news_id
int64 6
128k
| news_date
stringlengths 19
22
| news_category
stringclasses 15
values | news_title
stringlengths 1
226
| news_article
stringlengths 7
17.4k
|
---|---|---|---|---|
751 | 1/28/2011 3:29:07 PM | தமிழகம் | திருவள்ளூர் வீரராகவர் கோயிலில் தை பிரம்மோற்சவம் நாளை தொடக்கம் | திருவள்ளூர்: திருவள்ளூரில் பிரசித்தி பெற்ற வீரராகவர் கோயில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் தை, சித்திரை மாதத்தில் பிரம்மோற்சவ விழா நடத்தப்படும். இந்த ஆண்டு தை மாத பிரம்மோற்சவ விழா நாளை காலை 5 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. காலை 6 மணிக்கு வீரராகவர் தங்க சப்பரத்தில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். 31&ம் தேதி காலை 5 மணிக்கு கருட சேவையும், 7 மணிக்கு கோபுர தரிசனமும் நடக்கிறது. முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம், பிப்ரவரி 4&ம் தேதி நடக்கிறது. இந்நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். விழாவையொட்டி நகரில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் கவுரவ ஏஜென்ட் நரசிம்மாச்சாரியார் மற்றும் கோயில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர். |
752 | 1/28/2011 3:36:57 PM | குற்றம் | மயிலாப்பூரை சேர்ந்த ஆட்டோ டிரைவர் கடத்தி கொலை? ஈசிஆரில் சடலம் மீட்பு | துரைப்பாக்கம்: மயிலாப்பூரை சேர்ந்த ஆட்டோ டிரைவர், நீலாங்கரை அருகே ஈசிஆரில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவரை யாராவது கடத்தி வந்து கொலை செய்தார்களா என போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். சென்னை நீலாங்கரை கிழக்கு கடற்கரை சாலை போலீஸ் நிலையம் அருகே எல்லையம்மன் கோயில் உள்ளது. நேற்று மாலை அங்கு நீண்டநேரமாக ஒரு ஆட்டோ நின்றிருந்தது. சந்தேகமடைந்த அப்பகுதி மக்கள், அருகில் சென்று பார்த்தனர். ஆட்டோவில் வாய், மூக்கில் ரத்தம் வழிந்த நிலையில் 45 வயது மதிக்கத்தக்க நபர் இறந்து கிடந்தார். தகவல் கிடைத்து வந்த நீலாங்கரை இன்ஸ்பெக்டர் வெங்கட், எஸ்.ஐ சார்லஸ் மற்றும் போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.போலீஸ் மேற்கொண்ட விசாரணையில், இறந்து கிடந்தவர் மயிலாப்பூர் பொன்னம்பல வாத்தியார் தெருவை சேர்ந்த ஆட்டோ டிரைவர் வரதராஜன் (45) என தெரிந்தது. அம்மா கல்யாணி, அண்ணன் முகுந்தன் ஆகியோருடன் வசித்து வந்தார். அவரது அண்ணன்களில் ஒருவரான முரளி, கொல்கத்தாவில் மத்திய ரிசர்வ் படை போலீஸ்காரராக உள்ளார். விடுமுறையில் நேற்று சென்னை வந்த முரளி, குடித்துவிட்டு சுற்றித் திரிந்த தம்பியை கண்டித்துள்ளார். அதன் பிறகு ஆட்டோவில் வெளியே சென்ற வரதராஜன் வீடு திரும்பவில்லை. இந்நிலையில்தான் அவர், ஈசிஆர் சாலையில் மர்மமாக இறந்து கிடந்தார். முன்விரோதத்தில் யாராவது வரதராஜனை கடத்தி வந்து அடித்துக் கொலை செய்தார்களா அல்லது மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டாரா என்று போலீசார் விசாரிக்கிறார்கள். பிரேத பரிசோதனைக்கு பிறகே அவர் எப்படி இறந்தார் என்பது தெரியவரும். |
753 | 1/28/2011 3:45:12 PM | குற்றம் | பேய் என நினைத்து குழந்தை கொலை அப்பாவை கைது செய்ய அம்மா கோர்ட்டில் மனு | பொள்ளாச்சி: மன்னார்குடி அடுத்த கோட்டூர் ஈசனங்குடியை சேர்ந்தவர் அருள் (35). முதல் மனைவி கவுசல்யா. சந்தோஷ்(5), சந்தியா(3) என்ற 2 குழந்தைகள். குடும்ப பிரச்னையில் கணவரையும் குழந்தைகளையும் விட்டுவிட்டு கவுசல்யா பிரிந்து சென்றார். பின்னர், மகாதேவபட்டினத்தை சேர்ந்த கண்ணகியை (23) அருள் 2&ம் திருமணம் செய்தார். அருளின் அப்பா ராமையாவும் அவர்களோடு வசித்து வந்தார். நள்ளிரவில் போதையில் இருந்த ராமையன், தூங்கிக் கொண்டிருந்த பேத்தி சந்தியாவை அரிவாளால் வெட்டி கொன்றார். ‘திடீரென என் மார்பில் பேய் போன்ற ஒரு உருவம் ஏறி அமுக்கியது. அந்த உருவத்தை தள்ளிவிட்டு எழுந்தேன். அந்த உருவம் ஓடியது. அரிவாளை எடுத்துக்கொண்டு அதை துரத்திச்சென்று வெட்டினேன். பேத்தி இறந்து விட்டாள். இது எப்படி நடந்தது என்றே தெரியவில்லை‘ என்று அவர் போலீசில் தெரிவித்தார். ராமையனை போலீசார் கைது செய்தனர்.இந்நிலையில், சந்தியாவின் தாய் கவுசல்யா, பொள்ளாச்சி ஜே.எம். 1 கோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், ‘9 மாதம் முன்பு கணவர் மிகவும் கொடுமைப்படுத்தியதால் பெற்றோர் வீட்டுக்கு வந்து விட்டேன். குழந்தை சந்தியாவை மாமனாரே வெட்டிக் கொன்றதும், கணவர் 2வதாக திருமணம் செய்து கொண்டதும் தெரியவந்தது. மகள் கொடூரமாக கொல்லப்பட்டதில் கணவருக்கும் தொடர்பிருக்கும். அவரை கைது செய்து விசாரிக்க வேண்டும். குழந்தை இறந்த தகவலை தாயான எனக்கு தெரிவிக்காமல், குழந்தையை புதைத்து விட்டனர். கணவரிடம் உள்ள மகன் சந்தோஷை மீட்டு என்னிடம் ஒப்படைக்க வேண்டும்‘ என்று கூறியுள்ளார். |
754 | 1/28/2011 4:01:09 PM | தலையங்கம் | மாறாவிட்டால் மாற்றுவார்கள் | பள்ளி வரவேண்டிய ஆசிரியருக்கு பதிலாக அவரது மனைவி பாடம் நடத்திக்கொண்டிருந்ததை பார்த்த பெற்றோர் பள்ளியை பூட்டி அவரை சிறை பிடித்தனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ளது சாணிபூண்டி கிராமம். அரசு நிதியுதவியில் இயங்கி வரும் இப்பள்ளியில் இரண்டு ஆசிரியர்கள். மொத்தம் 48 மாணவர்கள். மைக்கேல் என்பவர் தலைமை ஆசிரியர். இன்னொரு ஆசிரியர் பிரிட்டோ. குடியரசு தினத்தை கொண்டாட பள்ளி மாணவர்கள் அனைவரும் ஆவலாக பள்ளிக்கு வந்துள்ளனர். ஆனால் ஆசிரியர்கள் வரவில்லை. ஏமாற்றம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர். இதுகுறித்து விசாரிக்க மறுநாள் பெற்றோர் பள்ளிக்கு சென்றுள்ளனர். அப்போதும் ஆசிரியர்கள் வரவில்லை. தலைமை ஆசிரியரின் மனைவி பாடம் நடத்திக்கொண்டிருந்தார். பள்ளிக்கு சம்பந்தமே இல்லாத அவரை பார்த்ததும் பெற்றோர் கொந்தளித்தனர். பள்ளியை பூட்டினர். வகுப்பறையில் அவரை சிறைபிடித்தனர். பள்ளிக்கு வராத ஆசிரியர்களை இடமாற்றம் செய்யக்கோரி போராட்டம் நடத்தினார்கள். போலீசார் விரைந்து வந்து தலைமை ஆசிரியரின் மனைவியை மீட்டுள்ளனர். கல்வித் துறை அதிகாரிகள் வந்து உடனடி நடவடிக்கை எடுப்பதாக கூறிய பின் மக்கள் கலைந்து சென்றுள்ளனர். இதுதான் கிராமங்களில் இருக்கும் அரசு பள்ளிகளின் நிலைமை. இதனால்தான் படிப்புக்காக எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை என நகரங்களுக்கு, தனியார் பள்ளிகளுக்கு மக்கள் படை எடுக்கின்றனர். தனியார் பள்ளிகளை விட அதிக சம்பளம். ஓய்வு வயதுவரை வேலை. அதற்கு பின்னரும் ஓய்வூதியம் என ஏகப்பட்ட சலுகைகள் இருந்தும் அரசு பள்ளி ஆசிரியர்களில் சிலர் இன்னமும் இப்படித்தான் இருக்கிறார்கள். ஆனால் இந்த சலுகைகள் எதுவுமே இல்லாத தனியார் பள்ளி ஆசிரியர்கள் வேலை, வேலை என கசக்கிப் பிழியப்படுகிறார்கள். ‘ஒரு நிமிடம் லேட்டாக வந்தாலும் அரைநாள் சம்பளம் கட். வகுப்பில் கிளாஸ் எடுக்கும்போது உட்காரக்கூடாது. அவசரத்துக்கு முன் அனுமதி இல்லாமல் லீவு எடுத்தால் ஒருநாள் லீவுக்கு 2 நாள் சம்பளம் கட்’ என ஏகப்பட்ட கெடுபிடிகள். இத்தனைக்கும் இடையில் தனியார் பள்ளி மாணவர்களின் கல்வித்தரம் நன்றாக இருக்கிறது. மாணவர்களுக்கு பாடம் சொல்லிக்கொடுக்க வேண்டிய கடமையிலிருந்து ஆசிரியர்கள் தவறுவது அவர்கள் படித்த படிப்புக்கு செய்யும் துரோகம். ஒரு சில ஆசிரியர்களால் குரு ஸ்தானத்தில் இருக்கும் ஆசிரியர்களின் மரியாதை சமூகத்தில் கெட்டுப்போய்விடுகிறது. கட் அடிக்கும் ஆசிரியர்கள் தங்களை மாற்ற வேண்டிய கட்டாயம் வந்துவிட்டது. மாறாவிட்டால் மக்கள் மாற்றுவார்கள். |
755 | 1/28/2011 4:36:30 PM | உலகம் | பாகிஸ்தானில் கொள்ளையர்களை சுட்டு கொன்றார் அமெரிக்க அதிகாரி | லாகூர்: பாகிஸ்தானின் லாகூரில் உள்ள அமெரிக்க துணை தூதரக அதிகாரி ரேமண்ட் டேவிட். இவர் மொசாங் என்ற இடத்தில் உள்ள மார்க்கெட் பகுதிக்கு நேற்று காரில் சென்றார். அப்போது ஒரு மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் டேவிட் காரை துப்பாக்கி முனையில் வழிமறித்தனர். உடனே டேவிட் தனது கைத்துப்பாக்கியை எடுத்து அவர்கள் இருவரையும் சுட்டுக் கொன்றார்.பின்னர் அந்த இடத்தை விட்டு வேகமாக, தனது காரில் புறப்பட்டு சென்றார். அப்போது, ரோட்டின் குறுக்கே வந்த பைக் ஆசாமி மீது டேவிட் கார் மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே பைக் ஆசாமி இறந்தார். மார்க்கெட் பகுதியில் 3 பேர் இறந்த சம்பவம் லாகூர் பகுதியில் நேற்று பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து டேவிட்டிடம் பாகிஸ்தான் போலீஸ் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். தற்காப்புக்காக கொள்ளையர்களை சுட்டுக் கொன்றேன் என்றார் டேவிட். தூதரக அதிகாரி என்பதால், அவர் மீது எந்த வழக்கும் உடனடியாக பதிவு செய்யவில்லை. சர்வதேச சட்ட விதிமுறைப்படி டேவிட் மீது நடவடிக்கை எடுக்கும்படி போலீசாருக்கு பஞ்சாப் மாநில முதல்வர் ஷாபாஸ் செரீப் உத்தரவிட்டார். |
756 | 1/28/2011 4:37:25 PM | உலகம் | நெல்சன் மண்டேலா ஆஸ்பத்திரியில் அனுமதி | ஜோகன்னஸ்பர்க்: தென் ஆப்பிரிக்க முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலா நேற்று முன்தினம் திடீரென ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். வழக்கமாக சோதனைகளை முடித்துவிட்டு உடனே வீடு திரும்பும் மண்டேலா, ஆஸ்பத்திரியில் தங்கிவிட்டார். இதனால் அவரது உடல்நிலை மோசமடைந்துவிட்டதாக தகவல் பரவியது. ஆஸ்பத்திரி முன்பு நிருபர்கள் குவிந்தனர். இதையடுத்து மண்டேலா அலுவலகம் அறிக்கை வெளியிட்டது. அதில், ‘மண்டேலா உடல் நிலை நன்றாக உள்ளது. வழக்கமான மருத்துவ சோதனைக்காக அவர் ஆஸ்பத்திரியில் சேர்ந்துள்ளார்Õ என குறிப்பிடப்பட்டிருந்தது. மண்டேலாவுக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர்களை, நிருபர்கள் தொந்தரவு செய்ய வேண்டாம் என தற்போதைய அதிபர் ஜேக்கப் ஜூமா அலுவலக அதிகாரிகளும் வேண்டுகோள் விடுத்துள்ளனர். |
757 | 1/28/2011 4:38:29 PM | உலகம் | கார் குண்டு வெடிப்பு ஈராக்கில் 48 பேர் பலி | பாக்தாத்: ஈராக்கில் கடந்த ஒரு வாரமாக, குண்டு வெடிப்பு சம்பவங்கள் அடிக்கடி நடக்கிறது. மார்ச் மாதம் நடைபெறவுள்ள அரபு நாட்டு தலைவர்களின் கூட்டத்தை சீர்குலைப்பதற்காக தீவிரவாதிகள் இந்த குண்டுவெடிப்பு தாக்குதல்களை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. பாக்தாத் அருகேயுள்ள ஷுலா என்ற இடத்தில், ஷியா பிரிவைச் சேர்ந்த மதத் தலைவர் ஒருவர் நேற்று இறந்தார். இந்த இரங்கல் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக, பலர் கூடாரத்தில் அமர்ந்திருந்தனர். அதன் அருகே பல கார்கள் நிறுத்தப்பட்டிருந்தன. அதில் ஒரு கார் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதில் துக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்ட 48 பேர் பலியாயினர். 121 பேர் காயம் அடைந்தனர். இச்சம்பவத்தால் அப்பகுதி மக்கள் ஆவேசம் அடைந்தனர். குண்டு வெடிப்பு சம்பவங்களை தடுக்க தவறிய போலீசார் மீது மக்கள் கல்வீச்சு தாக்குதல் நடத்தினர். ஈராக்கில் கடந்த ஒரு வாரமாக நடந்து வரும் குண்டு வெடிப்பு சம்பவங்களில், 200க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. |
758 | 1/28/2011 4:39:53 PM | உலகம் | தாய்ப்பால் கொடுக்க தயங்காதீங்க | சிட்னி: ஆஸ்திரேலியாவை சேர்ந்த மாடல் அழகி மிராண்டா கெர். பதிமூன்று வயதில் இருந்து மாடலிங் செய்து வருகிறார். ஆஸ்திரேலியாவின் டாலி இதழ் நடத்திய மாடல் தேர்வில் வெற்றி பெற்றபோது அவருக்கு வயது 14. இப்போது 27. மிராண்டா & இங்கிலாந்து நடிகர் ஆர்லண்டோ ப்ளூம் இடையே 4 ஆண்டுகளுக்கு முன்பு காதல் மலர்ந்தது. கடந்த ஜூலையில் காதும் காதும் வைத்தாற்போல திருமணம் முடித்தனர். கடந்த 6&ம் தேதி அழகிய ஆண் குழந்தையை பெற்றெடுத்தார் மிராண்டா.தன் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கும் படத்தை இணையதளத்தில் வெளியிட்டிருக்கிறார் மிராண்டா. இதுபற்றி அவர் கூறியதாவது:காதல், கல்யாணம், கர்ப்பம், குழந்தைப்பேறு எல்லாமே வித்தியாசமான அனுபவங்கள். ஃப்ளின் (குழந்தை பெயர்) எங்கள் வீட்டின் புது வரவு. குழந்தையை பார்த்துக் கொள்வதில் நேரம் போவதே தெரியவில்லை. நேரம் போதவில்லை. தாய்ப்பால் கொடுப்பதை சில தாய்மார்கள் சிரமமாக, சுமையாக கருதுகிறார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். அப்படி ஒன்றும் எனக்கு தெரியவில்லை. தாய்ப்பால் கொடுப்பதை சந்தோஷமாக உணர்கிறேன். குழந்தை மீதான பாசத்தை இது அதிகப்படுத்துகிறது. தாய்ப்பால் கொடுப்பதற்கு கூச்சப்படவோ, தயங்கவோ அவசியம் இல்லை. இந்த சந்தோஷ தருணத்தை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கிலும் இந்த போட்டோவை வெளியிடுகிறேன். இவ்வாறு மிராண்டா கூறியிருக்கிறார். |
759 | 1/28/2011 4:42:57 PM | உலகம் | ஒரு விரல் டைனோசர் சீன ஆய்வில் கண்டுபிடிப்பு | பீஜிங்: சீனாவை சேர்ந்த விலங்கியல் ஆராய்ச்சியாளர்கள், மைக்கேல் பிட்மன் தலைமையில் மேற்கொண்ட ஆராய்ச்சியில் சிறிய ஒரு விரல் டைனோசரை அடையாளம் கண்டுள்ளனர். மிகவும் அரிய வகையான இந்த புதிய உயிரினம் உலகிலேயே மிக கொடிய, ஒரு விரல் கொண்ட ஒரே உயிரினமான டி ரெக்ஸ் டைனோசர் இனத்தை சார்ந்ததாக இருக்கலாம் என்பது ஆராய்ச்சியாளர்களின் கணிப்பு. இது குறித்து ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்டுள்ள தகவல்: புதிய டைனோசருக்கு ஒரு விரல் மட்டுமே உள்ளது. இது தெரோபாட் இனத்தை சேர்ந்த லின்ஹெனிகஸ் மோனோடாகிலஸ் வகை உயிரினம். ஒரு மீட்டர் உயரத்துடன் காணப்படும் இது, அதிக பட்சமாக பச்சைக்கிளியின் எடையளவு உள்ளது. புலால் உண்ணும் வகையை சேர்ந்த பண்டைய தெரோபாட்களின் பரிணாம வளர்ச்சிதான் தற்போது பறவையாக உள்ளது. இவற்றின் ஒவ்வொரு கைகளிலும் தலா 3 விரல்கள் இருக்கும். தற்போது கண்டறியப்பட்டுள்ள உயிரினத்துக்கு ஒரே ஒரு விரல் மட்டும் பெரிய அளவில் உள்ளது. அதிலுள்ள நகத்தால் பூச்சிகளின் கூடுகளை கிளறி சிறிய புழுக்களை உணவாகக் உட்கொள்ளும். மிகக் குறைந்த உயரத்துக்கு பறக்கும் தன்மை இதற்கு இருந்திருக்க வேண்டும். பறக்க இயலாத பண்டைய தெரோபாட்கள் 5 விரல்களை உடையவை. கால மாற்றத்தில் இதிலும் மாற்றம் ஏற்பட்டு தற்போது இந்த வகைகளுக்கு 3 விரல்கள் உள்ளன. இத்தகைய உயிரினங்கள் பெரும்பாலும் அழிந்து விட்டதாகவே கருதப்பட்டு வரும் நிலையில், புதிய டைனோசர் அடையாளம் காணப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இது குறித்த தொடர் ஆராய்ச்சியில் மேலும் பல அரிய தகவல்கள் தெரியவரும். |
760 | 1/28/2011 4:44:36 PM | உலகம் | பெண் புலிக்கு செயற்கை இடுப்பு உலகிலேயே முதல் முறை | பெர்லின்: உலகிலேயே முதன்முறையாக ஒரு புலிக்கு செயற்கை இடுப்பு பொருத்தப்பட்டுள்ளது. உலகில் வேகமாக அழிந்து வரும் இனங்களில் ஒன்று மலேசிய புலிகள். மலேசியா, தாய்லாந்து நாட்டு காடுகளில் மட்டும் காணப்படுகின்றன. மொத்த எண்ணிக்கை 500&ஐ தாண்டாது. இந்த இனத்தை பாதுகாக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.ஜெர்மனியின் ஹால் மிருகக் காட்சி சாலையில் இருக்கும் 8 வயது மலேசிய பெண் புலி, கடந்த ஒரு வருடமாக இடுப்பு வலியால் அவதிப்பட்டு வந்தது. வலது பகுதி இணைப்பில் பாதிப்பு ஏற்பட்டிருந்ததால் நடமாட முடியாமல் உயிருக்கு போராடியது. 20 வருடங்கள் வரை வாழும் அதன் ஆயுளை காப்பாற்ற, ஜெர்மனியின் லெப்சிக் பல்கலைக்கழக கால்நடை மருத்துவர்கள் முடிவு செய்தனர். செயற்கை இடுப்பு பொருத்தி, பெண் புலியை காப்பாற்றுவது என தீர்மானிக்கப்பட்டது. அதன்படி 3 மணி நேர ஆபரேஷனுக்கு பிறகு, டைட்டானியத்தால் செய்யப்பட்ட செயற்கை இடுப்பு வெற்றிகரமாக பொருத்தப்பட்டது. செயற்கை இடுப்பு நகர்ந்துவிடலாம் என்பதால் இன்னும் 6 வாரங்களுக்கு புலியை கவனமாக பாதுகாக்க வேண்டும் என்கிறார்கள் டாக்டர்கள்.சுவிட்சர்லாந்தை சேர்ந்த பியரி மான்டேவன் என்பவர்தான் முதன்முதலாக விலங்குகளுக்கான செயற்கை இடுப்புகளை உருவாக்கினார். முதலில் அவை நாய்களுக்கு பொருத்தப்பட்டு வந்தது. பின்னர் மனிதர்களுக்கு பயன்படுத்தப்பட்டது. புலிக்கு செயற்கை இடுப்பு பொருத்துவது உலகிலேயே இதுவே முதல்முறை. |
761 | 1/28/2011 4:46:18 PM | உலகம் | கடலில் மூழ்கும் செயற்கை தீவுகள் | துபாய்: துபாயில் பல ஆயிரம் கோடி செலவில் உருவாக்கப்பட்ட ‘தி வேர்ல்டு’ செயற்கை தீவுக் கூட்டங்கள் கடலில் புதைந்து வரும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. பார்க்க சாது.. ஆனால் டேஞ்சரானது கடல். அதில் கொஞ்ச தூரம் உள்ளே சென்று நீரை அள்ளி பேஸ்மென்ட் போட்டு செயற்கை தீவு உருவாக்கும் சவால் பணியை அடிக்கடி செய்து வருகிறது துபாய். இதில் உலகையே வியக்க வைத்த சூப்பர் பிராஜக்ட் ‘பாம் ஜுமைரா’ தீவு. மட்டைகள் விரித்த பனை மரம் போலவே துபாயின் பெர்சியன் வளைகுடா பகுதியில் உருவாக்கப்பட்ட செயற்கை தீவு.5 கி.மீ. நீளம், 5. கி.மீ. அகலத்துக்கு கடலுக்குள் அமைக்கப்பட்ட அற்புத தீவு. வீடு, ஓட்டல், அபார்ட்மென்ட், ஆபீஸ், பொழுதுபோக்கு மையங்கள் எல்லாம் உண்டு. 2001&ல் தொடங்கிய கட்டுமான பணி 2007&ல் ஓரளவு நிறைவடைந்தது. செலவு ரூ.55 ஆயிரம் கோடியை தாண்டியது. இதற்கிடையில், உலக நாடுகள் போலவே கடல் நடுவே செயற்கை தீவுகள் அமைக்க ஆசைப்பட்டார் ஐக்கிய அரபு எமிரேட் பிரதமர் ஷேக் முகமது பின் ரஷீத். கட்டுமான பணிகளை நகீல் பிராப்பர்டீஸ் நிறுவனம் 2003 செப்டம்பரில் தொடங்கியது. குட்டிக் குட்டியாய் அமைக்கப்பட்ட 300 தீவுகளுக்கு அன்டார்டிகா, ஆசியா, பீஜிங், சீனா, ஹாங்காங், மலேசியா என்று பெயர்கள் வைக்கப்பட்டன. நடுவில் உலகம் முழுவதும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்ட காலகட்டத்தில் மட்டும் கட்டுமான பணியில் சற்று தொய்வு ஏற்பட்டது. இங்கும் வீடுகள், ஓட்டல், பொழுதுபோக்கு மையங்கள், வர்த்தக நிறுவனங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. செயற்கை தீவு அமைக்கும் செலவு மட்டும் ரூ.63 ஆயிரம் கோடியை தாண்டிவிட்டது. தொடர்ச்சியாக பணிகள் நடந்து வருகின்றன. உலகின் பல பகுதிகளை சேர்ந்த கோடீஸ்வரர்களும் இங்கு சொகுசு பங்களாக்கள், அபார்ட்மென்ட்கள் வாங்கிப் போட்டிருக்கின்றனர்.இந்நிலையில், செயற்கை தீவுகளின் திடத்தன்மை குறித்து சமீபத்தில் அங்கு ஆய்வு நடத்தப்பட்டது. இதில், செயற்கை தீவுகள் மெல்ல கடலில் மூழ்கத் தொடங்கியிருக்கும் அதிர்ச்சி தகவல் தெரியவந்துள்ளது. இதுபற்றி ஆராய்ச்சியாளர்கள் கூறுகையில், ‘‘பேஸ்மென்ட்டுக்கு கீழ் இருக்கும் மணல் பகுதி அரிக்கப்பட்டிருக்கிறது. செயற்கை தீவுகள் மூழ்க ஆரம்பித்திருக்கின்றன’’ என்று கூறியுள்ளனர். |
762 | 1/28/2011 4:47:34 PM | உலகம் | 60 மாடி கட்டிடத்தில் விதிகளை மீறி ஏறிய ஸ்பைடர்மேனுக்கு விலங்கு | சான்பிரான்சிஸ்கோ: அமெரிக்கவாசியான டேனியல் குட்வின் (55) உயரமான அடுக்கு மாடிகளில் ஏறி சாதனை படைத்து வருவதை வழக்கமாக கொண்டுள்ளார். உயரமான கட்டிடங்களில் எந்த உதவியும் இன்றி அசத்தலாக ஏறி சாதனை படைத்து வருவதால் இவருக்கு ஸ்பைடர் மேன் என்ற பெயரும் உண்டு. இவர், சமீபத்தில் சான்பிரான்சிஸ்கோவில் உள்ள மில்லேனியம் டவர் என்ற 60 மாடி கட்டிடத்தில் ஏறி மேலும் ஒரு சாதனை படைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தார். பார்வையாளர்கள் முன்பு இந்த சாதனை நிகழ்த்தப்பட்டுக் கொண்டிருந்தது. சட்ட விதிகளை மீறிய இந்தச் செயல் பார்வையாளர்களையும் பொதுமக்களை அச்சுறுத்தும் விதமாகவும் இருப்பதாக கூறி ஸ்பைடர் மேனை காவல் துறையினர் கைது செய்தனர். உயிருக்கு உத்திரவாதம் இல்லாத, சட்டத்துக்கு புறம்பான இத்தகைய செயலை இனி தவிர்க்க வேண்டும், பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கக்கூடாது என்ற நிபந்தனைகளுடன் பின்னர் அவரை விடுவித்தனர். கடந்த செப்டம்பரில் இத்தகைய சாதனைக்காக இவர் 4 மணி நேரத்தில் அமெரிக்காவில் உள்ள உயரமான கட்டிடம் ஒன்றின் மீது ஏறியது இதுவரை சாதனையாக உள்ளது. |
763 | 1/28/2011 4:48:38 PM | உலகம் | பள்ளிக்கூட பசங்களுக்கு ஹோமோ செக்ஸ் பாடமா? இங்கிலாந்தில் கடும் எதிர்ப்பு | லண்டன்: ‘ஒரு வீட்டில் 4 ஓரினச் சேர்க்கையாளர்கள் தங்கியிருந்தால், 88 வீடுகளில் எத்தனை பேர் இருப்பார்கள்..? மூன்று லெஸ்பியன்கள் சேர்ந்து ஒரு வேலையை ஐந்து நாட்கள் செய்தால், அதே வேலையை ஐந்து லெஸ்பியன்கள் செய்ய எத்தனை நாள் ஆகும்..? கிராமப்புறங்களில் இருந்து ஓரினச்சேர்க்கையாளர்கள் நகர் பகுதிகளுக்கு வருவதற்கான காரணங்கள் யாவை..?’ இதுபோன்ற கேள்விகள் இங்கிலாந்து பாடங்களில் விரைவில் இடம்பெற இருக்கின்றன.ஓரினச்சேர்க்கை என்பது 1950&களிலேயே மேலை நாடுகளில் இருந்தாலும் உலகம் முழுக்க இந்த பழக்கமும் இதுபற்றிய கருத்துகளும் பரவலாக பரவியது 1990&களில்தான். லெஸ்பியன், கே (ஆண் ஜோடி), செக்ஸில் ஆண், பெண் வித்தியாசம் காட்டாத பைசெக்சுவல், அரவாணிகள் ஆகியோரை தொகுத்து ‘எல்ஜிபிடி’ என்று அழைக்கும் வழக்கம் தொடங்கியதும் இந்த காலக்கட்டத்தில்தான். ஆண் & பெண் உறவை தவிர மற்ற உறவுகளும் உலகில் இருக்கின்றன என்று மாணவர்கள் தெரிந்துகொள்வதற்காகவே பாடத் திட்டத்தில் இதுதொடர்பான கருத்துகள், கேள்விகளை சேர்க்க இங்கிலாந்து கல்வித்துறை முடிவு செய்துள்ளது.இதற்கு மக்கள் மற்றும் சில ஆசிரியர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு. ‘‘இதுபோன்ற கருத்துகளை பாடத்திட்டத்தில் சேர்ப்பது மாணவர்கள் மத்தியில் செக்ஸ் ஆர்வத்தை தூண்டும். படிப்பில் கவனம் சிதறும்’’ என்று அவர்கள் கூறியுள்ளனர். ‘பாடத் திட்டம் கட்டாயமில்லை. தேவைப்படும் பள்ளி நிர்வாகங்கள் அரசு வெப்சைட்டில் இருந்து டவுன்லோடு செய்து பயன்படுத்திக் கொள்ளலாம்’ என்று கூறியிருக்கிறது கல்வித்துறை. |
764 | 1/28/2011 4:50:06 PM | தமிழகம் | நெல்லை அருகே யானைகள்அட்டகாசம் | களக்காடு: நெல்லை மாவட்டம் களக்காடு மலையடிவார கிராமங்களில் காட்டு யானைகள் கடந்த 3 மாதங்களாக குட்டிகளுடன் முகாமிட்டு அட்டகாசம் செய்து வருகின்றன. குட்டிகளின் பாதுகாப்பு கருதி இவைகள் காட்டுக்குள் செல்லாமல் இரவில் அங்குள்ள தோட்டங்களில் புகுந்து பனை, தென்னை மரங்களை நாசப்படுத்துகின்றன. நேற்று நள்ளிரவு களக்காடு பிளவக்கல் இசக்கியம்மன் கோயிலுக்கு தென்புறம் உள்ள கிறிஸ்தவ சபைக்குள் காட்டு யானைகள் புகுந்தன. அங்கு அமைக்கப்பட்டிருந்த கம்பி வேலியை பிடுங்கி எறிந்து தென்னை மரங்களை வேரோடு சாய்த்தன. இதுகுறித்து உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் வந்து வெடிகள் வெடித்தும், சப்தம் எழுப்பியும் யானை கூட்டத்தை விரட்டியடித்தனர். கிறிஸ்தவ சபைக்குள் யானை புகுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. |
765 | 1/28/2011 5:02:11 PM | தமிழகம் | தாளவேட்டில் புதிய சமத்துவபுரம் : பிப்.9-ல் துணை முதல்வர் திறக்கிறார் | திருத்தணி: தாளவேடு கிராமத்தில் கட்டப்பட்டுள்ள பெரியார் நினைவு சமத்துவபுரத்தை வரும் 9-ம் தேதி துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்துவைக்கிறார். திருத்தணி அடுத்த தாளவேடு கிராமத்தில் ரூ.1.75 கோடி மதிப்பில் பெரியார் நினைவு சமத்துவபுரம் கட்டப்பட்டுள்ளது. இப்பகுதியில் தார்ச்சாலை மற்றும் ஊராட்சி ஒன்றிய பொது நிதியிலிருந்து ரூ.3 லட்சத்தில் விளையாட்டு மைதானம், ரூ.4 லட்சத்தில் சிறுவர் பூங்கா, ரூ.2.60 லட்சத்தில் பகுதிநேர ரேஷன் கடை, ரூ.6 லட்சத்தில் குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மற்றும் தெரு விளக்குகள், கழிவுநீர் கால்வாய் உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடந்து முடிந்துள்ளன.புதிய சமத்துவபுரத்தை வரும் 9-ம் தேதி துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார். அப்போது ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள், மகளிர் சுயஉதவிக் குழுவினருக்கு கடன், போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு, சான்றிதழ் ஆகியவற்றை ஸ்டாலின் வழங்குகிறார். திருவள்ளூர் மாவட்ட திமுக செயலாளர் சிவாஜி எம்எல்ஏ, மாவட்ட திட்டக்குழு உறுப்பினர் வக்கீல் வி.எஸ்.ரமேஷ்காந்த், ஒன்றியக் குழு தலைவர் ஏழுமலை ஆகியோர் சமத்துவபுரத்தை நேற்று முன்தினம் ஆய்வு செய்தனர். மாவட்ட வேளாண்மை விற்பனைக் குழு துணைத் தலைவர் பன்னீர்செல்வம், முன்னாள் ஊராட்சி தலைவர் சீனிவாசன், திமுக நிர்வாகிகள் கூளூர் ராஜேந்திரன், மூர்த்தி உள்பட பலர் உடன் இருந்தனர். |
766 | 1/28/2011 5:06:21 PM | குற்றம் | பக்கத்து வீடுகளை பூட்டி விட்டு : டிரைவர்கள் வீடுகளில் கொள்ளை | வேளச்சேரி: சென்னை தரமணி அகத்தியர் தெருவை சேர்ந்தவர் மேகநாதன் (34). ஆட்டோ டிரைவர். அதே தெருவில் வசிப்பவர் அன்பழகன் (27). கால்சென்டர் டிரைவர். இருவரும் நேற்று முன்தினம் வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்தினருடன் உறவினர் வீடுகளுக்கு சென்றனர். நள்ளிரவில் பூட்டு உடைக்கும் சத்தம் கேட்டு அன்பழகன் வசிக்கும் வீட்டின் உரிமையாளர் வெங்கடேஷ் எழுந்து கதவை திறக்க முயன்றார். கதவு வெளிப்பக்கம் பூட்டியிருந்ததால் அதிர்ச்சியடைந்தார். உடனே சத்தம்போட்டு பக்கத்து வீட்டினரை அழைத்தார். அவர்களது வீடும் வெளிப்பக்கம் தாழ்ப்பாள் போடப்பட்டிருந்தது தெரிந்தது. நீண்ட நேரம் யாரோ கூப்பிடுவதுபோல சத்தம் கேட்டு, எதிர்வீட்டினர் வந்து கதவை திறந்தனர். எல்லாரும் வெளியே வந்து பார்த்தபோது அன்பழகன், மேகநாதன் வீடுகளில் பூட்டு உடைந்து கிடந்தது. உடனே இருவருக்கும் தகவல் தெரிவித்து வரவழைத்தனர். அவர்கள் வந்து பார்த்தபோது, அன்பழகன் வீட்டில் ரூ.2 ஆயிரம் ரொக்கமும், மேகநாதன் வீட்டில் இருந்து 6 பவுன் நகையும் திருடு போனது தெரிந்தது. இதுகுறித்து வேளச்சேரி போலீசில் நேற்று புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். |
767 | 1/28/2011 5:15:26 PM | மாவட்ட மசாலா | கொள்ளையன் கைது 20 பவுன் பறிமுதல் | ஸ்ரீபெரும்புதூர்: ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் போலீசார் நேற்றிரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது வடமங்கலம் பஸ் நிறுத்தம் அருகே சந்தேகப்படும்படி நின்ற வாலிபரை பிடித்து விசாரணை நடத்தினர். அவர் திருவள்ளூர் மாவட்டம் வயலூர் கிராமத்தை சேர்ந்த மணி (எ) மணிகண்டன் (27) என்பதும், காஞ்சிபுரம், திருவள்ளூர் புறநகர் பகுதியில் வீடுகளில் கொள்ளையடித்ததும் வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்டதும் தெரியவந்தது. ஸ்ரீபெரும்புதூர் பாரதிநகரை சேர்ந்த ஆசிரியை வீட்டில் 7 பவுன் நகைகளை கொள்ளையடித்ததாக கூறினார். இதையடுத்து மணிகண்டனை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து 20 பவுன் நகைகளை பறிமுதல் செய்தனர். |
768 | 1/28/2011 5:18:05 PM | ஸ்டேட் எக்ஸ்பிரஸ் | கோடிக்கணக்கில் அரசு விளம்பரம் கவர்னரிடம் மம்தா கட்சி புகார் | கொல்கத்தா, - கடன் சுமையில் திணறிக்கொண்டிருக்கும் மேற்கு வங்க அரசு, சுயவிளம்பரங்களுக்காக கோடிக்கணக்கில் செலவழித்து வருவதாக மாநில கவர்னர் எம்.கே.நாராயணனிடம் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி சட்டமன்ற தலைவர் பார்த்தா சட்டர்ஜி புகார் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக கவர்னருக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், ‘மேற்கு வங்க அரசுக்கு ரூ.2 லட்சம் கோடி கடன் உள்ளது. இந்நிலையில் டிவி, ரேடியோ, பத்திரிகைகளில் அரசின் சாதனைகள் என கூறி பக்கம் பக்கமாக விளம்பரங்கள் செய்யப்படுகிறது. இதற்காக கோடிக்கணக்கான ரூபாய் மக்கள் வரிப்பணம் அனாவசியமாக செலவிடப்படுகிறது. ஏற்கனவே, மாநில அரசு திவாலாகிக் கொண்டிருக்கும் நிலையில் விளம்பரங்களுக்காக பணத்தை செலவழிப்பது கண்டிக்கத்தக்கது. அடுத்து வரும் அரசு பெரும் நிதிநெருக்கடியை சந்திக்க நேரிடும்’ என தெரிவித்துள்ளார். திரிணாமுல் குற்றச்சாட்டுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ரயில்வே பணத்தை தேவையற்ற விளம்பரங்களில் மம்தா வீணடித்து வருவதாக மார்க்சிஸ்ட் கட்சி புகார் தெரிவித்துள்ளது. |
769 | 1/28/2011 5:18:59 PM | ஸ்டேட் எக்ஸ்பிரஸ் | 6 பேரை கடித்து கொன்ற புலி சுட்டுக் கொலை | லக்னோ, - உத்தரகாண்ட் மாநிலம் குமான் மாவட்டத்தில் கார்பட் புலிகள் சரணாலயம் உள்ளது. கடந்த 3 மாதங்களில் இந்த சரணாலயத்தை ஒட்டிய கிராமங்களில் வசிக்கும் 5 பேர், புலியால் அடித்துக் கொல்லப்பட்டனர். இதையடுத்து மனித ரத்த வாடை அறிந்த புலியை சுட்டுத்தள்ள மாநில அரசு உத்தரவிட்டது. இந்நிலையில், நேற்றிரவு மேலும் ஒருவரை புலி அடித்துக் கொன்றது. இதைத் தொடர்ந்து புலியை சுட்டுக் கொல்வதற்காக தலைமை வனக்காப்பாளர் எஸ்.சந்தோலா உத்தரவின் பேரில் 10 பேர் கொண்ட வனச்சரகர்கள் குழு வேட்டையை தொடங்கியது. இந்த வேட்டையில் யானைகளும் பயன்படுத்தப்பட்டன. நள்ளிரவு 2.30 மணியளவில் புதர் ஒன்றில் மறைந்திருந்த புலியை வனப்பாதுகாவலர்கள் சுட்டுக் கொன்றனர். இதையடுத்து கார்பட் சரணாலயத்தில் உள்ள மொத்த புலிகளின் எண்ணிக்கை 163 ஆக குறைந்துள்ளது. |
770 | 1/28/2011 5:19:16 PM | மாவட்ட மசாலா | சோத்துப்பாக்கத்தில் குழந்தைகள் பார்லிமென்ட் | மதுராந்தகம்: மதுராந்தகம் அடுத்த சோத்துப்பாக்கம் சமுதாயக் கூட வளாகத்தில் பள்ளி மாணவ, மாணவிகளிடையே அரசியல் ஆர்வத்தை ஏற்படுத்தும் நோக்கத்தில் ‘குழந்தைகள் பாராளுமன்றம்’ என்ற நிகழ்ச்சியை பார்வேர்ட் தொண்டு நிறுவனம் நேற்று நடத்தியது. எலப்பாக்கம், மோகல்வாடி, தண்டரை, சோத்துப்பாக்கம், களத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து 250-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். பிரதமர், உள்துறை அமைச்சர், நிதியமைச்சர், சுகாதாரத்துறை அமைச்சர் உள்பட பல அமைச்சர்களின் வேடங்களில் மாணவர்கள் தோன்றி விவாதம் நடத்தினர்.குழந்தை தொழிலாளர் முறை, பாலின பாகுபாடுகள், சமுதாயத்தை பாதிக்கும் விவசாய நிலப்பறிப்பு, விரிவாக்கம் மற்றும் தொழிற்சாலை என்ற பெயரில் வாழ்விடங்களில் இருந்து மக்களை கட்டாயமாக வெளியேற்றுதல், அரசு துறைகளில் ஊழல் மற்றும் தாமதம் ஆகியவற்றுக்கு எதிரான திட்டங்கள் குறித்து மாணவர்கள் விவாதித்தனர். இவற்றை ஒழிப்பது குறித்த தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன. தொண்டு நிறுவன இயக்குனர் ஷியாமளா பேபி, சோத்துப்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் ரேவதி மற்றும் பலர் பங்கேற்றனர். |
771 | 1/28/2011 5:19:50 PM | ஸ்டேட் எக்ஸ்பிரஸ் | பிப்ரவரி 1 முதல் திட்டம் அமல் ஆன்லைனில் எப்ஐஆர் ரிலீஸ் | புதுடெல்லி, - காவல் நிலையங்களில் புகார் கொடுத்தவர்களுக்கு எப்ஐஆர் நகல் வழங்கப்படுகிறது. குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு, அதாவது யார் மீது புகார் கொடுக்கப்பட்டதோ அவர்களுக்கு எப்ஐஆர் நகல் வழங்கப்படுவதில்லை. அவர்களுக்கு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை நகல்தான் வழங்கப்படும். குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கும் எப்ஐஆர் நகல் தர வேண்டும் என டெல்லி ஐகோர்ட்டில் பொது நல வழக்கு தொடரப்பட்டது. இதை விசாரித்த ஐகோர்ட், குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு தங்கள் மீது என்ன வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது என்பதை அறிந்து கொள்ளும் உரிமை இருப்பதாக தெரிவித்து, அவர்களுக்கும் உடனடியாக எப்ஐஆர் நகல் தர வேண்டும் என உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து பிப்ரவரி 1 முதல் டெல்லியில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் பதிவு செய்யப்படும் எப்ஐஆர்களை உடனடியாக ஆன்லைனில் வெளியிட காவல்துறை முடிவு செய்துள்ளது. இதனை யார் வேண்டுமானாலும் டவுன்லோடு செய்து கொள்ளலாம். |
772 | 1/28/2011 5:20:41 PM | ஸ்டேட் எக்ஸ்பிரஸ் | தலைகீழாக தேசிய கொடி பா.ஜ. நிபந்தனையற்ற மன்னிப்பு | புவனேஷ்வர், - தலைகீழாக தேசியக் கொடியை பறக்க விட்டதற்காக ஒரிசா மாநில பா.ஜ. நிபந்தனையற்ற மன்னிப்பு கோரியுள்ளது. நேற்று முன்தினம் நாடு முழுவதும் 62&வது குடியரசு தினம் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. ஒரிசாவில் மாநில பா.ஜ. சார்பாக அதன் தலைமை அலுவலகத்தில் தேசியக் கொடியை மூத்த தலைவர் பி.பி.ஹரிசந்திரன் ஏற்றினார். கொடி உச்சியில் பறக்கத் தொடங்கிய பிறகுதான் அது தலைகீழாக ஏற்றப்பட்டது தெரிந்தது. இதையடுத்து கொடி இறக்கப்பட்டு, சரி செய்து மீண்டும் ஏற்றப்பட்டது. இது குறித்து பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஹரிச்சந்திரன், ‘‘தவறு நடந்து விட்டது. அதனை நாங்கள் ஒப்புக் கொள்கிறோம். இதற்காக நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டுக் கொள்கிறோம்’’ என்றார். இதேபோல் பிஜூ ஜனதா தள தலைமை அலுவலகத்தில் மாநில முதல்வர் நவீன் பட்நாயக் தேசியக் கொடி ஏற்ற முயன்றபோது கயிறு அறுந்துவிட்டது. பின்னர் வேறு கயிறு கொண்டு வந்து கொடியேற்றப்பட்டது. |
773 | 1/28/2011 5:22:53 PM | மாவட்ட மசாலா | உணவு உற்பத்தி பெருக்க விவசாயிகளுக்கு பயிற்சி | புழல்: புழல் வட்டாரத்தில் உள்ள கன்னியம்மன்பேட்டையில் ஆத்மா திட்டத்தின் கீழ் உணவு உற்பத்தியை பெருக்கும் வகையில் விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. நெற்பயிரில் பல்வேறு தொழில்நுட்பங்களை பயன்படுத்தி கூடுதல் மகசூலுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. ராஜராஜன் 1000 சாகுபடி முறைகளை நெற்பயிரில் செயல்படுத்தவும், உரம், பயிர் பாதுகாப்பு பற்றியும் 100 பேருக்கு ஆலோசனை வழங்கப்பட்டது. எண்ணெய் வித்து, பயறு வகைகள் உற்பத்தியை பெருக்கும் தொழில்நுட்பங்கள் குறித்து விளக்கப்பட்டது. கடப்பாக்கம் ஊராட்சி தலைவர் பெருமாள் தலைமை வகித்தார். புழல் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் பன்னீர்செல்வம், வேளாண்மை அலுவலர் மதிவாணன், துணை அலுவலர் சுருளிராஜ் பயிற்சி அளித்தனர். ஏராளமான விவசாயிகள் பங்கேற்றனர். வேளாண்மை உதவி அலுவலர் ஏகாம்பரம் நன்றி கூறினார். |
774 | 1/28/2011 5:24:39 PM | மாவட்ட மசாலா | பஞ்செட்டி ஊராட்சியில் துப்புரவு பணி சிறப்பு முகாம் | புழல்: சோழவரம் ஒன்றியம் பஞ்செட்டி முதல்நிலை ஊராட்சியில் துப்புரவு பணி சிறப்பு முகாம் நேற்று நடந்தது. ஊராட்சி தலைவர் நிர்மலா ரவி தலைமை வகித்தார். ஒன்றியக்குழு தலைவர் கோபிநாதன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சாந்தி முன்னிலை வகித்தனர். முகாமையொட்டி பள்ளி மாணவர்களின் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. ஊராட்சி அலுவலகத்தில் தொடங்கி சிவன் கோயில் தெரு, பிள்ளையார் கோயில் தெரு, மேட்டுத் தெரு, ஜி.என்.டி. சாலை வழியாக நடுநிலைப்பள்ளியில் ஊர்வலம் முடிவடைந்தது. ஆணை யாளர்கள் தர்மலிங்கம், ஆறுமுகம் ஆகியோர் ஊர்வலத்தை தொடங்கி வைத்தனர். ’’வீட்டுக்கு வீடு கழிவறை அமைப்போம், திறந்தவெளியில் மலம் கழிப்பதை தடுப்போம். குப்பைகளை தெருக்களில் கொட்டாதீர்கள். வீட்டுக்கு ஒரு மரம் வளர்ப்போம்’ என்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை மாணவர்கள் கைகளில் ஏந்திச் சென்றனர். முகாமில் வார்டு உறுப்பினர் குப்பம்மாள், ஊராட்சி உதவியாளர் பாபு உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக ஸ்ரீ ஆனந்தவள்ளி சமேத அகத்தீஸ்வரர் கோயில் முன்பு இருந்த குப்பைகளை பொதுமக்கள் அகற்றினர். |
775 | 1/28/2011 5:28:58 PM | குற்றம் | கள்ளத்தொடர்பை கண்டித்த மனைவி கொலை : கள்ளக்காதலி கைது கணவனுக்கு வலை | திருவள்ளூர்: கள்ளத்தொடர்பை கண்டித்த மனைவியை கத்தியால் குத்திக் கொலை செய்த கணவனை போலீசார் தேடி வருகின்றனர். அவரது கள்ளக்காதலி கைது செய்யப்பட்டார். திருவள்ளூர் அருகே ராமாபுரத்தை சேர்ந்தவர் நேசக்குமார் (எ) நாகராஜ் (28), ரயில்வே ஊழியர். இவரது மனைவி செஞ்சு (24). நேசக்குமாருக்கும் அதே பகுதியை சேர்ந்த மூர்த்தி மனைவி பவானிக்கும் கள்ளத்தொடர்பு இருந்து வந்தது. இந்த விஷயம் தெரிந்ததும் இருவரையும் செஞ்சு கண்டித்துள்ளார். இந்நிலையில், நேற்று முன்தினம் பவானியுடன் ஊர் சுற்றிவிட்டு நள்ளிரவில் வீட்டுக்கு வந்தார் நேசக்குமார். மனைவி கண்டித்தபோது, அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. நேற்று மாலை பவானி வீட்டுக்கு சென்ற செஞ்சு, ‘என் கணவருடன் எப்படி ஊர் சுற்றலாம்’ என கேட்டு தகராறு செய்தார். வாக்குவாதம் முற்றி இருவரும் கைலப்பில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து நேசக்குமாரிடம் பவானி கூறியுள்ளார். ஆத்திரத்துடன் வீட்டுக்கு வந்த அவர், மனைவியை அடித்துள்ளார். பின்னர் வீட்டில் இருந்த கத்தியை எடுத்து செஞ்சுவின் வயிற்றில் சரமாரியாக குத்தினார். சத்தம்கேட்டு ஓடிவந்த செஞ்சுவின் சித்தப்பா தனசேகர் (46), சித்தி பூங்காவனம் (44), அவரது மகன் யுவராஜ் (17) ஆகியோரையும் கத்தியால் குத்திவிட்டு நேசக்குமார் தப்பி ஓடிவிட்டார். ரத்த வெள்ளத்தில் சரிந்த செஞ்சு, அதே இடத்தில் இறந்தார். காயம் அடைந்த மற்ற மூவரும் திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து திருவள்ளூர் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து கள்ளக்காதலி பவானியை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள நேசக்குமாரை தேடி வருகின்றனர். |
776 | 1/28/2011 5:36:22 PM | இந்தியா | தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் 30% கூலி உயர்வு: மத்திய அரசு அறிவிப்பு | புதுடெல்லி: மத்திய அரசின் தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் பணிபுரியும் கிராம மக்களுக்கு 30 சதவீத கூலி உயர்வினை மத்திய அரசு அறிவித்துள்ளது. கிராமப்புறங்களில் வசிக்கும் ஏழைகளுக்கு ஆண்டு ஒன்றுக்கு குறைந்தபட்சம் 100 நாட்கள் வேலைவாய்ப்பை உறுதி செய்யும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தை கடந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு கொண்டு வந்தது. இந்த திட்டத்தின் கீழ் பணியாற்றுபவர்களுக்கு நாள் ஒன்றுக்கு ளி100 கூலியாக நிர்ணயிக்கப்பட்டது. கடந்த 2009-ம் ஆண்டு ஏப்ரல் 1-ம் தேதி இந்தக் கூலி நிர்ணயிக்கப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் வழங்கப்படும் கூலி 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை உயர்த்தப்படும் என மத்திய அரசு அறிவித்தது. நுகர்வோர் விலை குறியீட்டின் அடிப்படையில் சம்பள உயர்வு அளிக்கப்பட வேண்டும் என பிரதமர் அலுவலகம் அண்மையில் சிபாரிசு செய்திருந்தது. இதன் அடிப்படையில் இந்த திட்டத்தின் கீழ் வழங்கப்படும் தினக்கூலியை 30 சதவீதம் உயர்த்தி தர மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம் நாடு முழுவதும் சுமார் 5 கோடி கிராம மக்கள் பலன் பெறுவார்கள்.மத்திய அரசின் உத்தரவை தொடர்ந்து மாநில அரசுகள் தங்கள் நிதி வசதிக்கேற்ப பலவிதங்களில் ஊதிய உயர்வை அறிவித்துள்ளன. அதிகபட்சமாக நிகோபாரில் தினக்கூலியாக ளி181 அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு அடுத்தபடியாக அரியானாவில் ளி179 வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலத்தில் ளி125 வழங்கப்படுவதாக மாநில ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஜெகதீஷ் ஷெட்டர் தெரிவித்துள்ளார். |
777 | 1/28/2011 5:40:57 PM | தமிழகம் | மகளிருக்கு உதவிகள் வழங்கும் விழா : திமுக ஆட்சி மீண்டும் மலரும் | சென்னை: கே.கே.நகர் (விருகம்பாக்கம்) பகுதி திமுக சார்பில் தமிழ் புத்தாண்டு பொங்கல் விழா மற்றும் 8300 மகளிருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, நேற்று நடந்தது. விழாவுக்கு பகுதி செயலாளரும் மண்டல குழுத் தலைவருமான க.தனசேகரன் தலைமை வகித்தார். உதவிகளை வழங்கி, துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: மகளிர் மேம்பாட்டுக்காக பல்வேறு திட்டங்களை திமுக அரசு நிறைவேற்றி வருகிறது. உள்ளாட்சி பதவிகள், அரசு வேலைகளில் மகளிருக்கு இட ஒதுக்கீடு வழங்கியுள்ளோம். 1989ல் தர்மபுரியில் திமுக ஆட்சியில் முதல் மகளிர் சுய உதவிக் குழு தொடங்கப்பட்டது. சேமிப்பு, சுய தொழில் என்று தன்னம்பிக்கை கொண்டவர்களாக மகளிர் சுய உதவிக் குழு பெண்கள் விளங்குகின்றனர். தமிழக மகளிர் சுய உதவிக் குழுவினர், இந்தியாவுக்கே முன்னோடியாக இருக்கின்றனர். மகளிர் சுய உதவி குழுவில் இருக்கும் பெண்களின் குடும்பம் பொருளாதார முன்னேற்றம் கண்டுள்ளது. மக்களுக்கு சேவை செய்ய மக்கள் தந்த பொறுப்பாகத்தான் அமைச்சர் பதவியை நினைக்கிறோம். ஏராளமான மக்கள் நலத்திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. எனவே, திமுக ஆட்சி மீண்டும் மலரும். அதற்கான உறுதி ஏற்போம். இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார். மேயர் மா.சுப்பிரமணியன், மாவட்ட செயலாளர் ஜெ.அன்பழகன், நிர்வாகிகள் ஆர்.ராமமூர்த்தி, ஆர்.முருகவேல், உ.துரைராஜ், கே.கண்ணன், து.தேவேந்திரன், பெ.தியாகு, அ.பாபு, கே.செண்பகவள்ளி, மயிலை பாலு உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில், துணைச் செயலாளர் எஸ்.உமாபதி நன்றி கூறினார். ஏ.கே.கல்வி அறக்கட்டளை மகளிர் மேம்பாட்டு சுய உதவிக் குழுவினர் விழாவுக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர். |
778 | 1/28/2011 5:43:19 PM | தமிழகம் | நியூ பிரின்ஸ் பள்ளியில் அறிவியல் கண்காட்சி | ஆலந்தூர்: உள்ளகரம் நியூ பிரின்ஸ் மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப்பள்ளியில் அறிவியல் கண்காட்சி நேற்று நடந்தது. முன்னாள் நகராட்சி தலைவர் ஆர்.எஸ்.பாரதி, குத்துவிளக்கேற்றி கண்காட்சியை தொடங்கி வைத்தார். பள்ளி தாளாளர் லோகநாதன் வரவேற்றார். முன்னாள் எம்எல்ஏ மீ.அ.வைத்திலிங்கம், ஆதம்பாக்கம் நியூ பிரின்ஸ் பள்ளி முதல்வர் வி.எஸ்.மகாலட்சுமி, பள்ளி ஒருங்கிணைப்பாளர் பார்த்தசாரதி, கவுன்சிலர் குமார், காங்கிரஸ் மாவட்டச் செயலாளர் பகத்சிங் உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக பள்ளி மாணவர்களின் பேரணி நடந்தது.இன்று மாலை 5 மணியளவில் பள்ளி ஆண்டு விழா நடக்கிறது. போட்டிகளில் வெற்றி பெற்ற மற்றும் சிறந்த மாணவர்களுக்கு பரிசுகளை முன்னாள் துணைவேந்தர் அவ்வை நடராஜன் வழங்குகிறார். நடிகர் பார்த்திபன், மெட்ரிக் பள்ளிகளின் இணை இயக்குனர் பிச்சை, சென்னை மருத்துவக் கல்லூரி பேராசிரியர் காதர் அலி மற்றும் பலர் பங்கேற்கின்றனர். நாளை மாலை நடக்கும் விழாவில் 2009&10ம் ஆண்டு எஸ்எஸ்எல்சி, பிளஸ் 2 பொதுத் தேர்வில் மாநில அளவில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு ரூ.35 ஆயிரம் ரொக்கப்பரிசுகளை ஓய்வுபெற்ற நீதிபதி வள்ளிநாயகம் வழங்குகிறார். இதில், பிஎஸ்என்எல் நிறுவன முதன்மை பொது மேலாளர் சுப்பிரமணியன், உள்ளகரம் & புழுதிவாக்கம் நகராட்சி தலைவர் ஜெ.கே.ஜெயச்சந்திரன், மேடவாக்கம் நியூ பிரின்ஸ் ஸ்ரீபவானி கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் எம்.பிரபாகரன் உள்பட பலர் பங்கேற்கின்றனர். |
779 | 1/28/2011 5:45:40 PM | தமிழகம் | கள்ளச்சாராய விற்பனை கண்டித்து திருப்போரூரில் மக்கள் மறியல் | திருப்போரூர்: கள்ளச்சாராய விற்பனையை தடுக்கக் கோரி திருப்போரூரில் மக்கள் இன்று காலை மறியலில் ஈடுபட்டனர். இதனால், அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. காஞ்சிபுரம் மாவட்டம் மானாம்பதியை அடுத்த அருங்குன்றம், கழனிபாக்கம், மேலகனகம்பட்டு, திருநிலை, ஒரகடம் ஆகிய இடங்களில் கள்ளச்சாராயம் விற்கப்படுவதாக அப்பகுதி மக்கள் புகார் கூறுகின்றனர். கடந்த வாரம் 7-ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் சிலர் பாக்கெட் சாராயத்தை வாங்கி வந்து குடிப்பதை கண்ட பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். இந்நிலையில், கள்ளச்சாராய விற்பனையை கண்டித்தும் அதை தடுக்கக் கோரியும் இன்று காலை 7 மணியளவில் திருக்கழுக்குன்றம் - திருப்போரூர் சாலையில் 250க்கு மேற்பட்டோர் மறியலில் ஈடுபட்டனர். இதனால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது.தகவல் அறிந்ததும் திருப்போரூர் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் தலைமையில் போலீசார் விரைந்து வந்தனர். மறியலில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் சமாதானம் அடையாத மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ‘சாராய வியாபாரிகளுக்கு துணை போகும் திருப்போரூர், மானாம்பதி காவல்நிலையங்களை சேர்ந்த போலீஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்ய வேண்டும். சாராயம் விற்பதை தடுக்க வேண்டும்’ என்று கோரிக்கை வைத்தனர். திருக்கழுக்குன்றம் மதுவிலக்கு போலீஸ் டிஎஸ்பி சியாமளாதேவி வந்து, இன்று மாலை 5 மணிக்குள் சாராய வியாபாரிகளை கைது செய்வதாகவும், தவறு செய்யும் அதிகாரிகளை இடமாற்றம் செய்ய பரிந்துரை செய்வதாகவும் கூறினார். அதன்பிறகே மக்கள் கலைந்து சென்றனர். ஐக்கிய ஜனதாதள மாநில இளைஞர் அணி தலைவர் செங்கை ஆனந்தன், சட்டக்கல்லூரி மாணவர்கள், மகளிர் சுயஉதவிக்குழுவினர் உள்பட பலர் மறியலில் கலந்து கொண்டனர். |
780 | 1/28/2011 5:47:48 PM | தமிழகம் | செங்குன்றத்தில் பரபரப்பு : சிமென்ட் மூட்டை சரிந்ததில் 2 சிறுவர்கள் சிக்கினர் | புழல்: செங்குன்றத்தில் குடோன் கட்டுவதற்காக அடுக்கி வைக்கப்பட்டிருந்த சிமென்ட் மூட்டைகள் சரிந்ததில் 2 சிறுவர்கள் சிக்கினர். இதில் ஒருவரின் கால் உடைந்தது. மற்றொருவருக்கு மூக்கு, வாயில் ரத்தம் வந்தது. இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. செங்குன்றம் நாரவாரிக்குப்பம் இரட்டை மலை சீனிவாசன் தெருவில் பார்த்திபன் ராஜ் என்பவர் புதிதாக சிமென்ட் குடோன் கட்டி வருகிறார். இதையொட்டி கட்டிட பணிக்காக 60 சிமென்ட் மூட்டை அடுக்கி வைத்திருந்தார்.இந்நிலையில் இன்று காலை, அதே தெருவை சேர்ந்த அன்பு மகன்கள் முத்து (9), மாரி (8) மற்றும் சிறுவர்கள், சிமென்ட் மூட்டை அருகே விளையாடி கொண்டிருந்தனர். அப்போது, எதிர்பாராதவிதமாக சிமென்ட் மூட்டைகள் ஒன்றன்பின் ஒன்றாக மளமளவென கீழே சரிந்து விழுந்தது. இதில், முத்து, மாரி ஆகியோர் சிக்கி அலறி துடித்தனர். இதில் முத்துவின் கால் உடைந்து ரத்தம் கொட்டியது. மாரிக்கு மூக்கிலும், வாயிலும் ரத்தம் வந்தது.சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து இருவரையும் மீட்டனர். பின்னர் 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்து வரவழைத்தனர். அதில் இருவரையும் ஏற்றி சிகிச்சைக்காக தாதாங்குப்பத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு இருவரும் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.இதுகுறித்து செங்குன்றம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. |
781 | 1/28/2011 5:52:01 PM | மாவட்ட மசாலா | கல்பாக்கம் அருகே திடீர் கலவரம் : கடைகளுக்கு தீ வைப்பு கல்வீச்சில் 6 பஸ் சேதம்! | திருக்கழுக்குன்றம்: கல்பாக்கம் அடுத்த கடலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அம்பேத்கர் மணி. இவருடைய நினைவு நாள் கூட்டத்தை விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் காத்தான்கடை கிராமத்தில் நேற்றிரவு ஏற்பாடு செய்தனர். இதில் பங்கேற்க திருமாவளவன் வந்தார். அவரை கடலூர் கிராமத்தில் உள்ள மணி வீட்டுக்கு தொண்டர்கள் அழைத்துச் சென்றனர். அங்கிருந்து திரும்பி வரும் வழியில் விடுதலை சிறுத்தை நிர்வாகிகளின் கார்கள் மீது சிலர் கல்வீசி தாக்கினர். இதைக் கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் காத்தான்கடை ஈசிஆர் சாலையில் அமர்ந்து மறியல் செய்தனர். அவர்களை கலைந்து செல்லும்படி போலீசார் கூறினர். அப்போது போலீசாருக்கும் வி.சி. தொண்டர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரமடைந்த சிலர், அங்கிருந்த கடைகளுக்கு தீ வைத்தனர். இதில் 3 கடைகள் எரிந்து நாசமானது. சில கடைகள் தாக்கப்பட்டன. அந்த வழியாக வந்த பஸ்கள் மீது சிலர் கற்களை வீசி தாக்கினர். சென்னையில் இருந்து புதுச்சேரி சென்ற 6 அரசு பஸ்கள் மீது காத்தான்கடை, கல்பாக்கம் ஆகிய இடங்களில் கல்வீசி தாக்கப்பட்டது. இதையடுத்து அங்கு பதற்றம் ஏற்பட்டதால் காஞ்சிபுரம் எஸ்.பி. பிரேம் ஆனந்த் சின்கா தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டனர். இதனால் இரவு முழுவதும் ஈசிஆரில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. கல்வீச்சில் சேதமடைந்த பஸ்சில் இருந்த பயணிகள் கீழே இறக்கி விடப்பட்டனர். மாற்று ஏற்பாடு செய்யாததால் நடுவழியில் அவர்கள் தவித்தனர். கல்வீச்சு சம்பவம் தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் தீவிர விசாரணை நடக்கிறது. |
782 | 1/28/2011 5:55:14 PM | விளையாட்டு | உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்காக இணையதளம் | மும்பை: உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்காக சர்வதேச கிரிக்கெட் வாரியம் (ஐசிசி), யாகூ இந்தியா ஆகியவை இணைந்து அதிகாரப்பூர்வ இணையதளத்தை தொடங்குகிறது. iccevents.yahoo.com என்ற பெயரில் இந்த இணையதளம் தொடங்கப்படுகிறது. கிரிக்கெட் போட்டிகள் மற்றும் அது தொடர்பான தகவல்கள், ஆட்டம் நடைபெறும் போது அது தொடர்பான விவரங்கள், வீடியோ காட்சிகள் உள்ளிட்ட விவரங்களை இந்த இணையதளத்தின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.இணையதளம் மூலம் கேப், டிசர்ட் உள்ளிட்ட பொருட்களையும் வாங்கிக்கொள்ளலாம். இந்த தகவல்களை ஐசிசி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. |
783 | 1/28/2011 5:57:45 PM | விளையாட்டு | பிப்.27 போட்டி ரத்து எதிரொலி : ஈடன்கார்டன் பிப்.7ல் ரெடியாகும் | கொல்கத்தா: இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதும் உலககோப்பை ஒருநாள் கிரிக்கெட் போட்டி கொல்கத்தா ஈடன்கார்டன் மைதானத்தில் நடைபெறுவதாக இருந்தது. இதற்காக மைதானம் சீரமைப்பு பணிகள் நடந்தன. இதை முடித்து ஜன.25க்குள் ஐசிசி வசம் மைதானம் ஒப்படைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் பணிகள் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் முடியாததால் பிப்.27ல் நடைபெற உள்ள முதல் போட்டியை ஐசிசி ரத்து செய்து விட்டது. இந்த போட்டி பெங்களூருக்கு மாற்றப்படலாம் எனத்தெரிகிறது. இதனால் இங்கு நடப்பதாக அறிவிக்கப்பட்டுள்ள மற்ற 3 போட்டிகள் நிலை பற்றி சந்தேகம் எழுந்துள்ளது.இதற்கிடையே பெங்கால் கிரிக்கெட் சங்கத்தலைவர் ஜக்மோகன் டால்மியா இந்த பிரச்னை பற்றி கூறும்போது எங்களுக்கு பிப்.7 வரை அவகாசம் கொடுங்கள். அன்று முழுமைதானத்தையும் சீரமைத்து ஐசிசி வசம் ஒப்படைத்து விடுவோம். இலங்கையின் கொழும்பு, ஹம்பன் டோட்டா, பல்லேகலே, மும்பை வான்கடே மைதானத்திற்கு இன்னும் 14 நாள் அவகாசம் வழங்கப்பட்டு இருக்கிறது. ஆனால் நாங்கள் 10 நாள் தான் கேட்கிறோம். பிப்.7ல் மைதானம் உங்கள் வசம் ஒப்படைக்கபடும். எனவே போட்டியை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டாம் என்று தெரிவித்துள்ளார். |
784 | 1/28/2011 6:02:20 PM | விளையாட்டு | ஈடன்கார்டனில் போட்டி ரத்து செய்யப்பட்டதற்கு பிசிசிஐ பொறுப்பல்ல | ஈடன்கார்டனில் பிப்.27ல் நடைபெற இருந்த இந்தியாஇங்கிலாந்து ஒருநாள் போட்டி ரத்து செய்யப்பட்டதற்கு சரத்பவார்டால்மியா மோதல்தான் காரணம் என்று கூறப்படுகிறது. மற்ற மைதானங்களுக்கு இன்னும் 14நாள் அவகாசம் அளித்திருக்கும் போது பிசிசிஐ நெருக்கடி காரணமாகத்தான் ஐசிசி இந்த முடிவை எடுத்திருக்கலாம் என்று பெங்கால் கிரிக்கெட் சங்கம் கருதுகிறது. இந்த பிரச்னை பற்றி பிசிசிஐ தலைவர் ஷாசங் மனோகர் கூறும்போது இது ஐசிசி நடத்தும் போட்டி. அவர்கள் தான் மைதானங்களை தேர்வு செய்தார்கள். அவர்கள் தான் ஆய்வு செய்தார்கள். அவர்கள் தான் முடிவையும் அறிவித்தார்கள். இதற்கும் பிசிசிஐக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று அவர் குறிப்பிட்டார். |
785 | 1/29/2011 12:03:05 PM | உலகம் | 8 மாதங்களுக்கு பிறகு தாய்லாந்து கப்பல் விடுவிப்பு | நைரோபி: தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த 'தாய் யுவான் 227' என்ற மீன்பிடி கப்பலை, செசல்ஸ் தீவு அருகே கடந்த மே 6-ம் தேதி சோமாலிய கடற்கொள்ளையர்கள் கடத்தினர். அதில் சீனா, வியட்நாம், பிலிப்பைன்ஸ், கென்யா மற்றும் மொசாம்பிக் நாட்டைச் சேர்ந்த 28 மாலுமிகள் இருந்தனர். கப்பலையும் ஊழியர்களையும் மீட்க சோமாலிய கொள்ளையர்களிடம், கப்பல் உரிமையாளர் பேச்சுவார்த்தை நடத்தினார். பேரம் படியாததால், கடந்த 8 மாதங்களாக, மீன்பிடி கப்பலை கடற்கொள்ளையர்கள் விடுவிக்கவில்லை. இந்நிலையில் தாய்லாந்து கப்பல் நேற்று விடுவிக்கப்பட்டதாக, ஐரோப்பிய யூனியன் கடற்படை தெரிவித்துள்ளது. சோமாலிய கடற்பகுதியை விட்டு 'தாய் யுவான் 227' கப்பல் புறப்பட்டு விட்டது. அந்தக் கப்பலில் உள்ள ஊழியர்களுக்கு தேவையான, உணவு மற்றும் குடிநீர் ஆகியவற்றை, ரோந்து பணியில் ஈடுபட்டுள்ள அமெரிக்க போர்கப்பல் வழங்கியது. இதேபோல் அரபிக் கடல் பகுதியில் கடத்தப்பட்ட தென்கொரிய சரக்கு கப்பலை மீட்கும் முயற்சியில் தென்கொரிய கடற்படை கமாண்டோக்கள் கடந்த வாரம் அதிரடியாக இறங்கினர். இதில் கொள்ளையர்கள் 8 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். 5 பேர் கைது செய்யபட்டனர். இந்த சண்டையில் கப்பல் கேப்டனை, சோமாலிய கொள்ளையர்கள் சுட்டனர். இதில் படுகாயம் அடைந்த கேப்டன், ஆம்புலன்ஸ் விமானம் மூலம், சியோல் நகருக்கு நேற்று கொண்டுவரப்பட்டார். கப்பலில் இருந்த 21 மாலுமிகளும் பத்திரமாக மீட்கப்பட்டனர். |
786 | 1/29/2011 1:18:46 PM | இந்தியா | நடிகை நவ்னீத் கவுர் - எம்எல்ஏ ஜோடி உள்பட 2834 ஜோடிகளுக்கு ஒரே மேடையில் டும் டும் | நாக்பூர்: மகள்களுக்கு திருமணம் செய்ய முடியாமல் தற்கொலை செய்துகொள்ளும் ஏழை விவசாயிகளுக்கு நம்பிக்கையூட்டும் வகையில் 2834 ஜோடிகளுக்கு ஒரே மேடையில் திருமணம் நடக்கிறது. இந்த எளிமையான திருமணத்தில் நடிகை நவ்னீத் கவுர் & சுயேச்சை எம்எல்ஏ ஜோடியும் ஒன்று.‘அரசாங்கம்’, ‘அம்பாசமுத்திரம் அம்பானி’ உள்பட சில தமிழ்ப் படங்களில் நடித்திருப்பவர் நவ்னீத் கவுர். பஞ்சாபை சேர்ந்த இவர் இந்தி, தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் 35 படங்கள் நடித்திருக்கிறார். இவரும் மகாராஷ்டிர மாநிலம் அமராவதியில் உள்ள பேட்நேரா தொகுதியை சேர்ந்த சுயேச்சை எம்எல்ஏ ரவி ரானாவும் (28) திருமணம் செய்ய முடிவு செய்துள்ளனர். பைவ் ஸ்டார் ஓட்டலில் ஆடம்பரமாக திருமணம் நடத்தும் அளவுக்கு இரு குடும்பத்தினரும் வசதி படைத்தவர்கள். இருந்தாலும் தங்கள் திருமணத்தை எளிமையாக நடத்த முடிவு செய்துள்ளனர்.பிப்ரவரி 2&ம் தேதி அமராவதி சைன்ஸ்கோர் மைதானத்தில் ஏழை விவசாயிகள் குடும்பத்தை சேர்ந்த 2834 ஜோடிகளுக்கு ஒரே மேடையில் திருமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்துள்ளனர். அந்த ஜோடிகளில் நவ்னீத் கவுர் & ரவி ரானா ஜோடியும் ஒன்று. இதுபற்றி ரவி ரானா கூறும்போது, ‘‘இது காதல் திருமணம் கிடையாது. பாபாவாக பார்த்து எங்களை சேர்த்து வைத்திருக்கிறார். மகாராஷ்டிர மாநிலத்தில் பல்வேறு ஏழை குடும்பத்தினர், ஏழை விவசாயிகள் தங்கள் மகள்களுக்கு திருமணம் செய்துவைக்க முடியாமல் தற்கொலை செய்துகொள்கின்றனர். ஆடம்பரமாகத்தான் திருமணம் செய்ய வேண்டும் என்பதில்லை.எளிமையாகவும் நடத்த முடியும் என்பதை அவர்களுக்கு புரிய வைக்கும் வகையில் எங்கள் திருமணத்தை எளிமையாக நடத்த இருவரும் முடிவு செய்தோம். இதே விழாவில் 2834 ஏழை ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைக்கவும் முடிவு செய்தோம்’’ என்றார். ஏழை குடும்பத்தை சேர்ந்தவர்கள், தற்கொலை செய்துகொண்ட விவசாய குடும்பத்தை சேர்ந்தவர்கள், இந்து, முஸ்லிம் மற்றும் புத்த மத்தை சேர்ந்தவர்கள் என பல தரப்பு ஜோடிகள் இதில் பங்கேற்கின்றனர். மாநில அரசு சார்பில் ஒவ்வொரு ஜோடிக்கும் தலா 10 ஆயிரம் ரூபாய் பரிசாக வழங்கப்படுகிறது. |
787 | 1/29/2011 1:22:18 PM | இந்தியா | கந்தமால் கலவர வழக்கு பா.ஜ. எம்எல்ஏ ஜாமீன் சுப்ரீம் கோர்ட் ரத்து | புதுடெல்லி: ஒரிசா மாநிலம் கந்தமால் கலவர வழக்கில் 7 ஆண்டு சிறை தண்டனை பெற்றுள்ள பா.ஜ. எம்எல்ஏவின் ஜாமீனை சுப்ரீம் கோர்ட் ரத்து செய்துள்ளது. ஒரிசா மாநிலம் கந்தமாலில் விசுவ இந்து பரிஷத் தலைவர் லட்சுமானந்தா சரஸ்வதி கடந்த 2008&ம் ஆண்டு மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். இதைத் தொடர்ந்து சுமார் 40 நாட்கள் அங்கு பெரும் கலவரம் நடந்தது. இதில் பலர் கொல்லப்பட்டனர். கோடிக்கணக்கான சொத்துக்கள் நாசமாயின. இது தொடர்பாக பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. நாயக் கொலை வழக்கில் பா.ஜ. எம்எல்ஏ மனோஜ் குமார் பிரதான் மற்றும் இரண்டு பேருக்கு கந்தமால் கோர்ட், 7 ஆண்டு சிறை தண்டனை விதித்தது. இதை எதிர்த்து ஐகோர்ட்டில் மனோஜ்குமார் வழக்கு தொடர்ந்தார். இது விசாரணையில் உள்ளது.இதற்கிடையே, அவருக்கு கடந்த ஜூலை மாதம் ஐகோர்ட் ஜாமீன் வழங்கியது. இதை எதிர்த்து கொலையான நாயக்கின் மனைவி ரேகா சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை நீதிபதிகள் சுதர்சன் ரெட்டி மற்றும் எஸ்.எஸ்.நிஜ்ஜார் அடங்கிய பெஞ்ச் விசாரித்து, எம்எல்ஏவுக்கு வழங்கிய ஜாமீனை ரத்து செய்து தீர்ப்பளித்தது. கலவர வழக்கில் சிறை தண்டனை பெற்ற மற்ற இரண்டு பேருக்கு ஜாமீன் வழங்காமல் எம்எல்ஏ என்ற காரணத்தால் மனோஜ்குமாருக்கு மட்டும் ஜாமீன் வழங்கியது தவறு என தீர்ப்பில் நீதிபதிகள் சுட்டிக் காட்டியுள்ளனர். |
788 | 1/29/2011 1:33:23 PM | ஸ்டேட் எக்ஸ்பிரஸ் | இஷ்ரத் என்கவுன்ட்டர் போலியானது சிறப்பு புலனாய்வு அதிகாரி தகவல் | அகமதாபாத்: மும்பையைச் சேர்ந்த கல்லூரி மாணவி இஷ்ரத் ஜகான் கடந்த 2004ம் ஆண்டு குஜராத் போலீசாரால் என்கவுன்ட்டரில் கொல்லப்பட்டார். அவருடன் சேர்த்து மேலும் 3 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இவர்கள் அனைவரும் குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை கொலை செய்ய வந்த தீவிரவாதிகள் என முத்திரை குத்தப்பட்டது. போலி என்கவுன்ட்டர் மூலம் இஷ்ரத் சுட்டுக் கொல்லப்பட்டிருப்பதாக அவரது தாயார் அகமதாபாத் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இதையடுத்து இந்த புகார் குறித்து விசாரணை நடத்த 3 பேர் கொண்ட சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டது.இந்தக் குழுவில் இடம்பெற்றுள்ள மூத்த ஐபிஎஸ் அதிகாரி சதீஷ்வர்மா நேற்று ஐகோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்தார். அதில், இஷ்ரத் என்கவுன்டர் போலியானது என்பதற்கான ஆதாரங்கள் இருப்பதாக தெரிவித்துள்ளார். இஷ்ரத்திடமிருந்து கைப்பற்றப்பட்டதாக கூறப்படும் துப்பாக்கியும் தோட்டாக்களும் ஒன்றுக்கொன்று சம்பந்தமில்லாதது என்றும் மருத்துவ பரிசோதனை அறிக்கையில் கிடைத்த விவரங்கள் போலீஸ் எப்ஐஆரில் பதிவு செய்யப்பட்ட விவரங்களுக்கு முரணாக இருப்பதாகவும் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். |
789 | 1/29/2011 1:35:36 PM | ஸ்டேட் எக்ஸ்பிரஸ் | பிஎப் மோசடி வழக்கில் மாஜி நீதிபதிகளின் மனு தள்ளுபடி | அலகாபாத்: உ.பி.மாநிலம் காசியாபாத் மாவட்ட நீதிமன்றத்தில் ஊழியர்களுக்கான வருங்கால வைப்பு நிதியில் கடந்த 2001 முதல் 2008 வரை கோடிக்கணக்கான ரூபாய் மோசடி நடைபெற்றிருப்பது கடந்த ஆண்டு வெளிச்சத்துக்கு வந்தது. இந்த மோசடியில் மாவட்ட நீதிபதிகள் 6 பேருக்கு தொடர்பு இருப்பது சிபிஐ விசாரணையில் தெரியவந்தது. இவர்களில் 3 பேர் ஐகோர்ட் நீதிபதிகளாக பதவி உயர்வு பெற்று, ஓய்வு பெற்றவர்கள். இது தொடர்பான வழக்கை காசியாபாத் சிபிஐ கோர்ட் விசாரித்து வந்தது. இதில் நாளை நேரில் ஆஜராகுமாறு 6 நீதிபதிகளுக்கும் கடந்த டிசம்பர் 22ம் தேதி சம்மன் அனுப்பப்பட்டது. இந்த சம்மனுக்கு தடை கோரி 6 நீதிபதிகளும் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை நீதிபதி அருண் தாண்டன் விசாரித்து தள்ளுபடி செய்தார். பிஎப் வழக்கில் சம்பந்தப்பட்ட முன்னாள் நீதிபதிகள் 6 பேரும் சிபிஐ கோர்ட் சம்மனுக்கு பதில் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டார். |
790 | 1/29/2011 1:36:45 PM | ஸ்டேட் எக்ஸ்பிரஸ் | விஜிலென்ஸ் கமிஷனர் பதவி பி.ஜே.தாமஸ் விலக மறுப்பு | புதுடெல்லி: மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையராக கடந்த செப்டம்பர் மாதம் கேரளாவை சேர்ந்த மூத்த ஐஏஎஸ் அதிகாரி பி.ஜே.தாமஸ் நியமிக்கப்பட்டார். பாமாயில் இறக்குமதி ஊழலில் இவரது பெயர் இடம்பெற்றிருந்ததால் இவரது நியமனத்தை எதிர்த்து டெல்லியை சேர்ந்த பொதுநல வழக்குகள் மையம் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசின் தலைமை வக்கீல் ஆஜராகி, Ôதாமஸ் மீதான பாமாயில் வழக்கு விவரங்கள் சிவிசி நியமன கமிட்டியின் முன் வைக்கப்படவில்லை' என்றார். சிவிசி நியமன கமிட்டியில் இடம்பெற்றிருந்த பாஜ தலைவர் சுஷ்மா சுவராஜ், தாமஸ் மீதான பாமாயில் ஊழல் வழக்கு விவரம் மத்திய அரசுக்கு தெரியும் எனவும் இது குறித்து சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்போவதாகவும் தெரிவித்தார். இதனால் மத்திய அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டது. தாமஸ் பதவி விலக மத்திய அரசு 2 நாள் கெடு விதித்திருப்பதாக செய்திகள் வெளியாயின. இந்நிலையில், 'சிவிசி தலைவர் பதவியை ராஜினாமா செய்யும் பேச்சுக்கே இடமில்லை' என பி.ஜே.தாமஸ் தெரிவித்துள்ளார். இதனால் மத்திய அரசுக்கு தர்மசங்கட நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. |
791 | 1/29/2011 1:37:30 PM | ஸ்டேட் எக்ஸ்பிரஸ் | மகன்களுக்கு நிலம் ஒதுக்கியது தவறுதான்: எடியூரப்பா ஒப்புதல் | பெங்களூர்: அரசுக்கு சொந்தமான நிலத்தை தனது மகன்களுக்கு ஒதுக்கியது தவறுதான் என்று எடியூரப்பா கூறினார். இது தொடர்பாக நேற்று அவர் அளித்த பேட்டியில், ‘‘அரசு நிலத்தை யாருக்கு வேண்டுமானலும் ஒதுக்கலாம். ஆனால், மகன்களுக்கு ஒதுக்கியது என் தவறுதான். இது தொடர்பாக கோர்ட் முடிவு எடுத்து, நிலத்தை திரும்ப எடுத்து கொள்ளட்டும். பா.ஜ. கட்சித் தலைவர் கட்கரி, எனது மகன்களுக்கு நிலம் ஒதுக்கியதை சட்டப்படி தவறில்லை என்றும், ஆனால் நியாயமற்றது என்றும் கூறியுள்ளார். இந்தப் பிரச்னை குறித்து அவர் தவறாக புரிந்து கொண்டுள்ளார். இதுகுறித்து அவரிடம் பேசுவேன். கவர்னர் பரத்வாஜ், ராஜ்பவனை அரசியல் அலுவலகமாக மாற்றி விட்டார். ஒரு எதிர்க்கட்சித் தலைவர் போல செயல்படுகிறார். என் மீது தொடரப்பட்டுள்ள ஊழல் வழக்கு விசாரணையை சந்திக்க தயாராக உள்ளேன்’’ என்றார். |
792 | 1/29/2011 1:49:39 PM | விளையாட்டு | ஈடன் கார்டனுக்கு ‘நோ’ ஐசிசி மீண்டும் பிடிவாதம் | கொல்கத்தாவில் உள்ள ஈடன்கார்டன் மைதானத்தில் உலககோப்பை கிரிக்கெட் போட்டியின் 4 லீக் ஆட்டங்கள் நடத்த திட்டமிடப்பட்டது. ஆனால் மைதான சீரமைப்புகள் இன்னும் நிறைவடையவில்லை. இதையடுத்து பிப்ரவரி 27&ந் தேதி இங்கு நடைபெறவிருந்த இந்தியா & இங்கிலாந்து இடையேயான ஆட்டம் வேறு மைதானத்திற்கு மாற்றப்படுமென ஐசிசி அதிரடியாக அறிவித்தது.இதற்கிடையே வருகிற 7&ந் தேதிக்குள் மைதானத்தை முழு அளவில் தயார் செய்துவிடுவோம். எனவே போட்டியை இங்கிருந்து மாற்றும் முடிவை கைவிட வேண்டும் என மேற்கு வங்க கிரிக்கெட் சங்கம் ஐசிசிக்கு கோரிக்கை விடுத்தது. இந்நிலையில் இந்த கோரிக்கையை ஐசிசி நிராகரித்துள்ளது. இதற்கிடையே இந்த விவகாரம் தொடர்பாக பிசிசிஐ வருகிற 31&ந் தேதி ஐசிசி நிர்வாகிகளுடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. |
793 | 1/29/2011 1:50:46 PM | விளையாட்டு | நெருக்கடியா...? அப்படின்னா.. | இந்திய கிரிக்கெட் அணியின் இளம் அதிரடி வீரரான ரெய்னா கூறுகையில், 'சமீபகாலமாக நடந்த போட்டிகளில் நான் என்னுடைய பார்மை இழந்ததாக கருதவில்லை. 6வது இடத்தில் களமிறங்கிய போதும் ஒவ்வொரு ஆட்டத்திலும் குறைந்தது 30 ரன்கள் வரையாவது எடுத்துள்ளேன். ஒரு ஆட்டத்தில் மோசமாக ஆடினால் கடும் விமர்சனம் எழும். ஆனால் அவை என்னை பாதிப்பதில்லை. மேலும் எப்போதுமே எனக்கு நெருக்கடி உண்டானது கிடையாது.என்னுடைய இயல்பான ஆட்டத்தின் மீது எனக்கு நம்பிக்கை உள்ளது. இம்முறை உலககோப்பையை வெல்வதற்கு இந்திய அணிக்கு வாய்ப்புள்ளது. சிறந்த கேப்டன், சிறந்த பயிற்சியாளர், சச்சின் போன்ற தலைசிறந்த வீரர்களை நமது அணி கொண்டுள்ளது. சச்சினுக்கு இது கடைசி உலககோப்பையாக இருக்கலாம். அதனால் அவருக்காக சிறப்பாக ஆடி கோப்பையை வெல்லும் முனைப்புடன் உள்ளோம். கடந்த சில ஆண்டுகளாகவே பீல்டிங், பந்துவீச்சு என எல்லா துறைகளிலுமே அணி நல்ல முன்னேற்றம் கண்டுள்ளது' என்றார். |
794 | 1/29/2011 1:51:48 PM | விளையாட்டு | சான்ஸ் கிடைக்கும் ஸ்ரீசாந்த் | இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்த் கூறுகையில், 'இம்முறை உலககோப்பையில் விளையாடுவதற்கான வாய்ப்பு கிடைக்கவில்லை. எனக்கு 27 வயதுதான் ஆகிறது. இன்னும் 10 வருடங்கள் என்னால் விளையாட முடியும். அதனால் அடுத்த 2 உலககோப்பையில் விளையாட வாய்ப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது' என்றார். |
795 | 1/29/2011 1:56:28 PM | விளையாட்டு | இன்னும் சாதிக்கணும்... சச்சின் சந்தோஷம் | மும்பை: சிறந்த இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கான கேஸ்ட்ரோல் விருது வழங்கும் விழா மும்பையில் நேற்று நடந்தது. ஆண்டின் சிறந்த வீரர், டெஸ்ட் வீரர் மற்றும் 50வது சதம் விளாசியது என சச்சினுக்கு 3 விருதுகள் வழங்கப்பட்டது. ஒருநாள் போட்டிக்கான சிறந்த வீரர் விருது டோனிக்கும், பந்துவீச்சாளர் விருது ஹர்பஜன்சிங்கிற்கும், அதிக கேட்ச்கள் செய்த வீரர் விருது டிராவிட்டிற்கும், அதிரடி வீரர் விருது யூசுப்பதானுக்கும், ரசிகர்களின் நாயகன் விருது சேவாக்கிற்கும், வாழ்நாள் சாதனையாளர் விருது மொகிந்தர் அமர்நாத்திற்கும் வழங்கப்பட்டது.விழாவில் சச்சின் பேசுகையில், Ôடெஸ்ட் போட்டியில் நாங்கள் முதலிடத்தை பிடித்த போது பலரும் இந்த இடம் 30 முதல் 40 நாட்களில் பறிபோய்விடும் என கூறினர். ஆனால் ஒரு வருடங்கள் தாண்டியும் தொடர்ந்து முதலிடத்தை தக்கவைத்து வருகிறோம். இது அவ்வளவு எளிதானதல்ல. பயிற்சியாளர் கிரிஸ்டன் அணியில் பல மாற்றங்களை கொண்டு வந்துள்ளார். என்னை பொறுத்தவரையில் சாதிப்பதற்கும், வயதிற்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. நான் 16 வயதில் விளையாட தொடங்கினேன். இன்றைய அளவும் நான் சிறப்பாக ஆடுவதற்கு காரணம் கிரிக்கெட்டை நான் எனது வாழ்க்கையாக கருதுவதுதான். இன்னும் நான் சாதிக்க வேண்டியதுள்ளது. அது எல்லோருக்குமே தெரியும்Õ என்றார். |
796 | 1/29/2011 2:03:20 PM | தமிழகம் | கிராமப்புற பள்ளிகளின் தரத்தில் அக்கறை செலுத்த வேண்டும் | சென்னை: தினகரன் - விஐடி பல்கலைக்கழகம் இணைந்து பிளஸ் 2 மாணவர்களுக்கான ‘வெற்றி நமதே’ நிகழ்ச்சியை சென்னையில் இன்று நடத்தின. சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா கலையரங்கில் நடந்த நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து விஐடி பல்கலைக்கழக வேந்தர் டாக்டர் ஜி.விசுவநாதன் பேசியதாவது: தினகரனும் விஐடி பல்கலைக்கழகமும் இணைந்து கல்வியில் பெரிய மறுமலர்ச்சி, விழிப்புணர்வு உண்டாக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் பல நகரங்களில் ‘வெற்றி நமதே’ நிகழ்ச்சியை நடத்திவிட்டு இன்று சென்னையில் நடத்துகிறோம். நாட்டின் வளர்ச்சியை முடிவு செய்வது கல்வி வளர்ச்சிதான். ஒரு நாட்டில் சமூக, பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் அதிகம் இருந்தால் அங்கு கல்வி சரியில்லை என்று அர்த்தம். அப்படிப்பட்ட கல்வியில் இந்தியா, தமிழகம் சிறந்து விளங்க வேண்டும். அதற்கு நீங்கள் பள்ளிப் படிப்புடன் நின்று விடக்கூடாது. உயர் கல்விக்கு செல்ல வேண்டும். இந்தியாவில் 12 சதவீதம் பேர் உயர் கல்வி கற்கின்றனர். அதில், 17 சதவீதத்துடன் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. இன்று நாம் உலக நாடுகளுடன் போட்டி போட வேண்டிய நிலையில் இருக்கிறோம். உலகமயமாக்கல் கொள்கை வந்த பிறகு இந்நிலை ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டுக்குள் போட்டி போட்டோம். பின்னர் இந்தியாவுக்குள் போட்டி போட்டோம். ஆனால், இப்போது சென்னை மாணவன், நியூயார்க், லண்டன், சிட்னி மாணவர்களோடு போட்டியிடும் நிலை உருவாகியுள்ளது. உலகத்தரமான கல்வி வழங்குவதில் விஐடி முன்னணியில் உள்ளது. முதன்முதலில் வெளிநாட்டு அங்கீகாரம் பெற்றது விஐடிதான். இங்கிலாந்து, அமெரிக்கா போன்ற நாடுகளின் அங்கீகாரத்தை முதலில் பெற்றோம்.கல்வியில் பல சீர்திருத்தங்களை கொண்டு வர மத்திய அரசு விரும்புகிறது. அதற்கேற்ப புதிய கல்வி முறையை கொண்டு வந்துள்ளோம். அதன்படி, மாணவர்கள் தாங்கள் விரும்பும் பாடம், ஆசிரியர், நேரம் போன்றவற்றை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். அதேபோல உயர் கல்வியை எளிமைப்படுத்தி இருக்கிறோம். எங்கள் கல்லூரியில் சேர்வதற்கு ஒரு லட்சத்து 58 ஆயிரம் பேர் விண்ணப்பித்து நுழைவுத் தேர்வு எழுதினர். இதில் தமிழகத்தைச் சேர்ந்த அதிகம் பேர் இடம் பெற வேண்டும் என்று விரும்புகிறோம். விஐடியில் படித்து முடித்து வெளியே வரும்போது வேலையுடன் வெளியே வரலாம். இந்த ஆண்டு 2400 பேருக்கு கேம்பஸ் தேர்வு மூலம் வேலை கிடைத்துள்ளது. அந்த வரிசையிலும் நீங்கள் இடம்பெற வேண்டும். பள்ளியில் தரமான கல்வியை கற்றால், உயர் கல்வியும் சிறப்பாக அமையும். கிராமப்புற பள்ளிகளில் கல்வித்தரம் போதுமானதாக இல்லை. கிராமங்களில் நாம் அதிக கவனம் செலுத்த வேண்டியவர்களாக இருக்கிறோம். இதுகுறித்து, மத்திய அரசு வெளியிட்ட ஆய்வறிக்கையில் ஒன்று மற்றும் 2&ம் வகுப்பு மாணவர்களை அழைத்து எழுத்துக்களை அடையாளம் காணச் சொன்னால் அதில் நாம் கடைசி மாநிலமாக இருக்கிறோம். 3, 4, 5ம் வகுப்பு மாணவர்களை முதல் வகுப்பு புத்தகத்தை படிக்கச் சொன்னால் அதிலும் தமிழகம் கடைசியில் இருக்கிறது. கணக்கில் 1, 2 வகுப்பு மாணவர்களை 1 முதல் 9 வரை அடையாளம் காட்டச் சொன்னால் கடைசியாக பாண்டிச்சேரியும் அதற்கு முன்பாக நாம் இருக்கிறோம்.3, 4, 5 வகுப்பு மாணவர்கள் சாதாரண கழித்தல் கணக்கு போடுவதில் நம் மாணவர்கள் கடைசியில் இருந்து 2வது இடத்தில் உள்ளனர். நமக்கு கீழே உத்தரபிரதேசம் உள்ளது. எனவே, இன்னும் நாம் விழித்துக் கொள்ள வேண்டும். கிராம பள்ளிகளின் தரத்தில் அக்கறை செலுத்த வேண்டும். இதை அரசு ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் ஆகிய அனைவரும் சேர்ந்து செய்ய வேண்டும். தொடக்கப்பள்ளியிலேயே இதை சரி செய்ய வேண்டும். விஐடியில் 45 நாட்டு மாணவர்கள் படிக்கின்றனர். 37 மொழி பேசுகிறவர்கள் இருக்கிறார்கள். அதில் அந்நிய மொழிகள் 16 உள்ளன. கிராமப்புற மாணவர்களும் விஐடியில் அதிக அளவில் சேருவதற்கு திட்டம் வைத்துள்ளோம். மாணவர்கள் தேர்ந்தெடுக்கும் நாட்டுக்கு சென்று ஒரு செமஸ்டர், புராஜக்ட் செய்யவும் திட்டம் வைத்துள்ளோம். காக்னிசன்ட் நிறுவனம், எங்கள் மாணவர்கள் 1643 பேருக்கு வேலை தந்துள்ளது. இது உலக சாதனையாகும். எங்கள் கல்லூரிக்கு வர எல்லாரும் நுழைவுத் தேர்வு எழுதுங்கள். பயப்பட வேண்டாம். தமிழகம் கல்வியில் முன்னணியில் இருக்க வேண்டும். அது உங்கள் கையில் இருக்கிறது. |
797 | 1/29/2011 2:30:44 PM | குற்றம் | ரூ. 25 கோடியில் தங்க விமானம் பிப்.7ம் தேதி கும்பாபிஷேகம் திருத்தணி முருகன் கோயிலில் | திருத்தணி: தமிழகத்திலேயே முதன்முறையாக ரூ. 25 கோடி செலவில் திருத்தணி கோயிலில் அமைக்கப்படும் தங்க கோபுரத்துக்கு, வரும் 7ம் தேதி மகா கும்பாபிஷேகம் நடக்கிறது என்று அறங்காவலர் குழு தலைவர் ஈஸ்வரப்பன் கூறினார். திருத்தணி முருகன் கோயிலில் தங்க கருவறை அமைக்கும் பணி, கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொடங்கியது. 27 அடி உயரத்தில் கோபுரம் புதிதாக அமைக்கப்பட்டும், குமார தந்திரப்படி சிற்பங்கள் அமைக்கப்பட்டும், அதன் மீது 1,200 கிலோ செம்பு தகடு, 100 கிலோ தங்கத் தகடு அமைக்கும் பணி நடந்து வருகிறது. ரூ. 25 கோடி செலவில் நடக்கும் இப்பணிகளை, அறங்காவலர் குழுத் தலைவர் ஈஸ்வரப்பன் இரு தினங்களுக்கு முன் பார்வையிட்டார். அப்போது, அவர் கூறுகையில், 'பிப்ரவரி 7ம் தேதி காலை 9 மணிக்கு தங்க கோபுரத்துக்கு மகா கும்பாபிஷேகம் நடக்கிறது. இதையொட்டி யாகங்கள், சிறப்பு பூஜைகள் நடக்கிறது. தஞ்சாவூர் ஸ்தபதிகள் குழு சார்பில் கோயில் கோபுரங்களுக்கு வண்ணம் தீட்டும் பணி நடந்து வருகிறது. திருவாரூர் ஸ்தபதிகள், யாக குண்டங்களை அமைத்து வருகின்றனர்' என்றார். அப்போது, கோயில் இணை ஆணையர் கவிதா, கோயில் மேலாளர்கள் மோகன், சுப்பிரமணி, நகர திமுக செயலாளர் எஸ்.சந்திரன், ஒன்றிய திமுக செயலாளர்கள் திருத்தணி அகூர் மாணிக்கம், திருவாலங்காடு ரமேஷ்காந்த், பள்ளிப்பட்டு ரவீந்திரநாத், ஆர்.கே.பேட்டை ஒன்றியக் குழு தலைவர் கன்னியப்பன், வடிவேல், முன்னாள் அறங்காவலர் நாகன் உள்ளிட்டோர் உடனிருந்தனர். |
798 | 1/29/2011 2:31:25 PM | குற்றம் | அண்ணனை தாக்கிய தம்பி கைது | ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டையை அடுத்த வெங்கல் கிராமத்தை சேர்ந்தவர் ராமு (39). இவரது தம்பி முரளி (28). இருவருக்கும் சொத்து பிரச்னை தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்தது. இதில் நேற்று இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த முரளி, வீட்டின் முன்பு கிடந்த கல்லை எடுத்து ராமுவை தாக்கியுள்ளார். இதில் ராமு பலத்த காயம் அடைந்தார். புகாரின் பேரில் சப்இன்ஸ்பெக்டர் சோமன் வழக்கு பதிவு செய்து முரளியை கைது செய்து விசாரிக்கிறார். |
799 | 1/29/2011 2:34:05 PM | தமிழகம் | கழிவுநீர் கால்வாய்களை சீரமைக்க நடவடிக்கை பேரூராட்சியில் தீர்மானம் | கும்மிடிப்பூண்டி: ஆரணியில் உள்ள கழிவு நீர் கால்வாய்களுக்கு சிமென்ட் சிலாப் அமைத்து சீரமைக்க வேண்டும் என்று பேரூராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆரணி பேரூராட்சி மன்ற சாதாரண கூட்டம், அதன் தலைவர் ஹேமபூஷனம் தலைமையில் நடந்தது. செயல் அலுவலர் மதுரை முன்னிலை வகித்தார். பேரூராட்சியில் அடங்கிய 15 வார்டுகளிலும் சிமென்ட்டால் செய்யப்பட்ட புதிய பெயர் பலகை வைப்பது என கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.மேலும், கழிவு நீர் கால்வாய்கள் பராமரிப்பு இன்றி உள்ளதால் தெருக்களில் சாக்கடை வழிந்தோடுகிறது. கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் அபாயமும் உள்ளது. எனவே, கால்வாய்களை சீரமைத்து சிமென்ட் சிலாப்புகளால் மூடவேண்டும், பாரதியார் சாலையை விரிவாக்கம் செய்ய வேண்டும் என்பது உள்பட 11 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. குமாரசாமி, கரிகாலன், சுகுமார், சுஜாதா, மேகலா ஜெகதீசன் உள்பட அனைத்து கவுன்சிலர்களும் கலந்து கொண்டனர். முடிவில் பேரூராட்சி துணைத்தலைவர் பாபு நன்றி கூறினார். |
800 | 1/29/2011 2:36:04 PM | குற்றம் | போலிஆவணம் மூலம் நில மோசடி ரியல் எஸ்டேட் அதிபர் கைது | காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம், மதுராந்தகம் அடுத்த புதுமாம்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் கண்ணப்பன். இவரது மனைவி லட்சுமியம்மாள் (70). இவருக்கு அதே கிராமத்தில் 63 சென்ட் நிலம் இருந்தது. அதில் 40 சென்ட் நிலத்தை கடந்த 1986ம் ஆண்டு அதே ஊரை சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபரான நடராஜன் என்பவருக்கு விற்பனை செய்தார். மீதியுள்ள 23 சென்ட் நிலத்தையும் லட்சுமியம்மாள் தனக்கு விற்றதாக போலி ஆவணம் தயாரித்தார் நடராஜன். அதை வேறு நபருக்கு விற்பனை செய்துவிட்டார். இது லட்சுமியம்மாளுக்கு தெரியவந்தது. காஞ்சி குற்றப்பிரிவு போலீசில் புகார் கொடுத்தார். டிஎஸ்பி ராமதாஸ், இன்ஸ்பெக்டர் மோகனவேல், சப்இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் போலி ஆவணம் தயாரித்து நில மோசடி செய்தது தெரியவந்தது. நடராஜனை போலீசார் கைது செய்தனர். |
801 | 1/29/2011 2:41:50 PM | தமிழகம் | தினகரன் - விஐடி பல்கலை சார்பில் சென்னையில் ‘வெற்றி நமதே’ அலைகடலென திரண்ட மாணவ, மாணவியர் | சென்னை: தினகரன் நாளிதழ் - விஐடி பல்கலைக்கழகம் இணைந்து பிளஸ் 2 மாணவர்களுக்காக சென்னையில் ‘வெற்றி நமதே’ என்ற நிகழ்ச்சியை இன்று நடத்தின. சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா கலையரங்கில் நடந்த இந்த நிகழ்ச்சியில் பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் கலந்து கொண்டனர். அவர்களுக்கு பயனுள்ள பல ஆலோசனைகள், குறிப்புகளை ஆசிரியர் குழுவினர் வழங்கினர். தமிழகத்தின் நம்பர் 1 நாளிதழான தினகரன், பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுதும் மாணவ, மாணவியருக்கு பயனளிக்கும் வகையில் மாதிரி வினா - விடையை வெளியிட்டு வருகிறது. அதுமட்டுமின்றி, மாணவர்கள் நலனில் அக்கறை கொண்டு தினகரன் நாளிதழும், வேலூர் விஐடி பல்கலைக்கழகமும் இணைந்து தமிழகம் முழுவதும் பல நகரங்களில் ‘வெற்றி நமதே’ என்ற கல்வி வழிகாட்டி நிகழ்ச்சியை கடந்த இரண்டு ஆண்டுகளாக நடத்தின. மிகச் சிறந்த கல்வியாளர்கள், ஆசிரியர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்று தேர்வு பயம் நீங்கவும், அதிக மதிப்பெண்கள் பெறவும் மாணவர்களுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினர். தேர்வில் இடம் பெறும் வினாக்களுக்கு எப்படி பதில் அளிக்க வேண்டும், தேர்வு நேரத்தில் உடலையும், மனதையும் உற்சாகமாக வைத்துக் கொள்வது எப்படி என்பதற்கான டிப்ஸ்களையும் வழங்கினர்.இந்த நிகழ்ச்சிக்கு மாணவர்கள், பெற்றோர் இடையே அதிக வரவேற்பு இருப்பதை அடுத்து இந்த ஆண்டும் ‘வெற்றி நமதே’ நிகழ்ச்சி பல மாவட்டங்களில் நடத்தப்பட்டது. சென்னை மற்றும் புறநகரை சேர்ந்த பிளஸ் 2 மாணவ, மாணவியர் பயன்பெறும் வகையில் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள சென்னை பல்கலைக்கழக தொல்காப்பியர் வளாகம், நூற்றாண்டு விழா கலையரங்கில் இந்த நிகழ்ச்சி இன்று நடந்தது. இதில் கலந்து கொள்ள அதிகாலையில் இருந்தே மாணவ, மாணவியர் ஆர்வத்துடன் வந்து காத்திருந்தனர். சென்னையில் உள்ள மாநகராட்சி மேல்நிலைப் பள்ளிகள், அரசு மற்றும் தனியார் மேல்நிலைப் பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவியர் அலைஅலையாக திரண்டு வந்தனர். தனியார் பள்ளியை சேர்ந்த மாணவ, மாணவிகள் பள்ளி வாகனங்களிலேயே அழைத்து வரப்பட்டனர். சென்னை நகரை தவிர அம்பத்தூர், ஆவடி, பொன்னேரி, மீஞ்சூர், திருவொற்றியூர், பூந்தமல்லி, தாம்பரம், பல்லாவரம், திருவான்மியூர், திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் ஏராளமான மாணவ, மாணவியர் சென்னை பல்கலைக்கழக வளாகத்தில் குவிந்தனர். காலை 7 மணிக்கே அரங்கம் நிரம்பி வழிந்தது. அரங்கத்துக்கு வெளியேயும் ஆயிரக்கணக்கான மாணவர்கள் குவிந்திருந்தனர்.காலை 10 மணிக்கு ‘வெற்றி நமதே’ நிகழ்ச்சி தொடங்கியது. விஐடி பல்கலைக்கழக வேந்தர் ஜி.விசுவநாதன் தலைமை உரையாற்றினார். சென்னை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் டாக்டர் எஸ்.நாகராஜ முருகன் முன்னிலை வகித்தார். விஐடி பல்கலைக்கழக துணைத் தலைவர்கள் சங்கர் விசுவநாதன், ஜி.வி.சம்பத், ஜி.வி.செல்வம், சென்னை கிழக்கு மாவட்ட கல்வி அலுவலர் ஜி.சுவாமிநாதன், தினகரன் நாளிதழ் நிர்வாக இயக்குனர் ஆர்.எம்.ஆர்.ரமேஷ், ஆசிரியர்கள் ராஜேந்திரன், ஆதியப்பன், பத்மலோசனி, ஸ்ரீபிரியா, வருண்குமார், உலகநாதன், செங்கோட்டையன் ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியை ஈரோடு மகேஷ் தொகுத்து வழங்கினார். |
802 | 1/29/2011 2:45:59 PM | தமிழகம் | களக்காடு அருகே இன்று காலை யானைகள் மீண்டும் ஊருக்குள் புகுந்தன | களக்காடு: நெல்லை மாவட்டம் களக்காடு அருகே உள்ள பூதத்தான் குடியிருப்பு, புலவன் குடியிருப்பு பகுதிகளில் கடந்த 3 மாதமாக யானைகள் நடமாட்டம் இருந்து வருகிறது. நேற்று அவைகள் பட்டப்பகலில் ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்ததுடன் பொதுமக்களையும் விரட்டின. வனத்துறையினர் மற்றும் போலீசார் வந்து யானைகளை காட்டுகள் விரட்டினர்.இந்த பரபரப்பு அடங்குவதற்குள் இன்று காலையில் மீண்டும் யானைகள் ஊருக்குள் புகுந்தன. களக்காடு அருகே உள்ள தானிஓடை பகுதியில் இருந்து 2 குட்டி யானை உள்பட 13 யானைகள் காலை 6 மணியளவில் ஊருக்குள் புகுந்தன. இதைப்பார்த்த பொதுமக்கள் அலறியடித்து கொண்டு நாலாபுறமும் சிதறி ஓடினர். அந்த வழியாக பைக்கில் சென்ற ஒருவர் பைக்கை போட்டு விட்டு ஓட்டம் பிடித்தார். பெண்கள் வீட்டை விட்டு வெளியே வரவில்லை. யானைகள் சர்வ சாதாரணமாக தெருக்களில் வலம் வந்தன. ஒரு யானை மட்டும் துதிக்கையை தூக்கி மிரட்டுவது போல பிளிறிக்கொண்டு தெருக்களில் ஓடி வந்தது. இதனால் அந்த வழியாக வந்த பலர் மிரண்டு ஓட்டம் எடுத்தனர்.இதையடுத்து அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த வனத்துறை ஊழியர்கள் வெடிகள் வெடித்து அவைகளை விரட்டினர். அதே நேரத்தில் சாமியார்பொடவு பகுதியிலிருந்து 5 யானைகள் ஊருக்குள் புகுந்தன. அவைகளையும் வனத்துறையினர் விரட்டினர். ஒரேநேரத்தில் இருபுறங்கள் வழியாக யானைகள் ஊருக்குள் புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. குட்டிகளுடன் யானைகள் இருப்பதால் அவைகள் காட்டிற்குள் செல்லாமல் மலையடிவாரத்திலேயே சுற்றி வருகின்றன. இதனால் கிராமமக்கள் தொடர்ந்து அச்சத்தில் உள்ளனர். |
803 | 1/29/2011 2:50:38 PM | தமிழகம் | பாதயாத்திரை குழுவில் வேன்புகுந்தது : புதுகை பக்தர்கள் 3 பேர் பலி | மணப்பாறை: புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் அருகே உள்ள ஆரியூர் என்ற கிராமத்தில் இருந்து குருசாமி மெய்யப்பன்(62) தலைமையில் முருக பக்தர்கள் ஆண்கள், பெண்கள் உள்பட 62 பேர் நேற்று மதியம் பழனிக்கு பாதயாத்திரை புறப்பட்டனர். இரவில் மணப்பாறை அருகே உள்ள ராஜாளிப்பட்டியில் தங்கினர். இன்று மதியம் அவர்களுக்கு வையம்பட்டியில் உணவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதற்காக அதிகாலை 3 மணிக்கு குருசாமியும் 4 பேரும் வேனில் புறப்பட்டு சென்று விட்டனர்.மற்றவர்கள் சிறு சிறு குழுக்களாக 3.30 மணிக்கு பாதயாத்திரையை தொடங்கினர். மணப்பாறையை கடந்து 4.45 மணிக்கு தீராம்பட்டி என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தனர். அந்த இடத்தில் உள்ள பாலத்தில் ஏறும் இடத்தில் நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது சென்னையில் இருந்து கேரள மாநிலம் மூணாறு சுற்றுலா சென்றுகொண்டிருந்த ஒரு வேன் எதிர்பாராதவிதமாக ரோட்டின் நடுவில் அமைக்கப்பட்டிருந்த தடுப்புகளில் மோதியது. இதையடுத்து டிரைவர் வேனை திடீரென இடதுபுறம் ஒடித்து திருப்பினார்.அப்போது சாலையோரம் நடந்து சென்றுகொண்டிருந்த பாதயாத்திரை குழுவில் வேன் புகுந்தது. இதில் ஆரியூர் கருப்பையா(40), மாங்குடி சுந்தர்ராஜன்(40) குறிச்சிப்பட்டி வள்ளிக்கண்ணு அம்மாள்(35) ஆகியோர் அதே இடத்திலேயே இறந்தனர். படுகாயமடைந்த சிங்கமுத்து(38), ஆறுமுகம்(37) ஆகியோர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். விபத்து நடந்ததும் வேனில் இருந்த டிரைவர், மற்றும் சுற்றுலா பயணிகள் தப்பி ஓடிவிட்டனர். மணப்பாறை போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர். |
804 | 1/29/2011 2:52:28 PM | தமிழகம் | பிளஸ் 2 மறு கூட்டலில் 3வது இடம் : 'வித்யா விகாஸ்' மாணவனுக்கு அமைச்சர் பாராட்டு | திருச்செங்கோடு: நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு வித்யா விகாஸ் பள்ளி மாணவர் மனோ பிரவீன். கடந்த மே மாதம் வெளியான பிளஸ் 2 தேர்வு முடிவில் 1181 மதிப்பெண் பெற்றார். மாநில அளவில் ரேங்க் கிடைக்கும் என எதிர்பார்த்த அவர் ஏமாற்றமடைந்தார். இதனால் மறு கூட்டலுக்கு விண்ணப்பித்தார். அதில், தமிழ்ப் பாடத்தில் கூடுதலாக 4 மதிப்பெண் பெற்றார். இதன் மூலம் 1185 மதிப்பெண் கிடைத்தது. இதன் மூலம் 2010 கல்வி ஆண்டில் மாநில அளவில் மனோ பிரவீன் மூன்றாவது இடத்தைப் பெற்றார்.கடந்த 24ம் தேதி பள்ளியில் நடந்த விழாவில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பங்கேற்றார். நிகழ்ச்சியில் பள்ளி செயலாளர் குணசேகரன், தாளாளர் சிங்காரவேல், மேலாண் இயக்குனர்கள் ராமலிங்கம், முத்துசாமி, மக்கள் தொடர்பு அலுவலர் பழனியப்பன், இயக்குனர் சீராளன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அப்போது, மாணவன் மனோ பிரவீனுக்கு புதிய மதிப்பெண் சான்றிதழ், மாநில அளவில் சிறப்பிடம் பெற்றமைக்கான அரசு சலுகைகள், உதவித்தொகை உள்ளிட்டவற்றை வழங்கி அமைச்சர் தங்கம் தென்னரசு பாராட்டினார். |
805 | 1/29/2011 2:57:34 PM | குற்றம் | மோசடி ஜோதிடர் ஈஸ்வரன் சிறையில் அடைப்பு | கோவை: கோவை மாவட்டம், வால்பாறை சோலையாறு அணை பகுதியை சேர்ந்தவர் ஈஸ்வரன் (49). கோவை தெலுங்குபாளையத்தில் குடும்பத்துடன் வசிக்கிறார். செல்வபுரம் சிஜிவி நகரில் 10 ஆண்டாக ஹம்ஸவேணி ஜோதிட சித்த மருத்துவ மாந்திரீக நிலையம் நடத்தி வருகிறார். ஜோதிடம் பார்க்க வந்த பெண்ணிடம் தவறாக நடக்க முயற்சித்தாக ஈஸ்வரன் நேற்று இரவு கைது செய்யப்பட்டார். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி கோவை சிறையில் அடைத்தனர்.போலீசில் ஈஸ்வரன் அளித்த வாக்குமூலம்: பத்தாம் வகுப்பு வரை படித்தேன். சில ஜோதிடர்கள் நிறைய பணம் சம்பாதிப்பதை பார்த்தேன். அவ்வாறு ஜோதிடம் பார்த்து வருமானம் ஈட்டலாம் என நினைத்தேன். ஜோதிடம் தொடர்பான சில புத்தகங்களை படித்தேன். செல்வபுரத்தில் வாடகைக்கு வீடு பிடித்து ஹம்ஸவேணி ஜோதிட சித்த மருத்துவ மாந்திரீக நிலையத்தை தொடங்கினேன். நல்ல வருமானம் வந்தது.மாந்திரீகம் மூலம் யாரையும் வசியப்படுத்தலாம் என்பதை நிறைய பேர் நம்பினர். இதுவரை 5 ஆயிரத்துக்கும் அதிகமான பெண்கள் என்னை நாடி வந்துள்ளனர். 6 பெண்களுடன் உல்லாசமாக இருந்துள்ளேன். சுமார் 200 பெண்களை சில்மிஷம் செய்துள்ளேன். சென்னையைச் சேர்ந்த துணை நடிகை ஒருவரும் என்னிடம் ஏமாந்துள்ளார். |
806 | 1/29/2011 3:00:21 PM | தமிழகம் | மூலிகைச் செடி வளர்க்க 120 கோடியில் புதிய திட்டம் | கோவை: மத்திய, மாநில அரசுகள், இந்திய தொழில் வர்த்தக கூட்டமைப்பு சார்பில், ‘ஆரோக்யா‘ என்ற இயற்கை மருத்துவ கண்காட்சி கோவை பீளமேடு கொடிசியா அரங்கில் நேற்று தொடங்கியது. நிகழ்ச்சியில், மத்திய சுகாதாரத் துறை இணை அமைச்சர் காந்திசெல்வன் பேசுகையில், ‘இந்தியாவில் உள்ள 488 மருத்துவ கல்லூரிகளில் இதுவரை 6 லட்சம் பேர் படித்து வெளியேறியுள்ளனர். ஆண்டுக்கு 25 ஆயிரம் பேர் மருத்துவம் படிக்கின்றனர். மூலிகைச்செடிகள் வளர்க்க ஈஷா யோகா மையத்துடன் இணைந்து ரூ.120 கோடியில் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. கொல்லிமலையில் மாதிரி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. புற்றுநோய், எய்ட்ஸ், மஞ்சள்காமாலை, சர்க்கரை நோய்களுக்கு இயற்கை மருத்துவத்தில் மருந்து உள்ளது‘ என்றார்.தமிழக சுகாதார துறை அமைச்சர் பன்னீர்செல்வம் பேசுகையில், ‘ஆரம்ப சுகாதார நிலையங்களில் சித்த மருத்துவத்துக்கு தனியாக கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. 75 ஆரம்ப சுகாதார நிலையங்களில் சித்த மருத்துவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். 300 நிலையங்களில் நியமிக்கப்பட உள்ளனர். தமிழகத்தில் கடந்த 4 ஆண்டுகளில் 10 மருத்துவ கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டு மேலும் 5 புதிய மருத்துவ கல்லூரிகள் திறக்கப்படுகின்றன‘ என்றார். பல்வேறு மாநிலங்களை சேர்ந்த சித்தா, ஆயுர்வேதா, யுனானி, யோகா, ஹோமியோபதி, நேச்சுரோபதி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளை சேர்ந்த 100க்கு அதிகமான அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. நாளை மறுநாள் வரை கண்காட்சி நடைபெறும். |
807 | 1/29/2011 3:03:59 PM | தலையங்கம் | மெட்ரோ ரயில் மூலம் சென்னைக்கு விடிவுகாலம் | சென்னை போன்ற பெருநகரங்களில் போக்குவரத்து பெரிய பிரச்னை. வீட்டில் இருந்து அலுவலகத்துக்கோ அல்லது கல்லூரிக்கோ போய், வரும் வழியில் தினமும் ஏதாவது ஒரு இடத்திலாவது டிராபிக் ஜாமில் சிக்கிக் கொள்வோம். அந்த அளவுக்கு எங்கு பார்த்தாலும் பஸ்கள், கார்கள், ஆட்டோக்கள், டூ வீலர்கள். இவற்றின் எண்ணிக்கை தினமும் அதிகரித்து வருகிறது. இதனால் ஏற்படும் விபத்துக்கள், உயிரிழப்புகளும் உயர்ந்து கொண்டே போகின்றன. இவற்றைக் குறைக்கும் வகையில் மெட்ரோ ரயில் பணிகள் விரைந்து முடிக்கப்பட்டு வருகின்றன.சென்னையில் போக்குவரத்து அதிகம் இருக்கும் பகுதிகளை இணைக்கும¢ வகையில், ழி14,600 கோடி செலவில் மெட்ரோ ரயில் பணிகள் நடந்து வருகிறது. முதல் வழித்தடம் வண்ணாரப்பேட்டையில் இருந்து சென்னை விமான நிலையம் வரை. தூரம் 23 கி.மீ. சைதாப்பேட்டை வரை சுரங்கப்பாதையாகவும், மீதமுள்ள தூரம் தரைக்குமேல் உயர்த்தப்பட்ட பாதையிலும் செல்லும். 11 நிலத்தடி ரயில் நிலையங்களும், 6 உயர்மட்ட ரயில் நிலையங்களும் அமைக்கப்படும். இரண்டாவது வழித்தடம் சென்ட்ரலில் இருந்து அண்ணா நகர், கோயம்பேடு வழியாக புனித தோமையார் மலை செல்கிறது. தூரம் 22 கி.மீ. 10 கி.மீ சுரங்கப் பாதை. 12 கி.மீ உயர்த்தப்பட்ட வழித்தடம். இதில் 9 நிலத்தடி ரயில் நிலையங்களும், 8 உயர்மட்ட ரயில் நிலையங்களும் அமைக்கப்படுகிறது. கோயம்பேடு - அசோக் நகர் (4.5 கி.மீ), அசோக் நகர் - புனித தோமையார் மலை (4.4 கி.மீ), சைதாப்பேட்டை - ராணுவ அலுவலர் பயிற்சி மையம் (5.2 கி.மீ) பாதை பணிகள் வேகமாக நடந்து வருகின்றன. இங்கு 81 தூண்கள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. 11 தூண்களுக்கு இடையே கான்கிரீட் வார்ப்பு வழித்தடங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. மறுபுறம் ரயில் பெட்டிகள் வடிவமைப்பு பணிகளும் துரிதகதியில் நடந்து வருகின்றன. கோயம்பேடு முதல் புனித தோமையார் மலை வரையுள்ள பகுதி 2013ம் ஆண்டில் முடிக்கப்பட்டு சேவை தொடங்கப்படும். 2015ல் அனைத்து பணிகளும் முடிக்கப்படும். இதுபோக, மூலக்கடை - திருமங்கலம் (22 கி.மீ), மூலக்கடை - திருவான்மியூர் (19 கி.மீ), மயிலாப்பூர் லஸ் கார்னர் - அய்யப்பன் தாங்கல் (22 கி.மீ) ஆகிய வழித்தடங்களிலும் மெட்ரோ ரயில் விட ஆய்வுப் பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளன.ஏற்கனவே மின்சார ரயில், பறக்கும் ரயில் மூலம் பல லட்சம் பேர் தினமும் வேலை, கல்லூரிக்கு சென்று வருகிறார்கள். மெட்ரோ ரயில் ஓடத் தொடங்கிய பிறகு தினமும் 6 லட்சம் பேர் அதில் பயணம் செய்வார்கள். அதன்பிறகு, சென்னை சாலைகளில் டிராபிக் ஜாம் குறைந்து விபத்துகளும் குறையும் என எதிர்பார்க்கலாம். |
808 | 1/29/2011 3:09:07 PM | மாவட்ட மசாலா | தேர்தல் முன்விரோத கொலையில் 5 பேருக்கு ஆயுள்தண்டனை | கள்ளக்குறிச்சி: விழுப்புரம் மாவட்டம் தியாகதுருகம் அருகே பல்லகசேரியை சேர்ந்தவர் சீனு என்கிற அருணாசலம் (45). இவரது மனைவி அலமேலு. ஊராட்சி மன்ற தலைவர். அருணாசலத்துக்கும் அதே ஊரைச் சேர்ந்த ராமருக்கும் தேர்தல் முன்விரோதம் இருந்து வந்தது. கடந்த 2007 ஜூலை 18ம் தேதி மாலை, அருணாசலம் படுகொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக ராமர், சடையன், கிருஷ்ணன், ரமேஷ், குமார், ராஜேந்திரன் ஆகிய 6 பேரை தியாகதுருகம் போலீசார் கைது செய்தனர். இதுகுறித்த வழக்கு கள்ளக்குறிச்சி விரைவு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. விசாரணையின்போது குமார் இறந்து விட்டார். இந்த வழக்கில் நீதிபதி மான்விழி நேற்று தீர்ப்பு கூறினார். கொலையாளிகள் 5 பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிட்டார். |
809 | 1/29/2011 3:09:28 PM | மாவட்ட மசாலா | தமிழகத்தில் இருந்து நார் ஏற்றுமதி அதிகரிப்பு | பொள்ளாச்சி: கயிறு வாரியத் தலைவர் விஜயராகவன் பொள்ளாச்சியில் கூறியதாவது: கடந்த ஆண்டு மட்டும் தமிழகத்தில் இருந்து ரூ.97.42 கோடி மதிப்பிலான 73 ஆயிரத்து 75 டன் நார் பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. நார் ஏற்றுமதி 12 சதவீதமாக இருந்தது, 25 சதவீதமாக உயர்ந்துள்ளது. கிராமப்புற பெண்களுக்கென ரிமோட் என்ற திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு ரூ.243 கோடியை ஒதுக்கியது. இதுவரை ரூ.180 கோடி பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது. கிராமங்களில் 4 சென்ட் நிலம் வைத்துள்ள யார் வேண்டுமானாலும் திட்டத்தில் கடன் பெற்று சுயமாக தொழில் செய்யலாம். அதிகபட்சம் ரூ.3 லட்சம் வரை கடனாகக் கொடுக்கப்படும். இதில் ரூ.25 ஆயிரம் மானியம். |
810 | 1/29/2011 3:09:51 PM | மாவட்ட மசாலா | பெண் குழந்தையை கொன்று கோணியில் கட்டி சடலம் வீச்சு | கும்பகோணம்: கும்பகோணம் அடுத்த பெருமாண்டி ஆட்டோ நகர் 3வது தெருவில் பாழடைந்த ஒரு வீட்டில் ஒரு சாக்குப் பையில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக அப்பகுதி மக்கள் தாலுகா போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் அங்கு சென்று சாக்குப்பையை பிரித்து பார்த்தனர். அதில் பிறந்து சில மணி நேரமே ஆன பெண் குழந்தை கழுத்தில் ரிப்பனால் இறுக்கப்பட்ட நிலையில் இறந்து கிடந்தது. அக்குழந்தையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர். |
811 | 1/29/2011 3:10:46 PM | மாவட்ட மசாலா | சமயபுரம் கோயிலில் தங்க தகடு பதிக்கும் பணி | திருச்சி: சமயபுரம் மாரியம்மன் கோயிலில் மூலவர் மாரியம்மன் சன்னதி முகப்பு மற்றும் நிலைக்கதவுகள் தங்கமாக மாற்றுவதற்கு 28.224 கிலோ கிராமில் தங்கத் தகடுகள் தயார் செய்யப்பட்டுள்ளது. இவற்றை மூலவர் சன்னதியில் பதிக்கும் பணி தொடங்கியது. இதேபோல உற்சவர் மாரியம்மன் சன்னதியில் 9.32 கிலோகிராம் தங்கத்தாலும், அபிஷேக அம்மன் சன்னதி 14.79 கிலோ கிராம் தங்கத்திலும், 9.92 கிலோ கிராம் தங்கத்தால் தங்க குதிரை வாகனமும், 6.4 கிலோ கிராமில் அபிஷேக அம்மனுக்கு தங்க கவசங்களும் தயார் செய்யும் பணி நடைபெற்று வருகிறது. |
812 | 1/29/2011 3:11:36 PM | மாவட்ட மசாலா | பாதை தகராறில் வாலிபர் படுகொலை | புளியங்குடி: நெல்லை மாவட்டம் சிவகிரி அருகே உள்ள தேவிபட்டணம் காமராஜர் காலனியை சேர்ந்தவர் முனியசாமி (32). இவர் அந்த பகுதியில் புதிதாக வீடு கட்டி வருகிறார். இதற்காக அங்கு மணல் அடித்து வைத்திருந்தார். இதனால் அந்த வழியாக எளிதாக செல்லமுடியவில்லை என அதே பகுதியை சேர்ந்த செல்வகுமார் (25) ஆட்சேபம் தெரிவித்தார். இதுதொடர்பாக நேற்று மாலை இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. அப்போது செல்வகுமார் அரிவாளால் முனியசாமியை சரமாரியாக வெட்டினார். இதில் படுகாயமடைந்த முனியசாமி சிவகிரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தார். போலீசார் வழக்கு பதிந்து செல்வகுமாரை தேடி வருகின்றனர். |
813 | 1/29/2011 3:15:23 PM | இந்தியா | கடப்பா தொகுதியில் ஜெகன்மோகனுக்கு எதிராக களம் இறங்கும் உறவினர் | ஐதராபாத்: காங்கிரஸ் மேலிடத்துடன் ஏற்பட்ட மோதலால், மறைந்த ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டியின் மகன் ஜெகன்மோகன் ரெட்டி, கடந்த நவம்பர் மாதம் அக்கட்சியிலிருந்து விலகினார். தனது எம்பி பதவியையும் ராஜினாமா செய்தார். ஜெகன் அடுத்த மாதம் புதிய கட்சி தொடங்க இருக்கிறார். அவருக்கு காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 20 பேரின் ஆதரவு இருப்பதாக தெரிகிறது. இந்நிலையில் ஜெகன் ராஜினாமாவால் காலியான கடப்பா எம்பி தொகுதிக்கு விரைவில் இடைத்தேர்தல் நடக்க இருக்கிறது. அங்கு மீண்டும் போட்டியிட போவதாக ஜெகன் அறிவித்தார். அவருக்கு எதிராக விவசாயத்துறை அமைச்சரும் ராஜசேகர ரெட்டியின் சகோதரருமான விவேகானந்தா ரெட்டியின் மருமகன் நர்ரெட்டி ராஜசேகர் ரெட்டியை களமிறக்க காங்கிரஸ் முடிவு செய்துள்ளது. புலிவெந்துலா எம்எல்ஏ தொகுதியில் ஜெகன்மோகனின் அம்மா விஜயலட்சுமியை எதிர்த்து விவேகானந்த ரெட்டியே களமிறங்க உள்ளார். புலிவெந்துலா ராஜசேகர ரெட்டி வெற்றி பெற்ற தொகுதி என்பது குறிப்பிடத்தக்கது. நர்ரெட்டி ராஜசேகர் ரெட்டி கூறும்போது, ‘Ôஜெகனை எதிர்த்து போட்டியிடுவதில் எனக்கு எந்த தயக்கமும் இல்லை. தேர்தலில் எந்த முடிவு வந்தாலும், அது ராஜசேகர ரெட்டியின் குடும்பமும் விரும்புவதாகவே இருக்கும்ÕÕ என்றார். |
814 | 1/29/2011 3:19:24 PM | தமிழகம் | உத்தபுரத்தில் பதற்றம்: பிப்.12 வரை 144 தடையுத்தரவு | உசிலம்பட்டி: மதுரை மாவட்டம், உத்தபுரம் கிராமத்தில் இரு சமூகத்தினர் இடையே அவ்வப்போது மோதல் ஏற்பட்டு வந்தது. இங்குள்ள சர்ச்சைக்குரிய சுவர் இடிக்கப்பட்டதை தொடர்ந்து பிரச்னை மேலும் அதிகரித்தது. இதையடுத்து இங்கு புறக்காவல் நிலையம் அமைக்கப்பட்டது. இந்நிலையில் ஒரு சமூகத்தினர் இங்குள்ள முத்தாலம்மன் கோயில் வளாகத்துக்கு பட்டா கொடுக்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனால் மற்றொரு சமூகத்தினர் இப்பகுதியில் தங்களுக்கு பஸ் நிறுத்தம் அமைத்துக் கொடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.இந்நிலையில் மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் முத்தாலம்மன் கோயிலில் ஆலய நுழைவுப் போராட்டம் வரும் 31ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இங்குள்ள ஒரு சமூகத்தினர் அதே நாளில் ஆலய சமூக பாதுகாப்பு போராட்டம் அறிவித்தனர். இதனால் கிராமத்தில் மீண்டும் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.இருதரப்பு போராட்டங்களால் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படும் வாய்ப்புள்ளதாக தெரியவந்ததையடுத்து பேரையூர் தாசில்தார் மங்கள சுப்பிரமணியன் உத்தபுரம் கிராமத்தில் 144 தடைஉத்தரவு பிறப்பித்தார். நேற்று (28ம் தேதி) நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ள இந்த தடையுத்தரவு வரும் பிப். 12ம் தேதி நள்ளிரவு வரை அமலில் இருக்கும். |
815 | 1/29/2011 3:24:04 PM | குற்றம் | அண்ணனூர் ரயில்வே ஸ்டேஷன் அருகே கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி கர்ப்பிணியிடம் 15 பவுன் வழிப்பறி | ஆவடி: அண்ணனூர் ரயில்வே ஸ்டேஷனில் கர்ப்பிணியை வழிமறித்து கத்திமுனையில் 15 பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர். ஆவடி அருகே அண்ணனூர் ஜோதி நகர் 3&வது பிரதான சாலையில் வசிப்பவர் கதிரவன். இவரது மனைவி நந்தினி (25), அம்பத்தூர் தொழிற்பேட்டையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றுகிறார். கர்ப்பிணியான இவர், நேற்று மாலையில் வேலை முடிந்து பட்டரைவாக்கம் ரயில்வே ஸ்டேஷனுக்கு நடந்து வந்தார்.அப்போது பைக்கில் ஹெல்மெட் அணிந்து வந்த இருவர், நந்தினியை வழிமறித்தனர். அவரது கழுத்தில் கத்தியை வைத்து கொன்று விடுவதாக மிரட்டி நகைகளை கேட்டனர். பயந்துபோன நந்தினி, தாலிச்செயின் உள்பட 15 பவுன் நகைகளை கழற்றிக் கொடுத்தார். அவற்றை வாங்கிக்கொண்டு மர்ம நபர்கள் பைக்கில் தப்பிவிட்டனர். நந்தினி கொடுத்த புகாரின்பேரில், அம்பத்தூர் தொழிற்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்பழகன், எஸ்ஐ ஜெயச்சந்திரன் வழக்கு பதிவு செய்து பைக் ஆசாமிகளை தேடி வருகின்றனர். அம்பத்தூர் தொழிற்பேட்டை பகுதியில் பல இடங்களில் மின் விளக்கு உள்ளது. ஆனால், அவை எரிவதில்லை. இது, வழிப்பறி கொள்ளையருக்கு வசதியாக உள்ளது. மின் விளக்குகளை பழுதுபார்த்து, கொள்ளை சம்பவங்களை தடுக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர். |
816 | 1/29/2011 3:26:22 PM | மாவட்ட மசாலா | கொள்ளை சம்பவங்களை தடுக்க. யோசனை | திருவள்ளூர்: திருவள்ளூர் அடுத்த செவ்வாய்பேட்டையில் குற்றத்தடுப்பு விழிப்புணர்வு கலந்தாய்வு கூட்டம் நடந்தது. கூடுதல் எஸ்பி செந்தில்குமார் தலைமை வகித்தார். அவர் பேசியதாவது: ஊருக்கோ அல்லது விழாவுக்கோ செல்லும்போது பெண்கள் அதிகமாக நகை அணிந்து கொண்டு தனியாக செல்லக்கூடாது. வீட்டிலும் அதிக அளவில் நகை, பணம் வைக்காமல் வங்கி லாக்கரில் வைக்கலாம். வீடு வாடகைக்கு விடும்போது, அதன் உரிமையாளர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.வாடகைக்கு வரும் நபர் யார், எந்த ஊரை சேர்ந்தவர், அவரது முகவரி, செல்போன் நம்பரை வீட்டு உரிமையாளர் தெரிந்து வைத்திருக்க வேண்டும். வீட்டில் குடியிருப்பவர் மீது சந்தேகம் ஏற்பட்டாலும் குடியிருப்பு பகுதியில் சந்தேக நபர் நடமாட்டம் இருந்தாலும் அருகேயுள்ள காவல்நிலையத்துக்கு தெரிவிக்க வேண்டும். வீட்டு உரிமையாளர், வாடகைக்கு குடியிருப்பவர்கள் வெளியூர் செல்லும்போது போலீசுக்கு தகவல் தெரிவித்தால், ரோந்து செல்லும் போலீசார் ஆள் இல்லாத வீட்டை கண்காணிப்பார்கள். இதன் மூலம் கொள்ளையை தடுக்க முடியும். முன்பின் தெரியாத நபர்களை வீட்டு வேலைக்கு வைக்கக்கூடாது. வீட்டு வேலை செய்பவர்களின் முழு விவரத்தையும் தெரிந்து வைத்திருக்க வேண்டும். குடும்ப ரகசியங்களை வேலைக்காரர்கள் முன்பு பேசக்கூடாது. வங்கியில் பணம் எடுக்கும்போதும், டெபாசிட் செய்யும்போதும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அருகேயுள்ள போலீஸ் நிலைய தொலைபேசி எண், அதிகாரிகளின் செல்போன் நம்பரை தெரிந்து வைத்திருக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். கூட்டத்தில் திருவள்ளூர் டிஎஸ்பி பாரதி, செவ்வாய்பேட்டை ஊராட்சி தலைவர் கனிஷ்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர். |
817 | 1/29/2011 3:28:33 PM | தமிழகம் | குறுக்கே பாயும் வாகனங்களால் விபத்து : பட்டாபிராம் ரவுண்டானாவில் சிக்னல் அமைக்கப்படுமா? | ஆவடி: ஆவடி அடுத்த பட்டாபிராம் - பூந்தமல்லி சாலையை இணைக்கும் வகையில் 14 கோடி ரூபாயில் ரயில்வே மேம்பாலம் கட்டப்பட்டு, கடந்த ஆகஸ்ட் மாதம் திறந்து வைக்கப்பட்டது. இந்த மேம்பாலத்தால் தண்டுரை, அணைக்கட்டுச்சேரி, சோராஞ்சேரி, பாரிவாக்கம், அமுதூர்மேடு, சித்துக்காடு, பாலேரிப்பட்டு உள்பட 20க்கும் மேற்பட்ட கிராமங்கள் பயனடைந்தன. தண்டுரை பகுதியில் இருந்து மேம்பாலம் வழியாக வரும் வாகனங்கள், பட்டாபிராம் பகுதியில் சிடிஎச் சாலை அருகில் இறங்கும் வகையில் மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இப்பகுதியில், பாலத்தின் இறக்கத்தில் பட்டாபிராம் போலீஸ் நிலையம் எதிரே எம்ஜிஆர் சிலையை சுற்றி வாகனங்கள் செல்லும் வகையில் ரவுண்டானா அமைக்கப்பட்டுள்ளது.திருவள்ளூர் மார்க்கத்தில் இருந்து சிடிஎச் சாலை வழியாக வரும் வாகனங்கள் மேம்பாலத்துக்கு செல்ல, ரவுண்டானாவில் வலதுபுறமாக சுற்றி வரவேண்டும். ஆவடி மார்க்கத்தில் இருந்து வரும் வாகனங்கள் ரவுண்டானாவுக்கு முன்பாகவே இடதுபுறம் திரும்பி மேம்பாலத்துக்கு செல்ல வேண்டும். அதேபோல், பாலத்தில் இருந்து கீழே இறங்கும் வாகனங்கள் திருவள்ளூர் செல்ல ரவுண்டானாவின் இடதுபுறமும், ஆவடிக்கு செல்ல ரவுண்டானாவின் வலதுபுறமும் சுற்றிக்கொண்டு செல்லும் வகையில் பாதை ஏற்படுத்தப்பட்டுள்ளது.ஆனால், ரவுண்டானா அருகில் போக்குவரத்து போலீசார் இருந்தும் வாகனங்கள் செல்வதை ஒழுங்குபடுத்துவதில்லை. அங்கு சிக்னலும் இல்லை. இதனால், ரவுண்டானா பகுதியில் வாகனங்கள் தங்கள் இஷ்டத்துக்கு சென்று வருகின்றன. குறுக்கும், நெடுக்குமாக செல்லும் வாகனங்களால் அடிக்கடி போக்குவரத்து நெரிசலும், விபத்துகளும் ஏற்படுகின்றன. எனவே, ரவுண்டானாவில் தானியங்கி சிக்னல் அமைத்து விபத்துகளை தடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். |
818 | 1/29/2011 3:31:17 PM | தமிழகம் | ஆந்திராவுக்கு கடத்த முயன்ற 5 டன் ரேஷன் அரிசி பறிமுதல் | திருவள்ளூர்: ஆந்திராவுக்கு கடத்தப்படவிருந்த 5 டன் ரேஷன் அரிசியை அதிகாரிகள் கைப்பற்றினர். இதுதொடர்பாக பெண்கள் உள்பட 9 பேர் கைது செய்யப்பட்டனர். கும்மிடிப்பூண்டி அடுத்த மாதர்பாக்கத்தில் இருந்து ஆந்திராவுக்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக, சிவில் சப்ளை சிஐடி இன்ஸ்பெக்டர் இளங்கோவனுக்கு தகவல் வந்தது. இதையடுத்து, அவரது தலைமையில் போலீசார் மாதர்பாக்கம் சத்தியவேடு கூட்டுச்சாலை பகுதியில் நேற்று தீவிர சோதனையில் ஈடுபட்டனர். வேகமாக வந்த லாரியை மடக்கி சோதனையிட்டனர். அதில் தலா 50 கிலோ எடை கொண்ட 100 மூட்டைகளில் ரேஷன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதை கடத்தி வந்த பொன்னேரி என்ஜிஓ நகரை சேர்ந்த லாரி உரிமையாளரும், டிரைவருமான குமார் (36), கூலித் தொழிலாளி விஜய் (26) இருவரையும் கைது செய்தனர். லாரியுடன் பறிமுதல் செய்யப்பட்ட அரிசி மூட்டைகள், திருவள்ளூர் நுகர்பொருள் வாணிபக் கழக கிடங்கில் ஒப்படைக்கப்பட்டது. இதேபோல திருத்தணி ரயில் நிலையத்திலும் நேற்று சோதனை நடத்தப்பட்டது. ரயில் மூலம் ஆந்திராவுக்கு ரேஷன் அரிசி கடத்த முயன்ற திருத்தணியை சேர்ந்த ஆயம்மாள் (35), காஞ்சனா (35), விஜயா (45), இந்திராணி (50), விசாலம்மாள் (60), தேசம்மாள் (60), ராஜம்மாள் (60) ஆகிய 7 பேரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட 9 பேரையும் திருவள்ளூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி, புழல் சிறையில் அடைத்தனர். |
819 | 1/29/2011 3:33:37 PM | தமிழகம் | செங்கல்பட்டு தச்சூர் சாலையை சீரமைக்க மக்கள் கோரிக்கை | செங்கல்பட்டு: 25 கிலோ மீட்டர் நீளமுள்ள செங்கல்பட்டு தச்சூர் நெடுஞ்சாலையை உடனே சீரமைக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். செங்கல்பட்டில் இருந்து செல்விநகர், வ.உ.சி.நகர், உதயம்பாக்கம், களத்தூர், வள்ளிபுரம், ஆனூர், புதூர் வழியாக பூதூர், தச்சூருக்கு அரசு பஸ் தடம் எண் 129 சி, டி 6, 12 மற்றும் தனியார் பஸ்கள் 2 இயக்கப்படுகிறது. 25 கி.மீட்டர் தூரமுள்ள இந்த சாலையில் தினமும் ஆயிரக்கணக்கான பள்ளி, கல்லூரி மாணவமாணவிகள், அரசு அலுவலர்கள் உட்பட பல தரப்பட்டவர்கள் பஸ் மற்றும் இரு சக்கர வாகனங்களில் பயணம் செய்கின்றனர். மேலும் வள்ளிபுரம், பாண்டூர் பகுதி பாலாற்றில் உள்ள அரசு குவாரிகளில் இருந்து மணல் அள்ள வரும் ஏராளமான லாரிகள், இந்த சாலையை பயன்படுத்துகின்றன. இதனால் சாலையில் போடப்பட்டுள்ள கற்கள் பெயர்ந்து, பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது. இரு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் விபத்துக்குள்ளாகின்றனர். பஸ்கள் ஆங்காங்கே பழுதாகி நிற்பதால், பயணிகள் குறிப்பிட்ட நேரத்தில், தாங்கள் செல்ல வேண்டிய இடத்துக்கு செல்ல முடியவில்லை. அவசர கால சிகிச்சைக்காக நோயாளிகளை வாகனங்களில் அழைத்துச் செல்ல முடியவில்லை. சாலை பழுதை காரணம் காட்டி இரவு 11 மணி வரை ஓட வேண்டிய அரசு பஸ்களை 7 மணியுடன் நிறுத்தி விடுகின்றனர். இதனால் அந்த பகுதி மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். சாலையை சீரமைக்க பலமுறை போராட்டம் நடத்தியும் பயனில்லை. கடந்த மாதம் நடந்த சாலை மறியல் போராட்டத்தை தொடர்ந்து நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் வந்தனர். ஒரு வாரத்தில் செங்கல்பட்டு தச்சூர் நெடுஞ்சாலையை சீரமைப்பதாக உறுதி அளித்தனர். ஆனால் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே செங்கல்பட்டு தச்சூர் நெடுஞ்சாலையை உடனே சீர் செய்யவும் பாண்டூர் பகுதி மணல் குவாரிக்கு தடை விதிக்கவும் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். |
820 | 1/29/2011 3:59:38 PM | சினிமா(ரீல்மா) | ஆர்யா, அனுஷ்கா தமன்னா உள்பட 74 பேருக்கு கலைமாமணி விருது | சென்னை: தமிழக அரசு நேற்று வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றம் கலை துறையில் சிறப்பாகப் பணியாற்றி வரும் கலைஞர்களைப் பாராட்டி ஆண்டு தோறும் ÒகலைமாமணிÓ எனும் மாநில அளவிலான விருதினை வழங்கிச் சிறப்பு செய்து வருகின்றது. விருது பெறும் ஒவ்வொரு கலைஞருக்கும் பொற்பதக்கம் வழங்கப்படுகிறது. 2008, 2009 மற்றும் 2010ம் ஆண்டுகளுக்கான கலைமாமணி விருதுகளுக்கான கலைஞர்களைத் தேர்வு செய்து, தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றம் அரசுக்குப் பரிந்துரை செய்துள்ளது. அப்பரிந்துரைகளையேற்று முதல்வர் கருணாநிதி அறிவிப்பு செய்துள்ளார்.2008ம் ஆண்டுக்கான விருதுகள்: சசிரேகா பாலசுப்ரமணியன் (நாட்டியம்)காயத்ரி சங்கரன் (கர்நாடக இசை) வே.நாராயணப் பெருமாள் (கர்நாடக இசை) எம்.வி. சண்முகம் (இசைக் கலைஞர்) இளசை சுந்தரம் (இயற்றமிழ் கலைஞர்) பி.லெட்சுமி நரசிம்மன் (தவில் கலைஞர்) காளிதாஸ், திருமாந்திரை (நாதஸ்வரக் கலைஞர்) பிரேமா ஜெகதீசன் (நாட்டியம்) ரோபோ சங்கர் (சின்னத்திரை கலைஞர்) நாமக்கல் வேணுகோபால் (கிளாரிநெட்)திருக்குவளை சகோதரிகள் சுந்தரி, சாவித்ரி (நாதஸ்வரக் கலைஞர்கள்)கவிக்கொண்டல் செங்குட்டுவன் (இயற்றமிழ் கலைஞர்)ச.சுஜாதா (நாட்டியம்) ராணி மைந்தன் (இயற்றமிழ் கலைஞர்) ஜி.கே. ராமஜெயம் (ஓவியக் கலைஞர்) கவிஞர் பட்டுக்கோட்டை சுப்பிரமணியன் (இயற்றமிழ் கலைஞர்) தஞ்சை சுபாஷினி மற்றும் திருமதி ரமா (பரதநாட்டியக் கலைஞர்கள்)சி.வி.ரமேஸ்வர சர்மா (சமையல் கலைஞர்) திருமுருகன் (சின்னத்திரை இயக்குநர்) பரத்வாஜ் (இசையமைப்பாளர்) ராஜீவ் மேனன் (ஒளிப்பதிவாளர்)சிற்பி குட்டப்பன் நாயர் (சிற்பக் கலைஞர்) தோஹா பேங்க் சீதாராமன் (பண்பாட்டுக் கலை பரப்புனர்)என்.எத்திராசன் (கலைப் பரப்புனர்) கருணாஸ் (நகைச்சுவை நடிகர்)2009ம் ஆண்டுக்கான விருதுகள்:காயத்ரி கிரீஷ் (கர்நாடக இசை) சேக்கிழார் (சின்னத்திரை வசனகர்த்தா) சாக்ஷி சிவா (சின்னத்திரை நடிகர்) மாளவிகா (சின்னத்திரை நடிகை) பூவிலங்கு மோகன் (சின்னத்திரை நடிகர்) எஸ்.முத்துராமலிங்கம் (கூத்துக் கலைஞர்) பி.முருகேஸ்வரி (கரகாட்டக் கலைஞர்) ரேவதி சங்கரன் (சின்னத்திரை நடிகை) தஞ்சை சின்னப்பொன்னு குமார் (கிராமியப் பாடகர்) எல். ஜான்பாவா (சிலம்பாட்டக் கலைஞர்) ரேவதி (வில்லுப்பாட்டுக் கலைஞர்) கே. கருப்பண்ணன் (ஒயிலாட்டக் கலைஞர்)கே.ஏ. பாண்டியன் (நையாண்டி மேளக் கலைஞர்) எம். திருச்செல்வம் (நையாண்டி மேளக் கலைஞர்) சிவகங்கை வி.நாகு (நையாண்டி மேளக் கலைஞர்) டி.சேகர் (கிராமியக் கருவி இசைக் கலைஞர்) மு.இளங்கோவன் (கிராமியக் கலை பயிற்றுனர்)சா.கந்தசாமி (இயற்றமிழ்) ராஜேஷ் குமார் (இயற்றமிழ்) நாஞ்சில் நாடன் (இயற்றமிழ்)ரோகிணி (குணச் சித்திர நடிகை) சரண்யா (குணச் சித்திர நடிகை) சின்னி ஜெயந்த் (நகைச்சுவை நடிகர்)2010ம் ஆண்டுக்கான விருதுகள்: பொன்.செல்வ கணபதி (இயற்றமிழ்) பேராசிரியர் தே.ஞானசேகரன் (இயற்றமிழ்) டாக்டர் சு. நரேந்திரன் (இயற்றமிழ்) டாக்டர் தமிழண்ணல் (இயற்றமிழ்) திண்டுக்கல் ஐ.லியோனி (இலக்கியச் சொற்பொழிவாளர்) சொ. சத்தியசீலன் (சமயச் சொற் பொழிவாளர்) தேச.மங்கையர்க்கரசி (சமயச் சொற்பொழிவாளர்) டி.வி. கோபால கிருஷ்ணன் (இசை ஆசிரியர்) கே.என். சசிகிரண் (குரலிசைக் கலைஞர்) குடந்தை ஜெ. தேவிபிரசாத் (வயலின் கலைஞர்)ஐ. சிவக்குமார் (மிருதங்க ஆசிரியர்) என்.எஸ்.ராஜம் (மிருதங்க கலைஞர்) ஸ்ரீனிவாசன் (வீணை கலைஞர்) ராஜேஷ் வைத்யா (வீணைக் கலைஞர்) திருவாரூர் எஸ். சாமிநாதன் (புல்லாங்குழல்) கே.வி. இராமானுஜம் (புல்லாங்குழல்) டாக்டர் தி.சுரேஷ் சிவன் (தேவார இசைக் கலைஞர்)கல்யாணி மேனன் (மெல்லிசைப் பாடகி) திருக்கடையூர் முரளிதரன் (நாதஸ்வரக் கலைஞர்) ரெட்டியூர் செல்வம் (தவில் கலைஞர்)ஏ.ஹேம்நாத் (பரத நாட்டியம்) பிரசன்னா ராமசாமி (நாடகக் கலைஞர்) எப்.சூசை மாணிக்கம் (நாடக நடிகர்) ஆர்யா (திரைப்பட நடிகர்) அனுஷ்கா (திரைப்பட நடிகை)தமன்னா (திரைப்பட நடிகை)விருது வழங்கும் விழா சென்னை வள்ளுவர் கோட்டத்தில் வரும் பிப்ரவரி மாதம் 13ம் தேதி(ஞாயிற்றுக் கிழமை) மாலையில் நடைபெறும். மேலும் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட சின்னத் திரை விருதுகளும்-பாரதி விருது, எம்.எஸ். சுப்புலட்சுமி விருது, பாலசரஸ்வதி விருது ஆகியவைகளும் வழங்கப்படும். முதல்வர் கருணாநிதி விருதுகளை வழங்குகிறார். |
821 | 1/31/2011 10:20:06 AM | மர்மம் | புதரில் தெரியும் திக் திக் உருவம்..... செல்போனில் தெரிவது பேயா, சித்தரா? | வெள்ளையாய் விகார முகம். அதை பாதியாய் மறைக்கும் அடர்த்தியான கூந்தல். தொங்கும் 2 கைகள் என மங்கலாய் தெரியும் அந்த செல்போன் உருவத்தை பார்த்து ஒரு கிராமமே குலை நடுங்கிக் கொண்டிருக்கிறது. செல்போன் படத்தை பார்த்து ஏன் அஞ்ச வேண்டும்? அந்த திகிலூட்டும் சம்பவம் விரிகிறது..நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் இருந்து 2 கி.மீ. தூரத்தில் இருக்கிறது கட்டனாச்சம்பட்டி கிராமம். திருமணம் ஆகாமல் இறக்கும் கன்னிப் பெண்கள் தாம்பத்திய ஆசை தீராததால், இறந்த பிறகும் கன்னியாக ஆவி வடிவில் அலைவார்கள் என்ற நம்பிக்கை இந்த கிராமத்தில் அதிகமாகவே இருக்கிறது. கன்னியாக இறந்த பெண் ஒருவள் பேயாக உலவுவதாகவும், அந்த ஆவியின் சேட்டை ஆங்காங்கே நடப்பதாகவும் கிராமத்தினர் நம்பி வந்தார்கள். மக்கள் மத்தியில் சிறு பொறியாய் இருந்த அச்சத்தீ பற்றி எரிந்ததற்கு காரணம் ஒரு செல்போன் படம்.பேய் உலவுவதாக நம்பப்படும் சுடுகாட்டு பகுதியில் மக்கள் நடமாட்டம் அவ்வளவாக இருக்காது. கன்னிப் பேயின் ஆவேசம் பற்றி பெரிசுகள் எச்சரிப்பதால் இளைஞர்களும் அவ்வளவாக அங்கு போகமாட்டார்கள். அதிலும் அங்கிருக்கும் புளியமரத்தில்தான் பேய் இருப்பதாக கூறப்படுவதால் அதன் அருகில் யாரும் போவதுகூட இல்லை.இந்த சுடுகாட்டின் அருகில் மினி டிரான்ஸ்பார்மர். இது அடிக்கடி மக்கர் செய்வதால் கிராமம் இருளில் மூழ்கும். இதை சரி செய்ய மின் வாரிய ஊழியர் ஒருமுறை வந்திருக்கிறார். டிரான்ஸ்பார்மரை சுற்றி முட்புதர் மண்டி கிடந்தது. தான் ஒரு ஆளாய் அதை சரிசெய்ய முடியாது என்பதால் கூடுதல் ஆட்கள் வேண்டும் என்பதை அதிகாரிகளிடம் தெரிவிக்க வசதியாக புதரை தனது செல்போனில் படம் எடுத்துக் கொண்டார்.படம் சரியாக பதிவாகியிருக்கிறதா என்று பார்த்தவர் வெலவெலத்துப் போனார். முகம் வியர்த்தது. உடல் நடுங்கியது. காரணம்.. அதில் மங்கலான உருவம் ஒன்று பதிவாகியிருந்தது. அதுவும் பெண் உருவம். புதரை திரும்பிக்கூட பார்க்காமல் வேகவேகமாக அங்கிருந்து புறப்பட்டார். பதிவான படத்தை கிராமத்தினரிடம் காட்டினார். அது கன்னிப்பேய்தான் என்று தீர்க்கமாக நம்பிய மக்கள் பயத்தில் உறைந்தனர்.பொழுது சாய்ந்த பிறகு வெளியில் நடமாடுவதை குறைத்தனர் மக்கள். ‘‘நிராசையோட செத்துப்போன ஒரு கன்னிப்பெண் பேய், சுடுகாட்டு புளியமரத்தில குடியிருக்குது. அதனால் அந்த மரத்து பக்கம் நாங்க போறதே இல்ல. சமீபத்துல, செல்போன்லயும் அந்த பெண் உருவம் பதிவாகியிருக்கு. அதை பார்த்தாலே குலை நடுங்குது’’ என்று பயம் மாறாமல் சொல்கிறார்கள் கட்டனாச்சம்பட்டி கிராமத்தினர்.கிராமத்தில் சிலர் வேறு மாதிரி கூறுகிறார்கள். ‘இந்த பகுதியில் கொல்லிமலை சித்தர் சோமானந்த மகரிஷி பிரபலமாக இருந்தார். கட்டனாச்சம்பட்டி இடுகாட்டில்தான் அவரது உடல் புதைக்கப்பட்டது. அவருக்கு எழுப்பப்பட்ட சமாதி இன்னும் அங்கே இருக்கிறது. அதில் இருந்து அடிக்கடி சித்தர் வெளியே வந்து உலவுவது வழக்கம். அப்படி உலவிய சித்தரின் உருவம் செல்போனில் பதிவாகியிருக்கிறது. அந்த உருவம் கன்னிப் பேய் அல்ல.. சோமானந்த சித்தர்’ என்கிறார்கள் அவர்கள். மர்ம உருவம் கன்னிப் பேயா.. சித்தரா..? கிராமத்தில் நீடிக்கும் மர்மம் ஊர் மக்களை கிலியில் ஆழ்த்தியிருக்கிறது. |
822 | 1/31/2011 10:26:08 AM | மருத்துவம் | சர்க்கரை நோயாளிகளுக்கான ஸ்வீட் | ஸ்வீட் வகைகள் சர்க்கரை நோயாளிகளுக்கு அலர்ஜியான விஷயம். அவர்களும் சுவைக்கும் வகையில் ஸ்வீட் செய்ய ஆலோசனை சொல்கிறார் ஓட்டல் மேலாண்மை இயக்குனர் கதிரவன். குழந்தைகள் அதிகமா ஸ்வீட் சாப்பிட்டா ஜலதோஷம். வயதானவங்களுக்கு அஜீரணம் என ஸ்வீட் சிலருக்கு தொல்லையாகிறது. சர்க்கரைக்கு பதிலாக சுகர்&பிரீ சேர்த்து தயாரிக்கலாம். இதில் இனிப்பு சுவை இருந்தாலும் குறைந்த கலோரி மட்டுமே உள்ளது. ஸ்டிலியா என அழைக்கப்படும் இனிப்பு துளசி அருகில் இருந்தாலும் இனிப்பு சுவைக்கு பயன்படுத்தலாம். ஸ்டிலியாவைத் தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து வடிகட்டினால் இனிப்பு தயாரிப்பது எளிதாகும். சர்க்கரையை விட இதில் 100 மடங்கு கூடுதல் இனிப்பு கிடைக்கும். தேன், வெல்லம், பனை வெல்லம் மற்றும் பழச்சாறுகளையும் இனிப்பு தயாரிப்பில் பயன்படுத்தலாம். புரதம் உள்ள பருப்பு வகைகள், நார்ச்சத்துள்ள காய்கறிகள், வைட்டமின் சத்துள்ள தானியங்களைக் கொண்டும் இனிப்பு வகைகளைத் தயார் செய்யலாம்.நாவை அடக்க முடியாமல் ஸ்வீட் வெரைட்டியாக வெளுத்துக் கட்டியவர்கள் உடலை பேலன்ஸ் செய்து கொள்ள அடுத்த மூன்று நாட்கள் டயட்டில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.கம்பு, சோளம் ஆகியவற்றில் செய்த சாதம், மக்காசோளம் மற்றும் ஆறிய ரொட்டியையும் உணவாக எடுத்துக் கொள்ள வேண்டும். கீரை, கீரைத் துவையல், கீரை ரொட்டி ஆகியவற்றை உணவில் சேர்ப்பதன் மூலம் உடல் கனம் குறைந்து லேசாக இருப்பதை உணர முடியும். |
823 | 1/31/2011 10:28:37 AM | மருத்துவம் | ஸ்வீட் சாப்பிடு.. சூடா தண்ணி குடி | புத்தாடை வாசனை, வெடிச்சத்தம், வண்ணங்களைச் சொரியும் வாண வெடி, நாக் கில் நைசாய்க் கரையும் மைசூர்பாகு இப்படிப் பல சந்தோஷங்கள் தீபாவளிக்கு உண்டு. அதனால் தான் தித்திக்கும் தீபாவளி. தீபாவளி தித்திக்க ஹெல்த்தையும் கவனிங்க என்கிறார் டாக்டர் சசிக்குமார். நரகாசுரனை வதம் செய்த தீபாவளி அதிகாலை எண்ணெய்க் குளியலுடன் துவங்கும். இப்போதைய டீன்களின் டிரெண்ட் டிரை ஹேர் தான். இதில் ஹேர் கலரிங் வேறு. புதியதாக தலைக்கு நல்லெண்ணெய் வைத்துக் குளிப்பவர்களை உடனடியாகத் தாக்குவது ஜலதோஷம். எண்ணெயில் ஊற வைத்த தலையை சுத்தமாக கழுவி குளிக்காமல் விட்டால் நீர் கோர்த்து சைனஸ் பிரச்னை உருவாகும். கூடவே தலைவலி வேறு. எண் ணெய்க் குளியல் கட்டாயம் என நினைப்பவர்கள் நல்லெண்ணெய்க்கு பதிலாக தேங்காய் எண்ணெய் பயன்படுத்தலாம். எண்ணெய் தேய்த்த உடனே குளிப்பது நல்லது. அதே சமயம் எண்ணெய் பிசுக்கு முற்றிலும் போகும்படி குளிப்பது அவசியம். புத்தாடை உடுத்தியவுடன் அடுத்து பிரிப்பது பட்டாசு கட்டுகளைத்தான். பட்டாசில் இருக்கும் கார்பன் தான் காற்றுக்கும், நுரையீரலுக்கும் எதிரி. ஆஸ்துமா, அலர்ஜி, சைனஸ் மற்றும் வீசிங் பிரச்னை உள்ளவர்களுக்கும் பட்டாசுக்கும் ஏழாம் பொருத்தம். புகையை நேரடியாக சுவாசிப்பதன் மூலம் சளி, மூச்சுத் திணறல் உள்ளிட்ட பல பிரச்னைகள் உடனடியாகத் தாக்கும். அதிக நேரம் பட்டாசு புகை உள்ள இடங்களில் இருப்பதை தவிர்க்கலாம். வலிப்பு நோய் உள்ளவர்களை அதிக ஒளி மற்றும் சத்தம் பாதிக்கும். மத்தாப்பு வகைகளில் அதிகளவு விஷத்தன்மை இருப்பதால் கூடுதல் எச்சரிக்கை தேவை. இது ஒருபுறம் இருக்க, அசைவத்தை ஒரு கை பார்ப்பதற்கு முன் அனைவரையும் இழுப்பது ஸ்வீட் மற்றும் கார வகைகள். தரமான எண்ணெயில் தயாரிக்கப்பட்ட பலகாரங்களாக இருக்க வேண்டும். எவ்வளவு தரமான ஸ்வீட்டாக இருந்தாலும் வெறும் வயிற்றில் சாப்பிடக் கூடாது. ஒருவேளை சாப்பிட்டால் உடனே சூடான தண்ணீரை குடித்து விடவும். இதனால் பிரச்னைகளை தவிர்க்க முடியும் என்கிறார் மருத்துவர் சசிக்குமார்.பாட்டி வைத்தியம்ஒரு காலத்தில நம்ம பெரியவங்க தீபாவளிப் பலகாரத்துடன் லேகியம் ஒண்ணு செய்வாங்க. அதையும் இனிப்புக்கு முன்னாடி ஒரு ஸ்பூன் சாப்பிட்டுட்டா எந்தப் பிரச்னையும் தாக்காது. அஜீரணம் போன்ற வயிற்றுக் கோளாறுகள் வரவிடாமல் தவிர்க்கலாம். தீபாவளி லேகியம் செய்வது பற்றி விளக்குகிறார் கதிரவன். |
824 | 1/31/2011 10:31:24 AM | மருத்துவம் | பாட்டி வைத்தியம் | ஒரு காலத்தில நம்ம பெரியவங்க தீபாவளிப் பலகாரத்துடன் லேகியம் ஒண்ணு செய்வாங்க. அதையும் இனிப்புக்கு முன்னாடி ஒரு ஸ்பூன் சாப்பிட்டுட்டா எந்தப் பிரச்னையும் தாக்காது. அஜீரணம் போன்ற வயிற்றுக் கோளாறுகள் வரவிடாமல் தவிர்க்கலாம். தீபாவளி லேகியம் செய்வது பற்றி விளக்குகிறார் கதிரவன். |
825 | 1/31/2011 10:40:36 AM | மருத்துவம் | ‘வெயிட்’ ஏறுதா? ‘டைட்’ பண்ணுங்க! | உலக நாடுகளை பாடாய் படுத்தி வரும் நீரிழிவு, ஹார்ட் அட்டாக் நோய்களுக்கு உடல்பருமன் பிரச்னை முக்கிய காரணமாக, உடல் ரீதியான டாப் 10 பிரச்னைகளில் இதுவும் ஒன்றாக இருக்கிறது என்று உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கிறது. உலகளவில் பார்க்கும்போது 100 கோடிக்கும் அதிகமானவர்கள், தங்களுக்கு பொருந்தாத எடையுடன் இருக்கிறார்களாம். கடந்த 30 ஆண்டுகளில் ஒபிசிட்டி பாதிப்பு 3 மடங்கு உயர்ந்திருக்கிறது எனும் தகவல் நம்மிடம் சரியான விழிப்புணர்வு இல்லை என்பதையே காட்டுகிறது. என்ன காரணங்கள்ஒரு நாளைக்கு சராசரியாக 1600 கலோரி ஆற்றல் தேவைப்படுகிறது. இது உடலுக்குள் செல்லும் போது சக்தியாக மாற்றப்படுகிறது. உடல் செயல்பாடுகளுக்கு மிஞ்சி சக்தி உள்ளே சென்றால், அதாவது அதிகமான கலோரிகளை எடுத்துக்கொண்டால் அது உடலிலேயே கொழுப்பாக படிந்து விடுகிறது. அவை செலவழிக்கப்படாமல் சேர்ந்து உடல் பெருக்க தொடங்கி விடுகிறது. நார்மல் எடைக்கும் அதிகமாக கூடும்போது உடல்பருமன் பிரச்னையாகி பல வியாதிகளுக்கு வாசலாகி விடுகிறது.பொதுவாக மாறிவரும் நமது சாப்பாட்டு முறைகளும், உடலுழைப்போ, உடற்பயிற்சியோ இல்லாததும் தான் முக்கிய காரணமாக இருக்கிறது. சிலருக்கு மரபியலும் காரணமாக அமைந்து விடுகிறதாம். சில ஜீன்கள் ஒபிசிட்டி பிரச்னைக்கு காரணமாகி விடுகின்றன என்கிறார்கள் டாக்டர்கள்.உயரத்திற்கேற்ற எடையை கண்டுபிடிப்பது எப்படி?பொதுவாக உடல் எடையை, உடல் திண்ம குறியீடு (பிஎம்ஐ) மூலம் அளவிடுகிறார்கள். இது உடலின் எடை, உயரத்தை ஒப்பிட்டு கணக்கிடப்படுகிறது. இந்த பிஎம்ஐ 25 முதல் 30 வரை இருப்பவர்கள் (அதாவது ஒரு சதுர மீட்டருக்கு 25 முதல் 30 கிலோ) அதிக பருமன் கொண்டவர்கள் என்ற பிரிவில் வருகிறார்கள். இந்த பிஎம்ஐ 30 கிலோவுக்கு அதிகமாக செல்லும் போது அது சிவியர் ஒபிசிட்டி எனும் நிலையாகி விடுகிறது. பிஎம்ஐ 18.5 முதல் 24.9 வரை இருக்கும் நபர்கள் தான் நார்மலான உடல் எடைக்காரர்கள். 40ஐ தாண்டும் போது நோயாளி ஆகிறார்கள்.ஒருவரின் உயரத்திற்கேற்ற எடையை கணித்து கொள்ள சிம்பிளான வழி இருக்கிறது. ஒருவர் 150 செமீ உயரம் இருக்கிறார் என்று வைத்து கொள்வோம். 150 என்பதில் 100ஐ கழித்து விட்டால் வரும் எண் 50. இதுதான் அவரது உயரத்திற்கேற்ற நார்மல் எடை. அந்த நபர் 50 கிலோ எடை இருக்கலாம். இது போல 160 செமீ உயரம் உள்ள ஒருவர், நார்மலாக 60 கிலோ வரை இருக்கலாம். இதற்கு அதிகப்படியாக எடை இருப்பவர்கள் உஷாராகி கொள்வது நல்லது.நோய்களின் ‘அம்மா’ பல நோய்களுக்கு ஒபிசிட்டி தான் அம்மா. உடல் பருமன் ஆகிவிட்டால் பல நோய்கள் அழையா விருந்தாளியாக நுழைந்து விடுகின்றன. இதய சம்பந்தப்பட்ட நோய்கள், டைப் 2 டயாபடீஸ், தூங்கும் போது சுவாச கோளாறு, மூட்டுகளில் பிரச்னை, உயர் ரத்த அழுத்தம், செரிமான கோளாறுகள், ரத்தத்தில் கொழுப்பு அளவு அதிகமாவது, கல்லீரல் பாதிப்புகள், சிறுநீர் பையில் கல், பெண்களுக்கு மாதவிடாய் கோளாறு, மலட்டுத் தன்மை, குழந்தைப்பேறின் போது சிரமம், கருச்சிதைவு, மனஅழுத்தம்.. என நோய்கள் வரிசைக்கட்டி நிற்கின்றன. ஒபிசிட்டியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கேன்சர் பாதிப்பு 30 சதவீதம் அதிகம். வயதுக்கு மீறிய எடையுடன் குண்டாக இருக்கும் குழந்தைகள் சீக்கிரமே நோயாளி ஆகி விடுகிறார்கள். இன்னும் விறுவிறுவென நடக்க முடியாது, அவசரத்துக்கு ஓட முடியாது, தொப்பைகாரர்களுக்கு குனிந்து எந்த வேலையும் செய்ய முடியாது என வேறு டைப்பான பிரச்னைகளும் இருக்கின்றன. சாப்பிடாதீங்க..உடல் பருமன் பிரச்னையிலிருந்து தப்பிக்க தவிர்க்க வேண்டிய உணவுகள்: எண்ணெயில் வறுத்த கறி, உணவுகள், ஸ்வீட்ஸ், சாக்லேட்ஸ், யோகர்ட், முட்டை, பீட்ஸா, பர்கர், சமோசா, பிரைடு ரைஸ், நூடுல்ஸ் உள்ளிட்ட கொழுப்பு நிறைந்த பாஸ்ட் புட் உணவுகள். அரிசியில், கிழங்கு வகைகளில் கார்போஹைட்ரேட் அதிகம் இருக்கும். எனவே அரிசி, அரிசியால் செய்யப்படும் பதார்த்தங்களை குறைப்பது நல்லது என்பது மருத்துவர்களின் ஆலோசனை. சாப்பிடுங்க..நார்சத்துள்ள காய்கறிகள், பழங்கள், புரதம் அதிகமுள்ள உணவுகள், கொழுப்பு குறைவாக உள்ள பால் பொருட்களை அதிகம் சேர்த்துக் கொள்ளலாம்.யாருக்கு சர்ஜரி அவசியம்?உடல்பருமன் பிரச்னைக்கு இரைப்பையின் அளவை குறைக்கும் அறுவை சிகிச்சையும் ஒரு வழியாக இருக்கிறது. அளவுக்கு அதிகமான உடல் எடையால் வரும் பிரச்னைகளான நீரிழிவு, ரத்த அழுத்தம், ரத்த கொழுப்பு, கல்லீரல் பாதிப்பு, மூட்டு வலி போன்ற பல நோய்களுக்கு ஆட்பட்டவர்கள் அறுவை சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்படுகிறார்கள். இது ஒரு எபெக்டிவ்வான வழி.இந்த அறுவை சிகிச்சை இரு பிரிவாக உள்ளது. ஒன்று ஊட்டச் சத்துக்கள் உடல் எடுத்து கொள்வதை குறைப்பது, மற்றொன்று உணவை எடுத்து கொள்வதை குறைப்பது. சில நேரங்களில் இரண்டும் முறைகளும் பயன்படுத்தப்படும். லேப்ராஸ்கோப்பிக் முறையில் செய்யப்படுவதால் வலியோ, தழும்புகளோ இருக்காது. அதோடு அறுவை சிகிச்சைக்கு பிறகு நீரிழிவு நோயும் கட்டுக்குள் வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இரைப்பையின்அளவை குறைப்பதால் உணவு எடுக்கப்படும் அளவு இயற்கையாகவே குறைகிறது. உடல் பருமனும் வெகுவாக குறைந்து விடுகிறது. ஆபரேஷனுக்கு பிறகு ரெகுலர் செக்அப் அவசியமானதாக இருக்கிறது. உடல் பருமன் பிரச்னையில் வருமுன் காப்பதே சிறந்தது. - டாக்டர். ரவீந்திரன் குமரன், அறுவை சிகிச்சை நிபுணர் சென்னை. கலோரிநாம் எடுத்து கொள்ளும் கலோரிகளை கட்டுப்பாட்டில் வைத்திருப்பதும் உடல் எடையை கட்டுக்குள் வைத்திருக்க உதவும். வயது, எடை, பாலினம், வேலை போன்றவற்றை பொறுத்து ஒருவருக்கு தேவையான கலோரிகள் அமைகிறது. சிறுவர்கள்: சராசரியாக 1500-1800 கலோரிகள்பெண்கள்: மிதமான வேலை பார்ப்பவர்களுக்கு 1100-1300, ஆக்டிவான வேலை பார்க்கும் பெண்களுக்கு 1400 -1600 கலோரிகள்.ஆண்கள்: மிதமான வேலை பார்க்கும் ஆண்களுக்கு 1600-1800, கடின வேலை பார்ப்பவர்களுக்கு 1800-2000.ஒவ்வொருவரும் கலோரி அட்டையை வைத்துக் கொண்டு உணவுகளை தேர்ந்தெடுத்து சாப்பிட முடியாது. ஆனால் அறிந்து வைத்திருப்பது அவசியம்.கலோரி அட்டவணைஉணவு கலோரிசப்பாத்தி(30 கிராம்) 100மசாலாதோசை 200சமோசா 150பூரி(1) 350உப்புமா(சின்ன கிண்ணம்) 100சாதம் (ஒரு கப்) 280சிக்கன்(70 கிராம்) 100முட்டை(1) 80குலோப் ஜாமூன்(2) 250ரசகுல்லா(2) 150டீ, காபி (1 கப்) 70-80 பாட்டி வைத்தியம்ரத்தத்தில் உள்ள கொழுப்பை குறைத்தாலே உடல் பருமன் குறையும். இதுபோன்ற பிரச்னைகளுக்கு பொதுவாக கையாளப்படும் மருந்து தேன். வெந்நீரில் தேனை கலந்து குடிப்பது பழங்காலத்தில் இருந்தே வழக்கத்தில் உள்ளது. இந்த முறையில் திருப்தி இல்லாதவர்களுக்கு கீழ்க்கண்ட முறைகள் கைகொடுக்கும்.செவ்வியம், சுக்கு, மிளகு, சீரகம், திப்பிலி, பெருங்காயம், துவர்சிலைஉப்பு, சித்ரமூலம் வேர்ப்பட்டை ஆகியவற்றை சம அளவு எடுத்து பொடி செய்யவும். வீட்டில் உள்ள சத்துமாவில் ஒரு ஸ்பூன் அளவு எடுத்து மேற்கண்ட பொடியை சிறிது கலந்து தயிரில் இருந்து எடுக்கப்பட்ட தெளிவு நீரையும் கலந்து தினமும் காலை, மாலை சாப்பிட்டு வரவும்.கடுக்காய் தோல், நெல்லிக்காய் (காய்ந்தது), தான்றிக்காய் தோல், சுக்கு, திப்பிலி, இந்துப்பு (வறுத்தது) ஆகியவற்றை சம எடையில் பொடி செய்து வைத்துக் கொள்ளவும். ஒன்று அல்லது இரண்டு கிராம் அளவு அந்த பொடியை எடுத்து ஒரு ஸ்பூன் நல்லெண்ணெயில் கலந்து சாப்பிட்டு வரவும். இப்படி 6 மாதங்கள் சாப்பிட்டால் உடல் மெலியும். அதே நேரம், வலிமை குறையாது.கடுக்காய் தோல், நெல்லிக்காய், தான்றிக்காய் தோல் ஆகியவற்றை சம எடையில் பொடி செய்து வைத்துக் கொண்டு தினமும் சிறிது தேனில் குழைத்து சாப்பிட்டு வரலாம். அத்துடன் ஒரு டம்ளர் தண்ணீரில் இரண்டு ஸ்பூன் தேன் கலந்து சாப்பிடவும். மேலும் சீந்தில் கொடி, கோரைக்கிழங்கு, மஞ்சள், தேன் நல்லெண்ணெய் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை தினமும் சாப்பிடலாம்.பயற்றம்பருப்பு, கொள்ளு, நரிப்பயறு, துவரை, முதலியவற்றை நெல்லிக்காய் பொடியுடன் கலந்து சாப்பிடலாம். இலந்தை இலையை மைய அரைத்து சோறு வடித்த நீரில் கலந்து கஞ்சிபோல் காய்ச்சி சாப்பிலாம்.எல்லாவற்றுக்கும் மேலாக கல்மதம் என்று கூறப்படும் ‘சிலாஜித்’ (ஒரு வகை பிசின்) சுத்தம் செய்து 4 மிளகு அளவு தினமும் திரிபலாதி பொடியுடன் சாப்பிட்டு வர சில மாதங்களில் உடல் எடை, பருமன் குறையும். ரத்த அழுத்தம் சீராகும். |
826 | 1/31/2011 10:44:33 AM | மருத்துவம் | முதுகு வலிக்கு முற்றுப்புள்ளி | அலாரம் அடிக்க எழுந்து பரபர சமையல், ஸ்கூல், ஆபீஸ் வழியனுப்பல்கள் முடிந்து வாகனப் பயணம். அலுவலகத்தில் கம்ப்யூட்டரை ஸ்விட்ச் ஆன் செய்ததில் இருந்து ஷட்-டவுன் பண்ணும் வரை ஸ்டைலிஷ் சேரில் சுழன்றபடி வேலை. ‘சும்மா இருக்கேன்’ என்ற வார்த்தையை இப்போது மைக்ரோ ஒலி வாங்கி வைத்துக் கேட்டாலும் கிடைக்காது. எல்லாரும் எப்பவும் பிசி. உடல் என்ற மெஷினில் எங்காவது வலிக்கும் வரை அப்படி ஒரு மெஷினைப் பயன்படுத்துகிறோம் என்ற உணர்வுகூட மிஸ்ஸிங். வீட்டுப் பொறுப்புகள் முடித்து அக்கடானு ரிமோட்டைத் தட்டி வீட்டு சோபாவில் அமரும் இரவு 11 மணிக்கு பேக் பெயின் பின்னியெடுக்க சரியாக தூக்கம் பிடிக்காமல் விடிகிறது அடுத்த காலை. தமிழ்நாட்டில் வேலை பார்க்கும் நபர்களின் 99 சதவீதத்தினருக்கு பேக் பெயின் பிரீ கிப்ட். பெண்களுக்கும் பேக் பெயினுக்கும் அவ்ளோ நெருக்கம்.ஏன் வருகிறது பேக் பெயின்?சொல்கிறார் பிசியோதெரபிஸ்ட் ரம்யாநம் உடல் இயக்கத்தில் முக்கியப் பங்கு எலும்பு, நரம்பு, ஜவ்வு ஆகிய மூன்றுக்கும் உண்டு. இந்த சிஸ்டத்தில் பிரச்னை வருவது தான் உடல் நோய்களாகிறது. ஜவ்வு மற்றும் நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்னைகளும் பேக் பெயினை உருவாக்கும். அளவுக்கு அதிகமான எடையை குனிந்து தம் கட்டித் தூக்குவதால் வரலாம். தொப்பை பெரிதாகிக் கொண்டே போகும் போது அதை தாங்கிக் கொண்டிருக்கும் முதுகு எலும்பு வளைகிறது. இதனாலும் பேக் பெயின் வரும். 30 வயதைத் தாண்டிய பலரும் பேக் பெயின் பேஷன்ட்தான். கூன் போட்டு உட்கார்ந்தபடி பலமணி நேரம் இருப்பதும் இப்பிரச்னையை உருவாக்கும். பின்புறம் குறைந்த அளவு சாய்வு மற்றும் சாய்வே இல்லாத சேர்களை பயன்படுத்துவதும் பேக் பெயினை உருவாக்கும். பேக்பெயின் வராமல் வேலை பார்க்க முடியுமா?வேலையிடத்தில் முதலில் நீங்கள் அமரும் சேரை கவனிக்கவும். பின்புற சாய்வு தோள் வரை நேராக இருக்கட்டும். குனிந்து கூன் போடாமால் நிமிர்ந்து அமர்ந்து வேலை பாருங்கள். லேசாக தொப்பை விழ ஆரம்பிக்கும் போதே டயட்டில் கவனம் செலுத்தி உடல் எடையை குறைப்பது நல்லது. சேரில் அமர்ந்து கால் தொங்கிக் கொண்டிருக்காமல் கீழே வைக்கவும். உயரம் குறைந்தவர்கள் கால் வைக்க புட் ஸ்டூல் வைத்து அட்ஜஸ்ட் செய்து கொள்ளலாம். ஒரே இடத்தில் அமர்ந்து வேலை பார்க்க நேர்ந்தால் ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை எழுந்து கொஞ்சம் நடக்கலாம். இத்துடன் எலும்புக்கு வலிமை சேர்க்கும் உணவுகளை டயட்டில் சேர்க்கவும். பேக் பெயினுக்கும் பெண்களுக்கும் அப்படி என்ன நெருங்கிய உறவு?பொதுவா பேக் பெயின் பெண்களுக்கு அதிகம் வருகிறது. பூப்பு எய்திய பின்னர் பீரியட்ஸ் டைமில் எலும்புகளில் வலி பின்னியெடுக்கும். எலும்புகளின் வளர்ச்சிக்காக அந்தக் காலத்தில் உளுந்துக் கஞ்சி, உளுந்துக் களி உணவில் சேர்க்கப்பட்டது. ஆனால் இப்போது இருக்கிற டீன்ஏஜ்கள் உளுந்துக் கஞ்சி என்றால் ‘உவ்வே’ சொல்கிறார்கள். ஆனால் இதெல்லாம் சேர்க்காவிட்டால் இளம் வயதிலேயே பேக் பெயின் இலவசமாகக் கிடைக்கும். குழந்தைப் பேற்றின் போது இடுப்பு எலும்புகள் விலகிக் கொடுத்து பின்னர் எலும்புகள் பழைய நிலைமைக்கு வரும். அந்த சமயத்திலும் எலும்புகளுக்கு வலிமை சேர்க்க உளுந்து சார்ந்த உணவுகள் அவசியம். 35 வயதுக்கு மேல் எலும்பு தேய்மானம் துவங்கும். அப்போது கால்சியம் மற்றும் புரதச்சத்துள்ள உணவுகள் மூலமாக எலும்புக்கு வலு சேர்க்கலாம். நாற்பது வயதுக்கு மேல் உணவில் கேழ்வரகு, பாசிப்பருப்பு, வெந்தயக்கீரை, சோயாபீன்ஸ் ஆகியவை கட்டாயம் சேர்க்க வேண்டும்.புரூட்டி மில்க் ஷேக்ஒரு கப் பாலுடன் ஒரு பச்சை வாழைப் பழத்தை சேர்த்து அடித்துக் கொள்ளவும். மாதுளையை உரித்துப் போட்டு வெல்லம் சேர்த்து லேசாக அடிக்கவும். மாதுளை லேசாக மட்டுமே உடைந்திருக்க வேண்டும். இந்த கிரஞ்சி மில்க் ஷேக் எலும்புகளின் ஆரோக்கியத்துக்கு உகந்தது. பீட்ஸ் உருண்டைகேழ்வரகு மாவு ஒரு கப் எடுத்துக் கொள்ளவும். வாணலியில் சிறிதளவு நெய் சேர்த்து மாவை பதமாக வறுத்துக் கொள்ளவும். வறுத்த மாவில் பாதாம், முந்திரி மற்றும் உலர்ந்த திராட்சை சேர்க்கவும். அத்துடன் சுவைக்கு வெல்லத்தைப் பொடித்து சேர்க்கவும். கொஞ்சம் பால் சேர்த்து ஒன்றாகப் பிசைந்து பீட்ஸ் உருண்டை தயாரிக்கலாம். பாதாம், முந்திரி மற்றும் உலர் திராட்சையில் அடங்கியுள்ள பாஸ்பரஸ் கால்சியம் சத்தை எலும்பு எடுத்துக் கொள்ள உதவுகிறது. உளுந்து கஞ்சிஉளுந்தை ஊற வைத்து நன்றாக ஆட்டி, கொதிக்கும் தண்ணீரில் விட்டு லிக்விட் பதத்தில் உப்பு சேர்த்து கஞ்சி வைப்பது பலரும் அறிந்ததே. கஞ்சியில் வாழைப்பழத் துண்டுகள், கட் செய்யப்பட்ட ஆப்பிள் துண்டுகள் மற்றும் மாதுளை முத்துக்களை சேர்த்துக் கொடுத்தால் சுவையும் சத்தும் கூடுதலாகும். இஞ்சியில் வெல்லம் சேர்ப்பதன் மூலம் குழந்தைகள் விரும்பி சாப்பிடும். பெரியவர்கள் உளுந்து கஞ்சியில் வெள்ளரித் துண்டுகள், வேக வைத்த பூசணி, கேரட் துண்டுகள் சேர்த்து சாப்பிடும் போது சுவை வேறுபடுவதுடன் எலும்புகள் வலிமை அடைவதற்கான சத்துகள் கிடைக்கும். எலும்புக்கு பிடித்த டயட்கால்சியம் அதிகம் உள்ள உணவுகள் எலும்பின் ஆரோக்கியத்தை பாதுகாக்க உதவும். பாலில் கால்சியம் சத்து அதிகம் உள்ளது. குழந்தைகளுக்கு மிகவும் அவசியம். சில குழந்தைகள் பால் குடிப்பதைத் தவிர்க்கும். பால் பிடிக்காத குழந்தைகளுக்கு மில்க் ஷேக் மற்றும் ஐஸ் கிரீமாக கொடுக்கலாம். பால் மற்றும் பால் பொருட்கள் சார்ந்த உணவுகளை கட்டாயம் சேர்க்கவும். அதே போல் எலும்பு உறுதிக்கும் வளர்ச்சிக்கும் கால்சியம் சத்துடன் வைட்டமின் டி சேர்க்கவும். உணவில் கிடைக்கும் கால்சியத்தை உடல் கிரகித்துக் கொள்ள வைட்டமின் டி அவசியம். வைட்டமின் டி மீன் உள்ளிட்ட அசைவ உணவுகளில் கிடைக்கிறது. குட்டிக் குட்டி மீன் முட்களில் கால்சியம் இருக்கிறது. அதை அப்படியே மென்று சாப்பிடும் போது உடலுக்கு கால்சியம் கிடைக்கும். வெஜிடபிள் ஆயிலில் வைட்டமின் டி உள்ளது. சோயா பீன்ஸ் ஆயிலையும் பயன்படுத் தலாம். வலிக்கு தீர்வு என்ன?உங்கள் வேலை நேரம், வேலையின் தன்மை ஆகியவற்றை கண்காணித்து பேக் பெயின் வருவதற்கான தவறுகள் இருப்பின் திருத்திக் கொள்ளவும். கொஞ்ச நேரம் நடப்பது, சிறிய ஓய்வு என வழக்கத்தை மாற்றிக் கொள்ளவும். உங்கள் டயட் சார்ட்டை செக் பண்ணவும். எலும்புகள் வலுப்படுவதற்கான உணவுகள் சேர்க்கவும். வேலைக்குப் போகும் பெண்கள் வீட்டில் உள்ள அத்தனை பொறுப்புகளையும் தனது தோள்களில் சுமப்பதற்கு பதிலாக கணவர், குழந்தைகளுடன் பகிர்ந்து கொள்ளலாம். இதன் மூலம் ஓய்வு கிடைப்பதுடன் பேக் பெயின் வரு வதற்கான வாய்ப்புகளைக் குறைக்க லாம். தொப்பை விழாத அளவுக்கு வெயிட்டை மெயின்டெய்ன் செய்வது ரொம்ப முக்கியம். சின்னச் சின்ன உடற்பயிற்சிகள் வீட்டில் செய்யலாம். நன்றாக நிமிர்ந்து படுக்கவும். படுத்த நிலையில் முட்டியை மடக்காமல் உடலை மேலே தூக்க வேண்டும். படுத்த நிலையில் நிலத்தில் இரண்டு கால்களையும் மடக்கி இடுப்பை மட்டும் மேலே தூக்க வேண்டும். இதே போல் குப்புறப் படுத்த நிலையில் தலையை மேலே தூக்குவது, இடுப்பையும் வயிற்றையும் மேலே தூக்குவது ஆகிய பயிற்சிகள் ஒவ்வொன்றையும் ஐந்து முறை செய்வதன் மூலம் பேக் பெயினால் ஏற்படும் பிரச்னைகளைத் தவிர்க்கலாம். முடிந்த வரை ஹீல்ஸ் செருப்புகளைத் தவிர்க்கவும். பேக் பெயின் உள்ளவர்கள் குப்புறப் படுத்து உறங்குவதைத் தவிர்க்கலாம். மல்லாந்து படுப்பதை விட ஒருக்களித்துப் படுப்பதே நல்லது. உடல் என்னும் இயந்திரம் ஒழுங்காக வேலை செய்தால்தான் சந்தோஷச் சிகரங்களில் சறுக்கி விளையாட முடியும். உடலை கவனித்தால் உற்சாகமாய் வலம் வரலாம்.பாட்டி வைத்தியம்ஆடாதொடா வேரை கஷாயம் வைத்து குடித்தால் உடல் வலிகள் சம்பந்தப்பட்ட பிரச்னைகளுக்கு நி வாரணம் கிடைக்கும். ஆல மர மொட்டுகளைப் பொடி செய்து சாப்பிட்டால் இடுப்பு வலி குணமாகும். உப்பை வறுத்து ஒரு துணியில் கட்டி மிதமான சூட்டில் வலியுள்ள இடத்தில் ஒத்தடம் கொடுத்தால் வலி குறையும். கொய்யாப் பழத்தை குழந்தைகளுக்கு சாப்பிடக் கொடுத்தால் உடல் வளர்ச்சியும், எலும்புகளும் பலம் பெறும். முருங்கை வேரில் இருந்து சாறு எடுத்து அதில் சம அளவு பால் சேர்த்துச் சாப்பிட்டால் உள் உறுப்புகளில் உள்ள வீக்கம், முதுகு வலி குணமாகும். வன்னி மர இலையை அரைத்து வலி உள்ள இடத்தில் பத்துப் போட்டால் வலி குறையும். வாதநாராயணக் கீரையை ஒரு கைப்பிடி அளவு எடுத்து கஷாயமாக்கிச் சாப்பிட்டால் மூட்டு வலி, இடுப்பு வலி, மற்றும் கழுத்து வலிக்கு நிவாரணம் கிடைக்கும். வாதநாராயணக் கீரையை கேழ்வரகு மாவில் சேர்த்து தோசை செய்து சாப்பிட்டு வந்தால் மூட்டு வலி, இடுப்பு வலி குணமாகும். சுக்கு, தனியா, வெந்தயம், வெல்லம், தலா 10 கிராம் எடுத்து நன்றாக அரைத்துக் கொள்ளவும். இதை காலை, மாலை இரண்டு வேளையும் சாப்பிட்டு வந்தால் இடுப்பு வலியில் இருந்து நிவாரணம் பெறலாம். |
827 | 1/31/2011 10:46:37 AM | மருத்துவம் | நீரிழிவு நோயால் ஏற்படும் விழித்திரை பாதிப்புகள் | ஒளிக்கதிர்கள் விழியின் முன் பகுதியான கார்னியா எனப்படும் விழிவெண் படலம், விழி ஆடி ஆகியவை மூலம் விழித்திரையில் குவிக்கப்படுகிறது. விழித்திரை ஒளி சக்தியை மின் சக்தியாக மாற்றி உணர்வலைகளை பார்வை நரம்பின் மூலம் மூளைக்கு செலுத்துகிறது. எனவே விழித்திரையின்றி பார்வை சாத்தியமாகாது. முக்கியத்துவம் வாய்ந்த இந்த விழித்திரையினை நீரிழிவு நோய் அதிகம் பாதிக்கிறது. நீரிழிவு நோயால் கண்களில் கண்புரை, கண்நீர் அழுத்த நோய் போன்ற நோய்கள் ஏற்படுகிறது. விழித்திரை பல்வேறு ரத்த குழாய்களின் மூலம் ஊட்டச் சத்தை பெறுகிறது. நீரிழிவு நோயால் ரத்த நாளங்கள் பலவீனமடைகின்றன. பலவீனமடைந்த ரத்த நாளங்களில் ரத்த கசிவு ஏற்பட்டு விழித்திரையும், அதன் மூலம் பார்வையும் வெகுவாக பாதிப்படைகிறது. விழித்திரையின் குழிவான பகுதி மையப்பகுதி மேக்குலா எனப்படும். இந்த பகுதியில் ஏற்படும் ரத்த கசிவு முழுமையான பார்வை இழப்பை கூட ஏற்படுத்தலாம். விழித்திரையில் ஏற்படும் ரத்த கசிவினால் ஊட்டச்சத்துக்கள் விழித்திரையின் அனைத்து பகுதிகளுக்கும் சென்றடையாது. எனவே விழித்திரையானது தானே சில புதிய ரத்த நாளங்களை உருவாக்கும். இவை மிகவும் பலவீனமானதாக இருக்கும். அதோடு அதிகப்படியான ரத்த கசிவுக்கும் வழிவகுக்கும். இந்நிலை ப்ரோலிபரேட்டிவ் டயபடிக் ரெட்டினோபதி எனப்படும். நீரிழிவு நோயாளிகளுக்கு, மற்றவர்களை விட பார்வையிழப்பு பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு 25 மடங்கு அதிகம் உள்ளது. கர்ப்பிணிகளுக்கு கர்ப்ப காலத்தில் விழித்திரை பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு உள்ளது. அறிகுறிகள்:ரத்த நாளங்களில் ரத்த கசிவு ஏற்பட தொடங்கும் போது, கண்முன்னே கரும்புள்ளிகள் மிதப்பது போன்று தோன்றும். மேக்குலா பாதிப்படையும் போது பார்வைத் திறனில் மாற்றங்கள் தெரியும். எனவே நீரிழிவு நோயாளிகள் கண் மருத்துவ பரிசோதனை செய்து கொள்வது இன்றியமையாதது.பாதிப்பை கண்டறியும் முறைகள் பார்வை திறன் பரிசோதனை முழுமையான விழித்திரை பரிசோதனை ப்ளோரசின் ஆஞ்சியோகிராபிசிகிச்சை முறைகள் இருவகையான சிகிச்சை முறைகள் உள்ளன. ஒன்று லேசர் சிகிச்சை, மற்றொன்று அறுவை சிகிச்சை முறை. இரு முறைகளும் பார்வையிழப்பை தடுக்கின்றன.சிறந்த சிகிச்சைகண்களில் ஏற்படும் அனைத்துவிதமான பாதிப்புகளுக்கும் தனித்துவம் வாய்ந்த டாக்டர்கள் மூலம் சங்கர நேத்ராலயாவில் சிறந்த சிகிச்சை அளிக்கப்படுகிறது. அதிநவீன தொழில்நுட்பத்துடன் 6 லட்சம் நோயாளிகளின் நன்மதிப்பை பெற்ற மருத்துவமனை சங்கர நேத்ராலயா. |
828 | 1/31/2011 10:48:31 AM | மருத்துவம் | ஹேர் சிகிச்சையில் புதிய யுக்தி | ஃபேர் அண்ட் ஹேர் நிறுவனம், ஹேர் வீவிங், ஹேர் பாண்டிங் மற்றும் சிலிக்கான் சிஸ்டம் ஆகிய முறைகளின் மூலம் வழுக்கை தலைக்கு அறுவைச் சிகிச்சை இல்லாமல், மருந்துகள் இல்லாமல், எந்த பக்க விளைவுகளும் இல்லாமல் மூன்றே மணி நேரத்தில் அடர்த்தியான கேசத்தை திரும்பப் பெற வைத்து 10 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனம் புதுவையிலும் கிளையைத் துவக்கியுள்ளது. 1997ம் ஆண்டு திருச்சியில் முதன் முறையாக இந்த தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்திய இந்நிறுவனத்திற்கு தமிழகம் முழுவதும் கிளைகள் உள்ளன. 2005ம் ஆண்டில் சென்னையில் கார்ப்பரேட் அலுவலகம் ஆரம்பிக்கப்பட்டது. 2003ம் ஆண்டு மதுரையிலும், 2007ம் ஆண்டு நெல்லையிலும் கிளைகள் தொடங்கப்பட்டது. வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை பெற்று பல்வேறு விருதுகளையும் பெற்றுள்ளது. இந்நிறுவனத்தின் நிறுவனருக்கு உலக நட்புறவு மையம் ‘‘சமத்துவ மாமணி‘‘ என்ற விருதினை அளித்து கவுரவித்தது. சிகிச்சை முறை: ஹேர் வீவிங், ஹேர் பாண்டிங் மற்றும் சிலிக்கான் சிஸ்டம் ஆகிய முறைகளின் மூலம் வழுக்கைத் தலைக்கு தீர்வளிக்கப்படுகிறது. ஒரு நபருக்கு முதலில் எந்த அளவிற்கு வழுக்கை உள்ளது என்பது அளவெடுக்கப்படுகிறது. பின்னர் அந்த நபரின் இயற்கையான முடியின் தன்மை ஆராயப்பட்டு அதற்கு ஒத்துபோகும் இயற்கையாக சுத்திகரிக்கப்பட்ட வேறு மாற்று முடி மருத்துவ ஆலோசனையுடன் தேர்ந்தெடுக்கப்படுகிறது. இந்த மாற்று முடி டெர்ரி காட்டன் அல்லது சிலிக்கான் வலையில் வைத்து நெய்யப்படுகிறது. முடி நெய்யப்பட்ட இந்த வலை, பின்னர் வழுக்கைத் தலை நபரின் வழுக்கை பகுதிக்கேற்ப வடிவமைக்கப்பட்டு அவரின் இயற்கையான முடியுடன் சேர்த்து இணைக்கப்படுகிறது. இவ்வாறு இணைக்கப்பட்ட முடி அந்த நபரின் இயற்கையான முடியுடன் சேர்ந்து எந்த வித்தியாசமும் இல்லாமல் அடர்த்தியான கேசம் போன்ற தோற்றத்தை அளிக்கிறது. தலைமுடியை மட்டுமே இணைத்து நெய்யப்படுவதால் பக்க விளைவுகள் ஏற்படுவதில்லை.அறுவைச் சிகிச்சையோ, மருந்துகளோ பயன்படுத்தப்படுவதில்லை. இவ்வாறு இணைக்கப்படும் முடியை ஒருவர் தன் வாழ்நாள் முழுவதும் பராமரித்துக் கொள்ளலாம்.சிறப்பம்சங்கள்1.எளிய தொழில்நுட்பம் 2.குறைந்த கட்டணம்3.மூன்றே மணி நேரத்தில் தீர்வு4.பக்க விளைவுகள் கிடையாது5.மருந்துகள் கிடையாது6.மருத்துவரால் பரிந்துரைக்கப்படுகிறது. விவரங்களுக்கு டாக்டர் கோவிந்தராஜ், செல்: 9444014312. |
829 | 1/31/2011 10:50:06 AM | மருத்துவம் | தலைவலியை தகர்க்க எளிய வழி | எப்பவும் பரபரன்னு இருக்கோம். வாய்க்கு ருசியா சாப்பிடறோம். டிஸ்கோதே, ஒன்டே அவுட்னு லைப் அவ்ளோ ஜாலியா போகுது. லைப் ஸ்டைல் மாறுவதால் வெயிட் கூடுது, தொப்பை போடுது. வாய்க்குள் நுழையாத வியாதியெல்லாம் உடல்ல அபார்ட்மென்ட் கட்டி குடித்தனம் நடத்துது. போதாக் குறைக்கு கண்ட நேரத்தில் தலைவலி வேற. டீன்களில் ஆரம்பித்து தள்ளாட்டம் போடும் தாத்தா வரைக்கும் தலைவலி ரொம்ப தோஸ்த்.தலைவலி தானேனு சாதாரணமா இருந்திட வேண்டாம் என்கிறார் மூளை நரம்பியல் நிபுணர் டாக்டர் இலி யாஸ் பாஷா. மூளையில் கட்டி இருந்தாக் கூட தலைவலி பின்னியெடுக்குமாம். சின்னச் சின்ன விஷயங்களில் கவனம் செலுத்தினா தலைவலிக்கு தடா போடலாம் என்கிறார் அவர். கண்டநேரத்துக்கு சாப்பாடு, குட்டித் தூக்கம், வேலையை திட்டமிடாமல் செய்யும்போது ஏற்படும் டென்ஷன், அதீத கற்பனை போன்ற காரணங்கள் தலைவலிக்கு அடிப்படையாக உள்ளன. லைப் ஸ்டைலும் ஒரு காரணம். நூற்றுக்கணக்கான தலைவலிகள் உள்ளன. ஒற்றைத் தலை வலி, இரட்டைத் தலைவலி, பசியில், துக்கத்தில், தூக்கமின்மையில் என எப்போது வேண்டுமானாலும் வருகிறது. பெண்களை அதிகளவில் தாக்குகிறது. வேலைப் பளு, குழந்தைகளால் டென்ஷன், எதிர்காலம் பற்றி பயம், வெளியிடங்களில் அட்ஜஸ்ட் செய்து கொள்ளாமல் போவது என டென்ஷன் எனும் புயல் உருவாகி தலைவலியாய்த் தாக்குகிறது. மைக்ரெய்ன் எனப்படும் ஒற்றைத் தலை வலி, கிளஸ்டர் ஹெட்ஏக், மாதவிலக்கு ஏற்படுவதற்கு முன்னர் வரும் தலைவலி மற்றும் மாதவிடாய் நின்ற பின்னர் ஏற்படும் தலைவலி என பெண்களை தலைவலி தாக்கும். தலைவலி தானே என மருந்துக் கடையில் ஒரு மருந்தை வாங்கிப் போட்டுக் கொள்வது தவறு. மூளையில் உள்ள கட்டியின் காரணமாக கூட தலைவலி வரலாம். எனவே அடிக்கடி தலைவலியால் அவதிப்படுபவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். தலைவலிக்கான காரணத்தை மருத்துவ சோதனைகள் மூலம் கண்டறியலாம். சரியான காரணத்தை அறிவதன் மூலம் எளிதில் குணப்படுத்தலாம். தலைவலியுடன் வாந்தியும் இருந்தால் மருத்துவ பரிசோதனை அவசியம். வாழ்க்கையைப் பற்றி எளிமை யாக சிந்திப்பது, டென்ஷனைத் தவிர்ப்பது. உணவில் அதிக கொழுப்பில்லாமல், துரித உணவு வகைகளை தவிர்த்து டயட்டில் கவனம் செலுத்துவது அவசியம். அதிக புளிப்பு, காரம், அதிக சர்க்கரை சாப்பிடுவதை தவிர்ப்பதும் நல்லது. அடிக்கடி தலைவலி வரும் பிரச்னை உள்ளவர்கள் யோகா, தியானம், காலை நேர வாக்கிங் என உடல், மனப் பயிற்சியில் ஏதாவது ஒன்றை வழக்கமாக வைத்துக் கொள்ளலாம். குறிப்பிட்ட அளவு தூக்கம், வேலைக்கு இடையில் சிறிய ஓய்வு. பிடித்த மாதிரியான சூழலை உருவாக்கிக் கொள்ளலாம். டென்ஷனைக் குறைப்பது, சகிப்புத்தன்மையை வளர்த்துக் கொள்வது, உணவுப் பழக்கத்தை நெறிப்படுத்துவதும் தான் தலை வலியை வழியனுப்பும் எளிய தத்துவம் என்கிறார் மூளை நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் இலியாஸ் பாஷா. ரிலாக்ஸ் தெரபிதலைவலிக்கு அடிப்படை டென்ஷன். தேவையற்ற கோபத்தால் பல்ஸ் எகிற நம்மைச் சுற்றி என்ன நடக்கிறது என்று உணராமல் தடாலடியாக எதையாவது செய்து விட்டு பின்னர் சாரி கேட்பவர்களே அதிகம். அப்படி மனதுக்கு பிடிக்காத விஷயங்கள் நடக்கும் போது உங்களை ரிலாக்ஸ் செய்து கொள்ளுங்கள். இதற்காக ரிலாக்ஸ் தெரபி உள்ளது. அதிக குளிர்ச்சி, அதிக வெப்பம் இல்லாத அறையில் ரிலாக்ஸ் செய்து கொள்ள வேண்டும். அங்கு நல்ல காற்றோட்டம் இருக்கட்டும். கட்டில் அல்லது தரையில் கொஞ்சம் ரிலாக்சாக படுத்துக் கொள்ளலாம். மூச்சை ஆழமாக இழுத்து விடவும். பின்னர் கண்களை இறுக்கமாக இல்லாமல் இலகுவாக மூடிக் கொள்ளவும். கோபம் வரும் போது சிலர் புருவங்களை சுருக்கிக் கொள்வர். முகம் இறுக்கமாக இருக்கும். இந்த சமயத்தில் தசை இறுகும். இதைத் தவிர்க்க புருவத்தையும், முகத்தசைகள் இறுகுவதையும் தவிர்த்து ரிலாக்சாக வைத்துக் கொள்ளலாம். மனதுக்குப் பிடித்த வேலை மூலம் ரிலாக்ஸ் செய்து கொள்வது ஈசி. மனம் சமாதானம் அடைந்த பின்னர் நிதானமாக யோசித்தால் பிரச்னைக்கான தீர்வை எளிதில் கண்டறிய முடியும். இதன் மூலம் தலைவலிக்கு விடை கொடுக்கலாம். பாட்டி வைத்தியம்அருகம்புல், ஆலமர இலை இரண்டையும் சம அளவு எடுத்து அரைத்து உச்சந்தலையில் பற்றுப் போட்டால் தலைவலி உடனடியாக குணமாகும். அவரை இலையை அவித்துத் தலையில் பூசிக் குளித்தால் நாள்பட்ட தலைவலி குணமாகும். ஆதொண்டை வேரை இடித்து நல்லெண்ணெயில் போட்டுக் காய்ச்சி அந்த எண்ணெயைத் தலையில் தேய்த்து குளித்து வந்தால் மண்டைக் குடைச்சல் குணமாகும். இஞ்சியைத் தோல் நீக்கி தேன் சேர்த்து வதக்கி தண்ணீர் (50) மிலி விட்டு கொதிக்க வைத்து தினமும் ஒரு ஸ்பூன் அளவுக்குச் சாப்பிட்டால் நாள்பட்ட தலைவலி குணமாகும். இஞ்சியைக் காயவைத்து பொடி செய்து தண்ணீரில் குழைத்து நெற்றியில் பற்றுப் போட்டால் தலைபாரம் குறையும். இஞ்சிச்சாற்றில் நல்லெண்ணெய் கலந்து காய்ச்சி தலைக்கு தேய்த்தால் தலைவலிக்கு நிவாரணம் கிடைக்கும். இஞ்சிசாற்றில் வெங்காயத்தை அரைத்து நெற்றியில் பற்றுப் போடலாம்.இரட்டைப் பேய் மருட்டி இலையை தண்ணீரில் போட்டு ஓமம் சேர்த்துக் கொதிக்க வைத்து, நீராவி பிடித்தால் அதிக வியர்வை வெளியேறி தலைவலி குறையும். எருக்கம் பாலில் வெள்ளை எள்ளை அரைத்து நெற்றியில் பற்றுப் போட்டால் தலைவலி குணமாகும். எலுமிச்சம்பழச் சாறை காபியில் கலந்து குடிப்பதன் மூலம் தலைவலி நீங்கும். எலுமிச்சம்பழத் தோலை அரைத்து நெற்றியில் பற்றுப்போடலாம். எலுமிச்சம்பழச் சாறுடன் மிளகை சேர்த்து அரைத்து நெற்றியில் பற்றுப் போட்டால் தலைவலி குணமாகும். கடுகை தண்ணீரில் ஊற வைத்து முளைக்கட்டவும், பின்னர் அதனை அரைத்து தலையில் தேய்த்துக் குளித்தால் நாள்பட்ட தலைவலிக்கு நிவாரணம் கிடைக்கும். |
830 | 1/31/2011 10:51:40 AM | மருத்துவம் | அல்சரை அழிக்க.. | ஸ்லிம்மா இருக்கிறது அழகுதான். ஆனா அதுக்காக சகட்டு மேனிக்கு பட்டினி கிடந்தா, ‘அல்சர்’ (குடல் அழற்சி) அழையா விருந்தாளியாக உடலுக்குள் நுழைந்துவிடும். யங் லுக்; குட் ஸ்ட்ரக்சர்; செக்சி அப்பீல் என கன்னா பின்னா ஸ்கேல்களை கையில் வைத்துக் கொண்டு உடலைப் படுத்தும்பாடால் அல்சர் வயிற்றில் வன்முறையை தூண்டி விடுகிறது. இந்த அல்சர் உருவாவதற்கு காரணம் என்ன தெரியுமா? கேஸ்டிரைடிஸ் என அழைக்கப்படும் இரைப்பையில் ஏற்படும் ஒரு வகையான வீக்கம். இந்த வீக்கம் தான் அல்சரின் தந்தை. தென்மாநிலத்தை சேர்ந்தவர்களை அதிகம் தாக்குகிறது. கமகமக்கும் மசாலா, காரம் என நாக்கில் எச்சில் கொட்டும் அளவுக்கு ருசி இல்லாவிட்டால் தட்டில் இருப்பது வயிற்றுக்குள்ளே போகாது. இன்னொரு விஷயம் வேலையில் காட்டும் அவசரம். அவசரத்தின் போது வயிற்றில் அதிக அமிலம் சுரக்கிறது. இதே போல் மற்றவர்களால் கவலைப்படும் போதோ அல்லது பொறாமைப்படும் போதோ கூட மூளையின் கட்டளைக்குக் கட்டுப்பட்டு வயிற்றில் சுரக்கும் அமிலத்தின் அளவு அதிகரிக்கிறது. இதன் மூலம் அல்சர் உண்டாகிறது. இப்போதெல்லாம் வாரத்தில் ஏழு நாளும் அசைவ வாசனை இல்லாமல் சாப்பாடே இல்லை. அந்தளவுக்கு அசைவத்தின் மேல் காதல். இந்த உணவில் பெரும்பாலும் மசாலா வகைகள் தான் சேர்க்கப்படுகிறது. மேலும் அல்சர் உருவாக சில கிருமிகளும் காரணமாக உள்ளன என்கிறது மருத்துவ உலகம். அது ஆன்ட்ரல் கேஸ்டிரைடிஸ். வழக்கமாக வயிற்றில் சுரக்கும் அமிலத்தைக் கட்டுப்படுத்துவதற்காக மாத்திரைகள் எடுத்துக் கொள்ளும் போது வலி குறையும். மாத்திரை சாப்பிடுவதை நிறுத்திவிடும் போது மீண்டும் வலி ஏற்படுகிறது. அல்சர் கிருமியை ஒழிப்பதற்கான மாத்திரை தான் அல்சர் பிரச்னையை முழுமையாகத் தீர்க்கும். தலைவலி உள்ளிட்ட உடல் வலிக்கு மருத்துவரின் ஆலோசனை இன்றி கடைகளில் வாங்கி சாப்பிடும் தவறான மருந்துகளின் காரணமாகவும் அல்சர் வர வாய்ப்புள்ளது. அப்படி அல்சர் வந்த பின்னர் அது பல தொந்தரவுகளை உண்டாக்குகிறது. மேல் மற்றும் நடுவயிறு, மார்பெலும்பின் பின்புறம் எரிவது போன்ற வலியினை ஏற்படுத்தும். பசியின் போது வலிக்கும். குமட்டல் போன்ற அறிகுறியையும் ஏற்படுத்தும். இதனால் வயிறு உப்பியது போலத் தோன்றி ஏப்பத்தை உருவாக்கும். வயிறு காலியாக இருக்கும் போது இது போன்ற அறிகுறிகள் இருந்தால் கண்டிப்பாக அல்சர் உள்ளது என தெரிந்து கொள்ளலாம். இது போன்ற தொல்லைகள் சாப்பிட்ட பின்னர் மறைந்து மறுபடியும் உங்களைத் தொல்லை செய்யும்.எப்படித் தடுக்கலாம்?தினமும் திட்டமிட்டு டென்ஷன் இன்றி வேலைகளை செய்து முடிக்கவும். டென்ஷனை தவிர்த்து ரிலாக்சாக இருக்க பழகலாம். சாப்பாட்டில் காரம் குறைக்கவும். அசைவ உணவுகளை வாரத்தில் ஒருநாள் என்பது போல் தள்ளிப் போடவும். அப்படியே சாப்பிட நேர்ந்தாலும் மசாலா பொருட்களைக் குறைத்துக் கொள்ள லாம். பெயின் கில்லர் மாத்திரைகளை மருத்துவரின் ஆலோசனை இன்றி தொடர்ந்து உபயோகிப்பதைத் தவிர்க்கவும். காபின் கலந்த உணவுகள் மற்றும் பானங்களுக்கு தடா போடவும். புகைப்பழக்கம் உள்ளவர்கள் அதை நிறுத்தி விடலாம். வயிற்றை நீண்ட நேரம் காலியாக வைக்காமல் அவ்வப்போது குறை ந்த அளவு உணவாக எடுத்துக் கொள்ளலாம். முன் எச்சரிக்கையாக இருந்தால் அல்சர் உருவாவதை தடுக்கலாம். அப்படியே வந்தாலும் உடனடியாக மருத்துவரின் ஆலோசனைப்படி மருந்து எடுத்துக் கொள்ள வேண்டியது அவசியம் என்கிறார் ஹோமியோ மருத்துவர் சசிகுமார். மூலிகைகளைப் போல செயல்பட்டு வயிற்றுப் புண்ணை ஆற்றும் வித்தை கீரைகளுக்கும் உண்டு. மணத்தக்காளி, வெந்தயக் கீரை அல்லது அகத்தி இதில் ஏதாவது ஒரு கீரையை சுத்தம் செய்து கழுவி நறுக்கிக் கொள்ளவும். துவரம்பருப்புடன் சின்ன வெங்காயம், சீரகம், மஞ்சள் ஆகியவற்றுடன் கீரை சேர்த்து வேக வைத்து கடைந்து கொள்ளவும். அத்துடன் கடுகு, காய்ந்த மிளகாய் மற்றும் கருவேப்பிலை தாளித்து கூட்டாகப் பரிமாறலாம். சாதத்துடன் பிசைந்து சாப்பிட சுவையாக இருக்கும். இதே கீரை வகைகளில் ஒன்றைக் கழுவி சுத்தம் செய்து கொள்ளவும். அத்துடன் இரண்டு பல் பூண்டு, சீரகம், மஞ்சள் மற்றும் உப்பு, சிறிதளவு துவரம்பருப்பு சேர்த்து வேக வைத்து அதிலிருந்து கிடைக்கும் சூப்பைக் குடிக்கலாம். பூசணிக்காயில் இருந்து விதையினை நீக்கவும். தோல் சீவி பொடியாக நறுக்கிக் கொள்ளவும். மிக்சியில் போட்டு அரைத்து வடிகட்டி சாறு எடுத்துக் கொள்ளவும். இத்துடன் மிளகு, சீரகம், உப்பு அல்லது சர்க்கரை கலந்து அப்படியே சாப்பிடலாம். தொடர்ந்து ஒரு வாரம் சாப்பிட்டால் குடல் புண் குணமாவதை உணர முடியும். மாதுளம் பழத்தை மிக்சியில் போட்டு அரை த்து வடிகட்டி ஜூசாக எடுத்துக் கொள்ள வும். இத்துடன் தேன் கலந்து சாப்பிட வயிற்றுப் புண், வயிற்று வலி ஆகிய பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும்.பாட்டி வைத்தியம்அகத்திக் கீரையை தினமும் உணவில் சேர்த்தால் குடல் புண் குணமாகும். அத்திக் காயை சிறுபருப்புடன் சேர்த்து சமைத்து சாப்பிட்டால் அல்சருக்கு தீர்வு கிடைக்கும். அம்மான் பச்சரிசிக் கீரையுடன் மஞ்சள், ஓமம் இரண்டையும் சேர்த்து அரைத்துச் சாப்பிட்டால் குடல் புண் குணமாகும். நெல்லிக்காய் சாறு எடுத்து அதில் தினமும் 30 மில்லி அளவுக்கு சாப்பிட்டால் குடல் புண் ஆற வாய்ப்புள்ளது. ஆடையொட்டி இலை, வில்வ இலை இரண்டையும் சம அளவில் எடுத்து பாலில் கலந்து குடித்தால் குடல் புண்கள் குணமாகும். உளுந்தை மாவாக்கி அத்துடன் மிளகு, சீரகம், கொத்தமல்லி, மஞ்சள் ஆகியவற்றைச் சேர்த்து அரைத்து கஞ்சி காய்ச்சிக் குடித்தால் குடல் புண்கள் ஆறும். ஏலம், சுக்கு, கிராம்பு, சீரகம் - தலா 50 கிராம் எடுத்து பொடி செய்து கொள்ளவும். இதில் இரண்டு கிராம் அளவுக்கு தினமும் இரண்டு வேளை சாப்பிடலாம். இதன் மூலம் குடல் புண் மற்றும் வயிற்று வலி குணமாகும். கசகசாவை தேங்காய்ப்பாலில் ஊற வைத்துச் சாப்பிட்டால் வயிற்று புண் குணமாகும். சாணாக்கிக் கீரையை துவரம் பருப்பு சேர்த்து கடைந்து சாப்பிட்டால் வயிற்று புண்கள் குணமாகும். சோற்று கற்றாழை சாறில் பச்சை பயறை ஊற வைத்து, காயவைத்து பிறகு கஞ்சி காய்ச்சிக் குடித்தால் வயிற்று வலி, குடல் புண், குடல் நோய்கள் அனைத்தும் தீரும். |
831 | 1/31/2011 10:54:42 AM | மருத்துவம் | பிரசவத்துக்கு பின் வரும் பிரச்னைகள் | பிரசவம், பெண்களுக்கு மறுஜென்மம் போன்றது. பெரும்பாலான பெண்கள் முதல் குழந்தை பிறந்ததுமே தங்களது உடலை கவனிக்க மறந்து விடுகிறார்கள். அதுவரை ஸ்லிம் டயட், ஆரோக்கியத்தில் முழுகவனம் செலுத்தும் அவர்கள், குழந்தைபேறுக்கு பின்னர் அவற்றை காற்றில் பறக்க விடுவதால் பிரச்னை ஆரம்பமாகி விடுகிறது. ஒபிசிடி, ரத்தசோகை, மன உளைச்சல் போன்ற உடல் பாதிப்புகளுக்கு ஆளாகிறார்கள். இதனால் தாம்பத்தியத்திலும் விரிசல் விழுகிறது. முதல் பிரசவத்துக்கு பின் பெண்கள் உடலையும், மனதையும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள ஹெல்த், டயட் இரண்டிலும் கவனம் செலுத்த வேண்டும் என்கிறார் மகப்பேறு மருத்துவ நிபுணர் கல்பனா சம்பத். ‘‘முதல் பிரசவத்துக்குப் பின்னர் பெண்களின் உடல் பலம் இழக்கிறது. பிரசவத்தின் போது சிலருக்கு சர்க்கரை நோய் மற்றும் பிபீ பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. குழந்தை பிறந்த பின், உணவு முறைகளில் கவனம் செலுத்தாமல் விட்டால் ரத்தசோகை, உடல்பருமன் போன்ற பிரச்னைகள் வரும். உடற்பயிற்சி இல்லாததால் வயிறு லூசாகி தொங்கிய நிலையில் காணப்படும். இதனை கவனிக்காமல் விட்டால் குடல் இறக்கம் ஏற்படவும் வாய்ப்பிருக்கிறது. பிரசவத்துக்குப் பின்னர் உடலில் உள்ள சர்க்கரை மற்றும் ரத்த அழுத்தம் ஆகியவற்றை சோதிப்பது அவசியம். பாதிப்பு ஏதேனும் இருப்பின் சிகிச்கை எடுக்க வேண்டும். தைராய்டு பிரச்னை உள்ளவர்கள் உரிய மருந்துகள் எடுத்து கட்டுக்குள் வைக்க வேண்டும். சர்க்கரை, பிபீ ஆகியவற்றைக் கண்டு கொள்ளாமல் விடும் போது அடுத்து உருவாகும் குழந்தைதான், இந்தப் பிரச்னைகளுக்கு இலக்காகும். தைராய்டு பிரச்னையால் அடிக்கடி சோர்வு, வேலையில் ஆர்வமின்மை என உடலுக்குள் ஒரு போர்க்களமே உருவாகி விடும். எனவே பிரசவத்துக்குப் பின்னர் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது அவசியம்” என்கிறார் டாக்டர் கல்பனா.பிரசவத்துக்குப் பின்னர் தாய்ப்பால் கொடுப்பதால், பெண்களுக்கு அடிக்கடி பசி ஏற்படும். அப்போது கொழுப்பு சத்து உணவுகளைத் தவிர்த்து, நார்ச்சத்து மற்றும் புரதம் அதிகம் உள்ள பச்சை கீரைகள், அவரை, பீர்க்கன், சாத்துக்குடி, ஆரஞ்சு ஆகியவற்றை சாப்பிடலாம். எண்ணெயில் பொரித்த எந்த உணவுகளையும் சாப்பிடக் கூடாது. மீன் சேர்த்துக் கொள்ளலாம். தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்தியவுடன் டயட்டில் முழுகவனம் செலுத்த வேண்டும். அந்த காலக்கட்டத்தில் உடல் எடையை குறைக்கும் உணவுகளை எடுத்துக் கொள்வது அவசியம். பச்சைக் காய்கறி, கீரைகள் மற்றும் பழ வகைகளை அதிகரித்தும் அரிசி மற்றும் கொழுப்பு உணவு வகைகளைக் குறைத்தும் சாப்பிட வேண்டும். பிரசவத்தின் போது பெண்கள் சந்திக்கும் மிகப்பெரிய பிரச்னை ரத்தம் இழப்பு. உடலில் இருந்து ரத்தம் அதிகளவில் வெளியேறுவதால் ரத்த சோகை உருவாகிறது. இதைத்தடுக்க முழு பருப்பு வகைகள், முளை கட்டிய தானியம், முழு கோதுமை, கொழுப்பு நீக்கப்பட்ட பால் கட்டாயம் உணவில் இருக்க வேண்டும். கீரை வகைகளில் முளைக்கீரை மற்றும் தண்டுக் கீரையிலும் அதிகளவு இரும்புச் சத்து உள்ளது. இவற்றை சாப்பிடுவது ரத்த விருத்திக்கு வழிவகுக்கும் என்கிறார் உணவு ஆலோசகர் சங்கீதா. உடற்பயிற்சி:குழந்தை பிறந்த பின்னர் பெண்கள் தொடர்ந்து சில மணி நேரம் கூட அயர்ந்து தூங்க முடியாது. அப்போது வீட்டில் உள்ள மற்றவர்கள் அவர்களது வேலையைப் பகிர்ந்து கொள்ள வேண்டும். குழந்தை தூங்கும் நேரத்தில் தாயும் தூங்கி ஓய்வெடுப்பது முக்கியம். குழந்தை சுகப்பிரசவமாக இருந்தால் ஒரு வாரத்திலும், அறுவை சிகிச்சையாக இருந்தால் மருத்துவரின் ஆலோசனைப்படியும் வயிற்றைக் குறைப்பதற்கான பயிற்சியை செய்யலாம். தற்போது பெல்ட் போடும் வழக்கம் உள்ளது. இவற்றால் வயிற்றுப் பகுதியை முழுமையாக சுருங்க வைக்க முடியாது. உடற்பயிற்சி தான் அவசியம். தோல் இறுக்கம் அடைந்து பழைய நிலைக்கு திரும்ப உடற்பயிற்சி மட்டுமே முழுமையாகக் கை கொடுக்கும். பின்பக்கத்தில் சேர்ந்திருக்கும் கொழுப்பைக் கரைக்கவும் இந்தப் பயிற்சி அவசியம். காலை படுக்கையை விட்டு எழும் போது, மதியம், இரவு தூங்கும் முன்னர் உடற்பயிற்சி செய்தால் போதும். மல்லாந்து காலை நீட்டி உடலை லேசாக உணரும் படி படுத்துக் கொள்ளவும். வயிற்றை உள் இழுத்து மூச்சை நன்றாக இழுத்து விடவும். இதே போல் பத்து முறை செய்யவும். பின்னர் படுத்த நிலையில் முதுகு நன்றாக தரையில் படும் படி வைத்து, ஒரு காலை நேராக மேலே தூக்கவும். இதே போல் ஐந்து முறை செய்து விட்டு அடுத்த காலுக்கும் இதே பயிற்சியை செய்ய வேண்டும். பின்னர் படுத்த நிலையில் தலையை மட்டும் மேலே தூக்கவும். படுத்த நிலையில் காலையும், தலையையும் தரையில் படாமல் தூக்கவும். இவ்விதம் குறைந்த பட்சம் பத்து முறை செய்யலாம். இப்படி செய்வதன் மூலம் பின் பக்கத்தில் உள்ள கொழுப்பு கரையும், முன்வயிற்று சதை இறுக்கம் அடையும். ரெசிபிகிரீன் கிரேவி: பச்சைப் பயறை 50 கிராம் அளவுக்கு எடுத்து முதல் நாள் இரவே ஊற வைக்கவும். தண்டுக் கீரையை சுத்தம் செய்து நறுக்கிக் கொள்ளவும். சிறிது சின்ன வெங்காயம், இரண்டு பல் பூண்டு, பச்சை மிளகாய் நான்கு, சீரகம் ஆகியவற்றை எடுத்து ஊற வைத்த பாசிப்பயறுடன் சேர்த்து வேக வைக்கவும். இறக்கிய பின் கடுகு தாளித்து உப்பு சேர்த்து சாதத்துடன் பிசைந்து சாப்பிடலாம். பருப்பில் உள்ள புரதம் மற்றும் கீரையில் உள்ள நார்ச்சத்து மற்றும் இரும்புச் சத்து ஆகியவை சேர்வதால் இது ஒரு முழுமையான சத்துணவாக அமையும். பிரவுன் மில்கி: ரத்த சோகைக்கு மிகவும் உகந்தது பேரீச்சை. அதனுடன் பாலும் சேரும் போது இரும்பு சத்து மற்றும் கால்சியம் ஆகிய சத்துகளும் உடலுக்குக் கிடைக்கிறது. பொடியாக நறுக்கிய பேரீச்சை, முந்திரி, உலர்ந்த திராட்சை ஆகியவற்றை சூடான பாலில் சேர்த்து வெல்லம் அல்லது சர்க்கரை கலந்து பருகலாம். இந்த பிரவுன் மில்கி கலவை எலும்புக்கு வலிமை தரும். கலர்புல் பீட்ஸ் மிக்ஸ்: பழங்கள், உடலில் உள்ள கொழுப்பைக் குறைத்து மினுமினுப்பை அதிகரிக்கச் செய்யும். தொடர்ந்து சாப்பிடும் போது தோல் சுருக்கங்கள் நீங்கி வனப்பு பெறும். மாதுளை, ஆப்பிள், கருப்பு திராட்சை, சப்போட்டா ஆகிய பழங்களை உரித்து, துண்டுகளாக்கிக் கொண்டு பாலில் கலந்து சாப்பிடலாம். இந்த பீட்ஸ் மிக்ஸ் ஆரோக்கியத்துக்கு உகந்தது.பாட்டி வைத்தியம்வேப்பிலையை அரைத்து சாப்பிட்டு வெந்நீர் குடித்தால் ரத்த சோகை குணமாகும். பூண்டை உணவில் அதிகமாகச் சேர்த்துக் கொண்டால் பிபீ பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும். ரத்த அழுத்தம் சீராகும். வெள்ளரி, வெள்ளை வெங்காயம் இரண்டையும் சம அளவில் எடுத்து சாறு பிழிந்து குடித்து வந்தால் உடல் பருமன் மற்றும் ஊளைச் சதை குறையும். வெந்தயம், சுண்டைக்காய் வற்றல், மிளகு ஆகியவை ஒவ்வொன்றிலும் 50 கிராம் எடுத்து வறுத்து பொடி செய்து வைத்துக் கொள்ளவும். இதனை தினமும் வெறும் வயிற்றில் சாப்பிட உடல் எடை குறையும். வாழைத்தண்டு சாறு, பூசணிச்சாறு, அருகம்புல் சாறு மூன்றையும் சம அளவில் எடுத்துக் கலந்து கொள்ளவும். இதனை ஒருநாள் விட்டு ஒருநாள் குடித்து வந்தால் உடல் எடை குறைந்து அழகிய தோற்றம் கிடைக்கும். வல்லாரைக் கீரை 3, சீரகம் 10 கிராம் அளவுக்கு எடுத்து பொடி செய்து வைத்துக் கொள்ளவும். இதனை இரவில் சாப்பிட்டு வந்தால் ரத்த அழுத்தம் சீராகும். வங்காரவள்ளைக் கீரையை தொடர்ந்து சமைத்து சாப்பிட்டால் உடல் பருமன் குறையும். லவங்கப் பட்டையுடன் வேப்பிலை மற்றும் மிளகு ஆகியவற்றை சம அளவில் எடுத்து அரைத்து அதிகாலையில் இரண்டு கிராம் அளவுக்கு சாப்பிடவும். இதன் மூலம் உடலில் உள்ள கெட்ட கொழுப்புகள் கரையும். ரோஜாப்பூ, வெள்ளை மிளகு, சுக்கு, ஆகியவற்றை தலா 50 கிராம் எடுத்துக் கொள்ளவும். இதனை அரைத்து காலை, மாலை இரு வேளையும் சாப்பிட்டு வந்தால் உடல் பருமன் குறையும். உலர்ந்த ரோஜா இதழ்கள், சுக்கு, ஏலக்காய் தலா 100 கிராம் எடுத்து அரைத்துக் கொள்ளவும். தினமும் காலை, மாலை இரண்டு வேளையும் இரண்டு கிராம் அளவுக்கு சாப்பிட்டு வந்தால் ரத்த அழுத்தம் குறைவதுடன் கெட்ட கொழுப்புகள் கரையும். |
832 | 1/31/2011 10:55:41 AM | மருத்துவம் | பற்கள் பாதுகாப்பு | பாஸ்ட் புட், நான் வெஜ்னு ஓட்டல்ல ஒரு கை பார்த்துட்டு, கடைசியா ஜில்லுனு குளிர்பானம் குடிக்கிறது, எப்பவும் சாக்லேட்டும் கையுமா இருக்கிறது, கடமுடாவென கடினமான பொருட்களை கடிக்கிறது....இதெல்லாம் பல்லுக்கு பாதிப்புகளை அழையா விருந்தாளிகளாக கொண்டு வந்து விடுகிறது. அதன் பிறகு சிரிக்கக் கூட முடியாமல் சிரமப்பட வேண்டியிருக்கும். பற்களில் ஏற்படும் பாதிப்புகள் தாங்க முடியாத வலியை தருவதோடு முகஅழகையும் கெடுத்து விடுகிறது. எனவே பற்களை பாதுகாப்பது மிகவும் அவசியம்.பற்கள் பாதுகாப்பு குறித்து சொல்கிறார் பல் மருத்துவர் புவனேஸ்வரி:‘பல்லைப் பொறுத்தவரை பிரச்னை வந்த பின் யோசிப்பது வேஸ்ட். பல் முளைப்பதற்கு முன்பே இதற்கான நடவடிக்கையில் இறங்கி விட வேண்டும். தாய் தனது கைகளை சுத்தமாகக் கழுவிக் கொண்டு குழந்தையின் ஈறு பகுதியில் பல் விளக்குவது போல தேய்த்து விட வேண்டும். அப்போது ஈறுகள் உறுதியாகும். பல் முளைத்தவுடனே பிரஷ் செய்யலாம். காலை, இரவு இரண்டு நேரமும் பல் துலக்குவது அவசியம். இரவில் வாயில் கிருமிகள் உற்பத்தியாக வாய்ப்புள்ளதால் மவுத் வாஷ் பயன்படுத்தலாம். பல் இடுக்கில் இருக்கும் அழுக்கையும் போக்க பிளாஸ் பயன்படுத்தலாம். பல்லை சரியாக பராமரிக்காத போது அழுக்கு சேர்ந்து பிரச்னையை உருவாக்கும். ஈறுகள் பாதிக்கப்பட்டால் பல் துலக்கும் போது ரத்தம் வடியும். பொதுவாக வைட்டமின் சி குறைபாடு உள்ளவர்களுக்கு இந்த பிரச்னை ஏற்பட வாய்ப்பிருக்கிறது. குளிர் காலத்தில் பல் கூசும் பிரச்னை சிலருக்கு ஏற்படும். பல் தேய்மானம் மற்றும் புளித்த ஏப்பம் உள்ளவர்களுக்கும் இதே பிரச்னை இருக்கும். பிரத்யேக பேஸ்ட் மூலம் இதற்கு தீர்வு காணலாம். பல்லில் ஒட்டும் உணவுப் பொருட்கள், குளிர்பானங்கள், சாக்லேட் ஆகியவற்றை சாப்பிட்ட பின் உடனடியாக சுடுதண்ணீரில் வாய் கொப்பளிக்க வேண்டும். தவறினால் பல்லில் பிரச்னைகள் உருவாக தொடங்கி விடும். பிரச்னை பெரிதான நிலையில் தான் மருத்துவரிடம் வருகின்றனர். குழந்தைகளின் பல்லை மாதம் ஒருமுறையாவது பெற்றோர் கவனிப்பது அவசியம். ஆரம்பத்தில் அழைத்து வருவதன் மூலம் பெரிய பாதிப்பின்றி குணப்படுத்த முடியும். மேலும் 3 வயது முதல் 10 வயது வரை புளூரைடு அப்ளை செய்து கொள்வதன் மூலம் பல் சொத்தை ஆவதை தடுக்கலாம். மூன்று மாதங்களுக்கு ஒரு முறை இது போல் செய்து கொள்ளலாம். மேலும் பல் சீராக இல்லாமல் மாறியிருந்தால் சுமார் 15 வயதில் இருந்தே சரி செய்து கொள்ளும் சிகிச்சை முறைகள் தற்போது வந்துள்ளனÕ என்கிறார் பல் டாக்டர் புவனேஸ்வரி.பாட்டி வைத்தியம்அசோக மரப்பட்டையுடன் உப்பு சேர்த்து பொடியாக்கி அதில் பல் துலக்கினால் பல் ஈறுகள் வலுப்படும், பல் நோய்கள் குணமாகும். ஆலமர விழுதுகளை சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் காய வைத்துக் கொள்ளவும். இத்துடன் படிகாரம் சேர்த்து பொடி செய்து கொள்ளவும். இதில் தினமும் பல் துலக்கி வந்தால் பல் தொடர்பான நோய்கள் வராது. ஆலமரத்துப் பட்டையில் கஷாயம் வைத்து வாய் கொப்பளித்தால் பல் நோய்கள் குணமாகும். ஆலமரத்துப் பட்டையை பொடி செய்து பல் துலக்கி வந்தால் பல் வலி, பல் கூச்சம் உள்ளிட்ட பல் பாதிப்புகளுக்கு தீர்வு கிடைக்கும். இஞ்சி சாற்றில் தேன் கலந்து குடித்தால் பல் வலி குணமாகும். உப்புடன் கொய்யா இலையைச் சேர்த்து அரைத்து, உலர்த்திப் பொடி செய்து பின்னர் பல் துலக்கலாம். இதன் மூலம் பல் வலி மற்றும் ஈறு வீக்கம் குணமாகும். எலியாமணக்கு குச்சியால் தினமும் பல் துலக்கினால் பல் ஈறு சம்பந்தப்பட்ட நோய்கள் குணமாகும். எலுமிச்சம் பழத்தின் தோலை வெயிலில் காய வைத்து பொடி செய்து பல் தேய்க்க பயன்படுத்தலாம். இதன் மூலம் பல்லின் பளிச் தோற்றத்தை பாதுகாக்கலாம். ஏலக்காய் போட்டு கொதிக்க வைத்த தண்ணீரில் வாய் கொப்பளித்தால் வாய் நாற்றம், பல் அரணை, ஈறுகளில் ஏற்படும் புண் ஆகியவை குணமாகும். கிராம்பு, கொட்டைப் பாக்கு ஆகியவற்றை சம அளவில் எடுத்து பொடி செய்து பல் துலக்கினால் பல் வலி மறையும். கொய்யா இலையை மென்று தின்று வெந்நீரில் வாய் கொப்பளித்தால் பல் கூச்சம் விலகும். கொய்யா இலை, கருவேலம்பட்டை, உப்பு மூன்றையும் சம அளவு எடுத்து பொடி செய்து பல் துலக்க பயன்படுத்தினால் பல் வலிகள் தீரும். சித்தரத்தை, காவிக்கல், படிகாரம், ஆலம்பட்டை ஆகியவற்றை சம அளவில் எடுத்து பொடி செய்து, அதில் பல் துலக்கி வந்தால் பல் சம்பந்தப்பட்ட அனைத்து பிரச்னைகளுக்கும் தீர்வு கிடைக்கும். |
833 | 1/31/2011 12:11:22 PM | இந்தியா | பில்லியனரிடம் நன்கொடை பெற பப்பெட், பில் கேட்ஸ் இந்தியா வருகின்றனர்... | புதுடெல்லி: கோடீஸ்வரர்களான வாரன் பப்பெட், பில்கேட்ஸ் ஆகியோர் விரைவில் இந்தியா வர உள்ளனர். கோடீஸ்வரர்கள் வாரன் பப்பெட், பில் கேட்ஸ் மற்றும் அவரின் மனைவி மெலிண்டா கேட்ஸ் ஆகியோர் இணைந்து கிவிங் பிலெட்ஜ் என்ற அறகட்டளை அமைப்பை நிறுவினர். இதன் மூலம் உலகின் பின் தங்கிய பகுதிகளில் வறுமையில் வாடும் மக்களுக்கு நிதியுதவி, ஏழ்மையில் வாடும் குழந்தைகளுக்கு கல்வி உதவி போன்ற சமூக தொண்டாற்றி வருகின்றனர். அதற்கு நன்கொடை அளிக்க உலக கோடீஸ்வரர்களின் உதவியை நாடுகின்றனர்.இந்நிலையில் கிவிங் பிலெட்ஜ் அமைப்பின் செய்தி தொடர்பாளர் இந்த ஆண்டு அவர்கள் செல்ல உள்ள நாடுகள் குறித்து கூறினார். அதன் விவரம்:பப்பெட், பில் கேட்ஸ் ஆகியோர் கடந்த ஆண்டு சீனா உட்பட சில நாடுகளுக்கு சென்று நிதி திரட்டினர். இந்த ஆண்டு விரைவில் இந்தியா உட்பட சில நாடுகளுக்கு சென்று கோடீஸ்வரர்களை சந்தித்து பேச்சு நடத்த உள்ளனர். கடந்த ஆண்டின் உலக கோடீஸ்வரர்கள் பட்டியலை போர்ப்ஸ் இதழ் வெளியிட்டது. அதில் ரூ.2.38 லட்சம் கோடி சொத்து மதிப்புடன் பில் கேட்ஸ் 2வது இடமும், ரூ.2.11 லட்சம் கோடியுடன் பபெட் 3வது இடமும் பிடித்தது குறிப்பிடத்தக்கது. |
834 | 1/31/2011 12:21:18 PM | வேலைவாய்ப்பு | என்சிசி பயிற்சி பெற்றவர்களுக்கு ராணுவத்தில் பயிற்சியுடன் வேலை | மாணவர்களிடையே நாட்டுப்பற்றை வளர்ப்பதற்கு பள்ளி மற்றும் கல்லூரிகளில் தேசிய மாணவர் படை (என்சிசி) எனும் அமைப்பு இயங்கி வருகிறது. இதில் பயிற்சி பெற்றவர்கள் நேரடியாக ராணு வத்தில் சேர்ந்து பணியாற்ற வாய்ப்பளிக்கப்படுகிறது. என்சிசியில் தேர்ச்சி பெற்றவர்கள் ஒவ்வொரு ஆண்டும் ராணுவத்தில் பணியில் அமர்த்தப்படுவர். இந்த ஆண்டும் என்சிசியில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பயிற்சி யுடன் கூடிய வேலைவாய்ப்பிற் கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. குறுகிய கால அடிப்படை யிலான இந்தப் பணிகளுக்கு தகுதியான திருமணமான ஆண் கள் மற்றும் பெண்கள் விண்ணப்பிக்கலாம்.காலியிடங்கள்: மொத்தம்-58. ஆண்கள்-50, பெண்கள்-8. கல்வித்தகுதி: அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் குறைந்தது 50 சதவீத மதிப்பெண்களுடன் ஏதேனும் ஒரு பட்டம் அல்லது அதற்கு சமமான கல்வித்தகுதி.வயது: 19 லிருந்து 25க்குள். (அதாவது விண்ணப்பதாரர்கள் 2.7.1986க்கும் 1.7.1992க்கும் இடையே பிறந்திருக்க வேண்டும்.) பயிற்சி: தேர்ந்தெடுக்கப்படு பவர்களுக்கு சென்னையில் உள்ள பயிற்சி மையத்ஷ்தில் 11 மாதங்களுக்கு பயிற்சியளிக்கப்படும். பயிற்சியை வெற்றிகரமாக முடிப்பவர்கள் லெப்டினன்ட் அந்தஸ்தில் பணியில் அமர்த்தப்படுவர்.மாதிரி விண்ணப்ப படிவம் மற்றும் கூடுதல் விவரங்களுக்கு www.joinindianarmy.nic.in இணையதளத்தையோ, எம்ப்ளாய்மென்ட் நியூஸ் ஜன.8-14 தேதியிட்ட இதழையோ பார்க்கவும். விண்ணப்பிக்க கடைசி நாள்: 1.2.2011. |
835 | 1/31/2011 12:28:05 PM | வேலைவாய்ப்பு | பரோடா வங்கியில் 1500 காலியிடங்கள் | பரோடா வங்கியில் காலியாக உள்ள 1500 கிளார்க் பணியிடங்களில் தமிழ் நாட்டிற்கு 110 இடங்களும், புதுச்சேரிக்கு 7 இடங்களும், கர்நாடகாவிற்கு 50 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன. ஆன்லைனில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.கல்வித்தகுதி: அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் குறைந்தது 55 சதவீத மதிப்பெண்களுடன் பிளஸ் 2 வில் தேர்ச்சி. (எஸ்சி., எஸ்டி., மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினர் ஆகியோர் 50 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருந்தால் போதுமானது) அல்லது ஏதாவது ஒரு பாடப்பிரிவில் பட்டப்படிப்பில் தேர்ச்சி.வயது: 1.1.2011 அன்று 18 லிருந்து 28க்குள் இருக்க வேண்டும். இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு வயது வரம்பில் தளர்வு உண்டு. விண்ணப்ப தாரர்கள் எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவர். விண்ணப்ப கட்டணம்: ரூ.200/-ஐ வங்கியின் கணக்கு எண் 29040200000199ல் செலுத்த வேண்டும். எஸ்சி., எஸ்டி., மற்றும் மாற்றுத் திறனாளிகள் ஆகியோர் ரூ.50 மட்டும் செலுத்தினால் போதுமானது. மாதிரி விண்ணப்பம் மற்றும் கூடுதல் விவரங்களுக்கு www. bankofbaroda.com இணையதளத்தை பார்க்கவும்.எழுத்துத்தேர்வு நடைபெறும் நாள்: ஏப்.17. தேர்வு மையங்கள்: சென்னை, கோவை, பெங்களூர். விண்ணப்பிக்க கடைசி நாள்: 10.2.2011. |
836 | 1/31/2011 12:42:57 PM | வேலைவாய்ப்பு | ராணுவத்தில் வக்கீல் பணி | டெல்லியில் உள்ள இந்திய ராணுவ தலைமையகத்தில் காலியாக உள்ள வக்கீல் பணியிடங்களை நிரப்ப தகுதியான இந்திய குடியுரிமை பெற்ற திருமணமாகாத ஆண்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.பணி: லா கிராஜுவேட்ஸ் மேன் (சார்ட் சர்வீஸ் கமிஷன் என்.டி. கோர்ஸ்- அக்.2011). காலியிடங்கள்:6.வயது: 21 முதல் 27க்குள். (2.7.1984க்கும் 1.7.1990க்கும் இடைப்பட்ட காலத்தில் பிறந்தவராக இருக்க வேண்டும்.) சம்பளம்: ரூ.15,600- ரூ.26,000. கல்வித்தகுதி: அங்கீகரிக்கப்பட்ட சட்ட பல்கலை.யில் குறைந்தது 55 சதவீத மதிப்பெண்களுடன் எல்எல்பி தேர்ச்சி.உடற்தகுதி: குறைந்த பட்சம் 157 செ.மீ., உயரம். இந்திய ராணுவத்தின ருக்கு தேவையான உடல் ஆரோக்கியம் மற்றும் இந்திய ராணுவத்தின் மருத்துவ குழுவால் ராணுவப் பணிக்கு தகுதியானவர் என்ற மருத்துவ சான்றிதழ்.விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு, உளவியல் தேர்வு, நேர்முகத் தேர்வு, மருத்துவ பரிசோதனை ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர். பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு சென்னை யிலுள்ள ராணுவ மையத்தில் 11 மாதங்கள் பயிற்சியளிக்கப்படும். மாதிரி விண்ணப்பம் மற்றும் கூடுதல் விவரங்களுக்கு www.indianarmy.nic.in. இணையதளத்தையோ, எம்ப்ளாய்மென்ட் நியூஸ் ஜன.8-14 இதழையோ பார்க்கவும்.விண்ணப்பத்தை பதிவுத் தபாலில் அனுப்ப வேண்டிய முகவரி:Additional Directorate General of Recruiting, Rtg.JAG Entry, AG’S Branch, Army Hqrs, West BlockIII, RK Puram, New Delhi 110 066. விண்ணப்பிக்க கடைசி நாள்: 1.2.2011. |
837 | 1/31/2011 12:43:17 PM | இந்தியா | கறுப்பு பணம் பற்றி தகவல் தெரிவிக்க ஆலோசனை குழு | புதுடெல்லி: கறுப்பு பணம் வைத்திருப்பவர்கள் தாமாக முன்வந்து தகவல் தெரிவிப்பதை ஊக்குவிப்பதற்கான ஆலோசனைகளை பெறுவதற்கு மத்திய அரசு ஒரு குழுவை நியமித்துள்ளது. இந்தியர்கள், சட்டவிரோதமாக சுமார் ரூ.70 லட்சம் கோடி கறுப்பு பணத்தை வெளிநாட்டு வங்கிகளில் முதலீடு செய்துள்ளதாகவும் அதை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனன. இது குறித்து, உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கும் தொடரப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. கறுப்பு பணத்தை மீட்பதற்கும் பதுக்கியவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது பற்றியும் உச்ச நீதிமன்றம் ஒவ்வொரு விசாரணையின்போதும் மத்திய அரசை கேள்வி மேல் கேள்வி கேட்டு அதிர வைக்கிறது. கறுப்பு பணம் வைத்திருப்பவர்கள், தாங்களாகவே முன்வந்து அதுபற்றி தகவல் தெரிவிப்பதை ஊக்குவிப்பது குறித்து மத்திய நிதியமைச்சகம் பரிசீலித்து வருகிறது. இது தொடர்பாக, ஆலோசனைகளை பெற குழு ஒன்றை நியமித்துள்ளது.பொருளாதார நிபுணர்கள் மற்றும் வருமான வரித்துறை அதிகாரிகள் இக்குழுவில் இடம்பெறுவார்கள். கறுப்பு பணம் குறித்த தகவலை தாமாக முன்வந்து தெரிவிக்க விரும்புகிறவர்களுக்கு என்னென்ன சலுகைகளை வழங்கலாம் என இக்குழு ஆய்வு செய்து, அதன் அடிப்படையில் அரசுக்கு ஆலோசனை வழங்கும். ‘‘நேரடி வரி வருவாயை அதிகரிப்பது மற்றும் வரி ஏய்ப்பு செய்வதை தடுப்பது மற்றும் கறுப்பு பணம் உருவாவதைத் தடுப்பது குறித்து இந்த குழு 4 அம்ச ஆலோசனை வழங்கும்’’ என நிதித் துறை உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.கறுப்பு பணத்தை மீட்பதற்கு, பொதுமன்னிப்பு உட்பட பல்வேறு வழிகள் குறித்து ஆராய ஏற்கனவே இரண்டு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சர் பிரணாப் கூறினார். இதன்படி, வருமான வரித் துறை ஒரு வரைவு அறிக்கையை வெளியிட்டுள்ளது. வர்த்தக நடைமுறையில் ஏற்பட்டுள்ள புதிய முறைகள், புதிய நிதி திட்டங்கள், ஏராளமான வரி செலுத்துவோர், இ-காமர்ஸ் காரணமாக விரிவடைந்துள்ள பன்னாட்டு வர்த்தக வளர்ச்சி ஆகிய காரணங்களால் வரி நிர்வாகம் என்பது கடும் சிக்கலான விஷயமாகி உள்ளதாக வருமான வரித் துறை தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. |
838 | 1/31/2011 12:51:55 PM | வேலைவாய்ப்பு | இந்திய உணவு கழகத்தில் 778 பணிகள் | பொதுத்துறை நிறுவனங்களுள் ஒன்றான இந்திய உணவு கழகத்தில் காலியாக உள்ள 778 பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடமிருந்து ஆன்லைனில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.1. துணை பொதுமேலாளர் (அக்கவுன்ட்ஸ்): 3 2. துணை பொதுமேலாளர் (பொதுநிர்வாகம்): 263. துணை பொதுமேலாளர் (எலக்ட்ரிக்கல்/மெக்கானிக்கல்): 1 4. உதவி பொது மேலாளர் (அக்கவுன்ட்ஸ்): 255. உதவி பொது மேலாளர் (மூவ்மென்ட்): 96. உதவி பொது மேலாளர் (டெக்னிக்கல்): 407. உதவி பொதுமேலாளர் (சட்டம்): 13 8. உதவி பொதுமேலாளர் (பொதுநிர்வாகம்): 58 9. மருத்துவ அதிகாரி : 310. நிர்வாக பழகுநர்(பண்டகசாலை, அக்கவுன்ட்ஸ், பொது): 600.எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். கல்வித்தகுதி, மாதிரி விண்ணப்பம் உள்ளிட்ட விவரங்களுக்கு http://specialtest.in/fci என்ற இணையதளத்தையோ, ஜன.8-14 எம்ப்ளாய்மென்ட் நியூஸையோ பார்க்கவும்.எழுத்துத்தேர்வு நடைபெறும் நாள்: (பதவி 1 முதல் 9 வரை): ஏப்.3, (பதவி 10 மற்றும் 11): மே.8.விண்ணப்பிக்க கடைசி நாள்: 7.2.2011 |
839 | 1/31/2011 12:56:32 PM | வேலைவாய்ப்பு | திருவாரூர் பல்கலையில் பல்வேறு பணியிடங்கள் | தமிழ்நாட்டில் திருவாரூரில் உள்ள மத்திய பல்கலைக்கழகத்தில் ஆசிரியரல்லாத பணிகளுக்கு தகுதியானவர் களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.பைனான்ஸ் ஆபீசர், டெபுடி ரிஜிஸ்டிரார், அசிஸ்டென்ட் ரிஜிஸ்டிரார், இந்தி அதிகாரி, பிரிவு அலுவலர், அசிஸ்டென்ட், அப்பர் டிவிஷன் கிளார்க், லோயர் டிவிஷன் கிளார்க், துணைவேந்தர் மற்றும் ரிஜிஸ்டிராருக்கு செயலாளர், பர்சனல் அசிஸ்டென்ட், டெக்னிக்கல் அசிஸ்டென்ட், லேப் அசிஸ்டென்ட், அசிஸ்டென்ட் லைப்ரரியன், ஜூனியர் புரொபஷனல் அசிஸ்டென்ட், லைப்ரரி அட்டெண்டன்ட், லேப் அட்டெண்டன்ட் ஆகிய பணியிடங்கள் காலியாக உள்ளன.மாதிரி விண்ணப்பம், விண்ணப்பிக்கும் முறை உள்ளிட்ட விவரங்களுக்கு www.tiruvarur.tn.nic.in ல் Vacancies for NonTeaching Posts என்ற இணையதளத்தை பார்க்கவும்.விண்ணப்பிக்க கடைசி நாள்: 28.1.2011. |
840 | 1/31/2011 1:02:53 PM | இந்தியா | காந்தி நினைவு நாளையொட்டி டெல்லியில் ஊழல் ஒழிப்பு பேரணி | புதுடெல்லி: மகாத்மா காந்தியின் நினைவு தினம் தியாகிகள் தினமாக அனுசரிக்கப்படுகிறது. காந்தியின் 63வது நினைவு தினம் நேற்று நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி, டெல்லியில் லஞ்ச ஒழிப்பு ஊர்வலம் நடந்தது. இந்த ஊர்வலம் வரலாற்று சிறப்புமிக்க ராம்லீலா மைதானத்தில் இருந்து தொடங்கியது. அதற்காக, பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்கள் ஆயிரக்கணக்கானவர்கள் திரண்டனர். பிற்பகல் 1 மணிக்கு கண்டன ஊர்வலம் தொடங்கியது. நாட்டின் முதல் பெண் ஐ.பி.எஸ். கிரண் பேடி, தகவல் அறியும் உரிமைச் சட்ட ஆர்வலர் அரவிந்த் கேஜ்ரிவால், ஸ்ரீஸ்ரீரவிசங்கர், சுவாமி அக்னிவேஷ், மவுலானா மஹ்மூத் மதானி, டெல்லி பேராயர் வின்சென்ட் கான்செஸாவோ உள்ளிட்டோர் ஊர்வலத்துக்கு தலைமை தாங்கி சென்றனர்.ஊர்வலத்தில் வக்கீல்களும் பெருமளவில் பங்கேற்றனர். வக்கீல்கள் பிரசாந்த் பூஷன், சாந்தி பூஷண், நாரிமன் உள்ளிட்டோர் தலைமையில் வக்கீல்கள் அணிவகுத்து வந்தனர்.பேரணியில் பங்கேற்றவர்கள், ஊழலுக்கு எதிரான கோஷங்களை முழங்கினர். மாநிலங்களில் லோகாயுக்தா என்ற ஊழல் ஒழிப்பு அமைப்பு இருப்பதைப்போல மத்தியிலும் லோக்பால் எனும் லஞ்ச ஒழிப்பு அமைப்பை உருவாக்க சட்டம் இயற்றப்பட வேண்டும் என்று பேரணியின் மூலம் வலியுறுத்தப்பட்டது. ஜந்தர் மந்தரில் பேரணி முடிவுற்றது.தலைநகர் டெல்லி மட்டுமல்ல, சென்னை, மும்பை, கொல்கத்தா, ஐதராபாத், பெங்களூர், அகமதாபாத், ஆக்ரா, அவுரங்காபாத், ஜெய்ப்பூர், ஜான்சி, பகல்பூர், லக்னோ, சண்டிகர், கான்பூர், குவாலியர், கோரக்பூர், கோவை, சூரத், வாரணாசி, பாட்னா, பனாஜி, புனோ, கவுகாத்தி, புதுச்சேரி, திருச்சி, ஜம்மு உள்ளிட்ட நகரங்களில் ஊழல் ஒழிப்பு பேரணி நேற்று நடத்தப்பட்டது. நியூயார்க், வாஷிங்டன் உள்ளிட்ட அமெரிக்காவின் சில பகுதிகள் உட்பட 52 நகரங்களில் இந்தியர்கள் நேற்று ஊழலுக்கு எதிராக ஒன்று திரண்டு பேரணி நடத்தினர் என்று தகவல்கள் கூறுகின்றன. |
841 | 1/31/2011 1:05:51 PM | இந்தியா | ஆதர்ஷ் ஹவுசிங் ஊழல் அதிகாரிகளின் வீடுகளில் சிபிஐ அதிரடி சோதனை | மும்பை: ஆதர்ஷ் ஊழல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள காங்கிரஸ் பிரமுகர், முன்னாள் ராணுவ அதிகாரி ஆகியோரின் வீடுகள் உட்பட பல இடங்களில் சிபிஐ அதிகாரிகள் நேற்று அதிரடி சோதனை நடத்தினர். கார்கில் போரில் வீரமரணம் அடைந்த வீரர்களின் குடும்பத்தினருக்கு வீடுகள் கட்டுவதற்காக தென் மும்பை, கொலாபாவில் நிலம் ஒதுக்கப்பட்டது. இங்கு, ஆதர்ஷ் ஹவுசிங் சொசைட்டி விதிகளை மீறி 31 மாடி கட்டிடம் கட்டியது. இதில் முன்னாள் முதல்வர் அசோக் சவானின் நெருங்கிய உறவினர்கள், முன்னாள் ராணுவ தளபதிகள் தீபக் குமார், என்.சி.விஜ், முன்னாள் கடற்படை தளபதி மாதவேந்திர சிங் உள்ளிட்ட ராணுவ அதிகாரிகள், அரசியல்வாதிகள் மற்றும் அரசு அதிகாரிகளுக்கு வீடுகள் ஒதுக்கப்பட்டன.நாடு முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்திய இந்த ஊழல் குறித்து சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. சில அதிகாரிகள், ஆவணங்களை திருத்தி மோசடி செய்திருப்பது விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து, அசோக் சவான் உள்பட 13 பேர் மீது எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில், ஆதர்ஷ் சொசைட்டி பொதுச் செயலாளர் ஆர்.சி.தாக்கூர், ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி எம்.எம்.வாஞ்சு, காங்கிரஸ் பிரமுகர் கே.எல்.கித்வானி ஆகியோரின் வீடுகள் உட்பட பல இடங்களில் சிபிஐ அதிகாரிகள் நேற்று அதிரடி சோதனை நடத்தினர். மகாராஷ்டிரா மற்றும் பீகாரில் பல்வேறு பகுதிகளில் இந்த சோதனை நடந்தது. ஆதர்ஷ் சொசைட்டி அலுவலகத்திலும் சோதனை நடந்தது. இதில் சில முக்கிய ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றினர்.இது குறித்து சிபிஐ அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘பீகார், நாக்பூர் மற்றும் தானேயில் உள்ள தாக்கூரின் வீடுகள், மும்பையில் உள்ள கித்வானியின் வீடு மற்றும் ஆதர்ஷ் சொசைட்டி அலுவலகத்தில் சோதனைகள் நடத்தப்பட்டன’ என்றார். சிபிஐ நீதிமன்றத்தில் சிபிஐ தாக்கல் செய்திருக்கும் எப்ஐஆரில் அசோக் சவான், ஆர்.சி.தாக்கூர் உட்பட பல முக்கியமான அதிகாரிகளின் பெயர்களும் இடம் பெற்றுள்ளன. |
842 | 1/31/2011 1:09:40 PM | இந்தியா | விலை உயர்வை தடுக்க முன்னெச்சரிக்கை : வெங்காய இறக்குமதி தொடரும் | புதுடெல்லி: விலை உயர்வை தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வெங்காய இறக்குமதிக்கான அனுமதி தொடரும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. மழையின் காரணமாக பயிர்கள் அழிந்ததால், கடந்த டிசம்பர் மாதத்தில் நாடு முழுவதும் வெங்காயத்தின் விலை உச்சத்துக்கு போனது. டெல்லியில் ஒரு கிலோ ரூ.80-ஐ தாண்டி விற்றது. இதைத்தொடர்ந்து, வெங்காய ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதித்தது. அதோடு, வெங்காய இறக்குமதிக்கான வரியையும் நீக்கியது.மேலும், விவசாய கூட்டுறவு அமைப்பான நபெட், தேசிய கூட்டுறவு நுகர்வோர் கூட்டமைப்பு (என்.சி.சி.எப்.), கேந்திரிய பந்தர், மதர் டெய்ரி கடைகளில் மலிவு விலையில் வெங்காயத்தை விற்பனை செய்ய மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்தன. இதுதவிர, பொதுத்துறை நிறுவனங்கள் மூலம் பாகிஸ்தானிலிருந்து 1,100 டன் வெங்காயம் இறக்குமதி செய்யப்பட்டது.இந்நிலையில், வெங்காயம் அதிகளவில் உற்பத்தியாகும் மகாராஷ்டிரா மாநிலத்தின் நாசிக்கில் வெங்காயத்தின் விலை அடியோடு குறைந்தது. ஒரு கிலோ வெங்காயம் ரூ.15க்கு விற்கப்பட்டதால் டெல்லியின் ஆசாத்பூர் மார்க்கெட்டிலும் வெங்காயத்தின் விலை குறைந்து, ரூ.18- ரூ.20க்கு(மொத்த விலை) விற்கப்படுகிறது.இதனால், டெல்லியில் சில்லரை மார்க்கெட்டில் ஒரு கிலோ வெங்காயம் ரூ.35 முதல் ரூ.40 வரையில் விற்கப்படுகிறது. அதேநேரத்தில், நபெட், என்.சி.சி.எப்., கேந்திரிய பந்தர், மதர் டெய்ரி ஆகியவற்றின் சார்பில் திறக்கப்பட்டுள்ள 350க்கும் மேற்பட்ட கடைகளில் ரூ.24க்கு ஒரு கிலோ வெங்காயம் விற்கப்படுகிறது. நபெட், என்.சி.சி.எப்., கேந்திரிய பந்தர், மதர் டெய்ரி கடைகளில் பிப்ரவரி 1 முதல் ரூ.22க்கு வெங்காயம் விற்கப்படும் என்று மத்திய உணவுத் துறை அமைச்சர் தாமஸ் கடந்த வாரம் அறிவித்தார்.“வெங்காயத்தின் விலை கட்டுக்குள் வந்ததால், அதை ஏற்றுமதி செய்வதற்கு விதிக்கப்பட்ட தடை விலக்கப்படுமா? இறக்குமதி செய்வது நிறுத்தப்படுமா?“ என்று வர்த்தகத் துறை செயலாளர் ராகுல் குல்லாரிடம் நிருபர்கள் கேட்டனர். அதற்கு ராகுல் குல்லார், “நாளை என்ன நடக்கும் என்பது எனக்கு தெரியாது. அதன்பிறகு என்ன நடக்கும் என்பதும் தெரியாது. அதனால், வெங்காய இறக்குமதி தொடரும்” என்றார்.“டிசம்பரில் வெங்காய விலை உச்சத்துக்கு போனது போல மீண்டும் நடந்து விடக்கூடாது. வெங்காயம் மக்களை எளிதில் சென்றடைய வேண்டுமென்பதில் மத்திய அரசு முன்னெச்சரிக்கையுடன் உள்ளது” எனவும் ராகுல் குல்லார் கூறினார். |
843 | 1/31/2011 1:21:11 PM | வேலைவாய்ப்பு | ரயில்வேயில் 3007 காலியிடங்கள் 10--ம் வகுப்பு தகுதி | தென்மேற்கு ரயில்வேயில் குரூப்-டி பிரிவில் 3007 பணிகளுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.1. டிராக்மேன்: மொத்த இடங்கள்: 994 (பொது-457, ஓபிசி-446, எஸ்சி-62, எஸ்டி-29)2. ஹெல்பர்/இன்ஜினியரிங்: 259 (பொது-129, ஓபிசி-66, எஸ்சி-42, எஸ்டி-22)3. ஹெல்பர்/ மெக்கானிக்கல்: 628 (பொது-431, ஓபிசி-88, எஸ்சி-44, எஸ்டி-65)4. ஹெல்பர்/எலக்ட்ரிக்கல்: 210 (பொது-132, ஓபிசி-49, எஸ்சி-12, எஸ்டி-17).5. ஹெல்பர்/எஸ் மற்றும் டி: 63 (பொது-19, ஓபிசி-36, எஸ்சி-5, எஸ்டி-3).6. ஹெல்பர்/ஸ்டோர்ஸ்: 162 (பொது-82, ஓபிசி-44,எஸ்சி-24, எஸ்டி-12)7. போர்ட்டர்/ஆபரேட்டிங்: 223 (பொது-99, ஓபிசி-94, எஸ்சி-12, எஸ்டி-18)8. போர்ட்டர்/கமர்சியல்: 77 (பொது-64, எஸ்சி-12, எஸ்டி-1).9. சபைவாலா: 24 (ஓபிசி-13, எஸ்சி-11)10. ஹெல்பர்/மெக்கானிக்கல்/டபிள்யூ.எஸ்: 333 (பொது-191, ஓபிசி-64, எஸ்சி-39, எஸ்டி-39).11. ஹெல்பர்/எலக்ட்ரிக்கல்/டபிள்யூ.எஸ்.:34 (பொது-18, ஓபிசி-7, எஸ்சி-5, எஸ்டி-4)தகுதி: 10ம் வகுப்பு அல்லது ஐ.டி.ஐ. அல்லது அதற்கு இணையான படிப்பு.வயது: (அனைத்து பணிகளுக்கும்): 22.12.2010ன்படி 18 லிருந்து 33 வயதுக்குள். அரசு விதிகளின்படி வயதுத் தளர்வு உண்டு.எழுத்துத் தேர்வு, உடற்தகுதி தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். தேர்வுக்கான கட்டணம் ரூ.40ஐ, ஹூப்ளியில் செலுத்தத்தக்க வகையில் FA - CAO / SWR / HUBLI என்ற பெயரில் டிடி எடுத்து விண்ணப்பத்துடன் அனுப்ப வேண்டும். இட ஒதுக்கீட்டு பிரிவினருக்கு கட்டணம் கிடையாது. விண்ணப்பிக்கும் முறை, அனுப்ப வேண்டிய முகவரி உள்ளிட்ட விவரங்களுக்கு www.swr.indianrailways.gov.in என்ற இணையதளத்தையோ, ஜனவரி 8-14 தேதியிட்ட எம்ப்ளாய்மென்ட் நியூஸ் இதழையோ பார்க்கவும். விண்ணப்பிக்க கடைசி நாள்: 22.2.2011. |
844 | 1/31/2011 1:21:28 PM | இந்தியா | டெல்லியில் குளிர் குறைகிறது : வெப்ப நிலை மேலும் ஒரு டிகிரி அதிகரிப்பு | புதுடெல்லி: டெல்லியில் நேற்று வெப்ப நிலை மேலும் ஒரு டிகிரி செல் சியஸ் அதிகரித்தது. இத னால் குளிர் சற்று குறைந்தது. டெல்லியில் 2 மாதங்களுக்கு முன் பலத்த மழை பெய்தது. இதனால் நகரம் முழுவதும் வெள்ளக்காடாகியது. இப்போது கடந்த சில மாதங்களாக குளிர் வாட்டி வதைக்கத் தொடங்கியுள்ளது.ஜனவரி மாதத்தில் வழக்கமாக லேசான குளிர் காற்று வீசும். ஆனால் இந்த ஆண்டு ஜனவரி 15ம் தேதிக்கு பிறகு அதிகாலை நேரங்களில் குளிர் சற்று அதிகரிக்க தொடங்கி இருக்கிறது. நேற்றுமுன்தினம் காலையில் 5.5 டிகிரியாக இருந்த வெப்ப நிலை நேற்றுகாலை மேலும் ஒரு டிகிரி அதிகரித்து 6.5 டிகிரி ஆனது. இதனால் காலை நேரத்தில் குளிரின் தாக்கம் சற்று குறைந்தது. பகலில் மெதுவாக உயர்ந்த வெப்ப நிலை அதிகபட்சமாக 22.4 டிகிரி இருந்தது. இன்று காலையில் சற்று மேக மூட்டம் காணப்படும் என்றும் காலையில் லேசான பனிப்பொழிவும் இருக்கக் கூடும் என்றும் டெல்லி வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளது. |
845 | 1/31/2011 1:27:41 PM | வேலைவாய்ப்பு | இந்தோ-திபெத் எல்லை காவல்படையில் காவலர் வேலை | மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் இந்தோ- திபெத் எல்லைக் காவல் படையில் காலியாக உள்ள காவலர்/டிரேட்ஸ்மேன் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.1. காவலர் (தையல்காரர்): காலியிடங்கள்: 30 (பொது-15, ஓபிசி-8, எஸ்சி-5, எஸ்டி-2).2. காவலர் (தோட்டக்காரர்): காலியிடங்கள்:16 (பொது-9, ஓபிசி-4, எஸ்சி-2, எஸ்டி-1).3. காவலர் (காலனி பழுதுபார்ப்பவர்): 29 (பொது-16, ஓபிசி-7, எஸ்சி-4, எஸ்டி-2).கல்வித்தகுதி: அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் 10ம் வகுப்பில் தேர்ச்சி மற்றும் சம்பந்தப்பட்ட பிரிவில் 2 வருட பணிஅனுபவம் அல்லது தொடர்புடைய பிரிவில் ஒரு வருட ஐடிஐ படிப்புடன் ஒரு வருட பணிஅனுபவம் அல்லது சம்பந்தப்பட்ட பிரிவில் 2 வருட டிப்ளமோ.வயது: 10.2.2011ன்படி 18 லிருந்து 23க்குள். அரசு விதிகளின்படி வயதுத் தளர்வு உண்டு.விண்ணப்ப கட்டணம்: ரூ.50/- Inspector General (Special) Frontier, I.T.B. Police, West Block, Wing-2, NewDelhi என்ற பெயருக்கு டிடி எடுக்க வேண்டும். இட ஒதுக்கீட்டு பிரிவினருக்கு விண்ணப்ப கட்டணம் கிடையாது.மாதிரி விண்ணப்பம் மற்றும் கூடுதல் விவரங்களுக்கு ஜன.8-14 தேதியிட்ட எம்ப்ளாய்மென்ட் நியூஸ் அல்லது www.itbpolice.nic.in அல்லது www.itbp.gov.in இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய முகவரி: Inspector General (Special) Frontier, I.T.B. Police, West Block, Wing-2, Sector 1, R.K. Puram, NewDelhi- 110 066.- 110 066.விண்ணப்பிக்க கடைசி நாள்: 10.2.2011. |
846 | 1/31/2011 1:28:00 PM | சினிமா(ரீல்மா) | பிரியங்கா, கேத்ரினா வங்கி லாக்கர்களில் சோதனை நடத்த முடிவு | மும்பை: நடிகைகள் பிரியங்கா சோப்ரா மற்றும் கேத்ரினா கைஃப் வங்கி லாக்கர்களில் சோதனை நடத்த வருமான வரித்துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். பிரபல பாலிவுட் நடிகைகள் பிரியங்கா சோப்ரா, கேத்ரினா கைஃப் உள்ளிட்ட பாலிவுட் பிரபலங்கள் வீடுகளில் கடந்த 24ம் தேதி வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.இந்த 2 நடிகைகளும் தங்களது வருமானத்துக்கு உரிய வரியை செலுத்தாமல் வரி ஏய்ப்பு செய்தது கண்டுபிடிக்கப்பட அவர்களது வீடுகளில் சோதனையிட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் சில முக்கிய ஆவணங்கள் மற்றும் கம்ப்யூட்டர் ஹார்ட் டிஸ்குகளை கைப்பற்றினர்.கேத்ரினாவுக்கு மும்பை ரூ.6 கோடி மதிப்புக்கு கணக்கில் காட்டப்படாத சொத்துகளும், பிரியங்காவுக்கு மும்பையில் 9 வீடுகள் இருப்பது இந்த சோதனையில் அம்பலமானதாக வருமான வரித்துறை வட்டாரங்கள் கூறின. ஆனால் தாங்கள் வருமான வரி ஏய்ப்பு எதுவும் செய்யவில்லை என்றும் கணக்கில் காட்டப்படாத சொத்துகள் எதுவும் தங்களிடம் இல்லை என்றும் இரண்டு நடிகைகளும் மறுத்தனர். இந்த நிலையில் கேத்ரினா மற்றும் பிரியங்காவுக்கு சொந்தமான வங்கி லாக்கர்களை திறந்து சோதனை நடத்த வருமான வரித்துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். இது பற்றி அதிகாரி ஒருவர் கூறுகையில்,“வரி விலக்கு பெறுவதற்காக 2 நடிகைகளும் தங்களது உண்மையான வருவாயை காட்டாமல் மோசடி செய்துள்ளனர். இவர்களின் வரி தாக்கல் கணக்குகள் தீவிரமாக ஆய்வு செய்யப்படும். மேலும் அவர்களது வங்கி லாக்கர்களும் விரைவில் சோதிக்கப்படும்” என்றார். |
847 | 1/31/2011 2:07:06 PM | வேலைவாய்ப்பு | இன்ஜினியரிங் சர்வீசஸ் தேர்வு | மத்திய அரசின் கீழ் சிவில், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ் ஆகிய துறைகளில் காலியாக உள்ள 745 இன்ஜினியர்கள் பணியிடங்களை நிரப்ப இன்ஜினியரிங் சர்வீசஸ் தேர்வு யுபிஎஸ்சியால் நடத்தப்படுகிறது. கல்வித்தகுதி: சம்பந்தப்பட்ட இன்ஜினியரிங் பாடத்தில் பி.இ. அல்லது இன்ஜினியர்கள் நிறுவனத் தேர்வில் தேர்ச்சி அல்லது இன்ஸ்ட்டிடியூட் ஆப் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் டெலிகம்யூனிகேஷன் நிறுவனத்தில் கிராஜூவேட் மெம்பர்ஷிப் அல்லது அதற்கு சமமான தகுதி. வயது: 1.8.2011ன்படி 21 ஆண்டுகள் பூர்த்தியானவராகவும், 30க்குள்ளும் இருக்க வேண்டும். விண்ணப்ப கட்டணம்: ஆன்லைனில் விண்ணப்பிப்பவர்கள் ரூ.50/ஐ ஸ்டேட் பாங்க் மூலமாகவும், தபாலில் விண்ணப்பிப்பவர்கள் ரூ.100 மத்திய அரசு வேலைவாய்ப்பு ஸ்டாம்ப் மூலமும் செலுத்த வேண்டும். விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய முகவரி: The Controller of Examinations, Union Public Service Commission, Dholpur House, Shahjahan Road, New Delhi- 110 069. ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 7.2.2011. தபாலில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 14.2.2011. மேலும் விவரங்களுக்கு ஜன.8-14 எம்ப்ளாய்மென்ட் நியூஸ் இதழைப் பார்க்கவும். |
848 | 1/31/2011 2:10:18 PM | வேலைவாய்ப்பு | பி.இ. படித்தவர்களுக்கு ராணுவத்தில் பணி | இந்திய ராணுவத்தில் 113வது டெக்னிக்கல் கிராஜூவேட் கோர்ஸ் (டிஜிசி) மற்றும் 37வது ஷார்ட் சர்வீஸ் கமிஷன் (டெக்னிக்கல் கோர்ஸ்) ஆகியவற்றில் சேர்ந்து பணியாற்ற ஆண்களிடமிருந்தும், 2011 அக்டோபரில் தொடங்க உள்ள 8வது ஷார்ட் சர்வீஸ் கமிஷன் (டெக்னிக்கல்) பெண்கள் கோர்ஸில் சேர்ந்து பணியாற்ற தகுதியான திருமணமாகாத பெண்களிடமிருந்து ஆன்லைனில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விவாகரத்தான பெண்கள் மற்றும் இறந்த ராணுவவீரர்களின் மனைவியரும் விண்ணப்பிக்கலாம்.1. 113வது கிராஜூவேட் கோர்ஸ்: தகுதி: சிவில், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், மெக்கானிக்கல், கம்ப்யூட்டர் சயின்ஸ், இன்பர்மேஷன் டெக்னாலஜி, டெலி கம்யூனிகேஷன்ஸ், ஆர்க்கிடெக்சர் பப்ளிக் ஹெல்த், கன்ஸ்ட்ரக்ஷன், இன்டஸ்ட்ரியல் இன்ஜினியரிங் மற்றும் மேனேஜ்மென்ட், மைனிங் ஆகிய பாடங்களில் ஏதேனும் ஒன்றில் இன்ஜினியரிங் பட்டம்.2. ஆர்மி எஜூகேஷன் கோர்ஸ்: தகுதி: ஆங்கிலம், இசை, அரசியல் அறிவியல், வரலாறு, புவியியல், இயற்பியல், கணிதம் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றில் எம்.ஏ அல்லது எம்.எஸ்சி.,.3. 37வது ஷார்ட் சர்வீஸ் கமிஷன் (டெக்னிக்கல் கோர்ஸ் மற்றும் 8வது ஷார்ட் சர்வீஸ் கமிஷன் டெக்னிக்கல் பெண்கள் கோர்ஸ்: தகுதி: சிவில், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், மெக்கானிக்கல், கம்ப்யூட்டர் சயின்ஸ், இன்பர்மேஷன் டெக்னாலஜி, டெலி கம்யூனிகேஷன், ஆர்க்கிடெக்சர், பப்ளிக் ஹெல்த், கன்ஸ்ட்ரக்ஷன், இன்டஸ்ட்ரியல், இன்ஜினியரிங் மற்றும் மேனேஜ்மென்ட், மைனிங் ஆகிய பாடங்களில் ஏதேனும் ஒன்றில் பொறியியல் பட்டம். இறுதியாண்டு மாணவர்களும் விண்ணப்பிக்கலாம்.வயது: மூன்று கோர்ஸ்களுக்கும் 20 லிருந்து 27க்குள் (அதாவது 2.7.1984 -- 1.7.1991க்குள் பிறந்திருக்க வேண்டும்.)உளவியல் சார்ந்த 2 கட்ட தேர்வு களுக்கு பின்னர் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.விண்ணப்பத்தை அனுப்ப கடைசி நாள்: 31.1.2011. ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 8.2.2011.மேலும் விவரங்களுக்கு ஜன.8-14 எம்ப்ளாய்மென்ட் நியூஸ் இதழைப் பார்க்கவும். |
849 | 1/31/2011 2:24:12 PM | இந்தியா | மீனவர் பிரச்னைக்கு தீர்வுகாண நிருபமாராவ் இலங்கை பயணம் | தமிழக மீனவர்கள் கடல் எல்லையில் தாக்கப்பட்ட பிரச்னை குறித்து பேச்சுவார்த்தை நடத்த நிருபமாராவ், விமானம் மூலம் இலங்கை புறப்பட்டு சென்றார். நாகை மாவட்டம், சின்னங்குடியை சேர்ந்த மீனவர் பாண்டியன், கடந்த 22ம் தேதி பாக்ஜலசந்தி அருகே கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது இலங்கை கடற்படையால் சுட்டுக் கொல்லப்பட்டார். இதேபோல், வேதாரண்ய த்தை சேர்ந்த மீனவர் ஜெய க்குமாரை இலங்கை கடற்படையினர் கயிற்றில் கட்டி கடலில் தள்ளி கொன்றனர். இந்த இரண்டு சம்பவங்கள் தமிழக மீனவர்கள் இடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.இதுகுறித்து தமிழக முதல்வர் கருணாநிதி, பிரதமர் மன்மோகன்சிங்கிற்கு அவசர அவசரமாக கடிதம் எழுதினார். இதையடுத்து இலங்கைக்கு சென்று இந்த பிரச்னை குறித்து தீர்வு காணுமாறு, பிரதமர் மன்மோகன் சிங், இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் நிருபமாராவிடம் கூறினார். இதையடுத்து நிருபமாராவ், இலங்கை செல்லும் வழியில் பெங்களூரில் இருந்து விமானம் மூலம் நேற்று மாலை 5.10க்கு சென்னை வந்தார். விமான நிலையத்தில் நிருபமாராவ் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:இலங்கைக்கு நான் எதற்காக செல்கிறேன் என்பது உங்கள் அனைவருக்கும் தெரிந்ததுதான். சமீபகாலமாக இலங்கை கடற்படையினர் இந்திய மீனவர்கள் மீது தொடர்ந்து தாக்குதல்கள் நடத்திவருகின்றனர், இதில் பல மீனவர்கள் உயிரிழந்துள்ளனர். இதற்குமேல் நாம் ஒரு உயிரைக்கூட இழக்க தயாராக இல்லை. எனவேதான் மத்திய அரசு என்னை உடனடியாக இல ங்கைக்கு அனுப்பிவைத்து ள்ளது. நான் இலங்கையில் நாளை (இன்று) சில முக்கிய தலைவர்களை சந்திக்க உள்ளேன். எதிர்காலத்தில் இதுபோன்ற தாக்குதல் சம்பவ ங்கள் நடக்காதபடி நிரந் தர தீர்வு காணும் வகையில் என்னுடைய பேச்சுவார் த்தை அமையும். ஏற்கனவே இரு நாடுகளிடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் உள்ளது.அதன் அடிப்படையில் என்னுடைய பேச்சுவார் த்தை அமையும். மீனவர்க ளுக்கு எதிரான வன்முறைகள் இனிமேலும் நடக்காத வண்ணம் முற்றுப்புள்ளி வைக்கப்படும். பொதுவாக என்னுடைய கருத்து என்னவெனில், இருநாட்டு மீனவர்களும் தங்களது நாட்டு கடல் எல்லையை தாண்டாமல் மீன் பிடித்தால் இதுபோன்ற பிரச்னைகள் ஏற்படாது. இவ்வாறு நிருபமாராவ் கூறினார். பேட்டி முடிந்தபின் நிருபமாராவ், மாலை 6.35க்கு ஜெட் ஏர்வேஸ் பயணிகள் விமானத்தில் கொழும்பு புறப்பட்டுச் சென்றார். |
850 | 1/31/2011 2:27:54 PM | இந்தியா | காவிரி நீரை தேக்கி வைக்க தொட்டி கட்டுகிறது கர்நாடகா | காவிரி ஆற்றில் இருந்து கர்நாடக மாநிலம் மாதேஸ்வரன் மலைக்கு குடிநீர் கொண்டு செல்லும் திட்ட பணிகளை கர்நாடக அரசு மேற்கொண்டு வருகிறது. இதற்காக ஒகேனக்கல்&மேட்டூர் இடையே பொங்கணகுண்டுசந்து என்ற இடத்தில் நீருந்து நிலையம் அமைக்கும் பணியையும், மாதேஸ்வரன்மலை வரை குழாய் பதிக்கும் பணியையும் மேற்கொண்டு வருகிறது.மாதேஸ்வரன் மலையில் லட்சக்கணக்கான பக்தர்களுக்கு குடிநீர் வழங்கும் அளவுக்கு மிகப்பெரிய நீர்த்தேக்க தொட்டி அமைக்கும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. மாதேஸ்வரன் மலை மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் சுமார் 50 ஆயிரம் வசித்து வருகின்றனர். இவர்களுக்கும் இந்த தொட்டி மூலம் தண்ணீர் விநியோகிக்க கர்நாடக அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.மேலும், மாதேஸ்வரன் மலைக்கு லட்சக்கணக்கில் வரும் பக்தர்கள் குடிப்பதற்காகவும், குளிப்பதற்காகவும் அங்குள்ள புனித குளங்களில் நீர் நிரப்பவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. சிவ ராத்திரி நாளில் மட்டும் சுமார் 5 லட்சம் பக்தர்கள் மாதேஸ்வரன் மலையில் கூடுவார்கள். அப்போது,நீர் தேவை பல மடங்கு அதிகரிக்கும். எனவே, இந்த திட்டம் படிப்படியாக விரிவாக்கம் செய்யப்படலாம் என தமிழக எல்லை கிராம மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.அப்போது, கோடை காலங்களில் மேட்டூர் அணைக்கு வரும் குறைந்தபட்ச நீர் முழுவதும் மாதே ஸ்வரன் மலை குடிநீர் திட்டத்துக்காக உறிஞ்சப்படும் வாய்ப்பு உள்ளது. அந்த சம யத்தில் மேட்டூர் அணைக்கு தண்ணீர் வரத்து இல்லாமல் போகும் அபாயம் ஏற்படலாம். இதற்கிடையே, கர்நாடக அரசு செயல்படுத்தி வரும் மாதேஸ்வரன்மலை குடிநீர் திட்ட பணிகளை தமிழக பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் சந்திரசேகர், உதவி செயற்பொறியாளர் குமாரசாமி ஆகியோர் நேற்று முன்தினம் ஆய்வு செய்தனர்.இது தொடர்பான முதல் கட்ட அறிக்கையை தமிழக அரசுக்கும், பொதுப்பணித்துறை செயலாளருக்கும், தலைமை பொறியாளருக்கும் அவர்கள் அனுப்பி வைத்துள்ளனர். மாதேஸ்வரன் மலையில் நீர்தேக்க தொட்டி அமைக்க அடித்தளம் அமைக்கும் பணி தீவிரமாக நடக்கிறது. |