text
stringlengths
57
183k
கீதமஞ்சரி: அன்பாயொரு விளிப்பு அம்மாவென வருமோ\nவல்லமை படக்கவிதைப் போட்டியில் வெகு நாட்களுக்குப் பிறகு கலந்துகொண்டேன். சில படக்காட்சிகள் பார்த்தவுடனேயே உள்ளத்தை ஊடுருவி உலுக்கிவிடும். அப்படியான ஒரு படம்தான் படக்கவிதைப்போட்டி – 213-ல் இடம்பெற்றது. புகைப்படக்கலைஞர் நித்தி ஆனந்த் அவர்கள் எடுத்துள்ள இப்படத்தை தோழி சாந்தி மாரியப்பன் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்திலிருந்து தெரிவு செய்திருந்தார்.\nஒரு முதியவளின் தனிமை, யாரையோ எதிர்பார்த்து ஏமாற்றமும் துளி நம்பிக்கையுமாய் வாசல் அமர்ந்திருக்கும் கோலம் என பார்த்தவுடனேயே மனம் பிசைந்துவிட்டது. அக்காட்சிக்கான அத்தனைக் கவிதைகளிலும் அந்த உணர்வைக் காண முடிந்தது. பங்குபெற்ற கவிதைகளுள் என்னுடைய கவிதை சென்ற வாரத்தின் சிறப்புக்கவிதையாக வல்லமை இதழின் ஆசிரியர் குழு உறுப்பினரும் தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான மேகலா இராமமூர்த்தி அவர்களால் தேர்வு செய்யப்பட்டுள்ளது. அவருக்கும் வல்லமை குழுவினர்க்கும் என் நெஞ்சார்ந்த நன்றி.\nஅன்பாயொரு விளிப்பு அம்மாவென வருமோ?\nமுன்னால் வந்து முகங்காட்டிப் போகுமோ?\nகவிதை குறித்து மேகலா ராமமூர்த்தி அவர்களின் வரிகள்.\nPosted by கீதமஞ்சரி at 08:30\nLabels: கவிதை, போட்டி, வல்லமை, வாழ்க்கை\nகோமதி அரசு 27/5/19 12:45\nகவிதை படித்து முடித்ததும் விழிகளை ஈரமாக்குவது உண்மை.\nகீதமஞ்சரி 29/5/19 17:41\nவருகைக்கும் கருத்துக்கும் நன்றி மேடம். இன்று பல முதியவர்களின் நிலை இப்படிதானே உள்ளது.\nகரந்தை ஜெயக்குமார் 27/5/19 16:20\nகீதமஞ்சரி 29/5/19 17:42\nG.M Balasubramaniam 27/5/19 19:44\nஎங்கள் ப்ளாகில் ஒரு முதியவரின் படம் போட்டு அதற்காக பல சிறுகதைகள் வந்தனகொடிது கொடிது தனிமை கொடிது என்றே தோன்றியது\nகீதமஞ்சரி 29/5/19 17:43\nசிலகாலமாக வலைப்பக்கம் அவ்வளவாக வரவில்லை. அதனால் எங்கள் ப்ளாக்கில் வந்த பதிவைக் கவனிக்கவில்லை.\nதனிமையை நாமாக தேடிக்கொண்டால் இனிக்கும். தானே அமைந்தால் துயரம்தான். தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஐயா.\nஞா கலையரசி 27/5/19 23:17\nநெகிழ்ச்சியான கவிதை. சிறந்த கவிஞர் எனப் பாராட்டு பெற்றமைக்கு வாழ்த்துகள் கீதா!\nதங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி அக்கா.\nThulasidharan V Thillaiakathu 29/5/19 19:48\nமனதை நெகிழ்த்திய கவிதை! ரசித்தேன்.\nநீங்கள் சிறந்தக் கவிஞர் ! படைப்பாளி என்பதில் ஐயமே இல்லை..\nகீதமஞ்சரி 31/5/19 06:00\nராமலக்ஷ்மி 31/5/19 12:09\nபடத்தைப் பார்த்ததும் ஏற்படுகிற சோக உணர்வை, தங்கள் வரிகளால் மேலும் அற்புதமாக வெளிப்படுத்தியிருக்கிறீர்கள். சிறப்புக் கவிதையாக தேர்வானதற்கு நல்வாழ்த்துகள். புகைப்படக் கலைஞருக்கும் வல்லமை குழுவினருக்கும் நன்றி.\nகீதமஞ்சரி 3/6/19 11:29\nவருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி ராமலக்ஷ்மி. வல்லமை தளம் வாசிக்க முடிகிறது. கருத்திட இயலவில்லையே. ஒரு வாரமாகவே இந்தப் பிரச்சனை இருக்கிறது. எனக்கு மட்டும்தானா என்று தெரியவில்லை.
எனக்கு கவலையில்லை.. கவர்ச்சி புகைப்பட எதிர்ப்புக்கு ரைசா பதிலடி – மின்முரசு\nஎனக்கு கவலையில்லை.. கவர்ச்சி புகைப்பட எதிர்ப்புக்கு ரைசா பதிலடி\nபுகைப்படத்திற்கு கமெண்ட் செய்வதை விடுத்து கல்வி போன்ற ஏராளமான விஷயங்களில் அக்கறை செலுத்துங்கள் என்று நடிகை ரைசா சமூக வலைத்தளத்தில் பதிவு செய்திருக்கிறார்.\nபிக்பாஸ் மூலம் புகழ் பெற்றவர் நடிகை ரைசா. ‘வேலை இல்லாத பட்டதாரி’, ‘பியார் பிரேமா காதல்’ உள்ளிட்ட சில படங்களில் நடித்து ரசிகர்களிடையே பிரபலமாகியுள்ளார். சமீபத்தில் முகப்பொலிவு சிகிச்சை எடுக்க சென்றிருந்தார் ரைசா. அப்போது மருத்துவர் பைரவி என்பவர் தவறான சிகிச்சை அளித்ததாக கூறி முகம் வீங்கிய நிலையில் புகைப்படத்தை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார்.\nஇதையடுத்து நீண்ட நாட்கள் சமூக வலைத்தள பக்கம் வராத ரைசா கடந்த சில நாட்களுக்கு முன்பு உள்ளாடை அணியாமல் சட்டை பட்டன்களை திறந்துவிட்டபடி புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டிருந்தார். இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் மிகுதியாக பகிரப்பட்டது. இதை பார்த்த ரசிகர்கள் கலாச்சாரத்துக்கு எதிரான இந்த மாதிரியான புகைப்படங்கள் சமூகத்திற்கே அழுக்கு என கண்டப்படி கமெண்ட் செய்திருந்தனர்.\nஇதனால் கோபமான ரைசா, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிலடி கொடுத்துள்ளார். அதில், இந்த விஷயத்தில் நீங்கள் வெறுப்பை உமிழ்ந்தால் நீங்கள் எதிர்மறை எண்ணங்களால் கொண்டவர் என்று அர்த்தம். இதே எண்ணங்களுடன் வாழ்ந்தால் வாழ்க்கையில் மகிழ்ச்சியாக வாழ முடியாது. எதிர்மறை எண்ணங்கள் வாழ்க்கையில் அதே சிந்தனையோடு எடுத்து செல்லும். பொதுவாக இதுபோன்ற கமெண்ட்களை படிப்பதில்லை. நடிகை ஒருவர் பிகினி அணிவது சாதாரண விஷயம். இதற்கு கமெண்ட் செய்வதை விடுத்து கல்வி போன்ற ஏராளமான விஷயங்களில் அக்கறை செலுத்துங்கள். எனக்கு விருப்பமானதை உடுத்துவதாகவும், மற்றவர்களை பற்றி எனக்கு கவலையில்லை என ரைசா பதிலடி கொடுத்துள்ளார்.
என் மகனுக்கு சமீபத்தில் சிறு வாகன விபத்து ஏற்பட்டது. இருவரிடம் ஜோதிடம் கேட்டதற்கு ராகு பகவானுக்காக வெவ்வேறு விதமான தோஷப் பரிகாரங்களை செய்திடச் சொன்னார்கள். மருந்தியல் படித்து வரும் அவனது எதிர்காலம் சிறக்க உரிய பரிகாரம் சொல்லுங்கள். கவிதா கேசவன், பெரியாம்பட்டி.\n8/9/2017 2:41:34 PM\nரோகிணி நட்சத்திரம், ரிஷப ராசி, கும்ப லக்னத்தில் பிறந்துள்ள உங்கள் மகனின் ஜாதகத்தில் தற்போது ராகு தசையில் கேது புக்தி நடந்து வருகிறது. ஆறாம் பாவத்தில் சூரியன், செவ்வாய், சுக்கிரனோடு ராகு இணைந்திருப்பது சற்று பலவீனமான நிலை ஆகும். ராகு தசை முடிகின்றவரை எச்சரிக்கையோடு இருக்க வேண்டியது அவசியம். 24 வயது வரை தனியாக வண்டி வாகனங்களை இயக்குவதோ, அநாவசியமாக நண்பர்களுடன் இணைந்து ஊர் சுற்றுவதோ கூடாது. வாகன விபத்து என்றில்லை, ஆறாம் இடத்தில் இணைந்துள்ள கிரகங்களால் அநாவசியமான பிரச்சினைகள் தேடி வரக் கூடும்.\nவீண் வம்பு, வழக்கில் சிக்கும் வாய்ப்பு உள்ளதால் உங்கள் மகனை உங்கள் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருப்பது நல்லது. மருந்தியல் சார்ந்த படிப்புகள் அவருடைய எதிர்காலத்திற்கு மிகவும் உதவிகரமாக அமையும். உங்கள் மகனுக்கு 24 வயது முடியும் வரை பிரதி தமிழ் மாதப் பிறப்பு நாளில் அருகிலுள்ள மாரியம்மன் ஆலயத்தில் அபிஷேக ஆராதனை செய்வதை வழக்கமாகக் கொள்ளுங்கள். ராகு பகவானுக்கு உரிய கீழேயுள்ள ஸ்லோகத்தினைச் சொல்லி தினமும் காலையில் உங்கள் பிள்ளையை பூஜையறையில் வழிபட்டு வரச் சொல்லுங்கள்.\n“அர்த்தகாயம் மஹாவீர்யம் சந்த்ராதித்யவி\nசிம்ஹிகா கர்ப்பசம்பூதம் தம் ராகும் ப்ரண\nRokini star, Rishabh Rasi, in your son's birthday born in Kumbhaknagar The sixth sin is associated with the sun, the sun, the rag, the rack is slightly
பெண் பத்திரிக்கையாளர் குறித்து அவதூறு கருத்து பதிவிட்ட நடிகர் எஸ்.வி.சேகர் இன்று சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார்.\nபெண் பத்திரிக்கையாளர் குறித்து அவதூறு கருத்து பதிவிட்ட விவகாரத்தில் நடிகர் எஸ்.வி.சேகர் இன்று சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜரானார்.\nதமிழக ஆளுநர் பன்வரிலால் புரோகித் பெண் பத்திரிக்கையாளர் ஒருவரின் கன்னத்தில் தட்டியது பெரும் சர்ச்சைக்குள்ளானது. இந்த விவகாரம் தொடர்பாகவும் அந்த பெண் பத்திரிக்கையாளர் குறித்தும் நடிகரும், பா.ஜ.கவைச் சேர்ந்தவருமான எஸ்.வி.சேகர் தனது முகநூல் பக்கத்தில் அவதூறான கருத்தை பதிவிட்டிருந்தார். இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதைத் தொடர்ந்து அந்த சர்ச்சைக்குரிய பதிவை எஸ்.வி.சேகர் நீக்கினார். இது தொடர்பாக அவர் மீது பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டன.\nவழக்கு விசாரணைக்காக கைது செய்யப்படலாம் என்ற நிலையில் எஸ்.வி.சேகர் சென்னை உயர் நீதிமன்ற வழக்கில், முன் ஜாமின் கேட்டு விண்ணப்பித்தார். ஆனால், சென்னை உயர் நீதிமன்றம் அவருக்கு முன்ஜாமின் வழங்க மறுத்துவிட்டது. அவரை போலீசார் கைது செய்யலாம் என்று உயர் நீதிமன்றம் கூறியும் அவர் மீது காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாறாக அவர் போலீஸ் பாதுகாப்புடன் வலம் வந்துகொண்டிருக்கிறார். தொடர்ந்து, உச்ச நீதிமன்றமும் அவரது முன்ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. மேலும், இந்த வழக்கு தொடர்பாக எஸ்.வி.சேகர் சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜராகும்படி உத்தரவிடப்பட்டது.\nஅதன்படி, எஸ்.வி.சேகர் இன்று காலை 10 மணிக்கு எழும்பூர் நீதிமன்றத்திற்கு வந்தார். அவரை கைது செய்யக்கோரி பல்வேறு அமைப்புகள் போராட்டம் நடத்தியிருந்த நிலையில், இன்று பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அவர் நீதிமன்றத்திற்கு வந்துள்ளார். எஸ்.வி.சேகர் ஆஜராவதையொட்டி எழும்பூர் நீதிமன்றத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர்.
அமெரிக்காவிலிருந்து இயற்கை விவசாயத்துக்கு! – பசுமை தமிழகம்\nஅமெரிக்காவிலிருந்து இயற்கை விவசாயத்துக்கு!\n“இயற்கை வேளாண்மைக்காக அமெரிக்க வீட்டையும் வேலையையும் துறந்து விட்டோம். ரூ. 80 லட்சம் மதிப்புள்ள வீடு, இரண்டு கார் என சொகுசு வாழ்க்கையைக் கைவிட்டதைப் பற்றி எங்களுக்குக் கவலையில்லை. புதிதாகச் சாதிக்கப் போகிறோம் என்ற சிந்தனையே எங்களிடம் மேலோங்கி இருந்தது” ஹேமாவும் தேவ்குமாரும் பேசும்போது எழும் ஆச்சரியத்தைச் சுலபமாக ஒதுக்கி வைக்க முடியவில்லை.\nஇன்ஜினீயரிங் படிப்பு, ஐ.டி.கம்பெனியில் வேலை, கை நிறையச் சம்பளம் – இதுதான் இன்றைய இளைய தலைமுறையினர் பலருடைய கனவு, விருப்பம், லட்சியம் எல்லாமே. அவர்களிடமிருந்து வித்தியாசப்படுகிறார்கள் ஹேமாவும் தேவ்குமாரும். அமெரிக்காவில் தகவல் தொழில்நுட்பத் துறையில் பணிபுரிந்து, அங்கேயே சொந்த வீட்டில் குடியேறியிருந்தார்கள் ஹேமாவும் தேவ்குமாரும். அவை எல்லாவற்றையும் துறந்துவிட்டுத் திருத்தணி அருகே ஐந்து ஏக்கர் நிலத்தில் இன்றைக்குக் காய்கறி விவசாயம் செய்துவருகிறார்கள் இருவரும்.\nதிருச்சி ஆர்.இ.சி.யில் (இன்றைய என்.ஐ.டி.) ஹேமாவும் தேவ்குமாரும் கம்ப்யூட்டர் இன்ஜினீயரிங் படித்தபோது காதலித்து, பின்னர் திருமணம் செய்துகொண்டனர். சென்னையில் ஹேமாவுக்கும் பெங்களூரில் தேவ்குமாருக்கும், ஐ.டி. கம்பெனியில் தலா மூன்று ஆண்டுகள் வேலை. பின்னர் அமெரிக்க ஐ.டி. கம்பெனிக்கு இடம்பெயர்ந்தார்கள். அங்கே சொந்த வீடு வாங்கினார்கள். 13 ஆண்டுகள் உருண்டோடின. அபினவ் (12), அபர்ணா (10) என இரண்டு குழந்தைகள்.\nசத்தான உணவு தேடி\nகுழந்தைகளுக்குச் சத்தான உணவு கொடுப்பதற்காக இணையத்தில் தேடியபோதுதான் இயற்கை விவசாயம் குறித்த அறிமுகம் ஹேமாவுக்குக் கிடைத்தது. அமெரிக்காவில் இயற்கை விவசாயத்தில் விளைந்த பொருட்களை வாங்கிப் பயன்படுத்தினர். ஒருகட்டத்தில் குழந்தைகளின் நலனுக்காக வேலையைத் துறந்துவிட்ட ஹேமா, வீட்டிலேயே தோட்டம் போடுவதற்கான பயிற்சியைப் பெற்றார்.\n“அமெரிக்காவில் மக்காச்சோளத்துக்கு அரசு மானியம் கொடுப்பதால், அதை அதிகமாக விளைவித்து, அனைத்து உணவுப் பொருட்களிலும் உட்பொருளாகச் சேர்க்கும் நிலை இருந்தது. அதனால் பல நோய்கள் உருவாவதும் தெரியவந்தது. செயற்கை உரம், பூச்சிக்கொல்லியே நோய்களுக்குக் காரணம் எனத் தெரிந்ததால், இயற்கை விவசாயம் குறித்துத் தெரிந்துகொள்ள ஆசைப்பட்டேன். இணையத்தின் வழியாகவும் புத்தகங்களின் வழியாகவும் இது தொடர்பாக நிறைய படித்தேன்.\nநம்மால் ஆனதைச் செய்வோம்\nஅப்போதுதான், இயற்கைப் பேரழிவுக்குப் புவி வெப்பமயமாதல்தான் காரணம் என்பதை நானும் கணவரும் உணர்ந்துகொண்டோம். அதுபற்றி வெறுமனே பேசிக்கொண்டே இருக்காமல், நம்மால் ஆனதைச் செய்ய வேண்டும் என நினைத்தோம். இந்தியாவுக்குத் திரும்பி இயற்கை விவசாயம் செய்யலாம் என முடிவெடுத்தோம்.\nஇயற்கை விவசாயத்துக்குத் தமிழ்நாடுதான் ஏற்ற இடம் என முடிவெடுத்தோம். `நல்ல சுற்றுச்சூழலில் இயற்கையோடு இயைந்த வாழ்க்கையை வாழப் போகிறோம்’ என்று குழந்தைகளுக்குச் சொல்லிப் புரியவைத்தோம்.\nஇருவரும் வேலையை விட்டுவிட்டதால் வருமானம் இல்லை. தேவைகளைக் குறைத்துக்கொண்டோம். அமெரிக்காவில் அதிகபட்சம் அரை மணி நேரம் மட்டுமே குழந்தைகளுடன் கணவர் இருக்க முடிந்தது. இப்போது நாங்கள் நான்கு பேரும் எப்போதும் சேர்ந்தே இருப்பதால், மகிழ்ச்சியாக இருக்கிறோம். இந்த வாழ்க்கையில் கிடைக்கும் சந்தோஷமே அலாதிதான்” என்கிறார் ஹேமா.\nஇந்தத் தம்பதிக்கு விவசாயப் பின்புலம் சுத்தமாகக் கிடையாது. தேவ்குமாரினுடையது ஆசிரியர் குடும்பம். ஹேமாவின் தந்தை திருச்சி `பெல்’ தொழிற்சாலையில் தரக் கட்டுப்பாட்டு மேலாளராகப் பணிபுரிந்து ஓய்வுபெற்றவர்.\n“தமிழ்நாட்டில் திருவண்ணாமலை, ஓசூர், கோவை, சேலம், சென்னை ஆகிய இடங்களில் இயற்கை விவசாயம் செய்வோரை நேரில் சந்தித்துப் பலவற்றைக் கற்றுக்கொண்டோம். மத்தியப் பிரதேசம், உத்தராஞ்சல், ராஜஸ்தான் எனப் பல வட மாநிலங்களுக்குச் சென்று இயற்கை விவசாயம் குறித்த தகவல்களை ஓராண்டுக்குத் திரட்டினோம்.\nஇயற்கை விவசாயத்தின் அடிப்படை அறிவு கிடைத்தது. நிலம் வாங்கும் முயற்சியில் நிறைய ஏமாற்றங்கள் இருந்தன. திருத்தணியை அடுத்துள்ள பள்ளிப்பட்டு அருகே அத்திமாஞ்சேரிபேட்டை கிராமத்தில் நிலத்தை வாங்கினோம்” என்றார் தேவ்குமார்.\n“மலையடிவாரத்தில் நாங்கள் வாங்கிய ஐந்து ஏக்கர் நிலம், தரிசு பூமி. முன்பு மானாவாரி பயிர் சாகுபடி செய்யப்பட்டு, பின்னர் தரிசாக விடப்பட்டது, அதில் வேலியிட்டோம்.\nநீராதாரத்துக்காக 36 அடி ஆழத்தில் கிணறு வெட்டினோம். கடந்த டிசம்பரில் பெய்த மழையில் கிணறு நிரம்பியது. இயற்கை விவசாயத்துக்கு மண் வளம் அவசியம். நைட்ரஜன் வாயு மண்ணில் கலந்து மண் வளமாவதற்காகப் புங்கை மரம், காட்டு வாகை, ஈட்டி, அகத்தி, யானைக்குன்றிமணி, புரசு, முருங்கை, கொடுக்காய்புளி, வில்வம் உள்பட 500 மரங்களை நட்டுள்ளோம்.\nதண்ணீரைச் சிக்கனமாகப் பயன்படுத்த சூரிய சக்தியில் இயங்கும் மோட்டார் மூலம் மரங்களின் வேருக்கு நேரடியாகத் தண்ணீர் பாய்ச்சும் உத்தியைச் செயல்படுத்துகிறோம். மழை நீர் சேகரிப்புக்காகச் சிறிய குளம். உயர்த்தப்பட்ட படுக்கை அமைப்பில் பூசணிக்காய், வாழைக்காய், அகத்தி கீரை, பசலைக் கீரையை விளைவிக்கிறோம். அக்கம்பக்கத்தினரே இப்போது எங்களுடைய வாடிக்கையாளர்கள்.\nஉரத்துக்கு இலைதழை, செடிகொடிகளை குவியலாக மூடாக்காகப்போட்டு மட்கச் செய்து இயற்கை உரம் கிடைக்கச் செய்கிறோம். குறைவான தண்ணீர் மூலம் காய்கறி, மானாவாரி பயிர்களைச் சாகுபடி செய்கிறோம். அடுத்தாகப் பழ வகைகளை உற்பத்தி செய்வது இலக்கு. புவி வெப்பமயமாவதைத் தடுக்க எங்களால் முடிந்த அளவுக்கு உயிர்பன்மயத்துக்குத் தேவையானவற்றைச் செய்வதே முதன்மை நோக்கம்” என்றார் ஹேமா.\nகிணறு வெட்ட பட்டபாடு\nஹேமா – தேவ்குமார் தம்பதி தங்கள் நிலத்தில் கிணறு வெட்ட முடிவெடுத்தபோது, அக்கம்பக்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர். அது மட்டுமில்லாமல் கிணறுக்குப் பதிலாக ஆழ்துளை கிணறு போட்டால் அதிக ஆழம் போட முடியும், தண்ணீரும் போதுமான அளவு கிடைக்கும் என்றும் யோசனை தெரிவித்தனர். ஆனால், தரைக் கிணற்றின் பயன்பாட்டை உணர்ந்த இவர்கள், கிணறு வெட்டுவதில் உறுதியாக இருந்து 45 நாள் போராட்டத்துக்குப் பிறகு 36 அடி ஆழக் கிணற்றை வெட்டி முடித்தனர்.\nஒரு நிலம் முழுவதும் நெல் அல்லது கரும்பு போன்ற பயிர்களைப் பயிரிட்டால், அது `மோனோ கல்சர்’ எனப்படுகிறது. இதனால், அயல் மகரந்தச் சேர்க்கை தடைபடுகிறது. காடுகளில் இருப்பதுபோல பலவகையான மரங்கள், செடி-கொடிகள், பல்வேறு உயிரினங்கள், மூலிகைத் தாவரங்கள் போன்றவை இருந்தால் அயல் மகரந்தச் சேர்க்கை நடைபெறுவதுடன், உயிர்பன்மயமும் நீடிக்கும் என்கிறார் ஹேமா.\nசூரிய ஒளி மின்சாரம் பயிர்களுக்கு தண்ணீர் →\n← மா மரத்தில் போரான் சத்துக் குறைபாடு
இப்படி3நாட்கள் தொடர்ந்து செய்து குடித்து வந்தால், தொப்பை குறைவதைக் காணலாம். | Tamil National News\nHome தலைப்புச் செய்திகள் இப்படி3நாட்கள் தொடர்ந்து செய்து குடித்து வந்தால், தொப்பை குறைவதைக் காணலாம்.\nஇப்படி3நாட்கள் தொடர்ந்து செய்து குடித்து வந்தால், தொப்பை குறைவதைக் காணலாம்.\non: April 25, 2016 In: தலைப்புச் செய்திகள், மருத்துவம்No Comments\nநீங்கள் உடுத்தும் ஜீன்ஸ் எப்போதும் புதிது போன்று இருக்க வேண்டுமா?\nவாழ்வின் எழுச்சி சமுதாய அடிப்படை வங்கியின் தமிழ் சிங்கள சித்திரை புத்தாண்டு விழா.(Photos)
கிரிக்கெட்டில் ஓரினச்சேர்க்கை சர்ச்சை – வெளியானது கேப்ரியலின் பேச்சு !\n303 ரன்கள் இலக்கு,3விக்கெட் இழப்பு! வெற்றி பெறுமா இலங்கை\n44 வீரர்களின் குழந்தைகளின் கல்விச் செலவு – முழுமையாக ஏற்ற சேவாக் !\nபரபரப்பான டெஸ்ட் போட்டியில் இலங்கை வெற்றி! தென்னாப்பிரிக்கா அதிர்ச்சி தோல்வி
வளர்ப்பு பற்றின குறும்படம்.. சம்யுக்தா வெளியேற்றம்.. நேற்று பிக் பாஸில் என்ன நடந்தது?? - The Subeditor Tamil\nby Mahadevan CM, Nov 30, 2020, 12:49 PM IST\nநீங்க நல்லவரா? கெட்டவரா? என்ற கேள்வியுடன் ஆரம்பித்தார். ஆனா கடைசி வரைக்கும் இது யாருக்குனே தெரியாம போச்சு. கெட்டவனுக்கு நல்லவன் கெட்டவன், நல்லவனுக்கு கெட்டவன் நல்லவன்... இதை சொல்லிட்டு புரிஞ்சுதானா வேற கேட்டாரு. இன்னிக்கு குழப்பனும்னே வந்துருக்கீங்கனு நல்லா புரியுது ஆண்டவரே.\nகால் செண்டர் டாஸ்க்ல சோம்-கேப்பி உரையாடல் நல்லாருந்ததா பாராட்டினார். ரம்யா-ரமேஷ் இருவருக்குமே பாராட்டு கிடைச்சுது. சனம்-சாம் உரையாடல் பத்தின பேச்சு வந்த போது, கேள்விக்கு பதில் சொன்னாலும் திருப்தி இல்லைனு சனம் சொன்னாங்க. "கலீஜ்" என்ற வார்த்தைக்கு அர்த்தம் சொல்லி, அது போன்ற வார்த்தைகள் வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார்.\nதனிப்பட்ட உரையாடலை எடுத்து பொதுவுல போட்டு உடைச்சு பிரச்சினை பண்றதை சனம் வழக்கமாவே வச்சுருக்காங்க. "முட்டாள் மாதிரி பேசாதே" னு நாம பேச்சு வாக்குல சொல்லுவோம். அதை எடுத்துட்டு போய் "அவன் என்னை முட்டாள்னு சொல்லிட்டான்" னு பொதுவுல குற்றம் சொல்ல முடியும். முட்டாள் என்று ஒருவரை திட்டுவதும் தவறு தான். ஆனா நாம பேசும் போது அப்படியான அர்த்தத்தில் சொல்லிருக்க மாட்டோம். பேச்சு வாக்குல சொல்ற வார்த்தைகளை எடுத்து சண்டை போட ஆரம்பிச்சா, அதுக்கு முடிவே இல்லை.\nஇதுல இன்னொரு முக்கியமான விஷயம் சனம், சம்யுக்தா ரெண்டு பேருக்குமே மொழிப் பிரச்சினை இருக்கு. சொல்லப்பட்ட பல வார்த்தைகளுக்கான அர்த்தத்தை பின்னாடி தான் கேட்டு தெரிஞ்சுக்கறாங்க சனம். அந்த வார்த்தைக்கான அர்த்தம் தனியா சொல்லும்போது , அது வேற மாதிரி இருக்கு. உடனே என்னை பார்த்து அப்படி சொல்லிட்டாங்கனு பிரச்சினை வந்துருது. தறுதலை வார்த்தையும் அப்படித்தான் வந்தது. அடிமைகள் டாஸ்க்ல இதே பிரச்சினை வந்தது.\nவேற ஒரு இடத்துல, வேற ஒரு காண்டக்ஸ்ட்ல சொல்லப்பட்ட ஒரு வார்த்தை, தனியா அர்த்தம் எடுத்து பார்க்கக் கூடாது. இங்க சனம் பார்க்கவேண்டியது, அந்த வார்த்தையை பயன்படுத்தினவங்க உள்நோக்கத்தோட பயன்படுத்தினாங்களானு பார்க்கனும். அதை இங்க யாருமே பார்க்கறதில்லை. போன் பேசும் போது ரியோ சொன்னதும் அந்த மாதிரி தான். அவரோட நோக்கம் சனம்-அனிதாவோட ப்ரெண்ட்ஷிப்பை பாராட்டுவது தான். ஆனா அதை புரிஞ்சுக்காம "நீ எப்படி அப்படி சொல்லலாம்னு" சண்டைக்கு போறதை தான் சனம் இங்க தொடர்ந்து செய்யறாங்க. இதை யாராவது எடுத்து சொன்னா பரவால்ல. மத்தபடி அப்படியான வார்த்தைகளை எடுத்து சண்டை போட்டு மைலேஜ் ஏத்திக்கறது தான் ஸ்ட்ராட்டஜினா, அதுக்கு நாம எதுவும் சொல்ல முடியாது.\n"வளர்ப்பு" பத்தி சம்யுக்தா சொன்னது விவாவதத்துக்கு வந்தது. அதுக்கு முன்னாடி சம்யுக்தாவை பத்தி பேசும் போது அவரோட தாய்மையை இழிவு படுத்தி பேசினதா ஆரி மேல ஒரு குற்றச்சாட்டு வச்சுருந்தாங்க. அதுக்கு விளக்கம் கொடுக்கபட்டது. ஆரி பேசின அந்த க்ளிப் மட்டும் ஒளிபரபப்பட்டது. ஆனா அதுக்கு முன்னாடியே "ஆரி அப்படி எதுவும் பேசலைனு"கமல் சார் தன்னோட தீர்ப்பை சொல்லிட்டாரு. ,அந்த காட்சி ஒளிபரப்பாவதற்கு முன்னாடி அவர் சொன்ன ஒரு வாக்கியத்தை இங்க கோடிட்டு காட்ட விரும்புகிறேன். " இன்னொரு உயிரை காப்பாற்றும் பொறுப்பும், உணர்வும், அனுபவமும் உள்ள உங்களுக்கு ஏன் இந்த அளவு மெச்சூரிட்டி இல்லை, என்பது தான்". இது கமல் சார் சொன்ன வார்த்தைகள். இதுக்கும் யாராவது பொழிப்புரை சொன்னால் நன்று.\nசம்யுக்தாவோட மெச்சூரிட்டி பத்தி தான் சொல்ல வந்தேன் என்பது ஆரியோட வாதம்.3வாரத்துக்கு முன்னாடி நடந்த மிகப்பெரிய வாக்குவாதத்துல, கோபத்துல சொல்லப்பட்ட ஒரு வார்த்தையை எடுத்து, அதுக்கு ஒரு அர்த்தம் கொடுத்து, விளக்கி சொல்ல இப்படி ஒரு உதாரணத்தை பயன்படுத்திருக்காரு ஆரி. ஆக்சுவலா இதை உதாரணம்னு சொல்ல முடியுமானு தெரியலை.\nரெண்டு பேரை நீங்க ஒப்பீடு செய்யும் போது ஒருத்தரை தாழ்த்தியும், ஒருவரை உயர்த்தியும் தான் சொல்ல முடியும். ஆனா இங்க இருவரையும் உயர்த்தி சொன்னதா சொல்றாரு ஆரி. உயர்த்தி சொல்வதற்கு எதற்கு ஒப்பீடு என்பது தான் இங்க கேள்வி. இலக்கணம் தெரிஞ்சவங்க கிட்ட கேட்டு தெரிஞ்சுக்கனும்.\nஆரி பேசினதை ஏன் டிவில ஒளிபரப்பலைங்கறது முக்கியமான கேள்வி. ஆரி பேசின அன்னிக்கே சாம் இதை குறிப்பிட்டு பேசி அழறாங்க. ஆனா சாம் -அர்ச்சனா கான்வோ மட்டும் தான் அன்சீன்ல காமிக்கறாங்க. அடுத்த நாள் ஒளிபரப்பின் போது, முந்தின நாள் நடந்த விஷயங்களை க்ளிப்பிங்ஸா போடுவாங்க. அப்படித்தான் ஆரி பேசினது காட்டப்பட்டது. சாம் இதை ஒரு குற்றச்சாட்டா வச்சதுக்கு அப்புறமும் எடிட்டிங்கல, ஆரி பேசினது மட்டும் கட் ஆகிருக்கு.\nஎந்த ஒரு விஷயமும் நடக்கும் போது பார்த்தால் அதோட இம்பாக்ட் வேற இங்க அன்சீன்ஸ் பார்க்காதவங்க தான் அதிகம். அப்படி இருக்கும் போது ஆரி-சாம் இருவரும் பரஸ்பரம் வைத்த குற்றச்சாட்டுக்கு, சாம் பக்கம் எந்த ஆதாரமும் இல்லாம போய்டுது. சாம் சொன்னதை யாரும் பெருசா எடுத்துக்கவே இல்லை. இந்த சீசன்ல இந்த மாதிரி நிறைய முக்கியமான விஷயங்கள் காட்டப்படுவதே இல்லை. "You are unfit to the house" அப்படினு நிஷாவை பார்த்து ஆரி சொன்னதும் டிவில வரலை. ஆனா அதுக்கப்புறம் நிஷா மத்தவங்க கிட்ட பேசி வருத்தப்படறது மட்டும் காட்டப்படுது.\nநிஷாவை திட்டினது காட்டப்பட்டுருந்தா அது ஆரி மேல கோபமாகவும், நிஷா மேல பரிதாப உணர்ச்சியும் ஆடியன்ஸ்க்கு வந்துருக்கும். இது போன்ற விஷயங்களும் ஆட்டத்தை மாற்றவல்லது. இந்த சீசன்ல விளையாடற எல்லாருக்கும் அபிமானிகள் இருப்பாங்க. அதே மாதிரி வெறுப்பாளர்ளும் இருப்பாங்க. ஆரியோட வெறுப்பாளார்கள் நிஷாவுக்கு ஓட்டு போடுவதும், சம்யுக்தா, பாலா வெறுப்பாளர்கள் ஆரிக்கு ஒட்டு போடுவதும் தான் வோட்டிங்ல நடக்கும். அப்படியான ஓட்டுகள் தான் ஆட்டத்தை மாற்றும். சில சம்பவங்கள் மட்டும் மறைக்கப்படும் போது இந்த சமநிலை பாதிக்கப்படுகிறது என்பது தான் என்னுடைய குற்றச்சாட்டு.\nஅதுவும் இந்த சீசன்ல ஒத்த வார்த்தைக்கு பல மணி நேர சண்டை போடும் போது, நேரடியான ஒரு ஸ்டேட்மெண்ட் காட்டப்படாம போனது தவறு.\nஇதற்கு சரியான உதாரணம் ஒன்று காட்ட வேண்டுமென்றால் பாலா-சனம்-தறுதலை விவகாரத்தை எடுத்துக் கொள்ளுங்கள்.\nசம்பவத்திற்கு முன் தினம் இரவு பாலாவும், சனமும் பேசிக் கொள்கிறார்கள்.\nபாலாவின் பின்புறத்தில் செல்லமாக உதைக்கிறார் சனம்.\nமறுநாள காலை டாஸ்க் நடக்கும் போது அவர்களுக்கு இடையேயான உரையாடல்.\nஅதற்கு பிறகு தறுதலை என்கிற வார்த்தைக்கு அர்த்தம் கேட்கும் சனம்.\nஅதன் பிறகு தான் சண்டை நடக்கிறது.\nஇத்தனைக்கு பிறகு சண்டை நடக்கும் போது நம்மால் சுலபமாக புரிந்து கொள்ள முடிகிறது. பாலாவின், வாதம், சனமின் வாதம் இரண்டுக்குமே சாட்சியாக நாம் பார்த்த காட்சிகள் இருக்கிறது. நான் எப்போதும் சொல்வதைப் போல் ஒரு பிரச்சினை நடக்கிறது என்றால், அதற்கு முன்னால் நடந்த சம்பவங்கள், அதன் பிறகு நடக்கும் சம்பவங்கள் இரண்டையுமே வைத்து தான் ஸ்டாண்ட் எடுக்க வேண்டும்.\nசனம் பெட்ரூமுக்குள்ள இருக்கும் போது பாலா வந்து தறுதலைனு3தடவை கத்திட்டு உள்ள வருவாரு. அந்த காட்சி கொடுத்த இம்பாக்ட் தான் சனம்க்கு கிடைத்த ஆதரவு. அதுவே அந்த காட்சி நமக்கு காட்டப்படாம, சனம் அதை விவரிக்கறா மாதிரி காட்டிருந்தா நாம இதே உணர்ச்சிகளை காட்டிருப்போமா? அது தான் நிஷாவுக்கு நடந்தது.\nஇது போன்ற சம்பவங்கள் ஆட்டத்தின் போக்கை மாற்றும் வல்லமை கொண்டவை. அந்த தறுதலை பிரச்சினையை ஆரி யூஸ் பண்றாரு, சனம்க்கு சிம்பதி கிடைக்குது, ஆரி, சனம் நட்பு உருவாகுது. இப்படி சங்கிலி தொடரான நிகழ்வுகள் நிறைய நடந்தது. நேத்து கமல் சார் சொன்னதும் இதான். அனிதா டாப்பிள் கார்ட் வாங்கலேன்னா ஆட்டமே மாறிருக்கும். இந்த சம்பவங்களை மக்களுக்கு காட்சிபடுத்தாத விஜய் டிவிக்கு கண்டனங்கள்.\nஇந்த ரெண்டு சம்பவத்திலும் ஆரி சம்பந்தபட்டிருப்பது தற்செயலான் விஷயம்னு என்றே நம்புவோம்.\nசோம், சனம், நிஷா மூவரும் சேவ் செய்யப்பட்டு சாம் மற்றும் ரமேஷ் மட்டும் இறுதில இருந்தாங்க. நிஷா சேவ் ஆனதுக்கு ஆனந்த கண்ணிர் விட்டாங்க அர்ச்சனா. கடைசியா சம்யுக்தா தான் எவிக்ட் ஆனது. ரொம்பவும் ஸ்ட்ராங்க பெண்ணா தன்னை காட்டிகிட்டாலும், சம்யுக்தா மனம் நெகிழ்ந்து அழுத தருணங்களும் உண்டு. அவர் பையனை நினைச்சு அழுதது தான் அதிகம். இந்த வீட்டுக்குள்ள நடந்த பிரச்சினைகளுக்காக அவர் கண்ணிர் விட்டது ரொம்பவே குறைவு. அதனால வெளியே போகும் போதும் அழாம தான் போனாங்க. உங்க எல்லாரையும் நான் மிஸ் பண்ணுவேன்னு சொன்ன போது தான் அவங்க கண்கலங்கினாங்க. பாலாஜியும் அழுதது எதிர்பார்க்காதது.\nசாம் ரொம்பவும் புத்திசாலியான பெண். வாழ்க்கையில வெற்றிகளை பார்த்தவங்க தான். அதுக்காக அவங்களுக்கு எந்த பிரச்சினையுமே கிடையாதுனு அர்த்தம் இல்லை. தன்னோட வேதனைகளை, வலிகளை, தோல்விகளை மறைச்சுட்டு பாசிட்டிவ் சைட் மட்டும் நமக்கு காட்டினாங்கனு நினைக்கிறேன். அவங்களோட தன்னம்பிக்கையும், மன உறுதியும் நன்றாகவே வெளிப்பட்டதுனு தான் சொல்லனும். இந்த வீட்ல அவர் தொடர்ச்சியா டார்கெட் செய்யபட்ட போதும் சரி, அவருடைய தகுதி கேள்விக்குள்ளாக்கப்பட்டு கேரக்டரை அசிங்கபடுத்தின போது சரி, அவங்க அதுக்காக கலங்கவே இல்லை. முக்கியமா அழவே இல்லை. பொதுவாகவே பெண்கள் அழுதே காரியம் சாதித்துக் கொள்வார்கள்னு ஒரு பிம்பம் இருக்கு. அது இந்த தலைமுறை பெண்களுக்கு பொருந்தாது. நிஷா, அனிதா, அர்ச்சனா3பேரும் தொட்டதுக்கெல்லாம் கண்ணிர் விடும் போது அந்த வீட்ல ஸ்ட்ராங்கான பெண்களா இருக்கறது சம்யுக்தா, ரம்யா, ஷிவானி, சனம் தான்.\nதன் மேல் வைக்கபட்ட குற்றச்சாட்டுகளை, தனக்கு நிகழ்த்தப்பட்ட அவமானங்களை தனக்கு சாதகமா பயன்படுத்திக்கவே இல்லை. மிக முக்கியமாக கிடைத்த சந்தர்ப்பங்களை பயன்படுத்தி அடுத்தவர்களிடம் சண்டைக்கு போகல. அதை வச்சு ஸ்கோர் செய்யனும், மைலேஜ் ஏத்தனும்னு அவங்க நினைச்சதே இல்லை.\nஆனா சம்யுக்தா மேல மேட்டிமைத்தனமா நடந்துக்கறதா குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. அதுக்கான ஆதாரமா வளர்ப்பு சரியில்லைனு அவங்க பேசின விஷயம் சொல்லப்பட்டது. வளர்ப்பு பத்தி அவங்க பேசினது "provoking" அடிப்படையில தான் வரும். "ஆம்பிளையா இருந்தா செய்டா" னு ஆரி பேசின போது அதுக்கு காரணம் பாலாவோட செய்கைகள் தான் provoking. இதை தான் கமல் சாரும் சொன்னாரு. ஒருத்தரை மாத்தி ஒருத்தர் ப்ரவோக் பண்ணிக்காதீங்கனு அவங்களுக்கு அட்வைஸ் கொடுத்தாரு.\nசண்டை நடக்கும் போது, கோபம் வரும் போது எதிராளி தன்னை அவமானபடுத்திய போது கோபத்தில் சொல்லும் வார்த்தைகள் தான். இங்க பாலா, ரியோ ரெண்டு பேருமே கெட்ட வார்த்தைகள் பேசறாங்க. அப்படியான ஒரு எதிர்வினையாக தான் சம்யுக்தா பேசினதையும் நான் பார்க்கிறேன். ஆரி பேசியதற்கான எதிர்வினை தான் சாம் பேசினது. அவங்க பேசின வார்த்தை தவறுங்கறதுல எந்த மாற்றுக்கருத்தும் கிடையாது. ஆனா அது மேட்டிமைத்தனம் இல்லங்கறது தான் என்னோட வாதம்.\nஅவங்க அப்படி நடந்துக்கலைனு அந்த வீட்டுக்குள்ள இருந்தே உதாரணம் காட்ட முடியும். வேல்முருகன் கூட பேசவே இல்லைனு சொன்னாங்க. ஆனா அவரோட சேர்ந்து பேஷன் ஷோ டாஸ்க்ல பர்பார்ம் செஞ்சுருக்காங்க சம்யுக்தா. அது டாஸ்க்கா இருந்தாலும் முழு ஈடுபாட்டோட தான் பண்ணிருந்தாங்க. நிஷா கூட அவங்க விலகியே இருக்காங்கனு குற்றச்சாட்டு சொன்னதும் உண்மையில்லை. எவிக்‌ஷன் டாப்பிள் ப்ரீ டாஸ்க்ல நிஷா அழுதுட்டு இருந்த போது அவங்களை கூட்டிட்டு வந்தது சாம் தான். கமல் சார் முன்னாடி நிஷாவோட திறமையை சிலாகிச்சு பேசிட்டு தான் போனாங்க. இங்க வேல்முருகன், நிஷா உதாரணம் எதுக்குன்னா, அவங்க பேரை சொல்லித்தான் இந்த குற்றச்சாட்டுக்கள் வைக்கப்படுது.\nஇவங்க இல்லாம ஆஜித்தோட அவங்களுக்கான உறவு. அம்மா இல்லாத குறையை சம்யுக்தாகிட்ட பார்க்கறதா ஆஜித் சொன்ன விஷயம் பொய்யா இருக்க முடியாது. ஆஜித்தோட கண்ணிரே அதுக்கு சாட்சி. அதுல கவனிக்க வேண்டிய இன்னொரு முக்கியமான விஷயம், அந்த உறவை எங்கேயும் அவங்க காட்சிபடுத்தலை. உங்களுக்கே தெரியும் இந்த மாதிரி விஷயங்களை விஜய் டிவி எப்படி ப்ரமோட் செய்வாங்கன்னு. ஆனா அப்படி ஒரு விஷயமே இல்லாம இயல்பா இருந்தது கூட சம்யுக்தாவுக்கு மைனஸ் ஆகிருக்கலாம்.\nஎல்லாத்துக்கும் மேல போன வாரம் இந்த வீட்ல யார் இருக்கனும்ங்கற கேள்விக்கு சனம், அனிதா, ஆரியை தவிர மீதி 10 பேரும் சம்யுக்தா பேரை தான் சொன்னாங்க. அந்தளவு வீட்ல இருக்கறவங்களோட அன்பா இருந்திருக்காங்க. மேட்டிமைதனத்தோட இருக்காங்கறது உண்மையா இருந்தா அது வீட்ல உள்ளவங்களுக்கு கண்டிப்பா தெரிஞ்சுருக்கும். அதனால அவங்க மேல வைக்கப்படும் குற்றச்சாட்டு பொய்யானது.\nவெளியே வந்து கமல் சார் கிட்ட பேசும் போதும் பாசிட்டிவா பேசிட்டு போனாங்க. ஆனா அவங்க போகும் போது ஹவுஸ்மேட்ஸை பார்க்காம அனுப்பி வச்சுதுக்கான காரணம் என்னனு தான் தெரியல. ரம்யாவுக்கு கிடைத்த ஸ்பெஷல் பவர் மூலம் தான் சம்யுக்தா வெளியே தெரிந்தார். ஆனால் அதுவே அவருக்கு வில்லனாகி போனது. இறுதியில் அனிதாவுக்கு கிடைத்த ஒரு ஸ்பெஷல் பவர் தான் அவருடைய வெளியேற்றத்திற்கு காரணமாக அமைந்து விட்டது.\nமொத்தத்துல இந்த வாரம் கமல் சார் எபிசோட் ரொம்பவுமே ஏமாற்றமா இருந்தது. வழக்கமான அவரோட ஷார்ப் இல்லை. ஆரி விட்டுக்கொடுத்த பிரச்சினைல ரியோவோட கருத்தே கேக்கலை. காதல் கண்ணை மறைக்குதுனு பேசினவர், அன்பா, காதலானு ஆரி கேட்ட கேள்வியை பத்தி ஒரு வார்த்தை கூட கேக்கலை. என்ன பிரச்சினைனு தெரியலை. சில வார்த்தைகள் உச்சரிப்பும் ரொம்ப குழறலா இருந்தது.\nவிட்டுக்கொடுக்கும் விஷயத்துல தன்னோட கருத்தை பதிவு செய்யாத ரியோ பெரிய தப்பு செஞ்சுட்டதா தான் தோணுது. அவர் கை கூட தூக்கலை. இந்த பிரச்சினை பாலா எழுப்பினப்போ கூட, அதுக்கு சம்பந்தம் இல்லேனு சொன்னாரு ரியோ. அதே மாதிரி ரியோ கேப்டன்ஷிப் ரேட்டிங் போது சனம் பேசினது ரொம்பவே அதீதம். அன்னிக்கு நடந்த சாதாரண விஷயங்களை கூட குற்றச்சாட்டா சொல்றது தேவையே இல்லாதது. ஒரு கேப்டனா முடிவெடுத்தேன்னு ரியோ சொன்னது திமிர்ங்கறா மாதிரி சனம் சொன்ன போது வெறும் ரியாக்சன் மட்டும் கொடுத்துட்டு இருந்தார் ரியோ. கேப்டன்ங்கற அதிகாரத்தை பயன்படுத்துவது எப்படி திமிர் ஆகும். அதை அப்பவே கண்டிச்சு பேசிருக்கனும்.\nஇந்த வீட்டுக்குள்ள இருக்க ஒவ்வொருத்தரும் என்னவெல்லாமோ செய்யறாங்க. சின்ன வாய்ப்பு கிடைச்சாலும் அடுத்தவங்களை காலி செய்யனும்னு நினைக்கறாங்க. ஆனா ரியோவுக்கு வெளியே போகறதை பத்தின கவலை இல்லாததால எல்லாற்றையும் ரொம்ப ஈசியா எடுத்துக்கறாரு.\nநிகழ்ச்சி முடிஞ்சதுக்கு அப்புறம் ஆரியும், அர்ச்சனாவும் பேசிக்கறாங்க. சாம் பிரச்சினைக்கு. ஆரி எப்பவும் போல தன்னிலை விளக்கம் கொடுத்துட்டு இருந்ததா உங்களுக்கு தெரியும். ஆனா அவர் அதை செய்யலை. நாமினேஷன் நடக்கும் போது முதல் ஆளா வந்து பேசி மத்தவங்க மைண்ட் செட் பண்ணுவான்னு பாலா மேல ஒரு குற்றச்சாட்டு சொன்னாரு ஆரி. ஆக்சுவலா ஆரி தான் இப்ப மைண்ட் செட் பண்ணிட்டு இருக்காரு. அதாவது தன்னுடைய அடுத்த டார்கெட்டான ரம்யாவுக்கு எதிரான மனநிலையை மத்தவங்க மனசுல விதைக்கற வேலை. முந்தாநேத்து ரமேஷ் கிட்ட, நேத்திக்கு அர்ச்சனா கிட்ட.\nரம்யா ஸ்ட்ராங் கண்டஸ்டண்ட்னு எல்லாருமே சொல்லிருக்காங்க. அவங்க அப்படி இல்லைனு ப்ரூப் செய்யறது தான் ஆரியோட அடுத்த கட்ட பணி. இதை பத்தி அடுத்தடுத்த நாட்கள்ல விரிவா பார்ப்போம்.\nஇறுதியா இந்த வார கமல் சார் எபிசோட் ரெண்டுமே அட்டகாசம்னு சனம் சர்டிபிகேட் கொடுக்கறாங்க. எதையுமே லேட்டாவே புரிஞ்சுக்கற சனம்க்கு புரிஞ்ச விஷயம் எனக்கு புரியலைங்கற போது கஷ்டமா இருக்கு ப்ரெண்ட்ஸ்.\nநீ எதுக்கு பிக் பாஸ் வந்த.. ஷிவானியின் தாயார் ஆவேசம்..!
Sakthi Vikatan - 23 May 2017 - சர்ப்பதோஷம் நீக்கும் காளத்தீஸ்வரர்! | Kattankulathur Sri Kalatheeswarar Temple - Sakthi Vikatan - Vikatan\nகாளத்தீஸ்வரர் ஆலயம் - காட்டாங்கொளத்தூர்பா.ஜெயவேல் - படங்கள்: சொ.பாலசுப்ரமணியன்\nபின்னர் பூமிக்கு வந்து யோகம் மேற்கொள்ளத் திருவுள்ளம் கொண்ட ஈசன், தாம் யோகம் செய்வதற்கு ஏற்ற இடத்தைப் பூமியில் தேர்வு செய்வதற்காக, தம் கழுத்தில் இருந்த நாகத்தை அனுப்பினார். நாகம் அடையாளம் காட்டிய ஐந்து இடங்களில் முதலாவது தலம் காளஹஸ்தி. இரண்டாவது தலம் காட்டாங் குளத்தூர். மற்றவை திருநாகேஸ்வரம், திருப்பாம்புரம், கீழப்பெரும் பள்ளம் ஆகிய தலங்கள் என்கின்றன ஞானநூல்கள்.\nநாகம் அடையாளம் காட்டிய தலங்களில் ஒன்றான காட்டாங் குளத்தூரில் ஐயன் காளத்தீஸ்வரர் என்னும் திருப்பெயருடனும், அம்பிகை ஞானாம்பிகையாகவும் அருளும் ஆலயம் சுமார் 1500 ஆண்டுகளுக்கு முன்பாக, பல்லவ மன்னர்களால் கட்டப்பட்டது. தெற்கு நோக்கி அமைந்திருக்கும் இந்த ஆலயத்தில் ஐயன் கிழக்கு நோக்கி அருள்கிறார். இங்குள்ள சிவலிங்கத் திருமேனி சுயம்பு வாகத் தோன்றியதாகவும், மகரிஷி அகத்தியரால் பிரதிஷ்டை செய்யப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. இங்கு அருளும் ஈசன் சுயம்பு மூர்த்தம் என்பதாலும், அதிக சக்தி கொண்டவர் என்பதாலும், இந்தப் பெருமானை நந்திதேவர் நேராகப் பார்த்து வழிபடாமல், சுவரில் உள்ள ஒரு துவாரத்தின் வழியாகத் தரிசித்து வழிபடுகிறார். இந்த நந்திதேவர் `ஆபரண நந்தி' என்று சிறப்பித்துச் சொல்லப்படுகிறார். நந்திதேவருக்கு நெய்தீபம் ஏற்றி வழிபட்டால், வீட்டில் ஆபரணங்கள் சேரும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.\nதிருவண்ணாமலை தலத்தில் அருணாசலேஸ்வரரை வழிபட்டுத் திரும்பிய ராகுவும் கேதுவும் ஓர் இரவு இங்கே தங்கி ஈசனை வழிபட்டதாக ஐதீகம். அதற்கேற்ப இந்தக் கோயிலில் ராகுவும் கேதுவும் ஒருவர் பின் ஒருவர் நின்ற கோலத்தில் காட்சி தருகின்றனர். மேலும் நவகிரகங்கள் ஒரே இடத்தில் இல்லாமல் தனித்தனியாக அமைந்திருப்பது சிறப்பம்சம்.\nதனிச் சந்நிதியில் தெற்கு நோக்கி அருளும் ஸ்ரீஞானாம்பிகை சிறந்த வரப்பிரசாதியாகத் திகழ்கிறாள்.ஆலயத்தை வலம் வரும்போது, வலம்புரி விநாயகர், குரு பகவான், தட்சிணாமூர்த்தி, மகாவிஷ்ணு, பிரம்மன், சண்டிகேஸ்வரர், விஷ்ணுதுர்கை ஆகியோரைத் தரிசிக்கலாம். பிரதோஷம், சஷ்டி, கிருத்திகை, சங்கடஹர சதுர்த்தி போன்ற தினங்கள் விசேஷமாகக் கொண்டாடப் படுகின்றன. சித்ரா பௌர்ணமி நாளில் திருக்கல்யாண வைபவம் நடைபெறுகிறது. ராகு - கேது, குரு, சனிப் பெயர்ச்சிகளின்போது சிறப்புப் பரிகாரப் பூஜைகள் நடைபெறுகின்றன.\nகாஞ்சிபுரம் மாவட்டம், சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், கூடுவாஞ்சேரி - பொத்தேரிக்கு அடுத்துள்ளது காட்டாங்குளத்தூர். இங்குள்ள ரயில் அல்லது பேருந்து நிறுத்தத்தில் இறங்கினால் போதும். நடந்து செல்லும் தொலைவிலேயே அமைந்துள்ளது காளத்தீஸ்வரர் ஆலயம். இங்கு, சனிக்கிழமைதோறும் நிகழும் சர்ப்பதோஷ நிவர்த்தி பூஜையில் கலந்துகொண்டு வழிபட்டால் சர்ப்பதோஷங்கள் நீங்கும். அதேபோல் தினமும் நடைபெறும் பள்ளியறை பூஜை வைபவத்தைத் தரிசிக்க, குழந்தை வரம் வாய்க்கும் என்பது நம்பிக்கை.\nகலைநயம் மிளிரும் பதினாறு கால் மண்டபம்\nஇந்த ஆலயத்தில் உள்ள பதினாறு கால் மண்டபத்தின் ஒவ்வொரு தூணிலும் பல்லவர்களுக்கே உரித்தான அழகிய சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. நரசிம்மர், ராமர், கிருஷ்ணர், ஆஞ்சநேயர், தில்லை காளி, காஞ்சி காமாட்சி, கருடன் மீது அமர்ந்திருக்கும் பெருமாள் ஆகிய தூண் சிற்பங்களை மிக அற்புதமாக வடித்திருக்கிறார்கள்.\nஇந்த மண்டபத்தின் இடப்புறம் கால பகவான், சூரிய பகவான், சனீஸ்வரர், பக்த ஆஞ்சநேயர் ஆகியோர் இருக்கிறார்கள். மண்டபத்தின் வலப்புறம் தேவியரோடு அருள்கிறார் சுப்ரமணியர். பொதுவாக முருகப் பெருமானின் வலப்புறம் நோக்கி இருக்கும் மயில், இந்த ஆலயத்தில் இடப்பக்கம் திரும்பி நிற்பது விசேஷ அம்சம் என்கிறார்கள்!
Tamil Boggboss Season5Akshara KIss To Varun Controversy Troll\nஅக்ஷரா கொடுத்த முத்தம்… இது மட்டும் தப்பு இல்லையா?\nTamil Biggboss Update : கயிற்றை விட்டு எழுந்து செல்லும்போது அக்ஷரா தான் சாய்ந்து தூங்கிகொண்டிருந்த வருணுக்கு முத்தம்கொடுத்துவிட்டு சென்றார்.\nDecember 22, 2021 7:01:05 pm\nTamil Biggboss Season5Update :விஜய்டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. நிகழ்ச்சி முடிய இன்னும்3வாரங்களே மீதமுள்ள நிலையில், போட்டியாளர்களின் உறவினர்கள் பிக்பாஸ் வீட்டிற்கு வரும் படலம் தொடங்கியுள்ளது. இது ஒருபுறம் இருக்க மறுபுறம் போட்டியாளர்களுக்குள் கடுமையான மோதலும் ஏற்பட்டுள்ள நிலையில், ஒரு சிலர் சர்ச்சைகளிலும் சிக்கி வருகினறனர்.\nஇதில் கடந்த சில தினங்களுக்கு முன்பு வைல்ட் கார்டு என்ட்ரியாக பிக்பாஸ் வீட்டிற்கு வந்த நடிகர் சஞ்சீவ், அமீர் ஆகியோர் தங்களின் வாழ்வியலைப்பற்றி பேசினர். இதற்கிடையே அமீர் பாவனி பின்னால் சுற்றுவது அவர் தம்பி என அழைத்தும் அவரை காதலிக்கிறேன் என்று என்று கூறியது என அமீர் பல சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். அதிலும் கடந்த சனிக்கிழமை ஒளிபரப்பான எபிசோட்டில் இரவு நேரத்தில் அமீர் பாவனிக்கு முத்தம் கொடுத்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.\nஇந்த விவகரத்தில் முதலில் முத்தம் கொடுத்த அமீரை வறுத்தெடுத்த நெட்டிசன்கள் அதற்கு அடுத்து பாவனி அமீரை தடுக்காதது ஏன் என்று கேள்வி கேட்க தொடங்கினர். மேலும் தம்பி என அழைத்தும் அமீர் தன்னிடம் நெருக்கி பழக பாவனி அனுமதிப்பது ஏன் என்று கேட்டு வருகின்றனர். மேலும் அமீர் முத்தம் கொடுத்த காட்சி குறித்து தொகுப்பாளர் கமல்ஹாசன் எதுவும் கேட்காதது ஏன் என்றும், அபிநய் விவகாரம் குறித்த அவ்வளவு பேசிய கமல் இந்த முத்த விவகாரம் குறித்து வாயை திறக்காதது ஏன் என்று கேட்டு வருகினறனர்.\nஇந்த சர்ச்சை தற்போது தீயாய் பரவி வரும் நிலையில், தற்போது அடுத்த முத்த சர்ச்சை வெடித்துள்ளது கடந்த இரு தினங்களுக்கு முன்பு வெளியான எபிசோட்டில், கேப்டன்சி டாஸ்க் நடத்தப்பட்டது. இதில் கயிற்றை யாரும் விடக்கூடாது என்ற நிலையில், அனைவரும் கயிற்றை பிடித்துக்கொண்டு சோபாவில் ஒருவர் மேல் ஒருவர் சாய்ந்து தூங்கிக்கொண்டிருந்தது. அப்போது கயிற்றை விட்டு எழுந்து செல்லும்போது அக்ஷரா தான் சாய்ந்து தூங்கிகொண்டிருந்த வருணுக்கு முத்தம்கொடுத்துவிட்டு சென்றார்.\nஅப்போது வருணும் இந்த முத்தத்திற்கு ரியாக்ஷன்கொடுப்பது போல சிரித்த முகத்துடன் இருந்தார். இந்த காட்சியை பார்த்த நெட்டிசன்கள் பலரும் அக்ஷராவை திட்டி தீர்த்து வருகின்றனார். ஆனால் ஒரு சிலர் நணபர் என்ற முறையில் அக்ஷரா முத்தம் கொடுத்திருப்பார் என்று சப்போர்ட் வாங்கினாலும், அமீர் ஏன் நட்பு ரீதியாக முத்தம் கொடுத்திருக்க கூடாது என்று கேட்டு வருகின்றனர். அமீர் முத்தம் கொடுத்தது தவறு என்றால் அதே அக்ஷரா செய்தால் சரியா என்று கேட்டு வருகின்றனர்.\nWeb Title: Tamil boggboss season5akshara kiss to varun controversy troll\nபாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லையைவிட இவங்க ரொம்ப அழகா? – காவ்யா லேட்டஸ்ட் ஸ்டில்ஸ்!
பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமிக்குக் கொடூர தண்டனை – ஊர்மக்களின் மூடநம்பிக்கை !\nபீகார் மாநிலத்தில் பாலியல் வல்லுறவுக்கு ஆளான சிறுமி ஒருவருக்கு ஊர் பஞ்சாயத்தினர் கொடூரமான தண்டனைக் கொடுத்துள்ளது சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளது. பீஹார் மாநிலம் கயா பகுதியில் தனது பெற்றோருடன் வசித்து வருகிறார் அந்த 14 வயது சிறுமி. இவர் கடந்த ஆகஸ்ட் 14 ஆம் தேதி தங்கள் வீட்டுக்கு அருகில் உள்ள மறைவானப் பகுதிக்கு இயற்கை உபாதைகளைக் கழிக்க சென்றுள்ளார். அப்போது அவரை கட்டாயமாக வாயைப் பொத்து தூக்கிச்சென்ற கும்பல், அவரை அருகில் உள்ள பஞ்சாயத்து அலுவலகத்தில் அடைத்து\nBy Karthik Kumar Wed, 28 Aug 2019\nபீகார் மாநிலத்தில் பாலியல் வல்லுறவுக்கு ஆளான சிறுமி ஒருவருக்கு ஊர் பஞ்சாயத்தினர் கொடூரமான தண்டனைக் கொடுத்துள்ளது சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளது.\nபீஹார் மாநிலம் கயா பகுதியில் தனது பெற்றோருடன் வசித்து வருகிறார் அந்த 14 வயது சிறுமி. இவர் கடந்த ஆகஸ்ட் 14 ஆம் தேதி தங்கள் வீட்டுக்கு அருகில் உள்ள மறைவானப் பகுதிக்கு இயற்கை உபாதைகளைக் கழிக்க சென்றுள்ளார். அப்போது அவரை கட்டாயமாக வாயைப் பொத்து தூக்கிச்சென்ற கும்பல், அவரை அருகில் உள்ள பஞ்சாயத்து அலுவலகத்தில் அடைத்து கூட்டு பலாத்காரம் செய்துள்ளனர்.\nஅடுத்த நாள் காலை பஞ்சாயத்து அலுவலகத்துக்கு வந்த அதிகாரிகள் அங்கே சிறுமி சீரழிக்கப்பட்டு கிடந்ததைப் பார்த்துள்ளனர். அதன் பின் சிறுமியின் பெற்றோருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு பஞ்சாயத்து கூடியுள்ளது. அந்த பஞ்சாயத்தில் அந்த பெண்ணை சீரழித்த வாலிபர்களை தேடி கண்டுபிடித்து தண்டனை தருவதற்குப் பதிலாக பாதிக்கப்பட்ட சிறுமியை நீ கலங்கமாகிவிட்டாய் எனக் கூறி, மொட்டை அடித்து ஊர்வலம் அழைத்துச் சென்று அசிங்கப்படுத்தியுள்ளனர்.\nஇதைப் பற்றி அந்த சிறுமியின் தாயார் போலிஸில் புகாரளிக்க போலிஸார் பலாத்காரம் செய்த இளைஞர் ஒருவரைக் கைது செய்துள்ளனர். மேலும் மற்றவர்களை தேடும் பணியில் துரிதமாக உள்ளனர்.
#IndiaFightsCorona மதுரை மக்களை துரத்தும் கொரோனா வைரஸ்... பாதிப்பு 84-ஆக உயர்வு\nமதுரையில் முதல் முறையாக அண்ணா நகரை சேர்ந்த கட்டுமான ஒப்பந்ததாரருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இவரை தொடர்ந்து அவரது குடும்பத்தினர் உட்பட மதுரையில் அடுத்தடுத்து பலருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. பின்னர் சில நாட்களாக மதுரை மாநகராட்சியில் கொரோனா தொற்றே கண்டறியப்படாத நிலை காணப்பட்டது.\nஏப்ரல் 22-ம் தேதிக்கு பின்னர் மதுரையில் கொரோனா வைரஸ் தொற்று வேகம் காட்ட தொடங்கியது. கொரோனா வைரஸ் தொற்று நோய் பரவாமல் இருக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது.\nஅரசு தரப்பில், அனைவரும் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். வீட்டை விட்டு தேவையில்லாமல் வெளியே செல்ல வேண்டாம் என்று கேட்டு கொண்டாலும் பொதுமக்கள் அதனை கடைபிடிப்பது இல்லை. காய்கறி மார்க்கெட், இறைச்சி, மீன் கடைகளில் மக்கள் அதிகமாக கூடினர். சிலர் தங்கள் பகுதியில் உள்ள கடைகளில் பொருட்கள் வாங்காமல், வேறு பகுதிகளுக்கு சென்றனர். பொதுமக்களின் ஒத்துழைப்பு இல்லாததால், கொரோனா சமூக பரவலாக மாறி விடுமோ என்ற அச்சம் எழுந்தது.\nமதுரையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு 79 பேர் சிகிச்சை பெற்றனர். இவர்களில் 40 பேர் பூரண குணமடைந்து வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த நிலையில்2தினங்களாக புதியதாக யாருக்கும் கொரோனா தொற்று ஏற்படாமல் இருந்தது. இந்நிலையில் நேற்று மதுரையில் மேலும்5பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது என அரசு தெரிவித்தது.\nமதுரை புது விளாங்குடி பகுதியைச் சேர்ந்த 29 வயது பிரசவமான பெண்ணுக்கும், கீழ அனுப்பானடி பகுதியை சேர்ந்த 33 வயது பெண்ணுக்கும், கரிசல்குளம் பகுதியை சேர்ந்த 31 வயது ஆண் ஒருவருக்கும் ஏற்கனவே கொரோனா பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து இவர்களுக்கு பரவியதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. மதுரை அரசு மருத்துவமனையில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் 42 வயது பெண் சுகாதார பணியாளர். இவருக்கும் நேற்று கொரோனா உறுதி செய்யப்பட்டது. கொரோனா வார்டில் பணிபுரியும் இவருக்கு, அங்கு சிகிச்சை பெறும் கொரோனா நோயாளியிடம் இருந்து நோய்த்தொற்று பரவியதாக சுகாதாரத் துறையினர் தெரிவித்து உள்ளனர்.\nமற்றொருவர் 26 வயதுடைய பேரிடர் மீட்பு படையை சேர்ந்த வீரர் ஆவார். இவர்களுடன் தொடர்பில் இருந்த சிலருக்கும் கொரோனா தொடர்பான பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. மதுரையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 84-ஆக உயர்ந்து உள்ளது. சிலருக்கு யாரிடம் இருந்து தொற்று பரவியது என்பதை உறுதி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அதனால் மதுரையில் கொரோனா சமூக பரவல் நிலையை அடைந்துவிட்டதோ? என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.\nமதுரையில் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வருகிறார்களா? என்பதை போலீசார் உதவியுடன் ‘ட்ரோன்’ கேமரா மூலம் கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க வீடு, வீடாக கபசுரக் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. தெருக்களில் கிருமி நாசினி தெளிக்கப்படுகிறது. மாநகராட்சி கட்டுப்பாட்டு அறைகளுக்கு வரும் புகார்களுக்கு உடனடியாக தீர்வு காணப்படுகிறது மாநகராட்சி ஆணையர் விசாகன் கூறியுள்ளார்.\nகொரோனா ஒழிப்புக்கு மக்களின் ஒத்துழைப்பு மிகவும் அவசியமாகும். எனவே, இனி வரும் நாட்களில் அரசின் வழிமுறைகளை பின்பற்றி நடக்க வேண்டும். இல்லையென்றால் வீட்டிற்குள் இன்னும் பல நாட்கள் முடங்கி கிடக்க வேண்டிய நிலை மக்களுக்கு ஏற்பட்டுவிடும்.\nPrevious post:#IndiaFightsCorona இந்தியாவில் பாதிப்பு 35 ஆயிரத்தை கடந்தது, பலி எண்ணிக்கை 1,147 ஆக உயர்வு; மாநிலம் வாரியாக பாதிப்பு விபரம்:-\nNext post:#IndiaFightsCorona கொரோனா நோயாளி இல்லாத மாவட்டமாக மாறும் நெல்லை, தூத்துக்குடி, குமரி, தென்காசி…
Aval Vikatan - 10 May 2022 - வினா நூறு... கனா நூறு... விடை ஒன்று! -4-உயர் பதவிகள் உங்களுக்கும் சாத்தியமே... | job-searching-from-social-media-4 - Vikatan\nசீதாவும், குமாரும் ஒரு நிறுவனத்தில் ஒரே நேரத்தில் வேலைக்குச் சேர்ந்தவர்கள். பத்து வருட அனுபவத்துக்குப் பிறகும் குமாருக்கு கொடுக்கப்பட்டிருக்கும் பொறுப்புகளும் உயர் பதவியும் சீதாவுக்கு மறுக்கப்பட்டன, பெண் என்ற காரணத்தால்.. ‘பெண்கள் எமோஷனல் ஆனவர்கள்’, ‘குடும்ப கமிட் மென்ட் அதிகம்’ என்று அதற்கு அவர்கள் சொல்லும் காரணங்கள் பல. இதுபோன்ற முன்முடிவுகளைப் புறந்தள்ளிவிட்டு உங்கள் துறையில் உச்சம் தொடுவதற்கான வழிகாட்டுதல்களை வழங்குகிறார் மகேந்திரா வேர்ல்டு சிட்டி நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி பாரதி.\n“குடும்பம், குழந்தை, அலுவலகம் போன்ற கமிட்மென்ட்டுகளையும் சுமக்க வேண்டியதால் பெண்களுக்கு கரியரை மட்டும் இலக்காகக் கொண்டு செயல்பட முடிவதில்லை. அதனால்தான் பெண் களுக்கு உயர் பதவிகள் எளிதில் வாய்ப்ப தில்லை. ஆனாலும் இதை மிக எளிதாகக் கையாள முடியும்.\nகுடும்ப பொறுப்புகளையும், அலுவலக பொறுப்புகளையும் மற்றவர்களுடன் பகிர்ந்துசெய்வது அவசியம். ‘நானே செய்தால்தான் எனக்கு திருப்தி’ என்ற எண்ணம் தேவையில்லை.\nபொறுப்புகளை பகிர்ந்துகொள்வதில் குடும்பத்தாருக்கு சிக்கல் இருந்தால், உங்கள் ஊதியத்தில் பத்து சதவிகிதத்தை ஒதுக்கி, வீட்டு வேலைகள், சமையல் வேலைகள் செய்ய ஒருவரை பணி அமர்த்தி, ஸ்ட்ரெஸ் ஃப்ரீயாக இருங்கள். குழந்தைகளுடன் நேரம் செலவழிக்க முடியவில்லை, அவர்களின் படிப்பில் கவனம் செலுத்த முடியவில்லை என நினைத்தால், ஹோம் டியூஷனுக்கு ஏற்பாடு செய்யுங்கள். கிடைக்கும் சில மணி நேரத்தை குழந்தை களுடன் மகிழ்ச்சியாகச் செலவிடுங்கள்.\n‘‘பெண்களுக்கு இது தெரியாது’, இதற்கு சரிப்பட்டு வர மாட்டார்கள்’ என்ற விமர்சனங்களைத் தவிர்க்க, வேலையில் அப்டேட் ஆக வேண்டியது அவசியம்.\nஉங்களுக்கு தலைவராக இருப்பவர் மட்டுமன்றி உயர் பதவியில் இருப்பவர் களிடமும் உங்களின் திறமைகளை வெளிப்படுத்துங்கள். சின்ன வாய்ப்பையும் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.\nகோபம், சந்தோஷம் எல்லாவற்றையும் சரியாகக் கையாளத் தெரிந்துகொள்ளுங்கள். அதே நேரம் உங்களுக்குக் கீழ் பணிபுரியும் ஓர் ஆண், ஒரு பணியை முழுமையாகச் செய்ய வில்லை என்றால், அதற்காக கோபத்தை வெளிப்படுத்துவதில் தவறில்லை, உங்களின் கோபம், உங்கள் துறையை நீங்கள் எவ்வளவு நேசிக்கிறீர்கள் என்பதை வெளிப்படுத்தும்.\nஅலுவலகத்தில் அழுவது உங்களை பலவீன மானவராகக் காட்டும். ஆளுக்கோர் அறிவுரை சொல்வார்கள். அதைத் தவிர்க்கவும்.\nஅலுவலகத்தில் மற்றவர்களைப் பார்த்து எதையும் ஃபாலோ செய்யாதீர்கள். நீங்களே சுயமாக முடிவெடுங்கள்.\nபெண் என்கிற காரணத்துக்காக பிறர் இரக்கப்பட வேண்டும் என்று நினைக்காதீர்கள். ‘ஆணுக்கிங்கே இளைப்பில்லை காண்’ என்பதை எப்போதும் துணிந்து வெளிப்படுத்திக் கொண்டே இருங்கள்.\nகுடும்பம், குழந்தை, அலுவலகம் என்று 360 டிகிரியில் சுழலும் பெண்கள் எந்த ஒரு முடிவை எடுக்கும் முன்பும், பல கோணங்களில் ஆராய்வதால் முடிவு எடுக்க தாமதம் ஆகலாம். ஆனால் அந்த முடிவு தவறாகாது என்பதை உங்கள் ஆட்டிட்யூட் மூலம் வெளிப்படுத்துங்கள்.\nஉயர் பதவியில் இருந்தாலும், சில நேரங்களில் உங்கள் பதவிக்குக் கீழ் இருப்பவர்களின் ஐடியாக்கள், கருத்து களைக் கேட்டுக் கொள்ளலாம். ஆனால் இறுதியாகத் தீர்மானிப்பது நீங்களாகத்தான் இருக்க வேண்டும்.\nஉங்களுக்கு எவ்வளவு நெருங்கிய நண்பர் களாக இருந்தாலும், ஆவணங்களில் கையெ ழுத்து போடும் முன்பும், அலுவலக அறிவிப்பு களைத் தெரிவிக்கும் முன்பும் கவனமாக இருங்கள். வாய்மொழியாக இல்லாமல் எல்லா வற்றையும் மெயில் மூலம் பதிவிடுவது நல்லது.\nபண்பில் ஆட்டிட்யூட் காட்ட வேண்டாம். தோழமை உணர்வுடன் தட்டிக்கொடுத்து எல்லோரிடமும் வேலை வாங்குங்கள்.\n* நெருங்கிய நட்பு வட்டத்திடம்கூட, உங்களின் பர்சனல் விஷயங்களை அலுவலகத்தில் பகிராதீர்கள்.\n* மற்றவர்களின் தனிப்பட்ட விஷயங்களில் தலையிடுவது,தேவையில்லாத விமர்சனங் களைப் பகிர்வது போன்றவை வேண்டாம்.\n* யாரிடமும் எமோஷனலாக கனெக்ட் ஆகாதீர்கள்.\n* ஊதியப் பாகுபாடு நிகழும்போது, துணிந்து எதிர்த்துக் கேள்வி கேளுங்கள்.\n* மற்றவர்களின் நெகட்டிவ் விமர்சனங்களை மனதில் ஏற்றிக்கொள்ளாதீர்கள்.
யானைகளின் வருகை 144: அங்குசப் பணியாளன் ஆன கதை | யானைகளின் வருகை 144: அங்குசப் பணியாளன் ஆன கதை - hindutamil.in\nPublished : 16 Mar 2018 15:26 pm\nPublished : 16 Mar 2018 03:26 PM\nயானைகளின் வருகை 144: அங்குசப் பணியாளன் ஆன கதை\nரமேஷ் பேடியின் 'யானை: காடுகளின் அரசன்' என்ற இந்த நூலை மட்டும் கிட்டத்தட்ட ஏழெட்டு முறை படித்திருக்கிறேன். ஒவ்வொரு முறை படிக்கும் போதும் காட்டு யானைகளை தரிசித்து அல்ல, ஸ்பரிசித்து பார்த்த தன்மை மட்டுமல்ல, அவற்றுடன் வாழ்ந்து பார்த்த அனுபவமே இதிலிருந்து கிடைக்கிறது. அவற்றிலிருந்து நமக்கு ஏற்படும் யானை அனுபவங்களை பொருத்திப் பார்க்கவும் வாய்ப்பு ஏற்படுகிறது.\nஇன்றைக்கு யானை மற்றும் வனவிலங்குகள் ஆராய்ச்சியாளர்கள் என்று சொல்லப்படுபவர்கள் இந்தப் புத்தகத்தைக் குறிப்பிடாமலே, இதில் உள்ள தகவல்களை ஏராளமாக எடுத்து தங்கள் நூல்களில் பயன்படுத்துவதையும் காண்கிறேன்.\nசமீபத்தில் எழுத்தாளர் சு.வேணுகோபால் எழுதி வெளி வந்திருக்கும் வலசை என்கிற நாவலிலும் சரி, அதற்கு முன்பு ராமன் சுகுமார் எழுதி வெளியிட்டிருந்த, 'என்றென்றும் யானைகள்' என்ற ஆய்வு நூலிலும் ஆகட்டும் இதன் நெடி சற்று தூக்கலாகவே காண நேரிட்டது. சு.வேணுகோபாலின் நூல் யானைகள் குறித்த புனைவு இலக்கியம். எனவே அதை பெரிதுபடுத்த வேண்டியதில்லை. ஆனால் ராமன் சுகுமாருடையது ஆய்வு நூல். அதில் சில நெருடல்களும் வெளிப்பட்டிருப்பதை காண்கிறேன்.\nராமன் சுகுமார் 1980களில் சத்திய மங்கலம் காடுகளின் இண்டு இடுக்குகளில் எல்லாம் சுற்றியலைந்து தரவுகள் சேகரித்து வெளியுலகுக்கு சொன்ன சூழலியாளர். யானைகளின் இயல்பு, மனிதருக்கும், யானைகளுக்கும் இடையேயுள்ள மோதல்கள். சூழலையும், யானைகளையும் காக்க வேண்டிய தேவை பற்றிய தேவையையும் போகிற போக்கில் சொல்லி செல்கிறார். விலங்கியல், தாவரவியல் பட்டம் பெற சென்னை லயோலா மற்றும் விவேகானந்தா கல்லூரியிலும் படித்த இவர், 1979ல் இயற்கை பற்றிய முனைவர் பட்ட ஆய்வாளனாக பெங்களூரு இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆப் சயன்ஸில் சேர்ந்திருக்கிறார்.\nசிறுவயதிலிருந்தே இருந்த இயற்கையின் மீதான நேசம் இவரிடம் விரிவடைந்து பெரிய பாலூட்டிகள் பற்றிய ஆய்வு செய்வதே விருப்பமாக மாறியது. அதில் இந்தியாவில் முதன்முதலாக மாதவ் காட்கில் பெரும் முயற்சி எடுத்து நவீன இயற்கையியல் படிப்பை அங்கே அறிமுகம் செய்திருந்தார். அதில் தனக்கான ஆய்வுத் தலைப்பை தேர்ந்தெடுக்க அவருடன் பலவாறாக யோசித்திருக்கிறார்.\nஅப்போது, மனிதர்கள்-யானைகள் மோதல் பற்றி ஆய்வு செய்வதில் உள்ள பிரச்சினைகளை பற்றி மாதவ் காட்கில் கூறியிருக்கிறார். அது இவருக்கு ஆர்வத்தை தூண்டியிருக்கிறது. காட்டை ஒட்டிய பகுதிகளில் சிறு விவசாயிகளின் விளைநிலங்களில் யானைகள் புகுந்து சூறையாடுவதையும், கோபமடைந்த விவசாயிகள் விஷமிட்டுக் கொல்வதையும், தந்தங்களுக்காக வனக் கொள்ளையர்கள் வேட்டையாடுவதையும் பற்றி அவர் விரிவாக பேசியதில், 'இது பற்றி ஆய்வு நடத்துவது புதுமையானது. அவசியமானது. நீண்டகாலத்திற்கு யானைகள் மனிதர்களால் அழிக்கப்படாமல் வாழ வேண்டுமானால் அதற்கு இந்த ஆய்வு உதவும்!' என்ற முடிவுக்கு வந்திருக்கிறார்.\nஇந்தக் காலகட்டத்தில் AESA (ஆசிய யானைகள் சிறப்புக்குழு), IUCN ஆகியவை தமது முதல் திட்டத்தை முதுமலையில் தொடங்கியிருக்கிறது. அதன் தலைவராக இருந்த ஜே.சி.டேனியல் இந்தியாவில் யானைகள் தொடர்பான ஆய்வுக்கு நிதி பெறும் வாய்ப்பு உண்டு என மாதவ் காட்கிலுக்கு கடிதம் எழுதியிருக்கிறார். அதற்கு WWF நிதி வழங்க முன் வந்திருக்கிறது. அதை முன்னிட்டு ராமன் சுகுமார் யானைகள் மனிதர்கள் மோதல் குறித்த முன் வரைவைத் தயார் செய்து அவர்களுக்கு அனுப்பியிருக்கிறார். அதையடுத்து AESA-ன் ஆலோசனைக்கூட்டம் பெங்களூருவில் நடந்திருக்கிறது.\nஅதற்கு முன்பாக தென்னிந்தியக் காடுகளில் யானைகள் எண்ணிக்கை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. இப்படி தென்னிந்தியா முழுவதும் கணக்கெடுப்பு நடத்தப்பட்டிருப்பது முதலாவது முறையாக இருக்க, அதில் சத்தியமங்கலம் காடுகளில் மட்டும் 1268 யானைகள் உள்ளதான விஷயம் பலரையும் சந்தேகிக்க வைத்திருக்கிறது.\nபலர் அதை ஏற்கவே மறுத்துள்ளனர். ஈரோடு வனப்பகுதி இத்தனை யானைகளை தாங்காது. புகழ்பெற்ற முதுமலை வனத்திலேயே வெறும் 446 யானைகளே உள்ளன. எப்படி அவ்வளவு புகழ்மிக்க வனச் சரணாலயத்திலேயே குறைவான எண்ணிக்கையில் யானைகள் இருக்கும்போது சாதாரண வனத்தில் அவ்வளவு யானைகள் இருக்க முடியும் என்பதே கேள்வியாக இருந்தது. என்றாலும் முதுமலை எவ்வளவு புகழ்பெற்றதாக இருந்தாலும் அதன் பரப்பளவு வெறும் 321 சதுர கிலோமீட்டர்களே என்பதையும், சத்தியமங்கலம் காடுகள் 2467 சதுர கிலோமீட்டர்கள் பரந்துபட்ட வனம் என்பதையும் அவர்கள் உணரவில்லை.\nசத்தியமங்கலத்தின் கிழக்குத் தொடர்ச்சி மலைக்காடுகளில் விவசாய நிலமும் அதிகம், எனவே மனிதர்-யானைகள் மோதலும் அங்கே மிக அதிகம் என்பதால் அதுவே தன் ஆய்வுக்கு உகந்த இடம் என தேர்ந்தெடுத்திருக்கிறார். இதையெல்லாம் இவரே தன் நூலில் விரிவாக, விவரமாக குறிப்பிட்டு செல்கிறார்.\n1980 ஆம் ஆண்டு மே மாதத்தில் ஒரு பழைய ஜீப்பில் புறப்பட்ட இவரின் ஆய்வு பத்தாண்டுகள் முதுமலை தொடங்கி சத்தியமங்கலம் காடுகளுக்குள் அங்கிங்கெணாதபடி பயணிக்கிறது.\nயானைகளை பற்றி மட்டுமல்ல, மற்ற விலங்கினங்களை பற்றியும், அதை சார்ந்த வாழ்கிற மனிதர்களைப் பற்றியும் ஒரு அல்ட்ரா ஸ்கேன் ரிப்போர்ட்டை நம்மிடம் தருகிறது. (இத்தொடரின் அத்தியாயம்:21ல் சொல்லப்பட்ட 'வீரப்பனுக்கு முன்பே செவ்வி கவுண்டர் என்பவர் யானை வேட்டையாடிகளை ஊக்குவிக்கும் பின்புலமாக இருந்திருக்கிறார்!' என்ற தகவல்களுக்கு இவரது நூலைதான் மேற்கோள் காட்டியிருந்தேன்)\nராமன் சுகுமார் தன் நூலின் ஆரம்பத்திலேயே மதம் பிடித்த இளம் வயது யானையைப் பற்றி ஒரு சிறுகதை போல் இப்படி வடிக்கிறார்:\n''பிலிகிரி என்ன செய்வது என்று புரியாமல் மேலும் கீழும் அலைந்து கொண்டிருந்தது. 16 வயதேயான ஆண் யானை பிலிகிரியிடம் இத்தகைய மாற்றம் உண்டாவது ஒன்றும் புதிதில்லை. எல்லா யானைகளும் இந்த வயதில் சந்திக்கக்கூடிய மாற்றம்தான். பிலிகிரியின் உடல் முழுவதும் ஒரு வேகம். நெற்றிப் பொட்டில் விண், விண் என்று வலி. உடல் முழுவதும் ரத்தம் குபு, குபுவென பொங்கி ஓடும் உணர்வு. ஆம் பிலிகிரிக்கு முதன் முதலாக மதம் பிடிக்கத் தொடங்கியுள்ளது. 1983 ஜனவரி 19 அன்று பிலிகிரி ரங்கா மலையில் கயத்ததே வரகுடி குட்டையருகே முதன்முதலாக பிலிகிரியை இத்தகைய மதம் வடியும் நிலையில் கண்டேன். அவன் தண்ணீரில் மீண்டும், மீண்டும் துள்ளிக் குதித்து விளையாடிக் கொண்டிருந்தான். துதிக்கையால் நீரை அலைந்தான். உறிஞ்சிப் பீய்சசி அடித்தான். இடவலமாக உடலை வேகமாக ஆட்டினான். குட்டையையே கலக்கிக் கொண்டிருந்தான். பின் திடீரென மூழ்கித் தன் தந்தத்தால் குட்டையின் அடியிலிருந்த சேற்றைத் தோண்டி தண்ணீருக்கு மேல் அள்ளி விசிறினான். இளமைக்கே உரிய மதம் வடிவதை அனுபவித்து பிலிகிரி திளைத்துக் கொண்டிருந்தான்'' என நீள்கிறது அந்தக் காட்சி.\nஇப்படியாக கதை போல் நீளும் இவரது ஆய்வில் யானைகள் குறித்த வரலாற்றுப் பார்வையும் சொல்லப்படுகிறது. அவர் சொல்கிறார்:\n''ஒரு காலத்தில் மன்னர்களை சுமந்து வலம் வந்து ராஜகவுரவத்தின் சின்னமானது யானைகள். வழிபடும் தெய்வமெனப் பணிந்த மனிதன், மறுபுறம் அவற்றைக் கொன்று பசியாறினான். பின் அதன் தந்தங்கள் மதிப்பு மிக்க பொருளான பின் பொருளுடமைச் சமூகத்தில் அவை காசுக்காக வேட்டையாடப்பட்டன. மன்னர்கள் எதிரிகளை அச்சுறுத்தும் படையாக்கிப் போரிட்டனர். மன்னர்களை மகிழ்விக்கும் பரிசுப் பொருளாகவும் யானைகள் மாறின. சிந்து சமவெளி நாகரிகம் கூறும் முத்திரைகளில் மாடு மட்டுமல்ல, யானையும் கூட காணப்படுகிறது. அதன் முதுகிலிருந்து ஒரு கோடு வரையப்பட்டுள்ளதைக் கொண்டு ஆராய்ச்சியாளர் ரிச்சர்ட் கேரிங்டன் அது அம்பாரியின் ஒரு கயிறு என்கிறார்.\nஆனால் வரலாற்று ஆய்வாளர் டி.கே.லாகிரி செளத்ரி அப்படி இருக்க முடியாது என்கிறார். எனினும் சிந்து சமவெளி நாகரிக காலத்தில் திராவிடர்கள் யானைகளைத் தமது உதவிக்கென பயன்படுத்தியிருக்கக் கூடும் என்பது உறுதி. ராமாயணம் ராமனுக்கு எதிராக தென்னிந்தியத் திராவிட மன்னன் ராவணன் யானைப் படையுடன் போரிட்டான் என்கிறது.\nதிராவிடர்கள் யானைகளை குழி வெட்டிப் பிடித்திருக்கக் கூடும். அதே முறைதான் சமீபகாலம் வரை கிட்டாவ் என்ற யானை பிடிப்பு முறையாக தென்னகத்தில் பயன்பட்டு வந்தது. கிமு 1500-ல் மேற்காசியாவிலிருந்து வந்த ஆரியர்கள் சிந்து சமவெளி நோக்கி வந்திருக்கக் கூடும். வலுவிழந்த சிந்து சமவெளி திராவிடர்கள் தெற்கு நோக்கி நகர்ந்தனர். யானைகளைப் படையாக பயன்படுத்தும் கலையை கற்ற ஆரியர்கள், யானைப் படை வலிமை கொண்டு கங்கை சமவெளி முழுமையும் தமது ஆளுகைக்கு உட்படுத்தினார்கள். யானைகளை விரட்டி ஏற்கெனவே அமைக்கப்பட்ட குழிகளில் விழ வைத்து, பழக்கப்படுத்த யானைகள் (கும்கிகள்) கொண்டு பயிற்றுவிக்கும் முறை வழமை பெற்றது.\nமாபெரும் யானைகள் சிறிய மனிதனின் கையிலிருந்த சின்ன இரும்பு ஊசிக்கு (அங்குசம்) பயந்து பணியும் பணியாளன் ஆனது!'' இவ்வாறு நீளும் அவரின் ஆய்வின் வெளிப்பாடு 16-ம் நூற்றாண்டில் பிஹாரில் வாழ்ந்த பாசுப்பியா என்ற முனிவர் எழுதிய கஜசாஸ்திரம் நூலைப் பற்றி சொல்கிறது.\nநியமன எம்எல்ஏக்கள் தொடர்பாக நீதிமன்ற அதிகாரபூர்வ நகல் கிடைத்த பிறகே முடிவு: புதுச்சேரி...\nஅதிகரிக்கும் குற்றங்கள்: பெண்களை மதிக்கத் தவறுகிறோமா?
கொரோனா-இந்தியாவில் பலி 273-ஆக உயர்வு | Swadesamithiran\nபுதுதில்லி, ஏப்ரல் 12:கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 273-ஆக உயர்ந்துள்ளது.\nநாடு முழுவதும் கொரோனா நோய்த்தொற்றின் வேகம் மெல்ல அதிகரித்து வருகிறது. இதைத் தடுக்க பல மாநில அரசுகள் ஊரடங்கு உத்தரவை மேலும் நீட்டித்துள்ளன. கொரோனா வைரஸ் தொற்றில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நாட்டில் மகாராஷ்டிர மாநிலமே முன்னிலையில் உள்ளது. அங்கு இதுவரை 1500 பேர் நோய்த்தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். 110 பேர் உயிரிழந்துள்ளனர்.\nஇரண்டாவதாக தமிழகம்: அடுத்ததாக தமிழகத்தில் 969 பேருக்கு நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை இறந்தோர் எண்ணிக்கை 11-ஆக உயர்ந்துள்ளது. மூன்றாவது இடத்தில் தில்லி உள்ளது. இங்கு 900-க்கும் மேற்பட்டோர் நோய்த்தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.\nமத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட அறிவிப்பின்படி, கடந்த 24 மணி நேரத்தில் 34 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 8,356 ஆக உயர்ந்துள்ளது. 716 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.\nவிரைவில் பொது போக்குவரத்து- நிதின் கட்காரி\nNext story கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஏற்றுமதி வர்த்தகம்\nPrevious story கபசுர குடிநீர் கொரோனாவை தடுக்குமா?
அர்ணாப் விவாத நிகழ்ச்சியில் ஸ்மிரிதி இராணியிடம் கமல் திணறியதற்கான காரணம்!\nடிசம்பர் 24, 2018\t960\nரிபப்ளிக் டிவியில் நடந்த விவாத நிகழ்ச்சியில் கமல்ஹாசன் மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இராணியிடம் பல சூழ்நிலைகளில் திணறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nமக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசனும், மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இராணியும் கலந்து கொண்ட விவாத நிகழ்ச்சி ஒன்றை அர்ணாப் கோஸ்வாமி தொகுத்து வழங்கினார். இந்நிகழ்ச்சியில் எப்போதும் இல்லாத அளவுக்கு கமல் பல சூழ்நிலைகளில் திணறினார்.\nபாஜகவை இந்துத்தவா கட்சி என்று வர்ணித்தபோது, ஸ்மிரிதி இராணி இந்துத்வா கட்சிதான் முஸ்லிம் அப்துல் கலாமை ஜனாதிபதியாக்கி அழகு பார்த்தது என்று பதிலடி கொடுத்தார்.\nதேசிய கீதம் விசயத்தில் ஏன் திரையரங்குகளில் தேசிய கீதம் ஒலிபரப்பப்பட வேண்டும்? என்று கேள்வி எழுப்பினார் கமல். அதற்கு பதிலடி கொடுத்த ஸ்மிரிதி இராணி தேசிய கீதத்திற்கு எதிரானவர்கள் நீங்கள் என்று தெரிவித்தபோது கமல் கொஞ்சம் எமோஷனலாகி எழுந்துவிட்டார்.\nஆனால் இதனை பார்த்து அர்ணாப் கோஸ்வாமி இந்த மேடையை நாடக மேடையாக்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார்.\nஎப்போது முன்னேற்பாட்டுடன் போகும் கமல் இந்நிகழ்ச்சிக்கு சரிவர தயார் நிலையில் இல்லாமல் போனதே திணறலுக்கு காரணம் என்று கூறப்படுகிறது.\nஇந்த விவாத நிகழ்ச்சியில் பல சூழ்நிலைகளில் கமல் பல்ப் வாங்கியதை சமூக வலைதளங்களில் விமர்சித்து வருகின்றனர். குறிப்பாக கமல் தீர ஆராய்ந்து பேசக் கூடியவர் ஆனால் இந்நிகழ்ச்சியில் தொடர்ந்து திணறியதனால் பலர் அதிருப்தி அடைந்தனர் என்பதுதான் உண்மை.\nகுடிபோதையில் ஸ்மிரிதி இரானியின் காரை விரட்டி வந்தவர் துரத்தி பிடிப்பு! ...\nஉடை மாற்றும் அறையில் ரகசிய கேமரா - ஸ்மிரிதி இராணி அதிர்ச்சி! ...\n« புதிய தேசிய நீரோட்டத்திற்கான தூர்வாரும் பணி! வளைகுடா நாடுகளில் அதிகரிக்கும் இந்தியர்களின் இள வயது மரணங்கள் »\nபாஜக தொண்டர் கொலை - மூன்று பேர் மீது சந்தேகம்!\nதிமுகவுக்கு அடுத்த நிலையில் நாங்கதான் - மக்கள் நீதி மய்யம்!
உங்க வீட்டுல டி.வி ரிமோட் யார் கையில இருக்கு?.டி.வி ரிமோட் யார் கையில இருக்கோ அவங்க தான் அந்த வீட்டோட பவர்புல் ஆளு. எங்க வீட்டல என் மகள் கையில் தான் அதிக நேரம் இருக்கும். அடுத்து என் மனைவி, அடுத்து அம்மா, அடுத்து தான் என்னோட கைக்கு வரும். மனைவி,அம்மா நாடகம் பார்பார்கள், ஆனா நான் நீயூஸ்சேன்ல்,டிஸ்கவரி, காமடி சேனல், ஆங்கில சேனல்கள் என் மாற்றி மாற்றி பார்பேன்.... இப்படி அடிக்கடி சேனல் மாற்ற காரணம் என்ன? சுஜாதாவின் கற்றதும் பெற்றதும் புக் படிச்சேன் அதில் கிடைத்த சில தகவல்களை உங்களுக்காக....\nசுஜாதா சொன்ன காரணங்கள் உண்மைதானா? நண்பர்களே...\nஅப்படியா? ஆச்சர்யமான சுஜாதா அவர்களின் அலசல். பகிர்தலுக்கு நன்றி செல்வன்.\n18 பிப்ரவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 1:31
Ananda Vikatan - 23 May 2012 - ஒரு வருட ஜெ. ஆட்சியின் டாப் 10... ஃப்ளாப் 10... | one year jayalalitha's regime 10 good points and 10 bad points - Vikatan\n• தி.மு.க. ஆட்சியில் அதிகாரம், போலீஸைப் பயன்படுத்தி அடித்துப் பிடுங் கப்பட்ட நிலங்களை மீட்க எடுத்த முயற்சி கள், இன்றைய நில அபகரிப்பு மனிதர் களுக்கும் அச்சுறுத்தலாக அமைந்தது. வருமானத்துக்கு அதிகமாக, அடித்துப் பிடித்துச் சொத்து சேர்த்த தி.மு.க. மந்திரிகளின் வீட்டுக்குள் லஞ்ச ஒழிப்புத் துறை யைவிட்டு ரெய்டுகள் நடத்தியதும், அதற் கெனத் தனி நீதிமன்றம் அமைக்க முயற்சித் ததும் அனைத்துத் தரப்பினராலும் வரவேற் கப்பட்டது.\n• சசிகலா குடும்பத்தின் ஆக்டோபஸ் கரங்கள் வெட்டி எறியப்பட்டன. ஜெ. பதவி ஏற்ற மே மாதம் முதல் சசி டிஸ்மிஸ் செய்யப்பட்ட டிசம்பர் மாதம் வரை, இந்தக் குடும்ப உறுப்பினர்கள் செய்த காரியங்களுக்குத் தடை விழாமல் இருந்திருந்தால், 3-வது ஆண்டு விழாவின்போது தமிழ்நாடே தனியார் சிலருக்குச் சொந்தமாகி இருந்துஇருக்கும். இந்தக் கும்பலுக்குத் தடுப்பணை விழுந்தது எல்லோரும் வரவேற்பது.\n• இரண்டு விஷயங்களில் ஜெ. சிறப்புக் கவனம் செலுத்தினார். ஒன்று, மதுரையை அடாவடி மனிதர்களின் ஆதிக்கத்தில் இருந்து மீட்பதில் உறுதி காட்டியது. இரண்டாவது, அ.தி.மு.க-வினர் சிலருக்கே பிடிக்காதது. ஆனால், ஜெ. தயக்கம் இல்லாமல் செய்தார். தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தை முறைகேடு இல்லாத தேர்வு அமைப்பாக மாற்ற அவர் எடுத்த முயற்சிகள் இளைஞர்களுக்கு நம்பிக்கை கொடுத்தன.\n• மத்திய அரசுடன் இணக்கமாக இருப்பது வேறு. அண்டிப் பிழைப்பது வேறு. பாதகமான காரியங்கள் நடந்தாலும் ஒரு மாநில அரசு சுயாட்சி உரிமைகொண்ட தாகச் செயல்பட வேண்டும் என்பதை நடைமுறையில் காட்டிய தைரியம் ஜெயலலிதாவின் தனித்தன்மையை உறுதிப் படுத்துகிறது.\n• ஈழத் தமிழர் விவகாரத்தில் கடந்த காலத்தில் இன விரோத நிலைப்பாடுகளை எடுத்தாலும், ஆட்சியைப் பிடித்த பிறகு கொண்டுவந்த தீர்மானங்கள், விடுத்த அறிக்கைகள் புலம் பெயர்ந்த தமிழர்கள் மத்தியில் முதல்வரின் செல்வாக்கை அதிகரித்து உள்ளது.\n• தினமும் தலைமைச் செயலகம் வருவது, அதிகாரிகள் மற்றும் அமைச்சர்களுடன் கலந்துரையாடுவது, முக்கியப் பிரச்னைகள்பற்றி அடிக்கடி ஆலோசிப்பது போன்றவை பழைய ஜெயலலிதாவைவிட இன்றைய ஜெ. உற்சாகமானவர் என்றே காட்டுகிறது. சட்டப் பேரவை நடவடிக்கைகளில் தொடர்ந்து பங்கேற்று விவாதங்களில் கலந்துகொண்டு வாத வல்லுநராகவும் திகழ்கிறார்.\n• தி.மு.க. ஆட்சியில் பல அமைச்சர்கள் தலைகால் புரியாமல் ஆடினார்கள். அந்தச் சூழ்நிலை இப்போது இல்லை. ஆளும் கட்சியினர் காவல் நிலையங்களுக்குச் சென்று கட்டப்பஞ்சாயத்து செய்வதும் குறைந்துவருகிறது. 'பதவியை வைத்து ஆடினால், அம்மா ஆப்பு அடித்துவிடுவார்’ என்ற அசரீரிக் குரல் கேட்பதே தப்பைக் குறைக்கிறது.\n• வெண்மைப் புரட்சிக்கு வித்திடும் வகையில், கறவை மாடுகள், ஆடுகள் வழங் கியதும், ஏழைப் பெண்களின் திருமணத் துக்கு தாலிக்குத் தங்கம் வழங்கியதும் கிராமப்புற மக்களுக்கு நல்ல உதவியாக அமைந்து இருக்கிறது.\n• கல்வித் துறையிலும் சிறப்புக் கவனம் செலுத்தினார் ஜெ. பள்ளி, கல்லூரி மாணவ - மாணவியருக்கு இலவச லேப்டாப் வழங்குவதில் தொடங்கி, 55 ஆயிரம் ஆசிரியர் நியமனம் வரை நடந்தால்... தமிழகப் பள்ளிக் கல்வி செழிக்கும்.\n• தன்னுடைய இலக்கு இதுதான் என்பதை வரையறுத்து 'விஷன் 2023’ வெளியிட்டார் முதல்வர். தன்னுடைய எண்ணங்களை அடுத்த 10 ஆண்டுகளுக்கு உரியதாக சொன்ன தன்னம்பிக்கை அனை வராலும் பின்பற்றத்தக்கது.\n• சென்ற தி.மு.க. ஆட்சியில் எகிறி வந்த விலைவாசி, கடந்த ஆண்டு ஏகத்துக்கும் ஏறியது. விலைவாசியைக் கட்டுப்படுத்துவது அரசாங்கத்தின் கையில் இல்லை என்ற மெத்தனம் ஆட்சியாளர்களுக்கு இருக்கிறது. இதைத் தடுக்க முயற்சிக்காத ஜெ., பால் விலையையும் பஸ் கட்டணத்தையும் தன் பங்குக்கு ஏற்றிவைத்தார்.\n• மின் வெட்டு முழுமையாக இல்லாத தமிழ்நாட்டை எப்போது பார்க்க முடியும் எனத் தெரியவில்லை. இதற்கான திட்டமிடுதல்களில் ஜெயலலிதா முழுக் கவனம் செலுத்தியதாகவும் தெரியவில்லை.6முதல் 8 மணி நேரம் வரை மின் வெட்டு இருந்ததும்... இன்னும் பல இடங்களில் இருப்பதும் வேதனையானது.\nடின் பொதுச் சொத்தான மணல், பட்டப்பகலில் கொள்ளை அடிக் கப்படுகிறது. என்ன சட்டதிட்டப்படி, யார் எடுக்கிறார், எவ்வளவுக்கு விற்கிறார் என்ற வரைமுறையே இல்லாமல் பூட்டு உடைக்கப்பட்ட வீடாக ஆறுகள் கொள்ளை அடிக்கப்படுகின்றன. இதுபற்றியவெள்ளை அறிக்கை தாக்கல் செய்யப்பட வேண்டும்.\n• கருணாநிதி கொண்டுவந்தவை என்பதற்காக, அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகத்தையும் தலைமைச் செயலகத்தையும் மருத்துவமனை ஆக்க முயற்சித்தார். சமச்சீர்க் கல்வியை என்ன செய்தேனும் ஒழிக்க முயற்சித்தார். செம்மொழி நூலகம் என்ன ஆனது என்றே தெரியவில்லை.\n• மூன்று தமிழர் தூக்கு, கூடங்குளம் எனப் பல முடிவுகளை மாற்றிக்கொண்டே இருந்தார். அதிகாரிகளும் அமைச்சர்களும் முதல் ஆறு மாதத்தில் பந்தாடப்பட்டே வந்தார்கள். 'எடுத்த முடிவில் எப்போதும் தெளிவானவர்’ என்ற பெயரை ஜெ. இழந்தார்.\n• ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தால், சட்டம் - ஒழுங்கு சரியாக இருக்கும் என்ற நினைப்பில் மண் விழுந்தது. குற்றம் நடக்காத நாளே இல்லை எனலாம். இதற்கு முக்கியக் காரணம், போலீஸ் - குற்றவாளிகள் இடையிலான நட்புதான். இந்தக் கண்ணியை உடைக்காமல், நாட்டில் அமைதியை ஏற்படுத்த முடியாது.\n• அப்பழுக்கற்ற அரசாங்கம் நடக்கிறது என்று சொல்ல முடியவில்லை. கடந்த ஆட்சியைவிட கமிஷன் சதவிகிதம் உயர்த் திய அமைச்சர்களும் இருக்கிறார்கள். கான்ட்ராக்ட் மனிதர்களின் நடமாட்டமும் தலைமைச் செயலகத்தில் அதிகம். ஐ.ஏ.எஸ். அதிகாரிகளே புரோக்கர்களாக மாறிய அவலமும் தொடர்கிறது.\n• சசிகலாவைக் கட்சியைவிட்டு நீக்கியபோது உயர்ந்த இமேஜ், அவரை மறுபடியும் சேர்த்துக்கொண்டபோது சரிந்தது. 'சசிகலா செய்தது எதுவும் எனக்குத் தெரியாது’ என்று ஜெ. சொன்ன வாதத்தை மக்கள் நம்பத் தயாராக இல்லை.\n• சட்டப் பேரவையில் அளவுக்கு மீறி அம்மா புகழ் பாடும் ஜால்ரா சத்தமே கேட்கிறது. ஆளும் கட்சியை விமர்சித்துப் பேச எதிர்க் கட்சிகளை அனுமதிப்பது இல்லை. அமைச்சர்கள் முதல் அ.தி.மு.க. எம்.எல்.ஏ-க்கள் வரை அனைவருமே தங்கள் சொந்த அம்மாவைக்கூட இத்தனை தடவை 'அம்மா’ என்று அழைத்திருப்பார்களா என்ற சந்தேகமே எழுகிறது.\n• முதல்வர் மீது மரியாதை இருக்கலாம். பக்திகூட இருக்கலாம். பயம் இருந்தால், அது அவருக்கேகூடப் பயன்படாது. அதுவும் சில அமைச்சர், அதிகாரிகளுக்கு மரண பயமே இருக்கிறது. இத்தகைய மனிதர்களை வைத்து ஜெயலலிதாவால் நல்லாட்சி தரவே முடியாது. நெகிழ்வுத்தன்மை உள்ளவராக ஜெயலலிதா தன்னை மாற்றிக்கொண்டால் மட்டுமே வெற்றியைத் தக்கவைக்க முடியும்.
தனியார் பள்ளி துவங்க தடை : அமைச்சரிடம் ஆசிரியர்கள் மனு.\nஅனைத்து அரசு பள்ளிகளிலும், 'வை - பை' வசதியுடன் கணினி வகுப்புகள் துவங்கப்பட வேண்டும்' என, பள்ளிக் கல்வி அமைச்சர் பாண்டியராஜனிடம், தலைமை ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்சங்கத்தின் சார்பில், அதன் தலைவர், சாமி.சத்தியமூர்த்தி மற்றும் நிர்வாகிகள், நேற்று அமைச்சரை சந்தித்து, மனு அளித்தனர்.மனு விபரம்:தமிழக மாணவர்கள், உயர்கல்வியில் அனைத்து வாய்ப்புகளையும் பெற, ஆறாம் வகுப்பு முதல் பிளஸ்2வரையில், சி.பி.எஸ்.இ.,க்கு இணையான பாடத்திட்டம் கொண்டுவர வேண்டும். அனைத்து மாவட்ட அரசு பள்ளிகளிலும், வகுப்புகள் முறையாக நடக்கிறதா என்பதை, தனி அதிகாரிகள்நியமித்து, கண்காணிக்க வேண்டும். அரசு நலத்திட்ட பணிகளில், ஆசிரியர்கள் அதிக நேரம் செலவிடுவதால், கற்பித்தல் பணிகள் பாதிக்கின்றன. எனவே, 10 பள்ளிகளுக்கு, ஒரு தொடர்பு அலுவலர் நியமித்து, நலத் திட்ட பணிகளை ஒப்படைக்க வேண்டும். இரண்டு ஆண்டுகளாக நிலுவையில் உள்ள, 4,250 ஆய்வக உதவியாளர் பணியிடங்களை நிரப்ப வேண்டும். கணினி வசதி இல்லாத பள்ளிகளை கண்டறிந்து, வை - பை வசதியுடன் கூடிய கணினி மற்றும் இணையதள வகுப்புகள் துவங்க வேண்டும். அரசு பள்ளிகளை சிறப்பாக செயல்பட வைப்பதுடன், வருங்காலத்தில் புதிதாகதனியார் பள்ளிகள் துவங்க அனுமதிக்கக் கூடாது. இவ்வாறுமனுவில் கூறப்பட்டுள்ளது.
Singapore Archives - TAMIL SPORTS NEWS\nPranitha P4months ago\n(world biggest airline introduced) சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் அக்டோபர் 11ஆம் திகதியில் இருந்து உலகின் மிக நீண்ட விமானச் சேவையை நியூயார்க்கிற்கு வழங்கவுள்ளது. மேலும் , சிங்கப்பூருக்கும் நியூயோர்க்கின் Newark Liberty அனைத்துலக விமான நிலையத்திற்கும் இடையே இப் புதிய சேவை இடம்பெறும். மற்றும், 16,700 ...\n(cockroaches mouse closed shops) சிங்கப்பூர் பிளாசாவில் உள்ள Toast Box கடையின் சேவை இரண்டு வாரத்துக்கு மூடபட்டுள்ளது. அதற்குக் காரணம் கரப்பான் பூச்சி, எலி தொல்லைகள் ஆகும் .இன்றிலிருந்து , அடுத்த மாதம் 7ஆம் திகதி வரை கடைகள் மூடப்படும் . மேலும் , தேசியச் ...\n(28,000 worth drug confiscation) சிங்கப்பூரில் , மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு, போதைப்பொருள் குற்றவாளிகள் என்ற சந்தேகத்தின் பேரில் நால்வரைக் கைதுசெய்துள்ளனர். அதிகாரிகள் பறிமுதல் செய்த போதைப்பொருட்களின் மதிப்பு 28,000 வெள்ளிக்கும் மேல் என மதிப்பிடப்படுகிறது. சந்தேக நபர்களில் ஒருவரான 36 வயதுப் பெண், ஜூரோங் ...
Tamil Nadu is the safest state in this corona epidemic is spreading say UP workers\n“தமிழ்நாடுதான் பாதுகாப்பானது.. எங்கள் மாநிலத்தில் சுகாதார கட்டமைப்பே இல்லை” : உ.பி தொழிலாளர்கள் கருத்து!\nகொரோனா பெருந்தொற்று வேகமாகப் பரவி வரும் நிலையில், தமிழ்நாடுதான் மிகவும் பாதுகாப்பான மாநிலம் என புலம்பெயர் தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.\nUpdated on : 21 May 2021, 11:20 AM\nஇந்தியாவில் கொரோனா பெருந்தொற்று வேகமாகப் பரவி வருகிறது. தினந்தோறும் பதிவாகும் உயிரிழப்பு எண்ணிக்கையில் இந்தியா முதலிடம் பெற்றுள்ளது மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.\nகுறிப்பாக உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், பீகார், குஜராத், உத்தரகாண்ட், டெல்லி, மகாராஷ்டிரா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் ஆக்சிஜன், படுக்கை வசதிகளுக்கு கடும் தட்டுப்பாட்டு ஏற்பட்டுள்ளதால் சுகாதார கட்டமைப்பே கேள்விக்குறியாகியுள்ளது.\nஇந்நிலையில், தமிழகத்தில் இருக்கும் வட மாநிலத் தொழிலாளர்கள் இந்த பெருந்தொற்று நேரத்தில் தமிழகத்தில் இருப்பதுதான் தங்களுக்குப் பாதுகாப்பு எனத் தெரிவித்துள்ளனர். அதிலும் பா.ஜ.க ஆளும் மாநிலமான உத்தர பிரதேச தொழிலாளர்களே இந்த கருத்தை அதிகமாகத் தெரிவித்துள்ளனர்.\nஉத்தர பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் தொகுதியான கோராக்பூரை சேர்ந்த பல ஆயிரம் கூலித் தொழிலாளர்கள் சென்னையின் அம்பத்தூர், அண்ணாநகர், ராமவரம் பகுதிகளில் தங்கியுள்ளனர். கொரோனா தொற்று வேகமாகப் பரவரும் நிலையில், தாங்கள் தமிழ்நாட்டில் தங்கியிருப்பதுதான் பாதுகாப்பானது என தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.\nமேலும், தமிழ்நாட்டில் மருத்துவ உட்கட்டமைப்பு சிறப்பாக இருப்பதே இதற்குக் காரணம் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். தற்போது தமிழ்நாட்டில் எங்களது வேலைக்கான கச்சாப்பொருட்கள் தட்டுப்பாடு மட்டுமே உள்ளது. ஊருக்குச் செல்ல எந்த அவசியமும் இல்லை என்றும் தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.\nகோராக்பூரில் இரண்டு மருத்துவமனைகள் மட்டுமே உள்ளன. இதனால் எங்கள் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் இந்த கொரோனா தொற்றால் நெருக்கடிகளைச் சந்தித்து வருகிறார்கள் என அவர்கள் வேதனையுடன் கூறியுள்ளனர்.\n“காணாமல் போன தமிழக மீனவர்களை உடனடியாக மீட்டுத்தர வேண்டும்”: ராஜ்நாத் சிங்-கிடம் டி.ஆர்.பாலு வலியுறுத்தல்!
Tamil Cine Talk – விஜய் டிவிக்கு நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் அனுப்பிய வக்கீல் நோட்டீஸ்..!\nவிஜய் டிவிக்கு நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் அனுப்பிய வக்கீல் நோட்டீஸ்..!\n‘என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா’ என்கிற வார்த்தையை வைத்து கேலி, கிண்டல் செய்யும் நிகழ்ச்சிகளை நடத்தக் கூடாது என்று விஜய் டிவிக்கு நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் வக்கீல் நோட்டிஸ் அனுப்பியிருக்கிறாராம்..!\nஅன்பிற்கு இனிய பத்திரிக்கை ஊடக நண்பர்களே,\nவிஜய் தொலைகாட்சியில் ‘அது இது எது’ நிகழ்ச்சியின் சிரிச்சா போச்சு பகுதியில், நான் ‘சொல்வதெல்லாம் உண்மை’ நிகழ்ச்சியில் பேசிய, ‘என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா’ என்ற வசனத்தை,தொடர்ந்து என்னை பரிகாசம் செய்யும் வகையிலும், என் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையிலும் ஒளிபரப்பியதற்காக சட்டபடி என்னுடைய கண்டனத்தை தெரிவித்து, எனது வழக்கறிஞர் மூலம் விஜய் தொலைகாட்சிக்கு சட்ட அறிக்கையை அனுப்பியுள்ளேன்.\nமுதல்முறையாக அது ஒளிபரப்பப்பட்டபொழுது அதை நான் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் வேடிக்கையாகவே எடுத்துக் கொண்டேன். இன்னும் சொல்லப் போனால் பெரிதும் பிரபலமாகவே, அந்த வசனத்தையே தலைப்பாக வைத்து சில தனியார் தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சி நடத்த நான் பேச்சு வார்த்தை செய்தேன். அதில் இதற்கு காரணமான விஜய் தொலைக்காட்சியும் அடங்கும்.\nஇருந்த சூழ்நிலையை சாதகமாகப் பயன்படுத்தி சுவராசியமான நிகழ்ச்சியின் மூலம் சமூகம் சார்ந்த பிரச்சனைகளை அலச வேண்டும் என்பதே எனது முதல் நோக்கமாக இருந்தது. ஆனால்தொடர்ந்து இதே வசனம் பல்வேறு திரைப்படங்களிலும், வேறு வேறு நிகழ்ச்சிகளிலும் பயன்படுத்தப்பட்டு வந்தது.\nஇது மட்டுமல்லாமல் மிக உச்சமாக ‘ரஜினிமுருகன்’ திரைப்படத்தில், இதே வசனத்தை பல்லவியாக வைத்து பாடலும் உருவாகி இருக்கிறது. இது போன்ற காரணங்களால் நானும் என் குடும்பத்தினரும் பொது இடங்களிலும் சமூக வலைதளங்களிலும் பல்வேறு பின் விளைவுகளையும், விரும்பத்தகாத சூழலையும் சந்திக்க நேர்ந்தது.\nஇப்படிபட்ட தொடர் பிரச்சனைகளால் இந்த வசனம் எந்த சூழலில் சொல்லப்பட்டது..? எதற்காக சொல்லப்பட்டது..? என்பதை மிக வலியோடு ஒரு வீடியோ பதிவின் மூலம் சமூக வலைதளத்தில் வெளியிட்டேன். அதன் பிறகு சிறிது சிறிதாக இந்த பிரச்சனைகள் குறையத் தொடங்கின.\nஇப்படிபட்ட சூழலில் இப்பிரச்சனையை மீண்டும் தூண்டும் வகையில் விஜய் தொலைக்காட்சி மறுபடியும் ‘என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா-பகுதி2’ என்ற ஒரு விளம்பர ப்ரோமோவை வெளியிட்டது. இதை மிக எதேச்சையாகத்தான் கடந்த அக்டோபர் 1-ம் தேதியன்று நான் பார்க்க நேர்ந்தது. இது மீண்டும் எனக்கு விரும்பத்தகாத வகையிலும்அத்து மீறுவதாகவும் இருக்கிறது.\nமீண்டும் இந்தப் பிரச்சனையை ஆரம்பத்தில் இருந்து என்னால் சந்திக்கவோ, விளக்கவோ எனக்கிருந்த பரபரப்பான வேலைகளும், உடல்நிலையும் இடம் கொடுக்கவில்லை. விஜய் தொலைகாட்சியின் பொது மேலாளர் திரு.ஸ்ரீராம் அவர்களுக்கு மின்னஞ்சல் மூலம் எனது எதிர்ப்பை பதிவு செய்து இந்த நிகழ்ச்சியை ஒளிபரப்ப வேண்டாம் என்று தெரிவித்து இருந்தேன். ஆனால் அதற்கு எந்த பதிலும் வரவில்லை. இதன் காரணமாக நான் கமிஷ்னரை அணுகி புகார் அளித்தேன். இது குற்றவியல் வழக்கு சார்ந்தது அல்ல என்பதால் அவர்கள் என்னை நீதிமன்றம் மூலம் சட்டப்பூர்வமாக இதை அணுகுமாறு கூறினார்கள்.\nஇதனை தொடர்ந்து எனது வழக்கறிஞர் மூலமாக அறிக்கை அனுப்பி உள்ளேன். அதற்கும் பதில் வரவில்லை என்றால் விஜய் தொலைக்காட்சி மீது மானநஷ்ட வழக்கு தொடர வேண்டிய சூழல் ஏற்படும்..\nபின் குறிப்பு : ஒரு பிரபல வார இதழ் விஜய் தொலைக்காட்சியிடம் பேசியபொழுது மட்டும்தான் இது குறித்து அவர்கள் பதில் அளித்தார்கள். முதல் முறை ஒளிபரப்பபட்டதை நான் பெரிதாக எடுத்துக் கொள்ளாததால் நாங்கள் மறுபடியும் செய்தோம் என்று அவர்கள் தரப்பினை நியாயப்படுத்தி இருக்கிறார்கள். ஒரு முறை அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை என்பதற்காக மறுபடியும் மறுபடியும் செய்து எல்லை மீறுவது எந்த விதத்தில் நியாயம்…?\nஇன்னொரு பதிலும் அளித்து இருக்கிறார்கள்.\nநிகழ்ச்சியை ஒளிபரப்பும் முன்பாக நாங்கள் ‘இந்த நிகழ்ச்சி யார்மனதையும் புண்படுத்தும் நோக்கத்தில் ஒளிபரப்பபடவில்லை’ என்று குறிப்பு போடுகிறாமே என்றார்கள். அப்படி பார்த்தால் இப்படியொரு குறிப்பை போட்டுவிட்டு யாரை வேண்டுமாலும், எப்படி வேண்டுமானாலும் கிண்டல் செய்யலாம் என்று சொல்கிறார்களா?\nஒரு தனி நபராக இருந்து கொண்டு தொலைக்காட்சி நிறுவனத்திடம் அதிலும் செல்வாக்கு மிகுந்த ஒரு தொலைக்காட்சி நிறுவனத்திடம் போராடுவது கடினம்தான். ஆனால் அதைப் பற்றியோ அல்லது இறுதி முடிவுகளை பற்றியோ நான் கவலைப்படவில்லை. என்னுடைய சுய கௌரவத்தை பாதுகாத்துக் கொள்ள நான் போராடுவேன்.\nஅனைவருடைய ஒத்துழைப்பிற்கும் நன்றி\nactress lakshmi ramakrishan slider vijay tv நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் விஜய் டிவி\nPrevious Post‘முண்டாசுப்பட்டி’ இயக்குநர் ராம் இயக்கும் புதிய படம் Next Postநடிகை அசினுக்கு நவம்பர் 26-ம் தேதி கல்யாணம்..!
இந்தியாவின் நம்பர்-1 பணக்கார கட்சி திமுக! | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon\nஇந்தியாவின் நம்பர்-1 பணக்கார கட்சி திமுக!\nநாட்டில் உள்ள மாநில கட்சிகளிலேயே அதிக வருவாய் பெற்ற மாநிலக்கட்சியாக முதலிடத்தில் உள்ளது தமிழகத்தை சேர்ந்த திராவிட முன்னேற்றக்கழகம்.\nமுதல் இடத்தை பிடித்த திமுக இந்தியாவின் பணக்கார கட்சி என்ற பெருமையை தட்டிச்சென்றுள்ளது. அதிமுக இரண்டாவது இடத்துக்கு தள்ளியுள்ளது. சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேச கட்சி மூன்றாவது இடத்திலும் உள்ளதாக ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nடில்லியைச் சேர்ந்த அரசு சாரா அமைப்பான, ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் என்ற அமைப்பு நாடு முழுவதும் உள்ள மாநில அரசியல் கட்சிகளின் வருவாய் மற்றும் செலவு குறித்து ஆய்வு மேற்கொண்டது.\nஅதன்படி கடந்த 2015 – 16 நிதிஆண்டில் அதிக வருவாய் பெற்ற மாநிலக் கட்சிகள் மற்றும் அதிகம் செலவழிக்காத மாநிலக் கட்சிகள் எவை என்பது குறித்து பட்டியல் வெளியிட்டுள்ளது.\nஅதில் நாட்டில் அதிக வருவாய் பெற்றுள்ள கட்சிகளில் முதல் இரண்டு இடத்தை தமிழகத்தை சேர்ந்த திராவிட கட்சிகளாக திமுகவும், அதிமுகவும் பிடித்துள்ளன.\nஅரசியல் கட்சிகள் ஒவ்வொரு ஆண்டு தங்களது கட்சியின் வரவு செலவு விவரங்களை தேர்தல் கமிஷனில் தாக்கல் செய்வது வழக்கம்.\nநாடு முழுவதும் மொத்தம் 47 உள்ள பதிவு செய்யப்பட்ட மாநில அரசியல் கட்சிகள் உள்ளன. இதில் 32 மாநில கட்சிகள் மட்டுமே தங்கள் கட்சியின் வரவு செலவு குறித்த தகவலை தேர்தல் கமிஷனில் தாக்கல் செய்துள்ளது.\nகடந்த 2015 – 16 நிதியாண்டுக்கான வரவு – செலவு கணக்கை 32 கட்சிகள் மட்டுமே தாக்கல் செய்துள்ளன. பீகாரை சேர்ந்த சமாஜ்வாதி கட்சி, ராஷ்ட்ரீய ஜனதா தளம் உள்பட 15 அரசியல் கட்சிகள் கணக்கை தாக்கல் செய்ய வில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇதில் தாக்கல் செய்யப்பட்டுள்ள 32 அரசியல் கட்சிகளின் மொத்த வருவாய், 221.48 கோடி ரூபாய். இதில்,110 கோடி ரூபாயை இந்த கட்சிகள் செலவிடவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த ஆய்வின்படி, நாட்டிலேயே அதிக வருவாய் பெறும் மாநில கட்சிகளில் திமுக முதலிடத்தை பிடித்துள்ளது. இதன் மொத்த வருவாய் 77.63 கோடி என்றும், இது மொத்த வருவாயில் 49 சதவிகிதத்திற்கும் அதிகம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதில் இரண்டாவது இடத்தை அதிமுக பிடித்துள்ளது. அதன் மொத்த வருவாய் 54.93 கோடி ரூபாய். தெலுங்கு தேசம் கட்சி 15.97 கோடி ரூபாயுடன் 3-வது இடத்தில் உள்ளது.\nஅதிகம் செலவழித்த கட்சிகளில், ஐக்கிய ஜனதா தளம் 23.46 கோடி ரூபாயுடன் முதலிடத்தில் உள்ளது. தெலுங்கு தேசம் கட்சி, 13.10 கோடி ரூபாயும், ஆம் ஆத்மி, 11.09 கோடி ரூபாயும் செலவழித்துள்ளன.\nஇதில், 14 கட்சிகள் வருவாயை விட அதிகமாக செலவழித்து உள்ளதாக கணக்கு காட்டியுள்ளன.\nஜார்க்கண்ட் விகார் மோர்ச்சா, ஐக்கிய ஜனதா தளம், ராஷ்ட்ரீய லோக்தளம் ஆகியவை, வருவாயை விட இரண்டு மடங்கு அதிகம் செலவழித்துள்ளன.\nதி.மு.க.-அ.தி.மு.க., – ஏ.ஐ. எம்.ஐ.எம். ஆகியவை வருவாயில், 80 சதவிகித பணத்தை சேமிப்பாக வைத்துள்ளதாக தெரிவித்துள்ளன.\nமேலும், இந்த கட்சிகள் தாங்கள் பெறும் நன்கொடை குறித்து அளிக்கும் ஆதாரங்கள் அனாமதேயமாக இருப்பதாகவும், அதுகுறித்து அறிய முடியவில்லை என்றும் தெரிவித்துள்ளது.\nரெயில் கொள்ளை: பணம் சென்னையில் கொள்ளையடிக்கப்பட்டது..? புதிய தகவல்! ஷா அறிக்கை: சொட்டுநீர் பாசனத்தை செயல்படுத்த காவிரி உயர் தொழில்நுட்ப குழு யோசனை! சீன நாளிதழில் தமிழக விவசாயிகளின் டில்லி போராட்டம்….\nTags: DMK the richest regional party in India, இந்தியாவின் நம்பர்-1 பணக்கார கட்சி திமுக!\nPrevious தமிழிசை ஆபாச கார்டூன்: விசிக செய்தி தொடர்பாளர் கைது கண்டித்து ஆர்ப்பாட்டம்!\nNext தமிழிசைக்காக பொய் சொல்லி கையெழுத்து!: பா.ஜ.க.வினர் மீது திடுக் புகார் (வீடியோ)\nகொல்கத்தா ரயில்வே தலைமை அலுவலகத்தில் பயங்கர தீ விபத்து:4தீயணைப்பு வீரர்கள் உள்பட9பேர் உயிரிழப்பு\nகுடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் 3நாள் பயணமாக இன்று தமிழகம் வருகை…\nகமல் தலைமையிலான கூட்டணியில் மநீம 154 இடங்களில் போட்டி, கூட்டணி கட்சிகளுக்கு தலா 40 தொகுதிகள் ஒதுக்கீடு…\n11 mins ago patrikai.com\nவங்கதேச 50-வது சுதந்திர தின விழாவில் மோடி பங்கேற்பு
README.md exists but content is empty.
Downloads last month
85

Models trained or fine-tuned on Hemanth-thunder/tamil-madlad-400