text
stringlengths 0
6.49k
|
---|
மனித வரலாறு மற்றும் கதைசொல்லல் ஆகியவற்றிற்கான தனி வார்த்தைகள் மொழியியல் சிந்தனையுடன் பகுப்பாய்வு அல்லது தனிமைப்படுத்தல் அல்லது இருமை வெளிப்பாடு போன்றவை ஆங்கில சொல்லுக்கு நிகராக சீனசொற்களும் உருவாகியுள்ளன. நவீன செருமன், பிரஞ்சு மற்றும் பெரும்பாலான செருமானிய மொழிகளிலும் இதே சொல்லே உறுதியாகவும் செல்வாக்குடனும் வரலாறு மற்றும் கதை ஆகிய இரண்டிற்கும் பயன்படுத்தப்படுகிறது. |
1661 களில் ஒரு பெயர் சொல்லாக இது மாற்றம் கண்டது . |
வரலாற்றை ஆய்வு செய்பவர் வரலாற்று ஆய்வாளர் என்ற பொருள் 1531 ஆம் ஆண்டில் அங்கீகாரம் பெற்றுள்ளது. உண்மையான மனிதனின் வரலாறு, கடந்தகால நிகழ்வுகளின் ஆய்வு என்ற இரு நோக்குகளிலும் வரலாறு பொருள் கொள்ளப்படுகிறது. |
வரலாற்றாசிரியர்கள் தங்கள் வாழும் காலத்தின் பின்னணியில் கடந்த காலத்தின் நிகழ்வுகளை விளக்கி வரலாறாக எழுதுகின்றனர். மற்றும் சில சமயங்களில் தங்களின் சொந்த சமுதாயத்திற்கான பாடங்களாகவும் இவர்கள் வரலாற்றை எழுதுகின்றனர். பெனிதெட்டோவின் வார்த்தைகளில் சொல்வதென்றால், அனைத்து வரலாறும் சமகால வரலாறு எனலாம். மனித இனம் தொடர்பான முந்தைய நிகழ்வுகளின் கதை மற்றும் பகுப்பாய்வை உண்மையான விளக்கத்தை உருவாக்குவதன் மூலம் வரலாறு எளிதாக்கப்படுகிறது. வரலாற்றின் நவீன விளக்கமானது இவ்விளக்கத்தின் அடிப்படையில் பல புதிய கோணங்களை உருவாக்குகிறது. |
சில உண்மையான நினைவில் வைத்து பாதுகாக்கப்படுகிற அனைத்து நிகழ்வுகளும் வரலாற்றுப் பதிவுகள் எனப்படுகின்றன. கடந்த காலத்தின் துல்லியத்திற்கு மிகவும் பயனுள்ள வகையில் பங்களிப்பு செய்யும் ஆதாரங்களை அடையாளம் காண்பதே வரலாற்று ஆய்வின் பணியாகும். எனவே, வரலாற்றாளரின் காப்பகம் சில நூல்கள் மற்றும் ஆவணங்கள் ஆகியவற்றை மிகச் சாதாரணமாகப் பயன்படுத்துவதை செல்லாததாக்குதல் மூலம் உருவாக்கப்படுகிறது. |
வரலாற்று ஆய்வு சில நேரங்களில் சமூக அறிவியல் பகுதியாகவும் மற்ற நேரங்களில் மானுடவியலின் ஒரு பகுதியாகவும் வகைப்படுத்தப்படுகிறது It can also be seen as a bridge between those two broad areas, incorporating methodologies from both. Some individual historians strongly support one or the other classification.. இந்த இரு பரந்த துறைகளுக்கும் இடையே ஒரு பாலமாகவும், இரண்டின் வழிமுறைகளையும் உள்ளடக்கியும் வரலாற்று ஆய்வு காணப்படுகிறது. சில தனிப்பட்ட வரலாற்றாசிரியர்கள் ஒன்று அல்லது மற்றொரு வகைப்பாட்டை மட்டும் ஆதரிக்கிறார்கள். 20 ஆம் நூற்றாண்டில், பிரெஞ்சு வரலாற்றாசிரியரான பெர்னாண்ட் பிரேடால் உலக வரலாறு பற்றிய ஆய்வுகளில் பொருளாதாரம், மானுடவியல் மற்றும் புவியியல் போன்ற வெளிப்புற துறைகளைப் பயன்படுத்தி வரலாற்றை ஆய்வில் ஒரு புரட்சியை உண்டாக்கினார். |
பாரம்பரியமாக, கடந்த கால நிகழ்வுகளை எழுதி வைத்து அல்லது வாய்வழியாக ஒருவரிடமிருந்து மற்றவருக்கு கடத்திவந்து வரலாற்று கேள்விகளுக்கு பதிலளிக்க வரலாற்றாசிரியர்கள் முயன்றனர். தொடக்கத்தில் இருந்தே வரலாற்று வல்லுனர்கள் நினைவுச்சின்னங்கள், கல்வெட்டுக்கள் மற்றும் படங்கள் போன்ற ஆதாரங்களையும் பயன்படுத்தினர். பொதுவாக வரலாற்று அறிவின் ஆதாரங்கள் மூன்று வகைகளாக பிரிக்கப்படுகின்றன: என்ன எழுதப்பட்டுள்ளது, எனன சொல்லப்படுகிறது, என்ன பாதுகாக்கப்பட்டுள்ளது என்பன அம்மூன்று வகைபாடுகளாகும் . வரலாற்றாளர்கள் பெரும்பாலும் இம்மூன்றையும் கணக்கில் கொள்கின்றனர். ஆனால் எழுத்து கடந்தகாலத்திலிருந்து என்னவெல்லாம் இருந்து வருகிறது என்பதைக் குறிப்பிட்டு வரலாற்றைச் சிறப்பாக்குகிறது. |
புதையுண்ட தளங்கள் மற்றும் பொருள்களைக் கையாள்வதில் தொல்பொருளியல் துறை குறிப்பாக பயனுள்ளதாக இருக்கும் ஒரு துறையாகும் தொல்பொருளியல் தளங்களும் பொருட்களும் ஒருமுறை கண்டுபிடிக்கப்பட்டால் அவை வரலாற்றின் ஆய்வுக்கு பங்களிப்புச் செய்கின்றன. அரிதாக சில சமயங்களில் அதன் கண்டுபிடிப்பை நிறைவு செய்வதற்காக கதை மூலங்களைப் பயன்படுத்தி தொல்பொருளியல் ஒரு தனித்துறையாகவும் சிறப்படைகிறது. இருப்பினும் வரலாற்றில் இருந்து பிரிக்கப்பட்ட சில பகுப்பாய்வு முறைகள் மற்றும் அணுகுமுறைகளை தொல்பொருளியல் கொண்டுள்ளது. அதாவது, தொல்பொருளியல் என்பது உரை ஆதாரங்களில் இடைவெளிகளை நிரப்பும் என்று சொல்ல இயலாது. உண்மையில், "வரலாற்று தொல்லியல்" என்பது தொல்பொருளியலின் ஒரு குறிப்பிட்ட கிளையாகும், இத்துறை பெரும்பாலும் சமகால உரைகளின் ஆதாரங்களுக்கு எதிராக அதன் முடிவுகளுடன் வேறுபடுத்துகிறது. உதாரணமாக, அமெரிக்காவின் மேரிலாந்து மாநிலத்தின் அனாபொலிசு நகரத்தைச் சேர்ந்த அகழ்வாராய்ச்சியாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளரான மார்க் லியோன் அவர்களின் ஆய்வினைக் குறிப்பிடலாம். உரை ஆவணங்கள் மற்றும் பொருட் பதிவுகள் ஆகியவற்றிற்கு இடையே உள்ள முரண்பாட்டை புரிந்து கொள்ள இவர் முயற்சித்தார். அந்த நேரத்தில் கிடைக்கப்பெற்ற எழுதப்பட்ட ஆவணங்களுக்கு அப்பாற்பட்டு ஒட்டுமொத்த வரலாற்றுச் சூழலையும் கணக்கில் கொண்டு அடிமைகள் தொடர்பான ஆய்வுக்கு இவர் பயன்படுத்தினார். |
காலவரிசைப்படியும், கலாச்சார ரீதியாகவும், பிராந்திய ரீதியாகவும், ஆய்வுப்பொருள் சார்ந்தும் வரலாறு பல்வேறு விதமான ஒழுங்கமைக்கப்பட்ட வழிகளால் ஆக்கப்படுகிறது. இந்தப் பிரிவுகள் அனைத்தும் முற்றிலும் தனிதன்மை கொண்டவையாக இல்லாமல் இவற்றினிடைல் குறிப்பிடத்தக்க கலப்பும் கொண்டுள்ளன. சில நடைமுறை அல்லது கோட்பாட்டு நோக்கத்துடன் வரலாறு பெரும்பாலும் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது, ஆனாலும் எளிமையான அறிவார்ந்த ஆர்வம் இதில் முக்கியப்பங்கு வகிக்கிறது . |
</doc> |
<doc id="582" url="https://ta.wikipedia.org/wiki?curid=582" title="பொறியியல்"> |
பொறியியல் |
பொறியியல் ("Engineering") என்பது அறிவியல் கோட்பாடுகளைத் "திறமுடன்" பயன்படுத்தி தக்க முறையில் இயற்கை வளங்களை மனித பயன்பாட்டிற்காக மாற்றும் தொழிற் கலையாகும். இது இயற்பியல், கணிதம், வேதியியல், உயிரியல் ஆகிய அறிவியற்துறைகளையும், அவற்றின் சிறப்புத் துறைகளான பொருள் அறிவியல்(materials science), திண்ம / பாய்ம விசைப்பொறியியல் (Solid/Fluid Mechanics), வெப்ப இயக்கவியல் (Thermodynamics) போன்றவற்றை அடிப்படையாகக் கொள்கிறது. இத்துறையில் பயிற்சிபெற்றவர்கள் பொறியாளர்கள் எனப்படுவர். பொறியாளர்கள் ஆற்றல், பொருட்கள் எனும் இரண்டுவிதமான இயற்கை வளங்களைப் பயன்படுத்துகின்றனர். |
பொருட்களின் பயன்பாடு அவற்றின் தாங்கு திறன், முறைப்படுத்த உகந்ததாயிருத்தல், எடை குறைவாயிருத்தல், வெகுகாலம் சிதையாதிருத்தல், கடத்து திறன், வேதியியல், ஒலியியல், மின்னியல் பண்புகள் போன்ற பற்பல தன்மைகளைப் பொருத்து இருக்கும். ஆற்றலுக்கான முக்கிய மூலங்கள், படிம எரிபொருட்கள்(Fossil Fuels) (பெட்ரோலியம், நிலக்கரி, எரிவாயு (எரிவளி)), காற்று, சூரியன், நீர்வீழ்ச்சி, அணுக்கரு பிளவு போன்றவை. |
பொறியியல் என்ற தமிழ்ச்சொல், "Engineering" என்பதற்கு இணையாக பயன்படுத்தும் ஒன்றாகும். பொறி (கருவிகள் ஆக்குவது, இயங்குவது பற்றியது)+அறிவியல் = பொறியியல். பொறியியல் என்னும் சொல் தமிழில் பயன்பாட்டுக்கு வருமுன்னர் யந்திரவியல், இயந்திரவியல், எந்திரவியல் போன்ற வடமொழி மூலங்களைக் கொண்ட சொற்களும் பயின்று வந்துள்ளன. மிகவும் பிற்காலத்தில் அறிமுகமான "Engineering" என்ற ஆங்கிலச் சொல் "Engineer" என்பதிலிருந்தும், இது, இயந்திரம் என்று பொருள்படும் "Engine" என்னும் சொல்லிலிருந்து உருவானதே. இதன் மூலம் இலத்தீன் மொழிச் சொல்லான "ingenium" என்பதாகும். "Engineer" என்பதைக் குறிக்கும் "engineour" என்னும் நடு ஆங்கிலச் சொல் 14 ஆவது நூற்றாண்டில் இருந்து ஆங்கில-பிரெஞ்ச் மொழிகளில் பயின்று வந்துள்ளது |
பொறியியல் துறையின் அடிப்படைக்கூறுகள் பல்வேறு நாகரிகங்களில் தொன்று தொட்டே இருந்து வந்துள்ளது. சக்கரம் (ஆழி), நெம்புகோல், புல்லி (pulley, கப்பி), போன்ற கருவிகளை அக்காலத்து மக்கள் உருவாக்கியதிலிருந்தும், பயன்படுத்தியதிலிருந்தும் இதை அறியலாம். இத்தகைய கண்டு பிடிப்புக்கள் ஒவ்வொன்றும், அடிப்படையான பொறிமுறைக் கொள்கைகளை பயனுள்ள கருவிகளையும், பொருட்களையும் உருவாக்குவதில் பயன்படுத்துதல் என்னும் தற்கால வரைவிலக்கணங்களோடு ஒத்துப்போகின்றன. போர்க்கருவிகளை உருவாக்குவதிலும், கட்டிடக் கலைத்துறையிலும் பொறியியல் கூறுகள் அதிகம் பயன்படுத்தப் பட்டிருக்கின்றன. தற்கால பொறியில்துறை ஐரோப்பாவில் இயந்திரமயமாக்கல் தொடங்கிய காலத்திலிருந்து (18-19 ஆவது நூற்றாண்டுகளில்) முக்கியத்துவம் அடைந்தது. |
கிரீசில் உள்ள அக்ரோபோலிஸ், பந்தியன்; ரோமர்களின் நீர்காவிகள், கொலோசியம்; பபிலோனின் தொங்கு தோட்டம்; எகிப்தின் பிரமிட்டுக்கள்; மாயன் பிரமிட்டுக்கள்; சீனப் பெருஞ்சுவர் போன்ற அமைப்புக்கள் அக்காலத்து குடிசார் மற்றும் படைசார் பொறியாளர்களின் திறமைகளுக்குச் சான்றாக அமைகின்றன. |
பெயர் குறிப்பிட்டு அறியப்படுகின்ற மிகப் பழைய காலத்துப் பொறியாளர் இம்ஹோட்டெப் (Imhotep) என்பவராகும். பாரோ ஜோசர் (Djosèr) என்பவரின் அலுவலரான இவரே எகிப்திலுள்ள சக்காரா என்னுமிடத்தில் உள்ள பாரோ ஜோசரின் பிரமிட்டான படிப் பிரமிட்டை வடிவமைத்துக் கட்டியிருக்கலாம் எனக் கருதப்படுகின்றது. இதன் காலம் கிமு 2630 - கிமு 2611 ஆகும். உலகக் கட்டிடக்கலையில் முதலில் அறியப்பட்ட தூண்களை வடிவமைத்தவரும் இவராகவே இருக்கக்கூடும். |
அல்-ஜசாரி என்னும் ஈராக்கியர் ஒருவர், 1174 க்கும் 1200க்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் துருக்கிய ஆர்த்துஜிட் வம்சத்தைச் சேர்ந்த அரசர் ஒருவரது மாளிகைகளில் நீருயர்த்துவதற்கு தற்கால இயந்திரங்களைப் போன்ற இயந்திரங்களை உருவாக்கியதாகத் தெரிகிறது. இரட்டைச் செயற்பாட்டு முன்பின்னியக்க (reciprocating motion) ஆடுதண்டுப் பம்பிகள் பிற்காலப் பொறியியல் வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக அமைந்தன. ஏனெனில், இதுவே இணைகோலையும் (connecting rod), மாற்றித்தண்டையும் (Crankshaft) உள்ளடக்கி, சுழல் இயக்கத்தை முன்பின் இயக்கமாக மாற்றும் வல்லமை கொண்ட முதல் இயந்திரமாகும். இன்றும் கூடச் சில விளையாட்டுப் பொருட்களில், அல் ஜசாரியின் கூட்டுப்பூட்டு (combination lock) தன்னியக்கப் பொறிகள் ஆகியவற்றில் காணப்படும் பற்கொம்பு – நெம்புகோல் (cam-lever) பொறிமுறை பயன்படுத்தப்பட்டு வருவதைக் காணலாம். ஐம்பதுக்கு மேற்பட்ட பொறியியல் கருவிகளைக் கண்டுபிடித்த அல்-ஜசாரி, துண்டுப் பல்லிணைகள் (segmental gears), பொறியியல் கட்டுப்பாடுகள், தப்பிப் (escapement) பொறிமுறைகள், மணிக்கூடு, வடிவமைப்பு மற்றும் உற்பத்தி முறைகளுக்கான நடபடிகள் போன்றவற்றை மேம்படுத்திப் புதுமைகளையும் புகுத்தியுள்ளார். |
உலகின் முதலாவது மின் பொறியியலாளராகக் கருதப்படுபவர் வில்லியம் கில்பர்ட் என்பவராவார். 1600 ஆம் ஆண்டில் "காந்தம்" "(De Magnete)" என்னும் நூலை எழுதியுள்ள இவரே முதன் முதலில் "electricity" (மின்சாரம்) என்னும் சொல்லைப் பயன்படுத்தியவராவார். |
முதல் நீராவி இயந்திரம், இயந்திரப் பொறியாளரான தாமஸ் சவேரி (Thomas Savery) என்பவரால் 1698 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. இதன் உருவாக்கம் பிற்காலத்தில் தொழிற்புரட்சி ஏற்படுவதற்குக் காரணமாயிற்று. இது பேரளவாக்கத்தின் (mass production) தொடக்கமாகவும் அமைந்தது. |
18 ஆம் நூற்றாண்டில் பொறியியல் ஒரு தொழிற்றுறையாக வளர்ச்சியடைந்ததுடன், பொறியியல் என்னும் சொல், கணிதம் மற்றும் அறிவியலைப் பயன்படுத்தும் துறைகளுக்கு மட்டும் மட்டுப்படுத்தப்பட்டது. அத்துடன், படைத்துறைப் பொறியியல், குடிசார் பொறியியல் என்பவற்றுக்குப் புறம்பாக பொறிமுறைக் கலைகள் எனப்பட்ட துறைகளும் பொறியியலுள் சேர்க்கப்பட்டன. |
1800களில், அலெசாண்ட்ரோ வோல்ட்டா செய்த சோதனைகளும், மைக்கேல் பாரடே, ஜார்ஜ் ஓம் ஆகியோரின் சோதனைகளும், 1872 இல் மின் மோட்டார் கண்டுபிடிக்கப்பட்டதும் மின் பொறியியல் துறையைத் தொடக்கி வைத்தன எனலாம். 19 ஆம் நூற்றாண்டின் இறுதியில் ஜேம்ஸ் மக்ஸ்வெல், ஹென்றிக் ஹேர்ட்ஸ் ஆகியோருடைய ஆய்வுகள், மின்னணுவியல் தொடக்கமாக விளங்கின. தொடர்ந்து வந்த காலங்களில் வெற்றிடக் குளாய், படிகப் பெருக்கி (transistor) போன்றவற்றின் கண்டுபிடிப்பு, மின் பொறியாளர்களினதும், மின்னணுப் பொறியாளர்களினதும் எண்ணிக்கையைக் கூட்டியது. அக்காலத்தில் இவர்கள் பிற துறைகளைச் சேர்ந்த பொறியாளரைவிட அதிகமாக இருந்ததாகக் கூறப்படுகின்றது. |
தாமஸ் சவேரியினதும், ஸ்காட்டியப் பொறியாளரான ஜேம்ஸ் வாட்டினதும் கண்டுபிடிப்புக்கள் தற்கால இயந்திரப் பொறியியல் துறையின் தோற்றத்துக்குக் காரணமாகின. சிறப்புத் தன்மைகளைக் கொண்ட இயந்திரங்களினதும், அவற்றைப் பேணுவதற்குத் தேவையான கருவிகளினதும் வளர்ச்சி, இயந்திரப் பொறியியல், அதன் பிறப்பிடமான பிரித்தானியாவிலும், உலகின் பிற பகுதிகளிலும் வேகமாக வளர்வதற்குத் துணை செய்தன. |
இயந்திரப் பொறியியலின் தற்கால வடிவம் பிரித்தானியாவில் தோன்றியதாகக் கொள்ளப்பட்டாலும், இது, மிகப் பழங்காலத்தில் படைத்துறை மற்றும் குடிசார் தேவைகளுக்குப் பொறிகள் உருவாக்கப்பட்ட காலத்திலேயே தொடங்கிவிட்டது எனலாம். வரலாற்றில் மிகப்பழைய பொறிமுறைக் கணினி எனக் கருதப்படும் ஆன்டிக்கிதீரா பொறிமுறை (Antikythera mechanism), ஆக்கிமிடீசின் கண்டுபிடிப்புக்கள் போன்றவை பழங்கால இயந்திரப் பொறியியலுக்கான எடுத்துக் காட்டுகளாகும். சில் ஆக்கிமிடீசின் கண்டுபிடிப்புக்களுக்கும், ஆன்டிக்கிதீரா பொறிமுறைக்கும், இயந்திரப் பொறியியலின் இரண்டு முக்கிய கொள்கைகளான வேறுபாட்டுப் பல்லிணைகள் (differential gearing) அல்லது வெளிவட்டகப் பல்லிணைகள் (epicyclic gearing) தொடர்பிலான சிக்கலான அறிவு அவசியமாகும். |
வேதிப் பொறியியல் துறையும், 19 ஆம் நூற்றாண்டின் தொழிற்புரட்சிக் காலத்தின்போதே உருவானது. பெரும் அளவிலான உற்பத்திகளுக்கு புதிய பொருட்களும், வழிமுறைகளும் தேவைப்பட்டன. 1880 ஆம் ஆண்டளவில், வேதிப்பொருட்களுக்கு இருந்த தேவைகள் அதிகமாக இருந்ததால், பாரிய இயந்திரங்களைப் பயன்படுத்தி வேதிப்பொருட்களைப் பெருமளவில் உருவாக்குவதற்கான புதிய தொழில் துறை தொடங்கியது. வேதிப் பொறியாளரின் பணி இவ்வாறான இயந்திரத் தொகுதிகளையும், வழிமுறைகளையும் வடிவமைப்பது ஆகும். |
வானூர்திப் பொறியியல், வானூர்திகளை வடிவமைப்பது, பேணுவது தொடர்பான துறை. அதேவேளை விண்வெளிப் பொறியியல், வானூர்திப் பொறியியலுக்கும் அப்பால் விண்கலங்களின் வடிவமைப்புக்களையும் உட்படுத்திய விரிவான துறையாகும். இத்துறைகளுடன் தொடர்புடையனவாகக் கருதப்படக்கூடிய, சர் ஜார்ஜ் கேலே என்பவரின் பணிகள் 18 ஆம் நூற்றாண்டின் இறுதிக் காலத்தைச் சேர்ந்தனவாயினும், இத்துறைகளின் தோற்றம் 19 ஆம் நூற்றாண்டிலிருந்து 20 ஆம் நூற்றாண்டுக்கு மாறுகின்ற காலப்பகுதியைச் சேர்ந்தது என்பதே பொதுக் கருத்து. இத் துறைகள் தொடர்பான பழங்காலத்து அறிவு, அனுபவ வாயிலானது என்பதுடன், சில கருத்துருக்களும், திறமைகளும் பிற பொறியியல் துறைகள் வழியாகப் பெறப்பட்டனவுமாகும். 1920களில் ரைட் சகோதரர்களின் வெற்றிகரமான வானூர்திப் பறப்பு நிகழ்ந்து பத்தாண்டுகளுக்குப் பின்னரே, முதலாம் உலகப் போருக்கான படைத்துறை வானூர்திகள் தொடர்பில் இத்துறை வளர்ச்சியடையத் தொடங்கியது. அதே வேளை, கோட்பாட்டு இயற்பியலுடன் சோதனைகளையும் பயன்படுத்தி இத்துறைகளுக்கு அடிப்படையான அறிவியலை உருவாக்குவதற்கான ஆய்வுகளும் நடைபெற்று வந்தன. |
பொறியியலாளர்கள் இயற்பியல் மற்றும் கணித அறிவியல்களை பிரச்சினைகளுக்கு பொருத்தமான தீர்வுகளை காண்பதற்கு அல்லது நிலையை மேம்படுத்துவதற்கு பிரயோகிக்கிறார்கள். முன்னெப்போதையும் விட அதிகமாக, தற்போது பொறியியலாளர்கள் அவர்களுடைய வடிவமைப்பு திட்டங்களுக்கு தேவையான அறிவியல் அறிவை பெறவேண்டியுள்ளது. இதன் விளைவாக அவர்களுடைய வாழ்க்கை முழுவதும் புதிய விடயங்களை கற்றுக் கொண்டிருக்க வேண்டும். |
பல தெரிவுகள் இருக்கும் போது பொறியியலாளர்கள் பல்வேறு வடிவமைப்புத் தேர்வுகளில் அவற்றின் தரத்தை ஆழ்ந்து எண்ணிப்பார்த்து தேவைக்கு மிகப் பொருத்தமான தீர்வை தெரிவு செய்வார்கள். வெற்றிகரமான விளைவை பெறுவதற்கு வடிவமைப்பிலுள்ள தடைகளை அடையளம் கண்டு, புரிந்து கொண்டு விளக்குவது பொறியியலாளரின் முக்கியமான மற்றும் தனிப்பட்ட பணியாகும். ஏனெனில், பொதுவாக ஒரு தயாரிப்பு தொழிநுட்பரீதியாக வெற்றிகரமானதாக இருப்பதோடு மேலும் பல தேவைகளை பூர்த்தி செய்தாக வேண்டும். |
கிடைக்கின்ற வளங்கள், பௌதீக, கற்பனையான அல்லது தொழிநுட்ப குறைபாடுகள், எதிர்காலத்தில் திருத்தங்கள் மற்றும் சேர்த்தல்களுக்கான நெகிழ்வுத்தன்மை இன்னும் ஏனைய காரணிகள்: அதாவது செலவு, பாதுகாப்பு, சந்தைப்படுத்தல், உற்பத்தி மற்றும் சேவை வசதிகளுக்கான தேவைகள் போன்றவற்றுக்கு கட்டுப்பாடுகள் ஏற்படுத்தப்படலாம். பொறியியலாளர்கள் இவ்வாறான கட்டுப்பாடுகளை புரிந்து கொள்வதன் மூலம் எவ்வாறான பொருட்களின் உற்பத்தி பொருத்தமானது மற்றும் எவ்வாறான இயக்க அமைப்பு பொருத்தமானது என்பது தொடர்பான வரம்புகளை நிர்ணயிக்கிறார்கள். |
ஒரு பொறியாளர் எடுத்துக்கொண்ட விடயம் தொடர்பிலான வரையறைகளை அடையாளங்கண்டு அவற்றைப் புரிந்து கொண்டு வடிவமைப்புச் செய்யவேண்டும். இங்கே வரையறைகள் என்பது, கிடைக்கக்கூடிய வளங்கள்; பௌதீக அல்லது தொழில்நுட்பம்சார் வரையறைகள்; எதிர்கால மாற்றங்களுக்கும், விரிவாக்கத்துக்கும் ஏற்றதாயிருத்தல்; செலவு; உற்பத்தி செய்யக்கூடிய தன்மை; பேணக்கூடிய தன்மை; சந்தைப்படுத்தல்; அழகியல், சமூகம் மற்றும் நெறிமுறைகள் சார்ந்த விடயங்களை உள்ளடக்கியது. Engineering is therefore a contingent enterprise influenced by many considerations. |
அமெரிக்க National Academy of Engineering படி பின்வருவம் இருபது 20 நூற்றாண்டின் முக்கிய பொறியியல் படைப்புகள் ஆகும். அனேகமானவையை கண்டுபிடிக்க அமெரிக்காவே முக்கிய பங்காற்றியுள்ளது. |
மேலே குறிப்பிடவற்றுள் கட்டிட தொழில்நுட்பம், துப்புரவு கட்டுமானம் (Sanitation System), இராணுவ தொழில்நுட்பங்கள் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. |
'பொறியியல் வாழ்க்கையில் தப்பிபிழைத்து வாழுவதற்கான உந்தலை மீறியது. புதிய சாத்தியக்கூறுகளை அது சிந்திக்கிறது. கலைகளைப் போல பொறியியலில் அழகு உண்டு, அளவுகளின் மதிப்பீடு உண்டு. பொறியிலாளர் இயற்கையைப் போட்டிக்கு அழைக்கின்றார்கள். சூறாவளியை எதிர்க்கின்றனர், நில நடுக்கம், வெள்ளப் பெருக்கு என இயற்கையின் மூர்க்கமான ஆற்றல்களோடு பொறியலாளர் போட்டிபோடுகின்றார்கள். அதேவேளை, இயற்கையுடன் இயைந்து செயற்படுகிறார்கள். மண்ணை, கனிமத்தை, வெவேறு தனிமங்களை அவர்கள் விளங்கிகொள்கிறார்கள். அறிவியலையும் கணிதத்தையும் அறிந்து பயன்படுத்திக்கொள்கிறார்கள். மனித நல்வாழ்க்கைக்கு பொறியிலாளரின் பங்களிப்பு அளப்பரியது.'Samuel C. Florman. (1987). "The Civilized Engineer". New York: St. Martin's Press. |
தமிழர்கள் பண்டைய காலத்திலிருந்தே பொறியியல் துறைகளில் கோலேச்சியே வந்துள்ளனர், கட்டுமானப் பொறியியல் துறைகளில் சான்றாக கல்லணை, தஞ்சைப் பெரியகோவில். |
</doc> |
<doc id="583" url="https://ta.wikipedia.org/wiki?curid=583" title="எமிரேட்ஸ் கோபுரங்கள்"> |
எமிரேட்ஸ் கோபுரங்கள் |
எமிரேட்ஸ் கோபுரங்கள் என அழைக்கப்படும் இரட்டைக் கோபுரங்கள், டுபாயிலுள்ள, ஷேக் ஸயத் வீதி என்று பெயரிடப்பட்டுள்ள, துபாய் - அபுதாபி பெருந்தெருவை அண்டி அமைந்துள்ளது. முக்கோணவடிவ வெட்டுமுகத்தையுடைய இவ்விரு கோபுரங்களிலொன்று மற்றதிலும் சிறிது உயரமானது. இக் கட்டிடத்தின் கீழ்த் தளங்கள், பரந்த ஒரு podium ஆக அமைந்து மேற்படி இரு கோபுரங்களையும் தாங்குவது போலுள்ளது. |
56 மாடிகளைக் கொண்ட, 355 மீட்டர் உயரமான பெரிய கோபுரம், பெரும்பாலும் அலுவலகங்களைக் கொண்டுள்ளது. 54 மாடியையும், 309 மீட்டர் உயரத்தையும் கொண்ட சிறிய கோபுரம், 500 அறைகளைக் கொண்ட ஒரு ஐந்து நட்சத்திர தங்குவிடுதி (Hotel) ஆக அமைந்துள்ளது. இணைப்பு மேடைபோலமைந்துள்ள கீழ் ஐந்து தளங்களிலும், உணவுச்சாலைகள், அங்காடிகள் மற்றும் வாகனத் தரிப்பிடங்கள் என்பன அமைந்துள்ளன. |
இக் கட்டிடம், கிடைக்கக்கூடிய அதி நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது. இது 2000 ஆவது ஆண்டில் கட்டிமுடிக்கப்பட்ட போது, மத்திய கிழக்கின் அதியுயர்ந்த கட்டிடமாகவும், உலகின் உயரமான கட்டிடங்களில் ஒன்பதாவது இடத்திலும் இருந்தது. |
இது நோர் குரூப் (Norr Group) கட்டிட ஆலோசனை நிறுவனத்தினால் வடிவமைக்கப்பட்டது. |
</doc> |
<doc id="585" url="https://ta.wikipedia.org/wiki?curid=585" title="கோலம்"> |
கோலம் |
கோலம் என்பது வீட்டு வாயில்களில் அல்லது வாசலில் அரிசி மா அல்லது வேறு பொடிகளைப் பயன்படுத்தி வரையப்படும் வடிவங்கள். |
தமிழ்நாடு, இலங்கை போன்ற இடங்களில், கோலங்கள் அரிசிமாவு, முருகைக்கற்பொடி போன்ற வெண்ணிற உலர்வான பொடிகளைக் கொண்டு வரையப்படுகின்றன. பொதுவாக வெளியே தளர்வான மண்தரையாயின், நீர் தெளித்துப் புழுதி அடக்கப்படும். பின்னர் பெருவிரலுக்கும், ஆள்காட்டி விரலுக்கும் இடையில் சிறிதளவு உலர் பொடியை எடுத்து, விரல்கள் நிலத்தில் படாமல், நிலத்துக்கு அரையங்குல உயரத்திலிருந்து, ஏற்கனவே எண்ணியபடியான வடிவம் கிடைக்கும் வகையில், பொடியைத் தூவிச் செல்வார்கள். பசுச் சாணம் முதலியவற்றால் மெழுகப்பட்ட மண் தரையிலோ அல்லது வேறு இறுக்கமான தரையிலோ கோலம் வரைவதாயின், சிலவேளைகளில் அரிசியை நீர்விட்டுப் பசைபோல் அரைத்துப் பின்னர் வேண்டிய அளவு நீர் விட்டுக் கரைத்து, அதை ஒரு துணியில் தோய்த்துக்கொண்டு விரல்களுக்கிடையே மெதுவாக வைத்து அழுத்த விரல்களில் வடியும் மாக்கரைசலினால் பேனாவால் வரைவதுபோல் கோலம் வரையலாம். காய்ந்த பின்னர் இது நீண்ட காலத்துக்கு நிலைத்து நிற்கக்கூடியது. |
கோலங்களை அவை வரையப்படும் முறையை ஒட்டி இரண்டு பிரிவுகளாக வகுக்க முடியும். |
கம்பிக் கோலம் என்பது கோடுகளை எளிமையான வடிவவியல் ஒழுங்குகளில் வரைவதன் மூலம் அழகிய சீரான வடிவங்களைப் பெறுதலைக் குறிக்கும். |
புள்ளிக் கோலம் என்பது, கோடுகளை வரையும் முன், வழிகாட்டல் புள்ளிகளை இட்டுக்கொண்டு அதன் அடிப்படையில் வடிவங்களை வரைவதாகும். புள்ளிகளிடுவதிலும் இருவித முறைகள் உள்ளன. ஒரு வகையில் கிடைவரிசையிலும், நிலைக்குத்துவரிசையிலும் ஒரு சதுர வலைப்பின்னல் வடிவில் அமையும்படி புள்ளிகள் இடப்படும். இரண்டாவது முறையில், நிலக்குத்தாக வரும் புள்ளித்தொடர்களில் (நிரல்கள்), ஒன்றுவிட்டு ஒரு நிரல்களிலுள்ள புள்ளிகள் ஒரே கிடைக் கோட்டிலும், அவற்றினிடையே வரும் நிரல்களிலுள்ள புள்ளிகள், முன்கூறிய வரிசைகளுக்கு இடையிலும் வரும். இவ்வாறு போடப்படும் புள்ளிகள் சமபக்க முக்கோண வலைப்பின்னல் வடிவில் அமைந்திருக்கும். இவ்விரு வகைகளையும் முறையே: |