ta_102524_0 போலியான ஆவணத்தை சமர்ப்பித்தார் என குற்றஞ்சாட்டப்பட்ட ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் திஸ்ச அத்தநாயக்காவிற்கு பெப்பிரவரி 11ஆம் திகதி வரை விளக்க மறியல் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. ta_102524_1 ஜனாதிபதி தேர்தலின் போது, பொது வேட்பாளர் மைத்திரிபால சிரிசேனவிற்கும், ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இடையே ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்தானதாக கூறி, திஸ்ச அத்தநாயக்க ஆவணம் ஒன்றை வெளியிட்டார். ta_102524_2 எனினும், அந்த ஆவணம், போலியானது என விசாரணைகளின் மூலம் தெரியவந்தது. ta_102524_3 இந்த நிலையிலேயே, அவர் கைது செய்யப்பட்டு இன்று நீதிமன்றத்தில் முன்னிலைப் படுத்தப்பட்டார். ta_102524_4 Update : Monday, 02 February 2015 - 19:48 ----------------------------------------------- திஸ்ஸ அத்தநாயக்க  கைதானார் பாராளுமன்ற உறுப்பினரும் , ஐ.தே.க. ta_102524_5 வின் முன்னாள் பொதுச் செயலாளருமான திஸ்ஸ அத்தநாயக்க சற்று நேரத்துக்கு முன்னர் கைது செய்யப்பட்டுள்ளார். ta_102524_6 போலியான ஆவணம் ஒன்றை சமர்ப்பித்தமை தொடர்பில் குற்றத்தடுப்பு பிரிவினரால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். ta_102524_7 கொழும்பு பௌத்தாலோக மாவத்தையில் உள்ள அவரது இல்லத்தில் வைத்தே இக் கைது இடம்பெற்றுள்ளது.