url
stringlengths
70
142
headline
stringlengths
32
105
subheadline
stringlengths
32
409
text
stringlengths
942
16.7k
https://www.vikatan.com/spiritual/temples/worlds-tallest-murugan-statue-to-be-opened-in-tamil-nadu
மலேசிய முருகனைவிட பிரமாண்டமாக தமிழகத்தில் தயாராகும் முருகன்..!
முருகனுக்காக அமைக்கப்பட்டிருக்கும் மிக உயரமான சிலை என்கிற பெருமையை விரைவில் மலேசிய முருகன் கோயில் இழக்க இருக்கிறது. வெகுவிரைவில், அந்தப் புகழ் தமிழகத்துக்குச் சொந்தமாக இருக்கிறது.
தமிழ் நிலத்துக்கே உரிய வழிபாடு, முருகன் வழிபாடு. முருகனைப் பற்றி குறிப்பிடும்போதும் 'தமிழ்க் கடவுள்' என்றே சொல்கின்றனர். தமிழர்கள் உலகமெங்கும் பரவி வாழ்கிறார்கள். அவ்வாறு அவர்கள் குடியேறியிருக்கும் இடங்களிலெல்லாம் முருகனுக்கு கோயில்கள் கட்டி வழிபடுகின்றனர். பல்வேறு நாடுகளிலும் முருகக் கடவுளுக்கு கோயில்கள் இருந்தாலும் மலேசியத் தலைநகரான கோலாலம்பூரில் அமைந்திருக்கும் பத்துமலைக் குகைக் கோயில் மிகவும் பிரபலமானது. இயற்கையாக உருவான சுண்ணாம்புக் குகைக்குள் அமைந்திருக்கும் இந்தக் கோயிலின் நுழைவுவாயிலில் அமைக்கப்பட்டிருக்கும் 140 அடி உயர பிரமாண்ட முருகன் சிலைதான், இதன் புகழுக்குக் காரணம். இந்த பிரமாண்ட முருகனைத் தரிசிப்பதற்காகவே பக்தர்கள் மலேசியாவிற்குச் செல்கின்றனர். ஆனால், முருகனுக்காக அமைக்கப்பட்டிருக்கும் மிக உயரமான சிலை என்கிற பெருமையை மலேசிய முருகன் கோயிலிடமிருந்து தமிழகம் பற்றிக்கொள்ள இருக்கிறது. சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே, முருகக் கடவுளுக்கு 146 அடி உயரத்தில் சிலை அமைக்கும் பணி முழுவீச்சில் நடந்துவருகிறது. சேலம் - உளுந்தூர்பேட்டை தேசிய நெடுஞ்சாலையில் இருக்கிறது, புத்திரகவுண்டம்பாளையம் கிராமம். இங்குதான், தனிநபர் ஒருவரின் முயற்சியால் 146 அடி உயர பிரமாண்ட முருகப் பெருமான் திருமேனி தயாராகிவருகிறது. இதில் சுவாரஸ்யம் என்னவென்றால், கோலாலம்பூரில் 140 அடி உயர சிலை அமைத்த அதே திருவாரூர் தியாகராஜன் ஸ்தபதி தான், இந்த புத்திரகவுண்டம்பாளையம் முருகன் சிலையையும் செய்துவருகிறார். முருகனின் சிலை மட்டும் 126 அடி. பீடத்துடன் சேர்த்து 146 அடி உயரம் இருக்கும் என்கிறார் ஸ்தபதி. “மலேசியா நாட்டில் கோலாலம்பூர், பத்துமலை குகைக்கோயில் நுழைவுவாயிலில் வைக்க, தம்புசாமி என்பவருக்குக் கடந்த 2006-ம் ஆண்டு 140 அடி உயரத்தில் முருகன் சிலை அமைத்துக்கொடுத்தேன். இதுவே முருகனுக்கு அமைக்கப்பட்ட உலகின் உயர்ந்த சிலையாக இதுவரை இருந்துவருகிறது. சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த முத்துநடராஜன் என்பவர், முருகன் சிலையை அமைக்கவேண்டி என்னைத் தொடர்புகொண்டார். அவர் விருப்பப்படி மலேசியா, பத்துமலை முருகன் சிலையை விடவும் 6 அடி உயரம்கூட்டி, 146 அடி உயரத்தில் சிலை அமைத்து வருகிறோம். இந்தப் பணியில் 22 சிற்பிகள், 10 உதவியாளர்கள், எனக்குத் துணையாக இருந்துவருகிறார்கள். மலேசியாவில் வடிக்கப்பட்ட சிலையில், முருகன் வலதுகையால் வேல் பிடித்ததுபோல காட்சி தருகிறார். இங்கு, புத்திரகவுண்டம்பாளையத்தில் வடித்துவரும் சிலையில், முருகப்பெருமான் வலது கையால் ஆசீர்வாதம் செய்வதுபோன்றும், இடது கையால் வேலைத் தாங்கியபடி சிரித்த முகத்துடன் மணிமகுடம் சூடி காட்சிதருவதைப்போன்று அமைத்துவருகிறோம். தற்போது, முருகனுக்கு ஆடை மற்றும் அணிகலன்களை அமைக்கும் நுண்ணிய வேலைப்பாடுகளைச் செய்துவருகிறோம். இந்தச் சிலை அமைக்கும் பணி முடிவடையும்போது, உலக அளவில் முருகனுக்கு அமைக்கப்பட்ட மிகப்பெரிய சிலையாக இது இருக்கும்” என்றார் ஸ்தபதி. புத்திரகவுண்டம்பாளையத்தில் முருகன் சிலையை அமைக்க முயற்சி எடுத்தவர், முத்து நடராஜர். தீவிர முருக பக்தரான இவர், திருப்பணிகள் நடைபெற்றுக்கொண்டிருக்கையில், தான் உருவாக்க விரும்பிய முருகனைத் தரிசிக்கும் முன்னரே இயற்கை எய்திவிட்டார். அவரது குடும்பத்தினர்தான் தற்போது கோயில் அமைக்கும் பணியைச் செய்துவருகிறார்கள். “என் அப்பா தீவிர முருக பக்தர். அவருக்கு 78 வயதிருக்கும்போது, 2015-ம் ஆண்டு புத்திரகவுண்டம்பாளையம் அருகே நிலம் வாங்கி 2 ஏக்கர் பரப்பளவில் முருகன் சிலை அமைக்க முடிவுசெய்தார். முருகப் பெருமானின் பரம பக்தரான தந்தை, 'முருகப் பெருமானுக்கு மிகப்பெரிய சிலை அமைக்க வேண்டும்' என்று விரும்பினார். அவரது விருப்பப்படிதான் மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் இருக்கும் பத்துமலை முருகன் சிலையைவிடவும் உயரமாக இந்தச் சிலையை எழுப்பத் திட்டமிட்டோம். அதன்படி திருவாரூர் ஸ்தபதி தியாகராஜனைத் தொடர்புகொண்டு, சிலை அமைக்கும் பணியைத் தொடங்கினோம். கடந்த 2016-ம் ஆண்டு செப்டம்பர் 6-ம் தேதி பூமி பூஜை போடப்பட்டது. தந்தைதான் சிலை அமைக்கும் பணியைக் கவனித்துவந்தார். இந்த நிலையில், அவர் கடந்த ஆண்டு உடல் நலக்குறைவாலும் வயோதிகத்தாலும் இறந்துவிட்டார். தான் அமைக்கும் முருகன் சிலையைக் காண்பதற்கு முன்பே முருகன் அவர்மீது விருப்பம் கொண்டு அழைத்துக்கொண்டார். தந்தையின் விருப்பத்தை நிறைவேற்றுவதற்காக, நான் இப்போது இந்தப் பணிகளைக் கவனித்துவருகிறேன். தந்தையின் விருப்பப்படி, 2020-ம் ஆண்டு பங்குனி உத்திரத்துக்கு முன்பு, குடமுழுக்கு நடத்தத் திட்டமிட்டுள்ளோம். இந்தச் சிலை அமைக்கும் பணி முடிந்த பிறகு, அறுபடை முருகன் சிலைகளையும் இங்கு மக்கள் தரிசிக்கும் வகையில் கோயில் அமைக்கத் திட்டமிட்டுள்ளோம். அப்போதுதான் தந்தையின் ஆன்மா சாந்தியடையும்” என்றார்.
https://www.vikatan.com/literature/international-2nd-tamil-music-conference-in-malaysia
உலகத் தமிழிசை மாநாடு: 'இசையால் தன்னை உணர்ந்தான் புத்தன், இசையால் தன்னை அழித்தான் ஒளரங்கசீப்!
இவ்விழாவில், இந்தியா, ஃபிரான்ஸ், மலேசியா, மொரீசியஸ், இலங்கை உள்ளிட்ட நாடுகளில் தமிழ் இசைக்கு அருந்தொண்டாற்றி வரும் 9 பேராளர்களுக்கு தமிழ் இசை விருதுகள் வழங்கி சிறப்பிக்கப்பட்டனர்.
கடந்த 19.03.2023 அன்று, மலேசியா நாட்டின் பேரா மாநிலம் ஈப்போ நகரில் உள்ள ரிவர் பிரண்ட் நட்சத்திர விடுதி கூட்ட அரங்கில், ஈப்போ முத்தமிழ் பாவலர் மன்றமும், ஈப்போ வெற்றித் தமிழர் இயக்கமும் இணைந்து நடத்திய, இரண்டாவது உலகத் தமிழிசை மாநாடு நடைபெற்றது. இம்மாநாட்டின் சிறப்பு விருந்தினர்களாக மலேசியா நாட்டின் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் சிவக்குமார், மலேசியா தொழில் முனைவோர் மற்றும் கூட்டுறவுத் துறை துணை அமைச்சர் சரஸ்வதி உள்ளிட்டோருடன், ம.தி.மு.க துணைப் பொதுச் செயலாளர் மற்றும் மல்லைத் தமிழ்ச்சங்கத் தலைவராக இருக்கும் நானும் பங்கேற்று வாழ்த்தி உரையாற்றினோம். இவ்விழாவில் இந்தியா, ஃபிரான்ஸ், மலேசியா, மொரீசியஸ், இலங்கை உள்ளிட்ட நாடுகளில் தமிழ் இசைக்கு அருந்தொட்டாற்றி வரும் 9 பேராளர்கள் தமிழ் இசை விருதுகள் வழங்கி சிறப்பிக்கப்பட்டனர். மலேசியா பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு, இசை குறித்து கட்டுரைப் போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்றவர்கள் 20 பேரை தேர்வு செய்து, ரொக்கப் பரிசும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. இம்மாநாட்டில் பெருந்திரளானோர் பங்கேற்றனர். மாநாட்டின் வரவேற்புக் குழு தலைவர் - முத்தமிழ் பாவலர் மன்றத்தின் தலைவர் கவி ரத்னா டாக்டர் அருள் ஆறுமுகம், வெற்றித் தமிழ் இயக்கத்தின் தலைவர் பேராசிரியர் விசுவநாதன் உள்ளிட்டோர், இம்மாநாட்டிற்கான சிறப்புப் பணிகளை மேற்கொண்டு வெற்றிகரமாக நடத்தினர். மலேசியத் திருநாட்டின் பேரா மாநிலத்தில் உள்ள ஈப்போ நகரின் ஜீவநதியாக ஓடிக்கொண்டிருக்கும் பேரா நதியின் கிளை நதியான லிம்பா கிண்ட என்னும் கிந்தா நதிக்கரையில் அமைந்திருக்கிறது, ரிவர் ஃப்ரன்ட் நட்சத்திர விடுதி. இங்கு நடைபெற்ற இரண்டாவது தமிழ் இசை மாநாடு, செறிவான விழாவாக அமைந்தது. உலக அளவில் நைல் நதி நாகரிகம், சிந்து நதி நாகரிகம், கங்கை நதி நாகரிகம், காவிரி நதி நாகரிகம் என்று நாகரிகங்கள் நதிக்கரையில்தான் தோன்றியிருக்கின்றன. அதைப் போன்றதொரு நாகரிக நகரம்தான், இந்த ஈப்போ நகர். இங்கு கிந்தா நதி, இரண்டு ஓடைகளாகப் பிரிந்து கிந்தா, கம்பார், கோலாநிஸ் சார், பேராக் தெங்ஙா ஆகிய நான்கு மாவட்டங்களின் வழியாக 100 கிலோ மீட்டர் தூரம், கிளேடாங் மலைத்தொடருக்கு இடையில் பாய்ந்தோடுகிறது.காவிரி ஆறு குடகுமலையில் உருவாகி, பகுத்தறிவு பகலவன், வெண்தாடி வேந்தர் தந்தை பெரியார் பிறந்த பூமிக்கு வருகின்றபோது, இரண்டு ஓடைகளாகப் பிரிந்து சென்று மீண்டும் இணையும் காவிரி, ஈரோடையாக பிரிந்த இடம் ஈரோடை. அது ஈரோடாக மாறியது. அதைப்போன்றோ என்னவோ கிந்த நதி இரண்டாகப் பிரிந்து ஓடியதால் ஈப்போ என்று வந்திருக்குமோ என்று எண்ணத் தோன்றுகிறது.கிந்த நதியோரம் வாழ்ந்த ஒராய் அஸ்லி பழங்குடி மக்களின் பூர்விகம் இந்த பூமி. அதற்கு தம்பூன் பாறை ஓவியம் சாட்சியாக இருக்கிறது. உலக ஈயத்தின் தலைநகரம்தான் இந்த ஈப்போ பட்டினம். உலகத்தின் ஈயத் தேவையில் 31% இங்கிருந்துதான் ஏற்றுமதி செய்யப்பட்டது. அதன் மூலமாக மலேசியா பொருளாதாரத்தில் தொழில் வளர்ச்சியில் முன்னேறியது. அந்த வளர்ச்சிக்குக் காரணமாக இருந்த ஈப்போ நகரில் தமிழ் இசைமாநாடு நடைபெறுகிறது.தற்காப்புக் கலைஞனாக அறியப்பட்ட நான், கடந்தாண்டு ஏப்ரல் மாதம் இதே நகரில், மாஸ்டர் ஆனந்தன் அவர்களின் பயிற்சி கூடத்திற்கு எங்கள் குழுவினருடன் வந்து பயிற்சி பெற்று திரும்பினேன். இப்போது இங்கு இசை மாநாடு! இந்த மாநாடு குறித்து, தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில் நடந்த ஆலோசனைக் கூட்டம் முடிந்து, பல்லவர்களின் துறைமுகப் பட்டிணமான திருக்கடல்மல்லை என்னும் மாமல்லபுரத்திற்கு வந்தார்கள். மல்லைத் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் மாமல்லா நட்சத்திர கடற்கரை விடுதியில் வரவேற்று பொன்னாடை அணிவித்து நினைவுப் பரிசுகள் வழங்கி விருந்து படைத்து மாமல்லபுரத்தை சுற்றிக்காட்டிவிட்டு, தமிழ் இசை மாநாடு சிறக்க கடல் சங்கை கொடுத்து வாழ்த்தி அனுப்பினோம்.சங்கு மட்டும்தான் சுட சுட வெளுக்கும். அந்த சங்கை வைத்துதான் பரமாத்மா கண்ணன் மகாபாரதப் போரை முடித்தார். அவர் கையில் இருக்கும் சங்கின் பெயர் பாஞ்சஜன்யம். விஷ்ணு கையில் இருக்கும் இந்த சங்கை ஊதும் போதெல்லாம் மழை பெய்யும் என்பது நம்பிக்கை. அந்த சங்கு மனித வாழ்வில் இரண்டறக் கலந்து இன்றியமையாததாகி விட்டது. தமிழன் சங்கம் வைத்து தமிழ் வளர்த்தான் என்பார்கள். அவன் கண்டது முதல் சங்கம், இடைச்சங்கம், கடைச்சங்கம் என்றால், தமிழர்களின் வாழ்வியலோடு சங்கும் இன்றியமையாததாக மாறிவிடுகிறது.குழந்தை பிறந்தவுடன் பால் சங்கில் பாலை ஊத்தி புகட்டுவார்கள். அது முதல். வாழ்வில் மணமேடையில் சங்கு பயன்படுத்தப்படுவது இடைச்சங்கம். இறந்தவுடன் சங்கை ஊதி முடித்து வைப்பது, கடைசி சங்கு; கடைச்சங்கம் என்பர். ஆக அந்த சங்கை இரண்டாம் தமிழ் இசை மாநாட்டிற்கு கொடுத்து அனுப்பினோம். நாதஸ்வர இசைக் கச்சேரி போட்டியில் வெற்றி பெற்றவர்களை தேர்வு செய்ய, என்னைப் போன்ற தற்காப்பு கலைஞரை அழைத்து, சிறந்த கலைஞனை தேர்வு செய்ய சொன்னபோது, பொறுப்பு கூடியது. போட்டியின் முடிவு என்ன? யார் சிறந்த கலைஞர்கள்? கலைஞர்களும் பார்வையாளர்களும் நடுவரின் தீர்ப்புக்காகக் காத்திருந்தனர். நாதஸ்வரமா, தவிலா, மிருதங்கம்மா, மத்தளமா, வாய்ப்பாட்டுக் கலைஞரா... பரிசுக்குரியவர் யார் என்று ஆவலோடு காத்திருந்தபோது, தற்காப்புக் கலை மாஸ்டர், ஒத்தூதியவர்தான் முதல் பரிசுக்குரியவர் என்று அறிவித்தபோது, அனைவரின் புருவங்களும் உயர்ந்தன. ’ஏன்?’ என்ற கேள்வி அனைவரிடமும் இருந்தது. இறுதியாக வழக்கு ’நீதிமன்றத்திற்குப்’ போனது. ஒவ்வொரு கலைஞரும் தன் திறமை குறித்து எடுத்துச் சொன்னார்கள், அனைத்தையும் பதிவு செய்து கொண்ட ’நீதிபதிகள்’, கச்சேரி நடுவரான மாஸ்டரை அழைத்து, உங்கள் தேர்வுக்கான காரணம் என்ன சொல்லுங்கள் என்று கேட்டனர். அப்போது மாஸ்டர் சொன்னார்... இங்கே வாதிட்ட இசைக்கலைஞர்கள் அனைவரும் நன்றாகவே வாசித்தார்கள், குறை ஏதுமில்லை. ஆனால் ஒத்து ஊதிய நாதஸ்வரக் கலைஞர் மட்டும், போட்டியின் துவக்கத்தில் நாதஸ்வரத்தில் வைத்த வாயை, மேளங்கள் முழங்கிய போதும், நாதஸ்வரங்கள் ஊதிய போதும், வாணர்கள் பாடிய போதும், வாயை எடுக்காமல் இடைவிடாமல் போட்டி முடியும் வரை, ஓய்வெடுக்காமல் ஊதினார். எனவே என் பார்வையில் முதலிடத்திற்கு உரியவர் என்றார். உலகம் என்பது ஒரு நாடக மேடை, அதில் வாழும் நாம் அனைவரும் நடிகர்கள். மனித குலத்தை மகிழ்ச்சியுடனும், குதுகலத்துடனும் வாழச் செய்வது இசைதான். அந்த இசை நான்கு வகையாகப் பிரிக்கப்படுகிறது. * காற்று கருவி * தோல் கருவி* நரம்புக் கருவி * கஞ்சக்கருவிகாற்று கருவிகள்: சங்கு, கொம்பு, புல்லாங்குழல், மகுடி, நாதஸ்வரம், கொக்கரை, துத்தரி, தாரை, ஆர்மோனியம் போன்றவை.தோல் கருவிகள்: பறை, முரசு, குடமுழா, தப்பு, உடுக்கை, உருமி, தவில், மிருதங்கம், பம்பை, நகரா, துடி, மத்தளம், முழவு, தண்ணுமை என்று வகைப்படுத்தப்படுகிறது.நரம்புக் கருவிகள்: யாழ், வீணை, வயலின், கித்தார், தம்புரா என்று வகைப்படுத்தப்படுகிறது.கஞ்சக் கருவிகள்: தாளம், செகண்டி, சிலம்பு, மணி, ஜால்ரா என்று வகைப்படுத்தப்படுகிறது. குழல் மூங்கில் காடுகளில், வண்டுகளால் துளைத்த துவாரத்திலிருந்து வெளிப்பட்ட காற்று, ஓசையுடன் வந்ததை ஆய்வு செய்து, அதைக் கொண்டு ஏழு துளையிட்டு குழல் இசை வந்தது. மூங்கில் புல்லினத்தை சார்ந்தது என்பதால் புல்லால் ஆன குழல் புல்லாங்குழல் ஆனது.யாழின் வகைகள் பேரியாழ், மகரயாழ், சகடையாழ், செங்கோட்டுயாழ், சீரியாழ், மருத்துவயாழ். யாழை மீட்டி பாடுபவர்கள் பாணர்கள் என்று அழைக்கப்படுவர். அதுதான் தமிழ் ஈழத் தாயகத்தின் தலைநகரின் யாழ் மீட்டிய பாணர்கள் வாழ்ந்ததால் யாழ்ப்பாணம் என்றானது.இதன் உண்மைத்தன்மை குறித்து தமிழீழத் தேசிய கவிஞர், உலகம் போற்றும் உணர்ச்சிக் கவிஞர் அண்ணன் காசி ஆனந்தன் அவர்களிடம் நான் கேட்டபோது, அவர் அதை ஆமோதித்துடன் கூடுதலாக ஒரு சுவாரஸ்யமான செய்தியும் சொன்னார். `தம்பி, மட்டக்களப்பில் உள்ள உப்புநீர் ஆற்றை மீன் பாடும் தேனாறு என்று அழைப்பார்கள். இந்த ஆற்றில் வாழும் மீன்கள் யாழிசையை கேட்டுக் கேட்டு அதை உள்வாங்கி யாழ் இசை போன்றே ஒலி எழுப்பும். அதை ஆங்கிலத்தில் ’சிங்கிங் ஃபிஷ்’ என்று அழைப்பார்கள். பல நாடுகளில் இருந்து வந்து அதை ஆராய்ச்சி செய்து உண்மைத்தன்மையை அறிவித்திருக்கிறார்கள்' என்றார். பறவைகள் இசை எழுப்புவதைக் கேட்டு இருக்கின்றோம். ஆனால் தமிழ் ஈழத்தில் மீன் இசை ஒலி எழுப்பும் என்ற செய்தியை என்னிடம் பரிமாறிக் கொண்டார். இலங்கையை ஆண்ட சிவபக்தன், சகல வரங்களும் பெற்றவன், தன் மக்களுக்கு எந்தவித குறையும் இன்றி நல்லாட்சி புரிந்து வந்தவன், இசைஞானி, மாவீரன் இராவணன். அவன் கொற்றக்கொடையில் வீணை சின்னம் பொறிக்கப்பட்டு இருக்கும். சிவனின் அருள் கிடைப்பதற்காக தன் உடலில் உள்ள நரம்புகளை எடுத்து வீணையில் பொருத்தி, வாசித்து பக்திப்பேறு பெற்றான் என்பது புராணம். ஆக, கல்விக்கடவுள் சரஸ்வதி கையில் வீணை, நாரதர் கையில் வீணை என்று வீணையின் சிறப்புகள் சென்று கொண்டிருக்கிறது.இசைப்பாலை: செம்பாலை, பகுமளிப்பாலை, செவ்வழிப் பாலை, அரும்பாலை, கோடிப் பாலை, விளரிப்பாலை, மேற்செம்பாலை என்று இசைப்பாலை உருவானது.தமிழர்கள் திசையை எட்டு என்றனர். இசையை ஏழு வகைப்படுத்தினர். சுவையை ஆறு என்றனர். நிலத்தை ஐந்து வகைப்படுத்தினர். திசையை நான்காகப் பிரித்தனர். தமிழ் இயல், இசை, நாடகம் என்று முத்தமிழ் ஆக மூன்றானது. வாழ்க்கை அகம், புறம் என்று இரண்டானது. ஒழுக்க நெறி மட்டும் ஒன்றானது. தமிழர்களின் வாழ்வியல் என்பது அரசவையில் கவிதைகள், ஆலயங்களில் கலைகள், கழனியில் தானியம், கடல் மேல் வாணிபம், களத்தில் வெற்றி... இதுதான் அவர்கள் வாழ்க்கையாக இருந்தது. தமிழ் இசையின் ஏழு சுரங்கள்... குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளரி, தாரம். கர்னாடக இசையில்... சட்ஜம், ரிஷபம், காந்தாரம், மத்யமம், பஞ்சமம், தைவதம், நிஷாதம்... இவைதான் ஏழு சுரங்களாக சரிகமபதநி என்றானது. இசை பல்லவி என்பது பதம், லயம், வின்யாசம் ஆகிய சொற்களின் முதல் எழுத்து, ப+ல+வி பல்லவி என்றானது. எந்தச் சூழலையும் மாற்றும் சக்தி இசைக்கு உண்டு. இசை என்பது நம்மை அதன்பால் இசைய வைப்பது. 'குனித்த புருவமுங் கொவ்வைச்செவ் வாயிற் குமிண்சிரிப்பும்பனித்த சடையும் பவளம்போன் மேனியிற் பால்வெண்ணீறும்இனித்த முடைய வெடுத்தபொற் பாதமுங் காணப்பெற்றால்மனித்தப் பிறவியும் வேண்டுவ தேயிந்த மாநிலத்தே'என்று போற்றப்படும் சிவபெருமான், எந்நாட்டவர்க்கும் இறைவனாக இருந்தாலும் தென்னாடுடைய சிவனே போற்றி என்று பாடப்படுவதின் காரணம், தமிழ் இசையால் ஈர்க்கப்பட்டதால்தான். தமிழ்நாட்டில் அவர் காட்சி கொடுத்தார். அதை திருவிளையாடல் புராணம் கூறுகிறது. தமிழ் இசையால் ஈர்க்கப்பட்ட 'சுடுகாட்டுப் பித்தன்' சிவபெருமான், சிதம்பரம் தில்லையில் தோன்றி நடராஜனாக பிரம்மனின் 32 தலைகளை மாலைகளாக அணிந்து ஆடும்போது, சிவனின் திருமுடியில் உள்ள சந்திரனிலிருந்து அமிர்தம் துளிகளாக மாலையில் உள்ள பிரம்மனின் தலை மீது விழ, அத்தலைகள் அமிர்தம் பட்டவுடன் உடலும் உயிரும் போன்று உயிர் பெற்று குரலும் இசையும் இணைந்து பாடத்துவங்கின. இதிலிருந்துதான் இசை வரலாறு தோன்றியதாக சங்கீத சாஸ்திரங்கள் கூறுகின்றன. ஆகையால்தான் இன்றளவும் இசை பயில்பவர்களும், நாட்டியம் பயில்பவர்களும் சிதம்பரம் தில்லை நடராஜன் ஆலயத்தில் உள்ள ராஜ்யசபை ஆயிரம் கால் மண்டபத்தில் அரங்கேற்றம் செய்து வருவது வழக்கம். அந்த தில்லையில்தான் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் நிறுவனர், தமிழர்களின் நன்றிக்குரிய உயர் மரியாதைக்குரிய வேந்தர் ஐயா அண்ணாமலை அரசர் அவர்கள் தமிழ் இசைக்கு தனி இயக்கம் கண்டார் என்பது வரலாறு. அதேபோன்றுதான், காவிரியானது குடகுமலையில் உருவாகி 3 மாநிலங்கள் வழியாகப் பாய்ந்தோடி, வங்கக்கடலில் புகும் இடம் பூம்புகார் ஆனது. அந்த பூம்புகார், கடலால் அழிந்து போனது. ஆதி தமிழினத்தின் நாகரிகத்தை பறைசாற்றும் பூம்புகார்பட்டினத்தின் வரலாற்றை, சிலப்பதிகாரம் என்று தொகுத்து வழங்கினார் இளங்கோவடிகள்.சிலப்பதிகாரம் ஆண்டவனின் கதையல்ல. அற்புதங்கள் நிகழ்த்திய அவதாரப் பெருமையல்ல. கடவுள் மனித உருக்கொண்டு மண்ணுக்கு வந்த கதையல்ல. மனித மாண்புகளை விண்ணுக்கு உயர்த்திய கதை சிலப்பதிகாரம். இதை முத்தமிழ்க் காப்பியம் என்றும் குடிமக்கள் காப்பியம் என்றும் அழைப்பர். சிலம்பின் அரங்கேற்றக் காதை ஒன்று மட்டும் போதும்... தமிழின் இசை அறிவை, இசைக் கருவிகளின் வகைகளை, அரங்க அமைப்புகளை, அதன் நுணுக்கங்களை பற்றி உலகம் அறிந்து கொள்ள! யாழ்மேல் பாலை இடமுறை மெலியகுழல் மேல் கோடி வல முறை மெலியவலிவும் மெலிவும் சமனும் எல்லாம்பொழிய கோத்தனர் புலமையோன் உடன்...என்று துவங்கி குழல் வழி நின்றது யாழ்.யாழ்வழித் தண்ணுமை நின்றது தகவேதண்ணுமை பின் வழி நின்றது முழவேவேமுழவோடு கூடி நின்று இசைத்தது ஆமாந்திரிகையோடு அந்தரம் இன்றி கொட்டு இரண்டு உடையதோர் மண்டிலம்ஆகக் கட்டிய மண்டிலம் பதினொன்று என்று.’’குழல் இசையோடு கூடி யாழிசையும், யாழிசைக்கு ஏற்ப மத்தள ஒலியும் பொருந்தி வர, மத்தள ஒலிக்கு ஈடு கொடுக்கும் வண்ணம் மேளம் ஒலிக்க, மேள ஒலிக்கேற்ப ஆம் மாந்திரிகை என்னும் இடக்கை வாத்தியம் இன்னிசை கூட்டியது. இடக்கை வாத்தியத்தோடு மற்ற வாக்கியங்களின் இசையும் சுதி பேதமின்றி பருந்தும் நிழமும் போல ஒன்றாய் பொருந்தி இசைத்தாளத்திற்கு பத்தும் தீர்மானம் ஒன்றுமாக பதினொன்று பற்றிலே கூத்தினை கூத்த நூல் வழி தவறாது மாதவி ஆடினாள்’’ என்று இசை குறித்து குடிமக்கள் காப்பியமான சிலப்பதிகாரம் கூறுகிறது. ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன், மௌடிகம் கொடிய கரங்களால் மனித குலத்தை ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருந்தபோது, மனித குல மீட்புக்காக, உலகை தன் ஞானத்தால் அளந்து, மெய்ஞானம் அடைந்த புத்தர் சொன்னார், `கடவுளைப் பற்றி கவலைப்படாதே, இல்லாத மோட்சத்தை இங்கு ஏன் தேடிக் கொண்டிருக்கின்றாய்? இதோ மனிதம் விழுந்து கிடக்கிறது. அவனைத் தூக்கி நிறுத்தச் சொல்வது மகானாகட்டும் அல்லது ரிஷியாகட்டும், எதையும் நம்பிவிடாதே. தர்க்கம் செய், விவாதி, அவற்றில் நல்லனவற்றை மட்டும் எடுத்துக் கொண்டு எஞ்சியதை தூக்கிக் குப்பையில் வீசு' என்றார்.புத்தரின் வாழ்வில் ஒரு சுவாரஸ்யமான சம்பவம்... சித்தார்த்தன் மெய்ஞானமடைந்து புத்தனாக மாற கடும் தவம் மேற்கொண்டார். அது ஒருநாள், இருநாள் அல்ல... ஆறு வருடங்கள் உருண்டோடின. உடல் மெலிந்து எலும்பும் தோலுமாக நகரக்கூட முடியாமல் தன் வயிற்றை தொட்டுப் பார்க்கின்றார். அது முதுகெலும்புடன் ஒட்டிக் கொண்டிருக்கிறது. ஆனால், தான் வேண்டிய புத்தொளி அவருக்குக் கிடைக்கவில்லை. கடும் தவத்தால், உடல் பசியால் வலுவிழந்து, தாகத்தால் களைப்பினால் தன்னிலை மறப்பதால் எவ்வாறு புத்தொளியைக் காண முடியும் என்று சிந்தித்துக் கொண்டிருக்கும் வேளையில், தன் முன்னே இசைக் கலைஞர்கள் வந்தமர்ந்து இசைக்கும்போது சித்தார் இசையிலிருந்து, சரியான சுரம் வரவில்லை. அப்போது இசை ஆசிரியர், `சித்தார் இசைக்கருவியில் பொருத்தப்பட்டுள்ள நரம்பு தளர்ந்தாலோ, கூடினாலோ இசை சுரம் வேறு மாதிரியாக இருக்கும். எனவே நரம்பை சமநிலையில் வைத்து இசைத்தால் நல்ல இசை கிடைக்கும்' என்று சொன்னதைக் கேட்ட சித்தார்த்தன், ’ஓர் இசைக் கருவியிலிருந்து நல்ல இசை வர வேண்டும் என்றால் சமநிலையில் வைத்து இசைக்க வேண்டும். மெய்ஞானம் பெறும் நான் உடலையும் மனதையும் சம நிலையில் வைத்தால் தான் மெய்ஞானம் அடைய முடியும்’ என்று கடும் தவத்தை முடித்துக் கொண்டு உணவை உட்கொண்டு புத்துணர்வு பெற்றார். மீண்டும் ஓர் அரச மரத்தடியில், 40 நாள்கள் அமர்ந்து அமைதியாக தியானம் மேற்கொண்டபோது, ஒரு வைகாசி பௌர்ணமி அன்று, அவரின் உள்ளே புத்தொளி தோன்றியது. உலகப் பிரச்னைகளுக்கு காரணங்கள் இரண்டு. அவை ஆசை, துன்பம். ஆக, ஆசையே துன்பத்திற்குக் காரணம். எனவே, துன்பத்தை கலைந்து மானுடத்தை மகிழ்விப்பது என்ற அறியாமை இருள் விளக்கப்பட்டு, ஒளி என்ற அறிவு வெளிப்பட்டது. சித்தார்த்தன், புத்தரானார். அரசமரம் போதிமரம் ஆயிற்று. ஆக, புத்தர் நிலை அடைவதற்கு சித்தார் இசையும் ஒரு காரணமாக இருந்துள்ளது என்பது செவி வழிச் செய்தி. முகலாய சக்கரவர்த்தி ஔரங்கசீப், தனது தலைநகர் டெல்லி செங்கோட்டையில் இருந்து தனக்கு விருப்பமான பட்டத்து யானையின் மீது அமர்ந்து பாதுகாப்புப்படை பரிவாரங்களுடன் ஆக்ரா நோக்கிச் செல்வது வழக்கம். ஒருநாள் அதே போன்று பயணிக்கும்போது, செங்கோட்டைக்கு அருகே உள்ள ஜூம்மா மசூதி பள்ளிவாசல் அருகே பலர் கூட்டமாக ஒன்றுகூடி ஓவென்று வாய்விட்டு அழுத வண்ணம் இருப்பதைக் கண்டார். மக்களின் கண்ணீருக்குக் காரணம் என்னவென்று கேட்பதற்காக காவலரிடம் அங்கு போகச் சொல்கிறார். அங்கு அவர் கண்ட காட்சி... ஏதோ பிணத்தின் மீது போர்வையை போர்த்தி, அதன் மீது பூக்களை தூவி, அதை சுற்றி நின்று அழுது கொண்டு இருக்கின்றார்கள் அவர்கள். ஔரங்கசீப்பை பார்த்தவுடன் சலாம் சொல்கிறார்கள் மக்கள். அது என்னவென்று கேட்டபோது, கூட்டத்தின் தலைவன் பாதுஷா முன் வந்து நின்று வணங்கிச் சொன்னான், `சக்கரவர்த்தி அவர்களே! நாங்கள் அனைவரும் இசைக் கலைஞர்கள். இசைதான் எங்கள் வாழ்க்கை. மனித வாழ்க்கைக்கு அழகும் பொலிவும் அர்த்தமும் அமைதியும் ஏற்படுத்தும் இசை நிகழ்ச்சிகளுக்கு தங்கள் ஆட்சியில் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதை மீறும் இசைக்கலைஞர்கள் சிறைக்கு அனுப்பப்படுகின்றனர். உங்கள் ஆட்சியில் இசை செத்துவிட்டது. இதோ போர்வையால் போர்த்தப்பட்டு இருப்பது எங்களின் இசைக்கருவிகள். இசைக்கருவி இசைக்கப்படாமல் இறந்து போயின. அந்த இசைக் கருவிகளுக்குத்தான் நாங்கள் அஞ்சலி செலுத்திக்கொண்டு இருக்கின்றோம்" என்றார். அப்படி சொன்னபோது, ’`ஓ! இசை இறந்து விட்டதா? மகிழ்ச்சி. எனக்கும் கூட சற்று சந்தேகம் இருந்தது. தற்போது உண்மை நிலை அறிந்து மகிழ்ச்சி அடைகின்றேன். நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து இறந்து போன இசையின் ஆன்மா சாந்தியடைய இறைவனிடம் துவா செய்வோம்'’ என்று சொல்லிவிட்டு, ’`இந்த இசை மீண்டும் உயிர்பெற்று வந்துவிடாமல் இருக்க கூடுதலாக ஆழம் தோண்டி புதைத்து விடுங்கள்'’ என்று முகத்தில் புன்னகைத் தவழும் பெருமிதத்துடன் சொன்னார். கலை, இலக்கியம், ஓவியம், இசை போன்றவற்றின் மீது ஈடுபாடு காட்டாதவர் ஔரங்கசீப். கால ஓட்டத்தில் ஔரங்கசீப்கள் இறந்து, மண்ணோடு மண்ணாகிப் போனார்கள். ஆனால் இசை எங்கும் வியாபித்து இருக்கிறது. இசை மேதை பீத்தோவான், சிம்பொனி இசையை மூன்று பகுதிகளாக ஆல்பமாக வெளியிட்டார். உடல்நிலை சரியில்லாமல் செவிப்புலன் பாதிக்கப்பட்டு சிறிது சிறிதாக கேட்கும் திறன் இழந்து வருகின்றார். ஓவியம் வரைவதற்கு, சிற்பம் செதுக்குவதற்கு, கண் எவ்வாறு முக்கியமோ அதைப்போன்று இசைப்பதற்கு காது அவசியம். ஆனால் பீத்தோவன் 9-வது சிம்பொனி அமைத்தபோது முழுமையாக கேட்கும் திறனை இழந்துவிட்டார். ஆனால், தன் உள்ளே இருந்த இசைஞானம் உள் உணர்வின் அடிப்படையில் சிம்பொனியை வெற்றிகரமாக இசைத்து முடித்தார்.அந்த இசை மேதையின் சாதனையை தமிழ்நாட்டைச் சேர்ந்த பண்ணைப்புரத்து இளையராஜா சிம்பொனி இசைத்து மேஸ்ட்ரோ பட்டம் பெற்று இந்தியாவுக்கு, தமிழர்களுக்குப் பெருமை சேர்த்தார். நான் சின்ன குழந்தையாக இருந்தபோது, காரணம் தெரியாமல் அழுதபோது, என்னுடைய அன்னை என்னை தொட்டில் போட்டு தாலாட்டுகின்றபோது..."மாணிக்கம் கட்டி வைரம் இடைக்கட்டி ஆணிப் பொண்ணால் செய்த வண்ண சிறுதொட்டிலில்பிரம்மன் பேணி உனக்கு வீடு தந்தான்தாலே தாலேலோ பாடப்பலம் குறைந்து வாழ்வை வயலாக்கும் முட்டவரும் மாடுகளையும்மூடப் பழக்கத்தையும் வண்டியிலே பூட்டிசீர்தூக்க வந்த ஈடற்ற தோழா இளம் தோழாகண்ணுறங்கு கண்ணுறங்கு..."என்று எந்த தமிழில் என்னை தாலாட்டினாலோ, எந்த தமிழைக் கேட்டு, எந்த தாலாட்டைக் கேட்டு நான் கண்ணுறங்கினேனோ, நான் நடைவண்டியை பிடித்து நடந்தபோது, தத்தா பித்தா என்று பேசியபோது, எந்தத் தமிழ் எனக்குத் தோழமை உணர்வை உருவாக்கித் தந்ததோ, நான் கல்லூரியில் பயின்றபோது, காதலித்தபோது, கனவு கண்டபோது, எந்தத் தமிழ் என்னுடன் தோழமை உணர்வை உருவாக்கியதோ, நான் அரசியல்வாதி ஆனபோது இதுபோன்ற மேடைகளில் எந்தத் தமிழ் எனக்கு சரம் சரமாக அடியெடுத்து தருகின்றதோ, நாளைக்கு நான் சாகின்றபோது என்னுடைய உற்றார் உறவினர்களும் நண்பர்களும் எந்தத் தமிழில் அழுது அங்கு ஒரு சோக மேகத்தை உருவாக்குவார்களோ, அந்த ஒப்பற்ற தமிழ் மொழியே தமிழீர் இசையாக வியாபித்து நிற்கிறது.தமிழ் இசை மாநாட்டின் வெற்றிக்காக ஒடி உழைத்த கால்களுக்கும், ஒத்துழைத்த கரங்களுக்கும், தமிழ் கூறும் நல்லுலகின் சார்பில் நன்றி!- மல்லை சி.ஏ. சத்யா
https://www.vikatan.com/government-and-politics/politics/130455-vaiko-in-malaysia
மலேசியா சென்ற வைகோவுக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு!
மலேசியா சென்ற வைகோவுக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு!
மலேசிய பினாங்கு மாகாணத்தின் துணை முதலமைச்சரான இராமசாமியின் மகன் திருமணத்தில் கலந்துகொள்ள மலேசியா சென்றுள்ள ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோவுக்கு கோலாலம்பூர் விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.    பினாங்கு துணை முதலமைச்சராக பொறுப்பு வகிக்கும் இராமசாமியும் வைகோவும் நீண்டகாலமாக நட்புடன் இருப்பவர்கள். ஈழத்தமிழர் பிரச்னைகளுக்காக மலேசியாவில் குரல் கொடுத்து வருபவர் இராமசாமி. அதற்காக பல பிரச்னைகளைச் சந்தித்தார். அவருடைய பூர்வீகம் தமிழ்நாடு ஆகும். அவருடைய மகன் திருமணத்தில் கலந்துகொள்வதற்காக வைகோ தனது உதவியாளர்களுடன் நேற்று நள்ளிரவு சென்னையிலிருந்து விமானம் மூலம் புறப்பட்டார். கோலாலம்பூர் சென்றடைந்த வைகோவுக்கு இன்று காலை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மலேசியாவைச் சேர்ந்த கழககுமார், டத்தோ.ராஜிவ், பினாங்கு மாநில சட்டமன்ற உறுப்பினர் சதீஷ்முனியான்டி, கே.எல்.டான், சையித், ஜகா, ராஜீவ்ராவ், ராஜேஷ்ராவ், கமான்டோ ஷான் ஆகியோர் வைகோவுக்கு மாலை அணிவித்து வரவேற்றனர். இன்று கோலாலம்பூரில் பல்வேறு தமிழ் பிரமுகர்களைச் சந்திக்கிறார் வைகோ. கடந்த முறை வைகோ ராமசாமியின் மகள் திருமணத்துக்காக மலேசியா சென்றபோது, விடுதலைப்புலி என்று மலேசிய அதிகாரிகள் அவரை விமான நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தியது பெரும் பரபரப்பானது குறிப்பிடத்தக்கது.
https://www.vikatan.com/crime/157573-16-year-girl-died-after-instagram-polling
``வாழ்வா... சாவா...?” - மலேசிய சிறுமியின் உயிரைப் பறித்த இன்ஸ்டாகிராம் போலிங்! #polling
``வாழ்வா... சாவா...?” - மலேசிய சிறுமியின் உயிரைப் பறித்த இன்ஸ்டாகிராம் போலிங்! #polling
இன்ஸ்டாகிராமில் வாக்குப்பதிவு நடத்தியதில் மலேசிய சிறுமி ஒருவர் தற்கொலை செய்திருக்கும் சம்பவம் உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  சமூக வலைதளங்கள் மனிதர்கள் இணைந்து இருப்பதற்காகவும் தங்களின் மனதில் இருக்கும் விஷயங்களைப் பகிர்வதற்கும் ஒரு தளமாக கொண்டுவரப்பட்டது. பின்னர் அது வளர்ச்சி அடைய அடையைச் சிலர் அதை தவறான வழிகளிலும் பயன்படுத்தினர். பலர் மன ரீதியாக சில பிரச்னைகளையும் சந்தித்தனர். இதுபோன்ற பல விஷயங்களை நாம் செய்திகளில் படித்திருப்போம்.  இன்றைய சூழலில் மொபைல் போன்கள் சிறுவர் சிறுமிகளிடமும் சர்வ சாதாரணமாகப் புழங்குகிறது. சிலர் இதைப் புதிய தேடல்களுக்காக பயன்படுத்திக்கொண்டாலும் பலர் இதை ஒரு பொழுதுபோக்காகதான் பார்க்கின்றனர். இந்த நிலையில், மலேசியாவில் நடந்த ஒரு சம்பவம் தற்போது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக உள்ளது.  மலேசியாவைச் சேர்ந்த 16 வயது சிறுமி ஒருவர் புகைப்படங்களைப் பகிரும் சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் ஒரு பதிவை போடுகிறார். அதாவது தன்னை அதில் பின் தொடர்பவர்களிடம் ஒரு கேள்வியை முன்வைக்கிறார். அதில், ``இது உண்மையிலே மிக முக்கியமானது. இதில் ஒன்றைத் தேர்வு செய்ய எனக்கு உதவுங்கள். நான் வாழ வேண்டுமா அல்லது சாக வேண்டுமா..?” என  வோட்டிங் முறையில் கேள்வி கேட்கிறார்.  நண்பர்கள் இப்படிக் கேட்கும்போது நம்மில் பலர் நகைச்சுவையாக கலாய்க்கும் விதமாகவும் நெகட்டிவ் பதில்களை அளிப்போம். அப்படிதான் பலர் இரண்டாவது ஆப்ஷனை தேர்வு செய்துள்ளனர். ஆனால், அவர்கள் பின் நடக்க இருக்கும் சம்பவத்தைப் பற்றி அறிந்திருக்க வாய்ப்பில்லை. சுமார் 69% பேர் இரண்டாவது ஆப்ஷனை தேர்வு செய்ய, அந்தச் சிறுமி தற்கொலை செய்திருக்கிறார்.  இந்தச் சம்பவம் மலேசியாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள வழக்கறிஞரும் அந்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினருமான ராம்கர்பால் சிங், ``நெட்டிசன்கள் அவருக்கு பாசிட்டிவ் வழியைக் காட்டியிருந்தால் ஒருவேளை அப்பெண்ணைக் காப்பாற்றி இருக்கலாம். ஆனால், அதற்கு மாறாக நடந்துள்ளது. இந்த நாட்டில் தற்கொலை என்பது குற்றம் என்பதால், அதற்குத் தூண்டுதலாக இருந்து வாக்களித்தவர்களும் குற்றவாளிகள்தான். இது தொடர்பாக விரிவான விசாரணை நடத்தப்படும்” என்றார்.  மலேசியாவின் விளையாட்டு மற்றும் இளைஞர்கள் துறை அமைச்சர் சயீத் அப்துல் ரஹ்மான் கூறுகையில், ``நாட்டு மக்களின் மனநிலை குறித்து உண்மையில் கவலைகொள்கிறேன். இது ஒரு தேசிய பிரச்னை. நிச்சயம் இது குறித்து விரிவான ஆலோசனை நடத்தப்படும்” என்றார்.  மேலும், இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள இன்ஸ்டாகிராம் அதிகாரி ஒருவர், ``எங்களின் பிரார்த்தனைகள் அந்தச் சிறுமியின் குடும்பத்தினருடன் இருக்கும். இன்ஸ்டாகிராமை மக்கள் பயன்படுத்தும்போது பாதுகாப்பானதாக மக்கள் உணர்வதை நாங்கள் உறுதி செய்ய வேண்டும். எங்களின் முயற்சிக்கு உங்களின் ஒத்துழைப்பும் தேவை. யாருக்காவது ஆபத்து ஏற்படுத்தும் வகையில் ஒரு பதிவைக் கண்டால் உடனடியாக ரிப்போர்ட் செய்வதை உறுதி செய்துகொள்ளுங்கள்” என்றார்.  இன்ஸ்டாகிராம் வாக்குமூலம் சிறுமி எடுத்த தற்கொலை முடிவு மலேசியா மட்டுமல்லாது அனைத்து நாட்டு மக்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 
https://www.vikatan.com/government-and-politics/151669-explanation-about-the-49-tamilians-who-were-rescued-from-the-malaysian-jail
மலேசியத் தமிழர்கள் மீட்பு விவகாரம்... சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த பாதிக்கப்பட்டவர்கள்!
மலேசியா சிறையிலிருந்து மீண்டு வந்திருக்கும் 49 தமிழர்கள் கூறுகையில், ``சாப்பாட்டுக்காக ஒரு மணி நேரம் தரையில வரிசையா உட்கார்ந்திருக்கணும். திரும்பிப் பார்த்தா முதுகுல அடிப்பாங்க. 14 பேருக்குக் காலையில 5 லிட்டர், சாயந்தரம் 5 லிட்டர்னு தண்ணி குடுப்பாங்க. கக்கூஸ் போறதுக்கு, குளிக்கறதுக்கு, குடிக்கறதுக்குனு அத்தனைக்கும் அந்தத் தண்ணிதான். ஊருக்குத் திரும்பிப் போவோம்கிற நம்பிக்கையே இல்லாமப் போச்சு’’ என்கிறார்கள்.
`கனிமொழி (நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்) முயற்சியால் மலேசியாவில் தவித்த 49 தமிழர்கள் மீட்பு - கிராம மக்கள் நன்றி’ என்ற தலைப்பில் கடந்த பிப்ரவரி 19-ம் தேதி விகடன் இணையதளத்தில் கட்டுரை வெளியிட்டிருந்தோம். இதுதொடர்பாக, ஏற்கெனவே மூன்று செய்திகளையும் பதிவிட்டிருந்தோம். மலேசியாவைச் சேர்ந்த தமிழ்ச் சங்கம், எம்.எல்.ஏ. கருணாஸின் புலிப்படை மற்றும் எம்.பி. கனிமொழி ஆகியோர் இந்த மீட்பு நடவடிக்கைகளில் உதவியுள்ளனர்' என்று சம்பந்தப்பட்டவர்களின் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில்தான் அந்தக் கட்டுரைகள் எழுதப்பட்டன. இந்நிலையில், `அவர்களை மீட்டது கனிமொழி அல்ல... எங்களின் முயற்சிதான்' என்றபடி முகநூல் மற்றும் யூடியூப் ஆகியவற்றில் காணொலியைப் பதிவேற்றியுள்ளனர் மலேசியாவில் செயல்பட்டுவரும் `அயலகம் உதவிக்குழு - மலேசியா' எனும் அமைப்பினர்.  எது உண்மை? எது உண்மை என்று அறிந்துகொள்ள நெல்லை மாவட்டத்திலிருக்கும் தலைவன்கோட்டை கிராமத்துக்குச் சென்றோம். மலேசியாவிலிருந்து திரும்பியிருக்கும் வெள்ளத்துரை, குணசேகரன், மாரித்துரை, பேச்சிப்பாண்டியன் ஆகியோரைச் சந்தித்தோம். மலேசிய சிறையில் சிக்கி உடல்நலம் குன்றிப்போனவர்கள், இன்னமும் அதிலிருந்து முழுமையாக மீளவில்லை. தொடர்ந்து மருத்துவச் சிகிச்சை எடுத்துவரும் அவர்கள், ``இதுவரைக்கும் எந்த மீடியாவுக்கும் நாங்க பேட்டி கொடுக்கல. செய்தியாளர்கள் பலரும் தேடி வந்தாங்க. இப்ப இருக்குற மனநிலையில யாரிடமும் பேசி, பட்ட கஷ்டங்களையும் வேதனைகளையும் மறுபடியும் நினைச்சுப் பார்க்க விரும்பல. அதனாலதான் யார்கிட்டயும் பேசல. எங்க மேல அக்கறைகொண்டு தொடர்ந்து செய்திகளை வெளியிட்டு வந்த விகடனே தேடி வந்திருக்கும்போது பேசாம இருக்க முடியல’' என்றவர்கள், தொடர்ந்தனர். அவர்களுடைய பேச்சின் சாராம்சத்தின்படி அயலகம் உதவிக்குழு, கருணாஸ் மற்றும் கனிமொழி மூன்று தரப்புமே அவரவர் பங்குக்கு உதவி செய்திருப்பது தெரியவருகிறது. அயராமல் உதவிய அயலகம்! இதைத் தொடர்ந்து, அயலகம் உதவிக் குழுவைச் சேர்ந்த பாரி தமிழரசனைத் தொடர்புகொண்டு பேசியபோது, ``நானும் ஜோதிபாரதியும் சேர்ந்துதான் அயலகம் உதவிக் குழு அமைப்பைத் தொடங்கினோம். தற்போது 60-க்கும் அதிகமானோர் இந்தக் குழுவில் இருக்கிறார்கள். இங்கே வேலை செய்துகொண்டே பிறருக்கு உதவும் பணியையும் செய்துவருகிறோம். எங்களின் முயற்சியால் நிறைய பேர் சொந்த ஊருக்குத் திரும்பியிருக்கிறார்கள். உரிய அனுமதி பெறாமல் புரோக்கர்களை நம்பி வேலைக்காக வந்து சிறையில் சிக்கிக்கொள்பவர்கள் பற்றிய தகவல்களை உறவினர்களுக்குத் தெரிவிப்பது, தூதரகம் மற்றும் குடியுரிமைத் துறை அதிகாரிகள் மூலமாக மீட்டுச் சொந்த ஊருக்கு அனுப்புவது போன்ற பணிகளைச் செய்துவருகிறோம். அப்படித்தான் அந்த 49 பேருக்கும் உதவி செய்தோம். அவர்களின் வழக்குகளைத் தொடர்ந்து கவனித்துவந்தோம். சிறைக்குச் சென்று உதவிகளைச் செய்தோம். தூதரகத்தில் அவர்களின் நிலையை எடுத்துச் சொல்லி சொந்த ஊருக்கு அனுப்ப முயற்சிகளைச் செய்தோம். ஆனால், எந்த உதவியும் செய்யாத தமிழக அரசியல்வாதிகள் அவர்களை வைத்து அரசியல் செய்வதை என்ன சொல்வது’’ என்றார் காட்டமாக. கருணை காட்டிய கனிமொழி! கனிமொழி தரப்பினரிடம் பேசியபோது, ``செய்யாத உதவிகளுக்கு பெருமைதேடிக் கொள்ளவேண்டிய அவசியம் கனிமொழிக்குக் கிடையாது. மலேசியா சிறையில் தவித்த அந்த 49 பேரின் உறவினர்கள் கனிமொழியைச் சந்தித்து கோரிக்கை மனு அளித்ததுமே, மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ் மூலமாக நடவடிக்கை எடுத்தார். வெளியுறவுத் துறை அதிகாரிகளிடமும் பேசி வந்தார். சிறையிலிருந்தவர்களை, குடியுரிமை தடுப்பு முகாமுக்கு மாற்றி இருப்பதாக சுஷ்மா சுவராஜ் கடிதம் மூலமாகவே கனிமொழிக்குத் தகவல் தெரிவித்துள்ளார். மலேசியாவிலிருந்து மீண்டு வந்திருப்பவர்களே கனிமொழியை நேரில் சந்தித்து, `நீங்க உதவி செய்யலைனா திரும்பி வந்திருக்க முடியாது’ என்று நன்றியும் தெரிவித்துள்ளனர். இப்படி வெளிநாட்டுச் சிறையில் சிக்கிய மீனவர்கள் உள்ளிட்ட பலரையும் மீட்க கனிமொழி உதவி செய்துகொண்டுதான் இருக்கிறார்’’ என்றார்கள். ஒட்டுமொத்தமாகக் கிடைத்த உதவி! ஆக மொத்தம், அயலகம் உதவிக்குழு - மலேசியா, கருணாஸின் ஆட்கள் மற்றும் கனிமொழி ஆகிய மூன்று தரப்புமே இந்த 49 பேருக்கு உதவியுள்ளனர். ஆரம்பத்தில் நமக்குக் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் கருணாஸ் மற்றும் கனிமொழி ஆகியோரின் உதவிகள் குறித்து செய்திகளை வெளியிட்டிருந்தோம். அயலகம் உதவிக்குழுவின் மனிதாபிமான அடிப்படையிலான முயற்சிகள் பற்றி அப்போது நமக்குச் சொல்லப்படவில்லை. அப்பாவிகளாக வந்து சிக்கிக்கொள்ளும் சகதமிழர்களை மீட்பதற்காகவே மலேசிய மண்ணில் அமைப்பை நடத்திவரும் அயலகம் உதவிக்குழுவின் முயற்சிகள் பாராட்டுக்குரியவையே! கண்ணீர்க் கதை! இந்த விவாதங்கள் ஒருபுறமிருக்க, மறுபுறம் மலேசியாவிலிருந்து மீண்டிருக்கும் அவர்களின் கதை, அனைவருக்கும் கண்ணீரைப் பொங்கவைப்பதாக இருக்கிறது. வெள்ளத்துரை, குணசேகரன், மாரித்துரை, பேச்சிப்பாண்டியன் ஆகியோர் பேசும்போது, ``ஏழை விவசாயக் குடும்பங்களைச் சேர்ந்த நாங்க, வெளிநாட்டுல வேலை பார்த்தா குடும்பக் கஷ்டங்கள் தீரும்னுதான் வட்டிக்குப் பணத்தை வாங்கி, நேரடியா கம்பெனி மூலமாகவே மலேசியாவுக்குப் போனோம். ஏ.ஜே.என் எனர்ஜி நிறுவனம் சார்பாக மின்சார டவர் அமைக்கும் வேலைக்காகத்தான் போனோம். வேலை நேரம், தங்கும் வசதி, சம்பளம் எல்லாத்தையும் ஒப்பந்தத்திலேயே தெரிவிச்சிருந்தாங்க. ஆனா, அதையெல்லாம் மீறி, மலேசிய காட்டுப் பகுதியில காலை 7 மணியில இருந்து ராத்திரி 7 மணி வரை டவர் அமைக்கிற வேலை செய்ய வெச்சாங்க. பாம்பு, காட்டுப்பன்றி, அட்டைப்பூச்சி, விஷப்பூச்சினு உயிருக்கே ஆபத்தான சூழல்ல உயிரைக் கையில பிடிச்சுக்கிட்டு வேலை பார்த்தோம். ஒருத்தருக்கு விஷப்பூச்சி கடிச்சதால, ஒரு வாரத்துக்குப் பார்வையே தெரியல.  முதல் மாசம் பேசினபடி சம்பளம் கொடுத்தவங்க, அடுத்த மாசமே பாதியா குறைச்சுட்டாங்க. பத்தாயிரம் ரூபாய்தான் கொடுத்தாங்க. ஒப்பந்தப்படி உணவு, தங்குமிடம், குடிநீர் வசதி செய்து கொடுக்கல. அதனால, வேலை செய்ய மறுத்தோம். பாஸ்போர்ட்டை வாங்கிவெச்சுக்கிட்டு, போலீஸில் புகார் செய்துட்டாங்க. `கம்பெனி விதிமுறைகளைக் கடைபிடிக்கலை'னு சொல்லி, ஜெயில்ல போட்டுட்டாங்க. கொலையாளிகள், போதைப்பொருள் கடத்தி தண்டனை பெற்றவங்க உட்பட கொடூரக் குற்றவாளிகளோட எங்களையும் அடைச்சுட்டாங்க. நம்பிக்கையே செத்துப்போச்சு! சாப்பாட்டுக்காக ஒரு மணிநேரம் தரையில வரிசையா உட்கார்ந்திருக்கணும். திரும்பிப் பார்த்தா முதுகுல அடிப்பாங்க. 14 பேருக்கு காலையில 5 லிட்டர், சாயந்தரம் 5 லிட்டர்னு தண்ணி குடுப்பாங்க. கக்கூஸ் போறதுக்கு, குளிக்கறதுக்கு, குடிக்கறதுக்குனு அத்தனைக்கும் அந்தத் தண்ணிதான். குளிக்காததால சொறி, சிரங்கு, சிக்கன்பாக்ஸ் வந்து சிரமப்பட்டோம். ஊருக்குத் திரும்பிப் போவோம்கிற நம்பிக்கையே இல்லாமப் போச்சு. இந்த நிலையிலதான், `அயலகம் உதவிக்குழு'வைச் சேர்ந்த ஜோதிபாரதி, சிறையில் வந்து எங்கள பார்த்தார். வேதனையையெல்லாம் கொட்டித் தீர்த்தோம். எங்க மொபைல் போனுக்கு ரீசார்ச் செய்து கொடுத்தார். எங்க கஷ்டங்கள வீடியோவா பதிவு செஞ்சு வீட்டுக்கு அனுப்பினோம். ஊர்ல இருக்கறவங்ககிட்ட பேசினோம். எங்க உறவினர்கள் நெல்லை மாவட்ட ஆட்சியர்கிட்ட ரெண்டு தடவை மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை. எங்க ஊரைச் சேர்ந்த புலிப்படை மாவட்டச் செயலாளர் ராஜூ குணசேகரன் மூலமாக கருணாஸ் எம்.எல்.ஏ-வுக்கு விஷயத்தை எங்க உறவுக்காரங்க தெரியப்படுத்தியிருக்காங்க. கருணாஸ் சொல்லி, மலேசியாவுல இருக்கிற நந்தகோபால்ங்கறவர் எங்கள வந்துபார்த்துட்டு, தூதரகத்தில் தகவல் சொல்லி உதவி கேட்டார். ஆனா, எந்த உதவியும் கிடைக்கல. பிறகுதான், எங்க ஊரைச் சேர்ந்த பூசைப்பாண்டியன், ராஜூ குணசேகரன், சுப்பையா பாண்டியன், துரைபாண்டியன் இவங்களோட கிராம மக்களும் சேர்ந்து கனிமொழியைச் சந்திச்சி விஷயத்தைச் சொல்லியிருக்காங்க. 2018 டிசம்பர் 20-ம் தேதி மத்திய வெளியுறவுத் துறை அமைச்சருக்குக் கனிமொழி கடிதம் எழுதின பிறகுதான், இந்தியத் தூதரகத்துல இருந்து ராமகிருஷ்ணன்கிற அதிகாரி வந்து பார்த்துப் பேசினார். `அயலகம் உதவிக்குழு' ஜோதிபாரதி அடிக்கடி எங்கள சந்திச்சி செல்போனுக்கு ரீசார்ஜ் செய்துகொடுத்து குடும்பத்தோட பேச உதவியா இருந்தார். அவரைப் பார்த்த பிறகுதான், `சொந்த ஊருக்குப் போய்விட முடியும்'கிற நம்பிக்கையே வந்துச்சு. இந்தியத் தூதரகத்துக்கும் அயலகம் உதவிக்குழுவினர் தொடர்ந்து அழுத்தம் கொடுத்தாங்க. இன்னொரு பக்கம் சுஷ்மா சுவராஜ் மூலமா கனிமொழி தொடர்ந்து அழுத்தம் கொடுக்கவே, பக்கிட் (Bukit) ஜெயிலுக்கு எங்கள மாற்றினாங்க. அந்தச் சிறையும் நரகமாகவேதான் இருந்துச்சு. சில நாள்களுக்குப் பிறகுதான் ஊர் திரும்புறதுக்கான நடவடிக்கைள் ஆரம்பமாச்சு. பெயர் வாங்கப் பார்த்த தமிழக அரசு! பிப்ரவரி 20-ம் தேதி காலை 7.30 மணிக்கு சென்னை விமான நிலையத்துக்கு வந்துட்டோம். ஆனா, அமைச்சர்கள் ஜெயக்குமார், ராஜலட்சுமி ரெண்டுபேரும் 9 மணிக்குத்தான் வந்தாங்க. அதுவரை எங்கள வெளியில விடல. உறவினர்களையும் பார்க்க அனுமதிக்கல. சென்னை மாவட்ட கலெக்டரும் அதிகாரிகளும் வந்து, `தமிழக அரசின் முயற்சியாலும் உதவியாலும்தான் சொந்த ஊருக்கு வர முடிஞ்சது’னு சொல்லச் சொன்னாங்க. நாங்க மறுத்துட்டோம். `எங்களுக்கு தமிழக அரசு எந்த உதவியும் செய்யல'னு சொன்னதுக்கு, `நீங்க என்ன ராணுவத்துலயா வேலை செஞ்சுட்டு வந்திருக்கீங்க. பணத்துக்காக வெளிநாட்டு வேலைக்குப் போயிட்டுதானே வந்திருக்கீங்க. உங்களுக்கு என்ன உதவி செய்ய முடியும்’னு அதிகாரிங்க சொன்னாங்க. அமைச்சர்கள் வந்தபிறகும், சால்வை வாங்கிட்டு வர மறந்துட்டதால கூடுதலா ஒரு மணிநேரம் காத்திருக்க வெச்சுட்டாங்க. `தமிழக அரசின் முயற்சியால் 49 தமிழர்கள் மீட்கப்பட்டு இருக்காங்க’னு அமைச்சர் ஜெயக்குமார் கூச்சமே இல்லாம மீடியாகிட்ட சொன்னார். தமிழக அரசு சார்பாக வழிச் செலவுக்கு ரூ.500, காலை உணவு, சொந்த ஊர் செல்ல போக்குவரத்து வசதி எல்லாம் ஏற்பாடு செய்திருக்கிறதா அமைச்சரும் அதிகாரிகளும் சொன்னாங்க. `எந்த உதவியும் தேவையில்லை'னு சொந்தச் செலவுலயே ஊருக்கு வந்துட்டோம். கடைசியா நாங்க சொல்ல விரும்புறது என்னன்னா, தமிழக இளைஞர்கள் யாரும் மலேசியாவுக்கு வேலைக்குப் போய் சிரமப்பட வேண்டாம்கிறதுதான்’’ என்றனர் சற்றே வேதனையுடன். என்ன செய்யப் போகிறது தமிழக அரசு? தொடர்ந்து அவர்கள், ``எங்களுக்குத் தமிழக அரசு எந்த உதவியும் செய்யவில்லை. இதுவரையிலும் இங்கே வந்து எந்த அதிகாரியும் பார்க்கவில்லை. உடல் நலப்பாதிப்பு காரணமாக இன்னும் சிகிச்சை எடுத்துக்கிட்டிருக்கோம். எங்களோட பரிதாபமான நிலையைக் கவனத்துல எடுத்துக்கிட்டு, தொழில் தொடங்க கடன் உதவி அளிக்கவாவது தமிழக அரசு முன்வர வேண்டும்’’ என்றார்கள், பாதிக்கப்பட்ட அப்பாவி இளைஞர்கள்.  அவர்களின் கோரிக்கையையாவது பரிவுடன் பரிசீலிக்குமா, தமிழக அரசு? 
https://sports.vikatan.com/cricket/126675-womens-asia-cup-t20-india-beat-malaysia-by-142-runs
`27 ரன்களில் மலேசியாவைச் சுருட்டிய இந்திய மகளிர் அணி!’ - 142 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
`27 ரன்களில் மலேசியாவைச் சுருட்டிய இந்திய மகளிர் அணி!’ - 142 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
மகளிர் ஆசியக் கோப்பை டி20 தொடரின் முதல் போட்டியில் மலேசிய அணியை 142 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய மகளிர் அணி அசத்தல் வெற்றி பெற்றது.  Photo Credit: Twitter/@ACCMedia1  இந்தியா, மலேசியா, இலங்கை, பாகிஸ்தான், தாய்லாந்து உள்ளிட்ட அணிகள் மோதும் மகளிர் ஆசியக் கோப்பை டி20 கிரிக்கெட் தொடர் மலேசியாவில் நடைபெறுகிறது. இந்த தொடரின் முதல் போட்டியில் போட்டியை நடத்தும் மலேசிய அணியும், ஆறு முறை சாம்பியனுமான இந்திய அணியும் மோதின. கோலாலம்பூர் கினாரா அகாடமி ஓவல் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 169 ரன்கள் குவித்தது. முன்னாள் கேப்டன் மிதாலி ராஜ், 69 பந்துகளில் 97 ரன்கள் குவித்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் 32 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். மலேசியா தரப்பில் அய்னா ஹஷிம் மற்றும் நூர் ஜக்காரியா ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.  170 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய மலேசிய அணிக்கு, இந்திய மகளிர் அணியின் கடும் நெருக்கடி கொடுத்தனர். தொடக்க ஆட்டக்காரர்களான யுர்சினா யாகூப் மற்றும் கிறிஸ்டினா பேரெட் ஆகிய இருவரும் ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தனர். மலேசிய அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இந்திய மகளிர் அணியின் சிறப்பான பந்துவீச்சைத் தாக்குப்பிடிக்க முடியாமல், மலேசிய அனி 13.4 ஓவர்களில் 27 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அந்த அணியில் ஒரு வீராங்கனை கூட ஒற்றை இலக்க ஸ்கோரைத் தாண்டவில்லை. ஷாஷா ஆஷ்மி எடுத்த 9 ரன்கள்தான் மலேசிய தரப்பில் அதிகபட்ச ஸ்கோர். கேப்டன் வின்ஃப்ரட் துரைசிங்கம் 21 பந்துகளைச் சந்தித்து 4 ரன்கள் எடுத்தார். இந்திய அணி தரப்பில் பூஜா வஸ்ட்ராக்கர் 3 விக்கெட்டுகளும், பூனம் யாதவ் மற்றும் அனுஜா பாட்டீல் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளும் வீழ்த்தினர். 97 ரன்கள் குவித்த ஆட்டமிழக்காமல் இருந்த மிதாலி ராஜ், பிளேயர் ஆஃப் தி மேட்ச்சாகத் தேர்வு செய்யப்பட்டார்.      
https://www.vikatan.com/crime/hotel-labor-from-sivagangai-tortured-in-malaysia-hotel
``சம்பளப்பாக்கி கேட்டதற்கு கட்டி வைத்து அடித்தார்கள்!” - அ.தி.மு.க பிரமுகரை குற்றம்சாட்டும் ஊழியர்
மலேசியாவுக்கு வேலை பார்க்கச் சென்ற தேவகோட்டையைச் சேர்ந்த ஊழியர் முகமது யூசுப், அவர் வேலை பார்த்த ஹோட்டல் நிர்வாகிகளால் கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளார். அப்போது அவருக்கு ஏற்பட்ட காயங்களை பத்திரிகையாளர்களிடம் அவர் காண்பித்தார்.
சிவகங்கை மாவட்டம், தேவகோட்டையைச் சேர்ந்த முகமது யூசுப் என்பவர் வேலைக்காக கடந்த 2018-ம் ஆண்டு ஏஜென்ட் உதவியுடன் மலேசியாவுக்குச் சென்றிருக்கிறார். அங்கு கார் கழுவும் வேலையை 7 மாதங்கள் செய்து வந்துள்ளார். கடந்த 2019 ஆகஸ்ட் மாதம் லெபாஅம்பாங் பகுதியில் உள்ள காரைக்குடி செட்டிநாடு ஹோட்டலில் வேலைக்குச் சேர்ந்திருக்கிறார். இந்த ஹோட்டல் அ.தி.மு.க-வைச் சேர்ந்த தேவகோட்டை, கண்டதேவி பஞ்சாயத்தின் முன்னாள் தலைவர் முருகன் என்பவருக்குச் சொந்தமானது. இவர் மலேசியாவில் கணேசன் என்பவரை பங்குதாரராக சேர்த்துக்கொண்டு இந்த ஹோட்டலை நடத்தி வந்திருக்கிறார். முருகனுக்குச் சொந்தமான ஹோட்டலில் பணியாற்றிவந்த முகமது யூசுப்பிற்கு மூன்றரை மாத சம்பளப் பாக்கி வைத்திருக்கின்றனர். இதைக் கேட்டபோது ஹோட்டல் உரிமையாளர்கள் எந்தப் பதிலும் தரவில்லை. இந்த நிலையில், ஹோட்டலில் இருந்து யூசுப் கிளம்ப முயன்றபோது கணேசன் மற்றும் மேலாளர் சேனாதிபதி ஆகியோரால் கடுமையாகத் தாக்கப்பட்டிருக்கிறார். இந்த நிலையில், முகமது யூசுப் மற்றும் புலம்பெயரும் தொழிலாளர்கள் உரிமைக் கூட்டமைப்பினர் சென்னையில் இன்று பத்திரிகையாளர்களைச் சந்தித்தனர். அப்போது பேசிய முகமது யூசுப், ``மலேசியாவில் முதலில் செய்துவந்த கார் வேலை ஒத்துவரவில்லை என்பதால்தான் ஹோட்டல் வேலைக்குச் சேர்ந்தேன். அதிலும் உரிமையாளர் முருகன் எங்கள் ஊரைச் சேர்ந்தவர் என்பதால் நம்பிக்கையுடன் சேர்ந்தேன். ஆனால், சேர்ந்த பிறகுதான் அங்குள்ள பிரச்னை தெரிந்தது. அங்குள்ள மற்ற 10 ஊழியர்களுக்குமே நிர்வாகத்தினர் சம்பளப் பாக்கி வைத்திருந்திருக்கின்றனர். நான் பலமுறை கேட்டபோதும் ஹோட்டல் நிர்வாகிகள் எந்தப் பதிலும் அளிக்கவில்லை. கடந்த 22-ம் தேதி நான் ஹோட்டலில் இருந்து கிளம்பியபோது முருகன் மற்றும் மேலாளர் சேனாதிபதி என்னைக் கட்டிவைத்து பைப் போன்றவற்றைக் கொண்டு பல மணி நேரம் அடித்தனர். இந்தச் செய்தி புகைப்படங்களாக சமூக வலைதளங்களில் வெளிவரவே  மலேசிய காவல்துறை வழக்கு பதிவு செய்தது. பிரச்னை பெரிதாகிவிடக் கூடாது என்பதற்காக முருகனின் உத்தரவின் பேரில் கணேசன் என்னை சென்னைக்கு விமானத்தில் அனுப்பிவைத்தார். நான் திருச்சிக்கு அனுப்பிவைக்கச் சொல்லித்தான் கேட்டிருந்தேன். சென்னை வந்திறங்கியதும் சிபி என்பவர் விமான நிலையத்திலிருந்து என்னை அழைத்துச் சென்று சாலிகிராமத்தில் உள்ள ஹோட்டலில் அடைத்து வைத்தார். காயங்கள் எல்லாம் சரியான பிறகுதான் அங்கிருந்து செல்ல முடியும். இல்லையென்றால் வெட்டிப் புதைத்துவிடுவேன் என்று மிரட்டினார்” என்றார். இவரைத் தொடர்ந்து பேசிய புலம்பெயரும் தொழிலாளர்கள் உரிமைக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பொன்குமார், ``சாலிகிராமத்தில் அடைத்து வைக்கப்பட்டிருந்த முகமது யூசுப்பை விருகம்பாக்கம் காவல்துறையினர்தான் மீட்டுள்ளனர். இதுதொடர்பாக புகார் அளிக்க டி.ஜி.பி அலுவலகம் சென்றபோது சிவகங்கை ஐ.ஜி-யிடம் புகார் அளிக்குமாறு தெரிவித்தனர். சொந்த ஊருக்குச் சென்றால் இவருடைய உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது. அதனால் காவல்துறை இவருக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும். ஹோட்டல் உரிமையாளர் முருகன் மீது உரிய நடவடிக்கை எடுத்து அவரைக் கைது செய்ய வேண்டும்” என்று தெரிவித்தார். இது தொடர்பாக ஹோட்டல் உரிமையாளர் முருகனைத் தொடர்பு கொண்டபோது அவருடைய இணைப்பைப் பெற முடியவில்லை. விளக்கம் தரும் பட்சத்தில் உரிய பரிசீலனைக்குப் பின் அது பிரசுரிக்கப்படும்.
https://www.vikatan.com/government-and-politics/141013-mother-demanding-to-rescue-his-son-in-pattukottai
`ஆடியோவை கேட்க முடியவில்லை; என் மகனைக் காப்பாற்றுங்கள்' - கலெக்டர் அலுவலகத்தில் கதறிய தாய்!
`ஆடியோவை கேட்க முடியவில்லை; என் மகனைக் காப்பாற்றுங்கள்' - கலெக்டர் அலுவலகத்தில் கதறிய தாய்!
வெளிநாட்டில் வேலைக்குச் சென்ற தன் மகனை, அங்கு அடித்துத் துன்புறுத்துகிறார்கள். அவன் உடல் முழுக்க காயங்களாக இருக்கிறது. என்னைக் காப்பாற்றுங்கள் என அழுதுகொண்டே அவன் பேசும் ஆடியோவை எங்களுக்கு அனுப்பி வைத்திருக்கிறான். அதைக் கேட்டதிலிருந்து என் மனது தவிக்கிறது எப்படியாவது என் மகனை மீட்டுத் தர வேண்டும் என தாய் ஒருவர் அழுதுகொண்டே கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து மனு கொடுத்த சம்பவம் பார்த்தவர்கள் அனைவரையும் கண் கலங்கச் செய்தது.  பட்டுக்கோட்டை அருகே ஏனாதி கிராமத்தைச் சேர்ந்தவர் வீரப்பன். இவர் மலேசியாவில் உள்ள சலூன் கடையில் கடந்த ஆண்டு முதல் வேலை செய்து வருகிறார். இந்நிலையில் வீரப்பன் வேலை செய்யும் இடத்தில் சிலர் கொடுமைப்படுத்தியதோடு வேலை செய்யவிடாமல் மிரட்டியுள்ளனர். இதனால் பயந்து போன வீரப்பன் ஊருக்குத் திரும்பிவிட நினைத்து முதலாளியிடம் கூற அவரும் பார்க்கலாம் சரி எனக் கூறியிருக்கிறார். இதையடுத்து 3 நாள்கள் கழித்து கடையில் 2 லட்சம் பணத்தைக் கையாடல் செய்துவிட்டதாகக் கூறி ஊருக்கு அனுப்பாமல் கடை உரிமையாளர் வீரப்பனை அடித்துத் துன்புறுத்தியுள்ளார். மேலும், குடும்பத்தினருக்கு போன் செய்து 2 லட்சம் பணத்தைக் கொடுத்தால் தான் மகனை ஊருக்கு அனுப்புவேன் என மிரட்டியுள்ளார். இந்த நிலையில் கடந்த சில நாள்களாக மருது ரத்த காயத்துடன் இருப்பதுபோல் உள்ள போட்டோவும் தான் வேலை பார்க்கும் நிறுவனத்தில் தன்னை அடித்துத் துன்புறுத்துவதாகவும் பேசும் ஆடியோ ஒன்றையும் வீரப்பன் வாட்ஸ் அப் மூலம் அனுப்பியுள்ளார். மேலும், எப்படியாவது என்னைக் காப்பாற்றுங்கள் என அதில் அழுதபடியே கூறியுள்ளார். அதன் பிறகு வீரப்பனின் தாய் இந்திரா அழுதபடியே தன் உறவினர்களுடன் இன்று தஞ்சாவூர் கலெக்டர் அலுவலகத்துக்கு மனு கொடுப்பதற்காக வந்தார்.  இது குறித்து இந்திரா கூறியதாவது, ``கடந்த 23-ம் தேதி என் மகன் போனில் கடைசியாகப் பேசினான். அதன் பிறகு அவனை தொடர்புகொள்ள முடியவில்லை. வெளிநாட்டில் அவன் வேலை செய்யும் இடத்தில் அவனைச் சித்ரவதை செய்து கொடுமைப்படுத்துகின்றனர். உடல் முழுக்க காயங்களோடு இருக்கும் படத்தையும் எப்படியாவது என்னைக் காப்பாற்றுங்கள் என அழுதபடி அவன் பேசும் குரலையும் கேட்ட பிறகு என மனது தவிக்கிறது. குடும்ப கஷ்டத்துக்காகக் கடன் வாங்கி அவனை வெளிநாட்டுக்கு அனுப்பி வைத்தேன். ஆனால், அங்கே என் புள்ளை படாதபாடு பட்டு வருகிறான். அசம்பாவிதங்கள் ஏதும் நிகழ்வதற்குள் என் மகனை மீட்டுத் தர வேண்டும் என டி.ஆர்.ஓ.,சக்திவேலிடம் மனு கொடுத்திருக்கிறேன். இரண்டு நாட்களில் மகனை மீட்டுக் கொண்டு வருவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தரப்பில் கூறியிருக்கிறார்கள் என்றார். தாய்க்கே உரியத் தவிப்புடன் அழுதபடி அவர் மனு கொடுத்துச் சென்ற சம்பம் பார்ப்பவர்கள் அனைவரையும் கலங்கச் செய்தது.
https://www.vikatan.com/health/diet/politics-behind-the-palm-oil-import-from-malaysia
பாமாயில் நல்லதா, கெட்டதா? ஆயில் அரசியலும் அதன் பின்னணியும்
பாமாயில் கலப்படத்தை அதன் நிறத்தை வைத்தே கணித்துவிடலாம். இதன் சிவப்பு நிறத்துக்குக் காரணம், இதில் இருக்கும் கரோட்டின். ஆனால், இதில் சில ரசாயனங்கள் சேர்த்து வெள்ளை நிற பாமாயிலாக மாற்றப்படுகிறது!
கடந்த ஜனவரி 8-ம் தேதி, உலகின் மிகப்பெரிய சமையல் எண்ணெய் இறக்குமதியாளரான இந்தியா, பாமாயில் மற்றும் பாமொலின் பற்றிய அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில், சுத்திகரிக்கப்பட்ட பாமாயில் இறக்குமதி பத்தியில், "இலவசம்" என்பதிலிருந்து "கட்டுப்படுத்தப்பட்டது" என்று மாற்றம் செய்யப்பட்டிருந்தது. அதாவது, இனி இந்தியா கச்சா பாமாயிலை மட்டுமே இறக்குமதி செய்ய முடியும். இந்நிலையில், கச்சா பாமாயிலின் மிகப்பெரிய ஏற்றுமதியாளரான இந்தோனேசியாவிற்கு இது வரப்பிரசாதம் என்றாலும், சுத்திகரிக்கப்பட்ட பாமாயில் மற்றும் பாமொலின் ஆகியவற்றின் முதன்மை சப்ளையரான மலேசியாவைப் பெரிதளவு பாதிக்கும். இந்தத் தடைக்கு முதன்மைக் காரணம், மலேசியப் பிரதமர் மஹதிர் முகமது, சமீபத்தில் மோடி அரசாங்கம் குறித்து விமர்சித்ததே என்று இந்திய அரசாங்கமும் தொழில்துறை வட்டாரங்களும் அந்நாட்டுப் பத்திரிகையாளர்களிடம் பகிர்ந்துகொண்டுள்ளனர். கடந்த வருடம் அக்டோபர் மாதம், மலேசிய பிரதமர் மஹதிர், "இந்தியா, காஷ்மீரை படையெடுத்து ஆக்கிரமித்துள்ளது" என்று குற்றம் சாட்டினார். மேலும், இந்திய அரசு வெளியிட்ட புதிய குடியுரிமைச் சட்டம் அமைதியின்மையைத் தூண்டுவதாகவும் குறிப்பிட்டார். மஹதிரின் இந்தக் குறிப்பு, இந்திய அரசுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்தே, பாமாயில் இறக்குமதி இந்தியாவில் ரத்து செய்யப்பட்டது. மலேசியப் பொருளாதாரத்திற்கு பாமாயில் மிகவும் முக்கியமானது. ஏனென்றால், இது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2.8 சதவிகிதமும், மொத்த ஏற்றுமதியில் 4.5 சதவிகித பொருளாதாரத்தையும் ஈட்டிக் கொடுக்கிறது. மலேசியாவின் மிகப்பெரிய வாடிக்கையாளராக இருந்த இந்தியா, பாமாயில் ஏற்றுமதியில் கடந்த ஆண்டு 28 சதவிகிதம் தொட்டது. இது, முந்தைய ஆண்டைவிட இரண்டு மடங்கு அதிகம். இந்நிலையில், மலேசியா தனது பாமாயில் வர்த்தகத்தைப் பாகிஸ்தானுடன் விரிவுபடுத்தக்கூடும் என்று அரபு செய்தி தெரிவித்தது. 2018-ம் ஆண்டு, மலேசியாவிலிருந்து 2.97 பில்லியன் (730 மில்லியன் டாலர்) மதிப்புள்ள 1.16 மில்லியன் மெட்ரிக் டன் பாமாயிலை பாகிஸ்தான் இறக்குமதி செய்தது. உலகில், தாவர எண்ணெய்களை இறக்குமதிசெய்யும் மிகப்பெரிய நாடு இந்தியா. அதாவது, ஆண்டுதோறும் சுமார் 15 மில்லியன் டன்களை வாங்குகிறது. இதில், பாமாயில் 9 மில்லியன் டன்கள், சோயாபீன் மற்றும் சூரியகாந்தி எண்ணெய் இரண்டும் சேர்ந்தது மீதமுள்ள 6 மில்லியன் டன். 60 சதவிகித சந்தைப் பங்குடன் இந்தியாவின் மிகப்பெரிய பாமாயில் ஏற்றுமதியாளராகச் செயல்பட்டுவருகிறது இந்தோனேசியா. ஆனால், அங்கிருந்து கச்சா பாமாயில் மட்டுமே இறக்குமதி செய்யப்படுகிறது. பாமாயிலின் தோற்றம் முதல் அதன் சுகாதார நலன்கள்வரை பகிர்ந்துகொள்கிறார், மருத்துவ உணவியல் நிபுணரும் ஊட்டச்சத்து மற்றும் உணவுமுறைகள் துறையின் உதவிப் பேராசிரியருமான இந்திராணி . "உண்ணக்கூடிய இந்த வெஜிடபிள் ஆயில், சுமார் ஐந்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிலிருந்தே மனிதர்களால் உபயோகப்படுத்தப்பட்டிருக்கிறது. எகிப்தில் உள்ள அபிடோஸ் பகுதியில்தான் முதல்முறையாக பாமாயில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இங்கிருந்துதான் பின்னாள்களில் மற்ற நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டிருக்கிறது.கடற்கரை ஓரங்களில், வளர்ந்த மரத்திலிருந்து ஒரு வகையான சிவப்புநிற பழத்திலிருந்து பாமாயில் எடுக்கப்பட்டிருக்கிறது. இதைத் தொடர்ந்து, கடற்கரைகள் அதிகமுள்ள இந்தோனேசியா, மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் இந்த மரங்களை வளர்த்து சோதனை செய்துபார்த்துள்ளனர். அதன் தொடர்ச்சியாகவே, குறிப்பிடப்பட்டுள்ள இடங்களில் பாமாயில் உற்பத்தி அதிகமானது. பழத்தின் சதைப்பகுதியிலிருந்து (Pulp) எடுப்பது மற்றும் பழத்தின் கொட்டையிலிருந்து எடுப்பது எனப் பாமாயிலை இரண்டு வகையாகப் பிரிக்கலாம். பழத்தின் சதைப்பகுதி சிவப்பு நிறத்தில் இருக்கும். எனவே, தூய்மையான எண்ணெயின் நிறம் சிவப்பு. இந்தோனேசியாவைத் தொடர்ந்து மலேசியா, நைஜீரியா, தாய்லாந்து உள்ளிட்ட நாடுகள் பாமாயில் உற்பத்தியில் அடுத்தடுத்த நிலையில் இருக்கின்றன. ஒரு பெரிய கொத்தில் இருக்கும் பழங்களின் சதைப்பற்றான பகுதியிலிருந்துதான் (Pulp) பெரும்பாலும் பாமாயில் எடுக்கப்படுகிறது. ஒரு கொத்தின் எடை 10-15 கிலோ இருக்கும். அதில், ஆயிரத்திலிருந்து மூவாயிரம் பழங்கள் இருக்கும். அதிலிருந்து 22 முதல் 25 சதவிகிதம்வரை எண்ணெய் எடுக்கலாம்.100 கிராம் எண்ணெயில் 884 கிலோ கலோரிகள் உள்ளன. வேறு எந்தப் பழத்திலும் கிடைக்காத வைட்டமின் ஈ நிறைந்துள்ள tocotrienols என்ற ரசாயனம் இதில் இருக்கிறது. அதுவும், ரீஃபைண்டு செய்யப்படாத எண்ணெயில் மட்டுமே இந்த வைட்டமின் சத்து நிறைந்திருக்கும். பாமாயில் கலப்படத்தை அதன் நிறத்தைவைத்தே கணித்துவிடலாம். இதன் சிவப்பு நிறத்துக்குக் காரணம், இதில் இருக்கும் கரோட்டின். ஆனால், இதில் சில ரசாயனங்கள் சேர்த்து வெள்ளை பாமாயிலாக மாற்றும்போது, எண்ணெய் கலப்படமாகிறது. இந்த ரீஃபைண்டு ஆயில், பிஸ்கட், கேக், பீநட் பட்டர், சிப்ஸ் போன்றவை தயாரிப்பதில் பயன்படுத்தப்படுகிறது. இது, உடலுக்குப் பல தீங்குகளை விளைவிக்கும். பேக்கரிப் பொருள்கள் தயாரிப்பில் பெரிய பங்கு பாமாயிலுக்கு உண்டு.மீதமிருக்கும் சக்கையை விலங்குகளுக்கு உணவாகப் பயன்படுத்துகிறார்கள்.2017-ம் ஆண்டு மார்ச் மாதம் Deutsche Welle பத்திரிகை தயாரித்த ஆவணப்படம் ஒன்றில், ஜெர்மன் ஆல்ப்ஸில் உள்ள பால் பண்ணைகளில், கன்றுகளுக்கு உணவளிக்க பாலுக்கு மாற்றாக பாமாயில் பயன்படுத்தப்படுவதைக் குறிப்பிட்டிருந்தனர். சில இடங்களில், இதிலுள்ள அதிகப்படியான மீத்தைல்-எஸ்தர் வேதியியல் பொருள்களை உபயோகித்து, பயோ-கேஸாகவும் பயன்படுத்துகிறார்கள்.இதில் ஆன்ட்டி-மைக்ரோபியல் தன்மை (Anti-Microbial Substance) இருப்பதால், இதைக் காயங்களை ஆற்றும் மருந்தாகவும் பயன்படுத்துகின்றனர். உடலிலுள்ள தேவையற்ற கொழுப்பை வெளியேற்றும்.இதய பிரச்னைகளிலிருந்து பாதுகாக்கும்.மூளை ஆரோக்கியத்தை மேம்படுத்தும். உடலில் வைட்டமின் ஏ அளவை அதிகரிக்கும்.சரும ஆரோக்கியம் காக்கும்.இந்த நற்குணங்கள் அனைத்தும் தூய சிவப்பு பாமாயிலில் மட்டும்தான் உள்ளன. இதில் நிறைவுற்ற கொழுப்பு அமிலங்கள் (saturated fatty acids) அதிகமுள்ளது என்பது மிகப் பெரிய குறைபாடு."
https://www.vikatan.com/science/136839-malaysia-passenger-jet-on-google-maps-crashed-in-remote-cambodian-jungle
கூகுள் எர்த் வரைபடத்தில் காணாமல்போன மலேசிய விமானம்?
கூகுள் எர்த் வரைபடத்தில் காணாமல்போன மலேசிய விமானம்?
2014 -ம் ஆண்டு மார்ச் மாதம் 8 தேதி, மலேசியாவின் கோலாலம்பூரில் இருந்து 239 பயணிகளுடன் பெய்ஜிங்கிற்குச் சென்ற போயிங் 777 வகை விமானம் காணாமல்போனது. விமானத்தில் பயணித்த பயணிகள் மற்றும் விமானத்துக்கு என்ன நிகழ்ந்தது என்பதுகுறித்து இப்போது வரை கண்டுபிடிக்க முடியாமல் இருந்துவருகிறது. விமானத்தின் உடைந்த பாகங்கள் கிடைத்தன என்று அவ்வப்போது செய்திகள் வந்தாலும், அவை எதுவும் இப்போது வரை உறுதிசெய்யப்படவில்லை.   இதற்கிடையில், விமானத்தின் பாகங்கள் கம்போடியாவின் தலைநகரான Phnom Penh நகரத்திற்குப் பக்கத்தில் இருக்கும் உயர்ந்த மலைக் காடுகளில் கிடப்பதாக, கடந்த 3-ம் தேதி பிரிட்டிஷ் தொழில்நுட்ப நிபுணர் இயன் வில்சன் 'டெய்லி ஸ்டார்' (DAILYSTAR ) என்கிற செய்தி நிறுவனத்துக்குத் தகவல் தெரிவித்தார். அதற்கு ஆதாரமாக,  கூகுள் செயற்கைக்கோள் வரைபடம் ஒன்றை வெளியிட்டார். அதில், விமானம் விழுந்துகிடப்பது தெளிவாகத் தெரிந்தது. செயற்கைக் கோள் வரைபடத்தில் இருக்கும் விமானத்தின் நீளம், 70 மீட்டர்கள் இருப்பதாகவும், காணாமல்போன மலேசியா விமானம் 63.9 மீட்டர் அளவுகொண்டது என்றும் பல்வேறு ஆராய்ச்சியாளர்களும் தெரிவித்தனர். விமானத்தின் வால் பகுதி உடைந்து காணப்படுவதால், படத்தில் இருப்பது மலேசியா போயிங் விமானமாக இருக்கலாம் என நம்பப்பட்டது. அதன்படி, வான்வழித் துறை ஆராய்ச்சியாளர்கள் கடந்த மூன்று நாள்களாக ஹெலிகாப்டர் உதவியுடன் வரைப்படம் காட்டிய இடத்தில் விமானத்தின் பாகங்கள் இருக்கிறதா என்பதைத் தேடிவருகின்றனர். இதைத் தொடர்ந்து, சீனாவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான ஸ்பேஸ் வியூ என்கிற நிறுவனம் 'இயன் வில்சன்' குறிப்பிட்ட, கம்போடிய மலைப் பகுதிகளில் தன்னுடைய செயற்கைக்கோள் உதவியுடன் விமானத்தின் பாகங்கள் இருக்கிறதா எனத் தேடியது. தேடுதலின் கடைசியில் 2015, 2016, 2017 -ம் ஆண்டுகளின் செயற்கைக் கோள் வரைபடங்களைக்கொண்டு ஆராய்ந்து பார்த்ததில், குறிப்பிட்ட பகுதியில் எந்த விமானமும் இல்லை எனத் தெரிவித்தது. தொடர்ந்து தேடுதல் பணி நடைபெறுகிறது. 
https://www.vikatan.com/trending/viral/malaysia-prime-minister-dance-video-goes-viral
குழந்தை நளினம்... குட்டிக் குட்டி ஸ்டெப்ஸ்... மகளோடு மலேசியப் பிரதமரின் 'க்யூட்' டான்ஸ்! #Viralvideo
சிம்பிள் ஸ்டெப்புகளால் அரங்கிலிருந்த அனைவர் மனதையும் கொள்ளை கொண்டார். தற்போது இணையவாசிகளின் 'க்யூட்' கமென்ட்களை அள்ளி வருகிறார்.
தன் மகளின் அழைப்பை ஏற்று மலேசியப் பிரதமர் மகாதீர் ஆடிய அழகு நடனம்தான் தற்போது இணையமெங்கும் செம்ம வைரல். மலேசிய அரசின் ஏழாவது பிரதமராகப் பதவி வகிப்பவர், முஹமது மஹதீர். மலேசிய மக்களின் பிரியத்துக்குரிய பிரதமராக வலம் வருகிறார். தன் முதிய வயதிலும் தவறாமல் உடற்பயிற்சிகளையும் உணவுக் கட்டுப்பாட்டையும் கடைப்பிடித்து உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தி வருபவர். மகாதீரின் மகள் மரீனா. இவர் பல்வேறு தொண்டு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார். மலேசியாவின் சபாஹ் சர்வதேசக் கருத்தரங்கு மையத்தின் நிகழ்வொன்றில் கலந்துகொள்ள பிரதமர் வருகை தந்திருக்கிறார். அதில் நடைபெற்ற கொண்டாட்ட பார்ட்டியில் மகள் மரீனா நடனமாடியபடியே, தந்தை மகாதீரையும் ஆடுவதற்கு அழைத்தார். அந்த உற்சாகத் தருணத்தில் மகளோடு இணைத்துக்கொண்டு, சின்னச் சின்ன அசைவுகளால் அட்டகாச நடனத்தை நிகழ்த்தினார், 94 வயது இளைஞரான மகாதீர். இதைக் கண்டு மகிழ்ந்த பார்வையாளர்கள் உற்சாக ஒலி எழுப்பி ஆரவாரம் செய்தனர். இடமும் வலமும் மாறி மாறி கால்களை எட்டு வைத்து, இடுப்பை அப்படி இப்படி என அசைத்து, முன்னும் பின்னும் நகர்ந்து வட்டமடித்து.. சிம்பிள் ஸ்டெப்புகளால் அரங்கிலிருந்த அனைவர் மனதையும் கொள்ளை கொண்டார், மகாதீர். தற்போது இணையவாசிகளின் 'கியூட்' கமென்ட்களை அள்ளி வருகிறார். பிரதமர் பதவியின் வேலைப்பளு கொடுக்கும் பிரஷரையும், தனது வயதையும் தாண்டி தன்னை இவ்வளவு உற்சாகமாக வைத்திருக்கிறாரே என ஆச்சர்யத்தையும் கைதட்டல்களையும் பொழிந்து வருகிறது வலையுலகம். உங்களுக்கு இன்னும் வயசாகல பிரதமரே!
https://www.vikatan.com/government-and-politics/what-happened-to-malaysia-flight-mh370-mystery
என்ன ஆனது மலேசிய விமானம் MH370? : மர்மங்களின் கதை | பகுதி 5
அதிகாலை 12.42 மணிக்கு வானேறிய MH370 விமானம் கடைசியாக தொடர்புக்குள் இருந்தது 1.20 மணி வரை. ராடாரில் காணாமல் போன 1.21 மணிக்கு Transponder கருவி அணைக்கப்பட்டிருக்கிறது.
- ஆர்.எஸ்.ஜெ எல்லா நாட்களை போலவும் அந்த நாளிலும் மலேசியாவின் கோலாலம்பூர் விமான நிலையம் பரபரப்பாக இருந்தத. சீனாவின் பெய்ஜிங்குக்கு காலை 6.30 மணிக்கு சென்று சேர வேண்டிய மலேசிய விமானம், 227 பயணிகளை ஏற்றிக் கொண்டு அதிகாலை 12.42 மணிக்கு புறப்பட்டது. விமானப்பாதையில் ஓடி MH370 என்ற அந்த விமானம் வானேறியது. பொழுது விடிந்து 6.30 மணி ஆனது. MH370 விமானம் பெய்ஜிங் சென்று சேரவேயில்லை.பணியாளர்களும் பைலட்டுகளும் சேர்ந்து மொத்தமாக 239 பேர் விமானத்தில் இருந்தனர். எவரை பற்றியும் எந்தவித எந்த தகவலும் கிடைக்கவில்லை. மார்ச் 8, 2014 ஓடுதளத்திலிருந்து வானேறியதும் வான் போக்குவரத்து மையத்தின் கட்டுப்பாட்டிலிருந்து லம்ப்பூர் ரேடாரின் கட்டுப்பாட்டுக்கு விமானம் சென்றது. MH370 விமானத்தின் கடைசியான தகவல் பரிமாற்றம் 1.19 மணிக்கு நடந்திருக்கிறது. வியட்நாம் நாட்டின் வான்வெளிக்குள் விமானம் நுழைவதை லம்ப்பூர் வான் போக்குவரத்து மையம் உறுதிப்படுத்த, விமானத்தின் தலைமை பைலட் கேப்டன் சகரி அதை ஏற்றார். வியட்நாம் வான்வெளிக்குள் நுழைந்ததும் ஹோசிமின் வான் போக்குவரத்து மையத்துக்கு விமானத்திலிருந்து தகவல் கிடைத்திருக்க வேண்டும். கிடைக்கவில்லை.MH370 விமானத்தின் ட்ராண்ஸ்பாண்டர் இயக்கம் நின்றவுடன், விமானம் வலது பக்கத்துக்கு திரும்பியதாக மிலிட்டரி ராடார் கண்டறிந்திருக்கிறது. வலதுபக்கம் திரும்பி இடது பக்கம் திரும்பியிருக்கிறது. 1.52 மணிக்கு பெனாங்க் தீவின் தெற்கே விமானம் பறந்திருக்கிறது. கடைசியாக மலேசியாவின் மிலிட்டரி ரேடாரின் தகவல்படி விமானம் பெனாங் விமான நிலையத்தின் வட மேற்கில் பறந்திருக்கிறது.12.45 மணிக்கு வானேறிய விமானம் அரை மணி நேரம் மட்டுமே நேரடி தொடர்புக்குள் இருந்திருக்கிறது. அதற்கு பின் விமானம் கொடுத்த சமிக்ஞைகள் மட்டுமே. அவையும் அடுத்த சில மணித்துளிகளில் நின்றுவிட்டது. 239 பேரை கொண்ட விமானம் சீனாவுக்கு சென்று சேராமல் புறப்பட்ட இடத்துக்கே திரும்பி, அந்த இடத்தையும் சென்று சேராமல் தென்னிந்திய பெருங்கடலை நோக்கி நேராக பயணித்திருக்கிறது.மூன்று வாரங்களுக்கு பிறகு மலேசிய பிரதமர் நஜீப் ரசாக் ஊடகங்களை சந்தித்தார். விபத்துகளை துப்பறியும் பிரிவு மற்றும் செயற்கைக்கோளின் தகவல்கள்படி கடைசியாக விமானம் தென்னிந்திய பெருங்கடலுக்கு மேல் பறந்ததாகவும் அங்கு விமானம் இறங்கும் தளம் ஏதுமில்லை என்பதால் கடலில் விழுந்திருக்கலாம் என்றும் அறிவித்தார். MH370 விமானத்தின் மர்மத்துக்கு காரணமாக மூன்று முக்கியமான விஷயங்கள் சொல்லப்படுகின்றன. 1. தொழில்நுட்ப கோளாறு 2. திட்டமிட்ட சதி 3. தீவிரவாத தாக்குதல். முதல் விஷயமான தொழில்நுட்ப கோளாறு இயல்பாகவே விமானங்களில் ஏற்படுவதுதான். அவற்றை உடனுக்குடன் தெரியப்படுத்துவதற்கான வழிமுறைகள் இருக்கின்றன. எல்லா விமான கட்டுப்பாட்டு மையங்களும் எப்போதுமே சேதிகளை அறிந்துகொள்ளவும் அனுப்பவும் தயார் நிலையிலேயே இருக்கின்றன. எல்லா நாடுகளிலும் Air Traffic Control எனப்படும் வான் போக்குவரத்து கட்டுப்பாட்டு மையங்கள் இருக்கின்றன. அந்தந்த நாடுகளின் வானுக்குள் நுழையும் எந்த விமானமும் இவர்களின் அனுமதி பெற்றுத்தான் நுழைய முடியும். அனுமதி இல்லையென்றால் எச்சரிக்கை கொடுக்கப்படும். பிற நாடுகளின் வான் கட்டுப்பாட்டு மையங்கள் தொடர்பு கொண்டு விசாரிக்கப்படும். எங்கும் நம்பகத்தன்மை வாய்ந்த தகவல் கிடைக்கவில்லையெனில் ராணுவ நடவடிக்கை முன்னெடுக்கப்படும். விமான போக்குவரத்தைக் கண்காணிக்க பயன்படும் வழிகளில் முதன்மையானது ராடார். வான்வெளியில் கிடைக்கும் சமிக்ஞைகளை கொண்டு விமானங்கள் அடையாளம் காணப்படும். முதன்மை ராடார் அல்லாமல் secondary radar மற்றும் மிலிட்டரி ராடார் ஆகியவையும் இருக்கின்றன. எல்லாவற்றுக்கும் மேலாக செயற்கைக்கோள் இருக்கிறது. விமானத்திலுள்ள transponder என்னும் கருவி, சமிக்ஞைகளை ராடாருக்கு அனுப்பி தன் இருப்பிடத்தை அறிவித்துக் கொண்டே இருக்கும். பைலட்டுகள் கட்டுப்பாட்டு மையத்துக்கு அனுப்பும் சேதிகள் அடிப்படையான தொடர்புவகையைச் சேரும்.இவை ஏதுமின்றி எந்த கண்காணிப்புக்கும் தட்டுப்படாமல் விமானம் பறந்து செல்லக் கூடிய வழி இல்லையா என கேட்டால், இருக்கிறது என்பதே பதில். நிலத்தில் இருந்து அனுப்பப்படும் ராடார் சமிக்ஞைகள் வானுக்கு சென்று பரவுவது குறிப்பிட்ட ஓர் உயரத்துக்கு மேல்தான். அந்த உயரத்தை தொடாமல், தாழ்வாக விமானம் பறந்தால் ராடாரின் வளையத்துக்குள் விமானம் சிக்காது. ஆனால் அந்த உயரத்தில் நிலப்பகுதிக்குள் பறக்கும்போது மிக எளிமையாக மக்களுக்கு புலப்பட்டு விடும். வழக்கமான உயரத்தை காட்டிலும் குறைவான உயரம் என்பதால் மிக எளிதாக மக்களுக்குள் சந்தேகம் கிளப்பிவிடும். பிறகு ராணுவ நடவடிக்கைதான். MH370 விமான விபத்துக்கான இரண்டாவது காரணமாக திட்டமிட்ட சதி கூறப்படுகிறது. சதி என ஆலோசிக்கப்பட்டதற்கு முக்கிய காரணம் MH370 விமானத்தின் Transponder கருவி அணைக்கப்பட்டதே.அதிகாலை 12.42 மணிக்கு வானேறிய MH370 விமானம் கடைசியாக தொடர்புக்குள் இருந்தது 1.20 மணி வரை. ராடாரில் காணாமல் போன 1.21 மணிக்கு Transponder கருவி அணைக்கப்பட்டிருக்கிறது. தொழில்நுட்ப கோளாறாக இருந்திருந்தால், மொத்த விமானத்திலும் அது வெளிப்பட்டிருக்கும். வான் கட்டுப்பாட்டு மையத்துக்கு தகவல் சென்று சேர்ந்திருக்கும். அப்படி எந்த தகவலும் வரவில்லை என்பதால், விமானத்துக்குள் இருந்தே transponder கருவி யாரோ ஒருவரால் அணைக்கப்பட்டிருக்கலாம் என யூகிக்கப்படுகிறது. Transponder கருவியை பைலட் மட்டுமே இயக்க முடியும். ஆதலால் விபத்துக்கான மொத்த சந்தேகமும் விமானத்தின் முதல் கேப்டனான சகாரி அகமது ஷா மீதும் விழுந்திருக்கிறது. சந்தேகத்துக்கேற்பவே அவர் நடத்தையும் இருந்ததே இன்னும் சந்தேகத்தை வலுப்படுத்தியிருக்கிறது.சகாரி அகமது ஷா 53 வயதானவர். அவரது மனைவியும் மக்களும் அவரை பிரிந்து விட்டிருந்தனர். காரணம், அவர் கொண்டிருந்த பெண்கள் தொடர்பு. அது பிரச்னையாகி அவரது குடும்பம் பிரிந்து அவர் தனிமையில் இருந்திருக்கிறார். விமானம் ஓட்டாத காலத்தில் அவருக்கு இருந்த முக்கியமான பொழுதுபோக்குகள் இரண்டுதான் என்கிறார்கள் அவரின் நண்பர்கள். முகநூல் போன்ற சமூக ஊடகங்கள், ஒன்று. இன்னொன்று அவர் வீட்டுக்குள்ளேயே உருவாக்கி வைத்திருந்த Flight Simulator. Flight Simulator என்பது வீடியோ கேம் போல. ஒரு விமானத்தின் பைலட் இருக்கும் அறையை போல வீட்டிலேயே உருவாக்கிக் கொள்ள முடியும். விமான ஓட்டி அமர்ந்து எதிரில் கண்ணாடி வழியே பறக்கும் வானை பார்ப்பது போல் திரையில் இயக்கத்துக்கு ஏற்ப படம் தெரியும். விமானம் ஓட்டுவதற்கான சாதனங்கள் எல்லாமும் அறைக்குள்ளே இருக்கும். அந்த சாதனங்களை இயக்குகையில், இயக்கத்துக்கு ஏற்ப திரையில் படங்கள் தோன்றும். உதாரணமாக வீட்டின் அறைக்குள் இருந்துகொண்டு, விமானத்தை எழுப்புவதற்கான சாதனங்களை பயன்படுத்தினால், திரையில் விமானம் எழும் தோற்றம் உருவாகும்.MH370 விபத்துக்கு பிறகு, சந்தேகங்கள் அனைத்தும் சகாரியின் மீது குவிய முக்கிய காரணமாக இருந்தது Flight Simulatorதான். ஏனெனில், சகாரி வைத்திருந்த Flight Simulator-ல் இணைக்கப்பட்டிருந்தது MH370 ரக விமான மாதிரி. அதில் அவர் ஓட்டி பழகிய பாதை தென்னிந்தியக் கடல். எரிபொருள் தீரும் வரை ஒவ்வொரு முறையும் simulator-ஐ ஓட்டி பழகியிருக்கிறார். எல்லாம் சரி. ஆனால் சகாரிதான் விமானத்தை விபத்துக்குள்ளாக்கினார் என்பதற்கான சாத்தியம் என்னவென்ற கேள்விக்கு வில்லியம் லேங்கெவீஷ் (WILLIAM LANGEWIESCHE) போன்ற பத்திரிகையாளர்கள் ஆராய்ந்து சொல்லும் பதில் இதுதான்.தான் கொண்டிருந்த மனஅழுத்தத்தாலும் தனிமையாலும் மரணத்துக்கு சகாரி தயாராகி இருக்கலாம். தன்னை இந்நிலைக்கு கொண்டு வந்து நிறுத்தியதாக சமூகத்தின் மீது அர்த்தமற்ற கோபம் கொண்டு, விமானத்தை பயணிகளோடு கொண்டு சென்று கடலில் மோதி விபத்துக்குள்ளாக்கி இருக்கலாம். ஆனால் விமான ஓட்டியின் அறைக்குள் இரண்டு விமான ஓட்டிகள் இருப்பார்கள். அதில் ஒருவரான சகாரி விமானத்தை விபத்துக்குள்ளாக்கும் முடிவை எடுத்திருந்தாலும் அடுத்தவர் எப்படி சம்மதித்திருப்பார்?அதற்கு பதிலளிக்கும் வில்லியம், `சகாரியுடன் இருந்த விமான ஓட்டி குறைந்த அனுபவத்தைக்கொண்டவர். சரியாக சொல்வதெனில் சகாரிக்கு ஜூனியர். அவரை கழற்றி விடுவது ரொம்ப சுலபம். விமான ஓட்டி அறைக்கு வெளியே சென்று எதையேனும் பரிசோதிக்க சொல்லியிருக்கலாம்’ என்கிறார்.சக விமான ஓட்டியை வெளியே அனுப்பிவிட்டு, சகாரி தன் வேலையை தொடங்கி இருக்கக்கூடும். விமானத்தை இன்னும் அதிகமாக, 40,000 அடி உயரத்துக்கு மேலேற்றி, காற்றழுத்தும் இல்லாத நிலைக்கு கொண்டு சென்றிருக்கலாம். காற்றழுத்தமும் ஆக்சிஜனும் இல்லாத நிலையில், பயணிகள் மயங்கியிருப்பார்கள். மயக்கத்திலேயே சில மணிகளில் மரணத்தை தழுவியிருப்பார்கள். பிறகு சாவகாசமாக சகாரி தன் Flight Simulator-ல் ஓட்டி பயிற்சி பெற்ற தென்னிந்திய பெருங்கடலை நோக்கி நேராக விமானத்தை செலுத்தியிருக்கலாம். சகாரியின் சக விமான ஓட்டியான ஃபாரிக் அகமதுக்கு அப்போதுதான் திருமணம் நிச்சயமாகி இருந்தது. இன்னும் அந்த விமானத்தில் இருந்த பலருக்கும் பல கனவுகள் இருந்திருக்கலாம். தொழில்நுட்பக் கோளாறோ திட்டமிட்ட சதியோ எதுவாகினும் அவர்களின் அத்தனை பேரின் கனவுகளும் இந்தியப் பெருங்கடலின் ஏதோவொரு ஆழத்தில் புதைந்திருக்கும்.MH370 விமானம் கடலிலேயே விழுந்திருந்தாலும் அதன் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டிருக்குமே என்ற கேள்விக்கு, ஒரே ஒரு பாகம் மட்டும் கிடைத்தது என்பதே பதில். அந்த பாகமும் மனித அறிவால் கண்டுபிடிக்கப்படவில்லை. ஆப்பிரிக்கத் தீவின் கடலோரத்தில் கரையொதுங்கி தன்னை அடையாளம் காட்டிக் கொண்டது. MH370 விமானத்தின் இறக்கையில் இருக்கும் ஒரு பகுதி அது.சகாரி பற்றிய ஊகத்தை சொன்ன வில்லியம், MH370 தன் பயணத்தை முடித்திருக்கக் கூடிய விதத்தையும் கூறுகிறார். அந்த பெரும் உலோகப் பறவையில் அநேகமாக ஒரே ஒருவர் உயிரோடு இருந்திருக்கலாம். விமான ஓட்டியின் அறைக்குள் ஏதோவொரு நிம்மதி நெஞ்சை கவ்வ அவர் அமர்ந்திருந்திருக்கலாம். எந்த அவசரமும் இல்லாமல் இருந்திருப்பார். கதவுக்கு வெளியே 238 பேர் தங்களின் உயிர் போன கதையே தெரியாமல் விமானத்தின் போக்குக்கு உயிரற்று ஆடிக் கொண்டிருந்திருப்பார்கள். விமான ஓட்டியின் அறைக்குள்ளிருந்த எல்லா திரைகளும் காரணமின்றி பூகோளத்தை காண்பித்திருக்கும். காற்றின் பேரிரைச்சல் விமானத்துக்குள் ஊளையிட்டிருக்கும். காலை 7 மணி அளவில் கிழக்கில் சூரியன் உதித்திருப்பான். அதன் அழகை ரசித்தபடி விமான ஓட்டி விமானத்தை கடலுக்குள் செலுத்தியிருப்பார். கடலின் பரப்பை தொட்டதும் விமானம் சிதறத் தொடங்கியிருக்கும். உலோகம் நொறுங்கி உடல்களுக்குள் பாய்ந்து, அத்தனை பேரும் கடலின் அடி ஆழத்தில் இருந்த மரணத்தின் ரகசியத்தை நோக்கி சென்று கொண்டிருந்திருப்பார்கள்.மனிதனுக்கு புரிபடாத வானமும் கடலும் ஒன்றிணைந்து ஓலம் எழுப்பியிருக்கும்!பல்லாயிர வருடங்களின் மனிதச் சரித்திரத்தை உண்டுச் செரித்து அலையாடும் கடல் அலட்சியத்துடன் அலையடித்துக் கொண்டு இருக்கிறது.
https://www.vikatan.com/environment/grow-plants-in-diwali-instead-of-bursting-crackers-says-penang-sangh
"தீபாவளிக்கு வெடிக்கு பதிலாக செடி!" பினாங்கு பயனீட்டாளர் சங்கம் வேண்டுகோள்!
பட்டாசுகள் வெடிக்கப்படுவதால் காற்றில் தூசி மற்றும் மாசு அதிகரிக்கின்றன. பட்டாசுகளில் உள்ள சல்பர், துத்தநாகம், தாமிரம், சோடியம் போன்ற ஆபத்தான இரசாயனங்கள் நிரம்பிய தூசி மற்றும் மாசு படிந்த காற்று பல பகுதிகளுக்குப் பரவுகின்றன...
தீபாவளி அன்று, தீபங்களின் ஒளி பிரகாசிக்கட்டும் பட்டாசுகளின் சத்தம் குறையட்டும் என்று மலேசியாவில் உள்ள பினாங்கு பயனீட்டாளர் சங்கத்தின் கல்வி பிரிவு அதிகாரி  என்.வி. சுப்பாராவ் வேண்டுகோள் விடுத்துள்ளார். ''தீபாவளிப் பண்டிகை இந்தியாவில் மட்டுமல்ல, மலேசியாவிலும் சிறப்பாக கொண்டாடப்படுகின்றது. எந்த நாட்டில் பட்டாசு வெடித்தாலும் சூழலுக்கு பாதிப்புத்தான் ஏற்படும். பட்டாசுகள் வெடிக்கப்படுவதால் காற்றில் தூசி மற்றும் மாசு அதிகரிக்கின்றன. பட்டாசுகளில் உள்ள சல்பர், துத்தநாகம், தாமிரம், சோடியம் போன்ற ஆபத்தான இரசாயனங்கள் நிரம்பிய தூசி மற்றும் மாசு படிந்த காற்று பல பகுதிகளுக்குப் பரவுகின்றன. இந்த காற்றை மக்கள் சுவாசிக்கும்போது பல நோய்கள் வர வாய்ப்புகள் உள்ளது. மேலும் இந்த தூசி மற்றும் மாசுபடுத்திகள் நமது சுற்றுச்சூழலை அழித்து, நமது ஆரோக்கியத்தை எளிதில் கெடுகின்றது. ஆஸ்துமா உள்ளிட்ட நோய்கள் பாதித்தவர்கள் மற்றும் உடல் நலமில்லாத பெரியவர்ளுக்கு இந்த மாசு ஆபத்தை ஏற்படுத்தும். மேலும் பட்டாசுகளால் ஏற்படும் சத்தம் மற்றும் இரைச்சல் செவிமெடுக்கும் திறனை பாதிக்கிறது. பட்டாசுகளின் இரைச்சல் அளவீடுகள் அதிக ஒலி அழுத்த உச்ச அளவை உருவாக்குகின்றன என்பதைக் காட்டுகின்றன. தற்போது உள்ள பட்டாசுகளின் சத்தம் காதுகளுக்கு வலியை ஏற்படுத்துகின்றது. சில நாடுகளில் பட்டாசுகளுக்கு பயன்படுத்தப்படும் ஒலி வரம்புகள் மற்றும் அளவீட்டு முறைகள் வழங்கப்படுள்ளது.ஆகவே ஆண்டுக்கு ஒரு முறைதானே என்ற நோக்கத்தில் சுற்றுச்சூழல் மற்றும் அதிக இறைச்சலை ஏற்படுத்தும் பட்டாசுகளை பயன்படுத்தாமல் ஆளுக்கு ஒரு செடியை நட்டு நல்ல உணவை  உற்பத்தி செய்ய முயற்சிக்கலாம்" என சுப்பாராவ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
https://www.vikatan.com/government-and-politics/tamil-people-returned-after-50-days-from-other-states-and-other-countries
பசி பட்டினி.. தூங்காத இரவுகள்.. 50 நாட்களுக்கு பிறகு ஊர் திரும்பிய தமிழர்கள் வேதனை!
“கொரோனா ஊரடங்கு காரணமாக பல்வேறு பகுதிகளில் சிக்கித் தவித்த தமிழர்கள் இன்று திருச்சி வந்தடைந்தனர். கடந்த 50 நாட்களாக நாங்கள் பட்ட வலிகளைச் சொல்ல வார்த்தைகளே இல்லை” எனக் கலங்கினார்கள்.
தமிழகத்தில் இருந்து வேலை உள்ளிட்ட காரணங்களுக்காக மலேசியா நாட்டில் தங்கி இருந்தவர்கள் கொரோனா விவகாரத்தால் நாடு திரும்ப முடியாமல் தவித்து வந்தனர். இந்தியாவுக்கான அனைத்து விமான சேவைகளும் ரத்து செய்யப்பட்டதால் அவர்கள் செய்வதறியாமல் தவித்தனர். ஏற்கனவே திருச்சியில் இருந்து இரண்டு சிறப்பு விமானம் மூலம், மலேசிய நாட்டைச் சேர்ந்தவர்கள் அந்நாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்நிலையில், ஊரடங்கில் சில தளர்வுகள் செய்யப்பட்டுள்ள நிலையில், மத்திய அரசு வந்தே பாரத் மிஷன் எனும் பெயரில் வெளிநாட்டில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களைத் தாய்நாட்டுக்கு அழைத்துவரச் சிறப்பு தனி விமானங்களை அனுப்பி ஏற்பாடு செய்தது. அதன்படி மத்திய அரசு ஏற்பாடு செய்த ஏர்இந்தியா சிறப்பு தனி விமானம் மூலம் மலேசியாவில் சிக்கித் தவித்த 178 பயணிகள் நேற்று இரவு திருச்சிராப்பள்ளி விமான நிலையத்திற்கு வருகை புரிந்தனர்.திருச்சி விமான நிலையத்துக்கு வந்த அவர்களை, திருச்சி மாவட்ட சுகாதாரப்பணிகள் துணை இயக்குநர் சுப்ரமணி, வருவாய் கோட்டாட்சியர் விசுவநாதன், பொன்மலை உதவி ஆணையர் தயாநிதி, மாநகராட்சி நகர் நல அலுவலர் ஜெகநாதன், திருச்சி கிழக்கு வட்டாட்சியர் மோகன், தேர்தல் தனி வட்டாட்சியர் முத்துசாமி ஆகியோர் சகிதமாக மாவட்ட ஆட்சியர் சிவராசு வரவேற்றார். அங்கேயே திருச்சி மாவட்ட சுகாதாரத்துறையின் மூலம் கொரோனா வைரஸ் நோய்த் தொற்று பரிசோதனை செய்யப்பட்டது. தொடர்ந்து பயணிகளில் ஒருவருக்கு கிட்னி தொடர்பான பிரச்னை இருக்கவே, அவர் திருச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.சிறப்பு தனி விமானம் மூலம் வந்த யாருக்கும் கொரோனா வைரஸ் நோய் அறிகுறி இல்லை. ஆனாலும் அவர்கள் மத்திய சுகாதாரத்துறை வழிகாட்டுதலின்படி 14 நாட்கள் தனிமைப்படுத்துதல் முகாமில் தங்க வைப்பதற்காக திருச்சி மணிகண்டம் அருகில் உள்ள சேதுராப்பட்டி அரசு பொறியியல் கல்லூரி விடுதிவிடுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு சுமார் 117 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். மீதமுள்ள 60 பேர் அவர்களின் விருப்பத்தின் அடிப்படையில் குரு ஹோட்டல், ராஜசுகம் ஹோட்டல், பெமினா ஹோட்டல் மற்றும் பல்வேறு ஹோட்டல்களில் தங்கவைத்து தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். தொடர்ந்து சில தினங்களில் மற்றொரு விமானம் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. நம்மிடம் பேசிய பயணிகள், ”கொரோனா ஊரடங்கு இந்தியாவை விட மலேசியாவில் மிகக் கடுமையாக பின்பற்றப்படுகிறது. விதிமுறைகளை மீறினால், கடுமையான தண்டனைகள் விதிக்கப்படுகிறது. இதனால் சொல்லமுடியாத துயரத்துக்கு ஆளாகிப் போனோம். கொரோனா பாதிப்பு அதிகரித்தவண்ணம் இருப்பதால், குடும்பத்தைத் தமிழகத்தில் விட்டுவிட்டு, மலேசியாவில் எங்கள் மனநிலை பட்ட பாடுகளைச் சொல்ல வார்த்தைகள் இல்லை. நல்லபடியாக நாங்கள் ஊர் வந்து சேர்ந்தோம் என்பதை நம்ப முடியவில்லை” என்றார்கள். இதேபோல், மகாராஷ்டிரா மாநிலம் சோழாப்பூரில் பணிபுரிந்த தமிழகத்தில் 34 மாவட்டங்களை சேர்ந்த 962 தொழிலாளர்கள் மத்திய - மாநில அரசுகளின் நடவடிக்கையால், பந்தர்பூர் ரயில் நிலையத்திலிருந்து சிறப்பு இரயில் மூலம் அழைத்துவரப்பட்டனர். அவர்கள் இன்று திருச்சி இரயில்வே ஜங்சன் வந்து சேர்ந்தனர். அவர்கள் அனைவரையும் திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு, நேரில் பார்வையிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் 30 சிறப்பு பேருந்துகள் மூலம் சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தார். மதுராந்தகத்தைச் சேர்ந்த கார்த்திக் நம்மிடம் பேசுகையில், “கடந்த 50 நாட்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளானோம். திடீரென அறிவிக்கப்பட்ட ஊரடங்கால் கடுமையாக பாதிக்கப்பட்டோம். பல நாட்கள் சோறு இல்லாமல் பட்டினியாக கிடந்தோம். மகாராஷ்டிர மாநிலத்தில் கொரோனா வைரஸ் தாக்குதல் அதிகம் இருப்பதால் அங்குச் சூழல் மோசமாக உள்ளது. சாப்பிட வெளியே சென்றாலும் போலீஸார் கைது செய்கிறார்கள். உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு கிடந்த நாங்கள், ஊருக்கு வருவோம்னு நம்பவே இல்லை.” என்றார். திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு கூறுகையில், “இவர்கள் அனைவரும், மகாராஷ்டிரா மாநிலம் சோழாப்பூரில் பணி புரிந்தவர்கள். கொரோனா ஊரடங்கில் சிக்கிக் கொண்ட இவர்கள், சொந்த ஊருக்குத் திரும்ப வேண்டும் எனக் கோரிக்கை வைக்கவே, மத்திய, மாநில அரசுகள் அரசுகளின் நடவடிக்கையின் மூலம் அழைத்துவரப்பட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் உள்ள 34 மாவட்டங்களைச் சேர்ந்த இந்த 962 பேரையும், திருச்சியில் இருந்து சிறப்பு பேருந்துகள் மூலம் சொந்த ஊருக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். அவர்களுக்கு அந்தந்த மாவட்டத்தில் கொரோனா வைரஸ் நோய்த் தொற்று உள்ளதா எனப் பரிசோதனை செய்யப்படுவார்கள்” என்றார்.
https://www.vikatan.com/government-and-politics/coronavirus-mutation-detected-in-malaysia
மலேசியா: `கொரோனா வைரஸின் புதிய திரிபு’ - 10 மடங்கு வேகமாகப் பரவுவதாக எச்சரிக்கை
மலேசியாவில் கொரோனா வைரஸின் திரிபு எனக் கருதப்படும் 'D624G' வகை கண்டறியப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீனாவின் வுகான் நகரிலிருந்து கடந்த ஜனவரி மாதம் முதல் பரவத்தொடங்கியதாகக் கூறப்படும் கொரோனா வைரஸ் இன்று மொத்த உலக நாடுகளுக்கும் பரவி மனிதனின் இயல்பு வாழ்க்கையை வெகுவாகப் பாதித்துள்ளது. இந்தக் கொரோனா வகைகளில் பல வைரஸ்கள் இருப்பதாகவும் அது தொடர்ந்து தன் தன்மையை மாற்றிக்கொள்வதால் அதனைப் பற்றி முழுதாக அறிந்துகொள்ள முடியவில்லை என உலக சுகாதார அமைப்பு தெரிவித்து வருகிறது. இந்நிலையில் மலேசியாவில் கொரோனாவின் 'D624G' என்ற திரிபு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டுச் சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவிலிருந்து மலேசியா திரும்பிச் சென்ற ஒரு உணவக உரிமையாளர் தனது 14 நாள் தனிமைப்படுத்துதலை மீறியுள்ளார். அவர் மூலம் 45 பேருக்கு கொரோனா பரவியிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த உணவக உரிமையாளருக்கு கொரோனா திரிபு இருப்பதாகச் சந்தேகப்பட்டு அவர் தீவிர மருத்துவ பரிசோதனைகளுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார். இதன் முடிவில் அவருக்கு 'D624G' என்ற திரிபு இருப்பது உறுதியாகியுள்ளது. இதனையடுத்து அவருக்கு ஐந்து மாத சிறைத்தண்டனையும் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல் பிலிப்பைன்ஸில் இருந்து மலேசியா திரும்பும் மக்களில் சிலருக்கும் 'D624G' திரிபு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. “இந்த வகை தொற்று 10 மடங்கு வேகமாகவும் மிகவும் எளிதாகவும் மற்றவர்களுக்குப் பரவும். மலேசியாவில் இந்தத் திரிபு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். மேலும், அதிக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இந்த வைரஸை கட்டுப்படுத்த மக்களின் ஒத்துழைப்பு மிகவும் தேவைப்படுகிறது. இதன் மூலம் நம்மால் தொற்றுநோய் சங்கிலியை உடைக்க வேண்டும். பொதுமக்கள் சமூக இடைவெளியைக் கடைப்பிடித்தல், முகக்கவசம் அணிதல் உள்ளிட்ட சுகாதார நடவடிக்கைகளையும் தொடர்ந்து பின்பற்ற வேண்டும்” என அந்நாட்டு சுகாதார இயக்குநர் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்துள்ளார். இந்த வகை பிறழ்வு ஜூலை மாதம்தான் தெரியவந்துள்ளது, எனவே, தற்போதுள்ள தடுப்பு மருந்துகளால் இந்த வகை பாதிப்பைத் தடுக்க முடியுமா எனும் சந்தேகம் எழுந்துள்ளது. இதற்கிடையே மலேசியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9,200-ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் 8,859 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில் 125 பேர் பலியாகியுள்ளனர். இப்போது 216 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
https://www.vikatan.com/literature/arts/148587-2-elderly-women-killed-in-freemeal-stampede-in-malaysia
மலேசியாவிலும் இலவசம்... கூட்ட நெரிசலில் சிக்கி இரு மூதாட்டிகள் பலி!
மலேசியாவிலும் இலவசம்... கூட்ட நெரிசலில் சிக்கி இரு மூதாட்டிகள் பலி!
மலேசியாவில் இலவச உணவுக் கூப்பனை வாங்கத் திரண்ட கூட்டத்தில் சிக்கி இரு மூதாட்டிகள் பலியாகினர்.  சீன புத்தாண்டு 5 மற்றும் 6m தேதிகளில் கொண்டாடப்படுகிறது. அதை முன்னிட்டு கோலாலம்பூரில் அன்றைய தினத்தில் நடைபெறும் விருந்தில் பங்கேற்க இலவச உணவுக் கூப்பன்களை விநியோகிப்பதாகத் தனியார் நிறுவனம் அறிவித்திருந்தது. சுமார் 200 உணவுக் கூப்பன்களைப் பெற ஆயிரக்கணக்கானோர் திரண்டனர். இதனால், ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி ஆ போ (வயது 85) லா லான் நங் (வயது 78) என்ற இரு மூதாட்டிகள் பரிதாபமாக பலியாகினர். மேலும், இருவர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இலவச உணவுக் கூப்பன்களை பெற முயன்ற வயதான மூதாட்டிகள் இறந்தது மலேசியாவில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 29-ம் தேதி இந்தச் சம்பவம் நிகழ்ந்தது.  பலியான லா லான் நங்கின் மகள் கூறுகையில், ``எங்கள் தாயார் அவ்வப்போது தன் தோழிகளுடன் சேர்ந்து வெளியே செல்வார். அப்படித்தான் எங்காவது சென்றிருக்கலாம் என்று நினைத்தோம். இதுபோன்று இலவச உணவுக் கூப்பன் பெறப்போகிறார் என்றால் நிச்சயம் தடுத்திருப்போம். தாயார் கூட்ட நெரிசலில் சிக்கி இறந்தது எங்களுக்கு அதிர்ச்சியாகவும் வேதனையாகவும் உள்ளது’ என்கிறார். பணக்கார நாடான மலேசியாவிலும் இதுபோன்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது வியப்பை ஏற்படுத்தியுள்ளது. 
https://www.vikatan.com/government-and-politics/130008-we-will-not-send-zakir-naik-to-india-malaysian-pm
``ஜாகிர் நாயக்கை இந்தியா அனுப்ப முடியாது" - மலேசியப் பிரதமர்!
``ஜாகிர் நாயக்கை இந்தியா அனுப்ப முடியாது" - மலேசியப் பிரதமர்!
தீவிரவாத நடவடிக்கைகளைத் தூண்டும் வகையில் பேசியதால் இந்தியாவில் பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்டுள்ள இஸ்லாமிய மதபோதகர் ஜாகிர் நாயக்கை மலேசியாவில் இருந்து நாடு கடத்த முடியாது என்று மலேசிய பிரதமர் மஹாதிர் முகம்மது கூறியிருக்கிறார். தீவிரவாத நடவடிக்கைகளில் தொடர்பு, வன்முறையைத் தூண்டும் வகையிலான பேச்சு போன்ற குற்றச்சாட்டுகள் காரணமாக, ஜாகிர் நாயக்குக்கு எதிராக இந்தியாவில் பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. தற்போது அவர் மலேசியாவில் நிரந்தரக் குடியுரிமை பெற்று அங்கு தங்கியுள்ளார். அவரை இந்தியாவுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று ஏற்கெனவே மத்திய அரசின் சார்பில் கோரிக்கை விடப்பட்டுள்ளது.  தொலைக்காட்சிகளில் மதப் பிரசார நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் ஜாகிர் நாயக், கடந்த 2016-ம் ஆண்டு இந்தியாவிலிருந்து வெளியேறி மலேசியாவில் தஞ்சம் புகுந்தார், அங்கு அவருக்கு நிரந்தரக் குடியுரிமையை அந்நாட்டு அரசு வழங்கியுள்ளது.  இந்நிலையில், அவரை இந்தியாவுக்கு அனுப்பி வைக்குமாறு மத்திய அரசு, கடந்த ஜனவரி மாதம் மலேசியாவிடம் கோரிக்கை விடுத்தது. இந்தியா - மலேசியா இடையே குற்றம்சாட்டப்பட்டவர்களை பரஸ்பரம் ஒப்படைக்கக்கூடிய வகையிலான ஒப்பந்தம் நடைமுறையில் இருந்து வருகிறது.  இதற்கிடையே கோலாலம்பூரில் செய்தியாளர்களிடம் பேசிய அந்நாட்டுப் பிரதமர் மஹாதிர் முகம்மது, ``மலேசியாவில் ஜாகிர் நாயக் ஏதாவது பிரச்னையை உருவாக்காமல் இருக்கும்வரை, அவரை இந்தியாவுக்கு நாடு கடத்த முடியாது. அவருக்கு நிரந்தரக் குடியுரிமை அந்தஸ்தை மலேசிய அரசு வழங்கியுள்ளது" என்றார். இந்திய இளைஞர்களைத் தன்னுடைய தவறான மதப் பிரசாரத்தின் மூலம் கவர்ந்திழுத்து, அவர்களை தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபடுத்த ஜாகிர் நாயக் தூண்டியதாக ஏற்கெனவே குற்றம்சாட்டப்பட்டுள்ளது. ஆனால், தன் மீதான குற்றச்சாட்டை மறுத்துள்ள ஜாகிர் நாயக், அது முற்றிலும் பொய்யானது என்றும், அதில் உண்மை ஏதும் இல்லை என்றும் மறுத்துள்ளார். ஜாகிர் நாயக்கைப் பொறுத்தவரை, சர்ச்சைக்குரிய பேச்சு மற்றும் செயல்பாடுகள் காரணமாக, பல்வேறு விமர்சனங்களுக்கு ஆளாகினார். இதையடுத்து கடந்த 2010-ம் ஆண்டு ஜாகிர் நாயக், பிரிட்டனுக்குள் நுழைய அந்நாட்டு அரசு தடை விதித்தது. நியூயார்க் உலக வர்த்தக மையம் கடந்த 2001-ம் ஆண்டு விமானங்களைக் கொண்டு மோதி தகர்க்கப்பட்ட நிலையில், தாக்குதலுக்குக் காரணமாக விமானங்களை அல்-கொய்தா அமைப்பினர் கடத்தவில்லை என்று, 2008-ம் ஆண்டு டி.வி. நிகழ்ச்சியில் பங்கேற்றபோது ஜாகிர் நாயக் தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
https://www.vikatan.com/government-and-politics/judiciary/married-woman-can-t-claim-she-was-cheated-by-a-man-by-breaching-promise-of-marriage
`விவாகரத்து பெறாத பெண், ஓர் ஆண் திருமண வாக்குறுதி தந்து ஏமாற்றியதாக கூற முடியாது’ - உயர்நீதிமன்றம்
`அப்பெண் தன் கணவரிடமிருந்து விவாகரத்து பெறவில்லை. ஏற்கெனவே செய்த திருமணம் சட்டப்படி இன்னும் நீடிக்கும்போது, புகாரளிக்கப்பட்ட நபரை அவர் தனக்கு திருமண வாக்குறுதி தந்து ஏமாற்றினார் என்றும், அப்பெண்ணின் குழந்தையை அவர் பராமரிக்க வேண்டும் என்று சொல்வதும் ஏற்றுக் கொள்ளத்தக்கதல்ல.
திருமணமான பெண் ஒருவர், தன் கணவரை பிரிந்து குழந்தையுடன் வசித்துவந்த நிலையில், தன்னை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி வாக்குறுதி அளித்த ஆண், தன்னை ஏமாற்றியதாக கர்நாடக உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். வழக்கின் விசாரணையில், ‘ஏற்கெனவே திருமணமாகி அந்த பந்தத்தில் இருந்து சட்டப்படி விவாகரத்து பெறாத பெண், இன்னோர் ஆண் தன்னை திருமண வாக்குறுதி தந்து ஏமாற்றியதாகக் கூறும் புகாரை ஏற்க முடியாது’ என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மனுதாரரான அந்தப் பெண், `நானும் அவரும் வேலை செய்யும் இடத்தில் சந்தித்தோம். என்னைத் திருமணம் செய்து கொள்வதாக உறுதியளித்தார். ஆனால் இதுவரை செய்யவில்லை’ என முறையிட்டார்.   அதற்கு மறுப்புத் தெரிவித்த அந்த ஆண், `அவருக்குத் திருமணமாகி குழந்தை இருப்பது தெரியும். அவருக்கு உதவி தேவைப்படும் சமயங்களில் நான் உதவினேன். அதைத் தவிர திருமணம் செய்து கொள்வதாக எந்த வாக்குறுதியும் தரவில்லை’ என்று கூறினார். இந்த வழக்கை விசாரித்த கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி எம். நாகபிரசன்னா, `மனுதாரர் குறிப்பிடும் ஆண் மலேசியாவில் இருக்கிறார். அப்பெண்ணுக்குத் தேவைப்படும் சமயங்களில் மட்டும் பணம் அனுப்பி இருக்கிறார். அவர் தன்னை திருமணம் செய்து தனக்குக் கணவராகும்படி அந்தப் பெண் எதிர்பார்த்ததில் இருந்து, அந்த ஆண் அப்பெண்ணுடன் பேசுவதையும், அவர் அழைப்புகளுக்குப் பதிலளிப்பதையும் நிறுத்தி இருக்கிறார். அந்த நபர் மீது இந்திய தண்டனை சட்டம் 498A பிரிவின் கீழ் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இது தண்டனைக்குரிய குற்றம். ஆனால், அவர் இதன்படி தண்டிக்க, அவர் அந்தப் பெண்ணின் கணவர் என்பதை நிரூபிக்க எந்தவோர் ஆவணமும் சமர்ப்பிக்கப்படவில்லை. அவர் தனக்குக் கணவராக இருந்து உதவியதாக அந்தப் பெண் குறிப்பிடுகிறார். அதுமட்டுமல்லாமல் அப்பெண் தன் கணவரிடமிருந்து விவாகரத்து பெறவில்லை. ஏற்கெனவே செய்த திருமணம் சட்டப்படி இன்னும் நீடிக்கும்போது, புகாரளிக்கப்பட்ட நபரை அவர் தனக்கு திருமண வாக்குறுதி தந்து ஏமாற்றினார் என்றும், அப்பெண்ணின் குழந்தையை அவர் பராமரிக்க வேண்டும் என்று சொல்வதும் ஏற்றுக் கொள்ளத்தக்கதல்ல. அப்பெண்ணின் தேவைக்காக அந்த ஆண் பணம் அனுப்பியதன் அடிப்படையில், அவரையும் அவர் குழந்தையையும் அவர் பராமரிக்க வேண்டும் என்று கூற முடியாது.திருமணமாகி விவாகரத்து பெறாத பெண், ஓர் ஆண் தன்னை திருமணம் செய்வதாகக் கூறி ஏமாற்றியதாகக் கூறுவதை ஏற்க முடியாது’ என்று கூறி வழக்கை தள்ளுபடி செய்திருக்கிறார்.  
https://www.vikatan.com/literature/146208-thiruvalluvar-statue-going-to-malaysia
மலேசிய மாநாட்டில் வைக்கப்படும் திருவள்ளுவர் சிலை - வழியனுப்பிவைத்த தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம்
மலேசிய மாநாட்டில் வைக்கப்படும் திருவள்ளுவர் சிலை - வழியனுப்பிவைத்த தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம்
மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் நடைபெற உள்ள உலகத் திருக்குறள் மாநாட்டில் வைப்பதற்காக ரூ. 2 லட்சம்  மதிப்பில் இரண்டரை அடி உயரம், 920 கிலோ எடை கொண்ட கருங்கல்லால் ஆன  திருவள்ளுவர் சிலையை, தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பாலசுப்பிரமணியன் மலர் தூவி மரியாதைசெய்ததோடு, மலேசியாவுக்கு வழியனுப்பிவைத்தார். மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் உள்ள மலாயா பல்கலைக்கழகத்தில் வரும் பிப்ரவரி மாதம் 22-ம் தேதி முதல் 24-ம் தேதி வரை உலகத் திருக்குறள் மாநாடு நடக்கிறது. இந்த மாநாட்டில் கலந்துகொள்வதற்கு தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்திலிருந்து 50-க்கும் மேற்பட்டவர்கள் செல்கின்றனர். அதே போல் தமிழகத்தின் பல்வேறு மாநிலங்களிலிருந்து ஏராளமான தமிழறிஞர்கள் கலந்து கொள்கின்றனர். திருக்குறள் மற்றும் திருவள்ளுவர் குறித்த விவாதங்கள் நடைபெறுவதோடு, அவர் புகழ் குறித்தும் பேசப்படும் இந்த மாநாட்டில் திருவள்ளுவர் சிலை வைக்கப்பட உள்ளது.  இதற்காக, தஞ்சை தமிழ்த்தாய் அறக்கட்டளை சார்பில் ரூ. 2 லட்சம்  மதிப்பில் இரண்டரை அடி உயரம், 920 கிலோ எடை கொண்ட கருங்கல்லால் ஆன திருவள்ளுவர் சிலை கன்னியாகுமரியில் வடிவமைப்பு செய்யப்பட்டுள்ளது. இன்று தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்துக்கு வந்த சிலையைத் துணைவேந்தர் பாலசுப்பிரமணியன், பதிவாளர் முத்துக்குமார் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதைசெலுத்தினர். இதற்காக பரத நாட்டியம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பிறகு, திருவள்ளுவர் சிலையை வழியனுப்பிவைத்தனர்.  இதைதொடர்ந்து திருச்சி, உளுந்துார்பேட்டை வழியாக சென்னை செல்லும் சிலை 4-ம் தேதி சென்னையில் இருந்து கப்பல் மூலம் மலேசியா செல்கிறது. இது குறித்து தமிழ்த்தாய் அறக்கட்டளை பொதுச் செயலாளர் உடையார்கோவில் குணா கூறியதாவது, ``தமிழ்த்தாய் அறக்கட்டளை சார்பில் இதுவரை 7 திருவள்ளுவர் சிலையை மலேசியா, சிங்கப்பூர், இலங்கை போன்ற நாடுகளுக்குக் கொடுத்துள்ளோம். மத்திய அமைச்சர் தருண் விஜயிடமும் திருவள்ளுவர் சிலை கொடுத்துள்ளோம். தற்போது மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் நடைபெறவுள்ள உலகத் திருக்குறள் மாநாட்டில் வைப்பதற்காக 2 லட்சம் ரூபாய் மதிப்பில் இரண்டரை அடி உயரத்தில் 920 கிலோ எடையில் கருங்கல்லால் திருவள்ளூவர் சிலையை வடிவமைத்துள்ளோம். இந்தச் சிலை கன்னியாகுமரியில் ஒரு சிற்பக்கூடத்தில் செய்யப்பட்டது. மாநாடு நடைபெறும் இடத்தில் தொடர்ந்து 3 நாள்கள் இந்தத் திருவள்ளுவர் சிலை வைக்கப்பட்டு இருக்கும். மாநாடு முடிந்தவுடன் சிலை அவர்களிடமே ஒப்படைக்கப்படும்” என்றார்.
https://www.vikatan.com/humour-and-satire/current-affairs/diving-instructor-arrested-for-kissing-chinese-tourist-underwater
கடலுக்கு அடியில் சுற்றுலா பயணியை முத்தமிட்ட டைவிங் பயிற்சியாளர்; கைது செய்து விசாரிக்கும் போலீஸ்!
கோவிட் -19 தொற்றின் தாக்கத்தில் இருந்து சுற்றுலாத்துறை மீண்டு வருகிறது. இந்தச் சமயத்தில் இதுபோன்ற சம்பவங்கள் குறிப்பாக செம்போர்னா மாவட்டத்தின் சுற்றுலா பிம்பத்தைப் பெரிதும் பாதிக்கின்றன .
24 வயது சீன பெண் சுற்றுலா பயணியை, மலேசிய டைவிங் பயிற்சியாளர் கடல் நீருக்கு அடியில் முத்தமிட்டு இருக்கிறார். அதனைத் தொடர்ந்து அப்பெண் அளித்த புகாரின் பேரில், 27 வயதான ஃப்ரீலான்ஸ் பயிற்சியாளரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.மலேசியாவின் செம்பொர்னா (Semporna) மாவட்டத்தில், வெள்ளிக்கிழமையன்று நிகழ்ந்த இந்தச் சம்பவம் சமூக வலைத்தளத்தில் வைரலானதை தொடர்ந்து அனைவரின் கவனத்தையும் பெற்றது. அந்தப் பதிவில், சீனப் பெண்ணும், டைவிங் பயிற்சியாளரும் பேசிக் கொள்ளும் புகைப்படங்களும், பயிற்சியாளர் முத்தமிட்ட புகைப்படமும் இடம்பெற்றுள்ளது. ``பாதிக்கப்பட்ட பெண் சீனாவில் உள்ள தனது சொந்த ஊருக்குச் செல்வதற்கு முன்பு, செம்போர்னா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதனைத் தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை மதியம் அந்நபர் அவரின் வீட்டில் கைது செய்து செய்யப்பட்டார். அவர் மீது குற்றவியல் தண்டனைச் சட்டம் 354 கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. விசாரணைக்காக ரிமாண்ட் செய்யப்பட்டிருக்கிறார்'' என உதவி காவல் கண்காணிப்பாளர் ஆரிப் அப்துல் ரசாக் தெரிவித்துள்ளார்.``சுற்றுலாத்துறை கோவிட் -19 தொற்றில் இருந்து மீண்டு வருகிறது. இந்தச் சமயத்தில் இது போன்ற சம்பவங்கள் குறிப்பாக செம்போர்னா மாவட்டத்தின் சுற்றுலா பிம்பத்தைப் பெரிதும் பாதிக்கின்றன'' என சபா (Sabah) மாநிலத்தின் சுற்றுலா, கலாசாரம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சர் கிறிஸ்டினா லியூ திங்களன்று தெரிவித்துள்ளார்.     
https://www.vikatan.com/environment/158529-last-male-sumatran-rhinoceros-of-malaysia-dies
மலேசியாவின் கடைசி ஆண் சுமத்ர காண்டாமிருகம் மரணம்!
மலேசியாவின் கடைசி ஆண் சுமத்ர காண்டாமிருகம் மரணம்!
மலேசியாவில் பாதுகாப்பாக வளர்க்கப்பட்டுவந்த கடைசி ஆண் சுமத்ர காண்டாமிருகம் மடிந்ததாக அந்நாட்டு வனத்துறை அதிகாரிகள் அறிவித்திருக்கின்றனர். 'தம்' எனப் பெயரிப்பட்டிருந்த இந்த 30 வயது ஆண் 2008-ல் பிடிக்கப்பட்டு போர்னியோ தீவுகளில் இவ்வளவு நாள் பாதுகாப்பாக வளர்க்கப்பட்டது. இந்த சுமத்ர காண்டாமிருக இனம் மலேசியா வனங்களில் மொத்தமாக அழிந்துவிட்டதாக 2015-ல் அறிவிக்கப்பட்டது. P.C: WWF_Malaysia  இந்த இறப்பின்மூலம் மலேசியாவில் 'இமான்' என்ற பெண் சுமத்ர காண்டாமிருகம் மட்டும்தான் இப்போது மீதமிருக்கிறது. துணை இல்லாததால் இதுதான் மலேசியாவின் கடைசி சுமத்ர காண்டாமிருகம். இன்றைய தென்கிழக்கு ஆசிய நாடுகள் பலவற்றில் வாழ்ந்து வந்த இவை இப்போது எண்ணிக்கையில் 30-80 மட்டுமே இருக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. இந்த இனத்தின் அழிவுக்கு முக்கிய காரணமாகப் பார்க்கப்படுவது இதன் வாழ்விடங்களின் அழிவுதான். இப்போது மீதமிருக்கும் சில காண்டாமிருகங்களும் தனிமைப்படுத்தப்பட்டிருப்பதால் இனப்பெருக்கம் செய்ய முடியாமல் இவை தவிக்கின்றன. முன்பு மனித வேட்டைகளும் பெருமளவில் இவற்றின் எண்ணிக்கையைக் குறைத்திருக்கின்றன. கடுமையான முயற்சிகள் மேற்கொள்ளப்படவில்லை என்றால் இந்த சொற்ப எண்ணிக்கையும் சில வருடங்களில் மறையக்கூடும். 2011-ம் ஆண்டு தொடங்கி செயற்கை கருத்தரிப்பு மூலம் இனத்தைப் பெருக்க பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இதனால் மலேசியாவுக்கு இந்த இறப்பு மிகப்பெரிய பின்னடைவு. இருப்பினும் 'தம்'மின் மரபணுக்கள் வருங்கால முயற்சிகளுக்காகச் சேமித்து வைக்கப்பட்டிருக்கின்றன. 
https://www.vikatan.com/government-and-politics/election/155337-our-duty-is-to-vote-pudukkottai-youth-group-traveled-from-abroad-for-elections
``லட்சம் செலவானாலும் ஓட்டு போட வந்துடுவோம்!" - வெளிநாட்டில் வேலைபார்க்கும் புதுக்கோட்டை இளைஞர்கள்
"`ஓட்டு போடுவது நமது ஜனநாயகக் கடமை, அதை நாம் செய்யாவிட்டால், அது நம் நாட்டிற்குச் செய்யும் துரோகம்' என்று அத்தா அடிக்கடி சொல்வார். `வாக்காளர் பட்டியலிலிருந்து பெயர் நீக்கப்பட்டுவிட்டால், அது நாம் இறந்துபோனதற்குச் சமம்' என்பார்."
தமிழகத்தில் 100 சதவிகித வாக்குப்பதிவு நடைபெற வேண்டும் என்ற இலக்கை முன்னிறுத்தித் தேர்தல் ஆணையம், பொதுமக்களிடம் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்திவருகிறது. ஆனாலும், தமிழகத்தில் உள்ள லட்சக்கணக்கான இளைஞர்கள் குடும்ப வறுமை காரணமாக, வெளிமாநிலங்களிலும், வெளிநாடுகளிலும் பணிபுரிந்து வருகின்றனர். இங்குள்ளவர்கள் பெரும்பாலும், தேர்தலன்று வாக்களிக்க முடியாத சூழலினால், 100 சதவிகித வாக்குப்பதிவு என்பது இன்றளவும் கானல் நீராகவே உள்ளது. இது ஒருபுறம் என்றால்... மறுபுறம், எத்தனை தடைகள் வந்தாலும் சரி, எவ்வளவு செலவானாலும் சரி, நாங்கள் கட்டாயம் ஓட்டு போட வந்துவிடுவோம் என்று புதுக்கோட்டையைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர் வாக்களிப்பதற்காகவே வெளிநாடுகளிலிருந்து விமானத்தில் சொந்த ஊருக்கு வந்து தங்கள் ஜனநாயக கடமையை ஆற்றிவிட்டு மீண்டும் வெளிநாடு திரும்புகின்றனர். புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே மங்களநாடு, அரசர்குளம் கிராமங்கள் உள்ளன. இந்தக் கிராமங்களைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர்தான் வாக்களிக்க, சொந்த ஊருக்கு வருகின்றனர். வாக்களித்த மறுநாள் மீண்டும் வெளிநாட்டுக்குச் சென்று பணியில் சேர்கின்றனர். சொந்த ஊரில் இருந்துகொண்டே வாக்களிக்கத் தவறும் சில இளைஞர்கள் மத்தியில், வாக்களிப்பதற்காகவே வெளிநாடுகளிலிருந்து கடல் கடந்து லட்சம் ரூபாய் வரையிலும் செலவுசெய்து வாக்களித்துவிட்டுச் செல்லும் இந்த இளைஞர்களைப் பலரும் பாராட்டி வருகின்றனர். அரசர்குளத்தைச் சேர்ந்த சேக் இஸ்மாயில் ஓட்டு போடுவதற்காக முதல் ஆளாக ஊருக்கு வந்துவிட்டார். தொடர்ந்து மங்களநாடு முகமது பாரூக், சையது முகமது, இதயத்துல்லா, குரு அப்துல்லா, பீர் முகமது, காசிம், இதயதுல்லா, ஜபருல்லா என 10-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் ஓட்டு போடுவதற்காகவே நாடு திரும்பியிருக்கின்றனர். மங்களநாடு முகமது பாரூக் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக வெளிநாட்டில் இருந்தாலும், ஊராட்சிமன்றத் தேர்தல் தொடங்கி நாடாளுமன்றத் தேர்தல் வரையிலும் அனைத்துத் தேர்தல்களிலும் வாக்களிக்கத் தவறுவதில்லை. பாரூக்கின் ஜனநாயக கடமை உணர்ச்சிதான் அந்தக் கிராமத்தினர் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது. இவருடைய கடமைதவறாத உணர்வைப் பார்த்து, அக்கிராமங்களில் உள்ள பல இளைஞர்கள் ஓட்டு போடுவதற்காக, சொந்த ஊருக்கு வந்திருக்கின்றனர். பாரூக்கிடம் பேசினோம், ``எங்கள் அத்தா காலத்தில் எல்லாம் ஓட்டு போடுறதுக்காக, வெளிநாட்டிலிருந்து வருவது ரொம்ப கஷ்டம். எவ்வளவு கஷ்டம் வந்தாலும், அதையெல்லாம் பொருட்படுத்தாமல், ஓட்டு போடுறதுக்காக, அத்தா ஊருக்குக் கிளம்பி வந்துவிடுவார். அப்ப நான் சின்ன பையன். `ஓட்டு போடுவது நமது ஜனநாயகக் கடமை, அதை நாம் செய்யாவிட்டால், அது நம் நாட்டிற்குச் செய்யும் துரோகம்' என்று அத்தா அடிக்கடி சொல்வார். `வாக்காளர் பட்டியலிலிருந்து பெயர் நீக்கப்பட்டுவிட்டால், அது நாம் இறந்துபோனதற்குச் சமம்' என்பார். அப்படித்தான் ஒரு தடவை ரொம்ப முயன்றும் அவரால் வரமுடியாமல் போய்விட்டது. உடனே வீட்டுக்கு ஒரு கடிதம் எழுதி அனுப்பினார். அதில், `வீட்டில் உள்ளவர்கள் மறக்காமல் ஓட்டு போடுங்கள்' என்று எழுதியிருந்தார். அந்தளவுக்கு அத்தா கடமை தவறாதவர். அத்தாகிட்ட இருந்துதான் எனக்கும் இந்தப் பழக்கம் வந்தது. அத்தாவுக்கு அப்புறம், இப்ப நான் வாக்களிப்பதைக் கடமையாகக் கொண்டிருக்கிறேன். மலேசியாவில் வேலை செய்து வரும் நான், 20 வருஷமாக உள்ளூர் தேர்தல் தொடங்கி நாடாளுமன்றத் தேர்தல் என அனைத்துத் தேர்தல்களுக்கும் மலேசியாவிலிருந்து ஊருக்கு வந்துவிடுவேன். வாக்களித்த பிறகுதான் மலேசியாவுக்குப் போவேன். அப்படித்தான் ஒரு தேர்தலில், `வெளிநாட்டில் இருக்கிறார்' என்று கூறி என்னுடைய பெயரை நீக்கிவிட்டனர். அப்புறம் போராடி என் பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்த்து அந்த முறையும் ஊருக்கு வந்து வாக்களித்துவிட்டுச் சென்றேன். அன்றிலிருந்து இன்று வரையிலும் பட்டியலிலிருந்து என்னுடைய பெயரை நீக்காமல் பார்த்துக்கொண்டு வருகிறேன். ஆரம்பத்தில், `ஓட்டு போடுவதற்காக, லட்சக்கணக்கில் செலவு செஞ்சிக்கிட்டு ஊருக்குப் போகிறாயே, நீ பிழைக்கத் தெரியாதவன் என்று எல்லாம் நண்பர்கள் கேலி, கிண்டல் செஞ்சிருக்காங்க. அதையெல்லாம் நான் பொருட்படுத்தியதே இல்லை. சிரிச்சிக்கிட்டே வந்துவிடுவேன். ஆரம்பத்தில் என்னைக் கேலி, கிண்டல் செய்த அந்த நண்பர்கள் எல்லாம் இப்ப ஓட்டு போடுறதுக்காக, சிங்கப்பூர், துபாய் நாடுகளிலிருந்து செலவு செய்து ஊருக்கு வந்து ஓட்டு போட்டுவிட்டுச் செல்கின்றனர். இப்போது, ஒருசில முதலாளிகளும், நிறுவனத்தினருமே ஓட்டு போட விடுமுறை கொடுத்து இந்தியாவுக்கு அனுப்பிவைக்கிறார்கள். ஆரம்பத்தில் ஓட்டு போடுவதற்காக, ஊருக்கு வருவதற்குக் கொஞ்சம் கஷ்டம் இருந்தது. ஓட்டு போட்டுவிட்டு விரலில் வைக்கிற மையைப் பார்த்தால் அனைத்துக் கஷ்டமும் பறந்துபோயிடும்" என்றார், சிரித்தபடியே. ஓட்டு போடுவதற்காகத் தாயகம் திரும்பிய மற்ற சில இளைஞர்களிடம் பேசினோம், ``பாரூக் அண்ணனின் கடமை உணர்ச்சிதான் எங்களையும் ஓட்டு போடுவதற்காக வரவழைத்தது. நாளை ஓட்டு போடுவதற்காக மேலும் சில இளைஞர்கள் ஊருக்கு வந்துவிடுவார்கள். வழக்கமாக, தேர்தல்களின் போது, ஆங்காங்கே சுவர் ஓவியம், கட்சிக்கொடிகள், பிரசாரம் என்று ஊரே பரபரப்பாக இருக்கும். தற்போது, அந்தப் பரபரப்பு இல்லை. நம்முடைய ஒவ்வொரு ஓட்டும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. எனவேதான் உள்ளூரில் இருந்துகொண்டே ஓட்டு போடாமல் இருப்பவர்கள் நிச்சயம் இனிவரும் காலங்களில் தவறாமல் வாக்களிக்க வேண்டும் என்பதுதான் எங்களது விருப்பம். எங்கள் மாவட்டத்திற்கு நாடாளுமன்றத் தொகுதி இல்லை என்பது வருத்தமளிக்கிறது. விரைவில் புதுக்கோட்டைக்கு நாடாளுமன்றத்  தொகுதி கிடைக்கும் என நம்புகிறோம். வெளிநாடுகளில் நீண்ட வருடம் சுகபோக வாழ்க்கை வாழ்ந்தாலும், நாங்கள் இந்தியர்கள், தமிழர்கள் என்பதுதான் எங்களுக்குப் பெருமை" என்றனர். வாக்களிப்பதற்காகவே தாயகத்துக்கு வரும் இளைஞர்களுக்கு ஒரு ராயல் சல்யூட்.
https://www.vikatan.com/technology/jack-dorseys-first-tweet-sold-out-for-29-million-usd
20 கோடி ரூபாய்க்கு ஏலம் போன ஜாக் டார்ஸேவின் முதல் ட்வீட்... கல்லாகட்டும் NFT வியாபாரம்!
NFT எனச் சுருக்கமாக அழைக்கப்படும் இவை தான் இணைய உலகின் தற்போதைய வைரல். டிஜிட்டலாக உருவாக்கப்படும் புகைப்படம், ஓவியம், GIF, குட்டி வீடியோ என எல்லாமே NFT-க்கள் தான்.
கடந்த சில மாதங்களாக இணைய உலகில் திடீரென வரவேற்பைப் பெற்றிருப்பவை நான்-ஃபன்ஜிபிள் டோக்கன் (Non- Fungible Token). NFT எனச் சுருக்கமாக அழைக்கப்படும் இவைதான் இணைய உலகின் தற்போதைய வைரல். டிஜிட்டலாக உருவாக்கப்படும் புகைப்படம், ஓவியம், GIF, குட்டி வீடியோ என எல்லாமே NFT-க்கள் தான். பிரபலமான ஓவியர் டிஜிட்டலாக ஓர் ஓவியத்தை வரைகிறார் என வைத்துக் கொள்வோம். அதைப் போல பல நகல்களை டிஜிட்டலாக நம்மால் நொடியில் உருவாக்கிவிட முடியும். ஆனால், டிஜிட்டலாக வரையப்பட்ட அசல் ஒன்று இருக்குமல்லவா, அதுதான் NFT. மோனா லிசா ஓவியத்தைப் போலப் பல பிரதிகள் இருந்தாலும், அசல் மோனா லிசா ஓவியத்திற்கு இருக்கும் மதிப்பு தனிதானே! அது போலத்தான் இந்த டிஜிட்டல் NFT-க்களும். 2006-ல் ட்விட்டரின் நிறுவனர்களுள் ஒருவரான ஜாக் டார்ஸே தன் முதல் ட்வீட்டை அந்தத் தளத்தில் பதிவு செய்திருந்தார். இந்த ட்வீட் NFT வடிவத்தில் சில வாரங்களுக்கு முன் NFT விற்பனைத் தளம் ஒன்றில் ஏலத்திற்கு வந்தது. அதனை தற்போது எத்தர் (Ether) கிரிப்டோ கரன்ஸி கொண்டு மலேசியாவைச் சேர்ந்த சினா எஸ்டவி (Sina Estavi) என்பவர் 2.9 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு வாங்கியிருக்கிறார். இவர் பிரிட்ஜ் ஓரக்கிள் என்ற பிளாக் செயின் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி. இந்த ஏலத்தின் மூலம் கிடைத்திருக்கும் தொகையை ஆப்பிரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நன்கொடையாக அளிக்கப்போவதாகத் தெரிவித்திருக்கிறார் ஜாக் டார்ஸே.இதேபோல் கடந்த வாரம் மைக் வின்கேல்மன் என்ற டிஜிட்டல் ஆர்டிஸ்ட் உருவாக்கிய டிஜிட்டல் புகைப்படம் ஒன்று இந்திய மதிப்பில் 500 கோடி ரூபாய்க்கு விற்பனையானது குறிப்பிடத்தக்கது.
https://www.vikatan.com/government-and-politics/150136-49-tamilians-who-were-arrested-in-malaysia-were-rescued-with-the-help-of-kanimozhi
கனிமொழி முயற்சியால் மலேசியாவில் தவித்த 49 தமிழர்கள் மீட்பு - கிராம மக்கள் நன்றி
கனிமொழி முயற்சியால் மலேசியாவில் தவித்த 49 தமிழர்கள் மீட்பு - கிராம மக்கள் நன்றி
மலேசியாவில் தவித்த 49 தமிழர்களை மீட்க கனிமொழி எம்.பி மேற்கொண்ட முயற்சிகளின் பலனாக, அவர்கள் அனைவரும் இந்தியத் தூதரக அதிகாரிகளால் மீட்கப்பட்டு, நாளை சென்னை விமான நிலையத்துக்கு வர உள்ளனர்.  தி.மு.க-வின் மகளிரணிச் செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான கனிமொழி, கடந்த டிசம்பர் 2-ம் தேதி, பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக நெல்லைக்குச் சென்றிருந்தார். கடையநல்லூரில் நடந்த பொதுக்கூட்டத்துக்கு அவர் சென்றபோது, சங்கரன்கோவில் அருகே உள்ள தலைவன்கோட்டையைச் சேர்ந்த பொதுமக்கள், நெல்லை மேற்கு மாவட்டச் செயலாளரான சிவபத்மநாபனிடம் சென்று கனிமொழியைச் சந்தித்துப் பேச விரும்புவதாகத் தெரிவித்தனர்.  அதன்படி கனிமொழியிடம் பேசி, கிராம மக்களைச் சந்திக்க சிவபத்மநாபன் ஏற்பாடுசெய்துகொடுத்தார். அப்போது பேசிய மக்கள், தங்கள் கிராமத்திலிருந்து மலேசியாவில் வேலைக்காகச் சென்ற 49 பேர், திரும்பி வர முடியாமல் தவிப்பதாகத் தெரிவித்தனர். மலேசியாவில் மின்சார டவர் அமைக்கும் பணிக்குச் சென்ற அவர்களை அழைத்துச்சென்ற புரோக்கர்கள், முறையாக வேலையில் அமர்த்தாமலும், சம்பளம் கொடுக்காமலும், கஷ்டப்படுத்தியதாகத் தெரிவித்தனர்.  வேலைக்கான விசா இல்லாமல் சட்ட விரோதமாக இருந்ததால், 49 பேரும் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட விவரத்தை எடுத்துச்சொல்லி, அவர்களை மீட்க உதவுமாறு கேட்டுக்கொண்டனர். அத்துடன், மலேசியாவில் சிரமத்துக்கு உள்ளான தமிழர்கள் பேசிய வீடியோ காட்சிகளையும் கனிமொழியிடம் காட்டினார்கள். அவற்றைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர், உடனடியாக வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜிடம் பேசி அனைவரையும் மீட்க உதவுமாறு கோரிக்கை விடுத்தார்.  அதைத் தொடர்ந்து, இந்திய வெளியுறவுத் துறை மேற்கொண்ட நடவடிக்கையால், கடந்த ஜனவரி 19-ம் தேதி, மலேசியத் தொழிலாளர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்டது. அதில், அனைவருக்கும் கொடுக்கப்படவேண்டிய நியாயமான ஊதியத்தை வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டது. அத்துடன், அவர்களை உடனடியாக விடுவிக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.  அதனால், 49 தமிழர்களும் இந்தியத் தூதரகத்தின் மூலமாக சொந்த ஊருக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்படி, அனைவரும் நாளை காலை சென்னைக்கு வந்து சேர்கிறார்கள். அதன்பின்னர், சொந்த ஊரான தலைவன்கோட்டைக்கு புறப்பட்டுச் செல்வார்கள். மலேசியாவில் தவித்த தங்கள் உறவினர்களை மீட்டு, பத்திரமாக அழைத்து வர உதவிய கனிமொழிக்கு கிராம மக்கள் நன்றி தெரிவித்துள்ளனர். 
https://www.vikatan.com/government-and-politics/mother-requested-the-government-to-bring-her-sons-dead-body-from-malaysia
``என் மகனின் உடலைக் கொண்டுவர உதவுங்கள்!" மலேசியாவில் பலியான இன்ஜினீயரின் தாய் கோரிக்கை!
கடந்த 2019 -ம் ஆண்டு மலேசியா சென்றிருக்கிறார். இன்ஜினீயரிங் படித்த கேசவன் மலேசியாவில் கூலித்தொழில் செய்துவந்தார்.
வேதாரண்யம் தாலுகா, கோவில்பத்து கிராமத்தைச் சேர்ந்தவர் நடராஜன். விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த இவரின் இரண்டாவது மகன் கேசவன் (வயது 30). இவர் பொறியியல் பட்டதாரி. இவர் கடந்த 2011-ம் ஆண்டு சிங்கப்பூர் செல்வதற்காக மதுரை அருகேயுள்ள அருப்புக்கோட்டையில் வசிக்கும் நபரிடம் ரூ.4 லட்சம் கொடுத்து ஏமாந்தார். அதன் பிறகு கடனை அடைப்பதற்காக கடந்த 2019-ம் ஆண்டு மலேசியா சென்றிருக்கிறார். இன்ஜினீயரிங் படித்த கேசவன் மலேசியாவில் கூலித்தொழில் செய்துவந்தார். கடந்த 21-ம் தேதி மலேசியாவிலுள்ள சைபர்ஜெயா என்ற இடத்தில் சாக்கடைக் கழிவுநீர் வாய்காலில் 12 அடி ஆழத்தில் கேபிள் புதைப்பதற்காக கேசவன் இறங்கியிருக்கிறார். அப்போது விஷவாயு தாக்கி கேசவன் இறந்துவிட்டதாக மலேசியாவிலிருந்து அவருடைய குடும்பத்தினருக்குத் தகவல் வந்தது. இதையொட்டி கடந்த 10 நாள்களாக மலேசியாவிலிருந்து கேசவனின் உடலைக் கொண்டுவருவதற்கு அவரின் குடும்பத்தினர் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுவருகின்றனர். ஆனால், இதுவரை கேசவனின் உடலைச் சொந்த ஊருக்குக் கொண்டுவர முடியவில்லை. இது குறித்து நாகை மாவட்ட ஆட்சியர் அருண்தம்புராஜிடம், இறந்த மகனின் உடலை மீட்டுத் தரக் கோரி கேசவனின் தாயார் மனு அளித்திருக்கிறார். கேசவன் தாய் பார்வதியிடம் பேசினோம். ``என் மகன் கடனை அடைப்பதற்காக மலேசியா சென்று ரெண்டு வருஷம் ஆகுது. ஆனா, கடனை அடைக்க முடியலை. அதற்குள் கேபிள் புதைக்கும்போது விஷவாயு தாக்கி செத்துப்போயிட்டதா சேதி சொல்றாங்க. இதுவரை என் மகனின் உடலைக் கொண்டுவர எடுத்த முயற்சிகளெல்லாம் தோல்வி அடைஞ்சிட்டுது. எனவே எனது மகனின் உடலை மீட்டுத்தர உடனடியா மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார் கண்ணீருடன்!
https://cinema.vikatan.com/hollywood/michelle-yeoh-as-1st-asian-woman-to-win-oscar-for-best-actress
95 வருட வரலாற்றில் முதன்முறை; சிறந்த நடிகைக்கான ஆஸ்கர் விருது வென்ற முதல் ஆசியப் பெண் மிச்செல்!
மலேசியாவில் பிறந்த மிச்செல் யோஹ், 95 வருட ஆஸ்கர் வரலாற்றில் முதன்முறையாகச் சிறந்த நடிகைக்கான விருதை வென்ற முதல் ஆசியப் பெண் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். மொத்தம் 7 விருதுகளைப் பெற்றுள்ளது இந்தத் திரைப்படம்.
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் மாகாணத்தில் உள்ள டால்பி திரையரங்கில், 95-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா மிகவும் கோலாகலமாக நடைபெற்றது. இந்த விழாவில் `எவ்ரிதிங் எவ்ரிவேர் ஆல் அட் ஒன்ஸ் (Everything Everywhere All At Once)' திரைப்படத்தில் நடித்ததற்காகச் சிறந்த நடிகைக்கான விருதை வென்றுள்ளார் மிச்செல் யோஹ் (Michelle Yeoh). 95 ஆண்டுக்கால ஆஸ்கர் விருதுகள் வரலாற்றில் சிறந்த நடிகைக்கான விருதை வென்ற முதல் ஆசியப் பெண் என்ற வரலாற்றையும் அவர் படைத்துள்ளார். மலேசியாவில் பிறந்து ஹாங்காங் அதிரடித் திரைப்பட உலகில் ஜாம்பவானாகத் திகழ்ந்தவர் மிச்செல். இவர், க்ரூச்சிங் டைகர் (Crouching Tiger), ஹிடன் டிராகன் (Hidden Dragon) மற்றும் கிரேஸி ரிச் ஏசியன்ஸ் (Crazy Rich Asians) போன்ற ஹிட் படங்களில் நடித்துள்ளார்.கடந்த ஆண்டு வெளியான ’எவ்ரிதிங் எவ்ரிவேர் ஆல் அட் ஒன்ஸ்’ படம் டேனியல் குவான் மற்றும் டேனியல் ஷீனெர்ட் ஆகியோரால் எழுதி இயக்கப்பட்டது. இதில் `ஈவ்லின்’ என்ற கதாபாத்திரத்தில் நடித்ததற்காகவே மிச்செலுக்கு ஆஸ்கர் விருது வழங்கப்பட்டுள்ளது. விருது பெற்ற பின் விழா மேடையில் பேசிய மிச்செல், “ இந்த விருதை 84 வயதான என் அம்மாவுக்கு சமர்ப்பிக்கிறேன். அவர் மலேசியாவில் இருந்து இந்த நிகழ்ச்சியை பார்த்துக் கொண்டிருப்பார். உலகில் உள்ள அனைத்து அம்மாக்களும் உண்மையில் சூப்பர் ஹீரோக்கள்தான். அவர்கள் இல்லாமல் நாம் யாரும் இங்கு இருந்திருக்க மாட்டோம். இன்று என்னைப் போலவே இருக்கும், என்னைப் பார்க்கும் அனைத்து இளைஞர்களுக்கும் இந்த விருது பெரும் நம்பிக்கை அளிக்கும். பெண்களே... நீங்கள் எப்போதும் உங்கள் வயதைக் கடந்துவிட்டதாகக் கூறாதீர். எந்த வயதிலும் முயற்சி செய்தால் வெற்றி நிச்சயம் என்பதற்கு நானே சாட்சி” என நெகிழ்ச்சியாகக் கூறியுள்ளார். இந்த வருடம் நடைபெற்ற கோல்டன் குளோப்ஸ் (Golden Globes) இன்டிபென்டன்ட் ஸ்பிரிட் (Independent Spirit Awards) விருதுகள் மற்றும் ஸ்க்ரீன் ஆக்டர்ஸ் கில்ட் விருதுகள் (Screen Actors Guild Awards) ஆகியவற்றில் சிறந்த நடிகைக்கான விருதுகளையும் மிச்செல் வென்றுள்ளார். இந்த வருட ஆஸ்கர் விருதுகளில் மொத்தம் 11 பரிந்துரைகளுடன் ’எவ்ரிதிங் எவ்ரிவேர் ஆல் அட் ஒன்ஸ்’ திரைப்படம் முன்னணியில் இருந்தது. அதில் மிச்செலின் ’சிறந்த நடிகை’க்கான விருது உள்பட மொத்தம் 7 விருதுகளைப் பெற்றுள்ளது இந்த திரைப்படம்.
https://www.vikatan.com/government-and-politics/malaysias-response-to-indias-boycott-of-palm-oil-import
"நாங்கள் மிகச் சிறிய நாடு... இந்தியா மீது நடவடிக்கை எடுக்கும் திறன் இல்லை!" - மலேசிய பிரதமர் மகாதீர்
இந்தியா மீது நடவடிக்கை எடுக்கும் திறன் தங்கள் நாட்டுக்கு இல்லை என்று மலேசிய பிரதமர் மகாதீர் முகமது தெரிவித்துள்ளார்.
"நாங்கள் மிகச்சிறிய நாடு, இந்தியா போன்ற பெரிய நாடு மீது நடவடிக்கை எடுக்கும் திறன் எங்களுக்கு இல்லை'' என்று மலேசிய பிரதமர் மகாதீர் தெரிவித்துள்ளார். இந்தியாவில் அமல்படுத்தப்பட்டுள்ள சி.ஏ.ஏ சட்டத்துக்கு எதிராக, 'இந்தியாவிலிருந்து இஸ்லாமிய மக்களைப் பிரிக்கும் செயல்' என்று மலேசிய பிரதமர் மகாதீர் கருத்து தெரிவித்திருந்தார். அவரின் இந்தக் கருத்துக்கு மத்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்தது. அதோடு, மலேசியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பாமாயில் எண்ணெயின் அளவையும் குறைத்தது. அதோடு, வேறு சில பொருள்களுக்கும் தடை விதிக்க இந்திய அரசு ஆலோசித்து வருகிறது. இதற்கிடையே ஸ்விட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் நடைபெறவுள்ள உலகப் பொருளாதார மாநாட்டில் இரு நாட்டு வர்த்தகத்துறை அமைச்சர்கள் சந்தித்து இந்த விவகாரத்தை சுமுகமாக முடிக்க பேச்சுவார்த்தையில் ஈடுபடுவார்கள் என்று மலேசிய அரசின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறியிருந்தார். ஆனால், இந்திய வர்த்தகத்துறை அமைச்சர் பியூஸ் கோயல் மலேசிய வர்த்தகத்துறை அமைச்சரை சந்திக்கப்போவதில்லை. பியூஸ் கோயலுக்குப் பதிலாக வர்த்தகத்துறை அமைச்சக அதிகாரி ஒருவர் மலேசிய வர்த்தகத்துறை அமைச்சருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவார் என்று சொல்லப்படுகிறது.மலேசியாவிலிருந்து அதிகளவில் பாமாயிலை இறக்குமதி செய்யும் நாடு இந்தியா. தற்போது, அங்கிருந்து பாமாயில் இறக்குமதியை மத்திய அரசு குறைத்துவிட்டது. இதனால், கடந்த 11 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மலேசியாவின் பாமாயில் ஏற்றுமதி கடும் சரிவைக் கண்டுள்ளது. மலேசியாவுக்குப் பதிலாக இந்தோனேசியாவிலிருந்து இந்தியா பாமாயிலை இறக்குமதி செய்ய முடிவு செய்துள்ளது. இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ள மலேசிய பிரதமர் மகாதீர் முகமது, ''எங்கள் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், எங்களிடமிருந்து பாமாயில் வாங்குவதை இந்தியா குறைத்துள்ளது. நாங்கள் மிகச்சிறிய நாடு. இந்தியா போன்ற நாட்டுக்கு வர்த்தக ரீதியிலான பதிலடியைக் கொடுக்கும் திறன் எங்களுக்கு இல்லை. இந்த விவகாரத்தை எதிர்கொண்டுதான் நாங்கள் மேலே வர வேண்டும்'' என்று தெரிவித்துள்ளார். மலேசியா இஸ்லாமிய மக்கள் அதிகம் வசிக்கும் நாடு. இங்கு 20 லட்சம் இந்திய வம்சாவளி மக்கள் வாழ்கிறார்கள். இதில், பெரும்பாலேனோர் தமிழர்கள். கடந்த 2019-ம் ஆண்டு மலேசிய நாட்டு கணக்கெடுப்பின்படி 1,17,733 இந்தியர்கள் இந்த நாட்டில் பணிபுரிகிறார்கள். இது மலேசிய வெளிநாட்டு தொழிலாளர்கள் எண்ணிக்கையில் 6 சதவிகிதம் ஆகும். 2014-ம் ஆண்டு முதல் மலேசியாவிலிருந்து பாமாயில் இறக்குமதி செய்வதில் இந்தியா முதலிடத்தில் இருந்து வருகிறது. கடந்த ஆண்டு மட்டும் 4.4 லட்சம் டன் பாமாயில் மலேசியாவிடமிருந்து இந்தியா இறக்குமதி செய்துள்ளது. மலேசியாவின் மொத்த பாமாயில் உற்பத்தியில் இந்தியாவுக்கு மட்டும் 24 சதவிகிதத்தை இறக்குமதி செய்கிறது. இரண்டாவது இடத்தில் சீனா உள்ளது. மலேசியாவை இந்தியா புறக்கணிக்கும் பட்சத்தில் இந்தோனேசியாவிடமிருந்தும் தாய்லாந்து நாட்டிடம் இருந்தும் பாமாயிலை அதிகளவில் கொள்முதல் செய்ய வாய்ப்பு உள்ளது. உலகிலேயே சமையலுக்குப் பயன்படுத்தும் எண்ணையை இறக்குமதி செய்வதில் இந்தியாவுக்குத்தான் முதலிடம். இந்தோனேசியா நாடுதான் உலகிலேயே பாமாயில் உற்பத்தியில் முதலிடத்தில் உள்ளது. மலேசியாவைவிட குறைவான விலையில் இந்தியாவுக்கு பாமாயில் தர அந்த நாடு ஒப்புக்கொண்டுள்ளது. எனவே, படிப்படியாக மலேசியாவிடமிருந்து முற்றிலும் பாமாயில் இறக்குமதியை நிறுத்திவிட்டு, இந்தோனேசியா பக்கம் இந்தியா சாய வாய்ப்புள்ளது. மலேசியா தன் பாமாயில் சந்தையில் 24 சதவிகிதத்தை ஈடுகட்ட முடியாமல் தவிக்கும் நிலை உருவாகும். எனவே, இத்தகைய சூழலைத் தவிர்க்க மலேசிய அரசு எல்லாவிதத்திலும் முயற்சி மேற்கொண்டு வருகிறது. அதுமட்டுமல்ல, மலேசியாவின் அனைத்துப் பொருள்களையும் இறக்குமதி செய்யும் நாடுகளில் இந்தியா 7-வது இடம் வகிக்கிறது. அதே வேளையில், இந்தியப் பொருள்களை வாங்குவதில் மலேசியா 17-வது இடத்தில் உள்ளது. அதனால், இந்தியாவின் மறைமுகப் பொருளாதாரத் தடையை எப்படி எதிர்கொள்ளலாம் என்று மலேசிய அரசு தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளது.
https://www.vikatan.com/government-and-politics/kulalampur-artist-shaq-koyo-expresses-feelings-of-guilt
மலேசியா: ஆயிரம் குற்ற உணர்வுகள் தாங்கிய நிலம்? - குரலற்றவர்களின் குரலாக ஒலிக்கும் பழங்குடி இளைஞர்
நான் சிறுவனாக இருந்தபோது பார்த்த என் வனம் எனக்கு இன்னும் நினைவில் இருக்கிறது. என் வனம் என் கண்முன்பே மாறிக்கொண்டிருந்ததை நான் பார்த்தேன்.
கோலாலம்பூர்: `ஆயிரம் குற்ற உணர்வுகள் தாங்கிய நிலம்’ என்ற இந்தத் தலைப்பு எதைப் பற்றிப் பேசவருகிறது என்று வாசகர்களால் அனுமானிக்க முடிந்தால், மனிதாபிமானம் என்ற ஈரப்பசை அவர்களிடத்தில் இருக்கிறது என்று என் மனம் நம்புகிறது. மலேசியாவின் 18 ஆதிகுடிகளில் தெமுவான் இனக்குழுவைச் சேர்ந்த ஓவியரான ஷாக் கோயோக்கை சந்தித்துப் பேசியதிலிருந்து என் மனம் இப்படித்தான் எண்ணிக்கொண்டிருக்கிறது. மக்களின் இயல்பு வாழ்க்கை தலைநகரில் மெல்ல திரும்பிக்கொண்டிருக்கும் வேளையில், உரிமையும் உடைமையும் நசுக்கப்படும் பூர்வகுடி மக்களுக்கான குரலாக தன் ஓவியங்கள் வழி பேசிக்கொண்டிருக்கிறார் ஷாக் கோயோக். உலகம் முழுக்கவே ஆதிகுடிகளின் காணி நிலம், கார்ப்பரேட் முதலாளிகளின் கோரப்பசிக்கு அவர்களின் தங்கத்தட்டுகளில் உணவாக மாறிக்கொண்டிருக்கிறது. மலேசியாவும் இதில் விதிவிலக்கல்ல. மலேசிய ஆதிகுடி மக்களின் காணி நிலங்களும் பறிபோகும் அவலம் தொடர்ந்து நடந்துகொண்டேதான் இருக்கிறது. இந்தச் செய்தியை வாசித்துக்கொண்டிருக்கும் நேரத்தில்கூட எங்கோ ஒரு பூர்வகுடியின் வனம் அழிக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது என்பதை நாம் நம்பித்தான் ஆக வேண்டும். இவ்விவகாரங்களை நேரடியாகப் பேசினாலும், சட்ட ரீதியாக கொண்டு சென்றாலும்கூட அவை ஓர் அனுபவமாக மாறுகிறதே தவிர பூர்வகுடிகளின் வாழ்க்கைக்கு எந்த வகையிலும் வலுசேர்ப்பதாக இல்லை. அதற்கு ஒரு சிறந்த உதாரணம், கடந்த மாதம் `செமெலாய்’ இன பூர்வகுடிகளின் ஒரு நூற்றாண்டுக்கும் மேலான பாரம்பர்ய வனத்தைச் சட்டபூர்வமாக வென்றெடுத்து அதை செம்பனைக் காடாக ஒரு தனியார் நிறுவனம் மாற்றிக்கொண்டிருக்கிறது. பாரம்பர்யம், வரலாறு, பூர்வீகம் எனப் பூர்வகுடிகள் தொடர்ந்து இழந்துகொண்டிருக்கும் அவலங்களையும், சுயத்தை இழத்தலையும் சொல்லில் கொண்டுவருவது மிகச் சிரமமானது. அந்த வலியை ஓவியத்தில் என்றென்றைக்குமாக வரைந்துவைத்திருக்கிறார் ஷாக் கோயோக். 2008-ம் ஆண்டு வரையத் தொடங்கியவர் இதுவரை நான்கு கண்காட்சிகளை நடத்தியிருக்கிறார். இந்த ஓவியக் கண்காட்சியில் மிக வித்தியாசமான யுக்தியைப் பயன்படுத்தி ஓவியங்களை வரைந்திருக்கிறார் அவர். காட்டில் கிடைக்கும் pandanus எனும் ஒருவகையான தாழையில் வெய்த பாயில் சில ஓவியங்களை வரைந்து காட்சிப்படுத்தியிருக்கிறார். இது குறித்து அவரிடம் பேசியபோது, ``பூர்வகுடிகளின் வாழ்க்கையில் பிரிக்க முடியாத ஒரு தளவாடப் பொருள் என்றால் அது காட்டின் உருப்படிகளைக்கொண்டு அவர்களாலேயே செய்யப்படும் பாய்தான். அதில் நாங்கள் அமர்வோம், உறங்குவோம். எங்களின் ஒவ்வொரு வாழ்கையிலும் இந்தப் பாயின் ஸ்பரிசம் இருக்கிறது. அதைப் பூர்வகுடிகளால்தான் புரிந்துக்கொள்ள முடியும். ஆனால், இன்று பறிபோகும் வனங்களோடு, எங்களின் கைவினைப் பொருள்களும் அடையாளம் தெரியாமல் போய்விடுமோ என்ற ஐயப்பாட்டுக்கு நாங்கள் வந்துவிட்டோம். என்றென்றும் நினைவுகூரும்விதமாக, பண்டனுஸ் தாழையைக்கொண்டு என் அம்மாவையும் அக்காவையும் எங்கள் பாரம்பர்ய பாயைப் பின்னச்செய்து, அதில் பூர்வகுடிகள் சம்பந்தப்பட்ட ஓவியங்களை வரைந்திருக்கிறேன். பூர்வகுடிகளின் வலியாகவும் குரலாகவும் அந்த ஓவியங்கள் இருக்கின்றன” என்றார். ``நான் சிறுவனாக இருந்தபோது பார்த்த என் வனம் எனக்கு இன்னும் நினைவில் இருக்கிறது. என் வனம் என் கண்முன்பே மாறிக்கொண்டிருந்ததை நான் பார்த்தேன். சில மேம்பாட்டாளர்கள் எனது இருப்பிடத்தைச் சுற்றியுள்ள காட்டில், மரம் வெட்டும் இயந்திரங்களைக்கொண்டு மரங்களை அறுத்து, அவை அடுக்கப்பட்டு லாரிகள் சுமந்து செல்லும் அந்தக் காட்சி இன்னும் எனக்கு நினைவிருக்கிறது. அதை ஓவியத்தில் பேசுகிறேன்.அந்நியர்களின் ஊடுருவலால் கிராம சாலைகள் எவ்வாறு சேதமடைந்தன என்பதும், அவர்களால் கிராமவாசிகள் வெளியே வருவது மிகவும் கடினமாக இருந்ததும் எனக்கு நினைவிருக்கிறது. அதையும் பேசியிருக்கிறேன். இளம் பூர்வகுடியை வனத்தின் பாதுகாவலர்களாக நான் பார்க்கிறேன். அந்நிய சக்திகளால் மலேயா புலிகள் வேட்டையாடப்பட்டு, இன்று அழியும் நிலைக்கு வந்துவிட்டன. ஆனால், நான் பூர்வகுடியை வனத்தின் பாதுகாவலர்களாக, ஒரு புலியாகப் பார்க்கிறேன். இந்தக் கூற்றை அறியப்படுத்த எனது 'மெண்ட்ராக்’ எனும் ஓவியத்தில் ஒரு பூர்வகுடியின் குழந்தை முகத்தில் புலியை வரைந்திருக்கிறேன்.விரைவாக நவீனமயமாக்கப்பட்ட மலேசியாவில், நான் எப்போதும் என் மக்கள் எதிர்கொள்ளும் பதற்றத்தையும் அழுத்தத்தையும் என் படைப்புகளின் மூலமாகப் பேச முயல்கிறேன். எங்களின் வாழ்க்கை இயற்கைச் சூழலுடன் தொடர்புகொண்டிருக்கிறது. நவீன நுகர்வோர் மற்றும் பாரம்பர்ய வாழ்க்கை முறைகளுக்கு இடையிலுள்ள பூர்வகுடிகளின் ஏற்றத்தாழ்வுகளை காட்சிப்படுத்தியிருக்கிறேன். எனது கலை, எனது மக்கள், நாங்கள் வளர்ந்த மழைக்காடுகள் இயற்கையின் முக்கியத்துவத்தைப் பிரதிபலிப்பதாகும் என்று ஷாக் கோயோக் பேசி முடிக்கும்போது எங்கள் இருவருக்குள்ளும் அதன் தாக்கத்தை உணர முடிந்தது. இந்த ஓவியக் கண்காட்சியில் மொத்தம் 16 ஓவியங்கள், ஆறு பூர்வகுடி இனக்குழுவின் கதைகளைப் பேசுகின்றன. ஒரு ஓவியத்தில் தன்னையே வரைந்திருக்கிறார் கோயோக். ஆனால், அந்த ஓவியத்துக்கு அவர் வாயை வரையவில்லை. அதன் அர்த்தத்தைச் சொல்லிப் புரியவைக்க வேண்டியதில்லை. ``குரல்கள் அற்றவர்களின் வலியை வேறு எப்படி தெரியப்படுத்துவது. நான் ஒரு பூர்வகுடி. எனக்கு இயற்கையோடு வலுவான தொடர்பு உள்ளது. நான் மழைக்காலத்திலும் காட்டில் மீன்பிடிக்கச் சென்றிருக்கிறேன். காடு எனக்கும் என் நண்பர்களுக்கும் விளையாட்டு மைதானமாக இருந்தது. இந்தப் பழைய நினைவுகள் என்னைத் தொந்தரவு செய்தபடி இருக்கின்றன” இப்படிக் கூறி என்னிடமிருந்து விடைபெற்றார் ஷாக் கோயோக். 36 வயதான ஷாக் கோயோக், ஒரு பட்டதாரி. பூர்வகுடி மக்களுக்கான சமூகச் செயற்பாட்டாளராகவும் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.விகடன் இணையதளத்துக்காக மலேசியாவிலிருந்து யோகி!
https://www.vikatan.com/agriculture/policy/if-you-hoard-rice-strict-action-do-you-know-which-country
`அரிசி பதுக்கினால் கடுமையான நடவடிக்கை!’ எந்த நாட்டில் தெரியுமா?
அரிசி ஏற்றுமதியில் முன்னிலை வகிக்கும் இந்தியா போன்ற நாடுகள் பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளதால் பிற நாடுகளை நம்பி இருக்கும் மலேசியா போன்ற நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன.
மலேசியாவின் அரிசி தேவையில் ஏறக்குறைய 38 சதவிகிதம் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. ஆனால், அரிசி ஏற்றுமதியில் முன்னிலை வகிக்கும் இந்தியா போன்ற நாடுகள் பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளதால் பிற நாடுகளை நம்பி இருக்கும் மலேசியா போன்ற நாடுகள் பாதிக்கப் பட்டுள்ளன. எனவே, அங்கு அரிசி பற்றாக்குறை மற்றும் அரிசி விலை உயர்வு ஆகியவை உருவாகியுள்ளன. அந்நாட்டில் இப்படியே அரிசி தட்டுப்பாடு நிலவினால் வருங்காலத்தில் அரிசி விலை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது. எனவே, சில வியாபாரிகள் அரிசியை அதிக அளவுக்கு வாங்கி இப்போதே பதுக்கி வைக்கத் தொடங்கி யுள்ளனர். அதேபோல் குடும்பத்தினரும் தங்களால் முடிந்த அளவு அதிக அரிசியை வாங்கி சேர்த்து வைத்து வருகின்றனர். அங்கு நிலவும் இந்த பிரச்னையால் எளிய மக்களுக்கு குறிப்பிட்ட அளவுகூட அரிசி கிடைக்காத நிலை உள்ளது. ``அரிசி கிடைக்க மக்கள் அல்லாடும்போது யாராவது அரிசியைப் பதுக்கினால் நாங்கள் கண்டுபிடித்து வழக்கு தொடுத்து நீதிமன்றத்தில் நிறுத்துவோம்” என்று பிரதமர் அன்வர் கூறியுள்ளார். மேலும், அரிசி பதுக்குவோரைக் கண்காணித்து அமலாக்க நடவடிக்கைகளை எடுக்குமாறு வேளாண், உணவுப் பாதுகாப்பு அமைச்சரும் உத்தரவிட்டுள்ளார். கடந்த மாதம் மலேசியாவில் இறக்குமதி செய்யப்படும் அரிசியின் விலை 30 சதவிகிதம் வரை அதிகரித்துள்ளது. இதனால் உள்ளூர் அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. உள்ளூர் அரிசியின் விலைக்கு அரசாங்கம் வரம்பு விதித்துள்ளது. அதனால் உள்ளூர் அரிசி விலையேற வாய்ப்பில்லை. இந்நிலையில், அரிசி விலை உயர்வைத் தடுப்பதற்காக சாபா, சரவாக் மாநிலத்தில் இறக்குமதி செய்யப்படும் ஒரு டன் அரிசிக்கு 950 ரிங்கிட் (1 Malaysian Ringgit equals 17.63 Indian Rupee) மானியம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
https://www.vikatan.com/government-and-politics/protest/malaysia-shoe-protest-for-myanmar-refugees
மலேசியா: மியான்மர் அகதிகளுக்காகக் காலணிகள் கொண்டு அறப்போராட்டம் - என்ன நடக்கிறது?
முகம் தெரியாத அகதிகளுக்காக 1,086 காலணிகளை வரிசைப்படுத்தி, ஒவ்வொரு ஜோடி காலணியும் ஒவ்வொரு அகதிகளுக்கானது என்ற அடிப்படையில் 1,086 காலணிகள்கொண்ட போராட்டம் அமைதியான முறையில் செய்யப்பட்டது.
மலேசியா: நாட்டில் தஞ்சம் அடைந்திருந்த 1,200 மியான்மர் அகதிகளில் 1,086 அகதிகளைத் திரும்ப மியான்மர் நாட்டுக்கே நாடு கடத்திய விவகாரத்தில், தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்திவருகின்றன, மனித உரிமை சார்ந்த சில தன்னார்வ அமைப்புகள். மியான்மர் உள்நாட்டு அரசியலின் உட்பூசல் காரணமாக அங்கு போராட்டம் வெடித்திருக்கும் வேளையில், மக்கள் பாதுகாப்பில்லாத சூழலில் இருக்கிறார்கள். இந்தநிலையில் மலேசியாவில் தஞ்சமடைந்திருந்த குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் உள்ளிட்ட 1,086 அகதிகளை மியான்மர் ராணுவத்திடம் ஒப்படைக்கும் பொருட்டு மலேசியக் குடி நுழைவுத்துறை திருப்பி அனுப்பியது. பேராக் லுமூட்டிலுள்ள ராயல் மலேசியக் கடற்படை தளத்திலிருந்து மியான்மர் கடற்படையின் மூன்று கப்பல்களில் அவர்கள் நாடுகடத்தப்பட்டனர். முன்னதாக கடந்த ஆண்டு முதல் அகதிகள் முகாமில் இருக்கும் மியான்மர் அகதிகள் 1,200 பேரை அவர்களின் சொந்த நாட்டுக்கு அனுப்பப்போவதாக மலேசியக் குடிநுழைவு இலாகா அறிவித்திருந்த வேளையில், அதை எதிர்த்து அம்னெஸ்டி இன்டர்நேஷனல் மலேசியா (Amnesty International Malaysia) மற்றும் அசைலம் அக்சஸ் மலேசியா (Asylum Access Malaysia) எனும் இரு மனித உரிமைக்குழுக்கள் வழக்கு தொடுத்தனர். மியான்மர் அகதிகளை நாடு கடத்தும் குடிநுழைவு துறையின் எண்ணத்துக்கு உயர் நீதிமன்றம் தற்காலிகமாகத் தடைவிதித்தது. ஆனால், அன்றைய தினமே (பிப்ரவரி 23-ம் தேதி) அகதிகள் 1,086 பேரை நாடு கடத்தியது மலேசிய அரசு. இந்த மனிதாபிமானமற்ற செயலுக்கு ஆட்சேபத்தைத் தெரிவிக்கவும், நாடுகடத்தப்பட்ட 1,086 அகதிகளுக்கு ஆதரவாகவும் வித்தியாசமான முறையில் அறப்போராட்டத்தை முன்னெடுத்தன மனித உரிமைக்குழுக்கள். முகம் தெரியாத அகதிகளுக்காக 1,086 காலணிகளை வரிசைப்படுத்தி, ஒவ்வொரு ஜோடி காலணியும் ஒவ்வொரு அகதிக்கானது என்ற அடைப்பிடையில் 1,086 காலணிகள் கொண்ட போராட்டம் அமைதியான முறையில் செய்யப்பட்டது. பிப்ரவரி மாத தொடக்கத்திலிருந்து தேசிய ஜனநாயக லீக் (என்.எல்.டி.) அரசாங்கத்திடமிருந்து, மியான்மர் ராணுவம் அதிகாரத்தைக் கைப்பற்றியது. இதனால் அங்கு கிளர்ச்சி வெடித்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். இந்தப் போராட்டத்தில் இதுவரை 50-க்கும் அதிகமான உயிர்கள் பலியாகியிருக்கின்றன. சரியான அரசியல் சூழல் இல்லாத இந்தநிலையில் அகதியாகத் தஞ்சமடைந்திருக்கும் மக்களை நாடு கடத்தியது எந்த வகையில் நியாயம் என்றும், இதற்கு அரசாங்கம் பதில் சொல்ல வேண்டும் என்றும் மீண்டும் வழக்கு தொடுக்கப்பட்டிருக்கிறது. அதன் விசாரணை மார்ச் 9-ம் தேதி நடைபெறப்போகும் நிலையில், குடிநுழைவுத்துறை அதிகாரி கைருல் டிசைமி தாவுத், ``அகதிகள் யாரையும் கட்டாயப்படுத்தி அனுப்பவில்லை. இந்த நடவடிக்கைக்கு ஒப்புக்கொண்டதன் அடிப்படையில்தான் அவர்கள் நாட்டுக்குத் திருப்பி அனுப்பப்பட்டிருக்கிறார்கள்’ என்று கூறியிருக்கிறார். அதோடு ரோஹிங்கியா அகதிகள், யு.என்.ஹெச்.சி.ஆர் அட்டைதாரர்கள் அரசியல் புகலிடம் கோரியவர்கள் ஆகியோரை அனுப்பவில்லை என்று அவர் கூறியிருந்தார். ஆனாலும், திருப்பி அனுப்பப்பட்டவர்களில் அரசியல் புகலிடம் வேண்டியவர்கள் இருக்கக்கூடும் என நம்பப்படுகிறது. இதற்கிடையில், கொரானா அச்சம் காரணத்தால்ல் மலேசியாவில் இன்னும் கட்டுப்பாடுகள் அமலில் இருப்பதால், விதிமுறைகளுக்கு உட்பட்டு இந்தக் காலணி அறப்போராட்டம் செய்யப்பட்டிருக்கிறது. Challenger Malaysia, MISI Solidariti, மலேசிய சோசலிஷக் கட்சி இளைஞர் அணி, மலேசிய சோசலிஷக் கட்சி, சுவாராம் ஆகிய அமைப்புகள் இந்த அறப்போராட்டத்தில் தங்களை இணைத்துக்கொண்டன.- விகடன் இணையதளத்துக்காக மலேசியாவிலிருந்து யோகி
https://www.vikatan.com/crime/man-gets-702-years-in-jail-234-lashes-for-raping-daughters-in-malaysia
702 ஆண்டுகள் சிறை, 234 பிரம்படிகள்; மகள்களைப் பாலியல் வன்கொடுமை செய்த தந்தை - நீதிமன்றம் அதிரடி
மலேசியாவில் தன்னுடைய மகள்களைப் பாலியல் வன்கொடுமை செய்தவருக்கு 702 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.
மலேசியாவில் தன்னுடைய மகள்களைப் பாலியல் வன்கொடுமை செய்தவருக்கு 702 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. மலேசியாவின் ஜோகூர் மாநிலத்திலுள்ள மூவார் குடியிருப்பில் வசித்து வந்த 58 வயது நபர், தன்னுடைய 15 மற்றும் 12 வயது மகள்களை, 2018 முதல் 2023 (ஜூலை) வரை சுமார் 30 முறை பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார். இதில் ஒரு சிறுமி கர்ப்பமானதில், இந்த விஷயம் வெளிச்சத்துக்கு வந்தது. அதையடுத்து, மகள்களைப் பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டில் தந்தை கைதுசெய்யப்பட்டார். இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டதில், குற்றம்சாட்டப்பட்டவர் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார். மேலும், இந்தக் குற்றத்துக்கு குறைவான தண்டனை வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை முன்வைத்தார். அதைத் தொடர்ந்து நீதிபதி, ``அவருக்கு வழங்கவிருக்கும் தண்டனை, குற்றவாளி தனது செயல்களைப் பற்றி சிந்திக்கவும், அவர் செய்த மோசமான தவறுகளிலிருந்து பாடம் கற்றுக்கொள்ளவும் வழிவகுக்க வேண்டும். குற்றவாளியின் செயல் இரண்டு சிறுமிகளுக்கு வாழ்நாள் வேதனையாக இருக்கும். எனவே, குற்றவாளிக்கு 234 பிரம்படிகளும், 702 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் விதிக்கப்படுகிறது. மேலும், இந்த இரண்டு தண்டனைகளையும், ஒரே நேரத்தில் அந்த நபர் அனுபவிக்க வேண்டும்" என்றார். சிறுவர்களிடம் பாலியல் குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு மலேசிய சட்ட அமைப்பில் நீண்ட சிறைத் தண்டனை வழங்குவது, வழக்கமானதுதான். இதற்கு முன்னர், ஜோகூரில் சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட குற்றவாளிக்கு 218 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
https://www.vikatan.com/government-and-politics/malaysian-woman-has-accidentally-send-her-first-month-salary-to-stranger
"தானமாக கொடுத்ததா நெனச்சுக்கோங்க"- முதல்மாத சம்பளத்தை பறிகொடுத்த இளம்பெண்ணுக்கு அதிர்ச்சியளித்த நபர்
தன்னுடைய முதல்மாத சம்பளத்தை அம்மாவுக்கு அனுப்ப முயன்று, தவறுதலாக வேறு யாருக்கோ அனுப்பிவிட்ட இளம்பெண் கண்ணீருடன் வீடியோ வெளியிட்டிருக்கிறார்.
மலேசியாவைச் சேர்ந்த ஃபஹதா பிஸ்தாரி (Fahada Bistari) என்ற இளம்பெண், தான் வாங்கிய முதல்மாத சம்பளத்தை, ஆசை ஆசையாய் தன்னுடைய அம்மாவுக்கு ஆன்லைனில் அனுப்பியிருக்கிறார். ஆனால், எதிர்பாரதமாக அந்தப் பணம் வேறு யாரோ ஒருவருக்கு சென்றுவிட்டது. பணத்தைப் பெற்றவரும் அதை திருப்பித்தராமல், ``தானமாகக் கொடுத்ததாக நினைத்துக் கொள்ளுங்கள்!" அந்தப் பெண்ணிடமே கூறியிருக்கிறாராம். இது குறித்து சம்பந்தப்பட்ட பெண்ணும், டிக்டாக்கில் கண்ணீர் மல்க வீடியோ பதிவிட்டிருக்கிறார்.அந்த வீடியோவில், ``இன்று நான் என்னுடைய முதல்மாத சம்பளத்தை வாங்கினேன். கொஞ்சநாள் மட்டுமே வேலைக்குச் சென்றிருந்ததால், சம்பளமும் குறைவுதான். இருப்பினும் அந்தப் பணத்தை என்னுடைய அம்மாவுக்கு அனுப்ப நினைத்தேன். முதல்மாத சம்பளம் என்பதால் பெரும் உற்சாகத்திலிருந்த நான், ஆன்லைனில் அம்மாவுக்குப் பணத்தை அனுப்பும்போது சரியாகக் கவனிக்கவில்லை. பின்னர் பணம் அனுப்பிய ரெசிப்ட்டை வைத்து அம்மாவிடம் கேட்டபோது தான், நான் வேறு யாருக்கோ பணத்தை மாற்றி அனுப்பியது எனக்கே தெரிந்தது. அதையடுத்து, பணம் அனுப்பப்பட்ட நம்பரை வைத்து அந்த நபரைத் தொடர்புகொண்டபோது, அந்த நபர் `தானமாகக் கொடுத்ததாக நினைத்துக் கொள்ளுங்கள்!' என்று கூறிவிட்டார்" எனக் கண்ணீருடன் பேசினார். இந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, இணையவாசிகள் பலரும் ஃபஹதாவுக்கு ஆறுதல் தெரிவித்துவருகின்றனர்.``ஆன்லைன் பரிவர்த்தனைகள் வந்தபிறகு, வங்கியோ அல்லது ஏடிஎம் மையங்களுக்கோ செல்லாமல் இருந்த இடத்திலிருந்தே பணத்தை யாருக்கு வேண்டுமானாலும் உடனடியாக அனுப்பலாம் என்பது மிகவும் எளிதாகிவிட்டது. இதில் அவ்வப்போது இந்தமாதிரியான சம்பவங்களும் நடப்பதுமுண்டு. இருப்பினும் யாரோ தவறுதலாக மாற்றி அனுப்பிய பணத்தை, அந்த நபர் மனிதாபிமான அடிப்படையிலாவது திருப்பித்தந்திருக்க வேண்டுமல்லவா" எனக் குமுறுகிறார்கள் இந்த வீடியோவை பார்ப்பவர்கள்.
https://cinema.vikatan.com/kollywood/vishnu-vishals-fir-movie-banned-in-selected-countries
விஷ்ணு விஷாலின் `FIR' படத்திற்கு சில நாடுகளில் தடையா? பின்னணி என்ன?
இப்படத்தை விஷ்ணு விஷாலே தயாரித்து, நடித்திருக்கிறார். இப்படம் 22 கோடிக்கு வியாபாரம் ஆகியிருக்கிறது என்கிறார்கள்.
விஷ்ணு விஷாலின் 'எஃப்.ஐ.ஆர்.' படம் நாளை வெளியாகிறது. இந்நிலையில் 'இப்படம் மலேசியா, குவைத், கத்தார் ஆகிய நாடுகளில் தடை செய்யப்பட்டிருக்கிறது' எனத் தகவல் வெளியாகியிருக்கிறது. விஷ்ணுவும், தனது ட்விட்டர் பக்கத்தில் 'மலேசிய, குவைத் ஆடியன்ஸ் மன்னிக்கவும்' என ட்வீட்டியிருக்கிறார். படத்தை புரோமோட் செய்யும் பொருட்டு ட்விட்டரில் தனது பெயரை இர்ஃபான் அஹமத் என மாற்றியிருக்கிறார். இது படத்தில் அவரது கதாபாத்திரத்தின் பெயர். இப்படத்தை விஷ்ணு விஷாலே தயாரித்து, நடித்திருக்கிறார். இப்படம் 22 கோடிக்கு வியாபாரம் ஆகியிருக்கிறது என்கிறார்கள். கௌதம் மேனனின் உதவியாளர் மனு ஆனந்த் இயக்கியுள்ள இப்படத்தில் கௌதம் மேனன், ரெபா மோனிகா, மஞ்சிமா மோகன், ரைசா உள்பட பலர் நடித்திருக்கிறார்கள். இப்படத்திற்கான தடை குறித்து இயக்குநர் மனு ஆனந்திடமே கேட்டேன். "எங்க படத்தை மலேசியா, குவைத், கத்தார் ஆகிய நாடுகளில் தடை பண்ணியிருக்காங்கனு சொல்றது தவறு. அங்கெல்லாம் எங்க படம் சென்ஸார் செய்யப்படலை. படத்தில் 'இஸ்லாம்' உள்பட சில வார்த்தைகள் இடம் பெற்றாலே அங்கே அவர்கள் தணிக்கை செய்யமாட்டார்கள். இது போன்ற விஷயங்களாலே மேற்கண்ட நாடுகள்ல எங்க படம் ரிலீஸ் செய்யப்படலை" என்கிறார் மனு.
https://www.vikatan.com/government-and-politics/magnitude-earthquake-strikes-indonesia-island-philippines-malaysia
மலேசியா, பிலிப்பைன்ஸ், இந்தோனேசியா-வில் பதிவான சக்திவாய்ந்த நிலநடுக்கம்..! - பீதியில் மக்கள்
மக்கள் வசிக்கும் குடியிருப்புகள் அதிர்ந்ததால் மக்கள் வீட்டைவிட்டு பதற்றத்துடன் வெளியேறியதாக முதற்கட்ட அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
இந்தோனேசியாவின் மேற்கு சுமத்ரா தீவில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக அமெரிக்கப் புவியியல் ஆய்வகம், "இந்தோனேசியா சுமத்ரா தீவின் மேற்கே 167 கி.மீ தொலைவில் இன்று அதிகாலை 4:06 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அதன் ரிக்டர் அளவு 6.7 எனக் கணக்கிடப்பட்டுள்ளது. சுமத்ரா மாகாணத்தின் தலைநகரான படாங்கிலிருந்து 167 கி.மீ தொலைவில் இந்த நிலநடுக்கம் மையம்கொண்டுள்ளதாகவும், அதனால் மக்கள் வசிக்கும் குடியிருப்புகள் அதிர்ந்ததால் மக்கள் வீட்டைவிட்டுப் பதற்றத்துடன் வெளியேறியதாகவும் முதற்கட்ட அறிக்கைகள் தெரிவிக்கின்றன. மேலும், `மிதமான ஒரு நிமிடம் நிலநடுக்கம் உணரப்பட்டது’ என்று தேசியப் பேரிடர் தணிக்கை நிறுவனம் ஆரம்ப அறிக்கையில் தெரிவித்துள்ளது.அதேபோல, பிலிப்பைன்ஸின் தலைநகர் மணிலாவின் அருகில் இருக்கும் லூசன் தீவுப் பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதன் ரிக்டர் அளவு 6.4 எனப் பதிவாகியுள்ளது என நில அதிர்வு கண்காணிப்பு தேசிய மையம் தெரிவித்துள்ளது. மேலும், மலேசியாவின் கோலாம்பூரிலிருந்து 504 கி.மீ தொலைவில் 6.8 ரிக்டர் அளவில் கடும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் வீடுகள், கடைகள், வணிக வளாகங்கள் அதிர்ந்ததாகச் சொல்லப்படுகிறது. இதனால் பீதியடைந்த மக்கள் அலறியடித்துக்கொண்டு வெளியேறி வீதிகளில் தஞ்சமடைந்தனர். இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதாரங்கள் குறித்து ஏதும் தகவல்கள் வெளியாகவில்லை.
https://www.vikatan.com/government-and-politics/150090-kanimozhi-take-action-to-release-49-people-who-trapped-in-malaysia
கனிமொழியின் தொடர் முயற்சிக்கு கிடைத்த வெற்றி! - 49 தமிழர்களை மீட்ட சுஷ்மா ஸ்வராஜ்
கனிமொழியின் தொடர் முயற்சிக்கு கிடைத்த வெற்றி! - 49 தமிழர்களை மீட்ட சுஷ்மா ஸ்வராஜ்
தி.மு.க-வின் மகளிரணிச் செயலாளரான கனிமொழி கடந்த வருடம் டிசம்பர் மாதம் நெல்லையில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக சென்றிருந்தார். அப்போது தலைவன் கோட்டையைச் சேர்ந்த பெண்கள் கனிமொழியைச் சந்தித்து கோரிக்கை ஒன்று முன் வைத்தனர். `மலேசியாவில் மின்சார டவர் அமைக்கும் பணிக்காக எங்கள் ஊரைச் சேர்ந்த 49 பேர்  சென்றார்கள். அப்படிச் சென்றவர்கள் குறித்து எந்தத் தகவலும் எங்களுக்குக் கிடைக்கவில்லை. சமீபத்தில் அவர்களை யாரோ பிடித்து வைத்துள்ளதாகவும், கஷ்டப்படுவதாகவும் வீடியோ ஒன்றை வெளியிட்டு தங்கள் வேதனையை தெரிவித்தனர். அவர்களை மீட்கப் பல அதிகாரிகளைச் சந்தித்தோம் ஒன்றும் பலனில்லை. நீங்கள் எப்படியாவது அவர்களை மீட்டுத் தர வேண்டும்’ எனக் கண்ணீர் மல்க கேட்டுக்கொண்டனர்.  இந்த விவகாரத்தில் நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்திருந்தார் கனிமொழி. பிறகு இது தொடர்பாக இந்திய தூதரக அதிகாரிகளிடம் கனிமொழி பேசியபோது, மலேசியாவில் விசா பிரச்னை காரணமாக 49 பேரை பிடித்துவைத்துள்ளதாகத் தெரியவந்துள்ளது. பிறகு அவர்களை விடுவிக்கக் கோரி இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜுக்கு அழுத்தம் கொடுத்தார். கனிமொழியின் வேண்டுகோளுக்குப் பிறகு சுஷ்மாவும் மலேசிய அதிகாரிகளைத் தொடர்புகொண்டு தமிழர்களை மீட்க நடவடிக்கை எடுத்தார். இதையடுத்து, விசா இல்லாமல் சிக்கியதாக தொடரப்பட்ட வழக்கின் இறுதி விசாரணை இன்று நடைபெறவுள்ளது. இந்த வழக்கு முடிந்த பிறகு மலேசியாவில் உள்ள 49 பேரும் இந்தியா அனுப்பப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி நெல்லையைச் சேர்ந்த 49 பேரும் நாளை நாடு திரும்பவுள்ளனர். 
https://www.vikatan.com/government-and-politics/anwar-sworn-in-as-malaysias-pm-after-25-year-struggle-for-reform
25 ஆண்டுகாலப் போராட்டம்... மலேசியாவின் பிரதமரான அன்வர் இப்ராஹிம் - சுவாரஸ்யப் பின்னணி!
தேர்தல் முடிவுகள் வெளியாகி எந்தக் கூட்டணிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இந்நிலையில் திடீர் திருப்பமாக அன்வர் இப்ராஹிம் பிரதமாகியிருக்கிறார்.
மலேசியாவின் 15-வது பொதுத் தேர்தல் கடந்த 19-ம் தேதி நடத்தப்பட்டது. இதில் 70 சதவிகித வாக்குகள் பதிவாகின. இருப்பினும் தேர்தல் முடிவுகளில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. அன்வர் இப்ராஹிம் தலைமையிலான நம்பிக்கைக் கூட்டணி, முகைதீன் யாசின் தலைமையிலான தேசியக் கூட்டணி, இடைக்கால பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாகூப் சார்ந்திருக்கும் தேசிய முன்னணி, முன்னாள் பிரதமர் மகாதீர் தலைமையிலான ஜி.டி.ஏ ஆகிய கட்சிகள் தேர்தல் களம் கண்டன. தேர்தல் முடிவுகளில் தேசிய முன்னணி கட்சிக்கும், மகாவீர் ஜி.டி.ஏ கட்சிக்கும் பின்னடைவு ஏற்படவே... பிரதமர் பதவிக்கான போட்டியில் அன்வர் இப்ராஹிமும், முகைதீன் யாசினும் மட்டுமே இருந்தனர். இதில் அன்வர் கட்சிக்கு 82 இடங்களும், முகைதீன் கூட்டணி 73 இடங்களும் வெற்றிப் பெற்றிருந்தன. இரு தலைவர்களும் அனைத்துக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை, ரகசிய கூட்டங்கள் என பல விதமான முயற்சிகளை மேற்கொண்டனர். இருப்பினும்,  மலேசிய மாமன்னர் விதித்திருந்த காலக்கெடுவிற்குள்  சரியான முடிவை எட்ட முடியவில்லை. எனவே, நாட்டின் நலன் கருதி அனைத்து கட்சிகளையும் உள்ளடக்கிய “ஒற்றுமை அரசாங்கம்”  அமைக்கலாம் என்கின்ற ஒரு அறிவுரையை மாமன்னர் வழங்கினார். இது தொடர்பாக அன்வர் முகைதீன் அங்கு இருவரையும் அரண்மனைக்கு அழைத்துப் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் அன்வர் தரப்புடன் இணைந்து பணியாற்ற தனக்கு விருப்பமில்லை என்பதை உறுதிப்படத் தெரிவித்தார் முகைதீன் யாசின். இந்த நிலையில் திடீர் திருப்பமாக தேசிய முன்னணி கட்சி தலைவர்கள் மாமன்னரைச் சந்தித்தனர். அதன் பிறகு ஐக்கிய அரசாங்கத்தை நாங்கள் ஆதரிக்க தாயார். ஆனால் முகைதீன் யாசின் தலைமையில் இந்தக் கூட்டணி அமையாது என்பதைத் திட்டவட்டமாக தெரிவித்தனர். இதனால் மறைமுகமாக அன்வர் இப்ராஹிம் தலைமையை ஆதரிப்பதாக தகவல் வெளியாகின. அதை உறுதிப்படுத்தும் விதமாக அன்வர் ஆதரவாளர்கள் சிலர் சமூக வலைதளங்களில் அடுத்த பிரதமர் அன்வர் இப்ராஹிம் எனப் பதிவிட்டு வந்தனர். இதை மன்னர் மாளிகை அறிவிப்பும் உறுதி செய்தது. மலேசிய மாமன்னர் முன்பு அன்வர் பிரதமராகப் பதவியேற்று இருக்கிறார்.  25 ஆண்டுகளுக்கு முன்பு மகாதீர் ஆட்சியின் கீழ் துணை பிரதமராக இருந்தவர் அன்வர். தன்பாலின ஈர்ப்பு சர்ச்சையில் சிக்கி சிறையில் அடைக்கப்பட்டார். அதன் பின் அன்வரின் அரசியல் முடிந்ததாகவே அனைவரும் கருதினர். ஆனால் சிறையில் இருந்தபடியே மறுமலர்ச்சி  என்னும் முழக்கத்தையும் தொடங்கி, தன் மனைவி வான் அசிலா நேரடியாக களமிறங்கி அரசியல் நடவடிக்கைகளை மேற்கொண்டார். பிறகு தன் ஆதரவாளர்கள் துணையோடு புது கட்சியைத் தொடங்கி அரசுக்கு எதிராகப் பல போராட்டங்களை முன்னெடுத்து, தன் நீண்ட கால அரசியல் பயணத்தில் வெற்றி கண்டிருக்கிறார். அன்வர் இப்ராஹிம் ``தன்னை ஒருமுறை  வாக்களித்து ஆட்சியில் அமர வையுங்கள், நாட்டை நல்ல முறையில் வழிநடத்திச் செல்வேன்'' என்றார். இவரின் 25 ஆண்டுகால முழக்கத்திற்கு மக்களின் பதில் இந்த வெற்றி என்று அவருடைய ஆதரவாளர்கள் கொண்டாடி வருகின்றனர்.
https://www.vikatan.com/health/new-covid-19-strain-d614g-detected-in-malaysia-named-sivaganga-strain
மலேசியாவில் வேகமெடுக்கும் `சிவகங்கா தொற்று!’ - தமிழகத்தில் தாக்கம் இருக்குமா..?
மலேசியாவில் கொரோனா தொற்று பரவுவது கட்டுப்படுத்தப்பட்டிருந்த நிலையில், `கொரோனா வைரஸின் திரிபு’ எனக் கருதப்படும்` D614G’ வகை வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இந்த வைரஸ் கொரோனாவைவிட பத்து மடங்கு வேக­மா­கப் பர­வக்­கூ­டி­யது.
மார்ச் மாதம் முதல் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் துரிதமாகச் செயல்பட்டுவரும் மலேசியா, சமீபத்தில்தான் `மலேசியாவில் கொரோனா தொற்று கட்டுப்பாட்டில் உள்ளது’ என்று அறிவித்திருந்தது. பொதுமக்கள் மெள்ள மெள்ளத் தங்களின் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பிக்கொண்டிருந்த நிலையில்தான், அங்கு ஒரு புதிய பிரச்னை புகையத் தொடங்கியுள்ளது. சமீபத்தில் சிவகங்கையிலிருந்து மலேசியா திரும்பிய நபரிடம் நடத்திய பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. அதோடு அவருக்கு உறுதிசெய்யப்பட்டது `கொரோனா வைரஸின் திரிபு’ எனக் கருதப்படும் `D614G’ வகை வைரஸ் தொற்று என்று மலேசிய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் கண்டறிந்துள்ளது. SARS-CoV-2-ல் உள்ள ஸ்பைக் புரோட்டீன் அமினோ அமில மாற்றம் தான் D614G பிறழ்வு வகை. இந்தப் பிறழ்வு அமினோ அமிலத்தின் 614 நிலையில் D-யில் (அஸ்பார்டிக் அமிலம்) இருந்து G ஆக (கிளைசின்) மாற்றுகிறது. ஆரம்ப D 614 இப்போது G 614 என மாறுபடுகிறது. எனவே, `D614G’ என்றழைக்கப்படுகிறது. கடந்த ஜூலை மாதம் கொரோனா வைரஸின் ஒருவகைத் திரிபான D614G வகை கண்டறியப்பட்டது. இந்த வகை வைரஸ் திரிபு `சூப்பர் ஸ்பிரெட்டர்' (Super Spreader) வகையைச் சேர்ந்தது. ஒரு தனிநபரிடமிருந்து பலருக்கு ஒரே நேரத்தில் தொற்று பரவுவதை `கிளஸ்டர்’ என்பார்கள். இதில் ஒரு சில கிளஸ்டர்கள் மட்டுமே 'சூப்பர் ஸ்பிரெட்டர்' வகையைச் சார்ந்தவையாக இருக்கும். முந்தைய கிளஸ்டர்களின் இயல்பைவிட D614G வகை சற்று வீரியமானது என்று கூறப்படுகிறது. மலேசியச் சுகாதார இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா, “மலேசியாவில் D614G பிறழ்வுகொண்ட கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டதால் அனைவரும் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும். இந்த வகை வைரஸ், ஒரு நபரிலிருந்து மற்ற நபருக்கு கொரோனாவைவிட பத்து மடங்கு எளிதாகவும், வேகமாகவும் பரவக்கூடியது. தற்போது இது குறித்த ஆரம்பகட்ட பரிசோதனை நடைபெற்றுவருகிறது. உறுதியான நிலவரம் விரைவில் வெளியிடப்படும்” என்று கூறியுள்ளார். மேலும் அவர் தனது ஃபேஸ்புக் பதிவில், “இவ்வகை பிறழ்வு ஜூலை மாதம்தான் கண்டறியப்பட்டுள்ளது. தற்போது ஆய்விலுள்ள தடுப்பூசிகள் இந்த வகைகளுக்குச் சேராது அல்லது பயனற்றதாக இருக்கும். எனவே, மக்கள் சுகாதாரத்துறை நடவடிக்கைகளைத் தொடர்ந்து பின்பற்ற வேண்டும். சரியான சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும்; முகக்கவசங்களை அணிய வேண்டும். தற்போதைய நிலைமை கட்டுப்பாட்டில் உள்ளது. மேலும், பல முயற்சிகளை மலே­சிய பொது சுகா­தார அதி­கா­ரி­கள் விரைந்து மேற்கொண்டுவருகிறார்கள். பொதுமக்களின் ஒத்துழைப்பால் மட்டுமே இதைக் கட்டுப்படுத்துவதைச் சாத்தியமாக்க முடியும்” என்று பதிவிட்டுள்ளார். மலேசியாவின் குடியுரிமை பெற்ற 57 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் கடந்த ஜூலை 23-ம் தேதி சிவகங்கையிலிருந்து மலேசியா வந்தடைந்தார். விமானநிலையத்தில் அவருக்கு மேற்கொண்ட பரிசோதனையில் எந்த அறிகுறிகளும் தென்படவில்லை. அவர் வீட்டில் தனிமைப்படுத்திக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளார். ஆனால் அவர், தான் நடத்தும் உணவகத்தில் சென்று பணிபுரிந்ததன் மூலம் மலேசியாவின் தனிமைப்படுத்துதல் விதிமுறைகளை மீறியுள்ளார். அதோடு அடுத்த சில நாள்களில் மீண்டும் அவருக்குப் பரிசோதனை செய்ததில் தொற்று இருப்பது உறுதியானது. அடுத்த சில தினங்களில் அவரின் மகன் உட்பட அங்கு பணியாற்றிய பலருக்கும் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. அந்த உணவகத்தை ஒட்டி பள்ளி ஒன்று செயல்பட்டுவருகிறது. அந்த உணவகத்துக்கு வந்த வாடிக்கையாளர்களுக்கும் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. மலேசியாவின் கெடா மாநிலத்தில், இந்த உணவகம் செயல்பட்டுவந்த பகுதியைச் சுற்றி மக்கள் நடமாடக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. அதோடு, அங்குள்ள பல்லாயிரக்கணக்கானவர்களுக்குப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கெடா பகுதியிலிருந்து அண்டை மாநிலங்களுக்கும் சிவகங்கா தொற்று பரவியுள்ளது. மலேசியாவில் இதுவரை இல்லாத அளவுக்குக் குறுகியகாலத்தில் அதிகமானோர் இவ்வகைத் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தின் சிவகங்கை மாவட்டத்திலிருந்து மலேசியா சென்ற நபருக்கு D614G வகை தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. அப்படியானால், இந்த வகைத் தொற்று அவருக்குத் தமிழகத்திலிருந்து பரவியதா... சிவகங்கையில் அவர் இருந்த பகுதியில் இந்த வகைத் தொற்று பரவுகிறதா என்பது குறித்த விசாரணையைச் சுகாதாரத்துறை எந்தக் காலதாமதமும் செய்யாமல் உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.
https://cinema.vikatan.com/news-about-the-incidents-happened-in-leonis-malaysia-event
லியோனி: நிகழ்ச்சிக்குத் தாமதம்; ரசிகர்கள் வாக்குவாதம்; மலேசியாவில் நடந்தது என்ன?
அரங்கத்துக்கு வந்த லியோனி டீமுடன் மிச்சமிருந்த பார்வையாளர்கள்ல சிலர் கடுமையா வாக்குவாதம் செய்ததும் நடந்தது என்கிறார்கள்.
பட்டிமன்றம் நடத்துவதற்காக மலேசியா சென்ற லியோனி தலைமையிலான டீம் அங்கு குறிப்பிட்ட நேரத்தில் நிகழ்ச்சியை நடத்திக் கொடுக்கவில்லையென்றும், இதனால் நிகழ்ச்சியைப் பார்க்க வந்திருந்த பார்வையாளர்கள் மற்றும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களிடையே கடும் வாக்குவாதம் லியோனி முன்னிலையிலேயே நடந்ததென்றும், ஒருகட்டத்தில் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களிலேயே சிலர் லியோனியைக் குற்றம் சொல்ல, லியோனிக்கும் அவர்களுக்குமே கூட சண்டை வந்து அது போலீஸ் புகார் வரை சென்றதாகவும், அந்த வீடியோக்கள் சொல்கின்றன.உண்மையில் என்ன நடந்தது என சம்பந்தப்பட்டவர்கள் தரப்பில் விசாரித்தோம். `மலேசிய நாட்டின் சில நகரங்களில் ஏப்ரல் கடைசி வாரம் தொடங்கி மே முதல் தேதி வரை தொடர்ந்து லியோனியின் நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செஞ்சிருந்தாங்க. கொரோனாவால சில ஆண்டுகள் அவருடைய நிகழ்ச்சிகள் அங்க நடக்காததால் இந்த முறை டிக்கெட்டுகள்லாம் சில நாட்கள் முன்னதாகவே  முழுமையாக விற்கப்பட்டுவிட்டது.பொதுவாகவே லியோனியின் நகைச்சுவைப் பேச்சுக்கு ரசிகர் கூட்டம் அதிகமா இருக்கும். இந்த முறையும் மலேசிய மக்கள் நிகழ்ச்சியைப் பார்க்க ரொம்பவே ஆர்வமா இருந்தாங்க.நான்கு நாள் நிகழ்ச்சின்னு திட்டமிட்டு மலேசியா வந்திருந்தாங்க லியோனி தலைமையிலான டீம். முதல் மூன்று நாட்கள் மூணு இடங்கள்ல எவ்விதப் பிரச்னையும் இல்லாம நிகழ்ச்சி நடந்திடுச்சு. நான்காவது நாள் பினாங்கில் நடந்த நிகழ்ச்சியிலதான் பிரச்னை. மூணு மணி நேரத்துக்கு மேலாகியும் லியோனி தலைமையிலான டீம் அங்க வராததால பார்வையாளர்கள்ல கொஞ்சம் பேர் ‘எங்களுக்கு டிக்கெட் கட்டணம் திருப்பித் தரப்படணும், இல்லாட்டி சட்ட நடவடிக்கை எடுப்போம்' என கத்திட்டு அரங்கத்துல இருந்து வெளியேறிப் போயிட்டாங்க.அதுக்குப் பிறகு அரங்கத்துக்கு வந்த லியோனி டீமுடன் மிச்சமிருந்த பார்வையாளர்கள்ல சிலர் கடுமையா வாக்குவாதம் செய்ததும் நடந்தது. அதுக்குப் பிறகு இருந்த ஆடியன்ஸை வச்சு ஒருவழியா நிகழ்ச்சியை நடத்தி முடிச்சுட்டுப் போனாங்க’’ என்கின்றனர், நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தவர்களுக்கு நெருக்கமான சிலர். சம்பந்தப்பட்ட இடத்துக்கு லியோனி வரத் தாமதமானதன் காரணமாகப் பரவிய சில தகவல்கள்தான் லியோனி தரப்பை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறதாம். அதாவது குறிப்பிட்ட நேரம் முன்கூட்டியே தெரிந்தும், அது குறித்துக் கவனம் செலுத்தாமல் ஹோட்டலில் ஓய்வெடுத்தார் லியோனி என்கிற தகவல்தான் அது.இந்தச் சம்பவம் தொடர்பான தகவல்கள் தமிழ்நாடு வரை பரவ, உடனடியாக நிகழ்ச்சி ஏற்ப்பாட்டாளர்கள் மலேசிய மீடியாவை அழைத்து ஒரு விளக்கத்தையும் தந்திருக்கிறார்கள். மழை, அதைத் தொடர்ந்து நிகழ்ந்த போக்குவரத்து நெருக்கடி காரணமாகவே நிகழ்ச்சி தாமதமானதாகவும், கூட்டத்தில் ஒரு சிலரே இந்தப் பிரச்னையைப் பெரிதாக்கியதாகவும், நிகழ்ச்சியைப் பார்க்காமல் திரும்பிச் சென்றவர்களுக்கு டிக்கெட் பணத்தைத் திரும்பத் தர நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சொல்கிறது அந்த விளக்கம்.இது குறித்துக் கேட்கலாமென நாம் லியோனியையே தொடர்பு கொண்டோம்.நமது அழைப்பை எடுத்த அவரது மனைவி, ’அது ஒரு சாதாரண சின்ன விஷயம்ங்க. நிகழ்ச்சி திட்டமிட்டபடி நடந்து முடிஞ்சிடுச்சு. கொஞ்சம் பேர் இதை எதுக்குப் பெரிசாக்குறாங்கன்னே தெரியலை. அவரு இப்ப தூங்கிட்டிருக்கார். அதுவும் போக இந்த விஷயத்துல பேசறதுக்கு இனிமே ஒண்ணுமில்ல’ என முடித்துக் கொண்டார்.
https://www.vikatan.com/environment/disasters/earthquake-hits-in-karnataka-malaysia-and-afghanistan
ஆப்கனைத் தொடர்ந்து மலேசியா, கர்நாடகாவிலும் நிலநடுக்கம்!
இந்தியா, மலேசியா மற்றும் ஆப்கானிஸ்தான் போன்ற உலகின் பல்வேறு பகுதிகளில் அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டுவருகிறது.
இந்தியா, மலேசியா, ஆப்கானிஸ்தான் போன்ற உலகின் பல்வேறு பகுதிகளில் அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டுவருகிறது.கர்நாடகா:இந்தியாவில் கர்நாடக மாநிலம், ஹாசன் மாவட்டத்தில் இன்று அதிகாலை 4.30 மணியளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கமானது சுற்றி 50 கி.மீ தொலைவுக்கு உணரப்பட்டதாகக் கூறப்படுகிறது. அதிகாலையில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக மக்கள் அச்சத்தில் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளுக்கு வந்தனர். இது தொடர்பாக கர்நாடக மாநில இயற்கை பேரிடர் கண்காணிப்பு மையம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ``இந்த நிலநடுக்கத்தின் தீவிரம் மிதமானது. இவ்வகை நிலநடுக்கம் மக்களுக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது. தீவிர பூகம்பம் ஏற்படுவதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு. எனவே மக்கள் பயப்படத் தேவையில்லை" என்று கூறியுள்ளது. மலேசியா:-மலேசியாவின் கோலாலம்பூரிலிருந்து மேற்கு திசையில் 561 கி.மீ தொலைவில், நேற்று நள்ளிரவு 12.38 மணி அளவில் 5.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கம் காரணமாக அந்தப் பகுதி மக்கள் தங்களின் குடியிருப்புகளிலிருந்து வெளியேறி சாலைகளில் தஞ்சம் புகுந்தனர். ஆப்கன்:ஆப்கானிஸ்தானின் பக்திகா மாகாணத்தில் நேற்று அதிகாலை 1.30 மணியளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் இதுவரை 1,000 பேர் வரை உயிரிழந்திருப்பதாகவும், 1,500-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்திருப்பதாகவும் பக்திகா மாகாணத்தின் அரசு செய்தித் தொடர்பாளர் தகவல் தெரிவித்துள்ளார். மேலும், கட்டட இடிபாடுகளில் சிக்கியிருப்பவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்றுவருகிறது. இந்த நிலநடுக்கத்தின் தாக்கம், பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்திலிருந்து 334 கி.மீ. தொலைவிலும், ஜம்மு காஷ்மீரிலிருந்து 445 கி.மீ. தொலைவிலும் மையம் கொண்டிருந்ததாக இந்தியாவின் தேசிய நிலநடுக்கவியல் மையம் தகவல் தெரிவித்துள்ளது.
https://www.vikatan.com/government-and-politics/126597-tabung-harapan-malaysia-has-collected-over-rm186mil-just-two-days
48 மணி நேரத்தில் 4.68 மில்லியன் டாலர் வசூல்... கடன் சுமையைக் குறைக்க மலேசியா அரசு பலே ஐடியா!
48 மணி நேரத்தில் 4.68 மில்லியன் டாலர் வசூல்... கடன் சுமையைக் குறைக்க மலேசியா அரசு பலே ஐடியா!
புதிய அரசு, நல்ல விடியலுக்கான நம்பிக்கை, ஊழலை வேரறுத்த திருப்தி... என மலேசியாவின் சந்தோஷத் தருணங்களில் மற்றுமோர் இலக்கை நிர்ணயித்திருக்கிறார் புதிய நிதி அமைச்சர் லிம் குவான் எங். மே-9 அன்று வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைப் பெற்று பதவியேற்றிருக்கும் புதிய அரசு, மலேசியச் சீரமைப்புப் பணியில் வேகம் காட்டிவருகிறது.  ஒரு சின்ன ஃப்ளாஷ்பேக்.  மலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜிப் துன் ரசாக் ஆட்சி, அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஆட்சிதான். அவர் 2009-ம் ஆண்டில் நாட்டின் ஆறாவது பிரதமராகப் பதவி ஏற்றபோது அவரின் தந்தையைப்போல் சிறப்பாகச் செயல்படுவார் என்றே எதிர்பார்க்கப்பட்டது. (நஜிப் துன் ரசாக், மலேசியாவின் இரண்டாவது பிரதமராக இருந்த துன் அப்துல் ரசாக்கின் மகன்.) அந்த நம்பிக்கை படிப்படியாகக் குறைந்து, நாட்டின் கடன் சுமை வேகமாக ஏற ஆரம்பித்தது. நஜிப் ஆட்சிக்காலத்தில் நடந்த 1எம்.டி.பி (1MDB - 1Malaysia Development Berhad) நிறுவனத்தின் பல மில்லியன் டாலர் ஊழல், ஒரே கட்சி ஆட்சி செய்யப்பட்டு வந்த மலேசியாவின் வரலாற்றையே மாற்றி எழுதியது. அதோடு, என்னதான் நஜிப் `நாட்டின் கடன் சுமை கட்டுக்குள்தான் இருக்கிறது. 55 சதவிகித ஜிடிபி அளவை அது தாண்டவில்லை; 50.8 சதவிகிதம்தான் இருக்கிறது. எதிர்க்கட்சிகள் தவறான உருவகம் செய்யப்பார்க்கின்றன' என விளக்கம் சொல்ல முயன்றாலும், `நாடு திவாலாகிவிடுமோ!' என்ற அச்சம் மக்கள் மனதில் உருவாவதை அவரால் தடுக்க முடியவில்லை. இதன் விளைவுதான் அரசியலில் மக்கள் நடத்திக்காட்டிய அதிரடி மாற்றம்.  நஜிப் பதவியிழந்தார். பல்வேறு ஊழல் குற்றங்களுக்குள் இப்போது நிறுத்தப்பட்டிருக்கிறார். கிட்டத்தட்ட ஒரு டிரில்லியன் ரிங்கிட் கடன் சுமை அனைவரையும் பதறவைக்க, ஏதாவது செய்தே ஆகவேண்டிய கட்டாயத்தில் நாடு தன்முனைப்பைத் தொடங்கியுள்ளது. நிக் ஷாசாரினா பக்தி என்கிற 27 வயதுப் பெண், க்ரௌடு ஃபண்டிங் முறையில் நாட்டின் ஒரு டிரில்லியன் கடன் சுமையைக் குறைக்க எடுத்த முதல் முயற்சியே, நிதியமைச்சர்  லிம்மின் `மலேசிய நம்பிக்கை நிதி' உருப்பெற காரணம். மே 30-ம் தேதி தொடங்கப்பட்ட இந்தத் திட்டம், 24 மணி நேரத்துக்குள் 7 மில்லியன் ரிங்கிட் (2.35 மில்லியன் டாலர்) குவித்துள்ளது. 48 மணி நேரத்துக்குள் 18.6 மில்லியன் ரிங்கிட் (4.68 மில்லியன் டாலர்). `இந்த கலெக்‌ஷன், மக்களின் நம்பிக்கையைப் பெறுமா?' என்ற கேள்விக்கு லிம்மின் சிம்பிளான பதில் ``மக்கள், தங்கள் நாட்டுப்பற்றை வெளிப்படுத்தும்போது அதை வரவேற்கவே செய்வோம். இது, மலேசியர்கள் அனைவரும் ஓர் இதயம், ஓர் உணர்வு, ஓர் உடல் என்பதை வெளிப்படுத்தும் தருணம்" என்கிறார். அதோடு நிற்காமல், வெளிப்படைத்தன்மைக்காக மலேசிய நம்பிக்கை நிதியில் பணம் செலுத்துவதற்கென தனியாக வங்கிக்கணக்கு எண் வழங்கப்பட்டுள்ளது. 2018-ம் ஆண்டில் நடக்கும் இந்த முயற்சியின் முன்னோடி, ஏற்கெனவே 1998-ம் ஆண்டில் தென்கொரியர்கள் நிகழ்த்திக்காட்டியதுதான். அது 1998-ம் ஆண்டின் தொடக்கம். தென்கொரிய மக்கள் தங்களின் வாழ்நாள் சேமிப்பாக வைத்திருந்த தங்கத்தை எல்லாம் வாரி வழங்கி,  சற்றும் தயங்காமல் தன் தாய்நாட்டின் கடனைத் தீர்க்க வரிசைகட்டி நின்றார்கள். அவை உழைப்பைக் கொட்டி ஈட்டிய தங்கம் மட்டுமல்ல; அவர்கள் வாழ்க்கையின் அதிமுக்கியத் தருணங்களின் சாட்சிகளும்கூட. கல்யாண மோதிரங்கள், மெடல்கள், வியாபார வெற்றிக்காகவும் அறுபதாவது பிறந்தநாளுக்காகவும் வழங்கப்படும் அதிர்ஷ்ட தங்கச்சாவிகளையும்கூட தயங்காமல் நாட்டுக்காக அள்ளிக்கொடுத்ததில் ஐ.எம்.எஃப் கடன் மூன்று வருடத்துக்கு முன்னதாகவே அடைக்கப்பட்டது.   கொட்டிக்கொடுத்த கொரியர்களின் நாட்டுப்பற்றுக்கு எந்த வகையிலும் குறைவில்லாமல் மலேசியர்களும் கொள்கையை முன்னெடுக்கிறார்கள். ஒருவேளை இந்தக் கடன் சுமை குறையாமல் இருக்குமேயானால், பிறக்கும் ஒவ்வொரு மலேசியக் குழந்தையும் 33,000 ரிங்கிட் கடனுடன்தான் பிறக்கும் என்ற பயம் நாட்டையே உந்தித்தள்ளுகிறது. ஊழலுக்கு எதிராக மலேசியர்களின்  பெருமுயற்சியாகவே இந்தக் கூட்டுமுயற்சி பார்க்கப்படுகிறது. ஆதிக்கச்சக்திகளுக்கும்   அநியாயத்துக்கும் எதிராக மக்கள் ஒன்று திரளும்போதெல்லாம் வென்றே தீர வேண்டும் என்பதே எல்லோரின் விருப்பம்! ஆல் தி பெஸ்ட் மலேசியா!
https://www.vikatan.com/government-and-politics/coronavirus-malaysian-prime-minister-declares-targeted-lockdowns
கொரோனா அச்சுறுத்தல் - மலேசியாவில் ஆகஸ்ட் 1 வரை அவசரநிலை பிரகடனம்!
மலேசியா நாட்டின் மன்னர், 50 வருடங்களுக்குப் பிறகு நாடு தழுவிய அவசரகால நிலையை (State of Emergency) அறிவித்திருக்கிறார். இது ஆக்ஸ்ட் 1-ம் தேதி வரை அமலில் இருக்கும் என்பதால், மலேசிய நாடாளுமன்றக் கூட்டங்கள் இடைநிறுத்தப்படும்.
கடந்த டிசம்பர் மாதம் சீனாவின் வூஹான் மாகாணத்திலிருந்து பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் தொற்று தற்போது உலகம் முழுவதும் பரவியிருக்கிறது. உலக நாடுகள் அனைத்தையும் அச்சுறுத்திவரும் இந்த வைரஸ் தொற்றுப் பரவலைக் கட்டுக்குள் கொண்டு வர ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறுகட்ட நடவடிக்கைகள் மேற்கொண்டு வரப்படுகின்றன. அமெரிக்கா, பிரிட்டன், சீனா உள்ளிட்ட சில நாடுகளில் கொரோனா தடுப்பு மருந்துகள் இறுதிக்கட்ட சோதனையில் உள்ளன.பிரிட்டன், தென்னாப்பிரிக்காவில் புதிய வகை கொரோனா வைரஸ் பரவத் தொடங்கி மக்களை மீண்டும் அச்சத்தில் ஆழ்த்தியிருக்கிறது. உலகம் முழுவதும் சுமார் ஒன்பது கோடிக்கும் அதிகமானவர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.மலேசியாவிலும் கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்துவருகிறது. அதைத் தொடர்ந்து, மலேசியா முழுவதும் இரண்டு வார காலத்துக்கு ஊரடங்கை நீட்டித்து அந்நாட்டு பிரதமர் முஹைதீன் யாசின் நேற்று அறிவித்திருந்தார். இந்த ஊரடங்கு இன்று நள்ளிரவு முதல் வரும் 26-ந் தேதி வரை அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், மலேசியா நாட்டின் மன்னர் 50 வருடங்களுக்கு பிறகு நாடு தழுவிய அவசரகால நிலையை (State of Emergency) அறிவித்திருக்கிறார். இது ஆக்ஸ்ட் 1-ம் தேதி வரை அமலில் இருக்கும் என்பதால், மலேசிய நாடாளுமன்றக் கூட்டங்கள் இடைநிறுத்தப்படும். தற்போதைய பிரதமர் முஹைதீன் யாசின் தொற்றுநோய் முடிவுக்கு வரும் வரை தேர்தலை எதிர்கொள்ள முடியாத சூழலை அவசரநிலை பிரகடனம் உருவாக்கியிருக்கிறது.மலேசிய பிரதமர் முஹைதின் யாசின் (Muhyiddin Yassin) தலைமையிலான அமைச்சரவைப் பரிந்துரையை ஏற்று அந்நாட்டில் அவசரநிலையை மலேசிய மன்னர் சுல்தான் அப்துல்லா ஹாஜி அகமத் ஷா பிரகடனப்படுத்தியிருக்கிறார். மலேசியாவின் அவசரநிலை அறிவிப்பு, தனியார் மருத்துவமனைகளின் செயல்பாடுகள் உட்பட கோவிட் -19 வைரஸ் தொற்று பரவலைச் சமாளிக்க பிரதமர் முஹைதீனின் நிர்வாகத்துக்கு அதிக அதிகாரத்தை அளிக்கிறது. மேலும், காவல்துறை மற்றும் ராணுவத்தை பொது சுகாதார நடவடிக்கைகளுக்கு உதவ அனுமதிக்கவும் வழிவகை செய்கிறது. இது குறித்துப் பேசிய மலேசிய பிரதமர் முஹைதீன் யாசின், ``பொருளாதார நாசவேலைகளைத் தடுக்க விலைக் கட்டுப்பாடுகள் போன்ற நடவடிக்கைகளை அறிமுகப்படுத்தலாம். அவசரநிலை ஆகஸ்ட் 1-ம் தேதி வரை அமலில் இருக்கும். நோய் தொற்று விரைவில் குறையாது. தொற்றுநோய் குறைந்துவிட்டதாக குழு அறிவித்தவுடன் தேர்தல்கள் நடத்தப்படும். அப்போதுதான் வாக்களிப்பது பாதுகாப்பானதாக இருக்கும்" என்றார். மேலும், தற்போதைய அவசரநிலை பிரகடனத்தால் கூட்டரசு அரசாங்கம், மாநில அரசாங்கச் செயல்பாடுகளிலும், பொருளாதார நடவடிக்கைகளிலும் பாதிப்பு இருக்காது. அவசரநிலை என்பது ராணுவ அதிகார கட்டுப்பாட்டைக் குறிப்பதும் ஆகாது. அவசரநிலை தொடர்பாக மாமன்னருக்கு ஆலோசனை வழங்க எம்.பி-க்கள், சுகாதார அதிகாரிகள் கொண்ட குழு அமைக்கப்படும்" என்றார் பிரதமர் முஹைதீன் யாசின்.மலேசியாவின் அவசரநிலை காலத்தில் நாடாளுமன்றக் கூட்டங்கள் நடைபெறாது என்றும், பொதுத்தேர்தல், இடைத்தேர்தல்கள் நடத்தப்பட மாட்டாது என்றும், அதேநேரத்தில் நீதிமன்றங்கள் வழக்கம்போல் இயங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மன்னரின் அவசரநிலை அறிவிப்புக்குப் பிறகு மலேசிய ரிங்கிட் (Ringgit) மற்றும் நாட்டின் முக்கியப் பங்குகளின் குறியீடுகள் குறைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
https://www.vikatan.com/government-and-politics/157717-muhammad-idrees-passed-away
இயற்கையில் கலந்த முகமது இத்ரீஸ்!
இயற்கையில் கலந்த முகமது இத்ரீஸ்!
மலேசியா நாட்டில் உள்ள ‘பினாங்கு பயனீட்டாளர் சங்கத்தின்’ (Consumers Association of Penang) தலைவர் எம்.எஸ். முகமது இத்ரீஸ் (93) இன்று இயற்கையுடன் கலந்தார். மலேசியா நுகர்வோர் உரிமை, சுற்றுச்சூழல், இயற்கை விவசாயம்... குறித்த விழிப்புணர்வு பணிகளில் முனைப்புடன் செயல்பட்டு வந்தார். சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட பினாங்கு பயனீட்டாளர் சங்கத்தை, மக்கள் இயக்கமாக மாற்றிக்காட்டிய பெருமைக்குரியவர். எளிமை, நேர்மை, தலைமைப் பண்பு, களப்போராட்டம்... போன்றவற்றில் முன்னுதாரணமாகச் செயல்பட்டவர். மலேசியாவில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வில் அதீத ஆர்வம் காட்டினார். இவரது அமைப்பு தொடர்ந்து கொடுத்த அழுத்தம் கரணமாகத்தான், 1975-ம் ஆண்டு, மலேசிய அரசாங்கம் ‘சுற்றுச்சூழல் துறையை’ உருவாக்கியது.  அந்நாட்டில் உள்ள மக்கள் விஷமில்லாத உணவு உண்ண வேண்டும் என்பதற்காக விவசாயம் சார்ந்த பல நிகழ்ச்சிகளை நடத்தினார். அந்நாட்டு விவசாயிகளைத் தமிழ்நாட்டுக்கு அனுப்பி இயற்கை விவசாயம் கற்று வரச்செய்து, பினாங்கு மாநிலத்தில் இயற்கை விவசாயத்தைப் பரப்பிய முன்னோடி இவர். இயற்கை வேளாண் விஞ்ஞானி கோ.நம்மாழ்வாரை, மலேசியாவுக்கு வரவழைத்து, தமிழ், சீன, மலேசிய விவசாயிகளுக்கு இயற்கை விவசாய நுட்பங்களைக் கற்றுக்கொடுக்க வைத்தார். மலேசியா நாட்டு மக்களால், பெரிதும் மதிக்கப்பட்ட முகமது இத்ரீஸ் பூர்வீகம், தமிழ்நாட்டில் உள்ள ராமநாதபுரம் என்பது குறிப்பிடத்தக்கது.
https://www.vikatan.com/government-and-politics/my-skills-foundation-helping-children-in-malaysia
இருளிலிருந்து வெளிச்சத்துக்கு… மலேசியத் தமிழ் இளைஞர்களின் நம்பிக்கையான தோழமை | இவர்கள் | பகுதி 24
``மலேசியாவின் My Skills Foundation எனும் தொண்டு நிறுவனத்தின் பணிகள் சமூக சீர்த்திருத்தத்துக்கு வித்திடும் அரும்பணிகளாகும்.’’
இனிமையான குழந்தைப் பருவமும், பெற்றோரின் அரவணைப்பும், அவர்கள் ஏற்படுத்தித்தரும் வாய்ப்புகளும் அனைவருக்கும் சாத்தியப்படுவதில்லை. மகிழ்ச்சியற்ற குழந்தைப் பருவமென்பது ஆகப்பெரும் துயரம். களிப்பும் கொண்டாட்டமும் சூழ்ந்து வாழவேண்டிய வயதில், வறுமையும் அவமானங்களும் துரத்த வாழ்கிற குழந்தைகள் எல்லாவற்றையும் கண்டு அச்சப்படுகிறவர்களாக மாறுகிறார்கள். இந்த அச்சம் அவர்களை வேறு பாதைகளுக்கு, சில சமயங்களில் இழுத்துச் செல்வதுண்டு. ஏதோவொரு தருணத்தில் தவிர்க்க முடியாத காரணங்களால் அப்படி வழிதவறியவர்களையெல்லாம் அரவணைத்து, அவர்களின் வாழ்வுக்கு வெளிச்சம் காட்டும் மனிதர்களும் நம்மோடு வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறார்கள். வாய்ப்புகள் அமையப்பெறாத எவரும் சபிக்கப்பட்டவரில்லை என்கிற பேருண்மையை நிஜமாக்கும் மனிதர்கள் பற்றித் தெரிந்துகொள்ளும் நேரங்களில் மனதில் நம்பிக்கையும் பேருவகையும் பெருக்கெடுக்கின்றன. பன்னிரண்டாம் நூற்றாண்டின் தத்துவ மேதை மைமோனிடஸின் கூற்றுப்படி "குறைகளோடு போராடும் மனிதர்களுக்கு அவர்களிடம் மறைந்துள்ள திறமையை அவர்களுக்கு நினைவூட்டி, அவர்களது சுயம் அழிந்துவிடாமல் வாழச் செய்வதே சமூகத் தொண்டாற்றுவதின் அடிப்படை நோக்கமாக இருக்க வேண்டும்.’’ இந்தக் கொள்கையைத் தனது குறிக்கோளாகக்கொண்டு இயங்கிவரும் மலேசியாவின் My Skills Foundation எனும் தொண்டு நிறுவனத்தின் பணிகள், சமூகச் சீர்த்திருத்தத்துக்கு வித்திடும் அரும்பணிகளாகும். வாழ்வின் விசை அனைவரையும் ஒரே திசையில் வழிநடத்தி, கரைசேர்த்துவிடுவதில்லை. சிலர் அதன் சுழலில் சிக்கி, வழிதவறி மூழ்கிப்போய்விடுவதுமுண்டு அல்லது திசையிழந்து கரைசேர தத்தளித்து, தோற்றுப்போவதுமுண்டு. வழிகாட்டுதலின்றி திசைமாறிச் சென்ற பதின் பருவத்தினருக்கு, நம்பிக்கையும் புதுவாழ்வு ஏற்படுத்திக்கொள்ள வாய்ப்புகளும் உருவாக்கித் தரும்போது அவர்களில் பலர் நாளைய சமுதாயத்தின் தலைவர்களாகவும், முன்னோடிகளாகவும் உருவெடுத்திருக்கின்றனர் என்பதற்கு வரலாற்றில் அநேகச் சான்றுகளுண்டு. குற்றப் பின்னணிகொண்ட பல இளைஞர்களைத் தேர்ந்தெடுத்து, தமது அமைப்பின் மூலம் அவர்களது கல்வி, உளவியல் மேம்பாடு, உடல்நலன் பேணுதல் ஆகியவற்றில் கவனம்செலுத்தி குற்றச் செயல்கள் புரியத் தூண்டும் காரணிகளிடமிருந்து விலக்கிவைத்து, அவர்களுக்குப் புதுவாழ்வு அமைத்துத் தரும் `MySkills’ அமைப்பின் தலைவர் திரு.பசுபதி மற்றும் திரு.சண்முக சிவா அவர்களின் கனவுகள் இன்று நனவாகிக்கொண்டிருக்கின்றன. அவர்களின் வழிகாட்டுதலில் பல மலேசிய இளைஞர்கள் அரசு நிறுவனங்களிலும், ஆசிரியர்களாகவும், மருத்துவர்களாகவும் பணிபுரிகின்றனர். "குற்றவாழ்வின் இருள் அவர்கள் மேல் இனி எப்போதும் படரப்போவதில்லை" என்று கனிவான குரலில் கூறுகிறார் திரு.பசுபதி. அவருடன் இணைந்து இந்த அமைப்பில் செயல்பட்டுவரும் சண்முகசிவா, மலேசியாவில் புகழ்பெற்ற மருத்துவர். இந்த அமைப்பைத் தொடங்குவதற்கு முன்பாகவே 90-களில் `செம்பருத்தி’ என்ற பத்திரிகையை நடத்தியிருக்கிறார்கள். மலேசியாவில் தமிழர் முன்னேற்றம், தமிழர் உரிமைகளுக்காகக் குரல்கொடுப்பதென அவர்களின் சமூகச் செய்லபாடுகள் நீண்ட வரலாறுகொண்டப்சி. மருத்துவர், சமூக ஆர்வலர் என்பதோடு சண்முகசிவா சிறந்த எழுத்தாளரும்கூட. MySkills அமைப்பின் தலைவர் திரு.பசுபதியின் குழந்தைப் பருவம் வறுமையில் சிக்கித் தவித்தபோது, ஒவ்வொரு நிலையிலும் யாரோ ஒருவர் நீட்டிய உதவிக்கரமே அவருக்குக் கல்வியும், அது சார்ந்த தொழிலும் ஏற்படுத்திக்கொள்ள உறுதுணையாயிருந்தன. உதவியின் மகத்துவத்தைத் தனது வாழ்விலிருந்தே அறிந்துகொண்ட பசுபதி அவர்கள், சட்டக்கல்வி பயின்று வழக்கறிஞரான பின் தன்னிடம் வந்த வழக்குகளில் இளங்குற்றவாளிகள் என்கிற அடையாளத்தோடு வந்த சிறுவர், சிறுமியருக்கு முன்னேற்றத்தின் பாதையை வழிகாட்டிட எண்ணி 2011-ம் ஆண்டு MySkills எனும் அமைப்பைத் தொடங்கினார். மலேசியாவின் Kalumpang பகுதியில், அமைதியான சூழலில் அமைந்திருக்கும் Myskills அமைப்பு ஆயிரக்கணக்கான இளைஞர்களின் வாழ்விடமாக இருக்கிறது. பசுமையான சுற்றுப்புறம், திறந்தவெளி தங்குமிடங்கள் என மனதுக்கு இதமளிக்கும் சூழலில் இளைஞர்கள் வாழும்போது அமைதி அவர்களுக்குப் பழகுகிறது. நிம்மதியைப் பேணும் மனத்தில் குற்ற எண்ணங்கள் உதிப்பதில்லை. சுமார் இருநூறு பேர் தங்குமளவுக்கு விடுதிகளும் அமைக்கப்பட்டுள்ளன. `ஒருவனுக்கு ஒரு மீன் கொடுப்பாயானால், அது அவனது ஒருவேளைப் பசியை மட்டுமே ஆற்றும் அவனுக்கு, மீன்பிடிக்கக் கற்றுக் கொடு. அவன் வாழ்நாள் முழுதும் பசியாற அது ஏதுவாக இருக்கும்’ என்று திருவிவிலிய வாசகம் ஒன்று உண்டு. Myskills அமைப்பில் இளைஞர்கள் அனைவரும் கல்வியோடு சேர்ந்து பற்பலத் திறன்களை வளர்த்துக்கொள்ள வழிவகைகள் செய்யப்பட்டுள்ளன. பசுமை விவசாயம், இயல் இசை நாடகம், வாகனம் ஓட்டுதல், ஓவியம் பயிலுதல், விளையாட்டு்த்திறன், எலெக்ட்ரானிக் துறை படிப்புகள், வெல்டிங், ஒப்பனையியல் போன்றவற்றைக் கற்கும் அவர்களால் வாய்ப்புகளின் கதவுகளை எளிதில் திறக்க முடிகிறது. மலேசியத் தமிழர்களின் வாழ்க்கை, கடந்த காலத்தில் பெரும் போராட்டங்களை உள்ளடக்கியது. தோட்டத் தொழிலாளர்களாகவும், விவசாயக்கூலிகளாகவும் அடிமைப்படுத்தப்பட்டிருந்த அவர்கள் நீண்ட போராட்டங்களுக்குப் பிறகுதான் தங்களுக்கான அடிப்படை உரிமைகள் கிடைக்கப்பெற்றவர்களாக இருக்கிறார்கள். கடந்த சில தசாப்தங்களில் இந்தப் பிரச்னைகள் வேறு வடிவங்களில் உருவெடுக்கத் தொடங்கின. அவற்றில் முக்கியமானது தமிழ் மாணவர்கள் மலாய் மற்றும் சீன மாணவர்களால் எதிர்கொள்ளும் நெருக்கடிகள். குடும்பச் சூழல் காரணமாகவும், மற்ற இன மாணவர்களின் அச்சுறுத்தல் காரணமாகவும் சிறு வயதிலேயே குற்றப்பின்னணிகொண்டவர்களோடு தங்களை இணைத்துக்கொள்ளவேண்டிய நெருக்கடி நமது தமிழ் மாணவர்களுக்கு உருவாகிவிடுகிறது. இப்படி திசைமாறிப் போகிறவர்களை சரியான பாதைக்குக் கொண்டுவர வேண்டுமென்பதுதான் my skills foundation அமைப்பின் முக்கிய நோக்கம். கல்விதான் ஒரு மனிதனை அவனது எல்லாத் துயரங்களிலிருந்தும் விடுதலை செய்யக்கூடிய ஆயுதம். இங்கு பயிலும் மாணவர்களுக்கு மலேசிய கல்வித்துறையின் பாடத்திட்டத்தின்படி மாணவர்களுக்குக் கல்வி பயிற்றுவிக்கப்படுகிறது. அதற்கான தேர்ந்த ஆசிரியர்களும், தன்னார்வலர்களும்தான் இவ்வமைப்பின் முதுகெலும்பாக விளங்குகின்றனர். கல்வி மற்றும் திறன் மேம்பாட்டு வகுப்புகளோடு சேர்ந்து, இளைஞர்களின் மனவியலைப் பக்குவப்படுத்தும் யோகப் பயிற்சி வகுப்புகளும், ஆன்மிகச் சொற்பொழிவுகளும் அவ்வப்போது நிகழ்ந்தவண்ணம் உள்ளன. Myskills அமைப்பில் பயிலும் இளைஞர்களோடு உரையாடினால் அவர்களது ஆர்வமும் அறிவும் நம்மை வியக்கச் செய்துவிடும் என்கின்றனர் அவ்வமைப்பின் தன்னார்வலர்கள். "வாய்ப்பும் வாழ்வும் மறுக்கப்பட்ட வலி, அவர்களை வாழ்வை இன்னும் அதிகமாக நேசிக்கவைத்திருக்கின்றன. துன்பமெனும் பாலைவனத்தில் நடந்து, வெடித்துப்போன அவர்களது பாதங்கள் வாழ்வின் பசுமையில் இளைப்பாறிட ஏங்குகின்றன. அவர்கள் அவ்விடம் சென்றடைய சிறு பாலமென எங்கள் அமைப்பு செயல்படுவதில் எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி" என்று உவகை பொங்கக் கூறுகிறார் ஒரு தன்னார்வலர். கல்வி மற்றும் இளைஞர்களுக்குக் கிடைக்கும் எவ்வித பயிற்சிக்கும் அவர்களிடத்தில் கட்டணமேதும் வசூலிக்கப்படுவதில்லை. பெற்றோர் மற்றும் உறவினர்கள் அவர்களைச் சந்தித்துச் செல்லவும் தடையேதுமில்லை. அவர்களது வாழ்வுக்கான செலவு மொத்தமும் தன்னார்வலர்களின் நன்கொடைகளால் மட்டுமே சந்திக்கப்பட்டுவருகின்றன. இவ்வமைப்பின் இயக்கம் உலகெங்குமுள்ள பல நல்ல உள்ளங்களின் கொடைக்கரங்களால் நடக்கிறது. பொருளாதார உதவி செய்யும் ஒவ்வொருவரும் இவ்வமைப்பின் சிற்பிகளாவர். இவ்வமைப்பின் பலம் கூடி, சுயச்சார்பில் இயங்கும் நாள் வெகு தொலைவிலில்லை. அதை இவ்வமைப்பின் இளைஞர்களே சாத்தியப்படுத்தித் தருவர் என்பதில் துளியும் ஐயமில்லை. 2017-ம் வருடம் முதன்முறையாக மலேசியா சென்றிருந்தபோது எழுத்தாளர் வல்லினம் நவீன் கோலாலம்பூரின் முக்கியப் பகுதியில் my skills foundation அமைப்பினர் நடத்தும் உணவகத்துக்கு அழைத்துச் சென்றிருந்தார். முழுக்க முழுக்க அந்த அமைப்பில் பயிலும் இளைஞர்களே எல்லா வேலைகளையும் செய்கிறார்கள். அங்கிருக்கும் தொலைக்காட்சியில் அந்த இளைஞர்கள் இங்கு வருவதற்கு முன்பு எப்படி இருந்தார்கள், அவர்களது குடும்பப் பின்னணி இவற்றோடு இந்த அமைப்புக்கு வந்த பிறகு அவர்களது வாழ்க்கை என்னவாக மாறியிருக்கிறதென அவர்களே பேசும் காணொலிகள் வருகின்றன. அங்கு பொறுப்பாளர்களாக இருப்பவர்களை `அக்கா, அண்ணன்...’ என அந்த இளைஞர்கள் உரிமையோடு அழைக்கிறார்கள். தன்னார்வலர்களாக இருப்பவர்களும், அவர்களைத் தங்கள் சொந்த சகோதர, சகோதரிகளாக நடத்துவதைப் பார்த்தபோது மகிழ்ச்சியாக இருந்தது. சிறுவயதில் ஆதரவற்றோர்களுக்கான விடுதியில் வளர்ந்தவன் என்ற முறையில் அந்தப் பருவத்தில் உருவாகும் தனிமையுணர்ச்சி, எல்லோராலும் கைவிடப்பட்டது போன்ற குழப்பங்களெல்லாம் எத்தனை வெறுப்பையும் தாழ்வுணர்ச்சியையும் உருவாக்கக்கூடுமென்பதை நன்கறிவேன். அங்கிருந்த இளைஞர்களிடம் நான் கண்டது தன்னம்பிக்கையையும் மனவுறுதியையும்தான். 'கபாலி' திரைப்படத்தின் கதை உருவானபோது, இயக்குநர் ரஞ்சித்தோடு திரைக்கதையில் இணைந்து வேலைசெய்த எழுத்தாளர் நவீன், மலேசியாவிலிருக்கும் MySkills அமைப்பைப் பற்றியும், அதன் மூலம் பயன்பெறும் இளைஞர்கள் பற்றியும் எடுத்துக் கூறி அங்கு அழைத்துச் சென்றிருக்கிறார். அதன் பிறகு திரைப்படத்தின் காட்சியமைப்பில் சிற்சில மாற்றங்கள் ஏற்படுத்தி, அவர்களது வாழ்வையும் கதைக்களத்தில் இணைத்துக்கொண்டதாகக் கூறப்படுகிறது. `அப்பழுக்கற்ற சித்தனுக்கு கடந்த காலம் மட்டுமே இருக்கிறது. தவறு செய்தவனுக்குத்தான் எதிர்காலம் இருக்கிறது’ என்று எங்கோ படித்த நினைவின் உண்மை MySkills அமைப்பின் செயல்பாடுகளின் மூலம் நன்கு விளங்குகிறது.
https://www.vikatan.com/trending/viral/boys-6-and-3-crash-parents-vehicle-while-driving-to-buy-a-toy-car
"அப்பா தூங்கிக்கிட்டு இருந்தார்" - பொம்மை கார் வாங்க உண்மையான காரை எடுத்துச் சென்ற 6 வயது சிறுவன்!
மலேசியாவைச் சேர்ந்த சிறுவன் பொம்மை கார் வாங்க உண்மையான காரை எடுத்துச் சென்று விபத்துக்குள்ளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
மலேசியாவின், லங்கா தீவில் ஒரு கார் தாறுமாறாக ஓடி மின்கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானது. அதைத் தொடர்ந்து, காரில் இருந்தவர்களை அருகிலிருந்த பொதுமக்கள் மீட்டிருக்கின்றனர். அப்போதுதான் அதிர்ச்சிகரமான உண்மை தெரியவந்திருக்கிறது. அந்த காரை ஓட்டிவந்தது 6 வயது மதிக்கத்தக்க சிறுவன். அவனிடம் விசாரித்ததில், "எங்கள் வீடு அருகில்தான் இருக்கிறது. கறுப்பு கலர் கார் வாங்கச் செல்கிறோம். அப்பா தூங்கிக்கொண்டிருந்தார். அம்மா குளித்துக்கொண்டிருந்தார். அதனால்தான் நாங்கள் இருவரும் கார் வாங்க புறப்பட்டுவிட்டோம். நான்தான் காரை ஓட்டி வந்தேன்" எனத் தெரிவித்திருக்கிறார். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த போலீஸார், காரில் இருந்த இருவரையும் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதித்திருக்கின்றனர். மேலும், அவர்களின் பெற்றோருக்கும் தகவல் தெரிவித்திருக்கின்றனர். இந்தச் சம்பவம் குறித்து பேசிய காவல்துறை அதிகாரி, "ஆறு மற்றும் மூன்று வயது சகோதரர்கள் இருவரும் வீட்டிலிருந்து தங்களின் பெற்றோரின் காரை சுமார் 2.5 கிலோமீட்டர் தூரம் ஓட்டிவந்து ஒரு விளக்குக் கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளாக்கியிருக்கிறார்கள். சிறுவர்கள் பொம்மை கார் வாங்க கடைக்குச் செல்ல விரும்புவதாக இருவரும் தெரிவித்திருக்கின்றனர். ஆறு வயது சிறுவனுக்கு மட்டும் தலையில் லேசான காயம் ஏற்பட்டிருக்கிறது" எனத் தெரிவித்திருக்கிறார். பொம்மை கார் வாங்க உண்மையான காரில் சென்ற சிறுவர்கள் குறித்து, நெட்டிசன்கள் நகைச்சுவையாகப் பதிவிட்டுவருகின்றனர்.
https://www.vikatan.com/government-and-politics/malaysia-man-went-to-lodge-complaint-police-answer-confused-him
`நீங்கள்தான் இறந்துவிட்டீர்களே...' - புகார் அளிக்கச் சென்ற முதியவருக்கு போலீஸ் சொன்ன அதிர்ச்சி பதில்
``தன்னுடைய நிலப்பத்திரத்தைத் தேடியபோது, அதைக் காணவில்லை. இதனால் அவர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கச் சென்றபோது அவருக்குப் பேரதிர்ச்சி காத்திருந்தது.”
மலேசியாவைச் சேர்ந்த லோ சூ சூன் (Low Choo Choon) (72) இறுதி ஊர்வல வாகன ஓட்டுநராகப் பணியாற்றிவந்திருக்கிறார். இறுதிக் காலத்தில் தானும், தன் மனைவியும் உயிரிழந்தால் அடக்கம் செய்வதற்காகச் சிறிது நிலத்தையும் வாங்கியிருக்கிறார். இந்த நிலையில், நிதி நெருக்கடி காரணமாக அந்த நிலத்தை விற்க லோ சூ சூன் முடிவுசெய்திருக்கிறார். அதற்கான நிலப்பத்திரத்தைத் தேடியபோது, அதைக் காணவில்லை. இதனால் அவர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கச் சென்றபோது அவருக்குப் பேரதிர்ச்சி காத்திருந்தது. அவர் காவலர்களிடம் புகார் அளித்தபோது, `நீங்கள்தான் எப்போதோ இறந்துவிட்டீர்களே, அப்படித்தானே பதிவில் இருக்கிறது’ என காவல்துறை அதிகாரி தெரிவித்திருக்கிறார். `நான்தான் உயிருடன் இருக்கிறேனே... பிறகு எப்படி இறந்தவராக முடியும்?’ எனக் குழம்பிய லோ சூ சூன் தேசிய பதிவுத்துறையில் புகார் ஒன்றை அளித்திருக்கிறார். இது தொடர்பாக அவர் கூறும்போது, "பல ஆண்டுகளாக இறுதிச்சடங்கு செய்யும் நிறுவனத்தில் பணிபுரிகிறேன். ஆனால் எனக்கே தெரியாமல் யாரோ எனக்கு இறுதிச்சடங்கு செய்துவிட்டார்கள். நான் இறந்துவிட்டேன் என அரசுப் பதிவுகளில் இருப்பதால் என்னால் சாலை வரிகூட கட்ட முடியவில்லை. தற்போதுதான் ஏதோ முயன்று அதிகாரிகளுக்கு நான் உயிருடன் இருப்பதை உணர்த்தி சாலை வரி செலுத்தியிருக்கிறேன். ஆனாலும், அரசின் எந்தச் சலுகையையும் தற்போது என்னால் பெற முடியவில்லை. இன்னும் சில மாதங்களுக்கு நான் இறந்தவனாகத்தான் இருக்க வேண்டும்போல..." என வேதனையை வெளிப்படுத்தியிருக்கிறார்.
https://www.vikatan.com/literature/arts/why-naveens-peichi-novel-is-banned-in-malaysia
புலம்பெயர் தமிழர்களின் வாழ்வைப் பேசும் `பேய்ச்சி' நாவல்... மலேசியாவில் தடை செய்யப்பட்டது ஏன்?
தமிழக எழுத்தாளர்கள் பேய்ச்சி நாவலுக்கு எதிரான தடையைக் கண்டித்து அறிக்கை வெளியிட்டு வருகிறார்கள். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கமும் இந்தத் தடையைக் கண்டித்துள்ளது.
இந்தப் புரட்சிக்குரல், சாதியக் கட்டுமானம் இல்லாத இங்கிலாந்து ஆட்சியாளர்களுக்கு எதிரானதாக இருக்க வாய்ப்பில்லை. ஆனால் அந்த நூல் அவர்களால் தடைசெய்யப்பட்டது. காரணம், அந்த நூலை மொழிபெயர்த்து, அதுகுறித்து அரசுக்கு அறிக்கை அளித்தவர்கள் அந்த நூலின் கருத்துகளை ஏற்காதவர்களாக இருந்திருக்க வேண்டும். அதன் அடிப்படையில் அந்த நூல் தடை செய்யப்பட்டது. அதன்பின்னான காலகட்டங்களில் பாரதிதாசன், அண்ணா, புலவர் குழந்தை ஆகியோரின் நூல்கள் பல்வேறு காரணங்களால் தடைசெய்யப்பட்டன. அந்நூல்களுக்கான தடைகள் சிலகாலங்களுக்குப் பின் விலக்கிக் கொள்ளப்பட்டன. அதற்குத் தடைக்கு எதிரான சமகாலப் படைப்பாளர்களின் குரலும் ஒரு முக்கிய காரணம். சில ஆண்டுகளுக்கு முன்பு தமிழில் பெருமாள் முருகன் எழுதிய, ‘மாதொரு பாகன்’ நாவலுக்குத் தடை விதிக்கப்பட்டது. பின் அந்தத் தடை விலக்கிக் கொள்ளப்பட்டது. ஒரு கருத்தை படைப்பை விமர்சனத்தால் மறுபடைப்பால் விவாதத்தால் எதிர்கொள்வதை விடுத்து அதற்கு எதிரான தடையைக் கோருவது என்பது இன்றும் தொடர்கிறது. கடந்தவாரம் மலேசிய எழுத்தாளர் ம. நவீனின் ‘பேய்ச்சி’ நாவல் அங்கு தடை செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்துக் கருத்துக்கூறிய அமைச்சகத்தின் தலைமைச் செயலாளர் வான் அஹ்மட், “பொது விதிமுறை, ஒழுக்கம் மற்றும் பொது நலனுக்குத் தீங்கு விளைவிக்கும் வகையில் இதன் உள்ளடக்கங்கள் அமைந்துள்ளதால் இவ்வெளியீடுகள் தடை செய்யப்பட்டுள்ளன” என்று குறிப்பிட்டுள்ளார். பேய்ச்சி நாவல் கடந்த 2019-ம் ஆண்டு நவம்பர் மாதம் வெளியிடப்பட்டது. இந்த நாவல் புலம்பெயர்ந்த தமிழ் மக்களின் வாழ்வைப் படைப்புக்குள்ளாக்குகிறது. பத்தொன்பதாம் நூற்றாண்டியின் இறுதியில் தொடங்குகிறது நாவல். ‘பேயவள் காண் எங்கள் அன்னை - பெரும் பித்துடையாள் எங்கள் அன்னை’ என்னும் பாரதியின் வரிகளைப்போல தன் குல தெய்வமான பேய்ச்சியைப் பிள்ளைகள் தின்னும் உக்கிரமான அம்சத்தோடு ஒரு மலைமீது காண்கிறார் கோப்பேரன். தன் வாழ்வுக்கும் அந்தக் காட்சிக்குமான தொடர்பு அவரை அதிர வைக்கிறது. அதுவரை பிறந்த ஐந்து பிள்ளைகளும் சில நாள்களிலேயெ இறந்துபோகிறார்கள். அதை நிகழ்த்துபவள் அந்த அன்னைதான் என்று அவருக்குத் தோன்றுகிறது. ஆறாவது மகன் பிறந்த சில தினங்களில் அவனைத் தூக்கிக்கொண்டு மனைவியையும் தன் சொந்த மண்ணையும் தெய்வத்தையும்விட்டுப் பிரிந்துபோகிறார். போகும்போது, ‘இனி அன்னையின் உத்தரவு வரும்வரை மருத்துவம் செய்ய மாட்டேன்’ என்று சத்தியம் செய்துபோகிறார். தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்தும் மக்கள் பஞ்சம் பிழைக்க மலேசியா செல்கிறார்கள். அங்கே தோட்டத்தொழிலாளர்களாக வேலைக்குவரும் அவர்கள் வாழ்வின் நிலை, அங்கு அவர்களுக்கு நேரும் துயரம், அந்த அவல வாழ்விலும் அவர்கள் ஏந்திப் பிடித்திருக்கும் நம்பிக்கைகள், வழிபாடுகள், சமகால தமிழகத்தின் நிகழ்வுகளின் பாதிப்பு என்று நூற்று ஐம்பது ஆண்டுகால வாழ்வியலின் ஆவணமாகப் பேய்ச்சி நாவல் திகழ்கிறது. ‘சிறுதெய்வ வழிபாட்டை முன்னிலைப்படுத்தும் தமிழின் மிக முக்கியமான நாவல் இது’ என்று ஜெயமோகன் கொண்டாடுகிறார். மலேசியப் புலம்பெயர்ந்தவர்கள் வாழ்க்கைப் பதிவு என்கிற அளவில் இது வரலாற்றில் இடம்பிடிக்கும் என்று பலரும் சொல்லிவரும் நிலையில் இந்த நாவலுக்கான எதிர்ப்பும் தடையும் நிகழ்ந்துள்ளது. ஆனால் இத்தகைய குற்றச்சாட்டுகள் எல்லாம் குழந்தைத் தனமானவை என்பதாக விமர்சகர்கள் கருதுகிறார்கள். நாவலின் தேவைக்கேற்பவே மக்களின் மொழிவாயிலாக இவை சொல்லப்பட்டிருக்கின்றன என்கிறார்கள். “மலேசியாவைப் பொறுத்த அளவில் இந்த நாவலுக்கான தடையை வழங்கிய அமைச்சக அதிகாரிகள் தமிழ் அறிந்தவர்கள் அல்ல. அவர்கள் நாளிதழ்களில் வெளியான தமிழ் எழுத்தாளர்களால் எழுதப்பட்ட விமர்சனங்களின் அடிப்படையிலேயே இந்த முடிவுக்கு வருகிறார்கள். யார் இந்த எழுத்தாளர்கள்? அவர்கள் ஏன் இத்தகைய விமர்சனங்களை எழுதுகிறார்கள்... இவர்கள் அந்த நாவலை ஒருமுறையாவது வாசித்தார்களா... என்ற கேள்விகளை முன்வைத்து ஆராய வேண்டியது அவசியம்.நாங்கள், கடந்த 15 ஆண்டுகளில் தீவிர இலக்கியப் பரப்பில் பணி செய்து மலேசிய தமிழ் இலக்கியத்துகான விமர்சன மரபையும் இலக்கிய வரலாற்றையும் கட்டமைக்க முயல்கிறோம். மலேசியத் தமிழ் இலக்கியம் சார்ந்து காத்திரமாக இயங்கிய பலர் அடையாளப்படுத்தபடவில்லை. மாறாக மேலோட்டமான எளிய படைப்புகளே, படைப்பாளர்களே கொண்டாடப்பட்டனர். அதை நாங்கள் விமர்சன இயக்கம் மூலமாக மாற்ற விரும்புகிறோம். இதனால் உண்டாகும் காழ்ப்புணர்ச்சியே எழுத்தாளர்கள் சிலர் இந்த நாவலுக்கு எதிராக கருத்துகளை முன்வைக்கக் காரணம். புதிய இலக்கிய சூழலை ஆரோக்கியமாக உருவாக்க முயல்வதற்காகக் கிடைத்த பரிசாகவே இந்தத் தடையைக் கருதுகிறேன்” என்றார். தமிழக எழுத்தாளர்கள் பேய்ச்சி நாவலுக்கு எதிரான தடையைக் கண்டித்து அறிக்கை வெளியிட்டு வருகிறார்கள். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கமும் இந்தத் தடையைக் கண்டித்துள்ளது.ஒரு நாவலில் பாலியல் சொற்களும் சாதியப் பெயரும் இடம் பெற்றிருப்பதால் அதைத் தடை செய்ய வேண்டுமா என்று எழுத்தாளர் பெருமாள் முருகனிடம் கேட்டோம். “ம.நவீனின் பேய்ச்சி நாவலை இன்னும் வாசிக்கவில்லை. விரைவில் வாசித்துவிடுவேன். ஆனால், எந்த ஒரு நூலையும் தடை செய்யக்கூடாது என்பதுதான் என் கருத்து. படைப்பு முன்வைக்கும் கருத்தை நீங்கள் விமர்சிக்கலாம், மறுகருத்தை முன்வைக்கலாம். ஏன் புறக்கணிக்கவும் செய்யலாம். அப்படியான வழிமுறைகள் இருக்கும்போது அதைத் தடை செய்வதென்பது அவசியமே இல்லை. இது கருத்துச் சுதந்திரத்துக்கு எதிரானது. நம் பேச்சு வழக்கில் இயல்பாகக் காணப்படும் பாலியல் சொற்களையும் சாதியப் பெயர்களையும்தான் தேவைக்கு ஏற்பப் படைப்பில் பயன்படுத்த வேண்டியிருக்கிறது. சமூகத்தில் இயல்பாகக் காணப்படும் ஒன்றை ஏன் எழுத்தில் காணும்போது மட்டும் இத்தனை பதற்றத்துக்குள்ளாகிறார்கள் என்று தெரியவில்லை. சமூகத்துக்கும் எழுத்துக்குமான இடைவெளியே இதற்குக் காரணம் என்றுகூட சொல்லலாம். எழுத்தைப் பற்றிய அச்சமும் ஒரு பிரமிப்பும் பலரிடையே காணப்படுகின்றன. எழுத்தில் சில சொற்கள் பதிவாகும்போது எது என்ன மாதிரியான விழைவுகளை ஏற்படுத்தும் என்னும் கவலையாகத் தான் இதைப் புரிந்துகொள்ள முடிகிறது. நிறையப் படித்தால் மனநிலை திரியும் என்று சொல்வதும் காலில் புத்தகம் பட்டால் தொட்டுக் கும்பிடும் மனநிலையும் இங்கே இருக்கிறது. எழுத்திலிருந்து விலகியிருப்பதே இதற்கெல்லாம் காரணம் என்று நினைக்கிறேன். எனவே படைப்பின் மீதான தடை என்பது ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று” என்றார்.பேய்ச்சி நாவலை சென்னையைச் சேர்ந்த யாவரும் பதிப்பகம் வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
https://www.vikatan.com/government-and-politics/130198-islamic-preacher-zakir-naik-meets-with-malasian-pm-mahathir-mohamad
இந்திய அரசால் தேடப்படும் மதபோதகர் ஜாகீர் நாயக், மலேசிய பிரதமருடன் சந்திப்பு!
இந்திய அரசால் தேடப்படும் மதபோதகர் ஜாகீர் நாயக், மலேசிய பிரதமருடன் சந்திப்பு!
இந்திய அரசால் தேடப்பட்டுவரும் மதபோதகர் ஜாகீர் நாயக், மலேசிய பிரதமர் மஹதீர் முகம்மதை சந்தித்த புகைப்படம் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.  இஸ்லாமிய ஆய்வு அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் இஸ்லாமிய மதபோதகர் ஜாகீர் நாயக் மீது, வன்முறையைத் தூண்டும் வகையில் பேசுதல் மற்றும் தீவிரவாத இயக்கங்களுக்கு பணம் அளித்தல் ஆகிய குற்றசாட்டுகள் எழுந்தன. அதனையடுத்து, இந்திய புலனாய்வு அமைப்பு அவரது வீடு மற்றும் அலுவலகங்களில் சோதனை நடத்தியது. 2016-ம் ஆண்டு, ஜாகீர் நாயக், மலேசியாவுக்குத் தப்பிச் சென்றார். மலேசியாவில், அவர் நிரந்தரமாக தங்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டது. அவரை இந்தியாவுக்கு திரும்ப அனுப்புமாறு இந்திய அரசால் கோரிக்கைவைக்கப்பட்டது. கடந்த சில தினங்களுக்கு முன்னர், 'ஜாகீர் நாயக்கை இந்தியாவுக்கு திரும்ப அனுப்ப முடியாது. அவரால், மலேசியாவுக்கு எந்தப் பிரச்னையும் இல்லை' என்று மலேசிய பிரதமர் மஹதீர் முகம்மது தெரிவித்திருந்தார். இந்த நிலையில், ஜாகீர் நாயக், மலேசிய பிரதமர் மஹதீர் முகம்மதுவை சனிக்கிழமை சந்தித்துள்ளார். அந்தப் புகைப்படம் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
https://www.vikatan.com/government-and-politics/malaysia-human-resources-minister-saravanan-press-meet-at-ramanathapuram
``தமிழர்களைப் பாதுகாக்க தனி செயலி; 15,000 புகார்கள்மீது நடவடிக்கை!" - மலேசியா மனிதவள அமைச்சர் தகவல்
மலேசியாவுக்கு வேலைக்கு வரும் தமிழர்களைப் பாதுகாக்க தனி செயலி உருவாக்கப்பட்டிருப்பதாக அந்த நாட்டின் மனித வளத்துறை அமைச்சர் சரவணன் தெரிவித்தார்.
மலேசியா நாட்டின் மனிதவள அமைச்சராக இருப்பவர் டத்தோ. ஸ்ரீ.எம்.சரவணன். இவருக்கு ராமநாதபுரம் மாவட்டத்திலிருந்து மலேசியாவில் சென்று பணிபுரியும் தொழிலாளர்கள் மற்றும் தொழிலதிபர்கள் சார்பில் ராமநாதபுரத்தில் வரவேற்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மலேசிய அமைச்சருக்கு மாலை, பொன்னாடைகள் அணிவித்து மலேசியாவில் பணிபுரியும் ராமநாதபுரம் தமிழர்கள் சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது.நிகழ்ச்சியின் முடிவில் டத்தோ.ஸ்ரீ.எம்.சரவணன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், ``இன்னும் 10 ஆண்டுகளில் 4-வது தொழில் புரட்சி ஏற்படவிருக்கிறது. இந்த தொழில் புரட்சி உலகத்தையே புரட்டிப் போடப் போகிறது. இந்தப் புரட்சியை எதிர்கொள்ள தமிழர்கள் தங்களைத் தயார்படுத்திக் கொள்ளவேண்டும். அனைத்து துறைகளும் முழுக்க முழுக்க இயந்திரமயமாகும் சூழல் ஏற்படும்‌. அதற்கு ஏற்றார்போல் வியாபாரிகள் தங்களைத் தயார் படுத்திக்கொள்ள வேண்டும். தமிழ்நாட்டிலிருந்து விசா இன்றி, சுற்றுலா விசாவில் வந்து பணிபுரியும் தமிழர்கள், அங்கு பணியாற்றும் தொழில் நிறுவனங்களின் முதலாளிகளால் சித்ரவதை செய்யப்பட்டாலும் அதை வெளியில் சொல்ல முடியாத நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். அவ்வாறு அவர்கள் சித்ரவதை செய்தது கண்டுபிடிக்கப்பட்டாலும் சுற்றுலா விசாவில் வந்து பணியாற்றியதற்காக முதலில் அவர்கள் கைதுசெய்யப்படுகிறார்கள். எனவே விசா வாங்கி முறையாக அனுமதி பெற்று தமிழர்கள் பணியாற்ற வரவேண்டும்.தமிழ்நாட்டிலிருந்து மலேசியாவில் வேலைக்கு வரும் தமிழர்களுக்கு உதவுவதற்காகவே மலேசியாவில் புதிய செயலியை அறிமுகப்படுத்தியிருக்கிறோம். அங்கு தமிழ்நாட்டு தொழிலாளர்களுக்கு எதிராக எந்தப் பிரச்னை ஏற்பட்டாலும் புகார் தெரிவிக்க இந்த செயலியை பயன்படுத்த அறிவுறுத்தியிருக்கிறோம். இந்த செயலி மூலம் அளிக்கப்படும் புகாருக்கு 7 நாள்களில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதுவரை இந்த செயலி மூலம் அளிக்கப்பட்ட 15 ஆயிரம் புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது" என்றார். மலேசியாவில் தமிழர்கள் உணவகம், மின்சாரத்துறை பணிகளுக்கு மட்டுமே ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனரே என்ற செய்தியாளர்கள் கேள்விக்கு, ``இந்த இரு துறைகளில் பணியாற்றுவதற்கு மட்டும்தான் இந்திய அரசு மலேசியா உள்ளிட்ட மற்ற நாடுகளுடன் ஒப்பந்தம் செய்திருக்கிறது. எனவே வெளிநாடுகளில் அனைத்து துறைகளிலும் பணியாற்ற தமிழர்களை அனுமதிக்க இந்திய அரசு மற்ற அனைத்து நாடுகளுடன் ஒப்பந்தம் செய்ய வேண்டும். அப்போதுதான் மலேசயா உட்பட அனைத்து நாடுகளிலும், அனைத்து துறைகளிலும் பணிபுரிய தமிழர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும்" என்று கூறினார்.
https://www.vikatan.com/lifestyle/travel/singapore-malaysia-australia-hongkong-travel-expeience
ஆஸ்திரேலியா, ஹாங்காங், சிங்கப்பூர் மற்றும் மலேஷியா| கிராமத்தானின் பயணம் - 24
இறகுப் பந்தாட்டம் ஆடலாம் என்று ஆரம்பித்த பத்து நிமிடத்தில், ஓர் உத்வேகத்தில் எம்பி அடிக்க முயல, முட்டியில் ஏதோ ஒரு வித்தியாசமான சத்தம். எனக்கு ஒன்று நன்றாக உணரமுடிந்தது, இது ஏதோ பெரிய பிரச்னை என்று.
(இந்த கட்டுரையின் ஆரம்பத்தில் கொடுத்துள்ள 'drop down' மூலம் பாகம் 1-23 படிக்காதவர்கள் படிக்கலாம்.)இந்த தொடர் எழுத ஆரம்பிக்கும்போது 5 - 6 வாரம் வரை தாக்கு பிடிக்கும் என்று நினைத்தேன். எதிர்பார்த்ததை விட 20 வாரத்திற்கு மேல் தாண்டி வந்தாகிவிட்டது. மறக்கவே முடியாத நான் பிறந்த வரக்கால்பட்டை பற்றி சொல்லிவிட்டேன். எனக்கு மிகவும் பிடித்த அமெரிக்கா மற்றும் கனடா பற்றி விரிவாக சொல்லிவிட்டேன். வாழ்ந்த ஈரான், போலந்து மற்றும் வாழுகின்ற துபாய் பற்றியும் பார்த்தாகிவிட்டது. அப்புறம் அந்த ஐக்கிய ராஜ்யம் (UK), அயர்லாந்து, துருக்கி, ஜோர்டான், ஈராக், பாகிஸ்தான், ஓமான், சவூதி, இத்தாலி பற்றி ஓரளவுக்கு சொல்லிவிட்டேன். ஆனால் இன்னும் நிறைய நாடுகள், நிறைய அனுபவங்கள். எழுதினால் இன்னும் 10-15 வாரம் போகும். ஆனால் வேண்டாம்.சிலவற்றை மட்டும் பார்த்துவிட்டு மீண்டும் வரக்கால்பட்டில் ஒரு சுற்று சுற்றுவோம். அதற்கப்புறம், நானும் என் புதிய பயணங்களை ஆரம்பிக்க வேண்டும். 2022 பயணங்களுக்கு ஏதுவாக அமையும் என்று நம்புகிறேன். முக்கியமாக செர்பியா 2021லிருந்து சில முறை தள்ளிப்போட்டாகிவிட்டது.காரணம் கொஞ்சம் சுவாரஸ்யமானது. சென்ற ஆகஸ்ட் மாதம் செல்வதற்கு எல்லா ஏற்பாடும் செய்து எதிர்பார்த்திருந்தோம். ஜூலை மாதம் ஒரு நாள் இறகுப் பந்தாட்டம் ஆடலாம் என்று ஆரம்பித்த 10 நிமிடத்தில், ஒரு உத்வேகத்தில் எம்பி அடிக்க முயல, முட்டியில் ஏதோ ஒரு வித்தியாசமான சத்தம். உள்ளுணர்வு சொல்லியது ஏதோ தவறு நடந்திருக்கிறது என்று. ஓரமாக அமர்ந்து சற்று நேரத்தில் சரியாகிவிட்டமாதிரி தோன்ற, மீண்டும் சாதாரணமாக அடிக்க முயல, இந்த முறை முட்டி ஒரு பிடிப்பே இல்லாமல் இங்கேயும் அங்கேயும் ஆடியது. எனக்கு ஒன்று நன்றாக உணரமுடிந்தது, இது ஏதோ பெரிய பிரச்னை என்று. விளையாடும் இடத்திலிருந்து வாகனத்திற்கு நடப்பது சிரமமாகப்பட்டது. நல்ல வேலை, மனைவியும் கூடவே இருந்ததால், உடனே மருத்துவமனைக்கு. மருத்துவர் சோதனை மற்றும் எம் ஆர் ஐ (MRI) செய்து தசை நார் (ligament, partial tear) அறுந்துவிட்டதாகவும், 3-4 மாதம் ஓய்விலிருந்து காலுக்கு பயிர்ச்சி அளித்து மீண்டும் ஏறக்குறைய சுமூக நிலைக்கு திரும்ப முடியும் என்று வேண்டிய ஏற்பாடுகளை செய்தார். நல்ல வேலை காலுக்கு வந்தது முட்டியோடு போயிற்று. முதல் வேலை செர்பியா பயணத்திட்டங்களை மாற்றினோம். அக்டோபர் செல்ல முடியும் என்று நினைத்து பின்னர் கோவிட் பயத்தால் மீண்டும் தள்ளிப்போட்டு இப்போது ஏப்ரல் 22-ல் செல்ல திட்டம். சென்று வந்த பிறகு அதைப்பற்றி எழுதலாம். இடையில் வேறு சில பயணங்கள் திட்டத்தில் உள்ளன. ஆஸ்திரேலியாஇந்த 2021 ஜூலை மாதம் ஏற்பட்ட இந்த விபத்து, வலது முட்டியில். சரியாக 21 வருடங்களுக்கு முன், 2000, ஜூலை மாதம் ஆஸ்திரேலியா சென்றோம். குழந்தைகள் மிகவும் குட்டிகள். நானும் இளைஞன். நிறைய தொலைநோக்கு திட்டங்கள். ஆஸ்திரேலியா குடியேறுவது அதில் ஒன்று. சும்மா முடிவெடுக்க முடியுமா? போய் ஒரு எட்டு பார்த்து முடிவெடுப்போம் என மெல்போன் (Melbourne) சென்றோம். நீண்ட பயணம். துபாய் - சிங்கப்பூர். பின்னர் சிங்கப்பூர் - மெல்போன். எமிரேட்ஸ்தான். விடுதியில் ஓய்வெடுத்து அடுத்த நாள் முதல் நிறுத்தம் மெல்போன் விலங்கியல் பூங்கா (Zoo). குடும்பம் நல்ல விடுமுறையை எதிர் நோக்கி இருக்க, நான் மிக சாதாரணமாக ஒரு சிறிய (1 அடிக்கும் குறைவே) வேலியை தாண்ட காலை தூக்கி அந்த பக்கம் வைக்க அடுத்த நிமிடம், கீழே கிடந்தேன். என்ன காரணம் என எனக்கும் என் குடும்பத்துக்கும் தெரியவில்லை. சரி எழும்பலாம் என முயற்சிக்க, இடது காலை மடக்க முடியவில்லை.கால் சட்டையை சற்றே உயர்த்தி பார்க்க என் கால் தொடைக்கும் கீழ் பகுதிக்கும் தொடர்பே இல்லாது மாதிரி கீழ் பகுதி L வடிவில் வளைந்து கிடந்தது. முட்டியின் மேல் இருக்க வேண்டிய சிறிய எலும்பு (Knee Cap) இடம் மாறி பக்கவாட்டில் சரிந்து கிடந்தது. எங்கிருந்து எனக்கு உத்தரவு வந்தது என்று தெரியவில்லை. என் கை தன்னிச்சையாக அந்த சிறிய எலும்பை (Knee Cap) அதனுடைய இடத்திற்க்கு நகர்த்த ஒரு கிளிக் சத்தத்துடன் அந்த எலும்பு இடத்தில் அமர்ந்தது. உடனே எழும்ப முயற்ச்சித்து வெற்றி பெற்று நிற்க, அனைவரின் முகத்திலும் கவலை. நான் எல்லாம் சரியாகிவிட்டது, எதற்கும் மருத்துவமனை செல்லலாம் என்று செல்ல, அவசர சிகிச்சையில் பார்த்து எலும்பு நிபுணரிடம் அனுப்ப அவர் நான் மருத்துவரா என கேட்டார். இல்லையென்று சொல்ல, நீ செய்த காரியம் மிகவும் சமயோசிதமானது. மிகவும் தாமதமாகியிருந்தால், உள்ளேயே நிறைய இரத்தம் கசிந்து சில கூடுதல் பிரச்னைகள் ஏற்பட்டிருக்கலாம். எதுவாகினும், இப்போதைக்கு பயம் ஒன்றும் இல்லை. நடப்பதற்கு "ஊன்று கோல்" கொடுக்கிறேன். மெல்போன் சுற்றிப்பார்த்து பின் துபாய் சென்று சிறிய அறுவை சிகிச்சை செய்யவேண்டும். பூரண குணமடைய ஒரு தடையும் இல்லை என உறுதி அளித்தார், அந்த பெண் மருத்துவர். எல்லாம் முடிந்து நான் மருத்துவ செலவைப்பற்றி எங்கே செலுத்துவது என கேட்க, முற்றிலும் இலவசம், இது இங்கே உள்ள முறை என்றார். நன்றி சொல்லி, அடுத்த நாள் முதல் "ஊன்று கோலை" வைத்துக்கொண்டு ஊரை சுற்றி வந்தோம். ஆஸ்திரேலியா இந்தியா கிரிக்கெட் மேட்ச் பார்க்கும்போது அந்த ஆஸ்திரேலிய வர்ணனையாளர்கள் பேசுவது பாதி புரியாது, எனக்கு. மெல்போனில் ஊன்றுகோல் வைத்துக்கொண்டு, முதல் நாள் வெளியே செல்ல நினைத்து ஒருவரை அணுகி எங்கே பேருந்து கிடைக்கும் என்று கேட்க அவர் முதலில் "சகல்லக்கா" சென்று அங்கிருந்து மற்றொரு பேருந்து பிடித்து செல்லவேண்டும் என்றார். என்னடா இது பெயர் ஒரு மாதிரியாக உள்ளதே என்று புரியாமல் விழிக்க அந்த பெயர் பலகை என் கண்ணில் பட்டது. அதில் "சர்குலர் க்வெ" (Cricular Quay) என்று போட்டிருந்தது. சரிதான் இந்த ஆஸ்திரேலியன் ஆங்கில உச்சரிப்பு சற்றே வித்தியாசம்தான் என்று புரிந்தது. அதற்கப்புறம் ஒரு முறைக்கு இரு முறை கேட்டு புரிந்துகொண்டு சுற்றிவந்தோம்.ஒரு நாள் 90 கிமீ தொலைவில் உள்ள "பிலிப் தீவு" (Philip Island) சென்று அங்குள்ள பென்குயின்கள் அணிவகுப்பை பார்த்தோம். மிக சிறிய அளவிலே ஆன அந்த பென்குயின்கள், அந்தி சாயும் வேலை, உணவு தேடலை முடித்து தங்கள் வீடுகளுக்கு செல்லும் அணிவகுப்பை பார்க்க நான்றாக இருந்தது. ஆண் பென்குயின்கள் தங்களுக்கு என்று தனி வீடு வைத்துக்கொண்டு துணையை தேடுமாம். துணை கிடைத்தவுடன் இனவிருத்தியில் ஈடுபடுவார்களாம். அந்த இனவிருத்தி காலம் மற்றும் முட்டை இட்டு அடைகாக்கும் காலம் பூராவும் சின்ன வீடு என்ற பேச்சுக்கே இடமில்லையாம். அதற்கப்புறம் "ஏக பத்தினி விரதம்" கைவிடப்படும். மற்றபடி விடுதியை சுற்றி உள்ள இடங்களும் ஒரு பூங்காவும் சென்று வந்தோம். புகழ் பெற்ற கங்காரு மற்றும் "கோலா" கரடிகளை மிக அருகில் சென்று பார்த்தோம்.எல்லாம் பார்த்து, சரி, ஆஸ்திரேலியா குடியேறலாம் என்று முடிவு செய்து பின்னர் செலவு செய்து "குடியுரிமை" வாங்கி அடுத்த வருடம், சிட்னி சென்று வந்தோம். அந்த ஒபேரா (Opera House) கட்டிடம் மற்றும் ஹார்பர் பாலம் (Harbour Bridge) பார்த்தோம்.சிட்னி சென்ற பிறகு என் நண்பர் ஒருவர் அவருடைய நண்பரை பார்க்க சொல்ல, நாங்கள் அவர் வீட்டுக்கு சென்றோம். பேச்சு வாக்கில் எங்கே தங்கியிருக்கீர்கள் என்று கேட்க, நாங்கள் சொன்னோம். அதற்கு அவர் அந்த இடம் மிகவும் குற்றங்கள் நிறைந்த இடம் என்றும், ஆஸ்திரேலியர்கள் அந்த இடத்துக்கு அதிகமாக செல்ல மாட்டார்கள் என்று சொன்னார். முக்கியமாக, போதை வஸ்துக்களுக்கு அடிமையான பழங்குடியினர் (Aborigines) அங்கு இருப்பதாகவும் அடிக்கடி வழிப்பறிகளில் ஈடுபடுவதாகவும் சொன்னார். நல்ல வேளை நாங்கள் அடுத்த நாள் கிளம்பிவிட்டோம். ஆஸ்திரேலியாவின் சரித்திரம் சற்று சுவாரஸ்யமானது. ஏறக்குறைய 65,000 வருடங்களாக "பூர்வகுடியினர்" (Aborigines) வாழும் பூமி. ஆனால் 1700 போல் நெதெர்லாந்துக்காரர்கள் காலெடுத்து வைத்து "நியூ ஹொலண்ட்" (New Holland) என்று பெயரிட்டு குடியேற ஆரம்பிக்க 60-70 வருடங்கள் கழித்து அப்போது ஊரிலியே பெரிய "அபகரிப்பு" கும்பலான ஆங்கிலேயர்கள் அங்கு குடியேறினர். அதே சமயம், அந்த பெரிய தீவு "குற்றவாளிகளை" தனிமைப்படுத்த சிறந்த இடம் என்று கருதி, குற்றவாளிகளை அங்கே தொடர்ந்து குடியேற்ற ஆஸ்திரேலியா ஒருவாறாக உருவாயிற்று. வந்து இறங்கிய உடன் முதல் வேலை, பூர்வக்குடியை மொழி மற்றும் கலாச்சார மாற்றம் மூலம் அழிக்க முயன்றது. மற்ற ஆஸ்திரேலியர்களை ஒப்பிடும்போது பூர்வக்குடி மக்களிடையே குற்றங்கள், போதைப்பழக்கங்கள் மற்றும் தற்கொலைகள் மிக அதிகமாக உள்ளன.மிக நீண்ட நாட்கள் ஆங்கிலேய ஆக்கிரமிப்பில் இருந்து 1901 இல் ஆஸ்திரேலியா சுதந்திர நாடாகியது. இன்று மிகவும் முன்னேறிய நாடு. பெரிய நிலப்பரப்பாகினும் (இந்தியாவை விட இரு மடங்கு பெரியது) மக்கள் தொகை 3 கோடிக்கும் கீழே. நிறைய மற்ற நாட்டிலிருந்து குடியேறியவர்கள் (கிரீஸ், சீனா, லெபனான், இந்தியா, பாக்கிஸ்தான் என் பல நாட்டினரும்) வாழும் நாடு. எல்லா நகரங்களும் / மக்களும் நாட்டின் கடற்கரை ஒட்டியுள்ள பகுதிகளில்தான். உட்புறம் பெரும்பாலும் வாழ்வதற்கு ஏதில்லாத பாலைவனம். ஒரு கட்டத்தில், அங்கே சென்று குடியேறவேண்டாம் என்று முடிவு செய்து துபாயிலே தொடர்ந்து பின்னர் கனடா குடியுரிமை வாங்கி அதையும் திருப்பியது வேறு கதை. ஒன்று மட்டும் நிதர்சனம். நாம் எவ்வளவுதான் திட்டமிட்டாலும் நடப்பது நடக்கும். அதற்காக திட்டமிடல் வேண்டாம் என்று சொல்லவில்லை. நடப்பது நம் திட்டப்படி இல்லையெனினும் அதை ஏற்றுக்கொண்டு அதன் ஊடே மிகச் சிறந்த விளைவுகளை அடைவதே நாம் செய்யக்கூடியது. என் வியாக்கியானம் எல்லோருக்கும் சரிப்படும் என்று சொல்ல முடியாது. சிங்கப்பூர்சிங்கப்பூர் என்பது நான் 4-5 வயதிலிருந்தே எனக்கு பரிச்சயப்பட்ட ஊர். ஏனெனில் வரக்கால்பட்டின் (எங்கள் ஊரில்) ஒரே "முடி திருத்தும்" குடும்பத்தின் தலைவர் பெயரே "சிங்கப்பூரான்". உண்மை பெயர் தெரியாது. முடி வெட்ட வேண்டுமா? சிங்கப்பூரானை கூப்பிடு. கை குழந்தைக்கு குளிப்பாட்ட வேண்டுமா "சிங்கப்பூரான்" அம்மாவை கூப்பிடு. நல்ல காரியங்களுக்கு நாதஸ்வரம், மேளம் வேண்டுமா, சிங்கப்பூரான் அண்ணனை கூப்பிடு என்று எங்கள் கிராமத்தின் இன்றியமையா ஆள் "சிங்கப்பூரான்". கடைத்தெருவில் ஒரு "முடி திருத்தும் நிலையம்" வைத்திருந்தார். நாங்கள் "ஹோம் சர்வீஸ்" தான். ஓரிரு முறை அந்த கடைக்கு சென்றிருக்கிறேன். கூரை வேய்ந்த சிறிய இடம். அதில் அந்த சுழலும் நாற்காலி. சிவப்பு நிற இருக்கை. (Cushion). சற்றே பெரிய கண்ணாடி. ஒரு நீண்ட கண்ணாடி பாட்டில். அதனுள் இருந்து வினோதமான வடிவில் ஒரு குழாய். அதன் வளைவில் அவர் விரல் விட்டு அழுத்த சில்லென்று தண்ணீர் முகத்தில் அடிக்கும். அப்புறம் அந்த "வெட்டும் சாதனம்", கத்தி, தீட்ட ஒரு கல் மற்றும் தோலால் ஆன பட்டை. 4-5 வண்ண சீப்புக்கள். சுவர் முழுவதும் வண்ண வண்ண "காலெண்டர்கள்". எம்ஜியார் தான் பிரதானம். அப்புறம் சட்டம் செய்யப்பட்ட கருப்பு வெள்ளை புகைப்படங்கள், அந்த கால அரசியல்வாதிகளுடன் சிங்கப்பூரான் எடுத்துக்கொண்டது.பார்த்தீர்களா, எவ்வளவு நெருக்கம், எனக்கும் சிங்கப்பூருக்கும். பின்னர், துபாய் வந்த சில வருடங்களில் எமிரேட்ஸ் சலுகை விலை பயணம் ஆசை காட்ட குழந்தைகள் 5 மற்றும் 3 வயதில் இருந்தபோதும் அவர்கள் பெயரை வைத்து, 1995-ல் சிங்கப்பூர் மற்றும் ஹாங்காங் சென்று வந்தோம். அவர்கள் இருவருக்கும் ஒன்றும் ஞாபகம் இல்லை. செண்டோசா தீவில் நிறைய கேளிக்கைகள் இருந்தும் சின்ன பெண் 3 வயது கூட நிரம்பாததால் எல்லாம் வேடிக்கை மட்டுமே. ஆனால், அந்த சிங்கப்பூர் சுத்தம், ஒழுங்கு முறை மற்றும் பிரம்மாண்டமான கட்டிடங்கள் உண்மையில் அசத்தின. அப்போதுதான் துபாய் மெதுவாக வளர்ந்து கொண்டு வந்தது. மற்றுமொரு மறக்க முடியாத இடம், முஸ்தபா கடை. கடை அல்ல கடல் என்று சொல்லுவார்கள். அந்த மாதிரி ஒரு கடல். அங்கே சற்று ஷாப்பிங் செய்து பக்கத்திலியே "கோமள விலாஸ்" உணவகத்தில், வாழை இல்லை சாப்பாடு, நெய்யோடு. மகள்கள் விரும்பிச் சாப்பிட்டார்கள். முஸ்தபாவும் கோமள விலாஸும் இருக்கும் இடம் செரங்கூன் சாலை 'லிட்டில் இந்தியா' என்றழைக்கப்படும் இடத்தில் அடங்கும். நிறைய இந்திய கடைகள், இந்திய மக்கள், இந்திய வாசனை என கிறங்கடிக்கும். போதாதற்கு அங்கேயே வீரமாகாளியம்மன் கோவிலும் உண்டு.எல்லோரும் பார்க்க சொல்லும் 'ஆர்ச்சட் ரோடு' என்ற வணிக ஏரியா. நிறைய கடைகள், வணிக வளாகங்கள். உண்ணுமிடங்கள். எல்லாம் பார்த்தோம். கூடவே எங்கள் மகள்களின் புரியாத எதிர்பார்ப்புகள், சிணுங்கல்கள், அழுகைகள் எல்லாம் சமாளித்தோம்! அதற்கப்புறம் நான் சில முறை சிங்கப்பூர் சென்று வந்திருக்கிறேன். வேலை நிமித்தம். ஒவ்வொரு முறையும் சிங்கப்பூர் இன்னும் மேலே மேலே என்று மெருகு ஏறிக்கொண்டே போகிறது. ஹாங்காங்1992-ம் வருடம். எமிரேட்ஸ் விமான நிறுவனத்தில் குறுகிய காலத்தில் ஓரளவுக்கு நல்ல பெயர் வாங்கி மேலாளர் என்னை "ஹாங்காங்" சென்று வர பரிந்துரைத்தார். எனக்கு தலை கால் புரியவில்லை, "ஃபாரின்" போகப்போகிறேன். இருப்பது “ஃபாரின்" தான் என உதிக்கவில்லை. முகவர் முன்பே சென்றுவிட நான் 3-4 நாட்கள் கழித்து சென்றேன். "ஓ மை காட்" (Oh My God) தான்.முதலில் விமானம் ஏறி அமர்ந்த பிறகு, நான் "ஹாங்காங்" விமானத்தில்தான் அமர்ந்தேனா இல்லை வேற ஊருக்கு போகிற விமானமா என்ற பயம். தேவை இல்லைதான். இருந்தாலும், முதல் முறை. அப்புறம் அங்கிருந்து "நியூ வேர்ல்ட் ஹார்பர் வியூ" என்ற 5 ஸ்டார் விடுதி. மயக்கமே வந்தது. உள்ளேயே தவழும் நறுமணம், அழகான பணியாளர்கள், பளிங்குக்கற்கள் வானைத் தொட்டுக்கொண்டு. அப்போதே முடிவு பண்ணினேன். குடும்பம் பார்க்கவேண்டும் என்று. அதன்படியே, 1995இல் சிங்கப்பூர் முடித்து ஹாங்காங் சென்றோம். அங்குள்ள் "ஓஷியன் பார்க்" (Ocean Park) தண்ணீர் பூங்கா பார்த்தே ஆகவேண்டிய ஒரு இடம். சென்று பார்த்தோம். துரதிஷ்டவசமாக மழையின் காரணம் பூங்காவின் பெரும்பகுதி பார்க்க முடியவில்லை. இருந்தும், என் மனைவிக்கும் சிங்கப்பூர்/ஹாங்காங்தான் முதல் பயணம், துபாயில் இருந்து. உண்மையில், பெரிய வணிக வளாகங்கள் (Malls) நான் முதல் முதல் பார்த்தது கவ்லூன், ஹாங்காங்கில்தான். கவ்லூன் பகுதி மிக நெரிசலான இடம். அவ்வளவு மக்கள். அவ்வளவு வானுயர கட்டிடங்கள். அப்போதே, ஒவ்வொரு கட்டிடங்களை அடுத்த கட்டிடத்துடன் ஒரு பாலம் போல போட்டு இணைத்திருப்பார்கள். சாலை தவிர்த்து கட்டிடங்கள் மூலமாகவே கடக்க முடியும். "கோயில் தெரு" (Temple Street) என்ற சாலை சைனீஸ் உணவுக்கு பெயர் போனது. ஹாங்காங் மிக செலவீனமான ஊர். மக்களும் கடுமையாக உழைக்க வேண்டும். கணவன் மனைவி இருவரும் அடித்து பிடித்து ரயிலில் பயணம் செய்து அலுவலகத்தில் 7-8 வரை வேலை செய்து சிறிய பெட்டி போன்ற வீட்டிற்குள் அடங்கவேண்டும். இதில் சமைக்க நேரம் எங்கே? எனவே நிறைய குடும்பங்கள் வார நாட்களில் சமைப்பது இல்லை என்று என் சக ஊழியர் சொல்வார். குடும்பமே விலை மலிவான உணவகங்களில் உணவை முடித்து வீடு செல்வார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். அந்த "கோயில் தெரு" உணவகங்களில் மக்கள் வழிவார்கள். ஒவ்வொரு மேஜை மீதும் ஒரு பெரிய சட்டி மாதிரியான பாத்திரம். கீழ் ஒரு சிறிய அடுப்பு போன்ற ஒன்றை வைத்து அந்த சூடு பறக்கும் சட்டியில் இருந்து மீனோ, ஏறாவோ, நண்டோ ஒவ்வொருவரும் எடுத்து சாப்பிடுவார்கள். அப்புறம் ஒரு சிறிய கோப்பையில் சாதம். அந்த இரண்டு குச்சிகளை வைத்து கோப்பையை வாய்க்கு அருகில் கொண்டு சென்று சாதத்தை உள் தள்ளுவார்கள். நானும் நிறைய முறை சைனீஸ் அல்லது ஜப்பனீஸ் உணவகங்களில் முயற்சித்திருக்கிறேன். கடைசியில் "ஒரு ஸ்பூன் குடுங்க" என்று வாங்கி குச்சிகளை ஓரம் வைத்துவிடுவேன்.அந்த ஊரில், ஷாப்பிங், பேருந்து பயணம் மற்றும் சுற்றுலா ரயில் பயணம் என சுற்றி அனுபவித்தோம். ஆனால் பாருங்கள் குழந்தைகளுக்கு ஒன்றும் ஞாபகம் இல்லை. எனக்கும் இன்னொரு முறை சென்று வரவேண்டும் என்ற ஆவல் உள்ளது. பார்க்காத இடங்களை பார்த்து நேரம் இருந்தால் பார்க்கலாம். இல்லையென்றால் இருக்கவே இருக்கிறது அடுத்த ஜென்மம். மலேசியாமலேசியா சென்றது வேலை நிமித்தமாக மட்டுமே. அதிகம் சுற்றியதில்லை. மனைவி அவர்களின் ஸ்நேகிதிகளுடன் "மகளிர் மட்டும்" சுற்றுலா சென்று வந்தார். நான் அவ்வளவு தூரம் சென்றதால் குறைந்தபட்சம் "ட்வின் டவர்ஸ்" மட்டும் பார்க்கலாம் என்று பார்த்து வந்தேன். மலேசியாவில் என்னை மிகவும் கவர்ந்தது அந்த பச்சை பசேல், எங்கு காணினும். மிகவும் பிடிக்காதது டூரியன் பழம். பார்க்க பலாப்பழம் மாதிரி இருந்தாலும் சுவை மற்றும் மணம்.....வேண்டாம். எல்லா டூரியன் பழத்தையும் அவர்களே சாப்பிடட்டும்.ஒரு முறை அண்ணன் பணி புரிந்த "மிர்ரி" என்ற ஊருக்கு சென்று வந்தேன். மிர்ரி இன்னும் சற்று அதிகம் பச்சை பசேல், காரணம் அது ஏறக்குறைய காட்டினுள் அமைந்த ஊர்.2022 இல் மலேஷியா செல்ல வேண்டும். அண்ணன் இப்போதும் மலேசியாவில். அழைத்துக்கொண்டிருக்கிறார். சுற்றிபார்க்கவேண்டும். பின்னர் முடிந்தால் விவரமாக எழுதவும் வேண்டும். அடுத்த வாரம் வரக்கால்பட்டை இன்னொரு முறை காட்டி சில பேரை அறிமுகப்படுத்தி வைக்கிறேன். உங்களுக்கு பிடிக்கும் என்று நம்புகிறேன்.பின்குறிப்பு: இந்த பயணங்கள் எல்லாம் பல வருடங்களுக்கு முன். ஆகவே புகைப்படங்கள் தாளில்தான் உள்ளன. ஸ்கேன் செய்தால் சரி வராது. ஆகவே இணையத்தில் இருந்து சில புகைப்படங்களை இங்கே உபயோகித்திருக்கிறேன். அவை என் புகைப்படங்கள் அல்ல.- சங்கர் வெங்கடேசன்(shankarven@gmail.com)
https://www.vikatan.com/environment/the-last-rhino-of-the-sumatran-rhinoceros-died-in-malaysia
`இந்த இனம் தப்பிப் பிழைப்பதே அரிதாக உள்ளது!'- மலேசியாவின் கடைசி சுமத்ரன் காண்டாமிருகமும் உயிரிழந்தது
மலேசியாவில் `சுமத்ரன்' வகை காண்டாமிருக இனத்தில் எஞ்சி இருந்த இமான் என்ற பெண் காண்டாமிருகம் நேற்று புற்றுநோயால் உயிரிழந்தது.
நமது நகம் மற்றும் முடிகளில் உள்ள அதே `கெரட்டின்' தான் காண்டாமிருகங்களின் கொம்புகளிலும் உள்ளது. ஆனால், மருத்துவப் பயன் என்ற மூடத்தனத்தால் உலகம் முழுக்க ஈவுஇரக்கமின்றி காண்டாமிருகங்கள் வேட்டையாடப்பட்டு கள்ளச் சந்தைகளில் கொம்புகள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. காண்டாமிருக இனங்களில் மிகச் சிறியதான சுமத்ரன் காண்டாமிருகங்கள் (Sumatran rhinoceros) ஒருகாலத்தில் இந்தியா உட்பட ஆசியக் காடுகளில் பரவலாக வாழ்ந்தன. காடழிப்பு மற்றும் கட்டுப்படுத்த முடியாத வேட்டை காரணமாக இந்த இனம் இன்னும் சில ஆண்டுகளில் அழிய உள்ளது. இந்திய, ஜாவா காண்டாமிருகங்களுக்கு ஒற்றைக் கொம்பு மட்டுமே இருக்கும். ஆனால், ஆப்பிரிக்க, சுமத்ரன் காண்டாமிருகங்களுக்கு இரண்டு கொம்புகள் இருக்கும். இந்தக் கொம்புகளே இவற்றுக்கு பேராபத்தாய் அமைந்துவிட்டன. மலேசியாவில் உள்ள போர்னியா காண்டாமிருகங்கள் சரணாலயத்தில், எஞ்சியிருந்த சுமத்ரன் இனத்தைச் சேர்ந்த ஒரு ஜோடி காண்டாமிருகங்கள் மிகுந்த கவனத்துடன் பராமரிக்கப்பட்டு வந்தன. இந்நிலையில், மலேசியாவின் கடைசி ஆண் சுமத்ரன் காண்டாமிருகமான டேம் (Tam) சிறுநீரகம் மற்றும் நுரையீரல் கோளாறுகளால் கடந்த மே மாதம் இறந்தது.இதையடுத்து, இதன் ஜோடியான இமான் மிகுந்த கவனத்துடன் பராமரிக்கப்பட்டு வந்தது. புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த இமான் உடல்நலக் கோளாறுகளைச் சந்தித்தது. இந்நிலையில் கருப்பையிலிருந்து வெளியான அதிகப்படியான இரத்தப்போக்கு காரணமாக உயிரிழந்தது. மலேசியாவில் இருந்த கடைசி சுமத்ரன் காண்டாமிருகமும் இப்போது இல்லையென்றாகி விட்டது. தற்போது இந்தோனேசியாவில் சுமார் 80 சுமத்ரன் காண்டாமிருகங்கள் இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளன. இவையும் மிக தனிமைப்படுத்தப்பட்டுள்ளதால் அவற்றின் இனப்பெருக்கங்களில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த இனம் தப்பிப் பிழைப்பது அரிதாகவே உள்ளது என W.W.F அமைப்பு நிர்வாகிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
https://www.vikatan.com/crime/malaysia-women-booked-in-attempt-murder-case-at-theni
ஃபேஸ்புக் காதல்; திசைமாறிய திடீர் சந்திப்பு! - தேனி காதலனைக் கொல்ல கூலிப்படையை ஏவிய மலேசியப் பெண்
இதுநாள் வரையில் அமுதேஸ்வரியை முகநூலில் மட்டுமே பார்த்து வந்த அசோக், நேரில் அவரைப் பார்த்ததும், `நீ குண்டாக இருக்கிறாய். அழகாக இல்லை' எனக் கூறியுள்ளார்.
ஃபேஸ்புக் வழியாக மலேசியப் பெண்ணைக் காதலித்த தேனி இளைஞரைக் கொலை செய்ய வந்த கூலிப்படையினர் 9 பேரைப் போலீஸார் கைது செய்தனர். தேனி மாவட்டம், வீரபாண்டி அருகே உள்ள காட்டுநாயக்கன்பட்டி நேரு என்பவரின் மகன் அசோக்குமார் (வயது 28). ஐ.டி துறையில் வேலைபார்த்து வருகிறார். இவர், முகநூல் வழியாக மலேசியாவைச் சேர்ந்த அமுதேஸ்வரி என்ற பெண்ணுடன் அறிமுகத்தை ஏற்படுத்தியுள்ளார். இருவருக்கும் இடையே நட்பு ஏற்பட்டு, பின்னர் அது காதலாக மாறியுள்ளது. இருவரும் சில மாதங்களாகக் காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில், அசோக்குமாரை சந்திப்பதற்காகத் தேனி வந்துள்ளார் அமுதேஸ்வரி. இதுநாள் வரையில் அமுதேஸ்வரியை முகநூலில் மட்டுமே பார்த்து வந்த அசோக், நேரில் அவரைப் பார்த்ததும், `நீ குண்டாக இருக்கிறாய். அழகாக இல்லை' எனக் கூறியுள்ளார். இதனால், மனமுடைந்த அமுதேஸ்வரி, மலேசியாவுக்குத் திரும்பிச் சென்றார். தொடர்ந்து இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்படவே, அமுதேஸ்வரியின் தொடர்பைத் துண்டித்துள்ளார் அசோக்குமார். பின்னர், கவிதா அருணாசலம் என்ற பெயரில் அசோக்குமாரை தொடர்புகொண்ட ஒரு பெண், `நான் அமுதேஸ்வரியின் அக்கா. நீ ஏமாற்றியதால் அவள் தற்கொலை செய்துகொண்டாள்' என்றும் கூறியுள்ளார். அதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த அசோக்குமார், தன்னை விட்டுவிடும்படி அப்பெண்ணிடம் கெஞ்சியுள்ளார். அதற்குப் பதிலளித்த அந்தப் பெண், `நான் தேனி வருகிறேன். என்னை நேரில் சந்தித்து மன்னிப்புக் கேள்' எனக் கூறியிருக்கிறார். இதற்கு அசோக்குமாரும் சம்மதம் தெரிவித்திருக்கிறார். கடந்த அக்டோபர் மாதம் அந்தப் பெண் தேனி வந்துள்ளார். பின்னர், தனியார் விடுதிக்கு அசோக்குமாரை வரச்சொல்லியிருக்கிறார். அங்கு சென்ற அசோக்குமார் அதிர்ச்சியடைந்துள்ளார். காரணம், அங்கு இருந்தது இறந்துவிட்டதாகக் கூறப்பட்ட அமுதேஸ்வரி. `உன்னை சந்திக்கத்தான் அப்படிப் பொய் சொன்னேன். என்னை ஏன் ஏமாற்றினாய்... என்னைக் கல்யாணம் செய்துகொள். இல்லையென்றால் இங்கேயே தற்கொலை செய்துகொள்வேன்' என அமுதேஸ்வரி கூறியிருக்கிறார். இதனால் பயந்துபோன அசோக்குமார். தேனி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார். சம்பந்தப்பட்ட அமுதேஸ்வரியை அழைத்துப் போலீஸார் விசாரணை நடத்தியதில், அப்பெண்ணின் உண்மையான பெயர் விக்னேஸ்வரி என்பது தெரியவந்தது. காவல்நிலையத்திலேயே போலீஸார் இருவரையும் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். இதைத் தொடர்ந்து அசோக்குமாரின் வீட்டுக்குச் சென்ற அப்பெண், தனக்கும் அசோக்குமாருக்கும் திருமணம் செய்துவைக்கும்படி கூறியுள்ளார். இதை அசோக்குமாரின் பெற்றோர் ஏற்றுக்கொள்ளவில்லை. இதனால் கோபமடைந்த அந்தப் பெண், தன்னை ஏமாற்றிய அசோக்குமார் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என வீரபாண்டி காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார்.இந்த வழக்கை விசாரித்த போலீஸார், ஏற்கெனவே தேனி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் நடந்த சமாதான முயற்சி பற்றிய தகவல்களைச் சேகரித்தனர். பின்னர், வீரபாண்டி காவல்நிலையத்திலும் சமாதான முயற்சிகள் நடக்கவே, `அசோக் மீது வழக்கு பதிவு செய்தால்தான் மலேசியா செல்வேன்' என அந்தப் பெண் பிடிவாதமாகக் கூறியுள்ளார். முடிவில், அசோக் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். இதனால், சமாதானம் அடைந்த விக்னேஷ்வரி, மலேசியா திரும்பியதாகக் கூறப்படுகிறது. இதற்கிடையில், இன்று போடி நகர் பகுதியில் சந்தேகத்துக்கு இடமாகச் சுற்றித்திருந்த சிலரை பிடித்துப் போலீஸார் விசாரித்துள்ளனர். அவர்கள் கூலிப்படையைச் சேர்ந்தவர்கள் என்பதும், காட்டுநாயக்கன்பட்டியைச் சேர்ந்த அசோக்குமாரை கொலை செய்ய வந்ததும் மலேசியாவைச் சேர்ந்த பெண் ஒருவர் பணம் கொடுத்ததும் தெரியவந்தது. இதுதொடர்பாகப் பேசிய போலீஸார், ``அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் பேசப்பட்ட சமாதான முயற்சி தோல்வியில் முடிந்திருக்கிறது. யார் மீது தவறு இருக்கிறது என்று பார்த்து நடவடிக்கை எடுக்காமல் கட்டப்பஞ்சாயத்து செய்திருக்கிறார்கள். காதலனிடம் நியாயம் கேட்க மலேசியாவில் இருந்து தேனி வந்திருக்கிறார் என்றால், அசோக்குமாரை விடமாட்டார் எனக் கணித்திருந்தோம். எனவேதான் அப்பெண்ணை கண்காணிப்பு வளையத்துக்குள் வைத்திருந்தோம். அதன் விளைவாகத்தான் கூலிப்படையினரை பிடிக்க முடிந்தது. ஒரு அசம்பாவிதமும் தவிர்க்கப்பட்டிருக்கிறது” என்கின்றனர்.
https://www.vikatan.com/environment/158549-if-you-ship-to-malaysia-we-will-return-it-back-without-mercy
`3000 டன் பிளாஸ்டிக் குப்பை; இனியும் கருணையை எதிர்பார்க்காதீர்கள்!'- வளர்ந்த நாடுகளை எச்சரிக்கும் மலேசியா
`3000 டன் பிளாஸ்டிக் குப்பை; இனியும் கருணையை எதிர்பார்க்காதீர்கள்!'- வளர்ந்த நாடுகளை எச்சரிக்கும் மலேசியா
வளர்ந்த நாடுகளின் குப்பைத் தொட்டியா நாங்கள்... இந்தப் பக்கம் உங்கள் கண்டெய்னர்கள் வந்தால் கப்பலுடன் அவை திருப்பி அனுப்பப்படும் என மலேசியா அரசு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. உலகநாடுகளின் குப்பைகளை இறக்குமதி செய்து அதில் வர்த்தகத்தைப் பெருக்கி வந்த சீனா இனி நாங்கள் பிளாஸ்டிக் கழிவுகளை இறக்குமதி செய்வது இல்லை என்று திடீரென அறிவித்தது. வளர்ந்த நாடுகளின் குப்பைகளை இறக்குமதி செய்து அதை மறுசுழற்சி செய்து வந்த ஆசிய நாடுகள் அதனால் ஏற்படும் சுற்றுச்சூழல் மாசை சமீபத்தில்தான் உணர்ந்திருந்தனர். சீனா, இந்தியா போன்ற ஆசிய நாடுகள் பிளாஸ்டிக் கழிவுகளை இறக்குமதி செய்வதில்லை என முடிவு எடுத்தது. இந்தியா துறைமுகங்களில் சில கண்டெய்னர்களில் பிளாஸ்டிக் கழிவுகள் என்ற பெயரில் மருத்துவக்கழிவுகள் இருந்தது கடந்த சில வருடங்களுக்கு முன்பு தலைப்புச் செய்தியானது. அதிகரிக்கும் மக்கள் தொகையில் உள்நாட்டுக் கழிவுகளையே மேலாண்மை செய்ய முடியாத நிலைதான் உள்ளது. இதன்காரணமாகத்தான் இந்த முடிவை ஆசிய நாடுகள் எடுத்தது. ஆசிய நாடுகளின் இந்த முடிவானது வளர்ந்த நாடுகளுக்குப் பெரும் அதிர்ச்சியைக் கொடுத்தது.   சீனா, இந்தியா போன்ற நாடுகள் திடீரென எடுத்த முடிவால் வளர்ந்த நாடுகளின் குப்பைகள் எங்குக் கொட்டப்படும் எனக் கேள்வி எழுந்தது. முறைகேடான வழியில் அவை மீண்டும் ஆசிய நாடுகளுக்குள்ளே கொட்டப்படும் எனச் சமூக ஆர்வலர்கள் வருத்தம் தெரிவித்திருந்தனர். இந்தநிலையில்தான் மலேசியாவில் முறைகேடாக மறுசுழற்சி நிறுவனங்கள் தொடங்கப்பட்டன. அமெரிக்கா, கனடா, ஜப்பான், சவுதி அரேபியா மற்றும் சீனாவிலிருந்து ஏராளமான பிளாஸ்டிக் கழிவுகள் மலேசியாவில் குவியத் தொடங்கின. இது அந்நாட்டு அரசுக்குப் பெரும் அச்சுறுத்தலைக் கொடுத்தது. முறைகேடாகத் தொடங்கப்பட்ட மறுசுழற்சி நிறுவனங்களைக் களையெடுக்கும் பணியை மலேசியா அரசு தொடங்கியது. சுமார் 150 நிறுவனங்களைக் கண்டுபிடித்து அவற்றை மூடியது. ஆனாலும் மலேசியாவுக்கு கண்டெய்னர்களில் வரும் குப்பைகளின் அளவு குறைந்ததாகத் தெரியவில்லை. இந்நிலையில்தான் மலேசியாவுக்குக் கப்பல்கள் மூலம் அனுப்பப்பட்ட 3300 டன் கழிவுகளை வளர்ந்த நாடுகளுக்கே திரும்பி அனுப்பியுள்ளது. இதுதொடர்பாகப் பேசியுள்ள அந்நாட்டுச் சுற்றுச்சூழல் துறை அமைச்சர்  Yeo Bee Yin, ``வளர்ந்த நாடுகளின் குப்பைத் தொட்டியா நாங்கள். இந்தப் பக்கம் உங்கள் கண்டெய்னர்கள் வந்தால் கப்பலுடன் அவை திருப்பி அனுப்பப்படும். எந்தக் கருணையும் எதிர்பார்க்காதீர்கள். பிளாஸ்டிக் கழிவுகளை சீனா இறக்குமதி செய்ய தடை விதித்ததையடுத்து வளர்ந்த நாடுகள் மலேசியாவைக் குறிவைக்கின்றன. தவறான வழிமுறைகள் மூலம் 60 கண்டெய்னர்களில் பிளாஸ்டிக் கழிவுகள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. இங்கிலாந்திலிருந்து கேபிள்கள், ஆஸ்திரேலியாவிலிருந்து மாசுபட்ட பால் பாக்கெட்டுகள், கனடா, ஜப்பான், அமெரிக்கா, சீனா போன்ற நாடுகளிலிருந்து மின்சாதனக் கழிவுகள், வீட்டு உபயோகப்பொருள்களின் கழிவுகள் குவிந்துள்ளன. சீனா பிளாஸ்டிக் கழிவுகளை இறக்குமதி செய்ய தடைவிதித்துள்ளதால் வளர்ந்த நாடுகள் இதை எங்கள் பக்கம் திருப்புகிறார்கள். இங்கிலாந்தைச் சேர்ந்த மறுசுழற்சி நிறுவனம் கடந்த 2 ஆண்டுகளில் 1000 கண்டெய்னர்களில் 50,000 டன் கழிவுகளை இறக்குமதி செய்துள்ளது. மலேசியா ஒன்றும் உலகநாடுகளின் குப்பையைக் கொட்டும் இடமல்ல. நாங்கள் எதிர்த்துப் போராடுவோம். நாங்கள் சிறிய நாடுதான். வளர்ந்த நாடுகள் எங்களைத் தாக்க முடியாது. மலேசியாவில் ஏராளமான மறுசுழற்சி நிறுவனங்கள் முறைகேடாகத் தொடங்கப்பட்டுள்ளன. இதுவரை 150 தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன. இந்த மாதம் தொடக்கத்தில்கூட ஸ்பெயினிலிருந்து வந்த 5 கண்டெய்னர்கள் திருப்பி அனுப்பப்பட்டது. வளர்ந்த நாடுகளில் வசிக்கும் மக்கள் தங்களது குப்பைகளைத் தனியாகப் பிரித்துத்தான் குப்பைத் தொட்டியில் போடுகின்றனர். இறுதியில் அந்தக் குப்பைகள் வளர்ந்து வரும் நாடுகளில் முறைகேடான முறையில் கொட்டப்படுகிறது. வளர்ந்த நாடுகள் இந்தக் குப்பைகளை எப்படி மேலாண்மை செய்வது என்பதை யோசியுங்கள். வளர்ந்து வரும் நாடுகள் மீது கொட்டுவதை நிறுத்துங்கள்'' எனப் பேசியுள்ளார்.
https://www.vikatan.com/government-and-politics/we-need-to-be-frank-malaysia-pm-on-india-palm-oil-curbs
`தடைவிதித்தாலும், தவறு செய்தால் உரக்கச் சொல்லுவோம்’ - மலேசியா, இந்தியா இடையே மூளும் பனிப்போர்
இந்தியாவில் நடக்கும் விஷயங்கள் பற்றி மலேசியப் பிரதமர் மகாதீர் தொடர்ந்து கருத்து தெரிவித்து வருவதால் அந்நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பாமாயிலுக்கு கட்டுப்பாடு விதித்துள்ளது இந்திய அரசு.
மலேசியாவுக்கும் இந்தியாவுக்கும் இடையே ஏற்பட்டுள்ள வார்த்தை ரீதியிலான மனக் கசப்பு, இரு நாடுகளுக்கும் இடையேயான வர்த்தகத்தில் எதிரொலித்துள்ளது. சமீபகாலமாக இந்தியாவில் நடந்த காஷ்மீர் விவகாரம், குடியுரிமைப் பிரச்னை போன்ற அனைத்து விவகாரங்களிலும் மலேசியப் பிரதமர் மகாதீர் முகமது தன் கருத்தை தெரிவித்துவந்தார். முன்னதாக காஷ்மீர் விவகாரத்தில், ``இந்தியா காஷ்மீரை ஆக்கிரமிப்பு செய்துள்ளது. மலேசியாவைப் பொறுத்தவரை, இரு நாடுகளுக்கு இடையான பிரச்னை மற்றும் மோதல்களைத் தீர்த்துக்கொள்ள ஆக்கிரமிப்பு செய்வது சரியான தீர்வல்ல. எவ்வளவு பெரிய பிரச்னையாக இருந்தாலும் மத்தியஸ்தம் அல்லது சட்டப்படி தீர்வு காண வேண்டும்” எனப் பேசியிருந்தார். `இந்திய உள்நாட்டு விவகாரங்களில் மலேசியப் பிரதமர் தலையிடுவது, கருத்து தெரிவிப்பது முறையல்ல’ என்று மத்திய அரசு தரப்பில் அவருக்குப் பதில் அளிக்கப்பட்டது. இதையடுத்து, சமீபத்தில் மத்திய அரசு கொண்டுவந்த குடியுரிமைச் சட்டத் திருத்தம் பற்றியும் மகாதீர் தன் கருத்தைப் பதிவு செய்திருந்தார். அதில், ``இந்தியாவில் தற்போது நடந்துகொண்டிருக்கும் நிகழ்வு மிகவும் துரதிர்ஷ்டவசமானது. இந்தியா மதச்சார்பற்ற நாடு. தொடக்கம் முதலே மக்கள் சார்ந்துள்ள மதங்கள் அவர்களின் குடியுரிமையைத் தடுக்கவில்லை. இத்தனை ஆண்டுகளாக அவர்கள் இந்தியக் குடிமக்களாகவே வாழ்ந்து வந்துள்ளனர். ஆனால், தற்போது கொண்டுவந்துள்ள சட்டத் திருத்தத்தில், இஸ்லாமியர்கள் மட்டும் இந்தியக் குடிமக்களாவதிலிருந்து தடுக்கப்படுவது நியாயமல்ல” எனக் கூறினார். இதற்கும் மத்திய அரசு தங்களின் அதிருப்தியை வெளிப்படுத்தியது. மலேசியப் பிரதமர் இதேபோன்று தொடர்ந்து மத்திய அரசின் முடிவுகளுக்கு எதிராகப் பேசி வருவதால் இரு நாட்டு உறவில் விரிசல் விழுந்துள்ளது. இந்த நிலையில், மலேசியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பாமாயிலுக்கு இந்திய அரசு திடீர் கட்டுப்பாடுகளை விதித்தது. இதனால் இந்திய வணிகர்கள் பாமாயில் இறக்குமதி செய்யமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்திய அரசின் இந்த நடவடிக்கை மலேசியாவுக்கும் பெரும் பொருளாதார இழப்பாக இருக்கும் எனக் கூறப்படுகிறது. இருந்தும் இது இந்தியாவுக்கும் பெரும் பாதிப்பாக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மலேசியாவிலிருந்து பாமாயில் இறக்குமதி தடைப்பட்டால் இந்தியாவில் பாமாயில் விலை அதிகரிக்கக் கூடும் என்ற அச்சம் உருவாகியுள்ளது. இதற்கிடையில், இந்தியாவின் நடவடிக்கை கவலை அளிப்பதாக மலேசியப் பிரதமர் மகாதீர் முகமது கருத்து தெரிவித்துள்ளார். ``மலேசியாவிலிருந்து இந்தியாவுக்கு அதிகப்படியான பாமாயில் விற்பனை செய்யப்படுகிறது. அதனால் இந்தியா தற்போது எடுத்துள்ள நடவடிக்கையை நினைத்து நிச்சயமாகக் கவலைப்படுகிறோம். ஆனால் மறுபுறம், நாம் வெளிப்படையாக இருக்க வேண்டும். இந்தியாவில் ஏதேனும் தவறு நடந்தால் நாங்கள் அதை உரக்கச் சொல்லவேண்டியிருக்கும். நாம் தவறான விஷயங்களை அனுமதித்து, பணம் தொடர்பாக மட்டுமே சிந்தித்தால் நம்மாளும் மக்களாலும் நிறைய தவறான காரியங்கள் செய்யப்படும் என நினைக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார். மலேசிய உள்நாட்டு உற்பத்தியில் 2.8 சதவிகிதம் பாமாயில் பங்களிப்பு கொண்டுள்ளது. எனவே, பாமாயில் ஏற்றுமதி அந்நாட்டுக்கு கவலைக்குரிய ஒன்றுதான் என்று ஒரு தரப்பினர் கருத்து தெரிவிக்கின்றனர். அதே சமயம், மலேசியாவின் பாமாயில் ஏற்றுமதியை இந்தியா கைவிட்டாலும் தனக்கென புதிய சந்தையை மலேசியா உருவாக்கிக்கொள்ளும். பாமாயில் விலையேற்றத்தால் இந்தியாவுக்குத்தான் பாதிப்பு என மற்றொரு தரப்பினர் கூறுகின்றனர்.
https://www.vikatan.com/health/137859-actor-munishkanths-fitness-secret
மனசையும் உடம்பையும் ஃபிட்டா வச்சுக்க குத்துவரிசை கத்துக்கிறேன்! - முனிஸ்காந்த் 
மனசையும் உடம்பையும் ஃபிட்டா வச்சுக்க குத்துவரிசை கத்துக்கிறேன்! - முனிஸ்காந்த் 
தமிழ் சினிமாவில் `ஈசா’ படத்தின் மூலம் அறிமுகமாயிருந்தாலும் `முண்டாசுப்பட்டி’ படம்தான்  முனிஸ்காந்துக்கு வெளிச்சம் தந்தது.  `ஜிகர்தண்டா’, `இன்று நேற்று நாளை’, `மாப்பிளை சிங்கம்’, `மாநகரம்’, `மரகதநாணயம்’, `வேலைக்காரன்’ என அதன்பின் அவரின் வெற்றிப்பயணம் தொடர்கிறது.  தற்போது `சண்டக்கோழி 2’, `விஸ்வாசம்’ படத்தில் நடித்து வருகிறார்.  முனிஸ்காந்த்  டயட் மற்றும் ஃபிட்னெஸ் விஷயத்தில் எப்படி? ``சினிமாவுல நடிக்கிறதுக்காக ஆரம்பத்துல நிறைய கம்பெனிகளைத் தேடிப்போனேன். குறிப்பிட்ட நேரத்துல சாப்பிட முடியாது. அதனால என்ன கிடைக்குதோ அதைச் சாப்பிடுவேன். வெஜ்ஜோ, நான்வெஜ்ஜோ விருப்பம்போல வயிறு நிறைய சாப்பிடுற பழக்கம் எனக்கு உண்டு. டயட்டுங்கிற விஷயமெல்லாம் எனக்கு ஒத்துவராது. ஏன்னா, நான் நல்லா சாப்பிடுற ஆள். என்னைப் பார்த்தாலே உங்களுக்குத் தெரியும்னு நினைக்கிறேன். எல்லா வகையான உணவுகளையும் சாப்பிடப் பிடிக்கும். குறிப்பா, தலைக்கறியும், மட்டன் பிரியாணியும் என்னோட ஃபேவரைட். அவுட்டோர் ஷூட்டிங் போனா மட்டும் நான்வெஜ் கிடைக்காம கொஞ்சம் சிரமப்படுவேன். கிராமப்புறங்களில் ஷூட்டிங் வைச்சிருந்தாங்கன்னா... அந்த ஏரியாவுல இருக்கிற ஏதாவது ஒரு வீட்டுல காசு கொடுத்து, சமைக்கச் சொல்லி சாப்பிடுவேன். அப்படி கம்மங்கூழும் கருவாட்டுக் குழம்பும் சாப்பிட்டிருக்கேன்.  கல்யாணத்துக்கு முன்னாடியெல்லாம் விருப்பம்போல சாப்பிட்டுக்கிட்டு இருந்தேன். இப்போ, வீட்டம்மா வந்துட்டாங்க. விதவிதமா ருசியா சமைக்கிறாங்க. அதனால நாக்கை கண்ட்ரோல் பண்ண முடியல. அவங்க எது சமைச்சாலும் ஃபுல்லா கட்டுவேன். சினிமாவுக்கு வர்றதுக்கு முன்னாடி மலேசியாவுல இரண்டு வருஷம் வேலை பார்த்தேன். அங்கே `நாசிலிமா’ ன்னு ஒரு உணவு உண்டு. பச்சரிசியை தேங்காய்ப்பால்ல வேகவச்சுத் தருவாங்க. சைடிஷ், சென்னாங்குண்ணி கருவாடு.  உடம்பை ஃபிட்டா வைச்சுக்கணும்னு ஆசையிருக்கு. அதனால, கடந்த ரெண்டு மாசமா கவனம் செலுத்திக்கிட்டு வர்றேன். நம்முடைய கலாசாரத்துல `குத்துவரிசை’ங்கிற கலை கொஞ்சம் கொஞ்சமாக அழிஞ்சுக்கிட்டு வருது. இந்தக் கலையை முழுசா தெரிஞ்சுக்கிட்டவங்க ஒருசிலர்தான் இருக்காங்க. இதை கத்துக்கிட்டோம்னா உடம்பும் மனசும் உறுதியாயிடும். இந்தக் கலையை தெரிஞ்ச வீரமணி மாஸ்டர் இப்போ கோடம்பாக்கத்துல இருக்காங்க. அவருக்கிட்டதான் பயிற்சி எடுத்துக்கிட்டு வர்றேன். ஃபிட்னெஸுக்காக ஜிம்முக்கெல்லாம் போற பழக்கமில்ல” என்கிறார் முனிஸ்காந்த்.
https://www.vikatan.com/science/126844-mh370-flight-hunt-is-now-officially-ended
`1549 நாள்கள் தேடியாச்சு... இனிமே முடியாது!' - முடிவுக்கு வந்த MH370 தேடல்
'35,000 அடியில் பறந்து கொண்டிருக்கிறோம் என தொடர்ந்து இரண்டு முறை விமானத்தில் இருந்து  தரைக்கட்டுப்பாட்டு மையத்துக்கு பதில் வர, அவர்கள் மறுமுனையில் விமானத்தை தொடர்புகொள்ள பதில் ஏதும் வரவில்லை. தரை கட்டுப்பாட்டில் இருந்த அதிகாரிகள் ``நீங்கள் தற்போது வியட்நாம் நாட்டின் எல்லைக்குள் நுழைந்திருப்பதால் உடனே ஹோ சி மின் நகரத்தை தொடர்புகொள்ளுங்கள்" கூறியது.
மார்ச் 8, 2014 சனிக்கிழமை அதிகாலை 12.40 மணிக்கு விமானம் ஒன்று கோலாலம்பூரிலிருந்து சீனாவின் பெய்ஜிங்குக்கு கிளம்பத் தயாராகிக் கொண்டிருந்தது. முதன்மை பைலட் ஜஹாரி அஹ்மத் ஷாவும், துணை பைலட் ஃபாரிக் அப்துல் அமிதும் தயாராக இருந்தனர். வழக்கம் போல் தரைக்கட்டுப்பாட்டு நிலையத்தில் இருந்து அறிவிப்பு வர ``குட் மார்னிங் ATC (AIR TRAFFIC CONTROL), இது MH 370" என பதிலளித்து விட்டு , 239 பயணிகளுடன் விமானம் பறக்கத் தொடங்கியது. '35,000 அடியில் பறந்து கொண்டிருக்கிறோம் என தொடர்ந்து இரண்டு முறை MH370 விமானத்தில் இருந்து தரைக்கட்டுப்பாட்டு மையத்துக்குப் பதில் வர, அவர்கள் மறுமுனையில் விமானத்தை தொடர்புகொள்ள பதில் ஏதும் வரவில்லை. தரை கட்டுப்பாட்டில் இருந்த அதிகாரிகள் ``நீங்கள் தற்போது வியட்நாம் நாட்டின் எல்லைக்குள் நுழைந்திருப்பதால் உடனே ஹோ சி மின் நகரத்தைத் தொடர்புகொள்ளுங்கள்" எனக் கூறினர். அதற்கு விமானத்தில் இருந்து ``ஆல் ரைட், குட் நைட்" என்று பதில் வர ஒட்டுமொத்த மலேசிய விமான தரைக் கட்டுப்பாட்டு மையமும் அதிர்ச்சிக்குள்ளானது. பின்னர் ரேடார் சிக்னலில் இருந்து முற்றிலும் விலகியது 'MH370'. அடுத்த நாள் காலை உலகின் தலைப்புச் செய்தி இந்த விமானம்தான். அதன் பிறகு MH370 பற்றி எழுந்த பல கேள்விகளுக்கு இன்று வரை பதில் கிடைக்கவில்லை. இந்நிலையில் மலேசிய விமானமான MH370யை தேடும் பணியை கைவிட்டுள்ளதாக மலேசிய அரசு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது,   விமானத்தில் இருந்த பயணிகள்  மொத்தம் 239 பயணிகள் இவ்விமானத்தில் பயணித்தனர். நீண்ட விசாரணைக்கு பிறகு, 2 நபர்கள் போலி பாஸ்போர்ட்டுடன் பயணித்துள்ளனர் என்பது கண்டறியப்பட்டது. பிறகு அதில் ஒருவர் Pouria Nour Mohammed , மற்றொருவர் Christian Kozel என்பதும், இருவரும் தீய நோக்கத்துக்காக பயணம் மேற்கொள்ளவில்லை என்பதும் உறுதிசெய்யப்பட்டது. 1. சீனா/தைவான் - 152 + 1 குழந்தை 2. மலேசியா - 38 3. இந்தோனேசியா - 7  4. ஆஸ்திரேலியா - 6 5. இந்தியா - 5 6. அமெரிக்கா - 3 + 1 குழந்தை 7. ஃப்ரான்ஸ் - 4  8. கனடா - 2 9. நியூசிலாந்து - 2  10. உக்ரைன் - 2 11. இத்தாலி - 1 12. நெதர்லாந்து - 1 13. ஆஸ்திரியா - 1  14. ரஷ்யா - 1   பைலட்தான் காரணமா ? பைலட் ஜஹாரி அஹ்மத் ஷா , விமானம் ஓட்டுவதில் 33 வருட அனுபவம் பெற்றவர். மற்றவர்களுக்குப் பயிற்சி அளிப்பதில் முக்கியமானவரும் கூட. ஃபாக்கர் F50, ஏர்பஸ் A300, போயிங் 737 ரக விமானங்களை எளிதில் கையாள்பவரும் ஆவார். காணாமல் போன இந்த விமானத்தை ஓட்டுவதற்கு முன்பு வரை கூட இவர் மகிழ்ச்சியாகதான் இருந்தார், துணை பைலட் ஆன  ஃபாரிக் அப்துல் அமிதும் இதே மனநிலையில் தான் இருந்துள்ளார். எனவே, பைலட்கள் இதற்கு எந்த விதத்திலும் காரணமில்லை என விசாரணையில் தெளிவாகத் தெரியவந்தது. கடைசியாக விமானம் எங்கு சென்றது ? விமானம் மலேசியாவில் இருந்து வியட்நாமுக்குச் செல்லும் வழியில் தென்சீனக் கடல் பகுதியில் சென்றது, திடீரென இடதுபுறமாக திரும்பி இந்தியப் பெருங்கடலை நோக்கிச் சென்றது என்றும் கூறப்படுகிறது. தெற்கு சீனக் கடல் பகுதியில்தான் கடைசியாக 1.30 மணி அளவில் இணைப்பு துண்டிக்கப்பட்டது. சிவிலியன் ரேடாரில் பதிவாகி இருக்கும் இடத்துக்கும், மிலிட்டரி ரேடாரில் பதிவாகி இருக்கும் இடத்துக்கும் இடையேயுள்ள வித்தியாசம் கிட்டத்தட்ட 300 கிலோ மீட்டர் ஆகும். இதுகுறித்து பேசிய மலேசியன் சிவில் அவியேசன் துறைத்தலைவர் அசாருதீன் அப்துல் ரஹ்மான், ' உங்களிடம் சில விஷயங்களைதான் சொல்ல முடியும், எல்லாவற்றையும் பகிர்ந்துகொள்ள முடியாது ' என்று கூறினார்.  தரமற்ற விமானமா எம் ஹச் 370 ? 2002-ல் `மலேசியன் ஏர்லைன்ஸ்' நிறுவனம் இந்த எம் ஹச் 370 விமானத்தை வாங்கியது. காணாமல் போகும் வரை 53,465.21 மணி நேரம் பறந்துள்ளதாக அதன் சி.இ .ஒ அஹ்மத் ஜெளஹாரி யாயா கூறினார். உலகின் மிக பாதுகாப்பான விமான வகைகளுள் இதுவும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. தாழ்வாகப் பறந்தது! அலிஃப் பாதி அப்துல் ஹாதி என்பவர் விமானம் மாயமான அன்று நள்ளிரவு 1.45 மணிக்கு தன் வீட்டின் மேல் பகுதியில் வெளிச்சம் வழக்கத்தைவிட அதிகமாக இருந்ததாகவும், விமானம்  'பச்சோக்' என்ற கடலை ஒட்டிச் சென்றதாகவும் கூறினார். அதனருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த ஆசிக் இப்ராஹிம் என்ற மீனவர் 1.30 மணியளவில் மிகவும் தாழ்வாக விமானம் பறந்ததாக அப்போது தெரிவித்திருந்தார். இது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை. அதேபோல், விமானம் தொலைந்த சனிக்கிழமையில் இருந்து திங்கள் கிழமை வரை ஏறக்குறைய 3 நாள்கள் வரை சில சீனப் பயணிகளின் செல்போன்கள் செயல்பாட்டில் இருந்ததாக 'சீனா சோஷியல் நெட்வொர்க்கிங் வலைதளம்' தெரிவித்தது. அதன் பிறகு அந்த சிக்னல் நின்றுவிட்டது. கடல் பகுதியில் சென்றுகொண்டிருந்தபோதே விமானம் தன்னுடைய சிக்னலை இழந்தது. அவ்வாறு இருப்பின், எப்படி செல்போன் மூன்று நாள் வரை செயல்பட்டிருக்க முடியும் ? இதுபோன்ற சந்தேகங்களும் எழுந்தன. தொடர் தேடுதல் வேட்டை மாயமான இந்த விமானத்தைப் பற்றி வெளியில் தெரிந்தவுடன் அனைத்து நாடுகளும் தேடுதல் பணியை முடுக்கிவிட்டன.  சீனா, ஆஸ்திரேலியா, தாய்லாந்து, இந்தோனேஷியா, வியட்நாம், சிங்கப்பூர், ஃபிலிப்பைன்ஸ், நியூசிலாந்து மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் மலேசியாவுடன் இணைந்து தேடுகின்றன. இதுக்காக சீனா தன்னிடம் உள்ள  ஹை-ரெசல்யூஷன் சேட்டிலைட்டுகளை இந்த விமானம் தேடுதல் பணிக்காக கொடுத்தது. தென் சீனக் கடல் பகுதியில் 222 கிலோ மீட்டர்  கிழக்கில் உள்ள பகுதியில் கேபிள் போன்ற உதிரிபாகம் கிடைத்ததாக  சீனாவும், அங்கிருந்து 387 கிலோ மீட்டர் தொலைவில் எண்ணெய் படலம் உள்ளதாக வியட்நாம் அரசும் தெரிவித்தது. முடிவில் இவ்விரு பொருள்களும் தொலைந்துபோன விமானத்தைச் சேர்ந்தது இல்லை என்று உறுதியானது. 2015 ஜூலையில் இந்தியப் பெருங்கடலில், பிரான்ஸ் நாட்டின் கட்டுப்பாட்டில் இருக்கும் ரீ-யூனியன் தீவில் உள்ள கடற்கரையில் விமானத்தின் இறக்கைப் பகுதி கிடைத்தாக கூறப்பட்டது. இதை மலேசிய பிரதமர் நஜிப் ரசாக் அதை உறுதி செய்தார். தொடர்ந்த தேடுதல் வேட்டையில் தொய்வு ஏற்பட, ஒவ்வொரு நாடாக விலகியது. மலேசிய அரசு மீது வழக்கு  காணாமல் போன அந்த விமானத்தில் பயணித்த ஜீ ஜிங் ஹாங்க் என்பவரின் மகன்கள் இருவர் கோலாலம்பூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அதில் கவனக் குறைவாக செயல்பட்ட விமான நிறுவனத்தின் மீதும், மலேசிய விமானப்படை தளபதி மீதும் குற்றம் சாட்டிருந்தனர். மேலும் தங்களுக்கு நஷ்ட ஈடு வேண்டும் என்ற கோரிக்கையும் விடுத்திருந்தனர். இது பெரும் சர்ச்சைக்குள்ளானது. 2017-ல் ஆஸ்திரேலிய விசாரணை அதிகாரிகள், `` நவீன காலகட்டத்தில் கண்டுபிடிக்க முடியாமல் போனது வருத்தம்" என்றும் கூறினார். இந்தத் தேடுதல் பணியானது, பெரிய பரப்பளவில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வாகும். 1046 நாள்களுக்குப் பிறகு இத்திட்டத்தை ஆஸ்திரேலியா அதிகாரிகள் கைவிட்டனர். தனியார் நிறுவனத்துடன்  ஒப்பந்தம்  நீண்ட இடைவெளிக்குப் (4 ஆண்டுகளுக்கு) பிறகு, அமெரிக்காவைச் சேர்ந்த 'ஒசன் இன்ஃபினிட்டி' நிறுவனத்துடன் ஓர் ஒப்பந்தம் மேற்கொண்டது மலேசியா அரசு. அதன்படி, 90 நாள்களுக்குள் விமானம் தொடர்புடைய கறுப்பு பெட்டியையோ அல்லது எதாவது ஒரு பாகத்தையோ கண்டுபிடித்தால் மலேசிய அரசு அந்நிறுவனத்துக்கு 70 மில்லியன் டாலரை தரவேண்டும் என்று  ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. கண்டுபிடிக்காத பட்சத்தில் எந்த ஒரு பணமும் தரப்படமாட்டாது என்பது குறிப்பிடத்தக்கது. அதிநவீன கப்பலுடன் AUV என்ற கருவியை இது பெற்றுள்ளது. இதன் மூலம் 6,000 அடி வரை தெளிவான டேட்டாக்களைப் பெறமுடியும். இந்தியப் பெருங்கடலின் தென்பகுதியில் 25,000 சதுர கிலோமீட்டரில் விழுந்திருக்கலாம் என்று முடிவு செய்யப்பட்டு அங்கும் தேடுதல் வேட்டை தொடர்ந்தது. இதுவரை எதுவும் கிடைக்காததால், கடைசியாக ஓசன் இன்பினிட்டி நிறுவனம் தற்போது இத்திட்டத்தைக் கைவிட்டுள்ளது. தொடரும் மர்மம்...! தொலைந்து போன எம் ஹச் 370 விமானமானது எங்காவது விபத்தில் சிக்கியிருந்தால் தடயம் எதாவது கிடைத்திருக்கும், தொலைந்து போன விமானமானது 7 மணி நேரம் செல்லக் கூடிய எரிபொருளைக் கொண்டது, அது என்ன ஆயிற்று? , பைலட் வேண்டுமென்று எதாவது செய்தாரா, வேறு யாரோ கடத்தினார்களா எனப் பல்வேறு மர்மங்கள் என பல்வேறு வாதங்கள் எழுந்தன. ஆனால், இதையெல்லாம், நம்புவதா, இல்லை வேண்டாமா என்றே தெரியவில்லை. தொழில்நுட்பத்தில் மனிதன் எத்தனையோ அடிகள் முன்னேறிவிட்டாலும் கூட, இன்னும்கூட பல்வேறு மர்மங்களுக்கு அவனால் விடை கண்டறிய முடியவில்லை. தற்போது MH 370-ம் அந்தப் பட்டியலில் இணைந்துள்ளது. 
https://www.vikatan.com/government-and-politics/hindu-sangam-opposes-periyar-picture-in-tamil-subjecs-in-malaysia-schools
மலேசியா: `பாடப் புத்தகத்தில் பெரியார் படம் இருக்கக் கூடாது` - இந்து சங்கத்தின் எதிர்ப்பால் சர்ச்சை!
தைப்பொங்கல் இந்து மதத்தவர்கள் மட்டும் கொண்டாடும் ஒரு பண்டிகையல்ல. முஸ்லிம் தமிழர்களும், கிறிஸ்தவத் தமிழர்களும் கொண்டாடும் உழவர் திருநாள்.
மலேசிய இந்து சங்கம், அங்கிருக்கும் தமிழ்ப் பள்ளிகளில் திராவிடக் கொள்கையைப் பரப்புவதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று, பத்திரிக்கைச் செய்தியை வெளியிட்டதைத் தொடர்ந்து அங்கு வாழும் தமிழர்களில் ஒரு பகுதியினரிடையே சர்ச்சை வெடித்திருக்கிறது.கடந்த பிப்ரவரி 16-ம் தேதி அது தொடர்பான அறிக்கையை மலேசிய இந்து சங்கம், அதிகாரபூர்வமாக மலேசியத் தமிழ் பத்திரிக்கைகளுக்கு அனுப்பியது. குறிப்பிட்ட அறிக்கையில், தமிழ்ப் பள்ளிகளில் இந்து சமயப் புறக்கணிப்பும், திராவிட கொள்கையைப் பரப்பும் நடவடிக்கைகளும் தீவிரமாக மேற்கொள்ளப்படுவதாகவும், கல்வி அமைச்சகத்தின்ன் பாடத்திட்டப் பிரிவின் சில அதிகாரிகள் பள்ளிகளில் திராவிட கொள்கைகளைப் பரப்புவதாகவும் அந்த அறிக்கையில் குற்றம் கூறியிருந்தது மலேசிய இந்து சங்கம். அதோடு, பள்ளி பாட நூலில் தை மாத முதல் நாளே தமிழர் புத்தாண்டு என்ற கருத்து திணிக்கப்படுவதையும் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும், மறைமுகமாக பள்ளிப்பாட புத்தகங்களில் பெரியாரின் கொள்கைகளும் அவரைப்பற்றிய செய்தி திணிப்பும் மேலோங்கி இருப்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று என்றும் அச்சங்கம் மிக கடுமையாக எச்சரித்திருந்தது. அதிர்ச்சியும் கோபமும்...இந்து சங்கத்தின் இந்தப் பத்திரிக்கைச் செய்தி, மலேசியத் தமிழ் மக்கள் ஒரு பகுதியினரிடம் அதிர்ச்சியையும் சினத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. தொடர்ந்து பத்திரிக்கையிலும், சமூக ஊடகங்களிலும் இது தொடர்பான எதிர்வினைகளை குறிப்பாக, திராவிடக் கொள்கையைப் பின்பற்றுபவர்களும், பெரியார் ஆதரவாளர்களும், தமிழ்ப் பற்றாளர்களும் இந்து சங்கத்தின் இந்த அறிக்கைக்கு எதிர்வினையாற்றிவருகிறார்கள். மலேசிய இந்து சங்கத்தின் தலைவரான மோகன் ஷான் வெளியிட்டிருக்கும் இந்தக் கருத்துக்கு, மலேசிய இந்தியர்களின் தாய்க் கட்சியான ம.இ.கா தனது எதிர்ப்பைத் தெரிவித்திருக்கிறது. பொங்கல் என்பது பண்பாட்டு விழா என்றும், அதற்கு மதச் சாயம் பூச வேண்டாம் என்றும் அந்தக் கட்சி மலேசிய இந்து சங்கத்திடம் வலியுறுத்தியது. மேலும், இந்து சங்கம் வெளியிட்ட அறிக்கையை திரும்பப் பெற வேண்டும் என்றும் அந்தக் கட்சி கூறியிருந்தது. ஆனாலும், ம.இ.கா-வைத் தவிர, எந்த ஒரு மதம் சாரா இயக்கமோ அல்லது திராவிட இயக்கமோ இந்து சங்கத்துக்கு எழுத்துபூர்வமான எதிர்வினையை ஆற்றவில்லை. இருப்பினும், பல தனி மனிதர்கள் இந்து சங்கம் மீதான தங்கள் அதிருப்தியைப் பதிவு செய்துவருகின்றனர். ``தமிழருக்கான புத்தாண்டு தை முதல்நாள்தான். தைப்பொங்கல் இந்து மதத்தவர்கள் மட்டும் கொண்டாடும் ஒரு பண்டிகையல்ல. முஸ்லிம் தமிழர்களும், கிறிஸ்தவத் தமிழர்களும் கொண்டாடும் உழவர் திருநாள். அதற்கு மதச் சாயத்தைப் பூச வேண்டாம்’’ என சமூக ஊடகங்களில் அவர்கள் வலியுறுத்திவருகிறார்கள். இந்து சங்கத் தலைவர் மோகன் ஷான் வலியுறுத்தும் ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தத்தைக்கொண்டு, மலேசிய நாட்டில் தமிழையும் தமிழனையும் ஒருபோதும் வெல்ல முடியாது என்று வெளிப்படையான கோபத்தையும் பலர் பதிவு செய்துவருகின்றனர். தமிழ்ப் புத்தாண்டுஇதனைத் தொடர்ந்து மோகன் ஷான் மற்றுமோர் அறிக்கையைப் பத்திரிகைகளில் வெளியிட்டார். அதில் ``சித்திரை முதல் தேதிதான் தமிழர் புத்தாண்டு. அதில் எந்த மாற்றுக் கருத்துமில்லை. தமது இந்தக் கூற்றோடு இந்து மதம் சார்ந்த 13 இயக்கங்கங்கள் உடன்பட்டிருப்பதாக அவர் அந்த அறிக்கையில் தெரிவித்திருக்கிறார். தவிர, தமது சங்கம் பொங்கலுக்கு மதச் சாயம் பூசுகிறது என்று சிலர் கூறுவது வேடிக்கையாக இருக்கிறது’’ என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.மோகன் ஷானின் இந்த மறு அறிக்கையால் இந்தச் சர்ச்சை அங்கு மேலும் நீடிக்கிறது. இதனால், இந்த விவாதம் தீவிரமடைந்துவருகிறது. மலேசிய இந்து சங்கத்துக்கு நிலையான ஒரு கருத்து இல்லை என்று மோகன் ஷானின் கருத்தை எதிர்ப்பவர்கள் பதிவு செய்துவருகிறார்கள். சில வருடங்கள் வரையில் அரசு ஆதரவின் கீழ் `ஒரே மலேசியா’ எனும் கோட்பாட்டின் கீழ் பொங்கல் பண்டிகையை மதம்-இனம் சாராமல் மலாய்க்காரர்களும் தமிழர்களோடு சேர்ந்து கொண்டாடினர். 2018-ம் ஆண்டில், `பொங்கல் மதம் சார்ந்த பண்டிகை. பள்ளிகளில் அதைச் செய்ய அனுமதிக்கக் கூடாது; மலாய் மாணவர்கள் பொங்கல் பண்டிகளில் ஈடுபடக் கூடாது’ என்ற மலாய் அதிகாரி ஒருவர் தெரிவித்த கருத்துக்கு இதே இந்து சங்கத்தைச் சேர்ந்த மோகன் ஷான், ` பொங்கல் மதம் சார்ந்த பண்டிகை அல்ல, அது பண்பாட்டு விழா` என்று அறிக்கைவிட்டிருந்தார். தான் கூறிய கூற்றுக்கு எதிராக இப்போது அவரே மாற்றிப் பேசுகிறார் என்று பலர் விமர்சிக்கின்றனர். பாடத்திட்டம்மலேசிய அரசு பாடத்திட்ட வழக்கப்படி ஆறு ஆண்டுகளுக்கு ஒரு முறை புதிய பாடப் புத்தகம் தயாரிக்கப்படும். அதன்படி கடந்த 2016-ம் ஆண்டு தயாரிக்கப்பட்ட பாடப்புத்தகத்தில், தமிழர்களுக்குப் பங்காற்றிய மூன்று அறிஞர்கள் குறித்துச் சிறு குறிப்பு எழுதப்பட்டிருக்கிறது. அதில் 10 வரிகளில் பெரியார் குறித்த அறிமுகம் எழுதப்பட்டிருக்கிறது. அடுத்த ஆண்டு இந்தப் பாடப்புத்தகம் காலாவதியாகும் நிலையில், பெரியார் குறித்த தகவல்கள் பாடப் புத்தகத்தில் இருப்பது சமயத்துக்கு எதிரானது என்று மலேசிய இந்து சங்கம் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறது. இந்த நிலைப்பாடு தொடர்பாக மலேசியத் தமிழர்களில் ஒரு பகுதியினர் இந்து சங்கத்துக்கு எதிரான கருத்தைத் தெரிவித்துவருகிறார்கள். பொங்கல் தமிழர் திருநாள், அது தமிழர்களின் புத்தாண்டு என்று தொடர்ந்து பலர் குரல் எழுப்பிவருகின்றனர். இந்த எதிர்ப்புக் குரல் நாளுக்கு நாள் தீவிரமடைந்துவருவது குறிப்பிடத்தக்கது. ``இந்து சங்கம் குற்றம் சுமத்தியிருப்பதுபோல எந்த எதிர்மறைக் கருத்தும் கல்வி பாடத்தில் இல்லை என்றும், அது கூறியிருப்பதுபோல பள்ளிப் பாடப்புத்தகத்தில் பொங்கல்விழா தமிழர்களின் புத்தாண்டு என்ற கருத்தை மாணவர்கள் மத்தியில் திணிப்பது போன்ற எந்தப் பதிவும் இல்லை’’ என்று கல்வியாளர்களும் தங்கள் கருத்தைத் தெரிவித்திருக்கின்றனர். மோகன் ஷான் கூறுவது என்ன?``இறையாண்மையைப் போற்றும் மலேசியத் திருநாட்டில் இந்து சமயத்துக்கு எதிரான கொள்கைகளைக் கொண்டவர்களின் சித்திரத்தையும், அவர்களைப் பற்றிய குறிப்புகளையும் பாடத்திட்டத்தில் இணைப்பது என்பது மிகக் கடுமையாகப் பார்க்க வேண்டிய ஒரு விஷயம். 6-ம் வகுப்பு பாடப்புத்தகத்தில் ஈ.வெ.ராமசாமி, அன்னை தெரேசா ஆகியோரின் படங்கள் இடம்பெற்றுள்ளன. மேலும், காவி உடையில் காட்சியளிக்கும் சுவாமி விவேகானந்தர் வெள்ளை உடையில் இருப்பது போன்று காட்டப்பட்டதன் உள்நோக்கம்தான் என்ன?" என்று மோகன் ஷான் கேள்வி எழுப்புகிறார்.யோகி சந்துரு, விகடன் இணையதளத்துக்காக மலேசியாவிலிருந்து...
https://www.vikatan.com/spiritual/temples/ooty-lord-murugan-temple-a-place-where-you-can-worship-palani-and-malaysia-murugan
உதகையிலும் அருள்பாலிக்கும் பழநி மலை தண்டாயுதபாணியும் மலேசிய பத்துமலை முருகனும்... எங்கே தெரியுமா?
ஊட்டிக்கு சுற்றுலா வரும் வெளியூர் மக்களும் இம்முருகப்பெருமானின் அருமை பெருமைகளை அறிந்து இத்தலத்திற்கு வந்து ஆர்வமுடன் வழிபாடு செய்கின்றனர் என்கிறார்கள் உள்ளூர் வாசிகள்.
ஊட்டியில் வாழ்ந்த முருக பக்தர்கள் இருவர் ஆண்டுதோறும் பழநி சென்று முருகப்பெருமானை மனமுருக தரிசனம் செய்து வருவது வழக்கம். வயது மூப்பின் காரணமாக ஓராண்டு செல்வது தடைபட்டுப் போனது. எனவே, முருகப்பெருமான் பக்தர்கள் கனவில் தோன்றி, ஊட்டி நகரில் உள்ள எல்க்ஹில் குன்றிலேயே உறைவதாகவும், இங்கேயே வழிபடுமாறும் அருள் பாலித்தார்.முருகப்பெருமானின் ஆணைக்கிணங்க, அவர்கள் இருவரும் சேர்ந்து ஊட்டி எல்க்ஹில் மலையில் பாலதண்டாயுதபாணி கோயிலை நிறுவினார்கள் என்பது செவிவழிச் செய்தியாகும். வேலுண்டு வினையில்லை என்பது போல, தொடக்கத்தில் வேலை வைத்து வழிபட்டனர். மலை உச்சியில் 60 அடி உயரம் கொண்ட ஞானவேல் நிறுவப்பட்டது. காலப்போக்கில் மலை உச்சியில் பலத்த காற்று வீசியதால் ஞானவேல் சாய்ந்தது. பின்னர், கோயில் நிர்வாகத்தினர் 60 அடி உயர ஞானவேலை அகற்றி விட்டு, 12 அடி உயரமுள்ள ஞானவேலை வைத்தனர். ஊட்டி என்றாலே, இயற்கை எழில் கொஞ்சும் நகரம். அவ்வண்ணம் கவின்மிகுந்த குன்றில் முருகப் பெருமான் காட்சியளிக்கிறார். இத்திருத்தலத்தில் நுழையும்போது முழுமுதற் கடவுளான விநாயகர் முதலில் காட்சி தருகிறார். விநாயகரை தரிசித்து விட்டு சற்று மேல்நோக்கி வலதுபுறம் திரும்பி சில அடி தூரம் நடந்து சென்றால் ஜலகண்டேஸ்வரி அம்மன் தாமரை மலரில் நான்கு கரங்களுடன் அருள் பாலித்து வருகிறார். ஜலகண்டேஸ்வரர் லிங்கவடிவமாக காட்சி அளிக்கிறார். முன்புறம் கொற்றவையான துர்க்கை அம்மன் சந்நிதியும், அங்கு மகிடனை வென்ற பத்ரகாளி அம்பிகையின் தோற்றமும் காணப்படுகிறது. அடுத்து, சொர்ணாகிருஷ்ண பைரவர் நவகிரகத்துடன் காட்சியளிக்கிறார். முருகப்பெருமான் இத்திருத்தலத்தில் தலையில் அக்க மாலையும், ஒரு கரத்தில் தண்டமும், ஒரு கரத்தை இடுப்பில் வைத்த கோலத்திலும் அழகுற காட்சி அளிக்கிறார். உலகப் புகழ்பெற்ற மலேசியா பத்துமலை முருகன் போலவே, இத்தலத்திலும் முருகப்பெருமான் வெளிப்புறத்தே கம்பீரமாக தகதகக்கும் நிலையில் வேலூன்றிக் காட்சியளிக்கிறார். இக்கோயிலில் 40 அடி உயர முருகன் சிலை, முருகப் பெருமானின் 6 படைவீடுகளை குறிக்கும் வகையில் 6 மண்டபங்கள், 108 திருநாமங்களை நினைவுகூரும் வகையில் 108 படிகள் ஆகியன உள்ளன. கோயிலில் ஆண்டுதோறும் தைப்பூசம், பங்குனி உத்திரம் மற்றும் வைகாசி விசாகத்தையொட்டி திருவிழாக்கள் விமரிசையாக நடைபெற்று வருகிறது. தைப்பூசம் 13 நாள்கள் திருவிழாவாக மிகவும் பிரமாண்டமாக நடக்கும். விழாவில் முருகன் சிறப்பு அலங்காரத்தில் திருவீதி உலா வருவது கண்கொள்ளா காட்சியாகும். ஊட்டிக்கு சுற்றுலா வரும் வெளியூர் மக்களும் இம்முருகப்பெருமானின் அருமை பெருமைகளை அறிந்து இத்தலத்திற்கு வந்து ஆர்வமுடன் வழிபாடு செய்கின்றனர் என்கிறார்கள் உள்ளூர் வாசிகள்.முருகப்பெருமானை மனமுருக வழிபட்டு அவரிடத்து, வைக்கப்படும் கோரிக்கைகள் உடனே நிறைவேறுவதாக பக்தர்கள் பூரிப்படைகின்றனர். கார்த்திகேயன் பிறந்தநாளே கார்த்திகை தீபமாகக் கொண்டாடப்படுகிறது என்கின்றன புராணங்கள். அம்முறையில், இத்திருத்தலம் கார்த்திகை தீபத் திருநாளிற்கு மிகவும் பிரசத்தி பெற்ற தலமாகும். மலை உச்சியில் கார்த்திகை தீப திருநாளன்று திருவிளக்கு பிரமாண்டமான முறையில் ஏற்றப்படும். பல ஆண்டுகளுக்கு முன்பு எல்க்ஹில் முருகன் கோயில் மலை உச்சியில் தீபம் ஏற்றப்பட்ட பின்னர்தான், ஊட்டி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள மக்கள் தங்களது வீடுகளில் கார்த்திகை தீபம் ஏற்றுவார்கள். தற்போதும், கோயில் நிர்வாகத்திடம் பக்தர்கள் எத்தனை மணிக்கு மலை உச்சியில் தீபம் ஏற்றுவார்கள் என்று கேட்டுச் சென்று, அதன் படி தங்கள் வீடுகளில் தீபம் ஏற்றி வருகின்றனர்.
https://www.vikatan.com/government-and-politics/indonesias-ban-on-palm-oil-will-impact-on-india
Indonesia: எண்ணெய் ஏற்றுமதிக்குத் தடை; இந்தியா எப்படி எதிர்கொள்ளப் போகிறது?!
எண்ணெய் ஏற்றுமதிக்கு இந்தோனேஷியா விதித்திருக்கும் தடை இந்தியாவில் உணவு பொருட்களின் விலையேற்றத்திற்கு காரணமாக அமையும்.
இந்தியாவில் ஏற்கெனவே எரிபொருள் விற்பனை விலை, கோடைகால வெயிலைவிட அதிகமாகிக் கொண்டிருக்கிறது. இப்போது அடுத்த அதிர்ச்சி இந்தோனேஷியாவின் அறிவிப்பால் வந்துள்ளது. அந்நாட்டில் அதிகரித்து வருகிற பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த அனைத்து வகையான எண்ணெய் ஏற்றுமதிகளையும் தடை செய்திருக்கிறது இந்தோனேஷியா அரசு. இந்தோனேஷியா பாம் ஆயில் உற்பத்தியில் உலகிலேயே முதலிடம் வகிப்பது. இந்தியா தன்னுடைய எண்ணெய் தேவைக்காக இந்தோனேஷியாவைதான் சார்ந்திருக்கிற அவசியம் இருந்து வருகிறது. ஆண்டுதோறும் 8 மில்லியன் டன் எண்ணெய் இந்தோனேஷியாவில் இருந்து கொள்முதல் செய்யப்படுகிறது. ஏற்கனவே உக்ரைன் -ரஷ்யா போரால் சூரியகாந்தி எண்ணெய் இறக்குமதி பாதிப்புக்குள்ளானது. இந்தியாவின் வணிக ரீதியான உணவுப் பொருட்கள் தயாரிப்பு தொடங்கி வீட்டுப் பயன்பாடு வரை பாம் ஆயில் பயன்பாடு முக்கிய பங்கு வகிக்கிறது. இந்நிலையில் இந்தத் தடையால் எண்ணெய் கிடைப்பதில் தட்டுப்பாடு உண்டாகி உணவு பொருட்களின் விலை அதிகரிக்கத் தொடங்கும். பாம் ஆயில் உற்பத்தியில் அடுத்த இடம் வகிக்கும் மலேசியாவில் இருந்து கொள்முதல் செய்து ஈடுகட்டலாம் என்றால் ஏற்கெனவே கொரோனா சூழலால் அங்கு தொழிலாளர்கள் பற்றாற்குறை நிலவி வருகிறது. இந்தோனேஷியாவின் ஆண்டு உற்பத்தி 30 மில்லியன் டன். மலேசியாவின் உற்பத்தி 18 டன்கள் மட்டுமே. பேக் செய்யப்பட நெஸ்லே, ஹிந்துஸ்தான் யூனிலீவர் உள்ளிட்ட நிறுவனங்களின் உணவு பொருட்கள் விலை அதிகரிக்கும். இது மறைமுக பல பொருட்களின் விலையேற்றத்திற்கு வழிவகுக்கும். இந்தோனேஷியாவின் தடை சில வாரங்களுக்கு தான் நீட்டிக்கும் என அங்கிருந்து தகவல்கள் கிடைத்தாலும் இந்தியாவின் உணவு சந்தை அபாயகரமான விலையேற்றத்தை எதிர்கொள்ளவே வேண்டி வரும் என எச்சரிக்கிறார்கள் வல்லுநர்கள்.
https://www.vikatan.com/business/palm-oil-imports-from-malaysia-begins
மலேசியாவிலிருந்து பாமாயில் இறக்குமதி தொடங்கியதால் உள்நாட்டு உற்பத்திக்கு பாதிப்பா?
நல்லெண்ணெய், கடலெண்ணெய் விலை மிகவும் அதிகமாக இருப்பதால் வருமானம் குறைவாக உள்ள குடும்பங்களுக்கு பாமாயில்தான் சாய்ஸ். எனவே, இறக்குமதியைக் கைவிட முடியாத சூழல்.
இந்தியாவுக்கு மலேசியா, இந்தோனேசியாவிலிருந்து பாமாயில் இறக்குமதி செய்யப்படுவது வழக்கம். இந்த நிலையில், மலேசியாவிலிருந்து பாமாயில் இறக்குமதி செய்யப்படுவதால் உள்நாட்டு பாமாயில் தயாரிப்பாளர்கள் பாதிக்கப்படுவதாகக் கூறப்பட்டது. மேலும், கடந்த ஜனவரியில் குடியுரிமைச்சட்டம், காஷ்மீர் பிரச்னை தொடர்பாக மலேசிய அரசு தெரிவித்த கருத்து, மத்திய அரசுக்கு எதிராக இருந்ததால் இரு நாட்டு உறவில் பாதிப்பு ஏற்பட்டது. அதிரடியாக சுத்திகரிக்கப்பட்ட பாமாயில் இறக்குமதிக்கு தடைவிதிக்கப்பட்டது. இந்த நிலையில், ஊரடங்கு காரணமாக இந்தியாவில் உள்நாட்டு உற்பத்தி, போக்குவரத்து ஆகியவை வெகுவாகப் பாதிக்கப்பட்டன. பொதுவாக சமையல் எண்ணெய் பயன்பாட்டைப் பொறுத்தவரை இந்தியாவுக்கு 70% அளவுக்கு இறக்குமதி சமையல் எண்ணெய்தான் கைகொடுத்துவருகிறது. உள்நாட்டு உற்பத்தி 30% அளவுக்குத்தான் இருந்துவருகிறது. எனவே, மலேசியாவிலிருந்து சுத்திகரிக்கப்பட்ட பாமாயில் இறக்குமதி செய்ய பல்வேறு கோரிக்கைகள் எழுந்தன. அதையடுத்து இதுகுறித்து மத்திய அரசு பரிசீலித்து, இறக்குமதியைச் சில கட்டுப்பாடுகளுடன் அனுமதித்தது. தற்போது மலேசியாவில் புதிய அரசு பொறுப்பேற்றபின் இந்தியா மலேசியாவுக்கு இடைப்பட்ட உறவு மேம்பட்டுள்ளது. எனவே, இந்தியாவிலிருந்து 1 லட்சம் டன் அரிசி இறக்குமதி செய்ய மலேசியா ஒப்புக்கொண்டது. அதேபோல மலேசியாவிலிருந்து 2 லட்சம் டன் சுத்திகரிக்கப்படாத பாமாயில் இறக்குமதி செய்ய இந்தியா ஒப்புக்கொண்டுள்ளது. இந்த பாமாயில், ஜூன், ஜூலை மாதத்தில் இந்தியாவுக்கு வந்துசேரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவுக்கு பாமாயில் இறக்குமதிக்கான தேவை குறித்து, மதுரை, எண்ணெய் மற்றும் எண்ணெய் வித்துகள் சங்கத்தின் முன்னாள் செயலாளர் வி.கிருஷ்ணமூர்த்தி கூறுகையில், ``தரமான 1 லிட்டர் நல்லெண்ணெய் ரூ.280 மொத்த விலைக்குக் கிடைக்கிறது. 1 லிட்டர் கடலை எண்ணெய் ரூ.165 - 170 மொத்த விலைக்குக் கிடைக்கிறது. 1 லிட்டர் சூரியகாந்தி எண்ணெய் ரூ.110 மொத்த விலைக்குக் கிடைக்கிறது. சுத்திகரிக்கப்பட்ட தவிட்டு எண்ணெய், 1 லிட்டர் ரூ.110 மொத்த விலைக்குக் கிடைக்கிறது. ஆனால், பாமாயில் ஒரு லிட்டர் ரூ.75 மொத்த விலைக்குக் கிடைக்கும். எனவே, ஏழைகளின் சமையல் எண்ணெய் என்று பாமாயிலைக் கூறலாம். பாமாயில் இறக்குமதியால் உள்நாட்டு உற்பத்தியில் பாதிப்பு இருக்கத்தான் செய்யும். ஆனால், முழுமையாக உள்நாட்டு உற்பத்தியையே நம்பும் அளவுக்கு தன்னிறைவு அடையவில்லை. ஓர் ஆண்டுக்கு சுமார் 1.60 லட்சம் டன் சமையல் எண்ணெய் இறக்குமதி செய்யப்படுகிறது. அதன்மூலம்தான் பெருகிவரும் நுகர்வோரின் தேவையைப் பூர்த்திசெய்ய முடிகிறது. குறிப்பாக, நல்லெண்ணெய், கடலை எண்ணெய் விலை மிகவும் அதிகமாக இருப்பதால் வருமானம் குறைவாக உள்ள குடும்பங்களுக்கு பாமாயில்தான் சாய்ஸ். எனவே, இறக்குமதியைக் கைவிட முடியாத சூழல்" என்றார். உலகமயமாக்கலுக்குப் பின், சிகாகோவிலிருந்து சோயா எண்ணெய் இறக்குமதியாகிறது. அர்ஜென்டினாவிலிருந்து சோயா மற்றும் சூரியகாந்தி எண்ணெய் இறக்குமதியாகிறது. மலேசியா, இந்தோனேசியாவிலிருந்து பாமாயில் இறக்குமதியாகிறது. எனவே, எண்ணெய் விலை நிர்ணயமும், தங்க விலை நிர்ணயம்போல சர்வதேச நாடுகளைச் சார்ந்துதான் முடிவெடுக்க வேண்டியுள்ளது. நம் நாட்டில் விவசாய நிலமும் உற்பத்தியும் குறைந்துகொண்டே வருவதால், எண்ணெய் விலை நிர்ணயத்தில் சர்வதேச நாடுகளைச் சார்ந்திருப்பது காலத்தின் கட்டாயம்.
https://www.vikatan.com/literature/arts/102894-mystery-stories-of-missing-flights
காணாமல் போன விமானங்கள்: விடை தெரியாத மர்மங்கள்!
1948, ஜனவரி 30-ம் தேதி இரண்டாம் உலகப்போரில் வீர தீரச் செயல்கள் புரிந்த ஏர் மார்ஷல் ஆர்தர் கோணிங்கம் பயணம் செய்த ஸ்டார் டைகர் விமானம் 6 பணியாளர்கள் மற்றும் 25 பயணிகளுடன் பெர்முடா தீவில் இருந்து கிளம்பிய நேரத்தில் இருந்து இதுவரை தரை இறங்கவில்லை.
'இருட்டில் தொலைத்துவிட்டு வெளிச்சத்தில் தேடாதே' என்பார்கள். சர்வதேச நாடுகள் பலவும் இருட்டில் தொலைத்த விமானங்களை  வெளிச்சம் இருக்கிறது என்கிற காரணத்தால் வேறு ஒரு இடத்தில்  தேடிக்கொண்டிருக்கிறார்கள். ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது என்கிற ரீதியில் 24 மணி நேரக் கண்காணிப்பிலேயே இருந்த விமானங்கள் பலவும் தொலைந்து போய் இன்றுவரை கண்டுபிடிக்க முடியாமலே இருக்கிறது. வெறுமனே விமானங்கள் மட்டும் காணாமல் போயிருந்தால் தேடாமல் விட்டிருக்கலாம். எல்லா விமானங்களிலும் 200 பயணிகளுக்கும் மேலாக இருந்திருக்கிறார்கள் என்பதுதான் சோகமான விஷயமாய் இருக்கிறது. குறிப்பிட்ட காலம் வரை தேடிவிட்டு கடலில் விழுந்திருக்கலாம் என ஜஸ்ட் லைக் தட் அறிக்கை கொடுத்துவிட்டு கடந்து வந்திருக்கின்றன சம்பந்தப்பட்ட அரசுகள். எல்லாமே முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கிற சம்பவங்கள். ராணுவ விமானங்கள், போர்க்கப்பல்கள் எனச் சர்வதேச படைகளின் கூட்டுத் தேடல்களில் இன்று வரை விடை கிடைக்காத விமானங்கள் ஏராளம். டிசம்பர் 28, 1948 அன்று, மியாமி (புளோரிடா) தலைநகரான போர்டோரிகோவின் சான் ஜுவான் விமான நிலையத்திலிருந்து  டக்ளஸ் டகோடா DC-3 என்கிற விமானம் இரவு 10.03 மணிக்குப் புறப்பட்டது. 28 பயணிகள் மூன்று விமான சிப்பந்திகளுடன் பயணித்தது. “வந்துகொண்டிருக்கிறோம். மியாமியினுடைய விளக்குகள் எனக்கு மங்கலாகத் தெரிகின்றன. இறங்குவதற்கான தகவலுக்காக காத்திருக்கிறேன்”  என விமானி செய்தி அனுப்புகிறார்.  அந்த விமானத்திலிருந்து கடைசியாய் வந்த தகவல் இது மட்டும்தான். இப்போது வரை அந்த விமானம் தரை இறங்காமலே இருக்கிறது.  1948, ஜனவரி 30-ம் தேதி இரண்டாம் உலகப்போரில் வீர தீரச் செயல்கள் புரிந்த ஏர் மார்ஷல் ஆர்தர் கோணிங்கம் பயணம் செய்த ஸ்டார் டைகர் விமானம் 6 பணியாளர்கள் மற்றும் 25 பயணிகளுடன் பெர்முடா தீவில் இருந்து கிளம்பிய நேரத்தில் இருந்து இதுவரை தரை இறங்கவில்லை. எங்கெங்கோ தேடியவர்கள் கடைசியில் பெர்முடா முக்கோணத்தைக் கைகாட்டிவிட்டு அப்படியே ஒதுங்கிவிட்டார்கள்.  1949-ம் ஆண்டு ஜனவரி 17 அன்று பெர்முடாவிலிருந்து ஜமைக்காவுக்கு கிளம்பிய ஸ்டார் ஏரியல் விமானம் கட்டுப்பாட்டு அறையின் அனைத்துத் தொடர்புகளையும் இழந்தது.  விமானத்தில் இருந்து கிடைக்கப்பெற்ற கடைசிச் செய்திகளும் சாதாரணமானவை. தேடுதலைக் கைவிட்ட பிறகு  1998ல் ஆண்டிஸின் மலைகளில் காணாமல் போனதற்கான சாத்தியக்கூறு கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால், அது ஸ்டார் ஏரியல் விமானம்தான் என்பதற்கு ஆதாரங்கள் இல்லாததால் இப்போது வரை கிடப்பிலேயே கிடக்கிறது விமானமும் அதுசார்ந்த கோப்புகளும்.  1962-ம் ஆண்டு அமெரிக்க  ராணுவ விமானம் ப்ளையிங் டைகர் லைன் விமானம் 739 மாயமானது. இந்த விமானமானது மேற்கு பசிபிக் பெருங்கடலின் வழியே செல்லும்போது திடீரென்று மாயமாகிவிட்டது. விமானத்தில் 93 அமெரிக்க போர் வீரர்கள் மற்றும் வியட்நாமைச் சேர்ந்த மூன்று பேர் என மொத்தம் 107 பேர் பயணித்தனர். விமானம்குறித்த தகவலும் பயணிகள்குறித்த தகவலும் இப்போது வரை தேடப்படும் பட்டியலில்தான் இருக்கிறது. விமானம் வெடித்திருக்குமோ என்று பார்த்தால், அதற்கான ஆதாரம் ஏதும் கிடைக்கவில்லை. விமானத்தைத் தேடுவதை கைவிட்டு மாமாங்கம் ஆகிறது.    ஏர் பிரான்ஸ் விமானம் 447 விமானம் கடந்த 2009-ம்  ஆண்டு 228 பேருடன் பிரேசில் வான்வெளியில் இருந்து, செனகல் வான் எல்லைக்குள் நுழையும்போது, கட்டுப்பாட்டு அறையுடன் கொண்டிருந்த அனைத்துத் தொடர்புகளும் துண்டிக்கப்பட்டது. இன்று வரை என்ன நடந்தது ஏன் நடந்தது என்று யாருக்கும் தெரியவில்லை. தீவிர  விசாரணைக்குப்  பிறகு, அந்த விமானம்  அட்லாண்டிக் பெருங்கடலைக் கடக்கும்போது வெடித்திருக்கும் என்று யூகித்து அப்படியே விட்டுவிட்டார்கள். 228 பயணிகளும் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது. 2 ஆண்டுகள் கழித்து அதன் கறுப்புப் பெட்டி கண்டெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து அது விபத்தில் வெடித்துச் சிதறியது உறுதியானது.  மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீனத் தலைநகர் பெய்ஜிங்குக்கு 2014-ம் ஆண்டு மார்ச் 8-ம் தேதி அன்று 00:41 மணியளவில் 239 பயணிகளுடன் போயிங் 777- 200 MH 370 விமானம் புறப்பட்டது. தகவல்களின்படி அதிகாலை 01:22 அல்லது 2.40 மணியளவில் தாய்லாந்து வளைகுடாவைக் கடக்கும்போது இவ்விமானம் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்தது. பிரேக்கிங் செய்திகள் அலற மலேசிய சீன நாடுகளைப் பதற்றத்தில் ஆழ்த்தியது. விமானம் கடத்தப்பட்டிருக்கலாம் என்கிற நோக்கில் இரு நாடுகளும் புலன் விசாரணையில் இறங்கின. உலகம் முழுவதிலும் பிரார்த்தனைகள் தொடர்ந்துகொண்டே இருந்தது. விமானம் பற்றிய  எந்தத் தகவலும் கிடைக்காத இரண்டொரு நாளில் உலக நாடுகளின் உதவியை நாடியது மலேசிய அரசு. உலகம் முழுவதிலும் இருந்து 25 நாடுகளின் விமானங்கள் மற்றும் கப்பல்கள் உதவியுடன் தேடியும் ஒரு துப்பு கூடக் கிடைக்காமல் போனது. கடல் மார்க்கம் ஆகாய மார்க்கம் என இந்தியப் பெருங்கடலில் ஆரம்பித்து ஆஸ்திரேலிய கடல் பகுதி வரை  சல்லடைப்  போட்டு தேடியும் எந்தத் தகவலும் கிடைக்காமல் போன பரிதாப விமானம் போயிங் 777. இப்போது வரை விமானத்தின் பாகங்கள் அங்கே கிடைத்தது இங்கே கிடைத்தது என உறுதிப்படுத்த முடியாத  தகவல்கள் வந்துகொண்டே இருக்கிறது. விமானம் என்ன ஆனது என்றுதான் இப்போது வரை மர்மமாகவே இருக்கிறது 2016 ஜூன் 21-ம் தேதி 29 பேருடன்  தாம்பரத்தில் இருந்து அந்தமான் கிளம்பிய ராணுவ விமானம் நடுவானில் காணாமல் போனது. தகவல் கிடைத்த நொடியில் இருந்து ஆறு கப்பல்கள் பதினைந்து விமானங்கள் எனப் பல இடங்களில் தேடியும் விமானத்தின் சிறிய பகுதிகூட இப்போது வரை கண்டுபிடிக்க முடியவில்லை. பயணம் செய்த 29 பேரும்  இறந்துவிட்டதாக அரசு அறிவித்திருக்கிறது.  பெரும்பாலான விமானங்கள் இயந்திரக் கோளாறுகளால் விபத்துக்குள்ளாகின்றன. சில விபத்துகள் வானிலை மாறுவதால் நடந்திருக்கின்றன. சில விமானங்கள் பறவை மோதுவதால் நிகழ்கின்றன. ஆனால் காணாமல் போன விமானங்கள் எப்படி நடந்தன என்கிற எந்த எந்தக் குறிப்பையும் கொடுக்காமல் காணாமல் போயிருக்கின்றன.  விமானம் விபத்தில் சிக்கினால் அந்த விமான விபத்துக்குக் காரணம் என்ன என்பதைக் கறுப்புப் பெட்டியை வைத்துக் கண்டறிந்துவிடலாம். விமானி உரையாடலில் தொடங்கி விமானத்தின் அனைத்துத் தகவல்களையும் சேமித்து வைக்கும் கறுப்புப் பெட்டியை விமானத்தின் வால் பகுதியில் பொருத்தி இருப்பார்கள். எளிதில் பாதிக்கப்படாத வண்ணம் கறுப்புப் பெட்டி வடிவமைக்கப்பட்டிருக்கும். விமானம் செயல் இழந்தாலும் முப்பது நாள்களுக்கு சிக்கனல்களை வழங்கிக்கொண்டே இருக்கும். 2012 டிகிரி வெப்பத்தையும், 1000 டன் எடையையும் தாங்கும் விதமாகக் கறுப்பு பெட்டிகள் இருக்கும். எப்படி இருந்தாலும் மனிதனால் தயாரிக்கப்பட்ட சில தொழில்நுட்பங்கள் எல்லாக் காலங்களிலும் உதவியாய் இருக்கும் எனச் சொல்லிவிட முடியாது. மேற்கூறிய விமான விபத்துகளில் மலேசிய விமானத்தின் கறுப்பு பெட்டியைக் கூட இப்போதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை என்பதுதான் தொழில் நுட்ப வளர்ச்சியின் முரண். இந்த எல்லா விமானங்களும் மாயமானதற்கான காரணங்கள் இருக்கின்றன. ஆனால், காரணம் தெரிந்தவர் யாரும் உயிரோடு இல்லை. 
https://www.vikatan.com/government-and-politics/12-tamils-arrested-in-malaysia-over-alleged-links-to-ltte
விடுதலைப் புலிகள் மீளுருவாக்கம்... மலேசியாவில் 12 தமிழர்கள் கைது... தொடரும் உறவினர்கள் போராட்டம்!
மலேசியாவில், விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கு புத்துயிரூட்டும் வகையில் ஓர் இயக்கம் செயல்பட்டுவருகிறது. நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் இந்த நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு இந்த இயக்கம் கிளைகளைக் கொண்டுள்ளது.
மலேசியாவில், தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை மீளுருவாக்கம் செய்ய முயன்றதாக, சோஸ்மா சட்டத்தின் கீழ் 12 தமிழர்கள் அதிரடியாகக் கைதுசெய்யப்பட்டுள்ளனர். அவர்களில், காடேக் சட்டமன்ற உறுப்பினரும் மலாக்கா ஆட்சிக்குழு உறுப்பினருமான சாமிநாதன், நெகிரி சட்டமன்ற உறுப்பினர் குணசேகரன் ஆகிய இருவரும் அடக்கம். இந்தக் கைதுகுறித்து, மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் செய்தியாளர்களிடம் பேசிய, மலேசிய காவல்துறை பயங்கரவாத தடுப்புப் பிரிவின் துணை ஆணையர் டத்தோ அயோப் கான்,''விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு புத்துயிரூட்டும் நடவடிக்கைகளுக்கு உதவும் வகையில், மலேசியாவில் ஏராளமான நிதிப் பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. விடுதலைப்புலிகள் தொடர்பான திட்டங்களைச் செயல்படுத்துவதற்கும், அந்த இயக்கத்திற்கு ஆள் சேர்ப்பதற்கும் மலேசியாவில் உள்ள ஆதரவாளர்கள் இந்த நிதியைப் பயன்படுத்தியிருக்கிறார்கள். கைதான நபர்களின் வங்கிக் கணக்குகளை ஆய்வுசெய்தபோது, பெருந்தொகையை உள்ளடக்கிய பரிமாற்றங்கள் நடந்திருப்பதைக் கண்டுபிடித்துள்ளோம். மேலும், அவர்களுடைய கைப்பேசிகளில் இருந்து பல்வேறு தகவல்கள் திரட்டப்பட்டுள்ளன. சந்தேக நபர்களுடன் சம்பந்தப்பட்ட இடங்களில் நடத்தப்பட்ட சோதனைகளின்போது, எல்.டி.டி.ஈ தலைவர்களின் படங்கள், இயக்கக் கொடிகள், சுவரொட்டிகள் ஆகியவை பறிமுதல் ஆகியுள்ளன. மலேசியாவில் விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கு புத்துயிரூட்டும் வகையில் ஓர் இயக்கம் செயல்பட்டுவருகிறது. நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் இந்த நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு இந்த இயக்கம் கிளைகளைக் கொண்டுள்ளது. எனவே, அதைத் தடுத்துநிறுத்தும் வகையில் போலீஸார் கைது நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர். இந்த நடவடிக்கைக்கும், குறிப்பிட்ட ஓர் அரசியல் கட்சியைக் குறிவைத்து காவல்துறை செயல்படுவதாகக் கூறப்படுவதற்கும் எந்தவிதத் தொடர்பும் இல்லை. இது, முற்றிலும் பயங்கரவாதம் சம்பந்தப்பட்ட விஷயம்'' என விளக்கம் அளித்துள்ளார், டத்தோ அயோப் கான். ஆனால், இந்தக் கைது விவகாரம் குறித்துப் பேசிய மலேசிய பிரதமர் மஹதீர் மொஹமட், ''தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பை மீள் உருவாக்க முயற்சித்ததாக அவர்கள் கைது செய்யப்பட்டதற்கு மலேசியாவில் தொடர்ச்சியாக ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன. கைது செய்யப்பட்டவர்களின் தொலைபேசி, அவர்கள் தங்கியிருந்த இடம் ஆகியவற்றை, மலேசிய பயங்கரவாத தடுப்புப் பிரிவினர் சோதனைக்கு உட்படுத்தியுள்ளனர். அப்போது, தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்துடன் தொடர்புடைய தகவல்களுடன் சுவரொட்டிகள், அச்சுப்படங்கள் உள்ளிட்ட பொருள்கள் மீட்கப்பட்டதாக அவர்களைக் கைதுசெய்த போலீஸார் விளக்கமளித்துள்ளனர். அவை ஏற்றுக்கொள்ளக்கூடிய காரணங்களே” என விளக்கம் அளித்துள்ளார். ஆனால், 'பிரதமரின் இந்த விளக்கம் ஏற்றுக்கொள்ளக்கூடிய வகையில் இல்லை. இது, அரசியல் உள்நோக்கத்தோடு எடுக்கப்பட்டுள்ள முடிவு' எனப் பல எதிர்ப்புக் குரல்கள் கிளம்பியுள்ளன. இந்த நிலையில், கைதுசெய்யப்பட்டுள்ள காடேக் சட்டமன்ற உறுப்பினர் ஜி.சாமிநாதன், வர்த்தகர் எஸ்.சந்துரு, மலாக்கா ஊராட்சி மன்றக் கவுன்சிலர் பி.சுரேஷ்குமார் ஆகிய மூவரின் மனைவிமார்களும் புக்கிட் அமான் காவல் தலைமையகத்திற்கு அருகில், கடந்த திங்கட்கிழமை முதல் பதாகைகளை ஏந்திப் போராடிவருகின்றனர். நேற்றிலிருந்து உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கியிருக்கின்றனர்.இந்த உண்ணாவிரதம் குறித்து, காடேக் சட்டமன்ற உறுப்பினர் ஜி.சாமிநாதனின் மனைவி உமாதேவி பேசுகையில்,''என் கணவர் சாமிநாதன், இலங்கையில் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்காக அனுதாபக் கூட்டம் ஒன்றை ஏற்பாடுசெய்தார். தவிர, அவருக்கும் விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கும் எந்தவிதத் தொடர்புகளும் இல்லை. அடக்குமுறையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் ஆதரவு தெரிவிப்பது குற்றமா? அப்பா எங்கே என எங்களின் குழந்தைகள் தொடர்ந்து கேட்டுவருகிறார்கள். அவர்களிடம் என்ன பொய் சொல்வது என எங்களுக்குத் தெரியவில்லை.எங்களின் கணவர்கள் விடுதலை செய்யப்படும் வரை தொடர் உண்ணாவிரதம் இருப்போம். அதற்காக அமைச்சர்கள் யாரையும் நாங்கள் சந்திக்கத் தயாராக இல்லை. உதவிகளுக்காக சிலரைச் சந்திக்கச் சென்றோம். அவர்கள், எங்களைப் பார்க்க மறுத்துவிட்டார்கள். எங்களின் வீடு தேடி வந்து பார்த்தவர்களும், எங்களால் எந்த உதவியையும் செய்யமுடியாது என அவர்களின் வருத்தத்தையும், ஆதங்கத்தையும் மட்டும்தான் தெரிவித்துவிட்டுச் சென்றார்கள். தமிழ் அமைச்சர்கள் யாரும் எங்களுக்காகக் குரல் கொடுக்கவில்லை. இன்று, எங்களுக்கு நிகழ்ந்த கொடுமை நாளை யாருக்கு வேண்டுமானாலும் நடக்கலாம். மக்களுக்காக சேவை செய்துவரும், ஆட்சியில் இருக்கும் என் கணவருக்கே இந்த நிலை என்றால், சாதாரண மக்களின் நிலை என்னவென்று யோசிக்க முடியவில்லை. இன்று நடுரோட்டில் போராடிக்கொண்டிருக்கிறோம். எங்களின் கணவர்களை விடுதலை செய்தால் மட்டுமே, இந்த உண்ணாவிரதத்தைக் கைவிடுவோம். இந்த உண்ணாவிரதத்தில் எங்களுக்கு என்ன அசம்பாவிதம் நடந்தாலும், நாட்டின் பிரதமர் பதிலளிக்க வேண்டும்'' என்று கண்ணீர் மல்க தெரிவித்தார்.
https://www.vikatan.com/government-and-politics/muhyiddin-yassin-takes-oath-as-malaysia-prime-minister
`கூட்டணியில் மோதல்; யாருக்கும் இல்லாமல் போன பதவி!’ - மலேசியாவின் பிரதமராக முஹைதீன் யாசின் நியமனம்
மலேசியாவில் ஆளும் கூட்டணிக் கட்சியில் விரிசல் ஏற்பட்டதால் பிரதமர் பதவியை எதிர்க்கட்சியைச் சேர்ந்த முஹைதீன் யாசினுக்கு வழங்கியுள்ளார் அந்நாட்டு மன்னர்.
மலேசியாவில் கடந்த 2018-ம் ஆண்டு நடந்த பொதுத் தேர்தலில் மகாதீர் முகமது தலைமையிலான மலேசிய ஐக்கிய சுதேச கட்சியும் அன்வர் இம்ராஹிம் தலைமையிலான மக்கள் நீதிக் கட்சியும் பிற சிறிய கட்சிகளுடன் இணைந்து கூட்டணி வைத்துத் தேர்தலை எதிர்கொண்டன. அந்தத் தேர்தலில் இரு கட்சியினரும் தங்களுக்குள் ஓர் ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளனர். அதன்படி 2018-ம் ஆண்டு தேர்தலில் இவர்களின் கூட்டணி வெற்றிபெற்றால் முதலில் மகாதீர் முகமது பிரதமராகப் பதவியேற்பார், குறிப்பிட்ட காலத்துக்குப் பிறகு அந்தப் பதவி அன்வர் இம்ராஹிமுக்கு வழங்கப்படும் என்பதுதான் ஒப்பந்தம். இதையே அவர்கள் தேர்தல் வாக்குறுதியாகவும் அறிவித்தனர். அவர்களின் கணிப்புப் படியே 2018 தேர்தலில் மகாதீர் - இம்ராஹிம் கூட்டணி அமோக வெற்றி பெற்று மகாதீர் மலேசியாவின் பிரதமராக பதவியேற்றுக்கொண்டார். இதன் மூலம் உலகிலேயே மிகவும் வயதான பிரதமர் என்ற பெருமையைப் பெற்றார் மகாதீர். இவர் பதவியேற்று தற்போது இரண்டு ஆண்டுகள் கடந்த நிலையிலும் இன்னும் பிரதமர் பதவியை இம்ராஹிமுக்கு வழங்கவில்லை என்று அவரது ஆதரவாளர்கள் கடந்த வாரம் குற்றம் சாட்டினர். இதற்கு, ஏபெக் மாநாட்டுக்குப் பிறகே பதவி விலக முடியும் என மகாதீர் திட்டவட்டமாகக் கூறியிருந்தார். இதனால் இந்தக் கூட்டணிக்குள் விரிசல் ஏற்பட்டது. மகாதீர் எதிர்க்கட்சிகளுடன் கூட்டணியமைக்கப் போவதாகவும் பல்வேறு தகவல்கள் வெளியாகின. ஆனால், யாரும் எதிர்பார்க்காத வகையில் கடந்த 24-ம் தேதி தன் பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார் மகாதீர். தன் ராஜினாமா கடிதத்தை மலேசிய மன்னருக்கு அனுப்பி அவரும் அதை ஏற்றுக்கொண்டார். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த அன்வர் இப்ராஹிம், ``மகாதீர் என்னை ஏமாற்றிவிட்டார். ஆட்சிக்கு வந்து சில வருடங்களில் பொறுப்பை எனக்கு வழங்குவதாகக் கூறினார். ஆனால், எங்களுக்குக் கொடுத்த வாக்குறுதியை அவர் மீறிவிட்டார்” என்று பேசியிருந்தார். இது மலேசிய அரசியலில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. மகாதீரும், இம்ராஹிமும் தங்களின் பெரும்பான்மையை தனித்தனியாக அந்நாட்டு மன்னருக்கு நிரூபிக்க முயற்சி செய்துகொண்டிருந்தனர்.அதைப் பயன்படுத்திக்கொண்ட எதிர்க்கட்சியான மலாய் தேசிய கட்சியைச் சேர்ந்த முன்னாள் உள்துறை அமைச்சர் முஹைதீன் யாசின் ஆட்சியைக் கைப்பற்றத் தனியாக முயற்சி செய்துகொண்டிருந்தார். இந்த முயற்சியில் யாசினுக்கு அதிக ஆதரவு கிடைக்கத் தொடங்கியது. பின்னர் அதிகாரிகளுடன் மலேசிய மன்னர் சுல்தான் அப்துல்லா ஆலோசனை நடத்தி இறுதி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதன்படி முஹைதீன் யாசினிடம் அதிக பெரும்பான்மையை இருப்பதாகத் தான் நம்புவதாகவும் அதனால் அரசியலில் பெரும் அனுபவம் உள்ள அவரே மலேசியாவின் புதிய பிரதமராக இருப்பார் என்றும் கூறியுள்ளார். மலேசியாவின் புதிய பிரதமர் முஹைதீன் யாசின் இன்று பிரதமர் அலுவலகத்தின் பதவியேற்றுக்கொண்டார்.
https://www.vikatan.com/government-and-politics/12-killed-in-landslide-near-malaysias-kuala-lumpur-more-than-20-missing
மலேசியா: நிலச்சரிவில் சிக்கி 12 பேர் பலி; 20-க்கும் மேற்பட்டவர்கள் மாயம்... தொடரும் மீட்புப்பணி!
மலேசியாவில் இன்று அதிகாலை நிலச்சரிவு ஏற்பட்டதில் 12 பேர் உயிரிழந்திருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.
மலேசியாவின் தலைநகர் கோலாலம்பூரின் புறநகர்ப் பகுதியிலுள்ள சிலாங்கூர் மாநிலத்தில், அதிகாலை 3 மணியளவில் நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் சாலையோரத்தில் இருந்த பண்ணை வீடு உட்பட பல கட்டடங்கள் பாதிக்கப்பட்டிருக்கின்றன. தேசியப் பேரிடர் மேலாண்மை முகமையின் சமூக ஊடகங்களில் வெளியான செய்தியின்படி, நிலச்சரிவில் சிக்கி 90-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாகவும், 59 பேர் மீட்கப்பட்டிருப்பதாகவும், 22 பேர் தேடப்பட்டுவருவதாகவும் கூறப்படுகிறது. ஆனால், அதிகாரபூர்வ அறிவிப்பில் 12 பேர் இறந்ததாகவும், 8 பேர் தீவிர சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும், 20-க்கும் மேற்பட்டோர் காணவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இது தொடர்பாக மாவட்டக் காவல்துறைத் தலைவர் சுஃபியன் அப்துல்லா செய்தியாளர்களிடம் பேசுகையில், "விபத்து குறித்த தகவல் கிடைத்தவுடன், மீட்புக்குழுவினருடன் சம்பவ இடத்துக்கு விரைந்தோம். தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளுக்காக பல நிறுவனங்களிலிருந்து கிட்டத்தட்ட 400 பேர் ஈடுபடுத்தப்பட்டிருக்கின்றனர்" எனத் தெரிவித்திருக்கிறார்.
https://www.vikatan.com/literature/arts/125344-malaysia-scrapping-gst-from-june
மலேசியாவில் ஜி.எஸ்.டி வரிவிதிப்பு முறை ஒழிப்பு!
மலேசியாவில் ஜி.எஸ்.டி வரிவிதிப்பு முறை ரத்து செய்யப்பட்டுள்ளது.
மலேசியாவில் புதிய பிரதமராக மகாதீர் பதவியேற்றுள்ளார். தேர்தல் பரப்புரையின்போது, தான் பதவிக்கு வந்தால் ஜி.எஸ்.டி வரியை ரத்து செய்வதாக மகாதீர் வாக்குறுதி அளித்திருந்தார். ஜி.எஸ்.டி வரிக்குப் பதிலாக மீண்டும் விற்பனை மற்றும் சேவை வரியைக் கொண்டு வருவதாகவும் அவர் கூறியிருந்தார். சமீபத்தில் தேர்தலில் தோல்வியடைந்த நஜீப் ரஸாக்கின் அரசு, கடந்த 2015-ம் ஆண்டு 6 சதவிகித ஜி.எஸ்.டி வரி விதிப்பை மலேசியாவில் அறிமுகப்படுத்தியது. ஜி.எஸ்.டி வரியை அறிமுகப்படுத்தியதுமே மலேசியாவில் பொருள்களின் விலை கடுமையாக உயர்ந்தன. சராசரி வருமானம் கொண்ட மக்கள் பல்வேறு இடர்ப்பாடுகளைச் சந்தித்தனர். இதனால், ஜி.எஸ்.டி வரிவிதிப்புக்கு மலேசியா முழுவதுமே பரவலாக எதிர்ப்புக் கிளம்பியது.  இதையடுத்து, நடந்து முடிந்த தேர்தலில் ஜி.எஸ்.டி வரிவிதிப்பை அறிமுகப்படுத்திய நஜீப் ரஸாக் படுதோல்வியடைந்தார். இந்நிலையில், புதியதாகப் பதவியேற்றுள்ள மகாதீர் அரசு, ஜூன் 1-ம் தேதி முதல் ஜி.எஸ்.டி வரியை ரத்து செய்வதாக அறிவித்துள்ளது. குறுகிய காலத்தில் ஜி.எஸ்.டி வரியை ரத்து செய்துவிட்டு விற்பனை மற்றும் சேவை வரியை அறிமுகப்படுத்தவது சவால் நிறைந்தது என்று பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இந்தியாவுக்கு முன்னதாகக் கடைசியாக ஜி.எஸ்.டி வரியை அறிமுகப்படுத்திய நாடு மலேசியா. ஆனால், 3 ஆண்டுகளில் ஜி.எஸ்.டி வரி விதிப்பு அங்கு ரத்து செய்யப்பட்டுள்ளது. மலேசியாவிடமிருந்து இந்தியா பாடம் படித்துக்கொள்ள வேண்டும். இல்லையென்றால் அரசியலில் பெரும் விளைவுகள் ஏற்படலாம் என்று பொருளாதார நிபுணர்கள் வலியுறுத்தியுள்ளனர். 
https://www.vikatan.com/government-and-politics/what-is-the-reason-behind-malaysia-environment-activists-protests
"10 ஆண்டுகளில் இருண்ட உலகத்தையே மனிதகுலம் சந்திக்கும்!"- மலேசியாவில் போராட்டம்
இயற்கை வளங்களை அழிக்கும் நடவடிக்கையை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்றும் அதற்கு அனுமதிக்கக்கூடாது என்றும் இடது சாரி அமைப்புகளும் மனித உரிமை மற்றும் சுற்றுச்சூழல் சார்ந்த அமைப்புகளும் தங்களின் கண்டனத்தை அரசுக்குத் தெரிவித்து வருகின்றன.
மாறி வரும் பருவநிலை மாற்றத்தில், நாட்டின் இயற்கை வளங்களைப் பாதுகாக்கும் தீவிர நடவடிக்கைகளை எடுக்கத் தவறினால் அடுத்த 10 ஆண்டுகளில், நாம் தற்போது எதிர்கொள்ளும் வெள்ளம் மற்றும் வெப்ப அலைகள் உள்ளிட்ட பேரழிவுகள் இன்னும் மோசமான நிலையை எட்டும் என எடுத்துரைக்கும் போராட்டம் மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் நடைபெற்றது. "தற்போதைய இயற்கைச் சுழுலில் மாபெரும் மாற்றத்தால் விவசாயிகளும், கால்நடை விவசாயிகளும், மீனவர்களும் பெரிய இழப்பை சந்தித்து வருவதோடு உணவு பாதுகாப்பு குறித்த அச்சமும் எழுந்துள்ளது. அடுத்து வரும் 10 ஆண்டுகளில், அதாவது 2030-க்குள், இயற்கைக்கு ஆதரவான சரியான ஒரு நடவடிக்கையையை அரசுகள் எடுக்கத் தவறினால் இருண்ட உலகத்தையே மனிதக் குலம் சந்திக்கும். 1.5 டிகிரி செல்ஷியஸுக்கு மேல் வெப்பநிலை உயரும் அபாயத்தை மலேசியா கொண்டிருக்கிறது. இது நம் அடுத்த தலைமுறையையும் அவர்களின் எதிர்காலத்தையும் சேர்த்தே எரிக்கும். மலேசியா அதிலிருந்து பிழைக்காது!" என அந்த அமைப்புகள் எச்சரிக்கின்றன. "இயற்கையைச் சுரண்டி பிழைக்கும் பெரு நிறுவனங்களுக்கு வங்கிகள் நிதியுதவி அளித்து ஆதரவளிக்கின்றன. தென்கிழக்கு ஆசியாவில் நிலக்கரித் தொழிலுக்கு முதலீடு செய்வதையும் நிதியளிப்பதையும் நிறுத்துங்கள்" என அந்த அமைப்புகள் தங்களின் எதிர்ப்பினை வங்கிகளை நோக்கி வெளிபடுத்தியிருக்கின்றனர். மலேசியாவில் தொடர்ந்து விவசாய நிலங்களும், பூர்வக்குடி வனங்களும் சில தனியார் பெருநிறுவனகளின் ஆதிக்கத்தால் மேம்பாட்டு நிலமாகவும் செம்பனைக் காடுகளாகவும் மாறிவருகிறது. இதனால், இயற்கை சூழலிலும், சீதோஷன நிலையிலும் பெரும் மாற்றத்தை எதிர்கொண்டு வருகிறது மலேசியா.