template_id
int64 1
2
| template_lang
stringclasses 1
value | inputs
stringlengths 132
27.8k
| targets
stringlengths 63
27.6k
|
---|---|---|---|
1 | ['tam'] | கீழே கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பைக் கொடு.
கதை: அன்றைக்குக் கடைசி ஆடி. ஊர் முழுக்க தோசை வாசனை கம்ம்மென்று முறுகல் மணல். ஆட்டுரல்களில் சட்னி ஆட்டுகிற கடகடா சப்தம். வழக்கத்துக்கு மாறாக... காலில் சக்கரம் கட்டிக் கொண்டு பறக்கிறான் சீனிவாசன். ஒரே பரபரப்பு. அங்கேயும் இங்கேயுமாய்ப் பாய்கிறான். ஆளைக் கையில் பிடிக்க முடியவில்லை. மூக்கின் மேல் நின்ற கோபம் நாலா பக்கமும் சிதறித் தெறிக்கிறது. இன்னார் மீது என்று கணக்கில்லை. சகட்டு மேனிக்கு ''சள் சள்'' ளென்று சீறுகிறான். மண்ணடிக்க டக்கர் போயிருக்கிறது. வேலை செய்யாமல் கூலியாட்கள் ஏய்த்து விடுவார்களே என்கிற பதற்றம், அவனுக்குள். சம்பளம் வாங்கத் தீயாய் வருகிற ஆட்கள். பாடுபடாமல் தேங்கின தண்ணீராகத் தேய்ந்து போகிற வஞ்சகம். ச்சே! நினைத்தாலே மனசு கிடந்து கொதிக்கிறது. என்றைக்குமில்லாத அதிசயமாக விடிவதற்கு முன்பே விழித்துவிட்டான் சீனிவாசன். டீக்கடை போய், ஓடைக்குப் போய், பல்லையும் தேய்த்துவிட்டு - ''என்ன ரெடியா?'' என்று காலில் கொதி நீரை ஊற்றிக் கொண்டு நிற்கிறான். வேணித்தாய்க்கு எரிச்சலாக இருக்கிறது. ....வழக்கம் இப்படியல்ல. இந்நேரம் படுத்துக் கிடப்பார். நீட்டி நிமிர்ந்து எழுந்து டீக்கடைக்குப் போனால், ரெண்டு டீக்கடைகளிலும் டீ குடித்து. பேப்பர் பார்த்து, ஊர்க்கதைகள் பேசி.... ஆள் தட்டுப்படவே மாட்டார், ஒன்பது மணி வரைக்கும். இன்றைக்கு என்ன அதிசயமோ... சரியாய் விடிவதற்குள் ''ரெடியா'' என்கிறான். என்ன கூத்தோ....? கேட்க முடியாது கேட்டால். வள்ளென்று விழுவான். இப்போது தான் முற்றம் தெளித்திருக்கிறாள். வெல்லம், தேயிலை போட்டு, காப்பி போட்டுவிட்டு... அடுப்பில் இட்லிச் சட்டியை தூக்கி வைத்திருக்கிறாள். வழக்கம் போல.... சோறு என்றாலாவது. சட்டு புட்டென்று வேலை முடியும். கடைசி ஆடி... ஊரெல்லாம் தோசை விசேஷம். தோசை என்றாலாவது... சட்டி காய்ந்தவுடன் மாவை சர் சர்ரென்று ஊற்றிப் புரட்டி எடுத்து விடலாம். இந்த ராசாவுக்குத் தோசை என்றால் தொண்டையில் இறங்காது. ஆவியே ஆகாது என்பார். தோசையில் எண்ணெய் வாடை வருமாம். சாப்பிட்டால்... நாவறட்சி எடுக்குமாம். நெஞ்சுக்கரிப்பு ஆளைக் கொல்லும் என்று பயப்படுவார். தோசை என்றால். மூஞ்சி முந்நூறு கோணலாகும். இட்லிக்கு மாவை ஊற்றி வைத்தால்.... வெந்து முடிய ரொம்ப நேரமாகும். சொய்ங்யென்று விசிலடிக்கிற புகைச் சீறல், வேணித்தாய்க்கு எரிச்சல் எரிச்சலாய் வரும். அவசர அவசரமாய் அம்மியில் சட்னிக்கு அரைத்தாள். சீனிவாசன் பறந்து கொண்டு வருகிறான். ''சாப்புடலாமா?'' ''சித்தெ பொறுங்க'' ''டக்கர் போயிருச்சு மண்ணடிக்க...'' ''ஆளுக போய்ட்டாகளா?'' ''ம்'' ''மண்ணை புஞ்சைக்குள்ளே தட்டவா, வெளியே தட்டவா?'' ''புஞ்சைக்குள்ளேதான்'' ''சர்க்கரை தேயிலை வாங்கிக் குடுத்தனுப்பிச்சிட்டீகளா?'' ''ம் தண்ணிக்கொடம். காப்பிச்சட்டி, கிளாஸ் எல்லாம் குடுத்தனுப்பியாச்சு'' ''கலிங்கப்பட்டி கம்மாயிலே தண்ணில்லியா?'' ''ம்'' ''பாதை நல்லாயிருக்கா?'' ''என்ன.... தொண தொணன்னு பேசியே உயிரை வாங்குறே?'' சிரித்தாள் வேணி. காத்திருத்தலைத் தோன்றவிடாமல் மறக்கடிக்கத்தான் பேச்சை ரப்பராய் இழுத்தாள். ''என்ன சிரிப்பாணி?'' ''கேக்குறதுமா குத்தம்?'' ''அப்படியில்லே. டக்கருக்கு நானூத்தைம்பது ரூவா வாடகை. கூலியாளுக்கு எறநூத்தம்பது. இம்புட்டு செலவழிச்சு மண்ணடிக்கிறப்ப. நா போய் நிக்க வேண்டாமா? ரெண்டு நடை மண்ணு கொறைஞ்சிட்டாக்கூட... நூற்றி நாப்பது வட்டம் வரும்.'' ''இப்ப யாரு..... உங்களைப் போக வேண்டாம்னது?'' ''சாப்புடாம எப்படிப் போக?'' உக்காருங்க. இதோ - சட்னியைத் தாளிச்சிடுறேன்'' ''அந்தா, இந்தா'' வென்று கால்மணி நேரம் ஆகிவிட்டது. முள்ளின் மேல் நிற்பவனைப்போல் பொறுமையற்று நெளிந்து கொண்டு உட்கார்ந்திருக்கிற சீனிவாசன் முன்னால்... வட்டில் ஆவி பறக்க இட்லிகள், கருகிப்போன கடுகும், கருவேப்பிலையும் சட்னிக்கு ஒரு லட்சணத்தையும் வாசத்தையும் தந்தது. பறக்கப் பறக்க சாப்பிடுகிறான். ''சட்னி இன்னைக்கு அம்சமா அமைஞ்சிருக்கு. தாளிச்ச வாசம் ஆளைத் தூக்குது''. நிலக்குளிர்ச்சியான அந்தப் பனிப்பூ வார்த்தையில் வேணியின் எரிச்சல், கோபம் எல்லாம் மாயமாகி மறைகிறது வியர்வைக்குரிய கிரீடம் கிட்டிவிட்ட மனத்ததும்பல் அவளுக்கு அவள் குரலில் ஒரு மென்மையும் குழைவும்.... ''நல்லாவாயிருக்கு? அவசர அவசரமா அரைச்சேன்... உப்புக்கூடப் பாக்கலே.'' ''கச்சிதமாயிருக்கு வேணி. நெசந்தா.'' ''இன்னும் ரெண்டு இட்லி போட்டுக்கங்க.'' அந்தக் கணத்தில், அவள் அவளாகியிருக்கிறாள். உள்ளும் புறமும் மிருதுவாகி. அன்பால் நெஞ்சு ததும்ப... புருஷனை புதிய வாஞ்சையோடு பார்க்கிறாள். உள்ளுக்குள் உவகைப் பெருக்கு பீறிடுகிற பரிவுணர்ச்சி கண்ணோரங்களில் நீர்த்துளிகளாய் மனப்பரவசம். காய்ந்து கனல் பறக்கிற லௌகீக வாழ்வை ஜீவதப் படுத்துகிற மனச்சங்கமம். மானுட ஈரத்தில் வேர் விட்டு உயிர் வளர்கிற - முகம் கழுவிக் கொள்கிற - புது வாழ்க்கையின் கணங்கள். கையை கழுவினான். சட்டையை மாட்டிக் கொண்டான். சிகரெட், தீப்பெட்டி, செருப்பு, பரபரப்பு. ''வேணி, நீ புஞ்சைக்குப் போவணுமா?'' ''மேலப் புஞ்சையிலே பருத்தி வெடிச்சு பூத்துக்கெடக்கு.'' ''போ, சரி... மதியத்துக்கு?'' ''கம்மாயிலேதானே இருப்பீக?'' ''ம் சின்னவன் கிட்டே குடுத்து. தெக்குப்புஞ்சைக்கு அனுப்பிவை. மண்ணைத் தட்ட வர்ற டக்கர்லே கம்மாய்க்கு வந்துருவான்.'' ''ஆட்டும்...'' ''என்ன குடுத்துவிடப் போறே மதியம்? தோசை தானே சுடுவே?'' ''உங்களுக்குத்தான் தோசை ஒவ்வாதுல்லே? அவிக்கிற இட்லியிலே மிச்சம் வச்சிருந்து... புதுசட்னியோட குடுத்துவுடட்டா? ''ம்.'' ''ஆறின இட்லின்னு கோவிக்கக்கூடாது?'' ''ம்'' அவன் முகத்தில் மெல்லிய பூஞ்சிரிப்பு. உள்ளுக்குள் பௌர்ணமி வெளிச்ச மகிழ்ச்சி. இங்கிதம் அறிந்து பேசுகிற வேணியின் மன அண்மையில் விளைந்த தன்மை. தெருவில் இறங்கினான். சீனிவாசன் ஓடியாடிப் பாடுபடுகிறவனில்லை. ப்ளஸ் டூ முடித்து, கல்லூரியிலும் ரெண்டு வருஷம் குப்பை கொட்டினான். பாதியில் படிப்பை நிறுத்திவிட்டு, விவசாயத்தைக் கவனிக்க வேண்டிய நிர்ப்பந்தம். நாலா பக்கமும் காடுகரைகள். இறவைத்தோட்டங்கள், மானாவாரிக் கரிசல்காடு. கண்மாய்ப் பாசனத்தில் கொஞ்சம் வயல்காடு. பெரிய பண்ணைப் பிரபு கிடையாது மத்திய தர விவசாயி. வரவு செலவு வருஷா வருஷம் இழுபறிதான். விளைச்சல் சரியாக இருக்காது. விளைந்த வருஷத்தில் விலை கிடைக்காது. ரெண்டும் கைகூடி வருகிற மாதிரியிருந்தால்... கல் மழை மாதிரி இயற்கை உற்பாதம் வந்து நாசக்காடு பண்ணிவிடும். விரல் நகத்தில் அழுக்குப்படாமல் மேற்பார்வை பார்ப்பான். உடலுழைப்புக்கு இயலாது. சில்லான் மாதிரி ஒல்லியான உடம்பு. மம்பட்டி பிடித்து ஒரு வாய்க்கால் வரப்பைக்கூட செதுக்க முடியாது. எல்லாவற்றுக்கும் சம்பள ஆள்தான். தண்ணீர் பாய்ச்ச, பாத்திகட்ட, மூலை முடக்கு கொத்த... எல்லாமே கூலியாட்கள்தான். வேணித்தாய் ஓயாமல் பொருமுவாள். ''வெளையுற வெள்ளாமை சம்பளம் குடுத்தே சாம்பலாயிரும்.'' ''அதுக்கு என்ன செய்யச் சொல்றே?'' ''உங்களாலே தண்ணி பாய்ச்சவுமா முடியாது பொம்பளைகூட பாய்ச்சுதாளே?'' ''நமக்கு அதெல்லாம் சரிப்பட்டுவராது'' படிப்பு படிச்சவுகளாம்! படிச்சிருந்தா... மம்பட்டியை தொடக்கூடாதுன்னு சட்டமா? கீரிடம் எறங்கிருமாக்கும். ''நொய் நொய்ன்னு நச்சரியாதே...'' ''வேர்வை சிந்தப் பாடுபாட்டாத்தான்.... அதோட அருமையும் அழகும் தெரியும்.'' ''ஒழைக்கிறதுலே என்ன அழகு இருக்கு. ''ஒழைச்சப் பாத்தாத் தெரியும். பசியெடுக்கும். கல்லை முழுங்கினாலும் செமிக்கும். ஒடம்பு வலுப்படும். மனசுலே ஒரு தைர்யம் வரும். வேர்வை சிந்தி ஒழைச்சுப் பார்த்தாத்தான்... மனுசருக்கு மனுசக்குணமே வரும்.'' ''வேணி... அஞ்சுலே வளையாத ஒடம்பு. முப்பத்தைஞ்சுலே வளைக்கணும்னு ஆசைப்படதே.'' ''இதுலே ஒரு பெருமையாக்கும்?'' விளையாட்டான வெளுப்பாக உதட்டைப் பிதுக்கினாள் வேணி. ஆனாலும் விளையாட்டல்ல. வெளிப்படுகிற ஏளனம். ரொம்ப ஆழத்திலிருந்து கூர்மையாக வருவதாய். உணர்வான். ஆயினும் சீனிவாசன் அசையவில்லை. அப்படியேதான் இருந்தான். புஞ்சையில் கூலியாட்கள் பாத்திக் கட்டிக் கொண்டிருந்தால்... அவன் பாட்டுக்கு. டீக்கடையில் பேப்பர் பார்த்துக் கொண்டிருப்பான். சாயங்காலம் போய்ப்பார்த்துவிட்டு வயிறெரிவான். காட்டுக்கத்தலாய்க் கத்துவான். ''வாங்குற காசுக்கு வஞ்சமில்லாம ஒழைக்க வேண்டாம்? ஆள் இருந்தா, ஒரு மாதிரி, இல்லேன்னா ஒரு மாதிரி. மோசக்காரப் பாவிக. பாத்தி கட்டியிருக்குற லட்சணமா, இது? வரட்டும். பேசிக்கிடுதேன். சம்பளம் வாங்க வருகிறவர்களிடம் ஒரே சண்டைக்காடுதான். வருஷம் பூராவும் வம்பு வழக்குதான். தகராறுகள், கூலியாட்களைக் குறை சொல்லிச் சண்டை போடுவது... அவனது சுபாவமாகிவிட்டது. வேலை தளத்துக்க போக முடியாமுலும் ஜோலிகள் வந்துவிடும். மேற்பார்வை ஜோலிகள், போங்குக்கு நகை அடகுவைக்க. கடன் வாங்க, கொடுக்க, உரம் வாங்க.... பூச்சி மருந்து வாங்க என்று ஜோலிகள். ....போன வருஷம் மண்ணடிக்கிறபோது இப்படித்தான் எல்லா சம்சாரிக்கும் டக்கர் பன்னிரண்டு நடைகொண்டு வந்து கொட்டியது. இவனுக்கு பத்துநடை மட்டும். கேட்டால்... கண்மாயிலிருந்து புஞ்சை ரொம்பத் தூரம் என்கிற சால்ஜாப்பு. ஏமாளியாகிப் போய்ட்டோமே என்கிற மனக்கொதிப்பு, ரொம்ப நாளைக்கிருந்தது. இந்தத்தடவை விடக்கூடாது என்ற முடிவு. கண்மாயிலிருந்து கடைசிவரைக்கும் வேலை நடக்கிற லட்சணத்தைக் கண்காணிப்பது என்கிற வைராக்யம். ....வந்தாயிற்று, தெற்குப் புஞ்சை. அதோ. தூரத்தில் சிவப்பாய் வருகிற டக்கர். கோபு ரங்குத்தியாய் மண். நல்ல வண்டல். புஞ்சைக்குள் ரெண்டாவது குமி தட்டி முடித்துவிட்டுத் திரும்பிய டக்கரில் ஏறிக்கொண்டான். வெறும் டிரெய்லர், லோடு இல்லாமல், வண்டி போகிற வேகத்துக்கு ''பேய்க்குதி'' குதித்து அதிர்ந்தது. தடதட சத்தம் காதைக்குடைந்தது போய்க்கூப்பாடு. கலிங்கப்பட்டியை தாண்டிப் போகணும். இங்கிருந்து கண்மாய் மூன்று மைல் இருக்கும் கண்மாயின் உள்வாய்ப் பகுதி முழுக்க கருவேல மரங்கள். ஒன்றையொன்று உரசிக்கொண்டு. பின்னிக்கொண்டு, அடர்த்தி என்றால் அடர்த்தி, கற்றை அடர்த்தி, ஆள் போக முடியாது. கரையை ஒட்டிய மடைகள், மடைகள் இருக்கிற உட்பகுதிகளில் கொஞ்ச தூரம் மரங்களில்லை. கன்னங்கரேலென்று இருள் மாதிரியான கரிசல் மண். ஈரல் கட்டி மாதிரி. ஆள் உயரத்திற்கு வெட்டுக் கிடங்குகள். அங்குதான் கூலியாட்கள். டக்கர் போய் வட்டமடித்து நின்றவுடன்... அள்ளி வைத்திருந்த அறுபது கூடை மண்ணையும் சடபுடவென்று தூக்கிக் தட்டினார்கள். அள்ளிவிட, தூக்கிவிட என்று புயல் சுறுசுறுப்பாய் வேலைகள், பரஸ்பரம் அதட்டுகிற... ஏவுகிற... உசுப்புகிற சப்த அதிர்வுகள். ''மம்பட்டியை ஓங்கிப்போடு!'' ''கூடையை விருட்டுன்னு தூக்கிப்போடு'' ''நடுவுலே எட்டி எறி'' ''வெட்டி அள்ளு'' ''ஏய், கையிலே உசுர் இல்லியா? ஓங்கிக் குத்து'' கண்மூடி முழிப்பதற்குள் வண்டி லோடாகிவிட, பீடியை சுண்டியெறிந்துவிட்டு டிரைவர் ஏறி... டக்கரை உயிர்ப்பித்தார். வண்டி போனவுடன் அவரவர் மரத்தடிகளில் போய்ச்சாயவில்லை. மாறாக, வேலைகள், சுறுசுறுப்புக் குன்றாத வேக வேலைகள். கடப்பாறையில் ஓங்கி ஓங்கி குத்தி மண்ணை நெகிழ்ந்து விடுகிற இருவர். நெகிழ்ந்து புரளும் கட்டிகளை உடைத்து இழுத்துக் குவியலாக்குகிற நால்வர். அறுபது கூடைகளிலும் மண்ணை அள்ளி அடுக்குகிற நால்வர். ரெக்கை கட்டிப்பறக்கிற வேலைகள். வியர்வை வரி வரியாய். துடைக்க நேரமில்லை. கரிசல மண்ணைப் போல கறுத்த உடம்புகளில் வியர்வைக் கசகசப்பில் அடைஅடையாய் கரிசல் தூசி. கருவேல மரத்தடி நிழலில் உட்கார்ந்தான். சீனிவாசன். நிழலும் பொய் நிழல், வெக்கையான நிழல், செருப்பைப்போட்டு அதன் மேல்தான் உட்கார முடிகிறது. வெயில் என்றால் வெயில். அப்படி வெயில், தீ வெயில், நிமிர்ந்து பார்க்க முடியவில்லை. கண்ணெல்லாம் காந்துகிறது. அலை அலையாய் அந்தரத்தில் நெளிந்தோடுகிற கானற் சங்கிலிகள். சீனிவாசனைப் பார்த்து அன்போடு சொன்னார்கள். ''நீங்க எதுக்கு வெயில்லே சீரழியணும்? வீட்டைப் பாத்துப் போங்க.'' ''எள்ளு காஞ்சதுன்னு... கூடவே எலிப் புழுக்கையும் காயஞ்சதாம்...'' ''அதானே? நாங்க காய்றது சரிதான். தலைவிதி. வயித்துப்பாடு. நீங்க எதுக்குக் காயணும்?'' எல்லோருக்கும் பொதுவாக மெல்லிசாகச் சிரித்துப் பதில் சொன்னான். ''இல்லே... நா இருக்கேன்.'' ''அப்ப... இருங்க. எங்க தோள்லேயா இருக்கீக? ராசாப்போல இருங்க.'' வியர்வையைப் போலவே அவர்களுக்குள் வற்றாத கேலிகள், கிண்டல்கள், பரஸ்பர நையாண்டிகள், தாறுமாறான கெட்ட வார்த்தை வசவுகள். சண்டை போடுகிற மாதிரி காட்டமான கோபப் பேச்சுகள். எல்லாமே வேடிக்கை விளையாட்டுகள்தான். அலுப்புத் தெரியாமலிருக்க உணர்ச்சி வடிகால்கள். பேச்சு பேச்சாக இருந்தாலும்... சீனிவாசன் அடிக்கடி மணியைப் பார்த்தான். போயிருக்கிற நடைகளை எண்ணி மனசுக்குள் கணக்குப் போட்டான். பத்து நடைபோய்ச்சேரும் என்பதே சந்தேகம்தான். அவர்கள் சொல்லச் சொல்லக் கேட்காமல்... அவனும் ''கூடமாட'' வேலைகள் செய்கிறான். சும்மாவே இருப்பதில் ஒரு குற்ற உணர்வு. உள் உறுத்தல். அதற்காகவே அவனும் உழைப்பில் பங்கெடுத்துக் கொண்டான். கடப்பாரையால் ஓங்கி ஓங்கிப் போட்டு அசைத்தான். மண் உருண்டைகளைப் பெயர்த்து உருட்டினான். கருவேலச் சல்லி வேர்களை அறுத்துக்கொண்டு மண் பெயர்கிறபோது... இவனுள் மழலைத்தனமான மகிழ்ச்சி. வெற்றி கண்ட மனப்பூரிப்பு. உழைப்பின் விளைவாய் நிகழும் மாறுதல்கள், அவனுள் ஒரு லாகிரியாய். நிழல் காலடியில் சுருண்டது. மதியமாகிவிட்டது. டக்கர் வந்து லோடு ஏற்றிப்போனவுடன்... லேசுமாசாய் கையைக் கழுவினர். தூக்குச்சட்டிகளை எடுத்து, வெட்ட வெயிலில் வட்டமாய் உட்கார்ந்தனர். திறந்தால்.... ஒவ்வொரு சட்டியிலும் பத்துத் தோசை, பனிரெண்டு தோசை. சட்னியில் நனைந்துகிடந்தது. சீனிவாசன் அசந்து போனான். ஒரு மனுசனுக்கு இம்புட்டுத் தோசையா! சாப்பிட முடியுமா? அதுவும் தோசையா! இவனையும் சாப்பிடச் சொல்லி ஆள் ஆளுக்கு உபசரித்தனர். மறுத்துவிட்டான். தோசை உடம்புக்கு ஒத்துக்காது.'' அவர்கள் சாப்பிட்ட வேகம். மறைத்துக் கொள்ளாத ஆசையோடு தின்கிற ஆர்வம். ருசி பற்றிய பேச்சுக்கள். அதிலேயே கேலிகளும் கிண்டல்களும்.... வாழ்வின் அவலமும்.... ''தின்னுங்க தோசையை... விடாதீக.'' ''ஆமா... நாளையிலேருந்து புளிச்ச கஞ்சிதான்.'' ''ஆமப்பா.... புரட்டாசி மொதச் சனிக்குத்தான் தோசையைக் கண்ணாலே பாக்கமுடியும் நம்மாலே!'' ''கூலிக்காரன் தெனம் தோசைக்கு ஆசைப்பட முடியுமா?'' ''நடக்குற காரியமா?'' ''துட்டுக்காரன் வீட்லே தெனம் தெனம் கடைசி ஆடிதான். தோசை மணந்தான்.'' ''தோசைன்னா... தனி ருசிதான்.'' ''ஆசைதோசை, அப்பள வடைன்னு சும்மாவா சொல்லுதாக'' ''அதுலேயும் காட்டு ருசியிருக்கே.... அது ஒரு தனி ருசி.'' ''கஞ்சின்னா... குடிச்ச மாத்திரத்துலே பசிச்சிரும். தோசைன்னா... கம்முன்னு கெடக்கும்.'' ''கல்லு மாதிரி.'' வினோதப் பிறவிகளைப் பார்க்கிற மாதிரி ஆச்சரியமாய்ப் பார்த்தான் சீனிவாசன். ''ராட்சஸங்கதான். தோசையையே இந்தப்போடு போடுறாங்களே, பாவிக. நம்மாலே ரெண்டு தோசையைக் கூட சாப்பிட முடியாதே. இவனுக்கு இது ரொம்பப் புதுசு. ஆச்சர்ய அனுபவம் இவனுக்குள் சம்மணம் போட்டு உட்கார்ந்துகொண்ட மலைப்பும், வியப்பும். பசி லேசாக வயிற்றைக் கிள்ளியது. வேலையால் வழிகிற வியர்வை. சட்டையைக் கழற்றி வைத்துவிட்டான். தடதடவென்று பேயிரைச்சலாய்த் திரும்ப வந்த டக்கரின் சின்னவன் உட்கார்ந்திருப்பது தெரிகிறது. அவன் கையில் எவர்சில்வர் தூக்குச் சட்டி. அந்தரத்தில் ஏந்திப்பிடித்திருந்தான். குலுங்காமலிருப்பதற்காக. கடப்பாரையை மண்ணில் குத்தி நிறுத்தினான். உள்ளங்கைகளைப் பார்த்தான். பிசுபிசத்த கரம்பைமண். அதையும் தாண்டித்தெரிகிற கன்றிப்போன சிவப்பு. காந்தலான வலி. குடத்துத் தண்ணீரில் கையை லேசாகக் கழுவினான். ஆட்கள் டக்கருக்கு நிமிஷத்தில் லோடு பண்ணி முடித்தார்கள். திரும்பிப்போன டக்கரில் கோபுரங்குத்தியாக மண். தேர் அசைந்து நகர்கிற மாதிரியான தோற்றம். மரத்தடிக்கி வந்தான். அடத்தியான பெருமூச்சு. உட்கார்ந்தான். ''என்னடா... அம்மா குடுத்துவிட்டாளா?'' ''ஆம்ப்பா....'' ''நீ சாப்பிட்டுட்டீயாடா?'' ''சாப்ட்டுட்டேன்ப்பா?'' ''இங்கேயும் சாப்புடுதியா?'' ''வேண்டாம்ப்பா'' ''அம்மா இட்லிதா குடுத்துவிட்டாளா?'' ''இல்லேப்பா...'' சின்னவன் குரலில் மெல்லிய அச்சம். பூகம்பத்தை முன்னுணர்ந்த நடுக்கம். சீனிவாசனுக்குள் சுள்ளென்று வருகிற கோபம். ''பொறகு?'' ''தோசை'' சட்டென்று நிமிர்கிற சீனிவாசன். விரிகிற கண்களில் ஒரு விறைப்பு. மூக்கு நுனியில் மெல்லிய துடிப்பு. கன்னக் கதுப்புகளில் பற்கடிப்பின் படைப்பு. ''தோ...சை...யா?'' அவனுள் சண்டாளமாய்ப் பீறிட்ட வெறி. பிடிக்காது என்று தெரிந்தும் தோசை கொடுத்தனுப்பினால்..... அத்தனை அலட்சியமா? சின்னவன் முகத்தில் ஒரு மிரட்சி. ''இல்லேப்பா.... காலையிலே ஒரு விருந்தாளி வந்திருச்சு. எடுத்து வைச்சிருந்த இட்லியை அவுகளுக்கு அம்மா வைச்சிட்டாக.'' ''ம்'' அதில் ஒரு இறுக்கம். ''தோசையை குடுத்தனுப்புறப்பவே... அம்மா சொன்னாக'' ''என்னன்னு'' ''உங்கப்பா என்னை வையத்தான் போறாரு. வாங்கிக் கட்டிக்கிட வேண்டியதுதான்னு சொன்னாக'' வேணித்தாய் சொன்ன சொற்கள் குளிர் நீராய் கொதித்துக் கொண்டிருந்த அவன் மனசை ஆசுவாசப்படுத்தியது. சமாதானப்படுத்தியது. அலட்சியம் செய்யவில்லை. மதிக்கிறாள் என்பதை உணர்ந்த மனத்திருப்தி. உள்ளே புதைந்து கிடந்த பெருந்தன்மையுணர்ச்சியை உசுப்பிவிட்டது. பெருமூச்சோடு சட்டியைத் திறந்தான். நாலு தோசை. ஒரு கிண்ணத்தில் சட்னி. அலம்பி விழுந்து தோசை நனைந்திருந்தது. ஒரு தோசையை மட்டும் சாப்பிடுவது என்று உள்ளுக்குள் வைராக்யமான முடிவு. சகிப்புத்தன்மையை மீறிக்கொண்ட கசிகிற முணுமுணுப்போடு சாப்பிட்டான். சின்னவன் அவனது அம்மாவைப்போல, ரொம்பத் துறுதுறுப்பு. ஓடியாடி வேலை செய்கிற ஆர்வம். உழைப்பின் நாட்டம் ஓடி ஓடி மண்கட்டிகளைத் தூக்கிக் கூடைகளில் வைத்தான். பெரிய பெரிய கட்டிகளாய்க்கிடந்ததை மம்பட்டியால் உடைத்தான். ஓங்கி ஓங்கிப் போட்டான். அந்தப் பிஞ்சுப்பயல் வேலைசெய்கிற நேர்த்தியை - அழகை - சுறுசுறுப்பையே பார்த்துக் கொண்டிருந்த சீனிவாசன். குனிந்து தூக்குச் சட்டியைப் பார்த்தான். அதிர்ந்தே போனான். நாலு தோசையும் காலி. நான்தான் சாப்பிட்டேனா என்கிற மலைப்பு. ஆச்சர்யம் இன்னும் கூட ஒரு தோசை சாப்பிடலாம் போல வயிற்றுக்குள் இடம். எண்ணெய் வாடை ஒத்துக்கொள்ளாது. நிஜம்தான். ஆனால், இப்போது ருசியாகவே இருந்ததாய் நினைவு. எப்படி? நாலு தோசை விழுங்க முடிந்ததே... அது எப்படி? காட்டு ருசியே தனி ருசி என்பது இதுதானா? காட்டு ருசி என்றால்... உழைப்புக்குப் பிறகு வருகிற பசியா? ''வியர்வை சிந்தப் பாடுபட்டாத்தான்... அதோட அருமையும் அழகும் தெரியும்.'' ''ஒழைச்சுப் பாத்தாத் தெரியும். பசியெடுக்கும். கல்லை முழுங்கினாலும் செமிக்கும். வேணி அடிக்கிற சொல்கிற வேதம். நிஜம்தானோ? ராட்சஸமாய் உழைப்பதால்தான்.... இவர்கள் பத்துத்தோசை என்று ராட்சஸதனமாய்ச் சாப்பிடுகிறார்களோ... அவனுக்குள் ஆச்சர்யமான வெளிச்சம். சுபாவத்தையே அலசிக் காயப்போடுகிற அனுபவ வெளிச்சம். உள்ளுக்குள் துருவேறிக்கிடந்த சாளரங்கள் திறந்துகொண்ட உணர்வு. சாயங்காலம்.... சம்பளம், வாங்க வந்த கூலிக்காரர்களோடு சண்டை போடவில்லை. சீனிவாசன். அன்றைக்கு மட்டுமல்ல....
| கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பு 'காட்டு ருசி' என்பதாகும். |
1 | ['tam'] | கீழே கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பைக் கொடு.
கதை: ஓர் ஊரில் துணி வெளுக்கும் தொழிலைச் செய்து வந்தாள் ஒருத்தி. அவளுக்கு மூன்று மகள்கள் இருந்தனர். மூவருமே அழகிகளாக விளங்கினார்கள். எவ்வளவு உழைத்தும் அவர்களால் வயிறார உண்ண முடியவில்லை. வறுமையில் வாடினார்கள். ஒருநாள், அவர்கள் வீட்டிற்கு அழகான இளைஞன் ஒருவன் வந்தான். அம்மா! நான் பக்கத்து ஊரைச் சேர்ந்தவன். செல்வனாக இருக்கிறேன். என் வீட்டு வேலைகளைச் செய்ய ஒரு பெண் தேவை. உங்கள் மகள்களில் ஒருத்தியை அனுப்பி வையுங்கள். நான் அவளை அரசி போல வைத்துக் கொள்கிறேன், என்று இனிமையாகப் பேசினான். இதைக் கேட்ட மூத்த மகள், அம்மா! இங்கு நாம் வறுமையில் வாடுகிறோம், நான் இவருடன் செல்கிறேன், என்றாள். அவர் சொல்கின்ற வேலைகளைச் செய்து நல்ல பெயர் வாங்கு, என்று அவளை அனுப்பி வைத்தாள் தாய்.அவளை அழைத்துக்கொண்டு நடந்தான் இளைஞன். நீண்ட தூரம் சென்ற பிறகு அவர்கள் ஒரு மாளிகையை அடைந்தார்கள். இதுதான் என் மாளிகை. இங்கு நீ உன் விருப்பம் போல இருக்கலாம் எந்த அறையை வேண்டுமானாலும் திறந்து பார்க்கலாம். ஆனால் அந்தக் கடைசி அறையை மட்டும் நீ திறந்து பார்க்கக் கூடாது. என் கட்டளையை நீ மீறினால் நான் பொல்லாதவனாகி விடுவேன். எல்லா அறைகளின் சாவியும் இங்கே உள்ளது, என்றான் அவன். நான் ஏன் உங்கள் கட்டளையை மீறப் போகிறேன். அந்த அறையைத் திறந்து பார்க்க மாட்டேன், என்றாள் அவள். தோட்டத்தில் இருந்த ஒரு சிவப்பு ரோசாப் பூவைப் பறித்து வந்தான் அவன். அதை அவள் தலையில் சூடினான். நான் வெளியே செல்கிறேன். எப்பொழுது வருவேன் என்று எனக்குத் தெரியாது. அந்த அறையை மட்டும் திறக்காதே, என்று சொல்லிவிட்டுச் சென்றான்.ஒவ்வொரு அறையாகப் பார்த்துக் கொண்டே வந்தாள் அவள். ஒவ்வொரு அறையிலும் விலை உயர்ந்த பொருள்கள் இருந்தன. ஒரு அறையில் நவரத்தினங்களும் பொற்காசுகளும் கொட்டிக் கிடந்தன. எவ்வளவு நல்ல வாழ்க்கை கிடைத்து இருக்கிறது? நாம் இங்கேயே மகிழ்ச்சியாக இருக்கலாம், என்று நினைத்தாள் அவள். பூட்டி இருந்த கடைசி அறை அவள் கண்ணில் பட்டது. அவளால் ஆர்வத்தை அடக்க முடியவில்லை. அந்த அறைக்குள் அப்படி என்னதான் இருக்கும்? ஏன் நம்மைப் பார்க்க வேண்டாம் என்று தடுக்கிறார்? மெல்லத் திறந்து பார்த்துவிட்டு உடனே மூடி விடுவோம். கண்டிப்பாக அவருக்குத் தெரிய வாய்ப்பு இல்லை என்று நினைத்தாள் அவள். சாவியைப் போட்டு மெதுவாக அந்தக் கதவைத் திறந்தாள். உள்ளிருந்து அழுகுரலும் ஓலமும் கேட்டன. உள்ளே நுழைந்தாள்.அங்கே கொடிய தீயில் பல உயிர்கள் வெந்து கொண்டிருந்தன. காப்பாற்றுங்கள்! காப்பாற்றுங்கள்! என்று அவை கெஞ்சின. தன்னை அழைத்து வந்திருப்பது பிசாசு என்ற உண்மை அவளுக்குப் புரிந்தது. அவசரமாக அந்தக் கதவை மூடிப் பூட்டுப் போட்டாள். எதுவுமே நடவாதது போலத் தன் அறைக்குள் வந்து அமர்ந்தாள் அவள். அந்தத் தீயின் வெப்பத்தால் அவள் தலையில் இருந்த பூ வாடி விட்டது. இதை அவள் கவனிக்கவில்லை.மீண்டும் அங்கு வந்த இளைஞன் அவளை மேலும் கீழும் பார்த்தான். என் கட்டளையை மீறி விட்டாய். அந்த அறையைத் திறந்து பார்த்து இருக்கிறாய். உனக்கு என்ன தண்டனை தெரியுமா? என்று கோபத்துடன் கத்தினான் அவன். நான் திறக்கவில்லை, என்று நடுங்கிக் கொண்டே சொன்னாள் அவள். உன் தலையில் உள்ள ரோசாப் பூ எப்படி வாடியது? என்னிடமா பொய் சொல்கிறாய்? நீயும் அந்தத் தீயில் கிடந்து புலம்ப வேண்டியதுதான், என்று அவளை இழுத்துக் கொண்டு சென்றான் அவன். என்னை மன்னித்து விடுங்கள், இனி மேல் நான் இப்படிச் செய்ய மாட்டேன், என்று கதறினாள் அவள். அவளை அந்தத் தீயில் தள்ளிவிட்டு அறையைப் பூட்டினான் அவன்.துணி வெளுப்பவளின் வீட்டிற்கு மீண்டும் வந்தான் அவன், அம்மா! உங்கள் பெண் எங்கள் வீட்டில் நன்றாக இருக்கிறாள். அங்கே அவளுக்கு வேலை அதிகமாக இருக்கிறது. தங்கையையும் அழைத்து வரச்சொன்னாள். அதனால்தான் வந்தேன், என்றான்.அடுத்தவளும் அவனுடன் புறப்பட்டான். இருவரும் மாளிகையை அடைந்தார்கள். வழக்கம் போல அவளுக்கும் சிவப்பு ரோசாப் பூவை சூடினான் அவன். எந்தக் காரணத்தை முன்னிட்டும் கடைசி அறையை மட்டும் திறக்காதே, என்று சொல்லிவிட்டுச் சென்றான் அவன். ஆர்வத்தை அடக்க முடியாத அவளும் அந்த அறையைத் திறந்தாள். திரும்பிவந்த அவன் அவளையும் தீக்குள் தள்ளினான். துணிவெளுப்பவளின் வீட்டிற்கு மூன்றாம் முறையாக வந்தான் அவன், உங்கள் இரு மகள்களும் என் மாளிகையில் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள், அவளுக்கு அங்கே வேலை அதிகமாக இருக்கிறதாம். கடைசித் தங்கையையும் அழைத்து வரச் சொன்னார்கள். அதற்காகத்தான் வந்தேன், என்றான் அவன்.என் மகள்கள் மகிழ்ச்சியாக இருந்தால் அதுவே எனக்குப் போதும் இவளையும் அழைத்துச் செல், என்றாள் தாய். கடைசி மகளையும் அழைத்து கொண்டு அவன் புறப்பட்டான், இருவரும் மாளிகையை அடைந்தனர். வழக்கம் போல அவள் தலையிலும் ரோசாப் பூவை அணிவித்தான் அவன். என் அக்கா ரெண்டு பேரும் எங்கே? என்று கேட்டாள் அவள். வேறு வேலையாக வெளியே சென்று இருக்கிறார்கள். வர ஒரு வாரம் ஆகும். நீ இந்த மாளிகையில் எங்கு வேண்டுமானாலும் செல்லலாம். ஆனால் கடைசி அறையை மட்டும் திறக்கக் கூடாது மீறினால் உனக்குக் கடுந்தண்டனை கிடைக்கும். நான் வெளியே செல்கிறேன். திரும்பி வர நேரம் ஆகும், என்று சொல்லிவிட்டுப் புறப்பட்டான் அவன்.அக்கா இருவரையும் காணவில்லை, வந்தவுடன் தலையில் ரோசாப் பூவைச் சூடுகிறான். ஒரு அறைக்கு மட்டும் செல்ல வேண்டாம் என்கிறான். ஏதோ சூழ்ச்சி நடக்கிறது, என்பது அவளுக்குப் புரிந்தது. அறிவுக்கூர்மை, உடைய அவள் சிந்தனையில் ஆழ்ந்தாள். திறக்கக் கூடாது என்று தடுத்த அறைக்கும் ரோசாப் பூவிற்கும் ஏதோ தொடர்பு உள்ளது, என்று அவளுக்குத் தோன்றியது. தலையில் இருந்த ரோசாப் பூவை எடுத்தாள். அருகில் இருந்த கிண்ணத்தில் அதை வைத்து மூடினாள். மெதுவாக நடந்து அந்த அறைக் கதவைத் திறந்தாள். உள்ளே தீயில் பலர் துடித்துக் கொண்டிருப்பது தெரிந்தது. அவர்களில் தன் இரண்டு அக்காவும் இருப்பதைக் கண்டு திகைத்தாள். எங்களால் இந்த வேதனையைத் தாங்க முடியவில்லை. தங்கையே! நீதான் எப்படியாவது எங்களைக் காப்பாற்ற வேண்டும். புத்திசாலியாகிய நீ ரோசாப் பூவை சூடாமலேயே வந்து இருக்கிறாய். நீ வந்திருப்பது அந்தப் பிசாசிற்குத் தெரிய வாய்ப்பே இல்லை, என்றாள் மூத்தவள்.கவலைப் படாதீர்கள் நான் உங்களை எப்படியும் காப்பாற்றுகிறேன், என்று வெளியே சென்றாள் அவள். பழையபடி அந்த அறையைப் பூட்டினாள். ரோசாப் பூவை எடுத்துத் தலையில் மீண்டும் அணிந்து கொண்டாள். இரவு நேரம், அவன் வந்தான். ரோசாப் பூ வாடாததைக் கண்டான். அவள் அந்த அறைக்குள் நுழைந்திருக்க மாட்டாள் என்று நினைத்தாள்.நாள்தோறும் அவள் தலையில் புதிய ரோசாப் பூவை சூடிவிட்டுச் சென்றான் அவன். தன் இரண்டு அக்காவையும் எப்படித் தப்பிக்க வைப்பது என்று சிந்தனையில் ஆழ்ந்தாள் அவள். நான்கு நாட்கள் சென்றன. இளைஞனைப் பார்த்து அவள், இங்கே எனக்கு ஏராளமான வேலை இருக்கிறது. துணி துவைக்க நேரமே இல்லை. அழுக்குத் துணிகளை எல்லாம் பெரிய மூட்டையாகக் கட்டி வைத்து இருக்கிறேன். என் அம்மாவின் வீட்டில் தந்துவிட்டு வாருங்கள், என்றாள். நாளை மாலை அந்த மூட்டையைத் தூக்கிச் செல்கிறேன், என்றான் அவன். பொழுது விடிந்தது. அவன் வழக்கம் போல வெளியே சென்றான். அறைக்குள் சென்ற அவள் மூத்த அக்காவை வெளியே கொண்டு வந்தாள். நீ நம் வீட்டிற்குச் செல்ல ஏற்பாடு செய்துள்ளேன். நான் சொல்கின்றபடி நடந்து கொள். எல்லோரும் தப்பிக்கலாம் என்றாள் அவள். பெரிய சாக்கிற்குள் அக்காவை நுழைத்தாள் அவள். சுற்றிலும் அழுக்குத் துணிகளை வைத்தாள். சாக்கை இறுகக் கட்டினாள். இளைஞன் வந்தான். அவனிடம் அவள், அழுக்குத் துணி மூட்டை தயாராக உள்ளது. அதைத் தூக்கிச் செல்லுங்கள். வழியில் எங்கும் மூட்டையை வைக்கக் கூடாது. வைத்தால் எனக்குத் தெரிந்து விடும். என்னை ஏமாற்ற முடியாது. மூட்டையைக் கீழே வைத்தால் வைக்காதே என்று குரல் கொடுப்பேன். இருட்டுவதற்குள் இந்த மூட்டையை என் அம்மாவிடம் சேர்த்து விடுங்கள். அவரிடம் அடுத்த வாரம் வேறு அழுக்கு மூட்டை கொண்டு வருகிறேன். இதைத் துவைத்து வையுங்கள். அப்பொழுது எடுத்துச் செல்கிறேன் என்று சொல்லுங்கள். அங்கே அதிக நேரம் தங்காதீர்கள் உடனே புறப்பட்டு விடுங்கள் என்றாள் அவள். சூழ்ச்சியை அறியாத அவன் மூட்டையை தூக்கிக் கொண்டு புறப்பட்டான். மூட்டை மிகவும் கனமாக இருந்தது. அழுக்கு மூட்டையா இவ்வளவு கனம்? கீழே வைத்து விட்டு இளைப்பாறலாம் என்று நினைத்தான் அவன். தோளில் இருந்து மூட்டையைக் கீழே இறக்க முயற்சி செய்தான். அதற்குள் இருந்தவள், நான் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறேன். மூட்டையைக் கீழே வைக்காதே, என்று குரல் கொடுத்தாள். மாளிகைக்குள் இருக்கும் பெண்தான் பேசுகிறாள். எவ்வளவு தொலைவில் நடப்பதும் அவள் கண்களுக்குத் தெரிகிறதே? இறக்கி வைத்தால் நம்மைப் பற்றித் தப்பாக நினைப்பாளே, என்று நினைத்தான் அவன். மூட்டையைத் தூக்கிக் கொண்டே நடந்தான். ஒரு வழியாக வீட்டை அடைந்தான் அவன். கதவைத் தட்டி, அம்மா! உங்கள் பெண் அழுக்குத் துணி மூட்டையை அனுப்பி இருக்கிறாள். நன்கு துவைத்து வையுங்கள். அடுத்த வாரம் வேறு துணி மூட்டையுடன் வருகிறேன். அப்பொழுது இதை எடுத்துச் செல்கிறேன். எனக்குத் தங்க நேரம் இல்லை. உடனே வீடு திரும்ப வேண்டும், என்று சொல்லிவிட்டுப் புறப்பட்டான் அவன்.அடுத்த வாரம், தன் இரண்டாவது அக்காவை மூட்டைக்குள் வைத்துக் கட்டினாள் அவள். வழக்கம் போல அவளையும் தூக்கிச் சென்றான் அவன். வழியில் மூட்டையை வைக்க அவன் முயற்சி செய்தான். மூட்டையைக் கீழே வைக்காதே நான் பார்த்துக் கொண்டு இருக்கிறேன், என்ற குரல் கேட்டது. எப்படியோ ஒரு வழியாக அவள் வீட்டை அடைந்தான். வீட்டு வாசலிலேயே அவனுக்காகத் துணி வெளுப்பவள் காத்திருந்தாள்.அவளைப் பார்த்து அவன், அம்மா! உன் மகள் அழுக்குத் துணி அனுப்பி இருக்கிறாள். ஒரு வாரத்திற்குள் எப்படித்தான் இவ்வளவு துணி சேர்கின்றதோ தெரியவில்லை. இதையும் வெளுத்து வையுங்கள். அடுத்த முறை வரும்போது இரண்டு மூட்டை துணிகளையும் எடுத்துச் செல்கிறேன். இப்பொழுது மிகவும் களைப்பாக இருக்கிறேன். நான் வருகிறேன், என்று சொல்லிவிட்டுப் புறப்பட்டான் அவன். தன் இரண்டாவது மகளும் வந்து சேர்ந்ததை எண்ணி மகிழ்ந்தாள் அவள். களைப்புடன் மாளிகைக்கு வந்து சேர்ந்தான் அவன். என் வீட்டில் துணி மூட்டையைச் சேர்த்து விட்டீர்களா? என்று கேட்டாள் அவள்.துணி மூட்டையா அது? என்ன கனம்? என்னால் தூக்கிக் கொண்டு நடக்கவே முடியவில்லை. நான் கீழே வைக்க முயன்றால் போதும். எப்படித்தான் உனக்குத் தெரியுமோ? உடனே நீ கீழே வைக்காதே, என்று குரல் கொடுக்கிறாய். அதைத் தூக்கிச் செல்ல நான் படும் துன்பம் எனக்குத்தான் தெரியும். இனிமேல் அழுக்குத் துணி மூட்டையை நான் எடுத்துச் செல்ல மாட்டேன், என்றான் அவன். இன்னும் ஒரே ஒருமுறை மட்டும் எடுத்துச் செல்லுங்கள். அதன் பிறகு நானே இங்கு துவைத்துக் கொள்கிறேன். துணியைக்கூட நீங்கள் அங்கிருந்து கொண்டு வர வேண்டாம். இந்த முறை மூட்டை அதிக கனமாக இருக்கும், என்றாள் அவள்.இதுதான் கடைசி முறை, இனிமேல் முட்டையைத் தூக்கிச் செல்ல மாட்டேன், என்றான் அவன். பிறகு வெளியே சென்று விட்டான். அந்த மாளிகைக்குள் இருந்த விலை உயர்ந்த பொருள்களை எல்லாம் திரட்டினாள் அவள். அவற்றை எல்லாம் சாக்கு மூட்டைக்குள் போட்டாள்.புறப்படும் நாள் வந்தது. இளைஞனிடம் அவள், எனக்கு உடல் நலம் சரியில்லை. நான் அறைக்குள் படுத்திருப்பேன். என்னை எழுப்ப வேண்டாம். இன்று மட்டும் இருட்டியதும் அந்த மூட்டையை எடுத்துச் செல்லுங்கள். வழியில் எங்கும் கீழே வைக்காதீர்கள். என்னை ஏமாற்ற முயற்சிக்க வேண்டாம். இங்கிருந்தபடியே எங்கும் நடப்பதை என்னால் சொல்ல முடியும், என்றாள். நீ மூட்டை கட்டி வை. நான் திரும்பி வந்ததும் எடுத்துச் செல்கிறேன், என்று வழக்கம் போல வெளியே புறப்பட்டான் அவன்.உடனே அவள் தன் படுக்கையில் தலையணைகளை வைத்தாள். மேலே போர்வையைப் போட்டு மூடினாள். சிறிது தூரத்தில் இருந்து படுக்கையைப் பார்த்தாள். யாரோ படுத்திருப்பதைப் போன்று தோன்றியது. சாக்கு மூட்டைக்குள் நுழைந்தாள் அவள். தன்னைச் சுற்றிப் பல பொருள்களை வைத்தாள். வெளியே ஒரு கையை மட்டும் நீட்டி சாக்கைக் கட்டினாள். பிறகு கையை உள்ளே இழுத்துக் கொண்டாள். சிறிது நேரத்தில் இளைஞன் உள்ளே வந்தான். படுக்கையில் அவள்தான் படுத்து இருக்கிறாள் என்று நினைத்தான். சாக்கு மூட்டையைத் தூக்கிக் கொண்டு புறப்பட்டான். மூட்டை மிகவும் கனமாக இருந்தது. தள்ளாடிக் கொண்டே நடந்தான் அவன். பாதி தூரம் கூடக் கடக்கவில்லையே, மூட்டையைக் கீழே வைத்து விட்டு இளைப்பாறுவோம் என்று நினைத்தான் அவன், தோளில் இருந்து கீழே இறக்க முயற்சி செய்தான். உடனே அவள், நான் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறேன். கீழே வைக்காதே, என்று குரல் கொடுத்தாள். அவனும் பலமுறை கீழே வைக்கலாம் என்று நினைத்தான், ஒவ்வொரு முறையும் அவள் குரல் கொடுத்துக் கொண்டே வந்தாள்.எப்படியோ முயன்று அவர்கள் வீட்டை அடைந்தான் அவன். கடைசி மகளின் வருகைக்காகத் தாய் வெளியேயே காத்திருந்தாள். பெரிய மூட்டையுடன் அவனைப் பார்த்ததும் துணி வெளுப்பவளுக்கு மகிழ்ச்சிதாங்கவில்லை. மூட்டையை இறக்கி வைத்தான் அவன். அப்பாடா! தொல்லை ஒழிந்தது. இனி மூட்டை தூக்கி வரும் வேலை எனக்கு இல்லை, என்று சொல்லிவிட்டுப் புறப்பட்டான் அவன்.சாக்கை அவிழ்த்தாள் அவள். விலை உயர்ந்த பொருள்களுடன் மகளும் வெளியே வந்தாள். மகளைக் கட்டித் தழுவிக் கொண்ட அவள், உள் அறிவுக் கூர்மையால் எல்லோரும் அந்தப் பிசாசிடம் இருந்து தப்பி விட்டோம். நிறைய பொருளும் கொண்டு வந்தாய். இனி நமக்கு வறுமையே இல்லை, என்றாள். அம்மா! என் திறமையை அந்தப் பிசாசு இந்நேரம் அறிந்து கொண்டிருக்கும். இனி அது நம் வழிக்கே வராது. கவலை இல்லாமல் நாம் இருக்கலாம், என்றாள் மகள்.மிகுந்த களைப்புடன் தன் மாளிகையை அடைந்தான் அவன். நீ சொன்னபடியே மூட்டையைச் சேர்த்து விட்டேன். மூட்டையா அது? என்ன கனம்? என்று படுக்கையைப் பார்த்துப் பேசினான். படுக்கையில் எந்த அசைவும் இல்லை. போர்வையை நீக்கிப் பார்த்தான். தலையணைதான் இருந்தது. பரபரப்புடன் சென்று கடைசி அறையைத் திறந்தான். அந்தப் பெண்கள் இருவரையும் காணவில்லை. மூவரும் எப்படித் தப்பித்து இருப்பார்கள் என்று குழம்பினான் அவன். மெல்ல மெல்ல அவனுக்கு உண்மை விளங்கியது.நானே ஒவ்வொருவராகச் சுமந்து சென்று அவர்கள் வீட்டில் விட்டு வந்திருக்கிறேன். நன்றாக ஏமாந்து விட்டேன், என்று வருந்தினான் அவன். நம் உண்மை உருவத்தை அவர்கள் புரிந்து கொண்டார்கள். இனி அவர்களை ஏமாற்ற முடியாது, என்று நினைத்தான் அவன், அவர்கள் வீட்டிற்குச் செல்லும் எண்ணத்தையே விட்டு விட்டான்.
| கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பு 'மூட்டையை வைத்தால்' என்பதாகும். |
2 | ['tam'] | கீழே கொடுக்கப்பட்டுள்ள வார்த்தைகளையும் தலைப்பையும் பயன்படுத்தி சிறு கதை எழுதுக.
வார்த்தைகள்: குரு, சீடர்கள், பூர்வாசிரமம், ஆயுதங்கள், தியானம், குழப்பம், தவறு, இயல்பு
தலைப்பு: குரு சிஷ்யன்
| ஒரு குருவும் அவருடைய சீடர்களுடம் ஆற்றங்கரையோரம் கலகலப்பாகப் பேசிக்கொண்டே சென்றனர். ஒரு சீடன் கேட்டான், ‘குருவே, பூர்வாசிரமத்தில் நீங்கள் ஒரு பெரிய போர் வீரராக இருந்ததாகவும், பல நாடுகளுக்குப் பயணம் செய்து வெற்றிமேல் வெற்றிகளைக் குவித்ததாகவும் மூத்த சீடர்கள் பேசிக் கொண்டிருந்தார்கள்… நிஜம்தானா?" ‘நிஜம்தான்.. ஆனால் அதெல்லாம் அந்தக் காலம். இப்போது நான் ஆயுதங்களைக் கைவிட்டுவிட்டேன்…!" என்றார் குரு. ‘ஏன் குருவே? போர் தவறா… ஆயுதங்களே வேண்டாமா?" ‘சரி தவறு என்பதல்ல என் வாதம்… ஒரு கட்டத்துக்குமேல் புத்திக் கூர்மையும் அமைதியையும் விட சிறந்த ஆயுதம் எதுவும் இல்லை என்று புரிந்துவிட்டது எனக்கு!" குருவின் வார்த்தைகளில் சீடர்களுக்கு நம்பிக்கை பிறக்கவில்லை. அவரை சோதித்துப் பார்த்துவிட முடிவு செய்து, ஒரு திட்டம் போட்டனர். ‘நாளை குரு தியானத்தில் இருக்கும்போது, நாம் இருவரும் மறைந்திருந்து அவரைத் தாக்குவோம். அப்போது அவர் ஆயுதங்களை எடுக்காமல் நம்மை எப்படிச் சமாளிக்கிறார் என்று பார்ப்போம்," என்று முடிவு செய்தனர். மறுநாள் வகுப்புகள் முடிந்ததும், குரு வழக்கம்போல தியானத்தில் ஆழந்துவிட, இந்த இரு சீடர்கள் மட்டும் ஓலை தட்டிகளுக்கு அப்பால் மறைந்து கொண்டனர். சில நிமிடங்கள் கழித்து இருவரும் மெல்ல வெளியில் வந்தனர். பேசி வைத்தபடி இருவரும் குருவின் மீது ஏக காலத்தில் இரு பக்கமிருந்தும் பாய்ந்தனர். குரு முகத்தில் எந்த சலனமும் இல்லை. அவர்கள் பக்கத்தில் நெருங்கும்வரை கண்மூடி அமைதியாக இருந்த குரு, கடைசி விநாடியில் சற்று முன்னே வந்து குனிந்துகொண்டார். சீடர்கள் இருவரும் மடேர் என்று மோதிக் கொண்டு தரையில் விழுந்து உருண்டனர். எதுவும் நடக்காததுபோல் தியானத்தைத் தொடர்ந்தார் குரு! குழப்பம் குருவே குழப்பம்! புகழ்பெற்ற துறவி அவர். அவருக்கு ஏராளமான மாணவர்கள். ஒருநாள், அந்த துறவியின் பழைய மாணவர் ஒருவர் அவரைப் பார்க்க வந்தார். பரஸ்பர விசாரிப்புகளுக்குப் பிறகு, ‘குருவே, எனக்கு ஒரு குழப்பம்," என்று ஆரம்பித்தார் மாணவர். ‘என்ன?" ‘நான் உங்களிடம் படித்த தியானத்தை முறையாகத்தான் பின்பற்றுகிறேன். கவனமாகத்தான் செய்கிறேன். அவை எனக்கு மிகுந்த மன அமைதியையும் புத்திக்கூர்மையையும் தருகின்றன. அதை அனுபவபூர்வமாக உணர்கிறேன்!" ‘மகிழ்ச்சி. மகிழ்ச்சி… இதில் என்ன குழப்பம்?" ‘நான் தியானத்தில் இல்லாத வேளைகளில் முழுமையான நல்லவனாக இருக்கிறேனா என்ற சந்தேகம் இருக்கிறது. அது எனக்கே சில நேரங்களில் தெரிகிறது. சில நாள்களில் நானும் ஒன்றிரண்டு தவறுகளைச் செய்கிறேன். தியானம் பழகிய ஒருவன் இப்படிச் செய்வது சரிதானா? இதை யோசிக்கும்போது என் உள்ளம் குன்றிச் சிறுத்துவிடுகிறது!" குருநாதர் சிரித்தார். ‘ஆக… நீ தியானமும் செய்கிறாய், தவறுகளும் செய்கிறாய், அப்படித்தானே…?" ‘ஆமாம் குருவே. அது தவறில்லையா?" ‘இல்லை. நீ தினமும் தியானம் செய், தினமும் தவறு செய், தினமும் தியானம் செய், தினமும் தவறு செய், கொஞ்ச நாளில் இதில் ஏதேனும் ஒன்று நின்றுவிடும்!" ‘அய்யோ.. ஒருவேளை தவறு நிற்பதற்குப் பதில் தியானம் நின்றுவிட்டால்?" ‘அதுவும் நல்லதுதான். உன்னுடைய இயல்பு எது என்று புரிந்துவிடும் இல்லையா?!" |
1 | ['tam'] | கீழே கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பைக் கொடு.
கதை: சக்கரவர்த்தி அக்பர் சில பிரமுகர்களுடன் நந்தவனத்தைச் சுற்றி வலம் வந்து கொண்டிருந்தார். அவருடன் பீர்பலும் இருந்தார். நந்தவனத்தில் மலர்ந்திருந்த ரோஜாப்பூக்களைப் பார்த்துப் பரவசமான அக்பர், “ஆகா! பூமியில் ஒரு சொர்க்கம் உண்டு எனில் அது இந்த நந்தவனம்தான்!” என்றார். “ஆம், பிரபு! நீங்கள் கூறுவது சரி!” என்று அனைவரும் ஆமோதிக்க, பீர்பல் மட்டும் மௌனமாக இருந்தார். அதைக் கவனித்த அக்பர், “பீர்பல்! சற்று முன் நான் கூறியதில் உனக்கு உடன்பாடு இல்லையா?” என்று கேட்டார். “பிரபு! இந்த நந்தவனத்திற்கு அழகைத் தருவது இந்த ரோஜா மலர்கள் தான். ஆனால் அழகு எங்கே உள்ளதோ, அங்கே அபாயமும் உண்டு!” என்றார் பீர்பல். “ஓகோ! ரோஜாப்பூக்களில் உள்ள முட்களைக் குறிப்பிடுகிறாயா?” என்று அக்பர் கேட்டார். “இல்லை, பிரபு! நான் அவற்றைச் சொல்லவில்லை!” என்று பீர்பல் சொல்ல, “அப்படியானால், ரோஜாச் செடிகளின் உள்ளே மறைந்திருக்கும் பாம்புகளைக் குறிப்பிடுகிறாயா?” என்று அக்பர் கேட்டார். “மனிதனால்தான் பாம்புகளுக்கு அபாயம்! நம் காலடியோசையைக் கேட்டவுடனேயே அவை பயந்து ஓடி விடுகின்றன!” என்றார் பீர்பல். “பின் நீ எதைத்தான் அபாயம் என்று குறிப்பிடுகிறாய்?” என்று சலிப்புடன் அக்பர் கேட்க, “பிரபு! அபாயம் என்பது அழகை மட்டுமல்ல; வலிமை, செல்வம், புகழ் ஆகிய அனைத்தையும் அபாயம் சூழ்ந்து உள்ளது. தாங்கள் பாரதத்தின் மிக வலிமை பொருந்திய, மிகப் புகழ்பெற்ற, சகல செல்வங்களையும் ஒருங்கே பெற்ற சக்கரவர்த்தி! ஆனால், மேற்கூறிய விஷயங்களினால், அண்டை ராஜ்யத்து மன்னர்கள் தங்கள் மீது பொறாமை கொண்டுள்ளனர். தங்களை வீழ்த்தி வெற்றிவாகை சூட சதித்திட்டம் இட்டவாறு உள்ளனர். அதனால்தான், பூலோக சொர்க்கம் என்று ஒன்று இருப்பதாக நான் எண்ணவில்லை” என்றார். பீர்பலின் சொற்கள் அக்பரை சிந்திக்கத் தூண்டின. மறுநாள் சபையில் அக்பர், “திடீரென்று ஒருவனை அபாயம் சூழ்ந்தால், அவனுடைய தற்காப்புக்காகப் பயன்படும் சிறந்த ஆயுதம் எது?” என்று சபையோர்களை நோக்கி ஒரு கேள்வி கேட்டார். “வாள்!” என்றார் ஒருவர். “இல்லை!” என்று மறுத்த பீர்பல், சில சமயங்களில் வாள் பிடித்த கரம் செயலற்றுப் போவதுண்டு!” என்றார். “எதிரி மீது தொலைவிலிருந்தே குறிபார்த்து ஈட்டியை வீசுவதன் மூலம் அபாயத்திலிருந்து தப்பலாம்!” என்றார் மற்றொருவர். “பதற்றத்தில் ஈட்டியின் குறி தவறினால், அது பயன்படாது!” என்றார் பீர்பல். “சரிதான்! வாள், ஈட்டி, என்று எந்த ஆயுதமுமே சரியில்லை என்றால், எதுதான் ஆபத்தில் பயன்படும்?” என்று அக்பர் கேட்க, “சூழ்நிலைக்கு ஏற்றவாறு சிந்தித்து செயற்படும் நமது அறிவே சிறந்த ஆயுதம் ஆகும்!” என்றார் பீர்பல். “வெறும் பிதற்றல்! நீ ஆபத்தில் சிக்கிக் கொள்ளும்போது உன் மூளை எப்படி வேலை செய்கிறது என்று பார்க்கிறேன்!” என்று அக்பர் கிண்டல் செய்ய, சபையோர் அவருடன் சேர்ந்து பீர்பலை எள்ளி நகையாடினர். “சமயம் வரும்போது நான் கூறியது உண்மை என்று நீங்களே தெரிந்து கொள்வீர்கள்!” என்றார் பீர்பல். மறுநாள், அக்பர் சில பிரமுகர்களுடன் நதிக்கரையில் உலவிக் கொண்டிருந்தபோது, பீர்பலும் உடனிருந்தார். அப்போது, ஒரே கூச்சலும், கூக்குரலும் கேட்க, மக்கள் தலைதெறிக்க ஓடிக் கொண்டிருந்தனர். சக்கரவர்த்தியைக் கண்ட அவர்கள் ஓடோடி வந்து, “பிரபு! ஆபத்து! அபாயம்! பட்டத்து யானைக்கு திடீரென மதம் பிடித்து விட்டது. அது இந்தப் பக்கம்தான் ஓடி வந்து கொண்டிருக்கிறது. நீங்கள் உடனே ஓடி விடுங்கள்!” என்று கூச்சலிட்டனர். அவர்கள் கூறி முடிப்பதற்குள் தொலைவில் மதயானை ஓடி வருவது தெரிந்தது. உடனே, அக்பர் தன் இடையிலிருந்து வாளை உருவ, கூடியிருந்த அனைவரும் தங்கள் வாட்களை உருவிக் கொண்டனர். ஆனால், மதம் பிடித்த யானையை வாள் கொண்டு சமாளிக்க முடியாது என்று உணர்ந்ததும், அவர்கள் திக்பிரமை பிடித்து சிலைகளாக நின்றனர். தன்னைப் பெரிய ஆபத்து எதிர் நோக்கியிருக்கிறது என்பதை அக்பரும் உணர்ந்தார். வாளினாலோ, ஈட்டியினாலோ யானையை ஒன்றும் செய்யமுடியாது என்று தெரிந்தது. ஆனால் கோழையைப் போல் பயந்து ஓடவும் அவருடைய தன்மானம் இடம் தரவில்லை. எல்லாரும் செய்வதறியாது செயலற்று நிற்க, பீர்பல் சட்டென்று அங்கிருந்த ஒரு பூனையைப் பிடித்து யானையின் முதுகில் வீசியெறிந்தார். யானையின் முதுகில் விழுந்ததால் மிரண்ட பூனை, தன் நகங்களினால் யானையைப் பிறாண்டியது. வலி பொறுக்க முடியாத யானை, தன் தும்பிக்கையினால் பூனையைப் பிடிக்க முயல, அது தப்பித்துக் கீழேயிறங்கி ஓடியது. யானையின் கோபம் முழுவதும் பூனையின்பால் திரும்ப, அது பூனையைத் துரத்திக் கொண்டே எதிர் திசையில் ஓடியது. தனது பருத்த உடலைத் தூக்கிக் கொண்டு யானையினால் விரைவாக ஓட முடியவில்லை. போக்குக் காட்டிக் கொண்டே ஓடிய பூனை, சாலையோரப் புதர்களின் உள்ளே மறைய, யானை புதர்களுக்குள் புகுந்து அதைத் தேடியது. இவ்வாறு, யானையின் கவனம் திசை திரும்ப, அக்பரும் மற்றவர்களும் யானையிடம் சிக்காமல் தப்பித்தனர். சற்றுநேரம் சிலையாய் நின்ற அக்பர் தெளிவடைந்தவுடன் பீர்பலைக் கட்டித் தழுவிக் கொண்டார். “பீர்பல்! சபாஷ்! அறிவுதான் சிறந்த ஆயுதம் என்பதை நிரூபித்துக் காட்டி விட்டாய்! சூழ்நிலைக்கு ஏற்றவாறு மூளையைப் பயன்படுத்தி சிந்தித்து செயற்படுவதே சாலச் சிறந்தது என்ற உண்மையை எங்களுக்குப் புரிய வைத்து விட்டாய்! நீ சொன்னதே சரி! உன்னைப் போன்ற அறிவாளி அருகிலிருந்தால் எந்த அபாயத்தையும் எதிர் கொள்ளலாம்!” என்று மனதாரப் பாராட்டினார்.
| கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பு 'சிறந்த ஆயுதம்' என்பதாகும். |
2 | ['tam'] | கீழே கொடுக்கப்பட்டுள்ள வார்த்தைகளையும் தலைப்பையும் பயன்படுத்தி சிறு கதை எழுதுக.
வார்த்தைகள்: பெண், குழந்தை, கணவன், பணக்காரி, ஞானி, டாக்டர், இனிப்பு, அறிவுரை, உடல்நிலை
தலைப்பு: அறிவுரைக்கான தகுதி
| ஒரு பெண் தனது குழந்தையினால் மிகவும் தொந்தரவுக்குள்ளானாள். அவளுக்கு ஒரே ஒரு குழந்தை. அவளது கணவன் இறந்துவிட்டான். அவள் பெரும் பணக்காரிதான். ஆனால் அவளுக்கு வாழ்வில் மிகவும் சலிப்பாகிவிட்டது. அவள் தனது குழந்தைக்காகத்தான் வாழ்ந்தாள். சில சந்தர்ப்பங்களில் குழந்தைகள் மிகவும் தொந்தரவாகி விடுவர். அந்த பையன் இனிப்பைத் தவிர வேறு எதுவும் சாப்பிடுவதில்லை. டாக்டர்கள் இது மிகவும் தவறான பழக்கம். அவனது உடல்நிலை கெட்டுவிடும் எனக் கூறி விட்டனர். ஆனால் அந்த குழந்தை கேட்பதேயில்லை. அவள் ஒரு சூஃபி ஞானியிடம் எப்போதும் செல்வாள். அதனால் அவள், இவன் நான் சொல்வதை கேட்பதேயில்லை. அவர் அவருக்கு அருகில் வரும் அனைத்து மக்களையும் ஈர்க்கும் சக்தியுடையவராக இருக்கிறார். அதனால் இவன் அவர் சொன்னால் கேட்கக் கூடும். என்று நினைத்தாள். அதனால் அவள் அந்த குழந்தையை அந்த ஞானியிடம் கூட்டி சென்று, இவன் இனிப்பைத் தவிர வேறு எதையும் சாப்பிடுவதேயில்லை. நானும் ஒவ்வொரு நாளும் சொல்லிக் கொண்டே இருக்கிறேன். கேட்க மாட்டேன் என்கிறான். அதற்கு பதிலாக பட்டினி கூட கிடக்கிறான். டாக்டர்கள் உடல்நிலை கெட்டுவிடும் என்கிறார்கள். அவன் யார் சொன்னாலும் கேட்க மாட்டேன் என்கிறான். எனது கணவர் இறந்துவிட்டார். இவன் எனது ஒரே குழந்தை இவனுக்காகத்தான் இருக்கிறேன். என்னால் இவன் பசியாக இருப்பதை பார்க்க முடியாது, அதனால் இவனுக்கு இனிப்பு கொடுக்க வேண்டி வருகிறது. இனிப்பு இவனுக்கு விஷம் என்று தெரிந்தே கொடுக்க வேண்டி வருகிறது. சர்க்கரை வெள்ளை விஷம். அதனால் நான் இவனை இங்கே கூட்டி வந்தேன். இவனுக்கு ஏதாவது அறிவுரை கூறுங்கள். நீங்கள் மனிதரில் தெய்வம். நீங்கள் கூறும் வார்த்தைகளுக்கு பலன் இருக்கக் கூடும். அந்த ஞானி குழந்தையை பார்த்தார். அவர், என்னால் இந்த குழந்தைக்கு இப்போது அறிவுரை கூற முடியாது. ஏனெனில் இப்போது நானே இனிப்பை மிகவும் விரும்பி சாப்பிட்டுக் கொண்டிருக்கிறேன். இன்னும் இரண்டு வாரங்கள் கழித்து வாருங்கள். அதற்குள் இந்த இரண்டு வாரங்களும் நான் இனிப்பு சாப்பிடாமல் இருக்கிறேன். இதை என்னால் செய்ய முடிந்தால் பிறகு என்னால் அறிவுரை கூற முடியும். இல்லாவிடில் இந்த அறிவுரை கூற சரியான ஆள் நானல்ல. என்றார். அந்த பெண்மணியால் நம்பவே முடியவில்லை. இது இன்னும் அபாயகரமானது. ஆனால் அந்த குழந்தை மிகவும் ஈர்ப்படைந்தான். அவன் அந்த ஞானியின் காலில் விழுந்தான். அவன், என் அம்மா பல பேரிடம் என்னை அழைத்து சென்றிருக்கிறாள். அத்தனை பேரும் உடனே எனக்கு அறிவுரை கூறினார். ஆனால் நேர்மையான முதல் ஆள் நீங்கள்தான். இரண்டு வாரங்கள் கழித்து வருகிறேன். நீங்கள் என்ன சொன்னாலும் செய்கிறேன். நான் உங்களை நம்புகிறேன். என்று கூறினான். குழந்தையின் முன் தனது தவறை ஒத்துக் கொண்ட ஒரு வளர்ந்த மனிதன், நானே இப்போது இனிப்பு விரும்பி சாப்பிட்டுக் கொண்டிருக்கிறேன். அதனால் இப்போது அறிவுரை கூறும் இடத்தில் நான் இல்லை. அதனால் இரண்டு வாரங்களில் இந்த அறிவுரையை நானே கடைபிடித்து பார்க்கிறேன். நான் தோற்றுவிட்டால், என்னை மன்னித்துவிடு. என்னால் அறிவுரை கூற முடியாது. நான் வென்றுவிட்டால் அப்போது அறிவுரை கூறுவேன். ஒரு வயதான மனிதன் நானே வென்றுவிடும்போது உனக்கு இள வயது, அதிக ஆற்றலுடன், அதிக புத்திசாலித்தனமாக இருக்கிறாய். உன்னாலும் வெற்றியடைய முடியும். அதனால் ஒரு முயற்சி செய்து பார் என்று கூற முடியும். என்றார். அந்த தாய் மிகவும் அதிர்ச்சியடைந்தாள். அந்த ஞானி கூறிய இரண்டு வாரங்களில் அவரால் அதை கடைபிடிக்க முடியாவிட்டால் எல்லாமும் முடிந்தது. பின் அந்த குழந்தையை கூட்டிச் செல்ல வேறு எந்த இடமும் இல்லை. இரண்டு வாரங்கள் சென்றபின் அவர்கள் திரும்பி வந்தனர். ஞானி அந்த குழந்தையிடம், மகனே, அது கடினம்தான். ஆனால் இயலாதது அல்ல. இந்த இரண்டு வாரங்களும் இனிப்பு சாப்பிடாமல் என்னால் சமாளிக்க முடிந்தது. நான் இனி என் வாழ்வு முழுவதும் இனிப்பு சாப்பிடப் போவதேயில்லை என உனக்கு உறுதியளிக்கிறேன். அப்போது உனக்கு அறிவுரை கூற தகுதி இருக்கிறது என நீ நினைக்கிறாயா – எனக்கு நீ அனுமதியளித்தால் என்னால் உனக்கு அறிவுரை கூற முடியும். எனக் கேட்டார். அந்த பையன், எதுவும் கூற வேண்டிய தேவையில்லை. எனக்கு புரிந்துவிட்டது. உங்களுக்கு எனது நன்றிகள். உங்களை போன்ற ஒருவர் எனக்கு அறிவுரை கூறுவதற்காக தனது வாழ்நாள் பூராவும் இனிப்பு சாப்பிடாமல் இருப்பது- தானே அப்படி இருப்பது – நம்பிக்கையுணர்வு வைக்க தகுதியானதே. நான் உங்கள் மேல் நம்பிக்கையுணர்வு கொண்டிருக்கிறேன். இந்த வினாடியிலிருந்து இனிமேல் நானும் இனிப்பு சாப்பிடப் போவதில்லை என உங்களுக்கு உறுதியளிக்கிறேன் என்றான். |
2 | ['tam'] | கீழே கொடுக்கப்பட்டுள்ள வார்த்தைகளையும் தலைப்பையும் பயன்படுத்தி சிறு கதை எழுதுக.
வார்த்தைகள்: பரமார்த்தகுரு, முட்டாள், மூடன், மட்டி, மடையன், பேயன், சீடர்கள், பின்னிரவு, பயணம், ஆறு, மரத்தடி, விழிப்பு, தூக்கம், கொள்ளிக்கட்டை, அக்கரை, அபிஷ்டு, வழிப்போக்கன்,கோயில், மந்திர சக்தி, முதுகு
தலைப்பு: காணாமல் போனது யார்?
| பொழுது விடியாத பின்னிரவு நேரத்தில் பரமார்த்த குரு பயணம் செய்துகொண்டிருந்தபோது, ஆறு ஒன்று குறுக்கிட்டது. ஆறு வேகமாக சீறிப் பாய்ந்து கொண்டிருந்தது. ஆற்றில் சல சல இரைச்சல் இருப்பதால் அது விழித்துக் கொண்டிருக்கிறது என்று குரு கருதினார். அதனால், இந்த வேளையில் ஆற்றைக் கடப்பது ஆபத்து எனப் பயந்தார். எனவே, ஆறு தூங்கும் வேளையில் கடப்பது நல்லது என்று முடிவு செய்தார். ஆற்றின் கரையில் இருந்த ஒரு மரத்தடியில் தனது சீடர்களுடன் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தார். சிறிது நேரம் கழித்து, குரு தனது சீடர்களில் ஒருவனான மட்டியை அழைத்தார். அவன் கையில் ஒரு கொள்ளிக் கட்டையைக் கொடுத்து, ஆற்றின் அருகில் சென்று, அது இன்னும் விழித்துக் கொண்டிருக்கிறதா? தூங்கத் துவங்கிவிட்டதா? என்று பார்த்து வருமாறு அனுப்பினார். மட்டி, தன் குருவின் கட்டளையை ஏற்று கொள்ளிக் கட்டையைக் கையில் பிடித்துக் கொண்டு, ஆற்றை நெருங்கினான். ஆற்று நீர் தன் மேல் பட்டுவிடாத படி, எட்டி நின்று கொண்டு, கொள்ளிக்கட்டையை நீரில் அமிழ்த்தினான். அது சுரீரென்று ஒலியுடன் அணைந்து விட்டது. அந்த ஒலியைக் கேட்டதும் மட்டி பதறிப் போனான். வேகமாகக் குருவை நோக்கி ஓடி வந்தான். குருவே ஆறு விழித்துக் கொண்டிருக்கிறது. கொள்ளிக் கட்டையால் அதைக் தொட்டவுடன் சீறி விட்டது. நல்ல வேளை தப்பியோடி வந்து விட்டேன் என்று பயந்து கொண்டே கூறினான். அதனைக் கேட்ட குரு, "நீ போய்ச் சோதித்துப் பார்த்துவிட்டு வந்தது நல்லதாய்ப் போயிற்று. ஆறு விழித்துக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் நாம் ஆற்றைக் கடந்தால் ஆற்றின் பொல்லாத கோபத்துக்குள்ளாகியிருப்போம். அது நன்றாகத் தூங்கும் வரை பொறுத்திருந்து, அதன்பின் பயணத்தைத் தொடர்வோம்" என்று கூறிவிட்டு அமர்ந்தார். சீடர்கள், அவரவர்களுக்குத் தெரிந்த கதைகளைக் கூறிப் பொழுதைப் போக்கிக் கொண்டிருந்தனர். பொழுது வெளுக்க ஆரம்பித்தது. அயர்ந்து தூங்கிய குரு திடுக்கிட்டு எழுந்தார். மடையனை அழைத்தார். "மடையா! பொழுது, புலர ஆரம்பித்துவிட்டது. இப்போதாவது ஆறு தூங்குகிறதா, விழித்துக் கொண்டிருக்கிறதா என்று பார்த்துவிட்டு வா" என்று கூறினார். உடனே மடையன், மட்டி கொண்டு வந்த போட்ட அணைந்து போன கொள்ளிக் கட்டையை எடுத்துக் கொண்டு ஆற்றை நெருங்கினான். கட்டையை நீருக்குள் விட்டான். எந்தவித ஒலியும் ஏற்படவில்லை. அவனுடைய மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. வேகமாக ஓடி வந்தான். "குரு! இப்போது ஆறு நன்றாக அயர்ந்து தூங்கிக் கொண்டு இருக்கிறது" என்று கூறினான். "அப்படியா, இதுதான் சரியான வேளை யாரும் எந்த ஒலியும் எழுப்பாமல் மிகவுவம் அமைதியாக வாருங்கள். சப்தம் போட்டால் ஆறு விழித்துக் கொள்ளும்" என்று தன் சீடர்களை எச்சரித்து விட்டு மெல்ல மெல்ல அடியெடுத்து வைத்து குரு ஆற்றை நோக்கி நடக்க, சீடர்களும் பின் தொடாந்தனர். பயந்து கொண்டே ஆற்றைக் கடந்து, ஒரு வழியாக அக்கரை வந்து சேர்ந்தனர். தன்னுடைய சீடர்கள் அனைவரும் பத்திரமாக வந்து சேர்ந்துவிட்டார்களா என்று சரிபார்க்க குரு எண்ணினார். தனது சீடர்களில் ஒருவனை அழைத்து, "சீடனே! என்னையும் சேர்த்து நாம் ஆறு பேர். நாம் அனைவரும் பத்திரமாக இருக்கிறோமா? நம்மில் யாரையாவது அந்தப் பொல்லாத ஆறு விழுங்கிவிட்டதா? எனச் சரிபார்த்து எண்ணிக்கூறு?" என்று கூறினார். அபிஷ்டு தன் முன்னால் நிற்பவர்களை ஒன்று இரண்டு என்று எண்ண ஆரம்பித்தான். தன்னை மட்டும் சேர்க்காமல் மற்றவர்களை மட்டும் எண்ணி, "குருவே, ஐந்து பேர்தான் உள்ளோம்" என்ற கூறினான். ஆறு பேரில் ஒருவரைக் காணோம் என்று குரு திடுக்கிட்டுப் போனார். தங்களில் ஒருவரை ஆறு விழுங்கிவிட்டது என்ற அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். அதனால், குரு மீண்டும் எண்ணிப் பார்க்குமாறு மற்றொரு சீடனிடம் கூறினார். அவனும் தன்னை விட்டுவிட்டு மற்றவர்களை மட்டும் எண்ணி விட்டு, "குருவே, மோசம் போனோம். அபிஷ்டு எண்ணியது சரியே! நம்மில் ஒருவரைக் காணோம். ஐவர்தான் உள்ளோம் என்று அலறினான். இப்படியே மற்ற சீடர்களும், குருவும் தங்களைச் சேர்க்காமலேயே எண்ணி ஐவர்தான் என்று முடிவு செய்தனர். தங்களில் ஒருவரை இழந்துவிட்ட சோகத்தில் அழுதுகொண்டிருந்தனர். குருவுக்கு ஆத்திரம் தாங்கவில்லை. தன் சீடர்களில் ஒருவரை அபகரித்துக் கொண்ட ஆற்றின் மீது கடுங் கோபம் கொண்டார். அதனைப் பலவாறு பழித்துக் கூறி சாபமிட்டார். குருவும் சீடர்களும் துயரம் தாங்காமல் அழுது புலம்ப ஆரம்பித்துவிட்டனர். ஆற்றோடு போனவன் தங்களில் யார் என்று அறிந்து கொள்ளாமலேயே துக்கம் கொண்டாட ஆரம்பித்துவிட்டனர். அந்த நேரத்தில் வழிப்போக்கன் ஒருவன் குருவும், சீடர்களும் இருந்த இடத்தை நோக்கி வந்து கொண்டிருந்தான். அவர்கள் துயரத்தில் ஆழ்ந்திருப்பதைக் கண்டு அனுதாபம் கொண்டான். காரணம் என்ன என்று அவர்களிடம் விசாரித்தான். சீடர்கள் நடந்ததைக் கூறி மேலும் அழுதனர். வழிப் போக்கன் அவர்களை எண்ணிப் பார்த்தான். அவர்களின் மடமையை எண்ணி மனதிற்குள் சிரித்துக் கொண்டான். "அன்பர்களே! நடந்தது நடந்ததாக இருக்கட்டும். போனவர்களை மீட்கும் மந்திர சக்தி என்னிடம் உண்டு. உங்களில் ஆறு விழுங்கிய நபரை மீட்டுத் தருகிறேன். அதற்கு என்ன சன்மானம் கொடுப்பீர்கள்?" என்று வழிப்போக்கன் கேட்டான். "ஐயா, எங்களில் காணாமல் போனவரைத் தாங்கள் மீட்டுக் கொடுத்தால் எங்களிடம் உள்ள பணம் முழுவதையும் தந்து விடுகிறோம். தங்களுக்கு நாங்கள் என்றும் நன்றிக் கடன் பட்டவர்களாக இருப்போம்" என்று, குரு நெகிழ்ந்து கூறினார். வழிப்போக்கன் தன் கையில் ஒரு குறுந்தடி வைத்திருந்தான். அதனை எடுத்தவாறு, "இந்தக் கோலில்தான் மந்திர சக்தி இருக்கிறது. நீங்கள் வரிசையாக நில்லுங்கள். நான் இந்தத் தடியால் முதலில் நிற்பவர் முதுகில் தட்டுவேன். அவர் ‘ஒன்று" என்று கூறிவிட்டுத் தன் பெயரைக் கூறவேண்டும்" என்று கூறினான். வழிப்போக்கன் கூறியவாறே, குரு வரிசையில் முதலிலும் அதனையடுத்து சீடர்களும் வரிசையாக நின்றனர். முதலில் குருவின் முதுகில் கம்பால் தட்டினான். அவர், "ஒன்று. என் பெயர் பரமார்த்த குரு" என்று கூறினார். அடுத்தவனைத் தட்டியதும் ‘இரண்டு" என்று கூறித் தன் பெயரையும் சொன்னான். இவ்வாறே மற்றவர்களும் முதுகில் தட்டியதும் தங்கள் பெயருடன் எண்ணிக்கையையும் கூறினர். கடைசியாக நின்றவன் "ஆறு, என் பெயர் மூடம்" என்ற கூறியதும் அவர்கள் அனைவருக்கும் மகிழ்ச்சி தாங்கவில்லை. காணாமல் போனவன் கிடைத்து விட்டான், இப்போது ஆறு பேர் உள்ளோம் என்று கூறி ஆனந்தக் கூத்தாடினர். தங்களில் ஒருவனை மீட்டுத் தந்த வழிபோக்கனின் அதிசய ஆற்றலை எண்ணி வியந்தனர். அவனைப் போற்றிப் புகழ்ந்து, தங்களிடமிருந்த பணம் முழுவதையும் தந்தனர். அதிருஷ்டத்தை நினைத்துக் கடவுளுக்கு நன்றி கூறினான் போக்கன். |
1 | ['tam'] | கீழே கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பைக் கொடு.
கதை: எப்படியோ அரசனை ஏமாற்றி, மட நாட்டின் முதல் மந்திரி ஆகி விட்டார், பரமார்த்த குரு. அவருக்குத் துணையாகச் சீடர்களும் அரண்மனை ஊழியர்களாக நியமிக்கப்பட்டனர். "நம் குரு முதல் அமைச்சர் ஆகிவிட்டதால், இனி கவலையே பட வேண்டாம்" என்று சந்தோஷம் கொண்டனர், ஐந்து சீடர்களும் ஒருநாள், "நமது நாட்டுப் படை பலம் எப்படி இருக்கிறது?" என்று பரமார்த்தரிடம் கேட்டான் மட மன்னன். இதுதான் நல்ல சமயம் என்ற நினைத்தார், பரமார்த்தர். "மன்னா! உங்களிடம் சொல்லவே நாக்குக் கூசுகிறது. நம் நாட்டு யானைகள் எல்லாம் பட்டினியால் வாடி இளைத்து, பன்றிகள் போல் ஆகிவிட்டன!" என்று புளுகினார். சீடர்களும், "ஆமாம் அரசே! இப்படியே கவனிக்காமல் விட்டால், போரில் கட்டாயம் தோல்வியே ஏற்படும்" என்று ஒத்து ஊதினார்கள். அதைக் கேட்ட மன்னன், "அப்படியா? இரண்டு யானைகளை இங்கே அழைத்து வாருங்கள்" என்று கட்டளை இட்டான். மட்டியும் மடையனும் ஓடிச் சென்று இரண்டு பன்றிக் குட்டிகளை அரண்மனைக்குள் ஓட்டி வந்தனர். அதைப் பார்த்த அரசன், "சே! சே! பார்க்கவே சகிக்கவில்லையே! இவையா நம் நாட்டு யானைகள்?" என்று கேட்டான். முதலில் மட மன்னனுக்குக் கொஞ்சம் சந்தேகம் எற்பட்டது. "இது யானை என்றால், தும்பிக்கையைக் காணோமே?" என்று கேட்டான். "மன்னா! எல்லாம் முதலில் தும்பிக்கையுடன் இருந்த யானைகள் தான். பட்டினி கிடப்பதால் உடலும் மெலிந்து விட்டது, தும்பிக்கையும் சுருங்கி விட்டது" என்று விளக்கினார் பரமார்த்தர். "இவை மறுபடியும் பழைய உருவம் அடைவதற்கு என்ன செய்ய வேண்டும்?" என்று கேட்டான் மடமன்னன். "மன்னா! இன்னொரு விஷயம். அதையும் பாருங்கள், பிறகு வைத்தியம் சொல்கிறோம்" என்றார் குரு. "நமது நாட்டுக் குதிரைப் படைகளும் இதே போல் இளைத்து விட்டன. எல்லாம் ஆட்டுக் குட்டிகள் மாதிரி ஆகிவிட்டன!" என்றான் மூடன். அப்படியா? வியப்பாக இருக்கிறதே! என்ன செய்யலாம் சொல்லுங்கள் என்றான் மன்னன். மன்னா! நாங்கள் அருமையான திட்டம் ஒன்று வைத்துள்ளோம். அதன்படி ஆயிரம் பொற்காசுகள் செலவாகும். அந்த ஆயிரம் பொற்காசுகளையும் எங்களிடமே கொடுத்து விடுங்கள். நாங்கள் எல்லாவற்றையும் பழையபடி குண்டாக்கி விடுகிறோம்! என்றனர், முட்டாளும், மூடனும் மடமன்னன் பெரிய கஞ்சன். அதனால் ஆயிரம் பொற்காசு செலவழிக்க மனம் வரவில்லை. "வேறு ஏதாவது யோசனை இருந்தால் சொல்லுங்கள்!" என்று கட்டளையிட்டான். "சே! நம் திட்டம் எல்லாம் பாழாகி விட்டதே!" என்று வருந்தினார், பரமார்த்தர். சீடர்களுக்கும் ஆத்திரமாக இருந்தது "அரசே! எல்லா யானைகளையும், குதிரைகளையும் நாட்டில் உள்ள வயல்களில் மேயவிடுவோம்! கொஞ்ச நாளில் சரியாகிவிடும்!" என்றான் மண்டு. "இதை வேண்டுமானால் செய்யலாம்!" என்றான் மடமன்னன். பரமார்த்தரின் ஆணையின்படி, மடநாட்டில் உள்ள பன்றிகள், ஆடுகள் அனைத்தும் அவிழ்த்து விடப்பட்டன. எல்லாம் சேர்ந்து கொண்டு, குடி மக்களின் வயல்களில் சென்று மேயத் தொடங்கின. இரண்டே நாளில் எல்லா வகையான தானியங்களும் பாழாகி விட்டன. அடுத்த மாதமே நாடு முழுவதும் பஞ்சம் ஏற்பட்டது. பலபேர் சோற்றுக்கே வழியில்லாமல் இறந்தனர். பரமார்த்தரும், சீடர்களும் ஒரு பயனும் இன்றித் தண்டச் சோற்றுத் தடிராமன்களாக இருப்பதைக் கண்ட மன்னன், எல்லோரையும் விரட்டி அடித்தான். அடடா! எப்படியாவது ஆயிரம் பொற்காசுகளைச் சம்பாதித்து விடலாம் என்று நினைத்தோம். கடைசியில் இப்படிப் பாழாகி விட்டதே! என்று புலம்பியபடி பழையபடி மடத்துக்கே திரும்பினார்கள்.
| கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பு 'தண்டச் சோற்றுத் தடிராமன்கள்' என்பதாகும். |
1 | ['tam'] | கீழே கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பைக் கொடு.
கதை: ஒரு நாள் ஒரு மூதாட்டி மண் அடுப்பில் வைத்து சமையல் செய்து கொண்டிருந்தாள். அவள் அடுப்பில் வைத்திருந்த தண்ணீர் கொதித்ததால் அதற்குள் சில காய்கறிகளை போட்டாள். அப்போது பட்டாணி அந்தப் சட்டியிலிருந்து வெளியே குதித்து வந்து, “என்னை வேக வைக்கவேண்டாம். என்னை சமைக்கவேண்டாம்” என்று கத்தியது. “மூதாட்டியோ நீ மரியாதையாக பழையபடி சட்டிக்குள் போகிறாயா? இல்லை உன்னை நசுக்கட்டுமா?” என்றாள். ஆனால் மூதாட்டியின் உத்தரவை பட்டாணி கேட்கவில்லை. அங்கிருந்து வேகமாக ஓட்டம் பிடித்தது. அப்போது “நில் நில் ஓடாதே’ உன்னுடன் நானும் வருகிறேன்” என்று இன்னொரு குரல் கேட்டது. பட்டாணி திரும்பிப் பார்த்தது, அப்படிக் கத்தியது என்று சொன்னது எரிந்து கொண்டிருந்த ஒரு துண்டு நிலக்கரி. “அடுப்பிற்குள் இருந்தால் எனக்கு மூச்சு முட்டுகிறது. அதனால் நானும் உன்னுடன் வெளியுலகைப் பார்க்க வருகிறேன்” என்றது, நிலக்கரி. “என்ன வெளியுலகைப் பார்க்கப் போகிறாயா?. அப்படியென்றால் என்னையும் உங்களுடன் அழைத்துச் செல்லுங்கள்”. என்றது கீழே கிடந்த வைக்கோல் ஒன்று. “சரி, வா போகலாம்” என்று நிலக்கரியும் பட்டாணியும்? வைக்கோலை தங்களுடன் கூட்டு சேர்த்துக் கொண்டன. மூன்றும் சேர்ந்து நடந்தபோது சாலையின் ஓரிடத்தில் விரிசல் விட்டிருந்தது. அந்த இடத்தில் தண்ணீர் ஓடிக் கொண்டிருந்தது. “இனி நாம் தொடர்ந்து செல்ல முடியாது. அதனால் நான் அடுப்பிற்கே போய் விடுகிறேன்” என்றது, நிலக்கரி. “அப்படியென்றால் நானும் அடுப்பில் எரியும் சட்டிக்குள் போய் விடுவேன்” என்றது பட்டாணி. “நண்பர்களே சோர்ந்து விடாதீர்கள். நான் இந்த பாலத்திற்கு (விரிசல்) இணைப்பாக இருக்கிறேன். நீங்கள் இருவரும் என்மீது ஏறி நடந்து மறுபக்கம் போய்விடலாம்” என்று நம்பிக்கைïட்டியது, வைக்கோல். முதலில் பட்டாணி, வைக்கோல் மீது ஏறி விரிசலின் மறுபக்கத்தை அடைந்தது. ஆனால் எரிந்து கொண்டிருந்த நிலக்கரி, வைக்கோல் மீது ஏறியதும் அது தீப்பிடித்துக் கொண்டது. இதனால் இரண்டும் சேர்ந்து தண்ணீருக்குள் விழுந்தன. “ஷ்..ஷ்..ஷ்…”தன் மீது எரிந்து கொண்டிருந்த நெருப்பு அணைந்ததும் நிலக்கரி பெருமூச்சு விட்டது. அந்த வினோத சத்தத்தைக் கேட்ட பட்டாணி சிரிக்க ஆரம்பித்தது. தொடர்ந்து அது பலமாகச் சிரித்ததால் வெடித்து சிதறி அதிலிருந்த ஒவ்வொரு பட்டாணியும் ஓட ஆரம்பித்தன. அந்தப் பட்டாணிகள் அனைத்தும் ஒரு தையல்கடையை நோக்கிச் சென்றன. தையல்காரரிடம் தயவு செய்து எங்களை ஒன்றாக வைத்து தைத்து விடுங்கள் என்று கேட்டுக் கொண்டன. தையல்காரரும் பட்டாணிகளின் வேண்டுகோளை ஏற்று ஒரு தடித்த நூல் கொண்டு தைத்து விட்டார். இதனால் தான் அன்று முதல் பட்டாணியை நாம் உரிப்பதற்கு அதன் மேல் தோலில் நூல் போல் உள்ள பகுதியை உரிக்கவேண்டியிருக்கிறது.
| கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பு 'பட்டாணி' என்பதாகும். |
2 | ['tam'] | கீழே கொடுக்கப்பட்டுள்ள வார்த்தைகளையும் தலைப்பையும் பயன்படுத்தி சிறு கதை எழுதுக.
வார்த்தைகள்: போலிச்சாமியார், தெனாலிராமன், போதை மருந்து, கழுதைகள், குழி, கூன், மன்னர்
தலைப்பு: கூன் வண்ணான்
| ஒரு போலிச்சாமியார் ஒருவன் விஜயநகரத்துக்கு வந்து சேர்ந்தான். அவன் மக்களுக்கு போதை மருந்தை விற்று பணத்தை ஏராளமாக சம்பாதித்துக் கொண்டிருந்தான். போதை மருந்தை உட்கொண்ட மக்கள் பலர் பைத்தியம் ஆனார்கள். பலர் மாண்டார்கள். இச்செய்தி தெனாலிராமனுக்கு எட்டியது. ஆகையால் போலிச் சாமியாரைத் தொலைத்துக் கட்ட முடிவு செய்தான். அதன்படியே சாமியாரை சந்தித்து அவனுடன் நட்புக் கொண்டான். தகுந்த சமயம் பார்த்து சாமியாரைக் கொன்று விட்டான். இச்செய்தி மன்னனுக்கு எட்டியது. தெனாலிராமனுக்கு ஆள் அனுப்பி அழைத்துவரச் செய்தார். ஏன் சாமியாரைக் கொன்றாய் என்று கேட்டார். அதற்குப் போதை மருந்தால் பலர் பைத்தியம் பிடித்து மாண்டனர். ஆகையால் தான் கொன்றேன் என்றான். போலிச்சாமியார் தவறு செய்து இருந்தாலும் அவனைக் கொல்ல உனக்கு ஏது அதிகாரம்? அதை என்னிடமல்லவா தெரிவித்திருக்க வேண்டும். அப்படி தெரிவித்திருந்தால் நானே அந்தப் போலிச் சாமியாருக்குத் தக்க தண்டனை கொடுத்திருப்பேன். இவ்விஷயத்தில் நீ தன்னிச்சையாக செயல் பட்டதற்கு உனக்கு மரணதண்டனை விதிக்கிறேன் என மன்னர் தீர்ப்புக் கூறினார். உடனே தன் ஆட்களை அழைத்து ஊருக்கு ஒதுக்குப்புறத்தில் ஒரு குழியை வெட்டி அதில் தெனாலிராமனை கழுத்தளவு புதைத்து யானையை விட்டு தலையை இடறுமாறு பணித்தார். அவ்வாறே தெனாலிராமனும் குழியில் கழுத்தளவு புதைக்கப்பட்டான். பின் யானையைக் கொண்டு வர பணியாளர்கள் சென்று விட்டனர். அப்போது சிலகழுதைகளை ஓட்டிக்கொண்டு ஒரு கூன் வண்ணான் வந்து கொண்டிந்தான். ஒரு மனிதன் பூமிக்குள் கழுத்தளவு புதையுண்டு இருப்பதைப் பார்த்து ஆச்சரியப்பட்டான். பின் தெனாலிராமனிடம் வந்து ஐயா, தாங்கள் ஏன் இவ்வாறு புதையுண்டு இருக்கிறீர்கள் என்று கேட்டான். அதற்கு தெனாலிராமன் எனக்கு மிக நீண்ட நாட்களாகவே முதுகு கூன் விழுந்து விட்டது. அதனால் மிகவும் சிரமப்பட்டு நடந்து வந்தேன். நேற்று ஒரு வைத்தியரை ஆலோசனை கேட்டேன். அவர்தான் ஒருநாள் முழுவதும் இவ்வாறு இருந்தால் கூன் நிமிரிந்து விடும் என்று சொன்னார். நான் குழியில் புதையுண்டு ஒருநாள் ஆகப் போகிறது. ஆகையால் மண்ணைத் தோண்டி என்னை மேலே எடு என்றான். அதன்படியே கூன் வண்ணானும் மண்ணைத் தோண்டி தெனாலிராமனை மேலே தூக்கி விட்டான். இப்போது தெனாலிராமனைப் பார்த்தான். அவன் முதுகு கூன் இல்லாமல் நேராக நிமிர்ந்து நின்றான். இதை உண்மை என்று நம்பிய கூன் வண்ணான் அதே குழியில் அவனைக் கழுத்தளவு புதைக்கச் சொன்னான். தெனாலிராமனும் கூன் வண்ணானை அவ்வாறே செய்தான். உடனே தெனாலிராமன் அவ்விடத்தைவிட்டு ஒரே ஓட்டமாக ஓடி விட்டான். சிறிது நேரத்தில் பணியாட்கள் யானையுடன் அங்கு வந்தனர். யானையை விட்டு குழியில் புதையுண்ட மனிதனின் தலையை இடறச் செய்தனர். கூன் வண்ணான் தலை சின்னா பின்னமாகியது. அச்சமயத்தில் தன் அரண்மனை அதிகாரிகளும் போலிச் சாமியாரைக் கொன்றது நியாம்தான் அதனால் தெனாலிராமனைக் கொல்ல வேண்டாம் என்று கேட்டுக் கொண்டனர். அந்நேரத்தில் பணியாட்களும் அங்கு வந்து "தெனாலிராமனின் தலையை யானையை விட்டு இடறிவிட்டோம்" என்று தெரிவித்தனர். தெனாலிராமனின் மரணத்துக்கு மன்னர் வருந்திக் கொண்டிருக்கையில் மனனர் முன் தெனாலிராமன் தோன்றினான். தெனாலிராமனைக் கண்ட மன்னர் மகிழ்ந்தார். நீ யானையால் இறந்ததாகப் பணியாட்கள் தெரிவித்தார்களே.. பின் எப்படி உயிரோடு வந்தாய் என்று வினவினார். அதற்குத் தெனாலிராமன் நடந்தவற்றை விவரமாகக் கூறினான். மன்னரும் அவனுடைய சாமர்த்தியத்துக்கு மனமாரப் பாராட்டி பரிசு வழங்கினார். |
2 | ['tam'] | கீழே கொடுக்கப்பட்டுள்ள வார்த்தைகளையும் தலைப்பையும் பயன்படுத்தி சிறு கதை எழுதுக.
வார்த்தைகள்: கிழவன், மனைவி, பூனை, மகன், இளவரசன், நரி, அரண்மனை, கொடுமை, வீரர்கள்
தலைப்பு: ஒருவர் மட்டும் போதாது
| ஓர் ஊரில் கிழவன் ஒருவன் தன் மனைவியுடன் வாழ்ந்து வந்தான். ஒரு பூனையை அவர்கள் அன்பாக வளர்த்து வந்தார்கள். முதுமையான அவர்களுக்கு ஒரு மகன் பிறந்தான். மகன் குழந்தையாக இருக்கும் போதே அவர்கள் இருவரும் இறந்து விட்டனர். அந்தக் குழந்தையை பூனை வளர்க்கத் தொடங்கியது. எங்கிருந்தோ பறவையின் மெல்லிய இறகுகளைக் கொண்டு வந்தது. அதில் மெத்தை செய்தது. குழந்தையை அந்த மெத்தையில் படுக்க வைத்தது. குழந்தையை வேளை தவறாமல் உணவு தந்தது. எப்பொழுதும் மெத்தையிலேயே அந்தக் குழந்தை இருந்ததால் அவனை இறகு இளவரசன் என்று அழைத்தது. ஆண்டுகள் ஓடின, குழந்தையும் வளர்ந்து பெரியவன் ஆனான். கட்டழகு வாய்ந்த அவனைக் கண்டு பூனை மகிழ்ந்தது. இறகு இளவரசனே! உனக்குத் திருமணம் செய்ய எண்ணியுள்ளேன், என்றது அது. எனக்கு யாரைப் பெண் கேட்பாய்? என்று கேட்டான் அவன். இந்த நாட்டு அரசனிடம் செல்வேன். இளவரசியை உனக்காகப் பெண் கேட்பேன். ஏழையாகிய எனக்கு இளவரசி மனைவியா? நடக்கக் கூடிய செயலா இது? கனவு காண்கிறாயா? உனக்கு ஏற்றவள் இளவரசிதான். நான் முடிவு செய்து விட்டேன். எப்படியும் இந்தத் திருமணத்தை முடிப்பேன். பொறுத்திருந்து பார். உனக்குப் பெண் கேட்டு நாளையே நான் அரசனிடம் செல்கிறேன், என்றது பூனை. மறுநாள் விடிகாலையில் எழுந்தது. அரசனைக் காண்பதற்காகப் புறப்பட்டது. காட்டு வழியே சென்று கொண்டிருந்த அதன் எதிரில் ஒரு முயல் வந்தது. முயலைப் பார்த்துப் பயந்து போன பூனை ஓட்டம் பிடித்தது. பூனையைப் பார்த்துப் பயந்து முயலும் ஓட்டம் பிடித்தது. பக்கத்தில் இருந்த குன்றைச் சுற்றி வந்த இரண்டும் சந்தித்தன. பூனையே! எங்கே போகிறாய்? என்று கேட்டது முயல். நான் அரசனிடம் செல்கிறேன். ஊரில் யாரும் என்னை நிம்மதியாக வாழ விடமாட்டேன் என்கிறார்கள். என்னை எப்பொழுதும் துரத்துகிறார்கள். நான் பயந்து கொண்டே வாழ்கிறேன். இவர்கள் செயல் குறித்து அரசனிடம் குறை சொல்லப் போகிறேன். நீதி தவறாத அரசன் எனக்கு நல்லது செய்வான், என்று இனிமையாகச் சொன்னது பூனை. கண்களில் கண்ணீர் வழிய, பூனையே! உன் நிலை பரவாயில்லை. அரசனின் வீரர்கள் வேட்டை நாய்களுடன் இங்கே வருகிறார்கள். எங்களை விரட்டுகிறார்கள். பொறி வைத்துப் பிடிக்கிறார்கள். சிறிது நேரம் கூட நாங்கள் நிம்மதியாகத் தங்க இங்கே இடம் இல்லை. நானும் உன்னுடன் வருகிறேன். அரசனிடம் எல்லாவற்றையும் விளக்கமாகச் சொல்லி எங்களைக் காப்பாற்றும்படி வேண்டுகிறேன், என்றது முயல். நீ அரசனிடம் செல். ஆனால் உன் முயற்சி வெற்றி பெறும் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை. ஏன்? எங்கள் ஊரில் நான் ஒரே ஒரு பூனைதான் இருக்கிறேன். நான் சொல்வதை அரசர் கேட்டு உதவி செய்வார். ஆனால் உன்னைப் பார்த்ததும் அவர், காட்டில் நூற்றுக்கணக்கான முயல்கள் உள்ளன. நீ மட்டும் தான் குறை சொல்ல வந்திருக்கிறாய், என்பார். குறைந்தது ஐம்பது முயல்களுடன் நீ அரசனிடம் சென்றால் அவர் கண்டிப்பாக உதவி செய்வார். பூனையே! இங்கேயே நில். நான் ஐம்பது முயல்களுடன் வருகிறேன், என்று அருகில் இருந்த புதருக்குள் மறைந்தது முயல். சிறிது நேரத்தில் ஐம்பது முயல்களுடன் வந்தது அது. பூனை முன்னால் சென்றது. எல்லா முயல்களும் அதைப் பின் தொடர்ந்தன. விந்தையான இந்த ஊர்வலம் பல ஊர்கள் வழியாகச் சென்றது. இதைப் பார்த்த மக்கள், பூனை தலைமை தாங்கி ஐம்பது முயல்களை அழைத்துச் செல்கிறதே, என்று வியப்புடன் பேசிக் கொண்டார்கள். கடைசியாக அந்த ஊர்வலம் அரசனின் அரண்மனையை அடைந்தது. அங்கு காவலுக்கு இருந்த வீரனைப் பார்த்து, நாங்கள் அரசனைப் பார்க்க வேண்டும், என்றது பூனை. அரண்மனை வாயிலில் எல்லோரும் தங்க வைக்கப்பட்டனர். பூனையை மட்டும் அரசனிடம் அழைத்துச் சென்றான் ஒரு வீரன். அரசனைப் பணிவாக வணங்கிய பூனை, இறகு இளவரசன் ஐம்பது முயல்களை உங்களுக்குப் பரிசாக அனுப்பி உள்ளார். இளவரசியாரை மணந்து கொள்ள அவர் விரும்புகிறார். இளவரசியாருக்கு அவரை விடப் பொருத்தமானவர் யாரும் இருக்க முடியாது, என்றது. வாயிலுக்கு வந்த அரசன் ஐம்பது முயல்களையும் பார்த்து வியப்பு அடைந்தான். இறகு இளவரசன் மிகவும் திறமையான வேட்டைக் காரனாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால் ஐம்பது முயல்களை எப்படிப் பிடிக்க முடியும் என்று நினைத்தான். என் வீரர்களும் முயல் வேட்டைக்குச் செல்கிறார்கள். இரண்டு அல்லது மூன்று முயல்களுக்கு மேல் அவர்கள் பிடித்து வருவது இல்லை. உங்கள் இளவரசன் ஐம்பது முயல்களை அதுவும் உயிருடன் பிடித்து இருக்கிறான், என்றான் அவன். அரசே! இந்த முயல்களை எல்லாம் ஒரு அறைக்குள் வைத்துப் பூட்ட வேண்டும். அவற்றைக் காவல் காக்கின்றவர் யாரும் இல்லை, என்றது பூனை. சமையல்காரனை அழைத்த அரசன், இனி நம் அரண்மனையில் நல்ல விருந்துதான். ஐம்பது முயல்களையும் அடைத்து வைக்க ஒரு அறையைத் திறந்து விடு, என்று கட்டளை இட்டான். முயல்களிடம் வந்தது பூனை. நாம் அனைவரும் தங்குவதற்கு அரசர் ஒரு அறையைத் தந்து உள்ளார். நமக்கு நல்ல சாப்பாடு அங்கே உள்ளது. அரசர் பிறகு வந்து நம் குறையைக் கேட்டு உதவி செய்வார், என்றது. சமையல்காரன் ஓர் அறையைத் திறந்து விட்டான். எல்லா முயல்களும் உள்ளே நுழைந்தன. உடனே அவன் கதவைத் தாழிட்டுப் பூட்டுப் போட்டான். வெளியே காவலுக்கு வீரர்கள் நின்றனர். பூனை தங்களை ஏமாற்றி விட்டதை முயல்கள் உணர்ந்தன. பாவம் அவை என்ன செய்யும்? தங்களுக்கு ஏற்படப் போகும் கதியை எண்ணி அவை அழுதன. பூனைக்கு அரசன் சிறந்த விருந்து அளித்தான். இறகு இளவரசனைப் பற்றி மிகவும் புகழ்ந்து பேசியது அது. இளவரசரை வந்து என்னைச் சந்திக்கச் சொல், என்றான் அரசன். அரசே! எங்கள் இளவரசர் தங்களைச் சந்திக்கக் கட்டாயம் வருவார். ஆனால் அவருக்கு இப்பொழுது ஏராளமான வேலைகள் உள்ளன, என்றது பூனை. விருந்து முடிந்தது. அரசன் நிறைய பரிசுகளைப் பூனைக்குத் தந்தான். அரசனிடம் விடை பெற்ற பூனை மகிழ்ச்சியுடன் தன் வீட்டிற்கு வந்தது. இளைஞனே! உனக்குத் திருமணம் செய்து வைக்கப் போகிறேன், என்றது அது. யாருடன்? என்று மீண்டும் கேட்டான் அவன். இளவரசிதான் மணமகள், என்றது அது. ஒரு வாரம் சென்றது. மீண்டும் அது அரசனைக் காணக் காட்டு வழியே சென்றது. எதிரில் வந்த நரியை நேருக்கு நேர் பார்த்தது அது. இரண்டும் எதிர் எதிர் திசையில் ஓடின. மலைக்குப் பின்னால் இரண்டும் மீண்டும் சந்தித்தன. பூனையே! எங்கே செல்கிறாய்? அரசனிடம் என் நிலையை எடுத்துச் சொல்ல? உனக்கு என்ன குறை? ஊரில் எல்லோரும் என்னை அடித்து விரட்டுகிறார்கள். சரியாக சாப்பாடு போடுவது இல்லை. எனக்கு வாழ்க்கையே வெறுத்து விட்டது. நீதி கேட்டு அரசரிடம் செல்கிறேன். நரியின் கண்களில் கண்ணீர் வழிந்தது. இப்பொழுது, என்னால் இந்தக் காட்டில் இருக்கவே முடியவில்லை. வேட்டைக்காரர்கள் நாய்களுடன் வந்து எங்களை விரட்டுகிறார்கள். குழிக்குள் மறைந்தாலும் புகை போட்டு எங்களை வெளியே வரவழைக்கிறார்கள். அவர்களுடைய அம்புகளால் நாங்கள் பலர் சாகிறோம். உன்னுடன் நானும் வந்து அரசரிடம் நீதி கேட்கிறேன். என்னையும் அழைத்துச் செல், என்றது. நரியாரே! நீர் தனியாக வருவது நல்லது அல்ல. எங்கள் ஊரில் நான் ஒருவன்தான் பூனை. அதனால் நான் சொல்வதை அரசர் கேட்பார். நீர் மட்டும் தனியே வந்து குறை சொன்னால் அவர் ஏற்றுக் கொள்ள மாட்டார். காட்டில் ஏராளமான நரிகள் உள்ளனவே. ஏன் அவை வந்து குறை சொல்லவில்லை! என்று கேட்பார். ஐம்பது நரிகள் ஒன்றாக வந்தால் அரசர் நீங்கள் சொல்வதை நம்புவார், என்றது. சிறிது நேரம் காத்திரு, என்ற நரி அங்கும் இங்கும் ஓடியது. ஐம்பது நரிகளுடன் அங்கு வந்தது. அரண்மனைக்குச் சென்றதும் யார் எப்படிப் பேச வேண்டும் என்று அவற்றிடம் விளக்கிச் சொன்னது பூனை. நீ சொல்வது போலவே நாங்கள் நடந்து கொள்வோம், என்றது நரிகள். பூனை முன்னால் சென்றது. எல்லா நரிகளும் அதைப் பின் தொடர்ந்தன. அவற்றின் ஊர்வலம் பல ஊர்கள் வழியாகச் சென்றது. இதைப் பார்த்த மக்கள், என்ன வேடிக்கையாக இருக்கிறது. போன வாரம் தான் இந்த பூனை ஐம்பது முயல்களுடன் ஊர்வலம் போனது. இப்பொழுது ஐம்பது நரிகளுடன் ஊர்வலம் போகிறது, என்று பேசிக் கொண்டார்கள். ஊர்வலம் அரண்மனையை அடைந்தது. காவலுக்கு இருந்த வீரர்கள் பூனையை அரசனிடம் அழைத்துச் சென்றார்கள். பணிவாக வணங்கிய பூனை, அரசர் பெருமானே! இறகு இளவரசர் தங்களுக்கு அன்பளிப்பாக ஐம்பது நரிகளை அனுப்பி வைத்துள்ளார். இளவரசியாரை மணக்க விரும்புகிறார், என்றது. வேலைக்காரர்களை அழைதூத அரசன், நரிகளை ஒரு அறையில் அடைத்து வையுங்கள். எவையும் தப்பிச் செல்லக் கூடாது. பூனைக்கு நல்ல விருந்து தர வேண்டும். அதற்கும் ஏற்பாடு செய்யுங்கள், என்று கட்டளை இட்டான். நரிகளை அரண்மனைக்குள் அழைத்து வந்தது பூனை. அங்கே ஒரு அறையில் முயல்களைக் கொன்று தோல் உரித்துக் கொண்டிருந்தார்கள் வேலைக்காரர்கள். முயல்கள் அழுது புலம்பிக் கொண்டிருந்தன. பெருங் கூச்சலையும் அலறலையும் கேட்ட நரிகள், அங்கே என்ன சத்தம்?, என்று பூனையைக் கேட்டன. ஏழு நாட்களுக்கு முன் இங்கே சில முயல்கள் வந்தன. தங்கள் குறையை அரசரிடம் தெரிவித்தன. கவனமாகக் கேட்ட அவர் அவற்றிற்கு நீதி வழங்கினார். அது மட்டும் அல்ல. பெரிய விருந்திற்கும் ஏற்பாடு செய்தார். விருந்தில் முயல்கள் ஏராளமான மதுரைக் குடித்தன. மகிழ்ச்சியால் தலையே வெடித்து விடுவது போல அவை கூச்சல் போடுகின்றன. அந்த சத்தம் தான் இது, என்றது பூனை. முயல்கள் இருக்கும் அறையில் எங்களைத் தங்க வைக்க வேண்டாம். அவை எப்பொழுதும் குடித்து விட்டுச் சண்டை போடும் இயல்புடையவை. எங்களையும் கெடுத்து விடும். வேறு அறையில் தங்க வையுங்கள், என்றன நரிகள். வேலைக்காரன் பக்கத்து அறையைத் திறந்து விட்டான். எல்லா நரிகளும் உள்ளே நுழைந்தன. உடனே அவன் கதவைத் தாழிட்டுப் பூட்டு போட்டான். தாங்கள் தவறை நரிகள் உணர்ந்தன. தங்களுக்கு ஏற்படப் போகும் கதியை எண்ணி வருந்தின. விருந்திற்கு வந்த பூனையை அரசன் வரவேற்றார். விதவிதமான உணவு வகைகள் மேசையில் பரிமாறப்பட்டு இருந்தன. உங்கள் இறகு இளவரசன் மிகச் சிறந்த வேட்டைக்காரனாக இருக்க வேண்டும். ஆற்றல் வாய்ந்தவனாகவும் திறமைசாலியாகவும் இருக்க வேண்டும். இல்லாவிட்டால் ஐம்பது நரிகளை உயிருடன் பிடிக்க முடியுமா? என்னுடைய வேட்டைக்காரர்களும் நரி வேட்டைக்குச் செல்கிறார்கள் பெரும்பாலும் வெறுங்கையுடன் திரும்புகிறார்கள். சில சமயம் ஒன்று அல்லது இரண்டு நரியைக் கொன்று எடுத்து வருவார்கள். அதன் மேல் தோல் எதற்கும் பயன்படாத வண்ணம் கிழிந்து வீணாகி இருக்கும், என்றான் அரசன். அரசே! எங்கள் இளவரசர் வீரம் உள்ளவர். வலிமை வாய்ந்தவர். இந்த உலகத்திலேயே அவரைப் போன்ற வீரம் யாரும் இல்லை. என்று புகழ்ந்தது பூனை. அவர் எங்கள் அரண்மனைக்கு வந்தால் இந்த அரண்மனையே பெருமை பெறும். இளவரசிக்கு அவர் பொருத்தமானவர். நான் அவரைச் சந்தித்தால் திருமணம் பற்றிப் பேசலாம், என்றான் அரசன். கண்டிப்பாக அவரை அழைத்து வருகிறேன். மேன்மை தங்கிய தங்களைச் சந்திப்பதில் அவருக்கு மகிழ்ச்சி, என்றது பூனை. விலை உயர்ந்த ஏராளமான பரிசுப் பொருள்களைப் பூனைக்கு வழங்கினார் அரசர். வீட்டிற்கு வந்தது அது. தூங்கிக் கொண்டிருந்த இளைஞனை எழுப்பியது. உனக்கும் இளவரசிக்கும் திருமணம் உறுதியாகி விட்டது. நான் சொல்கிறபடி நட, என்றது அது. மகிழ்ச்சியுடன் புறப்பட்டான் அவன். பூனை வழிகாட்டிக் கொண்டே நடந்தது. இருவரும் நெடுந்தூரம் நடந்தார்கள். வழியில் பாலம் ஒன்று வந்தது. பாலத்திற்கு அடியில் நீ ஒளிந்து கொள். நான் சிறிது நேரத்தில் வருகிறேன், என்றது பூனை. அவனும் ஒளிந்து கொண்டான். ஊருக்குள் சென்ற பூனை கவசங்கள், தொப்பிகள் பலவற்றை வாங்கியது. எல்லாவற்றையும் ஆற்றில் போட்டது. இறகு இளவரசனே! இங்கேயே இரு. நான் அரசனுடன் இங்கே வருகிறேன். எங்களைப் பார்த்த உடன் வெளியே வந்து விடாதே. நான் நல்ல ஆடைகளை உன்னிடம் தருகிறேன். அதன் பிறகு வெளியே வரலாம், என்று சொன்னது. அப்படியே செய்கிறேன், என்றான் அவன். அரண்மனைக்கு வேகமாக ஓடியது பூனை. அதைப் பார்த்து அரசன், இப்பொழுதும் இறகு இளவரசன் வரவில்லையா? என்று ஆர்வத்துடன் கேட்டான். அரசே! இளவரசர் தங்களைக் காணப் பெரும் படையுடன் வந்தார். வழியில் ஆற்றைக் கடக்கும்போது எல்லா வீரர்களும் மூழ்கி விட்டனர். அவர்களின் தலைக் கவசங்களும் தொப்பிகளும் மிதக்கின்றன. நான் எப்படியோ இளவரசரைக் காப்பாற்றி விட்டேன். அவர் கொண்டு வந்த விலை உயர்ந்த பொருள்கள் எல்லாம் ஆற்றில் போய் விட்டன. உடைகள் ஏதுமின்றிப் பாலத்தின் கீழ் இருக்கிறார். இப்படி ஒரு கொடுமை நிகழுமென்று யாரும் எதிர்பார்க்கவில்லை, என்று பரபரப்புடன் சொன்னது அது. இளவரசருக்கு இப்படி ஒரு கொடுமை என் நாட்டிலா நடந்திருக்க வேண்டும்? விலை உயர்ந்த ஆடைகளை இப்பொழுதே கொண்டு செல்லுங்கள். வீரர்கள் அவருக்குத் துணையாக அணிவகுத்து வரட்டும். நானும் பூனையுடன் வருகிறேன், என்றான் அரசன். வீரர்கள் சூழ அரசனும் பூனையும் அந்தப் பாலத்தை அடைந்தார்கள். ஆற்றில் நிறைய கவசங்களும் தொப்பிகளும் மிதந்து செல்வதைப் பார்த்தான் அரசன். விலை உயர்ந்த ஆடைகளை இளவரசனிடம் தந்தது பூனை. அவன் ஆடைகளை அணிந்து கொண்டு வெளியே வந்தான். அரசன் அவனைச் சிறப்பாக வரவேற்றான். அழகான வண்டியில் அவனை அமரச் சொன்னான். கோலாகலத்துடன் இளவரசனின் ஊர்வலம் தொடங்கியது. அரண்மனை வாயிலிலேயே அரசியும் இளவரசியும் காத்திருந்தனர். இளவரசனின் அழகைக் கண்டு இளவரசி மகிழ்ந்தாள். இருவருக்கும் சீரும் சிறப்புமாகத் திருமணம் நடந்தது. சில நாட்கள் சென்றன. பூனையை அழைத்த அரசன், உங்கள் இளவரசனின் செல்வச் செழிப்பைக் காண நினைக்கிறேன். எப்பொழுது உங்கள் நாட்டிற்குச் செல்லலாம்? நான் பெரிய படை சூழ வருகிறேன், என்றான். எப்பொழுது வேண்டுமானாலும் புறப்படலாம், என்றது பூனை. அடுத்த வாரம் புறப்படுவோம், என்றான் அரசன். என்ன செய்யலாம் என்று சிந்தித்தது பூனை. சில அரக்கர்களுக்குச் சொந்தமாக ஏராளமான நிலங்களும் அரண்மனைகளும் இருப்பது அதன் நினைவுக்கு வந்தது. எப்படியாவது அவற்றை இளவரசனுக்கு சொந்தமானது என்று சொல்லி அரசனை ஏமாற்ற வேண்டும் என்று நினைத்தது அது. இளவரசன் தேரில் அமர்ந்தான். அரசனும் அருகில் அமர்ந்தான். பெரும்படை சூழ ஆரவாரத்துடன் புறப்பட்டனர். பூனை வழிகாட்டிக் கொண்டே முன்னால் சென்றது. அங்கே நிலத்தில் நிறைய பேர் வேலை செய்து கொண்டிருந்தனர். அவர்களிடம் வந்த பூனை. இன்னும் சிறிது நேரத்தில் பெரும்படையுடன் அரசர் ஒருவர் இங்கே வருவார். இந்த நிலம் யாருடையது என்று உங்களைக் கேட்பார்? நீங்கள் இந்த நிலங்கள் எல்லாம் இறகு இளவரசர் உடையது என்று சொல்ல வேண்டும். இதைக் கேட்டால் அரசர் மகிழ்ச்சியுடன் உங்களுக்குப் பரிசு வழங்குவான். மாறாக அரக்கன் உடையது என்று உண்மையைச் சொன்னால் உங்களை எல்லாம் கொன்று விடுவார், என்றது. அரசன் அங்கு வந்தான். உழவு வேலை செய்து கொண்டிருந்தவர்களைப் பார்த்து, இந்த நிலம் யாருடையது? என்று கேட்டான். எல்லோரும் இறகு இளவரசர் உடையது, என்று சொன்னார்கள். மகிழ்ந்த அரசன் அவர்களுக்குப் பொற்காசுகளை வாரி வழங்கினான். வழியில் ஏராளமான ஆடுகளை நிறைய பேர் மேய்த்துக் கொண்டிருப்பதைப் பார்த்தது பூனை. அவர்களிடமும் சென்று அதையே சொன்னது. அரசன் வந்து கேட்ட போது, எல்லா மந்தையும் இறகு இளவரசர் உடையது, என்று அவர்கள் சொன்னார்கள். தன்னைவிட இளவரசனிடம் அதிக செல்வம் இருக்கிறது என்று மகிழ்ந்தான் அரசன். இனி இளவரசனின் அரண்மனைக்குச் செல்லலாம், என்றான் அரசன். அரக்கர்கள் தங்கி இருக்கும் அரண்மனைக்குள் நுழைந்தது பூனை. அவர்களைப் பார்த்து, உங்களுக்கு ஆபத்து வந்து விட்டது. உங்களைக் கொல்வதற்காக அரசர் பெரும் படையுடன் வருகிறார், என்றது. வெளியே பார்த்த அவர்களுக்குப் பெரும்படை வருவது தெரிந்தது. பூனையே! நீதான் எங்களைக் காப்பாற்ற வேண்டும், என்று கெஞ்சினார்கள். தோட்டத்தில் உள்ள வைக்கோல் போருக்குள் நீங்கள் எல்லோரும் ஒளிந்து கொள்ளுங்கள், என்றது அது. அவர்களும் அதற்குள் ஒளிந்து கொண்டார்கள். வைக்கோல் போருக்குத் தீ வைத்தது பூனை. தீயில் வெந்து எல்லா அரக்கர்களும் இறந்து போனார்கள். ஊர்வலம் அரக்கர்களின் அரண்மனையை அடைந்தது. எல்லோரையும் வரவேற்றது பூனை. இளவரசரின் அரண்மனை மிக அழகாக உள்ளது, என்றான் அரசன். இளவரசனிடம் தனியே நடந்ததை எல்லாம் சொன்னது பூனை. மகிழ்ச்சி அடைந்தான் அவன். இளவரசன் இளவரசியுடன் நீண்ட காலம் அந்த அரண்மனையில் வாழ்ந்தான். பூனை அவர்களுக்கு உறுதுணையாக இருந்தது. |
2 | ['tam'] | கீழே கொடுக்கப்பட்டுள்ள வார்த்தைகளையும் தலைப்பையும் பயன்படுத்தி சிறு கதை எழுதுக.
வார்த்தைகள்: கிருஷ்ண தேவராயர், தெனாலிராமன், கருப்பங்கழி, சேனாதிபதி, ராஜகுரு
தலைப்பு: கருப்பங்கழி!
| விஜயநகரப் பேரரசர் கிருஷ்ண தேவராயர் தெனாலிராமனுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தார். இதைப் பார்த்த மற்ற அரசவையினருக்கு தெனாலி மீது பொறாமை ஏற்பட்டது. அவர்கள் அடிக்கடி, "அரசே! எங்களிடம் என்ன குறை? நீங்கள் ஏன் எங்களை விடத் தெனாலிக்கு அதிக முக்கியத்துவம் தருகிறீர்கள்?" என்று கேட்டனர். இதற்கு பதில் அரசரின் சிரிப்புத்தான். ஒருநாள், தெனாலி விடுப்பில் சென்றிருந்தார். அரசர், அமைச்சர், சேனாதிபதி முதலானோர் மாறுவேடத்தில் நகர்வலம் சென்றனர். பேசிக் கொண்டே ஒரு கிராமத்தை அடைந்தனர். ஓரிடத்தில் விவசாயிகள் அமர்ந்து பேசிக்கொண்டிருந்ததைப் பார்த்தார் அரசர். அவர்களிடம் சென்று, "நாங்கள் வெளிநாட்டினர், உங்களை இந்நாட்டு அரசர் சரியாகக் கவனித்துக் கொள்கிறாரா?" என்றார். உடனே அனைவரும் அரசரைப் புகழ்ந்தனர். பிறகு அரசர் ஒரு முதிய விவசாயியிடம் அதே கேள்வியைக் கேட்டார். உடனே அவர் சட்டென்று அங்கிருந்து எழுந்து எங்கோ போய்விட்டுப் பிறகு திரும்பி வந்தார். அவர் கையில் ஒரு கருப்பங்கழி! வந்ததும் அதை அவர் இரு கையாலும் உடைத்தவாறு, "சகோதரா! எங்கள் அரசர் இதைப் போன்றவர்" என்றார். அவரது பதில் அரசருக்கு ஆச்சரியத்தைத் தந்தது. அமைச்சரைத் திரும்பிப் பார்த்தார். அமைச்சரோ "அரசே! அவர் உங்களை அவமானப் படுத்துகிறார். அவர், "எங்கள் அரசர் பலவீனமானவர்; எவரும் அவரை எளிதில் வீழ்த்தி விடலாம் என்பதைக் குறிக்கக் கரும்பை ஒடித்துக் காட்டினார்" என்றார். இதைக்கேட்டதும், அரசருக்கு ஆத்திரம் வந்தது. அவர் ஏதோ கூற வந்தார். அப்போது பின்னாலிருந்து தலைப்பாகை கட்டிய ஒருவர் எழுந்து, "கோபப்படாதீர்கள் தயாநிதியே! இப்போது கிழவர் கரும்பை உடைத்து, அரசர் கரும்பு போல் மேலிருந்து கசப்பும், இடையில் இனிப்பும் உடையவர் என்பதை உணர்த்தத்தான் இப்படி செய்தார்" என்று கூறிக் கொண்டே தனது பொய்த் தாடியை எடுத்தார். அது வேறு யாருமல்ல! தெனாலிராமன்தான். "அரசே! என்னைக் கண்டு பிடிக்க முடியாவிட்டாலும், நான் உங்களது பணியாள். என்னால் உங்களை விட்டு எப்படி இருக்க முடியும்?" என்றார். அதைக் கண்ட அரசர் சிரித்துவிட்டார். தெனாலியை வாரி அணைத்துக்கொண்டு, "நான் உன்னிடம் பிரியம் வைத்திருப் பதற்குக் காரணமே இதுதான்" என்று புகழ்ந்தார். கேட்டுக் கொண்டிருந்த அமைச்சர், ராஜகுரு மற்றும் சேனாதிபதிக்கு அவமானமாகப் போய்விட்டது. அதன்பிறகு அரசவையில் தெனாலியின் மதிப்பு மேலும் அதிகரித்து விட்டது. நன்றி தினமலர்! |
2 | ['tam'] | கீழே கொடுக்கப்பட்டுள்ள வார்த்தைகளையும் தலைப்பையும் பயன்படுத்தி சிறு கதை எழுதுக.
வார்த்தைகள்: அக்பர், பீர்பல், நாய்கள், பயந்தாகொள்ளிகள், தைரியசாலி, குழந்தை, கரும்பு, தங்க மோதிரம், யானை
தலைப்பு: குழந்தையின் அழுகை
| அக்பர் சக்கரவர்த்தியைக் காக்காய் பிடிப்பதற்காக அவருடைய சில அதிகாரிகள் எப்போதும் அவரைச் சூழ்ந்து கொண்டு, அவர் சொல்வதற்கெல்லாம் ஆமாம் போட்டுக் கொண்டிருந்தனர். அவர்களுடைய செயலைக் கண்டு முகம் சுளித்த பீர்பல், ‘இவர்கள் அக்பரின் பணிஆளர்களா, இல்லை எதற்கெடுத்தாலும் வாலையாட்டும் நாய்களா?" என்று எண்ணினார். தன் மனத்தில் தோன்றியதை ஒருநாள் அவர்களிடம் பீர்பல் கூறிவிட, அவர்கள் வெகுண்டனர். "பீர்பல்! என்ன தைரியம் இருந்தால் எங்களை நாய்கள் என்று குறிப்பிடுவாய்! நீ எங்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும்!" என்று கோபத்தில் எகிறிக் குதித்தனர். "ஏன் உங்களை நாய்கள் என்று சொல்லக்கூடாது?" என்று பீர்பல் கேட்டதும், "நாங்கள் ஆறறிவு படைத்த மனிதர்கள்!" என்றனர். "அதுதான் தெரிகிறதே!" என்றார் பீர்பல் ஏளனத்துடன்! "அப்படியெனில் ஏன் எங்களை நாய்கள் என்று சொல்கிறாய்?" என்று கேட்டனர். "தவறுதான்! ஏனெனில் நாய்களுக்கு வால் உண்டு. உங்களுக்கில்லை!" என்றார் பீர்பல். "நாக்கை அடக்கிப் பேசு!" என்று அவர்கள் சீறி விழ, "நான் என்ன பிரமாதமாக சொல்லிவிட்டேன் என்று நீங்கள் இப்படி கோபத்தில் குதிக்கிறீர்கள்? உங்களுக்கு தைரியம் இல்லை என்றும், நீங்கள் கோழைகள் என்றும் கூறுகிறேன். அது தவறா?" என்றார் பீர்பல். "சரி, அதைவிடு! நாங்கள் பயந்தாங்கொள்ளிகளாகவே இருந்து விட்டுப் போகிறோம். ஆனால் நீ எங்களை விட தைரியசாலியா?" என்று ஒருவன் பீர்பலிடம் கேட்டான். "ஆமாம், சந்தேகம் இல்லாமல்!" என்று மார்தட்டிய பீர்பல், "உங்களுக்கு என் தைரியத்தை நான் எந்த விதத்தில் நிரூபித்துக் காட்டவேண்டும் என்று என்னிடம் சொல்லுங்கள்!" என்றார். "முன்கூட்டியே சக்கரவர்த்தியிடம் அனுமதி பெறாமல் தர்பாருக்கு உன்னால் தாமதமாக வரமுடியுமா?" என்று ஒருவர் சவால் விட்டார். அக்பர் சபைக்கு வருமுன்னரே, மற்றவர்கள் வந்துவிட வேண்டும் என்பது அக்பரின் கட்டளை! அப்படி யாராவது குறித்த நேரத்தில் வர முடியவில்லையெனில், தாமதமாக வருவதற்கு முன்கூட்டியே தகவல் அனுப்ப வேண்டும். அந்த நியதியை மீறுபவர்களின் மீது சக்கரவர்த்தி கடுமையான நடவடிக்கை எடுப்பதுஉண்டு. இந்த விஷயம் பீர்பலுக்கும் தெரியும். ஆயினும், முன் வைத்த காலைப் பின் வைக்க மனமின்றி, "சரி! நாளைக்கு நான் முன் அனுமதிஇன்றி தாமதமாக சபைக்கு வந்துக் காட்டுகிறேன்!" என்று கூறினார். நாளைக்கு பீர்பலுக்கு சக்கரவர்த்தி கடுமையான தண்டனை விதிப்பார் என்று எண்ணியவாறு அவர்கள் மகிழ்ச்சியுடன் சென்றனர். மறுநாள் அக்பர் தர்பாரில் நுழைந்த போது, பீர்பலைத் தவிர மற்றவர் அனைவரும் ஏற்கெனவே வந்து இருந்தனர். அனைவரும் எழுந்து நின்று அவருக்கு வணக்கம் செலுத்திய பிறகு தங்களுடைய ஆசனங்களில் அமர்ந்தனர். அக்பரும் தன் ஆசனத்தில் அமர்ந்தார். பிறகு சபையோரை ஒருமுறை பார்த்த அக்பர் அவர்களில் பீர்பல் மட்டும் இல்லாததை உணர்ந்தார். "பீர்பல் ஏன் வரவில்லை? ஏதாவது தகவல் அனுப்பியிருக்கிறாரா?" என்று அக்பர் சபையோரைக் கேட்டார். உடனே, சபையில் ஒருவர் எழுந்து, "இல்லை, பிரபு!" என்றார். "தர்பாருக்கும் வரவில்லை; தகவலும் அனுப்பவில்லை! அவரை இங்கு அழைத்து வர ஆள் அனுப்புங்கள்!" என்று அக்பர் உத்தரவிட்டார். பீர்பலை அழைத்து வரச் சென்ற ஆள் சிறிது நேரத்தில் திரும்பினான். "பிரபு! அவருடைய குழந்தை அழுது அடம் பிடிக்கிறதாம்! அதை சமாதானப்படுத்திய பிறகு வருவதாகக் கூறினார்!" என்றான் அவன். "என்ன திமிர் இருந்தால் பீர்பல் இப்படி ஒரு பதிலை அனுப்புவான்! மிகவும் கெட்டிக்காரனான பீர்பலுக்கு அழுகின்ற குழந்தையை சமாதானப்படுத்த முடியவில்லையா? இது நம்புகிற மாதிரி இல்லையே!" என்றார் அக்பர். பிறகு கோபத்துடன், "பீர்பல் உடனே இங்கு ஆஜராக வேண்டும் என்று என் கட்டளையைத் தெரிவியுங்கள்! அப்படியும் ஏதாவது சமாதானம் கூறினால், அவரைக் கட்டியிழுத்து வாருங்கள்!" என்று என்று பணியாளரிடம் உத்தரவிட்டார். அவர் கோபத்துடன் கட்டளைப் பிறப்பிக்கும்போதே, பீர்பல் அவசர அவசரமாக சபைக்குள் நுழைந்தார். பீர்பலை தலையோடு கால்வரை உற்று அக்பர் உற்று நோக்கினார். "என்னை மன்னித்து விடுங்கள் பிரபு! என்னுடைய மூன்று வயதுக் குழந்தை காலையிலிருந்து தொடங்கி அடம் பிடித்து அழுது கொண்டேயிருக்கிறது. அதை என்னால் சமாதானப்படுத்தவே முடியவில்லை. அதனால்தான் என்னால் தர்பாருக்குக் குறித்த நேரத்தில் வர முடியவில்லை. என் குழந்தை இன்னமும் அழுது கொண்டேயிருக்கிறது!" என்றார் பீர்பல். "உன்னால் ஒரு குழந்தையை சமாதானப்படுத்த முடியவில்லை என்பதை நான் நம்ப மாட்டேன்!" என்றார் அக்பர். "நான் நடந்ததைக் கூறுகிறேன், கேளுங்கள்! காலையில் எழுந்தவுடன் என் குழந்தை கரும்பு கேட்டது, நானும் வாங்கித் தந்தேன். அதைப் பிழிந்து சாறு தரும்படிக் கேட்டது. நானும் அவ்வாறே செய்து ஒரு கோப்பையில் ஊற்றிக் கொடுத்தேன். உடனே கோப்பையிலிருந்த கரும்புச் சாற்றைத் தரையில் கொட்டிவிட்டு, தரையில் ஓடும் சாற்றை மீண்டும் கோப்பையில் எடுத்துத்தரச் சொல்லிப் பிடிவாதம் செய்தது. அது என்னால் எப்படி முடியும்? அது முடியாத காரியம் என்று சொன்னாலும் கேட்கவில்லை. அதனால்தான் எனக்கு தாமதமாகி விட்டது!" என்று பீர்பல் பரிதாபமாகக் கூறினார். "ஒரு குழந்தையை சமாதானப் படுத்த சாமர்த்தியமற்ற உன்னைப் போய் பிரதம ஆலோசகனாக நியமித்துக் கொண்டேனே!" என்று அக்பர் விமரிசனம் செய்தார். "பிரபு! உலகிலேயே மிகக் கடினமான காரியம் அது ஒன்று தான்! நீங்கள் எப்போதாவது அழும் குழந்தையை சமாதானம் செய்து இருக்கிறீர்களா?" என்று பீர்பல் கேட்டார். தொடர்ந்து, "எங்கே! சற்று முயற்சி செய்து பாருங்களேன்! நான் இப்போது ஒரு குழந்தை போல் நடிக்கிறேன். நீங்கள் என்னை சிரிக்க வையுங்கள்!" என்றார். அதற்கு அக்பரும் சம்மதித்தார். உடனே, பீர்பல் தரையில் படுத்துக் கொண்டு குழந்தையைப் போல் கை, கால்களை உதைத்துக் கொண்டு அழுவது போல் நடித்தார். அக்பரும் சிம்மாசனத்தில்இருந்து இறங்கி வந்து "அழாதே பாப்பா! உனக்கு என்ன வேண்டும்?" என்று கெஞ்சினார். "ஹூ…ஹூ! எனக்கு தங்க மோதிரம் வேண்டும்!" என்று பீர்பல் குழந்தைக் குரலில் கேட்டார். உடனே, அக்பர் தன் விரலிலிருந்து மோதிரத்தைக் கழற்றி பீர்பலின் விரலில் அணிவித்தார். ஆனால், மறுபடியும் பீர்பல் குழந்தையின் குரலில் உரக்க அழுதார். "எனக்கு ஒரு யானை வேண்டும்!" என்று கத்த, அக்பர் உடனே ஒரு யானையை வரவழைக்கச் செய்தார். அதன்பிறகும், பீர்பல் கை, கால்களை உதைத்துக் கொண்டு அழுதார். "இந்த மோதிரத்தினுள் யானை நுழைந்து வெளியே வரவேண்டும்! ஹூ…ஹூ!" என்று கத்தினார். தலையைப் பிடித்துக் கொண்ட அக்பர், "ஐயோ! உன்னை என்னால் சமாதானப் படுத்த முடியாது!" என்று கூவ, "இப்போதாவது புரிந்ததா பிரபு! அடம் பிடித்து அழும் குழந்தையை சமாதானம் செய்வது மிகவும் கடினம்!" என்றார் பீர்பல். அதைக் கேட்டு விழுந்து விழுந்து சிரித்த அக்பர், "பீர்பல்! நீ சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை!" என்றார். பீர்பலுக்குக் கிடைக்கப் போகும் தண்டனையை ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்த அதிகாரிகளின் முகத்தில் அசடு வழிந்தது. |
2 | ['tam'] | கீழே கொடுக்கப்பட்டுள்ள வார்த்தைகளையும் தலைப்பையும் பயன்படுத்தி சிறு கதை எழுதுக.
வார்த்தைகள்: சமுராய் போர் வீரன், ஸென் ஆசிரியர், பௌர்ணமி, மரம்
தலைப்பு: சாமுராயும் மரமும்
| தன்னை உயர்வாக மதித்துக்கொள்ளக் கூடிய ஒரு சமுராய் போர் வீரன் ஸென் ஆசிரியர் ஒருவரை சந்திக்கச் சென்றான். சமுராய் போர் வீரன் தன் வீர தீரச் செயல்களால் மக்களிடத்தில் புகழும் செல்வாக்கும் பெற்றவன். ஸென் ஆசிரியரின் தோற்ற அழகினையும் இனிய பண்பும் அருள் நிறைந்த மனத்தினையும் பார்த்தவன் தீடிரென தன்னை தாழ்வு மனப்பான்மையுடன் நினைக்க ஆரம்பித்தான். ஆசிரியரினை நோக்கிய சாமுராய், "கொஞ்சம் நேரத்திற்கு முன்பு வரை நன்றாக இருந்த நான் திடிரென எதற்காக என்னைத் தாழ்வு மனப்பான்மையுடன் பார்க்கிறேன்? உங்களது இருப்பிடத்திற்கு வந்ததும் ஏன் நான் என்னைத் தாழ்வாக நினைக்க வேண்டும். இதற்கு முன்பு எனக்கு இந்த மாதிரியான மனநிலை வந்ததில்லையே. நான் சாவினையே பலமுறை மகிழ்ச்சியுடன் சந்தித்திருக்கிறேன். ஆனால் இப்பொழுது ஏன் நான் பயப்பட வேண்டும்?" என்று கேட்டான். ஆசிரியர், "பொருத்திரு. எல்லாரும் இங்கிருந்து சென்றதும் உனக்கு பதில் சொல்லுகிறேன்" என்றார். பலரும் ஆசிரியரைப் பார்க்க வருவதும் போவதுமாக இருந்தனர். காத்திருப்பதினாலேயே களைப்படைந்து சோர்ந்து போனான் சாமுராய். மாலையானதும் அனைவரும் சென்று விட்டனர். சாமுராய், "இப்பொழுது உங்களால் என் கேள்விக்கு பதில் அளிக்க முடியுமா?" என்று கேட்டான். ஆசிரியர், "வெளியே வா" என்று அவனைக் கூப்பிட்டுக் கொண்டு திறந்த வெளிக்குச் சென்றார். அது ஒரு பௌர்ணமி நாள். தொடுவானத்திலிருந்து முழுநிலவானது மறைகின்ற கதிரவனின் ஒளிபட்டு அழகுடன் சிவந்து ஒளிர்ந்தது. "அங்கே தெரிகின்ற மரங்களைப் பார். அதோ அந்த மரமானது வானத்தை தொட்டுவிடும் உயரத்திற்கு வளர்ந்திருப்பதைப் பார். அதன் பக்கத்திலியே இன்னொரு சிறிய மரம் வளர்ந்திருப்பதைப் பார். என்னுடைய ஜன்னலின் வழியாக பல வருடங்களாக அவற்றைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன். அவைகளுக்குள் எந்த பேதமும் இருந்ததில்லை. அந்த சின்ன மரம், பெரிய மரத்தினைப் பார்த்து "ஏன் தாழ்ந்து போனவனாக என்னை நினைத்துக் கொள்கிறேன்?" என்று ஒரு பொழுதும் கேட்டதில்லை. இது சிறிய மரம், அது பெரிய மரம், ஏன் அவைகளுக்குள் காதோடு காதாக குசுகுசுவென பேசியதை என்னால் ஒரு நாளும் கேட்க முடியவில்லை?" என்றார். சாமுராய், "ஏனேன்றால் அவைகள் தங்களுக்குள் ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்வதில்லை" ஆசிரியர் சாந்தமான குரலில், "நீ என்னிடம் பதிலினை எதிர் பார்க்க வேண்டாம். உனக்கே பதில் தெரிந்திருக்கிறது" என்றார். |
2 | ['tam'] | கீழே கொடுக்கப்பட்டுள்ள வார்த்தைகளையும் தலைப்பையும் பயன்படுத்தி சிறு கதை எழுதுக.
வார்த்தைகள்: ஜுபிடர், ஒட்டகம், காளை, கரடி, சிங்கம்
தலைப்பு: ஜூபிடரும் ஒட்டகமும்
| கடவுளான ஜுபிடரிடம் ஒரு நாள் ஒட்டகம் ஒன்று வந்து புலம்ப ஆரம்பித்தது. "மற்ற மிருகங்களோடு ஒப்பிட்டால் என்னைப் பாதுகாத்துக் கொள்ளவோ, யாரையும் தாக்கவோ எதுவுமே எனக்கு நீங்கள் தரவில்லை" என்றது ஒட்டகம். "காளை மாட்டுக்கு கொம்பகள் இருக்கின்றன. கரடிக்கு நீண்ட பற்கள்; சிங்கத்திற்கும் புலிக்கும் வலிமையான நகங்கள். இதனால், எல்லா மிருகங்களும் இவற்றைப் பார்த்து அஞ்சுகின்றன. மரியாதை தருகின்றன. ஆனால், என்னிடம் எதுவுமே இல்லாததால், போகிறவர் வருகிறவர் எல்லாம் என்னை அவமானப்படுத்துகிறார்கள்" என்று புகார் செய்தது. ஜூபிடருக்குக் கோபம் வந்தது. "கொஞ்சமாவது யோசனையிருந்தால், மற்ற மிருகங்கள் எதற்குமே இல்லாத பலம் உனக்கு இருப்பது புரிந்திருக்கும். முட்டாள்தனமாக என்னிடம் வந்து புகார் செய்ததால், உன் காதுகள் சின்னதாகப் போகட்டும்" என்று கூறிவிட்டார் ஜூபிடர். எது தனக்குச் சிறந்தது என தன்னை மட்டுமே வைத்து சிந்திப்பவர்களுக்கு தெரியாது. |
1 | ['tam'] | கீழே கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பைக் கொடு.
கதை: ஒரு முறை விவசாயி ஒருவர் தன்னுடைய கழுதையை விற்று விடத் தீர்மானித்தார். அருகிலுள்ள கிரமாத்துக்குத் தன் கழுதையையும், மகனையும் அழைத்துக் கொண்டு சென்றான். அவர்கள் இருவரும் கழுதையை இழுத்துக் கொண்டு நடந்தே போனார்கள். செல்லும்போது அதைப்பார்த்த வழிப் போக்கர் ஒருவர் இவர்களைப் பார்த்துச் சிரித்தார். பிறகு, ‘கழுதை சும்மாதானே செல்கிறது. யாராவது ஒருவர் அதன் மீது ஏறிச் செல்லலாமே’ என்றார். அதுவும் சரியென்று தந்தை மகனை கழுதையின் முதுகில் ஏற்றி விட்டார். சிறிது தூரம் சென்றதும் எதிரே வந்த ஒருவர், ‘ஏனப்பா வயதான தந்தையை இப்படி நடக்க வைத்து விட்டு, நீ கழுதையின் மேல் அமர்ந்து செல்வது நியாயமா?’ என விவசாயி மகனைப் பார்த்து கேட்டார். உடனே மகன் கீழே இறங்கிக் கொண்டு தந்தையை கழுதை மீது அமரச் சொன்னான். தந்தையும் அவ்வாறே செய்தார். இப்படியாக இன்னும் சிறிது தூரம் பயணித்த பிறகு, இன்னொருத்தர் தந்தையை பார்த்து கடிந்து கொண்டார். ‘ஏனய்யா இப்படி சின்ன பிள்ளையை நடக்க விட்டு நீங்கள் கழுதை மேல் பயணிக்கலாமா?’ என கேட்டார். தந்தையும் மகனும் ஆளாளுக்கு இப்படிச் சொல்கிறார்களே என்ன செய்வது என பலவாறாக யோசித்து முடிவில் இருவருமே அந்த கழுதையிம் முதுகில் ஏறிச் செல்வோம் என ஏறிக் கொண்டனர். சிறிது தொலைவு சென்றதும், இரண்டு பேருமாக கழுதை மீது அமர்ந்து செல்வதைப் பார்த்த சிலர், ‘அடக் கொடுமையே இப்படியா இந்த வாயில்லா பிராணியைத் துன்புறுத்துவார்கள். இவர்களுக்கு இரக்கமே இல்லையா?’ என எள்ளி நகையாடினர். அவர்கள் பேச்சைக் கேட்டவுடன் விவசாயிக்கு மிகவும் கோபம் ஏற்பட்டது. உடனே இருவரும் கழுதையின் மீதிருந்து கீழே குதித்தார்கள். மனம் குழம்பிப் போன தந்தையும் மகனும், கழுதையைத் தூக்கிக் கொண்டு செல்வது தான் சிறந்தது என்று அவர்கள் இருவரும் தீர்மானித்தனர். மிகவும் சிரமப்பட்டுக் கழுதையின் கால்களைக் கட்டியபிறகு, ஒரு கொம்பில் அதைக் கட்டி அதைத் தோளில் தூக்கி வைத்துக் கொண்டு அவர்கள் தொடர்ந்து நடந்தனர். கிராமத்தை அடைவதற்கு முன்னால் ஆற்றின் மீதிருந்த ஒரு பாலத்தை அவர்கள் கடக்க வேண்டியிருந்தது. விவசாயியும் அவன் மகனும் மிகவும் சிரமப்பட்டுக் கழுதையைத் தூக்கிக் கொண்டு வரும் வினோதக் காட்சியை, ஆற்றுக்கு அக்கரையில் இருந்த குழந்தைகள் பார்த்துக் கைகொட்டிச் சிரித்தனர். பெரிய சத்தத்தைக் கேட்டுப் பயந்து போன கழுதை பெரிதாக துள்ளிக்குதிக்க ஆரம்பித்தது. அதைத் தூக்கிக் கொண்டு வந்த தந்தை, மகன் இருவரின் பிடியும் நழுவியது. அந்தப் பரிதாபமான கழுதை ஆற்று நீரில் தூக்கி எறியப்பட்டது! கால்கள் கட்டப்பட்டிருந்ததால் அதனால் நீந்த முடியவில்லை! அது இறக்க நேரிட்டது. இப்படி சுயமாக சிந்தித்து முடிவெடுக்காமல் அடுத்தவர் சொல்வதைக் கேட்டதால் தங்களுக்கு அடிபட்டதோடு கழுதையும் இறந்து போய்விட்டதே எனக் கவலை பட்டபடியே நடந்தனர். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கருத்து. எல்லோரையம் திருப்திப் படுத்த முடியாது. சொல் புத்தியைவிட சுயபுத்தி மிக அவசியம்.
| கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பு 'விவசாயி, மகன், கழுதை' என்பதாகும். |
1 | ['tam'] | கீழே கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பைக் கொடு.
கதை: மரியாதை இராமனுக்குப் பேரும் புகழும் சேரச் சேர, ராமன் அந்த ஊரில் மட்டும் அல்ல, அண்டை நாடுகளிலும் பிரபலம் ஆனான். வழக்கு என்றால், நீதிபதி முதல் கடைசி ஆள்வரை ஒரே கோணத்தில்தான் ஆராய்வார்கள். ஆனால், மரியாதை இராமன் யார் மீது கொஞ்சம்கூட சந்தேகம் இல்லையோ அவரைப் பிடிப்பான். கிடுக்கியில் மாட்டுவதுபோல் இரண்டு மூன்று கேள்விகளைப் போடுவான். கோணி மூட்டையில் இருக்கும் பூனைக் குட்டிகள் வெளியே வந்துவிடும். அதாவது ரகசியம் வெளியே வந்துவிடும். ராமன் ஒழுங்காக வேலைக்குச் செல்லாமல், வழக்கு, நீதி, வாதி, பிரதிவாதி என்று தன் பொன்னான இளைமையைப் பாழ் அடித்துக் கொள்கிறான் என்பது ராமனின் அப்பாவின் அசைக்க முடியாத நம்பிக்கை. அவ்வப்போது ராமனுக்கும் அவன் அப்பாவுக்கும் இந்தப் பிரச்சினையாலேதான் சண்டைவரும். “ஏண்டா! நீ பாட்டுக்கு இன்னார்தான் குற்றவாளி என்று சமூக அந்தஸ்தில் பெரியவரைக் குறிப்பிடுவாய். காவலர்களும் கைது செய்து விடுவார்கள். ஆனால் அதன் பின்விளைவு என்ன தெரியுமா? தண்டனை அனுபவிப்பவன் எதிராளியைப் பார்த்து “இந்த தடவை தப்பிச்சிட்டேன்னு நினைக்கிறியா? தண்டனைக்காலம் முடிவதற்குள், என் ஆட்கள் பழிவாங்கி விடுவார்கள். கண்டதுண்டமாக வெட்டி காக்கைக்கும், கழுகுக்கும் போடுவார்கள்!” என்று எச்சரிக்கை செய்வான். நமக்கு எதற்கு இந்த மாதிரி ஆபத்தான தொழில்?” என்னோடு வியாபாரத்தில் சேர்ந்து விடு! கொஞ்சம் வளர்ந்து வாலிபனானவுடன் உனக்குத் திருமணம் செய்கிறேன். எனக்கு உன்னை விட்டால் வேறு யார் இருக்கிறார்கள்.?” மரியாதை இராமன் தகப்பனாரின் பேச்சைக் கேட்டான். “அப்பா! ஆபத்தில்லாத வேலை கிடையாது. நீதிமன்றத்துறையில் என்னைச் சேர்த்துக் கொள்ளுங்கள் என்று நானா முறையிட்டேன்! அரசராகப் பார்த்து எனக்குக் கொடுத்த பதவியை, ‘எனக்கு இந்தப் பொம்மை வேண்டாம்’னு சொல்றாப்பல நானும் பதவியை வேண்டாம் என்று சொல்வதா? பார்க்கப் போனால், இந்தப் பதவி எனக்கு கிடைத்தது எவ்வளவு பேர்களுக்கு ஏமாற்றமும் எரிச்சலும் தந்தது என்று தெரியுமா? குற்றத்தைச் செய்தவன் தன்னை யாராவது பார்த்து விடுவார்கள்! என்று சுற்றும் முற்றும் பார்க்கிறான். பின்னாலே தைரியம் வந்து, தனக்கு விரோதிகளாக இருப்போரின் மீது பழி போடுவான்! அதனால் யாருமே அவனைச் சந்தேகப்பட மாட்டார்கள். சில சமயம் குற்றவாளியைக் கண்டு பிடிக்கமுடியாமல் இருக்கலாம். ஆனால், ஒரு நிரபராதி மீது பழி வந்து அவனுக்குத் தண்டனை கொடுத்துவிடக் கூடாது. சட்டம் ஒரு இருட்டறை அதில் வழக்காடுபவர் எடுத்துரைக்கும் வாதம் விளக்கு போன்றது. ஆனால், அந்த விளக்கு ஏழைக்கு எட்டாதது என்று ஓர் அறிஞர் கூறினார். தாமதப்படுத்தும் நீதியின் தீர்ப்பு! உனக்கு நீதி மறுக்கப்படுகிறது என்றும் சொல்கிறார்கள். “அப்பா! இந்த மரியாதை இராமன் உங்கள் நற்பெயரைக் கெடுக்க மாட்டான்.” “சரி! ராமா நான் கோவில்களுக்குச் சென்று திரும்பிவர பல நாட்கள் ஆகும்! அதற்குள் உனது லட்சியம் மாறாதா என்று பார்க்கிறேன்.” என்று அப்பா சொல்லிவிட்டு ஊர்ப் பயணம் செல்ல ஆரம்பித்தார். இரண்டு மாதம் கழித்து வந்தார் அப்பா. அன்று ஒரு வழக்கு விசாரிக்கப்படுகிறது. வாதியும் பெண். பிரதிவாதியும் பெண். இரண்டு பெண்களும் ஒருவனுடைய மனைவிகள். அந்த இரண்டு பெண்களைப் பற்றி அப்பாவுக்கு நன்றாகத் தெரியும். அவர்களுடைய வீட்டுக் கெதிரில் உள்ள அவருடைய வீட்டுத் திண்ணையில் படுத்திருப்பது அவருக்குப் பழக்கம். இந்தப் பெண்கள் என்ன குற்றம் செய்தார்கள்! இந்தக் குற்றத்தின் தன்மை என்ன? பின்னணி என்ன? வழக்கில் வாதி இரண்டாம் மனைவி. பிரதிவாதி முதல் மனைவி. குற்றம் – இளையவளின் குழந்தை இறந்து விட்டது. இயற்கையான மரணம் அல்ல என்று அந்த ஊரில் உள்ள அனைவருக்கும் தெரியும். ஆனால், குழந்தையைக் கொலை செய்தது யார்? கொலைக்கான உள் நோக்கம் என்ன? இதுதான் மண்டையைப் பிய்த்துக் கொள்ளும் கேள்வி. இளைய மனைவியின் பெயர் காந்தா. முதல் மனைவியின் பெயர் சாந்தா. இவர்களின் புருஷன் அப்பாவி. ஒரு மூலையில் உட்கார்ந்திருந்தான். “வழக்கை ஆரம்பிக்கலாமா?” என்று மரியாதை இராமன் கேட்கவும் அரசர் “தாராளமாக” என்றார். மரியாதை இராமனின் அப்பா, மகனின் சாமர்த்தியத்தைக் காண ஆவலாய் கூட்டத்தில் ஒருவராக நின்று கொண்டிருந்தார். இளையவள் காந்தாவைப் பேச அழைத்தார் மரியாதை இராமன். “ஐயா! நீங்களும் சிறிசு, நானும் சிறிசு. எப்பவுமே சிறிசுகளைக் கண்டால் பெரிசுகளுக்குப் பொறாமை? பொச்சரிப்பு! ‘என் குழந்தையை யாரோ கொலை பண்ணிட்டாங்க! பெத்த வயிறு பத்தி எரியுது! துக்கம் தொண்டையை அடைக்குது” என்று சொல்லி சத்தம் போட்டு அழுகிறாள். மரியாதை இராமன் இளையவளைப் பார்த்து, “அழாதேம்மா! உன்னுடைய கஷ்டம் ஈடில்லாத கஷ்டம்! குழந்தையைக் கொன்னவங்க யாருன்னு தெரியல்லியே! உனக்கு யார் மேலே சந்தேகம்! “அதை என் வாயாலே எப்படிச் சொல்வேன்? நீங்க கேட்டதாலே சொல்றேன்! எம் புருசன் ஒரு பூச்சி. எந்த விஷயத்தையும் காதிலே போட்டுக்க மாட்டார். என் சந்தேகம் சொல்லவே வெக்கமா இருக்கு…” என்று காந்தா இழுத்தாள். “சொல்லும்மா! இது நீதிமன்றம். “வேறே யாரு? இதோ எதிர்த்தாப்பலே குத்துக் கல்லாட்டம் நிற்கிறாளே அவதான் என் சக்காளத்தி. அவ மலடி! எனக்குக் குழந்தை பிறந்தது அவளுக்குப் பொறாமை! இந்த ஒரு காரணமே போதுமே! அவளுக்குத் தூக்குத்தண்டனை கொடுத்தா கூட என் ஆத்திரம் தீராது!” மரியாதை இராமன் ஏட்டில் குறிப்பெடுத்தான். பிறகு மூத்தவள் சாந்தாவை கூண்டில் நிற்க வைத்து கேள்விக் கணைகளைத் தொடுத்தான். “நான் என் புருஷனுக்கு முதல் மனைவி. குழந்தை பிறக்காததாலே, நானே என் புருசனுக்குப் பெண் பார்த்தேன். கூடப் பிறக்கல்லன்னாலும் அவ என் தங்கச்சி. குழந்தை பிறக்கப்போவுதுன்னு செய்தி வந்ததும் அதிக சந்தோசம் பட்டவ நான்தான் ஐயா!” “தாய் இல்லாத பெண்ணாச்சே! பிரசவத்தை நம்ம வீட்லேயே பார்த்துடலாம்னு இவளைப் பொறந்த ஊட்டுக்குக் கூட அனுப்பலே! நல்லபடியா குழந்தை பொறக்கணும்னு நான் வேண்டாத தெய்வம் இல்லே, முடிச்சுப் போடாத காணிக்கை இல்லே!” என்றாள் மூத்தவள் சாந்தா. உடனே இளையவள் காந்தா, “குழந்தை திடீர்னு எழுந்துக்கும். போய் ஆசையா பெரியம்மாகிட்ட படுத்துக்கும். அப்படிப் படுத்த குழந்தையை கழுத்தை நெரிச்சுக் கொன்னுட்டு, ஒண்ணும் தெரியாத பாப்பா போல நடிக்கறதைப் பாரு!” என்று சீறினாள். மரியாதை இராமன் இளையவள் – காந்தாவிடம் “குழந்தைக்குக் குளிப்பாட்டுவது யார்? மருந்து கொடுப்பது யார்? தூங்க வைப்பது யார்? அழகா உடுத்தி, கண்ணுக்கு மை தீட்டி, காற்றாட வெளியில் தூக்கிக்கிட்டு வேடிக்கைக் காட்றது யார்?” என்று கேட்டான். அதற்கு இளையவள், “என்னமோ தான் பெத்த புள்ளை மாதிரி குழந்தைக்கு எல்லாம் செய்றது எதுக்கு? புருசன் தன்னைத் தள்ளி வச்சிடுவாரோ என்ற பயம். பாக்கறவங்க தன்னைப் பாராட்டுவாங்கன்ற சுயநலம்தான்! தாய்ப்பால் குடிக்க மட்டும்தான் குழந்தையை என்னண்டை கொடுப்பா! ஏன்னா அது அவளால முடியாது!” என்று ஏளனமாக சாந்தாவைப் பார்த்துச் சொன்னாள். மரியாதை இராமன் வாக்கமூலத்தில் தெரிகின்ற கருத்துக்களைக் குறிப்பெடுத்துக் கொண்டிருந்தான். குழந்தையின் தகப்பன் என்னை சொல்கிறான்? அவன் ரெண்டு பொண்டாட்டிக்காரன். அவனுடைய கருத்தைக் கேட்போம் என்று மரியாதை இராமன் குழந்தையின் தகப்பனைக் கூண்டில் ஏற்றினான். “ஐயா! இந்தக் குழந்தையை யார் கொன்றது? தெரியவில்லை என்றால் யார் கொன்றிருப்பார்கள் என்ற ஊகத்தைச் சொல்லும்!” – மரியாதை இராமன். தகப்பன் அழுது கொண்டே “நான் ஊரில் இல்லாத சமயம் பார்த்து இந்தக் கொலை நடந்திருக்கிறது. பெத்தவள் செய்தாளா? மத்தவள் செய்தாளா? யார் செய்திருந்தாலும் கடுமையான தண்டனை கொடுங்க? எனக்கு ரெண்டாவது கல்யாணம் செய்து வச்சதே முதல்தாரம்தான். மனப்பூர்வமாகத்தான் ஒத்துக்கிட்டா! நமக்குக் குழந்தை வேணும்! என்னாலே முடியாதபோது எனக்கு வர ‘உடன்பிறவா சகோதரி’ மூலமாவது அந்தப் பாக்கியம் கிட்டட்டும்னு சொன்னவளே பெரியவள்தான்! அடிக்கடி சின்னவ எங்கிட்ட பெரியவளைப் பத்தி தூபம் போடுவா! அவளை விரட்டுங்க. என் குழந்தையை எப்பவும் அவளே கவனிச்சுக்கறா. அப்புறம் குழந்தைக்கு எம்மேலே எப்படிங்க பாசம் வரும்! குழந்தையும் அவகிட்ட நல்லா ஒட்டிக்கிச்சு. அப்படிச் சொல்லும்போது நான் ‘ஒண்ணா இருக்கக் கத்துக்கணும்’னு புத்தி சொல்வேன். “இன்னொரு உண்மையை இந்தச் சபையில் சொல்றேன். சின்னவளுக்குக் குழந்தை பிறந்த ஆறுமாசம் கழிச்சு பெரியவள் என்னை வைத்தியர்கிட்ட அழைச்சிட்டுப் போனா! வாந்தி மயக்கம்னு சொன்னா! வைத்தியர் அவளைப் பரிசோதித்து ‘மகிழ்ச்சி’ என்று சொன்னார். ஆம்! பெரியவளும் தாயாகப் போகிற நிலையில் இருக்கிறாளாம்! ‘நான் சந்தோஷம் அடைஞ்சேன்! ஆனா, பெரியவ வைத்தியரிடம், கருவைக் கலைக்கும் மருந்தைக் கொடுங்க. எனக்கு குழந்தை. வேணாம்!’ என்றாள். நானும் வைத்தியரும் தடுத்தபோது ‘விஷம் குடிச்சிருவேன்’னு பயமுறுத்தினா. வேறு வழியில்லாம வைத்தியர், கருத்தடை மருந்தைக் கொடுத்து விட்டார். இந்த விஷயம் இதுவரை சின்னவளுக்குத் தெரியாது” என்று தேம்பினார். வழக்கு தனக்கு எதிராகப் போவதை அறிந்த இளையவள் காந்தா, “என் குழந்தையைக் கொலை செய்தவளை சும்மா விடக் கூடாது. இந்த நீலிக் கண்ணீர் விட்டாகுழந்தை பொழைச்சுடுமா? விஷத்தைக் கொடுத்தா குழந்தை உடல் நீலம் பாய்ஞ்சிருக்கும் கையால நெறிச்சிருந்தா கை ரேகை தெரிஞ்சிருக்கும்…” என்று அரற்றினாள். மரியாதை இராமன் அவள் சொல்வதைக் குறித்துக் கொண்டான். “சரி அம்மா, குழந்தையைப் பெத்தவங்க நீங்க! ஆகவே தண்டனையில் ஒரு பகுதி நீங்க குற்றம் சாட்டும் மூத்தவளைக் கட்டிப் போட்டு கசையடியை நீங்களே கொடுக்கலாம். கயிறால் கட்டினால் அறுந்து விடும். எதனால் கட்டினால் உடலை இறுக்கும்?” என்று யோசிப்பதுபோல் கேட்டான். இளையவள் மகிழ்ச்சி பொங்க ‘மரத்தைச் சுத்திப் படரும் பாடவரங்காய் கொடியை வெச்சுக் கட்டினால் கொடி அறுபடாது. உடலை இறுக்கி விடும்’ என்றாள். ‘என் வீட்டுத் தோட்டத்திலேயே அந்தக் கொடி படருது’ என்று மேலும் தகவல் தந்து மூத்தவள் கொஞ்ச நேரத்தில் கொடியால் கட்டப்படுவாள் என்று மகிழ்ச்சியுடன் இருந்தாள். சொன்னபடியே இளையவள் வீட்டிலிருந்த நீளமான பாடவரங்காய் கொடி அறுத்துக் கொண்டுவரப் பட்டது. சபையில் நிசப்தம். மரியாதை இராமன் அரசரிடம் ரகசியமாக ஏதோ சொன்னான். “அப்படியா!” என்பதுபோல் அரசர் ஆச்சரியத்தால் வாய் பிளந்தார். கூடியிருந்த மக்கள் முடிவு தெரிந்து கொள்ள முட்டி மோதிக் கொண்டு இருந்தனர். மரியாதை இராமன் அந்தப் பாடவரங்காய்க் கொடியை சேவகனிடம் கொடுத்து அந்த அம்மாவைக் கொடியால் கட்டுங்கள்!” என்று உத்தரவிட்டான். ‘எந்த அம்மா’ என்பதை மக்கள் யோசனை செய்வதற்குள், சேவகன் இளையவளைக் கட்டத் துவங்கினான். இளைவள் பதறி “வேண்டாம்! என்னைக் கட்டாதீர்கள். நானே உண்மையைச் சொல்லி விடுகிறேன். குழந்தையைக் கொலை செய்ய கசாப்புக் கடைக்காரனின் உதவியை நாடினேன். அவன்தான் கத்தியால் குத்தமாட்டேன். கொடியால் கழுத்தை நெரித்து பெரியம்மா பக்கத்தில் போட்டுடறேன் என்று சொன்னான். என் வீட்டுக்காரர் இல்லாத நேரம் பார்த்துத் தகவல் சொன்னேன். அவனும் காரியத்தை முடித்தான். எனக்குக் குழந்தை போனாலும் பரவாயில்லை. பெரியவ மேலே எங்க வீட்டுக்காரர் வெச்சிருக்கிற பாசத்தை நாசப்படுத்தணும்கிறதான் என் ஒரே நோக்கமாய் இருந்தது. எனக்கு என்ன தண்டனை வேணும்னாலும் கொடுங்க!” என்று மண்டியிட்டு அழுதாள். மரியாதை இராமன், “குற்றவாளி வாயாலே குற்றத்தை ஒப்புக் கொள்ள” வைத்ததை, ராமனின் தந்தை மகிழ்ச்சி பொங்க பாராட்டினார். மக்களும் இளையவளின் அடாத செயலை இகழ்ந்தார்கள். இளையவளுக்குச் சிறைத் தண்டனை கிடைத்தது. இளையவள் மூத்தவள் கால்களில் விழுந்து அழுதாள். “அக்கா! நம் குலத்தைத் தழைக்க வந்த செல்வளை அழித்து விட்டேனே! நான் ஒரு மகா பாவி! அந்தப் பழியை உன் மீது போட்டு ஒழித்து விட நினைத்தேனே! என்னை மாதிரி ஒரு துரோகியை, நீங்கள் உங்கள் வாழ்வில் பங்கு போட்டுக் கொள்ள வைத்தீர்களே! நான் நன்றி கெட்டவள்…” என்று புலம்பலுக்கிடையே சொல்லி காவலர்களுடன் சென்றாள். புருசனும், மூத்தவளும் கண்கலங்கி ‘சீக்கிரம் நாம் மூவரும் ஒன்றாகலாம்’ என்றார்கள். மரியாதை இராமன் வீட்டில் அவனுடைய தந்தை, “பெற்ற குழந்தையைக் கொன்றாள் ஒருத்தி. நானோ பெற்ற மகனின் புகழைத் தடுக்க நினைத்தேன். அவள் பொறாமை கொண்டு குழந்தையைக் கொன்றாள். நான் அறியாமையால் என் மகனின் அறிவுத் திறனை மூடி மறைக்க நினைத்தேன்!” என்று மரியாதை இராமனைக் கட்டிப் பிடித்து ஆனந்தக் கண்ணீர் விட்டார்.
| கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பு 'நீயா கொலைகாரி?' என்பதாகும். |
2 | ['tam'] | கீழே கொடுக்கப்பட்டுள்ள வார்த்தைகளையும் தலைப்பையும் பயன்படுத்தி சிறு கதை எழுதுக.
வார்த்தைகள்: பரமார்த்தகுரு, முட்டாள், மூடன், மட்டி, மடையன், பேயன், சீடர்கள், கந்தபுரம், நரபலி, சாமியார் நாகப்பா, காளி கோயில், மண்டை ஓட்டு மாலை, கொடுவாள், பல்லி
தலைப்பு: நரபலி சாமியார் நாகப்பா
| பரமார்த்தரும் சீடர்களும் கந்தபுரம் என்ற ஊருக்குள் நுழைந்தார்கள். அப்போது அந்த ஊர் மக்கள் பெரும் அச்சத்தில் இருந்தார்கள். அதற்குக் காரணம் நரபலி சாமியார் நாகப்பா அந்த ஊரில் உலவுகிறான் என்பதுதான்! "குருவே! நாம் எந்தக் காரியத்தைச் செய்தாலும் நமக்கே ஆபத்தாக முடிகிறதே! அது ஏன்?" என்று மட்டி கேட்டான். "நாம் எல்லோரும் போன பிறவியில் நிறைய பாவம் செய்து விட்டோம் போலிருக்கிறது!" என்றார் பரமார்த்தர். "குருவே! உடனே இதற்கு ஏதாவது பரிகாரம் செய்தே ஆக வேண்டும்" என்று சொன்னான், முட்டாள். குருவும் சீடர்களும் அன்று இரவே ரகசியமாக ஆலோசனை செய்தார்கள். "குருவே! முனிவர்களைப் போல யாகம் செய்தால் நாம் பாவம் எல்லாம் போய்விடும்" என்றான் மூடன். "அதற்கு நிறைய பணம் செலவாகும். நம்மால் முடியாது. வேண்டுமானால், நரபலி கொடுக்கலாம்" என்றார் பரமார்த்தர். "நரபலியா? ஐயையோ!" என்று சீடர்கள் அனைவரும் அலறினார்கள். "சீடர்களே! நமக்கு நல்ல காலம் பிறக்க வேண்டுமானால் நரபலி கொடுத்தே ஆக வேண்டும் வேறு வழியே இல்லை" என்று முடிவாகச் சொல்லி விட்டார், பரமார்த்தர். "அப்படியானால் யாரைப் பலி கொடுப்பது?" என்று கேட்டான் மண்டு. "வேறு யாரையாவது பிடிக்கப் போனால் மாட்டிக் கொள்வோம்! அதனால்......சீடர்களே... உங்களில் யாராவது ஒருவர்தான் பலியாக வேண்டும்! இந்த நல்ல செயலுக்கு யார் முன் வருகிறீர்கள்?" என்றார் பரமார்த்தர். அவ்வளவுதான்! "ஐயோ நான் பலியாகிவிட்டால், அப்புறம் உங்கள் சுருட்டுக்குக் கொள்ளி வைப்பது யார்?" என்று அழ ஆரம்பித்தான் முட்டாள். "ஐயையோ நான் மாட்டேன்" என்று மூடனும் மூக்கால் அழுதான். "குருவே! நாங்களும் பலியாக மாட்டோம்" என்றபடி மற்ற சீடர்களும் தூர ஓடப் பார்த்தனர். பரமார்த்தருக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. நெருதூரம் தாடியை உருவிக் கொண்டு யோசனை செய்தார். "சரி, சீடர்களே! நீங்கள் யாரும் பலியாக வேண்டாம்! வேறு ஒரு வழி தோன்றுகிறது. அதன்படிச் செய்வோம்" என்று சொல்லிப் படுத்து விட்டார் பரமார்த்தர். மறுநாள், சீடர்கள் அனைவரும் "எங்கள் குரு நரபலி கொடுக்கப் போகிறார்" என்று ஊர் முழுவதும் பெருமையோடு சொல்லிக் கொண்டு திரிந்தார்கள். அதனால் அந்த ஊர் அரசனுக்கும் செய்தி எட்டியது. பரமார்த்தரை, நரபலி சாமியார் நாகப்பா என்று தவறாக நினைத்து விட்டான். "நாகப்பாவையும் அவன் கூட்டத்தையும் கையும் மெய்யுமாகப் பிடித்து வாருங்கள்" என்று ஆணையிட்டான். நரபலி இடுவதற்காகக் குறிப்பிட்ட நாளும் வந்தது! பரமார்த்தரும் சீடர்களும் யாருக்கும் தெரியாமல் பதுங்கிப் பதுங்கிச் சென்று கொண்டு இருந்தார்கள். ஊர்க் கோடியில் இருந்த காளி கோயிலை அடைந்ததும் பரமார்த்தர் பரம சந்தோஷம் அடைந்தார். மண்டை ஓட்டு மாலையும், நீளம் நீளமான பற்களுமாக இருந்த பத்ரகாளி சிலையைப் பார்த்த சீடர்கள் பயந்து நடுங்கினார்கள். "ஏ, காளியம்மா! வாக்குக் கொடுத்தபடி உனக்கு நரபலி கொடுக்கப் போகிறோம்! நீதான் எங்களைக் காப்பாற்ற வேண்டும். ஜெய் காளி" என்று காளியின் கால்களில் விழுந்து வணங்கினார் பரமார்த்தர். சீடர்களும் "தடால்" என்று விழுந்து கும்பிட்டார்கள். நடு இரவு ஆகிவிட்டதை அறிவிப்பதற்கு, அரண்மனையில் இருந்து மணியோசை கேட்டது. அப்போது, கோயிலைச் சுற்றிலும் மறைந்தபடி நின்று கொண்டிருந்த அரண்மனைக் காவலர்கள் சுறுசுறுப்பானார்கள். "சீடர்களே! சீக்கிரம் நாம் கொண்டு வந்த உயிரைப் பலி பீடத்தின் மீது வையுங்கள்!" என்று அவசரப்படுத்தினார், பரமார்த்தர். சீடர்களும் அவசரம் அவசரமாகத் தாங்கள் கொண்டு வந்த உயிரைப் பலி பீடத்தில் வைத்தனர். "ஓம்...ரீம்...பத்ரகாளி!...... இந்தா நரபலி!" என்று ஆவேசமாய்க் கத்தியபடி, பலி பீடத்தின் மீது கொடுவாளை வீசினார், பரமார்த்தர். உடனே அரண்மனை வீரர்கள் ஓடிவந்தது பரமார்த்தரையும் சீடர்களையும் சுற்றி வளைத்துப் பிடித்தனர். பரமார்த்தர் யாரைப் பலியிட்டார் என்று எல்லோரும் ஆவலோடு பலி பீடத்தைப் பார்த்தனர். அங்கே... ஒரு பல்லி, இரண்டு துண்டாகிக் கிடந்தது. அரண்மனை வீரர்களுக்கு ஒரே அதிர்ச்சியாகவும், ஆச்சரியமாகவும் இருந்தது. "சே, நரபலி சாமியார் என்று நினைத்தோம். இவர் நரபல்லி சாமியாராக அல்லவா இருக்கிறார்" என்றபடி பரமார்த்தரையும் சீடர்களையும் அரசனிடம் அழைத்துச் சென்றார்கள். மன்னா! ஏன் எங்களைக் கைது செய்தாய்? நாங்கள் செய்த தவறு என்ன?" என்றார் பரமார்த்தர். "நரபலி கொடுப்பது எங்கள் நாட்டுச் சட்டப்படி குற்றம்" என்றான் மன்னன். "நாங்கள் என்ன, மனிதர்களையா பலி கொடுத்தோம்? கேவலம் ஒரு பல்லியைத்தானே கொன்றோம்" என்று சொன்னார் பரமார்த்தர். "அதுதான் நீங்கள் செய்த தவறு! எங்கள் நாட்டு மக்களின் குலதெய்வம் பல்லி! என் நாட்டுக் கொடியில் இருப்பதும் பல்லி சின்னம்! அந்தப் பல்லியைக் கொன்று, அவமரியாதை செய்த குற்றத்திற்காக உங்கள் அனைவரையும் சிறையில் தனது ஆணையிடுகிறேன் என்று கட்டளையிட்டான், கந்தபுர மன்னன். ஐயோ! நரபலி கொடுத்தால் நல்லது நடக்கும் என்று நினைத்தோம். அதுவும் ஆபத்தில் கொண்டு வந்து விட்டு விட்டதே" என்று புலம்பியபடி குருவும் சீடர்களும் சிறைக்குச் சென்றார்கள். |
1 | ['tam'] | கீழே கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பைக் கொடு.
கதை: ஜானகி ஆன்ட்டி ஒருமுறை செக்கச்செவேல் என்று பழுத்திருந்த ப்ளம்ஸ் பழங்களை வாங்கினாள். ஆன்ட்டிக்கு நான்கு குழந்தைகள். கோபு பாபு, சிட்டு, பட்டு என்று அவர்களுக்குப் பெயர். குழந்தைகள் சாப்பிட்ட பிறகு பழங்களைத் தரலாம் என்று ஆன்ட்டி நினைத்தாள்.பழங்கள் மேஜைமீது ஒரு தட்டில் இருந்தன. பட்டுக்குட்டி இதுவரை ப்ளம்ஸ் பழத்தைச் சாப்பிட்டதேயில்லை. ஆசையோடு அவற்றை வாசனை பார்த்தாள். அந்த வாசனை அவளுக்கு மிகவும் பிடித்திருந்தது. பழத்தைத் தின்று பார்த்துவிட வேண்டும் என்ற ஆசை அவளுக்கு உண்டாயிற்று.அறையில் யாருமில்லாதபோது ஒரு பழத்தை எடுத்துத் தின்றுவிட்டாள். எல்லோரும் சாப்பிட்ட பின்பு ஜானகி ஆன்ட்டி பழங்களை எண்ணிப் பார்த்தாள். ஒன்று குறைந்தது. “மைடியர் சில்ட்ரன். ஒரு ப்ளம்ஸ் பழம் குறைகிறது. யாராவது சாப்பிட்டீர்களா?” என்று குழந்தைகளைப் பார்த்துக் கேட்டாள்.“நான் இல்லை”, “நான் இல்லை” என்று எல்லோரும் சொன்னார்கள். பட்டுக்குட்டியும் அவர்களோடு சேர்ந்து “நான் தின்னவில்லை” என்று சொன்னாள். “ஓகே……..யார் சாப்பிட்டிருந்தாலும் பரவாயில்லை. ஆனால், ப்ளம்ஸ் பழத்தில் கொட்டை இருக்கும். சாப்பிடத் தெரியாமல் அந்தக் கொட்டையையும் சேர்த்து சாப்பிட்டால் வயிற்றில் பெரியதாக ப்ளம்ஸ் மரம் முளைத்துவிடும். அதுதான் எனக்குப் பயமாக இருக்கிறது” என்றாள் ஜானகி ஆன்ட்டி.பட்டுக்குட்டி பயந்துபோய், “இல்லை, நான் கொட்டையை ஜன்னலுக்கு வெளியே எறிந்துவிட்டேன்” என்று கூறி அழத் தொடங்கினாள்.“பொய் சொன்னால் எப்படியும் மாட்டிக் கொள்கிறோம் பார்த்தாயா? இனிமேல் பொய் சொல்லக்கூடாது……….என்ன?” என்று பட்டுக்குட்டியை சமாதானப்படுத்தினாள் ஜானகி ஆன்ட்டி.
| கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பு 'மறைக்க முடியாத பொய்' என்பதாகும். |
1 | ['tam'] | கீழே கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பைக் கொடு.
கதை: விஜயநகரப் பேரரசர் கிருஷ்ண தேவராயர் தெனாலிராமனுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தார். இதைப் பார்த்த மற்ற அரசவையினருக்கு தெனாலி மீது பொறாமை ஏற்பட்டது. அவர்கள் அடிக்கடி, “அரசே! எங்களிடம் என்ன குறை? நீங்கள் ஏன் எங்களை விடத் தெனாலிக்கு அதிக முக்கியத்துவம் தருகிறீர்கள்?'' என்று கேட்டனர். இதற்கு பதில் அரசரின் சிரிப்புத்தான். ஒருநாள், தெனாலி விடுப்பில் சென்றிருந்தார். அரசர், அமைச்சர், சேனாதிபதி முதலானோர் மாறுவேடத்தில் நகர்வலம் சென்றனர். பேசிக் கொண்டே ஒரு கிராமத்தை அடைந்தனர். ஓரிடத்தில் விவசாயிகள் அமர்ந்து பேசிக்கொண்டிருந்ததைப் பார்த்தார் அரசர். அவர்களிடம் சென்று, “நாங்கள் வெளிநாட்டினர், உங்களை இந்நாட்டு அரசர் சரியாகக் கவனித்துக் கொள்கிறாரா?'' என்றார். உடனே அனைவரும் அரசரைப் புகழ்ந்தனர். பிறகு அரசர் ஒரு முதிய விவசாயியிடம் அதே கேள்வியைக் கேட்டார். உடனே அவர் சட்டென்று அங்கிருந்து எழுந்து எங்கோ போய்விட்டுப் பிறகு திரும்பி வந்தார். அவர் கையில் ஒரு கருப்பங்கழி! வந்ததும் அதை அவர் இரு கையாலும் உடைத்தவாறு, “சகோதரா! எங்கள் அரசர் இதைப் போன்றவர்'' என்றார். அவரது பதில் அரசருக்கு ஆச்சரியத்தைத் தந்தது. அமைச்சரைத் திரும்பிப் பார்த்தார். அமைச்சரோ “அரசே! அவர் உங்களை அவமானப் படுத்துகிறார். அவர், "எங்கள் அரசர் பலவீனமானவர்; எவரும் அவரை எளிதில் வீழ்த்தி விடலாம் என்பதைக் குறிக்கக் கரும்பை ஒடித்துக் காட்டினார்'' என்றார். இதைக்கேட்டதும், அரசருக்கு ஆத்திரம் வந்தது. அவர் ஏதோ கூற வந்தார். அப்போது பின்னாலிருந்து தலைப்பாகை கட்டிய ஒருவர் எழுந்து, “கோபப்படாதீர்கள் தயாநிதியே! இப்போது கிழவர் கரும்பை உடைத்து, அரசர் கரும்பு போல் மேலிருந்து கசப்பும், இடையில் இனிப்பும் உடையவர் என்பதை உணர்த்தத்தான் இப்படி செய்தார்'' என்று கூறிக் கொண்டே தனது பொய்த் தாடியை எடுத்தார். அது வேறு யாருமல்ல! தெனாலிராமன்தான். “அரசே! என்னைக் கண்டு பிடிக்க முடியாவிட்டாலும், நான் உங்களது பணியாள். என்னால் உங்களை விட்டு எப்படி இருக்க முடியும்?'' என்றார். அதைக் கண்ட அரசர் சிரித்துவிட்டார். தெனாலியை வாரி அணைத்துக்கொண்டு, “நான் உன்னிடம் பிரியம் வைத்திருப் பதற்குக் காரணமே இதுதான்'' என்று புகழ்ந்தார். கேட்டுக் கொண்டிருந்த அமைச்சர், ராஜகுரு மற்றும் சேனாதிபதிக்கு அவமானமாகப் போய்விட்டது. அதன்பிறகு அரசவையில் தெனாலியின் மதிப்பு மேலும் அதிகரித்து விட்டது. நன்றி தினமலர்!
| கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பு 'கருப்பங்கழி!' என்பதாகும். |
2 | ['tam'] | கீழே கொடுக்கப்பட்டுள்ள வார்த்தைகளையும் தலைப்பையும் பயன்படுத்தி சிறு கதை எழுதுக.
வார்த்தைகள்: கிருஷ்ண தேவராயர், அப்பாஜி, கப்பம், மன்னர், ஆடுகள்
தலைப்பு: கிருஷ்ணதேவராயரிடம் அப்பாஜி மந்திரி ஆன கதை
| விஜய நகர மன்னர் கிருஷ்ணதேவராயரிடம் அப்பாஜி என்று ஒரு மந்திரி இருந்தார். அவர் இதற்கு முன் கிருஷ்ணதேவராயருக்குக் கப்பம் கட்டும் ஒரு குறு நில மன்னரிடம் மந்திரியாக இருந்தார். அந்த மன்னர் ஏதோ காரணத்தால் வரிசையாக சில ஆண்டுகள் கப்பம் கட்ட இயலவில்லை. கிருஷ்ண தேவராயரின் கோபத்துக்கு அஞ்சினார். அவர் சர்வ சாதாரணமாக சம்பந்தப்பட்ட மன்னரை அழைத்து அவரைத் தனிமையில் வைத்து பிரம்பாலேயே அடிப்பார், பிறகு புண்மேல் உப்பு தடவச் செய்வார். அப்பாஜி அம்மன்னனை அழைத்துக் கொண்டு கிருஷ்ண தேவராயரைப் பார்க்க வந்தார். ஊருக்கு வெளியில் ஒரு சத்திரத்தில் மன்னனைத் தங்க வைத்தார். தான் தகவல் தெரிவிக்கும் வரை மன்னன் கிருஷ்ண தேவராயரின் முன்னால் வரக் கூடது என்றுக் கூறி விட்டு அவர் மட்டும் சென்று கிருஷ்ண தேவராயரை சென்று பார்த்தார். கிருஷ்ண தேவராயரும் அவரை வரவேற்று தன்னுடன் வைத்துக் கொண்டார். சில நாட்கள் கழிந்தன.கிருஷ்ண தேவராயரும் அப்பாஜியும் விஜய நகர சந்தை வீதியில் உலாவிக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென்று கிருஷ்ண தேவராயர் அப்பாஜியின் முகத்தைப் பார்க்காமல் அவரிடம் "ஆமாம், உங்கள் மன்னர் எங்கே? அவரை நான் பார்க்க வேண்டுமே" என்றார்.அப்பாஜியும் உரியன செய்வதாக வாக்களித்தார்.பிறகு தன் மன்னனிடம் ரகசியத் தூதனுப்பி தன் சொந்த நாடுக்கு உடனே விரைந்துச் செல்லுமாறுக் கூறினார். மன்னரும் ஓடி விட்டார். சில நாட்கள் கழித்து கிருஷ்ண தேவராயர் அப்பாஜியிடம் அவர் மன்னன் இன்னும் வராததற்கானக் காரணம் கேட்டார். அப்பாஜீ அவரிடம் நடந்ததைக் கூறினார்.கிருஷ்ண தேவராயர் ஆச்சரியத்துடன் அவரிடம் "நீங்கள் செய்தது உங்கள் மன்னனைக் காப்பாற்றி விட்டது. அவருக்குத் தக்கத் தண்டனை கொடுக்கவே எண்ணியிருந்தேன். ஆனால் இதை எப்படி உணர்ந்துக் கொண்டீர்கள்?" என்று கேட்டார்.அப்போது அப்பாஜீ "மகாராஜா, நீங்கள் என் மன்னனைப் பற்றிப் பேசும் போது உங்கள் பார்வைப் போன திசையைக் கவனித்தேன். அங்கு ஒரு கசாப்புக் கடையில் ஆடுகள் தோலுறிக்கப்பட்டுத் தொங்கிக் கொண்டிருந்தன. அதைப் பார்த்தவுடனேயே உங்களுக்கு எம் மன்னன் ஞாபகம் வந்தது. ஆகவே இது நல்லதுக்கல்ல என்று நான் உணர்ந்துக் கொண்டேன்" என்றார். அதன் பிறகு அப்பாஜி மகராஜாவிடம் மந்திரியாக இருந்தார். அது வேறு கதை, சோக முடிவுடன். அரசர்களுடன் நெருங்கி பழகுவது எப்போதுமே கத்திமுனையில் நடப்பது போலத்தான். |
2 | ['tam'] | கீழே கொடுக்கப்பட்டுள்ள வார்த்தைகளையும் தலைப்பையும் பயன்படுத்தி சிறு கதை எழுதுக.
வார்த்தைகள்: அக்பர், பீர்பல், கிழவி, குல்ஷா, சுந்தரி பாய், பத்ரிநாத், புறாச்சின்னம், தங்க நாணயங்கள், செப்பு நாணயங்கள்
தலைப்பு: செப்புக் காசாக மாறிய தங்கக் காசுகள்
| சக்கரவர்த்தி அக்பர் பொது மக்களைத் தன் சபையில் நேரடியாக சந்தித்துக் குறைகளை விசாரிப்பார் என்ற செய்தி கேட்டு அந்தக் கிழவி பரபரப்படைந்தாள். சமூகத்தில் மிக செல்வாக்குடைய குல்ஷா என்ற பணக்கார பிரபுவின் முகத்திரையைக் கிழிக்க அவள் துடித்தாள். ஆனால், தான் அந்தப் பிரபுக்கெதிராக கூறப்போகும் புகாரை அக்பர் நம்புவாரா என்ற சந்தேகமும் ஏற்பட்டது. எதற்கும் அவரை சந்திப்பது என்ற முடிவுக்கு வந்தாள். மறுநாள் கிழவி தயங்காமல் தர்பாருக்கே சென்று விட்டாள். வாயிற்காவலர்கள் அவளைத் தடுத்தி நிறுத்தி என்ன வேண்டும் என்று வினவியபோது, தான் சக்கரவர்த்தியை நேரில் சந்திக்க விரும்புவதாக அவள் கூறினாள். உடனே, ஒரு காவலன் அவள் கையைப் பிடித்து அழைத்துச் சென்று தர்பாருக்குள் நுழைந்தான். சிம்மாசனத்தில் வீற்றிருந்த அக்பரைக் கண்டு தரையைத் தொட்டு சலாம் செய்ய அவள் முயன்றபோது, அவளை கவனித்த அக்பர் அவளுடைய முதிர்ந்த வயதை மனத்தில்கொண்டு அவளை சிரமப்படாமல் இருக்க சைகை செய்தார். பிறகு, "அம்மா! உனக்கு என்ன வேண்டும்?" என்றார். அதற்கு அவள் அக்பரை நோக்கி, "பிரபு! நான் சுந்தரி பாய்! மிக ஏழையானவள்! என்றாள். அதற்கு அக்பர், "ஏழையாயினும், பணக்காரராயினும் என் முன் சமநீதி கிடைக்கும். உன் குறையென்ன சொல். தாயே!" என்றார். "பிரபு! ஓராண்டு முன் நான் பத்ரிநாத் யாத்திரை செல்ல விரும்பினேன். என்னிடமுள்ள பணத்தையெல்லாம் அதுவரை யாரிடமாவது பத்திரமாக விட்டுச் செல்ல வேண்டுமே என்று திட்டமிட்டேன். என்னுடைய உடைமைகளைப் பொற்காசுகளாக மாற்றி ஒரு பையில் போட்டு, வாயை இறுகக் கயிற்றினால் கட்டி விட்டேன். பிறகு, கயிற்றின் முடிச்சின் மேல் மெழுகை உருக்கி ஊற்றினேன். புறாச்சின்னம் உள்ள என் மோதிரத்தை உருகிய மெழுகில் அழுத்தி, முடிச்சை சீல் செய்தேன். சீலில் என் மோதிரத்தின் புறாச்சின்னம் தெளிவாகக் காணப்பட்டது" என்று மூச்சு விடாமல் சொல்லிக் கொண்டே போனவளை அக்பர், "அம்மா! நீ மிகவும் முன் எச்சரிக்கையுடன் நடந்து கொண்டு இருக்கிறாயே! சபாஷ்!" என்று பாராட்டினார். "என்ன பயன், பிரபு? அந்தப் பையை மிக கௌரவமான மனிதர் என்று கருதப்படும் குல்ஷாவிடம் நேரில் சென்று கொடுத்தேன். நான் பத்ரிநாத் சென்று வரும் வரை பத்திரமாகப் பாதுகாக்கும்படி வேண்டினேன். அந்தசமயம் கூட யாருமில்லை. என்னுடைய பையை அவர் தன் கையினால் தொடக்கூட இல்லை. என்னை வீட்டின் பின்புறம் அழைத்துச் சென்றவர், அங்கு ஒரு குழியைத் தோண்டி, அதனுள் அந்தப் பையைப் போடும்படி சொன்னார். நானும் அப்படியே செய்ய, பிறகு அதை மண்ணைப் போட்டு மூடி விட்டார். பிறகு என்னிடம் பிரயாணம் முடிந்து வந்த பிறகு நானே குழியைத் தோண்டி எடுத்துக் கொள்ளலாம் என்றார். "மிக உத்தமமான மனிதர் என்று மனத்தில் அவளுக்கு மரியாதை செலுத்திவிட்டு, நேரில் அவருக்கு நன்றி கூறித் திரும்பினேன். பிறகு பத்ரிநாத் யாத்திரை முடிந்தபின், நான் அவரிடம் செல்ல அதே இடத்திற்கு அவர் என்னை அழைத்துச் சென்றார். நான் குழியைத் தோண்டி, புதைத்து வைத்திருந்த என் பையை எடுத்துக் கொண்டேன். குலுக்கினால் உள்ளே நாணயங்கள் குலுங்கும் ஒலிகேட்டு திருப்தி அடைந்து வீட்டுக்குத் திரும்பினேன். பையின் கயிற்றின் முடிச்சும், அதில் நான் வைத்திருந்த சீலும் அப்படியே இருந்தது. "ஆனால், என்னவென்று சொல்வது! வீட்டுக்கு வந்து, பையைத் திறந்து பார்த்தால் உள்ளே தங்க நாணயங்களுக்கு பதிலாக செப்பு நாணயங்கள் இருந்தன. குல்ஷா போன்ற கௌரவமான மனிதர் இப்படி ஓர் ஏழைக்கிழவியை மோசம் செய்வார் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை" என்று கண்ணீர் வடித்தாள். பையிலுள்ள கயிற்றின் முடிச்சை அவிழ்க்காமல் உள்ளிருக்கும் பொற்காசுகளை எப்படி வெளியே எடுத்து செப்புக்காசுகளை நிரப்ப முடிந்தது என்று அக்பருக்குப் புரியவில்லை. அதேசமயம் கிழவி பொய் சொல்கிறாளோ என்று சந்தேகமும் எழ,அக்பர் பதில் சொல்ல முடியாமல் குழம்பிப் போய் பீர்பாலை நோக்க, பீர்பால் "பிரபு! இதை நான் தீர்த்து வைக்கிறேன்" என்றார். அக்பர் நிம்மதியுடன் ஒரு பெருமூச்சு விட்டார். அடுத்து பீர்பால், "பிரபு! பொற்காசுகள் இருந்ததாகக் கூறப்படும் அந்தப் பையினை நான் பார்க்க விரும்புகிறேன்!" என்று கூறி, அதைக் கிழவியிடமிருந்து வாங்கிக் கொண்டார். அதை மேலுங் கீழுமாகப் புரட்டி உற்று கவனித்த பீர்பாலின் புருவங்கள் நெரிந்தன. அதில் ஏதோ மர்மம் இருப்பதாகப் புரிந்தது. |
2 | ['tam'] | கீழே கொடுக்கப்பட்டுள்ள வார்த்தைகளையும் தலைப்பையும் பயன்படுத்தி சிறு கதை எழுதுக.
வார்த்தைகள்: முல்லா, நண்பர், கழுதை, இரவல்
தலைப்பு: கழுதையால் கிடைத்த பாடம்
| ஒருநாள் முல்லாவின் நண்பர் ஒருவர் முல்லாவிடம் வந்தார். " முல்லா அவர்களே! உங்களுடைய கழுதையை எனக்கு இரண்டு நாட்களுக்கு தயவுசெய்து
இரவலாகத் தாருங்கள் இரண்டு நாட்கள் கழிந்ததும் திருப்பி தந்துவிடுகிறேன் " என்றார்
நண்பர். அந்த நண்பர் முன்பும் இரண்டொரு தடவை கழுதையை இரவல் வாங்கிச் சென்றதுண்டு.
அப்பொழுதெல்லாம் சொன்ன நாட்களில் அவர் கழுதையைத் தரவில்லை. தவிரவும் கழதைக்கு
சரியான உணவளிக்காமலும் விட்டிருந்தார். அதனால் அவருக்குக் கழுதையை இரவல் தரக்கூடாது என்று முல்லா தீர்மானித்து விட்டார்.
நண்பரே! என் கழுதை இப்போது வீட்டில் இல்லை. அதை வேறு ஒருவர் இரவலாகக் கொண்டு
சென்றிருக்கிறார் என்று முல்லா கூறினார். நண்பர் அவரிடம் விடைபெற்றுக் கொண்டு புறப்பட்ட சமயம் முல்லாவின் வீட்டுக் கொல்லைப்
புறத்தில் கழுதை கத்தும் குரல் கேட்டது. " முல்லா அவர்களே கழுதை வீட்டில்தான் இருக்கிறது போலிருக்கிறதே! யாரோ
இரவலாகக்கொண்டு சென்றதாகக் கூறினீர்களே" என்ற நண்பர் வியப்புடன் கேட்டார்.
முல்லாவுக்குக் கோபம் வந்த விட்டது. " நான் சொன்ன சொல்லை நீர் நம்பவில்லை. ஒரு கழுதையின் சொல்லைத்தான் நம்புகிறீர். ஏன்
மீது நம்பிக்கை இல்லாத ஒருவருக்குக் கழுதையை இரவல் தரக்கூடாது என்பதற்காகத்தான் வேறு
ஒருவர் அதைக் கொண்டு சென்றார் எனச் சொன்னேன் " என்றார். நண்பர் அவமானமடைந்து அந்த இடத்தை விட்டுக் கிளம்பினார். |
2 | ['tam'] | கீழே கொடுக்கப்பட்டுள்ள வார்த்தைகளையும் தலைப்பையும் பயன்படுத்தி சிறு கதை எழுதுக.
வார்த்தைகள்: விக்கிரமன், வேதாளம், கபாலி, வியாபாரி பத்மநாபன், வியாபாரியின் மகள் பிரத்யுஷா, பத்மநாபநின் நண்பன் மகன் ஆனந்தன், வைத்தியர் தனஞ்சயன், சீடன் சஞ்சய், ஆனந்தனின் நண்பன் சிவநாதனு, கிழவர், கிழவி, இளவரசி, மகாதம்பன் என்ற மந்திரவாதி
தலைப்பு: சுயநலத்தின் விளைவு
| தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிரமன் மீண்டும் மரத்திலேறி அதில் தொங்கிய உடலைக் கீழே வீழ்த்தினான். பின்னர் கீழேயிறங்கி, அதைத் தூக்கிக் கொண்டு மயானத்தை நோக்கிச் செல்லும்போது, அதனுள்இருந்த வேதாளம் விக்கிரமனிடம், "மன்னா! ஆவிகளும், பேய்களும் உலவும் இந்த பயங்கர வனத்தில் நீ எதற்காக இவ்வாறு அலைந்து திரிகிறாய் என்று எனக்கு இன்னமும் புரியவில்லை. ஒருவேளை, அற்புதமான சக்திகளைப் பெறுவதற்காக நீ இத்தனை முயற்சிகளை மேற்கொள்ளுகிறாயோ என்று தோன்றுகிறது. கபாலி என்பவனின் கதையைக் கூறுகிறேன்" என்று கதை சொல்லலாயிற்று: மாணிக்கபுரியில் வசித்து வந்த பிரபல வியாபாரி பத்மநாபன் தன் ஒரே மகளான பிரத்யுஷாவிற்குத் திருமணம் செய்து வைக்கத் தீர்மானித்தார். தன்னுடைய நண்பரின் மகனான ஆனந்தனுக்கேத் தன் மகளை மணமுடிக்க முடிவும் செய்தார். ஆனால், திடீரென, திருமணத்திற்கு சில தினங்கள் முன் பிரத்யுஷாவிற்கு ஒரு விசித்திர நோய் ஏற்பட்டது. அவளால் பேசவே முடியாமல் வாய் அடைத்துப் போனது. இதனால் பத்மநாபன் துடிதுடித்துப் போனார். பல ஊர்களில்இருந்து தலைசிறந்த வைத்தியர்களை வரவழைத்து சிகிச்சை செய்தும் பலனில்லை. கடைசியில் ஒருநாள் தனஞ்சயன் என்ற வைத்தியர் அவளைப் பரிசோதித்து அவளுடைய நோய் என்னவென்று கண்டு பிடித்தார். அவர் பத்மநாபனை நோக்கி, "உங்கள் மகளின் குரல்வளை நரம்புகள் செயலற்று விட்டன. அதனால் அவளால் பேச முடியவில்லை. இந்த நோயை தசமூலம் எனும் மூலிகையினால் மட்டுமே குணப்படுத்த முடியும். ஆனால் அந்த மூலிகை வங்காளக் கடலில் உள்ள நாகத்தீவில் மட்டுமே கிடைக்கும். ஆனால், அங்கு செல்வது மிகவும் கடினம்!" என்றார். வைத்தியர் சொன்னதைக் கேட்டு ஆனந்தன், "வைத்தியரே! நான் பிரத்யுஷாவிற்காக தசமூல மூலிகையை உலகின் எந்தத் திசையிலிருந்தாலும் எடுத்து வருவேன். அந்த முயற்சியில் என் உயிரே போனாலும் பரவாயில்லை!" என்று உணர்ச்சிவசப்பட்டுக் கூறினான். அவனைப் பெருமிதத்துடன் பார்த்த தனஞ்செயர், "நீ அந்த மூலிகையை நீ எப்பாடுபட்டாவது எடுத்து வந்தால், அது பிரத்யுஷாவிற்கு மட்டுமன்றி, அதே நோயால் பீடிக்கப்பட்டுள்ள பல நோயாளிகளுக்கும் பலன் கிடைக்கும். நீ தனியாகச் செல்ல வேண்டாம். உன்னுடன் என் சீடன் சஞ்சய் வருவான். அவனையும் அழைத்துச் செல்!" என்றார். ஆனந்தனின் நண்பன் சிவநாதனும் அவனுடன் செல்ல முன் வந்தான். அங்கு இருந்தவர்களில் ஒருவனான கபாலி, "எனக்கு வீரதீர சாகசங்கள் மிகவும் பிடிக்கும். அதனால் இந்தப் பயணத்தில் நானும் கலந்து கொள்வேன். நால்வருமாகச் செல்வோம்! வெற்றியுடன் திரும்புவோம்!" ஒரு நல்ல நாளில் நால்வரும் மாணிக்கபுரியை விட்டுக் கிளம்பினர். கால்நடையாகப் பல நாள்கள் சென்றபின் கிழக்குக் கடற்கரையான வங்கக் கடலை அடைந்தனர். ஒரு கட்டுமரப் படகில் நால்வரும் நாகத்தீவை நோக்கிப் பயணித்தனர். முதல் ஐந்து நாள்கள், பயணத்தில் அபாயம் எதுவும் ஏற்படவில்லை. ஆனால் ஆறாம் நாளன்று திடீரென ஒரு திமிங்கிலம் தன் வாலைச் சுழற்றி அவர்களுடைய கட்டுமரத்தையடிக்க, அது துண்டு துண்டாக உடைந்தது. நால்வரும் கடலில் மூழ்கினர். ஆனந்தன் கடலுக்குள் மூழ்கவிருந்த சமயம், அவன் நண்பன் சிவநாதன் உடைந்த படகின் ஒரு துண்டை அவனிடம் தள்ளிவிட்டான். தனக்கு தகுந்த சமயத்தில் உதவி செய்த நண்பனுக்கு நன்றி கூறத் திரும்பினான். ஆனால் சிவநாதனைக் காணவில்லை. மற்ற இருவரும் சற்றுத் தொலைவில் உடைந்தப் படகுத்துண்டுகளைப் பிடித்துக் கொண்டு மிதப்பது தெரிந்தது. தனக்குதவி செய்த நண்பன் மட்டும் காணாமற்போனதைக் கண்டு ஆனந்தன் வருந்தினான். மிதந்து கொண்டே சென்ற மூவரும், கடலின் நடுவில் இருந்த குன்றுகள் சூழ்ந்த ஒரு தீவில் ஒதுங்கினர். அப்போது வானில் ஒரு பறக்கும் தட்டு தெரிந்தது. அந்தப் பறக்கும் தட்டு அவர்கள் இருக்குமிடத்தில் கீழே இறங்கியது. அதில் மிகவும் வயதான ஒரு கிழவர் உட்கார்ந்திருந்தார். அவரை மிகுந்த ஆச்சரியத்துடன் மூவரும் நோக்க, அவர், "பயப்படாதீர்கள்! நானும் உங்களைப் போல் மனிதன்தான்! வானில் பறக்கவேண்டுமென்பது எனது நீண்ட நாள் கனவு! அதற்காகக் காலமெல்லாம் முயன்று இந்தப் பறக்கும் தட்டை உருவாக்கினேன்" என்றார். "ஐயா! தசமூலம் எனும் மூலிகையைத் தேடி நாங்கள் நாகத் தீவிற்குப் புறப்பட்டோம். அது எங்கிருக்கிறது என்று தெரியுமா?" என்று ஆனந்தன் கேட்டான். "இதுதான் நாகத்தீவு! மலையின் மீது வஞ்சிநகர் என்ற ஊர் உள்ளது. அங்கு இந்தப் பறக்கும் தட்டில்தான் செல்ல வேண்டும்! உங்களில் யாராவது தன் இளமையை எனக்குத் தியாகம் செய்தால், இதை நீங்கள் எடுத்து உபயோகிக்கலாம்!" என்றார் அந்த கிழவர்! உடனே சஞ்சய் தன் இளமையைத் தியாகம் செய்ய முன் வந்தான். ஆனந்தன் அவனைத் தடுத்தும் சஞ்சய் கேட்கவில்லை. உடனே, கிழவர் சொல்லிக் கொடுத்த மந்திரத்தை சஞ்சய் உச்சரிக்க, அவன் சிறிது நேரத்தில் கிழவனாக மாறினான். கிழவர் குமரனாக மாறினார். குமரனான கிழவர் ஆனந்தனிடம் பறக்கும் தட்டைக் கொடுத்தார். பிறகு ஆனந்தன், கபாலி இருவர் மட்டும் பறக்கும் தட்டில் ஏறி வஞ்சிநகரை சேர்ந்தனர். வஞ்சிநகரில் அவர்கள் கண்ட காட்சி அவர்களை திடுக்கிடச் செய்தது. அந்த ஊரிலுள்ள இளைஞர்களும், இளம்பெண்களும் மிருகங்களின் தலைகளுடனும், மனிதர்களின் உடலுடனும் தென்பட்டனர். கிழவர்களும், கிழவிகளும் மட்டும் முழு மனித வடிவத்தில் இருந்தனர். அங்கு யாரை என்ன கேட்பது, தசமூல மூலிகையை எப்படித் தேடுவது என்று புரியாமல் அவர்கள் அலைந்து திரிந்து கடைசியில் ஒரு கிழவியின் குடிசையை அடைந்தனர். அந்தக் கிழவியிடம் தசமூல மூலிகையைப் பற்றிக் கேட்டனர். அதற்குக் கிழவி, "அந்த மூலிகை இளவரசியின் நந்தவனத்தில் இருக்கிறது. ஆனால் அதை உங்களால் பெற முடியாது. இளவரசியே இப்போது ஒரு மந்திரவாதியின் பிடியில் சிக்கிக் கொண்டிருக்கிறாள்" என்றாள். "யார் அந்த மந்திரவாதி? ஏன் இந்த ஊரில் இளவயதினர் விசித்திரமான தோற்றத்துடன் காணப்படுகிறார்கள்?" என்று கபாலி கேட்டான். "அது பெரிய கதை! மகாதம்பன் என்ற மந்திரவாதி இளவரசி நந்தினியை அடைய விரும்பினான். ஆனால் இளவரசிக்கு அவனைச் சிறிதும் பிடிக்கவில்லை. அதனால் கோபங்கொண்ட மந்திரவாதி இந்த ஊரிலுள்ள இளைஞர்களையெல்லாம் மிருகத்தலைகளுடன் தோன்றுமாறு சபித்து விட்டான். எங்களைப் போன்ற வயதானவர்களை விட்டுவிட்டான். இளவரசி தன்னைத் திருமணம் செய்து கொண்டால் மட்டுமே, சாபத்தை நீக்கிக் கொள்வான் என்று கிழவி சொல்லிக் கொண்டிருக்கையில், அந்தப் பக்கமாக மந்திரவாதி சென்று கொண்டிருந்தான். உடனே கபாலி அவன் எதிரில் போய் நின்று, "ஏய் மந்திரவாதி! உன் அக்கிரமத்தை ஒடுக்க நான் வந்துஇருக்கிறேன். மரியாதையாக, உன் சாபத்தைத் திரும்பப் பெறு!" என்று துணிச்சலுடன் கூறினான். "யாரடா நீ? நான் மந்திரவாதி மகாதம்பன்! என்னிடமா விளைாயடுகிறாய்? உன்னை என்ன செய்கிறேன் பார்?" என்று கோபத்துடன் கூவிக் கொண்டே, அவன் தன் மந்திரக்கோலை உயர்த்தினான். உடனே, சற்றும் எதிர்பாராதவிதமாய், கபாலி அவன் மீது பாய்ந்து அவன் மந்திரக்கோலைப் பிடுங்கிக் கொண்டான். மந்திரக்கோல் கை மாறியதும் தன் சக்தியை இழந்த மந்திரவாதி தப்பியோட முயலுகையில், அவனை ஆனந்தனும், கபாலியும் பிடித்துக் கட்டிப்போட்டனர். உடனே, செய்தி அறிந்த இளவரசி அங்கு வந்து மந்திரவாதியை சிறையிட கட்டளை இட்டாள். பிறகு, ஆனந்தனையும், கபாலியையும் ராஜமரியாதையுடன் அரண்மனைக்கு அழைத்துச் சென்று உபசாரம் செய்தாள். அவர்கள் அங்கு வந்ததன் நோக்கத்தையறிந்து, தசமூல மூலிகைகளை வேண்டிய அளவு தன் நந்தவனத்திலிருந்து எடுத்துக் கொடுத்தாள். செல்லுமுன், கபாலி அங்குள்ள மக்களுக்கு மந்திரக்கோலைப் பயன்படுத்தி சில மந்திர உச்சாடனங்கள் செய்து சுய உருவம் கொடுத்தான். வஞ்சிநகரை விட்டுச் செல்லும் போது ஆனந்தன், "கபாலி! இனி அந்த மந்திரக்கோல் தேவை இல்லை. அதைத் தூக்கி எறிந்து விடு!" என்றான். ஆனால் கபாலி மந்திரக்கோலை தன்னிடமே வைத்துக் கொண்டான். பிறகு, இருவரும் தாங்கள் கிழவரையும், சஞ்சயையும் விட்டு வந்த இடத்திற்குச் சென்றனர். அங்கு அவர்கள் கண்ட காட்சி அவர்களைப் பெரும் வியப்பில் ஆழ்த்தியது. சிவநாதன் அங்கு உயிருடன் காணப்பட்டான். சஞ்சய் பழையபடி வாலிபனாக மாறிஇருந்தான். கிழவர் பழையபடி கிழவராகவே இருந்தார். ஆனந்தனைக் கட்டித் தழுவிய சிவநாதன், "நண்பா! கடல் அலைகள் என்னை வேறு திசையில் தள்ளிவிட்டதால் நான் உங்களைப் பிரிந்து விட்டேன். பிறகு, சிரமப்பட்டு இங்கு வந்து விட்டேன்!" என்றான். கிழவரிடம் பறக்கும் தட்டை ஒப்படைத்துவிட்டு, நால்வரும் மாணிக்கபுரிக்குத் திரும்பினர். தசமூல மூலிகையின் மகிமையினால் பிரத்யுஷா விரைவிலேயே குணமடைந்தாள். ஒரு நல்ல முகூர்த்தத்தில் ஆனந்தன் அவளைத் திருமணம் செய்து கொண்டான். மந்திரவாதியின் மந்திரக்கோலைக் கைப்பற்றித் தன்னுடைமையாக்கிக் கொண்ட கபாலி அதை வைத்து மந்திரவித்தைகள் காட்டிப் பணம் சம்பாதிக்க முயன்றான். ஆனால் அந்த மந்திரக்கோல் வேலை செய்யாதது மட்டுமன்றி, கபாலியை நன்றாக அடித்துத் துவைக்க, அவன் அந்த ஊரைவிட்டே வெளியேறினான். இந்த இடத்தில் தன் கதையை நிறுத்திய வேதாளம் விக்கிரமனை நோக்கி, "மன்னா! கபாலியின் கதியைப் பார்த்தாயா? கபாலியின் மந்திரக்கோல் வேலை செய்யாதது மட்டுமன்றி அவனையே நையப் புடைத்தது. இவ்வாறு நடக்கக் காரணம் என்ன? வாள் பிடித்தவனுக்கு வாளினால்தான் சாவு என்பதுபோல் மந்திரசக்திகளினால் என்றாவது ஒருநாள் அவற்றைக் கையாள்பவனுக்கே தீங்கு நேரும் என்பது உண்மையா? என்னுடைய கேள்விகளுக்கு விடை தெரிந்தும் நீ மவுனமாக இருந்தால் உன் தலை வெடித்து சுக்கு நூறாகும்" என்றது. அதற்கு விக்கிரமன், "நீ சொல்வது சரியல்ல! ஆனந்தனுக்கு உதவி புரிவதற்காகவே முதலில் அவனுடன் சிவநாதன், சஞ்சய், கபாலி ஆகியோர் சென்றனர். சிவநாதன் தன் நண்பன் கடலில் மூழ்க இருக்கையில் அவனுக்கு உதவி செய்து உயிரைக் காப்பாற்றினான். சஞ்சய் ஆனந்தனின் நோக்கம் நிறைவேற தன் இளமையையே தியாகம் செய்தான். கபாலி மந்திரவாதியிடமிருந்து மந்திரக் கோலை பறித்த பிறகு, அவன் மனத்தில் பணம் சம்பாதிக்கும் ஆசை ஏற்பட்டது. மந்திரக்கோலைத் தன் சுயநலத்திற்குப் பயன்படுத்த எண்ணியதால் வந்த விளைவுதான் அது!" என்றான். விக்கிரமனது சரியான பதிலினால் அவனுடைய மௌனம் கலையவே, அவன் சுமந்திருந்த உடலிலிருந்த வேதாளம் பறந்து சென்று மீண்டும் முருங்கை மரத்தில் ஏறிக்கெண்டது. |
2 | ['tam'] | கீழே கொடுக்கப்பட்டுள்ள வார்த்தைகளையும் தலைப்பையும் பயன்படுத்தி சிறு கதை எழுதுக.
வார்த்தைகள்: முல்லா, குளக்கரை, நடமாட்டம், தற்பெருமைக்காரர்
தலைப்பு: தற்பெருமை
| ஒரு தடவை முல்லா ஒரு குளக்கரை ஒரமாக நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது வழியில் இருந்த ஒரு கல் தடுக்கி குளத்தில் விழ அவருக்குப் பின்னால் வந்து
கொண்டிருந்த ஒரு மனிதர் பாய்ந்து வந்து முல்லாவைக் குளத்தில் விழாமல் காப்பாற்றினார்.
முல்லா அவருக்கு நன்றி சொல்லிவிட்டுப் போய்விட்டார். ஆனால் முல்லாவைக் காப்பாற்றியவரோ சும்மா இருக்கவில்லை. முல்லாவை எந்த இடத்தில்
யாருக்கு நடுவே சந்தித்தாலும் " குளத்தில் விழ இருந்த முல்லாவை நான்தான்
காப்பாற்றினேன் " என்று சொல்ல தொடங்கிவிட்டார். அவருடைய தற்பெருமைப் பேச்சைக் கேட்டுக் கேட்டு முல்லாவுக்கு சலிப்பு ஏற்பட்டுவிட்டது.
அவருக்கு தகுந்த நேரத்தில் சரியான பாடம் கற்பிக்க வேண்டும் என்று தீர்மானித்தார். ஒரு நாள் பழைய குளக்கரைப் பக்கம் ஜன நடமாட்டம் அதிகமாக இருந்தது. அந்தப் பக்கம்
வந்த முல்லா அந்த தற்பெருமைக்காரர் குளக்கரையில் யாரோ ஒருவருடன் உரையாடிக்
கொண்டிருப்பதைக் கண்டார். திடீரென முல்லா குளத்தினுள் பாய்ந்து விட்டார்.
முல்லா குளத்தில் விழுந்து விட்டார் என நாலாபுறமிருந்த மக்களிடமிருந்து கூக்குரல்
எழுந்தன. பலர் முல்லாவைக் காப்பாற்றுவதற்காக குளத்தில் இறங்கினர். முன்னர் முல்லாவைக் குளத்தில் விழாமல் காப்பாற்றியவரும் அவசர அவசரமாகக் குளத்தில்
இறங்கினார். முல்லாவோ யாரைப் பற்றியும் கவலைப்படாமல் குளத்தில் நீச்சலடித்து விளையாடிக்
கொண்டிருந்தார். முல்லாவுக்கு நீந்தத் தெரியும் என்ற விஷயம் இதுவரை யாருக்கமே தெரியாது. முல்லா முன்னர் தம்மைக் காப்பாற்றியதாக தற்பெருமை பேசும் மனிதரைச் சுட்டிக்
காண்பித்து
" என் அருமை நண்பரை உங்களுக்கெல்லாம் அறிமுகப்படுத்த நினைக்கிறேன். நீந்தத் தெரிந்த
என்னை இந்தக் கனவான் ஒரு தடவை நீரில் மூழ்கி விடாமல் காப்பாற்றி பேருதவி செய்தார் "
என்றார். |
1 | ['tam'] | கீழே கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பைக் கொடு.
கதை: கிடைத்ததில் சம பங்கு ஒருநாள் கிருஷ்ணதேவர் அரண்மனையில் கிருஷ்ண லீலா நாடக நாட்டியம் நடைபெற ஏற்பாடு செய்திருந்தார். தெனாலிராமனைத் தவிர மற்ற எல்லா முக்கியப்பிரமுகர்களுக்கும் அழைப்பு விடுத்திருந்தார். இந்நிகழ்ச்சியில் அரசியும் மற்றும் சில பெண்களும் கலந்து கொள்வதால் தெனாலிராமன் இருந்தால் ஏதாவது கோமாளித்தனம் செய்து நிகழ்ச்சியை நடைபெறா வண்ணம் தடுத்துவிடுவான் என எண்ணி தெனாலிராமனை மட்டும் நாடக அரங்கினுள் விட வேண்டாமென்று வாயிற்காப்போனிடம் கண்டிப்புடன் சொல்லி விட்டார் மன்னர். இதை அறிந்தான் தெனாலிராமன் எப்படியாவது அரங்கத்தினுள் சென்று விடுவது என தீர்மானித்துக் கொண்டான். நாடகம் நடைபெறும், அரங்கின் வாயிலை நெருங்கினான் தெனாலிராமன். உள்ளே செல்ல முற்பட்டான். வாயில் காப்பானோ அவனை உள்ளே விட மறுத்து விட்டான். மீண்டும் மீண்டும் கெஞ்சினான். வாயிற்காப்போன் மசியவில்லை. இந்நிலையில் தெனாலிராமன் ஒரு தந்திரம் செய்தான். “ஐயா, வாயிற்காப்போரே என்னை உள்ளே விட்டால் என்னுடைய திறமையால் ஏராளமான பரிசு கிடைக்கும். அதில் பாதியை உனக்குத் தருகிறேன்” என்றான். இதைக் கேட்ட வாயிற் காப்போன் முதலில் சம்மதிக்காவிட்டாலும் பின்னர் கிடைப்பதில் பாதி பரிசு கிடைக்கிறதே என்று மகிழ்ந்து அவனை உள்ளே விட்டான். அரங்கத்தினுள் செல்ல வேண்டுமானால் மீண்டும் இன்னொரு வாயிற் காப்போனை சமாளிக்க வேண்டியிருந்தது. அவனும் தெனாலிராமனை உள்ளே விட மறுத்தான். முதற் வாயிற் காப்போனிடம் சொல்லியதையே இவனிடமும் சொன்னான். இவனும் பாதி பரிசு கிடைக்கிறதே என்று மகிழ்ந்து அவனை உள்ளே விட்டுவிட்டான். ஒருவருக்கும் தெரியாமல் தெனாலிராமன் ஓர் மூலையில் போய் உட்கார்ந்து கொண்டான். அப்போது கிருஷ்ணன் ஆக நடித்தவன் வெண்ணை திருடி கோபிதைகளிடம் அடி வாங்கும் காட்சி நடைபெற்றுக் கொண்டிருந்தது. உடனே மூலையில் இருந்த தெனாலிராமன் பெண் வேடம் அணிந்து மேடையில் தோன்றி கிருஷ்ணன் வேட்ம் போட்டு நடித்தவனை கழியால் நையப் புடைத்து விட்டான். கிருஷ்ண வேடதாரி வலி பொறுக்கமாட்டாமல் அலறினான். இதைப்பார்த்த மன்னர் கடுங்கோபமுற்று மேடையில் பெண் வேடமிட்டுள்ள தெனாலிராமனை அழைத்து வரச்செய்தார் பின் “ஏன் இவ்வாறு செய்தாய்” என வினவினார். அதற்குத் தெனாலிராமன் “கிருஷ்ணன் கோபிகைகளிடம் எத்தனையோ மத்தடி பட்டிருக்கிறான் இப்படியா இவன் போல் அவன் அலறினான்” இதைக் கேட்ட மன்னருக்கு அடங்காக் கோபம் ஏற்பட்டது. தெனாலிராமனுக்கு 30 கசையடி கொடுக்குமாறு தன் பணியாளர்களுக்கு உத்தரவிட்டார். இதைக் கேட்ட தெனாலிராமன் “அரசே இப்பரிசை எனக்கு கொடுக்க வேண்டாம். ஏனென்றால் எனக்குக் கிடைக்கும் பரிசை ஆளுக்குப் பாதி பாதி தருவதாக நம் இரண்டு பாயிற்காப்போன்களிடம் உறுதியளித்து விட்டேன். ஆகையால் இப்பரிசினை, அவர்கள் இருவருக்கும் சமமாகப் பங்கிட்டுக் கொடுங்கள் ” என்று கேட்டுக் கொண்டான். உடனே மன்னர் அவ்விரு வாயிற்காப்போன்களையும் அழைத்து வரச்செய்து இது குறித்து விசாரித்தார். அவ்விருவரும் உண்மையை ஒத்துக் கொண்டார்கள். அவ்விருவருக்கும் தலா 15 கசையடி கொடுக்குமாறு மன்னர் பணித்தார். மேலும் தெனாலிராமனின் தந்திரத்தைப் பாராட்டி அவனுக்குப் பரிசு வழங்கனார்.
| கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பு 'கிடைத்ததில் சம பங்கு' என்பதாகும். |
2 | ['tam'] | கீழே கொடுக்கப்பட்டுள்ள வார்த்தைகளையும் தலைப்பையும் பயன்படுத்தி சிறு கதை எழுதுக.
வார்த்தைகள்: சென் துறவி, மாணவன்
தலைப்பு: அப்படியானால் நீயே வைத்துக் கொள்
| சென் துறவி ஒருவர் தனது 60வது வயதில் தான் ஜென் தத்துவங்களைப் படிக்க ஆரம்பித்தார். தனது 80வது வயது வரை படித்தார். பின்னர் தான் காலமான 120ம் வயது வரை மற்றவர்களுக்கு கற்றுக் கொடுத்தார். அந்த துறவியிடம் மாணவன் ஒருவன்… ஒரு மாணவன், ‘குருவே, என் மனதில் எதுவுமே இல்லையென்றால் என்ன செய்வது?" என்றான். குரு, ‘அதைத் தூக்கி எறிந்து விடு", என்றார். மீண்டும் அவன், ‘என்னிடம் தான் எதுவுமே இல்லையே? எப்படித் தூக்கி எறிவது?" என்றான். குரு மீண்டும், ‘சரி, அப்படியானால் நீயே வைத்துக் கொள்" என்றார்! |
1 | ['tam'] | கீழே கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பைக் கொடு.
கதை: பீர்பாலின் நகைச்சுவையான பேச்சுகளை அக்பர் மட்டுமன்றி தர்பாரில் பலரும் ரசித்தனர். ஆனால், சிலருக்கு மட்டும் பீர்பாலுக்குக் கிடைத்த பாராட்டுகள் பொறாமையை அளித்தன. ஒவ்வொரு முறையும் அக்பர் மனந்திறந்து பீர்பாலைப் பாராட்டுகையில், அவர்களுடைய மனம் பற்றியெரிந்தது. எப்படியாவது பீர்பாலை மட்டம் தட்ட வேண்டும் என்றும்,அவமானப்படுத்த வேண்டும் என்றும் அவர்கள் ஆவலாயிருந்தனர். அவர்களில் சைதான்கான் முதன்மையானவர். சைதான்கான் தன்னைப்போலவே பீர்பாலின் மீது பொறாமை கொண்ட மற்றவர்களுடன் சேர்ந்து அவரை அவமானப்படுத்தத் திட்டங்கள் தீட்டினார். அவற்றுள் ஒரு திட்டம் அனைவருக்கும் பிடித்துப் போனதால் அதை செயலாற்ற முடிவு செய்தனர். மறுநாள் வழக்கம் போல் தர்பார் கூடியது. முக்கியமான அலுவல்கள் முடிந்தபின், அக்பர் சிம்மாசனத்தில் நன்றாக சாய்ந்து கொண்டு அமர்ந்தார். பொதுவாக அந்த சமயத்தில்தான் அவர் சபையோரிடமிருந்து அறிவுரைகள், யோசனைகள் ஆகியவற்றைக் கேட்பது வழக்கம். உடனே சைதான்கான் எழுந்து நின்று அக்பரை வணங்க, அவரும் பேசுவதற்கு அனுமதி தந்தார். உடனே சைதான்கான் பீர்பாலைப் பார்த்துக் கொண்டே, “சக்கரவர்த்தி! நமது பீர்பாலைப் போல் புத்திசாலி யாருமே இல்லை. அவருக்கு அபார மூளை!” என்று பீர்பாலுக்கு ஐஸ் வைத்தார். “உங்களுக்கு மட்டும் புத்தி குறைவா? நீங்களும் தான் புத்திசாலி!” என்றார் பீர்பால். “என்ன இருந்தாலும் உங்களுடைய புத்திசாலித்தனத்திற்கு ஈடாகுமா?” என்ற சைதான்கான் சக்கரவர்த்தியை நோக்கி விஷமமாக, “சக்கரவர்த்தி! பீர்பாலே இத்தனை புத்திசாலியாக இருந்தால் அவருடைய தகப்பனார் இன்னும் எத்தனை புத்திசாலியாக இருப்பார்?” என்றார். அதைக்கேட்டு நிமிர்ந்து உட்கார்ந்த அக்பர், “அட, ஆமாம்! இது ஏன் எனக்குத் தோன்றவில்லை?” என்றார். “அப்படியானால் உடனே பீர்பாலின் தகப்பனாரை தர்பாருக்கு வரவழைப்போம் பிரபு!” என்றார் சைதான்கான். தன்னுடைய திட்டம் இத்தனை சீக்கிரம் பலிக்கும் என்று அவர் எதிர்பார்க்கவில்லை. அதைக் கேட்ட பீர்பால் திடுக்கிட்டார். சைதான்கான் ஆரம்பத்தில் இருந்தே தன்னைக் கவிழ்ப்பதற்காகத்தான் திட்டம் போட்டிருக்கிறான் என்று உணர்ந்தார். ஆனால் இவ்வளவு சாமர்த்தியமான திட்டத்தை எதிர்பார்க்கவில்லை. பீர்பாலின் தகப்பனார் அவ்வளவாகப் படிப்பறிவு இல்லாதவர். கிராமத்தைச் சேர்ந்த அப்பாவி. அவரை தர்பாரில் அழைத்து வந்து, தாறுமாறாக அவரை கேள்விகள் கேட்டு, அவரை அவமானப்படுத்துவதன் மூலம், அவர்கள் தன்னை அவமானப்படுத்த நினைக்கிறார்கள் என்று பீர்பால் புரிந்து கொண்டார். இதற்கிடையில் அக்பர், “பீர்பால்! நீ உடனே கிராமத்திற்குச் சென்று உன் தகப்பனாரை அழைத்து வா!” என்று கட்டளை இட்டார். அக்பரின் கட்டளையை ஏற்றுக் கொண்டு ரதத்திலேறி உடனே பீர்பால் தன் தகப்பனார் வசித்து வந்த கிராமத்தை அடைந்தார். அவர் கால்களில் விழுந்து வணங்க, அவரும் தன் மகனை ஆசீர்வதித்தார். பிறகு இருவரும் உணவருந்தினர். இரவில் அவர் படுக்கைக்குச் செல்லுமுன், பீர்பால் தான் வந்த நோக்கத்தைத் தன் தந்தையிடம் மெதுவாக வெளியிட்டார். பரபரப்படைந்த அந்த முதியவர், “நானா… தர்பாருக்கு வருவதா! நான் படிக்காதவன்! தர்பாரில் சக்கரவர்த்திமுன் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென்றோ, எப்படி பேசுவதென்றோ அறியாதவன்!” என்று பதைபதைத்தார். “கவலைப்படாதீர்கள்! எப்படி நடந்து கொள்ள வேண்டுமென்றும், என்ன பேசவேண்டுமென்றும் நான் சொல்லித் தருகிறேன். தர்பாரில் நுழைந்ததும் சக்கரவர்த்தி முன் தலை தரையில் படும்படி விழுந்து சலாம் செய்யுங்கள். அவருடன் பேசும் போது, பணிவுடன் தலையை குனிந்தப்படி பதில் சொல்லுங்கள். யார் உங்களிடம் எது கேட்டாலும், தலையசைத்துப் புன்னகை மட்டும் செய்யுங்கள். மற்ற விஷயங்களை நான் பார்த்துக் கொள்கிறேன்” என்றார் பீர்பால். “மௌனம் சர்வார்த்த சாதகம்” என்று கூறிய பெரியவர் சிரித்துக் கொண்டே, “அப்படியே ஆகட்டும்!” என்றார். “எல்லாம் முடிந்த பிறகு யாராவது உங்களைப் பார்த்து ஏன் கேட்ட கேள்விகளுக்குப் பதில் சொல்லவில்லை என்று கேட்டால், உடனே நீங்கள்…” என்று பீர்பால் முதியவர் காதில் ரகசியமாகக் கூற, அவர் விழுந்து விழுந்து சிரித்தார். அதன்பிறகு பீர்பால் தன் தகப்பனாரை அழைத்துக்கொண்டு தலைநகரை அடைந்து, தர்பாருக்குள் நுழைந்தார். தர்பாரில் ஏற்கெனவே அக்பரும், மற்றவர்களும் வந்திருந்தனர். முதலில் பீர்பால் தனது தலை தரையில் படும்படி அக்பரை விழுந்து வணங்க, அவருடைய தகப்பனாரும் அப்படியே செய்தார். “வாருங்கள் பெரியவரே! உட்காருங்கள்!” என்று அக்பர் மரியாதையுடன் கூற முதியவரும் பீர்பாலுக்கருகே ஓர் இருக்கையில் அமர்ந்தார்.
| கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பு 'முட்டாள்களின் கேள்விகள்' என்பதாகும். |
1 | ['tam'] | கீழே கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பைக் கொடு.
கதை: ஒரு சமயம் பா'ன் யூன் என்ற துறவி, சா'ன் ஆசிரியர் ஷிடோவை முதன் முதலில் சந்தித்த போது, "எல்லா தர்மங்களின் துணையினையும் உதறித் தள்ளிய மனிதர்கள் எப்படிப் பட்ட மனிதர்களாக இருக்க முடியும்?" என்று கேட்டான். கேட்டவனின் வாயை அப்படியே தனது கைகளால் பொத்தினார் ஷிடோ. துறவியால் சா'ன் ஆசிரியரின் செய்கையை புரிந்து கொள்ள முடியவில்லை. மதிப்புக்குரிய குரு மாசூவிடம் சென்று தன்னுடைய கேள்வியினைக் கேட்பதென முடிவெடுத்து, அதேக் கேள்வியைத் திருப்பிக் கேட்டான். "நீ ஷிஷியாங் ஆற்றின் தண்ணிரினை ஒரே மிடக்கில் குடித்துக் காட்டினால்தான், நான் உன்னுடையக் கேள்விக்கு பதில் அளிக்க முடியும்" என்ற பதிலே கிடைத்தது. அதனைக் கேட்ட பா'ன் யூன் தன்னுடைய அறியாமை நீங்கி தன்னொளி பெற்றான்.
| கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பு 'நதியினைக் குடி' என்பதாகும். |
1 | ['tam'] | கீழே கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பைக் கொடு.
கதை: தன் முயற்சியில் சற்றும் தளராத விக்கிரமன் மீண்டும் மரத்திலேறி அதில்தொங்கும் உடலைக் கீழே வீழ்த்தி, பின்னர் அதைத் தோளில் சுமந்து கொண்டுசெல்லுகையில், அதனுள்ளிருந்த வேதாளம் விக்கிரமனை நோக்கி, “மன்னா? நீவீரமும், பராக்கிரமும் மிகுந்தவன் என்பதில் சந்தேகமில்லை. ஒரு மன்னனுக்கு வீரமும், பராக்கிரமும் எவ்வளவு தேவை என்று உன்னைப்பார்த்தாலே அறிந்து கொள்ளலாம். ஆனால் அறிவில் சிறந்தவர்கள் என்றுகருதப்படுபவர்கள் சிலருக்கு இந்த சாதாரண உண்மை புலப்படுவதில்லை.அவர்களுடைய தவறான ஆலோசனைகளினால் நாட்டிற்கே பெரிய தீங்கு உண்டாகக் கூடும். விக்ரமன் - வேதாளம் கதைகளில் , விக்ரமன் வேதாளத்திற்கு அளித்த பதில்களில் நீங்கள் ஏற்றுக்கொள்ளாத பதிலைக் கொண்ட கதை எது ? ஏன் ? அத்தகைய அறிவிற்சிறந்த ஒருவரின் கதையைக் கூறுகிறேன் கேள்!” என்று கதை சொல்லலாயிற்று. மன்னர் சுதட்சிணர் ஆட்சிக்காலத்தில் நாட்டில் சுபிட்சம் நிலவியது. மக்கள் மனநிறைவுடன் வாழ்க்கை நடத்தினார். ஆனால் மன்னருக்கு வாரிசு இல்லாதது ஒரு பெருங்குறையாக இருந்தது. தனக்குப் பிறகு ராஜ்யத்தை ஆளப்போவது யார் என்று பெருங்கவலையில் மூழ்கிய மன்னர் ஒருநாள் தன் முதன்மந்திரி கங்காதரரை அழைத்து அதைப்பற்றி ஆலோசித்தார். “மந்திரியாரே! இந்த ராஜ்யத்தை நான் ஒழுங்காக நிர்வாகம் செய்து வருகிறேன். ஆனால் எனக்குப் பிறகு யார் ஆட்சிப் பொறுப்பை ஏற்பார்கள் என்பது எனக்குப் பெரும் கவலையை அளிக்கிறது. எனக்குப்பிறகு சிம்மாசனத்தில் அமரப் போவது யார் என்பதை இப்போதே நாம் தீர்மானித்தால் நல்லது. ராணியைக் கலந்து ஆலோசித்தால் அவள் தன்னுடைய உறவினர்களின் பிள்ளைகள் யாரையாவது தத்து எடுத்துக் கொள்ளுமாறு சொல்கிறாள். அதில் எனக்கு விருப்பமில்லை. எனக்குப் பிறகு முடிசூட்டிக் கொள்பவன் வீரதீரப் பராக்கிரமனாக இருக்க வேண்டும். அப்படிப்பட்ட வீரனை நாம் எப்படித் தேடுவது?” என்றார். அதற்கு மந்திரி, “பிரபு! எனக்கு ஒரு யோசனை தோன்றுகிறது. நமது தலைநகரில் உள்ள குருகுலத்தில் வித்யாசாகர் அவர்கள் பல க்ஷத்திரிய மாணவர்களுக்கு வில் வித்தை, வாட்போர், மல்யுத்தம் ஆகியவற்றையும், ராஜாங்க நிர்வாகத்தையும், போர்த்தந்திரங்களையும் கற்பித்து வருகிறார். அவரிடம் சென்றால், நம் ராஜ்யத்தின் எதிர்கால வாரிசை நாம் தேர்ந்தெடுக்கலாம்” என்றார். மன்னருக்கு அது சரியான யோசனை என்ற தோன்றவே, இருவரும் மறுநாளே குருகுலத்திற்குச் சென்று, வித்யாசாகரை சந்தித்து, தாங்கள் வந்த காரியத்தைப் பற்றிக் கூறினர். அதற்கு குரு வித்யாசாகர், “மகாராஜா! நீங்கள் சரியான சமயத்தில்தான் வந்திருக்கிறீர்கள். விஜயதசமியையொட்டி, குரு குலத்தில் பல்வேறு போட்டிகள் நடைபெற உள்ளன. அந்தப் போட்டிகளைப் பார்வை இட்டால், உங்களுக்குத் தேவையான வீரனை நீங்களே தேர்வு செய்து கொள்ள முடியும்” என்றார். மறுநாள், போட்டியில் பங்கேற்ற மூன்று பேர் நீண்ட தூரம் பயணம் செல்ல வேண்டும் என குரு உத்தரவிட்டார்.இதன் படி தங்கள் பயணத்தைத் தொடங்கிய மூன்று பேரும் ஒருமாதப் பயணத்திற்குப்பின் குருகுலத்திற்குத் திரும்பினர். அவர்கள் திரும்பி வந்தபோது, குருகுலத்தில் குரு வித்யாசாகருடன், மன்னரும், மந்திரியும் அமர்ந்திருந்தனர். அவர்களை வரவேற்ற குரு, மூவரையும் ஒருவர் பின் ஒருவராக தங்கள் பயண அனுபவங்களைக் கூறும்படிச் சொன்னார். முதலில் முன்வந்த வில்வித்தை நிபுணனான ஜெயன் “குருவே! நான் வடக்குதிசையை நோக்கிப் பயணமானேன். வழியில் எனக்கு எந்தவிதத் தடங்கலும் ஏற்படவில்லை. சென்ற இடங்களிலெல்லாம் மக்கள் மகிழ்ச்சியுடன் தென்பட்டனர். ஆனால் நம் ராஜ்யத்து எல்லையில் உள்ள காட்டுப்பிரதேசத்தில் நான் கண்ட காட்சி என்னைத் திடுக்கிடச் செய்தது. அங்கு சில இளைஞர்கள் இரகசியமாக ஆயுதப் பயிற்சி பெற்றுக் கொண்டிருந்தனர். மறைந்திருந்துத் தாக்குவது, அரசாங்க ஆயுதங்களைத் திருடுவது, ரகசிய ஆயுதத் தயாரிப்பு ஆகியவற்றில் ஈடுபட்டிருந்த அந்த இளைஞர்கள் பக்கத்து ராஜ்யத்தைச் சேர்ந்தவர்கள். வறுமையில் வாடும் அந்த இளைஞர்களை யாரோ ஒருவன் சைகாட்டி அவ்வாறு ஆயுதப் பயிற்சி அளிப்பதைப் பார்த்தேன். நமது ராஜ்யத்தில் இவ்வாறு தீயசக்திகள் உருவாவதைப் பொறுக்க முடியாமல், இளைஞர்களுக்கு ஆயுதப் பயிற்சியளித்து அவர்களைத் தவறான வழியில் ஈடுபடுத்த முயன்ற பயிற்சியாளனை அம்பெய்திக் கொன்று விட்டேன். என்னுடைய கடமையை நிறைவேற்றியதற்காகப் பெருமைப்படுகிறேன்” என்றான். அடுத்து வந்த விஜயன், “நான் தென்திசை நோக்கிப் பயணம் சென்றேன். தென்திசைப் பகுதிகளில் சட்டம், ஒழுங்கு சரியான முறையில் இல்லை என்பதை அறிந்தேன். அங்குள்ள அரசாங்க அதிகாரிகள் மெத்தனமாக இருப்பதே இதற்குக் காரணம் என்று அறிந்தேன். எங்கு பார்த்தாலும் வழிப்பறி கொள்ளைகள் நடந்து கொண்டிருந்தன. அங்கிருந்த இளைஞர்களுக்குக் கொள்ளைக்காரர்களை எதிர்த்துப் போரிட தைரியம் இல்லை. அந்த நிலைமையை மாற்ற எண்ணிய நான் அங்கிருந்த இளைஞர்களைத் திரட்டி அவர்களுக்கு வாள் சண்டை கற்றுக் கொடுத்தேன். இப்போது அங்குள்ள இளைஞர்கள் எனது முயற்சியினால் வீரம் மிகுந்தவர்களாக மாறிவிட்டனர்.” என்றான். அடுத்து, மூன்றாமவன் கௌதமன் முன் வந்து, “நான் கிழக்கு திசையில் பயணம் சென்றேன். ராஜ்யத்தின் கிழக்குப் பகுதி சுபிட்சமாகவும், அமைதியாகவும் இருந்தது. அதனால் என்னுடைய போர்க்கலைகளைப் பயன்படுத்த வேண்டிய அவசியம் ஏற்படவில்லை. ஒருநாள் அங்குள்ள கோயில் ஒன்றில் வடித்திருந்த சிற்பத்தின் விரல்களுக்குள் ஒரு பல்லி சிக்கித் தவித்துக் கொண்டிருந்தது. எப்படி சிக்கியது என்று தெரியவில்லை. ஆனால், அந்த இடத்தை விட்டு மீள முடியாமல் தவித்ததைக் கண்டேன். அப்போது ஓர் அதிசயக் காட்சியைக் கண்டேன். மற்ற பல்லிகள் தங்கள் வாயில் உணவைக் கவ்விக் கொண்டு வந்து சிக்கிக் கொண்டிருந்த பல்லிக்கு அளித்துக் கொண்டிருந்தன. ஓரறிவு படைத்த சாதாரண பல்லிகளுக்குள் நிலவிய அந்த நல்லிணக்கத்தைக் கண்டு வியந்த நான், ஒரு சிற்பியை வரவழைத்து, சிற்பங்களின் விரல்களை உடைத்து, அது தப்பிக்க வழி செய்தேன். திரும்பி வரும் வழியில், ஒரு காட்டில் கிணற்றினுள் ஒரு யானைக் குட்டி விழுந்திருந்ததைக் கண்டேன். நான் காட்டுவாசி மக்களை அங்கு அழைத்து வந்து, அந்த யானைக் குட்டியை கிணற்றிலிருந்து வெளியே மீட்க ஏற்பாடு செய்தேன். பிறகு, அந்த ஆட்களிடம் பல்லிகள், யானைகள் போன்ற மிருகங்கள் தங்களுக்குள் உதவி செய்து கொள்வதை சுட்டிக்காட்டி, மனிதர்களாகிய நாமும் அதிலிருந்து பாடம் கற்றுக் கொள்ள வேண்டும் என்று உபதேசம் செய்தேன். பொறாமை, பேராசை ஆகியவற்றின் காரணமாக, மக்கள் ஒருவருக்கொருவர் சண்டையிடுவது எத்தகைய அறிவீனம் என்பதை எடுத்துரைத்தேன்” என்றான். உடனே, மன்னரும், மந்திரியும் தனியே சென்று தங்களுக்குள் கலந்து ஆலோசித்தனர். தாங்கள் தேடிக் கொண்டிருந்த வீரமும், பராக்கிரமும் ஜெயனிடமும், விஜயனிடமும் பரிபூரணமாக இருந்ததைக் கண்டு, அவர்களில் ஒருவனையே இளவரசனாகத் தேர்வு செய்ய வேண்டுமெனத் தீர்மானித்தபின், குரு வித்யாசாகரின் கருத்தினை அறிய அவரிடம் சென்றனர். வித்யாசாகர் மன்னரை நோக்கி, “மகாராஜா! என்னுடைய அபிப்பிராயப்படி மூவரில் கௌதமன்தான் உங்களுடைய வாரிசாகத் தகுதியானவன். அவனிடம் வீரம், பராக்கிரமம் ஆகியவற்றுடன், மனிதகுலத்திற்குத் தேவையான ஜீவகாருண்யமும் நிரம்பியுள்ளது. அத்தகைய ஜீவகாருண்யச் சிந்தனை உள்ளவனே எதிர்கால மன்னனாகத் தகுதியானவன்” என்றார். குருவின் கருத்தினைக் கேட்ட மன்னரும், மந்திரியும் மிகுந்த ஆச்சரியப்பட்டனர். நீண்டநேரம் யோசித்த பிறகு மன்னர், “குருதேவரே! உங்கள் கருத்தினை ஏற்கிறேன்” என்று சொல்லிவிட்டு, மந்திரியுடன் திரும்பிச் சென்றார். இந்த இடத்தில் கதையை நிறுத்திய வேதாளம், “மன்னா! மிகவும் அறிவாளியான குரு வித்யாசாகர் சரியானபடி முடிவு செய்வார் என்று நம்பி அவரை மன்னர் அணுகியது எவ்வளவு தவறாகப் போயிற்று? வீரதீர சாகசங்கள் புரிந்த ஜெயனையும், விஜயனையும் ஒதுக்கிவிட்டு, புத்தரைப் போல் ஜீவகாருண்யத்தை போதித்த கௌதமனைப் போய் யாராவது இளவரசனாக சிபாரிசு செய்வார்களா? இவை யாவும் தெரிந்தும், மன்னர் ஏன் குருவின் முடிவை ஏற்றுக் கொண்டார்? என் சந்தேகத்திற்கு விளக்கம் தெரிந்தும் நீ மௌனமாக இருந்தால் உன் தலை வெடித்து சுக்கு நூறாகும்” என்றது. அதற்கு விக்கிரமன், “அரசவை ஆட்சி பீடத்தில் அமரப் போகும் இளவரசனுக்கு வீரமும், பராக்கிரமமும் தேவை என்பது மறுக்க முடியாத உண்மை! அதைத்தான் மன்னர் சுதட்சிணர் எதிர்பார்த்தார். ஆனால் அவையிரண்டும் மட்டும் ளவரசனிடமிருந்தால் போதாது. மன்னன் என்பவன் யார்? தன் குடிமக்களின் நலத்திற்காக அல்லும் பகலும் பாடுபடுபவனே மன்னன். சட்டம், அமைதியை நிலைநாட்ட எவ்வாறு வீரம் தேவையோ, அவ்வாறு மக்களின் நலம் காக்க நெஞ்சில் ஈரமும் தேவை! ஜெயன், விஜயன் இருவரிடம் வீரத்தை மட்டுமே கண்ட குரு, கௌதமனிடம் வீரத்துடன், ஜீவகாருண்யத்தையும் கண்டார். தங்களுக்குள் ஒற்றுமையின்றி சண்டையிடும் மக்களை நல்லிணக்கத்துடன் வாழ, அன்புக்கரம் நீட்டுவதே மேல்! நோய் வந்த பின் சிகிச்சை அளிப்பதைவிட, நோய் வருமுன் காப்பது சிறந்ததல்லவா! கௌதமனின் அணுகுமுறையினால் நாட்டில், அமைதியும், நல்லிணக்கமும் நிலவும் என்பதை குரு புரிந்து கொண்டார். மற்றொன்றையும் நோக்க வேண்டும். தனத வீர, தீரப் பராக்கிரமத்தைக் காட்ட கௌதமனுக்குப் பயணத்தில் வாய்ப்பு கிடைக்கவில்லையே தவிர, அவனுக்கு வீரமேயில்லை என்று சொல்ல முடியாதே! அவன் சிறந்த மல்யுத்த வீரன்! தேவைப்படும் போது வீரத்தைக் காட்டவும், மற்ற சமயங்களில் அன்பினைப் பொழியவும் அவனால் முடியும் என்பதால் தான் குரு அவனைத் தேர்வு செய்தார். நீண்ட சிந்தனைக்குப் பிறகு, மன்னருக்கு அது விளங்கவே அவரும் குருவின் கருத்தினை ஒப்புக்கொண்டார்” என்றான். விக்கிரமனின் சரியான பதிலினால் அவன் மௌனம் கலையவே, வேதாளம் மீண்டும் பறந்து சென்று முருங்கை மரத்தில் ஏறிக் கொண்டது.
| கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பு 'வாரிசாகத் தகுதியானவன் யார் ?' என்பதாகும். |
1 | ['tam'] | கீழே கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பைக் கொடு.
கதை: முன்னொரு காலத்தில் மோஜுத் என்ற பெயர் கொண்ட ஒரு மனிதன் இருந்தான். அவன் தான் சிறு அதிகாரியாக பதவி வகிக்கும் ஒரு நகரத்தில் வாழ்ந்து வந்தான், மற்றும் அவன் எடைக்கற்களை பரிசோதிக்கும் அதிகாரியாகவே கடைசி வரை தன் நாட்களை கழித்துவிடுவான் என்பது போல தோன்றியது. ஒருநாள் அவன் அவனுடைய வீட்டிற்கு அருகில் உள்ள பழைய கட்டிடத்தின் தோட்டம் வழியாக நடந்துகொண்டிருந்தபோது, இதர் என்றழைக்கப்படும் சூபிகளின் மர்ம வழிகாட்டி பளிச்சென்ற பச்சை நிறத்தில் உடை உடுத்திக்கொண்டு அவன் முன் தோன்றி “ பிரகாசமான எதிர்காலம் உடைய மனிதனே! உன்னுடைய வேலையை விட்டுவிட்டு மூன்று நாளில் ஆற்றோரத்தில் என்னை சந்தி.” என கூறிவிட்டு பிறகு மறைந்துவிட்டார். மோஜுத் அவனுடைய அலுவலக மேலதிகாரியிடம் சென்று அவன் சென்றாக வேண்டும் என கூறினான். விரைவில் நகரத்தில் உள்ள அனைவரும் இதைப் பற்றி கேள்விப்பட்டு, பாவம் மோஜுத்! அவன் பைத்தியமாகிவிட்டான்! என கூறினர். ஆனால், அவனுடைய வேலைக்கு நிறைய ஆட்கள் காத்திருந்த காரணத்தால், அவர்கள் விரைவில் அவனை மறந்துவிட்டனர். சொல்லப்பட்ட தினத்தில், மோஜுத் இதரை சந்தித்தான், அவர், “ உன்னுடைய உடைகளை கிழித்துக்கொண்டு ஆற்றுக்குள் குதி. யாராவது உன்னை காப்பாற்றக்கூடும்” என கூறினார். மோஜுத் தான் பைத்தியமாகிவிட்டோமோ என ஆச்சர்யபட்டாலும் கூட அவன் அவர் சொன்னதை செய்தான். அவனால் நீந்த முடியும் என்பதால், அவன் மூழ்கவில்லை. ஆனால் வெகு தூரம் அடித்துச் செல்லப்பட்டான். ஒரு மீனவன் அவனைப் பிடித்து “முட்டாளே, ஆற்றோட்டம் வேகமாக உள்ளது. நீ என்ன செய்ய முயற்சி செய்தாய்? என கேட்டுக் கொண்டே அவனைப் படகிற்குள் தூக்கிப் போட்டான். மோஜுத் “எனக்கு உண்மையிலேயே தெரியாது” என கூறினான். மீனவன் “நீ ஒரு பைத்தியம், ஆனால் நான் ஆற்றோரத்தில் இருக்கும் என்னுடைய குடிசைக்கு உன்னை அழைத்து செல்கிறேன், பிறகு நாம் உனக்காக என்ன செய்யமுடியும் என்பதை பார்க்கலாம்” என கூறினான். மோஜுத் நன்றாக படித்தவன் என கண்டுகொண்ட பிறகு எழுதவும் படிக்கவும் மோஜுத்திடம் இருந்து மீனவன் கற்றுக்கொண்டான். மாற்றாக மோஜுத்திற்கு உணவு தரப்பட்டது மற்றும் மீனவனுக்கு மோஜுத் அவனுடைய வேலையிலும் உதவி செய்தான். ஒரு சில மாதங்களுக்கு பிறகு, இதர் இந்த முறை திரும்பவும் மோஜுத்தின் படுக்கையின் கால்மாட்டில் தோன்றி, “ இப்போது எழுந்து இந்த மீனவனை விட்டு கிளம்பு, உனக்கு தேவையானது அளிக்கப்படும்” என கூறினார். மோஜுத் உடனடியாக குடிசையை விட்டு வெளியே வந்தான், அவன் ஒரு மீனவனைப் போல உடை அணிந்திருந்தான், மற்றும் ஒரு நெடுஞ்சாலையை அடையும் வரை அவன் அலைந்துகொண்டிருந்தான். அதிகாலை விடிந்துகொண்டிருந்தபோது அவன் ஒரு விவசாயி அவனது கழுதையின் மீது சந்தைக்கு சென்றுகொண்டிருப்பதை பார்த்தான். விவசாயி, “ நீ வேலை தேடுகிறாயா? ஏனெனில் எனக்கு சந்தையில் வாங்கும் பொருட்களை கொண்டு வர உதவிக்கு ஒரு ஆள் வேண்டும்” என கேட்டான். மோஜுத் அவனைப் பின்தொடர்ந்தான். அவன் விவசாயியிடம் கிட்டதட்ட இரண்டு வருடங்கள் வேலை செய்தான், அந்த காலகட்டத்தில் அவன் மற்றவை பற்றி தெரிந்துகொண்டது சிறிதளவே, விவசாயத்தைப் பற்றி அதிகம் தெரிந்துகொண்டான். ஒருநாள் மதியம் அவன் ஆட்டுரோமத்தை அறுத்துகொண்டிருந்தபோது இதர் அவன்முன் தோன்றி “அந்த வேலையை விட்டுவிடு, மோசூல் நகரத்திற்கு நட, மற்றும் உன்னுடைய சேமிப்பை உபயோகப்படுத்தி தோல் வியாபாரியாக மாறு” என கூறினார். மோஜுத் அவர் சொன்னபடி செய்தான். மோசூலில் அவன் ஒரு தோல் வியாபாரியாக அறியப்பட்டான் அவன் அவனுடைய தோல் வியாபாரத்தை மூன்று வருடங்கள் செய்தான், அப்போது அவன் இதரை பார்க்கவேயில்லை. அவன் ஒரு பெரும் தொகையை சேமித்துவிட்டான், மற்றும் ஒரு வீடு வாங்குவதைப் பற்றி யோசித்துக்கொண்டிருந்தான். இதர் அவன் முன் தோன்றி “உன்னுடைய பணத்தை என்னிடம் தா, இந்த நகரத்தை விட்டு வெகுதூரத்தில் உள்ள சமர்கண்ட் வரை செல், மற்றும் அங்கு உள்ள ஒரு மளிகை கடையில் வேலை செய்” எனக் கூறினார். மோஜுத் அதைச் செய்தான். இப்போது அவன் சந்தேகமில்லாமல் பிரகாசத்தின் குறியீடுகளை காட்ட தொடங்கினான். அவன் நோயுற்றவர்களை குணப்படுத்தினான், அவனுடைய ஓய்வு நேரத்தில் அவன் அருகில் இருந்தவர்களுக்கு உதவி செய்தான், மற்றும் அற்புதத்தை பற்றிய அவனுடைய அறிதல் மேலும் மேலும் ஆழமாகியது. சமய குருமார்களும், தத்துவவாதிகளும் அவனை சந்தித்தனர், அவர்கள் அவனிடம் நீங்கள் யாரிடம் கற்றீர்கள்? என கேட்டனர். “அதைச் சொல்வது கடினம்” என மோஜுத் கூறினான். அவனுடைய சீடர்கள் நீங்கள் எப்படி உங்கள் வாழ்வை தொடங்கினீர்கள்? என கேட்டனர். “சிறு அதிகாரியாக தொடங்கினேன்” என அவன் கூறினான். மற்றும் “உங்களுடைய தேடுதலுக்கு வாழ்க்கையை அர்பணிப்பதற்காக அதனை விட்டுவிட்டீர்களா? என அவர்கள் கேட்டனர். “இல்லை நான் வெறுமனே அதனை விட்டுவிட்டேன்” என அவன் கூறியபோது யாருக்கும் அவன் சொல்வது புரியவில்லை. அவனுடைய வாழ்க்கை சரிதையை எழுதுவதற்காக மக்கள் அவனிடம் வந்தனர். உங்களுடைய வாழ்க்கையில் நீங்கள் என்னவாக இருந்தீர்கள்? என அவர்கள் கேட்டனர். “நான் ஆற்றுக்குள் குதித்தேன், ஒரு மீனவனாக மாறினேன், பின் நடு இரவில் அவனுடைய குடிசையை விட்டு வெளியேறினேன். அதற்கு பிறகு, நான் ஒரு விவசாய கூலியாக மாறினேன். நான் ஆட்டுரோமத்தை வெட்டிக்கொண்டிருக்கும்போது, நான் மாறிவிட்டேன் மற்றும் மோசூலுக்கு சென்றேன், அங்கு தோல் வியாபாரியாக மாறினேன், அங்கு சிறிது பணத்தை சேமித்தேன். ஆனால் அதை கொடுத்துவிட்டேன். பிறகு சமர்கண்டிற்கு நடந்தேன் அங்கு ஒரு மளிகை கடையில் வேலை செய்தேன். மற்றும் நான் இப்போது இங்கு இருக்கிறேன்.” ஆனால் இந்த விவரிக்கமுடியாத நடத்தை உங்களுடைய வித்தியாசமான அற்புதத்தையும், உங்களின் அருமையான ஆனந்த வாழ்வையும் எந்த விதத்திலும் விளக்கவில்லையே என வாழ்க்கை சரிதம் எழுதுபவர்கள் கேட்டனர். “அது அப்படித்தான்” என மோஜுத் கூறினான். எனவே வாழ்க்கை சரிதம் எழுதுபவர்கள் மோஜுத்திற்காக ஒரு அருமையான மற்றும் விறுவிறுப்பான கதையை உண்டாக்கினர். ஏனெனில் எல்லா துறவிகளும் அற்புதமான ஒரு கதையை கொண்டிருக்கவேண்டும், மற்றும் அந்த கதை கண்டிப்பாக கேட்பவரின் ஆசைக்கு தகுந்தபடி இருக்கவேண்டும், என்று நாம் நினைக்கிறோம். அது வாழ்க்கையின் உண்மைகளின்படி இருக்க வேண்டும் என்று நினைப்பதில்லை, மற்றும் இதரைப்பற்றி நேரடியாக பேச யாருக்கும் அனுமதியில்லை. அதனால்தான் இந்த கதையும் உண்மையல்ல. இது ஒரு வாழ்வின் பிரதிபலிப்பு. இது சிறந்த சூபிகளில் ஒருவரது உண்மை வாழ்க்கைப் பிரதிபலிப்பு.
| கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பு 'மோஜுத்' என்பதாகும். |
1 | ['tam'] | கீழே கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பைக் கொடு.
கதை: முல்லாவின் நண்பர் ஒருவர் பெரிய பணக்காரர். அவர் வீட்டுக்கு முல்லா செல்லும் போதெல்லாம் பணக்காரர் தமது திரண்ட சொத்துக்களை தம் மக்களுக்கு எவ்வாறு பிரித்து உயில் எழுதி வைப்பது என்பது பற்றியே அடிக்கடி பேசிக் கொண்டிருப்பார்.உயிலை எழுவதால் அவருக்கு சிக்கல் ஏதும் இல்லை. ஆனால் தம்முடைய செல்வச் செருக்குனை மற்றவர்களுக்கு உணர்த்த வேண்டும் என்பதற்காகவே யாரைக் கண்டாலும் உயிலைப் பற்றிப் பேச்செடுத்து மணிக்கணக்கில் அதைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்பார். அவருடைய பணச் செருக்கு முல்லாவுக்கு எரிச்சலாக இருக்கும்.ஒருநாள் செல்வந்தர் முல்லாவைத் தேடிக் கொண்டு முல்லாவின் வீட்டுக்கு வந்தார். அப்போது முல்லா ஒரு தாளில் ஏதோ தீவிரமாக எழுதிக் கொண்டிருப்பதை செல்வந்தர் கண்டார். ” இவ்வளவு தீவிர சிந்தனையுடன் என்ன எழுதிக் கொண்டிருக்கிறீர்?” என்று செல்வந்தர் கேட்டார்.” என் உயிலைத் தயாரித்துக் கொண்டிருக்கிறேன் தயாரித்து முடிப்பதற்குள் உயிர் போய்விடும் போலிருக்கிறது. ஒரே குழப்பம் சிக்கல் ” என்றார் முல்லா. ” நீரும் உயில் எழுதுகிறீரா? உயில் எழுதும் அளவுக்கு உம்மிடம் சொத்தோ பணமோ ஏது? ஒன்றும் இல்லாதபோது குழப்பமும் சிக்கலும் எங்கிருந்து வந்தது?” என்று செல்வந்தர் வியப்புடன் கேட்டார்.” சொத்தோ செல்வமோ இல்லாததனால்தானே உயில் எழுதுவதில் சிக்கல் இல்லாத சொத்து அல்லது செல்வத்தை எவ்வாறு என் மக்களுக்குப் பிரித்துக் கொடுப்பது என்றுதான் எனக்கு விளங்கவில்லை” என்று கூறிவிட்டு முல்லா சிரித்தார்.தம்மை மட்டம் தட்டவே முல்லா இவ்வாறு கூறுகிறார் என்று உணர்ந்த செல்வந்தர் வெட்கத்துடன் தலைகுனிந்தார்.
| கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பு 'முல்லாவின் உயில்' என்பதாகும். |
2 | ['tam'] | கீழே கொடுக்கப்பட்டுள்ள வார்த்தைகளையும் தலைப்பையும் பயன்படுத்தி சிறு கதை எழுதுக.
வார்த்தைகள்: முனிவர் சித்தானந்தர், பணக்கார பெண்மணி, சிறிய பெண் குழந்தை, சீடர்கள், வயதான மூதாட்டி, பணியாள், ஏழை விதவைப் பெண்
தலைப்பு: குருவின் நல்ல உள்ளம்
| ஒருநாள், முனிவர் சித்தானந்தர் தம் சீடர்களுடன் நகரத்தின் தெருக்கள் வழியாக நடந்து கொண்டிருந்தார். அவர் சிறந்த ஞானி. எனவே, மக்கள் அவரை மிகவும் மதித்தனர். அவர் சீடர்கள் அவரைத் தொடர்ந்து சென்றனர். ஒரு பணக்கார பெண்மணியின் வீட்டருகே அவர்கள் நடந்தனர். அப்போது ஒரு சிறிய பெண் குழந்தை அந்த வீட்டிலிருந்து வெளியே வந்தது. குழந்தைகள் மேல் மிகுந்த அன்புடையவர் ஞானி. அவர் குழந்தையை அன்புடன் நோக்கினார். குழந்தை ஒரு தட்டு நிரம்ப ரோஜா மலர்களைக் கொண்டு வந்து சித்தானந்தர் அதை ஏற்றுக் கொள்ள வேண்டும் எனக் கேட்டுக் கொண்டது. மலர்கள், மணம் தரும் பொருட்கள், தைலங்கள் என்றால் அவர் மிகுந்த மகிழ்ச்சி அடைவார் என்பது சீடர்களுக்குத் தெரியும். ஒரு ரோஜா மலரை மட்டும் எடுத்துக் கொண்டு தட்டை சீடர்களிடம் நீட்டினார். சீடர்களுக்கு சொல்லவா வேண்டும். தலைக்கு இரண்டு மூன்றாக அவர்கள் மலரை அள்ளிக் கொண்டனர். மலர்களை அர்பணித்த குழந்தை மகிழ்ச்சியுடன் இல்லம் சென்றது. சீடர்கள் புடை சூழ சித்தானந்தரின் உலா தொடங்கியது. ஒரு வயதான மூதாட்டி ஞானியை தன் வீட்டுக்குள் வரவேற்றாள். சீடர்கள் உள்ளே சென்று அமர்ந்தனர். ஒரு பணியாள் ஆப்பிள் பழத்தட்டை அவர் முன் வைத்தார். ஒரு பழத்தை எடுத்துச் சுவைத்தார் சித்தானந்தர். பழம் மிகவும் சுவையாக இருந்தது. அவைகளை எடுத்து தன் சீடர்களுக்கு வழங்கினார். சீடர்கள் பழங்களை சுவைத்து உண்டனர். ஞானியைத் தொடர்ந்து செல்வதால் அவர்களுக்கு அவ்வப்போது நல்ல சுவையான பொருட்கள் கிடைத்து வந்தன. எனவே, இந்த சந்தர்ப்பங்களை சீடர்களில் எவரும் தவறவிடுவதில்லை. செல்வந்தர்கள் வாழும் வீதிகளை எல்லாம் அவர்கள் கடந்து சென்றனர். இப்போது வசதி குறைந்தவர்கள் இடம்; நகரின் ஒதுக்குப் புறமான பகுதி. ஏழை விதவைப் பெண்ணொருத்தி அங்கே நின்று கொண்டிருந்தாள். அவள் ஞானியை தன் சிறிய வீட்டுக்கு வருமாறு அழைத்தாள். அவளது அழைப்பை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டார். அவரும் சீடர்களும் உள்ளே சென்று அமர்ந்தனர். ""ஐயனே, நீங்கள் இதைச் சாப்பிட வேண்டும்," என்று கூறி ஒரு தட்டை நீட்டினாள். தட்டைப் பெற்றுக் கொண்ட ஞானி அதில் திராட்சைப் பழங்கள் இருந்ததை பார்த் தார். ஒரு பழத்தை எடுத்து வாயில் போட்டார். சுவைத்து உண்டார். சீடர்கள் பார்த்துக் கொண்டே இருந்தனர். மீண்டும் ஒரு பழத்தைப் பிய்த்து வாயில் போட்டு மென்று சுவைத்தார். இப்படியாக எல்லா பழத்தையும் தான் ஒருவராகவே தின்று தீர்த்தார். தங்களுக்கு அப்பழத்தை வழங்காமல் தானே உண்டதைக் கண்ட சீடர்கள் வியப்படைந்தனர். திராட்சைப் பழம் வழங்கிய ஏழைக் கைம்பெண்ணுக்கு நன்றி கூறினார் ஞானி. பின்னர் வெளியே வந்து நடக்கத் தொடங்கினார். சீடர்கள் அவரோடு நடந்தனர். சீடர்கள் முகத்தில் மாற்றம் ஏற்பட்டிருந்தது. "இதுவரை எல்லா பொருட்களையும், உணவையும் பகிர்ந்து கொண்ட குரு திராட்சைப் பழங்களை மட்டும் தன்னந்தனியாய்த் தானே உண்டது ஏன்?" எல்லாருடைய உள்ளத்திலும் இக்கேள்வி எழுந்து நின்றது. சீடர் ஒருவர் வாய் திறந்து இக்கேள்வியைக் கேட்டே விட்டார். ""நீங்கள் ஏன் தனியாகச் சாப்பிட்டீர்கள்? எங்களுக்கு ஒரு பழங்கூட தரவில்லையே… ஏன்?", ""அந்த திராட்சைப் பழம் மிகவும் புளிப்பாய் இருந்தது. எனவே, நான் ஒருவனாக அவற்றைத் தின்றேன்," என்றார் குரு. ""உங்களுடைய சுகத்திலும் துக்கத்திலும் நாங்கள் பங்கு கொண்டிருக்கிறோம். அப்படியிருக்க, சுவையற்றதை நீங்கள் தனியாக உண்ண வேண்டும்; சுவை மிகுந்ததை மட்டும் எங்களோடு பகிர்ந்துண்ண வேண்டுமா? இது நீதியாகுமா?", ""என்னுடைய சுகத்திலும் துக்கத்திலும் நீங்கள் பங்கு கொள்ள விரும்புவது உண்மையாக இருக்கலாம். ஆனால், இதில் ஓர் ஏழைக் கைம்பெண் இடையே இருக்கிறாள். அவள் தந்த திராட்சைப் பழங்களை உங்களுடன் பகிர்ந்து கொண்டால், "இந்தப் பழம் புளிக்கிறது" என்று நீங்கள் சாப்பிடும் போதே சொல்லி விமர்சனம் செய்து அந்தப் பெண்ணின் மனதைப் புண்படுத்திவிடுவீர்கள். அவளது மனது படாத பாடுபட்டு நொந்து போய்விடும். அதனால் தான் திராட்சைப் பழங்களை உங்களுக்குத் தரவில்லை," என்று சொன்னார் முனிவர். எவருடைய மனதையும் புண்படுத்தக் கூடாது என்ற கருத்தில் தங்கள் குரு எத்தனை உண்மையாக இருக்கிறார் என்பதை அறிந்து மகிழ்ந்தனர் சீடர்கள். |
2 | ['tam'] | கீழே கொடுக்கப்பட்டுள்ள வார்த்தைகளையும் தலைப்பையும் பயன்படுத்தி சிறு கதை எழுதுக.
வார்த்தைகள்: பரமார்த்தரு, பரமார்த்தகுருவின் சீடர்கள், முட்டாள், மூடன், மட்டி, நாட்டு அரசன், தளபதி
தலைப்பு: தாடி சிறுத்தாலும் தொப்பை குறையாது
| திடீரென்று பரமார்த்தரின் படுக்கை அறை தீப்பிடித்து எரிந்து போனது. அத்துடன் குருவின் தாடியும் கொஞ்சம் பொசுங்கி விட்டது! அதைக் கண்டு சீடர்கள் ஐவரும் கவலையுடன் இருந்தனர். குருதேவா! உங்கள் மூன்றடி நீளமுள்ள தாடி, இப்படிக் குறுந்தாடியாக ஆகிவிட்டதே! என்று அழுதான், மட்டி. போனால் போகட்டும். இதற்காகக் கவலைப் படாதீர்கள். மீசை குறைந்தாலும் வீரம் குறையாது. தாடி குறைந்தாலும் தொப்பை குறையாது, என்ற பழமொழி உங்களுக்குத் தெரியாதா? இதோ என் தொப்பை அப்படியே இருக்கிறது பாருங்கள், என்றார், பரமார்த்தர். அதைக் கேட்டு சீடர்கள் மகிழ்ந்தனர். குருவே! இப்படியே இருந்தால் வயிற்றைக் கவனிப்பது எப்படி? எனக் கேட்டான் மடையன். குருநாதா! நேற்று அரசரின் பிறந்த நாள் விழா நடைபெற்றது. அப்போது, உடல் ஊனம் உள்ளவர்களுக்கு வேலைதரும் திட்டம் ஒன்றை அறிவித்தார்கள். அதனால் எப்படியாவது நாங்கள் உடல் ஊனம் உள்ளவர்கள் மாதிரி நடித்துச் சம்பாதித்து வருகிறோம், என்றான், முட்டாள். சரி. எல்லோரும் ஒன்றாகப் போனால்தான் தொல்லை வருகிறது. அதனால் தனித்தனியே போய் வாருங்கள். ஊமை மாதிரியும், செவிடு மாதிரியும், குருடாகவும், நொண்டியாகவும் நடியுங்கள். மண்டு மட்டும் எனக்குத் துணையாக இங்கேயே இருக்கட்டும், என்று கூறி, தம் தொப்பையில் வழிந்த வியர்வையைத் தொட்டு வீரத் திலகம் இட்டு அனுப்பினார், குரு. படைத் தளபதியிடம் சென்ற மட்டி, ஏதாவது வேலை தரும்படி கேட்டான். நான் ஒரு ரகசியம் சொல்கிறேன். அதை அரசரிடம் சொல்லி விட்டு வா, என்றார், தளபதி. செவிடனாக நடித்தால் வேலை கிடைக்கும் என்று நினைத்த மட்டி, என்ன? புடலங்காயா? நான் பார்த்தது இல்லையே! என்றான். தளபதி மறுபடி ரகசியத்தைச் சொன்னார். ஓகோ! மன்னருக்கு ஒரே ஒரு மூக்குதான் இருக்கிறதா? தெரியுமே! என்றான், மட்டி. தலையில் அடித்துக் கொண்ட தளபதி, இந்தச் செவிட்டுப் பயலை வைத்துக் கொண்டு என்ன செய்வது? என்று முணுமுணுத்தார். அதைக் கேட்ட மட்டிக்குக் கோபம் வந்தது. யார் செவிடன்? நீ செவிடன்! உங்க ராஜா செவிடன்! அவங்க தாத்தா செவிடன்! என்று திட்டினான். அவ்வளவுதான். அடுத்த நிமிடம், மட்டியின் காதுகளில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றுங்கள், என்று கட்டளையிட்டார், தளபதி. |
2 | ['tam'] | கீழே கொடுக்கப்பட்டுள்ள வார்த்தைகளையும் தலைப்பையும் பயன்படுத்தி சிறு கதை எழுதுக.
வார்த்தைகள்: முல்லா, காதலி, கண்ணாடி, ஊசி, எருமை மாடு, கண் டாக்டர்
தலைப்பு: முல்லாவின் காதலி
| முல்லா நஸ்ருதீன் ஒரு பெண்ணைக் காதலித்தார். முல்லாவுக்கு எல்லாம் நல்லபடி அமைந்திருந்தது. ஆனால் அவருடைய கண்பார்வை மங்கலானது.ஆகவே அவர் கண் டாகடரிடம் கேட்டார் :"கண்ணுக்கு சோடாபுட்டி போட்டுக் கொண்டிருந்தால் அந்தப் பெண் எப்படி என்னைக் காதலிப்பாள்?அவளுடைய முகம் கூட எனக்கு சரியாகத் தெர்யவில்லையே! நான் கண்ணாடி போட்டபடி அவள் எதிரில் போகக் கூடாது : உடனே என்னை நிராகரித்து விடுவாள் . என்ன செய்யலாம்? "டாக்டர் ஆலோசனை கூறினார் :"ஒன்று செய்யலாமே! வெகு தொலைவு வரை உம்மால் பார்க்க முடிவது போல் நடியும் . இப்படி அவள் நம்பும்படி ஏதாவது செய்து பாரும் !" முல்லா இதை செய்து பார்த்துவிடுவது என்று முடிவு செய்தார். ஒரு நாள் பூங்காவில் உட்கார்ந்திருந்தபோது அவருக்கு ஒரு யுக்தி தோன்றியது . தூரத்தில் இருந்த ஒரு மரத்தில் ஒரு தையல் ஊசியைக் குத்திவிட்டு வந்தார்.நல்ல கண்பார்வை இருந்தால் கூட அவ்வளவு தொலைவில் உள்ள ஊசியை யாராலும் பார்க்க முடியாது.முல்லா விண்மீ ன்கள் பளிச்ச்சிடும் இரவில் அன்று அந்த மரத்திலிருந்து100அடி தொலைவில் தன் காதலியுடன் உட்கார்ந்திருந்தார்,திடிமென அவளிடம்"அதோ அந்த மரத்தில் பொருப்பில்லாமல் யாரோ ஒரு தையல் ஊசியை குத்தி வைத்திருக்கிறார்களே !"என்று கூறினார். அப்பெண் முல்லாவின் கண்பார்வையின் மேல் ஏற்க்னவே சந்தேகம் கொண்டிருந்தாள். அப்படி இருக்க இவ்வளவு தொலைவில் ஒரு ஊசி இருப்பதை அவரால் எப்படி காண முடிந்தது என்று ஐயம் கொண்டாள். மேலும் அவளாலும் அதை பார்க்க முடியவில்லை;அந்த மரத்தையும் கூட சரியாகப் பார்க்கவில்லை ."நஸ்ருதீன்,எனக்கு ஊசி ஒன்றும் தெரியவில்லையே,"என்று கூறினாள்.முல்லா பந்தாவாக எழுந்து, "நான் போய் அதை எடுத்து வருகிறேன்",என்று கூறியபடி நடக்கலானார். ஓன்றிரண்டு அடி வைத்ததுமே தொப்பென்று தரையில் விழுந்தார். ஏனேன்றால் எதிரில் ஒரு எருமை மாடு நின்று கொண்டிருந்தது. இது அவர் கண்ணுக்குத் தெரியவில்லை.ஓஷோ :எந்த வேஷமும் நெடு நேரம் நிலைத்திருக்காது! உங்கள் வேஷத்தை மக்கள் கண்டுபிடிக்க வெகுனநேரமாகாது. ஆனாலும் மரியாதைக்காக நீங்கள் வேஷம் போடுகிறீர்கள் என்று உங்களிடம் அவர்கள் சொல்லுவதில்லை. ஒருவரை ஒருவர் ஏமாற்றிக் கொள்வது நாகரீகமாகிவிட்டது |
1 | ['tam'] | கீழே கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பைக் கொடு.
கதை: ஒரு நாள் முல்லா தெருவழியா நடந்து போய்க் கொண்டிருந்தார். ஒரு குடிசை வாசலை அவர்
கடந்து சென்ற சமயம் குடிசைக்குள் ஏதோ சத்தம் கேட்கவே உள்ளே சென்றார். அந்தக் குடிசையில் ஒரு ஏழை விதவைப் பெண் வசித்து வந்தாள் துணிகளை தைத்துக் கொடுத்து
அவள் கஷ்ட ஜவனம் நடத்திக் கொண்டிருந்தாள் அவளுக்கு பத்து வயதில் ஒரு மகன்
இருந்தான். அந்தக் குடும்பத்தைப் பற்றி முல்லாவுக்கு நன்றாகத் தெரியும் அவர்கள் மீது அவருக்கு
அனுதாபமும் உண்டு. வீட்டுக்குள் தாயும் மகனும் எதோ சச்சரவில் ஈடுபட்டிருந்தனர். " இங்கே என்ன நடக்கிறது?" என்று முல்லா வினவினார். " முல்லா அவர்களே இவனைப் பாருங்கள் ஒழுங்காக பள்ளிக்கூடம் போகமாட்டேன் என்று
அடம்பிடிக்கிறான், அறிவுரை கூறிப் பார்த்தேன் அடித்து மிரட்டிப் பார்த்தேன்
ஒன்றுக்கும் மசியமாட்டேன் என்கிறான் " என்றாள் தாய் வேதனையோடு. " குழந்தாய் நீ பள்ளிக்கூடம் போக வேண்டியது அவசியமில்லையா? அது உன்
எதிர்காலத்துக்கு நல்லதில்லையா?" என்று முல்லா சிறுவனுக்கு புத்திமதி கூறினார்.
பையன் கேட்பதாக இல்லை. " நான் பள்ளிக்கூடம் போகப்போவதே இல்லை" என்று அடம்பிடித்தான். முல்லா சுற்றும்முற்றும் பார்த்தார் தைப்பதற்காக அந்தப் பையனின் தாய் வைத்திருந்த
விலை உயர்ந்த துணி ஒன்று அவர் கண்களில் பட்டது. அதை எடுத்து முல்லா துண்டு துண்டாகக் கிழித்துப் போட்டு விட்டார். அதைக்கண்டு
தாயும் மகனும் அதிர்ச்சியும் திகைப்பும் அடைந்தனர். " அம்மா முல்லா விலை உயர்ந்த துணியைக் கிழித்துப் பாழாக்கி விட்டரே?" என்று
திகைப்போடு கேட்டான் பையன். " பள்ளிக்கூடம் போகமாட்டேன் என்று உன் எதிர்கால வாழ்க்கையையே பாழாக்கிக் கொள்கிறாயே
அதைவிட இந்த விலை உயரந்த துணி பாழானது பெரிய விஷயமா" என்றார் முல்லா. இந்தச் சொற்கள் அவன் மனதில் பெரிய மாறுதலை உண்டாக்கிற்று உடனே புத்தகங்களை
எடுத்துக் கொண்டு பள்ளிக்குப் புறப்பாட்டான். அவன் சென்றபிறகு முல்லா தாம் கிழித்த துணியின் மதிப்புக்கேற்ற விலையைக் கொடுத்து
விட்டுப் புறப்பட்டார்.
| கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பு 'எதிர்கால வாழ்க்கை' என்பதாகும். |
2 | ['tam'] | கீழே கொடுக்கப்பட்டுள்ள வார்த்தைகளையும் தலைப்பையும் பயன்படுத்தி சிறு கதை எழுதுக.
வார்த்தைகள்: நாய், சிப்பி, முட்டை
தலைப்பு: நாயும் சிப்பியும்
| ஒரு ஊரில் நாய் ஒன்று வசித்து வந்தது. அதற்கு எப்போதும் முட்டைகளை சாப்பிட்டே பழக்கம். ஒரு நாள் அது முட்டை வடிவில் இருந்த ஒரு சிப்பியைப் பார்த்தது. உடனே முட்டை என்று நினைத்து அப்படியே கவ்வி, விழுங்கிவிட்டது. ஆனால், விழுங்கியது சிப்பி என்பதால், நாயின் வயிறு கடுமையாக வலிக்க ஆரம்பித்தது. "எனக்கு இது தேவைதான். முட்டை வடிவில் இருப்பதெல்லாம் முட்டை என்று நினைத்த என் முட்டாள்தனத்திற்கு இதுவும் தேவை, இன்னமும் தேவை" என்று புலம்பியது அந்த நாய். முன்யோசனையின்றி ஒரு செயலில் ஈடுபடுபவர்கள், பெரும்பாலும் எதிர்பாராத சிக்கலில் மாட்டிக்கொள்வார்கள். |
2 | ['tam'] | கீழே கொடுக்கப்பட்டுள்ள வார்த்தைகளையும் தலைப்பையும் பயன்படுத்தி சிறு கதை எழுதுக.
வார்த்தைகள்: சிறுவர்கள், கடைக்காரன், கோபால், பானை செய்பவர், இனிப்பு, கடைக்காரனின் மகன், எறும்பு
தலைப்பு: எறும்பு தின்னது
| சித்தனூரில் இனிப்பு கடை ஒன்று இருந்தது. சிறுவர்கள் அந்தக் கடையில் இனிப்பு வாங்கிச் சாப்பிடுவர். அந்தக் கடைக்கார கிழவனுக்கு, சிறுவர்களைக் கண்டால் பிடிக்காது. அவர்கள் மீது எரிந்து விழுவான். அவர்களால் ஏதேனும் வேலை ஆக வேண்டி இருந்தால் அவர்களை அழைப்பான். "இந்த வேலையை முடியுங்கள்; இனிப்பு தருகிறேன்" என்பான். அவர்கள் அதைச் செய்து முடித்ததும் இனிப்பு தர மாட்டான். மாறாக, அவர்களை விரட்டி விடுவான். இதனால், சிறுவர்களுக்கு அவனைக் கண்டாலே பிடிக்காது. நண்பகல் நேரத்தில், கடைக்குள் படுத்துத் தூங்குவான். சிறுவனாக இருந்த அவன் மகன், அப்போதுதான் கடையைப் பார்த்துக் கொள்வான். ஒருமுறை அந்தக் கடைக்காரன் மண்பாண்டம் செய்பவர்களிடம் சென்றான். ""பலகாரங்கள் வைப்பதற்காக வாய் அகன்ற பானைகள் முப்பது செய்ய வேண்டும். எப்போது செய்து தருவீர்கள்?" என்று கேட்டான். ""ஒரு வாரத்தில் தயாராகி விடும்," என்றனர். குறிப்பிட்ட நாள் வந்தது. அந்தப் பானைகளைக் கடைக்குள் எடுத்து வர வேண்டுமே… என்ன செய்வது என்று சிந்தித்தான் கடைக்காரன். வழக்கம் போலச் சிறுவர்களை ஏமாற்றுவோம் என்று நினைத்தான். சிறுவர்களை அழைத்த அவன், ""மண்பாண்டம் செய்பவர்களிடம் முப்பது பானைகள் உள்ளன. அவற்றைக் கவனமாக எடுத்து வர வேண்டும். எடுத்து வருகிறீர்களா?" என்று கேட்டான். ""அப்படி நாங்கள் எடுத்து வந்தால் எல்லாருக்கும் நிறைய இனிப்பு தருவீர்களா?" என்று கேட்டான் அவர்களில் ஒருவன். ""கொண்டு வாருங்கள். பிறகு பார்க்கலாம்," என்றான் கடைக்காரன். ""நிறைய இனிப்பு கிடைக்கப் போகிறது," என்று மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர் சிறுவர்கள். ஒவ்வொரு பானையாக அவர்கள் கடைக்குக் கொண்டு வந்தனர். எல்லாப் பானைகளும் வந்து சேர்ந்தன. ""எங்களுக்குத் தருவதாகச் சொன்ன இனிப்பைத் தாருங்கள். நாங்கள் சாப்பிட்டுக் கொண்டே செல்கிறோம்," என்றனர் சிறுவர்கள். ""நான் எப்போது உங்களுக்கு இனிப்பு தருவதாகச் சொன்னேன். நீங்கள் கேட்டதற்கு, கொண்டு வாருங்கள் பிறகு பார்க்கலாம் என்றுதானே சொன்னேன். இப்போதும் அதையேதான் சொல்கிறேன். பிறகு பார்க்கலாம்," என்று அவர்களை விரட்டினான் கடைக்காரன். தாங்கள் ஏமாந்து விட்டதை எண்ணிப் புலம்பியப்படியே அங்கிருந்து சென்றனர் சிறுவர்கள். அந்த வழியாக வந்த கோபால், ""ஏன் அழுது கொண்டே செல்கிறீர்கள்?" என்று கேட்டார். ""கோபால் மாமா! அந்த இனிப்புக் கடைக்காரர் எங்களை ஏமாற்றிவிட்டார்," என்று நடந்ததை எல்லாம் சிறுவர்கள் கூறினர். ""கவலை வேண்டாம்! உங்களுக்குக் கிடைக்க வேண்டிய இனிப்பிற்கு அதிகமாகவே கொண்டு வருகிறேன். நீங்கள் யாரும் அந்தக் கடைக்குள் வரக் கூடாது. வெளியே நில்லுங்கள்," என்ற கோபால் கடைக்குள் நுழைந்தார். அப்போது கடைக்காரனின் மகன்தான் கடையைக் கவனித்துக் கொண்டிருந்தான். உள்ளே இருந்த அறைக்குள் கடைக்காரன் தூங்கிக் கொண்டிருந்தான். இவனை எளிதாக ஏமாற்றலாம் என்று நினைத்த கோபால், இனிப்புப் பாத்திரத்திற்குள் கையை விட்டான். இனிப்புகளை எடுத்துச் சாப்பிட்டான். இதைப் பார்த்த சிறுவன், "" என்ன இனிப்பை எடுத்து சாப்பிடுகிறாய்? பணம் தராமல் எதையும் தொடக்கூடாது," என்று கத்தினான். ""தம்பி! உன் தந்தைக்கு என்னை நன்றாகத் தெரியும். நான் இப்படி இனிப்பை சாப்பிடுவதை அவர் பொருட்படுத்தமாட்டார். என் பெயர் எறும்பு. நீ வேண்டுமானால் அவரிடம் இனிப்பை நான் சாப்பிடுவதாகச் சொல். அவர் ஒன்றும் சொல்ல மாட்டார்," என்றான் கோபால். ""அப்பா! கடைக்குள் எறும்பு வந்துள்ளது. நான் சொல்லியும் கேளாமல் இனிப்பை எடுத்துச் சாப்பிடுகிறது," என்று கத்தினான் சிறுவன். தூக்கம் கலைந்ததால், எரிச்சல் அடைந்த கடைக்காரன், ""மகனே! எறும்பு வந்தால் விரட்டு… இல்லையேல் அதை அப்படியே விட்டுவிடு. எறும்பைச் சமாளிக்க உன்னால் முடியாதா?" என்று கத்தினான். இதைக் கேட்ட கோபால் உள்ளுக்குள் சிரித்துக் கொண்டான். "இனிப்பு நிறைந்திருந்த ஒரு பாத்திரத்தைத் தூக்கினான். சிறுவர் களுக்கு வழங்க இதுபோதும்" என்று நினைத்து அங்கிருந்து புறப்பட்டான். இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அவன், ""அப்பா நிறைய இனிப்புகளை எறும்பு எடுத்துச் செல்கிறது. பணம் ஏதும் தர வில்லை," என்று கத்தினான். இதைக் கேட்ட கடைக்காரன் கோபம் கொண்டான். ""என் தூக்கத்தைக் கெடுக்காதே என்று எத்தனை முறை சொல்வது? நான் எழுந்து வந்தால் உன் தோலை உரித்து விடுவேன். எறும்பு இனிப்பை எடுத்துச் செல்வதற்காக, யாராவது கவலைப்படுவார்களா? போனால் போகட்டும் எவ்வளவு இனிப்பை எடுத்துச் சென்றுவிடப் போகிறது. பேசாமல் இரு," என்று கத்தினான். இனிப்புப் பாத்திரத்துடன் வெளியே வந்தான் கோபால். அங்கிருந்த சிறுவர்களுக்கு ஒன்றுக்கு இரண்டாக இனிப்புகளைத் தந்தான். அவர்களும் மகிழ்ச்சியாகச் சாப்பிட்டனர். ""உங்களை ஏமாற்ற முயன்ற கடைக்காரனை நன்றாக ஏமாற்றி விட்டேன்," என்ற கோபால் அங்கிருந்து புறப்பட்டான். தூக்கம் கலைந்து எழுந்த கிழவன், விஷயம் அறிந்ததும் குய்யோ, முய்யோ என கத்தினான். யார் அந்த எறும்பு என்று தெரியாமல் நொந்து போனான். |
1 | ['tam'] | கீழே கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பைக் கொடு.
கதை: அது ஒரு மலையடிவாரம். அதன் அருகே அழகிய ஆறு ஓடிக் கொண்டிருந்தது. அங்கே ஆறு ஓடிக் கொண்டிருந்ததால் மலையடிவாரத்தில் பச்சைப் பசேல் என்று புல் வளர்ந்திருந்தது. மலையடிவாரத்தின் மேலே அங்கங்கே காணப்படும் சமபரப்புப் பகுதியில் சின்னஞ்சிறு வீடுகள் இருந்தன. அங்கு வாழும் மக்கள் தங்களது பிழைப்புக்காக ஆடு, மாடு இன்னும் பிற கால்நடைகளை வளர்த்து வந்தனர். அதிலிருந்து வரும் வருவாயைக் கொண்டு வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருந்தனர். அவர்கள் வளர்க்கும் ஆடுகள் மலையடிவாரத்தில் வளர்ந்துள்ள புல்லைத் தின்ன அங்கே மேய வரும். மாடுகளால் சரிவில் நிற்க முடியாததால் அவைகள் அங்கு வருவதில்லை. அங்கே ஒரு முரட்டு ஆடு இருந்தது. உடல் பருத்து, கொம்புகள் இரண்டும் வளர்ந்து முறுக்கிக் கொண்டு நின்றன. அதைப் பார்த்து மற்ற ஆடுகள் பயந்து ஒதுங்கிப் போய்விடும். அதனால் அந்த முரட்டு ஆட்டுக்கு திமிர் வந்து விட்டது. அது மேய்ந்து கொண்டிருக்கும் இடத்தின் அருகே வேறு ஆடுகள் வந்து விட்டால் அவைகளை முட்டி தூர விரட்டி விடும். ஒரு நாள் - ஆற்றின் கரையோரம் மேய்ந்து கொண்டிருந்த ஆடு ஒன்று ஆற்றினோரம் வந்த முதலையைப் பார்த்து விட்டு பயந்து தப்பித்தோம் பிழைத்தோம் என்று ஓடி வந்தது. பயந்து ஓடி வந்த அந்த ஆடு முரட்டு ஆடு மேய்ந்து கொண்டிருந்த இடத்தின் அருகே வந்து விட்டது. அதைப் பார்த்த முரட்டு ஆடு ஓடி வந்த ஆட்டைப் பார்த்து, “நான் மேய்ந்து கொண்டிருக்கும் இடத்திற்கு நீ எப்படி வரலாம்” என்று கோபமாகக் கேட்டது. அதற்கு அந்த ஆடு, “அங்கே முதலையைப் பார்த்தேன். அதனால் வேகமாக ஓடி வந்து விட்டேன்” என்று அமைதியாக சொன்னது. முரட்டு ஆடோ அது சொன்னதைக் கேட்கவில்லை. ஓடி வந்த அந்த ஆட்டுடன் சண்டை போட ஆரம்பித்தது. அந்த ஆடோ சண்டைப் போட விரும்பாமல் சமாதானமாகவே பேசியது. முரட்டு ஆடோ அது சொன்னதைக் கேட்கவில்லை. வேறு வழியின்றி அந்த ஆடு முரட்டு ஆட்டுடன் எதிர்த்து நின்று ஆக்ரோஷமாக சண்டையிட்டது. மலைச் சரிவான பகுதியில் இரண்டு ஆடுகளும் சண்டையிட்டுக் கொண்டிருக்கும்பொழுது முரட்டு ஆடு கால் சறுக்கி மலையடிவாரத்தில் உருண்டு போய் ஆற்றில்விழுந்தது. ஆற்றின் கரையோரம் வாயைப் பிளந்து கொண்டு காத்திருந்த முதலை அந்த முரட்டு ஆட்டை கவ்விக் கொண்டு ஆற்றினுள்ளே சென்று விட்டது. தானே பெரியவன் என்ற மமதை ஏற்பட்டால் இதுதான் கதி.
| கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பு 'முரட்டு ஆடு' என்பதாகும். |
2 | ['tam'] | கீழே கொடுக்கப்பட்டுள்ள வார்த்தைகளையும் தலைப்பையும் பயன்படுத்தி சிறு கதை எழுதுக.
வார்த்தைகள்: முல்லா, முஸ்லீம்கள், தொழுகை, பிரார்த்தனை
தலைப்பு: பிரார்த்தனையும் மனிதனும்!
| பள்ளிவாசலில் தொழுகை நேரம். முஸ்லீம்கள் பலர் ஒன்று சேர்ந்து தொழுகையில் பங்கு
கொண்டு வழிபாடு நடத்திக் கொண்டிருந்தனர். அந்தக் கூட்டத்தில் முல்லாவும் இருந்தார். தொழுது கொண்டிருந்த ஒருவன் திடீரென்று தனக்கு அருகே தொழுகையில் ஈடுபட்டிருப்பனைப்
பார்த்து " அடடா நினைவு மறதியினால் என் வீட்டுக் கதவை மூடாமல் வந்து விட்டேன் "
என்றான். " தொழுகை நேரத்தில் நீ பேசியதானல் என் பிரார்த்தனையைக் கலைத்து விட்டாய். அதனால் நீ
மறுபடியும் தொழுது பிரார்த்தனை செய்ய வேண்டும் " என்றான் அவன். " நீயுந்தான் இப்போது என்னுடன் பேசி பிரார்த்தனையைக் கலைத்துக் கொண்டாய். நீயுந்தான்
மீண்டும் தொழுகையில் ஈடுபட்டுப் பிரார்த்தனை செய்ய வேண்டும் " என்றான் மற்றவன்.
அவர்கள் உரையாடலைக் கேட்டு முல்லா மெல்லச் சிரித்தார். " ஏன் சிரிக்கிறீர் " என அந்த இருவரும் கேட்டனர். " பொதுவாக மனித சுபாவத்தை நினைத்துப் பார்த்ததும் சிரிப்பு வந்துவிட்டது. மனிதன்
தான் ஒழுங்காக முறையாகப் பிரார்த்தனையில் ஈடுபடுவதைவிட மற்றவன் ஒழுங்காகப்
பிரார்த்தனை செய்கிறானா என்பதைக் கவனிப்பதில் அதிக அக்கறை செலுத்துகிறான் " என்றார்
முல்லா. அந்த இரண்டு பேரும் வெட்கமடைந்து தலைகுனிந்து கொண்டார்கள். |
2 | ['tam'] | கீழே கொடுக்கப்பட்டுள்ள வார்த்தைகளையும் தலைப்பையும் பயன்படுத்தி சிறு கதை எழுதுக.
வார்த்தைகள்: பத்து விவசாயிகள், கடவுள்
தலைப்பு: முடிவுகளில் கவனம் தேவை
| சீனாவில் ஒரு ஊரில் பத்து விவசாயிகள் இருந்தார்கள். ஓரு நாள் அவர்கள் தத்தம் நிலங்களில் உழவு வேலை செய்து கொண்டிருந்தார்கள். அப்பொழுது வானம் இருட்டிக் கொண்டு வந்தது. பயங்கர மின்னலுடன் இடி இடித்தது. பயந்து போன அவர்கள் பக்கத்தில் இருந்த ஒரு பாழடைந்த மண்டபத்தில் ஓடி ஒளிந்து கொண்டனர். வெகுநேரமாகியும் மின்னல் வெட்டுவதும் இடி இடிப்பதும் நிற்கவில்லை. அவற்றின் உக்கிரம் வேறு அதிகரித்துக் கொண்டே போனது. பயத்தில் நடுங்கிக் கொண்டிருந்த விவசாயிகளில் ஒருவன் ‘நம்மிடையே ஒரு மகாபாவி இருக்கிறான். அவனைக் குறி வைத்துத்தான் கடவுள் இடியையும் மின்னலையும் ஏவியிருக்கிறார். அந்தப் பாவியை வெளியே அனுப்பிவிட்டால் மற்றவர்கள் பிழைத்துக் கொள்ளலாம்" என்று சொன்னான். மற்றவர்கள் இதனை ஆமோதித்தார்கள். இத்தனை பேரில் அந்தப் பாவியை எப்படி அடையாளம் கண்டு கொள்வது என்று விவாதம் நடந்தது. விவாதத்தின் முடிவில் தீர்ப்பைக் கடவுளிடமே விட்டு விடுவது என்று முடிவாயிற்று. அதன் படி அனைவரும் தத்தம் தொப்பிகளைக் கையில் பிடித்துக் கொண்டு தொப்பியை மழையில் நீட்டுவது என்று முடிவாயிற்று. அனைவரும் தத்தம் தொப்பிகளை மழையில் நீட்டினர். பயங்கரமான இடி முழக்கத்துடன் ஒரு மின்னல் வெட்டியது. அதில் ஒரு விவசாயியின் தொப்பி மட்டும் எரிந்து சாம்பலாகியது. மற்ற ஒன்பது விவசாயிகளும் "இவன்தான் பாவி. இவனை முதலில் கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளு" என்று கத்திக் கொண்டே அவன் மேல் பாய்ந்தனர். அந்த விவசாயி கெஞ்சிக் கதறி தான் அப்பாவி என்று மன்றாடினான். மற்றவர் யாரும் காதில் போட்டுக் கொள்ளவில்லை. அவனை பலவந்தமாகக் கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளினர். அவன் கதறிக் கொண்டே மழையில் ஒடினான். அப்போது அதி உக்கிரமாக ஒரு மின்னல் தாக்கி இடி இடித்தது. ஒடிக்கொண்டிருந்த விவசாயி அதிர்ச்சியில் உறைந்து நின்று விட்டான். சற்று நேரத்தில் நிலைக்குத் திரும்பி மண்டபத்தைத் திரும்பிப் பார்த்தான். மண்டபத்தில் இடி விழுந்து நொறுங்கிக் கிடந்தது. ஒரு புண்ணியவானின் புண்ணிய பலத்தில் தப்பித்திருந்த ஒன்பது விவசாயிகளும் அவனை வெளியே தள்ளிப் பாதுகாப்பை இழந்து பரிதாபமாகக் கருகிச் செத்துப் போய் விட்டனர். |
1 | ['tam'] | கீழே கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பைக் கொடு.
கதை: மரியாதை இராமன் வசித்து வந்த ஊரில் சோமன் என்ற ஒரு பணக்காரன் இருந்தார். அவர் மிகவும் பொல்லாதவர் பணத்தாசைப் பிடித்தவர். தன்னிடம் வேலை செய்பவர்களுக்கு சரியான கூலி கொடுக்கமாட்டார். ஒரு முறை சோமன் தன் தோட்டத்தில் விளைந்த தேங்காய்களை சந்தையில் விற்று விட்டு, கிடைத்த பத்தாயிரம் ரூபாயுடன் தன்னுடைய மாட்டு வண்டியில் காட்டு வழியாக வீட்டுக்கும் வரும் போது தனது பணப்பையைத் தொலைத்துவிட்டார். வீட்டுக்கு வந்ததும் வண்டியில் பணப்பையை தேடி பார்த்து கிடைக்காமல் புலம்பி தள்ளினார். மாட்டு வண்டி ஓட்டி வந்தவர் முதல் அனைவரையும் கேட்டு பார்த்து கிடைக்காமல் என்ன செய்வது என்று தெரியாமல் விழித்தார். அப்போ அவரது மனைவியார் “உங்க பணப்பையை கண்டுபிடித்து கொடுப்பவர்களுக்கு தகுந்த சன்மானம் கொடுக்கிறேன் என்று சொல்லுங்க, கண்டிப்பாக யாராவது கொண்டு வந்து கொடுப்பாங்க” என்றார். ஆகா இது நல்ல திட்டமாக இருக்கிறதே என்று நினைத்து அடுத்த நாளே ஊர் முழுவதும் தண்டோரா போட்டு சொல்லிவிட்டார். ஊர் மக்களும் பணப்பை கிடைத்தால் கொடுத்து சன்மானம் வாங்கலாம் என்று நினைத்தார்கள். அப்படி தேடி பார்த்தும் யாருக்கும் பணப்பை கிடைக்கவில்லை. இந்த சம்பவம் நடந்து ஒரு வாரத்திற்கு பின்பு அருகில் இருந்த ஊரிலிருந்து அந்த ஊருக்கு ஒரு வழிப்போக்கர் வந்தார். அவர் பெயர் பூபாலன். மிகவும் நல்ல குணமுடையவர். ஏழையாக இருந்தாலும் கவுரவமாக வாழ பிரியப்படுபவர். தன்னால் முடிந்தவரை அடுத்தவர்களுக்கு உதவுபவர். அவர் விவசாயம் செய்த நிலத்தில் நிலத்தடி நீர் கிடைக்காததால் விவசாயம் சரியாக செய்யமுடியவில்லை, வேறு தொழில் செய்யவோ தன்னிடம் பணமும் அனுபவமும் இல்லை என்பதால் பக்கத்து ஊருக்கு சென்று ஏதாவது வேலை செய்து, சம்பாதித்து பின்னர் தொழில் தொடங்க நினைத்து வந்தார். போகிற வழியில் காட்டுப்பாதையில் இருந்த அம்மன் கோயிலுக்கு போய் வேண்டிக் கொண்டார். அப்படி காட்டுவழியில் போகும் போது அங்கே ஒரு புறா அடிப்பட்டு கீழே கிடந்தது, அதை பார்த்து இரக்கப்பட்ட பூபாலன் அந்த புறாவை தூக்கிக் கொண்டு அருகில் இருந்த குளத்திற்கு கொண்டு சென்று தண்ணீரை எடுத்து அந்த புறாவின் வாயில் ஊற்றினார், பின்னர் அந்த புறாவை அருகில் இருந்த மரக்கிழையில் வைத்துவிட்டு வந்தார். அவர் அப்படி வரும் போது பாதையின் ஓரத்தில் காலில் ஏதோ மாட்டியதை கண்டார், அது ஒரு பை. அதில் நிறைய பணமும் இருந்தது. அதை எடுத்தவுடன் பூபாலனுக்கு யாரோ பாவம், தன் பணப்பையை விட்டு விட்டு போயிட்டாங்க, அப்படி தொலைத்தவர் மனம் எத்தனை வேதனைப்படுமோ, எனவே விரைவில் அவரை கண்டுபிடித்து கொடுத்துவிட வேண்டும் என்று ஊருக்கு விரைந்தார். அப்போ ஊருக்குள் சென்ற போது அங்கே இருந்த கடையில் விசாரித்த போது கடைக்காரர் சோமனைப் பற்றி சொல்லி, அவர் தான் தொலைத்தவர், நீங்க இதை கொடுத்தால், கண்டிப்பாக சன்மானம் கொடுப்பார் என்றார். உடனே பூபாலனும் சோமன் வீட்டை தேடி பிடித்து சென்று பணப்பை கிடைத்த விபரத்தை சொன்னார், சோமனுக்கு சந்தோசம் தாங்கமுடியவில்லை. உடனே அந்த பணப்பையை வாங்கிக் கொண்டார், அதே நேரம் அவரது கெட்ட எண்ணமும் வெளிப்படத் தொடங்கியது. பணப்பை கிடைத்து விட்டது, பணமும் சரியாக இருக்குது, இப்போ ஏன் இவனுக்கு சன்மானம் கொடுக்க வேண்டும், சன்மானம் கொடுக்காமல் தப்பிக்க என்ன செய்யலாம் என்று யோசித்தார் சோமன். கெட்ட மனம் கொண்ட சோமன் பூபாலனைப் பார்த்து “நீ என்னை ஏமாற்றப் பார்க்கிறாய், நான் என்னுடைய பையில் வைர மோதிரம் ஒன்றையும் வைத்திருந்தேன், அது காணவில்லை, மரியாதையாக கொடுத்து விடு, உன்னை சும்மா விடமாட்டேன்” என்று கத்தினான். பூபாலனுக்கு ஒன்றுமே புரியவில்லை, ஒருவேளை இவர் சொன்னது போல் வைர மோதிரம் இருந்து தொலைந்து போயிருக்குமா, நாம் தான் எடுக்கவில்லையே, இவரிடம் சன்மானம் வாங்குவதை விட பிரச்சனையில் இருந்து தப்பிக்கலாம் என்று யோசித்தார். சோமனோ விடாமல் கத்தி ஆர்ப்பாட்டம் செய்தார், பூபாலன் பணப்பை கொண்டு வந்த செய்தியை ஊராருக்கு சொன்ன கடைக்காரர், கஞ்சப்பயல் சோமன் அப்படி என்னத்தான் பரிசு கொடுக்கப் போறான் என்று பார்ப்போம் என்று அனைவரையும் அழைத்து வந்தார். வந்த இடத்தில் பூபாலன் குற்றவாளி போல் நிற்பதை கண்ட ஊரார் சோமனை சும்மா விடக்கூடாது, இந்த பிரச்சனையை மரியாதை இராமனிடம் தான் கொண்டு சென்று தீர்ப்பு கேட்க வேண்டும் என்று சொன்னார்கள். சிறிது நேரத்தில் சோமன், பூபாலன், ஊர் மக்கள் அனைவரும் மரியாதை இராமன் முன்னால் போய் நின்றார்கள். சோமன் தான் பணப்பையும், அதில் இருந்த வைர மோதிரம் தொலைத்த கதையையும், பூபாலன் தான் பணப்பை கண்டுபிடித்த கதையையும் சொன்னார்கள். ஏற்கனவே சோமன் அறிவித்த தண்டோரா பற்றி மரியாதை இராமனுக்கு தெரியும், அப்போ தண்டோரா போடும் போது வைரமோதிரம் பற்றி ஒன்றும் சொல்லாததும் தெரிந்தது தான். ஆக மொத்தம் சோமன் ஏமாற்றுகிறான் என்பதை புரிந்துக் கொண்ட மரியாதை இராமன், சோமனுக்கு சரியான தண்டனை கொடுக்க நினைத்து இவ்வாறாக தீர்ப்பு கூறினார் “சோமன் தொலைத்த பையில் பணமும், வைர மோதிரமும் இருந்தது என்று அவரே சொல்லியிருக்கிறார். இப்போ பூபாலன் கொண்டு வந்த பையில் பணம் மட்டுமே உள்ளது, ஆக இது சோமனின் பையே இல்லை, வேற யாரோ தொலைத்த பை. அப்படி தொலைத்தவர் இதுவரை யாரும் புகார் கொடுக்கவில்லல, அவ்வாறு யாரும் புகார் கொடுக்காதவரை நம்ம ஊர் வழக்குப்படி கிடைத்த பணத்தில் 10 பங்கு அம்மன் கோயில் செலவுக்கு கொடுத்துவிட்டு, மீதியை எடுத்தவரே வைத்துக் கொள்ளலாம், ஆக பூபாலன் அந்த பணத்தை தன் சொந்த உபயோகத்து வைத்துக் கொள்ளலாம், சோமனின் பணம் மற்றும் வைர மோதிரம் கொண்ட பையை கண்டுபிடித்தவுடன் சோமனே சன்மானம் கொடுப்பார், சபை கலையலாம்”. மரியாதை இராமன் தீர்ப்பு சொன்னதும் சோமனுக்கு இதயமே நின்று போனது போல் ஆகிவிட்டது. பூபாலன் கிடைத்த பணத்தில் 10 சதவிதம் அம்மன் கோயிலுக்கு கொடுத்துவிட்டு, மீதியை தன் சொந்த ஊருக்கு கொண்டு சென்று தொழில் செய்து நலமாக வாழ்ந்து வந்தார்.
| கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பு 'நேர்மை கொண்ட உள்ளம்' என்பதாகும். |
2 | ['tam'] | கீழே கொடுக்கப்பட்டுள்ள வார்த்தைகளையும் தலைப்பையும் பயன்படுத்தி சிறு கதை எழுதுக.
வார்த்தைகள்: புனிதர், வேலைக்காரன், அந்தப்பிரதேசம், குடிசை, உபசாரம்
தலைப்பு: வேலைக்காரனாய் வந்த புனிதர்
| அந்தப்பிரதேசம் முழுக்க அந்தபுனிதரின் பெயர்பரவிருந்தது. அவர் ஒரு மலையில் சிறு குடிசையில்வசிக்கிற சேதியும் கூடவே பிரபலமாக இருந்தது. தூரத்து கிராமத்து மனிதர் ஒருவர் அவரைச்"சந்தித்துவிடவேண்டுமென்கிற ஏக்கத்தில் நெடுநாள் பயணம் செய்து புனிதரின் இருப்பிடம்அடைந்தார். குடிசையின் வாசலில் அவரை ஒரு வயோதிகவேலைலைக்கரன் வரவேற்றான்."நான் அந்தமகானைப்பார்க்கவேண்டு"மென்று வேலைக்காரனிடம் சொன்னார்.குடிசைக்குள்அவருக்கு உபசாரம் நடந்தது.அப்போதும் புனிதரைப் பார்க்கமுடியவில்லை. நேரம் ஆக ஆக பொறுமையிழந்து கிராம வாசி ‘நான் எப்பொழுதுதான் புனிதரைப்பார்க்க முடியும்" என்று கேட்டார்."நீங்கள் பார்க்க வந்தவரை ஏற்கனவே பார்த்துவிட்டீர்கள்" என்று சொன்னார். - மேலும்"நீங்கள் வாழ்க்கையில் சந்திக்கிற ஒவ்வொரு சாதாரண,அடித்தட்டு மனிதரையும் விவேகமுள்ள புனிதராக நினைத்தால் உங்கள் வாழ்க்கையின் எல்லா பிரச்சினைகளையும் மிகச் சுலபமக தீர்த்துவிடலாம்" என்று வேலைக்காரனாய் வந்த புனிதர் சொன்னார். |
2 | ['tam'] | கீழே கொடுக்கப்பட்டுள்ள வார்த்தைகளையும் தலைப்பையும் பயன்படுத்தி சிறு கதை எழுதுக.
வார்த்தைகள்: அக்பர், பீர்பல், பக்கத்து ஊரு ராஜா, ரோஜா செடிகள், முட்டை கோஸ், மாட்டு வண்டி
தலைப்பு: பீர்பாலின் புத்திசாலித்தனம்
| பீர்பாலின் புத்திசாலித்தனம் எட்டுத் திக்கிலும் பரவி இருந்துச்சு. பக்கத்து ஊரு ராஜாவுக்கு ரொம்ப பொறாமை.. இப்படி ஒரு ஆள் நம்ம தேசத்துல இல்லயேன்ணு..எப்படியாவது இந்த பீர்பாலை அவமானப்படுத்தணுனு யோசிச்சிட்டிருந்தான்.ஒரு யோசனை தோணுச்சு.. உடனே தன்னோட நாட்டில இருக்கும் அனைத்து வகை அபூர்வ ரோஜா செடிகளையும் அக்பருக்கு பரிசா அனுப்பினார்.கூடவே ஒரு வேண்டுகோலும் விடுத்தார். என்ன தெரியுமா.." பிரியமான ராஜாவே இதோ என்னோட சிறிய பரிசுகளை ஏத்துக்கங்க. எனக்கு ரொம்ப நாளா ஒரு ஆசை இருக்கு. உங்க ஊரு முட்டை கோஸ் சுவை ரொம்ப அருமையா இருக்குமாமே எனக்கு கொஞ்சம் அனுப்பி வையுங்க. கூடவே உங்க பீர்பாலையும் அனுப்புங்க.. அப்படி ஒரு புத்திசாலி எங்க நாட்டுக்கு வரணும்னு நாங்க ஆசைப்படுறோம்" இப்படி ஒரு கடிதமும் அனுப்பினார். அக்பருக்கு ஒரே தர்ம சங்கடமாப் போச்சு. முட்டை கோஸ் அவங்க ஊருக்கு போய் சேரதுக்குள்ள அழுகிடுமே. என்ன செய்யறதுனு யோசிச்சார். உடனே பீர்பால் வந்தார். நான் கொண்டு போறேன் அரசே. எனக்கு ஒரு 10 மாட்டு வண்டி மட்டும் கொடுங்க அப்படின்னார். அக்பரும் பீர்பால் கேட்டதெல்லாம் கொடுத்தார். பீர்பால் பயணத்தை தொடங்கினார். சில காலம் கழிச்சு அந்த ராஜாவோட அரண்மனைக்கு போனாரு பீர்பால். ‘ராஜா நீங்க கேட்ட பரிசில் கொண்டு வந்திருக்கேன் ஆனா நீங்க கொஞ்சம் அரண்மனைக்கு வெளிய வரணும்னு" சொன்னாரு நம்ம பீர்பால். ராஜாவுக்கு ஒரே சந்தோஷம்.. எப்படியும் முட்டை கோஸெல்லாம் அழுகி போயிருக்கும்.. பீர்பால் அவமானப்படப்போரார்னு நெனச்சிக்கிடே வெளிய வந்தார்..வந்தவர் அசந்து போயிட்டாரு.. பின்ன பீர்பால் என்ன பன்னார் கெரியுமா.. அந்த மாட்டு வண்டியிலவே முட்டை கோஸ் விதைச்சு எடுத்து வந்துட்டார்.அது இந்த தேசத்துக்கு வரதுக்குள்ள நல்லா விளைஞ்சு சமைக்க தயாரா இருந்தது. அந்த ராஜா நம்ம பீர்பால் கிட்ட மன்னிப்பு கேட்டு அவருக்கு நிறைய பரிசில் கொடுத்து அனுப்பினார். |
1 | ['tam'] | கீழே கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பைக் கொடு.
கதை: ஒரு காட்டில் ஒரு காகம் கூடுகட்டி வாழ்ந்து வந்தது. அக் காகம் விவாகமாகி ஆண் காகமும் பெண்காகமும் அக்கூட்டிலே வாழ்ந்தனர். பல நாட்கள் சென்ற பின் பெண் காகம் 5 முட்டைகள் இட்டது. அதனைக் கண்ட ஆண்காகம் தான் ஐந்து பிள்ளைகளுக்கு தந்தையாக போவதையிட்டு மிக மகிழ்ச்சியடைந்தது. பெண்காகம் முட்டைகளை அடைகாத்து வந்தது. ஆண் காகம் பெண் காகத்திற்கு வேண்டிய இரையை தேடிக்கொடுத்து பெண்காகம் அடைகாப்பதற்கு உதவி செய்தது, இருவரும் தமக்கு 5 பிள்ளைகள் பிறக்கப் போகிறார்கள் என்று மிகவும் சந்தோசமாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தனர். அக் காட்டில் ஒரு நரியும் குடும்பமாக வசித்து வந்தது. அந்த நரியும் காகமும் நல்ல நண்பர்களாக வாழ்ந்து வந்தனர். ஒரு நாள் ஆண்காகம் இரைதேடி வரும் வழியில் வேட்டைக்காரர்கள் காட்டினுள் நுளைவதைக் கண்டது. உடனே காகம் நரி நண்பர் வசிக்கும் இடத்திற்கு சென்று வேட்டைக்காரர் காட்டில் வருவதையும் பாதுகாப்பாக எங்காவது மறைந்து இருக்கும் படியும் கூறியது. அத்துடன் தனக்கும் ஐந்து பிள்ளைகள் பிறக்க உள்ளார்கள் என்றும் நண்பனான நரிக்கு கூறியது. அப்போது நரி தங்களுக்கு பாட்டி வைக்கும்படி கேட்டது. காகமும் அன்று இரவு பாட்டி தர அழைக்க வருவதாக கூறியது. உடனே நரியார் குடும்பம் நன்றி கூறி விட்டு ஓடி ஒழித்துக் கொண்டது. ஆண் காகம் இரையுடன் பெண்காகம் அடைகாத்துக் கொண்டிருந்த கூட்டுக்கு வந்தது. அப்போது பெண்காகம் அழுது கொண்டிருந்தது. காரணம் வினவிய போது. பாம்பொன்று வந்து தனது முட்டைகளை குடித்துவிட்டதாக கூறிப் புலம்பியது. அதனைக் கேட்ட ஆண்காகமும் விம்மி அழுத்துடன். அந்தப் பாம்பு தமது பிள்ளைகளை அழித்ததுடன் தமக்கு எனிமேலும் பிள்ளைகள் பிறக்க விடமாட்டாது அதனை கொன்றே தீருவேன் என சபதம் எடுத்தது. மறு நாள் நரியார் காகம் இருந்த கூட்டடிக்கு சென்று காகத்தை அழைத்தது. காகம்ம் இரண்டும் பறந்து வந்து சோகமாக இருந்தன. அதனை கண்ட நரி உங்களுக்கு என்ன நடந்தது என்று கேட்டது. அப்போது ஆஅண் காகம் முழு விபரத்தையும் சொல்லி புத்திசாலியான நரியிடம் பாம்பைக் கொல்ல ஒரு உபாயம் சொல்லும் படி கேட்டது. நரியும் அவர்களுக்கு எப்படியும் உதவி செய்ய வேண்டும் எண்ணத்துடன் ஆலோசித்தது. மறு நாள் நரி வெளியே சென்ற போது மகாராணியார் ஆற்றில் குழிப்பதற்காக தோழியருடனும் காவலருடனும் வருவதை அவதானித்தது. மகாராணி தனது நகைகள் கழட்டி ஆற்றங்கரையில் வைத்து விட்டு குழித்துக் கொண்டிருந்தார். உடனே நரிக்கு உபாயம் தோன்றியது மாகாராணி நாளைக்கு குழிக்கும் போது கரையில் வைத்த நெக்ளெஸ்சை காகம் தூக்கிக் கொண்டு போய் பாம்பின் புற்றுக்குள் போட்டால் அரச காவலாளிகள் பாம்பைக் கொலை செய்து நகைகளை மீட்பார்கள் அப்போது எனது நண்பரின் எதிரி இறந்து விடுவான் என திட்டம் போட்டு, தனது திட்டத்தை காகங்களுக்கு கூறியது. மறுநாள் குறிப்பிட்ட நேரத்திற்கு முன்னதாகவே காகங்களும் நரியும் அவ் ஆற்றங்கரைக்குச் சென்று சரியான சூழ்நிலை வரும் வரை காத்து இருந்தன. மகாராணியாரும் வழ்காகம் போல் நகைகள்ல் லழட்டி ஆற்றங்கரையி; வைத்து விட்டு குழிக்கச் சென்றாள். இதனைக் கண்ட காகன் இதுதான் த்ருணம் என எண்ணி ராணி நகைகள் வைத்திருந்த இடத்திற்குச் சென்று நெக்ளெஸை தூக்கிச் சென்றது. காவலாளிகள் காகத்தைத் பின் தொடர்ந்தார்கள். காகம் அந்த நெக்கிளெஸ்சை எதிரியான பாம்பு இருந்த புற்றினுள் போட்டது.. காவலாளாளிகள் நெக்ளெஸ்சை எடுக்க முயற்சித்தார்கள் அப்போது அதனுள் இருந்த பாம்பு சீறிக்கொண்டு வெளியே வந்தது. உடனே பாம்பை அடித்து கொலை செய்தபின் நெக்ளெஸ்சை மீட்டுச் சென்றார்கள். அதன் பின் காகங்கள் நின்மதியாக வாழ்ந்தது. ஆபத்தான நேரத்தில் காகம் நரியின் குடும்பத்தைக் காப்பாற்றியதால் நரியின் உதவியுடன் காகம் தனது குடும்பத்தை காப்பாற்றியது.
| கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பு 'காகமும் மகாராணியின் நெக்கிளேசும்' என்பதாகும். |
2 | ['tam'] | கீழே கொடுக்கப்பட்டுள்ள வார்த்தைகளையும் தலைப்பையும் பயன்படுத்தி சிறு கதை எழுதுக.
வார்த்தைகள்: பரமார்த்தகுரு, முட்டாள், மூடன், மட்டி, மடையன், பேயன், ஜமீன்தார் ஜம்புலிங்கம், துணி, கழுதை, திருடன்
தலைப்பு: உதைக்கிற கழுதையே உழைக்கும்
| குருதேவா! ஜமீன்தார் ஜம்புலிங்கம் வீட்டில் துணி துவைப்பதற்கு ஆள் தேவையாம். அந்த வேலையைச் செய்தால் என்ன? என்று சீடர்கள் கேட்டனர். துணி துவைக்கிற தொழிலுக்குப் பொதி சுமக்கும் கழுதை வைத்திருக்க வேண்டும். நம்மிடம் அது இல்லையே, என்ன செய்வது? என்றார் பரமார்த்தர். கழுதை இல்லாவிட்டால் என்ன? அதற்குப் பதில் தான் நாங்கள் இருக்கிறோமே! என்று சீடர்கள் கூறினர். இருந்தாலும், நிஜமான கழுதை இருந்தால் நல்லது! நல்ல கழுதையாக ஒன்று வாங்கி வாருங்கள், என்று உத்தரவிட்டார், பரமார்த்த குரு. அன்று மாலையே அவர் மடத்துகுக் கழுதை ஒன்று வந்து சேர்ந்தது. கழுதையைப் பார்வையிட்ட பரமார்த்தர், அதன் வாலைப் பிடித்து முறுக்கிப் பார்த்தார்! கோபம் கொண்ட கழுதை, விலுக் கென்று ஒரு உதை விட்டது! ஐயோ! என்று அலறியபடி தூரப் போய் விழுந்தார் பரமார்த்தர். முட்டாள்களே! என் பெருமைகளைப் பற்றி கழுதையிடம் ஒன்றுமே சொல்ல வில்லையா? என்று கோபமாகக் கேட்டார். குருதேவா! உங்களைப் பற்றி எல்லா விஷயங்களையும் தெளிவாக எடுத்துச் சொன்னோம்! அதனால்தான் உதைத்ததோ என்னவோ! என்றான் மடையன். ஆமாம் குருவே! அப்படியும் இருக்கலாம். என்று ஒத்து ஊதினான், மட்டி. பரவாயில்லை. அடிக்கிற கைதான் அணைக்கும். அதுபோல் உதைக்கிற கழுதைதான் உண்மையாய் உழைக்கும். ஆகையால் இந்தக் கழுதையே இருக்கட்டும்! என்றார் பரமார்த்தர். குருவும் சீடர்களும் கழுதை வைத்திருப்பதை அறிந்த உள்ளூர் திருடன், அதை எப்படியாவது திருடிச் செல்ல திட்டமிட்டான். ஒருநாள், கழுதையின் கழுத்தில் கட்டப்பட்டு இருந்த கயிற்றை அவிழ்த்துக் கொண்டு இருந்தான், திருடன். ஆனால் அதற்குள் சீடர்கள் வரும் சப்தம் கேட்கவே அவசரம் அவசரமாகக் கழுதையை மட்டும் தூர ஓட்டிவிட்டு, அதன் இடத்தில் தான் நின்று கொண்டான். வெளியே வந்து பார்த்த சீடர்களுக்கு வியப்பும் அதிர்ச்சியுமாக இருந்தது. இதென்ன? கழுதை இருந்த இடத்தில், மனிதன் இருக்கிறானே! என்றான் மூடன். ஒருவேளை இது மாயமந்திரம் தெரிந்த கழுதையாக இருக்குமோ! எனச் சந்தேகப்பட்டான் மண்டு. அதற்குள் பரமார்த்தரும் வந்து சேர்ந்தார். உன்னைக் கழுதையாகத்தானே வாங்கி வந்தோம். நீ எப்படி மனிதமாக மாறினாய்? என்று கேட்டான் முட்டாள். நான் முதலில் மனிதனாகத்தான் இருந்தேன். ஒரு முனிவரின் கோபத்துக்கு ஆளாகி விட்டேன். அவர்தான் என்னைக் கழுதையாகப் போகும்படிச் சாபம் இட்டார்.. இப்போது சாபம் நீங்கி விட்டதால் மறுபடி மனிதனாக மாறி விட்டேன்! என்று புளுகினான், திருடன். திருடனின் பொய்யைப் புரிந்து கொள்ளாத பரமார்த்தர், மனிதனைக் கழுதையாக மாற்றியதால் தப்பித்தோம். அதே முனிவர் சிங்கத்தையோ, புலியையோ கழுதையாக மாற்றியிருந்தால் இந்நேரம் நம்மையெல்லாம் சாப்பிட்டிருக்கும். நல்லகாலம்! தப்பித்தோம்! என்று மகிழ்ந்தார். சீடர்களும், விட்டது தொல்லை, என்று மகிழ்ந்தனர். கழுதை இல்லாமலேயே ஜமீன்தார் வீட்டில் வேலைக்குச் சேர்ந்த சீடர்கள், துணிகளை மூட்டை கட்டி, பாசி பிடித்த ஒரு குட்டைக்கு எடுத்துச் சென்றார்கள். வெள்ளை வெளேர் என்று இருக்க வேண்டும் என்பது ஜமீன்தார் கட்டளை என்று சொல்லியபடி, வெவ்வேறு நிறங்களில் இருந்த துணிகளைக் கல்லில் தேய்த்துக் கிழித்தான், மட்டி. வெள்ளையாக இருந்த வேஷ்டியில் பாசியை தோய்த்துப் பச்சை நிறமாக மாற்றினான் மடையன். ஒரே துணியாக இருந்ததைக் கசக்கிப் பிழிந்து முறுக்கி, பல துண்டுகளாக ஆக்கினார்கள், முட்டாளும் மூடனும். அப்பாடா! ஒரு வழியாக நன்றாக வெளுத்துக் கட்டி விட்டோம்! என்று மகிழ்ந்தபடி ஜமீன்தார் வீட்டுக்குப் புறப்பட்டனர். நீங்கள் ஒரு துணி போட்டீர்கள். நான் அதையே பத்தாக்கிக் கொண்டு வந்திருக்கிறேன்! என்று பெருஐம அடித்துக் கொண்டான், முட்டாள்! வெள்ளையைப் பச்சையாக்கி விட்டேன்! என்று குதித்தான் மடையன். சீடர்கள் கொண்டு வந்த துணிகளைப் பிரித்துப் பார்த்த ஜமீன்தாருக்கு மயக்கமே வந்து விடும் போலிருந்தது. அடப்பாவிகளா! முழுசாய் இருந்ததை எல்லாம் கிழித்துக் கோவணத் துணிகளாய் ஆக்கி விட்டீர்களே; புத்திகெட்டவர்களை நம்பி இந்தக் காரியத்தைச் செய்யச் சொன்னேனே! என்று புலம்பியபடி சீடர்களை விரட்டி அடித்தார். உம்... நம் தொழிலூ திறமையை யாருமே புரிந்து கொள்ள மாட்டார்கள் போலிருக்கிறதே! என்று வருத்தப்பட்டபடி மடத்துக்கே திரும்பினார்கள், ஐந்து சீடர்களும். |
1 | ['tam'] | கீழே கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பைக் கொடு.
கதை: ஓர் ஊரில் பெரிய பண்ணையார் ஒருவர் இருந்தார். அந்த ஊரில் இருந்த பெரும்பாலான நிலங்கள் அவருக்குத் தான் சொந்தம். அவரிடம் முனியன் என்ற உழவன் வேலை பார்த்து வந்தான். அவனுக்குக் குடிசை ஒன்றும் சிறிதளவு நிலமும் இருந்தன. பண்ணையாரிடம் வந்த அவன், " ஐயா! எல்லா நிலத்திலும் உழுது விதை நட்டு விட்டார்கள். என் நிலம் மட்டும் தான் வெறுமனே உள்ளது. நீங்கள் சிறிது தானியம் தாருங்கள். என் நிலத்திலும் விதைத்து விடுகிறேன்" என்றான். " என் நிலத்திலேயே உழுது பயிரிடு. சொந்தமாகப் பயிரிட வேண்டாம். பண்ணையாராகும் ஆசையை விட்டு விடு. கூலியாளாகவே இரு. அரை வயிற்றுக் கஞ்சியாவது கிடைக்கும்" என்று கோபத்துடன் சொன்னார் அவர். சோகத்துடன் வீடு திரும்பினான் அவன். தன் மனைவியிடம், " நாம் வளம் பெறுவது பண்ணையாருக்குப் பிடிக்கவிலலை. தானியம் தர மறுத்து விட்டார். நீயும் நம் குழந்தைகளும் எப்போதும் போலப் பட்டினி கிடக்க வேண்டியதுதான். இதுதான் நம் தலைவிதி" என்று வருத்தத்துடன் கூறினான். அவர்கள் குடிசையில் குருவி ஒன்று கூடு கட்டியது. இதைப் பார்த்த அவன் மனைவி " நம் குடிசை புயலுக்கும் மழைக்கும் எப்பொழுது விழுமோ என்று நாம் அஞ்சுகிறோம். இங்கு வந்து குருவி கூடு கட்டுகிறது பாருங்கள்" என்று கணவனிடம் சொன்னாள். " பாவம்! வாய் பேச முடியாத உயிர் அது. நிலைமை புரிந்தவுடன் அதுவே இங்கிருந்து போய்விடும். நாம் அதற்குத் தொல்லை செய்ய வேண்டாம்" என்றான் அவன். கூட்டில் அந்தக் குருவி நான்கு முட்டைகள் இட்டது. நான்கும் குஞ்சுகளாயின. திடீரென்று அந்தக் குருவிக் கூட்டுக்குள் ஒரு பாம்பு நுழைந்தது. குருவிக் குஞ்சுகளைப் பிடித்துச் சாப்பிடத் தொடங்கியது. அவை அலறின. அங்கு வந்த உழவன் பாம்பை அடித்துக் கொன்றான். அதற்குள் அது மூன்று குஞ்சுகளைத் தின்று விட்டது. தரையில் விழுந்த ஒரு குஞ்சு மட்டும் உயிரோடு இருந்தது. அதை அன்போடு எடுத்தான் அவன். அதன் கால் உடைந்திருப்பதைக் கண்டு அதற்குக் கட்டுப் போட்டான். அதை மீண்டும் கூட்டில் வைத்தான். வேளா வேளைக்கு உணவு தந்தான். சில நாட்களில் அந்தக் குருவியின் கால்கள் சரியாயின. அங்கிருந்து அது பறந்து சென்றது. உழவனும் குடும்பத்தினரும் வறுமையில் வாடினார்கள். " இப்படியே அரை வயிறு சாப்பிட்டு எவ்வளவு காலம் வாழ்வது? நமக்கு விடிவே கிடையாதா?" என்றாள் மனைவி. அப்பொழுது அவர்கள் வீட்டுக் கதவை யாரோ தட்டும் ஓசை கேட்டது. கதவை திறந்தான் அவன். அவன் வளர்த்த குருவி வெளியே இருந்தது. அதன் வாயில் ஒரு விதை இருந்தது. அதை அவன் கையில் வைத்தது. " இதை உன் வீட்டுத் தோட்டத்தில் நடு. சிறிது நேரத்தில் வருகிறேன்" என்று சொல்லிவிட்டுப் பறந்தது அது. மீண்டும் வந்தது அது. இன்னொரு விதையைத் தந்தது. " இதை உன் வீட்டின் முன்புறத்தில் நடு" என்று சொல்லிவிட்டுப் பறந்தது. மூன்றாம் முறையாக வந்த அது இன்னொரு விதையைத் தந்தது " இதை சன்னல் ஓரம் நடு. என் மீது காட்டிய அன்பிற்கு நன்றி" என்று சொல்லிவிட்டுப் பறந்தது. குருவி சொன்னபடியே மூன்று விதைகளையும் நட்டான் அவன். மறுநாள் காலையில் அங்கே மூன்று பெரிய பூசனிக் காய்கள் காய்த்து இருந்தன. இதைப் பார்த்து வியப்பு அடைந்தான் அவன். தோட்டத்தில் இருந்த பூசனிக் காயை வீட்டிற்குள் கொண்டு வந்தான். அதை இரண்டு துண்டாக வெட்டினான். என்ன வியப்பு! அதனுள் இருந்து விதவிதமான உணவுப் பொருள்கள் வந்தன. சுவையான அவற்றை எல்லோரும் மகிழ்ச்சியாக உண்டனர். மீண்டும் அந்தப் பூசனிக் காயை ஒன்று சேர்த்தனர். பழையபடி அது முழுப் பூசனிக் காய் ஆனது. மகிழ்ச்சி அடைந்த அவன், " இது மந்திரப் பூசனிக் காய். நமக்கு உணவு தேவைப்படும் போது பிளந்தால் உணவு கிடைக்கும். மீண்டும் சேர்த்து விட்டால் பழையபடி ஆகி விடும். இனி நமக்கு உணவுப் பஞ்சமே இல்லை" என்றான். " வீட்டின் முன் புறத்தில் ஒரு பூசனிக் காய் உள்ளது. அதைக் கொண்டு வாருங்கள். அதற்குள் என்ன இருக்கிறது என்று பார்த்து விடலாம்" என்றாள் மனைவி. அந்தப் பெரிய பூசனிக் காயை உருட்டிக் கொண்டு வந்தான் அவன். கத்தியால் அதை வெட்டினான். உள்ளிருந்து அழகான ஆடைகள், விலை உயர்ந்த மணிகள் கொட்டின. சன்னலோரம் இருந்த மூன்றாவது பூசனிக் காயையும் கொண்டு வந்து வெட்டினான். அதற்குள் இருந்து பொற்காசுகள் கொட்டின. அதன் பிறகு அவனும் மனைவியும் குழந்தைகளும் நல்ல உணவு உண்டனர். விலை உயர்ந்த ஆடைகளை அணிந்தனர். மிகப் பெரிய வீடு ஒன்றைக் கட்டத் தொடங்கினார்கள். உழவன் சில நாள்களில் பெருஞ்செல்வனானதை அறிந்தார் பண்ணையார். அவனிடம் வந்த அவர், " டேய்! முனியா! உனக்கு எங்கிருந்து இவ்வளவு செல்வம் கிடைத்தது? உண்மையைச் சொல்" என்று கேட்டார். அவனும் நடந்ததை எல்லாம் அப்படியே சொன்னான். தன் மாளிகைக்கு வந்தார் அவர். எப்படியாவது மேலும் செல்வம் சேர்க்க வேண்டுமென்று நினைத்தார். வீட்டில் மேல் பகுதியில் குருவிக் கூடு ஒன்றை அவரே செய்தார். குருவிகள் அவரும் அதில் தங்கும் என்று எதிர்பார்த்தார். அவர் எண்ணம் ஈடேறியது. ஒரு குருவி வந்து அந்தக் கூட்டில் தங்கியது. நான்கு முட்டைகள் இட்டது. நான்கு குஞ்சுகள் வெளியே வந்தன. ' பாம்பு வரவே இல்லை. பொறுமை இழந்த அவர் ஒரு பெரிய கம்புடன் குருவிக் கூட்டை நெருங்கினார். மூன்று குஞ்சுகளை அடித்துக் கொன்றார். ஒன்றன் காலை உடைத்துக் கீழே எறிந்தார். பிறகு கால் உடைந்த குருவியிடம் அன்பு காட்டுவது போல் நடித்தார். வேளை தவறாமல் உணவு அளித்தார். கால் சரியான அந்தக் குருவி கூட்டைவிட்டுப் பறந்து போனது. " மூன்று விதைகளுடன் குருவி மீண்டும் வரும். அரசனைவிட செல்வன் ஆவேன்" என்ற எண்ணத்தில் காத்திருந்தார் அவர். அவர் எதிர்பார்த்தபடியே கதவைத் தட்டியது குருவி. அவரிடம் மூன்று விதைகளைத் தந்தது. " ஒன்றை வீட்டின் பின்புறம் நடு. இரண்டாவதை வீட்டின் முன்புறம் நடு. மூன்றாவதைக் கிணற்றோரம் நடு" என்று சொல்லி விட்டுப் பறந்து சென்றது. எண்ணம் நிறைவேறியது என்று மகிழ்ந்தார் அவர். மூன்று தானியங்களையும் நட்டார். மறுநாளே மூன்று பெரிய பூசனிக் காய்கள் காய்த்து இருந்தன. தோட்டத்தில் இருந்த பூசனிக் காயை வீட்டுக்குள் கொண்டு வந்தார். அதை வெட்டினார். அதற்குள் இருந்து எண்ணற்ற பூச்சிகள் வெளிவந்தன. அவர் வயலில் விளைந்திருந்த பயிர்களை எல்லாம் ஒரு நொடிக்குள் தின்றுவிட்டு மறைந்தன. வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கொண்டார் அவர். முன்புறத்தில் இருந்த இரண்டாவது பூசனிக்காயை வெட்டினார். அதற்குள் இருந்து தீ வெளிப்பட்டது அது அவரையும் அந்த மாளிகையையும் ஒருநொடிக்குள் சாம்பல் ஆக்கியது. கொடிய பண்ணையார் ஒழிந்தார் என்று ஊர் மக்கள் மகிழ்ந்தனர். மூன்றாவது பூசனிக்காயை உடைக்க யாருமே முன்வரவில்லை. அதற்குள் பாம்பு, தேள், பூரான் போன்ற எண்ணற்றவை இருப்பதாகப் பேசிக் கொண்டார்கள்.
| கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பு 'குருவி கொடுத்த விதை' என்பதாகும். |
2 | ['tam'] | கீழே கொடுக்கப்பட்டுள்ள வார்த்தைகளையும் தலைப்பையும் பயன்படுத்தி சிறு கதை எழுதுக.
வார்த்தைகள்: போர்வீரன், ஜென் குரு, நரகம், பிச்சைக்காரன், வாள், நரகத்தின் கதவுகள், சொர்க்கத்தின் கதவுகள்
தலைப்பு: அப்படியா,சேதி !
| ஹாக்கின் ஒரு ஜென் ஞானி. அவர் குடிசைக்கு அருகில் அழகிய ஜப்பானியப் பெண் தன் பெற்றோருடன் வாழ்ந்து வந்தாள். திடீரென அவள் கர்ப்பமானாள். பெற்றோர் பதறினர். குழந்தைக்குத் தகப்பன் யார் என அவள் கூற மறுத்தாள். மற்றவர் வற்புறுத்தலால் ஹாக்கின் தான் காரணமென்று கூறி விட்டாள். பெற்றோர் ஜென் ஞானியிடம் சென்று கோபப்பட்டு கத்தினார்கள். அவர் அமைதியாக, ""அப்படியா,சேதி !" என்று மட்டுமே கூறினார். குழந்தை பிறந்ததும் ஹாக்கின் அதனை எடுத்து வளர்த்து வந்தார். இதனால் அவருக்குக் கெட்டபெயர் உண்டாயிற்று. ஆனால், அவர் கவலைப்படவில்லை ! குழந்தைக்குத் தேவையான எல்லா பொருட்களையும் வாங்கிக் கொடுத்து பாதுகாத்து வந்தார். ஓராண்டு சென்றது. குழந்தையின் தாய், அந்தக் குழந்தையின் தகப்பன் உள்ளூர் மீன் அங்காடியில் வேலை செய்பவன்தான் என்ற உண்மையைத் தன் பெற்றோர்களிடம் கூறினாள். பெண்ணின் பெற்றோர் ஹாக்கினிடம் சென்று தங்கள் தவறுக்கு மன்னிப்பு கேட்டனர். அவர் ""அப்படியா, சேதி !" என்று கூறிவிட்டு, குழந்தையைத் திரும்பக் கொடுத்தார். |
1 | ['tam'] | கீழே கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பைக் கொடு.
கதை: ஒரு தடவை முல்லா நசுருதீனிடம் அவருடைய நன்பன் கிண்டலாக , “ நசுருதீன், உன்னுடைய மனைவி இரவில் தன்னுடைய காதலனுடன் உன்னுடைய மாந்தோப்பில் காதல் புரிந்து கொண்டிருக்கிறாள் “ என்று சொன்னான். முல்லா கம்பீரமானார். “ எப்போது அவள் வ்ருகிறாள் ? “ என்று கேட்டார். “ இங்கு ஏறத்தாழ இரவு ஒருமணிக்கு” என்றான் அவன் அந்த நாள் நசுருதீனின் பொழுது மனஅமைதியற்றுக் கழிந்தது. இரவு உணவுகூட சாப்பிடவில்லை.இரவு பத்து மணி அடித்தது. தனது துப்பாக்கியை எடுத்துக் கொண்டு தோட்டத்திற்குச் சென்று ஒரு மரத்தின் மறைவில் உட்கார்ந்து கொண்டார். “ இன்று அவர்கள் இருவரையும் தீர்த்துக் கட்டுவது “ என்று முடிவு செய்திருந்தார். நேரம் போய் கொண்டே இருந்தது. அவரது மனைவியும் வரவில்லை. அவளது காதலனும் வரவில்லை. இரவின் அமைதியில் ஒரு மணி அடித்தது. அப்போதுதான் அவருக்கு நினைவு வந்தது. “ தனக்கு திருமணம் ஆகவில்லை “ என்பது
| கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பு 'கற்பனை காதலி' என்பதாகும். |
1 | ['tam'] | கீழே கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பைக் கொடு.
கதை: குணசீலன் என்கிற அரசன் ஒருவன் நோய்வாய்ப்பட்டு, பல நாட்களாகப் படுத்த படுக்கையாகக் கிடந்தான். அவனைப் பார்க்க தினமும் பல பிரமுகர்கள் வந்துகொண்டிருந்தனர். ஒருநாள், சில பெரிய மனிதர்கள் பலவித பழங்களைக் கொண்டு வந்து மன்னனிடம் கொடுத்துப் பேசிக்கொண்டிருந்தனர். அப்போது, ஒரு விவசாயி தன்னைத் தடுத்த காவலாளிகளையும் பொருட்படுத்தாமல், மன்னனின் படுக்கையருகே வந்து நின்றான்.அவனது கலைந்த தலைமுடியும், ஆடையில் படிந்திருந்த தூசியும் அவன் தன் கிராமத்திலிருந்து வெகுதூரம் நடந்து வந்திருக்கிறான் என்பதை அறிவித்தன. அவன் மன்னனிடம், “அரசே……..உங்கள் உடல் தேறவேண்டுமென்று எங்கள் ஊர் மாரியம்மனுக்குப் பொங்கல் படைத்தேன். அந்தப் பிரசாதத்தைக் கொண்டு வந்திருக்கிறேன். ஏற்றுக் கொள்ளுங்கள். அம்மன் பிரசாதத்தைச் சாப்பிட்டால் எந்த நோயும் பறந்து ஓடிவிடும்” என்றான்.அவன் பிரசாதத்தை வெளியே எடுத்ததும் அது கெட்டுப் போன நாற்றம் அடித்தது. அங்கிருந்த பிரமுகர்கள் மூக்கைப் பொத்திக் கொண்டார்கள். முகம் சுளித்தார்கள். அரசனோ, பிரசாதத்தைப் பெற்றுக்கொண்டு, தன் கழுத்தில் இருந்து முத்துமாலையைக் கழற்றி எடுத்து, அந்த விவசாயிக்கு பரிசளிக்க அளித்து அனுப்பினான். மன்னனுக்கு வேண்டிய பிரமுகர் ஒருவர், “அரசே, கெட்டுப் போன பொங்கலுக்கா முத்து மாலை பரிசு?” என்று கேட்டார். மன்னனோ, “அது கெட்டிருந்தாலும் அந்த பிரசாதத்தை நான் சாப்பிட்டுக் குணமடைய வேண்டும் என்று விரும்பி கள்ளங்கபடமற்ற மனதுடன் தன் கிராமத்திலிருந்து ஒரு வாரம் நடந்து வந்திருக்கிறான். அவனது அன்பு உண்மையானது. போலித்தனம் இல்லாதது. உண்மையான அன்புக்கு மதிப்பு மிக அதிகம். நான் அளித்த முத்துமாலைகூட அவனது அன்புக்கு ஈடாகாது” என்று கூறினான்.நமது அன்பு உண்மையாக இருந்தால், கடவுளே கையைக் கட்டிக் கொண்டு, நமக்கு சேவை புரிய வந்து நிற்பார்.
| கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பு 'அன்பின் மதிப்பு' என்பதாகும். |
1 | ['tam'] | கீழே கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பைக் கொடு.
கதை: அமெரிக்கா ஒரு காலத்தில் இங்கிலாந்திடம் அடிமைப்பட்டுக் கிடந்தது. அமெரிக்க மக்கள், இங்கிலாந்து மக்களிடமிருந்து சுதந்திரம் பெறுவதற்காகப் போராட்டம் நடத்தினர். அது கி.பி., பதினெட்டாம் நுõற்றாண்டு. அமெரிக்க ராணுவப் படை, இங்கிலாந்து ராணுவப் படையுடன் கடுமையாக மோதியது. போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த காலத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகை வந்தது. ஆகவே, இரண்டு தரப்பினரும் போர் நிறுத்தம் செய்தனர். அச்சமயம் அமெரிக்க ராணுவத்தைச் சேர்ந்த அதிகாரிகளில் ஒருவரான இஸ்ரேல் பொட்னாம் என்பவர் இங்கிலாந்தைச் சேர்ந்த ராணுவ அதிகாரி ஒருவரைச் சந்தித்தார். இருவருக்குமிடையே கடுமையான வாக்குவாதம் நடந்தது. பொறுத்துப் பொறுத்துப் பார்த்த அமெரிக்க அதிகாரி, ஆங்கிலேயே அதிகாரியை மிகவும் திட்டி விட்டார். இதைக் கேட்ட ஆங்கில அதிகாரி கொதித்தெழுந்தார். “இவ்வளவு துõரம் நீ பேசிவிட்டாய் அல்லவா…? நாளை நீ என்னுடன் சண்டைக்கு வர வேண்டும். நீ உன் துப்பாக்கியை எடுத்துக் கொண்டு வா. நான் என் துப்பாக்கியை எடுத்துக் கொண்டு வருகிறேன். இருவரும் துப்பாக்கியால் சண்டை போடுவோம். யார் வெல்கிறார்கள் என்று பார்க்கலாமா?” என்றார். இஸ்ரேல் பொட்னாம் இதைக் கேட்டு பதில் எதுவும் பேசவில்லை. அமைதியாக அங்கே கிடந்த மரப் பீப்பாய் ஒன்றின் மேல் உட்கார்ந்திருந்தார். போர்க்களத்தில் இந்த மரப் பீப்பாய்கள் அதிகமாகக் காணப்படும். காரணம், இம்மாதிரிப் பீப்பாய்களில் தான் போருக்குத் தேவையான வெடி மருந்துகள் நிரப்பி வைத்திருப்பர். இதைப் பார்த்துக் கொண்டிருந்த ஆங்கிலேய அதிகாரி அதிகமான கோபம் அடைந்தார். “அப்படியானால் நீ ஒரு கோழை என்பதை வெளிப்படையாகவே ஒப்புக் கொள்ள வேண்டியதுதானே! மவுனம் ஏன்?” என்று சீண்டினார். “நான் உன்னைப் போன்ற கோழை இல்லை. வாய்ச் சொல்லில் வீரம் பேசவும் எனக்குத் தெரியாது. நான் செயல் வீரன். நீ உனக்குச் சாதகமான முறையில் துப்பாக்கிச் சண்டை செய்யலாம் என்று கூறினாய். உனக்குத் துப்பாக்கி சுடுவதில் நல்ல பயிற்சி உண்டு என்பது எனக்குத் தெரியும். “ஆகையினால் நீ துப்பாக்கிச் சண்டையைத் தேர்ந்தெடுத்தாய். என் விஷயம் அப்படி இல்லை. எனக்குத் துப்பாக்கி சுடுவதில் அத்தனை அனுபவமில்லை. யார் வீரன் என்பதை நிரூபிக்க ஒரு பொதுவான வழிமுறையை உன்னால் சொல்லத் தெரியவில்லையே!” “ஏன், நீதான் செயல் வீரனாயிற்றே! பொதுவான ஒரு வழியைச் சொல்லேன் பார்க்கலாம்,” என்று குமுறினார் ஆங்கில அதிகாரி. “சரி! நானே சொல்கிறேன். இங்கே இரண்டு பீப்பாய்கள் இருக்கின்றன. இந்தப் பீப்பாய்கள் எதற்காக உபயோகப்படுத்தப்படுகின்றன என்பதை நீயும் அறிவாய். வெடிமருந்து போட்டு வைக்க உபயோகப்படுத்தும் பீப்பாய்கள் இவை என்பதை நீ மறந்தாலும் நான் உனக்கு நினைவூட்டுகிறேன். “இப்போது இந்த இரண்டு பீப்பாய்களிலும் நான் ஒரு துளையை இடுகிறேன். நீ ஒரு பீப்பாயின் மேல் அமர்ந்து கொள். நான் ஒரு பீப்பாயின் மேல் அமர்ந்து கொள்கிறேன். இந்த இரண்டு பீப்பாய்களில் எதன் மீதாவது அமரவும் உனக்குச் சுதந்திரம் உண்டு. “இதன் பிறகு நான் ஒரு வயரைச் செருகி வைப்பேன். அதன் முனையையும் பற்ற வைத்து விடுவேன். அது மெல்ல மெல்லக் கனிந்து பீப்பாய்க்குள் போகும். இவ்வாறு பற்ற வைத்த பின்னாலும் யார் ஒருவர் நீண்ட நேரம் வரை கீழே இறங்காமலேயே அந்தப் பீப்பாயின் மேல் உட்கார்ந்து கொண்டிருக்கிறார்களோ அவர்களே வெற்றி பெற்றவர். சம்மதமா? அதற்கான தைரியம் உன்னிடமிருக்கிறதா?’ என்று கேட்டார் இஸ்ரேல் பொட்னாம். “சரி’ என்று வீராவேசமாக ஒப்புக் கொண்டார் ஆங்கிலேய அதிகாரி. பொட்னாம் எழுந்தார். இரண்டு நீண்ட “ப்யூஸ்’ வயர்களை இணைத்து அதைப் பீப்பாய்க்குள் செலுத்தி விட்டு நுனியைப் பற்ற வைத்துவிட்டு அமைதியாகப் பீப்பாய் மேல் வந்து அமர்ந்தார். ஆங்கிலேய அதிகாரியும் ஒரு பீப்பாய் மேல் அமர்ந்திருந்தார். நெருப்பு சிறிது சிறிதாகக் கனிந்து பீப்பாயை நோக்கி வர ஆரம்பித்தது. அது பாதித் தொலைவில் வந்தவுடனேயே ஆங்கிலேய அதிகாரி நடுங்கினார். “இவன் நம்மைத் துண்டு துண்டாகச் சிதற வைக்கத் திட்டம் தீட்டித்தான் இம்மாதிரி ஏற்பாடு செய்திருக்கிறான்!’ என்று எண்ணினார். நெருப்பு மெல்ல மெல்ல ஊர்ந்து வந்து கொண்டிருந்தது. “இது மிகவும் பைத்தியக்காரத்தனமான ஒன்று. இதனால் நாம் இருவருமே வெடித்துச் சிதறி இறந்து விடுவோம். இது பயத்துக்குரிய ஒன்று.’ இஸ்ரேல் பொட்னாம் பேசவில்லை. அவர் முகத்தில் எவ்விதச் சலனமும் இல்லை. பீப்பாயை விட்டு அவர் இறங்கவுமில்லை. இன்னும் நன்றாக வசதியாக அமர்ந்து கொண்டார் அவர். திரி எரிந்து பீப்பாய்க்கு வெகு அருகில் வந்து விட்டது. இன்னும் முப்பது விநாடிகள் தாமதித்தால் நெருப்பு பீப்பாய்க்குள் போய்விடும். அப்படிப் போய் விட்டால்…? நினைத்தால் கூடத் தப்பி ஓட முடியாது. அதற்கு மேல் ஆங்கிலேய அதிகாரியால் அமைதியாக இருக்க முடியவில்லை. பீப்பாயிலிருந்து துள்ளிக் குதித்து இறங்கினார். திடுதிடுவென அந்த இடத்தைவிட்டு ஓட ஆரம்பித்தார். பாதுகாப்பான இடத்தில் நின்று திரும்பிப் பார்த்தார். பீப்பாய்க்குள் நெருப்பு நுழைய ஒரு விநாடி இருந்தது. அப்போதும் பொட்னாம் பீப்பாயை விட்டு எழவில்லை. ஆங்கிலேய அதிகாரியைப் பார்த்துப் புன்முறுவல் பூத்தார். “கோழை யார் என்பது புரிந்ததா?’ என்று சப்தமாகக் கேட்டார். அவர் அவ்வாறு கேட்டு முடித்தவுடன், பீப்பாய் வெடித்துத் துண்டு துண்டாகச் சிதறி விடும் என்று ஆங்கிலேய அதிகாரி எதிர்பார்த்தார். அவ்விதமான அசம்பாவிதம் எதுவும் நடைபெறவில்லை. பீப்பாய்க்குள்ளும் நெருப்புப் போய்விட்டது. பொட்னாம் அமைதியாகவே இருந்தார். ஐந்து நிமிடங்களுக்குப் பின் முழுதாக இறங்கி வந்தார் பொட்னாம். “இந்தப் பீப்பாய்க்குள் இருப்பது வெடி மருந்து என்றுதானே நீ நினைத்துக் கொண்டிருக்கிறாய். இல்லை, அது வெங்காயம். வெங்காயத்தைச் சமையல் அறையில் கொட்டிய பின் தான் வெடி மருந்து அதில் நிரப்பப்பட வேண்டும்!’ என்று அமைதியாகக் கூறினார். ஆங்கிலேய அதிகாரி மிகப் பெரிய அவமானத்தை அடைந்தார். அன்று இரவோடு இரவாக அந்த அதிகாரி அந்தப் பகுதியிலிருந்து வேறு பகுதிக்கு மாற்றல் வாங்கிக் கொண்டு சென்று விட்டார். இந்த அமெரிக்கச் சுதந்திரப் போரில் ஈடுபட்ட அந்த அதிகாரி இஸ்ரேல் பொட்னாம் பின்னாளில் அமெரிக்காவின் ராணுவத் தளபதியானார். புத்தி இருந்தால் எதையும் சாதிக்கலாம்.
| கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பு 'புத்திசாலி ராணுவவீரர்' என்பதாகும். |
2 | ['tam'] | கீழே கொடுக்கப்பட்டுள்ள வார்த்தைகளையும் தலைப்பையும் பயன்படுத்தி சிறு கதை எழுதுக.
வார்த்தைகள்: வித்யாசாகர், பெத்தண்ணா, சூரண்ணா, திம்மண்ணா, இராமன், கட்டை, திலகாஷ்ட மகிஷ பந்தனம், கயிறு
தலைப்பு: புலவரை வென்ற தெனாலிராமன்
| ஒரு சமயம் விஜயநகரத்திற்கு வித்யாசாகர் என்ற ஒருவர் வந்திருந்தார். அவர் சகல
சாஸ்திரங்களையும் அறிந்த புலவர். தம்மை போல யாரும் புலமை பெற்றவர் இருக்கமுடியாது
என ஆணவம் கொண்டவர். அதனால் ஒவ்வொரு ஊராக சென்று அங்குள்ள புலவர்களையெல்லாம்
வாதத்திற்கு அழைத்து வெற்றி பெற்று, பெருமையாக திரிந்து கொண்டிருந்தார். அவ்வாறே
ஒருநாள் விஜயநகரத்திற்கும் வந்தார். அவர் இராயரின் அவைக்கு வந்து தன் திறமையை வெளிப்படுத்தினார். அந்த அவையில் பெத்தண்ணா,
சூரண்ணா, திம்மண்ணா போன்ற புலவர்கள் இருந்தனர். அவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு
துறையில் வல்லவர்கள். அவர்கள் கூட வித்யாசாகரை கண்டு அஞ்சி பின்வாங்கினர். தன்னிடம்
வாதிட யாரும் முன்வராதது கண்ட வித்யாசாகர் ஆணவமுற்றார். தன் அவையில் சிறந்தவர்கள்
இல்லையோ என இராயருக்கோ வருத்தம். அந்த சமயத்தில் தெனாலிராமன் அவை முன் வந்து "பண்டிதரே! உம்மிடம் வாதம் புரிய நான்
தயார். இன்று போய் நாளை வாருங்கள்" என்றான். இதை கேட்டதும் மன்னருக்கும், மற்ற புலவர்களுக்கும் உற்சாகமாக இருந்தது. அவர்கள்
இராமனை வெகுவாக பாராட்டினர். இருந்தாலும் மறுநாள் வித்யாசாகரை இராமனால் வெல்ல
முடியுமா? என்ற சந்தேகம் அனைவருக்கும் இருந்தது. மறுநாள் இராமனை ஆஸ்தான பண்டிதரை போன்ற விலையுயர்ந்த ஆபரணங்களால் அலங்கரித்து அவைக்கு
அழைத்து வந்தனர். இராமன் தன் கையில் பட்டுத்துணியால் சுற்றப்பட்ட ஒரு கட்டை
வைத்திருந்தான். வாதம் ஆரம்பமாகியது. வித்யாசாகர் இராமனின் கையில் இருந்த கட்டைப்பார்த்தார். அது
என்னவாக இருக்கமுடியும்? என்று அவரால் ஊகிக்கமுடியவில்லை. எனவே "ஐயா! கையில்
வைத்திருக்கிறீர்களே! அது என்ன? " என்று கேட்டார். இராமன் அவரை அலட்சியமாகப் பார்த்து, கம்பீரமாக "இது திலாஷ்ட மகிஷ பந்தனம் என்னும்
நூல். இதைக்கொண்டுதான் உம்மிடம் வாதிடப்போகிறேன்!" என்றான். வித்யாசாகருக்கு குழப்பம் மேலிட்டது. அவர் இது வரை எத்தனையோ நூல்களை
படித்திருக்கிறார். கேட்டிருக்கிறார். ஆனால் இராமன் கூறியது போல் ஒரு நூலைப்பற்றி
இதுவரை கேள்விபட்டதில்லை. அந்த நூலில் என்ன கூறியிருக்குமோ? அதற்கு தம்மால் பதில்
சொல்ல முடியுமோ? முடியாதோ? என்ற பயம் ஏற்பட்டது. அதனால் நயமாக "வாதத்தை நாளை
வைத்துக்கொள்ளலாம்" என்று சொல்லிவிட்டு சென்றார். அன்றிரவு வித்யாசாகர் பல்வாறு சிந்தித்து பார்த்தார். இராமன் கூறிய நூல்
புரிந்துக்கொள்ள முடியாத நூலாக இருந்தது. இதுவரை தோல்வியே கண்டிராத அவர் இராமனிடம்
தோல்வி அடைய விரும்பவில்லை. ஆகவே அந்த இரவே சொல்லிக்கொள்ளாமல் ஊரை விட்டே
ஓடிவிட்டார். மறுநாள் அனைவரும் வந்து கூடினர். ஆனால் வித்யாசாகர் வரவில்லை. விசாரித்த பொழுது அவர்
இரவே ஊரை விட்டு ஓடி விட்டார் என்ற செய்திதான் கிடைத்தது. வெகு சுலபமாக அவரை வென்ற
இராமனை அனைவரும் பாராட்டினர். மன்னர் இராமனிடம் "இராமா! நீ வைத்திருக்கும் திலகாஷ்ட மகிஷ பந்த என்ற நூலை பற்றி
நானும் இதுவரை கேள்விபட்டதேயில்லை. அதை எங்களுக்கு காட்டு!" என்றார். இராமன் மூடியிருந்த பட்டுத்துணியை விலக்கினான். ஏடுகள் எதுவும் காணப்படவில்லை.
அதற்கு பதிலாக எள், விறகு, எருமையை கட்டும் கயிறு இருந்தது. அதை கண்டதும் எல்லாரும்
வியப்புற்றனர். இராமன், "அரசே! திலகம் என்றால் எள், காஷ்டம் என்றால் விறகு, மகிஷ பந்தனம் என்றால்
எருமை கட்டும் கயிறு. இதன உட்பொருளை வைத்து தான் திலகாஷ்ட மகிஷபந்தனம் என்று
சொன்னேன். இதைப்புரிந்து கொள்ளாத புலவர் பயந்து ஓடிவிட்டார்" என்று கூறிச்சிரித்தான்.
அனைவரும் சிரித்தனர். மன்னர் இராமனை பாராட்டி பரிசளித்தார். |
2 | ['tam'] | கீழே கொடுக்கப்பட்டுள்ள வார்த்தைகளையும் தலைப்பையும் பயன்படுத்தி சிறு கதை எழுதுக.
வார்த்தைகள்: சீலைப்பேன், மூட்டைப் பூச்சி, அரசன், அரசி, வேலைக்காரர்கள்
தலைப்பு: மூட்டைப்பூச்சியால் இறந்த சீலைப்பேன்
| ஓர் அரசனுடைய படுக்கையில் சீலைப்பேன் ஒன்று வாழ்ந்து வந்தது. அரசனும் அரசியும் உறங்கும் நேரம் பார்த்து அது அவர்கள் உடலைக் கடித்து இரத்தத்தை உறிஞ்சி வாழ்ந்து வந்தது. ஒருநாள் கொள்ளிவாய்ப் பிசாசு வந்ததுபோல் ஒரு சிறு மூட்டைப் பூச்சி அங்கு வந்து சேர்ந்தது. அது சீலைப் பேனை நெருங்கி, நான் உன் நண்பனாக இருக்க விரும்புகிறேன்" என்று கூறியது. இல்லை இல்லை, வேண்டாம். முள் போன்ற உன் பற்களால் அரசன் துங்குவதற்கு முன்னாலேயே நீ கடித்து விடுவாய். உன்னால் என் வாழ்வுக்கும் முடிவு வந்து விடும்" என்று சீலைப் பேன் மறுத்துக் கூறியது. "நான் அப்படித் துடுக்குத் தனமாக நடந்து கொள்ள மாட்டேன். நீ சொன்னபடி கேட்டுக் கொண்டிருப்பேன்" என்று கெஞ்சியது மூட்டைப் பூச்சி. "சரி, அப்படியானால் இங்கேயே இரு. எப்பொழுதும் வெடுக்கென்று கடிக்காதே. அரசனும் அரசியும் உறங்குகின்ற நேரம் பார்த்து மெதுவாகக் கடித்து இரத்தம் குடித்து உன் பசியைப் போக்கிக் கொள்" என்று கூறி அந்த மூட்டைப் பூச்சிக்குச் சீலைப்பேன்.இடம் கொடுத்தது. கெஞ்சி இடம் பிடித்துக் கொண்ட அந்த மூட்டைப் பூச்சி, அன்று இரவே அரசனும் அரசியும் படுக்கைக்கு வந்து விழித்துக் கொண்டிருக்கும் போதே, அரசனை வெடுக்கென்று கடித்து விட்டது. ஏதோ என்னைக் கடித்து விட்டது" என்று அரசன் கூறியதும் வேலைக்காரர்கள் விளக்குடன் ஒடி வந்தார்கள். அரசனைக் கடித்த மூட்டைப் பூச்சி வேலைக்காரர்கள் வருவதற்குள் எங்கோ ஒரு மூலையில் போய் ஒளிந்து கொண்டு விட்டது. நடந்தது அறியாத சீலைப் பேன் அவர்கள் கண்ணில் தட்டுப்பட்டது. உடனே அவர்கள், ! நீ தானே இந்தப் பொல்லாத வினையைச் செய்தாய்?" என்று சொல்லிக் கொண்டே, சீலைப் பேனை நசுக்கிக் கொன்று விட்டார்கள். வகை தெரியாமல் நட்புக் கொண்ட அந்தச் சீலைப் பேன், பாவம் இறந்து ஒழிந்தது. ஒருவனுடைய தன்மையை உணராமல் அவனுடன் நட்புக் கொள்ளக் கூடாது. |
2 | ['tam'] | கீழே கொடுக்கப்பட்டுள்ள வார்த்தைகளையும் தலைப்பையும் பயன்படுத்தி சிறு கதை எழுதுக.
வார்த்தைகள்: முல்லா, அறிஞர்கள், குழப்பவாதிகள், ரொட்டி
தலைப்பு: குழப்பவாதிகள்
| முல்லா நஸ்ருதீன் மன்னருடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்தார், அது அரசுசவையில் இருந்த பலருக்கு பிடிக்கவில்லை. ஒருமுறை முல்லா ஒரு நண்பரின் திருமணத்திற்கு சென்ற போது பேச்சுவாக்கில் நாட்டில் உள்ள அறிஞர்கள் எல்லாம் குழப்பவாதிகள், எதையுமே உறுதியாக, தீர்மானமாகக் கூற இயலாதவர்கள் என்று சொன்னார். அதை அறிந்த முல்லாவின் எதிரிகள் மன்னரிடம் போய் "மன்னர் நீங்க அறிஞர்களை வைத்திருப்பதற்கு பதிலாக குழப்பவாதிகளை வைத்திருப்பதாகவும், சரியான முடிவு எடுக்கத் தெரியாமல் இருக்கும் அறிஞர்கள் பேச்சு கேட்பதாகவும் முல்லா சொல்லிக் கொண்டு திரிக்கிறார் என்று அரசரிடம் முல்லாவைப் பிடிக்காதவர்கள் கூறித் தூண்டி விட்டார்கள். உண்மை நிலையை அறிய விரும்பிய அரசர், முல்லாவை சபைக்கு வரவழைத்தார். அத்துடன், தத்துவ மேதைகள், மார்க்க ஞானிகள், சட்ட நிபுணர்கள், அறிவுசால் அமைச்சர்கள் அனைவரையுமே கூட்டினார். பிறகு முல்லாவை நோக்கி," இவர்கள் எலலாம் குழப்பவாதிகள் என்று கூறினீர்களாமே?…ஏன் அப்படிக் கூறினீர்கள் ? இவர்கள் குழப்பவாதிகள் என்று உம்மால் நிரூபிக்க முடியுமா?" என்று கேட்டார். இது என்னடா வம்பா போச்சு, சும்மா வாய் பேச்சுக்கு சொன்னதை வைத்து என்னை மாட்டி விடப் பார்க்கிறீங்களா, அப்போ நீங்க குழப்பவாதிகள் தான், அதை நிறுபித்தால் ஆச்சுது என்று நினைத்து "அரசே என்னால் நிறுபிக்க முடியும்" என்று கூறிய முல்லா, அனைவரிடமும் ஆளுக்கொரு தாளைக் கொடுத்தார். பின்னர் அவர்களிடம்," அறிஞர் பெருமக்களே…நான் ஒரே ஒரு கேள்விதான் கேட்கப் போகிறேன். அதற்குரிய பதிலை, இந்தத் தாளில் நீங்கள் எழுதிக் கொடுக்கவேண்டும்" என்றார். பின்னர், அவர்களிடம் ஒரு தாளை கொடுத்தார், அதில் ," ரொட்டி என்றால் என்ன?" என்று கேட்டார். அனைவரும் பதிலைத் தாளில் எழுதி அரசரிடம் கொடுத்தார்கள். அரசர் படிக்க ஆரம்பித்தார். ஒருவர்- ரொட்டி என்பது சத்துள்ள பண்டம் என்று எழுதியிருந்தார். இரண்டாமவர் - ரொட்டி என்பது ஒரு உணவு என்று குறிப்பிட்டிருந்தார். மூன்றாமவர் - இறைவன் கொடுத்த கொடையே ரொட்டி. நான்காமவர் - ரொட்டி என்பது வேகவைத்த மாவுப் பொருள். ஐந்தமவர் - ரொட்டி என்பது மாவும் நீரும் கலந்த கலப்பு. ஆறாமவர் - அவரவர் விருப்பத்துக்கு ஏற்ப சுவையும் வடிவும் பெறுவது ரொட்டி ஏழாமவர் - ரொட்டி என்பதற்கு சரியான பொருள் யாருக்குமே தெரியாது……என்று குறிப்பிட்டு எழுதியிருந்ததை அரசர் படித்தார். எல்லா பதில்களையும் அரசர் படித்து முடிக்கும்வரை பொறுமையுடம் காத்திருந்த முல்லா," அரசே ! …ரொட்டி என்பது என்ன? என்ற எனது சாதாரன கேள்விக்கு, இவர்கள் அனைவரும் பலவிதமான பதில்களைக் கொடுத்துள்ளார்கள். யாருடைய பதிலும் ஒன்றுடன் ஒன்று ஒத்துப் போகவில்லை பார்த்தீர்களா? இதனால்தான் நம் நாட்டில் உள்ள அறிஞர்கள் குழப்பவாதிகள் என்றேன்" என்றார். அரசர் முல்லாவில் அறிவாற்றலை வியந்து அவர்மீது இருந்த குற்றச் சாட்டினைத் தள்ளுபடி செய்தார். அரசவையில் கூடியிருந்த அனைவரும் முல்லாவின் திறமையை பாராட்டினார்கள். |
1 | ['tam'] | கீழே கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பைக் கொடு.
கதை: எப்பொழுதும் போலத் தான் அன்றைய பொழுதும் விடிந்தது தொழிலதிபர் ராஜசேகரன் இல்லத்திற்கு. வழக்கம் போல முதலில் தேநீர் முகத்தில் தான் முழித்தார் ராஜசேகரன். ஆனால் மனைவி வைஷ்ணவி இன்று போட்ட டீ இன்று மிகவும் நன்றாக தெரிந்தது இராஜசேகரனுக்கு. இராஜசேகரன் பிறப்பால் ஓர் பெரிய தொழில் அதிபர் தான் என்று பார்ப்பவர்கள் எல்லாம் நினைப்பார்கள். ஆனால் அவர் மிகவும் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவர். அப்பா கிடையாது. அம்மா மட்டுமே. அவளும் இராஜசேகரனுக்கு பதினைந்து வயது இருக்கும் போதுஇறந்து போனார். தங்கள் குடும்பத்திற்கு என இருந்த ஒரே நிலத்தையும் விற்று அதில் கிடைத்த லட்சம் ரூபாய் முதலீட்டை கொண்டு ஓர் சிறிய ரைஸ் மண்டி வைத்தார். இன்று அந்த தொழிலில் பெரிய மனிதராகி கார்... பங்களா அப்பப்பா. பணத்தின் அருமை தெரிந்த ஒருத்தியே தனக்கு மனைவியாய் வர வேண்டும் என்ற இராஜசேகரனின் ஆசைபடியே, இராஜசேகரின் வீட்டிற்கு விளக்கேற்றியவள் தான் வைஷ்ணவி. அவர்களுக்கு பிறந்த மூத்த மகன் தான் ரமேஷ். அவன் செல்வந்தர் மகன் என்பதால் நல்ல செலவழிப்பான். இது தான் ராஜசேகரனுக்கும் ரமேஷ்க்கும் இடையே அடிக்கடி பிரச்சனை எழும்பக் காரணம் ஆகும். இரண்டு பேருக்குமிடையே ஏற்படும் பிரச்சனையை தீர்த்து வைப்பதற்கே நேரம் சரியாய் போய்விடும் வைஷ்ணவிக்கு. இராஜசேகரன் ஒரு பைசாவை கூட செலவு செய்வது என்றால் மிகவும் யோசிக்க கூடியவர். அவரது தும்மலும் கூட பத்து பைசா வரயே செல்லும். ஆனால் இராஜசேகரன் கருமியல்ல. பணத்தின் அருமை புரிந்தவர். இந்த நிலையில் தான் ஒரு சிக்கல். இதுவரைக்கும் அவரது ரைஸ் மண்டியிலிருந்து கிடைத்த லாபம் நிர்வாகச் செலவு போக ஓர் அளவிற்கே உட்பட்டு இருந்தது. ஆனால் இப்பொழுது விளைச்சல் குறையவும் லாபம் அதிகமாயிற்று. அதனால் தான் வருமானவரி கட்ட வேண்டிய சிக்கல் வந்தது. வைஷ்ணவியும் ஏற்கனவே இதை ஞாபகப்படுதிக் கொண்டு இருக்கிறாள். ஆனால் இராஜசேகரன் இந்த விஷயத்தில் தாமதம் காட்டி வந்தான். இன்றைய செய்தித்தாளை பேப்பர்காரன் வாசலில் அவனுக்கே உரிய தோரணையில் வாசலில் விட்டெரிந்து விட்டு "அம்மா பேப்பர்" என்று ராகமும் பாடினான். வழக்கம் போல வைஷ்ணவி தான் வந்து பேப்பரை எடுத்தாள். செய்தித்தாளின் முன் பக்கத்தில் கொட்டை எழுத்தில் அச்சிடப்பட்டு இருந்த செய்தி வைஷ்ணவி கண்ணில் பட்டது. 'என்னங்க' ஒரே உச்ச சாயலில் கூப்பிட்டாள் வைஷ்ணவி. "என்ன வைஷ்ணவி! காலம் காத்தால" என்றார் இராசசேகரன். "இத பாருங்க! இந்த நியூஸ் பேப்பர்ல என்ன போட்டிருக்குன்னு பாருங்க" "என்ன போட்டிருக்கு! கொடு பார்ப்போம் வருமான வரி கட்டாதவர்கள் மீது அரசு கடும் நடவடிக்கை தொழிலதிபர் மீது வருமானவரி சோதனை" "அதற்கு என்ன செய்ய சொல்லுற" என்றார் இராசசேகரன் ஒன்றும் தெரியாதவர் போல " என்ன செய்யவா" பத்ரகாளி ஆனால் வைஷ்ணவி. "ஆமாங்க! நான் சொல்லறது கிண்டலாய் தாங்க இருக்கும் உங்களுக்கு. வருமான வரி கட்டாமல் ஏய்ப்பது நமது நாட்டிற்கு நாம் தெரிந்தே செய்கிற துரோகம்ங்க" என்று ஒரு பாடமே நடத்தினாள் வைஷ்ணவி. "வருமான வரி கட்டணும்ணா. நமக்கு வருகிற லாபத்திற்கு எவ்வளவு கட்டணும். காசோட அருமை தெரிஞ்சா தானே உனக்கு" பதிலுக்கு இராஜசேகர். "இப்ப காசு கட்ட பயந்தா. பிறகு சிறைக்கு போன பின்னாடி பணம் நெறைய செலவழிக்கணும். அது மட்டுமா ,மன உளைச்சல் வேறு" இது வைஷ்ணவி. "பாத்துகிட்டே இரும்மா இவரு கம்பிதான் எண்ணப் போறாரு. இராஜசேகரனு பேரு வைச்சதும் போதும் இவருக்கு வரவர வில்லன் கெட்டப் வந்து விட்டது" இளமைக்கே உரிய துள்ளலுடன் ரமேசும் சேர்ந்து கொண்டான். "ம்... இந்த வீட்ல என்னை நிம்மதியாவே இருக்கவே விடுறாங்க இல்ல" சலித்து கொண்டார் இராஜசேகரன். வழக்கம் போல இராகம் பாட ஆரம்பித்தாள் வைஷ்ணவி " எம் பேச்சை இந்த வீட்ல யாருதான் கேட்கறாங்க. புருஷன் அப்படி, புள்ள இப்படி" இடைஇடையே அவளது பாட்டிற்கு ஏற்ப தாளம் போட்டன வைஷ்ணவி வீட்டு சமையலறை பாத்திரங்கள். வீட்டில் யாரும் பேசவில்லை. இராஜசேகரனுக்கு ஒரே தஞ்சம் தொலைக்காட்சிப் பெட்டி அவருக்கு பிடித்த நடிகர் கமலேஸ் குமார் வருமானவரி கட்ட வேண்டும் என்பதை பற்றி தொலைகாட்சியில் பேசினார். மதியம் இராஜசேகரன் வீட்டிற்கு வந்தார். "வைஷ்ணவி இந்த பைலை பத்தரமாக வை; இதுல வருமான வரி கட்டியதற்கான விபரமெல்லா இருக்கு சரியா" என்றார் இராஜசேகர். "வருமானவரியா? கட்டி விட்டீர்களா? எப்படி" தொடர்ந்தாள் வைஷ்ணவி. "நடிகர் கமலேஷ் குமார் சொன்ன பிறகு தான் வருமான வரி கட்ட வேணுங்கிறது நியாமுன்னு தெரிஞ்சது" "நாங்க சொன்னத கேக்கல. கமலேஷ் குமார் சொன்னா கேட்கிறார். இனிமே எதையாவது இவர செய்ய வைக்க வேணுமுன்னா, கமலேஷ் குமாரத்தான் கூப்பிடனும்" நொந்து போனாள் வைஷ்ணவி. மறுநாள், செய்தித்தாளில் வந்த செய்தி இராசசேகரனை அதிர செய்தது. செய்தி இதுதான். "நடிகர் கமலேஷ் குமார் வருமானவரி ஏய்ப்பு. அவரது வீட்டில் வருமான வரி அதிகாரிகள் சோதனை." நடிகன் என்னும் பொய் வேஷத்தை நம்பிய இராஜசேகரன் மனம் குறுகிப் போனது.
| கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பு 'நடிகன் என்னும் பொய்வேஷம்' என்பதாகும். |
1 | ['tam'] | கீழே கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பைக் கொடு.
கதை: ஒரு பல்கலைக் கழக பேராசிரியர் சிறந்த ஸென் துறவியை சந்திந்து அவரிடம் ஞானம் பற்றி தெளிவு பெறுவதற்காக சென்றார். துறவி அமைதியாக தேனீரினை கோப்பையில் ஊற்றிக் கொண்டு இருந்த போது, பேராசிரியர் ஸென் புத்த மதத்தை பற்றியும் தியானம் பற்றியும் தனக்கு தெரிந்ததை பற்றி வலவல வென்று பேசிக் கொண்டிருந்தார். பேராசிரியரின் கோப்பையின் விளிம்பு வரை தேனீர் ஊற்றிக் கொண்டு இருந்த துறவி, நிறுத்தாமல் தொடர்ந்து ஊற்றிக் கொண்டே இருந்தார். கோப்பையில் இருந்து வழியும் தேனீரை கவனித்துக் கொண்டிருந்த பேராசிரியர், ஒரு நிலைக்கு மேல் பொறுக்காமல் "கோப்பை நிறம்பி விட்டது. இதற்கு மேல் அதில் இடம் இல்லை" என்றார். அதற்கு துறவி "நீயும் இந்த கோப்பை போல் தான்", "நீ எப்போழுது உனது கோப்பையை காலி செய்து இடம் வைக்கிறாயோ, அப்போது தான் உனக்கு ஞானம் பற்றி என்னால் கூற முடியும்" என்றார்.
| கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பு 'கோப்பையை காலி செய்' என்பதாகும். |
1 | ['tam'] | கீழே கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பைக் கொடு.
கதை: தூரத்தில் தெரிகின்ற மேகங்களைப் போலவே உன் நினைவுகளும் கலைந்ததும் மறைந்து விடுபவையாய்...! கார்த்தி பஸ்ஸை விட்டு கிருஷ்ணாபுரம் காலனியில் இறங்கியபோது ஹேமா ஞாபகம் வராமல் இல்லை. மனதில் அழுத்திக் கிடந்த உணர்வுகள் தமிழ் மண்ணை மிதித்தும் பீறிட்டு வெளிக்கிளம்பிய போது அதன் தாக்கம் சற்று அதிகமாகவே இருந்தது. பஸ் கிளம்பியபோது எழுந்த தூசி முகத்தில் படிந்ததைக் கர்ச்சீப்பால் துடைத்துவிட்டுத் திரும்பியபோது ஒரு டீக்கடை கண்ணில் பட்டது. மெதுவாய் டீக்கடைப்பக்கம் கொட்டகைத் தூணருகே சாய்ந்து நின்று தெருவை நோட்டமிட்டான். நினைவுகள் மின்சார வேகத்தில் முன்னோக்கிச் செல்ல மெதுவாய்க் கண்களை மூடிய கார்த்திக்கு மகாத்மா காந்தி நகர் மெல்லிய பாசியாய்க் கண்முன் படிந்தது. மகாத்மாகாந்தி நகரில் தான் ஹேமாவின் வீடு இருந்தது. அங்கிருந்துதான் பெரியார் வந்து, பெரியாரிலிருந்து எஸ்.வி.என். காலேஜில் பி.பி.ஏ., படித்தாள். ஹேமா பிறந்து வளர்ந்ததெல்லாம் பெங்களூர். அவளுடைய தாய்மொழி கன்னடம். பிராமின் பேமிலி. அப்பரம்பரைக்கே உரிய வார்ப்பான மஞ்சள் தேகம். மின்மினிப்பூச்சியாய்க் கண்கள், துருதுருப்பாய் இயங்கும் இடை, நிலவு முகம் என்று சங்க இலக்கியத்தில் இருந்து உவமைகள் கடன் வாங்கும் அளவுக்குச் சந்தனத்தில் கடைந்தெடுத்த தங்கச் சிற்பம் என்றெல்லாம் சொல்லுமளவுக்கு அவளுடைய அழகு இருந்தது. கார்த்தியும் அங்குதான் பி.பி.ஏ., படித்தான். அவனுடைய வகுப்பில்தான் ஹேமாவும் வந்து சேர்ந்தாள். முதல் முதலாய் வேகமாய் வகுப்பறையில் நேருக்கு நேராய்ச் சந்தித்தபோது அவனது கண்களையே அவனால் நம்பமுடியவில்லை. அப்படியே அசந்துபோய் நின்றுவிட்டான். அப்படியொரு அழகான, அமைதியான குளிர் வீசும் நிலவை, குட்டித்தேவதையை அவன் அதுவரை பார்த்ததில்லை. முதன் முதல் பார்த்த பார்வையிலே அவள் முகம் பளிச்சென நெஞ்சில் ஒட்டிக்கொண்டது. அன்று வகுப்பறையில் என்ன நடந்தது என்று அவனுக்குத் தெரியவில்லை. அதை அவன் ஆராய்ச்சி செய்யவும் விரும்பவில்லை. அவள் முகம் மட்டும் பட்டாம் பூச்சிபோல, அடிக்கடி கண்ணில் நின்று கண்ணாமூச்சி காட்டியது. கண்டதும் காதல் என்கிற கணக்கில் உடனே நோட்டை எடுத்துப் படபடவென்று ஒரு ஹைக்கூ கவிதையை எழுதி வைத்தான். நான் பசையில்லை இருந்தும் நெஞ்சில் ஒட்டிக்கொண்டது உன் முகம் அப்புறமென்ன கவிதை ஊற்று தேனாய்ப் பாய்ந்தது. காதல் பறவை சிறகடித்து வானில் எழுந்து. கோடை குளிர்காலமாகியது. குளிர் கார்காலமாகியது, தென்றல் சுட்டது, தீ குளிர்ந்தது. மொத்தத்தில் உலகத்தின் இயல்பு நிலைகள் அனைத்தும் மாறி அவனது காதலுக்காகக் காமதேவனால் சிருஷ்டிக்கப் பட்டதுபோல் ஒரு திரிசங்கு சொர்க்கலோகம் உருவாகியது. அதில் அவனே இராஜா, அவனே காதல் மந்திரி, தந்திரி எல்லாம். ஹேமாதான் அவன் கனவுக் கன்னி என்று ஆயிற்று. இப்படியே நாட்கள் உருண்டன. படிப்பில் மனம் லயிக்கவில்லை. சதாசர்வமயமும் ஹேமா சுப்ரபாதமாகவே விடிந்தது. மழையடித்தால் ஹேமா, புயல் அடித்தால் ஹேமா, வெயிலடித்தால் ஹேமா என்று பார்க்குமிடமெல்லாம் ஹேமா உருவமே நின்றது. இளமை முறுக்கில், இன்பக் கிறுகிறுப்பில் எதிர்கால வாழ்க்கை ஒன்று இருப்பதே கார்த்திக்கு மறந்து போனது. அடுத்தடுத்து எழுதிய டெஸ்ட் பரீட்சைகள் செமஸ்டர் என்று எல்லாம் அரியர் விழுந்தது. (அதை இட்டு நிரப்புவதற்கு எக்ஸ்ட்ரா ஒரு வருஷம் ஆனது அடுத்த விஷயம்) ஹேமா ஞாபகத்திலேயே இது எல்லாம் நடந்து முடிந்தது. ஒருதலைக் காதலை வளர்த்தானே தவிர, அந்தக் காதலைப்போய் அவளிடம் மனம் விட்டுச் சொல்வதற்கு அவனுக்குத் தெம்பு வரவில்லை. இரண்டு மூன்று முறை சொல்ல முயற்சித்து அது பெரிய தோல்விகளிலேயே முடிந்தது. காரணம் அவனுக்கு முன்பே ஹேமாவை ஐந்து பேர் நான் முந்தி, நீ முந்தி என்று விரட்டிக் கொண்டிருந்தார்கள். கிருஷ்ணகுமார், கருணாகரன், ஆனந்த், சுரேஷ், நாச்சியப்பன் என்று மாதாமாதம் அந்தப்பட்டியல் நீண்டு கொண்டே போனது. அவர்களோடு போட்டி போட்டு, இவன் காதலைச் சொல்லி வடிகால் தேடுவதற்கு ஒரு வாய்ப்பு இல்லாமலேயே போய்விட்டது. அதற்கு இன்னொரு காரணமும் இருந்தது, கருணாகரனுக்கும், கிருஷ்ணகுமாருக்கும் உள்ளூர் தாதாக்களின் செல்வாக்கு இருந்ததால் வேண்டாம் இந்த விஷப்பரீட்சை என்று பாதியிலேயே முழுக்குப் போட்டுவிட்டான். அத்தோடு ஹேமா அத்தியாயமும் அவன் மனத்திலிருந்து முடிந்துபோனது. ஒரு வழியாய் இதயத்தில் படிந்த காதல் ரணங்களை ஆற்றி அரியர்ஸ் எல்லாம் முடித்து அடித்துப்பிடித்து சிபாரிசின் மூலம், மதுரைக் காமராஜ் யுனிவர்சிட்டியில் எம்.பி.ஏ., படிப்பதற்கு இடம் கிடைத்தபோது உண்மையில் கார்த்திக்கு தான் வாழ்வில் ஒரு இமாலயப் சாதனை செய்துவிட்டோம் என்று தோன்றியது. ஆனால் விதி அத்தோடு அவனை விடவில்லை. அவன் வாழ்க்கையில் அடுத்த அத்தியாயத்தை அங்குதான் இது தொடங்கி வைத்தது. அவன் எதிர்பாராத அளவுக்கு இன்னொரு கவிதைப் பெண்ணாய், தாரிணி வந்தாள். அப்படியே அவன் பழைய காதல் சரித்திரப் பக்கங்களைப் புரட்டிப்போட்டாள். ஒரு பெண்ணால் உண்டான காயத்தை இன்னொரு பெண்ணால்தான் ஆற்ற முடியும் என்பது மாதிரி, ஏற்கனவே ஹேமாவினால் அடிபட்டிருந்த இதயம் அவளைப் பார்த்ததும் அவளிடத்தில் பசக்கென்று ஒட்டிக்கொண்டது. அது என்ன மாயமோ தெரியவில்லை. காதலின் ரசவாத வித்தை இது என்று சொல்லவேண்டும். வள்ளுவன் உரைத்ததுபோல் ஹேமா விட்டுச் சென்ற தீக்காயங்களை இட்டு நிரப்புவதற்கென்றே தாரிணி வந்திருந்தாள். அவளைப் பார்த்ததுமே, ஏதோ ஒரு முன்ஜென்ம சாபல்யம்போல் அவளது உறவு அவனுக்கு வாய்த்து, தறிகெட்டுத் தடுமாறியது நெஞ்சம், அவள் அன்புப் பார்வையிலும், பேச்சிலும், மறுபடியும் ஒரு காதல் அரவணைப்பைத் தேடிக்கொண்டது. முதல் காதலைப்போலவே, மனசுக்குள்ளேயே இதையும் வளர்த்தான். முன்பிருந்த அதே பயம் இப்போதும் அவனை ஆட்டிப்படைத்தது. சகோதரி போல் சிரித்து பழகுகிறவளிடம் போய் எப்படி படக்கென்று, காதலைச் சொல்வது என்று மனம் தவியாய்த் தவித்தது. சொல்லாமலும் இருக்க முடியவில்லை. முதற்காதல் போல் இதுவும் ஒருதலையாய், கைக்கிளையாய் தவக்களையாய்ப் போய் விடும் என்ற பயத்தில், ஒருநாள் அதிக முயற்சி செய்து, ரொம்ப யோசித்து அவளைத் தனியே கேண்டீனுக்கு அழைத்து, டீ, கட்லெட், வடை எல்லாம் வாங்கிக் கொடுத்து காதலைச் சொல்லப்போகையில், தாரிணியின் அம்மாவுக்கு சீரியஸ் என்று போன் வர, தாரிணி அத்தோடு போனவள்தான்; திரும்பி யுனிவர்சிட்டிக்கு வந்தபோது, அவளது கல்யாணப் பத்திரிகையோடு உள்ளே நுழைந்தாள். தாரிணிக்குச் சொந்த ஊர் செக்காணூரணி. அவளது அம்மாவுக்கு முடியாமப் போன நேரத்திலேயே அவளது முறை மாமனை முறைப்படி நிச்சயதார்த்தம் செய்து கல்யாணத்திற்கு முடிவெடுத்து விட்டார்கள். தாரிணி, அவள் கல்யாணப் பத்திரிகையைக் கார்த்தியிடம் நீட்டியபோது அவனது காதல் மாளிகை அன்றோடு தவிடு பொடியாகிப் போனது. அப்புறமென்ன கண்ணீரை மொய்யாக்கி எங்கிருந்தாலும் வாழ்க என்று நெஞ்சில் ஓர் ஆலயம் ஜெமினிபோல் பாடி வாழ்த்திவிட்டு வீடு வந்து விட்டான். இரண்டு நாள் காலேஜ் போகாமல் வீட்டிலேயே படுத்துக்கிடந்தான். அப்புறம் ஒருவழியாய் அவள் ஞாபகத்தை மறந்து எம்.பி.ஏ., முடித்துக் கஷ்டப்பட்டு, ஆந்திராவில் ஒரு கம்பெனியில் அஸிஸ்டன்ட் டைரக்டராய்ப் பொறுப்பேற்றுக் கொண்டபோது, தாரிணி, ஹேமா என்ற பெண்கள் எல்லாம் மறந்து போனார்கள். நெஞ்சின் ஆழத்திலிருந்து, இதய வாசலிலிருந்து அவர்கள் எல்லாம் படிப்படியாய்த் தொலைந்து போனார்கள். இந்தப் பத்து வருடத் தனிமை வாழ்க்கையால் எல்லாமே தலைகீழாக மாறியிருந்தது. முன்பிருந்த இன்பேச்சுவேஷன் என்று சொல்லப்படுகிற இனக்கவர்ச்சி இப்போது இல்லை. இப்போதுகூட பழைய நினைவுகளை நினைத்துப்பார்த்தால் சிரிப்புத்தான் வருகிறது. இப்படியெல்லாமா சிறு குழந்தைத்தனமாக நடந்து இருக்கிறோம் என்று நினைத்துப் பார்க்கும்போது, ஒரு மெல்லிய புன்னகை மட்டும் இதழ்களில் இழையோடுகிறது. கார்த்தி திடீரென்று யாரோ திட்டுவதைக் கேட்டான். டீக்கடைக்காரர் இவனைப் பார்த்துச் சத்தம் போட்டார். 'தம்பி எவ்ளோ நேரமா கத்தறது கொஞ்சம் தூணவிட்டு ஒதுங்கி நில்லப்பா, கழிவுத்தண்ணிய வெளியே ஊத்தணும்' என்று வொல்லிவிட்டு இவன் பதிலைக்கூட எதிர்பாராது ஊற்றினான். இன்னும் ஓரிரு கணங்களில் மறந்துபோய் விடும். காதல் என்பதே வாழ்க்கை அல்ல, ஆனால் பகுதி. காதலை விதைத்தவர்கள் தொலைந்து போனாலும், காதல் பாதிப்பு மட்டும் என்றும் இருக்கும் என்ற நினைப்பில் கார்த்தி வீடு நோக்கி நடந்தான்.
| கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பு 'தொலைந்து போனவர்கள்' என்பதாகும். |
1 | ['tam'] | கீழே கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பைக் கொடு.
கதை: மணிவண்ணன் என்பவர் ஒரு வியாபாரி தொழிலில் நல்ல இலாபம் வந்தபடியால் வைரக் கடுக்கன்கள் செய்து இரண்டு காதுகளிலும் போட்டுக் கொண்டார். ஒகு நாள் வியாபார நிமித்தமாக அவர் வெளியூர் செல்ல வேண்டி நேரிட்டது. இர்வு வெகு நேரமாகி விட்டதால் அங்குள்ள சத்திரத்தின் திண்ணையில் படுத்துக் கொண்டார். அவ்வாறு படுக்கும்போது அவர் ஒருக்களித்தவாறு படுத்திருந்தார். அவருடைய இடது காது தனரயிலும், வலது காது மேற்புறமாகவும் இருந்தது. மணிவண்ணனுக்கு எதிரே ஒரு வழிப் போக்கன் படுத்திருந்தான். அவன் மணிவண்ணனின் வலது காதில் மின்னும் வைரக் கடுக்கனைப் பார்த்து விட்டான். அவன் மிகவும் பொல்லாதவன்.
| கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பு 'காதுக் கட்டுக்கனைத் திருடியவன்' என்பதாகும். |
1 | ['tam'] | கீழே கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பைக் கொடு.
கதை: ஒரு வேலையில்லாத மனிதன் வெடவெடக்கும் குளிர்கால இரவில் புத்தருடைய கோயிலிற்கு வந்தான். கோயிலில் இருந்த புத்த விக்கிரத்திற்கு முன்பு மண்டியிட்டு அமர்ந்து தன்னுடைய பிரார்த்தனையை செய்தான். பிரார்த்தனையை முடித்தவன், கண்களில் பொலபொலவென கண்ணீர் வழிய சத்தமாக அழுது புலம்ப ஆரம்பித்தான். அந்த கோயிலின் தலைமைக் குருவாக தர்மா ஆசிரியரியராக இருந்தவர் விங்ஸி (அர்த்தம், புகழ்வாயந்த கிழக்கு), அழுகின்றவனைப் பார்த்து "என்ன ஆயிற்று?, எதற்காக அழுகிறாய்?" என்று விசாரிக்க ஆரம்பித்தார். அந்த எழை மனிதன், "ஐயா, மேன்மை பொருந்திய ஆசிரியரே, என்னுடைய மனைவியும், குழந்தைகளும் சாப்பிட்டு பல நாட்கள் ஆகிவிட்டது. நானும் என்னால் முடிந்தவரை உழைத்து அவர்களை காப்பாற்ற முயற்சித்தேன், ஆனால் இந்த நகரத்தில் என்னால் ஒரு வேலையையும் கண்டு பிடிக்க முடியவில்லை. இந்தக் குளிர்காலத்தில், போதிய உணவோ, சரியான உடையோ இல்லாததால் நானும் மூட்டு வலியாலும் மற்ற பிற வியாதிகளாலும் துன்பப் படுகிறேன். என்னுடைய குடும்பத்தில் உள்ளவர்கள் பட்டினியுடன் இன்னும் எத்தனை நாளைக்கு உயிருடன் இருப்பார்கள் என்று எனக்குத் தெரியவில்லை. அதணால் தான் நான் புத்தரிடம் வந்து என்னுடைய துன்பங்களை நீக்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்தேன். என் நிலையை நினைத்து எனக்கே வருத்தமாக இருந்தது. அதணால் என்னையும் அறியாமல் கண்ணீர் விட்டு அழுது விட்டேன்" என்று விங்ஸியைப் பார்த்து பதில் அளித்தான். விங்ஸி மனதிற்குள், "புத்த பிக்ஷுக்களாகிய நம்மிடம் பணம் கிடையாது, இவனுடைய அவசரத்திற்கு எதாவது உதவி செய்ய வேண்டும், ஆனால் என்ன செய்வது என்றும் ஒன்றும் புரியவில்லையே" என்று நினைத்தவர், தன் எதிரே இருந்த தங்க மூலாம் பூசிய புத்த விக்கிரகத்தினைப் பார்த்தார். உடனே தன்னுடைய சீடர்களைக் கூப்பிட்டு, "புத்தருடைய ஒரு கையினை அந்த விக்கிரத்திலிருந்து பிரித்து எடுத்து. அதில் இருக்கும் தங்க மூலாமினை சேகரித்து வேலையில்லாத அந்த எழை மனிதனிடம் கொடுங்கள்" என்று கூறிவிட்டு. அந்த எழை மனிதனைப் பார்த்து, "ஒரு பொற்கொல்லனிடம் சென்று, இந்த தங்கத்தினை விற்று, வரும் பணத்தினைக் கொண்டு உன்னுடைய அவசர தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்" என்றுக் கூறினார். அங்கிருந்த சீடர்களும் மற்ற பிக்ஷுக்களும் கோபமடைந்து, "எப்படி நீங்கள் புத்தர் சிலையை உடைத்து மற்றவர்களுக்கு கொடுக்கலாம்?" என்று கேட்டு புத்தருடைய விக்கிரகத்திலிருந்து கையை எடுத்துக் கொடுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். ஆசிரியர் விங்ஸி அமைதியாக, "உங்களுக்கு தர்மம் என்றால் என்ன என்று இன்னும் புரியவில்லை, நான் இதனை செய்வதே புத்தருக்கு செய்யும் மரியாதையாகும்" என்று பதில் அளித்தார். எல்லாரும் குழப்பம் அடைந்து, "நீங்கள் புத்தருடைய சிலையை அக்குவேறு ஆணிவேறாக உடைக்க சொல்லுகிறிர்கள், அது எப்படி புத்தருக்கோ, புத்தமதத்திற்கோ மரியாதை செய்வதாகும்?" என்று திருப்பிக் கேட்டனர். குரு விங்ஸி, "நானும் உங்களைப் போல நம்முடைய மதத்தினையும், அதனை தோற்றுவித்த புத்தாவினையும் மதிக்கிறேன். இந்தக் காரியத்தினை செய்வதற்காக நான் நரகத்திற்கு செல்வதானாலும், செல்லத் தயாராக இருக்கிறேன். உங்களால் முடியாவிட்டால், நானே கையினை உடைத்து கொடுக்கிறேன்" என்றார். வேறு வழியில்லாத சீடர்கள் ஆசிரியருடைய கட்டளையின்படி கையினை உடைத்து அதிலிருந்த தங்கத்தினை சேகரிக்க ஆரம்பித்தனர். இருந்த போதிலும் அவர்களுக்குள் "நாம் உடைப்பது புத்தர் சிலையை, அதனுடைய பாகங்களை மற்றவர்களுக்கு கொடுப்பது எப்படி புத்தருக்கு மரியாதை செய்வாதாகும். ஆசிரியர் சரியான முட்டாள். புத்த மதத்தின் எதிரி" என்று முனுமுனுத்தனர். அதனைக் கேட்ட விங்ஸி அதற்கு மேல் பொருத்துக் கொள்ள முடியாமல் சத்தமாக, "நீங்கள் புத்தருடைய போதனைகளைப் படித்ததில்லையா?, அவர் புத்தராவதற்கு முன்பு, தன்னுடைய மூன்று முன்பிறவிகளில் இளவரசர் சித்தார்த்தர், ஒன்றில் தன்னையே புலிக்கு உணவாக கொடுத்தார், மற்றொன்றில் தன்னுடைய உடலேயே வெட்டி பருந்து ஒன்றிற்கு ஆகாரமாக அளித்தார், அடுத்த படியாக குருடன் ஒருவனுக்கு தன்னுடைய கண்களை தானம் செய்தார். புத்தர் மற்றவர்களுக்காக எல்லாப் பொருட்களையும் மட்டும் அல்லாமல் தன்னுடைய உடலேயேக் கொடுத்தார். நீங்கள் அவருடைய போதனைகளை இன்னுமா புரிந்து கொள்ளவில்லை" என்று கேட்டார்.
| கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பு 'புத்தாவினை உடைத்துக் கொடு' என்பதாகும். |
2 | ['tam'] | கீழே கொடுக்கப்பட்டுள்ள வார்த்தைகளையும் தலைப்பையும் பயன்படுத்தி சிறு கதை எழுதுக.
வார்த்தைகள்: முல்லா, கப்பல் பிரயாணம், பிரயாணிகள், பிரார்த்தனை, வாக்குறுதி
தலைப்பு: பிரார்த்தனை
| ஒரு தடவை முல்லா கப்பல் பிரயாணம் செய்து கொண்டிருந்தார். கப்பல் திசைமாறி தாறுமாறாக அலையத் தொடங்கியது. கரையே பல நாட்கள் கண்களில் தென்படவே இல்லை. உணவும் குடிநீரும் முற்றிலும் தீர்ந்து விட்டன. கப்பலின் பயணம் செய்தவர்களுக்குத் தாங்கள் உயிர்பிழைக்க மாட்டோம் என்ற அச்சம் ஏற்பட்டு விட்டது. அதனால் பிரயாணிகள் அனைவரும் தரையில் மண்டியிட்டுப் பிரார்த்தனை செய்யத் தொடங்கினர். தான் உயிர்பிழைத்தால் தன்னுடைய வீடு வாசல்களை எல்லாம் ஏழை எளிய மக்களுக்குத் தருமம் செய்து விடுவதாக ஒருவர் சொன்னார். மற்றொரு பிரயாணி தாம் உயிர் பிழைத்தால் ஆயிரம் ஏழை மக்களுக்கு நாள் தவறாமல் உணவளிப்பதாக வாக்குறுதி கொடுத்தார். இவ்வாறு ஒவ்வொரு பிரயாணியும் தம்மிடமிருக்கம் விலைமதிப்புள்ள பொருட்களையெல்லாம் தானம் செய்து விடுவதாக வாக்குறுதிகள் தந்தனர். இந்தக் காட்சிகளையெல்லாம் ஒருபக்கமாக நின்றவாறு வேடிக்கை பார்த்துக் கொண்டிருருந்தார் முல்லா. திடீரென்று அவர் அதோ கரை தெரிகிறது நாமெல்லாம் உயிர் பிழைத்து விட்டோம் என்று கூவினார். பிரயாணிகள் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. எல்லோரும் சேர்ந்து ஆனந்தக் கூத்தாடினார்கள். முல்லா உடனே உரத்த குரலில் அன்பர்களே நமக்கு உயிர்ப்பிச்சை அளித்த கடவுளுக்கு நன்றி செலுத்தம் வித்தத்தில் நாம் எல்லோரும் சேர்ந்து பிரார்த்தனை செய்வோம் என்றார். அவர் பேச்சுக்கு யாரும் செவிசாய்க்கவே இல்லை. உயிர்பிழைப்பது உறுதியாகி விட்டதால் இனி கடவுளின் தயவு தங்களுக்குத் தேவையில்லை என்று அவர்கள் கருதினார்கள். சற்றுமுன் அவர்கள் செய்த வாக்குறுதிகளையெல்லாம் மற்ந்து விட்டார்கள். அந்த நேரத்தில் ஏதோ உணர்ச்சிவசப்பட்டு கடவுளுக்கு வாக்குறுதி கொடுத்து விட்டோம். ஓரேயடியாக சொத்து சுகங்களைத் தியாகம் செய்துவிட முடியுமா? என்றெல்லாம் பேசத் தலைப்பட்டார்கள். முல்லா அட்டகாசமாக் கலகலவென நகைத்தார்." ஏன் சிரிக்கிறீர்?" என்று பிரயாணிகள் வினவினார்கள்." கரை கண்களுக்குத் தெரிவதாக நான் சொன்னது உண்மையல்ல ஒரு விளையாட்டுக்காக அவ்வாறு சொன்னேன்" என்றார் முல்லா. பிரயாணிகள் நாலாபுறமம் கடலில் கண்களை ஒட்டினர். முல்லா சொன்னது உண்மைதான் கரை எந்தப் பக்கமும் கண்களுக்கத் தெரியவே இல்லை. உடனே பிரயாணிகள் அனைவரும் அழுகுரல் எழுப்பியவாறு கடவுளைப் பிரார்த்தனை செய்வதற்காக மண்டியிட்டு அமர்ந்தனர். |
2 | ['tam'] | கீழே கொடுக்கப்பட்டுள்ள வார்த்தைகளையும் தலைப்பையும் பயன்படுத்தி சிறு கதை எழுதுக.
வார்த்தைகள்: முல்லா, பள்ளி வாசல், குருநானக், நீதிபதி, கோழி, குர்ஆன்
தலைப்பு: கோழியால் வந்த குழப்பம்
| ஒர் ஊரில் ஒரு பள்ளி வாசல் இருந்தது. அங்கே தொழுகை நடந்து கொண்டிருந்தது. முல்லா அந்த வழிபாட்டை முன்னின்று நடத்திக்கொண்டிருந்தார். கருணையும் இரக்கமும் மிக்க ஆசிரியர்களுக்கெல்லாம் ஆசிரியரான அல்லாவின் திருப்பெயரால்…. இந்த சமயத்தில் குருநானக் அங்கு வந்தார் அவர் முகத்தில் புன் முறுவல் முல்லாவுக்கு கோபம் வந்து விட்டது. ஏன் சிரிக்கிறாய்? நண்பா! நீ செய்வது தொழுகை அல்ல….அதனால் சிரிக்கிறேன் என்ன சொல்லுகிறாய்? தொழுகை இல்லையா? ஆமாம் உன்னுள்ளே பிரார்த்தனை என்பதே இல்லை முல்லாவின் கோபம் இன்னும் அதிகமாயிற்று. நேராக ஒரு நீதிபதியின் முன்னால் போய் நின்றார். நீதிபதி அவர்களே! இந்த ஆள் நாங்கள் தொழுகிற வேளையில் பள்ளிவாசலுக்குள் நுழைந்தார் அதுமட்டுமல்ல வழிபாடு செய்கிற எங்களைப் பார்த்துச் சிரிக்கிறார். இவருக்கு நீங்கள் மரணதண்டனை வழங்க வேண்டும். நீதிபதி குருநானக் பக்கம் திரும்பினார். நிங்கள் சிரித்தது உண்மையா? உண்மைதான் ஏன் சிரித்தீர்கள்?அவர் செய்தது பிரார்த்தனை அல்ல….அதனால் சிரித்தேன் அப்படியா ஆமாம்…அவரை நான் சில கேள்விகள் கேட்க தாங்கள் அனுமதிக்க வேண்டும். கேளுங்கள் முல்லா வந்து முன்னால் நின்றார். அவர் கையில் ஒரு புனித குர் ஆனைக்கொண்டு வந்து கொடுங்கள் என்றார் குருநானக் கொடுத்தார்கள். இப்போது சொல்லுங்கள்….. உங்கள் உதடுகள் அல்லாவை உச்சரித்த வேளையில் உங்கள் மனம் வீட்டிலே விட்டு வந்த கோழிகளை நினைத்ததா? இல்லையா? முல்லா கையில் குர் ஆன் இருந்தது. உண்மைதான் என்று முல்லா ஒப்புக் கொண்டார். குருநானக் விடப்பட்டார். குருநானக் முல்லாவை விடவில்லை. நீதிபதி சொன்னார் : முல்லா அவர்களே ! பள்ளி வாசலுக்குப் போய் ஏமாற்றுவதை விட அங்கே போகாமல் இருந்து விடுவது மேல். அங்கே ஒரு வேடதாரியாக இருக்காதீர்கள். கருணைமயமான இறைவனது திருநாமத்தைச் சொல்லும்போது கோழியை நினைக்காதீர்கள் உள்ளே இருக்கிற ஒன்றைத் தேடிச் செல்கிற போது வெளியே இருக்கிற ஒன்று நினைவுக்கு வரலாமா? |
2 | ['tam'] | கீழே கொடுக்கப்பட்டுள்ள வார்த்தைகளையும் தலைப்பையும் பயன்படுத்தி சிறு கதை எழுதுக.
வார்த்தைகள்: வீட்டுக்காரர், முல்லா, விழா, பாத்திரங்கள், நையாண்டி, விசேஷம், தகனம்
தலைப்பு: குட்டி போட்ட பாத்திரம்
| ஒரு நாள் பக்கத்து வீட்டுக்காரர் முல்லாவிடம் வந்து " என் வீட்டில் குடும்ப விழா
ஒன்று நடக்கிறது, புழங்குவதற்குப் போதிய பாத்திரங்கள் இல்லை உங்களிடம் இருக்கும்
சொற்ப பாத்திரங்கள் இரண்டை இரவலாகக் கொடும். வேலை முடிந்ததும் திரும்பித் தந்து
விடுகிறேன் " என்று கேட்டார். முல்லா அண்டை வீட்டுக்காரருக்கு மிகவும் பெரிய கெட்டிப் பாத்திரங்கள் இரண்டை
இரவலாகக்
கொடுத்தார். பக்கத்து வீட்டுக்காரர் ஒரு மாதிரியான நையாண்டி மனிதர். யாரையும் கேலியும் கிண்டலும்
செய்து சிரிக்கச் செய்வது அவரது வழக்கம். முல்லாவிடம் இரவல் வாங்கி பாத்திரத்தை அவர் திரும்பிக் கொடுக்கும் போது ஏதாவது ஒரு
விதத்தில் முல்லாவை நையாண்டி செய்து பார்க்க வேண்டும் என அவர் தீர்மானித்தார். அவர் பாத்திரங்களை திரும்பிக் கொடுக்க வந்தபோது, முல்லா கொடுத்த இரண்டு பாத்திரங்கள்
கூட ஒரு செம்பும் இருப்பதைக் கண்டு ஆச்சரியப்பட்டார். " நான் இந்தச் செம்பை உங்களுக்கு கொடுக்கவில்லையே?" என வியப்புடன் கேட்டார் முல்லா. " முல்லா அவர்களே உங்களுடைய பாத்திரங்கள் என் வீட்டில் இருந்த போது இந்தச் சொம்பைக்
குட்டி போட்டன. அதனால் குட்டியையும் உடனே கொண்டு வந்தேன் " என்றார் அண்டை
வீட்டுக்காரர். சற்று யோசித்த முல்லாவுக்கு அவர் நம்மை நையாண்டி செய்வதற்காக இந்த நாடகமாடுகிறார்
என்று புரிந்து கொண்டார். சந்தர்ப்பம் வாய்க்கும் போது அவருக்குச் சரியான புத்தி
கற்பிக்க வேண்டும் என்று தீர்மானித்துக் கொண்டார். " ஆமாம் நண்பரே பாத்திரங்களை கொடுக்கும்போது அவை கர்ப்பமாக இருக்கின்றன என்ற
உண்மையைச் சொல்ல மறந்து விட்டேன் " என்று கூறியவாறு அண்டை வீட்டுக்காரர் கொடுத்த
பாத்திரங்களை வாங்கிக் கொண்டார் முல்லா. சில நாட்கள் கடந்தன, ஒரு நாள் முல்லா அண்டை வீட்டுக்காரரிடம் சென்று என் வீட்டில்
ஒரு விசேஷம் புழங்குவதற்குத் தேவையான பெரிய பாத்திரம் இல்லை. தயவு செய்து பெரிய
பாத்திரங்கள் இரண்டு கொடுங்கள் என்று கேட்டார்.
அந்த வீட்டுக்காரரும் இரண்டு பெரிய பாத்திரங்களை கொடுத்தார். முல்லா அவற்றை
வீட்டுக்கு எடுத்து வந்தார். இரண்டு நாட்கள் கழித்து முல்லா ஒரு பாத்திரத்தை மட்டும் எடுத்துக் கொண்டு அண்டை
வீட்டுக்காாரிடம் சென்றார். " உங்களிடம் வாங்கிய பாத்திரம் இதோ இருக்கிறது. பெற்றுக்கொள்ளுங்கள" ் என்றார். " நான் இரண்டு பாத்திரம் கொடுத்தேனே ஒன்றுதான் திருப்பிக் கொண்டு வந்திருக்கிறீர்கள்
?"
என அண்டை வீட்டுக்காரர் கேட்டார். முல்லா தமது முகத்தில் வருத்தம் பிரதிபலிக்க " நண்பரே ஒரு தீய நிகழ்ச்சியினைச்
சொல்வதற்காக வருந்துகிறேன். தாங்கள் எனக்கு அளித்த பாத்திரங்களில் ஒன்றான பெண்
பாத்திரம் கர்ப்பமாக இருந்திருக்கிறது. என் வீட்டுக்கு வந்த இரவே அது பிரசவ
வேதனைப்பட ஆரம்பித்து விட்டது. துரதிர்ஷ்டவசமாக அது பிரசவித்த குழந்தையும் செத்து
விட்டது. தாயும்
இறந்து விட்டது. அவை இரண்டையும் தகனம் செய்து விட்டேன் " என்றார். முல்லா தனக்குச் சரியானபடி பதிலடி தருகிறார் என்பதைப் புரிந்து கொண்ட அண்டை
வீட்டுக்காரர் அவரிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டார். " இனி இந்த மாதிரி உங்களை நையாண்டி செய்ய மாட்டேன். தயவு செய்து என் பாத்திரத்தைத்
திருப்பித் கொடுத்து விடுங்களஞ் என்று வேண்டிக் கொண்டார். முல்லா அவரடைய
பாத்திரத்தைத் திருப்பிக் கொடுத்து விட்டார். |
2 | ['tam'] | கீழே கொடுக்கப்பட்டுள்ள வார்த்தைகளையும் தலைப்பையும் பயன்படுத்தி சிறு கதை எழுதுக.
வார்த்தைகள்: குத்புதின் அன்சாரி, மனைவி, அம்மா, மகள், புறா, சப்தம்
தலைப்பு: கூக்குரல்
| நான் குத்புதின் அன்சாரி, வயது 29. தையல்காரன். அம்மா, மனைவி, மூன்று வயதுள்ள மகள் என சுருங்கியிருக்கும் என் குடும்பம் அகமதாபாத் பாபு நகர் காலனியில் வாழ்கிறது. உங்களுக்கு என்னைத் தெரியும். நான் காற்றின் தொடக்க காலமான ஜனவரியில் பாபு நகரில் மிகவும் உயரமான கட்டடத்தின் மேலே ஏறி பட்டம் விட்டவன். கடையை மூடிவிட்டு இரவில் வீட்டுக்குப் போகும்போது காசிருந்தால் என் மகளுக்கு மிகவும் பிடித்தமான பாஸிலாலின் பட்டர் ஸ்காச் ஐஸ்கிரீம் வாங்குவேன். சில நேரங்களில் அமைதியாய் இருக்க வேண்டும் என்று தோன்றினால் எல்லீஸ் பாலத்தின் மேலே ஏறிநின்று நீருடனோ அல்லது நீரற்று வெறுமையோடோ இருக்கிற சபர்மதி ஆற்றைப் பார்த்துக்கொண்டிருப்பேன். நான் பார்க்கப் பார்க்க வளர்ந்த பாபுநகரின் சில பெண் பிள்ளைகள் தங்களின் திருமணத் துணி தைக்க வரும்போது, அதன் தொடர்ச்சியாக மனதில் எழும் இன்ப அலைகளை, நான் ரிலீப் ரோட்டில் பரப்பியிருக்கும் கடைகளிலிருந்து சிவப்பு கண்ணாடி வளையல்கள் வாங்கி, எங்களின் ஒரே அறையைக் கொண்ட வீட்டில் மிகவும் ரகசியம் காக்கும் கொசு வலைக்குள் என் மனைவியின் கைகளில் அணிவித்துப் பார்ப்பேன். மாதத் தவணையில் 14 இன்ச் டி.வி. வாங்கிய போது நான் ஏலக்காய் டீ போடுவதையும் கற்றுக்கொண்டேன். க்யோம்கி, சால்பி, கட்பஹீ"தி போன்ற சீரியல்கள் பார்த்துக் கொண்டிருக்கும்போது, அம்மாவும், மனைவியும் நான் தயாரித்த டீயை நன்றி கூட சொல்லாமல் வாங்கிக் குடித்தது எனக்குச் சிரிப்பை வரவழைத்தது. என் அம்மாவுக்கு சினிமா பார்ப்பதைவிட அதிகமான பிரியம் வெளியே சென்று தின்பண்டங்கள் வாங்கித் தின்பதில்தான் இருந்தது. வழியோரக் கடைகளில் கபாபும், கறி குருமாவும், வறுத்த கறியும், சங்கல்ப் ரெஸ்டாரண்டில் கொண்டு வந்து வைக்கும் ஃபேமிலி ரோஸ்டைப் பார்த்து என் மகள் கைகொட்டிச் சிரித்து உண்பதும், கோபி டைனிங் ஹாலில் தயிர் சேர்த்துச் செய்த தின்பண்டமும், கத்தரிக்காய், வள்ளிக்கிழங்கு, உருளைக்கிழங்கு எல்லாம் சேர்த்து செய்த உந்தியாவுமாக சுத்த வைஷ்ணவ குஜராத்தி பட்சணமும் அம்மாவை சந்தோஷப்படுத்தும். மாதத்தில் ஒரு முறையாவது இந்த சந்தோஷத்தை அம்மாவுக்குக் கொடுக்க சீரியல்கள் இல்லாத மாலைகளில் ஆட்டோ வைத்துக்கொண்டு போவோம். ஆனால் நான் குத்புதின் அன்சாரி. வருங்காலத்தின் ஒரு ஞாபக சின்னமானேன். டில்லிக்கு இந்தியா கேட் போல. ஜெய்ப்பூருக்கு ஹவா மஹால் போல. கல்கத்தாவின் ஹெளரா பிரிட்ஜ் போல. பம்பாய்க்கு கேட் வே ஆப் இந்தியா போல. அகமதாபாத்திற்கு ஒரு சின்னமில்லாமல் இருந்தது. காந்தியின் சபர்மதி ஆஸ்ரமம் அகமதாபாத்தின் சின்னமாகாமல் போனதற்கு, அது அவ்வளவு எடுப்பாக இல்லாமல் போனதே காரணம். சின்னம் பிரதானமானது. சின்னமில்லாத நகரங்களுக்கு முகமில்லை. சித்தி சையத்தின் மசூதியில் கல்லில் செதுக்கி வைத்த மரத் துண்டுகளுடன் கலந்து கிடக்கும் மர உருவம் ஐ.ஐ.எம் அகமதாபாத்தின் நினைவாகிப் போனது. குறிப்பிட்டு எதுவும் சொல்ல முடியாமல், அடையாளம் காண முடியாமல் போன நாட்களில் தான் நான் அதைச் செய்தேன். 2002ம் வருடம் எப்போது இல்லாத காற்றையும் சேர்த்துதான் தொடங்கியது. வடக்கு கிழக்காக அடித்த காற்று என் வீட்டுக்குப் பக்கத்தில் இருக்கும் தூங்கு மூஞ்சி மரத்தை அதிகமாக சப்தமிட வைத்த போது இந்த வருடம் பட்டம் விட மிகவும் தோதாக இருக்கும் என நான் நினைத்தேன். நான் பாய்சந்தைப் பார்க்கப் போனேன். பள்ளியில் என்னுடன் ஒன்றாய்ப் படித்தவனும், ரெயில்வேயில் வேலை செய்பவனுமாகிய பாய்சந்த்தான் எங்களுடைய ஏரியாவில் மிகவும் உயரமாகப் பட்டம் விடும் ஆள். நான் பாயிடம் "இம்முறை தைமாத சங்கராந்தியில் உன்னைத் தோற்கடிப்பேன்" என சொல்லியிருந்தேன். அவன் என் முதுகில் தட்டியபடி சொன்ன "சரி செய்" என்ற வார்த்தைகள் என்னைக் குளுமையாக்கவேயில்லை. அன்றே நான் அயூப் பதங்க வாலாவின் கடைக்குப் போய் பிரம்பில் ஒட்ட வைத்துச் செய்த மூன்று பட்டங்களும் நூலும் வாங்கினேன். அதற்குப் பிறகுதான் அம்மாவின் வேலை தொடங்கியது. பழைய பாட்டில்கள் விற்கும் கடையிலிருந்து பாட்டில்கள் வாங்கி அம்மாவிடம் உடைத்துக் கொடுத்தேன். நான் தைத்துக் கொடுத்த கனமான கை உறைகளைப் போட்டுக் கொண்ட, அம்மா கண்ணாடிச் சில்லுகளை வெற்றிலை இடிக்கும் சின்ன உரலில் போட்டுத் தூளாக்கினாள். அரைத்த கண்ணாடித் தூளைப் பசையுடன் கலந்து பட்டத்தின் நூலில் தடவிக் காய வைத்தேன். தைமாத சங்கராந்தி தினத்தன்று வானத்தில் இடமே இல்லாமல் போனது. பல வண்ணத்தில் பறந்த பட்டங்களின் கூட்டத்தால் என்னுடைய பக்கத்து வீட்டுக்காரன கபூத் பாஜ் அசன் ஷேக்கின் வீட்டுப் புறாக்கள் அன்று கூட்டிலேயே முடங்கிக் கிடந்தன. என்னை மற்றவர்களிடமிருந்து வித்தியாசப்படுத்திக் காண்பிக்கும் இளம் பச்சை நிற கண்களைக் கொண்ட வானத்தின் மேலே வாயு மண்டலத்தில் சுழலும் காற்றின் ஆதியைத் தேடிக் கொண்டிருந்தேன். சட்டென ஆகாயத்தில் நான் பார்த்த ஒரு பருந்து கறுப்புப் பொட்டு பட்டக் கயிற்றை ஒரு முறை உலுக்கிவிட்டது. என் பட்டம் பருந்தைத் தாங்கி நிற்கும் வாயுவின் சுழலுக்குள் நகர்ந்தது. பிறகு அது தானாகவே உயரே போகத் தொடங்கியது. மனசு நிராதரவாய் போக ஆரம்பித்தது. உயரத்தின் நடுக்கம் என்னைப் பாதிக்க ஆரம்பித்தபோது நான் நூலைத் தளர்த்திப் பட்டத்தை லேசாக்கினேன். அன்றைக்கு எங்கள் ஏரியாவில் மிக அதிக உயரம் பட்டம் விட்டவன் நானாகத்தான் இருந்தேன். நான் பட்டத்தைக் கீழே இறங்கினேன். இனி தான் சண்டையே தொடங்கும். முதலில் நான் கிழித்து எறிந்தது பாய்சந்தின் பட்டத்தைத்தான். கண்ணாடிப் பசை பூசிய என் பட்டக் கயிற்றில் வெயில் பட்டபோது வாளின் அலகுபோல ஜொலித்தது. நான் மைதானத்தில் ஓடிக்கொண்டே போய் பல பட்டங்களின் கயிற்றையும் அறுந்தெறிந்தேன். அப்போதுதான் பிந்தியா என் சட்டையைப் பின்னால் பிடித்து இழுத்தபடி சொன்னாள். "பர்ஜி சாச்சா என் பட்டத்தை அறுக்க வேணாம்." பிந்தியா பிறந்தபோது அவளுக்குப் பெரிய பின் போட்டுக் குத்தப்பட்ட நாப்கினைத் தைத்து கொடுத்தது நான்தான். பிறகு சின்ன கவுன்கள். ஃப்ராக்குகள். இப்போது பாவாடை சட்டையும் கூட என் அளவுகள் குறிக்கும் புத்தகங்களினூடாக அவள் வளர்ந்து வளர்ந்து இதோ பன்னிரெண்டு வயதில் நிற்கிறாள். "நான் அறுப்பேன். போட்டிக்கு வரலேன்னா நீ ஏன் மைதானத்துக்கு பட்டத்தை எடுத்திட்டு வாறே." நான் கேட்டபோது பிந்தியா எனக்குப் பட்டத்தின் கதையைச் சொன்னாள். பட்டமென்றால் பெண் குழந்தைகளுக்குக் காதலன். ஆண் குழந்தைகளுக்குக் காதலி. கயிறுதான் அவர்களின் காதல். அது அறுத்தெறியப்படும்போது காதல் உடைபடுகிறது. கயிறு அறுந்த பட்டத்தை மீண்டும் மீட்டு எடுக்கும்போது அது புனர்ஜென்மம். அதனால் பிந்தியா என்னிடம் சொன்னாள். "பாஜி சாச்சா ஒரு போதும் என்னுடைய கயிற்றை அறுத்தெறிய வேண்டாம்." நான் சிரித்தேன். அவள் திரும்பவும் சிரித்தபோது உதட்டுக்குப் பக்கத்தில் விழுந்த குழிகள் பொய்யாய் கவலைப்பட்டதையும் பார்த்தேன். வீட்டுக்குத் திரும்பி வரும்போது என்னைச் சுற்றியும் மகர ராசியில் காதலும் காமமும், மீண்டும் பல நாட்களுக்குப் பிறகு சந்திக்கும் சந்திப்புகளுமாய் தொடர்ந்த வண்ணம் இருந்தது. என்னுடைய பக்கத்து வீட்டுக்காரனான அசன் ஷேக் மொட்டை மாடியிலிருக்கும் தனி அறையில் புறாக்களுக்கிடையில் தங்கியிருந்தான் கீழ்போர்ஷனில் வாடகைக்கிருப்பவர்கள் தரும் பணத்தை வைத்துக் கொண்டு ஷேக் புறாக்களுக்கு தீனி வாங்கிப் போட்டுக் கொண்டிருந்தான். நடுவில் ஆக்ராவிலோ, டெல்லியிலோ போய் "சிக்கந்தரி,", "காபூளி" போடற உயர் ஜாதிப் புறாக்களை வாங்குவார். அசன் கை தட்டினால் புறாக்கள் மாடியின் பல பாகங்களுக்கும் பறந்து, வானத்தில் போய் ஒன்றாய் குழுமி, தூரமாய் பறந்து, விமானம் திரும்புவதுபோல சாய்ந்து சாய்ந்து திரும்பி, மீண்டும் வளைந்து மாடிக்கு வந்து சேரும். லாவகமாகச் சுழன்று ஆடும். நர்த்தகியின் உடை வட்டமிடுவது போல அப்புறாக்கள் ஒரு முறை சுழன்று தான் மாடியில் இறங்கும். புறாக்களின் சிறகசைப்பும், உடல் குலுக்கமும், பொட்டுப் பொட்டாய் கண் சிமிட்டி வீட்டிற்குத் திரும்பி வருவதின் சந்தோஷமும் பார்த்து என் மகள் எப்போதும் கைதட்டிச் சிரிப்பாள். அவள் கைகளில் அமர்ந்து மட்டுமே தீனியைக் கொத்தும் அனுமதியைப் புறாக்களுக்கு அசன் ஷேக் கொடுத்திருந்தார். பிப்ரவரியிலேயே அடைகாத்து உட்கார்ந்த புறாக்கள் ஏதோ நடக்கப் போவதை முன் கூட்டியே தெரிவித்ததாய் அசன் ஷேக் சொன்னார். புறாக்கள் எத்தனை முறை கை தட்டினாலும் வெளியே பறந்துபோக மறுக்கின்றன. ஏதோ நடக்கப் போகிறது. அன்றே கோதுமை மாவும், கடலை மாவும், பருப்பும், உருளைக்கிழங்கும் சேகரிக்க ஆரம்பித்துவிட்டேன். கேஸ் சிலிண்டர்கள் மட்டும் கிடைக்கவில்லை. என்னுடைய பதட்டத்தைப் பார்த்து அம்மாகூட திட்டினாள். "நீ என்ன பைத்தியக்காரத்தனமாக என்னென்னவோ செய்யறே. இது விலை அதிகமாயிருக்கும் காலம். இப்போ போய் எல்லாத்தையும் வாங்கி வைக்கிறயே. அகமதாபாதிகளும் குஜராத்திகளும் கருணை உள்ளவர்கள். சைவர்கள் பாபுஜியின் ஆட்கள், ஒரு எறும்பைக் கூட நோகடிக்காமல், ஜீவராசிகள் ஏதாவது இருக்குமா என்று தரையையே பார்த்து நடக்கும் ஜைனர்கள். அவங்க கடவுள் யாரு? பகவான் ரஞ்ஜோத் யுத்தத்தில் பங்கு கொள்ள மறுத்த பகவான் ஸ்ரீகிருஷ்ணர். அந்த பைத்தியக்காரன் பொண்டாட்டி புள்ள இல்லாத புறா வளக்கிறவன் ஏதோ சொன்னான்னு ஏன் இப்படியெல்லாம் நடந்துக்கற." அம்மா சொன்னது சரிதானென்று எனக்குத் தோன்றிய ஒரு நாள் இரவுதான் பாய்சந்த் என் வீட்டுக் கதவைத் தட்டினான். "குத்புதீன்..... " பாய்சந்தால் மூச்சு விட முடியவில்லை. "நான் வேலையை முடிச்சிட்டு ரயில்வே ஸ்டேஷனிலிருந்து நேரா இங்கு வரேன். பரோடாவுக்குப் பக்கத்தில் கோத்ரா ஸ்டேஷனில் வெளியில் ஒரு போகி கொளுத்தறாங்க. குத்புதின், நம் கிளாசில படிச்சாளே சாந்திபென் எப்பவும் கணக்கில் ஃபஸ்டா வருவாளேடா. அவளும், அவ புருஷன் கொழந்தை எல்லாம் செத்திட்டாங்க. டவுன்ல மைக் வைச்சிட்டாங்க. அயோத்தியிலிருந்து திரும்பி வந்து கொண்டிருந்த சாந்தி பெண்னைப் போன்ற ராமபக்தர்களைக் கொன்று கோத்ரா அவுட்டரில் குடியிருக்கும் உன் மதத்துக்காரர்களுக்கு எதிராக .... எனக்கு பயமாக இருக்கிறது...." அசன் ஷேக்கின் புறாக்கள் சொன்னது சரி. "நான் வரும் வழியிலேயே விரேன் ஷாவின் டாடா சுமோவை புக் பண்ணிட்டேன். நானும் ஆஷாவும் குழந்தைகளும் உதய்ப்பூரில் இருக்கும் அண்ணன் வீட்டுக்குப் போகப்போறோம். குத்புதீன் நீ என்ன செய்யப்போற? இங்கேயிருந்து கிளம்பிடு. இதைச் சொல்லத்தான் நான் இப்ப ஓடிவந்தேன். வரேன் பார்க்கலாம்." நான் ரொம்ப நாட்களுக்குப் பிறகு அம்மாவின் முகத்தில் பயம் படருவதை உணர்ந்தேன். இன்றைய இரவு என் மகளைத் தவிர யாரும் தூங்கவில்லை. மறுநாள் காலையிலும் நான் வாசல் கதவோ ஜன்னலோ திறக்கவில்லை. அவசரப்பட்ட மகளுக்காக நான் பின் கதவைத் திறந்து கொடுத்தேன். அவள் மண்ணை வாரி விளையாடத் தொங்கினாள். சிறிது நேரத்தில் ஏதோ சப்தம் கேட்பதை உணர்ந்தவுடனேயே நான் காதைக் கூர்மையாக்கினேன். என் மகள் ஒரு புறாவைப் பிடித்தபடி உள்ளே வந்தாள். "அழகாயிருக்கு இல்ல புறா" அவள் என் கையில் கொடுத்த புறா கழுத்து முறிந்து இறந்து கிடந்தது. நான் வெளியே எறிந்தபடி பார்த்தபோது அசன் ஷேக்கின் உரத்த சப்தம் கேட்டது. "அய்யோ என் புறாக்கள்" திடுக்கிட்டுத் திரும்பியபோது கலகக்காரர்கள் பெட்ரோல் ஊற்றித் தீ வைத்த அசன் ஷேக்கினைத் தான் நான் பார்த்தேன். பிறகு அவர்கள் என் வீட்டிற்கே வந்துவிட்டார்கள். அவர்கள் என் வீட்டைச் சுற்றியும் மண்ணெண்ணெய் ஊற்றித் தீ வைத்தார்கள். மூடி பிடுங்கப்பட்ட சிலிண்டர்களைத் தீயில் எறிந்தபோது அதில் என் அம்மாவும் மனைவியும் மகளும் மூலைக்கொருவராய் சிதறிப்போனார்கள். எப்படி என்றே தெரியாமல் பின் வாசல் வழியாக ஓடிப்போனேன். வெளியே வந்தபோது மண்ணெண்ணெய் பாட்டில்களும், பெட்ரோல் கேன்களும், வாட்களும், கோடாலிகளுமாக என்னைச் சுற்றி நின்றவர்கள் நம்மைப் போலவே மனிதர்களாக இருந்தார்கள். அவர்களின் இடுப்பின் பருமன் என்னுடைய அளவுக் குறிப்பேட்டில் பதிவாகியிருந்தது. நான் தைத்துக் கொடுத்த உடைகள் அணிந்த பெண்கள் என்னடைய மனைவியுடன் "கோன் கியோம் கீ சாஸ்பீ கபி பஹீதி" என சண்டையிட்டுக் கொண்டிருந்தார்கள். நான் அடையாளம் கண்டு பிடிக்க முடியாத ஆட்கள் வாட்களும் சூலங்களும் போர்டுகளுமாகக் காட்சியளித்தார்கள். அவர்கள் கையிலிருந்த போர்டுகள் சொன்னது. "முஸ்ஸிம்களின் கடைகளிலிருந்து எதையும் வாங்காதே" நான் என்னடைய பச்சைக் கண்களுக்கு நடுவில், ப்ரியத்தை இழுத்துப் பூட்டி விட்டு கருங்கல் சீழ்பிடித்து நிற்கும் பிந்தியாவைப் பார்த்தேன். அவளுடைய அம்மாவின் கையில் அரிவாள் இருந்தது. நான் அங்கே குழுமியிருக்கும் "ரேபிட் ஆக்ஷன் ஃபோர்ஸ்"காரர்களிடம் என்னைக் காப்பாற்றுமாறு கெஞ்சினேன். அப்போதுதான் ஒரு துப்பாக்கியின் ஸேப்டி காட்ச் மாற்றும் சப்தம் கேட்டது. சட்டென நான் திரும்பிப் பார்த்தபோது ஒரு தங்க முடியுள்ள வெள்ளைக்காரன் கேமராவை கிளிக் செய்வதைக் கவனிக்க முடிந்தது. ம்... பிறகு நடந்ததை நீங்கள் பத்திரிகையில் பார்த்திருப்பீர்கள். குத்புதின் அன்சாரியையும் குடும்பத்தையும் வெறித் தாக்குதலோடு சுற்றி வளைத்திருந்தார்கள். அந்த ஆள் போலீஸ்காரர்களிடமும் RAF காரர்களிடமும் தன்னுடையதும் தன் குடும்பத்தினுடையதும் உயிரைக் காப்பாற்றும்படி கெஞ்சினான். மாலை ஆறு மணிவரை நீண்டு கொண்டிருந்த இந்த அக்னிப் பரீட்சை முடிவுக்கு வந்தது. மிலிட்டரி வந்தபோது தான். மிலிட்டரிக்காரர்கள் அவர்களுடைய ட்ரக்கில் என்னை ஏற்றிக் கொண்டு என் வீட்டிற்குப் போனார்கள். இடிபாடுகளுக்கிடையில் என் அம்மாவையும், என் மனைவியையும், மகளையும் கண்டு பிடித்தார்கள், எங்களை ஷா அலம் முகாமில் கொண்டு போய்விட்டார்கள். ராய்ட்டரின் புகைப்படக்காரர் எடுத்த என் படம் பத்திரிகையில் வந்தது. பார்வை நிலைக்காமல் அலை பாய்ந்த என் கண்ணில் பச்சை நிறம் இருண்டு போக, நிறைந்த கண்ணீருமாய், ஈரமான பத்திரிகைத் தாளில் உறைந்துபோன என் கூக்குரலும், கைகூப்பியவாறு நான் கேட்கும் மன்னிப்பும் சமீபித்திருக்கும் மரணத்தை உங்களுக்குத் தத்ரூபமாக்கியிருக்கும். நான் அகமதாபாத்தின் சின்னமானேன். நான் சின்னமான சாலையின் இருபுறமும் பிணங்கள் கிடந்தன. உயரமான கட்டிடங்கள் எரிவதால் வானத்தில் கரும்புகை படர்ந்திருந்தது. அவற்றின் இடையிலான நான் இதுவரை காணாத பருந்துக் கூட்டங்களைப் பார்த்தேன். வழி நெடுகிலும் பள்ளிக் குழந்தைகளின் பாதி எரிந்த சிவப்பு ரிப்பன்கள் கிடந்தன. பெண்களின் ரத்தம் தோய்ந்த உள்ளாடைகள், கிழித் தெறியப்பட்ட பாடப்புத்தகங்கள். உடைந்த கண்ணாடி வளையல்கள். பாதி எரிந்த குடும்ப ஃபோட்டோ ஆல்பங்கள் சுவர்களில் முஸ்லீம்களின் கடைகளை பகிஷ்கரிக்கச் சொல்லும் விளம்பரங்கள், தலைபோன பொம்மைகள், வின் ஸ்கிரீன் உடைந்து பாதி எரிந்த கார்கள், தீ அணைந்து தீராத சைக்கிள் ரிக்ஷாக்களின் குவியல்கள், திறந்து வயிற்றிலிருந்து உருவின் குடல்போல வெளியே இழுத்தெறியப்பட்ட அனுமல்லிக்கினுடையதும், பங்கஜ் உத்தாஸினுடையதும் ஆடியோ கேஸட்டுகள், அதிகம் அடி வாங்கிக் கொடுத்த மார்க் குறைந்த ரேங்க் கார்டுகள், பட்டங்கள், கிழித்த பட்டங்கள் .... மிதித்து நசுக்கப்பட்ட பட்டங்கள்... கயிறு அறுந்த பட்டங்கள். நான் பட்டங்களைப் பார்ப்பதில்லை என்று தீர்மானித்தாலும் அவை எல்லா இடங்களிலும் ப்ரத்யட்ச்மானது. அம்மா அடிக்கடி சொல்வதை யோசித்துப் பார்த்தேன். "நீ அன்சாரி, மோமின், தையல்காரன், ஒரு போதும் உன் கைகளால் நூல் அறுக்கப்படக்கூடாது." ராய்ட்டரின் புகைப்படக்காரல் நூலறுந்த நகரத்தின் பதிவாய் என்னை ஆக்கியிருந்தார். மறுவாழ்வு இல்லத்தின் பெண்கள் பகுதியில் தனியாய் வாழும் என் குடும்பத்தை நான் பார்க்கவில்லை. நான் இரவு பகலாய் நடந்தேன். எதை எதிர்பார்த்தென்று தெரியாமல் நடந்தேன். என் யாத்திரைக் கிடையில் மண்ணில் ஏதோ மின்னுவதை உணர்ந்தேன். அது ஒரு உடைந்த கண்ணாடித் துண்டாக இருந்தது. அதன் மேலே ஸ்டிக்கர் பொட்டு ஒட்டியிருந்தது. நான் என்னுடைய முகத்தைப் பார்த்து ஐந்தாறு நாட்களாகியிருந்தது. முகத்தில் சின்ன சின்னதாய் ரோமங்கள் படர்ந்திருந்தன. கண்களில் முழுமையாய் பயம் போகவில்லை. நான் மறந்துபோன ஒரு விஷயத்தைச் செய்ய வேண்டும்போல இருந்தது. "அது சிரிப்பு" எத்தனை முறை முயன்றபோதும் முகம் விகாரமான தேயல்லாமல் சிரிக்க முடியவில்லை. பக்கவாதக்காரனை உருவி விடுவதுபோல என் கன்னத்தையும் வாயைச்சுற்றியும் அழுத்திவிட்டேன். அப்போதுகூட என் பிரதிபிம்பம் சிரிக்கவில்லை. என் முகத்தின் ரத்த நாளங்கள் தளர்ந்து கிடந்தன. |
1 | ['tam'] | கீழே கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பைக் கொடு.
கதை: ஒரு தடவை முல்லா ஒரு குளக்கரை ஒரமாக நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது வழியில் இருந்த ஒரு கல் தடுக்கி குளத்தில் விழ அவருக்குப் பின்னால் வந்து
கொண்டிருந்த ஒரு மனிதர் பாய்ந்து வந்து முல்லாவைக் குளத்தில் விழாமல் காப்பாற்றினார்.
முல்லா அவருக்கு நன்றி சொல்லிவிட்டுப் போய்விட்டார். ஆனால் முல்லாவைக் காப்பாற்றியவரோ சும்மா இருக்கவில்லை. முல்லாவை எந்த இடத்தில்
யாருக்கு நடுவே சந்தித்தாலும் " குளத்தில் விழ இருந்த முல்லாவை நான்தான்
காப்பாற்றினேன் " என்று சொல்ல தொடங்கிவிட்டார். அவருடைய தற்பெருமைப் பேச்சைக் கேட்டுக் கேட்டு முல்லாவுக்கு சலிப்பு ஏற்பட்டுவிட்டது.
அவருக்கு தகுந்த நேரத்தில் சரியான பாடம் கற்பிக்க வேண்டும் என்று தீர்மானித்தார். ஒரு நாள் பழைய குளக்கரைப் பக்கம் ஜன நடமாட்டம் அதிகமாக இருந்தது. அந்தப் பக்கம்
வந்த முல்லா அந்த தற்பெருமைக்காரர் குளக்கரையில் யாரோ ஒருவருடன் உரையாடிக்
கொண்டிருப்பதைக் கண்டார். திடீரென முல்லா குளத்தினுள் பாய்ந்து விட்டார்.
முல்லா குளத்தில் விழுந்து விட்டார் என நாலாபுறமிருந்த மக்களிடமிருந்து கூக்குரல்
எழுந்தன. பலர் முல்லாவைக் காப்பாற்றுவதற்காக குளத்தில் இறங்கினர். முன்னர் முல்லாவைக் குளத்தில் விழாமல் காப்பாற்றியவரும் அவசர அவசரமாகக் குளத்தில்
இறங்கினார். முல்லாவோ யாரைப் பற்றியும் கவலைப்படாமல் குளத்தில் நீச்சலடித்து விளையாடிக்
கொண்டிருந்தார். முல்லாவுக்கு நீந்தத் தெரியும் என்ற விஷயம் இதுவரை யாருக்கமே தெரியாது. முல்லா முன்னர் தம்மைக் காப்பாற்றியதாக தற்பெருமை பேசும் மனிதரைச் சுட்டிக்
காண்பித்து
" என் அருமை நண்பரை உங்களுக்கெல்லாம் அறிமுகப்படுத்த நினைக்கிறேன். நீந்தத் தெரிந்த
என்னை இந்தக் கனவான் ஒரு தடவை நீரில் மூழ்கி விடாமல் காப்பாற்றி பேருதவி செய்தார் "
என்றார்.
| கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பு 'தற்பெருமை' என்பதாகும். |
2 | ['tam'] | கீழே கொடுக்கப்பட்டுள்ள வார்த்தைகளையும் தலைப்பையும் பயன்படுத்தி சிறு கதை எழுதுக.
வார்த்தைகள்: பரமார்த்தகுரு, முட்டாள், மூடன், மட்டி, மடையன், பேயன், தோட்டம், கீரை, பாத்திகள், பானை, வேர், மாடு, முனியாண்டி
தலைப்பு: தோட்டத்தில் மேயுது ...
| அக்கம் பக்கம் இருந்தவர்கள் உதவியுடன் தோட்டத்தில் கீரை பயிரிட்டு இருந்தனர், குருவும் சீடர்களும். செடிகள் நன்றாக வளர்ந்து, தள தள என்று இருந்தனர். ஒருநாள் காலையில் எழுந்து பார்த்த மட்டி, "ஐயோ! போச்சு! போச்சு!" என்று அலறினான். பரமார்த்தரும், மற்ற சீடர்களும் தோட்டத்துக்கு ஓடினார்கள். மொத்தம் மூன்று பாத்திகள் இருந்தன. அதில் ஒரு பாத்தியில் இருந்த செடிகளை மாடு ஒன்று மேய்ந்து விட்டிருந்தது. "அடடா! நாம் எவ்வளவு கஷ்டப்பட்டு வளர்த்து வருகிறோம்; எல்லாம் இப்படிப் பாழாகி விட்டதே" என்று வருத்தப்பட்டார் பரமார்த்தர். செடிகளை மாடு மேயாமல் இருப்பதற்காகத் தம் சீடர்களை யோசனை கூறுமாறு கேட்டார். "குருவே! அந்த மாடு வந்து மேய்வதற்கு முன்பு நாமே கொஞ்சம் கீரையைப் பறித்து அதற்கு போட்டு விடலாமே!" என்றான் முட்டாள். "நாம் பயிரிடுவதை மாடு சாப்பிடாமல் இருக்க வேண்டுமானால் மாட்டுக்கென்று தனியாக ஒரு பாத்தியில் கீரை விதைத்து விட்டால் போதும். அதை மட்டும் சாப்பிட்டு விட்டுப் போய்விடும்!" என்றான்ன மூடன். "புத்திகெட்டவர்களே! நீங்கள் சொல்கிறபடி செய்தாலும் நமக்குத்தானே நஷ்டம்? அதையும் தின்று, இதையும் தின்றுவிடுமே!" என்று அவர்களைத் திட்டினார், பரமார்த்தர். அப்போது மண்டுவுக்கு ஒரு யோசனை தோன்றியது. "ராத்திரியில் மட்டும்தானே மேய்கிறது? அதனால் தினம் தினம் இரவு வந்ததும் எல்லாச் செடிகளையும் பிடுங்கி பத்திரமாக மறைத்து வைத்து விடலாம்! பொழுது விடிந்ததும், பழையபடி நட்டு விடலாம்!" என்றான். இந்த யோசனையும் சரிப்பட்டு வராது என்று பரமார்த்தர் கூறிவிட்டார். "தழைகள் எல்லாம் மேலே இருப்பதால்தான் தின்று விடுகிறது, பூரா செடிகளையும் பிடுங்கி, தலைகீழாக நட்டு விடுவோம்! வேர் மட்டும் மேலே இருப்பதைப் பார்த்து, மாடு ஏமாந்து போய்விடும்!" என்று சொன்னான் மட்டி "ஆமாம்! இதுதான் சரியான வழி!" என்று, ஒரு பாத்தியில் இருந்த செடிகளை மட்டும் பிடுங்கித் தலைகீழாக நட்டு வைத்தனர். வேர் முழுவதும் மண்ணுக்கு மேலே இருந்ததால் செடிகள் முழுவதும் ஒரே நாளில் செத்து விட்டன. "குருவே! இந்தச் செடிகளின் மீது பானைகளை கவிழ்த்து மூடி விட்டால் போதும். செடிகளைத் தேடிப் பார்த்து விட்டு மாடு ஏமாந்து போய்விடும்!" என்று சொன்னான் மடையன். மறுநாளே, சந்தையிலிருந்து ஏராளமான பானைகளை வாங்கி வந்தனர். ஒவ்வொரு செடியின் மீதும் ஒவ்வொரு பானையைக் கவிழ்த்து வைத்தனர். சூரிய வெளிச்சம் படாததால், பத்தே நாளில் இரண்டாவது பாத்தியில் இருந்த செடிகளும், வாடி வதங்கி விட்டன. குருவுக்கும், சீடர்களுக்கும் ஒரே கவலையாகப் போய்விட்டது. "குருவே! அந்தப் பசு மாட்டைப் பிடித்துக் கட்டி விட்டால் போதும். நாமே தினம் பால் கறந்து சாப்பிடலாம்! மாட்டுக்காரன் வந்து கேட்டால் செடிகளை மேய்ந்ததற்காகத் தண்டனையாக நிறைய பணத்தையும் வாங்கிக் கொள்ளலாம்" என்று கூறினான் மடையன். "இப்போதுதான் நமக்கு இரண்டு வழிகளில் லாபம்!" என்றபடி குதித்தான் மட்டி மறுநாள் இரவு வெளிச்சம் தெரிவதற்காகக் கையில் கொள்ளிக் கட்டையை வைத்துக் கொண்டான், முட்டாள். குருவும், சீடர்களும் தோட்டத்தில் பதுங்கிக் கொண்டனர். இந்தத் தடவை வழக்கமான மாட்டுக்குப் பதில் எலும்பும் தோலுமாய் இருந்த வேறொரு பசுமாடு வந்தது. மாட்டைக் கண்டதும் பதுங்கியிருந்த குருவும் சீடர்களும் தடால் என்று அதன் மேல் விழுந்து புரண்டார்கள். மாட்டின் வாலைப் பிடித்து முறுக்கினான் மூடன். அதன் முகத்தில் சூடு போட்டான், முட்டாள். வயிற்றின் மேல் ஏறிக் குதித்தான் மடையன். "அப்பாடா! ஒரு வழியாகத் திருட்டு மாட்டைக் கண்டுபிடித்து விட்டோம்!" என்ற பரமார்த்தரும் சீடர்களும் மகிழ்ச்சியோடு படுக்கச் சென்றார்கள். பொழுது விடிந்ததும், அந்த ஊரிலேயே பெரிய முரடனான முனியாண்டி, தன் மாட்டைத் தேடிக் கொண்டு வந்தான். பரமார்த்தரும் சீடர்களும் தன் மாட்டை கட்டி வைத்திருப்பதைப் பார்த்துப் பயங்கரமாகக் கோபம் கொண்டான். "டேய்! உங்களுக்கு எவ்வளவு திமிர் இருந்தால் என் மாட்டைக் கட்டி வைப்பீர்கள்? மாட்டுக்குச் சூடு போட்டதற்கும், அதன் காலை ஒடித்துக் கட்டிப் போட்டதற்கும் சேர்த்து மரியாதையாகப் பணத்த எடுத்து வையுங்கள்!" என்று கத்தியபடி குருவையும் சீடர்களையும் உதைக்க ஆரம்பித்தான். "கீரையும் வேண்டாம்; பணமும் வேண்டாம். ஆளை விட்டால் போதும்" என்று அலறியபடி குருவும், சீடர்களும் மடத்தை விட்டே ஓடத் தொடங்கினார்கள். |
2 | ['tam'] | கீழே கொடுக்கப்பட்டுள்ள வார்த்தைகளையும் தலைப்பையும் பயன்படுத்தி சிறு கதை எழுதுக.
வார்த்தைகள்: கொக்கு, மீன்கள், நண்டு, செம்படவன்
தலைப்பு: நண்டு, கொக்கைக் கொன்ற கதை
| ஒரு குளக்கரை. கரையோரத்தில் கிழக்கொக்கு ஒன்று விசனமுடன் ஒற்றைக் காலில் நின்று கொண்டிருந்தது. துள்ளிக் கொண்டிருந்த மீன்களில் ஒன்றுக்கு சந்தேகம் வந்தது. "நம்மைச் சும்மாவிடாதே, ஆனால் செயலற்று நின்றுள்ளதே என்னவாக இருக்கும்" என்று. "நமக்கேன்" என்று இராமல் அதன்முன் வந்தது. "என்ன கொக்காரே! உன் ஆகாரத்தைக் கொத்தாமல் சும்மா நிற்கிறீர்?" என்றது. "நான் மீனைக்கொத்தித் தின்பவன்தான், ஆனாலும் இன்று எனக்கு மனசு சரி இல்லை" என்றது கொக்கு. "மனசு சரி இல்லையா… ஏன்?" என்றது மீன். "அதைஏன் கேட்கிறாய்…" என்று பிகு பண்ணியது கொக்கு. "பரவாயில்லை சொல்லுங்களேன்", "சொன்னால் உனக்குத் திக் என்றாகும்." மீனுக்குப் பரபரத்தது. "சொன்னால்தானே தெரியும்", "வற்புறுத்திக் கேட்பதாலே சொல்கிறேன். இப்போது ஒரு செம்படவன் இங்கே வரப்போறான்…" என்று இழுத்தது கொக்கு. "வரட்டுமே", "என்ன வரட்டுமே? உங்களையெல்லாம் ஒட்டுமொத்தமாகப் பிடித்துச் சென்றுவிடப் போகிறான்.", "அய்யய்யோ!" உடனே அம்மீன் உள்ளே சென்றுவிட்டது. சில நிமிடங்கள் ஆகி இருக்கும்; பல மீன்கள் அதன்முன் துள்ளின. அதுமட்டுமா! ஒட்டுமொத்தமாக "நீயே எங்களையெல்லாம் அந்த அபாயத்திலிருந்து காப்பாற்றேன்" என்று கெஞ்சின. அபாயம் சொன்னவனே உபாயமும் சொல்வான் என்று அவைகள் யோசித்து கொக்கிடம் உதவி கேட்டன. "நான் என்ன செய்வேன்? என்னால் செம்படவனோடு சண்டை போடா முடியாது. கிழவன் நான். வேண்டுமென்றால் உங்களை இக்குளத்திலிருந்து வேறொரு குளத்துக்குக் கொண்டு போகலாம். அதனால் எனக்கும் இந்தத் தள்ளாத வயதில் பரோபகாரி என்ற பெயரும் வரும்; நீங்களும் பிழைத்திருப்பீர்கள்" என்றது கொக்கு மிகவும் இறக்கம் கசிய. மீன்கள் எல்லாம் தம் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள அதன் பேச்சை நம்பின. "அபாயத்தை அறிந்து சொன்ன நீங்களே உபாயத்தையும் தெரிந்து சொல்கிறீர்கள்; அப்படியே செய்யுங்கள்" என்றன ஒருமித்தக் குரலில். கொக்குக்கும் கசக்குமா காரியம்? நடைக்கு ஒவ்வொன்றாக குளத்திலிருந்த மீன்களையெல்லாம் கௌவிக் கொண்டுபோய் சில மீன்களைத் தின்று, மற்ற மீன்களை ஒரு பாறையில் உலரவைத்தது. குளத்திலிருந்த நண்டு ஒன்று இதை கவனித்தது. அதற்கும் வேறு குளத்திற்குச் செல்ல உள்ளுக்குள் ஆசை சுரந்தது. "ஓ சீவகாகுண்யனே! என்னையும் அவ்விடத்திற்குக் கொண்டுபோங்கள்" என்று கெஞ்சியது. வருங்காலத்தில் எதுவும் வழிய வரும் - என்று உள்ளுக்குள் துள்ளிக் கொண்ட கொக்கு, நண்டையும் கௌவிக்கொண்டு பறந்தது. பறக்கும் பொது வழியில் மீன்களின் முள்ளுடல்கள் ஆங்காங்கே சிதறி இருப்பதைக் கண்டது நண்டு. அதற்க்கு "பக்"கென்றது. அத்துடன் வேறு நீர்நிலைக்குக் கொண்டுச் செல்வதாகக் கூறி மீன்களைத் தின்றுவிடும் கொக்கின் வஞ்சகம் நண்டுக்குச் "சட்"டென்று புரிந்துவிட்டது. தன் நிலையம் அப்படித்தானா? உயிராசையால் நண்டுக்கு ஒரு உபாயம் தோன்றியது. வைரத்தை வைரத்தால் அறுப்பதுபோல் அதற்கு மூளை வேலை செய்தது. "கொக்காரே! நீங்கள் என்மேல் இரக்கப்பட்டு எடுத்துக்கொண்டு வந்தீர்கள். அங்கே என் உறவினர்கள் பலர் இருப்பதால், என்னை மீண்டும் அங்கே கொண்டு சென்றால் அவைகளையும் காண்பிப்பேன்" என்றது நண்டு. "அப்படியா? இன்னும் இருக்கிறதா நண்டுகள்?", "எனக்கு உறவினர்கள் அதிகம்; பல இருக்கின்றன.", "ஆஹா! அதிர்ஷ்டம் என்றால் இப்படித்தான் வரவேண்டும்; நம்பாடு யோகம்தான்" என்று மகிழ்ந்த கொக்கு மீண்டும் நண்டைக் கௌவிக் கொன்று பழைய குளத்தை நோக்கிப் பறந்தது. குளத்துக்கு நேராக வரும்போது அதுவரை மண்டுபோலிருந்த நண்டு தன் கொடுக்கினால் கொக்கின் கழுத்தை இரண்டு துண்டாக்கிவிட்டு குளத்து நீரில் விழுந்து உயிர் பிழைத்துக் கொண்டது. அபாயம் சொன்னவனிடமே உபாயம் கேட்ட மீன்கள் செத்தன. வஞ்சமனத்தானின் உபாய மும் அபயாமே என்றறிந்து கொன்றுவிட்ட நண்டு பிழைத்தது. |
2 | ['tam'] | கீழே கொடுக்கப்பட்டுள்ள வார்த்தைகளையும் தலைப்பையும் பயன்படுத்தி சிறு கதை எழுதுக.
வார்த்தைகள்: சிங்கம், காகம், நரி, புலி, ஒட்டகம்
தலைப்பு: ஒட்டகத்தைச் கொன்ற காகம்
| ஒரு காட்டில் சிங்கம் ஒன்று அரசு செய்து கொண்டிருந்தது. அதற்கு அமைச்சர்களாக ஒரு நரியும், ஒரு புலியும், ஒரு காக்கையும் இருந்து வந்தன. ஒரு நாள் ஒட்டகம் ஒன்று வழிதப்பி அந்தக் காட்டுக்குள் வந்து விட்டது. அதைக் கண்ட காகம், சிங்கத்தினிடம் அழைத்துக் கொண்டு வந்து விட்டது. சிங்கம் அதற்கு அடைக்கலம் கொடுத்து, அதையும் தன் அமைச்சர்களில் ஒருவனாக இருக்கும்படி கூறியது. எல்லாம் ஒன்றாகப் பல நாட்கள் இருந்தன. ஒரு நாள் சிங்கம் நோயுற்றிருந்ததால், தன் அமைச் சர்களாகிய புலி, நரி, காகம், ஒட்டகம் ஆகியவற் றைப் பார்த்து, என் பசியைத் தீர்க்க ஏதாவது இரை தேடிக் கொண்டு வாருங்கள்" என்று கூறியது. அவை நான்கும் காடெல்லாம் சுற்றித் திரிந்து எங்கும் இரை கிடைக்காமல் திரும்பி வந்தன. ஒட்டகத்திற்குத் தெரியாமல், காகம் மற்ற இரண்டையும் அழைத்துக் கொண்டு சிங்க மன்னனிடம் சென்றது. ‘மன்னா, காடு முழுவதும் தேடிப் பார்த்து விட்டோம். எங்கும் இரை கிடைக்கவில்லை" என்று காகம் கூறியது. "அப்படியானால் என் பசிக்கு என்ன பதில் சொல்லுகிறீர்கள்? உங்கள் கருத்து என்ன?" என்று சிங்கம் கேட்டது. மன்னா ஒட்டகம் இருக்கிறதே!" என்று காகம் கூறியது. ‘சிவசிவ! நினைப்பதும் பாவம்" என்று சிங்கம் தன் காதுகளை மூடிக் கொண்டது. "மன்னவா, ஒரு குடியைக் காப்பாற்ற ஒருவனைக் கொல்லலாம். ஒரு நகரைக் காப்பாற்ற ஒரு குடியைக் கெடுக்கலாம். ஒரு நாட்டைக் காப்பாற்ற ஒரு நகரையே அழிக்கலாம். இந்த நீதியைக் கொண்டுதான், பஞ்ச பாண்டவர்கள், தங்கள் மகன் அரவானைப் போர்க்களத்தில் பலியிட்டு வெற்றி அடைந்தார்கள்" என்று காகம் எடுத்துக் கூறியது. ‘அடைக்கலமாக வந்தவர்களை அழிப்பது சரி யல்ல என்று மீண்டும் சிங்கம் மறுத்துக் கூறியது. ‘அரசே, அடைக்கலமாக வந்ததை நீங்களாகக் கொல்ல வேண்டாம். அதன் ஒப்புதலின் பேரிலேயே அதைக் கொன்று பசி தீரலாம் என்று காகம் கூறியது. சிங்கம் அதற்குப் பதில் எதுவும் கூற வில்லை. காகம், அது பேசாமல் இருப்பதே ஒப்பியதாகும் என்று எண்ணிக் கொண்டு, நரியையும் புலி யையும் கூட்டிக் கொண்டு அவ்விடத்தை விட்டுச் சென்றது. ஒட்டகம் வந்தவுடன், நான்குமாக மீண்டும் சிங்க மன்னனிடம் வந்தன. ‘அரசே! இந்தக் காடு முழுவதும் இரையே அகப்படவில்லை. என்னைக் கொன்று உண்ணுங்கள்" என்று காகம் கூறியது. ‘உன்னுடலும் எனக்கோர் உணவாகுமா?" என்று சிங்கம் பதில் கூறியது. உடனே நரி, என்னைத் தின்னுங்கள்" என்றது. ‘உன்னைத் தின்றாலும் என் பசியடங்காதே? என்று சிங்கம் கூறியது. புலி முன் வந்து, அரசே என்னைச் சாப்பிடுங்கள்!" என்று வேண்டியது, "நீயும் என் பசிக்குப் போதுமானவன் அல்ல" என்று மீண்டும் சிங்கம் மறுத்துக் கூறியது. இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த ஒட்டகம் நம்மைக் கொல்லத்தான் சூழ்ச்சி நடக்கிறது" என்று தெரிந்து கொண்டது. ஆயினும் வேறு வழியில்லாமல், அரசே, நான் மிகுந்த தசை உடையவன், என்னைக் கொன்று தின்னுங்கள்? என்று கூறியது. அது சொல்லி முடிப்பதற்கு முன்னால், சிங்கம் என்ன சொல்கிறது என்பதையும் எதிர் பார்க்காமல், புலி அதன் மேல் பாய்ந்தது. சிங்கம் இறந்து போன ஒட்டகத்தின் இரத்தத் தைக் குடித்தது. புலி அதன் மூளையைச் சுவைத்துத் தின்றது. நரி அதன் ஈரலைக் கடித்துத் தின்று மகிழ்ந்தது. காகமோ, தசையைக் கொத்தித் தின்று வயிறு புடைத்தது. கொடியவர்களுடன் கூடியவர்கள் மடிவது திண்ணம் என்பதை இந்தக் கதை எடுத்துக் காட்டுகிறது. |
1 | ['tam'] | கீழே கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பைக் கொடு.
கதை: தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிரமன் மரத்திலேறி அதில் தொங்கும் உடலைக் கீழே வீழ்த்தினான். பின்னர் அவன் கீழேயிறங்கி, அதைத் தூக்கிக் கொண்டு மயானத்தை நோக்கிச் செல்லுகையில், அதனுள்ளிருந்த வேதாளம், “”மன்னா! யாரையாவது பழி தீர்ப்பதற்காக இந்த நள்ளிரவில் மயானத்தில் அலைந்து திரிந்து உன்னை நீயே வருத்திக் கொள்கிறாயா? உன் நோக்கம் தான் என்ன? உன்னைப் போல் சிலர் உணர்ச்சிவசப்பட்டு ஏதாவது சபதம் எடுத்துக் கொள்கிறார்கள். ஆனால் பல ஆண்டுகளுக்குப் பின் அவர்களுடைய ஆவேசம் தணிந்து போய் விடுகிறது. குணவீரமன் என்ற இளைஞன் தனது சிந்தனைகளைப் புரிந்து கொள்ளாத கிராமத்தினரை வெறுத்து அவர்களை விட்டு விலகியவன் இறுதியில் அவர்களிடமே மீண்டும் திரும்பி வந்தான். அவனுடைய கதையை உனக்குக் கூறுகிறேன் கேள்!” என்றது. அன்னாவரம் என்ற கிராமம் மலைகள் சூழ்ந்த இயற்கை எழில் நறைந்த கிராமம். அங்கிருந்த விவசாயிகள் பல நூதனமான பயிர்களை விவசாயம் செய்து வந்தனர். பலவிதமான கிழங்குகளையும், பழமரங்களையும் மூலிகைகளையும் பயிர்செய்து, அவற்றையே தங்கள் முக்கிய உணவாகவும் கொண்டு இருந்தனர். அந்த கிராமத்தில் குணவர்மன் என்ற இளைஞன் வசித்து வந்தான். சிறுவயது முதலே, அவன் தீவிர சிந்தனையாளனாக இருந்தான். எப்போதும், எதைப் பற்றியாவது சிந்தித்துக் கொண்டேயிருந்தவனை, கிராமத்தினர் சோம்பேறி என்று இளக்காரம் செய்தனர். அவனுடைய வாழ்க்கையின் கண்ணோட்டமே வேறுவிதமாக இருந்தது. கிராமத்து மனிதர்களுடைய வாழ்க்கைமுறை அவனுக்குப் பிடிக்கவில்லை. “கடவுள் கொடுத்த பகுத்தறிவை நன்குப் பயன்படுத்த வேண்டும். கற்றுக் கொள்ள வேண்டிய விஷயங்கள் உலகில் எத்தனையோ இருக்கின்றன” என்பது போன்ற அவனுடைய புதுமையான சிந்தனைகள் கிராமத்தினரின் மூளையில் நுழையவில்லை. தன்னுடைய புதிய கருத்துகளை யாரும் ஏற்காததால் சலிப்படைந்த குணவர்மன் ஒருநாள் தன் தந்தையிடம், “அப்பா! இங்குள்ள மக்கள் இயந்திரம்போல் இயங்குகின்றனர். இங்கிருந்தால் என் வாழ்க்கை வீணாகிவிடும்! தண்டகாரண்யக் காட்டில் புஜங்கர் என்பவர் நடத்தும் குருகுலத்தில் சேர்ந்து, என் கல்வி அறிவை அபிவிருத்தி செய்து கொள்ள விரும்புகிறேன். பிறகு அங்கிருந்து திரும்பி வந்து, எந்த கிராமத்தினர் என்னை ஏளனம் செய்கின்றனரோ, அவர்கள் எனக்கு மரியாதை செலுத்துமாறு செய்வேன்!” என்று கூறி விட்டு, தண்டகாரண்யத்தை நோக்கிச் சென்றான். புஜங்கரின் ஆசிரமத்தை நெருங்கிக் கொண்டுஇருக்கையில், ஒரு தேர் அவன் பின்னால் வந்தது. அவனிடம் வந்து தேரை நிறுத்திய தேரோட்டி, “தம்பி! நீ எங்கு செல்கிறாய்?” என்று கேட்க, குணவர்மன் பதில் சொல்லவும், அவன், “நானும் அங்குதான் செல்கிறேன்! நீயும் தேரில் ஏறிக்கொள்! மன்னரின் தாய்க்கு உடல் நலை சரியில்லாததால், புஜங்கரை அழைத்துச் செல்ல நான் வந்திருக்கிறேன்!” என்று கூறிவிட்டு குணவர்மனைத் தன்னுடன் அழைத்துச் சென்றான். குருகுலத்தை அடைந்ததும், குணவர்மன் புஜங்கரை கால்களில் விழுந்து வணங்கித் தன் விருப்பத்தை வெளியிட்டான். அதற்கு அவர், “மகனே! என்னிடம் சீடனாகச் சேர வேண்டுமெனில், அதற்குமுன் ஜம்புகாரண்யத்தில் என் பழைய மாணவர் வினயர் ஒரு குருகுலம் நடத்தி வருகிறார். அங்கு சென்று இரண்டு ஆண்டுகள் பயின்ற பிறகு நீ இங்கு வா!” என்றார். “குருவே! உங்களுக்கு என் அறிவுத் திறமையில் சந்தேகம் என்று நினைக்கிறேன். வேண்டுமானால், நீங்கள் என் அறிவை சோதித்துப் பாருங்கள்!” என்றான். “மகனே! இப்போது நான் அரண்மனைக்குச் செல்ல வேண்டிஇருக்கிறது. திரும்பி வர எனக்கு ஒரு வாரம் ஆகும்! அதுவரை இந்த இரண்டு கிரந்தங்களை உன்னிடம் தருகிறேன். இவற்றை கவனமாகப் படி! இவற்றினுடைய கருத்தை நீ நன்றாகப் புரிந்து கொண்டால் மட்டுமே, நீ என் சீடனாக அமையத் தகுதியுள்ளவன்!” என்று கூறிவிட்டு அரண்மனை தேரில் ஏறிச் சென்று விட்டார். உடனே, மற்ற சீடர்கள் அவனிடம், “இரண்டு ஆண்டுகளாக இவற்றைப் புரிந்து கொள்ள நாங்கள் படாதபாடு படுகிறோம். அப்படி இருக்க, உன்னால் ஒரு வாரத்தில் புரிந்து கொள்ள முடியுமா?” என்று அவனை பயமுறுத்தினர். ஆனால் குணவர்மணா, “இதை நான் ஒரு சவாலாக ஏற்றுக் கொள்கிறேன்!” என்று சொல்லிவிட்டு, கிரந்தங்கள் இயற்றப்பட்டிருந்த ஓலைச்சுவடிகளை ஆழ்ந்து படிக்கத் தொடங்கினான். நான்கே நாள்களில், அவற்றின் சாரத்தை குணவர்மன் நன்றாக கிரகித்துக் கொண்டான். மற்ற சீடர்களை அழைத்துத் தான் புரிந்து கொண்ட விஷயங்களை அவர்களுக்கு விளக்கினான். ஆனால் அவர்கள் அவனுடைய அறிவுத்திறமையை தாழ்வாக மதிப்பிட்டு எள்ளி நகையாடினர். கோபங்கொண்ட, குணவர்மன், “உங்களுக்கும் என் கிராமத்து மக்களுக்கும் அதிக வேறுபாடு இல்லை. அவர்கள் படிக்காத முட்டாள்கள்! நீங்கள் படித்த முட்டாள்கள்!” என்று சினந்தான். அரண்மனையிலிருந்து திரும்பிய புஜங்கர், வந்ததும் உடனே குணவர்மனை கிரந்தங்களின் விளக்கம் கேட்டார். குணவர்மன் கூறிய விளக்கங்களைக் கேட்டு அவர் வியந்து போனார். “மகனே! உன்னைப் போல் ஒரு புத்திசாலி எனக்கு சீடனாகக் கிடைக்க நான் கொடுத்து வைத்திருக்க வேண்டும்!” என்று மனமாரப் புகழ்ந்தார். அதன்பின் அவர் அரண்மனையில் நடந்ததை விவரிக்கத் தொடங்கினார். மன்னரின் தாயின் நோயை குணமாக்க எந்த வைத்தியராலும் முடியவில்லை. அப்போது, அவருடைய சபையில் இருந்த கவிஞர்களில் ஒருவர் தான் பத்திரப்படுத்தி வைத்திருந்த யாரோ ஒருவர் எழுதிய காவியத்தை மன்னரிடம் படித்துக் காட்டினார். காவியத்தில் வரும் நாயகிக்கு ஏற்பட்ட விசித்திர நோயின் வர்ணனைகள் மன்னரின் தாய்க்கு ஏற்பட்டிருந்த நோயை அப்படியே ஒத்திருந்தது. அதைப் படித்துக் காட்டிய கவிஞர், “மன்னா! இதில் மூலிகைகளைப் பற்றிய விவரங்களும் சிகிச்சை முறை பற்றியும் எழுதியுள்ள கவிதைகளின் பொருள் எனக்கு விளங்கவில்லை. இதைப் படித்து யாரேனும் அதன் பொருளை உணர்ந்து கொண்டால், அதே மருந்துகளையும், சிகிச்சையும் அளித்துத் தங்கள் தாயை குணமாக்கி விடலாம்!” என்றார். அதற்காகத்தான், புஜங்கர் அரண்மனைக்கு அழைக்கப்பட்டிருந்தார். ஆனால், அவராலும் அதன் பொருளை உணர்ந்து கொள்ள முடியவில்லை. “மகனே! எனக்கே விளங்காத கவிதைகளின் பொருள் உனக்கு ஒருக்கால் விளங்கக்கூடும்! நீ படித்துப் பார்!” என்றார். அவற்றை வாங்கிப் படித்ததும், உடனே குணவர்மனுக்குப் பொருள் விளங்கி விட்டது. “குருவே! இதில் மூலிகைகளின் பெயர்கள் இரு பொருள்பட கூறப்பட்டுள்ளன. அவற்றை முறையே எடுத்து கசாயம் செய்து இதில் குறிப்பிடப்பட்டு உள்ளபடி மன்னரின் தாய் ஆடல் பாடலை ரசித்தபடி அருந்தினால் அவர் குணமடைந்து விடுவார்: என்றான். “ஆனால், இந்த மூலிகைகளை எப்படித் தேடுவது? நான் இவற்றைப் பற்றி கேள்விப்பட்டதேஇல்லையே!” என்றார் புஜங்கர். “அது பற்றிக் கவலையில்லை! இந்த மூலிகைகள் அனைத்தும் என் கிராமத்தில் பயிரிடப்படுகின்றன!” என்று குணவர்மன் கூற, புஜங்கர் மகிழ்ச்சியுடன் அவனை அரண்மனைக்கு அழைத்துச் சென்றார். குணவர்மனை சந்தித்த மன்னர் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தார். உடனே, மன்னருடைய ஆட்கள் குணவர்மனுடன் சென்று அன்னாவரத்திலிருந்து மூலிகைகள் கொண்டுவர, வைத்தியர்கள் மருந்துத் தயாரித்துத் தந்தவுடன், மன்னரின் தாய் குணமானாள். மிகுந்த மகிழ்ச்சியுற்ற மன்னர் குணவர்மனுக்குப் பொன்னும் பொருளும் வெகுமதி அளித்தார். மன்னரின் தாயின் நோயை குணமாக்க எந்த வைத்தியராலும் முடியவில்லை. அப்போது, அவருடைய சபையில் இருந்த கவிஞர்களில் ஒருவர் தான் பத்திரப்படுத்தி வைத்திருந்த யாரோ ஒருவர் எழுதிய காவியத்தை மன்னரிடம் படித்துக் காட்டினார். காவியத்தில் வரும் நாயகிக்கு ஏற்பட்ட விசித்திர நோயின் வர்ணனைகள் மன்னரின் தாய்க்கு ஏற்பட்டிருந்த நோயை அப்படியே ஒத்திருந்தது. அதைப் படித்துக் காட்டிய கவிஞர், “மன்னா! இதில் மூலிகைகளைப் பற்றிய விவரங்களும் சிகிச்சை முறை பற்றியும் எழுதியுள்ள கவிதைகளின் பொருள் எனக்கு விளங்கவில்லை. இதைப் படித்து யாரேனும் அதன் பொருளை உணர்ந்து கொண்டால், அதே மருந்துகளையும், சிகிச்சையும் அளித்துத் தங்கள் தாயை குணமாக்கி விடலாம்!” என்றார். அதற்காகத்தான், புஜங்கர் அரண்மனைக்கு அழைக்கப்பட்டிருந்தார். ஆனால், அவராலும் அதன் பொருளை உணர்ந்து கொள்ள முடியவில்லை. “மகனே! எனக்கே விளங்காத கவிதைகளின் பொருள் உனக்கு ஒருக்கால் விளங்கக்கூடும்! நீ படித்துப் பார்!” என்றார். அவற்றை வாங்கிப் படித்ததும், உடனே குணவர்மனுக்குப் பொருள் விளங்கி விட்டது. “குருவே! இதில் மூலிகைகளின் பெயர்கள் இரு பொருள்பட கூறப்பட்டுள்ளன. அவற்றை முறையே எடுத்து கசாயம் செய்து இதில் குறிப்பிடப்பட்டு உள்ளபடி மன்னரின் தாய் ஆடல் பாடலை ரசித்தபடி அருந்தினால் அவர் குணமடைந்து விடுவார்: என்றான். “ஆனால், இந்த மூலிகைகளை எப்படித் தேடுவது? நான் இவற்றைப் பற்றி கேள்விப்பட்டதேஇல்லையே!” என்றார் புஜங்கர். “அது பற்றிக் கவலையில்லை! இந்த மூலிகைகள் அனைத்தும் என் கிராமத்தில் பயிரிடப்படுகின்றன!” என்று குணவர்மன் கூற, புஜங்கர் மகிழ்ச்சியுடன் அவனை அரண்மனைக்கு அழைத்துச் சென்றார். குணவர்மனை சந்தித்த மன்னர் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தார். உடனே, மன்னருடைய ஆட்கள் குணவர்மனுடன் சென்று அன்னாவரத்திலிருந்து மூலிகைகள் கொண்டுவர, வைத்தியர்கள் மருந்துத் தயாரித்துத் தந்தவுடன், மன்னரின் தாய் குணமானாள். மிகுந்த மகிழ்ச்சியுற்ற மன்னர் குணவர்மனுக்குப் பொன்னும் பொருளும் வெகுமதி அளித்தார்.
| கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பு 'புரிந்து கொள்ளாத மக்கள்' என்பதாகும். |
1 | ['tam'] | கீழே கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பைக் கொடு.
கதை: உருவத்தில் சிறியவனாக இருப்பதால் அவனை ஏளனம் செய்யக்கூடாது. அவன் வேறு விடையங்களில் வல்லவனாக இருப்பான் என்பதை உண்ர்த்தும் நீதிக்கதை ஒரு காட்டில் சிங்கம் ஒன்று வசித்து வந்தது. அது தனது பலத்தாலும், தோற்றத்தாலும், கர்ஜனையாலும் காட்டில் வசித்த அனைத்து மிருகங்களையும் பயமுறுத்தி வந்தது. பயம் காரணமாய் அனைத்து மிருகங்களும் சிங்கத்திற்கு கிட்டச் செல்வதில்லை. சிங்கத்தைக் கண்டால் பயந்து ஓடிவிடுகின்றன. ஆனால் ‘ஈ” ஒன்று பயமின்றி சிங்கத்தின் மீது வந்து அமர்ந்தது. அதைப் பார்த்ததும் சிங்கம் கோபமுற்று கர்ஜனை செய்தபடியே..’உன்னை என் பற்களால் கடித்துக் குதறுவேன், நகங்களால் விறாண்டுவேன், நசுக்கிப் பொசிக்கிப் போடுவேன் என்றது. அதற்கு ஈ யோ நீ பலசாலியாய் இருக்கலாம்..உன்னைப் பார்த்து மற்ற மிருகங்கள் பயப்படலாம். ஆனால் நான் பயப்பட மாட்டேன். இன்னும் சொல்லப்போனால்..நீ சொன்னபடி உன்னையே நீ பற்களால் கடித்துக் கொள்ளவும், நகங்களால் விறாண்டிக் கொள்ளவும் செய்வேன்” என்றது. இதைக் கேட்ட சிங்கம் கோபத்துடன் ஏலுமாயின் அதைச் செய் என் சவால் விட..ஈ பறந்து வந்து சிங்கத்தின் முதுகில் அமர்ந்து அதைக் கடித்தது. ஈ முதுகில் அமர்ந்த போது..அதை விரட்ட சிங்கம்.தன் பற்களால் முயன்ற போது..ஈ பறந்து விட சிங்கம் தன் முதுகைத் தானே கடித்துக் கொண்டது. ஈ சிங்கத்தின் முகத்தில் அமர்ந்த போது, அதை விரட்ட தன் கால் நகங்களால் முயல..ஈ பறக்க…சிங்கம் தன் நகங்களால் தன் முகத்தையே விறாண்டிக் கொண்டது. இவ்வாறு பலதடவை சிங்கத்தை நன்கு இம்சை செய்து விட்டு ஈ பறந்தது. சிங்கத்தினால் ஈயை பிடிக்கவோ நசுக்கவோ முடியவில்லை. அதனால் சிங்கம் தன் இயலாஇயை எணி வெட்கப்பட்டது. அதன் பின்புதான் சிங்கத்திற்கு புரிந்தது..தான் உடலளவில் வீரமாய் இருந்தாலும்..ஒரு சிறு ஈ தன்னை இம்சைப் படுத்தி விட்டதே என்று. . உருவத்தைக் கண்டு யாரையும் எடை போடக் கூடாது இதைத்தான் வள்ளுவரும்.. உருவுகண் டெள்ளாமை வேண்டும் உருள்பெருந்தேர்க் கச்சாணி யன்னார் உடைத்து என்றார். (பொருள்- உருவத்தால் சிறிதாக இருந்தாலும் அதை கேலி செய்து அலட்சியப் படுத்த்க் கூடாது. பெரிய தேர் ஓடக் காரணமாய் இருப்பது சிறிய அதன் அச்சாணியே)
| கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பு 'உருவுகண்டு எள்ளாமை வேண்டும்' என்பதாகும். |
2 | ['tam'] | கீழே கொடுக்கப்பட்டுள்ள வார்த்தைகளையும் தலைப்பையும் பயன்படுத்தி சிறு கதை எழுதுக.
வார்த்தைகள்: வையாபுரி, பட்டினம், நகரம், கடற்கரை, முத்து வியாபாரி, மாணிக்கம், வீடு, அரண்மனை, ரத்தினம், வைரம், இறப்பு , உடல்நிலை, பேராசை, குளம், கோவில்
தலைப்பு: சாகாத வரம்
| வையாபுரி பட்டினம் என்ற நகரம் கடற்கரை ஓரத்தில் அமைந்திருந்தது. வையாபுரி பட்டினத்தில் முத்து வியாபாரி மாணிக்கத்தை தெரியாதவர் இருக்கமுடியாது. மாணிக்கத்தின் வீடு அரண்மனையைப் போல் விசாலமாக இருக்கும். முத்து வியாபாரி மாணிக்கத்திற்கு முத்து, ரத்தினம், வைரம் என்று மூன்று மகன்கள். இவர்களில் பெரியவன் முத்து வெளிநாடுகளில் வியாபாரம் செய்து பெரும்பொருள் ஈட்டினான். அவன் தம்பி ரத்தினமும், வைரமும் உள்ளூர் வியாபாரத்தைக் கவனித்துக் கொண்டனர். முத்து வியாபாரி மாணிக்கத்திற்கு ஒரு நாள் திடீரென்று உடல்நிலை சரியில்லாமல் போனது. தான் இறந்து விடுவோம் என்று தோன்றியது. சொத்துக்கள் அனைத்தையும் உள்ளூரில் இருக்கும் தனது மகன்களிடம் ஒப்படைத்து விட்டு இறந்துபோனார். பேராசை கொண்ட ரத்தினமும், வைரமும் அப்பாவின் சொத்துக்களை இரண்டாகப் பிரித்துக் கொண்டு அண்ணன் முத்துவை கொலை செய்ய திட்டமிட்டனர். ஒரு நாள் அண்ணன் முத்து திரும்பி வந்தான். அவனிடம் சொத்துக்களை மூன்றாக பிரித்துக் கொள்ளலாம் என்று சொன்னார்கள். அண்ணனும் தம்பிகள் சொன்னதை நம்பினான். ஆனால் அன்று இரவே முத்துத் தூங்கி கொண்டிருக்கும் போது அவனை அடித்து ஒரு குளத்தில் வீசி எறிந்தனர். அடுத்த நாள் அந்த குளக்கரையில இருந்த கோவிலின் எதிரில் படுத்துகிடந்தான் முத்து. ஆனால் அவன் உடம்பில் எந்த விதமான காயமும் இல்லை. தூங்கி எழுந்த முத்து தனக்கு முன்னால் கடவுள் பிரத்யட்சமாய் தோன்றியிருப்பதைக் கண்டு வணங்கினான். "என்ன நடந்தது...?" என்றார் கடவுள். நடந்ததைச் சொன்னான் முத்து. "இனி உனக்கு எந்த ஆபத்தும் வராது. 400 ஆண்டுகள் வரை நீ வாழ்வாங்கு வாழ்வாய்...." என்று வரமளித்து விட்டு கடவுள் மறைந்தார். முத்து வீட்டிற்குத் திரும்பினான் ரத்தினமும் வைரமும் அதிர்ச்சியடைந்தனர். "காலையில் உங்களைக் காணாமல் துடித்துப் போனோம்... உங்களைப் பார்த்த பின்னர் தான்..... எங்களுக்கு உயிரே வந்தது" என்று சொல்லி அழுதனர். "என்ன நடந்தது......" என்று கேட்டனர். எதையும் மறைத்துப் பேசத் தெரியாத முத்து நடந்தது அனைத்தையும் ஒன்றுவிடாமல் சொன்னதுடன், 400 ஆண்டுகள் சாகாமல் வாழ பெற்ற வரத்தையும் பற்றி கூறினான். தாங்களும் இதே போல் அதிக ஆண்டு வாழவேண்டும் என்று திட்டமிட்டனர். பேராசை பிடித்த ரத்தினமும், வைரமும் தங்கள் இருவரையும் அடித்து அந்த குளத்தில் வீசி எறியும்படி ஏற்பாடு செய்தனர். அடுத்த நாள் அவர்கள் இருவரும் கோவிலின் எதிரில் தூங்கியபடி கிடந்தனர். தூங்கி எழுந்தனர். அவர்கள் எதிரில் கடவுள் தோன்றினார். "உங்களுக்கு என்ன நடந்தது"? என்றார் கடவுள். தங்களை விரோதிகள் அடித்துப் போட்டதாக கூறினர். "கடவுளே நான் 1000 ஆண்டு சாகாமல் வாழவேண்டும்....." என்றான் ரத்தினம். "நான் 2000 ஆண்டு சாகாமல் வாழ வேண்டும்" என்றான் வைரம். ரத்தினம் 3000 ஆண்டு என்றான். வைரம் 4000 என்றான். இப்படி ஆண்டுகளை ஏற்றிக்கொண்டே போனார்கள். கடவுளுக்குச் சிரிப்புத் தாங்கவில்லை. "நான் சொல்வது போல் செய்தால் உங்கள் திறமைக்குத் தகுந்தவாறு பத்தாயிரம் ஆண்டுகள் கூட சாகாமல் வாழலாம்.." என்றார் கடவுள். "சொல்லுங்கள்... சொல்லுங்கள்" என்றனர் இருவரும் அவசரம் அவசரமாக. "கோயிலில் எதிரில் இருக்கு இந்த குளத்தில் நீங்கள் மூழ்கி இருக்கும் ஒவ்வொரு மணித்துளிக்கும் 100 ஆண்டுகள் சாகாமல் வாழும் வரம் கிடைக்கும்" என்று கடவுள் சொல்லி முடிப்பதற்குள் இருவரும் குளத்தில் குதித்தனர். இருவரும் நீருக்குள் மூழ்கினர். ரத்தினத்தை விட 100 ஆண்டாவது அதிகம் பெற வேண்டும் என்று வைரம் நினைத்தான். வைரத்தைவிட 100 ஆண்டு அதிகமாகப் பெற வேண்டும் என்று நினைத்தான் ரத்தினம். யார் அதிக ஆண்டு சாகாமல் இருக்கும் வரத்தைப் பெறப் போகிறார் என்று பார்த்தபடி கடவுள் நின்று கொண்டிருந்தார். சிறிது நேரத்தில் வைரமும், ரத்தினமும் பிணமாக குளத்தில் மிதந்தனர். |
1 | ['tam'] | கீழே கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பைக் கொடு.
கதை: விஜயநகர மன்னர் கிருஷ்ணதேவராயர் அரண்மனையில் தாத்தாச்சாரியார் என்பவர்
ராஜகுருவாக இருந்தார்.தெனாலி கிராமத்துக்கு அருகில் உள்ள ஊர் மங்களகிரி அவ்வூருக்கு
ராஜகுரு தாத்தாச்சாரியார் வந்திருந்தார். அவ்வூர் மக்கள் ராஜகுருவை வணங்கி ஆசி பெற்றுச் சென்றனர். இதையறிந்த தெனாலிராமன்
ராஜகுருவை சந்தித்தான். தன்னுடைய விகடத் திறமையாலும் பேச்சாற்றலாலும் ராஜகுருவின் "சிஷ்யன்
ஆனான். ராஜகுருவின் நட்பு கிடைத்த பின் தன் குடும்பம் மிகவும் ஏழ்மை நிலையில்
இருப்பதாகவும் அதனால் மன்னர் கிருஷ்ணதேவராயரிடம் சிபாரிசு செய்து அரண்மனையில் வேலை
கிடைக்க ஏற்பாடு செய்யுமாறும் வேண்டிக் கொண்டான். அவன் வேண்டுகோள்படியே ராஜகுருவும்
அரண்மனையில் வேலையில் சேர்த்து விடுவதாக வாக்களித்தார். நான் போய் ஆள் அனுப்புகிறேன். அதன் பின் நீ வா என்று சொல்லி விஜயநகரத்துக்குச்
சென்று விட்டார். தெனாலிராமன் மிகக் கெட்டிக்காரனாக இருக்கிறான். இவனை மன்னரிடம் சொல்லி அரண்மனையில்
விகடகவியாக சேர்த்துவிட்டால் நம் வேலை போய்விடும் என்று எண்ணிய ராஜகுரு
தெனாலிராமனுக்கு ஆள் அனுப்பவே இல்லை. தெனாலிராமனும் ராஜகுருவிடமிருந்து ஆள் வரும் வரும் என்று எதிர்பார்த்து பல மாதங்கள்
ஓடிவிட்டன. எந்தத் தகவலும் அவனுக்குக்கிட்டவில்லை. ஆகையால் விஜயநகரம் சென்று
ராஜகுருவை நேரில் பார்த்து அரண்மனையில் சேர்ந்து விட வேண்டுமென்று தீர்மானித்துக்
கொண்டான். அதன்படியே மனைவி, மகனுடன் பல நாட்கள் நடந்து விஜய நகரம் வந்து சேர்ந்தான். பலவித இடையூறுகளுக்கிடையே தெனாலிராமன் ராஜகுருவை அவரது இல்லத்தில் சந்தித்தான். தெனாலிராமனைப் பார்த்ததும் ராஜகுரு அதிர்ச்சி அடைந்தார். யாரப்பா நீ? உனக்கு என்ன
வேண்டும் என்று கேட்டார். இதைக் கேட்ட தெனாலிராமன் பதறினார். ராஜகுருவே நான்தான் தெனாலிராமன். தாங்கள் மங்களகிரிக்கு வந்த போது நண்பர்கள் ஆனோம்.
நான் கேட்டுக் கொண்டதற்கு இணங்க தாங்கள் அரசவையில் என்னைச் சேர்த்து விடுவதாகச்
சொன்னீர்கள். ஆள் அனுப்பிய பின் வா என்றீர்கள். பல மாதங்களாக தங்களிடமிருந்து ஆள்
வராததால் தான் நான் நேரில் வந்துள்ளேன். தயவு செய்து என்னை பற்றி மன்னரிடம் சொல்லி
அரசபையில் சேர்த்து விடுங்கள் என்று வேண்டினான். உன்னை யாரென்றே எனக்குத் தெரியாதப்பா...... மரியாதையாக வெளியே போ, இல்லையேல்
அவமானப்படுவாய் என்று விரட்டினார். வீட்டைவிட்டு வெளியேற்றப்பட்ட தெனாலிராமன் பழிக்குப்பழி வாங்கத் துடித்தான். காளி
மகாதேவியைத் துதித்தான்.
| கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பு 'ராஜகுருவின் நட்பு' என்பதாகும். |
2 | ['tam'] | கீழே கொடுக்கப்பட்டுள்ள வார்த்தைகளையும் தலைப்பையும் பயன்படுத்தி சிறு கதை எழுதுக.
வார்த்தைகள்: செந்தில், ராசாத்தி, சுப்பு, ஜெயலட்சுமி, லலிதா, வனஜா, வனஜாவின் கணவர், குடம்
தலைப்பு: ராசாத்தியின் கோபம்
| காலையில் ஆடு செத்துப் போச்சு. ஒரு வேளை ராத்திரி செத்தாலும், பூச்சுப்பட்டைக் கடிச்சு இருக்கும்னு நினைக்கலாம். அதுவுமில்லாமல், இப்பத்தான் செத்திருக்கு. செந்தில் "ஷிப்டு" முடிஞ்சு வரும்போது நல்லாத்தான் நின்றது. பக்கத்தில் நின்று பார்த்தார். ஆடு "மே" ன்னு கூப்பிட்டது. மூத்திரம் பேஞ்சது. புளுக்கை போட்டது. ரெண்டு குட்டிகளுக்கு பால் கொடுத்தது. எப்படி செத்திருக்கும்? ரெண்டு கால்களும் விரைச்சு, வயிறு வீங்கி, வாய் பிழந்து செத்துக் கிடக்கு. ஆட்டைச் சுத்திப் பார்த்தார். கொஞ்ச நேரம் நின்னு யோசித்தார். பக்கத்துல பழைய பொங்கச் சோறு, அங்ஙன இங்ஙன சிதறிக் கிடந்தது. ஆஹா! புளிச்ச சக்கரைப் பொங்கலு. அதை தின்னுருக்கு. அதுதான் செத்திருக்கு. எந்த அறிவு கெட்ட ஜென்மம் இதை வச்சது? செந்திலுக்கு கோபம் வந்தது. ஆட்டைக் கள்ள விலைக்கு விற்றாலும், எவனும் கண்ண மூடிக்கிட்டு 1000 ரூபாய் கொடுப்பான். இப்படி அனாமத்தாப் போயிடுச்சேன்னு கவலையாக இருந்தது. ஆறு மாசத்துக்கு முன்னே, குட்டியாகக் கொண்டு வந்து மாமா கொடுத்தார். மாமாவுக்கு இப்ப சுகமில்லை அப்பாவைப் பார்க்க, ராசாத்தி ஊருக்குப் போயிருந்தாள். இப்ப வந்திடுவாள். தண்ணீர் வேற வரும். இன்னைக்கி புடிக்கலைன்னா, பிறகு 3 நாள் கழிச்சுத்தான் பைப்ல தண்ணியைப் பார்க்கலாம். அதுக்காகவே மனைவி வந்தாகணும். அவள் வந்து என்ன சொல்லப் போறாளோ? அந்த கவலை வேறு செந்திலை வாட்டியது. அவளும் முதல்ல அவுங்க அப்பா வந்து ஆட்டைக் கொடுக்கும்போது, வேண்டாம்னு தான் சொன்னாள். இருக்கிற வேலை காணாதுன்னு இந்த ஆட்டையும் கெட்டி எப்படி பாடு பார்ப்பேன்னு சொல்லும்போது அப்பா "சும்மா, முக்குலக் கட்டிப் போடம்மா. துன்னுட்டு மிச்சம் மீதியிருக்கிறத அதுக்கு போடு. நாளப் பின்ன அது வளர்ந்தால், ஒரு செலவுக்கு ஆகும்" என்றார். பிறகு அவருடைய மகளும் ஆட்டோடு பழகிவிட்டாள். அது ஒரு பாரமாகவே தெரியவில்லை. இப்போதுதான் ஆடு ரெட்டை குட்டி போட்டிருக்கு. அந்த சந்தோஷம் கை கூடி வரல. அதுக்குள்ள ஆடு செத்துப் போச்சு. செந்தில் மகளை அதட்டியபடியே கேட்டார். "இந்த பொங்கச் சோற நீ தானே வச்ச?" சுப்புக்கு நடுக்கம் எடுத்தது. குளித்து சுத்தமாக இருந்த இளம் முகம் வெட வெடத்தது. குரல் தள தளத்தது. "ஆமப்பா நான்தான் வச்சேன்" என்றாள். உடனே தடுமாறினார். மகளை ரொம்பவும் கண்டிக்கவா? ன்னு குழம்பினார். இருந்தாலும் ஆட்டைப் பார்த்த உடனே வயித்தெரிச்சல் தாங்க முடியல. அதை வச்சுத்தான் அவரும் கோபப்பட்டார் "கொஞ்சமாவது பொறுப்பிருக்கா உனக்கு பிளஸ்டூ படிக்கிறபுள்ள எவ்வளவு சுதாரிப்பா இருக்கணும். பொங்கச் சோத்தை ஆட்டுக்கு வைத்தோமே. அதுவும் சர்க்கரைப் பொங்கல். குட்டிபோட்ட ஆட்டுக்கு அது செமிக்குமா? கொஞ்சமாவது யோசிச்சிப்பார்த்தியா. இப்ப பாரு ஆடு செத்துக் கிடக்கு!" என்றார். அப்பா அதட்டும்போது, கண் இமைகள் துடித்தன. அந்த துக்கத்தில் நீர் கட்டி நின்றது. இருந்தாலும் தன் மீது தவறிருப்பதை உணர்ந்தாள். அவள் ஆடாமல் அசையாமல் நின்னுக்கிட்டிருக்கும்போதே ஸ்கூலுக்கு போக நேரமாகுதே. அப்பாகிட்ட என்ன சொல்ல? எப்படி பேசன்னு ஒரே குழப்பம். சுப்பு குனிந்தே நின்றாள். செந்தில் மகளைப் பார்த்துப் பேசினார். அப்போது " வெளிகேட்" திறக்கிற சத்தம் கேட்டது. "இப்பத்தான் வாரீங்களா அக்கா, அப்பாவுக்கு எப்படி இருக்கு?" பக்கத்து வீட்டு லலிதா கேட்கிறாள். பிறகு அம்மாவும், அவுங்க அப்பா உடல் நிலையைப் பத்தி சொல்லிட்டு வாராள். அவளுக்கு கணவனின் அதட்டல். அதுல இருக்கிற கோபம், பதற்றம், பரபரப்பு எல்லாம் கேட்டு, கைப்பையை திண்டில் வச்சிட்டு பின்னால் தான் வந்தாள். அம்மாவைப் பார்த்ததும் சுப்புக்கு அழுகையே வந்துவிட்டது. "செஞ்சதையும் செஞ்சுட்டு உங்கம்மையை கண்டதும் நல்லா அழு புள்ளைக்கு பொறுப்பு வேணும். இப்படியா இருக்கிறது" என்றார். அப்பத்தான் ராசாத்தி ஆட்டைப் பார்த்தால் அவளுக்கு திக்கென்றிருந்தது. அவள் விசயத்தைக் கேட்டறிந்தாள். அந்த சூரிய வெளிச்சத்தில் சுப்பு கன்னங்களில் வழிகிற நீர் பளபளத்தது. ராசாத்தி அழுகிற பிள்ளையை அணைத்துக் கொண்டாள். "சுப்பு என்ன, தெரிஞ்சா செஞ்சி இருப்பா. ஏதோ நடந்து போச்ச. அவளை அதட்டிக் கிட்டிருந்தா, அவள் பள்ளிக் கூடம் போக வேண்டாமா? நீ போம்மா. ரெண்டு பார்சல் வாங்கிட்டு வந்திருக்கேன். ஒன்னத் தின்னுட்டு ஒன்னக் கொண்டு போ" என்றாள். ஒரு நொடியில் குழப்பம் ஓய்ந்தது. "என்னப் பார்த்துக்கிட்டிருக்கீங்க. போனது திரும்பி வாராது. நட்டம் நட்டந்தான். போய் கறிக்கடைக்காரை கூட்டிக்கிட்டு வாங்க. அவர் கொடுக்கிறது வாங்கிட்டு ஆட்டைத் தூக்கிட்டுப் போகச் சொல்லுங்க." செந்திலுக்கு இதுவும் சரி என்று பட்டது. உடனே சைக்கிளை எடுத்துக்கிட்டுப் போனார். கையோடு கசாப்புக் கடைக்காரரைக் கூட்டிக் கொண்டு வந்தார். ரெண்டு பேருக்கும் பேரம் நடந்தது. கசாப்புக் கடைகாரனும் அங்கேயே கிரயத்தை முடித்துக் கொண்டான். பணத்தை சாயந்திரம் தருவதாகச் சொல்லி ஆட்டை தூக்கிக் கொண்டு போனான். ராசாத்தி "அந்த ஆடு கொடுத்த பணம் வந்தா, இந்த மாசம் வீட்டுத் தவணை அடக்காம இருக்கு குடுத்திருங்க" என்றாள். அதைக் கேட்டதும் செந்திலுக்கு கோபம் வந்தது. "ஆமா. செத்த ஆட்டுக்கு அள்ளித்தருவாங்க. நான் அப்படியே கொண்டு வந்து கொட்டணும்" என்றான். "ஏங்க கோவப்படுறீங்க. கொறைஞ்சத போட்டுக் கெட்டுவோம்" என்று புருஷனைச் சமாதானப்படுத்தினாள். அப்போது தான் செந்திலுக்கு பைப்பில் தண்ணீர் பிடிக்காதது ஞாபகத்திற்கு வந்தது. மனைவியிடம் தண்ணீர் பிடிக்கச் சொல்லிவிட்டு, வீட்டுக்குப் பின்புறம் உள்ள கொடுக்காப்புளி மரத்தை பார்த்தார். போன வருஷம்தான் மரம் காய்ப்புக்கு வந்தது. காய்ப்புன்னா அப்படிக் காய்ப்பு. கொத்துக் கொத்தாய் பூவும் பிஞ்சுமாய் காயும் பழமுமாய் கொடுக்காப்புளி மரக்கிளைகள் பூராவும் பொதுச் சுவருக்கு இந்தக் பக்கம்தான் விரிந்து கிடந்தன. சரவணனும் சுப்புவும் தொரட்டிக் கம்பை வைத்து பழமாகப் பறித்துத் தின்றார்கள். செந்திலும் ஆளில்லாத நேரம் பார்த்து ரெண்டை பறிச்சி வாயில் போட்டுக் கொள்வார். இப்போது மரம் காய்க்கத் தொடங்கி இருக்கு. அதுக்குள்ள சுவர் பக்கம் வருகிற கொப்பை பூராவும் வெட்டி எடுத்தாச்சு. ஒரு காய் கூட இனிமேல் பறிக்க முடியாது. செந்திலுக்கு அதைப் பார்த்ததும் கோபமாக இருந்தது. மரத்தை, தூரோடு வெட்டிச் சாய்த்தால் கூட அவனுக்கு இப்படிக் கோபம் வந்திருக்காது. வருத்தப்பட்டிருக்க மாட்டான். மனைவியிடம் சொன்னான். அதைக் கேட்டு ராசாத்திக்கு கோபம் வரவில்லை. புருஷனைத்தான் அமைதிப்படுத்தினாள். "அவுங்க மரம். அவுங்க வெட்றாங்க. நம்ம என்ன சொல்ல முடியும்? வேணும்னா நம்மளும் அதே மாதிரி ஒரு மரம் வளர்ப்போம்" என்றாள். அவளுக்கும் பின் வீட்டுக்காரர்களைப் பற்றி தெரியும். பக்கத்து வீட்டு வனஜா அக்கா புருஷன் நல்ல குடிகாரன். ஒரு நாள் மில்லுக்குப் போனால். ஒன்பது நாட்கள் போக மாட்டான். அவனை ஒன்றும் சொல்லமாட்டார்கள். ஆனால் செந்தில் ஒரு நாள் லீவு எடுத்தால் கூட அபராதம். ஒவ்வொருவருக்கும் மில்காரன் நிலம் கொடுக்கும் போது செந்திலுக்கு நிலம் கிடைக்கவில்லை. ராசாத்தி தான் நச்சரித்தாள். "திரும்ப கேட்டுப்பாருங்க நம்ம எத்தனை நாளைக்கு தான் வாடகை வீட்டுல இருந்து காலம் தள்ள முடியும்" என்றாள். செந்தில் அலைந்து திரிந்து, சங்கத்துக்காரன்களுக்கு லஞ்சம் கொடுத்து, பிறகு அவனுக மில்காரன் கிட்ட சொல்லித்தான் அவனுக்கு நிலம் கிடைத்தது. ஆனால் வனஜா புருஷனுக்கோ எந்தச் சிரமமுமில்லாம நிலம் கிடைத்தது. மில் அதிகாரி, வனஜா புருஷனைக் கூப்பிட்டு, அவன் "வேண்டாம் வேண்டாம்" ன்னாலும் "வச்சுக்கா வச்சுக்க" ங்கிற மாதிரி நிலத்தைக் கொடுத்தான். அது தான் ராசாத்திக்கு ஆச்சரியமாக இருந்தது. ஒரு சமயம் மனைவியிடம் பேசிக் கொண்டிருக்கும்போது செந்தில் சொன்னார். நாயக்கமாரு மில்லுல, நாயக்கமாருக்குதான் முன் உரிமை என்னமோ எங்கம்மா ஒரு நாயக்கர் விட்டுல வேலைக்கு இருந்தாங்க. அவுங்க கெஞ்சிக் கூத்தாடி என்னையும் மில்லுல சேர்த்தாங்க. இப்ப நிலம் கொடுத்திருக்காங்க." வனஜா புருஷனும் எங்கப்பா ராமசாமி நாயக்கரு வந்தாருன்னா, உங்க ஊரு பள்ளப்பய, பறைப்பய எல்லாம் குனிஞ்சு நின்னு கும்பிடணும். என்னமோ நான் எங்க நாயக்கர் மில்லாக இருக்கப்போய் வேலை பார்த்துக் கிட்டிருக்கேன் என்பான். "ராசாத்தி அக்கா தண்ணி வருது"- எதிர்வீட்டு லலிதா குரல் கொடுத்தாள். அவள் புதுசா கல்யாணம் முடிஞ்சு வாடகை வீட்டுக்கு வந்திருக்கிறாள். அவளுக்கும், "நாங்க தான் உசந்த சாதி" ன்னு நினைப்பு வந்து பேசாமப் போனால் போறான்னு தான் ராசாத்தியும், அவளுடன் பழகிக் கொண்டிருந்தால். அந்த பழக்கமான குரல் பின் வாசல் வரை கேட்டது. அந்த அவசரம் பரபரப்பானது. இருந்தாலும் ராசாத்தி பதற்றப்படாமல் புருஷனைப் பார்த்து. "ரெண்டு கொடத்த தூக்கிட்டுப் போங்க. ஜெயலட்சுமி அக்கா பிடிச்ச பின்னாடி நம்ம பிடிக்கணும். அந்த அக்கா ஒரு மாதிரி. தள்ளியே நின்னுக்கங்க. யாரும் எது சொன்னாலும் கோவப்படாதீங்க. இட்லி அவுச்சாச்சு சட்னி தான் வைக்கணும். வச்சுட்டுட்டு வந்துட்றேன் என்றாள். செந்தில் எதுவும் பேசாமல் பிளாஸ்டிக் குடங்களை தூக்கிக் கொண்டு போனார். பைப்பை சுற்றிலும் பொம்பளையாட்கள் நின்றார்கள். ஜெயலட்சுமி அக்காள் ரெண்டு குடம் பிடிக்கணும். அதன் பிறகு தான் நமக்கு. செந்தில் பைப்பை விட்டு தள்ளியே நின்றார். அவருக்கு இப்ப ஒரு வேலையும் இல்லை. சாப்பிட்டு தூங்கி எந்திரிச்சால் போதும். ராத்திரி பத்தேகாலுக்கு சைக்கிள் எடுத்தாலும் போதும். பதினொரு மணி ஷிப்டுக்கு போகச் சரியாக இருக்கும். அக்காவின் ரெண்டாவது குடம் நிறையும் போது, பைப்படிக்கு போய் குடத்தை வைத்தார். ரெண்டு குடம் பிடித்து ஒன்னை மட்டும் தூக்கிக் கொண்டு வீட்டுக்கு வந்தார். இவ்வளவு தண்ணீர் கஷ்டத்துக்கு இடையில். அப்பத்தான் பிடிச்சு வச்ச தண்ணியை ஒரு தெரு நாய் வாய் வைத்து விட்டது. அங்கே தான் லலிதா நின்னாள். ஆனால் அவள் கவனிக்கலை. நாய் குடிச்சுருச்சுனு அவளுக்கு கோபம். கிட்டத்துல கெடந்த கருங்கல்லை எடுத்து விட்டெறிந்தாள். அது நாய் காலுலேயே போய் விழுந்தது. நாய் வலி தாங்க முடியாமல் கத்திக்கிட்டு ஓடிப்போனது. நாய் அலறும் சத்தம் கேட்டு ராசாத்தி வெளியே வந்தாள். நாய் ஒரு சந்துக்குள் நுழைவதைப் பார்த்தாள் லலிதா, அவளிடம் சோகமாய் நடந்ததைச் சொன்னாள். பிறகு ஒரு குடம் தண்ணீர் வீணாகிப் போச்சேன்னு கவலைப்பட்டாள். ராசாத்தி கோபமேபடவில்லை. அவள் பதற்றமில்லாமல் நாய்க்காக பரிந்து பேசினாள். "அதுக்காகவா நாய அடிச்ச. அது என்ன செய்யும். பாவம் வாயில்லாத ஜீவன்" என்றாள். "என்ன இருந்தாலும் தண்ணிக்குப் படுற பாடு..." என்றாள் லலிதா. "அதுக்கென்ன செடிகளெல்லாம் தண்ணியில்லாம காயுது. அதுகளுக்கு ஊத்துனா சரியா போகும்?" என்றாள். குடத்தை தூக்கி வந்து செடிகளுக்கு ஊற்றினாள். முதல் வரிசை முடிந்து அடுத்த வரிசையும் வந்தது. தண்ணீர்க் குடத்தை தூக்கி இடுப்புல வச்ச லலிதா, "இன்னைக்கு தண்ணீர் கொஞ்சம் பாஸ்டா வருது" என்றாள். பின் அவள் போய் விட்டாள். பைப்படியில் கூட்டமில்லை. எல்லோருக்குமே காலைப் பொழுதில் அடுப்படிகளில் வேலைகள் இருந்தன. வரிசை வரும்போது வந்து தண்ணீர் பிடித்துக் கொண்டு போனார்கள். ஜெயலட்சுமி, ராசாத்தியும் மட்டும் பைப்பில் நின்றார்கள். ஜெயலட்சுமி முதல்குடத்தைப் பிடித்துவிட்டு, அடுத்த குடத்தை வைக்கிறாள். அடுத்து ராசாத்தி வைக்கணும். அவள் குடம் நிறைவதைக் கண்டு, "அக்கா உங்க குடம் நிறையுது" என்றாள். ஜெயலெட்சுமி அக்காள் முணுமுணுத்தாள். அந்த குரல் உள் வாங்கி வெளியில் வந்தது. அதுவும் ராசாத்தி கிட்டத்தில் நின்னதினால் கேட்டது. அவ்வளவு சின்னக்குரல். ஆனாலும் ராசாத்திக்கு கொமட்டுல குத்தினது மாதிரி வலித்தது. மனசைப் பிழிந்து ரணமாக்கியது. அப்படி ஜெயலட்சுமி அக்காள் என்னதான் கேட்டு விட்டாள்? நாயே, பேயே, பிசாசேன்னாலும் கூட மனசு ஆறும். சனியன் போகுதுன்னு விட்டிடலாம். ஒன்னுமில்லாத விசயம். ஒரு காத்துட்டுக்கு பெறாது. அப்படியும் ராசாத்தி என்ன சொல்லிவிட்டாள்? "அக்கா உங்க குடம் நிறையுது"ன்ன சொன்னது என்ன தப்பா? அதுக்கு ஜெயலெட்சுமி அக்காள், "என்ன. என்னை அக்கா நொக்காங்கிற. மருவாதையாக அம்மான்னுச் சொல்லு" என்றாள். "ஆமா....ஆமா... நீ ரொம்பவும் கிழவியாயிட்ட உன்னை அம்மான்னுக் கூப்புடுறதுக்கு. பார்த்தா என்னைய விட ரெண்டு வயசுக் குறையாகத்தான் இருப்ப. உன்னை அம்மான்னு கூப்பிடணுமாக்கும்? கூப்பிடுறேன். எங்கப்பா சாவக் கெடக்காரு நீ அவரக் கெட்டிக்க. நான் உன்னை அம்மான்னு கூப்பிடுறேன்" ராசாத்தியின் குரல் கோபத்தில பலமாக ஒலித்தது. |
1 | ['tam'] | கீழே கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பைக் கொடு.
கதை: இரண்டு ஜப்பானியர்கள் நியுயார்க் சென்றார்கள். அங்கே நகரத்தைச் சுற்றிப் பார்க்க ரயில் நிலையம் சென்றார்கள். ஒரு பழக்கடையைப் பார்த்தார்கள். ஆப்பிள், ஆரஞ்சுப் பழங்கள் நிறைய இருந்த அந்தக் கடையில் அவர்கள் பார்த்திராத ஒரு பழமும் இருந்தது. கடைக்காரரிடம் அந்தப் பழத்தைப் பற்றி கேட்டார்கள். அவரும் அதை வாழைப்பழம் என்று அடையாளம் சொல்லி அதை எப்படி உரித்துத் தின்பது என்றும் செய்து காண்பித்தார். நம் ஜப்பானிய நண்பர்கள் மகிழ்ச்சியுடன் ஆளுக்கு ஒரு பழம் வாங்கிக் கொண்டு ரயிலில் ஏறி அமர்ந்தார்கள். ரயில் புறப்பட்ட உடன் இருவரும் பழத்தை உரித்து உண்ணத் தொடங்கினார்கள். முதலாமவன் பழத்தை முதல் கடி கடிக்கும் போது ரயில் சரியாக ஒரு சுரங்கப் பாதைக்குள் நுழைந்தது. உடனே ரயில் பெட்டிக்குள் கும்மிருட்டு பரவியது. அவன் உடனே இரண்டாமவனிடம் அவசரமாக கத்தினான். ‘நண்பா, அந்தப் பழத்தை சாப்பிடாதே. நான் ஒரே ஒரு கடி கடித்த உடனே குருடாகி விட்டென். அந்தப் பழத்தில் விஷம் இருக்கிறது. தயவு செய்து சாப்பிட்டு விடாதே’ என்றான் அவன்.
| கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பு 'காக்கா உட்கார பனம் பழம் விழுந்தது' என்பதாகும். |
1 | ['tam'] | கீழே கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பைக் கொடு.
கதை: அரசர் கிருஷ்ணதேவராயரின் அவைக்கு ஒரு நபர் வந்தார். அவர் அரசரிடம், “அரசே! என்னுடைய வயலும் பக்கத்து வீட்டுக்காரர் வயலும் அருகருகில் உள்ளன. இரண்டுக்கும் இடையில் உள்ள வரப்பில், ஒரு தென்னை மரம் உள்ளது. பக்கத்து வீட்டுக்காரர் அதை எனக்கு விற்று விட்டார். நான்தான் அதை நன்றாகப் பராமரித்து வருகிறேன். இன்று அவர் என்னைத் தேங்காய் பறிக்கக் கூடாது என்றார். இப்போது அவர் தன் முடிவை மாற்றிக் கொண்டு விட்டாராம். மரம் திரும்ப அவருக்கு வேண்டுமாம்...” என்று முறையிட்டார். அதைக் கேட்டு அவையினர் அனைவரும் திடுக்கிட்டனர். அமைச்சர் சொன்னார். “அந்த மனிதாபிமானம் அற்ற மனிதரைக் கைது செய்து வந்து சிறையில் அடைக்க வேண்டும்” என்றார். அதற்குள் சேனாதிபதி, அந்த நபரைக் கைது செய்து வரத் தயாராகி விட்டார். அப்போது அரசர் "என்ன செய்யலாம்?" என்று கேட்பதைப் போல் தெனாலிராமனைப் பார்த்தார். தெனாலிராமன் புரிந்து கொண்டு, “தாங்கள் அனுமதி தந்தால், இதற்கான தீர்வை நாளைக்குத் தள்ளி வைத்துக் கொள்ளலாம்...” என்றார். அரசர், “சரி” எனவே, தெனாலி அந்த நபரிடம், “நாளைக்கு உன் பக்கத்து வீட்டுக்காரனையும் அழைத்து வா...” என்று அவனை அனுப்பி விட்டார். மறுநாள் அந்த நபரும், பக்கத்து வீட்டுக்காரனும் சபைக்கு வந்தனர். இருவரிடமும் நன்கு விசாரித்த பிறகு தெனாலிராமன் சொன்னார். “அப்படியானால் நீ உன் மரத்தைத் திரும்ப எடுத்துக் கொள்ள விரும்புகிறாய் இல்லையா?” என்றார். அதற்கு அவன், “ஆம் ஐயா!” என்றான். “சரி, நீ அவனுடைய பணத்தைத் திரும்பக் கொடுத்துவிடு...” என்றார் தெனாலிராமன். அவனும் பணத்தை எடுத்துக் கொடுத்து விட்டான். சபையினருக்கு ஒன்றும் புரியவில்லை. “தெனாலி ஏன் இப்படியெல்லாம் செய்கிறார்?” என்று திகைத்தார். பிறகு தெனாலி, மரத்தை வாங்கியவரிடம், “சரி... இன்றிலிருந்து அந்த மரம் உன்னுடையது இல்லை...” என்றார். அந்த மனிதரிடம் ஏமாற்றம். அப்போது தெனாலிராமன் தொடர்ந்து, “இன்னொரு விஷயம்... அந்த மரம் நீ வாங்கும் போது எப்படி இருந்ததோ அப்படியே அதை நீ திரும்பக் கொடுத்து விட வேண்டும்...” என்று கூறி விளக்கினார். “அதாவது நீ மரத்தை அவரிடம் வாங்கும்போது அம்மரம் காய்க்கத் தொடங்கவில்லை. ஆகவே, அதைத் திரும்ப ஒப்படைப்பதற்கு முன்பு எல்லாக் காய்களையும் பறித்துக் கொண்டுவிடு...” என்றார் வாங்கியவரிடம். திரும்பப் பெற்றவரிடம், “காய் இல்லாத மரத்தைத்தானே நீ விற்றாய்...? ஆகவே, என்றைக்கும் காயில்லாத மரம்தான் உன்னுடையது. அதில் இனிமேல் காய்க்கும் காய்கள் எல்லாம் மரத்தைத் திரும்பக் கொடுத்தவரையே சேரும்... அதை அவர் பறித்துக்கொள்ள அவ்வப் போது நீ அனுமதிக்க வேண்டும் தடுக்கக் கூடாது; நீயும் பறித்துக் கொள்ளக் கூடாது...” என்றார். தெனாலியின் இத்தீர்ப்பை அரசர் ஆமோதித்தார். திரும்பப் பெற்றவன் முகத்தில் ஏமாற்றம். புகார் கொடுத்த நபர் மகிழ்ச்சியுடன் எல்லாரையும் குறிப்பாக, தெனாலிராமனை வணங்கி விட்டு விடைபெற்று சென்றார்.
| கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பு 'தென்னை மரம்!' என்பதாகும். |
1 | ['tam'] | கீழே கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பைக் கொடு.
கதை: ஒரு துறவி தானகவே வலிய வந்து ஸென் ஆசிரியர் ஸூவான்-ஷாவிடம் தன்னை அறிமுகப் படுத்திக் கொண்டார். பின்பு ஆசிரியரிடம், "நான் இப்பொழுதுதான் மடத்திற்கு வந்துள்ளேன். எனக்கு மார்கத்தினை அடைவதற்கான வழியைக் காண்பியுங்கள்" என்று கேட்டார். "பள்ளத்தாக்கில் இரச்சலுடன் ஓடும் ஓடையாற்றின் சத்தத்தினை உங்களால் கேட்க முடிகிறதா?" என்றார் ஸூவான்-ஷா. "ஆமாம்" என்றார் துறவி "அங்கிருந்து நுழை"
| கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பு 'மார்கத்தின் வழி' என்பதாகும். |
1 | ['tam'] | கீழே கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பைக் கொடு.
கதை: ஒரு காட்டில் பல குரங்குகள் வசித்து வந்தன. ஒரு நாள் இரவு குளிர் தாங்காமல் அவை குளிர் காய்வதற்கு எங்கே போகலாம் என்று யோசித்துக் கொண்டிருந்தன. அப்போது தூரத்தில் மின்மினிப் பூச்சிகள் பறந்து கொண்டிருப்பதைக் கண்டு தீ என்று நினைத்துக் கொண்டு, அந்த இடத்தை நோக்கிச் சென்றன. குரங்குகள் பேசிக் கொண்டதைக் கேட்டு, மரத்தின் மேல் உட்கார்ந்திருந்த ஒரு கொக்கு குரங்குகளே அது தீயல்ல; மின்மினிப் பூச்சி’ என்று கூறியது. இதைக் கேட்டதும் அந்தக் கூட்டத்தில் இருந்த ஒரு குரங்குக்கு மிகவும் கோபம் வந்து விட்டது. உடனே அது மரத்தின்மேல் பாய்ந்து சென்று அந்தக் கொக்கைப் பிடித்து, “நீயா எனக்கு அறிவு புகட்டுகிறவன்?” என்று கேட்டு அப்படியே ஒரு பாறையில் அடித்துக் கொன்று விட்டது. தீயவர்களுக்கு நல்லது சொல்லக் கூடாது.
| கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பு 'குரங்குக்கு அறிவு சொன்ன கொக்கு' என்பதாகும். |
1 | ['tam'] | கீழே கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பைக் கொடு.
கதை: கல்லில் சிலை வடிக்கும் சிற்பி ஒருவன் ஒரு தேவதையின் சிலையை வடித்துக் கொண்டிருந்தான். அற்புதமாக தத்ரூபமாகத் தோற்றமளித்த அந்தச் சிலை வடித்து முடித்த கணம் ஒரு மின்னல் நேரத்தில் உயிர் பெற்றது. தேவதை மகிழ்ச்சியுடன் சிற்பியின் கலைத் திறனைப் பாராட்டி வேண்டிய வரம் ஒன்று கேட்குமாறு சொன்னது. சிற்பிக்கு வல்லவர்களுக்கு வல்லவனாக வேண்டும் என்ற வெகுநாள் ஆசை. அவன் அதை தேவதையிடம் சொன்னான். தேவதை அன்புடன் சிரித்துக் கொண்டே “சிற்பியே! நன்கு சிந்தித்துத்தான் கேட்கிறாயா?” என்று கேட்டது. சிற்பியும் மிகுந்த ஆவலுடன் “ஆம்!” என்றான். தேவதை “சரி! அடுத்த இரண்டு நாட்களுக்கு நீ யாரை அல்லது எதை வல்லவன் என்று நினைக்கிறாயோ அதுவாகவே மாறிவிடுவாய்” என்று வரம் அளித்து விட்டு அதே மின்னல் வேகத்தில் மறுபடியும் சிலை வடிவிற்குப் போய் விட்டது, சிற்பி திடீரென்று நிகழ்ந்த இந்த நிகழ்வைப் பற்றி நம்புவதா வேண்டாமா என்று தீவிரமாகச் சிந்தித்துக்கொண்டே தன் வேலையைத் தொடர்ந்தான். சூரியன் உச்சிக்கு வந்து தகித்துக் கொண்டிருந்தது. சிலை வடிக்கும் கருங்கற்பாறை கொதித்தது. கல்லைக் கொத்தும் உளி கொதித்தது. சிற்பியின் உடலெல்லாம் வியர்த்து வழிந்தது. சிற்பி “இந்த சூரியன் மிகச் சக்தி படைத்தவனாக இருக்கிறானே. எல்லாவற்றையும் ஆட்டிப் படைக்கிறானே! இவன்தான் மிக வல்லவனாக இருக்க வேண்டும்” என்று நினைத்தான். என்ன ஆச்சரியம்! உடனே அவன் தேவதை கொடுத்த வரத்தின் சக்தியால் சூரியனாகவே மாறிவிட்டான். சிறிது நேரம் உலகைச் சுற்றி வந்து தனது சக்தியால் ஆனந்தமாக கண்ணில் பட்ட எல்லாவற்றையும் தகிக்கச் செய்து மகிழ்ந்து கொண்டிருந்தான். ஒரு இடத்தில் மேகங்கள் சூழ்ந்திருந்தன. அவை சூரியனின் கதிர்களை மறைத்தன. ஆகவே அவை மறைத்த இடங்களை சூரியக் கதிர்கள் சென்றடைய முடியவில்லை. சூரியனாக இருந்த சிற்பி, தன் மிக உக்கிரமான கதிர்களை அந்த மேகங்கள் மேல் செலுத்திப் பார்த்தான். அந்தக் கருமேகக் கூட்டங்கள் அசைவதாக இல்லை. “என்ன… இந்த மேகக் கூட்டங்கள் சூரியனின் சக்திமிக்க கதிர்களையே மறைக்கும் வல்லமை படைத்தவையாக இருக்கின்றனவே” என்று நினைத்தவுடன் அவன் அந்தக் கருமேகங்களாக மாறிவிட்டான். சிறிது நேரம் மகிழ்ச்சியாக சூரியக் கதிர்களை மறைத்துக் கொண்டு ஆனந்தப் பட்டுக் கொண்டிருந்தான். அப்போது பலமாகக் காற்றடித்தது. அந்தக் காற்று மேகக் கூட்டங்களை இப்படியும் அப்படியுமாக அலைக்கழித்தது. சிற்பி எவ்வளவு முயன்றும் காற்றின் வேகத்திற்கு எதிராக எதையும் செய்ய முடியவில்லை. “சூரியனின் கதிர்களை மறைக்கும் மேகத்தையே செலுத்தும் காற்று எவ்வளவு வல்லமை படைத்ததாக இருக்க வேண்டும்” என்று நினைத்தான். அந்தக் கணமே அவன் காற்றாக மாறிவிட்டான். காற்று வடிவில் சிற்பி தென்றலாகவும், புயலாகவும் எண்ணப் படி மாறி மாறி உலகைக் கலக்கிக் கொண்டிருந்தான். மிகவும் வல்லமை படைத்தவனாகத் தன்னைப் பற்றி எண்ணி எண்ணி நினைத்த இடத்திற்கெல்லாம் சடுதியில் சென்று மகிச்சியில் திளைத்துக் கொண்டிருந்தான். அவன் ஒரு முறை அப்படிக் கடும் புயலாக மாறிச் சென்று கொண்டிருந்த வழியை மறித்துக் கொண்டு ஒரு நெடிதுயர்ந்த மலை நின்று கொண்டிருந்தது. எவ்வளவோ உக்கிரமாக முட்டி மோதிப் பார்த்தும் கடும் புயலாய் வடிவெடுத்திருந்த சிற்பியால் அந்த மலையைக் கடந்து செல்ல முடியவில்லை. “அட.. இந்த மலைக்குக் கடும் புயலையும் மிஞ்சும் சக்தி இருப்பது முன்னமேயே நமக்குத் தெரியாமல் போய் விட்டதே!” என்று நினைத்த மாத்திரம் அவன் ஒரு மலையாக மாறிவிட்டான். அப்போது மற்றொரு சிற்பி அந்த மலை மேல் மெதுவாக ஏறி வந்தான். அவன் ஒரு இடத்தில் உள்ள மலையின் பாறைகளைத் தேர்ந்தெடுத்து தன் உளியையும் சுத்தியலையும் கொண்டு பாறையைப் பிளந்து சிலை வடிக்க ஆரம்பித்தான். மலை வடிவில் இருந்த சிற்பி “சக்தி வாய்ந்த மலையின் பாறைகளையே பிளக்கும் சிற்பிதான் மலையை விட வல்லவன்” என்று நினைத்தான். தேவதையின் வரம் பாக்கியிருக்கிறதே! அதனால் அப்படி நினைத்த மாத்திரத்தில் பழைய படி அவன் தன் சுய உருவை அடைந்து விட்டான். சுய உருவிற்கே திடீரென்று திரும்பி விட்ட அவனுக்கு இப்போது மூளைக்குள் ஏதோ பொறி தட்டியது போல் இருந்தது. நிதானமாக அமர்ந்து, தன் அனுபவங்களை நினைத்துப் பார்த்தான். ஒவ்வோருவருக்கும் ஒரு தனித்துவமும் அதைச் சார்ந்து வல்லமைகளும் இருப்பதை அறிந்து கொண்டான். அனைவருக்கும் வல்லவனாக் விளங்க வேண்டும் என்ற நினைப்பைக் கை விட்டான். தன் வல்லமைகளைப் முடிந்த வரை பெருக்கிக் கொண்டு அவற்றின் மூலம் உலகிற்கு உப்பாக விளங்குவதே சிறந்தது என்று நினைக்க ஆரம்பித்தான். தேவதை அவன் முன் திரும்பவும் தோன்றி அவனுக்கு நிறையப் பரிசுகளை மிக மகிழ்ச்சியுடன் வழங்கியது.
| கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பு 'வல்லவர் யார் ?' என்பதாகும். |
2 | ['tam'] | கீழே கொடுக்கப்பட்டுள்ள வார்த்தைகளையும் தலைப்பையும் பயன்படுத்தி சிறு கதை எழுதுக.
வார்த்தைகள்: காகம்
தலைப்பு: யுக்தியால் தாகம் தீர்த்த காகம்
| ஒரு கோடை காலம், பகல் நேரம். கொழுத்தும் வெயில் மக்களையும், பறவைகளையும் வருத்தியது. தாகம் எல்லோருக்கும் ஏற்பட்டது பறவைகள் தங்கள் தாகத்தைத் தீர்க்க தண்ணீர் இன்றி அங்கும் இங்கும் அலைந்து திரிந்தன. அவற்றில் ஒரு புத்திசாலி காகமும் இருந்தது. அது தண்ணீருக்காக அலையும் போது. ஒரு வீட்டின் வெளியே வாய் குறுகிய குடுவை பாத்திரம் ஒன்றைக் கண்டது. அங்கே சென்று பார்த்தபோது அப்பாதிரத்தில் கொஞ்சத் தண்ணிர் இருந்ததைக் கண்டு மகிழ்வுற்றது. உடனே குடுவையின் விளிம்பில் அமர்ந்து, தன் அலகால் தண்ணீரைக் குடிக்கப் பார்த்தது. ஆனால் அதன் அலகிற்கு தண்ணீர் மட்டத்தை எட்ட முடியவில்லை. அதனால் பாத்திரத்தில் இருந்த நீரை காகத்தால் குடிக்க முடியவில்லை. கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லையே என காகம் மனம் வருந்தியது. இதைவிட்டால் வேறு இடத்தில் தண்ணீர் கிடக்கவும் மாட்டாது என எண்ணி அதனை எப்படியாவது குடிக்க வேண்டுமென சுற்றுமுற்றும் பார்த்து யோசனை செய்தது. பக்கத்தில் சிறு சிறு கூழாங்கற்கள் கொட்டிக் கிடந்தன.உடனே அதற்கு ஒரு யுக்தித் தோன்றியது. ஒவ்வொரு கூழாங்கற்களாக எடுத்து. அதை அந்தக் குடுவையில் போட்டது. கூழாங்கற்கள் விழ,விழ..தண்ணீரின் நீர் மட்டம் உயரத் தொடங்கியது. ஒரு கட்டத்தில் குடுவையின் வாயருகே தண்ணீர் வந்து விட்டது. உடன், அந்தக் காகம் தண்ணீரில் தன் அலகை வைத்து. தாகம் தீர தண்ணீர் அருந்தி மகிழ்ந்தது. எந்தப் பிரச்னையாயினும் அதற்கு ஒரு தீர்வு உண்டு. நமது புத்தியை பயன்படுத்தி,யோசித்து..தீர்வு கண்டால் பிரச்னை தீர்ந்து மகிழ்ச்சி ஏற்படும். |
2 | ['tam'] | கீழே கொடுக்கப்பட்டுள்ள வார்த்தைகளையும் தலைப்பையும் பயன்படுத்தி சிறு கதை எழுதுக.
வார்த்தைகள்: ஜம்பு, வண்டியோட்டி, கொல்லன், உழவன், உழவநின் உறவினர்கல்
தலைப்பு: கஞ்ச மகா பிரபு
| பட்டினப்பாக்கத்தில் ஜம்பு என்ற செல்வந்தர் இருந்தார். அவரிடம் ஏராளமான செல்வம் இருந்தது. இருப்பினும் சரியான கஞ்சன். எங்குச் சென்றாலம் அவர் நான்கு குதிரைகள் பூட்டப்பட்ட அழகான வண்டியில் அமர்ந்து செல்வார். ஒரு முறை, வெளியூர் சென்றிருந்த அவர் தன் ஊர் திரும்பிக் கொண்டிருந்தார். வண்டிச் சக்கரத்தில் ஏதோ முறிவது போன்ற ஓசை கேட்டது. கோபத்துடன் அவர் வண்டியோட்டியைப் பார்த்து, "டேய் வண்டியை நிறுத்து. சக்கரத்திற்கு என்ன ஆயிற்று பார்?" என்று கத்தினார். நடுக்கத்துடன் கீழே இறங்கிய வண்டியோட்டி சக்கரத்தைப் பார்த்தான். "ஐயா! சக்கரத்தில் உள்ள கடையாணி உடைந்துவிட்டது. அந்த ஆணியைச் சரி செய்தால்தான் வண்டியை ஓட்ட முடியும்," என்றான். "முட்டாளே! புறப்படும்போதே இதைப் பார்த்திருக்க வேண்டாமா? பக்கத்தில் உள்ள ஊருக்கு வண்டியை இழுத்துச் செல். அங்கே கொல்லனிடம் காட்டி வண்டியைச் சரி செய். நேரத்தை வீணாக்காதே," என்று வண்டியில் இருந்தபடியே கத்தினார் ஜம்பு. குதிரைகளுடன் வண்டியை மெதுவாக இழுத்துச் சென்றான் அவன். சிறிது நேரத்தில் வண்டி கொல்லனின் உலைக்களத்தின் முன் நின்றது. அவன் குரல் கொடுக்க வெளியே வந்த கொல்லன் வண்டியைப் பார்த்தான். கேசவனை பார்த்தக் கொல்லன், "உடைந்திருக்கும் கடையாணிக்குப் பதில் வேறொரு ஆணியை மாட்டினால் வண்டி பழையபடி ஓடும். ஒரு வெள்ளிப் பணம் கூலி ஆகும்," என்றான். "என்ன ஒரு ஆணியை மாட்டக் கூலி ஒரு வெள்ளிப் பணமா? நீ கொல்லனா அல்லது கொள்ளைக்காரனா?" என்று கோபத்துடன் கேட்டார் ஜம்பு. "எனக்கு நிறைய வேலை இருக்கிறது. நான் கேட்ட கூலி தருவதாக இருந்தால் சொல்லுங்கள். வண்டியைச் செப்பனிட்டுத் தருகிறேன். இல்லையேல் வேறு ஆளைப் பாருங்கள்," என்றான் அவன். வேறு வழியில்லாத ஜம்பு, "சரி" என்றார். சிறிது இரும்புத்துண்டு ஒன்றை எடுத்தான் அவன். உலைக்களத்து நெருப்பில் அதைப் போட்டான். பழுக்கக் காய்ந்த அந்த இரும்புத்துண்டை கத்தியால் நன்கு அடித்தான். ஆணியாக மாறிய அதை சக்கரத்தில் மாட்டினான். "இனிமேல் வண்டி நன்றாக ஓடும். கூலியைத் தாருங்கள்," என்றான் அவன். நடந்ததை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்தார் அவர். ஒரு வெள்ளிப் பணத்தைத் தந்துவிட்டு புறப்பட்டார். வண்டி ஓடிக் கொண்டிருந்தது. "இந்தச் சிறிய வேலைக்கு ஒரு வெள்ளிப் பணம் கூலியா? இப்படிப் பொருள் ஈட்டினால் இவன் என்னை விடச் செல்வனாகி விடுவானே. இந்த வேலையை நான் கற்றுக் கொண்டால் நல்ல வருவாய் வருமே. நாள்தோறும் இங்கு வந்து இவன் எப்படி வேலை செய்கிறான் என்று பார்ப்பேன். எல்லா வேலைகளையும் கற்றுக் கொண்ட பிறகு இவனை இங்கிருந்து விரட்டி விடுவேன்" என்று நினைத்தார் அவர். அதன்படி நாள்தோறும் அந்த உலைக்களத்திற்கு வந்தார். கொல்லன் எப்படி வேலை செய்கிறான் என்பதை கவனித்தபடி இருந்தார். சில நாட்கள் சென்றன. கொல்லனுடைய தொழிலில் தான் தேர்ச்சி பெற்றுவிட்டதாக நினைத்தார் அவர். கொல்லனைப் பார்த்து, "இனி உனக்கு இங்கு வேலை இல்லை. எங்காவது ஓடிப்போ. என்னைப் பற்றி உனக்குத் தெரியும். நீ மீண்டும் என் கண்ணில் பட்டால் உன்னைக் கொன்றுவிடுவேன்," என்று மிரட்டினார். அவருக்கு அஞ்சிய அவன், "இனி நான் இங்கு வரமாட்டேன்," என்று சொல்லிவிட்டுச் சென்றான். மகிழ்ச்சியுடன் உலைக்களத்திற்குள் நுழைந்தார் அவர். வண்டியோட்டியைப் பார்த்து, "இன்று முதல் கொல்லன் தொழிலை நான் செய்யப் போகிறேன். நீ என் உதவியாளர்," என்றார். "ஐயா! இந்தத் தொழிலில் எனக்கு ஏதும் தெரியாதே," என்றான் அவன். "நான் என்ன சொல்கிறேனோ அதைச் செய். அது போதும். வெளியே நின்று யாராவது இங்கு வருகிறார்களா பார்?" என்றார் அவர். "ஐயா, பெரிய இரும்புத் துண்டைத் தூக்கிக் கொண்டு ஒரு ஆள் இங்கு வருகிறான்" என்று மகிழ்ச்சியுடன் சொன்னான். "பக்கத்து ஊரில் வாழும் உழவன் நான். இந்த இரும்பில் எனக்கு ஒரு கலப்பை செய்ய வேண்டும்," என்றான் அவன். அந்த இரும்புத் துண்டைத் துõக்கிப் பார்த்தார். அவர். மிகுந்த கனம் உடையதாக இருந்தது. அதை உருட்டி மேலும் கீழும் பார்த்தார். "நல்ல இரும்பு இது. இதில் உறுதியான, நீடித்து உழைக்கும் கலப்பை செய்ய முடியும்," என்றார். பிறகு அந்த இரும்பைத் துõக்கி உலைக்களத்தில் போட்டார். சக்கரத்தைச் சுற்றச் சுற்ற தீ கொழுந்துவிட்டு எரிந்தது. இரும்புத் துண்டு பழுக்கக் காய்ந்தது. உதவியாளைப் பார்த்து, "ஏய்! பழுக்கக் காய்ந்த இந்த இரும்புத் துண்டை, அந்த இரும்புக் கட்டையின் மேல் வை. இந்தப் பெரிய சுத்தியால் அதை அடித்துக் கூர்மையாக்கு. எவ்வளவு வலிமையாக அடிக்கிறாயோ அந்த அளவு கலப்பை உறுதியாக இருக்கும்," என்றார். உதவியாளும் அவர் சொன்னது போலப் பெரிய சுத்தியால் ஓங்கி அடித்துக் கொண்டிருந்தான். சின்ன சுத்தியலுடன் அவரும் அவனுடன் சேர்ந்து இரும்புத் துண்டை அடித்தார். களைப்பு அடைந்த அவன் சுத்தியலால் அடிப்பதை நிறுத்தினான். "ஐயா! என்னால் முடியவில்லை," என்றான். உழவனைப் பார்த்து அவர், "இன்னும் சிறிது நேரம் சுத்தியால் அடித்தால் போதும். அழகான கலப்பை கிடைக்கும் உதவி செய்," என்றார். பெரிய சுத்தியலை எடுத்தான் உழவன். அதனால் இரும்புத் துண்டை ஓங்கி அடிக்கத் தொடங்கினான். களைப்பு அடைந்த அவனும் அடிப்பதை நிறுத்தினான். நீண்ட நேரம் சுத்தியால் வலிமையாக அடித்ததால் இரும்புத் துண்டு சிறியதாகிவிட்டது. அதை மேலும் கீழும் புரட்டிப் பார்த்தார். உதட்டைப் பிதுக்கிய அவர், "என்ன இரும்புத் துண்டைக் கொண்டு வந்திருக்கிறாய். மட்டமான இரும்பு. இதில் கலப்பை செய்ய முடியாது. வேண்டுமானால் ஒரு கோடரி செய்து தருகிறேன். பல பரம்பரைக்குத் தொடர்ந்து அது உழைக்கும். என்ன சொல்கிறாய்?" என்று கேட்டார். "சரி கோடரியே செய்து தாருங்கள்," என்றான் அவன். மீண்டும் அந்த இரும்புத் துண்டை உலைக்களத்தில் போட்டுத் தீ மூட்டினார் அவர். பழுக்கக் காய்ந்த அந்த இரும்பை உதவியாளும் அவரும் சேர்ந்து சுத்தியலால் அடித்தனர். சிறிது நேரம் சென்றது. அடிப்பதை நிறுத்திய அவர் இரும்புத் துண்டைப் பார்த்தார். மிகவும் சிறியதாக இருந்தது அது. "இதில் கோடரி செய்ய முடியாது. கூர்மையான அழகான சுத்தி செய்து தருகிறேன். இது போன்று வேலைப்பாடு அமைந்த சுத்தி யாரிடமும் இருக்க முடியாது. என்ன சொல்கிறாய்?" என்று கேட்டார். "ஏதாவது செய்யுங்கள்," என்று கடுப்புடன் சொன்னான் உழவன். பழையபடி அந்த இரும்பை நெருப்பில் போட்டு எடுத்து அவரும் உதவியாளும் அடித்தார்கள். அந்த இரும்பு மெல்லியதாக ஆகிவிட்டது. அதைப் பார்த்த அவர், "நீ கொண்டு வந்த இரும்பு மிக மோசம். அதில் ஒரு ஊசி தான் செய்ய முடியும். என்ன சொல்கிறாய்?" என்று கேட்டார். நடந்ததை எல்லாம் பார்த்து வெறுப்படைந்த உழவன், "எதையாவது செய்து தாருங்கள்," என்றான். அந்த இரும்புத் துண்டை சுத்தியலால் தட்டி ஊசி போல ஆக்கினார் ஜம்பு. மகிழ்ச்சியுடன் அதைக் கையில் எடுத்த அவர், "இந்த ஊசி சாதாரண ஊசி அல்ல. அருமையான ஊசி. நீண்ட காலம் உழைக்கும் ஊசி. இதைப் போன்ற அழகான ஊசியை இதுவரை யாரும் உருவாக்கி இருக்க முடியாது," என்று அதை உழவனிடம் தந்தார். "நான் இதற்காக அதிகக் கூலி கேட்கமாட்டேன். நான் உழைத்த உழைப்பு உனக்கே தெரியும். ஐந்து வெள்ளிப் பணம் கொடு. அது போதும்," என்றார். "ஒரு காசுகூடப் பெறாத ஊசி இது. பெரிய இரும்புத் துண்டை வீணாக்கியதோடு ஐந்து வெள்ளிப் பணமா கேட்கிறாய்? அந்தப் பணத்திற்கு பத்துப் புதிய கலப்பைகளையே வாங்க முடியுமே. என்னை ஏமாற்றவா நினைக்கிறாய்? உன்னை என்ன செய்கிறேன் பார்," என்று உள்ளத்திற்குள் கருவினான் அவன். "இப்பொழுது என்னிடம் வெள்ளிப் பணம் ஏதும் இல்லை. என் வீட்டில் ஏராளமாக நெல் உள்ளது. அங்கு வாருங்கள். பத்து வெள்ளிப் பணத்திற்கு உரிய நெல்லைத் தருகிறேன்," என்றான் அவன். மகிழ்ச்சி அடைந்த அவர், "நீ முன்னால் செல். நான் வண்டியுடன் பின்னால் வருகிறேன்," என்றார். உலைக்களத்தைப் பூட்டிவிட்டு வண்டியில் அமர்ந்தார் அவர். வண்டியோட்டி வண்டியை உழவனின் வீட்டின் முன் நிறுத்தினான். வண்டியோட்டியைப் பார்த்து, "நான் இந்தக் காலி சாக்கு மூட்டைகளுடன் உள்ளே செல்கிறேன். நீ இங்கிருந்தபடியே உள்ளிருந்து வரும் பேச்சுக் குரலைக் கவனி. சாக்கு மூட்டைகளில் எல்லாம் நெல்லை நிரப்பும் அவன் "போதுமா" என்று கேட்பான். நீ உடனே, "போதாது, நானும் வேலை செய்திருக்கிறேன். என் பங்கையும் அவரிடம் தாருங்கள் என்று குரல் கொடு," என்று சொல்லிவிட்டுச் சென்றார். அவரின் வருகைக்காக உழவனும் அவன் உறவினர்களும் கோபத்துடன் காத்திருந்தனர். அவர் உள்ளே நுழைந்ததும் எல்லாரும் அவரைப் பிடித்து இழுத்தனர். வலிமை கொண்ட அளவுக்கு அவரை உதைத்தனர். வலி பொறுக்க முடியாத அவர், "ஐயோ! என்னை விட்டு விடுங்கள் போதும்," என்று அலறினார். வெளியே இருந்த வண்டியோட்டி, "போதாது! போதாது! என் பங்கையும் சேர்த்து அவரிடம் தாருங்கள்," என்று உரத்த குரலில் கத்தினான். "கேட்டீர்களா? இன்னும் இவனை உதையுங்கள்," என்றான் உழவன். எல்லாரும் சேர்ந்து அவரை மேலும் அடித்து உதைத்தனர். உடலெங்கும் காயத்துடன் பரிதாபமாக முனகியபடி வெளியே வந்தார் அவர். வண்டியோட்டி உதவி செய்யத் தடுமாறியபடி வண்டியில் அமர்ந்தார். "அய்யா! எங்கேய்யா, நம்ம மூட்டை, நான் போய் வாங்கி வரவா?", "டேய்! வண்டியை விடு. சீக்கிரம் இங்கிருந்து புறப்பட வேண்டும். கொல்லனாக இருந்தால் இப்படி அடி உதை கிடைக்கும் என்பதை அறியாமல் போனேனே! என் வாழ்நாளிலேயே இப்படி வேதனைப்பட்டது கிடையாது. இனி இந்த வேலையே வேண்டாம்," என்றுஅலறினார் செல்வந்தர். |
1 | ['tam'] | கீழே கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பைக் கொடு.
கதை: அக்கம் பக்கம் இருந்தவர்கள் உதவியுடன் தோட்டத்தில் கீரை பயிரிட்டு இருந்தனர், குருவும் சீடர்களும். செடிகள் நன்றாக வளர்ந்து, தள தள என்று இருந்தனர். ஒருநாள் காலையில் எழுந்து பார்த்த மட்டி, "ஐயோ! போச்சு! போச்சு!" என்று அலறினான். பரமார்த்தரும், மற்ற சீடர்களும் தோட்டத்துக்கு ஓடினார்கள். மொத்தம் மூன்று பாத்திகள் இருந்தன. அதில் ஒரு பாத்தியில் இருந்த செடிகளை மாடு ஒன்று மேய்ந்து விட்டிருந்தது. "அடடா! நாம் எவ்வளவு கஷ்டப்பட்டு வளர்த்து வருகிறோம்; எல்லாம் இப்படிப் பாழாகி விட்டதே" என்று வருத்தப்பட்டார் பரமார்த்தர். செடிகளை மாடு மேயாமல் இருப்பதற்காகத் தம் சீடர்களை யோசனை கூறுமாறு கேட்டார். "குருவே! அந்த மாடு வந்து மேய்வதற்கு முன்பு நாமே கொஞ்சம் கீரையைப் பறித்து அதற்கு போட்டு விடலாமே!" என்றான் முட்டாள். "நாம் பயிரிடுவதை மாடு சாப்பிடாமல் இருக்க வேண்டுமானால் மாட்டுக்கென்று தனியாக ஒரு பாத்தியில் கீரை விதைத்து விட்டால் போதும். அதை மட்டும் சாப்பிட்டு விட்டுப் போய்விடும்!" என்றான்ன மூடன். "புத்திகெட்டவர்களே! நீங்கள் சொல்கிறபடி செய்தாலும் நமக்குத்தானே நஷ்டம்? அதையும் தின்று, இதையும் தின்றுவிடுமே!" என்று அவர்களைத் திட்டினார், பரமார்த்தர். அப்போது மண்டுவுக்கு ஒரு யோசனை தோன்றியது. "ராத்திரியில் மட்டும்தானே மேய்கிறது? அதனால் தினம் தினம் இரவு வந்ததும் எல்லாச் செடிகளையும் பிடுங்கி பத்திரமாக மறைத்து வைத்து விடலாம்! பொழுது விடிந்ததும், பழையபடி நட்டு விடலாம்!" என்றான். இந்த யோசனையும் சரிப்பட்டு வராது என்று பரமார்த்தர் கூறிவிட்டார். "தழைகள் எல்லாம் மேலே இருப்பதால்தான் தின்று விடுகிறது, பூரா செடிகளையும் பிடுங்கி, தலைகீழாக நட்டு விடுவோம்! வேர் மட்டும் மேலே இருப்பதைப் பார்த்து, மாடு ஏமாந்து போய்விடும்!" என்று சொன்னான் மட்டி "ஆமாம்! இதுதான் சரியான வழி!" என்று, ஒரு பாத்தியில் இருந்த செடிகளை மட்டும் பிடுங்கித் தலைகீழாக நட்டு வைத்தனர். வேர் முழுவதும் மண்ணுக்கு மேலே இருந்ததால் செடிகள் முழுவதும் ஒரே நாளில் செத்து விட்டன. "குருவே! இந்தச் செடிகளின் மீது பானைகளை கவிழ்த்து மூடி விட்டால் போதும். செடிகளைத் தேடிப் பார்த்து விட்டு மாடு ஏமாந்து போய்விடும்!" என்று சொன்னான் மடையன். மறுநாளே, சந்தையிலிருந்து ஏராளமான பானைகளை வாங்கி வந்தனர். ஒவ்வொரு செடியின் மீதும் ஒவ்வொரு பானையைக் கவிழ்த்து வைத்தனர். சூரிய வெளிச்சம் படாததால், பத்தே நாளில் இரண்டாவது பாத்தியில் இருந்த செடிகளும், வாடி வதங்கி விட்டன. குருவுக்கும், சீடர்களுக்கும் ஒரே கவலையாகப் போய்விட்டது. "குருவே! அந்தப் பசு மாட்டைப் பிடித்துக் கட்டி விட்டால் போதும். நாமே தினம் பால் கறந்து சாப்பிடலாம்! மாட்டுக்காரன் வந்து கேட்டால் செடிகளை மேய்ந்ததற்காகத் தண்டனையாக நிறைய பணத்தையும் வாங்கிக் கொள்ளலாம்" என்று கூறினான் மடையன். "இப்போதுதான் நமக்கு இரண்டு வழிகளில் லாபம்!" என்றபடி குதித்தான் மட்டி மறுநாள் இரவு வெளிச்சம் தெரிவதற்காகக் கையில் கொள்ளிக் கட்டையை வைத்துக் கொண்டான், முட்டாள். குருவும், சீடர்களும் தோட்டத்தில் பதுங்கிக் கொண்டனர். இந்தத் தடவை வழக்கமான மாட்டுக்குப் பதில் எலும்பும் தோலுமாய் இருந்த வேறொரு பசுமாடு வந்தது. மாட்டைக் கண்டதும் பதுங்கியிருந்த குருவும் சீடர்களும் தடால் என்று அதன் மேல் விழுந்து புரண்டார்கள். மாட்டின் வாலைப் பிடித்து முறுக்கினான் மூடன். அதன் முகத்தில் சூடு போட்டான், முட்டாள். வயிற்றின் மேல் ஏறிக் குதித்தான் மடையன். "அப்பாடா! ஒரு வழியாகத் திருட்டு மாட்டைக் கண்டுபிடித்து விட்டோம்!" என்ற பரமார்த்தரும் சீடர்களும் மகிழ்ச்சியோடு படுக்கச் சென்றார்கள். பொழுது விடிந்ததும், அந்த ஊரிலேயே பெரிய முரடனான முனியாண்டி, தன் மாட்டைத் தேடிக் கொண்டு வந்தான். பரமார்த்தரும் சீடர்களும் தன் மாட்டை கட்டி வைத்திருப்பதைப் பார்த்துப் பயங்கரமாகக் கோபம் கொண்டான். "டேய்! உங்களுக்கு எவ்வளவு திமிர் இருந்தால் என் மாட்டைக் கட்டி வைப்பீர்கள்? மாட்டுக்குச் சூடு போட்டதற்கும், அதன் காலை ஒடித்துக் கட்டிப் போட்டதற்கும் சேர்த்து மரியாதையாகப் பணத்த எடுத்து வையுங்கள்!" என்று கத்தியபடி குருவையும் சீடர்களையும் உதைக்க ஆரம்பித்தான். "கீரையும் வேண்டாம்; பணமும் வேண்டாம். ஆளை விட்டால் போதும்" என்று அலறியபடி குருவும், சீடர்களும் மடத்தை விட்டே ஓடத் தொடங்கினார்கள்.
| கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பு 'தோட்டத்தில் மேயுது ...' என்பதாகும். |
1 | ['tam'] | கீழே கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பைக் கொடு.
கதை: பீர்பாலின் நகைச்சுவையான பேச்சுகளை அக்பர் மட்டுமன்றி தர்பாரில் பலரும் ரசித்தனர். ஆனால், சிலருக்கு மட்டும் பீர்பாலுக்குக் கிடைத்த பாராட்டுகள் பொறாமையை அளித்தன. ஒவ்வொரு முறையும் அக்பர் மனந்திறந்து பீர்பாலைப் பாராட்டுகையில், அவர்களுடைய மனம் பற்றியெரிந்தது. எப்படியாவது பீர்பாலை மட்டம் தட்ட வேண்டும் என்றும்,அவமானப்படுத்த வேண்டும் என்றும் அவர்கள் ஆவலாயிருந்தனர். அவர்களில் சைதான்கான் முதன்மையானவர். சைதான்கான் தன்னைப்போலவே பீர்பாலின் மீது பொறாமை கொண்ட மற்றவர்களுடன் சேர்ந்து அவரை அவமானப்படுத்தத் திட்டங்கள் தீட்டினார். அவற்றுள் ஒரு திட்டம் அனைவருக்கும் பிடித்துப் போனதால் அதை செயலாற்ற முடிவு செய்தனர். மறுநாள் வழக்கம் போல் தர்பார் கூடியது. முக்கியமான அலுவல்கள் முடிந்தபின், அக்பர் சிம்மாசனத்தில் நன்றாக சாய்ந்து கொண்டு அமர்ந்தார். பொதுவாக அந்த சமயத்தில்தான் அவர் சபையோரிடமிருந்து அறிவுரைகள், யோசனைகள் ஆகியவற்றைக் கேட்பது வழக்கம். உடனே சைதான்கான் எழுந்து நின்று அக்பரை வணங்க, அவரும் பேசுவதற்கு அனுமதி தந்தார். உடனே சைதான்கான் பீர்பாலைப் பார்த்துக் கொண்டே, “சக்கரவர்த்தி! நமது பீர்பாலைப் போல் புத்திசாலி யாருமே இல்லை. அவருக்கு அபார மூளை!” என்று பீர்பாலுக்கு ஐஸ் வைத்தார். “உங்களுக்கு மட்டும் புத்தி குறைவா? நீங்களும் தான் புத்திசாலி!” என்றார் பீர்பால். “என்ன இருந்தாலும் உங்களுடைய புத்திசாலித்தனத்திற்கு ஈடாகுமா?” என்ற சைதான்கான் சக்கரவர்த்தியை நோக்கி விஷமமாக, “சக்கரவர்த்தி! பீர்பாலே இத்தனை புத்திசாலியாக இருந்தால் அவருடைய தகப்பனார் இன்னும் எத்தனை புத்திசாலியாக இருப்பார்?” என்றார். அதைக்கேட்டு நிமிர்ந்து உட்கார்ந்த அக்பர், “அட, ஆமாம்! இது ஏன் எனக்குத் தோன்றவில்லை?” என்றார். “அப்படியானால் உடனே பீர்பாலின் தகப்பனாரை தர்பாருக்கு வரவழைப்போம் பிரபு!” என்றார் சைதான்கான். தன்னுடைய திட்டம் இத்தனை சீக்கிரம் பலிக்கும் என்று அவர் எதிர்பார்க்கவில்லை. அதைக் கேட்ட பீர்பால் திடுக்கிட்டார். சைதான்கான் ஆரம்பத்தில் இருந்தே தன்னைக் கவிழ்ப்பதற்காகத்தான் திட்டம் போட்டிருக்கிறான் என்று உணர்ந்தார். ஆனால் இவ்வளவு சாமர்த்தியமான திட்டத்தை எதிர்பார்க்கவில்லை. பீர்பாலின் தகப்பனார் அவ்வளவாகப் படிப்பறிவு இல்லாதவர். கிராமத்தைச் சேர்ந்த அப்பாவி. அவரை தர்பாரில் அழைத்து வந்து, தாறுமாறாக அவரை கேள்விகள் கேட்டு, அவரை அவமானப்படுத்துவதன் மூலம், அவர்கள் தன்னை அவமானப்படுத்த நினைக்கிறார்கள் என்று பீர்பால் புரிந்து கொண்டார். இதற்கிடையில் அக்பர், “பீர்பால்! நீ உடனே கிராமத்திற்குச் சென்று உன் தகப்பனாரை அழைத்து வா!” என்று கட்டளை இட்டார். அக்பரின் கட்டளையை ஏற்றுக் கொண்டு ரதத்திலேறி உடனே பீர்பால் தன் தகப்பனார் வசித்து வந்த கிராமத்தை அடைந்தார். அவர் கால்களில் விழுந்து வணங்க, அவரும் தன் மகனை ஆசீர்வதித்தார். பிறகு இருவரும் உணவருந்தினர். இரவில் அவர் படுக்கைக்குச் செல்லுமுன், பீர்பால் தான் வந்த நோக்கத்தைத் தன் தந்தையிடம் மெதுவாக வெளியிட்டார். பரபரப்படைந்த அந்த முதியவர், “நானா… தர்பாருக்கு வருவதா! நான் படிக்காதவன்! தர்பாரில் சக்கரவர்த்திமுன் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென்றோ, எப்படி பேசுவதென்றோ அறியாதவன்!” என்று பதைபதைத்தார். “கவலைப்படாதீர்கள்! எப்படி நடந்து கொள்ள வேண்டுமென்றும், என்ன பேசவேண்டுமென்றும் நான் சொல்லித் தருகிறேன். தர்பாரில் நுழைந்ததும் சக்கரவர்த்தி முன் தலை தரையில் படும்படி விழுந்து சலாம் செய்யுங்கள். அவருடன் பேசும் போது, பணிவுடன் தலையை குனிந்தப்படி பதில் சொல்லுங்கள். யார் உங்களிடம் எது கேட்டாலும், தலையசைத்துப் புன்னகை மட்டும் செய்யுங்கள். மற்ற விஷயங்களை நான் பார்த்துக் கொள்கிறேன்” என்றார் பீர்பால். “மௌனம் சர்வார்த்த சாதகம்” என்று கூறிய பெரியவர் சிரித்துக் கொண்டே, “அப்படியே ஆகட்டும்!” என்றார். “எல்லாம் முடிந்த பிறகு யாராவது உங்களைப் பார்த்து ஏன் கேட்ட கேள்விகளுக்குப் பதில் சொல்லவில்லை என்று கேட்டால், உடனே நீங்கள்…” என்று பீர்பால் முதியவர் காதில் ரகசியமாகக் கூற, அவர் விழுந்து விழுந்து சிரித்தார். அதன்பிறகு பீர்பால் தன் தகப்பனாரை அழைத்துக்கொண்டு தலைநகரை அடைந்து, தர்பாருக்குள் நுழைந்தார். தர்பாரில் ஏற்கெனவே அக்பரும், மற்றவர்களும் வந்திருந்தனர். முதலில் பீர்பால் தனது தலை தரையில் படும்படி அக்பரை விழுந்து வணங்க, அவருடைய தகப்பனாரும் அப்படியே செய்தார். “வாருங்கள் பெரியவரே! உட்காருங்கள்!” என்று அக்பர் மரியாதையுடன் கூற முதியவரும் பீர்பாலுக்கருகே ஓர் இருக்கையில் அமர்ந்தார்.
| கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பு 'முட்டாள்களின் கேள்விகள்' என்பதாகும். |
2 | ['tam'] | கீழே கொடுக்கப்பட்டுள்ள வார்த்தைகளையும் தலைப்பையும் பயன்படுத்தி சிறு கதை எழுதுக.
வார்த்தைகள்: பத்மா, பத்மாவின் கணவன் ராஜா, பத்மாவின் மாமியார், பத்மாவின் மாமியார், பத்மாவின் தோழி கல்யாணி
தலைப்பு: உறவுப் பாலம்
| "வாங்கம்மா... பூ வாங்கிட்டுட்டுப் போங்க முழம் 2 ரூபாய் தான் பூ... பூ... ", " அம்மா... தாயே ... குழந்தை சாப்பிட்டு இரண்டு நாளாகுது ஏதாவது தர்மம் பண்ணுங்கம்மா...", "ஆரஞ்சு ... பைனாப்பிள் ... கிரேப்... ஆரஞ்சு" இந்த வசனங்களெல்லாம் பத்மாவிற்குப் பழக்கப் பட்டவை தான் இருந்தாலும் அனைத்தையும் காதில் வாங்கிய படி அவர்களைக் கடந்து போனாள். எட்டு மணி இளம் வெய்யில் அவள் முகத்தையும் தேகத்தையும் செல்லமாய் வருடிப் பார்த்தது. வெள்ளிப் பிள்ளையார் கோவிலைக் கடந்த பொழுது கற்பூர ஆராதனை நடப்பது தெரிந்து விரக்தியாய் ஒரு முறுவல் கொண்டாள். ஆம் இதுவே பள்ளிக்குத் தனியாய் இச்சாலையில் நடக்க ஆரம்பித்த காலம் முதல் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு வரையில் எத்தனை முறை இக்கோவிலைக் கடந்து இருப்பாள் ஒவ்வொரு முறை கோவிலைக் கடக்கும் பொழுதும் இறைவனை தரிசித்து விட்டுதான் செல்வாள். இன்று... சிந்தித்துப்பார்க்கும் நேரமில்லை காரணம் இவள் செல்ல வேண்டிய பேருந்து சிறிது தொலைவில் அளவுக்கு சற்று அதிகமான கூட்டத்தை பெருக்கிக் கொண்டு வந்தது. ஓடிச் சென்று ஏறினாள். இயந்திரத் தனமாக மூன்று மணி நேரம் ஓடியதே தெரியவில்லை. " கல்யாணி... கல்யாணி... " பக்கத்தில் உள்ள தையல் மிஷினில் துணி தைத்துக் கொண்டிருந்த கல்யாணியை தோழி வசந்தா கூப்பிடும் சத்தம் கேட்டு பத்மாவும் இயல்பு நிலைக்குத் திரும்பி மணி பார்த்தாள் 11 அடிக்க ஐந்து நிமிடம் இருந்தது. வசந்தாவைப் பார்த்து ஒரு சினேகப் புன்னகையை வீசினாள். வசந்தா பதிலுக்கு புன்னகைத்தாலும் முகத்தில் சிறு கவலை மண்டியிருந்தது தெரிந்தது. "என்ன வசந்தா... ஏன் இப்படி பேயரஞ்ச மாதிரி இருக்க?" கல்யாணி கேட்டாள். " ம்... பேய்தான் ஆனால் என்னை அறையவில்லை உன்னை அறைய வந்திருக்கு" - வசந்தா. " என்னடி உளர்ற ", " அங்க பார் உன் ஆத்து குடிமகன் உன்னை நாடி ஓடி வந்திருக்கார்" வசந்தா கிண்டலாக சொன்னாலும் தோழியின் நிலை பற்றி உண்மையான கவலை இருந்தது. இப்பொழுது கல்யாணியின் முகத்தில் கலவரம் படர்ந்தது. இந்நிகழ்ச்சிகள் பத்மாவிற்குப் புதிதல்ல கல்யாணியின் கணவர் வருகை அவளுக்கு இன்று 1 ம் தேதி என்பது ஞாபகத்திற்கு வந்தது. மாதம் முதல் தேதி அவள் கணவர் வருவதும் இவள் சம்பளத்தை ஜேப்படி செய்து குடிக்கச் செல்வதும், மறுத்தால் அனைவர் முன்னிலையில் இவளை தகாத வார்த்தைகளால் திட்டி அடிப்பதும், யாராவது தடுக்கச் சென்றால் அவர்களையும் தகாத வார்த்தைகளால் திட்டுவதும் அதற்குப் பயந்து கல்யாணி அவன் கேட்கும் பணத்தைக் கொடுத்து விடுவதும் மாதாந்திர நிகழ்ச்சிகள். பத்மா மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பிய போது நீண்ட அழைப்பு மணி அடித்து ஓய்ந்தது. அனைவரும் மேனேஜர் அறைக்கு சென்று தங்கள் ஊதியத்தைப் பெற்று வரும் போது வசந்தா பத்மாவிடம் கேட்டாள். "என்னடி மாமியார் வீட்டுக்கா.. வாயேன் சேர்ந்து போகலாம்". பதில் சொல்லாமல் தொடர்ந்தாள். பேருந்து பயணம் பத்து நிமிடத்தில் முடிந்தது. வசந்தா விடை பெற்றுச் சென்றால். அதோ - அந்த நான்காவது வீடு. இரண்டு வருடங்களுக்கு முன்பு வரை தான் பார்த்து இரசித்த வீடு. ஆசையாய் வளர்ந்த தோட்டங்கள் வரைந்த கோலங்கள் மூன்று வருடங்களுக்கு முன்பு இவ்வீட்டில் மருமகளாக நுழைந்து இந்நந்தவனத்துச் சூழலே நம் உலகம் என்று முடிவு செய்து அவ்வாறே பல கலர்கனவுகளுடன் வளைய வந்ததெல்லாம் ஒரு வாரத்தில் வடிந்து போனது. காரணம்... ராஜா! பெயருக்கேற்ற குணமில்லை. கல்லூரியில் பெரிய படிப்பு முடித்தாலும் ஏற்பட்ட காதல் தோல்வியால் உள்ளுக்குள் புகைந்து கொண்டிருந்தவனுக்கு வடிகாலாக வந்தாள் பத்மா. பெண்களின் மேல் அவனுக்கு ஏற்பட்ட வெறுப்பு இவள்மேல் வடிந்தது. அவளை சித்திரவதை செய்தான். ஆனாலும் அப்பாவிகளான அவன் பெற்றோருக்காகவும் அவர்களின் கண்ணீருக்காகவும் அவனை சமாளித்தால். அந்த நரக வாழ்க்கை கூட பத்மாவிற்கு வாழக் கொடுத்து வைக்காமல் அவன் ஒருநாள் வேறொரு பெண்ணுடன் ஊரை விட்டு ஓடிவிட்டான். இரண்டு மாதம் கழித்து அவன் சாலை விபத்தில் இறந்ததாக செய்தி வந்தது. சில நாட்கள் துக்கத்தில் கழித்தாலும் தேற்றிக் கொண்டாள். வீட்டில் இவள் ஒரே பெண் என்பதால் அவள் பெற்றோர் இவளை தன்னுடன் அழைத்துக் கொண்டனர். இருந்தாலும், அந்த வயதான பெற்றோரை நிராதரவாக விட மனமில்லை. எனவே தையல் பயிற்சி மேற்கொண்டு ஆறு மாதத்தில் டெக்ஸ்டைல் கம்பெனி ஒன்றில் பணியில் அமர்ந்து ஐந்தாயிரம் வருமானம் வருகிறது. மாமியார் அவளை வரவேற்றாள். சிறிதுநேர உபசரணங்களுக்குப் பின் அவர்கள் கையில் இரண்டாயிரம் ரூபாய் தந்தாள். நடுங்கும் கைகளால் அதைப் பெற்றுக் கொண்டாள் மாமியார். அம்மாடி இதெல்லாம் உனக்கு திருப்தி அளிக்கலாம் ஆனால் எங்களுக்கு மனம் வலிக்கிறது. உன் வாழ்க்கை தரைமட்டமாக காரணமான பாவிகள் நாங்கள். நீ ஏன் இன்னொரு கல்யாணம் பண்ணிக்கிட்டு சந்தோசமா இருக்கக் கூடாது. அம்மா உலகத்தில் யாருக்கும் கிடைக்காத பாக்கியம் எனக்கு கிடைத்திருக்கிறது. இரண்டு தாய் தந்தையர் கிடைத்திருக்கிறீர்கள். என் வாழ்வில் திருமணம் என்ற ஒன்று பூத்து முடிந்த சோலை இன்று காய்த்து குலுங்கி கனிய ஆரம்பிக்கும் வேளையில் மரத்தை வெட்டி வேறிடத்தில் செடியாய் மறுபடியும் வளரச் சொன்னால் என்னால் முடியாதம்மா என்னை மன்னித்து விடுங்கள் என்று கூறி விடைபெற்று தன் பெற்றோரை நோக்கிச் சென்றாள். இந்த உறவுப் பாலம் நிலைக்கும் என்றும் இடியக் கூடியதல்ல, என்று நினைந்து பொங்கி வர முயற்சிக்கும் கண்களை மகிழ்வுடன் துடைத்தாள். வழி தெளிவாகத் தெரிந்தது வாழ்க்கையும் தான். |
1 | ['tam'] | கீழே கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பைக் கொடு.
கதை: ஒரு மனிதன் தனக்கு கிடைக்கும் அதிர்ஷ்டத்தை எப்படி பயன்படுத்துகிறான் என்று அறிய ஒரு மன்னனுக்கு ஆவல் ஏற்பட்டது. அதை சோதிக்க நினைத்து ஒரு நாள் இரண்டு ரொட்டித் துண்டுகளை வரவழைத்து, விலையுயர்ந்த வைரக் கற்களை ஒன்றினுள் பதுக்கி வைத்தான். பிறகு இரண்டு ரொட்டித் துண்டுகளையும் பணியாளன் ஒருவனிடம் கொடுத்து, “”கவனமாகக் கேள், தகுதியுள்ள கண்ணியமான மனிதன் ஒருவனுக்கு இந்த கனமான ரொட்டியைக் கொடு. மற்றொரு சாதாரண ரொட்டியை ஒரு சாதாரணப் பிச்சைக்காரனுக்குக் கொடு,” என்று சொன்னான். நீண்ட மேலங்கி அணிந்து அடர்ந்த தாடியுடன் சாமியாரைப் போல் தோற்றமளித்த ஒரு நபருக்கு அந்தப் பணியாளன் வைரக் கற்கள் நிரம்பிய கனமான ரொட்டியை அளித்தான். பிறகு மற்றொன்றை ஒரு பிச்சைக்காரனுக்கு அளித்தான். இவற்றையெல்லாம் மன்னன் தன் அரண்மனை மேல் மாடத்திலிருந்து பார்த்துக் கொண்டிருந்தான். சாமியார் போன்ற தோற்றமளித்த நபர் தனக்குக் கிடைத்த ரொட்டியை உற்றுப் பார்த்தான். இது சரியாக பக்குவப்படுத்தப்படாததால் கொஞ்சம் கனமாக உள்ளது என்று எண்ணி தன் அருகில் வந்து கொண்டிருந்த பிச்சைக்காரனை அழைத்து, “”நண்பா, எனக்குக் கிடைத்த ரொட்டி கனமாக உள்ளது. எனக்கு அவ்வளவு பசியில்லை. ஆகையால் இதை நீ எடுத்துக் கொண்டு உன்னுடையதை எனக்குக் கொடு,” என்றான். உடனே இருவரும் தங்களுடைய ரொட்டிகளை மாற்றிக் கொண்டனர். இதைக் கண்ட மன்னன், “”ஆஹா! என்ன கடவுளின் உள்ளம்! ஒரு தவயோகிக்கு செல்வம் தேவை இல்லையாதலால் வைரக் கற்கள் உடைய ரொட்டி அவரிடம் தங்காமல் அந்த ஏழையிடம் சென்று விட்டது’ என்று நினைத்தான். உடனே அந்த சாமியாரையும், பிச்சைக்காரனையும் பின் தொடருமாறு தன் வேலையாட்களுக்கு உத்தரவிட்டான். அன்று மாலையே அவ்விருவரைப் பற்றிய தகவல்களும் மன்னனுக்குக் கிடைத்தன. சாமியார் போல் தோற்றமளித்தவர் தன் வீட்டுக்குச் சென்று பொய்த் தாடியையும், மேலங்கியையும் எடுத்துவிட்டு, ஆசைதீர ரொட்டியை உண்டு விட்டு, பிறகு பழையபடி தாடியை ஒட்ட வைத்துக் கொண்டு சாமியார் வேடத்தில் பிச்சை எடுக்க கிளம்பி விட்டதாக அறிந்தான். தன் வீட்டிற்குச் சென்ற பிச்சைக்காரன், தன் மனைவியுடன் ரொட்டியை உண்ணத் தொடங்கியதும் அதற்குள் இருந்த வைரக் கற்களைக் கண்டான். மகிழ்ச்சியில் துள்ளிய அவன் மனைவி அவற்றை தாங்களே எடுத்துக் கொள்ள விரும்பிய போது, அந்தப் பிச்சைக்காரன், “”இந்த வைரக் கற்களைக் கொண்டு கடவுள் என் மனசாட்சியை சோதிக்க விரும்புகிறார். இந்த ரொட்டியை அளித்த அரசுப் பணியாளரிடம் இதைப் பற்றிய உண்மையை தெரிந்து கொள்ள வேண்டும். இவ்வாறு வைரக் கற்கள் உள்ளிருப்பது அவருக்குத் தெரியாது என்றால், அவருடைய பொருளை அவரிடமே சேர்க்க வேண்டும். ஆனால், தெரிந்தே இவ்வாறு கொடுத்தார் என்றால், இவை அந்தச் சாமியாரைச் சேர வேண்டும். அதுதான் நியாயம்,” என்று கூறினான். அந்தப் பிச்சைக்காரனின் நேர்மையையும், உயர்ந்த உள்ளத்தையும் அறிந்த மன்னன், அவனை அரண்மனைக்கு அழைத்து அந்த வைரக் கற்களை அவனுக்கே கொடுத்து மேலும் பல பரிசுகளும் வழங்கினான். கடவுளின் அருளால் வைரக் கற்கள் ஒரு போலிச் சாமியாரிடம் சிக்காமல், நேர்மையான ஒரு பிச்சைக்காரனை அடைந்ததை எண்ணி மகிழ்ந்தான் மன்னன். பிச்சைக்காரரும் அதை விற்று கிடைத்த பணத்தில் வியாபாரம் செய்து சந்தோசமாக வாழ்ந்தார்.
| கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பு 'நேர்மையான பிச்சைக்காரர்' என்பதாகும். |
2 | ['tam'] | கீழே கொடுக்கப்பட்டுள்ள வார்த்தைகளையும் தலைப்பையும் பயன்படுத்தி சிறு கதை எழுதுக.
வார்த்தைகள்: சான் குரு ஃபாயா, துறவி, சீடர்கள், சுட்டு, நிலா
தலைப்பு: நிலவைச் சுட்டிக் காட்டு
| ஒரு பால் நிலா காயும் இரவு. சான் குரு ஃபாயாவும், அவரது இரண்டு சீடர்களான துறவிகளும் திறந்த வெளியில் மணல் பரப்பின் மீது உட்கார்ந்திருந்தனர். அவர்கள் நிலாவினைச் சுட்டிக் காட்டி பேசிக் கொண்டிருந்தனர். அவர்களுக்குள் நடந்த சுவரசியமான உரையாடலே இன்றைய தினம் ஒரு ஸென் கதையின் கருவாகும். முதலாம் துறவி சா"ன் குரு ஃபாயானிடம் "குருவே, உங்களிடம் நான் "சுட்டு" என்பதன் அர்த்தத்தைக் கேட்கவில்லை. "நிலா" என்பதன் உண்மையான அர்த்தத்தினை எனக்கு விளக்கிக் கூறவேண்டும்" என்று கேட்டான். ", "சுட்டு" என்பதன் பொருளை நீ உணர்ந்து விட்டதாக தெரிகிறது. எனக்கு அதன் பொருளைக் கொஞ்சம் விளக்கிச் சொல்ல முடியுமா?" என்று கேட்டார் சா"ன் குரு. அந்த சமயத்தில் இரண்டாம் துறவி, "குருவே, உங்களிடம் "நிலா"வின் அர்த்தத்தினை கேட்க விரும்பவில்லை. "சுட்டு" என்பதன் உண்மைப் பொருளை விளக்க வேண்டும்" என்று கேட்டான். "நிலா" என்பதே பதிலாக கிடைத்தது. "நான் உங்களை "சுட்டு" என்பதன் பொருளைத் தான் கேட்டேன்" என்று கண்டனத்துடன் மறுதலித்துக் கூறியவன், "எதற்காக "நிலா" என்று பதில் அளித்தீர்கள்?", "ஏனேன்றால் "சுட்டு" என்பதன் அர்த்தத்தினைத் தானே நீ கேட்டாய்" என்றார் குரு. |
1 | ['tam'] | கீழே கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பைக் கொடு.
கதை: முல்லா மன்னரிடம் சில காலம் அமைச்சராக இருந்தார். முல்லாவின் மீது மன்னருக்கு அதிக
அபிமானம் இருந்தது. அதனால் அவரை எப்போதுமே தன்னுடன் வைத்துக் கொண்டு அவருடன்
உரையாடி மகிழ்ந்தார். மன்னர் உணவருந்தும் சமயத்திலெல்லாம் முல்லாவையும் தம்முடன் அமர்ந்து உணவருந்தச்
சொல்வார். ஒருநாள் மன்னரும் முல்லாவும் வழக்கம்போல அருகருகே அமர்ந்து உணவருந்திக்
கொண்டிருந்தனர். அன்று பீன்ஸ் கறி சமைக்கப்பட்டிருந்தது. மன்னருக்கு அன்று அதிகமான பசியாக இருந்ததால் பீன்ஸ் கறியை மிகவும் விரும்பிச்
சாப்பிட்டார். சாப்பாட்டின் இடையே மன்னர் முல்லாவை நோக்கி, " முல்லா உலகத்திலேயே மிகவும் சிறந்த
காய் பீன்ஸ் என்றுதான் எனக்குத் தோன்றுகிறது நீர் என்ன நினைக்கிறீர்?" என்று
கேட்டார். " சந்தேகமே வேண்டாம். பீன்ஸ் காய்க்கு நிகராக வேறு காயைச் சொல்லவே முடியாது" என்று
முல்லா ஆமாம் போட்டார். மன்னர் உடனே சமையற்காரனை அழைத்து " இனி சமையலில் பீன்ஸ் கறிக்குத் தான் முதலிடம்
தர வேண்டும். அன்றாடம் ஏதாவது ஒரு உருவத்தில் பீன்ஸை உணவுடன் சேர்ந்து விடு"
என்று உத்திரவிட்டார். நாள் தவறாமல் உணவில் பீன்ஸை சேர்த்துக் கொண்டதால் மன்னருக்கு அந்த காயின் மீது
சலிப்பும் வெறுப்பும் ஏற்பட்டது. அன்று சாப்பாட்டின் போது பீன்ஸ் பரிமாறப்பட்டபோது மன்னர் முல்லாவை நோக்கி
" உலகத்திலேயே மிகவும் மோசமான காய் பீன்ஸ் என்றுதான் நினைக்கிறேன். நீர்; என்ன
நினைக்கிறீர்?" என்று கேட்டார். " ஆமாம் மன்னர் அவர்களே, எனக்கும் அப்படித்தான் தோன்றுகிறது. நான் அறிந்த மட்டில்
இவ்வளவு மோசமான சுவையே இல்லாத பீன்ஸைப் போன்ற காயைக் கண்டதே இல்லை"
என்றார் முல்லா " என்ன முல்லா! பத்து நாட்களுக்கு முன்னால் நான் கேட்டபோது உலகத்திலேயே மிகவும்
சிறந்த காய் பீன்ஸ் என்று சொன்னீர். இப்பொழுது தலை கீழாக மாற்றிப் பேசுகிறீரே"
என்று மன்னர் கேட்டார். முல்லா சிரித்துக் கொண்டே " மன்னர் அவர்களே! என்ன செய்வது? நான் தங்களிடம்
அல்லவா வேலை பார்க்கிறேன். பீன்ஸிடமல்லவே" என்றார்.
| கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பு 'உலகத்தில் சிறந்தது' என்பதாகும். |
2 | ['tam'] | கீழே கொடுக்கப்பட்டுள்ள வார்த்தைகளையும் தலைப்பையும் பயன்படுத்தி சிறு கதை எழுதுக.
வார்த்தைகள்: கண்ணாடி, அழகு, பெண், மக்கள், கௌதம புத்தர், ஊர், அரசர்கள், ராஜா பிரஜென்ஜீதா, விரல், மாலை, மரணம், அங்குலிமால், அப்பாவி, கொலைகாரன், கொலை, கருணை
தலைப்பு: அங்குலிமால்
| தன்னுணர்வை நீ எடை போடவே முடியாது. தன்னுணர்வு கண்ணாடி போன்றது. கண்ணாடி பிரதிபலிக்கும், ஆனால் அது எடை போடாது. ஒரு அழகான பெண்ணோஅசிங்கமான பெண்ணோ யார் எதிரில் நின்றாலும் அது பிரதிபலிக்கும். எந்த விதபாகுபாடும் இல்லாமல் அது பிரதிபலிக்கும். அதற்கு விருப்பு வெறுப்பு கிடையாது. அதன் வேலை அதன் எதிரில் நிற்பது பாவியோ, ஞானியோ யாராக இருந்தாலும் எதுவாக இருந்தாலும் சரி, அதை அப்படியே அசலாக பிரதிபலிக்கும். தன்னுணர்வு வெறுமனே பிரதிபலிக்கும் – ஆகவேதான் தன்னுணர்வு உள்ள மக்களை விழிப்புணர்வுள்ள மனிதனை உன்னால் புரிந்து கொள்ளவே முடியாது. கௌதம புத்தர் வாழ்ந்த காலகட்டத்தில் ஒரு மனிதன் இருந்தான், அவன் மிகவும்கோபக்காரனாகவும் வன்முறையாளனாகவும் இருந்தான். எந்த காரணத்தினாலேயோ அவன் கொலைகாரனாகி ஆயிரம் பேரை கொன்று அவர்கள் தலைகளை வெட்டுவேன் என்று சபதம் எடுத்திருந்தான். எத்தனை பேரை கொன்றோம் என்ற எண்ணிக்கை தெரிவதற்காக அவன் தான் கொன்ற மனிதனின் கட்டை விரலை வெட்டி விடுவான். அப்படி வெட்டப்பட்ட விரல்களை மாலையாக்கி கழுத்தில் அணிந்திருந்தான். அவன் படிப்பறிவில்லாதவன், எனவே எண்ணிக்கை தெரிவதற்காக அவன் கழுத்தில் அணிந்திருந்தான். ஆயிரம் என்பது பெரிய எண் அல்லவா? மேலும் ஆயிரம் பேரை கொல்வதற்க்கு பல ஆண்டுகள் பிடித்தன. அவன் அந்த ஊரை விட்டு வெளியே போயும் பல பேரை கொன்றான். அவன் கிட்டத்தட்ட 999 பேரை கொன்று விட்டான். அவனது பெயரே அங்குலிமால் – விரல்களை மாலையாய் அணிந்திருப்பவன் – என்று மாறி விட்டது. அவனைப்பற்றிய பயம் மிகவும் அதிகமாகி விட்டதால் அவன் இருக்கும் பாதையே வெறிச்சோடி விட்டது. யாரும் அந்த பாதையை பயன்படுத்துவதேயில்லை. அவன் இருக்கும் திசைக்கே யாரும் வருவதில்லை. அரசர்கள் கூட தங்களது படை செல்லக் கூட அந்த பாதையை பயன்படுத்துவதில்லை. ஒரு தனி மனிதன் அந்த அரசையே நடுங்க வைத்துக் கொண்டிருந்தான். அவன் ராஜா பிரஜென்ஜீதாவின் அரசினுள் இருந்தான். கௌதம புத்தர் பிரஜென்ஜீதாவின் ராஜ்ஜியத்தினுள் இருந்து வேறொரு அரசிற்கு செல்ல வேண்டி பயணப்பட்டார். மிக அழகான பாதையொன்று வெறிச்சோடிக் கிடப்பதைப் பார்த்த அவர் அந்த பாதையை பயணம் செய்ய தேர்ந்தெடுத்தார். அவரது சீடர்கள், "நீங்கள் என்ன செய்கிறீர்கள்? அங்குலிமாலைப் பற்றி கேள்விப்பட்டதில்லையா? அவனை எப்போதும் வந்து பார்த்து விட்டு போகும். அவனது சொந்த தாய் கூட பயந்து கொண்டு அவனை பார்க்க வருவதில்லை. அவனுக்கு அவனது மாலையை பூர்த்தி செய்ய இன்னும் ஒரே ஒரு விரல் தான் வேண்டும். அவன் தனது தாயாக இருந்தாலும் கூட தலையை வெட்ட தயங்காத ஆள் அவன். ஆகவே அவனது தாய் கூட அவனை பார்க்க செல்வதில்லை. ஆகவே போக வேண்டாம்." என்று கூறினார்கள். கௌதம புத்தர், "நீங்கள் என்னிடம் இதை சொல்லியிருக்காவிட்டால் நான் பாதையை மாற்றி போயிருக்க கூடும். ஆனால் இப்போது அது சாத்தியமில்லை. ஏனெனில் அந்த மனிதனுக்கு இன்னும் ஒரே ஒரு விரல்தான் வேண்டும், இன்னும் ஒரே ஒரு தலையை தான் வெட்ட வேண்டும். ஆனால் யாரும் கிடைக்காமல் சிரமப் பட்டுக் கொண்டிருக்கிறான். என்னிடம் ஒரு தலை உள்ளது, பத்து விரல்கள் இருக்கிறது. இப்படி யாருமே இந்த வழியில் போகாமல் இருந்தால் பாவம் அவனால் எப்படி தனது சபதத்தை பூர்த்தி செய்ய முடியும்? நான் போகப் போகிறேன். நானே போக வில்லையென்றால் வேறு யார் போவார்கள்?" என்றார். சீடர்களால் அவர் கூறுவதை புரிந்து கொள்ள முடிய வில்லை. தானே தன் தலையை கொண்டு போய் மரணத்தின் வாயில் வைப்பதா…….. ஆனால் கௌதம புத்தர் போவேன் என்று கூறும்போது வேறு வழியில்லை, அவர்கள் பின் தொடர்ந்து போய்தானாக வேண்டும். எப்போதும் சீடர்களிடையே யார் புத்தரின் அருகில் நடந்து செல்வது என்பதில் போட்டியிருக்கும், ஆனால் இன்று அது தலைகீழ். யார் கடைசியாக வருகிறார்கள் என்பதில்தான் போட்டி இருந்தது. ஆகவே முன்பு எப்போதும் இல்லாத அளவு புத்தருக்கும் சீடர்களுக்கும் இடையே இடைவெளி இருந்தது. அங்குலிமால் தனது கத்தியை மிகவும் கூராக்கி வைத்துக் கொண்டான். பல நாட்களாக யாருமே இந்த பாதையில் வரவில்லை, இன்று தூரத்தில் யாரோ வருவதை பார்த்தவுடன் அவன் கத்தியை பாறையில் கல்லில் தேய்த்து தயாரித்துக் கொண்டான். அவன் தயாராக இருந்தான். இன்று அவனது ஆசை பூர்த்தியடையப் போவதை நினைத்து அவன் மிகவும் மகிழ்ந்தான். ஆனால் கௌதம புத்தர் சிறிது தொலைவில் நெருங்கி வந்த போது, அவன் அவரை பார்த்தான். அவனால் அவரது அழகை, அவரது அமைதியை, அவரது அன்பை, அவரது கருணையை பார்க்க முடிந்தது. எந்தவிதமான கவலையுமின்றி 999 பேரை கொன்ற மனிதன் கூட ஒரு கணம் தயங்கினான். ‘இந்த மனிதனைக் கொல்லக் கூடாது, இந்த உலகத்திற்கு இது போன்ற மனிதர்கள்தான் மேலும் மேலும் அதிக அளவில் தேவை. நான் ஒரு பாவிதான், கொலைகாரன்தான். ஆனாலும் இது போன்ற ஒரு அப்பாவியான மனிதனை கொல்லக் கூடிய அளவிற்கு நான் தரையிறங்க மாட்டேன்." என்று நினைத்துக் கொண்டான். ஆகவே அவன் கௌதம புத்தரை பார்த்து, "என்னை நோக்கி இன்னும் ஒரு அடி கூட எடுத்து வைக்க கூடாது. திரும்பி போங்கள். ஒருவரை உயிரோடு நான் திரும்பி போக சொல்வது இதுதான் முதன் முறை. உங்களுக்கு என்னைப் பற்றி எதுவும் தெரியாமல் இருக்கலாம். என் பெயரே அங்குலி மால். விரல்கள் என் கழுத்தில் மாலையாக கிடப்பதைப் பாருங்கள். நான் இது வரை 999 பேரை கொன்றிருக்கிறேன். இன்னும் ஒரு அடி முன்னால் வந்தால் கூட நீங்கள் யாரென்பதைப் பற்றி சிறிதும் கவலைப் பட மாட்டேன். நீங்கள் சாதாரணமானவர் இல்லை என்பதை என்னால் பார்க்க முடிகிறது. நான் பல அரசர்களை கூட கொன்றிருக்கிறேன். ஆனால் யாரிடமும் இத்தகைய அழகையும் ஜொலிப்பையும் நான் கண்டதில்லை. இப்படி ஊடுருவக் கூடிய கண்கள் யாரிடமும் இருந்து நான் பார்த்ததில்லை. நீங்கள் தனித்துவமானவர். தயவுசெய்து நான் சொல்வதை கேளுங்கள், திரும்பி போய் விடுங்கள். உங்களை கொலை செய்ய என்னை தூண்டாதீர்கள்." என்று கத்தினான். கௌதம புத்தர், "அங்குலிமால், நீ தவறாக புரிந்து கொண்டிருக்கிறாய். நான் முப்பது வருடங்களுக்கு முன்பே நகர்வதை நிறுத்தி விட்டேன். என்னுடைய மனம் நகர்வதை நிறுத்திய அந்த கணமே எனது அசைவுகள் அனைத்தும் நின்று விட்டன. ஆசை தான் மக்களை ஆட்டுவிக்கிறது. என்னிடம் எந்த ஆசையும் கிடையாது. என்னால் எப்படி நகர முடியும்? நான் நகர்வதில்லை அங்குலிமால், நீதான் நகர்ந்து கொண்டிருக்கிறாய். உன்னுடைய மனதில் ஏகப்பட்ட ஆசைகள், எண்ணங்கள் இருக்கின்றன. அதனால் நீதான் தூக்கத்தில் கூட நகர்ந்து கொண்டே இருக்கிறாய். ஆகவே நீதான் நிற்க வேண்டும். நான் நிறுத்தப் போவதில்லை,. ஏனெனில் முப்பது வருடங்களுக்கு முன்பே நான் நிறுத்தி விட்டேன். நீதான் நிறுத்த வேண்டும்." என்றார். அங்குலிமால், "நீங்கள் வெறும் அழகான அப்பாவி மட்டுமல்ல, ஒரு தனிசிறப்பானவரும் கூட. மேலும் பைத்தியகாரனும் கூட. நான் நின்று கொண்டிருக்கிறேன், நீங்கள் நகர்ந்து வந்து கொண்டிருக்கிறீர்கள். ஆனால் நீங்கள் நின்று கொண்டிருப்பதாகவும் நான் நகர்ந்து கொண்டிருப்பதாகவும் நீங்கள் கூறுகிறீர்கள்." என்றான். புத்தர், "ஆனால் இது கேலியல்ல. இதை நீ சரியாக புரிந்து கொள்ள வேண்டும்". என்றார். அங்குலிமால், "என் கையில் உள்ள வாள் சூரிய ஒளியில் பளபளப்பதை காண்கிறாயா? இது விரைவில் உனது தலையை வெட்டிவிடும். நான் சொல்வதை கேள்." என்று கத்தினான். புத்தர், "என்னால் எதுவும் செய்ய முடியாது. ஒருவர் இரண்டு முறை நிற்க முடியாது. நீ என்னை மன்னித்து விடு. எல்லாமும் நின்று விட்டது. காலம் நின்று விட்டது, மனம் நின்று விட்டது. என்னைப் பொறுத்தவரை எல்லாமும் நின்று விட்டது. முப்பது வருடங்களாக என்னிடம் எந்த அசைவும் இல்லை." என்றார். மேலும் அவர் அங்குலிமாலை நெருங்கி வந்து கொண்டே இருந்தார். இறுதியில் அவர் அவன் முன்னால் வந்து நின்று அங்குலிமாலிடம், "நீ எனது தலையை வெட்ட விரும்பினால் வெட்டிக் கொள். உண்மையில் நான் உனக்காகவே வந்தேன். ஒரே ஒரு தலையை வெட்டுவதற்காக நீ வருடக்கணக்கில் காத்துக் கொண்டிருக்கிறாய் என கேள்விப்பட்டேன். இது மிகவும் அதிகம். யாராவது உன்னிடம் கருணை காட்ட வேண்டும். நான் இந்த தலையை உபயோகிப்பதில்லை, இந்த உடலால் வாழவில்லை. என்னால் இந்த உடல் இன்றியும் வாழ முடியும். நீ இந்த தலையை எடுத்துக் கொள். என்னுடைய விரலை வெட்டிக் கொள். என்ன வேண்டுமானாலும் செய்து கொள்……… ஆனால் அதை செய்வதற்கு முன் இறக்கப்போகும் மனிதனின் கடைசி ஆசையை நிறைவேற்றி வைப்பாயா?" என்று கேட்டார். அங்குலிமால், "சரி, நான் யார் கேட்பதையும் நிறைவேற்றி வைப்பதில்லை. ஆனால் நீ மிகவும் தைரியசாலியாக இருக்கிறாய். நீ என்னைக் கூட பயமுறுத்தி விட்டாய். உன்னுடைய விருப்பம் எதுவாக இருந்தாலும் நான் அதை நிறைவேற்றிவைக்கிறேன்." என்றான். கௌதம புத்தர், "நாம் நிற்கும் இந்த மரத்தின் இந்த கிளையை வெட்டு." என்றார். அங்குலிமால் உடனடியாக அந்த கிளையை வெட்டி விட்டு, புத்தரிடம், "மறுபடி மறுபடி நீ வித்தியாசமானவன் என்பதை நிரூபிக்கிறாய். என்ன ஆசை இது?" என்று கேட்டான். புத்தர், "இது ஆசையின் ஒரு பாதி தான், மறு பாதி திரும்பவும் அதை அந்த மரத்திலேயே ஒட்ட வைத்து விடு." என்றார். அங்குலிமால், "கடவுளே, இவன் ஒரு பைத்தியகாரனாக இருக்கிறானே, எப்படி ஒட்ட வைக்க முடியும்?" என்று கேட்டான். புத்தர், "உன்னால் ஒட்ட வைக்க முடியாது எனும்போது வெட்ட உனக்கு என்ன உரிமை இருக்கிறது? இரண்டாவது வெட்டுவதால் நீ உன்னை மிகச் சிறந்த வீரனாக நினைத்துக் கொண்டிருக்கிறாயா? குழந்தை கூட அதை செய்து விடும். உனக்கு ஏதாவது துணிச்சலும் புத்திசாலித்தனமும் இருக்குமானால் அதை ஒட்ட வை. அதுதான் உன்னை நிரூபிக்கும். வெட்டுவது அல்ல" என்றார். அங்குலிமால், "அது இயலாத காரியம்" என்றான். அப்போது புத்தர், "அப்படியானால் இந்த 999 விரல் மாலையை வீசியெறி. அதை விட்டுவிடு. வாளையும் எறிந்து விடு. இவை தைரியசாலிகளுக்கானவை அல்ல, இவை கோழைகள் தங்களது கோழைத்தனத்தை மறைக்க உபயோகப்படுத்துபவை. நான் உன்னை உண்மையான வீரனாக மாற்றுகிறேன்." என்றார். அங்குலிமால், "இதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. நான் பார்த்ததிலேயே இவ்வளவு தைரியமுள்ள மனிதன் நீங்கள் தான்." என்றான். அவன் வாளையும் அந்த விரல் மாலையையும் விட்டெறிந்து விட்டு, புத்தரின் காலடியில் விழுந்து, "எனக்கு தீட்சை கொடுங்கள். நீங்கள் கௌதம புத்தரைத் தவிர வேறு யாராகவும் இருக்க முடியாது. நான் கௌதம புத்தரைப் பற்றி கேள்விப்பட்டேன். என் எதிரில் நிற்பது கௌதம புத்தர்தான் என்பதை என்னால் பார்க்க முடிகிறது."என்றான். புத்தர் அங்குலிமாலுக்கு தீட்சை கொடுத்தார். இதைத்தான் நான் விழிப்புணர்வு கொண்ட மனிதன் என்று கூறுகிறேன். அவருக்கு எந்த வரையறையும் கிடையாது. அவர், "நீ ஒரு பாவி. நீ தன்னந்தனியாக இத்தனை மனிதர்களை கொன்று குவித்திருக்கிறாய். மனித குல வரலாற்றிலேயே தனியனாக வேறு யாரும் உன்னுடன் போட்டியிட முடியாத அளவு கொலை செய்திருக்கிறாய். இப்போது நீ துறவியாக விரும்புகிறாயா?" என்று அவர் கேள்வி கேட்க வில்லை. அவர் அவனுக்கு தீட்சை கொடுத்தார். இவர் இப்படி செய்வார் என்று அவரது சீடர்களாலேயே நம்ப முடிய வில்லை. அவர் மிகப் பெரிய பண்டிதர்களை, அறிவாளிகளை, தீட்சை கொடுக்காமல் திருப்பி அனுப்பியிருக்கிறார். ஆனால் ஒரு கொலைகாரனுக்கு மறுக்கவில்லை. மிகவும் காலதாமதமாகிவிட்ட படியால் அவர்கள் திரும்பவும் பிரஜென்ஜீதாவின் அரசிற்கே திரும்பி வந்தனர். அரசன் நடந்தவற்றை கேள்விப்பட்டான். அவனே அங்குலிமாலுக்கு பயந்து கொண்டு அந்த வழியே போவதை நிறுத்திவிட்டிருந்தான்.அங்குலிமால் ஒரு கிறுக்கன், அவன் அரண்மனைக்கு அருகில் இருப்பது ஆபத்தானது என அரசன் கவலைப்பட்டான். பிரஜென்ஜீதா அடுத்த நாள் புத்தரைப் பார்க்க வந்தான். அவன் எப்போதும் அவரை மிகவும் மதிப்பவன். ஆகவே அவர் சொற்பொழிவுகளை கேட்க தினமும் வருவான். ஆனால் முதல்தடவையாக அவன் புத்தரை பார்க்க தனது உடைவாளுடன் வந்தான். நீ ஞானமடைந்த ஒருவரின் சொற்பொழிவை கேட்க உடைவாளுடன் வர வேண்டிய அவசியமில்லை. ஆனால் பிரஜென்ஜீதா, "என்னை மன்னித்து விடுங்கள். நீங்கள் அங்குலிமாலுக்கு தீட்சை கொடுத்திருக்கிறீர்கள் என்பதை கேள்விப்பட்டதால் நான் வாளுடன் வந்தேன்." என்றான். அவன் மிகவும் பதட்டத்தோடு காணப்பட்டான். அவனுக்கு வேர்த்துக் கொட்டியது. புத்தர், "ஆம், ஆனால் வாளுக்கு இங்கே வேலையில்லை. அங்குலிமால் இப்போது ஒரு சன்னியாசி, புத்தபிக்கு, அவனைப் பார்த்து நீங்கள் பயப்பட வேண்டிய அவசியமில்லை." என்றார். ஆனால் அரசன், "அதெல்லாம் சரிதான். எங்கே அவன்? நான் அவன் முகத்தை பார்க்க வேண்டும். என்னுடைய வாழ்வில் அவன் ஒரு அச்சுறுத்தலாகவே இருந்திருக்கிறான்." என்றான். அங்குலிமால் புத்தரின் அருகில்தான் அமர்ந்திருந்தான். புத்தர், அவனைக் காட்டி, "இதோ பார் – இவன்தான் அங்குலிமால்!" என்றார். அங்குலிமால் என்ற பெயரைக் கேட்டு அவனைப் பார்த்தவுடனே பிரஜென்ஜீதா தனது வாளை உருவினான். அவனது பெயரே குலைநடுங்கச் செய்வதாக இருந்தது. புத்தர் சிரித்தார், அங்குலிமாலும் சிரித்தான். அவன் அரசனிடம், "உனது வாளை உறையினுள் வை. நீ இப்பேற்பட்ட வாள்வீரனாக இருந்தால் நான் அங்குலிமாலாக இருந்த போது வந்திருக்க வேண்டும். நான் இப்போது ஒரு சன்னியாசி. வாளை உறையினுள் வை." என்றான். அவன் சொன்ன முறையை கேட்ட பிரஜென்ஜீதா அப்படியே செய்தான். அங்குலிமால் எங்கே இருந்தாலும் அங்குலிமால்தான். அரசன் கூட அவன் சொன்னதை கேட்டாக வேண்டும். புத்தர், "அங்குலிமால்! நீ உனது தொனியை மாற்றிக் கொண்டாக வேண்டும். நீ உனது வழிமுறைகளை மாற்றிக் கொள்ள வேண்டும். நீ இப்போது ஒரு சன்னியாசி. நீ இன்று பிச்சையெடுக்கப் போகும்போது எது வேண்டுமானாலும் நடக்கலாம். ஏனெனில் இந்த முழு அரசும் உன்னைக் கண்டு பயந்து நடுங்கிக் கொண்டிருக்கிறது. நீ பிச்சை எடுக்கப் போகும்போது உனக்காக எந்த கதவும் திறக்காமல் போகலாம். பயத்தினால்….. எதிர்க்காதே. இந்த எளிய மக்களால் உன்னுடைய மாறுதலை பார்க்க முடியாது. அவர்கள் பழி தீர்க்கக் கூட செய்யலாம். ஆனால் நீ ஒரு சன்னியாசி என்பதை நீதான் நிரூபிக்க வேண்டும்" என்றார். அங்குலிமால் சென்றான். புத்தர் என்ன நடக்கப் போகிறதென்று அறிந்துகொள்ள அவன் பின்னே சென்றார். அவர் சொன்னதுதான் நடந்தது – கதவுகள் எதுவும் திறக்கவில்லை, அவனுக்கு சாப்பிட யாரும் எதுவும் கொடுக்க வில்லை. மக்கள் தங்களது வீட்டின் மாடியில், கூரையில் நின்று கொண்டு அவன் மேல் கற்களை வீசினார்கள். – நெருங்கி வர பயந்து கொண்டு தூரத்தில் இருந்த படியே மாடியில் கூரையில் நின்றபடி அவன் மேல் கற்களை மழையாக பொழிந்தனர். இறுதியில் அங்குலிமால் தெருவில் வீழ்ந்த பின்னும் அவர்கள் அவன் மேல் கற்களை வீசிக் கொண்டே இருந்தனர். அவன் உடல் முழுவதும் ரத்தகாயமாக இருந்தது. புத்தர் அவனை நெருங்கி வந்த போது அவன் கற்களால் மூடப் பட்டு ரத்த வெள்ளத்தில் கிடந்தான். அவனை அந்த கற்களிலிருந்து வெளியே இழுத்த போது அவன் தனது கடைசி நிமிடங்களில் இருந்தான். புத்தர், "அங்குலிமால், நீ ஒரு சன்னியாசி என்பதை நிரூபித்து விட்டாய். ஒரு வினாடியில் ஒரு பாவி துறவியாக முடியும் என்பதை நீ நிரூபித்து விட்டாய். நீ ஒரு பாவியாக வாழ்ந்தாய். ஆனால் ஒரு துறவியாக இறக்கிறாய்" என்றார். அங்குலிமால் புத்தரின் பாதங்களை தொட்டவண்ணம் உயிரை விட்டான். |
1 | ['tam'] | கீழே கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பைக் கொடு.
கதை: கூனனை ஏமாற்றிய கதை ஒரு முறை ராஜகுருவை தெனாலிராமன் அவமானப் படுத்தி விட்டான் என்ற குற்றச் சாட்டு அரசவைக்குக் கொண்டு வரப்பட்டது. தெனாலிராமனின் எந்த சமாதானத்தையும் அரசர் கேட்கத் தயாராக இல்லை. இராமனுக்குத் தண்டனையை அளித்து விட்டார். இராமன் மீது பொறாமை கொண்ட ராஜகுருவும் மன்னனைத் தூண்டி விட்டார்.ராஜகுருவை அவமதித்தது மன்னனையே அவமதித்ததாகும். எனவே இக்குற்றத்திற்கு மன்னிப்பே கிடையாதுஎன்று சொல்லி ராஜகுருவையே தண்டனையளிக்கும்படி கேட்டுக் கொண்டார் மன்னர் .ராஜகுரு தண்டனையைக் கூறினார்.” கழுத்து வரை தெனாலிராமனை மண்ணில் புதைத்து விட்டு யானையின் காலால் தலையை இடறச் செய்து கொல்ல வேண்டும்” என்று தண்டனையளித்தார். மன்னரும் ” அப்படியே செய்யுங்கள்” என்று ஆணை பிறப்பித்தார். ஆணையை சிரமேற்கொண்ட காவலர்கள் தெனாலிராமனை இழுத்துக் கொண்டு காட்டுக்குச் சென்றனர். வழியில் இராமன் அவர்களோடு என்னெனவோ பேச்சுக் கொடுத்துப் பார்த்தான். ஆனால் ராஜகுரு காவலர்களை எச்சரித்து தெனாலிராமன் ஏதேனும் பேசித் தப்பிவிடுவான். அதனால் எதுவும் பேசாதீர்கள் என்று கூறியிருந்தார். இந்த எச்சரிக்கை காரணமாக காவலர்கள் எதுவும் பேசாமல் நடந்தனர். ஊருக்கு எல்லையில் காடு இருந்தது. அங்கே ஒற்றையடிப்பாதை வழியே தெனாலிராமனை அழைத்துச் சென்றனர். மக்கள் நடமாட்டமில்லாத அமைதியாக இருந்த இடத்தில் நின்றார்கள். அந்த இடத்தில் ஒரு பெரிய பள்ளம் தோண்டினார்கள். தெனாலிராமனை அந்தப் பள்ளத்தில் இறக்கி கழுத்தளவு மண்ணால் மூடி விட்டு யானையைக் கொண்டுவர அரண்மனைக்குச் சென்று விட்டார்கள்.தெனாலிராமன் தப்பிச் செல்ல வழியறியாது திகைத்து மண்ணுக்குள் தவித்துக் கொண்டிருந்தான். சற்று தூரத்தில் ஒற்றையடிப் பாதை வழியாக யாரோ வருவது தெரிந்தது. “அய்யா!” தெனாலிராமன் பெருங் குரலெடுத்துக் கூவி அழைத்தான். அந்த மனிதன் ராமனின் குரல் கேட்டு மெதுவாக அச்சத்துடன் அருகே வந்தான். அவனைப் பார்த்த ராமன் “பயப்படாதீர்கள். அருகில் வாருங்கள்.”என அழைத்தான். வந்தவன் தன் முதுகில் இருந்த துணி மூட்டையைக் கீழே இறக்கி வைத்து விட்டு ராமனின் முகத்தருகே அமர்ந்தான். “யாரையா உம்மை மண்ணுக்குள் புதைத்தது?” என்றான். இராமன் வந்தவனின் முதுகைப் பார்த்தான். அவன் ஒரு வண்ணான் மூட்டை சுமந்து சுமந்து அவன் முதுகு வளைந்து கூனனாகியிருக்கிறான் என்பதைத் தெரிந்து கொண்டான். சட்டென சமயோசிதமாய்ப் பேசினான் இராமன்.“அய்யா! நானும் உம்மைப் போல கூனனாக இருந்தேன். ஒரு பெரியவர் என்னிடம் ஒரு நாள் முழுவதும் மண்ணுக்குள் புதைந்திருந்தால் கூன் நிமிர்ந்து விடும் என்று சொன்னார். நான் காலை முதல் மண்ணுக்குள்ளேயே இருக்கிறேன். என்னைத் தூக்கி விடும் என் கூன் நிமிர்ந்து விட்டதா பார்க்க ஆசையாக இருக்கிறது” என்றான்.கூனனும் இராமனை வெளியே எடுத்தான். இராமன் தன் கூனல் நிமிர்ந்து விட்டதாக மகிழ்ச்சி கொள்வது போல நடித்தான். அதை உண்மையென நம்பிய கூனனாகிய வண்ணான் தன்னையும் மண்ணில் புதைத்து , தன் கூனல் நிமிர வழி செய்யும்படி வேண்டிக் கொண்டான். தெனாலிராமனும் வண்ணானைக் குழிக்குள் இறக்கி கழுத்து வரை மண்ணால் மூடிவிட்டுத் தன் வீடு நோக்கிச் சென்றான்.யானையுடன் வந்த காவலர்கள் தாங்கள் விட்டுச் சென்ற இடத்தில் இராமனுக்குப் பதிலாக வேறொருவன் இருப்பதைப் பார்த்துத் திகைத்தனர். அந்த வண்ணானை அழைத்துக் கொண்டு மன்னரிடம் சென்று ராமனின் தந்திரத்தைக் கூறினர். ராமனின் திறமையைக் கண்டு அவனை மன்னித்து விடுதலை செய்தார் மன்னர்.
| கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பு 'கூனனை ஏமாற்றிய கதை' என்பதாகும். |
2 | ['tam'] | கீழே கொடுக்கப்பட்டுள்ள வார்த்தைகளையும் தலைப்பையும் பயன்படுத்தி சிறு கதை எழுதுக.
வார்த்தைகள்: போர்வீரன், ஜென் குரு, நரகம், பிச்சைக்காரன், வாள், நரகத்தின் கதவுகள், சொர்க்கத்தின் கதவுகள்
தலைப்பு: சொர்க்கம் - நரகம்
| போர்வீரன் ஒருவன் ஜென் குருவை அணுகிக் கேட்டான். "ஐயா, சொர்க்கம் அல்லது நரகம் என்று உண்மையிலேயே ஏதாவது இருக்கிறதா?" அவனுடைய கேள்விக்குப் பதில் சொல்லாமல் அவனைப் பார்த்துக் கேட்டார் குரு- "நீ உண்மையிலேயே ஒரு போர்வீரனா? பார்த்தால் பிச்சைக்காரன் போல இருக்கிறாய். உன்னைத் தன் படைவீரனாக நியமித்திருக்கும் உன்னுடைய அரசன் எப்பேர்ப்பட்ட பிச்சைக்காரனாக இருப்பான்?" போர்வீரன் கடுங்கோபத்துடன் வாளை உறையில் இருந்து உருவத் துவங்கினான். ஓஹோ. வாளை வைத்திருக்கிறாயோ? அதற்கு என் தலையை சீவும் வல்லமை இருக்கிறதா என்று கேட்டார் குரு. அவன் ஏறத்தாழ அவர் தலையை சீவத் தயார் ஆனான். அவன் கையைப் பிடித்து நிறுத்தி குரு சொன்னார் "இப்போது நரகத்தின் கதவுகள் திறக்கின்றன" அவன் ஒருவாறு சமாளித்து தலைகுனிந்து வெட்கி அவரை வணங்கி நின்றான். குரு சொன்னார்- "இப்போது சொர்க்கத்தின் கதவுகள் திறந்து விட்டன.. |
2 | ['tam'] | கீழே கொடுக்கப்பட்டுள்ள வார்த்தைகளையும் தலைப்பையும் பயன்படுத்தி சிறு கதை எழுதுக.
வார்த்தைகள்: நண்பர்கள், பஞ்சு, வியாபாரம், எலிகள், பூனை, கொலுசு, அணிகலன், கால், மருந்து
தலைப்பு: ஆளுக்கு ஒரு கால்!
| நான்கு நண்பர்கள் கூட்டாக பஞ்சு வியாபாரம் செய்து வந்தனர். அவர்களது பஞ்சுக்கடையில் ஏராளமான எலிகள் சேர்ந்து பஞ்சுப் பொதிகளை நாசமாக்கி விட்டன. எலிகளை ஒழிப்பதற்காகப் பூனை ஒன்றை வளர்க்கலாம் என்று நால்வரில் ஒருவன் அபிப்பிராயம் சொன்னான். மற்ற மூவரும் அவன் கருத்தை ஆதரித்தனர். நால்வருமாகச் சேர்ந்து ஒரு பூனையை வளர்க்க ஆரம்பித்தனர். பூனை வந்ததிலிருந்து எலிகளின் உபத்திரவம் குறைந்தது. இதன் காரணமாக நால்வருக்கும் பூனையின் மேல் மிகுந்த அன்பு ஏற்பட்டு விட்டது. பூனைக்குச் சகலவித உபசாரங்களும் செய்ய ஆரம்பித்தனர். அத்துடன் நில்லாமல் அதன் கால்களுக்குத் தண்டை கொலுசு முதலியன்வைகளை அணிவித்து அழகுபடுத்த நினைத்தார்கள். இதை நடைமுறைக்கு கொண்டு வரும்போது பல சிக்கல்கள் வந்தன. எனவே வியாபாரிகள் நால்வரும் பூனையின் நான்கு கால்களை ஆளுக்கு ஒன்றாகப் பங்கிட்டுக் கொண்டனர். அவரவர்க்குச் சொந்தமான கால்களில் தங்களுக்கு விருப்பமான அணிகலன்களைப் பூட்டி மகிழ்ந்தனர். ஒரு நாள் பூனை நொண்டிக் கொண்டே வந்தது. இதைப் பார்த்த வியாபாரிகளில் ஒருவன் தன் நண்பனிடம், "நண்பா, உனக்குச் சொந்தமான காலில் அடிபட்டு விட்டது. ஜாக்கிரதையாக மருந்து போட்டு குணப்படுத்து" என்றான். அந்தக் காலுக்கு உரியவனும் பூனையின் காயத்தைத் துடைத்து எண்ணெய்த் துணியால் அதைச் சுற்றி வைத்தான். |
1 | ['tam'] | கீழே கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பைக் கொடு.
கதை: “குரு நாதா! இனிமேல் நாம் மருத்துவத் தொழில் செய்தால் என்ன?” எனக் கேட்டான், முட்டாள். “அதனால் நமக்கு என்ன பயன்?” என்று பரமார்த்த குரு கேட்டார். “பணம் கிடைக்கும். அத்துடன் புண்ணியமும் கிடைக்கும்” என்றான், மூடன். “அப்படியே செய்வோம்” என்றார் குரு. “மனிதர்களுக்கு மட்டும்தானா?” என்று கேட்டான் மண்டு. “மனிதர்க்கும் வைத்தியம் செய்வோம்; மாட்டுக்கும் செய்வோம்; குழந்தைக்கும் செய்வோம்; குரங்குக்கும் செய்வோம்!” என்றான் மட்டி. பரமார்த்தரும் அவரது ஐந்து சீடர்களும் மருத்துவம் செய்யும் செய்தி ஊர் முழுதும் பரவியது. காய்ச்சலால் அவதிப்பட்ட ஒருவன் வந்தான். அவன் உடலைத் தொட்டுப் பார்த்த மடையன், “குருவே! இவன் உடம்பு நெருப்பாகச் சுடுகிறது!” என்றான். “அப்படியானால் உடனே உடம்பைக் குளிர்ச்சி அடையச் செய்ய வேண்டும்!” என்றார் பரமார்த்தர். “அதற்கு என்ன செய்வது?” எனக் கேட்டான் முட்டாள். “இந்த ஆளைக் கொண்டுபோய்த் தொட்டியில் உள்ள தண்ªரில் அழுத்தி வையுங்கள். ஒரு மணி நேரம் அப்படியே கிடக்கட்டும்” என்றார் குரு. உடனே மட்டியும் மடையனும் அந்த நோயாளியைத் தூக்கிக் கொண்டு போய், தொட்டி நீரில் போட்டனர். முட்டாளும் மூடனும் மாற்றி மாற்றி அவனை நீரில் அழுத்தினார்கள். நோயாளியோ “ஐயோ, அம்மா!” என்று அலறியபடி விழுந்தடித்து ஓடினான். கொஞ்ச நேரம் கழித்து ஒரு கிழவி வந்தாள். “கண் வலிக்கிறது” என்றாள். “இப்போது நேரமில்லை. உண் கண்ணை மட்டும் தோண்டி எடுத்துக் கொடுத்து விட்டுப்போ. சரி செய்து வைக்கிறோம்!” என்றான் முட்டாள். கிழவியோ, “ஐயையோ” என்று கத்திக் கொண்டு ஓடினாள். சிறிது நேரம் சென்றது. “உடம்பெல்லாம் வெட வெட என்று நடுங்குகிறது என்றபடி ஒருவன் வந்தான். “சும்மா இருப்பதால்தான் ஆடுகிறது. உடம்பு முழுவதும் கயிறு போட்டுக் கட்டி விடுங்கள்! அப்போது எல்லாம் சரியாகிவிடும்” என்றார் பரமார்த்தர். முட்டாளும் மூடனும், வந்தவனை இழுத்துக் கொண்டு சென்று தூணில் கட்டி வைத்தனர். கட்டி வைத்த பிறகும் அவன் உடம்பு நடுங்குவதைக் கண்ட மட்டி, “குருதேவா! இது குளிரால் வந்த நோய். இது தீர வேண்டுமானால், இவன் உடம்பைச் சூடாக்க வேண்டும்!” என்றான். அதைக் கேட்ட முட்டாள் தன் கையிலிருந்த கொள்ளிக் கட்டையால் நோயாளியின் உடல் முழுவதும் வரிவரியாகச் சூடு போட்டான். வலி தாங்காத நோயாளி சுருண்டு விழுந்தான். “பல் வலி தாங்க முடியவில்லை. என்ன செய்வது?” என்று கேட்டபடி வேறொருவர் வந்தார் “வலிக்கிற பல்லை எடுத்து விட்டால் சரியாகி விடும்” என்றார் பரமார்த்தர். சீடர்களோ, ஆளுக்குக் கொஞ்சமாக எல்லா பல்லையும் கத்தியால் தட்டி எடுத்துப் பொட்டலமாகக் கட்டிக் கொடுத்தனர்! “இனிமேல் உனக்குப் பல்வலியே வராது!” என்றார் பரமார்த்தர் சற்று நேரம் கழிந்தது. யானைக்கால் வியாதிக்காரன் ஒருவன் வந்தான். “உலகிலேயே இதற்கு இரண்டு வகையான வைத்தியம்தான் இருக்கிறது. நன்றாக இருக்கிற காலை வெட்டிவிட்டு, அந்த இடத்தில் யானையின் காலை ஒட்டி விட வேண்டும். இல்லாவிட்டால் அந்தக் காலுக்குச் சமமாக இந்தக் காலில் உள்ள சதையைச் செதுக்கி எடுத்து விட வேண்டும்!” என்றார் பரமார்த்தர் யானைக்கால் வியாதிக்காரனோ, “காலை விட்டால் போதும்” என்று தப்பினான். “ஐயா! ஒரே இருமல். தொடர்ந்து இருமிக் கொண்டே இருக்கிறþன்” என்றபடி வேறு ஓர் ஆள் வந்தார். வாயைத் திறப்பதால்தானே இருமல் வருகிறது. வாயை மூடிவிட்டால் என்ன? என்று நினைத்தார், பரமார்த்தர். “இவர் வாயை அடைத்து விடுங்கள்!” என்று கட்டளை இட்டார். குருவின் சொல்படி, கிழிந்த துணிகளை எல்லாம் சுருட்டி, இருமல்காரனின் வாயில் வைத்துத் திணித்தான் மட்டி. “என் ஆடு சரியாகத் தழை தின்னமாட்டேன் என்கிறது” என்றபடி ஒருவன் வந்தான். அந்த ஆட்டைக் கண்ட குரு, “தொண்டையில் ஏதாவது அடைத்துக் கொண்டு இருக்கும்” என்றார். “வாயைப் பெரிதாக ஆக்கிவிட்டால் போதும்” என்றான் மடையன். கத்தி ஒன்றைத் தூக்கிக் கொண்டு வந்தான், முட்டாள். அதைப் பிடுங்கி, ஆட்டை வெட்டப் போனான் மூடன். பயந்துபோன ஆட்டுக்காரன், ஆட்டை இழுத்துக் கொண்டு ஓட்டம் பிடித்தான். குருவும் சீடர்களும் வைத்தியம் என்ற பெயரில் கண்டபடி நடந்து கொள்வதைப் பற்றி எல்லோரும் பேசிக் கொண்டனர். ஊர் பெரியவர்கள் கூடி இனி குருவையும் சீடர்களையும் ஊருள் நுழையவிடக் கூடாதென முடிவெடுத்தனர்..
| கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பு 'மருத்துவத் தொழில்' என்பதாகும். |
2 | ['tam'] | கீழே கொடுக்கப்பட்டுள்ள வார்த்தைகளையும் தலைப்பையும் பயன்படுத்தி சிறு கதை எழுதுக.
வார்த்தைகள்: பிச்சைக்காரன், அதிர்ஷ்ட தேவதை
தலைப்பு: பிச்சைக்காரனும் தங்க நாணயமும்
| ஒரு பிச்சைக்காரன் உணவுக்காக வீடு வீடாக அலைந்தான். அவன் மிகவும் அசிங்கமாக, கிழிந்த உடைகளோடு, சிக்குப் பிடித்த தலைமுடியோடு இருந்தான். ஒரு பழைய கோணிப் பையே அவனுக்கு உடமையாக இருந்தது. ஒவ்வொரு வீடாகப் போய் பார்த்து விட்டு எதுவும் கிடைக்காவிட்டால் தனக்குள் அந்த வீட்டைப் பற்றி சொல்லிக் கொள்வான். ஒரு வீட்டின் முன்னே போய் சொன்ன வார்த்தைகள்; "வீடு மிகப் பெரியது. ஆனால் இங்குள்ளவர்களுக்குப் பணம் நிறைய இருந்தும் திருப்தி இல்லை. அவர்கள் எப்போதும் அதிகமாகவே எதிர்பார்க்கிறார்கள். கடைசியில் அவர்கள் பேராசையால் எல்லாவற்றையும் இழப்பார்கள்…" இன்னொரு வீட்டுக்குப் போனான். உணவு கிடைக்கவிலை. "இந்த வீட்டில் உள்ளவன் கோடீஸ்வரன். ஆனால் இருக்கிற பணத்தில் திருப்தியடையாமல் அவற்றை இரட்டை மடங்காக்க சூதாடினான். கடைசியில் எல்லாவற்றையும் இழந்தான். எனக்கோ கொஞ்சப் பணம் கிடைத்தால் போதும். திருப்தி கொள்வேன். அதிக ஆசைப் படமாட்டேன்!" என்று அந்த பிச்சைக்காரன் சொன்னதும் அதிர்ஷ்ட தேவதை அவன் முன்னே தோன்றியது. "நான் உனக்கு உதவப் போகிறேன். நீ உன்னுடைய கோணிப்பையைப் பிடி. நான் அதனுள்ளே தங்க நாணயங்கள் போடுவேன். உனக்கு எவ்வளவு வேண்டுமோ பெற்றுக் கொள்". பிச்சைக்காரன் அதிர்ஷ்ட தேவதையைப் பார்த்தான். அதன் கரங்களில் தங்க நாணயங்கள் நிறைய இருந்தன. உடனே அவன் கோணிப்பையை விரித்தான். அப்போது அதிர்ஷ்ட தேவதை சொல்லியது: "கோணிப்பைக்குள் விழுகின்ற நாணயங்கள் தங்கமாக இருக்கும். அவை நிலத்தில் விழுந்தால் தூசியாகி விடும். இது எனது எச்சரிக்கை…" பிச்சைக்காரன் மிகுந்த மகிழ்ச்சியோடு இருந்தான். அதிர்ஷ்ட தேவதை மீண்டும் எச்சரித்தது. அதன் பிறகு பிச்சைக்காரனின் கோணிப்பைக்குள் தங்க நாணயங்களைக் கொட்டியது. கோணிப்பை நிரம்பியதும் தேவதை தங்க நாணயங்களைக் கொட்டுவதை நிறுத்தியது. "உன் கோணிப்பையில் இருக்கிற நாணயங்கள் உன்னை அரசனை விட பணக்காரனாக்கும். அது போதும்தானே?" என்றது அதிர்ஷ்ட தேவதை. "போதாது. இன்னும் வேண்டும்" என்றான் பிச்சைக்காரன். அதிர்ஷ்ட தேவதை மேலும் சில தங்க நாணயங்களைக் கொடுத்து விட்டு சொன்னது, "உன் கோணிப்பை இதற்கு மேல் தாங்காது". பிச்சைக்காரன் சொன்னான்… "இன்னும் கொஞ்சம் வேண்டும்"…". அதிர்ஷ்ட தேவதை மேலும் தங்க நாணயங்கள் சிலவற்றைக் கொடுத்துவிட்டு நிறுத்தியது. "உன் கோணிப்பை கிழியப் போகிறது…". பிச்சைக்காரன் மறுத்தான். "இல்லை… நீ இன்னும் கொஞ்சம் நாணய்ங்களைப் போடு! என் கோணிப்பை தாங்கும்…" மறு வினாடி கோணிப்பை கிழிந்தது. அதனுள் இருந்த நாணயங்கள் கீழே விழுந்து தூசியாகின. அதிர்ஷ்ட தேவதையும் மறைந்தது. பிச்சைக்காரன் திகைத்துப் போய் நின்றான். |
2 | ['tam'] | கீழே கொடுக்கப்பட்டுள்ள வார்த்தைகளையும் தலைப்பையும் பயன்படுத்தி சிறு கதை எழுதுக.
வார்த்தைகள்: முல்லா, சொற்பொழிவு, மதத்தலைவர்கள், உணவு, இரவு, கைவிளக்கு, அமானுஷ்ய சக்தி
தலைப்பு: முல்லாவிடம் இருந்த சக்தி
| தற்பெருமை பேசுவார்களை கண்டால் முல்லாவுக்கு பிடிக்காது. அவர்களை எவ்விதமாவது மட்டந்தட்ட அவர் முயற்சி செய்வார். ஓரு தடவை ஒரு மதச் சொற்பொழிவு நிகழ்த்துவதற்காக வெளிநாட்டில் இருந்து மதத்
தலைவர்கள் சிலர் வந்திருந்தார்கள். அவர்கள் மக்கள் மத்தியில் சொற்பொழிவாற்றும் போது மதத்தைப் பற்றியோ கடவுளைப் பற்றியோ
அதிகம் பேசமால் தங்களுக்கு அதிசய சக்திகள் உண்டு என்றும் தாங்கள் விரும்பினால்
நீரில் நடக்க முடியும், நெருப்பில் புகுந்து வெளிவர முடியும், மணலைக் கயிறாக
திரிக்க முடியும் என்றும் அவர்கள் புராணத்தை தம்பட்டமடித்தே காலத்தை ஒட்டினர்.
கடைசியாக நன்றி கூறுவதற்காக வந்த முல்லா தனக்கும் சில கச்திகள் உண்டு என்றும்
குறிப்பாக நல்ல இருளில் எவ்வளவு தூரம் வேண்டுமானாலும் வழிநடக்க முடியும் என்றும்
கூறினார். " விளக்கே இல்லாமல் அடர்ந்த காட்டில்கூட நல்ல இருளில் முல்லாவால் நடந்து செல்ல
முடியுமா?" என்று மதத்தலைவர்கள் கேட்டனர். " முடியும் " என்று முல்லா கூறினார். அன்று இரவு உணவுக்குப் பிறகு, முல்லாவின் அந்த சிறப்பு ஆற்றலைப் பரிசோதனை செய்து
பார்ப்பது என்று முடிவாயிற்று. மதத் தலைவர்களும் உள்ளுர் பிரமுகர்கள் சிலரும் காட்டில் ஒரு குறிப்பிட்ட பகுதியில்
ஆங்காங்கே நின்று முல்லாவின் வருகையை எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர். அன்று உண்மையிலேயே இருள் மிகவும் அதிகமாக இருந்தது. மிகவும் அருகில் இருக்கும்
பொருள் கூட கண்களில் படவில்லை. குறுக்கும் நெடுக்;குமாக நிற்கும் மரங்களை அடையாளம் கண்டு முல்லா எவ்வாறு இருளில்
வருகிறார் என்று பார்க்க எல்லோரும் ஆவலோடு காத்துக் கொண்டிருந்தனர். சற்றநேரம்
கழித்து முல்லா ஒரு கைவிளக்கை எடுத்துக் கொண்டு நடந்து வந்தார். " இது என்ன? கைவிளக்கு வெளிச்சத்தில் நடந்து வருகிறீர், இருளில் அல்வா நடப்பதாக
சவால் விட்டீர் " என்று மற்றவர்கள் கேட்டனர். " நண்பர்களே, எவ்வளவு பயங்கர இருளாக இருந்தாலும் எனக்குக் கண் நன்றாகத் தெரியும்,
ஆனால் நடந்து வருவது நான்தான் என்று உங்களுக்கெல்லாம் தெரிய வேண்டாமா? எனக்குப்
பதிலாக வேறு ஆளை நடக்க விட்டு நான் உங்களை ஏமாற்றி விட்டேன் என்ற அவப்பெயர் நாளை
வரக்கூடாதல்லாவா? அதனால் என்னை நீங்கள் அடையாளம் கண்டுபிடிப்பதற்காகத்தான்
கைவிளக்குடன் நடந்து வந்தேன் " என்றார் முல்லா. பிறகு முல்லா " அன்பார்ந்த மதத் தலைவர்களே உங்களிடமெல்லாம ஏதேதோ அமானுஷ்ய சக்தி
இருப்பதாகத் கூறினீர்களே அதற்கு என் சக்தி ஒன்றும் இளைத்ததல்ல" என்றார் முல்லா
தங்களை மட்டம் தட்டவே இப்படி ஒரு நாடகத்தை முல்லா ஆடினார் என்பதை மதத் தலைவர்கள்
உணர்ந்து கொண்டனர். |
1 | ['tam'] | கீழே கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பைக் கொடு.
கதை: மன்னர் கிருஷ்ணதேவராயருக்கு அவருடைய தாயார் மேல் அன்பும் மரியாதையும் உண்டு. தாய்
மேல் அளவு கடந்த பாசம் வைத்திருந்தார். அவரது தாயாருக்கு வயோதிகம் ஆகிவிட்டபடியால்
மிகவும் நோய்வாய்ப்பட்டிருந்தார். வைத்தியரை அழைத்து தன் தாயின் உடல் நிலையைப்
பரிசோதிக்கச் செய்தார். பரிசோதனை செய்த வைத்தியரும் "தங்கள் தாயார் அதிக நாள் தாங்க
மாட்டார்கள். விரைவில் சிவலோகப் பதவி அடைந்து விடுவார்கள்" என்று கூறினார். அது
கேட்ட மன்னர் வேதனையுற்றார். தன் தாயாரிடம் சென்று "அம்மா, உங்களுக்கு சாபிட எது மிகவும் ஆசையாக இருக்கிறது"
என்று கேட்டார். அதற்கு அவரது தாயாரும் "மாம்பழம் தான் வேண்டும்" என்றார். அப்போது மாம்பழம்
கிடைக்கக் கூடிய காலமல்ல இருப்பினும் தன் ஆட்களை அனுப்பி எங்கிருந்தாவது மாம்பழம்
வாங்கி வர ஏற்பாடு செய்தார். ஆட்கள் மாம்பழம் வாங்கி வர புறப்பட்டனர். மாம்பழம் வந்து சேர்வதற்குள் அவரது தாயார் மரணம் அடைந்து விட்டார். மாம்பழம் சாப்பிடாமலேயே தன் தாயார் மரணம் அடைந்தது குறித்து மன்னர் மிக வேதனை
அடைந்தார். அதற்குப் பரிகாரம் காண எண்ணி அரண்மனைப் புரோகிதர்களை அழைத்து ஆலோசனை கேட்டார். பேராசைபிடித்த புரோகிதர்களும் "மாம்பழம் சாப்பிடாமல் இறந்ததால் அவரது ஆன்மா
சாந்தியடைய தங்கத்தால் 108 மாங்கனைகளைச் செய்து 108 புரோகிதர்களுக்குக் கொடுத்தால்
சரியாகிவிடும்" என்றனர். மன்னரும் அதற்குச் சம்மதித்தார். 108 மாம்பழங்கள் தங்கத்தால் செய்ய ஏற்பாடு செய்தார்.
சில நாட்களில் தங்க மாம்பழம் தயார் ஆனது. அவற்றை 108 புரோகிதர்களுக்கு மன்னர்
கொடுத்தார். புரோகிதர்களும் மிக மகிழ்சியுடன் அவற்றைப் பெற்றுக் கொண்டனர். இச்செய்தியை தெனாலிராமன் அறிந்து வேதனையுற்றான். புரோகிதர்களுக்குத் தக்க பாடம்
கற்பிக்க எண்ணினான். அதன்படியும் செயலாற்றத் துணிந்தான். புரோகிதர்களைச் சந்தித்தான். "என் அம்மாவிற்குத் திதி வருகிறது. அதற்குத் தாங்கள்
அனைவரும் வந்து புரோகிதம் பண்ணுங்கள். என்னால் முடிந்தளவு தருகிறேன்" என்றான். புரோகிதர்களும் மகிழ்ந்து தெனாலிராமன் வீட்டிற்கு வந்தனர். அவனும் புரோகிதர்களை
வரவேற்று உட்காரச் செய்தான். பின் கதவுகளை நன்கு தாழிட்டுப் பூட்டிக் கொண்டான்.
ஏற்கனவே நன்கு பழுக்கக் காய்ச்சிய இரும்புக் கம்பியால் ஆளுக்கு ஒரு சூடு போட்டான். புரோகிதர்கள் அய்யோ அம்மாவென்று கதறினார்கள். பின் மன்னரிடம் சென்று முறையிட்டனர். இதைப் பார்த்த மன்னர் தெனாலிராமன் மீது அளவிலடங்காக் கோபங்கொண்டார். பின் தன் பணியாட்களை அனுப்பி தெனாலிராமனை இழுத்து வரச் செய்தார். தெனாலிராமனைப்
பார்த்ததும் "ஏனடா புரோகிதர்களுக்கு இவ்வாறு சூடு போட்டாய்" என்று கேட்டார். "மன்னாதி மன்னா..... என்னை மன்னிக்க வேண்டும் நான் சொல்லுவதை தாங்கள் கவனமாகக்
கேட்க வேண்டுகிறேன். என் தாயார் உடல் நலமில்லாதிருந்து இறக்கும் தருவாயில் வலிப்பு
நோய் வந்து விட்டது. அதற்கு வைத்தியர்கள் என் தாயாருக்குச் சூடு போடும்படி
சொன்னார்கள். நான் சூடு போடும் முன் என் தாயார் இறந்து விட்டார்கள். ஆகையால் என்
தாயாரின் ஆன்மா சாந்தியடைய புரோகிதர்களுக்கு சூடு போடும்படி பெரியவர்கள் சொன்னார்கள்.
அவர்கள் சொன்னபடியே தான் புரோகிதர்களுக்குச் சூடு போட்டேன். இதில் என்ன தப்பு" என்று
மன்னரிடம் கேட்டான் தெனாலிராமன். இதைக்கேட்ட மன்னர் கோபம் கொண்டு "என்னடா தெனாலிராமா, இது முட்டாள் தனமாக இருக்கிறதே"
என்றார். இல்லை அரசே, விளக்கமாகக் கூறுகிறேன் சற்றுக் கேளுங்கள்" என்றான். முன்பு தங்கள் தாயார் மாம்பழம் சாப்பிடாமல் இறந்ததால் அவர்கள் ஆன்மா சாந்தியடைய 108
பொன்மாங்கனிகள் 108 புரோகிதர்களுக்குக் கொடுத்தால் தான் அவர்கள் ஆன்மா சாந்தியடையும்
என்று சொன்னார்களே...... அதன்படியும் தாங்கள் கொடுத்தீர்களே......................" அதுபோலவே என் தாயாரின் வலிப்பு நோய்க்கு சூடு போட முடியாமல் போனதால் தான்
இவர்களுக்குச் சூடு போட்டேன் என்றான். இதைக் கேட்ட மன்னர் நகைத்து விட்டார்.
தெனாலிராமனைப் பாராட்டினார். புரோகிதர்களின் பேராசையையும் புரிந்து கொண்டார்.
| கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பு 'சூடு பட்ட புரோகிதர்கள்' என்பதாகும். |
1 | ['tam'] | கீழே கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பைக் கொடு.
கதை: ஒரு காட்டில் நரி ஒன்று வசித்து வந்தது. அதற்கு எப்போதும் யாரையாவது ஏமாற்றி…அவர்கள் ஏமாறுவதைக் கண்டு ..மனம் மகிழ்வது பொழுது போக்காக இருந்தது. ஒரு நாள், கொக்கு ஒன்றை நரி சந்தித்தது. அதனுடன் நட்புக் கொண்டு…அந்த கொக்கை நரி தன் வீட்டிற்கு விருந்துக்கு அழைத்தது. கொக்கும் …நரியை நண்பன் என நினைத்து அதனுடைய வீட்டிற்குச் சென்றது. கொக்கைக் கண்ட நரி..ஒரு தட்டில் கஞ்சியை எடுத்து வந்து கொக்குக்கு உண்ணக் கொடுத்தது. கொக்கு அதன் நீண்ட அலகால்..தட்டிலிருந்த கஞ்சியை சாப்பிட முடியவில்லை…ஒரு வாயகன்ற ஜாடி போன்ற பாத்திரங்களில் இருந்தால் மட்டுமே …கொக்கு தன் அலகை அதனுள் விட்டு கஞ்சியை உறிஞ்சி குடிக்க முடியும். கொக்கு படும் துன்பத்தைக் கண்டு நரி சிரித்து மகிழ்ந்தது…அவமானம் அடைந்த கொக்கு..நரிக்கு பாடம் புகட்டத் தீர்மானித்தது. நரியை ஒரு நாள் கொக்கு விருந்துக்கு அழைத்தது..வந்த நரியை நன்கு உபசரித்த கொக்கு..ஒரு வாய் குறுகிய ஜாடியில்..கஞ்சியைக் கொண்டு வந்து வைத்தது நரியால்..நாக்கால் நக்கி கஞ்சியை குடிக்க முடியவில்லை.. அதைக் கண்ட கொக்கு ..’நரியாரே..இப்பொழுது எப்படி உங்களால் கஞ்சியை குடிக்க முடியவில்லையோ..அதே போல தட்டில் இருந்தால் …என்னால் குடிக்க முடியாது என தெரிந்தும் எனக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தி ..மனம் மகிழ்ந்தீர்கள்.ஆனால் நான் அப்படியில்லை..உங்களுக்கு பாடம் புகட்டவே ஜாடியில் கஞ்சியை வைத்தேன்…என்று கூறியபடியயே ..கஞ்சியை தட்டில் ஊற்றிக் கொடுத்தது. தன்னை ஏமாற்றிய நரிக்கு கொக்கு நல்லதே செய்தது. நரி தன் செயலுக்கு வருத்தம் தெரிவித்து விட்டு ..கஞ்சியைக் குடித்தது. அது முதல் திருந்திய நரி. பிறகு யாரையும் ஏமாற்றுவதில்லை. பிறரை வஞ்சித்து அவர் படும் துன்பம் கண்டு மகிழ்ச்சியடையாது. மற்றவர்களுக்கு நாமும் எம்மாலான உதவிகளைச் செய்ய வேண்டும்.
| கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பு 'பிறரை வஞ்சித்தால் நீயும் வஞ்சிக்கப் படுவாய்' என்பதாகும். |
2 | ['tam'] | கீழே கொடுக்கப்பட்டுள்ள வார்த்தைகளையும் தலைப்பையும் பயன்படுத்தி சிறு கதை எழுதுக.
வார்த்தைகள்: அக்பர், பீர்பால், கடவுள், விடை, குழந்தை, கங்கை, கேள்வி
தலைப்பு: கடவுளும் தூதுவர்களும்
| "கடவுள் நேரடியாக பூமிக்கு வருவதாகச் சொல்லப்படுகிறதே. தன்னுடைய தூதுவர்களை அனுப்பமல் ஏன் அவரே நேரடியாக வரவேண்டும்?"இது பேரரசர் அக்பர் பீர்பாலை பார்த்து கேட்ட சந்தேகம் பீர்பால் கூறினார் "இதற்கு உடனே விடை கூற முடியாது, சற்று அவகாசம் வேண்டும்" சில நாட்கள் கழித்து அக்பர் குடும்பத்தாரோடு கங்கையில் படகில் செல்ல வேண்டியிருந்தது. ஆழமான பகுதியில் செல்லும் போது அக்பரின் பேரனை தூக்கி பீர்பால் கங்கை நதியில் போட்டு விட்டார். அக்பருக்கு ஆத்திரம் வந்தாலும், உடனே ஆற்றில் குதித்து தனது பேரனைக் காப்பாற்றினார்.பீர்பாலை பார்த்து "முட்டாளே! ஏன் இக்காரியத்தைச் செய்தாய்?" என கோபமாகக் கேட்டார். அதற்கு பீர்பால், பேரரசே! உங்களை ஒரு கேள்வி கேட்கிறேன். குழந்தை தண்ணீரில் விழுந்த பொழுது, படைத்தளபதியை, என்னை மற்றும் வீரர்களை நோக்கி ‘குழந்தையைக் காப்பாற்று" என்று ஆணையிடாமல் நீங்கள் குதித்தது ஏன்? என்று கேட்டார்.அதற்கு அக்பர் "குழந்தையைக் காப்பாற்றுவது என் கடமையா? அல்லது ஆணையிட்டுக் கொண்டிருப்பது பெருமையா?" எனப் பதிலுக்கு கேட்டார்.பீர்பால் அமைதியாக கூறினார், "சக்ரவர்த்தி அவர்களே! நீங்கள் என்னிடத்தில் கடவுள் தானே பக்தர்களைக் காக்க உலகிற்கு வருவது ஏன்? வேலையாட்கள் இல்லையா? என்று கேட்டீர்கள். எத்தனை பேர் இருந்தாலும், நீங்களே குழந்தையைக் காக்க நினைத்தது போல, ஆபத்தில் இறைவன் தானே வந்து மக்களைக் காப்பான்." என்றார் |
2 | ['tam'] | கீழே கொடுக்கப்பட்டுள்ள வார்த்தைகளையும் தலைப்பையும் பயன்படுத்தி சிறு கதை எழுதுக.
வார்த்தைகள்: சேவல், மற்றொரு சேவல், இரத்தினக்கல், குப்பைக் கிடங்கு, தாணியம்
தலைப்பு: சேவலும் இரத்தினக் கல்லும்
| அது ஒரு அழகிய பனிக்காலம். சேவல் ஒன்று வழக்கம் போல் காலையில் எழுந்து அதற்கான உணவைத்தேட தன் நண்பர்களுடன் கிளம்பியது. அந்த சேவல் தொலைவில் ஒரு குப்பைக் கிடங்கை கண்டது. அந்த குப்பைக் கிடங்கில் ஏதாவது உணவு கிடைக்குமா என்ற எண்ணத்துடன் கிளற ஆரம்பித்தது. அப்போது அந்த சேவலுக்கு விலை மதிப்பில்லாத இரத்தினக்கல் ஒன்று கிடைத்தது. அந்த கல்லை சேவல் திருப்பித் திருப்பிப் போட்டது. அதைக் கண்ட மற்றொரு சேவல் வருத்தமுடன் "இந்த கல் நமக்கு கிடைத்து என்ன பயன்? ஒரு இரத்தின வியாபாரியின் கையில் இது கிடைத்திருந்தால் அவனுக்கு இதன் மதிப்பு தெரியும். நமக்கோ இந்த கல்லை விட சிறிது தாணியம் கிடைத்திருந்தால் அதுவே விலை மதிப்பில்லாத பொருளாக இருக்கும்" இந்த கல் நமக்கு உதவாது என்று கூறியது. ஒருவருக்கு பயன்படும் பொருளே அவர்களுக்குச் சிறந்ததாகும். |
2 | ['tam'] | கீழே கொடுக்கப்பட்டுள்ள வார்த்தைகளையும் தலைப்பையும் பயன்படுத்தி சிறு கதை எழுதுக.
வார்த்தைகள்: முல்லா, மன்னர், பீன்ஸ் கறி, காய்
தலைப்பு: உலகத்தில் சிறந்தது
| முல்லா மன்னரிடம் சில காலம் அமைச்சராக இருந்தார். முல்லாவின் மீது மன்னருக்கு அதிக
அபிமானம் இருந்தது. அதனால் அவரை எப்போதுமே தன்னுடன் வைத்துக் கொண்டு அவருடன்
உரையாடி மகிழ்ந்தார். மன்னர் உணவருந்தும் சமயத்திலெல்லாம் முல்லாவையும் தம்முடன் அமர்ந்து உணவருந்தச்
சொல்வார். ஒருநாள் மன்னரும் முல்லாவும் வழக்கம்போல அருகருகே அமர்ந்து உணவருந்திக்
கொண்டிருந்தனர். அன்று பீன்ஸ் கறி சமைக்கப்பட்டிருந்தது. மன்னருக்கு அன்று அதிகமான பசியாக இருந்ததால் பீன்ஸ் கறியை மிகவும் விரும்பிச்
சாப்பிட்டார். சாப்பாட்டின் இடையே மன்னர் முல்லாவை நோக்கி, " முல்லா உலகத்திலேயே மிகவும் சிறந்த
காய் பீன்ஸ் என்றுதான் எனக்குத் தோன்றுகிறது நீர் என்ன நினைக்கிறீர்?" என்று
கேட்டார். " சந்தேகமே வேண்டாம். பீன்ஸ் காய்க்கு நிகராக வேறு காயைச் சொல்லவே முடியாது" என்று
முல்லா ஆமாம் போட்டார். மன்னர் உடனே சமையற்காரனை அழைத்து " இனி சமையலில் பீன்ஸ் கறிக்குத் தான் முதலிடம்
தர வேண்டும். அன்றாடம் ஏதாவது ஒரு உருவத்தில் பீன்ஸை உணவுடன் சேர்ந்து விடு"
என்று உத்திரவிட்டார். நாள் தவறாமல் உணவில் பீன்ஸை சேர்த்துக் கொண்டதால் மன்னருக்கு அந்த காயின் மீது
சலிப்பும் வெறுப்பும் ஏற்பட்டது. அன்று சாப்பாட்டின் போது பீன்ஸ் பரிமாறப்பட்டபோது மன்னர் முல்லாவை நோக்கி
" உலகத்திலேயே மிகவும் மோசமான காய் பீன்ஸ் என்றுதான் நினைக்கிறேன். நீர்; என்ன
நினைக்கிறீர்?" என்று கேட்டார். " ஆமாம் மன்னர் அவர்களே, எனக்கும் அப்படித்தான் தோன்றுகிறது. நான் அறிந்த மட்டில்
இவ்வளவு மோசமான சுவையே இல்லாத பீன்ஸைப் போன்ற காயைக் கண்டதே இல்லை"
என்றார் முல்லா " என்ன முல்லா! பத்து நாட்களுக்கு முன்னால் நான் கேட்டபோது உலகத்திலேயே மிகவும்
சிறந்த காய் பீன்ஸ் என்று சொன்னீர். இப்பொழுது தலை கீழாக மாற்றிப் பேசுகிறீரே"
என்று மன்னர் கேட்டார். முல்லா சிரித்துக் கொண்டே " மன்னர் அவர்களே! என்ன செய்வது? நான் தங்களிடம்
அல்லவா வேலை பார்க்கிறேன். பீன்ஸிடமல்லவே" என்றார். |
2 | ['tam'] | கீழே கொடுக்கப்பட்டுள்ள வார்த்தைகளையும் தலைப்பையும் பயன்படுத்தி சிறு கதை எழுதுக.
வார்த்தைகள்: தேள், காடு, நீரோடை, மீன்கள், நண்டு, ஆமை, தவளை
தலைப்பு: தேளும் தவளையும்
| அது ஒரு அழகிய காடு, அந்த காட்டில் கெட்ட சுபாவமுள்ள தேள் ஒன்று வசித்து வந்தது. அந்தக் காட்டின் நடுவில் ஒரு நீரோடை இருந்தது. அந்தத் தேளுக்கு இக்கரையில் இருந்து அக்கரைக்கு போக வேண்டி இருந்தது. அக்கரைக்குப் போவதற்காக அந்த நீரோடையில் இருக்கும் பெரிய மீன்கள், நண்டு, ஆமை போன்றவைகளிடம் தேள் உதவி கேட்டது, ஆனால் அந்த பொல்லாத தேள் தம்மை கொட்டிவிடும் என்று அவை மறுத்து விட்டன. எப்படி நீரோடையைக் கடப்பது என்று தேள்யோசித்துக்கொண்டு இருந்தபோது அந்த நீரோடையில் தவளை ஒன்று வந்து கொண்டிருந்தது. தவளையைக் கண்ட தேள், "தவளையாரே! நான் அக்கரைக்குச் செல்லவேண்டும் என்னை அங்கு கொண்டு போய் விட்டு விடுவீரா?" என்று கேட்டது. "நானும் அக்கரைக்குத்தான் போகிறேன், என் முதுகில் ஏறிக்கொள்ளும் உம்மை நான் அக்கரையில் விட்டுவிடுகிறேன்!", என்றது தவளை. தேளும் தவளையின் முதுகில் ஏறிக்கொண்டது. தவளை நீரில் நீந்திச்செல்ல அரம்பித்தது, சிறிது தூரம் தான் தவளை சென்றிருக்கும் தேளுக்கு ஒரு யோசனை வந்தது, நான் பல பேரைக கொட்டியிருக்கிறேன். அவர்கள் வலியால் துடித்ததையும் பார்த்திருக்கின்றேன். ஆனால் நான் ஒரு நாளும், தவளையை கொட்டவில்லை, இந்த தவளையைக் கொட்டினால் எப்படித் துடிக்கும்? இதை விட்டால் வேறு சந்தர்ப்பம் கிடைக்காது என்று தவளையை கொட்டிப் பார்க்க நினைத்தது. தேள் தவளையின் முதுகில் கொட்டியது. அனால் தவளை பேசாமல் போய்க்கொண்டிருந்தது. தேள் தவளையைப் பார்த்து, "தவளையாரே! உமது உடம்பில் வலியே வருவதில்லையா?" என்று கேட்டது. தேளின் கெட்ட எண்ணத்தைப் புரிந்துகொள்ளாத தவளை, "எனது முதுகு வழவழப்பானது. அதனால் எனக்கு அந்த இடத்தில் வலியே வருவதில்லை" என்று சொன்னது தவளை. ஆனால் எனது கழுத்துப்பக்கம் மென்மையாக இருக்கும். இதில் தான் எனக்கு வலிகள் காயங்கள் ஏற்படும் என்று சொன்னது தவளை. ஓகோ; அப்படியா? என்று கேட்ட தேள், மெதுவாக தவளையின் கழுத்துப் பகுதியை நோக்கிச் சென்றது. கழுத்தில் இருந்து தலைப்பகுதிக்குச் சென்ற தேள் தவளையை கொட்ட ஆரம்பித்தது. தேள் கொட்டவருவதை அறிந்து தவளை தலையை தண்ணீருக்குள் இழுத்துக் கொண்டது. தேள் நீரோடையில் விழுந்து விட்டது. தனக்கு உதவி செய்த தவளைக்கு கேடுவிளைவிக்க நினைத்த தேள் தண்ணீரில் மூழ்கி இறந்தது. தவளை கரையை நோக்கி நீந்திச் சென்றது. ஒருவர் எவ்வித பலனையும் எதிர்பாராமல் எமக்கு உதவி செய்தாராயின், அவரின் உதவியை நாம், எம் வாழ் நாளில் என்றுமே மறந்து விடலாகாது. அவருக்கு நன்றியுடையவனாக இருத்தல் வேண்டும். மாறாக அவருக்கு கெடு செய்ய நினைப்போமாயின், அது எம்மையே வந்து சேரும். |
2 | ['tam'] | கீழே கொடுக்கப்பட்டுள்ள வார்த்தைகளையும் தலைப்பையும் பயன்படுத்தி சிறு கதை எழுதுக.
வார்த்தைகள்: முல்லா, அயல் ஊர், குளியல் அறை, உடை, வேலைக்காரர்கள், செல்வந்தர், தங்கக் காசுகள், நறுமணப் பொடிகள், வாசனைப் பன்னீர், செப்பு, உபசாரம், பரிசு
தலைப்பு: அலட்சியத்துக்குக் கிடைத்த பரிசு!
| ஒருநாள் முல்லா அயல் ஊர் ஒன்றுக்குச் சென்றிருந்தார். அந்த ஊரில் பொதுமக்கள் குளிப்பதற்காக ஒரு பொது குளியல் அறை இருந்தது. முல்லா அங்கே குளிப்பதற்காகச் சென்றார். அப்போது முல்லா மிகவும் அழுக்கான உடையை அணிந்திருந்தார். அதனால் அங்கிருந்த
வேலைக்காரர்கள் முல்லாவை சரியாகக் கவனிக்க வில்லை. அலட்சியமாக அவரை நடத்தினர்.
சீக்கிரம் குளித்து விட்டுச் செல்லுமாறு அவரை அவசரப் படுத்தினர். குளித்து முடித்து விட்டு வெளியே வந்த முல்லா வேலைக்காரர் ஒவ்வொருவருக்கும் ஆளுக்கு
ஒரு தங்கக் காசை அன்பளிப்பாகக் கொடுத்தார். அதைக் கண்டு வேலைக்காரர்கள் பிரமித்துப் போய்விட்டனர். இவர் பெரிய செல்வந்தர் என்பதை முன்னதாகத் தெரிந்த கொள்ளமால் போய் விட்டோமே.
இவரை நன்கு கவனித்து உபசாரம் செய்திருந்தால். இன்னும் நிறைய தங்கக் காசுகள்
கொடுத்திருப்பாரே என்று நினைத்தனர்.
இரண்டு நாட்கள் கழித்து முல்லா மறுபடியும் அந்தக் குளியல் அறைக்குக் குளிக்கச்
சென்றார். வேலைக்காரர்கள் முல்லாவை அடையாளம் கண்ட கொண்டனர். உடனே அவர்கள் போட்டி போட்டுக் கொண்டு முல்லாவுக்கு ராஜ உபசாரம் செய்தனர். உடலில்
தேய்த்துக் கொள்ள நறுமணப் பொடிகள் தந்தனர். வாசனைப் பன்னீர் கொடுத்தனர். அவர்கள்
முல்லாவை சூழ்ந்து கொண்டு அவர் உடம்பை அழுக்குப் போகத் தேய்த்து நிராடச் செய்தனர். உயர்தரமான துவாலையை உடல் துவட்டக் கொடுத்தனர். பிறகு அவர் உடலில் வாசனை
திரவியங்களைப் பூசினர். அன்று முல்லா தங்களுக்கு ஆளுக்கு ஐந்தைந்து பொற்காசுகளாவது அன்பளிப்பாக் கொடுப்பார்
என்று எதிர்பார்த்தனர். முல்லா ஆளுக்கு ஒரு செப்புக் காசுதான் கொடுத்தார். வேலைக்காரர்கள் மிகவும் ஏமாற்றமடைந்து " இவ்வளவு சிரமப்பட்டு உங்களுக்கு உபசாரம்
செய்ததற்கு இந்தச் செப்புக்காசுதானா பரிசு?" என்று கேட்டனர். முல்லா உடனே அன்றைய தினம் நான் உங்களுக்கு அளித்த பொற்காசு இன்று நீங்கள் செய்த
உபசாரத்திற்கான பரிசு. இன்று கொடுப்பதோ அன்று நீங்கள் என்னை
அலட்சியப்படுத்தியமைக்காகக் கொடுத்த பரிசு என்று கூறியவாறே குளியலறையை விட்டு வெளியே
நடந்தார். |
2 | ['tam'] | கீழே கொடுக்கப்பட்டுள்ள வார்த்தைகளையும் தலைப்பையும் பயன்படுத்தி சிறு கதை எழுதுக.
வார்த்தைகள்: அக்பர், பீர்பல், பீடா, சுண்ணாம்பு, சௌகத் அலி, நெய்
தலைப்பு: சிறிய தவறும் பெரிய தண்டனையும்!
| அக்பர் சக்கரவர்த்திக்கு வெற்றிலை போடும் பழக்கம் இருந்தது. அதிலும் குறிப்பாக, சௌகத் அலி தயாரிக்கும் பீடா அவருக்கு மிகவும் பிடிக்கும். அவன் தயாரிக்கும் பீடா மிகப் பிரமாதமாக இருப்பதாக அக்பர் அடிக்கடி அவனிடமே புகழ்ந்து பேசுவதுண்டு! அந்த சமயங்களில் சௌகத் அலி அக்பருக்கு சலாம் செய்து விட்டு, "பீடா தயாரிப்பது எனக்கு கை வந்த கலை! என்னுடைய எட்டாவது வயது முதல் இந்தத் தொழிலை நான் செய்து கொண்டு இருக்கிறேன். சக்கரவர்த்தியான உங்களுக்கு நான் பீடா தயாரித்து கொடுப்பதை பெரும் பாக்கியமாக நினைக்கிறேன்" என்றான். அக்பர் அன்றுமுதல் தான் எங்கு சென்றாலும் தன்னுடன் சௌகத் அலியையும் உடன் அழைத்துச் செல்லத் தொடங்கினார். இவ்வாறு மூன்றாண்டுகள் கழிந்தன! ஒருநாள் அலி பீடாவில் கை தவறி சிறிது அதிகமாக சுண்ணாம்பினைக் கலந்து விட்டான். அதைத் தின்ற அக்பரின் நாக்கு வெந்து விட்டது. உடனே பீடாவைத் துப்பியவாறே, "முட்டாள்! உன்னுடைய பீடாவைத் தின்று என் நாக்கு வெந்து விட்டது. பீடா தயாரிப்பதில் தலை சிறந்தவன் என்று ஓயாமல் பெருமையடித்துக் கொண்டாயே! இதுவா நீ தயாரிக்கும் லட்சணம்?" என்று சீறினார். அலி பயத்தினால் மிகவும் நடுங்க ஆரம்பித்து விட்டான். மிகக் கோபத்துடன் அவனை முறைத்துப் பார்த்தவாறே, "உடனே சென்று ஒரு பை நிறைய சுண்ணாம்பு கொண்டு வா!" என்று கட்டளையிட்டார். அலி கடைக்குப் போய் ஒரு பை நிறைய சுண்ணாம்பு வாங்கினான். அப்போது அங்கே வந்த மகேஷ்தாஸ் "அலி! என்ன விஷயம்? எதற்கு இத்தனை சுண்ணாம்பு?" என்று கேட்டான். "இதை சக்கரவர்த்தி வாங்கி வரச் சொன்னார். ஏன் என்று எனக்குத் தெரியவில்லை!" என்றான் அலி. "தெரியவில்லையா? எந்த சந்தர்ப்பத்தில் இதை வாங்கச் சொன்னார்?" என்று மகேஷ் கேட்க, அலியும் நடந்ததைக் கூறினான்.சக்கரவர்த்தி எதற்காக ஒரு பை நிறைய சுண்ணாம்பு வாங்கச் சொன்னார் என்று மகேஷுக்குப் புரிந்து விட்டது. உடனே அவன் அலியிடம், "வயிறு நிறைய நெய் குடித்து விட்டு சக்கரவர்த்தியிடம் செல்!" என்றான்."என்னப்பா! ஏற்கெனவே நான் யானைக் குட்டி போல் பருமனாக இருக்கிறேன். இந்த லட்சணத்தில் நான் வயிறு நிறைய நெய் தின்றால் பூதம் போல் ஆகிவிடுவேன்!" என்றான் அலி!"இன்று ஒருநாள் மட்டும் செய்" என்று சொல்லிவிட்டு மகேஷ் சென்று விட்டான்.மகேஷ் சொன்னால் அதில் ஏதோ காரணம் இருக்கும் என்று நம்பிய அலி, வீட்டிற்குச் சென்று ஒரு செம்பு நிறைய நெய் எடுத்து வயிறு முட்ட குடித்த பிறகு அவன் அக்பரை நாடிப் போனான்.சபையில் அமர்ந்திருந்த அக்பர் அலியைப் பார்த்து, "ஒரு பை சுண்ணாம்பு வாங்க இத்தனை நேரமா?" என்று கடிந்து கொண்ட பிறகு, ஒரு காவலனை நோக்கி "இவனை சபைக்கு வெளியே அழைத்துச் சென்று பையிலுள்ள சுண்ணாம்பு முழுவதையும் அவன் வாய்க்குள் போட்டு அடைத்து விடு!" என்றார். அப்போதுதான் அக்பர் தனக்குத் தந்த தண்டனையின் கொடூரம் அலிக்குப் புரிந்தது.கதறக் கதற அலியை வெளியே இழுத்துப் போன காவலன், அலியின் பையிலிருந்து சுண்ணாம்பை எடுத்து அலியின் வாயில் போட்டு விழுங்கச் செய்தான். ஒரு கவளம் சுண்ணாம்பு தின்ற உடனேயே, வாய், தொண்டை, வயிறு வெந்து போக அலி சுருண்டு விழுந்தான். தண்டனைக்குள்ளான அலி என்ன ஆனான் என்று பார்க்க அங்கு வந்த அக்பர், அலி தரையில் விழுந்திருந்தும் சுயநினைவுடன் இருப்பதைப் பார்த்து, "நீ இன்னும் சாகவில்லையா?" என்று கேட்டார்."இல்லை, பிரபு!" என்ற அலி சிரமப்பட்டு எழுந்து நின்று, "வயிறு நிறைய நெய் சாப்பிட்டதாலோ என்னவோ, நான் உயிருடன் இருக்கிறேன்!" என்றான். "உன்னை யார் நெய் உண்ணச் சொன்னார்கள்?" என்று அக்பர் கேட்க, அலி மகேஷின் பெயரைக் கூறினான். உடனே மகேஷ் அங்கு அழைத்து வரப்பட்டான். அவனைப் பார்த்ததும், "பீர்பல்! உன் வேலைதானா இது? அவனை ஏன் நெய் சாப்பிடச் சொன்னாய்?" என்று அக்பர் கேட்டார். "பிரபு! அலியிடம் நடந்தைக் கேட்ட பிறகு நீங்கள் அவனை சுண்ணாம்பை விழுங்க வைக்கப் போகிறீர்கள் என்று தெரிந்து கொண்டேன். நெய் தின்ற பிறகு சுண்ணாம்பை விழுங்கினால் உடலுக்குத் தீங்கு ஏற்படாது என்று எனக்குத் தெரியும்! அதனால்தான் அவ்வாறு அவனை செய்யச் சொன்னேன்" என்றான் பீர்பல்."அவன் மீது உனக்கு என்ன அவ்வளவு அக்கறை?" என்று அக்பர் கேட்க, "அக்கறை அவன் மீதில்லை, உங்கள் மீதுதான் பிரபு. அவன் தயாரிக்கும் பீடாவை நீங்கள் மிகவும் விரும்புகிறீர்கள் என்று எனக்குத் தெரியும். ஏதோ தெரியாமல் அவன் ஒருநாள் செய்த தவறுக்காக அத்தனை பெரிய தண்டனையை அவன் பெறப் போவதைத் தவிர்க்க விரும்பினேன். நீங்கள் அவன் செய்த சிறிய தவறை மன்னித்து விட வேண்டும். அக்பர் சக்கரவர்த்தி மிகவும் இரக்க குணம் படைத்தவர் என்பதை நிரூபிக்க இதை விட உங்களுக்கு வாய்ப்பு கிடைக்குமா?" என்று கேட்டான் பீர்பல்.அவனுடைய சாமர்த்தியமான பேச்சினால் கவரப்பட்ட அக்பர், "நீ சொல்வது சரிதான். மூன்று ஆண்டுகளாக அருமையாக பீடா தயாரித்தவன் ஒருநாள் தெரியாமல் செய்த தவறுக்காக தண்டனை பெறுவது சரியல்ல. அவனை நான் மன்னித்து விடுகிறேன்" என்றவர் அலியைப் பார்த்து, "பிழைத்துப் போ" என்றார். |
1 | ['tam'] | கீழே கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பைக் கொடு.
கதை: அண்ணன் தங்கை இருவருக்கும் எப்போதும் சண்டை தான். அண்ணன் பரத் மகா குறும்பன். இரண்டாம் வகுப்பில் படிக்கின்றான். தங்கை நந்தினி இன்னும் பள்ளிக்கு செல்லவில்லை.சின்னப் பெண். தாய் தந்தை இருவரும் பணி புரிகின்றார்கள். அப்பத்தாவும் தாத்தாவும் இவர்களுடன் இருக்கிறார்கள். பரத் , நந்தினி குடும்பம் இருப்பது ஒரு அடுக்குமாடி குடியிருப்பில். அந்த குடியிருப்பில் மொத்தம் 5 மாடி. மூன்றாவது மாடியில் இவர்கள் குடியிருக்கின்றார்கள். ஒரு சனிக்கிழமை காலை அப்பாவும் அம்மாவும் பணிக்கு சென்றபின்னர் பரத்தும் நந்தினியும் விளையாடிக் கொண்டு இருந்தனர். தாத்தா வெளியே தன் நண்பர்களைக் காண கிளம்பினார் “பரத் தங்கையை சீண்டாமல் விளையாடு. சண்டை போட்டுக்க கூடாது சரியா? தாத்தா சீக்கிரம் வந்துவிடுகின்றேன்” “சரிங்க தாத்தா” - இருவரும். விளையாட்டு சாமான்கள் எடுத்துக்கொண்டு இருவரும் மொட்டைமாடியில் விளையாடச் சென்றனர். நிழலாக இருந்த ஓரத்தில் விளையாடினர்.எந்த பொருள் பரத் எடுத்தாலும் உடனே நந்தினி அது வேண்டும் என்பாள். அப்போது திடீர் என்று பரத் “உஷ் உஷ்” என்று கத்தியபடி ஓடினான். “அண்ணா என்ன ஆச்சு?” பயத்துடன் அண்ணன் சட்டைக்கு பின்னால் ஒளிந்து கொண்டாள்.. “ஒரு பருந்து வந்தது பார்த்தியா?” “இல்லையே” “பெரிய பருந்து” ”அச்சோ அப்புறம்?. ஏன் விரட்டிக்கொண்டு ஓடினீர்கள்?” “அழக்கூடாது சரியா. அந்த பருந்து உன் மூக்கை கடிச்சி எடுத்துக்கொண்டு போய் விட்டது. அது தான் துரத்திக்கொண்டு சென்றேன். அதற்குள் பறந்தே போய்விட்டது”.. இவன் சொல்லி முடிப்பதற்குள் நந்தினி அழ ஆரம்பித்துவிட்டாள்..”அம்மா என் மூக்கு..என் மூக்கு” என்று அழுதபடி படிக்கட்டுகளில் இறங்கி தன் வீட்டிற்கு சென்றாள். அவள் விட்ட சத்தத்திற்கு அந்த கட்டிடத்தில் உள்ள அனைவருமே பயந்துவிட்டனர். யார் என்ன சொல்லியும் அழுகை நின்ற பாடில்லை. அப்பத்தா அதெல்லாம் ஒன்றும் இல்லை.அண்ணன் விளையாடுகிறான் என்றாள். கேட்கவே இல்லையே. அழுதபடியே இருந்தாள்.கை கால் உதைத்தாள். தாத்தா அந்த சமயம் வீட்டிற்குள் வந்தார். “என்னாச்சு பாப்பாக்கு? ஏன் என் தங்கம் அழுகின்றது?” தன் அழுகையை நிறுத்தி “தாத்தா, நானும் அண்ணனும் விளையாடிக் கொண்டு இருந்தோம்.ஒரு பெரிய பருந்து கறுப்பு நிறத்தில் வந்தது. என் மூக்கை…” மீண்டும் அழுகை… “அழாமல் சொன்னால் தானே புரியும்…” “என் மூக்கை கடிச்சி எடுத்துக்கொண்டு போய்விட்டது..ம்ம்ம்..ம்ம்ம்” நிலைமையை புரிந்து கொண்டார் தாத்தா. “ஓ உன் மூக்கு தானா அது? ” என்றார். அமைதியானாள் நந்தினி. “நான் தெருவில் வந்த போது ஒரு பருந்து வந்து என்னிடம் பேசியது.ஒரு அழகான குட்டி பெண்ணின் மூக்கை எடுத்துக்கொண்டு வந்துவிட்டேன். பாவம் அவள் நல்ல பெண், சமத்து பெண், என்று சொல்லிவிட்டு மூக்கை என்னிடம் கொடுத்து விட்டு பறந்து சென்றது.” “இதோ பத்திரமாக என் பாக்கெட்டில் வைத்திருக்கிறேன்.எங்கே கிட்டவா..கண்ணை மூடிக்கொள்..” பாக்கெட்டில் இருந்து ஏதோ எடுப்பது போல் பாவனை செய்து அவள் முகத்தில் வைத்து அழுத்தினார். “ஆகா. மூக்கு ஒட்டியாச்சே..போய் கண்ணாடியில் பார்.” நந்தினி கண்ணாடியை நோக்கி ஓடினாள்..”படவா..குழந்தையை ஏன் இப்படி ஏமாற்றுகிறாய்” என்று செல்லமாக பரத் கன்னத்தை கிள்ளினார் தாத்தா.. “ஹைய்யா மூக்கு வந்துடுச்சே..ஜாலி..ஜாலி..அண்ணா மூக்கு வந்துடுச்சு…ஜாலி ஜாலி…” மீண்டும் மாடிக்கு சென்று விளையாட துவங்கினர் ஆனந்தமாக.
| கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பு 'தொலைந்த மூக்கு' என்பதாகும். |