ta_292839_0 கிளிநொச்சி இரட்டைப் படுகொலை சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் கைது  செய்யப்பட்டுள்ளார். ta_292839_1 ஜயந்திநகர் பகுதியிலுள்ள வீடொன்றில் கடந்த செவ்வாய்க்கிழமை தாய் மற்றும் மகனின் சடலங்கள் மீட்கப்பட்டன. ta_292839_2 திங்கட் கிழமை இரவு இக்கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது. ta_292839_3 இந்நிலையில் இக்கொலை தொடர்பில் முக்கிய சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார். ta_292839_4 கைதுசெய்யப்பட்ட நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது குறித்த வீட்டின் கிணற்றில் போடப்பட்டிருந்த கையடக்கத் தொலைபேசி மற்றும் இரும்புக் கம்பி என்பன கண்டெடுக்கப்பட்டதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.