வெளியிட்ட தேதி
stringclasses
82 values
தலைப்பு
stringlengths
9
141
செய்தி-வகை
stringclasses
31 values
எழுத்தாளர்
stringclasses
1 value
இணைப்பு
stringlengths
61
178
மொழி
stringclasses
1 value
குறிமுறைத் தரநிலை
stringclasses
1 value
உள்ளடக்கம்
stringlengths
0
14.7k
சேகரிக்கப்பட்ட தேதி
stringlengths
26
26
ஜனவரி 7, 2025
தீக்கதிர் விரைவு செய்திகள்
மாநிலம் - தமிழ்நாடு
நமது நிருபர்
https://theekkathir.in/News/states/tamil-nadu/delhi-assembly-election-samajwadi-support-aam-aadmi-party
தமிழ்
UTF-8
தில்லி சட்டமன்ற தேர்தல் ஆம் ஆத்மிக்கு சமாஜ்வாதி ஆதரவு70 தொகுதிகளைக் கொண்ட தில்லியில் பிப்ரவரி 5ஆம் தேதி  ஒரே கட்டமாக சட்டமன்ற தேர்தல் நடை பெறும் என்றும், தேர்தலில் பதிவான வாக்குகள் பிப்ரவரி 8ஆம் தேதி எண்ணப்படும் என இந்திய தேர்தல் ஆணையம் செவ்வாய்க்கிழமை மதியம்  அறிவித்தது. இந்நிலையில், சட்டமன்ற தேர்தலில் ஆளும் ஆம் ஆத்மிக்கு நிபந்தனையற்ற ஆதரவை வழங்குவதாக சமாஜ்வாதி கட்சி அறிவித்துள்ளது. இதுதொடர்பாக அக்கட்சியின் தலைவர் அகிலேஷ் கூறு கையில், “தில்லி சட்டமன்றத் தேர்தலில் சமாஜ்வாதி கட்சி வேட்பாளர்களை நிறுத் தாது. ஆம் ஆத்மிக்கு நிபந்தனையற்ற ஆதரவு அளிப்போம்” என அவர் கூறினார்.  ஆம் ஆத்மியில்  பகுஜன் சமாஜ் தலைவர் பகுஜன் சமாஜ் கட்சியின் தில்லி மாநில முன்னாள் தலைவர் மதன் மோகன் மற்றும் அவரது மனைவி சுதேஷ்வதியும் ஆம் ஆத்மி கட்சியில் இணைந்தனர். “மதன் மோகன் மற்றும் அவரது மனைவி ஆம் ஆத்மி கட்சியில் இணைந்தது மகிழ்ச்சியளிக்கிறது” என ஆம் ஆத்மி மூத்த தலைவர் சஞ்சய் சிங் கூறினார்.எச்எம்பிவி வைரஸ் பரவல் பயப்பட எதுவும் இல்லை! சவுமியா சாமிநாதன் பேட்டிஜெனிவா, ஜன. 7- “எச்எம்பிவி வைரஸ் பரவுவது சாதாரணமானது தான் அதில் பயப்படுவதற்கு ஒன்றுமே இல்லை!” என உலக சுகாதார அமைப்பின் முன்னாள் தலைமை ஆராய்ச்சியாளர் சவுமியா சாமிநாதன் தெரிவித்துள்ளார். எச்எம்பிவி வைரஸை, சிலர் கொரோனாவுடன் ஒப்பிட்டு மக்கள் மத்தியில் பீதியையும் சமூகத்தில் பதற்றத்தையும் உருவாக்கி வரும் நிலையில், “2001-ஆம் ஆண்டே தோன்றிய இந்த வைரசை கொரோனாவுடன் ஒப்பிட்டு பார்க்கக் கூடாது” என தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் சர்வதேச மருந்தியல் துறை பேராசிரியர் நீரஜ் கூறியுள்ளார். எச்எம்பிவி வைரஸை பொறுத்தவரை, ஒரு மனிதனிடம் இருந்து மற்றொரு மனிதனுக்கு காற்றுவழியாகப் பரவும். தொற்று பாதிக்கப்பட்ட நபரின் சுவாசப்பாதையில் இந்த வைரஸ் தொற்றை உருவாக்கும். குறிப்பாக, குழந்தைகள் மற்றும் நோய் எதிர்ப்புச் சக்தி குறைவாக உள்ளவர்கள் எளிதாக பாதிப்பை சந்திப்பார்கள் என்று கூறப்படும் நிலையில், “ஒரு மனிதனுக்கு உடலில் இருக்க வேண்டிய போதுமான நோய் எதிர்ப்பு சக்தி இருந்தாலே இந்த எச்எம்பிவி வைரஸ் தொற்றைத் தைரியமாக எதிர் கொள்ளலாம்” என்று பேராசிரியர் நீரஜ் குறிப்பிட்டுள்ளார். எனினும் முகக்கவசம் அணிய வேண்டும் என வழிகாட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ.சண்முகத்திற்கு டியுஜே வாழ்த்துசென்னை ,ஜன.7-   விழுப்புரத்தில் நடைபெற்ற மாநில மாநாட்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளராக பெ.சண்முகம் தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு தமிழ்நாடு  பத்திரிகையாளர்கள் சங்கம் (T.U.J.) வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது. இதுகுறித்து சங்கத்தின் மாநிலத் தலைவர் பி.எஸ்.டி.புருஷோத்தமன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மாணவர் இயக்கத்தின் தலைவராக, விவசாயிகள் இயக்கம்,மலைவாழ் மக்கள் சங்கத்தின் தலைவராக, வாச்சாத்தி மக்களுக்காக போராடிய களநாயகன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ள பெ.சண்முகத்திற்கு  தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் சங்கம் (T.U.J.)  வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறது. சாதி, மதம்,இனவெறியை தமிழகத்திலிருந்து அகற்ற, விவசாயிகள், தொழிலாளர்கள்,அனைத்து பகுதி மக்களின் நலன் காக்கும் போராட்டத்தில், பத்திரிகை -ஊடகவியலாளர்கள், உங்களுடன் இணைந்து பயணிப்போம் என்று தெரிவித்துள்ளார்.யுஜிசி நெட் தேர்வு தேதியை மாற்றுக :  முதல்வர் கடிதம்சென்னை,ஜன.7- பொங்கல் உள்ளிட்ட நாள்களில் நடைபெறும் யுஜிசி-நெட் தேர்வு தேதிகளை மாற்றியமைக்க வேண்டும் என்று வலியுறுத்தி ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இதுகுறித்து தமிழக அரசு  வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு வருமாறு:  தமிழ்நாட்டில் தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் கொண்டாடும் ஜனவரி 13 முதல் 16 ஆம் நாள் வரை யுஜிசி-நெட் தேர்வு களை நடத்திட தேசியத் தேர்வு முகமையால் அறிவிக்கை கொடுக்கப்பட்டுள்ள நிலையில் அதுகுறித்து ஒன்றிய கல்வி அமைச்சரின் உடனடி கவனத்திற்கு கொண்டுவந்து அத்தேர்வுகளை வேறொரு நாளில் மாற்றி யமைக்கக்கோரி தமிழக முதல்வர் மு.க.ஸ்டா லின் கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதத்தில், பொங்கல் பண்டிகையை அனைத்து தமிழ்ச் சமூகத்தினரும் நான்கு நாட்கள் உற்சாகமாக கொண்டாடுவர். இந்தப் பொங்கல் பண்டிகையைப் போலவே, ஆந்திரம் மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் மகர சங்கராந்தி பண்டிகையாகக் கொண்டாடப்படுகிறது என்றும்  சுட்டிக்காட்டியுள்ளார். ஆகவே, திட்டமிட்டபடி பொங்கல் விடுமுறையில் யுஜிசி-நெட் தேர்வை நடத்தினால், ஏராளமான தேர்வர்கள் சிரமத்திற்கு ஆளாக நேரிடும். இதே காரணத்திற்காக ஜனவரி 2025இல் நடைபெறவிருந்த பட்டயக்  கணக்காளர்கள் தேர்வு ஏற்கனவே மாற்றிய மைக்கப்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார். முந்தைய ஆண்டுகளில் பொங்கல் பண்டிகை காலங்களில் தேசிய தேர்வு முகமை யுஜிசி-நெட் தேர்வை நடத்தவில்லை என்று தரவுகள் காட்டுகிறது என்றும் கடிதத்தில் குறிப்பிட்டுள் ளார். ஆகவே, இத்தகைய சூழ்நிலையில், யுஜிசி-நெட் தேர்வுகள் மற்றும் பிற தேர்வுகளை ஜனவரி 13 முதல் 16 வரையிலான நாட்களில் நடத்துவதைத் தவிர்த்து பொருத்தமான வேறு நாட்களுக்கு மாற்றியமைக்குமாறும் ஒன்றிய கல்வி அமைச்சர் தலையிட்டு தமிழ்நாட்டில் மற்றும் பல மாநிலங்களில் அறுவடைத் திருவிழா  கொண்டாடப்படும் காலங்களில் யுஜிசி-நெட் தேர்வுகள் நடத்தும் திட்டத்தை மாற்றி யமைக்குமாறு வலியுறுத்தியுள்ளார்.தங்கபாலுவுக்கு காமராஜர் விருதுசென்னை,ஜன.7- 2024 ஆம் ஆண்டிற்கான தமிழக அரசின் காம ராஜர் விருது தமிழக காங்கிரஸ் முன்னாள் தலை வர் தங்கபாலுவுக்கு அறி விக்கப்பட்டுள்ளது.  இதுதொடர்பாக தமிழக  அரசு வெளியிட்ட அறிக்கை யில், 2006 ஆம் ஆண்டு முதல் காமராஜர் விருது வழங்கப்பட்டு வருகிறது.  2024 ஆம் ஆண்டிற்கான விருதுக்கு தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் மற்றும் முன்னாள் ஒன்றிய அமைச்சருமான கே.வி.தங்கபாலு தேர்வு செய்யப் பட்டுள்ளார். அவருக்கு விருதுடன் ரூ.2 லட்சம்,  ஒரு சவரன் தங்கப் பதக்கம் வழங்கப்படும். வரும் 15ஆம் தேதி இந்த விருதை சென்னையில் நடக்கும் நிகழ்ச்சியில் முதல்வர் மு.க. ஸ்டாலின் வழங்க உள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.பிப். 5- தில்லி சட்டப்பேரவைக்கு ஒரே கட்டமாக பொதுத்தேர்தல்! ஈரோடு கிழக்கிற்கும் இடைத்தேர்தல் அறிவிப்புபுதுதில்லி, ஜன. 7 - தில்லி சட்டப்பேரவை பொதுத்தேர்தல் பிப்ரவரி 5 அன்று ஒரே கட்டமாக நடைபெறு கிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை, இந்திய தேர்தல் ஆணையம் செவ்வாயன்று வெளியிட்டுள்ளது. 70 உறுப்பினர்களைக் கொண்ட தில்லி சட்டப்பேரவையின் பதவிக்காலம் பிப்ரவரி 23-ஆம் தேதியுடன் முடிவடைய உள்ளது. இந்நிலையில், செவ்வாயன்று தில்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த தலைமை தேர்தல் ஆணையர் ராஜிவ் குமார், தில்லி சட்டப்பேரவை பொதுத் தேர்தல் தேதியை அறிவித்தார். “தில்லி சட்டப்பேரவைத் தேர்தலானது, ஒரே கட்டமாக பிப்ரவரி 5 அன்று நடை பெறும்; வேட்புமனு தாக்கல் ஜனவரி 10 அன்று துவங்கும். வேட்புமனுக்களைத் தாக்கல் செய்வதற்கான கடைசி நாள் ஜனவரி 17. மறுநாள்- அதாவது, ஜனவரி 18 அன்று வேட்புமனுக்கள் மீதான பரிசீல னை நடைபெறும். மனுக்களை திரும்பப் பெற ஜனவரி 20 கடைசி நாளாகும். அதைத்தொடர்ந்து பிப்ரவரி 5 அன்று வாக்குப்பதிவு நடைபெறும் என்று அறி வித்த தலைமைத் தேர்தல் ஆணையர், “பதிவான வாக்குகள் பிப்ரவரி 8-ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் உடனுக்குடன் அறிவிக்கப் படும்” என்றும் கூறினார். தில்லி சட்டப்பேரவைக்கு கடந்த 2020-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேர வை தேர்தலில் மொத்தம் உள்ள 70 இடங்களில் ஆம் ஆத்மி கட்சி 62 இடங்களில் வென்று ஆட்சியை பிடித்தது. பாஜக 8 தொகுதிகளில் வென்றது, காங்கிரஸ் கட்சி ஒரு இடத்திலும் வெற்றி பெறவில்லை. ஆனால், இந்த முறை  ஆட்சியைக் கைப்பற்றி விடுவது என்பதில் காங்கிரஸ் தீவிரமாக உள்ளது.  100 கோடியை நெருங்கும் வாக்காளர்கள் எண்ணிக்கை! முன்னதாக செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்குப் பதில் அளித்த ராஜிவ் குமார், “இந்தியாவில் பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களின் எண் ணிக்கை 99 கோடியைத் தாண்டியுள்ளது. வாக்களிப்பு, பெண்கள் பங்கேற்பு ஆகியவற்றில் புதிய சாதனைகளை நாங்கள் உருவாக்கியுள்ளோம். விரைவில் 100 கோடிக்கும் அதிகமான வாக்காளர்கள் என்ற புதிய சாதனையை இந்தியா பெறும்” என்று தெரிவித்தார்.ஈரோடு கிழக்கு தொகுதிக்கும் பிப்.5-இல் தேர்தல்தில்லி சட்டப்பேரவை பொதுத்தேர்தல் தொடர்பான அறிவிப்பினை வெளியிட்ட இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம், அந்த தேர்தலோடு சேர்த்தே, ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தலும் பிப்ரவரி 5 அன்று நடைபெறும் என அறிவித்துள்ளது. ஈரோடு கிழக்குத் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்த காங்கிரஸ் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் உடல்நலக்குறைவால் டிசம்பர் 14 அன்று  காலமானதையொட்டி, இங்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
2025-01-08 02:04:49.807177
ஜனவரி 7, 2025
பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனம் - மாநில அரசின் உரிமைகளைப் பறிக்கின்ற யுஜிசியை கண்டித்து ஜன.9 இல் போராட்டம்
மாநிலம் - தமிழ்நாடு
நமது நிருபர்
https://theekkathir.in/News/states/tamil-nadu/protest-on-jan.-9-against-the-ugc-which-is-taking-away-the-rights-of-the-state-government
தமிழ்
UTF-8
சென்னை,ஜன.7- பல்கலைக்கழக துணைவேந்தர் நிய மனத்தில் மாநில அரசின் உரிமைகளை பறிக்கின்ற வகையில் புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ள யுஜிசியை கண்டித்து ஜனவரி 9 அன்று தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்த இந்திய மாணவர் சங்கம் அறைகூவல் விடுத்துள்ளது. இதுகுறித்து சங்கத்தின் மாநிலத் தலைவர் தௌ.சம்சீர் அகமது, மாநிலச் செயலாளர் கோ.அரவிந்தசாமி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு: நாடு முழுவதுமுள்ள பல்கலைக்கழகங் களின் துணைவேந்தர் நியமனம் தொடர்பாக புதிய வழிகாட்டுதல் விதிமுறைகளை பல்கலைக் கழக மானியக்குழு (யுஜிசி) வெளியிட்டி ருக்கிறது. மாநில அரசின் தலைமையினால் அமைக்கப்படும் 5 பேர் கொண்ட தேடுதல் குழுவே பல்கலைக்கழகத்திற்கான துணை வேந்தரை தேர்வு செய்யும். தற்போது இதனை 3 பேர் கொண்ட தேடுதல் குழுவாகவும் அதில் வேந்தரான ஆளுநர், யுஜிசியின் உறுப்பி னர், பல்கலைக்கழக உறுப்பினர் ஆகிய மூன்று  பேர் மட்டுமே இருப்பார்கள் என அறிவித்துள் ளது. இந்த குழுவின் பெரும்பான்மை தேர்வே  துணைவேந்தராக இருக்கும் நபரை முடிவு செய்யும்.  இத்தகைய புதிய தேடுதல் குழுவிற்கான வழிமுறைகள் பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனத்தில் மாநில அரசின் கல்வி உரிமை களை முழுவதுமாக பறித்திருக்கின்றது. மக்க ளால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசாங்கத்தி னை தவிர்த்துவிட்டு, ஒன்றிய அரசால்  நியமிக்கப்படும் ஆளுநருக்கு அதிகாரம்  வழங்குவது என்பது இந்திய அரசியலமைப்பின் கூட்டாட்சி அமைப்புக்கு எதிரானது.  மாநில உயர்கல்வி நிறுவனங்களை அந்தந்த அரசுகளே பராமரித்துவரும் நிலை யில் அதற்கு போதுமான நிதியை கூட  ஒதுக்காத யுஜிசியும், ஒன்றிய அரசும் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முயற்சிப்பது டன், சங்பரிவார ஆட்களை புகுத்தும் ஆர்.எஸ்.எஸ்சின் தொலைநோக்கும் திட்டம். ஜேஎன்யு போன்ற பல மத்திய பல்கலைக்கழகங்களில் இத்தகைய செயல்பாடுகளின் மூலம் அதன்  சுதந்திரமான நடவடிக்கைகளை ஏற்கனவே  முடக்கியிருக்கின்ற ஒன்றிய அரசாங்கம் அதே போல மாநில பல்கலைக் கழகங்களையும் கட்டுப்படுத்த நினைக்கிறது.தனியார் நிறுவன அதிகாரிகளை புகுத்த முயற்சிமேலும், புதிய வழிகாட்டுதலில் துணை வேந்தருக்கான தகுதி வரையறைகள் என்பது கல்வி சார்ந்த பணிகளில் இருந்து விலக்களிக்கப் பட்டு, தனியார்  நிறுவனங்களின் மூத்த அதி காரிகள், பொதுத்துறைகளின் தலைமை பொறுப்பு வகிப்பவர்கள் துணைவேந்தராக விண்ணப்பிக்கலாம் எனவும் யுஜிசி திருத்தி யுள்ளது. பல்கலைக்கழகங்களின் தலைமை பொறுப்பில் இருக்கும் நபர் கல்விப்பணி சார்ந்தவராக இருக்க வேண்டுமென்பது கட்டாயம் இல்லை என்று மாற்றுவது அதன் செயல்பாடுகளை முற்றிலுமாக பாதிக்கும்.  ஆர்எஸ்எஸ் பேர் வழிகளை நுழைக்க ஏற்பாடு பல்கலைக்கழக துணைவேந்தர் நிய மனத்துக்கான தேடுதல் குழுவுக்கான புதிய  வழிகாட்டுதல்கள் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினை சார்ந்த நபர்களை பல்கலைக்கழகங்களில் புகுத்துவதற்கும், தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசின் கல்வி உரிமைகளை பறிக்கின்ற, அரசியலமைப்பு வழங்கியுள்ள கூட்டாட்சி அமைப்புக்கே எதிரானது.  யுஜிசியின் இத்தகைய நடவடிக்கையை இந்திய மாணவர் சங்கம் வன்மையாக கண்டிப்பதோடு கல்வியாளர்கள், ஜனநாயக அமைப்புகள் மற்றும் அனைத்து அரசியல் சக்திகள் இதற்கு எதிராக எதிர்வினையாற்ற வேண்டுமெனவும், தமிழ்நாடு அரசு இந்நட வடிக்கையினை தடுக்க உரிய சட்ட நடவடிக்கை களை விரைந்து எடுத்திட வேண்டுமெனவும் வலியுறுத்துகிறது.  துணைவேந்தர் தேடுதல் குழுவை ஆளுநர் தேர்வு செய்யும் அறிவிப்பை யூஜிசி  திரும்பப் பெற வலியுறுத்தி ஜனவரி 9 வியாழக்கிழமை தமிழ்நாடு முழுவதும் பல்கலைக் கழகம் மற்றும் கல்லூரியில் போராட்டம் நடத்திட இந்திய மாணவர் சங்கம் அறை கூவல் விடுக்கிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2025-01-08 02:04:49.807658
ஜனவரி 7, 2025
குடிமனை மற்றும் மனைப்பட்டா : சிறப்புத் திட்டத்தை செயல்படுத்திட வேண்டும்
மாநிலம் - தமிழ்நாடு
நமது நிருபர்
https://theekkathir.in/News/states/tamil-nadu/a-special-plan-should-be-implemented
தமிழ்
UTF-8
தமிழ்நாட்டில் குடிமனை மற்றும் குடிமனைப் பட்டா கோரி காத்திருப்போரின் எண்ணிக்கை 40 லட்சத்தைத் தாண்டியுள்ளது. 2006-ஆம் ஆண்டில் விவசாய அரங்கம் சார்பில் நடத்தப்பட்ட வட்டாட்சியர் அலுவலக குடியேற்றப் போராட்டத்தின் விளைவாக, அன்றைய திமுக அரசு வீட்டுமனைப் பட்டா வழங்கும் சிறப்புத் திட்டத்தைச் செயல்படுத்தி 5  லட்சம் மனைப்பட்டாக்களை வழங்கியது. கடந்த ஆட்சிக் காலத்தில் சில லட்சம் மனைப்பட்டாக்களும், தற்போதைய ஆட்சியில் இதுவரை 6 லட்சம் மனைப்பட்டாக்களும் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரி விக்கப்பட்டுள்ளது. தற்போதைய சவால்கள் வீட்டுமனைப் பட்டா வழங்க தற்போது தமிழ்நாடு அரசு சில அரசாணைகளை வெளியிட்டிருந்தாலும், மனைப்பட்டா கோரி காத்திருப்போருக்கு அவை போது மானதாக இல்லை. நீதிமன்ற உத்தரவுகளைக் கார ணம் காட்டி, நீர்நிலை புறம்போக்கு இடங்களில் வசிப்போரை மாற்று ஏற்பாடுகள் எதுவுமின்றி அப்புறப்படுத்தும் நடவடிக்கைகளை பல மாவட்டங் களில் வருவாய்த்துறையினர் மேற்கொண்டு வரு கின்றனர்.  இந்நடவடிக்கையால் பலர் வீடற்றவர்களாக நிர்க்கதிக்குள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது. கோரிக்கைகள் 1. குடியிருப்பவர்களுக்கு மாற்று இடமும், மறு வாழ்விற்கான உரிய நிவாரணமும் வழங்காமல், நீர்நிலை புறம்போக்கு உள்ளிட்ட இடங்களில் வசிப் போரை அப்புறப்படுத்தக் கூடாது. 2. முந்தைய திமுக ஆட்சிக்காலத்தில் நிறைவேற்றி செயல்படுத்தியதைப் போல, வீட்டுமனைப் பட்டா வழங்கும் சிறப்புத் திட்டத்தை மீண்டும் செயல் படுத்த வேண்டும். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24-வது தமிழ் நாடு மாநில மாநாடு மேற்கண்ட கோரிக்கைகளை வலி யுறுத்துகிறது என்ற தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.
2025-01-08 02:04:49.808164
ஜனவரி 7, 2025
நேபாளத்தில் நில நடுக்கம் : 100-க்கும் மேற்பட்டோர் பலி?
மாநிலம் - தில்லி
நமது நிருபர்
https://theekkathir.in/News/states/delhi/earthquake-in-nepal----more-than-100-dead
தமிழ்
UTF-8
திபெத்/காத்மாண்டு, ஜன. 7 - இமயமலையின் அடிவாரத்தில் உள்ள நேபாளம் - திபெத் எல்லையில் செவ்வா யன்று காலை நேரத்தில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் 100-க்கும் மேற் பட்ட மக்கள் உயிரிழந்தனர்.  150-க்கும் அதிகமான மக்கள் படுகாய மடைந்துள்ளனர். அவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் அனு மதிக்கப்பட்டுள்ளனர்.  நிலநடுக்கத்தின் அளவு ரிக்டர் அளவு கோலில் 7.1 ஆக பதிவாகியுள்ளது. நில நடுக்கத்திற்குப் பிறகும் நேபாள - திபெத் எல்லையில் தொடர் நில அதிர்வுகள் உணரப்பட்டன.   இந்நிலையில், படுகாயமடைந்தவர்கள் மற்றும் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. மேலும் நில நடுக்கத்தால் பாதிக்கப் பட்ட பகுதிகளில் பலர் சிக்கியுள்ள நிலை யில் அவர்களை மீட்கும் பணியில், மீட்புப் படை தீவிரமாக ஈடுபட்டுள்ளது.  இந்தியாவிலும் நில அதிர்வு தில்லி, பீகார், மேற்கு வங்கம், சிக்கிம் ஆகிய வட மாநிலங்களிலும் செவ்வாயன்று காலை நில அதிர்வு உணரப்பட்டுள்ளது. முதலில், காலை 6:35 மணியளவில் இந்த பகுதிகளில் நிலநடுக்கம் உணரப்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து காலை 7:02 மணிக்கு ரிக்டர் அளவுகோலில் 4.7 ஆகவும், காலை 7:07 மணிக்கு 4.9 ரிக்டர் அளவிலும் நிலநடுக்கங்கள் பதி வாகியுள்ளன.
2025-01-08 02:04:50.907086
ஜனவரி 7, 2025
குறைந்தபட்சம் ரூ.7,850 ஓய்வூதியம் வழங்க வேண்டும்
மாநிலம் - தமிழ்நாடு
நமது நிருபர்
https://theekkathir.in/News/states/tamil-nadu/demand-of-silk-development-sector-pensioners
தமிழ்
UTF-8
கிருஷ்ணகிரி,ஜன.7 – பட்டு வளர்ச்சி துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களுக்கு குறைந்த பட்சம் ரூ. 7,850 ஓய்வூதியம் வழங்க  வேண்டும் என்று தமிழ்நாடு அரசு பட்டு வளர்ச்சி துறை ஓய்வூதியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. தமிழ்நாடு அரசு பட்டு வளர்ச்சித் துறை ஓய்வூதியர்கள் சங்கத்தின் முதலாவது மாநில  பேரவை ஓசூரில் (ஜன.7) செவ்வாயன்று நடைபெற்றது. தின்னுர்பட்டு வளர்ச்சி வளாகம் முகப்பில் சங்கத்தின் கொடியேற்றத்துடன் மாநிலத் தலைவர் ஆர்.துரை தலைமையில் பேரவை தொடங்கியது.  மாநிலத் துணைத் தலைவர் கே.கந்தசாமி அஞ்சலி தீர்மானத்தை முன்மொழிந்தார். வர வேற்பு குழுத்தலைவர் ஜி.சரவணபவன் வரவேற்றார்.முன்னாள் பொதுச் செயலாளர் பி.சுப்பிரமணியன் துவக்க உரையாற்றினார். பொதுச் செயலாளர் பி.கோவிந்தசாமி சங்கத்தின் வேலை அறிக்கையை சமர்பித்தார். மாநில பொருளாளர் எஸ்.தேவராஜன் வரவு-செலவு அறிக்கையை சமர்ப்பித்தார். வாழ்த்திப் பேசிய முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் பி.டில்லிபாபு , பட்டு  வளர்ச்சி துறைக்கு நிரந்தர ஊழி யர்களை நியமிக்க வேண்டியதன் அவசியம் குறித்து சட்டமன்றத்தில் வலியுறுத்தியதையும் அதன்பிறகு, மாநில முழுவதும் 400 நிரந்தர ஊழியர்கள் பட்டு வளர்ச்சி துறையில் பணியில்அமர்த்தப் பட்டதை சுட்டிக்காட்டினார். கவுரவிப்பு 75 வயது நிரம்பிய 25 க்கும் மேற்பட்ட ஓய்வூதியர்கள் இந்த பேரவையில் கவுரவிக்கப்பட்டனர். இப்பேரவையில் கிருஷ்ணகிரி, கோவை,திருச்சி,தென்காசி,தர்மபுரி, சேலம்,திண்டுக்கல்,வேலூர் ஆகிய 8 மண்டலங்களில் இருந்து 550 க்கும் மேற்பட்ட ஓய்வூதியர் சங்க பிரதி நிதிகள் கலந்து கொண்டனர். மாநில பேரவை வரவேற்பு குழு செயலாளர் கே. ஸ்ரீநிவாசலு நன்றி கூறினார். மாநில துணைத் தலைவர்கள் ஆர்.நாக ராஜன், பி.கே.பெரியசாமி, பி.சந்திரசேக ரன், மாநில செயலாளர்கள் பி.மாயக் கண்ணன், வி.சண்முகம், ஆர்.சந்திரகாந்தன் ஆகியோர் தீர்மானங் களை முன்மொழிந்தனர்.தீர்மானங்கள்ஓய்வு பெற்ற அலுவலர்களுக்கு அனைத்து பதவிகளிலும் இளையவர், முதியவர் ஊதிய முரண்பாடுகளை  களைய உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஓய்வு பெற்ற மூத்த குடிமக்கள் பிரச்சனைகள் குறித்து உயர்நீதி மன்ற  தீர்ப்புகள் அடிப்படையில் மேல்முறை யீடு செய்வதை கைவிட வேண்டும், நிரந்தர தொழிலாளர்களுக்கு ஓய்வு பெற்றபின் பிடித்தம் செய்யப்பட்ட சிபிஎஸ் தொகையை வட்டியுடன் உடனடியாக வழங்க வேண்டும்.  ஊதிய உயர்வுக்கு முதல் நாள் ஓய்வு பெற்ற அலுவலர்களுக்கு 25.4.2018 படி ஊதிய உயர்வு வழங்குவது போல்  விருப்ப ஓய்வில் சென்றவர்களுக்கும் ஊதிய உயர்வு வழங்க வேண்டும். கருணை அடிப்படையில் பணி நியமனம் கேட்டு விண்ணப்பித்த வாரிசு தாரர்களுக்கு உடனடியாக பணி நிய மனம் வழங்க வேண்டும், கோலட்டி பட்டுப் பண்ணையில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற நிரந்தர தொழிலாளர்களுக்கு  சிறப்பு வைப்பு நிதி(spl) வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், தமிழ்நாடு அரசு தேர்தல் காலத்தில் பட்டு வளர்ச்சித்துறை ஊழியர்களுக்கு அளித்த வாக்குறுதிகளை இனியும் காலதாமதம் செய்யாமல்.நிறை வேற்ற வேண்டும். மலைப் பிரதேசங்களில் பணி புரிந்து ஓய்வு பெற்றவர்களுக்கு பணியில் இருக்கும் அலுவலர்களுக்கு வழங்கப்படு வது போல் மலைவாழ் படி குளிர்கால படி அவசியம் வழங்க வேண்டும்,பட்டு வளர்ச்சித் துறை பாதுகாக்க ஒப்பந்த முறையை கைவிட்டு நிரந்தர ஊழி யர்களை பணியில் நியமிக்க வேண்டும் என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
2025-01-08 02:04:50.907779
ஜனவரி 7, 2025
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!
மாநிலம் - தமிழ்நாடு
நமது நிருபர்
https://theekkathir.in/News/states/tamil-nadu/erode-east-bye-election-date-announced
தமிழ்
UTF-8
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு வரும் பிப்ரவரி 5ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ ஈவிகேஎஸ்.இளங்கோவன், உடல்நலக் குறைவு காரணமாக கடந்த டிசம்பர் 14 ஆம் தேதி காலமானார். இதை தொடர்ந்து, ஈரோடு கிழக்கு தொகுதி காலியானதாக தமிழ்நாடு சட்டமன்ற செயலகம் அறிவித்தது.  இந்த நிலையில், இன்று இத்தொகுதிக்கு சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெறும் தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அந்த அறிவிப்பின்படி, ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு வரும் பிப்ரவரி 5ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. பிப்ரவரி 8-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. வேட்பு மனுக்களை தாக்கல் செய்ய கடைசி நாள் ஜனவரி 17 வேட்பு மனு பரிசீலனை ஜனவரி 18ஆம் தேதி நடைபெற உள்ளது. மேலும் வேட்பு மனுக்களை திரும்பப் பெற ஜனவரி 20ஆம் தேதி கடைசி நாள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
2025-01-08 02:04:50.908422
ஜனவரி 7, 2025
தில்லி சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிப்பு!
மாநிலம் - தில்லி
நமது நிருபர்
https://theekkathir.in/News/states/delhi/delhi-assembly-election-date-announced
தமிழ்
UTF-8
தில்லி சட்டமன்ற தேர்தல் ஆம் ஆத்மிக்கு சமாஜ்வாதி ஆதரவு70 தொகுதிகளைக் கொண்ட தில்லியில் பிப்ரவரி 5ஆம் தேதி  ஒரே கட்டமாக சட்டமன்ற தேர்தல் நடை பெறும் என்றும், தேர்தலில் பதிவான வாக்குகள் பிப்ரவரி 8ஆம் தேதி எண்ணப்படும் என இந்திய தேர்தல் ஆணையம் செவ்வாய்க்கிழமை மதியம்  அறிவித்தது. இந்நிலையில், சட்டமன்ற தேர்தலில் ஆளும் ஆம் ஆத்மிக்கு நிபந்தனையற்ற ஆதரவை வழங்குவதாக சமாஜ்வாதி கட்சி அறிவித்துள்ளது. இதுதொடர்பாக அக்கட்சியின் தலைவர் அகிலேஷ் கூறு கையில், “தில்லி சட்டமன்றத் தேர்தலில் சமாஜ்வாதி கட்சி வேட்பாளர்களை நிறுத் தாது. ஆம் ஆத்மிக்கு நிபந்தனையற்ற ஆதரவு அளிப்போம்” என அவர் கூறினார்.  ஆம் ஆத்மியில்  பகுஜன் சமாஜ் தலைவர் பகுஜன் சமாஜ் கட்சியின் தில்லி மாநில முன்னாள் தலைவர் மதன் மோகன் மற்றும் அவரது மனைவி சுதேஷ்வதியும் ஆம் ஆத்மி கட்சியில் இணைந்தனர். “மதன் மோகன் மற்றும் அவரது மனைவி ஆம் ஆத்மி கட்சியில் இணைந்தது மகிழ்ச்சியளிக்கிறது” என ஆம் ஆத்மி மூத்த தலைவர் சஞ்சய் சிங் கூறினார்.எச்எம்பிவி வைரஸ் பரவல் பயப்பட எதுவும் இல்லை! சவுமியா சாமிநாதன் பேட்டிஜெனிவா, ஜன. 7- “எச்எம்பிவி வைரஸ் பரவுவது சாதாரணமானது தான் அதில் பயப்படுவதற்கு ஒன்றுமே இல்லை!” என உலக சுகாதார அமைப்பின் முன்னாள் தலைமை ஆராய்ச்சியாளர் சவுமியா சாமிநாதன் தெரிவித்துள்ளார். எச்எம்பிவி வைரஸை, சிலர் கொரோனாவுடன் ஒப்பிட்டு மக்கள் மத்தியில் பீதியையும் சமூகத்தில் பதற்றத்தையும் உருவாக்கி வரும் நிலையில், “2001-ஆம் ஆண்டே தோன்றிய இந்த வைரசை கொரோனாவுடன் ஒப்பிட்டு பார்க்கக் கூடாது” என தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் சர்வதேச மருந்தியல் துறை பேராசிரியர் நீரஜ் கூறியுள்ளார். எச்எம்பிவி வைரஸை பொறுத்தவரை, ஒரு மனிதனிடம் இருந்து மற்றொரு மனிதனுக்கு காற்றுவழியாகப் பரவும். தொற்று பாதிக்கப்பட்ட நபரின் சுவாசப்பாதையில் இந்த வைரஸ் தொற்றை உருவாக்கும். குறிப்பாக, குழந்தைகள் மற்றும் நோய் எதிர்ப்புச் சக்தி குறைவாக உள்ளவர்கள் எளிதாக பாதிப்பை சந்திப்பார்கள் என்று கூறப்படும் நிலையில், “ஒரு மனிதனுக்கு உடலில் இருக்க வேண்டிய போதுமான நோய் எதிர்ப்பு சக்தி இருந்தாலே இந்த எச்எம்பிவி வைரஸ் தொற்றைத் தைரியமாக எதிர் கொள்ளலாம்” என்று பேராசிரியர் நீரஜ் குறிப்பிட்டுள்ளார். எனினும் முகக்கவசம் அணிய வேண்டும் என வழிகாட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ.சண்முகத்திற்கு டியுஜே வாழ்த்துசென்னை ,ஜன.7-   விழுப்புரத்தில் நடைபெற்ற மாநில மாநாட்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளராக பெ.சண்முகம் தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு தமிழ்நாடு  பத்திரிகையாளர்கள் சங்கம் (T.U.J.) வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது. இதுகுறித்து சங்கத்தின் மாநிலத் தலைவர் பி.எஸ்.டி.புருஷோத்தமன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மாணவர் இயக்கத்தின் தலைவராக, விவசாயிகள் இயக்கம்,மலைவாழ் மக்கள் சங்கத்தின் தலைவராக, வாச்சாத்தி மக்களுக்காக போராடிய களநாயகன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ள பெ.சண்முகத்திற்கு  தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் சங்கம் (T.U.J.)  வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறது. சாதி, மதம்,இனவெறியை தமிழகத்திலிருந்து அகற்ற, விவசாயிகள், தொழிலாளர்கள்,அனைத்து பகுதி மக்களின் நலன் காக்கும் போராட்டத்தில், பத்திரிகை -ஊடகவியலாளர்கள், உங்களுடன் இணைந்து பயணிப்போம் என்று தெரிவித்துள்ளார்.யுஜிசி நெட் தேர்வு தேதியை மாற்றுக :  முதல்வர் கடிதம்சென்னை,ஜன.7- பொங்கல் உள்ளிட்ட நாள்களில் நடைபெறும் யுஜிசி-நெட் தேர்வு தேதிகளை மாற்றியமைக்க வேண்டும் என்று வலியுறுத்தி ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இதுகுறித்து தமிழக அரசு  வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு வருமாறு:  தமிழ்நாட்டில் தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் கொண்டாடும் ஜனவரி 13 முதல் 16 ஆம் நாள் வரை யுஜிசி-நெட் தேர்வு களை நடத்திட தேசியத் தேர்வு முகமையால் அறிவிக்கை கொடுக்கப்பட்டுள்ள நிலையில் அதுகுறித்து ஒன்றிய கல்வி அமைச்சரின் உடனடி கவனத்திற்கு கொண்டுவந்து அத்தேர்வுகளை வேறொரு நாளில் மாற்றி யமைக்கக்கோரி தமிழக முதல்வர் மு.க.ஸ்டா லின் கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதத்தில், பொங்கல் பண்டிகையை அனைத்து தமிழ்ச் சமூகத்தினரும் நான்கு நாட்கள் உற்சாகமாக கொண்டாடுவர். இந்தப் பொங்கல் பண்டிகையைப் போலவே, ஆந்திரம் மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் மகர சங்கராந்தி பண்டிகையாகக் கொண்டாடப்படுகிறது என்றும்  சுட்டிக்காட்டியுள்ளார். ஆகவே, திட்டமிட்டபடி பொங்கல் விடுமுறையில் யுஜிசி-நெட் தேர்வை நடத்தினால், ஏராளமான தேர்வர்கள் சிரமத்திற்கு ஆளாக நேரிடும். இதே காரணத்திற்காக ஜனவரி 2025இல் நடைபெறவிருந்த பட்டயக்  கணக்காளர்கள் தேர்வு ஏற்கனவே மாற்றிய மைக்கப்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார். முந்தைய ஆண்டுகளில் பொங்கல் பண்டிகை காலங்களில் தேசிய தேர்வு முகமை யுஜிசி-நெட் தேர்வை நடத்தவில்லை என்று தரவுகள் காட்டுகிறது என்றும் கடிதத்தில் குறிப்பிட்டுள் ளார். ஆகவே, இத்தகைய சூழ்நிலையில், யுஜிசி-நெட் தேர்வுகள் மற்றும் பிற தேர்வுகளை ஜனவரி 13 முதல் 16 வரையிலான நாட்களில் நடத்துவதைத் தவிர்த்து பொருத்தமான வேறு நாட்களுக்கு மாற்றியமைக்குமாறும் ஒன்றிய கல்வி அமைச்சர் தலையிட்டு தமிழ்நாட்டில் மற்றும் பல மாநிலங்களில் அறுவடைத் திருவிழா  கொண்டாடப்படும் காலங்களில் யுஜிசி-நெட் தேர்வுகள் நடத்தும் திட்டத்தை மாற்றி யமைக்குமாறு வலியுறுத்தியுள்ளார்.தங்கபாலுவுக்கு காமராஜர் விருதுசென்னை,ஜன.7- 2024 ஆம் ஆண்டிற்கான தமிழக அரசின் காம ராஜர் விருது தமிழக காங்கிரஸ் முன்னாள் தலை வர் தங்கபாலுவுக்கு அறி விக்கப்பட்டுள்ளது.  இதுதொடர்பாக தமிழக  அரசு வெளியிட்ட அறிக்கை யில், 2006 ஆம் ஆண்டு முதல் காமராஜர் விருது வழங்கப்பட்டு வருகிறது.  2024 ஆம் ஆண்டிற்கான விருதுக்கு தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் மற்றும் முன்னாள் ஒன்றிய அமைச்சருமான கே.வி.தங்கபாலு தேர்வு செய்யப் பட்டுள்ளார். அவருக்கு விருதுடன் ரூ.2 லட்சம்,  ஒரு சவரன் தங்கப் பதக்கம் வழங்கப்படும். வரும் 15ஆம் தேதி இந்த விருதை சென்னையில் நடக்கும் நிகழ்ச்சியில் முதல்வர் மு.க. ஸ்டாலின் வழங்க உள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.பிப். 5- தில்லி சட்டப்பேரவைக்கு ஒரே கட்டமாக பொதுத்தேர்தல்! ஈரோடு கிழக்கிற்கும் இடைத்தேர்தல் அறிவிப்புபுதுதில்லி, ஜன. 7 - தில்லி சட்டப்பேரவை பொதுத்தேர்தல் பிப்ரவரி 5 அன்று ஒரே கட்டமாக நடைபெறு கிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை, இந்திய தேர்தல் ஆணையம் செவ்வாயன்று வெளியிட்டுள்ளது. 70 உறுப்பினர்களைக் கொண்ட தில்லி சட்டப்பேரவையின் பதவிக்காலம் பிப்ரவரி 23-ஆம் தேதியுடன் முடிவடைய உள்ளது. இந்நிலையில், செவ்வாயன்று தில்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த தலைமை தேர்தல் ஆணையர் ராஜிவ் குமார், தில்லி சட்டப்பேரவை பொதுத் தேர்தல் தேதியை அறிவித்தார். “தில்லி சட்டப்பேரவைத் தேர்தலானது, ஒரே கட்டமாக பிப்ரவரி 5 அன்று நடை பெறும்; வேட்புமனு தாக்கல் ஜனவரி 10 அன்று துவங்கும். வேட்புமனுக்களைத் தாக்கல் செய்வதற்கான கடைசி நாள் ஜனவரி 17. மறுநாள்- அதாவது, ஜனவரி 18 அன்று வேட்புமனுக்கள் மீதான பரிசீல னை நடைபெறும். மனுக்களை திரும்பப் பெற ஜனவரி 20 கடைசி நாளாகும். அதைத்தொடர்ந்து பிப்ரவரி 5 அன்று வாக்குப்பதிவு நடைபெறும் என்று அறி வித்த தலைமைத் தேர்தல் ஆணையர், “பதிவான வாக்குகள் பிப்ரவரி 8-ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் உடனுக்குடன் அறிவிக்கப் படும்” என்றும் கூறினார். தில்லி சட்டப்பேரவைக்கு கடந்த 2020-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேர வை தேர்தலில் மொத்தம் உள்ள 70 இடங்களில் ஆம் ஆத்மி கட்சி 62 இடங்களில் வென்று ஆட்சியை பிடித்தது. பாஜக 8 தொகுதிகளில் வென்றது, காங்கிரஸ் கட்சி ஒரு இடத்திலும் வெற்றி பெறவில்லை. ஆனால், இந்த முறை  ஆட்சியைக் கைப்பற்றி விடுவது என்பதில் காங்கிரஸ் தீவிரமாக உள்ளது.  100 கோடியை நெருங்கும் வாக்காளர்கள் எண்ணிக்கை! முன்னதாக செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்குப் பதில் அளித்த ராஜிவ் குமார், “இந்தியாவில் பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களின் எண் ணிக்கை 99 கோடியைத் தாண்டியுள்ளது. வாக்களிப்பு, பெண்கள் பங்கேற்பு ஆகியவற்றில் புதிய சாதனைகளை நாங்கள் உருவாக்கியுள்ளோம். விரைவில் 100 கோடிக்கும் அதிகமான வாக்காளர்கள் என்ற புதிய சாதனையை இந்தியா பெறும்” என்று தெரிவித்தார்.ஈரோடு கிழக்கு தொகுதிக்கும் பிப்.5-இல் தேர்தல்தில்லி சட்டப்பேரவை பொதுத்தேர்தல் தொடர்பான அறிவிப்பினை வெளியிட்ட இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம், அந்த தேர்தலோடு சேர்த்தே, ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தலும் பிப்ரவரி 5 அன்று நடைபெறும் என அறிவித்துள்ளது. ஈரோடு கிழக்குத் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்த காங்கிரஸ் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் உடல்நலக்குறைவால் டிசம்பர் 14 அன்று  காலமானதையொட்டி, இங்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
2025-01-08 02:04:50.909034
ஜனவரி 8, 2025
வெண்டிலேட்டர் சப்போர்ட்டில் நாட்டின் பொருளாதாரம் - சா.பீட்டர் அல்போன்ஸ்
கட்டுரை
நமது நிருபர்
https://theekkathir.in/News/articles/world/country-economy-on-ventilator-support
தமிழ்
UTF-8
மக்களின் உணர்வற்ற நிலைதவளை ஒன்றை கொதிக்கும் நீரில் தூக்கிப் போட்டால் அது உடனே துள்ளி வெளியே குதித்து விடும். ஆனால் குளிர்ந்த நீரில் தூக்கிப் போட்டு கொஞ்சம் கொஞ்சமாக சூடேற்றினால் அந்த தண்ணீ ரிலேயே இருந்து வெந்து செத்துவிடும். வெப்பம் கொஞ்சம் கொஞ்சமாக ஏறும்போது அந்த வெப்பத்தின் தாக்கத்தை அது உணர்வதில்லை. நம் நாட்டு மக்களும் அந்த தவளையைப்போல் இருக்கிறார்களோ என்று நான் அடிக்கடி நினைப்பது உண்டு.அரசின் மக்கள்  விரோத கொள்கைகள்கடந்த பத்து ஆண்டுகளாக மோடி அரசு பின்பற்றி வரும் மக்கள் விரோத கொள்கைகள், ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரங்கள் தொடர்ந்து சிதைத்து வருவதால், தேசத்தின் பொதுச் சொத்துக்களை பன்னாட்டு கார்ப்பரேட் கம்பெனிகள் வரை முறையில்லாமல் சுருட்டிக் கொழுக்க அனுமதிப்ப தால், ஜனநாயக நிறுவனங்களை சீரழிப்பதால், இயற்கை வளங்களை தனியார் கொள்ளையிட அனு மதிப்பதால், சாதி-மத மோதல்களை திட்டமிட்டு உருவாக்கி வெறுப்பு அரசியலை வளர்த்தெடுப்ப தால் நாடு ஒரு பேரழிவை நோக்கி சென்று கொண்டி ருப்பதை மக்கள் உணர்ந்ததாக தெரியவில்லை.ஊடகங்களின் பொய்ப் பிரச்சாரம்'நாட்டின் முன்னேற்றம் மற்றும் வளர்ச்சி பற்றி, மோடி மயமாக்கப்பட்டிருக்கும் முதலாளித்துவ கார்ப்ப ரேட் ஊடகங்கள் தொடர்ந்து செய்து வரும் பொய்ப் பிரச்சாரம், கள யதார்த்தங்களை மக்களிடமிருந்து திட்டமிட்டு மறைக்கும் கபட விளம்பர யுக்திகள், அனைத்து பிரச்சனைகளையும் மதம் மயமாக்கும் அடையாள அரசியல் போன்ற சதிகளால் சாமானிய மக்களின் கண்கள் கட்டப்பட்டுள்ளன.பட்டினி குறியீட்டில்  இந்தியாவின் அவலம்127 நாடுகளைக் கொண்ட உலகளாவிய பட்டினி குறியீடு பட்டியலில் இந்தியா 105 ஆவது இடத்தைப் பெற்றுள்ளது. பட்டினி குறியீட்டில் பாகிஸ்தான், ஆப்கா னிஸ்தான், இலங்கையை விட மிகவும் மோசமான இடத்து க்கு சென்றுள்ளது. 13.7% மக்கள் ஊட்டச்சத்து குறை பாட்டுடனும், 35.5% குழந்தைகள் வளர்ச்சி குன்றியவர்கள் ஆகவும், 18.7% குழந்தைகள் எடை குறைந்தவர்களா கவும், 3% குழந்தைகள் ஐந்து வயதுக்கு முன்னரே இறந்து விடுவதாகவும் அந்த புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.நிதி ஆயோக்கின்  அதிர்ச்சி தரும் தகவல்கள்பாஜக அரசின் நிதி ஆயோக் சொல்லும் தகவல்கள் இதைவிட அதிர்ச்சியானவை. வறுமை ஒழிப்பில் இந்திய விழுக்காடு 72. பட்டினி ஒழிப்பில் இந்திய விழுக்காடு 52. தரமான கல்வியை வழங்குவதில் இந்திய விழுக்காடு 61. பாலின சமத்துவத்தில் இந்திய விழுக் காடு 49. குறைந்த விலை, சுத்தமான ஆற்றல் குறி யீட்டில் இந்தியா 68. பொருளாதார நெருக்கடியின் அறிகுறிகள் அடித்தட்டு மற்றும் நடுத்தர மக்களின் ‘நுகர்தல்’ (consumption) மிகவும் குறைந்து வருகிறது. உணவுப் பொருட்கள், ஆடை அணிகலன்கள், வீட்டு உபயோகப் பொருட்கள் மற்றும் வாழ்க்கை தேவைக ளுக்கான பொருட்களை சந்தைகளில் அதிகமாக வாங்கி பயன்படுத்தும் இந்த மக்கள் கைகளில் பணப் புழக்கம் இல்லாததால் இப்பொருட்களை உற்பத்தி செய்யும் தொழில்கள் மூடப்படும் அபாயத்தில் இருக்கின்றன.நடுத்தர வர்க்கத்தின் சரிவு'“இந்திய பொருளாதாரத்தை இழுத்துச் செல்லும் இஞ்சின்” நடுத்தர மக்களே! அவர்களது பொருளா தாரம் கவலைக்கிடமாக உள்ளது. அவர்களது சேமிப்பு  விகிதம் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு அதல பாதாளத்திற்கு சென்றுள்ளது. வங்கிகளில் தங்க நகைக்கடன்கள் 50% அதிகமாகியுள்ளது. அதுமட்டு மின்றி அடகு வைத்த நகைகளை மீட்டெடுக்க முடியாத நிலையில் அவர்கள் இருப்பதால் நகை மீது வராக் கடனும் 30% அதிகரித்துள்ளது. ரூபாய் மதிப்பின் சரிவு ரூபாயின் மதிப்பு வரலாற்றில் என்றும் இல்லாத அளவில் ஒரு டாலரின் மதிப்பு ₹86 ஐ தொடுகிறது. 2013இல் 40-43 ரூபாயாக டாலர் மதிப்பு இருந்த போது அன்றைய பாஜகவின் பிரதமர் வேட்பாளராக இருந்த மோடி சொன்ன வார்த்தைகள் நினைவில் இருக்கிறதா? “டாலருக்கு எதிராக ரூபாயின் மதிப்பு குறைகிறது என்றால் நாட்டின் நிர்வாகத்தை நடத்தும் பிரதமர் கோழை என்று அர்த்தம். கையால் இயலாத பேடி என்றும் சொல்லவேண்டும். பிரதமரின் திறமை யின்மையே ரூபாயின் மதிப்பு சரிவதற்கான காரணம்” என பேசியவர் தான் மோடி.நிர்வாகத்தின் முரண்பாடுகள்“பெற்ற தாய் குலைப்பட்டினி. மகன் கோதானம் கொடுத்தாராம்” என்ற பழமொழி இன்றைய சூழலுக்கு மிகவும் பொருத்தமானது. பெற்ற தாய் வீட்டில் பட்டினியால் சாகக்கிடக்கிறாள். மகன் பசு  மாட்டை தானம் கொடுத்தாராம். அமெரிக்க குடியரசுத் தலைவர் பைடனின் மனைவிக்கு பிரதமர் மோடி பரி சாக அளித்த வைர மோதிரத்தின் விலை ரூபாய் இருபது லட்சத்திற்கு மேல் என்று அமெரிக்க அரசு அறிவித்துள் ளது. உலகின் எந்த நாட்டு தலைவரும் அவ்வளவு விலை உயர்ந்த பரிசை அமெரிக்க குடியரசுத் தலை வருக்கு இதுவரை வழங்கியதில்லையாம்!தேச பக்தியின் பெயரில் மௌனம்வறுமைக் கோட்டிற்கு கீழே வாழ்கின்ற மக்கள் உலகிலே மிக அதிகமாக இருக்கும் ஒரு நாட்டின்  பிரதமர் இப்படியெல்லாம் மக்களின் வரிப் பணத்தை செலவிடலாமா என்று நாம் கேட்டால் ‘அவர்கள்’ நம்மை தேசவிரோதிகள் என்று அழைப்பார்கள். நம் மக்க ளைப் போல நாமும் கண்களை மூடிக்கொள்வோம், அவர்கள் பார்வையில் அப்போதுதான் நாம் ‘தேச பக்தர்கள்’. இதுதான் மோடி காணும் ‘புதிய இந்தியா’.உலகளாவிய பட்டினிக் குறியீடு பட்டியலில்  127 நாடுகளில் இந்தியா 105வது இடத்தில் உள்ளதுபாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், இலங்கையை விடவும் மோசமான நிலைஊட்டச்சத்து மற்றும் குழந்தைகள் நலம்:  -  13.7% மக்கள் ஊட்டச்சத்து குறைபாடு கொண்டவர்கள் - 35.5% குழந்தைகள் வளர்ச்சி குன்றியவர்கள்  - 18.7% குழந்தைகள் எடை குறைந்தவர்கள் - 3% குழந்தைகள் 5 வயதிற்கு முன்பே இறந்து விடுகின்றனர்நிதி ஆயோக் குறியீடுகள்: - வறுமை ஒழிப்பில் இந்திய விழுக்காடு: 72  - பட்டினி ஒழிப்பில் இந்திய விழுக்காடு: 52  - தரமான கல்வி வழங்குவதில் இந்திய விழுக்காடு: 61 - பாலின சமத்துவத்தில் இந்திய விழுக்காடு: 49 - குறைந்த விலை, சுத்தமான ஆற்றல் குறியீட்டில் இந்திய விழுக்காடு: 68பொருளாதார நிலை:   - வங்கிகளில் தங்க நகைக்கடன்கள் 50% அதிகரிப்பு   - அடகு வைத்த நகைகளை மீட்க முடியாமல் வராக்கடன் 30% அதிகரிப்பு   - வங்கிகள் அல்லாத நிதி நிறுவனங்களின் (NBFC) கடன் வழங்கல் 13.5% குறைவு   - டாலர் மதிப்பு ₹86 ஆக உயர்வு (2013-ல் ₹40-43 ஆக இருந்தது) சந்தை நிலவரம்:   - கார் விற்பனை கடந்த 4 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சரிவு   - GST வரி வசூல் தொடர்ந்து குறைவு   - தொழில் மற்றும் வியாபார கடன் கோரிக்கைகள் குறைவு   - தனிநபர் கடன்கள் மற்றும் கிரெடிட் கார்டு கடன்கள் மட்டுமே அதிகரிப்பு
2025-01-09 02:30:10.731591
ஜனவரி 8, 2025
மிரட்டலுக்கு அடிபணியோம்!
தலையங்கம்
நமது நிருபர்
https://theekkathir.in/News/headlines/bjp/university-grants-commission-(ugc)-new-draft-bill
தமிழ்
UTF-8
பல்கலைக்கழக மானியக்குழு(யு.ஜி.சி) புதிய வரைவு மசோதா ஒன்றை வெளியிட்டிருக்கிறது. அதில்  உள்ளவை விதிகளாக இல்லாமல்; மாநில அரசின் உரிமைகளை பறித்து, உயர்கல்வியை சீர்குலைப்பதற்கான ஒன்றிய மோடி அரசின் சதிகளாக இருக்கின்றன. அதனை ஒரு போதும் ஏற்க முடியாது. ஒன்றிய அரசு யுஜிசி புதிய வரைவு அறிக்கையை  உடனே திரும்பப்பெற வேண்டும்.இந்திய அரசியலமைப்பில் கல்வி ஒத்தி சைவு பட்டியலில் இருக்கும் நிலையில் மாநில அரசை முற்றாகப் புறக்கணித்து யுஜிசி  எப்படி தன்னிச்சையாக புதிய விதிமுறைகளைத் தீர்மானிக்க முடியும்?2014 இல் நரேந்திர மோடி பிரதமரான பின்னர், ஆர்எஸ்எஸ்- ஐச் சேர்ந்த கல்வியாளர் தீன நாத்பத்ரா  “நாங்கள் அரசு சாராக் கல்வி ஆணை யத்தை அமைப்போம். அந்த ஆணையம் 3  ஆண்டுகளில் கல்விக் கொள்கையை வகுத்துக் கொடுக்கும். அதைத்தான் பாஜக அரசு செயல் படுத்தும்’’ என்றார். அதுதான் இன்று ‘தேசிய கல்விக்கொள்கை 2020’ வடிவில் ஒவ்வொரு நிலையிலும் அமலாக்கப்படுகிறது. அதன் ஒரு உட்கூறுதான்  யுஜிசியின் புதிய விதிமுறைகள்  2025- க்கான வரைவு அறிக்கை .புதிய வரைவில் துணைவேந்தர் தேடுதல் குழு வில் மாநில அரசின் பிரதிநிதியை நீக்கியிருக்கிறது. அதற்குப் பதிலாக ஆளுநர் நியமிக்கும் நபரே குழுவின் தலைவராகவும் இருப்பார் என்கிறது. இனி நேரடியாகக் கல்விப்புலம் சாராத கம்பெனி நிர்வாகிகளும் துணைவேந்தர்களாக நியமிக்கப் படுவர் என்கிறது. அதாவது ஆர்எஸ்எஸ் நபர்க ளைக் கொண்டு சித்தாந்த ரீதியாக  உயர் கல்வி நிலையங்களை  காவிமயமாக்கும் குறுக்கு வழி யையே யுஜிசியின்  விதிமுறைகளாக அறிவித்தி ருக்கிறது.இந்த வரைவு விதிமுறைகள் மத்திய சட்டத் தில் உருவாக்கப்பட்ட பல்கலைக்கழகங்கள் மட்டு மின்றி,  மாநிலச் சட்டங்களால் உருவாக்கப்பட்டி ருக்கும் பல்கலைக்கழகங்களுக்கும் அவற்றின்  உறுப்பு நிறுவனங்களுக்கும் பொருந்தும் என்று கூறப்பட்டிருக்கிறது. இது கூட்டாட்சி தத்துவத் தின் மீது தொடுக்கப்பட்டுள்ள நேரடியான தாக்கு தலாகும்.புதிய வரைவைப் பின்பற்றாவிட்டால்  யுஜிசி அங்கீகாரம் ரத்து செய்யப்படும், படிப்பவர்களின் பட்டம் செல்லாது, தொலைநிலைக் கல்வி, திறந்த வெளிக் கல்வி  மற்றும்  ஆன்லைன் வாயிலாக கல்வியை தொடரவும் தடை விதிக்கப்படும் என மிரட்டல் விடுத்திருக்கிறது. இது அதிகார அத்து மீறல் மட்டுமின்றி ஆணவத்தின் உச்சமாகும்.அரசியல் சாசனம் பட்டியல் 2 வரிசை  32 இல்  மாநிலப்பட்டியலில் பல்கலைக்கழகங்க ளை உருவாக்கவும், ஒழுங்கு படுத்தவும், கலைப்ப தற்குமான அதிகாரமும் மாநிலத்திற்குதான் உண்டு என தெளிவாக இருக்கிறது.  தமிழகத்தில் உள்ள 13 அரசு  பல்கலைக்கழகங்களும் தனித்தனி சட்டங்களின் மூலம் மாநில அரசின் நிதி மற்றும் நிலத்தில் உருவாக்கப்பட்டவை. இதில் தலையிட யுஜிசிக்கு எந்த உரிமையும் இல்லை.
2025-01-09 02:30:14.228560
ஜனவரி 8, 2025
தீக்கதிர் உலக செய்திகள்
உலகம்
நமது நிருபர்
https://theekkathir.in/News/world/india/the-israeli-army-has-demolished-12,000-buildings-in-the-west-bank
தமிழ்
UTF-8
மேற்குக் கரையில் இஸ்ரேல் ராணுவம் 12 ஆயிரம் கட்டடங்களை இடித்துள்ளது2009 முதல் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் 12,000 க்கும் அதிகமான கட்டடங்கள் இஸ்ரேல் ராணுவத்தால் இடிக்கப்பட்டுள்ளன என ஐ.நா., அலுவலகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. 3,553 விவசாய கட்டமைப்புகள், 3,547 வீடுகள் (தனி அல்லது அடுக்குமாடி கட்டடங்கள்) இடிக்கப்பட்டுள்ளன. போர் துவங்கிய பிறகு 2024 இல் தான் 16 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு அதிகபட்சமான கட்டடங்களை இஸ்ரேல் இடித்துள்ளது. இந்த ஆண்டில் மட்டும் சுமார் 1,763 கட்டிடங்கள் இடிக்கப்பட்டுள்ளன.வேகமாக பரவும் காட்டுத்தீ :  30 ஆயிரம் பேர் வெளியேற்றம்அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீ பலத்த காற்றின் காரணமாக மிக வேகமாக குடியி ருப்புப் பகுதிகள் வரை பரவியுள்ளது. பெரும் தொழில திபர்களின் வீடுகள் அமைந்துள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகர புறநகர்ப் பகுதி காட்டுத் தீயால் சூழப்பட்டுள் ளது.இந்நிலையில்  30 ஆயிரத்துக்கும் அதிகமான பொதுமக்கள் அப்பகுதியை விட்டு வெளியேறியுள்ள னர்.  5 சதுர கிலோமீட்டர் பரப்பளவிற்கு வனப்பகுதி மற்றும் குடியிருப்பு பகுதிகள்  காட்டுத் தீயில் அழிந்து விட்டதாக அம்மாகாண அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.மத்திய கிழக்கில் நிலைமை  கைமீறி செல்லும் : டிரம்ப் மிரட்டல்தான் அமெரிக்க ஜனாதிபதியாக பொறுப் பேற்கும் ஜனவரி 20 க்கு முன் ஹமாஸ் வசம் உள்ள பணயக்கைதிகளை விடுவிக்கா விட்டால் மத்திய கிழக்கு  முழுவதும்  போர் தீவி ரமாகும் என டிரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார். போர் துவங்கிய 50 நாளில் ஹமாஸ் படையை அழித்துவிடுவேன் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்ச மின் நேதன்யாகு கூறி இருந்தார். ஆனால் 1 வருடம் கடந்தும் ஹமாஸ் குழு, இஸ்ரேல் ராணுவத்தின் மீது ஏவுகணைத் தாக்குதலை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.இலங்கை ஜனாதிபதி  சீனா பயணம்இலங்கை ஜனாதிபதி அனுரகுமார திஸா நாயக்க ஜனவரி 14 முதல் 17 வரை சீனாவுக்கு அரசுமுறை பயணம் மேற்கொள்ளவுள்ளார். ஜனா திபதியாக பொறுப்பேற்ற பிறகு முதல் அரசுமுறை பயணமாக இந்தியா வந்த அவர் இரண்டாவது பயணமாக சீனா செல்வது குறிப்பிடத்தக்கது. சீனா கடந்த ஆண்டுகளில் இலங்கையின் வளர்ச்சிக்காக பல முதலீடுகள்  செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த பயணத்தில் இலங்கைக்கான கடன் மற்றும் வளர்ச்சித் திட்டங்கள் குறித்து இரு நாடுகளுக் கிடையே பேச்சுவார்த்தை நடக்கும் என கூறப்படுகிறது.ஷேக் ஹசீனாவின்  பாஸ்போர்ட் ரத்துவங்கதேசத்தின் இடைக்கால அரசு,  முன் னாள் பிரதமர் ஷேக் ஹசீனா உட்பட 97 நபர்களின் பாஸ்போர்ட்களை ரத்து செய்துள் ளது.அந்நாட்டின் சர்வதேச குற்றவியல் தீர்ப்பா யம் ஹசீனா உள்ளிட்ட 11 பேருக்கு கைது வாரண் ட்களை பிறப்பித்துள்ளது. பிப்ரவரி 12 அன்று நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இதுவரை இரண்டு முறை அவருக்கு அந்நாட்டு நீதிமன்றம் கைது உத்தரவை பிறப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தியா அவரது விசாவை நீட்டித்துள்ளது.அமெரிக்காவின் எல்லைகளை விரிவாக்கப் போவதாக டிரம்ப் மிரட்டல்நியூயார்க், ஜன.8- அமெரிக்க ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப் பட்ட டொனால்டு டிரம்ப் செவ்வாயன்று கொடுத்த பேட்டி ஒன்றில் அமெரிக்காவின் எல்லைகளை விரிவுபடுத்தப்போவதாக மிரட்டல் விடுத்துள்ளார்.  ஒரு மணி நேரம் வரை நடந்த அந்த செய்தியாளர் சந்திப்பில், கனடா, டென்மார்க் கின் கிரீன்லாந்து, பனாமா கால்வாய் ஆகிய வற்றை அமெரிக்காவின் மாநிலங்களாக இணைப்பது குறித்து பேசியுள்ளார். ஜனாதிபதி தேர்தலில் வென்ற பிறகு பலமுறை எகிப்தின் பனாமா கால்வாய் மற்றும் கனடாவை அமெரிக்காவின் மாநிலங்களாக இணைப்பது பற்றி டிரம்ப் பேசியுள்ளார். தனது முதல் ஆட்சிக் காலத்திலேயே கிரீன்லாந்தை தனது நாட்டுடன் இணைக்க வேண்டும் என பேசியுள்ளார். 1867 இல் அலாஸ்காவையும், 1959 இல் ஹவாயையும் அமெரிக்காவின் மாகாணங்க ளாக இணைத்த பிறகு தற்போது அமெரிக்கா வுடன் பிறநாடுகளின் பகுதியை இணைக்க வேண்டும் என டிரம்ப் பேசி வருகிறார்.  எகிப்தில் உள்ள பனாமா கால்வாயை 1914 இல் அமெரிக்காதான் கட்டமைத்தது. இந்த கால்வாயை எங்கள் ராணுவத்திற்காக தான் கட்டினோம். அதனை மீண்டும் கைப்பற்றும் காலம் வந்துவிட்டது எனவும் டிரம்ப் குறிப் பிட்டுள்ளார்.  அமெரிக்காவின் பொருளாதார பாது காப்பை தக்கவைக்க இந்த பகுதிகளை அமெ ரிக்காவின் மாநிலங்களாக இணைப்பது அவசி யம் என தனது ஆக்கிரமிப்பு திட்டத்திற்கு டிரம்ப் ஒரு காரணத்தையும் சொல்லிக்கொள்கி றார். ஒருவேளை அவர்கள் இதற்கு ஒப்புக் கொள்ளவில்லை என்றால் அவர்கள் மீது பொ ருளாதாரத் தடைகளை விதிப்பேன் என்றும்,  தேவைப்பட்டால் ராணுவத்தை கூட பயன் படுத்துவேன் எனவும் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.  அதோடு நிறுத்தாமல் கிரீன்லாந்து மக்கள் அவர்கள் பகுதியை அமெரிக்காவுடன் இணைக்க வாக்களிக்க வேண்டும் என அந் நாட்டுக்குள் குழப்பத்தை உருவாக்கும் வகை யில் புதிய பிரச்சனையை தூண்டியுள்ளார். கனடா அமெரிக்காவின் 51 ஆவது மாகாண மாக இணைய வாய்ப்பில்லை என  டிரம்பின் கருத்துக்கு ஜஸ்டின் ட்ரூடோ மறுப்பு தெரி வித்துள்ளார்.
2025-01-09 02:30:15.066532
ஜனவரி 8, 2025
இஸ்ரோ புதிய தலைவராக வி.நாராயணன் நியமனம்!
தேசியம்
நமது நிருபர்
https://theekkathir.in/News/india/india/vnarayanan-to-become-next-isro-chief
தமிழ்
UTF-8
இஸ்ரோவின் தற்போதைய தலைவர் சோம்நாத்தின் பதவிக் காலம் முடிவதால், புதிய தலைவராக தமிழ்நாட்டைச் சேர்ந்த வி.நாராயணன் நியமித்து ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது.  கன்னியாகுமரி மாவட்டத்தை பூர்வீகமாகக் கொண்ட நாராயணன் எல்.பி.எஸ்.சியின் (LPSC) இயக்குநராக செயல்பட்டு வருகிறார். இவர், சந்திரயான் 2, சந்திரயான் 3, ஆதித்யா எல்1, ககன்யான் போன்ற விண்வெளி ஆய்வுத் திட்டங்களில் முக்கிய பங்காற்றியுள்ளார். இந்த நிலையில், இஸ்ரோவின் புதிய தலைவராக வி.நாராயணன் நியமித்து ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது. இவர் வரும் ஜனவரி 14ஆம் தேதி பதவியேற்கிறார்.
2025-01-09 02:30:15.373657
ஜனவரி 8, 2025
தமிழக ஆளுநரை மாற்ற மறுப்பதேன்?
மாநிலம் - தமிழ்நாடு
நமது நிருபர்
https://theekkathir.in/News/states/tamil-nadu/the-hindu-editorial-question
தமிழ்
UTF-8
தமிழக சட்டசபையில் ஆளுநர் உரை ஒரு முக்கிய நிகழ்வாக இருக்க வேண்டியது. ஆனால் ஆண்டு தோறும் அது சர்ச்சைக்குரிய நிகழ்வாக மாறிவருவது வருத்தத்தி ற்குரியது. குறிப்பாக, தற்போதைய ஆளுநர் ஆர்.என்.ரவி  தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக சர்ச்சைகளை உருவாக்கி வருகிறார். சமீபத்திய சர்ச்சையில், தேசியகீதம் முன்னதாக இசைக்கப்படவில்லை என்ற காரணத்தைக்கூறி, அரசிய லமைப்புச் சட்டமும் தேசிய கீதமும்  அவமதிக்கப்பட்டதாகக் குற்றம்சாட்டி பேரவையிலிருந்து வெளிநடப்பு செய்தார். ஆனால், தமிழக அரசின் வழக்கப்படி, ஆளுநர்  உரைக்கு முன் மாநில கீதமும், பின்னர் தேசியகீதமும் இசைக்கப்படுவதே நடைமுறை. இது ஆளுநர் அலுவலகத்திற்கு முன்னதாகவே தெரிவிக்கப்பட்டிருந்தது. கடந்த ஆண்டுகளிலும் இதேபோன்ற சர்ச்சைகளை உருவாக்கியவர் ஆளுநர். அரசின்  கொள்கை விளக்க உரையில் திராவிட ஆட்சி முறை பற்றியும், மாநிலத்தின் சட்டம்-ஒழுங்கு நிலை குறித்தும் குறிப்பிடப்பட்டி ருந்தது. ஆனால் அவற்றை வாசிப்பதற்கு மறுப்பு தெரிவித்து, உண்மைகள் திரிக்கப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டினார். சமீபத்தில் பல மாநிலங்களில் ஆளுநர் மாற்றங்கள் நடந்துள்ளன. கேரள ஆளுநர் பீகாருக்கு  மாற்றப்பட்டார். மணிப்பூர், மிசோரம் ஆகிய மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்கள் நியமிக்கப்பட்டனர். ஆனால் தமிழகத்தில் பல சர்ச்சைகளை உருவாக்கியிருந்தும் திரு.ரவி மாற்றப்படவில்லை. 2019-ல் நாகாலாந்தில் பதவியேற்ற ரவி, 2021-ல் தமிழகத்திற்கு மாற்றப்பட்டார். மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பதில் காலதாமதம் செய்வது, அடிக்கடி அரசியல் சர்ச்சைகளில் ஈடுபடுவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகிறார். உச்சநீதிமன்றம் சமீபத்தில், ஆளுநர்கள் தங்கள் பதவியை தவறாகப் பயன்படுத்தி மாநில அரசின் நிர்வாகத்தை சீர்குலைக்கக் கூடாது என அறிவுறுத்தியுள்ளது. ஆனால் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழக அரசுடன் திரு.ரவி தொடர்ந்து மோதல் போக்கை கடைப்பிடிப்பது, ஒன்றிய அரசின் உள்நோக்கத்தை வெளிப்படுத்துகிறது. மாநில அரசின் பொறுமையை சோதிப்பதே அவரது நோக்கமாக தெரிகிறது. இந்நிலையில் அவர் தொடர்ந்து பதவியில் நீடிப்பது கேள்விக்குறியாகவும், வியப்பாகவும் உள்ளது. ஜன.1, 2025 ஏட்டில் வெளியானது தமிழ்ச் சுருக்கம் : கடலூர் சுகுமாறன்
2025-01-09 02:30:19.896632
ஜனவரி 8, 2025
டங்ஸ்டன் சுரங்க எதிர்ப்பு மக்கள் போராட்டத்தில் காவல்துறை அடக்குமுறை ஏன்?
மாநிலம் - தமிழ்நாடு
நமது நிருபர்
https://theekkathir.in/News/states/tamil-nadu/why-the-police-crackdown-on-people's-protests-against-tungsten-mining
தமிழ்
UTF-8
ஜனநாயக வாலிபர் சங்கம் கண்டனம் மதுரை, ஜன.8 - மதுரை அரிட்டாபட்டி - நாயக்கர்பட்டி டங்ஸ்டன் சுரங்க திட்டத்திற்கு எதிராக  தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறை வேற்றப்பட்டுள்ள நிலையிலும், மக்கள் போராட்டத்தை அடக்க காவல்துறை மேற் கொள்ளும் நடவடிக்கைகள் கண்டனத்துக் குரியது என இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் தெரிவித்துள்ளது.  இதுதொடர்பாக சங்கத்தின் மாநிலத் தலைவர் எஸ்.கார்த்திக், செயலாளர் ஏ.வி. சிங்காரவேலன் ஆகியோர் விடுத்துள்ள அறிக்கையில் சம்பவங்களை விவரித்துள்ள னர். சட்டசபையில் தீர்மானம் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சுரங்கத்துறை அமைச்சரை சந்தித்து மனு அளித்ததுடன், நாடாளுமன்றத்திலும் இப்பிரச்சனையை எழுப்பியுள்ளார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட அனைத்து எதிர்க்கட்சிகளின் ஆதரவுடன் மேலூரில் பெரும் போராட்டம் நடைபெற்றது. தமிழக சட்டசபையில் இத்திட்டத்திற்கு எதிராக அனைத்துக் கட்சிகளின் ஆதரவுடன் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.  பல்லுயிர் பாதுகாப்பு மண்டலம் தமிழக அரசால் பல்லுயிர் தளமாக  அறிவிக்கப்பட்ட அரிட்டாபட்டி மலைப்பகுதி யில் சமணர் படுக்கை, தமிழ் பிராமி கல்வெட்டுகள், பாண்டியர் கால சிவன் கோயில், நீரூற்றுகள் உள்ளன. முல்லைப் பெரியாறு பாசனத்தில் விவசாயம் செய்யப்படும் இப்பகுதியில் சுரங்கம் அமைப்பதற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. மூன்று நாள் மக்கள் நடைபயணம் டிசம்பர் 20 முதல் 22 வரை வாலிபர் சங்கம் கிடாரிப்பட்டி முதல் மேலூர் வரை  மக்கள் நடைபயணம் நடத்தியது. நூற்றுக் கணக்கான இளைஞர்கள், பல்லாயிரக் கணக்கான பொதுமக்கள் பங்கேற்றனர். காவல்துறை தடை விதித்தும் மக்கள் ஆதரவுடன் நடை பயணம் வெற்றிகரமாக நடைபெற்றது. விவசாயிகள் போராட்டம் இந்நிலையில், ஜனவரி 7 செவ்வாயன்று நரசிங்கம்பட்டி முதல் தமுக்கம் வரை ஒரு லட்சம் விவசாயிகள் அணிதிரண்டனர். அரசியல் கட்சிகள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் இணைந்தனர். இத்தனை பெரிய மக்கள் இயக்கத்தில், வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் தமிழரசன் மீது காவல்துறை குறி வைத்து தாக்குதல் நடத்தியது. மக்கள் எதிர்ப்பால் அவர் விடுவிக்கப்பட்டார். பல நூறு காவலர்கள் குவிக்கப்பட்டனர். தடுப்பு வேலிகள், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டன. தமுக்கத்தில் மட்டுமே போராட்டத்திற்கு அனுமதி வழங்கப்பட்டது. ஒன்றிய அரசுக்கு எதிரான போராட்டத்தில் காவல்துறை இவ்வளவு அடக்குமுறை ஏன்; என்ற கேள்வி எழுகிறது. தமிழக காவல்துறை யை இயக்குவது யார்? மேலும் 5000 பேர் மீது வழக்கு ஏன்? தமிழரசன் மீது குறிவைத்த தாக்குதலுக்கு யார் உத்தரவிட்டது? என்ற கேள்வியும் எழுகிறது. இத்தாக்குதலுக்கு காரணமான காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாலிபர் சங்கம் வலி யுறுத்தியுள்ளது. டங்ஸ்டன் திட்டம் முழுமை யாக ரத்து செய்யப்படும் வரை போராட்டம் தொடரும் எனவும் அறிவித்துள்ளது.
2025-01-09 02:30:19.897734
ஜனவரி 8, 2025
தீக்கதிர் விரைவு செய்திகள்
மாநிலம் - தமிழ்நாடு
நமது நிருபர்
https://theekkathir.in/News/states/tamil-nadu/3-months--women's-entitlement-amount-deputy-chief-minister-for-missing
தமிழ்
UTF-8
விடுபட்டவர்களுக்கு 3 மாதங்களில்  மகளிர் உரிமைத் தொகை : துணை முதல்வர்சென்னை, ஜன. 8 - தமிழக சட்டப்பேரவையில் 2025-ஆம்  ஆண்டின் முதல் கூட்டத்தொடர் நடை பெற்று வருகிறது. மூன்றாவது நாளான புதன்கிழமை (ஜன.8) கேள்வி நேரத்தின் போது கலைஞர் மகளிர் உரிமைத் தொகை குறித்து உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதிலளித்தார். துணை முதல்வ ராக இது அவரது முதல் பதிலாகும். அப்போது, “மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை அமல்படுத்துவதற்காக சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு, தமிழகம் முழு வதும் 1.63 கோடி விண்ணப்பங்கள் பெறப் பட்டன. அவற்றை ஆய்வு செய்ததன் அடிப்படையில் கிட்டத்திட்ட 70 சதவிகித விண்ணப்பங்கள் முதற்கட்டமாக ஏற்கப்பட்டன. மேலும், முதல்முறை விண்ணப்பித்து நிராகரிக்கப்பட்டவர்கள் மீண்டும் விண்ணப்பிக்க வாய்ப்பு அளிக்கப் பட்டது. அதன்படி, கூடுதலாக 9 லட்சம் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. கடந்த டிசம்பர் மாதம் 1.14 லட்சம் மகளிருக்கு ரூ. 1,000 உரிமைத் தொகை வழங்கப்பட்டுள்ளது. தற்போது விடுபட்ட வர்களில் தகுதியுள்ளவர்களுக்கு மகளிர் உரிமைத் தொகை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தகுதி யுள்ள அனைவருக்கும் உரிமைத் தொகை  வழங்குவது தொடர்பான கோரிக்கைகளை முதல்வருக்கு கொண்டு சென்றுள்ளோம். 3 மாதங்களில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.ஆளுநர் ரவியின் செயலுக்கு  பேரவைத் தலைவர் கண்டனம்சென்னை, ஜன. 8 - தமிழ்நாடு சட்டப்பேரவையில் இருந்து ஆளுநர் ஆர்.என். ரவி வெளியேறியது குறித்து பேரவைத் தலைவர் மு. அப்பாவு விளக்கம் அளித்து பேசியதாவது:- சட்டப்பேரவையில் இருந்து ஆளுநர் வெளியேற அதிமுகவினரே காரணம். ஆளுநருக்கு எதிராக, அதிமுகவினர் பதாகைகளுடன் வந்தனர். எழுதிக் கொடுப்பதை வாசிப்பது மட்டும் தான் ஆளுநரின் வேலை, கோரிக்கை எதுவும் வைக்க  முடியாது. ஆளுநர் ஆர்.என். ரவி, ‘எக்ஸ்’ தளத்தில் பதிவிட்டது  மக்களையும், பேரவை உறுப்பினர்களையும் அவமானப் படுத்தும் செயல். ஆளுநரின் இந்தச் செயலை தமிழ்நாடு சட்டப்பேரவை வன்மையாக கண்டிக்கிறது. தேசிய கீதத்தை முதலில் பாட வேண்டும் என கோரிக்கை வைக்க ஆளுநருக்கு உரிமை இல்லை. ஆளுநர் உரையின் போது தூர்தர்ஷன் தொலைக்காட்சி மூலம் வெட்டி, ஒட்ட முயற்சி நடந்தது; வெட்டி,  ஒட்டுவார்கள் என முன்கூட்டியே கண்டு பிடித்ததால் தூர்தர்ஷன் தொலைக்காட்சிக்கு நேரலை தரப்படவில்லை. தூர்தர்ஷன் தொலைக்காட்சிக்கு நேரலை கொடுக்க ஆளுநர் தரப்பில் இருந்து  நெருக்கடி கொடுக்கப்பட்டது. தமிழக மக்களை ஆளுநர்  ஆர்.என். ரவி அவமதித்து விட்டார். இவ்வாறு சபாநாயகர் மு. அப்பாவு கூறினார்.பாதிக்கப்பட்டவர்களை தரக்குறைவாக பேசிய காவல் கண்காணிப்பாளர்உ.பி லக்கிம்பூரில் காவல் நிலை யத்தில் ராமச்சந்திரா என்ற  தலித் இளைஞர் ஒருவர் மர்ம மான முறையில் இறந்துள்ளார். அந்த இளைஞரின் தந்தை மகனுக்கு  நீதி  கேட்டு போராடி வரும் நிலையில் பேச்சு வார்த்தைக்கு சென்ற உதவி காவல் கண்காணிப்பாளர் பி.பி. சிங்  பாதிக் கப்பட்டவர்களை மிகத் தரக்குறைவாக பேசியுள்ளார். காவலர்கள் யாரையும் இடைநீக்கம் செய்யமுடியாது. உயிரிழப்புக்கு இழப்பீடு தரமுடியாது. எத்தனைநாட்கள் வேண்டுமானாலும் பிணத்தை வைத்துக் கொள்ளுங்கள். உங்களால் முடிந்ததை செய்து கொள்ளுங்கள் எனவும் மிரட் டிள்ளார்.கோரிக்கைகள் புறக்கணிப்பு ஜம்மு-காஷ்மீர்  அரசு ஊழியர்கள் போராட்டம்ஜம்மு-காஷ்மீரில் தங்களது நீண்ட காலக் கோரிக்கைகளை நிறை வேற்ற வலியுறுத்தி அரசு ஊழி யர்கள் சங்கம் ஜனவரி 17-ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தத் திட்டமிட்டுள்ளது. ஜம்மு-காஷ்மீர் நிர்வாகத்தை மேற்கொண்டுள்ள துணை நிலை ஆளுநர்  2023-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் அரசு ஊழியர்கள் (நடத்தை) விதி கள், 1971- விதி 20 (ii) ஐ- செயல் படுத்தினார். இந்த விதியின்படி எந்த அரசு ஊழியரும் தங்களது கோரிக்கை சார்ந்த பிரச்சனைகளுக்காக வேலை நிறுத்தம் உட்பட எந்தவகையான போராட்டங்களிலும் ஈடுபடக்கூடாது எனக் கூறியிருந்தார். உத்தரவு போட்ட துணை நிலை ஆளுநர் அரசு ஊழியர்களின் கோரிக்கை களை நிறைவேற்ற முன்வரவில்லை. இந்த நிலையில் ஆளுநரின் போக்கைக் கண்டித்து அரசு ஊழியர்கள் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர். அகவிலைப்படி, வீட்டு வாடகைப்படி, அரசு ஊழியர்கள் மற்றும் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் கல்லூரி விரிவுரையாளர்கள் ஆகியோர் பெறும் சம்பளத்தில் உள்ள முரண்பாடுகளைக் களைய வேண்டும். பொது வருங்கால வைப்பு நிதியை செலுத்த வேண்டும் என்ற கோரிக்கைகளை அரசாங்கம் தொடர்ந்து புறக்கணித்து வருகிறது. பலமுறை பேசியும் அரசு எந்த பதிலை யும் அளிக்கவில்லை. இதனால் அரசு ஊழியர்கள் போராட்டத்தை அறி வித்துள்ளனர்.நால்கோ (NALCO) நிறுவனத்தில் 518 பணியிடங்கள்ஐடிஐ/ டிப்ளோமா (ITI /DIPLOMA) படித்தவர்களுக்கு புவனேஸ்வரில் உள்ள நால்கோ (NALCO) நிறுவனத்தில் 518 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. ஜனவரி 21, 2025 தேதியின் படி 27 வயதுக்குள்                                                                                                                                       இருக்க வேண்டும். இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு அரசு விதித்துள்ள தளர்ச்சி உண்டு.  தகுதியானவர்கள் ஆன்லைன்,எழுத்துத் தேர்வு,நேர்முகத் தேர்வு மற்றும் குழு விவாதம் ஆகியவற்றில் மதிப்பெண் அடிப்படையில் தகுதியானவர்கள் பணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள். தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதம் ரூ.12,000உதவித்தொகையுடன் ஒரு வருட பயிற்சி அளிக்கப்பட்டு பின்னர் பணி வழங்கப்படும். www.nalcoindia.com என்ற இணையதளத்தின் வழியாக கூடுதல் விபரங்களை அறிந்து கொள்ளலாம். விண்ணப்பிக்க கடைசி தேதி ஜனவரி 21,2025 ஆகும்.எச்.எம்.பி.வி. தொற்றுக்கு பிரத்யேக சிகிச்சை இல்லை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தகவல்சென்னை, ஜன. 8 - எச்.எம்.பி.வி. தொற்று குறித்து தமிழ்நாடு சட்டப்பேரவை யில் விளக்கம் அளித்த அமைச்சர் மா. சுப்பிரமணியன், எச்.எம்.பி.வி. வைரசுக்கு அச்சப்பட வேண்டிய அவசியம் இல்லை  என்றார். தொடர்ந்து பேசிய அவர், சீனாவில் பரவி வரும் எச்.எம்.பி.வி. வைரஸ் 50 ஆண்டுகளுக்கு முன்பு கண்டறி யப்பட்டது. இந்த வைரசால் தமிழகத்தில் பாதிக்கப்பட்ட இருவர் நலமுடன் உள்ளனர். எச்.எம்.பி.வி. தொற்று குறித்து அச்சப்பட வேண்டிய அவசியம் இல்லை. காய்ச்சல், சளி பாதிப்புள்ளோர் பொது இடங்களில் முகக்கவசம் அணிவது நல்லது. ‘எச்.எம்.பி.வி. வைரஸ் சாதாரணமான ஒன்றுதான்; வீரியத் தன்மை உள்ள வைரஸ் இல்லை. இதற்கென பிரத்யேக மருந்துகளும் இல்லை. பிரத்யேக சிகிச்சையும் இல்லை. 4 அல்லது 5 நாட்களில் அதுவாகவே சரியாகி விடுகிறது. பெரிய அளவில் பயப்படத் தேவையில்லை என்றும் அவர் கூறினார்.ஜன. 18 - திருச்சியில் தொகுப்பூதிய ஒழிப்பு மாநாடு! சத்துணவு ஊழியர் சங்கம் நடத்துகிறதுசென்னை, ஜன. 8 - சத்துணவு ஊழியர் சங்கத்தின் சார்பில், ஜனவரி 18 அன்று திருச்சியில், தொகுப்பூதிய ஒழிப்பு மாநாடு நடைபெறுகிறது. சத்துணவு ஊழியர் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் செவ்வாயன்று (ஜன.7) சென்னையில் மாநிலத் தலைவர் ஆர். கலா தலைமையில் நடைபெற்றது. சங்கத்தின் பொதுச்செயலாளர் அ. மலர்விழி, பொரு ளாளர் எம்.ஆர். திலகவதி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இந்தக் கூட்டத்தில், “சத்துணவுத் திட்டத்தில் 8 ஆயிரத்து 997 சமையல் உதவியாளர்களை நியமிக்க உள்ளதை வரவேற்கிறோம். அதேசமயம், கொத்தடிமை ஊதியமாக 3 ஆயிரம் ரூபாய் நிர்ணயித்துள்ளதை மறுபரி சீலனை செய்ய வேண்டும் என வலியுறுத்துகிறோம்” என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. “சத்துணவு திட்டத்தில் உள்ள அனைத்து காலிப் பணியிடங்களையும், காலமுறை ஊதியத்தில் நிரப்ப வேண்டும்; 2021 தேர்தல் காலத்தில் அளித்த வாக்குறுதிப்படி, சத்துணவு ஊழியர்களை அரசு  ஊழியராக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி ஜனவரி 18 அன்று திருச்சியில் தொகுப்பூதிய ஒழிப்பு சிறப்பு மாநாட்டை நடத்துவது” என்றும் இக்கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. 24 மணி நேர உண்ணாநிலை முன்னதாக, “தொகுப்பூதியம் ஒழிக்கப்பட வேண்டும், சிறப்பு காலமுறை ஊதியத்தை மாற்றி காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், 9 ஆயிரம் ரூபாய் குறைந்தபட்ச ஓய்வூதியம் வழங்க வேண்டும், ஓய்வுபெறும் ஊழியர்களுக்கு பணிக்கொடையாக 5 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும், 63 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும், உணவு ஊட்டுச் செலவினத்தை, ஒரு குழந்தைக்கு 5 ரூபாயாக நிர்ணயித்து வழங்க வேண்டும்; சமூகத் தணிக்கையை கைவிட வேண்டும்; ஏற்கெனவே நடைமுறையில் இருந்த உள்ளாட்சி தணிக்கையை அமல்படுத்த வேண்டும். காலைச் சிற்றுண்டி திட்டத்தை சத்துணவு ஊழியர்களைக் கொண்டு செயல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஜனவரி 29 அன்று சென்னையில் உள்ள சமூக நலத்துறை இயக்குநர் அலுவலகம் அருகில் மாநில நிர்வாகிகள், செயற்குழு உறுப்பினர்கள் பங்கேற்கும் 24 மணி நேர உண்ணா நிலை போராட்டம் நடைபெறும்” என்றும் அறிவிக்கப்பட்டது. அதேநாளில், மாநிலம் முழுவதும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் ஆர்ப்பாட்டம் நடத்துவது என்றும் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
2025-01-09 02:30:19.898397
ஜனவரி 8, 2025
தீக்கதிர் முக்கிய செய்திகள்
மாநிலம் - தில்லி
நமது நிருபர்
https://theekkathir.in/News/states/delhi/dalits,-injustice-and-oppression
தமிழ்
UTF-8
தலித்துகள், மீதான அநீதி மற்றும் ஒடுக்குமுறைக்கு எதிரான உரிமைகளை வழங்கி இந்திய அரசியலமைப்புச் சட்டம் பலம் கொடுத்தது. பாஜக ஆட்சியில், தலித் வகுப்பினரின் அரசியலமைப்புச் சட்டமோ, உரிமைகளோ மதிக்கப்படுவதில்லை.2024-25 நிதியாண்டிற்கான ஜிடிபி வெறும் 6.4 சதவீதம் என மதிப்பிடப்பட்டுள்ளது. பொருளாதார மந்த நிலையின் யதார்த்தத்தை இனிமேல் பாஜக அரசால் மறுக்க முடியாது. நான்கு ஆண்டுகளில் இது மிகக் குறைவு.வேந்தருக்கு கட்டுப்பாடற்ற அதிகாரத்தை வழங்குவதன் மூலம் கூட்டாட்சி  குறைமதிப்பிற்கு உட்படுத்தப்படுகிறது. கல்வி என்பது மத்திய ஏகபோகத்திற்கான விஷயமல்ல. இந்த நடவடிக்கையானது மாநில சுயாட்சியை குலைக்கும் சங் பரிவார் நிகழ்ச்சி நிரலின் ஒரு பகுதியாகும்.சோர்வடைந்த முதல்வர், ஓய்வு பெற்ற அதிகாரிகளுடன் கூட்டு சேர்ந்து, பீகார் இளைஞர்களின் நம்பிக்கையை ஏமாற்றமாக மாற்றியுள்ளார்.இவர்களின் ஆட்சியில், வறுமை, வேலையின்மை, ஊழல் மற்றும் இடம்பெயர்வு ஆகியவற்றில் பீகார் முதலிடத்தில் உள்ளது.2024 இல் மின்சார வாகனங்களின் விற்பனை 20 சதவீதம் அதிகரித்துள்ளது. இது  2023 ஆம் ஆண்டை விட அதிகமாகும். 2023 இல் 82,688 மின்சார வாகனங்கள் விற்பனையான நிலையில் 2024 இல் 99,165 மின்சார வாகனங்கள் விற்ப னையாகியுள்ளன.முன்னாள் ஜனாதிபதியும், மூத்த காங்கிரஸ் தலைவருமான பிரணாப் முகர்ஜி கடந்த 2020 ஆகஸ்ட் 31 அன்று காலமானார். அவருக்கு நினைவிடம் அமைக்க தற்போது ஒன்றிய அரசு இடம் ஒதுக்கி உள்ளது. ராஜ்காட் வளாகத்தில் ஒரு பகுதியை இதற்காக  ஒதுக்கப்பட்டுள்ளது.2024 டிசம்பர் மாதம் எரிபொருள் தேவை 2.1  சதவீதம் அதிகரித்துள்ளதாக ஒன்றிய அரசு தகவல் தெரிவித்துள்ளது. எரிபொருள் பயன்பாடு டிசம்பர் மாதத்தில் 20.67 மில்லியன் மெட்ரிக் டன்னாக இருந்தது. டிசம்பரில் பெட்ரோல் 10.8 சத வீதமும், டீசல் 8.1 சதவீதமும் அதிகமாக விற்பனை யாகியுள்ளது. சமையல் எரிவாயு விற்பனை 5.8 சதவீதம் அதிகரித்துள்ளது.இந்தியாவில் கிளவுட் கம்ப்யூட்டிங் மற்றும் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) திறன்களை விரிவுபடுத்த ரூ.25,700 கோடி முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளதாக மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சத்ய நாதெள்ளா தெரிவித்துள்ளார்.இந்தியாவில் செயற்கை நுண்ண றிவு தொழில்நுட்பத்தின் பரவல் சிறப்பாக உள்ளது. 2030 க்குள் இந்தியாவில் 1 கோடி பேருக்கு ஏஐ திறன் களை பயிற்றுவிக்க மைக்ரோசாப்ட் திட்டமிட்டுள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார்.அசாம் மாநிலம் திமா ஹசாவ் மாவட்டத்தில் உள்ள சட்டவிரோத நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட விபத்தில் 9 தொழிலாளர்கள் சிக்கிக் கொண்ட னர்.  அவர்களை மீட்க 3 நாட்களாக மீட்புப்பணி நடைபெற்று வருகின்றது. ராணுவ நீர் மூழ்கி வீரர்கள் மீட்புக் குழு ஏற்கனவே 3 பேரின் உடல் மீட்டுள்ள நிலையில் நான்காவதாக புதனன்று ஒருவரது  உடலை மீட்டுள்ளது.மீதமுள்ள தொழிலாளர்களும் உயிர்பிழைத்திருப்பதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு என்று தெரிவித்துள்ளனர்.
2025-01-09 02:30:19.898936
ஜனவரி 8, 2025
மகாராஷ்டிராவில் செயற்கை நுண்ணறிவு உதவியுடன் ‘எதிர்கால விவசாயம்’
மாநிலம் - தில்லி
நமது நிருபர்
https://theekkathir.in/News/states/delhi/'farming-of-the-future'-with-artificial-intelligence-in-maharashtra
தமிழ்
UTF-8
மும்பை மகாராஷ்டிராவின் பாராமதி பகுதியில் செயற்கை நுண்ண றிவு தொழில்நுட்ப உதவியுடன் விவசாயிகள் கரும்பு விவ சாயத்தை மேற்கொண்டு வருகின்றனர். இது நல்ல பலனை கொடுப்பதாக விவசாயிகள் கூறுகின்றனர். பாராமதி வேளாண் மேம்பாட்டு அறக்கட்டளையில் உள்ள விஞ்ஞானிகள் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கரும்பு விவசாயிகளுக்கு வேண்டிய தகவலை அளித்து வருகின்றனர்.  உயரமான கோபுரம் அமைக்கப்பட்டு சென்சார்கள் பொருத்தப்பட்டு காற்று, மழை சூரிய ஒளி, வெப்பம், ஈரப்பதம் ஆகியவை அளவிடப்படுகின்றது. அதே போல மண்ணுக்கு அடியிலும் சென்சார்கள் பொருத்தப்பட்டு  மண்ணின் ஈரப்பதம், அமிலத்தன்மை, ஊட்டச்சத்து ஆகியவற்றை அளவிட்டு விவசா யம் செய்ய திட்டமிட  தேவையான தகவல் எடுக்கப்படுகின்றது.  இந்த தகவல்கள் செயற்கைக்கோள் மற்றும் டிரோன் படங்களுடன் இணைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் பெறப் படும் தகவல்கள் விவசாயிகளுக்கு செல்போன் செயலி வழி யாக தெரிவிக்கப்படுகின்றன. அதிக தண்ணீர் பாய்ச்சுவது, உரம் போடுவது, பூச்சிகள் தாக்கத்தை பரிசோதனை செய்வது போன்ற தகவல்கள் விவ சாயிகளுக்கு அவ்வப்போது தெரிவிக்கப்படுகின்றன. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப உதவியுடன் இந்தத் தகவல்கள் ஆராயப்பட்டு விவசாயிகளுக்கு கொடுக்கப்படுகிறது என்பதுதான் முக்கியமான விஷயமாக உள்ளது. இந்த தகவல்களின் அடிப்படையில் விவசாயத்தை மேற்கொள்ளும் விவசாயிகள் அறுவடைக்காலத்தில் நல்ல விளைச்சலை பெறுகின்றனர். கடந்த ஆண்டுகளில்  நடத்தப்பட்ட பரிசோதனையில் அறுவடை நேரத்தில் கரும்பு  30 முதல் 40 சதவீதம்  கூடுதலான எடையுடனும்,  20 சதவீத கூடுதலான சுக்ரோசுடனும்  இருந்தது என ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். மேலும் செயற்கை நுண்ணறிவு  தொழில்நுட்ப உதவியுடன் மேற்கொள்ளும் கரும்பு விவசாயத்துக்கு போதுமான அளவு மட்டுமே  தண்ணீர், உரம் செலவாகிறது. இதனால் உரம், மின்சாரம்  வீணாவது கட்டுப்படுத்தப்படுவதுடன், ஒரே வருடத்தில் நோய் தாக்குதல் இன்றி  கரும்பு நன்கு வளர்ச்சியடைந்து அறுவடைக்கு தயாராகி வருகின்றது என தெரிவிக்கப்பட்டுள்ளது. ‘எதிர்கால விவசாயம்’ என்ற பெயரில் செயற்கை நுண்ண றிவு தொழில்நுட்ப உதவியுடன் மேற்கொள்ளப்படும் , விவசா யத்தில் கரும்பு மட்டும் இன்றி  தக்காளி உட்பட பல பயிர்களின் விவசாயத்திற்கும் பயன்படுத்தப்படுவது  குறிப்பிடத்தக்கதாகும்.
2025-01-09 02:30:19.899416
ஜனவரி 8, 2025
அரசமைப்பைத் தாக்கும் புல்டோசர் அரசியல்
மாநிலம் - தில்லி
நமது நிருபர்
https://theekkathir.in/News/states/delhi/brinda-karath's-speech-at-the-international-book-festival
தமிழ்
UTF-8
திருவனந்தபுரம் இந்தியா முழுவதும் ஒன்றிய அரசும் அதன் கட்டளைக்கு அடிபணியும் காவல்துறை யும் நடத்தி வரும் புல்டோசர் ராஜ்யம், அரசமைப்பு சாசனத்தின் மீதான தாக்குதல் என்று மார்க்சி ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசி யல் தலைமைக்குழு உறுப்பினர் பிருந்தா காரத் தெரிவித்துள்ளார். கேரள சட்டசபை சர்வதேச புத்த கத் திருவிழாவில் ‘புல்டோசர் அரசியலும் இந்திய அரசமைப் பும்’ என்ற தலைப்பில் அவர் பேசி னார். சிறுபான்மையினர் வாழும் இடங்களை நோக்கி ஆளும் கட்சியின் (பாஜகவின்) புல்டோசர்கள் ஓடுகின்றன. ஒரு குறிப்பிட்ட சமூகம் குறிவைக்கப்படுகிறது என்பது தெளிவாகிறது. இது ஜஹாங்கிர்புரி, அரியானா மற்றும் மகாராஷ்டிராவில் காணப்பட்டது. புல்டோசர் பாஜக மற்றும் ஆர்எஸ் எஸ் வடிவமாகிவிட்டது. புல்டோசர் அரசியல் என்பது ஏழைகளைத் தாக்குவதும் கார்ப்பரேட் நிறுவனங் களைக் காப்பதும் ஆகும். தற்போது புதியவகை சாதி அரசியல் நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளது. பல வழிகளில் தீண்டாமையை மீண்டும் கொண்டு வர பாஜகவும் ஆர்எஸ் எஸ்ஸும் முயற்சி செய்கின்றன. ஒன்றிய அரசால் தண்டிக்கப்படும் மாநிலமாக கேரளம் மாறியுள்ளது. இங்குள்ள வளர்ச்சி, கல்வி, சுகாதாரம், தொழில் உள்ளிட்ட துறைகளின் சாதனைகளை ஒன்றிய அரசும், பாஜகவும் விரும்பாததே காரணம் என்றும் அவர் கூறினார்.
2025-01-09 02:30:19.899882
ஜனவரி 8, 2025
புதிய தொழிலாளர் சட்டங்களுக்கு எதிராக வேலைநிறுத்தப் போராட்டம்
மாநிலம் - தில்லி
நமது நிருபர்
https://theekkathir.in/News/states/delhi/strike-against-new-labor-laws
தமிழ்
UTF-8
புதுதில்லி புதிய தொழிலாளர் சட்டங்களு க்கு (Labour Codes) எதிராக நாடு தழுவிய வேலை நிறுத்தப் போராட்டம் நடத்த மத்தி யத் தொழிற்சங்கங்கள் முடிவு செய்துள்ளன.  புதுதில்லியில் நடைபெற்ற மத்தியத் தொழிற்சங்கங்கள் மற்றும் சுயேச்சை சம்மேள னங்களின் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. சிஐடியு, ஏஐடியுசி, தொமுச உள்ளிட்ட அனைத்து மத்தியத் தொழிற்சங்கத் தலை வர்களும் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர். ஒன்றிய அரசின் புதிய தொழிலா ளர் சட்டங்கள் தொழிலாளர்களின் உரிமைகளைப் பறிக்கும் வகை யில் உள்ளதாகக் கூட்டத்தில் விமர் சிக்கப்பட்டது. இந்தச் சட்டங்களை எதிர்த்து வரும் பிப்ரவரி 5-ஆம் தேதி நாடு முழுவதும் மாவட்ட அளவில் போராட்டங்கள் நடத்தப் படும். அன்றைய தினம் மத்திய பட்ஜெட்டை எதிர்த்தும் போராட் டங்கள் நடைபெறும். தொழிலாளர் சட்டங்கள் அம லுக்கு வரும் நாளில் நாடு தழுவிய வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள் ளது. வேலைநிறுத்தத் தேதி விரை வில் அறிவிக்கப்படும். அதற்கான தயாரிப்புப் பணிகளை உடனடி யாகத் தொடங்க வேண்டும் என அனைத்துத் தொழிற்சங்கங்க ளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. எதிர்கால போராட்டங்கள் குறித்து ஆலோசிக்க வரும் 15-ஆம் தேதி மத்தியத் தொழிற்சங்கங்கள் மற்றும் சம்யுக்த கிசான் மோர்ச்சா கூட்டம் நடைபெறவுள்ளது.
2025-01-09 02:30:19.900368
ஜனவரி 8, 2025
சிபிஐ(எம்) அசாம் மாநில மாநாடு
மாநிலம் - தில்லி
நமது நிருபர்
https://theekkathir.in/News/states/delhi/marxist-communist-party-held-in-guwahati
தமிழ்
UTF-8
ஜனவரி 5-7 வரை கவுகாத்தியில் நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அஸ்ஸாம் மாநில 24 ஆவது மாநாட்டில்  சுப்ரகாஷ் தாலுக்தார் மாநிலச் செயலாளராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள் மாணிக் சர்க்கார், நிலோத்பால் பாசு ஆகியோர் கலந்து கொண்ட இம்மாநாட்டில் 50 பேர் கொண்ட மாநிலக் குழுவும், 13 பேர் கொண்ட மாநில செயற்குழுவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
2025-01-09 02:30:19.900825
ஜனவரி 8, 2025
நடிகை ஹனி ரோஸ் புகார் தொழிலதிபர் பாபி செம்மனூர் கைது
மாநிலம் - தமிழ்நாடு
நமது நிருபர்
https://theekkathir.in/News/states/tamil-nadu/actress-honey-rose-complains-businessman-bobby-semmanur-arrested
தமிழ்
UTF-8
திரைப்பட நடிகை ஹனி ரோஸ் அளித்த பாலியல் புகாரின் பேரில் பிரபல தங்கநகை வியாபாரியும் தொழில் அதிபருமான பாபி செம்மனூர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். நடிகையின் புகாரின்படி, ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவின் கீழ் எர்ணாகுளம் மத்திய காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர் பெண்களுக்கு எதிராக ஆபாசமான கருத்துக்களை கூறுவது, இதுபோன்ற கருத்துக்கள் சமூக ஊடகங்கள் மூலம் பரப்பியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. கடை திறப்பு விழாவில் பாபி செம்ம னூர் ஹனி ரோசைஆபாசமாக பேசிய தாகவும், பிறகு மற்றொரு கடை திறப்பு விழாவுக்கான அழைப்பை நிராகரித்த தாகவும் புகாரில் தெரிவித்துள்ளார். அதையொட்டி அவரிடமிருந்து மோச மான கருத்துகள் தொடர்ந்து வந்தன. பாபியின் தொடர்ச்சியான ஆபாச அவ தூறுகளுக்கு எதிராக புகார் அளித்த தாக ஹனி ரோஸ் சமூக ஊடகத்தில் குறிப்பிட்டுள்ளார். “பாபியின் மனநிலையில் உள்ள கூட்டாளிகள் மீதும் புகார்கள் தெரி விக்கப்பட்டுள்ளது. பாபி பணத்தின் மீது  நம்பிக்கை வைத்துள்ளார்… இந்தியா வில் உள்ள சட்ட அமைப்பின் சக்தியை நான் நம்புகிறேன்’’ -என ஹனி ரோஸ் சமூக ஊடகத்தில் குறிப்பிட்டுள்ளார். சமூக வலைதளங்களில் ஏற்கனவே அவ தூறு செய்ததாக முன்பு அளித்த புகாரும் விசாரிக்கப்பட்டு வருகிறது. இதில் ஷாஜி (60) என்பவர் ஜன.6 திங்களன்று கும்பளம் வடக்கு சதீசபுரத்தில் உள்ள அவரது வீட்டில் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் ஹனியின் முகநூல் பதிவில் பெண்களுக்கு எதிராக கருத்து தெரிவித்த 30 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. அவர்களில் 20 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். பாபி கைது செய்யப்பட்ட பிறகு, பலர் தங்கள் கருத்துகளை நீக்கியுள்ளனர். சிலரது கணக்கே நீக்கப்பட்டது. பேஸ்புக் நிறுவனம் கூடுதல் தகவல்களை வழங்குமாறு கோரியுள்ளது.
2025-01-09 02:30:19.901290
ஜனவரி 9, 2025
டங்ஸ்டன் சுரங்க திட்டத்தை உடனடியாக ரத்து செய்க! - சாமி. நடராஜன்
கட்டுரை
நமது நிருபர்
https://theekkathir.in/News/articles/world/cancel-the-tungsten-mining-project-immediately
தமிழ்
UTF-8
ஒன்றிய ஆட்சிப் பொறுப்பில் உள்ள பாஜக கூட்டணி அரசு, ஆட்சி அதிகாரத்திற்கு வந்தது முதல் பெரும் முதலாளிகளும், கார்ப்பரேட் நிறு வனங்களும் கொள்ளை லாபம் பெறுவதற்கான திட்டங்களையே செயல்படுத்தி வருகிறது. இயற்கை வளங்கள் அனைத்தையும் தனியார்மயமாக்கிடும் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாகத்தான் தமிழ்நாட்டில் மதுரை மாவட்டம் மேலூரை அடுத்த அரிட்டாபட்டி பிளாக்கில் 48க்கும் மேற்பட்ட கிராமப்பகுதிகளில் பூமிக்கடியில் உள்ள டங்ஸ்டன் என்ற கனிமத்தை வெட்டி எடுப்பதற்கான சுரங்க அனுமதியை 2024 நவம்பர் 11ஆம் தேதி வேதாந்தா குழுமத்தின் துணை நிறுவனமாக செயல் படும் “ஹிந்துஸ்தான் ஜிங்க்” நிறுவனத்திற்கு ஏலம் விட்டுள்ளது.  இந்த செய்தி வெளியில் வந்தவுடன் உடனடியாக மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் முதலில் தனது எதிர்ப்பை தெரிவித்து கிராம மக்களை சந்தித்து உரையாடியதோடு, நாடாளுமன்றத்தில் வலு வான குரலை எழுப்பி ஏல அறிவிப்பை ரத்து செய்ய வலி யுறுத்தி பேசியுள்ளார். ஒன்றிய சுரங்கத்துறை அமைச்ச ரிடம் விரிவான விபரங்களுடன் மனு கொடுத்து சுரங்க திட்டத்தை உடன் ரத்து செய்திட வலியுறுத்தியுள்ளார்.  தொடர்ந்து மேலூர் பகுதி மட்டுமல்லாமல், மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கடந்த இரண்டு மாத காலமாக தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் பல்வேறு அரசி யல் கட்சிகள், விவசாய அமைப்புகள், சுற்றுச்சூழல் ஆர்வலர் அமைப்புகள் மூலம் போராட்டங்கள் நடை பெற்று வருகின்றன.  குறிப்பாக 7.1.2025 அன்று மேலூர் சுற்று வட்டாரப் பகுதி முழுவதும் கடையடைப்பு நடத்தி பல்லா யிரக்கணக்கான மக்கள் நரசிங்கம்பட்டியிலிருந்து மதுரை தமுக்கம் மைதானம் வரை 22 கி.மீ பேரணி யாக வந்து சுரங்கத் திட்டத்தை முற்றிலும் ரத்து செய்ய வேண்டும் என ஒன்றிய அரசை வலியுறுத்தியுள்ளனர்.டங்ஸ்டன் என்றால் என்ன?பூமிக்கடியில் படிந்துள்ள பல்வேறு தாதுப் படிவங்களிலிருந்து பல கனிமப் பொருட்கள் வெட்டி யெடுக்கப்படுகின்றன. அவ்வாறு தாதுப்படிவங்களிலி ருந்து பிரித்து எடுக்கப்படும் வேதியல் கனிமங்களில் ஒன்றுதான் “டங்ஸ்டன்” என்ற கனிமமாகும். இது தனி யான கனிமமாகக் கிடைக்காது. இது இரும்பை விட மூன்று மடங்கு அடர்த்தியான கனிமமாகும். இந்த கனி மத்தை 1783இல் ஜப்பானைச் சேர்ந்த யுவான் ஜோஸ், பாஸ்டோ எல்புவியா என்ற சகோதரர்கள் முதலில் கண்டறிந்தனர்.  உலகில் சீனா, ரஷ்யா, போர்ச்சுக்கல், நெதர்லாந்து போன்ற நாடுகளில் அதிகளவில் கிடைக்கிறது. இந்தி யாவில் ராஜஸ்தான், மேற்கு வங்காளம், கர்நாடகம், ஆந்திரா, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் சில பகுதிகளில் உள்ளது. உலகில் உற்பத்தி செய்யப் படும் “டங்ஸ்டன்” கனிமத்தில் 84.5 சதவீதத்தை சீனா உற்பத்தி செய்து வருகிறது.பயன்பாடுகள்தங்கத்திற்கு அடுத்து அடர்த்தியானதாகவும், இரும்பை விட மூன்று மடங்கு அடர்த்தி கூடுதலா கவும் உள்ள ‘டங்ஸ்டன்’ கனிமம் 3400 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலையில் தான் உருகும் நிலைக்கு வரும். எண்ணெய் சுத்திகரிப்பு துறையிலும், சுரங்கம் அமைப்பதற்கான பணிகளுக்கும் டங்ஸ்டன் கனிமம் அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது. ஒளிவிளக்கு கள்,  (குண்டு பல்புகளில் உள்ள நுண்ணிய நூல்இழை) மின்சார வாகன பேட்டரி தயாரிப்பிற்கு, ராணுவ தள வாடங்கள் தயாரிப்பிற்கு, ராக்கெட் பயன்பாட்டிற்கு, வெட்டுதல், துளையிடுதல் பணிகளுக்கு பயன்படு கிறது. மேலும் மருத்துவத்துறைகளில் அறுவைச் சிகிச்சை, எக்ஸ்ரே, ஸ்கேன் போன்ற கருவிகள் பயன் பாட்டிற்கு பயன்படுத்தப்படுகிறது. இயந்திர உற்பத்தி க்கு பெரியளவில் பயன்படுத்தப்படுகிறது. சிமெண்ட் கார்பைட் தயாரிக்க மிக முக்கியப் மூலப்பொருளாக “டங்ஸ்டன்” கனிமம் பயன்படுத்தப்படுகிறது. ஒளி விளக்குகளில் ‘டங்ஸ்டன்’ இழைகளை முதன்முதலில் 1903இல் வில்லியம் கூலிச் என்பவர் பயன்படுத்தி வெற்றிகண்டார்.சுரங்கத்தால் ஏற்படும் பாதிப்புகள்உலகில் பல நாடுகளில் அமைக்கப்பட்டுள்ள டங்ஸ்டன் சுரங்கத்தால் ஏற்படும் பாதிப்புகளால் உற்பத்தி குறைக்கப்பட்டுள்ளது. ஆப்பிரிக்கா வில் டங்ஸ்டன் சுரங்கம் துவங்கிய இடங்கள் தடுக்கப் பட்டுள்ளது. டங்ஸ்டன் தாதுப்படிவங்களிலிருந்து பிரித்தெடுக்கப்படுவதால் அதிலிருந்து வெளியேற் றப்படும் கழிவுகள், சுரங்கத்திலிருந்து வெளியேற்றப் படும் கழிவுநீர் உட்பட சுற்றுச்சூழலுக்கு பெரும் பாதிப்பு களை உருவாக்குகிறது. காற்று மாசு ஏற்படுவது, பல்லு யிர் வாழ்வதற்கான சூழலை முற்றிலும் கெடுத்து விடும். திறந்தவெளிச் சுரங்கங்களிலிருந்து ஏற்படும் கதிர்வீச்சுக்கள் பல்வேறு புதிய நோய்களை உரு வாக்குவதோடு சுரங்கம் அமைக்கப்படும் பகுதிகள் முழுவதும் வேளாண்மை கேள்விக்குறியாக்கப்பட்டு மக்கள் வாழ தகுதியற்ற பகுதியாக மாறும் அபாயம் ஏற்படும்.டங்ஸ்டன் சுரங்கத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்மதுரை மாவட்டம் மேலூர் வட்டத்தில் அரிட்டா பட்டி பிளாக்கில், மேலூர், அரிட்டாபட்டி, தெற்கு தெரு, முத்துவேல்பட்டி, கூலாணிப்பட்டி, கிடாரிப்பட்டி,  எட்டிமங்களம், அ.வல்லாளபட்டி, செட்டியார்பட்டி உள்ளிட்ட ஏராளமான கிராமங்களை உள்ளடக்கிய பகுதிகளில் 5500 ஏக்கரில் டங்ஸ்டன் சுரங்கம் அமைப்ப தற்கான ஏல ஒப்பந்தத்தை ஒன்றிய அரசு கடந்தாண்டு நவம்பர் மாதம் 7ஆம் தேதி ‘ஹிந்துஸ்தான் ஜிங்க்’ நிறுவனத்திற்கு வழங்கியுள்ளது. இந்த நிறுவனம் தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை நடத்திய வேதாந்தா நிறுவனத்தின் துணை நிறுவனமாகும். வேதாந்தா என்ற பன்னாட்டு நிறுவனம் ஸ்டெர்லைட் ஆலையை நடத்தி சுற்றுச்சூழலைக் கெடுத்து, பல்வேறு விதமான நோய்களை மக்களுக்கு உண் டாக்கிய நிறுவனம். இதை எதிர்த்து தூத்துக்குடி மாவட்ட மக்கள் தொடர் போராட்டங்களை நடத்தி கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் நடைபெற்ற மக்கள் போராட்டத்தில் காவல்துறை துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் படுகொலை செய்யப்பட்டனர் என்பதை இந்த நேரத்தில் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். உச்ச நீதிமன்றம் வரை சென்றபின்தான் ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டது வரலாறு.  அப்படிப்பட்ட வேதாந்தா குழுமத்தின் துணை நிறுவனம் தான் தற்போது அரிட்டாபட்டி “டங்ஸ்டன் சுரங்கம்” அமைக்க ஏலம் எடுத்துள்ளது. ஒன்றிய அரசின் முதல் கட்ட ஏல அறிவிப்பில் 5500 ஏக்கர் உள்ளது. உண்மையிலேயே அவர்கள் தமிழ்நாட்டில் திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, இராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் 38,500 ஏக்கர் நிலப்பரப்பில் “டங்ஸ்டன் கனிமம்” இருப்பதாக கண்டறிந்துள்ளனர். முதல் முன்னோட்டமாக மேலூர் பகுதியை தேர்வு செய்துள்ளனர்.வனப்பகுதி மட்டுமின்றி  விளை நிலங்கள் அழியும்அரிட்டாபட்டி பிளாக் தமிழ்நாடு அரசு ஏற்கனவே, பல்லுயிர்ச் சூழல் மண்டலமாக அறிவித்துள்ள பகுதி யாகும். மேலும் இப்பகுதி தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த பகுதியுமாகும். 3500 ஆண்டுகளுக்கு உட்பட்ட தொல்லியல் பொருட்கள் நிறைந்துள்ள பகுதியாகும். இப்பகுதியில் சமணர் படுக்கைகள் உள்ளன. 8க்கும் மேற்பட்ட வரலாற்றுத் தளங்கள் உள்ள பகுதி மட்டு மல்ல, இந்த பகுதியில் உள்ள அழகர் மலை மற்றும் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிக்கு பெரும் ஆபத்து ஏற்படும். நூற்றுக்கணக்கான குன்றுகள் அழிக்கப் படும். இப்பகுதியில் உள்ள கிராமங்களில் உள்ள 72 ஏரிகள், 3 தடுப்பணைகள், இயற்கை நீர் உற்றுகள் முற்றிலும் அழிக்கப்படும். அதோடு, வைகை ஒரு போக பாசனத்தில் உள்ள 1 லட்சத்து 6 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள் முழுமையாக அழியும் நிலை ஏற்படும். ஒட்டு மொத்தத்தில் சொந்த கிராமங்களில் மக்கள் வாழ்வாதாரத்தை இழந்து அகதிகளாக மாறும் நிலை ஏற்படும்.  எனவே, ஒன்றிய அரசு வளர்ச்சி என்ற போர்வை யில் மக்களின் வாழ்வாதாரத்தை அழித்து கார்ப்பரேட் நிறுவனங்கள் வளம் கொழிக்க கொண்டு வரப்படும் டங்ஸ்டன் சுரங்கத் திட்டத்தை முற்றிலும் ரத்து செய்திட வேண்டும். தமிழ்நாடு அரசு சட்டமன்றத்தில் ஏகமன தாக தீர்மானம் நிறைவேற்றியுள்ளதோடு, தமிழ்நாடு முதலமைச்சர் தங்களது ஆட்சியே போனாலும் டங்ஸ்டன் சுரங்கத்திட்டத்தை அனுமதிக்க மாட்டோம் என்று உறுதிபடக் கூறியுள்ளது வரவேற்கத்தக்கது. இவ்வளவு எதிர்ப்புகளுக்குப் பின்பும் ஒன்றிய அரசு இத்திட்டத்தை முழுமையாக ரத்து செய்வதற்கான அறிவிப்பை வெளியிடாமல், மறு ஆய்வு செய்வதாக ஒன்றிய சுரங்கத்துறை அமைச்சர் தெரிவித்திருப்பது மிகுந்த கண்டனத்துக்குரியது. ஒன்றிய அரசின் மக்கள் விரோத, விவசாயிகள் விரோத இதுபோன்ற திட்டங்களுக்கு எதிராக மக்களை அணி திரட்டுவோம்! போராட்டங்கள் மூலம் தடுத்து நிறுத்துவோம்!!கட்டுரையாளர் : பொதுச் செயலாளர்  தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்
2025-01-10 02:07:31.022510
ஜனவரி 9, 2025
“டிஜிட்டல் காலத்தின் புதிய சிறை”
தலையங்கம்
நமது நிருபர்
https://theekkathir.in/News/headlines/bjp/a-new-law-to-regulate-people's-personal-data
தமிழ்
UTF-8
மக்களின் தனிப்பட்ட தரவுகளை கட்டுப் படுத்தும் புதிய விதிகளை 2025-ன் நடுப்பகுதிக்குள் கொண்டுவர ஒன்றிய மோடி அரசு திட்டமிட்டுள் ளது. மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தி இந்து நாளிதழுக்கு அளித்த பேட்டியில் இதனை அறிவித்துள்ளார்.டிஜிட்டல் தனிநபர் தரவு பாதுகாப்பு சட்டம்  2023-ன் கீழ் இந்த விதிகள் கொண்டு வரப்படு கின்றன. வரைவு விதிகள் மீதான கருத்துகளை பிப்ரவரி 18 வரை பெற்று, பின்னர் இறுதி செய்யப் படும் என்கிறார் அமைச்சர். பெரு நிறுவனங்களு க்கு இந்த விதிகளை செயல்படுத்த இரண்டு ஆண்டு கள் வரை அவகாசம் வழங்கப்படவுள்ளது.தரவு பாதுகாப்பு வாரியத்தின் சுயாட்சியை உறுதிப்படுத்தும் வகையில் சட்டம் வரையப் பட்டுள்ளதாக கூறும் அமைச்சர், இதன் செயல் பாடுகள் அனைத்தும் டிஜிட்டல் முறையிலேயே இருக்கும் என்கிறார். ஐடி(IT) விதிகள் 2021-ன் கீழ் செயல்படும் குறைதீர்க்கும் குழுவின் அணுகு முறையே இங்கும் பின்பற்றப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.ஆனால் இந்த விதிகள் பல கேள்விகளை எழுப்புகின்றன. முதலாவதாக, தரவு சேகரிப்பு மற்றும் பயன்பாடு மீதான கட்டுப்பாடுகள் எந்த அளவுக்கு பயனுள்ளதாக இருக்கும்? இரண்டாவ தாக, பெரு நிறுவனங்களுக்கு வழங்கப்படும் நீண்ட கால அவகாசம் மக்களின் தனியுரிமையை பாதிக் காதா? மூன்றாவதாக, முழுவதும் டிஜிட்டல் முறை யிலான கண்காணிப்பு, அதிகார துஷ்பிரயோகத் திற்கு வழிவகுக்காதா?மக்களின் தனிப்பட்ட தரவுகளை பாதுகாப்ப தற்கு பதிலாக, அவற்றை கட்டுப்படுத்தி கையா ளும் முறையே இந்த விதிகளில் தெரிகிறது. பெரு நிறுவனங்களின் வணிக நலன்களுக்கு ஏற்ப வடி வமைக்கப்பட்டுள்ள இந்த விதிகள், மக்களின் தனியுரிமை மற்றும் சுதந்திரத்தை கட்டுப்படுத்தும் புதிய டிஜிட்டல் சிறையாகவே அமையும் அபாயம் உள்ளது.இந்த விதிகளின் மூலம் அரசும் பெரு நிறுவ னங்களும் கைகோர்த்து மக்களின் தனிப்பட்ட தர வுகளை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்க முயல் வது தெளிவாகிறது. ஜனநாயக சமூகத்தில் இது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. மக்களின் உரி மைகளை பாதுகாக்கும் வகையில் இந்த விதிகள் மாற்றியமைக்கப்பட வேண்டும்.இந்த விதிகளின் மீதான மக்கள் கருத்துகளை பெறுவதாக அரசு கூறினாலும், அவை எந்த அள வுக்கு கணக்கில் எடுக்கப்படும் என்பது கேள்விக் குறி. ஏற்கெனவே ஐடி விதிகள் 2021-ன் கீழ் உள்ள குறைதீர்க்கும் குழு போலவே இந்த அமைப்பும் செயல்படும் என்பது, மக்கள் குரலுக்கு செவி சாய்க்காத போக்கையே காட்டுகிறது.பேட்டியின் மற்றொரு முக்கிய அம்சமாக, உள்நாட்டு மின்னணு உபகரண உற்பத்தியை ஊக்குவிக்கும் திட்டங்கள் குறித்தும் அமைச்சர் பேசியுள்ளார். ஆனால் இது மக்களின் தரவுகளை கையாளும் பெரு நிறுவனங்களின் ஆதிக்கத்தை மேலும் வலுப்படுத்தவே வழிவகுக்கும்.
2025-01-10 02:07:34.262871
ஜனவரி 9, 2025
தீக்கதிர் உலக செய்திகள்
உலகம்
நமது நிருபர்
https://theekkathir.in/News/world/india/more-than-1000-attacks-on-lebanon
தமிழ்
UTF-8
லெபனான் மீது 1000 க்கும் மேற்பட்ட முறை தாக்குதல்2024 நவம்பர் 27 அன்று லெபனா னுடனான தற்காலிக போர் நிறுத்தம் அமலான பிறகு ஒப்பந்தத்தை மீறி சுமார் 1,000 க்கும் மேற்பட்ட முறை இஸ்ரேல் ராணுவம் லெபனான் மீது தாக்குதல் நடத்தியுள்ளது. இதுவரை 45 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் இஸ்ரேல் ராணுவத்தால் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு தொடர்ந்து ஒப்பந்தத்தை மீறினால் மீண்டும் லெபனான் இஸ்ரேலுக்கு இடையே போர் வெடிக்கலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.சிரியாவில் தாக்குதல் நடத்த  திட்டமிடும் துருக்கி?சிரியாவில் உள்ள குர்திஸ்தான் அமைப்பி னர் மீது துருக்கி ராணுவம் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக ஹரியேட் என்ற செய்தி நிறு வனம் தெரிவித்துள்ளது. குர்திஸ்தான் அமைப் பினருடனான சிரிய அதிகாரிகள் நடத்தி வரும் பேச்சுவார்த்தை தோல்வியுறும் பட்சத்தில் இந்த தாக்குதல் நடக்கும் என கூறப்படுகிறது. பயங்கர வாதிகள் சிரியாவை கைப்பற்றிய பிறகு அமெ ரிக்கா, இஸ்ரேல் உடன் இணைந்து சிரியாவின் இயற்கை வளங்களை கொள்ளையடிக்க துருக்கி திட்டமிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.இங்கிலாந்தில் ஆட்சியை கவிழ்க்க  எலான் மஸ்க் திட்டம்?இங்கிலாந்தில் கெய்ர் ஸ்டார்மரை பிரதமர் பதவியில் இருந்து அகற்றுவதற்காக எலான் மஸ்க் திட்டமிடுவதாக தி பைனான்சியல் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. இதற்காக தீவிர வலதுசாரியான இங்கிலாந்து சீர்திருத்த கட்சி ( Reform UK ) உள்ளிட்ட வலதுசாரிகளுடன் மஸ்க் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் அடுத்த நாடாளுமன்ற தேர்தலுக்கு முன் அவரது ஆட்சியை கவிழ்ப்பதற்கான வாய்ப்புகள் குறித்தும் பேசியுள்ளதாகவும் அப்பத்திரிகை குறிப்பிட்டுள்ளது.2025 முதல் வாரத்தில்  74 குழந்தைகள் படுகொலை2025 துவங்கிய முதல் வாரத்தில் சுமார் 74 பாலஸ்தீன குழந்தைகளை இஸ்ரேல் ராணுவம் படுகொலை செய்துள்ளது என ஐ.நா. குழந்தைகள் நிதியம் தெரிவித்துள்ளது. மேலும் ஜனவரி 7 அன்று காசா முழுவதும் 50 பாலஸ்தீனர்களை படுகொலை செய்துள்ளது. ஐ.நா. நிவாரண வாகனங்களை இஸ்ரேல் ராணுவம் தொடர்ந்து தடுத்து வரும் நிலையில் எரிபொருள் இல்லாமல் 3 மருத்துவமனைகள் முடங்கும் அபாயம் உருவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.தன்பாலின ஈர்ப்பாளர்களுக்கு எதிரான  கருத்துக்கு ‘மெட்டா’ அனுமதிதன்பாலின ஈர்ப்பாளர்கள் (பால்புதுமையினர்) மீது அவதூறு பரப்பும் வகையில் மெட்டா நிறுவனம் விதிகளை மாற்றியுள்ளது. இதனால் அந்நிறுவனத்தின் சமூக ஊடகங்களான முகநூல், த்ரெட்ஸ், இன்ஸ்டா கிராம் ஆகியவற்றில் பால்புதுமையினர், திருநர் உள்ளிட்டவர்கள் மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் என வும் இன்னும் பல  மோசமான கருத்துகளையும் உலகம் முழுவதும் பலர் பதிவிட்டு வருகிறார்கள். ஏற்கனவே முறையற்ற கொள்கையால் மெட்டா நிறுவன  ஊடகங்க ளை பயன்படுத்தும் லட்சக்கணக்கான பெண்கள் பாலி யல் வன்முறைகளை எதிர்கொண்டது குறிப்பிடத்தக்கது.தொடர்ந்து பரவும் காட்டுத் தீ : லாஸ் ஏஞ்சல்ஸில் அவசரநிலை அறிவிப்புலாஸ் ஏஞ்சல்ஸ், ஜன.9- அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத் தில் உள்ள மிக முக்கியமான நகரமான லாஸ் ஏஞ்சல்ஸ் முழுவதும்  காட்டுத்தீ  மிக மோசமாகவும், வேகமாகவும் பரவி வரு கின்றது. இந்த காட்டுத்தீயில் சிக்கி 5 பேர் உயிரிழந்துள்ளனர் என அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  இந்த காட்டுத் தீ ஹாலிவுட் நிறுவனத் தின்  குறியீடாக விளங்கும்  ஹாலிவுட் மலை கள் வரை வேகமாக பரவி வருகிறது. தீ  பரவி வரும் தீவிரத்தை உணர்ந்து கலி போர்னியா மாநில கவர்னர் அம்மாநிலத்தில் அவசரநிலையை அறிவித்துள்ளார். தீயணைப்புத்துறை வெளியிட்டுள்ள தகவலின்படி ஹாலிவுட் மலைப்பகுதியில் ரன்யான் கன்யோன் முதல் வாட்டலஸ் பார்க் வரையிலான மலைப்பகுதி  காட்டுத் தீயில் எரிந்துள்ளது. ஹாலிவுட் நிறு வனத்தின் முக்கியமான கட்டடம் அமைந் துள்ள இடம் மட்டுமின்றி , ஆஸ்கார் விருது கள் வழங்கும் விழா நடைபெறும் டோல்பி தியேட்டரும் இந்த காட்டுத் தீயில் பாதிக் கப்படும் என  கூறப்பட்டுள்ளது. துவக்கத்தில் அப்பகுதியில் இருந்து முப்பதாயிரம் மக்களை வெளியேற உத்தரவிட்டிருந்த அரசாங்கம் தற்போது  1,37,000 க்கும் அதிகமான மக்களை வெளி யேற்றியுள்ளது.  லாஸ் ஏஞ்சல்ஸ் மற்றும் அதனைச் சுற்றி யுள்ள ஆறுக்கும் மேற்பட்ட இடங்களில் காட்டுத் தீ பரவி வருகின்றது. லாஸ் ஏஞ்செல்ஸ் பகுதியில் உருவான காட்டுத் தீயிலேயே மிக மோசமான காட்டுத்தீயாக இது இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. காட்டுத் தீ காரணமாக 15 லட்சத் திற்கும் அதிகமான மக்களுக்கான மின்சாரத் தேவை துண்டிக்கப்பட்டுள்ளது. அதே போல், வெண்டியுரா கவுண்டி என்ற பகுதி யில்  சுமார் 3,34,000 மக்களும், லாஸ் ஏஞ்சல்ஸ் கவுண்டியில் 9,57,000 மக்களும் மின்சாரமின்றி பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் ஜோபைடன் தீயை கட்டுப்படுத்துவதில் முறையாகச் செயல் படவில்லை. தீயணைப்பு நடவடிக்கைக்கு தேவையான போதிய வாகனங்களும் பணமும் இல்லாமல் நாட்டை (அத்துறை யை) என்னிடம் கொடுத்துச் செல்கிறார் என அவரை டொனால்டு டிரம்ப் விமர்சித்துள்ளார்.
2025-01-10 02:07:34.365271
ஜனவரி 9, 2025
விளையாட்டு...
விளையாட்டு
நமது நிருபர்
https://theekkathir.in/News/games/cricket/only-40-days-left-for-unprepared-pakistan-stadiums
தமிழ்
UTF-8
இன்னும் 40 நாட்கள் மட்டுமே பாக்கி தயாராகாத பாகிஸ்தான் மைதானங்கள்மினி உலகக்கோப்பை  என  அழைக்கப்படும் சாம்பியன்ஸ் டிராபி தொடரின் 9ஆவது சீசன் பாகிஸ் தான் நாட்டில் பிப்ரவரி 19ஆம் தேதி தொடங்குகிறது. இந்தியா, பாகிஸ் தான், வங்கதேசம், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான், தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட 8 அணிகள் பங்கேற்கின்றன.  பாகிஸ்தான் இந்த தொடரை நடத்தினாலும் பாதுகாப்பு பிரச்சனை காரணமாக இந்தியா விளையாடும் ஆட்டங்கள் மட்டும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ளது. சாம்பியன்ஸ் டிராபி ஆட்டங்கள் கராச்சியில் உள்ள தேசிய மைதானம், லாகூரில் உள்ள கடாபி மைதானம் மற்றும் ராவல்பிண்டி நகரத்தில் உள்ள மைதானம்  என 3 மைதானங் ளில் நடைபெறுகிறது. சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு இன்னும் 40  நாட்களே உள்ள நிலையில், அந்நாட்டு மைதானங்கள் இன்னும் முழுமையாக தயாராகாமல் இருப்பது சர்வதேச கிரிக் கெட் அரங்கில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  இந்த 3 மைதானங்களில் இன்னும் கட்டுமானப் பணி முழுமையாக நிறை வடையவில்லை. மைதானங்களின் தயார்நிலை மற்றும் தன்மை தொடர் பான அறிக்கையை பிப்ரவரி 12ஆம் தேதிக்குள் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம், சர்வதேச கிரிக்கெட் வாரியத்திடம் ஒப்படைக்க வேண்டும். அதாவது இன்னும் 33 நாட்களில் ஒப்ப டைக்க வேண்டும்.  ஆனால் 3 மைதானங்களிலும் 70%  அளவிலான கட்டுமானப் பணி மட்டுமே  நிறைவடைந்துள்ளது. இன்னும் 30%  கட்டுமானப்பணி மீதம் உள்ளது. கேலரிகள் இன்னும் தயார் செய்யப்பட வில்லை. பிட்ச் பகுதிகள் இன்னும் முழு மையாக தயாராகவில்லை. இதனால் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் பெரும் சிக்கலில் சிக்கி உள்ளது. பிப்ரவரி 12ஆம் தேதிக்குள் பாகிஸ்தான் கிரிக் கெட் வாரியம் மைதானம் தொடர்பான அறிக்கையை வெளியிடாவிட்டால் சாம்பியன்ஸ் டிராபி தொடரை நடத்தும் வாய்ப்பு ஐக்கிய அரசு அமீரகத்திற்கு சென்றுவிடும் என்பது குறிப்பிடத் தக்கது.அடிலெய்டு டென்னிஸ் : அரையிறுதியில் பெகுலா5ஆவது அடிலெய்டு சர்வதேச டென்னிஸ் தொடர், ஆஸ்திரேலிய நாட்டின் அடிலெய்டு நகரில் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இந்திய நேரப்படி வியாழக்கிழமை அதிகாலை நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் காலிறுதி ஆட்டத்தில் போட்டித் தரவரிசையில் முதலிடத்தில் உள்ள அமெரிக்கா வின் டாமி பவுல், சகநாட்டு வீரரான ரிங்கியை எதிர்கொண்டார்.  தொடக்கம் முதலே பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் பவுல் 6-3, 6-4 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு தகுதி பெற்றார். இதே பிரிவு காலிறுதி ஆட்டத்தில் போட்டித் தரவரிசையில் 2-ஆவது இடத்தில் உள்ள அமெரிக்காவின் கோட்ரா, 5ஆவது இடத்தில் உள்ள கனடாவின் பெலிக்ஸ், தரவரிசையில் இல்லாத பிரான்சின் பெஞ்சமின் ஆகியோரும் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினர். நவர்ரோ அவுட் மகளிர் ஒற்றையர் பிரிவு அரையிறுதி ஆட்டத்தில் போட்டித் தரவரிசையில் முதலிடத்தில் உள்ள அமெரிக்காவின் பெகுலா, தரவரிசையில் இல்லாத சகநாட்டு வீராங்கனையான அஷ்லினை எதிர்கொண்டார். இந்த ஆட்டத்தில் காயம் காரணமாக அஷ்லின் வெளியேற 6-4, 2-0 என்ற கணக்கில் அதிர்ஷ்ட வாய்ப்புடன் பெகுலா அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.  போட்டித் தரவரிசையில் இண்டாவது இடத்தில் உள்ள நவர்ரோ, தரவரிசையில் இல்லாத ரஷ்யாவின் சம்சோனாவிடம் 6-4, 6-4 என்ற நேர் செட் கணக்கில் வீழ்ந்து அதிர்ச்சி தோல்வியுடன் தொடரில் இருந்து வெளியேறினார். அடிலெய்டு சர்வதேச டென்னிஸ் தொடர் (2020 முதல்) 5 வருடமே ஆகியுள்ள நிலையில், இந்த தொடரில்  முக்கிய நட்சத்திர வீரர்கள் அவ்வளவாக பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
2025-01-10 02:07:34.868480
ஜனவரி 9, 2025
பணிபுரியும் பெண்களுக்கான சிறந்த நகரங்கள் பட்டியலில் சென்னை!
மாநிலம் - தமிழ்நாடு
நமது நிருபர்
https://theekkathir.in/News/states/tamil-nadu/thiruvananthapuram-ranks-first-in-terms-of-government-efficiency-and-safety
தமிழ்
UTF-8
சென்னை, ஜன.9- பன்முகத்தன்மை, சமவாய்ப்பு மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய தீர்வுகளில் நாட்டின் முன்னணி பணி யிட கலாச்சார ஆலோசனை நிறுவன மான  அவதார் குழுமம் 'இந்தியாவில் பெண்களுக்கான சிறந்த நகரங்கள் ' என்னும் ஆராய்ச்சியின் முடிவுகளின் மூன்றாவது பதிப்பை புதன்கிழமை (ஜன.8) வெளியிட்டது.  பணிபுரியும் பெண்களுக்கான உள்ளடக்கிய, பாதுகாப்பான, மீளும் தன்மை கொண்ட, நீடித்த நகரங்களில் ஒன்றாக சென்னை இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. மேலும் பெண்களுக்கான இந்தியாவில் மிகச் சிறந்த பட்டியலில் சென்னை, கோயம் புத்தூர், திருச்சிராப்பள்ளி, வேலூர், மதுரை, சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய 8 நகரங்களுடன் கணக்கெடுப்பு முடிவுகளில் தமிழ்நாடு ஆதிக்கம் செலுத்துகிறது. இது தொடர்பான செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவதார் குழுமத்தின் நிறுவனர்-தலைவர் டாக்டர் சவுந்தர்யா ராஜேஷ், “நகரங்களே வாய்ப்புகளுக்கான அடித்தளம். பெண்கள் எப்படி வாழ்கிறார்கள், வேலை செய்கிறார்கள், வளர்கிறார் கள் என்பதை நகரங்களே வடிவமைக் கின்றன. எனவே, பெண்களின் முன்னேற்றம், அவர்களையும் உள்ள டக்கி முன்னேற்றுவதற்கு நமது நகரங் களின் அடிப்படைக் கொள்கைகள் - கலாச்சார அமைப்பு பற்றிய தெளி வான புரிதல் முக்கியமானது. அவதார் வெளியிடும் வருடாந்திரக் குறியீடான ‘இந்தியாவில் பெண்களுக்கான சிறந்த நகரங்கள்’ துல்லியமான, மையப்படுத் தப்பட்ட தரவு மற்றும் ஆதாரம் சார்ந்த அணுகுமுறையைப் பயன்படுத்தி கணக்கெடுப்பை மேற்கொள்கிறது என்றார்.  மேலும், 2047க்குள் வளர்ச்சிய டைந்த நாடு என்ற நமது நாட்டின் கனவை  நனவாக்கவேண்டும் என்றால், ஆண்களுக்கு இணையாக இந்தியப் பெண்கள் பல்வேறு துறையில் வல்லு நர்களாக இடம்பெறவேண்டும். நகரங் கள் உண்மையிலேயே பாலினத்தை உள்ளடக்கியதாகவும், பெண்களின் பலத்தை மேம்படுத்தக்கூடிய சூழலை யும் வழங்கினால் மட்டுமே இது சாத்தி யமாகும் என்றும் அவர் சுட்டிக்காட் டினார்.   2024 இல் பெண்களுக்கான மிகச் சிறந்த முதல் 10 நகரங்களின் பட்டிய லில் பெங்களூரு, சென்னை, மும்பை, ஹைதராபாத், புனே, கொல்கத்தா, அகமதாபாத், தில்லி, குருகிராம், கோயம்புத்தூர் ஆகியவை இடம் பெற்றுள்ளன.  சமூகம், தொழில்துறை, உள்ள டங்கிய தன்மை இரண்டிலும் ஒப்பீட் டளவில் அதிக மதிப்பெண்களைப் பெற்று, பெண்களை அதிகம் உள்ள டக்கிய பிராந்தியமாக தென்னிந்தியா உள்ளது. தென்னிந்திய நகரங்களை உள்ளடக்கிய சராசரி மதிப்பெண் 18.56. தென்னிந்தியாவுக்கு நெருக்க மாக மேற்கு இந்தியா 16.92 மதிப் பெண்களுடன் பின்தொடர்கிறது. இந்த அம்சங்களில் மத்திய மற்றும் கிழக்கு பிராந்தியங்கள் பின்தங்கியுள்ளன, முறையே 11.79 மற்றும் 10.55 சரா சரியை அவை கொண்டுள்ளன. குறைந்த தொழில்துறை வளர்ச்சி, குறைந்த வாய்ப்புகளே இதற்குக் காரணம். கேரளா முன்னணி  மாநிலங்கள் வரிசையில் அதிக பட்ச சராசரியாக 20.89 மதிப்பெண்க ளுடன் இடது ஜனநாயக முன்னணி அரசு ஆளும் கேரளா முன்னணியில் உள்ளது. தெலுங்கானா 20.57, மகாராஷ் டிரா 19.93, தமிழ்நாடு 19.38 மற்றும்  கர்நாடகா 17.50 ஆகிய மதிப்பெண்க ளுடன் அடுத்தடுத்து உள்ளன. உள்கட்டமைப்புக்கான அதிகபட்ச மதிப்பெண்ணை ஹைதராபாத் (8.01) பெற்றுள்ளது (நன்கு இணைப் புகள் கொண்ட பொதுப் போக்கு வரத்து வசதி, பிற பயண வசதிகளே இதற்கு காரணம்). அடுத்து மும்பை (7.64) உள்ளது. சிறிய நகரங்களில் கோயம்புத்தூர் (7.75), கொச்சி (7.41) ஆகியவை உள்கட்டமைப்பு வசதி களில் அதிக மதிப்பெண்கள் பெற்றுள் ளன. அரசாங்க செயல்திறன் திருவனந்த புரம் (8.15), புனே(7.06) சிறந்த நிர்வாகத் திறனுக்கு அதிகமதிப்பெண்களைப் பெற்றுள்ளன. திருவனந்தபுரம் (7.43), மும்பை (7.19), ஹைதராபாத் (6.95) ஆகியவை பாதுகாப்பில் முன்னணியில் உள்ளன. அதே நேரத்தில் பெங்களூரு (6.17), கொச்சி (6.02), குருகிராம் (5.60) ஆகியவை ஒப்பீட்டளவில் குறைவான பாது காப்பைக் கொண்டிருப்பதாக பெண்கள் மதிப்பிடுகின்றனர்.
2025-01-10 02:07:38.301238
ஜனவரி 9, 2025
தீக்கதிர் முக்கிய செய்திகள்
மாநிலம் - தமிழ்நாடு
நமது நிருபர்
https://theekkathir.in/News/states/tamil-nadu/those-responsible-for-the-death-of-6-people-in-the-stampede-at-tirupati-temple-have-been-arrested
தமிழ்
UTF-8
திருப்பதி கோவிலில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் இறந்ததற்கு காரணமானவர்களை கைது செய்ய வேண்டும். வரலாற்றில் இதுவரை நடக்காத வகையில் திருப்பதி கோவிலில் கோரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. பக்தர்களுக்கு குறைந்தபட்ச வசதி கூட இல்லாத சூழல் திருப்பதியில் நிலவி வருகிறது.பம்பாய், நாக்பூர் போன்ற  உயர்நீதிமன்றங்களில் நீதிபதியாக இருந்துள்ளேன். ஆனால் உச்சநீதிமன்றத்தைப் போல ஒழுக்கமற்ற நீதிமன்றத்தை நான் பார்த்த தில்லை. இந்தப் பக்கத்திலிருந்து 6 வழக்கறி ஞர்களும், மறுபுறம் 6 வழக்கறிஞர்களும் கூச்சலிடுகின்றனர். மிக மோசமானது.பாஜக மத்திய ஏஜென்சிகளை தவறாகப் பயன்படுத்தி கெஜ்ரிவால், சிசோடியா,  சத்யேந்தர் ஜெயின், சஞ்சய் சிங் ஆகியோரை சிறையில் அடைத்தது. இதனால் ஒரு அரசாங்கம் எப்படி சீர்குலைந்தது என்பதை தில்லி மக்கள் நன்கு அறிவர். அதனால் தில்லியில் பாஜக ஆட்சி அமைக்க வாய்ப்பில்லை.பாஜகவை ஆட்சியில் இருந்து அகற்றினால் தான், நாடு காப்பாற்றப்படும். அதனால் தான் ஆம் ஆத்மி கட்சியை நாங்கள் ஆதரிக்கிறோம். முழு ஒத்துழைப்புடன் அதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும். தில்லி மக்கள் ஆம் ஆத்மியை மீண்டும் ஆட்சிக்கு கொண்டு வருவார்கள்.உலகின் சக்தி வாய்ந்த பாஸ்போர்ட் பட்டியலில் இந்தியா 80ஆவது இடத்திற்கு முன்னேறி உள்ளது. தில்லி பாஸ்போர்ட் இன்டெக்ஸ் அமைப்பு வெளியிட்டுள்ள பட்டியலில் சிங்கப்பூர் பாஸ்போர்ட் முதலிடத்தில் உள்ளது.அசாம் நிலக்கரி சுரங்கத்தில் சிக்கியுள்ள தொழிலா ளர்களை மீட்கும் பணியில் இந்திய கடற்படை இணைந்துள்ளது.சத்தீஸ்கரின் சுக்மா மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருடன் நடந்த மோதலில் மூன்று நக்சல் கள் கொல்லப்பட்டதாக அம்மாநில துணை முதல்வர் விஜய் சர்மா தெரிவித்துள்ளார்.“21ஆம் நூற்றாண்டில் இந்தியா நம்பமுடியாத வேகத்தில் முன்னேறி வருகிறது” என ஒடிசாவில் நடந்த 18வது வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான மாநாட்டில் பிரதமர் மோடி பேசினார்.சத்தீஸ்கர் மாநிலம் முங்கேலியில் கட்டுமானப் பணியில் உள்ள தனியார் இரும்பு ஆலையில் புகைபோக்கி இடிந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 30 பேர் வரையில் சிக்கியிருக்கக் கூடும் என செய்திகள் வெளியாகியுள்ளது.கேரளத்தின் வயநாடு மாவட்டத்தில் யானை தாக்கி யதில் கர்நாடகாவைச் சேர்ந்த 22 வயது பழங்குடியின இளைஞர் விஷ்ணு உயிரிழந்தார்.பாஜக ஆளும் உத்தரப்பிரதேச மாநிலத்தில் ஜன வரி 13ஆம் தேதி முதல் பிப்ரவரி 26ஆம் தேதி வரை கும்பமேளா நடைபெறவுள்ளது. இந்த கும்ப மேளா மூலம் ரூ.2 லட்சம் கோடி வருவாய் கிடைக்கும் என அம்மாநில முதல்வர் ஆதித்யநாத் கூறியுள்ளார்.
2025-01-10 02:07:38.302290
ஜனவரி 9, 2025
திருப்பதி கோவிலில் நெரிசல் 2 தமிழர்கள் உட்பட 6 பேர் பலி தலா ரூ.25 லட்சம் நிவாரணம்
மாநிலம் - தில்லி
நமது நிருபர்
https://theekkathir.in/News/states/delhi/6-killed-including-2-tamils-​​in-tirupati-temple-stampede
தமிழ்
UTF-8
ஆந்திர மாநிலம் திருப்பதியில் அமைந்துள்ள ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட ஏகா தசியை முன்னிட்டு  இலவச டோக்கன்  விநியோகிக்கப்படும் என திருப்பதி தேவஸ்தான நிர்வாகம் அறிவித்திருந் தது. இதற்காக பல்வேறு இடங்களில் 90 கவுண்டர்கள் அமைக்கப்பட்டிருந்தன. வியாழக்கிழமை (ஜன.9) காலை 5 மணி முதல் விநியோகிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. இத்தகைய சூழலில் புதன்கிழமை இரவு இலவச தரிசன டிக்கெட்டை பெற ஆயிரக்கணக்கான பக்தர்கள் கவுண்டர் களில் திரண்டிருந்தனர். குறிப்பாக விஷ்ணு நிவாசம், பைராகிபட்டேடா, ராமச்சந்திர புஷ்கரிணி உள்ளிட்ட கவுண் டர்களில் கூட்டம் அதிகமாக இருந்தது. அங்கு ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி எஸ்.லாவண்யா (38 - ஆந்திரா), மல்லிகா (50 - தமிழ்நாடு), புத்தேடி பாபு (55 - ஆந்திரா), சாந்தி (33 - ஆந்திரா), ஜி. ரஜினி (47 - ஆந்திரா), வி.நிர்மலா (55 - கேரளா)  ஆகிய 6 பேர் உயிரிழந்தனர். காயம் காரணமாக சிகிச்சைக்காக 41 பேர் அனுமதிக்கப்பட்டிருந்தனர். அதில் 20 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பி விட்டனர். 21 பேர் எலும்பு முறிவு உள்ளிட்ட பிரச்சனைகளுக்காக சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், வியாழக்கிழமை மதியம் ஆந்திர முதல்வர் சந்திரபாபு திருப்பதியில் கூட்ட நெரிசல் ஏற்பட்ட இடங்களில் நேரடி ஆய்வு மேற்கொண் டார். தொடர்ந்து நெரிசலில்  சிக்கி உயிரி ழந்த 6 பேரின் குடும்பத்துக்கு தலா ரூ.25 லட்சம் வழங்கப்படும் என்று ஆந்திர அரசு அறிவித்துள்ளது.
2025-01-10 02:07:38.302832
ஜனவரி 9, 2025
அரசுப் பள்ளியில் தமிழ் வழி முதல் இஸ்ரோ தலைவர் வரை தமிழ்நாட்டின் டாக்டர் வி.நாராயணனுக்கு குவியும் வாழ்த்து
மாநிலம் - தில்லி
நமது நிருபர்
https://theekkathir.in/News/states/delhi/many-congratulations-to-dr.-v.-narayanan-of-milnad
தமிழ்
UTF-8
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவின் புதிய தலைவராகவும், விண் வெளித் துறை செயலராகவும் தமிழ் நாட்டைச் சேர்ந்த டாக்டர் வி.நாரா யணன் நியமிக்கப்பட்டுள்ளார்.  தற்போது இஸ்ரோ தலைவராக உள்ள சோம்நாத்தின் பதவிக்காலம் முடிவடையவுள்ள நிலையில், புதிய தலைவராக டாக்டர் வி.நாராயணன் அறிவிக்கப்பட்டுள்ளார். 11ஆவது தலைவரான டாக்டர் வி.நாராயணன் வரும் ஜனவரி 14ஆம் தேதி முறைப் படி பதவியேற்றுக் கொள்கிறார். இஸ்ரோ தலைவராக தேர்ந்தெடுக் கப்பட்டுள்ள வி.நாராயணனுக்கு நாடு  முழுவதும் அனைத்து தரப்பினரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். தமிழ் வழி  அரசுப் பள்ளி மாணவர் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மேலக்கட்டுவிளை என்ற கிராமத்தில் விவசாயி சி.வன்னியப் பெருமாள், எஸ்.தங்கம்மாள் தம்ப திக்கு மகனாக பிறந்தவர் தான் வி.நாராயணன். இவருக்கு 3 சகோ தரர்கள் மற்றும் 2 சகோதரிகள் உள்ள னர். சகோதரர், சகோதரிகளுடன் அப் பகுதியில் இருந்த அரசுப் பள்ளியில் பள்ளிப் படிப்பை தமிழ் வழியில் படித்தார் வி.நாராயணன். சிறுவய தில் அவர் வீட்டில் மின்சார வசதி கூட கிடையாது. நாராயணன் 9ஆம் வகுப்பு படிக்கும் போதுதான் அவர் வீட்டிற்கு மின்சார வசதி கிடைத்ததுமுதல் மாணவர்தனது 10ஆம் வகுப்பில் பள்ளி யில் முதலிடம் பெற்ற நாராயணன், அருகிலேயே 12ஆம் வகுப்பை முடித்து காரக்பூரில் உள்ள இந்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தில் (ஐஐடி) கிரையோஜெனிக் பொறியி யல் (Cryogenic Engineering) படிப்பில் 1989ஆம் ஆண்டு முதல் மாணவராக எம்.டெக் பட்டம் பெற் றார். மேலும் 2001ஆம் ஆண்டு கடி னமான விண்வெளிப் பொறியியல் (Aerospace Engineering) பிரிவில் பிஎச்.டி பட்டம் பெற்றார்.1984ஆம் ஆண்டு  முதல் இஸ்ரோ1984ஆம் ஆண்டு இஸ்ரோவில் நாராயணன் இணைந்தார். சுமார் 40 ஆண்டுகளாக பல்வேறு பொறுப்பு களில் வி.நாராயணன் பணியாற்றி யுள்ளார். ராக்கெட் மற்றும் விண்கல உந்துவிசை அமைப்புகளில் நிபு ணத்துவம் பெற்ற வி.நாராயணன், பிஎஸ்எல்வி சி-57, சூரிய ஆய்வுக்கான ஆதித்யா, ஜிஎஸ்எல்வி எம்.கே 3, சந்திரயான் 2,3 திட்டங்களில் பணி யாற்றியுள்ளார். 183 திரவ உந்துவிசை திட்டம், கட்டுப்பாட்டு அமைப்புகளை வி.நாராயணன் தலைமையிலான குழு இஸ்ரோவுக்கு வழங்கியது. தற் போது கேரளம் தலைநகர் திருவனந்த புரம் அருகே வலியமலாவில் உள்ள திரவ உந்துவியல் மையத்தின் இயக்குநராக உள்ளார். இஸ்ரோவில் அதிக சம்பளம் வழங்கப்படுவது தலைவர் பதவி. இதன் அடிப்படைச் சம்பளம் ரூ.2,25,000. இதர படிகள் உள்பட மொத்தம் ரூ.2.5 லட்சம் சம்பளமாக வழங்கப்படும். எம்.டெக் படிக்கும்போது ஐஐடி காரக்பூரில் வெள்ளிப் பதக்கம், இந்திய விண்வெளி சங்கத்தின் தங்கப் பதக்கம், இஸ்ரோவின் சிறந்த சாத னையாளர் விருது, இஸ்ரோவின் சிறந்த குழு விருது, சத்தியபாமா பல் கலைக்கழகத்தின் கவுரவ டாக்டர் பட்டம் உள்ளிட்டவை  வி.நாராய ணனுக்கு வழங்கப்பட்டுள்ளது.இஸ்ரோவும்... தமிழர்களும்...இஸ்ரோவில் தமிழர்கள் முக்கியப் பங்காற்றி வருவது நாடறிந்த விஷயம் ஆகும். “ரோகிணி-2” செயற்கைக்கோளை ஏவிய மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம், ராக்கெட்டுகளுக்கான திட எரிபொருள் ஆராய்ச்சியில் அவரது பங்கு மிக முக்கியமானது. “சந்திரயான்-1” மங்கள்யான் செயற்கைக்கோள்களுக்கான திட்ட இயக்கு நராக மயில்சாமி அண்ணாதுரை பணியாற்றினார். “ஜிசாட்-12” பணியின் திட்ட இயக்குநராக ந.வளர்மதி, இஸ்ரோ தலைவராக கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த கே.சிவன் ஆகியோர் பணியாற்றினர். இவரது பதவிக் காலத்தில் தான் முதன் முதலாக சந்திரயான் நிலவுக்கு அனுப்பப் பட்டது. “சந்திரயான்-2” பணியின் திட்ட இயக்குநராக வனிதா முத்தையா பணி யாற்றினார்.  சூரியனை ஆராயும் ஆதித்யா-எல்1 திட்ட இயக்குநராக நிகர் ஷாஜி, நில வின் தென் துருவத்தைச் சென்றடைந்த முதல் நாடு என்கிற பெருமைக்குரிய சந்திரயான் - 3 திட்டத்தின் இயக்குநராக பி.வீரமுத்துவேல் என பல தமிழர்கள் சாதனை படைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
2025-01-10 02:07:38.303471
ஜனவரி 9, 2025
பீகாரில் மீண்டும் ஆட்டம் காணும் பாஜக கூட்டணி
மாநிலம் - தில்லி
நமது நிருபர்
https://theekkathir.in/News/states/delhi/bjp-alliance-to-play-again-in-bihar
தமிழ்
UTF-8
பாட்னா பீகாரில் பாஜகவை விட நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சி மிகப்பெரியது. ஆனால் 2020ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்று போட்டியிட்ட ஐக்கிய ஜனதாதளம் கட்சி முன்னெப்போதும் இல்லாத வகையில் வெறும் 48 தொகுதி களில் மட்டுமே வெற்றி பெற்றது. ஆனால் பீகாரில் பெரியளவு பின்புலம் இல்லாத பாஜகவோ 84 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெ டுத்தது. இது ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளை விட ஐக்கிய ஜனதா தளத்திற்கு தான் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அரசியல் பச்சோந்தி குஜராத், உத்தரப்பிரதேசம் மாநிலங்களைப் போல பீகாரிலும் பாஜக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடிக்கும் அளவிற்கு வளர்ந்துவிடுமோ? என்ற அச்சத்தில் 2022ஆம் ஆண்டு எதிர்க் கட்சிகளின் ராஷ்டிரிய ஜனதா தளம் - காங்கிரஸ் கட்சிகளின் மகா கூட்டணிக்கு தாவி நிதிஷ் குமார் முதல்வராக பொறுப்பேற்றார். ராஷ்டிரிய ஜனதா தளத்தின் மூத்த தலைவர் தேஜஸ்வி துணை முதல்வராக பதவியேற்றார். துணை முதல்வரான தேஜஸ்வி வேலைவாய்ப்பு உள்ளிட்ட மக்கள் நலப்பணியில் பிரம்மாண்டமாக வேலை செய்தார். தேஜஸ்விக்கு மாநிலம் முழுவதும் செல்வாக்கு உயர்ந்தது. தேஜஸ்வி தன்னை விட வளர்ந்து விடுவாரோ என்ற அச்சத்தில் 2023ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் பச்சோந்தி அரசியல் நாயகன் பட்டத்துடன் மீண்டும் பாஜக கூட்டணியில் இணைந்து நிதிஷ் குமார் முதல்வரானார். துணை முதல்வர்களாக பாஜக வின் சாம்ராட் சவுத்ரி, விஜய் சின்ஹா உள்ளனர்.பாஜகவிற்கு  நிதிஷ் குமார் செக்...243 தொகுதிகளைக் கொண்ட பீகார் மாநிலத்தில் இன்னும் 10 மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. அதாவது இந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் சட்ட மன்ற தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தலு க்கு இன்னும் 10 மாதங்கள் இருந்தா லும் தற்போதே பீகார் பாஜக கூட்ட ணிக்குள் தொகுதி தொடர்பாக மோதல் துவங்கியுள்ளது. ஐக்கிய ஜனதாதளம் கட்சி  வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் 140 க்கும் மேற்பட்ட தொகுதிகளில் கண்டிப்பாக போட்டியிடுவோம் என அறிவித்துள்ளது. ஆனால் பாஜகவோ 150 தொகுதிகளுக்கு கீழ் போட்டியிட மாட்டோம் என கூறியுள்ளது. பீகாரில் மொத்தமே 243 தொகுதிகளே உள்ள நிலை யில், இரண்டு கட்சிகளும் 65%  தொகுதிகளுக்கு மேல் போட்டியிட முட்டி மோதி வருகின்றன. இந்த மோதல் காரணமாக ஐக்கிய ஜனதா தளம் - பாஜக கட்சிகளுக்கு இடையே கருத்து மோதல் ஏற்பட்டு வருவதாக செய்திகள் வெளி யாகின.கலக்கத்தில் பாஜக...இதனிடையே கடந்த வாரம் பீகார் புதிய ஆளுநராக ஆரிப் கான் பதவியேற்றார். இந்த நிகழ்வின் போது ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் தேஜஸ்வியுடன் நிதிஷ் குமார் தோளில் கைபோட்டு நீண்ட நேரம் பேசிக்கொண்டனர். இதனை கண்ட துணை முதல்வர்களான பாஜகவின் சாம்ராட் சவுத்ரி, விஜய் சின்ஹா விழா மேடையிலேயே கடும் கோபத்தை வெளிப்படுத்தி னர். மேலும் ராஷ்டிரிய ஜனதா தள மூத்த தலைவரும், பீகார் முன்னாள் முதல்வருமான லாலு பிரசாத்,”நிதிஷ் குமாருக்கான கூட்டணி கதவு திறந்தே உள்ளது” என கூறினார். இதனால் நிதிஷ் குமார் மீண்டும் எதிர்க்கட்சி களின் மகா கூட்டணிக்கு இணை யப்போகிறார் என இந்தி மற்றும் ஒரு சில ஆங்கில ஊடகங்களில் செய்தி வெளியானது.  ஆனால் நிதிஷ் குமார், “முன்பு ஒருமுறை தவறு இழைத்து விட்டேன். அதனால் மீண்டும் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியு டன் கூட்டணி வைக்க வாய்ப்பில் லை” என்று கூறினார். ஆனால் சட்ட மன்ற தேர்தல் முடிவை பொறுத்து நிதிஷ் குமார் மீண்டும் கூட்டணி நிலைப்பாட்டை மாற்றும் சூழல் ஏற்படலாம் என அரசியல் வல்லு நர்கள் கூறியுள்ளனர். இந்த தக வலால் பாஜக அதிர்ச்சியில் உறைந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.ஷிண்டேவை போல  நிதிஷ் குமாரையும் ஒடுக்க பாஜக திட்டம்மகாராஷ்டிராவில் கடந்த  2022ஆம் ஆண்டு எதிர்க்கட்சிகளின் கூட்டணியை உடைத்து, பாஜக கூட்டணி ஆட்சி அமைக்க சிவசே னாவை இரண்டாக உடைத்தவர் ஏக்நாத் ஷிண்டே. இதற்காக ஷிண்டேவிற்கு முதல்வர் பதவி கொடுத்தது பாஜக. துணை முதல்வ ராக பாஜக மூத்த தலைவர் பட்னா விஸ் இருந்தார். சமீபத்தில் நிறைவு பெற்ற சட்டமன்ற தேர்தலில் ஏக்நாத்  ஷிண்டேவை குறைந்த தொகுதி களில் போட்டியிட வைத்து, அதிக இடங்களை வென்ற தனிப்பெரும் கட்சிக்கு தான் முதல்வர் பதவி என ஷிண்டேவிடம் இருந்து முதல் வர் பதவியை பறித்தது பாஜக. இதனால் தற்போது பட்னாவிஸ் முதல்வராகவும், ஏக்நாத் ஷிண்டே துணை முதல்வராகவும் உள்ளார். மேலும் ஷிண்டேவை ஒடுக்கும் முயற்சியில் அவருக்கும், அவரது கட்சியினருக்கும் அமைச்சரவை யில் அதிகாரத்தை குறைத்தது பாஜக. கிட்டத்தட்ட ஷிண்டேவை பாஜக டம்மியாக்கிவிட்டது. இதே முறையில் நிதிஷ் குமாருக்கும் குறைந்த சீட்களை கொடுத்து, பீகாரின் முதல்வர் பதவியை கைப் பற்ற பாஜக கணக்கு போட்டு வருகிறது.மோடி அரசுக்கே செக் வைக்க திட்டம் வகுக்கும் நிதிஷ்இந்நிலையில் எங்கள் கட்சி 140 தொகுதிகளுக்கு மேல் கண்டிப் பாக போட்டியிடும். அதற்கு கீழ்  குறைந்த தொகுதிகளில் போட்டி யிட வாய்ப்பில்லை என நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம்  கட்சி வெளிப்படையாக அறிவித்து விட்டது. இதற்கு விட்டுக் கொடுக்க வில்லை என்றால் பாஜக கூட்ட ணியை விட்டு விலக ஐக்கிய ஜனதாதள கட்சி திட்டமிட்டுள்ள தாக செய்திகள் வெளியாகி யுள்ளன. பாஜக கூட்டணியை விட்டு ஐக்கிய ஜனதாதளம் கட்சி விலகினால் மத்தியில் மோடி அரசு கவிழும் சூழல் ஏற்படும். கார ணம் ஐக்கிய ஜனதாதளம் கட்சி யின் 12 தொகுதிகளை வைத்தே மோடி பிரதமர் நாற்காலியில் அமர்ந்துள்ளார்.  பீகாரில் அரசியல் சூழல் இவ் வாறு உள்ள நிலையில், கிங் மேக்க ராக நிதிஷ் குமார் மத்தியிலும், பீகார் மாநிலத்திலும் பாஜக கூட்ட ணிக்குள் அரசியல் குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறார்.
2025-01-10 02:07:38.304090
ஜனவரி 9, 2025
சங் - பரிவார பேர்வழிகளை துணைவேந்தர்களாக்க திட்டம்
மாநிலம் - தமிழ்நாடு
நமது நிருபர்
https://theekkathir.in/News/states/tamil-nadu/accusation-of-all-party-leaders-in-the-assembly
தமிழ்
UTF-8
சென்னை, ஜன. 9 - துணைவேந்தர் நியமனங்களில் ஆளுநருக்கு மேலும் அதிகாரம் அளிக்கும் வகையில் உருவாக்கப் பட்டுள்ள யுஜிசி-யின் புதிய விதி முறைகளுக்கு எதிராக தமிழ்நாடு சட்டமன்றத்தில் வியாழனன்று அரசினர் தனித்தீர்மானம் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டது. முன்னதாக இந்த தீர்மானத்தை வரவேற்று, அனைத்துக் கட்சித் தலைவர்கள் பேசினர். அப்போது அவர்கள் கூறியதாவது: முதலமைச்சர் கொண்டு வந்த தீர்மானத்தை வரவேற்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பி னர் மாரிமுத்து பேசுகையில், “யுஜிசி யின் விதிமுறைகளானது, மாணவர் களுக்கு எதிரான பிரச்சனை மட்டுமல்ல  இது, இதன் பின்னணியில் ஒன்றிய பாஜக அரசின் மறைமுக திட்டங்கள் பல உள்ளன. எனவே, அவற்றை சட்ட ரீதியாகவும் எதிர்க்க வேண்டும். மக்கள் மன்றத்திற்கும் கொண்டு சென்று போராட வேண்டும். அப்படி செல்லும்போது கூட்டணி கட்சிகள் மட்டுமல்ல தமிழ்நாட்டு மக்களும்  அரசின் பின்னால் அணிவகுப்பார்கள் என்றார். மாநில அரசு மீது யுத்தம் தொடுக்கும் பாஜக! “துணைவேந்தர் நியமனங்கள் என்பவை, மாநில அரசின் நிர்வாகங் களால் மேற்கொள்ள வேண்டிய தாகும். இதில் தேவையில்லாமல் நான்காவதாக ஒருவரை அதுவும், கற்றல் அனுபவம் இல்லாத ஒருவரை நியமனம் செய்யலாம் என்பது இட ஒதுக்கீடு நடைமுறைக்கு எதிரானது. யுஜிசி தற்போது வெளியிட்டி ருக்கும் வரைவு அறிக்கை மாநில அரசின் உரிமைகளைப் பறிக்கிறது. மாநில அரசின் கல்வி உரிமையில் ஒன்றிய பாஜக அரசு ஒரு யுத்தத்தை தொடுத்திருக்கிறது. ஏற்கெனவே, நீட் தேர்வு முறையை ஒழிக்க வேண்டும் என்று தீர்மானம் கொண்டு வந்த போதும் ஆதரித்துள்ளோம். எனவே, முதல்வர் கொண்டு வந்திருக்கும் இந்த தீர்மானத்தையும் நாங்கள் ஆத ரிக்கிறோம்” என்று அதிமுக உறுப்பி னர் எஸ்.எஸ். கிருஷ்ணமூர்த்தி கூறினார்.உரிமைகளைப் பறிக்க அனுமதியோம்“பொதுப் பட்டியலில் உள்ள கல்வியை மாநிலப் பட்டியலுக்கு கொண்டு வரவேண்டும். பல்கலைக் கழகங்கள் அனைத்தும் மாநில அர சின் கட்டுப்பாட்டுக்கு உட்பட்டவை தான். எனவே, துணை வேந்தரை மாநில அரசு தான் நியமனம் செய்ய  வேண்டும். மாநில அரசின் கட்டுப் பாட்டில் தான் இதற்கான அதிகாரம் இருக்க வேண்டும். ஆளுநர் தலையீடு தேவையில்லை. அப்போதுதான் மாநில அரசின் உரிமைகள் பாது காக்கப்படும். எனவே, யுஜிசி வரைவு அறிக்கையை ஒன்றிய அரசு திரும்ப  பெற வேண்டும் என்பதை ஆதரிக்கிறோம்” என்று பாமக தலைவர் ஜி.கே. மணி தெரிவித்தார்.பாசிச பாஜகவின்  அடக்குமுறைதுணைவேந்தரை நியமனம் செய்ய ஆளுநருக்கு அதிகாரம் வழங்கப்படும் என்று கூறியிருக்கும் வரைவு அறிக்கை பாஜக அரசின் சதித்  திட்டங்களில் ஒன்று என்றும் பாஜக காலூன்ற முடியாத மாநிலங்களை எப் படியாவது தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரவேண்டும் என்றும் அவர்கள் முயற்சிப்பது பாசிசத்தின் உச்சம் என்றும் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் தி. வேல்முருகன் கூறினார். மாநில அரசுக்கு பேராபத்து “யுஜிசி-யின் வரைவு விதிமுறைகள், மாநில அரசின் அதிகாரத்தை, உரிமை களை பறிக்கும் ஒன்றிய அரசின் அடக்குமுறை” என்றார் புரட்சி பாரதம் கட்சியின் தலைவர் ஜெகன் மூர்த்தி. “தேசிய கல்விக் கொள்கையை மறைமுகமாக கொண்டு வரும் திட்டம் தான் யுஜிசியின் வரைவு அறிக்கை. இதை அனுமதித்துவிட்டால் ஒட்டு மொத்தமாக நமது மாநிலத்தின் கல்வி கொள்கையை அது சிதைத்து விடும். இதை எதிர்த்து மக்கள் மன்றத்தில் போராடவில்லை என்றால், அது  அடுத்து தலைமுறையை தற்குறிகளாக மாற்றிவிடும்” என்றும் எச்சரிக்கை செய்தார். யார் கைகளில் பல்கலைக்கழகம்? துணைவேந்தரை ஆளுநர் மட்டுமே நியமிக்க முடியும். மாநில அரசும் முதலமைச்சரும் தலையிட முடியாது என்று கூறுவது மிகப்பெரிய ஆபத்து என்றும் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்காமல் விட்டால் இந்துத்துவ வாதிகளை பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களாக நியமனம் செய்து விடுவார்கள் என்றார் விசிக உறுப்பினர் முகமது ஷாநவாஸ். “மாற்றம் என்பது அனைத்திற்கும் உட்பட்டதுதான். ஆனால், அந்த மாற்றம் எதற்கு? யாருக்கானது? என்பது மிக மிக முக்கியமாகும். மாற்ற த்தை உள்வாங்கிக் கொண்டு முற் போக்காக சிந்திக்க வேண்டும்.  முற்போக்கு சித்தாந்தத்திற்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. கல்வி  எங்கள் உயிர்நாடி. அதை ஒருபோதும் விட்டுக் கொடுக்கமாட்டோம்” என்றும் ஷாநவாஸ் குறிப்பிட்டார். முன்னதாக திமுக சார்பில் உயர்கல்வித் த்துறை அமைச்சர் கோவி.செழியன், எழிலரசன் ஆகியோர் பேசினர்.
2025-01-10 02:07:38.304713
ஜனவரி 9, 2025
சீத்தாராம் யெச்சூரி சிந்தனைகள்
மாநிலம் - தமிழ்நாடு
நமது நிருபர்
https://theekkathir.in/News/states/tamil-nadu/the-reality-of-india's-diversity-and-pluralism
தமிழ்
UTF-8
இந்தியாவின் பன்முகத்தன்மை மற்றும் பன்மைத்துவத்தின் உண்மையை உணர்ந்த காங்கிரஸும் கம்யூனிஸ்டுகளும், இந்த பன்மைத்துவத்தின் பொதுவான இழைகளை வலுப்படுத்தும்போது மட்டுமே நாட்டின் ஒற்றுமையையும் மக்களின் ஒற்றுமையையும் உறுதிப்படுத்த முடியும் என்று, விடுதலைப் போராட்டக் காலத்தில் உறுதியாக நம்பினர். இந்திய பன்மைத்துவத்தின் மீது ஒரே மாதிரியான தன்மையை திணிக்க முயற்சிப்பது சமூக கொந்தளிப்புக்கு மட்டுமே வழிவகுக்கும்.
2025-01-10 02:07:38.305348
ஜனவரி 9, 2025
தீக்கதிர் விரைவு செய்திகள்
மாநிலம் - தமிழ்நாடு
நமது நிருபர்
https://theekkathir.in/News/states/tamil-nadu/include-rs.1000-cash-in-pongal-gift-package
தமிழ்
UTF-8
பொங்கல் பரிசுத் தொகுப்பில் ரூ.1000 ரொக்கத்தை இணைத்திடுக! தமிழக அரசுக்கு மாதர் சங்கம் வலியுறுத்தல்சென்னை, ஜன. 9 - பொங்கல் பரிசுத் தொகுப்பில் ரூ. 1000 ரொக்கம் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் வலியுறுத்தியுள்ளது. இதுதொடர் பாக சங்கத்தின் மாநிலத் தலைவர் எஸ். வாலண்டினா, பொதுச்செயலாளர் அ. ராதிகா ஆகியோர் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டில் கடந்த சில ஆண்டுகளாக அரசின் சார்பில் பொங்கல் பண்டிகையை ஒட்டி பொங்கல் பரிசுத் தொகுப்புடன், ரூ. 1000 ரொக்கத் தொகையும் வழங்கப்பட்டு வந்தது. இது தமிழக மக்கள் மத்தியில் நல்ல வர வேற்பையும் பண்டிகையை  மகிழ்ச்சி யுடன் கொண்டாடுவதற்கான சூழலையும் ஏற்படுத்தியது. தற்போது தமிழக அரசின் அறிவிப்பில் பொங்கல் பரிசுத் தொகுப்பு மட்டும் அறி விக்கப்பட்டு, வழங்கப்பட்டு வருகிறது. ரொக்கப் பரிசு இல்லை. கடுமையான வெள்ளப் பாதிப்பு, பெஞ்சால் புயல் பாதிப்பு ஆகியவற்றை எதிர்கொண்டு கடும் பொருளாதார நெருக்கடியை சந்தித்துள்ள குடும்பங்களுக்கு அரசின் இந்த அறிவிப்பு ஏமாற்றத்தை கொடுத்துள்ளது. தமிழர்களின் பாரம்பரியமான பொங்கல் திருநாளை அனைத்து மக்களும் மகிழ்ச்சியோடு கொண்டாட தமிழக அரசு  உடனடியாக அனைத்து குடும்ப அட்டை தாரர்களுக்கும் ரூபாய் ஆயிரம் வழங்கிட வேண்டுமென அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பில் கேட்டுக்கொள் கிறோம். இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப் பட்டுள்ளது.“மக்கள் பிரதிநிதிகளிடமே கல்வி அதிகாரம்” சட்டப்பேரவையில் முதலமைச்சர் உரைசென்னை, ஜன.9 - மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளிடமே கல்வி அதிகாரம் இருக்க வேண்டும் என்று சட்டப்பேர வையில் முதலமைச்சர் மு.க. ஸ்டா லின் வலியுறுத்தினார். பல்கலைக்கழ கங்களில் துணைவேந்தர்களை நிய மிப்பது தொடர்பாக பல்கலைக்கழக மானியக்குழு வெளியிட்டுள்ள வரைவு நெறிமுறைகளை திரும்பப் பெற வேண்டும் என ஒன்றிய அரசை வலியுறுத்தும் தீர்மானத்தை அவர் முன்மொழிந்தார். அனைவருக்கும் கல்வி கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தை சிதைக்கும் வகையில் கல்வித்துறை யில் தொடர்ச்சியாக தடைகள் ஏற்படுத்தப்படுவதாக முதல்வர் சுட்டிக்காட்டினார். புதிய தேசிய கல்விக் கொள்கையின் திணிப்பு, பொதுத்தேர்வு என்ற பெயரில் மாணவர்களை வடிகட்டும் முயற்சி,  நீட் தேர்வில் தொடரும் முறைகேடு கள் ஆகியவற்றை அவர் கடுமையாக எதிர்த்தார். பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர் நியமன அதிகாரத்தை ஆளுநரி டம் வழங்குவது கல்வி நிறுவனங் களின் சுயாட்சியைப் பாதிக்கும் என் றார். மேலும், மாநில அரசுகளின் கட்டுப் பாட்டில் உள்ள பல்கலைக்கழகங் களை முழுமையாக ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் முயற்சி கூட்டாட்சித் தத்துவத்துக்கு எதிரானது எனவும் குறிப்பிட்டார். ஒன்றிய அரசு உயர்கல்விக்கான நிதி ஒதுக்கீட்டைக் குறைத்து வருவ தோடு, தமிழகத்தில் புதிய உயர்கல்வி  நிறுவனங்களை அமைக்கவும் தவ றியுள்ளதாக சுட்டிக்காட்டினார். அதோடு, ஐ.ஐ.டி போன்ற நிறு வனங்களில் பட்டியலின, பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இடஒதுக்கீட்டு விதிகளை முறையாக அமல்படுத்தவில்லை என்றும் விமர்சித்தார். இறுதியாக, தமிழ்நாட்டின் கல்வி நிறுவனங்களின் தன்னாட்சி பறிக்கப் படுவதை ஏற்க முடியாது என்றும், இந்த விதிமுறைகளை ஒன்றிய அரசு திரும்பப் பெறாவிட்டால் மக்கள் மன்றத்திலும் நீதிமன்றத்திலும் போராடப்படும் என்றும் முதலமைச்சர் உறுதிபட தெரிவித்தார்.தில்லி சட்டமன்ற தேர்தல் ஆம் ஆத்மிக்கு சிவசேனா (உத்தவ்) ஆதரவு70 தொகுதிகளைக் கொண்ட தில்லியில் பிப்ரவரி 5ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டமன்ற தேர்தல் நடைபெறும் என்றும், தேர்தலில் பதிவான வாக்குகள் பிப்ரவரி 8ஆம் தேதி எண்ணப்படும் என இந்திய தேர்தல் ஆணையம் செவ்வாய்க்கிழமை மதியம் அறிவித்தது. இந்நிலையில், தில்லி சட்டமன்ற தேர்தலில் ஆளும் ஆம் ஆத்மிக்கு ஆதரவு வழங்குவதாக சிவசேனா (உத்தவ்) கட்சி அறிவித்துள்ளது.
2025-01-10 02:07:38.305846
ஜனவரி 9, 2025
யுஜிசியைக் கண்டித்து எஸ்எப்ஐ போராட்டம்
மாநிலம் - தில்லி
நமது நிருபர்
https://theekkathir.in/News/states/delhi/sfi-protest-against-ugc
தமிழ்
UTF-8
மாநில உரிமையைப் பறிக்கும் வகையில், பல்கலை. துணைவேந்தர் நியமன தேடுதல் குழுவை ஆளுநரே அமைப்பார் என்ற பல்கலைக்கழக மானியக்குழு (UGC)-வின் வரைவு விதிகளை ரத்து செய்யக் கோரி, இந்திய மாணவர் சங்கத்தினர் (SFI), நாடு முழுவதும் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். இதனொரு பகுதியாக தஞ்சாவூர் சரபோஜி அரசுக் கல்லூரியில், மாணவர் சங்கத்தின் மாநிலச் செயலாளர் கோ. அரவிந்தசாமி தலைமையில் போராட்டம் நடைபெற்றது.
2025-01-10 02:07:38.306344
ஜனவரி 9, 2025
‘பீப் பிரியாணி விற்கக்கூடாது’ என மிரட்டிய பாஜக நிர்வாகி மீது 4 பிரிவுகளில் வழக்கு!
மாநிலம் - தமிழ்நாடு
நமது நிருபர்
https://theekkathir.in/News/states/tamil-nadu/police-action-after-complaint-by-leftists
தமிழ்
UTF-8
கோவை, ஜன. 9 - கோவையில் பீப் பிரியாணி விற்கக் கூடாது என மிரட்டல் விடுத்த பாஜக நிர்வாகி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என இடதுசாரிக் கட்சிகள் சார்பில் காவல் ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டு உள்ளது. கோவை மாவட்டம், கணபதியை அடுத்த உடையாம்பாளையத்தில் அப்பகுதியைச் சேர்ந்த தம்பதி ரவி – ஆபிதா, தள்ளுவண்டி கடையில் பீப் பிரியாணி மற்றும் பீப் சில்லி விற் பனை செய்து வருகின்றனர்.  இந்நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணி, (மாநகர் மாவட்டச்  செயலாளர் - பாஜக ஓ.பி.சி அணி) என்பவர் மாட்டிறைச்சி பிரியாணி விற்கக்கூடாது என தொடர்ந்து அத்தம்பதியை மிரட்டி வந்துள்ளார்.  “யாரைக் கேட்டு விற்பனை செய்து வருகிறீர்கள்? என பாஜக நிர்வாகி  கடைக்காரரை மிரட்டுவதும், அதற்கு  அந்த கடையில் உள்ள பெண்மணி, எங்களுக்கு தெரிந்த தொழிலை செய்கிறோம், உங்களை வற்புறுத்தி எதையும் சாப்பிடச் சொல்லவில்லை. விரும்புகிறவர்கள் வந்து சாப்பிடு கிறார்கள். உங்களுக்கு என்ன?” என்று நியாயம் கேட்பதும் வீடியோவாகவும் சமூகவலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனடிப்படையில், விசாரணை மேற்கொண்ட காவல்துறையினரும், பீப் பிரியாணி கடையை, தள்ளிச் சென்று வேறு ஒரு இடத்தில் வைக்கு மாறு கூறியுள்ளனர். எனவே, இதுதொடர்பாக ரவி,  ஆபிதா ஆகியோர் காவல் ஆணையரி டம் முறையிட்டு மனு அளித்துள்ளனர். இந்நிலையில், இடதுசாரி கட்சியின ரும், வியாழனன்று கோவை மாநகர காவல் ஆணையரை நேரில் சந்தித்து மனு ஒன்றை அளித்தனர். அதில், உடையாம்பாளையம் பகுதியில் ஒரு சாலையோர கடையில் பீப் பிரியாணி கடைக்காரர்களை பாஜக நிர்வாகி மிரட்டும் காணொளி இணை யத்தில் வைரலாகி வருகிறது. இது அந்த வட்டாரத்தில் சமூக பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாநகரம் கடந்த காலங்களில் சந்தித்து வரும் பல பிரச்சனைகளின் நீட்சியாகவே இதைப் பார்க்க வேண்டியுள்ளது. எனவே இதுகுறித்து முழுமையாக விசாரித்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். அதோடு, உணவு என் பது தனிப்பட்ட விஷயம். அவரவரு டைய விருப்பப்படி உணவு தயாரித்து விற்பதும், வாங்கி உண்பதும் தனிநபர் சார்த்த உரிமையாகும். சாதியை, மதத்தை, பகுதியை கார ணம் காட்டி மறுப்பதை ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது. அதோடு சட்டத்துக்கு உட்பட்ட ஆட்சி தான் நிலை நிறுத்தப்பட வேண்டும். ஊர் கட்டுப்பாடு என்கிற உண்மைக்கு புறம் பான பிரச்சாரங்களை அனுமதிக் கக்கூடாது என வலியுறுத்தப் பட்டுள்ளது. முன்னதாக, இந்த நிகழ்வில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் சி. பத்மநாபன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் அஜய்குமார், கே.எஸ். கனகராஜ், சிபிஎம் மாமன்றக்குழுத் தலைவர் வி. இராமமூர்த்தி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலப் பொருளாளர் எம்.ஆறுமுகம், மாவட்ட துணைச்செய லாளர் ஜேம்ஸ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.  இதைத்தொடர்ந்து, பாஜக நிர்வாகி சுப்பிரமணி மீது துடியலூர் காவல்துறையினர், 126(2), 192, 196,  351/2 உள்ளிட்ட நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
2025-01-10 02:07:38.306824
ஜனவரி 9, 2025
அரசுப் போக்குவரத்துத் தொழிலாளர்கள் தர்ணா
மாநிலம் - தமிழ்நாடு
நமது நிருபர்
https://theekkathir.in/News/states/tamil-nadu/government-transport-workers-dharna
தமிழ்
UTF-8
தங்களின் நீண்டகாலக் கோரிக்கைகளுக்குத் தீர்வுகாணக் கோரி, அரசுப் போக்குவரத்து ஊழியர் சங்கத்தினர் (சிஐடியு) சென்னை பல்லவன் இல்லம் முன்பு வியாழனன்று தர்ணா போராட்டம் நடத்தினர். சிஐடியு மாநிலத் தலைவர் அ. சவுந்தரராசன், பொதுச்செயலாளர் ஜி.சுகுமாறன், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து ஊழியர் சம்மேளன பொதுச்செயலாளர் கே. ஆறுமுக நயினார் உள்பட ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.
2025-01-10 02:07:39.326359
ஜனவரி 10, 2025
பல்கலைக்கழக மானியக் குழு விதிகளில் திருத்தம் மாநிலப் பல்கலைக் கழகங்களின் மீதான தாக்குதல்
கட்டுரை
நமது நிருபர்
https://theekkathir.in/News/articles/world/amendment-of-university-grants-commission-rules-attack-on-state-universities
தமிழ்
UTF-8
2025ஆம் ஆண்டு கல்வி அமைப்பு முறையில் மற்றுமொரு தாக்குத லுடன் தொடங்கியிருக்கிறது. மோடி அரசாங்கம், பல்கலைக்கழக மானியக் குழுவின் மூலமாக, “பல்கலைக்கழக மானியக்குழு (பல்கலைக் கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் ஆசிரியர்கள் மற்றும் கல்வியாளர்கள் நியமனத்திற்கான குறைந்தபட்ச தகுதிகள் மற்றும் உயர்கல்வியில் தரநிர்ணயத்திற் கான நடவடிக்கைகள்)” என்று தலைப்பிட்டு புதிய வரைவு விதிகளை அறிவித்திருக்கிறது. இது, நாட்டில் உள்ள அனைத்து உயர்கல்வி நிறுவனங்களையும் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவதற்காக ஒன்றிய அரசு மேற்கொண்டுள்ள மற்றுமொரு முயற்சியாகும்.பல்கலைக்கழகங்களின் நிலவரம்பல்கலைக் கழக மானியக்குழுவின் கூற்றின்படி, நாட்டில் மொத்தம் 56 மத்தியப் பல்கலைக்கழகங்க ளும், 481 மாநிலப் பல்கலைக்கழகங்களும் இருக்கின் றன. இப்போது கொண்டுவரப்பட்டிருக்கும் வரைவு விதிகள் மூலம் மாநிலங்களில் உள்ள பல்கலைக் கழகங்களுக்கும் துணை வேந்தர்களை நியமனம் செய்வதற்கான உரிமையைப் பறித்துக்கொள்வதுடன், அவை எப்படி நடத்தப்பட வேண்டும் என்றும் தீர்மானிக்கிறது. இது நம் அரசமைப்புச் சட்டத்தின் ஒரு முக்கிய அம்சமாக விளங்குகிற கூட்டாட்சித் தத்து வத்தின் மீதான நேரடித் தாக்குதலாகும்.உரிமைப் பறிப்பும் மத்தியத்துவமும்வரைவு விதிமுறைகள், நாட்டிலுள்ள அனைத்து பல்கலைக்கழகங்களிலும் துணைவேந்தர்களை நியமிக்கும் முறையை பரிந்துரைக்கின்றன. துணை வேந்தர்களைத் தேர்ந்தெடுப்பதற்கும் நியமிப்ப தற்கும் இதுவரை இருந்துவந்த நடைமுறையை இந்த வரைவு விதிமுறைகள் மாற்றி அமைத்திருக்கின்றன. இதுநாள்வரையிலும், இதற்கான குழுவில் மூன்று நபர்கள் இடம்பெற்றிருந்தார்கள். ஒருவர், பல்கலைக் கழக மானியக்குழுவின் பிரதிநிதி. இன்னொருவர் மாநில அரசாங்கத்தால் பரிந்துரைக்கப்பட்ட வேந்தரின் பிரதி நிதி. மூன்றாமவர், பல்கலைக் கழகத்தின் சிண்டி கேட்/செனட்/நிர்வாகக் குழுவிலிருந்து ஒருவர்.மாநில உரிமைகள் மீதான தாக்குதல்புதிய வரைவு விதிமுறைகள் ஒன்றிய அரசாங்கத்தி ற்கு ஆதரவாகவும், துணை வேந்தர்களைத் தேர்ந்தெடுக்கும் நடைமுறையில் மாநில அரசாங்கங்க ளுக்கு எவ்விதப் பங்களிப்பையும் மறுத்திடும் விதத்தி லும் இதனை அடியோடு மாற்றி அமைத்திருக்கிறது. துணை வேந்தர்களைத் தேர்ந்தெடுக்கும் உரிமை மாநில அரசாங்கத்திடமிருந்து பறிக்கப்பட்டு, ஒன்றிய அரசாங்கத்தின் பிரதிநிதியாக இருந்திடும் ஆளுநர்/வேந்தரிடம் கொடுக்கப்பட்டிருக்கிறது.அரசியல் நோக்கங்களுக்கான முயற்சிஇது, ஆளுநர் நியமனங்களை மத்தியத்து வப்படுத்துவதோடு மட்டுமல்லாமல், பல்கலைக் கழகங்களின் துணைவேந்தர்களாக ஆர்எஸ்எஸ்/பாஜக-வின் ஆதரவாளர்களை நியமனம் செய்வ தையும் நோக்கமாகக் கொண்டதாகும். கேரளாவில், இதற்கு முன்பிருந்த ஆளுநர் மாநில அரசின் பரிந்துரைகளை நிராகரித்துவிட்டு, ஆர்எஸ்எஸ் அனுதாபி ஒருவரை துணை வேந்தராக நியமனம் செய்ததை நாம் ஏற்கனவே பார்த்திருக்கிறோம்.தேசியக் கல்விக்  கொள்கையின் தாக்கம்பாஜக அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்ட ஒரு தலைப்பட்சமான தேசியக் கல்விக் கொள்கையா னது இந்தியக் கல்வி முறையை மத்தியத்துவப் படுத்துவதற்கும், மதவாதத்தை பரப்புவதற்கும் ஏற்ற விதத்தில் உருவாக்கப்பட்டிருக்கிறது. எனவேதான் இதனைக் கல்வி அமைப்புமுறையின் ஆணி வேராக இருந்துவரும் ஆசிரியர்களும், மாணவர்களும் மிகச் சரியாகவே எதிர்த்து வருகிறார்கள். புதிதாக அறிமுகப் படுத்தப்பட்டிருக்கும் வரைவு விதிமுறைகள் தேசிய கல்விக் கொள்கையின் இந்தக் கொள்கைத் திசை வழியை முன்னெடுத்துச் செல்வதை நோக்கமாகக் கொண்டிருக்கின்றன.இந்துத்துவா நிகழ்ச்சி நிரல்ஒன்றிய அரசை பாஜக அமைத்ததிலிருந்து, அது பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்க ளை குறிவைத்து தனது இந்துத்துவா மதவாத நிகழ்ச்சி  நிரலை செயல்படுத்தி வருகிறது. அரசுத் துறைகளில் உள்ள அனைத்து முக்கிய பதவிகளிலும் அத்தகைய பதவிகளில் அமர்வதற்கு எவ்விதத் தகுதியும் இல்லாத ஆர்எஸ்எஸ்/இந்துத்துவா நபர்களை நியமித்து வருகிறது.மாநில எதிர்ப்புபாஜக அதிகாரத்தில் இல்லாத மாநிலங்களில், இந்த வேலைகளுக்காக அது ஆளுநர்களைப் பயன் படுத்துகிறது. கேரளா, தமிழ்நாடு, பஞ்சாப் மற்றும் மேற்கு வங்காளத்துடன் சேர்ந்து, மாநில பல்கலைக் கழகங்களை நிர்வகிப்பதிலும் கட்டுப்படுத்துவதிலும் ஆளுநர்களின் இத்தகைய தலையீட்டை கேரள இடது ஜனநாயக முன்னணி அரசாங்கம் எதிர்த்தது. கல்வி பொதுப் பட்டியலில் உள்ள அரசமைப்புச் சட்டத்தில் கூறப்பட்டுள்ளபடி, மாநிலங்களின் உரிமை களை அவர்கள் காலில்போட்டு மிதிக்கின்றனர்.ஆணைய அறிக்கைகளின் பரிந்துரைகள்1988இல் தனது அறிக்கையை சமர்ப்பித்த சர்க்கா ரியா ஆணையம், ‘முதலமைச்சர் அல்லது சம்பந்தப் பட்ட பிற அமைச்சர்களுடன் ஆளுநர் கலந்தாலோ சிப்பதில் ஒரு தெளிவான நன்மை இருக்கிறது’ என்று  கூறியிருந்தது. குறிப்பாக வேந்தர்களாக இருப்பவர் கள் முக்கியமான விஷயங்களில் ‘அமைச்சருடன் கலந்தாலோசிப்பது நல்லது’ என்று பரிந்துரைத் தது. இந்த இரண்டு பரிந்துரைகளும் பின்பற்றப் படவில்லை.புஞ்சி ஆணையத்தின் கருத்துகள்இரண்டாவது ஆணையமான புஞ்சி ஆணையம், சர்க்காரியா அறிக்கை வெளியான பின்னர், இருப தாண்டுகள் கழித்து, 2010இல் தனது அறிக்கையை சமர்ப்பித்தது. அதன் பரிந்துரைகள், சர்க்காரியா ஆணையத்தின் பரிந்துரைகளைக் காட்டிலும் அதிகமாகும். அது கூறியதாவது: “ஆளுநரைப் பல்கலைக்கழகங்களின் வேந்தராக ஆக்குவதும், அதன் மூலம் வரலாற்று ரீதியாக சில பொருத்தப்பாடுகளைக் கொண்ட அதிகாரங்களை அவருக்கு வழங்குவதும் காலங்கள் மற்றும் சூழ் நிலைகளின் மாற்றத்துடன் நின்றுவிட்டது. பல் கலைக்கழக கல்வியை ஒழுங்குபடுத்துவதில் அமைச்சரவை இயல்பாகவே ஆர்வம் காட்டும். மேலும் செயல்பாடுகள் மற்றும் அதிகாரங்களில் அமைச்ச ரவைக்கும் ஆளுநருக்கும் மோதல் ஏற்படும் சூழ்நிலையை ஏற்படுத்த வேண்டிய அவசியமில்லை.”பாஜகவின் கூட்டாட்சி எதிர்ப்புபாஜக கூட்டாட்சி என்ற கருத்தை கோட்பாட்ட ளவில் கூட எதிர்க்கிறது மற்றும் மத்தியத்துவப் படுத்தலை ஆதரிக்கிறது. எனவே ஒன்றிய-மாநில ஆணையங்களின் பரிந்துரைகளை செயல்படுத்துவ திலோ அல்லது ஆளுநரின் அதிகாரங்களைக் குறைப்ப திலோ அது சிறிதும் ஆர்வம் காட்டாது. தண்டனை  நடவடிக்கைகளின் கடுமை இந்த வரைவில் மிகவும் கடுமையான பகுதி என்ன வென்றால், மாநிலங்கள் அல்லது வேறு எந்த நிறுவனமும் இந்த விதிமுறைகளை செயல்படுத்தத் தவறினால் அவற்றின்மீது தண்டனை நடவடிக்கைகள் பரிந்துரைக்கப்படும் என்பதாகும். வரைவின்படி, அத்தகைய நிறுவனங்கள்: l பல்கலைக்கழக மானியக் குழுவின் திட்டங்களில் பங்கேற்பதிலிருந்தும் l பட்டப்படிப்புகளை வழங்குவதிலிருந்தும் l பல்கலைக்கழக மானியக் குழு சட்டத்தின் கீழ் பராமரிக்கப்படும் உயர்கல்வி நிறுவனங்களின் பட்டியலிலிருந்தும் நீக்கப்படும்.மானியக் குழுவின் அதிகார மீறல்சுருக்கமாகச் சொல்வதென்றால், இந்த விதிமுறை கள் பல்கலைக்கழக மானியக் குழுவால் பரிந்துரைக் கப்பட்ட ஒரு கட்டாய நடவடிக்கையாகும். இது அனைத்து பல்கலைக்கழகங்களையும் அதன் கட்ட ளைகளுக்குக் கீழ்ப்படிய வேண்டும் என்று அச்சுறுத்து கிறது. இது பல்கலைக்கழக மானியக்குழுவின் ஆணைக்கு எதிரானது. பல்கலைக்கழக மானியக்குழு என்பது பிரதானமாக, பல்வேறு பல்கலைக்கழகங்க ளுக்கு மானியங்களை வழங்குவதற்காக அமைக்கப் பட்ட அமைப்பாகும். மாறாக அவற்றைக் கட்டுப் படுத்துவதற்காக அல்ல.கல்வித் தரத்தை  குறைக்கும் பரிந்துரைகள்உயர்கல்வி அமைப்பின் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் பிற முக்கியமான பரிந்துரை களும் இந்த வரைவு விதிமுறைகளில் உள்ளன. இந்த விதிமுறைகள் மூலம் கல்வித்துறை சாராத நபர்களை துணைவேந்தர்களாக நியமிப்பதை சட்டப்பூர்வமாக்க, பல்கலைக்கழக மானியக்குழு திட்டமிட்டுள்ளது. முன்னர் ஐபிஎஸ் மற்றும் ஐஏஎஸ் அதிகாரிகள் துணைவேந்தர்களாக நியமிக்கப்பட்ட சம்பவங்கள் நமக்கு உண்டு.தொழில்துறை ஆதிக்கம்இப்போது, இந்த விதிமுறைகள் தொழில்துறை யுடன் தொடர்புடைய நபர்களையும் துணைவேந்தர் களாக நியமிக்க அனுமதிக்கின்றன. இது பல்கலைக் கழகங்களின் கல்வித் தன்மையின் மீதான தாக்கு தலாகும். மேலும் அவற்றை தொழில்துறையின் துணை  அமைப்பாக மாற்றும் முயற்சியாகும். மேலும், இது நம் நாட்டில் நிறுவப்பட்ட அனைத்து தனியார் பல்கலைக்கழகங்களும் கல்வியாளர்களைத்தான் துணைவேந்தர்களாக நியமிக்க வேண்டும் என்று கவலைப்பட வேண்டாம் என்ற சுதந்திரத்தையும் அளித்திருக்கிறது. அத்தகைய நடவடிக்கை தனியார் பல்கலைக்கழகங்களின் கல்வித் தரத்தை மேலும் சமரசத்திற்கு உட்படுத்திடும்.ஆசிரியர்களின் எதிர்ப்புபல்வேறு பல்கலைக்கழகங்களின் ஆசிரியர்க ளும் இந்த விதிமுறைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்துள் ளனர். ஏனெனில் இது ஆட்சேர்ப்பின் தரத்தை சமரசம் செய்கிறது. பல்கலைக்கழகங்களின் கல்வித் தரம் நீர்த்துப்போகச் செய்வதோடு, அதிகரித்து வரும் பணிச் சுமையும், தற்காலிக நியமனங்கள் செய்யப்படுவ தையும் அவர்கள் விமர்சித்து வருகின்றனர்.கருத்துரைக்கான அழைப்புபல்கலைக்கழக மானியக்குழு இந்த வரைவின்மீது மக்கள் தங்கள் பரிந்துரைகளை அளித்திட 30 நாட்கள் அவகாசம் அளித்திருக்கிறது. நம் கல்வி முறையில் அக்கறையுள்ள அனைவரும் இந்த வரைவு விதிமுறை களுக்குத் தங்கள் எதிர்ப்பினைப் பதிவு செய்திட வேண்டும்.போராட்ட அறைகூவல்இந்த விதிமுறைகளை ஒன்றிய அரசாங்கம் திரும்பப் பெற்றிடச்செய்யும் விதத்தில் மாணவர் சமுதாயமும், ஆசிரியர் சமுதாயமும் அனைத்து ஜனநாயக சக்திகளு டனும் ஒன்றுபட்டு நின்று போராட முன்வரவேண்டும்.(ஜனவரி 8, 2025)  தமிழில் : ச.வீரமணி
2025-01-11 02:04:42.728167
ஜனவரி 10, 2025
விளையாட்டு...
விளையாட்டு
நமது நிருபர்
https://theekkathir.in/News/games/cricket/felix-at-the-end-of-adelaide-tennis-2024
தமிழ்
UTF-8
அடிலெய்டு டென்னிஸ் 2024 : இறுதியில் பெலிக்ஸ்5ஆவது அடிலெய்டு சர்வதேச  டென்னிஸ் தொடர், ஆஸ்திரே லிய நாட்டின் அடிலெய்டு நகரில் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இந்திய நேரப்படி வெள்ளிக்கிழமை அதிகாலை நடைபெற்ற ஆடவர் ஒற்றை யர் பிரிவு அரையிறுதி ஆட்டத்தில் போட்டித் தரவரிசையில் முதலிடத்தில் உள்ள அமெரிக்காவின் டாமி பவுல், தரவரிசையில் 5ஆவது இடத்தில் உள்ள கனடாவின் பெலிக்ஸை எதிர்கொண் டார். இந்த ஆட்டத்தில் டாமி பவுல் எளி தாக வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப் பட்டது. ஆனால் தொடக்கம் முதலே பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் பெலிக்ஸ் 7-6 (7-3), 3-6, 6-4  என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று  இறுதிக்கு முன்னேறினார். அமெரிக்கா வின் டாமி பவுல் அதிர்ச்சி தோல்வி யுடன் தொடரில் இருந்து வெளியேறி னார். பெகுலா அபாரம் மகளிர் ஒற்றையர் பிரிவு அரை யிறுதி ஆட்டத்தில் போட்டித் தரவரிசை யில் முதலிடத்தில் உள்ள அமெரிக்கா வின் பெகுலா, தரவரிசையில் இல்லாத கஜகஸ்தான் வீராங்கனை யூலாவை 7-6 (7-4), 6-3 என்ற செட் கணக்கில் வீழ்த்தி இறுதிக்கு முன்னேறினார்.  மற்றொரு அரையிறுதி ஆட்டத்தில் தரவரிசையில் இல்லாத வீராங்கனைகளான அமெரிக்காவின் கீஸ், ரஷ்யாவின் சம்சோனோவா ஆகியோர் மோதினர். இந்த ஆட்டத் தில் 5-7, 7-5, 3-0 என்ற புள்ளிக்கணக்கில் கீஸ் முன்னிலையில் இருந்த நிலை யில், காயம் காரணமாக சம்சோ னோவா வெளியேறினார். அதிர்ஷ்ட வாய்ப்புடன் அமெரிக்காவின் கீஸ் இறுதிக்கு முன்னேறினார். மகளிர் ஒற்றையர் பிரிவு அரையிறுதி ஆட்டத்தில் அமெரிக்காவின் பெகுலா - கீஸ் இந்திய நேரப்படி  சனியன்று காலை 11 அணி அளவில் பலப்பரீட்சை நடத்துகின்றனர்.இந்திய ஆடவர் கிரிக்கெட் அணியின் ஆலோசகராக தோனி மீண்டும் நியமனம்?சாம்பியன் டிராபி தொடரில் பங்கேற்கும் இந்திய அணியின் ஆலோசகராக முன்னாள் நட்சத்திரம் தோனி அறிவிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகி யுள்ளன. சாம்பியன் டிராபி தொடருக்கு அணிகளை அறிவிக்க ஜனவரி 12ஆம் தேதி கடைசி நாளாகும். அன்றைய தினம் இந்திய தேர்வு குழு அணி வீரர்களின் விபரத்தை அறி விக்க உள்ளது.  கவுதம் கம்பீர் புதிய தலைமைப் பயிற்சியாளராக பதவியேற்ற பின்னர் இந்திய அணி சற்று பின்னடை வை சந்தித்து வருகிறது. இதனால் தோனியை மீண்டும் இந்திய அணியின் ஆலோசகராக நியமிக்கப்பட்ட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. கடந்த 2021ஆம் ஆண்டு நடை பெற்ற டி-20 உலகக்கோப்பை தொட ரின் போது ரவி சாஸ்திரி பயிற்சியாள ராக இருக்கும்போது தோனி ஆலோசகராக நியமிக்கப்பட்டார். இதேபோல் தற்போது சாம்பியன்ஸ் டிராபி தொடருக்காக டோனி மீண்டும் ஆலோசகராக பதவி நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.  இதுதொடர்பாக இந்திய கிரிக்கெட்  வாரியம் தோனியிடம்  பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.கோலிக்கு நவ்ஜோத் சிங் சித்து ஆதரவுஆஸ்திரேலியாவில் நடை பெற்ற பார்டர்-கவாஸ்கர் தொடரில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி, முதல் டெஸ்ட் போட்டியில் சதம் அடித்தாலும் அடுத்த 4 டெஸ்ட் போட்டியிலும் சொதப்பி னார். கோலி தன் மனைவியுடன் (நடிகை அனுஷ்கா சர்மா) அதிக நேரம்  செலவிடுவதால் கிரிக்கெட்டை மறந்துவிட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த குற்றச்சாட்டிற்கு இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் நவ்ஜோத் சிங் சித்து  கண்டனம் தெரிவித்துள்ளார்.  விராட் கோலிக்கு விமர்சனங் களை எதிர்கொள்வது இது முதல் முறை கிடையாது. ஆனால் சில ரசிகர்கள் விராட் கோலியின் மனைவி யை தேவையில்லாமல் இழுத்து விமர்சனம் செய்கிறார்கள். அது மிகவும் தவறு. நமது வீரர்களை நாம் மதிக்க வேண்டும். பொறுமையாக இருங்கள். அனைவருமே கடின காலத்தை சந்திப்பார்கள்.  ரோகித் சர்மாவை பொறுத்தவரை அவர் தன்னுடைய உடல் தகுதியை மேம்படுத்த வேண்டும். வேறொன்று மில்லை” என அவர் கூறினார்.
2025-01-11 02:04:47.241269
ஜனவரி 10, 2025
தீக்கதிர் உலக செய்திகள்
உலகம்
நமது நிருபர்
https://theekkathir.in/News/world/india/pope-condemns-disgraceful-situation-in-gaza
தமிழ்
UTF-8
காசாவில் மோசமான நிலை வெட்கக்கேடு : போப் கண்டனம்காசாவில் மனிதாபிமான நிலைமை மோசமாகியுள்ளது வெட்கக்கேடானது என போப் பிரான்சிஸ் விமர்சித்துள்ளார். இஸ்ரேலின் தாக்குதலால் மருத்துவமனை கள் அழிக்கப்பட்டது, எரிபொருள் பற்றாக் குறை, மோசமான வாழ்க்கை நிலைமை, கடும் குளிரில் குழந்தைகள் உறைந்து சாவது ஆகியவற்றை ஏற்க முடியாது. 15 மாதங்களுக்கும் மேலாக இஸ்ரேல் தனது இனப்படுகொலையை தொடர்கிறது. “பொது மக்கள் மீதான தாக்குதலை எந்த வகை யிலும் ஏற்க முடியாது” என்றும் கண்டித்துள்ளார்.சிரியாவில் ராணுவ ஆதிக்கத்தை அதிகரிக்க அமெரிக்கா திட்டம்சிரியாவில் தங்கள்  ராணுவம் தொடர்ந்து செயல்பட வேண்டும் என அமெரிக்க பாதுகாப்புத் துறை செயலாளர் லாயிட் ஆஸ்டின் தெரிவித்துள்ளார். சிரியாவில் அமெரிக்கா சுமார் 2,000 ராணுவ வீரர்க ளை நிலை நிறுத்தியுள்ளது. அல்-அசாத் அரசு கவிழ்க்கப்பட்ட பிறகு அவர் ஆட்சி யை பாதுகாத்து வந்த ரஷ்ய ராணுவம் வெளி யேறியது. இவ்வாய்ப்பை பயன்படுத்தி அந்நாட்டில் தனதுஆதிக்கத்தை அதிகரிக்க இவ்வாறு திட்டமிடு கிறது அமெரிக்கா.காட்டுத் தீயில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை உயர்வுஅமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 3 நாட்களுக்கு மேலாக பரவி வரும் காட்டுத் தீயினால் பலியானவர்களின் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது. இந்த பேரிடர் காரணமாக சுமார் 2 கோடி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை வீடு கள் வணிக கட்டடங்கள் என 10 ஆயிரத்துக் கும் அதிகமான கட்டடங்கள் தீயில் எரிந்துள் ளன. இதுமட்டுமின்றி நூற்றுக்கணக் கான வாகனங்களும் தீயில் சிக்கியுள்ளன. தீ முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டு பின்  நடத்தப்படும் ஆய்வுக்குப் பிறகே முழுமை யான சேத விபரங்கள் தெரியவரும்.கனடா பிரதமராக போட்டியிடுவதாக  சந்திரா ஆர்யா அறிவிப்புகனடாவில் ஆளும் கட்சியான லிபரல் கட்சிக்குள் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக ஜஸ்டின் ட்ரூடோ தனது  பிரதமர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார். அதனைத் தொடர்ந்து நான்கு நாட்களுக்குப் பிறகு, அக்கட்சியை சேர்ந்த இந்திய வம்சாவளி நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரா ஆர்யா பிரதமர் வேட்பாளருக்கு தான் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளார்.  இந்நிலையில் லிபரல் கட்சிக்கான தலைவரையும் அடுத்த பிரதமரையும் மார்ச் 9 அன்று தேர்ந்தெடுக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.நடுக்கடலில் ஆபத்தான சூழலில்  அகதிக்கு குழந்தை பிறப்புஆப்பிரிக்காவிலிருந்து ஸ்பெயினை நோக்கி அகதிகள் சென்ற படகில் ஒருவருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. எந்த ஒரு பாதுகாப்பும் இன்றி ஆபத்தான முறையில் லட்சக்கணக்கான ஆப்பிரிக்கர்கள் ஒவ்வொரு ஆண்டும் அகதிகளாக கடல் வழியே ஐரோப்பிய நாடுகளுக்கு பயணிக்கும் போது கடலில் ஏற்படும் விபத்து காரணமாக நூற்றுக்கணக்கானோர் பலியாகின்றனர். இந்த சூழலில் அகதிகளின் துன்பங்களை முன்னிலைப்படுத்தாமல் குழந்தை பிறப்பை புளங்காகிதமடைந்து பல ஊடகங்கள் எழுதி வருகின்றன.
2025-01-11 02:04:47.604030
ஜனவரி 10, 2025
மாட்டிறைச்சி அரசியல்
தலையங்கம்
நமது நிருபர்
https://theekkathir.in/News/headlines/bjp/roadside-vendor-says-beef-shouldn't-be-sold-in-coimbatore
தமிழ்
UTF-8
கோவையில் மாட்டிறைச்சி விற்கக்கூடாது என்று சாலையோர பெண் வியாபாரி ஒருவரை பாஜக நிர்வாகி மிரட்டியிருக்கிறார்.  இதனால்  பயந்துபோன அந்தப்பெண் தனது கடையை மற் றொரு இடத்திற்கு மாற்றியிருக்கிறார். அதன் பின்ன ரும் மிரட்டல் நிற்கவில்லை.  வட இந்தியாவைப் போன்ற ஒரு பதற்றமான சூழலை தமிழகத்தில் ஏற் படுத்த பாஜகவினரும் அக்கட்சியின் துணை அமைப்புகளும் முயற்சிக்கின்றன. இடதுசாரிக் கட்சிகள் தலையிட்டதால் பாஜக நிர்வாகிமீது காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளது வரவேற் கத்தக்கது. மாட்டிறைச்சி வைத்திருந்தார் என்பதற் காக நாட்டின் பல்வேறு பகுதிகளில் அவ்வப்போது அப்பாவி மக்கள் கொல்லப்படுவது கொடுமை யானது.ஹரியானாவில் கடந்தாண்டு செப்டம்பர்  2 ஆம் தேதி பசுமாட்டினை கடத்திச் செல்வதாக பழி சுமத்தி, பிளஸ் 2 படிக்கும் பள்ளி  மாணவனை, பசுக் குண்டர்கள் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றனர். அதே மாநிலத்தின் சர்க்கி தாத்ரி பகுதியில் கடந்தா ண்டு ஆகஸ்ட்  27 அன்று மாட்டிறைச்சி உண்டதாக மேற்கு வங்கத்தைச் சேர்ந்த முஸ்லிம்  இளைஞ ரான புலம் பெயர் தொழிலாளி சபீராவை (26) ஆர்எஸ்எஸ் - பாஜகவைச் சேர்ந்த குண்டர்கள் அடித்துக் கொன்றனர். 2022  மே மாதம் 4 ஆம் தேதி மத்தியப் பிரதேச மாநிலத்தில் மாட்டிறைச்சி வைத்தி ருந்ததாகக் கூறி பழங்குடியினர் ஒருவரது வீட்டி ற்குச் சென்று அவரை பஜ்ரங்தள் குண்டர்கள்  தாக்கியதில் அவர் உயிரிழந்தார். 2017 ஜூன் மாதம் தில்லியில் உள்ள கேரள மாநில இல்லத்தில் மாட்டிறைச்சி வழங்கப்படுவதாக கூறி, பாஜகவி னர் தில்லியை வன்முறைக் களமாக மாற்றினர்.இந்தியாவில் மக்கள் வழிபாட்டு முறையை தங்களுக்கு ஏற்ற முறைகளில் அமைத்துக்கொள் கிறார்கள். ஆனால் மதவெறியர்கள் உணவு வாயி லாக  மக்களையும் கடவுளையும் பிளவுபடுத்துகி றார்கள். அசைவம் சாப்பிட்டால் அறிவு குறைவு என்பதை போலவும், சைவம் சாப்பிட்டால் அறி வாளி என்பதை போன்ற ஒரு தோற்றத்தையும் ஏற்படுத்த முயன்று தோல்வியடைந்தவர்கள் தான் இவர்கள். இருப்பினும் அவர்களுக்கான அடையாள அரசியலாக மாட்டிறைச்சியை பயன் படுத்திக் கொள்கிறார்கள். பண்டைய இந்தியா வில் மாட்டிறைச்சியை அனைத்து மக்களும் உண்டதற்கான ஏராளமான ஆதாரங்கள், வேதங் கள் முதல் மகாபாரதம் வரை காணப்படுகின்றன. மாட்டிறைச்சியை  கடவுளுக்கு படைத்திருக்கிறார் கள். எனவே வேதகாலம் முதல் நவீன காலம் வரை மாட்டிறைச்சி என்பது இந்திய மக்களின் அன்றாட உணவாகவே இருக்கிறது.இளைஞர்கள் உடல்வலிமை பெற மாட்டிறைச் சியை உண்ணவேண்டும் என்று சுவாமி விவேகா னந்தர் கூறினார். இவை அனைத்தும் தெரிந்தும் பாஜவினர் தங்களது ஆதாய அரசியலுக்காக பசுவை பயன்படுத்திக் கொள்கிறார்கள். எனவே வடஇந்தியாவைப் போன்று மாட்டிறைச்சி தடை என்ற போர்வையில் பாஜகவினர் தமிழகத்தை  வன்முறைக் களமாக மாற்ற முயற்சிப்பதை காவல்துறையும் மாநில அரசும் ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது.
2025-01-11 02:04:47.609000
ஜனவரி 10, 2025
பிரபல பின்னணிப் பாடகர் ஜெயச்சந்திரன் மறைவு!
தேசியம்
நமது நிருபர்
https://theekkathir.in/News/india/kerala/famous-playback-singer-jayachandran-passed-away
தமிழ்
UTF-8
திருச்சூர்,ஜனவரி.10- பிரபல பின்னணி பாடகர் ஜெயச்சந்திரன் உடல்நலக்குறைவால் உயிரிழந்த செய்தி அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜெயச்சந்திரன் தமிழ், மலையாளம், கன்னடம் எனப் பல மொழிகளில் சுமார் 16,000க்கும் மேற்ற்ப்பட்ட பாடல்கள் பாடியுள்ளார். 80 வயதான இவர் கல்லீரல் நோய் தொடர்பான நோய்களுக்குச் சிகிச்சை பெற்று வந்த நிலையில் திருச்சூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி நேற்றிரவு உயிரிழந்தார்.
2025-01-11 02:04:47.728591
ஜனவரி 10, 2025
தீக்கதிர் விரைவு செய்திகள்
மாநிலம் - தமிழ்நாடு
நமது நிருபர்
https://theekkathir.in/News/states/tamil-nadu/rupee-depreciates-like-never-before
தமிழ்
UTF-8
ரூபாய் மதிப்பு வரலாறு காணாத சரிவுபுதுதில்லி, ஜன. 10 - அமெரிக்க டாலருக்கு இணையான இந்திய ரூபாய் மதிப்பு வரலாறு காணாத சரிவைக் கண்டுள்ளது. அமெரிக்க டாலருக்கு இணையான இந்திய ரூபாய்  மதிப்பு வெள்ளிக்கிழமை யன்று 86 ரூபாய் என்ற அளவிற்கு இறங்கி யுள்ளது.  வியாழனன்று ரூபாய் மதிப்பானது, அதன் முந்தைய நாள் நிலவரத்திலிருந்து 17 காசுகள் சரிந்து, 85 ரூபாய் 86 காசுகளாக இருந்தது. இது வெள்ளிக்கிழமையன்று மேலும் 14 காசுகள் சரிந்து 86 ரூபாய் என்ற அளவிற்கு வீழ்ச்சி அடைந்துள்ளது.  இந்திய பங்குச் சந்தைகளிலிருந்து, அந்நிய முதலீடுகள் வெளியேற்றம் தொடர்ந்து வருகிறது.  இதனால், பங்குச் சந்தைக் குறியீடு களான நிப்டி மற்றும் சென்செக்ஸ் ஆகியவை தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வருகின்றன. “வெளிநாட்டில் கச்சா எண்ணெய் விலை உயர்வு மற்றும் உள்நாட்டு பங்குச் சந்தை களில் எதிர்மறை உணர்வு ஆகியவை இந்திய நாணயத்தின் மதிப்பைக் குறைக்கின்றன” என்று அந்நிய செலாவணி வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.தெலுங்கானாவில் கோர விபத்து:  4 தொழிலாளர்கள் பலிதெலுங்கானா மாநிலம் சூர்யா பேட்டை அருகே வியாழக்கிழமை நள்ளிரவு ஹைதராபாத் – கம்மம் தேசிய நெடுஞ்சாலையில் ஓய்வு எடுப்ப தற்காக லாரியை நிறுத்தி வைத்து, ஓட்டுநர் ஓய்வு எடுத்தார். அப்பொழுது ஒடிசாவில் இருந்து ஹைதராபாத் நோக்கி வந்து கொண்டிருந்த பேருந்து லாரி மீது அதிவேகத்தில் மோதியது. இந்த கோர விபத்தில் சிக்கி சம்பவ இடத் திலேயே 4 தொழிலாளர்கள் உயிரிழந்த னர். படுகாயமடைந்த 17 தொழிலாளர் கள் சிகிச்சைக்காக அருகில் உள்ள  மருத்துவமனைகளில் அனுமதிக்கப் பட்டுள்ளனர். அதில் 9 தொழிலாளர் களின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக செய்திகள் வெளியாகி யுள்ளன. இதனால் உயிரிழப்பு எண்ணிக்கை உயரும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.“சனாதனம் மீது மரியாதை கொண்டவர்கள் மட்டுமே கும்பமேளாவுக்கு வர வேண்டுமாம்”உத்தரப்பிரதேசத்தின் அலகா பாத்தில் 12 ஆண்டுக்கு ஒரு முறை நடைபெறும் மகா கும்பமேளா ஜனவரி 13ஆம் தேதி துவங்குகிறது. கும்பமேளா விழா அலகாபாத், ஹரித்வார் (உத்தரகண்ட்), உஜ்ஜைனி (மத்தியப்பிரதேசம்), மற்றும் நாசிக் (மகாராஷ்டிரா) ஆகிய 4 இடங்களில் நடத்தப்படுகிறது. அதிக மக்கள் கூடும் இடமாக இருப்பதால் அலகாபாத்தில் நடைபெறும் கும்பமேளா தான் பிரபல மாக உள்ளது. ஆனால் இந்த மகா கும்பமேளாவில் முஸ்லிம்கள் எவரும் கடைகளை நடத்தக் கூடாது என துறவிகளின் சபைகளான அகாடாக்கள் எச்சரிக்கை விடுத்துள்ளன. மேலும் மகா கும்பமேளாவில் முஸ் லிம்களுக்கு இடமில்லை என்ற பேச்சுக் களும் எழுந்தன. இந்நிலையில், தனியார் தொலைக் காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்ற உத்தரப்பிர தேச முதல்வர் ஆதித்யநாத்திடம் கும்ப மேளா திடலில் முஸ்லிம்களின் அனுமதி குறித்த அவரிடம் கேள்வி எழுப்பப் பட்டது. அதற்கு அவர் அளித்த பதிலில், “தம்மை ஒரு இந்தியன் என எண்ணுபவர்களும், சனாதனம் மீது மரி யாதை கொண்டவர்களும் கும்பமேளா வுக்கு வரலாம். முஸ்லிம் மக்கள் தங்கள் கும்பமேளாவில் பங்கேற்பது ஒன்றும் பிரச்சனை இல்லை. கலாச்சாரத்தின்படி கும்பமேளாவின் சங்கமத்தில் புனித நீராடல் செய்ய விரும்பி வந்தால் எங்க ளுக்கு எந்த பிரச்சனையும் இல்லை” என மழுப்பலாகக் கூறினார்.பாஜக ஆளும் உ.பி.,யில் கொடூரம் 3 பெண் குழந்தைகள் உட்பட 5 பேர் அடித்துக் கொலைலக்னோ பாஜக ஆளும் மாநிலங்கள் குற்றச் சம்பவங்களின் கூடாரம் என்பது நாடறிந்த விஷயம் ஆகும். இந்த கூடாரத்தின் தலைமையகமாக உத்தரப்பிர தேச மாநிலம் உள்ளது.  உத்தரப்பிரதேசத்தில் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றச்சம்பவங் கள் இல்லாத நாட்களே இல்லாத சூழல் உள்ளது. இந்நிலையில், அம்மாநிலத்தின் முக்கிய நகரான மீரட்டில் 5 பேர் அடங்கிய ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் புதன்கிழமை யில் இருந்து காணாமல் போனதாக அண்டை வீட்டார் காவல்துறையினருக்கு தகவல் தெரி வித்தனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் காணாமல் போயிருந்த குடும்பத்தினரின் பூட்டியிருந்த வீட்டின் கூரை வழியாக உள்நுழைந்த போது  5 பேரும் சடலங்களாகக் கிடப்பது தெரிய வந்தது. பெண் குழந்தைகளின்  தலையில் பலத்த காயம் உயிரிழந்தவர்களின் 3 பெண் குழந்தை களும் (10 வயதிற்குட்பட்டவர்கள்) பெட்டிக் குள் உயிரிழந்த நிலையில் கிடந்தனர்.  உயிரிழந்து கிடந்த 5 பேரின் தலையிலும் பலத்த காயம் இருப்பதும் தெரியவந்தது. தலையில் பலமாக தாக்கியதால் 5 பேரும் உயிரிழந்துள்ளனர் என காவல்துறை விசார ணையில் தெரியவந்துள்ளது.  உடற்கூறாய்வுக்காக 5 பேரின் உடல் களும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதால் அறிக்கை வெளிவந்தவுடன்தான் உண்மை தெரிய வரும் என்று மீரட் மாவட்ட கண்காணிப் பாளர் கூறியுள்ளார். இரக்கமற்ற கொலை இந்த கொடூர கொலை நாட்டையே உலுக்கியுள்ளது. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேரின் தலையில் இரும்பு கம்பியால் தாக்கப்பட்டது போல பலத்த காயங்கள் ஏற் பட்டுள்ளன.  விரோதம், திருட்டு எதுவென்றாலும் சரி 10 வயதிற்குட்பட்ட 3 குழந்தைகளின் தலை  நசுங்கும் அளவிற்கு கொடூரத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இது இரக்கமற்ற கொலையாகும். ஆனால் இந்த கொடூரச் சம்பவம் தொடர்பாக உத்தரப்பிரதேச மனித உரிமைகள் ஆணையம் அமைதி காப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.சீமானுக்கு ஜனநாயக மாதர் சங்கம் கண்டனம்சென்னை,ஜன.10- தந்தை பெரியார் குறித்து அவதூறாக பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சங்கத்தின் மாநிலத் தலைவர் எஸ்.வாலண்டினா, மாநிலப் பொதுச்செயலாளர் அ.ராதிகா ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு: நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பத்திரிக்கையாளர் சந்திப்பு ஒன்றில் பெரியார் பேசியதாக உண்மைக்கு புறம்பாக, பெரியார் மீது அவதூறு பரப்பும் வகையில் பேசி உள்ளதை அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் வன்மையாக கண்டிக்கிறது.  தமிழ்நாட்டில் பெண்ணுரிமை, சமத்துவம், பெண் சுதந்திரம் குறித்து எந்தவித நவீன சாதனங்களும் இல்லாத காலத்தில் தன்னுடைய எழுத்து ,பேச்சு, மூலமாக சமூக சீர்திருத்த கருத்துக்களை தமிழ்நாட்டின் மூலை முடுக்குகளில் எல்லாம் சென்று பரப்புரை செய்த பெரியார். பெரியார் எழுதி இருப்பதாக சீமான் குறிப்பிட்டிருக்கக் கூடிய பேச்சு எந்த இடத்திலும் விடுதலை நாளேட்டில் இடம் பெறவில்லை என்பதை,வரலாற்று ஆவணங்கள் நிரூபித்துள்ளன.  சீமானின் இந்த பேச்சு தமிழகப் பெண்கள் மத்தியில் கடும் அதிருப்தியையும், கோபத்தையும், ஏற்படுத்தி உள்ளது. உடனடியாக சீமான்  தனது பேச்சை திரும்பப் பெற வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.பொங்கல் பணம் குறித்து நிதி அமைச்சர் விளக்கம்சென்னை, ஜன.10- பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் குடும்ப அட்டைதாரர் களுக்கு பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. முந்தைய ஆண்டுகளில் பொங்கல் பரிசு தொகுப்புடன் பணம் வழங்கப்பட்டு வந்த நிலையில், இந்த ஆண்டும் ரூ.1,000 பணம் கொடுக்கப்படும் என மக்கள் எதிர்பார்ப்புடன் இருந்தனர். இந்நிலையில், பொங்கல் பரிசுத் தொகுப்பில் ஏன் ரூ.1000 பணம் வழங்கப்படவில்லை? என்று நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தில் உறுப்பினர்கள் பலரும் கேள்வி எழுப்பினர். இதற்கு நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம் அளித்தார். அவர் கூறுகையில்,  “பொங்கல் பரிசுத் தொகுப்புக்காக தமிழ்நாடு அரசு ரூ.280 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. புயல், வெள்ள நிவாரணப் பணிகளுக்கு ஒன்றிய அரசிடம் ரூ.37,000 கோடி கேட்கப்பட்டது. ஆனால், ரூ.276 கோடி மட்டுமே கிடைத்தது. பள்ளிக்கல்வித்துறைக்கு வழங்க வேண்டிய நிதியை ஒன்றிய அரசு இன்னும் தரவில்லை. இதனால், மாநில அரசின் நிதியைக் கொண்டே அவை ஈடு கட்டப்படுகின்றன. இந்த காரணங்களால் தான் பொங்கல் பரிசுத் தொகுப்பில் ரூ.1,000 வழங்க முடியவில்லை.” என்று தெரிவித்தார்.முன்னாள் எம்எல்ஏவை விடுவித்த உத்தரவு ரத்துசென்னை,ஜன.10- சொத்துக்குவிப்பு வழக்கில், முன்னாள் எம்எல்ஏ ஞானசேகரன் மற்றும் அவரது மனைவியை விடுவித்து வேலூர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது. லஞ்ச ஒழிப்புத்துறை தாக்கல் செய்த மறு ஆய்வு மனு மீதான விசாரணையில் சென்னை  உயர்நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. வழக்கில் குற்றச்சாட்டுகளை பதிவு செய்து விசாரணையை தொடர வேண்டும் என வேலூர் நீதிமன்றத்திற்கு நீதிபதி வேல்முருகன் உத்தரவிட்டுள்ளார்.3 மடங்காக உயர்ந்த விமானக் கட்டணம்மதுரை,ஜன.10- பொங்கல் பண்டிகை யை முன்னிட்டு விமானக் கட்டணம் 3 மடங்கிற்கும் மேலாக உயர்ந்துள்ளது. இதனால் பயணிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். பொங்கல் பண்டிகை ஜனவரி 14 அன்று  கொண்டா டப்படும் நிலையில்,  சென்னையில் வசிக்கும் பலர் தங்களது சொந்த ஊருக்கு செல்கின்றனர். இதனைப் பயன்படுத்தி கொள்ளை லாபம் சம்பாதிக்க விமான நிறுவனங்கள் கட்டணத்தை பல மடங்கு அதிகரித்துள் ளன. சென்னை-மதுரைக்கு வழக்கமான நாட்களில் விமானக் கட்டணம் ரூ.4,300 வசூலிக்கப்படும்.டங்ஸ்டன் போராட்ட வழக்குகளை ரத்து செய்ய பரிசீலனை முதல்வர் ஸ்டாலின் உறுதிமதுரை மாவட்டம் அரிட்டாபட்டி உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்ட கிராமங்களில் டங்ஸ்டன் சுரங்கத் திட்டத்தை எதிர்த்து நடந்த போராட்டத்தின்போது 5,000 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்குகளை ரத்து செய்யக்கோரி எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி சட்டசபையில் கோரிக்கை வைத்தார். பதிலளித்த முதல்வர் மு.க.ஸ்டாலின், மாநில உரிமையைப் பாதிக்கும் இத்திட்டத்தை அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் ஆதரித்தது குறித்து சுட்டிக்காட்டி, போராட்டக்காரர்கள் மீதான வழக்குகளை ரத்து செய்வது குறித்து பரிசீலிக்கப்படும் என உறுதியளித்தார்.ஸ்மார்ட் மீட்டர் பொருத்திய பின் மாதாந்திர மின்கட்டண வசூல் அமைச்சர் செந்தில்பாலாஜி அறிவிப்புதேர்தல் வாக்குறுதியின்படி மாதாந்திர மின்கட்டண வசூல் முறையை அமல்படுத்தக் கோரி எதிர்க்கட்சிகள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, தற்போது நடைபெற்றுவரும் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் பணிகள் முடிந்தவுடன் மாதாந்திர கட்டண வசூல் முறை அமல்படுத்தப்படும் என்றும், தமிழகத்தில்தான் மின்கட்டணம் மிகக் குறைவாக வசூலிக்கப்படுவதாகவும் தெரிவித்தார்.சாதிவாரி கணக்கெடுப்பு அதிகாரம் ஒன்றிய அரசுக்கே உள்ளது முதல்வர் ஸ்டாலின் விளக்கம்சட்டமன்றத்தில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில், சாதிவாரி கணக்கெடுப்பை மாநில அரசே நடத்த வேண்டும் என பாமக உறுப்பினர் ஜி.கே.மணி கோரிக்கை வைத்தார். பதிலளித்த முதல்வர், இது ஒன்றிய அரசின் அதிகார வரம்பில் உள்ள விஷயம் என்றும், பீகார் மாநில அரசின் முயற்சி வெற்றி பெறவில்லை என்றும் சுட்டிக்காட்டி, தொடர்ந்து ஒன்றிய அரசிடம் வலியுறுத்தப்படும் என உறுதியளித்தார்.நீட் தேர்வு குறித்து சட்டமன்றத்தில் கடும் வாக்குவாதம் முதல்வர்-எதிர்க்கட்சித் தலைவர் இடையே பரபரப்புசட்டமன்றத்தில் நீட் தேர்வு விலக்கு குறித்து முதல்வர் ஸ்டாலினுக்கும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. நீட் விலக்கு வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை என்ற எதிர்க்கட்சியின் குற்றச்சாட்டுக்கு பதிலளித்த முதல்வர், இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வு விலக்கு பெறப்படும் என்று கூறியதாகவும், அதிமுக ஆட்சியில்தான் நீட் தேர்வு அமலுக்கு வந்ததாகவும் சுட்டிக்காட்டினார்.உள்ளாட்சி : தனி அதிகாரி நியமன மசோதாவுக்கு எதிர்ப்பு எதிர்க்கட்சிகள் கடும் அதிருப்தி தமிழகத்தின் 28 மாவட்டங்களில் உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவிக்காலம் (ஜனவரி 5) முடிவடைந்ததை அடுத்து, உள்ளாட்சி அமைப்புகளுக்கு தனி அதிகாரிகளை நியமிக்கும் மசோதாவை அமைச்சர் ஐ.பெரியசாமி சட்டமன்றத்தில் தாக்கல் செய்தார். இம்மசோதாவுக்கு காங்கிரஸ், அதிமுக, பாமக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் உடனடியாக எதிர்ப்பு தெரிவித்தன.போராட்ட அனுமதி விவகாரத்தில் சட்டமன்றத்தில் பரபரப்பு முதல்வர் - எதிர்க்கட்சித் தலைவர் இடையே வாக்குவாதம்எதிர்க்கட்சிகளின் போராட்டங்களுக்கு அனுமதி மறுக்கப்படுவதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டினார். பதிலளித்த முதல்வர் மு.க.ஸ்டாலின், அனுமதியற்ற இடங்களில் போராட்டம் நடத்தினால் மட்டுமே நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும், இது அதிமுக ஆட்சிக் காலத்திலும் நடந்ததே என்றும் சுட்டிக்காட்டினார். பேரவைத் தலைவர் அப்பாவு, நேரலை ஒளிபரப்பு தொழில்நுட்பக் கோளாறால் மட்டுமே தடைப்பட்டதாக விளக்கமளித்தார்.
2025-01-11 02:04:52.525874
ஜனவரி 10, 2025
பெண்களின் பாதுகாப்பில் ஒருபோதும் சமரசம் இல்லை
மாநிலம் - தமிழ்நாடு
நமது நிருபர்
https://theekkathir.in/News/states/tamil-nadu/women's-safety-is-never-compromised
தமிழ்
UTF-8
சென்னை, ஜன. 10 - பெண்களின் பாதுகாப்பிற்கென தமிழக சட்டப்பேரவையில் 2 புதிய சட்டத் திருத்த மசோதாக்களை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தாக்கல் செய்தார். அப்போது முதல்வர் பேசியதாவது: பாதுகாப்பான மாநிலம் பெண்களுக்குப் பாதுகாப்பான மாநிலமாக தமிழகம் திகழ்ந்து கொண்டி ருக்கிறது. பெண்கள் அதிகம் வேலைக்கு  செல்லும் மாநிலமாகவும், அதிகமான சமூ கப் பங்களிப்பு செய்யும் மாநிலமாகவும் தமிழகம் வளர்ந்து வருகிறது.  சமரசம் இல்லை பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதிலும், பெண்களுக்கு எதிரான பாலி யல் வன்கொடுமைகளில் ஈடுபடுவோர் மீது தயவு தாட்சண்யமின்றி நடவடிக்கை எடுத்து சட்டப்படி அவர்களுக்கு கிடைக்க வேண்டிய தண்டனைகளை வாங்கித் தருவதிலும் உறுதியோடு தமிழக அரசு செயல்பட்டு வருகிறது. கடும் எச்சரிக்கை பெண்களுக்கு எதிரான குற்றங்களை இரும்புக்கரம் கொண்டு அடக்கி, ஒடுக்கி வருகிறது இந்த அரசு. 86 விழுக்காட்டுக்கும் மேலான குற்றங்களில் 60 நாட்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.  அனைத்து பெண்களின் பாதுகாப்பை யும் உறுதி செய்யும் அரசாக தமிழக அரசு செயல்பட்டு வருகிறது. பெண்களுக்கு இழைக்கப்படும் பாலியல் குற்றம் என்பது யாராலும் மன்னிக்க முடியாத குற்றம்.  இத்தகைய கொடூர குற்றங்களில் ஈடுபடுவோருக்கு வழங்கப்பட வேண்டிய தண்டனை என்பது, இத்தகைய செயல் களில் ஈடுபடுவோருக்கான கடும் எச்சரிக்கையாக இருந்திட வேண்டும். இந்த வகையில் பிஎன்எஸ் சட்டத்தின் கீழும், நமது மாநில அரசின் சட்டங்களின் கீழும், ஏற்கெனவே இத்த கைய குற்றங்களுக்கு தண்டனைகள் வரையறுக்கப்பட்டு இருந்தாலும், இத் தண்டனைகளை மேலும் கடுமையாக்கிட வேண்டிய அவசியம் உள்ளதாகவே இந்த அரசு கருதுகிறது.  அந்த அடிப்படையில், இத்தகைய குற்றங்களுக்கான தண்டனைகளை மேலும் கடுமையாக்குவதற்கு பிஎன்எஸ் மற்றும் பிஎன்எஸ்எஸ் சட்டங்களின் மாநில சட்டத் திருத்தத்துக்கும், தமிழ்நாடு 1998 ஆம் ஆண்டு பெண்ணுக்கு துன்பம் விளைவித்தலை தடை செய்யும் சட்டத் திருத்தத்துக்கு, சட்ட முன்வடிவு களை பேரவையின் ஒப்புதலுக்காக முன்வைக்கிறேன்.  அனைத்து உறுப்பினர்களும் இதற்கு ஒப்புதல் அளிக்க வேண்டும்.  இவ்வாறு முதல்வர் கேட்டுக்கொண் டார்.
2025-01-11 02:04:52.526841
ஜனவரி 10, 2025
தீக்கதிர் முக்கிய செய்திகள்
மாநிலம் - தமிழ்நாடு
நமது நிருபர்
https://theekkathir.in/News/states/tamil-nadu/the-maha-kumbh-mela-conducted-by-the-bjp-government-in-uttar-pradesh-is-a-disaster
தமிழ்
UTF-8
உத்தரப்பிரதேசத்தில் பாஜக அரசு நடத்தும் மகா கும்பமேளாவில் பாவம் செய்தவர்கள்தான் செல்வார்கள். பாவம் செய்தவர்கள் செல்லும் இடம் தான் மகா கும்பமேளா. அதனால் வேறு யாரும் கும்பமேளா நிகழ்வில் பங்கேற்க வாய்ப்பில்லை.உமர் அப்துல்லா கூறுவது போல இந்தியா கூட்டணி என்பது வெறும் தேர்தலுக்கானது மட்டும் அல்ல. நாட்டுக்கானது ; ஜனநாயகத்தை பாதுகாப்பதற்கான  கூட்டணி ஆகும். மாநில அரசியல் களங்களால் சின்னஞ் சிறிய பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளதே தவிரே இந்தியா கூட்டணிக்குள் வேறுறொன்றும் இல்லை.தில்லி சட்டமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணியின் எந்த கட்சியும் ஆம் ஆத்மிக்கு அதிகாரப்பூர்வ ஆதரவை வழங்கவில்லை. தில்லி மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள் என்பதை கெஜ்ரிவால் உணர்ந்ததால், அவர் தனக்கு ஆதாயம் கிடைக்க வேண்டும் என்பதற்காக இந்தியா கூட்டணி பிம்பத்தை கையிலெடுக்கிறார்.இந்தியா கூட்டணி தேசிய அளவிலானது. ஆனால் மாநிலங்களின் அரசியல் நிலைமை முற்றிலும் வேறுபட்டது. இதுதான் அடிப்படை மந்திரம். இந்தியா கூட்டணி என்பது ஒரு சிந்தனை. அந்த சிந்தனையின் எண்ணம் ஒருபோதும் முடிவுக்கு வராது.பீகார் மாநிலம் பாட்னாவில் ஜனவரி 18ஆம் தேதி அரசியலமைப்பு பாதுகாப்பு மாநாடு நடைபெறும் என மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி அறிவித்துள்ளார். “ஒவ்வொரு இந்தியனுக்கும் அரசியலமைப்பின் கீழ் நீதி பெறும் உரிமை உண்டு. அரசியலமைப்பை பாதுகாப்பது நம் அனைவரின் கடமையாகும். எங்களுடன் சேருங்கள்; நீதியின் போர்வீரராகுங்கள்” என பொதுமக்களுக்கு ராகுல் காந்தி அழைப்பு விடுத்துள்ளார்.“ஜார்க்கண்டில் பாஜக விரைவில் ஆட்சிக்கு வரும்” என முன்னாள் முதல்வர் ரகுபர் தாஸ் திடீரென கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஜார்க்கண்டில் ஆட்சியை கவிழ்க்க பாஜக எதும் சதித்திட்டம் தீட்டியுள்ளதா? என்ற சந்தேகம் கிளம்பியுள்ளது.“தில்லி சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு பாஜக வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கும் வேலையை தொடங்கிவிட்டது” என ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம் சாட்டியுள்ளார்.ஊழியர்கள் வாரத்துக்கு 90 மணி நேரம் வேலை செய்ய வேண்டும் என எல் அண்ட் டி நிறுவன தலைவர் எஸ்.என்.சுப்ரமண்யத்தின் கருத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள சிவசேனா (உத்தவ்) எம்.பி., பிரியங்கா சதூர்வேதி, “இது நவீன யுக அடிமைத்தனத்தை அரங்கேற்றும் முயற்சி” என்று தெரிவித்துள்ளார்.“ஆந்திராவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்பும், திருப்பதியில் விஐபிகள் மீதான கவனத்தை வளர்ப்பதன் மூலம் சாமானிய பக்தர்களை புறக்கணிக்கும் போக்கு தொடர்கிறது” என திருப்பதி தேவஸ்தான அதிகாரிகளை ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் குற்றம்சாட்டியுள்ளார்.கட்சித் தலைவர் பதவியிலிருந்து சுக்பீர் சிங் பாதலின் ராஜினாமாவை சிரோமணி அகாலி தளத்தின் (எஸ்ஏடி) செயற்குழு வெள்ளிக்கிழமை ஏற்றுக்கொண்டதாக செய்திகளை வெளியாகியுள்ளன.“இந்தியாவின் விண்வெளிப் பார்வையில் தொழில்துறைகளுக்கு முக்கிய பங்கு உண்டு” என இஸ்ரோ தலைவர் சோம்நாத் கூறியுள்ளார்.போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக பாஜக ஆளும் திரிபுரா மாநிலத்தின் 7 இடங்களில் அமலாக்கத்துறை வெள்ளிக்கிழமை அன்று சோதனை நடத்தியது.
2025-01-11 02:04:52.527506
ஜனவரி 10, 2025
நக்சல்கள் விவகாரத்தில் கர்நாடக அரசின் முயற்சிக்கு குவியும் பாராட்டு
மாநிலம் - தில்லி
நமது நிருபர்
https://theekkathir.in/News/states/delhi/modi-government's-attempt-to-capture-the-hill-area
தமிழ்
UTF-8
பெங்களூரு காங்கிரஸ் ஆளும் கர் நாடக மாநிலத்தின் மேற்கு தொடர்ச்சி மலை அடிவா ரங்களில் சிக்மகளூரு, குடகு, உடுப்பி, ஷிவமொக்கா உள்ளிட்ட 4 மாவட்டங்கள் உள்ளன. இந்த 4 மாவட்டங்களும் நக்சல் நடமாட்டம் உள்ள பகுதிகளாகும். நக்சல் அமைப்பின் தலைவராக இருந்த உடுப்பி மாவட்டம் கார்கலா பகுதி யைச் சேர்ந்த விக்ரம் கவுடா, கடந்த டிசம்பர் மாதம் “நக்சல் ஒழிப்பு படை யினர்” என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார். அவருடன் இருந்தவர்கள் வனப்பகுதிக்குள் தப்பிச் சென்றனர். இந்நிலையில், தப்பி சென்ற வர்கள் மீது மீண்டும் தாக்குதல் நடத்தாமல் சரணடைந்தால் மறு வாழ்வுக்கு உதவி செய்வதாக கர்நாடக அரசு அறிவித்தது. 5 நாட் களுக்கு முன் மாநில அரசு சார்பில் முற்போக்கு சிந்தனையாளர்கள், முன்னாள் நக்சல் குழுவினர் மேற்கு  தொடர்ச்சி வனப்பகுதிக்குள் சென்று 6 நக்சல்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.சித்தராமையாவுக்கு பாராட்டுஇந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டதை அடுத்து 6 நச்சல்களும் சரணடைய ஒப்புக் கொண்டனர். இதன்படி புதன்கிழ மை இரவு 7:15 மணிக்கு பெங்களூ ரில் உள்ள முதல்வரின் அலுவல கமான கிருஷ்ணா இல்லத்தில் சித்தராமையா முன்னிலையில் 6 நக்சல்களும் சரணடைந்தனர். சரணடைந்தவர்களில் தமிழ் நாட்டைச் சேர்ந்த வசந்த் (வேலூர் மாவட்டம் - ஆற்காடு) என்பவரும் அடங்குவார். மோதல் மற்றும் தாக்குதலை கையிலெடுக்காமல் முற்போக்கு சிந்தனையாளர்கள், முன்னாள் நக்சல் குழுவினர் மூலம் பேச்சு வார்த்தை நடத்தி நக்சல்களுக்கு மறுவாழ்வு அளிக்க ஏற்பாடு செய்த கர்நாடக முதல்வர் சித்த ராமையாவின் முயற்சிக்கு நாடு  முழுவதும் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.மோடி அரசின்  முயற்சிக்கு செக்பாஜக ஆளும் சத்தீஸ்கர் மாநி லத்தின் மலைப் பகுதிகள் வள மிக்கவை ஆகும். பழங்குடிகளின் கட்டுப்பாட்டில் உள்ள மலைப் பகுதியை கைப்பற்றி  தனது நண்பர் அதானிக்கு தாரை வார்க்கவே “நக்சல் வேட்டை” என்ற பெயரில் அங்கு வாழும் பழங்குடி மக்களை மத்தியப் படைகள் மூலம் மோடி அரசு கொன்று குவித்து  வரு கிறது. இந்நிலையில், கர்நாடக அரசைப் போல அமைதியான முறையில் நக்சல் வேட்டையில் ஈடுபட முயற்சி மேற்கொள்ள வேண்டும் என்றும், அதிக உயி ரிழப்பு ஏற்படுவதால் நக்சல் மற்றும் மாவோயிஸ்ட் வேட்டையை கைவிட்டு அமைதி மற்றும் மறு வாழ்வுக்கான பேச்சுவார்த்தையே சிறந்தது என நாடு முழுவதும் அனைத்து தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். அதானிக்காக மலைப்பகுதியை கைப்பற்றும் மோடி அரசின் முயற்சிக்கு கர்நாடக காங்கிரஸ் அரசு தனது நல்லெண்ண முயற்சி மூலம் செக் வைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
2025-01-11 02:04:52.528036
ஜனவரி 10, 2025
மகாராஷ்டிராவில் முதல் முறையாக பெண் விவசாயிகள் மாநில மாநாடு
மாநிலம் - தில்லி
நமது நிருபர்
https://theekkathir.in/News/states/delhi/first-ever-women-farmers-state-conference-in-maharashtra
தமிழ்
UTF-8
515 பிரதிநிதிகள்; அசோக் தாவ்லே, மரியம் தாவ்லே பங்கேற்புகடந்த வாரம் அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் மகாராஷ்டிரா மாநிலக்குழு, நாசிக் நகரில் உள்ள தோழர் கோதாவரி பருலேகர் மண்டபத்தில் பெண் விவசாயிகளின் மாநில மாநாட்டிற்கு ஏற்பாடு செய்தது.  பெண் விவசாயிகளுக்காக மாநில மாநாடு நடத்துவது இதுவே முதல்முறை ஆகும். மகாராஷ்டிராவின் 15 மாவட்டங் களில் இருந்து மொத்தம் 515 பிரதி நிதிகள் (443 பெண்கள் மற்றும் 72 ஆண்கள்) ஆர்வத்துடன் பங் கேற்றனர். தானே-பால்கர் (155), அகமதுநகர் (109) மற்றும் நாசிக் (93) ஆகிய மூன்று மாவட்டங் களில் இருந்து அதிக அளவில் விவசாயப் பெண்கள் அணிதிரண்டனர். கொடியேற்ற நிகழ்விற்கு பிறகு அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவர் உமேஷ் தேஷ்முக் வரவேற்பு உரையாற்றினார். தொடர்ந்து மாநில பொதுச் செயலாளர் டாக்டர் அஜித் நாவலே மாநாட்டின் நோக்கம் தொடர்பாக விளக்க உரை யாற்றினார்.மரியம் தாவ்லேமாநாட்டை வழிநடத்தும் தலை மைக்குழுவில் 5 பெண்கள் இடம் பெற்றனர். மாநாட்டை அகில இந்திய மாதர் சங்கப் பொதுச் செய லாளர் மரியம் தாவ்லே தொடங்கி வைத்தார். மகிளா கிசான் அதிகார மஞ்ச் (மகம்) சீமா குல்கர்னி  கலந்து கொண்டு உரையாற்றி னார். அகில இந்திய விவசாயிகள் சங்க மாநிலக்குழு உறுப்பினர் டாக்டர் கவிதா வேர் 17 அம்ச கோரிக்கை தீர்மானத்தை முன் வைத்தார். இந்திய தொழிற் சங்கங்களின் மையம், அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம், இந்திய மாணவர்  மற்றும் வாலிபர் சங்க  பிரதிநிதிகள் உட்பட விவசாயி களின் சங்கம் சார்பாக 21 பெண் பிரதிநிதிகள், கோரிக்கைகள் தீர்மானத்தின் மீது முக்கிய ஆலோசனைகளை வழங்கினர். மாநாட்டை சிஐடியு துணைத் தலைவர் டாக்டர் டி.எல்.காரட், சிபி எம் எம்எல்ஏ வினோத் நிகோல் (தஹானு), சிஐடியு உழைக்கும் மகளிரணித் தலைவர்கள் சுபா ஷமிம், ஆனந்தி அவகாடே, மாதர் சங்க மாநிலத் தலைவர் நசீமா  ஷேக், மாணவர் சங்க மாநில தலை வர் சோம்நாத் நிர்மல், வாலிபர் சங்க மாநிலச் செயலாளர் தத்தா சவான் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.  சிபிஎம் அரசியல் தலைமைக் குழு உறுப்பினரும், அகில இந்திய விவசாயிகள் சங்க தலைவரு மான அசோக் தாவ்லே நிறைவுரை யாற்றினார். இந்த மாநாடு குறித்த சிறு புத்தகத்தை வெளியிடவும், மகாராஷ்டிரா கிராமங்களில் கோரிக்கை தீர்மானத்தை பிர பலப்படுத்தவும், மாவட்ட அள விலான பெண் விவசாயிகளின் மாநாடுகளை நடத்தவும், கோரிக் கைகள் தீர்மானத்தில் குறிப்பிடப் பட்டுள்ள பிரச்சனைகள் குறித்து போராட்டங்களை நடத்தவும் முடிவு செய்யப்பட்டது. மிகுந்த உற்சாகத்திற்கு மத்தியில் மாநாடு நிறைவடைந்தது.
2025-01-11 02:04:52.528568
ஜனவரி 10, 2025
நீதிபதி நியமன பரிந்துரைகள் சமூகநீதியைக் காப்பதாக அமைய வேண்டும்
மாநிலம் - தமிழ்நாடு
நமது நிருபர்
https://theekkathir.in/News/states/tamil-nadu/to-the-collegium--all-india-bar-association-request
தமிழ்
UTF-8
சென்னை, ஜன. 10 - புதிய நீதிபதிகள் நியமனத்திற்கான பரிந்துரைகள், சமூகநீதியைக் காப்பதாகவும் அமைய வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்ற கொலீஜியத்திற்கு அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கம் (AILU) கோரிக்கை விடுத்துள்ளது. இதுதொடர்பாக, அகில இந்திய வழக்கறிஞர் சங்கத்தின் மாநிலத் தலைவர் ஏ. கோதண்டம், மாநிலப் பொதுச்செயலாளர் எஸ். சிவகுமார் ஆகியோர் அறிக்கை ஒன்றை விடுத்துள்ளனர். அதில் அவர் கூறியிருப்பதாவது: இந்தாண்டு மட்டும்  10 நீதிபதிகள் ஓய்வு சென்னை உயர் நீதிமன்றத்திற்கு நிர்ணயிக்கப்பட்ட 75 நீதிபதி பணி இடங்களில் 10-க்கும் மேற்பட்ட இடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. மேலும் இந்த ஆண்டு 10 நீதிபதிகள் வரை ஓய்வுபெறும் நிலையில் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி உள்ளிட்ட 2 மூத்த நீதிபதிகளை கொண்ட கொலீஜியம் சென்னை உயர் நீதிமன்றத்திற்கான புதிய நீதிபதிகளை நியமனம் செய்ய பரிந்துரை செய்ய இருக்கிறது.  நீதிபதிகள் நியமனத்தில் வெளிப்படைத் தன்மையும், நியமிக்கப்படக் கூடிய நீதிபதிகள் நேர்மையானவர்களாகவும், திறமையானவர்களாகவும், அரசியல் அமைப்புச் சட்டத்தின் மாண்புகளை காக்கக் கூடியவர்களாகவும் இருக்க வேண்டும் என்று அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.முன்னேறிய சாதியினருக்கே  தரப்படும் முன்னுரிமைஉயர் நீதிமன்ற, உச்ச நீதிமன்ற நீதிபதி கள் நியமனத்தில் உயர்சாதியை சேர்ந்த வர்களுக்கே அதிகப்படியான முன் உரிமை தரப்படுகிறது என்கிற விமர்சனம் நீண்ட காலமாக இருந்து வருகிறது. 2023-ஆம் ஆண்டுக் கணக்கின் படி, உச்சநீதிமன்றத்தில் உள்ள 34 நீதிபதிகளில் முன்னேறிய சாதி யைச் சேர்ந்தவர்கள் 34 சதவிகிதமாக உள்ள னர். இதில் இதுவரை பெரிய மாற்றம் இல்லை.  கடந்த 2023-ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் சட்ட அமைச்சர் வெளியிட்ட தகவலின் படி, கடந்த 2018-ஆம் ஆண்டிலிருந்து கடந்த ஜூலை 2023 வரை நாடு முழுவதுமுள்ள உயர் நீதிமன்றங்களில் நியமிக்கப்படும் நீதிபதிகளில் நான்கில் 3 பேர் உயர்சாதி வகுப்பை சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  பட்டியல், பழங்குடி, சிறுபான்மை, பெண்களுக்கு இடமில்லை இதில் பட்டியல், பழங்குடி பிரிவிலிருந்து 5 சதவிகிதம் பேர் கூட இல்லை என்றும், இதர பிற்படுத்தப்பட்ட பிரிவைச் சேர்ந்தவர்கள் 11.92 சதவிகிதம் பேர், சிறுபான்மையினர் 5.6 சதவிகிதம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது  அந்தந்த பிரிவு மக்கள் தொகையோடு ஒப்பிடும் போது மிகக் குறைவாகும்.  அதே போன்று பெண் வழக்கறிஞர்கள் கடந்த 20  ஆண்டுகளில் வழக்கறிஞர்கள் தொழிலில் ஈடு பட்டு வரும் நிலையில் உச்சநீதிமன்றத்திலும், உயர் நீதிமன்றங்களிலும் போதிய அளவிற்கு பெண்கள் நீதிபதிகளாக நியமிக்கப்படாத சூழலே உள்ளது.சமூகநீதிப் பார்வை  கொலீஜியத்திற்கு அவசியம்இந்திய சமூக அமைப்பில் சாதிய ரீதி யான, மத ரீதியான, பாலின ரீதியான பாகுபாடு களும், ஒடுக்குமுறைகளும் நீண்ட காலமாக இருந்து வரும் நிலையில், அனைத்துப் பிரிவினரும் அரசின் ஜனநாயக அமைப்புகளில் பங்கேற்பது உத்தரவாதப்படுத்தப்படுவதே சரியான ஜனநாயக நடைமுறையாகும். கொலீஜியம் சமூகநீதிப் பார்வையோடு புதிய நீதிபதிகளை பரிந்துரைக்க வேண்டும் என்கிற கோரிக்கை பல்வேறு சமூக, ஜனநாயக அமைப்புக்கள் சார்பில் எழுந்துள்ளது. உயர்நீதிமன்றம், உச்ச நீதிமன்ற நீதிபதி பதவியிடங்கள் அரசியலமைப்பு சட்டத்தால் உருவாக்கப்பட்ட பதவிகள் என்பதால் அதற்கு இடஒதுக்கீடு கிடையாது என்பதால், சமூக நீதியின் அடிப்படையில் நீதிபதிகள் நியமனங் கள் இருக்க வேண்டும் என்கிற ஜனநாயக கோரிக்கை தொடர்ந்து முன் வைக்கப்பட்டு வருகிறது.நம்பகத்தன்மையை பெற வேண்டும்நீதியை வழங்குபவர்களிடையே தங்களை பற்றிய பிரதிபலிப்பை காணும் போது தான் நீதித்துறையை மக்கள் நம்பத் தொடங்கு வார்கள் என்று உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் ஒருமுறை நீதிபதிகள் நியமனங்கள் குறித்து கருத்து தெரிவித்தார். அதன்படி ஜனநாயகத்தில் சமூகத்தின் அனைத்துப் பிரிவினரையும் அதிகாரத்தில் பங்கேற்பதை உத்தரவாதப்படுத்த வேண்டும். சமூகத்தின் அனைத்து பிரிவினரையும் உள்ளடக்கியதாக நீதித்துறை இருப்பதன் மூலமே சமூகத்தில் உள்ள அனைத்துப் பிரிவு மக்களுக்கும் நீதித்துறையின் மீது முழுமையான நம்பிக்கை ஏற்படும்.  வெளிப்படைத்தன்மையுடன் நியமனங்கள் அமைய வேண்டும் உயர் நீதிமன்றத்திற்கு புதிய நீதிபதிகளை தேர்வு செய்யக்கூடிய கொலீஜியம் சுதந்திர மாகவும், வெளிப்படைத் தன்மையோடும் நீதிபதிகள் நியமனத்தில் செயல்பட வேண்டும். கொலீஜியத்தால் பரிந்துரை செய்யப்படும் புதிய நீதிபதிகள் நேர்மையானவர்களாகவும், திறமையானவர்களாகவும், அரசியலமைப்புச் சட்டத்தை காக்கக் கூடியவர்களாகவும் இருக்க வேண்டும். சமூகநீதியைக் காக்கக்கூடிய வகையிலும் புதிய நீதிபதிகளுக்கான பரிந்துரை இருக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற கொலீஜியத்தை அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தின் தமிழ்நாடு மாநிலக்குழு கேட்டுக்கொள்கிறது. இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
2025-01-11 02:04:52.529047
ஜனவரி 10, 2025
சீமானுக்கு ஜனநாயக மாதர் சங்கம் கண்டனம்
மாநிலம் - தமிழ்நாடு
நமது நிருபர்
https://theekkathir.in/News/states/tamil-nadu/democratic-mother-sangh-condemns-seeman
தமிழ்
UTF-8
சென்னை,ஜன.10- தந்தை பெரியார் குறித்து அவதூறாக பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சங்கத்தின் மாநிலத் தலைவர் எஸ்.வாலண்டினா, மாநிலப் பொதுச்செயலாளர் அ.ராதிகா ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு: நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பத்திரிக்கையாளர் சந்திப்பு ஒன்றில் பெரியார் பேசியதாக உண்மைக்கு புறம்பாக, பெரியார் மீது அவதூறு பரப்பும் வகையில் பேசி உள்ளதை அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் வன்மையாக கண்டிக்கிறது.  தமிழ்நாட்டில் பெண்ணுரிமை, சமத்துவம், பெண் சுதந்திரம் குறித்து எந்தவித நவீன சாதனங்களும் இல்லாத காலத்தில் தன்னுடைய எழுத்து ,பேச்சு, மூலமாக சமூக சீர்திருத்த கருத்துக்களை தமிழ்நாட்டின் மூலை முடுக்குகளில் எல்லாம் சென்று பரப்புரை செய்த பெரியார். பெரியார் எழுதி இருப்பதாக சீமான் குறிப்பிட்டிருக்கக் கூடிய பேச்சு எந்த இடத்திலும் விடுதலை நாளேட்டில் இடம் பெறவில்லை என்பதை,வரலாற்று ஆவணங்கள் நிரூபித்துள்ளன.  சீமானின் இந்த பேச்சு தமிழகப் பெண்கள் மத்தியில் கடும் அதிருப்தியையும், கோபத்தையும், ஏற்படுத்தி உள்ளது. உடனடியாக சீமான்  தனது பேச்சை திரும்பப் பெற வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2025-01-11 02:04:52.529550
ஜனவரி 11, 2025
மார்க்சிய தத்துவத்தை செழுமைப்படுத்திய மகத்தான தலைவர் தோழர் ஸ்டாலின் - அ.அன்வர் உசேன்
கட்டுரை
நமது நிருபர்
https://theekkathir.in/News/articles/world/comrade-stalin-was-the-great-leader-who-enriched-the-marxist-philosophy
தமிழ்
UTF-8
தத்துவத்தையும் அதனை முன்னெடுக்கும் தலைவர்கள் குறித்தும் உரையாற்றிய தி.மு.க.வின் துணைப் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஆ.ராசா அவர்கள் மார்க்சியத் தத்துவத்தை நீர்த்து போகச் செய்தவர்களின் பட்டியலில் ஸ்டாலினை யும் குறிப்பிட்டார். மார்க்சியத் தத்துவத்தை செழுமைப்படுத்தி முன்னெடுத்த மகத்தான தலைவர்களில் ஒருவர் ஜோசப் ஸ்டாலின். பின் தங்கிய தேசத்தில் சோசலிச நிர்மாணம்/ தேசிய இனப்பிரச்ச னைகள்/ பாசிச எதிர்ப்புக் கோட்பாடுகள்/ மார்க்சியத் தத்துவத்துக்கு எளி மையான விளக்கங்கள்/ கட்சி அமைப்பு கோட்பாடுகளில் புதிய அணுகு முறைகள் என மார்க்சியத் தத்துவத்துக்கு ஸ்டாலினின் பங்கு குறிப்பிடத் தக்கது. அதனால்தான் காரல் மார்க்ஸ்/ பிரடெரிக் ஏங்கெல்ஸ்/ லெனின் ஆகிய ஆளுமைகளின் பட்டியலில் ஸ்டாலினையும் முன்வைக்கிறோம்.பின் தங்கிய தேசத்தில் சோசலிச நிர்மாணம்சோவியத் புரட்சிக்கு அடித்தளமிட்டவர் தோழர் லெனின் எனில் அந்த மகத்தான புரட்சியை பாதுகாத்து முன்னெடுத்துச் சென்ற பெருமை  தோழர் ஸ்டாலின் அவர்களை சாரும். புரட்சி நடந்த ஏழே ஆண்டுகளில் லெனின் உயிர் நீத்தார். புரட்சிக்கு வெகு வலுவான அடித்தளத்தை லெனின் உருவாக்கியிருந்தார். எனினும் பிரச்சனைகள் ஏராளமாக இருந்தன. மிகமுக்கியமாக சித்தாந்த மோதல்கள் உருவாயின.  ரஷ்யா எனும் பின் தங்கிய தேசத்தில் புரட்சி வெல்வது சாத்தியமா?  பல தேசங்களில் புரட்சி குறுகிய காலத்தில் உருவாகாமல் ரஷ்யா  எனும் ஒரே தேசத்தில் மட்டும் புரட்சி நீடித்து நிற்குமா? இது சாத்திய மில்லை என டிராட்ஸ்கி போன்ற தலைவர்கள் முன்வைத்தனர். சோவியத் புரட்சிக்கு பின்னர் குறுகிய காலத்தில் சில வளர்ந்த தேசங்களில்  குறிப்பாக ஜெர்மனியில் புரட்சி நடக்கும் எனவும் அது சோவியத் புரட்சிக்கு உதவும் எனவும் மதிப்பிடப்பட்டது. ஆனால் அது நடைபெறவில்லை. டிராட்ஸ்கி போன்ற தலைவர்களின் மதிப்பீடுக்கு மாறாக ரஷ்யா எனும் தனி தேசத்தில் புரட்சி சாத்தியம் என்பதை சித்தாந்த மட்டத்திலும் நடை முறையிலும் நிரூபிக்க வேண்டிய கட்டாயம் லெனினுக்கு பின்னர் ஸ்டாலினுக்கு ஏற்பட்டது. ரஷ்ய மக்களின் உதவியுடனும் ரஷ்ய கம்யூ னிஸ்ட் கட்சியின் மிகப் பெரும்பான்மை ஆதரவுடனும் பொருளாதா ரத்தில் ஒரு பின் தங்கிய தேசத்தில் புரட்சி சாத்தியமே என நடைமுறை யிலும் சித்தாந்த அடிப்படையிலும் ஸ்டாலின் சாதித்துக் காட்டினார்.  சித்தாந்தத்தின் வெற்றி என்பது நடைமுறையில் நிரூபிக்கப்படுவது தான் என்பதை ஸ்டாலின் உணர்ந்திருந்தார். எனவே சோசலிச சித்தாந் தத்தை நடைமுறைப்படுத்துவதில் மக்கள் மற்றும் கட்சியின் முழு கவனத்தையும் செலுத்த ஸ்டாலின் உழைத்தார். உற்பத்தி சக்திகளை வளர்த்திட ஸ்டாலின் ஆற்றிய பணிகள் ஈடு இணையற்றவை. திட்ட மிட்ட பொருளாதாரம் எனும் கோட்பாடை சோவியத் ரஷ்யா முதன்முத லில் உலகுக்கு அறிமுகப்படுத்தியது. ஐந்தாண்டுத் திட்டங்கள் தீட்டப் பட்டன. ஐந்தாண்டுகளுக்கு நிர்ணயிக்கப்பட்ட இலக்குகள் நான்கு ஆண்டுகளிலேயே நிறைவேற்றப்பட்டன. 1934ஆம் ஆண்டு ரஷ்யாவின் கடைசி வேலை வாய்ப்பு அலுவலகத்தின் மூடு விழாவிற்கு தலைமை தாங்கிய ஸ்டாலின் பேசினார்: .“முதலாளித்துவ நாடுகளில் மக்கள் வேலைகளை தேடிக்கொண்டுள் ளனர்; ஆனால் ரஷ்யாவில் வேலைகள் மக்களை தேடிக்கொண்டுள் ளன.” திட்டமிட்ட பொருளாதாரமும் ஐந்தாண்டுத் திட்டம் எனும் பொருளா தாரக் கோட்பாடும் ஸ்டாலின் தலைமையில் சோவியத் கம்யூனிஸ்ட் கட்சி முன்னெடுத்த மிகப்பெரிய மார்க்சியப் பொருளாதார நடைமுறை  ஆகும். முதலாளித்துவ உலகம் நெருக்கடியில் திணறிக்கொண்டிருந்த பொழுது சோவியத் யூனியன் சாதனைகளைப் படைத்துக் கொண்டி ருந்தது. பொருளாதாரத்தில் ஒரு பின் தங்கிய தேசத்தில் புரட்சி சாத்தி யமே என நடைமுறையிலும் சித்தாந்த அடிப்படையிலும் நிரூபித்த ஸ்டாலின், மார்க்சிய சித்தாந்தத்தில் புதிய அத்தியாயம் எழுதினார் எனில் மிகை அல்ல. ஸ்டாலின் மார்க்சியத்தை நீர்த்து போகச் செய்ய வில்லை; மாறாக செழுமைப்படுத்தினார்.தேசிய இனப்பிரச்சனைமார்க்சிய சித்தாந்தத்துக்கு ஸ்டாலின் அவர்களின் மிகப்பெரிய பங்களிப்பு “தேசிய இனப்பிரச்சனை” குறித்த கோட்பாடுகள் ஆகும். நவீன வரலாற்றில் தேசம்/ தேசியம்/ தேசிய இனப்பிரச்சனை ஆகி யவை குறித்து ஸ்டாலின் அவர்களின் கோட்பாடு கலங்கரை ஒளி போல அமைந்தது எனில் மிகை அல்ல. ஒரு மக்கள் குழு எப்பொழுது தேசமாக அல்லது தேசிய இனமாக அறியப்படுகிறது? இந்த கேள்வியை எழுப்பி அதற்கு ஸ்டாலின் பதில் தருகிறார்.  ஒரு தேசிய இனத்துக்கு பொதுவான மொழி அவசியம்; அதே சமயத்தில் ஆங்கிலம் எனும் ஒரே மொழியை பேசும் அமெரிக்காவும் பிரிட்டனும் ஏன் ஒரே தேசமாக இல்லை எனும் கேள்வியை எழுப்புகிறார். ஒரே தேசம் எனில் அது ஒரே பூகோளப் பகுதியாக இருக்க வேண்டும்; ஆனால் அது மட்டும் போதாது. ஒரே மாதிரியான பொருளாதார வாழ்வியல் முறை  இருக்க வேண்டும்; இதுவும் கூட போதாது. பண்பாடு அடிப்படையிலான ஒரே மாதிரியான உளவியல் சிந்தனை இருக்க வேண்டும் எனவும் ஸ்டாலின் குறிப்பிடுகிறார்.  எனவே ஒரு தேசம் அல்லது தேசியம் எனில் பொதுவான மொழி/ பூகோளப் பகுதி/ பொருளாதார வாழ்வியல் முறை/ பொதுவான பண்பாடு அடிப்படையில் உருவான பொதுவான உளவியல் ஆகியவற்றின் அடிப்படையில் வரலாற்று ரீதியாக அமைந்த மக்களின் குழுதான் தேசமாக இருக்க இயலும் என்பதை விளக்குகிறார். எனினும் தேசிய சிந்தனையும் கோட்பாடுகளும் உழைக்கும் வர்க்கங்களுக்கு நன்மை பயப்பதாக இருக்க வேண்டும்.  அது முதலாளித்துவத்துக்கு மட்டுமே பயன்படும் எனில் அத்தகைய தேசியத்தால் எந்த பலனும் இல்லை என்பதையும் குறிப்பிடுகிறார். மேலும் தேசிய இனக் கோட்பாடு மாறாமல் அப்படியே இருப்பது இல்லை  எனவும் காலம் மற்றும் சூழலுக்கு ஏற்ப மாற்றங்கள் அடையும் எனவும் குறிப்பிடுகிறார்.தேசிய இனங்களின் சமத்துவம்சோவியத் ஒன்றியம் வெவ்வேறான மொழியும் பண்பாடும் கொண்ட 15 குடியரசுகளை உள்ளடக்கியதாக இருந்தது. பெரியதும் சிறியதுமாக 60 தேசிய இனங்களும் குழுக்களும் இருந்தன. அத்தகைய ஒன்றியம் உருவானதிலும் அதனை கட்டிக்காத்ததிலும் ஸ்டாலின் மார்க்சிய அடிப்படையிலான தேசிய கோட்பாடுகளை பரிசோதித்தார். வெற்றிகர மாகச் சாதித்தார். 1936ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட சோவியத் அரசியல் சட்டம் 6 மாதங்கள் பொது விவாதத்துக்கு உள்ளாக்கப்பட்டது. 5.5 கோடி பேர் விவாதங்களில் பங்கேற்றனர். 43,000 திருத்தங்கள் உழைக்கும் மக்களால் முன்வைக்கப்பட்டன.  அரசியல் சட்டம் குறித்த மக்களின் திருத்தங்கள் சிலவற்றை ஏன் நிராகரிக்கப்பட வேண்டும் அல்லது ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என ஸ்டாலின் விவரிக்கிறார்.  l    புரட்சி முடிந்து 19 ஆண்டுகள் ஆகிவிட்டதால் “பிரிந்து போகும் சுய நிர்ணய உரிமை” அகற்றப்பட வேண்டும்  என பல திருத்தங்கள் முன்வந்தன. அவை நிராகரிக்கப்பட வேண்டும் என ஸ்டாலின் கூறினார். சோவியத் ஒன்றியம் என்பது சுய விருப்பத்தின் மூலம் அமைந்த தேசம். எனவே பிரிந்து போகும் உரிமையும் இருக்க வேண்டும் என விளக்கினார். lஇன்னொரு திருத்தம் சோவியத் நாடாளுமன்றத்துக்கு ஒட்டு மொத்த அவை ஒன்றும் தேசிய இனங்களுக்கான  இன்னொரு அவையும் என இரு அவைகள் தேவை இல்லை என முன்வைக்கப்பட்டது. இதனை யும் ஸ்டாலின் நிராகரித்தார். சோவியத் ஒன்றியம் என்பது ஒருமுக தேசம் இல்லை. பன்முகத்தன்மை கொண்டது. அந்த பன்முகத் தன்மைக்கு அடித்தளம் பல தேசிய இனங்கள். ஒவ்வொரு தேசிய இனத்துக்கும் தனிப்பட்ட குணங்களும் பண்பாடுகளும் உண்டு. அவை உறுதியாக பிரதிபலிக்க வேண்டும் எனில் தேசிய இனங்களுக்கான தனி அவை நாடாளுமன்றத்தில் இருக்க வேண்டும் என வாதிட்டார்.  l    சோவியத் நாடாளுமன்றத்தின் இரு அவைகளுக்கும் சம எண்ணிக்கை யிலான உறுப்பினர்கள் இருக்க வேண்டும் எனும் திருத்தத்தை நியாய மானது என ஸ்டாலின் ஏற்றுக்கொண்டார். ஒவ்வொரு குடியரசுக்கும் அதாவது ஒவ்வொரு தேசிய இனத்துக்கும் ஒரு துணை ஜனாதிபதி இருக்க வேண்டும் எனும் தீர்மானத்தையும் வரவேற்று ஏற்றுக் கொள்ள முன்மொழிந்தார்.  ஸ்டாலின் அவர்களின் தேசிய இனக் கோட்பாடுகளும் நடைமுறையும் மார்க்சியத்தை மேலும் செழுமைப்படுத்தியது. திரு. ராசா கூறியது போல ஸ்டாலின் மார்க்சியத்தை நீர்த்துப் போகச்செய்யவில்லை.பாசிசத்துக்கு எதிரான போர்இன்றைய இந்தியாவில் நாம் சந்திக்கும் மிகப்பெரிய ஆபத்து பாசிசம் ஆகும். பாசிசம் என்றால் என்ன? இந்த கேள்விக்கு பதில் தேடும் பொழுது எவர் ஒருவரும் அடையும் இடம் இத்தாலி/ ஜெர்மானிய பாசிசம்தான். பாசிசத்தை எப்படி வரையறுப்பது? அதற்கு எதிராக எப்படிச் செயல்படு வது? ஆகிய சித்தாந்த மற்றும் நடைமுறைக் கோட்பாடுகளை உரு வாக்கியதில் ஸ்டாலின் அவர்களுக்கு மிகப்பெரிய பங்கு உண்டு.  பாசிசம் முதலாளித்துவத்தின் மிக கொடூர சீரழிந்த வடிவம் என்பதை சுட்டிக்காட்டிய ஸ்டாலின், அது ஜனநாயக எண்ணம் கொண்ட முதலா ளித்துவப் பிரிவையும் அழிக்க முனைவதால் அந்தப் பிரிவின் ஒத்து ழைப்பையும் பெற வேண்டும் என்றார். தொழிலாளி வர்க்கத்தின் சுயேச்சை இயக்கங்கள் ஒருபுறமும் பாசிசத்துக்கு எதிராகச் செயலாற்ற முன்வரும் முதலாளித்துவப் பிரிவுகளுடன் ஒற்றுமை இன்னொரு புறமும் என இரு அணுகுமுறைகளை உருவாக்குவதன் அவசியத்தை வலியுறுத்தினார். அதே சமயம் தொழிலாளி வர்க்கத்தின் ஒற்றுமையும் போராட்டங்களும்தான் பாசிசத்தை நிரந்தரமாக வீழ்த்த முடியும் என்பதை விளக்கினார்.   ஸ்டாலினின் ஒற்றுமைக்கான வேண்டுகோளை முதலாளித்துவ நாடுகள் அங்கீகரிக்க மறுத்ததால் சோவியத் யூனியன் தன்னந்தனி யாகவே இட்லருக்கு எதிராகப் போராடியது. பின்னர் வேறு வழியின்றி சோவியத் யூனியனுடன் முதலாளித்துவ தேசங்கள் கை கோர்த்தன. பின்னர் பாசிசம் வீழ்ந்ததும் மனிதகுலம் காப்பாற்றப்பட்டதும் வரலாறு. பாசிச காலத்தில் மார்க்சியக் கோட்பாடுகளை உருவாக்கியதும் அவற்றை அமலாக்கியதிலும் வென்ற ஸ்டாலின் அவர்கள் அதனை நீர்த்து போகச் செய்தார் என்பதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்?ஃபீனிக்ஸ் பறவை போல  மீண்டெழுந்த சோவியத் யூனியன்!பாசிசத்துக்கு எதிரான இரண்டாம் உலகப்போரில் சோவியத் யூனி யனுக்கு சுமார் 2.80 கோடி மனித இழப்புகள் மட்டுமல்ல; ஆலைகள், அணைகள், கிராமங்கள், சுரங்கங்கள், கால்நடைகள் என  பல அழிந்தன. இந்த இழப்புகள் குறித்து பின்னாளில் அமெரிக்க ஜனாதிபதியாக பணி யாற்றியவரும் போர்க் காலத்தில் அமெரிக்க படை தளபதியாக இருந்தவ ருமான ஐசன்ஹோவர் தனது நினைவுக் குறிப்புகளில் கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகிறார்: “1945இல் நான் விமானத்தில் சென்று கொண்டிருந்தேன். அப்பொழுது நான் கண்ட காட்சிகள் சொல்ல முடியாத மனவேதனையை அளித்தன. சோவியத் யூனியனின் மேற்கு எல்லையிலிருந்து மாஸ்கோ நகரம் வரை ஒரு வீடு கூட முழுமையாக இல்லை. அனைத்து வீடுகளும்  அழிக்கப் பட்டிருந்தன. இந்த நிலப்பரப்பில் லட்சக்கணக்கான பெண்களும் குழந்தைகளும் முதியவர்களும் (இட்லர் படைகளால்) கொல்லப் பட்டனர். இந்த எண்ணிக்கையை சோவியத் அரசாங்கத்தால் கணக்கீடு செய்ய முடியவில்லை என மார்ஷல் சுகோவ் என்னிடம் கூறினார்” (Crusade in Europe/by Dwight D.Eisenhower). எனினும் ஸ்டாலின் கலங்கவில்லை. சோவியத் மக்களை தட்டி  எழுப்பினார். சோவியத் யூனியன் மறுகட்டமைப்புக்கு ஊக்கப்படுத்தி னார். மிக குறுகிய காலத்தில் ஃபீனிக்ஸ் பறவை போல சாம்பலில் இருந்து சோவியத் யூனியன் புத்துயிர் பெற்று எழுச்சி கொண்டது.  1953ஆம் ஆண்டு ஸ்டாலின் மறைந்த பொழுது சோவியத் யூனியன் அமெரிக்காவுக்கு இணையாக ஒரு வல்லரசாக வளர்ந்திருந்தது. இந்தியா உட்பட புதியதாக விடுதலை அடைந்த நாடுகளுக்கு நம்பிக்கை நட்சத்திர மாகத் திகழ்ந்தது. ஸ்டாலின் மீது விமர்சனங்கள் இருக்கலாம். அவை  அவரது தனிப்பட்ட குறைகள் அல்ல. முதல் சோசலிச சமூகம் நிர்மா ணிக்கும் மகத்தான பணியில் உருவான குறைகள் அவை. எனினும் மார்க்சிய சித்தாந்தத்தை எந்த வகையிலும் ஸ்டாலின் நீர்த்துப் போகச் செய்யவில்லை. மாறாக அதற்கு தனது செழுமையான பங்கை செலுத்தி னார் என்பதுதான் உண்மை. அதனால்தான் இன்றும் ஸ்டாலின் லட்சோபலட்சக்கணக்கான மக்களால் நினைவு கூரப்படுகிறார்.
2025-01-12 02:13:16.698238
ஜனவரி 11, 2025
விளையாட்டு...
விளையாட்டு
நமது நிருபர்
https://theekkathir.in/News/games/tokyo/adelaide-tennis-2025---keys,-felix-champion
தமிழ்
UTF-8
அடிலெய்டு டென்னிஸ் 2025  - கீஸ், பெலிக்ஸ் சாம்பியன்5ஆவது அடிலெய்டு சர்வதேச டென்னிஸ் தொடர், ஆஸ்தி ரேலிய நாட்டின் அடிலெய்டு நகரில் நடைபெற்றது. இந்திய நேரப்படி சனிக்கிழமை காலை நடைபெற்ற மகளிர் ஒற்றை யர் பிரிவு இறுதி ஆட்டத்தில் போட்டித் தர வரிசையில் முதலிடத்தில் உள்ள அமெ ரிக்காவின் பெகுலா, தரவரிசையில் இல்லாத சகநாட்டு வீராங்கனை   கீஸை எதிர்கொண்டார். போட்டித் தரவரிசையில் இல்லாத வீராங்கனையாக இருந்தா லும் பெகுலாவை விட கீஸ் பலம் வாய்ந்த வீராங்கனை என்ற நிலையில், இறுதி ஆட்டத்தின் முடிவில் 6-3, 4-6, 6-1 என்ற செட் கணக்கில் கீஸ் அபார வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார். பெலிக்ஸ் அசத்தல் ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டத்தில் தரவரிசையில் 5ஆம் இடத்தில் உள்ள கனடாவின் பெலிக்ஸ், தரவரிசையில் 2ஆம் இடத்தில் உள்ள அமெரிக்காவின் கோட்ராவை எதிர் கொண்டார். தொடக்கம் முதலே அதிரடி யாக விளையாடிய பெலிக்ஸ் 6-3, 3-6, 6-1 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். இத்தாலி ஜோடிக்கு கோப்பை முன்னதாக ஆடவர் இரட்டையர் பிரிவு இறுதி ஆட்டத்தில் போட்டித் தர வரிசையில் 3ஆவது இடத்தில் உள்ள இத்தாலியின் ஆந்த்ரே - சிமோனே ஜோடி, தரவரிசையில் 2ஆவது இடத்தில் உள்ள ஜெர்மனியின் டிம் - கெவின் ஜோடியை எதிர்கொண்டது. தொடக்கம் முதலே அபார ஆட்டத்தை வெளிப் படுத்திய ஆந்த்ரே - சிமோனே ஜோடி 4-6, 7-6 (7-4), 11-9 என்ற செட் கணக் கில் வெற்றி பெற்று கோப்பையை கைப் பற்றியது.சாம்பியன்ஸ் டிராபி 2025 -  வீரர்கள் பட்டியலை வெளியிட முடியாமல் திணறும் இந்தியாமினி உலகக்கோப்பை என அழைக்கப்படும் 9ஆவது சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் பாகிஸ்தான் நாட்டில் பிப்ரவரி 19ஆம் தேதி முதல் மார்ச் 9ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரே லியா, தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, வங்கதேசம், ஆப்கா னிஸ்தான், நியூசிலாந்து உள்ளிட்ட 8 அணிகள் பங்கேற்கின் றன. பாதுகாப்புப் பிரச்சனை காரணமாக இந்தியா விளையா டும் ஆட்டங்கள் மட்டும் அரபு அமீரகத்தில் நடைபெறுகிறது. இந்நிலையில், இந்த தொடரில் பங்கேற்கும் அணி வீரர்க ளின் பட்டியலை அறிவிக்க ஞாயிற்றுக்கிழமை கடைசி நாள் ஆகும். இதனால் இந்திய அணி வீரர்களின் பட்டியல் சனிக் கிழமை அன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது.  ஆனால் ஆஸ்திரேலிய அணிக்கெதிரான பார்டர் - கவாஸ்கர் தொடரில் ஏற்பட்ட படுதோல்வி காரணமாக  சாம்பியன் டிராபி கிரிக்கெட் தொடருக்கு வலுவான அணியை களமிறக்க இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) ஆலோசித்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதனால் பிசிசிஐ, சர்வதேச கிரிக்கெட் வாரியத்திடம் வீரர்கள் பட்டியல் தொடர்பான அறிவிப்பிற்கு ஒருவார காலம் அவகாசம் கோரி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஜனவரி 18 அல்லது 19ஆம் தேதி தேர்வு குழுவினர் கூடி  அணியை அறிவிக்கலாம் என செய்திகள் வெளியாகியுள்ளன.42 நிமிடம் ; ரூ.882 கோடி சம்பளம்42 நிமிடம் ; ரூ.882 கோடி சம்பளம்  2024ஆம் ஆண்டில் நெய்மருக்கு அடித்த ஜாக்பாட் கால்பந்து உலகின் முக்கிய நட்சத்திர வீரர்களில் ஒரு வரான, பிரேசில் கேப்டன் நெய்மர் 2024ஆம் ஆண்டில் வெறும் 42 நிமிடமே கால்பந்து விளையாடி ரூ.882 கோடி சம்ப ளத்தை அள்ளியுள் ளார். இது கால்பந்து உலகில் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த் தியுள்ளது.  நெய்மர் சவூதி அரேபியா கிளப் கால்பந்து அணியான அல் ஹிலால் அணிக்காக விளை யாடி வருகிறார். 5 ஆண்டு ஒப்பந்தத்துடன் விளையாடி வரும் நெய்மர் ஆண்டுக்கு ரூ.882 கோடி (101 மில்லியன் யூரோ) சம்பளம் பெறுகிறார். அதன்படி 2024ஆம் ஆண்டில் வெறும் 42 நிமிடமே கால்பந்து விளையாடி ரூ.882 கோடி சம்பளத்தை அள்ளியுள்ளார் நெய்மர். காயம் காரணமாக 2024ஆம் ஆண்டில் 2 ஆட்டங்களில் விளையாடியுள்ள நெய்மர் அதில் 42 நிமிடம் மட்டுமே களத்தில் இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
2025-01-12 02:13:20.166656
ஜனவரி 11, 2025
வெறுப்பைத் தூண்டும் பேச்சு : புத்த துறவிக்கு 9 மாதம் சிறை
மாநிலம் - தமிழ்நாடு
நமது நிருபர்
https://theekkathir.in/News/states/tamil-nadu/buddhist-monk-jailed-for-9-months-for-hate-speech
தமிழ்
UTF-8
கொழும்பு, ஜன.11- இஸ்லாமிய மதத்திற்கு எதிராக வெறுப்பைத் தூண்டும் வகையில் பேசிய இலங்கை புத்த துறவியான கலகொடாத்தே ஞானசாரவுக்கு ஒன்பது மாதங் கள் சிறைத் தண்டனை விதிக்கப் பட்டுள்ளது. அத்துடன் 1500 இலங்கை ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. ஞானசார,  இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோத்த பய ராஜபக்‌ஷவின் நெருங்கிய வட்டாரத்தில் இருக்கும் முக்கிய நபர்.கடந்த 2016ஆம் ஆண்டு அவர் தெரிவித்த இஸ்லாமிய வெறுப்பு கருத்துகள் தொடர் பான வழக்கில் ஜனவரி மாதம் 9ஆம் தேதியன்று இந்த தீர்ப்பு வழங்கப்பட்டது. இலங்கையில் பௌத்த துற விகளுக்கு எதிராக தண்டனை வழங்கப்படும் நிகழ்வு மிகவும் அரிதாகவே நடைபெறுகிறது. ஆனால் தொடர்ச்சியாக இஸ்லாம் மதத்திற்கு எதிராக வெறுப்பைப் பரப்பும் கருத்து களைப் பேசி வந்த ஞானசார வுக்கு சிறைத் தண்டனை விதிக் கப்பட்டது இது இரண்டாவது முறையாகும். கடந்த 2018ஆம் ஆண்டு நீதி மன்ற அவமதிப்பு மற்றும் அரசி யல்ரீதியாக கார்ட்டூன் வரையும் கலைஞர் ஒருவரின் மனை வியை மிரட்டிய விவகாரத்தில் அவருக்கு 6 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.ஆனால் 2019ஆம் ஆண்டு அந்த சிறைத் தண்டனைக்கு எதிராக ஜனாதிபதி மன்னிப்பு வழங்கப்பட்டது. வியாழக்கிழமை, ஜனவரி 9ஆம் தேதியன்று, தீர்ப்பளித்த நீதிமன்றம் அரசியலமைப்பு சாசனத்தின்படி எந்த மதத்தி னராக இருந்தாலும் அவர்களின் மதம் சார்ந்த நம்பிக்கைகளை சுதந்திரமாகப் பின்பற்ற உரிமை உள்ளது என்றும் குறிப் பிட்டுள்ளது. மேலும் அவருக்கு 1500  இலங்கை ரூபாய் அபராதமாக விதிக்கப்பட்டது. அதைச் செலுத்தவில்லை என்றால் மேலும் ஒரு மாதம் சிறைத் தண் டனை அனுபவிக்க நேரிடும் என்றும் நீதிமன்றம் அறிவித் துள்ளது.இந்த தண்டனைக்கு எதிராக ஞானசார மேல்முறை யீடு செய்துள்ளார்.
2025-01-12 02:13:24.447161
ஜனவரி 11, 2025
தள்ளாத வயதிலும் அகப்பை செய்யும் தம்பதி
மாநிலம் - தமிழ்நாடு
நமது நிருபர்
https://theekkathir.in/News/states/tamil-nadu/a-couple-who-are-married-even-at-a-young-age
தமிழ்
UTF-8
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே அம்பாள்புரம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் சுப்பையா-ராஜம்பாள் தம்பதியினர். 80 வயதைக் கடந்த தம்பதியினர் இருவரும், கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக பாரம்பரிய முறைப்படி பொங்கல் திருநாளையொட்டி அகப்பை செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
2025-01-12 02:13:24.448390
ஜனவரி 11, 2025
தீக்கதிர் விரைவு செய்திகள்
மாநிலம் - தமிழ்நாடு
நமது நிருபர்
https://theekkathir.in/News/states/tamil-nadu/cpm-insists-on-payment-of-100-days-salary-arrears
தமிழ்
UTF-8
100 நாள் வேலை சம்பளப் பாக்கியை வழங்க சிபிஎம் வலியுறுத்தல்சென்னை, ஜன.11- தமிழ்நாடு சட்டப்பேர வையில் சனிக்கிழமை (ஜன.11) மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் சட்டமன்ற குழுத் தலைவர் நாகை மாலி  பேசும்போது, தமிழ்நாடு முழுவதும் 100 நாள் வேலை திட்டத்தில் பணியாற்றிய தொழிலாளர்களுக்கு சம்ப ளம் வழங்கப்படாமல் உள் ளது. பொங்கல் பண்டிகை நெருங்கி விட்டதால், பாக்கி வைத்திருக்கும் கூலித் தொகையை முழுமையாக வழங்குவதற்கு தமிழ்நாடு அரசு உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்தினார்.'இடைத்தேர்தல்  அதிமுக, தேமுதிக  புறக்கணிப்புசென்னை, ஜன.11- ஈரோடு கிழக்கு சட்டமன் றத் தொகுதிக்கான இடைத்  தேர்தலை புறக்கணிப்பதாக  பிரதான எதிர்க்கட்சியான அதிமுக அறிவித்தது. ஆட்சி  அதிகாரத்தை திமுக தவறா கப் பயன்படுத்தும் என்ப தால், ஈரோடு கிழக்கு சட்  டப்பேரவைத் தொகுதிக்கு  நடைபெறும் இடைத்தேர் தலை அதிமுக புறக்கணிப்ப தாக, எடப்பாடி பழனிசாமி  கூறினார். அதிமுகவை அடி யொற்றி அதன் கூட்டணியாக  இருக்கும் தேமுதிகவும் இடைத்தேர்தலை புறக்க ணிப்பதாக அறிவித்துள்ளது.தங்கம் விலை ரூ.58 ஆயிரத்தை கடந்ததுசென்னை, ஜன.11- தங்கம் விலை சனிக்  கிழமையன்று தொடர்ந்து  நான்காவது நாளாக உயர்ந்தது. சென்னை, கோவை, மதுரை போன்ற முக்கிய நகரங்க ளில் சனிக்கிழமையன்று 22 கேரட் தங்கம் கிராமிற்கு ரூ.  15 அதிகரித்து ரூ. 7 ஆயிரத்து  300-க்கும், 22 கேரட் தங்கம்  பவுனுக்கு ரூ. 120 அதிக ரித்து ரூ. 58 ஆயிரத்து 400-க்கும் விற்பனையானது. 24 கேரட் தங்கம் கிராமிற்கு ரூ.  17 அதிகரித்து ரூ. 7 ஆயிரத்து  964-க்கும், 24 கேரட் தங்கம்  பவுனுக்கு ரூ. 136 அதிகரித்து ரூ. 63 ஆயிரத்து 712-க்கும் விற்பனையானது.போக்குவரத்து - ரேசன் கடை ஊழியர்களுக்கு ஊக்கத்தொகைசென்னை, ஜன.11- தமிழ்நாடு அரசு போக்கு வரத்துக் கழக ஊழியர் களுக்கு, பொங்கலை முன்  னிட்டு 2024-ஆம் ஆண்டுக்  கான சாதனை ஊக்கத் தொகை வழங்க அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது. 200 நாட்கள் மற்றும் அதற்கு  மேல் பணிபுரிந்த ஊழியர் களுக்கு ரூ.625 ஊக்கத் தொகையாக வழங்க உத்த ரவு பிறப்பிக்கப்பட்டு உள்  ளது. இதுதவிர பொங்கல்  பரிசு தொகுப்பு வழங்கு வதன் ஒரு பகுதியாக ரேசன் கடை ஊழியர்களுக்கு ஊக்  கத்தொகை அறிவிக்கப் பட்டு உள்ளது. விற்பனை யாளர் மற்றும் ஊழியர்  களுக்கு ஊக்கத்தொகை யாக அவர்கள் பணியில் கை யாளும் ஒவ்வொரு குடும்ப அட்டைக்கும் 50 காசு ஊக்  கத்தொகை வழங்க கூட்டு றவுத்துறை உத்தரவு பிறப் பித்துள்ளது.‘இந்திய பொருளாதாரம் 2025-இல் பலவீனமாகும்!’'வாஷிங்டன், ஜன.11- 2025-ஆம் ஆண்டு சர்வதேச அள வில் சீரான பொருளாதார வளர்ச்சி இருந்த போதிலும் இந்திய பொருளா தாரம் சிறிதே பலவீனமாக இருக்கும்  என்று ஐஎம்எப் நிர்வாக இயக்குநர்  கிறிஸ்டலினா ஜார்ஜீவா கூறியுள்ளார்.  அமெரிக்காவின் வர்த்தகக் கொள்கையை சுற்றி இந்த ஆண்டு  பெரும் அளவுக்கு நிச்சயமற்ற தன்மை நிலவலாம் என எதிர்பார்ப்பதாகவும் ஜார்ஜீவா குறிப்பிட்டுள்ளார். வாஷிங்டன்னில் வெள்ளிக்கிழ மையன்று ஆண்டு செய்தியாளர் சந்  திப்பில் பேசிய கிறிஸ்டலினா ஜார்  ஜீவா, “2025ஆம் ஆண்டில் இந்திய  பொருளாதாரம் சிறிதளவு பலவீன மாக இருக்கும். அதே நேரத்தில் முன்பு  எதிர்பார்த்ததை விடவும் அமெரிக்கா வில் நல்ல சூழல் நிலவும். ஐரோப்பிய யூனியனில் தடுமாற்றம் இருக்கும். பிரேசில் அதிக பணவீக்கத்தை எதிர்  கொள்ளும். உலகின் இரண்டாவது பெரிய பொருளாதார நாடான சீனாவில் உள்  நாட்டு தேவையில் பணவாட்ட அழுத்  தம் மற்றும் தொடர்ச்சியான சவால்  கள் இருப்பதை ஐஎம்எப் கண்டது.  குறைந்த வருவாய் நாடுகள் அனை த்து முயற்சிகளை மேற்கொண்ட போதிலும், எந்தவொரு புதிய அதிர்ச்சியும் அவைகளை மிகவும் எதிர்மறையாக பாதிக்கக்கூடிய நிலையில் இருக்கின்றன. 2025ஆம் ஆண்டைப் பொறுத்த வரை நாம் என்ன எதிர்பார்க்கின் றோம் என்றால், குறிப்பாக பொருளா தார கொள்கை விதிகளை பொறுத்த வரை பெரும் அளவுக்கு நிச்சயமற்ற தன்மை இருக்கும்.  அமெரிக்காவின் 47-ஆவது ஜனாதிபதியாக பொறுப்பேற்க உள்ள டிரம்ப், சீனா, கனடா, மெக்சிகோ  உள்ளிட்ட நாடுகள் மீது கூடுதல் கட்ட ணங்களை அமல்படுத்துவார்.  உலக பொருளாதாரத்தை சரிவை  நோக்கி தள்ளாமல் இருக்க பண வீக்கத்துக்கு எதிராக போராட வேண்  டும் எனில் உயர்ந்தபட்ச வட்டிவிகி தத்தை நாம் எல்லோரும் அங்கீகரிக்க வேண்டும். இவ்வாறு கிறிஸ்டலினா ஜார் ஜீவா தெரிவித்துள்ளார்.பத்தனம்திட்டாவில் இளம்பெண்ணுக்கு 5 ஆண்டுகளாக பாலியல் தொல்லைகேரள மாநிலம் பத்தனம்திட்டா வில் இளம்பெண்ணுக்கு 5 ஆண்டுகளாக பாலியல் தொல்லை கொடுத்த 5 பேர் கைது செய் யப்பட்டனர். 18 வயது தடகள வீராங்கனை யான  இளம்பெண்ணுக்கு 13 வயதில் இருந்து சுமார் 60 பேருக்கு மேல் பாலி யல் தொல்லை அளித்ததாக புகா ரில் கூறப்பட்டுள்ளது. பெரும்பாலும் உற வினர்களே பாலியல் தொல்லை  கொடுத்ததாகவும் முதற்கட்ட விசாரணை யில் தகவல் வெளியாகி உள்ளது. 5 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், 10 பேரி டம் விசாரணை நடைபெற்று வருவதாக காவல்துறையினர் தகவல் தெரிவித் துள்ளனர்.ரயில் நிலைய கட்டுமானப் பணியில் விபத்து உ.பி.யில் 3 பேர் பலிபாஜக ஆளும் உத்தரப்பிரதேச மாநிலம் கன்னோஜ் ரயில் நிலையத்தில் கட்டுமான பணி யின்போது, கட்டடம் சரிந்து விபத்து ஏற் பட்டுள்ளது. இந்த கோர விபத்தில் 35 தொ ழிலாளர்கள் இடிபாடுகளில் சிக்கிக் கொண் டனர். தீயணைப்பு மற்றும் மாநில பேரிடர் படையினர் மேற்கொண்ட மீட்பு பணியில் 3 தொழிலாளர்கள் சடலமாக மீட்கப் பட்டுள்ளனர்.உள்ளாட்சிகளுக்கு தனி அலுவலர்  நியமன மசோதா நிறைவேறியதுசென்னை,ஜன.11- ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு தனி அலுவலர் நியமிக்கும் சட்ட மசோதா சட்டப்பேரவையில் நிறைவேறியது. தனி அலுவலர்களை நியமிப்பதற்கு ஒப்புதல் அளிப்பதற்கான, ஊராட்சிகள் சட்ட திருத்த மசோதாவை  அமைச்சர் ஐ.பெரியசாமி தாக்கல் செய்தார்.  28 மாவட்டங்களின் ஊராட்சிகளுக்கு வழக்கமான தேர்தல்கள் நடத்தப்படும் வரை அல்லது இந்த ஆண்டு ஜூலை 5 ஆம் தேதி இதில் எது முந்தியதோ, அதுவரை 28 மாவட்டங்களின் ஊராட்சிகளை நிர்வகிக்க தனி அலுவலர்கள் நியமிக்க, அரசுக்கு அதிகாரம் அளிக்க, ஊராட்சிகள் சட்டம் திருத்தம் செய்யப்படுகிறது. இதற்காக இந்த சட்ட மசோதா தாக்கல் செய்யப்படுவதாக கூறப்பட்டிருந்தது. அறிமுக நிலையில் அதிமுக, பாமக எதிர்ப்பு தெரிவித்தன. அதிகாரம் இல்லாத மாவட்ட பஞ்சாயத்து: சிபிஎம் இந்த மசோதா மீதான  விவாதத்தில்  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்ற குழுத் தலைவர் நாகை மாலி பேசுகையில், உள்ளாட்சி அமைப்புகளுக்கு தனி அலுவலர் நியமனம் என்பது ஒரு மாற்று ஏற்பாடுதான். எனவே, உரிய நேரத்திற்கு உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும்.  மாவட்ட பஞ்சாயத்துக்கு என்ன அதிகாரம் இருக்கிறது என்பது தெரியவில்லை. அந்த அளவுக்குத்தான் அதன் செயல்பாடுகள் உள்ளது. எனவே, மாவட்ட ஊராட்சியை அதிகாரமிக்க அமைப்பாக மாற்ற வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார். தனி அலுவலர் பதவியை நீட்டிக்க கூடாது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சட்ட மன்றகுழுத் தலைவர் டி.ராமச்சந்திரன், கே.பி.அன்பழகன் (அதிமுக), ஜி.கே.மணி (பாமக) ஆகியோரும் பேசினர். இதற்கு அமைச்சர் ஐ. பெரியசாமி விளக்கமளிக்கையில், உள்ளாட்சி அமைப்பு தேர்தலை தள்ளிப் போட வேண்டும் என்பது இந்த அரசின் நோக்கம் கிடையாது. தொகுதி சீரமைப்பு, எல்லைகள் மறுவரையறை பணிகளை விரைவாக முடித்து தேர்தல் நடத்தும். கருத்து கேட்பு கூட்டங்களில் மக்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு மதிப்பளிக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து, குரல் வாக்கெடுப்பு மூலம் மசோதா நிறைவேற்றப்பட்டது.தேதி குறிப்பிடாமல் சட்டப்பேரவை ஒத்திவைப்புசென்னை,ஜன.11- தமிழ்நாடு சட்டப்பேரவையின் இந்த ஆண்டிற்கான முதல் கூட்டம் ஜனவரி  6 ஆம் தேதி (திங்கட்கிழமை) தொடங்கியது. பேரவைக்கு வந்த ஆளுநர் ஆர்.என்.ரவி, உரையை வாசிக்காமல் அவையில் இருந்து வெளியேறினார். இதைத் தொடர்ந்து, அவரது உரையின் தமிழாக்கத்தை பேரவைத் தலைவர் அப்பாவு வாசித்தார். சட்டப்பேரவை கூட்டத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு மரண தண்டனை மற்றும் தண்டனையை அதிகரிக்கும் 2 சட்ட மசோதாக்கள் நிறைவேற் றப்பட்டன. மேலும் 4 சட்ட மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. இதைத் தொடர்ந்து, மீண்டும் கூடும் தேதி குறிப்பிடாமல் சட்டப்பேரவை ஒத்திவைக்கப்பட்டது.டங்ஸ்டன் போராட்டம் : வழக்குகள் வாபஸ்!சென்னை, ஜன. 11 - மதுரை மாவட்டம், அரிட்டாபட்டி உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்ட கிராமங்களில் வேதாந்தா குழுமம் டங்ஸ்டன் சுங்கம் அமைப்பதற்கு அனுமதியளித்து ஒன்றிய அரசு ஏலம் விட்டுள் ளதை எதிர்த்து தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.  இதில் பங்கேற்ற 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மீது தமிழ்நாடு காவல்துறை வழக்குப் பதிவு செய்தது. இந்த வழக்குகளை திரும்பப் பெற வேண்டும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள் கோரிக்கை விடுத்து வந்தன. எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியும் வெள்ளிக்கிழமை (ஜன.10) சட்டப்பேரவையில் இதுதொடர்பாக கோரிக்கை விடுத்தார். அப்போது குறுக்கிட்டுப் பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், இதுபற்றி பரிசீலிக்கப்படும் என்றார். இந்நிலையில், சனிக்கிழமை (ஜன.11) சட்டப்பேரவையில் பேசிய வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத் துறை அமைச்சர் பி. மூர்த்தி, டங்ஸ்டன் சுரங்கம் அமைப்ப தற்கு எதிர்ப்பு தெரிவித்து மதுரையில் மக்கள் போராட்டம் நடத்தினர். அந்த மக்களை நேரில் சந்தித்து, முதலமைச்சரின் உறுதிப்பாட்டை எடுத்துக் கூறியதாகவும், மேலும், அந்த போராட்டத்தின் போது போடப்பட்ட வழக்குகளை திரும்பப் பெற முதலமைச்சர்  உத்தரவிட்டுள்ளதாகவும், அதற்காக முதலமைச்சருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்வதாகவும் குறிப்பிட்டார்.ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த குழுசென்னை, ஜன.11- சட்டப்பேரவையில், ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம் குறித்து திமுக உறுப்பினர் மரு. எழில ரசன் எழுப்பிய கேள்விக்கு நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம் அளித்தார். அப்போது, புதிய ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தை தற்போது ஒன்றிய அரசு அறிவித்திருக்கிறது. இந்த புதிய ஓய்வூதிய திட்டம் அரசு பணியாளர்கள் குறைந்தபட்ச ஓய்வூதிய திட்டத்தை பெறு வதற்கு இது அடிப்படை நோக்கமாகும். இருந்தாலும் இந்த திட்டத்திற்கு உரிய செயலாக் கத்தை, வழிகாட்டுதல்களை, விரிவான செயல்முறைகளை இன்னும் ஒன்றிய அரசு வெளி யிடவில்லை. விரைவில் இந்த வழிகாட்டுதலுடன் நெறிமுறைகளும் வெளியிடப்படும் என்று நாங்கள் நம்புகிறோம். அது வெளியானவுடன் நம் மாநிலத்தில் தக்கதொரு ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த ஒரு குழுவினை முதலமைச்சர் ஆலோசனை பெற்று அமைத்து அந்த குழுவின் வழிகாட்டுதல்படி இந்த ஓய்வூதிய திட்டத்தை யல்படுத்த மாநில அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ளும் என்றார்.பொங்கலன்று கனமழைக்கு வாய்ப்புசென்னை,ஜன.11-  தமிழகத்தின் சில மாவட்டங்களில் ஜனவரி 15 ஆம் தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,  ஜனவரி 14 பொங்கல் பண்டிகை யன்று  தென்தமிழகத்தில் அநேக இடங்களிலும், வடதமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மிதமான மழை பெய்யக்கூடும். தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.பழனி கோவிலுக்கு அறங்காவலர் குழு நியமனம்சென்னை,ஜன.11-  பழனி தண்டாயுதபாணி சுவாமி மலைக் கோவிலு க்கு அறங்காவலர் குழு நியமனம் செய்து தமிழக அரசு அரசாணை வெளி யிட்டுள்ளது.  தனசேகர் (சேலம்), கே.எம்.சுப்பிரமணி (திருப் பூர்), அன்னபூரணி, ஜி.ஆர்.பாலசுப்பிரமணியம், (ஒட் டன்சத்திரம்), சு.பாலசுப்பிர மணியம் (திண்டுக்கல்)  ஆகியோரை அறங்காவலர் குழு உறுப்பினர்களாக நிய மித்து அரசாணை வெளி யிடப்பட்டுள்ளது.பொங்கல் பண்டிகை: 1.87 லட்சம் பேர் ஊர்களுக்கு பயணம்சென்னை,ஜன.11- பொங்கல் பண்டிகை யை முன்னிட்டு இயக்கப் பட்ட சிறப்பு பேருந்துகளில் 1,87,330 பேர் தங்களது சொ ந்த ஊர்களுக்கு பயணித் துள்ளனர் என்று அரசு போக்குவரத்துக்கழகம் தெரிவித்துள்ளது.   தினசரி இயக்கக்கூடிய 2,092 பேருந்துகளுடன் வெள்ளியன்று  கூடுதலாக 1,314 சிறப்பு பேருந்துகள் என மொத்தம் 3,406 சிறப்பு பேருந்துகள் இயக்கப் பட்டது. மேலும் பொங்கல் திருநாளை முன்னிட்டு 2,64,871 பயணிகள் முன் பதிவு செய்துள்ளதாக அரசு விரைவு போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது. மேலும் 94450 14436 ஆகிய அலைபேசி எண்ணையும் தொடர்பு கொள்ளலாம். தனியார் ஆம்னி பேருந்து களில் கூடுதல் கட்டணம் வசூ லிப்பது தொடர்பாக 1800 425  6151 என்ற இலவச எண் மற் றும் 044-24749002, 044-26280 445, 044-26281611 ஆகிய எண் களிலும் புகார் அளிக்கலாம்.
2025-01-12 02:13:24.448926
ஜனவரி 11, 2025
தீக்கதிர் முக்கிய செய்திகள்
மாநிலம் - தமிழ்நாடு
நமது நிருபர்
https://theekkathir.in/News/states/tamil-nadu/class-in-the-state-because-of-the-democratic-spirit-of-the-people-of-jharkhand
தமிழ்
UTF-8
ஜார்க்கண்ட் மாநில மக்களின் ஜனநாயக உணர்வால் மாநிலத்தில் வகுப்புவாத பாசிச சக்திகள் தோற்கடிக்கப்பட்டுள்ளன. இனி ஜார்க்கண்டில் வகுப்புவாத பாசிச சக்திகளுக்கு வேலை இல்லை. ஜார்க்கண்டைப் போலவே தில்லி சட்டமன்ற தேர்தலிலும் பாஜக பலத்த அடியை சந்திக்கும்.45 நாட்களாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஜக்ஜித் சிங்கின் உடல்நிலை மோசமடைந்து வருகிறது. ஒன்றிய அரசின் பிடிவாதம் தான் ஏற்கனவே போராடிய 750 விவசாயிகளின் உயிரைப் பறித்தது. விவசாயிகளுக்கு எதிராக இவ்வளவு கொடுமை ஏன் நடக்கிறது? பிரதமர் மோடி தனது ஈகோவை ஒதுக்கி வைத்து, உடனடியாக விவசாயிகளுடன் பேச்சுவார்த்தையைத் தொடங்க வேண்டும்.பீகார் மாநில தேர்வாணைய வினாத்தாள் கசிவு முறைகேடு தொடர்பாக தேர்வர்கள் அநீதிக்கு ஆளாகியுள்ளனர். ஆனால் பாஜக கூட்டணி அரசு வாய்மூடி பார்வையாளராக நிற்கிறது. இது கண்டனத்துக்குரியது.சுதந்திரத்துக்குப் பிறகு ஏழைகளின் வீடுகளை புல்டோசர் மூலம் தரைமட்டமாக்கிய ஒரே  கட்சி பாஜகதான். 2022-2023 வரை தில்லியில் 35 முறை ஏழைகளின் வீடுகளை புல்டோசர் மூலம் இடித்துள்ளது பாஜக. இதற்கு தில்லி மக்கள் கண்டிப்பாக பதிலடி கொடுப்பார்கள்.அதிகாரப்பூர்வ புள்ளிவிபரங்களுக்கான பெருந்தரவு மற்றும் தரவு அறிவியல் குறித்த மதிப்புமிக்க ஐ.நா நிபுணர்கள் குழுவில் இந்தியா இணைந்துள்ளது.தில்லியில் ஆளும் ஆம் ஆத்மி கட்சியில் புதிதாக சனாதன் சேவா சமிதி துவக்கப்பட்டுள்ளது. இதற்காக அறிவிக்கப்பட்டுள்ள நிர்வாகிகள் பட்டிய லில் பாஜகவிலிருந்து கட்சி மாறி வந்தவர்களுக் கும் இடம் அளிக்கப்பட்டுள்ளது.கேரள மாநிலம் நிலாம்பூர் தொகுதி எம்எல்ஏ பி.வி. அன்வர் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.கர்நாடக மாநிலம் மைசூருவில் உள்ள இன்போ சிஸ் வளாகத்தில் சிறுத்தை ஒன்று தென் பட்டதாக செய்தி வெளியானது. இதனைத் தொ டர்ந்து அந்நிறுவனம் வீட்டிலிருந்து வேலை பார்க்குமாறு உத்தரவிட்டுள்ளது.
2025-01-12 02:13:24.449434
ஜனவரி 11, 2025
மகாராஷ்டிர உள்ளாட்சித் தேர்தல் சிவசேனா (உத்தவ்) தனித்துப் போட்டி
மாநிலம் - தில்லி
நமது நிருபர்
https://theekkathir.in/News/states/delhi/shiv-sena-(uddhav)-alone-in-maharashtra-local-elections
தமிழ்
UTF-8
மகாராஷ்டிரா மாநிலத்தில் விரை வில் உள்ளாட்சித் தேர்தல் நடை பெறுகிறது. இந்த தேர்தலில் இந்தியா மற்றும் மகா விகாஸ் அகாதி (மகாராஷ்டிரா மாநில எதிர்க்கட்சி கூட்டணி) கூட்டணியில் அங்கம் வகிக்கும் சிவசேனா (உத்தவ்) கட்சி தனித்து போட்டியிடப் போவதாக அறிவித் துள்ளது. இதுதொடர்பாக நாக்பூரில் நடை பெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் அக்கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத் கூறுகையில்,“இந்தியா கூட்டணி மற்றும் மகா விகாஸ் அகாதி கூட்டணி கள் மக்களவை மற்றும் சட்டமன்றத் தேர்தல்களுக்கானவை. கூட்டணியில் இணைந்து போட்டியிடும்போது, தனிப் பட்ட கட்சிகளின் தொண்டர்களுக்கு வாய்ப்புகள் கிடைக்காது. இது கட்சியின் வளர்ச்சியைத் தடுக்கிறது. எனவே மும்பை, தானே, நாக்பூர் மற்றும் பிற நகராட்சிகள், மாவட்ட உள்ளாட்சிகள், கிராம பஞ்சாயத்துகள் ஆகியவற்றில் எங்கள் பலத்தின் அடிப்படையில் நாங்கள் போட்டியிடுவோம். இதற்கான ஆதரவை கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரே அளித்துள்ளார்” என அவர் கூறினார். காங்கிரஸ் கட்சிக்கு அறிவுரை மேலும் சஞ்சய் ராவத் கூறுகை யில், “இந்தியா கூட்டணிக்கு ஒரு ஒருங்கிணைப்பாளரைக் கூட நியமிக்க முடியவில்லை. இது நல்லதல்ல. கூட்ட ணியின் மிகப்பெரிய கட்சியாக, கூட் டத்தைக் கூட்டுவது காங்கிரஸ் கட்சியின் பொறுப்பு” என காங்கிரஸ் கட்சிக்கு அறிவுரை வழங்கினார்.
2025-01-12 02:13:24.449919
ஜனவரி 11, 2025
பஞ்சாப் ஆம் ஆத்மி எம்எல்ஏ குர்பிரீத் கோகி தற்கொலை?
மாநிலம் - தில்லி
நமது நிருபர்
https://theekkathir.in/News/states/delhi/punjab-aam-aadmi-mla-gurpreet-kogi-suicide
தமிழ்
UTF-8
சண்டிகர் ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவ ரும், லூதியானா மேற்கு தொகுதியின் எம்எல்ஏவுமான குர்பிரீத் பாஸி கோகி வெள்ளிக் கிழமை அன்று நள்ளிரவு தனது சொந்த கைத்துப்பாக்கி மூலம் குண்டு பாய்ந்து உயிரிழந்தார் என அவரது குடும்பத்தினர் கூறியுள்ள தாக செய்திகள் வெளியாகி யுள்ளன. இந்நிலையில், இதுதொடர் பாக செய்தியாளர்களிடம் பேசிய லூதியானா துணை காவல் ஆணை யர் ஜஸ்கரன் சிங்,”குர்பிரீத் கோகி துப்பாக்கியால் தன்னைத்தானே தலையில் சுட்டுக் கொண்டதாக குடும்ப உறுப்பினர்கள் தெரிவித்த னர். லூதியானா டிஎம்சி மருத்துவ மனைக்கு கொண்டு செல்லப்பட்ட குர்பிரீத் கோகி இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறினர். பிரேத பரி சோதனை அறிக்கைகள் வந்தவு டன் மரணத்திற்கான காரணம் தெளிவாகத் தெரியும். தொடர் விசாரணைகள் நடைபெற்று வரு கின்றன” என அவர் கூறினார். குர்பிரீத் கோகி இறப்பதற்கு முன்பு பஞ்சாப் சட்டமன்ற சபாநாய கர் குல்தார் சிங் மற்றும் ஆம்  ஆத்மி எம்.பி., பல்பீர் சிங் ஆகியோ ரை சந்தித்து பேசியுள்ளார். அதன் பிறகு வெள்ளிக்கிழமை நள்ளி ரவு அளவில் தனது சொந்த கைத்துப்பாக்கியால் தன்னைத் தானே சுட்டுக்கொண்டு தற் கொலை செய்துள்ளார். பஞ்சாப் பில் ஆளும் கட்சியைச் சேர்ந்தவர் துப்பாக்கியால் தன்னைத்தானே தலையில் சுட்டுக் கொண்டு உயிரி ழந்துள்ள சம்பவம் நாடு முழு வதும் கடும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியுள்ளன.
2025-01-12 02:13:24.450589
ஜனவரி 11, 2025
நச்சு கலந்த தண்ணீர் மகாராஷ்டிராவின் 6 கிராமங்களில் முடி உதிரும் பிரச்சனை
மாநிலம் - தில்லி
நமது நிருபர்
https://theekkathir.in/News/states/delhi/poisoned-water-causes-hair-loss-in-6-villages-of-maharashtra
தமிழ்
UTF-8
மும்பை  மகாராஷ்டிரா மாநிலத்தின் புல்தான் மாவட்டத்தில் உள்ள ஷேகான் தாலுக்காவிற்கு உட்பட்ட பாண்ட் கான், கல்வாத், கதோரா உள்ளிட்ட 6 கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்களுக்கு வழக்கத்தை விட அதிகமாக தலைமுடி கொட்டி, முடி உதிரும் நிலை ஏற் பட்டுள்ளது. ஆண்கள் மட்டுமின்றி பெண் கள், சிறுவர்களுக்கும் இந்த முடி உதிரும் பிரச்சனை ஏற்பட்டுள்ளது.  இதுதொடர்பாக உள்ளூர் சுகாதாரத் துறை இந்த திடீர் முடி உதிரும்  காரணத்தை கண்டறிய ஆய்வு மேற் கொண்டனர். இந்த ஆய்வில் நச்சுத்தன்மை கலந்த தண்ணீர் காரணமாகத் தான் இந்நிலை ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.  பொதுவாக மக்கள் பயன்படுத்தும் தண்ணீரில் 10 மில்லி கிராம் அளவில் மட்டுமே நைட்ரேட் இருக்க வேண்டும். ஆனால் இந்த 6 கிராமங்களில் பயன் படுத்தப்படும் தண்ணீர் மாதிரிகளில் 55% அளவில் நைட்ரேட் எனும் ரசாயனப் பொருள் இருப்பது தெரிய வந்துள்ளது. மேலும் தண்ணீரில் ஈயம் மற்றும் ஆர்சனிக் போன்ற நச்சு ரசாயனங்களும் உள்ளன. ஆய்வு முடிவுகள் புனேவில் உள்ள ஆய்வுக் கூடங்களுக்கு அனுப் பப்பட்டுள்ளதாகவும் அதன் முடிவுகள் 8 முதல் 10 நாட்களில் கிடைத்துவிடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குடித்தால் என்னவாகும்?  புல்தான் மாவட்டத்தின் 6 கிராமங்களில் பயன்படுத்தப்படும் தண்ணீரில் 55% அளவில் நைட்ரேட் இருப்பதன் காரண மாகவே அப்பகுதி மக்களுக்கு முடி உதிரும் நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.  குளிப்பதால் முடி உதிரும் சூழ்நிலை யில், அதே தண்ணீரை குடித்தால் என்ன அபாயம் ஏற்படும் என்பதை பாஜக கூட்டணி ஆளும் மகாராஷ்டிரா மாநில சுகாதாரத்துறை விளக்கம் அளிக்காதது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
2025-01-12 02:13:24.451094
ஜனவரி 11, 2025
8ஆம் வகுப்பு வரையிலான பாடத்திட்டத்தில் பகவத் கீதை
மாநிலம் - தில்லி
நமது நிருபர்
https://theekkathir.in/News/states/delhi/controversy-erupted-over-haryana-bjp-chief-minister's-announcement
தமிழ்
UTF-8
சண்டிகர் ஹரியானா முதல்வர் நயாப் சிங் சைனி பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு மிக நெருக்கமானவர். இவரது தலை மையில் தொடக்கக் கல்வி, பள்ளிக் கல்வி, உயர்கல்வித்துறை அதி காரிகள் கூட்டம் சனிக்கிழமை காலை நடைபெற்றது. இந்த கூட்டத் தில் பேசிய நயாப் சிங் சைனி, “தேசிய கல்விக் கொள்கையின்படி அனைத்துப் பள்ளிகளிலும் தர மான கல்வி வழங்கப்படுவதை அதி காரிகள் உறுதி செய்ய வேண்டும். அதற்கேற்றாற் போல மாணவர்க ளுக்கு ஒழுக்கம், தர்க்கநெறிகள் குறித்த சிந்தனையை வளர்க்கும் வகையில் 8ஆம் வகுப்பு வரை யிலான பாடத்திட்டத்தில் பகவத் கீதையை சேர்க்க வேண்டும். இந்த நடைமுறைக்கு அதிகாரிகள் தனி கவனம் செலுத்த வேண்டும்” என கூறியுள்ளார். ஹரியானா முழுவதும் சமஸ்கிருதப் பள்ளிகள்? ஹரியானா அரசு மாநிலம்  முழுவதும் ஆங்கில கல்விக்குப்  போட்டிக்கு மாதிரி சமஸ்கிருதப் பள்ளிகளை அதிக எண்ணிக்கை யில் நிறுவியுள்ளது. அவை தற்போது சிபிஎஸ்இ கல்வியுடன் இணைக்கப்பட்டுள்ளன. இத்த கைய சூழலில்,”சமஸ்கிருதப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக் கான தேவை மற்றும் போட்டி அதி கரித்து வருவதால், சமஸ்கிருதப் பள்ளிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும்” என்றும் நயாப் சிங் அந்த கூட்டத்தில் கூறி யுள்ளார்.  8ஆம் வகுப்பு வரையிலான பாடத்திட்டத்தில் பகவத் கீதை அறிவிப்பு மற்றும் சமஸ்கிருதப் பள்ளிகளின் எண்ணிக்கை அதி கரிக்கும் உத்தரவுக்கு ஹரியானா மாநிலம் முழுவதும் கண்டனங்கள் குவிந்து வருகின்றன.
2025-01-12 02:13:24.451571
ஜனவரி 11, 2025
தில்லியில் பாஜக பணப்பட்டுவாடா
மாநிலம் - தில்லி
நமது நிருபர்
https://theekkathir.in/News/states/delhi/election-commission-notice-to-bjp-candidate-in-kejriwal-constituency
தமிழ்
UTF-8
புதுதில்லி 70 தொகுதிகளைக் கொண்ட தில்லி மாநிலத்தில் பிப்ர வரி 5ஆம் தேதி ஒரே கட்ட மாக சட்டமன்ற தேர்தல் நடைபெ றும் என்றும், பதிவான வாக்குகள் பிப்ரவரி 8ஆம் தேதி எண்ணப்படும் என இந்திய தேர்தல் ஆணையம் செவ்வாய்க்கிழமை அன்று அறிவித்தது. ஆளும் ஆம் ஆத்மி, காங்கி ரஸ், பாஜக என தில்லியில் மும் முனை போட்டி நிலவுகிறது. மார்க்சி ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் 2 வேட்பா ளர்களுடன் களத்தில் குதித்துள் ளது. ஆம் ஆத்மி கட்சிக்கு சமாஜ் வாதி, சிவசேனா (உத்தவ்), திரி ணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சி கள் நிபந்தனையற்ற ஆதரவை வழங்கியுள்ளன. பாஜகவுக்கு ஆதரவாக வாக்குகளை பிரிக்கும் முனைப்பில் பகுஜன் சமாஜ், மஜ்லிஸ் கட்சிகளும் தில்லி தேர்தல் களத்தில் உள்ளன. இந்நிலையில், புதுதில்லி சட்டமன்ற தொகுதியில் பாஜக நேரடியாக பணப்பட்டுவாடா மேற் கொண்டு வருவதாக ஆம் ஆத்மி கட்சி குற்றம் சாட்டியுள்ளது. ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளரும், தில்லி முன்னாள் முதல்வருமான அர விந்த் கெஜ்ரிவால் புதுதில்லி தொ குதியில் போட்டியிடுகிறார். இந்த தொகுதியில் பாஜக சார்பில் பிரத மர் மோடிக்கு நெருக்கமான பர்வேஷ் வர்மா போட்டியிடுகிறார். பர்வேஷ் வர்மா பாஜக குண்டர்க ளோடு புதுதில்லி தொகுதியில் பணப்பட்டுவாடா மேற்கொண்டு வருவதாக தேர்தல் ஆணையத் திடம் கெஜ்ரிவால் புகார் அளித்துள் ளார். இந்த புகார் தொடர்பாக பாஜக வேட்பாளர் பர்வேஷ் வர்மாவுக்கு தேர்தல் ஆணையம் விளக்கம் அளிக்க உத்தரவிட்டுள்ளது.  தேர்தல் ஆணையத்தின் வேலையை முடக்கும் பாஜக புதுதில்லி தொகுதியில் பணப் பட்டுவாடா ஒரு பக்கம் இருந்தா லும், தங்களுக்கு நெருக்கமான தேர்தல் அதிகாரிகள் உதவியுடன் வாக்காளர்கள் நீக்கம், புதிய வாக் காளர்கள் சேர்த்தல் உள்ளிட்ட உள்ளடி வேலைகளை பாஜக தொ டர்ச்சியாக மேற்கொண்டு வரு கிறது. புதுதில்லி தொகுதியில் மட்டு மின்றி தில்லி மாநிலத்தின் 40க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வாக்கா ளர்கள் நீக்கம், சேர்த்தல் குளறுபடி வேலைகளை பாஜக செய்து வரு கிறது. இதுதொடர்பாக ஆம் ஆத்மி புகார் அளித்துள்ளது. இதனால் நீக்கப்பட்ட வாக்காளர்களை சேர்க் கவும், புதிய வாக்காளர்களை சேர்ப் பது தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையம், மாநில தேர்தல் ஆணையத்திற்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளது. ஆனால் தனக்கு ஆதரவான அதிகாரிகள் மூலம் அறி வுறுத்தல் சார்ந்த வழிகாட்டு நெறி முறைகளை பாஜக தடுக்கிறது என ஆம் ஆத்மி குற்றம் சாட்டி யுள்ளது.
2025-01-12 02:13:24.452043
ஜனவரி 11, 2025
சிபிஎம் ஜார்க்கண்ட் மாநில மாநாடு
மாநிலம் - தமிழ்நாடு
நமது நிருபர்
https://theekkathir.in/News/states/tamil-nadu/cpm-jharkhand-state-conference
தமிழ்
UTF-8
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 8ஆவது ஜார்க்கண்ட் மாநில மாநாடு ஜனவரி 9ஆம் தேதி ஏ.டி.சி.நாம்குளத்தில் பேரணி மற்றும் பொதுக்கூட்டத்துடன் துவங்கியது. கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிருந்தா காரத் மாநாட்டை தொடங்கி வைத்து உரையாற்றினார். பிரதிநிதிகள் அமர்வை அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ராமச்சந்திர டோம் துவங்கி வைத்தார்.
2025-01-12 02:13:24.452509
ஜனவரி 12, 2025
சமத்துவமின்மை வளர்ந்த காலத்தில் வேளாண்மை - பி.சாய்நாத்
கட்டுரை
நமது நிருபர்
https://theekkathir.in/News/articles/world/agricultural-decline-is-visible-in-milk-jugs
தமிழ்
UTF-8
பால் குவளையில் தெரியும் வேளாண் வீழ்ச்சிவேளாண்மையைப் பெருநிறுவனங்கள் கைப்பற்றிக் கொள்ளையடிக்கும் வணிகமயமாக்குதலை கிராமப்புறங் களில் மேற்கொண்டதன் காரணத்தால்தான் இந்தி யாவின் உண்மையான விவசாய நெருக்கடி ஏற்பட்டுள் ளது. இதன் காரணமாக உலகின் மிக அதிக அள விலான சிறு விவசாயிகள் உயிர் பிழைத்து வாழ்வதே பெரிய சவாலாக உள்ளது.விருந்தோம்பலின் வீழ்ச்சிகடந்த 1984-ல் ஃப்ரண்ட்லைன் இதழ் துவங்கப்பட்ட காலத்தில், விவசாயிகளின் வீடுகளில் முதல் உபசரிப்பு ஒரு குவளை பசும்பால். மகாராஷ்டிராவின் மேற்குப் பகுதிகளில் கூடுதலாக ஒரு குவளை பால் வீட்டை விட்டுக் கிளம்பும்போதும் தருவார்கள். கடலோர ஆந்திராவின் சில மாவட்டங்களில் வெள்ளித் தம்ளரில் பால் வழங்கி மரியாதை செய்வார்கள். தமிழகத்தில் பித்தளைத் தம்ளரில் பால் அல்லது நறுமணம் வீசும் வடித்த காபி வழங்கும் பழக்கம் இருந்தது.மாற்றத்தின் அடையாளங்கள்1990களின் தொடக்கத்தில் பல மாநிலங்களில் வெள்ளித் தம்ளர் மாறி ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் ஆனது. 1991-க்குப் பிறகு பசும்பால் தொடர்ந்தாலும் விளிம்பு இல்லாத பாத்திரங்களில் வந்தது. 1990களின் நடுப்பகுதியில் கண்ணாடிக் குவளைகள் தோன்றின. 2000 முதல் பாலுக்குப் பதிலாகத் தேநீர்வழங்கப்பட்டது. மகாராஷ்டிராவில் 2003-04-ல் கருப்புத் தேநீர் வந்தது. சர்க்கரையின் அளவு அன்பையும் மதிப்பையும் காட்டியது. அதுவும் குறைந்தது. கடந்த பத்தாண்டுகளில் கண்ணாடிக் குவளைகளும் மறைந்து, ரயில் நிலையங்களில் கிடைக்கும் சிறியபிளாஸ்டிக் கப்புகளில் கருப்புத் தேநீர் வழங்கப்படுகிறது.சமகால நிலை2018-ல் சுதந்திரப் போராட்ட வீரர் திரு.கணபதிபால் யாதவ் அவர்களை மகாராஷ்டிரா மாநிலம் சாங்கிலியில் சந்தித்தபோது பசும்பால் அலுமினியக் குவளையில் வந்தது. இவ்வாறு குவளைகளின் இறங்குமுகப் பயணம் நமது வேளாண் பொருளாதாரத்தின் வீழ்ச்சியைக் காட்டுகிறது.பொருளாதார  நெருக்கடியின் தாக்கம்பால் உற்பத்தியாளர்களின் நிலைதனியார் நிறுவனங்கள் பாலை குறைந்த விலைக்கு வாங்கி, நுகர்வோரிடம் அதிக விலைக்கு விற்கும் “சந்தை அடிப்படையிலான விலை” கொள்கையால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இத னால் கோடிக்கணக்கான விவசாயக் குடும்பங்களின் குழந்தைகளே பால் அருந்த முடியாத நிலை ஏற் பட்டுள்ளது. பாலின் ஒவ்வொரு சொட்டும் பிற அத்தியாவசியப் பொருட்கள் வாங்கத் தேவைப்படும் பணத்திற்குப் பயன்படுத்தப்படுகிறது.பருத்தி விவசாயிகளின் பரிதாபம்1970களில் விதர்பா பகுதியில் ஒரு விவசாயி ஒன்று அல்லது இரண்டு குவிண்டால் பருத்தி விற்று ஒரு பவுன் அல்லது ஒன்றரை பவுன் தங்கம் வாங்க  முடிந்தது. இன்று 10 குவிண்டால் பருத்தி விற்றா லும் ஒரு பவுன் தங்கம் வாங்க முடியாத நிலை. மகா ராஷ்டிராவில் பருத்திக்கு ரூ.7,122 குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயிக்கப்பட்டாலும், நடைமுறையில் வெகு சிலரே ரூ.6,500 வரை பெறுகின்றனர். முழு ஆதார விலை கிடைத்தாலும் 10 குவிண்டால் விற்று (ரூ.71,200) 10 கிராம் தங்கம் கூட வாங்க முடியாது.செல்வக் குவிப்பின் கொடுமை2024 டிசம்பர் நிலவரப்படி, நாட்டின் 217 பெரும் பணக்காரர்களின் சொத்து மதிப்பு 1.041 பில்லியன் டாலர் (86.40 லட்சம் கோடி ரூபாய்) என ஃபோர்ப்ஸ் இதழ் தெரிவிக்கிறது. இது நமது மொத்த வேளாண் நிதிநிலை அறிக்கையான வெறும் 562 பில்லியன் ரூபாயை (46,646 கோடி ரூபாய்) விட 58 மடங்கு அதிகம். மக்கள்தொகையில் .000015 சதவீதமே உள்ள 217 பேரின் சொத்து மதிப்பு நாட்டின் மொத்த சொத்தில் மூன்றில் ஒரு பங்காக உள்ளது.விவசாயிகளின் வருமான நிலை77வது தேசிய மாதிரி கணக்கெடுப்பின்படி, விவசா யக் குடும்பத்தின் மாத வருமானம் ரூ.10,218 மட்டுமே.  2017-ல் மோடி அரசு விவசாயிகளின் வருமானத்தை ஐந்தாண்டுகளில் இரட்டிப்பாக்கப் போவதாக வாக்கு றுதி அளித்தது. ஆனால் 2012-13 முதல் 2018-19 வரை  விவசாய வருமானம் 10 சதவீதம் வீழ்ச்சியடைந்துள் ளது. தற்போது விவசாயக் குடும்பங்கள் கூலிவேலை, சம்பளம் மற்றும் கால்நடை வளர்ப்பு மூலமே அதிக வருமானம் பெறுகின்றனர்.இடப் பெயர்வும் போராட்டங்களும்விவசாயிகளின் பெருந்திரள் இடப்பெயர்வுகடந்த 2000 முதல் 2011 வரையிலான காலகட்டத்தில் மிகப்பெரிய அளவிலான இடப்பெயர்வை நாடு சந்தித்தது. விவசாயமும் விவசாயப் பொருளாதா ரமும் தொடர் வீழ்ச்சிகளைச் சந்தித்ததால், கோடிக் கணக்கான விவசாயிகள் தங்களது நிலங்களை விட்டு பெருநகரங்களையும் அருகிலுள்ள சிறு நகரங்க ளையும் நோக்கிச் சென்றனர். ஊடகங்களின் அலட்சியம் இந்த மாபெரும் இடப்பெயர்வு ஒரு கெட்ட நிகழ்வா கக் கூடப் பார்க்கப்படவில்லை. ஃப்ரண்ட்லைன் போன்ற சில தேசிய ஊடகங்கள் மட்டுமே இது குறித்துப் பெரிய அளவில் செய்திகள் வெளியிட்டன. மற்ற ஊடகங் கள் இது குறித்து மிகவும் குறைவாகவே எழுதின. கொரோனா காலத்து மாற்றம் கொரோனா காலகட்டத்தில் இடப்பெயர்வு கிராமங்களை நோக்கி மறு வகையில் நடந்தது. குறைந்த வருமானத்தில் நகர்ப்புறங்களில் உடல் உழைப்புத் தொழிலாளர்களாகப் பணிபுரிந்தவர்க ளும், திறன் உள்ள விவசாயிகளும் தங்கள் கிராமங்க ளுக்குத் திரும்பினர். 2020 மே மாதத்தில் 25 நாட்க ளில் மட்டும் 91 லட்சம் தொழிலாளர்கள் கிராமங்களு க்குத் திரும்பியதாக ரயில்வே துறை தெரிவிக்கிறது. விவசாயிகளின் போராட்டங்கள் இந்தப் பின்னணியில் நடைபெற்ற விவசாயிகளின் எழுச்சிகள் முக்கியத்துவம் பெற்றன. Y 2018 மார்ச்சில் 40,000 ஏழை விவசாயிகள், குறிப்பாக ஆதிவாசி விவசாயிகள் மும்பையை நோக்கிச் சென்று மிகப்பெரிய அளவிலான போராட்டங்களை நடத்தினர். Y 2020-21 காலகட்டத்தில் கிசான் அந்தோலன் போராட்டங்கள் தில்லியின் எல்லைகளைத் தொட்டு, அதிர்வுகளை ஏற்படுத்தின. இது கடந்த 30 ஆண்டு களில் உலகில் நடந்த மிகப்பெரிய ஜனநாயக வழியிலான அமைதியான போராட்டம். Y வால்ஸ்ட்ரீட் ஆக்கிரமிப்பு போராட்டங்கள் 9 வாரங்க ளில் முடிவடைந்தபோது, விவசாயிகளின் போராட் டம் 54 வாரங்கள் நீடித்து, மூன்று முக்கிய வேளாண் சட்டங்கள் திரும்பப் பெறப்பட்ட பின்னரே முடி வுக்கு வந்தது.தாராளமயக் ொள்கைகளின் பின்விளைவுகள்அரசின் பங்களிப்பு குறைப்புதாராளமயக் கொள்கைகளால் பல்வேறு துறை களில் இருந்து அரசின் பங்களிப்பு படிப்படியாக வெளி யேற்றப்பட்டது. ஏழை மக்களுக்கான மானியங்கள் குறைக்கப்பட்டு, அதே நிதி பெருநிறுவனங்களுக்கு ஊக்கத்தொகையாக மாற்றப்பட்டது. பொதுச் சொத்துக்கள் தனியார் கைகளுக்கு மாற்றப்பட்டன. இதற்கு ஒரு துல்லியமான உதாரணம் - சத்தீஸ்கரில் 19 கிலோமீட்டர் நீளமுள்ள ஆறே தனியாருக்கு வழங்கப்பட்டது.கல்வித்துறை மாற்றங்கள்வேளாண் பல்கலைக்கழகங்கள் தங்களது அடிப் படை நோக்கத்தில் இருந்து விலகி, பெருநிறுவ னங்களின் வேளாண் வணிக ஆய்வகங்களாக மாறி வருகின்றன. விவசாயிகளுக்கான ஆராய்ச்சியும், அறிவுப் பகிர்வும் குறைந்து வருகிறது.உள்ளாட்சி அமைப்புகளின் நெருக்கடிபஞ்சாயத்து அமைப்புகளின் நிலை கவலைக் குரியதாக உள்ளது. பெருநிறுவனங்களுக்கு எதிராகக் குரல் கொடுத்த பஞ்சாயத்துகளின் அதிகாரங்கள் குறைக்கப்பட்டு, அவற்றின் செயல்பாடுகள் குறை மதிப்பிற்கு உள்ளாக்கப்பட்டன. கடன் சுமையின் தாக்கம் வேளாண் கடன் நெருக்கடி விவசாயிகளை மிகவும் பாதித்துள்ளது. முறையான வங்கிக் கடன்கள் மறுக்கப் பட்டதால், கோடிக்கணக்கான விவசாயிகள் தனியார் வட்டிக்கடைக்காரர்களின் பிடியில் சிக்கியுள்ளனர். இந்த கடன் சுமையால் விவசாயிகளின் தற்கொலை கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. விதர்பாவின் சோக நிலை 2003 முதல் 2013 வரையிலான பத்தாண்டு காலத்தில், வேளாண் இடுபொருட்களின் விலை 250-300 சதவீதம் வரை உயர்ந்தது. ஆனால் விவசா யிகளின் வருமானம் மிகவும் குறைவாகவே உயர்ந்தது. இது அவர்களின் வாழ்வாதாரத்தை கடுமையாகப் பாதித்தது.ரிசர்வ் வங்கியின்  முன்னாள் ஆளுநரின் எச்சரிக்கைஒய்.வி.ரெட்டி அவர்களின் எச்சரிக்கை குறிப்பிடத் தக்கது: “கிராமப்புறங்களில் நிறைய மாற்றங்களைக் காணலாம். ஆனால் கிராமப்புற வளர்ச்சியைக் குறை வாகவே காண முடிகிறது.” இந்த கருத்து இன்றும் பொருந்தும் உண்மையாக உள்ளது. ஊரக வேலைத் திட்டத்தின் நிலை மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் நெருக்கடியில் உள்ளது. கொரோனா காலத்தில் கிராமங்களுக்குத் திரும்பியவர்களால் திட்டத்தில் அதிக நெருக்கடி ஏற்பட்டது. வேலை கோருவோரின் எண்ணிக்கை அதிகரித்தும், நிதி ஒதுக்கீடு குறைக் கப்பட்டு, திட்டத்தின் செயல்பாடுகள் பாதிக்கப் பட்டுள்ளன. பொருளாதார நிபுணர்களின் பார்வை ஒரு முற்போக்கு பொருளாதார நிபுணர் கூறுவது போல, “நாம் வேளாண் விலைகளில் உலகமய மாக்குதலையும், வேளாண் வருமானத்தில் இந்தியமய மாக்கல் சூழலையும் காண்கிறோம்.” இந்த வார்த்தை கள் இன்றைய விவசாயிகளின் நிலையை மிகத் துல்லி யமாக விளக்குகின்றன.வேளாண் நெருக்கடியின் தற்கால நிலையும் எதிர்காலமும்தொடரும் அடிப்படை நெருக்கடிகள்1991-க்குப் பிந்தைய முப்பது ஆண்டுகளில் வேளாண் நெருக்கடிகளே கிராமப்புற சமுதாயத்தின் மிகப்பெரிய சவாலாக உள்ளது. போதிய வேலை வாய்ப்பின்மை, தொடர் இடப்பெயர்வுகள், நீர்ப் பற்றாக்குறை, மோசமான உடல்நலச் சேவைகள், தரமான கல்வி வாய்ப்புகளின்மை ஆகியவை சேர்ந்து நெருக்கடியை அதிகரிக்கின்றன. தற்கொலைகளின் அதிகரிப்பு 2024 வரை 10 ஆண்டுகளில் சுமார் 4 லட்சம் விவசாயி கள் தற்கொலை செய்துள்ளனர். இது அதிகாரப்பூர்வ புள்ளிவிவரம் - உண்மை எண்ணிக்கை இதைவிட அதிகமாக இருக்கலாம். பேராசிரியர் கே.நாகராஜ் கூறுவதுபோல, இந்த தற்கொலைகள் வேளாண் நெருக்கடியின் காரணம் அல்ல - அதன் சோக மான விளைவு மட்டுமே.பெருநிறுவனங்களின் ஆதிக்கம்ஐந்து பெரும் வர்த்தக நிறுவனங்கள் இந்திய வேளாண்மையைக் கைப்பற்றி விட்டன. பேராசிரியர் நாகராஜின் வார்த்தைகளில் சொல்வதெனில், “கிராமப் புறங்களில் கொள்ளையடிக்கும் வணிகமயமாக்கு தலே” இதற்குக் காரணம்.பாரம்பரிய முறைகளின் சிதைவுநெருக்கடி வெறும் பொருளாதார இழப்புகளோடு நின்றுவிடவில்லை. பாரம்பரிய விவசாய முறைகள் மறைந்து வருகின்றன. கிராமங்களின் பரஸ்பர உதவி முறைகள், கூட்டுறவு வாழ்க்கை முறை ஆகியவை சிதைந்து வருகின்றன. அரசின் புறக்கணிப்பு தற்போதைய சூழலில் விவசாயிகளுக்கான அடிப்படை ஆதரவு திட்டங்களே குறைக்கப்பட்டு வரு கின்றன. முக்கிய முடிவுகள் எடுக்கும்போது விவசா யிகளின் கருத்துகள் கேட்கப்படுவதில்லை. அவர்க ளின் வாழ்வாதாரம் குறித்த முடிவுகள் அவர்களைக் கலந்தாலோசிக்காமலேயே எடுக்கப்படுகின்றன.தீர்வுக்கான வழிகள் 1. விவசாயிகளுக்கான முறையான கடன் வசதிகள் மீண்டும் தொடங்கப்பட வேண்டும் 2. பொதுத்துறை முதலீடுகள் விவசாயத்தில் அதிகரிக்கப்பட வேண்டும் 3. சிறு விவசாயிகளுக்கான நிதி ஆதரவு வலுப் படுத்தப்பட வேண்டும் 4. வேளாண் விளைபொருட்களுக்கு நியாயமான விலை உறுதி செய்யப்பட வேண்டும் 5. கிராமப்புற உள்கட்டமைப்பு மேம்படுத்தப்பட வேண்டும்எதிர்காலத்திற்கான பரிந்துரைகள்Y விவசாயிகள் நலன் சார்ந்த கொள்கைகள் உரு வாக்கப்பட வேண்டும் Y கிராமப்புற வளர்ச்சிக்கு உண்மையான திட்ட மிடல் தேவை Y விவசாயிகளுக்கான சமூகப் பாதுகாப்பு வளை யம் உருவாக்கப்பட வேண்டும் Y விவசாய ஆராய்ச்சி மற்றும் கல்விக்கு முக்கி யத்துவம் அளிக்கப்பட வேண்டும் இந்த நெருக்கடியின் விளைவுகளை வெறும் உற்பத்தி இழப்புகளாலோ, உயிரிழப்புகளாலோ மட்டும் கணக்கிட முடியாது. இது மனிதநேய இழப்பு, சமூக உறவுகளின் சிதைவு, கிராமப்புற வாழ்க்கை முறையின் அழிவு, விவசாயக் கலாச்சாரத்தின் வீழ்ச்சி ஆகியவற்றின் கூட்டு விளைவாகும். இந்த நெருக்கடி யிலிருந்து மீள்வதற்கு அரசின் உடனடித் தலையீடும், விவசாயிகளின் நலன் சார்ந்த கொள்கைகளும் மிக அவசியம்.  பிரண்ட் லைன் ஏட்டின் 40ஆம் ஆண்டு நிறைவையொட்டி வெளியாகியுள்ள சிறப்பிதழில் (2025 ஜன.10), இடம் பெற்றுள்ள பிரபல பத்திரிகையாளரும், இந்திய கிராமப்புற வாழ்வியல் நெருக்கடிகளை நாடு முழுவதும் பயணித்து பதிவு செய்தவருமான பி.சாய்நாத் அவர்களது கட்டுரை.தமிழில் : பேரா. தி.ராஜ்பிரவின்
2025-01-13 02:09:42.375214
ஜனவரி 12, 2025
யாருக்கான தேசம்?
தலையங்கம்
நமது நிருபர்
https://theekkathir.in/News/headlines/bjp/narendra-modi-has-taken-charge-as-the-prime-minister-for-the-third-time
தமிழ்
UTF-8
மூன்றாவது முறையாக பிரதமராக பொறுப் ப்பேற்றுள்ள நரேந்திர மோடி நாடாளுமன்ற கூட்டங்களுக்கு முறையாக வருவதில்லை. ஊட கங்களை சந்திப்பதும் இல்லை. மாறாக “மனதின் குரல்” என்ற பெயரில் யாரும் எதிர்க்கேள்வி கேட்க  வாய்ப்பில்லாத வகையில் வானொலியில் உரை யாற்றுவார்.ஊடகச் சந்திப்புகளை அபூர்வமாக நடத்தினா லும் கூட அது திட்டமிடப்பட்ட, முன்பே தயாரிக் கப்பட்ட ஒரு நாடகமாகவே இருக்கும். அந்த வகை யில் ஜெரோதா பங்கு வர்த்தக நிறுவன இணை  நிறுவனர் நிகிலுடன் பிரதமர் ஒரு கலந்துரை யாடலை நிகழ்த்தியுள்ளார்.அதில் எல்லோரையும் போலவே நானும் சாதா ரண மனிதன்தான், கடவுள் அல்ல என்று தன்ன டக்கமாக கூறியுள்ளார். ஆனால் மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தின் போது தான் ஒரு சராசரி மனிதனல்ல என்றும், கடவுளின் அவதாரம் என்றும் கூறியதை மறந்துவிட முடியாது. நானும் தவறுகள் செய்வேன், ஆனால் கெட்ட எண் ணத்துடன் எந்தவொரு செயலிலும் ஈடுபட்ட தில்லை என்றும் மோடி கூறியுள்ளார். அவர் இது வரை எந்தவொரு நல்ல விசயமும் செய்ததாக தெரியவில்லை. நல்ல எண்ணமும் அவருக்கு இருந்தது இல்லை.அவருடைய அரசின் நடவடிக்கைகள் அனைத்தும் ஒன்று ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சி நிரலை நடைமுறைப்படுத்துவதாக இருக்கும். அல்லது கார்ப்பரேட் முதலாளிகளுக்கு கர சேவை செய்வதாக இருக்கும். பல நடவடிக்கை கள் இந்த இரு தரப்பின் நலனைக் கருத்தில் கொண்டதாக இருக்கும்.இந்த நாட்டின் கோடானுகோடி மக்களின் நலனை முன்னிறுத்தி அவர் எந்தச் செயலிலும்  ஈடுபட்டதில்லை. பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி வரி விதிப்பு, வேளாண் திருத்தச் சட்டம், தொழிலாளர் நலச் சட்டங்கள் வெட்டிச் சுருக்குவது, பொதுத் துறை நிறுவனங்களை தனியாரின் வேட்டைக் காடாக மாற்றுவது, நூறு நாள் வேலைத்திட்டம் உள்ளிட்ட திட்டங்களுக்கான நிதியை வெட்டிச் சுருக்குவது, கச்சா எண்ணெய் விலை குறைந்தா லும் பெட்ரோலியப் பொருட்களின் விலையை குறைக்க மறுப்பது என கார்ப்பரேட் முதலாளிக ளுக்கு சேவை செய்கிறது மோடி அரசு.மறுபுறத்தில் நாடு முழுவதும் சிறுபான்மை மக்களுக்கு எதிரான வெறுப்பு அரசியலை விசிறி விடுவது, குடியுரிமை திருத்தச் சட்டம், வக்பு வாரிய திருத்தச் சட்டம், ஜம்மு - காஷ்மீர் மாநி லத்தை துண்டு துண்டாக உடைப்பது, ஒரே நாடு, ஒரே தேர்தல் என இந்துத்துவா கூட்டத்தின் செயல்திட்டத்தையே தன்னுடைய அரசின் செயல்திட்டமாக மாற்றிக்  கொண்டுள்ளது மோடி அரசு. இந்த லட்சணத்தில் தேசமே என்னு டைய முதல் முன்னுரிமை என்று வாய்ப்பந்தல் போட்டுள்ளார் பிரதமர் மோடி. ஆனால் அவர் சொல்லும் தேசம் எல்லோருக்குமானதல்ல. குறிப்பிட்ட சிலரையே அவர் தேசமாக பார்க்கி றார். அதனால் அவருடைய செயல்கள் அனைத் தும் நாசகரமாக உள்ளன என்பதுதான் உண்மை.
2025-01-13 02:09:45.847928
ஜனவரி 12, 2025
விளையாட்டு...
விளையாட்டு
நமது நிருபர்
https://theekkathir.in/News/games/cricket/champions-trophy-2025
தமிழ்
UTF-8
சாம்பியன்ஸ் டிராபி 2025  - விராட் கோலி, ரோகித் சர்மா, ஜடேஜா நீக்கம்?மினி உலகக்கோப்பை என அழைக்கப் படும் 9ஆவது சாம்பியன்ஸ் டிராபி கோப்பை வரும் பிப்ரவரி மாதம் 19ஆம் தேதி பாகிஸ்தான் நாட்டில் தொடங்குகிறது.  இந்த தொடருக்கான இந்திய அணி இன்னும் அறி விக்கப்படாமல் உள்ள நிலை யில், விராட் கோலி, ரோகித் சர்மா, ஜடேஜாவை நீக்கி,  இளம் அணியுடன் சாம்பி யன்ஸ் டிராபியை எதிர்கொ ள்ள இந்திய கிரிக்கெட் கட்டுப் பாட்டு வாரியம் (பிசிசிஐ) ஆலோ சித்து வருவதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. விராட் கோலி, ரோகித் சர்மா, ஜடேஜாவை நீக்கி அவர்களு க்கு பதிலாக இளம் வீரர்களை கண்டறியவே பிசிசிஐ இன் னும் சாம்பியன்ஸ் டிராபி கோப்பைக்கான அணி வீரர் கள் விபரத்தை இன்னும் அறி விக்காமல் சர்வதேச கிரிக்கெட் வாரியத்திடம் கால அவகாசம் கேட்டுள்ளதாக தகவல் வெளி யாகியுள்ளது. தற்போதைய சூழலில் விராட் கோலி, ரோகித் சர்மா, ஜடேஜா ஆகிய மூவரும் மூத்த வீரர்கள் என்ற அடிப்படையில் இந்திய அணியின் தூண்க ளாக இருப்பவர்கள். ஆனால் ஒரே ஒரு தொடரில் ஏற்பட்ட சொ தப்பல்களால் உடனடியாக அணியில் நீக்குவது மிகவும் தவறானது. ஆஸ்திரேலிய அணிக்கெதிராக பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் விராட் கோலி, ரோகித் சர்மா,  ஜடேஜா  மட்டும் சொதப்ப வில்லை. ஒட்டுமொத்த இந்திய அணியும் சொதப்பியது என் பதை பிசிசிஐ கவனத்தில் கொள்ளாதது மிகவும் மோச மானது. அதனால் விராட் கோலி, ரோகித் சர்மா, ஜடே ஜாவை மட்டும் நீக்குவது சரி யானது அல்ல. குறிப்பாக பார்டர் - கவாஸ்கர் என்பது டெஸ்ட் தொடர் ஆகும். சாம்பி யன்ஸ் டிராபி ஒருநாள் கோப்பை ஆகும். இரண்டும் வெவ்வேறான தொடர் என்ற நிலையில், கம்பீர் மற்றும் பிசி சிஐ-யின் இந்த முடிவு கடும் சர்ச்சையை ஏற்படுத்தி யுள்ளது. மூவரும் சாதாரண ஆட்கள் இல்லை விராட் கோலி டெஸ்டில் 30 சதம், ஒருநாள் போட்டியில் 50 சதம் விளாசிய சாதனைக் குரியவர். மேலும் டெஸ்ட் போட்டியில் 9,230 ரன்களும், ஒருநாள் போட்டியில் 13,906 ரன்களும் குவித்த சிறப்புக்குரி யவர். அதே போல அதிரடி குணம் கொண்ட ரோகித் சர்மா டெஸ்டில் 12 சதமும், ஒருநாள் போட்டியில் 31 சதமும் விளாசி யவர். சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் அரங்கில் 3 முறை  இரட்டை சதம் அடித்த ஒரே வீரர் வரலாற்றுச் சாதனையும் ரோகித் சர்மாவிடம் தான் உள்ளது. பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் சரிசமமாக அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தும் முரட்டு குணம் கொண்ட ஜடேஜா  இதுவரை பார்ம் பிரச்சனை யில் சிக்கியதே இல்லை. டெஸ்ட் போட்டியில் 4 சதம் விளாசியுள்ள ஜடேஜா, ஒரு நாள் போட்டிகளிலன் இக் கட்டான சூழ்நிலையில், 13 முறை சதத்தை  நெருங்கும் வகையில் அரை சதம் விளா சியுள்ளார். மேலும் டெஸ்ட் போட்டிகளில் 319 விக்கெட்டு களும், ஒருநாள் போட்டிகளில் 220 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். இத்தகைய சிறப்புகள் மற்றும் சாதனை களை உடைய விராட் கோலி, ரோகித் சர்மா, ஜடேஜாவை சாம்பியன்ஸ் டிராபி தொடரில் நீக்கும் முடிவு மிக மோசமான பின்விளைவை ஏற்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது.கம்பீரைத்தான் முதலில் நீக்க வேண்டும்இந்திய அணி பார்டர்-கவாஸ்கர் தொடரில் சொதப்பியதற்கு வீரர்கள் மட்டுமின்றி புதிய தலைமை பயிற்சியாளர் கம்பீரும் முக்கிய காரணம் ஆகும். சூழ்நிலைக்கு ஏற்ப பயிற்சி அளிக்காதது, வீரர்கள் தேர்வு, ஆடும் லெவன் தேர்வு, அடிக்கடி ஆடும் லெவன் மாற்றம் என பல்வேறு வகையில் வீரர்களுக்கு குடைச்சலை கொடுத்தார். கம்பீரின் அழுத்தம் மற்றும் தந்திரம் இல்லாத பயிற்சி காரணமாகவே வீரர்கள் பதற்றத்துடன் பார்டர்-கவாஸ்கர் தொடரில் சோபிக்க தவறிவிட்டனர். அணியில் சீர்திருத்தம் தேவை என்றால் முதலில் பாஜக முன்னாள் எம்.பி.,யான கம்பீரை தான் நீக்க வேண்டும்.பிசிசிஐ புதிய செயலாளராக தேவஜித் சைக்கியா தேர்வுஇந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) செயலாளராக இருந்த ஜெய் ஷா, தற்போது சர்வதேச கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக செயல்பட்டு வருகிறார். இதனால் கடந்த 2 மாத காலமாக பிசிசிஐ செயலாளர் பதவி காலியாக இருந்தது.இந்நிலையில், பிசிசிஐ புதிய செயலாளராக தேவஜித் சைக்கியா தேர்வு செய்யப்பட்டுள்ளார். முதல்தர கிரிக்கெட் விளையாட்டில் குறுகிய அனுபவம் கொண்ட தேவஜித் சைக்கியா தேசிய அணியில் இடம் கிடைக்காததால் தனது 28 வயதில் கவுகாத்தி உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியை தொடங்கினார். சட்டம், நிர்வாகம் என ஓரளவு அனுபவ திறன் கொண்ட தேவஜித் சைக்கியா பாஜகவிற்கு நெருக்கமானவர் என செய்திகள் வெளியாகியுள்ளன.
2025-01-13 02:09:45.968096
ஜனவரி 12, 2025
தீக்கதிர் முக்கிய செய்திகள்
மாநிலம் - தமிழ்நாடு
நமது நிருபர்
https://theekkathir.in/News/states/tamil-nadu/agenda,-vision-for-bjp-in-delhi
தமிழ்
UTF-8
தில்லியில் பாஜகவிற்கு நிகழ்ச்சி நிரல், தொலைநோக்கு பார்வை, முதல்வர் முகம் என எதுவும் கிடையாது. அதனால் தான் ஆம் ஆத்மி தலைவர்கள் மீது பொய் வழக்குகள் போட்டுள்ளனர். வழக்குகள் மூலம் மிரட்டினாலும் வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் பாஜக படுதோல்வியை  சந்திக்கும்.சிஏஜி அறிக்கையில் தில்லி மாநில கருவூலத்துக்கு ரூ.2000 கோடி நஷ்டம் என கூறப்பட்டுள்ளது. இதன்மூலம் புதிய கலால் கொள்கையில் ஊழல் நிகழ்ந்து இருக்குமோ என்ற சந்தேகம் கிளம்பியுள்ளது. குறிப்பாக சிஏஜி அறிக்கையின் மூலம் ஆம் ஆத்மியின் தந்திரம் உடைந்துள்ளது.ஒன்றிய அரசு மற்றும் உத்தரப்பிரதேச அரசுகளுக்கு இடையே ‘மோதல்’ தீவிரமடைந்து வருகிறது. இரு பாஜக அரசுகளும் மக்கள் நலனை எதிர்கொள்ளாமல் மோதலில் மட்டுமே கவனம் செலுத்தி வருகின்றனர். இது நல்லதல்ல.எத்தனை மணி நேரம் பணிபுரிகிறேன் என்று என்னிடம் கேட்காதீர்; என் பணியின் தரம் எப்படி என்பதைக் கேளுங்கள். எனது மனைவி அற்புதமானவர், அவரைப் பார்த்துக்கொண்டே இருப்பதை நான் மிகவும் விரும்புகிறேன். உங்களுடைய வீட்டிலும், அதேபோல உங்கள் நண்பர்களுடனும் நீங்கள் நேரம் செலவழிக்காமல் இருந்தால், நீங்கள் எடுக்கும் தீர்மானங்களுக்கு சரியான ஆலோசனைகள் எப்படி கிடைக்கும்?உத்தரப்பிரதேச மாநிலத்தின் கன்னோஜ் ரயில் நிலையத்தில் கட்டிடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்த விபத்தில் 3 பேர் பலியாகிய நிலையில், 16 மணிநேரம் நீடித்த மீட்பு பணிக்கு இடையே 28 பேரும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.’தில்லி சட்டமன்ற தேர்தல் பிரசாரம் உள்பட செல வுக்காக ரூ. 40 லட்சம் வரை தனக்கு தேவைப் படுவதாக தில்லி முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர்களுள் ஒருவருமான அதிஷி அறி வித்து, இதற்காக நன்கொடை திட்டத்தையும் துவங்கியுள்ளார்.ஜார்க்கண்ட் மாநிலத்தின் மேற்கு சிங்பம் மாவட்டத்தின் காடுகளிலிருந்து 3 நவீன வெடிகுண்டுகளை பாதுகாப்புப் படையினர் கைப் பற்றியுள்ளனர். மேற்கு சிங்பம் நக்சல்கள் நட மாட்டம் அதிகமுள்ள பகுதியாகும்.
2025-01-13 02:09:50.996224
ஜனவரி 12, 2025
சத்தீஸ்கரில் நக்சல்கள் என 3 பேர் சுட்டுக்கொலை
மாநிலம் - தில்லி
நமது நிருபர்
https://theekkathir.in/News/states/delhi/3-naxals-shot-dead-in-chhattisgarh
தமிழ்
UTF-8
பாஜக ஆளும் சத்தீஸ்கர் மாநிலத்தின் பீஜப்பூர் அதிக மலைப்பகுதியை கொண்ட மாவட்டம் ஆகும். குறிப்பாக   நக்சல்கள் அதிக நடமாட்டம் கொண்ட பகுதி என்ற நிலையில், ஞாயிற்றுக்கிழமை அன்று பாதுகாப்பு படையினருடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் 3 நக்சல்கள் சுட்டுக்கொல்லப்பட்டதாக சத்தீஸ்கர் காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.  இதுகுறித்து பஸ்தர் ரேஞ்ச் காவல் துறை ஐஜி சுந்ததரராஜ் கூறுகை யில்,”இந்திராவதி தேசிய பூங்காவுக்கு அருகில் ஞாயிற்றுக்கிழமை காலையில் பாதுகாப்பு படையினர் நடத்திய நக்சல் எதிர்ப்பு கூட்டு தேடுதல் வேட்டையின் போது சீருடை அணிந்த மூன்று நக் சலைட்டுகளின் சுட்டுக்கொல்லப்பட்ட னர். நக்சலைட்டுகளின் உடல்கள் மற்றும் தானியங்கி துப்பாக்கி, வெடிபொருகள் மீட்கப்பட்டன” என அவர் கூறினார்.
2025-01-13 02:09:50.997306
ஜனவரி 12, 2025
மணிப்பூரில் மேம்படுத்தப்பட்ட வெடிபொருட்கள் மீட்பு
மாநிலம் - தில்லி
நமது நிருபர்
https://theekkathir.in/News/states/delhi/improved-ordnance-recovery-in-manipur
தமிழ்
UTF-8
பாஜகவின் இழிவான அரசி யலால் மணிப்பூர் மாநிலம் 20 மாதங்களுக்கு மேல் வன்முறையால் பற்றி எரிந்து கொண்டு இருக்கிறது. இந்த வன்முறைக்கு 260க்கும் மேற்பட்டோர் உயிரிழந் துள்ளனர். பல லட்சம் மக்கள் சொந்த மாநிலத்திலேயே அகதிகளாக இயல்பு நிலையற்று வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில், மணிப்பூரின் சுரா சந்த்பூர், தெங்னௌபால் மாவட்டங்க ளில் அதிநவீன ஆயதங்கள் மீட்கப் பட்டுள்ளன. சுராசந்த்பூர் காவல் நிலைய  எல்லைக்குட்பட்ட பழைய கெல்மோல் கிராமத்தில் நடத்தப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது ஏகே-56 ரைபிள் உட்பட 7 துப்பாக்கிகள் மற்றும் ஒரு சீன கையெறி குண்டுகள் ஆகியவை மீட்கப் பட்டதாக காவல்துறையின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இதேபோல தெங்னௌபாலில் உள்ள மோரேக் காவல் நிலைய எல்லைக் குட்பட்ட கோவஜங் பகுதியில் பாது காப்புப் படையினரின் தேடுதல் வேட்டை யில் தலா 1 கிலோ எடையுள்ள இரண்டு மேம்படுத்தப்பட்ட வெடிபொருள்கள் மற்றும் கிட்டத்தட்ட 5 கிலோ எடை யுடன் ஒரு ஐஇடி குண்டுகளும் மீட்கப் பட்டுள்ளது.
2025-01-13 02:09:50.997938
ஜனவரி 12, 2025
கர்நாடகாவில் முதல்வர் மாற்றம் இல்லை
மாநிலம் - தில்லி
நமது நிருபர்
https://theekkathir.in/News/states/delhi/dk-sivakumar's-response-to-kodi-media-media
தமிழ்
UTF-8
பெங்களூரு கர்நாடகா மாநிலத்தில் காங் கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. கடந்த 2023ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற  தேர்தலில் வெற்றி பெற்று முதல்வ ராக சித்தராமையா பதவியேற்றார். துணை முதல்வராக டி.கே.சிவக் குமார் பொறுப்பேற்றுக்கொண்டார். இந்நிலையில், இரண்டரை ஆண்டுகள் ஒப்பந்தம் என்ற பெய ரில் கர்நாடகாவில் முதல்வர் மாற் றம் செய்யபோவதாக பாஜக ஆத ரவு “கோடி மீடியா” ஊடகங்கள் சனிக்கிழமை மாலை முதல் செய்தி வெளியிட்டு வருகின்றன. அதாவது சித்தராமையா முதல்வர் பதவியை ராஜினாமா செய்யப் போவதாக வும், டி.கே.சிவக்குமார் முதல்வ ராக பொறுப்பேற்றுக் கொள்ள உள்ளதாக செய்திகள் வெளியா கின. மேலும் சித்தராமையா - டி.கே. சிவக்குமார் மோதல் சம்பவத்தால் கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சி எப்பொழுதும் வேண்டுமானாலும் கவிழும் என “கோடி மீடியா” ஊட கங்கள் தலைப்புச் செய்தியாக கூறி வந்தன. இத்தகைய சூழலில், “கர்நாட காவில் முதல்வர் மாற்றம் இல்லை” என “கோடி மீடியா” ஊடகங்களு க்கு டி.கே.சிவக்குமார் பதிலடி கொடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் அளித்த பேட்டியில், ”முதல்வர் மாற்றம் என வெளி வரும் தகவல்களில் உண்மை யில்லை. காங்கிரஸ் தலைமையின் வழிகாட்டுதலின் படி சரியான பாதையில் சென்று கொண்டிருக்கி றோம். எனவே யாரும் கவலைப் பட வேண்டாம். தற்போதைய சூழலில் அரசியல் மாற்றம் தேவை யில்லை. மக்கள் எங்களை தேர்வு செய்து ஆட்சி அதிகாரத்தை வழங் கியுள்ளார்கள். அதனை முழுமை அடையச் செய்வோம். எனக்காக யாரும் எதையும் பெற்று தர வேண் டியதில்லை. எனக்கு யாருடைய ஒத்துழைப்பும் தேவையில்லை. எனக்காக எந்த ஒரு எம்எல்ஏவும் பேச வேண்டும் என நான் கேட்க வில்லை. இது எனக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் இடையிலான விஷயம். கட்சி என்ன சொல்கிறதோ, அதை கச்சிதமாக செய்து முடிப்பேன்” என அவர் கூறினார்.
2025-01-13 02:09:50.998587
ஜனவரி 12, 2025
சிபிஎம் ஹரியானா மாநில மாநாடு துவங்கியது
மாநிலம் - தில்லி
நமது நிருபர்
https://theekkathir.in/News/states/delhi/cpm-haryana-state-conference-begins
தமிழ்
UTF-8
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஹரியானா மாநில 17ஆவது மாநாடு கைத்தலில் சனிக்கிழமை அன்று பொதுக்கூட்டத்துடன் துவங்கியது. அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் நிலோத்பால் பாசு, மத்திய குழு உறுப்பினர் டாக்டர் கே.ஹேமலதா, மாநில செயலாளர் சுரேந்திர சிங், சிபிஐ மாநில செயலாளர் தரியாவ் சிங் காஷ்யப் ஆகியோர் கலந்து கொண்டு பொதுக்கூட்டத்தில் உரையாற்றினர்.
2025-01-13 02:09:50.999865
ஜனவரி 12, 2025
பவுணர்மி அன்று கருத்தரிக்கக் கூடாதாம்: மாணவர்கள் முன்னிலையில் டிஐஜி ஆபாச பேச்சு சிபிஎம் கண்டனம்
மாநிலம் - தமிழ்நாடு
நமது நிருபர்
https://theekkathir.in/News/states/tamil-nadu/cpm-condemns-dig's-obscene-speech-in-front-of-students-who-are-not-allowed-to-conceive-on-paunarmi
தமிழ்
UTF-8
பாஜக ஆளும் மத்தியப்பிரதேச மாநிலத்தின் ஷாதோல் மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளியில் சமீபத்தில் 10 முதல் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பெண் குழந் தைகளின் பாதுகாப்பு குறித்து விழிப்பு ணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.  இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் ஷாதோல் மண்டல டிஐஜி சவிதா சோ ஹானே (பெண்),”நான் சொல்வதை செய்தால், நீங்கள் மீண்டும் பூமியில் மறுபிறவி எடுப்பீர்கள். அது எவ்வாறு நிகழ வேண்டும் என்றால், முதல் விஷயம் பவுணர்மி அன்று கருத்தரிக்கக் கூடாது.  அடுத்து சூரியனை வணங்கி, நீர் ஊற்றி நமஸ்காரம் செய்தால் வலிமையான குழந்தை பிறக்கும். மறுபிறவியும் கிடைக்கும்” என அவர் கூறினார்.  சிபிஎம் கடும் கண்டனம் “மாணவர்கள் முன்னிலையில் டிஐஜி சவிதா சோஹானேவின் தவறான மற்றும் அபத்தமான அறிவுரை வன்மையாக கண்டிக்கத்தக்கது” என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியப்பிரதேச மாநில செயலாளர் ஜஸ்விந்தர் சிங் கண்ட னம் தெரிவித்துள்ளார்.  இதுகுறித்து அவர் மேலும் கூறுகை யில்,”மாணவர்கள் முன்னிலையில் மூட நம்பிக்கை மற்றும் பாலியல் ஆரோக்கி யம் என்ற பெயரில் ஆபாசமாக பேசிய டிஐஜி சவிதா சோஹானேவை உடன டியாக மனநல சிகிச்சைக்கு அனுப்ப வேண்டும். அவர் கூறிய அனைத்தும் தவறான தகவல்கள் ஆகும். இந்த அபத்தமான அறிவுரைக்காக சவிதா சோஹானேவை தண்டிக்க வேண்டும். ஆளும் கட்சியான பாஜகவுக்கும், அதன் ரிமோட் கண்ட்ரோலான ஆர்எஸ் எஸ்ஸுக்கும் தன்னை விசுவாசமாக நிரூ பிக்கும் பந்தயத்தில் டிஐஜி சவிதா சோஹானேவின் வெற்றி பெறவே மாணவர் மனதில் நஞ்சை விளைக்கும் வகையில் பேசியுள்ளார். இது வன்மை யாக கண்டித்தக்கது” என ஜஸ்விந்தர் சிங் கூறினார்.
2025-01-13 02:09:51.000487
ஜனவரி 12, 2025
ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்திற்கு ஆரம்பப்பள்ளி ஆசிரியர்கள் எதிர்ப்பு
மாநிலம் - தமிழ்நாடு
நமது நிருபர்
https://theekkathir.in/News/states/tamil-nadu/primary-school-teachers-protest-against-integrated-pension-scheme
தமிழ்
UTF-8
சிவகங்கை,ஜன.12- பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் கொண்டுவருவதாக தேர்தல் வாக்குறுதி அளித்த தமிழக அரசு, தற்போது புதிய ஒருங்கிணைந்த ஓய்வூ தியத் திட்டத்தை செயல்படுத்த குழு அமைப்பதாக அறிவித்துள்ளதை தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கடுமையாக எதிர்த்துள்ளது.  சிவகங்கை மாவட்டம் காளையார் கோவிலில் ஜனவரி 12 அன்று  கூட்ட ணியின் மாநில பொதுக்குழு கூட்டம் மாநிலத் தலைவர் மூ.மணிமேகலை தலைமையில் நடைபெற்றது. பொதுச் செயலாளர் ச.மயில் மற்றும் பலர் பங் கேற்றனர். இக்கூட்டத்தில், தேர்தல் வாக்கு றுதியில் கூறியபடி பழைய ஓய்வூதியத் திட்டத்தை உடனடியாக நடைமுறைப் படுத்த வேண்டும்.  இடைநிலை ஆசிரி யர்களுக்கு ஒன்றிய அரசு ஆசிரியர்க ளுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும்.  தொடக்கக்கல்வி ஆசிரி யர்களின் பதவி உயர்வு வாய்ப்புகளை பாதிக்கும் அரசாணை 243-ஐ ரத்து  செய்ய வேண்டும் என்று வலியுறுத் தப்பட்டது. இந்த கோரிக்கைகளை வலி யுறுத்தி  பிப்ரவரி 22 அன்று சென்னை யில் இந்திய பள்ளி ஆசிரியர் கூட்ட மைப்பு சார்பில் பத்தாயிரம் ஆசிரியர் கள் பங்கேற்கும் உண்ணாவிரதப் போராட்டமும், மார்ச் 7-ஆம் தேதி டிட்டோஜாக் சார்பில் கோட்டை முற்று கைப் போராட்டமும் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
2025-01-13 02:09:51.001128
ஜனவரி 12, 2025
சிவகங்கை கல்லூரி மாணவி மர்ம மரண வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றுக!
மாநிலம் - தமிழ்நாடு
நமது நிருபர்
https://theekkathir.in/News/states/tamil-nadu/demand-of-democratic-mother-sangh
தமிழ்
UTF-8
சென்னை,ஜன.12- சிவகங்கை கல்லூரி மாணவி மர்ம மரண வழக்கை சிபிசிஐடிக்கு மாற்ற வேண்டும் என்று அனைத்திந்திய ஜன நாயக மாதர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து சங்கத்தின் மாநிலத் தலைவர் எஸ்.வாலண்டினா, மாநிலப் பொதுச்செயலாளர் அ.ராதிகா ஆகி யோர் வெளியிட்டுள்ள அறிக்கை வரு மாறு: சிவகங்கை மாவட்டம் கல்லல் ஒன்றியத்தில் சேது பாஸ்கரா தனியார் வேளாண் கல்லூரி உள்ளது. அக்கல்லூரியில் பயின்ற திருநெல் வேலி மாவட்டம் வீரமாணிக்கபுரத்தை சார்ந்த  பிரீத்தா தேவி என்ற மாணவி ஜனவரி 7ஆம் தேதி காலை  9 மணிக்கு விடுதியின் பின்புறம் உயிருக்கு போராடிய நிலையில் கீழே விழுந்து கிடந்துள்ளார். விடுதியின் நான்காவது மாடியில் இருந்து குதித்து மாணவி தற்கொலை முயற்சி செய்துள்ளதாக அவளது பெற் றோருக்கு கல்லூரி நிர்வாகம் தகவல் கொடுத்து விட்டு,  காரைக்குடியில் உள்ள குளோபல் மருத்துவமனை யில் மாணவியை அனுமதித்திருந்தது. அங்கு முதல் உதவி அளித்த மருத்துவ மனை நிர்வாகம் கல்லல் காவல் நிலை யத்திற்கு தொலைபேசி மூலம் தகவல் தெரிவித்துள்ளது. அதுவரை கல்லூரி நிர்வாகம் காவல்துறைக்கு எந்த தகவ லும் தரவில்லை. முதல் உதவி முடிந்து மிக மோசமான நிலையில் இருந்த மாணவியை  கல்லூரி நிர்வாகம் மதுரை மீனாட்சி மருத்துவமனையில் அனுமதித்தது. மதுரை மீனாட்சி மருத்துவமனை யில் தான் பெண்ணின் பெற்றோர்  சென்று பார்த்துள்ளனர்.அன்று இரவு சிகிச்சை பலனின்றி அந்த மாணவி மரணம் அடைந்தார். அன்று இரவு மாணவியின் உடல் உடற் கூராய்வுக்கு மதுரை அரச ராஜாஜி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. கல்லூரி நிர்வாகத்திற்கு ஆதரவாக காவல்துறை ஆய்வாளர் மாணவி இறக்கும் வரை கல்லூரி நிர்வாகத்திடம் எந்த புகாரும் காவல் துறை எழுத்துப்பூர்வமாக பெற வில்லை. அவர் இறந்த பின் அவரு டைய தந்தையிடம் புகார் மனுவை எழுதிக் கேட்டுள்ளனர். சம்பவம் நடந்தது குறித்து எந்த தகவலும் தனக்கு தெரியாது என்ப தால் புகார் மனுவை எழுதித்தர மாணவி யின் பெற்றோர் மறுத்துவிட்டனர். ஆனாலும் காவல்துறை ஒரு புகாரை எழுதி பெண்ணின் தந்தையிடம் கையொப்பம் பெற்றுள்ளது.அந்த விடு தியில் எங்கும் சிசிடிவி கேமராக்கள் இல்லை என சொல்லப்படுகிறது. மேலும் மொட்டை மாடிக்கு செல்வ தற்கான கதவின் சாவி காப்பாளரிடம் மட்டுமே உள்ளது. அந்த மாணவி சாவியை எடுத்து எப்படி திறந்து தற்கொலை செய்திருப்பார் என்பதே  கல்லூரி மாணவிகளிடம் எழும் கேள்வி. இவ் வழக்கில் சம்பவம் நடந்த கல்லூரி நிர்வாகத்திடம் காவல்துறை இதுவரை புகார் மனு பெறவில்லை.  கல்லூரி நிர்வாகத்திடம் புகாரை பெறாமல் மாணவியின் பெற்றோரை கட்டாயப்படுத்தி புகார் மனுவில் கையெழுத்து பெற்ற கல்லல் காவல் ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.  வழக்கை சிபிசிஐடிக்கு மாற்ற வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
2025-01-13 02:09:51.001742
ஜனவரி 12, 2025
பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களுக்கு கடும் தண்டனை
மாநிலம் - தமிழ்நாடு
நமது நிருபர்
https://theekkathir.in/News/states/tamil-nadu/matar-sangam-welcomes-social-change-along-with-law
தமிழ்
UTF-8
“காவல்துறை செயல்பாடுகளில் மாற்றம் தேவை”; “மரண தண்டனை தீர்வல்ல”சென்னை, ஜன.12- தமிழக சட்டமன்றத்தில் நிறை வேற்றப்பட்டுள்ள பெண்கள் மற்றும்  குழந்தைகளுக்கு எதிரான குற்றங்க ளுக்கு கடுமையான தண்டனை விதிக்கும் சட்டத்தை அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் வரவேற்  றுள்ளது. அதேநேரம், சட்டத்  திருத்தங்களில் உலக நாடுகளின்  அனுபவங்களையும், சமூக செயல் பாட்டாளர்களின் கருத்துக்களையும் கணக்கில் கொள்ள வேண்டியதன்  அவசியத்தையும் வலியுறுத்தியுள் ளது. காவல்துறை செயல்பாடு மோசம் சட்டங்களை செயல்படுத்துவ தில் காவல்துறையின் பங்கு குறித்து சங்கம் தனது கவலையை வெளிப்படுத்தியுள்ளது. “பெண்கள், குழந்தைகள் மீதான வன்முறை வழக்குகளில் காவல்துறையின் செயல்பாடுகள் மிக மோசமாக உள்  ளது. வழக்குகள் பதிவு செய்யப்பட்ட  பின்னரும், தண்டனை பெற்றுத் தரு வதில் கடும் அலட்சியம் காட்டப்படு கிறது,” என சங்கத்தின் மாநிலத் தலை வர் எஸ்.வாலாண்டினா, மாநில  பொதுச்செயலாளர் அ.ராதிகா ஆகி யோர் விடுத்துள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளனர். முக்கிய பரிந்துரைகள் H     ஏற்கனவே பதிவான வழக்கு கள், தண்டனைகள் குறித்து அரசு  விரிவான ஆய்வு நடத்த வேண்டும் H     புகார்கள், வழக்குப் பதிவுகள், தண்டனை விபரங்கள் குறித்த புள்ளிவிவரங்களை தொகுக்க வேண்டும்; H     பெண்களை பாலியல் பொரு ளாக பார்க்கும் ஆணாதிக்க கண்ணோட்டத்திற்கு எதிரான விழிப்புணர்வு பிரச்சாரங்களை அரசு முன்னெடுக்க வேண்டும்; H     பாடத்திட்டம், ஊடக சித்தரிப்பு களில் பண்பாட்டு ரீதியான மாற்  றங்களை கொண்டுவர வேண்டும்; H    பாலின சமத்துவக் கொள்கை களை அரசின் அனைத்து மட்டங்  களிலும் செயல்படுத்த வேண்டும்  எனவும் வலியுறுத்தியுள்ளனர். மரண தண்டனை குறித்த கருத்து “தண்டனை அதிகரிப்பு அல்லது  மரண தண்டனை மட்டுமே குற்றங் களைக் குறைக்காது என்பது பல நாடு களின் அனுபவம். மரண தண்ட னைக்குப் பதிலாக ஆயுள் முழுவதும்  சிறைத் தண்டனை வழங்குவதை பரிசீலிக்கலாம்” என சங்கம் தெரி வித்துள்ளது. தொடரும்  போராட்டம் “பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகளை எதிர்த்து தொடர்ந்து போராடுவோம். அரசின் நல்ல முயற்சிகளுக்கு ஆதரவு அளிப்பதுடன், குறைபாடுகளை சுட்டிக்காட்டி செயல்படுவோம்,” என அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் உறுதியளித்துள்ளது.
2025-01-13 02:09:51.002337
ஜனவரி 12, 2025
தீக்கதிர் விரைவு செய்திகள்
மாநிலம் - தமிழ்நாடு
நமது நிருபர்
https://theekkathir.in/News/states/tamil-nadu/distribution-of-pongal-packages-to-1.47-crore-people
தமிழ்
UTF-8
முதல்வர் மீது ஆளுநர் ஆத்திரம்சென்னை, ஜன.12- சட்டசபையில் உரையாற்றாமல் வெளிநடப்பு செய்த ஆளுநரின் செயலை ‘சிறுபிள்ளைத்தனமானது’ என முதல்வர் மு.க.ஸ்டாலின் விமர்சித்திருந்தார். இதனால் ஆத்திரம் அடைந்துள்ள ஆளுநர் ரவியின் எரிச்சலை வெளிப்படுத்தும்  விதமாக ஆளுநர் மாளிகை தனது எக்ஸ் தளத்தில் கடுமையான பதிவொன்றை வெளியிட்டுள்ளது. கடந்த பிப்ரவரி 12 அன்று சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியது. அரசமைப்புச் சட்டப்பிரிவு 176-ன் படி, ஆண்டின் முதல் கூட்டத்தொடரில் ஆளுநர் உரையாற்ற வேண்டும். ஆனால் தேசிய கீதம் முதலில் பாடப்படவில்லை என்ற காரணத்தைக் கூறி ஆளுநர் ஆர்.என்.ரவி உரையாற்றாமல் வெளிநடப்பு செய்தார்.  இதுகுறித்து சட்டசபையில் நடந்த விவாதத்தின்போது பேசிய முதல்வர், “திட்டமிட்டு விதிமீறல் செய்வதிலேயே ஆளுநர் குறியாக இருக்கிறார். தமிழ்நாடு வளர்ந்து வருவதை அவரால் ஜீரணிக்க முடியவில்லை” என விமர்சித்தார். இந்நிலையில் ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “தேசிய கீதத்திற்கு மரியாதையை வலியுறுத்துவதையும், அரசியலமைப்பு கடமைகளை நிறைவேற்றச் சொல்வதையும் முதல்வர் ‘அபத்தம்’ என்கிறார். இந்தியாவை ஒரு தேசமாகவும் அதன் அரசியலமைப்பை மதிக்காத தலைவராக முதல்வர் இருக்கிறார். இத்தகைய ஆணவம் நல்லதல்ல” எனக் கடுமையாக விமர்சித்துள்ளது.1.47 கோடி பேருக்கு பொங்கல் தொகுப்பு வழங்கல்சென்னை,ஜன.12- தமிழ்நாடு முழுவதும் சனிக்கிழமை (ஜன.11) வரை 1.47  கோடி பேருக்கு பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டுள்ளது என்று  கூட்டுறவுத் துறை அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து கூட்டுறவுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ”தை பொங்கலை சிறப்பாகக் கொண்டா டும் வகையில் தமிழ்நாடு முழுவதும் 34,793 நியாய விலைக்  கடைகளில் 2 கோடியே 20 லட்சத்து 94 ஆயிரத்து 585 அரிசி  பெறும் குடும்ப அட்டைதாரர்கள், இலங்கை தமிழர் மறு வாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கு பொங்கல்  பரிசுத் தொகுப்பு வழங்கும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இதற்காக சுமார் 50 ஆயிரம் கூட்டுறவு துறை பணி யாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பொங்கல் பண்டிகைக்கு முன்னதாக அனைத்து அரிசி பெறும் குடும்ப  அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கும் வகையில்  பணிகள் நடைபெற்று வருகின்றன. 1 கோடியே 47 லட்சத்து 07 ஆயிரத்து 584 அரிசி பெறும்  குடும்ப அட்டைதாரர்கள், இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கு பொங்கல் பரிசுத்  தொகுப்பு வழங்கப்பட்டது. இதன் மூலம் 67 சதவீதம் பணி கள் நிறைவு பெற்றுள்ளன. மீதமுள்ள பயனாளிகளுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணி முழுவீச்சில் நடை பெற்று வருகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.எடப்பாடி பழனிசாமியின் உறவினர் ரூ..700 கோடி வரி ஏய்ப்பு?சென்னை,ஜன.12-  ஈரோடு ராமலிங்கம் கன்ஸ்ட்ரக்சன் தொடர்பான இடங்க ளில் வருமானவரித் துறை அதிகாரிகள் சோதனை நடத்தி னர். இவர் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியின்  உறவினர் ஆவார்.  26 இடங்களில் நடைபெற்ற சோதனையில்  ரூ.10 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்றும்  ராம  லிங்கம் ரூ.700 கோடி வரி ஏய்ப்பு செய்தது கண்டுபிடிக்கப் பட்டுள்ளதாகவும் வருமானவரித்துறை தகவல் தெரிவித்துள்ளது.தில்லியில் அதிர்ச்சி பாஜக எம்.பி.,யின் இல்லத்திலேயே  போலி வாக்காளர்கள்70 தொகுதிகளை கொண்ட தில்லி மாநிலத்தில் பிப்ரவரி 5ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. பதிவான வாக்கு கள் பிப்ரவரி 8ஆம் தேதி எண்ணப்படும் நிலையில், தோல்வி பயத்தால் பணப் பட்டுவாடா, மதவெறியை கிளப்பும் பேச்சு, வாக்காளர்களை நீக்குதல் உள்ளிட்ட இழிவான வேளைகளில் பாஜக ஈடுபட்டு வருகிறது. அதாவது பெரும்பான்மைக்கு தேவையான அளவில் 40க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வாக்காளர்களை சேர்த் தல் மற்றும் நீக்குதல் போன்ற வேலை களை தேர்தல் அதிகாரிகள் மூலம் பாஜக நிகழ்த்தி வருகிறது. இதனை ஆதாரத்து டன் ஆம் ஆத்மி கட்சி இரண்டு நாட்களு க்கு முன் போட்டுடைத்தது.  இந்நிலையில், ஆம் ஆத்மி கட்சியின் அறிக்கையை சுட்டிக்காட்டி உச்சநீதி மன்ற மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன். ”பாஜக எம்.பி.,யின் இல்லத்திலேயே போலி வாக்காளர்கள் கண்டறியப்பட்டுள் ளது” என குற்றம் சாட்டியுள்ளார். இதுதொடர்பாக தனது டுவிட்டர் எக்ஸ் பக்கத்தில் அவர் மேலும் கூறுகை யில்,”தலைநகர் தில்லியில் பாஜக எம்.பி.,யின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் இருந்தே 24 போலி வாக்காளர்கள் பதிவு செய்யபட்டுள்ளது. இது நமது ஜனநாய கத்தின் மீதான மோசடி மட்டுமின்றி கடு மையான கிரிமினல் குற்றமாகும். பாஜக வினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கண்டனம் தெரிவித்துள்ளார்.பொங்கல் பண்டிகை: 4.12 லட்சம் பேர் அரசுப்  பேருந்துகளில் பயணம்சென்னை,ஜன.12- பொங்கலுக்காக சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்குச் செல்வதால், அரசு சார்பில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. பொங்கல் பண்டிகையையொட்டி ஜனவரி 19 ஆம் தேதி வரையில் விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில், வெளியூர்களில் பணிபுரிவோர், தங்கள் சொந்த ஊர்களுக்கு படையெடுத்து வருகின்றனர். இவர்கள் எந்தவித சிரமமின்றி பயணிக்கும்வகையில், அரசு போக்குவரத்துக் கழகங்கள் மூலம் வெள்ளிக்கிழமை முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. தொடக்க நாளான வெள்ளிக்கிழமை தமிழகம் முழுவதும், வழக்கமாக இயக்கப்படும் 2,092 பேருந்துகளுடன் 1314 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டது. வெள்ளிக்கிழமை மட்டும் சுமார் 1.8 லட்சம் பேர் அரசுப் பேருந்துகளில் பயணித்துள்ளனர். தொடர்ந்து இரண்டாம் நாளான சனிக்கிழமையும் (ஜன. 11) இயக்கப்பட்ட 4107 பேருந்துகளில் 2.2 லட்சம் பேர் பயணித்துள்ளனர். கடந்த இரண்டு நாட்களில் மட்டும் 7,500-க்கும் மேற்பட்ட சிறப்புப் பேருந்துகளில் 4.12 லட்சம் பேர் பயணித்துள்ளனர். மேலும் பேருந்துகள் குறித்த விவரங்கள், புகார்களுக்கு 94450 14436 என்ற எண்ணையும், ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிப்பு உள்ளிட்ட புகார்களுக்கு 1800 425 6151 (கட்டணமில்லா எண்) மற்றும் 044 24749002, 044 26280445, 044 26281611 ஆகிய எண்களையும் தொடா்பு கொள்ளலாம் என்றும் போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறினர்.தமிழறிஞர் சாலமன் பாப்பையா இணையர்   மறைவு : கே.பாலகிருஷ்ணன் இரங்கல்சென்னை,ஜன.12- தமிழறிஞர் சாலமன் பாப்பையா இணையர் மறைவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன் இரங்கல்  தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பில், தமிழ் அறிஞர், நாடறிந்த பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா அவர்களுடைய இணையர் ஜெயாபாய் அம்மையார் காலமானார் என்ற செய்தி அறிந்து வேதனையடைந்தேன். அன்னாரது இழப்பால் வாடும் சாலமன் பாப்பையா மற்றும் குடும்பத்தார், உற்றார் உறவினர் அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.புதுச்சேரியில் ஹெல்மெட் கட்டாயம்புதுச்சேரி,ஜன.12-  புதுச்சேரி மாநிலத்தில் இரு சக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் இருசக்கர வாகன விபத்தில் கடந்த 2023 ஆம் ஆண்டு 140 பேரும். 2024 ஆம் ஆண்டு 123 பேரும் பலியாகினர்.  இதனால் இந்தாண்டு சாலையில் உயிரிழப்புகளை தடுப்பதற்காக ஜீரோ உயிரிழப்பு என்ற திட்டத்தை புதுச்சேரியில் அமல்படுத்த புதுச்சேரி போக்குவரத்து காவல்துறை முடிவு செய்தது. அதன்படி இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு ஜனவரி 12  முதல் ஹெல்மெட் கட்டாயம் சட்டம் அமலுக்கு வந்தது. ஹெல்மெட் அணியாமல் வாகனத்தில் சென்றால் அபராதம் விதிக்கப்படும். தொடர்ந்து போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடுவர்க ளின் வாகன உரிமம் ரத்து செய்யப்படும் என்று போக்குவரத்து காவல்துறை எச்ச ரிக்கை விடுத்துள்ளது.இராமேஸ்வரம் மீனவர்கள்  8 பேரை சிறை பிடித்தது இலங்கை கடற்படைஇராமேஸ்வரம், ஜன.12- எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இராமேஸ்வரம் மீனவர்கள் 8 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த அவர்களிடம் இருந்து 2 விசை படகுகளையும் இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்துள்ளனர். கைதான மீனவர்களை, காங்கேசன் துறைமுகாமிற்கு அழைத்துச் சென்று இலங்கை கடற்படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.சென்னை விமான நிலையத்தில் அலைமோதிய பயணிகள் கூட்டம்சென்னை, ஜன.12-  பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னை விமான நிலையத்தில் மக்கள் கூட்டம் அலைமோதியது. இதனால் தூத்துக்குடி, திருநெல்வேலி உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கான விமானடிக்கெட் ஹவுஸ் புல் ஆனது.   வெள்ளிக்கிழமை மாலையில் இருந்து, சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் பயணிகள் கூட்டம், அதிகமாகக் காணப்பட்டது.  சனிக்கிழமை உள்நாட்டு விமான நிலையத்தில் பயணிகள் கூட்டம், அதைவிட அதிகமாக இருந்தது. இதையடுத்து வழக்கம் போல், சென்னை விமான நிலையத்தில், விமான டிக்கெட்டுகள் கட்டணங்கள் பல மடங்கு உயர்ந்துள்ளன.ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து  1,200 கனஅடியாக சரிவுஒகேனக்கல், ஜன.12-  காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்த மழை குறைந்ததால், ஞாயிறு காலை நிலவரப்படி, ஓகேனக்கலில் நீர்வரத்து 1,200 கனஅடியாக குறைந்தது.  மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. சுற்றுலா பயணிகள் குடும்பத்து டன் பரிசல் பயணம் மேற்கொண்டனர். மேலும், தொங்கு பாலத்தில் நின்று காவிரி ஆற்றில் பாறைகளுக்கு நடுவே விழும் தண்ணீரை ஆர்வ முடன் கண்டு மகிழ்ந்த சுற்றுலாப் பயணிகள், மெயின் அருவி மற்றும் காவிரி ஆற்றில் குளித்தும் மகிழ்ந்தனர். காவிரி ஆற்றில் நீர்வரத்தை தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர் வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.சீமானின் பேச்சுக்கு நாம் தமிழர் கட்சி நிர்வாகி எதிர்ப்புசென்னை,ஜன.12- திராவிடம், பெரியார் குறித்து சீமான் கூறியது அவ ரது சொந்தக் கருத்தே என்றும்  சீமான் பேசியிருப் பது இந்துத்துவாவின் வளர்ச்சிக்கே உதவும் என் றும் நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் செகதீச பாண்டியன் சாடி யுள்ளார்.  இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை யில், ‘ திராவிடத்தையையும் பெரியாரையும் ஒழிப்பது தான் எனது நோக்கம் என்று  அண்ணன் சீமான் பேசியி ருப்பது இந்துத்துவா சக்தி களின் வளர்சிக்கு உதவுமே ஒழிய தமிழ் தேசிய வளர்ச்சிக்கு உதவாது.  நாம் தமிழர் கட்சியை துவக்கியதும், அன்றைக்கு அரவணைத்தவர்களும் மார்க்சிய, பெரியாரிய, அம்பேத்கரிஸ்ட்டுகள் தான் என்று தெரிவித்துள்ளார்.முதுகலை பட்டதாரி ஆசிரியர் நியமனத்தில் உள் ஒதுக்கீடு குறைப்புசென்னை,ஜன,12- முதுகலை பட்டதாரி ஆசிரியர் நியமனத்தில் இடைநிலை ஆசிரியர்க ளுக்கு வழங்கப்பட்டு வந்த 10 விழுக்காடு உள் ஒதுக்கீடு 8 விழுக்காடாக குறைக்கப் பட்டு, அமைச்சு பணியாளர்க ளுக்கு 2 விழுக்காடு உள் ஒதுக்கீடு வழங்கப்பட்டது. இது தொடர்பாக பள்ளிக் கல்வித்துறை செயலர் எஸ்.மதுமதி வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியுள்ள தாவது: அரசு மேல்நிலைப் பள்ளி களில் முதுகலை பட்டதாரி ஆசிரியர் நேரடி நியம னத்தில், இடைநிலை ஆசிரி யர்களுக்கு 10 விழுக்காடு உள் ஒதுக்கீடு வழங்கப் பட்டு வருகிறது. இந்த ஒதுக் கீட்டை 8 விழுக்காடாக குறைக்கவும், உரிய கல்வித் தகுதி கொண்ட பள்ளிக் கல்வித் துறை அமைச்சு பணி யாளர்க ளுக்கு (கண்கா ணிப்பாளர், உதவியாளர், இளநிலை உதவியாளர், தட் டச்சர், சுருக்கெழுத்து தட் டச்சர்) 2 விழுக்காடு உள் ஒதுக்கீடு வழங்கவும், அதற்கு ஏற்ப  விதிமுறை களில் திருத்தம் செய்யுமா றும் அரசுக்கு பள்ளிக்கல்வி இயக்குநர் கருத்துரு அனுப் பியுள்ளார். அதை ஏற்று, தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி கல்விப் பணி சிறப்பு விதிமுறைகளில் உரிய திருத்தம் செய்து அரசு ஆணையிடுகிறது. இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.மதச்சார்பற்ற சமத்துவப் பெருநாள் முதல்வர் பொங்கல் வாழ்த்துசென்னை,ஜன.12- தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின்  பொங்கல் பண்டிகை வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். தமிழக மக்களுக்கு, திமுக தொண்டர்களுக்கு தன்னுடைய வாழ்த்துக்களை பகிர்ந்து இருக்கும் முக ஸ்டாலின், தை மகளை வரவேற் போம் என்று கூறியுள்ளார்.  இதுகுறித்து அவர் பதிவிட்டிருக்கும் பதிவில், “பொங்கல் தமிழரின் தனிப் பெரும் திருநாள்! நம் பண்பாட்டுப் படைகலன்! உழைப்பையும் உழவை யும் இயற்கையையும் போற்றும் மதச் சார்பற்ற சமத்துவப் பெருநாள்!  இதை மாநிலமெங்கும் கலை, விளை யாட்டு நிகழ்வுகளுடன் ஏற்றத்துடன் கொண்டாடிடுவீர்!” என தெரிவித்தி ருக்கிறார்.
2025-01-13 02:09:53.045609
ஜனவரி 13, 2025
சாதி விறகெரித்து சமத்துவப் பொங்கல் வைப்போம்! - மதுக்கூர் இராமலிங்கம்
கட்டுரை
நமது நிருபர்
https://theekkathir.in/News/articles/world/distinction-of-caste--let's-have-an-equality-pongal
தமிழ்
UTF-8
நவீன நகர்மயச் சூழலில் உணவுத் திருவிழாக்கள் நடைபெறுகின்றன. அண்மையில் கோயம் புத்தூரில் ஒரு உணவுத் திருவிழாவில் இரண்டா யிரம் ரூபாய் கட்டிச் சென்றவர்கள் ஒன்றும் கிடைக்கா மல் வெறும் தட்டோடு அமளியில் ஈடுபட்ட காட்சி அரங் கேறியது. ஆனால், ஆதி மனிதர்கள் கொண்டாடிய உண்மையான உணவுத் திருவிழாதான் பொங்கல் திருநாள். இது உணவோடு மட்டும் தொடர்புடை யதல்ல. மரபு சார்ந்த, இயற்கையோடு இயைந்தும், இணைந்தும் மனிதகுலம் வாழத் தலைப்பட்டதன் வெளிப்பாடாகவும் விளங்குகிறது. பொங்கல் என்பது தீட்டு அணுகாத ஒரு திருவிழா என்பார் மானுடவியல் அறிஞர் தொ.பரமசிவன். சேனை, சேம்பு, சிறு கிழங்கு, பனங்கிழங்கு ஆகிய  மண்ணிற்கு அடியில் விளையக் கூடிய கிழங்கு வகைகள் உயர்சாதியினர் என்று சொல்லப்படுப வர்களால் விலக்கப்பட்டவை. இன்றும் பெருங் கோயில்களில் இவை பயன்படுத்தப்படுவதில்லை. வெங்காயம், வெள்ளைப்பூண்டு நாங்கள் சேர்ப்ப தில்லை என்று ஒன்றிய நிதியமைச்சர் கூறியதற்கும் கூட இதுவே காரணமாக இருக்கக்கூடும். ஆனால், பொங்கலில் கிழங்கு வகைகள்தான் பிரதான இடத்தை வகிக்கின்றன. பொங்கல் எளிய மக்களின் இனிய கொண்டாட்டம் என்பதற்கு இதுவே சாட்சி என்றார் அந்த ஆய்வறிஞர்.சிறப்பிக்கும் வள்ளுவமும் நிந்திக்கும் மனுஸ்மிருதியும்பொங்கல்திருநாள் உழவர் திருநாள் என்றும் சிறப்பிக்கப்படுகிறது. உழவுக்கென்று தனி அதிகா ரமே படைத்தளித்தார் வள்ளுவப் பேராசான். உழவே தலை என உழவைக் கொண்டாடினார். “உழவினார் கை மடங்கினார் இல்லை விளை வதூஉம் விட்டேன் என்பார்க்கும் நிலை” என்பது குறள்.  எல்லா பற்றையும் விட்டுவிட்டதாகக் கூறும் துறவிகள் கூட உழவர்களின் கையை எதிர்பார்த்துத் தான் வாழவேண்டும் என்பது இதன் பொருள். உழுபவர் தான் உலகத்திற்கே அச்சாணி என்றெல்லாம் வள்ளுவம் பேச மறுபுறத்தில் மனு அநீதி விவசாயத்தை ஒரு பாவத்தொழில் என்று சபிக்கிறது. மனுஸ்மிருதியின் 10-ஆவது அத்தியாயம் 84-ஆவது ஸ்லோகத்தில் சிலர் பயிரிடுதலை நல்ல தொழில் என்று நினைக்கிறார்கள். அந்தப் பிழைப்பு பெரி யோர்களால் நிந்திக்கப்பட்டது. ஏனெனில் இரும்பு முகத்தினையுடைய கலப்பையும் மண்வெட்டியும் பூமியையும், பூமியில் உண்டான பலப்பல ஜந்துக்களை யும் வெட்டுகிறது அல்லவா? என்கிறது. ஆனால், சங்க இலக்கியம் தொடங்கி தமிழ் இலக்கிய மரபில் உழவு என்பது உணவளிக்கிற உயர்ந்த தொழிலா கவே கொண்டாடப்பட்டு வந்துள்ளது.அணையா அடுப்பும்  அட்சய பாத்திரமும்பசி போக்குவதே என் மதக்கோட்பாடு என்கிறார்  சுவாமி விவேகானந்தர். வாடிய பயிரைக் கண்டபோ தெல்லாம் வாடிய வள்ளலார், பசிப் பிணி போக்க அணையா அடுப்பை ஏற்றி வைத்தார். அந்த அடுப்பை ஏற்றியபோது உலகத்தில் தர்மம் இருக்கும் வரை இந்த அடுப்பு எரியும். இந்த அடுப்பு எரியும் வரை உலகில் தர்மம் இருக்கும் என்றார். மணிமேகலை கையில் ஏந்திய அமுதசுரபியும் பசியில்லா உலகம் உருவாக வேண்டும் என்ற மானுடப் பெருங்கனவின் கற்பனை வடிவமே ஆகும். மகா பாரதத்தில் தர்மனுக்கு சூரியனால் வழங்கியதாகக் கூறப்படும் அட்சயப் பாத்திரத்தின் துணையோடு தான் பாண்டவர்கள் வனவாசத்தை சமாளித்ததாகத் தெரிகிறது. இன்றைக்கு அந்த அட்சயப்பாத்திரம் இருந்தால் அம்பானிக்கும், அதானிக்கும் எடுத்துக் கொடுத்துவிடுவார் பிரதமர் மோடி.  பசிக்கொடுமை குறித்து பல குறள்களில் பேசுகிறார் திருவள்ளுவர். உறுபசியும், ஓவாப் பிணியும், செறு பகையும் இல்லாததே நாடு என்கிறார். நெருப்புக்கு மத்தியில் கூட தூங்கிவிட முடியும். ஆனால் பசி யோடு ஒருவன் தூங்க முடியாது என்கிறார் இன்னொரு குறளில். வறுமையை விட மோசமானது என்ன என்று  யோசித்துப் பார்த்து வறுமையை விட கொடியது வேறு ஒன்றுமில்லை என்கிறார். வறுமையையும் பசியை யும் போக்க வள்ளுவன் கண்டவழி ஈகை எனும் அறம் தான். அதே நேரத்தில் பிச்சை எடுத்துத் தான் ஒருவர் உயிர்வாழ வேண்டிய நிலை இருக்கு மேயானால் இந்த உலகத்தை படைத்ததாகக் கூறப்படும் கடவுள் (உலகியற்றியான்) அலைந்து திரிந்து கெட்டுத் தெலையட்டும் என சபிக்கிறார்.  உல கியற்றியான் என்பதை கடவுள் என்றும் புரிந்து கொள்ளலாம். சுரண்டல் மிகுந்த சமூக அமைப்பு என்றும் புரிந்துகொள்ளலாம். “தனியொரு மனிதனுக்கு உணவில்லை எனில் ஜகத்தினை அழித்திடுவோம்” என்ற மகாகவி பாரதி யின் கோபக் குரலும் வள்ளுவரின் எதிரொலிதான். கயமை என்னும் அதிகாரத்தில் “ஈர்ங்கை விதிரார் கயவர்/கொடிறுடைக்கும் கூன்கையர் அல்லாத வர்க்கு” என்பது ஒரு குறள். கையை மடக்கி தாடை  எலும்பை உடைக்காதவரை கயவர்கள் தங்கள் சாப்பிட்ட கையைக் கூட உதறமாட்டார்கள் என்பது இதன் பொருள். இதைத் தான் மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டையார், “வசதி படைத்தவன் தர மாட்டான், வயிறு பசித்தவன் விட மாட்டான்” என வர்க்கப்போராக வர்ணிக்கிறார்.பொன் காதணியும்  வேளைக் கீரையும்சங்க இலக்கியப் பாடல்கள் ஒரே காலத்தில் எழுதப் பட்டவை அல்ல. அந்தக் கால சமூகத்தில் இருந்த வளமையை சில பாடல்கள் பேசுகின்றன என்றால், சில பாடல்களில் வறுமையும் பேசப்பட்டுள்ளது. இரு  வேறு வர்க்கங்கள் இருந்ததற்கு சங்ககாலப் பாடல் களும் சாட்சியமாய் இருக்கின்றன. வாசலில் தானியத்தை காயவைத்து காவலுக்கு இருக்கிறார்கள் பெண்கள். அப்போது மேய வந்த கோழிகளை விரட்ட தங்களது பொன்னால் செய்யப் பட்ட காதணிகளை கழற்றி வீசினார்கள். மாலையில் சிறுவர்கள் வாசலில் சிறு தேர் ஓட்டி விளையாடும் போது அந்த பொன் காதணிகள் இடறியதாம் என்று பட்டி னப்பாலையில் கடியலூர் உருத்திரங்கண்ணனார் பாடுகிறார். இதோ இன்னொரு காட்சியை  சிறுபாணாற்றுப் படை காட்டுகிறது. குடிசை வீடு, மழை நீர் ஒழுகிய தால் மண் சுவரெங்கும் பாசி படர்ந்திருக்கிறது. வளை யல் அணிந்த குடும்பத் தலைவி பசியால் வாடி மெலிந்தி ருக்கிறாள். நீண்ட நாட்களாய் சமைக்கப்படாததால் அடுப்பில் காளான் வளர்ந்திருக்கிறது. நாய் அடுப்பங்க ரையில் குட்டி போட்டுள்ளது. பசியால் நாய்க்குட்டி களும் கத்திக் கதறுகின்றன. குடும்பத் தலைவி வீட்டுக்கு வெளியே முளைத்துள்ள வேளைக்கீரை எனும் கீரையைப் பறித்து வந்து மண் சட்டியில் சமைக்கி றாள். உப்பிட்டு சமைக்கக்கூட வழியில்லை. வெறும் தண்ணீரில் வேகவைத்து ஊருக்குத் தெரிந்துவிடக் கூடாதென்பதால் கதவைச் சாத்திவிட்டு குழந்தைக ளுக்குக் கொடுத்தாள் என்று நத்தத்தனார் என்ற புலவர் பாடியுள்ளார். அந்தக் குடும்பத்தின் தலைவன்  கிணைப் பறை கொட்டுவோன் என்றும் கூறப்பட்டுள்ளது. “திறவாக்கண்ண” என்று துவங்கும் இந்தப் பாடல் “அழிபசி வருத்தம்” என்று முடிகிறது.புரட்சி அடுப்பும்  சோசலிச சமூகமும்வறுமையும் பசியும் இல்லாத உலகத்தை காலம் காலமாக கவிஞர்களும், கலைஞர்களும், சமூக சீர்திருத்தவாதிகளும் கனவு கண்டுள்ளனர். கம்பன் கூட அயோத்தியில் வறுமையில்லை என்கிறார். ஆனால், மாமேதைகள் மார்க்ஸ்சும், எங்கெல்சும் தான், வறுமைக்கு என்ன காரணம் என்பதை கண்ட றிந்து அதை முற்றாக களைவதற்கான தீர்வையும் அறிவியல்ப்பூர்வமாக முன்வைத்தனர். புரட்சி அடுப்பில் தான் எல்லோருக்கும் எல்லாமும் கிடைக்கிற சோசலிச சமூகம் என்பது சாத்தியமாகும். முதலாளித்துவம் தன்னுடைய கோரப் பசிக்கு இந்த பூவுலகையே வேட்டையாடித் தின்று கொண்டி ருக்கிறது. சுற்றுச்சூழல் முற்றாக நாசமாக்கப்படுகிறது. இயற்கையோடு மனிதனுக்குள்ள இயங்கியலை வெளிப்படுத்தும் விழாவாகவும் பொங்கல் திருநாள் விளங்குகிறது என்றால் அது மிகையல்ல.  இதயமெல்லாம் அன்பு நதியினில் நனைப்போம், இது எனது என்னுமோர் கொடுமையை தவிர்ப்போம் என்பது பாவேந்தரின் பாட்டு வரி. சமத்துவ உலகில் தான் அன்பெனும் பயிர் செழித்து வளரும். உயிர் வளர்க்கும் உழவை போற்றுவோம். சாதி, மத வெறியை யும், பெண்ணடிமைத்தனத்தையும், மூட நம்பிக்கை களையும் எருவாக்கி சமத்துவப் பயிர் வளர்ப்போம்.  கரும்பின் ஒவ்வொரு கணுவிலும் வேராய் இருப்பது நாளை குறித்த நம்பிக்கைக் கனவுதான். சுரண்டல் இல்லாத சோசலிச உலகம் மார்க்சிய அறிவியல் வெளிச்சத்தில் விடிந்தே தீரும் என்பது ஆருடம் அல்ல. வெளிச்சம் தரும் சமூக விஞ்ஞானம்.
2025-01-14 01:55:13.802894
ஜனவரி 13, 2025
விளையாட்டு...
விளையாட்டு
நமது நிருபர்
https://theekkathir.in/News/games/india/congratulations-to-actor-ajith-kumar-who-created-history-in-the-dubai-car-race
தமிழ்
UTF-8
துபாய், ஜன.13- தமிழ் நடிகர் அஜித் குமார் சினிமாவுக்கு அடுத்தபடியாக கார் பந்தயத்தில் அதிக ஆர்வம் கொண்டவர்.  2003, 2004 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற சர்வதேச கார் பந்தயங்களில் நடிகர் அஜித் கலந்து கொண்டார். அதே போல 2010ஆம் ஆண்டு நடந்த “எப்ஐஏ பார்முலா 2” ஐரோப்பியன் சாம்பியன்ஷிப் போட்டியிலும் பங்கேற்றார். ஆனால் 15 ஆண்டு களாக படங்களில் நடித்து வந்ததால் அவரால் கார் பந்தயங்களில் கலந்து கொள்ள முடியவில்லை. இந்நிலையில், துபாயில் நடைபெற்ற “24 எச்” எனப்படும் 24 மணி நேர கார் பந்தயத்தில் கலந்து கொண்டார். இந்த பந்தயத்தில் 3 ரேஸர்கள் (இருவர் வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள்) அஜித்தின் காரில் இருந்தனர். இவர்களில் கார் ரேஸின் கேப்டன் அஜித் குமார். எனவே அவர்தான் அதிக நேரம் (14 முதல் 18 மணி நேரம்) வரை காரை ஓட்டினார். ஆட்டநேர முடிவில் அஜித் குமாரின் அணி 3ஆவது இடத்தை பிடித்தது.  எல்லாவற்றுக்கும் மேல் அஜித் அணிந்திருந்த கார் பந்தயத்திற்கான பிரத்யேக உடையில் தமிழ்நாடு விளை யாட்டு மேம்பாட்டு ஆணையத்தின்லோ கோவை (இலச்சினை) பொறித்திருந்தார். அந்த லோகோவையும் காட்டியபடியே அவர் துபாய் பந்தய பகுதியில் வலம் வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
2025-01-14 01:55:17.785203
ஜனவரி 13, 2025
ஆளுநருக்கு அழகல்ல...
தலையங்கம்
நமது நிருபர்
https://theekkathir.in/News/headlines/bjp/the-union-government-is-in-charge-of-the-governor-after-the-end-of-his-tenure
தமிழ்
UTF-8
பதவிக் காலம் முடிந்தபிறகும் ஆளுநர் பொறுப்பில் ஒன்றிய அரசு ஆசியோடு தொடர்ந்து கொண்டிருக்கும் ஆர்.என்.ரவி தொடர்ந்து வம்படி வழக்கில் ஈடுபட்டு வருகிறார். மக்களால் தேர்வு செய்யப்பட்ட மாநில அரசுக்கு எதிராக போட்டி அரசாங்கம் நடத்த முயல்கிறார். ஆளு நர் மாளிகையையே ஆர்எஸ்எஸ் அலுவலக மாக மாற்றும் வகையில் அத்துமீறி வருகிறார்.கடந்தாண்டு ஆளுநர் உரையின் போது, சில பகுதிகளை படிக்க மறுத்தார். இந்தாண்டு உரை யையே படிக்காமல் வெளிநடப்பு செய்துவிட்டார். ஒரு நாடகத்தை திட்டமிட்டு நடத்தும் நோக்கோடு தான் அவர் அவைக்கே வந்திருக்கிறார். இதற்கு ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள தூர்தர்ஷ னை துணைக்கு அழைத்து வந்துள்ளார்.ஆனால் அவையில் தாம் நடந்து கொண்ட தை நியாயப்படுத்த முடியாத ஆளுநர் மாநில அரசு, சட்டசபை நிகழ்ச்சிகளை முழுமையாக காட்டவில்லை என்றும், இது அவசர நிலைக் கால தணிக்கையை நினைவுபடுத்துகிறது என்றும் பழி சுமத்தினார்.  ஆளுநரின் திட்டம் பலிக்க வில்லை என்று சபாநாயகர் கூறியுள்ளது கவ னத்தில் கொள்ளத்தக்கது.ஆர்எஸ்எஸ் அமைப்பின் தேச பக்தியை ஊரறியும், உலகறியும். அவர்கள் நமது நாட்டில் தேசியக் கொடியையோ, தேசிய கீதத்தையோ ஏற்க மறுத்தவர்கள்தான். அவர்கள் வழி வந்தவர்தான் ஆளுநர் ஆர்.என்.ரவி. தமிழ்நாடு சட்டப் பேரவை யில் தொடக்கத்தில்  தமிழ்த்தாய் வாழ்த்தும் முடி வில் தேசிய கீதமும் பாடப்படுவது வழக்கம். ஆனால் அதற்குள் தேசிய கீதத்தை அவமதித்து விட்டதாக குய்யோ முறையோ என அறிக்கை விட்டார்.தமிழ்நாட்டு மக்களையும் நூற்றாண்டு கண்ட சட்டப் பேரவையையும் அவமதிப்பது ஆளுநரு க்கு அழகல்ல என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் குற்றம் சாட்டியிருந்தார். அரசியல் சட்டத்தின் அடிப்படை கடமைகளைக்கூட ஆளு நர் நிறைவேற்ற மறுக்கிறார் என்றும் அவர் கூறியிருந்தார்.இதற்கு பதிலளிக்கும் வகையில் எதிர்க் கட்சித் தலைவரைப் போல ஆளுநர் அறிக்கை வெளியிட்டிருக்கிறார். பாரதமே உயர்ந்த தாய் என்றும், அவளது குழந்தைகளுக்கு அரசியல மைப்பே உயர்ந்த நம்பிக்கை என்றும்  அவர்  வாயாடியிருக்கிறார். முதல்வர் சுட்டிக்காட்டு வதும் இதைத்தான். அரசியலமைப்புச் சட்டப்படி ஆளுநர் நடந்து கொள்ள வேண்டும். மாநில அர சினால் தயாரித்துத் தரப்படும் ஆளுநர் உரையை அவையில் வாசிக்க வேண்டும் என்பதுதான்.  ஆனால் அதைச் செய்ய மறுக்கும் ஆளுநர் ஒவ் வொரு நாளும் போட்டி அறிக்கைகளை வெளி யிட்டு வம்பு வளர்த்து வருகிறார்.பல்கலைக்கழகங்களை முற்றாக ஆளு நர்களின் விளையாட்டு மைதானமாக மாற்றிவிட ஒன்றிய அரசு சதித்திட்டம் தீட்டுகிறது. ஆர்.என். ரவி போன்றவர்களிடம் உயர்கல்வி நிறுவனங் கள் சிக்கி சின்னாபின்னமாவதை ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது.
2025-01-14 01:55:17.862598
ஜனவரி 13, 2025
தீக்கதிர் உலக செய்திகள்
உலகம்
நமது நிருபர்
https://theekkathir.in/News/world/india/zelensky-information-ready-to-exchange-2-players
தமிழ்
UTF-8
2 வீரர்களை  பரிமாற தயார் : ஜெலென்ஸ்கி தகவல்வட கொரிய வீரர்களை பரிமாறிக் கொள்ள ஜெலென்ஸ்கி தயாராகி இருப்பதாக தெரிவிக் கப்பட்டுள்ளது. ரஷ்யாவின் குர்ஸ்க் பகுதியை மீட்க வடகொரியா ராணுவ வீரர்களை ரஷ்யா பயன்படுத்தி வருவதாக கூறப்பட்டு வரும் நிலையில் காயமடைந்த இரண்டு வட கொரிய வீரர்களைப் பிடித்து வைத்துள்ளதாக உக்ரைன் அறிவித்தது. எனினும் அவர்களின் குடியுரிமைக்கான ஆதாரத்தை வெளியிடவில்லை. தற்போது உக்ரைன் மற்றும் வடகொரியா வீரர்களை பரிமாறிக்கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.காட்டுத் தீயில்  24 பேர் உயிரிழப்புலாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ஜன-7 அன்று ஏற்பட்ட காட்டுத் தீ அதிக காற்றின் கார ணமாக  50,000 ஏக்கர் அளவுக்கு பரவியது. இதனால் சுமார் 40,000 ஏக்கர் காடுகள் முழு மையாக தீயில் எரிந்துள்ளன. தண்ணீர் , தீய ணைப்பு வீரர்கள் பற்றாக்குறை உள்ளிட்ட கார ணங்களால் தீயை அணைக்கும் பணிகளில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. காட்டுத் தீயால் பலி யானவர்கள் எண்ணிக்கை 24 ஆக அதிகரித்துள் ளது. பலரை காணவில்லை. சுமார் 4 லட்சம் பேர் வீடுகளை விட்டு வெளியேறி உள்ளனர்.பிரான்ஸ் ராணுவம்  வெளியேறுகிறதுபிரான்ஸ் உடனான பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை ஆப்பிரிக்க நாடான சாட் முடிவுக்கு கொண்டு வந்ததைத் தொடர்ந்து அங்கி ருந்து பிரான்ஸ் ராணுவம் வெளியேறத் துவங்கி யது. ஞாயிற்றுக் கிழமையன்று அபேச்சி நகரில் இருந்த ராணுவ தளத்தை சாட் ராணுவத்திடம் ஒப்படைத்துவிட்டு சுமார் 120 பிரான்ஸ் ராணுவ வீரர்கள் அவர்களின் பீரங்கி உள்ளிட்ட நவீன ரக ஆயுதங்களும் வெளியேற்றப்பட்டது. ஜனவரி 31 க்குள் பிரான்ஸ் ராணுவம் முழுமையாக வெளியேறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.எதிர்பார்ப்பை விட சீன ஏற்றுமதி அதிகரிப்பு2023 உடன் ஒப்பிடும் போது 2024 டிசம்பரில் சீனாவின் ஏற்றுமதி 10.7 சதவீதமாக அதிகரித்துள்ளது. சீனாவின் ஏற்றுமதி 7 சதவீதம் வரை வளரும் என பொரு ளாதார வல்லுநர்கள் கணித்திருந்தனர். ஆனால் சீனாவின் ஏற்றுமதி அதைவிட அதிகமாக உயர்ந் துள்ளது. அதேபோல 2023 யை விட இறக்குமதி அளவு 1 சதவீதம் அதிகரித்துள்ளது. இறக்குமதி யை விட சீனாவின் ஏற்றுமதி அதிகமாக இருப்ப தால் அந்நாட்டின் வர்த்தக உபரி 104.84 பில்லி யன் டாலர்களாக உயர்ந்துள்ளது.தேன் ஏற்றுமதி மூலம்  1.6 மில்லியன் டாலர் வருமானம்2024 ஏப்ரல் முதல் டிசம்பர் வரை ஒன்பது மாதங்களில் சுமார் 1,100 டன் தேன் ஏற்றுமதி மூலமாக மியான்மர் 1.6 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு மேல் சம்பாதித்துள்ளது. இதனை அந்நாட்டின் விவசாயம், கால்நடை மற்றும் நீர்ப்பாசன அமைச்சகம் தெரிவித்துள்ளது. எனினும் கடந்த நிதியாண்டுடன் ஒப்பிடுகையில் இந்த ஒன்பது மாத கால  தேன் ஏற்றுமதி வீழ்ச்சியை சந்தித்துள்ளது. கடந்த நிதி ஆண்டில் சுமார் 1,600 டன் தேன் ஏற்று மதி மூலம் 2.4 மில்லியன் டாலர்களை மியான்மர் ஈட்டியது குறிப்பிடத்தக்கது.காசாவில் படுகொலை செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை : அதிகாரப்பூர்வ தரவுகளை விட 41 சதவீதம் அதிகம்காசா,ஜன.13- இஸ்ரேல்-ஹமாஸ் போரின் முதல் ஒன்பது மாதங்களில் காசாவில் படுகொலை செய்யப் பட்டவர்களின் எண்ணிக்கை பாலஸ்தீன சுகாதார அமைச்சகத்தால் பதிவுசெய்யப்பட்ட எண்ணிக் கையை விட 41 சதவீதம் அதிகம் என லான்செட் மருத்துவ இதழின் ஆய்வுக்கட்டுரையில் தெரி விக்கப்பட்டுள்ளது.  2023 அக்டோபர் முதல் 2024 ஜூன் இறுதி வரை காசாவில் இஸ்ரேல் ராணுவம் நடத்திய வான் மற்றும் தரை வழித் தாக்குதலில் படுகொலை செய்யப்பட்டவர்களின்  எண்ணிக்கையை மதிப்பி டும் பணியில் யேல் பல்கலைக்கழகம்,லண்டன் ஸ்கூல் ஆஃப் ஹைஜீன் & ட்ராபிகல் மெடிசின் உள்ளிட்ட சில நிறுவனங்களின் ஆராய்ச்சியா ளர்கள் ஈடுபட்டனர்.  இந்த ஒன்பது மாதக்காலம் இஸ்ரேல் ராணு வத்தின் நேரடித் தாக்குதலாலும், தாக்குதலில் படுகாயமடைந்தும் 64,260 பேர் படுகொலையாகி யுள்ளனர். இதில் 59.1 சதவீதமான நபர்கள் பெண் கள், குழந்தைகள் மற்றும் 65 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் என்று அந்த ஆய்வு தெரிவித்துள்ளது.  பாலஸ்தீன சுகாதார அதிகாரிகள் இஸ்ரேல் தாக்குதலால் இதுவரை 46,000 பாலஸ்தீனர்கள் படுகொலையாகியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.  காசா பகுதிக்குள் வெளிநாட்டு ஊடகவியலா ளர்களை இஸ்ரேல் ராணுவமும், அரசாங்கமும் அனுமதிக்க மறுத்து வருகின்றன. இதன்காரண மாக சர்வதேச ஊடகங்களால் காசாவில் எவ்வளவு பாலஸ்தீனர்கள் படுகொலையாகியுள்ளனர் என  சுயாதீனமாக கண்டறிய முடியவில்லை. ஒவ்வொரு முறை காசாவில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு முன்பும் பாலஸ்தீன மக்களை வெளி யேற்றுவதற்கான முன்னெச்சரிக்கையை  வழங்கியதாக இஸ்ரேல் ராணுவத்தரப்பில் கூறப் படுகிறது. எனினும் தற்போதைய அறிக்கையில் வெளிவந்துள்ள புள்ளிவிபரங்கள் படி ராணு வத்தின் முன்னெச்சரிக்கை வெறும் அறிவிப்புக ளாக மட்டுமே இருந்துள்ளதே தவிர அவற்றை இஸ்ரேல் கடைப்பிடிக்கவில்லை என்ற உண்மை யும் வெளிப்படுகிறது. லான்செட் ஆய்வின்படி  55,298 முதல் 78,525 வரை இறப்பு எண்ணிக்கை  மதிப்பிட்டுள் ளது. எனினும் 64,260 நபர்கள் படுகொலையாகி யுள்ளனர் என உறுதியாக குறிப்பிடுகின்றது. அதே நேரத்தில் பாலஸ்தீன சுகாதார அமைச்சகம் இறப்பு எண்ணிக்கையை 41 சதவீதம் குறைவாகப் பதிவு செய்துள்ளது. காசாவில் இஸ்ரேலின் தாக்கு தல் துவங்குவதற்கு முன்பு  இருந்த மக்கள்தொகை யில் 2.9 சதவீதம் அல்லது 35 நபர்களில்  ஒருவர் படு கொலையாகியுள்ளனர் என இந்த ஆய்வு தெரி விக்கிறது. இந்த எண்ணிக்கை இஸ்ரேல் ராணுவத்தின் தாக்குதலால் பாலியானவர்களின் எண்ணிக்கை மட்டுமே. போதிய சுகாதார பராமரிப்பு இன்றியோ அல்லது இஸ்ரேல் ராணுவம் உருவாக்கியுள்ள செயற்கை உணவுப் பஞ்சத்தின் காரணமாகவோ பலியானவர்கள்  அல்லது கட்டட இடிபாடுகளில் சிக்கி மீட்கப்படாமல் புதையுண்டு போன நபர்களின் எண்ணிக்கை இதில் சேர்க்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.  லான்செட் ஆய்வில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவெனில் உறவினர்களால் இறந்துவிட்ட தாக உறுதிப்படுத்தப்பட்டவர்களை மட்டுமே அப்பகுப்பாய்வில் குறிப்பிட்டுள்ளனர்.
2025-01-14 01:55:18.387019
ஜனவரி 13, 2025
தீக்கதிர் முக்கிய செய்திகள்
மாநிலம் - தமிழ்நாடு
நமது நிருபர்
https://theekkathir.in/News/states/tamil-nadu/in-tamil-nadu-governor-rn-ravi-is-acting-as-bjp's-ambassador
தமிழ்
UTF-8
தமிழ்நாட்டில் ஆளுநர் ஆர்.என்.ரவி பாஜகவின் தூதராகச் செயல்படுகிறாரே தவிர, இந்திய அரசியலமைப்பின் பிரதிநிதியாக அல்ல. ஆளுநர் - தமிழ்நாடு முதல்வர் இடையேயான மோதல் என்பது வெறும் 2 நபர்களுக்கு இடையிலான தகராறு அல்ல. எனவே இந்த விஷயத்தில் தமிழ்நாடு முதல்வர் மற்றும் மாநில மக்களுடன் சிபிஎம் உறுதியாக நிற்கும்.மோடி வீட்டிலும் அலுவலகத்திலும் தோண்டி மோடியின் மரியாதையையும் ரூபாயின் மதிப்பையும் தேடிக் கொண்டிருக்கிறார்களாமே? இதை ஒரு தகவலுக்காக சொல்கிறேன். மோடி ஆட்சிக்கு வருவதற்கு முன் டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 58 ஆக இருந்தது. இப்போது 87 ஆக இருக்கிறது.நாட்டையும் அரசியலமைப்பையும் காப்பாற்ற ஒற்றுமையை எவ்வாறு வலுப்படுத்துவது என்பது குறித்து இந்தியா கூட்டணி மீண்டும் சுயபரிசோதனை செய்ய வேண்டும். இந்தியா கூட்டணியில் உள்ள அனைத்துக் கட்சிகளும் மீண்டும் ஒரே உறுதிப்பாட்டைத் தொடர்ந்தால், ஒற்றுமையை வலுப்படுத்த முடியும். இது நம் நாட்டிற்கும் அதன் எதிர்காலத்திற்கும் நல்லதாக அமையும்.சுதந்திர இந்தியாவில் ஏழைகளுக்கு எதிரான அரசியல் கட்சி ஏதேனும் இருந்தால் அது பாஜக மட்டும் தான். பாஜகவை போன்று வேறு எந்த அரசியல் கட்சியும் மோசமான செயல்பாட்டை கொண்டிருக்கவில்லை.
2025-01-14 01:55:22.567345
ஜனவரி 13, 2025
ஓய்வூதியத் திட்டம்: நிதியமைச்சர் கருத்துக்கு அரசு ஊழியர் சங்கம் கண்டனம்
மாநிலம் - தமிழ்நாடு
நமது நிருபர்
https://theekkathir.in/News/states/tamil-nadu/union-condemns-finance-minister's-comment
தமிழ்
UTF-8
சென்னை, ஜன. 13 - தமிழ்நாடு நிதியமைச்சர், கடந்த வெள்ளிக் கிழமையன்று (ஜன.10) சட்டமன்றத்தில் வெளியிட்ட ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் குறித்த கருத்துக்கு தமிழ்நாடு அரசு  ஊழியர் சங்கம் கடும் கண்டனம் தெரி வித்துள்ளது. 2021-ஆம் ஆண்டு எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது, தற்போதைய முதல்வர் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநில அளவிலான போராட்ட ஆயத்த மாநாட்டில் காணொலி வாயிலாக கலந்து கொண்டு, கழக ஆட்சி வந்தால் பழைய ஓய்வூதியத் திட்டம் உட்பட அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும் என வாக்குறுதி அளித்திருந்தார்.  மேலும் 2021 தேர்தல் அறிக்கையிலும் புதிய ஓய்வூதியத் திட்டம் கைவிடப்பட்டு பழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் கொண்டுவரப்படும் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. எனவே, தற்போது புதிய ஓய்வூதியத் திட்டத்தில் உள்ள 6,14,175 பேர் விரைவில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அரசு அமல் படுத்தும் என எதிர்பார்த்துக் காத்திருக்கின்ற னர். ஆனால், நேற்று சட்டமன்றத்தில் நிதி யமைச்சர், ஒன்றிய அரசு அறிவித்துள்ள ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்திற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்ட பின்பு அத்திட்டம் செயல்படுத்த ஆலோ சிக்கப்படும் என அறிவித்துள்ளார். இது அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தி யில் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இப்பிரச்சனையில், சட்டமன்றத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் வி.பி. நாகை மாலி  எழுப்பிய கேள்விகளுக்கு முழுமையாக பதிலளிக்காதது ஏமாற்ற மளிப்பதாக உள்ளது என்றும் அரசு ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது.  64.22 லட்சம் பட்டதாரி இளைஞர்கள் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ளதாகவும், ஆனால் அரசுத்துறைகளில் காலியாக உள்ள 5 லட்சம் பணியிடங்களை நிரப்ப காலம் தாழ்த்தப்படுவதாகவும் அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.  மேலும் குறைந்த அளவில் நிரப்பப்படும் பணியிடங்கள் கூட தொகுப்பூதிய, மதிப்பூதியம், அவுட் சோர்சிங் (Out Sourcing) முறையில் நிரப்பப்படுவது சமூக நீதி காக்கும் அரசு என்பதன் பொருளை கேள்விக்குறியாக்கியுள்ளது என்றும் தெரிவித்துள்ளது. கடந்த அக்டோபர் 8-ஆம் தேதி மாநிலம் முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் இந்த ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்திற்கு எதிராக மாலை நேர தர்ணா போராட்டம் நடத்தப்பட்டது. மேலும் கடந்த மாதம் 13, 14 தேதிகளில் தூத்துக்குடியில் நடைபெற்ற தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் 15ஆம் மாநில மாநாட்டில் நிறை வேற்றப்பட்ட அறைகூவல் தீர்மானத்தின்படி, தமிழகமெங்கும் வலுவான ஒன்றுபட்ட கால வரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை நடத்த வேண்டிய நிர்பந்தத்திற்கு அரசு ஊழி யர்கள் தள்ளப்பட்டுள்ளதாக சங்கத்தின் மாநிலத் தலைவர் மு. பாஸ்கரன் மற்றும் பொதுச்செயலாளர் மு. சீனிவாசன் ஆகியோர் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
2025-01-14 01:55:22.568327
ஜனவரி 13, 2025
தீக்கதிர் விரைவு செய்திகள்
மாநிலம் - தமிழ்நாடு
நமது நிருபர்
https://theekkathir.in/News/states/tamil-nadu/6.40-lakh-people-travel-in-special-buses
தமிழ்
UTF-8
சிறப்பு பேருந்துகளில் 6.40 லட்சம் பேர் பயணம்சென்னை, ஜன. 13 - பொங்கல் திருநாளையொட்டி அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் சார்பில் வெள்ளிக்கிழமை முதல் சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு  செய்யப்பட்டிருந்தன.  கடந்த 3 நாட்களில் சென்னை யில் இருந்து சொந்த ஊர்களுக்கு 6,40,465 பேர் அரசுப் பேருந்துகளில் பயணம் மேற்கொண்டுள்ளனர் என்று போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது.  (ஜன.13) நிலவரப்படி மொத்தம் 3,950 பேருந்துகள் இயக்கப்பட்டு 2 லட்சத்து 17 ஆயிரத்து  250 பேர் பயணம் செய்துள்ளனர். தொடர்ந்து, திங்கள்கிழமையும் ஏராளமானோர் பயணிப்பாளர்கள் என்பதால், அதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் செய்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.10 ஆண்டில் ரூ. 1 லட்சம் கோடியை வட்டியாக செலுத்திய மின்சார வாரியம்சென்னை, ஜன.13- தமிழ்நாடு மின்வாரியம் கடந்த 10 ஆண்டுகளில் வாங்கிய கடனுக்கான வட்டியாக மட்டும் 1 லட்சம் கோடி ரூபாயை செலுத்தியுள்ளது. நிதி நிறுவனங்கள், வங்கிகளிடம் கடன் வாங்கியே நடைமுறை மூலதன செலவுகளும், புதிய மின் திட்டங்களும் மேற்கொள்ளப்படுகின்றன.  மின் கொள்முதலுக்கே அதிகம் செல விடுவதால் தமிழ்நாடு மின்வாரி யத்திற்கு வரவை விட செலவு அதிகரித்து நஷ்டம் ஏற்படுவதாக கூறப்படுகிறது. ஒன்றிய அரசின், ரூரல் எலக்ட்ரிபிகேஷன், பவர் பைனான்ஸ் உள்ளிட்ட நிதி நிறுவனங்களில் இருந்தும் வங்கிகளில் இருந்தும் பல்வேறு வட்டி விகிதங்களில் கடன்கள் வாங்கப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு நிலவரப்படி மின் வாரியத்தின் கடன் நிலுவை 1.60  லட்சம் கோடியாக உள்ளது. வட்டியாக மட்டுமே ஆண்டுக்கு பத்தாயிரம் கோடி ரூபாய்க்கு மேல் செலவு செய்யப்படு கிறது. கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் மின் வாரியம் வட்டிக்காக செலவு செய்த தொகை 1.01 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டில் மட்டும் பதினாறாயிரத்து நானூற்று நாற்பது கோடி ரூபாய் வட்டியாக செலுத்தப்பட்டிருக்கிறது. தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள 12 சர்க்கரை ஆலைகளில் இணை மின் நிலையம் அமைக்கும் பணியை மின் வாரியம் 2010-இல் தொடங்கியது.  இத்திட்டத்திற்கான செலவு தொள்ளாயிரத்து அறுபத்தைந்து கோடி  ரூபாயாகும். இதுவரை 6 ஆலை களில், மின் உற்பத்தி தொடங்கியுள்ள நிலையில் பணிகள் முழுமை பெற வில்லை.  ஆனால், திட்டத்திற்கு வாங்கிய கடனை விட அதிகமாக இதுவரை ஆயிரத்து நானூறு கோடி ரூபாய்க்கு மேல் வட்டி செலுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.சிபிஎம்  அகில  இந்திய மாநாட்டு வரவேற்புக்குழு அலுவலகம் ஜன.16-இல் திறப்புமதுரை, ஜன. 13 - மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் 24-ஆவது அகில இந்திய மாநாடு ஏப்ரல் 2 முதல் 6 வரை மது ரையில் நடைபெறவுள்ளது.  இம்மாநாட்டிற்கான பணிகளின் துவக்கமாக, வரவேற்புக் குழு அலுவல கம் ஜனவரி 16 (வியாழக் கிழமை) காலை 9:30 மணிக்கு மதுரை தீக்கதிர் வளாகத்தில் திறக்கப்பட வுள்ளது. இந்நிகழ்வில் மாநாட்டு இலச்சினை வெளியிடப்பட உள்ளது. நிகழ்ச்சிக்கு மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் தலைமை  வகிக்கிறார். வரவேற்புக் குழு செயலாளர் சு. வெங்க டேசன் எம்.பி.  வரவேற் கிறார். வரவேற்புக் குழுத்  தலைவர் கே.பாலகிருஷ் ணன் அலுவலகத்தை திறந்து வைக்கிறார்.  கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர்  உ.வாசுகி, மாநாட்டு  இலச்சினை யை வெளியிடுகிறார். மத்தியக் குழு உறுப்பினர் கள், மாநில செயற்குழு மற்றும் மாநிலக்குழு உறுப்பினர்கள் கலந்து கொள்கின்றனர்.கோத்தர் இன பழங்குடியினரின் அய்னோர், அம்னோர் திருவிழாகோத்தகிரி, ஜன.13- நீலகிரி மாவட்டத்தை பூர்வீகமாகக் கொண்ட கோத்தர் இன பழங்குடியின மக்கள் ஆண்டு தோறும் ஜனவரி மாதத்தில் தங்களின் குலதெய்வ பண்டிகை கொண்டாடுவது வழக்கம். இக்கோவில் விழாவில் கோத்தர் இன மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து அய்னோர், அம்னோர் தெய்வங்களுக்கு பொங்கல் வைத்து படைப்பர். முக்கிய நிகழ்வாக புதுக்கோத்தகிரி கிராமத்திலிருந்து ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என தங்களின் பாரம்பரிய வெள்ளை நிற உடை அணிந்து, தங்களின் கலாச்சார இசை இசைத்து ஊர்வலமாக  நடந்து வந்து கோவில் விளக்கேற்றி வழிபட்டனர். திருவிழா வில் ஆண்கள், தங்களின் பாரம்பரிய கலாச்சார இசை இசைத்து பாரம்பரிய நடனமாடி மகிழ்ந்தனர்.பொங்கல், வார விடுமுறையையொட்டி  ஏற்காட்டில் திரண்ட சுற்றுலா பயணிகள்ஏற்காடு, ஜன.13- பொங்கல் பண்டிகை மற்றும் வார விடுமுறையை யொட்டி, ஏற்காடு மற்றும் பூலாம்பட்டியில் திரண்ட சுற்றுலா  பயணிகள், படகில் சவாரி சென்றும், பூங்காவில் விளை யாடியும் மகிழ்ந்தனர்.  லேடிஸ் சீட், ஜென்ஸ் சீட், ரோஜா  தோட்டம், சேர்வராயன் கோயில், கரடியூர், அண்ணா பூங்கா உள்பட பல்வேறு இடங்களுக்கு சென்று, இயற்கை யை கண்டு ரசித்தனர். ஏற்காடு படகு இல்லத்தில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்ததால், நீண்ட நேரம் காத்திருந்து படகு சவாரி செய்து மகிழ்ந்தனர். சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரிப்பால், ஏற்காட்டில் உள்ள அனைத்து கடைகளில் கூட்டம் அதிகமாக இருந்தது. இதனால் வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்தனர்.போகி, புகை மூட்டம், பனிமூட்டம் எதிரொலி:  சென்னையில் 30 விமானங்களின் நேரம் மாற்றியமைப்புசென்னை, ஜன.13- போகிப் பண்டிகையால் ஏற்பட்ட புகை மூட்டம் மற்றும் பனிமூட்டம் காரணமாக சென்னையில் 30 விமானங்களின் நேரம் மாற்றியமைக்கப்பட்டது.  முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னைக்கு வர வேண்டிய, புறப்பட வேண்டிய 30 விமானங்கள் நேரம் மாற்றி அமைக்கப்பட்டன. தில்லி, பெங்களூருவில் இருந்து சென்னை வர வேண்டிய 3 விமானங்கள் ரத்து  செய்யப்பட்டுள்ளன. விமான நிலையத்தில் ஓடு பாதையே  தெரியாத அளவுக்கு புகை மூட்டம் காணப்பட்டதால் விமானங்களின் நேரம் மாற்றி அமைக்கப்பட்டது. துபாய், அபுதாபி, சிங்கப்பூர், கோலாலம்பூர், மும்பை, தில்லி, பெங்களூரு, கோவா செல்ல வேண்டிய விமானங்கள் தாமதம் ஆகியுள்ளன. சென்னையில் இருந்து  புறப்பட வேண்டிய விமானங்களின் நேர மாற்றம் குறித்து  பயணிகளுக்கு குறுஞ்செய்திகள் அனுப்பிவைக்கப்பட்டன.இன்று 2 மணி வரை செயல்படும்  ரயில் டிக்கெட் முன்பதிவு மையங்கள்சென்னை, ஜன.13- பொங்கல் விடுமுறை தினமான இன்று(செவ்வாய்க்கிழமை) ரயில் டிக்கெட் முன்பதிவு மையங்கள் பிற்பகல் 2 மணி வரை மட்டுமே செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  ஞாயிறு அட்டவணைப்படி இன்று காலை 8 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை ரயில் டிக்கெட் முன்பதிவு மையங்கள் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.எல்லை தாண்டி மீன்பிடித்ததாக  தமிழக மீனவர்கள் 10 பேர் கைதுகன்னியாகுமரி, ஜன.13- டிக்கோகார்சியா தீவு அருகே கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த 10 மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அவர்களை, எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி, பிரிட்டிஷ் கடற்படையினர் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட மீனவர்கள் குறித்து, மாவட்ட அதிகாரிகளுக்கு, இந்திய வெளி யுறவுத்துறை அமைச்சகம் சார்பில் தகவல் அளிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, 2 முறை எல்லை தாண்டியதாக இதே படகு சிறைப்பிடிக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் 7 நாட்கள் மழைக்கு  வாய்ப்பு: வானிலை மையம் தகவல்சென்னை, ஜன.13- தமிழகம் மற்றும் புதுச்சேரியில் திங்கட்கிழமை முதல்  19 ஆம் தேதி வரை ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு  உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  சென்னையில் நகரின் ஒரு சில இடங்களில் லேசானது  முதல் மிதமான மழை பெய்யக் கூடும். தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் இன்று (செவ்வாய்) ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.தில்லி குடியரசு தின விழா: தமிழகம், புதுச்சேரியின் 12 விருதாளர்களுக்கு அழைப்புசென்னை, ஜன.13- தில்லியில் நடைபெற உள்ள குடியரசு தின அணிவகுப்பு நிகழ்ச்சியில் பங்கேற்க, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியை சேர்ந்த 12 விருதாளர்களுக்கு சிறப்பு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. குடியரசு தின விழா வரும் 26  ஆம் தேதியன்று கொண்டாடப்படு கிறது. தேசிய முக்கியத்துவம் வாய்ந்த இத்தகைய நிகழ்ச்சிகளில்  பொதுமக்களின் பங்கேற்பை அதி கரிக்கும் வகை யில் அண்மைக் காலமாக நாடு முழுவதிலும் இருந்து பொதுமக்கள் சிறப்பு அழைப்பாளர்களாக அழைக்கப் படுகிறார்கள். அந்த வகையில், இந்த ஆண்டு குடியரசு தின விழாவில் பங்கேற்பதற்காக நாடு முழுவதும் சுமார் 10 ஆயிரம் பேருக்கு சிறப்பு அழைப்பிதழ்கள் வழங்கப்பட்டுள்ளன. இதில், குறிப்பாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியை சேர்ந்த 12  விருதாளர்க ளுக்கு சிறப்பு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அவர்களில் ஜவுளி பிரிவில் தேசிய விருது பெற்ற சென்னையைச் சேர்ந்த கமலக்கண்ணன், மாமல்லபுரத் தைச் சேர்ந்த எம். தேவராஜ், சேலத்தைச் சேர்ந்த ராஜஸ்தபதி, புதுச்சேரி வில்லிய னூரைச் சேர்ந்த கே.வெங்கடேசன், ஏ.சேகர் ஆகி யோரும் அடங்கு வர். பேரிடர் நிவாரண பணியாளர் கள், நீர் பாதுகாப்பு ஆர்வலர்கள், சிறப்பாக செயல்படும் தொடக்க வேளாண் கடன் சங்கங்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், சுய உதவி குழுக்கள், தேசிய திறன் மேம்பாட்டு கழகத்தின் சிறந்த பயிற்சி மாணவர்கள், கிராம செவி லியர்கள், மனதின் குரல் நிகழ்ச்சி  யில் பங்கேற்றவர்கள், மாற்றுத்  திறனாளிகளுக்கான விளை யாட்டுப் போட்டிகளில் பங்கேற்று சாதனை படைத்தவர்கள், புதுப்பிக் கத்தக்க எரிசக்தி துறையில் ஈடு படுவோர், அங்கன்வாடி பணியா ளர்கள், சாலை பணிகளில் ஈடுபடு வோர், சிறந்த புத்தாக்க தொழில்  நிறு வனங்கள், சிறந்த காப்புரி மம் பெற்றவர்கள் உட்பட பலருக்கும் இந்த அழைப்பிதழ் அனுப்பப்பட்டுள்ளது. சிறந்த உள்ளாட்சி அமைப்பு களை தேர்வு செய்வதற்காக அண்மையில் ஒன்றிய அரசின் நிர்வாக சீர்திருத்தம் மற்றும் பொது மக்கள் குறைதீர் துறை சார்பில் போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி யாளர்கள் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளனர். ஒன்றிய அரசின்  முக்கிய திட்டங்களில் குறைந்தது  6 திட்டங்களை சிறப்பாக செயல் படுத்தியவர்கள் இப்பட்டியலில் அடங்குவர். வேலை வாய்ப்புக்களை உரு வாக்குதல், வருவாயை பெருக்கு தல், சுற்றுச்சூழல் பாதுகாப்பு போன்றவற்றில் சிறப்பாக செயல்பட்ட சுயஉதவிக் குழுக்கள், குடியரசு தின அணிவகுப்புக்கான அழைப்புகளை பெற்றுள்ளன. உணவு, சுகாதாரம், தூய்மை, ஊட்டச்சத்து போன்ற பிரிவுகளிலும் சாதனையாளர்கள் அழைக்கப் பட்டுள்ளனர். இச்சிறப்பு அழைப்பாளர்கள் குடியரசு தின அணிவகுப்பை பார்வையிடுவதுடன் தேசிய போர் நினைவுச் சின்னம், இந்திய பிரத மர்கள் அருங்காட்சியகம் மற்றும்  தில்லியில் உள்ள முக்கிய இடங் களையும் பார்வை யிடுவார்கள். அவர்கள் தங்களது துறை சார்ந்த  அமைச்சர்களுடன் கலந்துரை யாடவும் வாய்ப்புகளை பெறுவர்.எல்லையோரம் குவிந்துள்ள மதுபான கடைகளால் சீரழியும் சட்டம்-ஒழுங்கு புதுச்சேரி அரசு மீது சிபிஎம் கடும் விமர்சனம்புதுச்சேரி, ஜன.13-  எல்லையோரம் குவிந்துள்ள மதுபான கடைகளால் சட்டம் ஒழுங்கு சீரழிந்து வருவதால் புதுச்சேரி அரசு மீது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. புதுச்சேரி மாநிலம்-கடலூர் மாவட்ட எல்லையில் அமைந்துள்ள  பாகூர் கொம்யூன் பகுதிக்குட்பட்ட சோரியங்குப்பம், குருவிநத்தம், ஆராய்ச்சிக்குப்பம்,  கும்ந்தாமேடு, மணமேடு கரையாம்புத்தூர் கிராமங்களில் சட்டத்திற்கு புறம்பாக மக்களின் உணர்வுக்கு மதிப்பளிக்காமல் 25க்கும் மேற்பட்ட மது கடைகள் இயங்கி வருகிறது. இந்த மதுக்கடைகள் அமைக்கப்பட்டதில் இருந்து எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். இளைஞர்களை சீரழிக்கும் விதமாகவும் அப்பகுதி பெண்கள் குழந்தைகள் மக்களின் பாதுகாப்பை பற்றி கவலை கொள்ளாமல் என்.ஆர்.காங்கிரஸ்,பாஜக அரசு உள்ளது.  மேலும், பிளாஸ்டிக் மற்றும் கண்ணாடி பாட்டில்களால் குப்பை மேடாக பாகூர் பகுதி  வருகிறது. இத்துடன், நாளுக்கு நாள் மதுபான கடைகளின் எண்ணிக்கையை அதி கரித்து வருகிறது. பாகூரில் சட்டம்-ஒழுங்கு பிரச்சனை களால் ஒரே மாதத்தில் மட்டும் 6 பேர்  மரணமடைந்துள்ளனர். குடித்து விட்டு தகராறுகள், சாலையில் செல்பவர்களிடம் வம்பு இழுப்பது, பெண்கள் குழந்தைகளை பாலியல் சீண்டல் செய்வது, தங்களுக்குள் அடித்துக் கொண்டு செத்து மடிவதும் அதிகரித்துள்ளது. ஆடு,மாடு மேய்ப்பவர்கள் மற்றும் விவசாயிகளை மிரட்டுவது, வழிப்பறி, பொருட்களை திருடுவது என தினந்தோறும் சமூக குற்றங்கள் நடந்து வரும் இடமாக பாகூர் மாறி உள்ளது. கடந்த ஆறு மாதத்தில் மட்டும் வாரம் ஒரு குற்றச் சம்பவம் மற்றும் கொலை சம்பவம் நடக்கும் அளவுக்கு இடமாக மாறியுள்ளது. எனவே, குற்றங்களுக்கு காரணமாக அப்பகுதியில் உள்ள அனைத்து மதுக் கடைகளை உடனடியாக மூட வேண்டும். தமிழக எல்லையோரம் உள்ள தென்பெண்ணை ஆற்றங்கரை நவாத்தோப்பில் மற்றும் சித்தேரி அணைக்கட்டு ஆகிய பகுதிகளில் 24 மணி நேரமும் செயல்படக்கூடிய காவல் துறை சோதனை சாவடி மற்றும் பாதுகாப்பு காவல் மையம் அமைக்க புதுச்சேரியில் ஆளும் என்.ஆர்.காங்கிரஸ் பாஜக கூட்டணி அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று பாகூர் கொம்யூன் கமிட்டி செயலாளர் ப.சரவணன் அறிக்கை ஒன்றில் வலியுறுத்தியுள்ளார்.
2025-01-14 01:55:22.569040
ஜனவரி 13, 2025
சபரிமலையில் இன்று மகரவிளக்கு பூஜை
மாநிலம் - தில்லி
நமது நிருபர்
https://theekkathir.in/News/states/delhi/makaravilakku-puja-today-at-sabarimala
தமிழ்
UTF-8
சபரிமலை ஐயப்பன் கோயிலில் மகரவிளக்கு காலம் இறுதிக்கட் டத்தை எட்டியுள்ளது. முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான மகரவிளக்கு பூஜை செவ்வாய்க்கிழமை நடைபெறு கிறது. அன்றைய நாள் மாலையில் பொன் னம்பலமேட்டில் மகரஜோதி தரிசனமும் நடைபெற உள்ளது. மகரவிளக்கு பூஜை தினத்தன்று ஐயப்பனுக்கு அணிவிக் கப்படும் திருவாபரணம் ஊர்வலமாக கொண்டு வரப்படும் நிலையில், செவ் வாய்க்கிழமை மாலை 6 மணியளவில் சன்னிதானத்தை அடையும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. கடும் கட்டுப்பாடு மகரவிளக்கு பூஜைக்கு பக்தர்கள் வருகை அதிகமாக இருக்கும் என்பதால் சபரிமலையில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. நிலக்கல்லில் இருந்து போக்குவரத்து கட்டுப்பாடு கடுமையான அளவில் உள்ளது. காலை 10 மணி வரை மட்டுமே பம்பை வரை போக்குவரத்து இயக்கம் இருக்கும். 12 மணிக்கு மேல் பம்பையில் இருந்து சன்னிதானத்திற்கு பக்தர்கள் அனுமதி இல்லை. ஜனவரி 19ஆம் தேதி இரவு 10 மணி வரை சபரிமலை கோவில் நடை திறந்திருக்கும். அன்று வரை மட்டுமே பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப் படுவார்கள். 20ஆம் தேதி காலை 7 மணிக்கு சபரிமலை கோவில் நடை சாத் தப்படும். அன்றுடன் மண்டல, மகர விளக்கு காலம் நிறைவடையும். மகரவிளக்கு பூஜையை முன்னிட்டு சபரிமலையில் பலத்த போலீஸ் பாது காப்பு போடப்பட்டுள்ளது. 5 ஆயிரத்திற் கும் அதிகமான போலீசார் குவிக்கப் பட்டுள்ளனர். நெரிசல் ஏற்படாமல் இருப்ப தற்காக  ஆன்லைனில் 50,000, ஸ்பாட் புக்கிங்கில் 1,000 பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 15ஆம் தேதி ஆன்லைன் புக்கிங்கில் 60,000 பக்தர்களுக்கு அனுமதி வழங்கப் பட்டுள்ளது. ஜனவரி 16ஆம் தேதி முதல் வழக்கமான முறையில் புக்கிங் நடை பெறும் என திருவாங்கூர் தேவஸ்தானம் அறிவிப்பில் கூறியுள்ளது.
2025-01-14 01:55:22.569592
ஜனவரி 13, 2025
சத்தீஸ்கரில் அதானி ரூ.65,000 கோடி முதலீடு
மாநிலம் - தில்லி
நமது நிருபர்
https://theekkathir.in/News/states/delhi/adani-invests-rs-65,000-crore-in-chhattisgarh
தமிழ்
UTF-8
மோடி பிரதமர் ஆவதற்கு முன்பு அதானி சாதாரண தொழிலதிபர்களில் ஒருவ ராக இருந்தார். 2014ஆம் ஆண்டுக்கு முன் அவரை பற்றி பெரிதாகத் தெரியாது. ஆனால் மோடி பிரதமர் ஆன பின்பு அதானி உலகின் முன்னணி தொழிலதி பர்களில் ஒருவராக உருவெடுத்தார். தனது நெருங்கிய நண்பருக்கு மோடி சலு கைகளை வாரி வழங்கியதனால் தான் அதானி உலகின் முன்னணி பணக்காரர்களில் ஒரு வராக வலம் வருகிறார். தற்போதைய சூழ் நிலையில், நிலக்கரிச் சுரங்கம், துறை முகம், மின்சாரம் உள்ளிட்ட முக்கிய துறைகள் அனைத்தும் அதானியின் கட்டுப்பா ட்டில் தான் உள்ளது. ஹிண்டன்பர்க் உள்ளிட்ட முறைகேடு சம்பவங்கள் நிகழ்ந்தாலும் மோடி அரசின் ஆதரவால் அதானி முன்பை விட கூடுதலாகவே செழிப்பாகவே கல்லா கட்டி வருகிறார். இந்நிலையில், சமீபத்தில் சத்தீஸ்கர் முதல்வர் விஷ்ணு தேவ் சாயை அதானி  சந்தித்துப் பேசினார். இதனை தொடர்ந்து சத்தீஸ்கர் மாநிலத்தில் ரூ.65,000 கோடி முதலீடு மேற்கொள்ள உள்ளதாக அதானி குழுமம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தொடர்ந்து பாஜக சத்தீஸ்கர் அரசும் அதானி  குழுமத்தின் முதலீடு தொடர் பாக அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ராய்ப்பூர், கோர்பா, ராய்கர் உள்ளிட்ட பகுதிகளில் அதானி குழுமத்தின் மின் உற்பத்தி மையங்கள் ரூ.80,000 கோடியில் விரிவாக்கம் செய்யப்பட உள்ளன. மேலும் அதானி குழுமத்துக்கு சொந்த மான சிமெண்ட் ஆலைகளில் ரூ.5,000 கோடியை முதலீடு செய்ய உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
2025-01-14 01:55:22.570120
ஜனவரி 13, 2025
திருப்பதி கோவிலில் தீ விபத்து
மாநிலம் - தில்லி
நமது நிருபர்
https://theekkathir.in/News/states/delhi/fire-incident-in-tirupati-temple
தமிழ்
UTF-8
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த வாரம் வைகுண்ட ஏகா தசி இலவச டிக்கெட் வாங்கும் பொழுது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 6 பக் தர்கள் உயிரிழந்தனர். 40க்கும் மேற் பட்டோர் காயமடைந்தனர். தொடர்ந்து திங்கள்கிழமை அன்று திருப்பதி கோவி லின் லட்டு விநியோக கவுண்டரில் தீ விபத்து ஏற்பட்டது. லட்டு விநியோகம் செய்யும் வளாகத்தில் உள்ள 47ஆம் நம்பர் கவுண்டரில் யுபிஎஸ்-இல் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற் பட்டது. இந்நிலையில்,  கரும்புகை வெளி வருவதை பார்த்த பக்தர்கள் மற்றும் ஊழி யர்கள் விரைந்து ஓடியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. தகவலறிந்து வந்த திருப்பதி தேவஸ்தான மின்துறை ஊழியர்கள் மின்விநியோகத்தை நிறுத்தி யுபிஎஸ் இணைப்பை துண்டித்தனர்.
2025-01-14 01:55:22.570600
ஜனவரி 13, 2025
கடும் குளிர் ராஜஸ்தான் பள்ளிகளுக்கு விடுமுறை
மாநிலம் - தில்லி
நமது நிருபர்
https://theekkathir.in/News/states/delhi/extreme-cold-rajasthan-schools-holiday
தமிழ்
UTF-8
தில்லி, உத்தரப்பிரதேசம், ஹரி யானா, ராஜஸ்தான் உள்ளிட்ட வடமாநிலங்களில் கடந்த சில நாட்களாக குளிரின் தாக்கம் அதிகரித்து வருகிறது. வடமாநிலங்களில் நள்ளிரவு முதல் காலை 9 மணி வரை அடர் மூடு பனி நிலவி வருகிறது. இதனால் வடமாநி லங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.  இந்நிலையில், கடும் குளிர் காரண மாக ராஜஸ்தான் மாநிலத்தின் தலை நகர் ஜெய்ப்பூர் உள்பட 25 மாவட்டங்க ளில் 1 முதல் 8ஆம் வகுப்பு வரை பள்ளி களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஒருசில மாவட்டங்களில் ஓரிரு நாட்கள் முதல், 4  நாட்கள் வரை விடுமுறை நீட் டிக்கப்பட்டுள்ளது.
2025-01-14 01:55:22.571107
ஜனவரி 13, 2025
தில்லி வாக்காளர்களுக்கு போர்வைகள், ரூ.1,100 பணம் பாஜக விநியோகம் செய்வதாக குற்றச்சாட்டு
மாநிலம் - தில்லி
நமது நிருபர்
https://theekkathir.in/News/states/delhi/allegedly-bjp-distributes-blankets,-rs-1,100-to-delhi-voters
தமிழ்
UTF-8
70 தொகுதிகளைக் கொண்ட தில்லி மாநிலத்தில் பிப்ரவரி 5ஆம் தேதி ஒரே கட்டமாக சட்ட மன்ற தேர்தல் நடைபெறுகிறது. பதிவான வாக்குகள் பிப்ரவரி 8ஆம் தேதி எண்ணப்படும் நிலையில், தோல்வி பயத்தால் பணப்பட்டுவாடா, மத வெறியை கிளப்பும் பேச்சு, வாக்கா ளர்களை நீக்குதல், சேர்த்தல் உள்ளிட்ட இழிவான வேலைகளில் பாஜக ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில், பாஜக தில்லி வாக்காளர்களுக்கு போர்வை மற்றும் ரூ.1,100 கொடுப்பதாக காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. இதுதொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவர் சந்தீப் தீட்சித் கூறுகையில்,”ஞாயிற்றுக்கிழமை இரவு கித்வாய் நகர் சட்டமன்ற தொகுதியின் கிழக்குப் பகுதியில் ஒரு கட்சி (பாஜக) வாக்காளர்களுக்கு போர்வைகள் மற்றும் ரூ.1,100 விநியோகம் செய்தது பற்றி அறிந்தேன். இதுதொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்க உள்ளேன். பாஜகவினர் இப்படித்தான் தேர்தலில் வெற்றி பெற திட்டமிட் டுள்ளார்கள். பாஜகவிடம் வளர்ச்சிக் கான திட்டங்கள் மற்றும் நேர்மை என்று எதுவும் இல்லை” என அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
2025-01-14 01:55:22.571602
ஜனவரி 15, 2025
தொழிலாளர் வேலை நேரம் உங்களுக்கு நகைச்சுவையா? - அ. குமரேசன்
கட்டுரை
நமது நிருபர்
https://theekkathir.in/News/articles/world/a-country's-progress-is-a-broad-road-with-skyscrapers-and-modern-vehicles
தமிழ்
UTF-8
தேசத்தின் முன்னேற்றம் என்றால் வானுயர் கட்டடங்களும் நவீன வாகனங்களும் அகன்ற சாலைகளுமா? அந்தக் கட்டடங்களில் வசிப்ப வர்கள் யார், வாகனங்கள் யாருக்குச் சொந்தம், சாலைகள் மக்களை எங்கே சேர்க்கின்றன –இவை தான் முன்னேற்றத்தின் அறிகுறிகள். ஆனால், கார்ப்பரேட் கனவான்களுக்கோ தொழிலாளர்கள் வரம்பில்லாத நேரம் உழைத்துத் தங்களின் லாபம்  குவிவதுதான் தேசத்தின் முன்னேற்றமாகத்தெரிகிறது. எல்.அண்.டி. குழுமத்தின் தலைவர் எஸ்.என்.சுப்பிர மணியன் அண்மையில் ஊழியர்களிடையே பேசுகை யில், வாரத்திற்கு 90 மணி நேரம் வேலை செய்யத் தயாராக இருக்க வேண்டும் என்றார். ஞாயிற்றுக் கிழமைகளிலும் வேலை வாங்க முடியாதது குறித்துக் கவலைப்படுவதாகக் கூறிய அவர், “வீட்டில் உங்கள் மனைவியின் முகத்தையே எவ்வளவு நேரம் உற்றுப் பார்த்துக்கொண்டிருப்பீர்கள், பெண்கள் எவ்வளவு நேரம் கணவனின் முகத்தையே உற்றுப் பார்த்துக் கொண்டிருப்பீர்கள்,” என்றும் கேட்டார். இப்படி உழைத்தால்தான் முன்னேறிய நாடுகளோடு நாமும் போட்டிபோட முடியும் என்று தேசப்பற்றோடு முடிச்சுப் போட்டார்.நகைச்சுவையாம்கடும் எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில் இப்போது அந்நிறுவனத்தின் மனித வளத்துறைத் தலைவர், குழுமத் தலைவரின் பேச்சு பொருத்தமற்ற முறையில் விமர்சிக்கப்படுவதாகவும், 90  மணி நேர உழைப்பைக் கட்டாயமாக்க வேண்டுமென்ற பொருளில் அவர் பேசவில்லை என்றும், நகைச்சுவையாகவே அப்படிக் கூறியதாகவும் விளக்கமளித்திருக்கிறார். 90 மணி நேரம், அதாவது ஞாயிற்றுக் கிழமையும் சேர்த்து  ஒரு நாளுக்குக் கிட்டத்தட்ட 13 மணி நேரம்,  ஞாயிற்றுக் கிழமையைச் சேர்க்காவிட்டால் 15 மணி நேரம்.நாராயணமூர்த்தியும் அதானியும்இதற்கு முன்பும் இப்படியான நகைச்சுவைத் துணுக்குகள் வந்திருக்கின்றன. இன்ஃபோசிஸ் தலைவர் நாராயணமூர்த்தி, கொஞ்சம் இளகிய மனதுடன், இந்தியர்கள் வாரத்திற்கு 70 மணி நேரம் வேலை செய்தால்தான், முன்னேறிய நாடுகளுக்கு இணையான உற்பத்தித்திறனைப் பெற முடியும் என்றார். இதுதொடர்பாக அலசிய அமெரிக்காவின் தொழில்–வணிக ஏடாகிய ‘ஃபோர்ப்ஸ்’ தனது ஆண்ட றிக்கையில் (2023) உலகின் மிகப் பெரிய 15 நிறு வனங்களில் எதிலுமே இத்தகைய நீண்ட நேர உழைப்பு கட்டாயமானதாக இல்லை என்று சுட்டிக்காட்டியது. இந்தப் புத்தாண்டு நாளில், அதானி குழுமத்தின் தலைவர் கௌதம் அதானி, “வீட்டில்  எட்டு மணி நேரம் இருந்தால் மனைவி ஓடிப்போய் விடுவாள்,” என்று “நகைச்சுவையாக” ஒரு பேட்டியில் கூறினார். அப்புறம், “வேலைக்கும் வாழ்க்கைக்கும் இடையே சமநிலைப்படுத்துவது ஒவ்வொருவரின் சொந்த முடிவாக இருக்க வேண்டும், என் கருத்தை உங்கள் மீது திணிக்கக்கூடாது, உங்கள் கருத்தை என் மீது திணிக்கக்கூடாது,” என்று கூறி சமநிலைப்படுத்திக் கொண்டார். இப்படித்தான் சும்மா சிரிப்பதற்காகச் சொன்னோம் என்று ஆள் மாற்றி ஆள் சொல்லிச் சொல்லி, அதிக நேர உழைப்புக்கு மனநிலையைத் தயார்ப்படுத்தும் கைங்கரியத்தைச் செய்துவருகிறார்கள். நகைச்சுவை தானே என்று சிரித்துவிட்டால் இதுவே பொதுக்கருத்து என்று பட்டையைக் கட்டி சட்டத் திருத்தங்களுக்கு அடிவாரம் போட்டுவிடுவார்கள்.சட்டமும் நடப்பும்தொழிலாளர் சட்டங்களில் வாரமொரு நாள் விடுமுறையோடு 48 மணி நேர (ஒரு நாளில் 8 மணி  நேரம்) வேலை என்ற வரம்பு இருக்கிறது. தேவைப் பட்டால் 9 மணி நேரம் வேலை வாங்கலாம், ஆனால் அது வாரம் 48 மணி நேரத்தைத் தாண்டக்கூடாது.  நடை முறையிலோ பல வளாகங்களில் ஒரு நாளில் 12 மணி நேர வேலை இயல்பாக்கப்பட்டிருக்கிறது. இதன் பின்னணியில் காலாவதியான விதிமுறைகளும், சட்டங்களின் வலுவற்ற செயலாக்கமும், கார்ப்பரேட்டு களின் அதிகரித்து வரும் செல்வாக்கும் இருக்கின்றன என்று இந்தியாவின் ‘தி எக்கனாமிக் டைம்ஸ்’ நாளேடு (ஜனவரி 13) கூறுகிறது. ‘குளோபல் ஜாப் பிளாட்பார்ம்’ என்ற வேலை வாய்ப்பு நிறுவனத்தின் ஆய்வறிக்கை, இந்தியத் தொழிலாளர்களில் 88 சதவீதம் பேர்களை வேலை நேரம் அல்லாத பொழுதுகளிலும் நிர்வாகங்கள் தொடர்பு கொள்கின்றன என்று தெரிவிக்கிறது. 85 சதவீதம் பேர் உடல் நலக்குறைவால் விடுப்பில் இருக்கிற நாட்களிலும் கூட நிர்வாகங்கள் தொடர்பு  கொள்வதாகத் தெரிவித்திருக்கிறார்கள். நிர்வாகங் களின் அந்த அழைப்புகளுக்குப் பதிலளிக்காமல் விட்டு விட்டால் வேலைக்குப் பாதிப்பு ஏற்படும், பதவி  உயர்வுகள் மறுக்கப்படும், தங்களது தகுதிகள் குறைத்து மதிப்பிட்டுப் பதிவு செய்யப்படும் என்ற  அச்சத்தை 79 சதவீதத்தினர் வெளிப்படுத்தி யிருக்கிறார்கள்.கூடுதல் வேலையால்  உயிரிழப்பு அதிகமாகும் இந்தியாஒரு நாளில் 24 மணி நேரமும் அழைக்கப்படு வதற்கும் உழைப்பைத் தருவதற்கும் தயாராக  இருந்தாக வேண்டும். பெரும்பாலும் அதனை ஈடுகட்டு வதற்கான கூடுதல் ஊதியம் வழங்கப்படுவதில்லை அல்லது சொற்பமான தொகையே வழங்கப்படும். ஐ.டி.  நிறுவனங்களின் ஊழியர்களுக்கோ கூடுதல் நேர ஊதியம் அறவே கிடையாது. நியமன ஒப்பந்தத்தி லேயே, கூடுதல் வருவாயை எதிர்பார்க்காமல் கூடு தல் வேலையை மட்டும் எதிர்பார்க்கும்படியான ஏற்பாடுகள் செய்யப்பட்டுவிடுகின்றன. வெளியி லிருந்து பார்ப்பவர்களுக்கு இந்தக் கண்ணாடிச் சிறை  தெரியாது. பன்னாட்டுத் தொழிலாளர் அமைப்பும், உலக சுகாதார நிறுவனமும் கூட்டாக மேற்கொண்ட ஆய்வின்படி, கூடுதல் நேர வேலையால் உயிரிழப்பவர்கள் மிக அதிகமாக உள்ள நாடுகளின் பட்டியலில் இந்தியா சேர்ந்திருக்கிறது. முறைசாராத் துறைகளில் பணிபுரிவோருக்கு இந்தச் சட்டங்கள் துணையாக வருவதில்லை. வேதனையான வேடிக்கை என்னவெனில் பன்னாட்டு நிறுவனங்களின் ஊழியர்களும் இப்படிப்பட்ட சூழலில்தான் இருக்கிறார்கள். சாம்சங் தொழிலாளர்கள் தங்களுக்காகப் போராடக்கூடிய சங்கத்தை அமைத்துக்கொள்ளும் உரிமையை நிலைநாட்ட இன்னமும் போராட வேண்டியிருக்கிறதே!போர்வையை விலக்கினால்...இப்படிப்பட்ட நிலைமைகளில்தான், 2020இல் தொழிலாளர் சட்டங்களை முறைப்படுத்துவது என்ற போர்வையில் புதிய விதிமுறைகள் சேர்க்கப்பட்டன.  போர்வையை விலக்கினால், 12 மணி நேரம் வேலை வாங்க அனுமதிப்பது உள்ளிட்ட சலுகைகள் நிர்வாகங்களுக்கு அளிக்கப்பட்டிருப்பது தெரியவரும். தொழிற்சங்கங்களின் உறுதியான எதிர்ப்பால் இன்னமும் நடைமுறைக்கு வரவில்லை என்றாலும், தொழிலாளர்கள் எதிர்கால வேலை நேரம் தொடர்பான விடை தெரியாத வினாக்களுடனேயே உழைத்துக்கொண்டிருக்கிறார்கள். வேலை நேரத்தை அதிகரிக்க அனுமதிக்கும் விதி தொழிலாளர்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகவே இருக்கும் என்று ‘தி எக்கனாமிக் டைம்ஸ்’ எச்சரிக்கிறது.. சட்டங்களும் விதிகளும் செயல்படுத்தப்படும் விதமும், கண்காணிக்க வேண்டிய அதிகார அமைப்பு களின் கண்டுகொள்ளாமையும் சேர்ந்து, ஆகப் பெரும்பாலான கார்ப்பரேட் நிறுவனங்களிலும், பாரம் பரியமான ஆலைகளிலும் தொழிலாளர்கள் வேலைக்கும் வாழ்க்கைக்கும் இடையேயான சமநிலை மோசமாக உள்ள சூழலில்தான் உழல்கிறார்கள்.நிரந்தரத் தொழிலாளர் முறையை ஒழித்துக்கட்ட...இந்தச் சூழலைப் படம் பிடித்துக் காட்டுகிறது ‘ஃபிரண்ட் லைன்’ 40ஆம் ஆண்டு சிறப்பிதழில் (ஜனவரி) தொழிற்சங்கத் தலைவரும் சமூகச் செயல் பாட்டாளருமான சுதா பரத்வாஜ் எழுதியுள்ள “தொடர்ச்சியான தொழிலாளர் துயரம்” என்ற கட்டுரை.  “இந்தியாவில் இன்று பெரிய நிறுவனங்களிலேயே நிரந்தரத் தொழிலாளர்கள் 10 சதவீதம் பேர்தான் இருக்கிறார்கள். 1990ஆம் ஆண்டுகளில் அதுவரை யில் இருந்து வந்த முதலீட்டுக்கும் உழைப்புக்குமான கொஞ்சநஞ்ச இணக்கத்திலும் துருவேறத் தொடங்கியது. இன்று உழைப்பாளி வர்க்கத்தில் 83  சதவீதத்தினர் அமைப்பு சார்ந்த நிறுவனத் தொழி லாளர்களாக இல்லை, 93 சதவீதத்தினர் முறையான ஒப்பந்தம் இல்லாத முறைசாராத்துறையினர்தான். சங்கமாகத் திரட்டுவது கடும் சவாலாக்கப்பட்டி ருக்கிறது. “காலவரம்புக்குட்பட்ட ஒப்பந்தம்” போன்ற ஏற்பாடுகள் நிரந்தரத் தொழிலாளர் முறை ஒழித்துக் கட்டப்படுவதை உறுதிப்படுத்துவதாக இருக்கின்றன” என்கிறார் அவர் (பீமா கோரேகான் வழக்கில்  சிறை யில் அடைக்கப்பட்டு நீதிமன்றத்தின் பிணை அனுமதியால் வெளியே நடமாடுகிறவர் இந்த சுதா பரத்வாஜ்). எட்டு மணி நேர உழைப்பு, எட்டு மணி நேர ஓய்வு–இவற்றோடு எட்டு மணி நேர வாழ்வு என்பதே உலகத் தொழிலாளர் இயக்கம் போராட்டங்களாலும் தியாகங் களாலும் வென்றெடுத்த உரிமை. எட்டு மணி நேர வாழ்வு என்றால் மனைவி முகத்தைக் கணவன் பார்ப்பதற்கும், கணவன் முகத்தை மனைவி பார்ப்ப தற்கும், பிள்ளைகளின் முகங்களை இருவருமே பார்ப்பதற்கும், எல்லோருமாக  சினிமா, கடற்கரை, கடையரங்குகள், உறவினர் இல்ல நிகழ்வுகள், அரசியல் உள்ளிட்ட பொது நிகழ்ச்சிகள் என்று போய்வருவதற்குமானது. நகைச்சுவைக் கார்ப்பரேட் கனவான்களுக்கு இது அழுத்தந்திருத்தமாக உணர்த்தப்பட்டாக வேண்டும்.
2025-01-16 01:56:00.443634
ஜனவரி 15, 2025
நிறமாற்றத்தை நிராகரித்து நிமிர்ந்து நிற்பார் வள்ளுவர்
தலையங்கம்
நமது நிருபர்
https://theekkathir.in/News/headlines/tamil-nadu/valluvar-rejects-the-discoloration-and-stands-upright
தமிழ்
UTF-8
ஆளுநர் தன்னுடைய வாழ்த்துச் செய்தியில் பொங்கல் திருநாள் என்று கூட குறிப்பிட மறுக்கிறார். பொங்கல் திருநாளின் ஒரு பகுதியாக  தை இரண்டாம் நாள் மாட்டுப் பொங்கல் திருநாளாகவும், திருவள்ளுவர் தினமாகவும் கொண்டாடப்படுகிறது. ஆளுநர் மாளிகையில் திருவள்ளுவர் படத்திற்கு காவி வண்ணம் பூசிக் களிப்படைந்திருக்கிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி. வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம் திருவள்ளுவரை அவமதித்து வருகிறார் இவர்.உலகம் பழிப்பதை விட்டொழித்துவிட்டால் மழிப்பதும், நீட்டலும் கூட தேவையில்லை என துறவுக்கோலத்தையும் துறந்தவர் திருவள்ளுவர். ஆனால் ஆளுநர் ஏற்பாட்டில் வரையப்பட்டுள்ள திருவள்ளுவர் படத்தில் அவர் காவி உடை  அணிந்திருப்பது போலவும் விபூதி பட்டை அடித் திருப்பது போலவும் சித்தரித்து வைக்கப்பட்டுள் ளது. தமிழக அரசினால் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டுள்ள திருவள்ளுவர் படத்தை யும் அவர் ஏற்க மறுக்கிறார்.அதுமட்டுமின்றி, இந்தியாவின் சனாதன நாகரிக மரபில் வாழ்க்கையின் ஆழத்தை கற்றுக் கொடுத்தவர் திருவள்ளுவர் என்று தன்னுடைய மனுஅநீதி, வர்ணாசிரமச் சிந்தனையை வள்ளுவ ரின் மீது ஏற்றி திருக்குறளுக்கு புது உரை எழுதப் புறப்பட்டிருக்கிறார் ஒன்றிய அரசின் நியமனப் பதவிக்காலம் முடிந்த பிறகும் நாற்காலியில் ஒட்டிக்கொண்டிருக்கும் ஆர்.என்.ரவி.வள்ளுவர் பேசியுள்ள அறம் என்பது  முற்றிலும் வர்ணாசிரம தர்மத்திற்கு எதிரானது. பிறப்பினால் பேதம் கற்பிக்கும் மநுஅநீதியை மறுத்து ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’  என்று பிரகடனப்படுத்தியவர் திருவள்ளுவர். வெளிப் படையாக அவர் எந்தவொரு மதக்கருத்துக் களையும் தன்னுடைய திருக்குறளில் கூறியவர் அல்லர். ஆனால் கடவுள் பக்தியின் உன்னதத்தை வள்ளுவர் பேசியதாக ஆளுநர் உருட்டுகிறார்.ஆர்எஸ்எஸ் பரிவாரம் வள்ளுவரை வளைக்க  முயல்வது இது முதன்முறையல்ல. பாஜகவைச்  சேர்ந்த தருண்விஜய் என்பவர் திருவள்ளுவருக்கு வடநாட்டில் சிலை வைக்கப்போகிறேன் என்று கூறிவிட்டு அவருடைய சிலையை வைக்க மனமின்றி மூட்டைகட்டி போட்டுவிட்டு போனவர்தான்.பிரதமர் நரேந்திர மோடிக்கும் இப்போது திருவள்ளுவர் மீது திடீர் பாசம் பொங்குகிறது. திருக்குறளின் ஒவ்வொரு குறளுக்கும் எதிராகவே மோடி அரசு செயல்பட்டு வருகிறது.  மக்கள் மீது அளவில்லாமல் வரி சுமத்தும் மன்னன் இரவிலே கன்னக்கோல் வைக்கிற கள்வர்களுக்கு சமமான வன் என்கிறார் வள்ளுவர். ஆனால் ஜிஎஸ்டி வரி என்கிற பெயரில் மக்களை வதைக்கும் பிரதம ருக்கு அவருடைய பெயரை உச்சரிக்கும் தகுதி யில்லை. இவர்களது தத்துவ வறுமை காரண மாகவே வள்ளுவ அறத்தை தின்று செரிக்க  முயல்கிறார்கள். எத்தனையோ காலப்புயல்களை கடந்து நிற்கும் வள்ளுவம் இவர்களது நிறமாற்றத்தையும் நிராகரித்து நிமிர்ந்து நிற்கும்.
2025-01-16 01:56:02.905981
ஜனவரி 15, 2025
தென் கொரிய ஜனாதிபதி கைது
உலகம்
நமது நிருபர்
https://theekkathir.in/News/world/china/south-korean-president-arrested
தமிழ்
UTF-8
சியோல்,ஜன.15-  அவசர நிலையை அமல்படுத்தியதன் காரணமாக பதவி நீக்கம் செய்யப்பட்ட தென்கொரிய ஜனாதிபதி யூன் சுக் யோல் அந்நாட்டு ஊழல் தடுப்புப் பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.  தன் மீதான குற்றச்சாட்டுக்கு எதிராக இறுதிவரை சட்ட ரீதியாக போராடுவேன் என தெரிவித்திருந்த யூன் சுக் யோல் ஊழல் தடுப்புப் பிரிவு அனுப்பிய சம்மனுக்கு  ஆஜராகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அந்நாட்டு நீதிமன்றம் இரண்டு முறை அவருக்கு கைது உத்தரவு பிறப்பித்துள்ளது. முதல் முறை கைது நடவடிக்கையின் போது அவரது தனிப் பாதுகாவலர்கள் தடுத்ததன் காரணமாக அவரை கைது செய்ய முடியாமல் ஊழல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் திரும்பிச் சென்றனர்.  இந்நிலையில் ஜன.15 அன்று அந்நாட்டு ஜனாதிபதி மாளிகைக்கு முன்பாக மூவாயிரத்துக்கும் அதிகமான காவலர்கள்,  ஊழல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் குவிக்கப்பட்டு அவர் கைது செய்யப்பட்டார்.
2025-01-16 01:56:02.965334
ஜனவரி 15, 2025
போர்நிறுத்தத்திற்கான வரைவு ஒப்பந்தத்தை இஸ்ரேல் கடைப்பிடிக்குமா?
உலகம்
நமது நிருபர்
https://theekkathir.in/News/world/china/will-israel-abide-by-the-draft-ceasefire-agreement
தமிழ்
UTF-8
காசா,ஜன.15- இஸ்ரேல் - காசா போர் நிறுத்திற்காக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கொண்டுவந்துள்ள  வரைவு அறிக்கையை ஹமாஸ் குழு ஏற்றுக்கொண்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.ஆனால் இந்த ஒப்பந்தத்தை இஸ்ரேல் கடை பிடிக்குமா என்ற கேள்வி பிரதானமாக எழுந்துள்ளது.  2023 அக்டோபர் மாதத்தில் இருந்து காசா மீது இஸ்ரேல் நடத்தி வரும் இனப் படுகொலை தாக்குதலை நிறுத்துவதற் கான போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கான வரைவு ஒப்பந்தத்தை ஹமாஸ்  அமைப்பி னர் ஏற்றுக்கொண்டனர் எனவும் ஆனால் வரைவு அறிக்கையில் குறிப்பிடப்பட்டி ருந்த பல தகவல்களை வெளியிடவில்லை எனவும்  பேச்சுவார்த்தைக்குழுவுடன் தொடர்புடைய அதிகாரிகள் தெரிவித்துள் ளனர். மேலும் இந்த ஒப்பந்தத்தை அமலாக்கு வதன் மூலம் 15 மாத கால இனப்படு கொலையை  முடிவுக்கு கொண்டு வர  வாய்ப்புள்ளதாகவும், ஹமாஸ் வசம் தற்போது உள்ள 100 க்கும் மேற்பட்ட பணயக் கைதிகளை விடுவிக்க வாய்ப்புள்ளது எனவும்  கூறப்படுகின்றது. அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் ஆண்டனி பிளிங்கன் பேசியபோது “நாங்கள் போர் நிறுத்தத்தை அடைவோம் என  நான் நம்புகிறேன். அதற்கான முன் னெடுப்பு முன்பை விட முக்கிய கட்டத்தில் உள்ளது என குறிப்பிட்டுள்ளார். அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனால் வகுக்கப்பட்ட, ஐ.நா அவையின் பாதுகாப்பு கவுன்சிலின் ஆதரவுடன் உரு வாக்கப்பட்ட மூன்று கட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் முதல் ஆறு வார காலத்திற்குள் 33 பணயக்கைதிகள் விடு விக்கப்படுவார்கள் என கூறப்படுகிறது.  எனினும் இஸ்ரேல் இந்த ஒப்பந்தத்தை மதித்து தாக்குதலை நிறுத்துமா என்ற கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன. இஸ்ரேலுக்கும் ஹிஸ்புல்லா அமைப்பிற்கு கடந்த ஆண்டு அமைதி ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்ட பிறகும் கூட 50 க்கும்  மேற்பட்ட முறை ஒப்பந்தத்தை மீறி இஸ்ரேல் ராணுவம் லெபனான் எல்லைக் குள் தாக்குதல் நடத்தி பொதுமக்களை படு கொலை செய்தது. எனினும் அமெரிக்கா உள்ளிட்ட எந்த நாடுகளும் இஸ்ரேலின் அடாவடித்தனத்தை கண்டிக்கவில்லை. அதேபோல காசாவில் போர் நிறுத்தம்  மேற்கொள்ள வேண்டும் என ஐ.நா., பாதுகாப்பு அவையில் பெரும்பான்மை யான உலக நாடுகளால் ஆதரிக்கப்பட்ட தீர்மானத்தை கடந்த 5 மாதங்களாக அமெரிக்க மட்டும் தனது ரத்து அதி காரத்தை பயன்படுத்தி ரத்து செய்து வந்ததும் குறிப்பிடத்தக்கது. ஒப்பந்தத்தை மீறி இஸ்ரேல் தாக்கு தல் நடத்திய போது கண்டிக்காத, இஸ்ரேலின் இனப்படுகொலையை அனைத்து வகை யிலும் ஆதரித்து வந்த அமெரிக்கா தற்போது எவ்வாறு இஸ்ரேல் - போலஸ்தீன போர் நிறுத்த ஒப்பந்தத்தை உறுதியாக நிலைநாட்டும் எனவும் கேள்விகள் எழுப்பட்டுள்ளன. ஐ.நா. நிவாரண வாகனங்களை இஸ்ரேல் ராணுவம் தடுத்து கொள்ளை யடித்து வரும் நிலையில் சுமார்  20 லட்சத் திற்கும் அதிகமான பாலஸ்தீனர்கள் செயற்கை பஞ்சத்தில் தள்ளப்பட்டுள்ளனர். அதேபோல லான்செட் மருத்துவ இதழின் ஆய்வறிக்கை காசாவில் படுகொலை செய்யப்பட்டுள்ள பாலஸ்தீனர்களின் எண்ணிக்கை, காசா சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ள 46,000 என்ற  அளவை விட 41 சதவீதம் அதிகம் (64,000)  என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வறிக்கையை காசா சுகாதாரத்துறை அமைச்சகமும் தற்போது ஏற்றுக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
2025-01-16 01:56:02.965906
ஜனவரி 15, 2025
கார்ப்பரேட்களின் சொர்க்கபுரியாக மாறிய மகா கும்பமேளா
மாநிலம் - தில்லி
நமது நிருபர்
https://theekkathir.in/News/states/delhi/maha-kumbh-mela-has-become-a-paradise-for-corporates
தமிழ்
UTF-8
பிரயாக்ராஜ் உத்தரப்பிரதேச மாநிலத்தின் பிரயாக்ராஜில் நகரில் 45  நாட்கள் நடைபெற உள்ள  மகாகும்பமேளா நிகழ்வு கார்ப்பரேட்  நிறுவனங்களின் சொர்க்கபுரியாக மாறியுள்ளது. இந்நிகழ்விற்கு 40 கோடிக்கும் அதிகமான மக்கள் வருவார்கள் என  கணிக்கப்பட்டுள்ள நிலையில் உள்  நாட்டு மற்றும் பன்னாட்டு கார்ப்பரேட்  நிறுவனங்கள், தங்கள் பொருட் களை (பிராண்டுகளை ) குறைந்த செல வில் நன்றாக விளம்பரப்படுத்திக் கொள்ளும் சந்தையாக பயன் படுத்தத் துவங்கியுள்ளன. பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இந்த மகா கும்பமேளாவில் மிகக்குறைந்த செல வில் பல கோடி மக்களிடம் ஒரே  நாளில் ஒரே நேரத்தில் தங்கள் பொருட்  களை சந்தை/விளம்பரப்படுத்தி விடக்கூடிய சாதுரியமான வேலை யில் பல முன்னணி கார்ப்பரேட் நிறு வனங்கள் ஈடுபட்டுள்ளன.  குறிப்பாக குளிர்பானம், சோப்பு,  அகர்பத்தி, பேஸ்ட் உள்ளிட்ட வேக மாக நகரும் நுகர்வோர் பொருட் களை (FMCG) உற்பத்தி செய்யும் நிறு வனங்கள் முதல் வங்கிகள், சிறு  தொழில் நிறுவனங்கள் என அனைத்து  நிறுவனங்களும் இந்த சந்தைப்படுத் தும் பணியில் இறங்கியுள்ளன. ஜனவரி 13 இல் துவங்கி பிப்ரவரி  26 வரை இந்நிறுவனங்கள் இவ்விளம்  பரங்களை பல கோடி மக்களிடம் கொண்டு செல்ல உள்ளன. 4,000 ஹெக்டேர் பரப்பளவில் நடைபெறும், ‘மகாகும்பமேளா -  2025’ இல் கடந்த கும்பமேளாவை விட  அதிக கோடிகள் பணம் புரளும் நிகழ்  வாக இருக்கும் என கூறப்படு கிறது. ‘மகாகும்ப் 2025’ மூலம் ₹2  லட்சம் கோடிக்கு மேல் வருவாயை  ஈட்ட முடியும் என உத்தரப்பிரதேச பாஜக அரசின் தொழில் மேம்பாட் டுத்துறையின் அமைச்சர் நந்த  கோபால் குப்தா நந்தி மதிப்பிட்டுள் ளது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டு மகா கும்பமேளா வில் விளம்பரம் மற்றும் சந்தைப்  படுத்துதலுக்காக பல நிறுவனங் கள் சுமார் ₹3,600 கோடிகள் வரை  செலவு செய்யும் என மதிப்பிடப் பட்டுள்ளது என பிராண்டுகளை விளப்பரப்படுத்தும் உத்தி வல்லு நர்கள் தெரிவித்துள்ளதாக செய்தி கள் வெளியாகியுள்ளன. இதுமட்டுமின்றி இன்னும் சில நிறு வனங்கள் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம், எல்இடி திரைகள், மெய்நிகர் தொழில் நுட்பம் ( Virtual  assistance) மற்றும் கைபேசி ஆப்கள் மூலம் விளம்பரம் செய்ய சுமார் 1,800 முதல் 2,000 கோடி வரை  முதலீடு செய்வார்கள் எனவும் மதிப்  பிடப்பட்டுள்ளன குறிப்பிடத்தக்கது.
2025-01-16 01:56:06.662231
ஜனவரி 15, 2025
பெண்களின் பாதுகாப்பில் எதிர்க்கட்சிகளுக்கும் ஊடகங்களுக்கும் சுயநலம்
மாநிலம் - தில்லி
நமது நிருபர்
https://theekkathir.in/News/states/delhi/opposition-parties-and-media-are-self-interested-in-protecting-women
தமிழ்
UTF-8
கோழிக்கோடு பெண்களின் பாதுகாப்பு தொடர்  பான விஷயங்களில் எதிர்க்கட்சி களும் ஊடகங்களும் சுயநல நோக்கத்துடன் செயல்படுவதாக சிபிஎம் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிருந்தா காரத் தெரிவித்தார். அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் கோழிக்கோடு மாவட்டக் குழு  அலுவலகமான கேப்டன் லட்சுமி நினைவ கத்தை திறந்து வைத்து அவர் மேலும் பேசி யதாவது: சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த  வாளையார் வழக்கில் இந்த அணுகுமுறை  தெளிவாகிறது. எதிர்தரப்பில் உள்ளவர் களின், சாதியையோ மதத்தையோ பதவி யையோ பார்க்காமல், பாதிக்கப்பட்டவர் களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதில்,  இடது ஜனநாயக முன்னணி அரசு உறுதி யாகச் செயல்பட்டது. ஆனால் நீதிக்காக. அல்லாமல், சுயநல  அரசியல் நோக்கத்துடன். எதிர்க்கட்சி செயல்பட்டது. நீதிக்கான போராட்டத்தை கண்டு கொள்ளாமல் அரசியல் உள் நோக்  கத்துடன் ஊடகங்கள் செய்தியை வழங்  கின. பாலியல் வழக்கில் குற்றவாளி களுக்கு, உச்சநீதிமன்றத்தில் ஜாமீன் வழங்கும் நிகழ்வுகளில் பெண்களின் பாது காப்புக்கு தேவையான போராட்டங்களும் தலையீடுகளும் வலுவாக நடக்க வேண்டும். விவசாயப் பணிகளில் ஆணுக்கும் பெண்  ணுக்கும் சரிசமமான ஊதியம் கிடைப்பதை  உறுதிப்படுத்தும் பண்பு உருவாக வேண் டும் என பிருந்தா காரத் கூறினார்.
2025-01-16 01:56:06.663340
ஜனவரி 15, 2025
உணவுக்கான உரிமையும் பொது விநியோக திட்ட சவால்களும்
மாநிலம் - தமிழ்நாடு
நமது நிருபர்
https://theekkathir.in/News/states/tamil-nadu/right-to-food-and-public-distribution-program-challenges
தமிழ்
UTF-8
உணவுக்கான உரிமை பற்  றிய விவாதம் பல மாநிலங்  களில் இன்று முன்னுக்கு வருகிறது.ஜார்க்கண்ட், ஒரிசா,  பீகார் போன்ற மாநிலங்களில் பொது விநியோக முறையின்(PDS)  பட்டியலில் இருந்து ஆயிரக்கணக்  கான குடும்பங்கள் நீக்கப்பட்டுள் ளன என்பதை இந்த விவாதங்கள் சுட்டிக் காட்டுகின்றன. முசாஹர் சமூகத்தின் உதாரணம் கோவிட் 19 காலத்தில் ரேஷன் மூலம் விநியோகம் மிகவும் தேவைப்பட்டபோது பீகாரில் அத்தி யாவசியப் பொருட்கள் வழங்கலில்  கடும் நெருக்கடி ஏற்பட்டது. இப்போ தும் கூட ரேஷன் முறையில் வழங் கப்படும் பொருட்களை நம்பி தான்  அவர்கள் வாழ்கின்றனர்.முசாஹர்  போன்ற மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தினர் படும் அவதி குறிப்பி டத்தக்கது. சாதி,அரசியல் வன்மத் தால் வறுமையின் விளிம்பிற்கு அப்  பால் தள்ளப்பட்டு பொது விநியோ கத் திட்டத்துக்காக இவர்கள் நடத்  தும் போராட்டம் குறிப்பிடத்தக்கது.ரேஷன் அட்டை இருந்தும் பலன் இல்லைபாட்னாவில் இவர்களின் பல குடும்பங்கள் ரேஷன் அட்டையில் இருந்து நீக்கப்பட்டுள்ளன.ரேஷன் அட்டை இருந்தாலும் அனைத்து குடும்ப உறுப்பினர்களும் அதில் இடம்பெற முடிவதில்லை. நியாய  விலைக் கடைகளில் பயோமெட்  ரிக் சரிபார்ப்பு கட்டாயமாக்கப்பட்ட திலிருந்து மாதாந்திர ரேஷன் பெற  முடியாமல் பலர் அவதிப்படுகின்ற னர்.சம்பந்தப்பட்ட நபர்கள் புதிய  ரேஷன் அட்டையை பெற்றாலும் மீண்டும் அவர்கள் பெயர் நீக்கப்படு கிறது. ஸ்மார்ட் (சிட்டிஸ்) நகரங்கள்  என்ற அரசின் உயர்மட்ட சந்தைப்  படுத்தும் பகட்டு விளம்பரங்கள் அர சுக்கும் மக்களுக்கும் இடையே உள்ள உயிரோட்டமான தொடர்பை  துண்டித்து விடுவதை நம் கண் முன்னே பார்க்க முடிகிறது. பொது விநியோகத் திட்டத்தில்  ஏற்படும் சிக்கல் பதிவு மற்றும் விநி யோக முறை பற்றியது மட்டுமல்ல.  அதன் நாடி நரம்புகள் வழியாக ஊழலும் ஓடிக் கொண்டிருக்கிறது. வறுமைக் கோட்டுக்கு கீழே உள்ள  குடும்பங்களுக்கு ஐந்து கிலோ அரி சியைப் பெற உரிமை இருந்தாலும்  நான்கு கிலோ மட்டுமே வழங்கப்  படுகிறது. அதுவும் தரமான அரிசி  அல்ல. உஸ்மா என்ற தரம் குறைந்த ரகமே விநியோகிக்கப்படுகிறது. கோதுமையை கண்ணில் காட்டு வதே இல்லை.சட்டப்பூர்வ அடிப்படையற்ற ஆவணம்ஆவணங்களின் அடிப்படை யிலோ அல்லது ஆன்லைனிலோ ரேஷன் அட்டை பதிவு செய்யலாம்.விண்ணப்பங்களுடன் குடும்ப உறுப்பினர்களின் ஆதாரம் தரப்பட  வேண்டும் ஆன்லைனில் விண்ணப்  பிக்கும் பொழுது, ‘சாரி’ இருப்பிடம்  மற்றும் வருமானம் குறித்த சான்றி தழ்கள் தேவை. இரண்டு முறைகளி லும் இந்த சான்றிதழ்கள் அவசியமா னதாக கேட்கப்படுகிறது.  பீகாரில் ஆவணங்கள் கேட்கப்  படுவதில்லை. உ.பி, ஜார்க்கண் டில் வருமானச் சான்றுகளும், மத்  தியப்பிரதேசத்தில் வசிப்பிடச் சான்  றிதழும் தேவை. 2013 ஆம் ஆண்டின்  தேசிய உணவு பாதுகாப்புச் சட்டத்  திலோ (National Food Security  Act, 2013) அல்லது 2015 பொதுவிநி யோகத் திட்ட கட்டுப்பாட்டு ஆணை  விதிமுறையிலோ இத்தகைய ஆவ ணங்கள் தேவை என்பது இடம் பெற வில்லை.ஆன்லைனில் விண் ணப்பிக்கும் பொழுது ஒரு மேற்பார்  வைக்காக இவை தேவை என பீகா ரில் உணவு மற்றும் நுகர்வோர் பாது காப்புத் துறையின் அதிகாரி ஒருவர்  கூறுகிறார். டிஜிட்டல் மோகம், மின்னணு மயம் என்ற வெறித்தனமான வேகத்  தில் மக்கள் நலனும் நிர்வாக நெறி முறைகளும் காற்றில் பறக்க விடப்  படுகின்றன.தீவிரமாகும் சுரண்டல்அமைப்பு ரீதியிலான குறை பாடுகளை உணர்ந்த பிறகும் கூட  அரசாங்கங்கள் எவ்விதமான தீர்வையும் நோக்கி நகரவில்லை.  ஆனால் அதிகார துஷ்பிரயோகத் தில் மக்கள் நசுக்கப்படுவது தொடர்கிறது. அதிகார வர்க்கத்தின்  இந்த பெருமிதம் சந்தையில் சுரண்  டலை தீவிரப்படுத்தும் சூழலை உரு வாக்கியுள்ளது. ஆன்லைன் செயல்முறை குறித்தும் ஆவணங்கள் குறித்தும் எவ்வித விழிப்புணர்வுமற்ற முசா ஹர் சமூகத்தினர் சிறிய அளவிலா வது நன்மையைப் பெற முயல் கின்றனர்.ரேஷன் அட்டை பெற 3  ஆயிரம் ரூபாய் வசூல் செய்து அவர்  களை ஏமாற்றும் இடைத்தரகர் களும் பெருகிவருகின்றனர். ரேசன் அட்டையும் கிடைப்பதில்லை. இடைத்தரகர்கள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கையும் எடுப்பதில்லை. நவீன தாராளமாய காலத்தில் இது  மிக இயல்பானதாக மாறிவிட்டது.ரேஷன் அட்டைக்கு உத்தரவாதம் இல்லை!இப்படி எண்ணற்ற தில்லு முல்லுகளுக்கு நடுவே மக்கள் விண்ணப்பித்தால் ரேஷன் அட்டை  எப்படியும் அவர்களுக்கு கிடைக் கும் என்பதற்கு எந்த விதமான உத்  தரவாதமும் இல்லை. விண்ணப் பித்த 30 நாட்களுக்குள் ரேஷன் அட்டை வழங்கப்பட வேண்டும் என்று 2015 ஆம் ஆண்டின் பொது விநியோகத் திட்ட ஆணை குறிப்  பிடுகிறது.நான்கு முதல் 18 மாதங் கள் கடந்த பின்பும் கூட ரேஷன் அட்டை வழங்கப்படாததால் நிலு வையில் உள்ள வழக்குகள் நிறை யவே உண்டு. மக்கள் கழுத்தை நெரித்து! ஒரு மனிதனின் அன்றாட அத்தி யாவசியத் தேவைகளுக்காக மட்டு மல்ல, அதையும் கடந்து அவனு டைய வாழ்வாதாரத்திற்கு அடிப்ப டையானது பொது விநியோக முறை. இந்திய சிவில் உரிமை கழ கம் எதிர் இந்திய அரசு வழக்கில் உணவு என்பது அடிப்படை உரிமை யாக அங்கீகரிக்கப்பட்டு 24 ஆண்டு கள் கடந்துவிட்டன. ஆனாலும் அர சாங்கங்கள் தங்களின் அதிகார கயிற்றை கழுத்தைச் சுற்றி இறுக்கி  ஏழை மக்களை மூச்சு திணறடித்து வருகின்றன. கட்டுரையாளர்கள்: டிவைஸ் (DEVISE) அறக்கட்டளையின் கள ஆய்வாளர்கள். நன்றி: தி இந்து தமிழில்: கடலூர் சுகுமாரன்
2025-01-16 01:56:06.664018
ஜனவரி 15, 2025
தீக்கதிர் விரைவு செய்திகள்
மாநிலம் - தமிழ்நாடு
நமது நிருபர்
https://theekkathir.in/News/states/tamil-nadu/congestion-tax-is-a-deadly-scheme-of-the-bjp-coalition-government-to-control-traffic-congestion
தமிழ்
UTF-8
போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த நெரிசல் வரி கட்டண வசூல் பாஜக கூட்டணி அரசின் கொடிய திட்டம்மகாராஷ்டிரா தலைநகர் மும்பை யில் நாளுக்கு நாள் போக்கு வரத்து பிரச்சனை அதிகரித்து வரு கிறது. அதற்கு தீர்வு காணும் வகையில் நெரிசல் வரி மற்றும் வாகனங்கள் வாங்க  புது கட்டுப்பாடுகளை விதிக்க மாநில  அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. முறையற்ற திட்டமிடலால் கார்ப்ப ரேட் முதலாளிகளுக்கான நகரமாக உரு வாகியுள்ள மும்பையில் போக்குவரத்து நெரிசல் மிக அதிகமாக உள்ளது. இத னால் நடுத்தர மற்றும் தொழிலாளி வர்க்  கத்தைச் சேர்ந்தவர்களே அதிகமாக பாதிக் கப்பட்டு வரும் சூழலில் அவர்களிடமே நெரிசல் வரி வசூலிப்பது முட்டாள் தனமா னது என பாஜக அரசாங்கத்தின் மீது கடு மையான விமர்சனங்கள் எழுந்துள்ளன. மும்பை நகரில் வேலைக்காக குடி யேறும் மக்களின் எண்ணிக்கை மிக அதிக ளவில் உள்ளது. இதனால் நாளுக்கு நாள் வாகன நெரிசல் அதிகரிக்கிறது. மேலும் திட்டமிடப்பட்ட பார்க்கிங் வசதி கள் இல்லாததும் வாகனங்களை பலரும் சாலையிலேயே நிறுத்தி விடுகின்றனர்.  அதிகமக்கள் தொகைக்கு ஏற்றவாறு  வலுவான பொதுப் போக்குவரத்து வசதி கள் இல்லை என்பதும் தனி நபர் வாக னப்பயன்பாட்டுக்கு முக்கிய காரணமா கும். இது போக்குவரத்து பிரச்சனையை மேலும் தீவிரப்படுத்தி விடுகிறது. இந்நிலையில் நெரிசல் வரி விதிப்பது  எனவும் அதுமட்டுமின்றி புதிய வாக னங்களை வாங்குவோர், அதனை நிறுத்துவதற்கான பார்க்கிங் வசதி  உள்ளது என்பதற்கான ஆதாரத்தை  சமர்ப்பிக்க வேண்டும் என்பதை கட்டாய மாக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.  இந்த நெரிசல் வரி அல்லது கட்டணம்  வசூலிக்கும் திட்டத்திற்கு தற்போது எதிர்ப்புகள் எழுந்துள்ளன.  மும்பையில் கடந்த 2024 இல் 10 கிலோமீட்டர் தூரத்தை கடக்க சராசரி யாக 29.26 நிமிடங்கள் ஆனது. மும்பை  சாலையில் ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்கு  2,300 வாகனங்கள் என்ற அளவுக்கு வாகன நெரிசல் உள்ளது குறிப்பிடத் தக்கது.மோகன் பகவத் தேசத் துரோக குற்றம் செய்துள்ளார்: ராகுல்ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பக வத் தேசத் துரோகம் செய்து விட்டார் என எதிர்கட்சித்தலை வர் ராகுல் காந்தி கண்டனம் தெரிவித் துள்ளார்.  இந்தியா 1947 ஆண்டில் சுதந்திரம்  பெறவில்லை. அயோத்தி ராமர் கோயில்  திறக்கப்பட்ட நாளே இந்தியா சுதந்திரம் அடைந்த நாள் என ஆர்எஸ்எஸ் அமைப்  பின் தலைவர் மோகன் பகவத் பேசியுள்  ளார்.  மேலும் ராமர் கோயில் திறக்கப்பட்ட நாளையே உண்மையான சுதந்திர தின மாக கொண்டாட வேண்டும் என்றும் பக வத் மக்களிடையே மதவெறிப் பிரச்சா ரத்தை திணித்து இந்திய சுதந்திரப்  போராட்ட வரலாற்றையும் சுதந்திரத்திற்  காக இன்னுயிர் நீத்த தியாகிகளையும் அவமதித்துள்ளார். இந்நிலையில் மக்களவை எதிர்கட்சித்  தலைவரான ராகுல் காந்தி, மோகன் பக வத்தின் பேச்சு தேசத்துரோக குற்றம். இந்திய சுதந்திரத்தின் சின்னமான அரசி யலமைப்புச் சட்டத்தை மோகன் பகவத் அவமதித்துவிட்டார் எனவும் ராகுல் காந்தி  கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் நாட்டை ஆட்சி செய்பவர்களுக்கு தேசி யக்கொடி மீது மரியாதை இல்லை என்றும்  ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.அதானி நிறுவனத்துக்கு அபராதம்இந்தியாவில் அல்லது வெளிநாடு களில் எந்த தொழில் துவங்கினா லும் ஊழல், இயற்கை வளங்  களை சூறையாடுதல் என பல குற்றச் சம்பவங்களிலும் அதானி நிறுவனம் ஈடு பட்டு வருகின்றது. இந்நிலையில் கடந்த 2022 இல் 5ஜி  அலைக்கற்றை உரிமத்தை ஏலம் எடுத் தது. 2022 இல் இந்த அலைக்கற்றையை வாங்கிய நிறுவனங்களுக்கான குறைந்த  பட்ச வெளியீட்டு கடமைகளின்படி, 26  ஜிகாஹெர்ட்ஸ் அதிர்வெண் அலைவரி சையில் அலைக்கற்றைகளை வாங்கிய வர்கள், ஒரு வருடத்திற்குள் சேவைப் பகு தியில் வணிகச் சேவைகளைத் துவங்க வேண்டும். ஏலம் எடுத்து இரண்டு ஆண்டுகள் கடந்தும் இதுவரை அந்த சேவையை அதானியின் தொலைத் தொடர்பு நிறு வனம் துவங்கவில்லை. இதன்காரண மாக அதானியின் டேட்டா நெட்வொர்க்ஸ் நிறுவனம் மீது ஒன்றிய அரசின் தொலைத்  தொடர்புத்துறை புகார் அளித்துள்ளது.  முதல் 13 வாரங்களுக்கு வாரத்திற்கு  ரூ.1 லட்சமும், அடுத்த 13 வாரங்களுக்கு  வாரத்திற்கு ரூ.2 லட்சமும் அபராதம்  விதிக்கப்படும்.  கடந்த ஆண்டு முதல் அதானி நிறு வனத்தின் மீது 2 முறை அபராதம் விதிக்  கப்பட்டுள்ளது எனவும் கூறப்படுகின்றது. எனினும் 5 ஜி சேவையை துவங்கு வதில் ஏன் அதானி நிறுவனம் இவ்வளவு  தாமதம் செய்கின்றது என கேள்வி எழுப்பி  பலமுறை நோட்டீஸ் அனுப்பப்பட்டும் அதானி நிறுவனம் பதில் கூறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.ஜன.20 கூடுதல் பத்திரப்பதிவு செய்ய உத்தரவுசென்னை, ஜன.14- தமிழகத்தில் உள்ள 100 சார்பதிவாளர் அலுவல கங்களுக்கு ஜனவரி 18 ஆம் தேதி விடுமுறை அளிக்கப் பட்டுள்ளதால்,  ஜன 20 ஆம் தேதி கூடுதல் பத்திரப்பதிவுக் கான முன்பதிவு வில்லைகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பத்திரப்பதிவுத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், “18.01.2025 அன்று ஒருநாள் மட்டும் 100 சார்பதிவாளர் அலுவலங்களுக்கு செயல்டுவதிலிருந்து விலக்கு அளித்து விடுமுறையும், 20.01.2025 அன்று பொதுமக்கள் பயன்பெறும் வகையில் அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களிலும் கூடுதல் முன்பதிவு வில்லைகள் ஒதுக்கீடு செய்தும் அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்களின் கோரிக்கைகளை ஏற்று, 20.01.2025 அன்று ஒரு சார்பதிவாளர் உள்ள அலுவலகங்களுக்கு 100-க்கு பதிலாக 150 முன்பதிவு வில்லைகளும், இரண்டு சார்பதிவாளர்கள் உள்ள அலுவலகங்களுக்கு 200-க்கு பதிலாக 300 முன்பதிவு வில்லைகளும், அதிகளவில் ஆவணப்பதிவுகள் நடைபெறும் 100 அலுவலகங்களுக்கு 100- க்கு பதிலாக 150 சாதாரன முன்பதிவு வில்லைகளோடு ஏற்கனவே வழங்கப்படும் 12 தட்கல் முன்பதிவு வில்லைகளோடு கூடுதலாக 4 தட்கல் முன்பதிவு வில்லைகளும் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக வழங்கிட உத்தரவிடப்பட்டுள்ளது.” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.தமிழக மீனவர்கள் 6 பேர் விடுதலைஇராமேஸ்வரம்,ஜன.15-  தமிழக மீனவர்கள் 6 பேரை விடுதலை செய்தும், 2 பேருக்கு அபராதம் சிறை தண்டனை விதித்தும் இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இராமேஸ்வரம் அருகே மண்டபம் வடக்கு மீன்பிடி துறைமுகத்திலிருந்து கடலுக்கு சென்ற கார்த்திக் ராஜா, சகாய ஆண்ட்ரிஸ் ஆகியோருக்குச் சொந்தமான இரண்டு விசைப்படகுகளை நெடுந்தீவு அருகே இலங்கை கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்டது. படகுகளிலிருந்த 8 மீனவர்களை கைது செய்து,  யாழ்ப்பாணம் சிறையில்  அடைத்தனர்.  மீனவர்களின் காவல் புதன்கிழமையோடு நிறை வடைந்ததை தொடர்ந்து ஊர்காவல்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். வழக்கை விசாரித்த நீதிபதி நளினி சுபாஷ்கரன் 6 மீனவர்களை  விடுதலை செய்தும், விசைப்படகு ஓட்டுநர்களான 2 பேருக்கு தலா ஒன்பது மாதம் சிறை தண்டனையும் அபராதமும் விதித்து உத்தரவிட்டார். பின்னர் விடுதலை செய்யப்பட்ட 6 மீனவர்கள் யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணை தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.வாட்ஸ் ஆப் அழைப்பால் ரூ.11 லட்சம் பணம் திருட்டுதிருச்சிராப்பள்ளி, ஜன.15 - திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் கரூர் பைபாஸ் சாலையைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (43). இவரது செல்போனுக்கு கடந்தாண்டு பிப்ரவரி மாதம் வாட்ஸ் ஆப் மூலம் ஒரு அழைப்பு வந்தது. எதிர்முனையில் பேசியவர் முதலீடு செய்தால், பல மடங்கு லாபம் சம்பாதிக்க முடியும் என்று தொடர்ந்து ஆசைவார்த்தை கூறியுள்ளார்.  இதை நம்பிய கிருஷ்ணமூர்த்தி 3 மாதங்கள் வரை பல்வேறு தவணைகளில் ரூ.11 லட்சம் வரை மர்மநபர் கூறிய வங்கி கணக்குக்கு அனுப்பினார். ஒரு கட்டத்தில் முதலீட்டுக்கான வட்டியை கேட்டபோது செல்போன் ‘சுவிட்ச் ஆப்’  செய்யப்பட்டிருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த கிருஷ்ணமூர்த்தி, நடந்த சம்பவம் குறித்து மாநகர ‘சைபர் கிரைம்’ காவல்துறையிடம்  புகார் கொடுத்தார். புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.ஜன.21, 27 இல் யுஜிசி நெட் தேர்வுசென்னை,ஜன.15- யுஜிசி-நெட் தேர்வு தேதிகளை மாற்றக்கோரி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மு. க. ஸ்டாலின் உட்பட பல அரசியல் தலைவர்கள் ஒன்றிய அரசுக்கு கடிதம் எழுதினர்.  இந்நிலையில் நெட் தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக தேசிய தேர்வு முகமை அறிவித்தது. ஜனவரி 21 மற்றும் 27 ஆகிய தேதிகளில் யுஜிசி நெட் தேர்வுகள் நடை பெறும் என்று அறிவித்துள்ளது . மற்ற விவரங்களை அதிகாரப்பூர்வ இணையதளத்தில் (ugcnet.nta.ac.in.) தெரிந்துகொள்ளலாம் என தெரிவித்துள்ளது.
2025-01-16 01:56:06.664672
ஜனவரி 15, 2025
பண்டிகைக் காலத்திலும் விவசாயத் தொழிலாளர்களை பரிதவிக்கவிட்ட மோடி அரசு!
மாநிலம் - தமிழ்நாடு
நமது நிருபர்
https://theekkathir.in/News/states/tamil-nadu/salary-has-not-been-paid-for-3-months-in-the-100-day-program
தமிழ்
UTF-8
சென்னை,ஜன.15-  மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி அளிப்புத் திட்டத்தில் வேலை  செய்த தொழிலாளர்களுக்கு சம்பளப் பாக்கி  வழங்காமல் மோடி அரசு  காலம் கடத்தி வரு வதற்கு அகில இந்திய விவசாயத் தொழி லாளர்கள் சங்கம் கண்டனம் தெரி வித்துள்ளது. சங்கத்தின் மாநில நிர்வாகிகள் கூட்டம் இணைய வழியில் திங்களன்று (12.01.2025) மாநிலத் தலைவர்  எம்.சின்னதுரை எம்.எல்.ஏ தலைமையில் நடைபெற்றது. அகில இந்தியத் துணைத் தலைவர் ஏ.லாசர் முன்னாள் எம்எல்ஏ,  மாநிலப் பொதுச் செயலாளர் வீ.அமிர்தலிங்கம்,  பொருளாளர் அ.பழநிசாமி உள்ளிட்ட மாநில நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் நிறை வேற்றப்பட்ட தீர்மானம் வருமாறு: மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை  உறுதி அளிப்புத்திட்டத்திற்கான நிதி ஒதுக்கீட்டை ஒன்றிய பாஜக அரசு தொடர்ச்சி யாக வெட்டிச் சுருக்கி வருகிறது. நிதி ஒதுக்கீட்டிற்கேற்ப பயனாளிகளின் எண்ணிக்கையையும் 25 கோடியில் இருந்து  சரி பாதியாக நாடுமுழுவதும் ஏறக்குறைய 13 கோடியாகக் குறைத்து விட்டது. விவ சாய நெருக்கடியால் ஏற்பட்டுள்ள கடும்  வேலையின்மையால் கிராமப்புற மக்கள் வேலை, வருமானத்தை இழந்து தவிக்கும் நிலை உருவாகி யுள்ளது.  ஒன்றிய பாஜக அரசு ஊரக  வேலைத் திட்டத்தை செயல்படுத்து வதிலும் பல்வேறு  புதிய  நிபந்தனை களை மாநிலங்களுக்கு விதித்து திட்டத்தை  செயல்படுத்துவதில் முட்டுக்கட்டை போடுகிறது. இவ்வளவு நெருக்கடிகளுக்கு மத்தியில்தான்  ஊரக வேலைத் திட்டம் அற்ப சொற்பமாக செயல்படுத்தப்படுகிறது.நாகை மாலி எம்எல்ஏ வேண்டுகோள்தமிழ்நாட்டில் கடந்த நவம்பர் மாதத்தில் இருந்து வேலை செய்த திட்டப் பய னாளிகளுக்கு மூன்று மாதங்களைக் கடந்தும் ஊதிய பாக்கிகள் அவர்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்காமல் ஒன்றிய பாஜக அரசு காலம் தாழ்த்தி வருகிறது. பொங்கல் பண்டிகை காலத்திலாவது, ஊதியம் வங்கிக் கணக்கில் வரவாகும் என்று  காத்திருந்த கிராமப்புற ஏழை மக்களுக்கு ஒன்றிய பாஜக அரசு பெருத்த ஏமாற்றத்தை அளித்துள்ளது.பாஜக அரசின் இந்த நட வடிக்கையை அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கம் வன்மையாகக் கண்டிக்கிறது.  இதுதொடர்பாக தமிழ்நாடு சட்டமன்றத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர் நாகை மாலி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்    கவனத்திற்கு தெரியப்படுத்தினார்.  முதலமைச்சர், பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதி,  ஊரக வேலைத்திட்டப் பயனாளி களின் ஊதியப் பாக்கியை, உடனடியாக விடுவிக்க ஊரக வளர்ச்சித் துறைக்கு அறி வுறுத்துமாறு வலியுறுத்தியுள்ளார். முத லமைச்சரின் இந்த விரைவான  தலையீடு  வரவேற்கத்தக்கதாகும். எனவே ஒன்றிய அரசு இதற்கு மேலும் காலம் தாழ்த்தாமல்  தமிழ்நாட்டின் ஊதிய நிலுவை 1056 கோடி ரூபாயை உடனடியாக திட்டத்தின் பயனாளிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைத்திட வேண்டும். தமிழ்நாடு முழுவதும் கிராம சபைக்  கூட்டங்களில் தேவையின் அடிப்படை யில், உருவாக்கப்பட்ட மனித சக்தி நாட் களுக்கு ஏற்ப தமிழ்நாடு அரசால் உரு வாக்கப்பட்டுள்ள வேலைத் தொகுப்புக்கு நிபந்தனையற்ற ஒப்புதலையும் அளித்து முழுமையாக வேலை ஊதியத்தை வழங்கிட வேண்டும்.  கடந்த மூன்று மாதங்களாக பருவமழை காலத்தில் வேலை இழந்துள்ள விவசாயத் தொழிலாளர்களுக்கு தொடர்ச்சியாக ஊரக வேலை திட்டத்தில் வேலை, முழுமை யான ஊதியம்  வழங்கிட ஒன்றிய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.ஜனவரி 30 ஆர்ப்பாட்டம்ஊதிய பாக்கியை உடனடியாக வழங்கிட வேண்டும். ஊராட்சிகளிலும் வேலை தொடங்கி தொடர்ச்சியாக வேலை வழங்கிட வேண்டும். வேலை நாட்களை 200 நாட்களாகவும் தினக்குலியை 600  ரூபாயாக உயர்த்திட வேண்டும். ஒன்றிய  அரசின் 2025-2026 ஆம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கையில் திட்டத்திற்கு ரூ.4 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு செய்திட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி, தேசத்தந்தை மகாத்மா காந்தி நினைவு நாளான ஜனவரி 30 அன்று ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில், கிராமப்புற மக்களை வலுவாகத் திரட்டி போராட்டம் நடத்திட  என்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
2025-01-16 01:56:06.665286
ஜனவரி 15, 2025
கிராமியக் கலைஞர்களுக்கு ஊதிய உயர்வு
மாநிலம் - தமிழ்நாடு
நமது நிருபர்
https://theekkathir.in/News/states/tamil-nadu/pay-hike-for-village-artistes
தமிழ்
UTF-8
சென்னை,ஜன.15-  ‘சென்னை சங்கமம் - நம்ம ஊரு  திருவிழா’ கிராமியக் கலைஞர் களுக்கு ஒரு நாள் ஊதியம் ரூ.5 ஆயிர மாக உயர்த்தி முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.  இது குறித்து தமிழக அரசு வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பு:  தமிழ்ப்பண்பாட்டை வளர்க்கும் ‘சென்னை சங்கமம் - நம்ம ஊரு திருவிழா’ நிகழ்ச்சி கடந்த மூன்று ஆண்டுகளாக வெற்றிகரமாக நடந்து முடிந்ததையடுத்து, இந்தாண்டிற்கான சென்னை சங்கமம் - நம்ம ஊரு திருவிழா நிகழ்ச்சியினை ஜனவரி 13 ஆம் தேதி முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.  சென்னையில் உள்ள 18 இடங் களில் நான்கு நாள்கள் நடைபெறும் இந்நிகழ்ச்சி பொதுமக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வரு கிறது.  சென்னை சங்கமம் - நம்ம ஊரு திருவிழா நிகழ்ச்சியில் தற்போது 1500 கிராமியக்கலைஞர்கள் பங்கேற்றுள்ளனர். இவர்கள் 75 கலைக் குழுக்களாக பிரிந்து 50 வெவ்வேறு கலை வடிவங்களை நிகழ்த்தி வருகின்றனர்.  சென்னை சங்கமம் - நம்ம ஊரு திருவிழாவில் பங்குபெறும் கிராமியக் கலைஞர்களுக்கு தங்கும் இடம், உணவு, 2 உடைகள், போக்குவரத்து வசதிகள் உட்பட அனைத்தும் தமிழ்நாடு அரசால் இலவசமாக வழங்கப்பட்டுள்ளது.  இது தவிர அவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் ஒரு நாள் ஊதியம் ரூ.5000 ஆக உயர்த்தி வழங்க முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆணையிட்டுள்ளார்.
2025-01-16 01:56:06.665903
ஜனவரி 15, 2025
வள்ளுவனைப் படி…
மாநிலம் - தமிழ்நாடு
நமது நிருபர்
https://theekkathir.in/News/states/tamil-nadu/a-person-who-studied-valluva-will-not-tie-saffron-to-him
தமிழ்
UTF-8
வள்ளுவனைப் படி…வள்ளுவனைப் படித்தவர் அவருக்கு காவி கட்டமாட்டார். அவருக்கு காவி கட்டுகிறவர்      மநுவை மட்டுமே படித்த மதவெறியரே!!நீரின்று அமையாது உலகு இயற்கையைப் படி! அறன்எனப் பட்டதே இல்வாழ்க்கை உணர்ந்து படி!வாய்மை எனப்படுவது யாதென நீயும் படி கற்றனைத்து ஊறும் அறிவு தொடர்ந்து படி!குணம்நாடி குற்றமும்நாடி மிகைநாடி நீ படி! அடுத்தது காட்டும் பளிங்கென நெஞ்சைப் படி!இளைதாக முள்மரம் கொய்க என அறிந்து படி! எண்ணியாங்கு எய்த திண்ணியராகப் படி!அழுதகண்ணீரின் ஆற்றலை அறிந்து படி! காலம் கருதி இடத்தாற் வினையாற்றப் படி!சொல்லுக சொல்லைப் பயனுடைய படி! நாவினால் சுட்டவடு ஆகாதபடி!வினைத் திட்பம் என்பது மனத்திட்பம் என்றபடி எண்ணித் துணிக கருமம் இழுக்கு அண்டாதபடி!அன்பு அறிவு தேற்றம் அவாஇன்மை கொண்டபடி! முகம்நக நட்பன்று அகம்நக நட்பைப் படி!இனிய உளவாக இன்னாத கூறாதபடி! ஊடலில் தோற்றவர் வென்றார் என்றபடி!வள்ளுவனைப் படி! திருவள்ளுவனைப் படி! பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்றபடி!-சு.பொ.அகத்தியலிங்கம்
2025-01-16 01:56:06.666536
ஜனவரி 15, 2025
அதிமுக முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கத்தின் ரூ.100 கோடி சொத்துகள் முடக்கம் : அமலாக்கத்துறை நடவடிக்கை
மாநிலம் - தமிழ்நாடு
நமது நிருபர்
https://theekkathir.in/News/states/tamil-nadu/100-crore-assets-freeze-enforcement-action
தமிழ்
UTF-8
சென்னை,ஜன.15- அதிமுக முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கத்தின் ரூ.100.92 கோடி மதிப்புள்ள அசையா சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கம் செய்தது.  சட்டவிரோத பணபரிமாற்ற வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறையினர் ஏற்கனவே வழக்கு பதிவு செய்து முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் மற்றும் அவர் தொடர்புடைய இடங்களில் கடந்த ஆண்டு சோதனை மேற்கொண்டனர்.இதில் பல முக்கிய ஆவணங்களை பறிமுதல் செய்தனர். அடுக்குமாடி குடியிருப்பு வழங்கிய விவகாரத்தில் தனியார் நிறுவனத்திடம் இருந்து 28 கோடி ரூபாய் லஞ்சம் பெற்றது தொடர்பாக முன்னாள் அதிமுக அமைச்சர் வைத்திலிங்கம் மற்றும் அவரது மகன்கள் உள்ளிட்ட 11 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை கடந்த அக்டோபர் மாதம் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டது. இந்த விவகாரம் தொடர்பாக அமலாக்கத்துறை அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்து முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் தொடர்பான இடங்களில் சோதனை நடத்தி பல முக்கிய ஆவணங்களை கைப்பற்றியிருந்த நிலையில் தற்போது இந்த நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டுள்ளது.
2025-01-16 01:56:06.667160
ஜனவரி 15, 2025
தீக்கதிர் முக்கிய செய்திகள்
மாநிலம் - தமிழ்நாடு
நமது நிருபர்
https://theekkathir.in/News/states/tamil-nadu/inflation-eased-slightly-in-december-for-consumers
தமிழ்
UTF-8
டிசம்பர் மாதம் பணவீக்கம் சற்று குறைந்திருப்பது நுகர்வோருக்கும் பொருளாதாரத்திற்கும் கொஞ்சம் கூட ஆறுதலை கொடுக்காது. டாலருக்கு எதிரான ரூபாய்  மதிப்புக் குறைவதால் இறக்குமதி விலைகள் கடுமையாக உயரும்.மோகன் பகவத் அடிக்கடி கேலிக்குரிய அறிக்கைகளை வெளியிட்டு வருகிறார். அவரது சமீபத்திய அறிக்கை  முற்றிலும் தேச விரோதமானது. மகாத்மா காந்திக்கும், நமக்கு சுதந்திரம் பெற்றுத் தந்த தலைமுறையினருக்கும் ஏற்பட்ட அவமானம் மட்டுமல்ல, ஜனவரி 26, 1950 அன்று நடைமுறைக்கு வந்த அரசியலமைப்புச் சட்டத்தின் மீதான மற்றொரு தாக்குதல்.நிற்காத ரூபாய் வீழ்ச்சி நமது ராணுவப் படைகளுக்கும் அவர்களின் தயார்நிலைக்கும் என்ன செய்யும் என்பதை கற்பனை செய்து பாருங்கள். உள்நாட்டில் தயாரித்ததாக கூறப்படும் பொருட்கள் கூட அதிகளவு இறக்குமதியைச் சார்ந்து தான் உள்ளது.உ.பியில் கும்பலால் சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டு பாலியல் வணிகத்தில் தள்ளப்பட்ட சம்பவம் பெண்களின் பாதுகாப்பு கோரிக்கைகளை முதல்வர் ஆதித்யநாத்தின் அரசு முற்றிலும் மறுத்துள்ளதை காட்டுகிறது. இது போன்ற குற்றங்கள் அவரது சொந்த மாவட்டத்தில் நடப்பது முதல்வரின் தோல்வியல்லவா?தலைநகர் தில்லியில் புதன்கிழமையன்று அதி காலை அதிக பனியின் காரணமாக ஏற்கனவே  இருந்த காற்றுமாசுபடு மேலும் மோசமாக மாறியது. காற்றின் தரம் 344 ஆக பதிவானதாக ஒன்றிய மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அலுவலகம்  தெரிவித்துள்ளது. செவ்வாய்கிழமையன்று இந்த அளவு   252 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.
2025-01-16 01:56:06.667788
ஜனவரி 16, 2025
பெண்களும் உழைப்புச் சுரண்டலும்: ஓர் ஆய்வு - எஸ். பாலா
கட்டுரை
நமது நிருபர்
https://theekkathir.in/News/articles/world/women-and-labor-exploitation-is-a-study
தமிழ்
UTF-8
வேலைவாய்ப்பு குறித்த முழுமையான புள்ளி விவரங்களை ஒன்றிய அரசு முறையாக வெளியிடுவதில்லை. கடுமையான நிர்பந்தங்களுக்குப் பிறகு சமீபத்திய ஆண்டு NSSO- வின் காலமுறை தொழிலாளர் ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது. இதில் உள்ள புள்ளி விவரங்கள், பெண்கள் நிலைமை மற்றும் தொழிலாளர் சந்தை குறித்து மிகுந்த எச்சரிக்கையுடன் பரிசீலிக்க வேண்டியுள்ளது.வேலைவாய்ப்பின் போக்குகடந்த 12 ஆண்டுகளாக வேலைவாய்ப்பு சரிவு அல்லது தேக்க நிலையில் இருந்து வந்துள்ளது. தொழிலாளர் படையில் பெண்களின் எண்ணிக்கை 1990 முதல் 2017-18 வரை தொடர்ந்து குறைந்து வந்தது.  2023-24 ஆம் ஆண்டு அறிக்கையில் பெண்களுக்கான வேலைவாய்ப்பு உயர்ந்துள்ளது. எனினும், வரு மானம், கூலி, சம்பளம் ஆகியவை உயரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 2017-18 ஆம் ஆண்டில் ஆண்களின் வேலைவாய்ப்பு சந்தையில் பங்கேற்பு விகிதம் 71.2 சதவீதமாக இருந்தது, அது 2023-24இல்  76.1 சதவீதமாக உயர்ந்துள்ளது. இதே காலகட்டத்தில் பெண்களின் பங்கேற்பு 22 சதவீதத்திலிருந்து 40.3 சதவீதமாக உயர்ந்துள்ளது. கடந்த இரண்டு ஆண்டு களாக பெண்களை வேலைவாய்ப்பு சந்தைக்கு கூடுதலாக கொண்டு வருவதற்கான முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.வேலையின் தன்மைபெருநிறுவனங்கள் துவங்கி கிக் வேலைவாய்ப்பு வரை பெண்கள் அணிதிரட்டப்படாத உழைப்பாளர்களாக மாற்றப்பட்டுள்ளனர். வேலை வாய்ப்பு சந்தையில் உள்ள தொழிலாளர்களுக்கு உற்பத்தி சார்ந்த வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட வில்லை. இத்துடன் வேலைவாய்ப்பு சந்தைக்கு தேடி  வரக்கூடிய கோடிக்கணக்கான இளம் தலைமுறை யினருக்கு போதுமான வேலை வாய்ப்புகளை உரு வாக்குவதற்கான எவ்விதமான திட்டமும் அரசிடம் இல்லை.ஊதியம் இல்லாத உதவியாளர்கள்குடும்ப நிறுவனத்தில் செய்யக்கூடிய வீட்டு வேலை, பராமரிப்பு, சமையல், தண்ணீர், கால்நடை பராமரிப்பு உள்ளிட்டவை வருமானம் தராத வேலை களாகும். இவை மறு உற்பத்திக்கான அடிப்படையாக உள்ளன. உலக தொழிலாளர் ஸ்தாபனத்தின் 92-93 பிரிவுகளில் இவை தெளிவுபடுத்தப்பட்டுள்ளன. ஊதியம் பெறாத உதவியாக செய்யப்படும் வேலைகள் வேலைவாய்ப்பு தொழிலாளர் சந்தையில் வகைப்படுத்த இயலாது. ஆனால் இந்த கணக்கெடுப்பில் 6 சதவீதம் பேர் ஊதியம் இல்லாத உதவியாளர்களாக பணியாற்றி வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இது இதுவரை பின்பற்றி வந்த அடிப்படைக் கொள்கைக்கு முரணானதாகும்.வருமான ஏற்றத்தாழ்வுகள்கார்ப்பரேட்டுகளின் லாப விகிதம் காரணமாக கடந்த ஆண்டு முதல் 10 பணக்காரர்களின் சொத்து மதிப்பு 35 லட்சம் கோடி உயர்ந்துள்ளது. ஆனால் கிராமப்புறங்களில் தொழிலாளர்களின் சம்பளம், கூலி, வருமானம் ஆகியவற்றில் விலைவாசி உயர்வுக்கு தகுந்தபடி கூட உயர்வு ஏற்படவில்லை. 2017-18 ஆம் ஆண்டில் ஆண் தொழிலாளர்களின் மாதாந்திர சம்பளம் 13,931 ரூபாய் என்பது 2023-24 ஆம் ஆண்டில் 18,029 ரூபாயாக 4.4 சதவீதம் மட்டுமே உயர்ந்துள்ளது. இதே காலத்தில் பெண்களின் மாதாந்திர வருமானம் 12,109 ரூபாயிலிருந்து 11,914 ரூபாயாக 0.3 சதவீதம் குறைந்துள்ளது.நகர்ப்புறங்களில் மாத சம்பளம் வருமான விகிதம் என்பது ஆண்களுக்கு 0.5 சதவீதம் உயர்வாகவும், பெண்களுக்கு மைனஸ் 0.3 சதவீதமாகவும் உள்ளது. முறைசாரா தொழிலாளர்களுக்கான தினசரி ஊதி யம் ஆண்களுக்கு 445 ரூபாயிலிருந்து 529 ரூபாயாக உயர்ந்துள்ள போதிலும், பெண்களுக்கு 264 ரூபாயி லிருந்து 354 ரூபாயாகவே உள்ளது. சுயதொழில் புரிவோரின் வருமானத்தில் ஆண்களுக்கு 0.6 சதவீதம் மட்டுமே உயர்ந்துள்ளது, பெண்களுக்கான வருமானத்தில் 2.1 சதவீதம் குறைந்துள்ளது.கிக் தொழிலாளர்களாக...தற்போது அறிவியல் தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால் வேலைவாய்ப்பு சந்தையில் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. ஐ எல்ஓ (ILO)-வின்  2023 அறிக்கையின்படி கிக் பொருளாதாரம் ஆண்டுக்கு 17 சதவீதம் உயர்வடைகிறது. உலகளாவிய கிக் பணியாளர்களில் பெண்கள் 35 சதவீதமாக உள்ளனர்.  இல்லத்தரசிகள் மற்றும் ஒற்றை தாய்மார்கள் கிடைக்கும் வேலை வாய்ப்பின் மூலம் பணம் ஈட்டுவதற்கு சில வாய்ப்புகள் உருவாகியுள்ளன. இந்தியாவின் தேசிய திறன்வளர்ச்சிக் கழகத்தில் (NSDC) பெண்கள் அதிகமாக பதிவு செய்துள்ளனர். கிக் தொடர்பான திறன் மேம்பாட்டுத் திட்டங்கள் 50 சதவீதம் அதிகரித்துள்ளன.பாஜகவின் இயல்புபெண்கள் மீதான வன்முறையும் தாக்குதலும் அதிகரித்துள்ள சூழலில் சுரண்டலும் பாலின இடைவெளியும் நாளுக்கு நாள் பெருகி வருகிறது. பெண்கள் வேலைவாய்ப்புக்கான குறிப்பிடத்தக்க முயற்சி எதையும் மோடி அரசு 11 ஆண்டு கால கட்டத்தில் மேற்கொள்ளவில்லை. ஏனெனில், ஆர் எஸ் எஸ் வழிகாட்டுதலில் செயல்படும் பாஜக அரசின் அடிப்படையே பெண்களை இரண்டாம் பட்சமாக கருதுவதாகும். இதனால் நாடு முழுவதும் உள்ள பெண்கள் உடல் ரீதியாக வன்முறையும், உழைப்பு ரீதியாக சுரண்டலையும் சந்தித்து வருகின்றனர்.கட்டுரையாளர் : சிபிஐ(எம்) மாநிலக் குழு உறுப்பினர்
2025-01-17 01:55:36.397636
ஜனவரி 16, 2025
304 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய மகளிரணி அபார வெற்றி!
விளையாட்டு
நமது நிருபர்
https://theekkathir.in/News/games/cricket/indian-women's-team-wins-by-304-runs
தமிழ்
UTF-8
அயர்லாந்துக்கு எதிரான 3ஆவது ஒருநாள் போட்டியில் 304 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய மகளிரணி அபார வெற்றி பெற்து.இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அயர்லாந்து அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடியது. இதில், முதல் இரண்டு போட்டிகளில் இந்திய அணி வெற்றிபெற்று 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது. இதனைத்தொடர்ந்து, ஜன. 15 ஆம் தேதியன்று குஜராத்தின் ராஜ்கோட்டில் மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நடைபெற்றது. இதில், முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு இந்திய அணி 435 ரன்கள் குவித்தது.இதனையடுத்து, 436 ரன்கள் என்ற கடின இலக்குடன் களமிறங்கிய அயர்லாந்து 31.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 131 ரன்கள் மட்டுமே எடுத்து படுதோல்வியடைந்தது. இதன்மூலம், 304 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய மகளிர் அணி அபார வெற்றி பெற்று சாதனை படைத்தது.
2025-01-17 01:55:38.176312
ஜனவரி 16, 2025
விண்வெளியில் இந்தியாவின் புதிய மைல்கல்
தலையங்கம்
நமது நிருபர்
https://theekkathir.in/News/headlines/india/indian-space-research-organization-(isro)-once-again
தமிழ்
UTF-8
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) மீண்டும் ஒருமுறை உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது. இரு செயற்கைக் கோள்களை விண்வெளியில் மிக நேர்த்தியாக ஒன்றையொன்று நெருங்கச் செய்து, புதிய சாதனை படைத்துள்ளது. ‘SpADeX’ என்ற இந்த முயற்சி, இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சித் துறையில் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கியுள்ளது.முதல் முயற்சியில் எதிர்பாராத சிக்கல்கள் ஏற்பட்டபோதிலும், இஸ்ரோவின் விஞ்ஞானிகள் தளராத மனஉறுதியுடன் அதனை சமாளித்து வெற்றி கண்டுள்ளனர். SDXO1 (Chaser) மற்றும்  SDXO2 (Target) என்ற இரு செயற்கைக்கோள் களை மூன்று மீட்டர் தொலைவுக்குள் கொண்டு  வந்து, அவற்றின் இயக்கத்தை துல்லியமாகக் கட்டுப்படுத்தியது இந்திய விண்வெளி விஞ் ஞானிகளின் திறமைக்கு சான்றாக உள்ளது.இந்த சாதனையின் முக்கியத்துவம் பல பரிமாணங்களைக் கொண்டது: விண்வெளியில் செயற்கைக்கோள்களை இணைக்கும் தொழில்நுட்பத்தில் இந்தியா தன் திறனை நிரூபித்துள்ளது;  எதிர்காலத்தில் விண்வெளிக் கழிவுகளை அகற்றுவதற்கான தொழில்நுட்ப அடித்தளம் உருவாக்கப்பட்டுள்ளது; விண்வெளி ஆராய்ச்சியில் பொருளாதார சிக்கனத்துடன் புதுமையான தீர்வுகளை உருவாக்கும் இந்தியா வின் திறன் மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.சத்தீஷ் தவான் விண்வெளி மையத்தி லிருந்து பிஎஸ்எல்வி-சி60 (PSLV C60) ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட்ட இந்த செயற்கைக்கோள்கள், நமது விண்வெளி விஞ்ஞானிகளின் கடின உழைப்பையும், அர்ப்பணிப்பையும் பறைசாற்றுகின்றன. முதல்  முயற்சியில் ஏற்பட்ட தடையை மீறி, இரண்டாவது முயற்சியில் வெற்றி பெற்றிருப்பது, இந்திய விஞ்ஞானிகளின் விடாமுயற்சிக்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறது.இந்த வெற்றி வெறும் தொழில்நுட்ப சாதனை மட்டுமல்ல; இது இளம் விஞ்ஞானிகளுக்கு ஊக்கமளிக்கும் முன்னுதாரணமாகவும், நமது  நாட்டின் அறிவியல் முன்னேற்றத்தின் அடை யாளமாகவும் திகழ்கிறது. தொடர்ந்து புதிய சவால்களை ஏற்று, அவற்றை வெற்றிகரமாக எதிர்கொள்ளும் இஸ்ரோவின் பயணம், இந்தியா வின் விண்வெளி ஆராய்ச்சித் துறையின் வளர்ச்சிக்கு உறுதியான அடித்தளமாக அமைந்துள்ளது. இந்த சாதனைக்குப் பின்னால் உழைத்த ஒவ்வொரு விஞ்ஞானி, தொழில்நுட்ப வல்லுநர், ஊழியர் ஆகிய அனைவரும் நம் நாட்டின் பெருமைக்குரிய சொத்துக்கள். அவர் களின் அயராத உழைப்பும், அர்ப்பணிப்பும் நம் நாட்டின் விண்வெளி ஆராய்ச்சித் துறையை உலக அரங்கில் உயர்ந்த இடத்திற்கு கொண்டு சென்றுள்ளது.இந்த வெற்றி, வரும் காலங்களில் மேலும் பல சாதனைகளை நோக்கி இஸ்ரோ பயணிக்க வழிவகுக்கும் என்பதில் ஐயமில்லை. விண் வெளி ஆராய்ச்சியில் இந்தியாவின் தடம் மேலும்  பதியப்பட, இது ஒரு புதிய தொடக்கமாக அமையும்.
2025-01-17 01:55:38.337448