Search is not available for this dataset
செல்வம் நிலையாமை
[செல்வத்தின் நிலையாமையை உணர்த்துவது]
பாடல்:
அறுசுவை யுண்டி அமர்ந்தில்லாள் ஊட்ட
மறுசிகை நீக்கியுண் டாரும் - வறிஞராய்ச்
சென்றிரப்பர் ஓரிடத்துக் கூழ்எனின், செல்வம்ஒன்
றுண்டாக வைக்கற்பாற் றன்று.
குறிப்புரை: அறுசுவை உண்டி - அறுசுவையுள்ள உணவை, இல்லாள் - மனையாள், அமர்ந்து ஊட்ட - விரும்பி உண்பிக்க, மறுசிகை நீக்கி உண்டாரும் - மறுபிடி தவிர்த்து உண்ட செல்வரும், வறிஞராய்ச் சென்று இரப்பர் ஓர் இடத்து கூழ் - ஒரு காலத்தில் வறுமையாளராகி எங்கேனும் ஓர் இடத்திற்போய்க் கூழ் இரப்பர், எனின் - ஆதலின், செல்வம் ஒன்று - செல்வமென்பதொன்று, உண்டாக வைக்கற்பாற்று அன்று - நிலையுடையதாக மனத்திற் கருதக் கூடியதன்று.
கருத்து: செல்வரும் வறிஞராக மாறுதலால், செல்வம் நிலையுள்ளதாகக் கருதற்குரியதன்று.
விளக்கம்: ‘அமர்ந்து' ‘ ஊட்ட' என்னும் சொற்கள் ஆற்றல் வாய்ந்தவை; அமர்தல் - மனம் பொருந்துதல் ; அன்பு, மகிழ்வோடு உண்ணச் செய்தலின் ‘ஊட்ட' என வந்தது. ஒவ்வொருவகை உணவிலும் ஒவ்வொரு பிடியளவே போதுமானதாயிருந்தமையால் அச் செழுமை மிகுதியால் மறுசிகை நீக்கி உண்டார். உம்மை உயர்வின் மேல் வந்தது. வைக்கறபாற்றன்று - வைக்கற்பாலதன்று. செல்வத்தின் நிலையாமை தெரிந்தால், அதனைக் காலத்தில் தக்கவாறு பயன்படுத்திக்கொள்ளும் உணர்வு உண்டாகும். நிலையாமை கூறும் பிறவிடங்களிலும் இங்ஙனமே கருத்துக்கொள்க.
stringlengths 16
7.39k
|
---|
செல்வம் நிலையாமை
அறத்துப்பால்
பழவினை
உருவும் இளமையும் ஒண்பொருளும் உட்கும்
ஒருவழி நில்லாமை கண்டும் - ஒருவழி
ஒன்றேயும் இல்லாதான் வாழ்க்கை உடம்பிட்டு
நின்றுவீழ்ந் தக்க துடைத்து.
குறிப்புரை: உருவும் இளமையும் ஒண்பொருளும் உட்கும் ஒருவழி நில்லாமை கண்டும் - தோற்றமும் இளமை நிலையும் மேன்மை வாய்ந்த செல்வமும் நன்மதிப்பும் எல்லாரிடமும் ஒரே வகையாகப் பொருந்தாமை நேரிற் பார்த்தும்,, ஒருவழி ஒன்றேயும் இல்லாதான் வாழ்க்கை - யாதானும் ஒரு வகையால் ஒரு நல்வினையையேனும் செய்யாதவனது உயிர் வாழ்க்கை, உடம்பு இட்டு நின்று வீழ்ந்தக்கது உடைத்து - உடம்பு தோற்றிச் சிலகாலம் பயனில்லாமல் இருந்து பின் இறந்துபோகும் வீண் நிலையினையே யுடையதாகும்.
கருத்து: நல்வாழ்வுக்குக் காரணம் நல்வினையே யென்றறிந்து அதனை இயன்ற அளவிலாயினுஞ் செய்து பிறவியைப் பயனுடையதாக்குதல் வேண்டும்.
விளக்கம்: செல்வம், அறம் முதலிய நோக்கங்கட்குப் பயன்படுத்தற்குரியதாகலின், ‘ஒண்பொரு' ளெனப்பட்டது. நில்லாமை - நின்று பொருந்தாமை. ‘உடம்பு இட்டு' என்பதற்குத் ‘தம்மைப் போல் உடம்பு மாத்திரையாக உணர்ச்சியில்லாச் சில குழந்தைகளைத் தோற்றி' என உணர்த்தலும் ஒன்று. வீழ்ந்தக்கது என்பது ‘வீழுந்தகையது' என்னும் பொருட்டு; இதனால் உட்கு முதலியன இல்லாத வாழ்க்கை வீண் என்பது பெறப்பட்டது; "உட்கில் வழி வாழா வூக்கம் மிக இனிதே"
என்றார் பிறரும்.
|
செல்வம் நிலையாமை
அறத்துப்பால்
பழவினை
வளம்பட வேண்டாதார் யார்யாரு மில்லை;
அளந்தன போகம்
அவரவ ராற்றான் ;
விளங்காய் திரட்டினார் இல்லை, களங்கனியைக்
காரெனச் செய்தாரும் இல்.
குறிப்புரை: வளம்பட வேண்டாதார் யார் யாரும் இல்லை - செழுமை பெற விரும்பாதவர் உலகில் ஒருவருமில்லை, அளந்தன போகம் அவரவர் ஆற்றல் - ஆனால் இன்பநுகர்வு அவரவர் முன்வினைப்படியே அளவு செய்யப்பட்டுள்ளன. விளங்காய் திரட்டினார் இல்லை களங்கனியைக் கார் எனச் செய்தாரும் இல் - விளங்காயை உருண்டை வடிவினதாக அமைத்தவரும் இல்லை, களம்பழக்கத்தைக் கரிய உருவினதாகச் செய்தவரும் இல்லையாதல் போல வென்க.
கருத்து: அவ்வவற்றின் முறைப்படியே அவையவை அமைதலின், வளம் பெற விரும்புவோர் அதற்கேற்ப நல்வினை செய்தல் வேண்டும்.
விளக்கம்: யார்யாரு மில்லை என்னும் அடுக்கு எஞ்சாமைப் பொருளது. ஆற்றால் - வினைவழியே. ‘திரட்டினாரில்லை; செய்தாருமில்' என்றது, எடுத்துக்காட்டுவமையணி.
சிந். நாம.
|
செல்வம் நிலையாமை
அறத்துப்பால்
பழவினை
உறற்பால நீக்கல் உறுவர்க்கும் ஆகா
பெறற்பா லனையவும் அன்னவாம்; மாரி
வறப்பின் தருவாரும் இல்லை, அதனைச்
சிறப்பின் தணிப்பாரும் இல்.
குறிப்புரை: உறற்பால நீக்கல் உறுவர்க்கும் ஆகா - உருத்து வருந் தீவினைகளை நீக்குதல் சான்றோர்க்கும் ஆகாது, பெறற்பால் அனையவும் அன்னவாம் - அங்ஙனமே அடைந்தின்புறற்குரிய நன்மைகளும் அப்பெரியோர்களால் தடை செய்தற்குரியன அல்லவாம், மாரி வறப்பின் தருவாரும் இல்லை, சிறப்பின் அதனைத் தணிப்பாரும் இல் - மழை பெய்யாதொழியின் அதனைப் பெய்விருப்பாருமில்லை ; மிகப் பெய்யின் அதனைத் தணிப்பாருமில்லை யாதல்போல வென்க.
கருத்து: இருவினைகளும் பொருந்தியே தீருமாதலின், தீவினைகளை நீக்கி நல்வினைகளைச் செய்தல் இன்றியமையாததாகும்.
விளக்கம்: உறுவர் - தக்கோர் . ஆகா ; பன்மையன்று ஈறுதொகுத்தல். தீவினைகளை ஒப்பவே தவறாது வந்து பொருந்துவவான என்றற்கு ' அனையவும் ' எனப்பட்டது. தருவாரும் தணிப்பாருமென்னும் உம்மைகள் ஒன்றையொன்று தழீஇ நின்றன. ஆற்றலாகிய வினையின் விளைவு அமையினன்றி மாரி தருவாருமில்லை, தணிப்பாருமில்லை என்பது கருத்தாகக் கொள்க.
|
செல்வம் நிலையாமை
அறத்துப்பால்
பழவினை
தினைத்துணைய ராகித்தந் தேசுள் ளடக்கிப்
பனைத்துணையார் வைகலும் பாடழிந்து வாழ்வர்;
நினைப்பக் கிடந்த தெவனுண்டாம் மேலை
வினைப்பய னல்லாற் பிற.
குறிப்புரை: தினைத்துணையராகித் தேசுஉள் அடக்கிப் பனைத்துணையார் வைகலும் பாடு அழிந்து வாழ்வர் - பனையளவினரான பெருமையுடையோர் சிலர் நாடோறும் பெருமை குறைந்து தினையளவினராய்ச் சிறுத்துத் தமது மேன்மையை உள்ளத்தில் அடக்கிக் கொண்டு உலகில் உயிர்பொறுத் திருக்கின்றனர்; நினைப்பக் கிடந்தது எவன் உண்டு மேலை வினைப்பயன் அல்லால் பிற - இதற்குக் காரணம் முன்னை வினைப்பயனல்லால் வேறு கருதக் கிடந்தது யாதுண்டு!
கருத்து: முன்னைத் தீவினை எத்தகைய பெரியோரையும் உருத்து வருத்தும்.
விளக்கம்: தினை பனை யென்னும் அளவுகள் கண்ணியங் கருதின. எவனுண்டாம் என்பதில், ‘ஆம்' அசைநிலை. பிற, வேறு என்னும் பொருட்டு, தேசு என்பது மேன்மைப் பொருட்டாதல் "வலிச்சினமும் மானமும் தேசும்"
என்னும் புறப்பொருள் வெண்பா மாலையினுங் காண்க.
புறம். வெ.
|
செல்வம் நிலையாமை
அறத்துப்பால்
பழவினை
பல்லான்ற கேள்விப் பயனுணர்வார் வீயவும்
கல்லாதார் வாழ்வ தறிதிரேல் - கல்லாதார்
சேதனம் என்னுமச் சேறகத் தின்மையால்
கோதென்று கொள்ளாதாம் கூற்று.
குறிப்புரை: பல் ஆன்ற கேள்விப்பயன் உணர்வார் வீயவும் கல்லாதார் வாழ்வது அறிதிரேல் - பலவகைப்பட்ட பரந்த நூற்கேள்விகளின் பயனை அறிந்தொழுகுங் கற்றோர் உலகில் விரைவில் இறக்கவும் கல்லாதார் நீடு வாழ்வது எங்ஙனமென்று கருதுவீர்களானால்;சேதனம் என்னும் அசசேறு அகத்து இன்மையால் கோது என்று கொள்ளாதாம் கூற்று - அறிவென்னும் அப்பிழிவு அவர்கள் உள்ளத்தில் இல்லாமையால் அவர்களை வெறுங்கோது என்று கருதிக் கழித்துவிடுவான் கூற்றுவன் என்பது.
கருத்து: சாதல் நேரினும் கற்றல் கேட்டல் முதலிய நல்வினைகளைச் செய்து புண்ணியம் பெறுதல் வேண்டும்.
விளக்கம்: கேள்வியின் பயனாவது மெய்யுணர்வுப்பேறு, அறிந்து ஒழுகுவாரென்றற்கு ‘உணர்வார்' எனப்பட்டது. கற்றோர் அறிவுச்சாறு பெற்றுக் கனிந்துவிட்டோராதலின், பிறவிப்பயனை அவர் அடைந்துவிட்டமை கருதி அதனினும் மேனிலையுறும் பொருட்டு விரைவில் அவரது ஊனுடல் கழற்றப்பட்ட தெனவும். கல்லாதார் இன்னும் அத்தகுதி பெறாமையால் இவ்விடமே கழித்து விடப்பட்டனரெனவுந் தெரிவித்து, அம்முகமாக, விரைவில் நல்வினை செய்து நன்னிலையுறுகவென அறிவுறீஇயது இச் செய்யுள். ‘அச்சேறு' என்னுஞ் சுட்டுக் கல்வி கேள்வி யறிவு கருதியது.
|
செல்வம் நிலையாமை
அறத்துப்பால்
பழவினை
இடும்பைகூர் நெஞ்சத்தார் எல்லாருங் காண
நெடுங்கடை நின்றுழல்வ தெல்லாம் - அடம்பப்பூ
அன்னங் கிழிக்கும் அலைகடல் தண்சேர்ப்ப
முன்னை வினையாய் விடும்.
குறிப்புரை: அடம்பப்பூ அன்னம் கிழிக்கும் அலை கடல் தண் சேர்ப்ப - அடம்பங்கொடியின் மலரை அன்னப் பறவைகள் கோதுகின்ற அலைமோதுங் கடலின் குளிர்ந்த துறைவனே, இடும்பை கூர் நெஞ்சத்தார் எல்லாரும் காண நெடுங்கடை நின்றுழல்வதெல்லாம் - மக்களிற் சிலர், துன்பம் மிக்க உள்ளத்தவராய் எல்லாருங் காணும்படி பெரிய வீடுகளின் நெடிய தலைவாயிலில் நின்று பிச்சையேற்றுழல்வதெல்லாம், முன்னை வினையாய் விடும் - ஆராய்ந்து பார்க்குங்கால் பழவினைப்பயனாய் முடிந்து நிற்கும்.
கருத்து: நல்வினையுடையோர் இரந்துழலார்.
விளக்கம்: ஏளனமும் இரக்கமுந் தோன்ற ‘எல்லாருங் காண' எனவும், உழல்வாரது ஏழைமை நன்கு வெளிப்பட ‘நெடுங்கடை' எனவுங் கூறப்பட்டன. அடம்பு நெய்தல் நிலத்து நீர்ப் பூங்கொடி. "அடும்பிவர் அணியெக்கர்"
என்றார் பிறரும்.
கலி.
|
செல்வம் நிலையாமை
அறத்துப்பால்
பழவினை
அறியாரும் அல்லர் அறிவ தறிந்தும்
பழியோடு பட்டவை செய்தல் - வளியோடி
நெய்தல் நறவுயிர்க்கும் நீள்கடல் தண்சேர்ப்ப!
செய்த வினையான் வரும்.
குறிப்புரை: வளி ஓடி நெய்தல் நறவு உயிர்க்கும் நீள் கடல் தண் சேர்ப்ப - காற்று வீசி நெய்தல் மலர்த் தேன் சிந்தும் பரந்த குளிர்ந்த கடற்கரையின் தலைவனே! அறியாரும் அல்லர் அறிவது அறிந்தும் பழியோடு பட்டவை செய்தல் செய்த வினையான் வரும் - மக்களிற் சிலர் அறியா தாருமல்லராய் அறியத்தக்கதை அறிந்தும் பழியோடு கூடிய தீச்செயல்களைச் செய்தல் முன் செய்த தீவினையால் நேர்வதாகும்.
கருத்து: அறிஞராய் விளங்குதலோடு பழிப்படா நல்வினைகளுஞ் செய்து புண்ணியப் பேறுடையராதல் வேண்டும்.
விளக்கம்: ‘இது தீதுஇது செய்யின் இதன் விளைவு இத்தனை துன்பமாகும்,' என்பதை அறிந்தவரே யென்றற்கு, ‘அறியாருமல்லர்' எனப்பட்டது. ‘அறிவது' என்றது, ஒழுக்க முறைமைகள். ஓடியென்னும் எச்சம் காரணப்பொருட்டு. நெய்தல் - ஒரு மலர். "சான்றோர் பழியொடு வரூஉம் இன்பம் வெஃகா,"
ராதலின். இதுமுன் வினைப்பாலதாயிற்று.
அகநா.
|
செல்வம் நிலையாமை
அறத்துப்பால்
பழவினை
ஈண்டுநீர் வையத்துள் எல்லாரும் எத்துணையும்
வேண்டார்மன் தீய ; விழைபயன் நல்லவை ;
வேண்டினும் வேண்டா விடினும் உறற்பால
தீண்டா விடுத லரிது.
குறிப்புரை: ஈண்டு நீர் வையத்துள் - மிக்க நீரையுடைய கடலாற் சூழப்பட்ட உலகத்தில், எல்லாரும் எத்துணையும் வேண்டார் தீய - யாரும் சிறிதும் துன்பந்தருந் தீயவற்றை விரும்பமாட்டார்கள். விழை பயன் நல்லவை - எல்லாரும் எவ்வளவும் விரும்புகின்ற பயன்கள் இன்பந்தரும் நல்லனவே, வேண்டினும் வேண்டாவிடினும் உறற்பால தீண்டாவிடுதல் அரிது - மக்கள் விரும்பினாலும் விரும்பா விட்டாலும் அவர்கள்பால் வந்து பொருந்துதற்குரியன பொருந்தாதொழிதல் இல்லை.
கருத்து: இன்பந் தரும் நல்லவற்றையே மக்கள் விரும்புதலால், அவற்றிற்கேற்றபடி நல்வினைகளைச் செய்து வரல்வேண்டும்.
விளக்கம்: மன்அசைநிலை. ‘தீண்டா' என்னும் வினையெச்ச ஈறு தொக்கது. அரிதென்றது, "மனக்கவலை மாற்றலரிது"
என்புழிப்போல இன்மைப் பொருட்டு.
|
செல்வம் நிலையாமை
அறத்துப்பால்
பழவினை
சிறுகா பெருகா முறைபிறழ்ந்து வாரா
உறுகாலத் தூற்றாகா ஆமிடத்தே யாகும்
சிறுகாலைப் பட்ட பொறியும் அதனால்
இறுகாலத் தென்னை பரிவு
குறிப்புரை: சிறுகாலைப் பட்ட பொறியும் - கருவமையுங் காலத்திலேயே அமைந்த ஊழ்வினைகளும், சிறுகா பெருகா முறை பிறழ்ந்து வாரா உறுகாலத்து ஊற்றாகா ஆமிடத்தே ஆகும் - குறையமாட்டா, மிகமாட்டா, முறைமாறிப் பொருந்தமாட்டா, உற்ற காலத்தில் உதவியாக மாட்டா, உதவியாதற்குரிய காலத்தில் உதவியாகும், அதனால் - ஆதலால், இறுகாலத்து என்ன பரிவு - ஊழ் வினையால் கெடுங்காலத்தில் வருந்துவது ஏன் ?
கருத்து: ஊழ்வினைகளை நுகர்ந்தே தீரவேண்டுமாதலின், தீவினைகள் செய்யாதிருத்தல் வேண்டும்.
விளக்கம்: ‘ஊன்றாகா ' என்பது ஊற்றாகா என நின்றது. ஊன்று - ஈண்டு ஊன்றுகோல்ஊன்றுகோல் போல் உதவியாகா என்பது கருத்து. எவ்வளவு துன்புற்றாலும் வினை உருத்து வருத்துமேயல்லது அவ்வுற்ற நேரத்தில் உதவிசெய்யா தென்றற்கு அங்ஙனம் கூறப்பட்டது. உதவி செய்தற்குரிய நல்வினையாயின் உதவும் என்றற்கு ‘ஆமிடத்தே ஆகும்' எனப்பட்டது; சிறுகாலை யென்றது பிறவித்தொடக்கத்தை; ஈண்டுக் கருவியின் நிலையை உணர்த்திற்று. பொறியும் என்னும் உம்மை எதிரது தழீஇயதாய்ப் பின்னர்ச் செய்யும் ‘வினைகளும் அத்தகையனவே என்பதைப் புலப்படுத்தி நின்றது, என்னை' யெனப்பட்டது. பயனில்லை யென்றற்கு, பரிவு என்றார், பெற்ற காலத்துற்ற அன்பினால் வருந்துதலின். இக்கருத்து, சிந்தாமணியில் ‘நோதலும் பரிவுமெல்லாம்'
என விதந்துரைக்கப்பட்டது.
சிந்.
|
செல்வம் நிலையாமை
அறத்துப்பால்
மெய்ம்மை
இசையா ஒருபொருள் இல்லென்றல் யார்க்கும்
வசையன்று வையத் தியற்கை - நசையழுங்க
நின்றோடிப் பொய்த்தல் நிரைதொடீஇ! செய்ந்நன்றி
கொன்றாரின் குற்ற முடைத்து.
குறிப்புரை: இசையா ஒரு பொருள் இல் என்றல் - கொடுக்க இயலாத ஒரு பொருளை இரப்போர்க்கு இல்லை என்று கூறிவிடுதல், யார்க்கும் வசை அன்று வையத்து இயற்கை - யார்க்கும் பழியாகாது, அஃது உலகத்தின் இயற்கையேயாகும்; நசை அழுங்க நின்று ஓடிப்பொய்த்தல் - ஆசையால் நையும்படி உதவுவார்போல் தோன்றிக்காலம்.
நீடிப் பின் பொய்த்துவிடுதல், நிரைதொடீ - ஒழுங்காக அமைந்த வளையல்களையணிந்த மாதே!, செய்ந்நன்றி கொன்றாரின் குற்றம் உடைத்து - ஒருவர் செய்த நன்றியை அழித்தாரது குற்றத்தை யொப்பத் தீ துடைத்தாகும்.
கருத்து: இயன்றதை உடனே உதவிடுதல் உண்மை அறம்.
விளக்கம்: ஓடி - காலந்தாழ்த்தென்னும் பொருட்டு, தன் வினைக்கண் வந்தது, அஃது அவன் செயலாதலின்; நெடுங்காலம் நம்பி அதுகாறும் வள்ளல் நிலையில் வைத்துப் பெருமைப்படுத்தினமையின் இரப்போர் நன்றி செய்தவராகின்றனராதலின், அவரைப் பொய்த்தல் செய்ந்நன்றி கொல்லுங் குற்றத்தோடோப்பதாயிற்று ; அக்குற்றமாவது, கழுவாய் இல்லாதகுற்றம்.
இச்செய்யுட்பொருள், "ஒல்லுவதொல்லும் என்றலும் யாவர்க்கும், ஒல்லாது இல்லென மறுத்தலும் இரண்டும், ஆள்வினை மருங்கிற் கேண்மைப்பாலே ; ஒல்லா தொல்லும் என்றலும் ஒல்லுவது இல்லென மறுத்தலும் இரண்டும் வல்லே, இரப்போர் வாட்டலன்றியும் புரப்போர் புகழ் குறைபடூஉம் வாயில்"
என்னும் புறச்செய்யுட்கண்ணும் கண்டுகொள்ளப்படும்.
|
செல்வம் நிலையாமை
அறத்துப்பால்
மெய்ம்மை
தக்காரும் தக்கவ ரல்லாரும் தந்நீர்மை
எக்காலுங் குன்றல் இலராவர் ! - அக்காரம்
யாவரே தின்னினும் கையாதாம் கைக்குமாம்
தேவரே தின்னினும் வேம்பு.
குறிப்புரை: தக்காரும் தக்கவரல்லாரும் தம் நீர்மை எக்காலும் குன்றல் இலராவர் - சான்றோரும் சான்றோரல்லாதாரும் தத்தம் இயல்புகள் எப்பொழுதும் குறைதல் இலராவர், அக்காரம் யாவர் தின்னினும் கையாது - கருப்பங்கட்டியை யார் தின்றாலும் கைக்காது, கைக்கும் தேவரே தின்னினும் வேம்பு - தேவரே தின்றாலும் வேப்பங்காய் கசக்கும்.
கருத்து: நல்லோரும் தீயோரும் அவரவரியல்பை எந்நிலையிலுங் காட்டிக் கொண்டிருப்பர்.
விளக்கம்: நீர்மை என்றது, இங்கே இயற்கைப் பண்பு, எக்காலுமென்றது. வறுமையிலுஞ் செம்மையிலும் தக்கார் முன்னுந் தகாதார் முன்னும் என்க. ஏகராமும் ஆம் என்பதும் அசை. தேவரே யென்னும் ஏகாரம் பிரிநிலை. யாவரே யென்றார் தேவரல்லாதாரு மென்றற்கு. தேவர்; ஈண்டு நல்லோரென்னும் பொருட்டு.
|
செல்வம் நிலையாமை
அறத்துப்பால்
மெய்ம்மை
காலாடு போழ்திற் கழிகிளைஞர் வானத்து
மேலாடு மீனின் பலராவர் - ஏலா
இடரொருவர் உற்றக்கால் ஈர்ங்குன்ற நாட!
தொடர்புடையேம் என்பார் சிலர்.
குறிப்புரை: காலாடு போழ்தில் கழிகிளைஞர் வானத்து ஆடு மீனின் பலர் ஆவர் - சாய்கால் உண்டான காலத்தில் மேலே வானத்தில் விளங்குகின்ற விண்மீன்களைப்போல நெருங்கிய உறவினர் பலராவர், ஏலா இடர் ஒருவர் உற்றக்கால் - ஒவ்வாத வறுமையை ஒருவர் அடைவராயின், ஈர் குன்ற நாட - குளிர்ந்த மலைகளையுடைய நாடனே!, தொடர்புடையேம் என்பார் சிலர் - அக்காலத்தில், நட்புடையேம் என்று உரிமை பாராட்டுவோர் சிலராவர்.
கருத்து: சாய்காலுள்ளபோது பலரும் சூழ்ந்து நின்று, வறுமை வந்தபோது அவர் பிரிந்துபோவது உலகியற்கை.
விளக்கம்: உலகில் உண்மை நட்புடையோர் சிலர் என்றபடி - கால் ஆடு போழ்தில் - காலம் ஆக்கமாக நடைபெறுகின்ற போழ்தில் என்க; சாய்கால் என்பதன் பொருளும் அது; இலக்கணையால் ஈங்குச் செல்வாக்ககுணர்த்திற்று. விண்மீன்கள் பன்மைக்குஞ் செறிவுக்கும் உவமை. ‘சிலராவர்' எனவும், ‘ஒருவர் காலாடு போழ்தில்' எனவும் ஒட்டிக்கொள்க. சிந்தாமணியுரையில் நச்சினார்க்கினியர் ‘கண் ஆடி ஒன்று' என்று வருமிடத்தில் "கண் எல்லாரிடத்தும் உலாவிவென்று; கால் ஆடு போழ்தின், என்றாற் போல"
என்றுரைத்து இதனை எடுத்துக் காட்டினார். இதனாற் ‘கால்' என்பதை உடம்பின் உறுப்பாகிய கால் என்று அவர் கருதினமை பெறப்படும். இதனினுங் ‘காலம்' என்னும் மேலுரை அதற்குச் சிறக்குமா றறிந்துகொள்க.
சிந்.
|
செல்வம் நிலையாமை
அறத்துப்பால்
மெய்ம்மை
வடுவிலா வையத்து மன்னிய மூன்றில்
நடுவண தெய்த இருதலையும் எய்தும்
நடுவண தெய்தாதான் எய்தும் உலைப்பெய்
தடுவது போலுந் துயர்.
குறிப்புரை: வடு இலா வையத்து மன்னிய மூன்றில் குற்றமில்லாத உலகத்தில் இன்றியமையாதனவாய்ப் பொருந்திய அறம் பொருள் இன்பம் என்னும் மூன்று உறுதிப் பொருள்களுள், நடுவணது எய்த இருதலையும் எய்தும் - நடுவில் நின்றதான ‘பொருள்' என்பதை ஒருவன் அடைய அது காரணமாக அதன் இருபக்கத்தனவான ‘அறம்' ‘இன்பம்' என்னும் இரண்டையும் அவன் அடைவான், நடுவணது எய்தாதான் - அவ்வாறு நடுவில் நின்றதான செல்வப்பொருளை அடையாதவன், எய்தும் உலைப்பெய்து அடுவதுபோலும் துயர் - கொல்லன் உலையில் இட்டு இரும்பைக் காய்ச்சுவது போலும் வறுமைத் துன்பத்தை அடைந்து நைவன்.
கருத்து: தக்கோர்க்குப் பொருள் ஏனையெல்லா அறங்களையும் நல்கும்.
விளக்கம்: அறமுதலா உறுதிப் பொருள்களை நாடும் நல்லோரை நினைந்து ‘வடுவிலாவையம்' எனப்பட்டது. மூன்றறங்கள் கூறினார், இவற்றின் விடுதலை வீடாகலின் மன்னியவென்னும் நிலைபேற்று மொழியாற் கூறியது; இவற்றின் பேறு பல பிறவிகளிலுந் தொடர்தலின் என்க. ஒன்றன் படர்க்கையாதலின்
எய்தும் என்னுஞ் செய்யுமென் முற்று வந்தது. இச்செய்யுட்கு ஒரு விரிவுரை போலப் "பாரோர் சொலப்பட்ட மூன்றன்றே அம்மூன்றும், ஆராயிற் றானே அறம்பொருளின்ப மென்று, ஆரார் இவற்றின் இடையதனை எய்துவார், சீரார் இருதலையும் எய்துவர்"
என நாலாயிரப்பனுவல் விளக்கிச் செல்லுதலும் இங்கு நினைவு கூரற்பாலது.
தொல். வினை ;
.
சிறிய திருமடல்
-
|
செல்வம் நிலையாமை
அறத்துப்பால்
மெய்ம்மை
நல்லாவின் கன்றாயின் நாகும் விலைபெறூஉம்
கல்லாரே யாயினும் செல்வர்வாய்ச் சொற்செல்லும்
புல்லீரப் போழ்தின் உழவேபோல் மீதாடிச்
செல்லாவாம் நல்கூர்ந்தார் சொல்.
குறிப்புரை: நல் ஆவின் கன்றாயின் நாகும் விலை பெறூஉம் - உயர் இனத்து ஆவின் கன்றாயின் இளங்கன்றும் மிக்க விலைபெறும், கல்லாரே யாயினும் செல்வர் வாய்ச்சொல் செல்லும் - ஆதலின் படியாதவரேயாயினும் செல்வரது வாய்ச்சொல் மதிக்கப்படும். நல்கூர்ந்தார் சொல் புல் ஈரப் போழ்தின் உழவேபோல் மீதாடிச் செல்லா - வறிஞரது வாய்மொழி, அவர் கற்றவரே யாயினும், சிறிது ஈரமுள்ள காலத்தில் உழுகின்ற உழவுபோல மேலளவாய்ச் சென்று உள்ளே மதிக்கப்படாதொழியும்.
கருத்து: கல்வியுடையராயினும் உலகத்திற் செல்வமும் எய்தி வாழ முயலவேண்டும்.
விளக்கம்: ‘நல் ஆ' என்றது செல்வரையும், ‘நாகு' என்றது அவருட் படிப்பில் இளையராயினாரையும், ‘புல் ஈரம்' என்றது செல்வமில்லாக் கல்வியாளர்பால் உலகு காட்டுஞ் சிறு மதிப்பையுங் குறிப்பால் உணர்த்தின. ஏ, ஆம்அசை. புலவர் சொல்லேருழவ ராதலின்,
ஈண்டு உழவுவமை ஆற்றலுடைத்து.
புறம்.
|
செல்வம் நிலையாமை
அறத்துப்பால்
மெய்ம்மை
இடம்பட மெய்ஞ்ஞானங் கற்பினும் என்றும்
அடங்காதார் என்றும் அடங்கார்;- தடங்கண்ணாய்
உப்பொடு நெய்பால் தயிர்காயம் பெய்தடினும்
கைப்பறா பேய்ச்சுரையின் காய்.
குறிப்புரை: இடம்பட மெய்ஞ்ஞானம் கற்பினும் என்றும் - விரிவுமிக மெய்யுணர்வு நூல்களை என்றுங் கற்பினும், அடங்காதார் என்றும் அடங்கார் - இயல்பாக அமைந்தொழுகாதவர் என்றும் அமைந்தொழுகார்; தடம் கண்ணாய் -அகன்ற கண்களையுடைய மாதே!, உப்பொடு நெய் பால் தயிர் காயம் பெய்து அடினும் - உப்பொடு நெய் பால் தயிர் பெருங்காயம் இட்டுச் சமைத்தாலும், கைப்பு அறா பேய்ச் சுரையின் காய் - பேய்ச்சுரையின் காய்கள் தம் கசப்பியல்பு நீங்கா.
கருத்து: இயற்கைத் தன்மை எதனாலும் நீங்காது.
விளக்கம்: ஞானம்ஆகுபெயர். என்றுங் கற்பினுமெனக் கொண்டு வாழ்நாள் முழுமையும் கற்றாலும் என்று உரைத்துக்கொள்க. கண்ணாள் என்பது விளித்தலிற் கண்ணாய் என நின்றது.
பொதுவாம் முதன்மை நோக்கி உப்பு ஒடுக்கொடுத்துப் பிரிக்கப்பட்டது. நெய் பால் தயிர் என்பவற்றுள் எதனை இட்டு அடினும் என்பது கருத்து.
தொல். விளி.
|
செல்வம் நிலையாமை
அறத்துப்பால்
மெய்ம்மை
தம்மை இகழ்வாரை தாமவரின் முன்னிகழ்க;
என்னை அவரொடு பட்டது?- புன்னை
விறற்பூங் கமழ்கானல் வீங்குநீர்ச் சேர்ப்ப
உறற்பால யார்க்கும் உறும்.
குறிப்புரை: தம்மை இகழ்வாரைத் தாம் அவரின் முன் இகழ்க - தம்மைப் புறக்கணிப்பவரை அவரினும் முற்படத் தாம் புறக்கணிக்க; என்னை அவரொடு பட்டது - என்ன அவரோடு உண்டான தொடர்பு!, புன்னை விறல் பூகமழ் கானல் வீங்குநீர்ச் சேர்ப்ப - புன்னையின் வெற்றி வாய்ந்த மலர் மணங் கமழ்கின்ற சோலைகளையுடைய கடற்கரைத் தலைவ! உறற்பால யார்க்கும் உறும் - வரற்குரிய நன்மை தீமைகள் யார்க்கும் வரும்.
கருத்து: வருவன வந்தே தீருமாதலின் அதன் பொருட்டு உலகத்தில் யாரும் தம் கண்ணியத்தைக் குறைத்துக்கொள்ளுதலாகாது.
விளக்கம்: இகழ்தல் ஈண்டுப் புறக்கணித்தற்பொருட்டு அவரின் முன் - அவர் இகழ்தற்குமுன்பே. எதுவும் தம்பழ வினைப்படியே வருதலின், ‘என்னை அவரொடு பட்டது" என்றார். ‘உறற்பால தீண்டா விடுதல் அரிது,‘
என்றார் முன்னும் கடலின் புலால் நாற்றத்தைக் கடிதலின் புன்னைமலர்க்கு விறல் நுவலப்பட்டது. வீங்கு நீர் - கடல்; மிக்க நீர் என்னும் பொருட்டா வந்தது. பிறர்க்குத் தாழ்ந்தொழுகுவாரை நினைந்து ‘யா£க்கும்' என்றாரென்க.
நாலடி,
;
|
செல்வம் நிலையாமை
அறத்துப்பால்
மெய்ம்மை
ஆவே றுருவின வாயினும், ஆபயந்த
பால்வே றுருவின வல்லவாம்;- பால்போல்
ஒருதன்மைத் தாகும் அறநெறி, ஆபோல்
உருவு பலகொளல் ஈங்கு.
குறிப்புரை: ஆ வேறு உருவினவாயினும் ஆ பயந்த பால் வேறு உருவினஅல்ல - ஆக்கள் வேறுவேறு நிறத்தன வாயினும் அவ்வாக்கள் உதவிய பால்கள் அவ்வாறு வேறு வேறு நிறத்தன அல்ல; பால்போல் ஒரு தன்மைத்தாகும் அறம் - பாலைப்போல் அறம் ஒரே தன்மையுடையதாகும்; நெறி ஆ போல் உருவு பல கொளல் ஈங்கு - இவ்வுலகில் அவ்வறத்தை ஆற்றும் முறைகள் ஆக்களைப் போல் பல செயல்களாக உருக்கொள்ளற்குரியது.
கருத்து: இயன்ற செயல்களின் வாயிலாக அறத்தைத் தேடிக்கொள்ள வேண்டும்.
விளக்கம்: உரு, நிறத்திற்காயிற்று; ‘களங்கனியன்ன கதழ்ந்து கிளர் உருவின்‘
என்றார் பிறரும். கொளல் என்னும் முற்று ஈண்டு உடன்பாட்டிற் படர்க்கைக்கண் வந்தது. பல செயல் முகமாகவும் அறந் தேடிக் கொள்ளுதற்குரியதாக உலகத்தின் இயல்பு அமைந்திருக்கின்றதென்பது பொருள். ஆம்அசை.
மலைபடு,
|
செல்வம் நிலையாமை
அறத்துப்பால்
மெய்ம்மை
யாஅர் உலகத்தோர் சொல்லில்லார்? தேருங்கால்
யாஅர் உபாயத்தின் வாழாதார்? - யாஅர்
இடையாக இன்னாத தெய்தாதார்? யாஅர்
கடைபோகச் செல்வம்உய்த் தார்?
குறிப்புரை: தேருங்கால் - உலகியலை ஆராயுமிடத்து, யார் உலகத்து ஓர் சொல் இல்லார் - உலகத்தில் ஒரு பழிச் சொல் இல்லாதவர் யார்?, யார் உபாயத்தின் வாழாதார் - யாதானும் ஓர் ஏதுவினால் உலகில் வாழாதவர் யார்?, யார் இடையாக இன்னாதது எய்தாதார் - வாழ்வின் இடையே இடர் அடையாதார் யார்?, யார் கடைபோகச் செல்வம் உய்த்தார் - முடிவுவரையிற் செல்வத்தை நுகர்ந்தவர் யார்?, யாருமில்லை.
கருத்து: இன்ப துன்பங்கள் கலந்து வருவதே உலகியற்கை.
விளக்கம்: யார் என்னும் வினா ஒருவருமிலர் என்னும் விடையை உட்கொண்டது. ஈதொப்பதை ‘அறிபொருள் வினா' என்பர் சேனாவரையர்.
அறியலுறவினை அறிவுறுத்துதலின், இங்ஙனம் வினாவும் விடையாகும் என்பது. உபாயம் என்பது, பலவகைப்பட்ட தொழிலேதுக்களை உணர்த்தும். உய்த்தல் - ஆளல்; ஈண்டு நுகர்தலென்க.
தொல். கிளவி.
|
செல்வம் நிலையாமை
அறத்துப்பால்
மெய்ம்மை
தாஞ்செய் வினையல்லால் தம்மொடு செல்வதுமற்
றியாங்கணும் தேரின் பிறிதில்லை:- ஆங்குத்தாம்
போற்றிப் புனைந்த உடம்பும் பயமின்றே,
கூற்றங்கொண் டோடும் பொழுது.
குறிப்புரை: தேரின் - ஆராய்ந்தால், தாம் செய்வினையல்லால் தம்மொடு செல்வது யாங்கணும் பிறிது இல்லை - தாம் செய்த நல்வினை தீவினைகளல்லாமல் தம் உயிரோடு துணைவருவது எப்பிறவியிலும் பிறிதெதுவுமில்லை, ஆங்கு தாம் போற்றிப் புனைந்த உடம்பும் பயம் இன்று கூற்றம் கொண்டு ஓடும்பொழுது - கூற்றுவன் உயிரைப் பிரித்தெடுத்துக்கொண்டு செல்லும்பொழுது அதுகாறும் தாம் பாதுகாத்து அழகுகள் செய்துகொண்ட உடம்பும் அவ்வாறே பயனின்றாயிற்று.
கருத்து: செல்லுங் கதிக்கு உறுதுணையாக நல்வினைகள் செய்துகொள்ளல் வேண்டும்.
விளக்கம்: மற்று, ஏஅசை. ஆங்கு, பிறிதெதுவும் துணை வராததுபோல என்னும்பொருட்டு. போற்றிப் புனைந்தவென்பது, அச்செயல்களினும் புண்ணியம் ஈட்டுஞ் செயல் முதன்மையான தென்னுங் குறிப்பிற்று இது, குறிப்பெச்சமாக
வருவித்து உணர்ந்து கொள்ளப்படும்.
தொல். எச்.
|
செல்வம் நிலையாமை
அறத்துப்பால்
தீவினையச்சம்
துக்கத்துள் தூங்கித் துறவின்கட் சேர்கலா
மக்கள் பிணத்த சுடுகாடு - தொக்க
விலங்கிற்கும் புள்ளிற்கும் காடே புலன்கெட்ட
புல்லறி வாளர் வயிறு.
குறிப்புரை: சுடுகாடு துக்கத்துள் தூங்கித் துறவின் கண் சேர்கலா மக்கள் பிணத்த - உலகத்திலுள்ள சுடுகாடுகள், வாழ்க்கைத் துன்பங்களிற் கிடந்தழுந்தி, அவற்றினின்று நீங்குதற்குரிய துறவற நெறியிற் சார்ந்தொழுகாத கீழ்மக்களின் பிணங்களையுடையன; புலன் கெட்ட புல்லறிவாளர் வயிறு - ஆனால் நல்லறிவு கெட்ட புல்லறிவாளரின் வயிறுகளோ, தொக்க விலங்கிற்கும் புள்ளிற்கும் காடு- தொகுதியான விலங்குகளுக்கும் பறவைகளுக்கும் இடுகாடுகளாயிருக்கின்றன.
கருத்து: பிற உயிர்களைக் கொன்றுண்ணுந் தீ வினைக்கு அஞ்சுதல் வேண்டும்.
விளக்கம்: அருளொழுக்கமுடைய சான்றோர் நோய்கொண்டு மறையாமல், செயற்கருஞ் செயல்கள் செய்து தூயராய் மறைதலால்
அவர்கள் மறையும் இடம் புனிதமாகப் போற்றப்படுதலின், ‘சுடுகாடுகள் கீழ்மக்கள் பிணங்களையுடையன' எனப்பட்டது. அக்கீழ்மக்களினும் இழிந்தனவான சிற்றுயிர்களின் பிணங்களையுடையன புல்லறிவாளர் வயிறுகள் என்க. பல காலுந் தின்று உள்ளே செலுத்துதலின் ‘தொக்க' எனவும், நல்லோர் கூறும் அறவுரைகளையேனுங் கேட்டொழுகுதலில்லாமையின் ‘புல்லறிவாளர்' எனவும் உரைக்கப்பட்டன, ஏகாரம், ஈற்றசை.
|
செல்வம் நிலையாமை
அறத்துப்பால்
தீவினையச்சம்
இரும்பார்க்குங் காலராய் ஏதிலார்க் காளாய்க்
கரும்பார் கழனியுட் சேர்வர் - சுரும்பார்க்கும்
காட்டுளாய் வாழுஞ் சிவலும் குறும்பூழும்
கூட்டுளாய்க் கொண்டுவைப் பார்.
குறிப்புரை: சுரும்பு ஆர்க்கும் காட்டுளாய் வாழும் சிவலும் குறும்பூழும் கூட்டுளாய்க் கொண்டு வைப்பார் - வண்டுகள் ஆரவாரிக்கும் இனிய காட்டில் இருந்து உயிர் வாழும் கவுதாரியையும் காடையையும் கூட்டில் இருந்து வருந்தும்படி பிடித்துக்கொண்டு வந்து சிறை வைப்பவர். இரும்பு ஆர்க்கும் காலராய் ஏதிலார்க்கு ஆளாய் கரும்பார் கழனியுள் சேர்வர் - இருப்பு விலங்குகளாற் பூட்டப்பட்ட கால்களையுடையராகவேனும் அயலார்க்கு அடிமைப்பட்டவர்களாகவேனும் கட்டுப்பட்டு வலிய பார்நிலத்திலாதல் விளைநிலத்திலாதல் போய்த் தொழில் செய்து உழல்வர்.
கருத்து: சிற்றுயிர்களைச் சிறைப்படுத்துந் தீவினைக்கும் அஞ்சுதல் வேண்டும்.
விளக்கம்: "பூவைகிளி தோகைபுணர் அன்னமொடு பன்மா, யாவையவை தங்கிளையின் நீங்கி அழவாங்கிக், காவல் செய்து வைத்தவர்கள் தங்கிளையின் நீங்கிப் போவர்புகழ் நம்பி இது பொற்பிலது கண்டாய்"
என்றார் பிறரும். காலராய்க் கரும்பார் சேர்வர், ஆளாய்க் கழனியுட் சேர்வர் என நிரனிறையாகக் கொள்க. கரும்பார் சேர்தல் சிறைச்சாலைகளுட் செய்யுந்தொழில். இரும்புஆகுபெயர். சிவலும் குறும்பூழுமென்றது, இலக்கணையாற் பிற சிற்றுயிர்களையும் உணர்த்தும். பின் அடிகளில் வரும் ஆய் இரண்டனுள் முன்னது செய்தெனெச்சமும் பின்னது செயவெனெச்சமுமாகக் கொள்க.
சிந்.
|
செல்வம் நிலையாமை
அறத்துப்பால்
தீவினையச்சம்
அக்கேபோல் அங்கை யொழிய விரலழுகித்
துக்கத் தொழுநோய் எழுபவே - அக்கால்
அலவனைக் காதலித்துக் கான்முரித்துத் தின்ற
பழவினை வந்தடைந்தக் கால்.
குறிப்புரை: அக்கால் அலவனைக் காதலித்துக் கால் முரித்துத் தின்ற பழவினை வந்தடைந்தக்கால் - முற்பிறப்பில் நண்டின் ஊனை விரும்பி அதன் கால்களை ஒடித்துத் தின்ற பழவினை இப்போது வந்தடைந்தால், அக்குபோல் அங்கை ஒழிய விரல் அழுகித் துக்கத் தொழிநோய் எழுப - சங்கு மணிபோல வெண்ணிறமாய் உள்ளங்கைகள் மட்டும் இருக்க ஏனை விரல்களெல்லாம் அழுகிக் குறைந்து துன்பத்திற்கேதுவான தொழுநோய் உண்டாகப் பெறுவர்.
கருத்து: ஊனுண்ணுந் தீவினைக்கு அஞ்சி அதனைவிடல் வேண்டும்.
விளக்கம்: ஏகாரங்கள் அசைநிலை, ‘அங்கை' யென்பது "அகமென் கிளவிக்கு"
என்னும் விதிப்படி ‘அகங்கை' என நின்றது. ‘எழுப' வென்பது ஈண்டு உயர் திணை யீறு. அக்கால் கால் முரித்த விரல் இக்கால் அழுகிக் குறைந்த தென்பது.
தொல். புள்ளி.
|
செல்வம் நிலையாமை
அறத்துப்பால்
தீவினையச்சம்
நெருப்பழல் சேர்ந்தக்கால் நெய்போல் வதூஉம்
எரிப்பச்சுட் டெவவநோய் ஆக்கும் - பரப்பக்
கொடுவினைய ராகுவர் கோடாருங் கோடிக்
கடுவினைய ராகியார்ச் சார்ந்து.
குறிப்புரை: நெருப்பு அழல் சேர்ந்தக்கால் நெய்போல்வதும் எரிப்பச் சுட்டு எவ்வம் நோய் ஆக்கும் - உடம்புக்கு நன்மை செய்யும் நெய்யும் நெருப்பின் அழற்சியைப் பொருந்தினால், எரிந்து தீயும்படி சுட்டு மிக்க வருத்தந்தரும் நோயை உண்டாக்கும்; கோடாரும் கடுவினைய ராகியார்ச்சார்ந்து கோடிப் பரப்பக் கொடுவினையராகுவர் - நெறிகோணாத நல்லோரும் தீவினையாயினாரைச் சார்ந்து அதனால் நெறிகோணி மிக்க கொடுந்தொழிலுடையராவர்.
கருத்து: தீச்செயலாளரோடு சேர்தற்கு அஞ்சுதல் வேண்டும்.
விளக்கம்: ‘போல்வது' மென்பது ஒப்பில்போலி.
சார்ந்து என்னும் எச்சம் காரணப்பொருட்டு. இயல்பில் நல்லோரும் தீய சேர்க்கையால் திண்ணமாய்த் தீயோராக மாறி விடுவர் என்று அவ்வகையில் ஐயமின்மையை இச்செய்யுள் உணர்த்திற்று.
தொல். இடை.
|
செல்வம் நிலையாமை
அறத்துப்பால்
தீவினையச்சம்
பெரியவர் கேண்மை பிறைபோல நாளும்
வரிசை வரிசையா நந்தும் - வரிசையால்
வானூர் மதியம்போல் வைகலும் தேயுமே
தானே சிறியார் தொடர்பு.
குறிப்புரை: பெரியவர் கேண்மை பிறைபோல நாளும் வரிசை வரிசையா நந்தும் - சான்றோர் நட்பு பிறைத்திங்களைப் போல ஒவ்வொரு நாளும் முறைமுறையே வளரும்; சிறியார் தொடர்பு வான் ஊர் மதியம்போல் வைகலும் வரிசையால் தானே தேயும் - கீழோர் உறவு வானத்தில் தவழுகின்ற முழுத் திங்களைப்போல ஒவ்வொரு நாளும் முறையாகத் தானே தேய்ந்தொழியும்.
கருத்து: சிற்றினத்தாரோடு சேர்தற்கு அஞ்சுதல் வேண்டும்.
விளக்கம்: முழுத்திங்கட்கு ‘மதி' எனவும், குறைத்திங்கட்குப் ‘பிறை' எனவும் வரும் சொல் வழக்குக் கருத்திருத்துதற்குரியது. தானே என்பதை முன்னும் கூட்டலாம். ‘வரிசை வரிசையா' என்னும் அடுக்கு உவகைப்பொருட்டு. வான் ஊர்தல் பிறைக்கும் உரியதேனுஞ் சிறப்பு நோக்கி மதியத்துக்கு அடைமொழியாக வந்தது. இச் செய்யுளின் உவமமும் பொருளும் "நிறைநீர நீரவர்கேண்மைபிறை மதிப், பின்னீர பேதையார் நட்பு"
என்னுந் திருக்குறளில் உள்ளவாறே உள்ளன.
|
செல்வம் நிலையாமை
அறத்துப்பால்
தீவினையச்சம்
சான்றோ ரெனமதித்துச் சார்ந்தாய்மன் சார்ந்தாய்க்குச்
சான்றாண்மை சார்ந்தார்கண் இல்லாயின் சார்ந்தாய்கேள்
சாந்தகத் துண்டென்று செப்புத் திறந்தொருவன்
பாம்பகத்துக் கண்ட துடைத்து.
குறிப்புரை: சான்றோர் என மதித்துச் சார்ந்தாய்மன் - நீ சிலரைக் குணநிறைந்தவர் எனமதித்து மிகுதியும் உறவு கொள்கின்றனை; சார்ந்தாய்க்குச் சான்றாண்மை சார்ந்தார்கண் இல்லாயின் -அவ்வாறு உறவு கொள்ளும் நினக்கு நீ சார்வோரிடத்தில் குணநிறைவு காணப்படாதாயின், சார்ந்தாய் கேள் - ஆராயாமல் உறவுகொள்வோனே, கேட்பாய்; சாந்து அகத்து உண்டு என்று செப்புத் திறந்து ஒருவன் பாம்பு அகத்துக் கண்டது உடைத்து - அச்செயல், சந்தனம் உள்ளே இருக்கின்றதென்று கருதிச் சிமிழைத் திறந்து , ஒருவன், பாம்பை அதனுள் கண்டாற்போன்ற தன்மையுடையது.
கருத்து: எவரோடும் ஆராயாமல் நட்புக்கொள்வதற்கு அஞ்சுதல் வேண்டும்.
விளக்கம்: இச் செய்யுள் மனத்தை விளித்துக் கூறியபடி; மன்மிகுதிப்பொருட்டு. நிகழ்கால வினைகள் மனத்தின் விரைவு நோக்கி இறந்தகால வினைகளாக வந்தன.
உவமையிற் பாம்பென்றது பொருளில் தீக்குணங்களை. கருதி என ஒரு சொல் வருவிக்க.
தொல். வினை.
|
செல்வம் நிலையாமை
அறத்துப்பால்
தீவினையச்சம்
யாஅர் ஒருவர் ஒருவர்தம் உள்ளத்தைத்
தேருந் துணைமை யுடையவர் - சாரல்
கனமணி நின்றிமைக்கும் நாட!கேள்; மக்கள்
மனம்வேறு செய்கையும் வேறு.
குறிப்புரை: யார் ஒருவர் ஒருவர்தம் உள்ளத்தைத் தேரும் துணைமை உடையவர் - எவரொருவர், ஒருவரது உள்ளத்தைத்தேர்ந்து துணியும் ஆற்றலுடையவர்?, சாரல் கன மணி நின்று இமைக்கும் நாட கேள் - மலைச்சாரலில் பெரிய மாணிக்க மணிகள் கிடந்து ஒளிவிடும் நாடனே கேள்; மக்கள் மனம் வேறு செய்கையும் வேறு - உலகத்தில் மக்களின் உள்ளமும் வேறு செய்கையும் வேறாயிருக்கின்றனவே!
கருத்து: நட்பாராய்தலிலும் பலகால் பலவழியால் ஆராய்ந்து துணிதல் வேண்டும்.
விளக்கம்: நற்செயல் கண்டவுடன் உள்ளமும் அத்தகையதென்று உடனே துணிந்துவிடலாகாதென்பது பொருள். ‘யாரொருவர் உடையவர்' என்னும் வினா, அரிதாதல் நோக்கி எழுந்தது. துணைமை, துணையால் உண்டாம் ஆற்றல் கருதி அப்பொருட்டாயிற்று.
|
செல்வம் நிலையாமை
அறத்துப்பால்
தீவினையச்சம்
உள்ளத்தான் நள்ளா துறுதித் தொழிலராய்க்
கள்ளத்தான் நட்டார் கழிகேண்மை -தெள்ளிப்
புனற்செதும்பு நின்றலைக்கும் பூங்குன்ற நாட!
மனத்துக்கண் மாசாய் விடும்.
குறிப்புரை: உள்ளத்தான் நள்ளாது உறுதித் தொழிலராய்க் கள்ளத்தான் நட்டார் கழிகேண்மை அகத்தால் நேயங்கொள்ளாது, ஆனால் உறுதியான நேயத்துக்குரிய செய்கைகளை மேலே உடையவராய்க், கரவினால் நேயஞ் செய்தவரது மிக்க நட்பு! புனல் தெள்ளிநின்று செதும்பு அலைக்கும் பூ குன்ற நாட - நீர் தெளிவுடைய தாய் ஒழுகிச் சேற்றை அலைத்தொதுக்கும் அழகிய மலைகள் விளங்குகின்ற நாட்டையுடையவனே!, மனத்துக்கண் மாசாய்விடும் - என்றும் மனத்தில் வேதனை தருங் குற்றமாய் முடியும்.
கருத்து: மேலோடு செய்யும் நட்புக்கு அஞ்சுதல் வேண்டும்.
விளக்கம்: உன்ளத்தானென்றது ஈண்டு அகத்தன்பினால் என்னும்பொருட்டு; கழிகேண்மையென்றார் அத்தகைய நட்புக்கு முதலில், அவ்வாறு மிக நெருக்கமாயிருப்பதும் ஓர் அறிகுறியாதலின். ‘அல்வழியெல்லாம் உறழென மொழிப'
வாதலின் எதுகை நோக்கிப் ‘புனற்செதும்பு' எனத் திரிபேற்றது.
தொல். புள்ளி.
|
செல்வம் நிலையாமை
அறத்துப்பால்
தீவினையச்சம்
ஓக்கிய ஒள்வாள்தான் ஒன்னார்கைப் பட்டக்கால்
ஊக்கம் அழிப்பதூஉம் மெய்யாகும் - ஆக்கம்
இருமையுஞ் சென்று சுடுதலால் நல்ல
கருமமே கல்லார்கண் தீர்வு.
குறிப்புரை: ஓக்கிய ஒள் வாள் தன் ஒன்னார் கைப்பட்டக்கால் ஊக்கம் அழிப்பதூஉம் மெய்யாகும் - ஓங்கிய தனது ஒளிமிக்க வாள் தன் பகைவர் கையில் அகப்பட்டு விட்டால். அது தனது மனவலிமையைக் கெடுப்பதும் திண்ணமாகும்; ஆக்கம் - அவ்வாறே தீயோர் கைப்பட்ட தனது செல்வம் இருமையும் சென்று சுடுதலால் - இம்மை மறுமை என்னும் தன் இருமைப் பயன்களையும் தொடர்ந்து கெடுத்தலால், நல்ல கருமமே கல்லார்கண் தீர்வு - அத்தகைய மூடர்களிடத்தினின்று நட்பு நீங்குதல் அறச்செய்கையேயாகும்.
கருத்து: கல்லாத முடர் சேர்க்கையினின்று அஞ்சி விலகுதல் வேண்டும்.
விளக்கம்: ‘ஊக்கம் அழிப்பதும்' என்னும் உம்மை ‘மேல் உயிரை அழிப்பதும்' என்னும் எதிரது தழீஇயது. ‘கைப்பட்டக்கால்' என்பதை ஆக்கம் என்பதற்கும், ‘ஆகும்' என்பதைக் கருமமே என்பதற்குங் கொள்க. தனது பொருள் கல்லாத மூடர்வழியாகப் பலர்க்குந் தனக்குந் தீங்கு விளைத்தலாலும், இம்மையிற் செய்த வினைகள் மறுமையிலுந் தொடர்தலாலுந் ‘இருமையுஞ் சென்று சுடுதல்' நுவலப்பட்டது.
|
செல்வம் நிலையாமை
அறத்துப்பால்
தீவினையச்சம்
மனைப்பாசம் கைவிடாய் மக்கட்கென் றேங்கி
எனைத்தூழி வாழ்தியோ நெஞ்சே - எனைத்தும்
சிறுவரையே யாயினும் செய்தநன் றல்லால்
உறுபயனோ இல்லை உயிர்க்கு.
குறிப்புரை: மனைப்பாசம் கைவிடாய் மக்கட்கென்று ஏங்கி - மக்கட்கு நல்வாழ்க்கை அமையும் பொருட்டு மனம் ஏங்கி வாழ்க்கைப்பற்றை இன்னும் விடமாட்டாய்; எனைத்து ஊழி வாழ்தியோ நெஞ்சே - நெஞ்சமே, அதற்காக நீ எத்தனை ஊழி வாழவிருக்கின்றனையோ? எனைத்தும் சிறுவரையேயாயினும் செய்தநன்றல்லால் உறுபயனோ இல்லை உயிர்க்கு - சிற்றளவாயினும் செய்த அறச் செயலன்றி உயிர்க்கு அடையும் பயன் வேறு சிறிதும் இல்லை.
கருத்து: செய்யும் நல்வினைகளே உயிரோடு தொடர்ந்து வரும்.
விளக்கம்: "வாழச் செய்த நல்வினை யல்லது, ஆழுங் காலைப்புணைபிறி தில்லை"
என்றார் பிறரும். வாழ்நாள் சிறிதாதலை நினைந்து ‘எனைத்தூழி வாழ்தியோ' எனப்பட்டது. எனைத்தும் இல்லை என்று கூட்டுக‘உயிர்க்கு' என்ற¬யிமயன் மறுமை பெறப்படும்.
புறம்.
அறத்துப்பால் முற்றும் |
செல்வம் நிலையாமை
பொருட்பால்
[இது பொருளை உணர்த்தும் பகுதி; அறத்தைப்போல் இம்மை மறுமை வீடு என்னும் மூன்றற்கும் நேரே காரணமாதலின்றித், துய்த்தலானும் வழங்குதலானும் முறையே இம்மை மறுமை இரண்டற்கு மட்டும் ஓராற்றால் காரணமாதல் பற்றி, இப் பொருட்பால் அறத்துப்பாலை அடுத்து நின்றது.]
கல்வி
[கற்றற்குரிய நூல்களைக் கற்றல், பொருளைத் தேடுதற்கும் தேடிய பொருளைப் பயன்படுத்துதற்கும் கல்வி காரணமாதலின் இதுபொருட்பாலின்கண் அமைந்தது.]
குஞ்சி யழகும் கொடுந்தானைக் கோட்டழகும்
மஞ்சள் அழகும் அழகல்ல - நெஞ்சத்து
நல்லம்யாம் என்னும் நடுவு நிலைமையால்
கல்வி அழகே அழகு.
குறிப்புரை: குஞ்சி அழகும் கொடுதானைக் கோடு அழகும் மஞ்சள் அழகும் அழகு அல்ல -மயிர்முடியின் அழகும் வளைத்து உடுக்கப்படும்ஆடையின் கரையழகும் மஞ்சட் பூச்சின் அழகும்மக்கட்கு முடிந்த அழகுகள் அல்ல; நெஞ்சத்து நல்லம்யாம் என்னும் நடுவுநிலைமையால் கல்வி அழகே அழகு -நாம் நல்லமாக ஒழுகுகின்றோம் என்று தம் மனம்அறிய உண்மையாக உணரும் ஒழுக்கத்தைப் பயத்தலால்மக்கட்குக் கல்வியழகே உயர்ந்த அழகாகும்.
கருத்து: நல்லொழுக்கம் பயக்கும்கல்வியே மக்கட்கு உயர்வான அழகாகும்.
விளக்கம்: குஞ்சி, ஆடவர் தலைமயிர்முடி; மஞ்சள், சிறப்பாக மகளிர் பூசிக்கொள்ளும் மஞ்சள் நிறமான மணப்பூச்சு; தானைஇருபாலார் ஆடைக்கும் ஒக்கும்; ஆதலின்,இச்செய்யுள் பொதுவாக மக்கட்குரிய கல்வியழகைஉணர்த்திற்றென்க. "நடை வனப்பும் நாணின்வனப்பும் வனப்பல்ல, எண்ணோ டெழுத்தின் வனப்பவனப்பு"
எனப் பெண்பாலாரையும்உட்கொண்டு பிறரும் அறிவுறுப்பர்.
‘குஞ்சி' முதலியன இலக்கணையால்பிற அழகுகளையும் உட்கொண்டன. நெஞ்சத்து என்றார்,மனமறிய என்றற்கு; நடுநிலைமையா லென்றார்.உண்மையாக உணரும் என்றற்கு. ‘யாம் நல்லம்' என்றது,தலைமைபற்றி வந்த தன்மைப் பன்மை.
ஏலாதி.
|
செல்வம் நிலையாமை
பொருட்பால்
கல்வி
இம்மை பயக்குமால் ஈயக் குறைவின்றால்
தம்மை விளக்குமால் தாமுளராக் கேடின்றால்
எம்மை யுலகத்தும் யாங்காணேம் கல்விபோல்
மம்மர் அறுக்கும் மருந்து.
குறிப்புரை: இம்மை பயக்கும் -நல்வாழ்க்கையாகிய இம்மைப்பயனை விளைவிக்கும்;ஈயக் குறைவு இன்று - பிறர்க்குக் கற்பித்தலால்குறைவுபடுதல் இல்லை; தம்மை விளக்கும் - தம்மைஅறிவாலும் புகழாலும் விளங்கச் செய்யும்; தாம்உளராக் கேடு இன்று ஆல் - தாம் இருக்க அது கெடுதல்இல்லை ஆதலால், எம்மை உலகத்தும் யாம் காணேம்கல்விபோல் மம்மர் அறுக்கும் மருந்து -எப்பிறவியின் உலகத்திலும் கல்விபோல்அறியாமை மயக்கத்தைத் தீர்க்கும் மருந்தை யாம்காண்கின்றிலேம்.
கருத்து: கல்வியே, எல்லா வாழ்க்கையின்னல்கட்குங் காரணமான அறியாமையாகியமயக்கத்தைத் தீர்க்கும்.
விளக்கம்: ஆல் காரணப் பொருட்டால்ஒவ்வொன்றனோடும் வந்தது. ஈதல் - ஈண்டுக்கற்பித்தல், மக்கள் பல நாள் உள்ளவராகச்செல்வம் அதற்கு முன்னரே கெட்டொழிதலும்உண்டாதல் போலக் கல்வி கெடுதல்இல்லையென்றற்குத் ‘தாம் உளராக் கேடு இன்று'எனப்பட்டது. தேவருலகத்து அமிழ்தமும் உடற் பிணியைநீக்குமன்றி உயிர்ப்பிணியாகிய மருட்சியைத்தீர்க்காதாதலின் ‘எம்மை யுலகத்துங் காணேம்'என்றார். அறத்தீர்க்கும் என்றற்கு அறுக்கும் எனவந்தது; "துயரங்கள் அண்டா வண்ணம்அறுப்பான்"
என்புழிப்போல.
தேவா,
:
|
செல்வம் நிலையாமை
பொருட்பால்
கல்வி
களர்நிலத் துப்பிறந்த உப்பினைச் சான்றோர்
விளைநிலத்து நெல்லின் விழுமிதாக் கொள்வர்;
கடைநிலத்தோ ராயினுங் கற்றறிந் தோரைத்
தலைநிலத்து வைக்கப் படும்.
குறிப்புரை: களர் நிலத்துப் பிறந்தஉப்பினைச் சான்றோர் விளைநிலத்து நெல்லின்விழுமிதாக் கொள்வர்-உவர் நிலத்தில் தோன்றியஉப்பைப் பெரியோர் விளைநிலத்தில் உண்டாகும்நெல்லினும் மிக்க பயனுடையதாகப் பயன்படுத்துவர்;கடைநிலத்தோராயினும் கற்றறிந்தோரைத் தலைநிலத்து வைக்கப்படும் - ஆதலால், கீழ்க்குடியிற்பிறந்தோராயினும் கற்றறிந்தோரைமேற்குடியாரினும் மேலிடத்து வைத்து மதித்தல்உண்டாகும்.
கருத்து: கல்வி, மாந்தரைஉயர்வகுப்பாரினும் மேலவராக மதிக்க வைக்கும்.
விளக்கம்: "கீழ்ப்பாலொருவன்கற்பின் மேற்பாலொருவனும் அவன்கட் படுமே"என்றார் பிறரும். தேவராகக் கருதச் செய்யும்என்றபடி, தேவர்க்குப் புலவரென ஒரு பெயருண்மையானும்."தேவரனையர் கயவர்"
என்னுங்குறிப்பால் ‘தேவரனையர் புலவர்'
என்னும்அதன் மறை புலப்படுதலானும் இவ்வுண்மை தேறப்படும்.பயன் தெரிவோர் என்னுங் கருத்தால் ‘சான்றோர்'என உயர்த்துக் கூறப்பட்டது. கடைநிலம்என்றவிடத்து, நிலம், பிறந்த விடத்தைஉணர்த்திற்று, ‘கற்றறிந்தோரை வைக்கப்படும்'என்னும் முடிவு "வஞ்சரை அஞ்சப்படும்"
என்றாற்போல நின்றது.
புறம்.
குறள்.
:
.. நான்மணிக்.
.. குறள்.
:
|
செல்வம் நிலையாமை
பொருட்பால்
கல்வி
வைப்புழிக் கோட்படா; வாய்த்தீயிற் கேடில்லை;
மிக்க சிறப்பின் அரசர் செறின்வவ்வார்;
எச்சம் எனஒருவன் மக்கட்குச்செய்வன
விச்சைமற் றல்ல பிற;
குறிப்புரை: வைப்புழிக்கோட்படா -வைத்த இடத்திலிருந்து பிறரால் கரவிற்கொள்ளப்படாது; வாய்த்து ஈயின் கேடு இல்லை -நன்மாணாக்கர் வாய்த்து அவர்க்குக் கற்பிக்கநேருமானால் அதனால் அழிதல் இல்லை; மிக்கசிறப்பின் அரசர் செறின் வவ்வார் - தம்மினும்மிக்க செல்வாக்கினால் அரசர் வெகுளல் நேரினும்கவர இயலாதவராவர்; எச்சம் என ஒருவன் மக்கட்குச்செய்வன விச்சை மற்று அல்லபிற - ஆதலால்; வைப்புஎன ஒருவன் தன் மக்கட்குத் தேடி வைக்கத்தக்கவைகல்வியே, பிற அல்ல.
கருத்து: கல்வியே மக்கட்குத் தேடிவைக்கத் தக்க அழியாத செல்வம்.
விளக்கம்: "கேடில்விழுச்செல்வங் கல்வி"
யாதலின்இங்ஙனங் கூறினார். வாய்த்து என்றார். வாய்ப்பதுஅருமையாதலாலும், தக்கோர்க்கு ஈயின் அவர்வாயிலாகத் தமக்கும் வேறு பிறர்க்கும்பெருகுதலுண்டாதலாலுமென்க. மற்றுஅசை; பிற என்னுங்குறிப்புச் செல்வத்தின்மேற்று.
|
செல்வம் நிலையாமை
பொருட்பால்
கல்வி
கல்வி கரையில! கற்பவர் நாள்சில;
மெல்ல நினைக்கின் பிணிபல; - தெள்ளிதின்
ஆராய்ந் தமைவுடைய கற்பவே நீரொழியப்
பாலுண் குருகின் தெரிந்து.
குறிப்புரை: கல்வி கரை இல -கல்விகள் அளவில்லாதன; கற்பவர் நாள் சில -ஆனால், கற்பவர் வாழ்நாட்களோ சிலவாகும்; மெல்லநினைக்கின் பிணி பல - சற்று அமைதியாகநினைத்துப்பார்த்தால் அச் சில வாழ்நாட்களில்பிணிகள் பலவாயிருக்கின்றன; தெள்ளிதின்ஆராய்ந்து அமைவுடைய கற்ப நீர் ஒழியப் பால்உண்குருகின் தெரிந்து - நீர் நீங்கப் பாலைஉண்ணும் பறவையைப்போல அறிஞர்கள் பொருத்தமுடையநூல்களைத்தெரிந்து அவற்றைத் தெளிவுகொள்ளஆராய்ந்து கற்பார்கள்.
கருத்து: தக்க மெய்ந்நூல்களையேதெரிந்து தெளிவாகக் கற்றல் வேண்டும்.
விளக்கம்: மேலும்
இக் கருத்துவரும். கல்வியென்றது ஈண்டுக் கலை நூல்களும் பலதலையான சமய நூல்களுமாகும். பாலுண்குருகு, நீரைஉண்ணுதலொடு அமைதியடையும் பல பறவைகள்போலன்றிப் பாலுண்ணுதலில் மகிழ்வு மிகுதியுமுடையபறவையாகும்; அதனை அன்னப்புள் என்பது வழக்கு.அமைவென்றது, ஈண்டுத் தகுதி; அது மெய்யுணர்வைஉணர்த்தும். தெரிந்து ஆராய்ந்து கற்ப என்க.
நாலடி.
:
|
செல்வம் நிலையாமை
பொருட்பால்
கல்வி
தோணி யியக்குவான் தொல்லை வருணத்துக்
காணிற் கடைப்பட்டான் என்றிகழார் - காணாய்
அவன்துணையா ஆறுபோ யற்றேநூல் கற்ற
மகன்துணையா நல்ல கொளல்.
குறிப்புரை: தோணி இயக்குவான்தொல்லை வருணத்துக் காணின் கடைப்பட்டான் என்றுஇகழார் அவன் துணையா ஆறுபோயற்று - படகுசெலுத்துவோன் பழைமையான சாதிகளில்,நினைக்குமிடத்துக் கடைப்பட்ட சாதியைச்சேர்ந்தவனென்று புறக்கணியாராய் அவன் துணையாகஆற்றைக் கடந்துபோன தன்மையை ஒக்கும்; நூல்கற்றமகன் துணையா நல்ல கொளல் - அறிவு நூல்கள் கற்றபெருமகனொருவன் துணையாக மெய்ப்பொருள்களைஅறிந்து கொள்ளுதல் என்க.
கருத்து: கல்விக்கு முன் பிறப்பின்உயர்வு தாழ்வு கருதத்தக்கன அல்ல.
விளக்கம்: ‘நல்ல கொளல் ஆறுபோ யற்று' என்க;தோணியியக்குந் தொழில் இந்நாட்டிற் பழைமையானதென்பது தோன்றத் ‘தொல்லை வருணத்து' எனவும்,பிறப்பின் உயர்வு தாழ்வு கருதுதல் இயல்பன்று,என்பது தோன்றக் ‘காணின்' எனவும், எக்குடிபிறப்பினுங் கல்வி கேள்விகளுடையோரே மக்கள் எனமதிக்கற்பாலரென்பது தோன்ற ‘மகன்' எனவுங்கூறப்பட்டன. இகழார்; முற்றெச்சம்; காணாய்:முன்னிலை அசை. ஆறு கடத்த லென்னுங் குறிப்பால்,வாழ்க்கையாற்றைக் கடந்து கரை சேர்தற்குக்கற்றோர் துணை இன்றியமையாததென்பது பெறப்படும்.
|
செல்வம் நிலையாமை
பொருட்பால்
கல்வி
தவலருந் தொல்கேள்வித் தன்மையுடையார்
இகலிலர் எஃகுடையார் தம்முட் குழீஇ
நகலின் இனிதாயிற் காண்பாம் அகல்வானத்
உம்ப ருறைவார் பதி.
குறிப்புரை: தவல் அரு தொல்கேள்வித் தன்மையுடையார் இகல் இலர் எஃகுஉடையார் தம்முள் குழீஇ நகலின்இனிதாயின்-அழிதலில்லாத பழைமையான நூற்கேள்விப் பேறுடையராய் முரணிலராய்க்கூரறிவுடையராய் விளங்குங் கற்றோருட் சேர்ந்துஅளவளாவி மகிழ்தலினும் இனிமையுடையதாயின்,காண்பாம் அகல்வானத்து உம்பர் உறைவார் பதி-அகன்ற விண்ணின் மேலிடத்தில்உறையுந்தேவர்களின் திருநகரைக் காண முயல்வோம்.
கருத்து: துறக்க வின்பத்தினுங்கல்வியின்பமே உயர்ந்தது.
விளக்கம்: இஃது, அறிவு பொருளாகத்தோன்றும் உவகை;
தொன்றுதொட்டுஆசிரியமரபினாற் கேட்கப்பட்டு வரும் நூற்கேள்வியென அதன் சிறப்பியல்பு தோன்றும்பொருட்டுத் ‘தொல் கேள்வி' யென்றதோடு,அவ்வகைத் தன்மையுடையா ரெனவுங்கிளந்தோதப்பட்டது. இகலென்றது ஈண்டு, நூல் நெறிஉலக நெறியென்னும் இருவகை வழக்கோடும் முரண் என்க.இனி தாகாதென்றற்கு இனிதாயிற் காண்பாம்எனப்பட்டது. காண்பாமென்றது, பாராமுகமான சொல்,மேலிடம். என்றது, துறக்க வுலகை. பதி, அமராவதியென்ப: கல்வியைப் போலத் துறக்கவுலகம் பேதமைகெடுத்து நிலையான அறிவொளியின்பம்நல்காதாகலின், இவ்வாறு நுவலப்பட்டது.
தொல். மெய்ப்.
|
செல்வம் நிலையாமை
பொருட்பால்
கல்வி
கனைகடல் தண்சேர்ப்ப! கற்றறிந்தார் கேண்மை
நுனியின் கரும்புதின் றற்றே
- நுனிநீக்கித்
தூரின்தின் றன்ன தகைத்தரோ பண்பிலா
ஈரமி லாளர்
குறிப்புரை: கனைகடல் தண்சேர்ப்ப -ஒலிக்கும் கடலின் குளிர்ந்த துறைவ!.கற்றறிந்தார் கேண்மை நுனியின் கரும்பு தின்றற்று- கற்று மெய்ப்பொருள் அறிந்தொழுகுவாரது நேயம்கரும்பை அதன் நுனியிலிருந்து தின்று சுவைப்பதைப்போன்றது; நுனி நீக்கித் தூரின் தின்றன்ன தகைத்துபண்பு இலா ஈரம் இலாளர் தொடர்பு - நுனியை விடுத்துஅடிப்பகுதியிலிருந்து அதனைத் தின்றாற் போன்றதன்மையையுடையது அக் கல்விப் பண்பும் அன்பும்இல்லாதவரது நேயம்.
கருத்து: கற்றோர் தொடர்பு வரவரவளர்ந்து இனிக்குந் தன்மையது.
விளக்கம்: கல்வியறிவு ஈண்டுப் பண்புஎனப்பட்டது. அதனால் இயற்கையறிவுசெம்மைப்படுதலின். கல்வி பெறாதோரது நிலையைநன்கு விளக்குவார் ‘பண்பு இலா ஈரம் இலாளர்'என்றார். கரும்பை நுனியிலிருந்து தின்னல்மேன்மேற் சுவைத்தற்கு உவமை; தூரென்றது"வேருந்தூருங் காயும்"
என்புழிப்போலஈண்டுக் கரும்பின் அடிப்பகுதியை யுணர்த்தும்.
நாலடி
:
பரிபாடல்.
|
செல்வம் நிலையாமை
பொருட்பால்
கல்வி
கல்லாரே யாயினும் கற்றாரைச் சேர்ந்தொழுகின்
நல்லறிவு நாளுந் தலைப்படுவர் - தொல்சிறப்பின்
ஒண்ணிறப் பாதிரிப்பூச் சேர்தலாற் புத்தோடு
தண்ணீர்க்குத் தான்பயந் தாங்கு.
குறிப்புரை: கல்லாரேயாயினும்கற்றாரைச் சேர்ந்தொழுகின் நல்லறிவு நாளும்தலைப்படுவர் - தாம் கல்லாதவரே யாயினும்கற்றாரைச் சேர்ந்து பழகினால் பண்பட்டமெய்யறிவு வரவர உண்டாகப்பெறுவர்; தொல்சிறப்பின் ஒள்நிறப் பாதிரிப்பூச் சேர்தலால்புது ஒடு தண்ணீர்க்குத் தான் பயந்தாங்கு -இயற்கைமணச் சிறப்பினையுடைய விளக்கமான நிறம்அமைந்த பாதிரிமலரைச் சேர்தலால் புதியமட்பாண்டம் தன்கண் உள்ள தண்ணீர்க்குத் தான்அம்மணத்தைத் தந்தாற்போல வென்க.
கருத்து: கல்வி பயிலும்பேறில்லாதார் கற்றாரோடு சேர்ந்து பழகுதலாவதுமேற்கொள்ள வேண்டும்.
விளக்கம்: முறைமுறையே என்றற்கு‘நாளும்' எனவும், இயற்கை மணச்சிறப்பென்றற்குத்‘தொல்சிறப்' பெனவும் வந்தன. ஓடுஆகுபெயர்; புதியமட்பாண்டத்தில் முதலில் பாதிரி மலர்களைப்பெய்துவைத்துப் பின்பு அதில் நீரூற்றி நீர்க்குநறுமணங் கூட்டுதல் மரபாதலின், ‘பாண்டம் மணத்தைஏற்றுப் பின் நீர்க்குத் தரும் என்றற்குத் தான்பயந்தாங்கு' எனப்பட்டது. ஈண்டுத் ‘தான்' என்பதுபொருள் பயந்து நின்றது. உவமையணி.
|
செல்வம் நிலையாமை
பொருட்பால்
கல்வி
அலகுசால் கற்பின் அறிவுநூல் கல்லா
உலகநூ லோதுவ தெல்லாங் - கலகல
கூஉந் துணையல்லாற் கொண்டு தடுமாற்றம்
போஒந் துணையறிவா ரில்.
குறிப்புரை: அலகுசால் கற்பின்அறிவுநூல் கல்லாது உலகநூல் ஒதுவதெல்லாம் -அளவமைந்த கருவிக் கல்வியினால் ஞானநூல்களைக்கற்று மெய்ப்பயன் பெறாமல் உலக வாழ்வுக்குரியவாழ்க்கை நூல்களையே எப்போதும் ஓதிக்கொண்டிருப்பது, கலகல கூம் துணையல்லால்- கலகல என்றுஇரையும் அவ்வளவேயல்லால், கொண்டு தடுமாற்றம்போம் துணை அறிவார் இல்-அவ் வுலக நூலறிவு கொண்டுபிறவித் தடுமாற்றம் நீங்கு முறைமையைஅறிகின்றவர் யாண்டும் இல்லை.
கருத்து: கருவிக் கல்வி கொண்டுமெய்யுணர்வுக் கல்வி பெறுதலே, நோக்கமாதல்வேண்டும்.
விளக்கம்: உலக நூலென்றது முன்,"சத்தமும் சோதிடமும் என்றாங்கிவை"
எனப்பட்டவை. கலகலவென்பது இரட்டைக் கிளவி;பிரிந்திசையா
எல்லாம் என்றது, என்றும்அவற்றையே ஓதுங் குறிப்பின்மேற்று. கூவும் போவும்என்பன கூம்போம் என நின்றன.
.நாலடி.
;
.தொல். கிளவி.
|
செல்வம் நிலையாமை
பொருட்பால்
குடிப்பிறப்பு
[ குணத்தால் உயர்குவத்திற் பிறத்தலின் மேன்மை; ஈண்டுக் ‘குலம்’ என்றதுசாதியன்று: ஒவ்வொரு சாதியிலும் உயர்ந்த குலங்கள் உண்டு. திருக்குறளுரையில் உரையாசிரியர் பரிமேலழகர் "உயர்ந்த குடிப்பிறப்பு நால்வகை வருணத்தார்க்கும் இன்றியமையாதாகலின்" என
உரையெழுதிச் செல்லுதல் கருத்திற் பதிக்கற்பாலது.]'
உடுக்கை உலறி உடம்பழிந்தக் கண்ணுங்
குடிப்பிறப் பாளர்தங் கொள்கையிற் குன்றார்;
இடுக்கண் தலைவந்தக் கண்ணும் அரிமா
கொடிப்புற் கறிக்குமோ மற்று.
குறிப்புரை: இடுக்கண் தலைவந்தக்கண்ணும் அரிமா கொடிப் புல் கறிக்குமோ -பசித்துன்பம் மிகுந்து நின்ற போதும் சிங்கம்படர்புல்வைத் தின்னுமோ? அதுபோல்; உடுக்கை உலறிஉடம்பழிந்தக் கண்ணும் குடிப்பிறப்பாளர் தம்கொள்கையின் குன்றார் - உடை பொலிவழிந்து உடல்மெலிவடைந்த காலத்திலும் உயர்குடிப் பிறந்தோர்தமக்குரிய ஒழுகலாற்றிற் குறைவுபடார்.
கருத்து: உயர்குடிப்பிறந்தோராயின், இயல்பாகவேநல்லொழுக்கத்தினின்றும் வழுவார்.
விளக்கம்: உலறுதல்செழுமைகெடுதலாதலின் பொலிவழிந்தெனப்பட்டது;உடம்பழிந்தக்கண்ணு மென்பதில் உணவில்லாதகாலத்தும் என்னும் பொருள் குறிப்பிற் புலப்படும்கொள்கையென்றது, நல்லுணர்வு நல்லாழுக்கங்கள்,தலைவருதல் ஈண்டு மிகுதிமேற்று. கொடியோடிப் படரும்புல் கூறினார் வளம் உணர்த்தற்கு, "பசிபெரிதாயினும் புல்மேயா தாகும் புலி"
என்பர்பிறரும். மற்றுஅசை.
.குறள்,
ஆம் அதி. உரை.
.பழமொழி .
|
செல்வம் நிலையாமை
பொருட்பால்
குடிப்பிறப்பு
சான்றாண்மை சாயல் ஒழுக்கம் இவைமூன்றும்
வான்றோய் குடிப்பிறந்தார்க் கல்லது - வான்றோயும்
மைதவழ் வெற்ப! படாஅ பெருஞ்செல்வம்
எய்தியக் கண்ணும் பிறர்க்கு.
குறிப்புரை: வான் தோயும் மைதவழ்வெற்ப - மேகங்கள் தவழ்கின்ற வானளாவியமலைகளையுடைய நாடனே!, சான்றாண்மை சாயல் ஒழுக்கம்இவை மூன்றும் வான்தோய் குடிப்பிறந்தார்க்கல்லதுபடா பெருஞ் செல்வம் எய்தியக்கண்ணும் பிறர்க்கு -பெருந்தன்மை, மென்மை, கடைப்பிடி என்னும் இவைமூன்றும் உயர்வு பொருந்திய குடியிற்பிறந்தவர்க்கல்லது மிக்க செல்வம் உண்டானகாலத்தும் பிறர்க்கு உண்டாகமாட்டா.
கருத்து: நல்லொழுக்கங்கள்உயர்குடிப்பிறந்தோர்க்கு இயல்பாகவே மலரும்.
விளக்கம்: "சான்றாண்மை தீயினம் சேரக்கெடும்"
என்புழிப்போல ஈண்டும்அச்சொல் பெருந்தன்மைமேற்று, "சாயல் மென்மை”
யென்பர்ஆசிரியர் தொல்காப்பியர். ஒழுகுதலாவது ஒன்றைத்தொடர்புறச் செய்தலாதலின். அதுகடைப்பிடியென்றறியற்பாற்று, திருவள்ளுவரில்அன்புடைமை, விருந்தோம்பல், இனிமை கூறல்முதலியவாக நல்லொழுக்கங்கள் பலவுங் கூறிவரும்ஆசிரியர், இடையே ‘ஒழுக்கமுடைமை' எனத்தனியதிகாரம் ஒன்று நிறீஇயதும் இக் கருத்தின்கண்ணதென்க. பெருஞ் செல்வம் எய்தியக்கண்ணும்பிறர்க்குப் படா வெனவே, அஃதெய்தியக்கண்உயர்குடிப் பிறந்தார்க்கு இன்னும் அவ்வியல்புகள்சிறந்து தோன்றுமென்பது பெறப்பட்டது.
.நாலடி.
.தொல். உரி.
|
செல்வம் நிலையாமை
பொருட்பால்
குடிப்பிறப்பு
இருக்கை யெழலும் எதிர்செலவும் ஏனை
விடுப்ப ஒழிதலோ டின்ன-குடிப்பிறந்தார்
குன்றா வொழுக்கமாக் கொண்டார் கயவரோ
டொன்றா வுணரற்பாற் றன்று.
குறிப்புரை: இருக்கை எழலும்எதிர்செலவும் ஏனை விடுப்ப ஒழிதலோடு இன்ன -பெரியோரைக் கண்டால் தன் இருக்கையிலிருந்துஎழுதலும், சற்று எதிர்சென்று வரவேற்றலும், அவர்பிரியும்போது சற்றுப் பின்சென்று அவர் விடைதரஏனைப் பிரிந்து வருதலுமாகிய இத்தகைய பணிவுக்குணங்களை, சூடிப்பிறந்தார் குன்றா ஒழுக்கமாகக்கொண்டார், உயர்குடிப் பிறந்தார் கைவிடாநல்லொழுக்கமாக மேற்கொண்டொழுகுவர்; கயவரோடுஒன்றா உணரற்பாற்றன்று-இத் தகுதி, கீழ்மக்களாற்சிறந்ததொன்றாக உணர்ந்துகொள்ளுதற்குரியதன்று.
கருத்து: உயர்குடிப் பிறந்தாரேபணிவின் உயர்வை அறிந்துகொள்ளுந் தகுதியுடையர்.
விளக்கம்: கயவரோடு என்னும் உருபு,"ஊசியொடு குயின்ற தூசும் பட்டும்"
என்புழிப்போல நின்றது.
தொல். வேற்.
- உரை. |
செல்வம் நிலையாமை
பொருட்பால்
குடிப்பிறப்பு
நல்லவை செய்யின் இயல்பாகும் தீயவை
பல்லவர் தூற்றும் பழியாகும்; - எல்லாம்
உணருங் குடிப்பிறப்பின் ஊதிய மென்னோ,
புணரும் ஒருவர்க் கெனின்?
குறிப்புரை: நல்லவை செய்யின்இயல்பாகும் தீயவை பல்லவர் தூற்றும் பழியாகும் -உயர்குடிப் பிறந்தார் நற்காரியங்கள் செய்தால்அஃதவர்க்கு இயல்பென்று. கொள்ளப்படும். தீயவைசெய்தால் பலருந் தூற்றும் பழியாக முடியும்; எல்லாம்உணரும் குடிப்பிறப்பின் ஊதியம் என்னோ புணரும்ஒருவர்க்கெனின் - அவ்வாறானால்,உயர்குடிப்பிறப்பு ஒருவர்க்கு வாய்க்குமாயின்எல்லா நன்மைகளும் இயல்பாகவேஉணர்ந்தொழுகுதற்குரிய தகுதி வாய்ந்த அக்குடிப்பிறப்பினால் அவர் அடையும் ஊதியந்தான்யாதோ!
கருத்து: நல்லவை செய்தலை இயல்பாகஉடையது உயர்குடிப் பிறப்பெனின் அந்நிலையேஆக்கம் என்பது.
விளக்கம்: பல்லவர் என்னும் மிகுதிப்பாடு, தீயவைசிறிது செய்யினும் என்னும் பொருட்குறிப்புஉணர்த்திற்று. இது போல்வன "குறிப்பிற்றோன்றலும்"
என்பதனால் உணரப்படும்.எல்லாம் உணரும் என்றது, குடிப்பிறப்பின்சிறப்பியல்பு உணர்த்திற்று. ஊதியமென்னோஎன்றது, அதனினும் ஊதியம் மற்றென்னோ என்னும்உட்கோளுடையது. புணரும் ஒருவர்க்கெனின் என்றது,அதன் அருமை தோன்ற நின்றது. இச்செய்யுள்,பழித்தது போலப் புகழ்தலாய்க்குடிப்பிறப்பின்உயர்வை விளக்கிற்று. மேல்வருஞ் செய்யுளும்இத்தகைத்து.
தொல். பெய.
|
செல்வம் நிலையாமை
பொருட்பால்
குடிப்பிறப்பு
கல்லாமை அச்சம், கயவர் தொழிலச்சம்,
சொல்லாமை யுள்ளுமோர் சோர்வச்சம், - எல்லாம்
இரப்பார்க்கொன் றீயாமை அச்சம்; மரத்தாரிம்
மாணாக் குடிப்பிறந் தார்.
குறிப்புரை: கல்லாமை அச்சம்,கயவர் தொழில் அச்சம், சொல்லாமை யுள்ளும் ஓர்சோர்வு அச்சம். எல்லாம் இரப்பார்க்கு ஒன்றுஈயாமை அச்சம் - உயர்குடிப் பிறந்தார்க்குப்,படியாமை ஓர் அச்சம், கீழோர் தொழிலொன்றுசெய்தலும் அச்சம், சொல்லத் தகாதவற்றுள்தவறிச் சொல்லிவிடுதலொன்றும் அச்சம்,இரப்பார்க்கு ஒன்று ஈயாமை முழுவதும் அச்சம்; இம்மாணாக் குடிப் பிறந்தார் மரத்தார் - இவ்வாறுமாட்சிமையில்லா உயர் குடியிற் பிறந்தார்,நடுக்கடலில் மரக்கலத்திற் செல்வாரைஒத்தவராவர்
கருத்து: தீயவற்றிற்கு அஞ்சிவாழ்தற்குரிய உயர் குடிப் பிறப்பே சிறந்தது.
விளக்கம்: எல்லாம் என்றது முழுமையும்என்னும் பொருட்டு. ஈதல் இல்லொழுக்கங்களுள்தலையானதாதலின், அதற்கு இயலாமை நேரின் அதுமுற்றும் அஞ்சுதற்குரிய
தென்பது கருத்து.மரக்கலம் என்னும் பெயர், கலம் என்னுஞ்சொல்லால் வழங்குமாப்போல் மரம் என்னும்பெயராலும் வழங்குவதாயிற்று. முற்செய்யுளைப் போல்இதுவும் பழித்ததுபோலப் புகழ்தலாதலின்,‘மாணாக்குடி' எனப்பட்டது.
குறுந்.
|
செல்வம் நிலையாமை
பொருட்பால்
குடிப்பிறப்பு
இனநன்மை இன்சொல்ஒன் றீதல்மற் றேனை
மனநன்மை என்றிவை யெல்லாம் - கனமணி
முத்தோ டிமைக்கு முழங்குவரித் தண்சேர்ப்ப!
இற்பிறந்தார் கண்ணே யுள.
குறிப்புரை: கனமணி முத்தோடுஇமைக்கும் முழங்கு உவரித் தண்சேர்ப்ப-சிறப்புடைய மாணிக்க முதலிய மணிகள்முத்துக்களுடன் கிடந்து ஒளிர்கின்றஒலிக்குங்கடலின் குளிர்ச்சியான துறைவனே!இனநன்மை, இன்சொல், ஒன்று ஈதல், ஏனை மனநன்மைஎன்று இவையெல்லாம் இல்பிறந்தார் கண்ணேஉள-நல்லார் கூட்டுறவு, இன்சொல்லுடைமை,வறியார்க்கு ஒன்று ஈதல், ஏனை மனத் தூய்மைஎன இந்நற்பண்புகளெல்லாம் உயர்குடிப் பிறந்தாரிடமேஅமைந்திருக்கின்றன.
கருத்து: உயர்குடிப் பிறப்புநற்பண்புகட்கு இடமானது.
விளக்கம்: எல்லாவற்றிற்கும்அடிப்படையாகிய மன நன்மையை வேறு பிரித்தற்கு‘ஏனை' யென்றார். மற்று ஏனை என்னும் இரண்டும்ஈண்டுப் பிறிதென்னும் ஒரு பொருட்கண் வந்தன.கடலுக்கு முத்துச் சிறப்பாதலின், வேறு பிரித்துக்கூறினார். இமைக்கும் சேர்ப்ப என்க. ஏகாரம்:பிரிநிலை.
|
செல்வம் நிலையாமை
பொருட்பால்
குடிப்பிறப்பு
செய்கை யழிந்து சிதல்மண்டிற் றாயினும்
பொய்யா ஒருசிறை பேரில் உடைத்தாகும்;
எவ்வ முழந்தக் கடைத்துங் குடிப்பிறந்தார்
செய்வர் செயற்பா லவை.
குறிப்புரை: செய்கையழிந்து சிதல்மண்டிற்றாயினும்பொய்யா ஒரு சிறை பேர் இல் உடைத்தாகும் - வளமானபெரிய வீடு வளங்குறைந்த காலத்தில்கட்டுக்குலைந்து கறையான் கவ்விற்றாயினும் அது மழைஒழுக்கில்லாத ஒரு பக்கத்தை உடையதாயிருக்கும்,அதுபோல; எவ்வம் உழந்தக்கடைத்தும்குடிப்பிறந்தார் செய்வர்செயற்பாலவை-வறுமையினால் மிக்க துன்பத்திற்சிக்கி அலைப்புண்ட காலத்தும் உயர்குடியிற்பிறந்த நல்லோர் தாம் செய்தற்குரியநற்செயல்களைச் செய்துகொண்டேயிருப்பர்.
கருத்து: வறுமையிலுங் குடிப்பிறந்தார் தம் கடமைகள்செய்தலில் வழுவார்.
விளக்கம்: செய்கை - செய்த அமைப்பு; என்றது,கட்டுக்கோப்பு; செயற்பாலவை என்பன,"அறவோர்க் களித்தல் அந்தணரோம்பல்"
முதலிய கடமைகள்.
சிலப். |
செல்வம் நிலையாமை
பொருட்பால்
குடிப்பிறப்பு
ஒருபுடை பாம்பு கொளினும் ஒருபுடை
அங்கண்மா ஞாலம் விளக்குறூஉந் - திங்கள்போல்
செல்லாமை செவ்வனேர் நிற்பினும் ஒப்புரவிற்
கொல்கார் குடிப்பிறந் தார்.
குறிப்புரை: ஒரு புடை பாம்புகொளினும் ஒரு புடை அங்கண்மா ஞாலம் விளங்குறூஉம்திங்கள்போல் - ஒரு பக்கம் இராகுவென்னும் பாம்புபற்றிக் கொண்டாலும் தனது மற்றொரு பக்கத்தால்அழகிய இடமகன்ற பெரிய உலகத்தை ஒளிவிளங்கச்செய்யுந் திங்களைப்போல, செல்லாமை செவ்வன்நேர் நிற்பினும் ஒப்புரவிற்கு ஒல்கார்குடிப்பிறந்தார் - வறுமையினால் மாட்டாமைநிலைநன்றாக முன்நிற்பினும் உயர்குடிப் பிறந்தார்பிறர்க்கு உதவி செய்யும் வகைக்குத்தளரமாட்டார்.
கருத்து: பிறர்க்கு உதவும் வகையில்வறுமையிலும் - குடிப்பிறந்தார் தளரார்.
விளக்கம்:. "இடனில் பருவத்தும்ஒப்புரவிற்கு ஒல்கார்"
என்றார்திருவள்ளுவரும். பாம்பு கொளல் என்பது, திங்களைக்கோள்பிடித்து அதனொரு பகுதியை மறைத்தல்.வறுமையுடையார் சொல்லுஞ் செயலும் உலகில்செல்லாமை நினைந்து, அவ் வறுமை நிலையை ஆசிரியர்‘செல்லாமை' யென்றே விதந்தார்.
குறள்,
:
|
செல்வம் நிலையாமை
பொருட்பால்
குடிப்பிறப்பு
செல்லா விடத்துங் குடிப்பிறந்தார் செய்வன
செல்லிடத்துஞ் செய்யார் சிறியவர்; - புல்வாய்
பருமம் பொறுப்பினும் பாய்பரி மாபோல்
பொருமுரண் ஆற்றுதல் இன்று.
குறிப்புரை: செல்லாவிடத்தும்குடிப்பிறந்தார் செய்வன செல்லிடத்தும்செய்யார் சிறியவர் - வறுமையினால் மாட்டாநிலையிலும் உயர்குடிப்பிறந்தார்செய்யுங்கடமைகளைச் செல்வாக்கு நிலையிலுங்கீழ்குடிப் பிறந்தார் செய்யமாட்டார்; புல்வாய்பருமம் பொறுப்பினும் பாய் பரிமாபோல் பொரும்முரண் ஆற்றுதல் இன்று-மான். சேணந் தாங்கினாலும்பாயும் இயல்பினையுடைய குதிரையைப்போல்மாறுபட்டுப் போர் செய்யும் செருக்கினைச்செய்தல் இல்லை.
கருத்து: வறுமையிலும்குடிப்பிறந்தார் தங் கடமைகளைச் செய்யும்ஆற்றலுடையராவர்.
விளக்கம்: பருமம், சேணம் என்னும்பொருட்டு; "பருமம் களையாப் பாய்பரிக்கலிமா"
என்னும் நெடுநல்வாடையினும்இப்பொருள் காண்க. பொருதற்குரிய சேணந்தாங்கினும் பொருகின்ற முரணுள்ளம் மானுக்குஇல்லாமைபோல, உதவுதற்குரிய செல்வம் பெறினும்உதவுகின்ற வண்மையுள்ளம் கிழோர்க்கில்லையெனக்கொள்க. மேல், ‘கயமை' என்னும் அதிகாரத்தில்வரும் ‘ஏட்டைப் பருவத்தும்'
என்னுஞ்செய்யுளுங் கருதற்பாலது. எடுத்துக்காட்டுவமை.
நெடுநல்.
நாலடி.
|
செல்வம் நிலையாமை
பொருட்பால்
குடிப்பிறப்பு
எற்றொன்றும் இல்லா இடத்துங் குடிப்பிறந்தார்
அற்றுத்தற் சேர்ந்தார்க் கசைவிடத் தூற்றாவர்;
அற்றக் கடைத்தும் அகல்யா றகழ்ந்தக்கால்
தெற்றெனத் தெண்ணீர் படும்.
குறிப்புரை: எற்று ஒன்றும்இல்லாவிடத்தும் குடிப்பிறந்தார் அற்றுத் தன்சேர்ந்தார்க்கு அசைவிடத்து ஊற்று ஆவர் - கையில்எத்தகையதொரு பொருளும் இல்லாத காலத்தும்உயர்குடிப் பிறந்தார் ஆதரவற்றுத்தம்மையடைந்தவர்க்கு அவரது தளர்ச்சிக்காலத்தில் ஊன்றுகோல் போல் உதவுவர்; அற்றக்கடைத்தும் அகல் யாறு அகழ்ந்தக் கால் தெற்றெனத்தெள்நீர் படும் - நீரற்ற காலத்தும், அகன்ற ஆறுசற்றுக் குழிதோண்டியகாலத்தில் விரைவாகத்தெளிநீர் ஊறி உதவும்.
கருத்து: குடிப்பிறந்தார்எந்நிலையிலும் தம்மை அண்டியவரின் தளர்ச்சிக்காலத்தில் ஊன்றுகோல் போல் உதவுவர்.
விளக்கம்: எற்றொன்று மென்றார், சிறிதுமென்றற்குஊன்றுகோல் ஊன்றெனநின்று பின் ஊற்று என வலித்தது."உடம் புயிர்க்கு ஊற்றாக"
என்றார்பிறரும். மேல், பெருமை'
யென்னும்அதிகாரத்தில் வரும் ‘உறைப்பருங்காலத்தும்'என்னுஞ் செய்யுளையுங் கருதுக.
கலி. நெய்.
நாலடி.
|
செல்வம் நிலையாமை
பொருட்பால்
மேன்மக்கள்
[மேன்மக்களின் இயல்புகள் இன்னவென்பது; மேன்மக்களாவார், குணத்தான்மேம்பட்ட நன்மக்கள்.]
அங்கண் விசும்பின் அகனிலாப் பாரிக்குந்
திங்களுஞ் சான்றோரும் ஒப்பர்மன் - திங்கள்
மறுவாற்றும், சான்றோரஃ தாற்றார் தெருமந்து
தேய்வர் ஒருமா சுறின்.
குறிப்புரை: அங்கண் விசும்பின்அகல் நிலாப் பாரிக்கும் திங்களும் சான்றோரும் ஒப்பர் மன் - அழகியஇடமகன்ற வானத்தில் விரிந்த நிலவொளியைப்பரவச் செய்யும் திங்களும் மேன்மக்களும் தம்மிற்பெரும்பாலும் ஒத்த பெருமையுடையவராவர்; திங்கள்மறு ஆற்றும் சான்றோர் அஃது ஆற்றார் தெருமந்துதேய்வர் ஒரு மாசு உறின்-ஆனால்; திங்கள்களங்கத்தைத் தாங்கும்; மேன்மக்கள்தமதொழுக்கத்திற் சிறிது கறையுண்டானால் அதுபொறாராய் உள்ளங் குழம்பி அழிவர்.
கருத்து: திங்களைப்போற்சான்றோர் மறுவாற்றாராதலின், அவர் அதனினுஞ்சிறந்தவராவர்.
விளக்கம்: ஒப்பரென்னும் முடிபுதிணைவழுவமைதி; "மூத்தோர் குழவி எனுமிவரை"
என்புழிப்போல. ஒப்புஇருள் நீங்கித் தண்ணொளிவழங்குதலிற் கொள்க. மன்: மிகுதிக்கண் வந்துஈண்டுப் பெரும்பாலுமென்னும் பொருட்டாயிற்று;ஆதலால், அதனாற் பெறப்படுகின்ற சிறுபான்மைவேறுபாடு, பின் இரண்டடிகளில் விளக்கப்பட்டது.ஆற்றார்:முற்றெச்சம். வேற்றுமையணி.
சிலப்.
|
செல்வம் நிலையாமை
பொருட்பால்
மேன்மக்கள்
இசையும் எனினும் இசையா தெனினும்
வசைதீர எண்ணுவர் சான்றோர்; - விசையின்
நரிமா உளங்கிழித்த அம்பினின் தீதோ,
அரிமாப் பிழைப்பெய்த கோல்?
குறிப்புரை: இசையும் எனினும் இசையாதெனினும் வரை தீர எண்ணுவர் சான்றோர் -கைகூடுமெனினும் கை கூடாதெனினும் பழித்தலில்லாதவகையில் அரிய காரியங்களையே மேன்மக்கள்எண்ணிச் செய்வர்; விசையின் நரிமா உளம்கிழித்த அம்பினின் தீதோ அரிமாப் பிழைப்புஎய்த கோல் - விரைவோடு நரி என்னும் விலங்கின்நெஞ்சைக் கிழித்துச் சென்ற அம்பைவிடப்பழிப்புடையதோ, சிங்கத்தினிடம் தவறுதலைப்பொருந்திய அம்பு?
கருத்து: அரிய காரியங்களையேஎண்ணிச் செய்வது மேன்மக்கள் இயல்பு.
விளக்கம்: வசையாவது, ‘சிறியர்செயற்கரிய செய்கலாதார்"
என்பது,‘அரிமாப் பிழைப்பெய்த' என்பதற்கு, அரிமாதவறிப் போதலுக்கு ஏதுவான நிலையையடைந்த கோல்என்பது கருத்து. "கான முயலெய்த அம்பினில் யானை,பிழைத்தவேல் ஏந்தல் இனிது"
என்னுந்திருக்குறளை ஈண்டு நினைவு கூர்க.
|
செல்வம் நிலையாமை
பொருட்பால்
மேன்மக்கள்
நரம்பெழுந்து நல்கூர்ந்தா ராயினுஞ் சான்றோர்
குரம்பெழுந்து குற்றங்கொ ண்டேறார்; - உரங்கவறா
உள்ளமெனும் நாரினாற் கட்டி உளவரையாற்
செய்வர் செயற்பா லவை.
குறிப்புரை: நரம்பெழுந்துநல்கூர்ந்தா ராயினும் சான்றோர் குரம்பெழுந்துகுற்றங்கொண்டு ஏறார் - உடம்பில் நரம்பு மேலேதோன்றும்படி
வறுமையெய்தினாராயினும்மேன்மக்கள் தமது நல்லொழுக்கத்தின் வரம்புகடந்து பிழையான வழிகளை மேற்கொண்டு அவற்றில்தொடர்ந்து செல்லமாட்டார்; உரம் கவறாஉள்ளமெனும் நாரினால் கட்டி - அறிவு பனைவிட்டமாகமுயற்சியென்னும் நாரினால் அத் தீய நினைவைக்கட்டுப்படுத்தி, உளவரையால் செய்வர் செயற்பாலவை- செய்தற்குரியநற்செயல்களைத் தமக்குள்ளபொருளளவினால் செய்து வருவர்.
கருத்து: வறுமையினால் மேன்மக்கள்,தவறிய வழிகளிற் செல்லார்.
விளக்கம்: குரம்பென்னுஞ் சொல்வரம்பென்னும் பொருட்டு; "குரம்புகொண் டேறி"
என்றார் பிறரும். நார் என்று வந்தமையாற் கவறுஎன்பது பனைவிட்டத்துக் காயிற்று; பிளவுள்ளபனம்பட்டை கவறெனப்படும்; கவர் என்னுஞ்சொல்ரகர றகர வேற்றுமையின்றிக் கவறு என வந்தது.
திருமுருகாற்.
மணிமே.
|
செல்வம் நிலையாமை
பொருட்பால்
மேன்மக்கள்
செல்வுழிக் கண்ணொருநாட் காணினுஞ் சான்றவர்
தொல்வழிக் கேண்மையிற் றோன்றப் புரிந்தியாப்பர்;
நல்வரை நாட! சிலநாள் அடிப்படின்
கல்வரையும் உண்டாம் நெறி:
குறிப்புரை: செல்வுழிக்கண் ஒருநாள்காணினும் சான்றவர் தொல்வழிக் கேண்மையின்தோன்றப் புரிந்துயாப்பர் - வழிச்செல்லுங்காலத்தில் ஒருவரை ஒரு நாள் கண்டாலும்மேன்மக்கள் பழைமைவழியான நேயம்போல் தோன்றஅன்புசெய்து அவரைப் பிணிப்பர்; நல்வரை நாட -உயர்ந்த மலைகளையுடைய நாடனே!. சில நாள்அடிப்படின் கல் வரையும் உண்டாம் நெறி - சில நாள் நடந்து பழகியதாயின் கல்லுள்ளமலையும் வழி உண்டாகப் பெறும்.
கருத்து: ஒரு நாள் பழகினும் சான்றோர் பிறருள்ளத்தைக் கவர்ந்துவிடுவர்.
விளக்கம்: பலகாற் பழகியநேயம்போல் என்றற்குத் ‘தொல்வழிக்கேண்மையின்' எனப்பட்டது. அடிப்படின் - பயின்றால்;கால் பட்டுப் பயின்றாலென்க. பலநாட்பழகியகாரணத்தால் நட்புண்டாகப் பெறுதலில்வியப்பொன்று மில்லையே என்றற்கு, ‘அடிப்படின்நெறியுண்டாம்' என்றார். தூய உணர்ச்சிச் சிறப்பேநட்புக்கு ஏதுவென்பது இச்செய்யுட் கருத்து;"உணர்ச்சிதான் நட்பாங்கிழமை தரும்"
என்றதுங் காண்க.
|
செல்வம் நிலையாமை
பொருட்பால்
மேன்மக்கள்
புல்லா வெழுத்திற் பொருளில் வறுங்கோட்டி
கல்லா ஒருவன் உரைப்பவுங் கண்ணோடி
நல்லார் வருந்தியுங் கேட்பரே, மற்றவன்
பல்லாருள் நாணல் பரிந்து.
குறிப்புரை: புல்லா எழுத்தின்பொருளில் வறுங்கோட்டி கல்லா ஒருவன் உரைப்பவும் -பொருந்தாக் கல்வியையுடைய மெய்யுணர்வில்லாதவீணோரவையில் கல்வியறிவு நிரம்பப்பெறாதஒருவன் உரையாடவும், கண்ணோடி நல்லார் வருந்தியும்கேட்பர் அவன் பல்லாருள் நாணல் பரிந்து-மேன்மக்கள் கண்ணோட்டமுற்று, உள்ளம்வருந்தியுங் கேட்டுக்கொண்டிருப்பர், தாம்கேளாதொழியின் அவன் பலரிடையில் நாணங்கொள்ளநேர்தற்கு இரங்கியென்க.
கருத்து: மேன்மக்கள் கல்வியறிவும்மெய்யுணர்வும் வாய்ந்து அவையில் அடக்கமுங்கண்ணோட்டமு முடையராயிருப்பர்.
விளக்கம்: எழுத்து, ஈண்டுக்கல்வியென்னும் பொருட்டு; "மயங்கா மரபின்எழுத்துமுறை காட்டி"
என்பதும் ஈண்டுநினைவுகூர்தற்குரியது. ‘பொருள்' என்றது மெய்ம்மை;"பொய்யுரையே யன்று பொருளுரையே"
என்றார் பிறரும்; இங்கு மெய்யுணர்வு என்னும்பொருட்டு. ‘வறுங்கோட்டி' என்னுமிடத்து வறுமைபயனின்மை: "வெள்ளைக் கோட்டியும் விரகினில்ஒழிமின்"
என்புழிப் போல, உம்மைஇரண்டனுள் முன்னது எச்சமெனவும் பின்னதுஇழிவுசிறப்பெனவுங் கொள்க.மற்று:அசை.
தொல். சிறப்புப்பா.
.
சிலப்.
.
சிலப்.
|
செல்வம் நிலையாமை
பொருட்பால்
மேன்மக்கள்
கடித்துக் கரும்பினைக் கண்தகர நூறி
இடித்துநீர் கொள்ளினும் இன்சுவைத்தே யாகும்;
வடுப்பட வைதிறந்தக் கண்ணுங் குடிப்பிறந்தார்
கூறார்தம் வாயிற் சிதைந்து.
குறிப்புரை: கடித்துக் கரும்பினைக்கண் தகர நூறி இடித்து நீர் கொள்ளினும்இன்சுவைத்தேயாகும் - கரும்பினைப் பல்லினாற்கடித்தும், கணுக்கள் உடையும்படி ஆலையிலிட்டுச்சிதைத்தும், பிற கருவிகளால் இடித்தும் அதன்சாற்றைக் கொண்டாலும், அச் சாறு இனியசுவையுடையதேயாகும்; வடுப்பட வைது இறந்தக்கண்ணும்குடிப்பிறந்தார் கூறார் தம் வாயின் சிதைந்து -பழியுண்டாகும்படி தம்மைப் பிறர் பழித்து வரம்புகடந்தபோதும்
மேன்மக்கள் தமதுபெருந்தன்மையிற் குறைந்து வாயினால் தீயன கூறார்.
கருத்து: பிறரால் இடுக்கணுற்றவிடத்தும் சான்றோர் இனியராகவே ஒழுகுவர்.
விளக்கம்: கடித்தும் நூறியும்இடித்தும் என்று கொள்க. தம் வாயின் சிதைந்து, தமதுஉண்மை நிலையினின்றும் மாறி எனினுமாம், ஆவது, தம்பெருந்தன்மையினின்றுங் குறைந்து என்க.எடுத்துக்காட்டுவமை,
நாலடி.
|
செல்வம் நிலையாமை
பொருட்பால்
மேன்மக்கள்
கள்ளார், கள் ளுண்ணார், கடிவ கடிந்தொரீஇ,
எள்ளிப் பிறரை இகழ்ந்துரையார், - தள்ளியும்
வாயிற்பொய் கூறார், வடுவறு காட்சியார்
சாயிற் பரிவ திலர்.
குறிப்புரை: வடு அறு காட்சியார் -மாசு நீங்கிய தெளிவினையுடையார், கள்ளார் -பிறர் பொருளைக்கவரார்; கள் உண்ணார் - கள்அருந்தார்; கடிவ கடிந்து ஒரீஇ- விலக்கத் தகுந்ததீயவற்றை விலக்கி அவற்றின் நீங்கித் தூயராகி,எள்ளிப் பிறரை இகழ்ந்து உரையார் - பிறரைஅவமதித்து இகழ்ந்து உரையாடாமல் விளங்குவர்;தள்ளியும் வாயின் பொய் கூறார் - சோர்ந்தும்தம் வாயினாற் பொய் சொல்லார், சாயின் பரிவதுஇலர் - வினைவயத்தால் தம் செல்வாக்குக்குறையின், அதற்காக வருந்துவதும் இலராவர்.
கருத்து: சான்றோர்பால்இயல்பாகவே தீய குணங்கள் இல்லை.
விளக்கம்: ஓரீஇ என்னும் எச்சத்தைஓரீஇ நிற்பர் என ஒரு தனிக் கருத்தாகக்கொள்ளலும், தள்ளியும் என்பதற்குப் பிறர் தம்மைஅவமதித்து ஒதுக்கியும் எனலும் ஆம், காட்சியார்,பெயர்.
|
செல்வம் நிலையாமை
பொருட்பால்
மேன்மக்கள்
பிறர்மறை யின்கட் செவிடாய்த் திறனறிந்
தேதிலா ரிற்கட் குருடனாய்த் தீய
புறங்கூற்றின் மூகையாய் நிற்பானேல், யாதும்
அறங்கூற வேண்டா அவற்கு.
குறிப்புரை: பிறர் மறையின்கண்செவிடாய் - பிறருடைய மறைந்த கருத்துக்களைக்கேட்டலிற் செவிடுடையனாய், ஏதிலார் இல்கண்குருடனாய்-அயலார் மனைவியரைக் காமக் கருத்துடன்நோக்குதலிற் குருடுடையனாய். தீய புறங்கூற்றின்மூகையாய்-தீயவான புறங்கூற்று மொழிகளைக் கூறுதலில்ஊமையுடையனாய், திறன் அறிந்து நிற்பானேல் -வாழ்க்கையில் துன்பம் உண்டாகுங் கூறுகள்இவையென்றறிந்து ஒருவன் ஒழுகுவானாயின், யாதும்அறம் கூறவேண்டா அவற்கு - அவனுக்குப் பிறர் வேறுயாதும் அறம் அறிவுறுக்கவேண்டா.
கருத்து: வாழ்க்கையில் துன்பம்உண்டாக்குங்கூறுகள் இவையென்றறிந்து மேன்மக்கள்அவற்றின் நீங்கியொழுகுவர்.
விளக்கம்: திறனறிந்து நிற்பானேல்என்க. காதிருந்தும் கண்ணிருந்தும் வாயிருந்தும்ஒருவன் செவிடாய்க் குருடாய் ஊமையாய்நிற்கவேண்டுமிடம் இன்னவென்றது. இச் செய்யுளில்நயமுடையது. "சொல்லும் மறையிற் செவியிலன்தீச்சொற்கண் மூங்கை"
முதலிய பிறர் வாய்மொழிகளும் நினைவு கூர்க. இம் மூவகை யறமேபோதுமென்பார் "யாதும் அறங் கூறவேண்டா"என்றார்.
ஏலாதி.
|
செல்வம் நிலையாமை
பொருட்பால்
மேன்மக்கள்
பன்னாளுஞ் சென்றக்கால் பண்பிலார் தம்முழை
என்னானும் வேண்டுப என்றிகழ்ப; - என்னானும்
வேண்டினும் நன்றுமற் றென்று விழுமியோர்
காண்டொறுஞ் செய்வர் சிறப்பு:
குறிப்புரை: பல் நாளும்சென்றக்கால் - பலமுறையும் ஒருவர் சென்றால்,‘பண்பிலார் - நற்பண்பில்லாத கீழ் மக்கள், தம்உழை என்னானும் வேண்டுப என்று இகழ்ப - தம்மிடம்ஏதாவது உதவி வேண்டுவார் என்று அவரை அவமதிப்பர்;விழுமியோர் - ஆனால் மேன்மக்கள், என்னானும்வேண்டினும் நன்று என்று - அவர் ஏதாவது உதவிவிரும்பினாலும் நல்லது என்று கருதி, காண்டொறும்செய்வர் சிறப்பு - அவரைப்பார்க்கும்போதெல்லாம் பெருமை செய்வர்.
கருத்து: மேன்மக்கள் பிறர்க்குஉதவி செய்தலில் விருப்பமுடையவராயிருப்பர்.
விளக்கம்: பன்னாளென்றது, பலமுறையென்னும் பொருட்டு. ‘பண்பிலார்' என்னுஞ் சொல்படர்க்கையாதலின்.
‘சென்றக்கால்'என்னும் படர்க்கையிடத்திற்குரிய வினை வந்தது.என்னானும் வேண்டினும் என்றற்கு எது வேண்டினாலும்என்றுரைத்தலும் ஒன்று.
தொல். கிளவி.
|
செல்வம் நிலையாமை
பொருட்பால்
மேன்மக்கள்
உடைய ரிவரென் றொருதலையாப் பற்றிக்
கடையாயார் பின்சென்று வாழ்வர் - உடைய
பிலந்தலைப் பட்டது போலாதே, நல்ல
குலந்தலைப் பட்ட விடத்து.
குறிப்புரை: உடையார் இவர் என்று ஒருதலையாப்பற்றிக் கடையாயார் பின் சென்றுவாழ்வர் - பொருளுடையார் இவர் என்று உறுதியாகப்பற்றி மக்களிற் பெரும்பாலார் கீழ்மக்கள்பின்சென்று உயிர் வாழ்வர்; உடையபிலம்தலைப்பட்டது போலாதே நல்ல குலம் தலைப்பட்டவிடத்து-சிறந்த மேன்மக்களினத்தைச்சேரப்பெற்ற போது, அஃது உரிமையுடைய ஒருபொருட்சுரங்கத்தைத் தலைப்பட்டதுபோ லாகாதோ?
கருத்து: மேன்மக்கள் சேர்க்கையேஎல்லா நலங்களும் பெருக அடைவதற்குரியது.
விளக்கம்: பொருளொன்றே கருதியென்றற்கு ‘உடையார் இவர்' என்றும்,பொருளுடையராயினுங் குணநலமில்லாதார்கீழ்ப்பட்டவரே யென்றற்கு ‘கடையாயார்' என்றுங்கூறினார். பற்றி-ஆதரவாகக் கொண்டு. தொங்கித்தொடரும் எளிமை, தோன்றப் ‘பின்சென்று வாழ்வர்'என்றார். மேன்மக்கள் எஞ்ஞான்றும்பிறர்க்குரியராதலின், உரிமையுடைய பிலம்என்றற்கு ‘உடையபிலம்' எனப்பட்டது.தமக்குடைமையான பிலம் எனப் பொருள்விரித்தலுமாம். "உடைப்பெருஞ் செல்வர்"
என்றார் பிறரும். ஏகாரம்வினா.
புறம்,
|
செல்வம் நிலையாமை
பொருட்பால்
பெரியாரைப் பிழையாமை
[பெரியாரை அவமதித்து நடவாமை]
பொறுப்பரென் றெண்ணிப் புரைதீர்ந்தார் மாட்டும்
வெறுப்பன செய்யாமை வேண்டும்; - வெறுத்தபின்
ஆர்க்கும் அருவி யணிமலை நன்னாட!
பேர்க்குதல் யார்க்கும் அரிது.
குறிப்புரை: பொறுப்பர் என்றுஎண்ணிப் புரைதீர்ந்தார் மாட்டும் வெறுப்பனசெய்யாமை வேண்டும் - பொறுத்துக் கொள்வார் என்றுநினைத்து மாசுநீங்கிய பெரியோரிடத்திலும் அவர்வருந்தத்தக்க பிழைகளைச் செய்யாதிருத்தல்வேண்டும்; வெறுத்தபின் - அவர் உள்ளம் அதனால்வருந்தியபின், ஆர்க்கும் அருவி அணி மலை நல் நாட -ஆரவாரித்தொலிக்கும் அருவிகளையுடைய அழகியமலைகள் பொருந்திய சிறந்த நாடனே; பேர்க்குதல்யார்க்கும் அரிது - அவ் வருத்தத்தால் உண்டாகுந்தீங்கை நீக்கிக் கொள்ளுதல் எத்தகையவர்க்கும்இயலாது.
கருத்து: பெரியோரைஅவமதித்தொழுகினால் தீர்வில்லாததீங்குண்டாகும்.
விளக்கம்: பெரியோர்பொறுத்தற்குரியோராயினும் அவர் உள்ளத்துக்குஆகாதன அவரொழுகலாற்றிற்கு ஊறு பயக்குமாதலின்‘வெறுப்பன செய்யாமை வேண்டும்' எனவும், இவைபொருந்தாதன என்று அவர் கருதுதலே ஈண்டுவருந்தியதாகுமாதலின் ‘வெறுத்தபின்' எனவும்.எத்தகைய ஆற்றல் படைத்தவர்க்கும் அதனால்விளையுந்தீங்குகளை நீக்கிக்கொள்ளுதல்அரிதாகுமாதலின் ‘யார்க்கும்' எனவுங் கூறினார்."பூவுட்கும் கண்ணாய் பொறுப்பரெனக் கருதியாவர்க்கேயாயினும் இன்னா செயல் வேண்டா"
என்றார் பிறரும். புரை தீர்ந்தார் மாட்டும்என்னும் உம்மை உயர்வொடு எச்சம்.
பழமொழி.
|
செல்வம் நிலையாமை
பொருட்பால்
பெரியாரைப் பிழையாமை
பொன்னே கொடுத்தும் புணர்தற் கரியாரைக்
கொன்னே தலைக்கூடப் பெற்றிருந்தும் - அன்னோ
பயனில் பொழுதாக் கழிப்பரே, நல்ல
நயமில் அறிவி னவர்.
குறிப்புரை: பொன்னே கொடுத்தும்புணர்தற்கு அரியாரை - பொன்னையே விலையாகக்கொடுத்தும் நட்புச் செய்தற்கு அரியரானபெரியோர்களை, கொன்னே தலைக்கூடப்பெற்றிருந்தும் - பொருட் செலவில்லாமலே அவரைநட்புச் செய்து கொள்ளும் நிலை பெற்றிருந்தும்.நல்ல நயம் இல் அறிவினவர் அன்னோ பயனில்பொழுதாக் கழிப்பரே - சிறந்த பண்புடைமையில்லாதஅறிவினையுடைய பேதையர் ஆ, தம்முடையவாழ்நாட்களைப் பயன் இல்லாத வீண் காலமாகக்கழிக்கின்றனரே!
கருத்து: பெரியார் இணக்கம்வாழ்க்கை யின்பம் மிகுத்து அதனைப்பயனுடையதாக்கும்.
விளக்கம்: பொன்னே என்பதன்ஏகாரம் தேற்றமும், கழிப்பரே என்பதன் ஏகாரம்ஈற்றசையுமாம். அன்னோவென்னும் இடைச்சொல்இரக்கப்பொருள் குறித்தது. சான்றவர் மேன்மையில்மரீஇ இன்புறும் நயமின்மை கருதி; ‘நயமில்அறிவினவ' ரென்றார்; பயனில் பொழுது கழிக்கும்வீணரை நயமில் அறிவினவரென விதந்தது, மிக்கநயமுடைத்து. "நயனிலனென்பது சொல்லும் பயனில,பாரித்துரைக்கும் உரை"
என்பதுதிருக்குறள்.
|
செல்வம் நிலையாமை
பொருட்பால்
பெரியாரைப் பிழையாமை
அவமதிப்பும் ஆன்ற மதிப்பும் இரண்டும்
மிகைமக்க ளான் மதிக்கற் பால; -நயமுணராக்
கையறியா மாக்கள் இழிப்பும் எடுத்தேத்தும்
வையார் வடித்தநூ லார்.
குறிப்புரை: அவமதிப்பும் ஆன்றமதிப்பும் இரண்டும் மிகைமக்களான் மதிக்கற்பால-மதிப்பின்மையும் மிக்க மதிப்புமாகிய இரண்டும்மேன்மக்களாகிய பெரியோர்களால்மதித்தற்குரியனவாகும்; நயம் உணராக்கையறியாமாக்கள் இழிப்பும் எடுத்தேத்தும் -நன்மையை உணர்தலில்லாத ஒழுக்கமறியாக்கீழ்மக்களின் இழிப்புரையும் உயர்த்தும்ஏத்துரையும், வடித்த நூலார் வையார் - தெளிந்தநூலறிவினையுடையோர் ஒரு பொருளாகமனத்துட்கொள்ளமாட்டார்கள்.
கருத்து: மேன்மக்கள்பால்மதிப்புப்பெற முயலுதல் வேண்டும்.
விளக்கம்: ஆன்ற மதிப்பென்றது,நன்கு மதித்தலை உட்கொண்டு நின்றது. மிகைமக்கள்- மக்களில் மேம்பட்ட நன்மக்கள்;பொதுமக்களினும் மேம்பட்டோரென்று கொள்க.மாக்களென்போர் அப்பொதுமக்களினுங்கீழ்ப்பட்டோர். கை, ஈண்டு ஒழுக்கமென்னும்பொருட்டு, உணரா அறியா மக்கள் என்க; "மூவா முதலாவுலகம்"
என்புழிப்போல.சான்றோராயின், உலகில் நிகழுந் தகுதிகளைத்தம்உள்ளத்துமதித்து மகிழ்வர்; நிகழ்வனதகுதியற்றனவாயின் அவற்றை மதியாமல்வாளாவிடுப்பரல்லது தூற்றார். நயமுணராக்கையறியாமக்களாயின், இழித்தலாயினும் அன்றிஏத்துதலாயினும் தம் வாய்விட்டுக் கூறுவர்.இவ்வியல்பு புலப்படுத்துவார், ‘இழிப்பும்எடுத்தேத்து' மென்று அவரது வாயுரைக்கண் வைத்துஆசிரியர் விளக்கின ரென்க.
சிந்.
|
செல்வம் நிலையாமை
பொருட்பால்
பெரியாரைப் பிழையாமை
விரிநிற நாகம் விடருள தேனும்
உருமின் கடுஞ்சினஞ் சேணின்றும் உட்கும்;
அருமை யுடைய அரண்சேர்ந்தும் உய்யார்
பெருமை யுடையார் செறின்.
குறிப்புரை: விரிநிற நாகம் விடர்உளதேனும் உருமின் கடு சினம் சேண் நின்றும் உட்கும்- படம் விரித்தலையுடைய நாகப்பாம்பு நிலத்தின்வெடிப்பினுள்ளே உள்ளதானாலும் இடியின் கொடியஒலிச்சீற்றமானது தொலைவில் இருந்தும் அதற்குஅஞ்சும், அதுபோல; அருமையுடைய அரண் சேர்ந்தும்பெருமையுடையார் செறின் உய்யார் - அருமைப்பாடுடையபாதுகாப்பிடத்தைச் சேர்ந்திருந்தாலும்,மேன்மையுடைய பெரியோர் சீறுவாராயின், ஏனைச்சிறியோர் அதற்குத் தப்பமாட்டார்.
கருத்து: பெரியோர்க்குப் பிழைசெய்து பின் அதிலிருந்து தப்புதல் இயலாது.
விளக்கம்: விடரென்பது பிளப்பு:"விடர் முகையடுக்கம்"
என்பது அகநானூறு.இடி முழக்கத்தின் மேன் மேற் கடுமைசினமெனப்பட்டது. "அரண்சேர்ந்தும்'என்றதனால், என்றதனால், பெருமையுடையாரது சினம்அவ்வரண் முதலியவற்றையுங் கெடுக்குமென்பது பெறுதும்.பெருமையுடையார் செறின் என்றமையின் ஏனைச்சிறியோர் உய்யார் என, வினை முதல் தானேபெறப்பட்டது.
அகநா.
|
செல்வம் நிலையாமை
பொருட்பால்
பெரியாரைப் பிழையாமை
எம்மை யறிந்திலிர் எம்போல்வார் இல்லென்று
தம்மைத்தாம் கொள்வது கோளன்று: - தம்மை
அரியரா நோக்கி அறனறியுஞ் சான்றோர்
பெரியராக் கொள்வது கோள்.
குறிப்புரை: எம்மை அறிந்திலிர்எம்போல்வார் இல் என்று தம்மைத்தாம் கொள்வதுகோள் அன்று - ‘எமது தகுதியை நீவிர்அறிந்தீரில்லை; எம்மைப்போன்ற தகுதியுடையார்பிறர் ஈண்டு இல்லை' என்று தம்மைத் தாமேபெருமைப்படுத்திக் கொள்வது சிறந்த மதிப்பாகாது;தம்மை அரியரா நோக்கி அறன் அறியுஞ் சான்றோர்பெரியராக் கொள்வது கோள்-தம்மைஅருமையுடையராகக் கருதி, அறமுணருஞ் சான்றோர்பெரியரென்று மதித்தேற்றுக் கொள்ளுதலேபெருமையாகும்.
கருத்து: தம்மைச் சான்றோர்பெரியரென மதித்தேற்குமாறு தாம் செய்கையில்ஒழுகுதலன்றித், தம்மைத் தாமே பெரியரென -வாயுரையாப் புலப்படுத்திக் கொள்ளுதல்மதிப்புடைமையாகாது.
விளக்கம்: "வியவற்கஎஞ்ஞான்றுந் தன்னை"
என்றார் பிறரும்.‘அரியரா, பெரியரா' ஈறு தொகுத்தல்.தக்கோரென்னும் பொருட்டு, அறனறியுஞ்சான்றோரென்றார். அறிதலாவது ஈண்டுஅறிந்தொழுகுதல்.
|
செல்வம் நிலையாமை
பொருட்பால்
பெரியாரைப் பிழையாமை
நளிகடல் தண்சேர்ப்ப! நாணிழற் போல
விளியுஞ் சிறியவர் கேண்மை: - விளிவின்றி
அல்கு நிழற்போல் அகன்றகன் றோடுமே
தொல்புக ழாளர் தொடர்பு.
குறிப்புரை: நளி கடல் தண் சேர்ப்ப- பெரிய கடலின் குளிர்ந்த துறையையுடையவனே!சிறியவர் கேண்மை நாள் நிழல்போலவிளியும்-சிறியோர் நட்புக் காலை நேரத்தின்நிழல்போலக் குறைந்து கெடும்; விளிவுஇன்றி-அவ்வாறு குறைந்து கெடுதலில்லாமல், அல்குநிழல்போல் - மாலை நேரத்தின் நிழல்போல,தொல்புகழாளர் தொடர்பு அகன்று அகன்று ஓடும்-பழைமை தொட்டு வரும் புகழினையுடையரான பெரியோர்நட்பு வளர்ந்து பெருகும்.
கருத்து: இருக்க இருக்கப் பெருகும் நேயமாட்சிக் குரியபெரியோரிடம் பிழைத்தலின்றி யொழுகி நலம்பெறல் வேண்டும்.
விளக்கம்: நாள், நாளின்தோற்றநேரமாகிய காலைப் பொழுதை யுணர்த்திற்று,அல்கு, என்பது முதலிலைத் தொழிற்பெயர்: சுருங்குதல்என்பது பொருள்: பொழுது சுருங்குதலையுடைய நேரம்என்னுங் கருத்தில் ஆகுபெயராய் இங்கு அது மாலைக்காலத்தை உணர்த்தி நின்றது. மாலையென்றது ஈண்டுப்பிற்பகல். அடுக்கு மிகுதிப் பொருளது.தொல்புகழாளர் என்றார். புகழுக்குரியநல்லியல்பும் பழக்கமும் இயற்கையாகவும்செயற்கையாவும் நெடுங்காலமாக உடையரென்னும்பொருட்டு.
|
செல்வம் நிலையாமை
பொருட்பால்
பெரியாரைப் பிழையாமை
மன்னர் திருவும் மகளிர் எழினலமும்
துன்னியார் துய்ப்பர் தகல்வேண்டா - துன்னிக்
குழைகொண்டு தாழ்ந்த குளிர்மர மெல்லாம்
உழைதங்கட் சென்றார்க் கொருங்கு.
குறிப்புரை: மன்னர் திருவும் மகளிர்எழில் நலமும் - அரசர் வளமும் மகளிரின்எழுச்சியழகும், துன்னியார் துய்ப்பர் - அவர்களுடன்நெருங்கிக் கலந்திருப்பவர் நுகர்வர்: தகல்வேண்டா-நேயம் என்னும் அந் நெருக்கமல்லதுஅதற்குத் தகுதியுடைமை வேண்டா: துன்னிக்குழைகொண்டு தாழ்ந்த குளிர்மரமெல்லாம் -நெருங்கத் தழைகள் பொருந்தித் தாழ்ந்துள்ளகுளிர்ச்சியான மரங்களெல்லாம், உழை தங்கட்சென்றார்க்கு ஒருங்கு - தம்மிடம் வந்தடைந்தாரனைவர்க்கும் வேறுபாடின்றி நிழலிடமாகும்.
கருத்து: ஆதலால், நேயத்தால் தம்மைஅடைந்தவரிடம் தகுதி வேறுபாடுகள் கருதாமல்,பெரியோர் அளவளாவியிருந்து அவரை மகிழ்விப்பரென்க.
விளக்கம்: உவமைகள் மூன்றும்இருவகையாகப் பெரியோர் மாட்சிமை யுணர்த்தினசிறப்பாக நேய நெருக்கமுடையோர் துய்த்தற்குமுதலிரண்டு உவமைகளும், தகுதி வேறுபாடு கருதாமைக்குப்பின் ஓர் உவமையும் வந்தன வென்க. இதனாற்பெரியோரது திருநலம் விளங்கிற்று. தகல்:தொழிற்பெயர். துன்னியென்பதற்குக் கிளைகள்நெருங்கியென உரைத்தலுமாம். குளிர் மரமாதலின்குழை கொண்டு தாழ்ந்தவெனக் கூறப்பட்டது. உழை -இடம்; ஈண்டு நிழல் பயக்கும் இடமென்க. ஒருங்குஎன்றார், வேறுபாடு கருதாமைப் பொருட்டு.
|
செல்வம் நிலையாமை
பொருட்பால்
பெரியாரைப் பிழையாமை
தெரியத் தெரியுந் தெரிவிலார் கண்ணும்
பிரியப் பெரும்படர்நோய் செய்யும்; - பெரிய
உலவா இருங்கழிச் சேர்ப்ப யார்மாட்டும்
கலவாமை கோடி யுறும்.
குறிப்புரை: தெரியத் தெரியும்தெரிவிலார் கண்ணும் நூற்பொருள்களை விளங்கத்தெளியும் தெளிவில்லாதவரிடத்தும், பிரியப்பெரும்படர் நோய் செய்யும் - அவரைப் பிரிய அப்பிரிவு பெரிய நினைவுத் துன்பம் உண்டாக்கும்;பெரிய உலவா இரு கழிச் சேர்ப்ப-வளங்கெடாதகருநிறமான பெரிய கழிக்கரையை யுடையோனே, யார்மாட்டும் கலவாமை கோடி உறும் - ஆதலால்,பெரியோரிடத்தன்றிப்பிறர் யாரிடத்திலும்நேயங்கொள்ளாமை கோடிப்பங்கு நன்மையாகும்.
கருத்து: ஆராய்ந்து பெரியோரிடமேநேயங்கொள்ளுதல் வேண்டும்.
விளக்கம்: பிரிய அப் பிரிவு நோய்செய்யும் என்று கொள்க. படர்-நினைவு "படரேஉள்ளல்"
என்பது தொல்காப்பியம்; படர்நோய்-நினைதலாலுண்டாகும் வருத்தம். நெய்தல்நிலம் கார் காலத்தில் நெல்விளைத்தும் வேனிற்காலத்தில் உப்பு விளைத்தும் என்றும்வளங்கொடாதிருத்தலின் "உலவாக் கழி"எனப்பட்டது. ‘வானம் வேண்டா உழவின் எம் கானலஞ்சிறுகுடி'
என்பதும் நினைவு கூர்க.
தொல். உரி.
.
நற்.
|
செல்வம் நிலையாமை
பொருட்பால்
பெரியாரைப் பிழையாமை
கல்லாது போகிய நாளும், பெரியவர்கண்
செல்லாது வைகிய வைகலும், - ஒல்வ
கொடாஅ தொழிந்த பகலும், உரைப்பின்
படாஅவாம் பண்புடையார் கண்.
குறிப்புரை: கல்லாது போகிய நாளும் -கற்றற்குரிய நூல்களைக் கல்லாமற் கழிந்தநாட்களும், பெரியவர்கண் செல்லாது வைகியவைகலும்-கேள்வியின் பொருட்டுப் பெரியோர்பாற்செல்லாது நின்ற நாட்களும், ஒல்வகொடாது ஒழிந்தபகலும் - இயன்ற பொருள்களை உரியவர்களுக்குஉதவாமல் நீங்கிய நாட்களும், உரைப்பின் -சொல்லுமிடத்து, பண்புடையார்கண்படா-நல்லியல்புடைய பெரியோர்களிடம்உண்டாகமாட்டா.
கருத்து: கல்வி கேள்விகளும்ஒப்புரவும் என்றும் பெரியோர் உடையராயிருப்பர்.
விளக்கம்: சாந்துணையுங் கற்றலும்,
செவிக்குணவில்லாத போழ்து வயிற்றுக்கு ஈதலும்,
‘இரவரலர்க்கு அருங்கலம் வீசி வாழ்தல் வேண்டும்இவண் வரைந்த வைக' லெனக் கருதலும்,
நல்லோர் இயல்பாகலின், இங்ஙனம் கூறினார். ஒல்வ: வினையாலணையும் பெயர். அளபெடைகள் செய்யுளோசைநிறைத்து நின்றன. ஆம்: அசை.
புறம்.
|
செல்வம் நிலையாமை
பொருட்பால்
பெரியாரைப் பிழையாமை
பெரியார் பெருமை சிறுதகைமை; ஒன்றிற்
குரியா ருரிமை யடக்கம்; - தெரியுங்கால்,
செல்வ முடையாருஞ் செல்வரே, தற்சேர்ந்தார்
அல்லல் களைப வெனின்.
குறிப்புரை: பெரியார் பெருமை சிறுதகைமை - கல்வி கேள்விகளிற் பெரியாருடையபெருமைக் குணமாவது யாண்டுந்தாழ்வுடைமையாயிருத்தல்; ஒன்றிற்கு உரியார்உரிமை அடக்கம் - வீடுபேற்றிற்கு உரியரானமெய்யுணர்வாளர்க்கு உரிமையான பண்பாவாதுமனமொழி மெய்கள் அடக்கமாயிருத்தல்;தெரியுங்கால் - ஆராயுமிடத்து, செல்வமுடையாரும்செல்வரே தற் சேர்ந்தார் அல்லல் களைப எனின் -தம்மை அடைந்தவர்களுடைய வறுமைத் துன்பங்களைநீக்குவார்களாயின் செல்வம் படைத்தவர்களும்செல்வரேயாவர்.
கருத்து: செல்வமும் கல்வியும்மெய்யுணர்வுமுடைய பெரியோர், யாண்டும் உதவியும்பணிவும் அடக்கமு முடையராயிருப்பர்.
விளக்கம்: சிறியதன்மையுடையார்போல் தாழ்வுடையராயிருத்தலின்அப் பணிவுடைமையை ஈண்டுச் சிறு தகைமையென்றார்.சிறப்பு நோக்கி வீடுபேறு, ஒன்றெனப்பட்டது.தற்சேர்ந்தார், ஒருமை பன்மை மயக்கம்."தற்சேர்ந்தார் ஒற்கம் கடைப்பிடியாதார்"
என்றார் பிறரும். பெரியாராயினார்இத்தகையினராதலின் இது தெரிந்து இந்நிலைகட்கேற்ப அவர்பாற் பிழைபடா தொழுகிக்கொள்க வென்பது கருத்து. இவ்வதிகாரத்தில்பெரியாரியல் புரைப்பனவாய் வந்திருக்கும் இதுபோன்ற செய்யுள்கட்கும் இவ்வாறுரைத்துக் கொள்க.
ஐந். ஐம்.
|
செல்வம் நிலையாமை
பொருட்பால்
நல்லினம் சேர்தல்
[உயர்ந்த பண்புடையார் கூட்டத்திற் சேர்ந்து பழகுதல்.]
அறியாப் பருவத் தடங்காரோ டொன்றி
நெறியல்ல செய்தொழுகி யவ்வும் - நெறியறிந்த
நற்சார்வு சாரக் கெடுமே வெயின்முறுகப்
புற்பனிப் பற்றுவிட் டாங்கு.
குறிப்புரை: அறியாப் பருவத்துஅடங்காரோடு ஒன்றி நெறியல்ல செய்தொழுகியவும் -அறிய வேண்டுவன அறியாத சிறுபருவத்தில்அடங்கியொழுகாத தீயோருடன் சேர்ந்துமுறையல்லாதவற்றைச் செய்தொழுகிய தீயகுணங்களும்,வெயில் முறுகப் புல் பனிப்பற்றுவிட்டாங்கு-வெயில் கடுகுதலால் புல்நுனியைப்பனியின் பற்றுதல் விட்டாற்போல, நெறியறிந்தநற்சார்வு சாரக் கெடும் - நன்னெறிதெரிந்தொழுகும் உயர்ந்த பெரியோர் சார்பைச்சார்ந்து பழகுதலால் கெடும்.
கருத்து: தீய குணங்கள் நீங்கும்பொருட்டு நல்லாரினத்திற் சார்ந்து பழகுதல்வேண்டும்.
விளக்கம்: அடங்கார்:வினையாலணையும் பெயர்: செய்தொழுகி யவ்வும்என்பதில் வகரம் விரிந்தது: உம்மை நல்லோர்சேர்க்கையால் நல்லன பெறுதலோடு என்னுங்கருத்துணர்த்துதலின் எச்சம்.
|
செல்வம் நிலையாமை
பொருட்பால்
நல்லினம் சேர்தல்
அறிமின் அறநெறி; அஞ்சுமின் கூற்றம்:
பொறுமின் பிறர்கடுஞ்சொல்; போற்றுமின் வஞ்சம்;
வெறுமின் வினைதீயார் கேண்மை; எஞ்ஞான்றும்
பெறுமின் பெரியார்வாய்ச் சொல்.
குறிப்புரை: அறிமின் அறநெறி - கடமையொழுங்கை அறிந்தொழுகுங்கள்; அஞ்சுமின் கூற்றம் -நமன் வருதற்கு அஞ்சி யொழுகுங்கள்; பொறுமின்பிறர் கடுஞ்சொல்-பிறர் கூறும் வன்சொற்களைப்பொறுத்துக் கொள்ளுங்கள்; போற்றுமின் வஞ்சம் -வஞ்சித்தொழுகுதலைக் காத்துக் கொள்ளுங்கள்;வெறுமின் வினை தீயார் கேண்மை - செய்கை தீயவரதுநட்பை வெறுத்தொதுக்குங்கள்; எஞ்ஞான்றும்பெறுமின் பெரியார்வாய்ச் சொல் -எக்காலத்திலும் பெரியார் வாயிலிருந்து வரும்நன்மொழிகளை ஏற்று ஒழுகுங்கள்.
கருத்து: நல்லாரினத்தைச் சார்ந்துபழகி அதனால் அறநெறியறிதல் முதலிய நலன்களைப்பெறுதல் வேண்டும்.
விளக்கம்: இச்செய்யுள் நல்லினம்சார்தற்குரியாரை நோக்கிற்று, அறிமின் முதலியன,அறிந்து அந்நெறி நிற்றலை யுணர்த்தா நின்றன.கூற்றம் அஞ்சுதலாவது அருள்வழி நின்றொழுகுதல்.‘வஞ்சம் போற்றுமின்' என்றது, தம்மைச் சாராதவாறுகாத்துக்கொள்ளுதலென்க. "புறஞ் சொற்போற்றுமின்"
என்றார் பிறரும். வினைதீயார் - தீய செயலுடையார். பெரியார் வாய்ச்சொல் பெறுதற்கு அறநெறி யறிந் தொழுகுதல் முதலியனஇன்றியமையாதன வாதலின், அவற்றை முறையேமுற்கூறினார்.
ஒரோவொருகாற் பிற நெறிகள் தவறினும் பெரியார்வாய்ச்சொல் பெறுதல் ஒருபோதுந் தவறலாகாதென்றற்கு, எஞ்ஞான்றும் என்னுஞ் சொல்அதனையடுத்து நின்றது.
சிலப்
|
செல்வம் நிலையாமை
பொருட்பால்
நல்லினம் சேர்தல்
அடைந்தார்ப் பிரிவும் அரும்பிணியும் கேடும்
உடங்குடம்பு கொண்டார்க் குறலால் - தொடங்கிப்
பிறப்பின்னா தென்றுணரும் பேரறிவி னாரை
உறப்புணர்க அம்மாஎன் நெஞ்சு.
குறிப்புரை: அடைந்தார்ப் பிரிவும்அரு பிணியும் கேடும்- இயற்கையாகவும்செயற்கையாகவுஞ் சார்ந்தவரான உறவினர் நண்பர்முதலியோரைப் பிரிந்து நிற்றலும், தீர்தற்கரியநோயும், இறப்பும், உடங்கு உடம்பு கொண்டார்க்குஉறலால் -பிறவியெடுத்தவர்க்கு ஒருங்கேபொருந்துதலால், தொடங்கி - ஆராயத் தொடங்கி,பிறப்பு இன்னாது என்று உணரும் பேரறிவினாரை -பிறப்புத் துன்பந் தருவது என்றுணர்ந்துபற்றற்றொழுகும் பெரிய அறிவினரான ஞானியரை,உறப் புணர்க என் நெஞ்சு - என் உள்ளம் மிகக் கூடுக.
கருத்து: துன்பந் தரும் பிறப்பைஅதன் இயல் பறிந்து பற்று நீங்கி யொழுகும்ஞானியரான நல்லாரினத்தைச் சார்ந்தொழுகுதல்வேண்டும்.
விளக்கம்: ‘உற்றோர்முதலியோரைப் பிரிந்து நிற்க நேர்ந்தால்,அப்போது இவ்வுடம்புக்குப் பற்பல வசதிகள் குறைந்துதுன்பங்கிளைத்தலால் அவையெலாம் ‘அடைந்தார்ப்பிரிவும்' என்பதில் அடங்கும். உடங்கு உறலால்என்க. உடம்பு இலக்கணையாற் பிறவியைஉணர்த்திற்று. இத்துன்பப்பிறவியை மகிழ்தல்அறிவுடைமையாகாமையின் இன்னாதென்றுணர்தல்பேரறிவுடைமையாயிற்று. "இளமை மகிழ்ந்தாரே ......இன்னாங் கெழுந்திருப்பார்"
என்றார்முன்னும். அம்மா:அசை. நல்லினம் என்பது சிறப்பாகஞானியரினம் என்பது இச்செய்யுட் கருத்து.
நாலடி.
|
செல்வம் நிலையாமை
பொருட்பால்
நல்லினம் சேர்தல்
இறப்ப நினையுங்கால் இன்னா தெனினும்
பிறப்பினை யாரும் முனியார்; - பிறப்பினுள்
பண்பாற்றும் நெஞ்சத் தவர்களோ டேஞ்ஞான்றும்
நண்பாற்றி நட்கப் பெறின்.
குறிப்புரை: பிறப்பினுள் - தாம்பிறந்த பிறப்பில், பண்பு ஆற்றும்நெஞ்சத்தவர்களோடு எஞ்ஞான்றும் நண்பு ஆற்றிநட்கப்பெறின் - பிறர்க்கு உதவிசெய்யும்நெஞ்சமுடையவர்களான பெரியார்களோடு எப்போதும்நேயஞ்செய்து அணுகியிருக்கப் பெற்றால், இறப்பநினையுங்கால் இன்னாது எனினும் பிறப்பினை யாரும்முனியார் - மிக ஆராயுமிடத்துத்துன்பந்தருவதென்றாலும் அப்பிறப்பினை யாரும்வெறுக்கமாட்டார்கள்.
கருத்து: பிறவி துன்பந் தருவதாயினும்நல்லாரினத்தோடு நேயங் கொண்டிருக்கப் பெறின்அதனை யாரும் வெறார்.
விளக்கம்: பிறவி நன்முறையிற்செல்லுதலின் வெறுக்கப்படாதாயிற்று. பிறப்பினுள்நட்கப்பெறின் அப்பிறப்பினை, இன்னாதெனினும்யாரும் முனியாரென்று கொள்க. பண்பென்பதுபாடறிந்தொழுக
லாதலின், ஈண்டு உதவியெனப்பட்டது. அது, நல்லார் இலக்கணம்இன்னதென்பதுணர்த்தும் பொருட்டு நின்றது.
கலித்.
|
செல்வம் நிலையாமை
பொருட்பால்
நல்லினம் சேர்தல்
ஊரங் கணநீர் உரவுநீர் சேர்ந்தக்கால்
பேரும் பிறிதாகித் தீர்த்தமாம்; - ஓருங்
குலமாட்சி யில்லாரும் குன்றுபோல் நிற்பர்
நலமாட்சி நல்லாரைச் சார்ந்து.
குறிப்புரை: ஊர் அங்கண் நீர்உரவுநீர் சேர்ந்தக்கால் - ஊரின் சாக்கடை நீர்கடலைச் சேர்ந்தால், பேரும் பிறிதாகித்தீர்த்தம் ஆம் - பேரும் கடல் நீர் என்று வேறாகிஅருள் நீராகும், ஒரும் குலமாட்சி இல்லாரும் -மதிக்கத்தக்க நற்குலப் பெருமையில்லாதகீழோரும், குன்றுபோல்
நிற்பர் நலமாட்சி நல்லாரைச் சார்ந்து -குணப்பெருமை வாய்ந்த நல்லாரைச் சார்ந்து அவர்நற்றன்மையில் மலைபோல் அசைதலின்றி நிலைத்துவிளங்குவர்.
கருத்து: கீழோரும் மேலோரைச்சேர்ந்தால், மேலோரேயாவர்.
விளக்கம்: உரவுநீர், வலிமையுடையநீரென்னுங் கருத்திற் கடல் நீருக்கு வந்தது.தீவினைகளைத் தீர்க்கும் அருளியல்பு வாய்ந்தநீர் தீர்த்தம் என்பபடுவதாயிற்று. குலம் -நல்லோர் சூழல், நலம், ஈண்டுப் பண்பு, குன்று போல்நிற்பரென்றார். பின் அந்நிலையினின்றும்வழாரென்றற்கு.
|
செல்வம் நிலையாமை
பொருட்பால்
நல்லினம் சேர்தல்
ஒண்கதிர் வான்மதியும் சேர்தலால் ஓங்கிய
அங்கண் விசும்பின் முயலும் தொழுப்படூஉம்;
குன்றிய சீர்மைய ராயினும் சீர்பெறுவர்,
குன்றன்னார் கேண்மை கொளின்.
குறிப்புரை: ஒள் கதிர் வாள்மதியம் சேர்தலால் ஓங்கிய அங்கண் விசும்பின்முயலும் தொழப்படும் - இனிய கதிர்களையுடைய ஒள்ளியதிங்களைச் சேர்தலால் அழகிய இடமகன்றவானத்தின்கண் முயலும் மாந்தரால் வணங்கப்படும்;குன்றிய சீர்மையராயினும் சீர்பெறுவர்குன்றன்னார் கேண்மை கொளின் - ஆதலால், குறைந்தநிலைமையுடையராயினும் மக்கள் மலைபோன்றபெருமையுடைய நல்லாரது நேயத்தை யடைந்தால்நிறைந்த சிறப்பினைப் பெறுவர்.
கருத்து: மக்கள், நல்லார்நேயத்தராயிருப்பின் சிறப்புறுவர்.
விளக்கம்: வான்மதியம் என அடுத்துவருதலின் கதிர்க்கு ஒண்மையாவது இனிமையென்றுகொள்க. ஒண்மைக்கு இந் நன்மைப் பொருளுண்மைபிங்கலந்ததையிற்
காணப்படும். முயல்,திங்களின்கட் காணப்படும் மறு. பிறை தொழுதல்வழக்கமாதலின்,
அதன்கண் உள்ள மறுவும்தொழப்படுவதாயிற்று. சீர்மை, பொதுவாக ஈண்டுநிலைமை என்னும் பொருட்டு. நிலை வழுவாதவராகலின்,நல்லோர் குன்றன்னா ரெனப்பட்டனர். அவரோடுகேண்மை கொள்ளுதலாவது அவர் அன்புக்குரியவராய்அவர் இனத்தவராய் இருத்தலென்க.
பிங்.
குறுந்.
|
செல்வம் நிலையாமை
பொருட்பால்
நல்லினம் சேர்தல்
பாலோ டளாயநீர் பாலாகு மல்லது
நீராய் நிறந்தெரிந்து தோன்றாதாம்; -தேரின்
சிறியார் சிறுமையும் தோன்றாதாம், நல்ல
பெரியார் பெருமையைச் சார்ந்து.
குறிப்புரை: பாலோடு, அளாய நீர்பாலாகுமல்லது நீராய் நிறம் தெரிந்துதோன்றாது-பாலோடு கலந்த நீர் பாலாகித்தோன்றுமல்லது நீராய்த் தன் நிறம் விளங்கித்தோன்றாது; தேரின்-ஆராய்ந்தால், சிறியார்சிறுமையும் தோன்றாது நல்ல பெரியார் பெருமையைச்சார்ந்து - உயர்ந்த பெரியாருடையபெருந்தன்மையைச் சார்தலால் சிறியார்குறைபாடுந் தோன்றாமற் பெருமையேயாகும்.
கருத்து: மக்கள் பெரியாரோடுசேர்ந்திருந்து தம் குறை நீங்கிப் பெருமையடைதல்வேண்டும்.
விளக்கம்: உவமையில் நீராய்த்தெரியாமையும் பாலாய் நிறமாதலுங்கூறப்பட்டமையின், பொருளிலும் சிறுமைதோன்றாமையோடு பெருமை உருவாதலும்உரைத்துக்கொள்க. நீர் தன் நிறந்தெரிந்துதோன்றா தென்றமையின் பால் நிறந்தெரிந்துதோன்றுமென்பது பெறப்பட்டமையால் அவ்வாறேசிறியோர்க்குங் கொள்க. "உவமப் பொருளின்உற்ற துணருந் தெளிமருங் குளவே திறத்தியலான"
என்பதனான் இங்ஙனங் கொள்ளப்படும். ஆம்இரண்டனுள் முன்னது அசை. நல்ல என்னும் அடைமொழிஇயல்புணர்த்தியபடி.
தொல். உவம.
|
செல்வம் நிலையாமை
பொருட்பால்
நல்லினம் சேர்தல்
கொல்லை யிரும்புனத்துக் குற்றி யடைந்தபுல்
ஒல்காவே யாகும் உழவ ருழுபடைக்கு;
மெல்லியரே யாயினும் நற்சார்வு சார்ந்தார்மேற்
செல்லாவாம் செற்றார் சினம்.
குறிப்புரை: கொல்லை இரு புனத்துக்குற்றியடைந்த புல் - கொல்லையாகிய பெரியநிலத்திலுள்ள மரக்கட்டையைச் சேர்ந்து வளர்ந்தபுல். ஒல்கா ஆகும் உழவர் உழுபடைக்கு - உழவரதுஉழுகின்ற படையாகிய கலப்பைக்குக் கெடாதனவாகும்;மெல்லியரேயாயினும் நற்சார்வு சார்ந்தார் மேல்செல்லா செற்றார் சினம்-வலிமையில்லாதவரேயாயினும் நல்லினத்தாரென்னும் வலிய சார்பினைச்சார்ந்தவர்மேல் பகைவரது சினம்பயன்படாமற்போம்.
கருத்து: நல்லாரினத்திற்சேர்ந்திருப்பார்மேற் பகைவர் சினம் செல்லாது.
விளக்கம்: குற்றி - சிறுகட்டை;ஈண்டுக், கொல்லையில் வளர்ந்து தரையளவாகவெட்டப்பட்டுவிட்ட வேர்க்கட்டை. ஒல்காமைக்குஇங்குக்கெடாமைப்பொருளுரைக்க. "ஒல்கியஎழில்"
என்றவிடத்துக் "கெட்டஅழகு" என்று நச்சினார்க்கினியர் உரை கூறினமைகாண்க. மெல்லியரென்றது அறிவு, ஆற்றல், பொருள்,நிலை முதலியவற்றிற் சிறியர் என்னும் பொருட்டு.நற்சார்வு, இந்நிலைகளிற் பெரியாராயினாரது துணை.சினம், பகையின்மேற்று, செல்லாது என்பதுகடைகுறைந்து நின்றது. "தக்காரினத் தனாய்த்தானொழுக வல்லானைச், செற்றார் செயக்கிடந்ததில்"
என்றார் நாயனார்.
கலித்.
குறள்
|
செல்வம் நிலையாமை
பொருட்பால்
நல்லினம் சேர்தல்
நிலநலத்தால் நந்திய நெல்லேயோல் தத்தங்
குலநலத்தால் ஆகுவர் சான்றோர்; - கலநலத்தைத்
தீவளி சென்று சிதைத்தாங்குச் சான்றாண்மை
தீயினஞ் சேரக் கெடும்.
குறிப்புரை: நிலநலத்தால் நந்தியநெல்லேபோல் தத்தங் குலநலத்தால் ஆகுவர்சான்றோர் - நிலத்தின் வளத்தினாற் செழித்துவளர்ந்த நெற்பயிரைப்போல் தத்தம் இனநலத்தால் நல்லோர் மேன்மேலும் சான்றாண்மையுடையோராவர்; கலநலத்தைத் தீவளி சென்றுசிதைத்தாங்கு - மரக்கலத்தின் வலிமையைக்கொடியபுயற்காற்றுச் சென்று கெடுத்தாற்போல,சான்றாண்மை தீ இனம் சேரக் கெடும் - தீயஇனத்தவரைச் சேர அதனால் அச் சான்றாண்மைஅழியும்.
கருத்து: இயல்பாகவேநல்லோராயிருப்பவர்க்கும் நல்லினச் சேர்க்கைநன்மையையும் தீயினச் சேர்க்கை தீமையையும்உண்டாக்கும்.
விளக்கம்: நிலத்துக்கு நலமாவதுவளம். குலம்-கலந்து பழகுவோர் இனம். இச்செய்யுள்சான்றோரைக் கருத்திற்றாதலின் அவர் மேலுமேலுஞ்சான்றோராகுவரென்று முதற்பகுதிக்குஉரைக்கப்பட்டது. கலத்துக்கு நலமாவதுஅலைகளாற்றாக்குறாது செல்லும் உறுதி.உவமைக்கேற்றபடி பொருளின் எழுவாய் தீயினம்ஆகவேண்டுமாயினும், அதனாற் கருத்துக்குஇழுக்கின்றென்க. இது, "உவமப்பொருளையுணருங்காலை, மரீஇய மரபின் - வழக்கொடு படுமே"
என்பதனாற் றெளியப்படும்.
தொல். உவம.
, |
செல்வம் நிலையாமை
பொருட்பால்
நல்லினம் சேர்தல்
மனத்தான் மறுவில ரேனுந்தாஞ் சேர்ந்த
இனத்தால் இகழப்படுவர்; - புனத்து
வெறிகமழ் சந்தனமும் வேங்கையும் வேமே,
எறிபுனந் தீப்பட்டக் கால்.
குறிப்புரை: புனத்துவெறி கமழ்சந்தனமும் வேங்கையும் வேம் எறிபுனம் தீப்பட்டக்கால் - காட்டினுள்ள மணங் கமழ்கின்றசந்தனமரமும் வேங்கைமரமும் பெருங்காற்றுவீசுகின்ற அக்காடு தீப்பிடித்தால் வெந்து அழிந்துவிடும்; மனத்தால் மறு இலரேனும் தாம் சேர்ந்தஇனத்தால் இகழப்படுவர்-ஆதலால், சான்றோர் தம்மனநலத்தால் மாசிலராயினும் தாம் சேர்ந்த தீயஇனத்தினால் பெருமை குன்றிப் பழிக்கப்படுவர்.
கருத்து: சான்றோர் மனநலம் நன்குடையராயினும்தீயினச் சேர்க்கையால் பெருமை குறைந்து கெடுவர்.
விளக்கம்: இகழப்படுவர்சான்றோரென்று கொள்க. இகழப்படுவரென்னுங்குறிப்பால் இனம் தீயினத்துக்காயிற்று.மணங்கமழ்தல் வேங்கைக்குங்கொள்க. "வேங்கைகமழுமெஞ் சிறுகுடி"
என்றார் பிறரும்.வேமே என்னும் ஏகாரம் இரக்கம் புலப்படுத்திற்று.எறிதலென்னும் ஆற்றலாற் பெருங்காற்றெனப்பட்டது.காடுகளிற் காற்றினால் மரங்கள் உராய்ந்துதீப்பற்றுதல் இயல்பாகலின் எறிதல் என்பதுஇப்பொருட்டாயிற்று. புனத்துச் சந்தனமும்வேங்கையும் அப்புனம் எறிபுனமாய்த்தீப்பட்டக்கால் வேமென்னும் பொருட்டுப் புனம்மறித்துங் கூறப்பட்டது. உம்மைகள் எண்ணொடு உயர்வுசிறப்பும் ஆம்.
குறுந்.
|
செல்வம் நிலையாமை
பொருட்பால்
பெருமை
[நல்லினத்தாரது பெருந்தன்மை உணர்த்துவது]
ஈத லிசையா திளமைசே ணீங்குதலால்
காத லவருங் கருத்தல்லர்; - காதலித்து
ஆதுநா மென்னு மவாவினைக் கைவிட்டுப்
போவதே போலும் பொருள்.
குறிப்புரை: ஈதல் இசையாது - உலகவாழ்க்கையானது வறியவர்க்கு ஒன்று விரும்பியபடிகொடுத்தல் இயலாததாயிருக்கின்றது; இளமை சேண்நீங்குதலால் காதலவரும் கருத்தல்லர் - இளமைநிலையும் நெடுந்தொலைவில் நீங்கிப் போதலால்காதலன்புடைய மனைவியரும் வரவர விருப்புடையரல்லர்;காதலித்து ஆதும் நாம் என்னும் அவாவினைக்கைவிட்டு போவதே போலும். பொருள்-ஆதலின்உலகவாழ்க்கையிற் பற்றுக்கொண்டு நாம் ஆக்கமுறுவோம் என்னும் அவாவினைக் கைவிட்டுத்துறவுநெறியில் ஒழுகுவதே பயன்றருவதாகும்.
கருத்து: பற்றில்லாமலிருந்தலேபெருந்தன்மையாகும்.
விளக்கம்: சேண் நீங்குதல் மீண்டும்பெறற்கருமை தேற்றி நின்றது. காதலவர்: ஒரு சொல்;‘இளமை நீங்குதலால்' என்னும் குறிப்பால்,சிறப்பாக அது மனைவியர் மேல் நின்றது. உம்மை,இறந்தது தழீஇயது. கருத்தென்றது ஈண்டு விருப்பம்.போலும் என்பது ஒப்பில் போலி.
தொல். இடை.
|
செல்வம் நிலையாமை
பொருட்பால்
பெருமை
இற்சார்வின் ஏமாந்தேம் ஈங்கமைந்தேம் என்றெண்ணிப்
பொச்சாந் தொழுகுவர் பேதையார்; - அச்சார்வு
நின்றன போன்று நிலையா எனவுணர்ந்தார்
என்றும் பரிவ திலர்.
குறிப்புரை: இல் சார்வின்ஏமாந்தேம் - மனை வாழ்க்கைச் சார்பினால்களித்திருக்கின்றேம்; ஈங்கு அமைந்தேம் -உலகத்தில் அதற்கு வேண்டிய பொன் முதலிய எல்லாநலங்களிலும் நிறைத்திருக்கின்றேம்; என்று எண்ணிபொச்சாந்து ஒழுகுவர் பேதையர் - என்று கருதிஅறிவிலா மாந்தர் அவற்றின் பொய்ம்மையை மறந்துஒழுகுவர்; அச் சார்பு நின்றனபோன்று நிலையா எனஉணர்ந்தார் என்றும் பரிவது இலர் - ஆனால்,அச்சார்புகள் நிலைத்திருப்பனபோற்காணப்பட்டுப் பின் நிலையாமற்போம் என்றுஉணர்ந்த மேலோர் எக்காலத்திலும் அவற்றைவிரும்புதலின்று யொழுகுவர்.
கருத்து: எல்லா உலக நலங்களும்ஒருங்கமைந்த காலத்தும் அவற்றிற் பற்றின்றிநிற்றலே பெருந்தன்மை யாகும்.
விளக்கம்: ஏமாத்தல் - மிகஇன்புறுதல்; அமைதல் - குறைவின்றியிருத்தல்.இரண்டும் தெளிவின் பொருட்டு இறந்த காலத்தில்வந்தன. "இயற்கையுந் தெளிவுங்கிளக்குங்காலை"
என்பதனால் இதுமுடிக்கப்படும். பேதையாரென்றதனானும் உணர்ந்தார்என்றதனானும் அவ்வவற்றின் உயர்வு தாழ்வுகள்விளங்கின. என்றும் என்றார், தம் இளமைப்பருவத்தும் அனைத்து நலங்களும் வாய்ந்த காலத்தும்பரிவதில ரென்றற்கு.
தொல். வினை.
|
செல்வம் நிலையாமை
பொருட்பால்
பெருமை
மறுமைக்கு வித்து மயலின்றிச் செய்து
சிறுமைக்குப் படாதேநீர் வாழ்மின் - அறிஞராய்
நின்றுழி நின்றே நிறம்வேறாங் காரணம்
இன்றிப் பலவு முள.
குறிப்புரை: மறுமைக்கு வித்துமயலின்றிச் செய்து சிறுமை படாதே நீர் வாழ்மின்அறிஞராய்-மறுமைக்கு வித்தாகிய அறச்செயலைவாழ்க்கையில் மயங்குதலில்லாமற் செய்துஎஞ்ஞான்றுந் துன்புறாமல் நீவிர் அறிஞராய்வாழுங்கள்; ஏனென்றால், நின்றுழி நின்றே நிறம்வேறாம் - நின்ற நிலையில் நின்றே உடம்பினஇளமையொளி வேறாய் மாறும்; காரணமின்றிப் பலவும்உள - அன்றியுங் காரணமில்லாமலே பல இடையூறுகளும்வாழ்க்கையில் உள்ளன.
கருத்து: மறுமை நினைவோடு ஒழுகுதலேபெருந்தன்மையாகும்.
விளக்கம்: வித்தென்றது,வித்துப்போன்றதை; அறிஞராய் வாழ்மின் என்க.நம்மையறியாமலே நிறம் வேறாம் என்றற்கு‘நின்றுழி நின்றே' யென்றும் இம்மைச்செய்காரணம் இன்றாயினும் என்றற்குக்‘காரணமின்றி, யென்றுங் கூறினார். மற்று, உளவாதல்உம்மைச் செய் காரணத்தாலென்று கொள்க பலவும்என்றது. "அடைந்தார்ப் பிரிவும் அரும்பிணியும்கேடும்."
நாலடி.
|
செல்வம் நிலையாமை
பொருட்பால்
பெருமை
உறைப்பருங் காலத்தும் ஊற்றுநீர்க் கேணி
இறைத்துணினும் ஊராற்றும் என்பர்; - கொடைக்கடனும்
சாஅயக் கண்ணும் பெரியார்போல் மற்றையார்
ஆஅயக் கண்ணும் அரிது.
குறிப்புரை: உறைப்பு அரு காலத்தும்ஊற்றுநீர்க் கேணி இறைத்து உணினும் ஊர் ஆற்றும்என்பர்-மழை துளித்தலில்லாத காலத்திலும் ஊற்றுநீரையுடைய சிறிய நீர்நிலை இறைத்துஉண்ணுவதாயினும் ஊரிலுள்ளாரனை வர்க்கும் உதவும்என்று பெரியோர் கூறுவர், கொடைக் கடனும் - அதுபோலவறியோர்க்கு ஒன்று கொடுத்தலாகிய கடமையும்,சாயக்கண்ணும் பெரியார்போல் மற்றையார்ஆயக்கண்ணும் அரிது - தமது நிலைமை குறைவானகாலத்தும் பெரியோர் மேற்கொள்ளுதல்போலப்பெரியரல்லாதார் தமது நிலைமை நிறைவடைந்தகாலத்தும் மேற்கொள்ளுதல் அரிதாகும்.
கருத்து: நிலைமை குறைந்த காலத்தும்பிறர்க்கு இயன்றது உதவ முற்படுதலேபெருந்தன்மையாகும்.
விளக்கம்: அருமை இரண்டிடத்தும்இன்மைமேற்று, கேணி என்பது மணற்பரப்பில்இயல்பாக அமையும் ஊற்றுடைய சிறிய நீர்நிலை.தொல்காப்பிய வுரையிற் "சிறுகுளம்"
எனப்பட்டது.கொடைக்கடனும் அரிது என்க. பெரியாரியல்பைஉவமையுடன் உரைக்குங்கால் மற்றையாரியல்பும்உடனுரைக்கப்பட்டது.
தொல்எச்.
. நச். |
செல்வம் நிலையாமை
பொருட்பால்
பெருமை
உறுபுனல் தந்துல கூட்டி அறுமிடத்தும்
கல்லூற் றுழியூறும் ஆறேபோல்; - செல்வம்
பலர்க்காற்றிக் கெட்டுலந்தக் கண்ணும் சிலர்க்காற்றிச்
செய்வர் செயற்பா லவை.
குறிப்புரை: உறுபுனல் தந்து உலகுஊட்டி-நீருள்ள காலத்தில் மிக்க நீர் தந்துஉலகுயிர்களை உண்பித்து, அறுமிடத்தும் கல் ஊற்றுழிஊறும் ஆறேபோல் - நீர் வறளுங் காலத்தும்தோன்றுகின்ற ஊற்றினிடத்தில் ஊறியுதவும்ஆறேபோல், செல்வம் பலர்க்கு ஆற்றி-உள்ளகாலத்திற் பொருளைப் பலர்க்கும் உதவிசெய்து,கெட்டு உலந்தக் கண்ணும் சிலர்க்கும் ஆற்றிச்செய்வர் செயற்பாலவை - அப் பொருள் கெட்டுநிலையழிந்த காலத்தும் மேன்மக்கள்,சிலர்க்கேனும் உதவிகள் செய்து தாம்செய்தற்குரிய கடமைகளைச் செய்துகொண்டிருப்பர்.
கருத்து: எந் நிலையிலுந் தங்கடமைகளைச் செய்தலே பெரியோர் தன்மையாகும்.
விளக்கம்: கல்லும ஊற்றெனவினைத்தொகையாகக் கொள்க. பலர்க்குமெனவும்,சிலர்க்கேனுமெனவுந் தந்துரைக்க. யாண்டுஞ்செயற்பாலவை செய்தலே பெரியோரியல்பாதலின்,பலர்க்காற்றி, சிலர்க்காற்றி என்ற பின்னும்‘செய்வர் செயற்பாலவை' என ஆசிரியர்முடித்துக்காட்டினார். இதனால், உதவுதலென்பது எந்நிலையிலுஞ் செயற்பாலதாங் கடமையாதலும்பெறப்பட்டது.
நாலடி.
,
|
செல்வம் நிலையாமை
பொருட்பால்
பெருமை
பெருவரை நாட! பெரியோர்கட் டீமை
கருநரைமேற் சூடேபோற் றோன்றும்; - கருநரையைக்
கொன்றன்ன இன்னா செயினும் சிறியார்மேல்
ஒன்றானும் தோன்றாக் கெடும்.
குறிப்புரை: பெரு வரை நாட - பெரியமலைகளையுடைய நாடனே!. பெரியோர்கண் தீமைகருநரைமேல் சூடேபோல் தோன்றும் -மேன்மக்களிடத்தில் உண்டான குற்றம் சிறந்தவெள்ளையெருதின்மேல் இட்ட சூடுபோல் விளங்கித்தெரியும்; கருநரையைக் கொன்றன்ன இன்னா செயினும்- அச் சிறந்த வெள்ளை எருதினைச் சூடிடுதலே யன்றிக்கொன்றாற்போன்ற துன்பங்களைச் செய்தாலும்,சிறியார்மேல் ஒன்றானும் தோன்றாக் கெடும் -கீழ்மக்களிடத்தில் ஒரு குற்றமாவது அவ்வாறுவிளங்கித் தெரியாமல் மறைந்துவிடும்.
கருத்து: மேன்மக்களிடம் சிறுகுற்றமும் உண்டாகாமலிருத்தல் நல்லது.
விளக்கம்: சூட்டின் வடு நன்குதெரிதல்வேண்டி நரையெருது கூறப்பட்டது. நரை :ஆகுபெயர்கருவென்னும் அடைமொழி முதன்மைப்பொருட்டாய்ச் சிறந்த வென்னுங் கருத்தில்நின்றது. சிறியோர் மிக்க கொடுமைசெய்தாராயினுமென்றற்குக் ‘கருநரையைக்கொன்றன்ன' வென்றது, ‘கருநரைமேற் சூடு' என்றுமுற்கூறியதையே தந்தெடுத்துக் கொண்டபடி யென்க.பெரியோரை அனைவரும் விளக்கமாகத்தெரிந்திருப்பாராதலின், அவர்பாற் றோன்றுஞ்சிறு குற்றமும் விளக்கமாகத் தோன்றுவதாயிற்று.‘உயர்ந்தார்ப் படுங்குற்றமும் குன்றின்மேல்இட்ட விளக்கு"
என்றார் பிறரும்.
பழமொழி.
|
செல்வம் நிலையாமை
பொருட்பால்
பெருமை
இசைந்த சிறுமை யியல்பிலா தார்கட்
பசைந்த துணையும் பரிவாம் - அசைந்த
நகையேயும் வேண்டாத நல்லறிவி னார்கண்
பகையேயும் பாடு பெறும்.
குறிப்புரை: இசைந்த சிறுமைஇயல்பிலாதார்கண் பசைந்த துணையும் பரிவாம் -தமக்குப் பொருந்திய சிறுமைச் செயல்களையுடையபண்பிலாதாரிடத்தில் நேயங்கொண்ட அளவுந்துன்பமேயாம்; அசைந்த நகையேயும் வேண்டாதநல்லறிவினார்கண் - மாறிய செயல்களைவிளையாட்டாகவும் விரும்பாத சிறந்தஅறிஞர்களிடத்தில், பகையேயும் பாடு பெறும் - பகைகொள்ளுதலுங்கூட மாட்சிமைப்படும்.
கருத்து: பெரியோரிடத்துப் பகைசெய்தலினுஞ் சிறியோரிடத்து நட்புச் செய்தல்பெருந்தீங்கு பயக்கும்.
இயல்பென்றார்,உலகியல்புக்கேற்ப வொழுகும் பெருந்தன்மையாகியபண்பை.
பசைதல், உள்ளம் நெகிழ்ந்து சென்றுபற்றுதல். அசைந்தவினையாலணையும் பெயர்.நகையேயும் பகையேயும் என்னும் உம்மைகள் இழிவுசிறப்பு.
|
செல்வம் நிலையாமை
பொருட்பால்
பெருமை
மெல்லிய நல்லாருள் மென்மை; அதுவிறநஒன்னாருட் கூற்றுட்கும் உட்குடைமை; எல்லாம்
சலவருட் சாலச் சலமே; நலவருள்
நன்மை வரம்பாய் விடல்.
குறிப்புரை: மெல்லிய நல்லாருள்மென்மை - மென்றன்மையுடைய மகளிரிடம்மென்றன்மையாகவும், அது இறந்து ஒன்னாருள் கூற்றுஉட்கும் உட்கு உடைமை - பகைவரிடத்தில் அம்மென்றன்மை நீங்கிக் கூற்றுவனும் அஞ்சும்மிடுக்குடைமையாகவும், எல்லாம் சலவருள் சாலச்சலமே- முழுதும் பொய்ராயனாரிடத்து மிக்கபொய்ம்மையாகவும், நலவருள் நன்மை -மெய்யியல்புடைய மேலோரிடம் மெய்ம்மையாகவும்,வரம்பாய் விடல் - அவ்வவற்றின் எல்லையாய்நடந்துகொள்க.
கருத்து: மாந்தரின் பல்வேறுநிலைக்கு ஏற்பப் பல்வேறு வகையாக உலகத்தில்நடந்துகொள்ள வேண்டும்.
விளக்கம்: முன்னிரு வரிகள்மென்மைக்கும் ஆண்மைக்கும் பின்னிரு வரிகள்பொய்ம்மைக்கும் மெய்ம்மைக்கும் வந்தன.‘நல்லார்' என்றது, ஈண்டுச் சிறப்பாய் மகளிரையுணர்த்திற்று. "மகளிர் சாயல் மைந்தர்க்குமைந்து"
எனப் பிறரும் இக் கருத்தியைபுகூறுமிடத்தான் அறிக. உட்கு, ஈண்டு மிடுக்கு;எல்லாம், முழுமையென்னும் பொருட்டு, நன்மை, சலம்என்பதன் மறையாக வந்த மையின் மெய்ம்மையென்றுரைக்கப்பட்டது. ‘வரம்பாய் விடல்' என்றார்,அவ்வக்குணங்களின் மேனிலையுடை யீராய் நடந்துகொள்க என்றற்கு, பொய்யற்குப் பொய்யராயொழுகுதல், அவர் திருந்தும் பொருட்டும் அவரால்தாம் ஏதமுறாமைக்கும் என்க.
புறம்.
|
செல்வம் நிலையாமை
பொருட்பால்
பெருமை
கடுக்கி யொருவன் கடுங்குறளை பேசி
மயக்கி விடினும் மனப்பிரிப்பொன் றின்றித்
துளக்க மிலாதவர் தூய மனத்தார்;
விளக்கினுள் ஒண்சுடரே போன்று.
குறிப்புரை: கடுக்கி ஒருவன்கடுங்குறளை பேசி மயக்கி விடினும் - ஒருவன் முகஞ்சுளித்துப் பிறரைப்பற்றிக் கொடிய கோளுரை கூறித்தம்மை மயக்கினாலும், மனப் பிரிப்பு ஒன்றுஇன்றித் துளக்கம் இலாதவர் - அப் பிறர்பால்மனவேறுபாடு சிறிதுமின்றி முற்கொண்டகருத்துறுதியினின்று அசைதலில்லாதவரே, தூயமனத்தார் விளக்கினுள் ஒண் சுடர் போன்றுவிளக்கினில் எரியும் ஒள்ளியதீப்பிழம்புபோன்று அழுக்கற்ற நெஞ்சுடையவராவர்.
கருத்து: பிறர் சொல்லுங்கோளுரைகட்குச் செவிகொடாமை பெருந்தன்மையாகும்.
விளக்கம்: முகத்தின் கடுமைபுலப்படுத்துவதற்குக் ‘கடுக்கி' என்றார்;"மடித்த செவ்வாய்க்கடுத்த நோக்கின்"
என்றார் மணிமேகலையினும், மயங்கிவிடினும்என்றமையாற் சான்றோர் மயக்கினமை பெறப்படாது;ஒருவன்தான் மயங்குஞ் செயலைத் தீரநிகழ்த்தினமையே பெறப்படும். அச்செயல்முற்றினமை தெரித்தற்கு ‘விடு' என்னுந்துணிவுப்பொருள் விகுதி நின்றது. துளக்கமின்மைதூய்மையைக் காட்டுமாகலின், தூயமனத்தாரென்று மேன்மக்களின் பெருமை கூறப்பட்டது; சுடர், தூய்மைக்குஉவமம். சுடரின் ஒண்மை மனத்தின் தூய்மைக்குக்கொள்க.
மணிமே.
|
செல்வம் நிலையாமை
பொருட்பால்
பெருமை
முற்றுற்றுந் துற்றினை நாளும் அறஞ்செய்து
பிற்றுற்றுத் துற்றுவர் சான்றவர்; -அத்துற்று
முக்குற்றம் நீக்கி முடியும் அளவெல்லாம்
துக்கத்துள் நீக்கி விடும்.
குறிப்புரை: முன் துற்றும் துற்றினைநாளும் அறம் செய்து பின் துற்றுத் துற்றுவர்சான்றவர் - முதலில் உண்ண எடுக்குங் கவளத்தைநாடோறும் பிறர்க்கு உதவி செய்து அடுத்தகளவத்தைப் பெரியோர் உண்ணுவர்; அத்துற்று-பிறர்க்கு உதவிசெய்த அந்தக் கவளம், முக்குற்றம் நீக்கி முடியுமளவெல்லாம் துக்கத்துள்நீக்கிவிடும் - அப் பெரியோருடைய காம வெகுளிமயக்கமென்னும் மூன்று குற்றங்களையுங் கெடுத்துப்பிறவி தீருங் கால முழுமையும் அவரைத்துன்பத்தினின்று நீக்கிவிடும்.
கருத்து: முதலில் பிறரை உண்பித்துப்பின்பு தாம் உண்டு துயர் தீர்தலேபெருந்தன்மையாகும்.
விளக்கம்: துற்றுதல்-உண்ணுதல்;ஆதலின் துற்று, ஒரு வாய் அளவு உணவுக்காயிற்று;"இகலன்வாய்த் துற்றிய தோற்றம்"
என்றார் பிறரும். முக்குற்றம் நீக்கி அதனால்துக்கத்துள் நீக்கிவிடும் என்க. முக்குற்றம்நீக்கியவளவே பிறவி தீர்தலின்றி எடுத்த வினைதீருமளவும் அஃதிருக்குமாகலின், அவ்வாறிருக்குங்கால முழுமையும் துக்கத்துள் நீக்கிவிடுமென்றார்."உதவிவரைத் தன்றுதவி"
யாகலின்,உதவியது ஒரு கவளமாயினும் அது பெரும் பயன் றந்தது.
களவழி நாற்.
குறள்.
|
செல்வம் நிலையாமை
பொருட்பால்
தாளாண்மை
[முயற்சியுடைமை உணர்த்துவது.]
கோளாற்றக் கொள்ளாக் குளத்தின்கீழ்ப் பைங்கூழ்போற்
கேளீவ துண்டு கிளைகளோ துஞ்சுப;
வாளாடு கூத்தியர் கண்போற் றடுமாறுந்
தாளாளர்க் குண்டோ தவறு.
குறிப்புரை: கோள் ஆற்றக்கொள்ளாக் குளத்தின் கீழ்ப் பைங்கூழ்போல் -நீர்கொள்ளுதலை நிரம்பக் கொள்ளாத ஏரியின்கீழுள்ள பயிரைப்போல், கேள் ஈவது உண்டு கிளைகளோதுஞ்சுப - தமக்கு உறவினர் கொடுப்பதை உண்டுசுற்றங்கள் சோம்பிக் கிடந்து பின் அவர்வறுமைப்பட்டபோது தாமும் வருந்தியிறப்பர்; வாள்ஆடு கூத்தியர் கண்போல் தடுமாறும் தாளாளர்க்குஉண்டோ தவறு - வாட்கூத்து ஆடுகின்ற கூத்துப்பெண்டிருடைய கண்களைப்போல் உழலும்முயற்சியுடையார்க்கு இப் பிழைபட்ட வாழ்வுஉண்டோ?
கருத்து: ஒவ்வொருவரும் தம் வாழ்க்கையில்முயற்சியுடையரா யிருக்க வேண்டும்.
விளக்கம்: உவமங்களின்கருத்துக்கள் பொருள்களின் விளக்கங்களில்வந்திருக்கின்றன. நீரை மிகுதியாகக் கொள்ளாதகுளம் முயற்சியுடைய கேளிர்க்கு உவமமாக வந்தது,அக்கேளிரின் சுற்றங்கள் சோம்பிக்கிடத்தலால் அவருக்க வருவாய் மிகுதியாகஅமையாமையின் என்க. துஞ்சுபதொழிலின்றியிருந்துபின் இறப்பரென்னும் பொருட்டு. "உலகுதொழிலுவந்து நாஞ்சில் துஞ்சி"
"நிலமிசைத் துஞ்சினார்"
என்பனகாண்க. வாளாடு கூத்தியர் - வாட்களை இரு கைகளிலும்பிடித்து விரையச் சுழற்றித் தாமுஞ் சுழன்றுகூத்தாடும் இள மகளிர்; ஆடுமகளிருள் இவர் ஒருவகையார்; இவர் கண்கள் அஞ்ஞான்றும் மிகமுயற்சியுடையவனாய் வாள் முனைகள்மேல் விரையத்திரிந்து திரிந்து பிறழ்ந்துழலும். அவ்வாறு கருமமேகண்ணாயிருக்கும், பேரூக்கமாகிய முயற்சியுடைமைக்குஅவர் கண்கள் உவமமாகக் கூறப்பட்டன. தடுமாறுதல் -ஈண்டு, உழன்று முயலுதல்.
அகம்.
.
நாலடி.
|
செல்வம் நிலையாமை
பொருட்பால்
தாளாண்மை
ஆடுகோ டாகி அதரிடை நின்றதூஉம்
காழ்கொண்ட கண்ணே களிறணைக்குங் கந்தாகும்;
வாழ்தலும் அன்ன தகைத்தே ஒருவன்றான்
தாழ்வின்றித் தன்னைச் செயின்.
குறிப்புரை: ஆடு கோடு ஆகி அதரிடைநின்றதும் காழ் கொண்ட கண்ணே களிறு அணைக்கும்கந்து ஆகும். துவள்கின்ற இளங்கொம்பாகிவழியிடையே நின்ற சிறு மரமும் உள்வயிரங் கொண்டுமுற்றிய காலத்தில் ஆண் யானைகளைக் கட்டுதற்குரியகட்டுத்தறியாக உதவும்; வாழ்தலும் அன்ன தகைத்தேஒருவன் தாழ்வின்றித் தன்னைச் செயின் - ஒருவன்முயற்சியால் தன்னை ஆற்றலிற் குறைவில்லாமற்செய்து கொள்ளுவானாயின் அவன் தனது வாழ்க்கையிற்பெருமை கொள்ளுதலும் அது போன்ற தன்மையதேயாம்.
கருத்து: எளிய நிலையிலுள்ளோரும்முயற்சியால் தம்மை ஆற்றலுடையவராகச்செய்துகொள்ளல்வேண்டும்.
விளக்கம்: வழியில் வரும் யானையைப்பாகர் அங்கே வலியதாய் நிற்பதொரு மரத்திற்கட்டுவராதலின், ‘அதரிடை' யென்றார். ‘அதரிடை ஆடுகோடாகி நின்றதும்' என்று கொள்க. இழிவுசிறப்பும்மைகோடாகி நின்றதற்கு வந்தது.கண்ணென்றது ஈண்டுக் காலப் பொருட்டு. அணைக்கும்என்றார், அதனாற் கந்து பெருமைப்படுதலின்.தாழ்வின்றித் தன்னைச் செய்து கொள்ளலாவது,"தொல் சிறப்பின் ஒண்பொருள் ஒன்றோ தவம்கல்வி ஆள்வினை"
யென மேற்கூறப்படுபவற்றில் தன்னைக் குறைவிலனாகச்செய்துகொள்ளலென்க.
நாலடி.
|
செல்வம் நிலையாமை
பொருட்பால்
தாளாண்மை
உறுபுலி ஊனிரை யின்றி ஒருநாள்
சிறுதேரை பற்றியுந் தின்னும்; - அறிவினால்
காற்றொழில் என்று கருதற்க கையினால்
மேற்றொழிலும் ஆங்கே மிகும்.
குறிப்புரை: உறுபுலி ஊன்இரைஇன்றிஒருநாள் சிறுதேரை பற்றியும் தின்னும் - வலிமைமிக்க புலி தனக்கேற்ற இறைச்சியுணவில்லாமல்ஒரோவொருகால் சிறிய தவளையைப் பிடித்துந்தின்னும்; அறிவினால் கால் தொழில் என்று கருதற்க- ஆதலால், தமக்குரிய அறிவு மேம்பாட்டினால்,எதனையும் காலால் செய்தற்குரிய சிறுதொழிலென்றுயாரும் கருதாதிருப்பராக; கையினால்மேல் தொழிலும் ஆங்கே மிகும் - அச்சிறுதொழிலையும் பொருள் செய்தொழுகும்முயற்சியினால் உயர்ந்த தொழிலும் அதிலிருந்தேபெருகிவரும்.
கருத்து: சிறு தொழிலையும்முயற்சியோடு திருத்தமாகச் செய்ய வேண்டும்.
விளக்கம்: உவமத்திற் புலிக்குஉடம்பு வலிமை கூறப்பட்டமையின், பொருளிலும் அறிவுவலிமை காட்டுதற்கு ‘அறிவினால்' என்றார்.ஊனிரையின்றி யென்றமையின், தேரையின் ஊன்சிறுமை பெறப்பட்டது. தேரை தின்று பசியாறிய ஒருசிறு தணிவிலிருந்து பேரிரை பற்றும் வன்மைபுலிக்குண்டாதலின், சிறு தொழிலையும் பொருள்செய்தொழுகும் முயற்சியிலிருந்தே மக்கட்குஉயர்தொழிலும் பெருகிவருமென்பது கருத்து. கையினால்முயற்சி யொழுக்கத்தாலென்க.
|
செல்வம் நிலையாமை
பொருட்பால்
தாளாண்மை
இசையா தெனினும் இயற்றியோ ராற்றால்
அசையாது நிற்பதாம் ஆண்மை - இசையுங்கால்
கண்டல் திரையலைக்குங் கானலந் தண்சேர்ப்ப!
பெண்டிரும் வாழாரோ மற்று.
குறிப்புரை: கண்டல் திரை அலைக்கும்கானல் தண்சேர்ப்ப - தாழையை அலைகள்சிதைக்கின்ற கடற்கரைச் சோலையையுடையகுளிர்ந்த துறைவனே!, இசையாது எனினும் - மேற்கொண்டகாரியம் ஊழ்வினையினால் எளிதிற் கூடிவராதாயினும், இயற்றி ஓர் ஆற்றால் - அவ்வூழ்இப்பிறவியில் வழி செய்துவிட்ட ஒரு வகையினால்,அசையாது நிற்பதாம் ஆண்மை - தளராமல் நின்றுமுயல்வதே ஆடவர்க்குரிய ஆண்மைப் பண்பாகும்;இசையுங்கால் பெண்டிரும் வாழாரோ மற்று - மற்று, ஊழ்கூட்டுதலால் ஒன்று எளிதிற் கூடி வருமாயின்பெண்மக்களும் அதனை முடித்துப் பெருமையடையாரோ!
கருத்து: ஊழ் கூட்டாதவிடத்தும்,அரிய காரியங்களைச்செய்தலில்தளர்வின்றியிருந்து முயலும் ஆண்மையேதாளாண்மையாகும்.
விளக்கம்: இயற்றிய வென்னும் அகரம்தொக்கது; ஊழ் இயற்றித் தந்த என்பது பொருள்;இயன்ற ஒரு வகையினால் என்பதன் கருத்தும் இது.நிற்பது - நின்று முயல்வது; இசையுங்கால் :வினையெச்சம். வாழாரோ என்பது ஈண்டு முயன்றுபெருமையடையாரோ வென்னுங் கருத்தினின்றது; இஃதுஅறி பொருள் வினா.
ஊழ்கூட்டுங்காற் சிறிதுமுயன்று ஒன்று நிறைவேறப்பெறுதல் பெண்டிர்க்கும்இயலுமென்றமையின், அஃதன்று தாளாண்மை யென்னும்ஆடவர் பண்பு என்பது இவ்வாற்றாற் பெறப்படும்,மற்றுவினைமாற்றென்க.
தொல். கிளவி.
|
செல்வம் நிலையாமை
பொருட்பால்
தாளாண்மை
நல்ல குலமென்றும் தீய குலமென்றும்
சொல்லள வல்லாற் பொருளில்லை; - தொல்சிறப்பின்
ஒண்பொரு ளொன்றோ தவங்கல்வி யாள்வினை
என்றிவற்றான் ஆகும் குலம்.
குறிப்புரை: நல்ல குலமென்றும் தீயகுலமென்றும் சொல் அளவு அல்லால் பொருள் இல்லை -நல்ல குலமென்றும் கெட்ட குலமென்றும் உலகத்திற்பிறப்பின் மேலேற்றிச் சொல்வது வெறுஞ்சொல்லளவே யல்லால் அதற்குப் பொருளில்லை.தொல் சிறப்பின் ஒண்பொருள் ஒன்றோ தவம்கல்வி ஆள்வினை என்று இவற்றான் ஆகும் குலம் - குலம்என்பது, தொன்று தொட்டுவரும் மேன்மையினையுடையசெல்வத்தால் மட்டுமன்று, தவம், கல்வி, முயற்சி எனஇவை தம்மாலெல்லாம் உண்டாவதாகும்.
கருத்து: தவம் கல்வி ஆள்வினைமுதலியவற்றில் முயற்சியுடையாரே பிறரால்நேயங்கொள்ளுதற்குரிய உயர்குலத்தோராவர்.
விளக்கம்: சொல்வது என ஒரு சொல்வருவிக்க. தொல் சிறப்பின் என்பதைத் தவம்முதலியவற்றிற்குங் கொள்க. பிறப்புப்பற்றியகுடியினும், தவவுணர்வு கல்வியறிவு ஆள்வினையியல்புபொருளாக்கம் என்பன நெடுங்காலமாக விளங்கி உரைபயின்றுவரும் பழம் பெருஞ் சிறப்பினவாகலின்,தொல் சிறப்பின் என்னும் அடையடுத்து வந்தன.பொருளுக்கு ஒண்மை, நல்வழியான் ஈட்டப் பட்டமை.உயர்குலத்துக்கு முதன்மையான காரணங்கள் தவமுங்கல்வியும் ஆள்வினையுமாகலின், ‘இவற்றான் ஆகுங்குலம்' என்று உம்மை கொடாது முடித்ததுமன்றிப்பொருளை ஒன்றோவென்னும் இடைச்சொற் கொடுத்தும்வேறு பிரித்தார். "தத்தங் குறப்பிற்பொருள்செய்குநவும்"
என்பதனால்ஈதுணரப்படும். குலம் என்றது. குழு ; உள்ளமேம்பாடுடையோர் குழுவென்க.
தொல். இடை.
|
செல்வம் நிலையாமை
பொருட்பால்
தாளாண்மை
ஆற்றுந் துணையும் அறிவினை உள்ளடக்கி
ஊக்கம் உரையார் உணர்வுடையார் - ஊக்கம்
உறுப்பினால் ஆராயும் ஒண்மை யுடையார்
குறிப்பின்கீழ்ப் பட்ட துலகு.
குறிப்புரை: ஆற்றுந் துணையும்அறிவினை உள் அடக்கி ஊக்கம் உரையார்உணர்வுடையார் - நுண்ணுணர் வுடையோர் ஓர்அருஞ்செயலைச் செய்து முடிக்குமளவும் தமதுஅறிவின்றிறத்தை மனத்தில் அடக்கித் தம்முயற்சிகளைப் பிறர்க்குச் சொல்லார்; ஊக்கம்உறுப்பினால் ஆராயும் ஒண்மை யுடையார் - மேலும்அவர், தமது ஆற்றலைத் தம்கண் முதலியஉறுப்புக்களாற் பிறர் ஆராய்ந்து தெரிந்துகொள்ளுதற்கேற்ற அறிவு விளக்க முடையவர்;குறிப்பின் கீழ்ப்பட்டது உலகு - உலகம் அத்தகையதிறமையான தாளாண்மை யுடையாரின் குறிப்பின்வழிப்பட்டது.
கருத்து: முயற்சிகள்உள்ளுணர்வோடும் அறிவு விளக்கத்தோடும்நடைபெறுதல் வேண்டும்.
விளக்கம்: அறிவென்றது திறமைப்பொருட்டு, "வழிபடுவோரை வல்லறி தீயே"
என்றதும் அது, ஊக்கம் இரண்டனுள், முன்னதுமுயற்சியையும் பின்னது அம்முயற்சியின்வீற்றினையும் உணர்த்தும். எடுத்த காரியத்தில்வேறின்றி நிற்பவரென்றற்கு ‘உணர்வுடையா'ரென்றார். ‘ஊக்கம் உறுப்பினால் ஆராயும்ஒண்மையுடையார்' என்றற்குப் பிறர் முயற்சிகளைமட்டும் அவர்தம் செய்கைக் கூறுகளாலும் முகத்தின்உறுப்புக்களாலும் ஆராய்ந்து தெரிந்து கொள்ளும்அறிவு மாட்சிமை யுடையாரெனவும் பொருளுரைத்து அதனைஇரட்டுற மொழிதலாகக் கொள்க. உலகம்அத்தகையோர் கருத்தின்வழி இயங்கிக் காரியம்எளிதில் நிறைவேறப்பெறுதலின்,அவ்வொண்மையுடையார் குறிப்பின் கீழ்ப்பட்டதுஉலகு என்றார்.
புறம்.
|
செல்வம் நிலையாமை
பொருட்பால்
தாளாண்மை
சிதலை தினப்பட்ட ஆல மரத்தை
மதலையாய் மற்றதன் வீழூன்றி யாங்குக்
குதலைமை தந்தைகட் டோன்றிற்றான் பெற்ற
புதல்வன் மறைப்பக் கெடும்.
குறிப்புரை: சிதலை தினப்பட்டஆலமரத்தை - கறையானால் அரிக்கப்பட்ட ஆலமரத்தை,மதலையாய் அதன் வீழ் ஊன்றியாங்கு - அதன் விழுதுஅதனைத் தாங்கும் வன்மையுடையதாய் ஊன்றிநின்றாற்போல, குதலைமை தந்தை கண் தோன்றில் -தன் தந்தையினிடத்தில் தளர்ச்சி தோன்றினால்,தான் பெற்ற புதல்வன் மறைப்பக் கெடும் - அவன்பெற்றெடுத்த புதல்வன் பாதுகாக்க அது நீங்கும்.
கருத்து: தந்தையின் தளர்ச்சியைக்காத்தற்கு மைந்தன் முயற்சியுடையனா யிருத்தல்வேண்டும்.
விளக்கம்: சிதலை யென்பதற்கு உருபுவிரித்துக் கொள்க. மதலை - வன்மையுடையதென்னும்பொருளது. மற்றுஅசை. மறைப்ப என்றார்,முயற்சியாலுண்டாகும் நன்மக்கள். ‘தந்தையின்தளர்ச்சியை அவர்க்குத் தோன்றாதபடி செய்துமகிழ்வித்தலின் "தூங்குசிறை வாவலுறைதொன்மரங்க ளென்ன, ஓங்கு குலம் நையஅத னுட்பிறந்தவீரர், தாங்கல்கட னாகும்"
என்றார்பிறரும்.
சிந். காந்தரு.
|
செல்வம் நிலையாமை
பொருட்பால்
தாளாண்மை
ஈனமாய் இல்லிருந் தின்றி விளியினும்
மானந் தலைவருவ செய்பவோ? - யானை
வரிமுகம் புண்படுக்கும் வள்ளுகிர் நோன்றாள்
அரிமா மதுகை யவர்.
குறிப்புரை: யானை வரிமுகம்பண்படுக்கும் வள் உகிர் நோன் தாள் அரிமாமதுகையவர் - யானையினறு புள்ளிகளையுடைய முகத்தைப்புண்படுத்தவல்ல கூரிய நகங்கள் பொருந்திய வலியகால்களையுடைய சிங்கத்தைப் போன்ற முயற்சிவலிமை யுடையோர், ஈனமாய் இல் இருந்து இன்றிவிளியினும் - நிலை குறைவாகி வீட்டில் அலுவலில்லாதுதங்கி வருவாயின்றி இறக்க நேரினும், மானம்தலைவருவ செய்பவோ - குற்றம் உண்டாகக்கூடியசெயல்களைச் செய்வார்களோ?
கருத்து: முயற்சியுடையார்க்குஎந்நிலையிலும் பழிப்புக்குரிய தீச்செயல்கள்செய்யும்படி நேராது.
விளக்கம்: தலைவருவபெயர், மதுகை,ஈண்டு-முயற்சி வலிமை. ‘வள்ளுகிர் நோன்றாள்'என்னும் உவமைக்கேற்பப் பொருளிற் கூரறிவும் தக்கசெயல்வாய்ப்புமுடைய மதுகையவர் எனவும், பொருளில்‘இல்லிருந்து இன்றி விளியினும்' என்றதற்கேற்பஉவமையிற் குகையில் தங்கி உணவின்றி இறக்கினும்எனவும் உரைத்துக்கொள்க. "தோல்வற்றிச்சாயினும் சான்றாண்மை குன்றாமை"
பெறப்பட்டது.
திரிகடு.
|
செல்வம் நிலையாமை
பொருட்பால்
தாளாண்மை
தீங்கரும் பீன்ற திரள்கால் உளையலரி
தேங்கமழ் நாற்றம் இழந்தா அங்கு - ஓங்கும்
உயர்குடி யுட்பிறப்பின் என்னாம் பெயர்பொறிக்கும்
பேராண்மை இல்லாக் கடை.
குறிப்புரை: தீம் கரும்பு ஈன்றதிரள் கால்உளை அலரி தேன் கமழ் நாற்றம்இழந்தாங்கு - இனிப்பாகிய கருப்பங் கழி தோற்றியதிரண்ட தாளையுடைய பிடரிமயிர் போன்ற மலர்தேனோடுகூடி மணக்கும் நறுமணத்தை இழந்தாற்போல்,பெயர் பொறிக்கும் பேராண்மை இல்லாக்கடை - தன்புகழைச் சான்றோர் எழுதி நிலைநிறுத்துதற்குரியஅரிய முயற்சித்திறம் இல்லாவிட்டால், ஓங்கும்உயர்குடியுட் பிறப்பின் என் ஆம் - மிக்கஉயர்குடியுட் பிறத்தலால். மட்டும் யாது பயனுண்டு?
கருத்து: அரிய முயற்சித்திறம்இல்லாதபோது உயர் குடிப் பிறப்பும் இனியதோற்றமும் இருத்தலால் மட்டும் பயனில்லை.
விளக்கம்: உளையென்றது ஈண்டுக்குதிரை சிங்கம் முதலியவற்றின்பிடரிமயிர்போல் மென்மையும் செறிவுமுடையகுஞ்சம் என்றற்கு. இதனாற் சாயலுடைய தோற்றம்பெறப்பட்டது. அலரி "முல்லை அரும்பவிழ்அலரி"
என்புழிப்போலப் பொதுவாகமலரென்னும் பொருட்டு, ‘தேங்கமழ் நாற்றம்'என்பதில் தேன் பெயர்க்கும் நாற்றம்ஆண்மைக்கும் ஒக்கும். ‘கரும்பு ஈன்ற' என்றார்,உயர்குடியுட் பிறந்தும் என்றற்கு. ‘நாற்றம்இழந்தாங்கு ஆண்மையிலாக்கடை' யென்க.பொறித்தல், நூலிலுங் கல்லிலுமாம்.
முல்லைப். |
செல்வம் நிலையாமை
பொருட்பால்
தாளாண்மை
பெருமுத் தரையர் பெரிதுவந் தீயுங்
கருனைச்சோ றார்வர் கயவர்; - கருனையைப்
பேரும் அறியார் நனிவிரும்பு தாளாண்மை
நீரும் அமிழ்தாய் விடும்.
குறிப்புரை: பெருமுத்தரையர் பெரிதுஉவந்து ஈயும் கருனைச் சோறு ஆர்வர் கயவர் -முயற்சியில்லாத கீழ் மக்கள், பெருமுத்தரையர்என்பார் மிக மகிழ்ந்து அளிக்குங் கறிகளோடு கூடியஉணவை உண்டு வாழ்நாட் கழிப்பர்; கருனையைப் பேரும்அறியார் நனிவிரும்பும் - கறிகளைப் பேர்தானும்அறியாத முயற்சியாளர்கள் மிகவும் விரும்புகின்ற,தாளாண்மை நீரும் - தம் முயற்சியுடைமையாற்கிடைத்த நீருணவும், அமிழ்தாய் விடும் -அவர்க்கத் தேவருணவாக மாறி மெய்யின்பந் தருதல்உறுதி.
கருத்து: தன்முயற்சியால் உண்டானதுநீருணவேயாயினும், அஃது அமிழ்த ஆற்றல் உடையதாய்நலம் பயக்கும்.
விளக்கம்: பெருமுத்தரைய ரென்போர்,இச் சிறப்புப் பெயருடன் இச்செய்யுளியற்றியஆசிரியர் காலத்தில் ஈகையும் செல்வமும் வாய்ந்துபுகழுற்று விளங்கிய ஒருசார் உயர்குடும்பத்தினராவர். "நல்கூர்ந்தக் கண்ணும்பெருமுத் தரையரே செல்வரைச் சென்றிரவாதார்"என்று இந்நூலில் மேலும்
இவரது மாட்சிகூறப்படுகின்றது. பிறர் தரும் சோறு ஆர்வார் கயவர்என்றபடி. இடைவிடாத முயற்சியினால் நல்ல உணவும்உண்பதற்கு நேரம் வாயாதவ ரென்றும் கருமமேகண்ணாயினார் உயர் உணவிற் கருத்திருத்தாரென்றும் உணர்த்துதற்குக் ‘கருனையைப் பேரும்அறியார்' என்று முயற்சியாளரைக் குறித்தார். அவர்நனி விரும்பும் தாளாண்மை நீரும் என்க. உம்மை :இழிவு சிறப்பு. நீரென்றது புல்லரிசிச் சோற்றில்ஊறிய நீர். விடும்துணிவுப் பெருளுணர்த்திற்று.
நாலடி.
|
செல்வம் நிலையாமை
பொருட்பால்
சுற்றந்தழால்
[உறவினர் நீங்கிவிடாதபடி அவரைத் தழுவியொழுகுதல்.]
வயாவும் வருத்தமும் ஈன்றக்கால் நோவும்
கவாஅன் மகற்கண்டு தாய்மறந் தாஅங்கு
அசாஅத்தான் உற்ற வருத்தம் உசாஅத்தன்
கேளிரைக் காணக் கெடும்.
குறிப்புரை: வயாவும் வருத்தமும்ஈன்றக்கால் நோவும் கவாஅன் மகன் கண்டு தாய்மறந்தாங்கு - கருவுற்றபோது தோன்றிய வேட்கைத்துன்பமும், இடையிற் கரு சுமந்து வந்த வருத்தமும்,கருவுயிர்த்த அக்காலத்தில் உண்டான இன்னலும்தாய் தன் தொடையில் மகனைக் கண்டுமறந்துவிட்டாற்போல, அசா தான் உற்ற வருத்தம் -முயற்சிகளினிடையே தளர்ச்சியால் ஒருவன் அடைந்ததுன்பம், உசா தன் கேளிரைக் காணக் கெடும் -ஆய்ந்து சூழ்தற்குரிய தன் சுற்றத்தாரைக்கண்டவளவில் நீங்கும்.
கருத்து: முயற்சிகளினிடையேதோன்றுந் தளர்ச்சியை நீக்குதற்குஅவ்வப்போதும் ஆராய்ந்து சூழ்தற்குரியசுற்றத்தார் இன்றியமையாது வேண்டியிருத்தலின்,அவரை எஞ்ஞான்றும் தழுவி யொழுகுதல் வேண்டும்.
விளக்கம்: ‘வயா' வென்பதைத்தொல்காப்பிய வுரையில்
"கருப்பந்தாங்கி வருத்தமுற்று, நுகரப்படும்பொருண் மேற்செல்லும் வேட்கை" என்பர்நச்சினார்க்கினியர். ஈன்றக்கால் என்பதைஈண்டு, ஈன்ற அக்கால் என்று பிரிக்க. மகனென வழக்குநோக்கி ஆண்பாலாகக் கூறினாரேனும் ஏனைப்பாலுக்கும் ஒக்கும். தான் அசாவினாலுற்றவருத்தமெனவும், தன் உசாக்கேளிரெனவும் கொள்க.
தொல். உரி.
|