title
stringlengths
1
93
url
stringlengths
31
123
text
stringlengths
0
361k
மீசு வெள்ளைக் கண்ணி
https://ta.wikipedia.org/wiki/மீசு_வெள்ளைக்_கண்ணி
மீசி வெள்ளைக் கண்ணி (கெலெயா சாவானிகா) என்றும் அழைக்கப்படும் சாவகம் சாம்பல் தொண்டை வெள்ளைக் கண்ணி அல்லது சாம்பல் தொண்டை ஐபோன் என்பது பறவைச் சிற்றினம் ஆகும். இப்பறவை சூசுடெரோபிடே குடும்பத்தினைச் சார்ந்தது. இது சாவகம் மற்றும் பாலி தீவுகளில் மட்டுமே வாழும் அகணிய உயிரி. மேற்கோள்கள் பகுப்பு:அகணிய உயிரிகள்
மூடிகெரே
https://ta.wikipedia.org/wiki/மூடிகெரே
மூடிகெரே (Mudigere) என்பது இந்திய மாநிலமான கர்நாடகா சிக்மகளூரு மாவட்டத்தில் உள்ள ஒரு பேரூராட்சி மற்றும் வட்டம் ஆகும். இது மாவட்டத் தலைமையகத்திலிருந்து 30 கி. மீ தொலைவில் உள்ளது.  அருகிலுள்ள விமான நிலையம் மங்களூரில் உள்ளது, இது 128 கிமீ (80 மைல்) தொலைவில் உள்ளது. மூடிகெரே காபி மற்றும் கருப்பு மிளகு உற்பத்திக்கு பெயர் பெற்றது. மூடிகெரே நகரம் 13°09′17′′N 75°39′01′′E/13.15459 °N 75.65033 °E இல் அமைந்துள்ளது. இது கடலின் மட்டத்திலிருந்து. மேலே சராசரியாக 990 மீ (3,250 அடி) உயரத்தில் உள்ளது. இதனால், மூடிகெரே, சோம்வர்பேட்டை மற்றும் சிக்மகளூருக்கு அடுத்தபடியாக கர்நாடகாவின் 4-ஆவது மிக உயரமான நிர்வாக நகரமாக இது திகழ்கிறது. இந்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி, மூடிகெரே 8,962 மக்கள் தொகையைக் கொண்டிருந்தது. இந்த மக்கள் தொகையில் 51% ஆண்களும் 49% பெண்களும் உள்ளனர். மூடிகெரேயின் சராசரி எழுத்தறிவு விகிதம் 82% ஆகும். கிராமங்கள் முடிகேர் வட்டத்தில் இருபத்தி ஒன்பது பஞ்சாயத்து கிராமங்கள் உள்ளன: சுற்றுலா தலங்கள் மேகனகட்டே அருகே உள்ள பெட்டடா பைரவேஸ்வரா மற்றும் பைரபுராவுக்கு அருகிலுள்ள நன்யாத பைரவேஸ்வாரா (ஹோசகேரே), இது முடிகேருக்கு தெற்கே 25 கி. மீ தொலைவில் அமைந்துள்ளது, குட்டிக்கு அருகிலுள்ள தேவரமனே ஆகியவை முடிகேயில் உள்ள பிரபலமான சுற்றுலாத் தலங்களாகும்.  சுங்கசாலே கிராமத்திற்கு அருகிலுள்ள பல்லலராயணா துர்கா அல்லது துர்கடா பெட்டா மற்றொரு மலையேற்றம் மற்றும் சுற்றுலாத் தலமாகும்.   கோட்டிகேஹராவிலிருந்து கலாசா வரை பயணம் செய்வது முடிகேரே வட்டத்தின் காபி தோட்டங்கள் மற்றும் பசுமையான மலைகளின் மயக்கும் அனுபவத்தை அளிக்கிறது. சங்கரா அருவி முடிகேரே அருகே அமைந்துள்ளது. கல்வி முடிகேர் தோட்டக்கலை கல்லூரி உட்பட பல தனியார் மற்றும் அரசு பள்ளிகள் மற்றும் கல்லூரிகளைக் கொண்டுள்ளது. குறிப்பிடத்தக்க நபர்கள் பூர்ணாச்சந்திர தேஜஸ்வி மேலும் காண்க மங்களூர் சார்மாடி குத்ரேமுக் தர்மஸ்தலா மேற்கோள்கள் பகுப்பு:கர்நாடக சுற்றுலாத் தலங்கள் பகுப்பு:Coordinates on Wikidata
குஷ்பூ
https://ta.wikipedia.org/wiki/குஷ்பூ
வழிமாற்று குஷ்பு சுந்தர்
பிராங்க் கேப்ரியோ
https://ta.wikipedia.org/wiki/பிராங்க்_கேப்ரியோ
பிரான்செசுகோ கேப்ரியோ (Francesco Caprio, பிறப்பு நவம்பர் 24, 1936) என்பவர் ஒரு அமெரிக்க நீதிபதியும், அரசியல்வாதியும் ஆவார், இவர் ரோடு தீவு, பிராவிடென்சு நகராட்சிக்குரிய நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகவும், உயர் கல்விக்கான ரோடு தீவு ஆளுநர் குழுவின் தலைவராகவும் பணியாற்றினார். காட் இன் பிராவிடன்சு என்ற நிகழ்ச்சியில் இவரது நீதித்துறைப் பணி தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டது. பார்க்கிங் வார்சு என்ற அமெரிக்க போக்குவரத்து விதிமீறல் தொடர்பான உண்மைநிலை நிகழ்ச்சி தொடரிலும் தோன்றினார். 2017 ஆம் ஆண்டில், இவரது நீதிமன்ற தீர்ப்பு காணொளிகள் சமூக வலைதளங்களில் பிரபலமடைந்தன, இதில் 15 மில்லியனுக்கு மேலான பார்வைகளை பெற்றார். 2022 ஆம் ஆண்டில், காட் இன் பிராவிடன்சு நிகழ்ச்சியின் பார்வைகள் 500 மில்லியனை நெருங்கியது. தொடக்க வாழ்க்கை மற்றும் கல்வி ரோடு தீவில் உள்ள பெடரல் கில் பகுதியில் அன்டோனியோ காப்ரியோவுக்கு பிறந்த மூன்று மகன்களில் இரண்டாவது மகனாக பிறந்தார். இவரது தந்தை அன்டோனியோ காப்ரியோ இத்தாலியிலிருந்து அமெரிக்காவுக்கு குடியேறியவர், பால் பழ வியாபாரம் செய்து வந்தார். இவர் பிராவிடன்சு பொதுப் பள்ளிகளில் தொடக்கக்கல்வியை கற்றார், கல்வி கற்கும் போது பாத்திரம் கழுவுவது, காலணிகளை சுத்தப்படுத்துவது ஆகிய பணிகளை ஒரு பகுதியாக செய்தார். ரோடு தீவிலுள்ள பிராவிடன்சு மத்திய உயர்நிலைப் பள்ளியில் பட்டம் பெற்றார், உயர்நிலைப் பள்ளியில் 1953 ஆம் ஆண்டு மல்யுத்தத்தில் மாநில பட்டத்தை வென்றார். பிராவிடன்சு கல்லூரியில் இளங்கலைப் பட்டம் பெற்றார். பட்டம் பெற்ற பிறகு, பிராவிடன்சில் உள்ள ஒப் உயர்நிலைப் பள்ளியில் கல்வியை கற்பிக்கும் ஆசிரியராக தனது தொழில் வாழ்க்கையை தொடங்கினார். ஒப் உயர்நிலைப் பள்ளியில் கல்வி கற்பிக்கும் போது, பாசுடனிலுள்ள சப்போல்க் சட்டப் பல்கலைக்கழகத்தில் இரவுப் பள்ளியில் சட்டக் கல்விப் பயின்றார். இது இவரை சட்டத்துறையில் பணி செய்ய வழி வகுத்தது. 1954 முதல் 1962 வரை 876 வது போர் பொறியாளர் படையணியில் தேசிய காவலில் பணியாற்றினார். அக்காலத்தில், நரகன்செட்டில் உள்ள கேம்ப் வர்னும், பென்சில்வேனியாவில் உள்ள போர்ட் இண்டியன்டவுன் கேப் ஆகிய இடங்களில் இருந்தார். "A Family of Veterans, Hurricane High Gravity, and Help Yourself" . Bolinger, James. தொழில் 1962 முதல் 1968 வரை பிராவிடன்சு நகர மன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டு பணியாற்றினார். 1970 இல் ரோட் தீவு சட்டத்துறை தலைவர் பதவிக்கு போட்டியிட்டார், குடியரசுக் கட்சியின் இரிச்சர்ட் ஜே. இசுரேலிடம் தேர்தலில் தோல்வியடைந்தார். 1975 இல் ரோட் தீவு அரசியலமைப்பு மாநாட்டின் பிரதிநிதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார், ஐந்து சனநாயக தேசிய மாநாடுகளுக்கு பிரதிநிதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். ரோட் தீவு பல்கலைக்கழகம், ரோட் தீவு கல்லூரி, ரோட் தீவு சமூகக் கல்லூரி ஆகியவற்றிற்கான முக்கிய முடிவுகளைக் மேற்கொள்ளும் உயர் கல்விக்கான ரோட் தீவு ஆளுநர் வாரியத்திற்கு தலைமை தாங்கினார். 1985 முதல், பிராவிடன்சு நகராட்சிக்குரிய நீதிமன்றத்தின் நீதிபதியாக பணியாற்றினார். இவர் ரோட் தீவு, நாரகன்செட்டில் உள்ள கடலோர காவல்படை உணவகத்தில் பங்குதாரராகவும் உள்ளார். கேப்ரியோ சனவரி 2023 இல் ஓய்வு பெற்றார். தனிப்பட்ட வாழ்க்கை கேப்ரியோ சாய்சு இ. கேப்ரியோவை மணந்து 50 ஆண்டுகளுக்கும் மேலாகிறது. "Judge Frank Caprio Wants Justice for All". இவர்களுக்கு ஐந்து குழந்தைகள் உள்ளனர்: பிராங்க் டி. கேப்ரியோ, டேவிட் கேப்ரியோ, மரிசா கேப்ரியோ பெசுசே, சான் கேப்ரியோ மற்றும் பால் கேப்ரியோ. பிராங்க் கேப்ரியோ பாசுடன் ரெட் சாக்சு என்ற பாசுடனில் உள்ள அமெரிக்க தொழில்முறை அடிபந்தாட்ட அணியின் ரசிகர். அண்மையில் தனது 87வது பிறந்தநாளைக் கொண்டாடிய பிறகு, திசம்பர் 6, 2023 அன்று, முகநூல் மற்றும் யூடியூப்பில் வெளியிட்ட காணொளியில், தனக்கு கணையப் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டதாக அறிவித்தார். இவருக்கு ஆதரவளிக்க விரும்புபவர்கள், இவரை தங்களின் பிரார்த்தனைகளில் வைக்குமாறு கேட்டுக்கொண்டார், இவரை நன்றாக கவனித்துக்கொண்ட மருத்துவர்களைப் பாராட்டினார். மேற்கோள்கள் பகுப்பு:1936 பிறப்புகள் பகுப்பு:வாழும் நபர்கள் பகுப்பு:இத்தாலிய அமெரிக்கர்கள் பகுப்பு:அமெரிக்க நீதிபதிகள்
ஆரோக்கியசாமி வேலுமணி
https://ta.wikipedia.org/wiki/ஆரோக்கியசாமி_வேலுமணி
ஆரோக்கியசாமி வேலுமணி (Arokiaswamy Velumani, பிறப்பு ஏப்ரல் 1959) என்பவர் ஒரு இந்திய தொழில்முனைவோர் ஆவார். நவி மும்பையை தலைமையிடமாகக் கொண்ட நோயறிதல் மற்றும் தடுப்பு பரிசோதனைக்கூடங்களின் சங்கிலித் தொடரான தைரோகேர் டெக்னாலஜிஸ் லிமிடெட் நிறுவனத்தின் நிறுவனர் ஆவார். மேலும் இவர் நியூக்ளியர் ஹெல்த்கேர் லிமிடெட்டின் நிறுவனரும் ஆவார். இது தைரோகேருடன் இணைந்து கதிரியக்கமுறையில் நோய் கண்டறியும் நிறுவனமாகும். துவக்ககால வாழ்க்கை வேலுமணி 1959 ஏப்ரலில் இந்தியாவின், தமிழ்நாட்டின், கோயம்புத்தூர் மாவட்டம், கோயம்புத்தூருக்கு அருகே உள்ள அப்பநாயக்கன்பட்டி புதூர் என்ற சிற்றூரில் நிலமற்ற விவசாயிக்கு பிறந்தார். இவரது தந்தை ஒரு விவசாயி, தாயார் ஒரு இல்லத்தரசி, அவர் எருமைகளை வளர்த்து, அதன் பாலை விற்று குடும்பத்தை நடத்திவந்தார். வேலுமணி அப்பநாயக்கன்பட்டி புதூரில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா உயர்நிலைப் பள்ளியில் படித்தார். பின்னர் இவர் 1978 இல் 19 வயதில் தன் இளம் அறிவியல் பட்டத்தை சென்னை பல்கலைக்கழகத்துடன் இணைவுபெற்ற இராமகிருஷ்ணா மிஷன் வித்யாலயாவில் பெற்றார். இவருக்கு மகாராஷ்டிர மாநிலம் பம்பாய் பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் வேலை கிடைத்தது. அங்கு பணிபுரிந்து கொண்டே முதுகலைப் பட்டம் பெற்றார். பின்னர் 1995 ஆம் ஆண்டு மும்பை பல்கலைக்கழகத்தில் கேடயச் சுரப்பி உயிர்வேதியியலில் முனைவர் பட்டம் பெற்றார். தொழில் 1978 தன் இளநிலைப் பட்டப்படிப்பை முடித்த பிறகு, வேலுமணி 1979 ஆம் ஆண்டு தமிழ்நாட்டின் கோயம்புத்தூரில் ஜெமினி காப்ஸ்யூல்கள் என்ற சிறிய மருந்து நிறுவனத்தில் ஷிப்ட் வேதியியலாளராக வேலை செய்யத் தொடங்கினார். மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, அந்த நிறுவனம் மூடப்பட்டது. பின்னர் இவர் பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் முதலில் ஆய்வக உதவியாளராக, 14 ஆண்டுகள் பணிபுரிந்தார். இந்த நேரத்தில் இவர் முதுகலை மற்றும் முனைவர் பட்டம் பெற்று அறிவியலாளர் பதவிக்கு உயர்ந்தார். பின்னர் இவர் மகாராட்டிரத்தின், பம்பாயில் உள்ள டாடா நினைவு மருத்துவமனையில் பி. ஏ. ஆர். சி. கதிர்வீச்சு மருத்துவ மையத்தில் பணியமர்த்தப்பட்டார். அந்தக் காலகட்டத்தில் தைராய்டு பரிசோதனைக்கான மருத்துவ உபகரணங்கள் வெளிநாடுகளில் இருந்தே இறக்குமதி செய்யப்பட்டு வந்தன. வேலுமணி தன் பணிசார்ந்து ஒரு ஆய்வில் ஈடுபட்டு வந்தார். ஆய்வின் நோக்கம் தைராய்டு பரிசோதனைக்கான மருத்துவ உபகரணங்களை உள்நாட்டில் தயாரிப்பதற்கான சாத்தியத்தை ஆராய்வதாக இருந்தது. ஆய்வின் முடிவில் இந்தியாவில் மிகக்குறைந்த செலவில் தைராய்டு பரிசோதனையை செய்யமுடியும் என்பதைக் கண்டறிந்தார். அதில் உள்ள தொழில் வாய்ப்பை உணர்ந்ததும் வேலையை விட்டு வெளியே வந்த வேலுமணி 1996-ம் ஆண்டு சொந்தமாக தைரோகேர் என்ற தைராய்டு பரிசோதனை மையத்தை நிறுவினார். இவர் தனது பரிசோதனை மையத்தில் கிளைஞர் (franchisee) மாதிரியை அறிமுகப்படுத்தினார். இதன் மூலம் மலிவு விலையில் பரிசோதனை சேவைகளை வழங்கினார். தைரோகேர் தைராய்டு கோளாறுகளுக்கான பரிசோதனையிலிருந்து தடுப்பு மருத்துவ பரிசோதனைகள் மற்றும் பிற நோய்களைக் கண்டறியும் இரத்த பரிசோதனைகள் என விரிவடைந்தது. இவரது தலைமையின் கீழ் தைரோகேர் இந்தியா, நேபாளம், வங்கதேசம், மத்திய கிழக்கு நாடுகள் என 1000 க்கும் மேற்பட்ட கிளை நிலையங்களின் வலையமைப்பைக் கொண்ட மிகப்பெரிய தைராய்டு பரிசோதனை மையமாக மாறியது. 2016 ஏப்ரலில், தைரோகேர் அதன் முதல் பங்கு வெளியீட்டை (ஐபிஓ) வெளியிட்டு, 72.86 மடங்கு மிகு பங்களிப்பை அடைந்தது. வேலுமணி நியூக்ளியர் ஹெல்த்கேர் லிமிடெட் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குநராகவும் உள்ளார். இது மகாராட்டிரத்தின் நவி மும்பையில் அதன் முக்கிய கிளையைக் கொண்ட கதிரியக்க நோயறிதல் நிறுவனம் ஆகும். இந்த நிறுவனம் புற்றுநோய் தொடர்பான இமேஜிங் சேவைகளை மற்றவர்கள் செய்வதில் பாதி செலவில் வழங்கியது. டாக்டர் ஏ. வேலுமணி போகஸ் டிபி மற்றும் ஆரோக்யம், என்ற இரண்டு ஹெல்த்கேர் பிராண்டுகளையும் அறிமுகப்படுத்தினார். அவை மலிவு விலையில், தரமாக காசநோய் கண்டறிதலில் கவனம் செலுத்தின. இவர் பெருநிறுவன நிகழ்வுகளில் ஊக்கமூட்டும் ஒரு வணிக பேச்சாளராக உள்ளார். தனிப்பட்ட வாழ்க்கை இவர் பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் பணிபுரிந்தபோது தன் 27 வயதில் ஜே. கே. ராவ் மற்றும் சரளா ராவ் ஆகியோரின் மகளான சுமதியை மணந்தார். சுமதி பாரத ஸ்டேட் வங்கியில் வேலை செய்து கொண்டிருந்தார். தைரோகேரைத் தொடங்க இணையர் இருவரும் தங்கள் வேலைகளை விட்டு வெளியேறினர். இந்த இணையருக்கு ஒரு மகன் – ஆனந்த் (பிறப்பு 1989), ஒரு மகள் – அம்ருதா (பிறப்பு 1991) ஆகியோர் பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் வேலுமணி பணிபுரிந்த காலத்தில் பிறந்தவர்கள். சுமதி வேலுமணி 2015 அக்டோபரில் கணைய புற்றுநோயால் பாதிக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து 13 பிப்ரவரி 2016 அன்று தன் 55 வயதில் இறந்தார். வேலுமணி தன் மகன், மகளுடன் நவி மும்பையில் உள்ள தைரோகேரின் முக்கிய தலைமையகத்தில் அமைந்துள்ள நிறுவன குடியிருப்பில் தொடர்ந்து வசித்து வருகிறார். மேற்கோள்கள் பகுப்பு:இந்திய உயிர்வேதியியலாளர்கள் பகுப்பு:வாழும் நபர்கள் பகுப்பு:1959 பிறப்புகள் பகுப்பு:கோயம்புத்தூர் மாவட்ட நபர்கள்
மஞ்சள் வளைய வெள்ளைக் கண்ணி
https://ta.wikipedia.org/wiki/மஞ்சள்_வளைய_வெள்ளைக்_கண்ணி
மஞ்சள் வளைய வெள்ளை கண்ணி (கெலெயா வாலேசி) என்பது சூசுடெரோபிடே குடும்பத்தில் உள்ள ஒரு பறவை சிற்றினமாகும். இது சிறு சுண்டாத் தீவுகளில் காணப்படுகிறது. இதன் இயற்கை வாழிவிடம் என்பது மிதவெப்ப மண்டல அல்லது வெப்ப மண்டல ஈரமான தாழ் நிலக் காடுகள் ஆகும். மேற்கோள்கள் பகுப்பு:வெள்ளைக் கண்ணிகள்
மாலிப்டினம் மோனோபாசுபைடு
https://ta.wikipedia.org/wiki/மாலிப்டினம்_மோனோபாசுபைடு
மாலிப்டினம் மோனோபாசுபைடு (Molybdenum monophosphide) என்பது MoP என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். மாலிப்டினமும் பாசுபரசும் சேர்ந்து இந்த இருமச் சேர்மம் உருவாகிறது. தயாரிப்பு உருகிய மாலிப்டினம் அறுமெட்டாபாசுபேட்டை மின்னாற்பகுப்பு செய்து மாலிப்டினம் மோனோபாசுபைடு தயாரிக்கப்படுகிறது: 4Mo(PO3)6 -> 4MoP + 10P2O5 + 9O2 கார்பன் உருக்குக் கலனில் மாலிப்டினம் மற்றும் மெட்டாபாசுபாரிக்கு அமிலத்தின் கலவையை சேர்த்து சூடாக்குவதன் மூலமும் இதை தயாரிக்கலாம்: 2Mo + 2HPO3 + 5C -> 2MoP + 5CO + H2O இவற்றை தவிற பிற தயாரிப்பு முறைகளும் அறியப்படுகின்றன. பண்புகள் மாலிப்டினம் மோனோபாசுபைடு அறுகோண படிக அமைப்பின் கருப்பு படிகங்களை P6m2 என்ற இடக்குழுவுடன் உருவாகிறது. தண்ணீரில் இது கரையாது. காற்றில் சூடுபடுத்தப்பட்டால் சிதைவடையும். 4 MoP + 11O2 -> 4MoO3 + 2P2O5 பயன்கள் மாலிப்டினம் மோனோபாசுபைடு ஒரு வினையூக்கியாகப் பயன்படுத்தப்படுகிறது. மேற்கோள்கள் பகுப்பு:மாலிப்டினச் சேர்மங்கள் பகுப்பு:பாசுபரசு சேர்மங்கள் பகுப்பு:பாசுபைடுகள்
மாலிப்டினம் இருபாசுபைடு
https://ta.wikipedia.org/wiki/மாலிப்டினம்_இருபாசுபைடு
மாலிப்டினம் இருபாசுபைடு (Molybdenum monophosphide) என்பது MoP2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். மாலிப்டினமும் பாசுபரசும் சேர்ந்து இந்த இருமச் சேர்மம் உருவாகிறது. தயாரிப்பு மாலிப்டினம் தனிமத்துடன் சிவப்பு பாசுபரைச் சேர்த்து ஒரு மூடிய குழாயிலிட்டு 550பாகை செல்சியசு வெப்பநிலைக்கு சூடுபடுத்தினால் மாலிப்டினம் இருபாசுபைடு உருவாகும். Mo + 2P → MoP2 பண்புகள் மாலிப்டினம் இருபாசுபைடு செஞ்சாய்சதுரப் படிக அமைப்பில் கருப்பு நிறப் படிகங்களாக A21am என்ற இடக்குழுவுடன் உருவாகிறது. தண்ணீரில் இது கரையாது. காற்றில் சூடுபடுத்தப்பட்டால் சிதைவடையும். மாலிப்டினம் மோனோபாசுபைடையும் வெள்ளை பாசுபரசையும் கொடுக்கிறது. 4MoP2 → 4MoP + P4 பயன்கள் மாலிப்டினம் இருபாசுபைடு ஒரு வினையூக்கியாகப் பயன்படுத்தப்படுகிறது. மேற்கோள்கள் பகுப்பு:மாலிப்டினச் சேர்மங்கள் பகுப்பு:பாசுபரசு சேர்மங்கள் பகுப்பு:பாசுபைடுகள்
தடித்த அலகு கெலியா
https://ta.wikipedia.org/wiki/தடித்த_அலகு_கெலியா
தடித்த அலகு கெலியா (Thick-billed heleia) என்பது புளோரசு வெள்ளைக் கண்ணி என்றும் அழைக்கப்படுவது குருவிச் சிற்றினம் ஆகும். இது சூசுடெரோபிடே குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பறவை ஆகும். இது இந்தோனேசிய சும்பாவா மற்றும் புளோரசு தீவுகளில் காணப்படுகிறது. இதன் இயற்கையான வாழிடங்கள் மிதவெப்ப மண்டல அல்லது வெப்பமண்டல வறண்ட காடுகள், மிதவெப்ப அல்லது வெப்பமண்டலம் ஈரமான தாழ் நிலக் காடுகள் மற்றும் மிதவெப்ப மண்டல அல்லது வெப்பமண்டல ஈரமான மலைக் காடுகள் ஆகும். மேற்கோள்கள் பகுப்பு:வெள்ளைக் கண்ணிகள்
புள்ளி மார்பு கெலியா
https://ta.wikipedia.org/wiki/புள்ளி_மார்பு_கெலியா
புள்ளி மார்பு கெலியா (Spot-breasted heleia) என்பது சூசுடெரோபிடே குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பறவை சிற்றினமாகும். இது திமோர் தீவில் காணப்படுகிறது. இதன் இயற்கையான வாழிடங்கள் மிதவெப்ப மண்டல அல்லது வெப்ப மண்டல ஈரமான தாழ் நிலக் காடுகள் மற்றும் மிதவெப்ப அல்லது வெப்பமண்டலம் ஈரமான மலைக் காடுகள் ஆகும். இது வாழிட இழப்பால் அச்சுறுத்தப்படுகிறது. மேற்கோள்கள் பகுப்பு:வெள்ளைக் கண்ணிகள்
இராதாட்டமி
https://ta.wikipedia.org/wiki/இராதாட்டமி
இராதாட்டமி (Radhashtami) என்பது இந்துக் கடவுள் கிருட்டிணனின் முக்கிய மனைவியான இராதையின் பிறந்த நாளைக் கொண்டாடும் திருவிழாவாகும். இது இராதையின் பிறப்பிடமான பர்சானா மற்றும் முழு விரஜபூமி பிராந்தியத்திலும் எட்டாவது நாளில் (பிரகாசமான அட்டமி) (சந்திர மாதத்தின் புரட்டாசி (ஆகஸ்ட்-செப்டம்பர்) கொண்டாடப்படுகிறது.Bhadrapada Festivals கிருஷ்ண ஜெயந்திக்கு பதினைந்து நாட்களுக்குப் பிறகு இராதாட்டமி வருகிறது. வைணவத்தில் இராதை, கிருட்டிணனின் நித்திய மனைவியாகக் கருதப்படுகிறார். மேலும் அவரது நிபந்தனையற்ற அன்பிற்காகவும், கிருட்டிணன் மீதான மாறாத பக்திக்காகவும் வணங்கப்படுகிறார். இத்திருவிழா, மக்களின் சமூக வாழ்க்கையை நிர்வகிக்கும் கலாச்சார-மத நம்பிக்கை அமைப்பின் குறிப்பிடத்தக்க அம்சமாக இருக்கிறது. வரலாறு thumb| இராவலில் உள்ள சிறீலாட்லி லால் கோவிலில் குழந்தையாக இராதை வியாசரின் பத்ம புராணம் (தொகுதி 5) பூமி காண்டத்தின் 7வது அத்தியாயம் இராதாட்டமி பண்டிகை தொடர்பான விரிவான தகவல்களையும் சடங்குகளையும் வழங்குகிறது. கந்த புராணத்தின் விஷ்ணு காண்டத்தில், கிருட்டிணனுக்கு 16,000 கோபியர்கள் இருந்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அவர்களில் இராதை மிகவும் முக்கியமானவர்.Radha Ashtami festival இராதா, உத்தரப் பிரதேச மாநிலத்தின் மதுரா மாவட்டத்தில் அமைந்துள்ள கோகுலத்திற்கு அருகில் அமைந்துள்ள இராவல் என்ற சிறிய ஊரில் பர்சானாவின் யது குல ஆட்சியாளரான விருசபானுவுக்கும் அவரது மனைவி கீர்த்திதாவுக்கும் பிறந்தார். ஆனால் இவர் பர்சானாவில் இவர் வளர்ந்ததாக கூறப்படுகிறது. நாட்டுப்புறக் கதைகளின்படி, கிருட்டிணன் தன் முன் தோன்றும் வரை இராதா உலகத்தைப் பார்க்க கண்களைத் திறக்கவில்லை. கொண்டாட்டம் thumb| இராதாட்டமி அன்று அலங்கரிக்கப்பட்ட இராதா கிருட்டிணனின் சிலைகள் இராதா வல்லப சம்பிரதாயம், கௌடிய வைணவம், துவைதாத்துவைதம், புஷ்டிமார்க்கம் மற்றும் அரிதாசி சம்பிரதாயம் போன்ற பாரம்பரியங்களுடன் தொடர்புடைய பல்வேறு கோவில்களில் இராதாட்டமி கொண்டாடப்படுகிறது. பிருந்தாவனத்தின் இராதா வல்லப ஆலயம், மற்றும் சேவா குஞ்ச் ஆகிய இடங்களில் கொண்டாட்டங்கள் ஒன்பது நாட்கள் நீடிக்கும். சடங்குகளில் இராதை மற்றும் கிருட்டிணனின் ஊர்வலம், உணவு மற்றும் ஆடை விநியோகம், இசை மற்றும் நடனம் ஆகியவையும் அடங்கும். thumb|220x220px| பர்சானாவிலுள்ள சிறீஜி கோவில் எனவும் அழைக்கப்படும் இராதா ராணி கோவில் பாரம்பரியமாக, கௌடிய வைணவத்தைப் பின்பற்றுபவர்கள் (இதில் அகில உலக கிருஷ்ண பக்திக் கழகம் பக்தர்களும் அடங்குவர்) மற்றும் இராதையின் பக்தர்கள் அரைநாள் நோன்பிருப்பது வழக்கம். ஆனால், ஏகாதசியைப் போலவே, சில பக்தர்கள் முழு நாளும் இந்த விரதத்தை கடைபிடிக்கின்றனர். சிலர் தண்ணீர் இல்லாமல் கூட விரதமிருப்பர். இந்நாளில் அகில உலக கிருஷ்ண பக்திக் கழகம் கோவில்களில் இராதாதேவி சிலைக்கு'திருமுழுக்கு வழிபாடு செய்யப்படுகிறது. இராதாட்டமி விரஜபூமி பகுதியில் சம்பிரதாயமாக கொண்டாடப்படுகிறது. விழா அன்று, இராதா கிருட்டிணன் சிலைகள் பாரம்பரியமாக முழுவதுமாக மலர்களால் அலங்கரிக்கப்படுகின்றன. கூடுதலாக, இந்த நாளில் மட்டுமே பக்தர்கள் இராதையின் பாதங்களை தரிசனம் பெற அனுமதிக்கப்படுகின்றனர். மற்ற எல்லா நாட்களிலும், அவை மூடப்பட்டிருக்கும். இராதாட்டமி அன்று இராதையின் சிலைக்கு பஞ்சாமிர்தம் உட்பட பலவிதப் பொருட்களால் அபிசேகம் செய்யப்பட்டு புத்தாடை அணிவிப்பர். பின்னர் நைவேத்தியம் (உணவு) வழங்கப்படுகிறது. இந்த நாளில், பக்தர்கள் இராதா கிருட்டிணனைப் புகழ்ந்து பக்தி பாடல்களைப் பாடுவார்கள். பின்னர், பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதமாக விருந்து வழங்கப்படுகிறது. முக்கியத்துவம் thumb| பிருந்தாவனத்திலுள்ள கோவிலில் இராதாட்டமி அன்று அலங்கரிக்கப்பட்டுள்ள் இராதா கிருட்டிணன் சிலைகள் இமாச்சலப் பிரதேச அரசின் நிதியுதவியுடன் மணிமகேசன் ஏரியில் மணிமகேசன் யாத்திரை எனப்படும் ஒரு புனித யாத்திரை நடத்தப்படுகிறது. யாத்ரிகர்கள் வெறுங்காலுடன், சிவன் மீது பாடல்களைப் பாடி, நடனமாடி, அட்சரின் அருகிலுள்ள சாலைப் புள்ளியிலிருந்து மணிமகேசன் ஏரி வரை 14 கிலோமீட்டர்கள் (8.7) இந்த மலையேற்றத்தை மேற்கொள்கிறார்கள்.Village Hadsar in சம்பா மாவட்டம் கிருஷ்ண ஜெயந்தியில் தொடங்கும் மணிமகேச யாத்திரை பதினைந்து நாட்களுக்குப் பிறகு இராதாட்டமி அன்று முடிவடைகிறது.Radhashtami is fifteen days after Krishna Janmashtami இதனையும் காண்க கிருஷ்ண ஜெயந்தி இராதா ராணி கோயில் மேற்கோள்கள் வெளி இணைப்புகள் Sri Radhashtami celebration. பகுப்பு:செப்டம்பர் சிறப்பு நாட்கள் பகுப்பு:ஆகத்து சிறப்பு நாட்கள் பகுப்பு:பிறந்த நாட்கள் பகுப்பு:வைணவ சமயம் பகுப்பு:இந்து சமய விழாக்கள்
ஜொகூர் அரச இராணுவப் படை
https://ta.wikipedia.org/wiki/ஜொகூர்_அரச_இராணுவப்_படை
ஜொகூர் அரச இராணுவப் படை (ஆங்கிலம்: Royal Johor Military Force (JMF); மலாய்: Askar Timbalan Setia Negeri Johor; சீனம்: 柔佛御林军) என்பது ஜொகூர் மாநிலத்தின் அரச பாதுகாப்புப் படை; மற்றும் ஜொகூர் சுல்தானின் தனியார் அரசக் காவலர் படையும் ஆகும். மலேசியாவில் இன்றும் செயல்பாட்டில் உள்ள மிகப் பழமையான இராணுவப் பிரிவு; மற்றும் மலேசியாவில் ஒரு மாநில அரசால் பராமரிக்கப்படும் ஒரே இராணுவப் படையும் ஆகும். இந்தப் பாதுகாப்புப் படை ஜொகூர் சுல்தானின் கட்டுப்பாட்டின் கீழ் வருகிறது. இதன் தலைமையகம் ஜொகூர் பாருவில் உள்ள சுல்தான் இப்ராகிம் முகாமில் அமைந்துள்ளது. பொது 1946-ஆம் ஆண்டில் மலாயா கூட்டமைப்பில் ஜொகூர் மாநிலம் இணையும் போது தன்னுடைய அரச பாதுகாப்புப் படையைத் தக்க வைத்து கொள்ள முடியும் எனும் துணை விதி, மலேசிய அரசியலமைப்புச் சட்டத்தில் இணைக்கப்பட்டது. மலேசிய அரசியலமைப்பின் ஒன்பதாவது அட்டவணை (Ninth Schedule of the Constitution of Malaysia), மலேசிய நாட்டின் வெளியுறவுக் கொள்கை மற்றும் இராணுவப் படைகளுக்கு மலேசிய கூட்டாட்சி அரசாங்கம் மட்டுமே பொறுப்பு என்று கூறுகிறது. எந்த வகையான அவசரகாலம்; மற்றும் ஆயுத மோதல்களின் போது மலேசிய ஆயுதப் படைகளின் கீழ் ஜொகூர் அரச பாதுகாப்புப் படை ஈடுபடும். நவீன இராணுவப் படை 1886-ஆம் ஆண்டு நவீன ஜொகூரின் முதல் சுல்தானான சுல்தான் அபு பக்கரின் ஆட்சியின் போது ஜொகூர் அரச பாதுகாப்புப் படை நிறுவப்பட்டது. மலாயா கூட்டமைப்பு மாநிலங்கள் மற்றும் மலாயா கூட்டமைப்பில் சேரா மாநிலங்கள் அமைப்புகளில், ஜொகூர் மாநிலம் மட்டுமே அதன் நவீன இராணுவப் படையைக் கொண்ட முதல் மற்றும் ஒரே மலாய் மாநிலம் ஆகும். அந்தக் காலக்கட்டத்தில் வேறு எந்த மலாய் மாநிலமும் அதன் சொந்த இராணுவத்தைக் கொன்டிருக்கவில்லை. ஆங்கிலோ-ஜொகூர் உடன்படிக்கை 1885-ஆம் ஆண்டு சுல்தான் அபு பக்கர் மற்றும் ஐக்கிய இராச்சியத்தின் விக்டோரியா ஆகியோரால் இலண்டன், ஐக்கிய இராச்சியத்தில் ஆங்கிலோ-ஜொகூர் உடன்படிக்கை கையெழுத்தானது. அதன் அடிப்படையில், அமைதியை நிலைநாட்டவும், வெளியில் இருந்து வரும் அச்சுறுத்தல்களில் இருந்து சிங்கப்பூர், ஜொகூர் பிரதேசங்களைப் பாதுகாக்கவும் அந்த உடன்படிக்கை செய்து கொள்ளப்பட்டது. அதன் பின்னர் ஜொகூர் அரச இராணுவப் படை தோற்றுவிக்கப்பட்டு; இன்று வரையில் செயல்பாட்டில் உள்ளது. இந்தப் படையின் தளபதியாக ஜொகூர் சுல்தான் பொறுப்பு வகிக்கிறார். மேற்கோள்கள் மேலும் காண்க ஜொகூர் சுல்தானகம் இப்ராகிம் இசுகந்தர் ஜொகூர் சுல்தான் அபு பக்கர் வெளி இணைப்புகள் பகுப்பு:மலேசியப் படைத்துறை பகுப்பு:ஜொகூர் பகுப்பு:ஜொகூர் சுல்தான்கள்
மும்மாலிப்டினம் பாசுபைடு
https://ta.wikipedia.org/wiki/மும்மாலிப்டினம்_பாசுபைடு
மும்மாலிப்டினம் பாசுபைடு (Trimolybdenum phosphide) என்பது Mo3P என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். மாலிப்டினமும் பாசுபரசும் சேர்ந்து இந்த இருமச் சேர்மம் உருவாகிறது. தயாரிப்பு மாலிப்டினம்(VI) ஆக்சைடுடன் சோடியம் குளோரைடும் மாலிப்டினம் அறுமெட்டாபாசுபேட்டையும் சேர்த்து இவ்வினை கலவையை மின்னாற்பகுப்பு வினைக்கு உட்படுத்தினால் மும்மாலிப்டினம் பாசுபைடு உருவாகும். பண்புகள் மாலிப்டினம் இருபாசுபைடு நாற்கோணகப் படிக அமைப்பில் சாம்பல் நிறப் படிகங்களாக I4 என்ற இடக்குழுவுடன் உருவாகிறது. தண்ணீரில் இது கரையாது. 7 கெல்வின் வெப்பநிலையில் மும்மாலிப்டினம் பாசுபைடு ஒரு மீக்கடத்தியாக மாறுகிறது. பயன்கள் மும்மாலிப்டினம் பாசுபைடு ஒரு வினையூக்கியாகப் பயன்படுத்தப்படுகிறது. மேலும் இதை ஒரு மின்திரட்டியாகவும் பயன்படுத்த முடியும். மேற்கோள்கள் பகுப்பு:மாலிப்டினச் சேர்மங்கள் பகுப்பு:பாசுபரசு சேர்மங்கள் பகுப்பு:பாசுபைடுகள்
2024 பாரசீக வளைகுடா வெள்ளம்
https://ta.wikipedia.org/wiki/2024_பாரசீக_வளைகுடா_வெள்ளம்
2024 பாரசீக வளைகுடா வெள்ளம் (2024 Persian Gulf floods) என்பது 2024-இல், பாரசீக வளைகுடா பகுதிகளில் பெய்த பலத்த மழையின் விளைவாக இப்பகுதி முழுவதும் திடீரென ஏற்பட்ட வெள்ளம் ஆகும். பல மாநிலங்களில் ஒரே நாளில் கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்குச் சமமான மழைப் பதிவாகியுள்ளது. இதனால் ஏற்பட்ட வெள்ளம் இப்பகுதி முழுவதும் குறிப்பிடத்தக்கத் தாக்கத்தை ஏற்படுத்தியது. ஓமான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் இந்த வெள்ளத்தினால் அதிகமாகப் பாதிக்கப்பட்ட பகுதிகளாகும். இதன் விளைவாக ஓமானைச் சேர்ந்த 19 பேர் உட்படக் குறைந்தது 24 பேர் இறந்தனர். தென்கிழக்கு ஈரான், யெமன் மற்றும் சவுதி அரேபியா கிழக்கு மாகாணம், அதே போல் வளைகுடா நாடுகளான பகுரைன் மற்றும் கத்தார் ஆகியவையும் பலத்த மழை மற்றும் அடுத்தடுத்த வெள்ளத்தால் பாதிப்பினைச் சந்தித்தன. பின்னணி பாரசீக வளைகுடா பகுதியானது, வெப்பமான மற்றும் வறண்ட வானிலைக்குப் பெயர் பெற்றது; இருப்பினும் கனமழையால் ஏற்படும் வெள்ளமும் சமீபத்திய ஆண்டுகளில் வழக்கமாக ஏற்பட்டுள்ளது. வறண்ட பாலைவனக் காலநிலை மற்றும் அதிக வெப்பநிலை காரணமாக, ஐக்கிய அரபு அமீரகத்தில் தண்ணீர்ப் பற்றாக்குறையை எதிர்த்துப் போராட மேக விதைப்பு பயன்படுத்தப்படுகிறது. தீங்கு விளைவிக்கும் விதைப்பு பொருட்களைப் பயன்படுத்துவது சுற்றுச்சூழல் தாக்கத்திற்கு வழிவகுக்கும் என்பதால் செயற்கை மழைப்பொழிவு விமர்சிக்கப்பட்டுள்ளது. ஆனால் ஐக்கிய அரபு அமீரகம் வெள்ளி அயோடைடு போன்ற தீங்கு விளைவிக்கக்கூடிய இரசாயனங்களுக்குப் பதிலாக இயற்கை உப்புகளைப் பயன்படுத்தப்படுகின்றது. ஐக்கிய அரபு அமீரகம் பூமியில் வெப்பமான மற்றும் வறண்ட பகுதிகளில் ஒன்றாக இருப்பதால், மழை மேம்பாட்டு அறிவியலுக்கான ஐக்கிய அரபு அமீரகத்தின் ஆராய்ச்சித் திட்டம் நாட்டில் எதிர்பார்க்கப்படும் நீர்ப் பற்றாக்குறையைச் சமாளிக்கப் புதுமையான தீர்வுகளில் முதலீடு செய்து வருகிறது. பிற விமர்சகர்கள் அசாதாரண வானிலையைப் பருவநிலை மாற்றத்துடன் இணைத்துள்ளனர். மேக விதைப்பு ஒரு குறைந்த விளைவை மட்டுமே ஏற்படுத்தும் என்றும் மேக விதைப்பில் கவனம் செலுத்துவது "தவறானது" என்றும் நிபுணர்கள் கூறியுள்ளனர். இப்பகுதி சமீபத்திய ஆண்டுகளில் வெப்ப அலைகள் மற்றும் சூறாவளிகளால் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் வெப்பநிலை மற்றும் ஈரப்பதம் அதிகரித்து வருவதால், வளைகுடாவில் வெள்ளம் ஏற்படும் அபாயமும் இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் எதிர்பார்க்கிறார்கள். வெள்ளத்திற்குப் பிறகு, புளூம்பெர்க் போன்ற சில செய்தி நிறுவனங்கள், கனமழையை ஐக்கிய அரபு அமீரகத்தின் செயற்கை மழைத் திட்டத்துடன் தொடர்புப்படுத்தி கருத்துக்கள் வெளியிட்டன. பெரிய அளவிலான வானிலை முறை முன்கூட்டியே கணிக்கப்பட்டதாலும், மேக விதைப்பால் பாதிக்கப்பட முடியாத அளவுக்கு அதிகமாக இருந்ததாலும், அதிக மழைப்பொழிவுக்கு மேக விதைப்பு தான் காரணம் என்பதை ரீடிங் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் மறுத்தனர். மேக விதைப்பின் விளைவுகள் பொதுவாகக் குறுகிய காலத்திற்கு மட்டுமே நீடிக்கும். சில மணிநேரங்களுக்கே இவை நீடிக்கும் என்று அவர்கள் கூறினர். பெரிய இடியுடன் கூடிய மழை பெய்ததால் பலத்த மழை பெய்ததாக ரீடிங் பல்கலைக்கழகத்தின் வானிலை ஆய்வாளர்களும் தெரிவித்தனர். ஐக்கிய அரபு அமீரகத்தின் தேசிய வானிலை மையத்தின் துணை இயக்குநர் உமர் அல் யாசிதி, இந்த நிறுவனம் "இந்த நிகழ்வின் போது எந்த செயற்கை மழைக்கான நடவடிக்கைகளையும் நடத்தவில்லை" என்றார். மேக விதைப்புக்கான இணைப்பை மற்ற செய்தி வர்ணனையாளர்களும் நிராகரித்துள்ளனர். தொழில்நுட்பம் ஓரளவு மழையை அதிகரிக்கிறது என்றும், ஐக்கிய அரபு அமீரகத்தின் மேக விதைப்புத் திட்டம் நாட்டின் கிழக்குப் பகுதியில், அடர்த்தியான மக்கள்தொகை கொண்ட பெருநகரப் பகுதிகளிலிருந்து விலகி உள்ளது என்றும் கூறினார். தாக்கம் thumb|பகுரைனின் மனாமாவில் வெள்ளம் ஓமான் ஓமானில், வெள்ளத்தால் குறைந்தது 19 பேர் கொல்லப்பட்டனர். இதில் 10 பள்ளிக் குழந்தைகள் மற்றும் அவர்களின் வாகன ஓட்டுநர் ஆகியோர் அடங்குவர். ஏப்ரல் 14 அன்று சமத் அல்-ஷானில் வெள்ள நீரில் வாகனம் அடித்துச் செல்லப்பட்டது. மீட்புப் பணியாளர்கள் சகாமில் ஒரு பெண்ணின் உடலைக் கண்டுபிடித்தனர். பரவலாக வெள்ளம் ஏற்பட்ட சர்கியா வடக்கு ஆளுநரகம் மிகவும் கடுமையாகப் பாதிக்கப்பட்ட பகுதியாகும். மஸ்கட் பன்னாடு வானூர்தி நிலையத்திலிருந்து சில வானூர்தி பயணங்கள் இரத்து செய்யப்பட்டன. சில பயணங்கள் தாமதமானது. ஐக்கிய அரபு அமீரகம் ஐக்கிய அரபு அமீரகம் 24 மணி நேர காலப்பகுதியில் சாதனை படைத்த மழையைக் கண்டது. இது 1949-இல் பதிவுகள் தொடங்கியதிலிருந்து அமீரக வானிலைத் தரவுகளை விஞ்சியது. தேசிய வானிலை ஆய்வு மையத்தின்படி, கத்ம் அல் ஷக்லா பகுதியில் அதிக மழைப் பதிவாகியுள்ளது. இருபத்து நான்கு மணி நேரத்தில் அல் ஐனில் மழைப் பெய்துள்ளது. அமீரகத்தின் ஏழுப்பகுதிகளிலும் பரவலாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. வெள்ளத்திற்கு முன்னதாக, ஒரு மதிப்பிடப்பட்ட மழை , வரை ஐக்கிய அரபு அமீரகத்தின் சில பகுதிகளில் மதிப்பிடப்பட்டது. ரஃஸ் அல் கைமா நகரம் உள்ள ஓர் ஆற்றுப் பள்ளத்தாக்கில் வெள்ளத்தில் 70 வயதான அமீரக மூத்தோர் ஒருவரின் வாகம் அடித்துச் செல்லப்பட்டதில் அவர் இறந்தார். மூன்று பிலிப்பீன்சு தொழிலாளர்களும் இந்த வெள்ளத்தில் இறந்தனர். வெள்ளத்தில் சிக்கிய வாகனத்திற்குள் இருவரும் மூன்றாவது நபர் வெள்ளத்தால் ஏற்பட்ட வாகன விபத்தினால் உயிர் இழந்தார். ரஃஸ் அல் கைமா மற்றும் அல் ஐனில் நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளது. இப்பகுதியில் குடியிருப்பாளர்கள் வீட்டிலேயே இருக்கவும், முற்றிலும் அவசியமானாலன்றி வாகனம் ஓட்டுவதைத் தவிர்க்கவும் எச்சரிக்கப்பட்டனர். மின் தடை காரணமாக இணையத் தொடர்பும் துண்டிக்கப்பட்டது. நாடு முழுவதும், பள்ளிகள் மற்றும் தனியார்த் துறையினர் வாரத்தின் எஞ்சிய நாட்களில் (திங்கள் தவிர) வீட்டிலிருந்து வேலை செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டனர். துபை மெட்ரோ சேவைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. இதனால் சுமார் 200 பயணிகள் பல நிலையங்களில் சிக்கித் தவித்தனர். துபாய்-அபுதாபி, துபாய்-சார்ஜா மற்றும் துபாய்-அஜ்மான் வழித்தடங்களில் நகரங்களுக்கு இடையான பேருந்து சேவையும் நிறுத்தப்பட்டது. துபாய் பன்னாட்டு வானூர்தி நிலையத்தில் இரண்டு நாள் காலப்பகுதியில் மொத்தம் 1,244 வானூர்தி பயணங்கள் இரத்து செய்யப்பட்டும், 41 வானூர்திகள் திசைதிருப்பப்பட்டன. துபாயிலிருந்து ஏப்ரல் 16 அன்று புறப்படத் திட்டமிடப்பட்ட அனைத்து பிளைதுபாய் வானூர்திகளும் இரத்து செய்யப்பட்டன. துபாய் வானூர்தி நிலையத்தில், மொத்தம் அங்குலம் (164 மிமீ) மழை பெய்தது.Dubai flooded by extreme rain as deadly storms sweep through UAE, Oman , AccuWeather, 17 April 2024 அல் ஐனில் விளையாடவிருந்த அமீர்க அல் ஐன் மற்றும் சவுதி அல் கிலால் கால்பந்து குழுக்களுக்கு இடையிலான ஏஎப்சி ஆசிய வாகையாளர் தொடர் அரையிறுதி கால்பந்து போட்டி வெள்ளம் காரணமாக ஒரு நாள் ஒத்திவைக்கப்பட்டது. பகுரைன் thumb|வெள்ளம் சூழ்ந்த தெரு முகர்ரக்கு, பகுரைன் ஏப்ரல் 15 மற்றும் 16ஆம் தேதிகளில் பலத்த மழை மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்தது, இதன் விளைவாகப் பரவலான வெள்ளம் ஏற்பட்டது. இதனால் வாகனங்கள் சாலைகளில் விடப்பட்டன. பகுரைன் வானிலை ஆய்வு மையத்தின் கூற்றுப்படி, 48 மணி நேரத்தில் சராசரியாக மிமீ மழைப் பதிவாகியுள்ளது. இது பகுரைன் வரலாற்றில் பதிவு செய்யப்பட்ட இரண்டாவது மிக அதிக மழைப்பொழிவு ஆகும். பகுரைன் உள்துறை அமைச்சகம் குடியிருப்பாளர்களை வீட்டிலேயே இருக்குமாறு பொதுப் பாதுகாப்பு எச்சரிக்கையை வெளியிட்டது. வெள்ளத்தின் விளைவாகப் பள்ளிகள் மற்றும் உயர் கல்வி நிறுவனங்களை மூடுவதாகக் கல்வி அமைச்சகம் அறிவித்தது. காற்றின் வேகம் மணிக்கு 70 கிமீ/மணி இருந்ததாக மதிப்பிடப்பட்டது. மழை காரணமாக சிட்ரா நகரில் ஒரு பல்பொருள் அங்காடியின் கூரை இடிந்து விழுந்தது. கத்தார் பலத்த மழை மற்றும் பலத்த காற்று பெரும்பாலும் மதீனத் ஆஷ் ஷமல் மற்றும் அர்-ரூயஸ் நகரங்களை மையமாகக் கொண்டு நாட்டின் வடக்குப் பகுதிகளில் மட்டுமே இருந்தது. தோகாவில் பரவலாக மழை பதிவாகியுள்ளது. மோசமான வானிலை காரணமாகப் பள்ளிகள் மற்றும் பொது அலுவலகங்கள் மூடப்பட்டன. இன்றைய தினம் சேவைகள் அனைத்தும் இணையவழி மாற்றப்பட்டன. ஈரான் தென்கிழக்கு ஈரானில் பலத்த மழை மற்றும் திடீர் வெள்ளம் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சீசுத்தான் பலுச்சிசுத்தான், கோர்மோசுகான் மற்றும் கெர்மான் மாகாணங்கள் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளன. கெர்மான் மாநிலத்தில் 3 பேர் காணாமல் போனதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சவுதி அரேபியா கிழக்கு மாகாணத்தில் பலத்த மழைப் பதிவாகியுள்ளது . பரவலான வெள்ளம் மாகாணத்தை, குறிப்பாகத் தலைநகர் தம்மத்தைப் பாதித்தது. இதன் விளைவாகச் சுரங்கப்பாதை சாலை மூடப்பட்டது. பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டன. குவைத்து குவைத்தின் வானிலை ஆய்வு நிறுவனம் ஏப்ரல் 16ஆம் தேதி அதிக மழை மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று எச்சரித்தது இருந்தது. யெமன் யெமனில் பெய்த தீவிர மழை மற்றும் திடீர் வெள்ளம் காரணமாக கார்த்ராமாகுட்டில் ஏப்ரல் 17 அன்று, ஒரு மரணமும் உடமைகளுக்குப் பரவலான சேதமும் ஏற்பட்டது. துறைமுகத்திற்கு அருகில் உள்ள மலைகளில் பெய்த பலத்த மழை காரணமாக முகல்லாவில் நிலச்சரிவு ஏற்படக் காரணமாக அமைந்தது. நடவடிக்கைகள் ஏப்ரல் 17 அன்று, பட்டத்து இளவரசரும் பகுரைனின் பிரதமருமான சல்மான் பின் ஹமாத் அல் கலீஃபா குடியிருப்பாளர்களுக்கு மழை தொடர்பான சேதங்களை மதிப்பீடு செய்து இழப்பீடு வழங்குவதற்கான திட்டங்களை அறிவித்தார். கனமழையை எதிர்கொள்ள, வெள்ளத்தில் மூழ்கிய தெருக்களிலிருந்து மழைநீரை அகற்றி அல்-லூசி ஏரியில் செலுத்துவது உள்ளிட்ட வெள்ள நிவாரண முயற்சிகளை ஒருங்கிணைக்க, பணிகள் அமைச்சகம் மற்றும் பகுரைனின் நான்கு நகராட்சி சபைகளுக்கும் இடையே ஒரு நாடு தழுவிய அவசரக் கூட்டுப் பணிக்குழு அமைக்கப்பட்டது."Residents struggle to cope with severe flooding amidst heavy rainfall". www.newsofbahrain.com. Archived from the original on 17 April 2024. Retrieved 17 April 2024. ஓமன் காவல்துறை 152 நடவடிக்கைகளை மேற்கொண்டது. நாடு முழுவதும் வெள்ளத்தில் சிக்கித் தவித்த 1,630 நபர்களை மீட்டது. இரங்கல் இசுலாமிய ஒத்துழைப்பு அமைப்பின் பொதுச்செயலாளர் கிசைன் பிராகிம் தாகா வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இரங்கல் தெரிவித்தார். மேலும் காண்க 2022 அசாம் வெள்ளம் மேற்கோள்கள் பகுப்பு:2024 இயற்கை அழிவுகள் பகுப்பு:வளைகுடா நாடுகள்
பிரதம்
https://ta.wikipedia.org/wiki/பிரதம்
பிரதம் (Pratham) இந்தியாவின் மிகப்பெரிய அரசு சாரா அமைப்புகளில் ஒன்றாகும். சமூக ஆர்வலராகவும் தொழில் முனைவோராகவும் அறியப்படும் மாதவ் சவான் மற்றும் பரீதா லம்பே[http://www.wise-qatar.org/farida-lambay ஆகியோரால் இணைந்து நிறுவப்பட்டது. இந்தியாவின் பின்தங்கிய குழந்தைகளுக்கு தரமான கல்வியை வழங்க இது செயல்படுகிறது. சேரிகளில் உள்ள குழந்தைகளுக்கு முன்பள்ளிக் கல்வியை வழங்குவதற்காக 1995 ஆம் ஆண்டில் மும்பையில் நிறுவப்பட்ட பிரதம் இன்று இந்தியாவின் 23 மாநிலங்கள் மற்றும் ஒன்றியப்பிரதேசங்களில் பரவியுள்ளது மேலும் அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம், ஜெர்மனி, சுவீடன் மற்றும் ஆத்திரேலியா ஆகிய நாடுகளில் துணைத் துறைகளைக் கொண்டுள்ளது. பிரதமின் நிறுவனரும் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரியுமான மாதவ் சவான், 2011 ஆம் ஆண்டு சமூக தொழில்முனைவோருக்கான ஸ்கோல் விருதைப் பெற்றார். மேலும், இருபது ஆண்டுகளுக்கும் மேலாக பல்லாயிரக்கணக்கான பின்தங்கிய குழந்தைகளின் கற்றல் தேவைகளை வெற்றிகரமாக பூர்த்தி செய்ததன் விளைவாக, மேம்பாட்டு ஒத்துழைப்பில் 2013 பிபிவிஏ அறக்கட்டளை அறிவு எல்லைகள் விருதைப் பெற்றார். வாசிக்கும் திறனை விரைவுபடுத்தும் புதிய முறைகளை வடிவமைத்து செயல்படுத்தியுள்ளனர். ஒரு அடித்தள நிலையிலான அணுகுமுறையைப் பயன்படுத்தி, மாணவர்களின் வயதிற்குப் பதிலாக உண்மையான நிலைகள் மற்றும் தேவைகளால் குழுக்களாக தொகுக்கப்படுகிறார்கள். இந்த அமைப்பு தன் திட்டங்களுக்கு ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட ஆசிரியர்கள் மற்றும் தன்னார்வலர்களுக்கு குறிப்பிட்ட பயிற்சியை வழங்குகிறார்கள். 2018 ஆம் ஆண்டில், பிரதமிற்கு லூயி சே வூ பரிசு வழங்கப்பட்டது, இது மனிதகுலத்திற்கு பயனளிக்கும் சிறந்த பங்களிப்புகளை அங்கீகரிக்கும் பல்துறையிடைக் கண்டுபிடிப்பு பரிசு ஆகும். கல்வியறிவின்மையை ஒழிப்பதில் கவனம் செலுத்திய நேர்மறை ஆற்றல் பிரிவில் பிரதம் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டது. வரலாறு. வலது|thumb|இந்தியாவின் மும்பையில் கணித வகுப்பு நடத்தப்படுகிறது, ஆகஸ்ட்-நவம்பர் 2010 Photo courtesy GiveWell. இந்தியாவின் ஆரம்பக் கல்வியை மேம்படுத்துவதற்காக அரசு, பெருநிறுவனங்கள் மற்றும் குடிமைச் சமூகம் இவற்றிற்கிடையே முத்தரப்பு கூட்டாண்மையை ஏற்படுத்துவதற்காக யுனிசெஃப் முதலில் மும்பையில் பம்பாய் கல்வி முன்முயற்சியைத் தொடங்கியது. இது 1995 ஆம் ஆண்டில் பிரதம் ஒரு தன்னிச்சையான தொண்டு நிறுவனமாக உருவாக வழிவகுத்தது. மும்பையின் சேரிகளில் முன்பருவக் கல்வி வகுப்புகளை (கல்விக்கு முந்தைய வகுப்புகள்) நடத்துவதன் மூலம் பிரதம் தன் செயல்பாடுகளைத் தொடங்கியது. கோயில்கள், அலுவலகங்கள் மற்றும் மக்களின் வீடுகள் உட்பட சமூக அமைப்புகுள் உள்ள இடங்களில் கற்பிக்க தன்னார்வலர்கள் நியமிக்கப்பட்டனர். பிரதம் முன்பருவப் பள்ளி வகுப்புகள் பெருகி மற்ற இடங்களிலும் பின்பற்றப்பட்டன. வலது|thumb|முன்பள்ளி வகுப்பு, மும்பை, இந்தியா, ஆகஸ்ட்-நவம்பர் 2010 Photo courtesy GiveWell. இலக்கு "பள்ளியில் உள்ள ஒவ்வொரு குழந்தையும் நன்கு கற்றுக்கொள்வது" என்பதே இதன் பிரதான நோக்கமாகும். உலகின் ஏழைகளில் மூன்றில் ஒரு பங்கைக் கொண்ட இந்தியாவின் ஏழைகளின் எழுத்தறிவு அளவை அதிகரிப்பதன் மூலம், இந்தியாவின் பொருளாதார மற்றும் சமூக சமத்துவத்தை மேம்படுத்துவதே பிரதம் அமைப்பின் நோக்கமாகும். இது நிலையான மற்றும் மறுஉருவாக்கம் செய்யக்கூடிய குறைந்த கட்டண கல்வி மாதிரிகளை அறிமுகப்படுத்துவதன் மூலம் மேற்கொள்ளப்படுகிறது. பணி கல்வியின் ஆண்டுத் தரநிலை அறிக்கை (Annual Status of Education Report) என்பது நாட்டின் ஒவ்வொரு கிராமப்புற மாவட்டத்திலும் குழந்தைகளின் பள்ளி நிலை மற்றும் அடிப்படை கற்றல் முடிவுகள் குறித்த தகவல்களை சேகரிக்கும் ஒரு வீட்டு அடிப்படையிலான கணக்கெடுப்பாகும். இக்கணக்கெடுப்பு என்பது 2005 முதல் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 500 அமைப்புகளையும் 25,000 க்கும் மேற்பட்ட தன்னார்வலர்களையும் உள்ளடக்கிய ஒரு மகத்தான பங்கேற்பு பயிற்சியாகும். கணக்கெடுப்பின் ஒரு பகுதியாக, மாவட்ட, மாநில மற்றும் தேசிய மட்டங்களில் குழந்தைகளின் பள்ளி மற்றும் கற்றல் நிலை குறித்த மதிப்பீடுகள் உருவாக்கப்படுகின்றன. இன்று இந்தியாவில் கிடைக்கும் குழந்தைகளின் கற்றல் முடிவுகள் குறித்த தரவுகளின் ஒரே வருடாந்திர ஆதாரமாக இந்த அறிக்கை உள்ளது, மேலும் இந்தியாவில் கல்வி குறித்த விவாதங்களின் கவனத்தை உள்ளீடுகளிலிருந்து விளைவுகளுக்கு மாற்றியதற்காக பெரும்பாலும் பாராட்டப்படுகிறது. இந்த அறிக்கையின் மாதிரி மூன்று கண்டங்களில் உள்ள பதினான்கு பிற நாடுகளால் பயன்படுத்தத் தழுவப்பட்டுள்ளது. இந்த நாடுகள் இயல்பாக ஒன்றிணைந்து கற்றலுக்கான மக்கள் நடவடிக்கை (PAL) வலையமைப்பை உருவாக்கியுள்ளன, நைரோபியில் ஒரு செயலகம் உள்ளது. சமீபத்திய ஆண்டுகளில் இந்தியாவில் கல்விச் சீர்திருத்தங்கள் இருந்தபோதிலும், தரமான கல்வி இன்னும் ஒரு கவலைக்குரிய நிலையிலேயே உள்ளது, குறிப்பாக குறைந்த வருமானம் கொண்ட சமூகங்களிடையே. 2005 மற்றும் 2006 ஆம் ஆண்டுகளில், அரசுப் பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளில் 50% பேர் நான்கு முதல் ஐந்து ஆண்டுகளாகப் பள்ளிக்குச் சென்ற போதிலும், அவர்களால் அடிப்படை கணிதத்தைப் படிக்கவோ எழுதவோ முடியவில்லை. எனவே 6 முதல் 14 வயது வரையிலான குழந்தைகளின் வாசிப்பு, எழுதுதல் மற்றும் அடிப்படை எண்கணித திறன்களை மேம்படுத்துவதற்காக 2007 ஆம் ஆண்டில் ரீட் இந்தியா தொடங்கப்பட்டது, இது பள்ளி ஆசிரியர்கள், அங்கன்வாடி தொழிலாளர்கள் மற்றும் தன்னார்வலர்களால் மேற்கொள்ளப்படுகிறது, அவர்களுக்கு பிரதம் பயிற்சி அளிக்கிறார். ரீட் இந்தியா இன்று வரை சுமார் 34 மில்லியன் குழந்தைகளை எட்டியுள்ளது, இதன் விளைவாக இந்தியாவின் பல மாநிலங்களில் கல்வியறிவு நிலைகளில் பெரிய அளவிலான முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன. குழந்தைகளுக்கான மலிவு விலையிலான, தரமான புத்தகங்களை வெளியிடும் இலாப நோக்கற்ற அமைப்பான பிரதம் புக்ஸ், ரீட் இந்தியாவை பூர்த்தி செய்வதற்காக 2004 ஆம் ஆண்டில் அமைக்கப்பட்டது. இது 10 இந்திய மொழிகளில் 200 க்கும் மேற்பட்ட அசல் தலைப்புகளை வெளியிட்டுள்ளது மற்றும் 14 மில்லியனுக்கும் அதிகமான குழந்தைகளை சென்றடைந்துள்ளது. நேரடி திட்டங்கள்ஃ பால்வாடிகள் (பள்ளிக்கு முந்தைய கல்வி) கற்றல் ஆதரவு திட்டங்கள், நூலகங்கள் மற்றும் இடைநிற்றல் குழந்தைகளை பிரதான நீரோட்டத்தில் கொண்டு வருவது மூலம் கல்வியின் தரத்தை மேம்படுத்துவதற்கான அரசாங்க முயற்சிகளுக்கு பிரதமின் நேரடி திட்டங்கள் துணைபுரிகின்றன. அருகிலேயே வசிக்கும் குழந்தைகளுக்கான மையங்களில் முழு ஆண்டிற்கும் கற்றல் ஆதரவு வழங்கப்படுகிறது. இந்தத் திட்டங்கள் பொதுவாக நகர்ப்புற சேரிகளில் அல்லது ஏழை கிராமங்களில் நடத்தப்படுகின்றன, அங்கு குழந்தைகளுக்கு தரமான கல்வி எளிதில் கிடைக்காது. மேற்கோள்கள் வெளி இணைப்புகள் அதிகாரப்பூர்வ இணையதளம் பிரதம் அமெரிக்கா பிரதம் யுகே பிரதம் ஸ்வீடன் பிரதம் ஆஸ்திரேலியா ஏஎஸ்இஆர் மையம் பகுப்பு:தன்னார்வ அமைப்புகள் பகுப்பு:கல்வி ஆய்விதழ் வெளியீட்டாளர்கள்
ஆவண அமுதம்
https://ta.wikipedia.org/wiki/ஆவண_அமுதம்
ஆவண அமுதம் (Avana Amudham) என்பது தமிழ்நாட்டில் இருந்து வெளியான ஒரு காலாண்டிதழ் ஆகும். இது சென்னை எழும்பூரில் உள்ள தமிழ்நாடு அரசு ஆவணக் காப்பகத்தால் வெளியிடப்பட்டது. இந்த இதழ் 1986 அக்டோபர்-திசம்பர் முதல் 1994 அக்டோபர் திசம்பர் வரை என தொடர்ச்சியாக 31 இதழ்கள் வெளியாகியுள்ளன. இந்த இதழின் முதல் ஐந்து இதழ்களும் கடைசி ஒன்பது இதழ்களும் தட்டச்சில் வெளியாயின. மற்றவை அச்சில் வெளியாயின. நோக்கம் தமிழ்நாடு அரசு ஆவணக் காப்பகத்தில் 1640 முதல் தற்காலத்தில் வெளியான அரசாணைகள் வரை சேகரித்துப் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. இந்த ஆவணங்கள் பெருவாரியான மக்களைச் சென்று சேரவேண்டும் என்ற நோக்கில் இந்தக் கலாண்டிதழ் வெளியிடப்பட்டது. ஆவணக் காப்பகத்தின் பணியாளர்களுக்கும், இளம் ஆய்வாளர்களுக்கும் எழுதுவதற்கான வாய்ப்பை ஏற்படுத்தும் விதமாக இந்தக் காலாண்டிதழ் உள்ளது. உள்ளடக்கம் ஆவண அமுதம் இதழானது இரு பிரிவாகப் பகுக்கப்பட்டுள்ளது. முதல் பகுதியானது ஆங்கிலத்திலும், இரண்டாம் பகுதி தமிழிலும் இடம்பெற்றுள்ளது. ஆங்கிலப் பகுதியில் ஆய்வுக் கட்டுரைகளும், ஆவணக் காப்பகத்தில் இருக்கும் முக்கிய ஆவணங்கள் குறித்த தகவல்களும், தமிழ்ப் பகுதியில் சிறுசிறு துணுக்குகளும், சிறுகதைகளும், ஆய்வுக் கட்டுரைகளும் இடம்பெற்றிருக்கும். ஆவணக் காப்பகம் இதுநாள்வரை எவ்வாறு பராமரிக்கபட்டு வருகிறது. இதை ஆய்வாளர்கள் எவ்வாறு பயன்படுத்தவேண்டும் என்ற வழிகாட்டுதல்கள் இடம்பெறன. ஆவண அமுதம் இதழ்கள் தமிழ் இணைய நூலகத்தில் வாசிக்கக் கிடைக்கின்றன. பழைய நூல்கள் தமிழ்நாடு அரசு ஆவணக் காப்பகத்தில் விற்பனைக்குக் கிடைக்கின்றன. மேற்கோள்கள் பகுப்பு:தமிழ் இதழ்கள் பகுப்பு:ஆய்விதழ்கள் பகுப்பு:நின்று போன தமிழ் இதழ்கள்
சினி செட்டி
https://ta.wikipedia.org/wiki/சினி_செட்டி
சினி சதானந்த் செட்டி (Sini Sadanand Shetty) என்பவர் ஒரு இந்திய வடிவழகி ஆவார். இவர் பெமினா மிஸ் இந்தியா அழகுப் போட்டியில் பட்டம் வென்றவர், மிஸ் வேர்ல்ட் 2023 இல் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தினார். வாழ்க்கை சினி செட்டி மும்பையில் கர்நாடகாவைச் சேர்ந்த குடும்பத்தில் பிறந்தார். மும்பையில் காட்கோபரிலுள்ள புனித தோமினிக் சாவியோ வித்யாலயாவில் பயின்றார், தொடர்ந்து மும்பையில் உள்ள எஸ்.கே. சோமையா கலை, அறிவியல் மற்றும் வணிகவியல் கல்லூரியில் பயின்றார், கணக்கியல் மற்றும் நிதியியல் துறையில் பட்டம் பெற்றார். இவர் ஒரு பயிற்சி பெற்ற பரதநாட்டிய நடனக் கலைஞர். 2022 ஆம் ஆண்டில், செட்டி பெமினா மிஸ் இந்தியா போட்டியில் பங்கேற்று வென்றார், டைம்சு மிஸ் பாடி பியூட்டிபுல் மற்றும் என்ஐஎஃப்டி மிஸ் டேலண்ட் துணை விருதுகளையும் வென்றார், இந்த நிகழ்வு மும்பையில் உள்ள ஜியோ உலக மாநாட்டு மையத்தில் 3 சூலை 2022 அன்று நடந்தது. பெமினா மிஸ் இந்தியா வேர்ல்ட் 2022 வெற்றியாளராக, செட்டி மும்பையில் உள்ள ஜியோ உலக மாநாட்டு மையத்தில் 9 மார்ச் 2024 அன்று நடைபெற்ற உலக அழகி 2023 இல் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தினார். மேற்கோள்கள் பகுப்பு:2001 பிறப்புகள் பகுப்பு:வாழும் நபர்கள்
மாலிப்டினம் இருகுளோரைடு ஈராக்சைடு
https://ta.wikipedia.org/wiki/மாலிப்டினம்_இருகுளோரைடு_ஈராக்சைடு
மாலிப்டினம் இருகுளோரைடு ஈராக்சைடு (Molybdenum dichloride dioxide) என்பது MoO2Cl2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். மற்ற மாலிப்டினம் சேர்மங்கள் தயாரிப்பதற்கு உதவும் ஒரு முன்னோடிச் சேர்மமாகப் பயன்படுத்தப்படுகிறது. மஞ்சள் நிறத்தில் எதிர்காந்தப் பண்புடன் ஒரு திண்மப் பொருளாக இது பயன்படுத்தப்படுகிறது. மாலிப்டினம் இருகுளோரைடு ஈராக்சைடு மாலிப்டினத்தின் அறியப்பட்டுள்ள பல ஆக்சிகுளோரைடுகளில் ஒன்றாகும். கட்டமைப்பு வாயு நிலை மாலிப்டினம் இருகுளோரைடு ஈராக்சைடு மோனோமர் எனப்படும் ஒரு தனி மூலக்கூறு ஆகும். ஆனால் ஒடுக்கமடையும்போது ​​நிச்சயமற்ற கட்டமைப்பில் ஒருங்கிணைப்புப் பலபடியாக பலபடியாகிறது. தயாரிப்பு மாலிப்டினம் மூவாக்சைடுடன் அடர் ஐதரோகுளோரிக்கு அமிலத்தைச் சேர்த்து சூடாக்கினால் எளிதாக மாலிப்டினம் இருகுளோரைடு ஈராக்சைடை தயாரிக்க இயலும்: MoO3 + 2 HCl → MoO2Cl2 + H2O மாலிப்டினம் ஆக்சிடெட்ராகுளோரைடு சேர்மத்திலிருந்தும் மாலிப்டினம் இருகுளோரைடு ஈராக்சைடை தயாரிக்க இயலும்: MoOCl4 + O(Si(CH3)3)2 → MoO2Cl2 + 2 ClSi(CH3)3 மாலிப்டினம் ஈராக்சைடு சேர்மத்தை குளோரினேற்றம் செய்தும் இதை தயாரிக்கலாம்: MoO2 + Cl2 → MoO2Cl2 மாலிப்டினம் மூவாக்சைடை குளோரினேற்றம் செய்தும் மாலிப்டினம் இருகுளோரைடு ஈராக்சைடை தயாரிக்க முடியும்: MoO3 + Cl2 → MoO2Cl2 வினைகள் MoO2Cl2(ஈதர்)2 வகையைச் சேர்ந்த பல பிசுகூட்டுசேர் பொருட்கள் அறியப்படுகின்றன. இந்த எண்முக மூலக்கூற்று அணைவுச் சேர்மங்கள் கரிம கரைப்பான்களில் கரைகின்றன. பெரிய அனிலீன்களுடன் இச்சேர்மம் ஈரமிடோ அணைவுச் சேர்மமாக MoCl2(NAr)2(இருமெத்தாக்சியீத்தேன்) மாறுகிறது. இந்த அணைவுச் சேர்மம் சிராக் கார்பீன் எனப்படும் Mo(OR)2(NAr)(CH-t-Bu) வகை உலோகக் கார்பனுக்கு முன்னோடிச் சேர்மமாகக் கருதப்படுகிறது. தொடர்புடைய சேர்மங்கள் மாலிப்டினம் இருபுளோரைடு ஈராக்சைடு இதனுடன் தொடர்புடைய ஒரு சேர்மமாகும். இது வெண்மை நிறத்தில் காணப்படுகிறது. மேற்கோள்கள் பகுப்பு:ஆக்சி குளோரைடுகள் பகுப்பு:மாலிப்டினம்(VI) சேர்மங்கள்
மாதவ் சவான்
https://ta.wikipedia.org/wiki/மாதவ்_சவான்
மாதவ் சவான் (Madhav Chavan) (பிறப்பு 1954) ஓர் சமூக ஆர்வலரும் மற்றும் தொழில்முனைவோரும் ஆவார். இவர் இலாப நோக்கற்ற பிரதம் என்ற நிறுவனத்தின் இணை நிறுவனரும் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியாகவும் உள்ளார். இந்தியா முழுவதும் உள்ள ஆதரவற்ற குழந்தைகளுக்கு அடிப்படை வாசிப்பு, எழுதுதல் மற்றும் எண்கணிதம் ஆகியவற்றைக் கற்பிப்பதை நோக்கமாகக் கொண்ட ரீட் இந்தியா என்ற பிரச்சாரத்தையும் இவர் தொடங்கினார். கல்வித் துறையில் ஒரு சமூக தொழில்முனைவோர் அமைப்பாக அதன் புதுமை மற்றும் தலைமைத்துவத்திற்காக 2011 ஆம் ஆண்டு ஸ்கோல் விருதைப் பெற்றார். மேலும், இருபது ஆண்டுகளுக்கும் மேலாக பல்லாயிரக்கணக்கான பின்தங்கிய குழந்தைகளின் கற்றல் தேவைகளை வெற்றிகரமாக பூர்த்தி செய்ததன் விளைவாக, மேம்பாட்டு ஒத்துழைப்பில் 2013 பிபிவிஏ அறக்கட்டளை அறிவு எல்லைகள் விருதைப் பெறுள்ளார். 2012 ஆம் ஆண்டில் சவான் கல்விக்கான உலகக் கண்டுபிடிப்பின் உச்சி மாநாட்டில் முன்னணி-சமூக-பங்களிப்பாளர் விருதை பெற்றுள்ளார். செயல்பாட்டுத் துறையில் முன்மாதிரியான பணிக்காக இந்தியாவின் மிக உயர்ந்த விருதான் இது கல்வித் துறையில் நோபல் பரிசுக்கு சமமானதாகக் கருதப்படுகிறது. 2011 ஆம் ஆண்டு சமூக தொழில்முனைவோருக்கான ஸ்கோல் விருதையும் பெற்றார். ஆரம்ப கால வாழ்க்கை மாதவ் சவான் மகாராட்டிராவில் யஷ்வந்த் சவான் என்பவருக்கு மகனாகப் பிறந்தார். இவரது தந்தை விளாதிமிர் லெனினால் ஈர்க்கப்பட்டு லால் நிஷான் என்ற கட்சியை நிறுவியவர். மாதவ் சவான் காரில் உள்ள பிபிஎம் உயர்நிலைப் பள்ளியிலும் ஜெய் இந்த் கல்லூரியிலும் படித்தார். மும்பையில் உள்ள அறிவியல் தொழிநுட்ப நிறுவனத்தில் வேதியியலில் இளம் அறிவியல் மற்றும் முது அறிவியல் பட்டம் பெற்றார். மேலும் இவர் 1983 இல் ஒகையோ மாநில பல்கலைக்கழகத்தில் வேதியியலில் முனைவர் பட்டமும் பெற்றுள்ளார். தொழில் 1989 இல் மும்பை சேரிகளில் தேசிய எழுத்தறிவுத் திட்டத்தில் வயது வந்தோருக்கான கல்வியறிவை வழங்குவதற்காகான பிரதம் என்ற திட்டத்தில் ஈடுபடுவதற்கு முன்பு மாதவ் சவான் ஐக்கிய அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தின் ஹியூஸ்டன் பல்கலைக்கழகம் மற்றும் மும்பை, வேதியியல் தொழில்நுட்ப நிறுவனம்ஆகியவற்றில் வேதியியலைக் கற்பித்தார். 1983ல் இந்தியா திரும்பிய இவர் சில வருடங்கள் தூர்தர்ஷனுக்காக கல்வியறிவுத் திட்டங்களைத் தயாரித்த பிறகு, மும்பையின் சேரிகளில் கற்பிக்க ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் திட்டத்தில் பணியாற்ற அழைக்கப்பட்டார். மாதவ் சவான் 2004 முதல் 2008 வரை தேசிய ஆலோசனைக் குழுவின் உறுப்பினராக இருந்தார் இந்திய அரசாங்கத்தின் அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் தலைமைக் குழுவின் உறுப்பினராகவும் உள்ளார். மேலும், அதன் நான்கு அரையாண்டு கூட்டு மறுஆய்வு பணிகளில் உறுப்பினராக உள்ளார். தனிப்பட்ட வாழ்க்கை மாதவ் சவான் பழைய உலக சர்வதேசத் திரைப்படங்களின் தீவிர ரசிகர். தொழில்முறை புகைப்படக் கலைஞரான இவர், மராத்தியில் 'சம்பவ்' என்ற புத்தகத்தை எழுதியுள்ளார். மேற்கோள்கள் வெளி இணைப்புகள் www.prathaminstitute.org Interview பகுப்பு:1954 பிறப்புகள் பகுப்பு:வாழும் நபர்கள் பகுப்பு:சமூக சேவகர்கள்
கோர்மனைட்டு
https://ta.wikipedia.org/wiki/கோர்மனைட்டு
கோர்மனைட்டு (Gormanite) என்பது (Fe,Mg)3Al4(PO4)4(OH)6·2H2O என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு பாசுபேட்டு வகை கனிமமாகும். 1922 முதல் 2020 ஆம் ஆண்டுகள் வரையிலான காலத்தில் வாழ்ந்த தொராண்டோ பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் தொனால்டு எர்பர்ட்டு கோர்மன் நினைவாக கனிமத்திற்கு கோர்மனைட்டு என்று பெயரிடப்பட்டுள்ளது. கோர்மனைட்டை பன்னாட்டு கனிமவியல் நிறுவனம் Gm என்ற குறியீட்டால் அடையாளப்படுத்துகிறது தோற்றம் கோர்மனைட்டு கனிமம் முதன்முதலில் 1981 ஆம் ஆண்டு கனடாவின் யூகோன் பிரதேசத்தில் உள்ள டாசன் சுரங்க மாவட்டத்தில் ரேபிட் கிரீக்கு மற்றும் பிக் பிசு நதியில் காணப்பட்டதாக விவரிக்கப்பட்டது. இவ்விடங்களில் இது இரும்பு பாசுபேட்டு கணுக்களில் இழைகளாக காணப்பட்டது. பிசுபீ, அரிசோனா பகுதிகளில் இது ஒரு தோனலைட்டு பாறைப் பிளவுகளில் ஊடுருவி பெரிய படிகங்களாக இருந்தது. அமெரிக்காவின் நியூபோர்ட்டு நகரம், சல்லிவன் மாகாணம், நியூ ஆம்சையர் குரோட்டன், கிராப்டன் மாகாணம் போன்ற பகுதிகளிலும் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நமீபியாவின் கரிபிப்பிற்கு தெற்கே உள்ள தீப்பாறைகளிலும் கோர்மனைட்டு கிடைப்பதாக பதிவாகியுள்ளது. மேற்கோள்கள் புற இணைப்பு OpticalMineralogy.org பகுப்பு:அலுமினியம் கனிமங்கள் பகுப்பு:மக்னீசியக் கனிமங்கள் பகுப்பு:இரும்பு(II) கனிமங்கள் பகுப்பு:பாசுப்பேட்டு கனிமங்கள் பகுப்பு:முச்சரிவச்சுக் கனிமங்கள்
துல் கஃதா
https://ta.wikipedia.org/wiki/துல்_கஃதா
துல் கஃதா (Dhu al-Qa'dah, ) என்பது இசுலாமிய நாட்காட்டியின் 11-ஆவது மாதமாகும். இது "இருக்கும் இடத்தின் உரிமையாளர்" என்று பொருள்படலாம் - உட்கார்ந்திருக்கும் போது ஆக்கிரமிக்கப்பட்ட இடம். போர் தடைசெய்யப்பட்ட இசுலாத்தின் நான்கு புனித மாதங்களில் இதுவும் ஒன்றாகும், எனவே இது "போர்நிறுத்தங்களின் ஆசான்" என்று அழைக்கப்படுகிறது. உதுமானியரின் காலத்தில், துருக்கிய மொழியில் இது "சில்கேட்" (Zi'l-ka'dé) ஆகும். காலம் இசுலாமிய நாட்காட்டி என்பது ஒரு சந்திர நாட்காட்டி ஆகும், அமாவாசையின் முதல் பிறை பார்க்கும்போது மாதங்கள் தொடங்கும். இசுலாமிய சந்திர நாட்காட்டி ஆண்டு வெப்பமண்டல ஆண்டை விட 11 முதல் 12 நாட்கள் குறைவாக இருப்பதால், பருவங்கள் முழுவதும் துல்-கதா இடம்பெயர்கிறது. சவூதி அரேபியாவின் உம்முல்-குரா நாட்காட்டியின் அடிப்படையில் துல்-கதாவின் மதிப்பிடப்பட்ட தொடக்க, முடிவு தேதிகள் பின்வருமாறு:Umm al-Qura calendar of Saudi Arabia +2022-2026 காலப்பகுதியில் துல்-கஃதா நாட்கள்ஹிஜ்ரி (AH)முதலாவது நாள் (பொஊ/கிபி)கடைசி நாள் (பொஊ/கிபி)144331 மே 202229 சூன் 2022144421 மே 202318 சூன் 202314459 மே 20246 சூன் 2024144629 ஏப்பிரல் 202527 மே 2025144718 ஏப்பிரல் 202617 மே 2026 இசுலாமிய நிகழ்வுகள் 5 ஹிஜ்ரி – அகழ்ப்போரில் முசுலிம்கள் பங்கேற்றனர். 7 ஹிஜ்ரி – முதலாவது புனிதப் பயணம் - முகம்மது நபியும் அவரது தோழர்களும் உம்ராவிற்காக மக்கா திரும்பினர். 8 துல் கஃதா – ஹிஜ்ரி 8-ல் ஹஜ் முசுலிம்களுக்குக் கடமையாக்கப்பட்டது. 25 துல் கஃதா – கஃபாவின் அடியில் பூமி போடப்பட்ட நாள், இப்றாகீமும், இயேசுவும் பிறந்த நாள். மேற்கோள்கள் வெளி இணைப்புகள் Islamic-Western Calendar Converter (Based on the Arithmetical or Tabular Calendar) 92
காலமுறைத் தொடர்வரிசை
https://ta.wikipedia.org/wiki/காலமுறைத்_தொடர்வரிசை
கணிதத்தில், காலமுறைத் தொடர்வரிசை அல்லது காலமுறைத் தொடர்முறை (periodic sequence) என்பது ஒரே உறுப்பானது மீண்டும் மீண்டும் வருகின்ற ஒரு தொடர்வரிசை ஆகும். இத்தொடர் வரிசையானது சில சமயங்களில் "சுழல்" (cycle) அல்லது "வட்டணை" (orbit) எனவும் அழைக்கப்படுகிறது. காலமுறைத் தொடர்வரிசையின் வடிவம்: a1, a2, ..., ap,  a1, a2, ..., ap,  a1, a2, ..., ap, ... மீளும் உறுப்புகளின் எண்ணிக்கை p ஆனது தொடர்வரிசையின் "காலமுறை இடைவெளி" (period) (அதிர்வெண்) எனப்படும்.Ultimately periodic sequence வரையறை p காலமுறை இடைவெளி கொண்ட ஒரு காலமுறைத் தொடர்வரிசை a1, a2, a3, ... ஆனது n இன் எல்லா நேர்ம முழுவெண் மதிப்புகளுக்கும், an+p = an என்ற முடிவை நிறைவுசெய்யும். இயல் எண் கணத்தை ஆட்களமாகக் கொண்ட சார்பாகத் தொடர்வரிசையைக் கருதினால், காலமுறைத் தொடர்வரிசையானது, காலமுறைச் சார்பின் சிறப்பு வகையாகும். p இன் எந்தவொரு மிகச்சிறிய மதிப்பிற்குத் தொடர்வரிசையானது p-காலமுறைத் தொடர்வரிசையாக அமைகிறதோ அம்மதிப்பு "மிகச்சிறிய காலமுறை இடைவெளி" அல்லது மிகச்சரியான "காலமுறை இடைவெளி" எனப்படும். எடுத்துக்காட்டுகள் ஒவ்வொரு மாறிலிச் சார்பின் காலமுறை '1' ஆகும். என்ற தொடர்வரிசையின் மிகச்சிறிய காலமுறை '2'. 1/7 இன் பதின்ம வடிவ விரிவு '6' காலமுறையளவுள்ள தொடர்வரிசை: பொதுவாகவே, எந்தவொரு விகிதமுறு எண்ணின் பதின்ம பின்ன விரிவானது இறுதியில் சுழற்சியுள்ள தொடர்வரிசையாக இருக்கும் -1 இன் அடுக்குகளின் தொடர்வரிசை '2' காலமுறையுள்ள தொடர்வரிசையாகும்: எந்தவொரு ஒன்றின் படிமூலத்தின் அடுக்குகளாகவும் அமையும் தொடர்வரிசையானது காலமுறையானதாக இருக்கும். இதேபோல ஒரு குலத்தின் முடிவுறு வரிசைகொண்ட உறுப்புகளின் அடுக்குகளாக அமையும் தொடர்வரிசைகளும் காலமுறைத் தொடர்வரிசைகளாக இருக்கும். முற்றொருமைகள் பகுதிக் கூட்டுத்தொகை k, m<p இரண்டும் இயல் எண்கள். பகுதிப் பெருக்கற்பலன் k, m<p இரண்டும் இயல் எண்கள். 0, 1 காலமுறையுள்ள தொடர்வரிசைகள் 0, 1 காலமுறையுள்ள தொடர்வரிசைகளை முக்கோணவியல் சார்புகளின் கூட்டலாக எழுதலாம்: ஏற்ற [[ஒன்றின் படிமூலம்|ஒன்றின் படிமூலத்திற்கு, டி மாவரின் வாய்ப்பாட்டைப் பயன்படுத்தி மேலுள்ளவற்றை நிறுவலாம். பொதுவாக்கங்கள் ஒரு தொடர்வரிசையின் துவக்கத்திலுள்ள சில எண்களை நீக்குவதன்மூலம் அதனைக் காலமுறையினதாக மாற்றக்கூடியதாக இருந்தால், அத்தொடர்வரிசையானது "இறுதியாகக் காலமுறைத் தொடர்வரிசை" (eventually periodic sequence) எனப்படும். எடுத்துக்காட்டு: 1 / 56 = 0 . 0 1 7  8 5 7 1 4 2  8 5 7 1 4 2  8 5 7 1 4 2  ... ஒரு தொடர்வரிசையானது, (k போதுமான அளவு பெரியதாக இருக்க வேண்டும்) என்பதை நிறைவு செய்தால் "அறுதியானக் காலமுறைத் தொடர்வரிசை" (ultimately periodic sequence) எனப்படும் ஒரு தொடர்வரிசையின் உறுப்புகள் மற்றொரு காலமுறைத் தொடர்வரிசையின் உறுப்புகளை அணுகுமானால் அத்தொடர்வரிசையானது, "அணுகல் காலமுறைத் தொடர்வரிசை" (asymptotically periodic sequence) எனப்படும். எடுத்துக்காட்டு: x1, x2, x3, ... என்பது அணுகும் காலமுறைத் தொடர்வரிசையாக இருக்கவேண்டுமானால, என்பதை நிறைவு செய்யும் வகையில் மற்றொரு காலமுறைத் தொடர்வரிசை a1, a2, a3, ... இருக்க வேண்டும். எடுத்துக்காட்டு: 1 / 3,  2 / 3,  1 / 4,  3 / 4,  1 / 5,  4 / 5,  ... இதன் உறுப்புகள், 0, 1, 0, 1, 0, 1, ....என்ற காலமுறைத் தொடர்வரிசையின் உறுப்புகளை அணுகுவதால், இது ஒரு அணுகும் காலமுறைத் தொடர்வரிசையாகும். மேற்கோள்கள் பகுப்பு:தொடர்களும் தொடர்வரிசைகளும்
இசைவான எண்கள்
https://ta.wikipedia.org/wiki/இசைவான_எண்கள்
thumb| (220,284) இரண்டும் நட்பு எண்களாக உள்ளதைக் கோல்களைக்கொண்டு விளக்கும் படம் இசைவான எண்கள் (Amicable numbers) என்பவை ஒன்றின் தகுவகுஎண்களின் கூட்டுத்தொகையானது மற்ற எண்ணுக்குச் சமமாகவுள்ள இரு இயல் எண்களாகும். s(a)=b ; s(b)=a (s(n)=σ(n)-n என்பது n இன் தகுவகுஎண்களின் கூட்டுத்தொகை) எனில், a,b இரண்டும் இசைவான எண்கள். இசைவான எண்களின் மிகச்சிறிய சோடி (220, 284). 220 இன் தகுவகுஎண்கள்: 1, 2, 4, 5, 10, 11, 20, 22, 44, 55, 110 இவற்றின் கூட்டுத்தொகை: 1+2+4+5+10+11+20+22+44+55+110 = 284; 284 இன் தகுவகுஎண்கள் 1, 2, 4, 71 142. இவற்றின் கூட்டுத்தொகை: 1+2+4+71+142 = 220. இசைவான எண்களின் முதல் பத்து சோடிகள்: (220, 284), (1184, 1210), (2620, 2924), (5020, 5564), (6232, 6368), (10744, 10856), (12285, 14595), (17296, 18416), (63020, 76084), and (66928, 66992). . இசைவான எண்களைக்கொண்ட சோடிகளின் எண்ணிக்கை முடிவற்றதா இல்லையா என்பது கண்டறியப்படவில்லை. ஒரு சோடி இசைவான எண்கள், காலமுறை இடைவெளியானது 2 ஆகவுள்ள தகு வகுஎண்களின் கூட்டுத் தொடர்வரிசையாக இருக்கும். தனது தகுவகுஎண்களின் கூட்டுத்தொகைக்குச் சமமாகவுள்ள எண்ணானது, ஒரு நிறைவெண்ணாகும். நிறைவெண்களின் தொடர்வரிசையின் காலமுறை இடைவெளி '1' ஆகும். 2 ஐவிடப் பெரிய காலமுறை இடைவெளிகொண்ட தொடர்வரிசையிலுள்ள எண்கள் இணக்க எண்களாக இருக்கும். ஏப்பிரல் 15, 2024 நாள்வரையிலான தகவலின்படி, 1,228,940,050 விற்கும் அதிகமான இசைவான எண்களின் சோடிகள் உள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது. குறிப்புகள் மேற்கோள்கள் வெளி இணைப்புகள் (database of all known amicable numbers) பகுப்பு:வகுஎண் சார்பு பகுப்பு:முழுஎண் தொடர்வரிசைகள்
சைதை துரைசாமி
https://ta.wikipedia.org/wiki/சைதை_துரைசாமி
வழிமாற்றுசைதை சா. துரைசாமி
பல்லமகாதேவி
https://ta.wikipedia.org/wiki/பல்லமகாதேவி
பல்லமகாதேவி (Ballamahadevi) (இறப்பு 1285) அலுபா வம்சத்தின் ராணி ஆட்சியாளராக இருந்தார். இவர் மனபாரநேஸ்வரர் குடும்பத்தில் பிறந்தார். இவர் மன்னர் வ்லராபந்திதேவாவை மணந்தார். 1275-ஆம் ஆண்டில் இவர் விதவையாகிவிட்டார். இவர் தனது இளம் மகன் மன்னர் நாகதேவராசாவுடன் இணைந்து அரியணை ஏறினார். இவர் தனது உரிய வயது பெறாத மகனின் ஆட்சிக்காலத்தின் போது வெறுமனே ஆட்சியாளராக இருக்கவில்லை-கல்வெட்டுகள் அவர் தனது கணவருக்குப் பிறகு தனது சொந்த உரிமையில் ஒரு முழு ஆட்சியாளராக இருந்ததாகவும், இவரது மகனின் இணை மன்னராக இருந்ததாகவும் தெளிவாகக் கூறுகின்றன. இவர் மகாராஜாதிராஜா என்ற ஆண் பட்டத்தையும், அலுபாக்கள் பயன்படுத்திய அனைத்து இறையாண்மை பட்டங்களையும் பயன்படுத்தினார். 1277 ஆம் ஆண்டின் ஒரு கல்வெட்டு, ராணி நீருவர-பகவதி தேவிக்கு பரிசுகளை வழங்கியதாக பதிவு செய்கிறது. இவர் தனது அனைத்து அமைச்சர்களுடனும் (சமஸ்தா-பிரதானரு), தேசி-புருஷர்கள், பஹத்தாரா-நியோகிகள் மற்றும் பூசாரிகளுடன் பராகன்யபுரத்தில் உள்ள தனது பிரதான அரண்மனையிலிருந்து ஆட்சி செய்தார். குறிப்புகள் மேற்கோள்கள் ஆபிரகாம் எராலி, முதல் வசந்தம்-இந்தியாவின் பொற்காலம் தெற்கு கனடாவின் வரலாறு, விரிவாக்க சேவைகள் மற்றும் வெளியீடுகள் துறை கர்நாடகா பல்கலைக்கழகம், DHARWAR.3 பகுப்பு:இந்திய அரச குடும்பப் பெண்கள்
பிறழ் புரதப்படிவு நோய்
https://ta.wikipedia.org/wiki/பிறழ்_புரதப்படிவு_நோய்
வழிமாற்றுபுரதப்படிவு நோய்
பழுப்பு மீன்கொத்தி
https://ta.wikipedia.org/wiki/பழுப்பு_மீன்கொத்தி
பழுப்பு மரங்கொத்தி (Sombre kingfisher-தோடிராம்பசு புனிப்ரிசு) என்பது அல்செடினிடே குடும்பத்தில் உள்ள ஒரு பறவை சிற்றினம் ஆகும். இது இந்தோனேசியாவின் வடக்கு மலுக்குவில் உள்ள ஹல்மஹேரா தீவில் மட்டுமே காணப்படும் அகணிய உயிரி. சோம்ப்ரே மரங்கொத்தியின் இயற்கை வாழிடம் மிதவெப்ப மண்டல அல்லது வெப்ப மண்டல ஈரமான தாழ் நிலக் காடுகள், மிதவெப்ப மண்டல அல்லது வெப்ப மண்டல சதுப்புநிலக் காடுகள், மிதவெப்பமண்டல அல்லது வெப்ப மண்டல சதுப்பு நிலங்கள் மற்றும் தோட்டங்கள் ஆகும். இது வாழ்விட இழப்பால் அச்சுறுத்தப்படுகிறது. விளக்கம் பழுப்பு மரங்கொத்தி ஒப்பீட்டளவில் பெரிய மீன்கொத்தி போன்று 28 செ.மீ. நீளமுடையது. இது வெள்ளை வயிறு மற்றும் கழுத்துடன் ஆலிவ் முதல் கருப்பு மேல் பகுதிகளுடன் கருமை கலந்த வெண் நிறத்தைக் கொண்டுள்ளது. அலகு அடர் நிறத்திலானது. இதன் ஓசை மெதுவான 'கி-கி-கி'; என மூன்று உரத்த சத்தத் தொடர்களைக் கொண்டதாகும். பரவல் பழுப்பு மரங்கொத்தி ஹல்மஹேரா மட்டுமே காணப்படுகிறது. இங்கு இது முதன்மைக் காடுகள், சதுப்புநிலக் காடுகள், முதிர்ந்த இரண்டாம் நிலை வனப்பகுதி மற்றும் சதுப்பு நிலங்களுக்கு அருகில் வாழ்கிறது. இது பயிரிடப்பட்ட பகுதிகளுக்கு இரைதேடிச் செல்லலாம். காப்பு இந்த சிற்றினம் 1931 முதல் இந்தோனேசியச் சட்டத்தின் கீழ் பாதுகாக்கப்படுகிறது. பல பாதுகாக்கப்பட்ட பகுதிகளிலிருந்து இவை பயனடைகின்றன. இருப்பினும், இது பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியலில், தற்போது தீவாய்ப்புக் கவலை குறைந்த இனமாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. மேற்கோள்கள் வெளி இணைப்புகள் பறவையின இனங்கள் உண்மைத் தாள். இணைய பறவை சேகரிப்பு பகுப்பு:இந்தோனேசியப் பறவைகள் பகுப்பு:மரங்கொத்திகள்
எரெமோப்டெரிக்சு
https://ta.wikipedia.org/wiki/எரெமோப்டெரிக்சு
எரெமோப்டெரிக்சு (Eremopterix) என்பது அலௌடிடே குடும்பத்தைச் சேர்ந்த சிட்டுக்குருவி சிற்றினம் ஆகும். இந்த வானம்பாடி குருவிகள் ஆப்பிரிக்காவிலும் இந்தியத் துணைக்கண்டத்திலும் காணப்படுகின்றன. வகைப்பாட்டியல் தற்போதுள்ள இனங்கள் எரேமோப்டெரிக்சு பேரினத்தில் தற்பொழுது பின்வரும் சிற்றினங்கள் உள்ளன. படம்விலங்கியல் பெயர்பொதுப் பெயர்பரவல்120x120pxஎரெமோப்டெரிக்சு ஆசுட்ராலிசுகருங்காது வானம்பாடிதெற்கு போட்ஸ்வானா, நமீபியா, தென்னாப்பிரிக்கா120x120pxஎரெமோப்டெரிக்சு கோவாமடகாசுகர் வானம்பாடிமடகாசுகர்.120x120pxஎரெமோப்டெரிக்சு நிக்ரைசெப்சுகருந்தலை வானம்பாடிமவுரித்தேனியா மத்திய கிழக்கு வழியாக வடமேற்கு இந்தியா வரை120x120pxஎரெமோப்டெரிக்சு லுகோடிசுகசுகொட்டை முதுகு வானம்பாடிசகாரா பாலைவனத்தின் தெற்கே ஆப்பிரிக்கா120x120pxஎரெமோப்டெரிக்சு கிரிசெசுசாம்பல் தலை வானம்பாடிதெற்காசியா120x120pxஎரெமோப்டெரிக்சு சிக்னேட்டசுகசுகொட்டை தலை வானம்பாடிகிழக்கு மற்றும் வடகிழக்கு ஆப்பிரிக்கா120x120pxஎரெமோப்டெரிக்சு வெர்டிகலிஸ்சாம்பல் முதுகு வானம்பாடிதெற்கு மற்றும் தெற்கு-மத்திய ஆப்பிரிக்கா180x180pxஎரெமோப்டெரிக்சு லூகோபாரெயாபிசர் வானம்பாடிமத்திய கென்யா முதல் கிழக்கு சாம்பியா, மலாவி மற்றும் வடமேற்கு மொசாம்பிக் முன்னாள் இனங்கள் முன்னதாக, சில வகைப்பாட்டியலாளர்கள் பின்வரும் சிற்றினத்தினை (அல்லது துணையினம்) எரேமோப்டெரிக்சு பேரினத்தின் கீழ் வகைப்படுத்தியிருந்தனர்.: அரேபிய வானம்பாடி (பைருகுலாடா எரிமோடைடிசு) மேற்கோள்கள் பகுப்பு:பறவைப் பேரினங்கள்
புலித்தேவன் (தமிழ்ப் போராளி)
https://ta.wikipedia.org/wiki/புலித்தேவன்_(தமிழ்ப்_போராளி)
சீவரட்ணம் புலிதேவன் (Seevaratnam Pulidevan) என்பவர் தமிழீழ விடுதலைப் புலிகளின் சமாதான செயலகத்தின் தலைவராக இருந்தவர். இவர் விடுதலைப் புலிகள் சார்பாக அமைதிப் பேச்சுவார்த்தைகளை நடத்தினார். இவருடன் சேர்ந்து வெள்ளைக் கொடி நிகழ்வின்போது பாலசிங்கம் நடேசன், ரமேஷ் ஆகியோர் கொல்லப்பட்டனர். மேற்கோள்கள் பகுப்பு:ஈழ விடுதலைப் போராளிகள் பகுப்பு:விடுதலைப் புலிகளின் போராளிகள் பகுப்பு:2009 இறப்புகள்
நிக்கல் அசைடு
https://ta.wikipedia.org/wiki/நிக்கல்_அசைடு
நிக்கல் அசைடு (Nickel azide) என்பது Ni(N3)2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும் நிக்கல் டெட்ராகார்பனைல் மற்றும் அயோடின் அசைடு ஆகியவற்றுக்கு இடையேயான வினை மூலம் இச்சேர்மம் உருவாகும். 2Ni(CO)4 + 2IN3 → Ni(N3)2 + NiI2 + 8CO பண்புகள் நிக்கல் அசைடு நீர்க் கரைசல் 292 நானோமீட்டரில் உச்சத்துடன் புற ஊதாக் கதிர்களில் அதிக உறிஞ்சுதலைக் கொண்டுள்ளது. இக்கரைசல் 394, 656 மற்றும் 720 நானோமீட்டரில் காணக்கூடிய ஒளி உறிஞ்சுதல் உச்சங்களைக் கொண்ட எக்சா அக்குவாநிக்கல் நேர்மின் அடனிகளையும் கொண்டுள்ளது. தொடர்புடைய நிகோட்டினிக் அமிலம் மற்றும் நிகோட்டினேட்டு கலப்பு எதிர்மின் அயனி சேர்மம் அசைடின் மீது (μ-1,1) என்ற முடிவில் பாலம் அமைத்து ஒருங்கிணைகிறது. மேலும் அணைவுக்குள் இருக்கும் நிக்கல் மற்றும் நைட்ரசனுக்கு இடையே ஓர் அசாதாரண கோணம் அமைகிறது. எல்லா அசைடுகளையும் போல நிக்கல் அசைடும் வெடிக்கும் தன்மை கொண்டிருக்கிறது. மேற்கோள்கள் பகுப்பு:நிக்கல் சேர்மங்கள் பகுப்பு:அசைடுகள்
கருப்புசாமிக் காசித்தும்பை
https://ta.wikipedia.org/wiki/கருப்புசாமிக்_காசித்தும்பை
கருப்புசாமிக் காசித்தும்பை (Impatiens karuppusamyi) என்பது 2023-ஆம் ஆண்டு களக்காடு பகுதியில் கண்டறியப்பட்ட காசித்தும்பைச் செடியினம். இது களக்காடு பகுதியில் மட்டுமே கண்டறியப்பட்டுள்ளதால் இதைக் களக்காட்டுக் காசித்தும்பை எனலாம். வகைப்பாடும் பரம்பலும் காசித்தும்பைப் பேரினத்தைச் சேர்ந்த செடிகள் ஆப்பிரிக்கா, மடகாசுக்கர், தென்னிந்தியா, இலங்கை ஆகிய பகுதிகளில் காணப்படுகின்றன. அவற்றுள் இந்தியாவில் 280 இனங்கள் கீழை இமயமலையிலும், மேற்குத் தொடர்ச்சி மலையிலும் உள்ளன. அவற்றுள் 106 இனங்கள் மேற்குத் தொடர்ச்சி மலையில் மட்டுமே காணும் அகணிய இனங்கள். அவற்றுள் 80 விழுக்காட்டுக்கும் மேல் அச்சுறுத்தலுக்குள்ளான இனங்களாவன. அவற்றுள் இலையறு தண்டுள்ளி (scapigerous) இனங்களான 36 இனங்கள் மிகமிக அரிதானவை. இவை தென்னிந்தியாவிலும் இலங்கையிலும் மட்டுமே வளர்கின்றன. அவற்றுள் அகத்தியமலைப் பகுதியில் திருநெல்வேலிக் காசித்தும்பை (I. tirunelvelliensis), கொம்புக் காசித்தும்பை (I. bicornis), குறுந்தண்டுக் காசித்தும்பை (I. acaulis) ஆகியன ஏற்கனவே அறியப்பட்டிருந்தன. களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்தில் ஆய்வில் ஈடுபட்டிருந்த பால்ராசு செல்வா, வெள்ளிங்கிரி இரவிச்சந்திரன் ஆகியோர் கொண்ட குழுவினர் பாறையொன்றில் வளர்ந்திருந்த காட்டுத்தும்பைச் செடியை ஆய்வு செய்தபோது அது அப்பகுதியில் எதிர்பார்க்கக்கூடிய கொம்புக் காசித்தும்பையை ஒத்து இருந்தாலும் குறிப்பிடத்தக்க வேறுபாடுகள் இருப்பதைக் கண்டுபிடித்தனர். அதுவரை பதிவாகாத புது இனம் என நிறுவி, தாவரவியலாளர் கருப்புசாமியின் பெயரால் அறிவியற் பெயரில் சிற்றினத்திற்கு கருப்புசாமியி எனப் பெயரிட்டனர். Impatiens எனும் பேரினம் காசித்தும்பைகளுக்கானது. தோற்றம் கொம்புக் காசித்தும்பை போன்ற தோற்றத்தைக் கொண்டிருக்கும் கருப்புசாமிக் காசித்தும்பையின் இலைகள் சற்றே சிறிய அளவின. ஆறு முதல் 8 மலர்கள், சிறு தரைப்பூக்காம்பில் (scape) காணப்படும். மலர்கள் 1 செ.மீ. விட்டம் கொண்டவை. பூந்துகள் அடர்செம்மஞ்சள் நிறத்தில் இருக்கும். வல்லாரை போன்ற இலைவடிவம் இருக்கும். 0.4 மி.மீ. பருமனுள்ள கிழங்குபோல் உருண்ட, சதைப்பற்றுள்ள வேர்கள் இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்கின்றன. சூழியல் பாறைவாழிகளான கருப்புசாமிக் காசித்தும்பைகள் மலைப்பாசிகளினூடே வளர்பவை. பிற குறுந்தண்டுக் காசித்தும்பைகளைப் போலவே குறுகிய மழைக்காலத்தில் மட்டும் தளைத்து மடிந்துவிடுபவை. இதனாலேயே இவ்வினங்கள் மிகவும் அச்சுறுதலுக்குள்ளானவை. மேற்கோள்கள் பகுப்பு:அகணியத் தாவரங்கள் பகுப்பு:தமிழ்நாட்டின் தாவரவளம்
கென் சிமிசு
https://ta.wikipedia.org/wiki/கென்_சிமிசு
கென் சிமிசு (Ken Shimizu) யப்பானைச் சேர்ந்த ஆபாச திரைப்பட நடிகர். 10,000 திரைப்படங்களில் 10,000 பெண்களுடன் பாலியல் உறவு கொண்டவர் என்ற பெருமையை இவர் பெற்றுள்ளார். வாழ்க்கை மற்றும் தொழில் செப்டம்பர் 1, 1979 இல் பிறந்தார். யப்பானிய நேர்பாலீர்ப்பு ஆண்களுக்கான பட்டி (பாடி) என்ற இதழின் ஜூலை 1998 இதழில் 18 வயதில் வடிவழகராக தனது முதல் தோற்றத்தை வெளிப்படுத்தினார். பின்னர் சிறிது காலத்திற்குப் பிறகு 2002 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் இவர் 1,200 வயது வந்தோருக்கான காணொளியில் தோன்றியதாகக் கூறப்படுகிறது. சிமிசு ஓரினச்சேர்க்கை வயது வந்தோருக்கான திரைப்படங்களை உருவாக்குகிறார். மேலும், ஓரினச்சேர்க்கையாளர்களிடையே பிரபலமான நபராக உள்ளார். இவரும் யோசியா மினாமியும் மே 2003 இல் நடிகைகள் இட்டோமி சினா மற்றும் மரிகோ கவானாவுடன் ஒன்றாகத் தோன்றினர். 2007 முதல் ஆண்-சார்ந்த திட்டத்தில், இவர் யப்பானிய ஆபாச பட நடிகர் நட்சுயா டோகாவாவுடன் இணைந்து ஒரு தொகுப்பில் தோன்றினார். மேற்கோள்கள் பகுப்பு:வாழும் நபர்கள் பகுப்பு:1979 பிறப்புகள்
மலேசிய தரைப்படை
https://ta.wikipedia.org/wiki/மலேசிய_தரைப்படை
மலேசிய தரைப்படை ஆங்கிலம்: Malaysian Army; மலாய்: Tentera Darat Malaysia) என்பது மலேசிய பாதுகாப்பு படைகளில் உள்ள மூன்று படைப்பிரிவுகளில் பெரிய பிரிவாகும். மலேசியாவின் எல்லை கண்காணிப்பு, உள்நாட்டு பாதுகாப்பு, அமைதி நிலைநாட்டல், பயங்கரவாத எதிர்ப்புப் பணிகளில் பெரும் பங்கு வகிக்கிறது. இயற்கைச் சீற்றங்களின்போது மீட்புப்பணி, நலப் பணிகளிலும் ஈடுபடுகின்றது. மலேசியத் தரைபடை மலேசிய தற்காப்பு அமைச்சின் நேரடி கட்டுப்பாட்டின் கீழ் இயங்குகிறது. மலேசிய இராணுவத்தில் மலேசிய தரைப்படை மட்டும் ‘அரச’ என்ற பட்டத்தைப் பெறவில்லை. இருப்பினும், தேர்ந்தெடுக்கப்பட்ட இராணுவப் படைகள் மற்றும் படைப்பிரிவுகளுக்கு ‘அரச’ பட்டம் வழங்கப்படுகிறது. மற்ற மலேசிய கடற்படை; மலேசிய வான்படை ஆகிய இரு படைகளும் ‘அரச’ என்ற பட்டத்துடன் செயல்படுகின்றன. சுல்தான் இப்ராகிம் இசுகந்தர் தலைமைத் தளபதியாக பொறுப்பு வகிக்கிறார். வரலாறு 1 மார்ச் 1861-இல், பினாங்கு தன்னார்வ ரைபிள் பிரிவு (Penang Volunteer Rifle) எனும் பெயரில் மலேசியாவின் முதல் இராணுவப் பிரிவு தோற்றுவிக்கப்பட்டது. அதன் பின்னர் 1915 முதல் 1936 வரை மற்றும் ஒரு பிரிவு இயங்கியது. அதன் பெயர் மலாயா மாநிலங்களின் தன்னார்வ ரைபிள் பிரிவு (Malay States Volunteer Rifle). 1933 ஆம் ஆண்டு சனவரி 23-ஆம் தேதி, மலாயா கூட்டமைப்பு மாநிலங்களின் தலைமை மன்றம், மலாய் படையணி (Malay Regiment) சட்ட முன்வரைவை நிறைவேற்றியபோது நவீன மலேசிய இராணுவப்படை தோன்றியது. அதைத் தொடர்ந்து, மார்ச் 1, 1933-இல், 25 இளைஞர்களைக் கொண்டு மலாய் இராணுவத்தில் ஒரு தற்காலிகப் பிரிவு உருவாக்கப்பட்டது. இரண்டாம் உலகப் போர் இந்தப் படைப்பிரிவு 1 சனவரி 1938-இல் மலாயா சிப்பாய் படைப்பிரிவின் முதல் படைத்துறைப் பிரிவு என முழு படைத்துறைப் பிரிவாகத் தொடர்ந்தது. மலாயாவில் இரண்டாம் உலகப் போர் தொடங்குவதற்கு ஆறு நாட்களுக்கு முன்பு, 1941 டிசம்பர் 1 அன்று இரண்டாம் படையணி நிறுவப்பட்டது. இந்த இரண்டு படைத்துறைப் பிரிவுகளும் சப்பானிய இராணுவத்திற்கு எதிரான போரில் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தின. போருக்குப் பிறகு, நாடு கம்யூனிச அச்சுறுத்தலால் பாதிக்கப்பட்டது. மற்றும் 1948-இல் அவசரகாலநிலை அறிவிக்கப்பட்டது. 1950 வாக்கில் மலாயா சிப்பாய் படைப்பிரிவின் பலம் ஏழு படைத்துறைகளாக அதிகரிக்கப்பட்டது. அமைப்பு உத்திசார்ந்த அமைப்பு thumb|சிங்கப்பூர் போர் நடைபெறுவதற்கு முன்னர் மலேசியத் தரைப்படையினரின் போர்ப் பயிற்சிகள். மலேசியத் தரைப்படையில் தற்போது 18 படைப்பிரிவு (Corps) மற்றும் படை அணிகள் (Regiments) உள்ளன. இவை 3 முக்கிய கூறுகளாக தொகுக்கப்பட்டுள்ளன; போர்ப் பிரிவு போர்முனை ஆதரவுப் பிரிவு ஆதரவு பிரிவு ஐந்து பெரும் பிரிவுகள் மலேசிய தரைப்படையின் அனைத்துப் பிரிவுகளும் மற்றும் படை அணிகளும் தற்போது ஐந்து பெரும் பிரிவுகளாக (Divisions) உள்ளன. இந்த ஐந்து பிரிவுகளில் 2-ஆவது, 3-ஆவது மற்றும் 4-ஆவது பிரிவு எனும் மூன்று பிரிவுகளும் தீபகற்ப மலேசியாவில் மேற்கு கள இராணுவ தலைமையகத்தின் கீழ் வைக்கப்பட்டுள்ளன. மற்ற இரண்டு பிரிவுகளான 1-ஆவது பிரிவு மற்றும் 5-ஆவது பிரிவு; கிழக்கு மலேசிய போர்னியோவை அடிப்படையாகக் கொண்டவை. அவை கிழக்கு கள இராணுவ தலைமையகத்தின் கீழ் வைக்கப்பட்டுள்ளன. 21-ஆவது சிறப்பு சேவைக் குழு (இராணுவத்தின் சிறப்புப் படைகள்), 10-ஆவது வான்குடை படைப்பிரிவு மற்றும் இரண்டு இராணுவ விமானப் படைப்பிரிவுகள் சுதந்திரமான அமைப்புகளாகும். தரவரிசை அமைப்பு மலேசிய இராணுவம் பிரித்தானிய இராணுவத்திடம் இருந்து பெறப்பட்ட தரவரிசை அமைப்பைப் பயன்படுத்துகிறது. மலேசிய இராணுவ தரவரிசை அமைப்பு அடிநிலை (Private) முதல் ஜெனரல் (General) வரை 17 நிலைகளைக் கொண்டுள்ளது. இந்த தரவரிசைகள் 2 முக்கிய குழுக்களாக பிரிக்கப்பட்டுள்ளன: அதிகாரி (Officer); மற்றும் பிற தரவரிசைகள் (Other Ranks). இதில் படைத்துறைப் பணி வகிக்காத அதிகாரி (Non-Commissioned Officer) தரவரிசைகள் அடங்கும். இராணுவத் தரவரிசை பதவிபொதுஅதிகாரிமார்சல்அட்மிரல்லெப்டினன்ட் ஜெனரல்மேஜர் ஜெனரல்பிரிகேடியர் ஜெனரல்கர்னல்லெப்டினன்ட் கர்னல்மேஜர்கேப்டன்லெப்டினன்ட்இரண்டாவது லெப்டினன்ட்போர் வீரர்கள்மலாய் பெயர் Fil Marsyal Jeneral Leftenan Jeneral Mejar Jeneral Brigedier Jeneral Kolonel Leftenan Kolonel Mejar Kapten Leftenan Leftenan Muda Pegawai Kadetதோள்கச்சை 50px 50px 50px 50px 50px 50px 50px 50px 50px 50px 50px பதவிஅதிகாரிகள்; வீரர்கள்வாரண்ட் அதிகாரி Iவாரண்ட் அதிகாரி IIபணியாளர் சார்ஜென்ட்சார்ஜென்ட்கார்போரல்சிப்பாய்பிரைவேட்.மலாய் பெயர் Pegawai Waran I Pegawai Waran II Staf Sarjan Sarjan Koperal Lans Koperal Prebetகைப்பட்டை 50px 50px 50px 50px 50px 50px படைப் பிரிவுகள் மலேசியத் தரைப்படை 18 படைப்பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது: இந்த 18 படைப்பிரிவுகள் போர் துருப்புக்கள், போர் ஆதரவு துருப்புக்கள் மற்றும் ஆதரவுப் படைகள் என பிரிக்கப்பட்டு உள்ளன: thumb|ACV-300 தரைப்படை வாகனம் thumb|மலேசிய இராணுவ வீரர்கள் thumb|அரச மலாய் ரெஜிமென்ட் கெளரவ காவலர் thumb|தரைப்படையினரின் செயல்விளக்கம் thumb|தரைப்படையினரின் கவச வாகனச் செயல்விளக்கம் போர்ப் படை அரச மலாய் படையணி(Rejimen Askar Melayu DiRaja)- முதன்மையான படை; முக்கியமாக மலாய்க்காரர்களைக் கொண்டது; மொத்தம் 25 படைத்துறைப் பிரிவுகள்: 20 தரைப்படைத்துறைப் பிரிவுகள், 2 இயந்திரமய தரைப்படைதுறைப் பிரிவுகள், 2 வான்வழி படைத்துறைப் பிரிவுகள்; ஒரு தளவாட ஆதரவு படைத்துறைப் பிரிவு; 10-ஆவது வான்வழிப் படைத்துறை அரச ரேஞ்சர் படையணி(Rejimen Renjer DiRaja) - முதன்மைப் படை: 9 படையணிகள் எல்லைப் படையணி (Rejimen Sempadan) - 2008-இல் நிறுவப்பட்டது; நாட்டின் எல்லைகளில் நிறுத்தப்பட்டுள்ளது; 2008-க்கு முன், உள்நாட்டு பாதுகாப்பு தயார்நிலை படையணி. கவச வாகன படையணி(Kor Armor DiRaja) - 5 படையணிகள்: 4 கவச வாகன படையணிகள், 1 போர் முனை படையணி போர்முனை ஆதரவுப் படை அரச பீரங்கி படையணி(Rejimen Artileri Diraja) - தரைப்படைகள், வான் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு ஆதரவுப் படையணி அரச தகவல் தொடர்பு படையணி(Rejimen Semboyan Diraja) - தகவல் செயல்பாடுகள், தகவல் தொடர்பு உத்திகள், மின்னணு செயல்பாடுகள், ராடார் முன் எச்சரிக்கை படையணி அரச இராணுவ காவலர் படையணி(Kor Polis Tentera DiRaja) - இராணுவ ஒழுக்கத்தைப் பேணுதல்; மற்ற வீரர்களின் நடத்தையைக் கட்டுப்படுத்துதல்; இராணுவ இடங்களைப் பாதுகாத்தல்; படையினரின் குற்றச் செயல்களைக் கையாளுதல் அரச இயந்திர படையணி(Rejimen Askar Jurutera DiRaja) - இலக்குகளை வெடிக்கச் செய்வது; வெடிக்கச் செய்து இராணுவ வசதிகளை உருவாக்குவது அரச மின்சார இயந்திர படையணி(Kor Jurutera Letrik dan Jentera DiRaja)- இராணுவ வாகனங்கள், மின் உற்பத்தி வசதிகள் போன்றவற்றைப் பழுது பார்ப்பது அரச ஆபத்து படையணி(Kor Risik DiRaja)- உளவு பார்த்தல்; இராணுவச் சூழ்நிலைகளைக் கண்காணித்தல்; எதிர்-உளவு உத்திகள்; உளவியல் தந்திரங்களில் நிபுணத்துவப் பணிகள் ஆதரவுப் படை அரச ஆயுதப் படையணி (Kor Ordnans DiRaja)- வெடிமருந்துகள், மருந்து, உணவு மற்றும் பிற பொருட்களைப் போர்முனைக்கு கொண்டு செல்லுதல் பொதுச் சேவை படையணி(Kor Perkhidmatan Am)- இராணுவ மேலாண்மைப் பணிகள் அரச மருத்துவவ் படையணி(Kor Kesihatan DiRaja) - மருத்துவர்கள்; மருத்துவச் சேவைகள்; அறுவை சிகிச்சைகள; கள மருத்துவமனைகள் அரச சேவை படையணி(Kor Perkhidmatan DiRaja)- தளவாட சேவைகளை; வீரர்கள் போக்குவரத்து; வாகனங்களின் பாகங்களை சரிசெய்தல் சமயத்துறை படையணி(Kor Agama Angkatan Tentera)- இராணுவத்தில் மத விழாக்க: மத விவகாரங்களைக் கையாளும் பொறுப்பு தயார்நிலைக் குழு வத்தானியா வீரர்கள் படையணி(Rejimen Askar Wataniah)- இரண்டாம் நிலை தன்னார்வத் தேசிய பாதுகாப்புப் படை; எந்த நேரத்திலும் நாட்டுக்குச் சேவை செய்யும் பொதுமக்கள சார்ந்த படையணி சிறப்புப்பணிக் குழு சிறப்பு நடவடிக்கை படையணி (Pasukan_Gerakan_Khas Rejimen Gerak Khas) - தந்திர உத்திகள், பயங்கரவாத எதிர்ப்புத் தந்திரங்கள்; சிறப்பு இராணுவ பணிகள்; உயரடுக்கு போர் வீரர்கள். வான் தரைப்படை அணி(Pasukan Udara Tentera Darat)- உலுங்கூர்தி போக்குவரத்து; வான்வழி ஆதரவு; வான்வழி உளவு வான் தரைப்படை அணி thumb|right|அகசுதாவெசுட்லேண்ட் AW109 இலகுரக உலங்கூர்திகள். மலேசியத் தரைபடை ஆங்கிலம்: Army Air Corps; மலாய்: Pasukan Udara Tentera Darat) அரச மலேசிய விமானப்படை அதிகாரிகளைக் கொண்டு இந்த வான் தரைப்படை அணி இயங்குகிறது. வான் தரைப்படை அணி ஒரு புதிய அணியாகும். இந்த அணி போக்குவரத்துத் திறன், வான் ஆதரவு, இலகுரக உலங்கூர்திகளைப் பயன்படுத்தி உளவு பார்ப்பது போன்ற செயல்களுக்குப் பொறுப்பு வகிக்கிறது.. இந்த அலகு தற்போது மூன்று படைப்பிரிவுகளைக் கொண்டுள்ளது. 881 வான் படைப்பிரிவு 882 வான் படைப்பிரிவு 883 வான் படைப்பிரிவு வான் தரைப்படை அணியின் படைத் தளம் ஜொகூர், குளுவாங் நகர்ப் பகுதியில் உள்ளது. 2019-ஆம் ஆண்டில், இந்த வான் அணியில் 10 அகசுதாவெசுட்லேண்ட் AW109 இலகுரக உலங்கூர்திகள்; மற்றும் 14 சிகோர்சுகி S61A-4 நடுத்தர உலங்கூர்திகள்; கூடுதலாகச் சேர்க்கப்பட்டன. 882 வான் படைப்பிரிவில் அதன் பழைய சிகோர்சுகி S61A-4 க்கு பதிலாக புதிய சிகோர்சுகி UH-60 பிளாக்ஆக் உலங்கூர்திகளைப் பெற்றது. அதே வேளையில், 2022-ஆம் ஆண்டில், 883 வான் படைப்பிரிவில் 6 MD530G ரக இலகு ரக உலங்கூர்திகள் சேர்க்கப்பட்டன. மலேசிய தரைப்படையின் தளவாடங்கள் தகரிகள் மாதிரி படம் தயாரிப்பு வகை மாதிரி எண்ணிக்கை விவரங்கள் PT-91 இலகு தகரி 150px முதன்மை போர் தகரி PT-91M 48சுடுகலன்: 125 மி.மீ. குழல் விட்டம் - 2A46MS தகரி சுடுகலன் FV-101 சுகார்பியன் இலகு தகரி 150px இலகு தகரி 26 சுடுகலன்: 90 மி.மீ. குழல் விட்டம்(மீட்கப்பட்டு விட்டது) மேற்கோள்கள் மேலும் காண்க மலேசிய பாதுகாப்பு படைகள் ஜொகூர் அரச இராணுவப் படை மலேசிய காவல் துறை வெளி இணைப்புகள் Malaysian Army Official Website Malaysian Armed Forces Official Website Malaysian Ministry of Defence Official Website
அர்த்தனாரி (திரைப்படம்)
https://ta.wikipedia.org/wiki/அர்த்தனாரி_(திரைப்படம்)
வழிமாற்று அர்த்தநாரி (1946 திரைப்படம்)
வாக்கு எண்ணிக்கை
https://ta.wikipedia.org/wiki/வாக்கு_எண்ணிக்கை
வாக்கு எண்ணிக்கை (Vote counting) என்பது ஒரு தேர்தலில் வாக்காளர்கள் செலுத்திய வாக்குகளை எண்ணும் செயல்முறையாகும். இது கைமுறையாகவோ அல்லது இயந்திரங்கள் மூலமாகவோ நடைபெறலாம். அமெரிக்காவில், தேர்தல் அறிக்கைகளை தொகுத்தல் மற்றும் உத்தியோகபூர்வ முடிவுகளுக்கு அடிப்படையாக இருக்கும் முடிவுகளை சரிபார்ப்பது கேன்வாசிங் என்று அழைக்கப்படுகிறது. கைமுறை எண்ணிக்கை இடது|thumb|கைமுறை வாக்கு எண்ணிக்கை, 2015 இல் வாக்குச் சீட்டு முறையில் நடைபெறும் தேர்தல்களைக் கைமுறை எண்ணிக்கையால் கணக்கிடப்படுகின்றன. வாக்குப்பெட்டிகள் மற்றும்/அல்லது உறைகளிலிருந்து வெளியே எடுக்கப்பட்டு, பின்னர் முடிவுகள் கணக்கிடப்படுகின்றன.History of Voting Technology from PBS's The NewsHour with Jim Lehrer தானியங்கு எண்ணிக்கை பயன்படுத்தப்பட்ட சமயங்களில் தேர்தல் தணிக்கைக்காகவும் மறு எண்ணிக்கைக்காகவும் கைமுறை எண்னிக்கை பயன்படுத்தப்படுகிறது. இயந்திரக் கணக்கீடு வாக்குப்பதிவு இயந்திரங்களில் வாக்காளர்கள் தங்களுக்கு விருப்பமான வாக்காளர்களை பொத்தானை அழுத்துவதன் மூலம் தேர்வு செய்கிறார்கள். வாக்குப் பதிவு இயந்திரங்களில் உள்ள முடிவுகள் எனும் பொத்தானை அழுத்துவதன் மூலம் அந்த வாக்குச்சாவடியில் பதிவான ஒட்டுமொத்த வாக்குகளைக் கணக்கிட முடியும். இம்முறையில் தனி நபர்கள் வாரியாக வாக்கு எண்ணிக்கை செய்ய இயலாது. மேற்கோள்கள் பகுப்பு:வாக்களிப்பு பகுப்பு:காணொளிக் கோப்பு உள்ள கட்டுரைகள் பகுப்பு:தேர்தல்
பொது விடுமுறை
https://ta.wikipedia.org/wiki/பொது_விடுமுறை
ஒரு பொது விடுமுறை (public holiday) தேசிய விடுமுறை நாள் என்பது அலுவல்பூர்வமான விடுமுறை நாளினைக் குறிக்கிறது. நாடு வாரியாக பொது விடுமுறை நாட்கள் சில நாடுகளில், சில அல்லது அனைத்துப் பொது விடுமுறை நாட்களையும் ஊதியத்துடன் கூடிய விடுமுறை நாளாக அறிவிப்பதற்கான சட்டங்கள் உள்ளன. சில நாடுகள் ஊதியத்துடன் விடுமுறை வழங்கினாலும் அதிகாரப்பூர்வ சட்டங்கள் இல்லாமல் உள்ளன. இவை, நாடு மற்றும் ஆண்டுகளைப் பொறுத்து மாறுபடலாம். 36 நாட்களை பொது விடுமுறையாகக் கொண்ட நேபாளம், அதிக எண்ணிக்கையிலான பொது விடுமுறை நாடுகளைக் கொண்ட நாடாக உள்ளது, ஆனால் அங்கு ஆறு நாட்கள் ஒரு வாரத்தில் வேலை நாட்களாக உள்ளன. 21 தேசிய விடுமுறை நாட்களைக் கொண்டு இந்தியா இரண்டாவது இடத்திலும், கொலம்பியா மற்றும் பிலிப்பைன்ஸ் தலா 18 தேசிய விடுமுறை நாட்களையும் கொண்டுள்ளன. அதேபோல், சீனா ஆங்காங்கில்ஆண்டுக்கு 17 பொது விடுமுறைகள் உள்ளன. நியூசிலாந்து நியூசிலாந்தில் 12 சட்டப்பூர்வ பொதுவிடுமுறை நாட்கள் உள்ளன. பொதுவிடுமுறை நாட்களில் ஒருவர் வேலை செய்தால் வழக்கமாக வழங்கப்படும் ஊதியத்தினை விட 1.5 மடங்கு அதிக ஊதியம் கொடுக்கப்பட வேண்டும். மேற்கோள்கள் பகுப்பு:பொது விடுமுறைகள்
தேர்தல் சின்னம்
https://ta.wikipedia.org/wiki/தேர்தல்_சின்னம்
thumb|கேரளாவின் முராள் பகுதியில் வரையப்பட்டுள்ள இந்திய தேசிய காங்கிரசின் தேர்தல் சின்னமான கைச் சின்னம் தேர்தல் சின்னம் (electoral symbol) என்பது ஒரு நாட்டின் தேர்தல் ஆணையத்தால் ஒரு சுயாதீன வேட்பாளர் அல்லது அரசியல் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட ஒரு தரப்படுத்தப்பட்ட சின்னமாகும். பயன்பாடு கட்சிகள் தங்களுக்கு வாக்களிக்க வேண்டும் என்று வாக்கு சேகரிப்பின் போது சின்னங்களைப் பயன்படுத்தப்படுகின்றன. மேலும், ஒரு வாக்காளர் தொடர்புடைய கட்சிக்கு வாக்களிக்க ஒரு அடையாளத்தை உருவாக்க வேண்டியதற்காக வாக்குச் சீட்டுகளில் இவை அச்சிடப்படுகின்றன. வாக்குச் சீட்டுகளில் வேட்பாளர்களின் பெயர்களைப் படிக்க முடியாத கல்வியறிவற்ற மக்களால் வாக்களிக்க உதவுவதே இதன் முதன்மையான நோக்கங்களில் ஒன்றாகும். இந்தியாவில், தேர்தல் சின்னங்கள் இந்தியத் தேர்தல் ஆணையத்தால் ஒதுக்கப்படுகின்றன, இதில் கட்சியின் சித்தாந்தம் மற்றும் நிலைப்பாட்டைக் காட்சிப்படுத்தும் உருப்படிகள் உள்ளன. தேசியக் கட்சியாக நியமிக்கப்பட்ட ஒரு கட்சிக்கு ஒதுக்கப்பட்ட சின்னத்தை நாட்டில் உள்ள பிற கட்சிகள் பயன்படுத்த முடியாது. ஒரு மாநிலத்தில் ஒரு மாநில கட்சிக்கு ஒதுக்கப்பட்ட சின்னம் மற்றொரு மாநிலத்தில் வெவ்வேறு மாநிலக் கட்சிக்கு ஒதுக்கப்படலாம். மேற்கோள்கள் பகுப்பு:தேர்தல்
தேர்தல் நாள்
https://ta.wikipedia.org/wiki/தேர்தல்_நாள்
thumb|400x400px| தேர்தல் நாள் (Election day) அல்லது வாக்குப்பதிவு நாள் என்பது பொதுத் தேர்தல் நடைபெறும் நாள் ஆகும். பல நாடுகளில், அதிகமான வாக்காளர்கள் பங்கேற்க முடியும் என்பதனால் பொதுத் தேர்தல்கள் எப்போதும் சனி அல்லது ஞாயிற்றுக்கிழமைகளில் நடத்தப்படுகின. பிற நாடுகளில் வார நாட்களில் தேர்தல் நடைபெறுகிறது. சில நாடுகள் தேர்தல் நடைபெறும் நாளினை பொது விடுமுறையாக அறிவிக்கின்றன. நாடு/பிரதேசம் வாரியாக தேர்தல் நாள் நாடு/மாகாணம்பிராந்தியம்தேர்தல் நாள்ஐரோப்பாஞாயிறு "THE ELECTORAL CODE OF THE REPUBLIC OF ALBANIA." Law no. 10 019. December 29, 2008.தென் அமெரிக்காஅக்டோபர் மாத நான்காம் ஞாயிற்றுக் கிழமை ஐரோப்பாஞாயிறு அல்லது பொது விடுமுறை ஓசியானியாஞாயிறு ஐரோப்பாஞாயிறு (1894 வரை செவ்வாய்).தென் அமெரிக்காஞாயிறு ஐரோப்பாஞாயிறு தென் அமெரிக்காஅக்டோபரின் முதல் ஞாயிறு ஐரோப்பாஞாயிறு வட அமெரிக்காஅக்டோபர் மாத மூன்றாம் திங்கள்.தென் அமெரிக்காஞாயிறு தென் அமெரிக்காஞாயிறுஐரோப்பாவெள்ளி- சனி.ஐரோப்பாசனிவட அமெரிக்காஞாயிறுஐரோப்பாஞாயிறுஐரோப்பாபெரும்பான்மையாக செவ்வாய்தென் அமெரிக்காஞாயிறுவட அமெரிக்காஞாயிறுஐரோப்பாமார்ச் மாத முதல் ஞாயிறுஐரோப்பாஞாயிறுஐரோப்பாஞாயிறு ஐரோப்பாஞாயிறு அல்லது பொது விடுமுறைஐரோப்பாஞாயிறு ஆசியாஞாயிறுஐரோப்பாஞாயிறுஐரோப்பாசனி ஆசியாபல்வேறு நாட்களில் நடைபெறும். 2019 இந்தியப் பொதுத் தேர்தல் வியாழக் கிழமை தொடங்கியது. 7 பருவங்களாக நடைபெற்றது. ஒவ்வொரு பருவத்திற்கும் ஆறு நாட்கள் இடைவெளி இருந்தது.ஆசியாவிடுமுறை நாட்களில்ஆசியாவெள்ளிஐரோப்பாபெரும்பான்மையாக வெள்ளிஆசியாஅலுவல்பூர்வ நாள் செவ்வாய்க்கிழமை ஆனால் பல நாட்களில் நடைபெறுகிறது. தேர்தலின் போது பொது விடுமுறை.ஐரோப்பாஉள்ளூர்த் தேர்தல்கள் ஞாயிறு, நாடாளுமன்றத் தேர்தல்கள் திங்கள் ஆசியாஞாயிறு ஐரோப்பாசனி.ஆசியாஞாயிறு ஐரோப்பாபெரும்பான்மையாக ஞாயிறுஐரோப்பாஞாயிறு ஆசியாஞாயிறு ஐரோப்பாஞாயிறு, ஆனால் கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக நாளுமன்றத் தேர்தல் மூன்ரு வார நாட்களில் நடைபெற்றது.ஐரோப்பாசனி.ஆசியாசனிவட அமெரிக்கா 2018 வரை சூலை மாத முதல் ஞாயிறு, 2021 முதல் சூன் மாத முதல் ஞாயிறு ஐரோப்பாஞாயிறுஐரோப்பா பெரும்பான்மையாக புதன், ஐரோப்பிய நாடாளுமன்றம் தேர்தல்களுக்கு வியாழன்.ஓசியானியசனி.வட அமெரிக்காஞாயிறு ஐரோப்பாசெப்டம்பர் மாத முதல் திங்கள் வட அமெரிக்காஞாயிறு தென் அமெரிக்காஞாயிறுதென் அமெரிக்காஞாயிறு ஆசியாமே மாத இரண்டாம் திங்கள்ஐரோப்பாஞாயிறு ஐரோப்பாஞாயிறு வட அமெரிக்காநவம்பர் மாத முதல் செவ்வாய்ஐரோப்பாஞாயிறுஐரோப்பாஞாயிறு ஐரோப்பாஞாயிறுஆசியாசனி, ஆனால் வார நாட்களில் தேர்தல் வந்தால் பொது விடுமுறையாக அறிவிக்கப்படும்ஐரோப்பாசனி.ஐரோப்பாஞாயிறு ஆசியாபெரும்பான்மையாக புதன் (பொது விடுமுறை).ஐரோப்பாபொதுத் தேர்தலுக்கு குறிப்பிட்ட நாள்கள் இல்லை என்றாலும் 1986 முதல் ஞாயிறு நடைபெறுகிறது நகராட்சி அல்லது மாகாணத் தேர்தல் எனில் மே மாத நான்காம் ஞாயிறு ஐரோப்பா செப்டம்பர் மாத இரண்டாம் ஞாயிறுஐரோப்பாசனி மற்றும் ஞாயிறு ஆசியாசனி.ஆசியாஞாயிறு ஐரோப்பாஞாயிறு ஐரோப்பாஞாயிறுஐரோப்பாசெவ்வாய் வட அமெரிக்காநவம்பர் மாத முதல் செவ்வாய்தென் அமெரிக்காஞாயிறுதென் அமெரிக்காஞாயிறு ஆசியாஞாயிறு மேற்கோள்கள் பகுப்பு:தேர்தல்
விஜயலலிதா
https://ta.wikipedia.org/wiki/விஜயலலிதா
விஜயலலிதா (Vijayalalitha) என்பவர் 1960கள், 1970களில் தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி படங்களில் தோன்றிய ஓர் இந்திய நடிகை ஆவார். ராணி மேரா நாம் (1972), பாஸிகர் (1972) சாக்ஷி (1967) ஆகிய படங்களில் நடித்ததற்காக இவர் மிகவும் பிரபலமானவர். இவர் அரசியல்வாதியாக மாறிய தெலுங்கு உச்ச நட்சத்திரமான விஜயசாந்தியின் சித்தி ஆவார். துவக்ககால வாழ்க்கையும், பின்னணியும் விஜயலலிதா நடிகை விஜயசாந்தியின் உறவினராவார். விஜயலலிதாவின் அக்காளின் மகள்தான் விஜயசாந்தி. விஜயலலிதா 860 திரைப்படங்களில் நடித்துள்ளார். தொழில் விஜயலலிதா 1960கள், 1970களில் பல தெலுங்கு படங்களில் நடித்துள்ளார். தமிழ், மலையாளம், கன்னடம், ஒரு சில இந்தி திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இவர் தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் "பெண் ஜேம்ஸ் பாண்ட்" என்று சிறப்பாக அறியப்பட்டார். மேலும் பல தமிழ் திரைப்படங்களில் "தென்னிந்திய ஜேம்ஸ் பாண்ட்" நடிகர் ஜெய்சங்கருடன் பல படங்களில் ஜோடியாக நடித்துள்ளார். வல்லவன் ஒருவன் படத்தில் இவரது நடனம் இடம்பெற்ற "பளிங்கினால் ஒரு மாளிகை" என்ற பாடல் இதுவரை பசுமையாக நினைக்கப்படுகிறது. ஜெய்சங்கருடன் இவர் இணைந்து நடித்த நீலகிரி எக்ஸ்பிரஸ், கண்ணன் வருவான், காலம் வெல்லும், மாப்பிள்ளை அழைப்பு, நூற்றுக்கு நூறு, நில் கவனி காதலி, அக்கா தங்கை, பட்டணத்தில் பூதம், வல்லவன் ஒருவன், நேர் வாழி, டெல்லி முதல் மெட்ராஸ் வரை போன்றவை மறக்கமுடியாத தமிழ் திரைப்படங்களில் சில ஆகும். இவர் பல பெண் மையம் சார்ந்த திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும் திரைப்படப் படப்பிடிப்புக்கு உரிய நேரத்திற்கு வருவதற்காக பெயர் பெற்றவர். தெலுங்கு திரைப்படங்களில் என். டி. ராமா ராவ் மற்றும் அக்கெனேனி நாகேஸ்வர ராவ் ஆகியோருடன் தொடர்ந்து நடித்துள்ளார். இவர் தெலுங்கு திரைப்படமான ஒக்க நரி ஒந்த துப்பாக்குலு (1973) என்ற படத்தை தயாரித்து, கதாநாயகியாகவும் நடித்தார். இவர் 1977 முதல் 1981 வரை தனது தொழில் வாழ்வில் உச்சத்தில் இருந்து அதிக திரைப்படங்களில் நடித்தார். ஒரு குறுகிய காலத்திற்குள், அவர் ஒரு அதிரடி கதாநாயகியாக பரபரப்பை ஏற்படுத்தினார். சில தமிழ் திரைப்படங்களில் இவர் திமிர்பிடித்த, எதிர்மறை பாத்திரங்களில் நடித்தார். இவர் நாகேசுடன் தேன் கின்னம், ஹலோ பார்ட்னர் மற்றும் எம். ஜி. ராமச்சந்திரனுடன் காதல் வாகனம் ஆகிய படங்களில் நடித்தார். இவர் சாந்தி நிலையம். படத்தில் "ஷீலா" என்ற திமிர்பிடித்த பெண்ணை சித்தரித்தார். 3 தசாப்தங்களாக, விஜயலலிதா 4 தென்னிந்திய மற்றும் இந்தி மொழிகளிலும் பிரதானமாக 860 திரைப்படங்களில் நடித்துள்ளார். தேர்ந்தெடுக்கப்பட்ட திரைப்படவியல் தமிழ் இந்த பட்டியல் முழுமையடையாது; இதை விரிவாக்கி அதன் மூலம் நீங்கள் உதவலாம். வள்ளி வரப் போறா (1995) அதிசயப் பிறவி (1989) செந்தூரப்பூவே (1988) விஷக்கன்னி (1985) துணிச்சல்காரி (1982) சி.ஐ.டி. விஜயா (1980) நல்லதொரு குடும்பம் (1979) சுப்ரபாதம் (1979) உங்களில் ஒருத்தி (1976) ஜெய் பாலாஜி (1976) ஓட்டல் சொர்க்கம் (1975) கைநிறைய காசு (1974) என்ன முதலாளி சௌக்யமா (1972) டில்லி டு மெட்ராஸ் (1972) மாப்பிள்ளை அழைப்பு (1972) கண்ணன் வருவான் (1972) சவாலுக்கு சவால் (1972) ஹலோ பார்ட்னர் (1972) கன் பைட் காஞ்சனா (1972) நான்கு சுவர்கள் (1971) நூற்றுக்கு நூறு (1971) தேன் கிண்ணம் (1971) மீண்டும் வாழ்வேன் (1971) எதிரொலி (1970) கல்யாண ஊர்வலம் (1970) காலம் வெல்லும் (1970) நம்மவீட்டு தெய்வம் (1970) பத்தாம் பசலி (1970) ரிவால்வர் ரீடா (1970) சொர்க்கம் (1970) திருடன் (1969) நில் கவனி காதலி (1969) சாந்தி நிலையம் (1969) அஞ்சல் பெட்டி 520 (1969) அக்கா தங்கை (1969) நேர்வழி (1968) காதல் வாகனம் (1968) நீலகிரி எக்ஸ்பிரஸ் (திரைப்படம்) (1968) எதிரிகள் ஜாக்கிரதை (1967) பக்த பிரகலாதா (1967) பட்டணத்தில் பூதம் (1967) வல்லவன் ஒருவன் (1966) காதல் படுத்தும் பாடு (1966) காட்டு மைனா (1963) மேற்கோள்கள் வெளி இணைப்புகள் Vijayalalitha-M3db മധുവിന്റെ പ്രമുഖ നായികമാർ Roudeelaku Roudeelu Full Movie in YouTube பகுப்பு:20 ஆம் நூற்றாண்டின் இந்திய நடிகைகள் பகுப்பு:மலையாளத் திரைப்பட நடிகைகள் பகுப்பு:தெலுங்குத் திரைப்பட நடிகைகள் பகுப்பு:தமிழ்த் திரைப்பட நடிகைகள் பகுப்பு:கன்னடத் திரைப்பட நடிகைகள் பகுப்பு:இந்தித் திரைப்பட நடிகைகள் பகுப்பு:இந்தியத் திரைப்பட நடிகைகள் பகுப்பு:வாழும் நபர்கள்
விஜய லலிதா
https://ta.wikipedia.org/wiki/விஜய_லலிதா
வழிமாற்று விஜயலலிதா
நையோபியம் இருசல்பைடு
https://ta.wikipedia.org/wiki/நையோபியம்_இருசல்பைடு
வனவிலங்கை வேட்டையாடுதல்
https://ta.wikipedia.org/wiki/வனவிலங்கை_வேட்டையாடுதல்
அரச மலேசிய கடற்படை
https://ta.wikipedia.org/wiki/அரச_மலேசிய_கடற்படை
அரச மலேசிய கடற்படை அல்லது மலேசிய கடற்படை ஆங்கிலம்: Royal Malaysian Navy (RMN); மலாய்: Tentera Laut Diraja Malaysia (TLDM) என்பது மலேசிய பாதுகாப்பு படைகளில் உள்ள மூன்று படைப்பிரிவுகளில் ஒரு பிரிவாகும். மலேசிய நாட்டின் முக்கிய பாதுகாப்பு படைகளில் ஒன்றாகத் திகழும் இந்தப் படை, கடல்சார் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு முக்கியத்துவம் வழங்குகிறது. நாட்டின் கடல் எல்லைகளைப் பாதுகாப்பது மற்றும் நாட்டின் பிற ஆயுதப் படைகளுடன் இணைந்து, போர் மற்றும் அமைதி காலங்களில் மலேசியாவின் எல்லைகளைப் பாதுகாத்து வருகிறது. அதே வேளையில், மலேசிய மக்கள்; மற்றும் மலேசியக் கடல்சார் நலன்களுக்கு எதிரான எந்தவோர் அச்சுறுத்தல் அல்லது ஆக்கிரமிப்பு நடந்தாலும் அவற்றைத் தடுத்து நிறுத்துவது இந்தப் படையின் முதன்மை இலக்கமாகும். அரச மலேசிய கடற்படை மலேசிய தற்காப்பு அமைச்சின் நேரடி கட்டுப்பாட்டின் கீழ் இயங்குகிறது. மலேசிய இராணுவத்தில், மலேசிய கடற்படையும்; மலேசிய வான்படையும் , ‘அரச’ என்ற பட்டத்துடன் செயல்படுகின்றன. அந்த வகையில், மலேசிய கடற்படை அதிகாரப்பூர்வமாக அரச மலேசிய கடற்படை என்று அழைக்கப்படுகிறது. பொது மலேசிய நாட்டின் 603,210 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்ட கடலோரப் பகுதிகள்; மற்றும் பிரத்தியேகப் பொருளாதார மண்டலங்களை உள்ளடக்கிய பகுதிகளைக் கண்காணிக்கும் பொறுப்பு மலேசிய கடற்படையிடம் வழங்கப்பட்டு உள்ளது. மலாக்கா நீரிணை மற்றும் சிங்கப்பூர் நீரிணை போன்ற நாட்டின் முக்கிய கடல்வழித் தொடர்புகளைக் கட்டுப்படுத்தும் பொறுப்பையும் மலேசிய கடற்படை கொண்டுள்ளது. தற்போது இசுப்ராட்லி தீவுகள் (Spratly Islands) நாடுகளுக்கு இடையிலான உரிமைக் கோரல்கள் பகுதியாக உள்ளது. அதன் காரணமாக, அந்தத் தீவுப் பகுதிகளில் தேசிய நலன்களையும் மலேசிய கடற்படை கண்காணிக்கிறது. வரலாறு மலாக்கா நீரிணையின் தன்னார்வ அரசக் கடற்படை மலாக்கா நீரிணையின் தன்னார்வ அரசக் கடற்படை (Straits Settlement Royal Naval Volunteer Reserve) என்பது தான் அரச மலேசிய கடற்படையின் தொடக்கப் புள்ளியாகும். 27 ஏப்ரல் 1934-இல், பிரித்தானிய காலனித்துவ அரசாங்கத்தால் தன்னார்வ அரசக் கடற்ப் படை சிங்கப்பூரில் உருவாக்கப்பட்டது. அந்தத் தன்னார்வ அரசக் கடற்படை சிங்கப்பூர் போரில், ஐக்கிய இராச்சியத்தின் அரச கடற்படைக்கு உதவியாக இருக்கவும்; மற்றும் சிங்கப்பூர், தீபகற்ப மலேசியாவின் பாதுகாப்பிற்காகவும் உருவாக்கப்பட்டது. அதன் உருவாக்கத்திற்குப் பின்னால் ஆசியாவில் அப்போது நடைபெற்று வந்த அரசியல் நிகழ்வுகளும் ஒரு காரணமாக இருந்தன. குறிப்பாக சப்பான் நாட்டின் எழுச்சியை எடுத்துக்காட்டாகக் கூறலாம். எச்எம்எஸ் லெபர்னம் 1938-இல், மலாக்கா நீரிணையின் தன்னார்வ அரசக் கடற்படை பினாங்கில் மேலும் ஒரு கிளையுடன் விரிவுபடுத்தப்பட்டது. 18 சனவரி 1935-இல், பிரித்தானிய கடற்படை சிங்கப்பூருக்கு ஒரு கப்பலைப் பரிசளிப்பு செய்தது. அந்தக் கப்பலின் பெயர் எச்எம்எஸ் லெபர்னம் (HMS Laburnum). மலாக்கா நீரிணையின் தன்னார்வ அரசக் கடற்படையின் தலைமையகத்திற்குச் சேவை செய்வதற்காக அந்தக் கப்பல் அனுப்பப்பட்டது. அந்தக் கப்பல் சிங்கப்பூர் தெலுக் ஆயர் படுகையில் இருந்து செயல்பட்டு வந்தது. இருப்பினும், இரண்டாம் உலகப் போரின் தொடக்கத்தில், பிப்ரவரி 1942-இல், எச்எம்எஸ் லெபர்னம் கப்பல், சப்பானியப் படைகளின் போர் விமானங்களின் குண்டுவீச்சிற்கு இலக்காகி மூழ்கடிக்கப்பட்டது. இரண்டாம் உலகப் போர் 1941-இல் ஆசியாவில் இரண்டாம் உலகப் போர் தொடங்கிய போது, மலாயா கடற்படை 1,450 வீரர்களைக் கொண்டிருந்தது. இரண்டாம் உலகப் போர் முழுவதும், மலாயா கடற்படை இந்திய மற்றும் பசிபிக் மண்டலங்களில், நேச நாட்டுப் படைகளுடன் இணைந்து பணியாற்றியது. 1945 இல் சப்பானிய சரணடைதலுடன் போர் முடிவடைந்தபோது, மலாயா கடற்படை 600 பணியாளர்கள் மட்டுமே இருந்தனர். அதனால் 1947-ஆம் ஆண்டில் மலாயா கடற்படை கலைக்கப்பட்டது. 1948-ஆம் ஆண்டு டிசம்பர் 24-ஆம் தேதி மலாயாவில் அவசரகால நிலை அறிவிக்கப்பட்டது. மலாயா அவசரகாலம் thumb|300px| 2022 கடற்படை தினத்தின் போது லூமுட் கடற்படை தளத்தில் கடற்படை கப்பலகள் பிரித்தானிய மலாயாவில்; மலாயா தேசிய விடுதலை படையினருக்கும் பொதுநலவாயப் படையினருக்கும் இடையே நடைபெற்ற ஒரு போரை மலாயா அவசரக் காலப் போர் என்று அழைக்கிறார்கள்.Siver, Christi L. "The other forgotten war: understanding atrocities during the Malayan Emergency." In APSA 2009 Toronto Meeting Paper. 2009., p.36 அத்துடன், மலாயா காலனித்துவ பிரித்தானியர்கள், மலாயா கம்யூனிஸ்டு கட்சியின் மீது தொடுத்த போர்க் காலத்தை மலாயா அவசரகாலம் என்று அழைக்கிறார்கள்.My Side of History by Chin Peng (Media Masters; Singapore, 2003) மலாயா அவசரகாலம் அறிவிக்கப்பட்டதும். மலாயா கடற்படை மீண்டும் செயல்படுத்தப்பட்டது. மலாயா கடற்படை தொடர்பான சட்டவிதிமுறைகள் 4 மார்ச் 1949-இல் காலனித்துவ சிங்கப்பூர் அரசிதழில் வெளியிடப்பட்டது. மேலும் அந்தப் படை சிங்கப்பூர் உட்லேண்ட்ஸில், முன்பு ஐக்கிய இராச்சியத்தின் அரச விமானப்படை இருந்த இடத்தில் குடியமர்த்தப்பட்டது. அரச மலாயா கடற்படை 1949-ஆம் ஆண்டில் தீபகற்ப மலேசியாவின் கடலோரப் பகுதியில் தீவிரமான கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டது. மலாயா கம்யூனிஸ்டு கட்சியின் ஆதரவாளர்கள், கடல் வழியாகப் பொருட்களைப் பெறுவதை நிறுத்துவதே முதன்மை நோக்கமாகும். அதன் பின்னர் மலாயா கடற்படை பற்பல மாற்றங்களைக் கண்டது. மலாயா அவசரகாலத்தின் போது, மலாயா கடற்படையின் சிறப்பான சேவைகளை அங்கீகரிக்கும் வகையில், இரண்டாம் எலிசபெத் அரசி "அரச மலாயா கடற்படை" என்ற பட்டத்தை, ஆகஸ்டு 1952-இல், வழங்கினார். கடற்படை தளங்கள் 600px|thumb|center|அரச மலேசிய கடற்படையின் தளங்கள். மலேசிய கடற்படையின் தலைமையகம், பேராக், லூமுட், கடற்படை தளத்தில் உள்ளது. லூமுட் கடற்படை தளம் அல்லது KD மலாயா என்று அழைக்கப்படுகிறது. லூமுட் கடற்படை தளமே மலேசிய கடற்படையின் முதன்மைத் தளமாகும். மலேசிய கடற்படையின் இதர தளங்கள்: தீபகற்ப மலேசியா thumb|right|பாசுகால் (PASKAL) சிறப்பு நடவடிக்கைகளுக்கான பணிக்குழு alt=|thumb| பாசுகால் (PASKAL) சிறப்பு நடவடிக்கைக குழுவினரின் உலங்கூர்தி செயல்பாடுகள் தஞ்சோங் கேலாங், குவாந்தான், பகாங் - (தலைமையகம், கடற்படை மண்டலம் I) தஞ்சோங் கெராக், லங்காவி, கெடா (தலைமையகம், கடற்படை மண்டலம் III) (KD Badlishah) தஞ்சோங் பெங்கேலி, ஜொகூர் (ஆட்சேர்ப்பு பயிற்சி மையம்) (PULAREK) (KD Sultan Ismail) தேசிய நீர்வரைவியல் மையம், இண்டா தீவு, சிலாங்கூர் (KD Sultan Abdul Aziz Shah) சுங்கை லுஞ்சு,ஜொகூர் பாரு, ஜொகூர் (KD Sri Medini) கிழக்கு மலேசியா செபங்கார், கோத்தா கினபாலு, சபா - (கிழக்கு கடற்படை தலைமையகம்; நீர்மூழ்கிக் கப்பல்களுக்கான தளம்) லபுவான், கூட்டாட்சிப் பகுதி சண்டக்கான், சபா - (தலைமையகம், கடற்படை மண்டலம் II) செம்பூர்ணா, சபா கூச்சிங், சரவாக் பிந்துலு, சரவாக் (கட்டுமானம் உறுதி செய்யப்பட்டது) துன் சரிபா ரோட்சியா கடல் தளம், செம்பூர்ணா, சபா - (நிரந்தர கடல் தளமாக மாற்றியமைக்கப்பட்டது) இந்தியப் பெருங்கடலுக்குள் கடற்படைக்கு கதிரலைக் கும்பா அணுகலை வழங்குவதற்காக கெடா, லங்காவி தீவில் மற்றொரு தளமும் கட்டப்பட்டு வருகிறது. பசிபிக் பெருங்கடலுக்கான தயார்நிலை அணுகல் லபுவான் மற்றும் செம்பூர்ணா, தளங்கள் வழியாக கிடைக்கிறது. கடற்பகுதி நிலையங்கள் 1983 லீமா நிலையம், இசுப்ராட்லி தீவுகள், (Swallow Reef); (Spratly Islands) 1986 உனிபார்ம் நிலையம், இசுப்ராட்லி தீவுகள், (Ardasier Reef); (Spratly Islands) 1986 மைக் நிலையம், இசுப்ராட்லி தீவுகள், (Mariveles Reef); (Spratly Islands) 1999 சியாரா நிலையம், இசுப்ராட்லி தீவுகள், (Erica Reef); (Spratly Islands) 1999 பாப்பா நிலையம், இசுப்ராட்லி தீவுகள், (Investigator Shoal); (Spratly Islands) தரவரிசை அமைப்பு பதவிஉயர் அதிகாரிகள்அதிகாரிகள் தளபதி இலக்சமணா துணை இலக்சமணா இளம் இலக்சமணா முதல் இலக்சமணா கேப்டன் கொமாண்டர் லெப்டிணன்ட் கொமாண்டர் லெப்டிணன்ட் லெப்டிணன்ட் மதியா லெப்டிணன்ட் மூடா பயிற்சி அதிகாரி 1 பயிற்சி அதிகாரி 2மலாய் பெயர் Laksamana Armada Laksamana Laksamana Madya Laksamana Muda Laksamana Pertama Kapten Komander Leftenan Komander Leftenan Leftenan Madya Leftenan Muda Pegawai Kadet Kanan Kadetதோள் பட்டை 50px 50px 50px 50px 50px 50px 50px 50px 50px 50px 50px 50px 50pxகைப்பட்டை 50px 50px 50px 50px 50px 50px 50px 50px 50px 50px 50px பதவிஅதிகாரிகள்; வீரர்கள்வாரண்ட் அதிகாரி 1வாரண்ட் அதிகாரி 2பிந்தாரா கானான்பிந்தாரா மூடாலசுகார் கானான் லசுகார் 1லசுகார் 2லசுகார் மூடாபயிற்சியாளர்மலாய் பெயர் Pegawai Waran I Pegawai Waran II Bintara Kanan Bintara Muda Laskar Kanan Laskar Kelas I Laskar Kelas II Laskar Muda Rekrutதோள் பட்டை 50px 50px 50px 50px 50px 50px 50px 50px நீர்மூழ்கிக் கப்பல்களுக்கான தளம் thumb|800px|center|செபங்கார், கோத்தா கினபாலு, சபாவில் நீர்மூழ்கிக் கப்பல்களுக்கான தளம் மேற்கோள்கள் மேலும் காண்க மலேசிய பாதுகாப்பு படைகள் ஜொகூர் அரச இராணுவப் படை மலேசிய காவல் துறை மேலும் படிக்க James Goldrick, Jack McCaffrie, Navies of South-East Asia: A Comparative Study (London: Routledge, 2012 ) வெளி இணைப்புகள் Official website of the Royal Malaysian Navy Official website of the Malaysian Armed Forces Official website of the Malaysian Ministry of Defence Commanders of the RMN Fleet of the RMN
மலேசிய கடற்படை
https://ta.wikipedia.org/wiki/மலேசிய_கடற்படை
வழிமாற்று அரச மலேசிய கடற்படை
பிராணயாமா
https://ta.wikipedia.org/wiki/பிராணயாமா
வழிமாற்று பிராணயாமம்
ஜான் ரத்தினம்
https://ta.wikipedia.org/wiki/ஜான்_ரத்தினம்
ஜான் ரத்தினம் (John Rathinam) என்பவர் 1885 ஆம் ஆண்டு அயோத்தி தாசருடன் இணைந்து திராவிட பாண்டியன் என்ற இதழை நிறுவியவர் ஆவார். இவ்விதழானது சென்னையில் இருந்த தீண்டத்தகாதவர்களின் துன்பங்களில் கவனம் செலுத்துகிற வகையில் நிறுவப்பட்டது. 1885 ஆம் ஆண்டு பேராயர் ஜான் ரத்தினம், பண்டிதர் அயோத்தி தாசருடன் இணைந்து திராவிடர் கழகம் என்ற ஆதி திராவிடர்களுக்கான அமைப்பையும் உருவாக்கினார்.hindutamil பகுப்பு:தலித் எழுத்தாளர்கள் மாலை நேரப் பள்ளிகள் ஜான் ரத்தினம் உருவாக்கிய திராவிட கழகம் சென்னையில் சிறிய அளவில் மாலை நேரப் பள்ளிகளை நடத்தி வந்தது. பிறகு அவர் ராயப்பேட்டை வெஸ்லி பள்ளியில் தலைமை ஆசிரியராகப் பொறுப்பேற்ற பிறகு அந்த அமைப்பின் பணிகள் படிப்படியாக நின்று போனது.https://www.vikatan.com/government-and-politics/iyodhee-thass-pandithar-a-pioneer-of-the-dravidian-movement-and-literature மேற்கோள்கள் பகுப்பு:தலித் எழுத்தாளர்கள் பகுப்பு:சென்னை எழுத்தாளர்கள் பகுப்பு:இந்தியப் பதிப்பாளர்கள்பகுப்பு:தமிழ் எழுத்தாளர்கள்
இசுப்ராட்லி தீவுகள்
https://ta.wikipedia.org/wiki/இசுப்ராட்லி_தீவுகள்
இசுப்ராட்லி தீவுகள் ஆங்கிலம்: Spratly Islands; மலாய்: Kepulauan Spratly; பிலிப்பினோ மொழி: Kapuluan ng Kalayaan; சீனம்: 南沙群島/南沙群岛; வியட்நாமியம்: Quần đảo Trường Sa) என்பது தென் சீனக் கடலில் உள்ள சர்ச்சைக்குரிய ஒரு தீவுக்கூட்டம் ஆகும். இந்தத் தீவுக்கூட்டம் பல சிறிய பெரிய தீவுகள், சிறுதீவுகள், பள்ளத்தீவுகள், மற்றும் 100-க்கும் மேற்பட்ட பவளப் படிப்பாறைகளால் ஆனது. சில இடங்களில் நீரில் மூழ்கிய பழைய பவளப் பாறைகளால் தொகுக்கப்பட்டும் உள்ளது. இந்தத் தீவுக்கூட்டம் பிலிப்பீன்சு, மலேசியா மற்றும் தெற்கு வியட்நாம் நாடுகளின் கடற்கரைகளில் அமைந்துள்ளது. 1843-ஆம் ஆண்டில் இசுப்ராட்லி தீவுகளைக் கண்டுபிடித்த பிரித்தானிய திமிங்கல வேட்டையாடும் கப்பலின் தலைவர் ரிச்சர்ட் இசுப்ராட்லியின் (Richard Spratly) பெயரால் இந்தத் தீவுக்கூட்டத்திற்குப் பெயரிடப்பட்டது. பொது thumb|260px|இசுப்ராட்லி தீவில் வியட்நாம் நாட்டின் உரிமை கோரல் நினைவுத்தூண் இந்தத் தீவுகளில் 2 சதுர கிலோ மீட்டருக்கும் (490 ஏக்கர்) குறைந்த அளவிலான இயற்கை நிலப்பரப்பு மட்டுமே உள்ளது. இருப்பினும், 425,000 சதுர கிலோ மீட்டர் (164,000 சதுர மைல்) பரப்பளவில் பரவியுள்ளது. இசுப்ராட்லி தீவுகள் தென் சீனக் கடலில் உள்ள முக்கிய தீவுக்கூட்டங்களில் ஒன்றாகும். அதே வேளையில், இந்தத் தீவுகள், தென்கிழக்கு ஆசியாவில் உள்ள நாடுகளின் நிர்வாகத்தையும் பொருளாதாரத்தையும் சிக்கலாக்கி வருகின்றன. ஏனெனில் இந்தத் தீவுகள், இந்த வட்டாரத்தின் முதன்மையான கப்பல் போக்குவரத்து வழித்தடங்களில் அமைந்துள்ளன. அதனால் தென் சீனக் கடல் பகுதியில் உள்ள நாடுகள் இந்தத் தீவுகளின் மீது உரிமைகள் கோரி வருகின்றன.Owen, N. A. and C. H. Schofield, 2012, Disputed South China Sea hydrocarbons in perspective. Marine Policy. vol. 36, no. 3, pp. 809–822. இந்தத் தீவுகளின் பெரும்பாலானவற்றில் மக்கள் வசிக்கவில்லை. ஆனால் மீன்பிடித் தளங்கள் நிறைய உள்ளன. மேலும் அவை குறிப்பிடத்தக்க எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு இருப்புக்களைக் கொண்டிருக்கலாம் என்றும் அறியப்படுகிறது. உரிமைகோரும் நாடுகள் இவற்றின் காரணமாக, இந்தத் தீவுகளில், பன்னாட்டு எல்லைகளை நிறுவுவதற்கான முயற்சிகளில் உரிமைகோரும் நாடுகள் பற்பல முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. ஒரு சில தீவுகளில் மட்டுமே பொதுமக்களின் குடியிருப்புகள் உள்ளன. ஆனாலும் ஏறத்தாழ 45 தீவுகளில், மலேசியா, பிலிப்பீன்சு, சீனா, தைவான், வியட்நாம் ஆகிய நாடுகளின் இராணுவப் படைகளின் கட்டமைப்புகள் உள்ளன. தற்போது இசுப்ராட்லி தீவுகளின் தென்கிழக்கு பகுதியை, புரூணையின் சிறப்புப் பொருளாதார மண்டலம் என புரூணை நாடும் உரிமை கோரி வருகிறது. நீரகக்கரிம இருப்புகள் 2012-ஆம் ஆண்டு புள்ளிவிவரங்களின்படி இசுப்ராட்லி தீவுகளில் உள்ள நீரகக்கரிம (Hydro Carbon) இருப்புகள், ஏறக்குறைய 26.3 டிரில்லியன் அமெரிக்க டாலர்கள் என நம்பப்படுகிறது.[6] இசுப்ராட்லி தீவுகளில் குறைந்தது 3 மீன்பிடி துறைமுகங்கள்; பல கப்பல்துறைகள்; 3 உலுங்கூர்தித் தளங்கள்; மற்றும் 6 - 8 சிறிய வானூர்தி நிலையங்கள் (Short Take Off and Landing Airports STOL) உள்ளன என்று அறியப்படுகிறது. இசுப்ராட்லி தீவுகளில் வேளாண் விளைநிலங்கள் எதுவும் இல்லை. பெரும்பாலான தீவுகளில் மக்களும் வசிக்கவில்லை. ஒரு சில தீவுகளில் மட்டுமே நிரந்தரமான குடிநீர் விநியோகம் உள்ளது. பொதுமக்கள் வாழ்வதற்கான அடிப்படை வசதிகள் இல்லாத சிறுசிறு தீவுகளே இந்தத் தீவுக் கூட்டத்தில் மிகுதியாக உள்ளன. பல வகையான மீன்கள், பறப்பன ஊர்வன எச்சங்கள், எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு ஆகியவை இயற்கை வளங்களில் அடங்கும். வணிக அடிப்படையிலான மீன்பிடித்தல், கப்பல் போக்குவரத்து, எண்ணெய் மற்றும் எரிவாயு தன்னலப் படுத்தல்; மற்றும் மிக அண்மையில் சுற்றுலாச் செயல்பாடுகள் போன்றவை பொருளாதார நடவடிக்கைகளாகும். பிலிப்பீன்சு - சீனா மனக்கசப்புகள் இசுப்ராட்லி தீவுகள் பல முதன்மையான கப்பல் பாதைகளுக்கு அருகில் அமைந்துள்ளதால் இந்தத் தீவுகளின் மீது இதுவரையிலும் 7 நாடுகள் உரிமை கோரி உள்ளன. ஐக்கிய நாடுகள் அவையின் கடல் சட்ட சாசனத்தின் (United Nations Convention on the Law of the Sea (UNCLOS) அடிப்படையில் சனவரி 2013-இல், பிலிப்பீன்சு அரசாங்கம் சீனாவுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கைகளைத் தொடங்கியது. சூலை 12, 2016 அன்று, ஐக்கிய நாடுகள் அவையின் நடுவர் மன்றம் பிலிப்பீன்சுக்கு ஆதரவாக தீர்ப்பளித்தது. தைவான் மற்றும் சீனா ஆகிய இரண்டும் முழு இசுப்ராட்லி தீவுகள் கூட்டத்தையும் உரிமை கோருகின்றன; மற்ற நாடுகள் அவற்றின் ஒரு சில பகுதிகளை மட்டுமே உரிமை கோருகின்றன. மலேசியா - சீனா உறவுகள் 2010-இல், மலேசியாவின் முன்னாள் பிரதமர் மகாதீர் பின் முகமது, சீனாவுடனான ஒத்துழைப்பின் மூலம் சீனாவின் பொருளாதார வளர்ச்சியிலிருந்து மலேசியா நன்மை பெற முடியும் என்று கருத்துரைத்தார். . 'சீனா யாருக்கும் அச்சுறுத்தலாக இல்லை' என்றும்; 'சீனாவின் ஆக்கிரமிப்பு குறித்து கவலைப்பட வேண்டாம்' என்றும் அவர் கூறினார். சீனாவை ஐக்கிய அமெரிக்கா தூண்டிவிட்டு, சீனாவின் அண்டை நாடுகளைச் சீனாவுக்கு எதிராகத் திசை திருப்ப முயற்சிப்பதாக ஐக்கிய அமெரிக்கா மீது குற்றம் சாட்டினார். இருப்பினும் மார்ச் 2013-இல், இசுப்ராட்லி தீவுகளில் உள்ள ஜேம்ஸ் மணல் திட்டில், சீனா நடத்திய இராணுவப் பயிற்சிகள் குறித்து மலேசிய அதிகாரிகள் அதிகமாய் அக்கறை காட்டவில்லை. சீனா மீது மலேசியாவின் கண்டனம் அப்போதைய மலேசிய தற்காப்பு அமைச்சர் இசாமுடின் உசேன், சீனாவுடன் மலேசியா இணைந்து செயல்படலாம் என்றும்; தென் சீனக் கடலில் சீனா ரோந்து நடவடிக்கைகளை மேற்கொள்வதில் மலேசியாவுக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை என்றும் கூறினார். இருப்பினும், தற்போது வரை இசுப்ராட்லி தீவுகள் சர்ச்சையில் ஈடுபட்டுள்ள நாடுகளுடன் மலேசியா சமநிலை உறவுகளைப் பேணி வருகிறது.[114] ஆனால், 2015-ஆம் ஆண்டுக்குப் பின்னர், மலேசியக் கடல் எல்லைக்குள் சீனா அத்துமீறி நுழையத் தொடங்கியதில் இருந்து, சீனாவைக் கண்டிப்பதில் மலேசியா தீவிரமாக உள்ளது. காட்சியகம் மேலும் காண்க தென்சீனக் கடல் சலாமி வெட்டும் உத்திகள் லாங் தெங்கா தீவு சீனக் கடல்கள் மேற்கோள்கள் மேலும் படிக்க Dzurek, Daniel J. and Clive H.Schofield. (1996) The Spratly Islands dispute: who's on first?. IBRU. Hogan, C. Michael (2011) "South China Sea", Encyclopedia of Earth, National Council for Science and the Environment, Washington, D.C.. Menon, Rajan (11 September 2012) "Worry about Asia, Not Europe", The National Interest, Issue: Sept–Oct 2012. வெளி இணைப்புகள் பகுப்பு:மலேசியாவின் தீவுகள் பகுப்பு:பசிபிக் பெருங்கடலின் தீவுக்கூட்டங்கள் பகுப்பு:தென்கிழக்காசியாவின் தீவுக்கூட்டங்கள்
வெள்ளைக் கொடி நிகழ்வு
https://ta.wikipedia.org/wiki/வெள்ளைக்_கொடி_நிகழ்வு
வெள்ளைக் கொடி நிகழ்வு (White Flag incident) என்பது இலங்கை, வன்னி, முல்லைத்தீவு, முல்லைவாய்க்காலில், 2009. மே. 18 அன்று சரணடைந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர்களும், அவர்களின் குடும்பத்தினரும் இலங்கை இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்ட நிகழ்வு ஆகும். விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவுத் தலைவர், பாலசிங்கம் நடேசன், புலித்தேவன் ஆகியோர் சரணடைய ஒப்புக் கொண்டு ஐக்கிய நாடுகள் அவை, நோர்வே, ஐக்கிய இராச்சியம், அமெரிக்கா, பன்னாட்டு செஞ்சிலுவை சங்கம் ஆகியவறைத் தொடர்பு கொண்டனர். அவர்களுக்கு இலங்கை அதிபர் மகிந்த ராசபக்ச, உத்தரவாதம் வழங்கினார். மேலும் பசில் ராஜபக்சவால் ஒரு குறிப்பிட்ட இடத்தில் சரணடையுமாறு அறிவுறுத்தப்பட்டனர். சரணடைவதை மேற்பார்வையிட மூன்றாம் தரப்பு சாட்சியம் வேண்டும் என்று விடுதலைப் புலிகள் விடுத்த கோரிக்கையை இலங்கை அரசு நடைமுறைப்படுத்தவல்லை. விடுதலைப் புலிகள் வெள்ளைக் கொடிகளை ஏந்தியவாறு 58ஆவது படைப்பிரிவினரிடம் (இலங்கை) சரணடைந்தனர், ஆனால் அவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. கோட்டாபய ராஜபக்சவின் உத்தரவின் பேரில் 58 ஆவது படைப் பிரிவின் தளபதி சவேந்திர சில்வாவால் அவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதாக அப்போதய சிறிலங்கா இராணுவத் தளபதி சரத் பொன்சேகா பின்னர் கூறினார். பிரபாகரனின் 12 வயது மகன் பாலசந்திரன் அவரது மெய்க்காப்பாளர்களுடன் சரண்டைந்த பின்னர் கொல்லப்பட்டார். விடுதலைப் புலிகளின் தலைவர்கள் சரணடைய உத்தேசித்துள்ளதாக ஐ.நா குழு ஒன்று கூறுகிறது. இலங்கை அரசாங்கம் எந்த தவறும் செய்யவில்லை என்ற குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளது. பின்னணி இலங்கை உள்நாட்டுப் போரில், வீழ்ச்சியுற்ற காலத்தில் வெடிமருந்துகளும், ஆள்பலமும் குறைவாக இருந்த விடுதலைப் புலிகள், முள்ளிவாய்க்காலில் 3 சதுர கிலோமீற்றருக்கும் அதிகமான பரப்பளவிலான இடத்தில் இலங்கை இராணுவத்தால் முற்றுகையிடப்பட்டனர். இலங்கை இராணுவம் அவர்களை நெருங்கும் நிலையில் விடுதலைப் புலிகளுடன் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் இலங்கை இராணுவத்தினரிடம் சிக்கிக் கொண்டனர். 14 மே 2009 அன்று சாத்தியமான சரணடைதல் குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. விடுதலைப் புலிகள் சார்பில் அரசியல் தலைவர் பாலசிங்கம் நடேசன், மற்றும் சமாதானச் செயலகம் சீவரட்ணம் புலித்தேவன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். போரின் இறுதி நாளில் சரணடைவது தொடர்பாக விடுதலைப் புலிகளின் அரசியல் தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். நடேசன் பிரித்தானியப் பத்திரிகையாளரிடம் மேரி கொல்வினிடம், "எந்தவொரு வாக்கெடுப்பின் முடிவுக்கும் கட்டுப்படுகிறோம்" என்றனர். மேலும் போர்நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்ட புலிகள், ஐக்கிய நாடுகள் சபை, செஞ்சிலுவை சங்கம், ஐரோப்பிய இராஜதந்திரிகள், தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹன் சந்திர நேரு, மற்றும் தி சண்டே டைம்ஸ் நிருபர், கொல்வின் என அவர்களால் பேச முடிந்த அமைப்பு, நபர்கள் மூலமாகவும் தங்கள் கோரிக்கையை அனுப்பினர். இது 300 போராளிகள் மற்றும் அவர்களது குடும்பங்களின் உயிரைக் காப்பாற்றுவதற்கான ஒரு முயற்சியாகும். சரணடைவது குறித்த பேச்சுவார்த்தை பற்றி இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சே அறிந்திருந்தார். மே 17, 2009 அன்று, நடேசனிடமிருந்து மேரி கொல்வினுக்கு அழைப்பு வந்தது, அவர் ஐக்கிய நாடுகள் சபையுடன் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொண்டார், "அவர்கள் [விடுதலைப் புலிகள்] தங்கள் ஆயுதங்களைக் கீழே போடுவார்கள், அமெரிக்கா அல்லது பெரிய பிரிட்டனிடமிருந்து பாதுகாப்புக்கான உத்தரவாதத்தை அவர்கள் விரும்பினர், மேலும் தமிழ் சிறுபான்மையினரின் உரிமைகளுக்கு உத்தரவாதம் அளிக்கும் அரசியல் செயல்முறைக்கு இலங்கை அரசாங்கம் உடன்படும் என்ற உறுதிமொழியை அவர்கள் விரும்பினர்." கொல்வினின் கூற்றுப்படி, அவர் ஐ.நா பொதுச்செயலாளர் பான் கீ மூனின் முக்கிய அதிகாரி விஜய் நம்பியாருடன் தொடர்பை ஏற்படுத்தினார் மேலும் சரணடைவதற்கான புலிகளின் நிபந்தனைகளை தெரிவித்தார், அவர் அதை அரசாங்கத்திற்கு தெரிவிப்பதாக ஒப்புக்கொண்டார். நிகழ்வு மே 17 இரவுக்குள், விடுதலைப் புலிகளிடம் அரசியல் கோரிக்கைகள் எதுவும் வரவில்லை ஆனால் சரணடைவதில் தங்கள் பாதுகாப்பிற்கு உத்தரவாதம் அளிக்க நம்பியாரைக் கேட்டுக் கொண்டனர். சரணடையும் போராளிகளின் பாதுகாப்பை இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச உறுதி செய்துள்ளதாகவும், அவர்கள் செய்ய வேண்டியதெல்லாம் "வெள்ளைக் கொடியை உயர்த்திப் பிடிப்பதுதான்" என்றும் விஜய் நம்பியார் கொல்வினிடம் கூறினார். ஜனாதிபதியின் உறுதிமொழியே போதுமானது என்றும் அவரது வருகை தேவையற்றது என்றும் நம்பியார் கெல்வினிடம் கூறினார். 2009 மே 18 அன்று அதிகாலை 1:06 மணிக்கு, நடேசன் தமிழ் எம்.பி சந்திரகாந்த் சந்திரநேருவிடம் தனது இறுதி தொலை தொடர்பு அழைப்பை விடுத்தார், தாங்கள் இலங்கை இராணுவத்தை நோக்கி நடந்து வருவதாகவும், "எங்களால் முடிந்தவரை வெள்ளைக் கொடியை உயர்த்தி பிடிப்போம்" என்றும் கூறினார். சாட்சிகளின் கூற்றுப்படி, நடேசனின் சிங்கள மனைவி சரணடைந்த தரப்பினரில் இருந்தார். சில மணி நேரங்களுக்குப் பிறகு, நடேசன், புலிதேவன் மற்றும் அவர்களுடன் வந்த விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டதாக இலங்கை இராணுவம் அறிவித்தது. அன்று மாலை அவர்களின் உடல்களைக் காண்பித்தனர். சரணடைய மறுத்தனர் என்பதில் இருந்து சரணடைய வந்தவர்களின் ஆதரவாளர்களால் அவர்கள் முதுகில் சுட்டுக் கொல்லப்பட்டனர் என்பது வரை இலங்கை அரசு பல்வேறு முரண்பாடான விளக்கங்களை அளித்துள்ளது. சரணடைந்த விடுதலைப் புலிகளைக் கொல்ல பாதுகாப்பு அமைச்சர் கோட்டபாய ராஜபக்ச 58 ஆவது படைத் தளபதி சவேந்திர சில்வாவுக்கு அறிவுறுத்தல் வழங்கியதாக அப்போது இலங்கை இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா கூறினார். சரணடைந்த விடுதலைப் புலி உறுப்பினர்களை இலங்கை இராணுவம் கொன்றதாக பல சாட்சிகள் கூற்றுகளை முன்வைத்துள்ளன. தமிழீழ விடுதலைப் புலிகளின் நிறுவனரும் தலைவருமான வேலுப்பிள்ளை பிரபாகரனின் 12 வயது மகன் பாலச்சந்திரன் உயிருடன், காயமின்றி, இராணுவத்தினரின் காவலில் உள்ளதாக படங்கள் வெளியாகின. சில மணிநேரங்களுக்குப் பிறகு எடுக்கப்பட்ட ஒளிப்படத்தில், சிறுவனின் மார்பில் ஐந்து முறை சுடப்பட்டது தெரிகிறது. தமிழீழ விடுதலைப் புலிகளின் தொலைக்காட்சி ஒளிபரப்பாளர் இசைப்பிரியா உயிருடன், இலங்கை இராணுவத்தின் காவலில் இருக்கும் மற்ற ஒளிப்படங்கள் வெளியாகின. சனல் 4 செய்திகளால் பெறப்பட்ட காட்சிகளில் இசைப்பிரியாவின் உடல்கள் உட்பட பல சடலங்கள் பாலியல் வன்கொடுமைக்கான அறிகுறிகளைக் கொண்டுள்ளதைக் காட்டுகின்றன. இப்படி வெளிவரும் நேரில் கண்ட சாட்சிகளின் அறிக்கைகள், ஒளிப்படங்கள், காணொளிகள், போரின் இறுதிக் கட்டத்தில் இலங்கைப் படையினரிடம் பிடிபட்ட தமிழர்கள் கொல்லப்பட்டதற்கான ஆதாரங்களின் ஒரு பகுதியாகும். "வெள்ளைக் கொடி நிகழ்வு" ஐ.நா அறிக்கையில் பெரிதும் இடம்பெற்றது, இது இலங்கை அரசாங்கத்திற்கு எதிரான போர்க்குற்ற குற்றச்சாட்டுகளின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்தியது மட்டுமல்லாமல், முழு விசாரணையைத் தொடங்க வழிவகுத்தது மட்டுமல்லாமல், போரின் முடிவில் ஐ.நா.வின் நடவடிக்கைகளை மறு ஆய்வுக்கு உட்படுத்த கோரிக்கையும் எழுந்தது. மேற்கோள்கள் வெளி இணைப்புகள் White Flags பகுப்பு:இலங்கையில் தமிழர்கள் படுகொலைகள் பகுப்பு:இலங்கையில் போர் குற்றங்கள் பகுப்பு:2009 இல் இலங்கை
பீட்டராண்ட்ரெசெனைட்டு
https://ta.wikipedia.org/wiki/பீட்டராண்ட்ரெசெனைட்டு
பீட்டராண்ட்ரெசெனைட்டு (Peterandresenite) என்பது Mn4Nb6O19•14H2O என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஓர் அரிய வகை கனிமமாகும். இயற்கையாக அறியப்பட்ட முதல் அறுநையோபேட்டு என்ற சிறப்புக்கு உரிய கனிமமாக இது அறியப்படுகிறது. இதன் கட்டமைப்பிலும் ஒரு சிறப்பு வகை இலிண்ட்குவிசுட்டு அயனி எண்முக அமைப்பு காணப்படுகிறது. நார்வே நாட்டிலுள்ள வெசுட்போல்டு மாகாணத்தின் இலார்விக்கு வளாகத்தின் பெக்மாடைட்டு பாறைகளில் பீட்டராண்ட்ரெசெனைட்டு கண்டுபிடிக்கப்பட்டது.Friis, H., Larsen, A.O., Kampf, A.R., Evans, R.J., Selbekk, R.S., and Sánchez, A.A., 2014. Peterandresenite, Mn4Nb6O19·14H2O, a new mineral containing the Lindqvist ion from a syenite pegmatite of the Larvik Plutonic Complex, southern Norway. European Journal of Mineralogy 26, 567-576 மற்ற தனித்தன்மை வாய்ந்த நியோபியம் தாதுக்களான ஆசுபெதமைட்டு மற்றும் மெனெசிசைட்டு போன்றதாகவும் கருதப்படுகிறது. தோற்றம் நார்வே நாட்டின் வெசுட்போல்டு மாகாணத்தின் இலார்விக்கு நகரத்திற்கு அருகிலுள்ள திவெடலன் என்ற குக்கிராமத்தின் ஒரு கருங்கல் கட்டிடக் கற்கள் வெட்டி எடுக்கப்படும் இடத்தில் பீட்டராண்ட்ரெசெனைட்டு முதன்முதலில் கிடைத்தது. பன்னாட்டு கனிமவியல் சங்கம் பீட்டராண்ட்ரெசெனைட்டு கனிமத்தை Pan என்ற குறியீட்டால் அடையாளப்படுத்துகிறது. மேற்கோள்கள் பகுப்பு:நையோபியம் கனிமங்கள் பகுப்பு:ஆக்சைடு கனிமங்கள் பகுப்பு:மாங்கனீசு(II) கனிமங்கள் பகுப்பு:ஒற்றைச்சரிவச்சுக் கனிமங்கள் பகுப்பு:கனிமங்கள்
வெஸ்லி மேல்நிலைப் பள்ளி
https://ta.wikipedia.org/wiki/வெஸ்லி_மேல்நிலைப்_பள்ளி
வெஸ்லி மேல்நிலைப் பள்ளி (Wesley Higher Secondary School) இந்தியாவில் தமிழ்நாடு, சென்னையில் உள்ள ஒரு அரசு உதவி பெறும் தனியார் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியாகும். உவெசுலிய மெதடிசக் கிறித்தவ அமைப்பைச் சார்ந்த இந்தப் பள்ளி மெஸ்டன் கல்வி, மேம்பாட்டு சங்கத்தின் நிறுவனங்களுடன் இணைக்கப்பட்டுள்ளது.wesleyschool பிரபல முன்னாள் மாணவர்கள் வாசுதேவன் பாஸ்கரன், இந்திய வளைதடிப் பந்தாட்ட வீரர் சேத்துப்பட்டு பட்டாபிராம இராமசுவாமி ஐயர், திருவிதாங்கூர் சமத்தானத்தின் திவான்https://cprfoundation.org/Sir-CPR.html திரு. வி. கலியாணசுந்தரனார், தமிழறிஞர்http://www.wesleyschool.in/thiruvika.html. மேற்கோள்கள் பகுப்பு:சென்னையிலுள்ள தனியார் பள்ளிகள் பகுப்பு:சென்னை மாவட்டத்திலுள்ள தனியார் பள்ளிகள்
இந்தியாவில் புலிகளை வேட்டையாடுதல்
https://ta.wikipedia.org/wiki/இந்தியாவில்_புலிகளை_வேட்டையாடுதல்
thumb|267x267px| பாரம்பரிய சீன மருத்துவத்தில் பயன்படுத்துவதற்காக ஒரு சீன சந்தையில் சட்டவிரோத பொருட்களை விற்கும் விற்பனையாளர். படத்தில் காட்டப்பட்டுள்ள சில துண்டுகளில் புலியின் பாதம் போன்ற விலங்குகளின் பாகங்களும் அடங்கும். இந்தியாவில் புலிகளை வேட்டையாடுதல் (Tiger poaching in India) என்பது புலிகள் உயிர்வாழும் நிகழ்தகவை கடுமையாக பாதித்துள்ளது.Tiger poaching and trafficking in India: Estimating rates of occurrence and detection over four decades, Koustubh Sharma,Belinda Wright,Tito Joseph,Nitin Desai, Biological Conservation, Elsevier, Volume 179, November 2014, Pages 33–39 20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இருந்த 100,000 காட்டுப் புலிகளுடன் ஒப்பிடுகையில் இப்போது சுமார் 3,000 காட்டுப் புலிகள் உயிர் பிழைத்துள்ளன. புலிகளின் எண்ணிக்கையின் இந்த திடீர் அழிவு, பிரித்தானிய இராச்சிய காலத்திலும், மற்றும் இந்தியாவின் சுதந்திரத்திற்குப் பின், காலனித்துவ மற்றும் இந்திய உயரடுக்கு மக்களால் புலிகள் படுகொலை செய்யப்பட்டதன் காரணமாக இருந்தது. இவற்றில் பெரும்பாலானவை, சுமார் 1,700 வங்காளப் புலிகள்.Poaching for Chinese Markets Pushes Tigers to the Brink, 12/05/2014 புலிகளின் ஆரம்ப எண்ணிக்கை மிகவும் தவறாக இருந்தது. இந்தியாவில் புலிகள் பாதுகாப்புத் திட்டமானது புலிகளின் ஆரம்ப எண்ணிக்கையில் கடுமையான குறைபாடுகள் உள்ளதைக் கண்டறியும் வரை, அது பெரும் வெற்றியாகப் பாராட்டப்பட்டது.Faulty Counts May Have Hurt India Tigers, Experts Say, Pallava Bagla, National Geographic News, August 7, 2003 வேட்டையாடப்பட்டு கொல்லப்பட்ட புலியின் உறுப்புகளில் பெரும்பாலானவை சீனாவை அடைகின்றன. அங்கு ஒரு தோலை 6.5 மில்லியனுக்கு விற்கலாம்.INDIA'S HIDDEN TIGER POACHERS, Roads and Kingdoms, Jun 20, 2014 அங்கு புலியின் ஒரு தோல் ரூ. 6.5 மில்லியனுக்கு விற்க முடியும்.Sansar’s Successors, RAMAN KIRPAL, October 16, 2010 இவ்வாறு புலிகளை வேட்டையாடுபவர்களுக்கு தண்டனை விகிதம் சுமார் நான்கு சதவீதமாகவே உள்ளது.Illegal Tiger Trade: Why Tigers Are Walking Gold, Sharon Guynup in Cat Watch on February 12, 2014 சன்சார் சந்த் வட இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள அல்வர் மாவட்டத்தின் தனகாசி பகுதியைச் சேர்ந்த சன்சார் சந்த், "நாட்டின் மிகப்பெரிய வனவிலங்கு வர்த்தக வலையமைப்பை நடத்தும் முக்கிய நபர்" என்று அழைக்கப்பட்டார்.Wriggling Out Of The Skin, Jay Mazoomdaar, Tehelka, 2013-07-27 அவர் 40 ஆண்டுகளாக கைது செய்யப்படாமல் இத் தொழிலில் ஈடுப்ட்டிருந்தார். தில்லியின் சதார் சந்தைப் பகுதியில் தனது வணிகத்தை நடத்தி வந்தார். மேலும், அவர் "வடக்கின் வீரப்பன்" என்று அழைக்கப்பட்டார்.Sansar Chand Is India’s Deadliest Poacher. Here Is How He Has Escaped Legal Traps For 40 Years, RAMAN KIRPAL, Tehelka, August 7, 2010, 2005 ஆம் ஆண்டில் சரிஸ்கா தேசியப் பூங்காவின் முழு புலிகளையும் அழித்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.Sansar Chand, who wiped out Sariska tigers, dies of cancer, Indian Express, March 18, 2014 புலி வேட்டையாடும் சன்சார் சந்த் நேபாளம் மற்றும் திபெத்தைச் சேர்ந்த நான்கு வாடிக்கையாளர்களுக்கு 470 புலி தோல்களையும் 2,130 சிறுத்தை தோல்களையும் விற்றதாக ஒப்புக் கொண்டார்.Sansar Chand, notorious tiger poacher, dead TNN | Mar 19, 2014 1991 ஆம் ஆண்டில், இராஜஸ்தானின் சவாய் மாதோபூரில் கைது செய்யப்பட்ட ஒரு குழு, அவருக்காக இரண்டு ஆண்டுகளில் 15 முதல் 18 புலிகளை வேட்டையாடியதாக ஒப்புக்கொண்டது. 2005 ஜனவரியில், படேல் நகரில் உள்ள ஒரு கிடங்கில் நடத்தப்பட்ட சோதனையில் இரண்டு புலிகளின் தோல்கள், 28 சிறுத்தைகளின் தோல்கள், 14 புலியின் கோரைப் பற்கள், மூன்று கிலோ புலி நகங்கள், 10 புலியின் தாடைகள் மற்றும் 60 கிலோ சிறுத்தை மற்றும் புலியின் பாதங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. 1988 ஆம் ஆண்டில், அவரிடமிருந்து 25,800 பாம்புத் தோல்களை காவலர்கள் பறிமுதல் செய்தனர்.சன்சார் சந்தின் மனைவி ராணி மற்றும் மகன் ஆகாஷ் ஆகியோரும் வனவிலங்கு கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளனர்.Poacher Sansar Chand arrested in Delhi, Outlook, JUN 30, 2005 இதனையும் காண்க புலி கிர் தேசியப் பூங்கா விலங்கு வன்கொடுமை தந்த வர்த்தகம் வேட்டையாடுதலுக்கான எதிர்ப்பு விலங்குரிமை விலங்குத் தொழிற்கூட்டு மேற்கோள்கள் பகுப்பு:இந்தியாவிலுள்ள புலிகள் காப்பகங்கள் பகுப்பு:வேட்டையாடுதல் பகுப்பு:விலங்குத் தொழிற்கூட்டு பகுப்பு:விலங்கு வன்கொடுமை பகுப்பு:விலங்குரிமை
திங் லிரேன்
https://ta.wikipedia.org/wiki/திங்_லிரேன்
திங் லிரேன் அல்லது திங் லிசேன் (Ding Liren, ; பிறப்பு: 24 அக்டோபர் 1992) சீன சதுரங்க பேராதனும், நடப்பு உலக சதுரங்க வாகையாளரும் ஆவார். இவர் வரலாற்றில் அதிக மதிப்பெண் பெற்ற சீன சதுரங்க வீரரும், மூன்று முறை சீன சதுரங்க வாகையாளரும் ஆவார். திங் லிரேன் உலக வாகையாளருக்கான வேட்பாளர் போட்டியில் விளையாடி பிடே உலகத் தரவரிசையில் 2800 எலோ மதிப்பெண்ணைக் கடந்த முதல் சீன வீரர் ஆவார். சூலை 2016 இல், 2875 மின்வல்லு மதிப்பீட்டுடன், இவர் உலகின் மிக உயர்ந்த மதிப்பெண் பெற்ற மின்வல்லு வீரர் ஆவார். சூலை 2023 இல், திங் 2830 மதிப்பெண்ணுடன் முதல்தர விரைவு வல்லு வீரர் ஆனார். ஆகத்து 2017 முதல் நவம்பர் 2018 வரை மரபார்ந்த சதுரங்கத்தில் திங் தோற்கடிக்கப்படவில்லை, 29 வெற்றிகளையும் 71 சமன்களையும் பதிவு செய்தார். இந்த 100-விளையாட்டு ஆட்டமிழக்காத தொடர் உயர்மட்ட சதுரங்க வரலாற்றில் மிக நீளமானது, மாக்னசு கார்ல்சன் 2019 இல் இதை முறியடித்தார். 2022 ஆம் ஆண்டுக்கான வேட்பாளருக்கான போட்டியில் திங் இரண்டாவது இடத்தைப் பிடித்தார். கார்ல்சன் தனது வாகைப் பட்டத்தைக் காக்க மறுத்ததால், இயான் நிப்போம்னியாசிக்கு எதிரான 2023 உலக சதுரங்க வாகையாளருக்காக திங் தன்னைத் தகுதிப்படுத்தினார். மரபார்ந்த விளையாட்டில் 7-7 என்ற சமநிலைக்குப் பிறகு விரைவு சமன்முறிகளில் நிப்போம்னியாசியை 2½-1½ என்ற கணக்கில் தோற்கடித்து, திங் வென்று, உலக சதுரங்க வாகையாளரானார். உலக வாகையாளர் (2023-இன்று) ஏப்ரல் 2023 இல், "நிப்போம்னியாசி எதிர் திங் திரேன்" உலக வாகையாளர் போட்டி மரபார்ந்த பகுதியுடன் தொடங்கி 7-7 என சமநிலையில் முடிந்தது. திங் பின்னர் நிப்போம்னியாசியை விரைவு சமன்முறியில் தோற்கடித்தார், நான்காவது ஆட்டத்தை கருப்புக் காய்களுடன் விளையாடி வென்றார். இதன்மூலம் திங் (பெண்கள் அல்லாத) உலக சதுரங்க வாகையாளர் பட்டத்தைப் பெற்ற முதல் சீன வீரர் ஆனார். மதிப்பெண்மரபுபுள்ளிகள்விரைவுமொத்தம்1234567891011121314151617182795½1½0101½½½½0½½7½½½08½2788½0½1010½½½½1½½7½½½19½ உலக வாகையாளர் பட்டத்தை வென்ற பிறகு, ஊக்கமின்மை காரணமாக திங் போட்டிகளிலிருந்து ஒன்பது மாத இடைவெளி எடுத்தார். சனவரி 2024 இல் டாட்டா ஸ்டீல் சதுரங்கச் சுற்றில் 13 இற்கு 6 என்ற கணக்கில் ஒன்பதாவது இடத்தைப் பிடித்தார். 2024 நவம்பரில் நடக்கவிருக்கும் 2024 உலக வாகையாளர் சுற்றில் இவர் தனது பட்டத்தைத் தக்க வைக்க இந்தியாவின் குகேசை எதிர்த்துப் போட்டியிடுவார். மேற்கோள்கள் வெளி இணைப்புகள் பகுப்பு:1992 பிறப்புகள் பகுப்பு:சதுரங்க கிராண்டு மாசுட்டர்கள் பகுப்பு:வாழும் நபர்கள் பகுப்பு:சீன சதுரங்க வீரர்கள் பகுப்பு:உலக சதுரங்க வாகையாளர்கள்
திங் லிசேன்
https://ta.wikipedia.org/wiki/திங்_லிசேன்
வழிமாற்று திங் லிரேன்
நீனா சிமோன்
https://ta.wikipedia.org/wiki/நீனா_சிமோன்
சைன் டாம் சாக்கோ
https://ta.wikipedia.org/wiki/சைன்_டாம்_சாக்கோ
சைன் டாம் சாக்கோ (Shine Tom Chacko) (பிறப்பு செப்டம்பர் 15,1983) ஓர் இந்திய நடிகரும் மற்றும் மலையாளத் திரைப்படங்களில் பணிபுரிந்த முன்னாள் உதவி இயக்குநரும் ஆவார். இயக்குனர் கமலின் உதவியாளராக சுமார் 9 ஆண்டுகள் பணியாற்றிய பிறகு, கடமா படத்தின் மூலம் நடிக்கத் தொடங்கினார். ஈ அதுத காலத்து, அத்தியாயம், ஆனையும் ரசூலும், மசாலா ரிபப்ளிக், ஜிகர்தண்டா டபுள்எக்ஸ் (தமிழ்) உள்ளிட்ட பல படங்களில் துணை வேடங்களில் நடித்தார். மேலும் பினு சதானந்தனின் நகைச்சுவை திரைப்படமான இதிஹாசா (2014) படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்தார். விவேகானந்தன் விரலானு இவரது 100 வது படமாகும். பிற மொழிப்படங்கள் விஜய் மற்றும் பூஜா ஹெக்டே ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்த பீஸ்ட் என்ற அதிரடித் திரைப்படத்தின் மூலம் சைன் தமிழில் அறிமுகமானார். நானி மற்றும் கீர்த்தி சுரேஷ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்த தசரா என்ற பத்தின் மூலம் சைன் தெலுங்கிலும் அறிமுகமானார். சர்ச்சை 31 ஜனவரி 2015 அன்று, சைன் டாம் சாக்கோ மற்றும் நான்கு பெண்கள் போதைப்பொருள் வைத்திருந்ததாகக் கூறி கொச்சியில் கைது செய்யப்பட்டனர். இவர் மீது போதைப்பொருள் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. பின்னர் அவருக்கு கேரள உயர் நீதிமன்றம் பிணை வழங்கியது. மேற்கோள்கள் வெளி இணைப்புகள் பகுப்பு:1983 பிறப்புகள் பகுப்பு:வாழும் நபர்கள் பகுப்பு:தமிழ்த் திரைப்பட நடிகர்கள் பகுப்பு:தெலுங்குத் திரைப்பட நடிகர்கள் பகுப்பு:மலையாளத் திரைப்பட நடிகர்கள்
லூமுட் கடற்படை தளம்
https://ta.wikipedia.org/wiki/லூமுட்_கடற்படை_தளம்
லூமுட் கடற்படை தளம் (மலாய்: Markas Pangkalan Lumut; ஆங்கிலம்: Lumut Naval Base) என்பது மலேசியா, பேராக், மஞ்சோங் மாவட்டம், லூமுட் நகரில் அமைந்துள்ள அரச மலேசிய கடற்படையின் கடற்படை தளம் ஆகும். கோலாலம்பூரில் இருந்து ஏறக்குறைய 100 மைல்கள் (160 கிமீ) தொலைவில் உள்ளது. இந்தத் தளம் மலேசியாவின் மிகப்பெரிய கடற்படைத் தளமாகும்; மேலும் 9 செப்டம்பர் 1984 முதல் அரச மலேசிய கடற்படையின் தலைமையகமாகச் செயல்பட்டு வருகிறது. பழைய தளம் சிங்கப்பூரில் உள்ள ஊட்லேண்ட்ஸ் கடற்படைத் தளத்தைத் தலைமையகமாகக் கொண்டு இருந்தது. மலேசிய கடற்படையின் தலைமையகம், லூமுட் கடற்படை தளத்தில் உள்ளது. இந்தத் தளம் கேடி மலாயா (KD Malaya) என்றும் அழைக்கப்படுகிறது. லூமுட் கடற்படை தளமே மலேசிய கடற்படையின் முதன்மைத் தளமாகும். இந்தத் தளம் தற்போது அரச மலேசிய கடற்படையின் மேற்கு கடற்படை கட்டளையகத்தின் (Western Fleet Command) தலைமையகமாகச் செயல்படுகிறது, அதே வேளையில் சபா, கோத்தா கினபாலு, செபங்கார் கடற்படைத் தளம், கிழக்கு கடற்படை கட்டளையகத்தின் (Eastern Fleet Command) தலைமையகமாகச் செயல்படுகிறது. வரலாறு பின்னணி ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து மலேசியா சுதந்திரம் பெறுவதற்கு முன்பு இருந்தே சிங்கப்பூரில் உள்ள ஊட்லேண்ட்ஸ் கடற்படைத் தளத்தில், தன் தலைமையகத் தளத்தைக் கொண்டு செயல்பட்டு வந்தது. 1963-இல் மலேசியக் கூட்டமைப்பில் இருந்து சிங்கப்பூர் வெளியேற்றப்பட்ட பிறகும், அரச மலேசிய கடற்படையின் தளம், சிங்கப்பூர் ஊட்லேண்ட்ஸ் கடற்படைத் தளத்தில் இயங்கி வந்தது. 1969-இல் அரச மலேசிய கடற்படையின் தலைமையகத்தை மலேசியாவிற்கு மாற்ற மலேசிய அரசாங்கம் திட்டமிட்டது. ஆனால் ஒரு பொருத்தமான இடம் கிடைக்கவில்லை. மலாக்கா நீரிணையைப் பாதுகாப்பதற்காக, சனவரி 1973-இல், லூமுட்டில் ஒரு சிறிய தளத்தை, அரச மலேசிய கடற்படை நிறுவியது. கிள்ளான் துறைமுகம் 5 சுலை 1975-இல், மலேசியாவின் முன்னாள் பிரதமர் அப்துல் ரசாக் உசேன், சிங்கப்பூர் ஊட்லேண்ட்ஸ் கடற்படைத் தளத்திற்குச் சென்றார். அப்போது அங்கு இருந்த மலேசியக் கடற்படைத் தளம், மலேசியாவின் எதிர்காலத் திட்டங்களுக்குப் போதுமானதாக இல்லை என்றும்; அந்தத் தளம் மலேசியாவிற்கு வெளியே அமைந்திருப்பது பொருத்தமற்றது என்றும் கவலை தெரிவித்தார். தீபகற்ப மலேசியாவில், எந்த இடத்தில் புதிய கடற்படைத் தளத்தைக் கட்டலாம் என்பதற்காக ஓர் ஆய்வுக்குழு உருவாக்கப்பட்டது. அந்த ஆய்வுக் குழுவிற்கு அப்போதைய மலேசியக் கடற்படை தளபதி வி. இராமசந்திரன் (Commander V. Ramachandran) தலைவராகப் பொறுப்பு வகித்தார். தொடக்கத்தில், கிள்ளான் துறைமுகம் புதிய தளத்திற்கான இடமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது. இருப்பினும், கிள்ளான் புவியியல் பற்றிய முழுமையான ஆய்வுகளுக்குப் பிறகு, அரச மலேசிய கடற்படையின் தலைமையகத்திற்கான புதிய இடமாக லூமுட் தேர்வு செய்யப்பட்டது. மேலும் காண்க அரச மலேசிய கடற்படை மலேசிய பாதுகாப்பு படைகள் ஜொகூர் அரச இராணுவப் படை மேற்கோள்கள் வெளி இணைப்புகள்
இசுமோல் இசு பியூட்டிபுல் (நூல்)
https://ta.wikipedia.org/wiki/இசுமோல்_இசு_பியூட்டிபுல்_(நூல்)
வழிமாற்று சிறியதே அழகு (நூல்)
கேரீநேம்
https://ta.wikipedia.org/wiki/கேரீநேம்
கேரீநேம் (KRename), ஒர் கே டீ ஈ மென்பொருளாகும், இது ஒரே நேரத்தில் பல கோப்புகளையும் கோப்பகங்களையும் பெயர் மாற்ற உதவுகிறது. கேடிஈ பிளாசுமா பணிச்சூழல்களைப் பயன்படுத்தும் லினக்சு விநியோகங்களில் இம்மென்பொருள் முன்னிருப்பாக இருக்கும். thumb|பிடிஎப் கோப்புகளின் பெயர்களை மாற்றும் விளக்கப்படம் அம்சங்கள் ஒரே நேரத்தில் பல கோப்புகளையும் கோப்பகங்களையும் பெயர் மாற்றுதல் ஒரு கோப்பகத்தில் உள்ள அனைத்து கோப்புகளையும் பெயர் மாற்றுதல் பெயர் மாற்றம் செய்யும் பொழுது மறைக்கப்பட்ட கோப்புகளை புறக்கணித்தல் எளிதில் பெயர் மாற்றங்களில் பெரிய மாற்றங்கள் இல்லாமல் பணிகளான பெரிய எழுத்தாக்குதல், சிறிய எழுத்தாக்குதல், ஒரு சொல்லில் உள்ள ஒரு எழுத்தை மட்டும் பெரிய எழுத்தாக மாற்றுதல் கோப்புப் பெயர்களுக்கு முன்னொட்டுகள், பின்னொட்டுகள் சேர்த்தல் கோப்புப் பெயர்கள் பகுதிகளை தேடுக் கருவி மூலம் தேடி மாற்றுதல் (தேவைப்பட்டால் சுருங்குறித்தொடரை அனுமதிக்கிறது) கோப்பு பெயர்களை வரிசைப்படுத்த எண்களை சேர்த்தல் கோப்புகளின் உரிமைகளை மாற்றுதல் கோப்புகளின் அணுகல் மற்றும் தேதி, நேரங்களை மாற்றுதல் MP3/ogg ஆகிய ஒலிக்கோப்பு வகைகளில் உள்ள ID3 என்ற மீதரவைப் பிரித்தெடுத்தல் படக் கோப்புகளிலிருந்து Exif என்ற மீதரவைப் பிரித்தெடுத்தல் தற்போதைய தேதி, நேரத்தை கோப்புப்பெயரில் சேர்த்தல் கோப்பு நீட்டிப்புகளை மாற்றுதல் செயல் தவறு செய்தவைகளை மீளமை செய்தல் விரும்பிய கோப்புகளை கைமுறையில் பெயர் மாற்றுதல் யாவாக்கிறிட்டு (JavaScript) என்ற நிரலாக்க மொழியைப் பயன்படுத்துதல் ஒலிபெயர்ப்பு வெளி இணைப்புகள் கே டீ ஈ பயனர் தள விக்கியில் கேரீநேம் பற்றிய கையேடு சோர்சுஃபோர்கில் பழைய மூல நிரலாக்கம் கிட்லாப்பில் தற்போதைய மூல நிரலாக்கம் அதிகாரப்பூர்வ தகவல் பக்கம் மேற்கோள்கள் பகுப்பு:சி++ பகுப்பு:கட்டற்ற மென்பொருட்கள்
ராஜீவலோசன் கோயில்
https://ta.wikipedia.org/wiki/ராஜீவலோசன்_கோயில்
ராஜீவ லோசன் கோயில் (Rajiv Lochan Temple) என்பது இந்தியவின், சத்தீசுகர் மாநிலத்தின் ராஜீம் என்ற ஊரில் உள்ள ஒரு விஷ்ணு கோயிலாகும். இது கிபி 8 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது. இந்த கோயிலின் நடுவில் ஒரு முற்றம் அமைந்துள்ளது. இதன் நான்கு மூலைகளில் நான்கு சிற்றாலயங்கள் அமைக்கப்பட்டுள்ளன. முதன்மைக் கோயிலானது ஒரு முன் மண்டபம், நடு மண்டபம், கருவறை ஆகியவற்றைக் கொண்டுள்ளது. கருவறையைச் சுற்றி விமானம் அமைந்துள்ளது. இக்கோயிலின் கதவுகள், தூண்கள் போன்றவற்றில் பல்வேறு இந்து கடவுள்கள், தெய்வங்கள் மற்றும் பிற உருவங்கள் விரிவாக செதுக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இங்கு வழிப்படப்படும் முதன்மைத் தெய்வமாக விஷ்ணு உள்ளார். விஷ்ணுவின் உருவமானது ஆயுதம் தாங்கிய நான்கு கைகளுடன் உள்ளார். புரி ஜகந்நாதர் கோயிலுக்குச் நோக்கிச் செல்லும் பாதையில் அமைந்துள்ள இக்கோயிலுக்கு ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான யாத்ரீகர்கள் வருகை தருகின்றனர். வரலாறு இந்தக் கோயிலுக்குள் இரண்டு கல்வெட்டுகள் உள்ளன. முதல் கல்வெட்டானது இது நள வம்சத்தைச் சேர்ந்த விலாசதுங்கா என்பவரால் கட்டப்பட்டது என்பதைக் குறிப்பிடுகிறது. கல்வெட்டில் நாள் குறிக்கப்படவில்லை என்றாலும், கல்வெட்டின் எழுத்தமைதியைக் கொண்டு இது கிபி 8 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக இருக்கலாம் எனப்படுகிறது. கிபி 1145 ஆண்டைச் சேர்ந்த இரண்டாவது கல்வெட்டானது, தொன்ம மன்னர் ஜகத் பால் கட்டிய கோயிலைக் பற்றிக் குறிப்பிடுறது. இது கட்டப்பட்ட காலம் குறித்து வரலாற்றாசிரியர்களிடையே ஒத்த கருத்து இல்லை. அலெக்சாண்டர் கன்னிங்காம் உட்பட சில வரலாற்றாசிரியர்கள், கோயிலானது கி.பி. 5 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது என்கின்றனர். அப்படியானால், நள வம்சத்தினரின் கல்வெட்டானது அநேகமாக மற்றொரு கோவிலைக் குறிக்கிறது, அல்லது இந்த கோவிலின் கட்டுமானத்தின் மறுசீரமைப்பைக் குறிக்கிறது. மற்ற சில ஆதாரங்கள் இது 7 மற்றும் 8 ஆம் நூற்றாண்டுகளுக்கு இடையில் கட்டப்பட்டதாக கூறுகின்றன, இது நள வம்ச கல்வெட்டின் அதே காலமாகும். இந்த கோயில் பல நூற்றாண்டுகள் இடைவெளியில் பல முறை புதுப்பிக்கப்பட்டுள்ளது. தொன்மக்கதை ஒரு தொன்மத்தின் படி, இந்த கோயில் விஸ்வகர்மனால் வடிவமைக்கபட்டது என்று கூறப்படுகிறது. மற்றொரு தொன்மமானது, தொன்ம மன்னரான ஜகத் பால் முழு கோவிலையும் ஒரே நாளில் கட்டினார் என்கிறது. மூன்றாவது தொன்மக்கதை இந்தக் கோயிலைக் கட்ட தொன்ம மன்னர் ரத்னகரே காரணம் என்று கூறுகிறது. ரத்னாகர் விஷ்ணுவின் பக்தர் என்றும் அவருக்கு விஷ்ணு ஜொலிகும் தாமரைப் போன்ற கண்களுடன் ( ராஜிவ-லோச்சனா) காட்சியளித்தார். விஷ்ணு இதே கோலத்தில் இங்கேயே எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்க வேண்டும் என்று ரத்னாகர் வேண்டினார். அவரின் வேண்டுகோளுக்கு இணங்கிய விஷ்ணு அதே கோலத்தில் இங்கு எழுந்தருளினார் என்று அக்கதை கூறுகிறது. விளக்கம் thumb|கோயிலின் வரைபடம் (மேலே கிழக்கு) இக்கோயில் பஞ்சாயத்தானா வடிவில் உள்ளது. கோயில் வளாகத்தின் நான்கு மூலைகளிலும் நான்கு சிற்றாலயங்கள் உள்ளன. இந்த சிற்றாலயங்களானது விஷ்ணுவின் நான்கு அம்சங்களான நரசிம்மர், வாமனர், வராகர், பத்ரிநாதர் ஆகியோருக்கு அமைக்கபட்டுள்ளன. இந்த கோயிலானது சுமார் 69 க்கு 43 அடி பரப்பளவிலும் சுமார் 8 அடி உயரமும் கொண்ட ஒரு மேடையின் மேல் கட்டப்பட்டுள்ளது. மேடையின் வடமேற்கு, தென்மேற்கு மூலைகளில் இரண்டு படிகள் உள்ளன. கோயில் கட்டடம் 59 அடி நீளமும், 25.5 அடி அகலமும் கொண்டது. இது செங்கற்கலால் கட்டப்பட்டுள்ளது. வாயில் கோயிலின் முதன்மை நுழைவாயிலானது மேற்கு நோக்கி அமைந்துள்ளது. நுழைவாயில் உள்ள தாழ்வாரத்தில் இரண்டு அலங்காரத் தூண்கள் உள்ளன. அலங்காரத் தூண்களில் உயரமான பெண்ணின் உருவம் அமைக்கப்பட்டுள்ளது. அதில் ஒரு பெண் தனது இடது கையால் ஒரு மரத்தின் கிளையைப் பிடித்துக் கொண்டிருக்கிறாள், வலது கையை உயர்த்தியுள்ளாள். இன்னொரு தூணில் உள்ள பெண் சிலையானது இடது கையை உயர்த்தி, வலது கையில் ஒரு மாம்பழக் கொத்தை வைத்திருப்பது போல அமைக்கப்பட்டுள்ளது. தூண்கள் மனித உருவங்களாலும், ஒரு ஜோடி முடிச்சு பாம்புகளாலும் அலங்கரிக்கப்பட்டுள்ளன. thumb|வேலைப்பாடுகள் மிக்க நுழைவு வாயில் நுழைவாயிலில் உள்ள தாழ்வாரமானது இரண்டு அறைகளாக பிரிக்கப்பட்டுள்ளது. புத்தர், அனுமன் சிற்பங்கள் உள் அறையின் மூலைகளில் வைக்கப்பட்டுள்ளன. புத்தரின் சிற்பம் கருங்கல்லால் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் புத்தர் போதி மரத்தின் கீழ் தனது வலது கையை முழங்காலில் வைத்து, இடது கையை மடியில் ஊன்றி தியானத்தில் அமர்ந்திருப்பதை சித்தரிக்கப்பட்டுள்ளது. கோயிலின் நுழைவாயில் சிற்ப வேலைப்பாடுகளுடன் அமைக்கப்பட்டுள்ளது. வாயில் இரண்டு மூன்று அடுக்குகளாக அமைக்கப்பட்டுள்ளது. வாயிலின் ஒரு அடுக்கின் உச்சியில் கஜலட்சுமி சித்தரிக்கபட்டுள்ளார். அடுத்த ஒரு அடுக்கின் உச்சியில், சிவன் நாகங்களுடன் சித்தரிக்கப்பட்டுள்ளார். மூன்றாவது அடுக்கின் உச்சியில் ஆதிசேஷன் மீது விஷ்ணு ஓய்வெடுப்பதுபோல சித்தரிக்கப்பட்டடுள்ளார். இறுதி அடுக்கில் பல உருவங்கள் செதுக்கப்பட்டுள்ளன. மண்டபம் இங்குள்ள மண்டபம் வடக்கு நோக்கி திறப்பதைக் கொண்டுள்ளது. இந்த மண்டபம் தட்டையான கூரையைக் கொண்டுள்ளது. இது நடுவில் ஆறு தூண்கள் கொண்ட இரண்டு வரிசைகளும்ம், இருபுறமும் ஆறு அலங்காரத் தூண்கள் ஒற்றை வரிசையாலும் காணப்படுகின்றன. சதுர தூண்களில் கீழ் பாதி வெறுமையாக உள்ளன, மேல் பாதி சிற்ப வேலைப்பாடுகளுடன் உள்ளன. அலங்காரத் தூண்களில் உயரமான ஒற்றைச் சிலைகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. தெற்கு சுவரின் அலங்காரத் தூண்களில் சித்தரிக்கப்பட்டுள்ள உருவங்கள்: (கிழக்கிலிருந்து மேற்கு நோக்கி) ஆயுதம் ஏந்திய துவாரபாலகர் நரசிம்மர் மகர வாகனத்தில் கங்கை இருக்க, அவருக்கு குடை பிடித்தபடி ஒரு சேவகர். ஒரு காதல் ஜோடி சீதை என அடையாளம் காணப்பட்ட ஒரு பெண் உருவம் வில், அம்பு ஆகியவற்றுடன் ஆயுதம் தாங்கிய ஒரு ஆண் உருவம். வடக்கு சுவரின் அலங்காரத் தூண்களின் சித்தரிக்கப்பட்டுள்ள உருவங்கள்: (கிழக்கிலிருந்து மேற்கு நோக்கி) ஆயுதம் ஏந்திய துவாரபாலகர் வராகர் ஆமை வாகனத்தின் மீது நின்றுள்ள யமுனை ஒரு பெண் உருவம் எட்டுக் கைகளைக் கொண்டு, சிங்கத்தின் மீது அமர்ந்திருக்கும் துர்க்கை ஐந்து குதிரைகளுடன் தேரில் சவாரி செய்யும் ஆண் உருவம். இது சூர்யனாக இருக்கக்கூடும் என்று கன்னிங்காம் கருதுகிறார். மண்டபத்தின் வடக்கு மற்றும் தெற்கு பக்கத்தில் இரண்டு நீண்ட அறைகள் பிற்காலத்தில் சேர்க்கப்பட்டுள்ளன. இவை பிரதான கோவில் கட்டிடத்தை பார்ப்பதற்கு தடையாக உள்ளன. இதுபற்றி அலெக்சாண்டர் கன்னிங்காம் குறிப்புடுகையில் "கோவிலின் முழு காட்சியையும் முற்றிலுமாக கெடுக்கின்றன" என்று குறிப்பிடுகிறார். இந்த அறைகள் கோயிலின் பண்டாரமாகவும் (கருவூலம்) மடப்பள்ளியாகவும் (சமையலறை) பயன்படுத்தப்படுகின்றன. கருவறை thumb|கருவறையின் வேலைப்பாடு மிக்க நுழைவாயில், உள்ளே பிரதான தெய்வம் தெரிகிறது. மண்டபத்தின் கிழக்குப் பகுதியில் கருவறைக்குள் செல்லும் முன் மண்டபம் உள்ளது. கருவறை சதுரவடிவில், சுமார் 20 அடி கொண்டதாக உள்ளது. கருவறையில் நுழைவாயிலானது வேலைப்பாடுகள் மிக்க வாயிலைக் கொண்டுள்ளது. வாயிலின் உச்சியில் கருடன் மீது அமர்ந்த நிலையில் விஷ்ணுவின் உருவம் அமைக்கப்பட்டுள்ளது. கருவறையினுள் நான்கு கரங்களுடன் கூடிய விஷ்ணுவின் அவதாரமான ராஜிவ-லோச்சனா"(தாமரைக் கண்ணன்) உள்ளார். கருவறையின் மேலே ஒரு விமானமானது ஒரு சதுர பிரமிடு வடிவத்தில், ஐந்து நிலைகளுடன் அமைந்துள்ளது. இதன் பாணி மகாபோதி கோயிலைப் போன்றது. கோயில் விமானத்தின் உயரம் தரையிலிருந்து சுமார் 50 அடி உயரத்தில் இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. வழிபாடு இங்கு ஒவ்வொரு ஆண்டும் மகா சிவராத்திரி அன்று ராஜீவ் லோகன் கும்பமேளா என்று அழைக்கபடும் கும்பமேளா நடைபெறுகிறது. மேற்கோள்கள் பகுப்பு:Coordinates on Wikidata பகுப்பு:சத்தீசுகரில் உள்ள இந்துக் கோயில்கள்
நியோடிமியம்(III) பெர்குளோரேட்டு
https://ta.wikipedia.org/wiki/நியோடிமியம்(III)_பெர்குளோரேட்டு
ஐசிலோ (யானை)
https://ta.wikipedia.org/wiki/ஐசிலோ_(யானை)
ஐசிலோ (Isilo) (1956-2014) என்பது மிகப்பெரிய ஆப்பிரிக்க யானைகளில் ஒன்றாகும். இது இறப்பதற்கு முன்பு தெற்கு அரைக்கோளத்தில் மிகப்பெரிய உயிருள்ள யானையாக இருந்தது. 100 பவுண்டுகளுக்கு மேல் எடையுள்ள தந்தங்களை இந்த ஆண் யானை கொண்டிருந்தது. இசிலோ முதுமை காரணமாக இயற்கையான காரணங்களால் இறந்தாலும், இதன் மரணம் சர்வதேச ஊடகங்களின் கவனத்தை ஈர்த்தது. ஏனெனில் இதன் உடல் கண்டுபிடிக்கப்பட்டபோது தேசிய பாரம்பரிய கலைப்பொருளாக கருதப்படும் இதன் தந்தங்கள் காணவில்லை. பின்னணி ஒரு ஆப்பிரிக்க யானையான ஐசிலோ தென்னாப்பிரிக்காவிலுள்ள தெம்பே யானைப் பூங்காவில் வாழ்ந்தது. இது உலகின் மிகப்பெரிய யானைகள் இதுவும் ஒன்று. சுலு மொழியில் ஐசிலோ என்றால் “அரசன்” என்று பொருள்படும். 1950 களின் பிற்பகுதியில் பிறந்த இது இறக்கும் போது குறைந்தது 58 வயதாக இருந்திருக்கலாம். ஐசிலோ 6.5 முதல் 7 டன் வரை எடை கொண்டது. ஐசிலோவின் தந்தங்கள் 3 மீட்டர் (9 அடி) நீளத்திற்கு மேல் இருக்கும் என மதிப்பிடப்பட்டது. வலது தந்தம் சுமார் 65 கிலோ (143 பவுண்டுகள்) மற்றும் இடது சுமார் 60 கிலோ (132 பவுண்டுகள்) எடை கொண்டது. இறப்பு ஐசிலோ, 10 ஜனவரி 2014இல் பூங்காவின் தென்மேற்குப் பகுதியில் உள்ள அதன் சொந்த இடமாக அறியப்பட்ட பகுதியில் இயற்கையான காரணங்களால் இறந்தது. இதன் சடலம் மார்ச் 2014 இன் பிற்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், மரணம் ஏப்ரல் 4, 2014 அன்று செம்வெலோ வனவிலங்கு மற்றும் தெம்பே யானை பூங்காவின் மேலாளர் எர்னஸ்ட் ராபர்ட்ஸால் அறிவிக்கப்பட்டது. இது இறந்து இரண்டு வார காலத்திற்குள் இதன் தந்தங்கள் ஒன்றன் பின் ஒன்றாக அகற்றப்பட்டிருக்கலாம். அவை பெரும்பாலும் மூக்குக் கொம்பன் வேட்டைக்காரர்கள் என்று சந்தேகிக்கப்படுபவர்களால் மொசாம்பிக் எல்லைக்கு வெளியே கொண்டு செல்லப்பட்டிருக்கலாம். அங்கிருந்து உலகின் மிகப்பெரிய தந்தங்களுக்கான சந்தையான தொலை கிழக்கு நாடுகளுக்கு அனுப்பப்படுகின்றன. ஐசிலோவின் தந்தங்கள் கறுப்புச் சந்தை மதிப்பு சுமார் தென்னாப்பிரிக்க ரான்ட் 3 மில்லியன் (சுமார் $250,000. அமெரிக்க டாலர்) என்று மதிப்பிடப்பட்டது. மரணத்திற்கான எதிர்வினைகள் இசிலோவின் மரணம் அதன் பிரபல அந்தஸ்து மற்றும் தேசிய பாரம்பரிய கலைப்பொருளாக கருதப்படும் அதன் தந்தங்களை இழந்ததன் காரணமாக சர்வதேச ஊடகங்களின் கவனத்தை ஈர்த்தது. ஐசிலோவின் தந்தங்கள் தெம்பே குலத்தின் பாரம்பரியத்தில் வந்தவரும் தெம்பே யாணைப் பூங்காவின் பகுதி காவலரும், தெம்பே குலத்தின் தலைவருமான இன்கோசி மபுடு தெம்பே, தென்னாப்பிரிக்காவின் சுற்றுலாவை மேம்படுத்துவதற்காக காட்சிப் பொருட்களுடன் வைக்க டர்பனில் உள்ள சாகா விமான நிலையத்தில் தந்தங்களை வழங்க திட்டமிட்டார். ஏப்ரல் 2014 இல், இன்கோசி தெம்பே காணாமல் போன தந்தங்களைத் திரும்பக் கொடுப்பதற்கு R100 000 (தோராயமாக $8600 அமெரிக்க டாலர்) வெகுமதியை அறிவித்தார். மற்ற பெரிய யானைத் தந்தங்கள் ஜூன் 2014 இல் கென்யாவில் உள்ள சாவோ கிழக்கு தேசியப் பூங்காவில், ஐசிலோவின் பெரிய தந்தங்களைப் போன்றே இருந்த கிழக்கு ஆபிரிக்காவின் மிகப்பெரிய யானையான சட்டாவோ விஷம் கலந்த ஈட்டிகளால் வேட்டையாடுபவர்களால் கொல்லப்பட்டது. புத்தகங்கள் மற்றும் பிற ஊடகங்கள் உலகிலேயே மிகப்பெரிய யானைகளை தெம்பே தேசிய யானைப் பூங்காவில் காணலாம் என்று நம்பும் டாக்டர். ஜோஹன் மரைஸின் இரண்டு புத்தகங்களில் ஐசிலோ பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. சர்வதேச வனவிலங்கு நிபுணரான ஜேம்ஸ் கியூரி, ஐசிலோ காணாமல் போவதற்கு முன்பு கடைசியாக படம் எடுத்தவர். 2016 ஆம் ஆண்டில், லாஸ்ட் ஆஃப் தி பிக் டஸ்கர்ஸ் பூமியில் உள்ள மிகப்பெரிய யானைகள் மற்றும் அவற்றின் உயிர்வாழ்வை உறுதிசெய்ய என்ன செய்யப்படுகிறது என்பது பற்றிய ஆவணப்படத்தை படமாக்க ஒரு ஆரம்பக்கட்டப் பிரச்சாரத்தைத் தொடங்கினார். ஆவணப்படம் அக்டோபர் 2018 இல் வெளியிடப்பட்டது மேற்கோள்கள் பகுப்பு:சகாரா கீழமை ஆபிரிக்காவின் பாலூட்டிகள் பகுப்பு:யானைகள் பகுப்பு:புகழ் பெற்ற யானைகள்
சுர்ஜித் பல்லா
https://ta.wikipedia.org/wiki/சுர்ஜித்_பல்லா
சுர்ஜித் பல்லா (Surjit Bhalla) என்பவர் ஒரு இந்திய பொருளாதார நிபுணர், எழுத்தாளர் மற்றும் கட்டுரையாளர், தேசிய மற்றும் சர்வதேச பொருளாதாரக் கொள்கை அரங்கில் விரிவான அனுபவத்தைக் கொண்டவர். சர்வதேச நாணய நிதியத்தில் (IMF) இந்தியாவுக்கான நிர்வாக இயக்குநராக பணியாற்றியவர்.Xevolvenceindiaevolvenceindia இவர் பிரதமர் நரேந்திர மோடியின் பொருளாதார ஆலோசனைக் குழுவின் முன்னாள் பகுதி நேர உறுப்பினராகவும் இருந்தார்.ssbhalla பகுப்பு:இந்தியப் பொருளியலாளர்கள் பணிகள் பொருளாதார ஆராய்ச்சியாளரான இவர், புதிய தொழில்களுக்கான ஆலோசனைகளை வழங்குபவர். பொருளாதார ஆராய்ச்சி தொடர்பான பல நூல்களை எழுதியுள்ளார். இவர் எழுதிய முதல் புத்தகம் விக்கெட்டுக்கு இடையே: யார் சிறந்தவர் ஏன்? (Between the Wickets: The Who and The Why) என்பதாகும்.hinditamil 2014 முதல் இவர் தி இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில் பங்களிக்கும் ஆசிரியராகவும் உள்ளார்.ssbhalla தேர்தலில் வெற்றிபெற முக்கிய காரணிகளை பற்றி இவர் குறிப்பிடும் போது "தேர்தலில் வெற்றி பெற இரண்டு விசயங்கள் முக்கியம். முதலில் பொருளாதாரம் அடுத்தது தலைமை." என்று இவர் கூறுகிறார்.hinditamil மேற்கோள்கள்
உலக சதுரங்க வாகை
https://ta.wikipedia.org/wiki/உலக_சதுரங்க_வாகை
thumb|நடப்பு (2023) உலக வாகையாளர் திங் லிரேன் (சீனா) உலக சதுரங்க வாகை (World Chess Championship) என்பது சதுரங்கத்தில் உலக வாகையாளரைத் தெரிவு செய்ய நிகழ்த்தப்படும் ஒரு தொடர் ஆகும். நடப்பு உலக வாகையாளர் சீனாவைச் சேர்ந்த திங் லிரேன் ஆவார். இவர் 2023 உலக சதுரங்க வாகைப் போட்டியில் இயான் நிப்போம்னிசியை வென்று வாகையாளர் ஆனார். முந்தைய வாகையாளர் மாக்னசு கார்ல்சன், தனது பட்டத்தைத் தக்கவைக்க மறுத்துவிட்டார். உலக வாகைக்காக அங்கீகரிக்கப்பட்ட முதல் நிகழ்வு 1886 ஆம் ஆண்டில் உலகின் இரண்டு முன்னணி வீரர்களான வில்கெம் இசுட்டைனிட்சு, யொகான்னசு சூக்கர்டோர்ட் ஆகியோருக்கிடையேயான போட்டியாகும். இசுட்டைனிட்சு வெற்றி பெற்று முதல் உலக வாகையாளரானார்.David Hooper and Kenneth Whyld, The Oxford Companion to Chess, Oxford University Press, 1992 (2nd edition), p.459. . 1886 முதல் 1946 வரை, வாகையாளர் தேவையான விதிமுறைகளை அமைத்து, புதிய உலக வாகையாளராவதற்கு எந்தவொரு சவாலிலும் கணிசமான பங்களிப்புகளை உயர்த்தி, இறுதிப் போட்டியில் வாகையாளரைத் தோற்கடிக்க வேண்டும். 1946-இல் அன்றைய உலக வாகையாளரான அலெக்சாண்டர் அலேகின் இறந்ததைத் தொடர்ந்து, பன்னாட்டு சதுரங்கக் கூட்டமைப்பு (பிடே) உலக வாகையாளருக்கான நிர்வாகத்தை எடுத்துக் கொண்டது. இது 1948 உலக வாகையாளர் போட்டியுடன் தொடங்கியது. 1948 முதல் 1993 வரை, பிடே அமைப்பு ஒவ்வொரு மூன்று ஆண்டுகளுக்கும் ஒரு புதிய போட்டியாளரைத் தேர்வு செய்ய போட்டிகளின் தொகுப்பை ஏற்பாடு செய்தது. 1993-ஆம் ஆண்டில், நடப்பு சாம்பியனான காரி காஸ்பரொவ் பிடே-யில் இருந்து பிரிந்தார். உலக வாகைப் பட்டத்திற்குப் போட்டியாக காசுபரோவ் "தொழில்முறை சதுரங்க சங்கத்தை" (PCA) தொடங்கி அடுத்த 13 ஆண்டுகளுக்கு அச்சங்கத்தின் மூலமாக ஒரு "போட்டி வாகையாளர்" தெரிவானார். இறுதியில் 2006 ஆம் ஆண்டில் இரண்டும் ஒன்றிணைக்கப்பட்டு அடுத்தடுத்த போட்டிகள் பிடே-ஆல் நடத்தப்பட்டு வருகின்றன. 2014 முதல், வாகைப் போட்டிகள் இரண்டு ஆண்டு சுழற்சியில் நிலைபெற்றது. கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக 2020, 2022 போட்டிகள் முறையே 2021, 2023 க்கு ஒத்திவைக்கப்பட்டு நடத்தப்பட்டன. அடுத்த போட்டி வழக்கமான அட்டவணைப்படி 2024 நவம்பரில் நடைபெறும். உலக வாகைப் போட்டிகளில் அனைத்து வீரர்களும் பங்குபற்றக் கூடியதாக இருந்தாலும், பெண்கள், 20 வயதுக்குட்பட்டவர்கள், குறைந்த வயதுக் குழுக்கள், மூத்தவர்கள் ஆகியோருக்குத் தனித்தனி வாகைப் போட்டிகள் உள்ளன. விரைவு, மின்னல், கணினி சதுரங்கம் ஆகியவற்றிலும் உலக சதுரங்க வாகைப் போட்டிகள் நடைபெறுகின்றன. உலக வாகையாளர்கள் பிடே-இற்கு முன்னர் (1886–1946) #பெயர்நாடுஆண்டுகள்1வில்கெம் இசுட்டைனிட்சு1886–18942இமானுவேல் லாசுக்கர்1894–19213ஒசே ரவூல் கப்பபிளாங்கா1921–19274அலெக்சாந்தர் அலேகின் பிரான்சு1927–19355மாக்சு இயூவி1935–1937(4)அலெக்சாந்தர் அலேகின் பிரான்சு1937–1946 பிடே உலக வாகையாளர்கள் (1948–1993) #பெயர்நாடுஆண்டுகள்6மிகைல் பொத்வின்னிக்1948–19577வசீலி சிமிசுலோவ்1957–1958(6)மிகைல் பொத்வின்னிக்1958–19608மிகைல் தால்1960–1961(6)மிகைல் பொத்வின்னிக்1961–19639திக்ரான் பெத்ரசியான்1963–196910போரிசு சுபாசுகி1969–197211பாபி ஃபிஷர்1972–197512அனத்தோலி கார்ப்பொவ்1975–198513காரி காஸ்பரொவ் 1985–1993 மரபு-சார் (PCA) உலக வாகையாளர்கள் (1993–2006) #பெயர்நாடுஆண்டுகள்13காரி காஸ்பரொவ்1993–200014விளாதிமிர் கிராம்னிக்2000–2006 பிடே உலக வாகையாளர்கள் (1993–2006) #பெயர்நாடுஆண்டுகள்அனத்தோலி கார்ப்பொவ்1993–1999அலெக்சாந்தர் காலிஃப்மேன்1999–2000விசுவநாதன் ஆனந்த்2000–2002உருசுலான் பனமரியோவ்2002–2004உருசுத்தாம் காசிம்சானொவ்2004–2005வெசிலின் தோப்பலோவ்2005–2006 பிடே (இணைந்த) உலக வாகையாளர்கள் (2006–இன்று) #பெயர்நாடுஆண்டுகள்14விளாதிமிர் கிராம்னிக்2006–200715விசுவநாதன் ஆனந்த்2007–201316மாக்னசு கார்ல்சன்2013–202317திங் லிரேன் 2023–இன்று மேற்கோள்கள் வெளி இணைப்புகள் Mark Weeks' pages on the championships – Contains all results and games Graeme Cree's World Chess Championship Page (archived) – Contains the results, and also some commentary by an amateur chess historian Kramnik Interview: From Steinitz to Kasparov – விளாதிமிர் கிராம்னிக் (the 14th World Chess Champion) shares his views on the first 13 World Chess Champions. Chessgames guide to the World Championship The World Chess Championship by Edward Winter
அருண் ஜேட்லி துடுப்பாட்ட விளையாட்டரங்கம்
https://ta.wikipedia.org/wiki/அருண்_ஜேட்லி_துடுப்பாட்ட_விளையாட்டரங்கம்
அருண் ஜேட்லி துடுப்பாட்ட விளையாட்டரங்கம் (முன்னர் பெரோ சா கோட்லா திடல் என்று அறியப்பட்டது) என்பது புதுதில்லியில் அமைந்துள்ள துடுப்பாட்ட அரங்கமாகும். 1883இல் தொடங்கப்பட்ட இது கொல்கத்தாவின் ஈடன் கார்டன்சுக்குப் பிறகு தற்போதும் செயல்பாட்டில் உள்ள இந்தியாவின் இரண்டாவது பழமையான பன்னாட்டுத் துடுப்பாட்ட அரங்கமாக உள்ளது. 12 செப்டம்பர் 2019இல் இந்த அரங்கம் இந்தியாவின் முன்னாள் நிதியமைச்சரும், முன்னாள் டிடிசிஏ தலைவருமான அருண் ஜெட்லியின் நினைவாக மறுபெயரிடப்பட்டது. பெயர் மாற்ற அறிவிப்புக்குப் பிறகு அரங்கம் மட்டுமே பெயர் மாற்றப்பட்டுள்ளதாகவும் அதன் திடல் தற்போதும் பெரோ சா கோட்லா திடல் என்றே அழைக்கப்படும் என்றும் டிடிசிஏ விளக்கமளித்தது. சாதனைப் பதிவுகள் தேர்வுப் பதிவுகள் அதிகபட்ச புள்ளிகள்- மேற்கிந்தியத் தீவுகள் 644-8 (1959); 631 (1948), இந்தியா 613-7 (2008) அதிகபட்ச ஓட்டங்கள்- திலீப் வெங்சர்கார் (637), சுனில் கவாஸ்கர் (668), சச்சின் டெண்டுல்கர் (643) அதிகபட்ச வீழ்த்தல்கள்- அனில் கும்ப்ளே (58), கபில் தேவ் (32), ரவிச்சந்திரன் அசுவின் (27) ஒருநாள் பதிவுகள் 2 முறை மட்டுமே ஒரு அணி 300 ஓட்டங்களைக் கடந்துள்ளது. 7 மட்டையாளர்கள் நூறு எடுத்துள்ளனர். 1989ஆம் ஆண்டு இந்திய அணிக்கு எதிரான போட்டியில் விவியன் ரிச்சர்ட்ஸ் 6 மட்டையாளர்களை வீழ்த்தினார். உலகக்கிண்ணப் போட்டிகள் 1987 உலகக்கிண்ணம் 1996 உலகக்கிண்ணம் 2011 உலகக்கிண்ணம் மேற்கோள்கள் பகுப்பு:இந்தியத் துடுப்பாட்ட மைதானங்கள் பகுப்பு:தில்லியில் விளையாட்டு
அரச மலேசிய வான்படை
https://ta.wikipedia.org/wiki/அரச_மலேசிய_வான்படை
அரச மலேசிய வான்படை அல்லது மலேசிய வான்படை ஆங்கிலம்: Royal Malaysian Air Force (RMAF); மலாய்: Tentera Udara Diraja Malaysia (TUDM;) என்பது மலேசிய பாதுகாப்பு படைகளில் உள்ள மூன்று படைப்பிரிவுகளில் ஒரு பிரிவாகும். மலேசிய நாட்டின் முக்கிய பாதுகாப்பு படைகளில் ஒன்றாகத் திகழும் இந்தப் படை, வான்சார்ந்த கண்காணிப்பு மற்றும் வான்சார்ந்த பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு முக்கியத்துவம் வழங்குகிறது. 2 ஜூன் 1958-இல், மலாயா விடுதலைக்குப் பின்னர், அரச மலாயா கூட்டரசு வான்படை ஆங்கிலம்: Royal Federation of Malaya Air Force; மலாய்: Tentera Udara Diraja Persekutuan Tanah Melayu) எனும் பெயரில் ஒரு வான்படை மலாயாவில் தோற்றுவிக்கப்பட்டது. அரச மலேசிய வான்படையானது, ஐக்கிய அமெரிக்கா, ரசியா, ஐரோப்பா நாடுகளில் தயாரிக்கப்பட்ட நவீன வானூர்திகளின் கலவையில் இயங்குகிறது. பொது நாட்டின் வான் எல்லைகளைப் பாதுகாப்பது மற்றும் நாட்டின் பிற ஆயுதப் படைகளுடன் இணைந்து, போர் மற்றும் அமைதி காலங்களில் மலேசியாவின் எல்லைகளைப் பாதுகாத்து வருகிறது. அதே வேளையில், மலேசிய மக்கள்; மற்றும் மலேசியக் வான்சார் நலன்களுக்கு எதிரான எந்தவோர் அச்சுறுத்தல் அல்லது ஆக்கிரமிப்பு நடந்தாலும் அவற்றைத் தடுத்து நிறுத்துவது இந்தப் படையின் முதன்மை இலக்கமாகும். அரச மலேசிய வான்படை மலேசிய தற்காப்பு அமைச்சின் நேரடி கட்டுப்பாட்டின் கீழ் இயங்குகிறது. மலேசிய இராணுவத்தில், மலேசிய கடற்படையும்; மலேசிய வான்படையும் , ‘அரச’ என்ற பட்டத்துடன் செயல்படுகின்றன. அந்த வகையில், மலேசிய வான்படை அதிகாரப்பூர்வமாக அரச மலேசிய வான்படை என்று அழைக்கப்படுகிறது. வரலாறு மலாயா துணை வான்படை தான் (Malayan Auxiliary Air Force) அரச வான்படையின் (Royal Air Force) (RAF) முதல் வான்படை ஆகும். இது 1934-இல் உருவாக்கப்பட்டது. பின்னர் அது நீரிணைக் குடியேற்றங்களின் தன்னார்வ வான்படை (Straits Settlements Volunteer Air Force) (SSVAF) என மாற்றப்பட்டது. 1940-இல் மலாயா தன்னார்வ வான்படை (Malayan Volunteers Air Force) (MVAF) உருவாக்கப்பட்டது. பின்னர் 1942-இல் சப்பானியர்கள் மலாயாவைத் தாக்கத் தொடங்கியபோது தன்னார்வ வான்படை கலைக்கப்பட்டது. பின்னர் 1950-இல், அதே மலாயா தன்னார்வ வான்படை மீண்டும் நிறுவப்பட்டது. மலாயா அவசரகால நிலையின் போது இந்தப் படை; குறிப்பிடத்தக்க அளவில் பங்களிப்புகளை வழங்கியது. மலாயா தன்னார்வ வான்படை 260px|right|thumb|மலேசிய விமானிகளும்; போர் விமானங்களும் 2 ஜூன் 1958-இல், மலாயா தன்னார்வ வான்படை என்பது அரச கூட்டரசு மலாயா வான்படை (Royal Federation of Malaya Air Force) (RFMAF) எனும் பெயர் மாற்றம் கண்டது. இந்த சூன் 2-ஆம் தேதி, ஆண்டுதோறும், அரச மலேசிய வான்படை தினமாக கொண்டாடப்படுகிறது. மலாயா அவசரகால நிலையின் போது நாட்டின் பாதுகாப்பிற்கு, மலேசிய வான்படை ஆற்றிய பங்களிப்பைக் கௌரவிக்கும் வகையில் மலேசிய நாடாளுமன்றத்தால் அந்தப் படைக்கு அரச பட்டம் வழங்கப்பட்டது. 1962 அக்டோபர் 25-ஆம் தேதி, மலாயா அவசரகால நிலை முடிவுக்கு வந்த பிறகு, சிம்பாங் வானூர்தி நிலையம் (Simpang Airport) என அழைக்கப்பட்ட சுங்கை பீசி இராணுவ வானூர்தி நிலையம், மலாயா தன்னார்வ வான்படைக்கு வழங்கப்பட்டது. இந்த வானூர்தி நிலையத்தை பழைய வானூர்தி நிலையம் (Old Airport) என்றும்; சுங்கை பீசி வானூர்தி தளம் (Sungai Besi Air Base) என்றும் அழைப்பது உண்டு. மலேசியாவில் கட்டப்பட்ட மிகப் பழைமையான வானூர்தி நிலையங்களில் இதுவும் ஒன்றாகும். Royal Selangor Flying Club: LocationAIP Malaysia: WMKF - RMAF Kuala Lumpur/Simpang at Department of Civil Aviation Malaysia 1963 செப்டம்பர் 16-ஆம் தேதி மலேசியா எனும் கூட்டமைப்பு உருவானதும், அரச கூட்டரசு மலாயா வான்படையின் பெயர் அரச மலேசிய வான்படை என மாற்றப்பட்டது. தரவரிசை அமைப்பு உயர் அதிகாரிகள் 1970-ஆம் ஆண்டில் இருந்து, அரச மலேசிய வான்படை, பழைய தரவரிசை முறையைப் பயன்படுத்தி வருகிறது. உயர் அதிகாரிகள்பயிற்சி பதவி தளபதி ஜெனரல் துணை ஜெனரல் மேஜர் ஜெனரல் பிரிகேடியர் ஜெனரல் கர்னல் துணை கர்னல் மேஜர் கேப்டன் லெப்டிணன்ட் லெப்டிணன்ட் மூடா பயிற்சி அதிகாரிமலாய் பெயர் Marsyal Tentera Udara Jeneral TUDM Leftenan Jeneral TUDM Mejar Jeneral TUDM Brigedier Jeneral TUDM Kolonel TUDM Leftenan Kolonel TUDM Mejar TUDM Kapten TUDM Leftenan TUDM Leftenan Muda TUDM Pegawai Kadet தோள் பட்டை 50px 50px 50px 50px 50px 50px 50px 50px 50px 50px 50px தோள் பட்டைஇல்லை அதிகாரிகள் 50px|Regimental Sergeant Major of the Army 50px|Warrant Officer Class 2 50px|Flight Sergeant 50px|Sergeant 50px|Corporal 50px|Lance Corporal No insignia No insignia வாரண்ட் அதிகாரி I வாரண்ட் அதிகாரி II வான் சார்ஜெண்ட் சார்ஜெண்ட் உடாரா கார்ப்பரல் உடாரா லாசுகார் உடாரா I லாசுகார் உடாரா II லாசுகார் உடாரா II பயிற்சி அதிகாரி படை அமைப்பு படை படையணி வானூர்திவான்தளம் 1-ஆவது படை படையணி 2 Global Express, Boeing BBJ (737-700) சுபாங் வான்தளம் படையணி 3 AgustaWestland AW139 பட்டர்வொர்த் வான்தளம் படையணி 8 Airbus A400M சுபாங் வான்தளம் படையணி 10 Eurocopter EC-725 குவாந்தான் வான்தளம் படையணி 11 UAS லபுவான் வான்தளம் படையணி 12 Su-30MKM Flanker கோங் கெடாக் வான்தளம் படையணி 15 BAE Hawk 108/208 பட்டர்வொர்த் வான்தளம் படையணி 16 Beechcraft 200T சுபாங் வான்தளம் படையணி 17 பட்டர்வொர்த் வான்தளம் படையணி 18 Boeing F/A-18D Hornet பட்டர்வொர்த் வான்தளம் படையணி 20 Lockheed C-130H Hercules, KC-130T சுபாங் வான்தளம் படையணி 21 CN235-220M, CN235-220M VIP சுபாங் வான்தளம் 2-ஆவது படை படையணி 1 CN-235-220M கூச்சிங் வான்தளம் படையணி 5 Eurocopter EC-725 லபுவான் வான்தளம் படையணி 6 BAE Hawk 108/Hawk 208 லபுவான் வான்தளம் படையணி 14 Lockheed C-130H Hercules லபுவான் வான்தளம் பயிற்சி பிரிவு படையணி 1 FTC PC-7 Mk II அலோர் ஸ்டார் வான்தளம் படையணி 2 FTC EC-120B அலோர் ஸ்டார் வான்தளம் படையணி 3 FTC குவாந்தான் வான்தளம் thumb|center|650px|மலேசிய வான்படை தளங்களின் வரைபடம் வான்படை தளங்கள் thumb|மலேசிய வான்படையின் பலவகையான போர் ஊர்திகள் thumb|மலேசிய வான்படையின் சுக்கோய் ரசிய போர் ஊர்திகள் பட்டர்வொர்த் இராணுவ வானூர்தி நிலையம், பினாங்கு RMAF Butterworth குவாந்தான், பகாங் RMAF Kuantan கோங் கெடாக், கிளாந்தான் RMAF Gong Kedak லபுவான், சபா RMAF Labuan சுங்கை பீசி RMAF Kuala Lumpur சுபாங், சிலாங்கூர் RMAF Subang கூச்சிங், சரவாக் RMAF Kuching அலோர் ஸ்டார், கெடா (RMAF Alor Setar) (வான்படை அகாடமி) ஈப்போ, பேராக் (RMAF Ipoh) (வான்படை பள்ளி) புக்கிட் லுஞ்சு, ஜொகூர் (RMAF Bukit Lunchu) (கட்டுப்பாட்டு தகவல் மையம்) கின்ராரா, சிலாங்கூர் (RMAF Kinrara) (மத்திய வான்படை மருத்துவமனை) ஜுக்ரா, சிலாங்கூர் (RMAF Jugra) புக்கிட் இபாம், பகாங் (RMAF Bukit Ibam) செரி சென்டாயான், நெகிரி செம்பிலான் (RMAF Sendayan) (இராணுவ நிர்வாக மையம்) மேலும் காண்க மலேசிய தற்காப்பு அமைச்சு மலேசிய பாதுகாப்பு படைகள் அரச மலேசிய கடற்படை மலேசிய தரைப்படை ஜொகூர் அரச இராணுவப் படை மேற்கோள்கள் மேலும் படிக்க வெளி இணைப்புகள் RMAF Official Website Malaysian Armed Forces Official Website Malaysian Ministry of Defence Official Website Scramble, Malaysian Forces Overview, Tentera Udara Diraja Malaysia (TUDM) Royal Malaysian Air Force Museum Bases and Squadrons
மலேசிய வான்படை
https://ta.wikipedia.org/wiki/மலேசிய_வான்படை
வழிமாற்று அரச மலேசிய வான்படை
மலேசிய காவல் துறை
https://ta.wikipedia.org/wiki/மலேசிய_காவல்_துறை
வழிமாற்று அரச மலேசிய காவல் துறை
விஜய் கே. நம்பியார்
https://ta.wikipedia.org/wiki/விஜய்_கே._நம்பியார்
சென்னிச்சேரி விஜய் நம்பியார் (Chenicheri Vijay Nambiar, பிறப்பு ஆகத்து 1943) என்பவர் ஒரு ஓய்வு பெற்ற இந்திய தூதர் மற்றும் மியான்மரில் ஐ.நா பொதுச்செயலாளரின் சிறப்பு ஆலோசகராக பணியாற்றியவர். இவர் 2007 சனவரி முதல் நாள் முதல் 2012 பெப்ரவரி வரை ஐ.நா பொதுச்செயலாளர் பான் கீ மூனின் கீழ் செஃப் டி கேபினட் (தலைமைப் பணியாளர்) ஆக இருந்தார். இவர் ஐ.நா துணைப் பொதுச்செயலாளர் பதவி வகித்தார் மேலும் பொதுச்செயலாளரின் மூத்த நிர்வாகக் குழுவில் உறுப்பினராகவும் இருந்தார்.நம்பியார் முன்பு இந்திய அரசின் தேசிய பாதுகாப்பு துணை ஆலோசகராகவும், தேசிய பாதுகாப்பு அவை செயலகத்தின் தலைவராகவும் பணியாற்றினார். இவர் முன்பு நியூயார்க்கில் ஐக்கிய நாடுகள் சபைக்கான இந்தியாவின் நிரந்தரப் பிரதிநிதியாக (மே 2002-ஜூன் 2004) பணியாற்றினார். முன்னதாக இந்தியாவின் தூதராக, பாக்கித்தான் (2000-2001), சீனா (1996-2000), மலேசியா (1993-1996), ஆப்கானித்தான் (1990-1992) ஆகிய நாடுகளில் அடுத்தடுத்து பணியாற்றினார். முன்னதாக அல்ஜீரியாவில் இந்திய தூதராக (1985-1988) இருந்தார். இந்திய வெளியுறவுச் சேவையில் தனது தொழில் வாழ்க்கையின் போது, 1970 கள் மற்றும் 1980 களில் பெய்ஜிங், பெல்கிரேட், நியூயார்க் போன்ற இடங்களில் பலதரப்பு பதவிகளில் பணியாற்றியுள்ளார். இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியின் வரலாற்று சிறப்புமிக்க சீனப் பயணத்தின் போது 1988 இல் கிழக்கு ஆசியாவைக் கையாளும் இணைச் செயலாளராக (டைரக்டர் ஜெனரல்) இருந்தார். 1980 களின் முற்பகுதியில் புது தில்லியில் உள்ள தலைமையகத்தில் பலதரப்பு விவகாரங்களையும் கையாண்டார். 1979 முதல் ஐ.நா, அணிசேரா நாடுகள் உச்சிமாநாடு, அமைச்சர்களின் மாநாடுகள் போன்ற பல மாநாடுகளில் இவர் தூதுக்குழு மட்டத்தில் பணியாற்றியுள்ளார். துவக்ககால வாழ்க்கையும், தொழிலும் விஜய் நம்பியார் இந்தியாவின், கேரளத்தை பீர்வீகமாக கொண்டவர். இவர் செனிச்சேரி குடும்பத்தைச் சேர்ந்தவர். இவர் 1943ஆம் ஆண்டு ஆகத்து மாதம் பூனாவில் பிறந்தார். இவர் லெப்டினன்ட் ஜெனரல் சதீஷ் நம்பியாரின் தம்பி ஆவார். பம்பாய் பல்கலைக்கழகத்தில் அரசியல் அறிவியலில் முதுகலை பட்டம் பெற்ற இவர், 1965 ஆம் ஆண்டில் பல்கலைக்கழகத்தின் வேந்தரின் தங்கப் பதக்கத்தைப் பெற்றார். நம்பியார் 1967 இல் இந்திய வெளியுறவுச் சேவையில் சேர்ந்தார். சீன மொழியில் நிபுணத்துவம் பெற்ற நம்பியார் தன் ஆரம்ப ஆண்டுகளின் இராஜதந்திர சேவையில் ஹாங்காங், பெய்ஜிங்கில் பணியாற்றினார். 1970 களின் நடுப்பகுதியில் யூகோஸ்லாவியாவின் பெல்கிரேடிலும் பணியாற்றினார். இவருக்கு திருமணமாகி இரண்டு மகள்கள் உள்ளனர். மேற்கோள்கள் வெளி இணைப்புகள் Official Biography பகுப்பு:கேரள நபர்கள் பகுப்பு:மலையாள நபர்கள் பகுப்பு:வாழும் நபர்கள் பகுப்பு:1943 பிறப்புகள்
விஜய் நம்பியார்
https://ta.wikipedia.org/wiki/விஜய்_நம்பியார்
வழிமாற்றுவிஜய் கே. நம்பியார்
சடாவோ (யானை)
https://ta.wikipedia.org/wiki/சடாவோ_(யானை)
சடாவோ (Satao) (சுமார் 1968 – 30 மே 2014) கென்யாவின் மிகப்பெரிய ஆப்பிரிக்க யானைகளில் ஒன்றாகும். இதன் தந்தங்கள் கிட்டத்தட்ட தரையைத் தொடும் அளவுக்கு நீளமாக இருந்தது. 30 மே 2014 அன்று நஞ்சு கலந்த அம்பைப் பயன்படுத்தி வேட்டைக்காரர்களால் சடாவோ கொல்லப்பட்டதாக சாவோ அறக்கட்டளை அறிவித்தது. பின்னணி சடாவோ என்பது ஆப்பிரிக்க யானையாகும். யானைகள் அதிகம் வசிக்கும் கொண்ட உலகின் மிகப்பெரிய வனவிலங்கு பூங்காவில் ஒன்றான சாவோ கிழக்கு தேசியப் பூங்காவில் வாழ்ந்தது. 1960 களின் பிற்பகுதியில் சடாவோ பிறந்தது என்றும் அது கொல்லப்பட்டபோது அதற்கு குறைந்தது 45 வயதாக இருந்திருக்கலாம் என்றும் கருதப்படுகிறது. அது இறக்கும் போது உலகின் மிகப்பெரிய யானைகளில் ஒன்றாக மதிப்பிடப்பட்டது. மேலும், கென்யாவின் மிகவும் பிரபலமான மற்றும் நன்கு அறியப்பட்ட யானைகளில் ஒன்றாக விவரிக்கப்பட்டது (அதாவது, கிட்டத்தட்ட தரையைத் தொடும் தந்தங்களைக் கொண்ட ஆண் யானைகள்). சடாவோவின் தந்தங்கள் 6.5 அடிகள் (2.0 மீ) நீளமானது. மேலும் கென்யாவில் வாழும் எஞ்சியிருக்கும் சில யானைகளில் மிகப்பெரிய யானையாகக் கணக்கிடப்பட்டது. மீதமுள்ள ஆப்பிரிக்க பெரிய யானைகளில் பாதிக்கும் மேற்பட்டவை கென்யாவில் உள்ளன.{Balan George Dian, The World As It Once Was, https://www.amazon.co.uk/World-As-Once-Was-Gloriously/dp/2805205901 வலது|thumb|300x300px| கென்யாவில் உள்ள சாவோ கிழக்கு தேசியப் பூங்காவில் உள்ள நீர்நிலையில் யானைகள் யானை தந்தம் வேட்டையாடுவது ஆப்பிரிக்காவில் ஒரு பரவலான பிரச்சனை. 2013 ஆம் ஆண்டில், 20,000 க்கும் மேற்பட்ட ஆப்பிரிக்க யானைகள் தந்தத்திற்காக கொல்லப்பட்டன. ஆப்பிரிக்க யானைகளின் படுகொலை யானை தந்தத்தின் கருப்பு சந்தை மதிப்பால் இயக்கப்படுகிறது. யானை தந்தத்தின் சட்டவிரோத வர்த்தகம் முதன்மையாக ஆசியாவில் உள்ளது. அங்கு தந்தம் ஒரு கிலோவுக்கு பல ஆயிரம் டாலர்களுக்கு விற்கப்படுகிறது. சடாவோவின் தந்தங்கள் ஒவ்வொன்றும் 100 பவுண்டுகள் (45 கிலோ) எடையுள்ளதாக மதிப்பிடப்பட்டது. மீதமுள்ள ஆப்பிரிக்க பெரிய யானைகளில் பாதிக்கும் மேற்பட்டவை கென்யாவில் உள்ளன.{Balan George Dian, The World As It Once Was, https://www.amazon.co.uk/World-As-Once-Was-Gloriously/dp/2805205901 2007 ஆம் ஆண்டு முதல், தந்தத்தின் சட்டவிரோத வர்த்தகம் இரட்டிப்பாகியுள்ளது. 2017 ஆம் ஆண்டு வரை சீனா மிகப்பெரிய சந்தையாக இருந்த நிலையில், அமெரிக்கா, தாய்லாந்து, வியட்நாம் மற்றும் பிலிப்பீன்சு போன்ற நாடுகளும் சட்டவிரோத தந்தங்களின் சிறந்த சந்தைகளாக கருதப்படுகின்றன. ஆப்பிரிக்காவில் கிளர்ச்சிகளுக்கு நிதியளிப்பதற்கான வழிகளைத் தேடும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் மற்றும் கிளர்ச்சிக் குழுக்களால் வேட்டையாடுதல் அதிகரிப்பு பெருமளவில் இயக்கப்படுகிறது. கறுப்பு சந்தையில் சடாவோவின் தந்தங்களின் பெரும் மதிப்பு காரணமாக, ஜூன் 2014 க்கு முந்தைய 18 மாதங்களுக்கு கென்யா வனவிலங்கு சேவை மற்றும் சாவோo அறக்கட்டளை மூலம் சடாவோ கிட்டத்தட்ட நிலையான கண்காணிப்பில் இருந்தது. இது பொதுவாக பூங்காவின் ஒரு சிறிய பகுதியில் தங்கியிருந்தது. ஆனால் வேட்டையாடுதல் அதிகமாக இருந்த பூங்காவின் பகுதிகளில் சுற்றித் திரிந்தது. இது ஒரு பெரிய 390-சதுர மைல் பரப்பளவு (1,000 கிமீ2) சுற்றித் திரிந்ததால் , அடர்ந்த காடுகள் காரணமாக கண்காணிப்பது கடினமாக இருந்தது. இது கிளர்ச்சிப் போராளிகளால் உந்தப்பட்ட வேட்டையாடும் முயற்சிகளை செயல்படுத்த உதவியது. கென்யா வனவிலங்கு செவையாலும், சாவோ அறக்கட்டளையாலும் வேட்டையாடுபவர்களை தடுக்க முடியவில்லை. ஆப்பிள் டிவி+ என்ற ஊடக நிறுவனத்தின் தி எலிபென்ட் குயின் என்ற ஆவணப்படத்தில் சடாவோ இடம்பெற்றது. இருப்பினும், ஆவணப்படத்தின் படப்பிடிப்பின் போதே, சடாவோ வேட்டைக்காரர்களால் கொல்லப்பட்டது. இறப்பு மார்ச் 2014 இல், சடாவோ நஞ்சு கலந்த அம்புகளால் அதன் பக்கவாட்டில் இரண்டு காயங்களுடன் காணப்பட்டது. இது அதற்கு சிகிச்சை அளிக்க சம்பவ இடத்திற்கு விரைந்த கால்நடை மருத்துவர்களால் உறுதிப்படுத்தப்பட்டது. சில நாட்களுக்குப் பிறகு, சடாவோ காயங்களிலிருந்து மீண்டது. சடாவோ கடைசியாக 19 மே 2014 அன்று உயிருடன் காணப்பட்டது. சுமார் 10 நாட்கள், சாவோ அறக்கட்டளையைச் சேர்ந்த இரிச்சர்ட் மொல்லர் மற்றும் கென்யா வனவிலங்கு சேவையும் சேர்ந்து சடாவோ இறந்துவிட்டதாக முடிவு செய்வதற்கு முன்பு சுமார் 10 நாட்கள் அதை தேடினர். 2 ஜூன் 2014 அன்று, சாவோ கிழக்கு தேசியப் பூங்காவின் எல்லைக்கு அருகிலுள்ள சதுப்பு நிலத்தில் ஒரு பெரிய யானை சடலம் கிடப்பதைக் கண்டனர். தந்தங்கள் துண்டிக்கப்பட்டு, முகம் மோசமாக சிதைக்கப்பட்டிருந்ததால், சடலத்தை அப்போது உறுதியாக அடையாளம் காண முடியவில்லை. 30 மே 2014 அன்று அதன் இடது புறத்தில் ஆழமாக வீசப்பட்ட நஞ்சு தடவப்பட்ட அம்புகளால் அது கொல்லப்பட்டிருந்தது. மீதமுள்ள ஆப்பிரிக்க பெரிய யானைகளில் பாதிக்கும் மேற்பட்டவை கென்யாவில் உள்ளன.{Balan George Dian, The World As It Once Was, https://www.amazon.co.uk/World-As-Once-Was-Gloriously/dp/2805205901 சடாவோ 13 ஜூன் 2014 அன்று இறந்துவிட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. சட்டவிரோத தந்தங்கள் பொதுவாக வேட்டையாடப்பட்டு பயங்கரவாத அமைப்புகளால் நீண்ட காலமாக சீனாவிற்கு விற்கப்பட்டன. சீனா 31 டிசம்பர் 2017 வரை உலகிலேயே தந்தங்களுக்கு மிகப்பெரிய சந்தையாக இருந்தது. தற்போது அதன் எல்லைக்குள் யானை தந்தம் வர்த்தகம் தடைசெய்யப்பட்டுள்ளது. கைதுகள் 20 ஜூன் 2014 அன்று, கென்யா வனவிலங்கு சேவைகள், சடாவோவைக் கொன்றதற்காக மூன்று சந்தேக நபர்களை வனப் பாதுகாவலர்கள் கைது செய்ததாக அறிவித்தது. கென்யா வனவிலங்கு சேவைகளின் செய்தித் தொடர்பாளர் பால் முயா, உளவுத்துறையின் அடிப்படையில் அவர்கள் கண்டுபிடிக்கப்பட்டதாகக் கூறினார். இதனையும் காண்க செசில் ஐசிலோ மேற்கோள்கள் வெளி இணைப்புகள் Tsavo East National Park Tsavo Trust பகுப்பு:யானைகள் பகுப்பு:புகழ் பெற்ற யானைகள்
ஓல்மியம் ஈராண்டிமோணைடு
https://ta.wikipedia.org/wiki/ஓல்மியம்_ஈராண்டிமோணைடு
ஓல்மியம் ஈராண்டிமோணைடு (Holmium diantimonide) என்பது HoSb2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். ஓல்மியத்தின் அறியப்பட்டுள்ள ஆண்டிமோனைடுகளில் இதுவும் ஒன்றாகும். 1000-1500 பாகை செல்சியசு என்ற ஒரு குறிப்பிட்ட வெப்பநிலையில் (30~65 கிலோபார்) அழுத்தத்தில் ஓல்மியமும் ஆண்டிமனியும் வினைபுரிந்தால் ஓல்மியம் ஈராண்டிமோனைடு உருவாகும். C222 என்ற இடக்குழுவில் அலகு செல் அளவுருக்கள் a=3.343 Å, b=5.790 Å, c=7.840 Å, Z=2 என்றும் உள்ளதாக எக்சுகதிர் விளிம்புவளைவு சோதனை காட்டுகிறது. HoSb2 என்பது சில சேர்மங்களின் படிக அமைப்புக்கு ஒரு முன்மாதிரியாகும். HoSb2 கட்டமைப்பைச் சேர்ந்த சேர்மங்களுக்கு LuSb2, YSb2 போன்றவை எடுத்துக்காட்டுகளாகும். மேற்கோள்கள் பகுப்பு:ஓல்மியம் சேர்மங்கள் பகுப்பு:ஆண்டிமோணைடுகள்
வலுவான எண்
https://ta.wikipedia.org/wiki/வலுவான_எண்
வழிமாற்றுஆற்றல்மிகு எண்
சுங்கை பூலோ சிறைச்சாலை
https://ta.wikipedia.org/wiki/சுங்கை_பூலோ_சிறைச்சாலை
சுங்கை பூலோ சிறைச்சாலை (ஆங்கிலம்: Sungai Buloh Prison; மலாய்: Penjara Sungai Buloh; சீனம்: 双溪毛糯监狱) என்பது மலேசியா, சிலாங்கூர், பெட்டாலிங் மாவட்டம், செலாயாங் நகராட்சியில் உள்ள ஒரு சிறைச்சாலை ஆகும். இது மலேசியாவின் மிகப்பெரிய சிறை வளாகமாகும். மலேசிய சிறைத் துறை; மற்றும் மலேசிய உள்துறை அமைச்சு; ஆகியவற்றால் இந்தச் சிறைச்சாலை நிர்வகிக்கப்படுகிறது. மலேசிய சிறைத் துறையில், இந்தச் சிறைச்சாலையே ஒருங்கிணைந்த மின்னணு பாதுகாப்பு அமைப்புடன் கூடிய முதல் சிறைச்சாலை ஆகும். இந்தச் சிறைச்சாலை RM 172 மில்லியன் மலேசிய ரிங்கிட் செலவில் கட்டப்பட்டது. சிறைச்சாலையின் கட்டுமானம் 1992-இல் தொடங்கப்பட்டு அக்டோபர் 1996-இல் நிறைவடைந்தது. பின்னர் நவம்பர் 1996-இல் திறக்கப்பட்டது. கோலாலம்பூரில் உள்ள புடு சிறைச்சாலைக்குப் பதிலாக, இந்தச் சிறைச்சாலை கட்டப்பட்டது. இந்தச் சிறையில் 3000 கைதிகளைச் சிறை வைக்கும் வசதி உள்ளது. பொது சுங்கை பூலோ சிறை வளாகத்தில் முதன்மைச் சிறைச்சாலை, நிர்வாகத் தொகுதி, தளவாடங்களின் இருப்புத் தொகுதி, வாகன அலுவலகம், காவல் நிலையம், பணியாளர்கள் குடியிருப்பு, பல்நோக்கு மண்டபம், பணியாளர்களுக்கான ஓய்வு மையம், பணியாளர்களுக்கான தொழுகை வளாகம் மற்றும் விளையாட்டுப் பொழுதுபோக்கு மையங்கள் உள்ளன. சிறைச்சாலையில் 5 மாடிகள் உள்ளன. ஒவ்வொரு மாடியின் உயரம் 21.5 மீ (71 அடி). அவற்றுள் கைதிகள் தங்கும் 28 குடியிருப்புக் கட்டிடங்கள் உள்ளன. 2023-ஆம் ஆண்டு சுலை 22-ஆம் தேதி இந்தச் சிறைச்சாலை அதன் மறுசீரமைப்பைத் தொடங்கியது. 2024 ஆம் ஆண்டின் மத்தியில் அதன் மறுசீரமைப்பு முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.[1] இந்தச் சிறையில் தடுத்து வைக்கப்பட்டவர்களில் டத்தோ ஸ்ரீ அன்வர் இப்ராகீம், மலேசியா டுடே வலைப்பதிவின் ஆசிரியர் ராஜா பெட்ரா கமருதீன்; அல்தான்தூயா சாரிபூ கொலைத் தொடர்பில் அப்துல் ரசாக் பகிண்டா போன்றோர் மிக முக்கியமானவர்களாக அறியப்படுகிறார்கள். மேற்கோள் மேலும் காண்க கமுந்திங் தடுப்பு மையம் லாலாங் நடவடிக்கை மலேசிய உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டம் மலேசியாவின் அரசியல் பகுப்பு:மலேசிய சிறைச்சாலைகள்
அக்கீலியசு எண்
https://ta.wikipedia.org/wiki/அக்கீலியசு_எண்
thumb|72 என்பது ஆற்றல்மிகு எண் என்பதை குசைனரின் கோல்களைக் கொண்டு விளக்கும் படம் அக்கீலியசு எண் (Achilles number) என்பது ஒரு ஆற்றல்மிகு எண்ணாக, ஆனால் நிறைவெண்ணாக இல்லாததொரு எண்ணாகும். என்ற நேர்ம முழுஎண் ஆற்றல்மிகு எண் எனில், அதனை வகுக்கும் ஒவ்வொரு பகாஎண் p க்கும், p2ம் ஐ வகுக்கும். அதாவது ஒரு ஆற்றல்மிகு எண்ணில் அதன் ஒவ்வொரு பகா காரணியும் குறைந்தபட்சம் வர்க்கக்காரணியாக இருக்கும். ஒவ்வொரு அக்கீலியசு எண்ணும் ஒரு ஆற்றல்மிகு எண்ணாக இருக்கும்; ஆனால் ஒவ்வொரு ஆற்றல்மிகு எண்ணும் அக்கீலியசு எண்ணாக இருக்காது: , (, இரண்டும் '1' ஐ விடப் பெரிய நேர்ம முழுவெண்கள்) என்ற வடிவில் எழுதமுடியாதவை மட்டுமே அவ்வாறமைய முடியும். என்றி போத்தோம்லேய் என்ற கணிதவியலாளர், இவ்வெண்களுக்கு திரோஜன் சண்டையின் பெருநாயகனான ஆற்றல்மிக்க, ஆனால் குறையுள்ள அக்கீலியசின் பெயரை இவ்வெண்களுக்கு வைத்தார். அக்கீலியசு எண்களில் ஆய்லரின் டோஷண்ட் சார்புகளும் அக்கீலியசு எண்களாக இருப்பவை "வலுமிகு அக்கீலியசு எண்கள்" (Strong Achilles numbers) எனப்படும். அத்தகைய எண்களில் மிகச்சிறியவை: 500, 864. அக்கீலியசு எண்களின் தொடர்வரிசை எனில், என்பது ஆற்றல்மிகு எண்களாகும். இதனோடு ஆகவும் இருந்தால் ஒரு அக்கீலியசின் எண்ணாகவும் இருக்கும். 5000 வரையிலான அக்கீலியசு எண்கள்: 72, 108, 200, 288, 392, 432, 500, 648, 675, 800, 864, 968, 972, 1125, 1152, 1323, 1352, 1372, 1568, 1800, 1944, 2000, 2312, 2592, 2700, 2888, 3087, 3200, 3267, 3456, 3528, 3872, 3888, 4000, 4232, 4500, 4563, 4608, 5000 . அடுத்தடுத்த எண்களாகமையும் அக்கீலியசு எண்களின் சோடிகள்:Carlos Rivera, The Prime Puzzles and Problem Connection, Problem 53 5425069447 = 73 × 412 × 972 5425069448 = 23 × 260412 எடுத்துக்காட்டுகள் 108 ஒரு அக்கீலியசு எண். விளக்கம்: இதன் பகாஎண் காரணியாக்கம்: 22 · 33 இதன் பகாகாரணிகள்: 2, 3. 22 = 4, 32 = 9 இரண்டும் 108 இன் வகுஎண்கள். எனவே 108 ஒரு ஆற்றல்மிகு எண். மேலும் 108 ஐ , (, இரண்டும் '1' ஐ விடப்பெரிய நேர்ம எண்கள்) என்ற வடிவில் எழுத இயலாது. எனவே 108, ஆனது ஆற்றல்மிகு எண்ணாகவும் அக்கீலியசு எண்ணாகவும் உள்ளது. 360 ஒரு அக்கீலியசு எண்ணல்ல. விளக்கம்: 360 இன் ஒரு வகுஎண் 5. மேலும், 52 = 25 உம் 360 இன் அதன் வகு எண்ணில்லை. எனவே 360 ஆற்றல்மிகு எண்ணில்லை. எனவே 360 ஆற்றல்மிகு எண்ணாக இல்லாததால், அக்கீலியசு எண்ணுமில்லை. 784 அக்கீலியசு எண்ணல்ல. விளக்கம்: 2, 7 ஆகிய இரண்டும் 784 இன் பகாக் காரணிகள்; அத்தோடு 22 = 4, 72 = 49 இரண்டுமே அதன் காரணிகளாகும். எனவே 784 ஒரு ஆற்றல்மிகு எண். ஆனால் 784 ஐ, என்ற வடிவிலும் எழுதமுடிகிறது. எனவே அது அக்கீலியசு எண்ணாக இருக்க முடியாது. 500 என்பது ஒரு வலுமிகு அக்கீலியசு எண்ணாகும். விளக்கம்: 500 = 22 × 53 = 55; இது ஒரு அக்கீலியசு எண். மேலும் அதன் ஆய்லரின் டோஷண்ட் சார்பலன் 200 = 23 × 52 என்பதும் ஒரு அக்கீலியசின் எண்ணாகவுள்ளதால், 500, ஒரு வலுமிகு அக்கீலியசு எண்ணாகும். மேற்கோள்கள் பகுப்பு:முழுஎண் தொடர்வரிசைகள்
ஆஃபினியம் பாசுபைடு
https://ta.wikipedia.org/wiki/ஆஃபினியம்_பாசுபைடு
ஆஃபினியம் பாசுபைடு (Hafnium phosphide) என்பது HfP என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். ஆஃபினியமும் பாசுபரசும் சேர்ந்து இச்சேர்மம் உருவாகிறது. தயாரிப்பு வெற்றிடத்தில் உயர் வெப்பநிலையில் மூடி முத்திரையிடப்பட்ட குவார்ட்சு குழாயில் ஆஃபினியம் தூளையும் சிவப்பு பாசுபரசையும் ஒன்றாகச் சேற்த்து சூடாக்குவதன் மூலம் ஆஃபினியம் பாசுபைடு சேர்மத்தை உருவாக்கலாம். 4Hf + P4 -> 4HfP பயன்கள் ஆஃபினியம் பாசுபைடு அதிக ஆற்றல், உயர் அதிர்வெண் பயன்பாடுகள் மற்றும் சீரொளி டையோட்களில் பயன்படுத்தப்படும் ஒரு குறைக்கடத்தி ஆகும். சிலிக்கா-ஆதரவுடன் (HfP/SiO2) ஆஃபினியம் பாசுபைடு ஒரு திண்ம அமில வினையூக்கியாக சைலனில் இருந்து பர்பரால் உற்பத்திக்கு பயன்படுத்தப்படுகிறது. மேற்கோள்கள் பகுப்பு:ஆஃபினியம் சேர்மங்கள் பகுப்பு:பாசுபைடுகள்
ஏறும் தொடர்பெருக்கம்
https://ta.wikipedia.org/wiki/ஏறும்_தொடர்பெருக்கம்
வழிமாற்றுஎழும் தொடர்பெருக்கம்
இறங்கும் தொடர்பெருக்கம்
https://ta.wikipedia.org/wiki/இறங்கும்_தொடர்பெருக்கம்
வழிமாற்றுவீழும் தொடர்பெருக்கம்
காரணியம்
https://ta.wikipedia.org/wiki/காரணியம்
வழிமாற்றுதொடர் பெருக்கம்
1981 இந்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்பு
https://ta.wikipedia.org/wiki/1981_இந்திய_மக்கள்_தொகைக்_கணக்கெடுப்பு
1981 இந்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்பு, 1872 முதல் ஒவ்வொரு தசாப்தத்திலும் இந்தியாவில் நடத்தப்படும் மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் வரிசையில் 12 வது ஆகும். இந்தியாவின் மக்கள் தொகை 685,184,692 பேர் எனக் கணக்கிடப்பட்டது. மாநில வாரியாக மக்கள்தொகை +1981இல் இந்திய மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பகுதிகளின் மக்கள் தொகைமாநிலம்/ஒன்றியப் பகுதிமக்கள் தொகைஆந்திரப் பிரதேசம்53,549,673அசாம்19,896,843பீகார்69,914,734குசராத்து34,085,799அரியானா12,922,618இமாச்சலப் பிரதேசம்4,280,818சம்மு காசுமீர்5,987,389கருநாடகம்37,135,714கேரளம்25,453,680மத்தியப் பிரதேசம்52,178,844மகாராட்டிரம்62,784,171மணிப்பூர்1,420,953மேகாலயா1,335,819நாகாலாந்து774,930ஒரிசா26,370,271பஞ்சாப்16,788,915இராசத்தான்34,261862சிக்கிம்316,385தமிழ் நாடு48,408,077திரிபுரா2,053,058உத்தரப் பிரதேசம்110,862,013மேற்கு வங்காளம்54,580,647அந்தமான் நிக்கோபார் தீவுகள் (ஒன்றியப் பகுதி) 188,741அருணாசலப் பிரதேசம் (ஒன்றியப் பகுதி) 631,839சண்டிகர் (ஒன்றியப் பகுதி) 451,610தாத்ரா மற்றும் நாகர் அவேலி (ஒன்றியப் பகுதி) 103,676தில்லி (ஒன்றியப் பகுதி) 6,220,406கோவா, தாமன் மற்றும் தியூ (ஒன்றியப் பகுதி) 1,086,730இலட்சத்தீவுகள் (ஒன்றியப் பகுதி) 40,249மிசோரம் (ஒன்றியப் பகுதி) 493,757பாண்டிச்சேரி (ஒன்றியப் பகுதி)604,471 மதப் புள்ளிவிவரங்கள் இந்தியாவில் உள்ள முக்கிய மதக் குழுக்களுக்கான மக்கள் தொகை தரவுகள் (1981) மதக் குழுமக்கள் தொகை சதவீதம் (1981) இந்து82.64%இசுலாமியர்கள்11.35%கிறித்தவர்2.43%சீக்கியர்1.97%பௌத்த மதம்0.71%பிற மதங்கள் மற்றும் அனுமானங்கள்0.42%மதம் குறிப்பிடப்படவில்லை0.01% மேலும் காண்க இந்தியாவின் மக்கள் தொகையியல் மேற்கோள்கள் வெளி இணைப்புகள் பகுப்பு:இந்தியாவில் மக்கள் தொகைக் கணக்கெடுப்புகள் பகுப்பு:1981
என்றி கர்னி பள்ளி
https://ta.wikipedia.org/wiki/என்றி_கர்னி_பள்ளி
thumb|280px|மலாக்கா என்றி கர்னி பள்ளி என்றி கர்னி பள்ளிகள் (ஆங்கிலம்: Henry Gurney Schools; மலாய்: Sekolah Henry Gurney) என்பது மலேசியாவில் இளம் குற்றவாளிகளின் ஒழுக்கத்தை மேம்படுத்துவதற்காக நிறுவப்பட்ட சீர்த்திருத்தப் பள்ளிகள் ஆகும். மலேசியாவில் ஐந்து இடங்களில் இந்தப் பள்ளிகள் (மையங்கள்) உள்ளன. இந்த மையங்கள் சிறார் நீதிமன்றங்கள் சட்டம் 1947 [சட்டம் 90] (Juvenile Courts Act 1947 [Act 90]) கீழ் 1949-இல் நிறுவப்பட்டன. 15 மே 1950-க்கு முன்னர், இந்தப் பள்ளிகள் உயர் ஒழுக்கப் பள்ளிகள் என்று அழைக்கப்பட்டன. பொது இந்தப் பள்ளி 1949-இல் முதன்முதலில் உருவாக்கப்பட்டது. சிறார் ஆண்களுக்காக நிறுவப்பட்ட இந்தப் பள்ளி அதன் பெயரில் 3 முறை மாற்றங்களுக்கு உட்பட்டுள்ளது. 1949-இல் உயர் ஒழுக்கப்பள்ளி என்ற பெயரில் தொடங்கியது. 1950-இல் இளைஞர் பயிற்சிப் பள்ளி என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. மூன்றாவதாக 15 மே 1950-இல் என்றி கர்னி பள்ளி எனப் பெயர் மாற்றம் கண்டது. என்றி கர்னி சர் என்றி கர்னி (Sir Henry Lovell Goldsworthy Gurney) மலாயா கம்யூனிச சித்தாந்தங்களையும் தீவிரவாதத்தையும் முறியடித்த பிரித்தானிய ஆணையர் ஆவார். அவர் மலாயாவில் பல சீர்திருத்தங்களைக் கொண்டு வந்தவர். மலாயா கம்யூனிச ஆதரவாளர்களை அழித்தே தீருவேன் என்று உறுதிபூண்டு போராடியவர்.Text of telegram from Sir M.V.del Tufo,Chief Secretary,Federation of Malaya Govt. to Mr.Griffiths,Secretary of State for the Colonies. accessed 4 November 2013] ஆனால், இறுதியில் கம்யூனிச ஆதரவாளர்களால் 1951-ஆம் ஆண்டு பிரேசர் மலையில் சுட்டுக் கொல்லப்பட்டார். சர் என்றி கர்னியின் கல்லறை கோலாலம்பூர் செராஸ் சாலையில் உள்ளது.Slain British Officer Buried என்றி கர்னி பள்ளிகள் என்றி கர்னி பள்ளி, பத்து காஜா, பேராக் (பெண்களுக்கான பள்ளி) என்றி கர்னி பள்ளி, தெலுக் மாஸ், மலாக்கா (இணை கல்வி) என்றி கர்னி பள்ளி, கோத்தா கினபாலு, சபா (பெண்களுக்கான பள்ளி) என்றி கர்னி பள்ளி புஞ்சாக் போர்னியோ, கூச்சிங், சரவாக் (ஆண்களுக்கான பள்ளி) என்றி கர்னி பள்ளி, கெனிங்காவு, சபா (ஆண்களுக்கான பள்ளி) திட்டங்கள் இந்த மையங்களில் மறுவாழ்வுத் திட்டங்கள் நான்கு நிலைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன: அறிமுகத் திட்டம் புத்தொளி பயிற்சி நோக்குநிலை மதிப்பீடு சுய ஆளுமைத் திட்டம் ஆன்மீகத் தொகுதி கல்வித் தொகுதி ஆலோசனை தொகுதி விளையாட்டு மற்றும் பொழுதுபோக்கு தொகுதி தொழில் பயிற்சி தையல் கைவினை பத்தீக் துணி நெய்தல் சமையல் வெளியாவதற்கு முன்னர் தயார்படுத்துதல் மேற்கோள் மேலும் காண்க மலேசிய கல்வி அமைச்சு மலேசிய அரசாங்கம் மலேசிய சிறைத் துறை மலேசிய திறன் மேம்பாட்டு துறை மலேசிய மகளிர், குடும்பம் மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சு வெளி இணைப்புகள் "Sekolah Henry Gurney Wanita Batu Gajah" பகுப்பு:மலேசியாவில் கல்வி பகுப்பு:மலேசிய சிறைச்சாலைகள்
தேசிய கங்கை நதி வடிநில ஆணையம்
https://ta.wikipedia.org/wiki/தேசிய_கங்கை_நதி_வடிநில_ஆணையம்
தேசிய கங்கை நதி வடிநில ஆணையம் (National Ganga River Basin Authority) என்பது இந்திய ஜல் சக்தி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் கங்கை நதிக்கான நிதி, திட்டமிடல், செயல்படுத்தல், கண்காணிப்பு மற்றும் ஒருங்கிணைப்பு அதிகாரத்தைப் பெற்ற ஆணையமாகும். கங்கைக்கு நீர் வழங்கும் வடிநிலத்தை மாசுபாடு அல்லது அதிகப்படியான பயன்பாட்டிலிருந்து பாதுகாப்பதே இந்த அமைப்பின் நோக்கம் ஆகும். சூலை 2014 இல், இந்த அமைப்பானது சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்திலிருந்து நீர்வள ஆதாரங்கள், நதிகள் மேம்பாடு மற்றும் கங்கை புத்துயிரூட்டல் அமைச்சகத்திற்கு மாற்றப்பட்டது, முன்பு இது நீர்வள அமைச்சகமாக இருந்தது. மத்திய அரசு 20 செப்டம்பர் 2016 அன்று வெளியிட்ட அறிவிப்பில், தற்போதுள்ள அமைப்பிற்குப் பதிலாக "கங்கை நதிக்கான தேசியக் குழு (புத்துணர்வு, பாதுகாப்பு மற்றும் மேலாண்மை)" என்ற புதிய அமைப்பை உருவாக்க கங்கை நதி (புத்துயிரூட்டல், பாதுகாப்பு மற்றும் நிர்வாகம்) அதிகாரிகள் ஆணை 2016-இன் கீழ் முடிவு செய்துள்ளது. தற்போதுள்ள தேசிய கங்கை நதி வடிநில ஆணையத்திற்கு பதிலாக, கங்கை நதிப் படுகை தூய்மைப்படுத்துதல் மற்றும் மாசு தடுப்பு மேற்பார்வைக்கு இந்த புதிய அமைப்பு செயல்படும். நிறுவப்பட்டது தொடர்பான விவரம் இது 20 பிப்ரவரி 2009 அன்று இந்திய அரசால் சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டம், 1986 இன் பிரிவு 3 (3) இன் கீழ் நிறுவப்பட்டது, இது கங்கையை இந்தியாவின் "தேசிய நதியாக" அறிவித்தது.NGRBA Ministry of Environment, GoI. கண்ணோட்டம் பிரதம மந்திரி ,இந்த அமைப்பின் தலைவராக உள்ளார். மற்ற உறுப்பினர்களில் கங்கை நதியோடு தொடர்புள்ள அமைச்சகங்களின் அமைச்சரவை அமைச்சர்கள் மற்றும் கங்கை நதி பாயும் மாநிலங்களின் முதலமைச்சர்கள் அடங்குவர். கங்கை நதி பாயும் மாநிலங்களான உத்தராகண்ட், உத்தரப்பிரதேசம், பீகார், ஜார்க்கண்ட், மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களைச் சேர்ந்த முதலமைச்சர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். தேசிய கங்கை நதி வடிநில ஆணையத்தின் முதல் கூட்டம் அக்டோபர் 5,2009 அன்று நடைபெற்றது.http://cpcb.nic.in/ngrba/about.html p.1. 2010 ஆம் ஆண்டு இந்திய மத்திய பட்ஜெட்டில், தேசிய கங்கை நதி வடிநில ஆணையத்திற்கான ஒதுக்கீடு 500 கோடி ரூபாயாக இரட்டிப்பாகியது. அமைப்பின் உறுப்பினர்கள் இந்த அமைப்பில் மொத்தம் 23 உறுப்பினர்கள் உள்ளனர். 23 பேரில் 14 பேர் அரசு துறைகளைச் சேர்ந்தவர்கள், மீதமுள்ள 9 பேர் தன்னார்வ தொண்டு நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள். குழுவின் அரசு உறுப்பினர்கள் அரசாங்கத் துறையைச் சேர்ந்த உறுப்பினர்கள் பின்வருமாறு: இந்தியப் பிரதமர், தலைவர் சுற்றுச்சூழல் மற்றும் வனங்கள் துறை அமைச்சர் (ஒன்றிய அமைச்சர்) இந்தியாவின் நிதியமைச்சர் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் நீர் வள அமைச்சர் மின்சக்தித்துறை அமைச்சர் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சர் உத்தராகண்ட் முதலமைச்சர் உத்தரப் பிரதேச முதலமைச்சர் பீகார் முதலமைச்சர் ஜார்கண்ட் முதலமைச்சர் மேற்கு வங்காளத்தின் முதலமைச்சர் சுற்றுச்சூழல் மற்றும் வனங்கள் துறை மாநில அமைச்சர் சுற்றுச்சூழல் மற்றும் வனங்கள் அமைச்சகம், செயலாளர்   குழுவின் நிபுணர் உறுப்பினர்கள் தன்னார்வ தொண்டு நிறுவனங்களைச் சேர்ந்த உறுப்பினர்கள் பின்வருமாறு: p.2. Composition of the Authority Ministry of Ganga Rejuvenation   ஓய்வு பெற்ற நீதிபதி. கிரிதர் மால்வியா, புரவலர், கங்கா மகாசபா, வாரணாசி. சிறீ மோகன் சிங் ராவத் காவ்ன்வாசி, மேனாள் அமைச்சர், உத்தராகண்டம். சிறீ எம். ஏ. சிட்லே, மகாராட்டிரம். முனைவர். புரே லால், இ. ஆ. ப. (ஓய்வு), தில்லி சிறீ என். விட்டல், சென்னை மேற்கோள்கள் வெளி இணைப்புகள் தேசிய கங்கை நதி வடிநில ஆணையம், இணையதளம் பகுப்பு:இந்திய அரசு அமைப்புகள்
சாவோ அறக்கட்டளை
https://ta.wikipedia.org/wiki/சாவோ_அறக்கட்டளை
சாவோ அறக்கட்டளை (Tsavo Trust) என்பது ஒரு இலாப நோக்கற்ற வனவிலங்கு பாதுகாப்பு அமைப்பாகும். இது சாவோ கிழக்கு தேசியப் பூங்கா, சாவோ மேற்கு தேசியப் பூங்கா மற்றும் கென்யாவில் உள்ள சையுலி மலை தேசியப் பூங்கா ஆகியவற்றை உள்ளடக்கியது. இந்த அறக்கட்டளை நிசியோகி வா மக்காவு மற்றும் புஷ் பைலட் ரிச்சர்ட் மொல்லர் ஆகியோரால் நிறுவப்பட்டது. அறக்கட்டளையின் ஆரம்ப நோக்கம் வனவிலங்குகளின் பாதுகாப்பு, குறிப்பாக ஆப்பிரிக்க யானைகள் மற்றும் தந்த வர்த்தகத்தைக் குறைப்பதாகும். ஜூன் 2014 இல், சாவோ அறக்கட்டளையானது கென்யாவின் சின்னமும் மற்றும் மிகவும் பிரபலமான யானையுமான சடாவோவின் தந்தத்தை வேட்டையாடுபவர்களால் நஞ்சு கலந்தஅம்பினால் கொல்லப்பட்டதை அறிவித்தபோது சர்வதேச கவனத்திற்கு வந்தது. சாவோ சுற்றுச்சூழல் அமைப்பு கொண்டது அல்லது தெற்கு கென்யாவில் வறண்ட மற்றும் அரை வறண்ட நிலமாகும். இந்த பிராந்தியத்தில் உள்ள தேசியப் பூங்காக்கள் கென்யா வனவிலங்கு சேவையால் நிர்வகிக்கப்படுகின்றன. பூங்காக்களைச் சுற்றி, ஆனால் சாவோ சுற்றுச்சூழல் அமைப்பிற்குள், பல சிறிய நகரங்கள், கிராமங்கள் மற்றும் கால்நடை வளர்ப்புப் பண்ணைகள் உள்ளன. கென்யாவில் உள்ள ஆப்பிரிக்க யானைகளின் மிக அதிகள அளவிலான எண்னிக்கை இந்த அமைப்பில் உள்ளது. இது 2021 இல் 14,964 ஆக இருந்தது. சாவோ சுற்றுச்சூழல் அமைப்பில், பிராந்தியத்தில் உள்ள மக்களிடையே அதிக வறுமை விகிதம், கல்வி மற்றும் சுகாதாரத்திற்கான மோசமான அணுகல், வாழ்விடத்தின் சீரழிவு, வளங்கள் மீதான இன மோதல், வனவிலங்கு இழப்பு மற்றும் நிதி பற்றாக்குறை இந்த சிக்கல்களைச் சமாளிக்க தொழில்நுட்ப ஆதாரங்கள் போன்ற பல முக்கியமான சிக்கல்கள் உள்ளன . இந்த சூழலில், பல்லுயிரியலைப் பாதுகாப்பது மற்றும் பெரிய சாவோ சுற்றுச்சூழல் அமைப்பில் உள்ள சமூகங்களுக்கு அதிகாரம் அளிப்பதும் சாவோ அறக்கட்டளையின் நோக்கமாகும். கென்யா வனவிலங்கு சேவையின் முக்கிய பங்காளியாக இருந்து, வான்வழி மற்றும் தரை பல்லுயிர் கண்காணிப்பு, வேட்டையாடுதல் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு ஆதரவை வழங்குதல் போன்ற பணிகளை சாவோ அறக்கட்டளை செய்கிறது. அறக்கட்டளையானது சுற்றுச்சூழல் அமைப்பில் சமூகப் பாதுகாப்புகளை நிறுவுவதற்கு முன்னோடியாக உள்ளது. இது மிகவும் தேவையான சமூக மேம்பாட்டு நன்மைகளை வழங்குகிறது. இதனால் வனவிலங்குகளுக்கான வாழ்விடத்தை அதிகரிக்கிறது. மேற்கோள்கள் வெளி இணைப்புகள் Tsavo Trust Official Site Tsavo East National Park Tsavo West National Park Amboseli National Park Chyulu Hills National Park பகுப்பு:அரசு சார்பற்ற அமைப்புக்கள் பகுப்பு:கென்யா
2024 இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல்கள்
https://ta.wikipedia.org/wiki/2024_இஸ்ரேல்_மீது_ஈரான்_தாக்குதல்கள்
13 ஏப்ரல் 2024 அன்று ஈரானிய இராணுவத்தின் ஒரு கிளையான இஸ்லாமிய புரட்சிகர காவலர் படை ஈராக்கில் உள்ள இஸ்லாமிய எதிர்ப்பு, லெபனான் குழுவான ஹிஸ்புல்லா, யெமன் ஹூத்திகள் ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் ஆளில்லாத வானூர்திகள், சீர்வேக ஏவுகணைகள், தொலைதூர ஏவுகணைகள் என்பவற்றின் மூலம் இஸ்ரேலுக்கு எதிராக பதிலடி தாக்குதல்களை நடத்தினர். இந்த தாக்குதலுக்கு Operation True Promise என ஈரான் பெயரிட்டது. ஏப்ரல் 1 அன்று டமாஸ்கஸில் உள்ள ஈரானிய தூதரகம் மீது இஸ்ரேல் குண்டுவீசி தாக்குதல் நடத்தியதற்கு பதிலடியாக இத்தாக்குதல் அமைந்ததாக ஈரான் கூறியது. அத்தாக்குதலில் இரண்டு ஈரானிய ஜெனரல் தர படையதிகாரிகள் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதல் இசுரேல்-ஹமாஸ் போரின் பக்க விளைவாகப் பார்க்கப்பட்டது. மேலும், இஸ்ரேல் மீதான மறைமுக மோதலில் இருந்து ஈரானின் முதல் நேரடி தாக்குதலாக இது அமைந்துள்ளது. இவற்றையும் பார்க்க 2024 ஈரான் மீது இஸ்ரேலிய தாக்குதல்கள் குறிப்புகள் உசாத்துணை வெளி இணைப்புகள் பகுப்பு:இசுரேலியப் போர்கள் மற்றும் முரண்பாடுகள் பகுப்பு:2023 இசுரேல்-ஹமாஸ் போர் பகுப்பு:2024 நிகழ்வுகள்
1971 இந்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்பு
https://ta.wikipedia.org/wiki/1971_இந்திய_மக்கள்_தொகைக்_கணக்கெடுப்பு
1971 இந்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்பு, 1872 முதல் ஒவ்வொரு தசாப்தத்திலும் இந்தியாவில் நடத்தப்படும் மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் வரிசையில் 11 வது ஆகும். இந்தியாவின் மக்கள் தொகை 547,949,809 மக்களாக கணக்கிடப்பட்டது. மாநில வாரியாக மக்கள் தொகை +1971இல் இந்திய மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பகுதிகளின் மக்கள் தொகைமாநிலம்/ஒன்றியப் பகுதிமக்கள் தொகைஆந்திரப் பிரதேசம்43,500,000அசாம்14,900,000பீகார்56,300,000குசராத்து26,600,000அரியானா10,030,000இமாச்சலப் பிரதேசம்3,460,000சம்மு காசுமீர்4,610,000கேரளம்21,300,000மத்தியப் பிரதேசம்41,640,000மகாராட்டிரம்50,400,000மணிப்பூர்1,070,000மைசூர்29,290,000நாகாலாந்து516,449ஒரிசா21,940,000பஞ்சாப்13,510,000இராசத்தான்25,700,000தமிழ் நாடு41,190,000திரிபுரா1,550,000உத்தரப் பிரதேசம்88,340,000மேற்கு வங்காளம்44,310,000அந்தமான் நிக்கோபார் தீவுகள்115,133அருணாசலப் பிரதேசம்465, 511சண்டிகர்257,251தாத்ரா மற்றும் நாகர் அவேலி74,170தில்லி4,060,000கோவா, தாமன் மற்றும் தியூ857,771இலட்சத்தீவுகள்31,810பாண்டிச்சேரி471,707 தகவல் அட்டவணையில் 35 கேள்விகள் இருந்தன. நபரின் பெயர் (குடும்பத்தின்) தலைவருடனான உறவுபாலினம்வயதுதிருமண நிலைதற்போது திருமணமான பெண்களுக்கு மட்டும்: திருமணத்தின் போது வயது கடந்த ஒரு வருடத்தில் பிறந்த குழந்தை பிறந்த இடம். பிறந்த இடம். கிராமப்புற/நகர்ப்புறம் மாவட்டம் மாநிலம்/நாடுகடைசி வசிப்பிடம் கடைசியாக வசிக்கும் இடம் கிராமப்புற/நகர்ப்புறம் மாவட்டம் மாநிலம்/நாடு கிராமம் அல்லது நகரத்தில் வசிக்கும் காலம் மதம்பட்டியல் சாதி அல்லது பட்டியல் பழங்குடிஎழுத்தறிவு (L அல்லது O)கல்வி நிலைதாய்மொழிபிற மொழிகள்முக்கிய செயல்பாடு பரந்த வகை தொழிலாளி (C, AL, HHI, OW) வேலை செய்யாதவர் (H, S, T, R, D, B, I, O) பணியிடத்தின் பெயர் (கிராமத்தின்/நகரத்தின் பெயர்) நிறுவனத்தின் பெயர் தொழில், வர்த்தகம், தொழில் அல்லது சேவையின் தன்மை பணியின் விவரம் தொழிலாள வர்க்கம் இரண்டாம் நிலை தொழிலாளி பரந்த வகை (C, AL, HHI, OW) பணியிடத்தின் பெயர் (கிராமத்தின்/நகரத்தின் பெயர்) நிறுவனத்தின் பெயர் தொழில், வர்த்தகம், தொழில் அல்லது சேவையின் தன்மை பணியின் விவரம் தொழிலாள வர்க்கம் மேலும் காண்க இந்தியாவின் மக்கள் தொகையியல் குறிப்புகள் மேற்கோள்கள் வெளி இணைப்புகள் பகுப்பு:இந்தியாவில் மக்கள் தொகைக் கணக்கெடுப்புகள் பகுப்பு:1971
என்றி கர்னி
https://ta.wikipedia.org/wiki/என்றி_கர்னி
சர் என்றி கர்னி அல்லது சர் என்றி லோவல் கோல்ட்சுவொர்த்தி கர்னி (மலாய்; ஆங்கிலம்: Sir Henry Lovell Goldsworthy Gurney; சீனம்: 亨利·葛尼) (27 சூன் 1898 - 6 அக்டோபர் 1951) என்பவர் பிரித்தானியப் பேரரசில் முழுவதும் பல்வேறு பதவிகளில் பணியாற்றிய பிரித்தானிய காலனித்துவ நிர்வாகி ஆவார். மலாயாவின் கூட்டமைப்பில் உயர் ஆணையராகப் பணியாற்றிய போது, மலாயா அவசரகாலத்தின் போது பொதுவுடைமைக் கிளர்ச்சியாளர்களால் கொல்லப்பட்டார். என்றி கர்னி, மலாயாவில் பொதுவுடைமைச் சித்தாந்தங்களையும் தீவிரவாதத்தையும் முறியடித்த பிரித்தானிய ஆணையர் என அறியப்படுகிறார்.. அவர் மலாயாவில் பல சீர்திருத்தங்களைக் கொண்டு வந்தவர். மலாயாவில் பொதுவுடைமை ஆதரவாளர்களை அழித்தே தீருவேன் என்று உறுதிபூண்டு போராடியவர் என்றும் அறியப்படுகிறார்.Text of telegram from Sir M.V.del Tufo,Chief Secretary,Federation of Malaya Govt. to Mr.Griffiths,Secretary of State for the Colonies. accessed 4 November 2013] பொது thumb|செராஸ் கிறிததவக் கல்லறையில் கர்னியின் உறைவிடம் அக்டோபர் 1, 1948-இல், மலாயாவின் உயர் ஆணையராக நியமிக்கப்பட்டார். மலாயா அவசரகாலம் தொடங்கிய நேரத்தில்தான் என்றி கர்னி தன் பதவியை ஏற்றுக்கொண்டார். அடுத்த மூன்று ஆண்டுகளில் அவர் மலாயாவில் பிரித்தானியக் கொள்கையின் தலைமை நிர்வாகியாகப் பணியாற்றினார். படுகொலை 1951-ஆம் ஆண்டு அக்டோபர் 6-ஆம் தேதி, மலாயா பொதுவுடைமை கட்சியைச் சேர்ந்த பொதுவுடைமை கிளர்ச்சியாளர்களின் பதுங்கு தாக்குதலில் என்றி கர்னி கொல்லப்பட்டார். அந்த நேரத்தில் அவர் பிரேசர் மலைக்கு அருகே உள்ள கோலா குபு பாரு சாலை, 90.4-ஆவது கி.மீட்டரில் இருந்த ஓய்வு விடுதிக்குச் சென்று கொண்டிருந்தார். மலாயா பொதுவுடைமை கட்சியின் தலைவர் சின் பெங்கின் கூற்றுப்படி, "பதுங்கியிருந்து தாக்குவது வழக்கமான ஒன்று; அது தற்செயலாக நடந்த ஒரு கொலை நடவடிக்கை; இறந்தவர்களில் மலாயாவின் உயர் ஆணையரும் ஒருவராக இருந்தார் என்பதை செய்தி அறிக்கைகளின் மூலமாகத்தான் மலாயா பொதுவுடைமை கட்சியினரும் அறிந்து கொண்டனர்" என அவர் கூறினார்.Chin Peng, My Side of History, Media Masters, Singapore, 2003, pp 287–289. என்றி கர்னியின் கல்லறை கர்னியின் இறுதிச் சடங்குகள் 8 அக்டோபர் 1951 அன்று நடந்தது. அவர் கோலாலம்பூர் செராஸ் சாலையில் உள்ள செராஸ் போர் கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டார். இறுதி ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர். என்றி கர்னியின் கல்லறை செராஸ் போர் கல்லறையில் இன்னும் உள்ளது.Slain British Officer Buried மலாக்கா. சிரம்பான், கோலாலம்பூர் மற்றும் சிங்கப்பூர் ஆகிய நகரங்களில் உள்ள கர்னி சாலைகள் எனும் அவரின் பெயரால் அழைக்கப்படுகின்றன. பேராக்கில் உள்ள பெக்கான் குர்னி என்ற நகரமும் அவரின் பெயரால் அழைக்கப்படுகிறது. அத்துடன் பினாங்கில் உள்ள பிரபலமான கர்னி டிரைவ் எனும் சுற்றுவட்டம்; மற்றும் மலாக்கா தெலுக் மாஸ் நகரில் உள்ள என்றி கர்னி பள்ளியும் அவரின் பெயரால் பெயரிடப்பட்டுள்ளன. மேலும் காண்க சின் பெங் பிரேசர் மலை மலாயா கூட்டமைப்பு மலாயா அவசரகாலம் பிரித்தானிய மலாயா மேற்கோள்கள் வெளி இணைப்புகள் ‎ பகுப்பு:1898 பிறப்புகள்‎‎ பகுப்பு:1951 இறப்புகள் பகுப்பு:பிரித்தானிய மலாயா‎ பகுப்பு:மலேசியாவில் நிகழ்வுகள் பகுப்பு:மலேசியாவில் படுகொலைகள்‎ பகுப்பு:மலேசியாவில் பொதுவுடைமை‎
2024 ஈரான் மீது இஸ்ரேலிய தாக்குதல்கள்
https://ta.wikipedia.org/wiki/2024_ஈரான்_மீது_இஸ்ரேலிய_தாக்குதல்கள்
19 ஏப்ரல் 2024 அன்று இசுரேலிய வான்படை ஈரானுக்குள் இருக்கும் வான் பாதுகாப்பு வசதியை குறிவைத்து வான்வழித் தாக்குதல்களை நடத்தியது. மட்டுப்படுத்தப்பட்ட வான்வழித் தாக்குதல்கள் மத்திய ஈரானில் உள்ள இசுபகானுக்கு அருகிலுள்ள ஒரு விமானத் தளத்தில் உள்ள வான் பாதுகாப்பு ரேடார் தளத்தை குறிவைத்தன. செயற்கைக்கோள் படங்கள்அடிப்படையில் நில வான் ஏவுகணைத் தொகுதி சேதமடைந்ததாக அல்லது அழிக்கப்பட்டதாக தெரிவிக்கின்றன. அடித்தளத்திற்கு பெரிய சேதம் எதுவும் இல்லை. இஸ்ரேலில் ஈரானிய நடத்திய ஆளில்லாத வானூர்தி, ஏவுகணை தாக்குதல்களுக்கு பதில் தாக்குதலாக இது நடத்தப்பட்டது. இவற்றையும் பார்க்க இசுரேல்-ஹமாஸ் போர் உசாத்துணை பகுப்பு:இசுரேலியப் போர்கள் மற்றும் முரண்பாடுகள் பகுப்பு:2024 நிகழ்வுகள்
தொலைதூர ஏவுகணை
https://ta.wikipedia.org/wiki/தொலைதூர_ஏவுகணை
upright|thumb|வி-2 ஏவுகணை பிரதி ஒரு தொலைதூர ஏவுகணை என்பது ஒரு வகை ஏவுகணை ஆகும். இது ஒரு இலக்கை நோக்கி வெடியுளையினைச் செலுத்த எறிகணை இயக்கத்தைப் பயன்படுத்துகிறது. குறுகிய தூர ஏவுகணைகள் பொதுவாக பூமியின் வளிமண்டலத்தில் இருக்கும். அதே சமயம் மிகப் பெரிய ஏவுகணைகள் வெளி-வளிமண்டலத்தில் இருக்கும். மிகப்பெரிய தொலைதூர ஏவுகணைகள் முழு சுற்றுப்பாதையில் பறக்கும் திறன் கொண்டவை. இந்த ஆயுதங்கள் சீர்வேக ஏவுகணைகளில் இருந்து வேறுபட்ட வகையைச் சேர்ந்தவை, அவை காற்றியக்கவியல் மூலம் இயக்கப்பட்டு வழிநடத்தப்பட்டு வளிமண்டலத்தில் கட்டுப்படுத்தப்படுகின்றன. வரலாறு ஒரு நவீன, முன்னோடி தொலைதூர ஏவுகணை ஏ-4 ஆகும். இது 1930 கள் மற்றும் 1940 களில் வெர்னர் வான் பிரவுனின் வழிகாட்டுதலின் கீழ் நாட்சி ஜெர்மனியால் உருவாக்கப்பட்ட வி-2 என பொதுவாக அறியப்பட்டது. வி-2 இன் முதல் வெற்றிகரமான ஏவுதல் அக்டோபர் 3, 1942 இல் இடம்பெற்றது. செப்டம்பர் 6, 1944 இல் பாரிசுக்கு எதிராக அது செயல்படத் தொடங்கியது. அதைத் தொடர்ந்து இரண்டு நாட்களுக்குப் பிறகு லண்டன் மீது தாக்குதல் நடத்த பயன்படுத்தப்பட்டது. இரண்டாம் உலகப் போரின் முடிவில் மே 1945 இல் ஐரோப்பாவில் 3,000 இற்கும் மேற்பட்ட வி-2 கள் ஏவப்பட்டன. இவற்றையும் பார்க்க ஏவுகணை பேரழிவு ஆயுதம் குறிப்புகள் உசாத்துணை Needham, Joseph (1986). Science and Civilization in China: Volume 5, Chemistry and Chemical Technology, Part 7, Military Technology; the Gunpowder Epic. Taipei: Caves Books. மேலும் படிக்க Bath, David W. Assured Destruction: Building the Ballistic Missile Culture of the U.S. Air Force (Naval Institute Press, 2020) online book review வெளி இணைப்புகள் Missile Threat: A Project of the Center for Strategic and International Studies பகுப்பு:சீனக் கண்டுபிடிப்புக்கள் பகுப்பு:ஏவுகணைகள்
உர்ஃபி ஜாவெத்
https://ta.wikipedia.org/wiki/உர்ஃபி_ஜாவெத்
உர்ஃபி ஜாவெத் (Urfi Javed) (அக்டோபர் 15, 1997) ஓர் இந்திய தொலைக்காட்சி நடிகை மற்றும் சமூக ஊடகங்கள் வாயிலாக பரவலாக அறியப்படுகிறவர். இந்தி திரையுலகில் 2016-ல் இந்தி நாடகத் தொடர் ஒன்றில் அறிமுகமான இவர், சந்திர நந்தினி தொடரின் மூலம் பிரபலமானார். அதன் பிறகு தொடர்ச்சியாக சில நாடகத் தொடர்களில் நடித்து வந்த இவர், கடந்த 2021-ம் ஆண்டு இந்தி ஓடிடி தளத்தில் ஒளிபரப்பான, ஊட் நிறுவனம் தயாரித்த பிக் பாஸ்-1 ல் கலந்துகொண்டு மேலும் பிரபலமானார். Kalaignarseithigal ஆரம்ப கால வாழ்க்கை இவர் லக்னோவின் சிட்டி மாண்டிசோரி பள்ளியில் தனது கல்வியை முடித்தார் மற்றும் லக்னோவின் அமிட்டி பல்கலைக்கழகத்தில் வெகுஜன தகவல் தொடர்பு (mass communication) பட்டப்படிப்பை முடித்தார். நடிகையாக பணியாற்றுவதற்கு முன்பு, டெல்லியில் உதவி ஆடை வடிவமைப்பாளராகவும் பணியாற்றினார்.Timesofindia தொழில் left|thumb|225x225px|2021 ல் ஜாவெத் ஜாவெத் 2016 முதல் 2017 வரை ஒலிபரப்பான, சோனி தொலைக்காட்சியின் படே பாய்யா கி துல்ஹனியா என்ற நகைச்சுவை நாடகத் தொடரில் அவ்னி பந்த் என்ற கதாப்பாத்திரத்தில் தோன்றினார்.Timesofindia இவர் ஸ்டார் ப்ளஸின் சந்திர நந்தினியில் சாயாவாக நடித்தார். பின்னர், அவர் ஸ்டார் ப்ளஸின் மெரி துர்காவில் ஆர்த்தியாக நடித்தார். மேற்கோள்கள் புற இணைப்புகள் பகுப்பு:இந்திய தொலைக்காட்சி நடிகைகள் பகுப்பு:1997 பிறப்புகள் பகுப்பு:வாழும் நபர்கள்
பாலித்த தெவரப்பெரும
https://ta.wikipedia.org/wiki/பாலித்த_தெவரப்பெரும
பாலித்த குமார தெவரப்பெரும (Palitha Kumara Thewarapperuma, ; 3 மே 1960 – 16 ஏப்ரல் 2024) இலங்கை அரசியல்வாதி ஆவார். இவர் 2010 முதல் 2020 வரை களுத்துறை மாவட்ட தேர்தல் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவர். இவர் மைத்திரிபால சிறிசேனவின் அரசில் ஒரு துணை அமைச்சராகப் பணியாற்றினார். வாழ்க்கைக் குறிப்பு தெவரப்பெரும 1960 மே 3 அன்று இலங்கையில் (அப்போது சிலோன் என்று அழைக்கப்பட்டது) பிறந்தார். இவர் களுத்துறை மாவட்டத்தின் மத்துகமை பிரதேசத்தின் உள்ள ஆனந்த சாஸ்த்திரலய தேசிய பாடசாலையில் கற்றார். தெவரப்பெரும மத்துகமை பிரதேச சபையின் ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினராக அரசியலில் பிரவேசித்தார். 2002 ஆம் ஆண்டு அந்த சபையின் தலைவராக இருந்தார். சில காலம் களுத்துறை மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் மேற்கு மாகாண சபை உறுப்பினராகவும் இருந்தார். 2010 ஆம் ஆண்டு நாடாளுமன்றத்திற்கு பிரவேசித்த நிலையில் 2020 ஆம் ஆண்டு வரை நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகித்தார். நல்லாட்சி அரசாங்கத்தின் கீழ் 2015 முதல் 2019 வரை சமூக வலுவூட்டல் துணை அமைச்சர், நிலையான அபிவிருத்தி, வனவிலங்கு மற்றும் பிரதேச அபிவிருத்தி துணை அமைச்சர் மற்றும் உள்துறை, வடமேற்கு மாகாண அபிவிருத்தி மற்றும் கலாசார அலுவல்கள் துணை அமைச்சர் போன்ற பல்வேறு பதவிகளை வகித்துள்ளார் தெவரப்பெரும அமிதா நலிங்கனி அமரதுங்கவை மணந்து இரண்டு பிள்ளைகளைப் பெற்றிருந்தார். இவர் பௌத்த மதத்தைச் சேர்ந்தவர். அவர் ஏப்ரல் 16, 2024 அன்று மின்சாரம் தாக்கி இறந்தார். மேற்கோள்கள் பகுப்பு:1960 இறப்புகள் பகுப்பு:2024 பிறப்புகள் பகுப்பு:இலங்கை அரசியல்வாதிகள் பகுப்பு:இலங்கை பௌத்தர்கள் பகுப்பு:சிங்கள அரசியல்வாதிகள் பகுப்பு:இலங்கையின் 14வது நாடாளுமன்ற உறுப்பினர்கள் பகுப்பு:இலங்கையின் 15வது நாடாளுமன்ற உறுப்பினர்கள் பகுப்பு:இலங்கையின் துணை அமைச்சர்கள் பகுப்பு:இருபத்தொராம் நூற்றாண்டு இலங்கை அரசியல்வாதிகள்
விடத்தல்தீவு சமர்
https://ta.wikipedia.org/wiki/விடத்தல்தீவு_சமர்
ஏவுகணைப் பாதுகாப்பு
https://ta.wikipedia.org/wiki/ஏவுகணைப்_பாதுகாப்பு
thumb|right|அரோ தொலைதூர ஏவுகணை எதிர்ப்பு ஏவுகணை ஏவுகணைப் பாதுகாப்பு என்பது ஒரு முறை, ஆயுதம் அல்லது தொழில்நுட்பம் ஆகும். இது கண்டறிதல், கண்காணித்தல், இடைமறித்தல், தாக்கும் ஏவுகணைகளை அழித்தல் ஆகிய செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளது. அணு ஆயுதம் ஏந்திய கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளுக்கு எதிரான பாதுகாப்பாகக் கருதப்பட்ட அதன் பயன்பாடு குறுகிய தூர அணுசக்தி அல்லாத தந்திரோபாய, அரங்க ஏவுகணைகளை உள்ளடக்கியதாக விரிவுபடுத்தப்பட்டுள்ளது. சீனா, பிரான்ஸ், இந்தியா, ஈரான், இஸ்ரேல், இத்தாலி, உருசியா, தைவான், இங்கிலாந்து, அமெரிக்கா ஆகிய நாடுகள் இத்தகைய வான் பாதுகாப்பு அமைப்புகளை உருவாக்கியுள்ளன. இவற்றையும் பார்க்க செயற்கைக்கோள் எதிர்ப்பு ஆயுதம் உசாத்துணை நூல் பட்டியல் Nicole C. Evans, "Missile Defense: Winning Minds, Not Hearts", Bulletin of the Atomic Scientists, September/October 2004. Daniel Möckli, "US Missile Defense: A Strategic Challenge for Europe", CSS Analyses in Security Policy no. 12, April 2007. Ishmael Jones, The Human Factor: Inside the CIA's Dysfunctional Intelligence Culture, New York: Encounter Books (2010) (). Missiles intelligence. வெளி இணைப்புகள் Missile Threat – CSIS Missile Defense Project U.S. Ballistic Missile Defense A primer from the Council on Foreign Relations Steven Donald Smith, Missile Defense Program Moves Forward, 2006. Missile Defense: The First Seventy Years பகுப்பு:ஏவுகணைகள்
வான் பாதுகாப்பு
https://ta.wikipedia.org/wiki/வான்_பாதுகாப்பு
வழிமாற்று வானூர்தி எதிர்ப்புப் போர்
செயற்கைக்கோள் எதிர்ப்பு ஆயுதம்
https://ta.wikipedia.org/wiki/செயற்கைக்கோள்_எதிர்ப்பு_ஆயுதம்
thumb|1985 ஆம் ஆண்டு செப்டம்பர் 13 ஆம் தேதி ஒருசெயற்கைக்கோள் எதிர்ப்பு ஏவுகணை ஏவப்பட்டது. இது பி78-1 செயற்கைக்கோளை அழித்தது. செயற்கைக்கோள் எதிர்ப்பு ஆயுதங்கள் (anti-satellite weapons) என்பது உத்தி அல்லது தந்திரோபாய நோக்கங்களுக்காக செயற்கைக்கோள்களை செயலிழக்கச் செய்ய அல்லது அழிக்க வடிவமைக்கப்பட்ட விண்வெளி ஆயுதங்கள் ஆகும். இதுவரை எப்போரிலும் எந்த செயற்கைக்கோள் எதிர்ப்பு ஆயுதங்களும் பயன்படுத்தப்படவில்லை என்றாலும், ஒரு சில நாடுகள் (சீனா, இந்தியா, உருசியா, அமெரிக்க ஐக்கிய நாடுகள்) தங்கள் செயற்கைக்கோள் எதிர்ப்பு ஆயுத திறன்களை நிரூபிக்க தங்கள் சொந்த செயற்கைக்கோள்களை வெற்றிகரமாக சுட்டு வீழ்த்தியுள்ளன. செயலிழந்த செயற்கைக்கோள்களை அகற்றவும் செயற்கைக்கோள் எதிர்ப்பு ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இவற்றையும் பார்க்க விண்வெளிக் கழிவு விண்வெளிப் போர் தொலைதூர ஏவுகணை எதிர்ப்பு ஏவுகணை உசாத்துணை வெளி இணைப்புகள் பகுப்பு:செயற்கைக் கோள்கள்
தொலைதூர ஏவுகணை எதிர்ப்பு ஏவுகணை
https://ta.wikipedia.org/wiki/தொலைதூர_ஏவுகணை_எதிர்ப்பு_ஏவுகணை
thumb|right|ஒரு தரை அடிப்படையிலான இடைமறிப்பான், சூலை 2004, அலாஸ்கா. தொலைதூர ஏவுகணை எதிர்ப்பு ஏவுகணை (anti-ballistic missile) என்பது தொலைதூர ஏவுகணைகளை எதிர்கொள்ள வடிவமைக்கப்பட்ட, ஒரு நில வான் ஏவுகணை ஆகும். தொலைதூர ஏவுகணைகள் அணு, இரசாயன, உயிரியல் அல்லது வழக்கமான வெடியுளையை ஒரு தொலைதூர பறப்புப் பாதையில் செலுத்தப் பயன்படுத்தப்படுகின்றன. "தொலைதூர ஏவுகணை எதிர்ப்பு ஏவுகணை" என்பது எந்தவொரு தொலைதூர ஏவுகணை அச்சுறுத்தலையும் இடைமறித்து அழிக்க வடிவமைக்கப்பட்ட ஒரு அமைப்பிற்கான பொதுவான சொல் ஆகும். இருப்பினும், இது கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை எதிர்கொள்ள வடிவமைக்கப்பட்ட முறைக்குப் பயன்படுத்தப்படுகிறது. இவற்றையும் பார்க்க ஏவுகணைப் பாதுகாப்பு அணு ஆயுதப்போர் நடவடிக்கை குறிப்புகள் வெளி இணைப்புகள் Article on Missile Threat Shift to the Black Sea region Video of the Endo-Atmospheric Interceptor missile system test by India Video of the Exo-Atmospheric interceptor missile system test by India Center for Defense Information Federation of American Scientists MissileThreat.com Stanley R. Mickelson Safeguard complex History of U.S. Air Defense Systems பகுப்பு:உருசியக் கண்டுபிடிப்புகள் பகுப்பு:ஏவுகணைகள்
அதிமீயொலி ஆயுதம்
https://ta.wikipedia.org/wiki/அதிமீயொலி_ஆயுதம்
thumb|right|பி-52 குண்டுவீச்சு வானூர்தி சுமந்து செல்லும் வான்வழி விரைவு மறுமொழி ஆயுதம் அதிமீயொலி ஆயுதம் என்பது ஒலியின் வேகத்தை விட 5 முதல் 25 மடங்கு அல்லதுவினாடிக்கு 1 முதல் 5 மைல்கள் (1.6 முதல் 8.0 கிமீ/வி) வரையிலான அதிமீயொலிவேகத்தில் பயணிக்கும் திறன் கொண்ட ஆயுதம் ஆகும். அத்தகைய வேகத்திற்குக் கீழேயுள்ள ஆயுதங்கள் குறைஒலிவேகம் அல்லது மீயொலிவேகம் என வகைப்படுத்தப்படும். அதே நேரத்தில் அத்தகைய வேகத்திற்கு மேல் செல்லும்போது, வளிமண்டலத்தின் மூலக்கூறுகள் அயனிமமாகப் பிரிந்து, கட்டுப்பாட்டையும் தகவல்தொடர்பையும் கடினமாக்குகிறது. பல வகையான அதிமீயொலி ஆயுதங்கள் உள்ளன: அதிமீயொலி சறுக்கு வாகனம் அதிமீயொலி சீர்வேக ஏவுகணை அதிவேகத்தை அடைய மீத்திமிசுத்தாரை போன்ற காற்றை சுவாசிக்கும் இயந்திரங்களைப் பயன்படுத்தும் அதிமீயொலி வானூர்தி பீரங்கியால் ஏவப்பட்ட, வழிகாட்டப்பட்ட எறிகணைகளை சுடும் ஆயுதங்கள் இவற்றையும் பார்க்க சீர்வேக ஏவுகணை மீஉயர் அதிர்வெண் வானூர்தி உசாத்துணை பகுப்பு:எறியும் ஆயுதங்கள்
தெம்பே யானை பூங்கா
https://ta.wikipedia.org/wiki/தெம்பே_யானை_பூங்கா
தெம்பே யானை பூங்கா (Tembe Elephant Park) என்பது தென்னாப்பிரிக்காவின் குவாசுலு-நதால் பகுதியிலுள்ள மாபுடாலாந்தில் அமைந்துள்ள 30 012 ஹெக்டேர் பரப்பளவில் அமைந்துள்ள விளையாட்டு இருப்பு ஆகும். இது என்துமோ விளையாட்டு வனச்சரகம் அருகில் உள்ளது. இந்த பூங்கா தெம்பே பழங்குடி ஆணையம் மற்றும் ''எசிம்வெலோ வனவிலங்கு பாதுகாப்பு அமைப்பால் உருவாக்கப்பட்டது. மபுடாலாந்து மற்றும் தெற்கு மொசாம்பிக் இடையே இடம்பெயர்ந்த யானைகளைப் பாதுகாப்பதற்காக 1983 இல் இது நிறுவப்பட்டது. இந்த யானைகள் மொசாம்பிக்கில் உள்நாட்டுப் போரின் போது வேட்டையாடப்பட்டது. எனவே பூங்கா 1991 இல் மட்டுமே பொதுமக்களுக்கு திறக்கப்பட்டது. இப்போது பூங்காவில் 250 யானைகள் உள்ளன. அவை உலகிலேயே பெரியவை. தெற்கு அரைக்கோளத்தில் வாழும் மிகப்பெரிய யானையான ஐசிலோ 2014 இல் இறந்தது இதே குழுவில் இருந்த மேலும் 200 யானைகள் மொசாம்பிக்கில் உள்ள மபுடோ யானைகள் காப்பகத்தில் வாழ்கின்றன. 340 க்கும் மேற்பட்ட பறவை இனங்கள் இந்தப் பூங்காவில் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த பூங்கா உசுத்து- தெம்பே-புட்டி பாதுகாப்புப் பகுதியில் சேர்க்கப்பட உள்ளது. மேற்கோள்கள் வெளி இணைப்புகள் Tembe Elephant Park Ezemvelo KZN Wildlife Tembe Wilderness Trust Tembe Live WebCam பகுப்பு:Coordinates on Wikidata பகுப்பு:வனவிலங்கு பாதுகாப்பு வலயங்கள்
ஆஃபினியம் கார்போநைட்ரைடு
https://ta.wikipedia.org/wiki/ஆஃபினியம்_கார்போநைட்ரைடு
ஆஃபினியம் கார்போநைட்ரைடு (Hafnium carbonitride) என்பது Hf2CN என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். ஆஃபினியம், கார்பன், நைட்ரசன் ஆகிய தனிமங்கள் சேர்ந்து இந்த அதி உயர் வெப்பநிலை பீங்கான் கலப்பு எதிர் மின்னயனிச் சேர்மம் உருவாகிறது. மூலக்கூறு இயக்கவியல் கணக்கீடுகள் HfCN (குறிப்பாக HfC0.75N0.22 கட்டம்) 4,110 ± 62 °செல்சியசு (4,048–4,172 °செல்சியசு, 7,318–7,542 °பாரங்கீட்டு, 4,43 °பாரங்கீட்டு, 4,321–4,445 கெல்வின்) கொதிநிலையை கொண்டிருப்பதாக கூறுகிறது. இது எந்தப் பொருளுக்குமான கொதிநிலையை விட மிகவும் அதிகமாகும். செயற்கை நரம்பியல் வலையமைப்பு இயந்திரக் கற்றலை அடிப்படையாகக் கொண்ட மற்றொரு அணுகுமுறையும் இதேபோன்ற அளவுகளையே சுட்டிக் காட்டியது. HfC0.76N0.24. 2020 ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட சோதனையும் 4,000 °செல்சியசு (7,230 °பாரங்கீட்டு; 4,270 கெல்வின்) என குறிப்பிட்டு 2015 ஆம் ஆண்டில் பயன்படுத்தப்பட்ட அணுவியல் உருவகப்படுத்துதல் முறை மூலம் செய்யப்பட்ட முந்தைய கணிப்புகளை உறுதிப்படுத்தும் உருகுநிலையை உறுதி செய்துள்ளது. பண்புகள் HfCxN1−x பின்வரும் பண்புகளை உடையதாக மதிப்பிடப்பட்டது வெப்பக் கடத்துதிறன் 19–24 W·m−1·K−1 அறை வெப்பநிலையில், 32–39 W·m−1·K−1 உயர்வெப்பநிலை மற்றும் அதிகரித்த நைட்ரசன் இருப்பு. மின்கடத்துதிறன் மற்றும் மின்தடைத்திறன்: (149×104)–(213×104) Ω−1 மீ−1 நெகிழ்வெல்லை: 2000 பாகை செல்சியசு (3630 பாரங்கீட்டு, 2270 கெல்வின்) இணைவு வெப்பம்:150கிலோயூல்/மோல் (36கிலோகலோரி/மோல்) வளைவு வலிமை: 638 ± 28 மெகா பாசுக்கல் அறை வெப்பநிலையில், 324 மெகா பாசுக்கல் 1000 பாகை செல்சியசு வெப்பநிலையில், 139 மெகா பாசுக்கல் 1600 பாகை செல்சியசு வெப்பநிலையில், 100 மெகா பாசுக்கல் 2000 பாகை செல்சியசு வெப்பநிலையில், முறிவுக்கடினத்தன்மை:6.73 ± 0.07 மெகாபாசுக்கல் மீ1/2, 4.7 ± 0.3 மெகாபாசுக்கல் மீ1/2 விக்கர்சு கடினத்தன்மை:19.08 கிகாபாசுக்கல் (2,767,000 சதுர அங்குலத்திற்கு பவுண்டுகள்), 21.3 ± 0.55 கிகாபாசுக்கல் (3,090,000 சதுர அங்குலத்திற்கு பவுண்டுகள்) மேற்கோள்கள் பகுப்பு:ஆஃபினியம் சேர்மங்கள் பகுப்பு:கார்பைடுகள் பகுப்பு:நைட்ரைடுகள் பகுப்பு:கலப்பு எதிர்மின்னயனி சேர்மங்கள் பகுப்பு:உருகாப் பொருட்கள்
அணிச்சல் எண்
https://ta.wikipedia.org/wiki/அணிச்சல்_எண்
thumb|ஒரு அணிச்சலை 15 (5 ஆவது அணிச்சல் எண்) துண்டுகளாக வெட்டுவதன் இயங்குபடம் . 4 தளங்களால் வெட்டப்படுகிறது. இவற்றுள், 14 துண்டுகள் அணிச்சலின் வெளிப்பரப்பைக் கொண்ட துண்டுகளாகவும், ஒரு துண்டு முழுவதும் அணிச்சலின் நடுப்பகுதியைக் கொண்ட ஒரு நான்முகி வடிவத்திலும் அமைகின்றன. கணிதத்தில் அணிச்சல் எண் அல்லது கேக் எண் (cake number) என்பது, ஒரு முப்பரிமாண கனசதுரத்தைச் சரியாக n தளங்களைக்கொண்டு பிரிக்கக்கூடிய பகுதிகளின் அதிகபட்ச எண்ணிக்கையைக் குறிக்கும் எண்ணாகும். இவ்வெண், Cn எனக் குறிக்கப்படுகிறது. பிரிக்கப்படும் ஒவ்வொரு பகுதியும், கனசதுர வடிவ அணிச்சல் ஒன்றை கத்தியால் வெட்டக் கிடைக்கும் துண்டுகளை ஒத்தமையும் என்பதால் இந்த எண் அணிச்சல் எண் என அழைக்கப்படுகிறது. அணிச்சல். சோம்பேறி உணவுவழங்குவோனின் தொடர்வரிசைக்கு ஒத்த முப்பரிமாண எண்ணாக அணிச்சல் எண் அமைகிறது. எனில், Cn இன் மதிப்புகள்: . வாய்பாடு n இன் தொடர் பெருக்கம் n!]]; ஈருறுப்புக் குணகங்கள்: கனசதுரத்தை வெட்டும் தளங்களின் எண்ணிக்கை: n எனில், n-வது அணிச்சல் எண் கீழ்வரும் வாய்பாட்டால் தரப்படுகிறது: பண்புகள் சோம்பேறி உணவுவழங்குவோனின் தொடர்வரிசைக்கு ஒத்த முப்பரிமாண எண்ணாக அணிச்சல் எண் அமைகிறது. மேலும், அடுத்தடுத்த இரு அணிச்சல் எண்களின் வித்தியாசங்கள், சோம்பேறி உணவுவழங்குவோனின் தொடர்வரிசையில் அமைகின்றன. thumb|300px|பெர்னூலியின் முக்கோணத்தின் நான்காவது நிரலில் அமையும் அணிச்சல் எண்கள் (நீலம்) பெர்னூலியின் முக்கோணத்தின் நான்காவது நிரலின் உறுப்புகள் (k = 3), n ( n ≥ 3) வெட்டுக்களால் கிடைக்ககூடிய அணிச்சல் எண்களைத் தருகின்றன. பாஸ்கலின் முக்கோணத்தின் ஒவ்வொரு நிரையின் முதல் நான்கு உறுப்புகளின் கூட்டுத்தொகை காண்பதன்மூலம் பெறலாம்: {| class="wikitable" style="text-align:right;" ! !! 0 !! 1 !! 2 !! 3 ! rowspan="11" style="padding:0;"| !! Sum |- ! style="text-align:left;"|1 | 1 || — || — || — || 1 |- ! style="text-align:left;"|2 | 1 || 1 || — || — || 2 |- ! style="text-align:left;"|3 | 1 || 2 || 1 || — || 4 |- ! style="text-align:left;"|4 | 1 || 3 || 3 || 1 || 8 |- ! style="text-align:left;"|5 | 1 || 4 || 6 || 4 || 15 |- ! style="text-align:left;"|6 | 1 || 5 || 10 || 10 || 26 |- ! style="text-align:left;"|7 | 1 || 6 || 15 || 20 || 42 |- ! style="text-align:left;"|8 | 1 || 7 || 21 || 35 || 64 |- ! style="text-align:left;"|9 | 1 || 8 || 28 || 56 || 93 |- ! style="text-align:left;"|10 | 1 || 9 || 36 || 84 || 130 |} மேற்கோள்கள் வெளி இணைப்புகள் பகுப்பு:முழுஎண் தொடர்வரிசைகள் பகுப்பு:இயங்குபடம் உள்ள கட்டுரைகள்
மலாயாவின் ஐக்கிய இராச்சிய உயர் ஆணையர்கள்
https://ta.wikipedia.org/wiki/மலாயாவின்_ஐக்கிய_இராச்சிய_உயர்_ஆணையர்கள்
மலாயாவின் ஐக்கிய இராச்சிய உயர் ஆணையர் அல்லது மலாயா கூட்டமைப்பு மாநிலங்களுக்கான உயர் ஆணையர் ஆங்கிலம்: High Commissioner for the Federated Malay States; மலாய்: Pesuruhjaya Tinggi Negeri-negeri Melayu Bersekutu) எனும் பதவி 1896 இல், உருவாக்கப்பட்டது. மலாயாவின் உயர் ஆணையர் என்பவர் மலாயா கூட்டமைப்பு மாநிலங்களின் பிரித்தானிய அரசாங்கப் பிரதிநிதியாகச் செயல்பட்டார். மலாயா கூட்டமைப்பு மாநிலங்கள் (Federated Malay States) என்பது 1896-ஆம் தொடங்கி 1946-ஆம் ஆண்டு வரையில், தீபகற்ப மலேசியாவின் சிலாங்கூர், பேராக், நெகிரி செம்பிலான், பகாங் மாநிலங்களின் கூட்டமைப்பு ஆகும். அந்த நான்கு மாநிலங்களும் பிரித்தானிய மலாயா நிர்வாகத்தின் கீழ் பாதுகாக்கப்பட்ட மாநிலங்களாக இருந்தன. பொது மலாயாவின் ஐக்கிய இராச்சிய உயர் ஆணையரின் அதிகாரப்பூர்வ இல்லம் மன்னர் மாளிகை என அழைக்கப்பட்டது. இது இப்போது கார்கோசா செரி நெகாரா என்ற தங்கும் விடுதியின் ஒரு பகுதியாக உள்ளது. உயர் ஆணையரின் மாளிகை கோலாலம்பூர் பெர்தானா தாவரவியல் பூங்காவில் இருந்தது. அந்த நேரத்தில் கோலாலம்பூர் மாநகரம், மலாயா கூட்டமைப்பு மாநிலங்களின் தலைநகராக இருந்தது. உயர் ஆணையரின் மாளிகை, அரச பிரமுகர்கள் மற்றும் சிறப்பு விருந்தினர்களுக்கு ஒரு முக்கிய இடமாக செயல்பட்டது. இசுதானா சிங்கப்பூர் நீரிணை குடியேற்றங்களின் ஆளுநர், அந்தக் காலக்கட்டத்தில், மலாயாவின் ஐக்கிய இராச்சிய உயர் ஆணையரின் அலுவலகத்தில் தனியான ஒரு நிர்வாகப் பொறுப்பில் இருந்து வந்தார். ஆளுநரின் அதிகாரப்பூர்வ இல்லம் சிங்கப்பூரில் இருந்தது. அந்த நேரத்தில் காலனிய சிங்கப்பூர், நீரிணை குடியேற்றங்களின் தலைநகராகவும் இருந்தது. நீரிணை குடியேற்றங்களின் ஆளுநர் மாளிகை, அரசு மாளிகை என்று அழைக்கப்பட்டது. இப்போது அது சிங்கப்பூர் குடியரசுத் தலைவரின் அதிகாரப்பூர்வ இல்லமான இசுதானா சிங்கப்பூர் என்று அழைக்கப்படுகிறது. மலாயா ஒன்றியம் பெர்லிஸ், கெடா, கிளாந்தான், திராங்கானு, மற்றும் ஜொகூர் ஆகிய ஐந்து மாநிலங்களும் மலாயா கூட்டமைப்பில் சேரா மாநிலங்கள் என்று அழைக்கப்பட்டன. இந்த மாநிலங்களில் பிரித்தானிய அரசாங்கம் ஓர் ஆலோசகரால் பிரதிநிதிக்கப்பட்டது.Simon C. Smith, "Rulers and Residents: British Relations with the Aden Protectorate, 1937–59", Middle Eastern Studies, Vol. 31, No. 3 (Jul., 1995), p. 511. நீரிணை குடியேற்றங்கள் 1946-இல் கலைக்கப்பட்டது. சிங்கப்பூர் அதன் சொந்த உரிமை அடிப்படையில், தனித்த நிலையிலான முடியாட்சி காலனி ஆனது. மீதமுள்ள இரு நீரிணை குடியேற்றப் பகுதிகள்; (அதாவது பினாங்கு மற்றும் மலாக்கா) ஆகிய இரு பகுதிகளும் பெர்லிஸ், கெடா, கிளாந்தான், திராங்கானு மற்றும் ஜொகூர் ஆகிய மாநிலங்களுடன் இணைக்கப்பட்டு மலாயா ஒன்றியம் எனும் புதிய அமைப்பாக உருவாக்கம் கண்டன.. கூட்டாட்சி மலாய் மாநிலங்களான பெர்லிஸ், கெடா, கிளாந்தான், திராங்கானு மற்றும் ஜொகூர் ஆகிய மாநிலங்களில் உள்ள பூர்வீக ஆட்சியாளர்கள் தங்கள் அதிகாரத்தை ஐக்கிய இராச்சியத்திற்கு விட்டுக் கொடுத்தனர். இதனால் இந்தப் பிரதேசங்கள் பிரித்தானிய காலனிகளாக மாறின. மலாயா ஒன்றியம் எனும் புதிய முடியாட்சி காலனிக்கு ஓர் ஆளுநர் தலைமை தாங்கினார். அவர்தான் மலாயாவின் ஐக்கிய இராச்சிய உயர் ஆணையர் ஆவார். விளக்கம் மலாயா கூட்டமைப்பு மாநிலங்கள் மலாயா கூட்டமைப்பு மாநிலங்கள் (Federated Malay States) (FMS) - (Protectorate States) சிலாங்கூர் பேராக் நெகிரி செம்பிலான் பகாங் மலாயா கூட்டமைப்பில் சேரா மாநிலங்கள் மலாயா கூட்டமைப்பில் சேரா மாநிலங்கள் (Unfederated Malay States) - (Protected States) ஜொகூர் கெடா கிளாந்தான் பெர்லிஸ் திராங்கானு நீரிணைக் குடியேற்ற மாநிலங்கள் நீரிணைக் குடியேற்ற மாநிலங்கள் (Straits Settlements) (Crown Colony States) மலாக்கா பினாங்கு சிங்கப்பூர் உயர் ஆணையர்கள் மற்றும் ஆளுநர்களின் பட்டியல் alt=|border|25x25px மலாயா கூட்டமைப்பு மாநிலங்கள் alt=|border|25x25px மலாயா ஒன்றியம் alt=|border|25x25px மலாயா கூட்டமைப்பு alt=|border|25x25px*தோற்றம்பெயர்பணிக்காலம் பதவியேற்ற நாள் பதவி விலகிய நாள்alt=|border|25x25px மலாயா கூட்டமைப்பு மாநிலங்களின் உயர் ஆணையர் (1896–1946) alt=|border|25x25px |- ! align=center style="background:gold; color:black;" |1 |80px |சார்லஸ் மிச்சல் | 01 சனவரி 1896 | 7 டிசம்பர் 1899 |- ! align=center style="background:gold; color:black;" |2 |80x80px |அலெக்சாண்டர் சுவெட்டன்காம் |8 டிசம்பர் 1899 |18 பிப்ரவரி 1901 |- ! align=center style="background:gold; color:black;" |3 |80px |சர் பிராங்க் சுவெட்டன்காம் |26 செப்டம்பர் 1901 |12 அக்டோபர் 1903 |- ! align=center style="background:gold; color:black;" |4 |80px |சர் ஜான் அண்டர்சன் |15 ஏப்ரல் 1904 |9 ஏப்ரல் 1911 |- ! align=center style="background:gold; color:black;" |5 |80x80px |சர் ஆர்தர் எண்டர்சன் யாங் |9 செப்டம்பர் 1911 |24 ஆகஸ்டு 1920 |- ! align=center style="background:gold; color:black;" |6 |80x80px |சர் லாரன்ஸ் குயில்மார்ட் |3 பிப்ரவரி 1920 |5 மே 1927 |- ! align=center style="background:gold; color:black;" |7 |80px |சர் இயூ கிளிபர்ட் |3 ஜூன்1927 |20 அக்டோபர் 1930 |- ! align=center style="background:gold; color:black;" |8 |80px |சர் சிசில் கிளமெந்தி |5 பிப்ரவரி 1930 |16 பிப்ரவரி 1934 |- ! align=center style="background:gold; color:black;" |9 |80x80px |சர் செந்தோன் தாமஸ் |9 நவம்பர் 1934 |15 ஆகஸ்டு 1945 |- | colspan="5" align="center" style="background:white; color:blue;" |alt=|border|25x25px மலாயாவில் சப்பானிய ஆக்கிரமிப்பு alt=|border|25x25px (31 சனவரி 1942 முதல் ஆகஸ்டு 15, 1945 வரை)alt=|border|25x25px பிரித்தானிய மலாயாவில் இராணுவ நிருவாகம் (15 ஆகஸ்டு 1945 – 30 மார்ச் 1946) alt=|border|25x25pxalt=|border|25x25px மலாயா ஒன்றியத்தின் ஆளுநர் (1946-1948) (1946–1948) alt=|border|25x25px1080pxசர் எட்வர்ட் ஜென்ட்1 ஏப்ரல் 194630 சனவரி 1948alt=|border|25x25px மலாயா உயர் ஆளுநர் (1948–1957) alt=|border|25x25px1180pxசர் எட்வர்ட் ஜென்ட்1 பிப்ரவரி 19484 சூலை 194812alt=|124x124pxசர் என்றி கர்னி1 அக்டோபர் 19486 அக்டோபர் 19511380pxசர் ஜெரால்ட் டெம்பிளர்15 சனவரி 195231 மே 19541480pxசர் டொனால்டு மெக்லவரி31 மே 195431 ஆகஸ்டு 1957 மேலும் காண்க மலாயா கூட்டமைப்பில் சேரா மாநிலங்கள் நீரிணை குடியேற்றங்கள் என்றி கர்னி மலேசியாவின் முடியாட்சிகள் மேற்கோள்கள் குறிப்புகள் Harrison, Cuthbert Woodville. An Illustrated Guide to the Federated Malay States. 1923 George Palmer Putnam Collection of Amelia Earhart Papers © Purdue University Benfield, H. Conway. Handbook of The Federated Malay States sabrizain.org Retrieved 23 January 2018. வெளி இணைப்புகள் பகுப்பு:மலேசிய வரலாறு பகுப்பு:மலேசிய அரசியல் வரலாறு‎ பகுப்பு:முன்னாள் முடியாட்சிகள் பகுப்பு:மலேசிய முடியாட்சி பகுப்பு:சிங்கப்பூரின் வரலாறு
இப்ராகிம் பூங்கா
https://ta.wikipedia.org/wiki/இப்ராகிம்_பூங்கா
இப்ராகிம் பூங்கா (Ibrahim Park) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் திருச்சிராப்பள்ளி மாவட்டத்திலுள்ள திருச்சிராப்பள்ளி நகரின் மையப் பகுதியில் உருவாக்கப்பட்டுள்ள மக்கள் பயன்பாட்டிற்கான ஒரு பூங்காவாகும். 1928 ஆம் ஆண்டு முதல் 1931 ஆம் ஆண்டு வரை திருச்சிராப்பள்ளி நகராட்சியின் தலைவராக பதவியிலிருந்த எம். கே. முகம்மது இப்ராகிம் ராவுத்தர் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு, தானமாகக் கொடுத்த இந்த இடத்தில் பூங்கா அழகுற கட்டப்பட்டு, அவரது நினைவாக 'இப்ராகிம் பூங்கா' என, பெயர் சூட்டப்பட்டது. அமைவிடம் திருச்சிராப்பள்ளியில் () என்ற புவியியல் ஆள்கூறுகள் கொண்டு இப்பூங்கா உருப்பெற்றுள்ளது. வணிகம் சார்ந்த சூழல் மிகுந்த மேலப்புலிவார் சாலையில் பூங்கா அமைந்துள்ளது. நிருவாகம் திருச்சிராப்பள்ளி மாநகராட்சியால் பூங்கா நிருவகிக்கப்படுகிறது. மேற்கோள்கள் வெளி இணைப்புகள் பகுப்பு:திருச்சி மாவட்ட சுற்றுலாத் தலங்கள்