news_id
int64 6
128k
| news_date
stringlengths 19
22
| news_category
stringclasses 15
values | news_title
stringlengths 1
226
| news_article
stringlengths 7
17.4k
|
---|---|---|---|---|
542 | 1/21/2011 3:49:20 PM | மாவட்ட மசாலா | வடபழனியில் மூதாட்டியிடம் செயின் அபேஸ் | சென்னை: வடபழனி முருகன் கோயில் தைப்பூச திருவிழாவின்போது, சாமி கும்பிட்ட மூதாட்டியிடம் செயினை பறித்துச் சென்ற ஆசாமியை போலீசார் தேடி வருகின்றனர். சென்னை வடபழனி முருகன் கோயிலில் தைப்பூச திருவிழா நேற்று விமரிசையாக நடந்தது. இரவில் நடந்த சிறப்பு பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். மகாகவி பாரதி நகரை சேர்ந்த சாவித்திரி (55), சாமி தரிசனம் செய்ய வந்தார். கூட்டம் அதிகமாக இருந்ததால் நெரிசலில் சிக்கிக் கொண்டார். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்ட மர்ம ஆசாமி, சாவித்திரி கழுத்தில் இருந்த 4 பவுன் செயினை நைசாக அபேஸ் செய்துகொண்டு தப்பிவிட்டார். கோயிலில் இருந்து வெளியே வந்தபிறகுதான் செயின் காணாமல் போனது தெரியவந்தது. அதிர்ச்சி அடைந்த சாவித்திரி, இதுகுறித்து வடபழனி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செயின் திருடனை தேடிவருகின்றனர். |
543 | 1/21/2011 3:55:47 PM | தமிழகம் | மாதா மடியில் குழந்தை நிலவை வணங்கிய மக்கள் : அச்சிறுப்பாக்கம், செங்கல்பட்டில் பரபரப்பு | செங்கல்பட்டு: குழந்தையுடன் மாதா இருப்பது போன்ற காட்சி நிலவில் தெரிவதாக நேற்று தகவல் பரவியது. இதனால் அச்சிறுப்பாக்கம், செங்கல்பட்டு உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பரபரப்பு ஏற்பட்டது. அச்சிறுப்பாக்கத்தில் மழைமலை மாதா ஆலயம் உள்ளது. ஒவ்வொரு மாதமும் பவுர்ணமியன்று பல்லாயிரக்கணக்கான பக்தர்கள், இங்கு வருகை தந்து மாதாவை வழிபட்டுச் செல்வது வழக்கம். இதற்காக சிறப்பு பஸ்கள் இயக்கப்படும். நேற்று தை மாதத்தின் முதல் பவுர்ணமி என்பதால் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கார், வேன், பஸ்களில் வருகை தந்து திரண்டிருந்தனர். அப்போது, இரவு 10 மணியளவில் முழு நிலவில் மாதா தனது மடியில் ஒரு குழந்தையை வைத்திருப்பது போல் ஒரு தோற்றம் தெரிந்ததாக தகவல் பரவியது. இதனால் ஆலயத்துக்கு வந்தவர்கள் பயபக்தியுடன் வணங்கினர். இந்த காட்சி நள்ளிரவு 12 மணியளவில் தெரிந்தது. ஆலயத்துக்கு வந்திருந்த பக்தர்கள், தங்களது உறவினர்களுக்கு செல்போன் மூலம் இந்த தகவலை தெரிவித்தனர். வீடுகளில் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தவர்கள் எழுந்து மாதாவை தரிசித்தனர். சிலர் பைனாகுலர் மூலமும் பார்த்தனர். தமிழகம் முழுவதிலும் இந்த காட்சி தெரிந்ததாக பக்தர்களிடையே தகவல் பரவியது. |
544 | 1/21/2011 3:56:53 PM | மாவட்ட மசாலா | பாதிக்கப்பட்டவருக்கு நஷ்டஈடு தர கட்டுமான நிறுவனத்துக்கு உத்தரவு | சென்னை: ஒப்பந்தப்படி வீடு கட்டிக்கொடுக்காத கட்டுமான நிறுவனம், பாதிக்கப்பட்டவருக்கு ரூ.55 ஆயிரம் நஷ்டஈடு தர நுகர்வோர் கோர்ட் உத்தரவிட்டது. சென்னை புரசைவாக்கத்தை சேர்ந்தவர் பிரேம்நாத். இவர் வீடு வாங்குவதற்காக பெரியமேட்டில் உள்ள ஒரு கட்டுமான நிறுவனத்தை அணுகினார். அந்த நிறுவனமும் ரூ.36 லட்சத்து 10 ஆயிரம் மதிப்புள்ள 900 சதுர அடி பிளாட்டை காட்டி, அதில் 12 மாதத்தில் வீடு கட்டித்தருவதாக கூறியுள்ளது. பிரேம்நாத் ரூ.2 லட்சம் அட்வான்ஸ் கொடுத்து ஒப்பந்தத்தில் கையெழுத்து போட்டுள்ளார். ஆனால் கட்டுமான நிறுவனம் வீடு கட்டி தராததோடு, லோன் வாங்கித் தருவது, அப்ரூவல் பிளான் உள்பட எந்த ஏற்பாட்டையும் செய்யவில்லை.இதையடுத்து அந்த கட்டுமான நிறுவனத்தின் மீது, சென்னை வடக்கு மாவட்ட நுகர்வோர் கோர்ட்டில் பிரேம்நாத் வழக்கு தொடர்ந்தார். கட்டுமான நிறுவனம் தரப்பில், ‘பிரேம்நாத், புதிய வீட்டுக்கு 20 சதவீத பணம்தான் கட்டியுள்ளார். இது தவறான வழக்கு’ என்று வாதிடப்பட்டது. வழக்கை நுகர்வோர் கோர்ட் நீதிபதி மோகன்தாஸ், உறுப்பினர் கமலக்கண்ணன் ஆகியோர் விசாரித்தனர். ‘‘வழக்கு தொடர்ந்த பிரேம்நாத், வீடு கட்ட ரூ.2 லட்சம் அட்வான்ஸ் கொடுத்தும் கட்டுமான நிறுவனம் எந்த ஏற்பாடும் செய்யவில்லை. அதனால் அவர் கொடுத்த ரூ.2 லட்சத்தை வட்டியுடன் அந்த நிறுவனம் திருப்பிக் கொடுக்க வேண்டும். மேலும் மன உளைச்சல் ஏற்படுத்தியதற்காக ரூ.50 ஆயிரமும் சேவை குறைபாட்டுக்காக ரூ.5 ஆயிரமும் அவருக்கு நஷ்டஈடாக கொடுக்க வேண்டும்’’ என்று நீதிபதி தீர்ப்பளித்தார். |
545 | 1/21/2011 3:58:14 PM | மாவட்ட மசாலா | மத்திய சென்னையில் இளைஞர் காங்கிரசார் 6 நாள் பிரசாரம் | அண்ணாநகர்: மத்திய அரசின் சாதனைகளை விளக்கி இளைஞர் காங்கிரசார் நாளை முதல் 6 நாள் பிரசாரம் செய்கின்றனர். மத்திய சென்னை இளைஞர் காங்கிரஸ் சார்பில் மத்திய அரசின் சாதனைகளை விளக்கி, நாளை முதல் துண்டு பிரசுரம் விநியோகம் செய்கின்றனர். 22&ம் தேதி அண்ணாநகர் தொகுதி, 23ல் எழும்பூர், 26&ல் வில்லிவாக்கம், 29&ல் துறைமுகம், 30&ல் ஆயிரம் விளக்கு, 31&ம் தேதி திருவல்லிக்கேணி, சேப்பாக்கம் ஆகிய தொகுதிகளில் துண்டு பிரசுரம் வழங்கி பிரசாரம் செய்கின்றனர். மத்திய சென்னை மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் அண்ணாநகர் எஸ்.ராம்குமார் தலைமையில் 200&க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்கின்றனர். கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொள்ளும்படி ராம்குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார். |
546 | 1/21/2011 4:01:59 PM | மாவட்ட மசாலா | நில தகராறை விசாரிக்க சென்ற பெண் எஸ்ஐ மூக்கு உடைப்பு | கும்மிடிப்பூண்டி: பொன்னேரி அருகே சிற்றரசு கிராமத்தை சேர்ந்தவர் பாண்டியன். இவரது தங்கை மாரியம்மாள் (35). கிராமத்தில் உள்ள கோயில் நிலத்தை தலைவர் பாளையம் குத்தகைக்கு எடுத்து பயிரிட்டார். அறுவடைக்காக பாளையம் சென்றபோது, நிலம் தனக்கு சொந்தம் என்று கூறி பாண்டியனும் வயலில் இறங்கி கதிர் அறுத்தார். இதனால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. இது குறித்து விசாரிக்கும்படி கும்மிடிப்பூண்டி எஸ்ஐ சகிலாக்கு டிஎஸ்பி ருத்திரசேகர் உத்தரவிட்டார். சம்பவ இடத்துக்கு சென்ற எஸ்ஐ சகிலா, பிரச்னை உள்ளதால் யாரும் கதிர் அறுக்கக் கூடாது என்று கூறினார். இதனால் ஆத்திரம் அடைந்த பாண்டியனின் தங்கை மாரியம்மாள், பெட்ரோல் கேனுடன் வந்து, ‘நிலம் என் அண்ணனுக்குதான் சொந்தம். இதில் வேறு யாராவது கதிர் அறுத்தால் பயிரை கொளுத்தி விடுவேன்’ என்று கூறினார். எஸ்ஐ எவ்வளவோ சொல்லியும் அவர் கேட்கவில்லை. இதையடுத்து இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. எஸ்ஐ முகத்தில் மாரியம்மாள் ஓங்கி குத்தினார். எஸ்ஐ மூக்கு உடைந்து ரத்தம் கொட்டியது. முகமும் வீங்கியது. காயம் அடைந்த அவரை பொன்னேரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுதொடர்பாக கும்மிடிப்பூண்டி போலீசார் வழக்கு பதிவு செய்து எஸ்ஐயை தாக்கிய மாரியம்மாளை கைது செய்து விசாரிக்கின்றனர். விசாரணைக்கு சென்ற பெண் எஸ்ஐ தாக்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. |
547 | 1/21/2011 4:04:21 PM | மாவட்ட மசாலா | தாம்பரத்தை அடுத்த சேலையூரில் புதிய சார்பதிவாளர் அலுவலகம் அமைச்சர் அன்பரசன் திறந்தார் | தாம்பரம்: சேலையூரில் அமைக்கப்பட்ட புதிய சார் பதிவாளர் அலுவலகத்தை அமைச்சர் தா.மோ.அன்பரசன் திறந்து வைத்தார். பத்திரப்பதிவுத்துறை சார்பில் சேலையூரை சுற்றியுள்ள 11 கிராமங்களை உள்ளடக்கி புதிதாக சேலையூர் சார்பதிவாளர் அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா கிழக்கு தாம்பரத்தில் நேற்று நடந்தது. விழாவுக்கு காஞ்சி கலெக்டர் அசிஷ் சட்டர்ஜி தலைமை தாங்கினார். தென்சென்னை பதிவுத்துறை உதவி தலைவர் அ.ப.ராசு வரவேற்றார். தொழிலாளர் நலத்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், புதிய அலுவலகத்தை திறந்து வைத்தார். விழாவில் தாம்பரம் எம்எல்ஏ எஸ்.ஆர்.ராஜா, கோட்டாட்சியர் சவுரிராஜன், தாம்பரம் நகராட்சி தலைவர் மணி, துணைத் தலைவர் காமராஜ், சேலையூர் சார் பதிவாளர் சுரேந்திரன் மற்றும் பத்திரப்பதிவு துறையினர் கலந்துகொண்டனர். அரசங்கழனி, ஒட்டியம்பாக்கம், சித்தாலப்பாக்கம், கவுரிவாக்கம், செம்பாக்கம், ராஜகீழ்பாக்கம், சேலையூர், பெரும்பாக்கம், மதுரைப்பாக்கம், வேங்கைவாசல் போன்ற கிராமங்கள் இந்த புதிய அலுவலக கட்டுப்பாட்டின் கீழ் வரும். பொதுமக்கள் பத்திரப்பதிவு, வில்லங்கச்சான்று, திருமணப்பதிவு, அறக்கட்டளைகளை பதிவு செய்தல் போன்றவற்றுக்கு இங்கு அணுகலாம். புதிய அலுவலகம் கிழக்கு தாம்பரம், பூண்டிபஜார் அருகே நெ.36 பாரதமாதா தெருவில் இயங்குகிறது. பத்திரப்பதிவு தொடர்பான விவரங்களுக்கு 98401-94192 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். |
549 | 1/21/2011 5:02:47 PM | உலகம் | ஈராக்கில் கார் குண்டு: 45 பேர் பரிதாப பலி | கர்பாலா: ஈராக்கின் கர்பாலா நகருக்கு அருகே நேற்று 2 இடங்களில் கார் குண்டு வெடித்ததில் 45 பேர் உடல் சிதறி பலியாயினர். 150-க்கும் அதிகமானவர்கள் படுகாயம் அடைந்தனர். ஈராக்கின் கர்பாலா நகரில் அர்பாயீன் நிகழ்ச்சி விரைவில் அனுசரிக்கப்பட உள்ளது. இதில் பங்கேற்க உலகம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கானோர் திரள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையொட்டி கர்பாலா மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில், கர்பாலாவின் புறநகர் பகுதியில் நேற்று மாலை 3 மணியளவில் சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் ஒன்று பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. 20 நிமிட இடைவெளியில் கர்பாலா அருகே வேறோரு இடத்தில் கார் வெடித்தது. இரு சம்பவங்களிலும் 45 பேர் உடல் சிதறி பலியாயினர். 150-க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்தனர். வெடிகுண்டுகள் நிரப்பிய காரை வெடிக்கச் செய்து நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதல் என்று தெரியவந்தது. இத்தாக்குதலுக்கு எந்த இயக்கமும் பொறுப்பேற்கவில்லை. பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக கர்பாலா நகர கவுன்சில் தலைவர் முகமது ஹமீத் அல் முசாவி தெரிவித்தார். |
550 | 1/21/2011 5:04:56 PM | ஸ்டேட் எக்ஸ்பிரஸ் | ஆள்கடத்தல், பலாத்காரத்தில் 35 நகரங்களில் டெல்லிக்கு முதலிடம் | புதுடெல்லி: டெல்லி, மும்பை, கொல்கத்தா, பெங்களூர், சென்னை, ஐதராபாத் உள்பட இந்தியாவில் உள்ள 35 முக்கிய நகரங்களில் கடந்த 2009ம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட கொலை, கொள்ளை, ஆள்கடத்தல் மற்றும் பலாத்கார குற்றங்கள் குறித்த விவரங்களை தேசிய குற்றப் பதிவு அமைப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி மொத்தம் பதிவான 1696 பலாத்கார வழக்குகளில் டெல்லியில் மட்டும் 404 பலாத்கார வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. டெல்லிக்கு அடுத்தபடியாக மும்பையில் 182 வழக்குகளும், போபாலில் 117 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்திய நகரங்களில் மொத்தம் பதிவான 3544 ஆள்கடத்தல் வழக்குகளில் 1379 வழக்குகள் டெல்லியில் பதிவு செய்யப்பட்டுள்ளன. 684 வரதட்சணை கொலைகளில் 104 வழக்குகள் டெல்லியைச் சேர்ந்தவையாகும். |
551 | 1/21/2011 5:05:48 PM | ஸ்டேட் எக்ஸ்பிரஸ் | நாலந்தா பல்கலைக்கு ரூ. 4500 கோடி நிதிஷ்குமாரிடம் சீன தூதர் உறுதி | பாட்னா: பீகார் முதல்வர் நிதிஷ்குமாரை இந்தியாவுக்கான சீன தூதர் ஷாங் யான் நேற்று பாட்னாவில் தலைமை செயலகத்தில் சந்தித்தார். பீகாரில் நாலந்தா மாவட்டத்தில் அமையவிருக்கும் நாலந்தா பல்கலைக்கழகத்துக்கு சீன அரசு ரூ.4500 கோடி நிதியுதவி அளிக்கும் என்று அப்போது ஷாங் யான் கூறினார். நிதிஷ்குமாரை சீனாவுக்கு வருமாறு தூதர் அழைப்பு விடுத்தார். சீன தூதருடன் அவரது மனைவி சென் யாங் ஜியா வந்திருந்தார். கடந்த 5ம் நூற்றாண்டில் பாடலிபுத்திரத்தில் (தற்போதைய பாட்னா) செயல்பட்ட நாலந்தா பல்கலைக்கழகம் ஆசியாவிலேயே மிகவும் புகழ்பெற்ற பல்கலைக்கழகமாக விளங்கியது. அப்போது சீனா, ஜப்பான் உள்ளிட்ட பல ஆசிய நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் இங்கு கல்வி பயின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. |
552 | 1/21/2011 5:07:22 PM | ஸ்டேட் எக்ஸ்பிரஸ் | தெலங்கானா மாணவர்கள் செமஸ்டர் தேர்வு புறக்கணிப்பு | ஐதராபாத்: தெலங்கானா தனி மாநிலம் கோரி உஸ்மானியா பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் முதுகலை பட்டப் படிப்பு களுக்கான செமஸ்டர் தேர்வு நேற்று முதல் தொடங்கியது. இதனை தள்ளி வைக்க வேண்டும் என போராட்டக் குழுவினர் மாநில அரசுக்கு கோரிக்கை வைத்தனர். இதனை அரசு ஏற்கவில்லை.திட்டமிட்டபடி செமஸ்டர் தேர்வுகள் நடக்கும் என அறிவித்தது. பல்கலைக்கழகத்தை சுற்றி தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. கல்லூரிகளுக்கு வெளியே போலீசார் குவிக்கப்பட்டனர். இருப்பினும் நேற்று நடைபெற்ற தேர்வை 82 சதவீத மாணவர்கள் புறக்கணித்திருப்பதாக பல்கலை அதிகாரிகள் தெரிவித்தனர். தேர்வு எழுத வந்த மாணவர்களை வெளியில் நின்றிருந்த மாணவர்கள் தடுத்து நிறுத்தியதாக அதிகாரிகள் தெரிவித்தனர். |
553 | 1/21/2011 5:08:13 PM | ஸ்டேட் எக்ஸ்பிரஸ் | பலாத்கார புகாரில் சிக்கிய உ.பி., எம்எல்ஏ மீது குற்றப்பத்திரிகை | லக்னோ: உத்தரபிரதேச மாநிலத்தில் சிறுமி பலாத்கார வழக்கில் சிக்கியுள்ள பண்டா தொகுதி பகுஜன் சமாஜ் கட்சி எம்எல்ஏ புருஷோத்தம் நரேஷ் திவாரி மீது சிபிசிஐடி போலீசார் நேற்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். அவருடன் மேலும் 4 பேர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்கள் மீது பலாத்காரம், சட்டத்துக்கு புறம்பாக அடைத்து வைத்தல், சித்ரவதை என பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. இந்த தகவல்களை நேற்று செய்தியாளர்களிடம் தெரிவித்த உ.பி. முதல்வர் மாயாவதி, இந்த வழக்கை உ.பி. அரசு மிக தீவிரமாக கையாண்டு வருவதாகவும், விரைவு கோர்ட் மூலம் விரைவில் நீதி நிலை நாட்டப்படும் எனவும் தெரிவித்தார். தனது உத்தரவின் பேரில் எம்எல்ஏ கைது செய்யப்பட்டிருப்பதாகவும், அவரை கட்சியிலிருந்து நீக்கியிருப்பதாகவும் தெரிவித்தார். இதற்கிடையில் தனது கணவர் அப்பாவி என எம்எல்ஏவின் மனைவி மாயாவதிக்கு கடிதம் எழுதியுள்ளார். ‘எந்தப் பெண்ணையும் அவரால் பலாத்காரம் செய்ய முடியாது’ என தனது கடிதத்தில் எம்எல்ஏவின் மனைவி குறிப்பிட்டுள்ளார். |
554 | 1/21/2011 5:10:08 PM | உலகம் | சக மாணவிகளை பேஸ்புக்கில் அநாகரிக வர்ணனை பள்ளி மாணவன் சஸ்பெண்ட் | வாஷிங்டன்: சக மாணவிகளின் அழகை வர்ணித்தும் கிண்டல் செய்தும் ஒன்று, இரண்டு, மூன்று என்று வரிசைப்படுத்திய பள்ளி மாணவன் சஸ்பெண்ட் செய்யப்பட்டான். அமெரிக்காவின் இலினாய்ஸ் மாநிலம் ஓக் பார்க் பகுதியை சேர்ந்த உயர்நிலைப் பள்ளி மாணவன் ஒருவன் சக மாணவிகளை கிண்டல் செய்து பேஸ்புக்கில் எழுதினான். அவர்களது உடல் அழகு, கவர்ச்சியை வர்ணித்தும் இன ரீதியாக கிண்டல் செய்தும் ஒன்று, இரண்டு, மூன்று என்று 50 மாணவிகளையும் லிஸ்ட் போட்டிருந்தான். அவர்களுக்கு பட்டப்பெயரும் சூட்டினான். இதை பிரின்ட் எடுத்து பள்ளியிலும் வினியோகித்தான். மாணவர்கள் மத்தியில் அவனுக்கு பாராட்டு குவிந்தது. இந்த விவரம் வெளியே தெரியவர, மாணவிகள் அதிர்ச்சி அடைந்தனர். பள்ளி நிர்வாகத்தில் புகார் கொடுத்தனர். இதையடுத்து, அவன் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளான். இதேபோல மாணவிகளை கிண்டல் செய்து ஏற்கனவே அவன் சஸ்பெண்ட் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. அவனை பள்ளியை விட்டு நீக்குவது குறித்து நிர்வாகம் ஆலோசித்து வருகிறது. |
556 | 1/21/2011 5:20:26 PM | உலகம் | உணவில் 8 பங்கு காய்கறி, பழங்கள் இதய நோயில் இருந்து தப்பிக்கலாம் | லண்டன்: ஆரோக்கியத்துக்கு பல விஷயங்கள் இருந்தாலும் அவற்றில் முதன்மையானது நாம் எடுத்துக் கொள்ளும் உணவுகள். அதனால்தான் உணவு முறையை தேர்ந்தெடுத்து கடைபிடிப்பது அதிகரித்து வருகிறது. உடல்வாகுக்கு ஏற்பவும் உணவின் தேவை உள்ளது. எந்தெந்த உணவை எடுத்துக் கொள்ளலாம்... எதை தவிர்க்கலாம் என்பது குறித்த ஆராய்ச்சி தகவல்கள் தினம் ஒன்றாக வந்து கொண்டிருக்கின்றன. சமீபத்தில் இங்கிலாந்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்று என்ன சொல்கிறது?நாம் உண்ணும் உணவில் அன்றாடம் 8 பங்கு, அதாவது பிரதானமான அளவுக்கு காய்கறிகளும் பழங்களும் இடம் பெற வேண்டியது அவசியம். இத்தகைய உணவு முறையால் மாரடைப்பு உள்ளிட்ட இதய நோய் தாக்குதலில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள முடியும் என்கிறது அந்த ஆய்வு முடிவு. இதற்கு முந்தைய ஆய்வில் 5 பங்கு காய்கறி, பழங்கள் இருந்தாலே போதும் என அறிவுறுத்தப்பட்டிருந்தது. இதன் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்ட தற்போதைய ஆய்வு, காய்கறி மற்றும் பழங்களின் பங்கு 8 மடங்காக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளது. அளவு அதிகரிப்பதால் எந்த பிரச்னையும் இல்லை. ஆனால் குறையாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியம் என்பது ஆராய்ச்சியாளர்களின் அட்டைஸ். இதனால் மாரடைப்பு உள்ளிட்ட இதய நோய்கள் வருவது 22 சதவீதம் குறையுமாம். |
557 | 1/22/2011 4:35:33 PM | இந்தியா | கவர்னரை கண்டித்து பா.ஜ. பந்த் : 30 பஸ்கள் எரிப்பு கர்நாடகாவில் பதற்றம் | பெங்களூர்: முதல்வர் மீது கிரிமினல் வழக்கு தொடர கவர்னர் அனுமதி அளித்ததை கண்டித்து கர்நாடகாவில் பா.ஜ.வினர் இன்று பந்த் நடத்தினர். இதையொட்டி பல இடங்களில் கலவரம் வெடித்தது. 30-க்கும் மேற்பட்ட பஸ்கள், வாகனங்கள் தீவைத்து எரிக்கப்பட்டன. பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டது. மாநிலம் முழுவதும் பதற்றம் நிலவுவதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.நிலமோசடி குற்றச்சாட்டின் பேரில் கர்நாடக முதல்வர் எடியூரப்பா, உள்துறை அமைச்சர் அசோக் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்ய நேற்று இரவு கவர்னர் பரத்வாஜ் அனுமதி அளித்தார். இது கர்நாடக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கவர்னரின் செயல் ஜனநாயக படுகொலை என எடியூரப்பா கூறியுள்ளார். அவரை கண்டித்து கர்நாடகாவில் இன்று மாநிலம் தழுவிய பந்த் நடத்தப்படும் என மாநில பா.ஜ. தலைவர் ஈஸ்வரப்பா நேற்றிரவு அறிவித்தார். கவர்னரை நீக்கும் வரை தொடர்ந்து போராடுவோம் என்றும் அவர் கூறினார்.பந்த் அறிவிப்பை தொடர்ந்து பெங்களூர், மங்களூர், மைசூர் போன்ற பெருநகரங்களில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். பால் விநியோகம், மின்சாரம் போன்ற அத்தியாவசிய சேவைகளுக்கு பந்த்தில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டது. பந்த் போராட்டத்துக்கு பா.ஜ. ஆதரவு தொழிற்சங்கங்களும் அமைப்புகளும் ஆதரவு தெரிவித்துள்ளன. இதனால், கர்நாடகா முழுவதும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. பந்த்தையொட்டி பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டது. பல இடங்களில் பா.ஜ.வினர் ஆர்ப்பாட்டம், மறியல் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டனர். பெரும்பாலான பகுதிகளில் பஸ், ஆட்டோக்கள் ஓடவில்லை. கடைகளும் மூடிக் கிடந்தன. பெங்களுர் சாலைகளில் போக்குவரத்து குறைந்து காணப்பட்டது. தனியார் மற்றும் அரசு அலுவலகங்கள் இயங்கினாலும், குறைந்த அளவு ஊழியர்களே வந்திருந்தனர். பந்த் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.பெங்களூர், பீதர், குல்பர்கா, பெல்காம், ஷிமோகா, தாவணகெரே, பெல்லாரி, ஹாவேரி, வடகனரா, தென்கனரா, உடுப்பி, கொப்பள், கதக், மைசூர், சித்ரதுர்கா மாவட்டங்களில் பா.ஜ.வினர் கலவரத்தில் ஈடுபட்டனர். பஸ்கள் உள்ளிட்ட வாகனங்கள் கல்வீசி தாக்கப்பட்டன. 30 பஸ்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன. பெரும்பாலான இடங்களில் சாலைகளில் டயர்களை கொளுத்தியும், மரங்களை வெட்டிச் சாய்த்தும் போக்குவரத்தை தடை செய்தனர். இதன் காரணமாக போக்குவரத்து ஸ்தம்பித்தது. இதையடுத்து பெங்களூரில் 24 மணி நேரத்துக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. வெளியூர்களில் இருந்து வந்த பயணிகள் சொந்த ஊருக்கு செல்ல முடியாமல் பஸ், ரயில் நிலையங்களில் காத்திருந்தனர். அவசர ஆலோசனை: முதல்வர் எடியூரப்பா வீட்டில் நேற்றிரவு அமைச்சர்கள் கூடி ஆலோசனை நடத்தினர். சட்ட அமைச்சர் சுரேஷ்குமார் தலைமையில் 15-க்கும் மேற்பட்ட அமைச்சர்கள் இன்று காலை முதல்வர் வீட்டில் இருந்து நடந்தே கவர்னர் மாளிகைக்கு சென்றனர். கவர்னரை சந்தித்து, முதல்வர் மீது வழக்கு பதிவு செய்ய பிறப்பித்த உத்தரவு நகலை கேட்டனர். இன்று மாலைக்குள் கொடுப்பதாக கவர்னர் உறுதியளித்ததாக அமைச்சர் சுரேஷ்குமார் தெரிவித்தார். அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முதல்வர் வீட்டில் அமைச்சர்கள், பா.ஜ. முன்னணி தலைவர்கள் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகின்றனர். |
558 | 1/22/2011 4:40:58 PM | மாவட்ட மசாலா | மணல் அள்ளுவதை தடுத்த அதிகாரிகளை கொல்ல முயற்சி | பாலக்கோடு: தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே உள்ள கெசர்குழி காப்புக்காடு வனப்பகுதியில் வனக்காப்பாளர் சுப்பிரமணி, வனச்சரகர் சின்னச்சாமி ஆகியோர் நேற்று அதிகாலை ரோந்து சென்றனர். அப்போது அங்குள்ள ஓர் ஓடையில் டிராக்டரில் மணல் அள்ளிக் கொண்டிருந்தனர். இதைப்பார்த்த வனத்துறையினர் மணல் அள்ளுவதை தடுத்தனர். அப்போது அதிகாரிகளை, மணல் அள்ளியவர்கள் டிராக்டர் ஏற்றி கொல்ல முயற்சித்துள்ளனர். இதுகுறித்து ஜெயவேல், ராமர், பன்னீர், சின்னவன் ஆகியோர் மீது வனத்துறை அதிகாரிகள், மாரண்டஅள்ளி போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர். |
559 | 1/22/2011 4:41:15 PM | மாவட்ட மசாலா | எலக்ட்ரானிக்ஸ் கடையில் தீ : 2 லட்சம் பொருள் நாசம் | பவானிசாகர்: ஈரோடு மாவட்டம், பவானிசாகர் பகுடுதுறை ரோட்டில் உள்ள ஒரு எலக்ட்ரானிக்ஸ் கடையில் நேற்றிரவு 11 மணி அளவில் திடீரென தீப்பிடித்தது. பொதுமக்கள், சத்தியமங்கலம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், கொழுந்துவிட்டு எரிந்துகொண்டிருந்த தீயை அணைத்தனர். தீயில் 5 கம்ப்யூட்டர்கள், 15 டி.வி.க்கள், ஒரு ஜெராக்ஸ் மெஷின் உள்ளிட்ட ரூ.2 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமானது. கடை உரிமையாளர் ரஞ்சித்குமார், பவானிசாகர் போலீசில் புகார் செய்துள்ளார். தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர். |
560 | 1/22/2011 4:41:37 PM | மாவட்ட மசாலா | பாத்திர தொழிலாளர் ஸ்டிரைக் : 25-வது நாளாக நீடிக்கிறது | அனுப்பர்பாளையம்: கூலி உயர்வு கோரி, திருப்பூர் அனுப்பர்பாளையம் பாத்திர தொழிலாளர்கள் டிசம்பர் 29ம் தேதி முதல் ஸ்டிரைக்கில் ஈடுபட்டு வருகின்றனர். 11 முறை நடந்த பேச்சுவார்த்தையில் தீர்வு ஏற்படவில்லை. தொழிலாளர் துறை துணை ஆணையாளர் மாரிமுத்து முன்னிலையில் நடந்த பேச்சில், எவர்சில்வர் பாத்திர உற்பத்தியாளர்கள் 25 சதவீதம் கூலி உயர்வு வழங்குவதாக கூறினர். 30 சதவீதத்துக்கு குறைவாக ஏற்க முடியாது என்று தொழிற்சங்கத்தினர் மறுத்தனர். இதையடுத்து, தொழிலாளர்கள் ஸ்டிரைக் தொடர்கிறது. மீண்டும் பேச்சுவார்த்தை கோவையில் 27ம் தேதி மாலை 4 மணிக்கு நடக்கிறது. |
561 | 1/22/2011 4:41:52 PM | மாவட்ட மசாலா | சாராயம் குடித்தால் மீன்பிடிக்க செல்ல தடை | வேதாரண்யம்: வேதாரண்யம் தாலுகாவில் உள்ளது புஷ்பவனம் மீனவ கிராமம். இங்கு 1,500 பேர் வசித்து வருகின்றனர். கிராமத்தில் உள்ள பெரும்பாலான ஆண்கள் குடிப்பழக்கத்துக்கு அடிமையாகினர். அவர்களது சம்பாத்தியத்தில் பெரும் பகுதி கள்ளச் சாராயத்துக்கே செலவானது. இதையடுத்து கிராம பஞ்சாயத்தார் ஒன்று கூடி ஆலோசனை நடத்தினர். இனி கிராமத்தில் யாராவது சாராயம் குடித்தால் ரூ. 10 ஆயிரம் அபராதம் மற்றும் 20 நாள் கடலுக்கு செல்ல தடை விதிப்பது என்றும் முடிவு செய்தனர். இதனை கண்காணிக்க 20 இளைஞர்கள் அடங்கிய குழுவும் அமைக்கப்பட்டது. |
562 | 1/22/2011 4:42:26 PM | மாவட்ட மசாலா | இஸ்ரோ சார்பில் குன்னூரில் சிறப்பு அறிவியல் கருத்தரங்கு | குன்னூர்: நீலகிரி கலாசார சங்கம், இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் (இஸ்ரோ) இணைந்து ‘விண்வெளி கலாசாரம்’ என்ற கண்காட்சியை குன்னூர் புனித ஜோசப் ஆண்கள் ஆங்கிலோ-இந்தியன் பள்ளியில் ஜனவரி 31, பிப்ரவரி 1 ஆகிய தேதிகளில் நடத்துகின்றன. இதுவரை விண்ணில் செலுத்தப்பட்ட விண்கலன்கள், சந்திரயான் உள்ளிட்டவற்றின் மாதிரிகள் இடம்பெறுகின்றன. 31-ம் தேதி அறிவியல் ஆசிரியர்களுக்கான சிறப்பு அறிவியல் கருத்தரங்கம் இஸ்ரோ விஞ்ஞானிகள் தலைமையில் நடக்கிறது என நீலகிரி கலாசார சங்க அமைப்பாளர் அனந்தகிருஷ்ணன் தெரிவித்தார். |
564 | 1/22/2011 4:45:53 PM | தலையங்கம் | திரியில் கருகும் மனித உயிர்கள் | சிவகாசி சம்பந்தமான செய்தி என்றாலே அது பட்டாசு விபத்தாகத்தான் இருக்கிறது. 5 மாதங்களுக்கு முன்பு நடந்த பட்டாசு விபத்தில் 8 பேர் பலியானார்கள். இப்போது, 8 பேர். எத்தனை பேர் இதுவரை பலியாகியிருக்கிறார்கள் எனக் கணக்கெடுத்தால் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டிவிடும். பாதுகாப்பு ஏற்பாடுகள் சரிவர செய்யப்படவில்லை என்பதால் இன்னமும் விபத்து நடந்து கொண்டுதான் இருக்கிறது. விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே முதலிபட்டி பெரியவாடியூரில் ராஜ்கண்ணா பயர் ஒர்க்ஸ் என்ற பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது. சிவகாசியை சேர்ந்த கண்ணன், விவேக், முனீஸ், சரவணன் ஆகியோருக்கு சொந்தமான இந்த ஆலையில் 35 அறைகளில் சரவெடி, பேன்சி வெடி தயாரிக்கப்படுகிறது. 250 பேர் பணியாற்றி வருகின்றனர். நேற்று ஒரு அறையில் நவீனரக பட்டாசுக்கு ‘மணி மருந்து‘ தயாரிக்கும் பணி நடந்துள்ளது. அரசு விதிமுறைப்படி அந்த அறையில் ஒரு நபர் மட்டும் இருந்திருக்க வேண்டும். ஆனால் 6 பேர் இருந்துள்ளனர். காலை 11 மணியளவில் உராய்வு ஏற்பட்டு தீப்பிடித்தது. அந்த அறை வெடித்து சிதறியது. அடுத்தடுத்து இருந்த அறைகளுக்கும் தீ பரவியுள்ளது. பட்டாசு மூலப்பொருட்கள் வெடித்து சிதறியதில் 4 அறைகள் தரைமட்டமாகின. 3 அறைகள் சேதமடைந்தன. வெடிவிபத்து ஏற்பட்ட அறையில் இருந்த இன்னாசிமுத்து, ஆறுமுகம், இன்னொரு ஆறுமுகம், சேகர் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பலியாயினர். 16 பேர் பலத்த தீக்காயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி 4 பேர் இறந்தனர். 5 மாதம் முன்பு, மீனாட்சிபுரத்தில் ராமசுப்பு என்பவரது தோட்டத்தில் ஆர்டிஓ கொம்பையா தலைமையில் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். அங்கு பம்பு செட் அறையில் பதுக்கிய கருந்திரிகளை அகற்றும் போது விபத்து ஏற்பட்டு, போலீஸ், ஆர்ஐக்கள் என 8 பேர் படுகாயமடைந்து, ஒரு சில நாட்களில் சிகிச்சை பலனின்றி பலியாயினர்.விபத்து நடக்க அதிக வாய்ப்பு உள்ளதால், சிறுசிறு அறைகளில் தனித்தனியாக பட்டாசு தயாரிக்கும் பணி நடக்கும். அப்போதுதான் விபத்து நடந்தாலும் அடுத்த அறைக்கு பாதிப்பு ஏற்படாது என்பதால் இந்த ஏற்பாடு. ஊழியர் பாதுகாப்புக்கு செலவிட வேண்டும். ஆனால் செய்வதில்லை. அனைத்திலும் விதிமுறை மீறல். ஒரே அறையில் பலர் வேலை பார்ப்பதாலும், பட்டாசு அறைகள் அடுத்தடுத்து இருப்பதாலும் தீ விபத்து நடந்தால் பெரிய அளவுக்கு பாதிப்பை ஏற்படுத்தி விடுகிறது. உயிரை பணயம் வைத்து வேலை பார்க்கும் தொழிலாளர்களுக்கு நஷ்டஈடும் பெரிதாகக் கிடைப்பதில்லை. உயிரை விட லாபம் பெரிய விஷயமில்லை. |
565 | 1/22/2011 4:48:38 PM | தமிழகம் | எஸ்எஸ்எல்சி, பிளஸ்2 தேர்வு : மாவட்ட கல்வி அதிகாரிகளுடன் 24ல் சென்னையில் ஆலோசனை | நெல்லை: தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வுகள் மார்ச் 2ம் தேதி தொடங்கி 25ம் தேதி முடிகிறது. இதைத் தொடர்ந்து எஸ்எஸ்எல்சி தேர்வுகள் மார்ச் 28ம் தேதி தொடங்கி ஏப¢ரல் 11ம் தேதி முடிகிறது. இதற¢கு முன்னதாக பிளஸ் 2 செய்முறை தேர்வுகள் தமிழகம் முழுவதும் பிப்ரவரி 3ம் தேதி தொடங்கி 28ம் தேதி வரை நடத்தப்படுகிறது. தமிழக சட்டசபைக்கு மே மாதம் தேர்தல் நடத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தல் பணியில் தமிழகம் முழுவதும் ஆசிரியர்கள் பெரும்பான்மையாக ஈடுபடுத்தப்படுவர். தேர்தலுக்கு முன்பாகவே தேர்வுகள் முடிந்து விடும் என்றாலும், தேர்வைத் தொடர்ந்து விடைத்தாள்கள் திருத்தும் பணி உள்ளது. விடைத்தாள்களை விரைவில் திருத்தி முடித்தால்தான் எஸ்எஸ்எல்சி, பிளஸ் 2 தேர்வு முடிவுகளை விரைவாக வெளியிட முடியும். தேர்தல் மே மாதம் நடந்தாலும், தேர்தலில் பணியாற்றும் ஊழியர்களுக்கு மூன்று கட்டங்களாக பயிற்சி அளிக்கப்படும். இந்த பயிற்சிகள் ஏப்ரல் மாதமே தொடங்கி விடும். எனவே தேர்தல் பணி காரணமாக விடைத்தாள்கள் திருத்தும் பணி பாதிக்கப்படக் கூடாது என்பதில் தேர்வுத் துறை உறுதியாக உள்ளது. இது தொடர்பாக அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி அலுவலர்களுடன் தேர்வுத் துறை இயக்குனர் வசுந¢தரா தேவி வருகிற 24ம் தேதி ஆலோசனை நடத்துகிறார். சென்னை சேத்துப்பட்டில் உள்ள யூனியன் கிறிஸ்தவ மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளியில் நடக்கும் இந்த ஆலோசனை கூட்டத்தில் நெல்லை, மதுரை, கோவை, திருச்சி, வேலூர், கடலூர், சென்னை மண்டல துணை இயக்குனர்கள், தேர்வுத் துறை உயர் அதிகாரிகளும் கலந்து கொள்கின்றனர். இந்த கூட்டத்தில் செய்முறை தேர்வுகள், எஸ்எஸ்எல்சி, பிளஸ் 2 தேர்வுகளை நல்ல முறையில் நடத்தி முடிப்பது குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவித்தன. |
566 | 1/22/2011 4:49:48 PM | மாவட்ட மசாலா | ஊரைவிட்டு ஒதுக்குபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் | மதுரை: ஊரை விட்டு ஒதுக்கி வைப்பது போன்ற காட்டுமிராண்டித்தனமான செயல்களை போலீசார் இரும்புக் கரம் கொண்டு அடக்க வேண்டும் என ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் கீழச்சிறுபோது இக்பால், சீனிமுகமது, பர்குருதீன், ரஷீத்கான் ஆகியோர் ஐகோர்ட் கிளையில் தாக்கல் செய்த மனு: எங்கள் ஊரில் உள்ள முஸ்லிம் சுன்னத் ஜமாத் நிர்வாகியாக கடந்த 23 ஆண்டுகளாக சீனிமுகமது பதவி வகித்து வந்தார். இந்நிலையில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். அதன்காரணமாக எங்கள் 4 பேரையும் ஊரைவிட்டு ஒதுக்கி வைத்துள்ளனர். ஜமாத்திற்கு போகக்கூடாது. யாரிடமும் பேசக்கூடாது என தடை விதித்துள்ளனர். புகார் செய்தும் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை. இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த மனுவை விசாரித்த நீதிபதி சசிதரன் பிறப்பித்த உத்தரவு: வழிபாட்டுத்தலங்களுக்கு வரக்கூடாது எனக்கூறுவது சட்டவிரோதமானது. ஊரை விட்டு ஒதுக்கி வைப்பது போன்ற காட்டுமிராண்டித்தனமான செயல்களை போலீசார் இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும். டிஎஸ்பி தாக்கல் செய்துள்ள பதில் மனுவில், மனுதாரர்கள் ஊரை விட்டு ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளனர் என்பது தெள்ளத்தெளிவாகிறது. மனுதாரர்கள் எவ்வித அச்சுறுத்தலுமின்றி அமைதியுடன் வாழ போலீசாரும், வருவாய்த்துறையினரும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். |
567 | 1/22/2011 4:51:38 PM | தமிழகம் | விஐடி பல்கலை.யில் சர்வதேச கல்வி கண்காட்சி | வேலூர்: வேலூர் விஐடி பல்கலைக்கழகத்தில் சர்வதேச உயர்கல்வி வாய்ப்புகள் குறித்த ஒருநாள் கண்காட்சி நடந்தது. வேந்தர் ஜி.விசுவநாதன் கண்காட்சியை திறந்துவைத்து பேசும்போது, ‘நான் கல்லூரியில் படிக்கும்போது அயல்நாட்டு கல்வி வாய்ப்புகள் மிக குறைவாக இருந்தன. ஆனால் தற்போது மாணவர்கள் உலகின் எந்த பகுதிக்கும் சென்று, கல்வி பயிலும் வாய்ப்பு உள்ளதுÕ என்றார். விஐடி துணைத்தலைவர் சேகர் விசுவநாதன் முன்னிலை வகித்து பேசும்போது, ‘உலகின் முன்னணி நாடுகளின் கல்வி அமைப்புகள் இந்த கண்காட்சியில் பங்கேற்றுள்ளன. பேராசிரியர்களுடன் மாணவர்கள் நல்லுறவை வளர்த்துக்கொண்டு, சர்வதேச உயர்கல்வி வாய்ப்பை உறுதி செய்துகொள்ள வேண்டும்Õ என்றார். கண்காட்சியில் அமெரிக்கா, ஜெர்மனி, இங்கிலாந்து, ஹாலந்து, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளின் அரசாங்க கல்வி அமைப்புகள் கலந்துகொண்டன. இந்த கல்வி அமைப்புகளின் பிரதிநிதிகள் தங்கள் நாட்டில் உள்ள உயர்கல்வி வாய்ப்புகள் குறித்து மாணவர்களுக்கு விளக்கம் அளித்தனர். இதில் ஏராளமான மாணவர்கள் கலந்துகொண்டு பயனடைந்தனர். |
568 | 1/22/2011 4:54:02 PM | மாவட்ட மசாலா | கொசஸ்தலை ஆற்றில் மணல் திருட்டு : மேம்பால தூண்களுக்கு ஆபத்து | புழல்: கொசஸ்தலை ஆற்றில் திருட்டுத்தனமாக மணல் அள்ளப்படுவதால் காரனோடை மேம்பாலத்தின் தூண்கள் பாதிப்படும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. சென்னை அருகே செங்குன்றம் அடுத்துள்ளது காரனோடை. இங்குள்ள கொசஸ்தலை ஆற்றின் மேல் புதிய பாலம் கட்டப்பட்டு உள்ளது. கொசஸ்தலை ஆற்றில் திருட்டுத்தனமாக மணல் அள்ளப்படுகிறது. குறிப்பாக, மேம்பாலத்தின் அடியில் அதிக அளவில் மணல் கொள்ளைப்போகிறது. இதனால் பாலத்தின் தூண்கள் பாதிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலைமை தொடர்ந்தால் தூண்களின் உறுதி தன்மைக்கு ஆபத்து ஏற்படும். இந்நிலையில், மணல் திருட்டை தடுக்க திருவள்ளூர் போலீஸ் எஸ்பி வனிதா உத்தரவிட்டார். பொன்னேரி டிஎஸ்பி ரங்கராஜன் மேற்பார்வையில் சோழவரம் இன்ஸ்பெக்டர் திருநாவுக்கரசு தலைமையில் தீவிர சோதனை நடத்தினர். அப்போது மணல் அள்ளிக்கொண்டு இருந்த 7 மாட்டு வண்டிகள், 2 டிராக்டர் மற்றும் ஒரு ஜேசிபி இயந்திரத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுசம்பந்தமாக பத்துக்கு அதிகமானவர்கள் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். கொசஸ்தலை ஆற்றில் மணல் திருடுபவர்கள் மீது குண்டர் சட்டம் பாயும். வாகன உரிமையாளர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் எச்சரித்துள்ளனர். |
569 | 1/22/2011 4:56:10 PM | தமிழகம் | சிவகாசி விபத்தில் அனுமதியின்றி வெடி தயாரித்தது அம்பலம் போர்மேன் கைது: ஓனர்கள் தலைமறைவு | சிவகாசி: விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே முதலிப்பட்டி பெரியவாடியூரில் சிவகாசியைச் சேர்ந்த கண்ணன், விவேக், முனீஸ், சரவணன் ஆகியோருக்கு சொந்தமான ராஜ்கண்ணா பயர் ஒர்க்ஸ் என்ற பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது. இங்கு 35 அறைகளில் சரவெடி, பேன்சி வெடி தயாரிக்கப்படுகிறது. சுமார் 250 பேர் பணியாற்றி வருகின்றனர். நேற்று காலை 11 மணிக்கு ஒரு அறையில் நவீன ரக பட்டாசுக்கு ‘மணி மருந்து’ தயாரிக்கும் பணி நடந்துள்ளது. அப்போது ஏற்பட்ட வெடிவிபத்தில் அறையில் இருந்த இன்னாசிமுத்து(35), ஆறுமுகம்(38), இன்னொரு ஆறுமுகம் (36), குணசேகர்(36), இனாம்ரெட்டியபட்டியைச் சேர்ந்த டேவிட் லிவிங்ஸ்டன் (35) ஆகியோர் அதே இடத்திலேயே இறந்தனர். 18 பேர் பலத்த தீக்காயங்களுடன் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர்.மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அந்தோணி செல்வம் (40), மாரிச்சாமி (60), சுப்புராஜ்(37) ஆகியோர் சிகிச்சை பலனின்றி இறந்தனர். கந்தவேல்(40), செல்வம்(19), பெருமாள்சாமி(36), பஞ்சவர்ணம்(31), மீனாட்சி(40), பேச்சியம்மாள்(39), ராமர்(40), சந்திரன்(35), முத்தழகு(48), பாக்கியராஜ்(19), பாப்பா(28), அமலா, பெருமாள்(43) ஆகியோருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்த விபத்து தொடர்பாக வச்சசக்காரப்பட்டி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர். பட்டாசு ஆலை உரிமையாளர்கள் 4 பேரும் தலைமறைவாகிவிட்டனர். மணி மருந்து தயாரித்து விட்டு டீ குடிக்கச் சென்ற போர்மேன் காசியை (44) போலீசார் கைது செய்தனர். இந்த ஆலையில் பட்டாசுகள், புஸ்வாணம் தயாரிக்க மட்டுமே முறைப்படி லைசென்ஸ் பெறப்பட்டுள்ளது. ஆனால் அனுமதியின்றி பேன்சி ரக வெடிகள் தயாரிப்பு பணியில் ஈடுபட்டபோதே விபத்து ஏற்பட்டது முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. |
570 | 1/22/2011 4:56:19 PM | விளையாட்டு | ஹோக்லி ஆட்டம் வீண் 4வது ஆட்டத்தில் இந்தியா தோல்வி | போர்ட் எலிசபெத், - தென் ஆப்ரிக்கா - இந்தியா அணிகள் நேற்று 4வது ஒருநாள் போட்டியில் மோதின. முதலில் பேட் செய்த தென் ஆப்ரிக்கா அணி 7 விக்கெட் இழப்புக்கு 265 ரன்கள் எடுத்தது. ஒருகட்டத்தில் 5 விக்கெட் இழப்புக்கு 118 ரன்கள் எடுத்து தவித்த நிலையில் டுமினி, போத்தா ஆகியோர் சிறப்பாக ஆடி அணியை மீட்டனர். டுமினி 71, ஆம்லா 64, போத்தா 44, பீட்டர்சென் 31 ரன் எடுத்தனர். இந்திய தரப்பில் யுவராஜ்சிங் 3, நெக்ரா 1 விக்கெட் வீழ்த்தினர்.266 ரன்கள் இலக்காக கொண்டு இந்திய அணி ஆடியது. ரோகித்சர்மா 1, பார்த்திவ் படேல் 11, யுவராஜ்சிங் 12, ரெய்னா 20, டோனி 2, யூசுப்பதான் 2 ரன்களில் வெளியேறினர். ஒருமுனையில் விக்கெட் வீழ்ந்தாலும் ஹோக்லி நிதானமாக ஆடி அரைசதம் கடந்தார். 31.3 ஓவரில் இந்திய அணி 6 விக்கெட் இழப்புக்கு 137 ரன் எடுத்த நிலையில் மழை குறுக்கிட்டது. சிறிது நேரத்திற்கு பிறகு ஆட்டம் தொடங்கியது. அப்போது 4 ஓவர்கள் குறைக்கப்பட்டு 46 ஓவரில் 260 ரன்கள் எடுக்க வேண்டுமென இந்திய அணிக்கு இலக்கு மாற்றியமைக்கப்பட்டது.ஒரு சில ஓவரே வீசப்பட்ட நிலையில் மீண்டும் மழை குறுக்கிட்டது. அந்த சமயத்தில் இந்திய அணி 32.5 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 142 ரன்கள் எடுத்திருந்தது. ஹோக்லி 87 ரன்னுடனும், ஹர்பஜன்சிங் 3 ரன்னுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். தொடர்ந்து மழை பெய்து வந்ததால் ஆட்டத்தை நடத்த முடியாத நிலை ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து டக்வொர்த் லீவிஸ் விதி கடைபிடிக்கப்பட்டு 48 ரன்கள் வித்தியாசத்தில் தென்ஆப்ரிக்க அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இந்த வெற்றியால் தொடர் 2&2 என சமநிலை பெற்றுள்ளது. மிடில் ஆர்டர் மோசம் - டோனிதோல்வி குறித்து இந்திய அணியின் கேப்டன் டோனி கூறுகையில், தென் ஆப்ரிக்க அணி 118 ரன்னுக்கெல்லாம் 5 விக்கெட்டை இழந்திருந்தது. அதற்கு பின்னர் விரைவாக விக்கெட்டுகளை வீழ்த்த நாங்கள் தவறிவிட்டோம். பந்துவீச்சில் பல வியூகங்களை வகுத்தும் எந்தவித பயனும் கிடைக்கவில்லை. எல்லா நேரத்திலும் நமது திட்டங்கள் பலிக்கும் என்றுகூற முடியாது. பேட்டிங்கில் துவக்கம் சரியாக கிடைக்காத போதிலும் ஹோக்லி அருமையாக ஆடினார். ஆனால் மற்ற வீரர்கள் யாரும் அவருக்கு சரியாக ஒத்துழைப்பு கொடுக்கவில்லை. மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சொதப்பலாக ஆடி விக்கெட்டுகளை தாரை வார்த்து விட்டனர். எனினும் வெற்றி பெற வாய்ப்பிருந்தது. டக்வொர்த் லீவிஸ் விதி அனைத்தையும் மாற்றிவிட்டது என்றார்.டுமினிக்கு ஸ்மித் புகழாரம்தென் ஆப்ரிக்க அணியின் கேப்டன் ஸ்மித் கூறுகையில், பேட்டிங்கில் துவக்கத்தை சிறப்பாக கொடுத்தோம். திடீரென விக்கெட்டுகள் மளமளவென சரிந்தது. அதிலிருந்து டுமினி தனது சிறப்பான ஆட்டத்தால் அணியை மீட்டார். அவர் களத்தில் நின்றதால் எப்படியும் 240 ரன்களை கடப்போம் என எதிர்பார்த்தோம். ஆனால் அதைவிட கூடுதல் ரன் கிடைத்தது. பந்து வீச்சாளர்களும் சிறப்பாக செயல்பட்டு அசத்தி விட்டனர். அடுத்த ஆட்டம் சுவாரஸ்யமாக இருக்கும் என்றார்.நாளைய போட்டிக்கும் வருணபகவான் மிரட்டல்கோப்பை யாருக்கு என்பதை தீர்மானிக்கும் கடைசி மற்றும் 5வது ஒருநாள் போட்டி நாளை செஞ்சூரியன் நகரில் நடக்கிறது. இந்திய நேரப்படி பிற்பகல் 2 மணிக்கு போட்டி துவங்கும். இதற்கிடையே இந்த ஆட்டமும் மழையால் பாதிக்கப்படும் என தகவல்கள் வெளியாகி உள்ளது. செஞ்சூரியன் நகரில் 90 சதவீதம் மழை பெய்ய வாய்ப்புகள் உள்ளதாம். போட்டி மழையால் ரத்தானால் கோப்பை இரு அணிகளுக்கும் பகிர்ந்து அளிக்கப்படும். |
571 | 1/22/2011 4:57:48 PM | மாவட்ட மசாலா | திருநங்கைகள் தினவிழா | திருத்தணி: திருத்தணி நேரு நகரில் அரசு தொடக்க பள்ளியில் தாய் விழுதுகள், சென்னை மாவட்ட அரவாணிகள் அறக்கட்டளை சார்பில் திருநங்கைகள் தின விழா நேற்று நடந்தது. கவுன்சிலர் செல்வி சுப்பிரமணியம் தலைமை தாங்கினார். வட்ட செயலாளர் அஜ்ஜி, தலைமை ஆசிரியர் லதா முன்னிலை வகித்தனர். சென்னை அரவாணிகள் கூட்டமைப்பு தலைவர் விஜி, சர்க்கரை நோய் பரிசோதனை முகாமை தொடங்கி வைத்தார். துணைத் தலைவர் மோகனா முதியோர்களுக்காக விளையாட்டுபோட்டியை தொடங்கி வைத்தார். சுகாதார பணியாளர் பாலாஜி நன்றி கூறினார். |
572 | 1/22/2011 4:59:27 PM | தமிழகம் | 4 ஆயிரம் ரூபாய்க்காக மகளை வீட்டுவேலைக்கு அனுப்பிய தாய் | காஞ்சிபுரம்: செங்கல்பட்டு ரயில்நிலையத்தில் நீண்டநேரம் சுற்றித்திரிந்த சிறுமியை செங்கல்பட்டு ரயில்வே போலீசார் பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அந்த சிறுமி தன்னுடைய பெயர் அனிதா (14). பெங்களூர் நெலவங்கம் பகுதியை சேர்ந்தவர் என்றும், தந்தை பெயர் நரசிம்மன் என்றும் கூறினார். குடும்ப வறுமை காரணமாக தன் அம்மா ஜெயா, வேளச்சேரியில் உள்ள ஒரு வீட்டில் வேலைக்காக தன்னை விட்டு வந்ததாகவும், அதற்காக ரூ.4000 பணம் பெற்றுக் கொண்டாதாகவும் கூறினாள். வீட்டு வேலை செய்த இடத்தில் துன்புறுத்தியதால் வீட்டை விட்டு ஓடிவந்ததாகவும் அனிதா கூறினாள். கிண்டி ரயில் நிலையத்திற்கு வந்து பின்னர் அங்கிருந்து செங்கல்பட்டு ரயில் நிலையம் வந்துள்ளதாகவும், அதன் பிறகு எங்கு செல்லவேண்டும் என்று தெரியவில்லை. கையிலும் பணம் இல்லை என்று அழுதுகொண்டே கூறியுள்ளார். இதுபற்றி காஞ்சிபுரம் சைல்டு லைன் ஒருங்கிணைப்பாளர் வெங்கட் ரெட்டியிடம் ரயில்வே போலீசார் கூறினர். அவர் விரைந்து வந்து அந்த சிறுமியை மீட்டு செங்கல்பட்டு அரசு குழந்தைகள் நல குழுமத்தில் ஒப்படைத்தார். அனிதாவின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாக சைல்டு லைன் ஒருங்கிணைப்பாளர் தெரிவித்தார். |
573 | 1/22/2011 5:00:33 PM | மாவட்ட மசாலா | திருத்தணியில் டிஎஸ்பி அலுவலகம் போலீஸ் குடியிருப்பு திறப்பு விழா | திருத்தணி: திருத்தணி நரசிம்மன் சுவாமி கோயில் தெருவில் டிஎஸ்பி அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகம் கடந்த 10 ஆண்டுகளாக வாடகை கட்டிடத்தில் இயங்கி வந்தது. திருத்தணி சித்தூர் சாலையில் புதிதாக டிஎஸ்பி அலுவலகம், கேம்ப் ஆபீஸ் மற்றும் காவலர் குடியிருப்பு கட்டிடம் கட்ட ரூ. 1 கோடியே 11 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது. இதற்கான பணி கடந்த 2008ல் தொடங்கியது. கடந்த சில மாதங்களுக்கு முன் கட்டிடப்பணி நிறைவடைந்தது. இதற்கான திறப்பு விழா நேற்று நடந்தது. டிஎஸ்பி மாணிக்கம் புதிய கட்டிடத்தை திறந்து வைத்தார். இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியம், எஸ்ஐ ருக்மாங்கதன் மற்றும் போலீசார் கலந்து கொண்டனர். தற்பொழுது புதிய டிஎஸ்பி அலுவலகத்தில் வயர்லெஸ் உள்பட தகவல்தொடர்பு சாதனம் பொருத்தும் பணி நடக்கிறது. பிப். 1ம் தேதி முதல் அலுவலகம் முழுமையாக செயல்படத் தொடங்கும் என்று டிஎஸ்பி கூறினார். |
574 | 1/22/2011 5:02:11 PM | மாவட்ட மசாலா | பொன்விழாவை முன்னிட்டு : கேளம்பாக்கம் அரசு பள்ளிக்கு புதிய கட்டிடம், அரங்க மேடை | திருப்போரூர்: கேளம்பாக்கம் அரசு மேல்நிலைப்பள்ளியின் பொன்விழாவை முன்னிட்டு பள்ளிக்கு புதிய கட்டிடம் மற்றும் அரங்க மேடை கட்டப்பட்டது. இதன் திறப்பு விழா நேற்று நடந்தது. செங்கல்பட்டு கோட்டாட்சியர் லெனின் ஜேக்கப் தலைமை தலைமை வகித்தார். தலைமை ஆசிரியர் செல்வராசு வரவேற்று பேசினார். எம்எல்ஏ மூர்த்தி, பொன்விழா கட்டிடத்தை திறந்து வைத்தார். ஊராட்சி தலைவர் துரைசாமி அரங்க மேடையை திறந்தார். ஒன்றியக் குழு தலைவர் விஜயலட்சுமி கிருஷ்ணன் பொன்விழா மலரை வெளியிட, துணைத் தலைவர் உஷா நாகராசன் பெற்றுக்கொண்டார். விழாவில் பெற்றோர் ஆசிரியர் கழக கவுரவ தலைவர் ரோஸ் எஸ்.நாகராஜன், முதன்மை கல்வி அலுவலர் முருகன், ஒன்றிய கவுன்சிலர்கள் அமிர்த சேகர், மயில்வாகனன், ஊராட்சி தலைவர்கள் கன்னியப்பன், கருணாகரன், ராமகிருஷ்ணன் கலந்துகொண்டனர். பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் தேவன்பு நன்றி கூறினார். |
575 | 1/22/2011 5:02:50 PM | மாவட்ட மசாலா | ஆவடி, திருமுல்லைவாயல் பகுதியில் சீரமைத்த மூன்று மாதத்தில் பழுதானது சிடிஎச் சாலை | ஆவடி: ஆவடி, திருமுல்லைவாயல் பகுதியில் 3மாதத்துக்கு முன்பு சீரமைக்கப்பட்ட சிடிஎச் சாலை, மீண்டும் பழுதடைந்துவிட்டதால் மக்கள் அவதிப்படுகின்றனர். பாடி, அம்பத்தூர், திருமுல்லைவாயல், ஆவடி, பட்டாபிராம், திருநின்றவூர் வழியாக சிடிஎச் சாலை செல்கிறது. இதன் வழியாக திருப்பதி, திருவள்ளூர் மற்றும் பல இடங்களுக்கு ஏராளமான வாகனங்கள் செல்கின்றன. இதுதவிர, சென்னை துறைமுகத்தில் இருந்து சரக்குகளை ஏற்றிக்கொண்டு ஆயிரக்கணக்கான கன்டெய்னர் லாரிகளும் சரக்கு வாகனங்களும் சிடிஎச் சாலையில்தான் வெளிமாநிலங்களுக்கு சென்று வருகின்றன. ஆவடி, திருமுல்லைவாயல் பகுதியில் பல ஆண்டாக மோசமான நிலையில் இருந்த சிடிஎச் சாலையை சரிப்படுத்த வேண்டும் என்று மக்கள் நடத்திய பல போராட்டங்களுக்கு பின் கடந்த மூன்று மாதத்துக்கு முன் ச¦ரமைக்கப்பட்டது. இருபுறமும் தலா 5 அடிக்கு சாலையை அகலப்படுத்தி பல லட்சம் செலவிட்டனர். இதனால் போக்குவரத்து நெரிசல் குறைந்தது. மக்கள் நிம்மதியாக பயணம் செய்தனர். இந்நிலையில் ஆவடி, திருமுல்லைவாயல் பகுதி சாலை தற்போது மீண்டும் பழுதடைந்து கிடக்கிறது. நெடுஞ்சாலைத் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். மழைநீர் தேங்காமல் இருக்க கால்வாய் கட்ட வேண்டும் என்று வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் வேண்டுகோள் விடுத்துள்ளனர். |
576 | 1/22/2011 5:03:06 PM | விளையாட்டு | ஒன்டே போட்டியில் பாக். தள்ளாட்டம் | வெலிங்டன், - நியூசிலாந்து - பாகிஸ்தான் அணிகள் வெலிங்டனில் இன்று முதல் ஒருநாள் போட்டியில் மோதின. முதலில் பேட் செய்த பாகிஸ்தான் மளமளவென விக்கெட்டுகளை இழந்தது. கம்ரன்அக்மல் 8, முகமதுஹபீஸ் 0, யூனுஸ்கான் 24, ஆசாத்ஷபீக் 4, உமர்அகமல் 0, அப்ரிடி 15, ரசாக் 6, அப்துர்ரகுமான் 0 ஆகிய ரன்களில் ஆட்டமிழந்தனர். 32 ஓவர்களில் பாகிஸ்தான் அணி 8 விக்கெட் இழப்புக்கு 99 ரன் எடுத்து தவித்தது. |
577 | 1/22/2011 5:03:43 PM | விளையாட்டு | 3வது சுற்றில் பயஸ் ஜோடி | மெல்பர்ன், - மெல்பர்னில் நடந்து வரும் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிசின் 3வது சுற்றில் போலந்து வீராங்கனை அக்னீஸ்கா 6&1, 6&2 என்ற நேர்செட்டில் ருமேனியாவின் சிமோனாவை வீழ்த்தினார். ஆண்கள் இரட்டையர் பிரிவு 2வது சுற்றில் இந்தியாவின் லியாண்டர்பயஸ் - மகேஷ்பூபதி ஜோடி 7-6, 6-4 என்ற நேர்செட்டில் பெலீசியானோ லோப்பஸ் (ஸ்பெயின்) & ஜூவன்மனாக்கோ (அர்ஜென்டினா) ஜோடியை வீழ்த்தி 3வது சுற்றுக்கு முன்னேறியது. |
578 | 1/22/2011 5:05:03 PM | தமிழகம் | திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில் பராமரிப்பின்றி பாழாகும் பூங்கா, செயற்கை நீரூற்று | திருவள்ளூர்: திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்துக்கு தினமும் ஏராளமான பொதுமக்கள், அதிகாரிகள் வந்து செல்கின்றனர். திங்கட்கிழமையில் நடக்கும் குறைகேட்கும் முகாமிலும் பல கிராம மக்கள் பங்கேற்கின்றனர். மழைக்காலத்தில் தண்ணீர் வெளியேற வழியின்றி கலெக்டர் அலுவலகம், எஸ்பி கேம்ப் ஆபீஸ் பகுதியில் குளம் போல் தேங்கி நிற்கும். இதை தடுக்க 2009&ல் வேளாண்மை பொறியியல் துறை சார்பில் கலெக்டர் அலுவலகம் முன்பு நவீன குளம் அமைக்கப்பட்டது. மழைநீர் இதில் தேக்கி வைக்கப்பட்டது. பொதுமக்கள் ஓய்வெடுக்க ரூ.20 லட்சம் செலவில் நவீன பூங்கா, குளத்தை சுற்றி நடைபாதை, மின்விளக்கு அமைக்கப்பட்டது. மரக்கன்றுகளும் நடப்பட்டது. பூங்காவை சுற்றி புல்தரை அமைக்கப்பட்டு மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டன. நுழைவாயில் முன்பு அழகிய செயற்கை நீரூற்றும் அமைக்கப்பட்டது. பசுமையான சூழலில் குளுகுளுவென இருந்த பூங்கா, ஆரம்பத்தில் முறையாக பராமரிக்கப்பட்டு வந்தன. தற்போது பூங்காவில் உள்ள புல்தரைக்கு தண்ணீர் ஊற்றுவது நிறுத்தப்பட்டுள்ளது. புற்கள் காய்ந்து கிடக்கின்றன. இருக்கைகள் உடைந்து பயனற்று உள்ளன. விளக்குகளும் எரிவதில்லை. நடைபாதையில் செடி கொடிகள் வளர்ந்து ஆக்கிரமித்துள்ளது. பூங்காவை சுற்றிலும் குப்பைகளும் கழிவுகளும் தேங்கிக் கிடக்கின்றன. இரவு நேரங்களில் சிலர் பூங்காவை பார் போல பயன்படுத்துவதாக கூறப்படுகிறது. இந்த சீர்கேடுகளை தடுத்து, பூங்காவை சீரமைப்பதுடன் சிறுவர்கள் விளையாடும் வகையில் ஊஞ்சல் உள்ளிட்ட விளையாட்டு சாதனங்களை நிறுவ வேண்டும் என்று மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். |
581 | 1/22/2011 5:09:56 PM | குற்றம் | தொழிலதிபர் வீட்டில் 22 பவுன் கொள்ளை | ஆவடி: அம்பத்தூரில் தொழிலதிபர் வீட்டை உடைத்து 22 பவுன் நகைகளை கொள்ளையடித்து தப்பிய நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். அம்பத்தூர் அருகே மேனாம்பேடு செங்குட்டுவன் நகர் காந்தி தெருவில் வசிப்பவர் தேவதாசன் (55). டூல்ஸ் கம்பெனி வைத்துள்ளார். நேற்று காலை வீட்டை பூட்டிவிட்டு மனைவியுடன் கருக்கு பகுதியில் உள்ள மகன் வீட்டுக்கு சென்றார். அங்கிருந்து மாலையில் வீடு திரும்பினர். வீட்டின் பின்பக்க கிரில் கதவு உடைக்கப்பட்டு இருந்தது கண்டு திடுக்கிட்ட அவர்கள் உள்ளே போய் பார்த்தனர். பொருட்கள் சிதறிக் கிடந்தன. பீரோவில் வைத்திருந்த 22 பவுன் நகைகள் கொள்ளை போயிருந்தன. இதுகுறித்த புகாரின்பேரில், அம்பத்தூர் இன்ஸ்பெக்டர் கண்ணன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனர். வீட்டில் பதிவாகி இருந்த கொள்ளையரின் ரேகைகளை நிபுணர்கள் சேகரித்து பழைய குற்றவாளிகளின் ரேகைகளுடன் ஒப்பிட்டு பார்த்து வருகின்றனர். |
582 | 1/22/2011 5:10:13 PM | மாவட்ட மசாலா | குடும்ப தகராறில் இன்ஜினியர் தற்கொலை | திருவொற்றியூர்: குடும்ப தகராறில் சாப்ட்வேர் இன்ஜினியர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். திருவொற்றியூர் வஉசி நகரை சேர்ந்தவர் முத்துக்குமார் (28). புனேயில் சாப்ட்வேர் இன்ஜினியர். இவரது மனைவி ராதிகா (25). காதல் தம்பதி. தற்போது ராதிகா, 5 மாத கர்ப்பிணியாக இருக்கிறார். கருத்து வேறுபாடு காரணமாக இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்படுமாம். கடந்த இரு தினங்களுக்கு முன்பு, தன்னை அடித்து துன்புறுத்துவதாக கணவன் மீது போலீசில் ராதிகா புகார் செய்தார். போலீசார், இருவரையும் சமாதானம் செய்து அனுப்பினர். நேற்று மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதனால் அதே பகுதியில் பக்கத்து தெருவில் வசிக்கும் தாய் வீட்டுக்கு ராதிகா சென்று விட்டார். மாலையில் வீட்டுக்கு திரும்பி வந்தார். அங்குள்ள அறையில் முத்துக்குமார் தூக்கில் தொங்குவதை பார்த்து அதிர்ச்சியடைந்து, கதறியழுதார். தகவல் அறிந்து திருவொற்றியூர் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். பின்னர், சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பினர். இதற்கிடையே, ‘மகன் சாவில் மர்மம் உள்ளது. விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்Õ என போலீசில் முத்துக்குமாரின் தந்தை கருப்பையா புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.தொழிலதிபர் வீட்டில் 22 பவுன் கொள்ளை ஆவடி: அம்பத்தூரில் தொழிலதிபர் வீட்டை உடைத்து 22 பவுன் நகைகளை கொள்ளையடித்து தப்பிய நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். அம்பத்தூர் அருகே மேனாம்பேடு செங்குட்டுவன் நகர் காந்தி தெருவில் வசிப்பவர் தேவதாசன் (55). டூல்ஸ் கம்பெனி வைத்துள்ளார். நேற்று காலை வீட்டை பூட்டிவிட்டு மனைவியுடன் கருக்கு பகுதியில் உள்ள மகன் வீட்டுக்கு சென்றார். அங்கிருந்து மாலையில் வீடு திரும்பினர். வீட்டின் பின்பக்க கிரில் கதவு உடைக்கப்பட்டு இருந்தது கண்டு திடுக்கிட்ட அவர்கள் உள்ளே போய் பார்த்தனர். பொருட்கள் சிதறிக் கிடந்தன. பீரோவில் வைத்திருந்த 22 பவுன் நகைகள் கொள்ளை போயிருந்தன. இதுகுறித்த புகாரின்பேரில், அம்பத்தூர் இன்ஸ்பெக்டர் கண்ணன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனர். வீட்டில் பதிவாகி இருந்த கொள்ளையரின் ரேகைகளை நிபுணர்கள் சேகரித்து பழைய குற்றவாளிகளின் ரேகைகளுடன் ஒப்பிட்டு பார்த்து வருகின்றனர். |
583 | 1/22/2011 5:20:13 PM | உலகம் | மற்ற நாடுகளின் மீது ஆதிக்கம் செலுத்த மாட்டோம் - சீன அதிபர் | வாஷிங்டன்: அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள சீன அதிபர் ஹு ஜின்டா, அமெரிக்க - சீன வர்த்தக கவுன்சில் கூட்டத்தில் நேற்று உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது: சர்வதேச பிரச்னைகளுக்கு அமைதியான தீர்வு ஏற்பட வேண்டும் என்பதையே சீனா விரும்புகிறது. நாங்கள், ஆயுத போட்டியில் ஈடுபடவில்லை. சீனாவால் எந்த நாட்டுக்கும் அச்சுறுத்தல் இல்லை. மற்ற நாடுகளின் மீது எப்போதும் ஆதிக்கம் செய்ய மாட்டோம். நாட்டை விரிவாக்கும் கொள்கையும் சீனாவுக்கு இல்லை. எங்கள் கொள்கைகள் எல்லாம் பாதுகாப்பு நடவடிக்கைதான். சீன & அமெரிக்க உறவு வலுவாக முன்னேற்றம் அடைந்து வருகிறது. இரு நாடுகளும் இணைந்து செயல்படுவதன் மூலம் இரு தரப்புக்கும் மேலும் பயன் கிடைக்கும். ஆசியா & பசிபிக் வளர்ச்சிக்கு சீனாவும், அமெரிக்காவும் பாடுபடும். இவ்வாறு ஹு ஜின்டா பேசினார். |
584 | 1/22/2011 5:20:35 PM | உலகம் | ரகசிய கணக்கு பட்டியலை தந்த சுவிஸ் வங்கி அதிகாரி சிறையில் அடைப்பு | ஜூரிச்: சுவிஸ் வங்கியில் ரகசிய சேமிப்பு கணக்கு வைத்திருக்கும் உலக பிரபலங்கள் சுமார் 2 ஆயிரம் பேர் பட்டியலை, விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசான்ஞ்சிடம் சில நாட்களுக்கு முன்பு வழங்கினார் மாஜி வங்கி அதிகாரி ரூடோல்ப் எல்மர். 3 ஆண்டுகளுக்கு முன்பே, விக்கிலீக்ஸ் நிறுவனத்துக்கு சுவிஸ் வங்கி வாடிக்கையாளர் பற்றிய விவரங்களை ரூடோல்ப் கொடுத்துள்ளார். இந்நிலையில் கடந்த திங்கட்கிழமை வாடிக்கையாளர் விவரம் பற்றிய இரண்டு சி.டி.க்களை விக்கிலீக்ஸ் நிறுவனத்திடம் கொடுத்துள்ளார். இதனால் சுவிஸ் வங்கி ரகசிய விதிமுறைகளை மீறியதாக ரூடால்ப் எல்மர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு கடந்த புதன்கிழமை கைது செய்யப்பட்டார். அவருக்கு ரூ.3 லட்சத்து 45 ஆயிரம் அபராதம் விதித்து சிறையில் அடைக்க கோர்ட் உத்தரவிட்டது. அதன்படி அவர் சிறையில் அடைக்கப்பட்டார். அவரிடம் போலீஸ் அதிகாரிகள் விசாரணை நடத்த உள்ளனர். சுவிஸ் வங்கிகளின் ரகசிய சட்டத்தால், உலகின் பல நாடுகளில் உள்ள மோசடி பேர்வழிகள் ரூ.92 லட்சம் கோடி அளவுக்கு சேமித்து வைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. |
585 | 1/22/2011 5:20:54 PM | உலகம் | 500 கேட்டால் 1000 வரும் டபுளாக வழங்கிய ஏடிஎம் | டன்டி: ஸ்காட்லாந்தில் டன்டி என்ற இடத்தில் உள்ள ஏடிஎம் மையத்தில், பணம் எடுக்க வந்தவர்களுக்கு இன்ப அதிர்ச்சி. குறிப்பிட்ட தொகையை விட இரு மடங்கு பணம் வந்ததுதான் அதற்கு காரணம். இந்த தகவல் மின்னல் வேகத்தில் பரவ, ஏராளமான வாடிக்கையாளர்கள் அந்த ஏடிஎம் மையத்துக்கு படையெடுத்தனர். நீண்ட வரிசையில் நின்று பணம் எடுக்க ஆரம்பித்தனர். இதைப் பார்த்ததும் அருகில் உள்ள கடை ஊழியர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். பின்னர் வங்கி நிர்வாகத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, ஏடிஎம் செயல்பாடு நிறுத்தப்பட்டது. தொழில்நுட்ப கோளாறு காரணமாக, இரு மடங்கு பணத்தை ஏடிஎம் இயந்திரம் வாரி வழங்கியிருக்கலாம் என கூறப்படுகிறது. பணம் எடுத்தவர்கள் விவரம் முழுவதும் பதிவாகியிருப்பதால், அவர்களிடம் இருந்து எக்ஸ்ட்ரா பணத்தை மீட்க வங்கி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கும் என தெரிகிறது. |
586 | 1/22/2011 5:21:17 PM | உலகம் | பிரேசில் நிலச்சரிவு பலி 763 ஆக உயர்வு 400 பேர் மாயம் | சா பாலோ: பிரேசில் நாட்டில் கன மழை காரணமாக கடந்த வாரம் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் ஏராளமான வீடுகள், சாலைகள், பாலங்கள் சரிந்தன. 100&க்கும் மேற்பட்டோர் இறந்திருக்கலாம் என முதலில் தகவல் வெளியானது. ஆனால், அங்கு நடந்த மீட்பு பணியின்போது நூற்றுக்கணக்கான உடல்கள் மீட்கப்பட்டன. இதுவரை 763 உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன. இன்னும் 400 பேரை காணவில்லை என கூறப்படுகிறது. இவர்கள் வேறு பகுதிக்கு சென்று விட்டனரா அல்லது மண்ணில் புதைந்தனரா என தெரியவில்லை. பிரேசில் நாட்டில் 40 ஆண்டுகளுக்கு முன்பு வெள்ளத்தால் பேரழிவு ஏற்பட்டது. அப்போது 785 பேர் பலியாயினர். அதன்பிறகு தற்போது நிலச்சரிவின் காரணமாக ஏராளமானோர் இறந்துள்ளனர். |
587 | 1/22/2011 5:39:15 PM | ஸ்டேட் எக்ஸ்பிரஸ் | பாக்கெட் மணிக்காக கார் திருடிய மாணவன் கைது | புதுடெல்லி, - குடியரசுதின பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னிட்டு டெல்லி கரோல்பாக் பகுதியில் வாகன சோதனையில் போலீசார் ஈடுபட்டிருந்தனர். அப்போது பள்ளி மாணவர் ஒருவர் மாருதி 800 காரை ஓட்டி வந்தார். அவரிடம் டிரைவிங் லைசன்ஸ் மற்றும் பதிவு சான்றிதழ் இல்லை. விசாரணையில் அந்தக் கார், மாணவனின் பக்கத்து வீட்டுக்காரருக்கு சொந்தமானது என்பதும் பாக்கெட் மணிக்காக அதை திருடியதும் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து மாணவர் கைது செய்யப்பட்டார். அவரது தந்தை பெல் நிறுவனத்தில் பொது மேலாளராக இருக்கிறார். தாய் தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் விரிவுரையாளராக பணியாற்றி வருகிறார். மகன் ஊதாரித்தனமாக செலவு செய்ததால் கடந்த சில மாதங்களாக பெற்றோர் பாக்கெட் மணி தரவில்லையாம். அதனால், இந்த விபரீத காரியத்தில் மாணவர் இறங்கியிருக்கலாம் என கல்காஜி காவல் நிலைய அதிகாரி தெரிவித்தார். |
588 | 1/22/2011 5:39:34 PM | ஸ்டேட் எக்ஸ்பிரஸ் | அவதூறு வழக்கில் இருந்து நடிகர் சஞ்சய் தத் விடுதலை | அலகாபாத், - பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், கடந்த 2009&ம் ஆண்டு ஏப்ரலில் நடந்த மக்களவை பொதுத்தேர்தலின் போது உ.பி. மாநிலத்தில் சமாஜ்வாடி கட்சிக்கு ஆதரவாக பிரசாரம் செய்தார். பொதுக்கூட்டம் ஒன்றில் பேசுகையில், முதல்வர் மாயாவதியை கட்டிப்பிடித்து முத்தம் கொடுக்க விரும்புவதாக கூறினார். முதல்வரின் புகழுக்கு களங்கம் விளைவிப்பதாக கூறி சஞ்சய் தத் மீது மாயாவதி அரசு அவதூறு வழக்கு தொடர்ந்தது. இது தொடர்பாக மன்னிப்பு கேட்டுக் கொள்வதாக சஞ்சய் தத் அறிவித்தார். இருப்பினும் அவர் மீது எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டு கோர்ட்டில் விசாரணை நடந்தது. கீழ் கோர்ட் விசாரணையை எதிர்த்து அலகாபாத் ஐகோர்ட்டில் சஞ்சய் தத் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை ஐகோர்ட் விசாரித்து, சஞ்சய் தத் மீதான அவதூறு வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. சஞ்சய் தத் பேசியதில் தகாத வார்த்தைகளோ அல்லது ஆபாசமான வார்த்தைகளோ இல்லை என ஐகோர்ட் கருத்து தெரிவித்துள்ளது. |
589 | 1/22/2011 5:40:11 PM | ஸ்டேட் எக்ஸ்பிரஸ் | கோர்ட்டில் ஆடையை அவிழ்த்த பெண் அதிகாரி | டெல்லி, - மத்திய அரசின் உளவுத்துறையில் அதிகாரியாக பணியாற்றியவர் நிஷா பிரியா. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பணியில் இருந்தபோது மேல் அதிகாரிகள் செக்ஸ் தொல்லை கொடுப்பதாக பலமுறை பிரதமர் அலுவலகத்துக்கு புகார் கொடுத்தார். ஆனால், இவரது புகாரை யாரும் கண்டுகொள்ளவில்லை. இதனால் ஒரு முறை பிரதமர் அலுவலகம் முன்பு தீக்குளிக்கவும் முயன்றார். பாதுகாவலர்கள் தலையிட்டு அவரை தடுத்தனர். இந்நிலையில், உளவுத்துறை அதிகாரிகளுக்கு எதிராக டெல்லி ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதி அஜித் பரியோகி முன் நேற்று விசாரணைக்கு வந்தது. நிஷா பிரியாவும் ஆஜராகியிருந்தார். அப்போது யாரும் எதிர்பார்க்காத வகையில் தனது ஆடைகளை அவிழ்க்க முயன்றார். பாதுகாப்புக்கு நின்றிருந்த பெண் காவலர்கள் அவரை தடுத்து விட்டனர். அதிர்ச்சி அடைந்த நீதிபதி, நிஷாவின் செயல்பாடுகள் புத்திசுவாதீனமில்லாத ஒருவரின் செயல்பாடுபோல் இருக்கிறது. அவரை மனநல மருத்துவமனையில் சேர்த்து பரிசோதிக்க வேண்டும் என போலீசுக்கு உத்தரவிட்டார். |
590 | 1/22/2011 5:40:41 PM | ஸ்டேட் எக்ஸ்பிரஸ் | லாக்அப்பில் விஷம் குடித்த கைதி சாவு : நண்பர் எஸ்கேப் | மும்பை, - மும்பை எல்.டி.மார்க் காவல் நிலைய போலீசார் கடந்த வாரம் செயின் பறிப்பு புகார் தொடர்பாக சதாப் ஷேக் (21), அவரது நண்பர் சேஷாத் பார்மர் (20) இருவரையும் விசாரணைக்காக பிடித்து வந்தனர். காவல்நிலைய லாக்அப்பில் வைத்து அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. நேற்று முன்தினம் இரண்டு பேரும் லாக்அப்பில் மயங்கிக் கிடந்தனர். அவர்களது வாயிலிருந்து நுரை தள்ளிக்கிடந்தது. உடனடியாக அவர்கள் ஜே.ஜே. மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இருவரும் விஷம் அருந்தியிருப்பதாக தெரிவித்த டாக்டர்கள், சிகிச்சையை தொடங்கினர். சிகிச்சை பலன் இன்றி சதாப் ஷேக் நேற்றிரவு இறந்தார். பார்மர் உயிருக்கு ஆபத்தில்லை என டாக்டர்கள் தெரிவித்தனர். லாக் அப் கைதிகளுக்கு விஷம் எப்படி கிடைத்தது என்பது புதிராக உள்ளது. தற்போது இந்த வழக்கு குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளது. எல்.டி.மார்க் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ஸ்ரீகாந்த் தேசாயிடம் விசாரணை நடந்து வருகிறது. |
591 | 1/22/2011 5:56:03 PM | சினிமா(ரீல்மா) | இசை அமைக்க ராஜா போட்ட கண்டிஷன் | பவன், செந்தில், சிங்கம் புலி மற்றும் தேனியை சேர்ந்த 100 புதுமுகங்கள் நடிக்கும் படம், ‘செங்காத்து பூமியிலே’. இதுபற்றி இயக்குனர் ரத்னகுமார் கூறியதாவது: தென் மாவட்டங்களில் நடக்கும் சம்பவங்கள், வாழ்க்கை முறைகள், மனித உறவுகள் பற்றிய உணர்வையும், உறவுகளுக்குள் ஏற்படும் முரண்பாடுகளையும் சொல்லும் கதை. இதன் கதையை கேட்டதும் தயாரிப்பாளர் துரைமுருகன் உடனே தயாரிக்க முன்வந்தார். இளையராஜாவிடம் கதையை சொல்லி இசையமைக்க கேட்டேன். அதற்கு அவர், ‘10 நாட்கள் ஷூட்டிங் முடித்துவிட்டு வாருங்கள். திருப்தி அளித்தால் இசை அமைக்கிறேன்’ என்று கண்டிஷன் போட்டார். அதை சவாலாக ஏற்று 10 நாள் ஷூட்டிங் நடத்தினேன். அவரிடம் காட்டியபோது பாராட்டியதுடன் இசை அமைக்க ஒப்புக்கொண்டார். பின்னர் படத்தை வெளியிடும் உரிமையும் பெற்றுக்கொள்வதாகக் கூறி எங்களை திக்குமுக்காட வைத்தார் இளையராஜா. |
592 | 1/22/2011 5:56:25 PM | சினிமா(ரீல்மா) | நடிக்க அம்மா தடை விதித்தார்: கார்த்திகா | ‘அலைகள் ஓய்வதில்லை’ ராதா மகள் கார்த்திகா, கோ படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார். அவர் கூறியது: மும்பையில் பிறந்து வளர்ந்தேன். எல்லா ஹீரோக்களுடன் அம்மா ராதா நடித்திருக்கிறார். அவர் நடித்த படங்களை எனது பெரியம்மா அம்பிகா அனுப்பி வைப்பார். அதை விரும்பிப் பார்ப்பேன். எவ்வளவுதான் படங்களை பார்த்தாலும் நடிகை ஆக வேண்டும் என்று எண்ணியதில்லை. என் அப்பாவைப் போல் பிசினசில் பெரிய ஆளாக வேண்டும் என்றுதான் நினைத்தேன். நிறைய வாய்ப்புகள் வந்தபோதும் மறுத்துவிட்டார் அம்மா. ‘படிப்புதான் முக்கியம். அதில் கவனம் செலுத்து’ என்றார். பிறகு நாகார்ஜுனா மகனுடன் தெலுங்கு படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது. அடுத்து மலையாளத்தில் ‘மகரா மஞ்சு’ என்ற படத்தில் நடித்தேன். இதையடுத்து ‘கோ’ படத்தில் ஜீவா ஜோடியாக, பத்திரிகை நிருபராக நடிக்கிறேன். ‘கவர்ச்சி ஹீரோயினாக நடிப்பீர்களா?’ என்கிறார்கள். ஆடையை குறைப்பதோ, நீச்சல் உடை அணிவதோ கவர்ச்சி என்றாகிவிடாது. முகத்திலும், நடிப்பில் காட்டும் கவர்ச்சிதான் முக்கியம். பேர் சொல்லும் கதாபாத்திரங்களில் நடிக்க ஆசைப்படுகிறேன். |
593 | 1/22/2011 5:57:00 PM | சினிமா(ரீல்மா) | சபதம் செய்த நடிகை ஆக்ஷன் ஆசையில் ஹீரோயின் | நல்லகாலம் பொறக்குது...நல்லகாலம் பொறக்குது...பாவன நடிகைக்கு சீக்கிரமே டும் டும் என நெட்டில் பரப்புறாங்களாம்... பரப்புறாங்களாம்... பலபேர் அவருக்கு போன் செய்து வாழ்த்து சொன்னப்போ, ‘எனக்கு கல்யாணம்னு யாரு உங்களுக்கு சொன்னது’ன்னு உர்ராயிட்டாராம்... மலையாளத்துல ஹிட் படங்கள் கொடுத்திட்டிருக்கேன். அதுபிடிக்காத யாரோ இப்படி புரளி கிளப்பறாங்க. அவங்க முகத்திரைய சீக்கிரமே கிழிப் பேன்னு சபதம் போட்டிருக்காராம்... நடிகை போட்டிருக்காராம்...நமீ நடிகை கிளாமரா நடிச்சும் எடுபடாம போயிட்டதால புது ரூட்டுக்கு மாறிட்டாராம்... மாறிட்டாராம்... யாராவது கதை சொல்ல வந்தா, ‘என் ஹைட்டுக்கு ஆக்ஷன்தான் ஒத்துவரும்னு கன்னடத்துல சொல்றாங்க. அப்படியே ரோலும் தர்றாராங்க. என்னோட ஸ்கிரிப்ட்ல இனிமே ஆக்ஷனும் சேத்துக்குங்க மச்சான்ஸ்ன்னு ஆர்டர் போடுறாராம்... போடுறாராம்...கோடங்கியோட முதல் எழுத்து பேர்ல ரெடியாகியிருக்கிற படத்து பாடல் வெளியீடு சமீபத்துல நடந்துச்சு... நடந்துச்சு... இதுல எல்லாரையும் மேடை ஏத்துனவங்க, பாட்டு எழுதுனவங்களை மேடை ஏத்தலையாம்... ஏத்தலையாம்... பங்ஷன் முடிஞ்ச பிறகுதான் விஷயம் இயக்கத்துக்கு தெரியவந்ததாம்... வந்ததாம்... அதனால மனசொடிஞ்ச இயக்கம், தன்னோட டிவிட்டர் இணைய தளத்துல மன்னிப்பு கேட்டிருக்காராம்... பாட்டு எழுதறவங்ககிட்ட மன்னிப்பு கேட்டிருக்காராம்... |
594 | 1/22/2011 5:59:53 PM | சினிமா(ரீல்மா) | கிளிப்பிங்ஸ் | புதிய படத்தில் நடிக்கும்போது முந்தைய படத்தின் வெற்றி, தோல்வி பற்றி மனதில் வைத்துக்கொள்வதில்லை என்கிறார் மாதவன்.சென்னை மல்டிபிளக்ஸ் தியேட்டரின் அனுபவத்தை வழங்குவதற்காக, ஏழை குழந்தைகளுக்கு ஆங்கிலப் படம் இலவசமாக திரையிடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கார்த்தி, இயக்குனர் ராதாமோகன், பாடகி அனுராதா ஸ்ரீராம் பங்கேற்று குழந்தைகளுக்கு இனிப்பு வழங்கினர்.மும்பை நடிகையை அறிமுகப்படுத்துவதைவிட ‘தென் மேற்கு பருவகாற்று’ படத்தில் உசிலம்பட்டி பெண்ணை 2&வது ஹீரோயினாக அறிமுகப்படுத்தியதை பெருமையாக கருதுகிறேன் என்கிறார் இயக்குனர் சீனுராமசாமி. ‘ராவணன்’ படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசை அமைத்த பாடல் டிராக், முழுமையாகப் பயன்படுத்த படாததால் அதை வீடியோ பாடலாக்கி வெப்சைட்டில் வெளியிட்டிருக்கிறார் ரகுமான்.செல்லப் பிராணியாக எட்டு பூனை குட்டிகளை வளர்க்கிறார் இலியானா. ஷூட்டிங் இல்லாத நேரங்களில் அவற்றுடன் கொஞ்சி விளையாடிப் பொழுதைக் கழிக்கிறார். ‘ஈரம்’ படத்தை இயக்கிய அறிவழகன், அடுத்து கூடைப்பந்து விளையாட்டை மையமாக வைத்து படம் இயக்குகிறார். அவ்விளையாட்டின் அனுபவ ரீதியான ஸ்கிரிப்ட் எழுத தினமும் ஒன்றரை மணி நேரம் நண்பர்களுடன் கூடைப்பந்து விளையாடிப் பயிற்சி பெறுகிறார். இப்படத்துக்கு இன்னும் பெயரிடவில்லை. |
595 | 1/22/2011 6:10:43 PM | சினிமா(ரீல்மா) | பத்மஸ்ரீ விருது போட்டியில் பிரியங்கா - ஜெயப்பிரதா | புதுடெல்லி, - பத்மஸ்ரீ விருதுக்கான பட்டியலில் பிரியங்கா சோப்ரா, ஜெயப்பிரதா இரண்டு பேரின் பெயர்களும் இடம்பெற்றுள்ளன. இந்த போட்டியில் விருதை வெல்லப்போவது யார் என்பது ஒன்றிரண்டு நாளில் தெரியும். ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினத்தையொட்டி பல்வேறு துறைகளில் சிறந்த சேவை புரிந்தவர்களை தேர்வு செய்து மத்திய அரசு ‘பத்மஸ்ரீ’, ‘பத்மபூஷண்’ போன்ற விருதுகள் வழங்கி வருகிறது. இம்முறை இந்த விருது பெறுவதற்காக நாடு முழுவதிலும் இருந்து 1,303 பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளன. இவற்றில் சமூக சேவை, உடல்நலம் மற்றும் மருத்துவம், விஞ்ஞானம், பொறியியல் பிரிவுகளின் கீழ் அதிகபட்சமாக பரிந்துரைகள் வந்துள்ளன. கலையுலக சேவைக்கான பட்டியலில் பிரபல நடிகைகள் பிரியங்கா சோப்ரா மற்றும் ஜெயப்பிரதா ஆகியோரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. விசில் அடிக்கும் கலையில் பிரபலமான சத்யேந்திரா துபே, மஞ்சுநாத் சண்முகம், லஞ்ச ஊழலை வெளிப்படுத்தியதால் கொலை செய்யப்பட்டு உயிர் துறந்த பீகாரை சேர்ந்த துபே, உத்தரபிரதேசத்தை சேர்ந்த சண்முகம் மற்றும் யோகா குரு பாபா ராம்தேவ் போன்றவர்கள் பெயரும் மற்றும் பிரபல பத்திரிகையாளர்கள், விவசாயம் போன்ற துறைகளை சேர்ந்தவர்களின் பெயர்களும் பத்ம விருதுகள் பட்டியலில் இடம்பெற்றுள்ளன. அரசுத்துறையில் பணியாற்றுபவர்களுக்கு பொதுவாக இந்த விருதுகள் வழங்கப்படுவதில்லை. ஆனால் 2008க்குப் பிறகு இதில் விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமான ஐஏஎஸ் அதிகாரிகளின் பெயர்களும் விருதுக்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளன. |
596 | 1/22/2011 6:11:05 PM | உலகம் | சவுதி மன்னர் தாராளம் ஒபாமாவுக்கு ரூ1.38 கோடி நகைகள் பரிசு | துபாய், - அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கு, ரூ.1 கோடியே 38 லட்சம் மதிப்பிலான தங்கம் மற்றும் வைர ஆபரணங்களை சவுதி மன்னர் அப்துல்லா பரிசாக வழங்கியுள்ளார்.அமெரிக்க அதிபரை வெளிநாட்டு தலைவர்கள் சந்திக்கும்போது, பரிசு பொருட்களை வழங்குவர். கடந்தாண்டு யார் எவ்வளவு மதிப்பிலான பரிசு பொருட்களை வழங்கியுள்ளனர் என்ற விவரத்தை வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ளது. பரிசுகள் வழங்கிய தலைவர்களில், மிக அதிக தொகைக்கு பரிசு பொருட்கள் வழங்கியவர் சவுதி மன்னர் அப்துல்லா. தங்கத்தில் செய்யப்பட்ட குட்டி பனைமரம், ஒட்டகம் போன்றவற்றை நினைவுப் பரிசாக வழங்கியுள்ளார். ஒபாமாவின் மகள்கள் சாஷா, மலியா ஆகியோருக்கு ரூ.4 லட்சம் மதிப்பில் வைரத் தோடு, நெக்லஸ் வழங்கியுள்ளார். வெள்ளை மாளிகை அதிகாரிகளுக்கும் சவுதி மன்னர் விலையுயர்ந்த வாட்ச¢, ப்ரேஸ்லட் மற்றும் பேனாக்களை வழங்கியுள்ளார். இவற்றின் மொத்த மதிப்பு 3 லட்சம் டாலர் (ரூ.1 கோடியே 38 லட்சம்). இவருக்கு அடுத்ததாக அதிக பொருட்செலவில் பரிசு வழங்கியவர் இத்தாலி பிரதமர் சில்வியோ பெர்லுஸ்கோனி. வாட்ச், பட்டு துணியில் செய்யப்பட்ட டை, கிரிஸ்டலில் செய்யப்பட்ட டேபிள், மெழுகுவர்த்தி ஸ்டேண்ட் ஆகியவற்றை வழங்கியுள்ளார். கானா அதிபரின் மனைவி ஏர்னஸ்டினா, ஒபாமாவின் மனைவி மிஷேலுக்கு தங்கம் மற்றும் வைரத்தால் செய்யப்பட்ட வாட்ச் வழங்கியுள்ளார். இங்கிலாந்து ராணி எலிசபெத், அவரது கணவருடன் இருக்கும் வரைபடம் ஒன்றை பரிசளித்துள்ளார். இவற்றின் மதிப்பு ரூ.35 ஆயிரம். சீன அதிபர் ஹு ஜின்டா பட்டுத் துணியில் எம்பிராய்டரி செய்யப்பட்ட அதிபர் குடும்பத்தின் வரைபடங்களை பரிசளித்துள்ளார். இதன் மதிப்பு ரூ.9 லட்சத்து 20 ஆயிரம். பாலஸ்தீன அதிபர் முகமது அப்பாஸ் ஆலிவ் எண்ணெய் பாட்டில் உட்பட ரூ.24 ஆயிரம் மதிப்புள்ள பரிசுகளை வழங்கியுள்ளார். அமெரிக்க அதிபருக்கு வெளிநாட்டு தலைவர்கள் கோடிக்கணக்கில் பரிசு அளித்தாலும், அவற்றில் ஒன்று கூட அதிபர் குடும்பத்துக்கு சேராது. அமெரிக்க அரசு அதிகாரிகள், வெளிநாடுகளிடம் இருந்து பரிசுகள் பெற அமெரிக்க சட்டம் தடை விதித்துள்ளது. பரிசளிப்பவருக்கு தர்மசங்கடம் ஏற்படுவதை தவிர்ப்பதற்காக, அமெரிக்க அதிபர்கள் பரிசுகளை பெற்று அரசு காப்பகத்தில் ஒப்படைத்து விடுகின்றனர். |
597 | 1/22/2011 6:11:29 PM | தமிழகம் | திருவொற்றியூர் ரயில்வே ஸ்டேஷன் ரிசர்வேஷன் கவுன்ட்டரில் விஜிலென்ஸ் திடீர் சோதனை | சென்னை, - திருவொற்றியூர் ரயில்வே ஸ்டேஷனில், போலி பெயர்களில் முன்பதிவு செய்த டிக்கெட் புரோக்கரை விஜிலென்ஸ் அதிகாரிகள் கைது செய்தனர். திருவொற்றியூரில் உள்ள ரயில்வே முன்பதிவு மையத்தில், போலி பெயர்களில் புரோக்கர்கள் தினமும் டிக்கெட் முன்பதிவு செய்வதாக தெற்கு ரயில்வே ஊழல் கண்காணிப்பு (விஜிலென்ஸ்) அதிகாரிகளுக்கு புகார்கள் வந்தன. இதையடுத்து விஜிலென்ஸ் டீமைச் சேர்ந்த சந்திரசேகரன், ரவி ஆகியோர் நேற்று திருவெற்றியூர் ரயில்வே முன்பதிவு மையத்தில் திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது முன்பதிவு செய்வதற்காக வரிசையில் நின்றவர்களிடம், ‘யாருக்காக முன்பதிவு செய்கிறீர்கள்?’ என்று விசாரணை மேற்கொண்டனர். அதைப் பார்த்த ஆசாமி ஒருவர் அங்கிருந்து தப்பி ஓடப் பார்த்தார். ரயில்வே பாதுகாப்பு படையினர் துணையுடன் அந்த ஆசாமியை விஜிலென்ஸ் அதிகாரிகள் மடக்கிப் பிடித்தனர். அவரை விசாரித்த போது முன்னுக்குப் பின் முரணாக பேசியுள்ளார். அவரிடம், ஆயிரக்கணக்கான மதிப்பிலான முன்பதிவு டிக்கெட்கள் பல்வேறு பெயர்களில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பிடிபட்ட புரோக்கரின் பெயர் ஸ்ரீதர் என்று தெரியவந்தது. அவருடைய தொடர்புகள் பற்றி விஜிலென்ஸ் அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். |
598 | 1/22/2011 6:11:55 PM | குற்றம் | ஓடும் ரயிலில் துணிகரம் பயணிகளை தாக்கி கொள்ளை | பாட்னா, - பீகார் மாநிலம் பாட்னா, உ.பி.யின் அகமதாபாத் இடையே ஓடும் அசீமாபாத் எக்ஸ்பிரஸ் ரயில், இன்று அதிகாலை பீகாரின் புக்ஸார் ரயில் நிலையம் அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது ரயிலில் ஆயுதங்களுடன் ஏறிய கொள்ளையர்கள், 2 பெட்டிகளில் இருந்த பயணிகளை தாக்கி அவர்களிடம் இருந்த நகை, பணம் மற்றும் பொருட்களை கொள்ளையடித்தனர். கிடைத்த பொருட்களை மூட்டை கட்டிக்கொண்டு, அபாய சங்கிலியை இழுத்து ரயிலை நிறுத்தி தப்பியோடிவிட்டனர். இதுகுறித்து ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து கொள்ளையரை தேடுகின்றனர்.ரயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் திரிபுராரி பாண்டே கூறும்போது, ‘‘10 முதல் 12 பேர் வரை ஆயுதங்களுடன் ரயிலில் ஏறி பயணிகளிடம் கொள்ளையடித்துள்ளனர். தர மறுத்தவர்களை தாக்கியுள்ளனர். இதில் சிலருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. கொள்ளையர்களை விரைவில் பிடிப்போம்’’ என்றார். |
599 | 1/22/2011 6:20:11 PM | சினிமா(ரீல்மா) | காதல் கைகூடியது மாஜி முதல்வரின் மகனை மணக்கிறார் ஜெனிலியா | சென்னை, - இளம் இந்தி நடிகர் ரித்தேஷ் தேஷ்முக்கை விரைவில் திருமணம் செய்ய உள்ளார் நடிகை ஜெனிலியா. ‘பாய்ஸ்’ படம் மூலம் தமிழ் திரையுலகில் நடிகையாக அறிமுகமானார் ஜெனிலியா. தொடர்ந்து ‘சச்சின்’, ‘சந்தோஷ் சுப்ரமணியம்’, ‘உத்தமபுத்திரன்’ போன்ற தமிழ் படங்களில் நடித்துள்ளார். தெலுங்கு, இந்தி, படங்களிலும் நடித்து வருகிறார். முன்னதாக ‘துஜே மேரி கஸம்’ என்ற படத்தில் பாலிவுட் ஹீரோ ரித்தேஷ் தேஷ்முக்குடன் ஜோடியாக அறிமுகமானார். மகாராஷ்டிர முன்னாள் முதல்வர் விலாஸ்ராவ் தேஷ்முக்கின் மகனான ரித்தேஷும் ஜெனிலியாவும் நட்பை காதலாக வளர்த்தனர். பாலிவுட் வட்டாரத்தில் இருவர் பற்றியும் உலா வந்த காதல் கிசுகிசுக்களை அவர்கள் மறுக்கவில்லை. இதனால் பத்திரிகைகள் ஜெனிலியா & ரித்தேஷ் காதலை சுவாரஸ்யப்படுத்தின. பாலிவுட் காதலர்கள் பகிரங்கமாகவே பார்ட்டி, பொது நிகழ்ச்சிகளில் ஜோடியாக பங்கேற்பது பேஷனாகிவிட்டது. ஆனால் ஜெனிலியா&ரித்தேஷ் ஜோடி பல இடங்களுக்கு ஒன்றாக சென்றாலும் ஜோடியாக வருவதை பகிரங்கப்படுத்திக் கொள்வதில்லை. ரகசியமாகவே தங்கள் காதலை வளர்த்து வருகின்றனர். சமீபத்தில் இருவரும் வெளிநாடுக்கு சென்று திரும்பியபோதும் விமான நிலையத்திலேயே தனியாக பிரிந்து வெவ்வேறு கார்களில் புறப்பட்டு சென்றனர். இந்த சம்பவத்தை பாலிவுட் பத்திரிகைகள் வெளியிட்டிருந்தன. இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போவதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்து ரித்தேஷிடம் கேட்டபோது, ‘விரைவில் எனது காதலியை மணக்க உள்ளேன்’ என்று மட்டும் சூசகமாக பதில் அளித்தார். |
600 | 1/22/2011 6:20:43 PM | உலகம் | ‘ஒட்டகம் ஸ்பீடா ஓடும்’ துபாயில் டுபாக்கூர் சேல்ஸ் | துபாய், - மிருகவதை தடைச் சட்டம் உலகம் முழுவதும் அமலில் உள்ளது. தடையை மீறி விலங்குகள் துன்புறுத்தப்படுவது நிரூபிக்கப்பட்டால் கடுமையான தண்டனை கிடைக்கும். இதுகுறித்த விழிப்புணர்வுகளும் அவ்வப்போது ஏற்படுத்தப்பட்டு வருகிறது. துபாய் உள்ளிட்ட அரபு நாடுகளில் ஒட்டகத்தை வேகமாக ஓட வைக்க சிறப்பு சாதனங்கள் பயன்படுத்தப்பட்டு வருவதாக போலீசாருக்கு புகார்கள் வந்த வண்ணம் இருந்தது. இதையடுத்து திடீர் சோதனைகளும் நடத்தப்பட்டு வந்தன. இந்நிலையில், ஷாக் கொடுத்து ஒட்டகத்தை வேகமாக ஓட வைக்க பயன்படுத்தப்படும் எலக்ட்ரிக் சாதனத்தை விற்றதாக துபாயில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இக்கருவியின் மூலம் ஒட்டகங்களுக்கு எலக்ட்ரிக் ஷாக் கொடுக்கப்படும். இதனால் அவை தூண்டப்பட்டு வேகமாக ஓடும். இது மிருகவதை என்பதுடன் இத்தகைய செயல்களால் அவற்றின் உடல் ஆரோக்கியம் பெருமளவில் பாதிக்கப்படும் அபாயமும் உள்ளது. இதனால் விரைவில் நோய்வாய்ப்பட்டு ஒட்டகங்கள் இறக்க நேரிடுகிறது. இத்தகைய சோக சம்பவங்களும் அடிக்கடி நிகழ்ந்து வருகின்றன. வருமானத்தை மட்டுமே கணக்கில் கொண்டு இத்தகைய சாதனங்களை பயன்படுத்துவோர் எண்ணிக்கையும் அதிகரித்து வந்தது. இதையடுத்து ஒட்டகங்களை காக்கும் நோக்கில் எலக்ட்ரிக் சாதனங்கள் பயன்படுத்த துபாய் அரசு தடை விதித்துள்ளது. இந்த தடையை மீறி சட்டத்துக்கு புறம்பாக சாதனத்தை விற்றதால்தான் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். |
601 | 1/24/2011 10:39:38 AM | மர்மம் | சாலை வளைவில் காத்திருக்கும் பேய் நடுங்கும் கிராமம் | பேய், கெட்ட ஆவிகள் சேட்டை என ஒவ்வொரு ஊர்க்காரர்களும், ஒவ்வொரு விஷயங்களால் அஞ்சிக்கொண்டிருக்க, நாமக்கல்லில் இருந்து 8 கி.மீ தொலைவில் விட்டமநாய்க்கன்பட்டி கிராமத்தினரோ அங்கிருக்கும் ஒரு சாலை வளைவை பார்த்து கதி கலங்கி கொண்டிருக்கிறார்கள். ஏன் இந்த பயம் என்று கேட்டால், அவர்கள் கூறும் காரணம் சற்று திகைக்க வைக்கிறது.கடந்த சில ஆண்டுகளாக இந்த கிராமத்தின் வழியாக செல்வோரை ஆட்டி படைத்துக் கொண்டிருக்கிறது பேய் பீதி. கிராமத்துக்குள் நுழையும் பகுதியில் இருக்கும் இருக்கும் தார்சாலையின் வளைவுதான் அவர்கள் அச்சத்திற்கு அச்சாரம். இங்கு இரவில் பைக், கார், சைக்கிள் போன்ற வாகனங்களில் வருபவர்கள், வளைவில் திரும்பும் போது, குறிவைத்து கீழே தள்ளப்படுவதாக கிராம மக்கள் கூறுகிறார்கள். எந்த காரணமும் இல்லாமல் திடீரென விழுவதால், அதிர்ச்சியில் உறைந்து போவதாகவும் சொல்கிறார்கள். ‘யார் நம்மை பிடித்து தள்ளுவது? யாரும் இல்லாத இடத்தில் எப்படி விழுந்தோம்? என குழப்பங்களோடு எழுந்தால், உடல் முழுவதும் காயங்களும் இருப்பதை பார்க்கும் போது பயத்தில் காய்ச்சலே வந்து விடுகிறது’ என்று அந்த வழியை கடந்த பலர் அச்சத்தோடு கூறுகிறார்கள். பல ஆண்டுகளாக இதுபோன்ற சம்பவங்கள் அந்த வளைவில் நடந்து வருவதால், பகலில் கூட அந்த பாதையை தனியாக கடப்பதில்லையாம். விஷயம் தெரிந்த உள்ளூர்வாசிகள் யாரும் இரவு வேளையில் இந்த சாலை வழியாக வருவதே இல்லை என்று கூறுகிறார்கள். இதுபற்றி தெரியாமல் வரும் வெளியூர்க்காரர்கள் தான் இதில் வசமாக மாட்டிக் கொள்கிறார்கள் என்கின்றனர் கிராம மக்கள். சிலருக்கு விழுந்த வேகத்தில் ரத்தம் கொட்டும் அளவுக்கு பெரிய காயங்களும் ஏற்பட்டிருக்கிறது. முதலில் இதை கிராமத்தினர் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. அதன்பிறகு தொடர்ச்சியாக சம்பவங்கள் நடக்க பயம் பற்றிக் கொண்டது. வளைவில் நிற்கும் கெட்ட ஆவிகள் தான் இதற்கு காரணம் என்றும், அவைதான் மனிதர்களை தள்ளி விட்டு ரத்தம் பார்ப்பதாக நம்பிய கிராம மக்கள், அந்த வளைவில் அமாவாசை நாளின் நடுநிசியில் கோழிகளை பலியிட்டு சிறப்பு பூஜை நடத்தினார்களாம். ஆனால் அதற்கும் பலன் இல்லை என்றே கூறுகிறார்கள்.பேய் பீதி கிளப்பும் வளைவில், கீழே விழுந்து பீதி அடைந்த அந்த கிராமத்தை சேர்ந்த பழனிசாமி கூறியதாவது: ஒரு நாள் இரவு, நாமக்கல் போய்விட்டு ஊருக்கு வந்துட்டு இருந்தேன். அந்த வளைவு பாதையில் வந்த போது, யாரோ பிடிச்சு தள்ளுற மாதிரி இருந்துச்சு. என் பைக் அருகில் உள்ள பாலத்தில் மோதி, கீழே விழுந்து விட்டேன். கை, கால்ல அடிபட்டது. அன்று இரவே பயங்கர காய்ச்சல் வந்து 10 நாள் படுத்துட்டேன். மருந்து மாத்திரை சாப்பிட்டும் குணமாகல. சேந்தமங்கலத்தில் உள்ள சாமியாரிடம் தாயத்து வாங்கி கட்டுன பிறகு தான் சரியாச்சு‘ என திகிலுடன் கூறி முடித்தார் பழனிச்சாமி. நிறைவேறாத ஆசைகளோடு செத்தவங்க ஆவிதான் வளைவில நின்னு ஆட்டி படைக்கிறது என்று கிராமத்தினர் நம்பினாலும், வளைவின் மர்மம் இன்னும் நீடிக்கிறது. |
602 | 1/24/2011 3:52:48 PM | உலகம் | ஈராக்கில் தொடர் குண்டு வெடிப்பு: 10 பேர் பலி | பாக்தாத்: ஈராக்கில் நேற்று காலை 7 மணி முதல் குண்டு வெடிப்பு சம்பவங்கள் ஒவ்வொன்றாக நடக்கத் தொடங்கின. மனித குண்டு, கார் குண்டு, கண்ணி வெடி என பல குண்டு வெடிப்பு சம்பவங்கள் நடந்தன. ரோந்து போலீசாரை குறிவைத்து நடந்த இரு கார் குண்டு வெடிப்பு சம்பவத்தில் 2 போலீசார் உள்பட 6 பேர் கொல்லப்பட்டனர். கசிமியா பகுதியில் புனிதப் பயணம் மேற்கொண்ட ஈரான் பயணிகள் குண்டு வெடிப்பில் சிக்கினர். இதில் ஒருவர் பலியானார். 9 பேர் காயம் அடைந்தனர். பாக்தாத் மார்க்கெட் அருகே நடந்த குண்டு வெடிப்பில் இருவர் பலியாயினர். டர்மியா என் இடத்தில் ஒரு பள்ளி அருகே நடந்த குண்டு வெடிப்பில் இரு சிறுவர்கள் பலியாயினர். இந்த குண்டு வெடிப்பு சம்பவத்துக்கு யாரும் பொறுப்பேற்கவில்லை.ஈராக் தலைநகர் பாக்தாத்தில் மார்ச் 23&ம் தேதி அரபு லீக் மாநாடு நடக்கவுள்ளது. இதில் அரபு நாடுகளின் தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள். இதை சீர்குலைப்பதற்காக தீவிரவாத அமைப்பினர் குண்டு வெடிப்பு சம்பவங்களில் ஈடுபட்டுள்ளனர் என ஈராக் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். |
603 | 1/24/2011 3:53:31 PM | உலகம் | ஆயில் டேங்கர் மீது பஸ் மோதி 32 பேர் பலி | நூரியாபாத்: பாகிஸ்தானின் ஜம்ஸ்ஹோரா மாவட்டம் நூரியாபாத் என்ற இடத்தில் பயணிகள் பஸ் நேற்று அதிகாலை சென்று கொண்டிருந்தது. அப்போது எதிரே வந்த ஆயில் டேங்கர் லாரி மீது பஸ் மோதி தீப்பிடித்தது. இதில் 32 பயணிகள் உடல் கருகி பலியாயினர். பஸ் டிரைவர் தூக்க கலக்கத்தில், டேங்கர் லாரி மீது மோதியதாக உயிர் பிழைத்த பயணிகள் தெரிவித்தனர். பஸ் தாறுமாறாக சென்றதால் பயணிகள் ஏற்கனவே இரண்டு முறை டிரைவரை எச்சரித்துள்ளனர். அப்படியிருந்தும் டேங்கர் லாரி மீது பஸ்சை மோதவிட்டுள்ளார் டிரைவர். பாகிஸ்தானில் சாலை விபத்துக்கள் அடிக்கடி நடக்கின்றன. திறமையில்லாத டிரைவர்கள், அதிக நேரம் பணியில் ஈடுபடுவது, மோசமான ரோடுகள் போன்றவை விபத்துக்கு காரணம் என கூறப்படுகிறது. |
604 | 1/24/2011 3:55:28 PM | உலகம் | மாஜி ஐ.எஸ்.ஐ அதிகாரியை கொன்றனர் தலிபான்கள் | பெஷாவர்: தீவிரவாதிகள் பற்றி குறும் படம் எடுப்பதற்காக பாகிஸ்தான் உளவுப்பிரிவின் (ஐ.எஸ்.ஐ) மாஜி அதிகாரிகள் இமாம், கலீத் காவாஜா, இங்கிலாந்து நிருபர் ஆசாத் குரேஷி ஆகியோர் இணைந்து வசிரிஸ்தான் பகுதிக்கு கடந்த ஆண்டு மார்ச் மாதம் சென்றனர். அப்போது அவர்களை 'ஏசியன் டைகர்ஸ்' என்ற தீவிரவாத அமைப்பினர் கடத்தினர். பின்னர் தெக்ரிக்&இ&தலிபான் அமைப்பினரிடம் விற்றனர். அமெரிக்க உளவுப் பிரிவு சி.ஐ.ஏ மற்றும் பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ ஆகியோருக்கு உளவு பார்த்ததாக கூறி கலீத் காவாஜை தலிபான்கள் கொன்றனர். இவரது உடல் கடந்த ஆண்டு மே மாதம் மீட்கப்பட்டது. அதன்பின் இங்கிலாந்து நிருபரை விடுவிக்க பேரம் பேசினர் தலிபான்கள். பிணையத் தொகையை பெற்றபின் ஆசாத் குரேஷி விடுவிக்கப்பட்டார். இமாம் மட்டும் 9 மாதங்களாக தீவிரவாதிகளின் பிடியில் சிக்கியிருந்தார். அவரை மீட்க பாகிஸ்தான் அரசு பேச்சுவார்த்தை நடத்தியது. பிணையத் தொகையுடன் சிறையில் உள்ள தலிபான் தலைவர்கள் இருவரை விடுவிக்க நிபந்தனை விதித்தனர் தலிபான்கள். இதை ஏற்க பாக். அரசு மறுத்துவிட்டது.இந்நிலையில் இமாமை தீவிரவாதிகள கொன்றுவிட்டனர் என அவரது உறவினர்களுக்கு உளவுத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். அவரது உடலை அனுப்ப ரூ.20 லட்சம் பணம் கேட்கின்றனர் தீவிரவாதிகள். இமாம் ஐ.எஸ்.ஐ.யில் பணியாற்றியபோது முல்லா உமர் தலைமையிலான தலிபான்களுக்கு பயிற்சியளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. |
605 | 1/24/2011 3:57:00 PM | உலகம் | முதலை வயிற்றில் கேட்குது வித்தியாசமான ரிங்டோன் | உக்ரைன்: உக்ரைன் விலங்கியல் பூங்காவில் உள்ள ஒரு முதலையின் வயிற்றுக்குள் இருந்து கடந்த ஒரு மாதமாக ரிங்டோன் கேட்டுக் கொண்டே இருக்கிறது. இதில் அதிசயம் ஒன்றும் இல்லை. தன்னை படம் பிடிக்க முயன்ற பார்வையாளரின் செல்போனை பறித்து விழுங்கிவிட்டது முதலை. அந்த செல்போனில் இருந்துதான் ரிங்டோன் கேட்கிறது.15 வயதான அந்த முதலையின் பெயர் ஜினா. கடந்த டிசம்பர் இறுதியில் பூங்காவுக்கு வந்த பார்வையாளர் ஒருவர் ஆர்வ மிகுதியில் ஜினாவை தனது செல்போனில் படம் பிடித்தார். இதைப் பார்த்து ஆத்திரமடைந்த ஜினா, சீறிப்பாய்ந்து செல்போனை பறித்து விழுங்கிவிட்டது. பார்வையாளர் அதிர்ச்சியில் உறைந்தார். அவரை பூங்கா ஊழியர்கள் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.ஜினாவின் வயிற்றுக்குள் இருக்கும் செல்போனில் இருந்து அடிக்கடி ரிங்டோன் கேட்டபடி உள்ளது. இதுகுறித்து விலங்கியல் பூங்கா அதிகாரிகளுக்கு உடனடியாக தகவல் கொடுக்கப்பட்டது. மருத்துவர் உதவியுடன் ஜினா வயிற்றில் இருந்து செல்போனை வெளியே எடுப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தனக்குள் இருந்து கேட்கும் வித்தியாசமான ஒலியால் பயந்துபோன ஜினா, சாப்பிடுவதையே நிறுத்தி விட்டது. இதனால், ஜினாவின் உடல் நிலை நாளுக்கு நாள் மோசமடைந்து வருவதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். விட்டமின் ஊசிகள் போடப்பட்டு வருகிறது. |
606 | 1/24/2011 3:58:04 PM | உலகம் | இங்கிலாந்து இளவரசர் கல்யாணம் ‘சூதாட்டம்’ ஆகிப் போச்சு! | லண்டன்: திருமணம் செய்துகொள்ளும் தம்பதியை ‘பல்லாண்டு காலம் இணை பிரியாமல் வாழ்க’ என்று உறவினர்களும் நண்பர்களும் வாழ்த்துவதுண்டு. பிரபலமானவர்கள் திருமணம் என்றால் கிசுகிசுக்களும் சிறுசிறு ஊடல், உரசல்களும் விமர்சனத்துக்கு ஆளாகிவிடும். இங்கிலாந்து ராஜ குடும்பத்தில் பரபரப்புக்கு எப்போதுமே பஞ்சமிருக்காது.இப்போது இளவரசர் சார்லஸ் மகன் திருமணத்திலும் ஒரு பரபரப்பு, விறுவிறுப்பு தொற்றிக் கொண்டுள்ளது. இது கொஞ்சம் வித்தியாசமான பரபரப்பு. சார்லஸ் மகன் வில்லியம் - கதே திருமணம் வரும் ஏப்ரல் 29ம் தேதி வெகு விமரிசையாக நடக்க உள்ளது. இந்த திருமணத்தை உலகமே ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறது. திருமண ஏற்பாடுகள் பல மாதங்களுக்கு முன்பே தொடங்கி தடபுடலாக நடந்து வருகிறது. தாய் டயானாவின் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள நிச்சயதார்த்த வைர மோதிரத்தை வருங்கால மனைவி கதேவுக்கு அணிவித்து அம்மா இல்லாத குறையை தீர்த்துக் கொண்டார் வில்லியம். ஆடை முதல் அணிகலன் வரை பல பொருட்களில் இருவரும் இணைந்த போட்டோவை போட்டு பணம் பார்த்துக் கொண்டிருக்கின்றன வியாபார நிறுவனங்கள். இது ஒரு பக்கம் இருக்க, வில்லியம் - கதே இருவரும் திருமணத்துக்கு பிறகு நீண்ட நாட்கள் சேர்ந்து வாழ்வது கடினம்தான் என்ற செய்தியை சிலர் கிளப்பி விட்டுள்ளனர். பட்டிமன்றமாக தொடங்கிய இந்தப் பிரச்னை, இப்போது சூதாட்டமாகவே வளர்ந்து வருகிறது. திருமணமே நடக்காது என்று கோஷ்டி ‘பெட்’ கட்டிக் கொண்டிருக்கிறது. ‘விரைவில் விவாகரத்து செய்வார்கள்’ என்று ஒரு பிரிவும், ‘திருமண பந்தத்தை முறித்துக்கொள்ள மாட்டார்கள். நீண்ட காலம் இணைந்து இல்லறம் நடத்துவார்கள்’ என்று மற்றொரு பிரிவும் வரிந்து கட்டுகிறது. இந்த சூதாட்டத்தில் தினம் தினம் ஏராளமானவர்கள் தங்களை இணைத்துக் கொண்டு வருகின்றனர். முதல்கட்ட போட்டியிலேயே அதிகபட்சமாக ரூ.22 லட்சம் பெட் கட்டப்பட்டுள்ளது. இந்த தொகை மேலும் உயரும் என்று சூதாட்டத்தில் ஈடுபடுபவர்கள் கூறுகிறார்கள்.இந்த சூதாட்டத்தில் வில்லியம் & கதே பற்றி மேலும் பல கேள்விகளும் எழுப்பப்பட்டு சூதாட்டத் தொகை அதிகரிக்கப்பட்டு வருகிறது. அதே நேரத்தில் இதற்கு எதிர்ப்பும் வலுத்து வருகிறது. மற்றவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையை சூதாட்டமாக்குவது தவறு என்கிறார்கள் எதிர்ப்பாளர்கள். இதையெல்லாம் கண்டுகொள்ளாமல் ‘ஆல் த பெஸ்ட் இன் அட்வான்ஸ் வில்லியம் - கதே’ என்று இருவரும் இணை பிரியாமல் பல ஆண்டுகள் வாழ பிரார்த்தனை செய்யும் உள்ளங்களும் உலகம் முழுவதும் இருக்கத்தான் செய்கின்றன. |
607 | 1/24/2011 4:49:49 PM | சினிமா(ரீல்மா) | கேத்ரினா கைப், பிரியங்கா சோப்ரா வீடுகளில் இன்கம்டாக்ஸ் ரெய்டு | மும்பையில் உள்ள பிரபல பாலிவுட் நடிகைகள் கேத்ரினா கைப் மற்றும் பிரியங்கா சோப்ரா ஆகியோரது வீடுகளில் வருமானவரித்துறை அதிகாரிகள் இன்று அதிரடி சோதனை நடத்தினர். இந்தி திரையுலகில் முன்னணி நட்சத்திரமாக விளங்கும் கேத்ரினா கைப், லண்டனைச் சேர்ந்தவர். இவரது தந்தை காஷ்மீரி இந்தியர். தாய் இங்கிலாந்தைச் சேர்ந்த வெள்ளை இனத்தவர். மும்பையில் தங்கி இந்தி படங்களில் நடித்து வரும் கேத்ரினா கைப், படம் ஒன்றுக்கு ரூ.3 கோடிக்கு மேல் வாங்குவதாக கூறப்படுகிறது. அண்மையில் இவரது நடிப்பில் வெளியான ‘தீஸ் மார் கான்’ என்ற இந்திப் படம் எதிர்பார்த்த வெற்றி பெறவில்லை. இருப்பினும் இதில் இடம் பெற்றிருந்த கவர்ச்சி நடனம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இன்று காலை மும்பையில் உள்ள அவரது வீட்டில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். காலை 8 மணிக்கு தொடங்கிய சோதனை மதியம் வரை நீடித்தது. இதே போல் மற்றொரு முன்னணி நட்சத்திரமான பிரியங்கா சோப்ரா வீட்டிலும் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். நடிகை பிரியங்கா சோப்ரா உலக அழகி பட்டத்தை வென்று திரைப்படங்களில் நடிக்க வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. வருமானத்துக்கு உரிய வரி கட்டப்படவில்லை என்ற சந்தேகத்தின் அடிப்படையில் நடிகைகள் வீட்டில் சோதனை நடைபெற்று வருவதாக வருமான வரித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. சோதனையில் கிடைத்த ஆதாரங்கள் குறித்து உடனடியாக தகவல் இல்லை. |
608 | 1/24/2011 5:02:53 PM | தமிழகம் | நாளை மறுநாள் குடியரசு தின விழா : சென்னையில் பலத்த பாதுகாப்பு | சென்னை: குடியரசு தின விழாவையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் நாளை மறுநாள் கவர்னர் பர்னாலா, தேசியக் கொடியை ஏற்றி வைக்கிறார். வீரதீர செயல் புரிந்தவர்களுக்கு பதக்கங்களை முதல்வர் கருணாநிதி வழங்குகிறார். இதையடுத்து சென்னையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தமிழகம் முழுவதும் 85 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். தமிழக அரசின் சார்பில் சென்னை மெரினா கடற்கரை காந்தி சிலை அருகே குடியரசு தின விழா நாளை மறுநாள் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன. காலை 7.50 மணிக்கு முதல்வர் கருணாநிதி வருகிறார். அவரை தலைமைச் செயலாளர், உள்துறை செயலாளர், டிஜிபி, சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் ஆகியோர் வரவேற்கின்றனர். அதைத் தொடர்ந்து 7.55 மணிக்கு முப்படை வீரர்கள் புடைசூழ, கவர்னர் சுர்ஜித் சிங் பர்னாலா வருகிறார். அவரை முதல்வரும் அதிகாரிகளும் வரவேற்கின்றனர். காலை 8 மணிக்கு அங்கு அமைக்கப்பட்டுள்ள கம்பத்தில் தேசியக் கொடியை பர்னாலா ஏற்றி வைக்கிறார். வீரதீர செயல் புரிந்தவர்களுக்கு பதக்கங்களை முதல்வர் கருணாநிதி வழங்குகிறார்.அதைத் தொடர்ந்து வண்ணமயமான அணிவகுப்பு தொடங்குகிறது. கவர்னர், முதல்வர், அமைச்சர்கள் மற்றும் உயரதிகாரிகள் பந்தலில் அமர்ந்து அணிவகுப்பை பார்வையிடுகின்றனர். பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், காவல் துறையினர், பல்வேறு மாநில குழுவினரின் கண்கவர் கலைநிகழ்ச்சிகள் நடக்கிறது. பின்னர் முப்படை வீரர்கள், தமிழக காவல் துறையினரின் அணிவகுப்பும், பல்வேறு துறைகளின் அலங்கார ஊர்தி அணிவகுப்பும் நடக்கிறது. ராணுவ டாங்கிகளும் அணிவகுப்பில் கலந்து கொள்கின்றன. விழாவையொட்டி, காந்தி சிலை அருகே நீண்ட தூரத்துக்கு ஷாமியானா பந்தல் அமைக்கப்பட்டு வருகிறது. சாலையின் இருபுறமும் சவுக்கு கட்டைகளால் தடுப்பு ஏற்படுத்தப்படுகிறது. விழா நடக்கும் இடத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. விஐபிக்கள் வரும் பாதையிலும், விழா நடக்கும் இடத்திலும் கண்காணிப்பு கேமராக்கள் வைக்கப்பட்டுள்ளன. மெரினாவில் விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. நகரில் கடந்த இரு நாட்களாக தீவிர சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இன்றும் நாளையும் சோதனை தொடரும் என போலீசார் தெரிவித்துள்ளனர். சென்னையில் மட்டும் சுமார் 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். விழா நடக்கும் இடத்தில் கடல் பகுதியில் கப்பல் படையும், கப்பல்படையின் ஹெலிகாப்டரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றன. மாவட்ட தலைநகர்களில் நடக்கும் குடியரசுதின விழாவில், கலெக்டர்கள் தேசியக் கொடியை ஏற்றிவைத்து அணிவகுப்பு மரியாதையை ஏற்கின்றனர். தமிழகம் முழுவதும் சுமார் 85 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். மாநில எல்லைகளில் சீல் வைக்கப்பட்டு அனைத்து வாகனங்களிலும் சோதனை நடத்தப்படுகிறது. ஓட்டல்கள், லாட்ஜ்களில் வெளிநாட்டை சேர்ந்தவர்கள் பதிவு செய்யாமல் தங்கி உள்ளார்களா என்பது குறித்தும் சோதனை நடத்தப்படுகிறது. பதிவு செய்யாமல் இருப்பவர்களை கைது செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. |
609 | 1/24/2011 5:03:08 PM | இந்தியா | எதிர்க்கட்சிகளுடன் பேசியபிறகு பட்ஜெட் கூட்டத் தொடர் நடக்கும் | ஆலந்தூர், - அகில இந்திய கட்டுமான வல்லுனர்கள் சங்கத்தின் 24ம் ஆண்டு விழா மற்றும் கருத்தரங்கம் நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடந்தது. கட்டுமான சங்கத் தலைவர் ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தார். ஒருங்கிணைப்பு தலைவர் அனந்தசயனம் முன்னிலை வகித்தார். கருத்தரங்கில் மத்திய நிதித்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி பங்கேற்று, மாநாட்டு மலரை வெளியிட, மத்திய கப்பல் துறை அமைச்சர் ஜி.கே.வாசன் பெற்றுக் கொண்டார்.விழாவில் பிரணாப் முகர்ஜி பேசுகையில், “நாட்டின் வளர்ச்சிக்கு கட்டுமானத்துறை முக்கிய பங்கு வகிக்கிறது. தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற்ப கட்டுமானத் துறையில் மாற்றம் ஏற்படுத்த வேண்டும். எதிர்காலத்தில் கட்டுமானத் துறையில் திறமை வாய்ந்தவர்களின் பற்றாக்குறை ஏற்படும். திறன் மேம்பாட்டுக்கழகம் மூலம் இதனை போக்க வேண்டும்’’ என்றார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், “பட்ஜெட் கூட்டத்தொடரை அமைதியாக நடத்த இரு முறை பேச்சுவார்த்தை நடந்துள்ளது. 3-வது முறையும் பேச்சுவார்த்தை நடத்த உள்ளோம், அதன்பின் பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெறும்’’ என்றார்.விழாவில் ஜி.கே.வாசன் பேசும்போது, “பொது மற்றும் தனியார் உள்கட்டமைப்பு மூலம், துறைமுகங்களின் திறன் 3200 மில்லியன் டன் அளவுக்கு 2020க்குள் தரம் உயர்த்தப்படும்’’ என்றார். விழாவில் தபால் உறை வெளியிடப்பட்டது. |
610 | 1/24/2011 5:04:05 PM | குற்றம் | ஒரே ஆண்டில் 650 ‘கவுரவ’ கொலைகள் - பாகிஸ்தான் | இஸ்லாமாபாத், - ஊர் பஞ்சாயத்து உத்தரவுப்படி, காதலனை மறக்க மறுத்த டீன் ஏஜ் பெண் ஒருவர் மின்சாரம் பாய்ச்சி கொலை செய்யப்பட்ட சம்பவம் பாகிஸ்தானில் நடந்துள்ளது. இதுகுறித்து விசாரித்து அறிக்கை தாக்கல் செய்யும்படி பிரதமர் கிலானி உத்தவிட்டுள்ளார். பாகிஸ்தானின் பகவல்பூர் மாவட்டத்தை சேர்ந்த டீன் ஏஜ் பெண் சைமா பீபி (17). அதே பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவரை காதலித்தார். அவர்களின் காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். காதலனை மறந்துவிட வேண்டும் என்றனர். அதை ஏற்காத சைமா, ‘வாழ்ந்தால் அந்த இளைஞருடன்தான் வாழ்வேன்’ என பிடிவாதமாக கூறிவிட்டார். இதையடுத்து கிராம பஞ்சாயத்து தலைவர்களுடன் சைமா பீபியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் ஆலோசனை நடத்தினர். குடும்ப கவுரவத்தை காப்பாற்றத் தவறிய பெண்ணை கொலை செய்ய முடிவு செய்யப்பட்டது.அதன்படி, சைமா பீபி நேற்று கொலை செய்யப்பட்டார். அவரது கழுத்து, கை, முதுகு போன்ற இடங்களில் மின்சாரம் பாய்ச்சி சுடப்பட்ட தழும்புகள் உள்ளன. இச்சம்பவத்தை கேள்விப்பட்ட பாகிஸ்தான் பிரதமர் கிலானி அதிர்ச்சியடைந்தார். அதுபற்றி போலீசார் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளார். பாகிஸ்தானில் கவுரவ கொலைகள் அதிகமாக நடக்கின்றன. காதலிக்கும் பெண்கள், கள்ளக்காதலில் ஈடுபடும் பெண்களை குடும்பத்தினரை கொலை செய்வது பாகிஸ்தான் கிராமங்களில் அதிகமாக நடக்கிறது. கடந்த ஆண்டு மட்டும் 650 பெண்கள் கவுரவ கொலைக்கு பலியாகியுள்ளனர் என பாகிஸ்தானில் உள்ள மனித உரிமை கமிஷன் தகவல் தெரிவித்துள்ளது. |
611 | 1/24/2011 5:04:29 PM | மாவட்ட மசாலா | இலவச வேட்டி, சேலை கேட்டு திருவொற்றியூர் நகராட்சி தலைவர் ரேஷன் கடையில் உண்ணாவிரதம் | திருவொற்றியூர்: திருவொற்றியூர் நகராட்சி தலைவர் ரேஷன் கடையில் உண்ணாவிரதம் இருப்பதால் பரபரப்பு நிலவுகிறது. சென்னை எர்ணாவூர் அருகே கன்னியாலால் லே அவுட் தெருவில் ரேஷன் கடை உள்ளது. இங்கு, 1500 குடும்ப அட்டைதாரர்கள் பொருட்கள் வாங்குகின்றனர். பொங்கலுக்கு இந்த ரேஷன் கடையில் இலவச வேட்டி, வேலை வழங்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இதுசம்பந்தமாக மார்க்சிஸ்ட் கட்சியை சேர்ந்த திருவொற்றியூர் நகராட்சி தலைவர் ஜெயராமனிடம் பொதுமக்கள் முறையிட்டனர். இதையடுத்து, ஜெயராமன் இன்று காலை அந்த ரேஷன் கடைக்கு வந்தார். ‘ஏன் வேட்டி, சேலை வழங்கவில்லை?’ என ஊழியர்களிடம் கேட்டார். ‘நீங்கள் அதுபற்றி தாசில்தாரிடம்தான் கேட்க வேண்டும்’ என்று ஊழியர்கள் கூறினர். இதனால் ரேஷன் கடை முன்பு நகராட்சி தலைவர் உண்ணாவிரதம் மேற்கொண்டார். ‘‘வேட்டி, சேலை வழங்கும்வரை இந்த இடத்தைவிட்டு நகர மாட்டேன்’ என்று நகராட்சி தலைவர் கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது. |
612 | 1/24/2011 5:07:18 PM | மாவட்ட மசாலா | தடுப்பணையில் மூழ்கி பாட்டி, பேத்தி பலி | கோவை: கோவை சீரபாளையத்தை சேர்ந்தவர் செல்வராஜ். பால் வியாபாரி. மகள் இந்திராணி(18), தனது பாட்டி மாணிக்கத்துடன்(60) நேற்று மாலை அருகில் உள்ள கோயிலுக்கு சாமி கும்பிட சென்றார். கோயில் அருகில் உள்ள தடுப்பணைக்கு சென்ற இந்திராணி தண்ணீரில் தவறி விழுந்தார். அவரை காப்பாற்றுவதற்காக பாட்டி மாணிக்கமும் தண்ணீரில் இறங்கினார். இதில், இருவரும் தண்ணீரில் மூழ்கி மூச்சுத்திணறி இறந்தனர். மதுக்கரை போலீசார் விசாரிக்கின்றனர். |
613 | 1/24/2011 5:07:56 PM | மாவட்ட மசாலா | வியாபாரிகளிடம் கொள்முதல் 2 ஊழியர்கள் சஸ்பெண்ட் | கும்பகோணம்: விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்த நெல்லை நியாயமான விலைக்கு விற்று உடனடியாக பணம் பெறுவதற்கு வசதியாக அரசு கொள்முதல் நிலையங்களை திறந்து உள்ளது. ஆனால் இங்கு வியாபாரிகளும் தங்களிடம் உள்ள நெல்லை விற்கின்றனர். இதை தடுக்க அதிகாரிகள் கொள்முதல் நிலையங்களில் திடீர் ஆய்வு நடத்துகின்றனர். பாபநாசம் தாலுகா மருத்துவக்குடி கொள்முதல் நிலையத்தில் வியாபாரிகளிடம் நெல் கொள்முதல் செய்யபட்டது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அந்த கொள்முதல் நிலையத்தின் பட்டியல் எழுத்தர் சந்திரசேகரன், உதவியாளர் ராஜராஜன் ஆகியோரை சஸ்பெண்ட் செய்து முதுநிலை மண்டல மேலாளர் தேவதாஸ் உத்தரவிட்டார். |
614 | 1/24/2011 5:08:33 PM | மாவட்ட மசாலா | சர்வதேச கணக்கு தணிக்கை முறை ஏப்ரல் முதல் அமலாகிறது | கோவை: கோவையில் இந்திய பட்டயக்கணக்காளர் சங்க (ஐசிஏஐ) தலைவர் அமர்ஜித் சோப்ரா கூறியதாவது: சர்வதேச கணக்கு தணிக்கை அறிக்கை முறை இந்தியாவில் ஏப்ரலில் அறிமுகமாகிறது. புதிய முறைக்கு தயாராக பட்டயக்கணக்காளர்கள், சிஏ மாணவர்களுக்கு பல்வேறு கருத்தரங்குகள், பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. நாடு முழுவதும் நவீன தொழில்நுட்ப உதவியுடன், பிப்ரவரி 1ம் தேதி முதல் ‘வெர்சுவல் கிளாசஸ்‘ என்ற நவீன வகுப்பறைகள் திட்டம், 25 மையங்களில் துவங்கப்படுகிறது. இதன் மூலம் ஒரு இடத்தில் நிபுணர்கள் நடத்தும் பாடத்தை அனைத்து மையங்களிலும் மாணவர்கள் ஒரே நேரத்தில் கேட்க முடியும் என்றார். |
615 | 1/24/2011 5:08:55 PM | மாவட்ட மசாலா | மார்ச் 6ம் தேதி வேலூரில் புதிய நீதிக்கட்சி மாநாடு | ஆரணி: திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி தொகுதி புதிய நீதிக்கட்சி செயல்வீரர்கள் கூட்டம் அருணகிரிசத்திரத்தில் நேற்று நடந்தது. மாநில பொதுக்குழு உறுப்பினர் எத்திராஜ் தலைமை தாங்கினார். பின்னர் கட்சி நிறுவன தலைவர் ஏ.சி.சண்முகம் கூறியதாவது: மார்ச் 6ம் தேதி வேலூரில் கட்சி மாநில மாநாடு நடைபெற உள்ளது. முதலியார்கள், பிள்ளைமார்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு, மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்பதை வலியுறுத்தி இந்த மாநாடு நடைபெறுகிறது. ஆரணியில் மத்திய ஜவுளி பூங்கா அமைக்கப்படும் என அறிவித்த மத்திய அமைச்சர் தயாநிதி மாறனுக்கு கட்சி சார்பில் நன்றியையும் பாராட்டையும் தெரிவித்துக்கொள்கிறேன் என்றார். |
616 | 1/24/2011 5:09:23 PM | மாவட்ட மசாலா | பாசன நீர் பற்றாக்குறை 30% ஆக உயரும் அபாயம் | கோவை: கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலை.யில் நீர் மேலாண்மை குறித்த கருத்தரங்கு நடந்தது. துணைவேந்தர் முருகேசபூபதி பேசியதாவது: மழை குறைந்தாலும், அதிகரித்தாலும் விவசாய உற்பத்தி பாதிப்படைகின்றது. இதற்கு முக்கிய காரணம் சரியான நீர் மேலாண்மை இல்லாததே. தற்போது 15 சதவீதம் பாசன நீர் பற்றாக்குறை காணப்படுகிறது. 2025ம் ஆண்டு இது 30 சதவீதமாக உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. சொட்டு நீர் பாசனம் உள்ளிட்ட நவீன முறைகள் மூலம் தண்ணீரை சிக்கனத்துடன் பயன்படுத்தி விவசாயம் செய்ய வேண்டும். இதன் மூலம், உற்பத்தியையும் 30 சதவீதம் அதிகரிக்கலாம் என்றார். |
617 | 1/24/2011 5:11:54 PM | தலையங்கம் | மீனவர் உயிருக்கு உத்தரவாதமில்லை | தமிழக மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கப் போனால், அங்கு ஏற்கனவே இருக்கும் கடல் கொந்தளிப்பு, சூறாவளி, திமிங்கலம் போன்ற ஆபத்துக்களோடு இப்போது, இலங்கை கடற்படை என்ற புதிய ஆபத்தும் சேர்ந்துள்ளது. எல்லை தெரியாமல் தாண்டிப்போய், வலைகளை இழந்து, அடி வாங்கி திரும்பும் நாகை, ராமேஸ்வரம் மீனவர்கள் சில நேரங்களில் உயிரை பறிகொடுக்க நேரிடுகிறது. அவர்களில் ஒருவர்தான் நாகை மாவட்ட மீனவர் ஜெயக்குமார்.நாகை மாவட்டத்தை சேர்ந்த மீனவர்கள் ஜெயக்குமார், அவரது தம்பி செந்தில், சித்தப்பா ராஜேந்திரன் ஆகியோர். பைபர் படகில் 3 பேரும் கடலுக்கு மீன்பிடிக்க சென்றுள்ளனர். இரவு நேரத்தில் சேது சமுத்திர திட்டப்பணிகள் நடக்கும் இடத்துக்கு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது இலங்கை கடற்படையினர் அங்கு வந்துள்ளனர். துப்பாக்கியை காட்டி மிரட்டி, படகில் இருந்த 3 மீனவர்களையும் கடலில் குதிக்கும்படி கூறினர். செந்திலும், ராஜேந்திரனும் குதித்தனர். ஜெயக்குமாருக்கு நீச்சல் தெரியாது என்பதால் அவர் குதிக்கவில்லை. மீனவர்கள் படகுக்கு வந்த கடற்படை வீரர்கள் 2 பேர், ஜெயக்குமாரை தாக்கி, அவரது கழுத்தில் நைலான் கயிற்றால் சுருக்கு போட்டனர். கயிற்றின் ஒரு முனையை கையில் பிடித்தபடி தங்கள் படகில் ஏறிக் கொண்டனர். பின்னர், மீனவர்கள் படகை சுற்றி ரவுண்ட் அடித்தனர். ஜெயக்குமாரின் கழுத்தில் இருந்த கயிறு இறுகியது. அவர் உயிருக்கு போராடினார். இதைப் பார்த்ததும் கடலில் நீந்திக் கொண்டிருந்த இருவரும் பதற்றத்துடன் படகில் ஏறினர். அதற்குள் கயிறு இறுக்கி ஜெயக்குமார் இறந்துவிட்டார். இந்தக் கொடுமை போதாதென்று மீனவர்களின் வலைகளை அறுத்து எறிந்த இலங்கை கடற்படையினர் அவர்களை விரட்டியடித்துள்ளனர். இதையடுத்து செந்திலும், ராஜேந்திரனும் ஜெயக்குமாரின் சடலத்துடன் கரைக்கு திரும்பினர். உயிரிழந்த மீனவர் ஜெயக்குமார் குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ள முதல்வர் கருணாநிதி, வி5 லட்சம் நிவாரண நிதியும் வழங்கி உள்ளார்.ம¦ன்பிடிக்க கடலுக்கு செல்லும் தமிழக மீனவர்கள் எல்லை தாண்டிப் போவதும், இலங்கை கடற்படையால் தாக்கப்படுவதும் புதிதல்ல. கச்சத்தீவு உரிமையை பறிகொடுத்ததில் இருந்து இதுபோல் தமிழக மீனவர்கள் பலியாவது தொடர்கதையாகி விட்டது. இலங்கையில் இனப் போராட்டம் நடந்தபோது, இதுபோல் மீனவர்களை சந்தேகப்பட்டு சுடுவது நடந்தது. அங்கு நிலைமை மாறியபிறகும், தமிழக மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்படுவதை ஏற்க முடியாது. இந்திய கடற்படையினர் ரோந்து பணியை தீவிரப்படுத்தினால் இந்த நிலைமை மாறும். |
618 | 1/24/2011 5:13:58 PM | தமிழகம் | கல்விக்குழு திருவிழா | மதுராந்தகம், - முதுகரை நடுநிலைப் பள்ளியில் கல்விக்குழு திருவிழா நடந்தது. மதுராந்தகம் வளமையம் சார்பில் முதுகரை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் கிராம கல்விக்குழு திருவிழா 3 நாள் நடந்தது. ஒருங்கிணைப்பாளர் கஜபதி தலைமை வகித்தார். கிருஷ்ணசாமி வரவேற்றார். வட்டார வளமைய மேற்பார்வையாளர் ஜோதிவேல், குழந்தைகள் உரிமை மற்றும் பெண் உரிமை சட்டம் பற்றி விளக்கி பேசினார். உதவி தொடக்கக் கல்வி அலுவலர் மணி கிராம கல்விக்குழுவின் செயல்பாடு, பள்ளிகளின் இன்றைய கல்வி முறை குறித்து பேசினார். இதில் ஆசிரியர் பயிற்றுநர்கள் உமாபதி, அலெக்ஸ் பாண்டியன் உள்பட பலர் பங்கேற்றனர். தலைமையாசிரியை தேவி நன்றி கூறினார். |
619 | 1/24/2011 5:15:13 PM | தமிழகம் | தமிழக மீனவர்கள் மீதான தாக்குதலுக்கு முற்றுப்புள்ளி | மதுரை: தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல் பிரச்னைக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கும்படி பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து வலியுத்துவேன் என்று மத்திய அமைச்சர் வாசன் கூறினார். தூத்துக்குடி துறைமுகத்தில் இரண்டாவது வடக்கு சரக்கு தளம் கட்டுமானப் பணிக்கான அடிக்கல் நாட்டு விழா மற்றும் பயணிகள் முனையம் துவக்க விழாவில் பங்கேற்கும் மத்திய கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர் வாசன் இன்று காலை மதுரையில் நிருபர்களிடம் கூறியதாவது:தமிழகம் உள்பட 5 மாநில சட்டசபை தேர்தல் விரைவில் நடக்க உள்ளது. இதில் அகில இந்திய காங்கிரஸ் உரிய நேரத்தில் கூட்டணி கட்சிகளுடன் கலந்து பேசி அந்தந்த மாநிலத்தில் வெற்றிக்கான வியூகத்தை வகுக்கும். இலங்கை கடற்படையினர் தமிழக மீனவரை சுட்டுக் கொல்வதும், தாக்குவதும் வேதனைக்குரியது மட்டுமின்றி யாரும் ஏற்றுக்கொள்ள முடியாதது. நாளை டெல்லி சென்றதும் பிரதமர் மன்மோகன் சிங், வெளியுறவு அமைச்சர் கிருஷ்ணா ஆகியோரைச் சந்தித்து இந்த கொடூரச் செயலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமெனக் கோருவேன்.ஜனநாயகத்தில் நாடாளுமன்றம் என்பது மக்கள் பிரச்னைகளை தீர்க்க கூடிய, நல்ல முடிவுகளை ஏற்படுத்தக் கூடியது. அதற்கு இடையூறாக செயல்படும் எதிர்க்கட்சிகள் நாட்டில் ஜனநாயகம் தழைக்க நாடாளுமன்றத்தில் விவாதத்தில் ஈடுபட வேண்டும், அதன் மூலம் அவர்களின் சந்தேகங்களை தீர்த்து, நல்ல முடிவுகளை காண வேண்டும். இதைத்தான் மக்கள் எதிர்பார்க்கிறார்கள் என்பதை எதிர்க்கட்சிகள் உணர வேண்டும். இவ்வாறு மத்திய அமைச்சர் வாசன் கூறினார். |
620 | 1/24/2011 5:15:52 PM | சினிமா(ரீல்மா) | விபசார ரெய்டில் சிக்கிய பிரபல நடிகை போலீசுக்கு ‘தண்ணி’ காட்டியது எப்படி? | பெங்களூர், - விபசார ரெய்டில் சிக்கிய நடிகை யமுனா, கஸ்டமரை கையாள்வதில் சில டெக்னிக்குகளை கையாண்டு வந்திருக்கிறார். இதனால், போலீசுக்கு ‘தண்ணி’ காட்டிவிட்டு நீண்ட காலமாக படுஜோராக தொழில் நடத்தி வந்திருப்பது, போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. ‘மௌன போராட்டம்’, ‘பிறந்த வீட்டு பட்டுப் புடவை’ போன்ற தமிழ் படங்களில் நடித்த பிரபல கன்னட நடிகை யமுனா. பல படங்களில் அம்மன் வேடத்தில் நடித்துள்ளார். இவர் விபசார தொழிலிலும் இறங்கினார். இவருக்கு புரோக்கராக செயல்பட்டவர் சுரக்ஷித். நடிகை யமுனா உள்பட பல பெண்களை வைத்து இவர் விபசார தொழில் நடத்தி வந்தார். ரிஸ்க்கான தொழில் என்பதால், மிகவும் கவனமாக செயல்பட்டுள்ளார் நடிகை. ஸ்டார் ஓட்டல்களில் புரோக்கர் பெயரில்தான் அறைகளை பதிவு செய்வது வழக்கம். இரண்டில் இருந்து மூன்று மணி நேரங்கள் மட்டுமே ‘டைம்’ ஒதுக்கித் தருவார் யமுனா. அதற்கப்புறம் அன்றைய தினம் அந்த ஓட்டலுக்கு திரும்பவும் வர மாட்டார். ஒரு கஸ்டமருக்கு ஒரு நாள்தான் டேட் கொடுப்பார். மறுமுறை அந்த கஸ்டமரை தவிர்த்து விடுவார். கொட்டிக் கொடுத்தாலும் இரண்டாவது முறையாக நடிகையை அந்த கஸ்டமர் சந்திக்க முடியாது. இப்படி நடிகை யமுனாவின் கண்டிஷன்கள் நீள்கிறது. இதனால் போலீசாரால் நடிகையை எங்குமே வளைக்க முடியவில்லை. இந்நிலையில் கடந்த வாரம் இவரை குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். ‘‘கஸ்டமர் லிஸ்ட்டை புதுப்பித்துக் கொண்டே வந்திருக்கிறார் சுரக்ஷித். எல்லோரும் விரும்பும் வீக்என்ட் ஜாலிக்கு யமுனா எப்போதும் ஒப்புக் கொள்வதில்லை’’ என்கிறார் பெங்களூர் குற்றப்பிரிவு உதவி கமிஷனர் லட்சுமண்.யமுனா கும்பலிடமிருந்து இரண்டு கார்கள், வாடிக்கையாளர் நந்தகுமார் என்பவரிடம் இருந்து ரூ.2 லட்சம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். யமுனா, சுரக்ஷித், நந்தகுமார் ஆகியோர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு ரிமாண்ட் செய்யப்பட்டுள்ளனர். |
621 | 1/24/2011 5:16:10 PM | மாவட்ட மசாலா | நாகையில் 10,000 மீனவர் ஸ்டிரைக் | வேதாரண்யம்: நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த புஷ்பவனத்தை சேர்ந்த மீனவர் ஜெயக்குமார் நேற்று முன்தினம் கடலுக்கு மீன் பிடிக்க சென்றபோது இலங்கை கடற்படையினரால் படுகொலை செய்யப்பட்டார். இந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி வந்து அட்டூழியம் செய்யும் இலங்கை கடற்படையினரை கண்டித்து புஷ்பவனம் பகுதியை சேர்ந்த 200க்கும் அதிகமான மீனவர்கள் இன்று கடலுக்கு செல்லவில்லை. இதே கோரிக்கையை வலியுறுத்தி நாகூர், பட்டினச்சேரி, சாமந்தான்பேட்டை, கீச்சாங்குப்பம், அக்கரைப்பேட்டை, கல்லார் உள்பட நாகை தாலுகாவை சேர்ந்த 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்களும் இன்று கடலுக்கு செல்லவில்லை. |
622 | 1/24/2011 5:18:16 PM | குற்றம் | காதல் போட்டியில் கல்லூரி மாணவி கொலையா? | ஊத்தங்கரை, - கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அருகே கொண்டம்பட்டியை சேர்ந்த கோவிந்தன் மகள் கனகலட்சுமி (21). செங்கத்தில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்தார். கடந்த வெள்ளிக்கிழமை மாலை கல்லூரிக்கு சென்றவர் வீட்டுக்கு வரவில்லை. சனிக்கிழமை காலை கொண்டம்பட்டி ரோட்டில் கனகலட்சுமி சடலமாக கிடந்தார். இவ்வழக்கை விசாரிக்க 3 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.கனகலட்சுமி தினமும் டைரி எழுதும் பழக்கம் உடையவர். இந்த டைரியை போலீசார் கைப்பற்றி உள்ளனர். கடந்த 2 மாதமாக கனகலட்சுமி செல்போனில் பேசிய உரையாடல்கள் 387 பக்கத்தில் சேகரிக்கப்பட்டுள்ளது. இவற்றை ஆராய்ந்து தனிப்படையின் ஒருபிரிவினர் விசாரித்து வருகின்றனர். மற்றொரு தனிப்படையினர் கனகலட்சுமியின் பள்ளி, கல்லூரி நண்பர்களிடம் விசாரிக்கின்றனர். மாணவியின் ஊரான கொண்டம்பட்டியில் தங்கி உள்ள போலீசார், விசாரணை வளையத்திற்குள் இருப்பவர்களின் செல்போன் அழைப்புகள் யார், யாருக்கு சென்றுள்ளது என்று விசாரிக் கின்றனர். அவர்களது செல்போனில் சங்கேத அடிப்படையில் பெயர்களை போட்டு பதிவு செய்துள்ள போன் நம்பர்களிலும் விசாரிக்கின்றனர். அதேசமயத்தில் கொடூரமாக சம்பவம் நடந்திருப்பதால் ஒன்றுக்கும் மேற்பட்டோர் தான் கொலை சம்பவத்தில் ஈடுபட்டு இருக்க முடியும். அதிகம் பேருடன் கனகலட்சுமி நட்புடன் பழகியிருப்பதால் காதல் போட்டியில் ஏற்பட்ட தகராறில் கொலை நடந்திருக்கலாம் எனவும் போலீசார் சந்தேகிக்கின்றனர். |
623 | 1/24/2011 5:18:21 PM | மாவட்ட மசாலா | பாளை. மத்திய சிறையில் கழுத்தை இறுக்கி கைதி கொலை | நாகர்கோவில்: குமரி மாவட்டம் குருந்தன்கோடு அருகே உள்ள வீர விளையை சேர்ந்தவர் சுப்பிரமணியன் என்ற ஆசி (45). கொலை வழக்கு ஒன்றில் ஆயுள் தண்டனை பெற்று பாளை. மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில் கடந்த 10&ம் தேதி சுப்பிரமணியனை நெஞ்சுவலி காரணமாக சிறைக்குள் இருந்த மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக அவர் நெல்லை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே சுப்பிரமணியன் இறந்தார். பாளை மருத்துவமனையில் சுப்பிரமணியன் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. சுப்பிரமணியன் கழுத்தில் துண்டால் இறுக்கியதற்கான அடையாளம் காணப்படுவதாக பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே அவரை துண்டால் கழுத்தை இறுக்கி கொலை செய்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. சுப்பிரமணியன் சக கைதிகளுக்கு அவ்வப்போது கஞ்சா விற்று வந்துள்ளதாகவும், இதற்கான பணத்தை சில கைதிகள் அவருக்கு கொடுக்காமல் ஏமாற்றி வந்தாகவும் இதனால் ஏற்பட்ட முன் விரோதத்தில் இவர் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்றும் சந்தேகம் எழுந்துள்ளது. |
624 | 1/24/2011 5:19:18 PM | தமிழகம் | ஆலந்தூரில் 75 மையங்களில் 18 ஆயிரம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து | ஆலந்தூர், - ஆலந்தூர் நகராட்சிக்குட்பட்ட ஆலந்தூர், ஆதம்பாக்கம், பழவந்தாங்கல், நங்கநல்லூர் போன்ற பகுதிகளில் உள்ள 75 மையங்களில் போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெற்றது. ஆலந்தூர் காந்தி மருத்துவமனையில், நகராட்சி தலைவர் துரைவேலு, ஒரு குழந்தைக்கு சொட்டு மருந்து வழங்கி முகாமை தொடங்கி வைத்தார். நகராட்சி ஆணையர் மனோகரன், பொறியாளர் மகேசன், சுகாதார அலுவலர் பழனிச்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். முகாமில், கவுன்சிலர்கள் புஷ்பா, கிருஷ்ணமூர்த்தி, சிவபாஸ்கர், சத்யா, சீனிவாசன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முகாமில், ‘18 ஆயிரம் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கப்பட்டது’ என்று கமிஷனர் மனோகரன் தெரிவித்தார். |
626 | 1/24/2011 5:22:45 PM | மாவட்ட மசாலா | சபரிமலை புல்மேடு பகுதியில் அனாதையாக கிடந்த பைக் | திருவனந்தபுரம்: சபரிமலையில் மகர ஜோதியை தரிசித்துவிட்டு திரும்பும்போது புல்மேட்டில் நடந்த விபத்தில் சிக்கி 102 பேர் பலியாயினர். இந்த சம்பவம் குறித்து கேரள குற்றப்பிரிவு எஸ்.பி சுரேந்திரன் தலைமையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே சம்பவ இடத்தில் தமிழக பதிவெண் கொண்ட பைக் ஒன்று அனாதையாக கிடந்தது. அதன் உரிமையாளர் யார் என்பது குறித்து போலீசார் இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இதையடுத்து பைக் உரிமையாளரை கண்டுபிடிக்க எஸ்.ஐ. தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. புல்மேடு விபத்தில் சிக்கி காயமடைந்தவர்களிடமும் விசாரணை நடத்த குற்றப்பிரிவு போலீசார் தீர்மானித்துள்ளனர். இதற்காக தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களிலும் நேரடியாக விசாரணை நடத்த தீர்மானித்துள்ளனர். விபத்தில் பலியான பக்தர்களிடம் இருந்து நகை, பணம், செல்போன் ஆகியவற்றை ஒரு கும்பல் கொள்ளையடித்து சென்றது விசாரணையில் தெரியவந்தது. இது தொடர்பாக வண்டிபெரியார் பகுதியை சேர்ந்த வினோத் (30) என்ற டாக்சி டிரைவரை போலீசார் கைது செய்துள்ளனர். |
627 | 1/24/2011 5:25:16 PM | தமிழகம் | கல்விக் கட்டணத்தை அரசு நிர்ணயிக்ககூடாது ஜி.விசுவநாதன் வலியுறுத்தல் | புதுச்சேரி: விஐடி பல்கலைக்கழக வேந்தர் டாக்டர் ஜி.விசுவநாதன் புதுவையில் நிருபர்களிடம் கூறியதாவது: இந்தியாவில், பள்ளிப்படிப்பை முடித்து விட்டு 12 சதவீதம் உள்ளவர்களே உயர்கல்வி வாய்ப்பை பெறுகிறார்கள். இது மற்ற நாடுகளை காட்டிலும் மிக குறைவாக உள்ளது. கல்வித்துறையின் வளர்ச்சிக்கு சீர்திருத்தம் அவசியமானது. புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்த வேண்டும். கல்வியின் தரத்தை உயர்த்த வேண்டும். அதற்கு தடையாக இரண்டு பிரச்னைகள் உள்ளன. ஊழல், வியாபார நோக்கம். இந்த இரண்டையும் அகற்ற வேண்டும். கல்வி நிறுவனங்களுக்கு அரசு, அதிக கட்டுப்பாடுகள் விதித்தால் ஊழல் அதிகம் நடக்க வாய்ப்புள்ளது. கல்வி நிறுவனங்கள் ஆரம்பிக்க 14 தடையில்லா சான்றிதழ்கள் வாங்க வேண்டியுள்ளது. இதற்கான செலவு, மறைமுகமான செலவு அதிகம் ஆகிறது. மத்திய அரசு பொறுப்பேற்று ஒன்றரை வருடங்கள் கடந்து விட்ட பிறகும் கல்வியில் விரிவாக்கம் கொண்டுவரப்படவில்லை. தொழில்நுட்பம், மருத்துவ படிப்புகளில் கொண்டுவரப்படவுள்ள கட்டண முறைப்படுத்தல் சட்டம் தவறாக பயன்படுத்த அதிக வாய்ப்பு உள்ளது. கல்வி கட்டணத்தை அரசு நிர்ணயம் செய்யக்கூடாது. ஒவ்வொரு கல்வி நிறுவனங்களின் உள் கட்டமைப்பிலும், தரத்திலும் வித்தியாசம் உள்ளது. அதற்கு பதிலாக அரசு பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளின் உள்கட்டமைப்பையும், தரத்தையும் அதிகப்படுத்த வேண்டும். தமிழகத்தில் முதல் தலைமைமுறையாக பொறியியல் படிக்கும் மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை வழங்கப்படும் திட்டத்தை வரவேற்கிறோம். அதுபோல் தனியார் கல்வி நிறுவனங்களில் படிக்கும் மாணவர்களுக்கு உயர்கல்வி உதவி தொகையை வழங்க வேண்டும். படிக்கும் மாணவர்களுக்கு வட்டி இல்லாமல் கடனுதவி வழங்க வேண்டும். உயர்கல்வியில் முன்னேற்றம் காண நிறைய பல்கலைக்கழகங்கள் உருவாக வேண்டும். இவ்வாறு டாக்டர் ஜி.விசுவநாதன் கூறினார். |
628 | 1/24/2011 5:27:26 PM | மாவட்ட மசாலா | மேட்டூர் அணை நீர் திறப்பு நாளை மாலை நிறுத்தம் | மேட்டூர்: மேட்டூர் அணையின் கிழக்கு, மேற்கு கால்வாய் மூலம் சேலம் மாவட்டத்தில் 16, 433 ஏக்கர், நாமக்கல் மாவட்டத்தில் 11,337 ஏக்கர், ஈரோடு மாவட்டத்தில் 17,230 ஏக்கர் நிலமும் பாசன வசதி பெறும். இதற்காக, மேட்டூர் அணையில் இருந்து கடந்த ஆகஸ்ட் மாதம் 1ம் தேதி முதல் ஜனவரி 15ம் தேதி வரை தண்ணீர் திறந்து விடப்படும். இந்த ஆண்டு விவசாயிகளின் கோரிக்கை ஏற்று, தண்ணீர் திறப்பு மேலும் 10 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டது. இந்நிலையில் நாளை மாலை 6 மணி முதல் கால்வாய் பாசனத்திற்கான தண்ணீர் திறப்பு மூடப்படுகிறது. மேட்டூர் அணை நீர் மட்டம் இன்று காலை நிலவரப்படி 110.54 அடியாக இருந்தது. |
629 | 1/24/2011 5:31:37 PM | குற்றம் | பெண்ணை கட்டிப்பிடித்து முத்தம் : தனியார் நிறுவன மேலாளர் கைது | பெரம்பூர்: ரோட்டில் நடந்து சென்ற பெண்ணை கட்டிப்பிடித்து முத்தமிட்ட தனியார் நிறுவன மேலாளர் கைது செய்யப்பட்டார். கொடுங்கையூரில் நடந்த இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னை கொடுங்கையூர் கண்ணதாசன் நகர் முதலாவது பிளாக் தெருவில் வசிப்பவர் சுசிலா (45) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் நேற்று இரவு, அதே பகுதியில் உள்ள மளிகைக் கடைக்கு சென்று பொருட்கள் வாங்கிக் கொண்டு வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது, அதே பகுதியில் உள்ள ஒரு டாஸ்மாக் கடையில் இருந்து வாலிபர் ஒருவர் போதையில் தள்ளாடியபடியே வெளியே வந்தார்.சுசிலாவை பின்தொடர்ந்து வந்த அந்த நபர் திடீரென, கண் இமைக்கும் நேரத்தில் அவரை கட்டிப்பிடித்து கன்னத்தில் முத்தமிட்டார். பலாத்காரம் செய்யவும் முயன்றார். இதை சற்றும் எதிர்பாராத சுசிலா, அலறி கூச்சலிட்டார். அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து வாலிபரை பிடித்து தர்மஅடி கொடுத்தனர். பின்னர் கொடுங்கையூர் போலீசில் சுசிலா புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் பொன்ராஜ் வழக்கு பதிந்து போதை வாலிபரை கைது செய்து விசாரித்தார். அவர், கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த கிரிஸ் (29) என்பதும், தனியார் நிறுவனம் ஒன்றில் மேலாளராக பணிபுரிவதும் தெரிந்தது. கொடுங்கையூர் விவேகானந்தா நகரில் வீடு வாடகைக்கு எடுத்து தங்கியுள்ளார். இந்த சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தியது. |
630 | 1/24/2011 5:32:42 PM | மாவட்ட மசாலா | நக்சலைட்களை ஒடுக்க நடவடிக்கை மலைக்கிராம மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் | வருசநாடு: தேனி, திண்டுக்கல் மலைப்பகுதிகளில் நக்சலைட் நடமாட்டம் இருப்பது கடந்த 2007ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து மலைப்பகுதிகளில் அதிரடிப்படையினர் தொடர்ந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். தேனி மாவட்டம், வருசநாடு பகுதியில் உள்ள மலைப்பகுதிகளில் ஏராளமான கிராமங்கள் உள்ளன. இப்பகுதிகளில் வசிப்பவர்கள் அனைவரும் விவசாயிகளாகவோ அல்லது விவசாய தொழிலாளர்களாகவோ உள்ளனர். இவர்களை நக்சலைட்கள் எளிதில் மூளைச்சலவை செய்து வசப்படுத்திக் கொள்ளக் கூடும் என்ற உளவுத்துறையின் தகவலை தொடர்ந்து நக்சலைட் ஒழிப்பில் காவல்துறையுடன், வருவாய்துறையும் கைகோர்த்துக் கொண்டுள்ளது. மலைக்கிராம மக்களுக்கு தேவையான வேலைவாய்ப்பு, அடிப்படை வசதிகள், வங்கிக்கடன், தொழிற்பயிற்சி, வளர்ச்சிப்பணிகள் உள்பட பலவற்றையும் செய்து தர அதிகாரிகள் முன்வந்துள்ளனர்.வருசநாடு பகுதியில் உள்ள காமராஜபுரம், கொடிக்குளம், உறைகுண்டான் கேணி, ராமசாமி நகர், காந்தி கிராமம், ஐந்தறை புளி, பாலூத்து, அரசரடி, வெள்ளிமலை, பொம்முராஜபுரம், இந்திரா நகர், மஞ்சனூத்து, நொச்சிஓடை, யானை கஜம் அருகே உள்ள பளியர் குடியிருப்பு உள்ளிட்ட 10 கிராமங்களை தத்தெடுத்து அனைத்து வசதிகளையும் செய்து தர முடிவு செய்யப்பட்டது. இதற்கான விழா இன்று காலை வருசநாடு அருகே உள்ள காமராஜபுரத்தில் நடந்தது. இதில் டிஜிபி லத்திகாசரண் மற்றும் உயர் போலீஸ் அதிகாரிகளும் தேனி கலெக்டர் முத்துவீரன், மாவட்ட வருவாய் அலுவலர் பிருந்தாதேவி மற்றும் வருவாய் துறையினரும், மயிலாடும்பாறை யூனியன் தலைவர் தமிழரசன் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர். பயனாளிகளிடம் பெற்ற மனுக்களின் அடிப்படையில் பரிசீலனை செய்யப்பட்டு, அவர்களுக்கு தேவையான அனைத்து நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டன. தொடர்ந்து டிஜிபி லத்திகாசரண் வருசநாடு சென்று அங்கு கட்டப்பட்டுள்ள புதிய காவல் நிலையத்தை திறந்து வைத்தார். |
631 | 1/24/2011 5:35:34 PM | தமிழகம் | பக்தர்கள் நெரிசலில் சிக்கி தவிப்பதை தவிர்க்க சபரிமலையில் 100 கோடியில் திட்டம் ஓராண்டில் பணிகளை முடிக்க முடிவு | கூடலூர்: சபரிமலையில் பக்தர்களின் நெரிசலை தவிர்க்கும் வகையில் ரூ.100 கோடி செலவில் பல்வேறு பணிகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. இந்தப் பணிகள் அனைத்தையும் அடுத்த மண்டல பூஜை தொடங்குவதற்கு முன்பு முடிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. கேரள மாநிலம் சபரிமலையில் உள்ள ஐயப்பன் கோயிலுக்கு ஆண்டுதோறும் மண்டல மற்றும் மகர விளக்கு காலங்களில் கோடிக்கணக்கான பக்தர்கள் இருமுடி கட்டி வருகின்றனர். இதுதவிர, மாதாந்திர பூஜைகளின்போதும் ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். மண்டல, மகரஜோதி காலத்தில் பக்தர்கள்பல மணி நேரம் வரிசையில் காத்திருந்து சுவாமியை தரிசிக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது.கடந்த 14&ம் தேதி மகரஜோதியை தரிசித்துவிட்டு புல்மேடு பாதை வழியாக திரும்பிக் கொண்டிருந்த பக்தர்களில் 102 பேர் நெரிசலில் சிக்கி பலியாயினர். இது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சபரிமலையில் நெரிசலை குறைக்கவும் பக்தர்களின் பாதுகாப்பு குறித்தும் உரிய கவனம் செலுத்தும்படி மாநில அரசுக்கும், தேவசம் போர்டுக்கும் கேரள ஐகோர்ட் மற்றும் பல்வேறு அமைப்புகள் வலியுறுத்தியுள்ளன. இதையடுத்து மாஸ்டர் பிளான் திட்டத்தின் கீழ் சபரிமலையில் ரூ.100 கோடியில் பல்வேறு வசதிகள் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இந்த திட்டங்களை நடைமுறைப் படுத்துவது தொடர்பாக கேரள மாநிலம் நெடும்பாஞ்சேரியில் ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு பிரதமரின் முதன்மைச் செயலாளர் கே.ஏ.நாயர் தலைமை வகித்தார். இதில் எடுக்கப்பட்ட முடிவுகள் வருமாறு:சபரிமலைக்கு செல்லும் பக்தர்களின் வாகனங்கள் நிறுத்தப்படும் நிலக்கல் பகுதியில் தற்போது 4 ஆயிரம் வாகனங்கள் மட்டுமே நிறுத்த முடியும். அந்த இடத்தை 12 ஆயிரம் வாகனங்கள் நிறுத்தும் வகையில் விரிவுபடுத்தப்படும். ந¤லக்கல்லில் இருந்து பக்தர்கள் பம்பை செல்ல கேரள அரசு போக்குவரத்துக்கழக பஸ்களை மட்டுமே இயக்க வேண்டும். பம்பை மற்றும் சன்னிதானத்தில் கூட்டத்தை கட்டுப்படுத்த நிலக்கல்லில் இரண்டு இடங்களில் பக்தர்கள் தங்கிச் செல்லும் வகையில் பல்வேறு வசதிகளுடன் கூடிய புதிய கூடங்கள் கட்டப்படும். சன்னிதானத்தில் நடைபந்தல் இரண்டடுக்காக மாற்றப்படும். இதனால், 60 சதுர அடி பாதை கிடைக்கிறது. சன்னிதானத்துக்கு செல்லவும், அங்கிருந்து திரும்பி வரவும் தனித்தனி பாதைகள் அமைக்கப்படும். அப்பம், அரவணை பிரசாத வினியோக சென்டர் வேறு இடத்துக்கு மாற்றப்படும். மேலும் 17 இடங்களில் (க்யூ காம்ப்ளக்ஸ்) வரிசையாக நின்று செல்லும் வகையில் வளாகங்கள் அமைக்கப்படும். இவ்வாறு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இந்தப் பணிகளை உடனடியாக தொடங்கி அடுத்த ஆண்டு மண்டல பூஜைக்குள் முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. |
632 | 1/24/2011 5:36:42 PM | குற்றம் | பஸ்சில் சிறுமி மானபங்கம் அரசு ஊழியர் கைது | திருவனந்தபுரம், - கோழிக்கோடு வெள்ளாயனி பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீஜெயன் (44). விவசாயத்துறையில் டிரைவராக பணியாற்றுகிறார். நேற்று வயநாடு மாவட்டம் மானந்தவாடியில் விவசாயத்துறை அமைச்சர் பங்கேற்ற நிகழ்ச்சிக்கு சென்றிருந்தார். நிகழ்ச்சி முடிந்ததும் வீட்டுக்கு செல்வதற்காக பஸ்சில் ஏறினார் ஸ்ரீஜெயன். பஸ் சிறிது தூரம் சென்றதும் 11 வயது சிறுமியுடன் ஒரு குடும்பம் ஏறியது. இருக்க வேறு இடம் இல்லாததால் அந்த சிறுமி ஸ்ரீஜெயன் அருகே அமர்ந்தார். இரவு நேரம் என்பதால் பஸ்சில் விளக்குகள் அணைக்கப்பட்டிருந்தன. திடீரென சிறுமி கதறி அழத் தொடங்கினார். உடனே, பஸ் டிரைவர் விளக்குகளை போட்டார். பயணிகள் சிறுமியின் அழுகைக்கான காரணம் குறித்து விசாரித்தனர். ஸ்ரீஜெயன் சிறுமியிடம் தவறாக நடந்து கொண்டது தெரியவந்தது. உடனே பஸ் அருகில் உள்ள காவல்நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. போலீசார் விசாரணை நடத்தி ஸ்ரீஜெயனை கைது செய்தனர். |
633 | 1/24/2011 5:37:37 PM | தமிழகம் | வைத்தீஸ்வரன் கோயில் ஊழியர் சம்பள விவகாரம் அரசு உத்தரவுக்கு இடைக்கால தடை | சென்னை: மயிலாடுதுறை தர்மபுர ஆதீனம், சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: எங்களது மடத்தின் கட்டுப்பாட்டின் கீழ் வைத்தீஸ்வரன் கோயில் உள்பட 27 கோயில்கள் உள்ளன. இந்தக் கோயில்களில் பணியாற்றும் குருக்கள் மற்றும் ஊழியர்களுக்கு சம்பள உயர்வு அளிப்பது குறித்து பரிந்துரை செய்ய கமிட்டி ஒன்றை தமிழக அரசு நியமித்தது. இந்தக் கமிட்டி கடந்த மாதம் அறிக்கையை தாக்கல் செய்தது. இந்த அறிக்கையின் படி வைத்தீஸ்வரன் கோயில் குருக்கள் மற்றும் ஊழியர்களுக்கு கோயில் வருமானத்திலிருந்து 40 சதவீத சம்பள உயர்வு அளிக்க வேண்டும் என இந்து அறநிலையத்துறை உத்தரவிட்டுள்ளது. இது சட்ட விரோதமானது. இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ள கோயில்களுக்குதான் அவர்கள் உத்தரவு பிறப்பிக்க முடியும். மடத்தின் கீழ் உள்ள கோயில்களுக்கு பொருந்தாது. சம்பள உயர்வு கோரி வைத்தீஸ்வரன் கோயில் ஊழியர்கள் நாளை உள்ளிருப்பு போராட்டம் அறிவித்துள்ளனர். இதனால் பூஜைகள் பாதிக்கப்படும். எனவே இந்து அறநிலைய உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும். இவ்வாறு கூறியிருந்தார். இந்த வழக்கை நீதிபதி ஜோதிமணி விசாரித்தார். ஆதீனம் சார்பாக மூத்த வக்கீல் கே.துரைசாமி ஆஜரானார். வழக்கை விசாரித்த நீதிபதி, இந்து அறநிலைய உத்தரவுக்கு 4 வார இடைக்கால தடை விதித்தார். 4 வாரத்தில் பதில் மனு தாக்கல் செய்ய நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார். |
634 | 1/24/2011 5:39:06 PM | மாவட்ட மசாலா | வெள்ளானூர் ஊராட்சியில் 8 பேருக்கு கலைஞர் வீடு | ஆவடி: ஆவடி அருகே வெள்ளானூர் ஊராட்சி, அரிக்கம்பேட்டில் 25 பயனாளிகளுக்காக கலைஞர் வீடு கட்டும் பணி நடக்கிறது. இதில் பணி முடிந்து, முதல் கட்டமாக 8 பேருக்கு வீடுகளுக்கான சாவி நேற்று வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு ஊராட்சி தலைவர் அருணாசலம் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் சகாதேவன் முன்னிலை வகித்தார். ப.ரங்கநாதன் எம்எல்ஏ கலந்துகொண்டு வீட்டின் சாவியை பயனாளிகளிடம் ஒப்படைத்தார். வில்லிவாக்கம் ஊராட்சி ஒன்றிய ஆணையாளர்கள் ஆனந்தன், பானுமதி, ஒன்றிய திமுக செயலாளர் கணபதி, பொறியாளர் ஜெகநாதன் கலந்து கொண்டனர். |
635 | 1/24/2011 5:40:00 PM | மாவட்ட மசாலா | தீயில் கருகி பெண் சாவு: கணவர் சீரியஸ் | மதுராந்தகம்: மதுராந்தகத்தில் இளம்பெண் தீயில் கருகி பரிதாபமாக இறந்தார். தீக்காயம் அடைந்த அவரது கணவர், மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார். குடும்பத் தகராறில் இந்த சம்பவம் நடந்ததா என போலீசார் விசாரிக்கின்றனர். மதுராந்தகத்தை சேர்ந்தவர் தேவராஜ் (23). இவரது மனைவி ரதிபாலா (21). இருவரும் அதே பகுதியில் உள்ள டயர் கம்பெனியில் வேலை பார்த்தபோது, காதல் மலர்ந்தது. கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். பின்னர் மதுராந்தகத்தில் வாடகை வீட்டில் குடியேறினர்.இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு, தேவராஜ் வீட்டிலிருந்து அலறல் சத்தம் கேட்டது. அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து பார்த்தனர். கணவனும், மனைவியும் பலத்த தீக்காயத்துடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர். உடனே இருவரையும் மீட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துவ மனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை அளித்தும் பலனின்றி ரதிபாலா நேற்று இறந்தார். தேவராஜுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து ரதிபாலாவின் உறவினர், மதுராந்தகம் போலீசில் புகார் செய்தார். எஸ்ஐ பரந்தாமன் வழக்கு பதிந்து, குடும்ப தகராறில் இந்த சம்பவம் நடந்ததா அல்லது வேறு ஏதும் காரணம் இருக்குமா என்று விசாரித்து வருகிறார். திருமணமாகி 3 மாதமே ஆவதால் மதுராந்தகம் ஆர்டிஓ அண்ணாதுரையும் விசாரித்து வருகிறார். |
636 | 1/24/2011 5:41:49 PM | தமிழகம் | திருவள்ளூர் மாவட்டத்தில் ஸ்டேஷன்களில் போலீசார் பற்றாக்குறை | திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் திருத்தணி, திருவள்ளூர், ஊத்துக்கோட்டை, பொன்னேரி, கும்மிடிப்பூண்டி ஆகியவற்றில் போலீஸ் டிஎஸ்பி உட் கோட்டங்கள் உள்ளன. இதன் கட்டுப்பாட்டில் பள்ளிப்பட்டு, ஆர்கே.பேட்டை, திருத்தணி, கனகம்மாசத்திரம், திருவாலங்காடு, கடம்பத்தூர், மப்பேடு, மணவாளநகர், திருவள்ளூர் நகரம், திருவள்ளூர் தாலுகா, செவ்வாப்பேட்டை, புல்லரம்பாக்கம், பென்னலூர்பேட்டை,ஊத்துக் கோட்டை, வெங்கல், பெரியபாளையம், பாதிரிவேடு, கும்மிடிப்பூண்டி, ஆரம்பாக்கம், கவரப்பேட்டை, மீஞ்சூர், பொன்னேரி, திருபாலைவனம், சோழவரம் போலீஸ் ஸ்டேஷன்கள் வருகின்றன.2009ம் ஆண்டு 80 ஏட்டுகளுக்கு சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் பதவி உயர்வு வழங்கப்பட்டது. 2010ம் ஆண்டும் செப்டம்பர் மாதம் 120 ஏட்டுகளுக்கும் ஜனவரி 1ம் தேதி 51 ஏட்டுகளுக்கும் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் பதவி உயர்வு கொடுக்கப்பட்டது. இதனால் ஒவ்வொரு போலீஸ் ஸ்டேஷனிலும் 6 முதல் 8 சப் இன்ஸ்பெக்டர்கள் உள்ளனர். ஆனால் போலீசார் எண்ணிக்கை கடந்த 20 ஆண்டுக்கு முன் உள்ள எண்ணிக்கையில்தான் இருக்கிறது. ஒரு ஸ்டேஷனுக்கு 20 முதல் 24 போலீசார் இருக்க வேண்டும். தற்போது 4 போலீசார் உள்ளனர். இதனால் தினசரி பணிகளை முடிக்க முடியாமல் போலீசார் திண்டாடுகின்றனர். வழக்குப் பதிவு செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. போலீசார் பற்றாக்குறை இருப்பதால் பிரச்னை நடக்கும் இடத்துக்கு செல்ல முடியவில்லை. அசம்பாவிதம் தடுக்க முடியவில்லை. திருட்டை தடுக்க முடியவில்லை என மக்கள் புகார் கூறுகின்றனர். பதவி உயர்வு கொடுக்கப்பட்டுள்ள எஸ்ஐக்களை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும். புதிதாக போலீசார் நியமிக்க வேண்டும் என்று பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர். |
637 | 1/24/2011 5:44:29 PM | குற்றம் | உறவினர்கள் பிரிக்க முயன்றதால் தீக்குளித்த கள்ளக் காதல் ஜோடி பலி | கும்மிடிப்பூண்டி: திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அருகே மாலந்தூர் கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேசன். இவரது மனைவி சீதா (30). 6 வருடத்துக்கு முன்பு திருமணம் நடந்தது. கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் இருவரும் பிரிந்து வாழ¢ந்து வந்தனர். மாலந்தூரிலேயே சீதா வசித்து வந்தார். இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த உதயா (எ) உதயகுமார் (35) என்பவருடன் சீதாவுக்கு பழக்கம் ஏற்பட்டது. உதயகுமாருக்கு மனைவியும் இரண்டு குழந்தைகளும் உள்ளனர். இவர்களது கள்ளத் தொடர்பு விஷயம் இரு வீட்டாருக்கும் தெரிந்தது. இதை உறவினர்கள் கண்டித்ததுடன் இவர்களை பிரிப்பதற்கும் முடிவு செய்தனர்.இந்நிலையில், சீதாவின் வீட்டில் இருந்து நேற்று காலை நெருப்பு புகை வந்ததால் மக்கள் திரண்டு சென்றனர். கதவை உடைத்து பார்த்தபோது, உதயகுமாரும் சீதாவும் உடல் கருகிய நிலையில் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தனர். மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் சீதா பரிதாபமாக இறந்தார். சிறிது நேரத்தில் உதயகுமாரும் இறந்தார். பெரியபாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆரோக்கியம், உதயகுமார், சீதாவின் சடலங்களை திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினார். இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர். கள்ளக் காதல் ஜோடி, தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டது மாலந்தூர் கிராமத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. |
638 | 1/24/2011 5:47:41 PM | தமிழகம் | திருத்தணி முருகன் கோயிலில் கருவறை தங்க கோபுரத்துக்கு பிப்.7ம் தேதி கும்பாபிஷேகம் | திருத்தணி: திருத்தணி முருகன் கோயில் கருவறை கோபுரத்துக்கு தங்கத் தகடு பதிக்கும் பணி கடந்த சில மாதமாக முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. கிட்டத்தட்ட பாதி வேலைகள் முடிவடைந்துவிட்டன. தங்கத் தகடு பதிக்க 100 கிலோ தங்கம், 1,300 கிலோ செம்புத் தகடு பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த மாத இறுதியில் தங்கத் தகடு பகுதிக்கும் பணி முடிவடைந்துவிடும். இதையடுத்து பிப்ரவரி 7ம் தேதி கருவறை கோபுரத்துக்கு மகா கும்பாபிஷேகம் நடத்தப்படுகிறது. இதை முன்னிட்டு, இன்று காலை மூலவர் முருகனுக்கு பாலாலய பிரதிஷ்டை செய்யப்பட்டது. முருகன் கோயிலில் 9 நிலை ராஜகோபுரம் கட்டும் பணிகளும் விரைவாக நடைபெற்று வருகிறது. பிப்ரவரி 7ம் தேதி அன்று நடைபெறும் கருவறை தங்க கோபுர மகாகும்பாபிஷேகத்தில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு முருகன் அருளை பெற வேண்டும் என்று அறங்காவல் குழு தலைவர் மு.ஈஸ்வரப்பன் மற்றும் ஆணையர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். |
639 | 1/24/2011 5:48:17 PM | விளையாட்டு | ஒருநாள் தொடரை இழந்ததற்கு பேட்ஸ்மேன்கள்தான் காரணம் - கேப்டன் டோனி | இந்தியா - தென் ஆப்ரிக்கா அணிகள் 5 ஒருநாள் போட்டியில் மோதின. கடைசி ஒருநாள் போட்டி நேற்று செஞ்சூரியனில் நடந்தது. முதலில் விளையாடிய தென் ஆப்ரிக்கா 46 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 250 ரன் எடுத்தது. அதன்பிறகு டக்வொர்த் லீவிஸ் விதிப்படி 46 ஓவரில் இந்தியா 268 ரன் எடுக்க வேண்டுமென்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் 40.2 ஓவரில் 234 ரன்களுக்கு இந்தியா ஆல் அவுட் ஆனதால் 33 ரன் வித்தியாசத்தில் தென் ஆப்ரிக்கா வெற்றி பெற்றது.இதன்மூலம் 3&2 என்ற கணக்கில் ஒருநாள் தொட ரையும் தென் ஆப்ரிக் கா வென் றது. 119 ரன்னுக்கு 8 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்த இந்திய அணிக்கு யூசுப்பதான் 105 ரன் (70 பந்து, 8 பவுண்டரி, 8 சிக்சர்) சேர்த்து வெற்றி வாய்ப்பை அதிகரித்தார். ஆனால் அவர் ஆட்டமிழந்ததும் இந்தியா தோல்வியடைந்தது. இதுபற்றி கேப்டன் டோனி கூறியதாவது: இந்த தொடரில் விராட்ஹோக்லி, யூசுப்பதான் ஆகியோரை தவிர பேட்ஸ்மேன்கள் யாரும் சரியாக விளையாடவில்லை. பேட்ஸ்மேன்கள் சரிவர செயல்படாததால்தான் ஒருநாள் தொடரை நாம் இழந்தோம். ஆனால் வரவிருக்கிற உலககோப்பை தொடரில் இந்திய வீரர்கள் சிறப்பாக விளையாடுவார்கள் என நம்புகிறேன். கடைசி போட்டியில் முதல் 10 ஓவரில் 1 விக்கெட் இழப்புக்கு 30 ரன் எடுத்திருந்தோம். அதன்பிறகு தவறான ஷாட்களை அடித்து ஆட்டத்தை பறிகொடுத்து விட்டோம்.இருப்பினும் யூசுப்பதான் நம்பிக்கை அளித்தார். ஆனால் கடைசி கட்டத்தில் அவர் அவுட் ஆனது ஏமாற்றம் அளித்தது. கடைசி வரை களத்தில் இருக்க வேண்டுமென்ற பாடத்தை இந்த தொடர் மூலம் உலககோப்பைக்கு முன்னதாக நாம் உணர்ந்து கொண்டோம். அவர்கள் ஒருநாள் தொடரை வென்றிருக்கிறார்கள். நாம் 20&20 ஆட்டத்தை வென்றோம். டெஸ்ட் தொடரை சமன் செய்தோம். மொத்தத்தில் இந்த தொடர் நமக்கு சவாலான ஒன்றாக இருந்தது. பந்துவீச்சாளர்கள் இந்த தொடர் முழுவதும் மிகச்சிறப்பாக செயல்பட்டனர்.அப்பாடா... ஜெயிச்சுட்டோம்...தென்ஆப்ரிக்கா கேப்டன் ஸ்மித் கூறியதாவது: உலககோப்பைக்கு முன்னதாக ஒருநாள் தொடரை வென்றிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இது சிறப்பான ஒரு வெற்றி. கடைசி வரை ஆட்டத்தில் விறுவிறுப்பு இருந்தது. வெற்றி பெறுவோம் என்று நினைத்திருந்த நேரத்தில் பதான் மிரட்டி விட்டார். அவர் அடிப்பார் என்று தெரியும். ஆனால் இப்படி அடிப்பார் என்று நினைக்கவில்லை. ஒட்டுமொத்த புகழும் அவருக்கே உரித்தானது. அவர் அவுட்டானதும் எங்கள் வெற்றி உறுதியானது. தொடர்ச்சியாக 2 ஆட்டங்களில் வென்று தொடரை கைப்பற்றியிருப்பது சிறப்பாக உள்ளது என்றார். |
640 | 1/24/2011 5:48:30 PM | மாவட்ட மசாலா | ரோடு ரோலர் மோதி கூலி தொழிலாளி பலி | திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே வேப்பம்பட்டு சத்தியசாய் நகரில் வசித்தவர் நந்தகோபால் (51). கூலி தொழிலாளி. நேற்று காலை, வேப்பம்பட்டு ரயில் நிலையத்தில் இருந்து வீட்டுக்கு நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக வந்த, ரோடு ரோலர் அவர் மீது மோதியது. படுகாயத்துடன் துடித்த நந்தகோபால், அதே இடத்தில் பரிதாபமாக இறந்தார். தகவல் கிடைத்து செவ்வாப்பேட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு வந்தனர். நந்தகோபால் சடலத்தை கைப்பற்றி திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து, ரோடு ரோலர் டிரைவர் குருவய்யாவை (28) கைது செய்தனர். ஆந்திராவில் உள்ள கடப்பா காசிநாயர் கிராமத்தை சேர்ந்தவர். அவரை திருவள்ளூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். |
641 | 1/24/2011 5:51:01 PM | குற்றம் | ஆட்டோ டிரைவருக்கு உருட்டுக்கட்டை அடி | ஆவடி: திருநின்றவூர், ராஜாங்குப்பம் காந்தி தெருவை சேர்ந்தவர் விஜயகுமார் (23). ஆட்டோ டிரைவர். அங்குள்ள கன்னிகாபுரம் ஸ்டாண்டில் தனது ஆட்டோவை நிறுத்துவார். சவாரி கேட்டு ஸ்டாண்டுக்கு நேற்று ஒருவர் வந்தார். தனக்கு முன்னால் நின்ற ஆட்டோக்காரர்களை முந்திக் கொண்டு, அந்த பயணியை ஆட்டோவில் ஏற்றிச் சென்றிருக்கிறார் விஜயகுமார். இதனால் சக ஆட்டோ டிரைவர்கள் கோபம் அடைந்தனர். இதையடுத்து நேற்றிரவு டிரைவர்கள் நான்கு பேர், விஜயகுமார் வீட்டுக்கு சென்றனர். ‘ஸ்டாண்ட் விதிமுறைப்படி சவாரி ஏற்றுவதாக இருந்தால் ஸ்டாண்டில் ஆட்டோவை நிறுத்துÕ என எச்சரித்திருக்கிறார்கள். இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. கோபம் அடைந்த டிரைவர்கள், உருட்டுக்கட்டையை எடுத்து வந்து விஜயகுமாரை சரமாரியாக அடித்தனர். இதில் படுகாயம் அடைந்த விஜயகுமார், மயங்கி விழுந்ததும் டிரைவர்கள் ஓடிவிட்டனர்.விஜயகுமாரை பக்கத்து வீட்டினர் திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இது குறித்து திருநின்றவூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து, ஆட்டோ டிரைவர்கள் விமல்ராஜ் (25), ஆஸ்ட்லி பால் (25), ராஜேஷ் (23), ரவிக்குமார் (23) ஆகியோரை இன்று கைது செய்தனர். |
642 | 1/24/2011 5:55:15 PM | விளையாட்டு | இந்திய அணியின் பயிற்சியாளர் கிறிஸ்டன் பதவி விலகுகிறார் | இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக இருப்பவர் கிறிஸ்டன். தென் ஆப்ரிக்காவை சேர்ந்த இவர் பதவியேற்ற பின் டெஸ்ட் அரங்கில் இந்தியா நம்பர்ஒன் இடத்தை பிடித்தது. ஒருநாள் தொடரிலும் தொடர்ச்சியாக வெற்றிகளை பெற்று வருகிறது. இதனால் ஒருநாள் தரவரிசை பட்டியலில் இந்தியா 2வது இடத்தில் உள்ளது. கிறிஸ்டனின் பதவிக்காலம் இந்த உலககோப்பை போட்டியுடன் முடிவடைகிறது. அதன்பிறகு அவர் தொடர்ந்து பயிற்சியாளர் பதவியில் நீடிக்க விரும்பவில்லை. வீரர்கள் மற்றும் பிசிசிஐ அவரை பதவியில் நீட்டிக்க விரும்பினாலும் குடும்பத்துடன் நேரத்தை கழிக்க கிறிஸ்டன் விரும்புவதால் பதவியில் இருந்து விலகுவதாக தெரிவித்துள்ளார். இதை பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தி உள்ளது. உலககோப்பை முடிந்த பின்னர் கிறிஸ்டனுக்கு பதில் புதிய பயிற்சியாளர் தேர்வு நடைபெறும். |
643 | 1/24/2011 6:10:31 PM | ஸ்டேட் எக்ஸ்பிரஸ் | 2 குழந்தைகள் எரித்துக்கொலை போதையில் தந்தை வெறிச்செயல் | திருவனந்தபுரம், - கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் கல்பெட்டா மேப்பாடி மாவட்டத்தைச் சேர்ந்தவர் பின்னி(40). இவரது மனைவி கிரேசி. இவர்களது மகள்கள் அமையா(5), அமலா(3). மகன் அபி(1). கூலித்தொழிலாளியான பென்னி சரியாக வேலைக்குச் செல்வது இல்லை. தினமும் குடித்துவிட்டு வந்து மனைவி குழந்தைகளை கொடுமைப்படுத்துவது வழக்கம். இந்நிலையில், நேற்று மாலையும் பென்னி குடிபோதையில் வீட்டுக்கு வந்தார். கிரேசி, மகன் அபியை அழைத்துக்கொண்டு அருகில் உள்ள கடைக்குச் சென்றார். அப்போது பென்னி திடீரென அமையா, அமலா மற்றும் தனது உடலில் மண்ணெண்ணெயை ஊற்றினார். முதலில் மகள்களுக்கு தீவைத்து விட்டு தன் உடலிலும் தீவைத்தார். அவர்களது அலறலை கேட்ட அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து மீட்க முயன்றனர். ஆனால் பென்னியும், அமையாவும் அங்கேயே உடல்கருகி இறந்தனர். உயிருக்கு போராடிய அமலாவை மீட்டு கோழிக்கோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். சிகிச்சை பலனின்றி அங்கு அமலா பலியானாள். |
644 | 1/24/2011 6:11:10 PM | ஸ்டேட் எக்ஸ்பிரஸ் | தொலைபேசி ஒட்டுக் கேட்பு மோடி மீது காங். குற்றச்சாட்டு | அகமதாபாத், - குஜராத் முதல்வர் நரேந்திர மோடியின் உத்தரவின் பேரில் காங்கிரஸ் தலைவர்களின் தொலைபேசி உரையாடல்கள் ஒட்டுக் கேட்கப்படுவதாக எதிர்க்கட்சி தலைவர் சக்திசிங் கோகில் குற்றம்சாட்டியுள்ளார். காங்கிரஸ் தலைவர்கள் மட்டும் அல்லாது பா.ஜ.வில் நரேந்திரமோடிக்கு விசுவாசமாக இல்லாத தலைவர்களின் போன்களும் ஒட்டுக் கேட்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். கடந்த 2002ம் ஆண்டு முதல் இந்த ஒட்டுக்கேட்கும் நடவடிக்கையை மோடி மேற்கொண்டு வருவதாகவும் தற்போது இந்தப் பணி மாநில உளவுத்துறையில் பணியாற்றிய மூத்த ஐபிஎஸ் அதிகாரி ஒருவரிடம் ஒப்படைக்கப்பட்டிருப்பதாகவும் கூறியுள்ளார். ஆனால் இந்தக் குற்றச்சாட்டை மாநில பா.ஜ. மறுத்துள்ளது. குஜராத் தலைவர்களின் தொலைபேசியை மத்திய அரசுதான் ஒட்டுக்கேட்டு வருவதாக குஜராத் மாநில பா.ஜ. துணை தலைவர் புருஷோத்தமன் ருபாலா தெரிவித்துள்ளார். |
645 | 1/24/2011 6:12:29 PM | ஸ்டேட் எக்ஸ்பிரஸ் | கவர்னர் உத்தரவை எதிர்த்து வழக்கு இல்லை: எடியூரப்பா | பெங்களுர், - நில மோசடி தொடர்பாக கர்நாடக முதல்வர் எடியூரப்பா மீது வழக்கு தொடர ஷிமோகா பகுதியைச் சேர்ந்த இரண்டு வக்கீல்கள் கவர்னர் பரத்வாஜிடம் அனுமதி கோரியிருந்தனர். இரண்டு தினங்களுக்கு முன் இதற்கான அனுமதியை கவர்னர் வழங்கினார். இதைக் கண்டித்து நேற்று முன்தினம் மாநிலம் தழுவிய பந்த் போராட்டத்தை பா.ஜ. நடத்தியது. இதற்கிடையில் கவர்னரின் உத்தரவுக்கு தடை கோரி பெங்களுர் ஐகோர்ட்டில் ரிட் மனு தாக்கல் செய்யப்படும் என பா.ஜ. வட்டாரங்கள் தெரிவித்தன. பாஜ தரப்பில் ரிட் மனு தாக்கல் செய்தால் அதை எதிர்த்து கேவியட் மனு தாக்கல் செய்யவிருப்பதாக ஷிமோகா வக்கீல்கள் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் கவர்னர் உத்தரவை எதிர்த்து ஐகோர்ட்டில் வழக்கு தொடரப் போவதில்லை எனவும் இதனை அரசியல் ரீதியாக சந்திக்கப் போவதாகவும் எடியூரப்பா தெரிவித்துள்ளார். |
646 | 1/24/2011 6:13:07 PM | ஸ்டேட் எக்ஸ்பிரஸ் | சிறையிலிருக்கும் மாஜி முதல்வருக்கு எய்ம்ஸ்சில் சிகிச்சை அளிக்க அனுமதி | ராஞ்சி, - கடந்த 2008ல் தொடங்கி சுமார் 23 மாதங்கள் ஜார்கண்ட் மாநில முதல்வராக இருந்தவர் மதுகோடா. முதல்வர் பதவி இழந்த பின்னர் இவர் மீது ரூ. 2500 கோடி ஊழல் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. கடந்த 2009ம் ஆண்டு நவம்பர் மாதம் இவர் சிபிஐயால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். கடந்த ஒரு ஆண்டுகளுக்கும் மேலாக ராஞ்சி சிறையில் இருக்கும் இவருக்கு முதுகு தண்டுவடத்தில் பாதிப்பு ஏற்பட்டது. டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற அனுமதி கேட்டு கடந்த வாரம் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் மதுகோடா சார்பாக மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி வினய்காந்த்கான், டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற மதுகோடாவுக்கு அனுமதி வழங்கி உத்தரவிட்டார். |
647 | 1/24/2011 6:13:29 PM | ஸ்டேட் எக்ஸ்பிரஸ் | டெல்லியில் 20 நாளில் 120 குழந்தைகள் மாயம் | புதுடெல்லி, - தலைநகர் டெல்லியில் தினந்தோறும் சராசரியாக 6 குழந்தைகள் காணாமல் போவதாக தகவல் வெளியாகியுள்ளது. டெல்லி காவல் துறை இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள தகவலின்படி கடந்த ஜனவரி 1 முதல் 20ம் தேதி வரை சுமார் 120 குழந்தைகள் காணாமல் போயுள்ளனர். இவர்கள் அனைவரும் 4 வயது முதல் 16 வயதுக்குட்பட்டவர்கள் ஆவர். குழந்தைகள் காணாமல் போவதை எதிர்த்து கடந்த 2009ம் ஆண்டு டெல்லி ஐகோர்ட்டில் பொது நல வழக்கு தொடர்ந்தது. இதை விசாரித்த ஐகோர்ட், குழந்தைகள் காணாமல் போவதை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்குமாறு டெல்லி போலீசுக்கு உத்தரவிட்டது. இதன்பின்னரும் குழந்தைகள் காணாமல் போகும் சம்பவம் டெல்லியில் குறையவில்லை. குழந்தைகளை கடத்தும் கும்பல் எதுவும் டெல்லியில் செயல்படவில்லை என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டாலும், கட்டாயமாக பிச்சை எடுக்க வைத்தல், விபசாரத்தில் ஈடுபடுத்துதல், கொத்தடிமைகளாக்குதல், சட்டவிரோதமாக தத்து கொடுத்தல் போன்றநடவடிக்கைகளுக்காக பல கும்பல்கள் குழந்தைகளை கடத்தி வருவதாக பச்பன் பச்சோ அன்டோலன் என்ற அமைப்பின் செயலாளர் ராகேஷ் செங்கர் குற்றம்சாட்டியுள்ளார். |