diff --git "a/அ.txt" "b/அ.txt" new file mode 100644--- /dev/null +++ "b/அ.txt" @@ -0,0 +1,891 @@ +அகமும்‌ காசும்‌ சிக்கெனத்‌ தேடு. +அஃகம்‌ சுருக்கேல்‌. +அகங்கையிற்‌ போட்டுப்‌ புறங்கையை நக்கலாமா? +அகட விகடமாய்ப்‌ பேசுகிறான்‌. +அகதிக்கு ஆகாசமே துணை. +அகதிக்குத்‌ தெய்வமே துணை. +அகதி சொல்‌ அம்பலம்‌ ஏறாது. +அகதி தலையிற்‌ பொழுது விடிந்தது. +அகதி பெறுவது பெண்பிள்ளை, அதுவும்‌ வெள்ளிபூராடம்‌. +அகதியைப்‌ பருதி கேட்கிறதா? +அகத்தி ஆயிரம்‌ காய்த்தாலும்‌ புறத்தி புறத்தியே. +அகத்தின்‌ அழகு முகத்தில்‌ தெரியும்‌. +அகத்துக்‌ கழகு ஆமுடையான்‌. +அகப்பட்டவனுக்கு அஷ்டமத்துச்சனி, ஓடிப்போனவனுக்கு ஒன்பதாம்‌ இடத்து ராஜா. +அகப்பட்டுக்கொள்வேன்‌ என்றோ கள்ளன்‌ களவெடுக்‌கிறது? +அகப்பை குறைந்தால்‌ கொழுப்பெல்லா மடங்கும்‌. +அகப்பை பிடூத்தவன்‌ தன்னவனானால்‌, அடிப்பந்தியில்‌ இருந்தாலென்ன, கடைப்பந்தியில்‌ இருந்தாலென்ன? +அகம்‌ ஏறச்‌ சுகம்‌ ஏறும்‌. +அகம்‌ மலிந்தால்‌ அஞ்சும்‌ மலியும்‌. +அகம்‌ குறைந்தால்‌ அஞ்சும்‌ குறையும்‌. +அகம்‌ மலிந்தால்‌ எல்லாம்‌ மலியும்‌, +அகம்‌ குறைந்தால்‌ எல்லாம்‌ குறையும்‌. +அகல இருந்தால்‌ நிகள உறவு, கதிட்டவந்தால்‌ முட்டப்‌ பகை. +அகல இருந்தால்‌ பகையும்‌ உறவாம்‌. +அகல இருந்தால்‌ புகல உறவு. +அகல இருந்து செடியைக்‌ காக்கிறது. +அகல உழுகிறதைவிட ஆழ உழுகிறது சிலாக்கியம்‌. +அகல்வட்டம்‌ பகல்‌ மழை. +அகவிலை அறியாதவன்‌ துக்கம்‌ அறியான்‌. +அகழிலே விழுந்த முதலைக்கு அதுவே வைகுண்டம்‌. +அகா நாக்காய்ப்‌ பேசுகிறான்‌. +அகாரியத்தில்‌ பகீரதப்‌ பிரயத்தனம்‌ பண்ணுறது. +அகிருத்தியம்‌ செய்கிறவன்‌ முகத்தில்‌ விழிக்கிறதா? +அகிலுந்‌ திகிலுமாக. +அகோர தபச விபரீத சோரன்‌. +அகோர தபசி விபரீத நிபுணன்‌. +அக்கச்சி உடைமை அரிச தங்கச்சி உடைமை தவிடா? +அக்கரைப்பாகலுக்கு இக்கரைக்‌ கொழுகொம்பு. +அக்கரை மாட்டுக்கு இக்கரை பச்சை. +அக்கறை தீர்ந்தால்‌ அக்காள்‌ முகடு குக்கா. +அக்கன்னா அரியன்னா, நோக்குவந்த விதியென்ன? +அக்காடு வெட்டிப்‌ பருத்தி விதைக்கிறேன்‌ என்றால்‌, அப்பா எனக்கொரு துப்பட்டி என்கிறான்‌ பிள்ளை; அதற்கு அப்பன்‌ கைகால்‌ பட்டுக்‌ கிழியப்போகிறது மடித்துப்‌ பெட்டியிலேவை யென்கிறான்‌. +அக்காடு வெட்டிப்‌ பருத்தி விதைத்தால்‌, அப்பா முழச்‌ சிற்றாடை என்கிறதாம்‌ பெண்‌. +அக்காள்‌ இருக்கிறவரையில்‌ மச்சான்‌ உறவு. +அக���காள்‌ உண்டானால்‌, மச்சான்‌ உண்டு. +அக்காள்‌ உறவும்‌ மச்சான்‌ பகையுமா? +அக்காளைக்‌ கொண்டால்‌, தங்கையை முறைகேட்பானேன்‌? +அக்காள்‌ தான்‌ கூடப்பிறந்தான்‌, மச்சானும்‌ கூடப்பிறந்‌தானா? +அக்காளைப்பழித்துத்‌ தங்கை அபசாரியானாள்‌. +அக்காளைப்பழித்துத்‌ தங்கை மோசம்போனான்‌. +அக்கியானம்‌ தொலைந்தால்‌ அவிழ்தம்‌ பலிக்கும்‌. +அக்கிராரத்தில்‌ பிறந்தாலும்‌, நாய்‌ வேதம்‌ அறியுமா? +அக்கிராரத்துக்கு ஒரு ஆடு செத்தால்‌ ஆளுக்கு ஒரு மயிர்‌. +அக்கிராரத்து நாய்‌ பிரதிஷ்டைக்கு அழுததுபோல. +அக்கிராரத்து நாய்க்கு அகவிலை தெரியுமா? +அக்கினிதேவனுக்கு அபிஷேகம்‌ செய்ததுபோல்‌ இருக்கிறான்‌. +அக்கனிப்பந்தலிலே வெண்ணெய்ப்பதுமை ஆடுமா? +அக்கினி மலையிலே கர்ப்பூரபாணம்‌ பிரயோகித்தது போல. +அக்கினியைத்தின்று கக்குகிறபிள்ளை, அல்லித்தண்டைத்‌ தின்கிறது அதிசயமா? +அக்கினியாற்‌ சுட்ட புண்‌ விஷமிக்காது. +அக்குத்‌ தொக்கு இல்லாதவனுக்குத்‌ துக்கம்‌ ஏது? +அக்குத்தொக்கில்லாதான்‌ ஆண்மையும்‌, வெட்கஞ்‌சிக்‌கல்லாதான்‌ தோஷமும்‌, மிக்கத்‌ துக்கப்படாதான்‌ வாழ்வும்‌ நாய்‌ கக்கி நக்கித்‌ தின்னத்துக்‌ கொக்கும்‌. +அங்கங்கு குறுணி அளந்துகொட்டி இருக்கிறது. +அங்கத்திலே குறைச்சலில்லை ஆட்டடா பூசாரி. +அங்கத்தை ஆற்றில்‌ அலைசொணாதா? +அங்கத்தைக்‌ கொண்டுபோய்‌ ஆற்றில்‌ அலசினாலும்‌ தோஷம்‌ இல்லை. +அங்கத்தைக்‌ கொன்று ஆற்றில்‌ சேர்க்கவொண்ணாது. +அங்காங்கு வைபோகமாயிருக்கிறான்‌, இங்கேபார்த்தால்‌ அரைக்காசு முதலும்‌ இல்லை. +அங்காடி விலையை அதிர அடிக்காதே. +அங்காடிக்காரியைச்‌ சங்கீதம்‌ பாடச்சொன்னால்‌, வெங்‌காயம்‌ கரிவேப்பிலை என்பாள்‌. +அங்காளம்மைத்‌ தெய்வம்‌ அகப்பைக்கூறு வழியாய்‌ வரும்‌. +அங்கிடு தொடுப்பிக்கு அங்கிரண்டு குட்டு, இங்கிரண்டு சொட்டு. +அங்கும்‌ இருப்பான்‌ இங்கும்‌ இருப்பான்‌, ஆக்கின சோற்றுக்குப்‌ பங்கும்‌ இருப்பான்‌. +அங்கும்‌ தப்பி இங்கும்‌ தம்பி அகப்பட்டுக்கொண்டான்‌ தும்மட்டிப்பட்டன்‌ (திம்மட்டிராயண்‌). +அங்கே போனேனோ செத்தேனோ. +அங்கேண்டி மகளே கஞ்சிக்கு அழுகிறாய்‌? இங்குவாடி காற்றாய்ப்‌ பறக்கலாம்‌. +அசத்துக்கு வாழ்க்கைப்பட்டு ஆயிரம்‌ வருஷம்‌ வாழ்‌வதைவிட சத்துக்கு வாழ்க்கைப்பட்டுச்‌ சட்டென்று தாலியறுப்பதே மேல��‌. +அசலார்‌ உடைமைக்குப்‌ பேயாய்ப்‌ பறக்கிறது. +அசலார்‌ குற்றம்போல்‌ தன்‌ குற்றம்‌ பார்த்தால்‌ தீதுண்‌டோ மன்னுயிர்க்கு? +அசலிலே பிறந்த கசுமாலம்‌. +அசலும்‌ பிசலும்‌ அறியாமல்‌ அடுத்தாரைக்‌ கெடுக்கப்‌பார்க்கிறான்‌. +அசல்‌ வாழ்ந்தால்‌ ஐந்துநாள்‌ பட்டினி கிடப்பாள்‌. +அசல்‌ வீடு வாழ்ந்தால்‌ பரதேசம்‌ போகிறதா? +அசல்‌ வீட்டான்பின்ளை ஆபத்துக்குதவுவானா? +அசல்‌ வீட்டுக்காரனுக்குப்‌ பரிந்துகொண்டு ஆமுடையானை அடித்தாளாம்‌. +அசல்‌ வீட்டுக்குப்போகிற பாம்மைப்‌ கையாலே பிடிக்கான்‌ +அசல்‌ வீட்டுப்‌ பிராமணா, பாம்மைப்‌ பிடி, அல்லித்‌தண்டுபோலக்‌ குளிர்ந்திருக்கும்‌. +அசவாப்‌ பயிரும்‌, கண்டதே உறவும்‌. +அசுணமாச்‌ செவிப்‌ பறை அடுத்ததுபோலும்‌. +அசைந்துதின்கிறது மாடு அசையாமல்தின்கிறது வீடு. +அசைப்புக்கு ஆயிரம்பொன்‌ வாங்குகிறது. +அசைவிருந்தால்‌ விட்டுப்போகமாட்டான்‌. +அச்சம்‌ அற்றவன்‌ அம்பலம்‌ ஏறுவான்‌. +அச்சம்‌ ஆண்மை குலைக்கும்‌. +அச்சாணி அன்னதோர்‌ சொல்‌. +அச்சாணி இல்லாத்‌ தேர்‌ முச்சாணும்‌ ஓடாது. +அச்சிக்குப்‌ போனாலும்‌, அகப்பை அரைக்காசு. +அச்சியிலும்‌ பிச்சைக்காரன்‌ உண்டு. +அச்சியென்றால்‌ உச்சி குளிருமா? அழுவணம்‌ (ஐவணம்‌) என்றால்‌ கை இவக்குமா? +அச்சில்லாத்‌ தேர்‌ ஓடவும்‌ ஆழுடையான்‌ இல்லாதவள்‌ பிள்ளை பெறவும்‌ கூடுமா? +அச்சு ஒன்றா வேறா? +அஞ்சலிவந்தனம்‌ ஆருக்கும்‌ நன்மை. +அஞ்சனக்காரன்‌ முதுகில்‌ வஞ்சனைக்காரன்‌ ஏறினான்‌. +அஞ்சா நெஞ்சு படைத்தால்‌ ஆருக்கு ஆவான்‌? +அஞ்சாவது பெண்‌ கெஞ்சினாலும்‌ கிடையாது. +அஞ்சி ஆண்மை செய்யவேணும்‌. +அஞ்சி நடக்கிறவளுக்குக்‌ காலமல்ல. +அஞ்சிலே வளையாதது ஐம்பதிலே வளையுமா? +அஞ்சிலே பிஞ்சிலே கொஞ்சாமல்‌, +அறுபதிற்குமேல்‌ கொஞ்சினானாம்‌. +அஞ்சில்‌ அறியாதவன்‌ ஐம்பதில்‌ அறிவானா? +அஞ்சினவனைக்‌ குஞ்சும்‌ வெருட்டும்‌. +அஞ்சினவனைப்‌ பேய்‌ அடிக்கும்‌. +அஞ்சினவன்‌ கண்ணுக்கு ஆகாசமெல்லாம்பேய்‌. +அஞ்சினாரைக்‌ கெஞ்சுவிக்கும்‌, அடித்தாரை வாழ்விக்கும்‌. +அஞ்சு காசுக்குக்‌ குதிரையும்‌ வேண்டும்‌, அதுவும்‌ +ஆற்றைக்‌ கடக்கப்‌ பாயவும்‌ வேண்டும்‌. +அஞ்சு குஞ்சும்‌ கறியாமோ, அறியாப்‌ பெண்ணும்‌ பெண்டாமோ? +அஞ்சுகதவும்‌ சாத்தியிருக்க, ஆமுடையான்‌ வாயிலே பேணவளார்‌? +அஞ்சுக்கு அறுகு கிள்ளப்போனவன்‌, திரட்டிக்குக்‌ கொண்டுவந்தானாம்‌. +அஞ்சுக்கு இரண்டு பழுதில்லை. +அஞ்சு பணம்‌ கொடுத்தாலும்‌, அத்தனை ஆத்திரம்‌ ஆகாது. +அஞ்சுபணங்‌ கொடுத்துத்‌ கஞ்சித்தண்ணீர்‌ குடிப்பானேன்‌? +அஞ்சு பெண்‌ பிறந்தால்‌ அரசனும்‌ ஆண்டியாவான்‌. +அஞ்சும்‌ இருக்கிறது நெஞ்சுக்குள்ளே, அதுவுமிருக்கிறது புந்திக்குள்ளே. +அஞ்சுரு ஆணியில்லாத்தேர்‌ அசைவதரிது. +அஞ்சுபொன்னும்‌ வாங்கார்‌ அரைப்பணமே போதுமென்பார்‌. +அஞ்சும்‌ மூன்றும்‌ உண்டானால்‌, அறியாச்‌ இறுக்கஇயும்‌ கறியாக்குவாள்‌. (பெண்ணாவாள்‌) +அஞ்சுருவுத்தாலி நெஞ்சுருவக்கட்டிக்‌ கொண்டு வந்தாற்போல்‌ வலக்காரமாய்ப்‌ பேசுகிறாய்‌. +அஞ்சு வயதுப்‌ பிள்ளைக்கு ஐம்பது வயதுப்‌ பெண்‌ கால்‌ முடக்கவேண்டும்‌. +அஞ்சுவோரைக்‌ கெஞ்சடிக்கப்‌ பார்க்கிறான்‌. +அஞ்சூர்ச்சண்டை சிம்மாளம்‌, ஐங்கல அரிச ஒரு கவளம்‌. +அஞ்செழுத்தும்‌ பாவனையும்‌ அப்பனைப்போல்‌ இவனைப்போல்‌) இருக்கிறது. +அடக்கத்துப்‌ பெண்ணுக்கு அழகேன்‌? +அடக்கமே பெண்ணுக்கு அழகு. +அடக்கம்‌ ஆயிரம்பொன்‌ தரும்‌. +அடக்கம்‌ உடையார்‌ அறிஞர்‌, அடங்காதார்‌ கல்லார்‌. +அடக்குவாரற்ற கழுக்காணி. +அடக்குவாரற்ற கழுக்காணியும்‌ கொட்டுவாரற்ற மேளமுமாய்த்‌ திரிகிறான்‌. +அடங்காத மனைவியும்‌ ஆங்கார புருஷனும்‌. +அடங்காப்‌ பாம்பிற்கு ராஜா மூங்கில்தடி. +அடங்காப்பிடாரியைப்‌ பெண்டுவைத்துக்‌ கொண்டது போல்‌. +அடங்காப்‌ பெண்சாதியால்‌ அத்தைக்கும்‌ நமக்கும்‌ பொல்லாப்பு. +அடங்காமாட்டுக்கு அரசன்‌ மூங்கில்‌ தடி. +அடங்கினபிடி பிடிக்கவேண்டுமேயல்லாமல்‌, அடங்காப்‌பிட பிடிக்கலாகாது. +அடம்பங்கொடியும்‌ இரண்டால்‌ மிடுக்கு. +அடா என்பான்‌, வெளியே புறப்படான்‌. +அடாது செய்தவன்‌ படாது படுவான்‌. +அடி அதிரசம்‌ (ஆலங்காய்), குத்து கொழுக்கட்டை. +அடி உதவுகிறதுபோல அண்ணன்‌ தம்பி உதவார்‌. +அடி என்கப்‌ பெண்சாதியில்லை, அஷ்ட புத்திரவெகு பாக்கிய நமஸ்து +அடி என்கிற மந்திரியுமில்லை பிடி என்கிற ராஜனுமில்லை. +அடி ஒட்டலே கரணம்‌ போடப்பார்க்கிறான்‌. +அடி ஒட்டையா யிருந்தாலும்‌ கொழுக்கட்டை வேக வேண்டியதுதானே +அடிக்க அடிக்கப்‌ பந்து அதிக விசைகொள்ளும்‌ +அடிக்காயிரம்‌ பொன்‌ கொடுக்கவேண்டும்‌. +அடிக்கிற காற்றுக்கும்‌ பெய்கிற மழைக்கும்‌ பயப்படு. +அடிக்கிற க���ற்று வெயிலுக்குப்பயப்படுமா? +அடிக்கும்‌ ஒரு கை, அணைக்கும்‌ ஒரு கை. +அடிக்கும்‌ காற்றிலே எடுத்துத்‌ தூற்றவேண்டும்‌. +அடிக்கும்‌ பிடிக்கும்‌ சரி. +அடி செய்கிறது அண்ணன்‌ தம்பி செய்யார்‌. +அடிச்சட்டிக்குன்ளே கரணம்‌ போடலாமா? +அடித்த இடம்‌ கண்டுபிடித்தழ ஆறு மாசம்‌ செல்லும்‌. +அடித்த ஏருக்கும்‌ குடித்த கூழுக்கும்‌ சரி. +அடித்தது ஆட்டம்‌ பிடித்தது பெண்டு. +அடித்தாலும்‌ புருஷன்‌ புடைத்தாலும்‌ புருஷன்‌. +அடித்துப்‌ பழுத்ததும்‌ பழமா? +அடித்துப்‌ பால்‌ புகட்டுகிறதா? +அடித்து வளர்க்காத பிள்ளையும்‌ முறுக்கி வளர்க்காத மீசையும்‌ செவ்வையாகா. +அடித்து விட்டவன்‌ பின்னே போனாலும்‌, பிடித்து விட்டவன்‌ பின்னே போகலாகாது. +அடிநாக்கிலே நஞ்சும்‌ நுனிநாக்கிலே அமிர்தமுமா? +அடி நொச்சி நுனி ஆமணக்கா? +அடிப்பானேன்‌ பிடிப்பானேன்‌ அடக்குகிற வழியில்‌ அடக்குவோம்‌. +அடிமேல்‌ அடி அடித்தால்‌, அம்மியும்‌ நகரும்‌, +அடிமை படைத்தால்‌ ஆள்வது கடன்‌. +அடியற்ற பனையபோல்‌ விழுந்தான்‌. +அடியற்ற மரம்போல அலறிவிழுகிறது. +அடியற்றால்‌ நுனி விழாமலிருக்குமா? +அடியாத மாடு படியாது. +அடியிலுள்ளது நடுவுக்கும்‌ முடிக்கும்‌ உண்டு. +அடியும்‌ நுனியும்‌ தறித்த கட்டையபோல. +அடியும்‌ பட்டுப்‌ புளித்த மாங்காயா தின்னவேண்டும்‌? +அடி யென்று அழைக்கப்‌ பெண்டாட்டி, இல்லை, பிள்ளை எத்தனை பெண்‌ எத்தனை என்கிறான்‌. +அடியைப்பிடிடா பாரதபட்டா. +அடி யொட்டி யல்லா மேற்கரணம்‌ போடவேணும்‌? +அடிவானம்‌ கறுத்தால்‌, ஆண்டை வீடு வறுக்கும்‌. +அடிவண்டிக்‌ கடாப்போலே. +அடிவயிற்றிலே இடிவிழுந்தாற்போல. +அடுக்களைக்‌ இணற்றிலே அமுதம்‌ எழுந்தாற்போல. +அடுக்களைக்‌ குற்றம்‌ திருப்பால்‌ குழைந்தது, ஆமுடையான்‌ குற்றம்‌ பெண்ணாகப்‌ பிறந்தது. +அடுக்களைக்கு ஒரு பெண்ணும்‌ அம்பலத்துக்கு ஒரு ஆணும்‌ இருக்கிறதென்கிறான்‌. +அடுக்களைப்‌ பூனைபோல்‌ இடுக்கிலே ஒளிக்கிறது. +அடுக்களைப்‌ பெண்களுக்கு அழகுவேண்டுமா? +அடுக்குகிற அருமை உடைக்கிற நாய்க்குத்‌ தெரியுமா? +அடுக்குகிற வருத்தம்‌ உடைக்கிறதுக்குத்‌ தெரியாது. +அடுத்த கூரை வேவுங்கால்‌ தன்‌ கூரைக்கு மோசம்‌. +அடுத்ததன்‌ தன்மை ஆன்மாவாகும்‌. +அடுத்தது காட்டும்‌ பளிங்கதுபோல, (நெஞ்சில்‌) கடுத்‌தது காட்டும்‌ முகம்‌. +அடுத்தவரை அகல விடல��காது. +அடுத்தவனைக்‌ கெடுக்கலாமா? +அடுத்தவன்‌ வாழ்வைப்‌ பகலே குடி கெடுப்பான்‌. +அடுத்த வீட்டுக்காரி பின்ளை பெற்றானளென்று அம்மிக்‌குழவி யெடுத்துக்‌ குத்தக்கொண்டாளாம்‌. +அடுத்தாரைக்‌ கெடுத்து அன்னம்‌ இட்டாரைக்‌ கன்னம்‌ இடுகிறான்‌. +அடுத்து அடுத்துச்‌ சொன்னால்‌ தொடுத்துக்‌ கெடுப்பான்‌ மடந்தை. +அடுத்து வந்தவர்க்கு ஆதரவு சொல்வோன்‌ குரு. +அடுப்பனலில்‌ வெண்ணெயை வைத்த கதை. +அடுப்பு எரிந்தால்‌ பொரி பொரியும்‌. +அடுப்புக்‌ கட்டிக்கு அழகு வேண்டுமா? +அடுப்புநெருப்பும்‌ போய்‌ வாய்த்தவிடும்‌ போச்சு. +அடுத்த வீட்டுக்காரனுக்‌ கஇகாரம்‌ வந்தால்‌ அண்டை வீட்டுக்காரனுக்கு இரைச்சல்‌ லாபம்‌, +அடுத்த வீட்டுக்காரனுக்கு அதஇயோகம்‌ வந்தால்‌ அண்‌டை வீடு குதிரை லாயம்‌. +அடுத்துமுயன்றாலும்‌ ஆகுநாள்தான்‌ ஆகும்‌. +அடே அத்தான்‌, அத்தான்‌, அம்மான்‌ பண்ணினாற்‌ போலிருக்கவில்லை அடா. +அடைந்தோரை ஆதரி. +அடைபட்டுக்‌ இடக்கிறான்‌ செட்டி, அவனை அழைத்து வா பணம்பாக்கி என்கிறான்‌ பட்டி. +அடையலரை அடுத்து வெல்லு. +அடைப்பைப்‌ பிடுங்கினால்‌ பாம்பு கடிக்கும்‌. +அடைமழைக்குள்ளே ஓர்‌ ஆட்டுக்குட்டி செத்தது போல. +அடைமழை விட்டும்‌ செடிமழை விடவில்லை. +அஷ்ட தரித்திரம்‌ தாய்‌ வீடு, அதிலும்‌ தரித்திரம்‌ மாமி யார்வீடு. +அஷ்டதரித்திரம்‌ பிடித்தவன்‌ அமராவதியில்‌ வாழ்கிறானென்று நித்திய தரித்திரம்‌ பிடித்தவன்‌ நின்றநிலையிலே பிட்டுக்கொண்டு வந்தான்‌. +அட்டமத்துச்‌ சனி கிட்டவந்ததுபோல. +அட்டமத்துச்‌ சனி நட்டம்‌ வரச்செய்யும்‌. +அட்டமத்துச்‌ சனி பிடித்தது, பிட்டத்துத்‌ துணியையும்‌ உரிந்துகொண்டது. +அட்டமத்துச்‌ சனியை வட்டிக்கு வாங்கினாற்போல. +அட்டாதுட்டி கொள்ளித்தேன்‌. +அட்டாலும்‌ பால்‌ சுவையில்‌ குன்றாது, +அட்டைக்கும்‌ இருத்தியில்லை, அக்கினிக்கும்‌ இருத்தியில்லை. +அட்டையை எடுத்து மெத்தையில்‌ வைத்தாலும்‌ செத்‌தையைச்‌ செத்தையை நாடும்‌. +அட்டையைப்‌ பிடித்து மெத்தையில்‌ வைத்ததுபோல. +அணி பூண்ட நாய்போல. +அணியத்திலே கிழிஞ்சாலும்‌ கிழிஞ்சுது, அமரத்திலே இழிஞ்சாலும்‌ கிழிஞ்சது. +அணில்‌ ஊணும்‌, ஆமை நடையும்‌. +அணில்‌ எஏறவிட்ட நாய்‌ (பார்ப்பது) போல +அணில்‌ கொப்பிலும்‌, ஆமை கிணற்றிலும்‌. +அணில்‌ நொட்டினதும்‌ தென்னமரம்‌ வீழ்ந்தது���்‌. +அணு மகா மேரு ஆமா? +அணிற்பிள்ளைக்கு நுங்கு அரிதோ, ஆண்டிச்சி பிள்ளைக்கு சோறு அரிதோ? +அணுவும்‌ மலையாச்சு, மலையும்‌ அணுவாச்சு. +அணை கடந்த வெள்ளம்‌ அழுதாலும்‌ வராது. +அணை கடந்த வெள்ளத்தை மறிப்பவர்‌ ஆர்‌? +அண்டங்காக்காய்‌ குழறுகிறாப்போல. +அண்டத்தில்‌ இல்லாததும்‌ பிண்டத்தில்‌ உண்டா? +அண்டத்திற்கு உன்ளது பிண்டத்திற்கும்‌ உண்டு. +அண்டத்துக்கொத்தது பிண்டத்துக்கு. +அண்டத்தைச்‌ சுமக்கிறவனுக்குச்‌ சுண்டைக்காய்‌ பாரமா? +அண்டத்தைக்‌ கையில்‌ வைத்தாட்டும்‌ பிடாரிக்குச்‌ சுண்டைக்காய்‌ எடுப்பது பாரமா? +அண்ட நிழலில்லாமற்போனாலும்‌ பேர்‌ ஆலாலவிருக்ஷம்‌, +அண்டை அயல்‌ பார்த்துப்‌ பேசுகிறது. +அண்டமும்‌ பிண்டமும்‌, அந்தரங்கமும்‌ வெளியரங்கமும்‌. +அண்டர்‌ எப்படியோ தொண்டரும்‌ அப்படியே. +அண்டாத பிடாரி ஆருக்கு அடங்குவாள்‌? +அண்டைமேலே கோபம்‌ கடாவின்‌ மேலே காட்டினதுபோல. +அண்டையிற்‌ சமர்த்தன்‌ இல்லாத ராஜாவுக்கு அபகீர்த்தி வரும்‌, +அண்டை ஸீட்டுக்‌ கடனும்‌ பிட்டத்துச்‌ சிரங்கு மாகாது. +அண்டை வீட்டுக்காரி பின்ளைபெற்றாளென்று அசல்‌ வீட்டுக்காரி இடித்துக்‌ கொண்டதுபோல. +அண்டை வீட்டுச்‌ சண்டை கண்ணுக்குக்‌ குளிர்ச்சி +அண்டை வீட்டுச்‌ சுப்பிக்கும்‌ எதிர்வீட்டுக்‌ காமாட்சிக்குமா கவலை? +அண்டை வீட்டுப்‌ பார்ப்பான்‌ சண்டை மூட்டித்‌ தீர்ப்பான்‌ +அண்ணனார்‌ சேனையிலே அன்ளி உண்ணப்போகிறாள்‌. +அண்ணனிடத்தில்‌ ஆறுமாதம்‌ வாழ்ந்தாலும்‌ அண்ணியிடத்தில்‌ அரை நாழிகை வாழலாமா? +அண்ணனானவன்‌ தம்பிக்கு மூத்தவன்‌; +அண்ணனுக்குத்‌ தம்பி அல்லவென்று போகுமா? +அண்ணனுக்குப்பெண்‌ பிறந்தால்‌ அத்தை அசல்‌ நாட்டாள்‌. +அண்ணற ஆயிரம்‌ பொன்னிலும்‌ நிண்ணற ஓருகாசு பெரிது. +அண்ணனைக்‌ கொன்றபழி, சந்தையிலே தீர்த்துக்கொள்ளுகிறதுபோல, +அண்ணன்‌ உண்ணாதது எல்லாம்‌ மைத்துனிக்கு லாபம்‌. +அண்ணன்‌ கொம்பு பம்பள பளாச்சு. +அண்ணன்‌ சம்பாதிக்கிறது, தம்பி அரைஞாண்‌ கயிற்‌றுக்குச்‌ சரி. +அண்ணன்‌ தம்பிதான்‌ சென்மப்‌ பகையாளி. +அண்ணன்‌ தம்பி வேண்டும்‌ இன்னம்‌ தம்பிரானே +அண்ணன்தான்‌ கூடப்‌ பிறந்தான்‌ அண்ணியும்‌ கூடப்‌ பிறந்தாளோ? +அண்ணன்‌ பெரியவன்‌, அப்பா, காலைப்பிடி. +அண்ணன்‌ பெரியவன்‌, சிற்றப்பா, சுருட்டுக்கு நெருப்புக்‌ கொண்டுவா. +அண்ணன்பேரிலிருந்த கோபத்தை நாய்பேரிலாற்றினான்‌. +அண்ணாக்கும்‌ தொண்டையும்‌ அதிர அடைத்தது. +அண்ணாணங்கை அப்ஸரஸ்கிரீ. +அண்ணாண்டி, வாரும்‌, சண்டையை ஒப்புக்கொள்ளும்‌. +அண்ணாமலையாருக்கு அறுபத்துநாலுபூசை, ஆண்டிகளுக்கு எழுபத்துநாலு பூசை. +அண்ணாமலையார்‌ அருளுண்டானால்‌ மன்னார்சாமி மயிரைப்‌ பிடுங்குமா? +அண்ணாவி பிள்ளைக்குப்‌ பணம்‌ பஞ்சமா, அம்பட்டன்‌ பிள்ளைக்கு மயிர்‌ பஞ்சமா? +அண்ணாவுக்கு மனது வரவேணும்‌, மதனி பிள்ளை பெறவேணும்‌. +அதமனுக்கு ஆயிரம்‌ ஆயுசு. +அதிக ஆசை அதிக நஷ்டம்‌. +அதிக ஆசை மிக தரித்திரம்‌. +அதிக கரிசனமானாலும்‌ ஆமுடையானை அப்பா என்றழைக்கிறதா? +அதிகார மில்லாவிட்டால்‌ பரியாரம்‌ வேணும்‌. +அதிகாரியுடனே எதிர்பண்ணலாமா? +அதிகாரியும்‌ தலையாரியும்கூடி விடியுமட்டும்‌ திருடலாம்‌ +அதிகாரி வீட்டில்‌ திருடித்‌ தலையாரி வீட்டில்‌ வைத்‌ததுபோல. +அதிகாரி வீட்டுக்‌ கோழிமுட்டை குடியானவன்‌ வீட்டு அம்மியை உடைத்ததாம்‌ +அதிக்கிரமமான ஊரிலே கொழிக்திற மீனும்‌ சரிக்கு மாம்‌. +அதிசயமான ரம்பை அரிசி கொட்டுகிற தொம்பை, +அதியாக்‌ குறியால்‌ கருமாரிப்‌ பாய்ச்சல்‌. +அதிர அடித்தால்‌ உதிர விளையும்‌ +அதிரந்‌ தடித்தாருக்கு ஐயருமில்லை, பிடாரியாருமில்லை. +அதிருஷ்டமும்‌ ஐசுவரியமும்‌ ஒருவர்‌ பங்கல்ல. +அதிருஷ்டம்‌ ஆறாய்ப்‌ பெருகுகிறது +அதிருஷ்டம்‌ இருந்தால்‌ அரசு பண்ணலாம்‌. +அதிருஷ்டம்‌ இல்லாதவனுக்கு கலப்பால்‌ வந்தாலும்‌, அதையும்‌ பூனை குடிக்கும்‌. +அதிருஷ்டம்‌ கெட்ட கழுக்காணி. +அதிருஷ்டம்கெட்டதுக்கு அறுபதுநாழியும்தியாச்சியம்‌. +அதிருஷ்டவான்மண்ணைத்தொட்டாலும்‌ பொன்னாகும்‌. +அதிலே குறைச்சல்‌ இல்லை ஆட்டடா மணியை பூசாரி. +அதிலேயும்‌ இது புதுமை, அவள்‌ செத்தது மெத்த அருமை +அதின்‌ கையை எடுத்து அதின்‌ கண்ணிலே குத்துகிறது +அது அதற்கு ஓருகவலை, ஐயாவுக்கு எட்டுக்கவலை. +அதுவும்‌ போதாதென்று அழலாமா இனி? +அதுக்கு இட்ட காக மினக்கெட்டு அரிவாள்‌ மணைக்குச்‌ சுறுக்கிட்டதா? +அதெல்லாம்‌ உஸண்டிட்டு வாவென்பான்‌ அதைக்‌ கைகழுவ வேண்டியதுதான்‌. +அதை நான்‌ செய்யாதேபோனால்‌ என்‌ மீசையை எடுத்துவிடுகிறேன்‌ +அதைரிய முள்ளவனை அஞ்சாத வீரன்‌ என்றாற்போல. +அதை விட்டாலும்‌ கதியில்லை. அப்புறம்‌ போனாலும்‌ விதியில்லை +அஸ்த செவ்வானம்‌ அடைமழைக்��ு லக்ஷணம்‌. +அத்தம்‌ மிகுதி அல்லவோ அம்பட்டன்‌ பெண்கேட்க வந்தது. +அத்தனையும்‌ நேர்ந்தான்‌ உப்பிட மறந்தாள்‌. +அத்தான்‌ செத்தால்‌ மயிராச்சு, கம்பளி மெத்தை நமக்காச்சு. +அத்திக்‌ காயைப்‌ பிட்டுப்‌ பார்த்தால்‌ அங்கும்‌ இங்கும்‌ பொள்ளல்‌. +அஸ்தி சகாந்தரம்‌ என்கிறது போலிருக்கிறது. +அத்தி பூத்தாற்‌ போல்‌ (இருக்கிறது). +அத்திப்‌ பழத்தைப்‌ பிட்டுப்பார்த்தால்‌ அத்தனையும்‌ புழு. +அத்திப்‌ பூவை ஆர்‌ அறிவார்கள்‌. +அத்திப்‌ பூவைக்‌ கண்டவர்கள்‌ உண்டா, ஆந்தைக்‌ +குஞ்சைப்‌ பார்த்தவர்கள்‌ உண்டா? +அத்தி மரத்திலே தொத்திய கனி போல. +அஸ்தியிலே ஜ்வரம்‌. +அத்து மீறிப்‌ போனான்‌, பித்துக்‌ கொள்ளி ஆனான்‌. +அத்தைக்கு மீசை முளைத்தால்‌ இற்றப்ப என்கலாம்‌. +அத்தைக்‌ கொழியப்‌ பித்தைக்‌ கில்லை ஒளவையாரிட்ட சாபத்‌ தடு. +அத்தைத்தான்‌ சொல்வானேன்‌ வாயைத்தான்‌ வலிப்‌பானேன்‌ (நோவானேன்‌)? +அத்தை மகள்‌ அம்மான்‌ மகள்‌: சொந்தம்‌ போல. +அத்தை மகளானாலுஞ்‌ சும்மா வருமா? +அத்தோடே நிண்ணுது அலைச்சல்‌, கொட்டோடே நிண்ணுது குலைச்சல்‌. +அந்த ஊர்‌ மண்‌ மிதிக்கவே தன்னை மறந்து விட்டான்‌. +அந்தணர்க்குத்‌ துணை வேதம்‌. +அந்தணர்‌ மனையிற்‌ சந்தனம்‌ மணக்கும்‌. +அந்தப்‌ பருப்பு இங்கே வேகாது. +அந்தம்‌ சிந்தி அழகு ஒழுகுகிறது. +அந்தரத்தில்‌ கோல்‌ எறிந்த அந்தகனைப்‌ போல. +அந்தலை கெட்டுச்‌ சிந்தலை மாறிக்‌ இடக்கு. +அந்த வெட்க்க்கேட்டை (வெட்கத்தை) ஆரோடே சொல்லுகிறது? +அந்தி ஈசல்‌ பூத்தால்‌ அடைமழை அதிகரிக்கும்‌. +அந்திப்‌ பீ சந்திப்‌ மீ பேலாதான்‌ வாழ்க்கை சாமப்‌ பீ தட்டி எழுப்பும்‌. +அந்திமழை அழுதாலும்‌ விடாது. +அந்துக்கண்ணிக்கு அழுதாலும்‌ வாரானாம்‌ ஆமுடையான்‌. +அந்தாது நெல்லானேன்‌. +அபத்த பஞ்சாங்கத்துக்கு அறுபது நாழியும்‌ தியாச்சியம்‌. +அப்பச்சி குதம்பையைச்‌ சூப்பப்‌ பிள்ளை முற்றின தேங்காய்க்கு அழுகிறது போல. +அப்பச்சி கோவணத்தைப்‌ பருந்துகொண்டோடுகிறது, பிள்ளை வீரவாளிப்‌ பட்டுக்கு அழுகிறது. +அப்பத்தை எப்படிச்‌ சுட்டாளோ, தித்திப்பை எப்படி நுழைத்தாளோ? +அப்பம்‌ என்றாற்‌ பிட்டுக்‌ காட்ட வேண்டுமா? +அப்பம்‌ சுட்டது சட்டியில்‌, அவல்‌ இடித்தது திட்டையில்‌. +அப்பம்‌ சுட்டது திட்டையிலே, அவல்‌ இடித்தது சட்டியிலே. +அப்பனோடே. போகிறவளுக்கு அண்ணன்‌ ஏது த���்பி ஏது? +அப்பன்‌ அருமை அப்பன்‌ மாண்டால்‌ தெரியும்‌, உப்பின்‌ அருமை உப்பு இல்லாவிட்டால்‌ தெரியும்‌. +அப்பன்‌ செத்தும்‌ தம்பிக்‌ கழுகிறதா? +அப்பன்‌ சோற்றுக்‌ கழுகிறான்‌, பின்ளை கும்பகோணத்தில்‌ கோதானம்‌ செய்டிறான்‌. +அப்பன்‌ பெரியவன்‌, ஏற்றப்பா, சுருட்டுக்கு நெருப்புக்‌ கொண்டுவா. +அப்பன்‌ அப்பா என்றால்‌ ரங்கா ரங்கா என்பான்‌. +அப்பா என்றால்‌ உச்சி குளிருமா? +அப்பாஜி உப்பில்லை. +அப்பிடாவு மில்லை வெட்டுக்‌ கத்தியு மில்லை. +அப்பியாசம்‌ குலவிருது. +அப்பியாசம்‌ கூசாவித்தை. +அப்பியாச வித்தைக்கு அழிவில்லை. +அமரபட்சம்‌ பூர்வபட்சம்‌, கிருஷ்ண பட்சம்‌ சுக்கிலபட்சம்‌. +அமரிக்கை ஆயிரம்‌ பெறும்‌. +அமர்த்தனுக்கும்‌ காணிவேண்டாம்‌ சமர்த்தனுக்கும்‌ காணிவேண்டாம்‌. +அமாவாசைக்‌ கருக்கலிலே பெருச்சாளி போனதெல்லாம்‌ வழி. +அமாவாசைச்‌ சோறு சும்மா அகப்படுமா? +அமாவாசைப்‌ பருக்கை என்றைக்கும்‌ அகப்படுமா? +அமிஞ்சி உண்டோ, குப்புநாயக்கரே. +அமிஞ்சிக்கு உழுதால்‌ சரியாய்‌ விளையுமா? +அமுக்கொற்‌ போலிருந்து அரணை அழிப்பான்‌. +அமுதம்‌ உண்கிற வாயால்‌ விஷம்‌ உண்பார்களா? +அமுதுபடி பூச்சியம்‌, ஆடம்பரம்‌ அதிகம்‌. +அமைச்சனில்லாத அரசும்‌, ஆமுடையானில்லாத ஆரிழையும்‌. +அம்பட்டக்‌ கிருதும்‌, வண்ணார ஓயிலும்‌. +அம்பட்டனை மந்திரித்‌ தனத்துக்கு வைத்துக்‌ கொண்டதுபோல. +அம்பட்டன்‌ குப்பையைக்‌ கிளறினால்‌ மயிர்‌ மயிராய்ப்‌ புறப்படும்‌. +அம்பட்டன்‌ கைக்‌ கண்ணாடி போல +அம்பட்டன்‌ பல்லக்‌ கேறினது போல. +அம்பட்டன்‌ பிள்ளைக்கு மயிர்‌ அருமையா? +அம்பட்டன்‌ மாப்பிள்ளைக்கு மீசை ஒதுக்கினது போல, +அம்பலக்‌ கழுதை அம்பலத்திற்‌ கிடந்தாலென்ன, அடுத்த திருமாளிகையிற்‌ (இருமாளத்திற்‌) இடந்தாலென்ன? +அம்பலத்தில்‌ ஏறும்‌ பேச்சை அடக்கம்‌ பண்ணப்‌ பார்க்கிறான்‌. +அம்பலத்தில்‌ கட்டுச்‌ சோறு அவிழ்த்தாற்‌ போல. +அம்பலத்தில்‌ பொதி அவிழ்க்கலாகாது. +அம்பலம்‌ வேகுது. +அம்பாத்தூர்‌ வேளாண்மை யானைகட்டத்‌ தான்‌ வானமட்டும்‌ போர்‌, ஆறுகொண்டது பாதி தூறு கொண்டது பாதி. +அம்பாணி தைத்தது போலப்‌ பேசுறான்‌. +அம்பா பாக்கியம்‌ சம்பா விளைந்தது, பாவிபாக்கியம்‌ பதராய்‌ விளைந்தது. +அம்பிகொண்டு ஆறுகடப்போர்‌ நம்பிக்கொண்டு நரிவால்‌ கொள்ளுவார்களா? +அம்மண தேசத்தில்‌ கோவ���ங்‌ கட்டினவன்‌ பைத்தியக்காரன்‌. +அம்மணமும்‌ இன்னலும்‌ ஆயுசுபரியந்தமா? +அம்மா குதிர்போல, ஐயா கதிர்‌ போல. +அம்ம கெட்ட கேட்டுக்கு முக்காடு ஒன்றா? +அம்மா தெருளுவதற்கு முன்னே ஐயா உருளுவார்‌. +அம்மாளுக்குத்‌ தமிழ்‌ தெரியாது, ஐயாவுக்கு வடுகு தெரியாது. +அம்மானும்‌ மருமகனும்‌ ஒரு வீட்டுக்கு ஆன்‌ அடிமை. +அம்மான்‌ மகளுக்கு முறையா? +அம்மான்‌ வீட்டு வெள்ளாட்டியை அடிக்க அதிகாரியைக்‌ கேட்கவேண்டுமா? +அம்மி மிடுக்கோ அரைப்பவள்‌ மிடுக்கோ? +அம்மிமிதித்து அருந்ததி பார்த்தது போலப்‌ பேசுகிறாள்‌. +அம்மி யிருந்து அரணை அழிப்பான்‌. +அம்மியும்‌ குழவியும்‌ ஆகாயத்தில்‌ பறக்கச்சே, எச்9ற்‌ கல்லை எனக்கு என்னகதி என்றாற்‌ போல +அம்மியும்‌ குழவியும்‌ ஆடிக்காற்றில்‌ பறக்கச்சே, இலவம்‌ பஞ்சு எனக்கென்னகதி என்றதாம்‌. +அம்முக்கள்ளி ஆடையைத்‌ தின்றால்‌ வெண்ணெய்‌ உண்டா? +அம்மை குத்தினாலும்‌ பொம்மை குத்தினாலும்‌ வேண்டியதரிசி. +அம்மைக்‌ கமர்க்களம்‌ ஆக்கிப்படை, எனக்‌ கமர்க்களம்‌ பொங்கிப்படை. +அம்மைக்கு அமர்க்களம்‌ பொங்்‌இப்‌ படையுங்கள்‌. +அம்மை வீட்டுத்‌ தெய்வம்‌ நம்மைவிட்டுப்போமா? +அம்மையாரே வாரும்‌, இழவனைக்‌ கொள்ளும்‌. +அம்மையார்‌ எப்பொழுது சாவார்‌, கம்பளி எப்பொமுது நமக்கு மிச்சமாகும்‌? +அம்மையார்‌ நூற்கிற நூலுக்கும்‌ பேரன்‌ அரைஞாண்‌ கயிற்றுக்கும்‌ சரி. +அம்மையார்‌ பெறுவது அரைக்காக, அவருக்குத்‌ தலை சிரைக்க முக்காற்காசு. +அம்மையார்க்கு என்ன துக்கம்‌, கந்தைத்‌ துக்கம்‌. +அயலார்‌ உடைமைக்குப்‌ பேயாய்ப்‌ பறக்கிறான்‌. +அயலார்‌ உடைமையில்‌ அந்தகண்போல்‌ இரு. +அயலான்‌ வாழப்‌ பகலே சரக்கெடுப்பது. +அயல்‌ வீட்டான்‌ பிள்ளை ஆபத்துக்‌ குதவுவானா? +அயல்‌ வீட்டு நெய்யே, என்‌ பெண்டாட்டி கையே. +அயன்‌ இட்ட எழுத்தில்‌ அணுவளவும்‌ தப்பாது. +அயன்‌ இட்ட கணக்கு ஆருக்கும்‌ தப்பாது. +அயன்‌ சமைப்பை ஆராலும்‌ தன்ளக்கூடாது. +அயிரையும்‌ சற்றே அருக்குமாம்‌ பிட்டுக்குள்‌ போட்டுப்‌ பிசறாமல்‌. +அயோக்கியர்‌ அழகு அபரஞ்சிச்‌ சிமிழில்‌ நஞ்சு. +அய்யன்‌ அளந்தபடி. +அய்யா, அய்யா, அம்மா குறைக்‌ கேழ்வரகும்‌ அரைக்க வரச்சொன்னாள்‌. +அய்யாசாமிக்கு கலியாணம்‌, அவரவர்‌ வீட்டிலே சாப்பாடு. +அய்யா தாசி கவனம்பண்ண அஞ்சாளின்‌ சுமையாச்‌சுது. +அய்யாத்துரைக்கு (���ப்பாசாமிக்கு)க்‌ கலியாணம்‌, அவரவர்‌ வீட்டிலே சாப்பாடு, கொட்டுமுழக்குக்‌ கோயிலிலே, வெற்றிலை பாக்குக்‌ கடையிலே, சுண்ணாம்பு சூளையிலே. +அய்யா பாட்டுக்கு அஞ்சடியும்‌ ஆறடியும்‌ தாண்டும்‌. +அய்யாவையர்‌ கூழுக்கு அப்பையங்கார்‌ தாதாவா? +அரகர என்கிறவருக்குத்‌ தெரியுமா, அமுது படைக்‌கிறவனுக்குத்‌ தெரியுமா? +அள என்பது பெரிதோ, ஆண்டிக்கு இடுவது பெரிதா? +அரகரன்‌ ஆண்டாலென்ன, மனிதன்‌ ஆண்டாலென்ன? +அரக்குமுத்தி தண்ணீர்க்குப்‌ போனாள்‌, புண்‌ பிடித்தவன்‌ பின்னாலே போனான்‌. +அரங்கின்றி வட்டாடலும்‌, அறிவின்றிப்‌ பேசலும்‌ ஒன்று. +அரசனில்லாப்படை வெட்டுமா? +அரசனுக்கு ஒருசொல்‌, அடிமைக்குத்‌ தலைச்சுமை. +அரசனுக்குத்‌ துணை வயவானள்‌. +அரசனுக்கு வலியார்‌ அஞ்சுவது எளியார்க்கு அனுகூலமாகிறது. +அரசனும்‌ அரவும்‌ சரி. +அரசனும்‌ அழலும்‌ சரி. +அரசனும்‌ நெருப்பும்‌ பாம்பும்‌ சரி. +அரசனைக்கண்ட கண்ணுக்குப்‌ புருஷனைக்கண்டால்‌ கொசுப்போல இருக்கறது. +அரசனை நம்பிப்‌ புருஷனைக்‌ கைவிட்டதுபோல. +அரசன்‌ அருள்‌ அற்றால்‌ அனைவரும்‌ அற்றார்‌. +அரசன்‌ அளவிற்கு (வரை) ஏறிற்று (எட்டியது). +அரசன்‌ அன்று கொல்லும்‌, தெய்வம்‌ நின்றுகொல்லும்‌. +அரசன்‌ இல்லாதநாடு, அச்சில்லாத தேர்‌. +அரசன்‌ இல்லாத நாடு, புருஷன்‌ இல்லாத வீடு. +அரசன்‌ உடைமைக்கு ஆகாயவாணி சாக்ஷி. +அரசன்‌ எப்படியோ அப்படியே குடிகள்‌. +அரசன்‌ எவ்வழி அவ்வழி குடிகள்‌. +அரசன்‌ ஒன்றை இகழ்ந்தால்‌ ஒக்க இகழவேண்டும்‌, ஒன்றைப்‌ புகழ்ந்தால்‌ ஒக்கப்‌ புகழவேண்டும்‌. +அரசன்‌ கல்லின்மேல்‌ கத்தரி (வழுதுணை) காய்க்கும்‌ என்றால்‌, கொத்து ஆயிரம்‌ குலை ஆயிரம்‌ என்பார்கள்‌. +அரசன்‌ குடுமியையும்‌ பிடிக்கலாமென்று அம்பட்டன்‌ வேலையை விரும்புவதுபோல. +அரசன்‌ வழிப்பட்டது அவனி. +அரசன்‌ வழிப்படாதவன்‌ இல்லை. +அரசில்லா நாடு அலக்கழிந்தாற்போல. +அரசில்லாப்படை வெல்லுவதரிது. +அரசுக்கு இல்லை சிறுமையும்‌ பெருமையும்‌. +அரசுடையானை ஆகாயம்‌ காக்கும்‌. +அரணை அலகு திறக்காது. +அரணை கடித்தால்‌ அப்பொழுதே மரணம்‌. +அரண்டவன்‌ கண்ணுக்கு இருண்டதெல்லாம்பேய்‌. +அரண்மனைகாத்தவனும்‌ அடுப்பங்கரை காத்தவனும்‌ வீண்போகிறதில்லை. +அரண்மனைவாசல்‌ காத்தவனும்‌ பரிமடைகாத்தவனும்‌ பழுதுபோவதில்லை. +அரண்மனைக்கு ஆயிரஞ்செல்லும்‌, குடி���ானவன்‌ என்ன செய்வான்‌? +அரத்தை அரம்கொண்டும்‌ வயிரத்தை வயிரம்‌ கொண்டும்‌ அறுக்க வேண்டும்‌. +அரபிக்குதிரையிலும்‌ ஐயம்பேட்டைத்‌ தட்டுவாணி நல்லது. +அரமும்‌ அரமும்‌ கூடினால்‌ கின்னரம்‌. +அரவத்தைக்‌ கண்டால்‌ &ரி விடுமா? +அரவுக்கு இல்லை சிறுமையும்‌ பெருமையும்‌. +அரனருள்‌ அல்லாது அணுவும்‌ அசையாது. +அரிஅரி என்றால்‌ ராமா ராமா என்கிறான்‌. +அரி என்கிற அக்ஷரம்‌ தெரிந்தால்‌ அதிகாரம்‌ பண்ணலாம்‌. +அரி என்கிற அக்ஷரம்‌ தெரிந்தால்‌ அதிக்கிரமம்‌ பண்ணலாமா? +அரி என்றால்‌ ஆண்டிக்குக்‌ கோபம்‌, அர என்றால்‌ தாதனுக்குக்‌ கோபம்‌. +அரிஹர பிரமாதிகளாலும்‌ முடியாது. +அரிசி என்று அள்ளிப்பார்ப்பாருமில்லை. உமி என்று ஊதிப்பார்ப்பாருமில்லை. +அரிசி அள்ளின காக்கை போல. +அரிசி ஆழாக்கானாலும்‌ அடுப்புக்கட்டி. மூன்றுவேண்டும்‌. +அரிசி உண்டானால்‌ வரிசையும்‌ உண்டு, அக்காள்‌ உண்டானால்‌ மச்சானும்‌ உண்டு. +அரிசி உழக்கானாலும்‌ அடுப்பு மூன்று. +அரிசி கொண்டு (உண்ண) அக்காள்‌ வீட்டுக்குப்போவானேன்‌? +அரிசி மறந்த கூழுக்கு உப்பு ஒன்றுகுறையா? +அரிசிக்குத்தக்க உலையும்‌ ஆமுடையானுக்குத்‌ தக்க வீறாப்பும்‌. +அரிசிக்குத்‌ தக்க கனவுலை +அரிசிப்பகையும்‌ ஆமுடையான்‌ பகையும்‌ உண்டா? +அரிசிப்‌ பொதியுடன்‌ திருவாரூர்‌. +அரிசியும்கறியும்‌ உண்டானால்‌ அக்கானள்வீடுவேண்டுமா? +அரிச்சந்திரன்‌ வீட்டுக்கு அடுத்த வீடு. +அரிதாரம்‌ கொண்டுபோகிற நாய்க்கு அங்கு இரண்டடி இங்கு இரண்டடி. +அரிது அரிது அஞ்செழுத்து உணர்தல்‌. +அரித்து எரிக்கிற சுப்பிக்கு ஆயம்‌ தீர்வை உண்டா? +அரிய சரீரம்‌ அந்தரத்தெறிந்த கல்‌. +அரியது செய்து எளியதுக்கு ஏமாந்து இரிகறான்‌. +அரியுஞ்‌ சிவனும்‌ ஒண்ணு, அறியாதவன்‌ வாயிலே மண்ணு. +அரியுஞ்சிவனும்‌ ஒன்று, அல்ல என்கிறவன்வாயிலே மண்ணு. +அரிவாளும்‌ அசையவேண்டும்‌, ஆண்டை குடியும்‌ கெட வேண்டும்‌. +அரிவாள்‌ சூட்டைப்போலக்‌ காய்ச்சல்‌ மாற்றவோ? +அரிவான்‌ சுறுக்கே அரிவாள்முனை கருக்கே. +அரிவை மொழிகேட்டால்‌ அபத்தன்‌ ஆவான்‌. +அருகாகப்பழுத்தாலும்‌, விளாமரத்தில்‌ வெளவால்சேராது. +அருக்காண முத்துக்‌ கரிக்கோலமானான்‌. +அருக்காணி நாய்ச்சியார்‌ குரங்குப்பிள்ளை பெற்றாளாம்‌. +அருக்காமணி முருக்கம்பூ. +அருக்கித்தேடிப்‌ பெருக்கி அழி. +அருங்கோடை துர���ம்பு அற்றுப்போகுது. +அருஞ்சுனை நீருண்டால்‌ அப்பொழுதே ரோகம்‌. +அருட்செல்வம்‌ ஆருக்கும்‌ உண்டு, பொருட்செல்வம்‌ ஆருக்கும்‌ இல்லை. +அருணாப்‌ பரமே கருணாம்பரம்‌. +அருண்டவன்‌ கண்ணுக்கு இருண்டதெல்லாம்‌ பேய்‌. +அருத்தியைப்‌ பிடுங்கித்‌ துருத்தியிலே போட்டுத்‌ துருத்தியைப்‌ பிடுங்கி அருத்தியிலே போடுகிறது. +அருமை அறியாதவன்‌ ஆண்டு என்ன, மாண்டு என்ன? +அருமை அறியாதவனிடத்தில்‌ போனால்‌ பெருமை குறைந்துபோம்‌. +அருமை அற்றவீட்டில்‌ எருமையும்‌ குடியிராது. +அருமை மருமகன்‌ தலைபோனாலும்‌ போகட்டும்‌, ஆதி காலத்து உரல்போகலாகாது. +அரும்புகோணினால்‌ அதின்‌ மணம்‌ குற்றமா? +அருவருப்புச்‌ சோறும்‌ அசங்கிதக்‌ கறியும்‌. +அருள்‌ இல்லார்க்கு அவ்வுலகில்லை, பொருள்‌ இல்லார்க்கு இவ்வுலகில்லை. +அருள்வேணும்‌, பொருள்வேணும்‌, அடக்கம்‌ வேணும்‌. +அரைக்கவுமாயம்‌, கரைக்கவுமாயம்‌. +அரைக்காசுக்கு அழிந்த கற்பு ஆயிரம்பொன்‌ கொடுத்தாலும்‌ கிடையாது. +அரைக்காசுக்குக்‌ குதிரை வாங்கவும்‌ வேண்டும்‌, ஆற்றைக்‌ கடக்கப்‌ பாயவும்‌ வேண்டும்‌. +அரைக்காசுக்குப்‌ போன மானம்‌ ஆயிரம்‌ கொடுத்தாலும்‌ வாராது. +அரைக்காசுக்கு வந்த வெட்கம்‌ ஆயிரம்‌ பொன்‌ கொடுத்தாலும்‌ போகாது. +அரைக்காசை ஆயிரம்‌ பொன்னாக்குகிறவளும்‌ பெண்‌ சாதி, ஆயிரம்‌ பொன்னை அரைக்காசாக்குகிறவளும்‌ பெண்சாதி. +அரைக்கிறவன்‌ ஒன்று நினைத்து அரைக்கிறான்‌, குடிக்‌கிறவன்‌ ஓன்று நினைத்துக்‌ குடிக்கிறான்‌. +அரைக்கினும்‌ சந்தனம்‌ அதன்‌ மணம்‌ அறாது. +அரைக்குடம்‌ ததும்பும்‌, நிறைகுடம்‌ ததும்பாது. +அரைச்சல்லியை வைத்து எருக்கு இலையைக்‌ கடந்தது போல. +அரைச்சிலை கட்டக்‌ கைக்கு உபசாரமா? +அரைச்சொற்‌ கொண்டு அம்பலம்‌ ஏறலாமா? +அரைச்சொற்‌ கொண்டு அம்பலம்‌ ஏறினால்‌, அரைச்‌சொல்‌ முழுச்சொல்லாமா? +அரைஞாண்‌ கயிறும்‌ தாய்ச்சீலையுமாய்‌ விடுகிறவளும்‌ பெண்சாதி. +அரைத்த பயறு முளைத்தாற்போல. +அரைத்துட்டுக்கு பீ தின்கிறவன்‌. +அரைத்துட்டிலே கலியாணம்‌, அதிலே கொஞ்சம்‌ பாண வேடிக்கை. +அரைத்து மீந்தது அம்மி, சிரைத்து மீந்தது குடுமி. +அரைப்பணங்‌ கொடுக்கப்‌ பால்மாறி, ஐம்பது பொன்‌ கொடுத்துச்‌ சேர்வைசெய்த கதை. +அரைப்பணங்‌ கொடுத்து அழச்சொல்லி ஒருபணங்கொடுத்து ஓயச்சொன்னதுபோல. +அரைப்பணச்‌ சேவகமானாலும்‌ அரண்மனைச்‌ சேவகம்‌ போல்‌ ஆகுமா? +அரைப்பணத்துக்கு மருத்துவம்‌ பார்க்கப்போய்‌ ஐந்து பணத்து நெளி உள்ளே போய்விட்டது. +அரையிலே புண்ணும்‌ அண்டையிலே கடனும்‌ ஆகாது. +அரைவித்தைகொண்டு அம்பலம்‌ ஏறினால்‌ அரைவித்தை முழுவித்தை ஆகுமா? +அரைவேலையைச்‌ சபையிலே கொண்டுவருவதா? +அலுத்துக்‌ கொலுத்து அக்காளண்டைபோனால்‌ அக்காள்‌ இழுத்து மச்சானிடத்தில்‌ விட்டாளாம்‌. +அலுத்து வியர்த்து அக்காள்‌ வீட்டுக்குப்போனால்‌ அக்காள்‌ இழுத்து மச்சானண்டையிற்‌ போட்டானாம்‌. +அலை அடங்கியபின்‌ ஸ்நானம்‌ செய்வதுபோல. +அலை எப்பொழுது ஒழியும்‌, தலை எப்பொழுது முழுகுகிறது? +அலை ஓய்ந்து கடலாடலாமா? +அலைபோல நாக்கும்‌, மலைபோல மூக்கும்‌, ஆகாசந்தொட்ட கையும்‌. +அலைமோதும்போதே தலை முழுகுகிறது. +அலைவாய்த்‌ துரும்புபோல்‌ அலை றது. +அல்லக்காட்டு நரி பல்லைக்‌ காட்டுகிறது. +அல்லாத வழியால்‌ பொருள்‌ ஈட்டல்‌, காமம்‌ துய்த்தல்‌ இவை ஆகா. +அல்லாதவன்‌ வாயில்‌ கன்ளை வார்‌. +அல்லல்‌ அருளாள்வார்க்கில்லை. +அல்லல்‌ அற்ற படுக்கை அழகிலும்‌ அழகு. +அல்லல்‌ ஒரு காலம்‌ செல்வம்‌ ஒரு காலம்‌. +அல்லவை தேய அறம்‌ பெருகும்‌. +அல்லற்பட்டு அழுதகண்ணீர்‌ செல்வத்தைக்குறைக்கும்‌. +அல்லார்‌ அஞ்சலிக்கு நல்லார்‌ உதை மேல்‌. +அல்லும்‌ பகலும்‌ கசடறக்‌ கல்‌. +அவகடம்‌ உள்ளவன்‌ அருமை அறியான்‌. +அவகுணக்காரன்‌ ஆவாசமாவான்‌. +அவசரக்காரனுக்குக்‌ காக்கிலோ பெட்டு, நேக்குச்‌ சேத்திலோ பெட்டு. +அவசரக்காரனுக்கு புத்தி மட்டு. +அவசரக்‌ கோலம்‌ அள்ளித்‌ தெளித்ததுபோலச்‌ சொல்லுகிறாய்‌. +அவசரத்தில்‌ அரிக்கண்‌ சட்டியிலும்‌ கை நுழையாது. +அவசரத்தில்‌ உபசாரமா? +அவசரத்தில்‌ செத்த பிணத்துக்குப்‌ பீச்சூத்தோடே மாரடிக்கிறாள்‌. +அவசரத்தில்‌ குண்டுச்‌ சட்டியில்‌ கை நுழையாது. +அவசரத்துக்குப்‌ பாவமில்லை. +அவசரப்பட்ட மாமியார்‌ மருமகனைப்‌ புணர அழைத்‌தாளாம்‌. +அவசாரி ஆடினாலும்‌ அதிருஷ்டம்‌ வேண்டும்‌, திருடப்‌ போனாலும்‌ திசை வேண்டும்‌. +அவசாரி ஆமூடையான்‌ ஆபத்துக்‌ குதவுவானா? +அவசாரி என்று ஆனைமேல்‌ ஏறலாம்‌, திருடி என்று தெருவில்‌ வரலாமா? +அவதாரி போகவும்‌ ஆசை யிருக்கிறது, அடிப்பான்‌ என்று பயமுமாய்‌ இருக்கிறது. +அவசாரிக்கு ஆணையில்லை, திருடிக்குத்‌ தெய்வமில்லை. +அவசாரிக்கு வாய்‌ பெரிது, அஞ்சு ���று அரிசிக்குக்‌ கொதி பெரிது. +அவசாரியிலே வந்து பெருவாரியிலே போகிறது. +அவதந்திரம்‌ தனக்கு அந்தரம்‌. +அவதிக்‌ குடிக்குத்‌ தெய்வமே துணை. +அவத்தனுக்கும்‌ சமர்த்தனுக்கும்‌ காணி கவை இல்லை. +அவப்பொழுதிலும்‌ தவப்பொழுது நல்லது. +அவமானம்‌ பண்ணி வெகுமானாம்‌ பேசுகிறான்‌. +அவரவர்‌ அக்கறைக்கு அவரவர்‌ பாடுபடுவார்‌. +அவரவர்‌ எண்ணத்தை ஆண்டவர்‌ அறிவார்‌. +அவரவர்‌ மனசே அவரவர்க்குச்‌ சாட்சி. +அவரை விதைத்தால்‌ துவரை முளைக்குமா? +அவரா சுறுக்கே அரிவாள்மணைக்‌ கருக்கே? +அவருடைய சிறகு முறிந்துபோயிற்று. +அவலட்சணம்‌ உன்ள குதிரைக்கு சுழிசுத்தம்‌ பார்க்க வேணுமா? +அவலமாய்‌ வாழ்பவன்‌ சவலமாய்ச்‌ சாவான்‌. +அவலைச்‌ சாக்கிட்டு உரலை இடிக்கிறது. +அவலை நினைத்துக்கொண்டு உரலை இடிக்கிறாள்‌. +அவலை முக்கித்‌ தின்னு, எள்ளை நக்கித்‌ இன்னு. +அவளவன்‌ என்பதைவிட அரிஅரி என்பது நலம்‌. +அவளுக்கிவள்‌ எழுந்திருந்து உண்பாள்‌. +அவளுக்கு ரொம்பத்‌ தக்குத்தெரியும்‌. +அவளுக்கெவள்‌ ஈடு அவளுக்கவளே சோடு +அவளைக்‌ கண்ட கண்ணாலே இன்னொருத்தியைக்‌ காணுகிறதா? +அவள்‌ அழகுக்குத்‌ தாய்‌ வீடு. +அவன்‌ அழகுக்குப்‌ பத்துபேர்‌ வருவார்கள்‌, கண்‌ சிமிட்டினால்‌ ஆயிரம்பேர்‌ மயங்கிப்‌ போவார்கள்‌. +அவள்‌ எமனைப்‌ பலகாரம்‌ பண்ணுவாள்‌. +அவள் சமர்த்துப்‌ பானை சந்தியில்‌ கவிழ்ந்தது. +அவன்‌ சம்பத்து அறியாமல்‌ கவிழ்ந்தது. +அவள்‌ சாட்டிலே திரை சாட்டா. +அவள்‌ சொல்‌ உனக்கு குரு வாக்கு. +அவள்‌ பலத்தை மண்கொண் டொளிச்சுது. +அவன்‌ பாடுகிறது குயில்‌ கூவுகிறது போல. +அவன்‌ பேர்‌ தங்கமாம்‌ அவள்‌ காதில்‌ பிச்சோலையாம்‌. +அவன்‌ பேர்‌ கூந்தலழகி அவள்‌ தலை மொட்டை, +அவளிடத்தில்‌ எல்லாரும்‌ பிச்சை வாங்கவேண்டும்‌. +அவனருளுற்றால்‌ அனைவரு முற்றார்‌, அவனருளற்றால்‌ அனைவருமற்றார்‌. +அவனியில்லை ஈடு, அவளுக்கவளே சோடு. +அவனுக்கு ஆகாசம்‌ மூன்று விரற்கடை. +அவனுக்குக்‌ கப்படாவுமில்லை வெட்டுக்‌ கத்தியுமில்லை. +அவனுக்குச்‌ சாண்‌ ஏறினால்‌ முழம்‌ சறுக்குது. +அவனுக்குச்‌ சுக்கிரதிசை அடிக்கிறது. +அவனுக்குச்‌ சுக்கிரதிசை சூத்திலே அடிக்கிறது. +அவனுக்குப்‌ பொய்ச்சத்தியம்‌ பாலும்‌ சோறும்‌, +அவனுக்கு ஜெயில்‌ தாய்‌ வீடு. +அவனுக்கும்‌ இவனுக்கும்‌ எருமைச்‌ சங்காத்தம்‌. +அவனுக்குள்ளே அகப்��ட்டிருக்கிறதாம்‌ என்‌ பிழைப்‌பெல்லாம்‌. +அவனுடைய பேச்சு காற்சொல்லும்‌ அரைச்சொல்லும்‌. +அவனுடைய வாழ்வு நண்டுக்குடுவை உடைந்ததுபோல்‌ இருக்கிறது. +அவனை தரித்து வைத்தாற்போல்‌ இருக்கிறான்‌. +அவனைப்‌ பேச்சிட்டுப்‌ பேச்சுவாங்கி ஆமை மல்லாத்துகிறாப்போல்‌ மல்லாத்திப்போட்டான்‌. +அவனே இவனே என்பதைவிடச்‌ சிவனே சிவனே என்கிறது நல்லது. +அவனே வெட்டவும்‌ விடவும்‌ கர்த்தன்‌. +அவனோடு இவனை ஏணிவைத்துப்பார்த்தாலும்‌ காணாது. +அவன்‌ அசையாது (அசையாமல்‌) அணு அசையாது. +அவன்‌ அதிகாரம்‌ கொடிகட்டிப்‌ பறக்கிறது. +அவன்‌ அண்டை அந்தப்பருப்பு வேகாது. +அவன்‌ அவன்‌ எண்ணத்தை, ஆண்டவன்‌ ஆக்கினாலும்‌ ஆக்குவான்‌, அழித்தாலும்‌ அழிப்பான்‌. +அவன்‌ அவன்‌ செய்த வினை அவன்‌ அவனுக்கு +அவன்‌ அவன்‌ மனசே அவன்‌ அவனுக்குச்‌ சாட்சி. +அவன்‌ அன்றி ஓர்‌ அணுவு மசையாது. +அவன்‌ ஆகாசத்தை வடுப்படாமல்‌ கடிப்பேனென்‌கிறான்‌. +அவன்‌ இட்டதே சட்டம்‌. +அவன்‌ இராச சமுகத்திற்கு எலுமிச்சம்பழம்‌. +அவன்‌ உள்ளெல்லாம்புண்‌, உடம்பெல்லாம்‌ கொப்பளம்‌. +அவன்‌ உனக்குக்‌ கிள்ளுக்கீரையா? +அவன்‌ எங்கே இருந்தான்‌, நான்‌ எங்கே இருந்தேன்‌. +அவன்‌ எரி பொரியென்று விழுகிறான்‌. +அவன்‌ எனக்கு அட்டமத்துச்சனி. +அவன்‌ என்‌ தலைக்கு உலை வைக்கிறான்‌. +அவன்‌ என்னை ஊடப்பறக்கடிக்கப்‌ பார்க்கிறான்‌. +அவன்‌ ஒரு குளிர்ந்த கொள்ளி. +அவன்‌ ஓஒடிப்பாடி நாடியில்‌ அடங்கினான்‌. +அவன்‌ கழுத்துக்குக்‌ கத்தி தட்டுகிறான்‌. +அவன்‌ காலால்‌ இட்ட வேலையைக்‌ கையால்‌ செய்வான்‌. +அவன்‌ காலால்‌ இட்ட வேலையைத்‌ தலையால்‌ செய்வான்‌. +அவன்‌ காலால்‌ கீறினதை நான்‌ நாவால்‌ அழிக்கிறேன்‌. +அவன்‌ காலால்‌ முடிந்ததைக்‌ கையால்‌ அவிழ்க்க முடியாது. +அவன்குடித்தனத்தை கமுக்கமாய்கொண்டுபோகிறான்‌. +அவன்‌ கெட்டான்‌ குடியன்‌ எனக்கு இரண்டு இராம்‌ வாரு (மொந்தைபோடு). +அவன்‌ கை மெத்தக்‌ கூராச்சே! +அவன்‌ கையைக்கொண்டே அவன்‌ கண்ணில்‌ குத்தினான்‌. +அவன்‌ கொஞ்சப்‌ புள்ளியா? +அவன்‌ சாதிக்கு எந்த புத்தியோ குலத்துக்கு எந்த ஆசாரமோ அது தான்‌ வரும்‌. +அவன்‌ சாயம்‌ வெளுத்துப்‌ போய்விட்டது. +அவன்‌ சிறகில்லாப்பறவை. +அவன்‌ சிறகொடிந்த பறவை. +அவன்‌ சூத்தைத்‌ தாங்குகிறான்‌. +அவன்‌ சொன்னதே சட்டம்‌ இட்டதே பிச்சை, +அவன்‌ சோற்றுக்குத்‌ தாளம்‌ போடுகிறான்‌. +அவன்‌ சோற்றை மறந்து விட்டான்‌. +அவன்‌ தலையில்‌ ஓட்டைக்‌ கவிழ்ப்பான்‌. +அவன்‌ தன்னாலே தான்‌ கெட்டால்‌ அண்ணாவி என்ன செய்வார்‌? +அவன்‌ தொட்டுக்‌ கொடுத்தான்‌, நான்‌ இட்டுக்‌ கொடுத்‌தேன்‌. +அவன்‌ தொத்தி உறவாடித்‌ தோலுக்கு மன்றாடுகிறான்‌. : +அவன்‌ நடைக்குப்‌ பத்துபேர்‌ வருவார்கள்‌, கைவீச்சுக்‌குப்‌ பத்துபேர்‌ வருவார்கள்‌. +அவன்‌ நா அசைய நாடு அசையும்‌. +அவன்‌ பசியாமல்‌ கஞ்சி குடிக்கிறான்‌. +அவன்‌ பூராயமாய்ப்‌ பேசுகிறான்‌. +அவன்‌ பேசுகிறதெல்லாம்‌ தில்லும்‌ பில்லும்‌ திருவாதிரை. +அவன்‌ பேச்சு விளக்கெண்ணெய்‌ சமாசாரம்‌. +அவன்‌ பேச்சைத்‌ தண்ணீர்மேல்‌ எழுதிவைக்க வேண்டும்‌. +அவன்‌ மிதித்த இடத்தில்‌ புல்லும்‌ சாகாது. +அவன்‌ மிதித்த இடம்‌ பற்றி எரிகின்றது. +அவன்‌ மூத்திரம்‌ விளக்காய்‌ எரிகிறது. +அவன்‌ மெத்த அத்து மிஞ்சின பேச்சுக்காரன்‌. +அவன்‌ ரொம்ப வைதீகமாய்ப்‌ பேசுகிறான்‌. +அவன்‌ வல்லாள கண்டனை வாரிப்‌ போரிட்டவன்‌. +அவிவேகி உறவிலும்‌ விவேகி பகையே நன்று. +அவிழ்‌ என்ன செய்யும்‌ அஞ்சுகுணம்‌ செய்யும்‌, பொருள்‌ என்னசெய்யும்‌ பூவை வசம்‌ செய்யும்‌. +அவையிலும்‌ ஒருவன்‌ சவையிலும்‌ ஒருவன்‌. +அவ்வளவு இருந்தால்‌ அடுக்கிவைத்து வாழேனோ? +அழ அழச்‌ சொல்லுவார்‌ தன்‌ மனிதர்‌, சிரிக்கச்‌ சிரிக்கச்‌ சொல்லுவார்‌ புறத்தியார்‌. +அழகிருந்தென்ன, அதிருஷ்டம்‌ இருக்கவேணும்‌. +அழகிலே பிறந்த பவளக்கொடி, ஆற்றிலே பிறந்த சாணிக்கூடை. +அழகிற்கு மூக்கை அழிப்பார்‌ உண்டா? +அழகு இருந்து அழும்‌, அதிருஷ்டம்‌ இருந்து உண்ணும்‌. +அழகு ஒழுகுது, மடியிலே கட்டடா கலயத்தை. +அழகு ஒஓழுகுகிறது, நாய்‌ வந்து நக்குகிறது, ஓட்டைப்‌ பானைகொண்டுவா பிடித்து வைக்க. +அழகுக்கு இட்டால்‌ ஆபத்துக்குதவும்‌. +அழகுக்குச்‌ செய்தது ஆபத்துக்குதவும்‌. +அழகு சொட்டுகிறது. +அழகு சோறுபோடுமா, அதிருஷ்டம்‌ சோறு போடுமா? +அழகு பெண்ணே காற்றாடி (காத்தாயி), உன்னை) அழைக்கிறாண்டி கூத்தாடி. +அழச்சொல்லுகிறவன்‌ பிழைக்கச்‌ சொல்லுவான்‌, இரிக்‌கச்சொல்லுகறவன்‌ கெடச்சொல்லுவான்‌. +அழச்சொல்லுவார்‌ தமர்‌, சிரிக்கச்‌ சொல்லுவார்‌ பிறர்‌. +அழிக்கப்படுவானை கடவுள்‌ அறிவீனன்‌ ஆக்குவார்‌. +அழித்துக்‌ கழித்துப்போட்டு வழித்து நக்கி யென்று பெயரிட்டானாம்��. +அழிந்த கொல்லையில்‌ குதிரை மேய்ந்தாலென்ன, கழுதை மேய்ந்தாலென்ன? +அழிந்தவள்‌ ஆரோடு போனால்‌ என்ன? +அழிந்து பழஞ்சோறாய்ப்‌ போச்சுது. +அழிவழக்குச்‌ சொன்னவன்‌, பழிபொறுக்கும்‌ மன்னவன்‌. +அழுகள்ளன்‌ தொழுகள்ளன்‌ ஆசாரக்கள்ளன்‌. +அழுகிற ஆணையும்‌ இரிக்கிற பெண்ணையும்‌ நம்பப்‌படாது. +அழுகிறதற்கு அரைப்பணம்‌ கொடுத்து ஓய்கிறதற்கு ஒரு பணம்‌ கொடு. +அழுகிற பிள்ளைக்கு வாழைப்பழம்‌ காட்டுகிறபோல, +அழுகிற வீட்டில்‌ இருந்தாலும்‌ ஒழுகு)கிற வீட்டில்‌ இருக்கலாகாது. +அழுகிற வேளைபார்த்து அக்குள்‌ பாய்ச்சுகிறான்‌. +அழுகை ஆங்காரத்தின்‌ மேலும்‌, சிரிப்பு கெலிப்பின்‌ மேலும்‌ தான்‌. +அழுகையும்‌ ஆங்காரமும்‌ சிரிப்புக்‌ கெலிப்போடே, +அழுக்குக்குள்‌ இருக்கும்‌ மாணிக்கம்‌. +அழுக்குச்‌ சீலைக்குள்ளே மாணிக்கம்‌. +அழுக்கை அழுக்குக்கொல்லும்‌, இழுக்கை இழுக்குக்‌ கொல்லும்‌. +அழுக்கைத்‌ துடைத்து மடியில்‌ வைத்தாலும்‌ புழுக்கைக்‌ குணம்‌ போகாது. +அழுத கண்ணும்‌ சிந்திய மூக்கும்‌. +அழுத பிள்ளை உரம்‌ பெறும்‌. +அழுத பிள்ளை பால்குடிக்கும்‌. +அழுத பிள்ளையும்‌ சிரித்ததாம்‌, கழுதைப்பாலைக்‌ குடித்‌ததாம்‌. +அழுத பிள்ளையும்‌ வாய்மூடும்‌ அதிகாரம்‌. +அழுதவனுக்கு அகங்காரமில்லை. +அழுதாலும்‌ பிள்ளை அவளே பெறவேண்டும்‌. +அழுத்த நெஞ்சன்‌ ஆருக்கு முதவான்‌, இளகின நெஞ்சன்‌ எவர்க்கும்‌ உதவுவான்‌. +அழுதபிள்ளைத்‌ தாய்ச்சிக்குப்‌ பணயம்‌ கொடுத்தால்‌ அநுபவிக்க ஓட்டுமா குழந்தை? +அழுவார்‌ அழுவார்‌ தம்‌ துக்கம்‌ அசலார்க்கல்ல +அழுவார்‌ அழுவார்‌ தம்‌ தம்‌ துக்கமே, இருவன்‌ பெண்டீருக்கு அழுவாரில்லை. +அழுவார்‌ அற்ற பிணமும்‌ ஆற்றுவார்‌ அற்ற சுடலையும்‌, +அழையா வீட்டிற்கு நுழையாச்‌ சம்பந்தி. +அளகாபுரி கொள்ளையானாலும்‌ அதிருஷ்ட ஈனனுக்கு ஒன்றுமில்லை. +அளகாபுரியிலும்‌ விறகு தலையன்‌ உண்டு. +அளகேசன்‌ ஆனாலும்‌ அளவு அறிந்து செலவுசெய்ய வேண்டும்‌. +அளக்கிற நாழி அகவிலை அறியுமா? +அளந்த அளந்த நாழி ஒழிந்து ஓழிந்து வரும்‌. +அளந்த நாழிகொண்டு அளப்பான்‌. +அளந்த ஒருசாணில்லை, அமிந்தால்‌ ஒருசட்டிகாணாது. +அளவளாலில்லாதவன்‌ வாழ்க்கைகுளவளாக்கோடின்றி நீர்‌ நிறைந்தற்கு. +அளவிட்டவரைக்‌ கள விடலாமா? +அளவிற்கு மிஞ்சினால்‌ அமுதமும்‌ விஷமாகும்‌. +அளவுக்கு மிஞ்சினா���்‌ அமிருதமும்‌ நஞ்சு. +அளுங்குப்‌ பிடி பிடித்தாற்போல, அள்ளாது குறையாது சொல்லாது பிறவாது. +அள்ளிக்குடிக்கத்‌ தண்ணீரில்லை, அவனள்பேர்‌ கங்காதேவி. +அன்ளிக்கொடுத்தால்‌ சும்மா, அளந்து கொடுத்தால்‌ கடன்‌. +அன்னிக்கொண்டே போகச்சே கிள்ளிக்கொண்டு வருகிறான்‌. +அன்ளிப்பால்‌ வார்க்கையிலே சொல்லிப்பால்வார்த்திருக்குது. +அள்ளுகிறவன்‌ இடத்தில்‌ இருக்கல்‌ ஆகாது, கின்ளுகிறவன்‌ இடத்தில்‌ இருந்தாலும்‌. +அள்ளுவது எல்லாம்‌ நாய்‌ தனக்கென்று எண்ணுமாம்‌. +அறக்கப்பறக்கப்‌ பாடுபட்டாலும்‌ படுக்கப்பாயில்லை. +அறக்கல்வி முழுமொட்டை. +அறக்காத்தான்‌ பெண்டிழந்தான்‌, அறுகாதவழி சுமந்து அழுதான்‌. +அறக்குழைத்தாலும்‌ குழைப்பாள்‌, அரிசியாய்‌ இறக்கினாலும்‌ இறக்குவாள்‌. +அறக்கூர்மை முழுமொட்டை. +அறங்கையும்‌ புறங்கையும்‌ நக்குதே. +அறச்செட்டு முழுநஷ்டம்‌. +அறத்தால்‌ வருவதே இன்பம்‌. +அறநனைந்தவருக்குக்‌ கூதல்‌ என்ன? +அறப்பத்தினி ஆமுடையானை அப்பா என்று அழைத்த கதை. +அறப்படித்த பூனை காடிப்பானையில்‌ தலைபோடும்‌. +அறப்படித்த மூஞ்சுறு கழுநீர்ப்பானையில்‌ விழுந்தது போல. +அறப்படித்தவன்‌ அங்காடிபோனால்‌ விற்கவும்‌ மாட்‌டான்‌ கொள்ளவும்‌ மாட்டான்‌. +அறப்படித்தவர்‌ கூழ்ப்பானையில்‌ விழுந்தார்‌. +அறப்பேசி உறவாடவேண்டும்‌. +அறமுறுக்கினால்‌ அற்றுப்போகும்‌. +அறமுறுக்கினால்‌ கொடி முறுக்குப்படும்‌. +அறமுறுக்குக்‌ கொடும்புரிகொண்டு அற்றுவிடும்‌. +அறம்‌ பொருள்‌ இன்பம்‌ எல்லார்க்கும்‌ இல்லை. +அறவடிக்குமுன்‌ சோறு காடிப்பானையில்‌ விழுந்தாற்‌ போல. +அறவுங்கொடுங்கோல்‌ அரசன்‌ கீழ்க்‌ குடியிருப்பிற்‌ குறவன்‌ கீழ்க்‌ குடியிருப்பு மேல்‌. +அறிஞர்க்கழகு அகத்துணர்ந்து அறிதல்‌. +அறிந்த ஆண்டையென்று கும்பிடப்போனால்‌, உங்கள்‌ அப்பன்‌ பத்துப்பணம்‌ கொடுக்கவேணும்‌ கொடு என்றான்‌. +அறிந்தபார்ப்பான்‌ சிநேகிதன்‌, ஆறுகாசுக்கு மூன்று தோசையா? +அறிந்தவனென்று கும்பிட அடிமைவழக்கிட்ட கதை. +அறிந்து அறிந்து செய்கிறபாவத்தை, அழுது அழுது தொலைக்க வேணும்‌. +அறிந்தும்‌ கெட்டேன்‌ அறியாமலும்‌ கெட்டேன்‌, சொறிந்து புண்‌ ஆயிற்று. +அறிய அறியக்‌ கெடுவார்‌ உண்டா? +அறியாத நாளெல்லாம்‌ பிறவாத நாள்‌. +அறியாப்பிள்ளை ஆனாலும்‌ ஆடுவான்‌ மூப்பு. +அறியாப்பினள்ள�� புத்தியைப்‌ போல. +அறியாமல்‌ தாடியை வளர்த்தது அம்பட்டன்‌ கையிற்‌ கொடுக்கவா? +அறிவில்லார்‌ சிநேகம்‌ அதிக உத்தமம்‌. +அறிவீனர்தமக்கு ஆயிரம்‌ உரைக்கினும்‌ அவம்‌. +அறிவீனனிடத்தில்‌ புத்தி கேளாதே. +அறிவு ஆர்‌ அறிவார்‌? ஆய்ந்தவர்‌ அறிவார்‌. +அறிவு இல்லாச்‌ சயனம்‌ அம்பரத்திலுமில்லை. +அறிவு இல்லாதவன்‌ பெண்களிடத்திலும்‌ தாழ்வுபடுவான்‌. +அறிவு இல்லார்‌ தமக்கு ஆண்மையுமில்லை. +அறிவு கெட்டவனுக்கு ஆர்‌ சொல்லியும்‌ என்ன? +அறிவுடன்‌ ஞானம்‌ அன்புடன்‌ ஒழுக்கம்‌. +அறிவுடையாரை அடுத்தாற்போதும்‌. +அறிவுடையாரை அரசனும்‌ விரும்பும்‌. +அறிவுதரும்‌ வாயும்‌ அன்பு உரைக்கும்‌ நாவும்‌, +அறிவு புறம்போய்‌ அண்டது போல, +அறிவு பெருத்தோன்‌ அல்லல்‌ (நோய்‌) பெருத்தோன்‌. +அறிவு மனதை அரிக்கும்‌. +அறிவேன்‌ அறிவேன்‌ ஆலிலை புளியிலைபோலிருக்கும்‌. +அறுகங்கட்டைபோல்‌ அடிவேர்‌ துளிர்க்கிறது. +அறுகங்கட்டையும்‌ ஆபத்துக்குதவும்‌, +அறுக்க ஊறும்‌ பூம்பாளை, அணுக ஊறும்‌ ஏற்றின்பம்‌. +அறுக்கமாட்டாதவன்‌ இடுப்பிலே ஐம்பத்தெட்டு அரிவாள்‌. +அறுதலி மகனுக்கு அங்கமெல்லாம்‌ சேட்டை. +அறுதலிமகனுக்கு வாழ்க்கைப்பட்டு விருதாவிலே தாலி அறுத்தேன்‌. +அறுத்த கோழி துடிக்குமாப்‌ போல. +அறுத்தவள்‌ ஆண்பிள்ளை பெற்றகதை, +அறுத்தவிரலுக்குச்‌ சுண்ணாம்பு தடவமாட்டான்‌, +ஆண்டிவந்தாலும்‌ பிச்சைபோடமாட்டான்‌. +அறுத்துக்‌ கொண்டதாம்‌ கழுதை எடுத்துக்கொண்டதாம்‌ ஓட்டம்‌. +அறுந்த விரலுக்குச்‌ சுண்ணாம்பு கிடையாது. +அறுபது நாளைக்கு எழுபது கந்தை. +அறுபத்துநாலடிக்‌ கம்பத்தி லேறி ஆடினாலும்‌,அடியிலிறங்கித்தான்‌ தியாகம்‌ வாங்கவேண்டும்‌. +அறுபத்தெட்டுக்‌ கோரம்பலம்‌. +அறுப்புக்காலத்தில்‌ எலிக்கு ஐந்துபெண்சாதி. +அறுவாய்க்கு வாய்பெரிது, அரிசிக்குக்‌ கொதுபெரிது, +அறைக்கீரைப்‌ புழுதின்னாதவனும்‌ அவசாரிகையில்‌ சோறுண்ணாதவனும்‌ இல்லை. +அறையில்‌ ஆடி, அல்லவோ அம்பலத்தில்‌ ஆடவேண்டும்‌. +அறையில்‌ இருந்தபேர்களை அம்பலம்‌ ஏற்றுகிற புரட்டன்‌. +அறைவீட்டுச்செய்தி அம்பலத்தில்‌ வரும்‌. +அற்ப ஆசை கோடிதவத்தைக்‌ கெடுக்கும்‌, அற்பக்கோபத்தினால்‌ அறுந்தமூக்கு ஆயிரம்‌ சந்தோஷம்‌ வந்தாலும்‌ வருமா? +அற்பசகவாசம்‌ பிராணசங்கடம்‌. +அற்பசுகம்‌ கோடிதுக்கம்‌. +அற்பத்திற்கு அழகு குலை$கறதா? +அற்பத்‌ துடைப்பமானாலும்‌ அகத்தூசியை அடக்கும்‌, +அற்பர்‌ சிநேகம்‌ பிராண கண்டிதம்‌. +அற்பர்‌ சிநேகம்‌ பிராண சங்கடம்‌. +அற்பனுக்கு பவிஷு(ஐசுவரியம்‌) வந்தால்‌ அர்த்த ராத்திரி குடை பிடிப்பான்‌. +அற்பன்கை ஆயிரம்பொன்னிலும்‌ சற்புத்திரன்‌ கைத்தவிடு நன்று. +அற்பன்‌ பணம்‌ படைத்தால்‌ அர்த்தராத்திரி குடைபிடிப்பான்‌. +அற்பன்‌ பணம்‌ படைத்தால்‌ வைக்க வகை அறியான்‌. +அற்றது பற்றெனில்‌ உற்றது வீடு. +அற்றத்துக்கு உற்றதாய்‌. +அனந்தத்துக்கு ஒன்றாய்‌ உரையிட்டாலும்‌ அளவிடப்‌ போகாது. +அனல்குளிர்‌ வெதுவெதுப்பு இம்மூன்றுகாலமும்‌ ஆறு காலத்திற்குள்‌ அடங்கும்‌. +அனற்றை இல்லா ஊரிலே வண்ணாரிருந்து கெட்டார்கள்‌. +அனுபோகம்‌ தொலைந்தால்‌ அவிழ்தம்‌ பலிக்கும்‌. +அன்பற்ற மாமியாருக்குக்‌ கால்பட்டால்‌ குற்றம்‌ கை பட்டால்‌ குற்றம்‌. +அன்பற்ற மாமியாருக்குக்‌ கும்பிடுகிறதும்‌ குற்றந்தான்‌. +அன்பற்றார்‌ வாசலிலே பின்பற்றிப்‌ போகாதே. +அன்பான சிநேகிதனை ஆபத்தில்‌ அறி. +அன்பில்லார்‌ தமக்கு ஆதிக்கம்‌ இல்லை. +அன்பு இருந்தால்‌ ஆகாததும்‌ ஆகும்‌. +அன்புடையானைக்‌ கொடுத்துஅலையச்சே அசல்வீட்‌டுக்காரன்‌ வந்து அழைத்தகதை. +அன்புள்ள குணம்‌ அலையில்லா நதி. +அன்பே பிரதானம்‌ அதுவே வெகுமானம்‌. +அன்று ஆயிரம்‌ பொன்னிலும்‌, நின்றற ஒருகாசு பெரிது. +அன்றில்லை இன்றில்லை அழுகல்‌ பலாக்காய்‌, கலியாணவாசலிலே கலந்துண்ண வந்தாயே! +அன்று இறுக்கலாம்‌ நின்றிறுக்கலாகாது. +அன்று எழுதினவன்‌ அழித்து எழுதுவானோ? +அன்று கண்டதை அடுப்பில்போட்டு ஆக்கினபானையைத்‌ தோளில்‌ போட்டுக்கொண்டு திரிகிறதுபோல்‌. +அன்று கண்ட மேனிக்கு அழிவு இல்லை. +அன்று கண்டனர்‌ இன்றுவந்தனர்‌. +அன்று கழி அன்று கழி. +அன்று குடிக்கத்‌ தண்ணீரில்லை ஆனைமேல்‌ அம்பாரி வேணுமாம்‌. +அன்று கொள்‌ நின்று கொள்‌ என்றும்‌ கொள்ளாதே. +அன்றுசாப்பிட்ட சாப்பாடு இன்னும்‌ ஆறுமாசத்திற்‌குத்‌ தாங்கும்‌. +அன்றுதின்ற ஊண்‌ ஆறுமாசத்துப்பசியை அறுக்கும்‌. +அன்றுதின்ற சோறு ஆறு மாதத்திற்கு ஆமா? +அன்றுமில்லை காற்று, இன்றுமில்லை குளிர்‌. +அன்றுமில்லை தையல்‌, இன்றுமில்லை பொத்தல்‌. +அன்றைக்காடை இன்றைக்குக்கொடை என்றைக்கு விடியும்‌ இடையன்‌ தரித்திரம்‌? +அன்றைக்கு அடித்த அடி ஆறுமாதம்‌ தாங்கும��‌. +அன்றைக்குக்‌ இடைக்கிற ஆயிரம்‌ பொன்னிலும்‌ இன்‌றைக்குக்‌ கிடைத்த அரைக்காசு பெரிது. +அன்றைக்கெழுதினதை அழித்தெழுதப்‌ போகிறானா? +அன்றைக்குச்‌ சொன்னசொல்‌ சென்ம சென்மத்துக்‌கும்‌ உறைக்கும்‌. +அன்றைக்குத்‌ தின்கிற பலாக்காயைவிட இன்றைக்குத்‌ தின்கிற களாக்காய்‌ பெரிது. +அன்னதானத்திற்குச்‌ சரி என்ன தானமிருக்கிறது? +அன்னநடை நடக்கப்போய்க்‌ காகம்‌ தன்‌ நடையும்‌ இழந்‌தாற்போல. +அன்னநடை நடக்கப்போய்த்‌ தன்‌ நடையும்‌ கெட்டாற்‌ போல. +அன்னப்பாலுக்குச்‌ சிங்கி யடித்தவன்‌ ஆவின்‌ பாலுக்‌குச்‌ சர்க்கரை தேடுகிறான்‌. +அன்னப்பிடி வெல்லப்பிடி ஆச்சுது. +அன்ன மயம்‌ இன்றிப்‌ பின்னை மயம்‌ இல்லை. +அன்னமயம்‌ பிராணமயம்‌. +அன்னம்‌ இட்டாரைக்‌ கன்னம்‌ இடலாமா? +அன்னம்‌ இறங்குவதே அபான வாயுவால்‌. +அன்னம்‌ ஓடுங்கினால்‌ அஞ்சும்‌ ஓடுங்கும்‌. +அன்னம்‌ மிகக்கொள்வானும்‌ ஆடை அழுக்கு ஆவானும்‌ பதர்‌. +அன்னம்‌ முட்டானால்‌ எல்லாம்‌ முட்டு. +அன்னிய சம்பந்தமே யல்லாமல்‌ அத்தை சம்பந்தமில்லை என்கிறான்‌. +அன்னிய மாதர்‌ அவதிக்கு உதவுவாரா? +அன்னைக்கு உதவாதவன்‌ ஆருக்கு மாகான்‌. +அன்னையும்‌ பிதாவும்‌ முன்னறி தெய்வம்‌.