ta_106717_0 யேமனில் உள்ள இலங்கையர்களை மீட்க இந்தியாவின் உதவி பெறப்பட்டுள்ளது. ta_106717_1 வெளிவிவகார பிரதி அமைச்சர் அஜித் பீ பெரேரா இதனைத் தெரிவித்துள்ளார். ta_106717_2 யேமனில் மோதல் சூழ்நிலை உருவாகியுள்ள நிலையில் அங்குள்ள 120 பேர் வகையிலான இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்து வர இந்தியா தயாராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ta_106717_3 ஏற்கனவே யேமனில் 400க்கும் அதிகமான இந்தியர்கள் சிக்கியுள்ள நிலையில் அவர்களை மீட்பதற்கு கப்பல்கள் மற்றும் விமானங்களை இந்தியா அனுப்பி வைத்துள்ளது. ta_106717_4 இந்த நிலையில் இந்தியாவின் உதவியுடன் அங்குள்ள இலங்கையர்களையும் மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.