text
stringlengths
8
614k
மேஜர் சுந்தர்ராஜன் என்று பரவலாக அறியப்பட்ட சுந்தர்ராஜன் மார்ச்சு 1, 1935 மார்ச்சு 1, 2003 , 1965 முதல் 2003 வரை தமிழ்த் திரைப்படங்களில் நடித்து வந்த ஓர் திரைப்பட நடிகர். மேஜர் சந்திரகாந்த் என்ற மேடைநாடகத்திலும் பின்னர் அதே பெயரிலான திரைப்படத்திலும் அவர் சிறப்பாக முன்னணி வேடத்தில் நடித்ததை ஒட்டி அவர் மேஜர் சுந்தர்ராஜன் என்று அழைக்கப்படலானார். திரைப்படங்களில் இவரது குரல்வளமைக்காகவும், உச்சரிப்புத் தெளிவிற்காகவும் சிறப்பானவராகக் கருதப்பட்டார். மேற்கோள்கள் "வைரம் தன்னைத் தானே பட்டை தீட்டிக்கொள்ள முடியாது. அடுத்தவன்தான் அதைச் செய்யணும்." தன்னுடைய சொந்த நாடகங்களில் நடித்தால் கூட நல்ல நடிகனாக உருவாக முடியவில்லை என்ற ஆதங்கத்தை மேஜர் சுந்தர்ராஜனின் வெளிப்படுத்திய பொழுது சிவகுமாரிடம் மேஜர் சுந்திர்ராஜன் கூறியவை. நபர் குறித்த மேற்கோள்கள் சான்றுகள் பகுப்பு இறந்த நபர்கள் பகுப்பு 2003 இறப்புக்கள் பகுப்பு 1935 பிறப்புக்கள் பகுப்பு தமிழ் திரைப்பட நடிகர்கள் பகுப்பு நாடக நடிகர்கள்
சுகி. சிவம் என்னும் சுப்பிரமணியம் சதாசிவம் தமிழகத்தைச் சேர்ந்த இந்து சமயச் சொற்பொழிவாளரும் எழுத்தாளரும் ஆவார். மேற்கோள்கள் காட்டில் வளரும் யானைக்கும், சைக்கிளுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை.ஆனால், முறையாக பயிற்சி பெறும் யானை, சர்க்கசில் சைக்கிள் ஓட்டுவதை பார்த்திருக்கிறோம். எனவே, முறையான பயிற்சி மூலம் மாணவர்கள் எதையும் சாதிக்க முடியும். எதிர்கருத்து வரும்போது அதை லாவகமாக கையாளத் தெரியும்போதுதான் ஒருவரின் ஆளுமை, தலைமைப்பண்புை முழுமையாக கண்டுபிடிக்க முடியும். ஒரு சிறந்த கர்மயோகி உயர்வு, தாழ்வு பார்ப்பதில்லை. நபர் குறித்த மேற்கோள்கள் சான்றுகள் பகுப்பு வாழும் நபர்கள் பகுப்பு தமிழ் எழுத்தாளர்கள் பகுப்பு பேச்சாளர்கள்
ஆர். சுந்தர்ராஜன் ஒரு தமிழ் திரைப்பட இயக்குனர், நடிகர் மற்றும் திரைக்கதை எழுத்தாளர் ஆவார். மேற்கோள்கள் நபர் குறித்த மேற்கோள்கள் "தனது படங்களில் பெரும் பாலும் இவர் கையாண்டுள்ள அத்தனை நகைச்சுவைக் காட்சிகளும் வசனங்களும், இவர் அனுபவத்தில் கண்டவை" சுந்தர்ராஜனைப் பற்றி சிவகுமார் கூறியது. ஒரு காட்சி படமாக்கும்போது ரொம்பவும் இயல்பாக, இது போன்ற சந்தர்ப்பங்களில் மக்கள் எப்படிப் பேசுவார்களோ அதை வாய்மொழியாகச் சுந்தரராஜன் சொல்வார். அதில் கொஞ்சம் அழுத்தம் போதவில்லை என்றாலோ, நீளம் தேவை என்றாலோ ஒரு விநாடி யோசித்து, வேறு வார்த்தைகளைச் சொல்வார். சுந்தர்ராஜனைப் பற்றி சிவகுமார் கூறியது. சான்றுகள் பகுப்பு வாழும் நபர்கள்
ஜவகர்லால் நேரு நவம்பர் 14,1889 மே 27,1964 இந்தியாவின் முதல் பிரதமர் தலைமை அமைச்சர் . இவர் பண்டிட் நேரு, பண்டிதர் நேரு என்றும் அழைக்கப்பெற்றார். அதிகாரத்துவம் சட்டம், ஒழுங்கு என்பது பிற்போக்குவாதியின், கொடுங்கோல் அரசனின், அதிகாரத்தை வைத்துக்கொண்டு அதை விட்டுக்கோடுக்க மறுப்பனின் கடைசி புகலிடம் சுதந்திரம் கிடைக்கும்வரை சட்டமும் ஒழுங்கும் இருக்க முடியாது. அதிகாரத்தை வைத்திருப்பவர்களைக் கட்டாயப்படுத்தாவிட்டால் அவர்கள் ஒருபோதும் அதிகாரத்தை விட்டுக்கொடுக்க மாட்டார்கள். 1928 திசம்பர் 12ஆம் நாள் பூனாவில் நடைபெற்ற பம்பாய் மாகாண இளைஞர் மாநாட்டுத் தலைமை உரையிலிருந்து. அரசியல்வாதி அரசியல்வாதி எல்லா விசயங்களைப் பற்றியும் பேச விரும்புகிறார். அவர் தனக்குத் தெரிந்ததைக் காட்டிலும் அதிகமான அறிவுள்ளவரைப்போல எப்பொழுதும் பாசாங்கு செய்கிறார் ஜவகர்லால் நேரு இந்திய தேசிய காங்கிரஸ் காங்கிரஸ் அரசியல் ஜனநாயகத்தை ஆதரிக்கிறது என்பதைத் தவிர விரிவாகப் பதிலளிக்க இயலாது. இதற்குமேல் எந்த முடிவும் செய்யப்படவில்லை. இன்று நிலவுகின்ற அமைப்பில் எவ்விதமான மாற்றத்தையும் செய்வதற்கு அது விரும்பவில்லை என்பது இதன் பெரும்படியான அர்த்தம். நேரு அல்மாரா சிறையிலிருந்தபோது 1935 ஆகத்து 6ஆம் நாள் எழுதிய பாய் பரமானந்தும் சுயராஜ்யமும் என்ற கட்டுரையில் இறுதி ஆசை நான் இறந்த பிறகு எனது உடலை எரியூட்ட வேண்டும். எந்த விதமான மதச்சடங்குகளும் செய்யக் கூடாது. அவற்றில் எனக்கு நம்பிக்கையும் உடன்பாடும் இல்லை. கொஞ்சம் சாம்பலை எடுத்து கங்கையிலே கரையுங்கள். கங்கையில் கரைக்கச் சொல்வது மத நம்பிக்கையினால் அல்ல. கங்கை நான் நேசித்த ஜீவநதி. அதனோடு சங்கமிக்க விரும்புகிறேன். மிச்சமிருக்கிற சாம்பலை இந்தியாவின் வயல்கள் எங்கும் தூவுங்கள். உழவர்கள் உழுது தானியங்களை விளைவிக்கும் அந்த மண்ணோடு மண்ணாக, இந்தியத் திருநாட்டின் காற்றோடு காற்றாகக் கலந்து கிடக்க விரும்புகிறேன். உழைப்பு முதியவர்கள் தமக்கு இன்னும் எஞ்சிய காலத்தை நினைத்துக்கொண்டு உழைக்கிறார்கள். இளைஞர்கள் ஊழிக்காலத்திற்கும் உழைக்கிறார்கள். கடவுள் நான் விஞ்ஞானக் கோயிலில் அறிவைத் தேடும் ஒரு பக்தன். வெறுமனே ஆன்மிகம் என்று பேசிக்கொண்டிருக்க மாட்டேன் பசியால் பரிதவிக்கும் ஓர் ஆணுக்கோ பெண்ணுக்கோ கடவுள் என்பது ஒரு பொருட்டல்ல. அவர்களுக்கு உணவு வேண்டும். இந்தியா பசியும் பட்டினியும் மலிந்த நாடு. இங்கு சோற்றுக்கே அல்லாடுகிற கோடானு கோடி மக்களிடம் சத்தியம் கடவுள் மறுவாழ்வு அருட்செல்வம் பற்றியெல்லாம் பேசுவது கேலிக்கூத்து. அவர்களுக்கு உணவு, உடை, உறைவிடம், கல்வி, நல்வாழ்வு போன்ற தேவைகளைத் தேடித் தர வேண்டியது நமது கடமை. விஞ்ஞான அறிவும் நவீன தொழில்நுட்பமுமே இவற்றைச் சாதிக்கும். கல்வி இந்தியாவின் எதிர்கால முன்னேற்றம், குழந்தைகள் மற்றும் இளைஞர்களின் கல்வியை மேம்படுத்துவதில் தான் இருக்கிறது. விஞ்ஞானத்தையும், வரலாற்று நூலையும் பிரித்துப் பேசக் கூடாது. தனி மனிதனின் அறிவு வளர்ச்சிக்கு இந்த இரண்டையும் கற்க வேண்டும். 11 10 1962 எனக்கு மிகவும் பிடித்தமான பொருள் புத்தகம். புத்தகத்திற்காகப் பணம் செலவழிப்பதில் நான் ஊதாரி என்ற பட்டத்தையும் பெறத் தயார். சமூகவுடைமை உலகம் முழுவதிலும் மனித சமுதாய அமைப்பில் சோஷலிஸத் தத்துவம் படிப்படியாக ஊடுருவிப் பாய்ந்திருக்கிறது என்பதை நாம் உணர்ந்துகொள்ள வேண்டும். அதை எவ்வளவு வேகத்தில் அடையலாம் என்பதிலும், முன்னேறிச் செல்வதற்குரிய வழி முறைகள் என்ன என்பதிலுமே கருத்து வேற்றுமைகள் இருக்கின்றன. முதலாளித்துவ அமைப்பு முழுவதும் ஏதாவது ஒருவகையான செல்வம் ஈட்டும் ஆர்வமுள்ள சமூகத்தையே அடிப்படையாகக் கொண்டுள்ளது. சோஷலிஸ சமுதாயம் செல்வம் சேர்க்கும் இந்த ஆர்வத்தைக் கைவிட முயற்சி செய்ய வேண்டும். இதற்குப் பதிலாகக் கூட்டுறவை மேற்கொள்ள வேண்டும். சிலை இப்பொழுது மக்கள், எங்கும் சிலைகளையும் படங்களையும் வைக்கிறார்கள், அந்த மாதிரி ஆசை தோன்றுமானல் இந்திய விவசாயிகளின் சிலையை வையுங்கள். 17 11 1960 சிறைச்சாலை நாட்டிலிருந்து வெளியேற்றப்படுகின்ற, சிறையில் அடைக்கப்படுகின்ற நபர்கள் பிழைத்துக்கொண்டால், ஏன் உயிரோடு இருக்கிறேன் என வேதனைப்படுவார்கள். ஆனால் இலக்கியவாதி அந்த நாட்களை தன் வாழ்க்கையிலேயே மிகவும் இனிமையானவை என கருதுவான் ஜவகர்லால் நேரு சீர்திருத்தம் என்போதும் ஆபத்தில் சிக்காமல் வாழ்க்கை நடத்த விரும்புகிறவர்கள், சரணாகதியைக் கடவுளாக வழிபடுபவர்கள், உலகத்தை சீர்திருத்த முடியாது. உலகத்தின் இன்பங்களை, தனக்குரிய பங்கைக் காட்டிலும் கூடுதலாக அனுபவித்துக் கொண்டிருப்பவர்கள் மாற்றத்தின் தூதர்களாக முடியாது. அதிருப்தி உள்ளவர்கள், நாட்டில் நிலவுகின்ற தீமைகளையும் அநீதிகளையும் சகித்துக்கொள்ள மறுப்பவர்கள்தான் உலகத்தை மாற்றுகிறார்கள், முன்னேற்றுகிறார்கள். 1928 திசம்பர் 12ஆம் நாள் பூனாவில் நடைபெற்ற பம்பாய் மாகாண இளைஞர் மாநாட்டுத் தலைமை உரையிலிருந்து. மிக ஆழ்ந்து படிந்துவிட்ட சமூகத் தீமைகளை வெறும் சட்டத்தால் நீக்கிவிட முடியாது. என்றாலும், அப்போதுதான் எடுத்துக் கொண்ட நோக்கத்திற்கு ஒருவேகம் கிடைக்கும். 6 5 1961 திராவிடர் ஆரியர்கள் இந்தியாவிற்குள் நுழையும் முன்னர், இந்தியா முழுதும் பரவியிருந்தவர்கள் திராவிடர்கள். அவர்கள் எகிப்து, மெசபடோமியா நாடுகளோடு வணிகம் செய்து வாழ்ந்த பழைய நாகரிகத்துக்கு சொந்தக்காரர்கள். தலைமைத்துவம் தீர்க்க தரிசியாய் இருப்பவர்கள் தமக்கு உண்மை எனத் தோன்றியதைக் கடைசி வரையில் தாம் கல்லால் அடிக்கப்பட்டு சாக நேரிட்டாலும் கடைப்பிடிக்கலாம். ஆனால் நாட்டுத் தலைவனாக இருப்பவன் பல நிலைமைகளுக்கேற்ப நடந்து கொள்ள வேண்டியிருக்கிறது. நாடு தன்னுடைய சுதந்திரத்தைக் காப்பாற்றிக் கொள்ளுவதற்கு, முழுக்க முழுக்கப் பிறரை நம்பியிருக்கும் ஒரு நாடு உதவாக்கரை நாடாகும். 27 11 1962 இந்தியா உலகத்துக்கெல்லாம் வழி காட்டியாய் இருக்க வேண்டும் என்று திரு. சுபாஷ் சந்திர போஸ் கூறியதில் எனக்கு நம்பிக்கையில்லை. நான் பற்பல நாடுகளைப் போய்ச் சுற்றிப் பார்த்திருக்கிறேன். ஒவ்வொரு நாட்டிலும் இம்மாதிரிதான் பேசிக் கொள்கிறார்கள், உலகம் பூராவும் தங்களுடைய நாகரிகத்தைப் பரப்பும் பொருட்டுக் கடவுள் தங்களை அனுப்பியிருக்கிறார் என்று ஆங்கிலேயர் எண்ணிக் கொள்கிறார்கள். பிரான்சு, ரஷ்யா ஆகிய நாடுகளும் உலகப் பிரச்சினையைத் தீர்த்து வைப்பதற்குத் தாங்களே வழி காட்டியாய் இருக்கவேண்டுமென்று கூறிக் கொள்கின்றன. எந்த தேசமும் எந்த ஜாதியாரும் தாங்களே கடவுளால் அனுப்பப்பட்டவர்கள் என்று பெருமை பேசிக்கொள்ள முடியாது. 20.5 1928 பம்பாயில் பர்தா பர்தா முறை என்பது முந்தைய யுகத்தின் காட்டுமிராண்டித்தனமான எச்சம். பல இடங்களில் மதத்தின் பெயரால் பெண்கள் பர்தா முறையைக் கடைபிடிக்குமாறு கட்டாயப் படுத்தப்படுகிறார்கள். 1928 திசம்பர் 12ஆம் நாள் பூனாவில் நடைபெற்ற பம்பாய் மாகாண இளைஞர் மாநாட்டுத் தலைமை உரையிலிருந்து. பாரத மாதா இந்த நாட்டை பாரத மாதா என்கிறோம். பாரத மாதா அழகான, ஆனாதரவான தாயாக, அவளுடைய கூந்தல் பூமியைத் தொடுவதாகச் சில ஓவியங்கலில் தீட்டியுள்ளனர். அது பாரத மாதவின் உண்மையான தோற்றமல்ல. பாரதமாத வாழ்க பாரதமாதா வாழ்க என்று நாம் கூறும் மாதா யார். ஓவியங்களில் தீட்டப்பட்டிருக்கின்ற கற்பனையான மாதா அல்ல, இந்திய நிலப்பரப்பும் அல்ல, இந்திய மக்களைத்தான் வாழ்க என்று சொல்லுகிறோம். 1936 செப்டம்பர் 16ஆம் நாள் எழுதிய ஒரு கட்டுரை மதம் மதமானது அநேகமாக எப்போதுமே குருட்டு நம்பிக்கை, பிற்போக்கு, வறட்டுக் கோட்பாடு, வெறியுணர்ச்சி, முடநம்பிக்கை, சுரண்டல், உடமையாளர்களின் நலன்களைப் பாதுகாத்தல் ஆகியவற்றை ஆதரிப்பதாகத் தோன்றுகிறது. மதமானது தெளிவான சிந்தனைக்கு எதிரியாக எனக்குத் தோன்றுகிறது. ஏனெனில் அது மாற்றப்பட முடியாத சில தத்துவங்களையும் கோட்பாடுகளையும் மறுப்பில்லாமல் ஏற்றுக்கொள்வதை அடிப்படையாகக் கொண்டிருக்கிறது. மதத்திலிருந்துதான் எதேசதிகாரம் பிறக்கிறது, மக்கள் அடிமைகளாக்கப்படுகின்றனர். 1928 திசம்பர் 12ஆம் நாள் பூனாவில் நடைபெற்ற பம்பாய் மாகாண இளைஞர் மாநாட்டுத் தலைமை உரையிலிருந்து. மதம் மனிதனுடைய சுதந்திர தாகத்தைக் குறைக்கின்ற அபீனாக கடந்த காலத்தில் அதிகமாகப் பயன்படுத்தப்பட்டது. 1928 திசம்பர் 12ஆம் நாள் பூனாவில் நடைபெற்ற பம்பாய் மாகாண இளைஞர் மாநாட்டுத் தலைமை உரையிலிருந்து. பஞ்சாயத்து "ஸ்தல சுயாட்சி அல்லது பஞ்சாயத்துதான் அரசாங்கக் கட்டுக்கோப்பின் அஸ்திவாரம். இந்த அஸ்திவாரம் உறுதியாக இல்லாவிடில் மேல் கட்டுமானம் பலவீனமாகிவிடும்...சோஷலிஸக் கூட்டுறவுச் சமுதாய அமைப்பிலே நாம் மேலிருந்து எதையும் திணிக்க முடியாது. வேரிலிருந்து, கிராமத்திலிருந்து, கிராமப் பஞ்சாயத்திலிருந்துதான் அது ஆரம்பமாக வேண்டும்..." 1958 பதவி பதவிக்கு, மனிதனைக் கெடுக்கும் குணம் உண்டு என்பது எனக்குக் தெரியும். பதவியினால் நான் எவ்வளவு தூரம் கெட்டுப் போயிருக்கிறேன் என்பது எனக்குத் தெரியாது. 12 6 1963 எனக்குப் பதவியில் ஒட்டிக் கொண்டிருக்க வேண்டும் என்ற ஆசை கிடையாது. பதவி வகிப்பது எனக்குப் பெருஞ்சுமையாகவே இருக்கிறது. இந்த நெருக்கடி நேரத்தில் நான் தொடர்ந்து பதவியில் இருப்பதின்மூலம் நாட்டுக்குச் சிறிது சேவை செய்ய முடியும் என நினைக்கின்றேன். 12 6 1963 யுத்தம் அச்சமே முதன்மையான தீமையென்று நான் கருதுகிறேன். ஏனெனில், அச்சத்திலிருந்து பூசலும், பலாத்காரமும் தோன்றுகின்றன. பலாத்காரம் பயத்தின் விளைவு அது போலவேதான் பொய்யும். ஜனநாயகம் ஜனநாயகம் என்பது வெறும் தேர்தல்களுக்குரிய பிரச்சினையன்று. பூரண அரசியல் ஜனநாயகம் என்பதன் பொருள் பொருளாதார ஜனநாயகமாக வளர்ச்சியடைதல் என்று பொதுவாகச் சொல்லி விடலாம். சான்றுகள் பகுப்பு இறந்த நபர்கள் பகுப்பு 1889 இறப்புக்கள் பகுப்பு 1964 பிறப்புக்கள் பகுப்பு இந்தியப் பிரதமர்கள் பகுப்பு இந்திய தேசிய காங்கிரஸ் அரசியல்வாதிகள்
என். எஸ். கிருஷ்ணன் நவம்பர் 29, 1908 ஆகஸ்ட் 30, 1957 தமிழ்த் திரைப்பட நகைச்சுவை நடிகரும் பாடகரும் ஆவார். மேற்கோள்கள் இப்போது மக்களைக் குலுங்கக் குலுங்கச் சிரிக்க வைத்து, மகிழ வேண்டுமானால், அந்தப் பணியைச் செய்யும் கலைஞருக்குப்பல துறைகளிலும் தேர்ச்சியும், தெளிந்த அறிவும் வேண்டும் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனின் வானொலி உரை 1949 என்னைச் சில சமயங்களில் தமிழ்நாட்டுச் சார்லி சாப்ளின் என்று சிலர் அழைக்கிறார்கள். அது அவ்வளவு பொருத்தமல்ல. சார்லி சாப்ளினே ஆயிரம் துண்டுகளாக்கினால் கிடைக்கிற ஒரு துண்டுக்குக்கூட நான் ஈடாக மாட்டேன். எழுத்தாளர்கள் தங்கள் பேனவை எப்பேர்பட்ட மையில் தொட்டு எழுதுகிறார்கள் என்பதைக் கேட்டால் நீங்கள் ரொம்பவும் ஆச்சரியப்படுவீர்கள். அதாவது, பொறா'மை'யில் தொட்டு எழுதுகிறார்கள். இன்னும் சிலர் தற்பெரு'மை'யில் தொட்டு எழுதுகிறார்கள். இன்னும் சிலரோ பொய்'மை', பழ மை , கய'மை', அறியா'மை' போன்ற மை'களில் தொட்டு எழுதுகிறாகள். நல்லதகுதியுள்ள எழுத்தாளன், தன் பேனாவை புது மை , 'உண்மை , பொறு'மை', வறு'மை', உரி'மை' கட'மை' இத்தகைய மை'களில்தான் தொட்டு எழுதிக் கொண்டிருக்கிறான். நபர் குறித்த மேற்கோள்கள் என் வாழ்நாளில் இரண்டு தலைவர்களைப் பெற்றேன். ஒருவர் கலைவாணர் என். எஸ் கிருஷ்ணன். அவர் என்னுடைய கலைத்துறைத் தலைவர். இன்னொருவர் அறிஞர் அண்ணா. இவர் என்னுடைய அரசியல் தலைவர் இந்த இரண்டு தலைவர்களையும் எனக்குத் தந்தவர் பெரியார். எம். ஜி. ஆர். 22 11 1964 கலைவாணர் என். எஸ். கிருஷ்ணன் இன்னும் உயிரோடு இருந்திருக்கலாம் என்று சொன்னார்கள் அவர் நல்ல சமயத்தில் செத்தார் என்று நான் மகிழ்ச்சி அடைகிறேன். இதே போல எல்லோரும் அந்தந்த நேரத்தில் போய்விடவேண்டும். இருந்துகொண்டு மற்றவர்களுக்குத் தொந்தரவு கொடுக்கக் கூடாது. எம். ஆர். இராதா 31.8 1961 சான்றுகள் பகுப்பு இறந்த நபர்கள் பகுப்பு 1908 பிறப்புக்கள் பகுப்பு 1957 இறப்புக்கள் பகுப்பு தமிழ் திரைப்பட நடிகர்கள்
சோனியா காந்தி சோனியா காந்தி இத்தாலியில் உள்ள லூசியானாவில், எட்விகி அண்டோனியா அல்பினா மையினோ என்பவராக 1946 டிசம்பரில் பிறந்தார். இவர் இந்திய தேசியக் காங்கிரஸின் தலைவரும் மறைந்த இந்தியப் பிரதம மந்திரி ராஜிவ் காந்தியின் மனைவியும் ஆவார். மேற்கோள்கள் "கட்சியின் அடிப்படைக் கொள்கைகளை புறந்தள்ளிவிட்டு பெறும் வெற்றி நீண்ட காலத்துக்கு நிலைக்காது. ஆனால் கொள்கைகளைப் பின்தொடர்ந்தோமேயானால் எந்த ஒரு தோல்வியும் நிரந்தரமாகாது." 2016 மாநில தேர்தல்களில் காங்கிரஸ் கட்சியின் தோல்வியை குறித்து கூறியது. நபர் குறித்த மேற்கோள்கள் வெளியிணைப்புக்கள் சான்றுகள் பகுப்பு வாழும் நபர்கள் பகுப்பு 1946 பிறப்புக்கள் பகுப்பு அரசியல் தலைவர்கள்
சசி தரூர் பிறப்பு 9 மார்ச் 1956 இந்தியாவின் முன்னாள் மனிதவள மேன்பாட்டுத் துறை அமைச்சரும், முன்னாள் வெளியுறவுத்துறை இணையமைச்சரும் மற்றும் கேரளாவின் திருவனந்தபுரம் மக்களவை தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களவை உறுப்பினரும் ஆவார். மேற்கோள்கள் பிரிட்டனின் 200 ஆண்டு கால காலனியாதிக்கம் அவர்களது வளர்ச்சியை முன்னிறுத்தியே தொடர்ந்தது. பிரிட்டனின் வளர்ச்சியாக விதந்தோதப்படும் தொழிற்புரட்சி, இந்தியத் தொழில் துறையை அழித்ததன் மூலமே உருவானது. காலனியாதிக்கத்தின் மூலம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பொருளாதாரச் சூழ்நிலைகள் மோசமடைந்தன என்பதே உண்மை. பிரிட்டன் ஆதிக்கவாதிகள் இந்தியாவுக்குள் நுழையும்போது உலகப் பொருளாதாரத்தில் இந்தியாவின் பங்களிப்பு 23 . பிரிட்டன் நாட்டைவிட்டு வெளியேறியபோது உலகப் பொருளாதாரத்தில் இந்தியாவின் பங்களிப்பு 4 . இதைவிடச் சான்று வேண்டுமா? 19 ம் நூற்றாண்டின் முடிவில் இந்தியா, பிரிட்டனின் மிகப் பெரிய கறவை மாடானது, பிரிட்டன் பொருட்களின் நுகர்வுச் சந்தையாக மாற்றப்பட்டது. செல்வவளம் கொழித்த விக்டோரிய இங்கிலாந்தின் செல்வந்தர்கள், அடிமைப் பொருளாதாரத்தின் மூலமே தங்களது செல்வங்களை ஈட்டியுள்ளனர். அடிமைப் பொருளாதாரம் மூலம் ஐந்தில் ஒரு பங்கு இங்கிலாந்து மக்கள் பணக்காரர்களானார்கள். காலனி ஆதிக்க நாடுகளில் பிரிட்டன் அரசு ரயில் பாதைகளையும் சாலைகளை அமைத்ததைப் பற்றிப் பிரமாதமாகப் பேசுகிறார்கள். பிரிட்டனின் தொழில் துறைத் தேவைகளுக்காக, கொள்ளைக்காகக் கொண்டுவரப்பட்டவைதான் ரயில்வேயும், சாலைகளுமே தவிர, உள்ளூர் மக்களின் பயன்பாடுகளுக்காக அல்ல. கச்சாப் பொருட்களை உள்ளூரிலிருந்து துறைமுகத்துக் கொண்டுசெல்ல வேண்டும். அதற்காகவே போக்குவரத்து பெரிதும் பயன்பட்டது. இந்தியாவில் ரயில்வேயை உருவாக்க பிரிட்டன் முதலீட்டாளர்களை அழைத்தபோது, இந்தியாவிலிருந்து கிடைக்கும் பெரிய தொகையை, அதாவது இந்திய வரிப்பணம் என்ற ஆசையையும், உத்தரவாதத்தையும் அளித்தது. இதனால் ஒரு மைல் தூர பால வேலைகள் நடக்க இரு மடங்கு செலவானது. அதாவது கனடாவிலோ, ஆஸ்திரேலியாவிலோ இந்தத் தொலைவுக்கு ஆகும் செலவைவிட இரு மடங்கானது. இந்தியப் பொதுமக்களைத் துன்பத்தில் ஆழ்த்தி, பிரிட்டன் தனியார் துறைகள் ரயில்வே, சாலைகள் திட்டம் மூலம் கொழுத்து வளர்ந்தன. நபர் குறித்த மேற்கோள்கள் சான்றுகள் பகுப்பு வாழும் நபர்கள் பகுப்பு 1956 பிறப்புக்கள் பகுப்பு அரசியல் தலைவர்கள்
செர்சோ லியோனி , இத்தாலிய ஒலிப்பு செர்ஜோ லெயோனெ 3 சனவரி 1929 30 ஏப்ரல் 1989 இத்தாலிய இயக்குனர், தயாரிப்பாளர் மற்றும் திரைக்கதை ஆசிரியராவார். "இசுப்பகட்டி வெசுட்டர்ன்" என அறியப்படும் திரைப்படப் பாணியை உருவாக்கிய பெருமை இவரைச் சாரும். மேற்கோள்கள் வாழ்க்கை எந்த மதிப்பும், மரணம் இருந்தது எங்கே, சில நேரங்களில், அதன் விலை. தாராளம் கொலையாளிகள் தோன்றினார் ஏன் என்று. வெளியிணைப்புக்கள் பகுப்பு இறந்த நபர்கள் பகுப்பு 1929 பிறப்புக்கள் பகுப்பு 1989 இறப்புக்கள் பகுப்பு இயக்குனர்கள் பகுப்பு தயாரிப்பாளர்கள்
ஆர். மாதவன் பிறப்பு ஜூன் 1, 1970, ஜாம்ஷெட்பூர் , இந்தியத் திரைப்பட நடிகர், எழுத்தாளர், படத்தயாரிப்பாளர் மற்றும் நிகழ்ச்சி தொகுப்பாளர் ஆவார். திரைப்படத் துறைக்கு வரும் முன்னர் இந்தித் தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்து வந்தார். அவர் தனது நடிப்பை 'பனேகி அப்னி பாத்' என்னும் தொலைக்காட்சி தொடர் மூலம் ஆரம்பித்தார். இவர் கிட்டத்தட்ட ஏழு மொழிகளில் நடித்ததற்காக பிலிம் பேர் விருது வாங்கியுள்ளார். மேற்கோள்கள் மக்கள் மூன்று நாட்கள் என் திரைப்படங்களைப் பற்றிப் பேசுவர். பின்னர் மறந்து விடுவார்கள். சான்றுகள் வெளியிணைப்புக்கள் பகுப்பு வாழும் நபர்கள் பகுப்பு 1970 பிறப்புக்கள் பகுப்பு தமிழ் திரைப்பட நடிகர்கள் பகுப்பு நடிகர்கள் பகுப்பு இந்தியர்கள் பகுப்பு எழுத்தாளர்கள் பகுப்பு தயாரிப்பாளர்கள்
விஸ்வநாதன் ஆனந்த் பிறப்பு டிசெம்பர் 11, 1969, மயிலாடுதுறை, இந்தியா , இந்திய சதுரங்க செஸ் கிராண்ட் மாஸ்டர் மற்றும் ஐந்து முறை உலக சதுரங்க போட்டியின் வெற்றி வீரரும் ஆவார். மேற்கோள்கள் மனம் தெளிவாக இருந்தால், சிந்திக்கும் திறன் நன்றாக இருக்கும். நாம் என்ன வேலை பார்க்கிறோம் என்பது முக்கியமல்ல. இங்கு எல்லோருக்குமே உடற்தகுதி தேவைப்படுகிறது. உடல்ரீதியாக நீங்கள் தகுதிக் குறைவாக இருக்கும்போது, உங்களின் மூளையும் சோர்வடைகிறது. நபர் குறித்த மேற்கோள்கள் சான்றுகள் பகுப்பு வாழும் நபர்கள் பகுப்பு 1969 பிறப்புக்கள் பகுப்பு விளையாட்டு வீரர்கள்
சாய்னா நேவால் பிறப்பு 17 மார்ச் 1990 ஒரு இந்திய இறகுப்பந்தாட்ட வீராங்கனை. மேற்கோள்கள் பாட்மின்டன் மைதானத்துக்குள் ஒவ்வொரு முறை நுழையும்போதும் என் இதயம் அதிகம் படபடக்கும். கைகளில் ராக்கெட்டை எடுக்கும்போது நடுக்கம் இருக்கும். அப்போது மைக்கில் 'சாய்னா நேவால்... ஃப்ரம் இந்தியா என, என் பெயரை உச்சரிக்கும்போது... உடல் சிலிர்க்கும். இந்தியத் தேசத்தின் பிரதிநிதியாக நான் இங்கே நிற்கிறேன். நான் என்பது என் தேசம். எனக்காக, என் பெற்றோருக்காக, என் பயிற்சியாளர்களுக்காக, ஒவ்வோர் இந்தியருக்காக இந்தப் போட்டியை வென்றே ஆக வேண்டும் என்ற உணர்வு உள்ளுக்குள் பற்றிக்கொள்ளும். அது மட்டுமேதான் என்னைக் கொண்டு செலுத்தும்! நபர் குறித்த மேற்கோள்கள் ஒவ்வோர் ஆட்டக்காரருக்கும் 'சிக்னேச்சர் ஸ்ட்ரோக் என ஒன்று உண்டு. உயரத்தில் பறந்து வரும் இறகுப் பந்தை, எகிறிக் குதித்து எதிர் களத்தில் தரையோடு தரையாக வேகமாக அடித்து எதிரியை நிலைகுலையச் செய்யும் 'ஸ்மாஷ் ஸ்ட்ரோக் அடிப்பதில் சாய்னா கில்லாடி. இதன் எதிர் துருவமாக எதிரியின் வலையை ஒட்டி இறகுப் பந்தை விழச் செய்யும் 'டிராப் ஷாட் அடிப்பதிலும் சாய்னா கில்லி. சான்றுகள் பகுப்பு வாழும் நபர்கள் பகுப்பு 1990 பிறப்புக்கள் பகுப்பு விளையாட்டு வீரர்கள்
கிரண் பேடி பி. 9 ஜூன் 1949 என்பவர் ஒரு இந்திய அரசியல்வாதியும், சமூக சேவகரும், ஓய்வு பெற்ற காவலரும் ஆவார். இவர் இந்தியக் காவல் பணியில் 1972ஆம் ஆண்டு சேர்ந்த முதல் பெண் அதிகாரியாவார். மேற்கோள்கள் இளமையில் எதற்கும் சமரசம் செய்துகொள்ளாத பண்பையும், மனசாட்சிக்கு எதிரான அநீதியை எதிர்த்துப் போராடவும் கற்றுக்கொண்டேன். அதை இன்றுவரை கடைபிடிக்கிறேன் நபர் குறித்த மேற்கோள்கள் போக்குவரத்து கட்டுப்பாடு அதிகாரியாக இருந்தபோது, விதி மீறி நிறுத்தப்பட்டிருந்த பிரதமர் இந்திரா காந்தியின் காரையே கிரேன் வைத்து அப்புறப்படுத்திய அசாத்திய துணிச்சல் படைத்தவர். இவர் பணிபுரிந்த இடங்களில் குற்றங்கள் குறைந்தன. அதனால், பெண்களின் மரியாதை, அன்பைப் பெற்றார். சான்றுகள் பகுப்பு வாழும் நபர்கள் பகுப்பு 1949 பிறப்புக்கள் பகுப்பு அரசியல் தலைவர்கள்
சச்சின் டெண்டுல்கர் பிறப்பு ஏப்ரல் 24, 1973 ஓர் முன்னாள் இந்தியத் துடுப்பாட்ட வீரர். மேற்கோள்கள் எந்த ஒரு கிரிக்கெட் வீரருக்கும் டெஸ்ட் கிரிக்கெட்தான் உடனடியான சவால். அது டெஸ்ட் என்று அழைக்கப்படுவதற்குக் காரணமே அது பல விதங்களிலும் ஒரு வீரரை சோதனைக்குட்படுத்துகிறது. ஒவ்வொரு முறையும் புதிதாகத் தொடங்கி புதிய ஆட்டத்துக்கு தயார்படுத்திக் கொண்டே இருக்க வேண்டும். கடந்த போட்டியில் ஒருவர் சதம் எடுத்திருக்கலாம் ஆனால் நடந்து முடிந்த விஷயமே. கடினமான உழைப்பு மற்றும் கட்டுக்கோப்புக்கு பதிலீடு கிடையாது. நபர் குறித்த மேற்கோள்கள் வெளியிணைப்புக்கள் சான்றுகள் பகுப்பு வாழும் நபர்கள் பகுப்பு 1973 பிறப்புக்கள் பகுப்பு விளையாட்டு வீரர்கள்
விராட் கோலி பிறப்பு நவம்பர் 5, 1988 ஓர் இந்தியத் துடுப்பாட்டக்காரர். மேற்கோள்கள் நபர் குறித்த மேற்கோள்கள் நேரான மட்டையுடன் நல்ல கிரிக்கெட் ஷாட்கள் மூலம் விராட் ரன் குவிக்கிறார். அவர் ஒரு சிறப்பு வாய்ந்த திறமையாளர். அவர் தனது ஆட்டத்திற்காக கடுமையாக உழைக்கிறார். அவரது ஒழுக்கம், கட்டுக்கோப்பு மற்றும் அர்ப்பணிப்பை பலரும் பின்பற்ற வேண்டும். விராட் கோலியைக் குறித்து சச்சின் டெண்டுல்கர் கூறியது. அனைத்து கிரிக்கெட் வடிவங்களையும் அவர் தனது பேட்டிங் உத்தியில் சமரசம் செய்து கொள்ளாது அணுகுகிறார். மேலும் அவர் மனோபலம் மிக்கவர் இதனால் நெருக்கடியான தருணங்களிலும் அவரால் சிறப்பாக செயல்பட முடிகிறது. விராட் கோலியைக் குறித்து சச்சின் டெண்டுல்கர் கூறியது. வெளியிணைப்புக்கள் சான்றுகள் பகுப்பு வாழும் நபர்கள் பகுப்பு 1988 பிறப்புக்கள் பகுப்பு விளையாட்டு வீரர்கள்
நா. சந்திரபாபு நாயுடு பிறந்தது ஏப்ரல் 20, 1950 , ஒரு இந்திய அரசியல்வாதி, தற்போதைய ஆந்திர முதலமைச்சர் ஆவார். மேற்கோள்கள் செம்மரக்கட்டைகள் இந்தியாவில் அழிந்து வரும் அபூர்வ மரம். அதை காப்பாற்ற வேண்டியது நமது கடமை. நபர் குறித்த மேற்கோள்கள் வெளியிணைப்புக்கள் சான்றுகள் பகுப்பு வாழும் நபர்கள் பகுப்பு 1950 பிறப்புக்கள் பகுப்பு அரசியல் தலைவர்கள்
மேன்க்டே சன்ங்நேஜாங்க மேரி கோம் பிறப்பு மார்ச் 1, 1983 ,இந்தியாவின் மணிப்பூர் மாநிலத்தைச் சேர்ந்த ஒரு குத்துச்சண்டை வீராங்கனை ஆவார். மேற்கோள்கள் குத்துச்சண்டை போன்ற கடுமையான விளையாட்டுப் போட்டிகளில் பெண் குழந்தைகள் ஈடுபடுவதை பெற்றோர்கள் விரும்புவதில்லை. இன்றைய உலகம் குற்றச்சம்பவங்களால் நிறைந்துள்ளது. எனவே பெற்றோர் இப்போதாவது விழித்துக் கொண்டு பெண் குழந்தைகளை குத்துச்சண்டை போன்ற போட்டிகளில் கவனம் செலுத்த அனுமதிக்க வேண்டும். பல தியாகங்களுக்குப் பிறகு எனது மிகச்சிறந்த பங்களிப்பை அளித்தேன். வெற்றியும் தோல்வியும் விளையாட்டின் ஒரு பகுதி தான். அம்முடிவு என்னை மிகவும் பாதித்தது. ஆனாலும் என் கையில் எதுவும் இல்லையே. நல்ல ஸ்போர்ட்ஸ்மேன்ஷிப்போடு இம்முடிவை நான் ஏற்றுக்கொள்கிறேன். கடவுள் எனக்கு வேறு திட்டங்கள் வைத்திருக்கிறார் என்று நம்புகிறேன். 2016 உலக குத்துச்சண்டை போட்டியில் தோற்ற பின் கூறியது. நபர் குறித்த மேற்கோள்கள் வெளியிணைப்புக்கள் சான்றுகள் பகுப்பு வாழும் நபர்கள் பகுப்பு 1983 பிறப்புக்கள் பகுப்பு விளையாட்டு வீரர்கள்
எஸ். வி. சேகர் தமிழ்நாட்டைச் சேர்ந்த மேடை நாடக மற்றும் திரைப்பட நடிகர் ஆவார். மேற்கோள்கள் பெரிய பட்ஜெட் படங்களுக்கும் வரிச்சலுகை என்பது பென்ஸ் காரில் வந்திறங்குபவர்களுக்கு 'அம்மா உணவக' உணவு தருவதுபோலதான். நபர் குறித்த மேற்கோள்கள் வெளியிணைப்புக்கள் சான்றுகள் பகுப்பு வாழும் நபர்கள்
இளையராஜா பிறப்பு சூன் 2, 1943 , இந்தியாவின் சிறந்த திரைப்பட இசையமைப்பாளர்களுள் ஒருவர். அன்னக்கிளி என்ற திரைப்படத்துக்கு இசை அமைத்ததன் மூலம் 1976 இல் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். இதுவரை 1000 க்கும் மேற்பட்ட தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார். இவருக்கு இந்திய அரசின் படைத்துறை சாரா விருதுகளில் மூன்றாவது உயரிய விருதான பத்ம பூசண் விருது 2010 ஆம் ஆண்டு அளிக்கப்பட்டது. மேற்கோள்கள் சிந்தனை இருந்தால் தெளிவு இருக்காது. சிந்தனை இல்லாமல் இருப்பதே தெளிவாக இருக்கும். நபர் குறித்த மேற்கோள்கள் "... இன் ஷர்ட் பண்ணிய ஒடிசலான தேகதுடன் ஒரு பையன் வந்து நின்றான். தழையத்தழையக் கட்டிய வேட்டியும், நெற்றி நிறைய விபூதி குங்கும்முமாக இசையமைப்பாளர்களைப் பார்த்து பழகிய கண்களுக்கு, நெற்றி நிறைய விபூதி குங்குமுமாக இசையமைப்பாளர்களைப் பார்த்து பழகிய கண்களுக்கு, கவர்மென்ட் ஆபிஸ் குமாஸ்தாபோல இருந்த அந்த இளைஞனை, இசையமைப்பாளர் என என்னால் நம்ப முடியவில்லை. ஹார்மோனியம், கிடார் என ஏதாவது கையில் எடுத்து வந்திருந்தாலாவது நம்பியிருப்பேன். அதுவும் எடுத்து வரவில்லை. 'ஃபர்ஸ்ட் இம்பரஷன் இஸ் தி பெஸ்ட் இம்ப்ரஷன் என்பார்களே, ராஜா விழயத்தில் அது பொய்த்துப்போனது." முதல் முறையாக வாய்ப்பு தேடி வந்த இளையராஜாவைப் பற்றி பஞ்சு அருணாசலம் கூறியது. வெளியிணைப்புக்கள் சான்றுகள் பகுப்பு வாழும் நபர்கள் பகுப்பு 1943 பிறப்புக்கள்
க. அன்பழகன் ஒரு தமிழக அரசியல்வாதி. தமிழக அமைச்சரவையில் நிதி அமைச்சராகப் பணியாற்றியுள்ளார். திராவிடக் கொள்கையில் பற்று கொண்ட இவர், திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆரம்ப காலம் முதல் முக்கியப் பங்கு வகிக்கின்றார். இவர் 1977 முதல் திமுகவின் பொதுச் செயலாளராக உள்ளார். மேற்கோள்கள் தமிழ்மொழி இலக்கியத்தின் நிலைக்களன் இசையில் இனிய ஊற்று நாடகத்தின் நலங்கொழிக்கும் நன்மொழி! நபியை நினைப்பவன் எப்படி முகம்மதியனாகிறானோ, ஏசுவை நினைப்பவன் எப்படி கிறிஸ்துவனகிறானோ, அதுபோல வள்ளுவனை நினைப்பவன்தான் தமிழன். 4 7 1960 சான்றுகள் வெளியிணைப்புக்கள் பகுப்பு வாழும் நபர்கள் பகுப்பு 1922 பிறப்புக்கள் பகுப்பு அரசியல்வாதிகள் பகுப்பு எழுத்தாளர்கள்
தேவநேயப் பாவாணர் பெப்ரவரி 7, 1902 சனவரி 15, 1981 மிகச்சிறந்த தமிழறிஞரும், சொல்லாராய்ச்சி வல்லுநருமாவார். இவர் 40க்கும் மேலான மொழிகளின் சொல்லியல்புகளைக் கற்று மிக அரிய சிறப்புடன் சொல்லாராய்ச்சிகள் செய்துள்ளார். மேற்கோள்கள் காடுறையும் விலங்காண்டி மாந்தரேனும் அருமையுறும் தனித்தமிழை விரும்புவாரேல் அவரன்றோ தலையாய தமிழர் கண்டீர். சான்றுகள் வெளியிணைப்புக்கள் பகுப்பு இறந்த நபர்கள் பகுப்பு 1902 பிறப்புக்கள் பகுப்பு 1981 இறப்புக்கள் பகுப்பு தமிழறிஞர்கள் பகுப்பு இந்தியர்கள் பகுப்பு தமிழர்கள்
ராபர்ட் கால்டுவெல் ராபர்ட் கால்டுவெல் 1814 1891 கால்டுவெல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் திராவிட மொழியியலின் தந்தை எனப் போற்றப்படுபவர். திராவிட மொழிகளின் தனித்துவத்தை நிலைநிறுத்தியதில் பெரும்பங்கு இவருடையது. மேற்கோள்கள் தமிழ்மொழியில் வரும் சுட்டு வினாப் பெயர்களின் அழகான, தத்துவார்த்தமான ஒழுங்கு முறை உலகில் வேறு எம்மொழியிலும் இல்லை. ஒரு விழுக்காட்டுக்கு குறைவாகவே தமிழில் பிறமொழிச் சொற்கள் கலந்துள்ளன. ஒலி அமைப்பிலும், பிறமொழிச் சொற்களைத் தன்னில் கலக்க விடாத தூய்மை பேணலிலும் நிலையாக இருப்பதால் தமிழ் கன்னித் தமிழாகும். தமிழ் என்னும் சொல் வல்லோசை, மெல்லோசை, இடையோசை சிறந்து இணைந்திருத்தலால் அம் மூவினமும் சேர்ந்த தமிழ் என்னும் சொல் தனிச் சொல்லே ஆகும். திரிபு அன்று. சான்றுகள் வெளியிணைப்புக்கள் பகுப்பு இறந்த நபர்கள் பகுப்பு 1814 பிறப்புக்கள் பகுப்பு 1891 இறப்புக்கள்
தமிழ்த்தேசியத்தந்தை என்று அறியப்படும் பெருஞ்சித்திரனார் மார்ச் 10, 1933 சூன் 11, 1995 இருபதாம் நூற்றாண்டின் தமிழ்ப் பல்துறை அறிஞர்களில் முதன்மையான ஒருவர் ஆவார். தனித்தமிழ்த் தந்தை மறைமலையடிகளார், மொழிஞாயிறு பாவாணர் ஆகியோரின் கொள்கை கற்றவர்களிடமும், மற்றவர்களிடமும் பரவப் பெருங்காரணமாக விளங்கியவர். மேற்கோள்கள் வீறுடைய செம்மொழி தமிழ்மொழி! உலகம் வேரூன்றிய நாள் முதல் உயிர்மொழி! கூறுபடும் மொழிகளைப் போல் புதையவில்லை கொஞ்சிப் பேசும் வழக்கற்றுக் குமையவில்லை சாறுபட்ட மரங்களைப்போல் சாயவில்லை தரங்கெட்ட மனிதர்களைப்போல் தாழவில்லை. ஆண்டு நூறானாலும் அன்னைத் தமிழ்நாடு வேண்டும் விடுதலை எண்ணம் விலக்கோம் யாம்! சான்றுகள் வெளியிணைப்புக்கள் பகுப்பு இறந்த நபர்கள் பகுப்பு 1933 பிறப்புக்கள் பகுப்பு 1995 இறப்புக்கள் பகுப்பு தமிழறிஞர்கள்
2012ல் ஜெயகாந்தன் ஜெயகாந்தன் ஏப்ரல் 24, 1934 ஏப்ரல் 08, 2015 சிறந்த தமிழ் எழுத்தாளர்களில் ஒருவர் ஆவார். இந்திய அரசின் இலக்கியத்திற்கான உயர்ந்த விருதான ஞான பீட விருதைப் பெற்ற இரண்டாவது தமிழ் எழுத்தாளர் இவராவார். இவருடைய படைப்பிலக்கியக் களம் சிறுகதைகள், புதினங்கள், கட்டுரைகள், திரைப்படங்கள் என பரந்து இருக்கின்றது. மேற்கோள்கள் இண்டெலெக்சுவல் என்பது படித்தவர்கள் இல்லை. சிந்திக்கிறவர்கள். கர்நாடக இசை தக்களியில் நூல் நூற்பதைப் போன்றது. மேற்கத்திய இசை ஊடும் பாவுமாக தறி போட்டு துணி நெய்வதைப் போன்றது. எல்லோரையும் கேள்வி கேட்கிற தைரியத்தைக் கொடுத்தவர் நீங்கள் தான். உங்களிடமே கேள்வி கேட்டுத் தொடங்குகிறேன். ஒரு மேடையில் தந்தை பெரியாரிடம் கேள்வி கேட்கும் முன்பு கூறியது. ஆதிக்கம் தான் எதிரியே தவிர யாருடைய ஆதிக்கம் என்பது பொருட்டல்ல. ஆதிக்கத்தை எதிர்ப்பதன் மூலம் தான் ஜனநாயகத் தன்மை வளரும். இந்த ஆதிக்கத்திற்குப் பதிலாக , அந்த ஆதிக்கம் என்று சொல்வது மாற்றாகாது. அது ஆதிக்கக் காரர்களுக்கிடையே நடந்த போட்டி என்று தான் நான் நினைக்கிறேன். படித்த மேல் வர்க்கத்து முதலியார்களுக்கும், பிராமணர்களுக்கும் இடையில் நடந்த சண்டையில் எனக்குச் சம்பந்தமில்லை, உழைக்கிற, பாடுபடுகிற பிராமணர்களும் இருக்கிறார்கள். வஞ்சிக்கப் படுகிற , சுரண்டப் படுகிற பிராமணர்களும் இருக்கிறார்கள். தந்தை பெரியாரின் பிராமண ஆதிக்க எதிர்ப்பைப் பற்றிக் கேட்ட பொழுது கூறியது. ஒளரங்க சீப் பண்ணின கொடுமைக்கு, இன்றைக்கு உள்ள முஸ்லீம்களைப் பகைத்தால் எப்படி ? பிராமணக் கொடுமை என்றைக்கோ நடந்தது என்பதற்காக, இன்று வளர்ந்து, மாறிவந்திருக்கும் பிராமணர்கள் மீது பகைமை கொள்ளத் தூண்டுவது சரியாகாது. இலக்கிய தர்மமாகாது. அரசியலுக்கு வேண்டுமானால் அது அவசியமாய் இருக்கலாம். இன்னும் சொல்லப் போனால் முதலாளி தொழிலாளி விஷயத்தையும் நான் இப்படித் தான் பார்க்கிறேன். 18 ம் நூற்றாண்டின் முதலாளித்துவம் அழிந்து விட்டது . இன்றுள்ள நவீன , வளர்ந்திருக்கும் முதலாளித்துவம் சோஷலிசத்தை விட முற்போக்காக இருக்கிறது. இன்றைக்கு முதலாளித்துவம் அழிந்து தான் தொழிலாளி வர்க்கம் வளர வேண்டுமென்பதில்லை. இரண்டும் இணைந்து, உலகத்தை வளர்க்கிற ஒரு போக்கு இருக்கிறது. தான் முக்கியம். பகைமையை வளர்ப்பது இலக்கியப் பண்பாகாது. கம்யூனிஸ்ட்கள் ஆட்சி அமைத்தால், அவர்களும் ஆளும் வர்க்கமாகி, இன்னும் சொல்லப் போனால் இன்னும் கொடிய ஆளும் வர்க்கமாகி விடுவார்கள். அதிலிருந்து அவர்கள் விடுபட்டிருக்கிறார்கள். கம்யூனிஸ ஆட்சி தான் அழிந்தது. கம்யூனிஸக் கருத்துகள் அழியவில்லை. கிழக்கு ஐரோப்பாவில் கம்யூனிஸம் அழிந்ததன் காரணம் பற்றிக் கேட்ட பொழுது கூறியது. சிறுகதை உரைநடையில் எழுதப் படுகிற கவிதை. கவிஞன் தான் சிறுகதை எழுத முடியும். கொட்டாவி விடும்போது என்னைப் படம் எடுத்து விட்டு எப்போதும் கொட்டாவி விட்டுக் கொண்டிருப்பேன் என்று நினைத்தால் தவறு. காலந்தோறும் மாற்றங்களை நாம் பார்க்கிறோம். நாமும் மாறிக்கொண்டே இருக்கிறோம். இடதுசாரி இயக்கத்தைச் சுயநலம் செல்லரித்துவிட்டது. மகத்தான சாதனை பெற்ற சுதந்திரத்தைப் பேணிக் காத்தது. மிகப் பெரிய சவாலும் அதுவே. குறுகிய மனப்பான்மையிலிருந்து வெளியே வரக் கற்றுக்கொள்ள வேண்டும். ஏனைய சமூகங்களின் ஆக்கபூர்வ விஷயங்கள் ஒவ்வொன்றையும் கற்றுக்கொள்ள வேண்டும். முக்கியமாக தமிழ் வெறியை விட்டொழிக்க வேண்டும். பிள்ளைகளைப் பள்ளிக்கூடம் அனுப்பாதீர்கள். பள்ளிக்கூடத்தில் படிப்பதால் எந்த நன்மையும் இல்லை. என்மகனைக் கூட நான், ஏண்டா பள்ளிக்கூடம் போகிறாய்? என்று தான் கேட்கிறேன். நான் கூடப் பள்ளிக்கூடம் போகவில்லை. நான் என்ன கெட்டா போய்விட்டேன்? நபர் குறித்த மேற்கோள்கள் வெளியிணைப்புக்கள் சான்றுகள் பகுப்பு இறந்த நபர்கள் பகுப்பு 1934 பிறப்புக்கள் பகுப்பு 2015 இறப்புக்கள் பகுப்பு தமிழ் எழுத்தாளர்கள்
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை அக்டோபர் 19, 1888 ஆகஸ்ட் 24, 1972 தமிழறிஞரும், கவிஞரும் ஆவார். கத்தியின்றி இரத்தமின்றி யுத்தமொன்று வருகுது போன்ற தேசபக்திப் பாடல்களைப் பாடிய இவர் தேசியத்தையும், காந்தியத்தையுயும் போற்றியவர். முதலில் பால கங்காதர திலகர் போன்றவர்களின் தீவிரவாதத்தால் ஈர்க்கப்பட்ட இவர் மகாத்மா காந்தியின் கொள்கைகளால் ஆட்கொள்ளப்பட்ட பின் அறப் போராட்டத்தால் மட்டுமே விடுதலையைப் பெறமுடியும் என்ற முடிவுக்கு வந்தவர். மேற்கோள்கள் தமிழன் என்றொரு இனம் உண்டு! தனியே அவர்க்கொரு குணம் உண்டு! சான்றுகள் வெளியிணைப்புக்கள் பகுப்பு இறந்த நபர்கள் பகுப்பு 1888 பிறப்புக்கள் பகுப்பு 1972 இறப்புக்கள் பகுப்பு தமிழறிஞர்கள் பகுப்பு கவிஞர்கள்
என் தமிழ் பற்று மிகுந்ததே அன்றிக் குறைந்திலா! தனிநாயகம் அடிகள் என்கிற வண. சேவியர் தனிநாயகம் . . , ஆகத்து 2, 1913 செப்டம்பர் 1, 1980 ஈழத்துத் தமிழறிஞர், கல்வியாளர். தமிழ், ஆங்கிலம் தவிர எசுப்பானியம், உரோம மொழி, போர்த்துகீசியம், பிரெஞ்சு முதலிய மொழிகளில் சரளமாக உரையாடவும் சொற்பொழிவாற்றவும் வல்லவர் ஆவார். மேற்கோள்கள் தரமான பாக்கள் ரிக் வேதத்தில் குறைவாகவே காணப்படுகின்றன. அவற்றை நோக்க சங்க இலக்கியப் பாக்கள் எவ்வளவோ மேல். என் தமிழ் பற்று மிகுந்ததே அன்றிக் குறைந்திலா! சான்றுகள் வெளியிணைப்புக்கள் பகுப்பு 1913 பிறப்புக்கள் பகுப்பு 1980 இறப்புக்கள் பகுப்பு தமிழறிஞர்கள் பகுப்பு இலங்கையர்கள்
சுஜாதா மே 3, 1935 பெப்ரவரி 27, 2008 தமிழகத்தின் குறிப்பிடத்தக்க எழுத்தாளர்களில் ஒருவராவார். இயற்பெயர் ரங்கராஜன். தனது தனிப்பட்ட கற்பனை மற்றும் நடையால் பல வாசகர்களை கவர்ந்துள்ளார். சுஜாதாவின் முதல் கதை 1953 ஆம் ஆண்டு சிவாஜி என்ற பத்திரிக்கையில் வெளிவந்தது. இவர் சிறுகதைகள், புதினங்கள், நாடகங்கள், அறிவியல் நூல்கள், கவிதைகள், கட்டுரைகள், திரைப்பட கதை வசனங்கள், தொலைக்காட்சி நாடகங்கள் எனப் பல துறைகளில் தன் முத்திரையினைப் பதித்தவர். மேற்கோள்கள் அண்டத்தில் தான் மட்டுமே ஒரே மனித இனம் என்ற எண்ணம் தரும் தனிமையுணர்வு, கோடானுகோடி கோளங்கள் பூமியைச் சுற்றி அனாதையாகச் சுற்றுவது என்பது மனிதனுக்கு மிகுந்த பிரயாசை தரும் எண்ணமாக இருக்கலாம். நபர் குறித்த மேற்கோள்கள் வெளியிணைப்புக்கள் சான்றுகள் பகுப்பு இறந்த நபர்கள் பகுப்பு 1935 பிறப்புக்கள் பகுப்பு 2008 இறப்புக்கள் பகுப்பு தமிழ் எழுத்தாளர்கள்
டென்சின் கியாட்சோ 2007 ஜெட்சுன் ஜம்பேல் ஙவாங் லொப்சாங் யெஷெ டென்சின் கியாட்சோ திபெத்திய மொழி , பிறப்பு லாமோ தொங்ருப் , ஜூலை 6, 1935 திபெத்தின் 14 தலாய் லாமா ஆவார். இவர் திபெத் மக்களின் ஆன்மீக அரசியல் தலைவர் ஆவார். இவர் உலக அரங்கில் ஒரு முக்கிய தலைவராகவும் பார்க்கப்படுகிறார். மேற்கோள்கள் திபெத் முழுவதையும் அமைதி மண்டலமாக அறிவிக்க வேண்டும். நேர்மறையான நடவடிக்கையை செயல்படுத்துவதற்கு, நேர்மறையான பார்வையை உருவாக்க வேண்டும். எப்போதெல்லாம் சாத்தியமாகிறதோ அப்போதெல்லாம் அன்பாக இருங்கள். இது எப்போதும் சாத்தியமாகும். சகிப்புத்தன்மையை கற்றுக்கொடுப்பதில் நடைமுறையில், ஒருவருடைய எதிரியே சிறந்த ஆசிரியராக இருக்கின்றார். நீங்கள் ஒரு குறிப்பிட்ட மதம் அல்லது நம்பிக்கை சார்ந்தவராக இருந்தால், நல்லது. ஆனால், அது இல்லாமலும் உங்களால் வாழமுடியும். கருத்து வேறுபாடு என்பது ஒரு சாதாரணமான விஷயம். மதம் மற்றும் தியானம் இல்லாமல் நம்மால் வாழமுடியும் ஆனால், மனித நேசம் இல்லாமல் நம்மால் வாழமுடியாது. நாம் நம்மிடம் அமைதியை ஏற்படுத்தாதவரை, நம்மால் வெளி உலகில் ஒருபோதும் அமைதியைப் பெறமுடியாது. தூக்கம் என்பது மிகச்சிறந்த தியானம் ஆகும். மகிழ்ச்சி என்பது ஏற்கெனவே தயாராக இருக்கும் விஷயமல்ல அது உங்கள் சொந்த நடவடிக்கைகளில் இருந்து வருவது. அறியாமை நமக்கு ஆசானாக இருக்கும் இடத்தில், உண்மையான அமைதிக்கான சாத்தியம் இல்லை. இந்த வாழ்க்கையில் நமது முதன்மையான நோக்கம், மற்றவர்களுக்கு உதவ வேண்டும் என்பதே. உங்களால் உதவ முடியவில்லை என்றால், குறைந்தது புண்படுத்தாமலாவது இருங்கள். கோயில்களுக்கு அவசியமில்லை, சிக்கலான தத்துவம் தேவையில்லை நமது சொந்த அறிவு மற்றும் இதயமே நமது கோயில், கருணையே தத்துவம். இதுவே எனது எளிய மதம். நமது வாழ்க்கையின் நோக்கம் மகிழ்ச்சியாய் இருக்க வேண்டும் என்பதே. அன்பு மற்றும் கருணை ஆகியவை ஆடம்பரமானவை அல்ல, அவசியமானவை. இவையில்லாமல் மனிதநேயம் தொடர்ந்து வாழமுடியாது. சான்றுகள் வெளியிணைப்புக்கள் பகுப்பு வாழும் நபர்கள் பகுப்பு 1935 பிறப்புக்கள்
வெற்றி மாறன் தமிழ்நாட்டைச் சேர்ந்த தமிழ்த் திரைப்பட இயக்குநர் ஆவார். இவரது முதல் திரைப்படமான பொல்லாதவன் நடப்பு நிலைக்கு மிக அண்மையாகப் படம்பிடித்துக் காட்டியதற்காக மிகவும் பாராட்டைப் பெற்றது. இவரது இரண்டாவது திரைப்படமான ஆடுகளம் 2011ஆம் ஆண்டுக்கான தேசியத் திரைப்பட விருதுகளில் சிறந்த இயக்குநர் மற்றும் சிறந்த திரைக்கதையாசிரியர் விருதுகளைப் பெற்றுத் தந்துள்ளது. இந்தத் திரைப்படத்திற்கு 6 தேசிய விருதுகள் கிடைத்துள்ளன. மேற்கோள்கள் விசாரணை என்னை வைத்து தன்னைத் தானே உருவாக்கிக் கொண்ட படம்னுதான் சொல்வேன். படத்துல எங்கெல்லாம் தங்களோட உணர்வுகளை வெளிப்படுத்த முடியுதோ, அங்கெல்லாம் கைதட்டுறாங்க. ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒரு ஸ்கிரிப்ட் ரைட்டருக்கு ஒரு பேட்டர்ன் சிக்கும். ஒரு ஸ்கிரிப்ட் எழுதி, அது திரைப்படமாக முழுமையடையும் முன்னர், இன்னொரு ஸ்கிரிப்ட எழுதினால், முதல் கதையில் இருந்து முக்கியமான சில விஷயங்கள் அடுத்த ஸ்கிரிப்டிலும் வரும். 'புத்தக வாசிப்பு, ஒருவனுக்கு என்ன கொடுத்துவிடும்?' என சிலர் கேட்பது உண்டு. பாலுமகேந்திரா போன்ற ஒரு பெருங்கலைஞனின் எதிரே அமர்வதற்கான இருக்கையை அதுதான் எனக்கு வாங்கித் தந்தது. நபர் குறித்த மேற்கோள்கள் வெளியிணைப்புக்கள் சான்றுகள் பகுப்பு வாழும் நபர்கள் பகுப்பு 1975 பிறப்புக்கள் பகுப்பு இயக்குனர்கள் பகுப்பு இந்தியர்கள்
கா. அப்பாத்துரை ஜூன் 24, 1907 மே 26, 1989 தமிழ்நாட்டு மொழியியல் வல்லுநர்களுள் ஒருவர். பன்மொழிப்புலவர் எனப் பெயர் பெற்றவர். அப்பாத்துரையாருக்கு தமிழ், மலையாளம், வடமொழி, இந்தி, ஆங்கிலம் ஆகிய ஐந்து மொழிகளிலும் சரளமாகப் பேசவும், படிக்கவும், எழுதவும் கூடியத் திறமை இருந்தது. மேற்கோள்கள் ஒருவனது மொழியை அவனது தாய்மொழி என்று அழைப்பது வெறும் அழகுக்காக அல்ல. அது பல்லாற்றானும் தாயினும் சிறந்தது என்பதால்தான்! தமிழ், தமிழ்மொழியாய், தமிழ்த் தாயாய், தமிழ்நாடாய், நாட்டு மக்களாய், மக்களின் வாழ்வாய் வாழ்வின் மலர்ச்சியாய் வளர்ந்து பொங்கிப் பெருகி வழிந்தோட வேண்டுமெனில் தெருவெல்லாம் தமிழ் முழக்கம் செய்தல் வேண்டும். சான்றுகள் வெளியிணைப்புக்கள் பகுப்பு இறந்த நபர்கள் பகுப்பு 1907 பிறப்புக்கள் பகுப்பு 1989 இறப்புக்கள் பகுப்பு தமிழறிஞர்கள்
பரிதிமாற் கலைஞர் வி. கோ. சூரியநாராயண சாஸ்திரியார், ஜூலை 6, 1870 நவம்பர் 2, 1903 ஒரு தமிழறிஞரும், நூலாசிரியரும், தனித்தமிழ் இயக்கத்தில் முதன்மையான பங்கு வகித்தவர்களில் ஒருவரும் ஆவார். இவர் உயரிய செந்தமிழ் நடையில் பேசுவதிலும் எழுதுவதிலும் வல்லவர். நாடகப் புலமை சான்றவர். மேற்கோள்கள் பலமொழிகட்குத் தலைமையும், மிக்க மேதமையும் உடைய மொழி உயர்மொழி, தனித்து இயங்க வல்ல ஆற்றல் சார்ந்தது தனிமொழி. திருந்திய பண்பும், சீர்த்த நாகரிகமும் பொருந்திய தூய்மொழி செம்மொழி. ஆயின் தமிழ் உயர் தனிச் செம்மொழியாம். சான்றுகள் வெளியிணைப்புக்கள் பகுப்பு இறந்த நபர்கள் பகுப்பு 1870 பிறப்புக்கள் பகுப்பு 1903 இறப்புக்கள் பகுப்பு தமிழறிஞர்கள்
சமுத்திரக்கனி தமிழ்த் திரைப்பட இயக்குநரும், நடிகரும், தொலைக்காட்சி நாடக இயக்குநரும் ஆவார். மேற்கோள்கள் நபர் குறித்த மேற்கோள்கள் சமுத்திரகனியோட நடிப்பு இந்தப் படத்துல ரொம்ப சவாலான வேலை. கெட்டவனாவோ நல்லவனாவோ நடிக்கிறது சுலபம். ரெண்டுக்கும் நடுவுல இருக்குற ஒரு மனுசனோட தடுமாற்றம், வசனங்களே இல்லாம நடை, பாவனையில் மட்டுமே வெளிப்படுத்தவேண்டிய கட்டாயம், அதையும் எளிதா பண்ணிருந்தது தான் விருது கிடைப்பதற்கான காரணமா நினைக்கிறேன். விசாரணை படத்திற்காக சமுத்திரகனிக்கு தேசிய விருது கிடைத்து பற்றி வெற்றிமாறன் கூறியது. வெளியிணைப்புக்கள் சான்றுகள் பகுப்பு வாழும் நபர்கள் பகுப்பு 1973 பிறப்புக்கள் பகுப்பு தமிழ் திரைப்பட நடிகர்கள் பகுப்பு இயக்குனர்கள்
உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன் பிறப்பு 1938, மட்டக்களப்பு, இயற்பெயர் காத்தமுத்து சிவானந்தன் ஈழத்து எழுச்சிக் கவிஞர். இளைஞனாக இருந்த காலத்திலேயே சிங்கள ஆதிக்க வெறியர்களினதும் அரசினதும் அடக்குமுறைகள் மற்றும் ஆட்சி நடைமுறைகளுக்கு எதிராக போராட்டம் செய்தவர். மேற்கோள்கள் இருப்பாய் தமிழா நெருப்பாய்! இதுவரை இருந்தது போதும் செருப்பாய்! சான்றுகள் வெளியிணைப்புக்கள் பகுப்பு நபர்கள் பகுப்பு 1938 பிறப்புக்கள் பகுப்பு கவிஞர்கள் பகுப்பு இலங்கையர்கள்
தமிழ் மொழியின் சிறப்பு பற்றி பலரும் பல கருத்துக்களை கூறியுள்ளனர். அவற்றில் சில. மேற்கோள்கள் தமிழ்மொழி இலக்கியத்தின் நிலைக்களன் இசையில் இனிய ஊற்று நாடகத்தின் நலங்கொழிக்கும் நன்மொழி! பேராசிரியர் க. அன்பழகன் தமிழன் என்றொரு இனம் உண்டு! தனியே அவர்க்கொரு குணம் உண்டு! நாமக்கல் கவிஞர் எத்திசையும் புகழ் மணக்க இருந்த பெருந் தமிழ் அணங்கே! உன் சீரிளமைத் திறம் வியந்து செயல் மறந்து வாழ்த்துவோம். பேராசிரியர் சுந்தரம்பிள்ளை இருப்பாய் தமிழா நெருப்பாய்! இதுவரை இருந்தது போதும் செருப்பாய்! கவிஞர் காசி ஆனந்தன் பலமொழிகட்குத் தலைமையும், மிக்க மேதமையும் உடைய மொழி உயர்மொழி, தனித்து இயங்க வல்ல ஆற்றல் சார்ந்தது தனிமொழி. திருந்திய பண்பும், சீர்த்த நாகரிகமும் பொருந்திய தூய்மொழி செம்மொழி. ஆயின் தமிழ் உயர் தனிச் செம்மொழியாம். பரிதிமாற் கலைஞர் பாவேந்தர் பாரதிதாசன் தமிழ் எங்கள் உயர்வுக்கு வான் இன்பத் தமிழ் எங்கள் அசதிக்கு சுடர் தந்த தேன்! தீங்கு நேர்ந்திடில் தமிழர்க்கே இந்தத் தேகம் இருந்தொரு லாபமுண்டோ? தமிழுக்கு நிலவென்று பேர் இன்பத் தமிழ் எங்கள் சமூகத்தின் விளைவுக்கு நீர் தமிழ் என்று தோள் தட்டி ஆடு நல்ல தமிழ் வெல்க வெல்கவென்றே தினம் பாடு இனிமைத் தமிழ்மொழி எமது எமக்கு இன்பந்தரும்படி வாய்த்த நல் அமுது! கெடுதல் எங்கே தமிழின் நலம் அங்கெல்லாம் தலையிட்டுக் கிளர்ச்சி செய்க! தனிமைச் சுவையுடைய சொல்லை எங்கள் தமிழினும் வேறெங்கும் யாம் கண்டதில்லை! தமிழ் எங்கள் இளமைக்குப் பால் இன்பத் தமிழ் நல்ல புலவர்க்கு வேல் தமிழ் எங்கள் உயிர் என்பதாலே வெல்லுந் தரமுண்டு தமிழர்க்கு இப்புவி மேலே! தமிழுக்கும் அமுதென்று பேர் அந்தத் தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! எளிமையினால் ஒரு தமிழன் படிப்பில்லையயன்றால் இங்குள்ள எல்லோரும் நாணிடவும் வேண்டும்! வெங்குருதி தனிற்கமழ்ந்து வீரஞ்செய்கின்ற தமிழ் எங்கள் மூச்சாம் இன்பத்தமிழ்க்கல்வி யாவரும் கற்றவர் என்றுரைக்கும் நிலை எய்திவிட்டால் துன்பங்கள் நீங்கும், சுகம் வரும் நெஞ்சினில் தூய்மையுண்டாகிடும், வீரம் வரும்! எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு! தொண்டு செய்வாய் தமிழுக்கு துறை தோறும், துறை தோறும் துடித்தெழுந்தே! எங்கள் தமிழ் உயர்வென்று நாம் சொல்லிச் சொல்லித் தலைமுறைகள் பல கழித்தோம் குறை களைந்தோமில்லை தகத் தகாயத் தமிழைத் தாபிப்போம் வாரீர்! என்றும் தமிழ் வளர்க கலை யாவும் தமிழ் மொழியால் விளைந்தோங்குக! இன்பம் எனப்படுதல் தமிழ் இன்பம் எனத் தமிழ் நாட்டினர் எண்ணுக! வெளியிணைப்புக்கள் பகுப்பு கருப்பொருட்கள்
தனுஷ் தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவராவார். செல்வராகவனின் இயக்கத்தில் வெளியான அவரது முதற் திரைப்படமான துள்ளுவதோ இளமையில் தமிழ்த் திரையுலகிற்கு அறிமுகமானார். பாரிய வெற்றி பெற்ற இத்திரைப்படத்தைத் தொடர்ந்து தனுஷ் செல்வராகவனின் இயக்கத்தில் நடித்த காதல் கொண்டேன் திரைப்படமும் ஒரு வெற்றிப்படமாக அமைந்தது. இத்திரைப்படத்தின் மூலமாக, தனுஷ் ஒரு சிறந்த நடிகர் என்ற பாராட்டையும் பெற்றுக் கொண்டார். இதன் பிறகு வெளியான திருடா திருடி மற்றும் தேவதையைக் கண்டேன் போன்ற திரைப்படங்களின் மூலமாக தனது திரையுலக செல்வாக்கை நிலைநிறுத்திக் கொண்டார். இவர் ஆடுகளம் படத்தில் சிறப்பாக நடித்ததற்காக 2011ல் சிறந்த நடிகருக்கான இந்திய தேசிய விருதைப் பெற்றார். மேற்கோள்கள் 24 மணி நேரமும் நமக்காக ஒரு ஜீவன் வேண்டிட்டு இருக்கிறது என்றால் அது தாய் தான் நபர் குறித்த மேற்கோள்கள் வெளியிணைப்புக்கள் சான்றுகள் பகுப்பு வாழும் நபர்கள் பகுப்பு 1983 பிறப்புக்கள் பகுப்பு தமிழ் திரைப்பட நடிகர்கள் பகுப்பு தயாரிப்பாளர்கள்
அன்னை சாரதா தேவி ஆங்கிலம் , வங்காள இந்த ஒலிக்கோப்பு பற்றி கேட்க 22 திசம்பர் 1853 20 சூலை 1920 , ஆன்மிகவாதியும், இராமகிருஷ்ணரின் மனைவியும் ஆவார். இராமகிருஷ்ண இயக்கத்தின் வளர்ச்சிக்கு முக்கியத் தூணாக இருந்தவர். மேற்கோள்கள் இல்லறத்தாருக்கும் துறவறத்தாருக்கும் பிரம்மச்சாரியம் அவசியம். ஏனெனில் உடல் மீதான ஆசை ஒழிந்தாலன்றி ஆத்மானந்தம் கிடையாது. வெளியிணைப்புக்கள் பகுப்பு இறந்த நபர்கள் பகுப்பு 1853 பிறப்புக்கள் பகுப்பு 1920 இறப்புக்கள் பகுப்பு ஆன்மிகவாதிகள்
ஜான் மில்டன் 6 திசம்பர் 1608 8 நவம்பர் 1674 புகழ்பெற்ற ஆங்கிலக் கவிஞர். தன்னுடைய கவித்திறன் மூலம் இங்கிலாந்து மக்களுக்கு அரசியல் விழிப்புணர்வை ஊட்டி மன்னராட்சி மகுடத்தை வீழ்த்துவதற்குத் துணை புரிந்தவர் மில்டன். டிசம்பர் 9, 2008 மில்டனின்400வது பிறந்த தினம். உலகம் முழுவதும் உள்ள இலக்கிய ஆர்வலர்களுக்கு மில்டனின் கவித்திறன் ஆதர்சமாய் விளங்குகிறது. இவரது மேற்கோள்கள் அமரத்துவம் மண்கட்டியாகிய இந்த உடலுடன் இறைவன் அருளிய ஆன்மா அழிந்துவிடுவதில்லை. அமைதி அமைதிக்கும் வெற்றிகள் உண்டு. அவை போரின் வெற்றிகளைவிடப் புகழில் குறைந்தவை அல்ல. அறிவுடைமை நமக்கு முன்னால் தினசரி வாழ்க்கையில் காணப்பெறும் பொருள்களைத் தெரிந்துகொள்வதே முக்கியமான அறிவு இதற்கு மேற்பட்டனவெல்லாம் புகை அல்லது வெறுமை அல்லது அதிகம் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற ஆர்வமேயாகும். இவை நமக்கு முக்கியமாகத் தேவையுள்ள விஷயங்களில் நமக்குப் பழக்கமில்லாமலும் நம்மைத் தயாரித்துக்கொள்ள வாய்ப்பில்லயலும் செய்துவிடும். கடவுள் எங்கும் பார்க்கக்கூடிய இறைவனுடைய கண்ணிலிருந்து எது தப்பியிருக்க முடியும்? எது அவன் உள்ளத்தை ஏமாற்ற முடியும்? அவன் எல்லாம் அறிந்தவன். கபடம் கடவுளைத் தவிர வேறு எவரும் காணமுடியாதபடி உலவும் தீமை பாசாங்கு ஒன்றுதான். கல்வி சொந்தக் காரியம் பொதுக் காரியம் எல்லாவற்றையும் நியாயமாயும் சாமர்த்தியமாயும் பெருந்தன்மையாயும் செய்யக் கற்றுக் கொடுப்பதே பரிபூரணமான கல்வியாகும். கவிதை உயர்ந்த கவிதையை சிருஷ்டிக்க விரும்புபவன் தன் வாழ்வு முழுவதையுமே ஒரு உன்னதக் கவிதையாக ஆக்கிக்கொள்ளக் கடவன். குழந்தை காலை நேரம் ஒரு நாளைக் காட்டுவது போல, குழந்தை பின்னால் வளரும் மனிதனைக் காட்டுகின்றது. கூட்டம் அவர்கள் சுதந்தரம் என்று கூவும் பொழுது தங்கள் இஷ்டம் போல் நடக்கும் உரிமையையே கோருகின்றனர். சீர்திருத்தம் நரகத்திலிருந்து ஒளிமயமான பிரதேசத்திற்குச் செல்ல வேண்டுமானால், வழி நீளமாயும் கஷ்டமாயுமே இருக்கும். சுதந்திரம் மற்ற சுதந்தரங்களைக்காட்டிலும் எனக்கு அறிவு பெறவும், சிந்தனை செய்யவும், நம்பிக்கை கொள்ளவும், மனச்சாட்சியின்படி நினைத்ததைப் பேசவும் உரிமை தேவை. எங்கே சுதந்தரம் உளதோ, அது என் நாடு. செல்வம் அறிவிலார் செல்வம் பெற அரும்பாடுபடுவர் அறிஞர்க்கோ அது மாயவலையாக இல்லாவிடினும் பெரும் பாரமாகவே இருக்கும். நரகம் மனம் தன் இடத்தில் இருந்துகொண்டே சுவர்க்கத்தை நரகமாக்கிக்கொள்ளும், நரகத்தைச் சுவர்க்கமாக்கிக்கொள்ளும். நேரம் மணிகளுக்குச் சிறகுகள் உண்டு. அவை காலத்தை ஏற்படுத்ரியவரிடம் சென்று. நாம் அவைகளை எப்படி உபயோகித்தோம் என்பதைதைத் தெரிவிக்கும். நேர்மையின்மை உலகில் யாரும் அறியாதபடி உலவும் தீமை வஞ்சக நடை ஒன்றே. அதை ஆண்டவன் மட்டுமே அறிவான். நூல்கள் நூலை உண்டாக்கியவருடைய ஆன்மாவைப் போலவே நூலும் உயிராற்றல் உடையதாகும். மனிதனைக் கொல்பவன் அறிவுள்ள பிராணியை ஆண்டவன் பிம்பத்தைக் கொல்கிறான். ஆனால் புஸ்தகத்தைக் கொல்பவனோ அறிவை ஆண்டவன் பிம்பத்தின் கண்ணைக் குத்திக் கொல்பவனாகிறான். பழிவாங்குதல் பழிவாங்குதல் ஆரம்பத்தில் இனிக்கும். ஆனால், சிறிது போதில் கசப்பாக மாறிவிடும். அது எய்தவனையே திரும்பிவந்து கொல்லும் அம்பாகும். மன நிறைவு மனம் கொண்டது மாளிகை நரகத்தைச் சொர்க்க மாக்குவதும் சொர்க்கத்தை நரகமாக்குவதும் அதுவே. மெய்யறிவு தினசரி வாழ்க்கையில் நமது கண்முன்னால் நடப்பதை அறிந்து கொள்வது முக்கியமான அறிவாகும். வஞ்சகம் நம்பிக்கை குறையும் போது ஒவ்வொரு மனிதனும் நெறியற்ற கொள்கையை மேற்கொள்கிறான். வன்முறை பலாத்காரத்தினால் வெல்பவன் பாதி எதிரியைத் தான் வெல்கிறான். வாழ்க்கை வாழ்க்கையைக் காதலிக்கவும் வேண்டாம். வெறுக்கவும் வேண்டாம் அது எவ்வளவு காலம் நீண்டிருக்க வேண்டும் அல்லது குறைந்திருக்க வேண்டும் என்பதை இறைவனுக்கு விட்டுவிடுங்கள். வீடுபேறு அறம் விரும்பு அதுவே வீடு. நபர்குறித்த மேற்கோள்கள் உலகத்திலுள்ள மில்டனின் புத்தகங்களையெல்லாம் எரித்து விட்டால் கூட, என் ஞாபக சக்தியைக் கொண்டு, மீணடும், அவைகளை அப்படியே எழுதிவிடுவேன். லார்டு மெக்காலே சான்றுகள் வெளியிணைப்புக்கள் பகுப்பு இறந்த நபர்கள் பகுப்பு 1608 பிறப்புக்கள் பகுப்பு 1674 இறப்புக்கள் பகுப்பு கவிஞர்கள்
இராமானுசர் இராமானுஜர், 1017 1137 இந்து தத்துவப் பிரிவுகளில் ஒன்றான வேதாந்தத்தின் விளக்கங்களில் ஒன்றான விசிஷ்டாத்துவைதத்தின் முன்னோடியாக விளங்கினவர். அண்மைக்காலத்தில் அறிஞர்கள், இவரது பிறப்பு இன்னும் 20 60 ஆண்டுகள் வரை பிந்தியதாக இருக்கும் எனக் கருதுகிறார்கள். இவரது இறப்பும் 20 ஆண்டுகள் வரை பிந்தியே நிகழ்ந்திருக்க வேண்டுமென்பதும் சிலரது கருத்து. மேற்கோள்கள் உயிருள்ளவை, உயிரற்றவை இரண்டுமே ஈசுவரனை பற்றி கொண்டு தான் இயங்குகின்றன. பிரம்மத்தை நேராக உய்த்துவரும் அனுபவமே 'உபாசனை' எனப்படும். சான்றுகள் வெளியிணைப்புக்கள் பகுப்பு இறந்த நபர்கள் பகுப்பு 1017 பிறப்புக்கள் பகுப்பு 1137 இறப்புக்கள் பகுப்பு ஆன்மீகவாதிகள்
ஆஸ்கார் வைல்டு ஆஸ்கார் வைல்டு , 16 அக்டோபர் 1854 30 நவம்பர் 1900 ஒரு ஐரிய நாடகாசிரியரும், எழுத்தாளரும், கவிஞரும் ஆவார். இவர் எண்ணற்ற சிறுகதைகளையும் ஒரு புதினத்தையும் எழுதியுள்ளார். நகைத்திறம் வாய்ந்த எழுத்துக்களுக்காக மிகவும் அறியப்பட்ட இவர், விக்டோரியாக் காலத்தில் இலண்டனில் மிகவும் வெற்றிகரமான நாடகாசிரியராக விளங்கியதுடன், அக்காலத்துப் பிரபலங்களுள் ஒருவராகவும் விளங்கினார். மேற்கோள்கள் தானாக இருந்து, தனக்கு உண்மையாய் நடந்து, தன்னிடம் பரிபூரண நம்பிக்கை கொண்டவனே உண்மையான கலைஞன். உலகம் எனக்குக் கெடுதல் செய்திருந்த போதிலும், நான் எனக்குச் செய்து கொண்ட கெடுதல் அதைவிடக் கொடியது. 1895 என் காலத்தின் கலைக்கும் ஓர் வளர்ச்சிச் சின்னமாக நான் இருந்தேன். காளைப் பருவத்தில் இதை நான் உணர்ந்து, என் முதிய பருவத்திலும் இதை நன்றாய் அறியும்படி கட்டாயம் நிகழ்ந்தது. தன் வாழ்நாளில் உயர்ந்த நிலையில் என்னப்போல் வாழ்ந்து உண்மைகளை அறிந்தவர்கள் மிகச்சிலரே இருக்கக்கூடும். சாதாரண சிறையில், சாதாரண கைதியாக நான் அடைந்த நிலையைப் பற்றி நான் வெட்கப்பட வேண்டியதேயில்லே. இது எனக்கு ஏற்பட்ட தண்டனையே. தண்டனையைப் பற்றி வெட்கப்படுவதில் என்ன பொருள் இருக்கிறது? என்னுடைய வாழ்க்கையில், நான் செய்யாத குற்றத்திற்காகவும் தண்டித்திருக்கிறார்கள். செய்த குற்றத்திற்காகவும் தண்டித்துமிருக்கிறார்கள். அநேக சந்தர்ப்பங்களில், நான் செய்த குற்றங்களுக்குத் தண்டிக்கப்படாமலும் வந்திருக்கிறேன். நானே என்னைக் கெடுத்துக் கொண்டதாகத்தான் சொல்லவேண்டும். எந்த நிலையிலுள்ளவனும், பெரிய பதவியிலிருந்தாலும் சரி, சிறுபதவியிலிருந்தாலும் சரி, தன் செய்கையினலேதான் கெட்ட நிலையை அடைய முடியும். இந்த உண்மையைச் சொல்ல நான் தயாராக இருக்கிறேன். மற்றவர்கள் எப்படி நினைத்தாலும் சரி, நான் சொல்லுவதும் உண்மையே. இந்த நிமிடத்தில் மற்றவர்கள் இதை ஒப்புக் கொள்ளாமலிருக்கலாம். நான் இரக்கமற்று இந்தக் குற்றத்தை என் தலையிலே சுமத்திக் கொள்ளுகிறேன். உலகம் எனக்குக் கெடுதல் செய்திருந்த போதிலும், நான் எனக்கு செய்து கொண்ட கெடுதல் அதைவிடக் கொடிது. சான்றுகள் வெளியிணைப்புக்கள் பகுப்பு இறந்த நபர்கள் பகுப்பு 1854 பிறப்புக்கள் பகுப்பு 1900 இறப்புக்கள் பகுப்பு எழுத்தாளர்கள் பகுப்பு கவிஞர்கள்
சால்வடோர் கியேர்மோ அயேந்தே , 26 சூன் 1908 11 செப்டம்பர் 1973 என்பவர் சிலி நாட்டு மார்க்சிய அரசியல்வாதியும், மருத்துவரும் ஆவார். இலத்தீன் அமெரிக்க நாடொன்றில் மக்களால் தெரிவு செய்யப்பட்ட முதலாவது மார்க்சிய அரசுத்தலைவர் என இவர் அறியப்படுகிறார். மேற்கோள்கள் புறப்பொருள் மூலம், ஆன்மிக அழகை புலப்படுத்துவதே கலை. சான்றுகள் வெளியிணைப்புக்கள் பகுப்பு இறந்த நபர்கள் பகுப்பு 1908 பிறப்புக்கள் பகுப்பு 1973 இறப்புக்கள் பகுப்பு அரசியல்வாதிகள்
ரஸ்கின் பாண்ட் ரஸ்கின் பாண்ட் , பி. மே 19, 1934 பிரித்தானிய வம்சாவளியில் பிறந்த ஒரு இந்திய எழுத்தாளராவார். 1 ஆங்கிலத்தில் எழுதும் இந்திய எழுத்தாளர்கள் மற்றும் குழந்தைகளுக்கான எழுத்தாளர்கள் ஆகியோரிடையே ஒரு தனிப்பெரும் முன்னோடியாகக் கருதப்படுகின்றார். மேற்கோள்கள் கலை ஒரு ஆன்மா, மற்றொரு ஆன்மாவுடன் உரையாடும் சங்கேத மொழியாகும். கல்வி என்பது தெரியாததைத் தெரியச் செய்வதன்று ஒழுக்கத்தை ஒழுகச் செய்வதும் இன்பம் அளிப்பதுமாகும்! 'உதவி செய்க' என்பதே உலகின் உயர்ந்த ஆதி விதி. அதுவே வாழ்வுக்கு மறுபெயர். மரணத்துக்கு மறுபெயர் 'பிரிந்திரு' என்பதே. சான்றுகள் வெளியிணைப்புக்கள் பகுப்பு வாழும் நபர்கள் பகுப்பு 1934 பிறப்புக்கள்
வாசிங்டன் இர்விங் ஏப்ரல் 3, 1793 நவம்பர் 28, 1859 என்பவர் அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு எழுத்தாளர் ஆவார். இவர் ரிப் வான் விங்கிள் 1819 மற்றும் தி லெஜென்ட் ஆஃப் ஸ்லீபி ஹாலோ 1820 போன்ற தனது புகழ் பெற்ற சிறுகதைகளுக்காக அறியப்படுகிறார். ஜார்ஜ் வாசிங்டன், ஆலிவர் கொல்ட்ஸ்மித், முகமது போன்றவர்களின் வாழ்க்கை வரலாறுகள், கிரிஸ்டொபர் கொலம்பஸ், சோனகர்கள் மற்றும் ஆலம்பரா ஆகியோரைப் பற்றிய வரலாறுகள் இவரது வரலாற்றுப் படைப்புகளாகக் கருதப்படுகின்றன. இவர் 1842 முதல் 1846 வரை ஸ்பெய்னின் அமெரிக்கத் தூதராகவும் பணியாற்றியுள்ளார். மேற்கோள்கள் அன்புள்ள இதயம் இன்பத்தின் ஊற்று அதைச் சுற்றியுள்ளவர்களின் முகங்களெல்லாம் புன்னகையுடன் விளங்கும். நாவடக்கம் உபயோகிக்க உபயோகிக்க அதிகக் கூர்மை பெறும் ஆயுதம் தீய நா ஒன்றே. தலைசிறந்த அழகியைக்காட்டிலும், புற அழகிலே குறைந்த, ஆனால், அறிவும் புத்திக் கூர்மையும் மிகுந்த ஒரு பெண் என்னை அதிகமாய்க் கவர்ந்துவிடுகிறாள் உள்ளேயிருக்கும் தெய்வத் தன்மையே வெளியேயுள்ள தெய்வத் தன்மைக்குக் காரணமாயுள்ளது. அன்புள்ள இதயத்தின் ஊற்று. அதைச் சுற்றியுள்ளவர்களின் முகங்களெல்லாம் புன்னகையுடன் விளங்கும். சான்றுகள் வெளியிணைப்புக்கள் பகுப்பு இறந்த நபர்கள் பகுப்பு 1793 பிறப்புக்கள் பகுப்பு 1859 இறப்புக்கள் பகுப்பு எழுத்தாளர்கள்
இன்பம் என்பது வாழ்வின் முதன்மைக் குறிக்கோள்களில் ஒன்று. வாழ்வில் இன்பத்திற்கு புறக் காரணிகள் முக்கிய கூறுகளாக அமைந்தாலும், இன்பம் முதன்மையாக ஒர் அக உறுதிப் பொருளே. இன்பம் உன்னத மகிழ்ச்சி மனநிறைவு கொண்ட ஒர் உணர்ச்சி. இன்பத்தினைச் சிற்றின்பம், பேரின்பம் என இரண்டு வகையாக பண்டைய தமிழ் இலக்கியங்கள் பிரித்துக் குறிப்பிட்டுள்ளன. மேற்கோள்கள் இன்பம் என்கிறபொழுது ஒருவனும் ஒருத்தியுமாக கலந்து பெறும் புலனின்பமே ஆகும். சோ. ந. கந்தசாமி அன்புள்ள இதயம் இன்பத்தின் ஊற்று அதைச் சுற்றியுள்ளவர்களின் முகங்களெல்லாம் புன்னகையுடன் விளங்கும். வாசிங்டன் இர்விங் இன்பம் வரும்போது அதைப் பற்றி சிந்தனை செய்யாதே. அது போகும் போது அதைப் பற்றி சிந்தனை செய். அரிஸ்டாட்டில் கல்வி என்பது தெரியாததைத் தெரியச் செய்வதன்று ஒழுக்கத்தை ஒழுகச் செய்வதும் இன்பம் அளிப்பதுமாகும்! ரஸ்கின் பாண்ட் இம்மையில் தம்மை இயக்க இன்பம் தரும் ஒர் இலக்கு வேண்டும். பெ. சுந்தரம் பிள்ளை இன்பத்தையும், ஓய்வையும் தேடி அலைந்து கொண்டிருக்காதீர்கள் அப்படி, நீங்கள் ஒரு வேளை அடைந்தால் அவை நிச்சயமாக உங்களது கைப்பிடிக்குள் அகப்படாது. கான்பூசியசு தான் மகிழ்ச்சியாயிருப்பதாக ஒருவன் எண்ணிலாலன்றி ஒரு மனிதன் இன்பமாயிருப்பதாகச் சொல்ல முடியாது. மார்க்கஸ் அன்டோனியஸ் இன்பத்தை ஒழுக்கத்தின்மீதுதான் அமைக்க முடியும். அடிப்படையில் சத்தியம் இருக்க வேண்டும். காலெரிட்ஜ் இன்பம் நமக்கு உள்ளே மட்டும் இருப்பதில்லை. அல்லது வெளியே இருப்பதில்லை அது இறைவனுடன் நாம் ஐக்கியப்படுவதாகும். நமக்கு எவ்வளவு இருக்கிறது என்பதைப் பொறுத்தன்று. நாம் எவ்வளவை அனுபவிக்கிறோம் என்பதைப் பொறுத்தது நம் இன்பம் ஸ்பர்ஜியன் வாழ்க்கையில் நிகழ்ச்சிகள் எத்தகையவை என்பதைவிட அவைகளை நாம் எப்படி ஏற்றுக்கொள்கிறோம் என்பதைப் பொறுத்தது இன்பம். ஹம்போல்ட் இன்பம் நம் ஆசைகள் நிறைவேறுவதிலும், நாம் நியாயமான ஆசைகளை மட்டும் வைத்திருப்பதிலும் உள்ளது. அகஸ்டின் எந்த மனிதனையும், அவனுடைய வாழ்க்கையின் முடிவை அறியுமுன். மகிழ்ச்சியுள்ளவன் என்று கூற வேண்டாம். அதுவரை அவனை அதிருஷ்டசாலி என்று வேண்டுமானால் கருதிக்கொள்ளலாம். ஹிரோடோட்டஸ் இன்பம் வாழ்க்கையின் இலட்சியமன்று. குணமே இலட்சியம் பீச்சர் பூரணமாக உழைத்துக்கொண்டேயிருந்த எந்த மனிதனும் மிகவும் வருந்தத்தக்க நிலையை அடைந்ததில்லை. லாண்டன் எந்த மனிதன் தன் வாழ்க்கையின் இறுதியையும் தொடக்கத்தையும் இணைக்கும் தொடர்பை அறிந்துள்ளானோ அவனே இன்பமான மனிதன். கதே உன்னைவிட அதிருஷ்டம் குறைந்தவனிடம் உன் இன்பத்தைப்பற்றிப் பேச வேண்டாம். புளுடார்க் இடமும், நிலைமையும் முக்கியமல்ல மனம் மட்டுமே ஒருவனை இன்புறவோ, துன்புறவோ செய்கின்றது. லா எஸ்டிரேஞ்ச் வெளியிணைப்புக்கள் பகுப்பு உணர்வுகள்
முகம்மது அலி ஜின்னா முகம்மது அலி ஜின்னா உருது ஒரு இசுலாமிய அரசியல்வாதி ஆவார். அகில இந்திய முஸ்லிம் லீக் கட்சியில் ஒரு தலைவராக இருந்த ஜின்னா இந்தியா பிரிக்கப்பட்டு, பாகிஸ்தான் என்ற தனிநாடு ஏற்பட்ட பின் அந்த நாட்டின் தந்தையார் பாபா ஏ கௌம் என்றழைக்கப்படுகிறார். மேற்கோள்கள் தண்டிக்கச் சக்தி உடையவன் தான் மன்னிக்க இயலும். சான்றுகள் வெளியிணைப்புக்கள் பகுப்பு இறந்த நபர்கள் பகுப்பு 1876 பிறப்புக்கள் பகுப்பு 1948 இறப்புக்கள்
மைக்கலாஞ்சலோ டி லொடோவிக்கோ புவோனரோட்டி சிமோனி , மார்ச் 6, 1475 பெப்ரவரி 18, 1564 ஒரு இத்தாலிய மறுமலர்ச்சிக் கால ஓவியரும், சிற்பியும், கவிஞரும்,கட்டிடக்கலைஞருமாவார். இவர் மைக்கலாஞ்சலோ எனப் பொதுவாக அறியப்படுகிறார். இவரது கலைசார்ந்த பல்துறைத் திறமையின் உயர்ந்த தரம் காரணமாகச் சமகாலத்தவரான லியொனார்டோ டா வின்சியுடன் சேர்த்து இவரும் மறுமலர்ச்சிக் காலத் தந்தையெனக் கணிக்கப்படுகின்றார். மேற்கோள்கள் அற்ப விஷயம் அற்ப விஷயங்கள் நிறைவை உண்டாக்கும். ஆனால், நிறைவு அற்பமானதன்று. கடவுள் ஏதேனும் பழுதிலாத ஒன்றை இயற்ற முயல்வதைப்போல் ஆன்மாவைப் புனிதமாக்குவதும் சமயவாழ்வு வாழச் செய்வதுமானது வேறெதுவும் இல்லை. ஏனெனில் பரிபூரணமே கடவுள். அதனால் பூரணத்தை நாட முயல்பவன் கடவுள் தன்மையை நாடுபவனாவான். கலை தெய்விகப் படைப்பின் நிழல்தான் உண்மையான கலைப் படைப்பு. கல்வி சலவைக்கல் தேய்ந்து கொண்டே போகும், சிலை வளர்ந்து கொண்டே வரும். கவிதை அனாவசியமாக அதிகமாயிருப்பவற்றை அகற்றுவதே அழகு எனப்படுவதாகும், சான்றுகள் வெளியிணைப்புக்கள் பகுப்பு இறந்த நபர்கள் பகுப்பு 1475 பிறப்புக்கள் பகுப்பு 1564 இறப்புக்கள் பகுப்பு ஓவியர்கள் பகுப்பு கவிஞர்கள்
டான்டே அலிகியேரி, ஆல் வரையப்பட்ட இவ்வோவியம் புளொரன்சில் உள்ள பார்கெலோ மாளிகைச் சிற்றாலயத்தில் உள்ளது. டாண்டேயின் மிகப் பழமையான இந்த ஓவியம் அவர் வாழ்ந்த காலத்தில் வரையப்பட்டது. டான்டே அலிகியேரி என அழைக்கப்படும் துரான்டே டெக்லி அலிகியேரி மே ஜூன் 1265 செப்டெம்பர் 14, 1321 மத்திய காலத்துப் புளோரன்சைச் சேர்ந்த ஒரு கவிஞர் ஆவார். இவருடைய முக்கியமான ஆக்கமான "டிவினா காமெடியா" இத்தாலிய மொழியில் எழுதப்பட்ட மிகச் சிறந்த ஆக்கமும், உலக இலக்கியத்தின் சிறந்த ஆக்கங்களில் ஒன்றுமாகும். மேற்கோள்கள்கள் அறிவீனம் உண்டென்றோ அல்லது இல்லையென்றோ பகுத்தறியாது பகர்வோரே மூடர்கள், அனைவரிலும் தாழ்ந்தவர். கலை கலை, அதன் சக்திக்குத் தகுந்தபடி இயற்கையைப் பின்பற்றிச் செல்கிறது. சுதந்திரம் மனித சமுகம் எப்பொழுது மிக அதிகமான அளவில் சுதந்தரம் பெற்றுள்ளதோ, அப்பொழுதுதான் உச்ச நிலையில் விளங்கும். புகழ் உலகத்தின் புகழ், காற்றைப் போன்றது. ஒரு சமயம் இந்தப் புறமாக வீசும், பிறகு, அந்தப் புறமாக வீகம், திசை மாறும் பொழுதெல்லாம் அதன் பெயரும் மாறிவிடும். சான்றுகள் வெளியிணைப்புக்கள் பகுப்பு இறந்த நபர்கள் பகுப்பு 1265 பிறப்புக்கள் பகுப்பு 1321 இறப்புக்கள் பகுப்பு கவிஞர்கள்
மனம் என்பது, சிந்தனை, நோக்கு, உணர்ச்சி, மன உறுதி, கற்பனை போன்றவற்றில் வெளிப்படுகின்ற அறிவு மற்றும் உணர்வுநிலை சார்ந்த அம்சங்களின் தொகுப்பைக் குறிக்கிறது. மேற்கோள்கள் உன் மனதில் எதை பதிய வைக்கிறாயோ அப்படியே உன் உடல் செயல்படும் பிரபஞ்சம் அப்படியே இயங்கும். மனம் அறிய உண்மையாக வாழ்வது நேர்மையான வாழ்வாகும். ஔவையார் மனதில் ஒன்றைத் திட்டமிட்டு, அது நடக்கும் , கிடைக்கும் என்று நம்பினால், மனித மனம் எப்பாடுபட்டாவது அதை பெற்றுத் தந்துவிடும்.காரியங்களையும் செய்து முடித்துவிடும். நெப்போலியன் ஹில் அறிவியல் நமக்கு அளிக்கின்ற பிரமிப்பூட்டும் ஆச்சரிய உணர்ச்சி என்பது, மனித மனம் எட்டிப் பிடிக்கக் கூடிய மிக உன்னதமான உணர்ச்சிகளில் ஒன்று. அற்புதமானதொரு இசையும் கவிதையும் அளிக்கின்ற ஆழ்ந்த அழகியல் உணர்ச்சிக்கு இணையானது அது. இந்த உலகமும், பிரபஞ்சமும் அழகானவை, அற்புதமானவை அவற்றை எந்த அளவுக்கு நாம் புரிந்து கொள்கிறோமோ அந்த அளவுக்கு! அறிவியல் என்பது எதார்த்தத்தின் கவிதை. ரிச்சர்ட் டாக்கின்சு மௌனமாகத் தீர்மானித்தால் மனம் கலங்காத நிலைபெறும். மகாவீரர் மனம் தளரக் கூடாது, துணிச்சல் தான் உள்ள ஊக்கம். திருபாய் அம்பானி இயற்கையின் அழகான பன்முகத் தன்மைகளை, வற்றாத வளங்களை வியந்து போற்றுகிறீர்கள். ஒரு ரோஜா மலர் வயலட் பூவைப் போல மணக்க வேண்டும் என்று நீங்கள் கட்டளையிடுவதில்லை. ஆனால் எல்லாவற்றையும் விட வளமிக்கதான மனம் மட்டும் ஒற்றைத் தன்மையுடன் இருக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தப்படுகிறதே. காரல் மார்க்சு பெ. சுந்தரம் பிள்ளை கள்ள மனம் துள்ளும் தன்னுள்ளம் தனையே தின்னும். தனக்கென வாழ்பவன் தனி மிருகம் அவன் மனம் மாறட்டும். யாதே வரினும் மனவலி குன்றாதே மானமே பெரிது பழமொழிகள் தமிழ்ப் பழமொழிகள் கள்ள மனம் துள்ளும். செய்தவன் மனம் குன்றினால் ஐவினைப் பயனும் கெடும். பெற்ற மனம் பித்து பிள்ளை மனம் கல்லு. மனம் உண்டானால் இடம் உண்டு. மனம் இருந்தால் மார்க்கமும் உண்டு. மனம் தடுமாறினால் மாற்றானுக்கு வலிமை. மனம் போல வாழ்வு. வெளியிணைப்புக்கள் பகுப்பு கருப்பொருட்கள்
மகாவீரர் இந்தி , 599 527 என்று குறிப்பிடப்படுபவர் சமண சமயத்தின் மையக் கருத்துக்களை நிறுவிய வர்த்தமானர் என்ற இந்திய துறவியாகும். சமண மத வழக்கில் அவர் 24வது மற்றும் கடைசி அருகன் ஆவார். சமண சமயப் புத்தகங்களில் இவர் வீரா,வீரப்பிரபு, சன்மதி, அதிவீரர் மற்றும் ஞானபுத்திரர் என்று அழைக்கப்படுகிறார். மேற்கோள்கள் நீயும் வாழு பிறரையும் வாழவிடு. இதுவும் அகிம்சையின் தத்துவம் தான். எந்தப் பேச்சானாலும் தீர ஆலோசனை செய்த பிறகே பேச வேண்டும். நல்ல மனிதன் பொறுமையைக் கடைப்பிடிப்பான். கோபம் அன்பை அளிக்கிறது செருக்கு அடக்கத்தை அழிக்கிறது. அடக்கமாக வாழ்பவன், இம்மையிலும், மறுமையிலும் இன்பம் பெறுகிறான். 'ஏமாற்றுதல்' என்பது மிகச்சிறிய முள். அதனைப் பிடுங்கி எறிவது கடினம். பாவச் செயல்கள் முடிவில் துன்பம் தரும். உள்ளத் தூய்மையே ஒழுக்கத்தின் உயிர்நாடி. உண்மையே உள்ளத் தூய்மையை உண்டாக்கும். உண்மையாக நடந்து கொள்ளும் மனிதனுக்கு எந்த உபதேசமும் தேவையில்லை. சொல்லக் கூடாத பேச்சானால் அதை சொல்லாமல் இருப்பதே மேல். அளவில்லாத ஆசை, நமது குணங்களை எல்லாம் அழித்துவிடும். தன்னடக்கமே வாழ்க்கையில் கடைப்பிடிக்க வேண்டிய தலையாய நெறியாகும். மௌனமாகத் தீர்மானித்தால் மனம் கலங்காத நிலைபெறும். சான்றுகள் வெளியிணைப்புக்கள் பகுப்பு இறந்த நபர்கள் பகுப்பு ஆன்மீகவாதிகள்
மகாவீர் கிமு 599 கிமு 527 எனப்படுபவர் ஜெய்னிச மதத்தை உருவாக்கியவர் ஆவார். மேற்கோள்கள் மன்னிப்பதால் மனம் தெளிவடைகின்றது. வேண்டுவது, வேண்டாதது இரண்டையும் சகித்துக் கொள்ள வேண்டும். அடுத்தவர்களை நிந்தனை செய்தால் தீமையே விளையும். உண்மையே நம் பெருமைக்கு ஆதாரம். எவனொருவன் யோசித்து, பின் அழகான, மிதமான வார்த்தைகளை பேசுகின்றானோ அவனே பெரியோர்களின் மதிப்பை பெறுகின்றான். புத்திசாலி, தெளிவு பெற்றவுடன் அடக்கமுடையவன் ஆகின்றான். நல்ல பணிகளுக்கு ஆணி வேர் பணிவு தான். தவறு ஏற்படாதவாறு நடப்பவன் புத்திசாலி. பயங்கொண்ட மனிதனால் பிறருக்கு உதவ இயலாது. உலகில் கோழையாக மட்டும் இருக்காதே. மகிழ்ச்சியான சொற்கள் விருப்பத்தை ஏற்படுத்தும் மற்ற சொற்கள் பகை உணர்ச்சியை தூண்டும். சான்றுகள் வெளியிணைப்புக்கள் பகுப்பு இறந்த நபர்கள் பகுப்பு ஆன்மீகவாதிகள்
சமர்த்த ராமதாசர் என்பது சத்ரபதி சிவாஜியின் குரு ஆவார். மேற்கோள்கள் முயற்சியே தெய்வம். சான்றுகள் வெளியிணைப்புக்கள் பகுப்பு இறந்த நபர்கள் பகுப்பு ஆன்மீகவாதிகள்
ரால்ப் வால்டோ எமேர்சன் ரால்ப் வால்டோ எமேர்சன் மே 25, 1803 ஏப்ரல் 27, 1882 என்பவர் ஐக்கிய அமெரிக்க நாடுகளைச் சார்ந்த எழுத்தாளராகவும், சொற்பொழிவாளராகவும், கவிஞராகவும் விளங்கி, 19ஆம் நூற்றாண்டின் மையப்பகுதியில் "கடப்புவாதம்" என்னும் கொள்கையை முன்னெடுத்துச் சென்ற அறிஞர் ஆவார். மேற்கோள்கள் காட்டுவாசி ஒருவன் கொட்டிய பாறையில்தான் கவிதை தோன்றியிருக்க வேண்டும். நமது அறிவுத் திண்மையும் செயல்படும் திறனும் வளர்வது அன்பினாலே. பூக்களின் வாயிலாக பூமி சிரிக்கின்றது. நான் மேற்கோள்களை வெறுப்பவன் உனக்குத் தெரிந்ததைக் கூறு. நீ முடிவெடுத்த உடனே, இந்த அண்டமே அதை நடத்திக்காட்ட தயாராகிவிடுகின்றது. நீங்கள் கோபப்படும் ஒவ்வொரு நிமிடத்திலும் அறுபது விநாடிகள் நிம்மதியை இழக்கின்றீர்கள். உங்கள் நண்பரின் வீட்டிற்கு அடிக்கடி செல்லுங்கள் பயன்படுத்தாத பாதையில் புதர் மண்டிவிடும். ஒவ்வொரு பேரறிவு மிக்க செயல்களிலும் நாம் ஒதுக்கித்தள்ளிய நம் எண்ணங்களைக் காணலாம் ஒருவித அயன்மை மிடுக்குடன் நம்மையே அவை வந்தடையும். . மறுசிந்தனையே சிறந்த சிந்தனை ஒரு காலத்திய மதம் அடுத்த காலத்தின் இலக்கிய பொழுதுபோக்காகிறது. சுறுசுறுப்புடன் எல்லாவற்றையும் செய்கிறவனுக்கு, எல்லாக் கதவுகளும் திறந்திருக்கும். திறமைதான் ஏழையின் மூலதனம். நூலகம் ஒரு மாயக்கூடம், அங்கு பலவகை வசீகர ஆவிகள் உலவுகின்றன. நாம் விருந்துக்குப் போகும் போது உடுத்த வேண்டிய மிகச் சிறந்த உடைகளில் ஒன்று நகைச்சுவை. நான் செய்யும் ஒவ்வொரு செயலும், நான் அனுபவிக்கும் ஒவ்வொரு வேதனையும், என்னை எல்லாவிதத்திலும் புதிய மனிதனாக மாற்றுகின்றன. வறுமை, அன்பு, அதிகாரம், கோபம், நோய், துயரம், வெற்றி எல்லாம் என் மனத்தில் புதைத்து கிடக்கும் பல்வேறு சக்திகளை வெளிக்கொணர்கின்றன. இவைகளினால் எனது அற்ப ஆசைகள் பாதிக்கப் பட்டாலும் எனது மனோசக்தி பெருகுவது தடைப்படுவதில்லை. அமைதி உன்னைத் தவிர உனக்கு அமைதியை வேறு எதுவும் கொண்டுவர முடியாது தத்துவங்களின் வெற்றியாலேயே அமைதி ஏற்படும். அரசாங்கம் ஆண்டு அடக்குதல் குறையக் குறைய நமக்கு நல்லது. சட்டங்கள் குறைவாயிருப்பதும் அளிக்கப்படும் அதிகாரம் குறைந்திருப்பதும் நலம், சாதாரணமான அரசாங்கத்தால் விளையும் தீமைக்கு மாற்று. தனிப்பட்டவரின் ஒழுக்கமும், தனி மனிதரின் வளர்ச்சியும். அறம் நன்மை ஒரு நல்ல வைத்தியன். ஆனால், தீமை சில சமயங்களில் அதைவிட மிக நல்ல வைத்தியன். அறிவியல் விஞ்ஞானம். பழைய புராணக் கதைகளிலுள்ள அற்புதங்களையும் மிஞ்சிவிடுகின்றது. அறிவு கடவுள் ஆலோசிப்பவன் ஒருவனை உலகிற்கு அனுப்பினால், ஜாக்கிரதை அப்பொழுது அனைத்தும் அபாய நிலை அடையும்! பக்தர் 'தன்'னைத் துறத்தல் போலவே அறிஞரும் 'தன்'னைத் துறத்தல் அவசியமானதே. அறிவின்மை அறியாதாரிடம் அனுதாபம் கொள்வது தலைசிறந்த பண்பாட்டிற்கு அறிகுறி. அற்ப விஷயம் ஆயிரம் காடுகளை உண்டாக்கும் ஆற்றல் ஒரு விதையில் அடங்கியிருக்கின்றது. அழகு அழகுள்ள எதையும் பார்க்கும் வாய்ப்பை ஒருகாலும் இழந்துவிட வேண்டாம். ஆண்டவன் நல்லொழுக்கத்தின்மீது வைக்கும் முத்திரையே அழகு இயகையான எந்தச் செயலும் வழிலுடையது ஒவ்வொரு வீரச்செயலும் நேர்த்தியானது. அது நிகழும் இடத்தையும், அருகில் நிற்பவர்களையும் ஒளியமாக்குகின்றது. அன்னை தாய்மார்கள் உருவாக்கிய முறையிலேதான் மனிதர்கள் இருப்பார்கள். முரட்டுத் துணிகளை நெய்யும் தறியில் காஷ்மீரப் பட்டை எதிர்பார்ப்பதும், பொறியியல் நிபுணரிடம் கவிதையை எதிர்பார்ப்பதும், தரகுக்காரனிடம் புதிய விஞ்ஞானக் கண்டுபிடிப்பை எதிர்பார்ப்பதும் வீணாகும். ஆன்மா ஆன்ம அபிவிருத்தி மனிதனைப் பரிபூரண மாக்குவதே அதன் லட்சியம். அதனால் அது சரீர வாழ்வை யெல்லாம் சாதனமாகத் தாழ்த்திவிடும். இசை இசையே ஏழைகளின் கலா சொர்க்கம். உரையாடல் உரையாடல் என்ற கலையில் ஒரு மனிதனுக்கு உலகிலுள்ள எல்லா மனிதர்களும் போட்டியாயிருக்கின்றனர். சம்பாஷணைதான் மாணவனுக்கு ஆராய்ச்சிக்கூடமும், தொழில் நிலையமும் ஆகும். உதவி பிறர் செய்த உபகாரம் அதிகமாக உன் கையில் தங்கவிடாமல் பார்த்துக்கொள், ஜாக்கிரதை. எதிர்ப்பு ஊக்கமுள்ள ஆன்மா சிரமமில்லாத வெற்றியை வெறுக்கின்றது. தாக்குவோனுடைய ஆவேசமும் தற்காத்துக்கொள்பவனுடைய வேகத்தை அதிகப்படுத்தும். கருத்து உலக அபிப்பிராயத்தைத் தழுவிக்கொண்டு உலகிலே வாழ்வது எளிது. ஏகாந்தமான இடத்தில் நம் சொந்த அபிப்பிராயமுடன் வாழ்தல் எளிது. ஆனால், மக்கள் கூட்டத்தின் நடுவில் ஏகாந்தத்திலுள்ள சுதந்தரத்துடன் இனிதாக வாழ்பவேனே பெரிய மனிதன். கல்வி கற்பிப்பதன் இரகசியம் மாணவனுக்கு மதிப்பளிப்பதில் இருக்கின்றது. கவிதை கவிதை வெற்றி பெறுவது அழுவதை மாற்றுவதிலும் மனத்திற்குத் திருப்தி அளிப்பதிலுமில்லை. அடையமுடியாததை அடைவதற்காக மறுபடியும் முயற்சி செய்யும்படி நம்மை எழுப்பி விடுவதிலேயே உண்டு. கூட்டம் ஜனக் கூட்டத்திற்குத் தன்னம்பிக்கையும், தனித்த செயல் திறமையும் கிடையாதென்பதால், வலிமை பெற்றவர்களுக்கு வாய்ப்புண்டாகிறது. கொள்கை பரிசுத்தமான சித்தாந்தம் பரிசுத்தமான நன்மைகளின் மூலம் எப்பொழுதும் பயனளித்து வருகின்றது. சமூகச் செல்வாக்கு பேரறிவும் புனித வாழ்வும் உலகம் வெளியிடும் சிந்தனைகள். உலகை மாற்றிவிடுகின்றன. சான்றோர் சால்பின் சாரம் அறத்தைச் செய்வதற்கு அறமாகிய காரணமே போதும் என்பதே. பணம் படிப்பு பதவி முதலியவைகளில் பிறரைப்போல் இருப்பதே சுகம் என்று எண்ணுகிறோம். ஆனால் கடவுளோ துன்பத்தையும் தோல்வியையும் தந்து நமக்கு உயர்ந்த அன்பையும் உண்மையையும் அறிவித்துச் சான்றோனாக்க முயல்கிறார். உயர்ந்த விஷயங்களை எளிய முறையில் கூறுவதே சால்பின் லட்சணம். செல்வம் இளைஞருக்கு வழி காட்டுதல், ஆற்றலைப் பெருக்குதல், நம்பிக்கை ஊட்டுதல், அணைக்கின்ற கரிக்கங்குகளை ஊதித் தீ மூட்டுதல், புதிய சிந்தனையாலும் உறுதியான செயலாலும் தோல்வியை வெற்றியாக்குதல் இவையெல்லாம் எளிதான காரியங்களல்ல. இவை தெய்விக மனிதர்களின் வேலையாகும். சொற்கள் இந்த வாக்கியத்தின் பின்னால் ஒரு மனிதன் உள்ளனரா. இல்லையா? இது ஒரு ஆன்மாவைப் பிரதிபலிக்கின்றதா, இல்லையா? இதைப் பொறுத்ததே அதன் ஆற்றல். சொற்பொழிவு பேச்சாளரோ, ஆசிரியரோ, தம் கருத்துகளைவிடத் தம் சொற்கள் சிறியவைகளாக இருக்கும்படி செய்யக் கற்றுக்கொள்ளும்வரை வெற்றி பெற இயலாது. நன்மை செய்தல் துன்பத்தைக் கண்டு இரங்குதல் மனித இயல்பு அதை நீக்குதல் தெய்விகமாகும். நூலாசிரியர் ஆசிரியராவதற்கு அறிவுத்திறன் மட்டும் போதாது நூலுக்குப் பின்னால் ஒரு மனிதன் இருக்கவேண்டும். நேர்மையின்மை நயனம் ஒன்று சொல்ல நாவொன்று சொல்லின், விஷயம் அறிந்தவன் நயன மொழிகளையே நம்புவான். ஒவ்வொரு மனிதனும் தன் அண்டையில் இருப்பவர்கள் தன்னை ஏமாற்றாமலிருக்க வேண்டும் என்று கவனமாய், பார்த்துக்கொள்கிறான். ஆனால், பின்னால் ஒரு காலம் வருகின்றது. அப்பொழுது அவன் தான் எவரையும் ஏமாற்றாமலிருக்க வேண்டுமே என்று கவனமாயிருக்கத்தொடங்குகிறான். அது முதல் எல்லாம் சரியாக நடந்து வருகின்றது. நாகரிகம் ஒரு தேசத்தின் நாகரிகத்தை அளக்குங்கோல் அதன் ஜனத்தொகையோ நகரங்களின் விசாலமோ செல்வத்தின் மிகுதியோ அன்று. அதில் பிறக்கும் மனிதரின் குணமேயாகும். நாகரிகம் உண்டாக்கத் தக்க நிச்சயமான வழி பெண்களின் செல்வாக்கே. நாகரிகத்தின் உச்சிப் பொழுது வந்துவிட்டதாக எண்ணுகிறோம். ஆனால் இப்பொழுதுதான் கோழி கூவும் சமயம். பிரபுக்கள் சிலர் எப்பொழுதும் மற்றவர்களுக்கு மேலாகவே இருப்பர். இன்றுள்ள ஏற்றத்தாழ்வை அழித்துவிட்டால், அது நாளை மறுபடி தோன்றிவிடும். மரியாதை அமைதி ஆத்திரமோ ஆவேசமோ இல்லாமை ஆகிய இவை நேர்த்தியான பண்புகளைக் காட்டும் கனவான் ஓசையுண்டாக்க மாட்டான். சீமாட்டி சாந்தமாயிருப்பாள். மன எழுச்சி உலகத்தின் வரலாற்றில் பெரிய இயக்கங்களுக்கெல்லாம் காரணம் மன எழுச்சிதான். அது இல்லாமல் பெரிய காரியம் எதையும் ஒரு காலத்தும் சாதிக்க முடிந்ததில்லை. மௌனம் மௌனத்திற்கு ஆச்சரியமான எத்தகைய ஆற்றலிருக்கின்றது உதடுகள் மூடியிருக்கும் பொழுது எத்தனை தீர்மானங்கள் செய்யப்பெறுகின்றன. எத்தனை ஆன்மார்த்திகமான வெற்றிகள் அடையப்பெறுகின்றன ஆன்மா, இறைவனின் பார்வை தன்மீது விழுவதை அந்தரங்கமாக எவ்வளவு உணர்கின்றது. வீரம் தன்னைத்தான் நம்புதல் வீரத்தின் சாரம். சான்றுகள் வெளியிணைப்புக்கள் . பகுப்பு இறந்த நபர்கள் பகுப்பு 1803 பிறப்புக்கள் பகுப்பு 1882 இறப்புக்கள் பகுப்பு எழுத்தாளர்கள் பகுப்பு கவிஞர்கள்
அறப் போராட்டம் அல்லது அகிம்சை என்பது பொதுவாக உரிமைகளை வென்றெடுப்பதற்காக வன்முறை இன்றி அறவழியில் போராடுவதைக் குறிக்கும். எதிராளிக்கு வன்முறையால் தீங்கு விளைவிக்காமல் அவர் மனதை மாற்றி, உரிமைகளைப் பெற்றுக்கொள்ள முயல்வதே இதன் அடிப்படை நோக்கமாகும். மேற்கோள்கள் நான் போதிப்பது கோழைகளின் அகிம்சையை அல்ல. காந்தி நீயும் வாழு பிறரையும் வாழவிடு. இதுவும் அகிம்சையின் தத்துவம் தான். மகாவீரர் வெளியிணைப்புக்கள் பகுப்பு கருப்பொருட்கள்
பொறுமை என்பது தமக்கு துன்பம் ஏற்படும்போது உணர்ச்சி வயப்படாமலும், கோபம் கொள்ளாமலும் இருக்கும் மனநிலை ஆகும். மற்றவர் தம்மை இகழும் போதும், நீண்ட தாமதங்கள் ஏற்படும் போதும், பிரச்சனைகள் ஏற்படும் போதும், தொடர் துன்பங்கள் வரும் போதும், சில அசாதரண சூழ்நிலைகளிலும் அமைதியாக இருக்கும் குணம் ஆகும். இந்த குணம் மனிதனை பல்வேறு உடல் நோய்களில் இருந்தும், மன நோய்களில் இருந்தும் பாதுகாக்கிறது. மேற்கோள்கள் நல்ல மனிதன் பொறுமையைக் கடைப்பிடிப்பான். மகாவீரர் பொறுத்தல் என்பது நம் விதியையும் வெல்லுதல் காமப்பெல் பொறுமை கசப்பு ஆனால், அதன் கனி இனிப்பாயிருக்கும் ரூஸோ பொறுமை, நெஞ்சின் உறுதியைப் போலவே இருப்பதால், அது அதற்குச் சகோதரியாகவோ, மகளாகவோ இருக்க வேண்டும். அரிஸ்டாட்டில் பொறுமை பலவீனத்திற்குக் காப்பாகும். ஆத்திரம் வலிமையை அழிக்கும். கோல்டன் பொறுமையுள்ளவனுக்கு அவன் விரும்பியனவெல்லாம் கிடைக்கும். ஃபிராங்லின் எப்படிக் காலம் கருதிக் காத்திருக்க வேண்டும் என்பதை அறிதலே வெற்றியின் இரகசியம். டி. மெய்ஸ்டிரி பொறுமையில்லாதவர் எவ்வளவு எளியராயிருக்கின்றனர்! எந்தப் புண்தான் சிறிது சிறிதாக அல்லாமல் உடனே ஆறிவிடுகின்றது? ஷேக்ஸ்பியர் சான்றோருக்குரிய ஆற்றல்கள் இரண்டு. ஒன்று. சகிப்புத் தன்மை, மற்றது. பொறுமை. எபிக்டெட்டஸ் வலிமையும் உணர்ச்சியும் சாதிப்பதைவிடப் பொறுமையும் காலமும் அதிகமாய்ச் சாதித்துவிடும். லாஃபான்டெயின் ஒறுக்கும் மதுகை உரனுடைய யாளன்பொறுக்கும் பொறையே பொறை. நாலடியார் திருக்குறள் ஒறுத்தார்க்கு ஒருநாளை இன்பம், பொறுத்தார்க்குப் பொன்றும் துணையும் புகழ். அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மைஇகழ்வார்ப் பொறுத்தல் தலை. குறள் விளக்கம் தன்னைத் தோண்டுபவரை பொறுத்துத் தாங்கிக் கொள்ளும் நிலம்போல, தம்மை இகழ்ந்து பேசுபவரைப் பொறுத்துக் கொள்ளுதல் முதன்மையான அறமாகும். பழமொழிகளும் சொலவடைகளும் பூமியைப்போலப் பொறுமை வேண்டும். பொறுமை கடலினும் பெரிது. பொறுத்தார் பூமி ஆள்வார் பொங்கினார் காடாள்வார். ஆக்கப் பொறுத்தவன் ஆறப் பொறுக்க வேண்டும். குறிப்புகள் வெளியிணைப்புக்கள் பகுப்பு உணர்வுகள் பகுப்பு நல்லொழுக்கங்கள்
கோபம் என்பது மனிதர்களுக்கிடையே தோன்றும் கடுமையான உணர்ச்சியாகும். இது சிறிய எரிச்சல் அளவில் இருந்து கடுமையான வெறி கொண்டதாக இருக்கலாம். மேற்கோள்கள் கோபப்படுவது என்பது யாருக்கும் எளிது. ஆனால் சரியான நபர் மீது சரியான அளவில் சரியான நேரத்தில் சரியான நோக்கத்துடன் கோபப்படுவது எல்லோருக்கும் வராது. அரிசுடோடில் நல்ல மனிதன் பொறுமையைக் கடைப்பிடிப்பான். மகாவீரர் உங்களில் பலசாலி யார் என்று உங்களுக்கு நான் அறிவிக்கட்டுமா? கோபம் வரும் போது தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்பவரே பலசாலியாவார். முகமது நபி கோபம் விசம் குடிப்பதைப் போன்றது, ஆனால் நம்பிக்கை உங்கள் எதிரிகளையும் அழிக்கும் வல்லமை மிக்கது. நெல்சன் மண்டேலா கோபம் கூடாது. அது முகத்தின் அழகைக் கெடுத்து விடுகிறது. சாந்தமே முகத்திற்கு அழகு தருகிறது. இராஜாஜி அன்பில்லாத இடத்தில் தான் கோபம், முட்டாள் தனம், விரோதம் எல்லாம் இருக்கும். இங்கர்சால் இந்த உலகத்தில் அநீதி தலையெடுக்கிற போதெல்லாம் கோபமும் வெறுப்பும் கொண்டு நீ குமுறி நடுங்குவாயானால் நாம் இருவரும் தோழர்கள். அதுதான் முக்கியமான விஷயம். சே குவேரா கோபம் வரும்போது இரவும் பகலும் கடுமையாக உழைக்கக் கற்றுக் கொள்ளுங்கள். உங்களிடமுள்ள அதிக அளவு சக்தியை இப்படிப் பயனுள்ள வழிகளில் செலுத்த இது ஒரு நல்ல வழி. கோபமும் குறையும். ஹெச். ஹில் உணர்ச்சிகளுள் கோபமே எவ்வித வலுவும் இல்லாதது. அதனால் பயனொன்றும் விளைவதில்லை. எதிரியைக் காட்டிலும். அதைக் கொண்டவனுக்கே அது அதிகத் தீங்கிழைப்பதாகும். கிளாரண்டன் பிறரிடம் பழி வாங்க எண்ணுவதற்கோ, நமக்கு இழைக்கப்பெற்ற தீங்குகளை நினைத்துப் பார்க்கவோ, வாழ்க்கையில் நேரமில்லை. அது மிகச் சுருக்கமானது. சார்லட் பிரான்டி கோபத்திற்குச் சிறந்த மருந்து தாமதித்தல். ஸெனீகா அமைதியாயிரு. நீ எவரையும் வசப்படுத்திக்கொள்ள முடியும். ஸெயின்ட் ஜஸ்ட் கோபம் வெறிகொண்ட குதிரையைப் போல் துள்ளிப் பாய்கையில், இடையில் தடுக்கி விழும். ஸாவேஜ் வெளியே காட்டிய கோபம் மன்னிப்புக்கு வழி தேடும். உள்ளேயடக்கிய கோபம் பழிக்கு வழி தேடும். புல்வெர் நீ கோபமாயிருந்தால். நீ பேசத் தொடங்குமுன் பத்துவரை எண்ணு. அதிகக் கோபமாயிருந்தால் நூறுவரை எண்ணு. ஜெஃபர்ஸன் உணர்ச்சி அரியணையில் அமர்ந்திருக்கும் பொழுது அறிவு வெளியே போய்விடும். எம். ஹென்றி கோபும் எழும்பொழுது. அதன் விளைவுகளை எண்ணிப்பார். கன்ஃபூஷியஸ் பொறுமையுள்ள மனிதனின் கோபத்தைப்பற்றி எச்சரிக்கையாயிருக்க வேண்டும். பழமொழிகளும் சொலவடைகளும் எதிர்த்தவன் ஏழை என்றால் கோபம் சண்டாளம். ஏறச் சொன்னால் எருதுக்குக் கோபம், இறங்கச் சொன்னால் நொண்டிக்குக் கோபம். கோபம் உள்ள இடத்தில் குணம் உண்டு. மிகக் கூர்மையாக இருக்க விரும்பாதீர்கள் உங்களையே வெட்டிக்கொள்வீர்கள். இத்தாலி பழமொழி வெளியிணைப்புக்கள் குறிப்புகள் பகுப்பு உணர்வுகள்
பஞ்சு அருணாசலம் தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியரும் கவிஞரும் ஆவார். இவர் கண்ணதாசனின் உதவியாளராகப் பணியாற்றிப் பின்நாளில் பல நல்ல பாடல்களை தமிழ் திரைஉலகிற்கு எழுதியுள்ளார். மேற்கோள்கள் எல்லா கதைகளும் நல்ல கதைகள்தான். அதை சினிமாவுக்கான மொழியில் சொல்வதில்தான் அதன் வெற்றி அடங்கியிருக்கிறது. நாம் ஒரு முடிவு எடுத்தப்பிறகு பெரியவர்கள் என்ன சொன்னாலும், அது நம்மை சமாதானப்படுத்துவதற்காகச் சொல்கிறார்கள் என்றே நமக்கு தோன்றும். வெண்பாவுக்கான இலக்கணம் நுணுக்கமானது கடினமானது. வெண்பாவில் சிறிய தவறு இருந்தால்கூட, அதை புலமைக்கு இழுக்காக பார்ப்பார்கள். சகுனம் பார்ப்பது எனக்கு இயல்பாகவே பிடிக்காது. அப்படி சகுனம் பார்த்து எடுக்கப்பட்ட எத்தனையோ படங்கள் பாதியில் நின்று போயிருக்கின்றன. அதனால் நான் எப்போதும் திறமையை மட்டுமே நம்புவேன். நபர் குறித்த மேற்கோள்கள் வெளியிணைப்புக்கள் சான்றுகள் பகுப்பு வாழும் நபர்கள் பகுப்பு பாடலாசிரியர்கள் பகுப்பு திரைப்படக் கலைஞர் பகுப்பு இயக்குனர்கள்
ரகுராம் கோவிந்தராஜன் பிறப்பு பிப்ரவரி 3 ,1963 ஒரு இந்தியப் பொருளியல் வல்லுநர் ஆவார். இந்திய ரிசர்வ் வங்கியின் தற்போதைய ஆளுநராக உள்ளார். மேற்கோள்கள் நாட்டில் சகிப்புத் தன்மை குறைந்தால், வன்முறை அதிகரித்து வளர்ச்சி பாதிக்கப்படும். குருட்டு தேசத்தில் ஒற்றைக்கண் ராஜா உலக வங்கி தலைவர் இந்திய பொருளாதார நிலைமை உலக பொருளாதாரத்தில் பிரகாசமான புள்ளியாக உள்ளது என்ற கருத்துக்கு, பொருளாதார நிலை எப்படி இருக்கிறது என்று கேட்ட பொழுது கூறியது. நபர் குறித்த மேற்கோள்கள் வெளியிணைப்புக்கள் சான்றுகள் பகுப்பு வாழும் நபர்கள் பகுப்பு 1963 பிறப்புக்கள்
அடக்கம் அல்லது பணிவு என்பது பலராலும் சிறப்பாக கூறப்பட்ட ஒரு சிறந்த பண்பாகும். மேற்கோள்கள் கல்வி ஒரு மூட்டை நூல்களை வாசிப்பது அன்று அடக்கம், ஒழுங்கு, அறம், நீதி இவற்றின் முன்மாதிரியாகும்! எட்மண்ட்பர்க் எவ்வளவு கல்வியும் செல்வமும் இருந்தாலும், அடக்கம் இல்லாவிடில் பண்பாடென்பது இல்லை. இராஜாஜி கதிர் நிறைந்தால் பயிர் தரையில் தொங்கும். பிஷப் ரெய்னால்ட்ஸ் இறைவனே! என்னிடம் தாழ்மையை வேண்டுகிறீர். ஆனால் நான் இன்னும் அந்த உயர்ந்த பொருளை எட்டவில்லை. டால்ஸ்டாய் எல்லோர்க்கும் பிறர்க்கு எஜமானாயிருக்க ஆசை. ஆனால் எவனும் தனக்கு எஜமானனாயில்லை. கதே எஜமானனா? சில வேளைகளில் குருடாயிருக்கவேண்டும். ஊழியனா? சில வேளைகளில் செவிடாயிருக்கவேண்டும். புல்லர் மனித ஜாதியின் திறமைக்குள் அடங்கும் நன்மைகள் எல்லாம், 'கீழ்ப்படிதல்' என்பதில் அடங்கும். மில் நெஞ்சில் போர் நிகழ்த்தும்பொழுதுதான் நாம் கொஞ்சமேனும் பெறுமதி அடைகின்றோம். ராபர்ட் ப்ரெளணிங் தன்னைத்தானே உயர்த்திக்கொள்பவன் தாழ்த்தப்படுவான். தன்னைத்தானே தாழ்த்திக்கொள்பவன் உயர்த்தப்படுவான். விவிலியம் வாஞ்சையும் தாழ்மையும் துன்பங்களைச் சகித்துக் கொள்வதன் மூலமே கற்றுக்கொள்ள முடியும். ஜார்ஜ் எலியட் தாழ்மையே அறிவுடைமையின் உத்தம அடையாளம். ஜெரிமி காலியர் அடக்கமுள்ள பிள்ளைகளைத் தந்தைமார் அழைத்தால் உடனே அவரைச் சார்ந்து, ஏன் அழைத்தீர்கள் என்று கேட்பது உயர்ந்தது என்று சிலர் கருதுகின்றனர். என் கருத்து சென்று நிற்றல் வேண்டும் என்பதே. ஞானியாரடிகள் அடக்கம் என்ற பொன்னில் பதித்த அறிவு இருமடங்கு ஒளியுடன் பிரகாசிக்கும். திறமையோடு அடக்கத்தையும் பெற்றுள்ள மனிதன் ஓர் இராஜ்யத்திற்கு ஈடாகவுள்ள மணியாகும். பென் பிறரை இழிவாகப் பார்த்தல் எளிது. நம்மையே இழிவாகப் பார்த்துக்கொள்வதுதான் கஷ்டம். பீட்டர்பரோ செருக்கு. தேவர்களை அசுரர்களாக மாற்றுவது .அ.க்கம் மனிதர்களைத் தேவர்களாக்குவது. அகஸ்டின் அறிவாளியாயிரு உயரத்தில் பறந்து கீழே விழாதே. உயர்வதற்காகத் தாழ்மையுடன் இரு. மாஸ்ஸினசர் தாழ்ந்து கிடக்கும் அடக்கம் என்ற தேரிலிருந்துதான் தெய்விகக் குணங்கள் கிளைத்து வளர்கின்றன. மூர் சுவர்க்கத்தின் வாயில்கள். அரசர்களுடைய அரண்மனை வாயில்களைப் போல உயரமாக அமைந்திருக்கவில்லை அங்கே நுழைபவர்கள் முழங்கால் பணிந்து ஊர்ந்து செல்ல வேண்டும். ஜே. வெப்ஸ்டர் அடக்கம் என்பது தன்னைத்தானே சரியாக மதிப்பிட்டுக் கொள்ளலாகும். ஸ்பாஜியன் எல்லோரும் பணிவைப்பற்றி உபதேசம் செய்கின்றனர். எவரும் அதன்படி நடப்பதில்லை. ஆனால், செவியால் மட்டும் கேட்டுத் திருப்தியடைகின்றனர். எசமானன் அது தன் வேலைக்காரனுக்கு ஏற்றது என்று எண்றுகிறான். ஜனங்கள் அது பாதிரிமார்களுக்கு ஏற்றது என்று எண்ணுகின்றனர். பாதிரிமார்கள் அது ஜனங்களுக்கு ஏற்றது என்று எண்ணு கின்றனர். ஸெல்டென் இறைவனை அடைய ஒரே பாதைதான் உண்டு. அதுதான் பணிவு. மற்ற பாதைகள் வேறிடங்களுக்குக் கொண்டுபோய் விடும். பாப்லியோ உன்னைத் தாழ்த்திப் பேசும்போது, நீ அடக்கமாயிருத்தல் பெரிய காரியமன்று உன்னைப் புகழ்ந்துரைக்கும் பொழுது அடக்கமாயிருத்தல் அரிய பெரிய வெற்றியாகும். அர்ச். பெர்னார்டு கிறிஸ்தவன் முதிர்ந்து வரும் கதிரைப் போன்றவன் அவன் முதிர முதிரத் தன் தலையை அதிகமாகத் தாழ்த்திக் கொள்வான். கத்ரீ நீ இறைவனுடைய அருளையும். மனிதனுடைய அன்பையும். அமைதியையும் பெற வேண்டுமானால், உன் கண்முன்பே உன்னைத் தாழ்த்திக்கொள். உன் குற்றங்களுக்காக உன்னை மன்னித்துக்கொள்வதைக் குறைத்துப் பிறரை அதிகமாக மன்னித்து வரவேண்டும். லெய்ட்டன் உண்மையான பெரிய மனிதனுக்கு முதல் அடையாளம் பணிவு என்று நான் நம்புகிறேன். ரஸ்கின் அடக்கம். இருளைப்போல் தெய்விக ஒளிகளைக் காண்பிக்கின்றது. தோரோ சமயத்தில் முதல் விஷயம் என்ன என்று நீங்கள் என்னிடம் கேட்டால், முதலாவது, இரண்டாவது. மூன்றாவது ஆகிய எல்லா விஷயங்களுமே அடக்கம் ஒன்றுதான் என்று நான் கூறுவேன். அகஸ்டின் கஷ்டங்கள். நஷ்டங்கள் அடைந்த பின்பு மனிதர் அதிக அடக்கத்தையும் அறிவையும் பெறுகின்றனர். ஃபிராங்க்லின் ஆண்டவனுக்கு உகந்தவர்கள் ஏழைகளைப்போன்ற அடக்கமுள்ள செல்வர்களும், செல்வர்களைப் போன்ற பெருந் தன்மையுள்ள ஏழைகளுமே ஆவர். ஸா அதி அடக்கமில்லாமல் நற்பண்புகளைச் சேகரிப்பதில் பயனில்லை அடக்கமுடையவர்களின் இதயங்களில் தங்கியிருப்பதிலேயே ஆண்டவனுக்கு மகிழ்ச்சி. எரர்ஸ்மஸ் அடக்கமும் அன்பும் உண்மையான சமயத்தின் சாரம். அடக்கமுள்ளவர் போற்றுகின்றனர். அன்புள்ளவர் நித்தியமான அன்புடன் கலந்துகொள்கின்றனர். லவே நாம் இல்லாமல் உண்மையில் இந்த உலகம் இயங்க முடியும் ஆனால், நாம் அப்படிக் கருதவேண்டும். லாங்ஃபெல்லே சைத்தான் ஒருவரை அண்டாமலிருப்பதற்கு அடக்கத்தைப் போல வேறு எதுவுமில்லை. ஜோனாதன் எட்வர்ட்ஸ் அடக்கமுடையவர்களுக்கு ஒரு பொழுதும் கோபம் வராது என்பதில்லை. அப்படியானால் அவர்கள் உணர்ச்சியற்றவர்கள் என்றாகிவிடும். ஆனால், அவர்கள் கோபம் வரும்பொழுது அதை அடக்கிக்கொள்வார்கள். எப்பொழுது கோபிப்பது உசிதமோ அப்பொழுதுதான் கோபிப்பார்கள். பழிக்குப் பழி வாங்குதல், எரிச்சல், புலனுணர்ச்சிகளில் திளைத்தல் ஆகியவை அடக்கத்தோடு சேர்ந்தவை அல்ல. தற்பாது காப்பும், அமைதியாகவும் நிதானமாகவும் உரிமையைப் பாதுகாப்பதும் அடக்கத்தில் அடங்கும். தியோபிலாக்ட் அடக்கம் அமரருள் உய்க்கும். க. திருவள்ளுவர் எல்லார்க்கும் நன்றாம் பணிதல். திருவள்ளுவர் காக்க பொருளா அடக்கத்தை ஆக்கம் அதனினுஉங் கில்லை உயிர்க்கு. திருவள்ளுவர் கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக. திருவள்ளுவர் தன்னைத்தன் நெஞ்சம் கரியாகத் தான்அடங்கின் பின்னைத்தான் எய்தா நலன்இல்லை. அறநெறிச்சாரம் அறிஞர்க்கு அழகு கற்றுணர்ந்து அடங்கல். வெற்றிவேற்கை முழுவதுஉம் கற்றனம் என்று களியற்க, நீதிநெறி விளக்கம் சிற்றுணர்வோர் என்றும் சிலுசிலுப்பர் ஆன்றமைந்த முற்றுணர்வோர் ஒன்றும் மொழியாரே. நீதி வெண்பா மகாவீரர் அடக்கமாக வாழ்பவன், இம்மையிலும், மறுமையிலும் இன்பம் பெறுகிறான். தன்னடக்கமே வாழ்க்கையில் கடைப்பிடிக்க வேண்டிய தலையாய நெறியாகும். பழமொழிகள் தமிழ்ப் பழமொழிகள் அடக்கம் உடையார் அறிஞர், அடங்காதவர் கல்லார். மேற்கோள்கள் வெளியிணைப்புக்கள் பகுப்பு கருப்பொருட்கள்
ஆசை என்பது தமக்கெது தேவையோ அதனை கொண்டு வருதற்கான உணர்வாகும். ஒவ்வொருவருக்கும் தேவைகள் மாறுபட்டாலும் ஏதாவது தேவைகள் கண்டிப்பாக இருந்து கொண்டே இருப்பதனால் ஆசையும் அழிவில்லாது இருந்து கொண்டே இருக்கிறது. மேற்கோள்கள் அளவில்லாத ஆசை, நமது குணங்களை எல்லாம் அழித்துவிடும். மகாவீரர் உள்ளத்தின் உறுதியோடு கொள்ளும் நியாயமான ஆசை காலப்போக்கில் நிறைவேறாமல் போகாது. விளாதிமிர் லெனின் எந்தப் பொருளின் மீது ஆசை இல்லையோ அவற்றினால் துன்பம் இல்லை. ஔவையார் ஆசையின் வேட்கையை அடக்கவும் முடியாது. தீர்த்து வைக்கவும் முடியாது. ஸீஸெரோ ஆசைகளைக் குறைத்துக்கொள்வதிலேயே அமைதி இருக்கின்றது. அவைகளைத் திருப்தி செய்வதிலன்று .ஹீபர் ஒரு மனிதனுடைய ஆசைகள் எல்லையற்றவைகளாக இருந்தால், அவனுடைய முயற்சிகளும் எல்லையற்றவைகளாக ஆகிவிடும். பால்கி நம்முடைய தற்போதைய நிலைக்குத் தக்கபடி நாம் நம் ஆசைகளைச் சுருக்கிக் கொள்ள வேண்டும். இது வாழ்க்கையின் அவசியமான ஒரு விதியாகும். எதிர்பார்ப்பவைகள் எப்படியிருப்பினும் நம்மிடம் உள்ளவைகளுக்குத் தக்கபடி நாம் வாழ்ந்து வர வேண்டும். அடிஸன் முறையற்ற ஆசைகள் பூர்த்தியான பிறகு தண்டனைை அனுபவிக்கிறோம். நிறைவேற முடியாத ஆசைகள் தோன்றுபோதே தண்டனையும் வந்துவிடுகின்றது. ஸவிப்ர் ஃயிஸிட்ஸ் நாம் எவ்வளவு செல்வம் பெற்றிருப்பினும், எவ்வளவு உயர்ந் பதவியிலிருப்பினும், குறைவாகத் தோன்றும் நம் செல்வத்தை நிறைவுபடுத்தப் பெயரில்லாத ஏதோ ஒன்று மேலும் தேவையாகத் தோன்றுகின்றது. ஹொரேவி ஆசைகளும் உணர்ச்சிகளும் ஒரு கயிற்றின் இரண்டு பிரிகளைப் போல, ஒன்றோடு ஒன்று பின்னிக்கொண்டு இதயத்தைச் சுற்றி இறுக்கமாகப் பிணைந்துகொள்கின்றன நாம் அவைகளை நிதானமாகப் பயன்படுத்திக்கொண்டால் நன்மை விளையும், அளவுக்கு அதிகமானால் அழிவு நிச்சயமாகிவிடும். பர்டன் ஆசைகளை அறவே அவித்துவிட்டால், மனமும் அவிந்துவிடும். உணர்ச்சிகளே இல்லாத மனிதன் செயலுக்குரிய தூண்டுகோலோ, தத்துவமோ இல்லாமல் போய் விடுவான். ஹெல்விடியா நம் ஆசைகளை வெட்டிக் குறைத்துக்கொண்டு. நடுநிலையான முறைகளால், சில ஆசைகளை மட்டும் நிறைவேற்றி கொள்ளல் என்பது, செருப்புகள் தேவை என்பதற்காகக்காக, பாதங்களையே வெட்டிவிடுவது போலாகும். ஸ்விஃப் அவசியம் என்பது முடிவடையும் பொழுது. ஆசையும் மேலும் அறியவேண்டுமென்ற துடிப்பும் தொடங்குகின்றன. இயற்கையின் தேவையை அனுசரித்து நமக்கு வேண்டியன யாவும் கிடைத்துவிட்ட பிறகு, என்னென்ன வேண்டும் என்ற செயற்கையாக ஆசைகளை வளர்த்துக் கொள்கிறோம். ஜான்ஸ் அவா இல்லார்க்கு இல்லாகும் துன்பம். திருவள்ளுவர் தூஉய்மை என்பது அவா இன்மை. திருவள்ளுவர் குருடனைக்காட்டிலும் குருடன் எவன்? ஆசையுள்ளவன். ஆதிசங்கரர் ஆசையற்றவனே அகில உலகிலும் மிகப்பெரும் பணக்காரன். சுவாமி சிவானந்தர் அவாவினால் உந்தப்பட்ட மனிதர்கள். வேட்டையில் விரட்டப்பட்ட முயலைப் போல், ஓடித் திரிகிறார்கள். ஆதலால், மோக பந்தங்களிலிருந்து விடுதலை பெற விரும்பும் பிக்கு அவாவை ஒழிப்பானாக. புத்தர் பழமொழிகள் தமிழ் பழமொழிகள் அற்ப ஆசை கோடி தவத்தைக் கெடுக்கும். ஆசை இருக்கு ஆனை மேல் ஏற அம்சம் இருக்கு மண் சுமக்க! ஆசை உள்ளளவும் அலைச்சலும் உண்டு! ஆசை வெட்கம் அறியாது. ஆசை இருக்கு தாசில் பண்ண அதிருஷ்டம் இருக்கு கழுதை மேய்க்க. ஆசைக்கு ஒரு பெண்ணும், ஆஸ்திக்கு ஒர் ஆணும்!! உப்பில்லா பத்தியக்காரன் ஊறுகாய்க்கு ஆசைப்பட்டானாம்! ஐம்பதிலும் ஆசை வரும். கடலைத் தாண்ட ஆசையுண்டு கால்வாயைத் தாண்டக் கால் இல்லை. காணி ஆசை கோடி கேடு. கூழுக்கும் ஆசை, மீசைக்கும் ஆசை. முடவன் கொம்புத் தேனுக்கு ஆசைப் பட்டாற்போல!.. வட்டி ஆசை முதலுக்கு கேடு. மலையாளப் பழமொழிகள் ஆயுள் உள்ளவர்க்கு ஆசை உண்டு. ஆசை அறுபது நாள் மோகம் முப்பது நாள். குறிப்புகள் வெளியிணைப்புக்கள் பகுப்பு உணர்வுகள்
சிவசங்கரி பிறப்பு அக்டோபர் 14, 1942 ஒரு குறிப்பிடத்தக்க தமிழக எழுத்தாளர். நாவல், சிறுகதை, பயணக் கட்டுரை, இலக்கியக் கட்டுரை, நேர்காணல், மொழிபெயர்ப்பு எனப் பல தளங்களில் இயங்குகிறார். 1993 இலிருந்து "இலக்கியம் மூலம் இந்திய இணைப்பு" என்ற செயற்றிட்டத்தை முன்னெடுத்து வருகிறார். இவரது 150 க்கும் மேற்பட்ட சிறுகதைகள் மற்றும் குறுநாவல்கள், 35 நாவல்கள், 13 பயணக் கட்டுரைத் தொகுப்புக்கள், 7 கட்டுரைத் தொகுப்புக்கள், 2 வாழ்க்கைச் சரிதங்கள் ஆகியவை வெளியாகியுள்ளன. மேற்கோள்கள் இளமை இழப்பு, உறவு இழப்பு, நம்பிக்கை இழப்பு, பண இழப்பு, பொருள் இழப்பு, மானம் இழப்புன்னு இழப்புகள்ல பலவகை இருக்கு. ஆனா, எந்த இழப்புமே சாபம் இல்லை. வயிறு நிறைஞ்ச பிறகு எப்படி சாப்பிடமுடியும்? உங்களுடைய அடுத்த படைப்பை எப்ப எதிர்பார்க்கலாம்? என்று கேட்ட பொழுது கூறியது. நபர் குறித்த மேற்கோள்கள் வெளியிணைப்புக்கள் சான்றுகள் பகுப்பு வாழும் நபர்கள் பகுப்பு 1942 பிறப்புக்கள் பகுப்பு தமிழ் எழுத்தாளர்கள்
உ. ஸ்ரீநிவாஸ் , பிப்ரவரி 28, 1969 செப்டம்பர் 19, 2014 1 தென் இந்தியாவைச் சேர்ந்த மேண்டலின் இசைக் கலைஞர் ஆவார். இவரது இசையின் மூலாதாரம் கருநாடக இசை ஆகும். இவர் இங்கிலாந்து மற்றும் கனடா நாடுகளின் முன்னணி இசைக் கலைஞர்களுடன் ஜாண் மெக் லெளக்லின், மைக்கேல் நெய்மென் மற்றும் மைக்கேல் ப்ரூக் இணைந்து பல்வேறு இசை நிகழ்ச்சிகளை நிகழ்த்தியுள்ளார். மேற்கோள்கள் நபர் குறித்த மேற்கோள்கள் மிகச்சிறிய வயதிலேயே, மிகச்சிறந்த புகழ் பெற்றவர். இங்கு மட்டுமின்றி, வெளிநாடுகளிலும், அவரது இசைக்கு மிகப்பெரிய வரவேற்பு இருந்தது. அவர் மறைவால் ஏற்பட்ட வெற்றிடத்தை யாராலும் நிரப்ப முடியாது. உ. ஸ்ரீநிவாஸ் அவர்களின் மரணத்தைப் பற்றி திரு. நல்லி குப்புசாமி கூறியது 'மாண்டலின்' சீனிவாசை போன்ற ஒரு தங்கமான மனிதரை யாரும் பார்த்திருக்க முடியாது. என்னுடைய மிகச் சிறந்த சகோதரர்.அவரை, இசைக்கலைஞர் என்று சொல்வதை விட, மகா இசை மேதை என்று தான் சொல்ல வேண்டும். அவரது மரணம் தந்த அதிர்ச்சியால், எனக்கு வார்த்தைகளே வரவில்லை. உ. ஸ்ரீநிவாஸ் அவர்களின் மரணத்தைப் பற்றி பாடகர் திரு. ஹரிஹரன் கூறியது. அவருக்கும், எனக்கும், 20 ஆண்டுகளாக மிகச்சிறந்த நட்பு இருந்தது. குழந்தைகள் முதல், பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினரும் அவரது இசையை ரசித்திருக்கின்றனர். இசைத் துறையில் அவரது இழப்பு யாராலும் ஈடு செய்ய முடியாதது. உ. ஸ்ரீநிவாஸ் அவர்களின் மரணத்தைப் பற்றி கர்நாடக இசைப்பாடகி திருமதி. சுதா ரகுநாதன் கூறியது. வெளியிணைப்புக்கள் சான்றுகள் பகுப்பு இறந்த நபர்கள் பகுப்பு 1969 பிறப்புக்கள் பகுப்பு 2014 இறப்புக்கள் பகுப்பு இசை கலைஞர்கள்
செல்வராகவன் பிறப்பு மார்ச்சு 5, 1976 செல்வராகவன், தமிழ்த் திரைப்பட இயக்குனர் ஆவார். இவரது தம்பி பிரபல நடிகர் தனுஷ். இயக்குனர் கஸ்தூரி ராஜாவின் மகனும் ஆவார். மேற்கோள்கள் கலைஞனை சாந்தமான மனநிலையில் இருந்து செயல்பட விடணும். நபர் குறித்த மேற்கோள்கள் வெளியிணைப்புக்கள் சான்றுகள் பகுப்பு வாழும் நபர்கள் பகுப்பு இயக்குனர்கள்
அனுராக் கஷ்யப் ஒர் இந்திய திரைப்பட இயக்குனர், தயாரிப்பாளர், நடிகர் மற்றும் திரைக்கதை உருவாக்குனர் ஆவார். மேற்கோள்கள் முதலில் நீங்கள்தான் உதவும் விதமாய் இருக்க வேண்டும். பின்னர் உங்களுக்குத் தேவையானது தானாய்க் கிடைக்கும். நாட்களை சந்தோஷமாய்க் கழிக்கும் நண்பர்களைக் கண்டு கவலை கொள்ளக்கூடாது. இருண்ட சிந்தனைகளைக் கொண்டவர்களே சிறந்த மென்மையான, மகிழ்ச்சியான படங்களை எடுக்கிறார்கள் என்பதை நம்புகிறேன். நபர் குறித்த மேற்கோள்கள் வெளியிணைப்புக்கள் சான்றுகள் பகுப்பு வாழும் நபர்கள் பகுப்பு இயக்குனர்கள் பகுப்பு தயாரிப்பாளர்கள் பகுப்பு 1972 பிறப்புக்கள்
2010ல் திரிஷா திரிஷா பிறப்பு மே 4, 1983, சென்னை , தமிழ், தெலுங்குத் திரைப்பட நடிகை ஆவார். சாமி, கில்லி போன்ற திரைப்படங்களில் நடித்ததன் மூலம் அறியப்படுகிறார். திரைப்படங்களில் நடிக்கத் துவங்கும் முன் சென்னை அழகியாக 1999ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டார். மேற்கோள்கள் எப்போதுமே நான் எதையுமே அதிகமாக கண்டுகொள்வதில்லை. அதைத்தான் எனது பலமாகக் கருதுகிறேன். நபர் குறித்த மேற்கோள்கள் வெளியிணைப்புக்கள் சான்றுகள் பகுப்பு வாழும் நபர்கள்
பார்த்திபன் இராதாகிருஷ்ணன் தமிழ்த் திரைப்பட நடிகரும் இயக்குனரும் ஆவார். இவர் இயக்குனர் கே. பாக்கியராச்சிடம் உதவி இயக்குனராகப் பணி புரிந்தவர். மேற்கோள்கள் எக்காயமும், யாரும், எக்காரணமும், எப்போதும் நம் புன்னகையை வெட்டி எறிந்துவிடாமல் பாதுகாப்பதே வாழ்வின் வெற்றியென்று! நபர் குறித்த மேற்கோள்கள் வெளியிணைப்புக்கள் சான்றுகள் பகுப்பு வாழும் நபர்கள் பகுப்பு தமிழ் திரைப்பட நடிகர்கள் பகுப்பு இயக்குனர்கள் பகுப்பு கவிஞர்கள்
பாக்யராஜ் 1951 ம் ஆண்டு கோபிச்செட்டிபாளையம் அருகே உள்ள வெள்ளாங்கோவில் என்னும் ஊரில் பிறந்தவர். தமிழ்த் திரையுலகில், நடிகர், வசன எழுத்தாளர், திரைக்கதை அமைப்பாளர், இயக்குனர், சிறப்பு வேடமேற்கும் நடிகர், தயாரிப்பாளர் மற்றும் பத்திரிகையாளர் எனப் பன்முகம் கொண்ட ஒரு கலைஞர். இயக்குனர் பாரதிராஜாவிடம் உதவி இயக்குனராக, '16 வயதினிலே', 'கிழக்கே போகும் ரயில்', சிகப்பு ரோஜாக்கள் ஆகிய படங்களில் திரைப்படக்கலை பயின்றவர். மேற்கோள்கள் எவனாலயும் அவனோட நிழலைவிட்டு எப்பவும் பிரிய முடியாதுனு சொல்லுவாங்க. என் முட்டாள்தனத்துக்கு நான் சப்பைக்கட்டு கட்ட விரும்பல. நான் உசுப்பட்டதைச் சீக்கிரமே உணர்ந்து ஒதுங்கிட்டேன். அவ்வளவுதான்! தனியாக அரசியல் கட்சி ஆரம்பித்து பிறகு கலைத்தது பற்றி கூறியது. நபர் குறித்த மேற்கோள்கள் வெளியிணைப்புக்கள் சான்றுகள் பகுப்பு வாழும் நபர்கள் பகுப்பு தமிழ் திரைப்பட நடிகர்கள் பகுப்பு இயக்குனர்கள் பகுப்பு 1951 பிறப்புக்கள் பகுப்பு கதாசிரியர்கள்
இராசகோபாலாச்சாரி 10 டிசம்பர் 1878 25 திசம்பர் 1972 ,தமிழகத்தில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அன்றைய சேலம் மாவட்டத்தில் ஓசூருக்கு அருகில் உள்ள தொரப்பள்ளி என்னும் கிராமத்தில் பிறந்த இந்திய விடுதலைப் போராட்ட வீரர் ஆவார். சுருக்கமாக ராஜாஜி என்றும் சி.ஆர் என்றும் அழைக்கப்பட்டவர். வழக்கறிஞர், எழுத்தாளர், அரசியல்வாதி என பன்முகம் கொண்டவர். இந்திய தேசிய காங்கிரசில் பெரும் பங்கு வகித்தவர்.பசும்பொன் முத்துராமலிங்க தேவர் அவர்களும் ராஜாஜியும் நேரடி அரசியல் எதிரிகளாக இருந்தாலும் கடைசி காலங்களில் தேவரின் மேல் நாட்டம் கொண்டு அவருடன் நட்பாகி விட்டார்,இருவரும் பல மேடைகளில் சேர்ந்தே தோன்றினர். கர்நாடகம் இணைந்த பகுதிகளைக் கொண்ட சென்னை மாநிலத்தின் முதலமைச்சராகப் பணியாற்றினார். விடுதலைக்குப் பின்னர் இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரலாக பொறுப்பாற்றினார். மேற்கோள்கள் ஒரு விலைமாது தன் உடலைப் பணத்துக்கு விற்பதை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. அதை என்னால் மன்னிக்கவும் முடியும். ஆனால், தன் அறிவை விலைபேசும் ஒரு வழக்கறிஞரை என்னால் மன்னிக்க முடியாது. இத்தொழிலை விட்டு விலகும் நாளை நான் ஆவலுடன் எதிர்பார்த்தேன். வழக்கறிஞர் தொழிலில் இருந்து விழகிய பொழுது கூறியது. அரசு லாட்டரி விற்பனையை நடத்துவது அரசியலமைப்புச் சட்டத்துக்கு முரணானது. இது ஏழை மக்களிடமிருந்து பணத்தைத் திருடுவதற்கு ஒப்பானது. ஒரு மாநில அரசு வருவாயைக் கருதி லாட்டரியை நடத்துமானால், சூதாட்ட நிலையங்களை நடத்துவோரைத் தண்டிக்கும் தார்மீக உரிமை அதற்கு எப்படி இருக்க முடியும்? அண்ணாவின் அரசு லாட்டரி விற்பனையில் ஈடுபட்டபோது கூறியது. சுற்றிலும் சட்டம் கட்டிய மேஜையின் வழவழப்பான பலகை மீது, பந்துகளை ஒரு கம்பினல் இடித்து, ஒன்றோடொன்று மோதவிட்டுக் குழிகளில் விழச்செய்யும் பில்லியார்ட்ஸ் ஆட்டத்திற்கும், கோலியாட்டத்திற்கும் அதிக வித்தியாசம் இல்லை. பில்லியார்ட்ஸ் ஆட்டத்திற்கான மேஜை, முதலிய உபகாரணங்களுக்கு ரூ 50 ஆயிரம் போல செலவு செய்வதைவிட, நாம் ஏன் கோலி ஆடக்கூடாது? விலை மலிவாகவும் பழங்காலத்தைச் சேர்ந்ததாகவும் உள்ள எதையும் மட்டமாக நினைக்கும் மனப்பான்மை நமக்கு இருக்கிறது. எனக்குப் பிராமணர்களும் ஒன்றுதான், வேளாளரும் ஒன்றுதான் இருவரும் தள்ளும் மற்ற ஜாதியாரும் ஒன்று தான். இவன் பேச்சோடு நில்லாதவன், செயலிலும் ஜாதி வித்தியாசத்தை மதியாதவன், அதிலும் பகிரங்க மூர்க்கன். நல்ல ஆசாரிய வம்சத்தில் பிறந்து குலத்தைக் கெடுத்தவன் என்று என்னைக் குலத்தார் நீக்கி வெகு நாளாயிற்று. 'முதலில் அவர் செய்யட்டும், பிற்பாடு நாம் செய்ய லாம் என்று நீங்கள் சொல்லிக் கொண்டிருக்கக் கூடாது. ஒவ்வொருவரும் உங்களால் ஆனதை உடனே செய்ய வேண்டும். இன்றைய தினத்திலிருந்து நீங்கள் அனாவசியமாகத் தூங்காமல் ஒவ்வொரு நாளும் 'நான் இந்த தேச விடுதலைக்காக என்ன செய்தேன்' என்று உங்கள் மனதைத் தொட்டுப் பாருங்கள். 1930 என் வாழ்நாளில் நான் எழுதியது எல்லாம் தமிழில் தான். வியாசர் விருந்தும், கண்ணன் காட்டிய வழியும், சக்கரவர்த்தி திருமகனும், உபநிஷதப் பலகணியும், பல வருடங்களுக்கு முன்பே கதைகளும் தமிழில்தான் எழுதினேன். எனக்கு ஆங்கிலத்தில் சரளமாக எழுத வராது. விஞ்ஞான சொற்கள் அடங்கிய புத்தகமும் தமிழில்தான் எழுதினேன். தமிழிலேயே மூழ்கி வளர்ந்தவனை என்னைப் பார்த்து தமிழுக்கு விரோதி எதிரி என்பது மோசடி முழுப்பொய் கலியுகப்புளுகு. 4 7 1965 மக்களுக்குப் பாட்டைப் போல உற்சாக மூட்டுவது வேறொன்றுமில்லை. எனக்கு மட்டும் சுப்புலட்சுமியைப் போல பாட வந்தால், அதோடு எனக்கு இருப்பதாக நீங்கள் கூறும் குணங்களுமிருந்தால், நான் உலகத்தையே ஆளுவேன். 1947 எட்டயபுரம் பாரதி மண்டபத் திறப்பு விழாவில் அரும்பெரும் மனிதர்கள் திடீரென்று தோன்றி விடுவதில்லை. அந்தந்தப் பருவங்கள் அந்தந்தக் காலத்துக்குத்தகுதியான பிரத்தியேகமான மலர்களை உண்டாக்குவது போல, சமுதாயத்தில் மாறிவரும் தேவைகளுக்கேற்ப மகா புருஷர்கள் உருவாக்கப்படுகின்றனர். குடிப்பதற்குக் குழாய்த் தண்ணீர், குளிப்பதற்குக் கிணற்றுத் தண்ணீர், துணி துவைப்பதற்குக் குளத்துத் தண்ணீர் இப்படிச் சிலர் உபயோகிப்பார்கள். ஆனால், காவிரி நீர், குளிக்க, குடிக்க, துணி துவைக்க, பாத்திரம் துலக்க எல்லாவற்றுக்குமே பயன்படும். காவிரி நீர் மாதிரி நமது எழுத்தும் இருக்க வேண்டும். அதாவது எளிமையாக, தெளிவாக எல்லோருக்கும் புரியும்படி இருக்கவேண்டும். நம் தமிழைப் புரிந்து கொள்ள யாரும் சிரமப் படக்கூடாது. கருத்தைப் புரிந்து கொள்வது அவரவர் ஈடுபாட்டைப் பொறுத்தது. என்னைப் பொறுத்த வரையில், என்னிடமிருந்த அளவு, என்னால் முடிந்த வரையில், சுதந்திரப் போராட்டத்தில் தியாகம் செய்தேன். என் தியாகம் பெரிதாக இல்லாமல் இருக்கலாம். என்னிடம் இருந்ததும், என்னல் முடிந்ததும் அவ்வளவுதான். அதைச் செய்துவிட்டேன். நான் எப்போதும் என் வரையில் எனது கடமையைச் செய்பவன். மற்றவர்கள் பதிலுக்கு உதவி செய்கிறார்களா என்பதை எதிர்பார்க்காதவன். இராஜாஜி 5 3.1962 தமிழ் நாட்டில் தமிழ் சங்கீதம் வளர்ச்சியடைய வேண்டுமென்ற பேரவா கொண்டவர்களில் நானும் ஒருவன். சமீப காலமாகத் தமிழ்ப் பாடல்கள் பாடுவதைப் பற்றி ஓர் விவாதம் நடந்து வருகிறது. சங்கீதத்திற்குப் பாஷை அவசியம் இல்லையென்று கூறப்படுகிறது. அப்படியானல் இப்பொழுது போற்றப்பட்டு வரும் மகான் தியாகராஜாவின் கீர்த்தனங்களுக்கு அவசியமேயில்லையே! 30.12.1942 காரைக்குடி இந்து மதாபிமான சங்கத்தின் 25 வது ஆண்டு நிறைவு விழாவில். பொன் மொழிகள் நம்முடைய தேகமும், உள்ளமும் ஆண்டவனுடைய கோயில். அதைச் சுத்தமாக வைத்துக் காப்பது நம் கடமை. எவ்வளவு கல்வியும் செல்வமும் இருந்தாலும், அடக்கம் இல்லாவிடில் பண்பாடென்பது இல்லை. தீண்டாமை என்பது நமது சமூகத்தில் ஒரு மாசு. தீண்டாமை ஒரு விஷப் பாம்பு. அதைக் கொன்றாக வேண்டும். பள்ளிக்கூடங்கள் தேசத்தில் எத்தனை இருந்தாலும், பண்பாட்டுக்குப் பள்ளிக்கூடம் வீடேயாகும். வாழ்கையில் தைரியமாக இருப்பதைவிட மகிழ்ச்சி அளிக்க்கூடிய விஷயம் வேறு என்ன இருக்க முடியும்! ஞானமும், பக்தியும் அனைவருக்கும் உரித்தான பெருஞ்செல்வம். கோபம் கூடாது. அது முகத்தின் அழகைக் கெடுத்து விடுகிறது. சாந்தமே முகத்திற்கு அழகு தருகிறது. ஒழுக்கத்துடனும், நாணயத்துடனும் ஒவ்வொருவரும் நடந்துகொண்டால், எல்லோருக்கும் நன்மை விளையும். நம்முடைய சமூகம் சுதந்திர வாழ்க்கையை அடைந்துவிட்டது. சுதந்திரத்துடன் சுகமும் பெறவேண்டுமானால், மக்கள் அற வழியில் நிற்கவேண்டும். நபர் குறித்த மேற்கோள்கள் சான்றுகள் வெளியிணைப்புக்கள் பகுப்பு இறந்த நபர்கள் பகுப்பு 1878 பிறப்புக்கள் பகுப்பு 1972 இறப்புக்கள் பகுப்பு அரசியல் தலைவர்கள் பகுப்பு தமிழ் நாட்டு முதலமைச்சர்கள் பகுப்பு தமிழக அரசியல்வாதிகள்
பிரகாஷ் ஜவடேகர் பிறப்பு 30 ஜனவரி 1951 இந்திய அரசியல்வாதி. மேற்கோள்கள் சாராம்சமாக, கிளர்ச்சியின் விளைவே புதுமை. ஏற்கெனவே இருக்கும் நடைமுறைகளைக் கொள்கைகளை தக்கவைப்பதற்கு எதிராக செயல்படவில்லையெனில் அதனை எதிர்க்கவில்லையெனில் எந்த புதுமையையும் கொண்டு வர முடியாது. இந்தியக் கல்வித்துறையில் புதுமை இல்லாததற்குக் காரணம் என்ன? நாம் கேள்விகள் கேட்க அனுமதிக்கவில்லை. கேள்விகேட்கும் திறனை நாம் வளர்த்தெடுக்க விரும்பவில்லை. பள்ளியில் மாணவர்கள் கேள்வி கேட்டால் நாம் உட்கார் என்று தடை போடுகிறோ. இது இப்படியே தொடர்வது கூடாது. கேள்வி கேட்கும் திறனை நாம் வளர்த்தெடுப்பது அவசியம். குழந்தைகள் கேள்வி கேட்க வேண்டும். குழந்தைகளை கேள்வி கேட்க அனுமதித்தால் புதுமை தானாகவே விளையும். ஏற்கெனவே இருக்கும் நடைமுறைகளை கேள்விக்குட்படுத்தி மாற்றங்களை ஏற்படுத்தும். நபர் குறித்த மேற்கோள்கள் வெளியிணைப்புக்கள் சான்றுகள் பகுப்பு வாழும் நபர்கள் பகுப்பு 1951 பிறப்புக்கள் பகுப்பு அரசியல் தலைவர்கள்
ஆமிர் கான் பிறப்பு மார்ச் 14, 1965 , இவர் இந்தியத் திரைப்பட நடிகர், இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் ஆவார். கான் விமர்சன ரீதியாகவும் வணிக ரீதியாகவும் வெற்றி பெற்ற பல படங்களில் நடித்துள்ளார், மேலும் அவர் இந்தி திரைப்படத்தில் முன்னணி நடிகர்களில் ஒருவராகவும் உள்ளார். மேற்கோள்கள் மத்திய அரசாக இருந்தாலும் சரி, மாநில அரசாக இருந்தாலும் சரி மக்கள் தங்கள் கைகளில் சட்டத்தை எடுக்கத் துணியும் போது அதை வன்மையாகக் கண்டிக்க வேண்டும், சட்ட நடவடிக்கைகளை முடுக்கிவிட வேண்டும். இவ்வாறு நடந்தால் பாதுகாப்பு உணர்வு இருக்கும். மதத்தின் பெயரை கூறிக்கொண்டு பயங்கரவாதத்தை பரப்புபவர்கள், குறிப்பிட்ட மதத்தை உண்மையாக பின்பற்றுபவர்கள் அல்ல நபர் குறித்த மேற்கோள்கள் வெளியிணைப்புக்கள் சான்றுகள் பகுப்பு வாழும் நபர்கள் பகுப்பு 1965 பிறப்புக்கள் பகுப்பு நடிகர்கள் பகுப்பு இயக்குனர்கள் பகுப்பு தயாரிப்பாளர்கள்
பார்வதி இந்திய நடிகை கேரள மாநிலத்தில் கோழிக்கோட்டில் பிறந்தவர். மலையாளம், தமிழ் ஆகிய மொழித் திரைப்படங்களில் நடித்துள்ளார். மேற்கோள்கள் மாசற்ற மனசாட்சியுடன் ஒரு நல்லிரவு உறக்கத்துக்கும் சீசா விளையாட்டு ஏற்றஇறக்க பலகை விளையாட்டு போல் ஏற்ற இறக்கங்களை சரிசமமாக பாவிக்கும் தன்மைக்கும் இடையேயான போட்டாபோட்டிதான் மகிழ்ச்சி. ஒரு மனிதன தனது தவறுகளை தானே நளினமாக திருத்திருக்கொள்ளும் சீர்திருத்தமே தலைசிறந்தது. நபர் குறித்த மேற்கோள்கள் வெளியிணைப்புக்கள் சான்றுகள் பகுப்பு வாழும் நபர்கள் பகுப்பு நடிகர்கள் பகுப்பு தமிழ் திரைப்பட நடிகர்கள்
எலிசபத் கில்பர்ட் சூலை 18, 1969 ஓர் அமெரிக்க எழுத்தாளர், நாவலாசிரியர். மேற்கோள்கள் இரக்கமற்ற உலையாக திகழும் இவ்வுலகில் நமக்கான மகிழ்ச்சியை சிக்கென பற்றிக்கொள்ளும் பிடிவாதம் நமக்கு வேண்டும் நபர் குறித்த மேற்கோள்கள் சான்றுகள் பகுப்பு வாழும் நபர்கள் பகுப்பு 1969 பிறப்புக்கள் பகுப்பு எழுத்தாளர்கள் பகுப்பு அமெரிக்கர்கள்
பாலு மகேந்திரா 20 மே 1939 13 பெப்ரவரி 2014 இந்தியத் திரைப்பட இயக்குனரும் ஒளிப்பதிவாளரும் ஆவார். சமகாலத் தமிழ் வாழ்க்கையை சித்தரிக்கும் பல படைப்புகளை உருவாக்கியவர். தமிழ், தெலுங்கு, கன்னட, மலையாள, ஹிந்தி மொழித் திரைப்படங்களில் பணியாற்றியவர். மேற்கோள்கள் உன்னோட பவுன்ஸிங் வால் நல்லா இருந்தால்தான், நீ அடிக்கிற பந்து கரெக்ட்டா திரும்ப உன்னிடம் வரும். அந்த மாதிரி உன் வேவ்லெங்த்துக்கு செட் ஆகுற ஆள்கிட்ட உன் கதையைப் பகிர்ந்துகிட்டாதான், ஒரு நல்ல கதையை வளத்தெடுக்க முடியும் சினிமா கதை விவாதத்தைப் பற்றி கூறியது. நபர் குறித்த மேற்கோள்கள் வெளியிணைப்புக்கள் சான்றுகள் பகுப்பு இறந்த நபர்கள் பகுப்பு இயக்குனர்கள் பகுப்பு 1939 பிறப்புக்கள் பகுப்பு 2014 இறப்புக்கள்
இசுக்காட்லாந்து ஸ்காட்லாந்து, இசுக்கொட்லாந்து, வடமேற்கு ஐரோப்பாவில் பெரிய பிரித்தானியத் தீவில் உள்ள நாடு. இது ஐக்கிய இராச்சியத்தின் ஒரு பாகமாகும். இதன் கிழக்கில் வட கடலும், வடமேற்கிலும் மேற்கிலும் அட்லாண்டிக் பெருங்கடலும், தென்மேற்கில் வடக்குக் கால்வாயும் ஐரியக் கடலும் சூழ்ந்துள்ளது. இதன் தெற்கில் இங்கிலாந்துடன் தனது எல்லையைக் கொண்டிருக்கிறது. முதன்மையான பெரும் தீவு மட்டுமின்றி 790க்கும் மேற்பட்ட சிறு தீவுகளும் இசுக்காட்லாந்தில் அடங்கும். பழமொழிகள் அகம்பாவம் ஒரு பொல்லாத குதிரை அது தன எஜமானனை ஒரு முறையாவது கீழே தள்ளாமல் விடாது. அதிகக் காதலுள்ளவர்கள் மிகக் குறைவாகப் பேச வேண்டும். வெளியிணைப்புக்கள் பகுப்பு நாடு வாரியாக பழமொழிகள்
சித்ரா அல்லது கே. எஸ். சித்ரா எனப் பொதுவாக அழைக்கப்படும் கிருஷ்ணன் நாயர் சாந்தகுமாரி சித்ரா , பிறப்பு 27 சூலை 1963 , இந்தியத் திரைப்படப் பின்னணிப் பாடகி ஆவார். இவர் மலையாளம், கன்னடம், தமிழ், தெலுங்கு, ஒரியா, இந்தி, அசாமிய, வங்காளம் போன்ற பல இந்திய மொழிகளில் பாடி வருகிறார். இவர் ஆறு தடவைகள் இந்தியத் தேசிய திரைப்பட விருதுகளையும், ஆறு தடவைகள் தென்னிந்திய பிலிம்பேர் விருதுகளையும், மற்றும் பல்வேறு மாநில விருதுகளையும் பெற்றுள்ளார். இவர் தென்னிந்தியர்களிடையே சின்னக்குயில் சித்ரா எனப் பிரபலமாக அழைக்கப்படுகிறார். மேற்கோள்கள் எனக்குத் தெரிந்ததெல்லாம் ஓரளவு சங்கீதம் மட்டுமே. ஆனால் அந்த இசையே எனக்கு எல்லாம். வெளியிணைப்புக்கள் பகுப்பு 1963 பிறப்புக்கள் பகுப்பு வாழும் நபர்கள் பகுப்பு இந்தியர்கள் பகுப்பு பாடகர்கள்
அரவிந்த்சாமி பிறப்பு 30 ஜூன் 1967 ஓர் புகழ்பெற்ற இந்தியத் திரைப்பட நடிகர். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தித் திரைப்படங்களில் நடித்து வருகிறார். ரோஜா, பம்பாய், மின்சார கனவு, இந்திரா, தேவராகம், அலைபாயுதே என்பன அவரது புகழ்பெற்ற திரைப்படங்களில் சில. மேற்கோள்கள் பேட்டிங் பண்றப்ப அவுட் ஆனா என்ன ஆகும்னு யோசிச்சா, பேட் ஒரு பக்கம் பால் ஒரு பக்கம் போகும்... தைரியமா விளையாடணும். நபர் குறித்த மேற்கோள்கள் வெளியிணைப்புக்கள் சான்றுகள் பகுப்பு வாழும் நபர்கள் பகுப்பு 1967 பிறப்புக்கள் பகுப்பு தமிழ் திரைப்பட நடிகர்கள் பகுப்பு இந்தியர்கள்
தா. பாண்டியன் பிறந்த திகதி 18 மே 1932 இந்திய பொதுவுடமைக் கட்சி இன் தமிழ்நாடு மாநிலக்குழுவின் முன்னாள் செயலாளர் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆவார். மேற்கோள்கள் "தொலைக்காட்சி விவாதங்களில் நான் பங்குபெறுவது இல்லை. முக்கியமான கருத்தைப் பேசிக்கொண்டிருக்கும்போது, 'ஒரு சிறிய இடைவேளை' என விளம்பரம் போடுவார்கள். 'வரவு பார்த்துவிட்டு உன்னை உளறவிடுகிறேன்' என்பதுதான் அதன் அர்த்தம். முதலாளித்துவச் சூத்திரத்தையும் சரண்டலையும் மார்க்ஸிடம் இருந்து கற்றவன் நான். வெறும் உணர்வுகளை வைத்துக்கொண்டு குடுகுடுப்பை ஆட்டம் ஆடும் பாமரத்தனமான அரசியல் அல்ல. அதனால் ஊடக விவாதங்களில் பேசவேண்டிய அவசியம் எனக்கு இல்லை" நபர் குறித்த மேற்கோள்கள் வெளியிணைப்புக்கள் சான்றுகள் பகுப்பு வாழும் நபர்கள் பகுப்பு 1932 பிறப்புக்கள் பகுப்பு அரசியல்வாதிகள் பகுப்பு இந்தியர்கள்
தணிகை மீட்ட தளபதி எனப் பரவலாக அறியப்படும் கே. விநாயகம் திருத்தணியை தமிழகத்துக்கு மீட்டுக் கொடுக்கப் போராடியவர். ஆந்திரப் பிரதேசம் தமிழ்நாட்டில் இருந்து பிரிந்த போது திருப்பதிக்கு தெற்கில் இருந்த பல பகுதிகள் தமிழகத்தோடு 1960ஆம் ஆண்டில் தான் இணைக்கப்பட்டது. அதை மீட்டு தந்ததில் பெரும்பங்கு விநாயகத்தைச் சேரும். இவர் ஆற்றிய சட்டமன்ற உரைகள் கீழே தொகுக்கப்படுகின்றன. தெலுங்குத் திணிப்பு எதிர்ப்பு சித்தூர் மாவட்டம் ஆந்திரர்களின் மாவட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளது. உண்மையில் சித்தூர் மாவட்டம் பல மொழியினர் கூடி வாழும் மாவட்டம் ஆகும். தமிழர்களே பெருவாரியாக இங்கு வாழ்கின்றனர். ஆனாலும் தாலுகா அலுவலகங்கள், போலிஸ் நிலையங்கள், நீதிமன்றங்கள், பதிவாளர் அலுவலகங்கள் ஆகியவற்றில் தெலுங்கில் மட்டுமே ஆவணங்கள் அளிக்கப்பட வேண்டும் என்று உத்தரவு இடப்பட்டுள்ளது. கடந்த 1908 ஆம் ஆண்டிலிருந்து இவ்வாறு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதன் விளைவாக அங்கு வாழும் தமிழர்களுக்கு தங்கள் தாய்மொழியைக் கற்கும் வாய்ப்பே இல்லாமல் போய்விட்டது. நான் சித்தூர் மாவட்டத்தில் பிறந்தவன். ஆனாலும் தெலுங்கு மொழி படிக்கும்படி கட்டாயப்படுத்தப்பட்டேன். மாவட்டக் கழக ஆட்சியின் போது தமிழ்ப் பள்ளிக்கூடங்கள் அறவே ஒழிக்கப்பட்டுவிட்டன. தெலுங்கு பள்ளி கூடங்களில் படிக்க வேண்டிய கட்டாயம் தமிழர்களின் பிள்ளைகளுக்கு ஏற்பட்டது. ஜஸ்டிஸ் கட்சி ஆட்சிக்கு வந்தபோது அனேகமாக எல்லா முதலமைச்சர்களும் தெலுங்கர்களாகவே இருந்தனர். பனகல்ராஜா, பி. முனிசாமி நாயுடு, சர். கே. வி. ரெட்டி, பொப்பிலி ராஜா போன்ற ஆந்திரர்கள் முதலமைச்சர்களாக இருந்த போது இம்மாவட்டத்தில் வாழ்ந்த தமிழர்கள் கொஞ்சம் கொஞ்சமாக தெலுங்கு மொழி பேசுபவர்களாக ஆக்கப்பட்டனர். இம்மாவட்டத்தில் வாழ்ந்த வன்னியர்கள் ரெட்டிகள் எனப் பட்டம் பூண்டனர். நானே கூட ரெட்டி என அழைக்கப்படுகிறேன். ஆனால் நான் முழுக்க முழுக்க மொழியினாலும் பண்பாட்டினாலும் தமிழனே. ஆனால் ரெட்டி என நாங்கள் பட்டம் பூண்டதால் எங்களை தெலுங்கர்களாகவே பதிவு செய்தனர். சட்டமன்றம் 27 04 59 தமிழக வடக்கெல்லை மீட்புக்கு ஆதரவு ஆந்திர அரசு தமிழ்நாட்டின் பல பகுதிகளில் மீதும் உரிமை கொண்டாடத் தொடங்கியிருக்கிறது. ஓசூர், கிருட்டினகிரி, குடியாத்தாம், பொன்னேரி, திருவள்ளூர். எத்தகைய ஆதாரமும் இல்லாமல் ஆந்திர அரசு இவ்வாறு உரிமை கொண்டாடுவதற்கு ஆழ்ந்த உள்நோக்கம் இருக்கிறது. திருத்தணி தாலுகாவைப் பொறுத்தவரையில் 73 தமிழர்கள் அங்கு வாழ்கிறார்கள். சித்தூர் மாவட்டத்தைப் பொறுத்தவரையில் அங்கும் பெரும்பாண்மை தமிழர்களே இருக்கிறார்கள். தெலுங்கர்களை விட தமிழர்களின் எண்ணிக்கை 4000 அதிகம் ஆகும். சட்டமன்றம் 23 11 55 தமிழக தெற்கெல்லை மீட்புக்கு ஆதரவு மாநில புணரமைப்புக் கமிசனின் தலைவர் சர். பசல் அலி பீகாரைச் சார்ந்தவர். அவருடைய சொந்த மாநிலமான பீகார் பற்றிய விவாதம் நடைபெற்ற போது அவர் அதில் கலந்துகொள்ளாமல் வெளியேறி விட்டார். அவருடைய இந்த நேர்மையான நடவடிக்கையை நான் பாராட்டுகிறேன். ஆனால் கமிசனின் மற்றொரு உறுப்பினரான கே. எம். பணிக்கரிடம் இத்தகைய நேர்மையில்லை. தமிழ்நாடு, கேரளம் ஆகியவை பற்றிய பிரச்சினை விவாதிக்கப்படும் போது மலையாளியான அவர் இந்த கமிசன் கூட்டத்தில் கலந்து கொண்டிருக்கக் கூடாது. குறிப்பாக தேவிகுளம், பீர்மேடு தாலுகாக்களை பற்றிய பிரச்சினைகளில் அவர் அளவு கடந்து அக்கரை காட்டி இந்த தாலுக்கா கேரளத்துடனேயே இணைக்க வேண்டும் என்று கமிசனுக்குள்ளேயும், வெளியேயும் வாதாடி வருகிறார். சட்டமன்றம் 23 11 55 ஆரணியாற்றுப் படுகை தொடர்பான பேச்சு ஆரணி ஆற்றுப் பாசனத்தில் உள்ள பெரும்பகுதியான நிலங்கள் தமிழகத்தில் உள்ளன. இப்போது கிராமங்களைப் பிரித்த பிறகு ஆரணியாறு அணை இருக்கக் கூடிய இடம் ஆந்திராவிறகுப் போய் விட்டது. இதன் விளைவாக தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய 22 கிராமங்களில் உள்ள 13,000 ஏக்கர் நிலம் பாதிக்கப்டுகிறது. நீர்ப்பாசன வசதிகளைப் பிரித்து வைக்கக்கூடாது என்பதை மாநில அரசுகளும் மத்திய அரசும் ஒப்புக்கொண்டு இருக்கின்றன. ஆந்திராவில் உள்ள 13 கிராமங்களில் வசதிக்காக ஆரணி அணைப்பகுதி அளிக்கப்பட்டது. ஆரணியாறு அணைப்பகுதியையும் 35 கிராமங்களையும் தமிழ்நாட்டுடன் தான் இணைத்து இருக்க வேண்டும். கிராமத்தை அடிப்படையாக வைத்துக் கொண்டால்தான் ஆரணி ஆற்றுப் பகுதி ஆந்திராவிற்குப் போய் விட்டது. பிர்க்காவை அடிப்படையாகக் கொண்டு பிரிவினை செய்திருந்தால் இந்தப் பகுதி தமிழ்நாட்டுக்கு வந்திருக்கும். சித்தூர், திருத்தணி, நகரி, சத்தியமேடு ஆகிய பிர்க்காக்கள் தமிழ்நாட்டிற்கும் கிடைத்திருக்கும். பிர்க்காவை அடிப்படையாக வைத்து பிரிவினை செய்யக்கூடாது என ஆந்திரக் கம்யூனிஸ்டுகளும், கிளர்ச்சி செய்தார்கள். அதை மத்திய காங்கிரசு ஆட்சி ஏற்றுக்கொண்டது. இதன் விளைவாக தமிழ்நாட்டிற்கு பாதகம் ஏற்ப்பட்டது. சட்டமன்றம் 10 3 53 மூலம்
ஜேன் ஆஸ்டின் அவர்களின் சகோதரி கேசன்ட்ரா ஆஸ்டினால் வரையப்பட்ட உருவபடம் . 1810 ஜேன் ஆஸ்டின் , டிசம்பர் 16, 1775 ஜூலை 18, 1817 ஒரு பிரிட்டானியப் பெண் எழுத்தாளர். இவர் எழுதிய நடுத்தர மக்களைப் பற்றிய நேசப் புனைவுகள் ஆங்கில இலக்கிய உலகில் இவருக்கு அழியாத இடத்தைத் தந்துள்ளன. இவரது புதினங்களில் காணப்படும் யதார்த்தவாதமும், கூர்மையான சமூக விமர்சனமும் வெகுஜன வாசகர்களிடம் மட்டுமல்லாது விமர்சகர்களிடமும், இலக்கிய ஆய்வாளர்களிடமும் இவருக்கு பெரும் மதிப்பைப் பெற்றுத்தந்துள்ளன. அவரது பொன்மொழிகள் வீட்டில் தங்கியிருக்கும்போது உள்ளது போன்ற சுகம் வேறு எங்கும் இல்லை. இதயத்தின் மென்மைக்கு இணையான வசீகரம் வேறு எங்குமில்லை. ஒரு கலைஞனால் அழகில்லாத எதையும் செய்ய முடியாது. திருமணத்தில் உள்ள மகிழ்ச்சியானது முற்றிலும் வாய்ப்பினை பொறுத்த விஷயம். இந்த உலகின் ஒரு பாதியால் மற்ற பாதியின் மகிழ்ச்சியை புரிந்துகொள்ள முடிவதில்லை. எங்கு ஒரு கருத்து பொதுவானதாக உள்ளதோ, வழக்கமாக அது சரியானதாகவே இருக்கின்றது. செய்வதற்கு சரியான செயலை மிக விரைவாக செய்ய முடியாது. நான் கேள்விப்பட்டவரையில் மிகப்பெரிய வருமானம் என்பது மகிழ்ச்சிக்கான சிறந்த செயல்முறையாக உள்ளது. திறமையான நன்கு தகவலறிந்தவர்களின் சகவாசமே நல்ல சகவாசம் என்பதே என் கருத்து. தற்பெருமை பலவீனமான தலைமையில் செயலாற்றி, ஒவ்வொரு வகையான குழப்பத்தையும் உருவாக்குகின்றது. கடந்தகால நினைவுகூர்தல் உங்களுக்கு மகிழ்ச்சியளித்தால் மட்டும் அதைப்பற்றி நினையுங்கள். ஒருவருடைய வழிமுறை மற்றொருவருடையதைவிட சிறந்ததாக இருக்கலாம். ஆனால், நம்முடைய தனிப்பட்ட சிறந்ததை நாம் விரும்ப வேண்டும். வெளி இணைப்புக்கள் மேற்கோள்கள் பகுப்பு பிரித்தானியர்கள் பகுப்பு 1775 பிறப்புக்கள் பகுப்பு 1817 இறப்புக்கள் பகுப்பு எழுத்தாளர்கள்
ஜார்ஜ் சண்டயானா 1863 1952 என்பவர் ஸ்பானிய அமெரிக்க மெய்யியலாளர், கட்டுரையாளர், கவிஞர், நாவலாசிரியர் என பன்முகத்தன்மைவாய்ந்த எழுத்தாளராவார். பல மொழிகளைக் கற்ற இவரின் தி சென்ஸ் ஆப் பியூட்டி உள்ளிட்ட இவரது மெய்யியல் படைப்புகள், புத்தகங்கள் மற்றும் கட்டுரைகள் பெரும்புகழ் பெற்றவை. இவரது மேற்கோள்கள் இயற்கையின் தலைசிறந்த படைப்புகளில் ஒன்று குடும்பம். மரணத்தால் மட்டுமே போரின் முடிவைப் பார்க்க முடியும். ஒரு மனிதனின் கால்கள் அவனது சொந்த நாட்டில் பதியப்பட வேண்டும். ஆனால், அவனது கண்கள் உலகையே நோட்டமிட வேண்டும். உங்களுடைய உணர்வுபூர்வமான வாழ்க்கையை மற்றவர்களின் பலவீனங்களின் மீது ஒருபோதும் உருவாக்காதீர்கள். மிகப்பெரும் ஏமாற்றங்களில் இருந்தே ஞானம் பிறக்கின்றது. விரைவில் கடந்த காலமாக மாறிவிடும் என்பதை நினைவுகூர்ந்து எதிர்காலத்தை வரவேற்க வேண்டும். விவேகமுள்ள மனம் அறிந்துகொள்ள வேண்டியது இன்னும் உள்ளது. கடினமானது என்பது உடனடியாக செய்ய முடிந்தது சாத்தியமற்றது என்பது செய்வதற்கு சிறிது நேரம் தேவைப்படுவது. வாழ்க்கை என்பது ஒரு விந்தையோ அல்லது விருந்தோ அல்ல அது ஒரு இக்கட்டான நிலையை உடையது. பள்ளியில் மட்டுமே படித்த ஒரு குழந்தை, உண்மையில் படிக்காத குழந்தையே. எது சாத்தியம் என்பதன் அறிவே மகிழ்ச்சியின் ஆரம்பம். உடல் ஒரு கருவி, மனம் அதன் செயல்பாடு. அழுதறியாத இளைஞன் ஒரு காட்டுமிராண்டி சிரித்தறியாத கிழவன் ஒரு மூடன். மேற்கோள்கள் பகுப்பு எழுத்தாளர்கள் பகுப்பு 1863 பிறப்புக்கள் பகுப்பு 1952 இறப்புக்கள் பகுப்பு கவிஞர்கள் பகுப்பு அமெரிக்கர்கள்
பிரெடரிக் நீட்சே 1844 1900 என்பவர் புகழ்வாய்ந்த ஜெர்மானிய மெய்யியலாளர், கவிஞர், பண்பாட்டு விமர்சகர் ஆவார். இவர் மதம், கவிதை, தத்துவ எதிர்வாதம், விமர்சனம், அறிவியல், ஒழுக்கநெறி ஆகியவற்றில் படைப்புகளை செய்துள்ளார். இவரது எழுத்துக்கள் நவீன அறிவார்ந்த வரலாறு மற்றும் மேற்கத்திய மெய்யியலிலிலும், இருபதாம் நூற்றாண்டின் பல முக்கிய எழுத்தாளர்கள் மற்றும் சிந்தனையாளர்களிடமும் தாக்கம் செலுத்தியுள்ளது. இவரது சிந்தனைகள் சில எப்போதும் அன்பில் சில பைத்தியக்காரத்தனம் உண்டு. ஆனால், அந்த பைத்தியக்காரத்தனத்திற்கான காரணமும் எப்போதும் உண்டு. ஒவ்வொரு உண்மையான மனிதனுக்குள்ளும் விளையாட்டில் விருப்பமுள்ள ஒரு குழந்தை மறைந்துள்ளது. நமது உணர்வுகளின் நிழல்களே எண்ணங்கள். அவை எப்போதும் இருண்ட, வெறுமையான மற்றும் எளிமையானதாக உள்ளன. இசை இல்லாமல், வாழ்க்கை தவறானதாகிவிடும். உண்மைகள் என்று எதுவுமில்லை, விளக்கங்கள் மட்டுமே உள்ளன. பொய் என்பது வாழ்க்கையின் ஒரு நிபந்தனையாக உள்ளது. ஒரு எதிரிக்கு எதிரான சிறந்த ஆயுதம், மற்றொரு எதிரியே. கடந்த காலத்தைப் போலவே எதிர்காலமும் நிகழ்காலத்தில் ஆதிக்கம் செலுத்துகின்றது. உங்களது ஆழ்ந்த தத்துவத்தில் உள்ளதைவிட, உங்கள் உடலில் அதிக ஞானம் உள்ளது. மன்னிப்பதற்கு ஏதாவது இருந்தால், அங்கே கண்டிப்பதற்கும் ஏதாவது ஒன்று இருக்கும். ஏன் என்பது உங்களுக்கு தெரியுமானால், உங்களால் எப்படியாயினும் வாழ முடியும். அனைத்து அழகிய கலை மற்றும் அனைத்து உயர்ந்த கலை ஆகியவற்றின் சாராம்சமாக நன்றி உள்ளது. காட்டு மிருகமாயிருக்கும் மனிதன் வீட்டு மிருகமாக ஆக்குவதே நாகரிகத்தின் பயன். இரவலரை இல்லாமல் செய்யவேண்டும், அவர்க்குக் கொடுப்பதும் வேதனை தருகிறது, கொடுக்காமலிருப்பதும் வேதனை தருகிறது. எந்த நூல், ஆக்கியோன் இரத்தத்தால் ஆக்கப் பட்டிருக்கிறதோ அந்த நூலே எனக்குப் பிரியம். வெளி இணைப்புக்கள் மேற்கோள்கள் பகுப்பு 1844 பிறப்புக்கள் பகுப்பு 1900 இறப்புக்கள் பகுப்பு கவிஞர்கள் பகுப்பு செர்மனியர்கள்
ஓமர் கய்யாம் என அழைக்கப்படும் கியாஸ் ஒத் தீன் அபொல் ஃபத் ஓமார் இபின் எப்ராகிம் கய்யாம் நேஷபூரி பாரசீக மொழி பிறப்பு நேஷபூர், பாரசீகம், மே 18, 1048, இறப்பு டிசம்பர் 4, 1122 ஒரு பாரசீகக் கவிஞரும், கணிதவியலாளரும், மெய்யியலாளரும், வானியலாளரும் ஆவார். இவர் ஓமர் அல் கய்யாமி எனவும் அழைக்கப்படுகிறார். இவர் அவரது கவிதைகளுக்காகவே கூடுதலாக அறியப்படுகிறார். மேற்கோள்கள் பகைவனை மன்னிக்காதவன், உடலில் அமையக்கூடிய உயர்ந்த இன்பத்தை இன்னும் அறியாதவன். நான் எழுதிய எழுத்தில் பாதியைக்கூட உங்களால் அழிக்க முடியாது. ஏன், உங்கள் கண்ணீரெல்லாம் கொட்டிக் கழுவினாலும் ஒரு வார்த்தையைக்கூட அழிக்க முடியாது. குறிப்புகள் வெளியிணைப்புக்கள் பகுப்பு இறந்த நபர்கள் பகுப்பு 1048 பிறப்புக்கள் பகுப்பு 1131 இறப்புக்கள் பகுப்பு கவிஞர்கள் பகுப்பு கணிதவியலாளர்கள் பகுப்பு மெய்யியலாளர்கள் பகுப்பு வானியலாளர்கள்
எட்மண்ட் பர்க் 1729 1797 என்பவர் அயர்லாந்து நாட்டில் பிறந்து, பிரிட்டனில் குடியேறிய மெய்யியலாளர், இராசதந்திரி, ஆசிரியர், சொற்பொழிவாளர், அரசியல் கோட்பாட்டாளர் என பன்முகத்தன்மை வாய்ந்தவர். இலண்டனில் பாராளுமன்ற உறுப்பினராக பல ஆண்டுகள் பணியாற்றியவர். அரசியலமைப்பின் வரம்புகள், வரிவிதிப்பு, பிரெஞ்சுப் புரட்சி, அயர்லாந்து மற்றும் இந்திய சிக்கள்கள் போன்றவற்றை தனது எழுத்திலும் பேச்சிலும் பயன்படுத்தியவர். அரசியல் கோட்பாடு வரலாற்றில் முதன்மையான நபராகக் கருதப்படுகிறார். இவரின் புகழ்வாய்ந்த மேற்கோள்கள் நம்முடன் போராடுபவனே நமது நரம்புகளை வலுப்படுத்துகிறான், நமது திறமையைக் கூர்படுத்துகிறான். ஆக, நமது எதிரியே நமக்கு உதவுபவன். புகழ்ச்சியானது புகழ்பவர் மற்றும் புகழப்படுபவர் இருவரையும் பாழ்படுத்தி விடுகின்றது. கரவொலி, உயர்ந்த மனதிற்கு தூண்டுகோலாகவும், பலவீன மனதிற்கு இறுதியானதாகவும் உள்ளது. ஒருபோதும் நம்பிக்கை இழக்காதீர்கள், அப்படியானாலும் அந்த விரக்தியிலும் செயல்பட்டுக்கொண்டே இருங்கள். மாற்றம் என்னும் உயரிய சட்டத்திற்கு நாம் அனைவரும் கீழ்படியவேண்டும். இதுவே இயற்கையின் அதிக ஆற்றல்வாய்ந்த சட்டமாகும். அழகு என்பது மகிழ்ச்சியின் வாக்குறுதியினைப் போன்றது. ஒவ்வொரு நிலத்திலும் வளரக்கூடிய களைச்செடியே அடிமைத்தனம். உடலுக்கு உணவு எப்படியோ, அதுபோலவே மனதிற்கு உண்மை. பிரதிபலிப்பு இல்லாத படித்தல் என்பது செரிமானம் அடையாத உணவைப் போன்றது. நமது வலிமையை விட மிகுதியானவற்றை நமது பொறுமையின் வாயிலாக அடைய முடியும். ஒழுங்கு படுத்தப்பட்ட அமைப்பு முறையே அனைத்து விஷயங்களுக்குமான அடித்தளம். மனித மனதில் நாம் கண்டறியக்கூடிய முதல் மற்றும் எளிய உணர்ச்சி, ஆர்வம். கடந்த காலத்தின் மூலம் உங்களால் ஒருபோதும் எதிர்காலத்தை திட்டமிட முடியாது. அறம் என்ன செய்யலாம் என்று வக்கீல் கூறுவது விஷயம் அன்று என்ன செய்யவேண்டும் என்று அறிவும், அறமும், அன்பும் கூறுவதே விஷயம். ஒழுங்கு நல்ல ஒழுங்குதான் எல்லா விஷயங்களுக்கும் அடிப்படை எதிர்ப்பு நம்முடன் மல்யுத்தம் செய்பவன் நம் நரம்புகளை முறுக்கேற்றி விடுகிறான். நம் திறமைகளைக் கூர்மைப்படுத்துகிறான். நமது எதிரியே நமக்குத் துணைவன். கல்வி எந்தக் கல்வி தேவை? ஒரு மூட்டை நூல்களை வாசித்தலா? அன்று. அடக்கம், ஒழுங்கு அறம், நீதி இவற்றின் முன்மாதிரிகளே தேவை. ஆராய்ச்சி முறையை ஒட்டிய கல்வி முறையே இணையற்றதாகும். தேசங்களுக்கு மலிவான பாதுகாப்பு. கல்வி. குறைபாடு மனிதனின் குறைபாடுகளைப்பற்றிக் கூறிக்கொண்டிருப்பவன் கடவுளையே கண்டிக்கிறான். கொடுங்கோன்மை தீமையான சட்டங்களே கொடுங்கோன்மையில் மிகவும் இழிவானவை. சான்றோர் சங்கடங்களே சான்றோரை நீட்டி அளக்கும் கோல். நீதி சுதந்தரமும் நீதியும் எப்பொழுதெல்லாம் பிரிந்து செல்ல ஏற்படுகின்றதோ, அப்பொழுதெல்லாம் இரண்டுக்கும் ஆபத்து என்பது என் அபிப்பிராயம். படித்தல் சிந்தியாது படிப்பது சீரணியாது உண்பதை ஒக்கும். பரிவு மனித உள்ளத்தில் அன்புக்கு அடுத்தபடியான தெய்விக உணர்ச்சி அநுதாபமே. பழக்கம் அறிவிலி ஒருவன் ஒரே கதையை நாள்தோறும். ஆண்டு முழுவதும். உன்னிடம் சொல்லிவந்தால், நீ அதையும் நம்பி விடுவாய். வெளி இணைப்புக்கள் குறிப்புகள் பகுப்பு 1716 பிறப்புக்கள் பகுப்பு 1797 இறப்புக்கள் பகுப்பு அரசியல்வாதிகள்
இந்தப் பக்கத்தில் எசுப்பானிய மொழி பழமொழிகள் தொகுக்கபட்டுள்ளன. பழமொழிகள் அடுப்படியிலேயே அடைகாக்கும் கணவன் விலாப்பக்கத்து வலி போன்றவன். அழகுக்கும் கற்புக்கும் இடைவிடாத போர் இருந்தே வரும். ஆடவர் அழகை ஒரு குணமாகப் பார்க்கின்றனர் பெண்கள் குணத்தை அழகாகப் பார்க்கின்றனர். என் வீட்டுக்கு நானே ராஜா. ஒரு காதல் மற்றொன்றை வெளியேற்றிவிடும். ஒரு மனிதனின் அதிருஷ்டமோ துரதிருஷ்டமோ அவன் மனைவிதான். ஒவ்வொரு மனிதனும் பொதுமக்களே உனக்கு நல்ல மனைவி வேண்டுமானால், அவளை ஞாயிற்றுக் கிழமையில் தேர்ந்தெடுக்காதே. உன் கணவனை ஒரு நண்பனைப் போல நேசி, ஆனால் பகைவனைப் போல எண்ணி அவனுக்கு அஞ்சி நட. உன் மகளுக்குத் தக்க வரன் வந்தால், வெளியே போயிருக்கும் அவளுடைய தந்தையின் வரவைக்கூட எதிர்பார்க்க வேண்டாம். உன் மனைவி உன்னை ஒரு கூரையிலிருந்து குதிக்கச் சொன்னால், 'கடவுளே, அது தணிந்த கூரையா யிருக்கட்டும்!' என்று பிரார்த்தனை செய்து கொள். ஒரு பெண் அழகாயிருப்பதாக நாம் ஒரு முறை சொன்னால், அதையே சயித்தான் அவளிடம் பத்து முறை சொல்வான். ஒரு பெண்ணின் காதல் கூடையிலுள்ள தண்ணீர் போன்றது. ஒரு மகனோடு இருப்பதைவிட, ஒற்றைக் கண்ணுடைய கணவனுடன் வாழ்வதே மேல். கடலில் உப்பைத்தான் பெறலாம், பெண்ணிடம் தீமையைத் தான் பெறலாம். கணவனைத் தெரிந்துக்கொள்ள மனைவியின் முகத்தைப் பாருங்கள். கற்புடைய கன்னியும், நொண்டியும் வீட்டிலேயேயிருப்பது மேல். காதலர் மற்றவர் கண்களெல்லாம் அவிந்து விட்டது போல எண்ணுவர். காதலிலும் மரணத்திலும் நம்வலிமை பயனில்லை. காதலின் பார்வையில் செம்பு தங்கமாயிருக்கும், ஏழைமை செல்வமாகும். காதலுக்காகக் கலியாணம் செய்து கொள்பவன் துக்கத்தோடு வாழ வேண்டும். காதல் சுளுக்குப் போன்றது, இரண்டாம் தடவை அது எளிதில் வந்துவிடும். காதல் வெட்கப்பட்டால், அது உண்மையானதன்று. கூவுகிற கோழியும், லத்தீன் படித்த பெண்ணும் நல்ல முடிவை அடைய மாட்டார்கள். கெட்ட ஸ்திரீகளைக் காவல் காப்பது வீண் வேலை. சாளரக் கம்பிகளின் இடைவழியாகவே காதலுக்கு உயிர் வருகிறது. 'சூப்'பிலும் காதலிலும் முதலாவது தான் சிறந்தது. செயல்களே காதல், இனிமையான சொற்களல்ல. சேவல் தன் குப்பை மேட்டிலிருந்துதான் கூவும், கோழி ஊரெங்கும் சுற்றிக் கூவி வரும். தன் முகத்தைப் பற்றியே பெருமைப்படும் பெண்ணால் வீடு பாழாகும். தன்னையே அதிகமாய்ப் பார்த்துக் கொண்டிருக்கும் பெண் வீட்டை நாசாமாக்குவாள். திருமணம் என்ற கோணியில் தொண்ணூற் றொன்பது பாம்புகளும், ஒரு விலாங்கும் இருக்கும். திருமணம் செய்து கொள்ள உறுதி கொண்டவன் அண்டை அயலார்களைப் பார்த்துக் கொள்வது நல்லது. திருமணம் செய்து கொண்டு அடங்கிக்கிட. தேர்ந்தெடுப்பது என்பது காதலில் இல்லை நன்றாக உடையணியும் ஒரு பெண் தன் கணவன் வேறு பெண்ணை நாடாமல் காத்துக் கொள்ளமுடியும். நன்றியுள்ள மனிதன் எது சொன்னாலும் நம்பலாம். ஏனெனில், அவன் துரோகம் செய்ய மாட்டான். நெருப்புக்குக் காற்று எப்படியோ, அப்படிக் காதலுக்குக் பிரிவு. பெண்கள் கிடைத்ததை மதிக்கமாட்டார்கள், மறுத்ததையே விரும்பி வாடுவார்கள். மரணம் வரும் வரையில் எல்லாம் வாழ்க்கைதான். மனைவியைக் கௌரவிக்காதவன் தன்னையே குறைவு படுத்திக் கொள்கிறான். மூன்று பெண்களும், ஒரு தாயும் ஆகத் தந்தைக்கு நான்கு சயித்தான்கள். விவாகமான மனிதன் ஒவ்வொருவனும் தன் மனைவி ஒருத்திதான் உலகிலே நல்லவள் என்று எண்ணிக் கொள்ள வேண்டும். வெளியிணைப்புக்கள் பகுப்பு மொழி வாரியாக பழமொழிகள்
ஆமோர் 2012 ஆம் ஆண்டு வெளிவந்த பிரான்சு திரைப்படமான இதில் ஆனி, சார்சு என்ற வயதான இசை வல்லுனர்களின் காதல் வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்களைக் கூறப்பட்டுள்ளது. இதன் இயக்குநனர் மிகேயல் கொனோக். ஜார்ஜ் லாரண்ட் வயது முதிர்ந்தாலும் காதல் நிறைவு பெருவதில்லை. ஆனி லாரண்ட் சில நேரங்களில் விகாரமாகிறார். உரையாடல் ஆனி இது அழகாக உள்ளது. ஜார்ஜ் என்னது? ஆனி வாழ்க்கை. மிகவும் நீளமானதாக உள்ளது. மேலும் பார்க்க பிரெஞ்சுத் திரைப்படங்கள் விக்கிப்பீடியா பகுப்பு பிரஞ்சுத் திரைப்படங்கள் பகுப்பு 2012 திரைப்படங்கள்
இந்து சமயம் இந்தியாவில் தோன்றிய, காலத்தால் மிகவும் தொன்மையான உலகின் முக்கிய சமயங்களில் ஒன்றெனக் கருதப்படுகிறது. ஏறக்குறைய 850 மில்லியன் இந்துக்களைக் கொண்டு உலகின் மூன்றாவது பெரிய சமயமாக இருக்கின்றது. பெரும்பாலான இந்துக்கள் இந்தியாவிலும், நேபாளத்திலும் வசிக்கின்றார்கள். இலங்கை, இந்தோனேசியா, மலேசியா, சிங்கப்பூர், சுரினாம், பிஜி தீவுகள், அமெரிக்கா, கனடா மற்றும் பிற பல நாடுகளிலும் இந்துக்கள் குறிப்பிடத்தகுந்த எண்ணிக்கையில் வசிக்கின்றார்கள். மேற்கோள்கள் கடவுளை நோக்கி ஓர் ஆதி நடந்தால் கடவுள் அவனை நோக்கி ஓடி வருகின்றார். குரு பக்தியினால் கைகூடாதது ஒன்றும் இல்லை. வெளியிணைப்புக்கள் பகுப்பு மதங்கள்
ஸ்ரீ அரவிந்தர் , அரவிந்த அக்ராய்ட் கோஷ், ஆகத்து 15, 1872 டிசம்பர் 5, 1950 இந்தியத் தேசியவாதியும், மெய்யியலாளரும், ஆன்மிகத் தலைவரும், கவிஞரும் ஆவார். இந்திய விடுதலை இயக்கத்தில் இணைந்த இவர் போராட்ட வீரராய் இருந்து ஆன்மிக வாழ்க்கையை மேற்கொண்டவர். அரவிந்தரின் பொன்மொழிகள் பகுத்தறிவு இறக்கும்போதுதான் ஞானம் பிறக்கிறது என்பதை நான் தாமதித்துத்தான் புரிந்துகொண்டேன். அம்முக்திக்கு முன் நான் அறிவினை மட்டுமே பெற்று இருந்தேன். அறிவு பொய்த் தோற்றங்களை ஆய்ந்து, அனுமானித்து ஏற்கிறது. ஞானமோ திரைக்குப் பின் நோக்கி, காட்சியைப் பெறுகிறது. பகுத்தறிவு பிரிக்கின்றது. விவரங்களை வரையறுத்து அவற்றிடையே வேற்றுமையை நிறுவுகின்றது. ஞானமோ ஒன்றுபடுத்துகின்றது. வேற்றுமைகளை ஒரே இசைவினுள் இணைக்கின்றது. எண்ணம் என்பது உண்மையை நோக்கி எய்யப்படும் ஓர் அம்பு. தன் இலக்கின் புள்ளியை மட்டுமே அதனால் தொட இயலும் முழு இலக்கையும் அதனால் அடைய இயலாது. ஆனால் எய்தவனோ தான் வெற்றி பெற்று விட்டதாய்க் கருதி, இன்னுமென்ன வேண்டும் என்ற பெரும் திருப்தியுடன் இருக்கிறான். துன்பத்தையோ, தோல்வியையோ கண்டிராதவனை நம்பாதே. அவன் விதியைப் பின்பற்றாதே. அவன் கொடியின் கீழ்ப் போரிடாதே. சில சமயங்களில் செயலாற்றுவது இயலாததாக, செயலாற்றாமல் இருப்பது விவேகமாக இருக்கலாம் அப்போது ஆன்மாவின் தவத்தில் ஆழ்ந்து விடு. தெய்வத்தின் சொல்லை அலது வெளிப்பாட்டை எதிர் நோக்கியிரு. இடைக்காலத் துறவிகள் பெண்களை வெறுத்தனர் துறவிகளைச் சோதிப்பதற்கே கடவுள் பெண்களைப் படைத்தார் என நினைத்தனர் கடவுளையும், பெண்களையும் பற்றிய கருத்து இதை விடக் கண்ணியமாக இருந்திருக்கலாம். நீ மலையுச்சியில் தனித்து அசைவற்று மௌனமாக அமர்ந்திருக்கும் அதே சமயத்தில், நீ வழி நடத்தும் புரட்சிகளை உன்னால் காண முடிந்தால், நீ தோற்றங்களிலிருந்து விடுபட்டவனாவாய் தெய்வீகப் பார்வை பெற்றவனாவாய். இறைவன் மும்முறை சங்கரரைப் பார்த்து நகைத்தான் முதலில் தன தாயின் சடலத்தை எரிக்க வீடு திரும்பிய போது இரண்டாவதாக ஈசா உபநிடதத்திற்கு உரை எழுதியபோது மூன்றாம் முறை செயலின்மையைக் கற்பிக்க பாரதம் முழுமையையும் புயலாய் வலம் வந்த போது. இறைவன் இப்படியிருக்க வேண்டும், அப்படியிருக்க வேண்டும் இல்லையெனில் அவன் இறைவன் அல்லன் என்று எவரோ விதி விதித்தார். ஆனால் எனக்கோ, 'இறைவன் எத்தகையவன் என்பதைத்தான் என்னால் அறிய முடியும். அவன் எப்படி இருக்க வேண்டும் என்று எவ்வாறு நான் அவனுக்குக் கூற முடியும்?' என்றுதான் தோன்றியது. இறைவனை நாம் மதிப்பிடக் கூடிய அளவைதான் ஏது? இம் மதிப்பீடுகள் எல்லாம் நம் அகங்காரத்தின் மடமைகளே. எல்லா அறிவையும் தான் வெற்றி கொண்டு விட்டதைப் போல் விஞ்ஞானம் பேசுகிறது நடந்து கொள்கின்றது. தனித்துச் செல்லும் விவேகமோ, அளவற்ற ஞானக் கடல்களின் விளிம்புகளில் எதிரொலிக்கும் தன் காலடியோசையைக் கேட்டவாறே நடையிடுகின்றாள். அரசுகள், சமூகங்கள், அரசர்கள், காவலர், நீதிபதிகள், நிறுவனங்கள், கோயில்கள், சட்டங்கள், மரபுகள், ராணுவப் படைகள், இவையெல்லாம் சில நூற்றாண்டுக் காலங்களுக்கு நம் மீது சுமத்தப்படும் தற்காலிகத் தேவைகளே. இறைவன் நம்மிடமிருந்து தன் முகத்தை மறைத்துக் கொண்டிருப்பதே இத்தேவைக்குக் காரணமாகும். அம்முகம் தன் எழிலிலும், மெய்ம்மையிலும் மீண்டும் நமக்குத் தெரியும் போது, ஒளியில் இவையெல்லாம் மறைந்து போகும். ஞானம் நம்முள் அடியெடுத்து வைக்கும்போது அவள் அளிக்கும் முதற்பாடம் இதுவே அறிவென்பது ஏதுமில்லை வரம்பற்ற இறைவனைச் சுட்டிக்காட்டும் குறிப்புகள் மட்டுமே உண்டு . இந்த நாட்டை வயல்களும், ஆறுகளும், காடுகளும் அடங்கிய நிலப்பரப்பாக நினைக்காமல், இதனை அன்னை என நினைத்து வழிபடுகிறேன். அன்னையின் மார்பிலே ஒரு அரக்கன் வந்து உட்கார்ந்து கொண்டு அவளுடைய குருதியை உறிஞ்சுவானாகில் மகன் கவலை யாதுமின்றி, தனது மனைவி மக்களுடன் உல்லாசமாகக் காலம் கழிப்பான? தன் அன்னையைக் காப்பாற்ற உடனே வழி தேடுவான் அல்லவா! இழிநிலே அடைந்துள்ள இந்நாட்டைக் காப்பாற்றும் வலிமை எனக்குண்டு. இதனை நான் உணர்ந்திருக்கிறேன். எனக்கு உடல் வலிமை இல்லை. ஆனால் நான் கத்தியையோ, துப் பாக்கியையோ, ஏந்திப் போர் புரியப் போவதில்லே. அறிவின் வலிமையினாலேயே போர் புரியப்போகிறேன். வெளியிணைப்புக்கள் மேற்கோள்கள் பகுப்பு ஆன்மீகவாதிகள் பகுப்பு சமயத் தலைவர்கள் பகுப்பு இந்து குருக்கள் பகுப்பு இறந்த நபர்கள் பகுப்பு 1872 பிறப்புக்கள் பகுப்பு 1950 இறப்புக்கள்
ஏர்ல் நைட்டிங்கேல் 1921, மார்ச் 12 1989, மார்ச், 28 1921 என்பவர் ஐக்கிய அமெரிக்காவைச் சேர்ந்த புகழ்வாய்த வானொலி பேச்சாளர், எழுத்தாளர், பேச்சாளர், மெய்யியலாளர் ஆவார். இவரது படைப்புகள் பெரும்பாலும் மனிதத்தன்மை மேம்பாடு, ஊக்கமூட்டல் ஆகியவற்றை அடிப்படையாக அமைந்தவை ஆகும். இவரது புத்தகங்கள் மற்றும் ஒலிப் புத்தகங்கள் விற்பனையில் குறிப்பிடத்தக்க சாதனை புரிந்துள்ளன. இவரின் பொன்மொழிகள் மற்றவர்களை நோக்கிய நமது அணுகுமுறையே, நம்மை நோக்கிய அவர்களது அணுகுமுறையைத் தீர்மானிக்கின்றது. நமக்கான வெகுமதிகள் எப்போதும் நமது சேவைக்கான சரியான விகிதத்தில் இருக்கும். நமது தற்போதைய கம்பீரமான எண்ணங்களின் திசையிலேயே மனதின் நகர்வுகள் அமைகின்றன. எங்கு சரியான திட்டமிடல் இல்லையோ அங்கு உங்களால் சலிப்பைக் காணமுடியும். நமது ஆர்வம் மற்றும் உற்சாகத்தின் விரிவாக்கப்பட்ட செயல்பாடே படைப்பாற்றல். பெரிய விஷயம் என்னவென்றால், உங்களுக்கு என்ன வேண்டும் என்பதை நீங்கள் தெரிந்திருப்பதே. நாம் வாழும் இந்த உலகமானது, நமது அணுகுமுறை மற்றும் எதிர்பார்ப்புகளின் கண்ணாடியினைப் போன்றது. இலக்கு உடையவர்களே வெற்றிபெறுகிறார்கள் ஏனென்றால், எங்கு செல்கிறோம் என்பது அவர்களுக்குத் தெரியும். ஒவ்வொரு விசயமும் திட்டத்தின் மூலமே தொடங்குகின்றது. நமது ஆழ் மனதில் நாம் பதியக்கூடிய எதுவாயினும், ஒருநாள் அது உண்மையாகும். திட்டம், வழிமுறை மற்றும் இலக்கை நோக்கிய அழுத்தத்திற்கான தைரியம் ஆகியவையே உங்கள் அனைவரின் தேவை. உங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு நிமிடத்தையும் அனுபவிக்கக் கற்றுக் கொள்ளுங்கள். உட்புறத்தில் என்ன நடந்துக் கொண்டிருக்கிறது என்பது வெளிப்புறத்தில் தெரிந்துவிடுகின்றது. வெளியிணைப்புக்கள் குறிப்புகள் பகுப்பு எழுத்தாளர்கள் பகுப்பு இறந்த நபர்கள் பகுப்பு 1921 பிறப்புக்கள் பகுப்பு 1989 இறப்புக்கள்
வில்லியம் ஹாஸ்லிட் 10 ஏப்ரல் 1778 18 செப்டம்பர் 1830 என்பவர் ஒரு நாடக விமர்சகர், மெய்யியல் மற்றும் சமூக சீர்திருத்தவாதி, ஒவியர் என்னும் பன்முகம் கொண்டவர். இவர் ஆங்கில மொழியில் கட்டுரை மற்றும் விமர்சன எழுத்தாளர்களில் சிறந்தவராகக் கருதப்படுகிறார். இவரின் பொன்மொழிகள் ஒரு மென்மையான சொல், ஒரு கனிவான பார்வை, ஒரு நல்ல புன்னகை ஆகியவற்றால் அதிசயங்களையும், அற்புதங்களையும் நிகழ்த்த முடியும். இதயம் மற்றும் புரிதலின் மூலம் இயற்கையினைப் பார்க்க வேண்டுமே தவிர வெறும் கண்களால் அல்ல. அழுவதற்கும் சிரிப்பதற்கும் தெரிந்த ஒரே விலங்கு மனிதன் மட்டுமே. மரத்திலிருந்து ஆப்பிள் கீழே விழுவதைப் பலரும் பார்த்தார்கள் ஆனால் ஏன் என்று கேட்டவர் நியூட்டன் ஒருவரே. விதிகள் மற்றும் மாதிரிகள் ஆகியவை அறிவாற்றல் மற்றும் கலை ஆகியவற்றை அழித்துவிடுகின்றன. செழிப்பு ஒரு சிறந்த ஆசான் வறுமை அதைவிட சிறந்த ஆசான். வாக்குறுதிகளை மீறுவதனால் கிடைக்கும் மகிழ்ச்சிக்காகவே சிலர் அதனை மீறிவிடுகிறார்கள். எந்த அளவு நம்பிக்கை உள்ளதோ அந்த அளவிற்குத் திறமை உண்டு. அறிவைவிட ஆர்வமே அதிக செயல்களைச் செய்ய வல்லது. நீங்கள் வெல்ல முடியும் என்று நினைத்தால், கண்டிப்பாக உங்களால் வெல்ல முடியும் வெற்றிக்கு அவசியம் நம்பிக்கையே. அடுத்தவரை மகிழ்விக்கும் கலையானது, நம்மை மகிழ்ச்சியாய் வைத்திருக்கும் அம்சங்களையும் தன்னகத்தே கொண்டுள்ளது. தான் இறந்து விடுவோம் என்பதைப்பற்றி எந்த இளைஞனும் ஒருபோதும் நினைப்பதில்லை. வெளி இணைப்புக்கள் குறிப்புகள் பகுப்பு ஓவியர்கள் பகுப்பு எழுத்தாளர்கள் பகுப்பு 1778 பிறப்புக்கள் பகுப்பு 1830 இறப்புக்கள்
வெற்றி குறித்து அறிஞர்கள் சொன்ன பொன்மொழிகள் வெற்றியின் வாசல்படி உழைப்பு மட்டுமே. கார்லைல் துணிச்சல் உழைப்பு வெற்றி பெர்னாட்ஷா உள்ளத்தின் உறுதியே வெற்றியின் வித்தாகும். நெப்போலியன் நல்ல தொடக்கம் பாதி வெற்றிக்கு சமம். ஹில் வெற்றி உழைப்பவர்களின் பரிசாகும். ஆர்தர் முயற்சிக்கேற்ப வெற்றி அமையும். டிரைடன் எதையும் தாங்குபவனே வெற்றி அடைவான். பெரிசியஸ் வெற்றியின் ரகசியம் நோக்கத்தைக் கைவிடாமல் இருப்பதுதான். டிஸ்ரேலி ஒரு மதிப்பு வாய்ந்த இலக்கைப் படிப்படியாக அடைதலே வெற்றி. நைட்டிங்கேல் வெற்றி பெற முடியுமென்று நம்புவோரே வெல்வார்கள். வெர்ஜில் ஒவ்வொரு மனிதனும் தனக்குத் தானே தேர்ந்தேடுத்துகொள்ளும் ஒவ்வொரு செயலின் குணங்களைப் பொறுத்துதான் அவனுடைய எதிர்கால வெற்றி தோல்விகள் கணிக்கப்படும். டார்வின் வெற்றி என்னைத் தேடிவரவில்லை நான் என் இடையறா முயற்சியால் வெற்றியைத் தேடிப் பிடித்துக் கொண்டேன். முதலில் சிறு பாவங்களாகச் செய்யத் தொடங்குவோம் என்று தீர்மானித்துக் கொண்டு, நான் எனது நாடகங்களை எழுதத் தொடங்கினேன். ஜோர்ஜ் பெர்னாட் ஷா எதையும் சிர்தூக்கி ஆராய்ந்து அளவிட்டு, ஆற அமர ஆலோசித்து செய்வதால்தான் பலர் தங்கள் திட்டங்களில் வெற்றியடைகிறார்கள். நிக்கோலோ மாக்கியவெல்லி எளிதாயுள்ள வெற்றிகள் மதிப்பற்றவை. கடுமையான போராட்டத்தினால் வருபவைகளே மதிப்புயர்ந்த வெற்றிகள். பீச்செர் கடவுளின் புன்னகையே வெற்றி. விட்டியர் வெற்றியை வெகுதூரம் தொடர்ந்து செல்ல வேண்டாம் எதிரியைப் புறமுதுகு காட்டி ஓடும்படி செய்ததே சிறந்த வெற்றிதான். ஓடுகிறவனை இறுதியான உறுதியுடன் திரும்பி நின்று எதிர்க்கும்படி விரட்ட வேண்டாம். அதனால் உனக்குத் தீங்கு நேரிடும். ஹெர்பெர்ட் குறிப்புகள் பகுப்பு கருப்பொருட்கள்
டேல் ஆர்பைசான் கார்னெகி என்பவர் நவம்பர் 24, 1888 நவம்பர் 1, 1955 ஒரு அமெரிக்க எழுத்தாளர் ஆவார். மிசௌரியில் ஒரு ஏழ்மையான விவசாயக் குடும்பத்தில் பிறந்த இவர், நண்பர்களை வெல்வது எப்படி? 1936 , லிங்கன் அறியப்படாதவை 1932 போன்ற பல புகழ்பெற்ற நூல்களை எழுதியுள்ளார். இவரது பொன்மொழிகள் வெற்றிகரமான மனிதன் தனது தவறுகளிலிருந்து பலன்பெறுகிறான் மற்றும் மாறுபட்ட வழியில் மீண்டும் முயற்சி செய்கிறான். பயத்தை வெல்ல வேண்டுமென்றால், வீட்டில் உட்கார்ந்து கொண்டு அதைப்பற்றி நினைத்துக் கொண்டிருக்காமல், வெளியில் சென்று செயல்படுங்கள். தோல்விகளிலிருந்து வெற்றியை உருவாக்குங்கள். ஊக்கமின்மை மற்றும் தோல்வி ஆகியன வெற்றிக்கான இரண்டு உறுதியான படிக்கற்கள். செய்ய அஞ்சுகிற செயலை தொடர்ந்து செய்யுங்கள். அதுவே எப்போதும் பயத்தை கைப்பற்றுவதற்கான வேகமான மற்றும் எளிய வழி. என்ன மோசமான விளைவுகள் ஏற்படும் என்பதை உங்களிடம் முதலில் கேட்டுக்கொள்ளுங்கள். பிறகு அதை ஏற்றுக்கொள்ள தயாராகுங்கள். பின்னர் அதை மேம்படுத்த செயல்படுங்கள். சிறிய பணிகளை நன்றாக செய்தால், பெரிய பணிகள் தங்களை தாங்களே கவனித்துக்கொள்ள முனையும். பெரும்பாலும் உலகின் சிறந்த பணிகள் இயலாமைகளுக்கு எதிராகவே செய்து முடிக்கப் பட்டுள்ளன. மகிழ்ச்சி என்பது எந்த வெளிப்புற நிலைமைகளையும் சார்ந்ததல்ல. அது நமது மனதின் அணுகுமுறையால் ஆளப்படுகிறது. செயலின்மை, சந்தேகம் மற்றும் அச்சத்தை தரும் செயல்பாடு, நம்பிக்கை மற்றும் தைரியத்தை தரும். நீங்கள் என்ன செய்கிறீர்களோ அதை விரும்பாதவரை உங்களால் ஒருபோதும் வெற்றியடைய முடியாது. வாக்குவாதத்தில் சிறந்ததைப் பெறுவதற்கான ஒரே வழி, அதைத் தவிர்ப்பதே. மனதை தவிர பயம் வேறு எங்கும் இல்லை. வெளி இணைப்புக்கள் குறிப்புகள் பகுப்பு 1888 பிறப்புக்கள் பகுப்பு 1955 இறப்புக்கள் பகுப்பு அமெரிக்கர்கள் பகுப்பு எழுத்தாளர்கள்
நா. முத்துக்குமார் 12 சூலை 1975 14 ஆகத்து 2016 தமிழகத்தைச் சேர்ந்த தமிழ் திரைப்படப் பாடலாசிரியரும் கவிஞரும் ஆவார். பல்லேலக்கா, என் காதல் சொல்ல, ஒரு கல் ஒரு கண்ணாடி ஆகியவை இவரின் பாடல்களுள் சில. அண்மையில் தங்க மீன்கள், சைவம் திரைப்படப் பாடல்களுக்காக தேசிய விருது வாங்கினார். மேற்கோள்கள் கவிதைங்கறது ஒத்தையடிப்பாதை மாதிரி. பாதையையும், இலக்கையும் நம்ம விருப்பப்படி அமைச்சிக்கலாம். ஆனா, சினிமா பாடல்... தண்டவாளத்து மேல பயணிக்கிற மாதிரி. தீர்மானிக்கப்பட்ட இலக்கை நோக்கி, நிர்ணயிக்கப்பட்ட பாதையில் தடம் புராளம பயணிக்கனும். கவிஞருக்கு பாடலாசிரியருக்குமான வித்தியாசத்தைப் பற்றி கேட்ட பொழுது கூறியது. "குடுசை வீடு தான், ஆனால் வீடு முழுவதும் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட புத்தங்கங்கள் இருக்கும், அப்பா எந்நேரமும் வாசித்து கொண்டே இருப்பார். அவரை நான் தூங்கி பார்த்ததே இல்லை. இதை தவிர தமிழகத்தில் வரும் அனைத்து சஞ்சிகைகள், சிறு பத்திரிகைகள் என அனைத்தையும் வாங்குவார். சுற்றிலும் உள்ள 10க்கும் மேற்பட்ட நூலகங்களுக்கு, என்னையும் சைக்கிளில் அழைத்து செல்லுவார்" தனது சிறு வயது வாழ்கைப் பற்றி ஒரு மேடையில் நா. முத்துக்குமார் குறிப்பிட்டது. நபர் குறித்த மேற்கோள்கள் " கடந்த 10 வருடங்களில் அதிக தமிழ்ப் பாடல்கள் எழுதியவர் நா.முத்துக்குமார். அவற்றில் பெரும்பாலானவை ஹிட் பாடல்கள். கடந்த சில மாதங்களாகக் கூட அவர் நிறைய பாடல்கள் எழுதிவந்தார். " நா. முத்துக்குமாரைப் பற்றி மதன் கார்க்கி கூறியவை. வெளியிணைப்புக்கள் சான்றுகள் பகுப்பு இறந்த நபர்கள் பகுப்பு 1975 பிறப்புக்கள் பகுப்பு 2016 இறப்புக்கள் பகுப்பு பாடலாசிரியர்கள் பகுப்பு கவிஞர்கள்
புசார்லா வெங்கட சிந்து பிறப்பு 5 சூலை 1995 ஒரு இந்திய இறகுப்பந்தாட்ட வீரர். 2016 ஆகத்து மாதம் பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளில் வெள்ளிப் பதக்கத்தை வென்றுள்ளார். மேற்கோள்கள் நபர் குறித்த மேற்கோள்கள் "சில்வர் சிந்துவுக்கு எனது வாழ்த்துகள். சிறப்பாக போராடினீர்கள். ரியோ ஒலிம்பிக்கில் நீங்கள் செய்த சாதனை, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. இது பல ஆண்டுகளுக்கு நினைவு கூறப்படும்" பி. வி. சிந்து 2016 ஒலிம்பிக்கில் வெள்ளி பதக்கம் வென்ற பொழுது நரேந்திர மோடி கூறியது. "சிந்து, நீங்கள் படைத்திருக்கும் இந்த சாதனைக்காக, உங்களோடு இணைந்து இந்திய மக்களும் மகிழ்ச்சி கொள்கிறார்கள். உங்களது இந்த மன உறுதி, இதர இந்திய விளையாட்டு வீரர்களிடமும் தன்னம்பிக்கையை விதைக்கும். இதன்மூலம் சர்வதேச அளவிலான போட்டிகளில் அவர்களும் சாதிக்க முடியும்" பி. வி. சிந்து 2016 ஒலிம்பிக்கில் வெள்ளி பதக்கம் வென்ற பொழுது பிரணாப் முகர்ஜி கூறியது. வெளியிணைப்புக்கள் சான்றுகள் பகுப்பு வாழும் நபர்கள் பகுப்பு 1995 பிறப்புக்கள் பகுப்பு விளையாட்டு வீரர்கள் பகுப்பு இந்தியர்கள்
லிண்டன் பி ஜான்சன் 1908 1973 என்பவர் ஐக்கய அமெரிக்காவின் 36 வது அதிபராவார். அதற்கு முன் 1961 முதல் 1963 வரை ஜான் எப் கென்னடியின் கீழ் துணை அதிபராக இருந்தவர். கென்னடியின் படுகொலைக்கு பின்பு 1963 ஆம் ஆண்டுமுதல் 1969 ஆண்டு வரையிலான காலகட்டத்தில் அதிபராக பணியாற்றினார். இவர் சிவில் உரிமைகள், கல்வி, வறுமை ஒழிப்பு, மருத்துவம். கலை, நகர, கிராம வளர்ச்சி ஆகியவற்றில் கவனம் செலுத்தினார். தனது காலகட்டத்தில் திறமைவாய்த தலைவராக கருதப்பட்டார். இவரது பொன்மொழிகள் நேற்று என்பது மீட்பதற்கு நம்முடையதல்ல ஆனால் நாளை என்பது வெற்றி பெறவோ அல்லது தோல்வியடையவோ நம்முடையதே. அமைதி என்பது ஆயிரம் மைல்களுக்கான பயணம், இதில் ஒரு நேரத்தில் ஒரு அடி மட்டுமே எடுத்துவைக்க வேண்டும். வாய்ப்பிற்கான கதவுகளைக் கண்டிப்பாக திறந்து வைத்திருக்க வேண்டும். ஆனால் அந்தக் கதவுகளின் வழியே செல்வதற்கு தம்மை தயார்படுத்திக் கொள்ளவும் வேண்டும். மனிதனால் கண்டுபிடிக்கப்பட்ட கருவிகளில், வாக்கு மிகவும் சக்திவாய்ந்த கருவியாகும். சரியானவற்றை செய்வது கடினமான விசயமல்ல சரியானவற்றை அறிந்துகொள்வதே கடினமான விசயம். துப்பாக்கிகள், குண்டுகள், ஏவுகணைகள், போர்க்கப்பல்கள் ஆகியவை அனைத்தும் மனித தோல்வியின் சின்னங்கள். நாம் ஒன்றிணைந்து தீர்க்க முடியாத பிரச்சினைகள் என்று எதுவுமில்லை. நீங்கள் பேசிக்கொண்டிருக்கும் போது எதையும் கற்றுக்கொள்வதில்லை. வாக்குரிமை இல்லாத மனிதன், பாதுகாப்பு இல்லாதவனாவான். சிறந்தவற்றை அடைவதற்கான தேடலே உன்னதமான தேடல். கல்வி என்பது பிரச்சினை அல்ல, அது ஒரு வாய்ப்பு. கற்றுக் கொள்வதற்கு வறுமை தடையாக இருக்கக் கூடாது வறுமையிலிருந்து மீள்வதற்கான வாய்ப்பினை கற்றல் வழங்க வேண்டும். வெளி இணைப்புக்கள் மேற்கோள்கள் பகுப்பு ஐக்கிய அமெரிக்கக் குடியரசுத் தலைவர்கள் பகுப்பு 1908 பிறப்புக்கள் பகுப்பு 1973 இறப்புக்கள்
பிரெடரிக் டக்ளஸ் பெப்ரவரி 1818 20 பெப்ரவரி 1895 என்று அறியப்படும் ஃப்ரெடரிக் அகஸ்டஸ் வாஷிங்டன் பெய்லி ஓர் அமெரிக்க அடிமை ஒழிப்புப் போராளி, பேச்சாளர், எழுத்தாளர், பத்திரிக்கையாளர், சீர்திருத்தவாதி, பெண்களின் வாக்குரிமைக்காகப் போராடியவர், வழக்கறிஞர் மற்றும் அமெரிக்க உள்நாட்டுப் போரின் போது இராசதந்திரியாக செயல்பட்டவர். கருப்பினத்தவரான இவர், அடிமையாக மேரிலாந்தில் பிறந்தார். மேற்கோள்கள் உரிமைக்குப் பாலினமில்லை, உண்மைக்கு நிறமில்லை, கடவுள் நம் எல்லோருக்கும் தகப்பன், எனவே நாம் எல்லோரும் சகோதரர்கள். ஆங்கிலத்தில் , , , . தனது வார இதழான த நார்த் ஸ்டாரின் குறிக்கோள் சொற்றொடராகக் கொண்டது ஒரு மனிதன் எப்படி அடிமையாக்கப்பட்டான் என்பதைப் பார்த்திருக்கிறீர்கள். இனி ஒரு அடிமை எப்படி மனிதனாக்கப்பட்டான் என்பதைப் பார்ப்பீர்கள். ஓர் அமெரிக்க அடிமை, பிரெடரிக் டக்ளஸின் வாழ்க்கை விரிவுரை 1845 . , 1845 10. வலிமை இல்லா மனிதன் மனித குலத்தின் அடிப்படைக் கண்ணியம் அற்றவன். நான் அடிமையாக இருந்தபோது, வேறு எந்தக் காரணங்களையும்விட என் தோற்றத்துக்காகவே நான் அதிகமாகத் தாக்கப்பட்டிருக்கிறேன். அதாவது, அதிருப்தியடைந்திருக்கும் முகபாவனைக்காக, அதிருப்தி அடைந்திருந்ததால்தானே நான் அதிருப்தியான முகபாவத்தை வெளிப்படுத்தினேன். கவிஞர்கள், தீர்க்கதரிசிகள், சீர்திருத்தவாதிகள் அனைவரும் சித்திரங்களை உருவாக்கக்கூடியவர்கள். இந்தத் திறன்தான் அவர்களுடைய ஆற்றலுக்கும் சாதனைகளுக்கும் பின்னுள்ள ரகசியம். குறிப்புகள் வெளி இணைப்புக்கள் ' " " , , பகுப்பு அமெரிக்கர்கள் பகுப்பு எழுத்தாளர்கள் பகுப்பு 1818 பிறப்புக்கள் பகுப்பு 1895 இறப்புக்கள்
300 ஒரு வாள் 250 வெண்கலக் கால ஆயுதங்கள் ஆயுதம் என்பது ஒருவரை காயப்படுத்தவோ, கொல்லவோ அல்லது ஒரு பொருளினை அழிக்கவோ, சேதப்படுத்தவோ பயன்படும் ஒரு கருவி ஆகும். ஆயுதங்கள் தாக்கவோ, அல்லது தடுக்கவோ, அச்சமூட்டவோ, தற்காத்துக் கொள்ளவோ பயன்படலாம். மேலோட்டமாக, சேதத்தை ஏற்படுத்தக் கூடிய எதனையும் ஆயுதம் எனலாம். ஆயுதம் என்பது சாதாரண தடியில் இருந்து கண்டம் விட்டுக் கண்டம் பாயும் ஏவுகணை வரை எதுவாகவும் இருக்கலாம். ஆயுதம் குறித்து பிரபலங்களின் மேற்கோள்கள் போர் என்பது ஆயுதம் ஏந்திய அரசியல், அரசியல் என்பது ஆயுதம் ஏந்தாத போர். மா சே துங் நாம் எந்த ஆயுதந்தை ஏந்தவேண்டும் என்பதை நம் எதிரிகளே தீர்மாணிக்கின்றனர் மா சே துங் நான் இறந்த பிறகு என் துப்பாக்கியைத் தோழர்கள் எடுத்துக்கொள்வார்கள். அப்போதும் தோட்டாக்கள் சீறிப் பாயும்!. சே குவேரா துப்பாக்கிகள், குண்டுகள், ஏவுகணைகள், போர்க்கப்பல்கள் ஆகியவை அனைத்தும் மனித தோல்வியின் சின்னங்கள். லிண்டன் பி ஜான்சன் வெளி இணைப்புக்கள் குறிப்புகள் பகுப்பு கருப்பொருட்கள்
மால்கம் போர்ப்ஸ் 19 ஆகத்து 1919 24 பெப்ரவரி 1990 என்பவர் ஒரு அமெரிக்க தொழிலதிபர் மற்றும் புகழ்பெற்ற போர்ப்ஸ் பத்திரிகையின் வெளியீட்டாளர் ஆவார். கல்லூரிப்படிப்பை முடித்த, சில காலம் அமெரிக்க இராணுவத்தில் பணியாற்றினார். பின் சில ஆண்டுகள் அரசியலில் ஈடுப்ட்டார். பின்னர் முழுமையாக பத்திரிகைத் துறையில் ஈடுபட்டு, கொண்டார். இவரது தலைமையின் கீழ் ஃபோர்ப்ஸ் பத்திரிக்கை சீரான வளர்ச்சியினை கண்டது. இவரின் பொன்மொழிகள் தனக்காக எதுவுமே செய்யாத மற்றவர்களை ஒருவர் எப்படி நடத்துகிறார் என்பதன் மூலம் அவரது குணத்தை உங்களால் எளிதாகத் தீர்மானிக்க முடியும். பலரும், அவர்கள் எவ்வாறு இல்லையோ அதற்கு அதிகமாகவும், அவர்கள் எவ்வாறு இருக்கிறார்களோ அதற்கு குறைவாகவும் தங்களை மதிப்பீடு செய்துகொள்கிறார்கள். உள்ளார்ந்த பார்வையே சிறந்த பார்வை. எதுவுமே செய்யாமலிருப்பதே, அனைத்திலும் கடினமான பணி. அறிவுரை பெறுவதைவிட கொடுப்பது மிகவும் வேடிக்கையானது. மனிதனை அளவிட வேண்டுமானால், அவனது இதயத்தை அளவிட வேண்டும். சிந்தனையாளர்கள் மறைந்துவிடுகிறார்கள், எண்ணங்கள் என்றும் அழிவதில்லை. தோல்வியும் வெற்றியே, அதிலிருந்து நாம் கற்றுக்கொண்டால். எப்பொழுது தோல்வியைப்பற்றி அறிந்து வைத்துள்ளீர்களோ. அப்போது வெற்றி இனிமையானதாக உள்ளது. பிரச்சினைகளை பற்றி அதிகம் தெரியாதபோது தீர்வுகளை பரிந்துரைப்பது மிகவும் சுலபம். எப்போது கனவு காண்பதை நிறுத்திவிடுகிறீர்களோ, அப்போது வாழ்வதையும் நிறுத்திவிடுகிறீர்கள். உரையாடலின் கலை, அதை கவனமாக கேட்பதிலேயே உள்ளது. யார் சத்தமாக பேசுகிறார்களோ, அவர்கள் அரிதாகவே கேட்கிறார்கள். உங்களால் செயல்பட முடியாது என்றால், நீங்கள் உந்துதலை எதிர்பார்க்க வேண்டாம். குறிப்புகள் பகுப்பு அமெரிக்கர்கள் பகுப்பு ஊடகவியலாளர்கள் பகுப்பு 1919 பிறப்புக்கள் பகுப்பு 1990 இறப்புக்கள்
ஜோக்கர் என்பது 2016ஆம் ஆண்டு தமிழில் வெளியான அரசியல் மற்றும் சமூக பகடித் திரைப்படமாகும். ராஜு முருகன் இயக்கத்தில் குரு சோமசுந்தரம், ரம்யா பாண்டியன், காயத்திரி, பாவா செல்லதுரை, ராமசாமி போன்றவர்கள் நடித்துள்ளனர். இப்படத்தில் சில உரையாடல்கள் நகைக்கடைக்காரன் புரட்சி பண்ற நாட்ல, ஜனாதிபதி புரட்சி பண்ணக் கூடாதா? ஜனாதிபதி வீட்டு கரன்ட் பில்லு எவ்ளோனு கேட்டாக் கூட சொல்லணும். சகாயம் பண்ணுங்கன்னு சொல்லலை... சகாயம் மாதிரி பண்ணுங்கன்னு தான் சொல்றோம். இந்த நாட்ல வாழ்றதுதான் கஷ்டம்னு பார்த்தா... இப்போ பேள்றதையும் கஷ்டமாக்கிட்டானுங் களே!... குண்டு வைக்கிற வனையெல்லாம் விட்டுருங்க, உண்டக்கட்டி வாங்கி தின்னுட்டு கோயில் வாசல்ல தூங்குறவனப் புடிங்க. உழைக்கிறவன் வண்டியைத் தான போலீஸ் புடிச்சு ஸ்டேஷன்ல வெச்சுக்கிடுது? எந்த ஸ்டேஷன்லயாவது ஆடி காரோ, பி.எம்.டபிள்யூ.வோ துருப்பிடிச்சு நின்னுட் டிருக்கா? கக்கூஸ் கட்டுன காசு நாறாது. சூப்பர் சிங்கர்ல நம்ம புள்ள கலந்துக்கணும்... அதைப் பார்த்து நாம அழுவணும்... அதை டி.வி.ல காட்டணும்! அவ அப்பா மார் சளிக்காக குடிக்கிறாரு, என் புருசன் நான் மார்ல அடிச்சிக் கணும்னு குடிக்கிறான். இப்போல்லாம் ஹீரோவை விட வில்லனைத்தான் சனங்களுக்குப் பிடிக்குது. உங்களுக்காகப் போராடுற எங்களைப் பார்த்தா பைத்தியக் காரன்னு தோணுச்சுன்னா... அது எங்க தப்பில்ல! குறிப்புகள் பகுப்பு 2016 திரைப்படங்கள் பகுப்பு இந்தியத் திரைப்படங்கள் பகுப்பு தமிழ்த் திரைப்படங்கள்
பிரேமம் 2015 ம் ஆண்டில் வெளிவந்த மலையாள திரைப்படமாகும். அல்போன்சு புத்திரன் இயக்கிய இத்திரைப்படத்தில் நிவின் பவுலி, சாய் பல்லவி,மடோனா செபாஸ்டியன் அனுபமா பரமேசுவரன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். இத்திரைப்படம் ரசிகர்களின் பெரும் வரவேற்பை பெற்றது. ''இயக்குனர் அல்போன்சு புத்திரன். திரைக்கதை அல்போன்சு புத்திரன். நடிப்பு நிவின் பவுலி ஜார்ஜ் டேவிட் சாய் பல்லவி மலர் அனுபமா பரமேசுவரன் மேரி மடோனா செபாஸ்டியன் செலின் மணியன்பிள்ளை ராஜு ஜார்ஜ் தமிழா? என் பேரு ஜார்ஜ் டேவிட்! இங்க என்ன படிக்கிறதுக்கு வந்து? மலர் மலர்! என் பேர சொன்னன் உங்க பேர் என்ன? சொல்ல மாட்டன் சொல்ல மாட்டன். ரோட்ல போறப்போ எல்லாம் தைரியமா இருக்கணும்னா இந்த ராக்கிங் எல்லாம் பரவாயில்லை. சரியா ! அதெல்லாம் உங்க விஷயம்! ஆனா நீங்க நைட்ல சுத்திரப்போ வெளியிணைப்புக்கள் பகுப்பு 2015 திரைப்படங்கள் பகுப்பு இந்தியத் திரைப்படங்கள் பகுப்பு மலையாளத் திரைப்படங்கள்
மார்க்கசு துல்லியசு சிசெரோ 3 சனவரி கி.மு106 7 திசம்பர் கி.மு43 ஒரு பண்டைய உரோமானியரும், மெய்யியலாளரும், அரசியலாளரும், வழக்கறிஞரும், சொற்பொழிவாளரும், அரசியல் கோட்பாட்டாளரும், உரோம மன்ற உறுப்பினரும், உரோமக் குடியரசின் அரசியலமைப்பாளரும் ஆவார். மேற்கோள்கள் எந்த மனிதனும் தவறுகள் செய்யலாம், ஆனால் முட்டாள் மட்டுமே அவனது தவறை தொடர்கிறான். மக்களின் பாதுகாப்பே மிக உயர்ந்த சட்டமாக இருக்க வேண்டும். உங்களை விட வேறு யாரும் உங்களுக்கு விவேகமான ஆலோசனையைக் கொடுக்க முடியாது. உரையாடலின் சிறந்த கலைகளில் ஒன்று அமைதி. நினைவுத்திறனே அனைத்து விடயங்களுக்குமான கருவூலமாகவும், பாதுகாவலனாகவும் இருக்கின்றது. நியாயமான போரை விட நியாயமற்ற அமைதி மேலானது. நன்றியுணர்வு என்பது உயர்ந்த நற்குணம் மட்டுமல்ல, அது மற்ற அனைத்து நற்குணங்களுக்கும் பெற்றோரைப் போன்றது. தொடங்குவதற்கு முன்னர் கவனமாக திட்டமிட வேண்டும். நட்பே மகிழ்ச்சியை அதிகரிப்பதாகவும், துயரத்தை தணிப்பதாகவும் இருக்கின்றது. புத்தகங்கள் இல்லாத வீடு, ஆன்மா இல்லாத உடலைப் போன்றது. துடுக்குத்தனம் இளமைக்குச் சொந்தமானது மதிநுட்பம் முதுமைக்குச் சொந்தமானது. கவுரவம் என்பது நற்பண்பிற்கான வெகுமதி ஆகும். ஒன்றை நினைப்பதற்கு நாம் வெட்கப்படவில்லை என்றால், அதைச் சாெல்வதற்கும் நாம் வெட்கப்படக்கூடாது. போர் நேரத்தில் சட்டங்கள் மௌனம் சாதிக்கின்றன. மரியாதை இல்லாத திறமை பயனற்றது. அபாயம் அபாயத்தை அறவே விலக்குவதில் நாம் உறுதியில்லாத கோழைகள் என்று காட்டும்படி நாம் ஒரு போதும் செய்யக்கூடாது. ஆனால், அதே சமயத்தில், தேவையில்லாத முறையில் நாம் அபாயத்திற்கு உள்ளாகும்படியும் நடக்கக் கூடாது. அதைவிட அறிவீனம் வேறில்லை. அவமரியாதை ஒருவன் சந்தர்ப்பம் அறியாமல் பேசுதலும், பேசிக்கொண்டிருக்கும் மற்றவர்களின் கவனத்தைத் தன்பால் இழுத்தலும், தன்னைப்பற்றியே பேசுதலும், தான் எவர்களுடன் இருக்கிறானோ அவர்களை மதியாமலிருத்தலும் அவனை அவமரியாதை என்ற குற்றமிழைத்தவனாகச் செய்யும். ஆணவம் என்ற குற்றச்சாட்டுக்கு இடம் கொடாமலிருக்க வேண்டுமானால், நாம் செய்கின்ற வேலையில் வெட்கப்படக் கூடாது. நாம் வெட்கப்பட வேண்டிய வேலை எதையும் ஒரு போதும் செய்யக்கூடாது. அறம் மனிதர்களுக்கு நன்மையைச் செய்வதில் மனிதர்கள் அநேகமாகத் தெய்வங்களுக்கு நிகராக ஆகின்றனர். வேறு எதிலும் இப்படி ஆக முடியாது. அறிவீனம் ஒவ்வொருவனும் பிழை செய்யக் கூடியவனே. ஆனால் மூடனைத் தவிர வேறு யாரும் பிழையை விடாமல் பிடித்துக்கொள்ளார். ஆன்மா எது சிந்தனை செய்கின்றதோ, புரிந்துகொள்கின்றதோ, தீர்மானம் செய்கின்றதோ, செயல் புரிகின்றதோ, அது தெய்விகமானது. அக்காரணத்தால் அது அவசியம் நித்திய மானதாகும். இலக்கியம் இலக்கியம் பயில்வது இளைஞர்களுக்கு வளர்ச்சியளிக்கும். முதுமைப் பருவத்தில் விருந்தாக விளங்கும் செழுமையை அலங்கரிக்கும் வறுமையில் ஆறுதலளிக்கும். வீட்டில் இன்பமளிக்கும் வெளியில் எங்கே செல்லவும் உரிமை அளிக்கும். ஈகை 'ஈதல்' இதிலேயே மனிதன் கடவுளை ஒப்பான். கடமை கடமையில்லாத ஒரு கணங்கூட இல்லை. கருத்து ஒரு மனிதன் தன்னைப்பற்றிய உலக அபிப்பிராயத்தை மதிக்காமலிருந்தால், ஆணவமாயிருப்பதோடு, ஒழுக்க கேடும் ஆகும். தாராள மனப்பான்மையுள்ள ஒருவன், மற்றொருவன் தன் அபிப்பிராயத்தை மாற்றிக் கொண்டால், அவன்மீது குற்றம் சாட்டமாட்டான். கருத்துடன் கற்றல் இயற்கையாகப் பெருமை ஏற்படுவதைவிட அதிகமான மக்கள் கருத்துடன் கற்பதால் மேன்மையடைகின்றனர் குற்றம் காணல் பிறர் குற்றம் காண்பதும் தன் குற்றம் மறப்பதுமே மடைமையின் விசேஷ லட்சணம். சட்டம் ஆயுதங்களுக்கு நடுவே சட்டங்கள் மெளனமாக இருந்துவிடும். சுருங்கச் சொல்லல் சட்டமன்ற உறுப்பினராயினும் சரி. பேச்சாளராயினும் சரி. ஒருவரின் பேச்சு சுருக்கமாயிருக்க வேண்டும். செய்ந்நன்றி பெற்ற நன்றியை மறப்பவனும், பிறரிடம் மறைப்பவனும், கைம்மாறு செய்யாதவனும் செய்நன்றி கொல்லும் பாதகர்கள் இவர்களில் பெரிய பாதகன் நன்றியை மறப்பவன். சொற்கள் நாவன்மை என்பது ஆன்மாவின் இடையீடில்லாத இயக்கமேயாகும். அலங்காரமாய்ப் பேசுவோர் நாவலர் அல்லர். பல சொல் அடுக்கிப் பாமரரை மயக்கப் பழக்கப் படுத்தப்பட்ட நாவினரேயாவர். சொற்பொழிவு மற்றவர்களைத் தூண்டும்படியான பொலிவுடன் ஒரு பேச்சாளன் இருக்க வேண்டும் என்பது பேச்சுக்கலையின் முதல் விதி. அதைச் செய்யவல்லது அவனுடைய வாழ்க்கையே. நடக்க முடியாதவர்கள் குதிரைகள்மீது ஏறிச் செல்வது போல, சொற்பொழிவாளர்கள் தங்கள் விஷயம் மிகவும் பலவீனமாயிருந்தால், அப்பொழுதுதான் மிகவும் காரசாரமாய்ப் பேசுவார்கள். தத்துவ ஞானம் தத்துவ ஞானம் கற்பது என்பது, 'தான்' சாகத் தயராக்குவதேயன்றி வேறன்று. தத்துவ ஞானத்தை ஆராய்வது ஒருவன் தன்னை மரணத்திற்குத் தயாரித்துக்கொள்வதாகும். தவறுகள் எந்த மனிதனும் தவறு செய்யக்கூடும் ஆனால், முட்டாளை, தவிர வேறு எவனும் அதைத் தொடர்ந்து செய்ய மாட்டான். நல்லதும் கெட்டதும் தீமை செய்வதினும் தீமை பெறுதலே நலம். நன்மை செய்தல் மனிதர்கள் தங்களுடன் சேர்ந்த மற்ற மனிதர்களுக்கு நன்மை செய்வதிலேயே தேவர்களைப் போல விளங்குகின்றனர். வேறு எதிலும் அவ்வாறு விளங்குவதில்லை. நாகரிக நடை ஒழுக்கத்திற்கும். காலத்திற்கேற்ற நடைக்கும் மிக நெருங்கிய சம்பந்தம் உண்டு. நமது கற்பனையில்தான் நாம் அவற்றைப் பிரித்து எண்ணுகிறோம். நிதானம் நீண்ட நாள் வாழ்வதற்கு நிதானமாக வாழ்தல் அவசியம். நீதி மனிதர்க்குத் தீங்கு செய்யாமலிருப்பது நீதி, அவர்க்குப் பிழை செய்யாதிருப்பது கௌரவத்திற்கு அழகு. பகுத்தறிவு அறிவாளர்களுக்குப் பகுத்தறிவு கற்பிக்கின்றது. குறைந்த அறிவுள்ளவர்களுக்கு அனுபவம் கற்பிக்கின்றது. மிருகங்களுக்கு இயற்கை கற்பிக்கின்றது. வரலாறு முன்னாளில் நடந்தவற்றை அறியாவிடில் நாம் என்னாளும் குழந்தைகளே. சான்றுகள் வெளியிணைப்புகள் பகுப்பு அரசியல் தலைவர்கள் பகுப்பு இறந்த நபர்கள்
இரோம் சானு சர்மிளா அல்லது ஐரோம் ஷர்மிளா , பிறப்பு மார்ச் 14, 1972 என்பவர் மணிப்பூரின் இரும்பு மங்கை என அழைக்கப்படுபவராவார். இவரை அவரது வட்டார மொழி மக்கள் மெங்ஙௌபி என அழைக்கின்றனர். மணிப்பூரில் நடந்த வன்முறைகளுக்கும் மற்றும் பிற வடகிழக்குப் பகுதிகளில் அதன் விளைவுகளுக்கும் காரணமான ஆயுதப்படை சிறப்பு அதிகாரங்கள் சட்டம், 1958ஐ இந்திய அரசாங்கம் மீளப் பெறவேண்டும் என்று கூறி 2000ஆம் ஆண்டு நவம்பர் 2 அன்றிலிருந்து இவர் உண்ணாநிலைப் போராட்டம் இருந்துவந்தார். இது 500 வாரங்களுக்கும் மேல் தொடர்ந்து வருகிறது. இதுவே உலகின் நீண்ட உண்ணாப் போராட்டமாகும். ஆகஸ்ட் 9, 2016 அன்று தன்து 16 ஆண்டுகால உண்ணாநிலை போராட்டத்தை முடித்துக் கொண்டார். இவரின் சொற்கள் என்னால் என் சமூகத்துக்கு என்ன செய்ய முடியும் என்று கேட்டுக்கொண்டபோது, அகிம்சை வழியில் எனக்கு அது உண்ணா நோன்பு ஒன்றே வழியாகத் தெரிந்தது. எந்த உணவையும் பார்த்து அப்படி ஒரு வேட்கைக்கு ஆளானதில்லை. ஆனால், சில சமயங்களில் தண்ணீரைப் பார்த்து அலாதியான தாகம் ஏற்படும். உள்ளுணர்வு சொல்வதைக் கேட்கிறேன். விளைவுகளை நான் கணக்கிடவில்லை. யார் எவ்வளவு பலசாலியாக இருந்தால் என்ன, மக்கள் ஒன்றுபட்டுவிட்டால் எதுவும் சாத்தியம். மணிப்பூரில் வீடுகள்தோறும் போய்க் கேளுங்கள். இதுவரை எவ்வளவு பேர் காணாமல் போயிருக்கிறார்கள், பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டிருக்கிறார்கள், கொடூரமாகக் கொல்லப்பட்டிருக்கிறார்கள் என்று ராணுவப் படைகள் செய்த அட்டூழியங்கள் ஒவ்வொன்றையும் அவர்கள் நாளெல்லாம் சொல்வார்கள். என் கவிதைகள்... அவற்றை எப்படிச் சொல்வது? அவை எல்லாம் என்னுடைய புகார்கள், புலம்பல்கள். அப்படித்தான் இப்போது தோன்றுகிறது. அன்பு ஒன்றுதான் என்னிடமுள்ள ஒரே செய்தி. அன்பின் வழி அரசியலை அணுகி ஒரு பெரும் ஏகாதிபத்திய அரசை வெளியேற்றிய தந்தையின் வழித்தோன்றல்கள் நாம். அந்த வழியை நாம் என்றும் மறந்துவிடக் கூடாது. மேற்கோள்கள் பகுப்பு 1972 பிறப்புக்கள் பகுப்பு இந்தியப் பெண்கள் பகுப்பு மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் பகுப்பு இந்தியர்கள்
ஓப்ரா கைல் வின்ஃப்ரே பிறப்பு சனவரி 29, 1954 ஓர் அமெரிக்க ஐக்கிய நாட்டு அரட்டைக் காட்சி தொகுப்பாளர், தயாரிப்பாளர் மற்றும் வள்ளல். இவர் தன்பெயரைக் கொண்டு நடத்தும் ஓப்ரா வின்ஃப்ரே ஷோ என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சி இத்தைகைய வகை நிகழ்ச்சிகளின் வரலாற்றிலேயே மிகவும் உயர்ந்த மதிப்பீடுகளைப் பெற்று பல விருதுகளை வென்றுள்ளது. இவரது மேற்கோள்கள் எங்கு போராட்டம் இல்லையோ, அங்கு வலிமையும் இல்லை. ஒருவர் தனது அணுகுமுறையை மாற்றுவதன் மூலம், தனது எதிர்காலத்தையே மாற்ற முடியும் என்பதே அனைத்து காலத்திற்குமான மிகச்சிறந்த கண்டுபிடிப்பு. மேன்மை அடைவதற்கான மற்றுமொரு மைல்கல்லே தோல்வி உங்களை முன்னேற்றப் பாதையில் அழைத்துச் செல்பவர்கள் மட்டுமே உங்களைச்சுற்றி இருக்க வேண்டும். உங்களது காயங்களை ஞானமாக மாற்றுங்கள். உங்கள் உள்ளுணர்வுகளைப் பின்பற்றுங்கள். அங்குதான் உண்மையான ஞானம் தன்னை வெளிப்படுத்திக்கொள்கிறது. இந்த கணத்தில் சிறந்ததை செய்வது. அடுத்த கணத்திற்கான சிறந்த இடத்தில் உங்களை வைக்கிறது. நீங்கள் உங்கள் வாழ்க்கையின் இலக்குகளை அடைய வேண்டுமானால், அதற்கான ஊக்கத்துடன் செயலைத் தொடங்க வேண்டும். நீங்கள் இங்கு எப்படி இருக்கிறீர்கள் என்பதுதான் முக்கியமே தவிர, இந்த உலகிற்கு எப்படி வந்தீர்கள் என்பது ஒரு விசயமே அல்ல. எனக்கு நண்பர்கள் யாரும் இல்லாதபோது, என்னிடம் புத்தகங்கள் இருந்தன. நான் தோல்விகளை நம்புவதில்லை. நீங்கள் உங்கள் செயலை அனுபவித்து செய்துள்ளீர்கள் என்றால், அது தோல்வியே அல்ல. முன்னேற்பாடு எப்பொழுது வாய்ப்பினை சந்திக்கிறதோ அதுவே அதிர்ஷ்டம் எனப்படுகிறது. ஒவ்வொரு தடுமாற்றமும் வீழ்ச்சி அல்ல மற்றும் ஒவ்வொரு வீழ்ச்சியும் தோல்வி என்று அர்த்தமல்ல. மற்றவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதைப்பற்றி வெற்றிகரமான மக்கள் ஒருபோதும் கவலைப் படுவதில்லை. குறிப்புகள் பகுப்பு அமெரிக்கர்கள் பகுப்பு 1954 பிறப்புக்கள்
டோனி மாரிசன் 2008 டொனி மொறிசன் ரொனி மொறிசன், , பி. பெப்ரவரி 18, 1931 1993 இல் இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்ற அமெரிக்கப் பெண் நாவலாசிரியர் ஆவார். இவர் புனைகதை இலக்கியத்துக்கான 1988ற்கான புலிற்சர் பரிசும் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. தனது மகனுடன் இணைந்து சிறுவர்களுக்கான பல நூல்களையும் பதிப்பித்துள்ளார். இவரது பொன்மொழிகள் நீங்கள் ஒரு புத்தகத்தைப் படிக்க விரும்புகிறீர்கள், ஆனால் அந்தப் புத்தகம் இதுவரை எழுதப்படவில்லை. அப்படியென்றால் அந்தப் புத்தகத்தை எழுத வேண்டியவர் நீங்கள்தான். வெளி இணைப்புகள் குறிப்புகள் பகுப்பு நோபல் பரிசு வென்றவர்கள் பகுப்பு 1931 பிறப்புக்கள் பகுப்பு எழுத்தாளர்கள்