ta_102520_0 இலங்கை மற்றும் அமெரிக்காவுக்கு இடையிலான உறவுகள் புதிய தளத்திற்கு கொண்டு செல்லவுள்ளதாக வெளிவிவகாரத்துறை அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். ta_102520_1 இதன் முதல் கட்ட நடவடிக்கையாக தாம் இந்த மாதம் 12 ஆம் திகதி அமெரிக்க ராஜாங்க செயலாளர் ஜோன் கெரியை வாஷிங்டனில் சந்திக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ta_102520_2 அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய நாடுகளுக்கான உதவி ராஜாங்க செயலாளர் நிஷா பிஷ்வாலை சந்தித்த பின்னர் இடம்பெற்ற ஒன்றிணைந்த செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் இந்த கருத்தை வெளியிட்டார். ta_102520_3 நிஷா பிஷ்வால் இன்று அதிகாலை இலங்கை வந்தடைந்தார். ta_102520_4 அவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரையும் சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.