Search is not available for this dataset
செல்வம் நிலையாமை [செல்வத்தின் நிலையாமையை உணர்த்துவது] பாடல்: அறுசுவை யுண்டி அமர்ந்தில்லாள் ஊட்ட மறுசிகை நீக்கியுண் டாரும் - வறிஞராய்ச் சென்றிரப்பர் ஓரிடத்துக் கூழ்எனின், செல்வம்ஒன் றுண்டாக வைக்கற்பாற் றன்று. குறிப்புரை: அறுசுவை உண்டி - அறுசுவையுள்ள உணவை, இல்லாள் - மனையாள், அமர்ந்து ஊட்ட - விரும்பி உண்பிக்க, மறுசிகை நீக்கி உண்டாரும் - மறுபிடி தவிர்த்து உண்ட செல்வரும், வறிஞராய்ச் சென்று இரப்பர் ஓர் இடத்து கூழ் - ஒரு காலத்தில் வறுமையாளராகி எங்கேனும் ஓர் இடத்திற்போய்க் கூழ் இரப்பர், எனின் - ஆதலின், செல்வம் ஒன்று - செல்வமென்பதொன்று, உண்டாக வைக்கற்பாற்று அன்று - நிலையுடையதாக மனத்திற் கருதக் கூடியதன்று. கருத்து: செல்வரும் வறிஞராக மாறுதலால், செல்வம் நிலையுள்ளதாகக் கருதற்குரியதன்று. விளக்கம்: ‘அமர்ந்து' ‘ ஊட்ட' என்னும் சொற்கள் ஆற்றல் வாய்ந்தவை; அமர்தல் - மனம் பொருந்துதல் ; அன்பு, மகிழ்வோடு உண்ணச் செய்தலின் ‘ஊட்ட' என வந்தது. ஒவ்வொருவகை உணவிலும் ஒவ்வொரு பிடியளவே போதுமானதாயிருந்தமையால் அச் செழுமை மிகுதியால் மறுசிகை நீக்கி உண்டார். உம்மை உயர்வின் மேல் வந்தது. வைக்கறபாற்றன்று - வைக்கற்பாலதன்று. செல்வத்தின் நிலையாமை தெரிந்தால், அதனைக் காலத்தில் தக்கவாறு பயன்படுத்திக்கொள்ளும் உணர்வு உண்டாகும். நிலையாமை கூறும் பிறவிடங்களிலும் இங்ஙனமே கருத்துக்கொள்க.
stringlengths
16
7.39k
செல்வம் நிலையாமை பொருட்பால் இரவச்சம் இழித்தக்க செய்தொருவன் ஆர உணலின் பழித்தக்க செய்யான் பசித்தல் தவறோ? விழித்திமைக்கு மாத்திரை யன்றோ ஒருவன் அழித்துப் பிறக்கும் பிறப்பு. குறிப்புரை: இழித்தக்க செய்துஒருவன் ஆர உணலின் பழித்தக்க செய்யான்பசித்தல் தவறோ - இழிக்கத்தக்க மானக்குறைவானசெயல்களைச் செய்து ஒருவன் வயிறார உண்ணுதலைவிடஉலகம் பழிக்கத்தக்க அச்செயல்களைச்செய்யானாய் வறுமையாற் பசியோடிருத்தல்தவறாகுமோ?, ஒருவன் அழித்துப் பிறக்கும் பிறப்புவிழித்து இமைக்கும் மாத்திரையன்றோ-ஏனென்றால்,அழிக்கப்பட்டு ஒருவன் பிறக்கும் பிறப்புஇமைத்துப் பின்கண் திறக்கும்நொடிப்பொழுதாமன்றோ? கருத்து: நொடிப்பொழுதில்மாய்தற்குரிய இப்பிறவியின் பொருட்டுமானக்குறைவான இரத்தல் செயலைச் செய்து உயிர்பிழைத்தல் ஆகாது. விளக்கம்: இழி பழி என்பன ஈறுகுறைந்து நின்றன. இழித்தக்க, பழித்தக்க என்பவை,பெயர்கள். இழிவுடைய செயல்கள்பழிப்புடையனவாகலின், ‘இழிக்கத்தக்க'‘பழிக்கத்தக்க' எனக் காரண காரியமாகவேறுபடுத்திக் கூறப்பட்டன. அழித்துப் பிறக்கும்என்றதற்கேற்ப, இமைத்து விழிக்கும் என்றுமாற்றிக்கொள்க. ‘பிறந்தவர் சாதலும் இறந்தவர்பிறத்தலும் உறங்கலும் விழித்தலும் போன்றதுண்மையின்’ இங்ஙனம் கூறினார். உயிரின்பெருங்குண விளக்கமே பிறவியெடுத்தலால் ஒருவன்அடைய வேண்டும் பயனாகலின், அப்பெருங் குணம்அழியப் பிறவியை ஓம்புதல் வீண் என்றபடி.பிறாண்டும் ஏற்றவற்றிற் கிங்ஙனம்உரைத்துக்கொள்க. மணிமே.
செல்வம் நிலையாமை பொருட்பால் இரவச்சம் இல்லாமை கந்தா இரவு துணிந்தொருவர் செல்லாரும் அல்லர் சிறுநெறி - புல்லா அகம்புகுமின் உண்ணுமின் என்பவர்மாட் டல்லான் முகம்புகுதல் ஆற்றுமோ மேல்? குறிப்புரை: இல்லாமை கந்தா இரவுதுணிந்து ஒருவர் செல்லாரும் அல்லர் சிறுநெறி -வறுமை காரணமாக இரத்தலுக்குத் துணிந்து அச்சிறுவழியில் ஒருவர் செல்லுங் கட்டாயமுடையராதலுங்கூடும்; ஆனால், புல்லா அகம் புகுமின் உண்ணுமின்என்பவர் மாட்டு அல்லால் முகம் புகுதல் ஆற்றுமோமேல் - தாம் செல்லுமுன்பே தம்மை முன்போந்து தழுவி,வீட்டுக்கு வாருங்கள், உண்ணுங்கள் என்றுவரவேற்பாரிடத்தன்றி மேன்மக்கள் ஏனையோரிடம்தலைகாட்டுதல் செய்வரோ? தலைகாட்டாரென்க. கருத்து: தம்மை வரவேற்காதவரிடம்வறுமை காரணமாகவும் இரத்தற்கு மேலோர் அஞ்சுவர். விளக்கம்: கந்தென்றது, ஈண்டுக்காரணமென்னும் பொருட்டு. "பழைமைகந்ததாக," "காதன்மை கந்தா" என்புழிப்போல. இரத்தல், ‘சிறு நெறி'எனப்பட்டமை கருத்திற் பதிக்கற்பாலது. புல்லா:உடன்பாடு. பிறர்குறிப்பிற்கேற்றவாறு தமது முகத்தைநொடித்துக் கொண்டு நுழையும் இரவின் இழிவுதோன்றத் தலைகாட்டுதல் ஈண்டு ‘முகம்புகுத'லெனப்பட்டது. இவ்விழிவு மேற் செய்யுளிலும் வருதல்காண்க. நாலடி. .
செல்வம் நிலையாமை பொருட்பால் இரவச்சம் திருத்தன்னை நீப்பினும் தெய்வம் செறினும் உருத்த மனத்தோடு டுயர்வுள்ளி னல்லால் அருத்தம் செறிக்கும் அறிவிலார் பின்சென் றெருத்திறைஞ்சி நில்லாதா மேல். குறிப்புரை: திரு தன்னை நீப்பினும்தெய்வம் செறினும் உருத்த மனத்தோடு உயர்வுஉள்ளினல்லால் - திருமகள் தன்னைத் துறந்தாலும்ஊழ் உருத்தெழுந்தாலும் தாம் மேலும் ‘ஊக்கமுற்றஉள்ளத்தோடு உயர்ந்த செய்கைகளைக் கருதியொழுகுதலல்லால், அருத்தம் செறிக்கும் அறிவிலார்பின் சென்று எருத்து இறைஞ்சி நில்லாதாம் மேல் -செல்வத்தை இறுக்கிப் பிடிக்கும்மெய்யறிவில்லாக் கீழ்மக்கள் பின்னேபோய்மேலோர் தலைவளைந்து இரந்து நில்லார் கருத்து: திரு நீங்கினும் ஊழ்கறுவினுங்கூட மேலோர் இரத்தற்கு அஞ்சுவர். விளக்கம்: திருபொருளன்று பொருள்பெறுதற்குரிய பேறு. "திருவினும் நிலையிலாப்பொருள்" என்பதன்கண் இவ்வேறுபாடுபுலப்படும். தெய்வமென்றது, அறக்கடவுள்; ஆவது, ஊழ்;"தெய்வப் புணர்ச்சி" என்பதிற்போல, உருத்த - உருக்கொண்ட ; முனைந்தவென்க. எருத்து - கழுத்து; எருத்திறைஞ்சி நிற்றல்இரத்தலின் இழிவு காட்டிற்று. மேல், மேலோர்க்குஆகு பெயர்; நில்லா தென்னும் அஃறிணை முடிபு மேல்என்னுஞ் சொல் கருதிற்று. இவ்வாறு முற்செய்யுளினும்வந்ததை நினைவு கூர்க. கலித். . இறைய. -உரை
செல்வம் நிலையாமை பொருட்பால் இரவச்சம் கரவாத திண்ணன்பின் கண்ணன்னார் கண்ணும் இரவாது வாழ்வதாம் வாழ்க்கை; -இரவினை உள்ளுங்கால் உள்ளம் உருகுமால், என்கொலோ கொள்ளுங்கால் கொள்வார் குறிப்பு. குறிப்புரை: கரவாத திண் அன்பின்கண் அன்னார் கண்ணும் இரவாது வாழ்வதாம்வாழ்க்கை - தமக்கொன்று ஒளியாத உறுதியானமெய்யன்பின்னையுடைய கண்போன்றஅன்பர்களிடத்தும் யாதும் இரத்தல் செய்யாதுவாழ்வது வாழ்க்கையாகும்; இரவினை உள்ளுங்கால்உள்ளம் உருகும் - இரத்தலாகிய செயலைநினைக்கும்பொழுதே உள்ளம் கரைந்து அழிகின்றது;கொள்ளுங்கால் கொள்வார் குறிப்பு என் கொலோ -அவ்வாறானால், பிறரிடம் ஒன்று ஏற்குங்காலத்தில்அங்ஙனம் ஏற்பவரது கருத்துத்தான் எவ்வாறு நையாநிற்கும்! கருத்து: அன்பர்களிடத்தும்இரக்குந்தொழில் உயிராற்றலை ஒடுக்கும். விளக்கம்: அன்பின் அன்னாரென்க.ஆலுங்கொல்லும் அசை. குறிப்பு என்றார், அவர்கருத்து அந்நேரத்தில், இடுவார் கருத்தின்வழியெல்லாம் இயங்கி ஒன்று பெறுதலில் முனைந்துநிற்றலின், அன்பரிடத்தும் இரத்தல்அஞ்சுகவென்பது இச் செய்யுளிற் பெறப்பட்டது."கரவாது உவந்தீயுங் கண்ணன்னார் கண்ணும்,இரவாமை கோடி யுறும்." "இரவுள்ளம் உள்ளம்உருகும்" என்னும் நாயனார் திருமொழிகள் இங்குஒப்பு நோக்கற்பாலன. குறள் ,
செல்வம் நிலையாமை பொருட்பால் இரவச்சம் இன்னா இயைக இனிய ஒழிகென்று தன்னையே தானிரப்பத் தீர்வதற் - கென்னைகொல் காதல் கவற்றும் வனத்தினாற் கண்பாழ்பட் டேதி லவரை இரவு. குறிப்புரை: இன்னா இயைக இனிய ஒழிகஎன்று தன்னையே தான் இரப்பத் தீர்வதற்கு - தூயமெய்யுணர்வு உண்டாதற்கு உலகத் துன்பங்களேஏதுவாயிருத்தலின். அத்துன்பங்கள் வந்துபொருந்துக,இன்பந் தருவன நீங்குக என்று தன் உள்ளத்தையே தான்வேண்டித் தெளிவு செய்துகொள்ள அதனால்தம்மைவிட்டு நீங்கிவிடுதற்குரிய பொருள்முடைக்காக; காதல் கவற்றும் மனத்தினால் கண்பாழ்பட்டு ஏதிலவரை இரவு என்னைக்கொல்-அதற்குமாறாய், அப் பொருளின்மேற் கொள்ளும் அவாவருத்துகின்ற மனத்தினால் அறிவு பாழாகிய அயலாரைஒன்று இரத்தல் ஏன்? கருத்து: பொருளால் வருந் துன்பத்தைநோக்கி அதனைத் துறக்குந்தெளிவுடையோர்,அப்பொருளுக்காகப் பிறரை இரக்க அஞ்சுவர். விளக்கம்: தீர்வது, பெயர்:நான்கனுருபு பொருட்டுப் பொருளது. கண் என்றது அறிவு."பெரியோர்ப் பிழைப்பதோர்கண்ணிலியாகும்" என்பதனானுங் காண்க.அவாவால் அறிவு மறைக்கப்படுதலின், ‘காதல் கவற்றுமனத்தினாற் கண் பாழ்பட்'டென்றார். இரவாழிதற்கு இச்செய்யுளிற் கருவி கூறப்பட்டது. பெருங். உஞ்சைக்
செல்வம் நிலையாமை பொருட்பால் இரவச்சம் என்றும் புதியார் பிறப்பினும் இவ்வுலகத் தென்று மவனே பிறக்கலான் - குன்றின் பரப்பெலாம் பொன்னொழுகும் பாயருவி நாட! இரப்பாரை எள்ளா மகன். குறிப்புரை: குன்றின் பரப்பெலாம்பொன் ஒழுகும் பாய் அருவி நாட - மலையின் பரந்தஇடமெல்லாம் பொன் பரவுதற்கு ஏதுவான பாயும்மலையருவிகளையுடைய நாடனே!. என்றும் இவ்வுலகத்துப்புதியார் பிறப்பினும் - இந்த உலகத்தில் என்றும்புதிக மக்கள் பிறந்தாலும், என்றும் அவனேபிறக்கலான் - என்றும் அவனொருவனே உண்மையிற்பிறத்தலுடையான்; அவன் யாரெனில்: இரப்பாரைஎள்ளா மகன் - இரந்துண்ணும் எளியோரை இகழாதொழுகும் மகனெனத் தக்கான் என்க; கருத்து: இரப்பாரை இகழாதவனேமகனெனப் பாராட்டப்பட்டுப் பிறப்பின்பயனெய்துவோனாவன். விளக்கம்: புதியாரென்றது, புதியவடிவினையுடைய மக்கள்; அவனே என்று முதலிற்சுட்டினால் உணர்த்திப்பின் விளக்கினார், இதுசெய்யுளாகலானும் உலகத்தில் அவனொருவனே பலரானும்மனிதனாக மதிக்கப்பட்டு பிறவியின் பயனுடையனாய்,பாரிவள்ளல் போன்று, ஏனையோரினும் மேம்பட்டுவிளங்குதல் வெளிப்படையாகலானுமென்க. அவன் என்றதுஇனவொருமை. பிறக்கலான் என்பதில் அல்தொழிற்பெய ரீறு.
செல்வம் நிலையாமை பொருட்பால் இரவச்சம் புறத்துத்தன் இன்மை நலிய அகத்துத்தன் நன்ஞானம் நீக்கி நிறீஇ ஒருவனை ஈயாய் எனக்கென் றிரப்பானேல் அந்நிலையே மாயானோ மாற்றி விடின். குறிப்புரை: புறத்துத் தன் இன்மைநலிய - புறத்தே உடம்பைத் தனது வறுமை வருத்தஅதனால், அகத்துத் தன் நல்ஞானம் நீக்கிநிறீஇ-உள்ளத்தில் தனது நல்லறிவை ஒதுக்கிமனந்துணிந்து, ஒருவனை ஈயாய் எனக்கு என்றுஇரப்பானேல் - பொருளாளனொருவனை எனக்கு யாதானும்இடு என்று மானமுடையோன் இரந்து நிற்பானாயின்,மாற்றிவிடின் அந்நிலையே மாயானோ - அவன் இல்லைஎன்று மறுத்துவிட்டால் அந் நொடியே அம்மானிஉயிரழிவானன்றோ? கருத்து: மானிகள் இரந்துகருத்தழிதலினும் இரவாது நலிதலே நன்று. விளக்கம்: புறத்து என்றார்,உடம்பையும் உலகத்தையும் நினைந்து; நன்ஞானம்என்பதன் குறிப்பானும், ‘நிறீஇ' என்னுங்குறிப்பானும் இரப்பான் என்றது, ஈண்டுமானமுடையோனை யென்க. உள்ளத்தை ஒருவழிநிறுத்தியென்றற்கு நிறீஇ யென்றார்.உயர்ந்தோர், தாழ்ந்தோர்க்கு இடுகின்றதொழில் ஈதலெனப்படுமாகலின், இவ்விழிவுதோன்ற ‘ஈயாய்' எனப்பட்டது. மாய்தலென்றது,சாதலொத்த துன்பமடைதல்; "இரப்பவர்சொல்லாடைப் போஒம் உயிர்" என்றார்திருவள்ளுவரும். தொல். எச்ச. .
செல்வம் நிலையாமை பொருட்பால் இரவச்சம் ஒருவ ரொருவரைச் சார்ந்தொழுகல் ஆற்றி வழிபடுதல் வல்லுத லல்லால், - பரிசழிந்து செய்யீரோ என்னானும் என்னுஞ்சொற் கின்னாதே பையத்தான் செல்லும் நெறி? குறிப்புரை: ஒருவர் ஒருவரைச்சார்ந்தொழுகல் ஆற்றி வழிபடுதல் வல்லுதலல்லால்- வறுமையாளரொருவர் செல்வரொருவரைச் சார்ந்துஇருந்துகொள்ளுதல் செய்து அவரைப் பின்பற்றியொழுகுதல் கூடுவதன்றி; பரிசு அழிந்து என்னானும்செய்யீரோ என்னுஞ்சொற்குப்பையைத்தான்செல்லுநெறிஇன்னாதே - தமது இயல்பாகிய மானம்அழிந்து ஏதானும் ஈயீரோ என்றிரக்கும்இரப்புரைக்கு, அடக்கமாகத் தான் ஒழுகிக்கொள்ளும்அம்முறைமை தீதாமோ? கருத்து: தொழுதுணடு வாழ்தலினும்இரந்துண்டு வாழ்தல் அஞ்சுக. விளக்கம்: ஆற்றி என்றார்,அஃதருமையாதலின். மானமே உயிரினியல்பாய்விளங்குதலின், அதனை வாளாபரிசெனவே விதந்தார்.பொறுமையோடு அடங்கி நடத்தல், ‘பையச் செல்லும்'எனப்பட்டது. தொழுதுண்டு வாழ்தல் வறுமையினுஞ் சற்றுவலிவுடைத்தாதல் பற்றி, ‘வல்லுதல், என்னுஞ் சொல்பெய்துரைக்கப்பட்டதென்க. ஏகராம்: வினா.
செல்வம் நிலையாமை பொருட்பால் இரவச்சம் பழமைகந் தாகப் பசைந்த வழியே கிழமைதான் யாதனுஞ் செய்க: கிழமை பொறார் அவரென்னின் பொத்தித்தம் நெஞ்சத் தறாஅச் சுடுவதோர் நீ. குறிப்புரை: பழமை கந்தாகப் பசைந்தவழியே கிழமைதான் யாதானும் செய்க - பழமையாகியநட்பே பற்றுக்கோடாக நண்பர்பால் ஒன்று பெறுதற்குஉள்ளம் விரும்பியவிடத்து உரிமையால் அவ்வாறுஏதேனுஞ் செய்து கொள்க; கிழமை பொறார்அவரென்னின் பொத்தித் தம் நெஞ்சத்து அறாச்சுடுவதோர் தீ - ஆனால், அங்ஙனம் செய்யும் உரிமைச்செயலை அந் நண்பர் பொறாரென்றால், தமதுநெஞ்சத்தில் மூட்டப்பட்டு அம் மானக் குறைவால்உண்டான வேதனை யென்னும் ஒரு தீ என்றும் நீங்காதுசுடுவதாகும். கருத்து: பழமை கருதியவிடத்தும்இரத்தலுக்கு அஞ்சுக. விளக்கம்: தடுக்கும் அறிவைப்பிற்படுத்தி உள்ளம் இரத்தற்கு மீதூர்ந்துவிழைந்தவழி யென்றற்குப், பசைந்தவழியேயெனப்பட்டது. "பசைஇப் பசந்தன்றுநுதல்" என்றார் பிறரும். இரத்தல்செய்க என்றற்கு உள்ளங்கூசுதலின், ‘யாதானுஞ்செய்க' என்று வேண்டா வகையாய்க் கூறினார்.அங்ஙனம் மனம் பொறுத்து அது செய்தும் அதனை அந்நண்பர் கருதாது கைவிடுவரென்றால், பின்பு, நினையநினையக் கனைந்தெழும் வேதனைத் தீ உள்ளத்தேஅறாது மூண்டுவிடுமாகலின், அந்நிலையினும் இரத்தல்பெரிதஞ்சப்படும் என்பது பின் வரிகளால்உணர்த்தப்பட்டது. குறுந்.
செல்வம் நிலையாமை பொருட்பால் அவையறிதல் [அவையிலுள்ளாரின் தகுதி தெரிந்து ஒழுகுதல்] மெய்ஞ்ஞானக் கோட்டி உறழ்வழிவிட் டாங்கோர் அஞ்ஞானந் தந்திட் டதுவாங் கறத்துழாய்க் கைஞ்ஞானங் கொண்டொழுகுங் காரறி வாளர்முன் சொன்ஞானஞ் சோர விடல். குறிப்புரை: மெய்ஞ்ஞானக் கோட்டிஉறழ்வழி விட்டு - உண்மையறிவினையுடையகூட்டத்திற் கலந்து அவர் வழி நின்றொழுகுதலைவிடுத்து; ஆங்கு ஓர் அஞ்ஞானம் தந்திட்டு அதுஅறத்துழாய் - அதற்கு மேலும் அம் மெய்ஞ்ஞானமுடையாரிடையே தமது ஓர் அறியாமைக் கருத்தையும்உரைத்து, அதனையே மிகவும் பன்னிப்பன்னிப் பேசி,கைஞ்ஞானம் கொண்டு ஒழுகும் கார் அறிவாளர்முன் -இவ்வாறு தமது சிற்றறிவே பற்றியொழுகுகின்றமயக்கவறிவினரெதிரில், சொல் ஞானம் சோரவிடல்- புகழ்தற்குரிய தமது ஞானப் பெருமையினைக்காட்டிக்கொள்ளாமல் தளர்த்துக் கொள்க. கருத்து: தமது சிற்றறிவையேபேரறிவாகக் கொண்டு அடங்காதொழுகுவாரிடம்சான்றோர் தமது ஞானப்பெருமையை வெளிப்படுத்திக்கொள்ளார். விளக்கம்: ‘அதுவாங்கு'என்னுமிடத்தில் ‘ஆங்கு' அசை. ‘கை' சிறுமைப் பொருட்டாதல் ‘கையேடு' ‘கைவாள்' என்பவற்றானுங்காண்க. அறியாமை மிகுதியாக உடைய அறிவென்றற்குக்‘காரறிவு' எனப்பட்டது. விடல் என்னும் வியங்கொள்ஈண்டு உடன்பாடு. பயனில்லாமையின் விடுக என்றார். குறுந்.
செல்வம் நிலையாமை பொருட்பால் அவையறிதல் நாப்பாடஞ் சொல்லி நயமுணர்வார் போற்செறிக்குந் தீப்புலவற் சேரார் செறிவுடையார்; -தீப்புலவன் கோட்டியுட் குன்றக் குடிப்பழிக்கும் அல்லாக்கால் தோட்புடைக் கொள்ளா எழும். குறிப்புரை: நாப் பாடம் சொல்லிநயம் உணர்வார் போல் செறிக்கும் தீப்புலவன்சேரார் செறிவுடையார் - தாம் இதற்குமுன் நெட்டுருச்செய்த பாடங்களை அப்படியே சொல்லிக்காட்டி ஏதோபொருள்நயம் உணர்வார்போல் நடித்துத் தம்அறியாமைக் கருத்துக்களை அவற்றிற் செறித்துககூறும் போலிப் புலவனை அவ்வாரவாரமில்லாமெய்ப்புலவோர் அணுகார்;தீப்புலவன் கோட்டியுள் குன்ற - மெய்ப்புலவோராகிய தமதுவருகையால் அப் போலிப் புலவன் அவையிற் பெருமைகெடுதலால்; குடிப்பழிக்கும் - அவன் தமதுகுடிப்பிறப்பைப் பற்றிப்பழித்துப் பேசுவான்;அல்லாக் கால்தோட்புடைக் கொள்ளா எழும் -அல்லாவிட்டால் தன் தோளைத் தட்டிக்கொண்டுவலுச்சண்டைக்கு எழுவான் என்க. கருத்து: போலிப் புலவரோடுமெய்ப்புலவர் சேர்ந்து பெருமை குன்றுதலாகாது. விளக்கம்: பொருள் தெரிந்து,கல்லாமையின், ‘நாப்பாட' மெனவும்,போலிப்புலவரால் உலகுக்குத் தீமை விளைதலின்‘தீப்புலவன்' எனவுங் கூறினார். செறிவு,போலியாரவராமில்லா அடக்கமுடைமை. கல்வி, அறிவு,ஒழுக்க முதலியவற்றால் இவரைக் குறைகூறுலாகாமையின்இவர் குடிப்பிறப்பைப் பற்றிப் பேசும் எனவும்,அதனை எவரும் பொருள் செய்யாமையின் தோள்தட்டிஎழும் எனவும் உரைத்தார். "வெல்வது வேண்டிவெகுண்டுரைக்கும் நோன்பிலி" என்றார்பிறரும். ‘குன்ற' என்னும் எச்சம் காரணப்பொருட்டு திரிகடு.
செல்வம் நிலையாமை பொருட்பால் அவையறிதல் சொற்றாற்றுக் கொண்டு சுனைத்தெழுதல் காமுறுவர், கற்றாற்றல் வன்மையுந் தாந்தேறார், -கற்ற செலவுரைக்கும் ஆறறியார், தோற்ப தறியார், பலவுரைக்கும் மாந்தர் பலர். குறிப்புரை: சொல் தாறு கொண்டுசுனைத்தெழுதல் காமுறுவர் - சொல்லாகிய முட்கோல்கொண்டு நாத்தின வெடுத்துப் பேச முற்படுதலை மிகவிரும்பும் இயல்பினர், கற்று ஆற்றல் வன்மையும்தாம் தேறார் - நூல்நுட்பங்களைக் கற்றறிந்துஒழுகும் வல்லமையுந் தாம் தெளியார், கற்ற செலஉரைக்கும் ஆறு அறியார் - தாம் கற்ற சிலவற்றைக்கேட்பவர் உள்ளத்திற் பதியும்படி எடுத்துரைக்கும்முறையையும் அறியார்; தோற்பது அறியார் -தம்சொற்கள் பயன்படுதலின்றி வீணாகியொழிதலையுங்கருதார்; பல உரைக்கும் மாந்தர்பலர்-ஒன்றைப் புலப்படுத்தும்பொருட்டு இவ்வாறு பலசொற்கள் சொல்லி அவம்படும் மாந்தர் உலகிற்பலராவர். கருத்து: நாத் தின வெடுத்துப் பலசொல்லலாகாது. விளக்கம்: ‘காமுறும் இயல்பினர்தேறார், அறியார், அறியார், இவ்வாறு பல உரைக்கும்மாந்தர் உலகிற் பல' ரென்க, பொருள்வளமில்லாமையின், நயனிலாச் சொற்கள் ‘தாறு'எனப்பட்டன. எதுகை நோக்கி இடையொற்று மிக்கது.சில சொல்லல் தேறாது பல சொல்லக் காமுறுதலின், ‘சுனைத்தெழுதல்' என்றார். ஆற்றல் ஈண்டுஒழுகுதலென்னும் பொருட்டு. ‘ஆற்றுவாராற்றல்' என்பதுங் கருதுக. உம்மை பிறவற்றிற்குங் கொள்க. குறள்
செல்வம் நிலையாமை பொருட்பால் அவையறிதல் கற்றதூஉ மின்றிக் கணக்காயர் பாடத்தால் பெற்றதாம் பேதையோர் சூத்திரம்-மற்றதனை நல்லா ரிடைப்புக்கு நாணாது சொல்லித்தன் புல்லறிவு காட்டி விடும். குறிப்புரை: கற்றதும் இன்றிக்கணக்காயர் பாடத்தால் பெற்றது ஆம் ஓர்சூத்திரமதனை - தாம் ஆழ்ந்து பயின்றதுமின்றித்தக்க கேள்வியுமின்றிப் பள்ளி ஆசிரியர்நெட்டுருச் செய்வித்த மனப்பாடத்தால் தெரிந்துகொண்டதாகிய ஒரு நூற்பாவினை, நல்லாரிடைப் புக்குநாணாது சொல்லிப் பேதை தன் புல்லறிவுகாட்டிவிடும் - நற்புலவர் அவையிற் சென்றுநாணுதலின்றி விரித்துரைத்து அறிவிலான் தனதுசிற்றறிவினைக் காட்டிக்கொள்வான். கருத்து: நூல் நுட்பங்களைநன்குணர்ந்து விளங்கும் நற்புலவரிடையில்ஏனையோர் நாவடக்கமுடையராதல் வேண்டும். விளக்கம்: கற்றதூஉமின்றி என்னும்உம்மை கேட்டதூஉமின்றி என்பது விளக்கி நின்றது.கணக்காயர், கல்வி கற்பிக்கும்பள்ளியாசிரியர்; "கணக்காயர் இல்லாதஊரும்" என்றார் கடுகத்தினும். ஓர்சூத்திரமென்றார், வேறு தெரியாமையானும் அஃதும்அரிதிற் கிடைத்தமையானும். மற்று:அசை. பிழையைப்பிழையென்று கருதும் உள்ளவொடுக்கமில்லாமையின்,‘நாணாது சொல்லி' எனப்பட்டது. திரிகடு.
செல்வம் நிலையாமை பொருட்பால் அவையறிதல் வென்றிப் பொருட்டால் விலங்கொத்து மெய்கொள்ளார் கன்றிக் கறுத்தெழுந்து காய்வாரோ-டொன்றி உரைவித் தகமெழுவார் காண்பவே, கையுள் சுரைவித்துப் போலுந்தம் பல். குறிப்புரை: வென்றிப் பொருட்டால்விலங்கு ஒத்து மெய்கொள்ளார் கன்றிக்கறுத்தெழுந்து காய்வாரோடு - போலி வெற்றியின்பொருட்டுப் பகுத்தறிவின்றிவிலங்கோடொத்தவராய் உண்மையை அறியாமற்காழ்த்து மிகக் கொதித்து எரிந்து விழுவரோடு,ஒன்றி சுரை வித்தகம் எழுவார் சுரை வித்துப்போலுந் தம் பல் கையுள் காண்பநெருங்கித் தமதுஉரைவல்லமையைப் புலப்படுத்த முற்படும் நற்புலவர்சுரையின் விதையை ஒத்த தம் பற்களைக்கன்னத்தில் அறைந்து அவர் உதிர்த்தலால் உடனேதம் கையிற் காண்பவராவர். கருத்து: சினத்தால் தம்மை வெல்லமுற்படும் போலிப் புலவருடன் நற்புலவர் தமது உரைவித்தகத்தைப் புலப்படுத்திக் குறைவடைதலாகாது. விளக்கம்: கறுத்தென்றதோ டமையாதுஎழுந்தென்றமையின், மிக்க கருத்தெனப்பட்டது.உரைவித்தகத்துக்கு முற்படுவார்என்றுரைத்துக்கொள்க. சுரை வித்தென்னும் உவமைஉதிர்ந்த பல்லின் இயல்புரைத்தபடி; ‘சுரைவித்தேய்ப்பப் பிறழ்ந்துவேறாயின' எனஇவ்வுவமை பல்லுக்குப் பிறாண்டும் வந்திருத்தல்அறிக. மணிமே.
செல்வம் நிலையாமை பொருட்பால் அவையறிதல் பாடாமே ஓதிப் பயன்றெரிதல் தேற்றாத மூடர் முனிதக்க சொல்லுங்கால்-கேடருஞ்சீர்ச் சான்றோர் சமழ்த்தனர் நிற்பவே, மற்றவரை ஈன்றாட் கிறப்பப் பரிந்து. குறிப்புரை: பாடமே ஓதிப்பயன்தெரிதல் தேற்றாத மூடர் மனிதக்க சொல்லுங்கால் -செய்யுள்களை நெட்டுருச் செய்து சொல்லிக்கொண்டுஅதன் பொருள் நுட்பங்கண்டு இன்புறுதல் அறியாத,மூடர்கள் அருவருக்கத்தக்க உரைகளைச்சொல்லும்போது, கேடு அருசீர்ச் சான்றோர் அவரைஈன்றாட்கு இறப்பப் பரிந்து சமழ்த்தனர் நிற்ப -என்றும் அழிதலில்லாத சிறப்பினையுடையமெய்ப்புலமை சான்ற பெரியோர் அம் மூடர்களைப்பெற்றெடுத்த தாய்க்காக அவள் வருந்துவளே என்றுமிக இரங்கி யாதுங் கூறாதுபொறுமையுடையராயிருப்பர். கருத்து: சான்றோர் அவையில்மூடர்கள் யாதும் பேசித் தம்மை ஈன்றார்பெயர்க்கு இழுக்குத் தேடுதலாகாது. விளக்கம்: பாடமே என்னும் ஏகாரம்பொருள் தெரியாதவரெனப் பிரிந்து நிற்றலின்பிரிநிலை. தெரிதல், தெரிந்து இன்புறுதல்.சான்றோன் எனக் கேட்ட தாய் ஈன்ற ஞான்றினும்பெரிதுதுவத்தலின் மூடனெனக் கேட்டதாய்அவ்வீன்ற ஞான்றினும் பெரிது வருந்துதல் ஒருதலையாகலின், ‘ஈன்றாட்கு இறப்பப் பரிந்து'என்றார்; தாய் வருந்துதல் அம்மகப்பேற்றால்யார்க்கும் யாதும் பயனின்மையினென்க. பொதுவிற்பெற்றோர்க்கென்னாது ஈன்றாட் கென்றார், அவள்வருத்தம் பெரிதாதலினென்பது. புறம்.
செல்வம் நிலையாமை பொருட்பால் அவையறிதல் பெறுவது கொள்பவர் தோள்போல் நெறிப்பட்டுக் கற்பவர்க் கெல்லாம் எளியநூல்; மற்றம் முறிபுரை மேனியர் உள்ளம்போன் றியார்க்கும் அறிதற் கரிய பொருள். குறிப்புரை: பெறுவது கொள்பவர்தோள்போல் நெறிப்பட்டுக் கற்பவர்க்கெல்லாம்நூல் எளிய-கொடுப்பவரை மனத்துட் கொள்ளாமல்தாம் பெறுகின்ற விலைப் பொருளையே கருத்தாகக்கொள்ளும் பொது மகளிரின் தோள்கள் பலர்க்கும்எளியவாதல் போல ஒரு தொடர் புற்றுக்கற்பவரெல்லார்க்கும் நூல்களின்பொதுக்கருத்துக்கள் எளியனவாய் விளங்கும்;மற்று-ஆனால்; அம்முறிபுரை மேனியர் உள்ளம்போன்றுயார்க்கும் அறிதற்கு அரிய பொருள்-மாந்தளிர்போன்ற மேனியையுடைய அவ்விலை மகளிரின் மனம்யார்க்கும் அறிதல் அருமையாதல் போல, நூலின்உட்பொருள்கள் எல்லார்க்கும் அறிதற்கரியனவாகும். கருத்து: நூல்களின் நுண்பொருள்அறியும் நற்புலவோர் உலகில் மிகச் சிலராவர். விளக்கம்: நெறிப்பட்டுக்கற்பவர்க் கென்றார், ஓரளவு செயற்கைமுயற்சிகளால் நூல்களின் மேற்போக்கானகல்வியறிவை யாரும் அறியலாம் என்றற்கு.மாற்று:வினை மாற்று. நூல்களின் ஆழ்ந்தஉட்கருத்துக்களே உண்மையிற் ‘பொருள்'என்பதற்குரியனவாகலின், வாளா ‘பொருள்' என்றேகூறினார். அவற்றை யறிவரே ‘நூல்வழி நுனித்த நுழைநுண்ணுணர்வின' ரென்க. பெருங். இலாவா.
செல்வம் நிலையாமை பொருட்பால் அவையறிதல் புத்தகமே சாலத் தொகுத்தும் பொருடெரியார் உய்த்தக மெல்லா நிறைப்பினும் - மற்றவற்றைப் போற்றும் புலவரும் வேறே, பொருடெரிந்து தேற்றும் புலவரும் வேறு. குறிப்புரை: புத்தகமே சாலத்தொகுத்தும் பொருள் தெரியார் - புத்தகங்களைமிகுதியாகத் தொகுத்து வைத்தும் பலர் அவற்றின்பொருள் தெரியாதவராவர்: உய்த்து அகமெல்லாம்நிறைப்பினும் அவற்றைப் போற்றும் புலவரும் வேறுபொருள் தெரிந்து தேற்றும் புலவரும் வேறுபிறர்முயன்று நூல்களை வீடு முழுமையும் நிறைத்து வைத்தாலும்அவற்றை அன்புடன் பாதுகாக்கும் அறிஞர்களும் வேறு,அவற்றின் கருத்தறிந்து தம்மையும் பிறரையும்தெளிவித்துக் கொள்ளும் பேரறிஞர்களும் அவரின்வேறாவர். கருத்து: நூலகளின் கருத்தறிந்துநலம்பெறல் வேண்டும். விளக்கம்: நூல்களிற் றெளிவு பெறுதல்பிறர் முயற்சி யாலன்றென்பது ‘உய்த்துஅகமெல்லாம் நிறைப்பினும்' என்றதனாற்பெறப்படும். மாற்றுவினைமாற்று. பொதுவாகவேனும்நூல்களின் அருமையறிந்தன்றிப்போற்றுதலாகாமையானும் அப்போற்றுதலொன்றும்அவரை அவ்வறிவுத்துறையிற் செலுத்தும்வாயிலாதலானும் அவரும் ஈண்டுப் புலவரெனப்பட்டனரென்க. ‘பொருள் தெரிந்து' என்றார்; பயன்கொண்டுஎன்னும் பொருட்டு; "நூல் விளைந்தனைய நுண்சொற்புலவர்" என்றார் பிறரும். சிற்
செல்வம் நிலையாமை பொருட்பால் அவையறிதல் பொழிப்பகல நுட்பநூ லெச்சமிந் நான்கின் கொழித்தகலங் காட்டாதார் சொற்கள் - பழிப்பில் நிரையாமா சேர்க்கும் நெடுங்குன்ற நாட! உரையாமோ நூலிற்கு நன்கு? குறிப்புரை: பொழிப்பு அகலம்நுட்பம் எச்சம் இந்நான்கின் நூல் கொழித்துஅகலம் காட்டாதார் சொற்கள்-பொழிப்புரைஅகலவுரை நுட்பவுரை எச்சவுரை யென்னும் இந்நால்வகையுரைகளாலும் நூலை ஆராய்ந்து தெரிந்து அதன்விரிந்த பொருட்பெருக்கை விளக்கிக்காட்டாதவருடைய சொற்கள், பழிப்பு இல் நிரை ஆமாசேர்க்கும் நெடு குன்ற நாட-பழித்தலில்லாதகாட்டாக்களின் இனத்தைத் தமது செழுமையால்தம்மாட்டு வருவிக்கும் உயர்ந்த மலைகளையுடையநாடனே!; நூலிற்கு நான்கு உரையாமோ-நூலிற்குச்சிறந்த உரையாகுமோ? ஆகாவென்க. கருத்து: ஏதொன்றையும் நால்வகையுரைகளாலும் விளக்கிப் பேசவேண்டும். விளக்கம்: பொதுவின் உரைத்தல்பொழிப்பெனவும், வினாவியுரைத்தல் அகலமெனவும்,ஏதுவினிறுத்தல் நுட்பமெனவும், இவற்றாற் றுணிதல்எச்சமெனவும் உரைக்கப்படும். இவற்றினியல்பைநச். பாயிரவுரை மேற்கோள்களிற் காண்க.வளமான ஆக்களென்றற்குப் ‘பழிப்பில் ஆமா'என்றார். தொல். சிறப்புப்பாயிர வுரை.நச், மேற்.
செல்வம் நிலையாமை பொருட்பால் அவையறிதல் இற்பிறப் பில்லா ரெனைத்துநூல் கற்பினும் சொற்பிறரைக் காக்குங் கருவியரோ? -இற்பிறந்த நல்லறி வாளர் நவின்றநூல் தேற்றாதார் புல்லறிவு தாமறிவ தில். குறிப்புரை: இற்பிறப்பு இல்லார்எனைத்து நூல் கற்பினும் சொல் பிறரைக் காக்கும்கருவியரோ-உயர்ந்த குடிப்பிறப் பில்லாதவர்எவ்வளவு நூல்கள் பயின்றாலும் ஏனைக் கல்லாதவரின்வழுச்சொற்களை இகழாது அடக்கும் பொறுமையாகியகருவியை யுடையவராவரோ? ஆகார்; இற்பிறந்தநல்லறிவாளர் - ஆனால் உயர்குடியுட் பிறந்த சிறந்தஅறிவுடையவர், நவின்ற நூல் தேற்றாதார்புல்லறிவுதாம் அறிவது இல்-புலனெறியுலகில்அடிப்பட்டுப் பழகிவரும் நூல்களின் நுண்பொருள்தெளியப்பெறாத கல்லாமையுடையவரது சிற்றறிவைத்தாம் ஆராய்ந்து காண்பதில்லை. கருத்து: நூலறிவின் சிறப்போடுகுடிப்பிறப்பு மாண்பு மிருப்பின், புலவர்கட்குப்பொறுமையும் பெருந்தன்மையும் மிகும். விளக்கம்: பிறர் சொல்லையெனமாறுக: ஓகாரம்: வினா. கருவியரோ வென்றார்,அக்கருவி கல்வி முதலியவற்றால் கிடைப்பதன்றாய்க் குடிப்பிறப்பினாற் சிறப்பிற்கிடைக்கு மென்றற்கு; "குலத்தொடு புணர்ந்தநலத்தகு நண்பின் அழுக்கா றகன்றஒழுக்கறோம்பி" என்றார் பிறரும். நவின்றநூலென்றது, அறியும் எளிமைபற்றி; அவ்வெளிமையிலும்அதனைத் தெளியாதவரது புல்லறிவு, தானேவெளிப்படையாய் மிகுந்த தெரியினும். பெரியோர்நோக்கம் அது காண்பதல்லாமையாற், புல்லறிவுஅறிவது இல்' எனப்பட்டது.
செல்வம் நிலையாமை பொருட்பால் புல்லறிவாண்மை [தாழ்ந்த அறிவையே உயர்ந்த அறிவாகக் கருதிக்கொண்டு ஒழுகும் இயல்பு.] அருளின் அறமுரைக்கும் அன்புடையார் வாய்ச்சொல் பொருளாகக் கொள்வர் புலவர்; -பொருளல்லா ஏழை அதனை இகழ்ந்துரைக்கும் பாற்கூழை மூழை சுவையுணரா தாங்கு. குறிப்புரை: அருளின் அறம் உரைக்கும்அன்புடையார் வாய்ச்சொல் பொருளாகக் கொள்வர்புலவர்-அருள் காரணமாக அறம் அறிவுறுத்தும் அன்புடையபெரியயோரது வாய்மொழியை அறிவுடையோர்பெரும்பயனுடையதாக மதித்தேற்றுக்கொள்வர்; பாற்கூழை மூழை சுவையுணராதாங்கு பொருளல்லா ஏழை அதனைஇகழ்ந்துரைக்கும் - ஆனால் அகப்பை பாலடிசிற்சுவையுணராமைபோல ஒரு பொருளாகக் கருதற்கில்லாதஅறிவிலான் அவ்வாய் மொழியை மதியாதுஇகழ்ந்துரைப்பான். கருத்து: புல்லறிவாளர் நல்லோர்பொருளுரையை மதியாதொழுகுவர். விளக்கம்: அன்பிருந்தன்றி அருள்பிறவாதாகலின், அருளோடு, அன்பும் உரைக்கப்பட்டது.பொதுவாக அறிஞரென்றற்கு ஈண்டுப் ‘புலவ'ரெனப்பட்டது மூழை சுவையுணராமை போல அறிவிலான்அன்புடையார் வாய்ச்சொல்லின் பெருமையுணரானென்க. "பொருளுணர்வாரில்வழிப்பாட்டுரைத்தல் இன்னா" என்றதூஉங்காண்க. உவமை: ஏழைக்கு உணரும் இயல்பில்லாமைஉணர்த்திற்று; காரணம் புல்லறிவின் இயல்புஅத்தகைத்தென்றபடி. இன்னா நாற்.
செல்வம் நிலையாமை பொருட்பால் புல்லறிவாண்மை அவ்வியம் இல்லார் அறத்தா றுரைக்குங்கால் செவ்விய ரல்லார் செவிகொடுத்துங் கேட்கலார்; கவ்வித்தோல் தின்னும் குணுங்கர்நாய் பாற்சோற்றின் செவ்விய கொளல்தேற்றா தாங்கு. குறிப்புரை: கவ்வித் தோல்தின்னும் குணுங்கர் நாய் பால் சோற்றின்செவ்விகொளல் தேற்றாதாங்கு - தொரைக் கவ்வித்தின்னும் புலையருடைய நாய்கள் பாலடிசிலின்நன்மையைத் தெரிந்து கொள்ளாமைபோல,அவ்வியமில்லார் அறத்தாறு உரைக்குங்கால்செவ்வியரல்லார் செவி கொடுத்தும் கேட்கலார் -அழுக்காறு முதலிய மனமாசுகளில்லாதவர் அறநெறிஅறிவுறுத்தும் போது நல்லறிவில்லாப்புல்லறிவாளர் அதனைக் காது கொடுத்துங்கேட்கமாட்டார். கருத்து: புல்லறிவுடைய கீழ்மக்கள்சான்றோர் அறிவுரைகளை ஏலார். விளக்கம்: உரைக்குங்கால் என்றுநிகழ்கால வினையாற் கூறினார், அஃதவர்க்கு"முந்நிலைக் காலமுந்தோன்றும் இயற்கை"யாதலின், அஃது அவர்பால் அல்லாதார்க்குள்ளஅழுக்காற்றையுங் குறிப்பானுணர்த்திற்று. செவிகொடுத்தும் என்றார், அற விலக்குதல்பற்றி,குணுங்கர், புலையராதல் திவாகரத்திற் காண்க.‘செவ்வி' என்றது, அதன் நன்மையை.
செல்வம் நிலையாமை பொருட்பால் புல்லறிவாண்மை இமைக்கும் அளவிற்றம் இன்னுயிர்போம் மார்க்கம் எனைத்தானும் தாங்கண் டிருந்தும் -தினைத்துணையும் நன்றி புரிகல்லா நாணின் மடமாக்கள் பொன்றிலென் பொன்றாக்கா லென்? குறிப்புரை: இமைக்குமளவில் தம்இன்னுயிர் போம் மார்க்கம் எனைத்தானும் தாம்கண்டிருந்தும் -கண்ணிமைக்கும் அத்துணைச் சிறுபொழுதில் தமது இனிய உயிரானது பிரிந்துபோம்இயல்பை எவ்வகையாலுந் தாம் தெரிந்திருந்தும்,தினைத் துணையும் நன்றி புரிகல்லா நாண் இல்மடமாக்கள் பொன்றிலென் பொன்றாக்கால்என்-உலகில் உயிரோடிருப்பதற்குள்தினையளவாயினும் நற்செயல்கள் செய்து பிறவியைப்பயனுடையதாக்கிக் கொள்ளாத வெட்கமில்லாஅறியாமை மாந்தர் இறந்தாலென்ன, இறவாதுஇருந்தாலென்ன? இரண்டும் ஒன்றே. கருத்து: புல்லறிவுடையோர் தமதுவாழ்க்கையைப் பயனுடையதாக்கி இன்புறல் அறியார். விளக்கம்: தாம் இனிதாகக் கருதிவளர்க்கும் உயிர் என்றற்கு, இன்னுயிர் என்றார்.மார்க்கமறிதல், பிறருயிர் பிரியும் வழிகளைக்காண்டலென்க. எனைத்தானுமென்றது, எல்லாப்படியாலுமென்றற்கு; "எனைப் பொருளுண்மை" என்புழிப்போல.தாம் வறிதே உயிர்காத்து நிற்கும் பொருந்தாச்செயலில் உள்ள வொடுக்கமின்மையின், ‘நாணில்'எனவும், அதனைத் தடியும் அறிவாற்றலில்லாமையின்‘மடமாக்க' ளெனவுங் கூறினார். மணிமே.
செல்வம் நிலையாமை பொருட்பால் புல்லறிவாண்மை உளநாள் சிலவால் உயிர்க்கேமம் இன்றால், பலர்மன்னுந் தூற்றும் பழியால், -பலருள்ளும் கண்டரோ டெல்லாம் நகாஅ தெவனொருவன் தண்டித் தனிப்பகை கோள். குறிப்புரை: உள நாள் சில, உயிர்க்குஏமம் இன்று, பலர் தூற்றும் பழி -இவ்வுலகில் உயிர்வாழ்ந்திருக்கும் நாட்கள் சில, அச் சிலநாட்களிலும் உயிர்க்குப் பாதுகாப்பில்லை, பலர்தூற்றும் பழி வேறு; பலருள்ளும் கண்டாரோடெல்லாம்நகாஅது எவன் ஒருவன் தண்டித் தனிப்பகை கோள்-ஆதலால், பலரோடும் மகிழ்ந்தொழுகாது விலகிஎதிர்ப்பட்டவரோ டெல்லாம் ஒருவன் கடும்பகைகொள்ளுதல் ஏன்? கருத்து: பலரோடும் அளவளாவி மகிழாதுவிலகிப் பகைகொள்ளுதல் புல்லறிவாகும். விளக்கம்: ஆலும் மன்னும் உம்மையும்ஆசை. பலருள்ளும்; மூன்றாவதனோடு உறழ்ந்தது நகுதல். அளவளாவி: மகிழ்ந் தொழுகுதல், தண்டுதல்,நீங்குதல் "கற்றல் வேண்டுவோன் வழிபாடுதண்டான்" என்பது. முதுமொழிக்காஞ்சி,தனிப்பகை, மிக்க பகையென்னும் பொருட்டு. தொல். வேற்றுமை மயங் . .குறள் முதுமொழிக்.
செல்வம் நிலையாமை பொருட்பால் புல்லறிவாண்மை எய்தி யிருந்த அவைமுன்னர்ச் சென்றெள்ளி வைதான் ஒருவன் ஒருவனை; -வைய வயப்பட்டான் வாளா இருப்பானேல், வைதான் வியத்தக்கான் வாழும் எனின். குறிப்புரை: எய்தியிருந்த அவைமுன்னர்ச் சென்று எள்ளி ஒருவன் ஒருவனைவைதான்-ஒருவன் சென்று கலந்திருந்த தக்கோர்அவையின் முன் ஒருவன் போய் அவனை இகழ்ந்துதிட்டினானாக, வைய வயப்பட்டான்வாளா இருப்பானேல்வைதான் வியத்தக்கான் வாழும் எனின்-அவ்வாறுதிட்ட அதற்கு உட்பட்டவன் பொறுமையோடு சும்மாஇருந்துவிடுவானாயின் அந்நிலையில் வைதவன்நன்னிலைமையில் உயிர்வாழ்வா னென்றால் அவன்வியக்கத்தக்கவனே யாவான். கருத்து: பலர் நடுவில் பிறரை வைதல்புல்லறிவின் இயல்பாகும். விளக்கம்: வைதனனாகவெனவருவித்துரைக்க. வயப்பட்டான்பெயர். வாளாவிருத்தல். தன் ஊழும் அவன் அறியாமையும் நினைந்துவாளாவிருந்தமையின் பிழைவை தான்றனக்கேஉரித்தாய் அவன் வாழ்வு கெடுதற்கேது வாயிற்று."உய்யார் பெரியார்ப் பிழைத்தொழுகுவார்" என்றது தமிழ்மறை.
செல்வம் நிலையாமை பொருட்பால் புல்லறிவாண்மை மூப்புமேல் வாராமை முன்னே அறவினையை ஊக்கி அதன்கண் முயலாதான் - நூக்கிப் புறத்திரு போகென்னும் இன்னாச்சொல் இல்லுள் தொழுத்தையாற் கூறப் படும். குறிப்புரை: மூப்பு மேல் வாராமைமுன்னே அறவினையை ஊக்கி அதன்கண் முயலாதான் -கிழத்தனம் மேல் எழுந்து தோன்றாததற்கு முன்உலகில் அறச்செயலைத் தொடங்கி அதன்கண்முயன்றுவராதவன், நூக்கிப் புறத்திரு போக என்னும்இன்னாச்சொல் இல்லுள் தொழுத்தையால் கூறப்படும்- பின்பு வீட்டில் ஏவற்காரியாலும் நெட்டித்தள்ளப்பட்டு ‘வெளிப்புறத்தில் இரு' ‘ஒழிந்துபோ'என்னுங் கொடுஞ் சொற்களுஞ் சொல்லப்படுவான். கருத்து: புல்லறிவாளர் நல்லது செய்யஅறியாராய்ப் பிறரால் இகழவும் படுவர். விளக்கம்: மூப்பு மேல் வருதலாவது, அதுமேலெழுதலென்க. நூக்குதல்-மோதித் தள்ளுதல்;"கரை நூக்கிப்புனல் தந்த" என்றார்பரிபாடலினும். போவென்னும் அகரவீறு தொக்கது.தொழுத்தையாலுமென இழிவு சிறப்பும்மைவிரித்துக்கொள்க. இல்லுட் பிறரும்அவ்வாறிகழ்தலின் தொழுத்தையும் இகழ்வளென்பது.அறவினை செய்யாதான் மூப்புப் புண்ணியப் பயன்இல்லாமையின் மிக நெளிந்து பேரின்னலுடையதாய்ப்பிறர்க்குப் பெருந்துன்பந்தந்து அவரங்ஙனம்எள்ளுதற் கேதுவாயிற்று. பரிபா.
செல்வம் நிலையாமை பொருட்பால் புல்லறிவாண்மை தாமேயும் இன்புறார், தக்கார்க்கு நன்றாற்றார் ஏமாஞ்சார் நன்னெறியுஞ் சேர்கலார்-தாமயங்கி ஆக்கத்துள் தூங்கி அவத்தமே வாழ்நாளைப் போக்குவார் புல்லறிவி னார். குறிப்புரை: புல்லறிவினார்தாமேயும் இன்புறார் தக்கார்க்கும் நன்றாற்றார்ஏமம் சார் நல்நெறியும் சேர்கலார்தாழ்ந்தஅறிவினையுடையோர் தாமாகிலும் இன்புறல் அறியார்,தகுதியுடைய பிறர்க்கும் நன்மை செய்ய அறியார்,தம்முயிர்க்கு அரணாக அமைந்தஅறவொழுக்கங்களையும் சேர்ந்தொழுகார்; தாம்மயங்கி ஆக்கத்துள் தூங்கி அவத்தமே வாழ் நாளைப்போக்குவார் - தாம் மதிமயங்கி முன்னைநல்வினையாற் கிடைத்த செல்வச் செழுமையில்அழந்தி வீணே தம் வாழ் நாளைக் கழித்தொழிவர். கருத்து: புல்லறிவாளர் தம்வாழ்நாளைத் தமக்கும் பிறர்க்கும் பயன்படவொட்டாமல் வீணாக்கிக்ளொள்வர். விளக்கம்: ‘ஏமஞ்சார்நன்னெறியென்றது' வீடுபேற்று நெறி. அவத்தம், ஒருசொல்; "அவத்தமே பிறந்து" என்றார்தேவாரத்தினும், தேவா.
செல்வம் நிலையாமை பொருட்பால் புல்லறிவாண்மை சிறுகாலை யேதமக்குச்செல்வுழி வல்சி இறுகிறுகத் தோட்கோப்புக் கொள்ளார் - இறுகிறுகிப் பின்னறிவாம் என்றிருக்கும் பேதையார் கைகாட்டும் பொன்னும் புளிவிளங்கா யாம். குறிப்புரை: சிறுகாலையே தமக்குச்செல்வுழி வல்சி இறுக இறுகத் தோட் கோப்புக்கொள்ளார் - இளம் பருவத்திலேயே தமதுசெல்லுமிடமாகிய மறுமைக்கு, அறமாகிய உணவு அழுந்தஅழுந்தக் கட்டுணவு தேடிக்கொள்ளாதவராய்; இறுகிஇறுகிப் பின் அறிவாம் என்று இருக்கும்பேதையார்-பொருளில் இறுக்கம் மிகக் கொண்டுஅறவினையைப் பிற்காலத்திற் காண்போம் என்றுசெம்மாந்திருக்கும் புல்லறிவினார்; கைகாட்டும்பொன்னும் புளிவிளங்காயாம்-இறுதிக்காலத்திற்சாக்காட்டுத் துன்பத்தினால் அறநினைவு வந்துஅந்நிலையிற் பேச நாவெழாமையால்அயலிலுள்ளார்க்கு அறஞ்செய்ம்மினெனக் கைக்குறியாகக் காட்டும் பொன்னும் அவராற்புளிச்சுவையுள்ள விளங்காய் கேட்டலாகக் கருதிமறுக்கப்படும். கருத்து: புல்லறிவு எதனையுங்காலத்திற் செய்து கொள்ளாது ஏமாந்து பின் கவலும். விளக்கம்: ‘தமக்குச் செல்வுழி'யென்பதைத் ‘தம்செல்வுழிக்கு' என மாறுக. வல்சிஇறுகுதலாவது, கட்டுணாப் பொருட்டு நன்கு பிசைந்துசெறித்தலால் அவை ஒன்றோடொன்று அழுந்திப்பொருந்துதல்; கட்டுணவு கவளம் கவளமாக வைத்துச்செறித்துச் செறித்துக் கட்டப்படுவது போல்மறுமைக் குணவாகிய அறத்தையும் மேலுமேலுந் தேடிச்செறித்துக்கொள்ள வேண்டுமென்றற்கு, ‘இறுக இறுக'வென மிகுதிப் பொருளில் அடுக்குக் கூறினார். வழிநடையின்போது கட்டமுது தோளிற் கோக்கப்படுவதாகவின், ‘தோட்கோப்' பெனப்பட்டது.சாக்காட்டு நிலையிலிருப்பாருக்குப்புளிவிளங்காய் ஏலாததொன்றாகலின்,மறுக்கப்படும். "ஐயா விளம்பழமே யென்கின்றீராங்கதற்குப் பருவமன்றென்செய்கோ" என்றார்பிறரும். "மரப் பெயர்க்கிளவி என்பதனான் விளங்காய் இன மெல்லெழுத்துமிக்கது. சிந். ; தொல். உயிர்மயங்.
செல்வம் நிலையாமை பொருட்பால் புல்லறிவாண்மை வெறுமை யிடத்தும் விழுப்பிணிப் போழ்தும் மறுமை மனத்தாரே யாகி, - மறுமையை ஐந்தை யனைத்தானும் ஆற்றிய காலத்துச் சிந்தியார் சிற்றறிவி னார். குறிப்புரை: வெறுமையிடத்தும் விழுப்பிணிப் போழ்தும் மறுமை மனத்தாரேயாகி - கையிற்பொருளில்லாத வறுமைக் காலத்தும் மிக்கநோயுண்டான நேரத்தும் மறுமைக்குரியஅறநினைவினராயிருந்து, ஆற்றிய காலத்து - செல்வம்முதலியவற்றால் ஆற்றல் வாய்ந்த காலத்தில்,மறுமையை ஐந்தை யனைத்தானுஞ் சிந்தியார்சிற்றறிவினார் - அம்மறுமைக்குரிய அறத்தைச் சிறுகடுகி னளவாயினும் புல்லறிவினார் கருதார். கருத்து: புல்லறிவு,துன்பக்காலத்தில் மட்டுமே நன்மையை நினையும்இயல்புடையது. விளக்கம்: மறுமைக்குரிய அறம்ஈரிடங்களிலும் ‘மறுமை' யெனப்பட்டது. ஐந்தை :ஐயென்னுஞ் சிறுமையடியாகப் பிறந்த சொல். ஆற்றுந்தகுதி, பொருந்திய காலம் இங்கு ஆற்றிய காலம்எனப்பட்டது. "பின்னை வழி நினைந்து, நோய்காண்பொழுதின் அறஞ் செய்வார்க் காணாமை நாய்காணிற்கற் காணாவாறு" ஆதலின் அவரைச்சிற்றறிவினார் என்றார். ) பழமொ. . நா
செல்வம் நிலையாமை பொருட்பால் புல்லறிவாண்மை என்னேமற் றிவ்வுடம்பு பெற்றும் அறம்நினையார் கொன்னே கழிப்பர்தம் வாழ்நாளை, - அன்னோ அளவிறந்த காதற்றம் ஆருயி ரன்னார்க் கொளஇழைக்கும் கூற்றமுங் கண்டு. குறிப்புரை: அன்னோ அளவிறந்தகாதல் தம் ஆருயிரன்னார்க் கொள இழைக்கும்கூற்றமும் கண்டு - ஐயோ, தம்பால் அளவு கடந்தஅன்பினையுடைய தம் ஆருயிரன்ன உறவினரை உயிர்பிரித்துக்கொள்ள முயலுங் கூற்றுவனையும் உலகிற்பார்த்துக்கொண்டு, என்னே இவ் வுடம்பு பெற்றும்அறம் நினையார் கொன்னே தம் வாழ்நாளைக்கழிப்பர் - ஆ! பெறற்கரிய இம் மக்களுடம்பைப்பெற்றும் அறத்தை நினையாதவராய்ப்புல்லறிவினார் தம் வாழ்நாளை வீணேகழிக்கின்றனர்! கருத்து: புல்லறிவானது, செய்திகளைநேரிற் கண்டும் தெளிவுபெறாதஇயல்புடையதாயிருக்கின்றது. விளக்கம்: என்னே அன்னோ என்னும்இரங்கல் புல்லறிவினாரின் ஏழைமை கருதிற்று.பெற்றும் என்னும் உம்மை, பெறற் கருமையுணர்த்திற்று. மேல் ஆருயிரன்னாரென்பதனால்தமதன்பு பெறப்படுதலின், அளவிறந்த காதல் என்பதுதம்பால் அவர் செலுத்தும் அன்பெனக்கொள்ளப்படும். எத்துணை அருமையாளரையுங் கூற்றுவன்பிரித்தெடுத்துக்கொள்ள முயலுதலால் மற்று யார்பொருட்டு அறத்தையுங் கருதாது பொருட் பற்றுதலோடுஇவ்வாறு சிக்கென்றிருந்து வாழ்நாளை வீணாக்கிக்கொள்ளுதலென்று அறிவுறுத்துமுகத்தால் இச் செய்யுள்புல்லறிவின் இழிந்த இயல்பை விளக்குவதாயிற்று.எனவே, "செல்வத்தைப் பெற்றார் சினங்கடிந்துசெவ்வியராய்ப. பல்கிளையும் வாடாமற் பாத்துண்டு -நல்லவாம் , தானம் மறவாத தன்மையராய்" விளங்கல் வேண்டும் என்பதறிந்து கொள்ளப்படும்.புல்லறிவினார் கழிப்பரென்று எழுவாய்வருவித்துக்கொள்க. மற்றுவினைமாற்று. ‘உடம்புபெற்றும் மற்றுக் கொன்னே கழிப்ப' ரென்க. அறநெறி.
செல்வம் நிலையாமை பொருட்பால் பேதைமை [யாதும் அறியாமை என்பதுணர்த்தும்] கொலைஞர் உலையேற்றித் தீமடுப்ப ஆமை நிலையறியா தந்நீர் படிந்தாடி யற்றே, கொலைவல் பெருங்கூற்றம் கோள்பார்ப்ப ஈண்டை வலையகத்துச் செம்மாப்பார் மாண்பு. குறிப்புரை: கொலை வல் பெரு கூற்றம்கோள் பார்ப்ப ஈண்டை வலையகத்துச்செம்மாப்பார் மாண்பு - கொல்லுந் தொழிலில்வல்லமையுடையோனாகிய ஆற்றலிற் பெரிய கூற்றுவன்தம் உயிர்கொள்ளுதலை எதிர்நோக்கிக்கொண்டிருக்க இவ் வுலகப் பற்றாகியவலையிற்கிடந்து அதன்கட் களித்திருப்பாரதுஏழைமையியல்பு, கொலைஞர் உலை ஏற்றித் தீ மடுப்பஆமை நிலையறியாது. அந்நீர் படிந்தாடி யற்று -தன்னைக் கொல்லுங் கொலைஞர் தன்னை உலையில்இட்டு அடுப்பிலேற்றித் தீக்கொளுவ ஆமைநிலையறியாது அவ்வுலை நீரில் மூழ்கி விளையாடிமகிழ்ந்தாற்போன்றது. கருத்து: பேதைமை தனக்கு வரும்இடுக்கணையறியாது களித்திருக்கும் இயல்புடையது. விளக்கம்: தீமடுப்ப, தீச்செறிப்பவென்க. பெருங்கூற்றமென்றது, எதிர்ப்பாரையற்றபேராற்றல் வாய்நத கூற்றம்; மாற்றருங் கூற்றம் கோள் பெயர்; இவ்வுலக வலையென்றற்கு, ‘ஈண்டை வலை'யெனப்பட்டது; பற்றின் கட்டுக்கருதிவலையெனப்பட்டது. கிடந்தென ஒருசொல் வருவிக்க.மாண்பென்னும் நன்மொழியாற் கூறியது, மிக்கஇழிவை யுணர்த்திற்று. மேற் செய்யுளில் வருதற்கும்இங்ஙனங் கொள்க. இடுக்கண் அறியாமை ஈண்டுப்பேதைமையாயிற்று. தொல். புறத்.
செல்வம் நிலையாமை பொருட்பால் பேதைமை பெருங்கட லாடிய சென்றார் ஒருங்குடன் ஓசை அவிந்தபின் ஆடுது மென்றற்றால் இற்செய் குறைவினை நீக்கி அறவினை மற்றறிவாம் என்றிருப்பார் மாண்பு. குறிப்புரை: இல்செய் குறைவினைநீக்கி அறவினை மற்றறிவாம் என்றிருப்பார்மாண்பு- குடும்பத்துக்குச் செய்யவேண்டிய குறைகளைச்செய்து தீர்த்து அறச்செயல்களைப் பின்புகருதுவோம் என்று காலத்தை எதிர்நோக்கியிருப்பாரது இழிதகைமை, பெருங்கடல் ஆடியசென்றார் ஒருங்கு உடன் ஓசை அவிந்தபின் ஆடுதும்என்றற்று - பெரிய கடலில் நீராடுதற்குச்சென்றவர், முழுதும் ஒருசேர அலையொலி அடங்கியபின்நீராடுவோம் என்று கருதினாற் போன்றது. கருத்து: நடவாத தொன்றை நினைவதுபேதைமையின் இயல்பு. விளக்கம்: ஆடியசெய்யிய வென்னும்எச்சம். ஒருங்கு - எல்லா அலைகளும்; உடன்,சேரவென்க. ஓசையென்றது, இலக்கணையால் அலையின்மோதுதலையுணர்த்தும். ஆல்அசை. குறைவினை,யென்பதில், இன்சாரியை; குறைவினை, அறவினை என்றது,செய்யுளோசையின் இன்பங் கருதிற்று, குறைவாகியசெயலென்றுரைப்பின் அவ்வின்பத்திற்காகஆசிரியர் செய்த விரகு புலப்படாது போமாதலின், அதுசிறவாது மற்று என்றது, இங்குப் பின் என்னும்பொருட்டு "மற்றறிவாம் நல்வினையாம்இளையம்" என்புழிப்போல. நாலடி.
செல்வம் நிலையாமை பொருட்பால் பேதைமை குலந்தவங் கல்வி குடிமைமூப் பைந்தும் விலங்காமல் எய்தியக் கண்ணும் - நலஞ்சான்ற மையறு தொல்சீர் உலகம் அறியாமை நெய்யிலாப் பாற்சோற்றின் நேர். குறிப்புரை: குலம் தவம் கல்வி குடிமைமூப்பு ஐந்தும் விலங்காமல் எய்தியக்கண்ணும் -நல்லிணக்கம் தவவொழுக்கம் கல்வியறிவு குடிவளம்ஆண்டில் மூத்தோராதல் என்னும் ஐந்தும்தடையின்றிப் பெற்றவிடத்தும்; நலம் சான்ற மைஅறுதொல்சீர் உலகம் அறியாமை நெய் இலாப்பால்சோற்றின் நேர்-இன்பம் நிரம்பிய தீதற்றதொன்மையாகிய இயல்பினையுடைய வீட்டுலகவொழுக்கம் அறியானாயிருத்தல் நெய் இல்லாதபாலடிசிலுக்கு ஒப்பாகும். கருத்து: உறுதிப்பொரு ளறியாமைபேதைமையின் இயல்பு. விளக்கம்: குடிமையென்பதிற்குடிப்பிறப்பும் அடங்குதலின் குலம் என்றதுசார்பென்னும் பொருளையும், மூப்பு என்பதில்உலகியலறிவும் அடங்குதலின் உலகமென்பதுவீட்டுலகமென்னும் பொருளையும் உணர்த்தும்.விலங்குதல் குறுக்கிடுதலாகலின்விலங்காமலென்றதற்குத் தடையின்றியென்றுரைக்கப்பட்டது. நலஞ்சான்ற மையறுதொல்சீர்' என்னும் அடைமொழிகளின் பெருமைகருத்திருத்தற்பாலது; இதனால் இன்பம் நிரம்பியமாசில்லாத இயற்கை யொழுங்கோடு கூடிய ஒழுக்கமேஅந்நிலையினை உய்க்கும் என்றறிந்து கொள்ளல்வேண்டும். முன்னும் இஃது ‘இயல்நெறி' என்றுணர்த்தப்பட்டமை காண்க. பாற்சோறாயினும்நெய்யின்றி மாட்சிமைப்படாமைபோல எத்துணைச்சிறந்த வாழ்க்கை நலங்களும் இயற்கைஅருளொழுக்கமின்றி நலப்படாவென்பது இதனாற்பெறப்பட்டது. நாலடி.
செல்வம் நிலையாமை பொருட்பால் பேதைமை கன்னனி நல்ல கடையாய மாக்களின்; சொன்னனி தாமுணரா வாயினும் - இன்னினியே நிற்றல் இருத்தல் கிடத்தல் இயங்குதலென் றுற்றவர்க்குத் தாமுதவ லான். குறிப்புரை: கல் நனி நல்ல கடையாயமாக்களின் - மக்களிற் கடைப்பட்டவரானபேதையரைவிடக் கற்பாறைகள் மிக நல்லனவாம் தாம் சொல் நனி உணராவாயினும்உற்றவர்க்கு இன்னினியே நிற்றல் இருத்தல்கிடத்தல் இயங்குதல் என்று உதவலான் - அவை இக்கடைப்பட்டவர்களைப்போற் சான்றோர்உறுதிமொழிகளை முற்றும் உணரமாட்டாவாயினும்தம்மை அடைந்தவர்க்கு உடனே நின்று கொள்ளல்இருந்து கொள்ளல் சாய்ந்து கொள்ளல் நடந்துகொள்ளல் என்று பலவற்றிற்கும் இடம் உதவுதலான்என்க. கருத்து: சொல்வதுணராமையும்தாமேயுஞ் செய்யாமையும் பேதையோர் இயல்பாகும். விளக்கம்: இன்னினியே, உடனேஎன்னும் பொருட்டு, உணராததொன்று.அந்நிலைமைக்கு வேறான உதவுதலைச் செய்தலாகத்தானெடுத்து மொழிதலால் ‘தாம் உணராவாயினும்'‘தாம் உதவலான்' என இருமுறை ‘தாம்' என்னும்பெயர்ச்சுட்டுக் கொடுத்து விதந்தார்.பலவற்றிற்குமென ஒரு சொல் வருவிக்க.கற்பாறைக்கும் பேதைக்கும் உணராமை பொதுவாயினும்கற்பாறையால் உதவியுண்டென்று ஒரு வேறுபாடு காட்டிஏதுவின் நிறுத்துக் கல் நனி நல்ல வென்றாரென்பது.நனி நல்லவென்றார், நினைத்த வண்ணமெல்லாம்உதவுதலாலும், அவ்வுதவுதல் சிறந்த அறமாதலானுமென்க. ஐங்.
செல்வம் நிலையாமை பொருட்பால் பேதைமை பெறுவதொன் றின்றியும் பெற்றானே போலக் கறுவுகொண் டேலாதார் மாட்டும் - கறுவினால் கோத்தின்னா கூறி உரையாக்கால் பேதைக்கு நாத்தின்னும் நல்ல சுனைத்து. குறிப்புரை: பெறுவதொன்று இன்றியும்பெற்றானே போலக் கறுவுகொண்டு - தனது சினத்துக்குஏதுவாகப் பெறுங் காரணம் ஒன்று இல்லாதிருந்தும்அக் காரணம் பெற்றவனேபோலக் கோபித்தலைமேற்கொண்டு, ஏலாதார் மாட்டும் கறுவினால்கோத்து இன்னா கூறி உரையாக்கால் - தனது சினம்சென்று தாக்குதலில்லாத உயர்ந்தோரிடத்தும்கோபத்தால் இன்னாச் சொற்களைத்தொடுத்துரைத்துப் பேசாவிட்டால், பேதைக்கு நல்லசுனைத்து நாத்தின்னும் - பேதைகளுக்கு மிக்க தினவுநாவை அரித்துவிடுவது போலிருக்கும். கருத்து: பேதை மாக்கள்காரணமில்லாமலே பிறரைப் பகைத்தும் பழித்தும்நாத் தினவாற் சும்மா பேசியபடியேயிருப்பர். விளக்கம்: கறுவென்றது மனத்தின்நிகழுஞ் செற்றம். கோத்து என்றார், காரணத்தோடுஅறிஞர் தொடுப்பது போற் போலியாக முறைப்படுத்தியென்றற்கு. கூறியென்றதன் மேலும்உரையாக்காலென்றார், விளக்கங்கூறுவது போல வாளாபன்னிப்பன்னிப் பேசுதலினென்க. அதற்குக் காரணம்தினவேயல்லது வேறில்லாமையின், அதன் மிகுதிதோன்ற ‘நாத்தின்னும் நல்ல சுனைத்து' என்றார்;இஃது, ‘உண்டற்குரிய வல்லாப் பொருளை உண்டனபோலக் கூறும்' ஒரு மரபு. தொல். பொருளி.
செல்வம் நிலையாமை பொருட்பால் பேதைமை தங்கண் மரபில்லார் பின்சென்று தாமவரை எங்கண் வணக்குதும் என்பவர் - புன்கேண்மை நற்றளிர்ப் புன்னை மலருங் கடற்சேர்ப்ப! கற்கிள்ளிக் கையிழந் தற்று. குறிப்புரை: நல் தளிர்ப் புன்னைமலரும் கடல் சேர்ப்ப - அழகிய தளிர்களையுடையபுன்னைமரங்கள் மலர்களைப் பூக்கின்றகடற்கரையாய்!, தங்கண் மரபு இல்லார் பின் சென்றுதாம் அவரை எங்கண் வணக்குதும் என்பவர்புன்கேண்மை - தம்மிடத்தில் மதிப்பில்லாதவர்வழிச்சென்று ‘அவரை எம்மிடம் அடங்கும்படிசெய்வோம்' என்று சொல்லுவோர் கருதும் அச்சிறியோர் தொடர்பு. கல் கிள்ளிக் கை இழந்தற்று- கருங்கல்லைக் கிள்ள முயன்று ஒருவன் கைவிரலைஇழந்ததனோடு ஒக்கும். கருத்து: திருந்தா இயல்புடையதுபேதைமையாகும். விளக்கம்: மரபென்பது ஈண்டுநன்மதிப்பு. புன் கேண்மையென்றார், அப்பேதையர்தொடர்பை. கல்லையுங் கிள்ளமுடியாது தாமுங்கைவிரலிழந்தாற்போல அப் பேதையோரையுந்திருத்த முடியாமல் தாமும் அவரால் தீங்குறப்பெறுவரென்பது; "கற்கிள்ளிக் கையுய்ந்தார் இல்" என்றார் பிறரும். "நிலத்தறைந்தான்கைபிழையாதற்று" என்றதூஉங் காண்க. பழமொழி.
செல்வம் நிலையாமை பொருட்பால் பேதைமை ஆகா தெனினும் அகத்துநெய் யுண்டாகின் போகா தெறும்பு புறஞ்சுற்றும்; - யாதுங் கொடாஅ ரெனினும் உடையாரைப் பற்றி விடாஅர் உலகத் தவர். குறிப்புரை: ஆகாது எனினும் அகத்து நெய் உண்டாகில் போகாது எறும்பு புறம் சுற்றும் - தமக்கு உண்ண வாய்க்காதெனினும் குடத்தினுள் நெய் இருக்குமாகில் எறும்புகள் போகாமல் அக் குடத்தைச் சூழச் சுற்றிக் கொண்டிருக்கும்; யாதும் கொடாரெனினும் உடையாரைப் பற்றி விடார் உலகத்தவர் - அதுபோல, ஒன்றும் உதவமாட்டா ரென்றாலும் பொருளுடையோரைச் சூழ்ந்து கொண்டு பேதைமாக்கள் விடமாட்டார்கள். கருத்து: பேதைமை யென்பது, அறியாமையும் வீண்முயற்சியுமுடையது. விளக்கம்: இஃது எடுத்துக்காட் டுவமை. உடையார் என்றது பொருளுடையாரை; "உடைப் பெருஞ் செல்வர்" என்றார் புறத்தினும். உலகத்தவரென்றது, ஈண்டுப் பேதையரைக் கருதிற்று. முடிவறியாது வீண்முயற்சி செய்யும் பேதைமையின் பெற்றி இதன்கண் நுவலப்பட்டது. புறம்.
செல்வம் நிலையாமை பொருட்பால் பேதைமை நல்லவை நாடொறும் எய்தார், அறஞ்செய்யார் இல்லாதார்க் கியாதொன்றும் ஈகலார், - எல்லாம் இனியார்தோள் சேரார், இசைபட வாழார், முனியார்கொல் தாம்வாழும் நாள். குறிப்புரை: நல்அவை நாடோறும் எய்தார், அறம் செய்யார், இல்லாதார்க்கு யாதொன்றும் ஈகலார், எல்லாம் இனியார் தோள்சேரார் இசைபட வாழார் - உயர்ந்தோர் அவைக்களத்தை நாடொறுஞ் சென்றடைந்து கேள்விப் பயன் பெறாமலும், நற்செயல்கள் செய்யாமலும், இல்லாத வறியோர்க்கு யாதொன்றும் உதவாமலும், எல்லா வகையாலும் இனியரா யிருக்கும் தம் மனைவியர் தோளை மருவாமலும், கல்வி முதலியவற்றால் உலகிற் புகழுண்டாக வாழாமலுமிருக்கும் பேதைமாந்தர், முனியார்கொல் தாம் வாழும் நாள் - உயிர்வாழும் தம் வெற்று வாழ்நாட்களை வெறாரோ! கருத்து: பேதையர் வாழ்நாள் வறிதே கழித்தொழியும். விளக்கம்: நாடொறுமென்னும் குறிப்பால் நல் அவை எனப் பிரித்துரைக்க. இனியராயிருந்தும் தம் துணைவியர் தோள் சேராரெனவே பேதையர் பிற மாதர் நினைவினரென்பது பெறப்படும். 'பிறன்பொருளாட் பெட்டொழுகும் பேதைமை' என்றார் பொய்யில் புலவரும், ஒரு பயனுமில்லாது கழியுந் தம் வாழ்நாளில் வெறுப்புத்தோன்றாதோ வென்றற்கு, ‘முனியார் கொல்' எனப்பட்டது. . குறள். :
செல்வம் நிலையாமை பொருட்பால் பேதைமை விழைந்தொருவர் தம்மை வியப்ப ஒருவர் விழைந்திலேம் என்றிருக்குங் கேண்மை, - தழங்குகுரல் பாய்திரைசூழ் வையம் பயப்பினும் இன்னாதே ஆய்நலம் இல்லாதார் மாட்டு. குறிப்புரை: விழைந்து ஒருவர் தம்மைவியப்ப ஒருவர் விழைந்திலேமென்றிருக்கும் ஆய்நலமில்லாதார் மாட்டுக்கேண்மை - ஒருவர் தம்மைவிரும்பி மதித்து அளவளாவ ஒருவர். அவரைவிரும்பிலேம் என்று புறக்கணித்திருக்கும்இத்தகைய நுண்ணுணர்வில்லாப்பேதையரிடத்துண்டாகுந் தொடர்பு, தழங்கு குரல்பாய் திரைசூழ் வையம் பயப்பபினும் இன்னாது -ஒலிக்குங் குரலோடு பாய்ந்திழியும் அலைகளையுடையகடல் சூழ்ந்த உலகத்தைப் பயப்பதாயினும் இனியதொன்றன்று. கருத்து: பொருள் செய்ய வேண்டுவதைப்புறக்கணித்துக் கிடப்பது பேதைமையின் இயல்பு. விளக்கம்: வியப்ப வென்றது,வியந்தளவளாவ வென்க. ‘தம்முள் ஒருவர் விழையஒருவர் விழைந்திலேமென்றிருக்கும் ஆய்நலமில்லாதார்மாட்டுக்கேண்மை இன்னாது' என்பது.விழைவோரையும் ஆய்நலமில்லாதாரென்றது, அறியாதுவிழைதலின். ஆய்நலமாவது, ஈண்டு நுண்ணுணர்வு :"ஆய்தல் ............. உள்ளதன் நுணுக்கம்" என்பது தொல்காப்பியம். பிறவி தொறும் இன்பம்பெருக்கும் அறவொளியைக் கெடுத்தலின் அவர்கேண்மை வையம் பயப்பினும் இன்னாதாயிற்று. தொல். உரி.
செல்வம் நிலையாமை பொருட்பால் பேதைமை கற்றனவும் கண்ணகன்ற சாயலும் இற்பிறப்பும் பக்கத்தார் பாராட்டப் பாடெய்தும்; தானுரைப்பின் மைத்துனர் பல்கி மருந்தின் தணியாத பித்தனென் றெள்ளப் படும். குறிப்புரை: கற்றனவும் கண் அகன்றசாயலும் இல் பிறப்பும் பக்கத்தார் பாராட்டப்பாடு எய்தும் - தான் கற்ற கல்விகளும், காட்சிபரந்த தன் சாயலும், தனது உயர் குடிப் பிறப்பும்அயலவர் பாராட்டப் பெருமையடையும்; தான்உரைப்பின் - அவ்வாறன்றித் தான் புகழ்ந்தால்,மைத்துனர் பல்கி மருந்தின் தணியாத பித்தன்என்று எள்ளப்படும் - தனக்கு முகமன் மொழிந்துவிளையாடுவோர் மிகப் பெருகி அதனால்,மருந்தினால் தெளியாத பித்தன் இவன் என்றுஉலகத்தவரால் இகழப்படும் நிலையை ஒருவன்அடைவான். கருத்து: பேதைமை, பிறர்கருத்தறியாது அவர் முகமனுக்கு மகிழும் பித்துத்தன்மையுடையது. விளக்கம்: கற்றனவும் என்றமையால்அறிவும், சாயலும் என்றமையால் அழகும்,இற்பிறப்பும் என்றமையால் இவ்விரண்டிற்கும்ஏதுவான இயற்கைச்சார்புங் கொள்க. தான்உரைத்தலால், பிறர், தன் மகிழ்ச்சிக்குரியதுஇச்சை பேசுதலென்றறிந்து அதுவே பேசுவாராய்ப்பல்க, அதனால் தன் அறிவு நிலை திரிந்துபித்துடையதாகு மென்பது பின் வரிகளின் கருத்து.மைத்துனரென்னுங் குறிப்பால், அவ்விச்சை பேசுதலும்பகடி செய்யுங் கருத்தானென்பது பெறப்படும்."மைந்தனை மகிழ்வ கூறி மைத்துனத் தோழன்என்றான்" என்பதும் அதன்உரையுங்காண்க. சிந்.
செல்வம் நிலையாமை பொருட்பால் கீழ்மை [கீழ்மக்களின் தன்மை யுணர்த்திற்று.] கப்பி கடவதாக் காலைத்தன் வாய்ப்பெயினும் குப்பை கிளைப்போவாக் கோழிபோல், - மிக்க கனம்பொதிந்த நூல்விரித்துக் காட்டினும் கீழ்தன் மனம்புரிந்த வாறே மிகும். குறிப்புரை: கப்பி கடவதா காலை தன்வாய்ப்பெயினும் குப்பை கிளைப்பு ஓவாக்கோழிபோல் - கடமையாக நாடோறும்நொய்யரிசியைத் தன் வாயிற் பெய்தாலும் குப்பைகிளைத்தலைவிடாத கோழியைப்போல், மிக்கனம்பொதிந்த நூல் விரித்துக் காட்டினும் கீழ் தன்மனம் புரிந்தவாறே மிகும் - மிக்க பெருமை நிறைந்தமெய்ந் நூலுண்மைகளைப் பொருள் விளக்கிஅறிவுறுத்தாலும் கீழ்மகன் தன் மனம் விரும்பியவழியே முனைந்தொழுகுவான். கருத்து: கீழ்மை யென்பது பிறர்கூறும் அறிவுரையை ஏலாது. விளக்கம்: கடவது, கடமை, "கடவதுதிரியாக்கடவுளர்க் கண்டு" என்புழிப்போல. மிகும் என்றார், தன்னியல்பேகாட்டிச் சேறலின். பெருங். . :
செல்வம் நிலையாமை பொருட்பால் கீழ்மை காழாய கொண்டு கசடற்றார் தஞ்சாரல் தாழாது போவாம் எனஉரைப்பின் - கீழ்தான் உறங்குவம் என்றெழுந்து போமாம், அஃதன்றி மறங்குமாம் மற்றொன் றுரைத்து. குறிப்புரை: காழ் ஆய கொண்டு கசடுஅற்றார் தம் சாரல் தாழாது போவாம் எனஉரைப்பின் - உறுதியாகிய மெய்ந்நூலுணர்வு கொண்டுவினை நீங்கிய மேலோர் பக்கல் நாம் காலம்தாழாது சென்று பயனுறுவோம் என்று அறிந்தோர்எடுத்துக்காட்டினால், கீழ்தான் உறங்குவம் என்றுஎழுந்துபோம் அஃதன்றி மறங்கும் மற்றொன்றுஉரைத்து - கீழ்மகன் தூங்குவோம் வம்மின் என்றுஎழுந்து போவான், அஃதன்றி வேறு வம்பு பேசிமாறுபடுவான். கருத்து: இருந்தால் வாளா கிடத்தலும்யாதேனுஞ் செய்தால் பழுது செய்தலுங் கீழோர்இயல்பாகும். விளக்கம்: காழ் என்றது ஈண்டுமெய்யுணர்வு; "காழ் இலா மம்மர்கொள்மாந்தர்" என்றார் முன்னும்.கலங்குதலில்லாததென்பது பொருள். தம், தான்:சாரியை. உறங்குவம் என்னும் உளப்பாட்டுப் பன்மை,உரைத்தோரையும் உட்கொண்டு நின்றது. ஆம்இரண்டும் அசை. மற்றொன்றென்றதுகுறிப்பாற்றீமைமேற்று. நாலடி.
செல்வம் நிலையாமை பொருட்பால் கீழ்மை பெருநடை தாம்பெறினும் பெற்றி பிழையா தொருநடைய ராகுவர் சான்றோர்; - பெருநடை பெற்றக் கடைத்தும் பிறங்கருவி நன்னாட! வற்றாம் ஒருநடை கீழ். குறிப்புரை: பெரு நடை தாம் பெறினும்பெற்றிபிழையாது ஒரு நடையராகுவர் சான்றோர் -உலகிற் பெருமித நிலையைத் தாம் பெற்றாலும் தம்பெருந்தன்மையாகிய இயல்பு வழுவாது என்றும் ஒருதன்மையாராய் விளங்குவர் மேலோர்; பெருநடைபெற்றக்கடைத்தும் பிறங்கு அருவி நல் நாடவற்றாம் ஒரு நடை கீழ்-பெருமித நிலையைப்பெற்றவிடத்தும், விளங்குகின்ற அருவிகளையுடையசிறந்த மலைநாடனே, கீழ் மகனும் என்றுந் தனதுகீழ்மையியல்பு தோன்ற ஒரு நடையாய்ஒழுகவல்லவனாவன். கருத்து: செல்வநிலையிலும் கீழோர்கீழோராகவேயிருப்பர். விளக்கம்: நடையென்றது,செல்வப்போக்கு; பெறினுமென்னும் உம்மைபெறாதிருந்த காலத்துமென் இறந்தது தழீஇயது.பெற்றக்கடைத்து மென்னும் உம்மையும் அற்று.கீழுமென எச்சவும்மை கொள்க. வல்லதென்னுங்குறிப்பானும் ஒரு நடையென்னுங் குறிப்பானும் கீழுஞ்சான்றோரொப்ப ஒரு நடைய ராகுவரென்றுரைக்கப்பட்டது. நாயனாருந் ‘தேவரனையர்கயவர்" என்றிங்ஙனம் இகழ்ந்துரைமுறைமை மேற்கொண்டமை காண்க. செல்வாக்குக்கேற்றபெரும்போக்கைப் பெறாமல் தமது கீழ்மையியல்பையே கீழோர் மேற்கொண்டிருப்பரென்பது.
செல்வம் நிலையாமை பொருட்பால் கீழ்மை தினையனைத்தே யாயினும் செய்தநன் றுண்டால் பனையனைத்தா உள்ளுவர் சான்றோர் ;- பனையனைத் தென்றுஞ் செயினும் இலங்கருவி நன்னாட. நன்றில நன்றறியார் மாட்டு. குறிப்புரை: தினையனைத்தேயாயினும்செய்த நன்று உண்டால் பனையனைத்தா உள்ளுவர்சான்றோர் - தினையளவினதேயாயினும் செய்த உதவிமுன் இருக்குமானால் அதனைப் பனையளவினதாகக்கருதிக் கனிந்திருப்பர் மேலோர்; பனையனைத்துஎன்றும் செயினும் இலங்கு அருவி நல் நாட நன்றுஇலநன்று அறியார்மாட்டு - நாளும் பனையளவுஉதவிசெயினும், விளங்குகின்ற அருவிகளையுடையஉயர்ந்த மலைநாடனே, நன்மையறியாக்கீழோரிடத்தில் அவை சிறிதளவும் நன்றிபாராட்டுத லில்லாதனவாகும். கருத்து: கீழ்மை, நன்றி மறக்கும்இயல்புடையது. விளக்கம்: உள்ளுதல், உள்ளிக்கனிதல்; "கன்றுள்ளிய புனிற்றா" என்பதுகாண்க. ‘நன்றில' என்னுமிடத்து ‘நன்று'நன்றியையும் ‘நன்றறியார்' என்னுமிடத்துஅதுமேன்மையையும் உணர்த்தும். "தினைத்துணைநன்றி செயினும் பனைத்துணையாக் கொள்வர் பயன்றெரி வார்" என்னும் தமிழ்மறையை ஈண்டுநினைவுறுக. பெருங். இலாவா.
செல்வம் நிலையாமை பொருட்பால் கீழ்மை பொற்கலத் தூட்டிப் புறந்தரினும் நாய்பிறர் எச்சிற் கிமையாது பார்த்திருக்கும்; - அச்சீர் பெருமை யுடைத்தாக் கொளினுங்கீழ் செய்யுங் கருமங்கள் வேறு படும். குறிப்புரை: பொன் கலத்து ஊட்டிப்புறந்தரினும் நாய் பிறர் எச்சிற்கு இமையாதுபார்த்திருக்கும் - பொன்னாற் செய்தஉண்கலத்தினால் உண்பித்துப் பாதுகாத்தாலும்நாயானது பிறர் எறியும் எச்சிற் சோற்றுக்குக்கண்ணிமையாமல் விழித்துக்கொண்டு காத்துக்கிடக்கும், அச்சீர்-அத்தன்மையாக,பெருமையுடையதாக் கொளினும் கீழ் செய்யும்கருமங்கள் வேறுபடும் - பெருமைக்குரியவனாகப்பெருமைப்படுத்தினாலும் கீழ்மகன் செய்யுஞ்செயல்கள் அந்நிலைமைக்கு வேறாகும். கருத்து: கீழ்மையியல்பு,திருத்தினாலுந் திருந்தாது. விளக்கம்: பறந்தருதல், காத்தல்,பார்த்திருக்குமென்றது. காத்திருக்கு மென்றற்கு.அச் சீரென்றது, உவமப்பொருட்டு. ‘அன்ன பிறவே'என்பதனாலும், ‘பல் குறிப்பினவே' என்பதனாலும் இது கொள்ளப்படும். வேறுபடும் என்பது,கீழ்மைத் தொழில்களாகவே நிகழும் என்னுங்குறிப்பிற்று. தொல். உவம.
செல்வம் நிலையாமை பொருட்பால் கீழ்மை சக்கரச் செல்வம் பெறினும் விழுமியோர் எக்காலுஞ் சொல்லார் மிகுதிச்சொல்; - எக்காலும் முந்திரிமேற் காணி மிகுவதேற் கீழ்தன்னை இந்திரனா எண்ணி விடும். குறிப்புரை: சக்கரச் செல்வம்பெறினும் விழுமியோர் எக்காலும் சொல்லார்மிகுதிச் சொல் - ஆட்சிச் செல்வம் பெற்றாலும்மேலோர் எந்தக் காலத்திலும் வரம்பு கடந்தசொற்களைச் சொல்லமாட்டார்கள்; முந்திரிமேற்காணிமிகுவதேல் கீழ் தன்னை எக்காலும் இந்திரனாஎண்ணிவிடும் - ஆனால் முந்திரியளவுக்குமேற்காணியளவாகச் செல்வம் மிகுவதானால் கீழ்மகன்தன்னை என்றுந் தேவர் கோனாக எண்ணி இறுமாந்துஉரையாடுவன். கருத்து: சிறிது நிலையுண்டானால்கீழ்மக்கள் மிகவுஞ் செருக்குவர். விளக்கம்: அரசாட்சிச் செல்வம்‘ஈண்டுச் சக்கரச் செல்வ' மெனப்பட்டது. "தாங்குமாவண்கைச் சக்கரமிக்குயர் பிறரும்" என்றார் சிந்தாமணியினும், பெறினுமென்னும் உம்மைஎச்சம், மிகுதிச்சொல், தன்முனைப்புச் சொல்;மண்ணுலக வேந்தனாகவுமன்றி விண்ணவர் கோனாகவேஎண்ணி விடுவனென்றற்கு, ‘இந்திரனா' வென்றார்.சிறு இன்பத்தையும் பெரிது பாராட்டிக்களிக்குங்கீழ்மையியல்பினை இச் செய்யுள் விளக்கிற்று. சிந்.
செல்வம் நிலையாமை பொருட்பால் கீழ்மை மைதீர் பசும்பொன்மேல் மாண்ட மணியழுத்திச் செய்த தெனினுஞ் செருப்புத்தன் காற்கேயாம்; எய்திய செல்வத்த ராயினும் கீழ்களைச் செய்தொழிலாற் காணப் படும். குறிப்புரை: மை தீர்பசும்பொன்மேல் மாண்ட மணியழுத்திச்செய்ததெனினும் செருப்புத் தன் காற்கேயாம் -குற்றந் தீர்ந்த கிளிச்சிறை என்னும் பசியபொற்றகட்டின்மேல் மாட்சிமை வாய்ந்தமணிக்கற்களைப் பதித்துச் செய்யப்பட்டதாயினும்செருப்பு ஒருவனது காலுக்கே அணிந்துகொள்ள உதவும்;எய்திய செல்வத்தராயினும் கீழ்களைச்செய்தொழிலாற் காணப்படும் - அதுபோலச்சிறக்கப் பொருந்திய செல்வமுடையரானாலும்கீழ்மக்களை அவர் செய்கின்ற தொழில்களால்இன்னாரென்று கண்டுகொள்ளுதல் கூடும். கருத்து: கீழோர் இயல்பு,நிலைமைகளால் வேறுபடுதலில்லை. விளக்கம்: மைதீர் பசும்பொன்என்றது ‘கிளிச்சிறை' யென்னும் பொன்னாதல்,"வீறுயர் பசும்பொன்" என் புழிக்காண்க. மாண்டமணியாவது, குணச்சிறப்புடையமணிகளென்க. பிற வுறுப்புக்கட்கன்றென்றுபிரித்தலின், காற்கேயென்னும் ஏகாரம்பிரிநிலை. காண என்பது காணல் என்னுந் தொழிற்பெயரின் றிரிபு. முன்வந்த "பொற்கலத்தூட்டி"யென்னுஞ் செய்யுள் ஈண்டு நினைவுகூர்தற்குரியது. சிலப். நாலடி. . .
செல்வம் நிலையாமை பொருட்பால் கீழ்மை கடுக்கெனச் சொல்வற்றாம், கண்ணோட்டம் இன்றாம் இடுக்கண் பிறர்மாட் டுவக்கும், - அடுத்தடுத்து வேகம் உடைத்தாம், விறன்மலை நன்னாட! ஏகுமாம் எள்ளுமாம் கீழ். குறிப்புரை: விறல் மலை நல் நாட -ஆற்றல் வாய்ந்த மலைகளையுடைய சிறந்த நாடனே!,கீழ் - கீழ்மகன், கடுக்கெனச் சொல் வற்று -கடுமையாகப் பேசுதல் வல்லான்: கண்ணோட்டம் இன்று- கண்ணோட்ட மில்லான்; இடுக்கண் பிறர்மாட்டுஉவக்கும் - பிறரிடத்து நேரும் இன்னலுக்குமகிழ்வான்; அடுத்தடுத்து வேகம் உடைத்து - அடிக்கடிசீற்றமுடையான் ; ஏகும் - கண்ட விடங்கட்குச்செல்வான் ; எள்ளும்-பிறரை இகழ்வான். கருத்து: பிறர்க்குத் தொல்லைகள்விளைப்பது கீழ்மக்களின் இயல்பு. விளக்கம்: வல்லது என்றது,இகழ்ச்சிக்குறிப்பு. ஆம் அனைத்தும் அசை. பிறர்மாட்டு என்பதைப் பிறவிடங்கட்குங் கொள்வதுபொருந்தும். வேகம், சினத்தின் வேகம். மலைக்குவிறலாவது, எஞ்ஞான்றும் வளமுடைமை; "உழவர் உழாதனநான்கு பயன் உடைத்தே" என்பவைமுதலாயின. கீழ் என்னும் அஃறிணைச் சொல்லால்எல்லாம் அஃறிணை முடிபு கொண்டன. கீழ்மக்களின்இயல்புகள் சிலவற்றை இச்செய்யுள்தொகுத்துணர்த்திற்று. புறம்.
செல்வம் நிலையாமை பொருட்பால் கீழ்மை பழைய ரிவரென்று பன்னாட்பின் நிற்பின் உழையினிய ராகுவர் சான்றோர்; - விழையாதே கள்ளுயிர்க்கும் நெய்தற் கனைகடல் தண்சேர்ப்ப; எள்ளுவர் கீழா யவர். குறிப்புரை: கள் உயிர்க்கும்நெய்தல் கனை கடல் தண் சேர்ப்ப - தேன்சொரியும்நெய்தல் மலர்களையுடைய ஒலிக்கின்ற கடலின்குளிர்ந்த கரையை யுடையவனே!, பின் நிற்பின் பல்நாள் பழைய ரிவரென்று உழை இனிய ராகுவர்சான்றோர் - தமக்குப் பின்னால் வந்து ஒருவர்பணிவுடையராய் நின்றால் இவர் பலநாள்பழகியவரென்று விரும்பி அவரிடம் சான்றோர்அன்புடையவராவர்; கீழாயவர் விழையாது எள்ளுவர் -ஆனாற் கீழ்மக்கள் அவரைத் தமக்குஅடங்கினவரெனக் கொண்டு அன்புடன் விரும்பாமல்அதிகாரத்தால் மதியாது ஒதுக்குவர். கருத்து: தம்மை விரும்புவோரைத்தாம் மதியாதொதுக்குவது கீழ்மக்களின் இயல்பு. விளக்கம்: பின் நிற்றல் ஈண்டுப்பணிவுடையராயிருத்தல் உணர்த்திற்று‘பின்நின்றபின் இவர் பன்னாட் பழையரென்று சான்றோர்உழை இனியராகுவ' ரென்று கொள்க. உழை, அவருழையென்க.விழையாதே என்னும் குறிப்பானும், பின் நிற்பின்என்னும் குறிப்பானும், எள்ளுதல்அதிகாரத்தானென்பது பெறப்படும். கீழாயவர்என்பதில் ஆய்வரென்பது ஆக்க மன்று; நூலானதுஎன்புழிப்போல வினை முதற் குறிப்பிடைச் சொல்;அதனை எழுவாய்ச் சொல்லுருபு என்ப; "வேற்றுமைப்பொருள்வயின்" என்பதற்குச்சேனாவரையர் உரைத்த உரை காண்க. தொல். இடை.
செல்வம் நிலையாமை பொருட்பால் கீழ்மை கொய்புல் கொடுத்துக் குறைத்தென்றுந் தீற்றினும் வையம்பூண் கல்லா சிறுகுண்டை; - ஐயகேள், எய்திய செல்வத்த ராயினும் கீழ்களைச் செய்தொழிலாற் காணப் படும். குறிப்புரை: கொய் புல்கொடுத்துக் குறைத்து என்றும் தீற்றினும் வையம்பூண்கல்லா சிறு குண்டை - கொய்தற்குரிய பசும்புல்லைஅறுத்துக்கொடுத்து நாடோறும் உண்பித்து வந்தாலும்சிற்றெருதுகள் வண்டிகள் பூண்டிழுக்க உதவா; ஐய கேள் -ஐய கேட்பாயாக; எய்திய செல்வத்தராயினும்கீழ்களைச் செய்தொழிலாற் காணப்படும் -சிறக்கப் பொருந்திய செல்வமுடையரானாலும் கீழ்மக்களை அவர் செய்கின்ற தொழில்களால்இன்னரென்று கண்டுகொள்ளுதல் கூடும். கருத்து: எவ்வளவு நலமுறச் செய்யினும்கீழ்மக்கள் பிறர்க்குப் பயன்படார். விளக்கம்: கொய் புல் என்பதுபுல்லின் இளம்பதமான தகுதி யுணர்த்திற்று.குறைத்துக் கொடுத்தென்று மாறுக, பூண்கல்லா: ஒருசொல். ‘சிறு குண்டை' யென்றது, வளர்ச்சியில்லாதுகுறுகி மூத்த எருதுகள். "குண்டை குறட்பூதம்" என்றார் தேவாரத்தினும். ‘காணப்படு'மென்பதற்குக், கீழ் ‘மைதீர் பசும்பொன்' என்னுஞ் செய்யுளில் உரைத்தாங்குரைக்க. தேவா. நாலடி.
செல்வம் நிலையாமை பொருட்பால் கயமை [மெலிந்த உணர்வினாரது இயல்புணர்த்திற்று.] ஆர்த்த அறிவினர் ஆண்டிளைய ராயினுங் காத்தோம்பித் தம்மை அடங்குப; - மூத்தொறூஉம் தீத்தொழிலே கன்றித் திரிதந் தெருவைபோல் போத்தறார் புல்லறிவி னார். குறிப்புரை: ஆர்த்த அறிவினர் ஆண்டுஇளையராயினும் காத்து ஓம்பித் தம்மை அடக்குப -உறுதிமக்க மெய்யறிவினையுடையார் ஆண்டில்இளையராயினும் தம்மைத் தீய நெறியினின்றுந்தடுத்து நன்னெறியில் நிறுத்திஅடக்கிக்கொள்வர்; மூத்தொறும் தீத்தொழிலேகன்றித் திரிதந்து எருவைபோல் போத்து அறார்புல்லறிவினார் - ஆனால் மெலிந்தஅறிவினையுடையார் கழுபோல முதிர முதிரத் தீயசெய்கைகளே தடிப்பேறி அலைந்து மாசு நீங்கார். கருத்து: ஆண்டு முதிர்ந்து உலகப்பழக்கம் ஏறுதலால் கயவர் பெறும் பயன் யாதுமில்லை. விளக்கம்: ஆர்த்தவென்பது காழ்ந்தவென்னும் பொருட்டு. ‘காத்து ஓம்பி அடக்குப'என்பதற்குப் புலன் நெறியிற் காத்து ஞானநெறியில் ஓம்பி அருளில் தம்மை அடக்கியொழுகுவர்என்க. மூத்தொறும் என்றார், மூத்தலிற்பயனில்லாமையின். எருவை, மேலுமேலும் பிணத்தையேஉகத்தலைதப்போல் தீயனவே விரும்பியலைவர்என்பது. போத்தென்றது புரை: ஆவது, குற்றம். கயமைஈண்டு மென்மையாகலின் மெலிந்தஅறிவினார் புல்லறிவினாரெனப்பட்டனர். தொல். உரி.
செல்வம் நிலையாமை பொருட்பால் கயமை செழும்பெரும் பொய்கையுள் வாழினும் என்றும் வழும்பறுக்க கில்லாவாந் தேரை: - வழும்பில்சீர் நூல்கற்றக் கண்ணும் நுணுக்கமொன் றில்லாதார் தேர்கிற்கும் பெற்றி அரிது. குறிப்புரை: செழும் பெரும்பொய்கையுள் வாழினும் என்றும் வழும்புஅறுக்ககில்லாவாம் தேரை-நீர் நிறைந்த பெரியகுளத்தின்கண் உயிர் வாழ்ந்தாலும் தவளை தன்மேல் உள்ள வழுவழுப்பான அழுக்கைநீக்கிக்கொள்ளும் ஆற்றலில்லாதனவாகும்; வழும்புஇல் சீர் நூல் கற்றக் கண்ணும் நுணுக்கம் ஒன்றுஇல்லாதார் தேர்கிற்கும் பெற்றி அரிது - அது போல,பிழையற்ற சிறப்பினையுடைய மெய்ந்நூல்களைப்பயின்றாலும் நுட்பஞ் சிறிது மில்லாதவர் தம்மைஅதனால் மேம்படுத்திக்கொள்ளும் மாட்சி இல்லை. கருத்து: அறிவு உரமில்லாதவர், தக்கவாய்ப்புக்களிருந்தாலும் தம்மைமேம்படுத்திக்கொள்ள அறியார். விளக்கம்: பொய்கைக்குச் செழுமைநீரின் நிறைவு. உரமுள்ள அறிவு நுணுக்கம் பெறும்ஆற்றலுடையதாகலின், நுட்பமில்லா அறிவென்பதுமெலிந்த அறிவினையுணர்த்தும்; ஆதலின் ஈண்டுநுணுக்கமில்லாதரென்றது, கயவரை யென்க. தேர்தல்,தகுதி பெறுதல்; மாட்சிமைப்படுத்திக் கொள்ளலென்பது. அருமை இன்மைமேற்று; "மதிநுட்பம் நூலோடுடையார்" எனத்தெய்வப் புலவர்மதிநுட்பத்துக்கு முதன்மை தேற்றியதூஉங் காண்க.
செல்வம் நிலையாமை பொருட்பால் கயமை கணமலை நன்னாட! கண்ணின் றொருவர் குணனேயுங் கூறற் கரிதால், குணனழுங்கக் குற்றம் உழைநின்று கூறுஞ் சிறியவர்கட் கெற்றா லியன்றதோ நா. குறிப்புரை: கண மலைநல் நாட -கூட்டமான மலைகளையுடைய உயர்ந்த நாடனே!. கண் இன்றுஒருவர் குணனேயும் கூறற்கு அரிது - புறத்தில் ஒருவரதுநல்லியல்பினையும் பேசுதற்குஅருமையாயிருக்குமென்ப; குணன் அழுங்கக் குற்றம் உழைநின்று கூறும் சிறியவர்கட்கு எற்றால் இயன்றதோநா - ஆனால் அவரது நல்லியல்பு கெடும்படி, செய்யாதகுற்றங்களை அவரெதிரிலிருந்து செய்ததாகக் கூறும்மெலிந்த அறிவினார்க்கு நாக்கு எதனால்உருவானதோ, அறிகிலேம். கருத்து: கயவர், அஞ்சாது,பொய்யுரைக்கும் இயல்பினர். விளக்கம்: புறத்திற் குறை கூறாதுகுணங்கூறுதல் பொருந்துமேனும் அதனையுங்காரணமின்றிக் கூறச் சான்றோர் கூசுவர்;அற்றாயின், காரணமின்றியே அதுவும் குற்றத்தை,இல்லாத குற்றத்தை, எதிரிலேயே புனைந்துரைத்துப்பழிப்பதாயின் அதனை என்னென்பது என்றபடி.எதிரிற் குற்றங் கூறித் திருத்த முயல்வதுநன்றாகலின், இங்குக் குற்றம் என்றது, இல்லாதகுற்றத்தை யென்க. அறிகிலேம் என்பதுசொல்லெச்சம். தசையினாலியன்ற தன்றென்பதுகுறிப்பு. அறிவொடுபடாத நாவினியல்புஇனைத்தென்பது இதனாற் பெறப்பட்டது. தொல். எச்.
செல்வம் நிலையாமை பொருட்பால் கயமை கோடேந் தகலல்குற் பெண்டிர்தம் பெண்ணீர்மை சேடியர் போலச் செயல்தேற்றார்; - கூடிப் புதுப் பெருக்கம் போலத்தம் பெண்ணீர்மை காட்டி மதித்திறப்பர் மற்றை யவர். குறிப்புரை: கோடு ஏந்து அகல்அல்குற் பெண்டிர்தம் பெண் நீர்மை சேடியர்போலச்செயல் தேற்றார்-பக்கம் உயர்ந்து அகன்றஅல்குலையுடைய நல்லிலக்கணம் அமைந்த நற்பெண்டிர்,வேலைக்காரிகளைப்போல் தமது பெண்மையில்பைப்புறத்தில் ஒப்பனை செய்து காட்டுதல் அறியார்;மற்றையவர் கூடிப் புதுப் பெருக்கம்போலத் தம்பெண் நீர்மை காட்டி மதித்து இறப்பர் - ஆனால்ஏனைத் தீய பெண்டிரோ தம்முட் கூடிப் புதுவெள்ளம்போலப் புனைதல் செய்து தமது பெண்மையியல்பைப்புறத்திற் புலப்படுத்தித் தாமே மதித்துவரம்புகடந்து நடப்பர்.கருத்து: கயமைஉள்ளீடில்லாததாகலின் இடம்பத்தையே விரும்பும். விளக்கம்: கோடேந்து அகலல்குலென்னும் அடைமொழி ஈண்டு நல்லிலக்கணந்தேற்றிப் பெண்டிர் நற்பெண்டிரென்பதுணர்த்திற்று. ஒப்பனை செய்துகொள்ளாமைக்குச் சேடியர் உவமமாயினார். புதுப்புனலுவமம் ஈண்டு ஒப்பனை ஆரவாரம் முதலியவற்றிற்குவந்தது. மதித்திறப்பரென்பதற்கு, பிறர், பொருள்தந்தபோது அவரை மதித்துத், தராதபோது மீறிஒழுகுவரென மொழிந்துகொள்க. உவமமும் இதற்கொக்குமென்பது, ‘புதுப்புனலும் மாரியறவே அறுமே அவரன்பும்வாரியறவே அறும்' என மேலும் இவ்வியல்புதேற்றி வருதலால் அறியப்படும். உவமமட்டுங் கூறிஇச்செய்யுள் அறிஞர் கயவர்களியல்புஉணர்த்தலின், இது பிறிது மொழிதலென்னும் அணி.அறிஞர் அடக்கமாகவும் கயவர் ஆடம்பரமாகவும்ஒழுகுவரென்பதும் இதனாற் பெறப்பட்டது நாலடி.
செல்வம் நிலையாமை பொருட்பால் கயமை தளிர்மேலே நிற்பினுந் தட்டமாற் செல்லா உளிநீரார் மாதோ கயவர்; - அளிநீராக் கென்னானுஞ் செய்யார் எனைத்தானுஞ் செய்பவே இன்னாங்கு செய்வார்ப் பெறின். குறிப்புரை: தளிர்மேலே நிற்பினும்தட்டாமற் செல்லா உளிநீரார் கயவர் -இளந்தளிரின்மேல் நின்றாலும் பிறர்தட்டினாலன்றி அதனுள் இறங்காத உளியின்இயல்பினையுடையவர் கயவர்; அளிநீரார்க்குஎன்னானும் செய்யார் இன்னாங்கு செய்வார்ப்பெறின் எனைத்தானும் செய்ப - ஏனென்றால்,பிறர்க்கு இரங்கும் இயல்புடைய சான்றோர்க்குச்சிறிதும் பயன்படாமல், தமக்குக்கொடுமைசெய்வாரைப் பெற்றால் அவர் எவ்வளவும் பயன்பட்டுவேலை செய்வர். கருத்து: கயவர், வருத்தியே வேலைவாங்குதற்குரியர். விளக்கம்: அளிநீரரான சான்றோர்பக்கலிருப்பது இனிதாக வேலைபார்ப்பதற்கிடமாயினும் அங்கு அவர் பயன்படாமல்,தம்மை வருத்துவார் பக்கலே பயன்படுதல் பற்றித்தளிர்மேலே நிற்பினும் தட்டாமற் செல்லாத உளிஉவமமாயிற்று. "கரும்பு போற் கொல்லப்பயன்படுங்கீழ்" என்றார்திருவள்ளுவரும். மாது, ஓ:அசை. செய்தல் ஈண்டுப்பயன்படுதலின்மேற்று. இக் கருத்து இவ்வுவமமேகொண்டு, "விட்டுக் கருமம் செயவைத்த பின்னரும்,முட்டாதவரை வியங்கொளல் வேண்டுமால்,தொட்டக்கால் மாழ்குந் தளிர்மேலே நிற்பினுந்,தட்டாமற் செல்லாது உளி" என பிறாண்டும்வருதல் அறிக. உளிக்கு இறங்குதலென்றது, கயவர் தம்தொழில் செய்தற்குக் கொள்ளப்படும். பழமொழி.
செல்வம் நிலையாமை பொருட்பால் கயமை மலைநலம் உள்ளும் குறவன்; பயந்த விளைநிலம் உள்ளும் உழவன்; சிறந்தொருவர் செய்தநன் றுள்ளுவர் சான்றோர்கயந்தன்னை வைததை உள்ளி விடும். குறிப்புரை: மலைநலம் உள்ளும் குறவன்- குறவன் தனக்கு வளந்தந்த மலையினது நன்மையைநினைந்து பாராட்டிக்கொண்டிருப்பான்; பயந்தவிளைநிலம் உள்ளும் உழவன் - உழவன் தனக்குவிளையுள் பயந்த விளைநிலங்களின் நன்மையைநினைந்து பாராட்டிக்கொண்டிருப்பான்; சிறந்தஒருவர் செய்த நன்று உள்ளுவர் சான்றோர் - அவைபோல, ஒருவர் அருட்குணம் மிகுந்து தமக்குச் செய்தநன்றியை நினைந்து பாராட்டிக்கொண்டிருப்பர்சான்றோர்; கயம் தன்னை வைததை உள்ளிவிடும் -ஆனால் தாழ்ந்த அறிவினன், தன்னைப் பிறர்பழித்ததை நினைத்துப் பகைமை கொண்டுவிடுவன்கருத்து: மெலிந்த அறிவினர், பிறர்தீமைகள் உள்ளுதலை விலக்கி நலந்தேடி உள்ளும்ஆற்றலில்லா தவராவர். விளக்கம்: குறவர்க்கும்உழவர்க்கும் வாழ்வு மலையினாலும்விளைநிலுத்தினாலும் உண்டாதல்போல, சான்றோரது வாழ்வு பிறர் செய்தநன்றியுள்ளுதலையே அடிப்படையாகக் கொண்டுநடைபெறுதலும், கீழோரது வாழ்வு பிறரைப் பகைத்துக்கொள்ளுதலையே அடிப்படையாகக் கொண்டுநடைபெறுதலும், பெறப்படும். உள்ளுதல், ஈண்டுநினைந்து பாராட்டுதல். புன்மை கருதிக் கயம் எனஅஃறிணையான் முடிக்கப்பட்டது."இரும்பிற்பிணிப்பர் கயத்தை" என்றார்பிறரும். விடும் என்னுந் துணிவுப்பொருள் விகுதி,தவறித் தீயதில நுழைந்துவிட்ட புன்மையின்முரட்டுத் துணிவினை உணர்த்தும். நான்மணிக்.
செல்வம் நிலையாமை பொருட்பால் கயமை ஒருநன்றி செய்தவர்க் கொன்றி யெழுந்த பிழைநூறுஞ் சான்றோர் பொறுப்பர்: - கயவர்க் கெழுநூறு நன்றிசெய் தொன்றுதீ தாயின் எழுநூறுந் தீதாய் விடும். குறிப்புரை: ஒரு நன்றி செய்தவர்க்குஒன்றி எழுந்த பிழை நூறுஞ் சான்றோர் பொறுப்பர் -தமக்கு ஒரு நன்மை செய்தவர்க்குச் சான்றோர்அவரால் பின்பு தொடர்ந்து உண்டான நூறுகுற்றங்களும் பொறுத்து நிற்பர்; கயவர்க்கு எழுநூறுநன்றி செய்து ஒன்று தீதாயின் எழுநூறுந் தீதாய்விடும் - ஆனால், அறிவில் தாழ்ந்தோர்க்கு ஒருவர்எழுநூறு நன்மைகள் செய்து பின்பு தவறுதலால் ஒன்றுதீமையாக நேர்ந்துவிட்டால் அவ்வெழுநூறுநன்மைகளும் தீமைகளாய்க் கருதப்பட்டு விடும். கருத்து: கயவர் அறிவு, நன்மைகளில்அழுந்தி நில்லாமல் தீமைகளையே முனைந்தெண்ணிநிற்கும். விளக்கம்: ஒன்றியெழுதல், சேரத்தோன்றுதல், பொறுத்தலாவது, பொறுத்துத்தீங்கியற்றாது நிற்றலென்றும் ‘தீதாய்விடுதலாவது, தீமைகளாய்க் கருதப்பட்டுப் பலதுன்பங்கள் விளைதற்கு ஏதுவாய் விடுதல் என்றுங்கொள்க; "நிலம்புடை பெயர்வ தாயினும் ஒருவன்செய்தி கொன்றோர்க்கு உய்தி இல்" என்பவாகலின், சான்றோர் பிழை நூறும்பொறுப்பராயினர். "நன்றி செய்குநர்ப்பிழைத்தோர்க் குய்வில வென்னுங்குன்றாவாய்மை" என்றதூஉம் அறிக. புறம். கல்லா.
செல்வம் நிலையாமை பொருட்பால் கயமை ஏட்டைப் பருவத்தும் இற்பிறந்தார் செய்வன மோட்டிடத்துஞ் செய்யார் முழுமக்கள்; - கோட்டை வயிரஞ் செறிப்பினும் வாட்கண்ணாய்; பன்றி செயிர்வேழ மாகுத லின்று. குறிப்புரை: ஏட்டைப் பருவத்தும் இற்பிறந்தார் செய்வன மோட்டிடத்தும் செய்யார் முழுமக்கள் - பொருளில்லாமை முதலியவற்றால் தளர்வுண்டான காலத்திலும் உயர்குடியிற் பிறந்த சான்றோர் செய்யும் நற்செயல்களைச் செல்வமுள்ள காலத்திலும் கயவர்கள் செய்யார்கோட்டை வயிரம் செறிப்பினும் வாட்கண்ணாய் பன்றி செயிர்வேழம் ஆகுதல் இன்று - ஒளிமிக்க கண்களையுடைய பெண்ணே! பன்றியின் கொம்பை வயிரம் பொருத்திப் பூண்கட்டினும் அது போர்ச்சினமுடைய யானையாதலில்லை. கருத்து: நல்லன செய்தல் கயவரியல்பன்று. விளக்கம்: உவமையாற் கயவர்க்கு இயல்பன்மை பெறப்படும். ஏட்டை: தளர்வு: "ஏட்டைப்பசி" என்புழிப் போல, இற்பிறந்தாரென்னுங் குறிப்பால் அறஞ்செய்தல் பிறவி யியல்பென்பது பெறப்படும். மோடென்றது, ஈண்டுச் செல்வவுயர்வு. இழிவு கருதியும், உருவம் ஏனை அறிஞரையொப்ப முழுதொத்திருப்பது கருதியும், அறிவு முதலிய உயிர் வளர்ச்சியின்றிப் பிறந்தவடிவாக விளங்குதல் கருதியும் மூடர் ‘முழுமக்க' ளெனப் பட்டனர். செறிப்பினும் செறித்துக் கட்டினு மென்க.
செல்வம் நிலையாமை பொருட்பால் கயமை இன்றாதும் இந்நிலையே ஆதும் இனிச்சிறிது நின்றாதும் என்று நினைத்திருந் - தொன்றி உரையின் மகிழ்ந்துதம் உள்ளம்வே றாகி மரையிலையின் மாய்ந்தார் பலர். குறிப்புரை: இன்று ஆதும் இந்நிலையேஆதும் இனிச்சிறிது நின்று ஆதும் என்றுநினைத்திருந்து ஒன்றி உரையின் மகிழ்ந்து - இன்றுசெல்வராவோம், இப்பொழுதே செல்வராவோம்,இனிச் சற்றுப் பொறுத்துச் செல்வராவோம் என்றுஎண்ணமிட்டுக்கொண்டிருந்து அதிற்படிந்துவாய்ப்பேச்சினாற் களித்து, தம் உள்ளம் வேறாகி-ஆனால் அதற்குரிய முயற்சியிலராய்த் தம் இயல்புவேறுபட்டு, மரை இலையின் மாய்ந்தார் பலர் -தாமரையிலையைப் போல், இருந்த நிலையிலேயேமாய்ந்தொழிந்த கயவர் பலராவர். கருத்து: அறிவின் மெலிந்தோர்வீண் எண்ணமும் வாய்ப்பேச்சும் உடையவராய் உரியசெயலில்லாதவராவர். விளக்கம்: இந்நிலையே என்பதற்கு,இப்போதுள்ள தொழில் முதலிய நிலைமைகளின்ஏதுவாகவே யென்று உரைத்தலும் ஒன்று. மரை: தாமரையென்பதன் முதற்குறை; தாமரையிலை கடைசியில் தான்இருந்த இடத்திலேயே இருந்து உலர்ந்து மறைந்துவிடுதலால் உவமையாயிற்று; இலையைக் கூறினார் மேலேவிளங்கித் தெரிதலாலும் கயவர்க்கு உவமையாதலாலுமென்க. "மரையிலை போல மாய்ந்திசினோர்பலரே" என்றார் பிறரும் புறம்.
செல்வம் நிலையாமை பொருட்பால் கயமை நீருட் பிறந்து நிறம்பசிய தாயினும் ஈரங் கிடையகத் தில்லாகும்; - ஓரும் நிறைப்பெருஞ் செல்வத்து நின்றக் கடைத்தும் அறைப்பெருங்க லன்னா ருடைத்து. குறிப்புரை: நீருள் பிறந்து நிறம்பசியதாயினும் ஈரம் கிடையகத்து இல்லாகும் -நீரினுள் தோன்றி மேலே நிறம்பசுமையுடையதாயிருந்தாலும் நெட்டியின் உள்ளே ஈரம்இல்லையாம் ; நிறைப்பெருஞ் செல்வத்துநின்றக்கடைத்தும் அறைப்பெருங்கல் அன்னார்உடைத்து - அதுபோல, நிறைந்த பெரிய செல்வநிலையில் நின்றாலும், பாறையாகிய பெரியகல்லைப்போல் வன்மையான உள்ளம் படைத்த கயவரைஉடைத்து இவ்வுலகம். கருத்து: கயவர்க்கு ஈர உள்ளம்இல்லை. விளக்கம்: நீர் செல்வத்துக்கும்,பசுமை கவர்ச்சியாகிய தோற்றப் பொலிவுக்கும்,ஈரம் இரக்கத்துக்குங் கொள்ளப்படும்; ஓரும்: அசை.எதுகை நோக்கி நிறைப்பெருமென ஒற்றுமிக்கது.பாறைபட்ட உள்ள முடையா ரென்றற்கு,‘அறைப்பெருங்கல் அன்னா' ரென்றார். படிமம்வகுத்தற்கும், இருத்தல் கிடத்தல்முதலியவற்றிற்குங் கூடப் பயன்படுதலில்லாதஅறுப்புக்களை யுடைய பெருங்கல்அறையெனப்படுமாகலின், யாதும் பயன்படாமை கருதிற்றுஇவ்வுவமம். "கல் நனி நல்ல கடையாயமாக்களின்" எனக் கீழ் வந்தது;இதனினும் சிறந்த கல்லென்பது இதனாற்பெறப்பட்டது. நாலடி.
செல்வம் நிலையாமை பொருட்பால் பன்னெறி [பலவகைப்பட்ட ஒழுகலாறுகளை உணர்த்துவது] மழைதிளைக்கு மாடமாய் மாண்பமைந்த காப்பாய் இழைவிளக்கு நின்றமைப்பின் என்னாம்? -விழைதக்க மாண்ட மனையாளை யில்லாதான் இல்லகம் காண்டற் கரியதோர் காடு. குறிப்புரை: மழை திளைக்கும்மாடமாய் மாண்பு அமைந்த காப்பாய் இழை விளங்குநின்று இமைப்பின் என்னாம் - மேகங்கள் தவழும்உயர்ந்த மாளிகையாய்ச் சிறப்பமைந்தபாதுகாப்புடையதாய்மணிகளால் இழைக்கப்பட்டவிளக்குகள் அங்கங்கும் இருந்து ஒளிவிடினும் என்னபயனாகும்?, விழைதக்க மாண்ட மனையாளையில்லாதான்இல்லகம் காண்டற்கு அரியதோர் காடு - மாட்சிமைவாய்ந்த விரும்பத்தக்க இல்லக்கிழத்தியையில்லாதவனது வீடு கண்கொண்டுபார்த்தற்கியலாததொரு கொடிய காடாகும். கருத்து: மனையாள் இல்லாத வீடுவீடன்று. விளக்கம்: திளைத்தல், இடைவிடாதுபயிலுதல்; பெருமையும் காப்பும்ஒளியுமுடையதாயிருத்தாலும் வீட்டுக்கு உணர்வுவிளக்காகிய மனையாள் இன்றியமையாதவ ளென்பதுகருத்து; "மனைக்கு விளக்காகிய வாணுதல்" என்றார் பிறரும்; மாண்ட விழைதக்க மனையாளென்க.மனைமாட்சி மனைக்கு மங்கலமாகலின் இல்லாள் இல்லாத இல்லம், அறவோர் துறவோர்அந்தணர் விருந்து உறவோர் நண்பர் குழந்தைகள்பெரியோர் உலவுதலற்றுக் காண்டற்கரியதொருகாடாயிருக்கும் எனப்பட்டது. புறம்.
செல்வம் நிலையாமை பொருட்பால் பன்னெறி வழுக்கெனைத்து மில்லாத வாள்வாய்க் கிடந்தும் இழுக்கினைத் தாம்பெறுவ ராயின், இழுக்கெனைத்துஞ் செய்குறாப் பாணி சிறிதே; அச் சின்மொழியார் கையுறாப் பாணி பெரிது. குறிப்புரை: வழுக்கு எனைத்தும்இல்லாத வாள்வாய்க்கிடந்தும் இழுக்கினைத் தாம்பெறுவராயின் - சோர்வு சிறிதுமில்லாத வாளின்காவலில் இருந்தும் மகளிர் ஒழுக்கந்தவறுதலைத்தாம் உறுவராயின், இழுக்கு எனைத்தும் செய்குறாப்பாணி சிறிதே அச் சின்மொழியார் கையுறாப் பாணிபெரிது - குளிர்ந்த மொழிகளைப் பேசும் அம்மகளிர் தமது வாழ்நாளிற் குற்றம் சிறிதுஞ்செய்யாத காலம் சிறிதே; மற்றுத் தம் கணவர்க்குவயப்பட்டொழுகாக் காலம் பெரிதென்க. கருத்து: மகளிர்க்கு நிறை காக்குங்காப்பே தலை. விளக்கம்: வாள் என்றது, வாள்வீரரின் காவல்; ஆகுபெயர். கிடத்தல்,கட்டுப்பட்டிருத்தல். காவலினும் இழுக்குப்பெறுவராயின் நிறை சிறிதுமில்லாதவர் அம்மகளிரென்பது பெறப்படுதலின், அவர் தம் வாழ்நாளில்இழுக்கெனைத்துஞ் செய்குறாப் பாணி சிறிதே யெனப்பட்டது. பாணி என்றது காலம். ‘எம் சொல்லற் பாணிநின்றன னாக" என்புழிப்போல. எனைத்துஞ்செய்குறாப் பாணி யென்றார் ஏதானும்வழுக்குடையராகவே யிருப்ப ரென்றற்கு. கையுறாமை,இங்கு வயமாயிராமை. குறிஞ்சிப்.
செல்வம் நிலையாமை பொருட்பால் பன்னெறி எறியென் றெதிர்நிற்பாள் கூற்றம்; சிறுகாலை அட்டில் புகாதாள் அரும்பிணி; - அட்டதனை உண்டி யுதவாதாள் இல்வாழ்பேய்; - இம்மூவர் கொண்டானைக் கொல்லும் படை. குறிப்புரை: எறி என்றுஎதிர்நிற்பாள் கூற்றம் - தன் கணவற்குச் சினத்தைமூட்டி ‘அடி' என்று எதிரில் அடங்காது நிற்கும்மனைவி அவனுக்குக் கூற்றுவனாவாள்; சிறு காலை அட்டில்புகாதாள் அரும்பிணி - காலை நேரத்தில்அடுக்களையிற் சென்று உணவு சமைக்காதவள் தன்கணவனுக்குக் கொடிய நோயாவாள், அட்டதனை உண்டிஉதவாதாள் இல்வாழ் பேய் - சமைத்ததை அவனுக்குரியஉணவாக இடமால் உண்பவள் இல்லத்தில் வாழும்பேயாவாள், இ மூவர் கொண்டானைக் கொல்லும் படை -இம் மூவகையியல்புடைய மாதரும் தம்மை மணந்துகொண்டகணவன்மாரை உயிரோடு வருத்தும் கருவிகளாவர். கருத்து: இல்வாழ் பெண்டிர்அடக்கமும் சுறுசுறுப்பும் அன்புமுடையவராய்விளங்கவேண்டும். விளக்கம்: சினத்தை மேலுமேலும்மூளச்செய்து கணவற்கு இறுதியுண்டாக்குதலின் ‘கூற்ற'மெனவும், காலத்தில் உணவு கிட்டாமற் செய்தலால்நோயுண்டாதலின் ‘பிணி' எனவும், பெரும்பசி கொண்டுமுன் உண்ணுதலின் பேய்' எனவுங் கூறினார்.சிறுகாலையென்றது காலை நேரத்தின் முற்பகுதியிலுந்தொடக்க நேரத்தைக் குறித்தது. பிணிக்குஅருமையாவது, என்றும் இவ்வாறே நடந்து தீராநேயாதல்.அட்டதனை உதவாதாள் என்றதன் மேலும் உண்டியென்றது,அட்டது தன் கணவற்குரிய உண்டியொன்று கருதாதவளாய்என்னும் பொருட்டு. பேய்க்குப் பெரும்பசிஇயல்பாதல் "பேஎய்ப் பிறப்பிற் பெரும்பசியும் " என்பதனானும் பெறப்படும். திரிகடுகம்.
செல்வம் நிலையாமை பொருட்பால் பன்னெறி கடியெனக் கேட்டுங் கடியான், வெடிபட ஆர்ப்பது கேட்டும் அதுதெளியான், - பேர்த்துமோர் இற்கொண் டினிதிரூஉம் ஏமுறுதல் என்பவே, கற்கொண் டெறியுந் தவறு. குறிப்புரை: கடி எனக் கேட்டும்கடியான் - இனி மணவாழ்க்கையை முனிந்துவிடு என்றுதக்கோ ரறிவுரைகள் கேட்டும் முனியானாய், வெடிபடஆர்ப்பது கேட்டும் அது தெளியான் - தலைவெடிக்கும்படி உலகிற் சாப்பறைகள் முழங்குவதுகேட்டும் அத் துறவியல்பைத் தெளியானாய்;பேர்த்தும் ஓர் இல்கொண்டு இனிது இரூஉம் ஏமுறுதல்கல்கொண்டு எறியும் தவறு என்ப - மீண்டும் இரண்டாமுறையாக ஓர் இல்லக்கிழத்தியைமணம்புரிந்துகொண்டு இன்புற்றிருக்கும்மயக்கத்தையடைதல் தன்னையே தான்கற்கொண்டெறிந்துகொள்ளும் தவறென்று சான்றோர்கூறுவர். கருத்து: இரண்டாம் முறையாகவும்மனைவாழ்க்கையிற் புகாமல் மக்கள் துறவுடையராய்உலகப் பெரும்பணிகள் செய்து விளங்குதல் வேண்டும். விளக்கம்: கடியான் முதலியனமுற்றெச்சம். இனி தென்றது, உடல் நலங் கருத்திற்று.ஏமுறுதல், ஈண்டு மயக்கமுறுதல் ; "தலைப்பட்டார்தீரத் துறந்தார் மயங்கி, வலைப்பட்டார்மற்றையவர்" என்னும் நாயனார்திருமொழியை இங்கு நினைவு கூர்க.
செல்வம் நிலையாமை பொருட்பால் பன்னெறி தலையே தவமுயன்று வாழ்தல், ஒருவர்க் கிடையே இனியார்கட் டங்கல், - கடையே புணராதென் றெண்ணிப் பொருள்நசையால் தம்மை உணரார்பின் சென்று நிலை. குறிப்புரை: தலையே தவம் முயன்றுவாழ்தல் ஒருவர்க்கு - மக்கட்பிறவியில் வந்தஒருவர்க்கு, தம் வாழ்க்கையில்தவமுயற்சியுடையராய் வாழ்தல் தலையானதாகும்;இடையே இனியார்கண் தங்கல் - தமக்குஇனியராயிருக்கும் மனைவி மக்கள் முதலியஉறவினரிடத்து மனந்தங்கி அவாவோடொழுகுதல்இடைத்தரமான வாழ்வாகும்; கடையே புணராது என்றுஎண்ணிப் பொருள் நசையால் தம்மை உணரார்பின்சென்று நிலை - மேற் கூறிய இருவகை வாழ்வின்முயற்சியும் தமக்குக் கைகூடாதென்று நினைந்து வெறும்பொருள் விருப்பத்தால் தம் குடிப்பிறப்பு கல்விமுதலிய தகுதிகளையுங் கருதிப்பாராது நடத்துஞ்செல்வர்களின் பின் சென்று நிற்கும் அடிமைநிலைகடைப்பட்ட வாழ்வாகும். கருத்து: வாழ்க்கையிற் பற்றின்றியொழுகும் அறப் பணியாளர் தலையானமுயற்சியுடையோராவர். விளக்கம்: ஒருவர்க்கு என்பதைப்பிறவற்றிற்குங் கூட்டுக. தலை, இடை, கடையென ஈண்டுக்கூறிய வாழ்வுமுறையே அருள் வாழ்வும், அன்பு வாழ்வும்,அடிமை வாழ்வுமாகும். பிறர்பால் அடிமைத் தொழில்பூண்டிருப்போர் முறையாக மனையறம் நடத்துதல்இயலாதாகலின் அதனை வேறுபிரித்துக்கடையாக்கினார். பொருண் முயற்சி இம்மூன்றற்கும்பொதுவெனக்கொள்க. பொருள் ஈட்டிப் பலர்க்கும்உதவியாய் வாழ்தலும், தமக்கினியார்க்கு மட்டுமேஉதவியாய் வாழ்தலும், தமக்கு இனிமையின்றி உயிர்வாழ்தலும் கருதினமையின், முறையே இவை தலைஇடைகடையாயின. பொருணசை யாலென்றார், கண்டதுபயனன்று நசையே யென்றற்கு. பின் நிற்றலாவதுஈண்டுத் தொழுதுண்டு வாழ்தல் பின்நின்றேவல்செய்கின்றேன்" என்ப திருவாசகத்தினும்.
செல்வம் நிலையாமை பொருட்பால் பன்னெறி கல்லாக் கழிப்பர் தலையாயார்; நல்லவை துவ்வாக் கழிப்பர் இடைகள்; கடைகள் இனிதுண்ணேம் ஆரப் பெறேமியாம் என்னும் முனிவினாற் கண்பா டிலர். குறிப்புரை: கல்லாக் கழிப்பர்தலையாயார் - மக்களில் உயர்ந்தோர்,நற்கருத்துக்களை ஆழ்ந்து அறிந்து தெளிவு பெறுதலைமேற்கொண்டு அம்முறையில் தம் வாழ்நாட்களைக்கழிப்பர்; நல்லவை துவ்வாக் கழிப்பர் இடைகள் -இடைத்தர மக்கள், இனிய பண்டங்களைஐம்புலன்களானும் நுகர்ந்தின்புறுதலை மேற்கொண்டுஅம் முறைமையில் வாழ்நாள் கழிப்பர்; கடைகள்இனிது உண்ணேம் ஆரப்பெறேம் யாம் என்னும்முனிவினால் கண்பாடு இலர் - கடைத்தர மக்கள்,‘யாம் பண்டங்களை இன்பமாய் நுகரப் பெற்றிலேம்,நிறையப் பெற்றிலேம்' என்னும் வெறுப்பினால்இரவிலும் உறக்கமில்லாதவராவர். கருத்து: உலகப் பொருள்களின்வாயிலாகத் தம்மைத் தெளிவுடையராக்கிக்கொள்ளும் மக்களே உயர்ந்தோராவர். விளக்கம்: கற்றல், ஆழ்ந்துணர்ந்துதெளிவுபெறுதல். ஒரு பொருளைக் காணநேர்ந்தால்அதுகொண்டு தலையானவர் தமதறிவைத் தெளிவு செய்யமுயல்வரெனவும், இடைப்பட்டவர் புலன்களால்நுகர்ந்தின்புற முயல்வரெனவும், கடைப்பட்டவர்ஏதும் பெறாராய் ஆற்றாமை மட்டுங்கொண்டுஅமைதியின்றி மெலிவர் எனவும் உணர்த்திற்று இச்செய்யுள்; நாயனார் கடைப்பட்டவர் நிலையைஒதுக்கிப் பேறுடையாரிருவரியற்கையைமட்டு மெடுத்து,"இருவேறுலகத்தியற்கை திருவேறு, தெள்ளியராதலும்வேறு” என்றருளிச் செய்தார். கண்படுதல்,உறக்கங்கொள்ளுதல். பெறேம்யாம்.
செல்வம் நிலையாமை பொருட்பால் பன்னெறி செந்நெல்லா லாய செழுமுளை மற்றுமச் செந்நெல்லே யாகி விளைதலால் - அந்நெல் வயனிறையக் காய்க்கும் வளவய லூர! மகனறிவு தந்தை யறிவு. குறிப்புரை: செந்நெல்லாலாயசெழுமுளை மற்றும் அச் செந்நெல்லேயாகி விளைதலால்- சாலி என்னும் உயர்ந்த செந்நெல்லின்விதையினால் உண்டான செழுவியமுளை பின்னும் அச்செந்நெற் பயிராகவே தோன்றி விளைதலால்,அந்நெல் வயல் நிறையக் காய்க்கும் வளவயல் ஊரமகனறிவு தந்தை யறிவு - அச் செந்நெல் வயல் நிறையவிளைந்து கிடக்கும் வளமான கழனிகளையுடைய ஊரனே!புதல்வன் அறிவு அவன் தந்தையின் அறிவு வகையைஒத்ததாகும். கருத்து: புதல்வனுடைய அறிவுஒழுக்கங்களை விரும்புந் தந்தை, தான் நல்லறிவுநல்லொழுக்கமுடையவனாய் விளங்குதல் வேண்டும். விளக்கம்: செந்நெல், நெல்லின்உயர்ந்த இனத்தைச் சேர்ந்தது. காய்க்கும் என்றது,ஒரு வழுவமைதி. ஊரன், மருத நிலத்துத் தலைவன். இச்செய்யுள், ஒருவன் அறிவு செயல் முதலியவை அவன்மரபினரையுஞ் சாருமென் றறிவுறுத்துமுகத்தால், அவனைநன்னிலையில் நிறுத்த விரும்பிற்று.
செல்வம் நிலையாமை பொருட்பால் பன்னெறி உடைப்பெருஞ் செல்வரும் சான்றோரும் கெட்டுப் புடைப்பெண்டிர் மக்களும் கீழும் பெருகிக் கடைக்கால் தலைக்கண்ண தாகிக் குடைக்கால்போற் கீழ்மேலாய் நிற்கும் உலகு. குறிப்புரை: உடைப்பெருஞ் செல்வரும்சான்றோரும் கெட்டுப் புடைப்பெண்டிர் மக்களும்கீழும் பெருகி தமது பொருளைப் பலர்க்கும் வழங்கும்அன்புரிமையுடைய பெரிய செல்வ வளம் வாய்ந்தஇல்லறத்தாரும் ஏனைத் துறவாசிரியரும் வறியராய்நிலைசுருக்கிச் சார்ப்பெண்டிராகிய வேசையரின்மக்களும் ஏனைக் கயவர்களும் செல்வமுடையவர்களாய்நிலைபெருகி, கடைக்கால் தலைக் கண்ணதாகிக்குடைக்கால்போல் கீழ்மேலாய் நிற்கும் உலகு -அவ்வாற்றால், குடையினது தண்டு கீழ்மேலாகநிற்பதுபோல் இவ்வுலகம் தலைகீழாய் நிற்கும்இயல்புடையதாயிருக்கின்றது. கருத்து: உலகநிலை கொண்டு மக்களைமதித்தலாகாது. விளக்கம்: செல்வம், பிறர்க்குவழங்குவார்க்கே பயன்றந்து உடைமையாதலின்,அவ்வன்புரிமையுடையாரது செல்வம் ‘உடைப்பெருஞ்செல்வ' மெனப்பட்டது அவ்வாற்றால், அறவோர்முதலியோரைப் புறந்தருவாராதல்பற்றி அவர்இல்லறத்தாரெனப்பட்டனர். "படைப்புப் பலபடைத்துப் பலரோடு உண்ணும் உடைப் பெருஞ்செல்வர்" எனப் புறத்தில் வருதலும்அறிக. புடைப்பெண்டிர், பொருள் தருவார் பக்கல்சாரும் பெண்டிர்; இக் குறிப்பினாலும் முன்னர்க்கூறிய செல்வர் இல்லறத் தோன்றல்கள் என்பதுபெறப்படும். இஃது உலகியற்கை கூறுமுகத்தான்மெய்ப்பொருளொன்று அறிவுறீ இயது. புறம்.
செல்வம் நிலையாமை பொருட்பால் பன்னெறி இனியார்தம் நெஞ்சத்து நோயுரைப்ப அந்நோய் தணியாத உள்ளம் உடையார், - மணிவரன்றி வீழும் அருவி விறன்மலை நன்னாட! வாழ்வின் வரைபாய்தல் நன்று. குறிப்புரை: மணி வரன்றி வீழும்அருவி விறல் மலை நல் நாட - மணிகளை வாரிக்கொண்டுவீழ்கின்ற அருவிகளையுடைய வென்றிமிக்கமலைகளமைந்த சிறந்த நாடனே!. இனியார் தம்நெஞ்சத்து நோய் உரைப்ப அந்நோய் தணியாதஉள்ளம் உடையார் - தமக்கு இனியராயிருப்போர் தமதுஉள்ளத்திலுள்ள கவலையைத் தாமே ஆற்றிக்கொள்ளவியலாது எடுத்துச் சொல்ல அக் கவலைக்கு ஏதுவானகுறையைத் தீர்த்து அதனைத் தணிவிக்காதஇரக்கமற்ற வன்னெஞ்சுடையார், வாழ்வின் வரைபாய்தல் நன்று - இவ்வுலகில் உயிர் வாழ்தலினும்ஒரு மலையின்மேல் ஏறி வீழ்ந்து உயிர் மாய்த்துக்கொள்ளுதல் நலமாகும். கருத்து: பிறர்க்குஉதவியாயிராதவர் இருப்பதும் இறப்பதும் ஒன்றே. விளக்கம்: இனியாரென்றது, உறவினர்நண்பர் முதலியோர், நோய் தணித்தலாவது,நோய்க்கு ஏதுவானதைத் தணித்தலென்க.ஒப்புரவறியாதவர் உலக நடையறியாதவராகலின்உலகில் அவர் இருத்தலும் இல்லாமையும்ஒன்றேயாயின. "ஒத்த தறிவான் உயிர் வாழ்வான்மற்றையான், செத்தாருள் வைக்கப் படும்" என்றார் நாயனாரும். வரை பாய்தலால் அவ்விழிவுபெறப்படாமை நோக்கி நன்றென்றார். "மிக்கமிகுபுகழ் தாங்குபவோ தற்சேர்ந்தார் ஒற்கம்கடைப்பிடியா தார்" என்றார். ஐந், ஐம்.
செல்வம் நிலையாமை பொருட்பால் பன்னெறி புதுப்புனலும் பூங்குழையார் நட்பும் இரண்டும் விதுப்பற நாடின்வே றல்ல; - புதுப்புனலும் மாரி அறவே அறுமே, அவரன்பும் வாரி அறவே அறும். குறிப்புரை: புதுப் புனலும் பூங்குழையார் நட்பும் இரண்டும் விதுப்பு அற நாடின் வேறுஅல்ல - புதுநீர்ப் பெருக்கும் அழகிய தோடணிந்தவேசையரின் றொடர்பும் விரை தலின்றிஆராய்ந்தால் அவை தம் தன்மையில் வேறு வேறு அல்ல;புதுப் புனலும் மாரி அறவே அறும் அவர் அன்பும் வாரிஅறவே அறும்-புது வெள்ளமும் மழை நிற்க நின்றுவிடும்;அவ் விலைமகளிர் அன்பும் பொருள் வருவாய் நீங்கநீங்கிவிடும். கருத்து: பொருட் பெண்டிர்,பொருளைமட்டுங் கொண்டு பொருள் கொடுப்பாரைக்கொள்ளாதவராகலின், அவர் தொடர்புகொள்ளத்தக்கதன்று. விளக்கம்: விதுப்பென்றது, உள்ளத்துடிப்பு ; ஈண்டு விரைவுக்காயிற்று; "விதுப்புறுவிருப்பொடு" என்புழிப் போல. முன்உம்மைகள் இரண்டும் எண்பின் உம்மைகள்இரண்டும் ஒன்றையொன்று தழுவிய எச்சங்கள்.பொருள் நிலையற்றதாகலின் அப்பொருணோக்கமாகஇனியராயொழுகுவாரது அன்பும் நிலையற்றதாய்இன்னாமை பயக்குமென்று ஏதுவின் நிறீஇயினார். புறம்.
செல்வம் நிலையாமை பொருட்பால் பொதுமகளிர் [பொருள் கொடுப்பார் பலர்க்கும் உரிய பொதுப் பொருளாயிருக்கும் வரைவில் மகளிரின் இயல்பு.] விளக்கொளியும் வேசையர் நட்பும் இரண்டும் துளக்கற நாடின்வே றல்ல; - விளக்கொளியும் நெய்யற்ற கண்ணே அறுமே, அவரன்பும் கையற்ற கண்ணே அறும். குறிப்புரை: விளக்கொளியும்வேசையர் நட்பும் இரண்டும் துளக்குஅற நாடின் வேறுஅல்ல - விளக்கின் ஒளியும் விலைமகளிர் உறவுமாகியஇரண்டும் கலக்கமின்றி ஆராய்ந்தால் அவை தம்தன்மையில் வேறு அல்ல; விளக்கொளியும் நெய்அற்றகண்ணே அறும் அவர் அன்பும் கை அற்றகண்ணேஅறும் - விளக்கின் ஒளியும் நெய்வற்றியபோதேஅவியும், அம் மகளிரின் அன்பும் பொருள்வற்றியபோது இல்லையாய்விடும். கருத்து: பொதுமகளிர் அன்புவிலைக்கே அல்லது விலை கொடுப்பார்க்கன்று. விளக்கம்: ஒளிக்குக் காரணம்நெய்யாதல்போல அவரன்புக்குக் காரணம்பொருளல்லது வேறல்ல என்றார். துளக்கற நாடுதல்,ஐயந் திரிபின்றி ஆராய்தல், கண்ணே யென்னும்ஏகாரம் இரண்டிடத்தும் தேற்றம்; ஏனையது அசை.கையென்னும் இடப்பெயர் இடத்திலுள்ளபொருட்காயிற்று: ஆகுபெயர் "பிறந்தவழிக்கூறலும்" என்றதனாற் கொள்க. தொல். வேற்றுமை மயங்.
செல்வம் நிலையாமை பொருட்பால் பொதுமகளிர் அங்கோட் டகலல்குல் ஆயிழையாள் நம்மோடு செங்கோடு பாய்துமே என்றாள்மன்; - செங்கோட்டின மேற்காணம் இன்மையான் மேவா தொழிதாளே காற்கால்நோய் காட்டிக் கலுழ்ந்து. குறிப்புரை: அம் கோடு அகல் அல்குல்ஆய் இழையாள் நம்மோடு செங்கோடுபாய்துமேஎன்றாள் மன் - அழகிய பக்கங்கள் உயர்ந்த அகன்றஅல்குலையுடைய ஆராய்ந்தெடுத்த இழைகளையணிந்தவிலைமகள் நாம் பொருளுடையமாயிருந்த காலத்துநம்மோடு செங்குத்தான மலையுச்சியில் ஏறிக்கீழ்விழுந்து ஒன்றாய் உயிர் துறப்போம் என்றுஅன்புரை கூறினாள்; காணம் இன்மையான்செங்கோட்டின்மேல் மேவா தொழிந்தாளே கால்கால்நோய் காட்டிக் கலுழ்ந்து - இப்போது நமதுகையிற் பொருளில்லாமையால் தனது காலில்வாதநோயென்று காட்டிப் போலியாக அழுது அம்மலையுச்சியின்மேல் வராமற் போனாளே! கருத்து: பொதுமகளிரின் அன்புரைபோலியென்றொழிக. விளக்கம்: ‘அங்கோட் டகலல்குல்'இயற்கை யழகினையும்' ‘ஆயிழை' செயற்கை யழகினையும்உணர்த்தி அவை கருவியாகக் காமுகரைப் பிணிக்கும்பொதுமகளிரின் இயல்பு புலப்படுத்தப்பட்டது.‘பாய்தும்' என்றது முன்னிலையை உளப்படுத்தியபன்மை. ஏதானும் இடர்வந்தாற் ‘பாய்தும்'என்றபடி. ஏகாரம்; உறுதி புலப்படுத்தித் தேற்றமாய்நின்றது. மேல்: மேவா தொழிந்தாளெனக்கூறப்படுதலின் மன் ஒழியிசை யன்றுகழிவுப்பொருளது. ஒழிந்தாளே என்னும் ஏகாரம் ஈண்டுஇரங்கலின் மேற்று. இறந்த காலத்தாற்கூறினமையின் இப்போது இவன் வறிஞனாய் வாழவழியற்று உயிர் துறக்கச் செங்கோட்டின்மேல்ஏறினானாயிற்று. கால் காற்றாகலின், கால் நோய்வாயுநோய். பொருள் இப்போது இல்லையாயினது அவள்பறித்துக் கொண்டமையின் என்க. தொல். வினை
செல்வம் நிலையாமை பொருட்பால் பொதுமகளிர் அங்கண் விசும்பின் அமரர் தொழப்படுஞ் செங்கண்மா லாயினும் ஆகமன், - தங்கைக் கொடுப்பதொன் றில்லாரைக் கொய்தளி ரன்னார் விடுப்பர்தங் கையாற் றொழுது. குறிப்புரை: அங்கண் விசும்பின்அமரர் தொழப்படும் செங்கண்மால் ஆயினும் ஆக -அழகிய இடமகன்ற விண்ணுலகத்தின் தேவர்களால்வணங்கப்படுகின்ற சிவந்த தாமரைக் கண்களையுடையதிருமாலை ஒப்பவனாயினுமாக; தம் கைக்கொடுப்பதுஒன்று இல்லாரைக் கொய்தளிர் அன்னார் விடுப்பர்தம் கையால் தொழுது - கொடுக்கத்தக்க பொருள் தமதுகையில் ஒன்றுமில்லாத ஆடவரை கொய்தற்குரியஇளந்தளிர் போன்ற மேனியையுடைய பொதுமகளிர் தம்கைகளால் வணங்கி விடைகொடுத்தனுப்பிவிடுவர். கருத்து: பொதுமகளிர்பொருளொன்றல்லது வேறு தகுதி கருதார். விளக்கம்: ‘மால்' என்றது பெருமையும்,‘செங்கண்' என்றதும் உருவும், ‘அமரர் தொழப்படு'மென்றது செல்வாக்கும் உணர்த்தின. உரு, திருமுதலியவற்றிற் சிறந்த ஆடவர்க்குநல்லிலக்கணமாகத் திருமாலைக் கூறுதல்நூற்றுணிபாகலின் ஈண்டுங் கூறினார்.திருமாலாயினும் பொருளிலனேல் விடத்தக்கானென்னும் பொருட்டாகலின் மன் கழிவின்கண்வந்தது. ‘கொய் தளி' ரென்னும் அடைதளிரின் தகுதிகருதிற்று. பொருளீட்டுதற்குரிய சிறந்தஆடவனாகலானும் பொருளுண்டான காலத்து வருகவெனவிரும்புதலானும் பகைப்பதின்றி இனிதாகவிடுத்தலின் ‘தொழுது விடுப்ப' ரென்றார். தொல். புறத். - , புறம். : - , சிந்.
செல்வம் நிலையாமை பொருட்பால் பொதுமகளிர் ஆணமில் நெஞ்சத் தணிநீலக் கண்ணார்க்குக் காணமி லாதார் கடுவனையர்; - காணவே செக்கூர்ந்து கொண்டாரும் செய்த பொருளுடையார் அக்காரம் அன்னார் அவர்க்கு. குறிப்புரை: ஆணம்இல் நெஞ்சத்துஅணிநீலக் கண்ணார்க்குக் காணம் இலாதார் கடுஅனையர் - அன்பில்லாத உள்ளமும் அழகிய நீலமலர்போன்ற கண்களுமுடைய பொதுமகளிர்க்குப்பொருளில்லாதார் எத்துணை உயர்ந்தவராயினும்நஞ்சையொப்பத் தோன்றுவர்; காணவே செக்கூர்ந்துகொண்டாரும் செய்த பொருளுடையார் அக்காரம்அன்னார் அவர்க்கு - பலருங் காணச்செக்காட்டிப்பிழைப்பாரும் ஈட்டிய செல்வமுடையார்அவர்க்குச் சர்க்கரைபோல் விரும்பத்தக்கவராவர். கருத்து: எந்நிலையினும் பொருளுடையாரையேவிலைமகளிர் விரும்புவர். விளக்கம்: அகமும் புறமும்தம்மியல்பில் மாறுபட்டு நிற்குங் கள்ளம்உணர்த்துவார், ‘ஆணமில் நெஞ்சத்து அணிநீலக்கண்ணார்' என்றார், "மாயப்பொய் கூட்டிமயக்கும் விலைக் கணிகை" என்றார்பிறரும். ‘கடுவனைய ' ரென்றமையாற் பொருளின்மையேஅவர்க்கு எடுப்பாய்த் தோன்றுதல் பெறப்பட்டது.கொள்ளவென்றது, ஈண்டு உயிர்வாழலின் மேற்று;உம்மை இழிவு சிறப்பு, இதனால் காணமில்லாதார்எத்துணை உயர்ந்தவராயினும் எனமேல்உரைக்கப்பட்டது. இவை நான்கு பாட்டானும் பொதுமகளிர் அன்பு, பொருட்கே யன்றி அதுகொடுப்பார்கன்றென்பது பெறப்பட்டது. பரிபா.
செல்வம் நிலையாமை பொருட்பால் பொதுமகளிர் பாம்பிற் கொருதலை காட்டி ஒருதலை தேம்படு தெண்கயத்து மீன்காட்டும் - ஆங்கு மலங்கன்ன செய்கை மகளிர்தோள் சேர்வார் விலங்கன்ன வெள்ளறிவி னார். குறிப்புரை: பாம்பிற்கு ஒரு தலைகாட்டி ஒரு தலைதேம் படு தெள் கயத்து மீன் காட்டும்மலங்கு அன்ன செய்கை மகளிர் தோள் சேர்வார் -இன்சுவை மிக்க தெளிந்த நீர்ப்பொய்கையில்பாம்புக்குத் தனதுடலின் ஒரு புறமாகிய தலையைக்காட்டி மற்றொரு புறமாகிய வாலை மீனுக்குக் காட்டிஅவ்வவற்றிற்கினமாயிருந்து உயிர் பிழைத்து வரும்விலாங்கு மீனைப் போன்ற கள்ளச் செயலுடையவிலைமகளிரின் தோள்களைக் கூடுங் காமுகர்,விலங்கு அன்ன வெள் அறிவினார் - விலங்கைப்போற்பகுத்தறிவில்லாத அறியாமையுடையவராவர். கருத்து: விலைமகளிர்கள்ளவுருவினராகலின் அவரைக் கூடற்க வென்பது. விளக்கம்: விலாங்கு மீனின்தலைப்புறம் பாம்பு போலவும் வாற்புறம் மீன்போலவும் இருக்குமாகலின், பாம்பு மீனென்று கருதிஇரைபிடிக்க வருமாயின் அதற்குத் தலைப்புறங்காட்டிஇனம்போல உலவி உயிர் தப்பியும், தனக்கு உணவாகியசிறு மீன்கள் பாம்பென்று கருதி அஞ்சிவிலகுமாயின் அவற்றிற்கு வாற்புறங்காட்டிஇரையுண்டு உயிர் பிழைத்தும் அது வஞ்சித்துவாழ்தலின், பொருளற்றாரையும் பொருளுற்றாரையும்பகையாதும் நேசித்தும் அவரவர்க்கேற்பஒழுகிப்பரிந்தும பொருள் பறித்தும் வஞ்சித்துஉயிர் வாழும் விலை மகளிர்க்கு அஃது உவமமாயிற்று.கரந்து பொருள் பறித்து வாழும் இம் மகளிரியல்பு,"காரிகை கடுநுனைத் தூண்டிலாக, உட்கும் நாணும்ஊராண் ஒழுக்கும், கட்கின் கோலமுங் கட்டிரையாக,இருங்கண் ஞாலத் திளையோர் ஈட்டிய, அருங்கலவெறுக்கை யவைமீனாக, வாங்குபு கொள்ளும்வழக்கியல் வழாஅப் பூங்குழை மகளிர்" எனப்பிறாண்டும் நுவலப்பட்டமை காண்க. ஒரு தலை, ஒருபுறம். ஆங்கு: அசை. கள்ளத்தைப் பகுத்தறிதலாகியஉள்ளீடில்லாமையின், ‘வெள்ளறிவினா' ரென்றார். பெருங். இலாவா. -
செல்வம் நிலையாமை பொருட்பால் பொதுமகளிர் பொத்தநூற் கல்லும் புணர்பிரியா அன்றிலும்போல் நித்தலும் நம்மைப் பிரியலம் என்றுரைத்த பொற்றொடியும் போர்த்தகர்க்கோ டாயினாள் நன்னெஞ்சே நிற்றியோ போதியோ நீ. குறிப்புரை: பொத்த நூல் கல்லும்புணர் பிரியா அன்றிலும்போல் நித்தலும் நம்மைப்பிரியலம் என்று உரைத்த பொன் தொடியும் போர்த்தகர்க் கோடு ஆயினாள் - நாம் பொருளுடையமாயிருந்தகாலத்தில், கோத்த நூலோடு பொருந்திய மணியும்சேர்க்கை பிரியாத அன்றிற் பறவைகளும்போலஎந்நாளும் நம்மைப் பிரியோம் என்று உறுதி கூறியபொன்னாற் செய்த வளையலையணிந்த பொது மகள்,இப்போது, போர்த்தொழில் செய்கின்ற ஆட்டுக்கடாவின் கொம்புபோல் மனம் முறுக்குண்டுவன்மையாய்ப் பின்வாங்கி விட்டாள்; நல்நெஞ்சே நிற்றியோ போதியோ நீ - கவடற்றநெஞ்சமே! இனி நீ அவளிடமே நயந்து நிற்பாயோஅன்றி நன்னெறியில் திரும்பி வருவாயோ? கருத்து: விலைமாதர்நம்பத்தக்கவரல்லர். விளக்கம்: பொத்த வென்பது ஈண்டுக்கோத்த வென்னும் பொருட்டு. கல், முத்து முதலியமணிகள்; "கற்குளி மாக்கள்" என்புழிப்போல. நூலும் மணியும் போலவும் பிரியாஅன்றில் போலவும் என்றது, என்றும் உடனுறைவுக்குவந்த உவமம். ‘பிரியலம்' என்பது ஆயத்தையும்உள்ளடக்கிப் படர்க்கையை உளப்படுத்தியதன்மைப் பன்மையாம். தகர்க்கோடு வல்லென்றுதிரிந்து பின் வாங்கி நிற்றற்கு உவமையாயிற்று. கல்லா.
செல்வம் நிலையாமை பொருட்பால் பொதுமகளிர் ஆமாபோல் நக்கி அவர்கைப் பொருள்கொண்டு சேமாபோல் குப்புறூஉஞ் சில்லைக்கண் அன்பினை ஏமாந் தெமதென் றிருந்தார் பெறுபவே தாமாம் பலரால் நகை. குறிப்புரை: ஆமாபோல் நக்கி அவர்கைப்பொருள் கொண்டு சேமாபோல் குப்புறூஉம்சில்லைக்கண் அன்பினை ஏமாந்து எமதுஎன்றிருந்தார் - முதலிற் காட்டாவைப் போல்மெத்தென ஊற்றின்பந்தந்து காமுகரின் கையிலுள்ளபொருளைப் பறித்துக்கொண்டு பின்பு காட்டெருதைப்போற் பிறவிடத்துப் பாய்ந்தோடிவிடும்தீயொழுக்கமுடைய பொதுமக ளுள்ளத்துப் போலியன்பினை மதிமயங்கி எமக் குரியதென்றுநம்யிருந்தவர், பெறுப பலரால் நகை - உலகிற்பலரால் நகைத்தலைப் பெறுவர். கருத்து: பொருட்பெண்டி ருறவைநம்பியிருந்தவர் பின்பு வறிய நிலையில் அவராற்கைவிடப்பட்டுப் பலரால் நகைத்தலுக் கிடமாவர். விளக்கம்: ஆமா பிறவுயிர்களைநாவினால் மெத்தெனத் தடவுமென்றும், அதுவே அவ்வுயிர்கட்குக் கடுவாகிய இறுதியைவிளைவிக்குமென்றுங் கூறுப. ஆமா காட்டான்ஆனமைபோலச் சேமாவுங் காட்டெருதாயிற்று.குப்புறுதல் பாய்ந்து கடத்தல். பிறவிடத்தென்றதுபொருளுடையார் பிறரிடத்தென்க. தன்விருப்பம்போல் திரிந்து வளம் உண்டு கொழுத்திருத்தலின்அவ்வியல்புடைய பொதுமகளிர்க்குக்காட்டுவிலங்குகள் எடுத்துக் காட்டப்பட்டன.சில்லை,. தூர்த்தை; இழிவென்னும் பொருளான் வந்தது.தாம். ஆம்அசைகள், நம்பிப் பொருளிழந்துகைவிடப்பட்ட நிலைகள், பிறர் நகைத்தற்குக்காரணமாயின.
செல்வம் நிலையாமை பொருட்பால் பொதுமகளிர் ஏமாந்த போழ்தின் இனியார்போன் றின்னாராய்த் தாமார்ந்த போதே தகர்க்கோடாம் - மானோக்கின் தந்நெறிப் பெண்டிர் தடமுலை சேராரே, செந்நெறிச் சேர்துமென் பார். குறிப்புரை: ஏமாந்த போழ்தின்இனியார்போன்று இன்னராய்த் தாம் ஆழ்ந்தபோதேதகர்க்கோடு ஆம் - காமுகர் தம்பால்மயங்கியிருந்த காலத்தில் புறத்தே அவர்க்குஇனியாரைப்போலிருந்து அகத்தே வஞ்சம்மிக்கவராய்த் தாம் அவர் பொருளையெல்லாம்உண்டுவிட்டவுடனே ஆட்டுக் கடாவின் கொம்புபோல்திருக்குண்டு செல்கின்ற, மான் நோக்கின் தம்நெறிப் பெண்டிர் தடமுலை சேரார் செந்நெறிச்சேர்தும் என்பார் - மான் போன்ற மருண்டபார்வையினையுடைய தம் மனம் போன வழியே யொழுகும்பொருட் பெண்டிரது அகன்ற மார்பினைஅருணெறியிலொழுகுவே மென்றிருப்பார் கூடார். கருத்து: விலைமாதரது சேர்க்கையால்அருணெறியொழுக்கங் கெடும். விளக்கம்: தகர்க்கோடாம்பெண்டிரென்க. அருணெறியொழுக்கத்தும் பொருணெறிப்போக்குங் கரவு முடையாரது தொடர்புமாறுபட்டதாகலின் சேராரென்றார்."பொருட்பொருளார் புன்னலந் தோயார்அருட்பொருள். ஆயும் அறிவி னவர்" என்றார்நாயனாரும், தந்நெறிப் பெண்டிரென்றது,ஒருவர்க்குரிமையாய் அடங்காமை யுணர்த்திற்று.
செல்வம் நிலையாமை பொருட்பால் பொதுமகளிர் ஊறுசெய் நெஞ்சந்தம் உள்ளடக்கி ஒண்ணுதலார் தேற மொழிந்த மொழிகேட்டுத் - தேறி எமரென்று கொள்வாருங் கொள்பவே யார்க்குந் தமரல்லர் தம்உடம்பி னார். குறிப்புரை: ஊறு செய் நெஞ்சம் தம்உள்ளடக்கி ஒள் நுதலார் தேற மொழிந்த மொழிகேட்டு - பிறர்பாற் பொருள் பறித்துக்கொள்ளுதலாகிய தீமையைச் செய்யுந் தமது நினைவைப்புறத்தே புலப்படாதபடி தம் உள்ளத்தில்அடக்கிக்கொண்டு ஒளிமிக்க நெற்றியையுடையபொருட் பெண்டிர் புறத்தே மனந் தெளியும்படிமொழிந்த பசப்பு மொழிகளைக் கேட்டு, தேறி எமர்என்று கொள்வாரும் கொள்ப-அவற்றை நம்பி அப்பெண்டிர் எமக்குரியரென்று உரிமை கொள்வாருங்கொள்வர்; யார்க்கும் தமர் அல்லர் தம்உடம்பினார் - அம் மாதரார் எவர்க்கும்உறவினராகார் அவர் தமக்கே உரியஉடம்பினையுடையர். கருத்து: வேசையர் தமதுடம்பைத்தமதாக்கத்துக்குப் பயன்படுத்துவரான்றிப்பிறரெவர்க்கும் உரிமையாக்கார். விளக்கம்: ‘தூண்டி லிரையின்துடக்குள் ளுறுத்துத் தேன் தோய்த் தன்னதீஞ்சொல் அளைஇ" உரையாடும்இயல்பினராதலின், ‘ஊறுசெய் நெஞ்சம் தம்உள்ளடக்கித் தேற மொழிந்த மொழி' என்றார்.‘கொள்வாருங்கொள்ப' வென்றார்,தமக்குடம்பாடின்மையின். அன்புடையராயின்பிறர்க்கென்பும் உரியராவராகலின் அன்பிலாரானஇவர் தம் முடம்பு தமக்கே உரியவராயினார். இவைஐந்து பாட்டானும் விலைமாதரது கரவுடைமைபெறப்பட்டது. பெருங். உஞ்சைக்.
செல்வம் நிலையாமை பொருட்பால் பொதுமகளிர் உள்ளம் ஒருவன் உழையாத ஒண்ணுதலார் கள்ளத்தாற் செய்யுங் கருத்தெல்லாந் - தெள்ளி அறிந்த விடத்தும் அறியாராம் பாவம் செறிந்த உடம்பி னவர். குறிப்புரை: உள்ளம் ஒருவன்உழையதா-தமது நெஞ்சம் வேறொருவனிடத்ததாக, ஒள்நுதலார் கள்ளத்தால் செய்யுங் கருத்தெல்லாம் -ஒளிபொருந்திய நெற்றியையுடைய பொருட்பெண்டிர்வஞ்சனையால் தம்மிடஞ் செய்யும் நினைவெல்லாம்,தெள்ளி அறிந்தவிடத்தும் அறியாராம் பாவம்செறிந்த உடம்பினவர் - ஆராய்ந்து நன்றாகத்தெரிந்த நிலையினும் தீவினைமிக்கபிறப்பினையுடையவர் அத்தெரிவினைத்தமதொழுக்கத்திற் கொண்டுவரும்அறிவாற்றலில்லாதவராவர். கருத்து: தீவினை மிக்கார்விலைமாதரின் வஞ்சங்களை நன்கு தெரிந்திருந்தும்அவரின் நீங்கியொழுகும் ஆற்றலில்லாதவராவர். விளக்கம்: உள்ளம் ஒருவனுழையதாவென்றமையான் உடம்பு பிறனொருவனுழையாதாக்கள்ளஞ்செய்வரென்பது பெறப்பட்டது.அறிதற்கிருந்த அறிவாற்றல், தீவினைச்செறிவால்அறிந்தவாறொழுகுதற்கில்லாமையின்,‘அறிந்தவிடத்தும் அறியாராம்' என்றார். ஆம்,ஆவரென்னும்பொருட்டு. ‘அறிவதறிந்தும் பழியோடுபட்டவை செய்தல்செய்த வினையான் வருமாகலின் ‘பாவஞ் செறிந்த உடம்பினவர்' என்றார். இதனான்வஞ்சமிக்க விலைமாதரினின்று காமுகர்நீங்காமைக்கு ஏதுக் கூறுமுகத்தால் அவ்விருதிறத்தாரது இழிவும் உரைக்கப்பட்டது. நாலடி.
செல்வம் நிலையாமை பொருட்பால் கற்புடை மகளிர் [கணவன்பால் ஆழ்ந்த அன்புணர்வுடைய இல்லற நிகழ்த்தும் மகளிரது இயல்பு.] அரும்பெறற் கற்பின் அயிராணி யன்ன பெரும்பெயர்ப் பெண்டி ரெனினும் - விரும்பிப் பெறுநசையாற் பின்னிற்பா ரின்மையே பேணும் நறுநுதலாள் நன்மைத் துணை. குறிப்புரை: அரும்பெறல் கற்பின்அயிராணி அன்ன பெரும் பெயர்ப் பெண்டிர்எனினும்-பெறற்கரிய கற்பொழுக்கமுடைய அயிராணிஎன்னுந் தேவர்கோன் மனைவிபோல் வாழ்க்கையிற்பெரிய புகழ்வாய்ந்த மகளிராயினும், விரும்பிப்பெறு நசையால் பின் நிற்பார் இன்மையே பேணும்நறுநுதலாள் நன்மைத்துணை - அவருள், உணவு முதலியபொருள்களை விரும்பி அவற்றை அடையும் வேட்கையால்தன் பின்னே இரந்து நிற்கும் இரவலர்இல்லாமையையே தனது இல்லற வொழுக்கத்தாற்காத்தொழுகும் இயற்கை மணங் கமழு நெற்றியையுடையபெண்ணே அவ் வில்லறத்தின் பயன்களாகியமேன்மேல் நன்மைகட்குத் துணையாவாள். கருத்து: கற்புடை மகளிர்க்கு விருந்துபுறத்தரும் இயல்பு இன்றியமையாதது. விளக்கம்: கற்பாவது, கணவன்பால்ஆழ்ந்த அன்புணர்வுடைமை. அயிராணியின் கற்புக்கூறவே இவரது கற்பும் பெறப்பட்டது. படவே,பின்னிற்பாரென்றது இரவலர்க்காயிற்று. அயிராணிகூறப்பட்டமையின், கற்பொழுக்கத்தோடு திரு உருமுதலிய ஏனைப் படைப்புக்களும் பெறப்பட்டன.இல்லறவொழுக்கமாவது, அறவோர்க்களித்தல்முதலியன; அவற்றுள்ளும் விருந்து புறந்தருதல் மிகஇன்றியமையாததாதலின், ‘பின்னிற்பாரின்மையேபேணும் நறுநுதலாள் துணை' யெனப்பட்டது,"இல்வாழ்வதெல்லாம் விருந்தோம்பி வேளாண்மைசெய்தற் பொருட்" டென்றார் நாயனாரும்.வீடுபயக்கும் அருணெறிக்கு ஏதுவாய்ப் பொருள்களிற்பற்றின்றி நின்று உலகில் அறம் வளர்க்கும்பயிற்சியே இல்லறத்தின்கண்நடைபெறுதற்குரியதாகலின், ஒரு பயனுங் கருதாதுஆருயிர்களை ஓம்புதலாகிய விருந்து புறந்தருதலின்இன்றியமையாமை இவ்வாறுணர்த்தப்பட்டது. இல்லம்போதுவார் குறிப்பறிந்து, அவரை இரவலராக்காதுஉடனே விருந்தாக ஏற்றொழுகுக வென்பார்,பின்னிற்பா ரின்மையே பேணும்' என்றார்.ஏகாராம்; தேற்றம். நன்மையென்றது, தவம் முதலியதுறவற நிலைகளை.
செல்வம் நிலையாமை பொருட்பால் கற்புடை மகளிர் குடநீரட் டுண்ணும் இடுக்கட் பொழுதுங் கடனீ ரறவுண்ணுங் கேளிர் வரினும் கடனீர்மை கையாறாக் கொள்ளு மடமொழி மாதர் மனைமாட்சி யாள். குறிப்புரை: குடம் நீர் அட்டுஉண்ணும் இடுக்கண் பொழுதும் கடல் நீர் அற உண்ணும்கேளிர் வரினும் - குடத்திலுள்ள நீரையேகாய்ச்சிப் பருகிப் பசியாறும் இன்னாக்காலத்தும் கடல் நீர் முழுமையும் உண்டுபசியாறுதற்குரிய அத்தனை உறவினர் ஒருங்குவிருந்தாக வந்தாலும், கடன் நீர்மை கை ஆறாக்கொள்ளும் மடமொழி மாதர் - அந்நேரத்தில், தன்கடமையாகிய விரும்தோம்புமியல்பைச்செயன்முறையாக மேற்கொள்கின்ற மென்மையானசொற்களையுடைய பெண்ணே, மனை மாட்சியாள் - இல்லறவாழ்க்கைக்குரிய மாட்சிமையுடையவளாவாள். கருத்து: எந்நிலையிலும்விருந்தோம்பும் இயல்பே மனை மாட்சியாகும். விளக்கம்: நீரையேனும் நிரம்ப உண்டுபசியாறுதல் கருதிக் ‘குடம்நீ' ரென்னப்பட்டது."விருந்துகண்டொளிக்குந் திருந்தாவாழ்க்கைப், பொறிப்புணர்உடம்பிற்றோன்றிஎன், அறிவுகெட நின்றநல்கூர்மை" என்றதூஉங் காண்க.உறவினர்க்கு விருந்தோம்பல் இயலாத நிலையேஇல்லறத்தார்க்கு இடுக்க ணென்பதாகலின் வறுமைப்பொழுதை ‘இடுக்கட்பொழு' தென்று விதந்தார்.‘கடனீரறவுண்ணு' மென்றது கேளிரின் பன்மையுணர்த்திநின்றது. வரினும் என்னும் உம்மை எதிர்மறையாய்வருதலின் அருமையுணர்த்திற்று. கடன் கீழ்ச்செய்யுளிற் கூறப்பட்டது. மனைமாட்சியாள் என்னும்ஒருமையால் மாதர், குற்றுகரப் போலியென்று கொள்க. புறம்.
செல்வம் நிலையாமை பொருட்பால் கற்புடை மகளிர் நாலாறும் ஆறாய் நனிசிறிதாய் எப்புறனும் மேலாறு மேலுறை சோரினும் - மேலாய வல்லாளாய் வாழும்ஊர் தற்புகழு மாண்கற்பின் இல்லாள் அமர்ந்ததே இல். குறிப்புரை: நால் ஆறும் ஆறாய், நனிசிறிதாய், எப்புறனும் மேல் ஆறு மேல்உறை சோரினும்- வீடு நாலாபக்கமும் இடிந்து வழியுடையதாய்; மிகவுஞ்சிறியதாய், எந்தப் பக்கமும் கூரை கலனாகிமேல்வழியாய்த் தன்மேல் மழை ஒழுகுவதாய் அத்துணைவறிய நிலையிலிருப்பினும், மேலாயவல்லாளாய்வாழும் ஊர் தன் புகழும் மாண்கற்பின் இல்லாள்அமர்ந்ததே இல் - உயர்ந்தஇல்லறவொழுக்கங்களில் திறமையுடையவளாய் அதனால்தான் வாழும் ஊரவர் தன்னைப் புகழ்ந்தேத்துகின்றமாட்சிமையான கற்பு நிலையுடைய மனைவிஅமர்ந்திருக்கும் வீடே வீடெனப்படும். கருத்து: செல்வம் முதலியவற்றைவிடஇல்லக்கிழத்தியின் நற்குணமே இல்வாழ்க்கைக்குமுதன்மையானது. விளக்கம்: மேலாய: பெயர். வறியநிலையிலும் இன்சொல் முதலிய நலங்களுடன் மனம்அமைய விருந்தோம்புதல் செய்தலின், ‘வல்லாளாய்'என்றார். தற்புகழும் இல்லாள் என்க.இல்லறவொழுக்கமுடையது இல்லம் எனப்படுமல்லதுஏனைச் செல்வச் சிறப்புடையன அஃதாகாவென்பதுகருத்து. இவை மூன்றுபாட்டானுங் கற்புடை மகளிர்க்குமுதன்மையாவன விருந்து புறந்தரல் முதலிய இல்லறக்கடமைகளென்பது விளக்கப்பட்டது."உள்ளதுதவச்சிறிதாயினும் மிகப்பல ரென்னாள் நீள்நெடும் பந்தர் ஊன்முறை யூட்டும் இற்பொலிமகடூஉ" என்றதூஉங் காண்க. புறம்.
செல்வம் நிலையாமை பொருட்பால் கற்புடை மகளிர் கட்கினியாள், காதலன் காதல் வகைபுனைவாள், உட்குடையாள், ஊர்நாண் இயல்பினாள், - உட்கி இடனறிந் தூடி இனிதின் உணரும் மடமொழி மாதராள் பெண். குறிப்புரை: கட்கு இனியாள் காதலன்காதல் வகை புனைவாள் - பார்வைக்கு இனியஇயற்கையழகுடைய வளாய்த் தன் காதலன் விருப்பப்படிசெயற்கைக் கோலங்கள் செய்து கொள்வாளும், உட்குஉடையாள் ஊர்நாண் இயல்பினாள் - தனதுகற்பொழுக்கச் சீரினாற் கண்டாரெவரும் அஞ்சும்மதிப்புடையவளாய்த் தான் வாழும் ஊரிலுள்ளமகளிரெல்லாரும் தன்னுடைய இல்லறச் செய்கைகளின்திறமைக்கு வியந்து நாண்கொள்ளற்குரியமாட்சிமையுடையாளும், உட்கு இடன் அறிந்து ஊடிஇனிதின் உணரும் மடமொழி மாதராள் - தன்கணவன்பால் உள்மதிப்புக்கொண்டு செவ்வியறிந்துஊடியும் அஃது இனிதாம்படி அவ்வூடல் நீங்கியும்இன்பம் விளைக்கும் மென்மையான மொழிகளையுடையபெண்ணே, பெண் - இல்வாழ்க்கைக்குரிய வாழ்க்கைத்துணையாவள். கருத்து: தோற்றமும் ஒழுக்கமும்காதலுமுடைய மாது சிறந்த வாழ்க்கைத் துணையாவாள். விளக்கம்: இல்லக் கிழத்தியின்அறுவகை நலங்களை மூவிரு முகமாக இச் செய்யுள்வகுத்தோதிற்று. இனியாள் புனைவாள் ஓரிரு ஓவகையும்,உடையாள் இயல்பினாள் மற்றோரிருவகையும், ஊடுவாள்ஊடலுணர்வாள் பிறிதோரிரு வகையுமாயின. இறுதிப்பகுதி ஊடி உணருமென்று வந்தமையான், ஏனைப்பகுதிகளும்அவ்வாறே எச்சமும் முடிவுமாய் உரைக்கப்பட்டன.தனக்கென்றொரு புனைவின்மையின் ‘காதலன் காதல்வகை புனைவா' ளென்றார். கணவன் பிரிவிற் கண்ணகிவாடிய மேனி வருத்தத்தோடு இருந்தமை ஈண்டுநினைவுகூரப்படும். உணர்தல். தெளிதல்ஊடல் சிறிதுநீட்டிப்பினும் இன்பங்கெடுமாகலின் அளவறிந்துணர்தல் தோன்ற, ‘இனிதினுணரு' மென்றார்;கணவன்மாட்டு உட்கின்றி இஃதியலாமையின் ‘உட்கிஊடி உணரும்' எனப்பட்டது. இதனாற் கற்புடைமகளிரின்நலங்கள் தொகுத்துரைக்கப்பட்டன. சிலப்.
செல்வம் நிலையாமை பொருட்பால் கற்புடை மகளிர் எஞ்ஞான்றும் எங்கணவர் எந்தோள்மேற் சேர்ந்தெழினும் அஞ்ஞான்று கண்டேம்போல் நாணுதுமால்; - எஞ்ஞான்றும் என்னை கெழீஇயினர் கொல்லோ பொருள்நசையாற் பன்மார்பு சேர்ந்தொழுகு வார். குறிப்புரை: எஞ்ஞான்றும் எம் கணவர்எம் தோள் மேல் சேர்ந்தெழினும் அஞ்ஞான்றுகண்டேம்போல் நாணுதும் - எம் கணவர் எந்நாளும்எம் தோள்மேல் முயங்கியெழுந்தாலும் தலைநாளிற்கண்டேம்போல் அவர் பால் யாம்நாணமுடையமாயிருக்கின்றேம்; எஞ்ஞான்றும் பொருள்நசையாற் பன் மார்பு சேர்ந்தொழுகுவார் என்னைகெழீஇயினர் கொல்லோ - அவ்வாறிருக்க, பொருள்வேட்கையால் எந்நாளும் ஆடவர்பலர் மார்புகளைச்சற்றும் நாணின்றிக் கூடியொழுகும் பரத்தையர்தமதுள்ளத்தில் என்னதான்உடையராயிருக்கின்றனரோ; கருத்து: கற்புடை மகளிர்க்கு நாணமுதலிய பெண்மை யியல்புகள் அணிகளாகும். விளக்கம்: எம் என்னும் பன்மைஉயர்வு கருதிற்று. தோள் இன்பந்துய்த்தற்கு இலக்கணை. ஆலுங் கொல்லும் அசை.பொருள் நசையால் என்றது இயல்பு உணர்த்தியபடி.பொருணசையாற் சேர்ந்தொழுகலின் காதலுமின்றிப்பன்மார்பு சேர்ந்தொழுகலின் கற்பும் நாணுமின்றிஅவம்படுதலின், அவரெல்லாந் தமதுயிரில்என்னைகெழீஇயினரோ என்று குலமகள் ஒருத்திதனக்குள் வியந்து கூறுவாளாயினள். உயிரினுஞ்சிறந்ததாய் நாணும் நாணினுஞ் சிறந்ததாய்க்கற்புமிருத்தலின், அவை யிரண்டு மில்லாதஉயிர் யாதுமில்லாத தாயிற்று. ஆதலின்கெழீஇயினரோவென்னும் வினா ஈண்டு எதிர்மறைப்பொருளது. முதன்மைபற்றி நாண் கூறினமையின், அச்சம்மடம் பயிர்ப்பென்னும் ஏனைப்பெண்மையியல்புகளுங் கொள்ளப்படும். தொல். கிளவி. தொல். கள. தொல். கள.
செல்வம் நிலையாமை பொருட்பால் கற்புடை மகளிர் உள்ளத் துணர்வுடையான் ஓதிய நூலற்றால் வள்ளன்மை பூண்டான்கண் ஒண்பொருள்; -தெள்ளிய ஆண்மகன் கையில் அயில்வாள் அனைத்தரோ நாணுடையாள் பெற்ற நலம். குறிப்புரை: உள்ளத்து உணர்வுடையான்ஓதிய நூல் அற்று - உள்ளத்தில் இயற்கைநுண்ணுணர்வுடையதா னொருவன் கற்ற கல்வியறிவையொத்த தாயும், வள்ளன்மை பூண்டான்கண்ஒண்பொருள் அற்று - இயற்கையிற் கொடைக்குணம்உடையானொருவனிடத்து மாட்சிமைப்படுகின்ற ஒள்ளியசெல்வத்தை ஒத்ததாயும், தெள்ளிய ஆண் மகன்கையில் அயில்வாள் அனைத்து - வாட்பயிற்சியில்தெளிவடைந்த வீரமிக்க ஆடவனொருவன் கையில்விளங்கும் கூரிய வாட்படையை ஒத்ததாயும்இருக்கின்றது, நாண் உடையாள் பெற்ற நலம் - நாணம்முதலிய பெண்ணீர்மைகளுடைய கற்புடைப்பெண்ணொருத்தி பெற்ற அழகு முதலிய நலங்களென்க. கருத்து: மகளிர்க்கு நாண முதலியபெண்மைப் பண்புகளிருப்பின், அவர்க்கு ஏனைநலங்களுஞ் சிறக்கும். விளக்கம்: அற்றென்பதைஒண்பொருட்குங் கொள்க. உவமைகளால் அறிவும்கொடையும் வீரமுமாகிய ஆடவரியல்புகள் பெறப்பட்டன; அனைத்தே மகளிர்க்கு நாண் என்பது கருத்து. குறித்த ஆணியல்புகளின்றேற் கல்வியும் பொருளும் கருவியும் மாட்சிமைப் படாமைபோல, நாண் முதலிய பெண்ணீர்மைகளின்றேல் எவ்வகை நலனும் பயனில்லன வென்பதாம். நலமென்றது, அழகு முதலிய பலவகை நன்மைகளை, இவை யிரண்டு பாட்டானும் கற்புடை மகளிர்க்குரிய நாணினது நன்மை கூறப்பட்டது. தொல். கள.
செல்வம் நிலையாமை பொருட்பால் கற்புடை மகளிர் கருஞ்கொள்ளுஞ் செங்கொள்ளுந் தூணிப் பதக்கென்று ஒருங்கொப்பக் கொண்டானாம் ஊரன்; -ஒருங்கொவ்வா நன்னுதலார்த் தோய்ந்த வரைமார்பன் நீராடாது என்னையுந் தோய வரும். குறிப்புரை: கருங்கொள்ளும்செங்கொள்ளும் தூணிப்பதக்கு என்று ஒருங்கு ஒப்பக்கொண்டானாம் ஊரன் - மருதநிலத்து ஊரில்இருந்துகொண்டே அவ்வூரானொருவன் தாழ்ந்தகருங்கொள்ளையும் உயர்ந்த செங்கொள்ளையும் ஒரேவிலைக்குத் தூணிப்பதக்கு என்று ஒரே அளவாகஒன்றாய் வாங்கினானாம்; ஒருங்கு ஒவ்வாநல்நுதலார்த் தோய்ந்த வரைமார்பன் நீராடாதுஎன்னையும் தோயவரும் - அதுபோலப்பெண்மையியல்பில் என்னோடு ஒருங்கு ஒவ்வாத நல்லநெற்றியையுடைய பரத்தையரை மருவிய மலைபோலும்பெரிய மார்பினையுடைய என் கணவன் நீராடுதலுஞ்செய்யாது என்னையும் மருவ வருகின்றனன். கருத்து: கற்புடை மகளிர் தூயர். விளக்கம்: தூணி யென்பது நான்குமரக்காலும் பதக்கென்பது இரண்டு மரக்காலுமாய்த்தூணிப் பதக்கென்பது ஆறு மரக்காலளவையுணர்த்திற்று. ஆம் என்பது இகழ்வின் மேற்று.உருவில் மட்டும் ஒத்து அழகியராய் உள்ளத்தால்ஒவ்வாரான பரத்தையரென்றற்கு ‘நன்னுதலா'ரென்றும். ‘ஒருங்கொவ்வா' வென்றுங் கூறினார். மேன்மாசினும்மனமாசு தீயதாய் மேற்புறத்தைப் பின்னுந்தீதாக்கி ஊறுவிளைத்தலின், தலைவிபெரிதஞ்சினாள். "மனத்துக்கண்மாசிலனாதல் அனைத்தறம்" என்றதூஉம்இக்கருத்தின் மேற்று. ‘நீராடா' தென்னுங்குறிப்பால் இவ்வச்சமும், பரத்தையர்இழிவுடையராய்த் தன்னோடொவ்வாமையும் ஆனால்தலைமகன் ஒப்புக் கருதினமையும், கணவர் எத்துணைத்தவறுடையராயினும் கற்புடை மகளிர் அவரது திருத்தம்விரும்புவரல்லது வெறுத்து வேறாவரல்ல ரென்பதும்,பிறவும் பெறப்படும். இது, பரத்தையர் மாட்டுப்பிரிந்து வந்த தலைமகனோடு ஊடிய தலைமகள் தன்னுட்கூறியது.
செல்வம் நிலையாமை பொருட்பால் கற்புடை மகளிர் கொடியவை கூறாதி பாண! நீ கூறின் அடிபைய இட்டொதுங்கிச் சென்று - துடியின் இடக்கண் அனையம்யாம் ஊரற் கதனால் வலக்கண் அனையார்க் குரை. குறிப்புரை: கொடியவை கூறாதி பாண -பாண! கேட்க இன்னாதனவான தலைவனைப் பற்றியநயவுரைகளை எம் மிடங் கூறாதே; நீ கூறின் - நீகூறுவதானால், துடியின் இடக்கண் அனையம் யாம் ஊரற்குஅதனால் - ஊரனான எம் தலைவனுக்கு யாம் உடுக்கையின்இடப்பக்கத்தை ஒத்துப் பயன்படாமலிருக்கின்றேமாதலால், அடி பைய இட்டு ஒதுங்கிச் சென்று வலக்கண்அனையார்க்கு உரை - மெல்ல அடியிட்டு நீங்கிப்போய் அவ்வுடுக்கையின் வலப்பக்கம்போற்பயன்படுதலுடைய பரத்தையர்க்குக் கூறு. கருத்து: கற்புடை மகளிர் தமதூடுதலாற்கணவரது திருத்தத்தை நாடுதற்குரியர். விளக்கம்: பரத்தையிற்பிரிந்துவந்த தலைமகனைப் பற்றி நயவுரைகள்கூறிக்கொண்டு பாணன் வாயில்வேண்டத் தலைவிமறுத்தமை கூறியது. இது புலவியாற்சினக்குறிப்போடிருந்தமையால் நயவுரைகள் கொடியவையாயின. பாணன் தலைவனுக்குத் தூதாக வந்தவன்;அஞ்சிப் பதுங்கி யொதுங்கிச் செல்லும்அவனதிழிந்த நடையியல்பு கூறி இகழ்வாள், ‘அடி பையஇட்டொதுங்கிச் சென்று' என்றாள். துடிக்குக்கண்ணென்றது அதன்கண் ஒலியெழுப்பும் இடம். உவமைபயன்படாமையும் பயன்படுத்தலுங் காட்ட எழுந்தது.யாம் என்னும் பன்மை உயர்வினின்றது. ஊரன்,மருதநிலத்துத் தலைவன்; ஊடல் மருதத்தின்உரிப்பொருளாகலின் இவ்வாறு கூறுதல் மரபு.இச் செய்யுட் கருத்து இவ் வதிகாரத்தின் இறுதிச்செய்யுளினும் வரும். தொல். அகத்.
செல்வம் நிலையாமை பொருட்பால் கற்புடை மகளிர் சாய்ப்பறிக்க நீர்திகழுந் தண்வய லூரன்மீது ஈப்பறக்க நொந்தேனும் யானேமன், - தீப்பறக்கத் தாக்கி முலைபொருத தண்சாந் தணியகலம் நோக்கி யிருந்தேனும் யான். குறிப்புரை: சாய் பறிக்க நீர்திகழும் தண்வயல் ஊரன்மீது ஈப் பறக்கநொந்தேனும் யானேமன் - கோரைகளைப்பறித்துவிடுதலால் நீர் நன்கு விளங்கித்தெரிகின்ற குளிர்ந்த வயல்களையுடைய ஊரனாகிய என்தலைவன் மேல் முன்னெல்லாம் ஓர் ஈ வந்து உட்காரஅதுபொறாமல் வருந்தியவளும் யானே; தீப்பறக்கத்தாக்கி முலை பொருத தண் சாந்து அணி அகலம்நோக்கி இருந்தேனும் யான் - தீப்பொறி பறக்கப்பரத்தையர் தம் கொங்கைகளால் ஞெமுக்கிக்கலவிசெய்த, குளிர்ந்த சந்தனமணிந்த அவனது அகன்றமார்பினை இப்போது பார்த்துப்பொறுத்திருந்தவளும் யானே காண். கருத்து: கற்புடைய மகளிர்க்குத் தங்கணவர் மாட்டு அன்பு எந்நிலையிலும் குன்றாது. விளக்கம்: களைகளாகிய கோரைகளைப்பறித்துவிட நீர் நன்கு விளங்கித் தெரிதல்போல,பரத்தையிற் பிரிவென்னுந்தலைவனதுகுறையொன்றனைக் கருதாதுவிட அவன் நலங்கள் நன்குவிளங்கிக் பெரிதும் இன்பஞ் செய்கின்றனவாதலின், அந்நலங்களால் யான் கவரப்பட்டுப்பொறுப்பேனாயினே னென்பது தலைவியின் விடை..புலவாது நின்றனை யென்ற தோழிக்குத் தலைவி கூறியதுஇது. "ஊடியிருப்பினும் ஊரன் நறுமேனி கூடலினிதாம்எனக்கு" ஐந்திணையைம்பதினும் இது வரும்.முன்னே பொறாதிருந்தே னென்றமையின், மன் கழிவுப்பொருளினின்றது. ‘தண்சாந் தணியகல' மென்னுங்குறிப்பால் தலைவன் நலங்கள் பைய வெளிப்படும்.பின் வந்த யான் என்பதற்கும் ஏகாரங் கொள்க. ஐந். ஐம்.
செல்வம் நிலையாமை பொருட்பால் கற்புடை மகளிர் அரும்பவிழ் தாரினான் எம்அருளும் என்று பெரும்பொய் உரையாதி, பாண; - கரும்பின் கடைக்கண் அனையம்நாம் ஊரற் கதனால் இடைக்கண் அனையார்க் குரை. குறிப்புரை: அரும்பு அவிழ் தாரினான்எம் அருளும் என்று பெரும்பொய் உரையாதி பாண -அரும்புகள் போதாகி மலரும் மாலையை யணிந்த எம்தலைவன் எமக்குத் தலையளி செய்ய வருகின்றனன்என்று பெரியதொரு பொய்ம்மொழியை, பாண!எம்மிடம் மொழியாதே கரும்பின் கடைக்கண்அனையம் நாம் ஊரற்கு அதனால் இடைக்கண்அனையார்க்கு உரை - ஊரனாகிய எம் தலைவர்க்கு யாம்கரும்பின் நுனிக் கணுக்கள் போலச் சுவையிலேமாயிருக்கின்றனமாதலின் அதன் நடுக் கணுக்களையொப்ப அவற்குச் சுவை மிக உடையரானபரத்தையரிடம் அதனைச் சொல். கருத்து: கற்புடை மகளிர், கணவன்வருகையில் அன்புடையராயிருப்பர். விளக்கம்: தலைவன் வருகை தனக்குப்பொய்யெனவே பாரத்தையர்க்கு மெய்யாதல்பெறப்படுதலின், ‘இடைக்கண்ணனையார்க்குரை'யென்றாள். ‘பொய்யுரையாதி' யென்னுங் குறிப்பால்,அவன் அருளுதல் மெய்யாதல் வேண்டுமென்னும்தலைவியின் வேட்கை பெறப்படும். கண்ணென்றது கணு.கரும்பின் நுனி இடைப்பகுதிகளின் சுவையியல்புமுன்னும் வந்தது. இவை நான்கு பாட்டானும்கணவன் தவறுடையானாயினும் தாம் பொறுமையுடையராய்அன்பின் நீங்காது தமது புலத்தலால்அவனைத்திருத்தி ஏற்றுக்கோடலாகிய கற்புடைமகளிரது மற்றொரு கடமையும் நுவலப்பட்டது. நாலடி.
செல்வம் நிலையாமை காமத்துப்பால் இது காமவின்பத்தின் இயல்பை யுணர்த்தும் பகுதி. அறம்பொருள் இன்பமென்னும் வழக்கால், காமம் இன்பமென்றே கூறப்படுதல் விளங்கும். விளங்கவே, வீடென்பது இன்பத்தின் வேறென்றுணரப்படும். அஃது, இன்ப துன்ப மற்ற அமைதி நிலையென்று கொள்க. அந்நிலையையெய்துங்கால் அஃது இவ்வின்பத்தினுஞ் சிறப்புடையதாய் விளங்கலின், அறம் பொருளின்ப மென்னும் இம் மூவகை உறுதிப்பொருளினும் உயர்வுடையதாய் இவற்றின் விடுதலையேயாம். ஆதலின், துய்த்தற் குரியவாக நூல்களால் உணர்த்தப்படும் பொருள்கள் அறமுதலிய மூன்றுமே யாகலின் காமத்துப்பால் மூன்றாம் பகுதியாக இறுதியில் நின்றதென்க. காமநுதலியல் ‘இன்பத்தின் இயல்பு நுவலும் அதிகாரம்' என்பது பொருள்; இன்பமாவது, பொருள்களின் வாயிலாகப் புலன்களால் நுகர்வதோர் உணர்வு. அதன்கண், ஒருகாலத் தொருபொருளால் ஐம்புலனும் ஒருங்கு நுகருங்காமவின்பம் சிறத்தலின், அதுவே ‘இன்ப' மென் றெடுத்துக்கொள்ளப்பட்டது. அஃது, ஒத்த தலைவனுந் தலைவியும் இயற்கையன்பினால் ஒருவரையொருவர் இன்றியமையாராய்த் தம்முட் கூடுங்கால், அவருள்ளத்துணர்வாய்த் தோன்றுவதோ ருணர்வுநிலை. அந்நிலை மாட்சிமைப்பட்டன்றி அதனினுஞ் சிறந்ததொன்று கைவாராமையின், அது மாட்சிமைப்படும் வாயில்கள் இவ் வதிகாரத்தா னுவலப்படும். முயங்காக்காற் பாயும் பசலைமற் றூடி உயங்காக்கால் உப்பின்றாம் காமம்; - வயங்கோதம் நில்லாத் திரையலைக்கும் நீள்கழித் தண்சேர்ப்ப! புல்லாப் புலப்பதோர் ஆறு. குறிப்புரை: முயங்காக்கால் பாயும் பசலை - தலைவியை மருவாவிடின் அவளுடம்பிற் பசலைநிறம். பரவும்; மற்று ஊடி உயங்காக்கால் உப்பு இன்றாம் காமம் - ஆனால் அவள் இடையிடையே ஊடல்கொண்டு உள்ளம் மெலியாவிடின் காமவுணர்வு சுவையில்லாததாகும்; வயங்கு ஓதம் நில்லாதத் திரை அலைக்கும் நீள் கழித் தண்சேர்ப்ப புல்லாப் புலப்பதோர் ஆறு - ஆதலால் விளங்குகின்ற கடலானது ஒரு படியிலும் நில்லாத தன் அலைகளால் அலைத்தெதிர்கின்ற நீண்ட கழியினையுடைய குளிர்ந்த துறைவனே! காமத்திற்கு ஊடிப் புணர்வது ஓர் இனிய நெறியாகும். கருத்து: ஊடலுங் கூடலும் காமம் மாட்சிமைப்படுதற்கு ஏது. விளக்கம்: பசலையென்றது ஈண்டு ஒளிமழுக்கம். உப்பு. சுவையென்னும் பொருட்டு ஆகுபெயர்; சற்றே குறையினுங் கூடினுஞ் சுவை கெட்டு மற்றளவி னிற்கச் சுவை பயப்பதொரு பொருளாகலின், அவ் வியல்பினரான ஊடற் சுவைக்கு ஈதுரைக்கப்படும். "உப்பமைந் தற்றாற் புலவி" என்றார் நாயனாரும்; பிறரும் "உப்பமை காமம்" என்பர். அலை எதிர்தலாற் கழிநீர் நிறைந்து உப்புமிக்கு மாட்சிமைப்படுதலின், தலைவன்பாற் குறைகண்டு அதனால் ஒருநிலையினு நில்லாது கடலலைபோற் கொந்தளிக்கும் உள்ளமுடையளான தலைவி, தன்கண் வந்து கூடுகின்ற தலைவனைத் தனதூடலால் எதிர்த்து அவனுணர்வை நீர்மையுஞ் சுவையு மிகுவித்து மாட்சிமைப்படுத்துவ ளென்பது ‘நில்லாத் திரையலைக்கும் நீள்கழி' என்னும் அடைமொழியின் கருத்தாம். ‘ஊடுதல் காமத்திற்கின்பம் அதற்கின்பம், கூடி முயங்கப் பெறின்' என்னும் உண்மை இச் செய்யுளான் உணர்த்தப்பட்டது. ‘புலவாப்புல்லுவதோராறு' என்று மாற்றி எதிர் நிரனிறையாகக் கொள்க. தலை மகளை ஊடல் நீக்கிக் கூடிய தலைமகற்கு, முன்னம் வாயில் நேர்ந்த தோழி உவகை மிக்குக் கூறியது. இதனாற் காமம் மாட்சிமைப் படுவதோ ராறு நுவலப்பட்டது.
நான்மணிக்கடிகை மூலமும் உரையும் கடவுள் வாழ்த்து மதிமன்னு மாயவன் வாள்முகம் ஒக்கும் கதிர்சேர்ந்த ஞாயிறு சக்கரம் ஒக்கும் முதுநீர்ப் பழனத்துத் தாமரைத் தாளின் எதிர்மலர் மற்றவன் கண்ஒக்கும் பூவைப் புதுமலர் ஒக்கும் நிறம் மதி - திங்கள், மன்னும் மாயவன் - அழிதலில்லாத திருமாலினது, வாள் முகம் ஒக்கும் - ஒளியையுடைய திருமுகத்தை ஒத்திருக்கும்; கதிர்சேர்ந்த ஞாயிறு - ஒளிசிறந்த ஞாயிறு, சக்கரம் ஒக்கும் அவனது சக்கரப் படையை ஒத்திருக்கும், முதுநீர்ப் பழனத்து - வற்றாத நீரையுடைய கழனிகளில் முளைத்த, தாமரைத்தாளின் - செந்தாமரைத் தண்டினின்றும், எதிர் மலர் - தோன்றுஞ் செந்தாமரைப் பூ, அவன் கண் ஒக்கும் - அவன்றன் கண்களை ஒத்திருக்கும்; பூவைப் புதுமலர் - காயா மரத்தின் புதுப் பூ; நிறம் ஒக்கும் - அவனது திருமேனியின் நிறத்தை ஒத்திருக்கும். என்னுஞ் சிலப்பதிகாரத்திலும் இப்பொருளுண்மை காண்க. எதிர்மலர் - செவ்வி மலர் எனினுமாம். ‘மதிமுக மொக்கு' மென்று கூறிய உவமையை ‘முகம் மதியொக்கு' மென்னுங் கருத்திற் கொள்க; பிறவும் அன்ன. இதனை ‘மாறிய வுவமை' யென ஓரணியாகக் கொள்ளுப. ‘நான்மணிக்கடிகை' யென்னும் நூல் ஒவ்வொரு பாட்டிலும் நந்நான்கு பொருள் வைத்துக் கூறுதலின், அக்குறிப்பினை இக் கடவுள் வாழ்த்துச் செய்யுளும் நான்கு பொருளே கூறிக் குறிப்பதாயிற்று. இக் குறிப்பினை மேற்பாட்டினுங் காண்க. இது பஃறொடை வெண்பா. மற்று : அசை.
படியை மடியகத் திட்டான் அடியினால் முக்காற் கடந்தான் முழுநிலம் - அக்காலத்து ஆப்பனிதாங்கிய குன்றெடுத்தான் சோவின் அருமை யழித்த மகன். பொருள்: படியை - உலகத்தை, மடியகத்து இட்டான் - வயிற்றில் வைத்தான், அடியினால் - தன் திருவடிகளால், முழு நிலம் - உலகங்கள் முழுமையும், முக்கால் கடந்தான் - மூன்று முறைகளில் தாவியளந்தான்; அக்காலத்து - இந்திரன் மழை பெய்வித்தபோது, ஆ பனி - ஆனிரைகளின் நடுக்கத்தை, தாங்கிய - தடுக்கும் பொருட்டு, குன்று எடுத்தான் - ‘கோவர்த்தன' மென்னும் மலையைக் குடையாகத் தூக்கினான்; சோவின் அருமை - பாணாசுரனது அழித்தற்கு அரிய நெருப்பு மதிலை அழித்த மகன் - அழித்த பெருமானான திருமால். விளக்கவுரை: யசோதைக்குக் கண்ணன் எல்லா உலகங்களையுந் தன் வயிற்றகத்திற் காட்டினனாதலின், ‘படியை மடியகத் திட்டா' னென்றார். மடியகத்து : உருபின்மேற் சாரியை நின்றது. மடி - வயிறு; ‘மடியகத்திட்டாள் மகவை'என்னுஞ் சிலப்பதிகார வடிக்கு அடியார்க்கு நல்லா ருரைக்கும் உரையைக் காண்க. ‘மூக்கா லென்றது, ஒருகால் நிலவுலகத்தையும் மற்றொருகால் விண்ணுலகத்தையும் கடந்து பின்னொருகால் மாபலியின் தலைமேல் வைத்துக் கீழுலகத்தையும் அளந்தன னென்றற்கு : தாங்கிய : செய்யிய வென்னும் வாய்பாட்டு வினையெச்சம்; தாங்குதல் - துயர்கெடுத்தல். ஆயர்பாடியினர் தேவேந்திரனுக்குத் தைப் பொங்கலில் இட்ட பொங்கலுணவைத் தான் ஏற்றுக்கொண்டமையால், இந்திரன் சினந்து கல் மழை பெய்வித்த போது பசுக்கள் நடுங்குதல் கண்டு ‘கண்ணன், கோவர்த்தன மலையைக் குடையாகத் தூக்கிப் பிடித்து அவற்றைப் பாதுகாத்தமையால், ‘ஈண்டுக் குன்றெடுத்தா' னென்றார். ‘உஷா'வி னிடத்திருந்த ‘அநிருத்தனை' மீட்டற்குச் சென்றபோது ஆங்கெதிர்த்துப் பொருத பாணாசுரனை அவன் மதிற் கோட்டையோடு அழித்தமையே ‘சோ' அழித்த வரலாறு. அம்மதில் நெருப்பினானியன்ற தாகலின், ‘சோவின் அருமை' என்றார். மகன் - இங்கே பெரியோன் என்னும் பொருட்டு.
எள்ளற்க என்றும் எளியாரென்றென்பெறினும் கொள்ளற்க கொள்ளார்கைம் மேலவா- உள்சுடினும் சீறற்க சிற்றிற் பிறந்தாரைக் கூறற்க கூறல் லவற்றை விரைந்து. பொருள்: என்றும் - எக்காலத்தும், எளியார் என்று - பொருள்வலிகளாற் குறைந்தவரென்று, எள்ளற்க - பிறரை இகழாதொழிக; என்பெறினும் - மிகச் சிறந்த தொன்றைப் பெறுவதனாலும், கொள்ளார் கை - கொள்ளத் தகாதவருடைய கைகள், மேல ஆ - தன் கைகளுக்கு மேற்பட்டன ஆகும்படி, கொள்ளற்க - அவர்பால் ஒன்றும் ஏற்றுக் கொள்ளாதொழிக: சிறு இல் பிறந்தாரை - வறுமைமிக்க குடியிற் பிறந்தவர்களை, உள் சுடினும் - அவர் செய்கை தனதுள்ளத்தை வருத்துவதாயினும், சீறற்க - சினவா தொழிக; கூறு அல்லவற்றை - சொல்லத்தகாத சொற்களை, விரைந்து - பதைத்து, கூறற்க - சொல்லாதொழிக. கருத்து: எவரையும் எளியரென்று இகழாதே; சிறந்த பொருளாயினுந் தகாதவர் கொடுக்க வாங்காதே; தகாதன செய்தாலும் ஏழை மக்களைச் சீறாதே; தகாத சொற்களைப் பதைத்துச் சொல்லிவிடாதே. விளக்கவுரை: தன்னிடத்தில் ஒன்றை நச்சி நட்பாய் வருங்காலத்திலும், அல்லது தனக்கு ஆக்கம் வந்த காலத்திலும் பிறரை எள்ளற்க வென்பார், ‘என்றும்' என்றார். என் பெறினும் உம்மை உயர்வு சிறப்பு. மேல: பலவின்பால் முற்று. ஆ: ஈறு தொகுத்தல். சுடினும் - உம்மை எதிர்மறை. சிற்றில் என்புழி, சிறுமை வறுமைமேல் நின்றது.
பறைபட வாழா அசுணமா உள்ளங் குறைபட வாழார் உரவோர்- நிறைவனத்து நெற்பட்ட கண்ணே வெதிர்சாந் தனக்கொவ்வாச் சொற்பட வாழாதாஞ்சால்பு. பொருள்: அசுணமா - கேகயப் பறவைகள், பறை பட வாழா - பறையின் ஓசை தஞ் செவியிற்பட்டால் உயிர்வாழ மாட்டா; உரவோர் - அறிவுடையோர், உள்ளம் குறைபட வாழார் - தமது பெருநிலை குறைபட்டால் உயிர்தாங்கமாட்டார், நிறை வனத்து - மரங்கள் நிறைந்த காட்டில், வெதிர் - மூங்கில்கள், நெல் பட்ட கண்ணே - நெல்லுண்டானபோதே, சாம் - பட்டுப் போகும்; சால்பு - நிறையுடைய சான்றோர், தனக்கு ஒவ்வாச் சொல்பட வாழாது - தமது நிறைவுக்குக் குறைவான இழிவுரைகள் உண்டானால் உயிர் வாழ மாட்டார். கருத்து: சான்றோர்கள் தமக்கு மானக்கேடு உண்டாகும்படி உயிர்வாழமாட்டார். விளக்கவுரை: பறை - ஒருமுகக் கருவி. அசுணமா பறையோசை கேட்கின் இறந்துபடு மென்பதனை, ‘மறையிற்றன் யாழ் கேட்ட மானை யருளா, தறைகொன்று மற்றத னாருயிரெஞ்சப் பறையறைந்தாங்கு' என்னும் நெய்தற் கலியா னுணர்க. ‘உள்ள' மென்றது ஈண்டு ஊக்கத்தை. ‘உள்ளத்தனைய துயர்வு'என்பதுங் காண்க. தமது ஊக்கங் குறையும்படி ஏதேனும் அலர்மொழி ஏற்படுமானால் உரவோர் உயிர் தாங்காரென்பது கருத்து. நெற்பட்ட கண் - கண் : வினையெச்ச விகுதி; ஈண்டு விகாரத்து இயல்பு. சாம் : ஈற்று மிசையுகரம் மெய்யொடுங் கெட்டது. பெரியோர் செயல் அவரியல்பின் மேலேற்றிச் ‘சால்பு வாழாதா' மெனப்பட்டது: ஆம் : அசை. இச்செய்யுளிற் கூறப்பட்ட கருத்துக்கள் நான்கும் ஒன்றே யாயினும்; நூன்முறைமைபற்றி நாற்பொருளாய்க் கூறி விளக்கினார்; மேல்வருமிடங்களிலும் இங்ஙனங் கொள்க. பெரியோர் சொல்பட்டால் சாவதாம்.
மண்ணி யறிப மணிநலம் பண்ணமைத்து எறிய பின்னறிப மாநலம் மாசறச் சுட்டறிப பொன்னின் நலங்காண்பார் கெட்டறிப கேளிரான் ஆய பயன். பொருள்: மணி நலம் - மாணிக்கம் முதலான மணிகளின் நல்லியல்பை, மண்ணி அறிப - கழுவியறிவார்கள்; மா நலம் - குதிரையின் நல்லியல்பை, பண் அமைத்து - அதன்மேற் சேணமமைத்து, ஏறிய பின் அறிப - ஏறிய பின் அறிவார்கள்; பொன்னின் நலம் காண்பார் - பொன்னின் மாற்றை யறிவார், மாசு அற - குற்றங்கெட, சுட்டு அறிப - அதனை உருக்கியறிவார்கள்; கேளிரான் ஆய பயன் - உறவினரால் உண்டாகும் பயனை, கெட்டு அறிப - செல்வமெல்லாங் கெட அறிவார்கள். கருத்து: மக்கள் செல்வம் கெட்டு வறுமையுறும்போது தான் அவர் உறவினரால் அவர்க்கு உண்டாகும் பயன் நன் கறியப்படும். விளக்கவுரை: மண்ணல் - கழுவல். பண் - சேணத்தையுணர்த்துதல், ‘பண்ணென்ப பரிமாவின் கலணையும் பேர்'என்னுஞ் சூடாமணி நிகண்டினாற் காண்க. பொன்னின்நலமென்பது, வெள்ளி முதலியன:கலவாமை. காண்பார் இதனை மற்றவற்றிற்குக் கூட்டியுரைத்தலுமாம். கேளிர் - ‘கேண்மை' யென்னும் பண்படியாகப் பிறந்த பல்லோர் படர்க்கைப் பெயர். செல்வ மிக்கா னொருவன் தான் வறுமையுற்ற காலத்துக் கேளிரின் நன்றியறிவை நன்கறிவானாதலின் ‘கெட்டறிப.....பயன்' என்றார்.
கள்ளி வயிற்றின் அகில்பிறக்கும் மான்வயிற்றின் ஒள்ளரி தாரம் பிறக்கும் பெருங்கடலுள் பல்விலைய முத்தம் பிறக்கும் அறிவார்யார் நல்லாள் பிறக்குங் குடி. பொருள்: அகில் - அகிற்கட்டை, கள்ளி வயிற்றின் பிறக்கும் - கள்ளிமரத்தின் நடுவில் உண்டாகும்; ஒள் அரிதாரம் - ஒளியுள்ள அரிதாரம், மான் வயிற்றின் பிறக்கும் - மான் வயிற்றில் உண்டாகும்; பல் விலைய முத்தம் - மிக்க விலையுடைய முத்துக்கள், பெருகடலுள் பிறக்கும் - பெரிய கடலினுள் பிறக்கும்; நல் ஆள் - நல்ல மக்கள், பிறக்கும் குடி - பிறக்கும் குடியை, அறிவார் யார் - முன்பே அறிய வல்லவர் யார்?கருத்து: எக்குடியினும் நன்மக்கள் தோன்றுவர். விளக்கவுரை: கள்ளி - சதுரக்கள்ளி; அகின்மரம் வேறேயிருப்பினும், இக் கள்ளியினுள் உண்டாகும் உள்ளீடு அகில் போல் மணமுடைமையின் இதனையும் ‘அகி' லெனக் கொள்வர். விலைய : குறிப்புப் பெயரெச்சம், பல்விலைய என்பதிற் பன்மை மிகுதி மேற்று. ஆள் - நல்லியல்புகளை ஆளும் நன்மக்கட்குப் பெயராய் வந்தமையின் தொழிலாகு பெயராம். எக்குடியினும் நல்லார் பிறத்தலைப் பண்டும் இன்றுங் காண்கின்றமையின், அவர் பிறக்குங் குடி இதுதானென்று துணிந்தறிதல் கூடாமையின் ‘அறிவார் யார்' என்றார்.
கல்லிற் பிறக்குங் கதிர்மணி காதலி சொல்லிற் பிறக்கும் உயர்மதம் - மெல்லென்று அருளிற் பிறக்கும் அறநெறி எல்லாம் பொருளிற் பிறந்து விடும். பொருள்: கதிர்மணி - ஒளியுள்ள மணிகள், கல்லில் பிறக்கும் - மலையில் உண்டாகும்; உயர் மதம் - மிக்க களிப்பு, காதலி சொல்லில் பிறக்கும் - காதலியினது இன்சொல்லினால் தோன்றும்; அறநெறி - அறவழிகள், மெல் என்ற அருளில் பிறக்கும் - மென்மை பொருந்திய அருளினிடம் உண்டாகும்; எல்லாம்-அவ்வறத்தோடு ஏனைய இன்பம் முதலியவெல்லாமும், பொருளில் பிறந்துவிடும் - செல்வத்தினால் உண்டாய்விடும். கருத்து: மணிகள் மலையிலும், இன்பம் காதலியின் சொல்லிலும், அறநெறி அருளிலும், அவ்வறமும் இன்பமும் முதலான ஏனைய எல்லாப் பேறுகளுஞ் செல்வத்திலும் உண்டாகும். விளக்கவுரை: கல் - கருவியாகு பெயராய் மலையையுணர்த்தும். கற்புடைய மனைவியின் சொல்லில் இன்பம் பயக்குமென்பார், ‘காதலி சொல்லில்' என்றார். மெல்லென்ற அருள், அகரம் தொக்கது. அறநெறிக்கு அருளெண்ணமே ஏதுவென்பதற்கு ‘அருளிற் பிறக்கும் அறநெறி' எனப்பட்டது. ‘அறனு மருளுடையான் கண்ணதே யாகும்' என்பது சிறு பஞ்சமூலம். அறமும் இன்பமுமெல்லாம் பொருளிற் பிறந்து விடுதலைப் ‘பொருளானா மெல்லாம்'என்னும் திருக்குறளாற் றெளிக.
திருவொக்குந் தீதில் ஒழுக்கம் பெரிய அறனொக்கும் ஆற்றின் ஒழுகல் பிறனைக் கொலையொக்குங் கொண்டுகண் மாறல் புலையொக்கும் போற்றாதார் முன்னர்ச் செலவு. பொருள்: தீது இல் ஒழுக்கம் - தீமை கலவாத நல்லொழுக்கம், திரு ஒக்கும் - செல்வத்தை யொக்கும்; ஆற்றின் ஒழுகல் - முறைப்படி ஒழுகுதல், பெரிய அறன் ஒக்கும் - சிறந்த அறச் செய்கையோடு ஒக்கும்; பிறனை - பிறனொருவனை, கொண்டு - நட்பாகக் கொண்டு, கண் மாறல் - பின்பு அந் நட்பு மாறிப் புறங் கூறுதல், கொலை ஒக்கும் - அவனைக் கொலை செய்தலைப் போன்றதாகும்; போற்றாதார் முன்னர் - தம்மை மதியாதாரிடத்தில், செலவு - சென்று ஒன்றை நயத்தல், புலை ஒக்கும் - இழி தகைமையை ஒப்பதாகும். கருத்து: நல்லொழுக்கம் செல்வம்போன்றது; முறையான இல்லற வொழுக்கம் துறவறத்தைப்போன்றது; பிறரைப் புறங்கூறல் அவரைக் கொலைசெய்தல் போல்வதாம்; தம்மை மதியாரைத் தாம் மதித்தல் இழிதகைமையாகும். விளக்கவுரை: நல்லொழுக்க முடையார் செல்வரைப்போல் நன்மதிப்பும், வாழ்க்கையில் இடுக்கணின்மையும், உயர்வும் புகழுமான இம்மை நலங் களையும் பெற்றிடுதல் திண்ணமாதலின், ‘திருவொக்கு,' மென்றார். முறையான உலகவாழ்க்கை துறவற வாழ்க்கையை யொத்தலின், ‘பெரிய அறன் ஒக்கு' மெனப்பட்டது. பெரிய அறன் - துறவறம். ஆற்றின் - இல்லற ஆறு: "அறத்தாற்றி னில்வாழ்க்கை யாற்றிற் புறத்தாற்றிற், போஒய்ப் பெறுவதெவன்"என்பதுங் காண்க. கண்மாறல் : ஒரு சொல்; கருத்து மாறலென்பது பொருள். புலை : தன்மையின் மேலது. முன்னர் : ஏழாவதன் இடப்பொருளில் வந்தது.
கள்வமென் பார்க்குந் துயிலில்லை காதலிமாட்டு உள்ளம்வைப் பார்க்குந் துயிலில்லை ஒண்பொருள் செய்வமென் பார்க்குந் துயிலில்லை அப்பொருள் காப்பார்க்கும் இல்லை துயில். பொருள்: கள்வம் என்பார்க்கும் - திருடுவமென்று சோர்வு நேரம் பார்ப்பார்க்கும், காதலிமாட்டு - காதலியினிடத்தில், உள்ளம் வைப்பார்க்கும் - விருப்பம் வைத்திருப்பார்க்கும், ஒண்பொருள் - சிறந்த செல்வப்பொருளை, செய்வம் என்பார்க்கும் - பெருக்குவமென்று கருதி யுழைப் பார்க்கும், அப் பொருள் - தேடிய அப்பொருளை, காப்பார்க்கும் - களவாலும் பிறவாற்றாலுங் கெடாதபடி பாதுகாப்பவர்கட்கும், துயில் இல்லை - தூக்கம் பிடிப்பதில்லை. கருத்து: திருடர்க்கும், தலைவிமாட்டு விருப்புற்ற தலைமகனுக்கும், பொருள் தேடுவார்க்கும், அப்பொருளைப் பாதுகாப்பார்க்கும் தூக்கம் இராது. விளக்கவுரை: கள்வம், செய்வம்: தன்மைப் பன்மை எதிர்கால வினைமுற்றுகள். என்பார், வைப்பார், காப்பார்: வினையாலணையும் பெயர்கள். உம்மை: எச்சவும்மைகள். உள்ளம் - விருப்பத்தின் மேலது. பொருள் - தன்மையுடையார்க்கு ஏனையோரிடையில் விளக்கந் தரலின் ஒண்பொருளெனப்பட்டது, துயில் : முதனிலைத் தொழிற் பெயர்.
கற்றார்முன் தோன்றா கழிவிரக்கங் காதலித்தொன்று உற்றார்முன் தோன்றா உறாமுதல் - தெற்றென அல்ல புரிந்தார்க்கு அறந்தோன்றா எல்லாம் வெகுண்டார்முன் தோன்றாக் கெடும். பொருள்: கழிவு இரக்கம் - இழந்த பொருள்களுக்கு இரங்குதல், கற்றார்முன் தோன்றா - கற்றுணர்ந்த பெரியோர்பால் தோன்றாது; காதலித்து - ஊக்கங்கொண்டு ஒன்று உற்றார்முன் - ஒரு நன்முயற்சியைத் தொடங்கி ஆற்றுபவர்பால், உறா முதல் - விரைவிற் கிட்டாமையாலாகிய முயற்சித்துன்பம், தோன்றா - தோன்றாது; தெற்றென - தெளிவாய், அல்ல புரிந்தார்க்கு - தீயவை செய்தார்க்கு, அறம் தோன்றா - நல்லவை தோன்றமாட்டா; எல்லாம் - எல்லா நன்மைகளும், வெகுண்டார்முன் - சினந்து கொள்வாரிடத்தில், தோன்றா கெடும் - தோன்றாவாய்க் கெட்டொழியும். கருத்து: கழிந்துவிட்ட பொருள்களைப்பற்றிய துன்பம் கற்றுத் தெளிந்தாரிடத்தும், முயற்சித் துன்பம் ஊக்கமுடையாரிடத்தும், அறத்தின் உண்மைகள் தீயவை செய்வாரிடத்தும், எல்லா நன்மைகளுஞ் சினந்தாரிடத்துந் தோன்றா. விளக்கவுரை: அவரவர் உளப் போக்குக்கு அவ்வவை எதிர்மாறாய் நிற்றலின், ‘தோன்றா' வெனப்பட்டது. கழிவு, முதல் : ஆகுபெயர்கள். முதல் மூன்றிடங்களிலுந் ‘தோன்றா' வென்பது துவ்வீறு தொக்க ஒன்றன் படர்க்கை எதிர்மறை வினைமுற்று. ஈற்றிலுள்ளது ‘தோன்றாக் கெடு' மென ஒற்று மிகாமையின், முற்றெச்ச மென்க. முதல் - ஒரு செயலை முடித்தற்கு ஏதுவாய் முதலில் நிகழும் முயற்சிப்பெருமையை யுணர்த்திற்று. அல்ல : குறிப்பு வினைப்பெயர். ‘தெற்றென' வென்றது, அறிந்துந் தீயவை புரிந்தா ரென்றற்கு.