audio
audioduration (s)
30.4
65.8
Name
stringlengths
16
16
Label
stringclasses
3 values
text
stringlengths
490
1.29k
TAM_MSA_51_part1
Positive
இந்த படத்துல ரொம்பவே ஒரு முக்கியமான கேரக்டர் . அது அவர் மிகச் சரியா பண்ணியிருக்கிறாரு. அவரோட நடிப்பில் எந்த குறையுமே இல்லை . அடுத்து, ஹீரோயினான நிமிஷா சஜயன். இவங்களும் இவங்களுக்கு கொடுத்த ரோலை கரெக்டா பண்ணியிருக்கிறங்க . குறிப்பா சொல்லணும்னா, இவர்களுடைய எக்ஸ்பிரஷன் எல்லாம், எல்லாமே ரியலாகவும் இருந்துடுச்சு, ஆன்ட் க்யூட்டாகவும் இருந்துச்சு . ஒரு சின்ன சீன் சொல்றேன். போலீஸ் ஸ்டேஷன்ல ஃபஹத் ஃபாசிலை அடிப்பாங்க. அடிச்சதும் ரொம்ப பாதிப்பு அவங்களுக்கு ஏற்படக் கூடாது அப்படின்னு, வாம் அப் மாதிரி ஒரு ஜம்ப் பண்ண சொல்லுவாங்க . அப்ப ஹீரோயின் அவங்கள முறைச்சு பார்த்துட்டு இருப்பாங்க. எல்லாருமே அவங்கவங்க வேலைய பார்த்துட்டு இருப்பார். அந்த ஹீரோயின் மட்டும் ஒரு நிமிஷத்துக்கு அவரை முறைச்சு பார்ப்பாங்க . அங்க அவங்களுடைய அந்த கண்ணோட எக்ஸ்பிரஷன் இருக்கு, இல்லையா ?அது பயங்கரமா இருந்துச்சு . உண்மையா அந்த. இடங்களெல்லாம் ரொம்பவே ரசித்தேன் . சஜீவ் பள்ளுர் அப்படிங்கிறவங்க
TAM_MSA_51_part2
Positive
ஸ்கிரீன்பிளே பண்ணியிருக்கிறாரு. இந்த கதையை நான் முன்னாடியே சொன்ன மாதிரி ரொம்ப சிம்பிளான ஒரு ஒன்லைனெ கொண்ட கதை . இந்த கதைக்கு நார்மலான ஒரு ஸ்கிரீன்பிளே வைத்திருந்தால் கண்டிப்பாக போர் அடித்திருக்கும் . பட், இதுல அவங்க வச்சிருக்கிற ஸ்கிரீன்பிளே, உண்மையாகவே ரசிக்கும்படி தான் இருந்துச்சு . இவங்க ரெண்டு பேரும் லவ் பண்ணிட்டு இருக்காங்க அப்படிங்கறது முன்னாடியே தெரியும், பட், அவங்களுக்கு கல்யாணம் ஆயிடுச்சு அப்படிங்கறத வந்து, போலீஸ் ஸ்டேஷன்ல போலீஸ் காரன்கிட்ட சொல்லும் போதுதான் நமக்கு தெரியும். அதுக்கு அப்புறம் தான் அந்த போர்ஷன் எல்லாம் காட்டுவாங்க . சோ, ஸ்கிரீன்பிளே பொறுத்தவரைக்கும் படம் பக்கா . ஓவரோலா சொல்லணும்னா ரொம்ப லைட் ஹார்டட் ஆன பிலிம். அதே சமயத்துல, நீங்க ரொம்ப ரசிக்கக் கூடிய ஒரு பிலிம். சோ, தயவு செய்து இந்த படத்தை யாரும் மிஸ் பண்ணிடாதிங்க . இந்த படத்துக்கு என்னுடைய ரேட்டிங் என்ன அப்படின்னு கேட்டீங்கன்னா 4.1 அவுட் ஆஃப் 5.
TAM_MSA_52_part1
Positive
ரொம்ப அழுத்தமா , ரொம்ப ஹார்ட் ஹிட்டிங்கா, உண்மையாகவே நடக்கிற விஷயங்கள், அதாவது வெளிநாட்டுக்கு வந்து வேலைக்கு என்ரு போறாங்க . பட், நமமளே நிறைய கேள்விப்பட்டு இருக்கோம் எப்படி வந்து அவங்க அங்க போய் ஏமாற்றப்படராங்க நிறைய பேர் அப்படின்னு . சோ, அந்த ஒரு விஷயம் வந்து, ஆங்கிளை வந்து டச் பண்ணி, ரொம்ப அழுத்தமா, அது வந்து போய் சேர வேண்டிய விதத்திலே சேர்த்திருக்காங்க . படம் பார்க்கிற சில பேருக்கு, லாஜிக் இடிக்கலாம் , அது எப்படி சாத்தியம் அந்த கேள்வி வரலாம் . அதுதாண்டி பார்த்தீங்கன்னா, இந்த படம் ஒரு வெர்சுவல் படம் அப்படிங்கிறது கேள்விப்பட்டதனாலெ, நிறைய சேட் கான்வர்சேஷன் வந்து நமக்கு காண்பிக்கிறார்கள் . இரண்டு பேர் சாட் பண்றது வந்து அப்படியே ரெக்கோடு பண்ணி நமக்கு காமிக்கிறாங்க . சில பேருக்கு அது வந்து, போதும்பா அப்படிங்கற
TAM_MSA_52_part2
Positive
மாதிரி ஒரு சின்ன சலிப்பு வரலாம் . இந்த ஃபார்மேட் உங்களுக்கு செட் ஆயிடுச்சின்னா, நிச்சயமாக இந்தப் படம் வந்து உங்கள ஃபுல் பில் பண்ணும் . ஒருவேளை, என்னப்பா வீடியோ கால் மாதிரி முழு படத்தை எடுத்து வச்சு இருக்கீங்க, அப்படி என்கிற ஒரு தோட்டு வந்துடிச்சின்னா, மேபி உங்களால வந்து இந்த படத்தை அந்த அளவுக்கு வந்து என்ஜாய் பண்ண முடியாது . அதைத் தாண்டி, திஸ் பிலிம் ஹாஸ் ஓபெண்ட் அப் நியூ பாஸிபிலிடீஸ் இன்று தான் சொல்லணும் . அதாவது , லோக் டளண்லெ ஷூட் போக முடியாது, அப்படின்னு நிறைய பேர் யோசிச்சு இருந்த சமயத்தில், இவங்க ஒரு ஃபீச்சர் ஃபிலிம முடிச்சு இருக்காங்க . அந்தப்படம் வெளியும் வந்துடுச்சு. ரொம்ப இன்ட்ரஸ்டிங்கா ஒரு கான்செப்ட் ஆகவும் எடுத்து இருக்காங்க, அப்படிங்கறது வந்து நிறைய புது பிலிம் மேக்கர்ஸ்ககு ஒரு ஹாப் கொடுக்கும்.
TAM_MSA_53_part1
Positive
அதாவது, கைதி ஒரு நைட்டில நடக்கக்கூடிய கதைங்க . நைட்ல நடக்கிற கதை அப்படின்னாலே வந்து, சினிமாடோகிராபர்க்கு வந்து வேலை அதிகம் . அதே குரிப்பா இது வந்து ரெசிடென்சியல் ஏரியாவில நடக்கிர கதை கிடையாது . ஏதோ ஒரு காட்டுல நடக்கிற கதை . அந்த மாதிரி எடத்துல அழகா லைட்டிங் பண்ணி, ரொம்பவும் ஆர்டிபிசியல் இல்லாமல், நேச்சுரல் லைட் கிட்டத்தட்ட , ஒரு லாரியோட ஹெட்லைட் அத வச்சே ஷூட் பண்ணின சீக்வன்ஸ் எல்லாம் வந்து, நிச்சயமாக அவரை வந்து ஒரு பெரிய அளவில பாராட்டணும், சத்தியன் சூரியன் . ஆக்டர் நரைன், ஐ திங்க், ஒரு கேப்புக்கு அப்புறம் அவரு திரும்பி நம்ம தமிழ் சினிமாவில் பார்க்கிறோம் என நினைக்கிறேன். அவளோ ரியலிஸ்டிக்கா பர்ஃ போம் பண்ணி இருக்கிறாரு. ஒரு போலீஸ் ஆபீஸராக வந்திருக்கிறார். .இதுக்கு முன்னாடி அவரு போலீஸா நடித்து இருந்தாலும் , இந்த கேரக்டர் அவருடைய கரியரில், ஒரு முக்கியமான கேரக்டரா இருக்கும் அப்படின்னு நம்பலாம்
TAM_MSA_53_part2
Positive
. அதே மாதிரி தீனா, கார்த்திக் கூடவே டிராவல் ஆகிற ஒரு கேரக்டர். அங்க இங்க நம்மள சிரிக்க வைத்தாலும், நம்மளை ஏமோஷனல் ஆகவும் சில இடங்களில் வந்து டச் பண்ணிட்டாரு, அவருடைய பர்ஃபாமென்ஸ் . சாம் .சி. எஸ் ஓட பேக்ரவுண்ட் ஸ்கோர், ஆல்ரெடி கொஞ்சம் ட்ரமாட்டிக்கா, பயங்கர டிராமா ஓட , த்ரில்லிங்கா இருக்கக்கூடிய ஒரு ஸ்கிரீன்பிளேயிலே, இன்னும் ஒளி சேர்க்கிற மாதிரி இருக்கு அவருடைய மியூசிக். இந்தப் படத்தை பொறுத்தவரைக்கும் எந்த ஒரு பெரிய அளவிலான கமேர்ஸியல் காம்ப்ரமைஸும் இல்லாமல், அந்த ஜான் ராக் ரொம்ப டீப்பாக இருந்ததுதான், இந்தப் படத்தினோட ,ரைட்டரோட, டிரக்டரோட, ஒரு பெரிய பிளஸ் ன்னு சொல்லணும் . ஆக மொத்தத்துல கைதி ஒரு நல்ல திரில்லர் படம் வித் எ லோட் ஆஃ ஏமோஷன்ஸ் . தமிழ் சினிமாவில் வந்து மிகச் சிறந்த த்ரில்லர் படங்கள் அப்படின்னு ஒரு லிஸ்ட் எடுத்தோம் என்றால் கண்டிப்பாக வந்து அதிலே கைதி இருக்கும் .
TAM_MSA_54_part1
Neutral
படத்தோட லங்த்தெ கொஞ்சம் ட்ரிம் பண்ணி இருந்தா, இன்னும் கொஞ்சம் நல்லா இருந்திருக்குமே , அப்படின்னு நான் மட்டுமில்ல , தியேட்டர்ல இருக்கிற இன்னொரு கொஞ்சம் பேரும் வந்து ஃ பீல் பண்ணி இருந்தாங்க . ஆண்டு, இந்த படத்துல இன்னொரு விஷயம் என்ன அப்படின்னு வந்து பாத்தீங்கன்னா பஸ்ட் ஹாஃப் ல இருக்கிற அந்த ஹைப் ஆவட்டும், விஜய் தேவர்கொண்டாவே பார்த்த உடனேயே அந்த ஒரு எக்சைட்மென்ட் , அந்த ஒரு ஹைப்னஸ் அப்படியே கிரியேட் ஆயிருந்தது . ஆண்டு, செகண்ட் ஹாஃப் என்று வரும்போது, அதுல அப்படியே லேகா வர மாதிரியும் , அப்படியே டவுன் ஆகிற மாதிரியும் எனக்கு ரொம்ப பீல் ஆச்சு . இந்தப் படத்தில் விஜய் தேவர்கொண்டா உடைய நேம் கௌதம் அண்ட் ராசிக்கண்ணாவோட நேம் யாமினி . இவங்களுக்குள்ள இருக்கிற அந்த லவ் ஸ்டோரியாவட்டும், எனக்கு நான் பார்க்கும் போது அர்ஜுன் ரெட்டியோட ரிசம்ப்லன்ஸ் இந்த
TAM_MSA_54_part2
Neutral
படத்திலேயும், இந்த கேரக்டரிலேயும், இருக்கிற மாதிரி நான் கொஞ்சம் பீல் பண்ணேன் . பிக்காஸ் ஒரு செட் ஆஃப் ஆடியன்ஸுக்கு வந்து ஒரு பாசிட்டிவ் நோட்டுல சொல்லும்போது இந்த படம் ஓகே, பிடிச்சிருச்கலாம் . அவர் பண்ண, பிளே பண்ண, வி.டி.ப்ளே பண்ண கேரக்டர் ரொம்ப புடிச்சி இருக்கலாம் . அண்ட் இன்னொரு செட் ஆஃப் ஆடியன்ஸுக்கு வந்து , என்னடா அர்ஜுன் ரெட்டியோட ரிசம்ப்லன்ஸ் இருக்கே, ஒரு நெகட்டிவ் ஆஸ்பெட்லெ சொல்லிட்டு இருக்க, த்ரூ அவுட்டா என்ன இதுதான் பண்ணிட்டு இருக்காரு, அப்படின்னு ஒரு தோட் வரலாம். சோ, ஒரு பாசிட்டிவ் சைடு ஆண்டு நெகட்டிவ் சைடு. எனக்கு என்ன தோணுச்சோ, எனக்கு என்ன ஃபீல் ஆச்சோ அது நான் சொன்னேன் . சோ, ஓவரோல் பார்த்தீங்கன்னா, விஜய் தேவர்கொண்டா ஆண்டு ஐஸ்வர்யா ராஜேஷ் ,ராசி கண்ணா இவங்க மூணு பேரோட ஆக்டிங்க்காகவே தியேட்டரில் போய் ஒன் டைம் பார்க்கலாம் .
TAM_MSA_55_part1
Positive
ஒரு பாட்டு , அது ஹிந்து, முஸ்லிம், கிரைஸ்தவர்கள், அவங்கள சம்பந்தப்பட்ட அந்த வழிபாட்டு தலங்களை மையமா வச்சு எழுதின ஒரு பாட்டு. நம்மோடு, நம்மோடு, நம்மோடு ன்னு, அது வீட்டுக்கு வர வரைக்கும் நம்மோடு அந்தப் பாட்டும் வரும் . பிக்சரைஸேஷன் அவளோ பிரமாதமா, தாமரா எடுத்து இருந்தார் . இப்படி சின்ன சின்ன கதாபாத்திரங்கள் வந்து போனாலும், வெளியில வரும்போது, ஒரு நல்ல மெசேஜ் கொடுத்திருக்காருங்கர ஒரு திருப்தி நமக்கு தாமரா விஷயத்திலெ. தாமரா வந்து , படம் பார்த்துட்டு வெளியில வந்த உடனே ,எப்படி இருக்குன்னு கேட்டார். நல்ல படம். ஒரு குருநாதர் ஸ்டைலிலேயே சொல்லி இருக்காங்க . மனச தொட்டு நின்னு இருக்கணும் சார். மனசு உங்க மனசு தொட்டு நிற்கிறது வந்து பெருசில்ல. இன்னிக்கு
TAM_MSA_55_part2
Positive
தேதியில வீட்டுக்கு வீடு வேலைக்கு போற புருஷன் பொண்டாட்டி, அதும் என்பார் இளம் தம்பதிகள் இருக்காங்க. அவங்கள குறி வைத்துதான் இந்தப் படத்தையே எடுத்து இருக்கேன், அப்படின்னு சொன்னார் . நிச்சயமா அவருடைய நம்பிக்கை வீண்போகாது . இப்போ ஒன்னு சொல்றேன், ஐ.டி. இன்டஸ்ட்ரீஸ்லெ வேலை பார்க்கிறவங்க, தம்பதி ,கணவன் மனைவி மட்டும் இல்லிங்க ,பொதுவா எல்லா இடத்திலேயும் வேலை பார்க்கக் கூடிய கணவன்மார்ங்க ஜோடியாகத்தான் போய் இந்தப் படத்தைப் பார்க்கணும் . முடிஞ்சா, அவங்க கூட குழந்தைகளையும் அழைச்சிட்டு போய் பார்க்கலாம் . எதுக்குச் சொல்றேன்னா , நல்ல படம், நம்ம வரவேர்க்கணும் . அந்த ஒரு ஆனந்தத்தில் சொல்றேன், நீங்க எல்லாம் படம் பார்த்தீங்கன்னா ஆனந்தமா இருக்கும் .
TAM_MSA_60_part1
Positive
நிறைய தடவை அவங்க அப்பாகிட்ட சொல்லிட்டே இருப்பாரு , இத மாதிரி இவ்வளவு வந்து நீங்க ரொம்ப செல்லம் கொடுக்குறீங்க அப்பா, அதனால இவளுக்கு வந்து என்ன சொல்றது ஒரு செய்ஃப் கிடையாதுங்க, அப்படி இப்படின்னு சொல்லுவாரு . அவங்க அப்பா தான் ஃபுள் சப்போர்ட்டா இருப்பாரு. பரவால்லே, அவ வந்து பாத்துக்கிட்டுவா, அவ என் பொண்ணு கண்டிப்பா சாதிப்பா . அப்படின்னு வந்து அவ அப்பா தான் ஃபுல் ஃபுல் அந்த பொண்ணுக்கு வந்து, நீ வந்து நீ எல்லா பொண்ணுங்க மாதிரி சமயல்கட்டிலே இருக்கக் கூடாது .உன் எயிம் வந்து கண்டிப்பா அச்சீவ் பண்ணனும். அப்படி வந்து, அவங்க அப்பா வந்து அவ்வளவு சப்போட்டா இருப்பாரு அந்த பொண்ணுக்கு. லாஸ்ட் பாத்தீங்கன்னா, ஒரு மிஷின் மூலியமா அவங்க வந்து கார்கில் வேலைக்கு வந்து அந்த குஞ்சன் சக்சேனா வந்து
TAM_MSA_60_part2
Positive
போவாங்க . இதற்கு அடுத்து நீங்க நீங்களே போய் பாருங்க. என்னால ஃபுல் ஸ்டோரியும் சொல்ல முடியாது . அவங்க போய் இந்தியன் சோல்ஜரெ காப்பாற்றினாங்களா இல்லையான்னு, நீங்க போய் பாருங்க . நானே பாதி ஸ்டோரியை சொல்லிட்டேன், மிச்ச ஸ்டோரியை நீங்க போய் பாருங்க. நெட்பிளிக்ஸ் ஓ. டி. டி .யில வந்து இந்தப் படம் ரிலீஸ் ஆயிருக்கு. சோ, மறக்காமல் எல்லாரும் இந்த படத்தை பார்க்கணும் . எல்லாரும் போய் கண்டிப்பா பாருங்க. இந்த படத்தை மிஸ் பண்ணிடாதிங்க . முக்கியமா கேர்ள்ஸ் வந்து கண்டிப்பா இந்த படத்தை பாருங்க . இந்தப் படத்துக்கு என்னுடைய ரேட் மூவி ரேட்டிங் எவ்வளவுன்னா, அவுட் ஆஃப் 5, 3.5 கண்டிப்பா இந்த படத்துக்கு கொடுக்கலாம் . எனக்கு இந்த படம் ரொம்ப ரொம்ப புடிச்சிருந்துச்சு. உங்களுக்கும் கண்டிப்பா புடிக்கும் .
TAM_MSA_61_part1
Positive
இது வந்து இப்போ, வைபவ் வந்து வசந்த்ன்னு ஒரு கேரக்டர் நடிச்சிருக்கிறாரு. அது பார்த்தீங்கன்னா, அவருக்கு வந்து ஒரு லவ்வர் இருக்கு . அந்த பொண்ணு வீட்டுல என்ன சொல்றாங்க நீ ஒரு இன்ஸ்பெக்டர் போஸ்டிங்லெ வந்தீங்கன்னா, என் பொண்ண கொடுக்கிறோம், அப்படி சொல்லி இருக்காங்க . சோ, வந்து வைபவ், வந்து போஸ்டிங் காக வெயிட் பண்ணிட்டு இருக்காரு. ப்ரமோஷன் வரும் உடனே, வந்து இன்ஸ்பெக்டர் ஆனவுடனே பொண்ணு கேக்கணும் அப்படின்னு, அதுக்காக வெயிட் பண்ணிட்டு இருக்காரு . அவருக்கும் வந்த ஸ்டேஷன்ல வந்து ப்ரமோஷன் வர மாதிரி சான்ஸ் கெடசசிட்டே, இருந்துட்டே, நிறைவிட்டே இருக்கு . வெங்கட் பிரபு சார் ஈஸ்வரி ராவ் கிட்ட என்ன சொல்றாருன்னா, நம்ம இன்ஸ்பெக்டர கொன்னுட்டு வெளியே வந்த ரவுடிய நான்தான்
TAM_MSA_61_part2
Positive
பிடிச்சேன், அப்படின்னு சொல்றாரு . பிளஸ் என்ன சொல்றாருன்னா, எவ்விடன்ஸ்ம் அவங்ககிட்ட இருந்து ஒப்படைக்கிறாரு. யாரு? ஈஸ்வரி ராவ் கிட்ட. அந்த எவிடன்ஸ் எல்லாம் பார்த்தீங்கன்னா மேட்ச் ஆகாம இருக்கு . சோ, ஈஸ்வரி ராவ் வந்து ரொம்ப சந்தேகம் வருது, கொலை யார் பண்ணி இருப்பாங்கன்னு. சோ, இன்ஸ்பெக்டர் வீட்டில வந்து , என்ன நடந்துடுச்சு ? யார் வந்து அந்த இன்ஸ்பெக்டரை கொன்றது? பிளஸ் ப்ரமோஷன் வந்து வைபவுக்கு கிடைச்சிருச்சா? இல்லேன்னா நம்ம வெங்கட்பிரபு சாருக்கு கிடைச்சிடுச்சா? இதுதான் இந்த படத்தோட ஸ்டோரி, கைஸ் . இந்தப் படத்தில பார்த்தீங்கன்னா, நிறைய இடத்தில செம செம ட்விஸ்ட் எல்லாம் இருக்கு . சோ, எல்லாரும் கண்டிப்பா இந்த படத்தை மிஸ் பண்ணிடாதீங்க, கண்டிப்பா பாருங்க .
TAM_MSA_62_part1
Negative
இந்தப் படத்தில் பார்த்தீங்கன்னா , பிளஸ் பாயிண்டு அப்படின்னு சொல்லனும்னா, சினிமாடோகிராஃபி மட்டும் தான் சொல்ல முடியும். தவர வேற எதுவுமே பிளஸ் போயிட்டு மாதிரி தோனல . ப்ளஸ், நடிச்ச ஆக்டர் அனுஷ்கா ஷெட்டி பிளஸ் மாதவன் நடிச்சிருக்காங்க. அவ்வளவா அவங்க ஆக்டிங்கெ வெளியே கொண்டுவராத மாதிரி தான் இருக்கு. ஏதோ ஒரு சீரீஸ் பாக்குற மாதிரி தான் நமக்கு தோணுது, இந்தப் படத்தை பார்க்கும் போது. படத்தில பார்த்தீங்கன்னா, அனுஷ்கா செட்டிக்கு வந்து காது கேட்காது, பேசவும் முடியாது. நம்ம படம் பார்க்கிற நமக்கு வந்து ஒரு பீலிங்கே வராது , அவங்களுக்கு வந்து இந்த படத்துல வந்த காது கேட்காது , பேச முடியாது அந்த ஃபீலிங், இது எதுவுமே வராது இதிலே. பிளஸ், அப்படி ஏன் சொல்ற அப்படின்னு பார்த்தீங்கன்னா, இந்த படத்திலே . இந்தப் படத்தில் பார்த்தீங்கன்னா, ஒரு சீன் வருமும்க. அப்போ என்ன ஆகும்ன்னா,
TAM_MSA_62_part2
Negative
அனுஷ்கா செட்டி வந்து அழுவாங்க . அழுவும்போது பார்த்தீங்கன்னா, நமக்கு வந்து எந்த ஃபீலிங் மே இருக்காது. கண்ணீர். கண்ணில் இருந்து கண்ணீர் வரணும் அந்த சீனுக்கு . நமக்கு எந்த கண்ணீரும் அவ கண்ணில் இருந்து வராது. பிளஸ் என்ன சொல்லுவோம் ? ஒரு ஃபீலிங் ஏ இருக்காது . நெகட்டிவ்ன்னு சொல்ல இந்த படத்துல நிறைய விஷயங்கள் இருக்கு . ஃபர்ஸ்ட் பத்து நிமிஷத்தில இருந்த இன்ட்ரஸ்டிங்கான இதெ, அப்படியே லாஸ்ட் வரைக்கும் இந்தப் படத்திலே மெயின்டெயின் பண்ணிக் கொண்டு போய் இருந்தாங்கன்னா, இந்தப் படம் வேற லெவல்ல இருந்திருக்கும். சோ, ஒரு ஹாரர் படம் பார்க்கப் போறோம் அப்படின்னு நீங்க உட்கார்ந்தீங்கன்னா, கண்டிப்பா இந்த படம் சர்விஸ் சாடிஸ்ஃபை பண்ணாது . இந்த படம் பார்த்தீங்கன்னா, ஒன் டைம் வாச்சபிள் தான் . இந்தப் படத்துக்கு என்னுடைய ரேட்டிங் எவ்வளவுன்னா ஃபைவுக்கு வந்து டூ கொடுக்கலாம் .