ta_121020_0 கோட்டையிலிருந்து மாலபே வரை இலகு ரயில் சேவையொன்றை ஆரம்பிப்பதற்கு ஜப்பான் ஆயிரத்து 850 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் உதவியை வழங்க இணக்கம் தெரிவித்துள்ளது. ta_121020_1 கொழும்பு கோட்டையிலிருந்து மாலம்பே வரையான 17 கிலோமீற்றர் நீளத்தைக் கொண்ட இலகு ரயில் பாதை திட்டத்திற்கு நிதிமற்றும் தொழிநுட்ப உதவிகளை வழங்க ஜப்பான் இணக்கம் தெரிவித்துள்ளது. ta_121020_2 ஜப்பான் சர்வதேச புரிந்துணர்வு நிறுவனம் இதற்கென முன்வந்துள்ளது. ta_121020_3 இத்திட்டத்தின் கீழ் கொழும்பு கோட்டையிலிருந்து மாலபே வரை நிர்மாணிக்கப்படவுள்ள புகையிரத வீதி கட்டமைப்பில் 16 ரயில் நிலையங்கள் ஏற்படுத்தப்படவுள்ளன. ta_121020_4 நிதி மற்றும் ஊடக அமைச்சர் மங்கள சமரவீர இக்கடன் உதவியைப் பெற்றுக்கொள்வதற்காக சமர்ப்பித்த அமைச்சரவை பத்திரத்திற்கு அங்கீகாரம் கிடைத்துள்ளது. ta_121020_5 2024 ம் ஆண்டளவில் 6 கட்டங்களின் கீழ் இக்கடன் உதவி பெற்றுக்கொள்ளப்படவுள்ளது. ta_121020_6 இதன் முதற்கட்டத்தின் கீழ் 260 மில்லியன் அமெரிக்க டொலர் கிடைக்கவுள்ளது. ta_121020_7 0.1 சத வீத குறைந்த வட்டி விகிதத்தில் இக்கடன் உதவியை பெற்றுக்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.