title
stringlengths
1
93
url
stringlengths
31
123
text
stringlengths
0
361k
முதற் பக்கம்
https://ta.wikipedia.org/wiki/முதற்_பக்கம்
விக்கிப்பீடியா மொழிகள்
கட்டடக்கலை
https://ta.wikipedia.org/wiki/கட்டடக்கலை
thumb|upright=2|முகலாய கட்டடக்கலையின் சிறந்த மற்றும் மிகவும் நுட்பமான எடுத்துக்காட்டாக விளங்கும் தாஜ் மஹால். கட்டடக்கலை என்பது கட்டடங்கள் மற்றும் அதன் உடல் கட்டமைப்புகளை வடிவமைத்தல், செயல்முறைத் திட்டமிடல், மற்றும் கட்டடங்கள் கட்டுவதை உள்ளடக்கியதாகும். கட்டடக்கலை படைப்புகள், கட்டடங்கள் பொருள் வடிவம், பெரும்பாலும் கலாச்சார சின்னங்களாக மற்றும் கலை படைப்புகளாக காணப்படுகின்றது. வரலாற்று நாகரிகங்கள் பெரும்பாலும் அவர்களின் கட்டடக்கலை சாதனைகளின் மூலம் அடையாளம் காணப்படுகின்றன. ஒரு விரிவான வரைவிலக்கணம், பெருமட்டத்தில், நகரத் திட்டமிடல், நகர்ப்புற வடிவமைப்பு மற்றும் நிலத்தோற்றம் முதலியவற்றையும், நுண்மட்டத்தில், தளபாடங்கள், உற்பத்திப்பொருள் முதலியவற்றை உள்ளடக்கிய, முழு உருவாக்கச் சூழலின் வடிவமைப்பைக் கட்டடக்கலைக்குள் அடக்கும். மேற்படி விடயத்தில், தற்போது கிடைக்கும் மிகப் பழைய ஆக்கம், பொ.ஊ. முதலாம் நூற்றாண்டைச் சேர்ந்த உரோமானியக் கட்டடக் கலைஞரான விட்ருவியஸ் என்பாரது "கட்டடக்கலை தொடர்பில்", என்ற நூலாகும்.D. Rowland – T.N. Howe: Vitruvius. Ten Books on Architecture. Cambridge University Press, Cambridge 1999, இவரது கூற்றுப்படி, நல்ல கட்டடம், அழகு, உறுதி, பயன்பாடு ஆகியவற்றைக் கொண்டிருக்கவேண்டும்.Translated by Henry Wotton, in 1624, as "firmness, commodity and delight" மேற்படி மூன்றும், ஒன்றின்மீதொன்று அளவுமீறி ஆதிக்கம் செலுத்தாமல், தங்களிடையே சமனிலையையும், ஒருங்கினைப்பையும் கொண்டிருத்தலே கட்டடக்கலை என்று சொல்லலாம். ஒரு மேலான வரைவிலக்கணம், கட்டடக்கலையைச், செயற்பாட்டு, அழகியல், உளவியல் என்பன தொடர்பான விடயங்களைக் கையாளல் என்ற விதத்தில் நோக்குகிறது. எனினும், இன்னொரு விதத்தில் பார்த்தால், செயற்பாடு என்பது, அழகியல், உளவியல் உட்பட்ட எல்லா அளபுருக்களையும் தன்னுள் அடக்குவதாகக் கொள்ளலாம். கட்டடக்கலை, கணிதம், அறிவியல், கலை, தொழினுட்பம், சமூக அறிவியல், அரசியல், வரலாறு, தத்துவம், பொன்றவற்றுடன் தொடர்புள்ள, ஒரு பல்துறைக் களமாகும். விட்ருவியசின் சொற்களில், "கட்டடக்கலையென்பது, வேறுபல அறிவியல் துறைகளிலிருந்து எழுவதும், பெருமளவு, பல்வேறுபட்ட அறிவுத்துறைகளினால் அலங்கரிக்கப்பட்டதுமான ஒரு அறிவியலாகும்: இதன் உதவியைக் கொண்டே பல்வேறு கலைத் துறைகளினதும் விளைவுகள் மதிப்பீடு செய்யப்படுகின்றன". மேலும் ஒரு கட்டடக் கலைஞன், இசை, வானியல் முதலிய துறைகளிலும் நல்ல பரிச்சயமுடையவனாயிருக்க வேண்டும் என்பது விட்ருவியசின் கருத்து. தத்துவம் குறிப்பாக விருப்பத்துக்குரியது. உண்மையில், அணுகுமுறை பற்றிக் கருதும்போது, ஒவ்வொரு கட்டடக் கலைஞனதும் தத்துவம் பற்றிக் குறிப்பிடுகிறோம். பகுத்தறிவியம், பட்டறிவியம், கட்டமைப்பியம், பின்கட்டமைப்பியம் மற்றும் தோற்றப்பாட்டியல் என்பன போன்ற போக்குகள், கட்டடக்கலையில், தத்துவத்தின் செல்வாக்கைக் காட்டும் சில எடுதுதுக்காட்டுகளாகும். கட்டடக்கலைக் கோட்பாடுகள் thumb|left|250px|கொலோசியம், ரோம், இத்தாலி லியொன் பட்டிஸ்டா ஆல்பர்ட்டி என்பவர் தான் எழுதிய நூலொன்றில் விட்ருவியசின் கருத்துக்களை விரிவாக்கினார். அலங்காரங்களும் அழகுக்குப் பங்களிப்புச் செய்த போதிலும், அழகு என்பது, அளவுவிகிதம் (proportion) தொடர்பிலானது என்று இவர் எழுதினார். ஆல்பர்ட்டியின் கருத்துப்படி ஒரு முறையான உடலமைப்புக் கொண்ட மனிதனின் உடலின் அளவுவிகிதங்களைக் கட்டுப்படுத்தும் விதிகளே சிறப்பான அளவுவிகிதங்களுக்கான விதிகளாகும். அழகைப் பொருளின் தன்மைக்குப் புறம்பாக வெளியிலிருந்து கொண்டுவந்து ஒட்டவைக்க முடியாது, பொருள்களோடு அவற்றின் அழகு இயல்பாக அமைந்திருக்கிறது என்னும் கருத்தே இங்கு முக்கியமான அம்சம். கட்டடக்கலையிலும், பிற அழகியல் கலைகளிலும் பாணி என்னும் ஒரு அம்சம் இடைக்காலத்தில் முக்கிய பங்கு வகித்தது. ஆனால், பாணி என்னும் கருத்துரு 16-ஆம் நூற்றாண்டில் வாசரி என்பவர் எழுதிய நூல்களினூடாகவே அறிமுகமானது.Françoise Choay, Alberti and Vitruvius, editor, Joseph Rykwert, Profile 21, Architectural Design, Vol 49 No 5-6 இந் நூல்கள் 18-ஆம் நூற்றாண்டில் இத்தாலிய மொழி, பிரெஞ்சு மொழி, ஸ்பானிய மொழி, ஆங்கிலம் ஆகியவற்றில் மொழிபெயர்ப்புச் செய்யப்பட்டது. 19-ஆம் நூற்றாண்டில் ஆங்கிலக் கலைத் திறனாய்வாளரான ஜான் ரஸ்கின் என்பவர் 1849-இல் வெளியிட்ட "கட்டடக்கலையின் ஏழு விளக்குகள்" என்னும் நூலில்,John Ruskin, The Seven Lamps of Architecture, G. Allen (1880), reprinted Dover, (1989) "கட்டடக்கலை என்பது அதனைக் காண்போருக்கு உள நலத்தையும், ஆற்றலையும், இன்பத்தையும் தரக்கூடிய வகையில், அமைத்து, அலங்கரித்து உருவாக்கப்பட்ட கட்டடங்களாகும்" என்றார். ரஸ்கினுக்கு, கட்டடக்கலையைப் பொறுத்தவரை அழகியலே யாவற்றிலும் முக்கியமான அம்சமாக இருந்தது. மேலும், ஏதோ ஒரு வகையில் அலங்கரிக்கப்படாத கட்டடங்கள் கட்டடக்கலை ஆகாமாட்டா என்ற கருத்தையும் அவர் கொண்டிருந்தார். கட்டடங்களும், கட்டடக்கலையும் thumb|175px|right|ஐரோப்பாவின் நுழைவாயில், மட்ரிட், வேண்டுமென்றே சாய்வாகக் கட்டப்பட்ட கட்டடம் ஒரு கட்டடக்கலை சார்ந்த கட்டடத்துக்கும், சாதாரண கட்டடத்துக்கும் உள்ள வேறுபாடு பலரதும் கவனத்தை ஈர்க்கின்ற விடயமாக இருந்துவருகின்றது. இது குறித்து எழுதிய பிரபலமான பிரெஞ்சுக் கட்டடக்கலைஞரான லெ கொபூசியே, "நீங்கள், கற்கள், மரம், காங்கிறீட்டு என்பவற்றைக் கொண்டு ஒரு வீட்டையோ மாளிகையையோ அமைக்கலாம். அது கட்டுமானம். ஆனால் ஆக்கத்திறன் சிறப்பாக அமையும்போது, அது எனது நெஞ்சைத் தொடுகிறது. நீங்கள் எனக்கு நல்லது செய்திருக்கிறீர்கள். மிகவும் அழகாக இருக்கிறது என்கிறேன் நான். அதுவே கட்டடக்கலை." எனக் குறிப்பிடுகிறார்.Le Corbusier, Towards a New Architecture, Dover Publications(1985). 20 ஆம் நூற்றாண்டின் ஐரோப்பிய வரலாற்றாசிரியரான "நிக்கொலஸ் பெவ்ஸ்னர்" என்பாருடைய கூற்றுப்படி, ஒரு துவிச்சக்கரவண்டிக் கொட்டகை ஒரு சாதாரண கட்டடமும், லிங்கன் பேராலயம் ஒரு கட்டடக்கலை சார்ந்த கட்டடமுமாகும். தற்காலச் சிந்தனைப் போக்குகளுக்கு அமைய இத்தகைய பிரிவு அவ்வளவு தெளிவானதாக இல்லை. "பெர்னாட் ருடோவ்ஸ்கி" என்பாரது "கட்டடக்கலைஞன் இல்லாத கட்டடக்கலை" (Architecture without architects) என்னும் பிரபலமான நூல், சாதாரண மக்களால் கட்டப்பட்ட பல்வேறு தரத்திலான கட்டடங்களையும், கட்டடக்கலையின் ஆளுகைக்குள் கொண்டுவந்தது. வரலாற்றில் பின்னோக்கிச் செல்லும்போது, கட்டடக்கலைசார் கட்டடங்கள் எவை, அவ்வாறில்லதவை எவை என்பதிலே கருத்தொற்றுமை காணப்பட்டது. விருவியசைப் போல், நல்ல கட்டடங்களே கட்டடக்கலைசார்ந்த கட்டடங்கள் என வரைவிலக்கணப்படுத்தினால், கூடாத கட்டடக்கலைசார்ந்த கட்டடங்கள் இல்லையா என்ற கேள்வி எழும். இப்பிரச்சினையிலிருந்து விடுபடுவதற்கு, கட்டடக்கலைசார் கட்டடங்கள் என்பதற்கு, கட்டடக்கலைஞரால் வடிவமைக்கப்பட்ட கட்டடங்கள் என்றும் வரைவிலக்கணம் கூறலாம் எனச் சிலர் கூறுகிறார்கள். இது கட்டடக்கலைஞர் என்பதன் வரைவிலக்கணம் பற்றிய இன்னொரு சர்ச்சையை உருவாக்குவதைத் தவிர்க்க முடியாது. கட்டடக்கலையின் தற்காலக் கருத்துருக்கள் 19-ஆம் நூற்றாண்டின் புகழ் பெற்ற கட்டடக்கலைஞர் லூயிஸ் சலிவன் கட்டடக்கலை வடிவமைப்பில் புதிய நோக்கு ஒன்றை வளர்ப்பதற்கு முயற்சித்தார். செயற்பாட்டுத் தன்மைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் இந்த நோக்குக்கு அமைய "செயற்பாட்டுத் தேவைகளிலிருந்தே வடிவம் உருவாகின்றது" (Form follows function) என்னும் கருத்து முன்வைக்கப்பட்டது. செயற்பாட்டு நோக்கின் அடைப்படையிலேயே அமைப்பும் அழகியலும் நோக்கப்படவேண்டும் என்னும் இக் கருத்து பரவலான ஆதரவையும் எதிர்ப்பையும் பெற்றது. செயற்பாடு என்னும் இப் புதிய கருத்துரு கட்டடங்களின் உளவியல், அழகியல், பண்பாட்டுப் பயன்கள் உட்பட எல்லா வகையான பயன்களும் குறித்த எல்லா அளபுருக்களையும் தன்னுள் அடக்கியிருந்தது. கட்டடக்கலைஞர்களும் கோட்பாடும் பல கட்டடக்கலைஞர்கள் கோட்பாட்டை ஒதுக்கித் தள்ளினாலும், செயல்முறையை (practice) வளம்படுத்துவதில் அதன் முக்கியத்துவத்தைக் குறைத்து மதிப்பிட முடியாது. விட்ருவியஸ் தொடர்ந்து சொன்னபடி, "செய்முறையும், கோட்பாடும் கட்டடக்கலையின் பெற்றோருக்குச் சமம். செயல்முறை என்பது, கொடுக்கப்பட்ட வேலைகளை நடைமுறைப்படுத்தும் முறைகளைக் கைக்கொள்ளும்போது, அடிக்கடி நிகழும், தொடர்ச்சியான, சமநிலைப்படுத்தும் செயலை, அல்லது வெறுமனே உடற் செயல்பாட்டின்மூலம், ஒரு பொருளைச் சிறந்த பயன்படத்தக்க ஒன்றாக மாற்றுவதைக் குறிக்கும். கோட்பாடு என்பது, ஒரு பொருள், பிரேரிக்கப்பட்ட முடிவை அடையும்வகையில், மாற்றப்பட்டுள்ளது என்பதை எடுத்துக்காட்டுவதும், விளக்குவதுமான காரணத் தொடர்பாக்கத்தின் விளைவாகும். வெறுமனே செய்முறையிலூறிய கட்டடக்கலைஞன், தான் எடுத்துக்கொண்ட வடிவுருக்களுக்கான (forms) காரணங்களை எடுத்துக்காட்ட முடிவதில்லை; கோட்பாட்டுக் கட்டடக்கலைஞனும், பொருளை விட்டு நிழலைப் பிடிப்பதன் மூலம் தோல்வியடைகிறான். எவனொருவன் கோட்பாடு செயல்முறை இரண்டிலும் வல்லவனாக இருக்கிறானோ அவன் இரட்டைப் பலமுள்ளவன்; தன்னுடைய வடிவமைப்பின் தகுதியை நிரூபிக்கக்கூடியவனாக இருக்கின்றது மட்டுமன்றி, அதைத் திறமையாகச் செயற்படுத்தக்கூடியவனயும் இருப்பான்." வரலாறு தொல்பழங்காலமும் கட்டடக்கலையும் thumb|விருபக்ச கோயில், ஹம்பி, இந்தியா கட்டடக்கலையென்பது, ஆரம்பத்தில், தேவைகளுக்கும், (உகந்த சூழல், பாதுகாப்பு என்பன) Means (கிடைக்கக் கூடிய கட்டடப்பொருள்கள், தொழில் நுட்பம் முதலியன) என்பவற்றுக்கிடையிலான இயக்கப்பாடுகளிலிருந்து பரிணமித்ததாகும். தொல்பழங்கால, பழங்காலக் கட்டடங்கள் இவ்வகையைச் சேர்ந்தனவாகும். மனித முன்னேற்றத்துடன், அறிவுத்துறைகளும், வாய்மொழி மரபுகளினாலும், செயல்முறைகளினாலும், ஒழுங்கமையத் தொடங்கியபோது, கட்டடம் கட்டுதல் ஒரு கலையாக உருவானது. இங்கே முதலில் முயன்று தெரிதல் (Trial and Error) முறையின் பயன்பாடு, பின்னர் அவற்றில் தேவைக்கேற்ற மாற்றங்கள் அல்லது வெற்றிகரமான முயற்சிகளைப் பிரதிபண்ணல் எனப் பரிணாம வளர்ச்சி நடைபெற்றது. கட்டடக்கலைஞர் மட்டுமே இங்கு முக்கியமானவர் அல்ல. இவர்கள் பங்கு சதவீத அடிப்படையில் மிகக் குறைவே; விசேடமாக வளரும் நாடுகளில் இது 5% அளவுக்கும் குறைவே என்றும் கூறப்படுகின்றது. அவர் தொடர்ந்துவரும் கட்டடக்கலை மரபுகளில் ஒரு பகுதியேயாவர். நாட்டார் மரபு "(Vernacular Tradition)" என்று அழைக்கப்படும் மரபுசார் கட்டடமுறை இதற்கு ஒரு எடுத்துக்காட்டாகும். உலகின் எல்லாப் பகுதிகளிலும், பெரும்பாலான கட்டடங்கள் இம்முறையிலேயே கட்டடக்கலைஞர் அல்லாதவர்களால் உருவாக்கப்படுகின்றன. முற்கால மனிதர் குடியிருப்புகள் கிராமம் சார்ந்தவையாகும். உற்பத்திப் பெருக்கம் ஏற்பட்டபோது கிராமச் சமுதாயங்கள் நகர்சார் சமுதாயங்களாக வளர்ச்சி பெறத்தொடங்கின. கட்டடங்கள் அதிக சிக்கலானவையாக ஆனதுடன், அவற்றின் வகைகளும் அதிகரித்தன. வீதிகள், பாலங்கள் போன்ற குடிசார் கட்டுமானங்களும், பாடசாலைகள், மருத்துவமனைகள், பொழுதுபோக்கு வசதிகளுக்கான கட்டடங்கள் எனப் புதிய கட்டடவகைகளும் பெருகத்தொடங்கின. எனினும் சமயம் சார்ந்த கட்டடக்கலை அதன் முதன்மையிடத்தைத் தக்கவைத்துக்கொண்டிருந்தது. பல்வேறு கட்டடப்பாணிகளும், வளர்ச்சியடையத் தொடங்கியதுடன், கட்டடக்கலை பற்றிய எழுத்தாக்கங்களும் உருவாகின. இவற்றிற் சில, கட்டடங்கள் வடிவமைத்தல், கட்டுதல் தொடர்பில் பின்பற்றவேண்டிய விதிகளாக உருப்பெற்றன. இந்தியாவின் வாஸ்து சாஸ்திரம், சீனாவிலெழுந்த பெங் சுயி போன்ற கீழைத் தேச நூல்களும், மேலை நாட்டிலெழுந்த விட்ருவியசின் நூலும் இதற்கு உதாரணங்களாகும். "கிளாசிக்கல்" மற்றும் மத்திய காலங்களில், ஐரோப்பாவில், கட்டடக்கலைத் துறையில் தனிப்பட்ட கட்டிடக்கலைஞர்கள் முதன்மைப்படுத்தப்படவில்லை. பண்டை எகிப்தியக் கட்டிடக்கலை கட்டடக்கலையின் வரலாற்றில் பாரிய கட்டுமானங்களைக் கட்டிய மிகப் பழைய நாகரிகங்களுள் ஆப்பிரிக்காவின் நைல் ஆற்றங்கரையில் உருவாகிச் செழித்த எகிப்திய நாகரிகம் முதன்மையானது. இம் மக்கள் மிகப் பெரிய பிரமிட்டுகளையும், கோயில்களையும் உருவாக்கினர். பல வரலாற்றாளர்களும் உலகக் கட்டடக்கலை வரலாற்றின் தொடக்கத்தை இங்கிருந்துதான் தொடங்குகிறார்கள். ஐரோப்பாவின் தொடக்ககால நாகரிகங்களான கிரேக்க, ரோமர்காலக் கட்டடக்கலைகளுக்கான பல அடிப்படைகளை எகிப்தியக் கட்டடக்கலையில் அடையாளம் காண முடியும். மெசொப்பொத்தேமியக் கட்டடக்கலை தற்கால ஈராக்கிலுள்ள யூபிரட்டீஸ், டைகிரிஸ் ஆகிய ஆறுகளுக்கு இடையேயுள்ள பகுதியில் செழித்து வளர்ந்த மெசொப்பொத்தேமிய நாகரிகம், உலகக் கட்டடக்கலை வளர்ச்சிக்குப் பெரும் பங்களிப்புக்களைச் செய்த இன்னொரு தொன்மையான ஆசிய நாகரிகம் ஆகும். மெசொப்பொத்தேமிய ஆற்றுப்படுக்கையிலும், மேற்கு ஈரானியப் பீடபூமியிலும் கட்டப்பட்ட சிகுரட் எனப்படும் கூம்பக வடிவ கோயில் கோபுரங்கள் இதற்குச் சான்று பகர்கின்றன. இவை பல படிகளாகக் கட்டப்பட்டுள்ளன. இவ்வாறான 32 சிகுரட்கள் அறியப்பட்டுள்ளன. இவற்றுள் 28 ஈராக்கிலும், 4 ஈரானிலும் உள்ளன. பண்டைய கிரேக்க கட்டடக்கலை பண்டைக் கிரேக்க நாகரிகம் பொ.ஊ.மு. 1900 தொடக்கம் பொ.ஊ.மு. 133 வரையான காலப்பகுதியில் செழித்திருந்தது. ஆனால் இதன் தாக்கம் இன்றுவரை மேற்கு நாட்டுப் பண்பாட்டில் உணரப்பட்டு வருகிறது. கிரேக்கர்கள் உலகக் கட்டடக்கலைக்குப் பல குறிப்பிடத்தக்க பங்களிப்புக்களைச் செய்துள்ளனர். இக்காலத்தில் கட்டப்பட்ட கட்டடங்களுள் முதன்மையானவை கோயில்கள் ஆகும். கிரேக்கக் கோயில்கள் எகிப்தியக் கோயில்களைவிடச் சிறியவை. இவை, ஆள்பவர்களின் அதிகாரத்தைக் காட்டுவதற்காகவோ, பெருமளவிலான மக்கள் குழுமி வழிபடுவதற்காகவோ கட்டப்படவில்லை. இவை முக்கியமாகப் புற அழகுக்காகவும், சூழலில் ஏற்படுத்தக்கூடிய தாக்கங்களுக்குமாகவே வடிவமைக்கப்பட்டன. கிரேக்கக் கட்டடக்கலையில் ஒழுங்குகள் எனப்படும் மூன்று விதமான பாணிகள் பயன்படுத்தப்பட்டன. இவை டொரிக், அயனிக், கொறிந்தியன் என அழைக்கப்பட்டன. ஒழுங்குகள் என்பன தூண்களின் அமைப்பு, அவற்றின் அளவுவிகிதங்கள், அலங்காரங்கள், அவற்றால் தாங்கப்படும் வளைகளின் அமைப்பு அலங்காரம் முதலியவை தொடர்பானது. பண்டைய ரோமக் கட்டடக்கலை ரோமர் காலம் பொ.ஊ.மு. முதலாம் நூற்றாண்டில் இருந்து தொடங்குகிறது. ரோமர்களின் கட்டடக்கலை ஓரளவுக்குக் கிரேக்கக் கட்டடக்கலையின் தொடர்ச்சியே எனினும் ரோமர் காலத்தில் கட்டடக்கலையில் பெருமளவு வளர்ச்சிகள் ஏற்பட்டன. ரோமர் புத்தாக்கத் திறனும், கட்டடப்பொருள்கள் பற்றிய நல்ல அறிவும் கொண்டிருந்தனர். இயற்கையாகக் கிடைத்த கற்கள் முதலியவற்றை வெட்டிக் கட்டடக் கற்களை உருவாக்கும் முறைக்குப் பதிலாகச் சுண்ணாம்பு, மணல், சிறு கற்கள் போன்றவற்றை நீருடன் கலந்து ஒருவகைக் காங்கிறீட்டுச் செய்யும் முறையை அறிமுகப்படுத்தியவர்கள் ரோமர்களே. கட்டடக்கலை ஒழுங்குகளைப் பொறுத்தவரை ரோமர் மேலும் இரண்டு ஒழுங்குகளைப் பயன்படுத்தினர். இவை கூட்டு ஒழுங்கு, டஸ்கன் ஒழுங்கு என்பவையாகும். மறுமலர்ச்சிக்காலமும் கட்டடக்கலைஞரும் thumbnail|left|தாஜ் மஹால், ஆக்ரா, இந்தியா "ரெனசான்ஸ்" என்று அழைக்கப்பட்ட, மறுமலர்ச்சிக் காலகட்டத் தொடக்கத்துடன், சமயத்தைவிட மனிதசமுதாயமும், தனிப்பட்டவர்களும், முதன்மை பெறத் தொடங்கியமையும், அக்காலத்திலேற்பட்ட முன்னேற்றமும், அதன் பெறுபேறுகளும், கட்டடக்கலைத்துறையில் புதிய அத்தியாயமொன்றுக்கு அடிகோலின. கட்டடக்கலை தொடர்பில், தனிப்பட்ட கட்டடக்கலைஞர்கள் பெருமைப்படுத்தப்பட்டனர். மைக்கலாஞ்சலோ, லியொனார்டோ டா வின்சி, புரூணலெஸ்ச்சி போன்றவர்களை உதாரணமாகக் காட்டலாம். அக்காலத்தில், சிற்பி, கட்டடக் கலைஞன், பொறியியலாளன் எனத் தொழிற்பிரிவுகள் இருக்கவில்லை. ஒரு சிற்பியே (சிற்பம் செய்பவன்) பாலமொன்றை வடிவமைத்துக் கட்டக்கூடிய நிலை இருந்தது. அதற்குத் தேவையான கணித அறிவும்கூடப் பொதுமை அறிவின் பாற்பட்டதாகவேயிருந்தது. இந்தியாவிலும், சிற்பக் கலைஞர்களே கட்டடங்களையும் வடிவமைத்துக் கட்டினார்கள். கட்டடக்கலை, பொறியியல் அனைத்தும் இச் சிற்பக் கலைக்கு உள்ளேயே அடங்கியிருந்தன. கட்டடம் சார்ந்த தேவைகளின் அதிகரிப்பு, அவை தொடர்பான பெருமளவு அறிவு வளர்ச்சி என்பவற்றோடு, புதிய கட்டடப்பொருட்களின் அறிமுகம், தொழில்நுட்பங்களின் வளர்ச்சி என்பனவும் சேர்ந்து கட்டடத்துறையினுள் பல்வேறு தொழிற்பிரிவுகள் உருவாக வழி சமைத்தன. கூடிய தொழில் நுட்ப அம்சங்களை எடுத்துக்கொண்டு பல்வேறு பொறியியற் துறைகள் பிரிந்துபோகக் கட்டடக்கலை அழகியல் அம்சங்களையும், இடவெளி(space)வடிவமைப்புத் தொடர்பான பொறுப்புக்களையும் உள்ளடக்கி, வளர்ச்சியடைந்தது. "சீமான் கட்டடக்கலைஞர்" என்று அழைக்கப்பட்ட ஒரு பிரிவினர் உருவாகினர். பொதுவாகப் பெரும் பணக்காரர்களை வாடிக்கையாளராகக் கொண்டிருந்த இவர்கள், தோற்றம் சார்ந்த அம்சங்களிலேயே கூடிய கவனம் செலுத்தினர். அதுவும் பெரும்பாலும், வரலாற்றுக் கட்டட மாதிரிகளையே பின்பற்றிவந்தனர். 19 ஆம் நூற்றாண்டில் பிரான்சிலிருந்த இக்கோல் டெஸ் பியூக்ஸ் ஆர்ட்ஸ் (Ecole des Beaux Arts) என்னும் நிறுவனம், சூழ்நிலை சார்ந்த அம்சங்களுக்கு முக்கியத்துவம் கொடாது, அழகிய வரைபடங்களை உள்ளடக்கிய விரைவான திட்டங்களை உருவாக்குவதற்கே பயிற்சி கொடுத்துவந்தது. இதற்கிடையில், தொழிற்புரட்சி தொகையான நுகர்வுக்கான பாதையைத் திறந்துவிட்டதுடன், ஒருகாலத்தில் விலையுயர்ந்த கைவினைத்திறனோடு சம்பந்தப்பட்டிருந்த அலங்காரப் பொருட்கள், இயந்திர உற்பத்தியின் கீழ் மலிந்ததன் காரணமாக, அழகியல் மத்தியதர மக்கள் மட்டத்திலும் எதிர்பார்க்கப்படும் ஒன்றாக மாறியது. எனினும், உற்பத்தி வழிமுறைகளின் வெளிப்பாடுகளோடு இயைந்த நேர்மையும், அழகும் இவ்வுற்பத்திப் பொருட்களிற் குறைவாகவே காணப்பட்டன. நவீனத்துவமும் கட்டடக்கலையும் thumbnail|100px|கிறிஸ்லர் கட்டிடம், நியூ யோர்க் நகரம், ஐக்கிய அமெரிக்கா இவ்வாறான ஒரு பொதுவான நிலைமையினால் உருவான திருப்தியின்மை, 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பல புதிய சிந்தனைப் பாதைகளுக்கு வித்திட்டது. கட்டடக்கலையைப் பொறுத்தவரை இது நவீன கட்டடக்கலைக்கு முன்னோடியாக அமைந்ததெனலாம். சிறந்த தரத்தையுடைய இயந்திர உற்பத்திப் பொருட்களை உற்பத்திசெய்வதற்காக உருவாக்கப்பட்ட டொய்ச் வேர்க்பண்ட் (Deutshe Werkbund) இவற்றுள் குறிப்பிடத்தக்கதாகும். கைத்தொழில் வடிவமைப்புத் துறை இங்கேதான் ஆரம்பமானதாகப் பொதுவாகக் கருதப்படுகிறது. இதைத் தொடர்ந்து, 1919 ல், ஜெர்மனியில் ஆரம்பிக்கப்பட்ட பௌஹவுஸ் (Bauhaus) பாடசாலை வரலாற்றை நிராகரித்துவிட்டு, கட்டடக்கலை என்பது கலை, கைவினை மற்றும் தொழில்நுட்பத்தின் ஒரு தொகுப்பு என்ற கருத்தைக் கொண்டிருந்தது. முதன்முதலில் நவீன கட்டடக்கலை பயிலப்படத் தொடங்கியபோது, அது, தார்மீக, தத்துவ, அழகியல் அடிப்படைகளிலமைந்த, ஒரு முன்னோடி இயக்கமாக இருந்தது. வரலாற்றை நிராகரித்து, வடிவத்தை உருவாக்கும் காரணியாகச் செயற்பாட்டை (function), கருதியதுமூலம் உண்மையைத் தேட முயற்சிக்கப்பட்டது. கட்டடக்கலைஞர்கள் பிரபலமனார்கள். பின்னர், நவீன கட்டடக்கலை, பொருளாதார நோக்கத்தையும், எளிமையையும் கருத்தில் கொண்டு, பெரும்படி உற்பத்திமுறையை நோக்கிச் சென்றது. நவீனத்துவக் கட்டடக்கலைஞர்கள், கட்டடங்களை அவற்றின் அடிப்படையான வடிவங்களுக்கு எளிமையாக்க முயன்றனர். இவர்கள் கட்டடங்களில் அலங்காரங்களை நீக்கிவிட்டனர். உருக்குத் தூண்கள், வளைகள், காங்கிறீற்று மேற்பரப்புக்கள் போன்ற தங்கள் உண்மையான அமைப்புக்களை வெளிப்படுத்தும் கட்டடங்கள் அலங்காரங்கள் இன்றித் தம்மளவிலேயே அழகானவையாகக் கருதப்பட்டன. மீஸ் வான் டெர் ரோ போன்ற கட்டடக்கலைஞர்கள், கட்டடப்பொருட்கள், கட்டுமான நுட்பங்கள் என்பவற்றின் உள்ளார்ந்த அழகியல் இயல்புகளைப் பயன்படுத்திக் கட்டடங்களை அழகாக்க முயன்றனர். இவர்கள் மரபுவழியான வரலாற்று வடிவங்களுக்குப் பதிலாக எளிமையான வடிவவியல் வடிவங்களை உருவாக்கினர். எனினும், நவீன கட்டடக்கலையில் ஒரு தரக்குறைவு ஏற்பட்டிருப்பதை, 1960களிலிருந்து, பொதுமக்கள் உணர ஆரம்பித்தனர். கருத்தின்மை, வரட்சித்தனம், அழகின்மை, ஒருசீர்த்தன்மை மற்றும் உளவியற் தாக்கங்கள் என்பன இந்நிலைக்குக் காரணமாகக் காட்டப்பட்ட சில விடயங்களாகும். கட்டடக்கலையில் இருக்கவேண்டிய ஆழத்தைத் தியாகம் செய்துவிட்டு, வெளித்தோற்ற அளவில் பொதுமக்களைக் கவரக்கூடிய கட்டடங்களைக் கொடுக்கும் பாதையொன்றைக் கைக்கொள்வதுமூலம், மேற்கூறிய நிலைமைக்குப் பதிலளிக்கக் கட்டடக்கலைத் துறை முயன்றது. இது பின்நவீனத்துவம் (Postmodernism) என அழைக்கப்பட்டது. உள்ளே செயல்பாடுகளுக்கு உகந்தபடியான வடிவமைப்பையும், வெளியில் அலங்கரிக்கப்பட்டதுமான கொட்டகை; உள்ளும், புறமும் ஒரே நேரத்தில் சிந்தித்து வடிவமைக்கமுயன்று, கவர்ச்சியற்ற கட்டடத்தைக் கட்டுவதிலும் சிறந்தது என்ற தொனிகொண்ட, ராபர்ட் வெஞ்சூரி என்னும் கட்டடக்கலைஞரது கருத்து, இந்த அணுகுமுறையின் நோக்கத்தை விளக்குகிறது. கட்டடக்கலை இன்று 200px|thumb|சிட்னி ஒப்பேரா மாளிகை,அட்ஸனால் வடிவமைக்கப்பட்டது. கட்டடக்கலைத் துறையின் இன்னொரு பகுதியினரும், கட்டடக்கலைஞரல்லாதோர் சிலரும், பிரச்சினையின் அடிப்படை என்று அவர்கள் கருதிய விடயங்களுக்குத் தீர்வுகாண்பதன் மூலம் இப் பிரச்சினையை அணுக முயன்றனர். கட்டடக்கலையென்பது, தனிப்பட்ட கட்டடக்கலைஞர்கள் தங்கள் விருப்பங்கள், தத்துவங்கள் அல்லது அழகியல் நோக்கங்களை அடைவதற்கான ஒன்றல்லவென்றும், மாறாக மக்களுடைய நாளாந்தத் தேவைகளைக் கருத்திற்கொண்டு, தொழில்நுட்பங்களை உபயோகப்படுத்தி , வாழ்வுக்குகந்த சூழலை வழங்குவதாக இருக்கவேண்டுமென அவர்கள் கருதினர். சிறந்த உற்பத்திகளை உருவாக்குவதற்கு வழிசமைக்கக் கூடிய, புதிய வடிவமைப்பு வழிமுறையைக் கண்டுபிடிக்கும் நோக்கில், கிறிஸ் ஜோன்ஸ், கிறிஸ்தோபர் அலெக்ஸாண்டர் போன்றவர்களைக் கொண்ட வடிவமைப்பு வழிமுறைகள் இயக்கம் (Design Methodology Movement) ஆரம்பிக்கப்பட்டது. நடத்தை, சூழல் மற்றும் சமூக அறிவியல் சார்ந்த விடயங்களில் விரிவான ஆராய்ச்சிகள் செய்யப்பட்டு, வடிவமைப்பு வழிமுறைகளுக்கு உதவக்கூடிய தகவல்கள் பெறப்பட்டன. thumb|200px|left|Gare do Oriente புகையிரத நிலையம், லிஸ்பன், உருவாக்கியவர் சந்தியாகோ கலற்றாவா மேலும் பல பிரச்சினைகள் அடையாளம் காணப்படத் தொடங்கியபோது, கட்டடச் சேவைகள் போன்ற அம்சங்கள் தொடர்பில், கட்டடங்களின் சிக்கல்தன்மை அதிகரித்து, கட்டடக்கலை, எப்பொழுதுமில்லாதபடி பல்துறைசார்ந்த ஒன்றாக ஆனது. இதனால், கட்டடக்கலை சார்ந்த கட்டடங்களின் உருவாக்கத்துக்கு, பல உயர்தொழில் நிபுணர்களைக் கொண்ட ஒரு குழு தேவைப்பட்டது. ஆரம்பத்தில் இக்குழுவுக்குக் கட்டடக் கலைஞரே தலைவராக விளங்கினார். தற்காலத்தில் இத் தலைமைப் பொறுப்புக்கும், பல சிறப்புப் பயிற்சிகள் தேவைப்பட்ட காரணத்தினால், திட்ட முகாமைத்துவம் போன்ற புதிய துறைகள் தோன்றிக் கட்டடக்கலைத் துறையின் தலைமை நிலையையும் பிடித்துக்கொள்ள ஆரம்பித்துவிட்டன. எனினும், கட்டடங்களின் வடிவமைப்பு அம்சங்களைப் பொறுத்தவரை, கட்டடக்கலைத்துறை இன்னும் பலமாகவேயிருந்து வருகின்றது. விசேடமாக, பண்பாட்டுச் சின்னங்களாகக் கருதப்படக்கூடிய கட்டடவகைகளில், கட்டடக்கலைப் பாணி சார்ந்த பரிசோதனைகள் இன்னும் நிகழக்கூடிய நிலையுள்ளதுடன் அவை மேற்படி பரிசோதனைகளின் காட்சியகங்களாகவும் விளங்குகின்றன. மனித இனத்தின் உற்பத்திகளிலே, எக்காலத்திலும், மிகக் கூடிய அளவு பார்வைக்குத் தெரிகின்றவை கட்டடங்களேயாகும். இருந்தும், அவற்றுட் பெரும்பாலானவை, சாதாரண மக்களினாலேயோ அல்லது வளரும் நாடுகளிலுள்ளதுபோல், கொத்தனார்களாலேயோ கட்டப்படுகின்றன. வளர்ந்த நாடுகளிலே தரப்படுத்தப்பட்ட (standardised) உற்பத்திமுறைகள் மூலம் பெருமளவு கட்டடங்கள் உருவாகின்றன. கட்டட உற்பத்தியின் மிகக் குறைவான வீதமே கட்டடக்கலைஞரின் ஈடுபாட்டைக் கொண்டுள்ளன. சிக்கலான கட்டட வகைகளிலும், பண்பாட்டு, மற்றும் அரசியற் சின்னங்களாக விளங்கக்கூடிய கட்டடங்களில் மட்டுமே கட்டடக்கலைஞரின் திறமை பெரும்பாலும் வேண்டப்படுகின்றது. இவற்றைத்தான் பொதுமக்களும், கட்டடக்கலை சார்ந்த கட்டடங்களாகக் கருதுகிறார்கள். சமூகத்துக்கும், கட்டடக்கலைஞருக்குமிடையே எப்பொழுதும் ஒரு கருத்துப்பரிமாற்றம் நடந்துகொண்டுதான் வருகிறது. இப் பரிமாற்றத்தின் விளைவுகள்தான் கட்டடக்கலையும், அதன் உற்பத்திப்பொருட்களுமாகும் என்று சொல்லலாம். இவற்றையும் பார்க்கவும் கட்டிடக் கலைஞர் கட்டிடக்கலை வரலாறு கட்டிடக்கலைப் பாணி கட்டிடங்களின் பட்டியல் கட்டிடக்கலையில் வடிவங்கள் (Forms) குறிப்பிடத்தக்க கட்டிடக்கலைஞர்களின் பட்டியல் வானளாவி (Skyscraper) இடவெளித் தொகுப்பு (Space Syntax) தாங்குதிறன் வடிவமைப்பு (Sustainable Design) உருப்படிம மொழி (Pattern Language) கணிதமும், கட்டிடக்கலையும் கட்டிட வரைபடங்கள் கட்டிடக்கலைசார் அழகியல் பசுமைக் கட்டடங்கள் (Green Buildings) கட்டிடக்கலை மானிடவியல் (Architectural Anthropology) மேற்கோள்கள் வெளி இணைப்புகள் Famous architects – Biographies of well-known architects, almost all of the Modern Movement. Dravidian Temple Architecture Vitruvius' "Ten Books of Architecture" online Skyscrapers.com database on skyscrapers and tall structures Royal Institute of British Architects American Institute of Architects Institute for Architectural Theory, Swiss Federal Institute of Technology, Zurich What is New Urbanism? - Congress for the New Urbanism What is Landscape Architecture? - American Society of Landscape Architects Architecture and Urban Research Laboratory Canadian Centre for Architecture – International Research Centre and Museum devoted to Architecture http://www.architexturez.net http://www.pritzkerprize.com/ http://www.vitruvio.ch/
கட்டிடங்களின் பட்டியல்
https://ta.wikipedia.org/wiki/கட்டிடங்களின்_பட்டியல்
பிரபலமான அல்லது குறிப்பிடத்தக்க கட்டிடங்கள்: 1 கனடா சதுக்கம், இலண்டன், ஐக்கிய இராச்சியம் 191 பீச்ட்றீ கோபுரம், அட்லாண்டா, ஜார்ஜியா, ஐக்கிய அமெரிக்க நாடுகள் 30 சென் மேரி அக்ஸ், இலண்டன் 8 கனடா சதுக்கம், இலண்டன் அல் அக்சா மசூதி, ஜெரூசலம் அஸ்ரீலி மையம் வட்டக் கோபுரம், தெல்-அவீவ், இஸ்ரேல் அஸ்ரீலி மையம் முக்கோணக் கோபுரம், தெல்-அவீவ், இஸ்ரேல் அமெரிக்க வங்கி பிளாசா, அட்லாண்டா, ஜார்ஜியா, ஐக்கிய அமெரிக்க நாடுகள் சீன வங்கிக் கோபுரம், ஹொங்கொங் Bauhaus, Dessau, ஜெர்மனி Bayreuth Festspielhaus, Bayreuth, ஜெர்மனி Beaulieu Palace, Essex, England, ஐக்கிய இராச்சியம் பிராண்டென்பேர்க் நுழைவாயில், பெர்லின், ஜெர்மனி பிருஹதீஸ்வரர் கோவில், தஞ்சாவூர், இந்தியா பி.டி (BT) கோபுரம், இலண்டன், ஐக்கிய இராச்சியம் புக்காரெஸ்ட் Mall, புக்காரெஸ்ட், ருமேனியா பக்கிங்ஹாம் அரண்மனை, இலண்டன் புல்குக்சா, வட கியொங்சாங், வட கொரியா ககுவாஸ் (Caguas) கோபுரம், ககுவாஸ், புவேர்ட்டோ ரிக்கோ காசா மிலா (Casa Milà), பார்சிலோனா, ஸ்பெயின் Cathedral of Christ the Saviour , மாஸ்கோ, ரஷ்யா மத்திய பிளாசா (Central), ஹொங்கொங் செண்டர் பொயிண்ட் (Centre Point), இலண்டன் கிறிஸ்லெர் கட்டிடம், நியூயார்க் நகரம், நியூயார்க் மாநிலம், ஐக்கிய அமெரிக்க நாடுகள் பெருநகர் நுழைவாயில், ராமத்-கன், இஸ்ரேல் கொலோன் தேவாலயம், கொலோன், ஜெர்மனி கொலோன் நாடக அரங்கு (Cologne Theater), புவெனஸ் அயர்ஸ், ஆர்ஜெண்டீனா கொலோசியம், ரோம், இத்தாலி கொமேர்ஸ்பாங்க் கோபுரம், பிராங்க்பர்ட், ஜெர்மனி கொன்செர்ட்கெபவ், ஆம்ஸ்டர்டம், நெதர்லாந்து கிறிஸ்டல் மாளிகை, இலண்டன், ஐக்கிய இராச்சியம் சி.என் கோபுரம் (C.N. Tower), டொரான்டோ, ஒண்டாரியோ, கனடா டி.ஜி வங்கி கட்டிடம் (D.G. Bank Building), பெர்லின், ஜெர்மனி பாறைக் குவிமாடம், ஜெருசலெம், இஸ்ரேல் டொங்லின் கோவில், ஜியாங்ஷி, மக்கள் சீனக் குடியரசு டுபாய் லாண்ட், துபாய், ஐக்கிய அரபு அமீரகம் ஈபெல் கோபுரம், பாரிஸ், பிரான்ஸ் எமிரேட்ஸ் கோபுரங்கள், துபாய், ஐக்கிய அரபு அமீரகம் எம்பயர் ஸ்டேட் கட்டிடம், நியூயார்க் நகரம், நியூயார்க் மாநிலம், ஐக்கிய அமெரிக்க நாடுகள் எல் எஸ்கோரியல், ஸ்பெயின் பிளடிரோன் கட்டிடம் (Flatiron), நியூயார்க் நகரம், நியூயார்க் மாநிலம், ஐக்கிய அமெரிக்க நாடுகள் குளோப் நாடக அரங்கு (Globe Theatre), இலண்டன், ஐக்கிய இராச்சியம் பெரிய பிரமிட், கிஸா, எகிப்து குகென்ஹெயிம் அருங்காட்சியகம், பில்போ, ஸ்பெயின் ஹபிட்டாற் '67 (Habitat '67), மொன்றியல், கியூபெக், கனடா ஹேகியா சோபியா, இஸ்தான்புல், துருக்கி ஹெயின்சா (Haeinsa), வட கியொங்சாங், வட கொரியா ஜோன் ஹன்கொக் கட்டிடம், சிகாகோ, இலினொய்ஸ், ஐக்கிய அமெரிக்க நாடுகள் ஹிமேஜி கோட்டை (Himeji castle), Hyogo prefecture, ஜப்பான், ஜப்பான் ஹிரோஷிமா சமாதான நினைவகம், ஹிரோஷிமா, ஜப்பான் ஹொலிவூட் மாளிகை, எடின்பரோ, ஐக்கிய இராச்சியம் ஹோப்வெல் செண்டர், ஹொங்கொங் ஜெபெர்சன் வளைவு (Arch), சாந். லூயிஸ், மிசோரி, ஐக்கிய அமெரிக்க நாடுகள் ஜெபெர்சன் நினைவகம், வாஷிங்டன், டி. சி, ஐக்கிய அமெரிக்க நாடுகள் ஜே.பி. மோர்கன் சேஸ் கோபுரம், ஹியூஸ்டன், டெக்சஸ், ஐக்கிய அமெரிக்க நாடுகள் காபா, மக்கா, சவுதி அரேபியா பீசாவின் சாய்ந்த கோபுரம், பீசா, இத்தாலி லீன்ஸ்டர் ஹவுஸ், டப்லின், அயர்லாந்து அலெக்ஸாண்ட்ரியா கலங்கரை விளக்கம், அலெக்ஸாண்ட்ரியா, எகிப்து Madeleine, Église de la, பாரிஸ், பிரான்ஸ் மால் ஆஃப் அமெரிக்கா (Mall of America), புளூமிங்டன், மினசோட்டா, ஐக்கிய அமெரிக்க நாடுகள் மேரி-ரெனி-து-மாந்தே தேவாலயம் (Marie-Reine-du-Monde Cathedral), மொன்றியல், கியூபெக், கனடா மிலான் மத்திய நிலையம், மிலான், இத்தாலி இத்வோமோ தி மிலானோ (Duomo di Milano), மிலான், இத்தாலி மில்லெனியம் டோம், இலண்டன், ஐக்கிய இராச்சியம் நொட்ரே-டேம் டி மொன்ரியல் பசிலிக்கா, மொன்றியல், கியூபெக், கனடா நொட்ரே-டேம் டி பாரிஸ், பாரிஸ், பிரான்ஸ் ஓர்சன்மிச்சேல், புளோரன்ஸ், இத்தாலி பான் அம் கட்டிடம், நியூயார்க் நகரம், நியூயார்க் மாநிலம், ஐக்கிய அமெரிக்க நாடுகள் பார்த்தினன், பாரிஸ், பிரான்ஸ் பாரிஸ் ஒபேரா (பலைஸ் கார்னியர்), பாரிஸ், பிரான்ஸ் பார்த்தினன், ஏதென்ஸ், கிரீஸ் பெண்டகன், ஆர்லிங்டன், வெர்ஜீனியா, ஐக்கிய அமெரிக்கா பெட்ரோனாஸ் கோபுரங்கள், கோலாலம்பூர், மலேசியா பிளாஸா லாஸ் அமெரிக்காஸ், சான் ஜுவான், பியூட்டோரிக்கோ பிறாடோ நூதனசாலை, மாட்ரிட், ஸ்பெயின் புரொமெனேட் II, அட்லாண்டா, ஜார்ஜியா, ஐக்கிய அமெரிக்க நாடுகள் றீச்ஸ்டயிக் கட்டிடம் (Reichstag Building), பெர்லின், ஜேர்மனி ரிலையண்ட் அஸ்ட்ரோடோம், ஹூஸ்டன், டெக்சஸ், ஐக்கிய அமெரிக்கா ரொபர்ட்டோ கிளெமண்ட் கொலிசியம், பியூட்டோரிக்கோ ரோயல் ஒப்பேரா ஹவுஸ், இலண்டன், ஐக்கிய இராச்சியம் ரியூக்யொங் ஹோட்டல், பியொங்யாங், வட கொரியா சக்ராதா பமிலியா (Sagrada Família), பார்சிலோனா, ஸ்பெயின் Sainte-Chapelle, பாரிஸ், பிரான்ஸ் சென். ஜோசப் டியு மொண்ட்-ரோயல், மொண்ட்ரியல் சாந்தா மரியா நொவெல்லா, புளோரன்ஸ் ஷலோம் மெயர் கோபுரம், தெல்-அவிவ், இஸ்ரேல் ஷெரட்டன் சிட்டி கோபுரம், ரமாத்-கன், இஸ்ரேல் சொலமன் ஆர். குகனீம் நூதனசாலை, நியூயார்க் நகரம், நியூயார்க் மாநிலம், ஐக்கிய அமெரிக்க நாடுகள் சென் போல்ஸ் பேராலயம், இலண்டன், ஐக்கிய இராச்சியம் புனித பீட்டர் தேவாலயம் (St.Peters Basillica), ரோம், இத்தாலி லா ஸ்காலா அரங்கம், மிலான், இத்தாலி ஷௌன்ப்ர்ண் அரண்மனை (Schönbrunn Palace), ஆஸ்திரியா சியேர்ஸ் கோபுரம், சிகாகோ, இலினொய்ஸ், ஐக்கிய அமெரிக்கா ஸ்கை டோம், டொரான்டோ, ஒண்டாரியோ, கனடா சிங்கர் கட்டிடம், நியூயார்க் நகரம், நியூயார்க் மாநிலம், ஐக்கிய அமெரிக்க நாடுகள் சிமித் கோபுரம், சியாடில், வொஷிங்டன், ஐக்கிய அமெரிக்க நாடுகள் சொன்குவாங்சா, தெற்கு ஜோல்லா, தென் கொரியா சௌத்டேல், எடினா, மினசோட்டா, ஐக்கிய அமெரிக்கா விண்வெளி ஊசி (Space Needle), சியாட்டில், வொஷிங்டன், ஐக்கிய அமெரிக்கா ஸ்டீபன்ஸ்டம் (Stephansdom), வியன்னா கோடை அரண்மனை, பீஜிங், மக்கள் சீனக் குடியரசு சண்ட்ரஸ்ட் பிளாஸா, அட்லாண்டா, ஜார்ஜியா, ஐக்கிய அமெரிக்க நாடுகள் சிட்னி ஒப்பேரா மாளிகை, சிட்னி, அவுஸ்திரேலியா தாய்ப்பே 101, தாய்ப்பே, தாய்வான் தாஜ் மஹால், ஆக்ரா, இந்தியா டி & சி கோபுரம், Kaohsiung, தாய்வான் தெல்-அவிவ் மத்திய பேருந்து நிலையம், தெல்-அவிவ், இஸ்ரேல் சுவர்க்கக் கோவில், பீஜிங், மக்கள் சீனக் குடியரசு டோக்கியோ கோபுரம், டோக்கியோ, ஜப்பான் கோபுரம் 42, இலண்டன், ஐக்கிய இராச்சியம் ட்ரான்ஸ் அமெரிக்கா பிரமிட், சான் பிரான்சிஸ்கோ, கலிபோர்னியா, ஐக்கிய அமெரிக்கா ட்ரிபியூன் கோபுரம், சிகாகோ, இலினொய்ஸ், ஐக்கிய அமெரிக்கா ஐக்கிய நாடுகள் தலைமையகம், நியூயார்க் நகரம், நியூயார்க் மாநிலம், ஐக்கிய அமெரிக்க நாடுகள் யூ.எஸ். வங்கி கோபுரம், லாஸ் ஏஞ்சல்ஸ், கலிபோர்னியா, ஐக்கிய அமெரிக்கா வெர்செயிலஸ் அரண்மனை, வெர்செயிலஸ், பிரான்ஸ் வில்லா சவோய், பொய்சி-சர்-சீனே, பிரான்ஸ் மேற்கு எட்மண்டன் அங்காடி, எட்மண்டன், அல்பேர்ட்டா, கனடா வெஸ்டின் பீச்ட்ரீ பிளாஸா, அட்லாண்டா, ஜார்ஜியா, ஐக்கிய அமெரிக்க நாடுகள் வெஸ்ட்மின்ஸ்டர் அபே, இலண்டன், ஐக்கிய இராச்சியம் வெஸ்ட்மின்ஸ்டர் அரண்மனை, இலண்டன் வெள்ளை மாளிகை, வாஷிங்டன், டி.சி., ஐக்கிய அமெரிக்கா வின்செஸ்டர் மர்ம மாளிகை, சான் ஜோஸ், கலிபோர்னியா, ஐக்கிய அமெரிக்கா குளிர்கால அரண்மனை, சென். பீட்டர்ஸ்பர்க், ரஷ்யா வூல்வேர்த் கட்டிடம், நியூயார்க் நகரம், நியூயார்க் மாநிலம், ஐக்கிய அமெரிக்க நாடுகள் உலக வர்த்தக மையம், நியூயார்க் நகரம், நியூயார்க் மாநிலம், ஐக்கிய அமெரிக்க நாடுகள் ரிக்லே கட்டிடம், சிகாகோ, இலினொய்ஸ், ஐக்கிய அமெரிக்க நாடுகள் இவற்றையும் பார்க்கவும் ஐக்கிய அமெரிக்காவிலுள்ள 50 உயரமான கட்டிடங்கள். Amphitheatre நீர்காவி (Aqueduct) கட்டிடக்கலை பெருநகர் நுழைவாயில் பதுகாப்புச் சுவர் List of abbeys and priories List of basilicas பாலங்களின் பட்டியல் இந்துக் கோவில்களின் பட்டியல் பௌத்த கோவில்களின் பட்டியல் கட்டிட வகைகளின் பட்டியல் List of castles பேராலயங்களின் பட்டியல் (Cathedrals) அணைக்கட்டுகளின் பட்டியல் பிரபல தொல்பொருளியற் களங்களின் பட்டியல் பிரபல களங்களின் பட்டியல் (sites) வரலாற்றுச் சிறப்புமிக்க வீடுகளின் பட்டியல் கலங்கரை விளக்கங்களின் பட்டியல் வானளாவிகளின் பட்டியல் (skyscrapers) உலகின் உயரமான அமைப்புகளின் பட்டியல் சுவர்களின் பட்டியல் Opera house அரண்மனைகள் அங்காடித் தொகுதி இலண்டனின் உயரமான கட்டிடங்கள் வெற்றி வளைவுகள் (Triumphal arch) உலக பாரம்பரியக் களங்கள் பகுப்பு:கட்டிடக்கலை
கட்டடக் கலைஞர்
https://ta.wikipedia.org/wiki/கட்டடக்_கலைஞர்
thumb|250px|ஒரு கட்டடக் கலைஞர் வேலை செய்கிறார்,1893ஒரு கட்டிடக்கலைஞன் அல்லது கட்டிடச்சிற்பி (Architect) என்பவன் கட்டிடத் திட்டமிடல், வடிவமைப்பு மற்றும் கட்டிட நிர்மாண மேற்பார்வை என்பவற்றில் தேர்ச்சி பெற்ற ஒருவனாவான். கட்டிடக்கலையைப் பார்க்கவும். கட்டிடக்கலைஞர்கள், மருத்துவர்கள், வக்கீல்கள் மற்றும் பொறியியலாளர்களைப்போல உயர்தொழில் வல்லுனர்களாகக் கணிக்கப்படுகிறார்கள். ஒரு கட்டிடக்கலைஞன் பெறக்கூடிய அதி கௌரவம் பிரிட்ஸ்கெர் பரிசு (Pritzker Prize)https://www.pritzkerprize.com/ ஆகும். முற்காலத்தில் கட்டிடக்கலைஞர்கள், திட்டமிடல், வடிவமைப்பு, மேற்பார்வை மட்டுமின்றி, தாங்களே முன்னின்று கட்டிடவேலைகளில் ஈடுபட்டார்கள். பழங்காலக் கட்டிடங்களிலே சிற்பவேலைப்பாடுகள் மிக முக்கிய இடத்தை வகித்தபடியால், இவர்களும் சிற்பிகள் என்றே அழைக்கப்பட்டார்கள். பல நாடுகளிலே, கட்டிடக்கலைஞர்கள் தொழில்புரிவதற்கு அனுமதி பெற்றிருக்கவேண்டும். தொழில் முறையில், கட்டிடக் கலைஞர் ஒருவரின் தீர்மானங்கள் பொதுப் பாதுகாப்பைப் பாதிக்கக் கூடியவை. அதனால், உயர்நிலைக் கல்வியையும், செய்முறை அனுபவத்தையும் உள்ளடக்கிய சிறப்புப் பயிற்சி பெற்றிருக்கும் ஒருவருக்கே கட்டிடக்கலைத் தொழிலில் ஈடுபடுவதற்கான அனுமதி வழங்கப்படுகிறது. இந்த அனுமதி, பொதுச் சட்டவிதிகளின் கீழ் அமைக்கப்பட்ட தனி அமைப்பொன்றினாலோ அல்லது கட்டிடக்கலைஞர் நிறுவனங்களினாலோ வழங்கப்படுகின்றது. நாட்டுக்கு நாடு இந்த அனுமதிபெறுவதற்கான, வழிமுறைகளும், பயிற்சிகளும், சிற்றளவில் வேறுபடுகின்றன. பல நாடுகளில் "கட்டிடக்கலைஞர்" என்னும் பெயரைப் பயன்படுத்திக்கொள்ளும் உரிமையும் சட்டத்தினால் பாதுகாக்கப்பட்டு உள்ளது. இந்நாடுகளில், உரிய பயிற்சி பெறாமல் கட்டிடக்கலைஞர் என்று அழைத்துக்கொள்வது சட்டப்படி குற்றம். குறிப்பிடத்தக்க கட்டிடக்கலைஞர்கள் thumb|250px|21ஆம் நூற்றாண்டில் கட்டடக் கலைஞரும் கட்டிடங்களும்,(1910) இங்கு தரப்பட்டுள்ள குறிப்பிடத்தக்க கட்டிடக்கலைஞர்களின் பட்டியல் அவர்களுடைய முக்கியமான வேலைகளின் காலப்பகுதியைத் தழுவி, காலஒழுங்கு அடிப்படையிலும், அக் காலப்பகுதியினுள் அகரமுதல் அடிப்படையிலும் உள்ளது. கட்டிடக்கலைஞர்களைப் பயிற்றுவிக்கும் குறிப்பிடத்தக்க கல்வி நிலையங்கள்: பாஹாவுஸ் (Bauhaus), ஜெர்மனி * இதனைக் குறித்த கூகுள் தளத்தின் தரவு வகைமைத்தளம் இக்கோல் டெஸ் பியூக்ஸ் ஆர்ட்ஸ் (Ecole des Beaux Arts), பாரிஸ்https://www.beauxartsparis.fr/en மேற்கோள்கள் மேலும் பார்க்க குடிசார் பொறியியல் (Civil engineering) அமைப்புப் பொறியியல் (Structural engineering) கட்டிடக்கலைஞர் சங்கங்கள் குடிசார் பொறியாளர் பகுப்பு:கட்டிடக்கலை
குறிப்பிடத்தக்க கட்டிடக்கலைஞர்களின் பட்டியல்
https://ta.wikipedia.org/wiki/குறிப்பிடத்தக்க_கட்டிடக்கலைஞர்களின்_பட்டியல்
குறிப்பிடத்தக்க கட்டிடக்கலைஞர்களின் பட்டியல் முற்காலக் கட்டிடக்கலைஞர்கள் மார்க்கஸ் அக்ரிப்பா ட்ரலசிய அந்தேமியஸ் (Anthemius of Tralles) இம்ஹோடெப் (Imhotep) இக்டினொஸ் (Iktinos) மிலெட்டஸ் இசிடோர் (Isidore of Miletus) கல்லிக்கிறேட்டஸ் (Kallikrates) நெசிக்கிள்ஸ் (Mnesicles) நிம்ரொட் விட்ருவியஸ் விவாஸ்வட் பதின்மூன்றாம் நூற்றாண்டுக் கட்டிடக்கலைஞர்கள் ராபர்ட் டி லுஸார்ச்செஸ் வில்லார்ட் டி ஹொன்னெக்கோர்ட் பதினைந்தாம் நூற்றாண்டுக் கட்டிடக்கலைஞர்கள் லியொன் பட்டிஸ்டா அல்பர்ட்டி டொனாட்டோ பிரமண்டே பிலிப்போ புருனெலெஸ்ச்சி (Filippo Brunelleschi) லியொனார்டோ டா வின்சி மிக்கெலொஸ்ஸோ மிக்கெலொஸ்ஸி (Michelozzo Michelozzi) பதினாறாம் நூற்றாண்டுக் கட்டிடக்கலைஞர்கள் கலீஸ்ஸோ அலெஸ்ஸி (Galeazzo Alessi) பார்த்தொலோமியோ அம்மானத்தி (Bartolomeo Ammanati) மைக்கலாஞ்சலோ புவோனரோட்டி Philibert de l'Orme அண்ட்ரியா பல்லாடியோ (Andrea Palladio) அண்டோனியோ சங்கால்லோ ரஃபாயேலோ சாண்டி (Raffaello Santi) சினான் ஜோர்ஜியோ வசாரி கியாகோமோ பரோஸ்சி டா விக்னோலா (Giacomo Barozzi da Vignola) பதினேழாம் நூற்றாண்டுக் கட்டிடக்கலைஞர்கள் கியான் லொரென்ஸோ பெர்னினி ( Gian Lorenzo Bernini) பிரான்ஸெஸ்கோ பொரோமினி (Francesco Borromini) பியெட்ரோ டா கொர்தோனா(Pietro da Cortona) குவாரினோ குவாரினி (Guarino Guarini) உஸ்தாத் இஸா (Ustad Isa) இனிகோ ஜோன்ஸ் கார்லோ மடேர்னோ கார்லோ ரைனால்டி (Carlo Rainaldi) ஜான் வெப் (John Webb) கிறிஸ்தோபர் ரென் (Christopher Wren) பதினெட்டாம் நூற்றாண்டுக் கட்டிடக்கலைஞர்கள் ராபர்ட் ஆடம் (Robert Adam) கொஸ்மாஸ் டாமியன் ஆசாம் (Cosmas Damian Asam) எகிட் குயிரின் ஆசாம் (Egid Quirin Asam) Étienne-Louis Boullée வில்லியம் சேம்பர்ஸ் (William Chambers) கிரிஸ்தோஃப் தியென்சென்ஹோபர் (Christof Dienzenhofer) கிலியன் இக்னாஸ் தியென்சென்ஹோபர் (Kilian Ignaz Dienzenhofer) ஜோஹான் பெர்ன்ஹார்ட் ஃபிஷர் வொன் ஏர்லாச் (Johann Bernhard Fischer von Erlach) ஜொஹான் மைக்கேல் ஃபிஷர் (Johann Michael Fischer) நிக்கொலாஸ் ஹோக்ஸ்மூர் (Nicholas Hawksmoor) Johann Lukas von Hildebrandt ஜேம்ஸ் ஹோபன் (James Hoban) தோமஸ் ஜெஃபர்சன் ஃபிலிப்போ ஜுவார்ரா (Filippo Juvarra) வில்லியம் கெண்ட் (William Kent) பெஞ்சமின் லாட்ரோப் (Benjamin Latrobe) Jules Hardouin Mansart ஜோசெஃப் முங்கெனாஸ்ட் (Josef Munggenast) பல்தாசர் நியூமான் (Balthasar Neumann) Giuseppe Piemarini Jakob Prandtauer ஜொஹான் மைக்கேல் புரூன்னர் (Johann Michael Prunner) Jacques-Germain Soufflot வில்லியம் தோர்ன்டன் (William Thornton) Luigi Vanvitelli John Vanbrugh Bernardo Vittone Dominikus Zimmermann Johann Baptist Zimmermann பத்தொன்பதாம் நூற்றாண்டுக் கட்டிடக்கலைஞர்கள் Dankmar Adler சர் சார்லஸ் பரி (Charles Barry) சார்லஸ் பரி (junior) Edward Middleton Barry Frederic Auguste Bartholdi Charles Bulfinch William Burges எட்வார்ட் கிளாக் (Edward Clark) Thomas Cubitt Pierre Cuypers Alexandre Gustave Eiffel சார்லஸ் கார்னியர் (Charles Garnier) பிலிப் ஹார்ட்விக் (Philip Hardwick) விக்டர் ஹோர்ட்டா Horta (Victor Horta) ரிச்சார்ட் ஹண்ட் (Richard Hunt) Henri Labrouste Benjamin Henry Latrobe William LeBaron Jenney Charles Follen McKim ஜான் நாஷ் (John Nash) Frederick Law Olmsted ஜோசேஃப் பக்ஸ்டன் (Joseph Paxton) A. W. N. Pugin ஜேம்ஸ் ரென்விக் (James Renwick) ஹென்றி ஹொப்சன் ரிச்சார்ட்சன் (Henry Hobson Richardson) ஜான் ரூட் (John Root) ஜார்ஜ் கில்பர்ட் ஸ்கொட் (George Gilbert Scott) கொட்பிரைட் செம்பர் (Gottfried Semper) John Soane லூயிஸ் சலிவன் (Louis Sullivan) Eugene Viollet-le-Duc Thomas Ustik Walter Alfred Waterhouse Stanford White இருபதாம் நூற்றாண்டுக் கட்டிடக்கலைஞர்கள் அல்வார் ஆல்டோAlvar Aalto டேவிட் அட்லர்David Adler கிறிஸ்தோபர் அலெக்சாண்டர்Christopher Alexander Tadao Ando லூயிஸ் பராகன் (Luis Barragan) Frederic Bereder Henrik Petrus Berlage Gottfried Boehm ரிக்காடோ போவில் (Ricardo Bofill) Mario Botta Marcel Lajos Breuer J. van den Broek Gordon Bunshaft John Burgee டானியேல் பர்ண்ஹம் (Daniel Burnham) சந்தியாகோ கலத்ராவா (Santiago Calatrava) Ralph Adams Cram Pierre de Meuron Willem Marinus Dudok Peter Eisenman ஆர்தர் எரிக்சன் (Arthur Erickson) Sverre Fehn நார்மன் பாஸ்டர் (Norman Foster) பக்மின்ஸ்டர் புல்லர் (Buckminster Fuller) அண்டோனியோ கௌடி (Antonio Gaudi) பிராங்க் கெரி (Frank Gehry) Cass Gilbert மைக்கேல் கிறேவ்ஸ் (Michael Graves) வால்டர் பர்லி கிறிபின் (Walter Burley Griffin) வால்டர் குறோப்பியஸ் (Walter Gropius) வலஸ் ஹரிசன் (Wallace Harrison) Jacques Herzog சார்ல்ஸ் ஹோல்டன் (Charles Holden) Hans Hollein ரேமண்ட் ஹூட் (Raymond Hood) Arata Isozaki ஆர்னே ஜகொப்சன் (Arne Jacobsen) Helmut Jahn பிலிப் ஜான்சன் (Philip Johnson) லூயிஸ் கான் (Louis Kahn) கென்ஸோ டாங்கே (Kenzo Tange) Hans Kolhoff Rem Koolhaas Leon Krier Kisho Kurokawa லெ கொபூசியே (Le Corbusier) மாயா லின் (Maya Lin) அடொல்ப் லூஸ் (Adolf Loos) Edwin Lutyens Fumihiko Maki சார்ல்ஸ் ரெனி மக்கின்டோஷ் (Charles Rennie Mackintosh) Robert Mallet-Stevens McKim, Mead, and White ரிச்சர்ட் மீயர் (Richard Meier) லுட்விக் மீஸ் வான் டெர் ரோLudwig Mies van der Rohe Giovanni Michelucci Samuel -Sambo- Mockbee ராபேல் மோனியோ (Rafael Moneo) சார்ல்ஸ் மூர் (Charles Moore) ஜூலியா மோர்கன் (Julia Morgan) வில்லியம் மொறிஸ் (William Morris) Glenn Murcutt ரிச்சர்ட் நியூட்ரா (Richard Neutra) ஒஸ்கார் நிமேயர் (Oscar Niemeyer) ஒஸ்கார் நிற்ஸ்கே (Oscar Nitzchke) Nouvel Jean J.J.P.Oud ஐ.எம்.பே (I. M. Pei) ரென்ஸோ பியானோ (Renzo Piano) கியோ பொண்டி (Gio Ponti) ஜோன் போர்ட்மன்John Portman Christian de Portzamparc ரால்ப் ரப்சன் (Ralph Rapson) ஸ்டீன் எய்லெர் ராஸ்முசென் (Steen Eiler Rasmussen) Gerrit Rietveld கெவின் ரோச் (Kevin Roche) ரிச்சர்ட் ரோஜர்ஸ் (Richard Rogers) அல்டோ ரொஸ்ஸி (Aldo Rossi) போல் ருடொல்ப் (Paul Rudolf) ஈரோ சாரினென் (Eero Saarinen) எலியெல் சாரினென் (Eliel Saarinen) Moshe Safdie கர்லோ ஸ்கார்ப்பா (Carlo Scarpa) Paul Schmitthenner Margarete Schütte-Lihotzky கைல்ஸ் கில்பர்ட் ஸ்கொட் (Giles Gilbert Scott) ஹரி சீட்லெர் (Harry Seidler) Shreeve, Lamb, and Harmon அல்வாரோ சிஸா (Alvaro Siza) Skidmore, Owings, and Merrill பவோலோ சோலேரி (Paolo Soleri) அல்பர்ட் ஸ்பியர் (Albert Speer) James Stirling Edward Durrell Stone கென்சோ டாங்கே (Kenzo Tange) Bruno Taut பெர்ணார்ட் சூமி (Bernard Tschumi) ஜோர்ன் அட்சன் (Jørn Utzon) வில்லியம் வான் அலன் (William van Alen) Aldo van Eyck ராபர்ட் வெஞ்சூரி (Robert Venturi) ஜன் வில்ஸ் (Jan Wils) பிரான்க் லாய்டு ரைட் (Frank Lloyd Wright) மினோரு யமசாகி (Minoru Yamasaki) இருபத்தோராம் நூற்றாண்டுக் கட்டிடக்கலைஞர்கள் Richard Nash Gould Steven Holl Daniel Libeskind
புவியியல்
https://ta.wikipedia.org/wiki/புவியியல்
thumb|333px|right|புவியின் நிலப்படம்(Medium) (Large 2 MB) புவியியல் என்பது புவி, அங்குள்ள நிலம், பல்வேறு அம்சங்கள், அதிலுள்ள உயிர் வகைகள் மற்றும் தோற்றப்பாடுகள் என்பவற்றை விளக்கும் ஒரு துறையாகும். இச்சொல்லை நேரடியாக மொழி பெயர்க்கும்போது அது புவியைப்பற்றி விளக்குவது அல்லது எழுதுவது என்பதைக் குறிக்கும். புவியியல் ஆய்வில் வரலாற்று ரீதியாக நான்கு மரபுகள் காணப்படுகின்றன. இவை, இயற்கை மற்றும் மனிதத் தோற்றப்பாடுகள் தொடர்பிலான இடம்சார் பகுப்பாய்வு, இது பரம்பல் அடிப்படையிலான புவியியல் ஆய்வு; நிலப்பரப்பு ஆய்வு, இது இடங்களும், நிலப்பகுதிகளும் தொடர்பானது; மனிதனுக்கும், நிலத்துக்குமான தொடர்பு பற்றிய ஆய்வு; புவி அறிவியல்கள் தொடர்பான ஆய்வு; என்பனவாகும். ஆனால், தற்காலப் புவியியல், எல்லாவற்றையும் ஒருங்கே தழுவிய ஒரு துறை. இது புவியையும் அதிலுள்ள எல்லா மனித மற்றும் இயற்கைச் சிக்கல்களையும் புரிந்துகொள்ள முயல்கிறது. எங்கெங்கே பொருள்கள் இருக்கின்றன என்பதை மட்டுமன்றி, அவை எவ்வாறு மாறுகின்றன, எப்படித் தற்போதைய நிலையை அடைந்தன என்பவற்றை அறிவது தற்காலப் புவியியலின் நோக்கமாகும். மனிதனுக்கும், இயற்பு அறிவியலுக்கும் இடையே உள்ள தொடர்பாக அமைவதால், புவியியல் துறையானது, மானிடப் புவியியல், இயற்கைப் புவியியல் (physical geography) என இரு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அறிமுகம் முன்னர் புவியியலாளர்களை, நிலப்பட வரைவாளர்களைப் போலவும், இடப்பெயர்களையும் அவற்றின் எண்ணிக்கைகளையும் ஆய்வு செய்பவர்களைப் போலவுமே மக்கள் நோக்கி வந்தனர். பல புவியியலாளர்கள், புவிப்பரப்பியல், நிலப்பட வரைவியல் போன்ற துறைகளில் பயிற்சி பெற்றிருப்பினும், அவர்களின் முதன்மையான பணி அதுவல்ல. புவியியலாளர்கள், தோற்றப்பாடுகள், செயல்முறைகள், அம்சங்கள், மனிதனுக்கும் அவனது சூழலுக்கும் இடையிலான தொடர்புகள் என்பவற்றின் இடம் சார்ந்தனவும், உலகியல் சார்ந்தனவுமான பரம்பல்கள் குறித்து ஆராய்கிறார்கள். வெளியும், இடமும்; பொருளியல், உடல்நலம், காலநிலை, தாவரங்கள், விலங்குகள் என்பவற்றின் மீது தாக்கங்களைக் கொண்டிருப்பதால், புவியியல் ஒரு பலதுறைத் தொடர்பு கொண்ட துறையாக உள்ளது. புவியியலின் இரண்டு பிரிவுகளுள், மானிடப் புவியியல், பெரும்பாலும் கட்டிடச் சூழல் பற்றியும்; அவற்றை எவ்வாறு மனிதர்கள் உருவாக்குகிறார்கள், நோக்குகிறார்கள், மேலாண்மை செய்கிறார்கள், அவற்றின் மீது செல்வாக்குச் செலுத்துகிறார்கள் என்பது பற்றியும் ஆய்வு செய்கிறது. இரண்டாவது வகையான இயற்கைப் புவியியல், காலநிலை, தாவரவகை, பிற உயிர்வகைகள், நில அமைப்பு என்பன எவ்வாறு உருவாகின்றன, எத்தகைய தொடர்புகளை அவற்றுள் கொண்டுள்ளன என்பவற்றை உள்ளடக்கிய இயற்கைச் சூழல் குறித்து ஆய்வு செய்கிறது. புவியியலின் பிரிவுகள் இயற்கைப் புவியியல் இயற்கைப் புவியியல், புவியியலை புவி பற்றிய அறிவியல் என்ற வகையிலேயே நோக்குகிறது. இது பூமியின் தளக்கோலம் (layout), கற்கோளம் (lithosphere), நீர்க்கோளம் (hydrosphere), வளிமண்டலம், மேலோட்டுக் கோளம் (pedosphere), அதன் காலநிலை மற்றும் தாவர விலங்கினத் தொகுதிகள் பற்றிப் புரிந்து கொள்ள முயல்கிறது. இயற்கைப் புவியியலைப் பின்வரும் பெரும் பிரிவுகளாகப் பிரிக்கலாம். நிலவியல் (Geology) நில உருவாக்கவியல் (Geomorphology) நீர்வள இயல் (Hydrology) பனியாற்றியல் (Glaciology) உயிரினப் புவியியல் (Biogeography) காலநிலையியல் மண்ணியல் (Pedology) புவி உருவவியல் (Geodesy) தொல்புவியியல் (Palaeogeography) சூழற் புவியியலும் மேலாண்மையும் நிலத்தோற்ற வாழ்சூழலியல் (Landscape ecology) மானிடப் புவியியல் மானிடப் புவியியல் என்பது புவியியலிலிருந்து கிளைத்த ஒரு துறையாகும். இது மனிதனுக்கும், பல்வேறுவகையான சூழல்களுக்கும் இடையிலான தொடர்புகளை உருவாக்குகின்ற வடிவுருக்களையும் (patterns), வழிமுறைகளையும் பற்றி ஆராய்வதை இலக்காகக் கொண்டுள்ளது. இதன் ஆய்வுப் பரப்பு, மனிதன், அரசியல், பண்பாடு, சமூகம் மற்றும் பொருளாதார அம்சங்களை உள்ளடக்கியுள்ளது. மானிடப் புவியியலின் முக்கிய இலக்கு புவியின் இயல் நிலத்தோற்றமாக (physical landscape) இல்லாதிருப்பினும், மனிதச் செயற்பாடுகள் யாவும் இயல் நிலத்தோற்றப் பின்னணியிலேயே நடைபெறுவதால், இதன் தொடர்பின்றி மானிடப் புவியியலை ஆராய முடியாது. சூழற் புவியியல் இவ்விரு துறைகளுக்கும் இடையிலான இணைப்புப் பாலமாக உருவாகி வருகிறது. மானிடப் புவியியல் பின்வரும் பிரிவுகளாகப் பிரிக்கப்படலாம். பொருளாதாரப் புவியியல் (Economic geography) வளர்ச்சிப் புவியியல் (Development geography) மக்கள் தொகைப் புவியியல் அல்லது மக்கட் பரம்பல் (Population geography or Demography) நகரப் புவியியல் (Urban geography) சமூகப் புவியியல் (Social geography) நடத்தைப் புவியியல் (Behavioral geography) பண்பாட்டுப் புவியியல் (Cultural geography) அரசியற் புவியியல் (Political geography) புவிசார் அரசியலும் (Geopolitics) அடங்கலாக. வரலாற்றுப் புவியியல் (Historical geography) பிரதேசப் புவியியல் (Regional geography) சுற்றுலாப் புவியியல் (Tourism geography) உத்திசார் புவியியல் (Strategic geography) பாதுகாப்புப் புவியியல் (Military geography) பெண்ணியப் புவியியல் (Feminist geography) மானிடப் புவியியலின் துணைப்பிரிவுகள் பலவற்றுக்கும் இடையிலான வேறுபாடுகள் பொதுவாகத் தெளிவற்ற நிலையிலேயே இருப்பதால் மேலே தரப்பட்டுள்ள பட்டியல் ஒரு முடிவான பட்டியல் அல்ல என்பதைக் கருத்தில் கொள்ளவும். சூழற் புவியியல் சூழற் புவியியல், புவியியலின் ஒரு கிளைத் துறை. இது மனிதருக்கும், இயற்கை உலகுக்கும் இடையிலான தொடர்புகளின் இடம் சார்ந்த அம்சங்களையும், சூழலை எவ்வாறு மனிதர் கருத்துருவாக்கம் செய்கிறார்கள் என்பதையும் விளக்குகிறது. மானிடப் புவியியலும், இயற்கைப் புவியியலும் கூடிய அளவில் சிறப்பாக்கம் பெற்று வருவதன் விளைவாக, இவ்விரண்டுக்கும் இடையிலான ஒரு இணைப்புப் பாலமாக, சூழற் புவியியல் உருவாகியுள்ளது. மேலும், சூழலுடனான மனிதரின் தொடர்புகள், உலகமயமாதல், தொழில்நுட்ப மாற்றங்கள் போன்றவற்றால் மாற்றம்பெற்று வருவதனால், இந்த மாறுகின்றதும் இயங்குதன்மை கொண்டதுமான தொடர்புகளை விளங்கிக் கொள்வதற்கு புதிய அணுகுமுறையும் தேவைப்பட்டது. பேரழிவு மேலாண்மை (disaster management), சூழல் மேலாண்மை, தாங்குதிறன் (sustainability), அரசியல் சூழலியல் (political ecology) என்பன சூழற் புவியியலின் கீழ் அடங்கும் ஆய்வுப் பரப்புகள் ஆகும். புவித்தகவற்கணியவியல் thumb|right|இலக்கமுறை ஏற்ற மாதிரி (Digital Elevation Model – DEM) புவித்தகவற்கணியவியல் (Geomatics) என்பதும் புவியியலின் ஒரு கிளைத்துறை. 1950களின் நடுப்பகுதியில், புவியியலில் கணியப் புரட்சி ஏற்பட்டதிலிருந்து, இத்துறை உருவானது. நிலப்படவரைவியல், நிலவுருவவியல் ஆகிய துறைகளில் பொதுவாகப் புழங்கும் நுட்பங்களையும், அவற்றைக் கணினியில் பயன்படுத்தும் முறைகளையுமே புவித்தகவற்கணியவியல் பயன்படுத்துகின்றது. புவியியல் தகவல் முறைமை, தொலையுணர்தல் போன்ற நுட்பங்களைப் பிற துறைகளும் பயன்படுத்துவதனால் புவித்தகவற்கணியவியல் இன்று ஒரு பரந்துபட்ட துறையாக மாறியுள்ளது. இத்துறை, நிலப்படவரைவியல், புவியியல் தகவல் முறைமை, தொலையுணர்தல், விண்கோள் நில அளவை முறைமை (Global positioning systems) போன்ற இடஞ்சார் பகுப்பாய்வுகளுடன் கூடிய பலவகை அம்சங்களை உள்ளடக்கியுள்ளது. மண்டலப் புவியியல் பிரதேசப் புவியியல் (Regional geography), புவியியலின் ஒரு கிளைத்துறை. இது புவியில் உள்ள எல்லா அலவிலான மண்டலங்களையும் பற்றி ஆய்வு செய்கிறது. இது விளக்கும் இயல்பு கொண்ட ஒரு துறை. இதன் முக்கிய குறிக்கோள், ஒரு மண்டலத்தின், இயற்கை மற்றும் மனிதக் கூறுகள் உட்பட்ட, இயல்புகளை அல்லது சிறப்புத்தன்மையைப் புரிந்துகொள்வது அல்லது வரையறுப்பது ஆகும். பகுதிகளை மண்டலங்களாகப் பிரித்து எல்லை வகுப்பதற்கான முறையான நுட்பங்களைத்தன்னுள் அடக்கும் மண்டலமயமாதல் (regionalization) குறித்தும் இது கவனம் செலுத்துகின்றது. மண்டலப் புவியியல், புவி அறிவியல் ஆய்வுகளில் ஒரு அணுகுமுறையாகவும் கருதப்படுகின்றது. தொடர்புள்ள துறைகள் நகரத் திட்டமிடல், மண்டலத் திட்டமிடல், இடஞ்சார் திட்டமிடல் ஆகிய துறைகள், புவியியல் அறிவைப் பயன்படுத்துகின்றன. பாதுகாப்பு, அழகு, பொருளியல் வாய்ப்புக்கள், கட்டிட அல்லது இயற்கைப் பாரம்பரியங்களைக் காத்தல் போன்றவை தொடர்பிலான நோக்கங்களை அடைவதற்காக ஒரு குறிப்பிட்ட பகுதியை எவ்வாறு திருத்தியமைக்கலாம் அல்லது திருத்தாமல் விடலாம் போன்ற விடயங்களைப் புவியியல் அறிவு கொண்டு முடிவு செய்யலாம். நகரங்கள், பெருநகரங்கள், நாட்டுப்புறப் பகுதிகள் ஆகியவற்றைத் திட்டமிடுவதைப் பயன்பாட்டுப் புவியியலாகப் பார்க்க முடியும். மண்டல அறிவியல்: 1950ல் வால்ட்டர் இசார்ட் என்பவரால் வழிநடத்தப்பட்ட மண்டல அறிவியல் இயக்கம், புவியியல் பிரச்சினைகளுக்குக் கணிய மற்றும் பகுப்பாய்வு அடிப்படைகளை வழங்குவதற்காக உருவானது. இது மரபுவழியான புவியியல் திட்டங்களின் விளக்கும் போக்கிலிருந்து மாறுபடுகின்றது. மண்டல அறிவியலானது, இடஞ்சார் நோக்கை முக்கியமாகக் கொண்ட, மண்டலப் பொருளியல், வள மேலாண்மை, அமைவிடக் கோட்பாடு, நகர மற்றும் மண்டலத் திட்டமிடல், தகவல் தொடர்பு, மானிடப் புவியியல், மக்கள்தொகைப் பரம்பல், நிலத்தோற்றச் சூழலியல், சூழல் தரம் அறிவுத் தொகுதிகளை உள்ளடக்கியது. கோள் அறிவியல்கள் புவியியல் பொதுவாகப் புவி தொடர்பானதே ஆனாலும், சூரியக் குடும்பத்தில் உள்ள கோள்களைப் போன்ற பிற கோள்களை ஆய்வு செய்வதற்கும் இதனைப் பயன்படுத்த முடியும். புவியைக் காட்டிலும் பெரிய தொகுதிகள் பற்றிய ஆய்வு பொதுவாக வானியல், அண்டவியல் ஆகிய துறைகளுக்கு உட்பட்டது. பிற கோள்களை ஆயும் துறை கோளியல் (planetology) எனப்படும். புவியியலின் வரலாறு மிலேட்டஸ் என்னுமிடத்தைச் சேர்ந்த அனக்சிமாண்டர் (கிமு 610 - கிமு 545) என்பவரே புவியியல் துறையை நிறுவியவர் என பிற்காலக் கிரேக்க அறிஞர்கள் குறிப்பிட்டுள்ளனர். இவருடைய எண்ணங்கள் பற்றிப் பிற நூல்களில் குறிப்பிட்டிருப்பது தவிர இவரது ஆக்கங்கள் எதுவும் கிடைக்கவில்லை. தொடக்ககாலத்தில் நிலநேர்க்கோட்டை அளப்பதற்குக் கிரேக்கர்கள் பயன்படுத்திய, எளிமையான ஆனால் செயற்றிறன் கொண்ட கருவியைக் கண்டுபிடித்தவரும், கிரகணங்களை எதிர்வு கூறுவதற்கான வழிமுறையை வகுத்தவரும் இவரே என்று கருதப்படுகிறது. புவியியலுக்கான அடிப்படைகளைப் பல பண்டைக்காலப் பண்பாடுகளில் காண முடியும். பண்டைய, இடைக்கால, தற்காலத் தொடக்கம் ஆகிய காலப்பகுதிகளுக்குரிய சீனப் பண்பாட்டில் இதற்கான சான்றுகள் உள்ளன. புவியியலை ஒரு அறிவியலாகவும், தத்துவமாகவும் கருதி முதன்முதலில் ஆராய்ந்தவர்கள் கிரேக்கர் ஆவர். இவர்கள் இதனை, நிலப்படவரைவியல், மெய்யியல், இலக்கியம், கணிதம் போன்ற துறைகளூடாகச் செய்தனர். புவி கோள வடிவானது என்பதைக் கண்டு பிடித்தது யார் என்பதில் கருத்து வேறுபாடு உள்ளது. இது, பாராமெனிட்ஸ் (Parmenides) அல்லது ஆக்கிமிடீசாக இருக்கலாம் என்கின்றனர். அனக்சாகோரஸ் என்பவர் கிரகணங்களைச் சான்றாகக் கொண்டு புவி வட்டமான விளிம்புத் தோற்றம் கொண்டது என விளக்கினார். எனினும் அவர், அவர் காலத்தின் பல அறிஞர்களைப் போலவே புவி ஒரு வட்டமான தட்டுப் போன்றது என நம்பினார். புதிய நாடுகளைத் தேடிப்போன ரோமர்கள் புவியியல் ஆய்வில் புதிய நுட்பங்களைப் புகுத்தினார்கள். மத்திய காலங்களில், இத்ரிசி, இபின் பட்டுடா, இபின் கால்டுன் போன்ற அராபியர்களும் கிரேக்க மற்றும் ரோமன் நுட்பங்களைப் பயன்படுத்தியதோடு அவற்றை மேலும் விருத்தி செய்தனர். மார்க்கோ போலோவின் பயணங்களைத் தொடர்ந்து புவியியல் பற்றிய ஆர்வம் ஐரோப்பா எங்கும் பரவியது. 16 ஆம் மற்றும் 17 ஆம் நூற்றாண்டுகளின் புகழ் பெற்ற நாடுகாண் கடற் பயணங்கள் அச்சொட்டான புவியியல் விபரங்களையும், புவியியல் சார்பான கோட்பாட்டு அடிப்படைகளையும் பெற்றுக்கொள்வதில் புதிய ஆர்வத்தை உருவாக்கின. இக்காலப்பகுதி பெரிய புவியியற் கண்டுபிடிப்புக்களுக்கான காலப்பகுதியாகவும் அறியப்படுகின்றது. 18 ஆம் நூற்றாண்டில் புவியியல் ஒரு தனித் துறையாக அங்கீகாரம் பெற்றிருந்ததுடன், ஐரோப்பாவின் பல்கலைக் கழகங்களின் பாடத்திட்டங்களிலும் இடம் பெற்றிருந்தது. கடந்த இரண்டு நூற்றாண்டுகளில் புவியியல் அறிவின் அளவு பலமடங்காக விரிவடைந்துள்ளது. புவியியலுக்கும், நிலவியல், தாவரவியல் ஆகிய அறிவியல் துறைகளுடனும், பொருளியல், சமூகவியல், மக்கட்தொகைப் பரம்பல் ஆகியவற்றுடனும் பிணைப்புகள் உருவாகி வலுப்பெற்றுள்ளன. மேற்கு நாடுகளில் 20 ஆம் நூற்றாண்டில், புவியியல் துறை நான்கு கட்டங்களைக் கடந்து வந்துள்ளது. இவை சூழல் அறுதிப்பாட்டியம் (environmental determinism), பிரதேசப் புவியியல் (regional geography), கணியப் புரட்சி (quantitative revolution), மற்றும் critical geography என்பனவாகும். புவியியல் நுட்பங்கள் இடஞ்சார் ஊடு தொடர்புகள் புவியியலுக்கு முக்கியமான அம்சங்களாக இருப்பதால், நிலப்படங்கள் (maps) இத்துறைக்கு இன்றியமையாத கருவிகளாக அமைந்துள்ளன. இத்துறையில் நீண்ட காலமாக வழக்கிலிருந்துவரும் நிலப்பட வரைவியலுடன், நவீன புவியியல் பகுப்பாய்வுக்கு உதவியாகக் கணினி சார்ந்த புவியியற் தகவல் முறைமையும் (geographic information systems (GIS)) இணைந்து கொண்டுள்ளது. நிலப்பட வரைவியல்: thumb|right|புவியியற் தகவல் முறைமைகள் (GIS) மென்பொருள். புவியியற் தகவல் முறைமைகள் என்பது தேவையின் நோக்கத்துக்கு உகந்த வகையில், அச்சொட்டான (accurate) முறையில், கணினிமூலம் தன்னியக்கமாகப் பெற்றுக்கொள்ளும் வகையில் புவி பற்றிய தகவல்களைச் சேமிப்பது தொடர்பானது. புவியியலின் எல்லாத் துணைத் துறைகளையும் அறிந்திருப்பதோடு, கணினி அறிவியல் மற்றும் தரவுத்தள முறைமைகள் பற்றியும் ஒரு புவியியற் தகவல் முறைமைகள் நிபுணர் அறிந்திருக்க வேண்டும். புவியியற் தகவல் முறைமைகள் நிலப்பட வரைவியல் துறையில் புரட்சிகரமான மாற்றங்களை உண்டாக்கியுள்ளன. இன்று ஏறத்தாள எல்லா நிலப்பட ஆக்க முயற்சிகளுமே ஏதாவதொரு புவியியற் தகவல் முறைமைகள் மென்பொருள் மூலமே செய்யப்படுகின்றன. புவியியல் கல்வி தமிழக மாணவர்களுக்கான புதிய முறை தமிழகத்தில் புவியியல், வரைபடம், நேரம் கணக்கீடு தொடர்பான பாடங்களை புதிய முறையில் 35 லட்சம் மாணவர்களுக்குக் கற்பிக்க மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் திட்டமிட்டது. இந்த புதுமுறைக் கல்விமுறைதினமணி செய்தி பத்திரிகை; ஜனவரி 8, 2014; 35 லட்சம் மாணவர்களுக்கு புதிய முறையில் கற்பிக்க முடிவு மூலம் கற்ற மாணவர்கள் தாங்களாகவே தங்கள் அமைவிடத்திற்கும் வெளிநாடுகளுக்கும் உள்ள நேர வித்தியாசத்தைக் கணக்கிட முடியும். இவற்றையும் பார்க்கவும் உலக நாடுகளின் பட்டியல் மேற்கோள்கள் பகுப்பு:புவி அறிவியல்கள்
உலக நாடுகள் பட்டியல் (அகர வரிசையில்)
https://ta.wikipedia.org/wiki/உலக_நாடுகள்_பட்டியல்_(அகர_வரிசையில்)
இது உலக நாடுகளின் ஒரு அகரமுதற் பட்டியலாகும். நீங்கள் நாடுகளை தலைநகரம்வாரியாகவோ, கண்டங்கள் வாரியாகவோ, மக்கள்தொகை வாரியாகவோ, பரப்பளவு வாரியாகவோ, மக்கள்தொகை அடர்த்தி வாரியாகவோ, நேர வலயம் வாரியாகவோ கூட உலவலாம். விக்கித் திட்டம் நாடுகள் திட்டமானது தமிழ் விக்கியில் காணப்படும் மற்றும் இனி வரவிருக்கும் நாடுகள் பற்றிய கட்டுரைகள் ஒரு சீர்தரத்துக்குள் கொண்டுவரும் நோக்கில் அமைந்தது. மேலதிக மூலங்களுக்கு புவியியல் குறிப்புகளைப் பார்க்கவும். {| id="toc" border="0" ! : அ ஆ இ ஈ உ ஊ எ ஏ ஐ ஒ ஓ க ச ட த ந ப ம ய ர ல வ ஹ ஸ ஜ__NOTOC__ |} <table border=1 cellpadding=1 cellspacing=0 style="float: right; border-collapse: collapse;"> நாடுவாரியான பட்டியல் அ (ஐக்கிய அமெரிக்க நாடுகள்) ஆ இ ஈ உ ஊ எ ஏ ஐ ஒ ஒல்லாந்து நெதர்லாந்து பார்க்கவும். ஓ க (முன்னர் ஸயர்) 2 ச 1 (தாய்வான்) ட ட்ரினிடாட்டும் டொபாகோவும் டொங்கா டொமினிக்கா டொமினிகன் குடியரசு டோகோ த தாய்வான் (பார் சீனக் குடியரசு1) தான்ஸானியா தாஜிக்ஸ்தான் திமோர் லெஸ்தே (பார் கிழக்குத் திமோர்) துருக்மெனிஸ்தான் துவாலு துனீசியா தென் கொரியா தென்னாபிரிக்கா ந 2 ப பர்மா (இப்பொழுது மியன்மார்) (பார் மேற்குக் கரை) 3 ம 6 மேற்கு சமோவா(இப்பொழுது சமோவா) 5 ய யேமன் யப்பான் ர ரஷ்யா ருமேனியா ருவாண்டா ல லெய்செஸ்டீன்(Liechtenstein) வ 4 (Holy See) ஹ ஹங்கேரி ஹைத்தி ஹொண்டூராஸ் ஸ ஸ்பெயின் சிலவாக்கியா சிலவேனியா சாம்பியா ஸயர் (இப்பொழுது கொங்கோ ஜனநாயகக் குடியரசு) ஸிம்பாப்வே ஜ ஜமேக்கா ஜிபூட்டி ஜெர்மனி ஜோர்தான் ஜோர்ஜியா குறிப்புகள் இங்கு பட்டியலிடப்பட்டுள்ள நாடுகளின் நிலைமை / இறைமை பற்றிய விபரங்கள். 1 சீனக் குடியரசு(தாய்வான்): Political status of Taiwan பார்க்கவும். 2 குக் தீவுகளும் நியூவும்: நியூசிலாந்துடனான ஒரு free கூட்டு (association); Niue Constitution Act 1974 (NZ) ஐயும் பார்க்கவும். 3 பலஸ்தீனம்: "பலத்தீன் நாடு" 1988 ஆம் ஆண்டு பிரகடனப்படுத்தப்பட்டுப் பல அரபு மற்றும் முஸ்லிம் நாடுகளால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. proposals for a Palestinian state ஐயும் Palestinian territories ஐயும் பார்க்கவும். காஸா Strip, மேற்குக் கரை, இஸ்ரேல் என்பவற்றுக்குப்பலஸ்தீனப் பிரதேசம் தொடர்பில் கட்டுரைகள் உள்ளன. 4 வத்திக்கான்: Holy See பார்க்கவும். 5 மேற்கு சஹாரா: Politics of Western Sahara பார்க்கவும். 6 மசிடோனியக் குடியரசு: "முன்னாள் யூகோஸ்லாவியாவின் மசிடோனியக் குடியரசாக" அனைத்துலக அளவில் பரிச்சயமானது. **http://www.un.org/documents/ga/res/47/a47r225.htm ஐப் பார்க்கவும். தொடர்புள்ள தலைப்புகள் ஐ.எசு.ஓ 3166-1 இறைமையுள்ள நாடு உலக நாடுகள் பட்டியல் (கண்டங்கள் வாரியாக) பன்னாட்டுத் தலைநகரங்களின் பட்டியல் உலக நாடுகளின் மரபுச் சின்னங்கள் ஏற்கப்படாத நாடுகள் சார்பு மண்டலம் பகுப்பு:நாடுகள் தொடர்பான பட்டியல்கள் nds:Land#Länner sv:Världsgeografi#Lista över länder
கிறித்தோபர் கொலம்பசு
https://ta.wikipedia.org/wiki/கிறித்தோபர்_கொலம்பசு
"கிறித்தோபர் கொலம்பசு (Christopher Columbus) (1451–1506) இ(...TRUNCATED)
இலங்கையின் புவியியல்
https://ta.wikipedia.org/wiki/இலங்கையின்_புவியியல்
"thumb|300px|right|இலங்கையின் புவியியல் அமைப்பு (...TRUNCATED)
இந்தியத் துணைக்கண்டம்
https://ta.wikipedia.org/wiki/இந்தியத்_துணைக்கண்டம்
"thumb|right|250px|இந்தியத் துணைக்கண்டம்\n\nஇந்தி(...TRUNCATED)
README.md exists but content is empty. Use the Edit dataset card button to edit it.
Downloads last month
4
Edit dataset card