ta_104607_0 கிழக்கு மாகாண சபையின் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பைச் சேர்ந்த 6 உறுப்பினர்கள் ஆளும் கட்சிக்கான ஆதரவை விலக்கிக்கொண்டதாக மாகாண சபை உறுப்பினர் மஹ{மூட் லெப்பை அப்துல் ஹமீட் தெரிவித்தார். நிபந்தனைகள் மீறப்பட்டு தன்னிச்சையாக பதவிகள் கைமாற்றப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார். ta_104607_1 ஏ.எல்;.எம்.அமீர், எஸ்.உதுமா லெப்பை, விமலவீர திசாநாயக்க, டப்ளியு.ஈ வீரசிங்க, ரி.எம்.ஜயசேன, ஜயந்த விஜேசேகர ஆகிய கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களே எதிர்கட்சிக்கு ஆதரவை வெளியிட்டுள்ளமை குறிப்பிட்டத்தக்கது.