ta_47318_0 பாகிஸ்தானில் பயங்கரவாதத்தை தடுப்பதற்கு வழங்கப்பட்டு வந்த நிதியை அமெரிக்கா ரத்து செய்துள்ளது. ta_47318_1 அமெரிக்க இராணுவத்தினால் பயங்கரவாத தடுப்பு பணிகளுக்கென பாகிஸ்தானிற்கு நிதி வழங்கப்பட்டு வந்தது. ta_47318_2 எனினும் அந்நாட்டிலுள்ள பயங்கரவாத அமைப்புகளுக்கு எதிராக மேற்கொள்ளும் நடவடிக்கையில் பாகிஸ்தான் அரசு தோல்வியடைந்துள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. ta_47318_3 இதனால் பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்டு வந்த 300 மில்லியன் டொலர் நிதியை ரத்து செய்வதாக அமெரிக்க பாதுகாப்பு பிரிவு அறிவித்துள்ளது. ta_47318_4 அவசர தேவைகளுக்கு முன்னுரிமை வழங்கும் வகையில் குறித்த நிதியை அவற்றுக்கு வழங்கவுள்ளதாக பென்டகன் குறிப்பிட்டுள்ளது. ta_47318_5 இதேவேளை அமெரிக்காவின் நிதி ரத்து தீர்மானம் தொடர்பில் பாகிஸ்தான் அரசு இதுவரை எந்தவொரு பதிலையும் வழங்கவில்லை.