Datasets:

ArXiv:
License:
File size: 38,356 Bytes
b9d2e3d
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
42
43
44
45
46
47
48
49
50
51
52
53
54
55
56
57
58
59
60
61
62
63
64
65
66
67
68
69
70
71
72
73
74
75
76
77
78
79
80
81
82
83
84
85
86
87
88
89
90
91
92
93
94
95
96
97
Book_Chapter_Verse,Text

COL_001_001,"தேவனுடைய விருப்பத்தினாலே இயேசுகிறிஸ்துவின் அப்போஸ்தலனாகிய பவுலும், சகோதரனாகிய தீமோத்தேயும்,"

COL_001_002,கொலோசே பட்டணத்தில் கிறிஸ்துவிற்குள் பரிசுத்தவான்களும் விசுவாசிகளுமாக இருக்கிற சகோதரர்களுக்கு எழுதுகிறதாவது: நம்முடைய பிதாவாகிய தேவனாலும் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலும் உங்களுக்குக் கிருபையும் சமாதானமும் உண்டாவதாக.

COL_001_003,"கிறிஸ்து இயேசுவின்மேலுள்ள உங்களுடைய விசுவாசத்தையும், பரிசுத்தவான்கள் எல்லார்மேலுமுள்ள உங்களுடைய அன்பையும்குறித்து நாங்கள் கேள்விப்பட்டு,"

COL_001_004,"பரலோகத்தில் உங்களுக்காக வைத்திருக்கிற நம்பிக்கையினிமித்தம்,"

COL_001_005,"நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் பிதாவாகிய தேவனுக்கு நன்றிசெலுத்தி, எப்பொழுதும் உங்களுக்காக வேண்டுதல் செய்கிறோம்."

COL_001_006,"அந்த நம்பிக்கையைக்குறித்து, நீங்கள் முன்னமே சத்தியவசனமாகிய நற்செய்தியினாலே கேள்விப்பட்டீர்கள்; அந்த நற்செய்தி உலகமெங்கும்பரவிப் பலன்தருகிறதுபோல, உங்களிடத்திலும் வந்து, நீங்கள் அதைக்கேட்டு, தேவகிருபையைச் சத்தியத்தின்படி அறிந்துகொண்ட நாள்முதல், அது உங்களுக்குள்ளும் பலன் தருகிறதாக இருக்கிறது;"

COL_001_007,"அதை எங்களுக்குப் பிரியமான உடன் வேலையாளும், உங்களுக்காகக் கிறிஸ்துவின் உண்மையான ஊழியக்காரனுமாக இருக்கிற எப்பாப்பிராவினிடம் நீங்கள் கற்றறிந்திருக்கிறீர்கள்;"

COL_001_008,ஆவியானவருக்குள்ளான உங்களுடைய அன்பையும் அவனே எங்களுக்குத் தெரியப்படுத்தினான்.

COL_001_009,"இதினிமித்தம், நாங்கள் அதைக் கேட்ட நாள்முதல் உங்களுக்காக இடைவிடாமல் ஜெபம் செய்கிறோம்; நீங்கள் எல்லா ஞானத்தோடும், ஆவியானவருக்குரிய விவேகத்தோடும் அவருடைய விருப்பத்தை அறிகிற அறிவினாலே நிரப்பப்படவும்,"

COL_001_010,"எல்லாவித நல்ல செயல்களாகிய கனிகளைத் தந்து, தேவனை அறிகிற அறிவில் வளர்ச்சியடைந்து, கர்த்தருக்குப் பிரியமுண்டாக வாழவும் அவருக்குத் தகுதியாக நடந்துகொள்ளவும்,"

COL_001_011,"சந்தோஷத்தோடுகூடிய எல்லாப் பொறுமையும் நீடிய சாந்தமும் உண்டாவதற்கு மகிமையான அவருடைய வல்லமையின்படி, எல்லா வல்லமையாலும் பலப்படுத்தப்படவும், உங்களுக்காக ஜெபம் செய்கிறோம்."

COL_001_012,"ஒளியிலுள்ள பரிசுத்தவான்களுடைய சுதந்திரத்தில் பங்கடைவதற்கு, நம்மைத் தகுதியுள்ளவர்களாக்கினவரும்,"

COL_001_013,"இருளின் அதிகாரத்திலிருந்து நம்மை விடுதலையாக்கி, தமது அன்பின் குமாரனுடைய ராஜ்யத்திற்கு உட்படுத்தினவருமாக இருக்கிற பிதாவிற்கு நன்றி செலுத்துகிறோம்."

COL_001_014,"குமாரனாகிய இயேசுகிறிஸ்துவிற்குள், அவருடைய இரத்தத்தினாலே, பாவமன்னிப்பாகிய மீட்பு நமக்கு உண்டாயிருக்கிறது."

COL_001_015,"அவர் கண்ணுக்குத் தெரியாத தேவனுடைய ரூபமும், எல்லாப் படைப்புக்கும் முதற்பேறுமானவர்."

COL_001_016,"ஏனென்றால், அவருக்குள் எல்லாம் படைக்கப்பட்டது; பரலோகத்திலுள்ளவைகளும் பூலோகத்திலுள்ளவைகளுமாகிய காணப்படுகிறவைகளும் காணப்படாதவைகளுமான எல்லாப் பொருட்களும், சிங்காசனங்களானாலும், கர்த்தத்துவங்களானாலும், அரசாங்க ஆட்சி புரிவோர்களானாலும், அதிகாரங்களானாலும், எல்லாமும் அவரைக் கொண்டும் அவருக்கென்றும் படைக்கப்பட்டது."

COL_001_017,"அவர் எல்லாவற்றிற்கும் முந்தினவர், எல்லாம் அவருக்குள் நிலைநிற்கிறது."

COL_001_018,"அவரே சபையாகிய சரீரத்திற்குத் தலையானவர்; எல்லாவற்றிலும் முதல்வராக இருக்கும்படி, அவரே துவக்கமும் மரித்தோரிலிருந்து உயிரோடு எழுந்த முதற்பேறுமானவர்."

COL_001_019,"எல்லாப் பரிபூரணமும் அவருக்குள்ளே வாசமாக இருக்கவும்,"

COL_001_020,"அவர் சிலுவையில் சிந்தின இரத்தத்தினாலே சமாதானத்தை உண்டாக்கி, பூலோகத்திலுள்ளவைகள் பரலோகத்திலுள்ளவைகள் யாவையும் அவர் மூலமாகத் தமக்கு ஒப்புரவாக்கிக்கொள்ளவும் தேவனுக்கு விருப்பமானது."

COL_001_021,முன்னே தேவனுக்கு அந்நியர்களாகவும் தீய செயல்களினால் மனதிலே விரோதிகளாகவும் இருந்த உங்களையும் பரிசுத்தர்களாகவும் குற்றமற்றவர்களாகவும் கண்டிக்கப்படாதவர்களாகவும் தமக்குமுன் நிறுத்தும்படியாக அவருடைய மாம்சசரீரத்தில் அடைந்த மரணத்தினாலே இப்பொழுது ஒப்புரவாக்கினார்.

COL_001_022,"நீங்கள் கேட்ட நற்செய்தியினால் உண்டாகும் நம்பிக்கையைவிட்டு அசையாமல், நிலையாகவும் உறுதியாகவும் விசுவாசத்திலே நிலைத்திருப்பீர்களானால் அப்படியாகும்."

COL_001_023,அந்த நற்செய்தி வானத்தின்கீழே இருக்கிற எல்லாப் படைப்புகளுக்கும் பிரசங்கிக்கப்பட்டுவருகிறது; அதற்கென்றே பவுலாகிய நான் ஊழியக்காரனானேன்.

COL_001_024,"இப்பொழுது நான் உங்கள்நிமித்தம் அநுபவிக்கிற பாடுகளில் சந்தோஷமடைந்து, கிறிஸ்துவினுடைய உபத்திரவங்களில் குறைவானதை அவருடைய சரீரமாகிய சபைக்காக, என் சரீரத்தினாலே நிறைவேற்றுகிறேன்."

COL_001_025,"ஆரம்ப காலங்களுக்கும் தலைமுறை தலைமுறைகளுக்கும் மறைவாக இருந்து, இப்பொழுது அவருடைய பரிசுத்தவான்களுக்கு வெளியாக்கப்பட்ட இரகசியமாகிய தேவவசனத்தை நிறைவாகத் தெரியப்படுத்துகிறதற்கு,"

COL_001_026,உங்கள்நிமித்தம் தேவனால் எனக்கு அளிக்கப்பட்ட வேலையின்படியே நான் அந்தச் சபைக்கு ஊழியக்காரனானேன்.

COL_001_027,"யூதரல்லாதவர்களுக்குள்ளே விளங்கிய இந்த இரகசியத்திலுள்ள மகிமையின் ஐசுவரியம் இன்னதென்று, தேவன் தம்முடைய பரிசுத்தவான்களுக்குத் தெரியப்படுத்தப் பிரியமானார்; கிறிஸ்துவானவர் மகிமையின் நம்பிக்கையாக உங்களுக்குள் இருப்பதே அந்த இரகசியம்."

COL_001_028,"எந்த மனிதனையும் கிறிஸ்து இயேசுவிற்குள் தேறினவனாக நிறுத்தும்படிக்கு, அவரையே நாங்கள் அறிவித்து, எந்த மனிதனுக்கும் புத்திசொல்லி, எந்த மனிதனுக்கும் எல்லா ஞானத்தோடும் உபதேசம் செய்கிறோம்."

COL_001_029,அதற்காக நான் எனக்குள்ளே வல்லமையான செய்கையை நடப்பிக்கிற அவருடைய பலத்தின்படி போராடிப் பிரயாசப்படுகிறேன்.

COL_002_001,"உங்களுக்காகவும் லவோதிக்கேயாவில் இருக்கிறவர்களுக்காகவும், சரீரத்தில் என் முகத்தைக் காணாதிருக்கிற மற்றெல்லோருக்காகவும் மிகுந்த போராட்டம் எனக்கு உண்டென்று நீங்கள் அறியவிரும்புகிறேன்."

COL_002_002,"அவர்களுடைய இருதயங்கள் தேற்றப்பட்டு, அவர்கள் அன்பினால் இணைக்கப்பட்டு, பிதாவாகிய தேவனுக்கும் கிறிஸ்துவிற்கும் உரிய இரகசியத்தை அறிந்துகொள்ளுகிற உணர்வின் பூரண நிச்சயத்தினுடைய எல்லா ஐசுவரியத்திற்கும் உரியவர்களாகவேண்டுமென்றே இப்படி விரும்புகிறேன்."

COL_002_003,அவருக்குள் ஞானம் அறிவு என்பவைகளாகிய பொக்கிஷங்களெல்லாம் அடங்கியிருக்கிறது.

COL_002_004,ஒருவனும் பொய்யான வாதங்களால் உங்களை ஏமாற்றாதபடிக்கு இதைச் சொல்லுகிறேன்.

COL_002_005,"சரீரத்தின்படி நான் தூரமாக இருந்தும், ஆவியின்படி உங்களோடுகூட இருந்து, உங்களுடைய ஒழுங்கையும், கிறிஸ்துவின் மேலுள்ள உங்களுடைய விசுவாசத்தின் உறுதியையும் பார்த்துச் சந்தோஷப்படுகிறேன்."

COL_002_006,"ஆகவே, நீங்கள் கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவை ஏற்றுக்கொண்டபடியே, அவருக்குள் வேர்கொண்டவர்களாகவும், அவர்மேல் கட்டப்பட்டவர்களாகவும், அவருக்குள் நடந்துகொண்டு,"

COL_002_007,"நீங்கள் போதிக்கப்பட்டபடியே, விசுவாசத்தில் உறுதிப்பட்டு, நன்றி செலுத்துவதோடு அதிலே பெருகுவீர்களாக."

COL_002_008,"உலக ஞானத்தினாலும், மாயமான தந்திரத்தினாலும், ஒருவனும் உங்களைக் கொள்ளைகொண்டு போகாதபடிக்கு எச்சரிக்கையாக இருங்கள்; அது மனிதர்களின் பாரம்பரிய நியாயத்தையும் உலக வழிபாடுகளையும் பற்றினதேயல்லாமல் கிறிஸ்துவைப்பற்றினதல்ல."

COL_002_009,"ஏனென்றால், தேவத்துவத்தின் பரிபூரணமெல்லாம் சரீரப்பிரகாரமாக அவருக்குள் குடிகொண்டிருக்கிறது."

COL_002_010,மேலும் எல்லாத் துரைத்தனங்களுக்கும் அதிகாரத்திற்கும் தலைவராக இருக்கிற அவருக்குள் நீங்கள் பரிபூரணம் உள்ளவர்களாக இருக்கிறீர்கள்.

COL_002_011,"அல்லாமலும், நீங்கள் கிறிஸ்துவைப்பற்றும் விருத்தசேதனத்தினாலே மாம்சத்திற்குரிய பாவசரீரத்தைக் களைந்துவிட்டதினால், கையால் செய்யப்படாத விருத்தசேதனத்தை அவருக்குள் பெற்றீர்கள்."

COL_002_012,"ஞானஸ்நானத்திலே அவரோடுகூட அடக்கம்பண்ணப்பட்டவர்களாகவும், அதிலே அவரை மரித்தோரிலிருந்து உயிரோடு எழுப்பின தேவனுடைய செயலின்மேலுள்ள விசுவாசத்தினாலே அவரோடுகூட உயிரோடு எழுந்தவர்களாகவும் இருக்கிறீர்கள்."

COL_002_013,"உங்களுடைய பாவங்களினாலேயும், உங்களுடைய சரீரவிருத்தசேதனம் இல்லாமையினாலேயும் மரித்தவர்களாக இருந்த உங்களையும் அவரோடுகூட உயிர்ப்பித்து, அக்கிரமங்கள் எல்லாவற்றையும் உங்களுக்கு மன்னித்து;"

COL_002_014,"நமக்கு எதிரானதாகவும் கட்டளைகளால் நமக்கு விரோதமாகவும் இருந்த கையெழுத்தை அழித்து, அதை நடுவில் இல்லாதபடிக்கு எடுத்து, சிலுவையின்மேல் ஆணியடித்து;"

COL_002_015,"துரைத்தனங்களையும் அதிகாரங்களையும் பறித்துக்கொண்டு, வெளியரங்கமாக வெளிப்படுத்தி, அவைகளின்மேல் சிலுவையிலே வெற்றி சிறந்தார்."

COL_002_016,"ஆகவே, உணவையும், பானத்தையும் குறித்தாவது, பண்டிகை நாளையும் மாதப்பிறப்பையும் ஓய்வுநாட்களையும் குறித்தாவது, ஒருவனும் உங்களைக் குற்றப்படுத்தாமல் இருப்பானாக."

COL_002_017,அவைகள் வருங்காரியங்களுக்கு நிழலாக இருக்கிறது; அவைகளின் பொருள் கிறிஸ்துவைப்பற்றினது.

COL_002_018,"மூட்டுகளாலும் தசை நரம்புகளாலும் உதவிபெற்று இணைக்கப்பட்டு, தேவவளர்ச்சியாக வளர்ந்தேறுகிற சரீரமுழுவதையும் ஆதரிக்கிற தலையைப் பற்றிக்கொள்ளாமல்,"

COL_002_019,"மாய்மாலமான தாழ்மையிலும், தேவதூதர்களுக்குச் செய்யும் ஆராதனையிலும் விருப்பமடைந்து, காணாத காரியங்களிலே துணிவாய் நுழைந்து, தன் சரீரசிந்தையினாலே வீணாக கர்வம் கொண்டிருக்கிற எவனும் உங்களுடைய பந்தயப்பொருளை நீங்கள் இழந்துபோகும்படி உங்களை ஏமாற்றாதிருக்கப் பாருங்கள்."

COL_002_020,"நீங்கள் கிறிஸ்துவோடுகூட உலகத்தின் வழக்கங்களுக்கு மரித்ததுண்டானால், இன்னும் உலக வழக்கத்தின்படி பிழைக்கிறவர்கள்போல,"

COL_002_021,"மனிதர்களுடைய கட்டளைகளின்படியும் போதனைகளின்படியும் நடந்து: தொடாதே, ருசி பாராதே, தீண்டாதே என்கிற கட்டளைகளுக்கு உடன்படுகிறதென்ன?"

COL_002_022,இவையெல்லாம் அநுபவிக்கிறதினால் அழிந்துபோகுமே.

COL_002_023,"இப்படிப்பட்டப் போதனைகள் சுயவிருப்பமான ஆராதனையையும், போலியான தாழ்மையையும், சரீர ஒடுக்கத்தையும்பற்றி ஞானம் என்கிற பெயர்கொண்டிருந்தாலும், இவைகள் மாம்சத்தைப் பாதுகாப்பதற்கேயன்றி வேறு எதற்கும் உபயோகப்படாது."

COL_003_001,"நீங்கள் கிறிஸ்துவுடன்கூட எழுந்ததுண்டானால், கிறிஸ்து தேவனுடைய வலதுபாரிசத்தில் வீற்றிருக்கும் இடத்திலுள்ள மேலானவைகளைத் தேடுங்கள்."

COL_003_002,"பூமியிலுள்ளவைகளை இல்லை, மேலானவைகளையே விரும்புங்கள்."

COL_003_003,"ஏனென்றால், நீங்கள் மரித்தீர்கள், உங்களுடைய ஜீவன் கிறிஸ்துவோடு தேவனுக்குள் மறைந்திருக்கிறது."

COL_003_004,"நம்முடைய ஜீவனாகிய கிறிஸ்து வெளிப்படும்போது, நீங்களும் அவரோடுகூட மகிமையிலே வெளிப்படுவீர்கள்."

COL_003_005,"ஆகவே, விபசாரம், அசுத்தம், மோகம், தீய எண்ணம், விக்கிரக ஆராதனையான பொருளாசை ஆகிய இந்த உலகத்திற்குரிய பாவ சுபாவத்தை அழித்துப்போடுங்கள்."

COL_003_006,இவைகளினாலேயே கீழ்ப்படியாமையின் பிள்ளைகள்மேல் தேவனுடைய கோபம் வரும்.

COL_003_007,"நீங்களும் முற்காலத்தில் அவர்களுக்குள்ளே வாழ்ந்தபோது, அவைகளைச் செய்துகொண்டுவந்தீர்கள்."

COL_003_008,"இப்பொழுதோ கோபமும் மூர்க்கமும் பொறாமையும், உங்களுடைய வாயிலிருந்து வரக்கூடாத நிந்தனையும், வம்புவார்த்தைகளுமாகிய இவைகளையெல்லாம் விட்டுவிடுங்கள்."

COL_003_009,"ஒருவருக்கொருவர் பொய் சொல்லாதிருங்கள்; பழைய மனிதனையும் அவன் செய்கைகளையும் களைந்துபோட்டு,"

COL_003_010,தன்னைப் படைத்தவருடைய சாயலுக்கு ஒப்பாக பூரண அறிவடையும்படி புதிதாக்கப்பட்ட புதிய மனிதனை அணிந்துகொண்டிருக்கிறீர்களே.

COL_003_011,"அதிலே கிரேக்கனென்றும் யூதனென்றுமில்லை, விருத்தசேதனம் உள்ளவனென்றும், விருத்தசேதனம் இல்லாதவனென்றுமில்லை, யூதனல்லாதவனென்றும் வெளிதேசத்தானென்றுமில்லை, அடிமையென்றும் சுதந்திரமானவனென்றுமில்லை; கிறிஸ்துவே எல்லோரிலும் எல்லாமுமாக இருக்கிறார்."

COL_003_012,"ஆகவே, நீங்கள் தேவனால் தெரிந்துகொள்ளப்பட்ட பரிசுத்தரும் பிரியருமாக, உருக்கமான இரக்கத்தையும், தயவையும், மனத்தாழ்மையையும், அமைதியையும், நீடிய பொறுமையையும் அணிந்துகொண்டு;"

COL_003_013,"ஒருவரையொருவர் ஏற்றுக்கொண்டு, ஒருவர்பேரில் ஒருவருக்குக் குறைபாடு உண்டானால், கிறிஸ்து உங்களுக்கு மன்னித்ததுபோல, ஒருவருக்கொருவர் மன்னியுங்கள்."

COL_003_014,"இவை எல்லாவற்றின்மேலும், பூரண நற்குணத்தின் கட்டாகிய அன்பை அணிந்துகொள்ளுங்கள்."

COL_003_015,"தேவசமாதானம் உங்களுடைய இருதயங்களில் ஆளக்கடவது, இதற்கென்றே நீங்கள் ஒரே சரீரமாக அழைக்கப்பட்டீர்கள்; நன்றியுள்ளவர்களாகவும் இருங்கள்."

COL_003_016,"கிறிஸ்துவின் வசனம் உங்களுக்குள்ளே எல்லா ஞானத்தோடும் பரிபூரணமாக குடியிருப்பதாக; பாடல்களினாலும் கீர்த்தனைகளினாலும் ஞானப்பாட்டுகளினாலும் ஒருவருக்கொருவர் போதித்து புத்திசொல்லிக்கொண்டு, உங்களுடைய இருதயத்திலே கர்த்த்தரைப் பக்தியுடன் பாடி;"

COL_003_017,"வார்த்தையினாலாவது செயல்களினாலாவது, நீங்கள் எதைச்செய்தாலும், அதையெல்லாம் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினாலே செய்து, அவர் மூலமாகப் பிதாவாகிய தேவனுக்கு நன்றி செலுத்துங்கள்."

COL_003_018,"மனைவிகளே, கர்த்தருக்கேற்கும்படி உங்களுடைய கணவர்களுக்குக் கீழ்ப்படியுங்கள்."

COL_003_019,"கணவன்மார்களே, உங்களுடைய மனைவிகளில் அன்பு செலுத்துங்கள், அவர்கள்மேல் கசந்துகொள்ளாதிருங்கள்."

COL_003_020,"பிள்ளைகளே, உங்களுடைய பெற்றோருக்கு எல்லாக் காரியத்திலேயும் கீழ்ப்படியுங்கள்; இது கர்த்தருக்கு விருப்பமானது."

COL_003_021,"பிதாக்களே, உங்களுடைய பிள்ளைகள் மனம் தளர்ந்துபோகாதபடி, அவர்களை கோபமூட்டாமலிருங்கள்."

COL_003_022,"வேலைக்காரர்களே, சரீரத்தின்படி உங்களுடைய எஜமான்களாக இருக்கிறவர்களுக்கு எல்லாக் காரியத்திலேயும் கீழ்ப்படிந்து, நீங்கள் மனிதர்களைப் பிரியப்படுத்த விரும்புகிறவர்களாகப் பார்வைக்கு பணிவிடைசெய்யாமல், தேவனுக்குப் பயப்படுகிறவர்களாகக் கபடமில்லாத இருதயத்தோடு பணிவிடைசெய்யுங்கள்."

COL_003_023,"நீங்கள் கர்த்தராகிய கிறிஸ்துவைத் தொழுதுகொள்ளுகிறதினாலே, உரிமைப்பங்கின் பலனைக் கர்த்தராலே பெறுவீர்களென்று அறிந்து,"

COL_003_024,"எதைச்செய்தாலும், அதை மனிதர்களுக்கென்று செய்யாமல், கர்த்தருக்கென்றே மனப்பூர்வமாகச் செய்யுங்கள்."

COL_003_025,அநியாயம் செய்கிறவன் தான் செய்த அநியாயத்திற்குரிய பலனை அடைவான்; பட்சபாதமே இல்லை.

COL_004_001,"எஜமான்களே, உங்களுக்கும் பரலோகத்தில் எஜமான் இருக்கிறாரென்று அறிந்து, வேலைக்காரர்களுக்கு நீதியும் செம்மையுமானதைச் செய்யுங்கள்."

COL_004_002,"இடைவிடாமல் ஜெபம்பண்ணுங்கள், நன்றியுள்ள இருதயத்தோடு ஜெபத்தில் விழித்திருங்கள்."

COL_004_003,"கிறிஸ்துவினுடைய இரகசியத்தினிமித்தம் கட்டப்பட்டிருக்கிற நான் அந்த இரகசியத்தைக்குறித்துப் பேசவேண்டிய பிரகாரமாகப் பேசி, அதை வெளிப்படுத்துவதற்கு,"

COL_004_004,தேவவார்த்தை செல்லும்படியான வாசலை தேவன் திறந்தருளும்படி எங்களுக்காகவும் வேண்டிக்கொள்ளுங்கள்.

COL_004_005,"அவிசுவாசிகளுக்கு முன்பாக ஞானமாக நடந்து, காலத்தைப் பயன்படுத்திக்கொள்ளுங்கள்."

COL_004_006,"அவனவனுக்கு எவ்வாறு பதில்சொல்லவேண்டுமென்று நீங்கள் அறியும்படிக்கு, உங்களுடைய வசனம் எப்பொழுதும் கிருபை பொருந்தினதாகவும் உப்பினால் சாரமேறினதாகவும் இருப்பதாக."

COL_004_007,"பிரியமான சகோதரனும், உண்மையுள்ள ஊழியக்காரனும், கர்த்தருக்குள் எனக்கு உடன் வேலையாளுமாக இருக்கிற தீகிக்கு என்பவன் என் செய்திகளையெல்லாம் உங்களுக்கு அறிவிப்பான்."

COL_004_008,"உங்களுடைய செய்திகளை அறியவும், உங்களுடைய இருதயங்களைத் தேற்றவும்,"

COL_004_009,"அவனையும், உங்களில் ஒருவனாக இருக்கிற உண்மையும் பிரியமும் உள்ள சகோதரனாகிய ஒநேசிமு என்பவனையும், உங்களிடம் அனுப்பியிருக்கிறேன்; அவர்கள் இந்த இடத்துச் செய்திகளையெல்லாம் உங்களுக்கு அறிவிப்பார்கள்."

COL_004_010,"என்னோடுகூடக் காவலில் இருக்கிற அரிஸ்தர்க்கும், பர்னபாவிற்கு நெருங்கிய உறவினரான மாற்கும் வாழ்த்துதல் சொல்லுகிறார்கள். மாற்குவைக்குறித்து உத்தரவுபெற்றீர்களே; இவன் உங்களிடம் வந்தால் இவனை அங்கீகரித்துக்கொள்ளுங்கள்."

COL_004_011,"யுஸ்து என்னப்பட்ட இயேசுவும் வாழ்த்துதல் சொல்லுகிறான். விருத்தசேதனம் உள்ளவர்களில் இவர்கள்மட்டும் தேவனுடைய ராஜ்யத்திற்காக என் உடன்வேலையாட்களாக இருந்து, எனக்கு ஆறுதல் செய்துவந்தார்கள்."

COL_004_012,"எப்பாப்பிராவும் உங்களுக்கு வாழ்த்துதல் சொல்லுகிறான்; உங்களைச் சேர்ந்தவனும் கிறிஸ்துவின் ஊழியக்காரனுமாகிய இவன், நீங்கள் தேவனுக்குச் சித்தமானவைகள் எல்லாவற்றிலும் தேறினவர்களாகவும் பூரண நிச்சயமுள்ளவர்களாகவும் நிலைநிற்கவேண்டுமென்று, தன் ஜெபங்களில் உங்களுக்காக எப்பொழுதும் போராடுகிறான்."

COL_004_013,"இவன் உங்களுக்காகவும், லவோதிக்கேயருக்காகவும், எராப்போலியருக்காகவும், மிகுந்த விழிப்புள்ளவனாக இருக்கிறான் என்பதற்கு நான் சாட்சியாக இருக்கிறேன்."

COL_004_014,"பிரியமான மருத்துவனாகிய லூக்காவும், தேமாவும், உங்களுக்கு வாழ்த்துதல் சொல்லுகிறார்கள்."

COL_004_015,"லவோதிக்கேயாவிலிருக்கிற சகோதரர்களையும், நிம்பாவையும், அவன் வீட்டில் கூடுகிற சபையையும் வாழ்த்துங்கள்."

COL_004_016,இந்தக் கடிதம் உங்களிடம் வாசிக்கப்பட்டபின்பு இது லவோதிக்கேயா சபையிலும் வாசிக்கப்படும்படி செய்யுங்கள்; லவோதிக்கேயாவிலிருந்து வரும் கடிதத்தை நீங்களும் வாசியுங்கள்.

COL_004_017,அர்க்கிப்பைக் கண்டு: நீ கர்த்தரிடத்தில் பெற்ற ஊழியத்தை நிறைவேற்றும்படி கவனமாக இருப்பாயாகவென்று சொல்லுங்கள்.

COL_004_018,"பவுலாகிய நான் என் கையினால் எழுதி, உங்களை வாழ்த்துகிறேன். நான் கட்டப்பட்டிருக்கிறதை நினைத்துக்கொள்ளுங்கள். கிருபை உங்களோடிருப்பதாக. ஆமென்."