text
stringlengths 1
20.1k
|
---|
இதில் தில்லைநகர் மற்றும் ஜி.எச். காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்ட 17 பேரை, திருச்சி குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி திருநாவுக்கரசர் முன்னிலையில் ஆஜர்படுத்தினர். அப்போது 3 பேருக்குச் சிறையில் அடைக்கும் வயதல்ல என்றும் இதனால் மீதமுள்ள 12 பேரையும் 20ம் தேதி வரை திருச்சி சிறையில் அடைக்க உத்தரவிட்டார். கூடுதலாக 5 பேர் நீதிபதியின் முன்பு ஆஜர்படுத்தினர். |
அப்போது, அந்த 5 பேரும் நீதிபதியிடம் காவல்துறை மீது குற்றச்சாட்டு கூறினர். அதில், "பேருந்துகள் கண்ணாடியை உடைத்தவர்களை அடிக்காமல் சம்பந்தப்படாத எங்களைக் கடுமையாக தாக்கினார்கள். காயமடைந்த எங்களை இதுவரை மருத்துவமனைக்குக் கூட அழைத்துச் செல்லவில்லை. நாங்கள் எங்களின் உரிமைக்காகப் போராடுகிறோம். ஆனால் போலீஸ் எங்களை ரவுடி போல் நடத்துகிறார்கள்" என்று குற்றம் சாட்டினர். அப்போது அவர்கள் அனைவரும் தங்களின் ஆடையைக் கழற்றி காயங்களை நீதிபதியிடம் காட்டினர். இந்தக் காயங்களை பார்த்து நீதிபதி அதிர்ச்சியில் உறைந்து போனார். |
பின்னர் மாணவர்களின் குற்றச்சாட்டுகளையும் நீதிபதி குறித்துக் கொண்டார். காயப்பட்ட மாணவர்களுக்கு முதலுதவி அளிக்குமாறு நீதிபதி கூறினார். |
தமிழ் கற்றுக் கொள்வதற்காக புரபஷனல் மொழி பயிற்றுவிப்பாளரும் நியமிக்கப்பட்டுள்ளாராம். |
கோரிக்கை குறித்து தமிழக அரசு உடனடியாக பதில் அளிக்க வேண்டும் |
கோப்புப் படம் மார்கண்டேய நதி |
தென்பெண்ணை ஆற்றின் நீர் பங்கீடு தொடர்பாக நடுவர் மன்றம் அமைக்கக் கோரி தமிழக அரசு வழக்குத் தொடர்ந்தது. மத்திய அரசிடம் தமிழக அரசு மனு அளிக்க உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியதை அடுத்து, மத்திய அரசிடம் தமிழக அரசு மனு அளித்துள்ளது. |
தென்பெண்ணை ஆற்றின் கிளை நதியான மார்கண்டேய நதியின் குறுக்கே 'யர்கோல்' என்ற இடத்தில் கர்நாடக அரசு அணை கட்டுகிறது. இதைத் தடுக்கக் கோரி தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்திருந்தது, |
அந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், நீர் பங்கீடு தொடர்பான பிரச்சினையைத் தீர்க்க மத்திய அரசுக்கு உள்ள தனி அதிகாரத்தைப் பயன்படுத்த தமிழக அரசு தவறிவிட்டது. அதை முதலில் பயன்படுத்துங்கள் என அறிவுறுத்தியது. |
இந்நிலையில், உரிய நிவாரணம் பெற மத்திய அரசை அணுகுமாறு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியதையடுத்து, தமிழக அரசுத் தரப்பில் தென்பெண்ணை நதிநீர் பங்கீடு தொடர்பாக நடுவர் மன்றம் அமைக்க வலியுறுத்தி தயாரிக்கப்பட்ட கோரிக்கை மனுவை சீலிடப்பட்ட கவரில் மத்திய நீர்வளத்துறை அமைச்சகத்திடம் தமிழக அரசு கொடுத்துள்ளது. |
கிரேக்க நாடகாசிரியர் ஹோமர் அவர்கள் எழுதிய ஒடிசி பற்றிய சுருக்க வரைவு. |
02 ஏப்ரல் 2017 |
மிக நீண்ட பயணத்தின் பல்வேறு பரிணாமங்கள் என்பதே ஒடிசி என்ற வார்த்தையின் பொருள். காலத்தால் அழியா கிரேக்க காவியமான ஹோமரின் ஒடிசி, காப்பிய நாயகனான யூலிஸிஸ் என்ற மாபெரும் கிரேக்க வீரனின் ஒரு நெடுந்தூர பயணத்தை விவரிக்கும் விதமாக அமைந்துள்ளது. கி. மு எட்டாம் நூற்றாண்டில் எழுதப்பெற்ற ஒடிசி ஹோமரின் முந்தய காப்பியமான இலியட் என்ற புத்தகத்தின் தொடராக அமைகிறது. இலியட் காப்பியத்தில் கிரேக்கர்களும், டிராய் மக்களுக்கும் நடந்த ட்ரோஜன் போர் மற்றும் அதன் முடிவு பற்றி விவரிப்பதாக உள்ளது. எனினும், அதன் தொடர்ச்சிக்காப்பியமான ஒடிஸியில் கதாநாயகன் யூலிஸிஸ் ( இன்னொரு பெயர் ஒடிஸிஸ்) மேற்கொள்ளும் தீரம் நிறைந்த பயணங்களை எடுத்துரைப்பதாக உள்ளது. ட்ரோஜன் போரில் மிகுந்த துணிவுடன் பங்கு பெற்று தன் கிரேக்க நாட்டுக்கு மாபெரும் வெற்றிக்கனியை ஈட்டித்தரும் யூலிஸிஸ், தன் தாயகமான இதாகாவுக்கு செல்லும் வழியில் பத்து வருடங்களாக மேற்கொள்ளும் பயண சாகசங்கள் நிறைந்த காப்பியம் என்ற வகையில் ஒடிசி புதுமைக்காப்பியமாக படைக்கப்பட்டு உள்ளது. |
தன் சகாக்களுடன் தாயகம் நோக்கி புறப்படும் யூலிஸிஸ் பல்வேறு விதமான விசித்திர அனுபவங்கள் நிறைந்த நெடும்பயணம் மேற்கொள்ளுகிறான். டிராய் நகரத்தில் இருந்து பன்னிரண்டு கப்பல்களில் தன் குழுவினருடன் புறப்படும் யூலிஸிஸ் சிறு தூரம் அலைக்கடலில் கடந்த பின் ஒரு சிறிய நிலப்பரப்பை காண்கிறான். சிகானீஸ் எனப்படும் அந்நிலப்பரப்புவாசிகள் இந்த குழுவினரை பார்த்து பக்கத்தில் உள்ள மலைகளை நோக்கி ஓடி தப்பிவிட, யூலிஸிஸ் தன் குழுவினருடன் அந்த நிலப்பரப்பில் இறங்கி அங்குள்ள பொருட்களை சூறையாடி தன் கப்பல்களை நிரப்புவதுடன், நல்ல உணவு மற்றும் வைன் முதலியவற்றை ருசி பார்த்து அனுபவிக்கின்றான், |
நீராக வழிந்து ஓடும் வைன் ருசியில் மதி மயங்கி அந்த நிலப்பரப்பில் போதையில் உறங்கும் அவர்களை, நள்ளிரவில் எதிர்பாரா விதமாக சிகானீஸ் தங்களின் கொடூரமான நண்பர்களுடன் வந்து கொலைத் தாக்குதல் நடத்தி துரத்தி அடிக்கிறார்கள். நிலைகுலையும் யூலிஸிஸ் மற்றும் அவனது சகாக்கள் கப்பல்களை நோக்கி பின்வாங்கி தப்பிக்க முனைகிறார்கள். எனினும், அவர்கள் தரப்பில் அதிக சேதம் விளைகிறது. மிகுந்த தீரம் கொண்ட பல கிரேக்க வீரர்கள் மரணிக்கிறார்கள். தப்பிக்கும் யூலிஸிஸ் தன் சகாவான யூரிலோகாஸ் மீது மிகுந்த சினம் கொண்டு யுத்தம் செய்கிறான். அவர்கள் இருவரும் சக வீரர்களால் தடுக்கப்படுவதால் மீண்டும் அமைதி நிலவுகிறது. |
தெற்கு நோக்கி வட்டமிடும் கப்பல்கள், சற்றும் எதிர்பாராவிதமாய் ஏற்படும் சூறாவளிக்காற்றின் சுழற்சியால் இழுத்து செல்லப்பட்டு, லோட்டஸ் ஈட்டர்ஸ் (தாமரை உண்ணிகள்) என்னும் தீவில் கரை சேர்கிறார்கள். தீவை சுற்றிப்பார்க்கும் யூலிஸிஸ் தன் சகாக்கள் அங்குள்ள மக்களிடம் அங்கு விளையும் தாமரை என்னும் உணவை உண்பதை காண்கிறான். அந்த தாமரை மலர்கள் போதை நிறைந்த வஸ்துக்கள் உள்ளதாக இருப்பதால், அதை உண்ணும் வீரர்கள் அதன் வசிய சக்தியில் மயங்கி தங்கள் சுற்றம் வீடு மனை மற்றும் மக்கள் அனைத்தையும் மறந்து அந்த தீவின் போதை நிறைந்த வஸ்துக்களிலேயே வாழ விழைகிறார்கள். நிலைமையின் தீவிரம் அறியும் யூலிஸிஸ் தன் மற்ற நண்பர்களுடன் தாமரை உணவில் மதி மயங்கி உள்ள வீரர்களை குண்டுக்கட்டாக தூக்கி கப்பலுக்கு எடுத்து வருகிறான். |
அதன் பின் சில நாட்கள் பயணம் செய்யும் நிலையில், அவர்கள் ஒரு விசித்திரமான ஓர் இடம் காண்கிறார்கள். அந்த இடத்தில் மிக பிரமாண்டமான ஒரு குகையின் முகத்துவாரத்தையும் பார்க்கிறார்கள். அதன் உள்ளே செல்லும் அவர்கள் அங்கே காணப்படும் ஆடுகளை வெட்டித் தம் பசியாறுகிறார்கள். துரதிஷ்டவசமாக, அந்த ஆடுகள் பாலிபீமஸ் என்ற கொடூர அரக்கனுக்குச் சொந்தமானவை என்பது அவர்களுக்கு தெரியாமல் போகிறது. கடும் கோபம் கொள்ளும் அரக்கன் யூலிசிஸின் இரண்டு சகாக்களின் தலையை குகை சுவற்றில் மோதி இறக்க செய்கிறான். மேலும் மற்ற அனைவரையும் அந்த குகையில் அடைத்து வைக்கிறான். யூலிஸிஸ் தன் சமயோசித புத்தியினால் கடைசியில் அந்த அரக்கனை கொண்டு தன் சகாக்களை அங்கிருந்து தப்ப வைத்து மீண்டும் தங்கள் கப்பலை அடைகிறான். அடுத்து அவர்கள் கப்பல் சென்று சேரும் இடம் காற்றின் கடவுளான ஏஓலிஸ் வசிப்பிடம். ஏஓலிஸ் தன் பரிசாக ஒரு பை நிறைய காற்றை அளித்து அதனை சாமர்த்தியமாக பிரயோகித்து யூலிசிஸின் சொந்த பூமியான இத்தாக்கா செல்ல வரம் அளிக்கிறார். ஆனால், கப்பலில் யூலிஸிஸ் உறங்கும் சமயம், அவனது சக வீரர்கள் ஆர்வக்கோளாறில் அந்த பையை திறந்து விட, கடும் புயல் காற்று ஏற்பட்டு மீண்டும் யூலிஸிஸ் ஏஓலிஸ் வசம் வந்து சேர நேர்கிறது. சினம் கொண்ட ஏஓலிஸ் மீண்டும் யூலிசிஸ்க்கு உதவ மறுக்கிறார். மனம் நொந்த யூலிஸிஸ் தன் விதியை சபித்த படி கடலில் மீண்டும் பயணம் மேற்கொள்ளுகிறான், |
நரமாமிசம் உண்ணும் அரக்கர்கள், மாய வலை விரிக்கும் மோகினி என யூலிஸிஸ் சந்திக்கும் விசித்திரங்களின் பட்டியல் நீளுகிறது. இறந்து பாதாள உலகம் வசிக்கும் தன் தாயையும் அவன் சந்திக்க நேரும் விந்தையும் நிகழ்கிறது. பாடல்கள் மூலம் வசியம் செய்யும் மாயப்பெண், ஆறு தலையுடன் காணப்படும் நாகம் என கடக்கும் யூலிஸிஸ், ஒரு கட்டத்தில் தன் கப்பல் முழுதும் பழுதடைந்துவிட, காலிப்சோ என்ற கடல் கன்னியுடன்ஏழு ஆண்டுகள் குடித்தனம் நடத்துகிறான். |
ஒரு வழியாக புது கப்பலை உருவாக்கி பின் தாயகம் திரும்புகிறான். முதன் முதலாக தன் குல வாரிசான தன் மகன் டெலிமாக்கஸ் என்னும் பதினைந்து வயது சிறுவனையும், மனைவி பெனிலோபியையும் பார்த்து பூரிப்படைகிறான். |
டிராய் வெற்றியை தொடர்ந்து மாவீரனாக தாய்நாடு திரும்பும் யூலிசிஸின் போக்கை அவன் பயணம் மாற்றுகிறது.பயணங்கள் யூலிசிஸ்க்கு கற்று கொடுத்த பாடங்கள் ஏராளம். தன் பாதையில் சந்தித்த ஆபத்துகள் யூலிஸிஸை சிறந்த சாகசக்காரனாக மாற்றியது என்பதில் ஐயம் இல்லை. யூலிசிஸின் பயணங்கள் மூலம் அவன் மிக சிறந்த மதி நுட்பத்தை அடைவதுடன், மற்ற மனிதர்களை எடை போட்டு தரம் பிரிப்பதிலும் தேர்ந்தவனாகிறான். தன் சகாக்களுக்கு நேரும் பல ஆபத்துக்களை தன் வீரத்தால், விவேகத்தால் தவிர்த்து தன் பயணத்தை தொடர முற்படுகிறான். பயணம் கொடுத்த அனுபவத்தின் காரணமாக நாட்டில் இருக்க விரும்பாமல், யூலிஸிஸ் தன் மகன் டெலிமாக்கஸ்க்கு முடி சூட்டிய பின் தன் நாடு துறந்து, இலக்கற்ற குறிக்கோளுடன் கடலின் மீது மேற்கு நோக்கி மீண்டும் ஒரு நெடிய புறப்பாடு மேற்கொள்ளுகிறான். |
அவனுக்கு மூன்று பெண்களும் முக்கியமானவர்கள். ஒரு பெண் அருகில் வாழ்வது அவஸ்தையானதுதான். அதை சரி செய்ய அவனால் இனி முடியாது. அவன் இதை தீர்மானிக்கவில்லை. அந்த மூன்று பெண்களும் தான் அவனை தீர்மானித்தார்கள். ஆதாமின் எதிர்காலத்தை ஏவாள் தீர்மானித்தது போல. |
இங்கே ஒரு பெண்ணை பற்றி தான் சொல்லப் போகிறேன். ஏனென்றால் அவள் நிலவு. அவன் இருட்டாய் இருந்த போது சுடாத வெளிச்சத்தை கொடுத்தவள். மற்ற பெண்களில் ஒருத்தி பூமி போன்றவள். மற்றவள் சூரியன் போன்றவள். |
வடகொரியாவால் மறக்க முடியாத நான்கு அமெரிக்க வீரர்கள் |
சைமன் ஃபவுலர் பிபிசி செய்தியாளர் |
29 டிசம்பர் 2017 |
வட கொரியாவில் திரைப்படங்களில் அமெரிக்க நட்சத்திரங்கள் சிலர் பிரபலமானவர்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா? |
அமெரிக்க திரைப்பட நடிகர்களையோ, ஹாலிவுட் நட்சத்திரங்களைப் பற்றியோ பேசவில்லை. திரைத்துறைக்கு தொடர்பில்லாத இந்த அமெரிக்கர்கள், வடகொரிய திரைப்படங்களில் மட்டுமே நடித்து திரைப்பட நட்சத்திரங்களாக மிகவும் பிரபலமடைந்தார்கள். |
தற்போது அமெரிக்காவிற்கும் வட கொரியாவிற்கும் இடையில் பதற்றங்கள் அதிகரித்திருக்கிறது. ஒன்று மற்றொன்றைவிட அதிகாரம் மிக்கது என்று காட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ள நிலையில் நூற்றுக்கு நூறு சதவிகிதம் உண்மையான இந்த தகவல்கள் உங்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தலாம். |
வட கொரியா மற்றும் தென்கொரியாவின் எல்லைப்பகுதி 38வது அட்சரேகை என்று அழைக்கப்படுகிறது. இந்த எல்லையானது 1950களில் கொரியாவில் நடைபெற்ற உள்நாட்டு சண்டையின்போது, நாடு இரண்டாக பிரிந்தபோது நிர்ணயிக்கப்பட்டது. |
கொரியா முழுவதையும் தங்கள் வசப்படுத்தும் முயற்சியில், அமெரிக்காவின் ஆதரவு பெற்ற தென் கொரியாவும், ரஷ்யா மற்றும் சீனாவின் ஆதரவு பெற்ற வட கொரியாவும் கடுமையாக சண்டையிட்டன. யுத்தத்தின் முடிவில் கொரிய தீபகற்பம் துண்டாடப்பட்டு வட கொரியா தென் கொரியா என இரண்டாக பிரிந்தன. |
இந்த எல்லையை கடப்பது உயிருக்கு உலை வைக்கக்கூடியது. எல்லையை கடக்க முயற்சிப்பவர்களை எதிரிப்படைகள் பார்த்து சுடுவதற்கு முன்னரே, கண்ணுக்கு தெரியாத கண்ணி வெடிக்கு பலியாவதற்கான சாத்தியங்களே அதிகம். |
உலகிலேயே மிகவும் ஆபத்தான பகுதி என்று அறியப்படும் பகுதி 38வது அட்சரேகை எல்லைப் பகுதி என்றால் அது மிகையாகாது. ஆனால் உலகில் துணிச்சல் மிக்கவர்கள் மற்றும் அபாயத்தை எதிர்கொள்பவர்களுக்கும் பஞ்சமில்லை. |
அப்படிப்பட்டவர்களில் சில அமெரிக்கர்களின் பெயர்களும் வருகின்றன. இவர்கள் எல்லையை கடந்து வட கொரியாவிற்குள் நுழைந்துவிட்டார்கள். இந்த எல்லைப்பகுதியில் தென் கொரியாவிற்கு உதவுவதற்காக அறுபதுகளில் அமெரிக்கத் துருப்புக்கள் இங்கு வந்தன. |
அமெரிக்காவின் வட கரோலினாவைச் சேர்ந்த சார்லஸ் ராபர்ட் ஜென்கின்ஸ் அமெரிக்க ராணுவத்தில் பணிபுரிந்தவர். இவர் 1965 ஜனவரி மாதத்தில் தென் கொரியாவில் இருந்த அமெரிக்க துருப்புக்களை விட்டுவிட்டு வடகொரியாவிற்குள் ஓடிவிட்டார். |
அவர் அந்த மரண ஆபத்து கொண்ட சாகசத்தை செய்தபோது அவரிடம் இருந்தது ஒரேயொரு துப்பாக்கி மட்டுமே. ரோந்துப் படையில் இருந்த அவர் வட கொரியா எல்லையை நோக்கி நகர்ந்தார். |
சரி, ஜென்கின்ஸின் இந்த முடிவுக்கு காரணம் என்ன? வியட்னாமிற்கு அமெரிக்க படைகள் அனுப்பப்படும்போது, அதில் தானும் செல்ல நேரிடுமோ என்று அஞ்சிய அவர், அதிலிருந்து தப்பிக்க வட கொரியாவிற்குள் நுழைந்துவிட்டார். அவரது அந்த முடிவு வாழ்க்கையையே புரட்டிப்போட்டது. |
வடகொரிய எல்லைக்குள் சென்ற ஜெக்கின்ஸ் கைது செய்யப்பட்டார். பிறகு அடுத்த 39 ஆண்டுகள் போர்கைதியாகவே இருந்தார். 1962இல் இருந்து இப்படி மூன்று அமெரிக்க சிப்பாய்கள் வட கொரியாவிற்குள் சென்றுவிட்டார்கள். இவர்கள் நால்வரும் ஒன்றாகவே தங்க வைக்கப்பட்டார்கள். |
தீவிரமான கண்காணிப்பில் ஒரே அறையில் வைக்கப்பட்டிருந்த நால்வரும் அங்கு உயிருக்கு அச்சுறுத்தலான நிலைமையிலேயே வாழ்ந்தார்கள் என்றாலும், அவர்களது வாழ்க்கையில் சுவாரஸ்யமான திருப்பங்களும் நிகழ்ந்தன. |
இவர்கள் நால்வரும் சிறையில் இருந்து தப்பிக்கும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டார்கள். அரசு பொருட்களை திருடிவிடுவார்கள் அல்லது காட்டுக்குள் ஓடிவிடுவார்கள். அவர்கள் செய்தது விவேகமற்ற குறும்புச் செயல்களாக இருந்தாலும் அது அவர்களின் உயிரை எடுக்கக்கூடிய தன்மை கொண்டவை. |
1962இல் வடகொரியாவில் தஞ்சம் அடைந்த அமெரிக்க சிப்பாய் ஜேம்ஸ் டெஸ்நோக் முதல் திரைப்படத்தில் வில்லனாக நடித்தார். திரைப்பட இயக்குநர்களை மற்றொரு நாட்டிற்கு அனுப்பிய இல், திரைப்படம் தயாரிக்கும் கலையை கற்றுக்கொள்ளச் செய்தார். |
1972 ஆம் ஆண்டில் புகழ்பெற்ற வட கொரிய திரைப்படமான 'தி ஃப்ளவர் கேர்ள்' வெளியிடப்பட்டது. நிலச் சுவான்தாரர்களுக்கு எதிரான ஒரு வட கொரிய பெண்ணின் போராட்டத்தை பற்றிய கதையைக் கொண்ட திரைப்படம் அது. |
அமெரிக்க ஆயுதம் தயாரிப்பாளர்களுக்கு பயனளிக்கும் வகையில் வட கொரியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான போர் தொடரவேண்டும் என்பதே அந்த கதாபாத்திரத்தின் குறிக்கோளாக காட்டப்பட்டது. |
இந்த தொடரில், அமெரிக்க ராணுவ தளபதி ஜேம்ஸ் டெஸ்நோக், போர் கைதிகள் முகாமின் தலைவர் ஆர்தர் என்ற அடக்குமுறையாளர் கதாபாத்திரத்தில் நடிக்க வைக்கப்பட்டார். |
மற்றொரு அமெரிக்க சிப்பாய் ரலி எப்ஷியரும் நடித்தார். பைரிஷ் என்ற மற்றொரு சிப்பாய் வடக்கு அயர்லாந்தின் ராணுவ வீரர் லூயிசாக நடித்தார். |
நோட்டுகளில் இடம்பெற்ற திரைப்பட நடிகைகளின் புகைப்படங்கள் |
கைதிகளிடம் ஆட்டோகிராஃப் வாங்கிய மக்கள் |
பைரிஷின் கதாபாத்திரம் வட கொரிய மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றது. ஏனெனில் அவருடைய கதாபாத்திரத்திற்கு அமெரிக்கா மற்றும் பிரிட்டன் குடிமக்களை பிடிக்காது. வடகொரிய தலைநகர் பியோங்யாங்கில் அவருக்கு உற்சாக வரவேற்பு வழங்கப்படும். அவரை மக்கள் கம்யூனிஸ்ட் கதாநாயகராகவே பார்த்தார்கள். |
தப்பியோடிய இந்த நான்கு சிப்பாய்களும் பெரிய அளவில் கல்வி கற்றதில்லை. திரைப்படங்களில் நடிக்கவேண்டும் என்ற ஆசையோ லட்சியமோ கொண்டவர்களும் இல்லை. ஆனால் இவர்கள் திரைப்படங்களில் நடித்து புகழ் பெற்றார்கள். |
இவர்கள் போர் கைதிகள் என்பதும் வட கொரிய மக்களுக்கு தெரியும். இருந்தாலும் பொது இடங்களுக்கு இவர்கள் வந்தால், ஆட்டோகிராஃப் வாங்க மக்கள் ஆசைப்படுவார்கள் என்று ஜென்கின்ஸ் தனது சுயசரிதையில் குறிப்பிடுகிறார். |
39 ஆண்டுகள் வடகொரியாவில் போர்கைதியாக இருந்த ஜென்கின்ஸ் 2000வது ஆண்டில் 'ப்யூப்லோ' என்ற திரைப்படத்தில் கடைசியாக நடித்தார். இந்த திரைப்படம் 1968ஆம் ஆண்டு நடைபெற்ற ஒரு உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டது. |
ப்யூப்லோ என்ற அமெரிக்க கப்பலைத் தாக்கிய வட கொரியா, அதனை தனது கட்டுப்பாட்டில் எடுத்துக் கொண்டது. பிறகு இந்த கப்பல் அருங்காட்சியகமாக மாற்றப்பட்டது. |
கிம் ஜோங் இல்லின் திரைப்பட ஆர்வத்தை தணிக்கவும் இந்த அமெரிக்க போர் கைதிகள் பயன்படுத்தப்பட்டனர். அமெரிக்க திரைப்படங்கள் பார்க்க விரும்பும் கிம் ஜோங் இல்லுக்கு, அதில் வரும் ஆங்கில உரையாடலை புரிந்து கொள்ளமுடியாது. |
ஆனால் தனது திரைப்பட ஆர்வத்தை தணித்துக்கொள்ள அமெரிக்க போர் கைதிகளை அவர் பயன்படுத்திக்கொண்டார். போர்க் கைதிகளுக்கு முழு திரைப்படமும் காட்டப்படாமல், திரைப்படத்தின் ஒரு குறிப்பிட்ட பகுதி மட்டும் காணப்பட்டு உரையாடலை கேட்டுத் தெரிந்துக்கொள்வார் கிம் ஜோங் இல். |
அமெரிக்க சிப்பாய் ஏப்ஷியார் மாரடைப்பினால் தனது 40 வயதிலேயே பியோங்யாங்கில் காலமானார். சிறுநீரகக்கோளாறால் அவதிப்பட்ட பைரிஷ் 1990இல் காலமானார். |
வட கொரியாவில் சிறைக்கைதியாக இருந்த ஜப்பானிய பெண் ஹிட்டோமி சோகா சார்லஸை ஜென்கின்ஸ் மணந்துக்கொண்டார். 2004ஆம் ஆண்டு இருவரும் ஜப்பான் செல்வதற்கு அனுமதி வழங்கப்பட்டது. வட கொரியாவில் வாழ்ந்த தனது நினைவுகளை 2009 ஆம் ஆண்டில் சுயசரிதையாக ஆவணப்படுத்தினார் ஜென்கின்ஸ். |
ஜென்கின்ஸின் சக கைதியான ஜேம்ஸ் டெஸ்நோக், வட கொரியா பெண் ஒருவரை திருமணம் செய்து அங்கேயே வசித்துவந்தார். வடகொரியா தனக்கு தாயகமாகவே தோன்றுவதாக கூறிய ஜேம்ஸ் டெஸ்நோக், அமெரிக்காவுக்கு திரும்பிச்செல்ல விரும்பிய ஜென்கின்ஸை வெறுத்தார். |
வடகொரிய திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்ற நான்கு அமெரிக்க போர்கைதிகளும் அந்த நாட்டில் என்றேன்றும் மாறாத புகழ்பெற்றுவிட்டார்கள். |
மழை பொய்த்ததால் காடு வரண்டது. |
புல், பயிர், தண்ணீர் எதுவும் கிடைக்காததால் தவித்தன மான்கள். |
சிங்கம், புலி போன்ற மிருகங்கள் துரத்திய போது, ஓட முடியாமல் சுலபமாக இரையாயின. இந்த நிலை நீடித்தால், மான் இனமே அழிந்து விடும். கவலையில் கூட்டம் கூடி ஆலோசித்தன மான்கள். |
அதைக் கேட்டதும், கூட்டமாக கிளம்பின மான்கள். |
இதை பார்த்த காகம், கவலையுடன் விசாரித்தது. |
புல்வெளியை தேடி போவதாக கூறின மான்கள். |
நம்பிக்கையுடன் நடந்த மான்கள், சோர்வுடன் திகைத்து நின்றன. |
வயதான ஒரு மான், 'பட்டினியாக சாவதை விட, முயற்சித்து பார்ப்பது நல்லது அல்லவா.' என்றது. |
இதை கேட்டதும், அவை பயணத்தை தொடர்ந்தன. |
பாலைவனத்தில் வெயில் சுட்டு எரித்தது. |
முதிர்ந்த மான் ஒன்று, 'பிள்ளைகளா. தளராதீர். மலையை தாண்டினால், அழகான சோலை. மேய்ச்சலுக்கு நல்ல புல்வெளி இருக்கிறது என கற்பனை செய்யுங்கள். அந்த சந்தோஷத்தில் நடக்கலாம்.' என ஊக்கம் தந்தது. |
அதன் பேச்சில் உத்வேகம் பெற்றன மான்கள். |
கடக்கும் துாரம், எரிக்கும் வெயிலைப் பொருட்படுத்தாமல் இலக்கை நோக்கி நடந்தன. |
வழியில் உயிரை பறிக்கும் விலங்குகள் இல்லாததால் மலையை சுலபமாக தாண்டின. கற்பனை செய்திருந்த பசும் புல்வெளியை கண்டன. நன்றாக பசியாறி, குரங்கிற்கு நன்றி கூறின. |
மோகினி ஏகாதசி |
மோகினி ஏகாதசி விரதம், பல னங்கள் மற்றும் ஆசிகள் |
ஏகாதசி நாளில், பகல் நேரத்தில் குளித்துவிட்டு சுத்தமாக ஆடைகளை அணியுங்கள். |
நண்பகல் நேரத்தில், மற்றும் மோகினி ஏகாதசி வ்ரத் கதையை கேட்டு வாசிக்கவும். |
த்வாதாஷி நாளில் ஏகாதசி வ்ரத் திறக்கவும். |
கடவுளை வணங்கியபின் பிராமணருக்கோ அல்லது ஏழைகளுக்கோ உணவு வழங்கவும், பங்களிப்புகளை வழங்கவும். |
அதன் பிறகுதான் உங்கள் உணவு உண்டு. |
மோகினி ஏகாதசி வ்ரதத்தின் முக்கியத்துவம் |
மோகினி ஏகாதசி வ்ராட்டின் வரலாற்று புராணக்கதை |
சென்னை ஆர்.கே.நகரில் கோவில் விழாவுக்கு சென்ற டி.டி.வி தினகரனுக்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். ரூ.20 நோட்டை கையில் வைத்துக்கொண்டு டி.டி.வி தினகரனுக்கு எதிராக பொதுமக்கள் கோஷம் எழுப்பினர். |
சென்னை ஆர்கே நகர் இடைத்தேர்தலின் போது ஓட்டுக்கு ரூ.10000 தருவதாக டி.டி.வி உறுதியளித்ததாக பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். ரூ.20 நோட்டை டோக்கனாக கொடுத்து டி.டி.வி வாக்குக் கேட்டதாக செய்தி வெளியாகியுள்ளது. |
ரூ.20 டோக்கன் |
ரூ.20 நோட்டு இங்கே, ரூ.10000 எங்கே ? என்று பொதுமக்கள் கோஷம் எழுப்பினர். இதையடுத்து காவல் துறையினர் தலையிட்டு டி.டி.வி தினகரனை பாதுகாப்பாக அழைத்து சென்றனர். |
மதுசூதனன் தரப்பு செட் அப் |
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன், ஆர்கே நகரில் 20 ரூபாய் நோட்டுக்கு பணம் தருவோம் என நாங்கள் யாரும் கூறவில்லை என்றார். மதுசூதனன் தரப்பினர் 50க்கும் மேற்பட்ட ரவுடிகளை செட் அப் செய்து இதுபோன்று செய்வதாகவும் அவர் கூறினார். |
நேரத்தை வீணாக்க விரும்பவில்லை |
18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் விரைவில் நல்ல தீர்ப்பு வரும் என்றும் அவர் கூறினார். இதைத்தொடர்ந்து திவாகரன் தனிக்கட்சி தொடங்கியது குறித்த கேள்விக்கு பதிலளித்த தினகரன், திவாகரனுக்கெல்லாம் பதில் சொல்லி நேரத்தை வீணாக்க விரும்பவில்லை என்றார். திவாகரன் கூறுவதில் ஒரு சதவீதம் கூட உண்மையில்லை என்றும் தினகரன் கூறினார். |
மேலும் திவாகரனுக்கு 2002ஆம் ஆண்டு உடல்நலம் பாதிக்கப்பட்டது என்றும், தற்போது அவருக்கு மனநலமும் பாதிக்கப்பட்டுள்ளதோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது என்றும் தினகரன் கூறினார். திவாகரன் கோபத்தில் விரக்தியில் பேசுகிறார், அவருக்கெல்லாம் பதில் சொல்லிவ நேரத்தை வீணாக்க விரும்பவில்லை என்றும் தினகரன் கூறினார். |
மோதல் தீவிரம் |
யாருடைய தூண்டுதலில் திவாகரன் செயல்படுகிறார் என்பது மக்களுக்கு விரைவில் தெரியும் என்றும் தினகரன் கூறினார். ஏற்கனவே மோதல் ஏற்பட்டுள்ள நிலையில் திவாகரன் குறித்து தினகரன் இவ்வாறு பேசியிருப்பது மோதலை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது. |
தென்மாவட்டங்கள், மேற்கு மாவட்டங்களைச் சேர்ந்த லட்சக்கணக்கான மக்கள் சென்னையில் தங்கி படித்து, வேலை செய்து வருகின்றனர். பண்டிகை, தொடர்விடுமுறையை கொண்டாட சொந்த ஊர் செல்வது வழக்கம். |
கடந்த 28ஆம் தேதி மாலையில் சென்னையில் இன்று சென்றவர்கள். நான்கு நாட்கள் விடுமுறை முடிந்து இன்று திரும்பினர். |
ஆயுதபூஜை விடுமுறை |
சென்னை போன்ற முக்கிய நகரங்களில் போக்குவரத்து நெரிசல் அன்றாட பிரச்சினையாக மாறிவருகிறது. |
செப்டம்பர் 29 முதல் அக்டோபர் 2ஆம் தேதி வரை நான்கு நாட்கள் தொடர் விடுமுறை விடப்பட்டதால் பல மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் சொந்த ஊருக்கு சென்றனர். இதனால் கடந்த 28ஆம் தேதி மாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வாகனங்கள் நத்தை போல ஊர்ந்து சென்றன. |
திணறிய ஜிஎஸ்டி சாலை |
இந்நிலையில் தொடர்விடுமுறையை முன்னிட்டு சொந்த ஊருக்கு சென்ற மக்கள் பலரும் இன்று அதிகாலையில் சென்னைக்கு திரும்பினர். ஜிஎஸ்டி சாலையில் ஊரப்பாக்கத்தில் இருந்து பெருங்களத்தூர் வரையில் வாகனங்கள் நீண்டதூரம் அணிவகுத்தன. கோயம்பேடு பேருந்து நிலையத்திற்குள் நுழையவே 2 மணி நேரத்திற்கு மேலானது. |
ஜிஎஸ்டி சாலையில் நெரிசல் |
இன்று அதிகாலை காலை முதல் புறநகர் பகுதிகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. புறநகர் பகுதியாக ஊரப்பாக்கம், வண்டலூர், பெருங்களத்தூர் பகுதிகளில் உள்ள சாலைகள் குறுகலாகவும் சேதமடைந்தும் இருப்பதால் வாகனங்கள் நத்தைபோல் ஊர்ந்தன. இதனால் பயணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். |