text
stringlengths 0
6.49k
|
---|
பார்க்க: படைப்புநாள் பற்றிய மதிப்பீடுகள். |
</doc> |
<doc id="608" url="https://ta.wikipedia.org/wiki?curid=608" title="கிமு 5ஆம் ஆயிரமாண்டு"> |
கிமு 5ஆம் ஆயிரமாண்டு |
குறிப்பிடத் தக்கவர்கள்: |
புத்தாக்கங்கள், கண்டுபிடிப்புகள், அறிமுகங்கள் |
</doc> |
<doc id="609" url="https://ta.wikipedia.org/wiki?curid=609" title="அஞ்சல்தலை சேகரிப்பு"> |
அஞ்சல்தலை சேகரிப்பு |
அஞ்சல்தலை சேகரிப்பு என்பது அஞ்சல்தலைகளையும், அதனுடன் தொடர்புடைய வேறு பொருட்களையும் சேகரித்தல் என்று பொருள்படும். இது உலகின் மிகப் பரலமான பொழுது போக்குகளில் ஒன்று. உலக அளவில் பரவி இருந்தும், பெரும்பாலானோருக்கு இது ஒரு இலாபமில்லாத முயற்சியாகவே இருந்து வருகிறது. எனினும், சில சிறிய நாடுகள், நுணுக்கமாக வடிவமைக்கப்பட்ட, சிறுதொகையான அஞ்சல்தலைகளை, அஞ்சல்தலை சேகரிப்பாளர்களைக் கருத்தில் கொண்டு மட்டுமே வெளியிட்டு வருமானம் பெறுகின்றன. இந்நாடுகள் வெளியிடும் அஞ்சல் தலைகள் அவற்றின் அஞ்சல் துறைத் தேவைகளிலும் அதிகமாகவே இருக்கும். |
பென்னி பிளாக் (Penny Black) என்று அழைக்கப்படும், முதலாவது அஞ்சல்தலை, 1840ல் பெரிய பிரித்தானியாவில் வெளியிடப்பட்டது. இளம் அரசி விக்டோரியாவின் படத்தைத் தாங்கியிருந்த இது, துளைகளில்லாமல் வெளியிடப்பட்டதனால் பயன்படுத்தும்போது கத்தரிக்கோல்களினால் வெட்டிப் பிரிக்கப்படவேண்டியிருந்தது. பயன்படுத்தப் படாத 'பென்னி பிளாக்' அஞ்சல்தலைகள், கிடைத்தற்கரிதாயிருக்கின்ற அதேவேளை, பயன்படுத்தப்பட்டவை பொதுவாகக் கிடக்கின்றன. இவற்றை $25 முதல் $150 வரை அவற்றின் நிலையைப் பொறுத்து வாங்கலாம். |
1960களிலும், 1970களிலும், பொதுவாகச் சிறுவர்களும், இளவயதினருமே தொடக்ககாலச் சேகரிப்பாளர்களாக இருந்தார்கள். பெரியவர்கள் பலர் இதையொரு சிறுவர் செய்யும் செயலாகக் கருதி ஒதுக்கினார்கள். 1800களின் இறுதிப் பகுதியில், இவ்வாறான சேகரிப்பாளர்கள் பெரியவர்களாகி, அஞ்சல்தலைகள், அவற்றின் உற்பத்தி, அஞ்சல்தலையில் அச்சுப் பிழைகள் போன்றவை தொடர்பாக முறையாக ஆராய்ந்து வெளியிட்டார்கள். |
அரிய அஞ்சல்தலைகளுக்குப் கிடைத்த பிரபலம் பலருக்குத் தூண்டுதலாக அமைந்து, 1920களில், சேகரிப்பாளர்களது தொகை விரைவாக அதிகரித்தது. முந்திய அஞ்சல்தலைகள் நல்ல நிலையில் கிடைக்காததால், அவற்றின் பெறுமதியும் பெருமளவு கூடியது. பொதுவாக இரண்டு, மூன்று, நான்கு என்று சேர்ந்து இருந்த பழைய அஞ்சல்தலைகள் கிடைத்தற்கு அரிதாயிருந்தன. |
1920களில் வெளியிடப்பட்ட அமெரிக்கத் அஞ்சல்தலைகளின் பெறுமதி கிடுகிடுவென உயர்ந்ததால், 1930களில், பல அமெரிக்கச் சேகரிப்பாளர்கள், சில ஆண்டுகளின் பின்னர் நல்ல விலைக்கு விற்கும் எண்ணத்துடன், புத்தம்புதிய அஞ்சல்தலைகளை வாங்கிக் குவித்தனர். இவ்வெண்ணம் ஈடேறவில்லை. 60 ஆண்டுகளுக்கு மேலாகியும், இப்பொழுதுகூட, புத்தம்புதிய நிலையில் 1930களின் அமெரிக்க வெளியீடுகளை, கிட்டத்தட்ட அவற்றின் குறித்த விலையிலேயே வாங்கமுடியும். பல சேகரிப்பாளர்களும், வணிகர்களும் இன்னும் 1930களின் அஞ்சல்தலைகளைக் கடிதம் அனுப்பப் பயன்படுத்துகிறார்கள் என்று கூறப்படுகிறது. |
அஞ்சல்தலைகள் சேகரிப்பாளர்களது சேகரிப்புப் பொருட்களில் பின்வருவன அடங்கும்: |
இன்று பல்வேறு நாடுகளும் வெளியிடும் அஞ்சல்தலைகள் கணக்கிட முடியாதவை. 1840 க்குப் பின்னர் கடந்த ஒன்றரை நூற்றாண்டுகளுக்கு மேலாக அனைத்து நாடுகளும் வெளியிட்ட அஞ்சல்தலைகளோடு ஒப்பிடும்போது, ஒரு மனிதன் தன் வாழ்நாளில் சேகரிக்ககூடியவை மிகச் சிலவே. ஒரு வரையறையின்றி, கிடைக்கக் கூடிய எல்லாத் அஞ்சல்தலைகளையும் சேகரிக்க முயலும் ஒருவரின் சேகரிப்பில் எவ்வித ஆழமும் இருக்க முடியாது. இதனால் தற்காலத்தில் சேகரிப்பாளர்கள், தங்கள் சேகரிப்பு முயற்சிகளை ஒரு குறிப்பிட்ட வரையறைக்குள் அடக்கிக் கொள்கிறார்கள். இவ்வாறான வரையறுப்புகள் சில பின்வருமாறு: |
இப் பொழுதுபோக்கு இலாபமற்றதாக இருந்தும், பல புதிய சேகரிப்பாளர்கள் அஞ்சல்தலைகளில் முதலீடு செய்கிறார்கள். அஞ்சல்தலையியல் முதலீடு உயர் மட்டச் சேகரிப்பாளரிடையே பரவலாக இருந்துவருகிறது. அரிய அஞ்சல்தலைகள், தொட்டுணரக்கூடிய முதலீடுகளில், இலகுவாகக் காவிச்செல்லக் கூடியவை என்பதுடன் சேமித்துவைப்பதும் இலகுவாகும். ஓவியங்கள், சேகரிப்புப் பொருள் முதலீடுகள், பெறுமதியான உலோகங்கள் என்பவற்றுக்குக் கவர்ச்சிகரமான மாற்றீடாக இவை இருந்து வருகின்றன. |
எனினும், இப் பொழுதுபோக்கில் ஈடுபடுவதால் கிடைக்கும் மன நிறைவுக்கும், பொது அறிவு வளர்ச்சிக்குமாகவே, இதில் ஈடுபடும்படி புதியவர்களைத் தூண்டுகிறார்கள். மிகச் சிறிய வண்ணப்படங்களான அஞ்சல்தலைகள் பல பயனுள்ள தகவல்களைத் தம்முள் புதைத்து வைத்துள்ளன. இவை இளம் சேகரிப்பாளர்களது அறிவு வளர்ச்சிக்கு உதவுகின்றன. |
அஞ்சல்தலைகள் பற்றிய ஆய்வுகளில் ஈடுபடுவதும் ஒரு தனித்துறையாக இருந்து வருகிறது. இதனை 'அஞ்சல்தலையியல்' (Philately) என்பார்கள். இதில் ஈடுபடுபவர்கள் பெரும்பாலும் அஞ்சல்தலைகள் சேகரிப்பதும் வழக்கமாக இருப்பதால், அஞ்சல்தலையியலும் அஞ்சல்தலை சேகரிப்பும் ஒன்றே என்று பிழையாக எண்ணப்படுகிறது. அஞ்சல்தலையியல் என்பது அஞ்சல்தலைகளையும், தொடர்புடைய பொருட்களையும் ஆய்வு செய்யும் ஒரு விரிவான துறையைக் குறிக்கும் ஒரு பதமாகும். |
பலவகையான அஞ்சல்தலை விபரப் பட்டியல்கள் உள்ளன. |
</doc> |
<doc id="610" url="https://ta.wikipedia.org/wiki?curid=610" title="அஞ்சல் தலை"> |
அஞ்சல் தலை |
அஞ்சற்றலை அல்லது தபால்தலை என்பது அஞ்சல் சேவைக்கு முன் கட்டணம் செலுத்தப்பட்டதற்குச் சான்றாக கொடுக்கப்படுவது. பொதுவாக இது ஒரு நீள்சதுர வடிவிலமைந்த சிறு காகிதத் துண்டாக இருக்கும். தபால் சேவை மூலம் அனுப்பப்படவுள்ள கடிதஉறையில், மேற்சொன்ன தபால்தலைகளை ஒட்டுவதன் மூலம், அக் கடிதத்தை அனுப்புபவர் அதை அனுப்புவதற்கான கட்டணத்தைச் செலுத்தியுள்ளார் என்பதற்குச் சான்று அளிக்கின்றார். முன் கட்டணம் செலுத்தப்பட்ட உறைகளைப் பயன்படுத்துவதிலும் பார்க்க அதிகம் விரும்பப்படும் முறை இதுவாகும். |
அஞ்சல்தலை என்ற சொல்லுக்குப் பதிலாக முத்திரை என்ற பதமும் வழக்கிலுள்ளது. இச் சொல் தபால்தலை என்பதை மட்டுமன்றி வேறு பொருள்களையும் கொடுக்கக் கூடுமெனினும், சாதாரணமாக முத்திரை என்பது, தபால் தலையையே குறிக்கும். |
நீள் சதுரமாக மட்டுமன்றித் தபால்தலைகள் பல்வேறு வடிவங்களிலும் வெளியிடப்படுவதுண்டு. முக்கோணம், வட்டம், பல்கோணம், இணைகரம் போன்ற வடிவங்களிலும் தபால்தலைகள் உண்டு. |
ஒட்டும் தன்மையுள்ள தபால்தலைகளும், ஒருதன்மைத்தான தபால் கட்டணமும், 'ஜேம்ஸ் சாமேர்ஸ்' என்பவரால் 1834 அளவில் முன்வைக்கப்பட்டது. இதே கருத்தை 1837ல் 'ரோலண்ட் ஹில்' என்பவரால் வெளியிடப்பட்ட, "தபால் துறைச் சீரமைப்பு: இதன் முக்கியத்துவமும், செயற்படுதன்மையும்" என்னும் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டது. தபால் பெறுனர், கட்டணம் செலுத்தவிரும்பாவிடில், தபாலை வாங்க மறுக்கலாம் எனவே தபால் கட்டணத்தை, பெறுனரிடம் அறவிடுவதிலும், அனுப்புனரிடம் அறவிடுவதே சிறந்தது என அதில் அவர் வாதாடினார். எவ்வளவு தூரத்தில் வழங்கப்படுகிறது என்பதைக் கருதாமல், ஒருசீரான கட்டணமாக ஒரு பென்னியை அறவிடவேண்டுமென்றும் அவர் கருத்து கூறினார். வெவ்வேறு தொலைவிடங்களுக்கு வெவ்வேறு கட்டண அறவீட்டு முறை, கணக்கு வைக்கும் செலவை அதிகரிக்கும் என்றும், ஒரு சீரான கட்டணமுறையில் அரச தபால் சேவைக்குப் பணம் மிச்சப்படும் என்பதையும் எடுத்துக் காட்டினார். சாமேர்ஸின் முன்வைப்பு இறுதியாக 1839 ஆகஸ்டில் நாடாளுமன்றத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டதுடன் பொதுத் தபால் அலுவலகம், 1840ல் பென்னி தபால் சேவையை ஆரம்பித்ததுடன், 1 பென்னியும், 2 பென்னியும் பெறுமானமுள்ள, படம் அச்சிடப்பட்ட உறைகளையும் வெளியிட்டது. |
மூன்று மாதங்களின் பின்னர், விக்டோரியா மகாராணியின் படம் அச்சிடப்பட்ட பென்னி பிளாக் என்று அறியப்பட்ட முன்கட்டணத் தபால் தலையையும் வெளியிட்டது. முதலாவது தபால் தலையை வெளியிட்ட காரணத்தினால், அனைத்துலகப் பயன்பாட்டுக்குத் தபால்தலைகளை வெளியிடும் நாட்டின் பெயர் ரோமன் எழுத்துக்களில் அவற்றில் பொறிக்கப் பட வேண்டுமென்ற அதன் விதியிலிருந்து, ஐக்கிய இராச்சியத்துக்கு, அனைத்துலக தபால்சேவைச் சங்கம் (U.P.U.) விலக்கு அளித்துள்ளது. யூ.பி.யூ வில் இணைவதற்கு முன்னர் பல நாடுகள் இப்படிச் செய்வதில்லை, எனினும் பின்னர் மிகக் குறைந்த மீறல்களே இருந்தன. இதன் காரணமாக சீனா, ஜப்பான் போன்ற நாடுகளின் பெரும்பாலான பழைய வெளியீடுகளிலுள்ள கீழை நாட்டு எழுத்துக்களுக்கு மேற்கு நாட்டுப் புதிய சேகரிப்பாளர்கள் அறிமுகமில்லாதவர்களாக உள்ளார்கள். ஒரு தபால் தலை, அதன் பெறுமதியையும், அந் நாட்டு நாணயத்தில் கொண்டிருக்கவேண்டும். சில நாடுகள், ஒரு எழுத்தையோ அல்லது "First Class" என்பது போன்ற குறிப்புக்களையும் பெறுமதிக்குப் பதிலாகக் கொடுக்கின்றன. யூ.பி.யூ வின் விதி காரணமாக இது உள்ளூர் சேவைகளுக்கு மட்டுமே மட்டுப்படுத்தப்படுகின்றது, எனினும் மீறல்களும் அதிகம் கவனிக்கப்படுவதில்லை.(ஐரோப்பிய தபால் சேவைக்கான பிரித்தானியாவின் "E" தபால்தலையும், தென்னாபிரிக்காவின் "பன்னாட்டு கடித விகிதம்" என்ற தபால் தலையும் மேற்சொன்ன விதிவிலக்குகளில் அடங்கும்). |
தொடக்க காலத்திலிருந்தே, எப்படித் தபால் தலைகள் வழங்கப்படுகின்றன அல்லது விற்கப்படுகின்றன என்பது தொடர்பில், பல்வேறு புதிய முறைகள் கையாளப்பட்டு வந்தன. அண்மையில் ஒருவர் தனது கணனியிலேயே தபால்தலைகளை அச்சிட்டுப் பெறக்கூடியதாக இருந்தது. 2002ல் ஐக்கிய அமெரிக்கத் தபால் சேவை வலைத் தபால்தலைகளை வெளியிடுவதற்கு ஸ்டாம்ப்ஸ்.காம் முக்கு (Stamps.com) அனுமதி வழங்கியது. |
"முதன்மைக் கட்டுரை: அஞ்சல்தலை சேகரிப்பு" |
சில நாடுகள் தபால் சார்ந்த தேவைகளுக்காகவன்றி, சேகரிப்பாளர்களுக்காகவே தபால்தலைகளை வெளியிடுகின்றார்கள். இது அவ்வாறான நாடுகளின் வருமானத்தின் குறிப்பிடத்தக்க அளவுக்குக் காரணமாக உள்ளது என்றும் கூறப்படுகின்றது. இவ்வாறு சேகரிப்பாளர்களைக் குறி வைத்துத் தபால் தலைகளை வெளியிடும் கொள்கை எல்லாச் சந்தர்ப்பங்களிலும் சேகரிப்பாளர்களால் ஆதரிக்கப்படுவது இல்லை. இக்கொள்கையை மிதமான அளவுக்குப் பயன்படுத்தும்போது சேகரிப்பாளர்களிடம் வரவேற்புப் பெறும் அதே வேளை, அளவுக்கு மீறித் தபால்தலைகளை வெளியிடும் நாடுகள் கண்டனத்துக்கு உள்ளாகின்றன. சில பத்தாண்டுகளுக்கு முன், சில தனியார் நிறுவனங்கள், சிறிய நாடுகளுடன் ஒப்பந்தம் செய்துகொண்டு, அந்நாடுகளுக்கான தபால்தலைகளை இலவசமாக அச்சிட்டுக் கொடுத்தன. ஆனால், இதற்கு மாற்று உதவியாக, எஞ்சியிருக்கும் தபால்தலைகளை சேகரிப்பாளர்களுக்கு விற்கும் உரிமையைத் தாங்கள் பெற்றுக்கொண்டன. |
</doc> |
<doc id="611" url="https://ta.wikipedia.org/wiki?curid=611" title="பென்னி பிளாக்"> |
பென்னி பிளாக் |
பென்னி பிளாக் ("Penny Black") உலகின் முதலாவது உத்தியோகபூர்வ ஒட்டக்கூடிய தபால்தலையாகும். இது பெரிய பிரித்தானியாவால் 1840 மே 1 அன்று மே 6ம் திகதியிலிருந்து உபயோகிப்பதற்காக வெளியிடப்பட்டது. |
தபால் சேவைக்காக முன்கட்டணம் செலுத்தப்பட்டதைக் காட்ட, ஒட்டக்கூடிய தபால்தலையைப் பயன்படுத்தும் எண்ணம், ரோலண்ட் ஹில் என்பவரது, பிரித்தானிய தபால் முறைமையின் மறுசீரமைப்புக்கான 1837 ஆம் வருடத்திய முன்வைப்பின் ஒரு பகுதியாகும். 1839ல், பிரித்தானியத் திறைசேரி, புதிய தபால்தலை வடிவமைப்புக்காகப் போட்டியொன்றை அறிவித்ததாயினும், சமர்ப்பிக்கப்பட்ட வடிவமைப்புகள் எதுவும் ஏற்கப்படவில்லை. அதனால், முன்னர் ஒரு பதக்கத்துக்காக வில்லியம் வயன் என்பவரால் உருவாக்கப்பட்ட விக்டோரியா மகாராணியின் உருவப்படமொன்றைப் பயன்படுத்தத் திறைசேரி முடிவுசெய்தது. மேல்பகுதியில் "POSTAGE" என்ற சொல்லும், அடியில் "ONE PENNY" என்ற பெறுமானமும் அச்சிடப்பட்டிருந்தது. இவற்றுடன் அடிப்பக்கத்து இரண்டு மூலைகளிலும், பெரிய தாளில், குறிப்பிட்ட தபால்தலையின் இடத்தைக் குறிக்கும், "A A", "A B", போன்ற எழுத்துக்கள் இருந்தன. அதன் பெயர் குறிப்பதுபோல், தபால்தலை முழுவதும் கறுப்பு நிறத்திலேயே அச்சிடப்பட்டிருந்தது. தபால்தலைகள் பேர்க்கின்ஸ் பேக்கன் ("Perkins Bacon") நிறுவனத்தால் அச்சிடப்பட்டது. |
மே 6 உத்தியோகபூர்வமான முதல் நாளாக இருப்பினும், மே 2ல் தபால்குறியிடப்பட்ட மூன்று உறைகள் இருப்பது அறியப்பட்டுள்ளது. இது தபாலதிபர்கள் குறிப்பிட்ட நாளுக்கு முன்னதாகவே தபால்தலைகளை விற்றதன் காரணமாக இருக்கலாம். |
பென்னி பிளாக், ஒரு வருடத்துக்கும் சற்றுக் கூடியகாலமே உபயோகத்தில் இருந்தது. கறுப்பு நிறத்தின் மேல் சிவப்பு நிற மையினால் அடித்தல் செய்தால்கூடத் தெளிவாகத் தெரிவதில்லை என்ற அனுபவத்தின் காரணமாக, பென்னி ரெட் என்னும் சிவப்பு நிறத் தபால் தலை அறிமுகப்படுத்தப்பட்டு, கறுப்பு மையினால் அடித்தல் செய்யப்பட்டது. |
பென்னி பிளாக் தாராளமாகக் கிடைக்கக்கூடியதெனினும், அதனுடைய முக்கியத்துவம் காரணமாக அதற்கு சேகரிப்பாளரிடையே அதிக மதிப்பு உள்ளதால், மலிவாகக் கிடைப்பதில்லை. 2000ல் நல்ல நிலையிலுள்ள ஒரு பயன்படுத்திய தபால்தலை US$200க்கும், பயன்படுத்தாதது US$3,000 க்கும் விலைபோனது. மாறாக பயன்படுத்திய பென்னி ரெட் $ 3 மட்டுமே பெற்றது. |
</doc> |
<doc id="612" url="https://ta.wikipedia.org/wiki?curid=612" title="தமிழர்"> |
தமிழர் |
தமிழர் (, "Tamils", "Tamilians") என்பவர் தமிழைத் தாய்மொழியாகக் கொண்டவர்களாவர். மிகப் பழைய தமிழ்ச் சமுதாயங்கள் தென்னிந்தியா, இலங்கையைச் சேர்ந்தவைகள் ஆகும். உலகம் முழுவதிலும் இன்று தமிழர் பரவி வாழ்ந்தாலும் அவர்களது தாயகம் தமிழ்நாடும், தமிழீழமுமே ஆகும். 1800-களில் பிரித்தானியக் குடியேற்றவாத அரசால் பெருந்தோட்டப் பயிர்ச் செய்கைக்காகத் தென்னிந்தியாவிலிருந்தும், இலங்கையின் வடபகுதியிலிருந்தும் குறிப்பிடத்தக்க அளவில் தமிழர்கள் மலேசியா, சிங்கப்பூர், பர்மா போன்ற நாடுகளில் குடியேற்றப்பட்டார்கள். இவ்வாறே மொரிசியசு, மடகாசுகர், தென்னாபிரிக்கா போன்ற ஆப்பிரிக்கா நாடுகள் பலவற்றிலும் தமிழர்கள் குடியேறியுள்ளார்கள். 20-ஆம் நூற்றாண்டில் தொழில் வாய்ப்புகள் பெற்று நடு ஆசிய நாடுகளுக்குச் சென்று வசிக்கின்றனர். 1950-களின் பின்னர் தமிழர் தொழில் வல்லுனர்களாக ஐரோப்பிய அமெரிக்க நாடுகளுக்குப் புலம்பெயர்ந்தனர். 1983-இல் இலங்கை இனக்கலவரங்களில் பாதிக்கப்பட்டுப் பெருமளவு ஈழத்தமிழர்கள் அசுத்திரேலியா, கனடா, அமெரிக்கா போன்ற நாடுகளிலும், ஐரோப்பிய நாடுகளான பிரித்தானியா, பிரான்சு, யேர்மனி, சுவிற்சர்லாந்து, டென்மார்க், நோர்வே போன்ற நாடுகளிலும் சென்று வாழ்கிறார்கள். உலகில் 70 மில்லியன் மக்கள் தமிழைத் தாய் மொழியாகவும், மேலும் 9 மில்லியன் மக்கள் தமிழை இரண்டாம் மொழியாகவும் பயன்படுத்துவதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. |
தமிழர் தோற்றம் பற்றி 4 கருதுகோள்கள் உள்ளன. தமிழர் குமரிக்கண்டத்தில் இருந்து வந்தார்கள் என்பது ஒரு கருதுகோள். பழந்தமிழர் தென் இந்தியாவின் பழங்குடிகள் என்பது இன்னொரு கருதுகோள். மூன்றாவது கருதுகோள் ஆதியில் ஆபிரிக்காவில் இருந்து அரேபிய கடல் ஊடாகத் தென்னிந்தியா வந்தோரின் வழித்தோன்றல்களே தமிழர் என்கிறது. தமிழர் நடு ஆசியா, வட இந்தியா நிலப்பரப்புகளில் இருந்து காலப்போக்கில் தென் இந்தியா வந்தனர் என்பது மற்றைய கருதுகோள். எப்படி இருப்பினும் தமிழினம் தொன்மை வாய்ந்த மக்கள் இனங்களில் ஒன்று. |