ta_104633_0 இலங்கையில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்துவதற்கான வாய்ப்பு தற்போது ஏற்பட்டுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. ta_104633_1 அமெரிக்க ராஜாங்க செயலாளர் ஜோன் கரி இவ்வாறு குறிப்பிட்டார். ta_104633_2 இன்று ஜெனீவாவில் ஆரம்பமான ஐக்கிய நாடுகளின் 28வது மனித உரிமைகள் தொடர்பான கூட்டத்திலே உரையாற்றிய போது அவர் இதனை தெரிவித்தார். தற்போதைய அரசாங்கத்தினால் வழங்கப்பட்டுள்ள வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்காக ஐக்கிய நாடுகள் சபை இலங்கைக்கு பூரண ஒத்துழைப்பையும் ஊக்குவிப்பையும் வழங்கும் எனவும் அவர் குறிப்பிட்டார். ta_104633_3 இதனை நடைமுறைப்படுத்தும் போது ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் சபையின் நடைமுறைகளை உதாசீனம் செய்ய முடியாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.