ta_102494_0 அரசாங்கத்தினால் சரதியல் முறையிலான வரவு செலவுத்திட்டமொன்று முன்வைக்கப்பட்டது என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். ta_102494_1 செல்வந்தர்களிடமிருந்து சுவீகரித்து வறியவர்களுக்கு நன்மைகளை  வழங்கும் வரவு செலவுத் திட்டத்தை இந்த அரசாங்கம் சமர்ப்பித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார். ta_102494_2 மாவனல்லையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின்  ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய பிரதமர், கடந்த கால அரசாங்கத்தின் மஹிந்த சிந்தனை என்னென்ன விடயங்களை முன்னெடுத்தது, ஏழைகளிடமிருந்து பறித்து  செல்வந்தர்களுக்கு வழங்கியது. ta_102494_3 கடந்த பத்து ஆண்டுகளாகவே இந்த நிலைமை நீடித்தது. ta_102494_4 இந்த அரசாங்கம் தொழிலாளர்களின் வேதனங்களை உயர்த்தியுள்ளது. ta_102494_5 பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன மேலும் பல சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன. ta_102494_6 வர்த்தகர்கள் இப்பொழுது சொல்கின்றார்கள் வரிச் சுமை அதிகம் என்று. ta_102494_7 எங்களுக்கு நிவாரணம் வழங்குமாறு வர்த்தகர்கள் கோருகின்றனர். ta_102494_8 ஓராண்டு காலம் பொறுமையுடன் இருக்குமாறு வர்த்தகர்களிடம் கோருகின்றோம். ta_102494_9 ஏழைகள் கடந்த பத்து ஆண்டுகளாக வரிச் சுமையை சுமந்தனர். ta_102494_10 சரதியல் என்ற நபர் செல்வந்தர்களிடம் கொள்ளையிட்டு அதனை வறியவர்களுக்கு வழங்கியதாக வரலாற்றுத் தகவல்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.