ta_102510_0 மின்னேரிய - சுதுகந்த பிரதேசத்தில் உள்ள வீடோன்றிலிருந்து அதிக பெறுமதியைக் கொண்ட உலோகப் பொருட்களை காவல்துறையினர் மீட்டுள்ளனர். ta_102510_1 பெறுமதிமி;க்க தட்டுகளும், பாத்திரத்தின் வடிவைக் கொண்ட பொருட்களும் இதன்போது மீட்கப்பட்டுள்ளன. ta_102510_2 மின்னேரிய காவல்நிலையத்திற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், இந்த விடயம் தெரியவந்துள்ளது. ta_102510_3 குறித்த பெறுமதி மிக்க பொருட்கள் புராதன சிறப்பு மிக்க இடமொன்றிலிருந்து பெறப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ta_102510_4 சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.