The dataset viewer should be available soon. Please retry later.

template_id
int64
template_lang
string
inputs
string
targets
string
1
['tam']
கீழே கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பைக் கொடு. கதை: அன்றைக்குக் கடைசி ஆடி. ஊர் முழுக்க தோசை வாசனை கம்ம்மென்று முறுகல் மணல். ஆட்டுரல்களில் சட்னி ஆட்டுகிற கடகடா சப்தம். வழக்கத்துக்கு மாறாக... காலில் சக்கரம் கட்டிக் கொண்டு பறக்கிறான் சீனிவாசன். ஒரே பரபரப்பு. அங்கேயும் இங்கேயுமாய்ப் பாய்கிறான். ஆளைக் கையில் பிடிக்க முடியவில்லை. மூக்கின் மேல் நின்ற கோபம் நாலா பக்கமும் சிதறித் தெறிக்கிறது. இன்னார் மீது என்று கணக்கில்லை. சகட்டு மேனிக்கு ''சள் சள்'' ளென்று சீறுகிறான். மண்ணடிக்க டக்கர் போயிருக்கிறது. வேலை செய்யாமல் கூலியாட்கள் ஏய்த்து விடுவார்களே என்கிற பதற்றம், அவனுக்குள். சம்பளம் வாங்கத் தீயாய் வருகிற ஆட்கள். பாடுபடாமல் தேங்கின தண்ணீராகத் தேய்ந்து போகிற வஞ்சகம். ச்சே! நினைத்தாலே மனசு கிடந்து கொதிக்கிறது. என்றைக்குமில்லாத அதிசயமாக விடிவதற்கு முன்பே விழித்துவிட்டான் சீனிவாசன். டீக்கடை போய், ஓடைக்குப் போய், பல்லையும் தேய்த்துவிட்டு - ''என்ன ரெடியா?'' என்று காலில் கொதி நீரை ஊற்றிக் கொண்டு நிற்கிறான். வேணித்தாய்க்கு எரிச்சலாக இருக்கிறது. ....வழக்கம் இப்படியல்ல. இந்நேரம் படுத்துக் கிடப்பார். நீட்டி நிமிர்ந்து எழுந்து டீக்கடைக்குப் போனால், ரெண்டு டீக்கடைகளிலும் டீ குடித்து. பேப்பர் பார்த்து, ஊர்க்கதைகள் பேசி.... ஆள் தட்டுப்படவே மாட்டார், ஒன்பது மணி வரைக்கும். இன்றைக்கு என்ன அதிசயமோ... சரியாய் விடிவதற்குள் ''ரெடியா'' என்கிறான். என்ன கூத்தோ....? கேட்க முடியாது கேட்டால். வள்ளென்று விழுவான். இப்போது தான் முற்றம் தெளித்திருக்கிறாள். வெல்லம், தேயிலை போட்டு, காப்பி போட்டுவிட்டு... அடுப்பில் இட்லிச் சட்டியை தூக்கி வைத்திருக்கிறாள். வழக்கம் போல.... சோறு என்றாலாவது. சட்டு புட்டென்று வேலை முடியும். கடைசி ஆடி... ஊரெல்லாம் தோசை விசேஷம். தோசை என்றாலாவது... சட்டி காய்ந்தவுடன் மாவை சர் சர்ரென்று ஊற்றிப் புரட்டி எடுத்து விடலாம். இந்த ராசாவுக்குத் தோசை என்றால் தொண்டையில் இறங்காது. ஆவியே ஆகாது என்பார். தோசையில் எண்ணெய் வாடை வருமாம். சாப்பிட்டால்... நாவறட்சி எடுக்குமாம். நெஞ்சுக்கரிப்பு ஆளைக் கொல்லும் என்று பயப்படுவார். தோசை என்றால். மூஞ்சி முந்நூறு கோணலாகும். இட்லிக்கு மாவை ஊற்றி வைத்தால்.... வெந்து முடிய ரொம்ப நேரமாகும். சொய்ங்யென்று விசிலடிக்கிற புகைச் சீறல், வேணித்தாய்க்கு எரிச்சல் எரிச்சலாய் வரும். அவசர அவசரமாய் அம்மியில் சட்னிக்கு அரைத்தாள். சீனிவாசன் பறந்து கொண்டு வருகிறான். ''சாப்புடலாமா?'' ''சித்தெ பொறுங்க'' ''டக்கர் போயிருச்சு மண்ணடிக்க...'' ''ஆளுக போய்ட்டாகளா?'' ''ம்'' ''மண்ணை புஞ்சைக்குள்ளே தட்டவா, வெளியே தட்டவா?'' ''புஞ்சைக்குள்ளேதான்'' ''சர்க்கரை தேயிலை வாங்கிக் குடுத்தனுப்பிச்சிட்டீகளா?'' ''ம் தண்ணிக்கொடம். காப்பிச்சட்டி, கிளாஸ் எல்லாம் குடுத்தனுப்பியாச்சு'' ''கலிங்கப்பட்டி கம்மாயிலே தண்ணில்லியா?'' ''ம்'' ''பாதை நல்லாயிருக்கா?'' ''என்ன.... தொண தொணன்னு பேசியே உயிரை வாங்குறே?'' சிரித்தாள் வேணி. காத்திருத்தலைத் தோன்றவிடாமல் மறக்கடிக்கத்தான் பேச்சை ரப்பராய் இழுத்தாள். ''என்ன சிரிப்பாணி?'' ''கேக்குறதுமா குத்தம்?'' ''அப்படியில்லே. டக்கருக்கு நானூத்தைம்பது ரூவா வாடகை. கூலியாளுக்கு எறநூத்தம்பது. இம்புட்டு செலவழிச்சு மண்ணடிக்கிறப்ப. நா போய் நிக்க வேண்டாமா? ரெண்டு நடை மண்ணு கொறைஞ்சிட்டாக்கூட... நூற்றி நாப்பது வட்டம் வரும்.'' ''இப்ப யாரு..... உங்களைப் போக வேண்டாம்னது?'' ''சாப்புடாம எப்படிப் போக?'' உக்காருங்க. இதோ - சட்னியைத் தாளிச்சிடுறேன்'' ''அந்தா, இந்தா'' வென்று கால்மணி நேரம் ஆகிவிட்டது. முள்ளின் மேல் நிற்பவனைப்போல் பொறுமையற்று நெளிந்து கொண்டு உட்கார்ந்திருக்கிற சீனிவாசன் முன்னால்... வட்டில் ஆவி பறக்க இட்லிகள், கருகிப்போன கடுகும், கருவேப்பிலையும் சட்னிக்கு ஒரு லட்சணத்தையும் வாசத்தையும் தந்தது. பறக்கப் பறக்க சாப்பிடுகிறான். ''சட்னி இன்னைக்கு அம்சமா அமைஞ்சிருக்கு. தாளிச்ச வாசம் ஆளைத் தூக்குது''. நிலக்குளிர்ச்சியான அந்தப் பனிப்பூ வார்த்தையில் வேணியின் எரிச்சல், கோபம் எல்லாம் மாயமாகி மறைகிறது வியர்வைக்குரிய கிரீடம் கிட்டிவிட்ட மனத்ததும்பல் அவளுக்கு அவள் குரலில் ஒரு மென்மையும் குழைவும்.... ''நல்லாவாயிருக்கு? அவசர அவசரமா அரைச்சேன்... உப்புக்கூடப் பாக்கலே.'' ''கச்சிதமாயிருக்கு வேணி. நெசந்தா.'' ''இன்னும் ரெண்டு இட்லி போட்டுக்கங்க.'' அந்தக் கணத்தில், அவள் அவளாகியிருக்கிறாள். உள்ளும் புறமும் மிருதுவாகி. அன்பால் நெஞ்சு ததும்ப... புருஷனை புதிய வாஞ்சையோடு பார்க்கிறாள். உள்ளுக்குள் உவகைப் பெருக்கு பீறிடுகிற பரிவுணர்ச்சி கண்ணோரங்களில் நீர்த்துளிகளாய் மனப்பரவசம். காய்ந்து கனல் பறக்கிற லௌகீக வாழ்வை ஜீவதப் படுத்துகிற மனச்சங்கமம். மானுட ஈரத்தில் வேர் விட்டு உயிர் வளர்கிற - முகம் கழுவிக் கொள்கிற - புது வாழ்க்கையின் கணங்கள். கையை கழுவினான். சட்டையை மாட்டிக் கொண்டான். சிகரெட், தீப்பெட்டி, செருப்பு, பரபரப்பு. ''வேணி, நீ புஞ்சைக்குப் போவணுமா?'' ''மேலப் புஞ்சையிலே பருத்தி வெடிச்சு பூத்துக்கெடக்கு.'' ''போ, சரி... மதியத்துக்கு?'' ''கம்மாயிலேதானே இருப்பீக?'' ''ம் சின்னவன் கிட்டே குடுத்து. தெக்குப்புஞ்சைக்கு அனுப்பிவை. மண்ணைத் தட்ட வர்ற டக்கர்லே கம்மாய்க்கு வந்துருவான்.'' ''ஆட்டும்...'' ''என்ன குடுத்துவிடப் போறே மதியம்? தோசை தானே சுடுவே?'' ''உங்களுக்குத்தான் தோசை ஒவ்வாதுல்லே? அவிக்கிற இட்லியிலே மிச்சம் வச்சிருந்து... புதுசட்னியோட குடுத்துவுடட்டா? ''ம்.'' ''ஆறின இட்லின்னு கோவிக்கக்கூடாது?'' ''ம்'' அவன் முகத்தில் மெல்லிய பூஞ்சிரிப்பு. உள்ளுக்குள் பௌர்ணமி வெளிச்ச மகிழ்ச்சி. இங்கிதம் அறிந்து பேசுகிற வேணியின் மன அண்மையில் விளைந்த தன்மை. தெருவில் இறங்கினான். சீனிவாசன் ஓடியாடிப் பாடுபடுகிறவனில்லை. ப்ளஸ் டூ முடித்து, கல்லூரியிலும் ரெண்டு வருஷம் குப்பை கொட்டினான். பாதியில் படிப்பை நிறுத்திவிட்டு, விவசாயத்தைக் கவனிக்க வேண்டிய நிர்ப்பந்தம். நாலா பக்கமும் காடுகரைகள். இறவைத்தோட்டங்கள், மானாவாரிக் கரிசல்காடு. கண்மாய்ப் பாசனத்தில் கொஞ்சம் வயல்காடு. பெரிய பண்ணைப் பிரபு கிடையாது மத்திய தர விவசாயி. வரவு செலவு வருஷா வருஷம் இழுபறிதான். விளைச்சல் சரியாக இருக்காது. விளைந்த வருஷத்தில் விலை கிடைக்காது. ரெண்டும் கைகூடி வருகிற மாதிரியிருந்தால்... கல் மழை மாதிரி இயற்கை உற்பாதம் வந்து நாசக்காடு பண்ணிவிடும். விரல் நகத்தில் அழுக்குப்படாமல் மேற்பார்வை பார்ப்பான். உடலுழைப்புக்கு இயலாது. சில்லான் மாதிரி ஒல்லியான உடம்பு. மம்பட்டி பிடித்து ஒரு வாய்க்கால் வரப்பைக்கூட செதுக்க முடியாது. எல்லாவற்றுக்கும் சம்பள ஆள்தான். தண்ணீர் பாய்ச்ச, பாத்திகட்ட, மூலை முடக்கு கொத்த... எல்லாமே கூலியாட்கள்தான். வேணித்தாய் ஓயாமல் பொருமுவாள். ''வெளையுற வெள்ளாமை சம்பளம் குடுத்தே சாம்பலாயிரும்.'' ''அதுக்கு என்ன செய்யச் சொல்றே?'' ''உங்களாலே தண்ணி பாய்ச்சவுமா முடியாது பொம்பளைகூட பாய்ச்சுதாளே?'' ''நமக்கு அதெல்லாம் சரிப்பட்டுவராது'' படிப்பு படிச்சவுகளாம்! படிச்சிருந்தா... மம்பட்டியை தொடக்கூடாதுன்னு சட்டமா? கீரிடம் எறங்கிருமாக்கும். ''நொய் நொய்ன்னு நச்சரியாதே...'' ''வேர்வை சிந்தப் பாடுபாட்டாத்தான்.... அதோட அருமையும் அழகும் தெரியும்.'' ''ஒழைக்கிறதுலே என்ன அழகு இருக்கு. ''ஒழைச்சப் பாத்தாத் தெரியும். பசியெடுக்கும். கல்லை முழுங்கினாலும் செமிக்கும். ஒடம்பு வலுப்படும். மனசுலே ஒரு தைர்யம் வரும். வேர்வை சிந்தி ஒழைச்சுப் பார்த்தாத்தான்... மனுசருக்கு மனுசக்குணமே வரும்.'' ''வேணி... அஞ்சுலே வளையாத ஒடம்பு. முப்பத்தைஞ்சுலே வளைக்கணும்னு ஆசைப்படதே.'' ''இதுலே ஒரு பெருமையாக்கும்?'' விளையாட்டான வெளுப்பாக உதட்டைப் பிதுக்கினாள் வேணி. ஆனாலும் விளையாட்டல்ல. வெளிப்படுகிற ஏளனம். ரொம்ப ஆழத்திலிருந்து கூர்மையாக வருவதாய். உணர்வான். ஆயினும் சீனிவாசன் அசையவில்லை. அப்படியேதான் இருந்தான். புஞ்சையில் கூலியாட்கள் பாத்திக் கட்டிக் கொண்டிருந்தால்... அவன் பாட்டுக்கு. டீக்கடையில் பேப்பர் பார்த்துக் கொண்டிருப்பான். சாயங்காலம் போய்ப்பார்த்துவிட்டு வயிறெரிவான். காட்டுக்கத்தலாய்க் கத்துவான். ''வாங்குற காசுக்கு வஞ்சமில்லாம ஒழைக்க வேண்டாம்? ஆள் இருந்தா, ஒரு மாதிரி, இல்லேன்னா ஒரு மாதிரி. மோசக்காரப் பாவிக. பாத்தி கட்டியிருக்குற லட்சணமா, இது? வரட்டும். பேசிக்கிடுதேன். சம்பளம் வாங்க வருகிறவர்களிடம் ஒரே சண்டைக்காடுதான். வருஷம் பூராவும் வம்பு வழக்குதான். தகராறுகள், கூலியாட்களைக் குறை சொல்லிச் சண்டை போடுவது... அவனது சுபாவமாகிவிட்டது. வேலை தளத்துக்க போக முடியாமுலும் ஜோலிகள் வந்துவிடும். மேற்பார்வை ஜோலிகள், போங்குக்கு நகை அடகுவைக்க. கடன் வாங்க, கொடுக்க, உரம் வாங்க.... பூச்சி மருந்து வாங்க என்று ஜோலிகள். ....போன வருஷம் மண்ணடிக்கிறபோது இப்படித்தான் எல்லா சம்சாரிக்கும் டக்கர் பன்னிரண்டு நடைகொண்டு வந்து கொட்டியது. இவனுக்கு பத்துநடை மட்டும். கேட்டால்... கண்மாயிலிருந்து புஞ்சை ரொம்பத் தூரம் என்கிற சால்ஜாப்பு. ஏமாளியாகிப் போய்ட்டோமே என்கிற மனக்கொதிப்பு, ரொம்ப நாளைக்கிருந்தது. இந்தத்தடவை விடக்கூடாது என்ற முடிவு. கண்மாயிலிருந்து கடைசிவரைக்கும் வேலை நடக்கிற லட்சணத்தைக் கண்காணிப்பது என்கிற வைராக்யம். ....வந்தாயிற்று, தெற்குப் புஞ்சை. அதோ. தூரத்தில் சிவப்பாய் வருகிற டக்கர். கோபு ரங்குத்தியாய் மண். நல்ல வண்டல். புஞ்சைக்குள் ரெண்டாவது குமி தட்டி முடித்துவிட்டுத் திரும்பிய டக்கரில் ஏறிக்கொண்டான். வெறும் டிரெய்லர், லோடு இல்லாமல், வண்டி போகிற வேகத்துக்கு ''பேய்க்குதி'' குதித்து அதிர்ந்தது. தடதட சத்தம் காதைக்குடைந்தது போய்க்கூப்பாடு. கலிங்கப்பட்டியை தாண்டிப் போகணும். இங்கிருந்து கண்மாய் மூன்று மைல் இருக்கும் கண்மாயின் உள்வாய்ப் பகுதி முழுக்க கருவேல மரங்கள். ஒன்றையொன்று உரசிக்கொண்டு. பின்னிக்கொண்டு, அடர்த்தி என்றால் அடர்த்தி, கற்றை அடர்த்தி, ஆள் போக முடியாது. கரையை ஒட்டிய மடைகள், மடைகள் இருக்கிற உட்பகுதிகளில் கொஞ்ச தூரம் மரங்களில்லை. கன்னங்கரேலென்று இருள் மாதிரியான கரிசல் மண். ஈரல் கட்டி மாதிரி. ஆள் உயரத்திற்கு வெட்டுக் கிடங்குகள். அங்குதான் கூலியாட்கள். டக்கர் போய் வட்டமடித்து நின்றவுடன்... அள்ளி வைத்திருந்த அறுபது கூடை மண்ணையும் சடபுடவென்று தூக்கிக் தட்டினார்கள். அள்ளிவிட, தூக்கிவிட என்று புயல் சுறுசுறுப்பாய் வேலைகள், பரஸ்பரம் அதட்டுகிற... ஏவுகிற... உசுப்புகிற சப்த அதிர்வுகள். ''மம்பட்டியை ஓங்கிப்போடு!'' ''கூடையை விருட்டுன்னு தூக்கிப்போடு'' ''நடுவுலே எட்டி எறி'' ''வெட்டி அள்ளு'' ''ஏய், கையிலே உசுர் இல்லியா? ஓங்கிக் குத்து'' கண்மூடி முழிப்பதற்குள் வண்டி லோடாகிவிட, பீடியை சுண்டியெறிந்துவிட்டு டிரைவர் ஏறி... டக்கரை உயிர்ப்பித்தார். வண்டி போனவுடன் அவரவர் மரத்தடிகளில் போய்ச்சாயவில்லை. மாறாக, வேலைகள், சுறுசுறுப்புக் குன்றாத வேக வேலைகள். கடப்பாறையில் ஓங்கி ஓங்கி குத்தி மண்ணை நெகிழ்ந்து விடுகிற இருவர். நெகிழ்ந்து புரளும் கட்டிகளை உடைத்து இழுத்துக் குவியலாக்குகிற நால்வர். அறுபது கூடைகளிலும் மண்ணை அள்ளி அடுக்குகிற நால்வர். ரெக்கை கட்டிப்பறக்கிற வேலைகள். வியர்வை வரி வரியாய். துடைக்க நேரமில்லை. கரிசல மண்ணைப் போல கறுத்த உடம்புகளில் வியர்வைக் கசகசப்பில் அடைஅடையாய் கரிசல் தூசி. கருவேல மரத்தடி நிழலில் உட்கார்ந்தான். சீனிவாசன். நிழலும் பொய் நிழல், வெக்கையான நிழல், செருப்பைப்போட்டு அதன் மேல்தான் உட்கார முடிகிறது. வெயில் என்றால் வெயில். அப்படி வெயில், தீ வெயில், நிமிர்ந்து பார்க்க முடியவில்லை. கண்ணெல்லாம் காந்துகிறது. அலை அலையாய் அந்தரத்தில் நெளிந்தோடுகிற கானற் சங்கிலிகள். சீனிவாசனைப் பார்த்து அன்போடு சொன்னார்கள். ''நீங்க எதுக்கு வெயில்லே சீரழியணும்? வீட்டைப் பாத்துப் போங்க.'' ''எள்ளு காஞ்சதுன்னு... கூடவே எலிப் புழுக்கையும் காயஞ்சதாம்...'' ''அதானே? நாங்க காய்றது சரிதான். தலைவிதி. வயித்துப்பாடு. நீங்க எதுக்குக் காயணும்?'' எல்லோருக்கும் பொதுவாக மெல்லிசாகச் சிரித்துப் பதில் சொன்னான். ''இல்லே... நா இருக்கேன்.'' ''அப்ப... இருங்க. எங்க தோள்லேயா இருக்கீக? ராசாப்போல இருங்க.'' வியர்வையைப் போலவே அவர்களுக்குள் வற்றாத கேலிகள், கிண்டல்கள், பரஸ்பர நையாண்டிகள், தாறுமாறான கெட்ட வார்த்தை வசவுகள். சண்டை போடுகிற மாதிரி காட்டமான கோபப் பேச்சுகள். எல்லாமே வேடிக்கை விளையாட்டுகள்தான். அலுப்புத் தெரியாமலிருக்க உணர்ச்சி வடிகால்கள். பேச்சு பேச்சாக இருந்தாலும்... சீனிவாசன் அடிக்கடி மணியைப் பார்த்தான். போயிருக்கிற நடைகளை எண்ணி மனசுக்குள் கணக்குப் போட்டான். பத்து நடைபோய்ச்சேரும் என்பதே சந்தேகம்தான். அவர்கள் சொல்லச் சொல்லக் கேட்காமல்... அவனும் ''கூடமாட'' வேலைகள் செய்கிறான். சும்மாவே இருப்பதில் ஒரு குற்ற உணர்வு. உள் உறுத்தல். அதற்காகவே அவனும் உழைப்பில் பங்கெடுத்துக் கொண்டான். கடப்பாரையால் ஓங்கி ஓங்கிப் போட்டு அசைத்தான். மண் உருண்டைகளைப் பெயர்த்து உருட்டினான். கருவேலச் சல்லி வேர்களை அறுத்துக்கொண்டு மண் பெயர்கிறபோது... இவனுள் மழலைத்தனமான மகிழ்ச்சி. வெற்றி கண்ட மனப்பூரிப்பு. உழைப்பின் விளைவாய் நிகழும் மாறுதல்கள், அவனுள் ஒரு லாகிரியாய். நிழல் காலடியில் சுருண்டது. மதியமாகிவிட்டது. டக்கர் வந்து லோடு ஏற்றிப்போனவுடன்... லேசுமாசாய் கையைக் கழுவினர். தூக்குச்சட்டிகளை எடுத்து, வெட்ட வெயிலில் வட்டமாய் உட்கார்ந்தனர். திறந்தால்.... ஒவ்வொரு சட்டியிலும் பத்துத் தோசை, பனிரெண்டு தோசை. சட்னியில் நனைந்துகிடந்தது. சீனிவாசன் அசந்து போனான். ஒரு மனுசனுக்கு இம்புட்டுத் தோசையா! சாப்பிட முடியுமா? அதுவும் தோசையா! இவனையும் சாப்பிடச் சொல்லி ஆள் ஆளுக்கு உபசரித்தனர். மறுத்துவிட்டான். தோசை உடம்புக்கு ஒத்துக்காது.'' அவர்கள் சாப்பிட்ட வேகம். மறைத்துக் கொள்ளாத ஆசையோடு தின்கிற ஆர்வம். ருசி பற்றிய பேச்சுக்கள். அதிலேயே கேலிகளும் கிண்டல்களும்.... வாழ்வின் அவலமும்.... ''தின்னுங்க தோசையை... விடாதீக.'' ''ஆமா... நாளையிலேருந்து புளிச்ச கஞ்சிதான்.'' ''ஆமப்பா.... புரட்டாசி மொதச் சனிக்குத்தான் தோசையைக் கண்ணாலே பாக்கமுடியும் நம்மாலே!'' ''கூலிக்காரன் தெனம் தோசைக்கு ஆசைப்பட முடியுமா?'' ''நடக்குற காரியமா?'' ''துட்டுக்காரன் வீட்லே தெனம் தெனம் கடைசி ஆடிதான். தோசை மணந்தான்.'' ''தோசைன்னா... தனி ருசிதான்.'' ''ஆசைதோசை, அப்பள வடைன்னு சும்மாவா சொல்லுதாக'' ''அதுலேயும் காட்டு ருசியிருக்கே.... அது ஒரு தனி ருசி.'' ''கஞ்சின்னா... குடிச்ச மாத்திரத்துலே பசிச்சிரும். தோசைன்னா... கம்முன்னு கெடக்கும்.'' ''கல்லு மாதிரி.'' வினோதப் பிறவிகளைப் பார்க்கிற மாதிரி ஆச்சரியமாய்ப் பார்த்தான் சீனிவாசன். ''ராட்சஸங்கதான். தோசையையே இந்தப்போடு போடுறாங்களே, பாவிக. நம்மாலே ரெண்டு தோசையைக் கூட சாப்பிட முடியாதே. இவனுக்கு இது ரொம்பப் புதுசு. ஆச்சர்ய அனுபவம் இவனுக்குள் சம்மணம் போட்டு உட்கார்ந்துகொண்ட மலைப்பும், வியப்பும். பசி லேசாக வயிற்றைக் கிள்ளியது. வேலையால் வழிகிற வியர்வை. சட்டையைக் கழற்றி வைத்துவிட்டான். தடதடவென்று பேயிரைச்சலாய்த் திரும்ப வந்த டக்கரின் சின்னவன் உட்கார்ந்திருப்பது தெரிகிறது. அவன் கையில் எவர்சில்வர் தூக்குச் சட்டி. அந்தரத்தில் ஏந்திப்பிடித்திருந்தான். குலுங்காமலிருப்பதற்காக. கடப்பாரையை மண்ணில் குத்தி நிறுத்தினான். உள்ளங்கைகளைப் பார்த்தான். பிசுபிசத்த கரம்பைமண். அதையும் தாண்டித்தெரிகிற கன்றிப்போன சிவப்பு. காந்தலான வலி. குடத்துத் தண்ணீரில் கையை லேசாகக் கழுவினான். ஆட்கள் டக்கருக்கு நிமிஷத்தில் லோடு பண்ணி முடித்தார்கள். திரும்பிப்போன டக்கரில் கோபுரங்குத்தியாக மண். தேர் அசைந்து நகர்கிற மாதிரியான தோற்றம். மரத்தடிக்கி வந்தான். அடத்தியான பெருமூச்சு. உட்கார்ந்தான். ''என்னடா... அம்மா குடுத்துவிட்டாளா?'' ''ஆம்ப்பா....'' ''நீ சாப்பிட்டுட்டீயாடா?'' ''சாப்ட்டுட்டேன்ப்பா?'' ''இங்கேயும் சாப்புடுதியா?'' ''வேண்டாம்ப்பா'' ''அம்மா இட்லிதா குடுத்துவிட்டாளா?'' ''இல்லேப்பா...'' சின்னவன் குரலில் மெல்லிய அச்சம். பூகம்பத்தை முன்னுணர்ந்த நடுக்கம். சீனிவாசனுக்குள் சுள்ளென்று வருகிற கோபம். ''பொறகு?'' ''தோசை'' சட்டென்று நிமிர்கிற சீனிவாசன். விரிகிற கண்களில் ஒரு விறைப்பு. மூக்கு நுனியில் மெல்லிய துடிப்பு. கன்னக் கதுப்புகளில் பற்கடிப்பின் படைப்பு. ''தோ...சை...யா?'' அவனுள் சண்டாளமாய்ப் பீறிட்ட வெறி. பிடிக்காது என்று தெரிந்தும் தோசை கொடுத்தனுப்பினால்..... அத்தனை அலட்சியமா? சின்னவன் முகத்தில் ஒரு மிரட்சி. ''இல்லேப்பா.... காலையிலே ஒரு விருந்தாளி வந்திருச்சு. எடுத்து வைச்சிருந்த இட்லியை அவுகளுக்கு அம்மா வைச்சிட்டாக.'' ''ம்'' அதில் ஒரு இறுக்கம். ''தோசையை குடுத்தனுப்புறப்பவே... அம்மா சொன்னாக'' ''என்னன்னு'' ''உங்கப்பா என்னை வையத்தான் போறாரு. வாங்கிக் கட்டிக்கிட வேண்டியதுதான்னு சொன்னாக'' வேணித்தாய் சொன்ன சொற்கள் குளிர் நீராய் கொதித்துக் கொண்டிருந்த அவன் மனசை ஆசுவாசப்படுத்தியது. சமாதானப்படுத்தியது. அலட்சியம் செய்யவில்லை. மதிக்கிறாள் என்பதை உணர்ந்த மனத்திருப்தி. உள்ளே புதைந்து கிடந்த பெருந்தன்மையுணர்ச்சியை உசுப்பிவிட்டது. பெருமூச்சோடு சட்டியைத் திறந்தான். நாலு தோசை. ஒரு கிண்ணத்தில் சட்னி. அலம்பி விழுந்து தோசை நனைந்திருந்தது. ஒரு தோசையை மட்டும் சாப்பிடுவது என்று உள்ளுக்குள் வைராக்யமான முடிவு. சகிப்புத்தன்மையை மீறிக்கொண்ட கசிகிற முணுமுணுப்போடு சாப்பிட்டான். சின்னவன் அவனது அம்மாவைப்போல, ரொம்பத் துறுதுறுப்பு. ஓடியாடி வேலை செய்கிற ஆர்வம். உழைப்பின் நாட்டம் ஓடி ஓடி மண்கட்டிகளைத் தூக்கிக் கூடைகளில் வைத்தான். பெரிய பெரிய கட்டிகளாய்க்கிடந்ததை மம்பட்டியால் உடைத்தான். ஓங்கி ஓங்கிப் போட்டான். அந்தப் பிஞ்சுப்பயல் வேலைசெய்கிற நேர்த்தியை - அழகை - சுறுசுறுப்பையே பார்த்துக் கொண்டிருந்த சீனிவாசன். குனிந்து தூக்குச் சட்டியைப் பார்த்தான். அதிர்ந்தே போனான். நாலு தோசையும் காலி. நான்தான் சாப்பிட்டேனா என்கிற மலைப்பு. ஆச்சர்யம் இன்னும் கூட ஒரு தோசை சாப்பிடலாம் போல வயிற்றுக்குள் இடம். எண்ணெய் வாடை ஒத்துக்கொள்ளாது. நிஜம்தான். ஆனால், இப்போது ருசியாகவே இருந்ததாய் நினைவு. எப்படி? நாலு தோசை விழுங்க முடிந்ததே... அது எப்படி? காட்டு ருசியே தனி ருசி என்பது இதுதானா? காட்டு ருசி என்றால்... உழைப்புக்குப் பிறகு வருகிற பசியா? ''வியர்வை சிந்தப் பாடுபட்டாத்தான்... அதோட அருமையும் அழகும் தெரியும்.'' ''ஒழைச்சுப் பாத்தாத் தெரியும். பசியெடுக்கும். கல்லை முழுங்கினாலும் செமிக்கும். வேணி அடிக்கிற சொல்கிற வேதம். நிஜம்தானோ? ராட்சஸமாய் உழைப்பதால்தான்.... இவர்கள் பத்துத்தோசை என்று ராட்சஸதனமாய்ச் சாப்பிடுகிறார்களோ... அவனுக்குள் ஆச்சர்யமான வெளிச்சம். சுபாவத்தையே அலசிக் காயப்போடுகிற அனுபவ வெளிச்சம். உள்ளுக்குள் துருவேறிக்கிடந்த சாளரங்கள் திறந்துகொண்ட உணர்வு. சாயங்காலம்.... சம்பளம், வாங்க வந்த கூலிக்காரர்களோடு சண்டை போடவில்லை. சீனிவாசன். அன்றைக்கு மட்டுமல்ல....
கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பு 'காட்டு ருசி' என்பதாகும்.
1
['tam']
கீழே கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பைக் கொடு. கதை: ஓர் ஊரில் துணி வெளுக்கும் தொழிலைச் செய்து வந்தாள் ஒருத்தி. அவளுக்கு மூன்று மகள்கள் இருந்தனர். மூவருமே அழகிகளாக விளங்கினார்கள். எவ்வளவு உழைத்தும் அவர்களால் வயிறார உண்ண முடியவில்லை. வறுமையில் வாடினார்கள். ஒருநாள், அவர்கள் வீட்டிற்கு அழகான இளைஞன் ஒருவன் வந்தான். அம்மா! நான் பக்கத்து ஊரைச் சேர்ந்தவன். செல்வனாக இருக்கிறேன். என் வீட்டு வேலைகளைச் செய்ய ஒரு பெண் தேவை. உங்கள் மகள்களில் ஒருத்தியை அனுப்பி வையுங்கள். நான் அவளை அரசி போல வைத்துக் கொள்கிறேன், என்று இனிமையாகப் பேசினான். இதைக் கேட்ட மூத்த மகள், அம்மா! இங்கு நாம் வறுமையில் வாடுகிறோம், நான் இவருடன் செல்கிறேன், என்றாள். அவர் சொல்கின்ற வேலைகளைச் செய்து நல்ல பெயர் வாங்கு, என்று அவளை அனுப்பி வைத்தாள் தாய்.அவளை அழைத்துக்கொண்டு நடந்தான் இளைஞன். நீண்ட தூரம் சென்ற பிறகு அவர்கள் ஒரு மாளிகையை அடைந்தார்கள். இதுதான் என் மாளிகை. இங்கு நீ உன் விருப்பம் போல இருக்கலாம் எந்த அறையை வேண்டுமானாலும் திறந்து பார்க்கலாம். ஆனால் அந்தக் கடைசி அறையை மட்டும் நீ திறந்து பார்க்கக் கூடாது. என் கட்டளையை நீ மீறினால் நான் பொல்லாதவனாகி விடுவேன். எல்லா அறைகளின் சாவியும் இங்கே உள்ளது, என்றான் அவன். நான் ஏன் உங்கள் கட்டளையை மீறப் போகிறேன். அந்த அறையைத் திறந்து பார்க்க மாட்டேன், என்றாள் அவள். தோட்டத்தில் இருந்த ஒரு சிவப்பு ரோசாப் பூவைப் பறித்து வந்தான் அவன். அதை அவள் தலையில் சூடினான். நான் வெளியே செல்கிறேன். எப்பொழுது வருவேன் என்று எனக்குத் தெரியாது. அந்த அறையை மட்டும் திறக்காதே, என்று சொல்லிவிட்டுச் சென்றான்.ஒவ்வொரு அறையாகப் பார்த்துக் கொண்டே வந்தாள் அவள். ஒவ்வொரு அறையிலும் விலை உயர்ந்த பொருள்கள் இருந்தன. ஒரு அறையில் நவரத்தினங்களும் பொற்காசுகளும் கொட்டிக் கிடந்தன. எவ்வளவு நல்ல வாழ்க்கை கிடைத்து இருக்கிறது? நாம் இங்கேயே மகிழ்ச்சியாக இருக்கலாம், என்று நினைத்தாள் அவள். பூட்டி இருந்த கடைசி அறை அவள் கண்ணில் பட்டது. அவளால் ஆர்வத்தை அடக்க முடியவில்லை. அந்த அறைக்குள் அப்படி என்னதான் இருக்கும்? ஏன் நம்மைப் பார்க்க வேண்டாம் என்று தடுக்கிறார்? மெல்லத் திறந்து பார்த்துவிட்டு உடனே மூடி விடுவோம். கண்டிப்பாக அவருக்குத் தெரிய வாய்ப்பு இல்லை என்று நினைத்தாள் அவள். சாவியைப் போட்டு மெதுவாக அந்தக் கதவைத் திறந்தாள். உள்ளிருந்து அழுகுரலும் ஓலமும் கேட்டன. உள்ளே நுழைந்தாள்.அங்கே கொடிய தீயில் பல உயிர்கள் வெந்து கொண்டிருந்தன. காப்பாற்றுங்கள்! காப்பாற்றுங்கள்! என்று அவை கெஞ்சின. தன்னை அழைத்து வந்திருப்பது பிசாசு என்ற உண்மை அவளுக்குப் புரிந்தது. அவசரமாக அந்தக் கதவை மூடிப் பூட்டுப் போட்டாள். எதுவுமே நடவாதது போலத் தன் அறைக்குள் வந்து அமர்ந்தாள் அவள். அந்தத் தீயின் வெப்பத்தால் அவள் தலையில் இருந்த பூ வாடி விட்டது. இதை அவள் கவனிக்கவில்லை.மீண்டும் அங்கு வந்த இளைஞன் அவளை மேலும் கீழும் பார்த்தான். என் கட்டளையை மீறி விட்டாய். அந்த அறையைத் திறந்து பார்த்து இருக்கிறாய். உனக்கு என்ன தண்டனை தெரியுமா? என்று கோபத்துடன் கத்தினான் அவன். நான் திறக்கவில்லை, என்று நடுங்கிக் கொண்டே சொன்னாள் அவள். உன் தலையில் உள்ள ரோசாப் பூ எப்படி வாடியது? என்னிடமா பொய் சொல்கிறாய்? நீயும் அந்தத் தீயில் கிடந்து புலம்ப வேண்டியதுதான், என்று அவளை இழுத்துக் கொண்டு சென்றான் அவன். என்னை மன்னித்து விடுங்கள், இனி மேல் நான் இப்படிச் செய்ய மாட்டேன், என்று கதறினாள் அவள். அவளை அந்தத் தீயில் தள்ளிவிட்டு அறையைப் பூட்டினான் அவன்.துணி வெளுப்பவளின் வீட்டிற்கு மீண்டும் வந்தான் அவன், அம்மா! உங்கள் பெண் எங்கள் வீட்டில் நன்றாக இருக்கிறாள். அங்கே அவளுக்கு வேலை அதிகமாக இருக்கிறது. தங்கையையும் அழைத்து வரச்சொன்னாள். அதனால்தான் வந்தேன், என்றான்.அடுத்தவளும் அவனுடன் புறப்பட்டான். இருவரும் மாளிகையை அடைந்தார்கள். வழக்கம் போல அவளுக்கும் சிவப்பு ரோசாப் பூவை சூடினான் அவன். எந்தக் காரணத்தை முன்னிட்டும் கடைசி அறையை மட்டும் திறக்காதே, என்று சொல்லிவிட்டுச் சென்றான் அவன். ஆர்வத்தை அடக்க முடியாத அவளும் அந்த அறையைத் திறந்தாள். திரும்பிவந்த அவன் அவளையும் தீக்குள் தள்ளினான். துணிவெளுப்பவளின் வீட்டிற்கு மூன்றாம் முறையாக வந்தான் அவன், உங்கள் இரு மகள்களும் என் மாளிகையில் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள், அவளுக்கு அங்கே வேலை அதிகமாக இருக்கிறதாம். கடைசித் தங்கையையும் அழைத்து வரச் சொன்னார்கள். அதற்காகத்தான் வந்தேன், என்றான் அவன்.என் மகள்கள் மகிழ்ச்சியாக இருந்தால் அதுவே எனக்குப் போதும் இவளையும் அழைத்துச் செல், என்றாள் தாய். கடைசி மகளையும் அழைத்து கொண்டு அவன் புறப்பட்டான், இருவரும் மாளிகையை அடைந்தனர். வழக்கம் போல அவள் தலையிலும் ரோசாப் பூவை அணிவித்தான் அவன். என் அக்கா ரெண்டு பேரும் எங்கே? என்று கேட்டாள் அவள். வேறு வேலையாக வெளியே சென்று இருக்கிறார்கள். வர ஒரு வாரம் ஆகும். நீ இந்த மாளிகையில் எங்கு வேண்டுமானாலும் செல்லலாம். ஆனால் கடைசி அறையை மட்டும் திறக்கக் கூடாது மீறினால் உனக்குக் கடுந்தண்டனை கிடைக்கும். நான் வெளியே செல்கிறேன். திரும்பி வர நேரம் ஆகும், என்று சொல்லிவிட்டுப் புறப்பட்டான் அவன்.அக்கா இருவரையும் காணவில்லை, வந்தவுடன் தலையில் ரோசாப் பூவைச் சூடுகிறான். ஒரு அறைக்கு மட்டும் செல்ல வேண்டாம் என்கிறான். ஏதோ சூழ்ச்சி நடக்கிறது, என்பது அவளுக்குப் புரிந்தது. அறிவுக்கூர்மை, உடைய அவள் சிந்தனையில் ஆழ்ந்தாள். திறக்கக் கூடாது என்று தடுத்த அறைக்கும் ரோசாப் பூவிற்கும் ஏதோ தொடர்பு உள்ளது, என்று அவளுக்குத் தோன்றியது. தலையில் இருந்த ரோசாப் பூவை எடுத்தாள். அருகில் இருந்த கிண்ணத்தில் அதை வைத்து மூடினாள். மெதுவாக நடந்து அந்த அறைக் கதவைத் திறந்தாள். உள்ளே தீயில் பலர் துடித்துக் கொண்டிருப்பது தெரிந்தது. அவர்களில் தன் இரண்டு அக்காவும் இருப்பதைக் கண்டு திகைத்தாள். எங்களால் இந்த வேதனையைத் தாங்க முடியவில்லை. தங்கையே! நீதான் எப்படியாவது எங்களைக் காப்பாற்ற வேண்டும். புத்திசாலியாகிய நீ ரோசாப் பூவை சூடாமலேயே வந்து இருக்கிறாய். நீ வந்திருப்பது அந்தப் பிசாசிற்குத் தெரிய வாய்ப்பே இல்லை, என்றாள் மூத்தவள்.கவலைப் படாதீர்கள் நான் உங்களை எப்படியும் காப்பாற்றுகிறேன், என்று வெளியே சென்றாள் அவள். பழையபடி அந்த அறையைப் பூட்டினாள். ரோசாப் பூவை எடுத்துத் தலையில் மீண்டும் அணிந்து கொண்டாள். இரவு நேரம், அவன் வந்தான். ரோசாப் பூ வாடாததைக் கண்டான். அவள் அந்த அறைக்குள் நுழைந்திருக்க மாட்டாள் என்று நினைத்தாள்.நாள்தோறும் அவள் தலையில் புதிய ரோசாப் பூவை சூடிவிட்டுச் சென்றான் அவன். தன் இரண்டு அக்காவையும் எப்படித் தப்பிக்க வைப்பது என்று சிந்தனையில் ஆழ்ந்தாள் அவள். நான்கு நாட்கள் சென்றன. இளைஞனைப் பார்த்து அவள், இங்கே எனக்கு ஏராளமான வேலை இருக்கிறது. துணி துவைக்க நேரமே இல்லை. அழுக்குத் துணிகளை எல்லாம் பெரிய மூட்டையாகக் கட்டி வைத்து இருக்கிறேன். என் அம்மாவின் வீட்டில் தந்துவிட்டு வாருங்கள், என்றாள். நாளை மாலை அந்த மூட்டையைத் தூக்கிச் செல்கிறேன், என்றான் அவன். பொழுது விடிந்தது. அவன் வழக்கம் போல வெளியே சென்றான். அறைக்குள் சென்ற அவள் மூத்த அக்காவை வெளியே கொண்டு வந்தாள். நீ நம் வீட்டிற்குச் செல்ல ஏற்பாடு செய்துள்ளேன். நான் சொல்கின்றபடி நடந்து கொள். எல்லோரும் தப்பிக்கலாம் என்றாள் அவள். பெரிய சாக்கிற்குள் அக்காவை நுழைத்தாள் அவள். சுற்றிலும் அழுக்குத் துணிகளை வைத்தாள். சாக்கை இறுகக் கட்டினாள். இளைஞன் வந்தான். அவனிடம் அவள், அழுக்குத் துணி மூட்டை தயாராக உள்ளது. அதைத் தூக்கிச் செல்லுங்கள். வழியில் எங்கும் மூட்டையை வைக்கக் கூடாது. வைத்தால் எனக்குத் தெரிந்து விடும். என்னை ஏமாற்ற முடியாது. மூட்டையைக் கீழே வைத்தால் வைக்காதே என்று குரல் கொடுப்பேன். இருட்டுவதற்குள் இந்த மூட்டையை என் அம்மாவிடம் சேர்த்து விடுங்கள். அவரிடம் அடுத்த வாரம் வேறு அழுக்கு மூட்டை கொண்டு வருகிறேன். இதைத் துவைத்து வையுங்கள். அப்பொழுது எடுத்துச் செல்கிறேன் என்று சொல்லுங்கள். அங்கே அதிக நேரம் தங்காதீர்கள் உடனே புறப்பட்டு விடுங்கள் என்றாள் அவள். சூழ்ச்சியை அறியாத அவன் மூட்டையை தூக்கிக் கொண்டு புறப்பட்டான். மூட்டை மிகவும் கனமாக இருந்தது. அழுக்கு மூட்டையா இவ்வளவு கனம்? கீழே வைத்து விட்டு இளைப்பாறலாம் என்று நினைத்தான் அவன். தோளில் இருந்து மூட்டையைக் கீழே இறக்க முயற்சி செய்தான். அதற்குள் இருந்தவள், நான் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறேன். மூட்டையைக் கீழே வைக்காதே, என்று குரல் கொடுத்தாள். மாளிகைக்குள் இருக்கும் பெண்தான் பேசுகிறாள். எவ்வளவு தொலைவில் நடப்பதும் அவள் கண்களுக்குத் தெரிகிறதே? இறக்கி வைத்தால் நம்மைப் பற்றித் தப்பாக நினைப்பாளே, என்று நினைத்தான் அவன். மூட்டையைத் தூக்கிக் கொண்டே நடந்தான். ஒரு வழியாக வீட்டை அடைந்தான் அவன். கதவைத் தட்டி, அம்மா! உங்கள் பெண் அழுக்குத் துணி மூட்டையை அனுப்பி இருக்கிறாள். நன்கு துவைத்து வையுங்கள். அடுத்த வாரம் வேறு துணி மூட்டையுடன் வருகிறேன். அப்பொழுது இதை எடுத்துச் செல்கிறேன். எனக்குத் தங்க நேரம் இல்லை. உடனே வீடு திரும்ப வேண்டும், என்று சொல்லிவிட்டுப் புறப்பட்டான் அவன்.அடுத்த வாரம், தன் இரண்டாவது அக்காவை மூட்டைக்குள் வைத்துக் கட்டினாள் அவள். வழக்கம் போல அவளையும் தூக்கிச் சென்றான் அவன். வழியில் மூட்டையை வைக்க அவன் முயற்சி செய்தான். மூட்டையைக் கீழே வைக்காதே நான் பார்த்துக் கொண்டு இருக்கிறேன், என்ற குரல் கேட்டது. எப்படியோ ஒரு வழியாக அவள் வீட்டை அடைந்தான். வீட்டு வாசலிலேயே அவனுக்காகத் துணி வெளுப்பவள் காத்திருந்தாள்.அவளைப் பார்த்து அவன், அம்மா! உன் மகள் அழுக்குத் துணி அனுப்பி இருக்கிறாள். ஒரு வாரத்திற்குள் எப்படித்தான் இவ்வளவு துணி சேர்கின்றதோ தெரியவில்லை. இதையும் வெளுத்து வையுங்கள். அடுத்த முறை வரும்போது இரண்டு மூட்டை துணிகளையும் எடுத்துச் செல்கிறேன். இப்பொழுது மிகவும் களைப்பாக இருக்கிறேன். நான் வருகிறேன், என்று சொல்லிவிட்டுப் புறப்பட்டான் அவன். தன் இரண்டாவது மகளும் வந்து சேர்ந்ததை எண்ணி மகிழ்ந்தாள் அவள். களைப்புடன் மாளிகைக்கு வந்து சேர்ந்தான் அவன். என் வீட்டில் துணி மூட்டையைச் சேர்த்து விட்டீர்களா? என்று கேட்டாள் அவள்.துணி மூட்டையா அது? என்ன கனம்? என்னால் தூக்கிக் கொண்டு நடக்கவே முடியவில்லை. நான் கீழே வைக்க முயன்றால் போதும். எப்படித்தான் உனக்குத் தெரியுமோ? உடனே நீ கீழே வைக்காதே, என்று குரல் கொடுக்கிறாய். அதைத் தூக்கிச் செல்ல நான் படும் துன்பம் எனக்குத்தான் தெரியும். இனிமேல் அழுக்குத் துணி மூட்டையை நான் எடுத்துச் செல்ல மாட்டேன், என்றான் அவன். இன்னும் ஒரே ஒருமுறை மட்டும் எடுத்துச் செல்லுங்கள். அதன் பிறகு நானே இங்கு துவைத்துக் கொள்கிறேன். துணியைக்கூட நீங்கள் அங்கிருந்து கொண்டு வர வேண்டாம். இந்த முறை மூட்டை அதிக கனமாக இருக்கும், என்றாள் அவள்.இதுதான் கடைசி முறை, இனிமேல் முட்டையைத் தூக்கிச் செல்ல மாட்டேன், என்றான் அவன். பிறகு வெளியே சென்று விட்டான். அந்த மாளிகைக்குள் இருந்த விலை உயர்ந்த பொருள்களை எல்லாம் திரட்டினாள் அவள். அவற்றை எல்லாம் சாக்கு மூட்டைக்குள் போட்டாள்.புறப்படும் நாள் வந்தது. இளைஞனிடம் அவள், எனக்கு உடல் நலம் சரியில்லை. நான் அறைக்குள் படுத்திருப்பேன். என்னை எழுப்ப வேண்டாம். இன்று மட்டும் இருட்டியதும் அந்த மூட்டையை எடுத்துச் செல்லுங்கள். வழியில் எங்கும் கீழே வைக்காதீர்கள். என்னை ஏமாற்ற முயற்சிக்க வேண்டாம். இங்கிருந்தபடியே எங்கும் நடப்பதை என்னால் சொல்ல முடியும், என்றாள். நீ மூட்டை கட்டி வை. நான் திரும்பி வந்ததும் எடுத்துச் செல்கிறேன், என்று வழக்கம் போல வெளியே புறப்பட்டான் அவன்.உடனே அவள் தன் படுக்கையில் தலையணைகளை வைத்தாள். மேலே போர்வையைப் போட்டு மூடினாள். சிறிது தூரத்தில் இருந்து படுக்கையைப் பார்த்தாள். யாரோ படுத்திருப்பதைப் போன்று தோன்றியது. சாக்கு மூட்டைக்குள் நுழைந்தாள் அவள். தன்னைச் சுற்றிப் பல பொருள்களை வைத்தாள். வெளியே ஒரு கையை மட்டும் நீட்டி சாக்கைக் கட்டினாள். பிறகு கையை உள்ளே இழுத்துக் கொண்டாள். சிறிது நேரத்தில் இளைஞன் உள்ளே வந்தான். படுக்கையில் அவள்தான் படுத்து இருக்கிறாள் என்று நினைத்தான். சாக்கு மூட்டையைத் தூக்கிக் கொண்டு புறப்பட்டான். மூட்டை மிகவும் கனமாக இருந்தது. தள்ளாடிக் கொண்டே நடந்தான் அவன். பாதி தூரம் கூடக் கடக்கவில்லையே, மூட்டையைக் கீழே வைத்து விட்டு இளைப்பாறுவோம் என்று நினைத்தான் அவன், தோளில் இருந்து கீழே இறக்க முயற்சி செய்தான். உடனே அவள், நான் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறேன். கீழே வைக்காதே, என்று குரல் கொடுத்தாள். அவனும் பலமுறை கீழே வைக்கலாம் என்று நினைத்தான், ஒவ்வொரு முறையும் அவள் குரல் கொடுத்துக் கொண்டே வந்தாள்.எப்படியோ முயன்று அவர்கள் வீட்டை அடைந்தான் அவன். கடைசி மகளின் வருகைக்காகத் தாய் வெளியேயே காத்திருந்தாள். பெரிய மூட்டையுடன் அவனைப் பார்த்ததும் துணி வெளுப்பவளுக்கு மகிழ்ச்சிதாங்கவில்லை. மூட்டையை இறக்கி வைத்தான் அவன். அப்பாடா! தொல்லை ஒழிந்தது. இனி மூட்டை தூக்கி வரும் வேலை எனக்கு இல்லை, என்று சொல்லிவிட்டுப் புறப்பட்டான் அவன்.சாக்கை அவிழ்த்தாள் அவள். விலை உயர்ந்த பொருள்களுடன் மகளும் வெளியே வந்தாள். மகளைக் கட்டித் தழுவிக் கொண்ட அவள், உள் அறிவுக் கூர்மையால் எல்லோரும் அந்தப் பிசாசிடம் இருந்து தப்பி விட்டோம். நிறைய பொருளும் கொண்டு வந்தாய். இனி நமக்கு வறுமையே இல்லை, என்றாள். அம்மா! என் திறமையை அந்தப் பிசாசு இந்நேரம் அறிந்து கொண்டிருக்கும். இனி அது நம் வழிக்கே வராது. கவலை இல்லாமல் நாம் இருக்கலாம், என்றாள் மகள்.மிகுந்த களைப்புடன் தன் மாளிகையை அடைந்தான் அவன். நீ சொன்னபடியே மூட்டையைச் சேர்த்து விட்டேன். மூட்டையா அது? என்ன கனம்? என்று படுக்கையைப் பார்த்துப் பேசினான். படுக்கையில் எந்த அசைவும் இல்லை. போர்வையை நீக்கிப் பார்த்தான். தலையணைதான் இருந்தது. பரபரப்புடன் சென்று கடைசி அறையைத் திறந்தான். அந்தப் பெண்கள் இருவரையும் காணவில்லை. மூவரும் எப்படித் தப்பித்து இருப்பார்கள் என்று குழம்பினான் அவன். மெல்ல மெல்ல அவனுக்கு உண்மை விளங்கியது.நானே ஒவ்வொருவராகச் சுமந்து சென்று அவர்கள் வீட்டில் விட்டு வந்திருக்கிறேன். நன்றாக ஏமாந்து விட்டேன், என்று வருந்தினான் அவன். நம் உண்மை உருவத்தை அவர்கள் புரிந்து கொண்டார்கள். இனி அவர்களை ஏமாற்ற முடியாது, என்று நினைத்தான் அவன், அவர்கள் வீட்டிற்குச் செல்லும் எண்ணத்தையே விட்டு விட்டான்.
கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பு 'மூட்டையை வைத்தால்' என்பதாகும்.
2
['tam']
கீழே கொடுக்கப்பட்டுள்ள வார்த்தைகளையும் தலைப்பையும் பயன்படுத்தி சிறு கதை எழுதுக. வார்த்தைகள்: குரு, சீடர்கள், பூர்வாசிரமம், ஆயுதங்கள், தியானம், குழப்பம், தவறு, இயல்பு தலைப்பு: குரு சிஷ்யன்
ஒரு குருவும் அவருடைய சீடர்களுடம் ஆற்றங்கரையோரம் கலகலப்பாகப் பேசிக்கொண்டே சென்றனர். ஒரு சீடன் கேட்டான், ‘குருவே, பூர்வாசிரமத்தில் நீங்கள் ஒரு பெரிய போர் வீரராக இருந்ததாகவும், பல நாடுகளுக்குப் பயணம் செய்து வெற்றிமேல் வெற்றிகளைக் குவித்ததாகவும் மூத்த சீடர்கள் பேசிக் கொண்டிருந்தார்கள்… நிஜம்தானா?" ‘நிஜம்தான்.. ஆனால் அதெல்லாம் அந்தக் காலம். இப்போது நான் ஆயுதங்களைக் கைவிட்டுவிட்டேன்…!" என்றார் குரு. ‘ஏன் குருவே? போர் தவறா… ஆயுதங்களே வேண்டாமா?" ‘சரி தவறு என்பதல்ல என் வாதம்… ஒரு கட்டத்துக்குமேல் புத்திக் கூர்மையும் அமைதியையும் விட சிறந்த ஆயுதம் எதுவும் இல்லை என்று புரிந்துவிட்டது எனக்கு!" குருவின் வார்த்தைகளில் சீடர்களுக்கு நம்பிக்கை பிறக்கவில்லை. அவரை சோதித்துப் பார்த்துவிட முடிவு செய்து, ஒரு திட்டம் போட்டனர். ‘நாளை குரு தியானத்தில் இருக்கும்போது, நாம் இருவரும் மறைந்திருந்து அவரைத் தாக்குவோம். அப்போது அவர் ஆயுதங்களை எடுக்காமல் நம்மை எப்படிச் சமாளிக்கிறார் என்று பார்ப்போம்," என்று முடிவு செய்தனர். மறுநாள் வகுப்புகள் முடிந்ததும், குரு வழக்கம்போல தியானத்தில் ஆழந்துவிட, இந்த இரு சீடர்கள் மட்டும் ஓலை தட்டிகளுக்கு அப்பால் மறைந்து கொண்டனர். சில நிமிடங்கள் கழித்து இருவரும் மெல்ல வெளியில் வந்தனர். பேசி வைத்தபடி இருவரும் குருவின் மீது ஏக காலத்தில் இரு பக்கமிருந்தும் பாய்ந்தனர். குரு முகத்தில் எந்த சலனமும் இல்லை. அவர்கள் பக்கத்தில் நெருங்கும்வரை கண்மூடி அமைதியாக இருந்த குரு, கடைசி விநாடியில் சற்று முன்னே வந்து குனிந்துகொண்டார். சீடர்கள் இருவரும் மடேர் என்று மோதிக் கொண்டு தரையில் விழுந்து உருண்டனர். எதுவும் நடக்காததுபோல் தியானத்தைத் தொடர்ந்தார் குரு! குழப்பம் குருவே குழப்பம்! புகழ்பெற்ற துறவி அவர். அவருக்கு ஏராளமான மாணவர்கள். ஒருநாள், அந்த துறவியின் பழைய மாணவர் ஒருவர் அவரைப் பார்க்க வந்தார். பரஸ்பர விசாரிப்புகளுக்குப் பிறகு, ‘குருவே, எனக்கு ஒரு குழப்பம்," என்று ஆரம்பித்தார் மாணவர். ‘என்ன?" ‘நான் உங்களிடம் படித்த தியானத்தை முறையாகத்தான் பின்பற்றுகிறேன். கவனமாகத்தான் செய்கிறேன். அவை எனக்கு மிகுந்த மன அமைதியையும் புத்திக்கூர்மையையும் தருகின்றன. அதை அனுபவபூர்வமாக உணர்கிறேன்!" ‘மகிழ்ச்சி. மகிழ்ச்சி… இதில் என்ன குழப்பம்?" ‘நான் தியானத்தில் இல்லாத வேளைகளில் முழுமையான நல்லவனாக இருக்கிறேனா என்ற சந்தேகம் இருக்கிறது. அது எனக்கே சில நேரங்களில் தெரிகிறது. சில நாள்களில் நானும் ஒன்றிரண்டு தவறுகளைச் செய்கிறேன். தியானம் பழகிய ஒருவன் இப்படிச் செய்வது சரிதானா? இதை யோசிக்கும்போது என் உள்ளம் குன்றிச் சிறுத்துவிடுகிறது!" குருநாதர் சிரித்தார். ‘ஆக… நீ தியானமும் செய்கிறாய், தவறுகளும் செய்கிறாய், அப்படித்தானே…?" ‘ஆமாம் குருவே. அது தவறில்லையா?" ‘இல்லை. நீ தினமும் தியானம் செய், தினமும் தவறு செய், தினமும் தியானம் செய், தினமும் தவறு செய், கொஞ்ச நாளில் இதில் ஏதேனும் ஒன்று நின்றுவிடும்!" ‘அய்யோ.. ஒருவேளை தவறு நிற்பதற்குப் பதில் தியானம் நின்றுவிட்டால்?" ‘அதுவும் நல்லதுதான். உன்னுடைய இயல்பு எது என்று புரிந்துவிடும் இல்லையா?!"
1
['tam']
கீழே கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பைக் கொடு. கதை: சக்கரவர்த்தி அக்பர் சில பிரமுகர்களுடன் நந்தவனத்தைச் சுற்றி வலம் வந்து கொண்டிருந்தார். அவருடன் பீர்பலும் இருந்தார். நந்தவனத்தில் மலர்ந்திருந்த ரோஜாப்பூக்களைப் பார்த்துப் பரவசமான அக்பர், “ஆகா! பூமியில் ஒரு சொர்க்கம் உண்டு எனில் அது இந்த நந்தவனம்தான்!” என்றார். “ஆம், பிரபு! நீங்கள் கூறுவது சரி!” என்று அனைவரும் ஆமோதிக்க, பீர்பல் மட்டும் மௌனமாக இருந்தார். அதைக் கவனித்த அக்பர், “பீர்பல்! சற்று முன் நான் கூறியதில் உனக்கு உடன்பாடு இல்லையா?” என்று கேட்டார். “பிரபு! இந்த நந்தவனத்திற்கு அழகைத் தருவது இந்த ரோஜா மலர்கள் தான். ஆனால் அழகு எங்கே உள்ளதோ, அங்கே அபாயமும் உண்டு!” என்றார் பீர்பல். “ஓகோ! ரோஜாப்பூக்களில் உள்ள முட்களைக் குறிப்பிடுகிறாயா?” என்று அக்பர் கேட்டார். “இல்லை, பிரபு! நான் அவற்றைச் சொல்லவில்லை!” என்று பீர்பல் சொல்ல, “அப்படியானால், ரோஜாச் செடிகளின் உள்ளே மறைந்திருக்கும் பாம்புகளைக் குறிப்பிடுகிறாயா?” என்று அக்பர் கேட்டார். “மனிதனால்தான் பாம்புகளுக்கு அபாயம்! நம் காலடியோசையைக் கேட்டவுடனேயே அவை பயந்து ஓடி விடுகின்றன!” என்றார் பீர்பல். “பின் நீ எதைத்தான் அபாயம் என்று குறிப்பிடுகிறாய்?” என்று சலிப்புடன் அக்பர் கேட்க, “பிரபு! அபாயம் என்பது அழகை மட்டுமல்ல; வலிமை, செல்வம், புகழ் ஆகிய அனைத்தையும் அபாயம் சூழ்ந்து உள்ளது. தாங்கள் பாரதத்தின் மிக வலிமை பொருந்திய, மிகப் புகழ்பெற்ற, சகல செல்வங்களையும் ஒருங்கே பெற்ற சக்கரவர்த்தி! ஆனால், மேற்கூறிய விஷயங்களினால், அண்டை ராஜ்யத்து மன்னர்கள் தங்கள் மீது பொறாமை கொண்டுள்ளனர். தங்களை வீழ்த்தி வெற்றிவாகை சூட சதித்திட்டம் இட்டவாறு உள்ளனர். அதனால்தான், பூலோக சொர்க்கம் என்று ஒன்று இருப்பதாக நான் எண்ணவில்லை” என்றார். பீர்பலின் சொற்கள் அக்பரை சிந்திக்கத் தூண்டின. மறுநாள் சபையில் அக்பர், “திடீரென்று ஒருவனை அபாயம் சூழ்ந்தால், அவனுடைய தற்காப்புக்காகப் பயன்படும் சிறந்த ஆயுதம் எது?” என்று சபையோர்களை நோக்கி ஒரு கேள்வி கேட்டார். “வாள்!” என்றார் ஒருவர். “இல்லை!” என்று மறுத்த பீர்பல், சில சமயங்களில் வாள் பிடித்த கரம் செயலற்றுப் போவதுண்டு!” என்றார். “எதிரி மீது தொலைவிலிருந்தே குறிபார்த்து ஈட்டியை வீசுவதன் மூலம் அபாயத்திலிருந்து தப்பலாம்!” என்றார் மற்றொருவர். “பதற்றத்தில் ஈட்டியின் குறி தவறினால், அது பயன்படாது!” என்றார் பீர்பல். “சரிதான்! வாள், ஈட்டி, என்று எந்த ஆயுதமுமே சரியில்லை என்றால், எதுதான் ஆபத்தில் பயன்படும்?” என்று அக்பர் கேட்க, “சூழ்நிலைக்கு ஏற்றவாறு சிந்தித்து செயற்படும் நமது அறிவே சிறந்த ஆயுதம் ஆகும்!” என்றார் பீர்பல். “வெறும் பிதற்றல்! நீ ஆபத்தில் சிக்கிக் கொள்ளும்போது உன் மூளை எப்படி வேலை செய்கிறது என்று பார்க்கிறேன்!” என்று அக்பர் கிண்டல் செய்ய, சபையோர் அவருடன் சேர்ந்து பீர்பலை எள்ளி நகையாடினர். “சமயம் வரும்போது நான் கூறியது உண்மை என்று நீங்களே தெரிந்து கொள்வீர்கள்!” என்றார் பீர்பல். மறுநாள், அக்பர் சில பிரமுகர்களுடன் நதிக்கரையில் உலவிக் கொண்டிருந்தபோது, பீர்பலும் உடனிருந்தார். அப்போது, ஒரே கூச்சலும், கூக்குரலும் கேட்க, மக்கள் தலைதெறிக்க ஓடிக் கொண்டிருந்தனர். சக்கரவர்த்தியைக் கண்ட அவர்கள் ஓடோடி வந்து, “பிரபு! ஆபத்து! அபாயம்! பட்டத்து யானைக்கு திடீரென மதம் பிடித்து விட்டது. அது இந்தப் பக்கம்தான் ஓடி வந்து கொண்டிருக்கிறது. நீங்கள் உடனே ஓடி விடுங்கள்!” என்று கூச்சலிட்டனர். அவர்கள் கூறி முடிப்பதற்குள் தொலைவில் மதயானை ஓடி வருவது தெரிந்தது. உடனே, அக்பர் தன் இடையிலிருந்து வாளை உருவ, கூடியிருந்த அனைவரும் தங்கள் வாட்களை உருவிக் கொண்டனர். ஆனால், மதம் பிடித்த யானையை வாள் கொண்டு சமாளிக்க முடியாது என்று உணர்ந்ததும், அவர்கள் திக்பிரமை பிடித்து சிலைகளாக நின்றனர். தன்னைப் பெரிய ஆபத்து எதிர் நோக்கியிருக்கிறது என்பதை அக்பரும் உணர்ந்தார். வாளினாலோ, ஈட்டியினாலோ யானையை ஒன்றும் செய்யமுடியாது என்று தெரிந்தது. ஆனால் கோழையைப் போல் பயந்து ஓடவும் அவருடைய தன்மானம் இடம் தரவில்லை. எல்லாரும் செய்வதறியாது செயலற்று நிற்க, பீர்பல் சட்டென்று அங்கிருந்த ஒரு பூனையைப் பிடித்து யானையின் முதுகில் வீசியெறிந்தார். யானையின் முதுகில் விழுந்ததால் மிரண்ட பூனை, தன் நகங்களினால் யானையைப் பிறாண்டியது. வலி பொறுக்க முடியாத யானை, தன் தும்பிக்கையினால் பூனையைப் பிடிக்க முயல, அது தப்பித்துக் கீழேயிறங்கி ஓடியது. யானையின் கோபம் முழுவதும் பூனையின்பால் திரும்ப, அது பூனையைத் துரத்திக் கொண்டே எதிர் திசையில் ஓடியது. தனது பருத்த உடலைத் தூக்கிக் கொண்டு யானையினால் விரைவாக ஓட முடியவில்லை. போக்குக் காட்டிக் கொண்டே ஓடிய பூனை, சாலையோரப் புதர்களின் உள்ளே மறைய, யானை புதர்களுக்குள் புகுந்து அதைத் தேடியது. இவ்வாறு, யானையின் கவனம் திசை திரும்ப, அக்பரும் மற்றவர்களும் யானையிடம் சிக்காமல் தப்பித்தனர். சற்றுநேரம் சிலையாய் நின்ற அக்பர் தெளிவடைந்தவுடன் பீர்பலைக் கட்டித் தழுவிக் கொண்டார். “பீர்பல்! சபாஷ்! அறிவுதான் சிறந்த ஆயுதம் என்பதை நிரூபித்துக் காட்டி விட்டாய்! சூழ்நிலைக்கு ஏற்றவாறு மூளையைப் பயன்படுத்தி சிந்தித்து செயற்படுவதே சாலச் சிறந்தது என்ற உண்மையை எங்களுக்குப் புரிய வைத்து விட்டாய்! நீ சொன்னதே சரி! உன்னைப் போன்ற அறிவாளி அருகிலிருந்தால் எந்த அபாயத்தையும் எதிர் கொள்ளலாம்!” என்று மனதாரப் பாராட்டினார்.
கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பு 'சிறந்த ஆயுதம்' என்பதாகும்.
2
['tam']
கீழே கொடுக்கப்பட்டுள்ள வார்த்தைகளையும் தலைப்பையும் பயன்படுத்தி சிறு கதை எழுதுக. வார்த்தைகள்: பெண், குழந்தை, கணவன், பணக்காரி, ஞானி, டாக்டர், இனிப்பு, அறிவுரை, உடல்நிலை தலைப்பு: அறிவுரைக்கான தகுதி
ஒரு பெண் தனது குழந்தையினால் மிகவும் தொந்தரவுக்குள்ளானாள். அவளுக்கு ஒரே ஒரு குழந்தை. அவளது கணவன் இறந்துவிட்டான். அவள் பெரும் பணக்காரிதான். ஆனால் அவளுக்கு வாழ்வில் மிகவும் சலிப்பாகிவிட்டது. அவள் தனது குழந்தைக்காகத்தான் வாழ்ந்தாள். சில சந்தர்ப்பங்களில் குழந்தைகள் மிகவும் தொந்தரவாகி விடுவர். அந்த பையன் இனிப்பைத் தவிர வேறு எதுவும் சாப்பிடுவதில்லை. டாக்டர்கள் இது மிகவும் தவறான பழக்கம். அவனது உடல்நிலை கெட்டுவிடும் எனக் கூறி விட்டனர். ஆனால் அந்த குழந்தை கேட்பதேயில்லை. அவள் ஒரு சூஃபி ஞானியிடம் எப்போதும் செல்வாள். அதனால் அவள், இவன் நான் சொல்வதை கேட்பதேயில்லை. அவர் அவருக்கு அருகில் வரும் அனைத்து மக்களையும் ஈர்க்கும் சக்தியுடையவராக இருக்கிறார். அதனால் இவன் அவர் சொன்னால் கேட்கக் கூடும். என்று நினைத்தாள். அதனால் அவள் அந்த குழந்தையை அந்த ஞானியிடம் கூட்டி சென்று, இவன் இனிப்பைத் தவிர வேறு எதையும் சாப்பிடுவதேயில்லை. நானும் ஒவ்வொரு நாளும் சொல்லிக் கொண்டே இருக்கிறேன். கேட்க மாட்டேன் என்கிறான். அதற்கு பதிலாக பட்டினி கூட கிடக்கிறான். டாக்டர்கள் உடல்நிலை கெட்டுவிடும் என்கிறார்கள். அவன் யார் சொன்னாலும் கேட்க மாட்டேன் என்கிறான். எனது கணவர் இறந்துவிட்டார். இவன் எனது ஒரே குழந்தை இவனுக்காகத்தான் இருக்கிறேன். என்னால் இவன் பசியாக இருப்பதை பார்க்க முடியாது, அதனால் இவனுக்கு இனிப்பு கொடுக்க வேண்டி வருகிறது. இனிப்பு இவனுக்கு விஷம் என்று தெரிந்தே கொடுக்க வேண்டி வருகிறது. சர்க்கரை வெள்ளை விஷம். அதனால் நான் இவனை இங்கே கூட்டி வந்தேன். இவனுக்கு ஏதாவது அறிவுரை கூறுங்கள். நீங்கள் மனிதரில் தெய்வம். நீங்கள் கூறும் வார்த்தைகளுக்கு பலன் இருக்கக் கூடும். அந்த ஞானி குழந்தையை பார்த்தார். அவர், என்னால் இந்த குழந்தைக்கு இப்போது அறிவுரை கூற முடியாது. ஏனெனில் இப்போது நானே இனிப்பை மிகவும் விரும்பி சாப்பிட்டுக் கொண்டிருக்கிறேன். இன்னும் இரண்டு வாரங்கள் கழித்து வாருங்கள். அதற்குள் இந்த இரண்டு வாரங்களும் நான் இனிப்பு சாப்பிடாமல் இருக்கிறேன். இதை என்னால் செய்ய முடிந்தால் பிறகு என்னால் அறிவுரை கூற முடியும். இல்லாவிடில் இந்த அறிவுரை கூற சரியான ஆள் நானல்ல. என்றார். அந்த பெண்மணியால் நம்பவே முடியவில்லை. இது இன்னும் அபாயகரமானது. ஆனால் அந்த குழந்தை மிகவும் ஈர்ப்படைந்தான். அவன் அந்த ஞானியின் காலில் விழுந்தான். அவன், என் அம்மா பல பேரிடம் என்னை அழைத்து சென்றிருக்கிறாள். அத்தனை பேரும் உடனே எனக்கு அறிவுரை கூறினார். ஆனால் நேர்மையான முதல் ஆள் நீங்கள்தான். இரண்டு வாரங்கள் கழித்து வருகிறேன். நீங்கள் என்ன சொன்னாலும் செய்கிறேன். நான் உங்களை நம்புகிறேன். என்று கூறினான். குழந்தையின் முன் தனது தவறை ஒத்துக் கொண்ட ஒரு வளர்ந்த மனிதன், நானே இப்போது இனிப்பு விரும்பி சாப்பிட்டுக் கொண்டிருக்கிறேன். அதனால் இப்போது அறிவுரை கூறும் இடத்தில் நான் இல்லை. அதனால் இரண்டு வாரங்களில் இந்த அறிவுரையை நானே கடைபிடித்து பார்க்கிறேன். நான் தோற்றுவிட்டால், என்னை மன்னித்துவிடு. என்னால் அறிவுரை கூற முடியாது. நான் வென்றுவிட்டால் அப்போது அறிவுரை கூறுவேன். ஒரு வயதான மனிதன் நானே வென்றுவிடும்போது உனக்கு இள வயது, அதிக ஆற்றலுடன், அதிக புத்திசாலித்தனமாக இருக்கிறாய். உன்னாலும் வெற்றியடைய முடியும். அதனால் ஒரு முயற்சி செய்து பார் என்று கூற முடியும். என்றார். அந்த தாய் மிகவும் அதிர்ச்சியடைந்தாள். அந்த ஞானி கூறிய இரண்டு வாரங்களில் அவரால் அதை கடைபிடிக்க முடியாவிட்டால் எல்லாமும் முடிந்தது. பின் அந்த குழந்தையை கூட்டிச் செல்ல வேறு எந்த இடமும் இல்லை. இரண்டு வாரங்கள் சென்றபின் அவர்கள் திரும்பி வந்தனர். ஞானி அந்த குழந்தையிடம், மகனே, அது கடினம்தான். ஆனால் இயலாதது அல்ல. இந்த இரண்டு வாரங்களும் இனிப்பு சாப்பிடாமல் என்னால் சமாளிக்க முடிந்தது. நான் இனி என் வாழ்வு முழுவதும் இனிப்பு சாப்பிடப் போவதேயில்லை என உனக்கு உறுதியளிக்கிறேன். அப்போது உனக்கு அறிவுரை கூற தகுதி இருக்கிறது என நீ நினைக்கிறாயா – எனக்கு நீ அனுமதியளித்தால் என்னால் உனக்கு அறிவுரை கூற முடியும். எனக் கேட்டார். அந்த பையன், எதுவும் கூற வேண்டிய தேவையில்லை. எனக்கு புரிந்துவிட்டது. உங்களுக்கு எனது நன்றிகள். உங்களை போன்ற ஒருவர் எனக்கு அறிவுரை கூறுவதற்காக தனது வாழ்நாள் பூராவும் இனிப்பு சாப்பிடாமல் இருப்பது- தானே அப்படி இருப்பது – நம்பிக்கையுணர்வு வைக்க தகுதியானதே. நான் உங்கள் மேல் நம்பிக்கையுணர்வு கொண்டிருக்கிறேன். இந்த வினாடியிலிருந்து இனிமேல் நானும் இனிப்பு சாப்பிடப் போவதில்லை என உங்களுக்கு உறுதியளிக்கிறேன் என்றான்.
2
['tam']
கீழே கொடுக்கப்பட்டுள்ள வார்த்தைகளையும் தலைப்பையும் பயன்படுத்தி சிறு கதை எழுதுக. வார்த்தைகள்: பரமார்த்தகுரு, முட்டாள், மூடன், மட்டி, மடையன், பேயன், சீடர்கள், பின்னிரவு, பயணம், ஆறு, மரத்தடி, விழிப்பு, தூக்கம், கொள்ளிக்கட்டை, அக்கரை, அபிஷ்டு, வழிப்போக்கன்,கோயில், மந்திர சக்தி, முதுகு தலைப்பு: காணாமல் போனது யார்?
பொழுது விடியாத பின்னிரவு நேரத்தில் பரமார்த்த குரு பயணம் செய்துகொண்டிருந்தபோது, ஆறு ஒன்று குறுக்கிட்டது. ஆறு வேகமாக சீறிப் பாய்ந்து கொண்டிருந்தது. ஆற்றில் சல சல இரைச்சல் இருப்பதால் அது விழித்துக் கொண்டிருக்கிறது என்று குரு கருதினார். அதனால், இந்த வேளையில் ஆற்றைக் கடப்பது ஆபத்து எனப் பயந்தார். எனவே, ஆறு தூங்கும் வேளையில் கடப்பது நல்லது என்று முடிவு செய்தார். ஆற்றின் கரையில் இருந்த ஒரு மரத்தடியில் தனது சீடர்களுடன் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தார். சிறிது நேரம் கழித்து, குரு தனது சீடர்களில் ஒருவனான மட்டியை அழைத்தார். அவன் கையில் ஒரு கொள்ளிக் கட்டையைக் கொடுத்து, ஆற்றின் அருகில் சென்று, அது இன்னும் விழித்துக் கொண்டிருக்கிறதா? தூங்கத் துவங்கிவிட்டதா? என்று பார்த்து வருமாறு அனுப்பினார். மட்டி, தன் குருவின் கட்டளையை ஏற்று கொள்ளிக் கட்டையைக் கையில் பிடித்துக் கொண்டு, ஆற்றை நெருங்கினான். ஆற்று நீர் தன் மேல் பட்டுவிடாத படி, எட்டி நின்று கொண்டு, கொள்ளிக்கட்டையை நீரில் அமிழ்த்தினான். அது சுரீரென்று ஒலியுடன் அணைந்து விட்டது. அந்த ஒலியைக் கேட்டதும் மட்டி பதறிப் போனான். வேகமாகக் குருவை நோக்கி ஓடி வந்தான். குருவே ஆறு விழித்துக் கொண்டிருக்கிறது. கொள்ளிக் கட்டையால் அதைக் தொட்டவுடன் சீறி விட்டது. நல்ல வேளை தப்பியோடி வந்து விட்டேன் என்று பயந்து கொண்டே கூறினான். அதனைக் கேட்ட குரு, "நீ போய்ச் சோதித்துப் பார்த்துவிட்டு வந்தது நல்லதாய்ப் போயிற்று. ஆறு விழித்துக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் நாம் ஆற்றைக் கடந்தால் ஆற்றின் பொல்லாத கோபத்துக்குள்ளாகியிருப்போம். அது நன்றாகத் தூங்கும் வரை பொறுத்திருந்து, அதன்பின் பயணத்தைத் தொடர்வோம்" என்று கூறிவிட்டு அமர்ந்தார். சீடர்கள், அவரவர்களுக்குத் தெரிந்த கதைகளைக் கூறிப் பொழுதைப் போக்கிக் கொண்டிருந்தனர். பொழுது வெளுக்க ஆரம்பித்தது. அயர்ந்து தூங்கிய குரு திடுக்கிட்டு எழுந்தார். மடையனை அழைத்தார். "மடையா! பொழுது, புலர ஆரம்பித்துவிட்டது. இப்போதாவது ஆறு தூங்குகிறதா, விழித்துக் கொண்டிருக்கிறதா என்று பார்த்துவிட்டு வா" என்று கூறினார். உடனே மடையன், மட்டி கொண்டு வந்த போட்ட அணைந்து போன கொள்ளிக் கட்டையை எடுத்துக் கொண்டு ஆற்றை நெருங்கினான். கட்டையை நீருக்குள் விட்டான். எந்தவித ஒலியும் ஏற்படவில்லை. அவனுடைய மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. வேகமாக ஓடி வந்தான். "குரு! இப்போது ஆறு நன்றாக அயர்ந்து தூங்கிக் கொண்டு இருக்கிறது" என்று கூறினான். "அப்படியா, இதுதான் சரியான வேளை யாரும் எந்த ஒலியும் எழுப்பாமல் மிகவுவம் அமைதியாக வாருங்கள். சப்தம் போட்டால் ஆறு விழித்துக் கொள்ளும்" என்று தன் சீடர்களை எச்சரித்து விட்டு மெல்ல மெல்ல அடியெடுத்து வைத்து குரு ஆற்றை நோக்கி நடக்க, சீடர்களும் பின் தொடாந்தனர். பயந்து கொண்டே ஆற்றைக் கடந்து, ஒரு வழியாக அக்கரை வந்து சேர்ந்தனர். தன்னுடைய சீடர்கள் அனைவரும் பத்திரமாக வந்து சேர்ந்துவிட்டார்களா என்று சரிபார்க்க குரு எண்ணினார். தனது சீடர்களில் ஒருவனை அழைத்து, "சீடனே! என்னையும் சேர்த்து நாம் ஆறு பேர். நாம் அனைவரும் பத்திரமாக இருக்கிறோமா? நம்மில் யாரையாவது அந்தப் பொல்லாத ஆறு விழுங்கிவிட்டதா? எனச் சரிபார்த்து எண்ணிக்கூறு?" என்று கூறினார். அபிஷ்டு தன் முன்னால் நிற்பவர்களை ஒன்று இரண்டு என்று எண்ண ஆரம்பித்தான். தன்னை மட்டும் சேர்க்காமல் மற்றவர்களை மட்டும் எண்ணி, "குருவே, ஐந்து பேர்தான் உள்ளோம்" என்ற கூறினான். ஆறு பேரில் ஒருவரைக் காணோம் என்று குரு திடுக்கிட்டுப் போனார். தங்களில் ஒருவரை ஆறு விழுங்கிவிட்டது என்ற அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். அதனால், குரு மீண்டும் எண்ணிப் பார்க்குமாறு மற்றொரு சீடனிடம் கூறினார். அவனும் தன்னை விட்டுவிட்டு மற்றவர்களை மட்டும் எண்ணி விட்டு, "குருவே, மோசம் போனோம். அபிஷ்டு எண்ணியது சரியே! நம்மில் ஒருவரைக் காணோம். ஐவர்தான் உள்ளோம் என்று அலறினான். இப்படியே மற்ற சீடர்களும், குருவும் தங்களைச் சேர்க்காமலேயே எண்ணி ஐவர்தான் என்று முடிவு செய்தனர். தங்களில் ஒருவரை இழந்துவிட்ட சோகத்தில் அழுதுகொண்டிருந்தனர். குருவுக்கு ஆத்திரம் தாங்கவில்லை. தன் சீடர்களில் ஒருவரை அபகரித்துக் கொண்ட ஆற்றின் மீது கடுங் கோபம் கொண்டார். அதனைப் பலவாறு பழித்துக் கூறி சாபமிட்டார். குருவும் சீடர்களும் துயரம் தாங்காமல் அழுது புலம்ப ஆரம்பித்துவிட்டனர். ஆற்றோடு போனவன் தங்களில் யார் என்று அறிந்து கொள்ளாமலேயே துக்கம் கொண்டாட ஆரம்பித்துவிட்டனர். அந்த நேரத்தில் வழிப்போக்கன் ஒருவன் குருவும், சீடர்களும் இருந்த இடத்தை நோக்கி வந்து கொண்டிருந்தான். அவர்கள் துயரத்தில் ஆழ்ந்திருப்பதைக் கண்டு அனுதாபம் கொண்டான். காரணம் என்ன என்று அவர்களிடம் விசாரித்தான். சீடர்கள் நடந்ததைக் கூறி மேலும் அழுதனர். வழிப் போக்கன் அவர்களை எண்ணிப் பார்த்தான். அவர்களின் மடமையை எண்ணி மனதிற்குள் சிரித்துக் கொண்டான். "அன்பர்களே! நடந்தது நடந்ததாக இருக்கட்டும். போனவர்களை மீட்கும் மந்திர சக்தி என்னிடம் உண்டு. உங்களில் ஆறு விழுங்கிய நபரை மீட்டுத் தருகிறேன். அதற்கு என்ன சன்மானம் கொடுப்பீர்கள்?" என்று வழிப்போக்கன் கேட்டான். "ஐயா, எங்களில் காணாமல் போனவரைத் தாங்கள் மீட்டுக் கொடுத்தால் எங்களிடம் உள்ள பணம் முழுவதையும் தந்து விடுகிறோம். தங்களுக்கு நாங்கள் என்றும் நன்றிக் கடன் பட்டவர்களாக இருப்போம்" என்று, குரு நெகிழ்ந்து கூறினார். வழிப்போக்கன் தன் கையில் ஒரு குறுந்தடி வைத்திருந்தான். அதனை எடுத்தவாறு, "இந்தக் கோலில்தான் மந்திர சக்தி இருக்கிறது. நீங்கள் வரிசையாக நில்லுங்கள். நான் இந்தத் தடியால் முதலில் நிற்பவர் முதுகில் தட்டுவேன். அவர் ‘ஒன்று" என்று கூறிவிட்டுத் தன் பெயரைக் கூறவேண்டும்" என்று கூறினான். வழிப்போக்கன் கூறியவாறே, குரு வரிசையில் முதலிலும் அதனையடுத்து சீடர்களும் வரிசையாக நின்றனர். முதலில் குருவின் முதுகில் கம்பால் தட்டினான். அவர், "ஒன்று. என் பெயர் பரமார்த்த குரு" என்று கூறினார். அடுத்தவனைத் தட்டியதும் ‘இரண்டு" என்று கூறித் தன் பெயரையும் சொன்னான். இவ்வாறே மற்றவர்களும் முதுகில் தட்டியதும் தங்கள் பெயருடன் எண்ணிக்கையையும் கூறினர். கடைசியாக நின்றவன் "ஆறு, என் பெயர் மூடம்" என்ற கூறியதும் அவர்கள் அனைவருக்கும் மகிழ்ச்சி தாங்கவில்லை. காணாமல் போனவன் கிடைத்து விட்டான், இப்போது ஆறு பேர் உள்ளோம் என்று கூறி ஆனந்தக் கூத்தாடினர். தங்களில் ஒருவனை மீட்டுத் தந்த வழிபோக்கனின் அதிசய ஆற்றலை எண்ணி வியந்தனர். அவனைப் போற்றிப் புகழ்ந்து, தங்களிடமிருந்த பணம் முழுவதையும் தந்தனர். அதிருஷ்டத்தை நினைத்துக் கடவுளுக்கு நன்றி கூறினான் போக்கன்.
1
['tam']
கீழே கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பைக் கொடு. கதை: எப்படியோ அரசனை ஏமாற்றி, மட நாட்டின் முதல் மந்திரி ஆகி விட்டார், பரமார்த்த குரு. அவருக்குத் துணையாகச் சீடர்களும் அரண்மனை ஊழியர்களாக நியமிக்கப்பட்டனர். "நம் குரு முதல் அமைச்சர் ஆகிவிட்டதால், இனி கவலையே பட வேண்டாம்" என்று சந்தோஷம் கொண்டனர், ஐந்து சீடர்களும் ஒருநாள், "நமது நாட்டுப் படை பலம் எப்படி இருக்கிறது?" என்று பரமார்த்தரிடம் கேட்டான் மட மன்னன். இதுதான் நல்ல சமயம் என்ற நினைத்தார், பரமார்த்தர். "மன்னா! உங்களிடம் சொல்லவே நாக்குக் கூசுகிறது. நம் நாட்டு யானைகள் எல்லாம் பட்டினியால் வாடி இளைத்து, பன்றிகள் போல் ஆகிவிட்டன!" என்று புளுகினார். சீடர்களும், "ஆமாம் அரசே! இப்படியே கவனிக்காமல் விட்டால், போரில் கட்டாயம் தோல்வியே ஏற்படும்" என்று ஒத்து ஊதினார்கள். அதைக் கேட்ட மன்னன், "அப்படியா? இரண்டு யானைகளை இங்கே அழைத்து வாருங்கள்" என்று கட்டளை இட்டான். மட்டியும் மடையனும் ஓடிச் சென்று இரண்டு பன்றிக் குட்டிகளை அரண்மனைக்குள் ஓட்டி வந்தனர். அதைப் பார்த்த அரசன், "சே! சே! பார்க்கவே சகிக்கவில்லையே! இவையா நம் நாட்டு யானைகள்?" என்று கேட்டான். முதலில் மட மன்னனுக்குக் கொஞ்சம் சந்தேகம் எற்பட்டது. "இது யானை என்றால், தும்பிக்கையைக் காணோமே?" என்று கேட்டான். "மன்னா! எல்லாம் முதலில் தும்பிக்கையுடன் இருந்த யானைகள் தான். பட்டினி கிடப்பதால் உடலும் மெலிந்து விட்டது, தும்பிக்கையும் சுருங்கி விட்டது" என்று விளக்கினார் பரமார்த்தர். "இவை மறுபடியும் பழைய உருவம் அடைவதற்கு என்ன செய்ய வேண்டும்?" என்று கேட்டான் மடமன்னன். "மன்னா! இன்னொரு விஷயம். அதையும் பாருங்கள், பிறகு வைத்தியம் சொல்கிறோம்" என்றார் குரு. "நமது நாட்டுக் குதிரைப் படைகளும் இதே போல் இளைத்து விட்டன. எல்லாம் ஆட்டுக் குட்டிகள் மாதிரி ஆகிவிட்டன!" என்றான் மூடன். அப்படியா? வியப்பாக இருக்கிறதே! என்ன செய்யலாம் சொல்லுங்கள் என்றான் மன்னன். மன்னா! நாங்கள் அருமையான திட்டம் ஒன்று வைத்துள்ளோம். அதன்படி ஆயிரம் பொற்காசுகள் செலவாகும். அந்த ஆயிரம் பொற்காசுகளையும் எங்களிடமே கொடுத்து விடுங்கள். நாங்கள் எல்லாவற்றையும் பழையபடி குண்டாக்கி விடுகிறோம்! என்றனர், முட்டாளும், மூடனும் மடமன்னன் பெரிய கஞ்சன். அதனால் ஆயிரம் பொற்காசு செலவழிக்க மனம் வரவில்லை. "வேறு ஏதாவது யோசனை இருந்தால் சொல்லுங்கள்!" என்று கட்டளையிட்டான். "சே! நம் திட்டம் எல்லாம் பாழாகி விட்டதே!" என்று வருந்தினார், பரமார்த்தர். சீடர்களுக்கும் ஆத்திரமாக இருந்தது "அரசே! எல்லா யானைகளையும், குதிரைகளையும் நாட்டில் உள்ள வயல்களில் மேயவிடுவோம்! கொஞ்ச நாளில் சரியாகிவிடும்!" என்றான் மண்டு. "இதை வேண்டுமானால் செய்யலாம்!" என்றான் மடமன்னன். பரமார்த்தரின் ஆணையின்படி, மடநாட்டில் உள்ள பன்றிகள், ஆடுகள் அனைத்தும் அவிழ்த்து விடப்பட்டன. எல்லாம் சேர்ந்து கொண்டு, குடி மக்களின் வயல்களில் சென்று மேயத் தொடங்கின. இரண்டே நாளில் எல்லா வகையான தானியங்களும் பாழாகி விட்டன. அடுத்த மாதமே நாடு முழுவதும் பஞ்சம் ஏற்பட்டது. பலபேர் சோற்றுக்கே வழியில்லாமல் இறந்தனர். பரமார்த்தரும், சீடர்களும் ஒரு பயனும் இன்றித் தண்டச் சோற்றுத் தடிராமன்களாக இருப்பதைக் கண்ட மன்னன், எல்லோரையும் விரட்டி அடித்தான். அடடா! எப்படியாவது ஆயிரம் பொற்காசுகளைச் சம்பாதித்து விடலாம் என்று நினைத்தோம். கடைசியில் இப்படிப் பாழாகி விட்டதே! என்று புலம்பியபடி பழையபடி மடத்துக்கே திரும்பினார்கள்.
கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பு 'தண்டச் சோற்றுத் தடிராமன்கள்' என்பதாகும்.
1
['tam']
கீழே கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பைக் கொடு. கதை: ஒரு நாள் ஒரு மூதாட்டி மண் அடுப்பில் வைத்து சமையல் செய்து கொண்டிருந்தாள். அவள் அடுப்பில் வைத்திருந்த தண்ணீர் கொதித்ததால் அதற்குள் சில காய்கறிகளை போட்டாள். அப்போது பட்டாணி அந்தப் சட்டியிலிருந்து வெளியே குதித்து வந்து, “என்னை வேக வைக்கவேண்டாம். என்னை சமைக்கவேண்டாம்” என்று கத்தியது. “மூதாட்டியோ நீ மரியாதையாக பழையபடி சட்டிக்குள் போகிறாயா? இல்லை உன்னை நசுக்கட்டுமா?” என்றாள். ஆனால் மூதாட்டியின் உத்தரவை பட்டாணி கேட்கவில்லை. அங்கிருந்து வேகமாக ஓட்டம் பிடித்தது. அப்போது “நில் நில் ஓடாதே’ உன்னுடன் நானும் வருகிறேன்” என்று இன்னொரு குரல் கேட்டது. பட்டாணி திரும்பிப் பார்த்தது, அப்படிக் கத்தியது என்று சொன்னது எரிந்து கொண்டிருந்த ஒரு துண்டு நிலக்கரி. “அடுப்பிற்குள் இருந்தால் எனக்கு மூச்சு முட்டுகிறது. அதனால் நானும் உன்னுடன் வெளியுலகைப் பார்க்க வருகிறேன்” என்றது, நிலக்கரி. “என்ன வெளியுலகைப் பார்க்கப் போகிறாயா?. அப்படியென்றால் என்னையும் உங்களுடன் அழைத்துச் செல்லுங்கள்”. என்றது கீழே கிடந்த வைக்கோல் ஒன்று. “சரி, வா போகலாம்” என்று நிலக்கரியும் பட்டாணியும்? வைக்கோலை தங்களுடன் கூட்டு சேர்த்துக் கொண்டன. மூன்றும் சேர்ந்து நடந்தபோது சாலையின் ஓரிடத்தில் விரிசல் விட்டிருந்தது. அந்த இடத்தில் தண்ணீர் ஓடிக் கொண்டிருந்தது. “இனி நாம் தொடர்ந்து செல்ல முடியாது. அதனால் நான் அடுப்பிற்கே போய் விடுகிறேன்” என்றது, நிலக்கரி. “அப்படியென்றால் நானும் அடுப்பில் எரியும் சட்டிக்குள் போய் விடுவேன்” என்றது பட்டாணி. “நண்பர்களே சோர்ந்து விடாதீர்கள். நான் இந்த பாலத்திற்கு (விரிசல்) இணைப்பாக இருக்கிறேன். நீங்கள் இருவரும் என்மீது ஏறி நடந்து மறுபக்கம் போய்விடலாம்” என்று நம்பிக்கைïட்டியது, வைக்கோல். முதலில் பட்டாணி, வைக்கோல் மீது ஏறி விரிசலின் மறுபக்கத்தை அடைந்தது. ஆனால் எரிந்து கொண்டிருந்த நிலக்கரி, வைக்கோல் மீது ஏறியதும் அது தீப்பிடித்துக் கொண்டது. இதனால் இரண்டும் சேர்ந்து தண்ணீருக்குள் விழுந்தன. “ஷ்..ஷ்..ஷ்…”தன் மீது எரிந்து கொண்டிருந்த நெருப்பு அணைந்ததும் நிலக்கரி பெருமூச்சு விட்டது. அந்த வினோத சத்தத்தைக் கேட்ட பட்டாணி சிரிக்க ஆரம்பித்தது. தொடர்ந்து அது பலமாகச் சிரித்ததால் வெடித்து சிதறி அதிலிருந்த ஒவ்வொரு பட்டாணியும் ஓட ஆரம்பித்தன. அந்தப் பட்டாணிகள் அனைத்தும் ஒரு தையல்கடையை நோக்கிச் சென்றன. தையல்காரரிடம் தயவு செய்து எங்களை ஒன்றாக வைத்து தைத்து விடுங்கள் என்று கேட்டுக் கொண்டன. தையல்காரரும் பட்டாணிகளின் வேண்டுகோளை ஏற்று ஒரு தடித்த நூல் கொண்டு தைத்து விட்டார். இதனால் தான் அன்று முதல் பட்டாணியை நாம் உரிப்பதற்கு அதன் மேல் தோலில் நூல் போல் உள்ள பகுதியை உரிக்கவேண்டியிருக்கிறது.
கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பு 'பட்டாணி' என்பதாகும்.
2
['tam']
கீழே கொடுக்கப்பட்டுள்ள வார்த்தைகளையும் தலைப்பையும் பயன்படுத்தி சிறு கதை எழுதுக. வார்த்தைகள்: போலிச்சாமியார், தெனாலிராமன், போதை மருந்து, கழுதைகள், குழி, கூன், மன்னர் தலைப்பு: கூன் வண்ணான்
ஒரு போலிச்சாமியார் ஒருவன் விஜயநகரத்துக்கு வந்து சேர்ந்தான். அவன் மக்களுக்கு போதை மருந்தை விற்று பணத்தை ஏராளமாக சம்பாதித்துக் கொண்டிருந்தான். போதை மருந்தை உட்கொண்ட மக்கள் பலர் பைத்தியம் ஆனார்கள். பலர் மாண்டார்கள். இச்செய்தி தெனாலிராமனுக்கு எட்டியது. ஆகையால் போலிச் சாமியாரைத் தொலைத்துக் கட்ட முடிவு செய்தான். அதன்படியே சாமியாரை சந்தித்து அவனுடன் நட்புக் கொண்டான். தகுந்த சமயம் பார்த்து சாமியாரைக் கொன்று விட்டான். இச்செய்தி மன்னனுக்கு எட்டியது. தெனாலிராமனுக்கு ஆள் அனுப்பி அழைத்துவரச் செய்தார். ஏன் சாமியாரைக் கொன்றாய் என்று கேட்டார். அதற்குப் போதை மருந்தால் பலர் பைத்தியம் பிடித்து மாண்டனர். ஆகையால் தான் கொன்றேன் என்றான். போலிச்சாமியார் தவறு செய்து இருந்தாலும் அவனைக் கொல்ல உனக்கு ஏது அதிகாரம்? அதை என்னிடமல்லவா தெரிவித்திருக்க வேண்டும். அப்படி தெரிவித்திருந்தால் நானே அந்தப் போலிச் சாமியாருக்குத் தக்க தண்டனை கொடுத்திருப்பேன். இவ்விஷயத்தில் நீ தன்னிச்சையாக செயல் பட்டதற்கு உனக்கு மரணதண்டனை விதிக்கிறேன் என மன்னர் தீர்ப்புக் கூறினார். உடனே தன் ஆட்களை அழைத்து ஊருக்கு ஒதுக்குப்புறத்தில் ஒரு குழியை வெட்டி அதில் தெனாலிராமனை கழுத்தளவு புதைத்து யானையை விட்டு தலையை இடறுமாறு பணித்தார். அவ்வாறே தெனாலிராமனும் குழியில் கழுத்தளவு புதைக்கப்பட்டான். பின் யானையைக் கொண்டு வர பணியாளர்கள் சென்று விட்டனர். அப்போது சிலகழுதைகளை ஓட்டிக்கொண்டு ஒரு கூன் வண்ணான் வந்து கொண்டிந்தான். ஒரு மனிதன் பூமிக்குள் கழுத்தளவு புதையுண்டு இருப்பதைப் பார்த்து ஆச்சரியப்பட்டான். பின் தெனாலிராமனிடம் வந்து ஐயா, தாங்கள் ஏன் இவ்வாறு புதையுண்டு இருக்கிறீர்கள் என்று கேட்டான். அதற்கு தெனாலிராமன் எனக்கு மிக நீண்ட நாட்களாகவே முதுகு கூன் விழுந்து விட்டது. அதனால் மிகவும் சிரமப்பட்டு நடந்து வந்தேன். நேற்று ஒரு வைத்தியரை ஆலோசனை கேட்டேன். அவர்தான் ஒருநாள் முழுவதும் இவ்வாறு இருந்தால் கூன் நிமிரிந்து விடும் என்று சொன்னார். நான் குழியில் புதையுண்டு ஒருநாள் ஆகப் போகிறது. ஆகையால் மண்ணைத் தோண்டி என்னை மேலே எடு என்றான். அதன்படியே கூன் வண்ணானும் மண்ணைத் தோண்டி தெனாலிராமனை மேலே தூக்கி விட்டான். இப்போது தெனாலிராமனைப் பார்த்தான். அவன் முதுகு கூன் இல்லாமல் நேராக நிமிர்ந்து நின்றான். இதை உண்மை என்று நம்பிய கூன் வண்ணான் அதே குழியில் அவனைக் கழுத்தளவு புதைக்கச் சொன்னான். தெனாலிராமனும் கூன் வண்ணானை அவ்வாறே செய்தான். உடனே தெனாலிராமன் அவ்விடத்தைவிட்டு ஒரே ஓட்டமாக ஓடி விட்டான். சிறிது நேரத்தில் பணியாட்கள் யானையுடன் அங்கு வந்தனர். யானையை விட்டு குழியில் புதையுண்ட மனிதனின் தலையை இடறச் செய்தனர். கூன் வண்ணான் தலை சின்னா பின்னமாகியது. அச்சமயத்தில் தன் அரண்மனை அதிகாரிகளும் போலிச் சாமியாரைக் கொன்றது நியாம்தான் அதனால் தெனாலிராமனைக் கொல்ல வேண்டாம் என்று கேட்டுக் கொண்டனர். அந்நேரத்தில் பணியாட்களும் அங்கு வந்து "தெனாலிராமனின் தலையை யானையை விட்டு இடறிவிட்டோம்" என்று தெரிவித்தனர். தெனாலிராமனின் மரணத்துக்கு மன்னர் வருந்திக் கொண்டிருக்கையில் மனனர் முன் தெனாலிராமன் தோன்றினான். தெனாலிராமனைக் கண்ட மன்னர் மகிழ்ந்தார். நீ யானையால் இறந்ததாகப் பணியாட்கள் தெரிவித்தார்களே.. பின் எப்படி உயிரோடு வந்தாய் என்று வினவினார். அதற்குத் தெனாலிராமன் நடந்தவற்றை விவரமாகக் கூறினான். மன்னரும் அவனுடைய சாமர்த்தியத்துக்கு மனமாரப் பாராட்டி பரிசு வழங்கினார்.
2
['tam']
கீழே கொடுக்கப்பட்டுள்ள வார்த்தைகளையும் தலைப்பையும் பயன்படுத்தி சிறு கதை எழுதுக. வார்த்தைகள்: கிழவன், மனைவி, பூனை, மகன், இளவரசன், நரி, அரண்மனை, கொடுமை, வீரர்கள் தலைப்பு: ஒருவர் மட்டும் போதாது
ஓர் ஊரில் கிழவன் ஒருவன் தன் மனைவியுடன் வாழ்ந்து வந்தான். ஒரு பூனையை அவர்கள் அன்பாக வளர்த்து வந்தார்கள். முதுமையான அவர்களுக்கு ஒரு மகன் பிறந்தான். மகன் குழந்தையாக இருக்கும் போதே அவர்கள் இருவரும் இறந்து விட்டனர். அந்தக் குழந்தையை பூனை வளர்க்கத் தொடங்கியது. எங்கிருந்தோ பறவையின் மெல்லிய இறகுகளைக் கொண்டு வந்தது. அதில் மெத்தை செய்தது. குழந்தையை அந்த மெத்தையில் படுக்க வைத்தது. குழந்தையை வேளை தவறாமல் உணவு தந்தது. எப்பொழுதும் மெத்தையிலேயே அந்தக் குழந்தை இருந்ததால் அவனை இறகு இளவரசன் என்று அழைத்தது. ஆண்டுகள் ஓடின, குழந்தையும் வளர்ந்து பெரியவன் ஆனான். கட்டழகு வாய்ந்த அவனைக் கண்டு பூனை மகிழ்ந்தது. இறகு இளவரசனே! உனக்குத் திருமணம் செய்ய எண்ணியுள்ளேன், என்றது அது. எனக்கு யாரைப் பெண் கேட்பாய்? என்று கேட்டான் அவன். இந்த நாட்டு அரசனிடம் செல்வேன். இளவரசியை உனக்காகப் பெண் கேட்பேன். ஏழையாகிய எனக்கு இளவரசி மனைவியா? நடக்கக் கூடிய செயலா இது? கனவு காண்கிறாயா? உனக்கு ஏற்றவள் இளவரசிதான். நான் முடிவு செய்து விட்டேன். எப்படியும் இந்தத் திருமணத்தை முடிப்பேன். பொறுத்திருந்து பார். உனக்குப் பெண் கேட்டு நாளையே நான் அரசனிடம் செல்கிறேன், என்றது பூனை. மறுநாள் விடிகாலையில் எழுந்தது. அரசனைக் காண்பதற்காகப் புறப்பட்டது. காட்டு வழியே சென்று கொண்டிருந்த அதன் எதிரில் ஒரு முயல் வந்தது. முயலைப் பார்த்துப் பயந்து போன பூனை ஓட்டம் பிடித்தது. பூனையைப் பார்த்துப் பயந்து முயலும் ஓட்டம் பிடித்தது. பக்கத்தில் இருந்த குன்றைச் சுற்றி வந்த இரண்டும் சந்தித்தன. பூனையே! எங்கே போகிறாய்? என்று கேட்டது முயல். நான் அரசனிடம் செல்கிறேன். ஊரில் யாரும் என்னை நிம்மதியாக வாழ விடமாட்டேன் என்கிறார்கள். என்னை எப்பொழுதும் துரத்துகிறார்கள். நான் பயந்து கொண்டே வாழ்கிறேன். இவர்கள் செயல் குறித்து அரசனிடம் குறை சொல்லப் போகிறேன். நீதி தவறாத அரசன் எனக்கு நல்லது செய்வான், என்று இனிமையாகச் சொன்னது பூனை. கண்களில் கண்ணீர் வழிய, பூனையே! உன் நிலை பரவாயில்லை. அரசனின் வீரர்கள் வேட்டை நாய்களுடன் இங்கே வருகிறார்கள். எங்களை விரட்டுகிறார்கள். பொறி வைத்துப் பிடிக்கிறார்கள். சிறிது நேரம் கூட நாங்கள் நிம்மதியாகத் தங்க இங்கே இடம் இல்லை. நானும் உன்னுடன் வருகிறேன். அரசனிடம் எல்லாவற்றையும் விளக்கமாகச் சொல்லி எங்களைக் காப்பாற்றும்படி வேண்டுகிறேன், என்றது முயல். நீ அரசனிடம் செல். ஆனால் உன் முயற்சி வெற்றி பெறும் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை. ஏன்? எங்கள் ஊரில் நான் ஒரே ஒரு பூனைதான் இருக்கிறேன். நான் சொல்வதை அரசர் கேட்டு உதவி செய்வார். ஆனால் உன்னைப் பார்த்ததும் அவர், காட்டில் நூற்றுக்கணக்கான முயல்கள் உள்ளன. நீ மட்டும் தான் குறை சொல்ல வந்திருக்கிறாய், என்பார். குறைந்தது ஐம்பது முயல்களுடன் நீ அரசனிடம் சென்றால் அவர் கண்டிப்பாக உதவி செய்வார். பூனையே! இங்கேயே நில். நான் ஐம்பது முயல்களுடன் வருகிறேன், என்று அருகில் இருந்த புதருக்குள் மறைந்தது முயல். சிறிது நேரத்தில் ஐம்பது முயல்களுடன் வந்தது அது. பூனை முன்னால் சென்றது. எல்லா முயல்களும் அதைப் பின் தொடர்ந்தன. விந்தையான இந்த ஊர்வலம் பல ஊர்கள் வழியாகச் சென்றது. இதைப் பார்த்த மக்கள், பூனை தலைமை தாங்கி ஐம்பது முயல்களை அழைத்துச் செல்கிறதே, என்று வியப்புடன் பேசிக் கொண்டார்கள். கடைசியாக அந்த ஊர்வலம் அரசனின் அரண்மனையை அடைந்தது. அங்கு காவலுக்கு இருந்த வீரனைப் பார்த்து, நாங்கள் அரசனைப் பார்க்க வேண்டும், என்றது பூனை. அரண்மனை வாயிலில் எல்லோரும் தங்க வைக்கப்பட்டனர். பூனையை மட்டும் அரசனிடம் அழைத்துச் சென்றான் ஒரு வீரன். அரசனைப் பணிவாக வணங்கிய பூனை, இறகு இளவரசன் ஐம்பது முயல்களை உங்களுக்குப் பரிசாக அனுப்பி உள்ளார். இளவரசியாரை மணந்து கொள்ள அவர் விரும்புகிறார். இளவரசியாருக்கு அவரை விடப் பொருத்தமானவர் யாரும் இருக்க முடியாது, என்றது. வாயிலுக்கு வந்த அரசன் ஐம்பது முயல்களையும் பார்த்து வியப்பு அடைந்தான். இறகு இளவரசன் மிகவும் திறமையான வேட்டைக் காரனாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால் ஐம்பது முயல்களை எப்படிப் பிடிக்க முடியும் என்று நினைத்தான். என் வீரர்களும் முயல் வேட்டைக்குச் செல்கிறார்கள். இரண்டு அல்லது மூன்று முயல்களுக்கு மேல் அவர்கள் பிடித்து வருவது இல்லை. உங்கள் இளவரசன் ஐம்பது முயல்களை அதுவும் உயிருடன் பிடித்து இருக்கிறான், என்றான் அவன். அரசே! இந்த முயல்களை எல்லாம் ஒரு அறைக்குள் வைத்துப் பூட்ட வேண்டும். அவற்றைக் காவல் காக்கின்றவர் யாரும் இல்லை, என்றது பூனை. சமையல்காரனை அழைத்த அரசன், இனி நம் அரண்மனையில் நல்ல விருந்துதான். ஐம்பது முயல்களையும் அடைத்து வைக்க ஒரு அறையைத் திறந்து விடு, என்று கட்டளை இட்டான். முயல்களிடம் வந்தது பூனை. நாம் அனைவரும் தங்குவதற்கு அரசர் ஒரு அறையைத் தந்து உள்ளார். நமக்கு நல்ல சாப்பாடு அங்கே உள்ளது. அரசர் பிறகு வந்து நம் குறையைக் கேட்டு உதவி செய்வார், என்றது. சமையல்காரன் ஓர் அறையைத் திறந்து விட்டான். எல்லா முயல்களும் உள்ளே நுழைந்தன. உடனே அவன் கதவைத் தாழிட்டுப் பூட்டுப் போட்டான். வெளியே காவலுக்கு வீரர்கள் நின்றனர். பூனை தங்களை ஏமாற்றி விட்டதை முயல்கள் உணர்ந்தன. பாவம் அவை என்ன செய்யும்? தங்களுக்கு ஏற்படப் போகும் கதியை எண்ணி அவை அழுதன. பூனைக்கு அரசன் சிறந்த விருந்து அளித்தான். இறகு இளவரசனைப் பற்றி மிகவும் புகழ்ந்து பேசியது அது. இளவரசரை வந்து என்னைச் சந்திக்கச் சொல், என்றான் அரசன். அரசே! எங்கள் இளவரசர் தங்களைச் சந்திக்கக் கட்டாயம் வருவார். ஆனால் அவருக்கு இப்பொழுது ஏராளமான வேலைகள் உள்ளன, என்றது பூனை. விருந்து முடிந்தது. அரசன் நிறைய பரிசுகளைப் பூனைக்குத் தந்தான். அரசனிடம் விடை பெற்ற பூனை மகிழ்ச்சியுடன் தன் வீட்டிற்கு வந்தது. இளைஞனே! உனக்குத் திருமணம் செய்து வைக்கப் போகிறேன், என்றது அது. யாருடன்? என்று மீண்டும் கேட்டான் அவன். இளவரசிதான் மணமகள், என்றது அது. ஒரு வாரம் சென்றது. மீண்டும் அது அரசனைக் காணக் காட்டு வழியே சென்றது. எதிரில் வந்த நரியை நேருக்கு நேர் பார்த்தது அது. இரண்டும் எதிர் எதிர் திசையில் ஓடின. மலைக்குப் பின்னால் இரண்டும் மீண்டும் சந்தித்தன. பூனையே! எங்கே செல்கிறாய்? அரசனிடம் என் நிலையை எடுத்துச் சொல்ல? உனக்கு என்ன குறை? ஊரில் எல்லோரும் என்னை அடித்து விரட்டுகிறார்கள். சரியாக சாப்பாடு போடுவது இல்லை. எனக்கு வாழ்க்கையே வெறுத்து விட்டது. நீதி கேட்டு அரசரிடம் செல்கிறேன். நரியின் கண்களில் கண்ணீர் வழிந்தது. இப்பொழுது, என்னால் இந்தக் காட்டில் இருக்கவே முடியவில்லை. வேட்டைக்காரர்கள் நாய்களுடன் வந்து எங்களை விரட்டுகிறார்கள். குழிக்குள் மறைந்தாலும் புகை போட்டு எங்களை வெளியே வரவழைக்கிறார்கள். அவர்களுடைய அம்புகளால் நாங்கள் பலர் சாகிறோம். உன்னுடன் நானும் வந்து அரசரிடம் நீதி கேட்கிறேன். என்னையும் அழைத்துச் செல், என்றது. நரியாரே! நீர் தனியாக வருவது நல்லது அல்ல. எங்கள் ஊரில் நான் ஒருவன்தான் பூனை. அதனால் நான் சொல்வதை அரசர் கேட்பார். நீர் மட்டும் தனியே வந்து குறை சொன்னால் அவர் ஏற்றுக் கொள்ள மாட்டார். காட்டில் ஏராளமான நரிகள் உள்ளனவே. ஏன் அவை வந்து குறை சொல்லவில்லை! என்று கேட்பார். ஐம்பது நரிகள் ஒன்றாக வந்தால் அரசர் நீங்கள் சொல்வதை நம்புவார், என்றது. சிறிது நேரம் காத்திரு, என்ற நரி அங்கும் இங்கும் ஓடியது. ஐம்பது நரிகளுடன் அங்கு வந்தது. அரண்மனைக்குச் சென்றதும் யார் எப்படிப் பேச வேண்டும் என்று அவற்றிடம் விளக்கிச் சொன்னது பூனை. நீ சொல்வது போலவே நாங்கள் நடந்து கொள்வோம், என்றது நரிகள். பூனை முன்னால் சென்றது. எல்லா நரிகளும் அதைப் பின் தொடர்ந்தன. அவற்றின் ஊர்வலம் பல ஊர்கள் வழியாகச் சென்றது. இதைப் பார்த்த மக்கள், என்ன வேடிக்கையாக இருக்கிறது. போன வாரம் தான் இந்த பூனை ஐம்பது முயல்களுடன் ஊர்வலம் போனது. இப்பொழுது ஐம்பது நரிகளுடன் ஊர்வலம் போகிறது, என்று பேசிக் கொண்டார்கள். ஊர்வலம் அரண்மனையை அடைந்தது. காவலுக்கு இருந்த வீரர்கள் பூனையை அரசனிடம் அழைத்துச் சென்றார்கள். பணிவாக வணங்கிய பூனை, அரசர் பெருமானே! இறகு இளவரசர் தங்களுக்கு அன்பளிப்பாக ஐம்பது நரிகளை அனுப்பி வைத்துள்ளார். இளவரசியாரை மணக்க விரும்புகிறார், என்றது. வேலைக்காரர்களை அழைதூத அரசன், நரிகளை ஒரு அறையில் அடைத்து வையுங்கள். எவையும் தப்பிச் செல்லக் கூடாது. பூனைக்கு நல்ல விருந்து தர வேண்டும். அதற்கும் ஏற்பாடு செய்யுங்கள், என்று கட்டளை இட்டான். நரிகளை அரண்மனைக்குள் அழைத்து வந்தது பூனை. அங்கே ஒரு அறையில் முயல்களைக் கொன்று தோல் உரித்துக் கொண்டிருந்தார்கள் வேலைக்காரர்கள். முயல்கள் அழுது புலம்பிக் கொண்டிருந்தன. பெருங் கூச்சலையும் அலறலையும் கேட்ட நரிகள், அங்கே என்ன சத்தம்?, என்று பூனையைக் கேட்டன. ஏழு நாட்களுக்கு முன் இங்கே சில முயல்கள் வந்தன. தங்கள் குறையை அரசரிடம் தெரிவித்தன. கவனமாகக் கேட்ட அவர் அவற்றிற்கு நீதி வழங்கினார். அது மட்டும் அல்ல. பெரிய விருந்திற்கும் ஏற்பாடு செய்தார். விருந்தில் முயல்கள் ஏராளமான மதுரைக் குடித்தன. மகிழ்ச்சியால் தலையே வெடித்து விடுவது போல அவை கூச்சல் போடுகின்றன. அந்த சத்தம் தான் இது, என்றது பூனை. முயல்கள் இருக்கும் அறையில் எங்களைத் தங்க வைக்க வேண்டாம். அவை எப்பொழுதும் குடித்து விட்டுச் சண்டை போடும் இயல்புடையவை. எங்களையும் கெடுத்து விடும். வேறு அறையில் தங்க வையுங்கள், என்றன நரிகள். வேலைக்காரன் பக்கத்து அறையைத் திறந்து விட்டான். எல்லா நரிகளும் உள்ளே நுழைந்தன. உடனே அவன் கதவைத் தாழிட்டுப் பூட்டு போட்டான். தாங்கள் தவறை நரிகள் உணர்ந்தன. தங்களுக்கு ஏற்படப் போகும் கதியை எண்ணி வருந்தின. விருந்திற்கு வந்த பூனையை அரசன் வரவேற்றார். விதவிதமான உணவு வகைகள் மேசையில் பரிமாறப்பட்டு இருந்தன. உங்கள் இறகு இளவரசன் மிகச் சிறந்த வேட்டைக்காரனாக இருக்க வேண்டும். ஆற்றல் வாய்ந்தவனாகவும் திறமைசாலியாகவும் இருக்க வேண்டும். இல்லாவிட்டால் ஐம்பது நரிகளை உயிருடன் பிடிக்க முடியுமா? என்னுடைய வேட்டைக்காரர்களும் நரி வேட்டைக்குச் செல்கிறார்கள் பெரும்பாலும் வெறுங்கையுடன் திரும்புகிறார்கள். சில சமயம் ஒன்று அல்லது இரண்டு நரியைக் கொன்று எடுத்து வருவார்கள். அதன் மேல் தோல் எதற்கும் பயன்படாத வண்ணம் கிழிந்து வீணாகி இருக்கும், என்றான் அரசன். அரசே! எங்கள் இளவரசர் வீரம் உள்ளவர். வலிமை வாய்ந்தவர். இந்த உலகத்திலேயே அவரைப் போன்ற வீரம் யாரும் இல்லை. என்று புகழ்ந்தது பூனை. அவர் எங்கள் அரண்மனைக்கு வந்தால் இந்த அரண்மனையே பெருமை பெறும். இளவரசிக்கு அவர் பொருத்தமானவர். நான் அவரைச் சந்தித்தால் திருமணம் பற்றிப் பேசலாம், என்றான் அரசன். கண்டிப்பாக அவரை அழைத்து வருகிறேன். மேன்மை தங்கிய தங்களைச் சந்திப்பதில் அவருக்கு மகிழ்ச்சி, என்றது பூனை. விலை உயர்ந்த ஏராளமான பரிசுப் பொருள்களைப் பூனைக்கு வழங்கினார் அரசர். வீட்டிற்கு வந்தது அது. தூங்கிக் கொண்டிருந்த இளைஞனை எழுப்பியது. உனக்கும் இளவரசிக்கும் திருமணம் உறுதியாகி விட்டது. நான் சொல்கிறபடி நட, என்றது அது. மகிழ்ச்சியுடன் புறப்பட்டான் அவன். பூனை வழிகாட்டிக் கொண்டே நடந்தது. இருவரும் நெடுந்தூரம் நடந்தார்கள். வழியில் பாலம் ஒன்று வந்தது. பாலத்திற்கு அடியில் நீ ஒளிந்து கொள். நான் சிறிது நேரத்தில் வருகிறேன், என்றது பூனை. அவனும் ஒளிந்து கொண்டான். ஊருக்குள் சென்ற பூனை கவசங்கள், தொப்பிகள் பலவற்றை வாங்கியது. எல்லாவற்றையும் ஆற்றில் போட்டது. இறகு இளவரசனே! இங்கேயே இரு. நான் அரசனுடன் இங்கே வருகிறேன். எங்களைப் பார்த்த உடன் வெளியே வந்து விடாதே. நான் நல்ல ஆடைகளை உன்னிடம் தருகிறேன். அதன் பிறகு வெளியே வரலாம், என்று சொன்னது. அப்படியே செய்கிறேன், என்றான் அவன். அரண்மனைக்கு வேகமாக ஓடியது பூனை. அதைப் பார்த்து அரசன், இப்பொழுதும் இறகு இளவரசன் வரவில்லையா? என்று ஆர்வத்துடன் கேட்டான். அரசே! இளவரசர் தங்களைக் காணப் பெரும் படையுடன் வந்தார். வழியில் ஆற்றைக் கடக்கும்போது எல்லா வீரர்களும் மூழ்கி விட்டனர். அவர்களின் தலைக் கவசங்களும் தொப்பிகளும் மிதக்கின்றன. நான் எப்படியோ இளவரசரைக் காப்பாற்றி விட்டேன். அவர் கொண்டு வந்த விலை உயர்ந்த பொருள்கள் எல்லாம் ஆற்றில் போய் விட்டன. உடைகள் ஏதுமின்றிப் பாலத்தின் கீழ் இருக்கிறார். இப்படி ஒரு கொடுமை நிகழுமென்று யாரும் எதிர்பார்க்கவில்லை, என்று பரபரப்புடன் சொன்னது அது. இளவரசருக்கு இப்படி ஒரு கொடுமை என் நாட்டிலா நடந்திருக்க வேண்டும்? விலை உயர்ந்த ஆடைகளை இப்பொழுதே கொண்டு செல்லுங்கள். வீரர்கள் அவருக்குத் துணையாக அணிவகுத்து வரட்டும். நானும் பூனையுடன் வருகிறேன், என்றான் அரசன். வீரர்கள் சூழ அரசனும் பூனையும் அந்தப் பாலத்தை அடைந்தார்கள். ஆற்றில் நிறைய கவசங்களும் தொப்பிகளும் மிதந்து செல்வதைப் பார்த்தான் அரசன். விலை உயர்ந்த ஆடைகளை இளவரசனிடம் தந்தது பூனை. அவன் ஆடைகளை அணிந்து கொண்டு வெளியே வந்தான். அரசன் அவனைச் சிறப்பாக வரவேற்றான். அழகான வண்டியில் அவனை அமரச் சொன்னான். கோலாகலத்துடன் இளவரசனின் ஊர்வலம் தொடங்கியது. அரண்மனை வாயிலிலேயே அரசியும் இளவரசியும் காத்திருந்தனர். இளவரசனின் அழகைக் கண்டு இளவரசி மகிழ்ந்தாள். இருவருக்கும் சீரும் சிறப்புமாகத் திருமணம் நடந்தது. சில நாட்கள் சென்றன. பூனையை அழைத்த அரசன், உங்கள் இளவரசனின் செல்வச் செழிப்பைக் காண நினைக்கிறேன். எப்பொழுது உங்கள் நாட்டிற்குச் செல்லலாம்? நான் பெரிய படை சூழ வருகிறேன், என்றான். எப்பொழுது வேண்டுமானாலும் புறப்படலாம், என்றது பூனை. அடுத்த வாரம் புறப்படுவோம், என்றான் அரசன். என்ன செய்யலாம் என்று சிந்தித்தது பூனை. சில அரக்கர்களுக்குச் சொந்தமாக ஏராளமான நிலங்களும் அரண்மனைகளும் இருப்பது அதன் நினைவுக்கு வந்தது. எப்படியாவது அவற்றை இளவரசனுக்கு சொந்தமானது என்று சொல்லி அரசனை ஏமாற்ற வேண்டும் என்று நினைத்தது அது. இளவரசன் தேரில் அமர்ந்தான். அரசனும் அருகில் அமர்ந்தான். பெரும்படை சூழ ஆரவாரத்துடன் புறப்பட்டனர். பூனை வழிகாட்டிக் கொண்டே முன்னால் சென்றது. அங்கே நிலத்தில் நிறைய பேர் வேலை செய்து கொண்டிருந்தனர். அவர்களிடம் வந்த பூனை. இன்னும் சிறிது நேரத்தில் பெரும்படையுடன் அரசர் ஒருவர் இங்கே வருவார். இந்த நிலம் யாருடையது என்று உங்களைக் கேட்பார்? நீங்கள் இந்த நிலங்கள் எல்லாம் இறகு இளவரசர் உடையது என்று சொல்ல வேண்டும். இதைக் கேட்டால் அரசர் மகிழ்ச்சியுடன் உங்களுக்குப் பரிசு வழங்குவான். மாறாக அரக்கன் உடையது என்று உண்மையைச் சொன்னால் உங்களை எல்லாம் கொன்று விடுவார், என்றது. அரசன் அங்கு வந்தான். உழவு வேலை செய்து கொண்டிருந்தவர்களைப் பார்த்து, இந்த நிலம் யாருடையது? என்று கேட்டான். எல்லோரும் இறகு இளவரசர் உடையது, என்று சொன்னார்கள். மகிழ்ந்த அரசன் அவர்களுக்குப் பொற்காசுகளை வாரி வழங்கினான். வழியில் ஏராளமான ஆடுகளை நிறைய பேர் மேய்த்துக் கொண்டிருப்பதைப் பார்த்தது பூனை. அவர்களிடமும் சென்று அதையே சொன்னது. அரசன் வந்து கேட்ட போது, எல்லா மந்தையும் இறகு இளவரசர் உடையது, என்று அவர்கள் சொன்னார்கள். தன்னைவிட இளவரசனிடம் அதிக செல்வம் இருக்கிறது என்று மகிழ்ந்தான் அரசன். இனி இளவரசனின் அரண்மனைக்குச் செல்லலாம், என்றான் அரசன். அரக்கர்கள் தங்கி இருக்கும் அரண்மனைக்குள் நுழைந்தது பூனை. அவர்களைப் பார்த்து, உங்களுக்கு ஆபத்து வந்து விட்டது. உங்களைக் கொல்வதற்காக அரசர் பெரும் படையுடன் வருகிறார், என்றது. வெளியே பார்த்த அவர்களுக்குப் பெரும்படை வருவது தெரிந்தது. பூனையே! நீதான் எங்களைக் காப்பாற்ற வேண்டும், என்று கெஞ்சினார்கள். தோட்டத்தில் உள்ள வைக்கோல் போருக்குள் நீங்கள் எல்லோரும் ஒளிந்து கொள்ளுங்கள், என்றது அது. அவர்களும் அதற்குள் ஒளிந்து கொண்டார்கள். வைக்கோல் போருக்குத் தீ வைத்தது பூனை. தீயில் வெந்து எல்லா அரக்கர்களும் இறந்து போனார்கள். ஊர்வலம் அரக்கர்களின் அரண்மனையை அடைந்தது. எல்லோரையும் வரவேற்றது பூனை. இளவரசரின் அரண்மனை மிக அழகாக உள்ளது, என்றான் அரசன். இளவரசனிடம் தனியே நடந்ததை எல்லாம் சொன்னது பூனை. மகிழ்ச்சி அடைந்தான் அவன். இளவரசன் இளவரசியுடன் நீண்ட காலம் அந்த அரண்மனையில் வாழ்ந்தான். பூனை அவர்களுக்கு உறுதுணையாக இருந்தது.
2
['tam']
கீழே கொடுக்கப்பட்டுள்ள வார்த்தைகளையும் தலைப்பையும் பயன்படுத்தி சிறு கதை எழுதுக. வார்த்தைகள்: கிருஷ்ண தேவராயர், தெனாலிராமன், கருப்பங்கழி, சேனாதிபதி, ராஜகுரு தலைப்பு: கருப்பங்கழி!
விஜயநகரப் பேரரசர் கிருஷ்ண தேவராயர் தெனாலிராமனுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தார். இதைப் பார்த்த மற்ற அரசவையினருக்கு தெனாலி மீது பொறாமை ஏற்பட்டது. அவர்கள் அடிக்கடி, "அரசே! எங்களிடம் என்ன குறை? நீங்கள் ஏன் எங்களை விடத் தெனாலிக்கு அதிக முக்கியத்துவம் தருகிறீர்கள்?" என்று கேட்டனர். இதற்கு பதில் அரசரின் சிரிப்புத்தான். ஒருநாள், தெனாலி விடுப்பில் சென்றிருந்தார். அரசர், அமைச்சர், சேனாதிபதி முதலானோர் மாறுவேடத்தில் நகர்வலம் சென்றனர். பேசிக் கொண்டே ஒரு கிராமத்தை அடைந்தனர். ஓரிடத்தில் விவசாயிகள் அமர்ந்து பேசிக்கொண்டிருந்ததைப் பார்த்தார் அரசர். அவர்களிடம் சென்று, "நாங்கள் வெளிநாட்டினர், உங்களை இந்நாட்டு அரசர் சரியாகக் கவனித்துக் கொள்கிறாரா?" என்றார். உடனே அனைவரும் அரசரைப் புகழ்ந்தனர். பிறகு அரசர் ஒரு முதிய விவசாயியிடம் அதே கேள்வியைக் கேட்டார். உடனே அவர் சட்டென்று அங்கிருந்து எழுந்து எங்கோ போய்விட்டுப் பிறகு திரும்பி வந்தார். அவர் கையில் ஒரு கருப்பங்கழி! வந்ததும் அதை அவர் இரு கையாலும் உடைத்தவாறு, "சகோதரா! எங்கள் அரசர் இதைப் போன்றவர்" என்றார். அவரது பதில் அரசருக்கு ஆச்சரியத்தைத் தந்தது. அமைச்சரைத் திரும்பிப் பார்த்தார். அமைச்சரோ "அரசே! அவர் உங்களை அவமானப் படுத்துகிறார். அவர், "எங்கள் அரசர் பலவீனமானவர்; எவரும் அவரை எளிதில் வீழ்த்தி விடலாம் என்பதைக் குறிக்கக் கரும்பை ஒடித்துக் காட்டினார்" என்றார். இதைக்கேட்டதும், அரசருக்கு ஆத்திரம் வந்தது. அவர் ஏதோ கூற வந்தார். அப்போது பின்னாலிருந்து தலைப்பாகை கட்டிய ஒருவர் எழுந்து, "கோபப்படாதீர்கள் தயாநிதியே! இப்போது கிழவர் கரும்பை உடைத்து, அரசர் கரும்பு போல் மேலிருந்து கசப்பும், இடையில் இனிப்பும் உடையவர் என்பதை உணர்த்தத்தான் இப்படி செய்தார்" என்று கூறிக் கொண்டே தனது பொய்த் தாடியை எடுத்தார். அது வேறு யாருமல்ல! தெனாலிராமன்தான். "அரசே! என்னைக் கண்டு பிடிக்க முடியாவிட்டாலும், நான் உங்களது பணியாள். என்னால் உங்களை விட்டு எப்படி இருக்க முடியும்?" என்றார். அதைக் கண்ட அரசர் சிரித்துவிட்டார். தெனாலியை வாரி அணைத்துக்கொண்டு, "நான் உன்னிடம் பிரியம் வைத்திருப் பதற்குக் காரணமே இதுதான்" என்று புகழ்ந்தார். கேட்டுக் கொண்டிருந்த அமைச்சர், ராஜகுரு மற்றும் சேனாதிபதிக்கு அவமானமாகப் போய்விட்டது. அதன்பிறகு அரசவையில் தெனாலியின் மதிப்பு மேலும் அதிகரித்து விட்டது. நன்றி தினமலர்!
End of preview.