ta_106740_0 அமைச்சர் ராஜித்த சேனாராத்ன உள்ளிட்ட அவரது குடுத்பத்தாருக்கு எதிராக தொடுக்கப்பட்டுள்ள வழக்கு தொடர்பில் மேல் நீதிமன்றம், நீதவான் நீதிமன்றத்திடம் இருந்து அறிக்கை கோரியுள்ளது. ta_106740_1 கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது இந்த கோரிக்கை விடுக்கப்பட்டது. ta_106740_2 2014ஆம் ஆண்டு பாடசாலை மாணவி ஒருவரை கடத்திச் சென்ற சம்பவம் தொடர்பில் அமைச்சர் ராஜித்த சேனாரத்ன, அவரது மனைவி மற்றும் மகன்மார் இரண்டு பேருக்கு எதிராக கடந்த மாதம் 20ஆம் திகதி குறித்த மாணவியின் பெற்றோர் முறைப்பாடு செய்திருந்தனர். ta_106740_3 இதன் அடிப்படையில் இன்று அவர்களுக்கு மேல் நீதிமன்றம் அழைப்பாணை விடுத்திருந்தது.