news_id
int64
6
128k
news_date
stringlengths
19
22
news_category
stringclasses
15 values
news_title
stringlengths
1
226
news_article
stringlengths
7
17.4k
113
1/7/2011 2:51:13 PM
உலகம்
பாக். கவர்னர் கொலை திட்டமிட்ட சதியா?
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் பஞ்சாப் மாநில கவர்னர் சல்மான் தசீர், கடந்த செவ்வாய்க்கிழமை அன்று பாதுகாவலரால் சுட்டுக் கொல்லப்பட்டார். பழமைவாத முஸ்லிம் சட்டத்துக்கு எதிராக கருத்து தெரிவித்ததற்காக இவரை பாதுகாவலர் மாலிக் என்பவர் சுட்டுக்கொன்றார். கவர்னர் சல்மான் தசீரின் உடல் அரசு மரியாதையுடன் நேற்று அடக்கம் செய்யப்பட்டது.இச்சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த அதிபரின் அரசியல் ஆலோசகர் பைசல் ரசா அபிதி, ÔÔபாதுகாவலர் மாலிக் தீவிரவாத கொள்கையில் நம்பிக்கையுள்ளவர் என்பது என பஞ்சாப் போலீசுக்கு ஏற்கனவே தெரியும். அவரை வி.ஐ.பி.க்களின் பாதுகாப்பு பணிக்கு அனுப்ப வேண்டாம் என 5 மாதத்துக்கு முன்பே தடை விதிக்கப்பட்டிருந்தது. அப்படியிருந்தும் கவர்னரின் பாதுகாப்பு பணிக்கு மாலிக்கை அலட்சியமாக நியமித்துள்ளது பஞ்சாப் போலீஸ்ÕÕ என கூறியுள்ளார்.கைது செய்யப்பட்ட மாலிக், இஸ்லாமாபாத் கோர்ட்டுக்கு நேற்று கொண்டு வரப்பட்டார். அவருக்கு வக்கீல்கள் உள்பட பலர் வாழ்த்து தெரிவித்தனர். ஒருவர் மாலிக்குக்கு மாலை அணிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. கவர்னர் கொலையில் மிகப் பெரிய சதி இருக்கலாம் என கருதிய விசாரணை அதிகாரிகள், மாலிக்குடன் பணியாற்றிய 36 போலீசார் உள்பட 40 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
114
1/7/2011 2:51:37 PM
உலகம்
முகத்தை ஸ்கேன் பண்ணினா நடிகை வயசும் ‘நச்’னு தெரியும்
நியூயார்க்: முகத்தில் உள்ள சுருக்கங்களை வைத்து வயதை அடையாளம் காண முடியும் என்பது எல்லாருக்கும் தெரியும். இது ஆண்,  பெண் இருபாலருக்கும் பொருந்தும். இந்த வழியில் வயதை தோராயமாகத்தான் சொல்ல முடியுமாம். ஆனால், முக எலும்புகளை  கொண்டு வயதை துல்லியமாக கணித்துக் கூற முடியும் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். வயதுக்கு ஏற்ப எலும்புகளும் மாற்றம் பெறும் என்று கூறும் ஆராய்ச்சியாளர்கள், முக எலும்புகளும் இதற்கு விதிவிலக்கல்ல என்கி ன்றனர். ரோசெஸ்டர் மருத்துவ பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் மூப்பு குறித்து மேற்கொண்ட ஆராய்ச்சியில் இந்த தகவல்  வெளியாகி உள்ளது. முகத்தில் உள்ள சுருக்கங்கள் வயதுக்கேற்ப மாற்றத்தை தோற்றுவிக்கும். வயது ஏறும்போது எலும்புகள் பலவீனமாவதும் இயல்பு.  எலும்புகளில் ஏற்படும் மாறுபாடுகளை கொண்டே உடல் மற்றும் முகத்தில் உள்ள தோல் சுருக்கம் ஏற்படும். முதலில் மெதுவாகவே  தொடங்கும் இந்த செயல்பாடு வயது கூடகூட அதிக மாறுபாடு அடையும். இதனால் முக சுருக்கங்களும் அதிகரிக்கும். கம்ப்யூடட் டோமோகிராபி (சிடி) என்ற அதிநவீன ஸ்கேன் மூலம் ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டதில் இது உறுதிப்படுத்தப்பட்டுள் ளது. வயது வித்தியாசமின்றி ஆண், பெண் ஏராளமானோர் இந்த ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டனர். முக மாற்றம் என்பது வயதை  ஒட்டியதே என்பதை உறுதிப்படுத்தி உள்ளனர். ஆரோக்கியமான உணவுகள், உடற்பயிற்சி, தக்க மருத்துவ ஆலோசனைகள் மூலம்  இத்தகைய பாதிப்பை தள்ளிப்போட முடியும் என்பது ஆராய்ச்சியாளர்கள் தரும் ஆறுதல் வார்த்தைகள்.
116
1/7/2011 3:05:45 PM
வேலைவாய்ப்பு
யு.பி.எஸ்.சி நடத்தும் ஒருங்கிணைந்த பாதுகாப்பு படை தேர்வு
ஒருங்கிணைந்த  பாதுகாப்பு படை சர்வீஸில் பணிபுரிய 2011ம் ஆண்டு பிப்.13ல் நடத்தப்படும் யுபிஎஸ்சி தேர்வுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்தியன் மிலிட்டரி அகடமி, இந்தியன் நேவல் அகடமி மற்றும் ஏர்போர்ஸ் அகடமிகளில் வேலைவாய்ப்பு பெற இத் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இதுதவிர பெண்களும் சேர்த்துக் கொள்ளப்பட இருக்கும் ஆபீசர்ஸ் டிரெய்னிங் அகடமி கோர்சுக்கு சேர்த்து இத்தேர்வு நடத்தப்படுகிறது.வயது: இந்தியன் மிலிட்டரி அகடமி: திருமணமாகாத ஆண்கள் ஜன.2., 1988க்கு முன்னதாகவோ, ஜன.1., 1993க்கு பின்னர் பிறந்தவராகவோ இருக்கக் கூடாது. கல்வித்தகுதி: ஏதேனும் ஒரு பட்டம். இந்தியன் நேவல் அகடமி: திருமணமாகாத ஆண்கள் ஜன.2, 1990க்கு முன்னதாகவோ, ஜன.1 1993க்கு பின்னரோ பிறந்தவராக இருக்கக் கூடாது. ஆனால் என்சிசி நேவல் அணியில் 'சி' சான்றிதழ் பெற்றவர்கள் ஜன.2., 1988ல் பிறந்தவராக இருந்தாலும் விண்ணப்பிக்கலாம்.கல்வித்தகுதி: பி.இ., பட்டம்.ஏர்போர்ஸ் அகடமி: திருமணமாகாத ஆண்கள் ஜன.2., 1989க்கு முன்பும், ஜன.1.,1993க்கு பின்பும் பிறந்தவர்களாக இருக்கக் கூடாது. பிளஸ் 2 வில் இயற்பியல், கணிதப் பாடங்களுடன் பயின்று ஏதேனும் ஒரு டிகிரி அல்லது பி.இ. பட்டம். ஆபீசர்ஸ் டிரெய்னி அகடமி:  திருமணமான அல்லது திருமணமாகாத ஆண்கள் விண்ணப்பிக்கலாம். ஜன.2.,1987க்கு முன்னதாகவோ, ஜன.1 1993க்கு பின்னரோ பிறந்தவராகவோ இருக்கக் கூடாது. கல்வித்தகுதி: ஏதேனும் ஒரு பட்டம்.ஆபீசர்ஸ் டிரெய்னி அகடமி (பெண்கள்): திருமணமாகாத பெண்கள், குழந்தையில்லாத, மறுமணம் செய்யாத விதவைகள், குழந்தையில்லாத விவாகரத்தான மறுமணம் செய்யாத பெண்கள் விண்ணப்பிக்கலாம். வயது :  ஜன.2.,1987க்கு முன்னரோ அல்லது ஜன.1, 1993க்கு பின்னரோ பிறந்தவர்களாக இருக்கக் கூடாது. கல்வித்தகுதி: ஏதேனும் ஒரு பட்டம்.விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் அல்லது தபாலில் விண்ணப்பிக்கலாம். தபாலில் விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் தலைமை தபால் நிலையங்களில் விற்கப்படும் யுபிஎஸ்சி பொது விண்ணப்பத்தை தீ20 செலுத்தி பெற்றுக் கொள்ளலாம். ஆன்லைனில் விண்ணப்பிப்பவர்கள் www.upsconline.nic.in இணையதளத்தில் மாதிரி விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.தேர்வுக்கட்டணம்: ஆன்லைனில் விண்ணப்பிப்பவர்கள் கட்டணம் ரூ.50ஐ ஸ்டேட்பாங்கின் ஏதேனும் ஒரு கிளையில் ரொக்கமாக செலுத்தலாம்.தபாலில் விண்ணப்பிப்பவர்கள் தீ100ஐ சென்ட்ரல் ரெக்ரூட்மென்ட் ஃபீ ஸ்டாம்ப் மூலம் செலுத்தலாம். எஸ்சி., எஸ்டி.,யினர் மற்றும் பெண்களுக்கு தேர்வுக் கட்டணம் கிடையாது.தபாலில் விண்ணப்பிப்பவர்கள்: The Controller of Examinations, Union Public Service Commission, Dholpur House, Shahjahan Road, New Delhi 110069 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.ஆன்லைனில் மற்றும் தபாலில் விண்ணப்பிக்க கடைசிநாள்: 25.10.2010.மேலும் விவரங்களுக்கு செப்.25& அக்.1., தேதியிட்ட எம்ப்ளாய்மென்ட் நியூஸ் பேப்பரை பார்க்கவும்.
117
1/7/2011 3:07:59 PM
வேலைவாய்ப்பு
யூனியன் பாங்க் ஆப் இந்தியாவில் எம்பிஏ படித்தவர்களுக்கு வாய்ப்பு
யூனியன் பாங்க் ஆப் இந்தியாவில் காலியாக உள்ள 250 வாடிக்கையாளர் தொடர்பு அதிகாரி பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடமிருந்து ஆன்லைனில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.மொத்த இடங்கள்: 250 வயது: 21-30.கல்வித்தகுதி: 60 சதவீத தேர்ச்சியுடன் ஏதேனும் ஒரு பட்டம்.  (இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு 55 சதவீதம் போதுமானது.) இத்துடன் எம்.பி.ஏ., அல்லது நிர்வாக பாடத்தில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விண்ணப்ப கட்டணம்: ரூ.300. யூனியன் பாங்க் ஆப் இந்தியாவின் எந்தக் கிளை மூலமும் விண்ணப்ப கட்டணத்தை செலுத்தலாம்.எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு மற்றும் குழுவிவாதம் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 7.10.2010. எழுத்துத்தேர்வு நடைபெறும் நாள்: 5.12.2010.மேலும் விவரங்களுக்கு www.unionbankofindia.nic.in  இணையதளத்தை பார்க்கவும்.
118
1/7/2011 3:09:26 PM
வேலைவாய்ப்பு
இஎஸ்ஐ நிறுவனத்தில் கிளார்க், ஸ்டெனோகிராபர் வேலை
மத்திய அரசின் இ.எஸ்.ஐ. (தொழிலாளர் காப்பீட்டுக்கழகம்) நிறுவனத்தின் தமிழ்நாடு மண்டலத்தில் காலியாக உள்ள ஸ்டெனோகிராபர், லோயர் டிவிஷன் கிளார்க் பணியிடங்களுக்கு ஆன்லைனில் மட்டும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.1. ஸ்டெனோகிராபர்: மொத்த இடங்கள்: 3 கல்வித்தகுதி: பிளஸ் 2 அல்லது அதற்கு சமமான தகுதி. அத்துடன் இந்தி அல்லது ஆங்கிலத்தில் நிமிடத்திற்கு 80 வார்த்தைகள் டைப் செய்யவும், கம்ப்யூட்டர் அறிவும் பெற்றிருக்க வேண்டும்.2. லோயர் டிவிஷன் கிளார்க்: மொத்த இடங்கள்: 39. இதில் உள் ஒதுக்கீடாக முன்னாள் ராணுவத்தினருக்கு 3 இடங்களும், மாற்றுத் திறனாளிகளுக்கு 2 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன. கல்வித்தகுதி: பிளஸ் 2 அல்லது அதற்கு சமமான தகுதி. அத்துடன் நிமிடத்திற்கு இந்தியில் 35 வார்த்தைகள் அல்லது ஆங்கிலத்தில் 40 வார்த்தைகளும் டைப் செய்ய வேண்டும். மேலும் கம்ப்யூட்டர் அறிவும் பெற்றிருக்க வேண்டும்.வயது: 18 -27. ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு தளர்வு உண்டு.விண்ணப்ப கட்டணம்: ரூ.225ஐ இஎஸ்ஐ பண்ட் அக்கவுன்ட் நம்பர் 1 என்ற பெயருக்கு சென்னையில் மாற்றத்தக்க வகையில் டிடி எடுத்து அனுப்ப வேண்டும். பெண்கள், எஸ்சி.,மற்றும் எஸ்டி பிரிவினர், முன்னாள் ராணுவத்தினர், மாற்றுத்திறனாளிகள், முன்னாள் இஎஸ்ஐ ஊழியர்கள் ஆகியோர் ரூ.25 செலுத்தினால் போதும். எழுத்துத் தேர்வு நடைபெறும் இடங்கள்: சென்னை, கோவை, மதுரை, சேலம், திருநெல்வேலி.விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைனில் விண்ணப்பிக்கும் போது பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை பிரின்ட் அவுட் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். இதனுடன் சான்றிதழ்களின் நகல்கள், டிடி ஆகியவற்றை இணைத்து அனுப்ப வேண்டும்.முகவரி: The  Additional Commissioner, ESI Corporation, Regional Office, 143, Sterling Road, Nungambakkam, Chennai600034.ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி: 15.10.2010. பிரின்ட் அவுட் அனுப்ப கடைசி தேதி: 20.10.2010.மேலும் விவரங்களுக்கு www.esi chennai.org என்ற இணையதளத்தை பார்க்கவும்.
120
1/7/2011 3:13:12 PM
வேலைவாய்ப்பு
மத்திய ரிசர்வ் படையில் 376 ஏஎஸ்ஐ, ஹெட் கான்ஸ்டபிள் பிளஸ் 2 மற்றும் சுருக்கெழுத்து படித்தவர்களுக்கு வாய்ப்பு
மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் பிளஸ் 2 வுடன் சுருக்கெழுத்து படித்தவர் கள் 376 ஏஎஸ்ஐ, தலை மைக் காவலர் பணியிடங் களுக்கு கவிண்ணப்பிக்க லாம்.1. அசிஸ்டென்ட் சப்- இன்ஸ்பெக்டர் (ஸ்டெனோ). மொத்த இடங்கள்: 273 (பொது-18, ஓபிசி-22, எஸ்சி-8, எஸ்டி-120, டிபார்ட் மென்டல்-74, முன்னாள் ராணுத் தினர்-31). சம்பளம்: ரூ.5,200-20,200 மற்றும் தர ஊதியம் ரூ.2,800. தகுதி: பிளஸ் 2 வுடன் சுருக்கெழுத்தில் நிமிடத்திற்கு 80 வார்த்தைகள் எழுதும் வேகம் பெற்றிருக்க வேண்டும். 10 நிமிடங்கள் தேர்வு நடைபெறும். 2. ஹெட் காஸ்டபிள் (மினிஸ்டரியல்): மொத்த இடங்கள்: 103 (பொது-38, ஓபிசி-27, எஸ்சி-22, எஸ்டி-16) சம்ப ளம்: ரூ.5,200- ரூ.20.200 மற்றும் தர ஊதியம் ரூ.2,400.தகுதி: பிளஸ் 2 தகுதியுடன் கம்ப் யூட்டரில் ஆங்கிலத்தில் நிமிடத்திற்கு 80 வார்த்தைகள் அல்லது ஹிந்தியில் நிமிடத்திற்கு 30 வார்த்தைகள் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும். குருப் ‘டி’ பிரிவில் பணிபுரிபவர்களுக் கும், கான்ஸ்டபிள்களும் இப் பணிக்கு விண்ணபிக் கலாம்.உடற்தகுதி: உயரம் 163 செ.மீ., (எஸ்சி.,எஸ்டி பிரி வினருக்கு 162.5 செ.மீ). மார்பளவு 77-82 செ.மீ (எஸ்சி.,எஸ்டியின ருக்கு 78-81 செ.மீ). வயது: 16.11.2010 அன்று 18-25 வயதிற்குள் இருக்க வேண்டும். இடஒதுக்கீட்டுப் பிரி வினருக்கு வயதுவரம் பில் சலுகை உண்டு. தேர்வுக்கட்டணம்: ரூ.30/- இதனை DIGP, Group Centre, CRPF, Avadi, Chennai 600065 மாதிரி விண்ணப்பம் மற்றும் கூடுதல் விவரங்களுக்குஷ்ஷ்ஷ்.நீக்ஷீஜீயீ.ஸீவீநீ.வீஸீஇணையதளத்தை பார்க்கவும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய முகவரி: DIGP, Group Centre, CRPF, Avadi, Tamilnadu 600065.விண்ணப்ப கடைசி நாள்: 16.11.2010.
121
1/7/2011 3:14:38 PM
வேலைவாய்ப்பு
கொங்கன் ரயில்வே கழகத்தில் : டிப்ளமோ/பி.காம்/பி.இ.படித்தவர்கள்தேவை
கொங்கன் ரயில்வே கழகத்தில் அசிஸ்டென்ட் புரொஜக்ட் இன்ஜினியர், செக்ஷன் இன்ஜினியர், ஆபீஸ் அசிஸ்டென்ட், டெக்னிக்கல் அசிஸ்டென்ட், அக்கவுன்ட்ஸ் அசிஸ் டென்ட் ஆகிய 25 இடங்கள் காலியாக உள்ளன.1. அசிஸ்டென்ட் புரொஜெக்ட் இன்ஜினியர்- 2. சம்பளம்: ரூ.29,539. கல்வித்தகுதி: சிவில் பிரிவில் 55 சதவீத தேர்ச்சியுடன் பி.இ மற்றும் 3 வருட பணிஅனுபவம்.2. செக்ஷன் இன்ஜினியர்-10. சம்பளம்: ரூ.24,275. கல்வித்தகுதி: சிவில் பிரிவில் 55 சதவீத தேர்ச்சியுடன் பி.இ மற்றும் ஒரு வருட முன் அனுபவம்.3. ஆபீஸ் அசிஸ்டென்ட்-3. சம்ப ளம்: ரூ.17,216. கல்வித்தகுதி: 10+2+3 கல்வி முறையில் 50 சத தேர்ச்சியுடன் ஏதேனும் ஒரு டிகிரி. மற்றும் அலுவலக பணியில் 2 வருட முன் அனுபவம்.4. டெக்னிக்கல் அசிஸ்டென்ட்-5. சம்பளம்: ரூ19,431. கல்வித்தகுதி: சிவில் இன்ஜினியரிங்கில் 55 சதவீத தேர்ச்சியுடன் டிப்ளமோ. அத்துடன் ஆட்டோகாட், சிவில் பிரிவில் 2 வருட அனுபவம்.5. அக்கவுன்ட்ஸ் அசிஸ்டென்ட்- 5. சம்பளம்: ரூ.19,431. கல்வித்தகுதி: 55 சதவீத தேர்ச்சியுடன் பி.காம் அல்லது எம்.காம்.,. அத்துடன் கம்ப்யூட்டர் சார்ந்த அக்கவுன்ட் பணியில் 3 வருட பணிஅனுபவம்.பணிஒப்பந்த காலம் 2 ஆண்டுகள். பணி திறனை பொறுத்து ஒப்பந்த காலம் 5 ஆண்டுகள் வரை நீட்டிக்கப் படலாம். வயது: 1.1.1975 அன்றோ அல்லது அதற்கு பின்னர் பிறந்தவர்கள் விண் ணப்பிக்கலாம். மத்திய அரசு விதி முறைகளின்படி வயது வரம்பு தளர்த் தப்படும். விண்ணப்ப படிவம் மற்றும் விவரங்களுக்கு www.konkan railway.recruits என்ற இணையதளத்தை பார்க்கவும்.விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி: Chief Personnel Officer, Administration, Konkan Railway Corporation Ltd., Project Division, 5th Floor, Belapur Bhavan, Plot no.6, Sector 11, CBD Belapur, Navi, Mumbai 400 614.விண்ணப்பிக்க கடைசி நாள்: 15.11.2010.
122
1/7/2011 3:15:25 PM
வேலைவாய்ப்பு
பி.இ., பி.டெக்., படித்தவர்கள் கடற்படை அதிகாரியாகலாம்
இந்திய கடற்படையின் எக்சிகியூட்டிவ் பிரிவில் ழிணீஸ்ணீறீ கிக்ஷீனீணீனீமீஸீt மிஸீsஜீமீநீtவீஷீஸீ சிணீபீக்ஷீமீ அந்தஸ்தில் பணியில் சேர திருமணமாகாத ஆண் களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.வயது: 19லிருந்து 25க்குள் இருக்க வேண்டும். அதாவது விண்ணப்பதாரர்கள் 2.7.1986க்கும் 1.1.1992க்கும் இடையில் (இரண்டு தேதிகள் உட்பட) பிறந்தவர்களாக இருக்க வேண்டும்.கல்வித்தகுதி: எலக்ட்ரிக்கல்/எலக்ட்ரானிக்ஸ்/ மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பிரிவில் பி.இ/பி.டெக்  அல்லது எலக்ட்ரானிக்ஸ்/ இயற்பியல் பிரிவில் முதுகலை பட்டம். 2011 ஜனவரியிலிருந்து ஜூனிற்கும் தேர்வு நடத்தப் படும். தேர்வு மையங்கள்: பெங்களூர், போபால், கோவை. தேர்வு இரு கட்டங்களாக நடை பெறும்.  அனைத்துத் தேர்வுகளிலும் தேர்ச்சி பெறு பவர்கள் அடங்கிய மெரிட் பட்டியல் தயாரிக்கப்பட்டு காலியிடங்களுக்கு ஏற்ப பயிற்சிக்கு அனுப்பப்படுவர். பயிற்சி 2011 ஜூலையில் தொடங்கும். பயிற்சிக்குப் பின்SubLieutenant அந்தஸ்தில் பணியில் அமர்த் தப்படுவர். மாதிரி விண்ணப்பபடிவம் மற்றும் விண்ணப் பிக்கும் முறை உள்ளிட்ட விவரங்களுக்கு www.nausenabharti.nic.in இணையதளத் தையோ அல்லது எம்ப்ளாய்மென்ட் நியூஸ் அக்.23-29 இதழையோ பார்க்கவும்.விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி: POST BAG NO:04, R.K.PURAM (Main), NEWDELHI 110 066.விண்ணப்பிக்க கடைசி நாள்: 15.11.2010.
123
1/7/2011 3:16:22 PM
வேலைவாய்ப்பு
டிஎன்பிஎஸ்சி நடத்தும் புள்ளியியல் உதவியாளர் தேர்வு
தமிழ்நாடு பொதுசுகாதாரத்துறை மற்றும் தமிழ்நாடு மருத்துவ துணை சுகாதாரப்பணிகள் துறையில் புள்ளியியல் உதவியாளர் மற்றும் வட்டார நல புள்ளியியலாளர், அமைச்சுப் பணியில் சிறப்பு உதவியாளர் பணிகளுக்கு டிஎன்பிஎஸ்சி தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.1. புள்ளியியல் உதவியாளர்: மொத்த இடங்கள்-12. கல்வித்தகுதி: புள்ளியியலை துணைப்பாடமாக கொண்டு புள்ளியியல் அல்லது கணிதத்தில் முதுநிலை பட்டம்.   2. வட்டார நல புள்ளியியலாளர்: மொத்த இடங்கள்-49. கல்வித்தகுதி: கணிதம் அல்லது புள்ளியியல் பாடத்தில் இரண்டாம் நிலை தேர்ச்சியுடன் புள்ளியியலை துணைப்பாடமாகக் கொண்டு ஏதேனும் ஒரு டிகிரி. புள்ளியியல் துறையில் 3 ஆண்டுகள் முன்அனுபவம் பெற்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.3. சிறப்பு உதவியாளர்: மொத்த இடங்கள்:4. கல்வித்தகுதி: ஏதேனும் ஒரு பட்டம் மற்றும் தட்டச்சில் ஆங்கிலம் மற்றும் தமிழிலில் உயர்நிலை தேர்ச்சி.வயது: 1.7.2010ன்படி 18 வயதிலிருந்து 30க்குள் இருக்க வேண்டும். இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு அதிகபட்ச வயதுவரம்பில் சலுகை உண்டு. விண்ணப்பதாரர்கள் எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவர்.தேர்வுக்கட்டணம்: ரூ.100/- டிஎன்பிஎஸ்சியால் பட்டியிலிடப்பட்ட தபால் அலுவலகங்களில் ரூ.100 செலுத்தி அதற்கான ரசீதை சேவைக் கட்டணமாக ரூ.12 செலுத்தி பெற்றுக் கொள்ள வேண்டும். இந்த ரசீதை விண்ணப்பத்தின் குறிப்பிடப்பட்ட பகுதியில் ஒட்ட வேண்டும்.விண்ணப்பங்களை அந்தந்த தலைமை தபால் அலுவலகங்களில் ரூ.30 செலுத்தியோ அல்லது சென்னை டிஎன்பிஎஸ்சி அலுவலகத்தில் நேரடியாகவோ பெற்றுக் கொள்ளலாம்.  விண்ணப்பதாரர்கள் ஆன்லைனிலும் விண்ணப்பிக்கலாம்.ஆன்லைனில் விண்ணப்பிப்பவர்கள் விண்ணப்ப கட்டணமாக ரூ.30, தேர்வுக்கட்டணமாக ரூ.100, மொத்தம் ரூ.130 ஐ தபால் அலுவலகத்தில் செலுத்தி அதன் ரசீதை விண்ணப்பத்தின் பிரின்ட் அவுட்டுடன் இணைத்து அனுப்ப வேண்டும்.விண்ணப்பத்தை உரிய சான்றிதழ்களுடன் அனுப்ப வேண்டிய முகவரி:The Controller of Examinations, Office of the Tamil Nadu Public Service Commis sion, No.1 Greams Road, Chennai 600006.விண்ணப்பிக்க கடைசி நாள்: டிச.7. புள்ளியியல் பணிக்கான தேர்வுகள் நடைபெறும் நாள்: பிப்.26,27. சிறப்பு உதவியாளர் பணிக்கான தேர்வு நடைபெறும் நாள்: பிப்.20.மேலும் விவரங்களுக்கு www.tnpsc.gov.in  இணையதளத்தை பார்க்கவும்.
124
1/7/2011 3:17:45 PM
வேலைவாய்ப்பு
முன்னாள் ராணுவ வீரர்களுக்கு ரயில்வேயில் வேலை
தென்கிழக்கு மத்திய ரயில்வேயில் காலியாக உள்ள 1010 கேங்க்மேன், கலாசி, பியூன் பணியிடங்களுக்கு  முன்னாள் ராணுவ வீரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 1. டிராக்மேன்/கேங்க்மேன் (இன்ஜினியரிங்): மொத்த இடங்கள்: 800. சம்பளவிகிதம்: ரூ.5,200- ரூ.20,200 மற்றும் தர ஊதியம் ரூ.1,800. வயது: 1.1.2011 அன்று பொது பிரிவினருக்கு 30 வயதிற்குள்ளும், ஓபிசியினருக்கு 33 வயதிற்குள்ளும் இருக்க வேண்டும். மிலிட்டரி சர்வீஸ் தளர்வும் வழங்கப்படும்.2. கலாசி (மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், சிக்னல் மற்றும் டெலிகாம்): மொத்த இடங்கள்:179.விண்ணப்ப கட்டணம் கிடையாது. எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு, உடற்தகுதித்தேர்வு இல்லை. மாதிரி விண்ணப்ப படிவம் மற்றும் கூடுதல் விவரங்களுக்கு www.rrcer.com இணையதளத்தை பார்க்கவும்.பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய முகவரி:Assistant Personnel Officer (Recruitment), Railway Recruitment Cell, GM s Annex Building, South East Central Railway, Bilaspur 495004. Chhattisgarh.விண்ணப்பம் அனுப்ப கடைசி நாள்: 29.11.2010. மேலும் விவரங்களுக்கு அக்.30-நவ.5 தேதியிட்ட எம்ப்ளாய்மென்ட் நியூஸைப் பார்க்கவும்.
126
1/7/2011 3:21:15 PM
வேலைவாய்ப்பு
தேசிய நீர்மின்கழகத்தில் இன்ஜினியர் பணி டிப்ளமோ படித்தவர்களுக்கு வாய்ப்பு
மத்திய பிரதேசத்திலுள்ள தேசிய நீர்மின் உற்பத்தி கழகத்தில் காலியாக உள்ள ஜூனியர் இன்ஜினியர் பணியிடங்களுக்கு டிப்ளமோ படித்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.1. ஜூனியர் இன்ஜினியர் (எலக்ட்ரிக்கல்): 12 ( பொது-9, எஸ்சி-3). சம்பளம்: ரூ.7,900- ரூ.13,700.தகுதி: எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் கில் 60 சதவீத  தேர்ச்சியுடன் டிப்ளமோ. எஸ்சி/எஸ்டி/மாற்றுத் திறனாளிகளுக்கு 50 சதவீதம் போதுமானது.2. ஜூனியர் இன்ஜினியர் (மெக்கா னிக்கல்): 8 (பொது-5, எஸ்சி-1, எஸ்டி-1, ஓபிசி-1). தகுதி: மெக்கா னிக்கல் இன்ஜினியரிங்கில் 60 சதவீத தேர்ச்சியுடன் டிப்ளமோ. எஸ்சி/எஸ்டி/மாற்றுத்திறனாளிகளுக்கு 50 சதவீத தேர்ச்சி போதுமானது.வயது: இரு பணிகளுக் கும் 1.12.2010 அன்று 30க்குள் இருக்க வேண்டும். இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது வரம்பில் சலுகை உண்டு. எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு அடிப்படை யில் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். விண்ணப்ப கட்டணம்: ரூ.250/- இதை‘‘NHDC Ltd’’என்ற பெயரில் போபாலில் மாற்றத்தக்க வகையில் கிராஸ் செய்யப்பட்ட டிடியாக எடுக்க வேண்டும். எஸ்சி.,எஸ்டியினருக்கு விண்ணப்ப கட்டணம் கிடையாது. மாதிரி விண்ணப்பம் மற்றும் கூடுதல் விவரங்களுக்கு www.nhdcindia.com என்ற இணைய தளத்தை பார்க்கவும். பூர்த்தி செய்யப் பட்ட விண்ணப்பத்தை தேவையான சான்றிதழ்களுடன் அனுப்ப வேண்டிய முகவரி:The Senior Manager (HR)-Rectt., NHDC Ltd., NHDC Parisar, Shamia Hills, BHOPAL (M.P). Pin: 462013.விண்ணப்பிக்க கடைசி நாள்: 5.1.2011.
127
1/7/2011 3:22:41 PM
வேலைவாய்ப்பு
புரொபஷனரி ஆபீசர் காலியிடங்கள்
ஐசிஐசிஐ வங்கியில் காலியாக உள்ள புரொபஷனரி பணியிடங்களுக்கு ஆன்லைனில் மட்டும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. கல்வித்தகுதி: 55 சதவீத தேர்ச்சியுடன் ஏதேனும் ஒரு பட்டம். கம்ப்யூட்டரில் பணிபுரியும் திறன். வயது: 1.5.2011 அன்று 25 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.விண்ணப்பதாரர்கள் எழுத்துத்தேர்வு, குழு விவாதம், மற்றும் நேர்முகத்தேர்வின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவர். பெங்களூர் அருகே மணிபால் அகாடமியில்  2011 மே முதல் 14 மாதங்களுக்கு உதவித் தொகையுடன் கூடிய பயிற்சியளிக்கப்படும். பயிற்சிக்குப் பின்னர் உதவி மேலாளராக பணி அமர்த்தப்படுவர். இதற்கான தேர்வுகள் 2011 ஜனவரி, பிப்ரவரியில் நடைபெறும்.ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 5.1.2011.மேலும் விவரங்களுக்கு www.icici.nic.in. இணையதளத்தை பார்க்கவும்.
128
1/7/2011 3:24:09 PM
வேலைவாய்ப்பு
இந்தோ-திபெத் எல்லைக்காவல் படையில் 416 போலீஸ் இடங்கள்
இந்தோ-திபெத் எல்லைக்காவல் போலீஸ் படையில் (ஐடிபிபி) 416 கான்ஸ்டபிள் பணியிடங்கள் காலியாக உள்ளன. 1. கான்ஸ்டபிள் (சமையலர்): மொத்த இடங்கள்: 123 (பொது-63, ஓபிசி-33, எஸ்சி-18, எஸ்டி-9).2. கான்ஸ்டபிள் (வாஷர்மேன்): 49 (பொது-26, ஓபிசி-13, எஸ்சி-7, எஸ்டி-3).3. கான்ஸ்டபிள் (பார்பர்): 41 (பொது-22, ஓபிசி-10, எஸ்சி-6, எஸ்டி-3).4. கான்ஸ்டபிள் (வாட்டர் கேரியர்): 86 (பொது-45, ஓபிசி-23, எஸ்சி-12, எஸ்டி-6).5. கான்ஸ்டபிள் (சபை கரம்சாரி): 117 (பொது-61, ஓபிசி-31, எஸ்சி-17, எஸ்டி-8).கல்வித்தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சி. வயது: 12.1.2011 அன்று 18 லிருந்து 25க்குள். இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு வயது வரம்பில் தளர்வு உண்டு. சம்பளம்: ரூ.5,200-20,200 மற்றும் தர ஊதியம் ரூ.2000.விண்ணப்ப கட்டணம்: ரூ.50ஐ IG Northern Frontier, ITBP என்ற பெயரில் ஸ்டேட்பாங்கின் ஏதேனும் ஒரு கிளையில் டேராடூனில் மாற்றத்தக்க வகையில் டிடி எடுக்க வேண்டும்.நேரடி ஆள் சேர்ப்பு நடைபெறும் நாள்: 16.3.2011. காலை 8 மணி.  உடல்திறன், எழுத்து, நேர்காணல், மருத்துவசோதனை அடிப்படையில் விண்ணப்பதாரர் தேர்ந்தெடுக்கப்படுவர்.மேற்கண்ட தேதியில் நேரடி ஆள்சேர்ப்புக்கு விண்ணப்பதாரர் அணுக வேண்டிய மையம்:Group Centre CRPF, Jai Jawahar Nagar, Hakimpet, Ranga Reddy Dt., Andhra Pradesh- 500075.
131
1/7/2011 3:27:44 PM
வேலைவாய்ப்பு
மத்திய அரசுப் பணியில் 2086 பணியிடங்கள்: 10ம் வகுப்பு படித்தவர்களுக்கு வாய்ப்பு
மத்திய அரசின் மல்டி டாஸ் கிங் ஸ்டாப் பணிகளுக்கு 2086 பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படு கின்றன. இவற்றில் தமிழகத்தில் 196 காலியிடங்கள் உள்ளன. இது தவிர கேரளா-16, ஆந்திரா-20, கர்நாடகம்-119 என காலியிடங்கள் உள்ளன.தமிழ்நாட்டிற்கு ஒதுக்கப்பட்ட இடங்கள்: 196 (பொது-102, ஓபிசி-57, எஸ்சி-32, எஸ்டி-5). வயது: 31.12.2010 அன்று 18 லிருந்து 25க் குள். இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு வயதுவரம்பில் சலுகை உண்டு.சம்பளம்: ரூ.5,200-ரூ.20,200 மற்றும் தர ஊதியம் ரூ.1,800. தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சி அல்லது அதற்கு இணையான கல்வித்தகுதி.விண்ணப்ப கட்டணம்: ரூ.100/- தபாலில் விண்ணப்பிப்பவர்கள் இதை சென்ட்ரல் ரெக்ரூட்மென்ட் ஃபீ ஸ்டாம்ப் மூலம் செலுத்த வேண்டும். ஆன்லைனில் விண் ணப்பிப்பவர்கள் இணையதளத் தில் செலானை பதிவிறக்கம் செய்து ஏதேனும் ஒரு ஸ்டேட் வங்கியில் செலுத்தலாம். எழுத்துத்தேர்வு நடைபெறும் நாள்: 27.02.2011. தமிழ்நாட்டில் கோவை, சென்னை, மதுரை, திருநெல்வேலி, திருச்சி ஆகிய இடங்களில் தேர்வு நடைபெறும்.மாதிரி விண்ணப்பம் மற்றும் விவரங்களுக்கு www.sscsr.gov.in இணையதளத்தை பார்க்கவும். விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய முகவரி: Regional Director (SR), Staff Selection Commission, EVK Sampath Building, 2nd Floor, College Road, Chennai. விண்ணப்பிக்க கடைசி நாள்: 31.12.2010. ஒன்றுக்கு மேற்பட்ட மாநில காலியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் தனித்தனி விண்ணப்பத்தை அனுப்ப வேண்டும்.
132
1/7/2011 3:33:30 PM
விளையாட்டு
260 ரன் இலக்காக இருந்தால் ஜெயித்திருப்போம்: டோனி
கேப்டவுன்:கேப்டவுனில் நடந்த கடைசி டெஸ்ட் போட்டி யில் இந்திய அணிக்கு 340 ரன்களை வெற்றி இலக்காக தென் ஆப்ரிக்கா நிர்ணயித்தது. கடின இலக்கை நோக்கி ஆடிய இந்தியா நேற்றைய கடைசி நாள் ஆட்டத்தில் 3 விக்கெட் இழப்பிற்கு 166 ரன்கள் எடுத்தது. இத னால் போட்டி டிராவில் முடிந்தது. இரு அணி களும் தலா ஒரு ஆட்டத்தில் வெற்றி பெற்றதால் கோப்பை பகிர்ந்து வழங்கப்பட்டது.போட்டி குறித்து இந்திய அணியின் கேப்டன் டோனி கூறுகையில், 2வது இன்னிங்சில் தென் ஆப்ரிக்க அணி  130 ரன்னுக்கு 6 விக்கெட்டை இழந்த போது எங்களுக்கு வெற்றி வாய்ப்பு இருந்தது. ஆனால் அதன் பின்னர் விரைவாக விக்கெட்டுகளை வீழ்த்த தவறிவிட்டோம். காலிஸ் அருமையாக ஆடி ஆட்டத்தை எங்கள் கையில் இருந்து பறித்துவிட்டார். அவரை மட்டும் அல்லாமல் பின்கள வீரர்களையும் நாங்கள் கட்டுப்படுத்த தவறிவிட்டோம். 250 முதல் 260 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டிருந்தால் ஜெயிக்க வாய்ப்பு கிடைத்திருக்கும். 340 ரன்கள் என்பது கடைசி நாளில் கடினமாக இலக்கு. இந்திய பந்து வீச்சாளர்கள் பழைய பந்திலும் சிறப்பாக செயல்பட வேண்டும். இந்த தொடரில் முதல் ஆட்டத்தில் தோல்வி அடைந்த நிலையில் அடுத்து வெற்றி பெற்றோம். ஒட்டு மொத்தத்தில் டெஸ்ட் தொடர் எங்களுக்கு சிறப்பாக அமைந்தது.சேவாக்கின் மோசமான பார்மினால் அணியின் வாய்ப்புகள் பறி போனதா? என்ற கேள்விக்கு டோனி பதில் அளிக்கையில், எல்லோருமே சிறப்பாக தான் ஆடவேண்டும் என நினைப்பார்கள். சேவாக் சிறப்பாக தான் ஆடினார். ஆனால் எல்லா நேரமும் வீரர்கள் சிறப்பாக ஆடுவார்கள் என்பதற்கு கியாரண்டி கொடுக்க முடியாது என்றார்.
133
1/7/2011 3:36:26 PM
விளையாட்டு
ஒருநாள் போட்டி தொடர் தெ.ஆ. அணியில் காலிஸ் நீக்கம் பாக். வம்சாவளி வீரருக்கு வாய்ப்பு
கேப்டவுன்:இந்தியா&தென் ஆப்ரிக்க அணிகள் இடையேயான டெஸ்ட் தொடர் 1&1 என்ற கணக்கில் சமனில் முடிந் தது. தொடர்ந்து இரு அணிகளும் ஒரு 20&20 மற்றும் 5 ஒருநாள் போட்டி கொண்ட தொடரில் மோதுகிறது. 20&20 ஆட்டம் வரும் 9ந்தேதி நடக்கிறது. ஒருநாள் போட்டி தொடர் 12ந்தேதி துவங்குகிறது. இந்நிலையில் ஒருநாள் போட்டி தொடருக்கான தென் ஆப்ரிக்க அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் டெஸ்ட் போட்டியில் காயம் அடைந்த காலிஸ் நீக்கப்பட்டுள் ளார். மேலும் புதுமுக வீரர்களாக பாகிஸ்தான் வம்சாவளியான சுழற்பந்து வீச்சாளர் இம்ரான் தகீர், ஆல்ரவுண்டர் பா டூ பிளசிஸ் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். அணி விவரம்:சுமித்(கேப்டன்), அம்லா, டிவில்லியர்ஸ், டூம்னி, பா டூ பிளசிஸ், ராபின் பீட்டர்சன், போத்தா, காலின் இங்ராம், டேவிட் மில்லர், மோர்னே மோர்கல், பார்னல், ஸ்டெய்ன், இம்ரான் தகீர், சோட் சோபி.
134
1/7/2011 3:37:00 PM
வேலைவாய்ப்பு
நெல்லை இஎஸ்ஐ ஆஸ்பத்திரியில் டெக்னீஷியன் பணி
மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் நெல்லையில் உள்ள இஎஸ்ஐ மருத்துவ மனையில் காலியாக உள்ள பாரா மெடிக்கல் பணியிடங் களை நிரப்ப தகுதியானவர் களிடமிருந்து விண்ணப் பங்கள் வரவேற்கப்படுகின்றன. லேப் டெக்னீஷியன், லேபரேட்டரி அசிஸ்டென்ட், ரேடியோகிராபர், ஜூனியர் ரேடியாகிராபர், பார்மசிஸ்ட், ஓ.டி. டெக்னீஷியன், ஓ.டி. அசிஸ்டென்ட், பிளாஸ்டர் டெக்னீஷியன், பிளாஸ்டர் அசிஸ்டென்ட், டென்டல் டெக்னீஷியன், பிசியோ தெரபிஸ்ட், இசிஜி டெக்னீ ஷியன், ஸ்டாப் நர்ஸ், சிஎஸ்எஸ்டி டெக்னீஷியன், நர்சிங் ஆர்டர்லி/ஸ்டெரச் சர்/பேரர்/அட்டென்டன்ட், குக் மேட்/மசால்ஜி/பேரர் ஆகிய காலியிடங்கள் உள்ளன.எழுத்துத்தேர்வு, நேர் முகத் தேர்வு அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். தர ஊதியம் ரூ.2 ஆயிரத்துக்கும் குறைவாக பெறும் பணிகளுக்குரிய விண்ணப்ப தாரர்களுக்கு கட்டணம் ரூ.75/. இதர விண்ணப்ப தாரர்களுக்கு ரூ.125/. கட்ட ணத்தை ‘‘ணிஷிமி சிஷீக்ஷீஜீஷீக்ஷீணீtவீஷீஸீ, கிநீநீஷீuஸீt ழிஷீ.01’’என்ற முகவரிக்கு சென்னையில் மாற்றத்தக்க வகையில் டிடியாக செலுத்த வேண் டும்.டிடியின் பின்புறம் விண் ணப்பதாரரின் பெயர், முகவரி, விண்ணப்பிக்கும் பணியின் பெயர், இஎஸ்ஐ மருத்துவமனையின் பெயர் ஆகியவற்றை குறிப்பிட வேண்டும். இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு விண்ணப்ப கட்டணம் கிடையாது.மாதிரி விண்ணப்பம் மற்றும் கூடுதல் விவரங் களுக்கு www.esic.nic.in  இணையதளத்தை பார்க்கவும்.விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய முகவரி:The Medical Superin tendent, ESI Hospital, Tirunelveli Camp Office, ESI Hospital Cum-ODC, Ashok Pillar Road, K.K. Nagar, Chennai- 600078.விண்ணப்பிக்க கடைசி நாள்: 10.1.2011
135
1/7/2011 3:39:35 PM
விளையாட்டு
20&20 கேப்டன் பதவி கிளார்க் ‘கல்தா’
ஆஸி. அணியின் கேப்டன் ரிக்கி பான்டிங்கின் பதவி கேள்விக்குறியாக உள்ளது. காயம் காரணமாக தற்போது ஓய்வில் உள்ள பான்டிங் அணிக்கு மீண்டும் திரும்பும் போது கேப்டனாக திரும்புவாரா என்பதில் குழப்பம் நீடித்து வருகிறது. இந்த நிலையில் 20&20 போட்டிகளுக்கு கேப்டனாக செயல்பட்டு வரும் கிளார்க் அந்த பதவியில் இருந்து விலகுவதாக இன்று திடீரென அறிவித்தார். ஒரு நாள் போட்டியில் கவனம் செலுத்துவதற்காக இந்த முடிவை எடுத்துள்ளதாக அவர் தெரிவித்தார். 20&20 அணிக்கு கேமரூன் ஒயிட் கேப்டனாக நியமிக்கப்பட வாய்ப்புகள் உள்ளது.
136
1/7/2011 3:40:23 PM
வேலைவாய்ப்பு
ரயில்வேயில் 11, 439 காலியிடம்
மத்திய ரயில்வே அமைச்சகத்தின் கீழ் செயல்படும் வடக்கு ரயில்வே யில் 11 ஆயிரத்து 439 பணியிடங்கள் காலியாக உள்ளன.அதாவது டிராக்மேன் (சிவில்)4802, கேட்மேன்160, டிராபிக் போர்ட்டர்277, கேட்மேன் (ஆபரேட்டிங்)438, கலாசி ஹெல்பர்1748, கலாசிஹெல்பர் (பெண்கள்)2480, கலாசிஹெல்பர் (ஸ்டோர்ஸ்)424, சபைவாலா (மெடிக்கல் மற்றும் மெக்கானிக்கல்)137, சபைவாலா பெண்கள் (மெடிக்கல்)25, கேரேஜ் கிளீனர் (மெக்கானிக்கல்)854, டிஎஸ்எல் கிளீனர் (மெக்கானிக்கல்)94. கல்வித்தகுதி: 1.1.2010ன்படி 10ம் வகுப்பு அல்லது ஐடிஐ அல்லது அதற்கு சமமான தேர்ச்சி. தேர்வு முடிவுக்காக காத்திருப்பவர்கள் விண்ணப்பிக்க வேண்டாம்.வயது: 1.1.2011ன்படி 18 வயதிலிருந்து 33க்குள் இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி வயதுத் தளர்வு உண்டு. விண்ணப்பதாரர்கள் உடற்தகுதித் தேர்வு மற்றும் எழுத்துத்தேர்வு அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவர்.விண்ணப்ப கட்டணம்: ரூ.40/ Assistant Personnel Officer (Recruitment), Railway Recruitment Cell, New Delhi என்ற பெயரில் டி.டி எடுக்க வேண்டும். மாதிரி விண்ணப்பம் மற்றும் கூடுதல் விவரங்களுக்கு  www.nr.indianrailways.gov.in இணையதளத்தை பார்க்கவும்.விண்ணப்பிக்க கடைசி நாள்: 16.2.2011.
137
1/7/2011 3:41:15 PM
விளையாட்டு
சானியா ஜோடி தோல்வி
நியூசிலாந்தின் ஆக்லாந்து நகரில் நடந்து வரும் டென்னிஸ் போட்டியில் இரட்டையர் பிரிவு அரையிறுதியில் சானியா (இந்தியா)& வோரகோவா(செக்குடியரசு) ஜோடி 1&6, 1&6 என்ற நேர் செட்டில் பெஸ்கி (செக்குடியரசு)& செர்போட்னிக் (சுலோவேனியா) ஜோடியிடம் தோல்வி அடைந்தது. ஒற்றையர் பிரிவு காலிறுதியில் முன்னணி வீராங்கனையான ரஷ்யாவின் மரியா ஷரபோவா 2&6, 5&7 என்ற நேர் செட்டில் ஹங்கேரியின் கிரீட்டாவிடம் தோல்வியை தழுவினார்.
138
1/7/2011 3:43:00 PM
விளையாட்டு
முதல் டெஸ்ட் துவக்கம்: நியூசி.க்கு 6 விக்கெட் காலி
ஹாமில்டன்:பாகிஸ்தான்& நியூசிலாந்து அணிகள் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி இன்று காலை ஹாமில்டனில் துவங்கியது. டாஸ் வென்ற பாகிஸ்தான் பீல்டிங்கை தேர்வு செய்தது.இதையடுத்து நியூசிலாந்து பேட்டிங்கை துவக்கியது. மெக்கிங்தோஸ் 5, மெக்குல்லம் 56, குப்தில் 50, ரோஸ் டெய்லர் 6, ரைடர் 22, யங்க் 14 ஆகிய ரன்களில் ஆட்டமிழந்தனர். 64 ஓவர்கள் வீசப்பட்ட நிலையில் நியூசிலாந்து 6 விக்கெட் இழப்பிற்கு 176 ரன் எடுத்திருந்தது. பாக். தரப்பில் அப்துர் ரகுமான் 3 விக்கெட் சாய்த்தார்.
139
1/7/2011 3:43:38 PM
விளையாட்டு
ஆஸி. இன்னிங்ஸ் தோல்வி தொடரையும் இழந்தது
சிட்னி:ஆஷஸ் டெஸ்ட் தொடரின் கடைசி மற்றும் 5வது டெஸ்ட் போட்டி சிட்னியில் நடந்தது. இதன் முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா 280 ரன் எடுத்தது. இங்கிலாந்து 644 ரன்கள் குவித்தது. தொடர்ந்து 2வது இன்னிங்சை ஆடிய ஆஸ்திரேலியா நேற்றைய 4வது நாள் ஆட்டம் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 213 ரன்கள் எடுத்தது. சுமித் 24, சிடில் 17 ரன்னுடன் இன்றைய கடைசி நாள் ஆட்டத்தை தொடர்ந்தனர். சிடில் 43, ஹில்பன்ஹாஸ் 7, பீர் 7 ரன்களில் ஆட்டமிழக்க முடிவில் ஆஸி. அணி 281 ரன்னுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. சுமித் 54 ரன்னுடன் கடைசி வரை ஆட்டமிழக்காமல்இருந்தார். இதனால் இங்கிலாந்து இன்னிங்ஸ் மற்றும் 83 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஏற்கனவே 2 டெஸ்டில் வெற்றி பெற்றிருந்ததால் தொடரை 3&1 என்ற கணக்கில் வென்று இங்கிலாந்து அணி கோப்பையை கைப்பற்றியது. ஆஸி. மண்ணில் இங்கிலாந்து அணி 24 வருடங்களுக்கு பிறகு தற்போது தான் ஆஷஸ் கோப்பையை வென்றுள்ளது.
140
1/7/2011 3:43:43 PM
வேலைவாய்ப்பு
பி.எட். படித்தவர்களுக்கு விமானப்படையில் வேலை
விமானப்படையில் குரூப் ‘‘எக்ஸ்’’ பிரிவின் கீழ் உள்ள காலியிடங் களை நிரப்ப டிகிரி, முதுகலை படிப்புடன் பி.எட். படித்தவர்களிடமிருந்து விண் ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி: சீனியர் நான்கமிஷன்டு ஆபீசர். கல்வித்தகுதி: கலை/வணிகவியல்/அறிவியல் பாடங்களில் டிகிரியுடன் பி.எட்., அல்லது 2 வருட ஆசிரியர் பணி அனுபவம். டிகிரி மற்றும் பி.எட்டில் 50 சதவீத தேர்ச்சி. அல்லது எம்.ஏ., ஆங்கிலம்/எம்எஸ்சி (கணிதம், இயற்பியல், கம்ப்யூட்டர் அறிவியல்)/ எம்சிஏ தகுதியுடன் பி.எட்., அல்லது 2 வருட ஆசிரியராக பணியாற்றிய அனுபவம்.வயது: டிகிரியுடன் பி.எட்., தகுதி யுடையவர்கள் 1.1.1987க்கும் 31.5.1994க் கும் இடைப்பட்ட நாளில் பிறந்தவராக இருக்க வேண்டும் (இரு தேதிகள் உட்பட). அதிக பட்ச வயது வரம்பு:25. முதுநிலை படிப்புடன் பி.எட். தகுதி யுடையவர்கள் 1.1.1984க்கும் 31.5.1994க் கும் இடைப்பட்ட தேதியில் பிறந்தவராக இருக்க வேண்டும். ( இரு தேதிகள் உட்பட). அதிக பட்ச வயது வரம்பு: 28.உயரம்: 152.5 செ.மீ., 5 செ.மீ., மார்பு விரியும் தன்மை கொண்டவராக இருக்க வேண்டும். உயரத்திற்கும், வயதிற்கும் ஏற்ற எடை.விண்ணப்பதாரர்கள் எழுத்துத்தேர்வு, உடற்தகுதித்தேர்வு, நேர்முகத்தேர்வு, மருத்துவ சோதனை ஆகியவற்றின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவர். எழுத்துத்தேர்வு 2011 மார்ச்சில் பெங்களூர், பாரக்பூர், மும்பை, போபால் ஆகிய ஊர்களில் நடைபெறும்.மாதிரி விண்ணப்பத்தை www.carrerairforce.nic.in இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ள லாம்.விண்ணப்பத்தில் ஒட்டும் பாஸ் போர்ட் அளவு படம் டிச.8,2010க்கு முன்ன தாக எடுக்கப்பட்டதாக இருக்க வேண்டும். ஒட்டப்பட்ட போட்டோவைப் போன்று மேலும் 2 நகல்களை வைத்து பின் செய்ய வேண்டும். விண்ணப்பத்துடன் வயது வரம்பு உறுதிப்படுத்த 10ம் வகுப்பு சான்றிதழின் அட்டெஸ்ட் நகல், கல்வித்தகுதி சான்றிதழ் மற்றும் மதிப்பெண் பட்டியல்களின் அட்டெஸ்ட் நகல்கள், ஆசிரியர் பணி அனுபவம் உறுதிப்படுத்தும் சான்றிதழ் களின் அட்டெஸ்ட் நகல், சுயமுகவரியிட்ட 24 செ.மீ நீளம், 10 செ.மீ., அகலம் உள்ள வெள்ளை நிற விண்ணப்ப உறை ஆகியவற்றை இணைத்து அனுப்ப வேண்டும்.விண்ணப்பத்தை சாதாரண தபாலில் அனுப்ப வேண்டிய முகவரி:President, Central Airman Selection Board, Post Box No.11807, New Delhi- 110 010. விண்ணப்பத்தை அனுப்ப கடைசி நாள்: 10.1.2011.
141
1/7/2011 3:47:12 PM
வேலைவாய்ப்பு
பாண்டியன் கிராம வங்கியில் 248 ஆபீசர் பணியிடங்கள்
பாண்டியன் கிராம வங்கியில் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 248 பணியிடங் களுக்கு தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் களிடமிருந்து ஆன்லைனில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.1. ஆபீஸ் அசிஸ்டென்ட்ஸ்: மொத்த இடங்கள்: 138 (பொது74, ஓபிசி37, எஸ்சி26, எஸ்டி1). வயது: 18க்கு மேல்   28க்குள். கல்வித் தகுதி: ஏதேனும் ஒரு பட்டம். கம்ப்யூட்டர் திறன் விரும்பத் தக்கது.2. ஆபீசர்நிலை (1): 84 (பொது41, ஓபிசி21, எஸ்சி11, எஸ்டி11). வயது: 18க்கு மேல் 28க்குள். கல்வித்தகுதி: ஏதேனும் ஒரு பட்டம். வேளாண்மை, தோட்டக் கலை, வனவியல், கால்நடை அறிவியல், கூட்டுறவு, விவசாய சந்தையியல், தகவல் தொடர்பியல், மேலாண்மை, சட்டம், பொருளியல் கணக்கியல் பட்டங்களுக்கு முன்னுரிமை.3. ஆபீசர் நிலை (2): 24 (பொது24). வயது: 21க்கு மேல் 32க்குள். கல்வித்தகுதி:  எலக்ட்ரா னிக்ஸ்/தகவல் தொடர்பியல்/கம்ப்யூட்டர் அறிவியல்/தகவல் தொழில்நுட்பவியல் பாடங்கள் ஏதேனும் ஒன்றில் 50 சதவீத மதிப்பெண் தேர்ச்சியுடன் டிகிரி மற்றும் கம்ப்யூட்டர் தகுதி4. ஆபீசர் நிலை (3): 2 (பொது2). வயது: 40க்குள். கல்வித்தகுதி: ஏதேனும் ஒரு பட்டம் மற்றும் பாங்கிங், மார்க்கெட்டிங், சட்டம் மற்றும் தகவல் தொழில்நுட்பவியல் பாடத்தில் டிப்ளமோ. இதுதவிர ஏதேனும் ஒரு வங்கியில் குறைந்த பட்சம் 5 ஆண்டுகள் அதிகாரியாக பணிபுரிந்த அனுபவம்.  இடஒதுக்கீடு பிரிவினருக்கு வயதுவரம்பில் சலுகை உண்டு. வயது வரம்பிற்கு 26.8.2010 தேதியை அடிப்படையாக கொள்ள வேண்டும்.இவற்றில் ஊனமுற்றோருக்கு 8 இடங்களும், முன்னாள் ராணுவத் தினருக்கு 13 இடங்களும் ஒதுக்கப் பட்டுள்ளன.விண்ணப்ப கட்டணம்: பொது மற்றும் ஓபிசியினருக்கு ஒவ்வொரு பதவிக்கும் தலா ரூ.300. எஸ்சி., எஸ்டி., முன்னாள் ராணுவத்தினர் மற்றும் ஊனமுற்றோருக்கு தலா ரூ.50 மட்டும். இதை‘‘Pandyan Grama Bank Recruitment Project-2010’’என்ற பெயருக்கு மதுரையில் செலுத்தத்தக் கவகை யில் டிடி எடுக்க வேண்டும்.எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக் கப்படுவர். தேர்வு மதுரை, நெல்லை, விருதுநகர், திருச்சி ஆகிய மையங் களில் நடைபெறும். விண்ணப்பதாரர்கள் www.pandyangramabank.in இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். மாதிரி விண்ணப்பம் மற்றும் கூடுதல் விவரங்களுக்கு மேற்குறிப் பிட்ட இணையதளத்தை பார்க்க வும்.ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 25.1.2011. பிரின்ட் அவுட் அனுப்ப கடைசி நாள்:1.2.2011. தேர்வு நடைபெறும் நாட்கள்: ஆபீஸ் அசிஸ்டென்ட்ஸ்: 10.4.2011. ஆபீசர்ஸ்:17.4.2011.
142
1/7/2011 3:54:49 PM
சினிமா(ரீல்மா)
டைரக்ஷன் எனக்கு டைம்பாஸ் : பிரபு தேவா
'டைரக்ஷன், நடிப்பு இரண்டுமே எனக்கு டைம்பாஸ்தான். டான்ஸ், எனது ரத்தத்தில் ஊறியது' என்கிறார் பிரபு தேவா. அவர் கூறியது: இந்த ஆண்டில் புது பட வாய்ப்புகளால் எனது கால்ஷீட் டைரி பிசியாக இருக்கிறது. தங்கர்பச்சானின் 'களவாடிய பொழுதுகள்'Õ, சந்தோஷ் சிவனின் 'உருமி' படங்களில் நடித்து முடித்தேன். 'எங்கேயும் காதல்' படத்தை இயக்கி முடித்தாகிவிட்டது. அடுத்து, விஷால், சமீரா ரெட்டி நடிக்கும் படத்தை இயக்குகிறேன். இதையடுத்து இந்தியில் அக்ஷய் குமார் நடிக்கும் படமும் சல்மான் கானுடன் ஒரு படமும் உள்ளது. டைரக்ஷனில் கவனம் செலுத்தினாலும் நடிப்பு என வந்துவிட்டால் டைரக்ஷன் பற்றி யோசிக்க மாட்டேன். ஒரு நேரத்தில் ஒரு பணியில் கவனம் செலுத்துவதே எனக்கு பிடிக்கும். 'களவாடிய பொழுதுகள்' படத்தில் நடித்தபோது, எந்த படத்துக்கும் நடனம் அமைக்க செல்லவில்லை. டைரக்ஷன் வேலையிலும் ஈடுபடவில்லை. அதே நேரம், டைரக்ஷன் மற்றும் நடிப்பை விட எனக்கு பிடித்தது டான்ஸ்தான். அது என் ரத¢தத்தில் ஊறியது. அதை யாராலும் பிரிக்க முடியாது. டைரக்ஷன், நடிப்பு இரண்டும் எனக்கு டைம்பாஸ்தான். சிங்கப்பூரில் நடத்தி வரும் டான்ஸ் பள்ளியில் இந்த ஆண்டு அதிக கவனம் செலுத்த விரும்புகிறேன். இவ்வாறு பிரபு தேவா கூறினார்.
143
1/7/2011 3:59:46 PM
சினிமா(ரீல்மா)
கவர்ச்சிக்கு மாறியது ஏன்? விமலா ராமன்
தமிழில் ஹோம்லி வேடங்களில் நடித்து வந்தவர் விமலா ராமன். திடீரென தெலுங்கில் கவர்ச்சியாக நடிக்க ஆரம்பித்தார். பிகினியிலும் நடித்து வருகிறார். இது பற்றி அவர் கூறியது: ஹோம்லியாக மட்டுமே நடிப்பேன் என நான் சொல்லவில்லை. தமிழில் தொடர்ந்து ஹோம்லி வேடங்களே கிடைத்தன. தெலுங்கில் வாய்ப்பு வந்தபோது, ஒரு மாற்றத்துக்கு கவர்ச்சியாக நடிக்க விரும்பினேன். அதே நேரம், கதைக்கும் அது தேவையாக இருந்தது. அதனால் அப்படி நடித்தேன். தமிழிலும் கதைக்கு தேவையான பட்சத்தில் கவர்ச்சியாக நடிப்பேன். தெலுங்கில் இப்போது சூர்யதேவரா பிரபாகர் இயக்கும் படத்தில் நடிக்கிறேன். இதில் கதையே என¢னைச் சுற்றித்தான் நடக்கும். த்ரில் படமிது. 'டேம் 999' என்ற ஹாலிவுட் படத்திலும் நடித்து வருகிறேன். என¢னை அறிமுகப்படுத¢தியது தமிழ் சினிமாதான். அதனால் அதை எப்போதும் மறக்க மாட்டேன். இவ்வாறு விமலா ராமன் கூறினார்.
144
1/7/2011 4:02:16 PM
சினிமா(ரீல்மா)
நடிகை வருத்தம் தள்ளிப்போன படம்
கோடம்பாக்கம் கோடங்கிநல்ல காலம் பொறக்குது...நல்ல காலம் பொறக்குது...சுனேன நடிகை ரொம்பவே வருத்தமா இருக்கிறாராம்... இருக்கிறாராம்... ஷூட்டிங் முடிஞ்ச படங்கள் ரிலீசாகாம நிக்குது. ஷூட்டிங் தொடங்கின படங்கள், பாதியில நிக்குது. புது வாய்ப்புகளும் இல்லை. இதனால வருத்தமா இருக்கிறாராம். தமிழ்ல வாய்ப்பிழந்த நடிகைகளுக்கு ஒரே ஆறுதல் கன்னட சினிமாதான். அங்கே போகலாமான்னு தீவிரமா யோசிக்கிறாராம்... யோசிக்கிறாராம்...டாடி படத்துல நடிக்கிறாரு விரல் நடிகரு. அடுத்த படத்துக்கு ஹீரோயின்கள் கிடைக்கல. திரைக்கதையும் ரெடி ஆகலையாம்... ஆகலையாம்... இதனால அந்த படத்தை தள்ளிப்போட்டிருக்கிறாராம்... தள்ளிப்போட்டிருக்கிறாராம்...கேப்டன் நடிகர்கிட்ட கதை சொல்ல சில இயக்குனருங்க முயற்சி பண்ணினாங்களாம்... பண்ணினாங்களாம்... ஆனா, கதை கேட்க நடிகருக்கு விருப்பம் இல்லையாம்... இல்லையாம்... 'எலெக்ஷன் முடியட்டும். நடிப்பையெல்லாம் பிறகு பார்த்துக்கலாம்'னு சொல்றாராம்... சொல்றாராம்...
145
1/7/2011 4:07:18 PM
சினிமா(ரீல்மா)
கிளிப்பிங்ஸ்
இந்த ஆண்டு ஹாலிவுட்டில் அதிக கவனம் செலுத்த முடிவு செய்திருக்கிறார் ஏ.ஆர். ரகுமான்.'மல்லுசிங்' மலையாள படத்தில் சீக்கியராக நடிக்கிறார் பிருத்விராஜ்.'பசங்க' பாண்டிராஜ் இயக்கும் படத்தில் கிராமத்து பெண்ணாக நடிக்கிறார் அமலா பால்.சிம்பு, அனுஷ்கா நடித்துள்ள 'வானம்' அடுத்த மாதம் ரிலீசாகிறது.பின்னி மில்லில் தனித்தனியே ஷூட்டிங்கில் இருந்தபோது, அஜீத்&விஜய் சந்தித்து பேசிக்கொண்டனர். கடந்த 4ம் தேதி தனது பிறந்த நாளை கேரளாவில் 'வந்தான் வென்றான்' படக்குழுவுடன் கொண்டாடினார் ஜீவா. 'சமீபத்தில் பிரேக்கே இல்லாமல் 12 மணி நேரம் நடித்தேன்' என்கிறார் ஜெனிலியா. ராதாமோகன் இயக்கத்தில் நாகார்ஜுனா, பிரகாஷ் ராஜ் நடித்துள்ள 'பயணம்', பிப்ரவரி 4ல் ரிலீசாகிறது.
146
1/7/2011 4:08:23 PM
இந்தியா
சம்ஜூதா ரயில் குண்டுவெடிப்புக்கு இந்து தீவிரவாதிகள்தான் காரணம்
புதுடெல்லி: அறுபத்தெட்டு பேரை பலிவாங்கிய சம்ஜூதா ரயில் குண்டுவெடிப்புக்கு இந்து தீவிரவாதிகள் தான் காரணம் என ஆர்எஸ்எஸ் தலைவர் சுவாமி அசிமானந்தா சிபிஐயிடம் வாக்குமூலம் அளித்துள்ளார். டெல்லியிலிருந்து வாகா எல்லை வழியாக வாரத்துக்கு இரண்டு முறை லாகூர் செல்லும் சம்ஜூதா எக்ஸ்பிரஸ் ரயிலில் கடந்த 2007ம் ஆண்டு இரண்டு சக்தி வாய்ந்த குண்டுகள் வெடித்தன. இதில் 68 பேர் பலியானார்கள். இவற்றில் பெரும்பாலானோர் பாகிஸ்தானியர்கள். இந்த குண்டுவெடிப்பு தொடர்பாக விசாரணை நடத்தி வந்த சிபிஐ அண்மையில் ஆர்எஸ்எஸ் தலைவர் அசிமானந்தாவை கைது செய்தது. இந்த வழக்கில் அவர் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார். சாட்சிகள் சட்டம் பிரிவு 164ன் கீழ் மாஜிஸ்திரேட் முன்பு அசிமானந்தா அளித்த வாக்குமூலம் தற்போது தெகல்கா இணையதளத்தில் வெளியாகியுள்ளது. இந்த சட்டப்பிரிவின்படி பெறப்படும் வாக்குமூலம் நீதிமன்றத்தில் ஏற்றுக் கொள்ளப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. தனது வாக்குமூலத்தில் சம்ஜூதா குண்டுவெடிப்புக்கு இந்து தீவிரவாதிகள் தான் காரணம் என அசிமானந்தா ஒப்புக் கொண்டுள்ளார். பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகளின் ஒவ்வொரு குண்டுவெடிப்புக்கும் பதிலடி கொடுக்க வேண்டும் என தனது ஆதரவாளர்களை துண்டியதாகவும் ஒப்புக் கொண்டுள்ளார். தீவிரவாத நடவடிக்கைகளில் ஆர்எஸ்எஸ் தலைவர் இந்த்ரேஷ்க்கு தொடர்பு இருப்பதாகவும் தனது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.
147
1/7/2011 4:16:19 PM
குற்றம்
நகைக்கடையில் துணிகர கொள்ளை போலீசை கண்டதும் கும்பல் ஓட்டம்
போச்சம்பள்ளி: நகைக்கடை சுவரில் துளையிட்டு கொள்ளையடித்து கொண்டிருந்த போது, போலீசார் வந்ததால் கும்பல் தப்பியோடியது. இதனால் பல லட்சம் நகைகள் தப்பின. கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியில் உள்ள வணிகவளாகத்தில் தேவன் என்பவருக்கு சொந்தமான எஸ்கேபி தங்க நகைக்கடை உள்ளது. நேற்று இரவு 10 மணிக்கு ஊழியர்கள் வழக்கம்போல கடையை பூட்டி விட்டு சென்றனர். கடை உரிமையாளர் தேவன், சென்னைக்கு அவசர வேலையாக சென்று விட்டார்.நேற்றிரவு போச்சம்பள்ளி பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். இன்று அதிகாலை 1.30 மணியளவில், வணிகவளாகத்தின் பின்சுவர் பகுதியில் சுவரை இடிக்கும் சத்தம் கேட்டது. இதனால் சந்தேகம் அடைந்து, சத்தம் வந்த இடம் அருகில் சென்று பார்த்தனர். சுவரில் துளையிட்டு மர்ம ஆசாமிகள் நகைக்கடையில் கொள்ளையடித்து கொண்டிருப்பதை பார்த்தனர். போலீசாரை கண்டதும் மர்ம ஆசாமிகள், கையில் சிக்கிய நகைகளுடன் அங்கிருந்து தப்பி ஓடினர்.இதையடுத்து கிருஷ்ணகிரி மாவட்ட எஸ்.பி.பாபுவிற்கு போச்சம்பள்ளி போலீசார் தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு எஸ்.பி பாபு, பர்கூர் டிஎஸ்பி வைத்தியலிங்கம் மற்றும் கைரேகை நிபுணர்கள் விரைந்து வந்தனர். கிருஷ்ணகிரியில் இருந்து மோப்பநாய் வரவழைக்கப்பட்டது. அந்த நாய் அங்குமிங்கும் ஓடியது. யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. போச்சம்பள்ளி இன்ஸ்பெக்டர் அர்ஜூனன் கூறுகையில்,  திருட்டுப்போன நகைகளின் மதிப்பு தெரியவில்லை. கடையின் உரிமையாளர் வெளியூர் சென்றுள்ளார். அவர் வந்தபிறகு தான் கூற முடியும் என்றார். இச்சம்பவம் அப்பகுதியில் இன்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
148
1/7/2011 5:06:28 PM
ஸ்டேட் எக்ஸ்பிரஸ்
கட்சி மாறிய காங்கிரஸ் பெண் எம்எல்ஏ பதவி பறிப்பு
கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலம் மால்டா மாவட்டத்தில் உள்ள அரைடங்கா தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ சாவித்ரி மித்ரா, தொடர்ந்து 5 முறை எம்எல்ஏ பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட மூத்த தலைவர் ஆவார். மேற்கு வங்க மாநில காங்கிரஸ் கமிட்டியின் துணை தலைவராகவும் பதவி வகித்து வந்தார். இவர் கடந்த மாதம் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். இதை தொடர்ந்து அவரது பதவியை பறிக்க வேண்டும் என மாநில சபாநாயகர் எச்.ஏ.ஹலிமுக்கு மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் மனாஸ் புனியா கடிதம் அனுப்பினார். சபாநாயகர் அனுப்பிய நோட்டீசுக்கு சாவித்ரி மித்ரா பதில் அளிக்காததை தொடர்ந்து நேற்று அவரது பதவியை பறிப்பதாக சபாநாயகர் அறிவித்தார். இதுவரை 3 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் திரிணாமுல் காங்கிரசுக்கு தாவிய காரணத்துக்காக பதவி இழந்துள்ளனர். காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் திரிணாமுல் காங்கிரஸ் இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
149
1/7/2011 5:09:05 PM
தமிழகம்
ஆளுநர் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டசபையில் அதிமுக, மதிமுக, கடும் அமளி
சென்னை: ஆளுநர் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக, மதிமுக, கம்யூனிஸ்ட் கட்சியினர் சட்டசபையில் இன்று கூச்சலிட்டு கடும் அமளியில் இறங்கினர். இதனால், அவர்களை அவைக் காவலர்கள் குண்டுகட்டாக தூக்கிச் சென்று வெளியேற்றினர். தமிழக சட்டசபை இன்று காலை 9.30 மணிக்கு கூடியது. தமிழ்த்தாய் வாழ்த்து முடிந்ததும் ஆளுநர் சுர்ஜித்சிங் பர்னாலா 9.34க்கு தனது உரையை வாசிக்கத் தொடங்கினார். அப்போது அதிமுக உறுப்பினர்கள் எழுந்து நின்றனர். எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வம் ஏதோ பேசினார். அதிமுக உறுப்பினர்கள், ‘மைக்கை ஆன் செய்யுங்கள்’ என்று கூறி கூச்சல் எழுப்பினர். ஆளுநர் தனது  உரையை தொடர்ந்ததால் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும்விதமாக, அதிமுகவினர் கூச்சல் எழுப்பினர். 9.37 வரை கூச்சல் தொடர்ந்தது. அதிமுக உறுப்பினர்களுடன் மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், மதிமுக உறுப்பினர்களும் சேர்ந்து கொண்டு கூச்சல் எழுப்பியதால் அவையில் பரபரப்பு ஏற்பட்டது.  அப்போது சபாநாயகர் ஆவுடையப்பன் எழுந்து, ‘ஆளுநர் உரை நிகழ்த்தும்போது அதற்கு இடையூறு ஏற்படுத்தும் வகையிலும், பேரவையின் நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையிலும் அதிமுக, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், மதிமுக ஆகிய கட்சிகளின் உறுப்பினர்கள் செயல்படுகின்றனர். எனவே பேரவை விதி 286ல் வகை செய்யப்பட்டுள்ளபடி எனது அதிகாரத்தை பயன்படுத்தி, அவர்களை அவையில் இருந்து வெளியேற்றும்படி அவைக் காவலர்களுக்கு உத்தரவிடுகிறேன்’ என்றார்.இதையடுத்து  கூச்சலில் ஈடுபட்டவர்களை வெளியேற்ற அவைக் காவலர்கள் உள்ளே வந்தனர். அப்போது ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் அதிமுக உறுப்பினர்கள் அவையின் நடுப்பகுதிக்கு வந்து காவலர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அதிமுக உறுப்பினர்கள் அவையின் நடுவில் அமர்ந்தனர். சில உறுப்பினர்கள் ஆளுநர் உரையை கிழித்து வீசினர். கடும் அமளி நிலவியதால், ஒவ்வொரு உறுப்பினரையும் குண்டுக்கட்டாக தூக்கி அவைக் காவலர்கள் வெளியேற்றத் தொடங்கினர்.தங்களை தூக்க வந்த காவலர்களுடன் பொள்ளாச்சி ஜெயராமன், உடுமலைப்பேட்டை சண்முகம் ஆகியோர் மோதலில் ஈடுபட்டனர். இதனால், ஒவ்வொரு உறுப்பினரையும் நான்கு, ஐந்து காவலர்கள் ஒன்றாகச் சேர்ந்து தூக்கி வெளியேற்றினர். இன்னொருபுறம் மார்க்சிஸ்ட் உறுப்பினர்கள் பாலபாரதி, குடியாத்தம் லதா ஆகியோர் வெளியேற மறுத்ததால் அவர்களை பெண் காவலர்கள் குண்டுகட்டாக தூக்கி அவைக்கு வெளியே கொண்டுவந்து இறக்கி விட்டனர். இந்த அமளி அடங்க 9.46க்கு மேல் ஆனது. இதனால் சட்டசபையில் பெரும் பரபரப்பு நிலவியது. அவர்களை வெளியேற்றிய பின் ஆளுநர் தனது உரையை தொடர்ந்தார்.
150
1/7/2011 5:12:25 PM
ஸ்டேட் எக்ஸ்பிரஸ்
ஸ்ரீகிருஷ்ணா கமிட்டியினர் மீது வழக்கு பதிவு செய்ய உத்தரவு
ஐதராபாத்:தெலங்கானா தனி மாநிலம் அமைப்பது குறித்து கடந்த பிப்ரவரி மாதம் நீதிபதி ஸ்ரீகிருஷ்ணா தலைமையில் 5 பேர் கொண்ட கமிட்டி ஒன்று அமைக்கப்பட்டது. இதன் அறிக்கை கடந்த  டிசம்பர் 30ம் தேதி உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்திடம் ஒப்படைக்கப்பட்டு நேற்று வெளியிடப்பட்டது. இந்நிலையில் இந்த அறிக்கை குறித்து உள்ளுர் தொலைகாட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்த கமிட்டி உறுப்பினர்கள் அபுசலே ஷரீப் மற்றும் ரவீந்தர் கவுர் ஆகியோர், ‘தெலங்கானா தனி மாநில கோரிக்கையில் சிறுபான்மையினர் அதிக ஆர்வம் காட்டவில்லை. அவர்கள் தங்கள் சொந்த வளர்ச்சியில்தான் அக்கறை காட்டி வருகிறார்கள்’ என்றனர். இது முஸ்லிம்களின் உணர்வை பாதிக்கும் வகையில் இருப்பதாக தெலங்கானா மக்கள் அமைப்பின் பொது செயலாளர் ரஹ்மான், தலைமை பெருநகர மாஜிஸ்திரேட் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த மனுவை நீதிமன்றம் விசாரித்து, மத உணர்வை புண்படுத்தியதாக கூறப்படும் கிருஷ்ணா கமிட்டி உறுப்பினர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தும்படி போலீசாருக்கு உத்தரவிட்டது.
151
1/7/2011 5:12:39 PM
தமிழகம்
மணல் லாரிகள் ஸ்டிரைக் நள்ளிரவில் தொடங்கியது
நாமக்கல்: ஆற்றில் மணல் திட்டு உள்ள இடங்களில் மனித சக்தி மூலமே மணல் அள்ள வேண்டும். பொக்லைன் இயந்திரங்கள் மூலம் மணல் அள்ளக்கூடாது என அரசு உத்தரவிட்டுள்ளது. அதே நேரத்தில் மனிதர்கள் மூலம் மணல் அள்ளினால் லாரிகளில் லோடு செய்ய நீண்ட நேரம் ஆகும். விவசாய தொழிலுக்கு ஆட்கள் பற்றாக்குறை உள்ள நிலையில் மணல் அள்ள தொழிலாளர்கள் யாரும் கிடைப்பதில்லை. மேலும் ஆற்றில் தண்ணீர் செல்லும் நிலையில், ஆற்றுக்குள் மனிதர்கள் இறங்கி மணல் அள்ள முடியாது என்று மணல் லாரி உரிமையாளர்கள் குமுறி வருகின்றனர். எனவே பொக்லைன் இயந்திரங்கள் மூலம் மணல் அள்ள அனுமதி அளிக்கக்கோரி, மணல் லாரி உரிமையாளர்கள் நேற்று நள்ளிரவு முதல் காலவரையற்ற ஸ்டிரைக்கில் ஈடுபட்டுள்ளனர். மாநிலம் முழுவதும் 75 ஆயிரம் மணல் லாரிகள் இயக்கப்படவில்லை. மணல் லாரிகள் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனால் மணல் தட்டுபாடு பரவலாக ஏற்பட துவங்கியுள்ளது. மணல் விலையும் கிடுகிடுவென உயரத் தொடங்கியுள்ளது.இது குறித்து மாநில மணல் லாரி உரிமையாளர்கள் சம்மேளன மாநில தலைவர் செல்ல.ராசாமணி கூறியதாவது: தமிழகம் முழுவதும் நேற்று நள்ளிரவு முதல் மணல் லாரிகள் மணல் அள்ள குவாரிக்கு செல்லவில்லை. இதனால் பொதுப்பணித்துறை மூலம் நடத்தப்படும் மணல் குவாரிகள் மூடப்பட்டுவிட்டன. மணல் லாரிகள் ஸ்டிரைக்கில் ஈடுபட்டுள்ளதால், மணல் விலை உயர்ந்துள்ளது. கடந்த மாதம் ஒரு யூனிட் மணல் ரூ. 1500க்கு விற்பனை செய்யப்பட்டது. தற்போது ஒரு யூனிட் ரூ. 4500க்கு விற்பனையாகிறது. அதுவும் தேவைக்கேற்ப கிடைப்பதில்லை. மாநிலம் முழுவதும் மணல் தட்டுபாடு ஏற்பட்டுள்ளதால், அரசு கட்டிட பணிகள் மற்றும் தனியார் கட்டிட பணிகள் பாதிக்கப்படும். எங்களின் கோரிக்கையை வலியுறுத்தி வரும் 9&ம் தேதி கோவையில் மாநிலம் முழுவதும் உள்ள மணல் லாரி உரிமையாளர்கள் பங்கேற்கும் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும்.இவ்வாறு செல்ல.ராசாமணி தெரிவித்தார்.
152
1/7/2011 5:13:14 PM
ஸ்டேட் எக்ஸ்பிரஸ்
தெருமுனை கூட்டங்களுக்கு சுப்ரீம் கோர்ட் திடீர் தடை
புதுடெல்லி:அரசியல் கட்சிகள் நடத்தும் தெருமுனை பொதுக்கூட்டங்களால் போக்குவரத்து, மாணவர்கள் படிப்பு, பொதுமக்களின் அமைதி என பல விஷயங்கள் பாதிக்கப்படுவதாக கேரள ஐகோர்ட்டில் பொது நல வழக்கு தொடரப்பட்டது. இதை விசாரித்த ஐகோர்ட் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தெருமுனை பொதுக்கூட்டங்களுக்கு தடை விதித்தது. இதை எதிர்த்து கேரள அரசு சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்தது. இதை விசாரித்த சுப்ரீம் கோர்ட், தெருமுனை பொதுக் கூட்டங்களுக்கு தடை விதித்து கேரள ஐகோர்ட் பிறப்பித்த உத்தரவு சரியானதே என தீர்ப்பளித்துள்ளது. மேலும் இந்த உத்தரவினால் அரசுக்கு நல்ல பெயர் ஏற்படும் எனவும் இதனை கேரள அரசு எதிர்ப்பதன் நோக்கம் புரியவில்லை எனவும் கருத்து தெரிவித்தது.
153
1/7/2011 5:16:11 PM
தமிழகம்
இறுதி வாக்காளர் பட்டியல் தாலுகா, ஆர்டிஓ ஆபீஸ்களில் ஜனவரி 10ல் பார்க்கலாம்
நெல்லை: தமிழகம் முழுவதும¢ ஜனவரி 1&ம் தேதியை தகுதி நாளாகக் கொண்டு 18 வயது நிரம்பிய வாக்காளர்கள் சேர்க்கப்பட்டனர். இதற்காக வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த ஆண்டு அக்டோபர் 25ம் தேதி வெளியிடப்பட்டது. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் செய்ய வாக்காளர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டன. வாக்காளர் பெயர் சேர்க்க நவம்பர் 7ம் தேதி கடைசி நாள் என அறிவிக்கப்பட்டது. தீபாவளி பண்டிகை விடுமுறைக்காக பலர் சொந்த ஊருக்கு சென்றதால் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க நவம்பர் 13&ம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டது. கடைசி நாளன்று வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க¢க பலர் ஆர்வத்துடன் மனு அளித்தனர். வாக்காளர்களிடம் இருந்து பெறப்பட்ட சேர்த¢தல், நீக்கல், திருத்தம் குறித்த அனைத்து விண்ணப்பங்களும் 100 சதவீதம் வீடு, வீடாக விசாரணை நடத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து  வாக்காளர்களின் முழு விவரங்களையும் கம்ப்யூட்டரில் பதிவு செய்யும் பணி நடந்தது. தற்போது இறுதி வாக்காளர் பட்டியலை இறுதி செய்யும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். தமிழகம¢ முழுவதும் 234 சட்டசபை தொகுதிகளிலும் வருகிற 10ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியாகிறது. கலெக்டர் அலுவலகம், ஆர்டிஓ அலுவலகம், தாலுகா அலுவலகங்களில் பொதுமக்கள் பார்வைக்காக வாக்காளர் பட்டியல் வைக்கப்பட்டிருக்கும். வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயர் இடம் பெற்றுள்ளதா என பொதுமக்கள் சரி பார்த்துக் கொள்ளலாம்.
154
1/7/2011 5:18:32 PM
தமிழகம்
பொங்கல் விடுமுறை மறுப்பு : முதல்வர் தலையிட கோரிக்கை
கோவை: கேரள மாநில தமிழ் பாதுகாப்பு இயக்க பொதுச்செயலாளர் பேச்சிமுத்து வெளியிட்டுள்ள அறிக்கை: கேரளாவில் பாலக்காடு, வயநாடு, இடுக்கி, பத்தினம் திட்டா, திருவனந்தபுரம் உள்ளிட்ட பகுதிகளில் லட்சக்கணக்கான தமிழர்கள் வாழ்கிறார்கள். 1956ம் ஆண்டு மாநில பிரிவினைக்கு முன்பே கேரள மாநிலத்தில் நிரந்தர குடிமக்களாக வாழ்ந்து வருகிறார்கள். தமிழர் வசிக்கும் பகுதிகளில் பொங்கல் நாளில் அரசு விடுமுறை விடுமாறு கேரள முதல்வர் அச்சுதானந்தனிடம் பல முறை மனு தரப்பட்டது. ஆனால் விடுமுறை அளிக்க கேரள அரசு தயக்கம் காட்டுகிறது. தமிழக முதல்வர் கருணாநிதி, கேரள முதல்வருடன் பேசி பொங்கல் விடுமுறை பெற்று தர ஏற்பாடு செய்யவேண்டும்.
155
1/7/2011 5:20:42 PM
தமிழகம்
நகர்ப்புற குடிசை ஏழைகள் அனைவருக்கும் பாதுகாப்பான வீடுகள் வழங்க சிறப்பு திட்டம்
சென்னை: ஆளுநர் உரையில் அறிவிக்கப்பட்டுள்ள புதிய திட்டங்கள் மற்றும் சிறப்பு அம்சங்கள் பற்றிய விவரம் வருமாறு: தலைமை செயலகத்தின் 2ம் கட்டப்பணிகளும், ரூ.60 கோடியே 86 லட்சம் செலவில் புதிய கலைவாணர் அரங்கம் கட்டும் பணியும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தாக்கப்படுவது தமிழக அரசுக்கு மிகுந்த கவலை அளிக்கிறது. தமிழக மீனவர்களை பாதுகாக்கவும், இலங்கை தமிழர்களின் இன்னல்களை களைந்திடவும் மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென்று இந்த அரசு வலியுறுத்துகிறது.மழை வெள்ளம் காரணமாக போதுமான வடிகால் வசதியின்றி பயிர்ச் சேதமும், பொருள் சேதமும் அடிக்கடி ஏற்படும் நாகை, திருவாரூர், தஞ்சை, கடலூர் மாவட்டங்களில் முறையான வடிகால் வசதிகள் ஏற்படுத்தி வெள்ள பாதிப்பை நிரந்தரமாக தடுத்திட சிறப்பு வெள்ள மேலாண்மைத் திட்டம் ஒன்றைச் செயல்படுத்தி நடவடிக்கை எடுக்கப்படும்.* வடகிழக்கு பருவ மழை அதிக அளவில் பெய்யும்போது, சரபங்கா நதி, திருமணிமுத்தாறு, அய்யாறு ஆகிய உபநதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படுகிறது. இந்த 3 ஆறுகளையும் ஓர் இணைப்புக் கால்வாய் மூலம் இணைத்து வறட்சி பகுதிகளில் விவசாயத்திற்கு பயன்படும் வகையில் இந்த ஆறுகள் பாய்ந்தோடும் சேலம், நாமக்கல், திருச்சி மாவட்டங்களிலுள்ள கண்மாய்கள், குளங்களுக்கு வெள்ள நீரைத் திருப்பி விட்டு இப்பகுதிகளில் நிலத்தடி நீரை செறிவூட்டும் வகையில் ஒரு சிறப்பு திட்டத்தை தீட்டி நிறைவேற்ற உரிய ஆய்வுகள் மேற்கொள்ளப்படும்.* பனை, தென்னை விவசாயிகளின் நலன்கருதி பனை நுங்குச் சாறும், தென்னை இளநீரும் பக்குவப்படுத்தப்பட்டு தயாரிக்கப்படுகின்ற சுவைநீர், காதி கிராமத் தொழிற்சங்கங்களின் வாயிலாக விற்பனை செய்யப்படும். தென்னை நலவாரியம் மூலம் தேங்காயை கொள்முதல் செய்து கொப்பரை தயாரிக்கவும், இந்த வாரியம் மூலம் தயாரிக்கப்படுகின்ற தேங்காய் எண்ணெயை சத்துணவு திட்டத்தில் தற்போது வழங்கப்படும் பாமாயிலுக்கு பதில் பயன்படுத்தவும், கூட்டுறவு அங்காடிகள் மூலம் விற்பனை செய்யவும் தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ளும்.தமிழ்நாட்டில் வனவளத்தைப் பாதுகாக்க ரூ.686 கோடியில் ஜப்பான் பன்னாட்டு நிதி நிறுவன உதவியுடன் ‘தமிழ்நாடு உயிர்பன்மை பாதுகாப்பு மற்றும் பசுமைத் திட்டம்’ செயல்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.மீனவர்களின் நீண்ட நாள் கோரிக்கையான நாட்டுப் படகுகளுக்கு மானிய விலையில் மண்ணெண்ணெய் வழங்கும் திட்டம் அறிவிக்கப்பட்டு, ஒரு படகுக்கு 200 லிட்டர் வீதம் மாதம் 3200 கிலோ லிட்டர், மானிய விலையில் வழங்க உத்தரவிடப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு அரசு ஆண்டுக்கு ரூ.80 கோடி மானியம் வழங்குகிறது.கிழக்குக் கடற்கரை மற்றும் தென்னகச் சுற்றுலா மையங்களை அழகுபடுத்தவும், அடிப்படை வசதிகளை மேம்படுத்தவும் ஆசிய வங்கியின் நிதியுதவியுடன் ரூ.450 கோடி செலவில் ஒரு சிறப்புச் சுற்றுலா மேம்பாட்டுத் திட்டம் செயல்படுத்தப்படும்.* ஏழை எளிய மாணவர்களும் உயர் கல்வியை தடையின்றி பெறும் வகையில் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் கலை மற்றும் அறிவியலில் முதுகலை பட்டம் பயிலும் மாணவர்களுக்கு கல்வி கட்டணம் ரத்து செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து நடப்பு ஆண்டில் ஓர் உன்னத முயற்சியாக பட்டதாரியே இல்லாத குடும்பங்களில் இருந்து தொழிற்கல்வி பயில ஒற்றை சாளர முறையில் ஒதுக்கீடு பெரும் மாணவ, மாணவியருக்கு அரசால் அனுமதிக்கப்பட்ட முழு கல்வி கட்டணத்தையும் அரசே ஏற்கும் என உத்தரவிடப்பட்டு இந்த ஆண்டு 80 ஆயிரத்து 450 தொழிற்கல்வி படிக்கும் முதல் தலைமுறை மாணவர்கள் பயன் பெற்றுள்ளனர்.பச்சிளம் குழந்தைகளின் இறப்பு விகிதத்தை மேலும் குறைத்து, பிறந்த குழந்தைகள் அனைவரையும் காத்திட உதவும் வகையில், அங்கீகரிக்கப்பட்ட தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளின் உதவியோடு ஒரு வயது வரையுள்ள பச்சிளம் குழந்தைகளுக்கான தீவிர அவசர சிகிச்சை திட்டம் என்னும் புதிய திட்டத்தினை இந்த ஆண்டில் ரூ.10 கோடி செலவில் அறிமுகம் செய்திடவும், அடுத்த ஆண்டில் இத்திட்டத்தினை ரூ.15 கோடி நிதி ஓதுக்கீட்டில் செயல்படுத்திடவும் இந்த அரசு முடிவெடுத்துள்ளது.சித்த மருத்துவத்தின் தாயகம் என கருதப்படும் தமிழகத்தில்தான் இந்தியாவிலேயே சித்த, ஆயுர்வேத, யுனானி, யோகா இயற்கை மருத்துவம் மற்றும் ஓமியோபதி ஆகிய 5 பிரிவுகளுக்கான மருத்துவத்திற்கான கல்லூரிகளை அரசே நடத்தி வருகின்றது. பாரம்பரியம் மிக்க இந்திய மருத்துவத்தையும் மற்றும் ஓமியோபதி மருத்துவத்தையும் வளர்த்தெடுக்க தற்போதுள்ள ஆறு அரசு இந்திய மருத்துவ மற்றும் ஓமியோபதி கல்லூரிகளையும், இது போன்ற 26 தனியார் கல்லூரிகளையும் உள்ளடக்கி தனியாக இந்திய மருத்துவ மற்றும் ஓமியோபதி பல்கலைக்கழகம் ஒன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் இந்த ஆண்டு தொடங்கப்படும்.தமிழ்நாட்டிலிருந்து சென்று வெளிநாட்டில் பணிபுரியும் தமிழர்களின் நலனுக்காக வெளிநாடு வாழ் தமிழர்கள் நலவாரியம் ஒன்றை அமைக்க இந்த அரசு உத்தரவிட்டுள்ளது. மாற்று திறனாளிகளுக்கு அரசு வழங்கும் சலுகைகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்திட வழிகாட்டும் திட்டம் என்ற புதிய திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இந்தியாவிலேயே முதன் முறையாக மாற்று திறனாளிகள் நலம் காக்க தனி நல வாரியம் அமைக்கப்பட்டு, தனித்துறையும் ஏற்படுத்தப்பட்டு முதல்வர் கருணாநிதி அவர்களே முன்வந்து அந்த துறையை தன் தலைமையிலே ஏற்று செயல்படுவது சிறப்புக்குரியதாகும். தமிழகத்தில் பல்லாண்டு காலத்திற்கு முன்பு வழங்கப்பட்ட பஞ்சமி நிலங்களை பஞ்சமர்கள் அல்லாதவர்கள் பட்டா மாறுதல் செய்து வைத்திருப்பதாகவும் காலப்போக்கில் அவற்றை பல்வேறு தரப்பினர் ஆக்கிரமிப்பு செய்து அனுபவித்து வருவதாகவும் ஆக்கிரமிப்பு செய்த நிலங்கள் பலவற்றில் தொழிற்சாலைகள் நிறுவப்பட்டுள்ளதாகவும், ஒப்படை நிபந்தனைகள் மீறப்பட்டு, கிரயம் செய்யப்பட்டு பலருக்கு கைமாற்றப்பட்டுள்ளதாகவும்; அடிக்கடி அரசுக்கு முறையீடுகள் வருவதோடு, ஏடுகளிலும் செய்திகள் வருகின்றன.பஞ்சமி நிலம் தொடர்பான பல்வேறு பிரச்னைகளையும், சட்டவிதிமுறைகளுக்கு உட்பட்டு, பரிசீலனை செய்து, அவர்களிடமே திரும்ப ஓப்படைக்கப்படுவதற்கான சாத்தியக் கூறுகள் பற்றி ஆய்வு செய்து, அரசுக்கு பரிந்துரைகள் வழங்குவதற்கு, உயர்நீதிமன்றத்திலிருந்து ஓய்வு பெற்ற நீதியரசர் ஒருவர் தலைமையில் குழு அமைப்பதென அரசு முடிவு செய்துள்ளது. கிராமப்புற சாலைகளை மேம்படுத்த ஒரு சிறப்பு ஒதுக்கீடாக நபார்டு வங்கியின் உதவியை எதிர்நோக்கி ரூ.320 கோடி உடனடியாக அனுமதிக்க அரசு முடிவு செய்துள்ளது.வறுமை ஒழிப்பு திட்டத்திலேயே ஒரு புது முயற்சியாக உலக வங்கி நிதி உதவியுடன் தமிழ்நாட்டில் ‘வாழ்ந்து காட்டுவோம்’ என்ற திட்டம் 16 மாவட்டங்களில் உள்ள 2,509 ஊராட்சிகளில் ரூ.717 கோடி செலவில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டம் மேலும் 10 மாவட்டங்களுக்கு ரூ.950 கோடி செலவில் இந்த ஆண்டு விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இதனால் 1,161 ஊராட்சிகளில் வாழும் 9.6 லட்சம் ஏழை குடும்பத்தினர் பயன்பெறுவர்.நகர்ப்புற உள்ளாட்சிகளில் சாலைகள் மேம்பாட்டுக்காக இந்த ஆண்டு ரூ.1,051 கோடி ஒதுக்கியுள்ளது. இந்த நிதியை கொண்டு நகர உள்ளாட்சி அமைப்புகளுக்குட்பட்ட 3,500 கிலோ மீட்டர் சாலைகளை மேம்படுத்தும் பணி விரைவாக நடைபெற்று வருகிறது.சென்னை நகரும், அதைச் சுற்றியுள்ள பகுதிகளும் வேகமாக வளர்ந்து வருகின்றன. இதேபோல் கோவை, மதுரை, சேலம், திருச்சி, திருநெல்வேலி போன்ற பிற நகரங்களும் வளர்ந்து வருகின்றன. இத்தகைய வளர்ச்சியினால் புதிதாக உருவாகிவரும் புறநகர் பகுதிகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டியது அவசியமாகிறது. சென்னை மாநகராட்சி மற்றும் அதன் எல்லையை ஒட்டி அமைந்துள்ள புறநகர் பகுதிகள், திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் வளர்ச்சி மையமாகச் செயல்படும் முக்கிய நகரங்கள் மற்றும் அவற்றை ஒட்டி உள்ள பகுதிகளிலும், மதுரை, கோவை, திருச்சி, நெல்லை மாநகராட்சிகள், ஈரோடு, திருப்பூர், வேலூர், தூத்துக்குடி போன்ற புதிதாக அமைக்கப்பட்ட மாநகராட்சிகளிலும் குடிநீர் சாலைகள், கழிவுநீர் வசதி, திடக்கழிவு மேலாண்மை, மின்விளக்கு போன்ற பல்வேறு அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தர அடுத்த 5 ஆண்டுகளுக்கு ரூ.15,000 கோடி தேவை என மதிப்பிடப்பட்டுள்ளது. இதற்கான நிதி ஆதாரத்தை மாநிலத்தின் நிதி ஆதாரத்தில் இருந்தும், சர்வதேச நிதியுதவி அமைப்புகளிடம் இருந்தும் பெற்று தரம்மிக்க அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தர உரிய நடவடிக்கைகளை இந்த அரசு மேற்கொள்ளும்.குடிசைகளில் வாழும் லட்சக்கணக்கான மக்கள் தொடர்ந்து பல இன்னல்களை சந்தித்து வருவதை கருத்தில் கொண்டு ஒரு குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் தமிழகத்தை குடிசைகள் அற்ற மாநிலமாக மாற்ற ‘கலைஞர் வீடு வழங்கும் திட்டம்’ என்னும் ஓர் உன்னதமான திட்டத்தை அரசு அறிவித்தது. தமிழகத்தில் 21 லட்சம் குடிசைகளை 6 ஆண்டு காலத்தில் கான்கிரீட் வீடுகளாக மாற்ற திட்டமிட்டு, அரசின் சார்பில் வீடு ஒன்றுக்கு ரூ.60 ஆயிரம் வழங்கப்படும் என்று அறிவித்தது. அந்த தொகை போதுமானதாக இல்லை என்றதால் ரூ.75 ஆயிரமாக அரசு உயர்த்தியது. முதல்கட்டமாக மூன்று லட்சம் வீடுகள் கட்டி முடிக்கப்படும் நிலையில் உள்ளது. இதற்காக 2010&2011ம் ஆண்டிற்கு ரூ.2,250 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ரூ.75 ஆயிரம் ரூபாயும் போதாது என்றதால் மேலும் ரூ.20 ஆயிரம் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மூலம் குறைந்த வட்டியில் கடனாக பெற்றுக்கொள்ள அரசு முயற்சி எடுத்து வருகிறது. 2வது கட்டமாக இந்த ஆண்டிலேயே மேலும் மூன்று லட்சம் பயனாளிகளுக்கு வீடுகள் கட்டும் பணிகளை தொடங்க அனுமதி அளிக்கப்படும்.தமிழகத்தில் குடிசைகளற்ற கிராமங்களை உருவாக்குவதுபோல் குடிசை பகுதிகளற்ற நகரங்களையும் உருவாக்க இந்த அரசால்தான் 1970ம் ஆண்டில் தமிழ்நாடு குடிசைமாற்று வாரியம் தொடங்கப்பட்டது. இந்த வாரியம் மூலம் ஒரு லட்சத்து 6 ஆயிரம் வீடுகள் கட்டப்பட்டுள்ளன. இந்த முயற்சியை தீவிரப்படுத்த 2011&2012ம் ஆண்டில் தொடங்கி அடுத்து ஐந்து ஆண்டுகளில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பேரூராட்சிகளிலும் உள்ள இரண்டரை லட்சம் குடிசைகளை கான்கிரீட் வீடுகளாக மாற்ற இந்த அரசு உரிய நடவடிக்கைகளை தொடங்கியுள்ளது.நகர்ப்புறத்தை நாடிவரும் மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அவ்வாறு வருபவர்கள் நிரந்தரமாக தங்குவதற்கு வசதியான வீடுகள் போதுமான எண்ணிக்கையில் இல்லை. இத்தகைய குடும்பங்கள் சுகாதாரமற்ற, பாதுகாப்பற்ற சூழலில் உள்ளதாகவும், பெரும்பாலானோர் புறம்போக்கு பகுதியில் வசிப்பதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. இவர்களுக்கு பாதுகாப்பான வீடுகள் கட்டித்தர மேலும் பல ஆண்டுகள் தாமதமாகும் என்பதால், ஒரு சிறப்பு திட்டம் தயாரித்து இத்தகைய திட்டத்திற்கு மத்திய அரசிடம் இருந்து கிடைக்கும் நிதி உதவியை பெற்று கூடுதலாக தேவைப்படும் தொகையை மாநில அரசே ஏற்று 2017ம் ஆண்டுக்குள் நகர்ப்புற குடிசை பகுதிகளில் உள்ள அனைத்து ஏழை குடும்பங்களுக்கும் பாதுகாப்பான வீடுகள் கட்டி வழங்கப்படும். இத்திட்டத்திற்கும் அடையாள அட்டை வழங்கி 2011&12ம் ஆண்டில் வீடுகள் கட்டும் முதற்கட்ட பணிகள் தொடங்கப்படும். இதன்மூலம் தமிழகமெங்கும் குடிசைகளே இல்லா நகரங்கள் உருவாக்கப்பட்டு அனைவருக்கும் பாதுகாப்பான வீடுகள் கிடைப்பது உறுதி செய்யப்படும்.கிராமப்புறங்களில் ஏழை குடும்பங்கள் பாதுகாப்பான வீடுகள் கட்டுவதற்கு மத்திய நிதியுதவியுடன் செயல்படுத்தப்படுகிற ‘இந்திரா நினைவு குடியிருப்பு’ திட்டத்தின் கீழ் தொகுப்பு வீடுகள் கட்டும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த வீடுகள் சில இடங்களில் பெருமளவில் சேதமடைந்த நிலையில் உள்ளது. அத்தகைய வீடுகளை சீரமைத்து தர வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர். இதை ஏற்று இந்த அரசு 10 ஆண்டுகளுக்கு முன்பு கட்டி பெருமளவில் பாதிப்படைந்துள்ள வீடுகளின் எண்ணிக்கை கணக்கிடப்பட்டு சீரமைத்துக் கொள்ளும் வகையில் வீடு ஒன்றுக்கு தலா ரூ.15 ஆயிரம் தமிழக அரசு நிதி உதவியாக வழங்கப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.நெம்மேலியில் கல்லூரிகாஞ்சிபுரம் மாவட்டம் & ராஜீவ்காந்தி சிலைக்கும், கிழக்கு கடற்கரை சாலைக்கும் இடையில் உள்ள நெம்மேலியிலும், தூத்துக்குடி மாவட்டம் & நாகலாபுரத்திலும், தர்மபுரி மாவட்டம் & அரூரிலும், விழுப்புரம் மாவட்டம் & கள்ளக்குறிச்சியிலும் விருதுநகர் மாவட்டம் & திருச்சுழியிலும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் புதிதாக தொடங்கப்படும். வேளாண்மை தொழிலை வாழ்வாதாரமாக கொண்டுள்ள விவசாயிகள் நிறைந்த நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சை மாவட்டங்களில் உள்ள மாணவர்கள் பெரிதும் பயன் பெற வேண்டும் என்ற எண்ணத்தோடு நாகை மாவட்டத்தில் உள்ள கீவலூரில் இந்த ஆண்டு புதிதாக விவசாய கல்லூரி ஒன்று தொடங்கப்படும். அண்மையில் நடைபெற்ற வேளாண்மை அலுவலர்கள் மாநாட்டில் முதல்வர் கருணாநிதி அறிவித்ததற்கு இணங்க இந்தியாவிலேயே முதன் முதலாக கால்நடை பல்கலைக்கழகத்தையும் கோவையில் வேளாண்மை பல்கலைக் கழகத்தையும் தொடங்கி பெருமை சேர்த்த இந்த அரசு வேளாண்மையின் எதிர்காலம் என்று கருதப்பட்ட தோட்டக் கலைக்கு என தனியே தோட்டக்கலை பல்கலைக் கழகம் ஒன்றை கிருஷ்ணகிரி மாவட்டத்தில், இந்த ஆண்டில் தொடங்கும்சென்னையில் அறிவியல் பெருநகரம்கடந்த வாரம் சென்னைக்கு வருகை தந்து 98வது இந்திய அறிவியல் காங்கிரஸ் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய பிரதமர் மன்மோகன் சிங், ‘இந்திய அறிவியல் அரங்கில் தமிழகம் தனிச் சிறப்பு பெற்றுள்ளது. இந்தியாவின் நோபல் பரிசு பெற்ற முதல் இந்தியரான சர் சி.வி. ராமன் சென்னை மாநில கல்லூரியில் பயின்றவர். நோபல் பரிசு பெற்ற பேராசிரியர் எஸ்.சந்திர சேகரும் சென்னை வாசிதான். உலக புகழ் பெற்ற கனித மேதை ராமானுஜமும் தமிழகத்தைச் சேர்ந்தவர்தான். இத்தகைய காரணங்களால் இந்திய அறிவியல் அரங்கில் தமிழகம் தனிச்சிறப்புடன் விளங்குகிறது’ என்று கூறியது நாம் எல்லாம் தலை நிமிர்ந்து மகிழக்கூடிய பாராட்டுரையாகும். முதல்வர் கருணாநிதி சென்னை தொழில்நுட்ப நிறுவனத்தில் (எம்ஐடி) 1990ம் ஆண்டு நவம்பர் 14ம் தேதிஆற்றிய உரையில், ‘சென்னை பல்கலைக்கழகம் அமைந்திருக்கின்ற இடத்தையும் அதை சுற்றியுள்ள அறிவு நிலையங்களையும், அவற்றை போல அறிவியல் புதுமைகளை செய்கின்ற இடங்களை எல்லாம் இணைத்து இந்த பகுதியையே ஓர் அறிவியல் நகரமாக சென்னை மாநகரத்திலே உருவாக்க வேண்டும்’ என்று அறிவித்தார். அவர் கருதி பார்த்தவாறு அறிவியல் நகரம் அமையவில்லை என்பது ஒரு பெரும் குறையாகவே உள்ளதால், சென்னையில் அண்ணா பல்கலை கழகம், இந்திய தொழில்நுட்ப நிறுவனம் போன்ற 69க்கும் மேற்பட்ட உயர்கல்வி ஆய்வு நிறுவனங்கள் அமைந்துள்ள பகுதிகள் அனைத்தையும் ஒருங்கிணைத்து, உயர் அறிவியல் ஆய்வுக்கு உகந்த வசதிகளை உள்ளடக்கி இளைய தலைமுறையினரின் அறிவு வளர்ச்சிக்கு ஊக்கமளிக்கும் தூய்மை பகுதியாக விளங்கிட உலகத்தரம் மிக்க அறிவியல் பெருநகரம் அமைக்கப்படும். மருத்துவ கல்லூரிகள்மாவட்டந்தோறும் மருத்துவ கல்லூரி என்னும் இந்த அரசின் நோக்கத்தை தொடர்ந்து நிறைவேற்றிடும் வகையில், அடுத்தபடியாக ராமநாதபுரம், கடலூர் மற்றும் திண்டுக்கல்லிலும் அரசு மருத்துவ கல்லூரி தொடங்கப்படும். இதன் மூலம் வருங்காலத்தில் தகுதியுடைய மருத்துவர்களின் எண்ணிக்கை தமிழகத்தில் கணிசமாக உயர வாய்ப்புள்ளது.மெட்ரோ ரயில்&2சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் 2ம் கட்டமாக மூலக்கடை & திருமங்கலம், மூலக்கடை & திருவான்மியூர், லஸ் & ஐயப்பன்தாங்கல் வழியாக பூந்தமல்லி வரை பாதைகள் அமைப்பது பற்றிதிட்டஆய்வு மேற்கொள்ளப்படும்.
156
1/7/2011 5:24:53 PM
தமிழகம்
சட்டசபைக்கு காய்கறி மாலையுடன் வந்த அதிமுக எம்எல்ஏ-க்கள்
சென்னை: சட்டசபைக்கு இன்று, கருப்பு சட்டை அணிந்து, காய்கறி மாலைகளுடன் வந்த அதிமுக எம்எல்ஏக்களால் பரபரப்பு ஏற்பட்டது.சட்டப்பேரவை கூட்டத்தொடர் கவர்னர் சுர்ஜித் சிங் பர்னாலா உரையுடன் இன்று காலை தொடங்கியது. அதிமுக, மதிமுக எம்எல்ஏ&க்கள் கருப்பு சட்டை அணிந்து இன்று பேரவைக்குள் வந்தனர். பொள்ளாச்சி ஜெயராமன், திருத்தணி அரி உள்ளிட்ட சில எம்எல்ஏ&க்கள் கருப்புச் சட்டையுடன், கழுத்தில் காய்கறிகளை மாலையாக அணிந்து வந்தனர். அதிமுக எம்எல்ஏ ஜெயகுமார் கருப்புச் சட்டை அணிந்து ஒரு தட்டில் ஆப்பிள், வாழைப்பழம் மற்றும் காய்கறிகளுடன் பேரவைக்கு வந்தார். அதே போல், கம்யூனிஸ்ட் கட்சிகளைச் சேர்ந்த எம்எல்ஏ&க்கள் கருப்பு துண்டு அணிந்து பேரவைக்கு வந்தனர்.
157
1/7/2011 5:28:49 PM
தமிழகம்
தமிழகத்துக்கு கூடுதலாக 1040 மெகாவாட் மின்சாரம்
பொன்னேரி: மீஞ்சூர் அடுத்த வல்லூரில் தேசிய அனல் மின் நிறுவனமும், தமிழ்நாடு மின்சார வாரியமும் இணைந்து 1,500 மெகாவாட் திறன் கொண்ட அனல் மின் நிலையத்தை கட்டி வருகிறது. இந்த நிலையத்தை தேசிய அனல் மின் நிறுவன செயல்திட்ட உயர் அதிகாரி சூர்யநாராயணன் மற்றும் அதிகாரிகள் குழுவினர் பார்வையிட்டனர். பின்னர் சூர்யநாராயணன் கூறியதாவது:  வல்லூரில் 1,184 ஏக்கரில் ரூ.8,443 கோடியில் 1500 மெகாவாட் மின்சாரம் தயார் செய்ய கடந்த 2002ம் ஆண்டு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டது. கட்டுமானப் பணிகள், இயந்திரம் நிறுவும் பணிகள் நடைபெற்று வருகின்றன. முதல் மற்றும் 2ம் அலகுக்கான கொதிகலன் உருளைகள் நிறுவும் பணிகள் மற்றும் கொதிகலன் நீர் அழுத்த பரிசோதனை பணிகள் முடிவடைந்துள்ளன. பூகம்பம் மற்றும் இயற்கை சீற்றங்களால் பாதிக்கப்படாதவாறு நவீன முறையில் கொதிகலன் அமைக்கப்பட்டுள்ளது. கடல் நீர் சுத்திகரிக்கப்பட்டு பாய்லரை குளிர்ந்த தன்மை பெற பயன்படுத்தப்படுகிறது. தற்போது 2,000க்கு அதிகமான தனியார் ஊழியர்கள் வேலை செய்கின்றனர். மின் நிலையப் பணிகள் முடிவடைந்த பின் 600 பேர் நிரந்தர ஊழியர்களாக பணியாற்றுவார்கள். முதல் யூனிட் அக்டோபர் 2011லும் 2வது யூனிட் டிசம்பர் 11லும் 3வது யூனிட் 2012 நவம்பரிலும் முடிவடைந்து உற்பத்தி தொடங்கப்படும். இதனால் தமிழக அரசுக்கு 1040 மெகாவாட் மின்சாரம் கிடைக்கும். இவ்வாறு சூர்யநாராயணன் கூறினார்.
158
1/7/2011 5:34:26 PM
தலையங்கம்
கல்லூரிகளில் ராகிங் கொடுமை
கல்லூரியில் ஜூனியர் மாணவர்களை சீனியர்கள் ராகிங் செய்வது உலகிலேயே இந்தியாவில்தான் அதிகமாக உள்ளது. ராகிங் செய்வது காட்டுமிராண்டித்தனம் என உச்ச நீதிமன்றம் கண்டித்துள்ள போதிலும் அவ்வப்போது ராகிங் செய்திகள் வெளியாகி வருகின்றன. கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை அடுத்த சிறிய கிராமத்தை சேர்ந்தவர்கள் ரசாக், முகமது. நண்பர்கள். கோவை குனியமுத்தூரில் உள்ள ஒரு கல்லூரியில் பிஎஸ்சி முதலாமாண்டு மாணவர்கள். அதே கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படிக்கும் கேரளாவை சேர்ந்த 7 மாணவர்கள் கோவை புதூரில் ஒரு அறை எடுத்து தங்கியுள்ளனர். ரசாக்கையும், முகமதுவையும் தங்கள் ரூமுக்கு அழைத்து சென்று இவர்கள் அடைத்து வைத்துள்ளனர். மது மற்றும் போதை மாத்திரைகளை வலுக்கட்டாயமாக வாயில் ஊற்றியும், திணித்தும் அடித்து உதைத்துள்ளனர். 2 மணி நேரம் கொடுத்து 150 கொசுக்களை உயிருடன் பிடித்து வரவேண்டும் என்றும் கூறியுள்ளனர். தொடர்ந்து பலமணி நேரம் டார்ச்சர் செய்தபிறகு விடுவித்து உள்ளனர். டார்ச்சர் அனுபவித்த மாணவர்கள் போலீசில் புகார் செய்ய 7 சீனியர்கள் மீது ராகிங் உள்பட 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.நன்கொடை அதிகம் வாங்கும் கல்லூரிகளில்தான் ராகிங் கொடுமை அதிகமாக நடக்கிறது. இதுபற்றி புகார் வந்தால் கூட வெளியில் பரவினால் பெயர் கெட்டு, வருமானம் போய்விடும் என பயந்து கல்லூரி நிர்வாகம் அமுக்கி விடுகிறது. ராகிங் செய்தால் கடும் தண்டனை. கல்லூரி முதல்வர்தான் அதற்கு பொறுப்பேற்க வேண்டும் என கடுமையான பல விதிமுறைகள் இருந்தபோதும் நன்கொடை கொடுக்கும் ‘ராகிங் மாணவர்களை’ காப்பாற்ற கல்லூரி நிர்வாகம் நினைப்பதால்தான் ராகிங் கொடுமை தொடர்கிறது.ராகிங் கொடுமைக்கு பயந்து படிப்பை பாதியிலே விட்ட மாணவர்கள் பல ஆயிரம் பேர். எதிர்த்து நிற்க முடியாமலும் வீட்டுக்கு பயந்தும் என்ன செய்வதென தெரியாமல் தற்கொலை செய்துகொண்ட மாணவர்கள் சில நூறாவது இருப்பார்கள். கல்லூரி நிர்வாகம் நினைத்தால் ராகிங்கை முழுமையாக தடுக்க முடியும். அப்படிப்பட்ட கல்லுரிகளும் இருக்கத்தான் செய்கின்றன. வெளியில் அட்டகாசம் செய்யும் மாணவர்கள் கல்லூரி பஸ்சில் ஏறியது முதல் திரும்ப வீட்டுக்கு வந்துசேரும்வரை வாலை சுருட்டிக்கொண்டு இருக்கிறார்கள். காரணம், யாராக இருந்தாலும் ராகிங் செய்தால் அடிஉதை, கல்லூரியில் இருந்து நீக்கம், அபராதம் என ஏகப்பட்ட கட்டுப்பாடுகள். கல்லூரி வாழ்க்கையில் கேலி, கிண்டல் இருக்கத்தான் செய்யும். அப்படிப்பட்ட வயது அது. ஆனால் அது ஒரு கட்டுப்பாட்டுக்குள் இருந்தால் யாருக்கும் பிரச்னை இல்லை.
160
1/7/2011 5:49:32 PM
குற்றம்
புழல் சிறையில் கைதியிடம் செல்போன் போலீசார் விசாரணை
புழல்: புழல்சிறையில், காவலர்கள் நேற்று, இரவு ரோந்து பணியில் ஈடுபட்டனர். சிறையில் கைதிகள் உள்ள அறையின் ஒவ்வொரு பிளாக்காக சென்று சோதனை நடத்தினர். அப்போது 10வது பிளாக்கில் உள்ள ஒரு கைதி செல்போனில் பேசிக்கொண்டிருந்தார். சிறைகாவலரை பார்த்ததும் அந்த கைதி செல்போனை வெளியே வீசினார். சிறைகாவலர்கள் அந்த செல்போனை பறிமுதல் செய்தனர். கைதியிடம் விசாரித்ததில் அவர் பெயர் ராஜேஷ் என்கிற சின்ராஜ் (23), திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவிலை சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. திருவள்ளூர் பகுதியில் அடிதடி, வழிப்பறி வழக்கில் கைதாகி கடந்த ஏப்ரல் மாதம் சிறையில் அடைக்கப்பட்டார். இது குறித்து சிறைஜெயிலர் இளவரசன் புழல் போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து சிறை கைதிக்கு செல்போன் எப்படி கிடைத்தது. இவர் யார் யாரிடம் பேசினார் என் விசாரிக்கிறார்கள்.
161
1/7/2011 5:51:42 PM
குற்றம்
விபசாரம் செய்வதற்காக லாட்ஜில் அடைத்த 18 பெண்கள் மீட்பு : 2 பேர் கைது
ஆவடி: பாடியில் உள்ள லாட்ஜூகளில் அடைத்து வைத்து, விபசாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட 18 பெண்களை போலீசார் மீட்டனர். சென்னை அருகே அம்பத்தூர் பாடி சி.டி.எச். சாலை அண்ணா தெரு உள்ளிட்ட இடங்களில் உள்ள லாட்ஜ்களில் விபசாரம் நடப்பதாக புறநகர் கமிஷனர் ஜாங்கிட்டுக்கு தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின்படி சிறப்பு படை கூடுதல் துணை கமிஷனர் ஜெயக்குமார், கொரட்டூர் இன்ஸ்பெக்டர் அகஸ்டின் ஆகியோர் லாட்ஜ்களில் நேற்று சோதனை நடத்தினர். 2 லாட்ஜூகளில் விபசாரத்தில் ஈடுபடுத்துவதற்கு அடைத்து வைக்கப்பட்டு இருந்த 18 பெண்களை போலீசார் மீட்டனர். இதுதொடர்பாக லாட்ஜ் உரிமையாளர் சக்திவேல் (51), மேலாளர் செல்வராஜ் (57) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மீட்கப்பட்ட பெண்களை சென்னையில் உள்ள காப்பகத்தில் ஒப்படைத்தனர்.
162
1/7/2011 5:59:34 PM
மாவட்ட மசாலா
சுற்றுலா பஸ் கவிழ்ந்து 11 பக்தர்கள் படுகாயம்
கலசப்பாக்கம்:கர்நாடக மாநிலம் அனந்தபூர் மாவட்டம் தர்மாபுரம் பகுதியை சேர்ந்த 49 பக்தர்கள், சபரிமலையில் ஐயப்பனை தரிசித்து விட்டு, வேலூரில் உள்ள கோயில்களை தரிசிக்க வந்துகொண்டிருந்தனர். தி.மலை மாவட்டம் கலசப்பாக்கம் அடுத்த கொண்டம் அருகே இன்று அதிகாலை  5 மணியளவில் வந்தபோது, திடீரென பஸ் நிலைதடுமாறி பக்கவாட்டில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் பஸ்சில் பயணம் செய்த சங்கரா (28), முத்தண்ணா (25), பாலகிருஷ்ணன் (19), பிரசன்னா (22), ராமன்ஜி (40), வெங்கட்நாராயணா (52), கண்ணன் (35), ஆதிநாராயணன் (35), சுப்பம்மாள் (50) உட்பட 11 பேர் படுகாயமடைந்தனர். அவர்கள் திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
163
1/7/2011 6:00:45 PM
மாவட்ட மசாலா
பொங்கல் விடுமுறை மறுப்பு முதல்வர் தலையிட கோரிக்கை
கோவை:கேரள மாநில தமிழ் பாதுகாப்பு இயக்க பொதுச்செயலாளர் பேச்சிமுத்து வெளியிட்டுள்ள அறிக்கை: கேரளாவில் பாலக்காடு, வயநாடு, இடுக்கி, பத்தினம் திட்டா, திருவனந்தபுரம் உள்ளிட்ட பகுதிகளில் லட்சக்கணக்கான தமிழர்கள் வாழ்கிறார்கள். 1956ம் ஆண்டு மாநில பிரிவினைக்கு முன்பே கேரள மாநிலத்தில் நிரந்தர குடிமக்களாக வாழ்ந்து வருகிறார்கள். தமிழர் வசிக்கும் பகுதிகளில் பொங்கல் நாளில் அரசு விடுமுறை விடுமாறு கேரள முதல்வர் அச்சுதானந்தனிடம் பல முறை மனு தரப்பட்டது. ஆனால் விடுமுறை அளிக்க கேரள அரசு தயக்கம் காட்டுகிறது. தமிழக முதல்வர் கருணாநிதி, கேரள முதல்வருடன் பேசி பொங்கல் விடுமுறை பெற்று தர ஏற்பாடு செய்யவேண்டும்.
164
1/7/2011 6:01:51 PM
மாவட்ட மசாலா
திருச்செந்தூர் கோயிலில் 2 புதிய வாசல்கள்
திருச்செந்தூர்:திருச்செந்தூர் கோயில் அறங்காவலர் குழுத்தலைவர் தேவதாசசுந்தரம் கூறியதாவது: கோயிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கூட்டநெரிசலை தவிர்க்க மகாமண்டபம் வழியாக சென்று சாமி தரிசனம் செய்வதற்காக, இந்து சமய அறநிலையத்துறை தலைமை ஸ்தபதி முத்தையா மற்றும் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை செய்து சாஸ்திரப்படியும், சிற்பக்கலை சம்பிரதாயபடியும் 2 வாசல்கள் புதியதாக ஏற்படுத்த உள்ளோம். சுவாமி ஜெயந்திநாதருக்கு எதிர்புறமும், மகாமண்டபம் நடராஜர் சன்னதிக்கு எதிர்புறமும் 2 வாசல்கள் மூன்றரை அடி அகலத்திலும், ஆறரை அடி உயரத்திலும் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
165
1/7/2011 6:02:19 PM
இந்தியா
அமைச்சர்களின் சிபாரிசுகளை கேஸ் டைரியில் குறிப்பிட வேண்டாம்
மும்பை: குற்றவழக்குகளில் சிக்குபவர்களை விடுவிப்பதற்காக எம்எல்ஏக்கள், அமைச்சர்கள் ஆகியோர் தொலைபேசி வாயிலாக செய்யும் சிபாரிசுகளை கேஸ் டைரியில் குறிப்பிட வேண்டாம் என மாநிலத்தில் உள்ள அனைத்து போலீஸ் ஸ்டேஷன்களுக்கும் மகாராஷ்டிர உள்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அடிதடி வழக்குகள், பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படுத்துதல், போக்குவரத்து விதி மீறுதல் போன்ற சிறு வழக்குகளில் சிக்குபவர்கள்  எம்எல்ஏக்கள் மற்றும் அமைச்சர்களின் சிபாரிசுகளில் வெளியே வருவது புதிய விஷயம் அல்ல. எல்லா மாநிலங்களிலும் எல்லா காவல்நிலையங்களிலும் அன்றாடம் நடைபெறும் மிக சாதாரண விஷயம்தான். சீரியசான குற்றங்களிலும் எம்எல்ஏக்கள் மற்றும் அமைச்சர்களின் தலையீடு வரும்போது அவற்றை கேஸ் டைரியில் எழுதி வைப்பது போலீசாரின் வாடிக்கை. புல்தானா மாவட்டத்தில் காங்கிரஸ் எம்எல்ஏவின் உறவினர் ஒருவர் கடந்த 2006ம் ஆண்டு கந்துவட்டி புகாரில் சிக்கினார். இது தொடர்பாக விசாரணை நடத்திய போலீஸ் அதிகாரிக்கு அப்போதைய முதல்வர் விலாஸ்ராவ் தேஷ்முக் போன் செய்து வழக்குப் பதிய வேண்டாம் என கேட்டுக் கொண்டார். இந்த விவரத்தை அந்த போலீஸ் அதிகாரி கேஸ் டைரியில் பதிவு செய்தார். இந்த வழக்கு அண்மையில் சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது போலீஸ் பணியில் குறுக்கிட்டதற்காக மாஜி முதல்வர் விலாஸ்ராவ் தேஷ்முக்குக்கு சுப்ரீம் கோர்ட் கடும் கண்டனம் தெரிவித்தது. இந்த சர்ச்சையை தொடர்ந்து மாநிலத்தில் உள்ள அனைத்து போலீஸ் ஸ்டேஷன்களுக்கும் மாநில உள்துறை ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அதில் எம்எல்ஏக்கள் மற்றும் அமைச்சர்கள் போனில் செய்யும் சிபாரிசுகளை கேஸ் டைரியில் எழுத வேண்டாம் எனவும் அவற்றை ரகசியமாக வைக்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.
166
1/7/2011 6:02:55 PM
மாவட்ட மசாலா
ஈரோடு மார்க்கெட்டில் மஞ்சள் விலை திடீர் சரிவு
ஈரோடு:கர்நாடக மாநிலம் மைசூர், மாண்டியா, குண்டல்பேட் பகுதிகளில் டிசம்பர் கடைசி வாரம், மஞ்சள் அறுவடை துவங்கியது. ஈரோடு மார்க்கெட்டுக்கு கர்நாடக மஞ்சள் வரத்து அதிகரிக்க துவங்கியுள்ளது. ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில், 2 வாரம் முன்பு, ஒரு குவின்டால் விலை ரூ.17000 ஆக இருந்தது.  நேற்று ஒரு குவின்டால் விலை ரூ.15,569 & ரூ.16,081 ஆக இருந்தது. விலை குவின்டாலுக்கு ரூ.ஆயிரம் வரை சரிந்துள்ளதால் விவசாயிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
167
1/8/2011 3:40:06 PM
இந்தியா
ஸ்ரீகிருஷ்ணா கமிட்டி அறிக்கை எதிரொலி எம்.பி., எம்எல்ஏ வீடுகள் முற்றுகை
சித்தூர்: தனி தெலங்கானா கோரிக்கையை வலியுறுத்தி எம்.பி., எம்.எல்.ஏ.க்களின் வீடுகளை முற்றுகையிடப்போவதாக மாணவர் சங்கங்கள் அறிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, அவர்களது வீடுகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மாணவர்கள் மீது போலீசார் நடத்திய தாக்குதலை கண்டித்து அரசு அலுவலகங்களை டிஆர்எஸ் கட்சியினர் முற்றுகையிட்டனர்.ஆந்திராவை பிரித்து தெலங்கானா தனி மாநிலம் அமைக்கும் கோரிக்கை வலுத்ததால் நீதிபதி ஸ்ரீகிருஷ்ணா கமிட்டியை மத்திய அரசு அமைத்தது. கமிட்டி தாக்கல் செய்த அறிக்கையை மத்திய அரசு நேற்று முன்தினம் வெளியிட்டது. ‘தெலங்கானா பிரித்தால் பிரச்னைகள் வரும். பிரிக்காமல் இருப்பதே நல்லது’ என்று அறிக்கையில் கூறப்பட்டிருந்தது. தனி தெலங்கானா கோரிக்கையில் தீவிரமாக இருந்தவர்கள் மத்தியில் இது பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. ஸ்ரீகிருஷ்ணா அறிக்கையை கண்டித்து ஐதராபாத் உஸ்மானியா பல்கலைக்கழக மாணவர்கள் நேற்று ஒருநாள் பந்த்துக்கு அழைப்பு விடுத்தனர். பல்கலை வளாகத்தில் ஆயிரத்துக்கும் அதிகமான போலீசார் குவிக்கப்பட்டனர். போலீசாரை நோக்கி மாணவர்கள் சரமாரியாக கற்களை வீசினர். அவர்களை கட்டுப்படுத்த போலீசார் தடியடி நடத்தினர். கண்ணீர் புகை குண்டுகள் வீசினர். இதனால் பதற்றம் அதிகரித்தது. மாணவிகள் சிலர் ஆந்திர மாநில உள்துறை அமைச்சர் சபீதா இந்திரா ரெட்டி உருவ பொம்மையை எரிக்க ஊர்வலமாக வந்தனர். போலீசார் கண்ணீர் புகை குண்டுகள் வீசி மாணவிகளை விரட்டினர்.இதற்கிடையில், 6 பஸ், 2 கார்களை மாணவர்கள் அடித்து நொறுக்கினர். ஒரு பஸ், ஜீப்பை தீ வைத்து கொளுத்தினர். போலீசார் மீது சில மாணவர்கள் பெட்ரோல் குண்டுகளை வீசினர். இதில் 5 போலீசார் காயமடைந்தனர். அப்பகுதி போர்க்களம் போல மாறியது. தெலங்கானா போராட்டங்களை ஏன் டிவியில் ஒளிபரப்புவதில்லை என கேட்டு 2 சேனல்களின் வாகனங்களை மாணவர்கள் தீயிட்டு கொளுத்தினர். டிவி நிருபர், வீடியோகிராபரையும் தாக்கினர். படுகாயம் அடைந்த அவர்களை போலீசார் மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இந்நிலையில், கல்வி நிறுவனங்களுக்கு இன்று முதல் 18-ம் தேதி வரை பொங்கல் விடுமுறை அறிவிக்கப்பட்டது. உஸ்மானியா பல்கலை உள்பட பல்வேறு கல்லூரிகள், விடுதிகள் நேற்று இரவு மூடப்பட்டன.போலீசார் நடத்திய தடியடி, கண்ணீர் புகை தாக்குதலை கண்டித்தும் உஸ்மானியா பல்கலையில் இருந்து போலீசை உடனே வெளியேற்றக் கோரியும் தெலங்கானா ராஷ்டிரிய சமிதி (டிஆர்எஸ்) கட்சியினர் தெலங்கானா மாவட்டம் முழுவதும் இன்று தர்ணா போராட்டங்கள், சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் ஐதராபாத்-விஜயவாடா, ஐதராபாத்-கம்மம், ஐதராபாத்- நிஜாமாபாத் உள்பட பல்வேறு சாலைகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அரசு அலுவலகங்களையும் டிஆர்எஸ் கட்சியினர் முற்றுகையிட்டனர். இதனால் அரசு பணிகள் ஸ்தம்பித்தன. தொடர்ந்து பரபரப்பு அதிகரித்து வரும் சூழ்நிலையில் அடுத்தகட்டமாக தெலங்கானா பகுதியில் உள்ள எம்.பி., எம்எல்ஏக்களின் வீடுகளை முற்றுகையிடப் போவதாக மாணவர் சங்கங்கள் அதிரடியாக அறிவித்துள்ளன. இதையடுத்து, அவர்களது வீடு, அலுவலகம் முன்பு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதனால் தெலங்கானா பகுதியில் பதற்றமும், பரபரப்பும் தொடர்ந்து நீடிக்கிறது.
168
1/8/2011 3:43:59 PM
தமிழகம்
தேர்வு தேதியில் திடீர் மாற்றம் விஏஓ தேர்வு பிப்ரவரி 20ல் நடக்கிறது
சென்னை: விஏஓ தேர்வு தேதியில் திடீர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. முன்னதாக பிப்ரவரி 20ம் தேதி நடைபெறும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. தமிழக அரசு பணியாளர் தேர்வாணையத்தின் (டி.என்.பி.எஸ்.சி) மூலம் தமிழகம் முழுவதும் காலியாக உள்ள 2,400 கிராம நிர்வாக அலுவலர் (விஏஓ) பணியிடங்களை நிரப்புவதற்காக தேர்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. மேலும், தாழ்த்தப்பட்ட, பழங்குடியினர் பிரிவைச் சேர்ந்தவர்களுக்கான பின்னடைவு காலிப் பணியிடங்களான 1,077ஐ நிரப்பவும் தேர்வு நடத்தப்பட உள்ளது.இதற்கான விண்ணப்பங்கள் கடந்த ஆகஸ்ட் 20ம் தேதி வரை பெறப்பட்டன. சுமார் 3 மாதங்களாக இதற்கான தேர்வு தேதி அறிவிக்கப்படாமல் இருந்தது. இந்நிலையில், விஏஓ தேர்வு பிப்ரவரி 27ம் தேதி நடத்தப்படும் என தேர்வாணையம் அதிகாரபூர்வமாக அறிவித்தது. இத்தேர்வை 10 லட்சத்து 10 ஆயிரம் பேர் எழுத உள்ளனர். கூடுதலாக 831 விஏஓ காலிப் பணியிடங்களுக்கும் அண்மையில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்த அனைத்து விஏஓ காலிப் பணியிடங்களுக்கும் பிப்ரவரி 27ம் தேதி தேர்வு நடத்தப்பட இருந்தது. விஏஓ தேர்வும், மத்திய பணியாளர் தேர்வாணைய தேர்வும் ஒரே நாளில் நடைபெற இருந்தது. இதனை மாற்றி அமைக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பில் இருந்து கோரிக்கை விடப்பட்டது.இந்நிலையில் இத்தேர்வுக்கான தேதியை டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் திடீரென மாற்றி அறிவித்துள்ளது. அதாவது, ஒரு வாரம் முன்னதாக பிப்ரவரி 20ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது: விஏஓ தேர்வு பிப்ரவரி 27ம் தேதி அறிவிக்கப்பட்டது, பிப்ரவரி 20ம் தேதி மாற்றப்பட்டுள்ளது. அதே போல் தமிழ்நாடு பொது சுகாதார சார் நிலை பணியில் புள்ளியியல் உதவியாளர் பதவி தேர்வு பிப்ரவரி 19ல் இருந்து 26ம் தேதிக்கும், மருத்துவ சார்நிலை பணியில் வட்டார சுகாதார புள்ளியர் பதவிக்கான தேர்வு 19ம் தேதியில் இருந்து 26ம் தேதிக்கும், கண்காணிப்பு மற்றும் ஊழல் தடுப்பு துறையில் சிறப்பு உதவியாளர் பதவிக்கான தேர்வு பிப்ரவரி 20ம் தேதியில் இருந்து மார்ச் 6ம் தேதிக்கும், தொகுதி 1க்கான முதனிலைத் தேர்வு மே 22ம் தேதியில் இருந்து மே 5ம் தேதிக்கும், ஒருங்கிணைந்த சார்நிலைப்பணிகள் 1ல் அடங்கிய பதவிகளுக்கான தேர்வு ஜூன் 12ம் தேதியில் இருந்து ஜூன் 19ம் தேதிக்கும் மாற்றப்பட்டுள்ளது. இவ்வாறு அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
169
1/8/2011 3:51:22 PM
குற்றம்
கணவருடன் தகராறு தீக்குளித்த பெண் பலி; குழந்தையும் சாவு திருவள்ளூர் அருகே சோகம்
திருவள்ளூர்: திருவள்ளூரை அடுத்த இறையாமங்கலத்தை சேர்ந்தவர் அரிகிருஷ்ணன் (27). கூலி தொழிலாளி. இவரது மனைவி சங்கீதா (24). திருமணமாகி 4 வருடம் ஆகிறது. மகன்கள் ஹேமந்த்குமார் (3), கணேஷ் (2) உள்ளனர். அரிகிருஷ்ணன் குடிப்பழக்கம் உடையவர். குடித்துவிட்டு வந்து அடிக்கடி மனைவியுடன் தகராறு செய்வாராம். இதனால் கணவன், மனைவி இடையே அவ்வப்போது சண்டை ஏற்படும். நேற்று மதியம் அரிகிருஷ்ணன் வேலைக்கு போய்விட்டு வீட்டிற்கு வந்தார். அப்போது தம்பதி இடையே தகராறு ஏற்பட்டது. மனைவியிடம் கோபித்துக்கொண்டு அரிகிருஷ்ணன் வெளியே போய்விட்டார். மனமுடைந்த சங்கீதா, வீட்டின் சமையல் அறையில் இருந்த மண்ணெண்ணெயை குழந்தைகள் மீது ஊற்றினார். பின் தன் மீதும் ஊற்றினார். நடப்பதை அறியாமல் குழந்தைகள் இருவரும் அழுதபடி இருந்தனர். உடனே தன் மீது தீ வைத்துக்கொண்டு குழந்தைகள் இருவரையும் கட்டி பிடித்தார் சங்கீதா. இதில் மூவரும் தீக்காயங்களுடன் அலறி துடித்தனர். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் திரண்டு வந்தனர். உயிருக்குப் போராடிய சங்கீதா, அவரது இரண்டு குழந்தைகளையும் மீட்டு சென்னை கீழ்பாக்கம் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஹேமந்த்குமார் இறந்தார். சிறிது நேரத்தில் சங்கீதாவும் இறந்தார். உடல் கருகிய நிலையில் கணேஷ் தீவிர சிகிச்சை பெற்று வருகிறான். மப்பேடு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். திருவள்ளூர் டிஎஸ்பி பாரதி, அரிகிருஷ்ணனிடம் விசாரிக்கிறார். ஆர்டிஓ அண்ணாமலை மேல்விசாரணை நடத்துகிறார். குடும்பத் தகராறில் பெண்ணும் அவரது குழந்தையும் தீயில் கருகி இறந்தது இறையாமங்கலம் கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
170
1/8/2011 3:55:46 PM
குற்றம்
போலி ஆவணம் மூலம் கடன் வழங்கிய வங்கி மேலாளர்கள் சிறையில் அடைப்பு
மதுரை: இந்தியன் ஓவர்சீஸ் வங்கி பாளையங்கோட்டை கிளையில் கடந்த 2007 முதல் 2010 வரை முதன்மை மேலாளராக பணியாற்றியவர் பாலசுப்பிரமணியன்(55). இவர் தற்போது ஈரோடு மண்டல அலுவலகத்தில் முதன்மை மேலாளராக பணியாற்றி வருகிறார். பாளையங்கோட்டையில் பணியாற்றிய போது போலி ஆவணங்கள் மூலம் கடன் வழங்கி வங்கிக்கு ரூ.2 கோடியே 42 லட்சத்து 37 ஆயிரம் இழப்பு ஏற்படுத்தியதாக, முதன்மை மேலாளர் பாலசுப்பிரமணியன், அதிமுக முன்னாள் அமைச்சர் அம்மமுத்து பிள்ளை, கல்யாணசுந்தரம், மகாலிங்கம், அன்ன சரஸ்வதி, மோகன்ராஜ், கீதா, பார்வதி ஆகியோர் மீது சிபிஐ போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கில் நேற்று பாலசுப்பிரமணியனை சிபிஐ போலீசார் கைது செய்து மதுரை சிபிஐ கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அவரை வரும் ஜன.21 வரை காவலில் வைக்க நீதிபதி ஜெகந்நாதன் உத்தரவிட்டார். இதேபோல், போலி ஆவணம் மூலம் கடன் வழங்கி திருச்சி இந்தியன் வங்கி கன்டோன்மென்ட் கிளைக்கு ரூ. 1 கோடியே 5 லட்சம் இழப்பு ஏற்படுத்தியதாக தற்போது இந்தியன் வங்கி சென்னை கீழ்பாக்கம் கிளையில் முதன்மை மேலாளராக பணியாற்றி வரும் நடராஜன், கன்டோன்மென்ட் கிளை முதன்மை மேலாளர் பூர்ணசந்திரன், உதவி மேலாளர் சகாதேவன் மற்றும் புல்லம்பாடி கந்தசாமி, திருச்சி கணியன், திருச்சி குரு ஓட்டல் ரங்கநாதன், திருப்பூர் ராமஜெயம் ஆகியோர் மீது சிபிஐ போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கில் நேற்று கைது செய்யப்பட்ட நடராஜன் மதுரை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு  ஜன.21 வரை ரிமாண்ட் செய்யப்பட்டார்.
172
1/8/2011 3:58:44 PM
தமிழகம்
மணல் லாரி ஸ்டிரைக் 2வது நாளாகதொடர்கிறது
கோவை: தமிழகம் முழுவதும் மணல் லாரிகள் 2வது நாளாக ஸ்டிரைக்கில் ஈடுபட்டுள்ளன. தமிழகம் முழுவதும் 75 ஆயிரத்திற்கும் மேற்பட்ட லாரிகள் நிறுத்தப்பட்டுள்ளன. கோவை மாவட்ட மணல் லாரி உரிமையாளர்கள் சங்க செயலாளர் சந்திரிகா மணி கூறும்போது, ‘தற்போது, காவிரியாற்றில் அதிக தண்ணீர் ஓடும் நிலையில், ஆட்களை வைத்து மணல் எடுப்பதால் ஒரு லாரிக்கு மணல் ஏற்ற மூன்று நாள் ஏற்படும். ஆட்கள் கூலி, போக்குவரத்து செலவு என லோடுக்கு ரூ.15 ஆயிரத்துக்கு மேல் ஆகிவிடும். இயந்திரங்களில் எடுத்தால் மட்டும்தான் செலவு கட்டுபடியாகும். அரசு தனது முடிவை மறு பரிசீலனை செய்யவேண்டும். கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை கோவை காந்திபுரத்தில் உண்ணாவிரத போராட்டம் நடக்கிறது. இதில் மாநிலம் முழுவதும் இருந்து 3ஆயிரத்திற்கும் மேற்பட்ட லாரி உரிமையாளர்கள் பங்கேற்கின்றனர்’ என்றார். மணல் லாரி உரிமையாளர்கள் போராட்டம் காரணமாக கட்டுமான தொழில் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
173
1/8/2011 4:02:12 PM
தமிழகம்
மேட்டூர் அணை இன்னும் 20 நாளே திறக்கப்படும்
மேட்டூர்: காவிரி டெல்டா பாசனத்துக்காக மேட்டூர் அணையிலிருந்து ஆண்டுதோறும் ஜூன் 12ம் தேதி தண்ணீர் திறக்கப்படும். ஆனால் இந்த ஆண்டு அணையில் போதிய தண்ணீர் இல்லாததால் குறித்த நாளில் அணை திறக்கப்படவில்லை. கடந்த ஜூலை 28ம் தேதி தான் தண்ணீர் திறக்கப்பட்டது. நீர் வரத்து குறைவாக இருந்த நேரத்தில் அணை திறக்கப்பட்டதால் நீர் மட்டம் கிடுகிடுவென 60 அடி வரை குறைந்தது. இந்நிலையில் வடகிழக்கு பருவமழை காரணமாக கர்நாடகாவிலுள்ள அணைகள் நிரம்பியதால் காவிரியில் தண்ணீர் திறக்கப்பட்டது. மேலும் தமிழகத்திலும் தொடர்ந்து கனமழை பெய்ததால் அணைக்கு நீர் வரத்து அதிகரித்து அணை நிரம்பி வழிந்தது.  தொடர் மழை காரணமாக தண்ணீர் தேவையும் குறைந்ததால், தற்போது டெல்டா பாசனத்துக்காக விநாடிக்கு 3417 கனஅடி நீர் மட்டுமே திறந்து விடப்பட்டுள்ளது. வழக்கமாக ஜனவரி 28ம் தேதி அணை மூடப்படும். அதற்கு இன்னும் 20 நாட்களே இருக்கும் நிலையில் தண்ணீர் தேவை குறைவாக இருப்பதால் அணையில் நீர் தேக்கி வைக்கப்படுகிறது. இதனால் இந்த ஆண்டு குறித்த காலத்தில் தண்ணீர் திறக்க போதுமான அளவிற்கு தண்ணீர் இருக்கும் என்று கருதப்படுகிறது.
174
1/8/2011 4:18:55 PM
மாவட்ட மசாலா
கல்லூரியில் ராகிங் 2 மாணவர்கள் கைது
கோவை: திருவனந்தபுரத்தை சேர்ந்தவர்கள் அஸ்வத் அசோக், பிலால் முகமது. இருவரும், குனியமுத்தூரில் உள்ள ஒரு கல்லூரியில் பி.எஸ்சி ஏரோநாட்டிக்ஸ் முதலாம் ஆண்டு படித்து வருகின்றனர். ‘சீனியர் மாணவர்கள் 7 பேர், ஒரு அறையில் அடைத்து வலுக்கட்டாயமாக மது, போதை மாத்திரைகளை வாயில் ஊற்றி சித்ரவதை செய்தனர். 150 கொசுக்களை உயிருடன் பிடித்து தரும்படியும்,  கூறி ராகிங் செய்தனர்’ என்று இவர்கள் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிந்தனர். இதற்கிடையே கல்லூரி நிர்வாகம், ராகிங் செய்த மாணவர்கள் மீரஜ்(18), செரீன்ராஜ்(20) ஆகியோரை கல்லூரியில் இருந்து டிஸ்மிஸ் செய்துள்ளது. இவர்களை நேற்று போலீசார் கைது செய்து, கோவை சிறையில் அடைத்தனர்.
175
1/8/2011 4:22:16 PM
மாவட்ட மசாலா
தோட்டத்துக்குள் புகுந்து யானைகள் அட்டகாசம்
களக்காடு: நெல்லை மாவட்டம் களக்காடு அருகே உள்ள பூதத்தான்குடியிருப்பு, புலவன்குடியிருப்பு, தானிஒடை பகுதியில் கடந்த ஒரு வாரமாக காட்டு யானைகள் ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வருகின்றன. நேற்று முன்தினம் இரவில் காட்டு யானைகள் கூட்டம் களக்காடு  சேரன்மகாதேவி பிரதான சாலையை கடந்து, நெடுவிளை அருகே உள்ள பண்ணை மனைக்காட்டில் உள்ள விவசாயி துரைசாமி என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் புகுந்தன. வாழைகளை துவம்சம் செய்தன. யானைக் கூட்டங்களை அடர்ந்த காட்டுக்குள் விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
176
1/8/2011 4:25:54 PM
மாவட்ட மசாலா
தமிழகம் முழுவதும் ஜெயிலர்கள் 11 பேர் மாற்றம்
நெல்லை: பாளை மத்திய சிறை ஜெயிலர் அமிர்தலால் மதுரை மத்திய சிறைக்கும், புதுக்கோட்டை சிறுவர் சீர்திருத்த பள்ளி அன்பழகன் பாளை மத்திய சிறைக்கும், வேலூர் மத்திய சிறை மாரியப்பன் திருச்சிக்கும், மதுரை துணை ஜெயிலர் தமிழ் செல்வன் பதவி உயர்வு பெற்று புதுக்கோட்டை சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கும், வேலூர் மத்திய சிறையிலிருந்த அன்வர் பாட்ஷா கடலூர்  சிறைக்கும் மாற்றப்பட்டனர். சிங்கநல்லூர் திறந்த வெளிச்சிறை மனோகரன் வேலூர் சிறைக்கும், சேலம் கிளை சிறை பாஸ்கர் ஜெயசிங் சேலம் மத்திய சிறைக்கும், மதுரை சிறை ஆறுமுகம் திண்டுக்கல்  சிறைக்கும், திருச்சி மத்திய சிறை சங்கர் கோவை மத்திய சிறைக்கும், புழல் சிறையில் இரண்டு பேரும் மாற்றப்பட்டனர்.
177
1/8/2011 4:29:05 PM
மாவட்ட மசாலா
மலைவாழ் மக்களுக்கு வீடு தேடி சாதி சான்று
பொள்ளாச்சி: கோவை மாவட்டம், பொள்ளாச்சி சேத்துமடை அருகேயுள்ள நாகரூத்து மலைவாழ்  குடியிருப்பு பகுதிக்கு நேரில் சென்ற ஆர்.டி.ஓ அழகிரி சாமி, அங்கு வசிக்கும் 34 மலை வாழ் மக்களுக்கு சாதி சான்றிதழ்களை வழங்கினார். ஆர்.டி.ஓ கூறுகையில், 'பொள்ளாச்சியை அடுத்த வனப்பகுதியின் பல இடங்களில் மலைவாழ் மக்கள் குடியிருப்புகள் உள்ளன. இங்கு வசிப்பவர்கள் கல்வி பெறவும், வேலை வாய்ப்பு பெறவும் சாதி சான்றிதழ், வருமான சான்றிதழ் அவசிமாகிறது. மலைவாழ் மக்கள் பொள்ளாச்சியில் உள்ள தாலுகா அலுவலகத்துக்கு வந்து இதுபோன்ற சான்றிதழ்களை வாங்குவதில் பல்வேறு சிக்கல்கள் உள்ளன. நேரில் சென்று சாதி சான்றிதழ் வழங்கப்பட்டு வருகிறது’ என்றார்.
178
1/8/2011 4:33:41 PM
தலையங்கம்
ஆற்றுமணலை அள்ளியது போதும்
ஆற்றுமணல் அனைவரின் சொத்து. அரசுக்கு மட்டுமல்ல. அள்ள அள்ள குறையாமல் கிடைக்கிறது என்பதற்காக எவ்வளவுதான் சுரண்டுவது? இன்று சுரண்டும் மணலால், நாளை நிலத்தடி நீர் கொஞ்சம் கூட இல்லாமல் வறண்டு நிலமெல்லாம் பாலையாகி விடும். இது தெரிந்தும் எதிர்கால சந்ததிகளைப் பற்றி துளிக்கூட கவலை இல்லாமல் ஆற்று மணலை அள்ளிக் கொண்டிருக்கிறார்கள். மனிதக் கைகளால் அள்ளினால் போதாது என்பதால், இயந்திரக் கைகளால் அள்ள வேண்டும் என வலியுறுத்தி மணல் லாரிகள் ஸ்டிரைக் அறிவித்துள்ளன. ஆற்றில் மணல் திட்டு உள்ள இடங்களில் பொக்லைன் இயந்திரங்கள் மூலம் மணல் அள்ளக்கூடாது என அரசு உத்தரவிட்டுள்ளது. ஆனால், மனிதர்கள் மூலம் மணல் அள்ளினால் லாரிகளில் லோடு செய்ய நீண்ட நேரம் ஆகும். விவசாய தொழிலுக்கு ஆட்கள் பற்றாக்குறை உள்ள நிலையில் மணல் அள்ள தொழிலாளர்கள் கிடைப்பதில்லை. ஆற்றில் தண்ணீர் செல்லும் நிலையில், ஆற்றுக்குள் மனிதர்கள் இறங்கி மணல் அள்ள முடியாது. எனவே பொக்லைன் இயந்திரங்கள் மூலம் மணல் அள்ள அனுமதி அளிக்க வேண்டும் என மணல் லாரி உரிமையாளர்கள் கால வரையற்ற ஸ்டிரைக்கில் ஈடுபட்டுள்ளனர். மாநிலம் முழுவதும் 75 ஆயிரம் மணல் லாரிகள் இயக்கப்படவில்லை. தமிழகம் முழுவதும் லாரிகள் மணல் அள்ள குவாரிக்கு செல்லவில்லை. இதனால் பொதுப்பணித்துறை மூலம் நடத்தப்படும் மணல் குவாரிகள் மூடப்பட்டுவிட்டன. மணல் லாரிகள் ஸ்டிரைக்கில் ஈடுபட்டுள்ளதால், மணல் விலை உயர்ந்துள்ளது. கடந்த மாதத்துடன் ஒப்பிடும்போது இப்போது மூன்று மடங்கு உயர்ந்துள்ளது. அதுவும் தேவைக்கேற்ப கிடைப்பதில்லை. இதனால் அரசு கட்டிட பணிகள் மற்றும் தனியார் கட்டிட பணிகள் பாதிக்கப்படும் என மணல் லாரி உரிமையாளர்கள் அமைப்பு எச்சரித்துள்ளது.அனுமதி இல்லாமல் ஆற்றில் மணல் அள்ளுவது ஆங்காங்கே நடந்து வருகிறது. கவனிப்பவர்களைக் கவனித்து விட்டால் ஒரு பிரச்னையுமில்லை. கிராமத்தினர் லாரிகளை மறித்து ஆர்ப்பாட்டம் செய்தால், அவர்களுக்கும் மொத்தமாகக் கொடுத்து விடுகின்றனர். ஆற்று மணல்தானே என எல்லோரும் அலட்சியமாக இருக்கிறார்கள். ஆற்று மணல் இல்லாமல் போனால், ஆற்றுப் படுகைகளில் நிலத்தடி நீர் தேங்காது. நீர் இல்லாவிட்டால் மோட்டார் போட்டு நீரிறைக்க முடியாது. விவசாயம் அழிந்து விடும¢. உணவு கிடைக்காமல் அவதிப்படும் நிலை உருவாகும். ஏற்கனவே விளை நிலங்கள் வேலை பார்க்க ஆளில்லாமல் தரிசாகக் கிடக்கின்றன. தண்ணீரும் கிடைக்காத நிலை உருவானால் நிலைமை இன்னும் மோசமாகிவிடும்.
179
1/8/2011 4:38:13 PM
தமிழகம்
வெள்ளம் போல் மாணவர்கள் குவிந்தனர் தினகரன் - வி.ஐ.டி. சார்பில் நாகர்கோவிலில் 'வெற்றி நமதே'
நாகர்கோவில்: தமிழகத்தின் நம்பர் 1 நாளிதழான தினகரன், எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ் 2 மாணவ, மாணவிகள் பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்களை பெறும் வகையில் சிறந்த நிபுணர்களை கொண்டு தயாரிக்கப்பட்ட மாதிரி வினா விடைகளை வெளியிட்டு வருகிறது. இதன் அடுத்த கட்டமாக தினகரன் நாளிதழும், வேலூர் வி.ஐ.டி. பல்கலைக்கழகமும் இணைந்து பிளஸ் 2 மாணவ, மாணவிகளுக்கான ‘வெற்றி நமதே’ என்ற சிறப்பு முகாமை தமிழகம் முழுவதும் நடத்தி வருகின்றன. முகாமில் பல்வேறு துறைகளை சேர்ந்த நிபுணர்கள் பங்கேற்று தேர்வுக்கு தயாராகும் மாணவ, மாணவிகளுக்கு பல்வேறு விளக்கங்களையும், ஆலோசனைகளையும் வழங்குகின்றனர். குமரி மாவட்ட பிளஸ் 2 மாணவ, மாணவிகளுக்கான வெற்றி நமதே சிறப்பு முகாம் நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரியில் இன்று காலை 9.30 மணிக்கு தொடங்கியது. முகாமில் பங்கேற்பதற்காக காலை முதலே குமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் மாணவ, மாணவிகள் விழா அரங்கில் குவிய தொடங்கினர். நேரம் செல்ல, செல்ல மாணவ, மாணவிகள் வருகை அதிகரித்தது. சாரை, சாரையாக வந்து மாணவ, மாணவிகள் குவிந்தனர். நிகழ்ச்சிக்கு வி.ஐ.டி. பல்கலைக்கழக வேந்தர் டாக்டர் ஜி. விசுவநாதன், வி.ஐ.டி. பல்கலைக்கழக துணைத்தலைவர் சங்கர் விசுவநாதன் ஆகியோர் தலைமை வகித்தனர். தினகரன் நிர்வாக இயக்குனர் ஆர்.எம்.ஆர். ரமேஷ் நிகழ்ச்சியில் பங்கேற்றார். குமரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சசிகலா முன்னிலை வகித்து பேசினார். முகாமில் ஆங்கில ஆசிரியர் செங்கோட்டையன், வணிகவியல் மற்றும் கணக்கு பதிவியல் ஆசிரியர் உலகநாதன், கணினி அறிவியல் ஆசிரியர் வருண்குமார், இயற்பியல் ஆசிரியை ஸ்ரீபிரியா, வேதியியல் ஆசிரியை பத்மலோசனி, உயிரியல் ஆசிரியர் ஆதியப்பன், கணித ஆசிரியர் ராஜேந்திரன் ஆகியோர் மாணவர்களுக்கு பல்வேறு ஆலோசனைகளையும், டிப்ஸ்களையும் வழங்கினர். ஆசிரியர்கள் கூறும் குறிப்புகளை ஆர்வமாக மாணவ, மாணவிகள் குறிப்பெடுத்தனர். நிகழ்ச்சிகளை ஈரோடு மகேஷ் தொகுத்து வழங்கினார்.  முகாம் நடந்த மண்டபத்தின் வெளியிலும் மாணவ, மாணவிகள் அமர்ந்து ஆசிரியர்கள் கூறும் அறிவுரைகளை குறிப்பெடுக்கும் வகையில் சிறப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டு இருந்தன. நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவ, மாணவிகளுக்கு தேர்வுக்கான நுணுக்கங்கள் குறித்த புத்தகம், வினா - விடை புத்தகம், குறிப்பேடு, பைல், பேனா, தேநீர் மற்றும் மதிய உணவு உள்ளிட்டவை வழங்கப்பட்டன.
180
1/8/2011 4:41:40 PM
குற்றம்
பார் ஊழியர் அடித்து கொலை?
தண்டையார்பேட்டை: பாரிமுனையிலுள்ள பாரில், ஊழியர் அடித்து கொல்லப்பட்டாரா என போலீசார் தீவிரமாக விசாரித்து வருகிறார்கள். திருச்சி சிங்காரத்தோப்பு பகுதியை சேர்ந்தவர் செல்வம் (42). கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வேலைதேடி சென்னை வந்தார். பாரிமுனை ஜாபர்சாரங் தெருவில் உள்ள டாஸ்மாக் பாரில் உதவியாளராக வேலை பார்த்தார். செல்வத்திற்கு குடிப்பழக்கம் உண்டு. நேற்று அவர் மது குடித்திருந்ததால், பாருக்கு வந்த வாடிக்கையாளர்களுக்கு சரியாக சப்ளை செய்யவில்லை. இதனால் பார் சூப்பர்வைசர் மணிகண்டன் (48), செல்வத்தை கண்டித்தார். இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த மணி செல்வத்தை தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் கீழே விழுந்த செல்வத்தை, மற்ற ஊழியர்கள் பாரில் உள்ள ஓய்வு அறையில் படுக்க வைத்தனர். இரவு விற்பனை முடிந்ததும் பார் ஊழியர்கள் செல்வத்தை எழுப்பினர். ஆனால் அவர் எழுந்திருக்கவில்லை. அவரது தலையில் ரத்த கசிவு இருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த ஊழியர்கள் செல்வத்தை சென்னை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பரிசோதனை செய்த டாக்டர்கள் செல்வம் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து வடக்கு கடற்கரை போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் வழக்குபதிவு செய்து, சூப்பர்வைசர் உள்பட பார் ஊழியர்களிடம் விசாரணை நடத்தி வருகிறார்.
181
1/8/2011 4:45:01 PM
சினிமா(ரீல்மா)
சில்மிஷம் செய்த வாலிபருக்கு நடிகை சமந்தா 'பளார்'
விண்ணைத் தாண்டி வருவாயா, மாஸ்கோவின் காவிரி, பாணா காத்தாடி உள்பட பல படங்களில் நடித்தவர் இளம் நடிகை சமந்தா. தெலுங்கு மற்றும் மலையாள படங்களிலும் நடித்துள்ளார். இவர் நேற்று திருப்பதியில், ஒரு பெரிய ஷாப்பிங் கடை திறப்பு விழாவுக்கு சென்றிருந்தார். காரிலிருந்து இறங்கியதும், அவரை நூற்றுக்கணக்கான ரசிகர்கள் சூழ்ந்து கொண்டனர். நிறைய பேர் திரண்டதால், கூட்டத்தில் சிக்கிக் கொண்டார். இதை சாக்காக பயன்படுத்தி, சில வாலிபர்கள் அவரைத் தொட்டு சில்மிஷத்தில்  ஈடுபட்டனர். இதனால் கோபமான சமந்தா,  ஒரு வாலிபரின் கன்னத்தில் ஓங்கி அறை விட்டார். அந்த வாலிபர் அங்கிருந்து ஓடி  விட்டார். பின்னர் போலீசார் வந்து, கூட்டத்தை விலக்கி, சமந்தாவை பத்திரமாக மீட்டனர். நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்த வர்களும், அவரிடம் மன்னிப்பு கேட்டனர். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதே போல திருப்பதி கோயிலுக்கு வந்த போது, தன்னிடம் சில்மிஷம் செய்த ரசிகருக்கு ஸ்ரேயாவும் பளார் விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
182
1/8/2011 4:47:47 PM
தமிழகம்
நாகை கடலோர பகுதியில் இலங்கை மீனவர்கள் கைது
தண்டையார்பேட்டை: நாகப்பட்டினத்தில் இருந்து 35 கடல் மைல் தொலைவில் வடகிழக்கு பகுதியில், இந்திய கடலோர காவல் பாதுகாப்பு படையினர் ரோந்து சென்றனர். அப்போது, இலங்கை கொடியுடன் 2 விசை படகுகள் நிற்பதை கண்டனர். படகை பிடித்து சோதனை செய்தபோது அதில் இருந்தவர்கள் இலங்கை மீனவர்கள் என தெரிந்தது. இதையடுத்து படகுகளில் வந்த 10 மீனவர்களை பிடித்து சென்னை துறைமுக போலீசில் நேற்று மாலை ஒப்படைத்தனர். இன்ஸ்பெக்டர் குணவர்மன் வழக்கு பதிவு செய்து, இந்திய கடற்பகுதியில் அத்துமீறி நுழைந்து மீன் பிடித்ததற்காக 10 பேரையும் கைது செய்தார். பின்னர், அவர்கள் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.
183
1/8/2011 4:54:34 PM
தமிழகம்
ஒரு வாரத்துக்கு பிறகு கூட்டணி குறித்து பேச்சு முதல்வர் கருணாநிதி பேட்டி
சென்னை: பொங்கல் பண்டிகை முடிந்த பின்பு காங்கிரஸ் கட்சியுடன் தொகுதிப்பங்கீடு  பற்றி பேச உள்ளோம் என்று முதல்வர் கருணாநிதி தெரிவித்தார். திமுக எம்எல்ஏக்கள் ஆலோசனைக் கூட்டம் நேற்று மாலை 5.20 முதல் 6.20 வரை கலைஞர் அரங்கில் நடந்தது. முதல்வர் மு.கருணாநிதி தலைமை வகித்தார். நிதியமைச்சர் அன்பழகன், துணை முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், திமுக எம்எல்ஏக்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தின் முடிவில் முதல்வர் அளித்த பேட்டியின் விவரம் வருமாறு: தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற்றுள்ளது. என்ன ஆலோசனைகளை வழங்கி இருக்கிறீர்கள். காலையில் சட்டப்பேரவையில் எதிர்க்கட்சிகளால் ஒரே பிரச்னையாக இருந்ததே? ஒரே பிரச்னை தானே & ஒரே பிரச்னை & ஒரேயொரு பிரச்னை & ஆளுநர் உரை. ஆளுநர்  உரையை கூட்டணி கட்சிகள் எல்லாம்  வரவேற்று இருக்கிறார்கள். ஆனால், எதிர்கட்சிகள் ஏமாற்றம் என்று சொல்லியிருக்கிறார்களே, அது பற்றி உங்கள் கருத்து என்ன?  எதிர்க்கட்சிகள் என்றால், அப்படித்தான் சொல்வார்கள்; அதில் என் கருத்து ஒன்றுமில்லை.  டில்லி உயர்நீதிமன்றம் இன்றைக்கு சுப்ரமணியம்சாமி தாக்கல் செய்த வழக்கில்,  ராசா மீதான வழக்கை  தொடர்ந்து நடத்தலாம். அதற்கு சி.பி.ஐ. ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்று சொல்லியிருக்கிறதே?  இது ஒரு செய்தி,  ராசா மீது சுப்ரமணியசாமி தொடுத்துள்ள வழக்கு பற்றி உங்கள் கருத்து...? அதிலே கருத்து ஒன்றும் இல்லை. நீதிமன்ற  விவகாரத்தில் பேசும் போது நான் எந்த கருத்தும் சொல்லமாட்டேன். தி.மு.க.வுக்குள் முன்னாள் அமைச்சர் ராசா, தொடர்ந்து நீடிப்பது சில நெருக்கடிகளை ஏற்படுத்துவதாக சில செய்திகள் வந்து கொண்டிருக்கிறதே?அதை பெரிய நெருக்கடியாக நான் கருதவில்லை. குற்றம்,  ராசா மீது நிரூபிக்கப்பட்டால் கட்சியின் செயற்குழு கூடி, விவாதித்து நடவடிக்கை எடுக்கப்படும். மத்திய அமைச்சர் மு.க. அழகிரி கட்சியில் இருந்து விலகுவதாக உங்களிடம் கடிதம் கொடுத்து விட்டதாக ஒரு செய்தி உள்ளதே? செய்திகள் எல்லாம் செய்திகளாக இருக்கின்றன. கடிதம் கொடுத்திருக்கிறாரா? கொடுக்கவில்லை. ஜெயலலிதா, தி.மு.க.வை எதிர்த்து இந்த தேர்தலில் ஒரு போர் நடக்குமென்று சொல்லியிருக்கிறாரே? போரா? போர்...ரா?ஸ்பெக்ட்ரம் பிரச்னையை தேர்தலிலே  பூதாகாரமாக  கொண்டுவர வேண்டுமென்று ஜெயலலிதா சொல்வது பற்றி...? நீங்களே பூதாகாரமாக...என்று சொல்லி விட்டீர்கள்.  அதாவது, சின்ன விஷயத்தை பெரிதுபடுத்துவதாக இருக்கிறார்கள்.  செய்யட்டும். அதற்கு ஏற்கனவே பிரதமர் உட்பட எல்லாரும் பதில் சொல்லியாகி விட்டது. குறிப்பாக, மத்திய அமைச்சர் கபில் சிபல் அதைப்பற்றி விவரமாக சொல்லி விட்டார். நான் எதுவும் சொல்வதற்கில்லை.  பிரதமர் , கூட்டணி உறுதியாக உள்ளது என்று சொல்லியிருக்கிறாரே?   அதுதான் உண்மை.  அதைத்தான் தொடர்ந்து பிரதமரும்,  சோனியா காந்தியும்  சொல்லி வருகின்றனர்.  கூட்டணியின் அடுத்த கட்டமாக எப்போது பேச்சு வார்த்தை? பொங்கல் விழா முடிந்த பிறகு அந்த பேச்சுவார்த்தைகள் தொடரும்.  பா.ம.க. போன்ற கட்சிகள் கூட்டணிக்கு வர சமிக்ஞை கொடுத்து இருக்கிறார்கள்.  எப்போது அந்த கட்சிகளோடு பேச்சுவார்த்தை நடத்தப்போகிறீர்கள்?அவர்களும் சமிக்ஞை கொடுத்துள்ளார்கள்.  நாங்களும் சமிக்ஞை கொடுத்துள்ளோம். எப்போது பேசப்போகிறோம் என்பதற்கு தேதி இன்னும் நிர்ணயிக்கவில்லை. இவ்வாறு கருணாநிதி கூறினார்.
184
1/8/2011 4:56:26 PM
தமிழகம்
சாமிதோப்பு பதியில் வழிபாடு : ஜெயலலிதா நாளை குமரி பயணம்
நாகர்கோவில்: அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா நாளை (9&ம் தேதி) குமரி மாவட்டம் வருகிறார். நாளை பகல் 2 மணியளவில் சாமித்தோப்பு அய்யா வைகுண்டபதி கோயிலுக்கு வரும் அவர், வடக்கு வாசலில் அய்யாவை வழிபடுகிறார். அங்கு நடக்கும் விழாவில் நல உதவிகளை வழங்கி பேசுகிறார். விழாவுக்கு பாலபிரஜாபதி அடிகளார் தலைமை வகிக்கிறார். பின்னர் சாமிதோப்பு பதியில் கோசாலை திட்டத்தை தொடங்கி வைக்கும் ஜெயலலிதா, கன்றுகுட்டியையும் கோயிலுக்கு வழங்குகிறார்.சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு தனி விமானத்தில் வரும் ஜெயலலிதா, அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் கன்னியாகுமரி வருகிறார். பின்னர் காரில் சாமித்தோப்பு வருகிறார். நிகழ்ச்சி முடிந்து ஹெலிகாப்டர் மூலம்  தூத்துக்குடி சென்று பின்னர் சென்னை செல்கிறார். ஜெயலலிதாவின் வருகையையொட்டி அதிமுக மாவட்ட பொறுப்பாளர் தளவாய்சுந்தரம் தலைமையில் வரவேற்பு ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. கன்னியாகுமரி மற்றும் சாமிதோப்பு பகுதியில் சுமார் 800 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
185
1/8/2011 4:59:23 PM
தமிழகம்
84 பெட்டிகளுடன் சரக்கு ரயில் வெள்ளோட்டம்
திருவொற்றியூர்: தண்டையார்பேட்டையில் இருந்து 84 பெட்டிகளுடன் சரக்கு ரயில் வெள்ளோட்டம் இன்று நடந்தது. சரக்கு ரயில் சேவையை அதிகரிக்க ரயில்வே துறை திட்டமிட்டுள்ளது. இதற்காக இரண்டு சரக்கு ரயில்களை இணைத்து ஒரே ரயிலாக இயக்க முடிவு செய்யப்பட்டது. இதன்படி கடந்த 6ம் தேதி ஜோலார்பேட்டையில் இருந்து ரேனிகுண்டாவுக்கு வெள்ளோட்டம் விடப்பட்டது. இரண்டாம் கட்டமாக இன்று சென்னை தண்டையார்பேட்டையில் இருந்து ஆந்திர மாநிலம் கூடூருக்கு வெள்ளோட்டம் விடப்பட்டது. காலை 9.45 மணிக்கு புறப்பட்ட இந்த சரக்கு ரயிலில் மொத்தம் 84 பெட்டிகள் இணைக்கப்பட்டு இருந்தது. இது பற்றி ரயில்வே அதிகாரி ஒருவர் கூறுகையில், Ôவழக்கமாக ஒரு சரக்கு ரயிலில் 42 பெட்டிகள் இணைக்கப்பட்டு இருக்கும். இப்போது நேரத்தை குறைக்கும் வகையில் இரண்டு ரயிலுக்கான பெட்டிகளை அதாவது 84 பெட்டிகளை ஒரே ரயிலில் இணைத்து வெள்ளோட்டம் விட்டுள்ளோம். இது வெற்றியடைந்தால் மற்ற சரக்கு ரயில்களும் இதுபோல இயக்கப்படும்Õ என்றார்.
186
1/8/2011 5:05:14 PM
விளையாட்டு
இந்தியாதென் ஆப்ரிக்கா 2020ல் நாளை மோதல்
டர்பன்: இந்திய கிரிக்கெட் அணி தென் ஆப்ரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையே நடந்த 3 டெஸ்ட் போட்டி கொண்ட தொடர் 11 என்ற கணக்கில் சமனில் முடிந்தது. இந்நிலையில் இரு அணிகளும் 2020 ஆட்டம் ஒன்றில் மோது கிறது. இந்த ஆட்டம் நாளை இந்திய நேரப்படி மாலை 6 மணிக்கு டர் பனில் நடைபெறுகிறது. இந்த ஆட்டம் சச்சின், தென் ஆப்ரிக்க வேகப்பந்து வீச்சாளர் நித்தினி ஆகியோரை கவுரவிக்கும் வகையில் நடத்தப்படுகிறது. சச்சினின் 20 ஆண்டுகால கிரிக்கெட் வாழ்க்கையை பாராட்டும் வகையிலும் சீனியர் வீரரான நித்தினிக்கு ‘விடை‘ கொடுக்கும் வகையிலும் போட்டியின் போது  சிறிய பாராட்டு விழாவும் நடத்தப்பட உள்ளது. சச்சின் இதுவரை சர்வதேச அளவில் ஒரு 2020 ஆட்டத்தில் மட்டுமே ஆடியுள்ளார். இளம் தலைமுறையினருக் கான ஆட்டம் என அவர் இதில் இருந்து விலகியே இருந்தார். நாளைய ஆட் டம் அவரை கவுரவிக்கும் வகையில் நடத்தப்படுவதால் அவர் நிச்சயம் ஆடுவார் என கூறப்படுகிறது. போட்டியை டென் கிரிக்கெட் நேரடி ஒலிபரப்பு செய்கிறது.
187
1/8/2011 5:15:15 PM
விளையாட்டு
உலககோப்பை கிரிக்கெட் போட்டி வாஸ், ஜெயசூர்யாவுக்கு ஆப்பு
கொழும்பு: உலககோப்பை கிரிக்கெட் போட்டி வருகிற பிப்ரவரி மாதம் 19ந்தேதி துவங்குகிறது. இந்த தொடருக்கான 30 பேர் கொண்ட உத்தேச அணியை கடந்த சில வாரங்களுக்கு முன் இலங்கை கிரிக்கெட் வாரியம் அறிவித்திருந்தது. இதில் மிகவும் சீனியர் வீரர்களான ஜெயசூர்யா, வாஸ் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர். நீண்ட நாட்களாக சர்வதேச போட்டிகளில் பங்கேற்காத ஜெயசூர்யா, வாஸ் ஆகியோர் உத்தேச அணியில் சேர்க்கப்பட்டதற்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியது.  இந்நிலையில் நேற்று இலங்கை வாரியம் உலககோப்பை போட்டிக்கான 15 பேர் கொண்ட இறுதி அணியை அறிவித்தது. இதில் ஜெயசூர்யா, வாஸ் ஆகியோருக்கு வாய்ப்பு கொடுக்கப்படவில்லை. கேப்டனாக சங்ககராவும், துணை கேப்டனாக ஜெயவர்த்தனேவும் நீடிக்கின்றனர். முரளீதரன் தனது இடத்தை தக்கவைத்துக்கொண்டுள்ளார். அதே வேளையில் இளம் சுழற்பந்து வீச்சாளர் சுரஜ் ரன்திவ்விற்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. அவருக்கு பதிலாக ரங்கனா ஹெராத் இடம் பிடித்துள்ளார். அணி விவரம்: சங்ககரா(கேப்டன்), ஜெயவர்த்தனே, தில்ஷான், தரங்கா, சமரவீரா, சமர சில்வா, கபுகேதரா, ஆங்லோ மேத்யூஸ், திஷரா பெரைரா, குலசேகரா, மலிங்கா, தில்காரா பெர்ணான்டோ, முரளீதரன், மென்டீஸ், ரங்கனா ஹெராத்.
188
1/8/2011 5:17:04 PM
விளையாட்டு
ஆஸி.யை வலுப்படுத்த வார்ன் 10 டிப்ஸ்
இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் தொடரை ஆஸ்திரேலிய அணி 1&3 என்ற கணக்கில் இழந்துள்ளது. மேலும் இந்த தொடரில் ஆஸி. வீரர்களின் செயல்பாடுகள் படுமோசமாக அமைந்தன. இந்நிலையில் அணியை வலுப்படுத்த மாஜி வீரர் வார்ன் 10 டிப்ஸ்கள் வழங்கியுள்ளார். அதன் விவரம்:சர்வதேச போட்டிகளில் ஆடும் வீரர்கள் கட்டாயம் உள்ளூர் போட்டிகளில் ஆடவேண்டும்.வீரர்களுக்கு ஓய்வு கொடுக்கக்கூடாது. அனைத்து ஆட்டங்களிலும் ஆடவேண்டும். ஒரே அணிக்கு எதிராக 7 ஆட்டங்களை நடத்தக்கூடாது. 5 ஒன்டே, மூன்று 20&20 ஆட்டங்களாக நடத்த வேண்டும். ஒவ்வொரு ஆட்டமும் முடிந்தவுடன் வீரர்கள் ஒன்றாக கூடி ஆலோசனை நடத்த வேண்டும். வீரர்களின் உடல் திறன், மன கட்டுப்பாட்டு ஆகியவற்றை மேம்படுத்த கூடுதல் நிபுணர்களை நியமிக்க வேண்டும். பந்து வீச்சாளர்கள் அதிக ரன்கள் போகிறதே என்று கவலைப்படாமல் விக்கெட்டுகள் வீழ்த்துவதிலேயே கவனம் செலுத்த வேண்டும். ஸ்டம்புகளை சிதறடிப்பதே இலக்காக இருக்க வேண்டும். பேட்ஸ்மேன்களுக்கு பயிற்சியின் போது பந்து வீச்சாளர்கள்தான் பந்து வீசவேண்டும். மெஷினை பயன்படுத்தக்கூடாது. அணி வீரர்களிடையே ஒருங்கிணைந்த செயல்பாட்டை கொண்டுவரவேண்டும். கிரிக்கெட் என்பது வீரர்களுக்கான வேலை கிடையாது நாட்டிற்காகத்தான் ஆடுகிறோம் என்ற உணர்வை வீரர்கள் மனதில் ஆழமாக ஏற்படுத்த வேண்டும்.சிறந்த அணியாகயிருக்க திறமையை மேலும் மேலும் வலுப்படுத்திக்கொள்ள வேண்டும்.
189
1/8/2011 5:27:26 PM
விளையாட்டு
நடால் தோல்வி
தோகா: தோகாவில் நடந்து வரும் டென்னிஸ் போட்டியின் அரையிறுதியில் நம்பர் ஒன் வீரரான ஸ்பெயின் ரபேல்நடால் 3&6, 2&6 என்ற நேர்செட்டில் ரஷ்யாவின் நிக்கோல டேவிடேன்கோவிடம் தோல்வி அடைந்தார். நடால் நேர்செட்டில் தோல்வி அடைந்ததால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.மற்றொரு அரையிறுதியில் சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் 6&3, 7&6 என்ற நேர் செட்டில் பிரான்சின் டிசோங்காவை வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறினார்.
190
1/8/2011 5:31:32 PM
விளையாட்டு
காய்கறி விற்கிறது இலங்கை ராணுவம்
கொழும்பு : இலங்கையில் காய்கறிகள் உட்பட அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்து விட்டது. இதனால் மக்கள் அதிருப்தியில் உள்ளனர். காய்கறிகளின் விலையை குறைக்க அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது இலங்கை அரசு. நாட்டின் பல பகுதிகளில் உள்ள ராணுவ முகாம்கள் மூலம் விவசாயிகளிடமிருந்து காய்கறிகளை நேரடியாக கொள்முதல் செய்ய உத்தரவிடப்பட்டது. விவசாயிகளின் இருப்பிடத்துக்கு சென்று, ராணுவ வாகனங்களில் காய்கறிகள் கொள்முதல் செய்கின்றனர் வீரர்கள்.  கொழும்பு மற்றும் சுற்றுப் புறப்பகுதியில் 14 காய்கறி கடைகளை திறந்துள்ளது ராணுவம். இங்கு, குறைந்த விலையில் காய்கறிகள் விற்பனை செய்யப்படுகின்றன.
192
1/8/2011 5:35:18 PM
உலகம்
இந்தியரின் திருமணத்தால் நியூசிலாந்தில் டிராபிக் ஜாம்
வெலிங்டன்: நம்நாட்டு மக்கள் வெளிநாடுகளுக்கு சென்றாலும், பாரம்பரியத்தை பின்பற்றுகின்றனர். சில நேரங்களில், இது மற்றவர்களுக்கு இடையூறாகவும் அமைந்து விடுகிறது. அமெரிக்காவின் சிகாகோ நகரில் வசிக்கும் இந்திய கோடீஸ்வரர் விக்ரம் ஆதித்ய குமார். இவருக்கும் நியூசிலாந்தில் பணியாற்றும் பெண் டாக்டர் பூஜாவுக்கும், ஆக்லாந்து பகுதியில் நேற்று திருமணம் நடந்தது. இதற்காக பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. ஓட்டல் ஒன்றில் இருந்து தொடங்கிய திருமண ஊர்வலம் ஆக்லாந்தின் பல்மோரல் ரோடு வழியாக சென்றது. 7 குதிரைகள் பூட்டப்பட்ட சாரட் வண்டியில் மாப்பிள்ளை பவனி வர, பஞ்சாப் இதை கலைஞர்களின் இன்னிசையுடன், உறவினர்கள் தங்கள் கார்களில் அணி வகுத்துச் சென்றனர். அப்பகுதியில் உள்ள இந்தியக் கோயிலில் சாமி கும்பிட்ட பின், ஊர்வலம் மீண்டும் ஓட்டலுக்கு திரும்பியது. இதை ஏராளமான மக்கள் வேடிக்கை பார்த்தனர். இந்த திருமண ஊர்வலத்தால் ஆக்லாந்தின் பல்மோரன் பேக் தெரு பகுதியில் போக்குவரத்து பாதித்தது.
193
1/8/2011 5:37:19 PM
உலகம்
ஆப்கனில் மனிதகுண்டு தாக்குதல்: 17 பேர் பலி
காந்தகார்: ஆப்கானிஸ்தானின் காந்தகார் அருகே  தீவிரவாதிகள் நேற்று தற்கொலைப்படை தாக்குதலில் ஈடுபட்டனர். போலீஸ் கமாண்டரை குறிவைத்து இந்த மனித குண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. வெடிகுண்டுகளை உடலில் கட்டிக் கொண்டு வந்த தீவிரவாதி, பொது இடத்தில் வெடிக்கச் செய்ததால், போலீஸ் அதிகாரி உள்பட 17 பேர் பலியாயினர், 21 பேர் படுகாயம் அடைந்தனர். இச்சம்பவத்துக்கு யாரும் உடனடியாக பொறுப்பேற்கவில்லை. ஆப்கானிஸ்தானில் அமெரிக்க வீரர்கள் 97 ஆயிரம் பேரும், மற்ற நாடுகளைச் சேர்ந்த 45 ஆயிரம் வீரர்களும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்படியிருந்தும் வெடிகுண்டு தாக்குதல் சம்பவங்களை தடுக்க முடியவில்லை. இந்நிலையில் ஆப்கானிஸ்தானுக்கு மேலும் 1,400 வீரர்களை அனுப்ப அமெரிக்கா உத்தரவிட்டுள்ளது. தீவிரவாதிகளுடன் கடந்த ஆண்டு நடந்த சண்டையில் நேட்டோ வீரர்கள் 711 பேர் பலியாயினர். உயிர்பலியை குறைக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் நேட்டோ படை எடுத்து வருகிறது. போர்க்களத்தில் துப்பாக்கியுடன் கூடிய ரோபோக்களை பயன்படுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. தீவிரவாதிகளின் மறைவிடங்களை தகர்க்க ஆளில்லா போர் விமானம், ட்ரோன் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் தீவிரவாதிகளின் நடமாட்டத்தை கண்காணிக்க ரேடார் பொருத்தப்பட்ட Ôஅவாக்ஸ்Õ விமானங்களை பயன்படுத்தவும் நேட்டோ படை நேற்று முடிவு செய்தது. இதற்காக இரண்டு அவாக்ஸ் போர் விமானங்கள் ஆப்கானிஸ்தானுக்கு அனுப்பப்படுகின்றன. மூன்று மாதங்களுக்கு இந்த விமானங்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்படும்.
194
1/8/2011 5:41:23 PM
சினிமா(ரீல்மா)
ஹாலிவுட் டெக்னீஷியன்கள் சம்பளம் அதிகம்
ஆஸ்திரேலியாவில் வாழும் தென்னிந்தியர் பாரதி ரெட்டி தயாரிக்கும் படம் ‘நியூட்டன்ஸ் தேர்ட் லா’. இதுபற்றி இயக்குனர் ஸ்டான்லி ஜோசப் கூறியது: முதன்முறையாக இந்தியர்கள் ஆஸ்திரேலியாவில் உருவாக்கும் படம். தீவிரவாதம், போதை தடுப்பு பற்றிய கதை. 15 கோடி ரூபாயில் தயாரிக்கப்பட்டுள்ளது. 100 நிமிடம் ஓடும். இதில் கிராபிக்ஸ் காட்சிகளோ, ஆபாச காட்சிகளோ கிடையாது. ஹாலிவுட் நடிகர்கள் மார்க் டங்கன், மைக் டங்கன், அமென்டா, நீல் ஹார்டன் நடித்துள்ளனர். ‘நியூட்டன்ஸ் தேர்டு லா’ என்றால் அதுபற்றி ஆஸ்திரேலியாவில் உள்ளவர்களுக்கு புரியவில்லை. ஒவ்வொரு வினைக்கும் எதிர் வினை உண்டு என்பதை இப்படம் சொல்வதால் இப்பெயர் வைக்கப்பட்டது. 100 நிமிடம் ஓடும் படத்துக்கு 15 கோடி ரூபாய் செலவா? என்கிறார்கள். இதில் அதிகபட்ச செலவு தொழில் நுட்ப கலைஞர்கள், நடிகர்களுக்குதான் சென்றது. ஒரு இடத்துக்குலொகே ஷன் பார்க்க டெக்னீஷியனை அழைத்துச் சென்றால் கூட அதற்கு பெருந்தொகை சம்பளமாக கொடுத்தாக வேண்டும். கூடுதல் நேரம் பணியாற்றினால் சம்பளமும் டபுளாகிவிடும். இதனால் ஹாலிவுட் படம் என்பது பெரும்பாலான இந்தியர்களுக்கு கனவாக இருக்கிறது. தமிழ், இந்தி, கன்னடம், தெலுங்கு, மலையாளம் ஆகிய 5 மொழிகளில் இப்படம் ரிலீஸ் ஆகிறது.
195
1/8/2011 5:43:21 PM
சினிமா(ரீல்மா)
நடிப்பு ரொம்ப கஷ்டம்
‘வில்லாளன்’ ஹீரோ வெற்றிவேல் கூறியது: நடிக்க வேண்டும் என்பதைவிட டைரக்ட்டு செய்வதுதான் ஆசை. ஆனால் எனது மாமா ஜெய் ஷம்பத் கூறும்போது போலீஸ் அதிகாரிக்கு பொருத்தமாக இருப்பீர்கள் என்றபிறகு நடிக்க சம்மதித்தேன். பவர் பாண்டியன் மாஸ்டரிடம் ஸ்டண்ட் பயிற்சி பெற்றேன். கேமரா முன்நிற்குமபோது முதலில் நடுக்கம் இருந்தது. பிறகு தெளிந்துவிட்டது. நடிப்பது சாதாரண விஷயம் இல்லை. அது தனி கலை. அடுத்து சூரி இயக்கும் ஒரு படம், ஜெய் முரளி இயக்கும் படம் என 2 படங்களில் நடிக்க உள்ளேன். காதல் காட்சியில் நடிப்பதும் ரொம்ப கடினம்.
196
1/8/2011 5:45:57 PM
சினிமா(ரீல்மா)
கண்டிஷன் ஹீரோயின் கடுப்பானார் நடிகை
நல்லகாலம் பொறக்குது...நல்லகாலம் பொறக்குது...முன்னாள் பாலிவுட் பியூட்டி ஹேம நடிகையும், மூணுஷா நடிகையும் சமீபத்துல ஒரு விழாவுல கலந்துக்கிட்டாங்களாம்... கலந்துக்கிட்டாங்களாம்... சொன்ன நேரத்துக்கு ஹேம நடிகை வந்துட்டாராம். மணிக்கணக்குல காத்திருந்தும் மூணுஷா நடிகை வராததால கடுப்பாயிட்டாராம்... பங்ஷன் நடத்தினவங்களை கூப்பிட்டு, ‘அந்த நடிகைக்காக என்னை ஏன் இப்படி வெயிட் பண்ண வைக்கிறீங்க. நிகழ்ச்சியை தொடங்குறீங்களா, நான் கிளம்பவா?’ன்னு ஹேம நடிகை உர்ரானாராம்... உர்ரானாராம்... பிறகு மூணுஷா வராமலேயே, விழா தொடங்குச்சாம்... தொடங்குச்சாம்...ஒன்பதுதாரா நடிகையோட கல்யாண மேட்டர் கிளியராகிட்டதால, சந்தோஷத்துல இருக்காராம்... இருக்காராம்... மலையாள தேசத்துல தாடிக்கார டான்ஸ்காரர் வாங்கிக்கொடுத்திருக்கிற தனி ப்ளாட்லதான் நடிகை தங்கி இருக்கிறாராம்... வீட்டுக்காரங்க அவங்க வீட்டுக்கு கூப்பிட்டும் நடிகை போகலையாம்... ‘நான் இங்கயே இருக்கேன், என்னைய தொந்தரவு பண்ணாதீங்க’ன்னு நடிகை கண்டிஷனா சொல்லிட்டாராம்... சொல்லிட்டாராம்...காதலில் விழுந்த சுனேன நடிகைக்கு தமிழ்ல ஒரே ஒரு படம்தான் இருக்குது... இருக்குது... எந்த தயாரிப்பாவது தங்களோட படத்துக்கு நடிகையை தொடர்புகொள்ள நினைச்சா, அவரோட தெலுங்கு மானேஜரு இன்டரஸ்ட் காட்ட மாட்டேங்கிறாராம்... மாட்டேங்கிறாராம்... நடிகை தெலுங்குல பிசி, மலையாளத்துல பிசின்னு சொல்லியே தட்டிக்கழிக்கிறாராம்... காரணம் என்னவா இருக்கும்னு கோடம்பாக்கம் தலையை பிராண்டிக்கிட்டு இருக்குதாம்... இருக்குதாம்...
197
1/8/2011 5:49:47 PM
சினிமா(ரீல்மா)
கிளிப்பிங்ஸ்
மும்பை அருகே அடர்ந்த காட்டுப்பகுதியில் ஜீப்பில் சென்ற அசின், புலி மற்றும் காட்டு விலங்குகளை அருகில் சென்று பார்த்தார்.சுசீந்திரன் இயக்கும் புதிய படத்தில் இரட்டை வேடத்தில் நடிக்கிறார் விக்ரம். இதற்காக பிரத்யேக பயிற்சியில் ஈடுபட்டிருக்கிறார்.ரஜினியை இந்தி படத்தில் நடிக்க கேட்டு அவருக்கு ஸ்கிரிப்ட்டை அனுப்பி இருக்கிறாராம் டைரக்டர் ரோஹித் ஷெட்டி.விழாக்களுக்கு செல்லும்போது ஆடை விஷயத்தில் கவனம் செலுத்தாமல் இருந்த வித்யா பாலன் தற்போது தனது ஆடைகளை வடிவமைக்க ஷப்யாசாசி முகர்ஜி என்ற டிசைனரை நியமித்திருக்கிறார்.‘இதுவரை நடித்த படங்களில் ‘அங்காடி தெரு’ என் வாழ்க்கையில் மைல்கல்லாக அமைந்த படம்’ என்கிறார் அஞ்சலி.‘திருமங்கலம் பேருந்து நிலையம்’ பட ஹீரோயின் வனிஷ்கா குஜராத்தை சேர்ந்தவர்.
198
1/8/2011 5:51:20 PM
ஸ்டேட் எக்ஸ்பிரஸ்
பீகார் துணை முதல்வர் விலக காங்கிரஸ் வலியுறுத்தல்
பாட்னா, - பீகார் மாநிலம் புர்னியா தொகுதி பா.ஜ. எம்எல்ஏ ராஜ்கிஷோர்கேசரி பெண் ஆசிரியர் ஒருவரால் கத்தியால் குத்திக் கொல்லப்பட்டார். கொலை செய்யப்பட்ட எம்எல்ஏ ஒரு சாத்தான் என்றும், தொடர்ந்து தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததால் குத்திக் கொன்றதாகவும் கைது செய்யப்பட்ட பெண் ஆசிரியர் ரூபம் பதக் போலீசில் வாக்குமூலம் அளித்தார். இது குறித்து சிபிஐ விசாரிக்க வேண்டும் என ரூபம் பதக் குடும்பத்தார் கோரிக்கை வைத்துள்ளனர். ஆனால் இந்தக் குற்றச்சாட்டை மாநில துணை முதல்வரும் பா.ஜ. தலைவருமான எஸ்.கே. மறுத்தார். ராஜ்கிஷோர்கேசரி குற்றமற்றவர் என கருத்து தெரிவித்தார். இந்த வழக்கில் சிபிஐ விசாரணை தேவையில்லை என்றும் கூறினார். போலீஸ் விசாரணை நடைபெற்று வரும் நிலையில் அதனை திசை திருப்பும் வகையில் துணை முதல்வர் பேசியிருப்பதற்கு மாநில காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. பெண் ஆசிரியரின் புகாரை மூடி மறைக்கப் பார்க்கும் துணை முதல்வரை உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளது. இதே கோரிக்கையை பல்வேறு பெண் அமைப்புகளும் வலியுறுத்தியுள்ளன
199
1/8/2011 5:51:37 PM
ஸ்டேட் எக்ஸ்பிரஸ்
ஆடைகளை அவிழ்த்து சோதனை பள்ளி மாணவி தற்கொலை
தியோகர், - ஒரிசா மாநிலம் தியோகர் மாவட்டம் ரியாமல் பகுதியில் குந்தைகோலா பெண்கள் உயர் நிலைப் பள்ளி உள்ளது. இந்தப் பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வந்த சானி சாகு என்ற மாணவி சில தினங்களுக்கு முன் தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கான காரணத்தை வெளியே கூறாமல் அவர்களது பெற்றோர்களும் மகளின் உடலை புதைத்து விட்டனர். இந்நிலையில் பள்ளியில் படித்த மாணவி ஒருவரின் காணாமல் போன 110 ரூபாயை கண்டுபிடிப்பதற்காக வகுப்பறையில் சக மாணவிகள் முன்னிலையில் சானி சாகுவின் ஆடைகளை அவிழ்த்து சோதனை செய்ததே தற்கொலைக்கு காரணம் என்பது தெரியவந்தது. இதை தொடர்ந்து பள்ளியின் தலைமை ஆசிரியர், சோதனை செய்த பெண் ஆசிரியர் மற்றும் தற்கொலையை மூடி மறைத்து மாணவியின் பெற்றோர் ஆகிய 4 பேரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
200
1/8/2011 5:52:30 PM
ஸ்டேட் எக்ஸ்பிரஸ்
உ.பி.யில் கடுங்குளிருக்கு 62 பேர் பரிதாப சாவு
லக்னோ - வடமாநிலங்களில் கடந்த இரண்டு வாரமாக கடுங்குளிர் நிலவி வருகிறது. பல பகுதிகளில் ஜீரோ டிகிரிக்கும் குறைவாக குளிர் வாட்டி எடுத்து வருகிறது. இதன் காரணமாக டெல்லி, அரியானா உள்ளிட்ட சில மாநிலங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சில தினங்களுக்கு இந்த நிலை நீடிக்கும் என வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்தனர். உ.பி.யில் நேற்று மட்டும் 4 பேர் கடுங்குளிர் காரணமாக உயிரிழந்தனர். மதுரா மாவட்டத்தில் இரண்டு பேரும், பரேலி மற்றம் பாராபங்கி மாவட்டத்தில் தலா ஒருவரும் உயிரிழந்ததாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. இவர்களுடன் சேர்த்து உ.பி.யில் இந்த குளிர்சீசனில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 62 ஆக உயர்ந்துள்ளது. லக்னோவில் குறைந்த பட்ச வெப்பநிலை 4 டிகிரி செல்சியசாக பதிவாகியிருந்தது. பெரும்பாலான பகுதிகளில் பகல் நேரங்களிலும் கடும் பனி மூட்டம் காணப்பட்டது.
201
1/8/2011 5:52:53 PM
ஸ்டேட் எக்ஸ்பிரஸ்
அரசு விழாவில் தீக்குளிப்பேன் பா.ஜ.அமைச்சர் மிரட்டல்
பதின்டா, - பஞ்சாப் மாநிலத்தில் பா.ஜ. மற்றும் அகாலி தளம் கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது. பதின்டா மாவட்டத்தில் சாலை பாதுகாப்பு தொடர்பாக அரசு விழா நேற்று நடைபெற்றது. இதில் பா.ஜ.வைச் சேர்ந்த போக்குவரத்து அமைச்சர் மோகன்லால் கலந்து கொண்டார். போக்குவரத்து போலீசார் பெருமளவில் கலந்து கொண்டனர். இந்த விழாவில் பதிண்டா தொகுதி எம்பியும் மாநில துணை முதல்வரின் மனைவியிமான ஹர்சிம்ரத் கவுரும் கலந்து கொண்டார். இவர் பேசி முடித்துவிட்டு கிளம்பியதும் விழா அரங்கமே காலியானது. இதனால் எரிச்சல் அடைந்த அமைச்சர் மோகன்லால், போலீஸ் அதிகாரிகள் விழா அரங்குக்கு திரும்ப வேண்டும் என மைக்கில் கோரிக்கை விடுத்தார். இதை யாரும் மதிக்கவில்லை. இதை தொடர்ந்து மேடையிலிருந்த படியே மாவட்ட போலீஸ் அதிகாரிக்கு போன் செய்த அமைச்சர், எனது துறை தொடர்பான விழாவில் என்னை அவமதிப்பதா என கேள்வி எழுப்பியதுடன், எஸ்பி அலுவலகம் முன்பு தீக்குளிப்பேன் என்றும் மிரட்டினார். மைக்கை ஆப் செய்யாமல் அமைச்சர் பேசியது கூடியிருந்த பத்திரிகையாளர் மற்றும் ஆட்டோ டிரைவர்களுக்கு கேட்டது. இதனால் சிறிது நேரம் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
202
1/8/2011 5:53:04 PM
இந்தியா
மேற்கு வங்க படுகொலை பலி எண்ணிக்கை 8 ஆக உயர்வு கவர்னர் கண்டனம்
கொல்கத்தா: மேற்குவங்க மாநிலம் லால்கர் மாவட்டம் நேதாய் கிராமத்தில், மார்க்சிஸ்ட் தொண்டர்கள் நேற்று நடத்திய துப்பாக்கி சூட்டில், கிராம மக்கள் 8 பேர் பலியாயினர். மேற்குவங்க மாநிலத்தின் லால்கர் மாவட்டம் கடந்த சில ஆண்டுகளாக மாவோயிஸ்ட்களின் கட்டுப்பாட்டில் இருந்தது. கடந்த ஆண்டு மத்தியப்படை நடத்திய வேட்டையில், லால்கர் பகுதியில் இருந்து மாவோயிஸ்ட்கள் விரட்டப்பட்டனர். இந்நிலையில் நேதாய் கிராமத்தில் மார்க்சிஸ்ட் தொண்டர்கள் ஒரு வீட்டில் முகாம் அமைத்து மீண்டும் தீவிரவாத பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். வீட்டுக்கு ஒரு ஆண் துப்பாக்கி சுடும் பயிற்சி அல்லது இரவுநேர ரோந்து பணிக்கு வரவேண்டும், முகாமில் வீட்டு வேலை செய்வதற்கு பெண்கள் வரவேண்டும் என அப்பகுதி மக்களுக்கு மார்க்சிஸ்ட் தொண்டர்கள் உத்தரவு பிறப்பித்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் 250 பேர் ஒன்றாக திரண்டு, மார்க்சிஸ்ட் தொண்டர்கள் தங்கியிருந்த முகாம் முன் கோஷமிட்டனர். அப்போது வெளியேவந்த மார்க்சிஸ்ட் தொண்டர்கள், கிராம மக்கள் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் 6 பேர் பலியாயினர். பலருக்கு குண்டுக்காயம் ஏற்பட்டது.  இவர்களில் இரண்டு பேர் சிகிச்சை பலனின்றி இன்று காலை இறந்தனர். இந்த படுகொலை சம்பவத்தையடுத்து, முதல்வர் புத்ததேவ் பட்டாச்சாரியை டெல்லிக்கு வரும்படி அழைத்துள்ளார் உள்துறை அமைச்சர் சிதம்பரம். இச்சம்பவம் குறித்து மேற்கு வங்க கவர்னர் எம்.கே.நாராயணன் விடுத்துள்ள அறிக்கையில், ÔÔமேற்கு வங்கத்துக்கு நேற்று சோகமான மற்றும் வெட்கமான நாள். இது போன்ற வன்முறையை எந்த அரசும் ஏற்றுக்கொள்ளாது. இந்த படுகொலையில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் மீது அரசு கடும் நடவடிக்கை எடுத்து வன்முறையை ஒடுக்க வேண்டும்ÕÕ என குறிப்பிட்டுள்ளார்.
203
1/8/2011 5:56:06 PM
இந்தியா
நில ஒதுக்கீடு விவகாரத்தில் சிறப்பு அதிகாரம் பயன்படுத்த வேண்டாம்
புதுடெல்லி: அரசு நிலங்கள் ஒதுக்கீடு விவகாரத்தில் தங்களுக்குள்ள சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்த வேண்டாம் என காங்கிரஸ் ஆட்சி செய்யும் மாநிலம் மற்றும் யூனியன் பிரதேச முதல்வர்களுக்கு சோனியாகாந்தி கடிதம் எழுதியுள்ளார். மும்பை கொலபா பகுதியில் ராணுவ வீரர்களுக்காக கட்டப்பட்ட ஆதர்ஷ் அடுக்குமாடி குடியிருப்பை அரசு அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் அபகரித்துக் கொண்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த குடியிருப்பில் தனது மாமியாருக்கும் மனைவியின் சகோதரிக்கும் வீடு ஒதுக்கிய காரணத்தால் மகாராஷ்டிர முதல்வர் அசோக் சவான் பதவியை ராஜினாமா செய்ய நேரிட்டது.கர்நாடகாவில் அரசு நிலத்தை மகன்களுக்கு ஒதுக்கியதாக முதல்வர் எடியூரப்பா மீது குற்றச்சாட்டு எழுந்தது. நிலங்களை திரும்ப ஒப்படைப்பதாக எடியூரப்பா அறிவித்தார். கர்நாடக அரசியலில் எடியூரப்பாவுக்கு மாற்றாக வேறு வலுவான தலைவர் இல்லாத காரணத்தால் அவரது பதவி தப்பியது. இந்நிலையில் அரசு நிலங்கள் ஒதுக்கீடு விவகாரத்தில் முதல்வர்களுக்கு உள்ள சிறப்பு உரிமையை பயன்படுத்த வேண்டாம் என காங்கிரஸ் ஆட்சி செய்யும் மாநிலம் மற்றும் யூனியன் பிரதேச முதல்வர்களுக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா கடிதம் எழுதியுள்ளார். கடந்த மாதம் டெல்லியில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் இதே கோரிக்கையை சோனியா முன்வைத்தார். அதை நினைவூட்டும் வகையில் தற்போது கடிதம் எழுதியிருப்பதாக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்தன. காங்கிரஸ் முதல்வர்களை தொடர்ந்து மத்திய அமைச்சர்களுக்கும் இது போன்ற உத்தரவு பிறப்பிக்கப்படலாம் எனவும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
204
1/8/2011 5:59:18 PM
தமிழகம்
கடந்த ஆண்டில் 40 ஆயிரம் பேரை காப்பாற்றிய 108 ஆம்புலன்ஸ் சேவை
சென்னை: தமிழகத்தில் கடந்த ஒரு வாரமாக சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு வாரமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. சென்னை பல்கலைக்கழக நாட்டு நலப்பணி திட்டம் சார்பில், நேற்று சாலை பாதுகாப்பு விழா நடத்தப்பட்டது. பாதுகாப்பு அடங்கிய புத்தகம் மற்றும் குறும்படங்களை போக்குவரத்து ஆணையர் ராஜாராம் வெளியிட, சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர் திருவாசகம் பெற்றுகொண்டார். பின் போக்குவரத்து ஆணையர் ராஜாராம் பேசும்போது, ÔÔநாட்டில் அதிக வாகனங்கள் உள்ள முதல் மாநிலமாக மகாராஷ்டிரா, 2வது மாநிலமாக தமிழகம் உள்ளது. அரசால் இயக்கப்படும் இலவச ஆம்புலன்ஸ் 108 மூலம் கடந்த ஆண்டில் மட்டும் 40,000 பேரின் உயிர் பாதுகாக்கப்பட்டுள்ளது. ஆண்டுக்கு உலகில் சாலை விபத்துகளால் 12 லட்சம் பேர் இறக்கின்றனர். நம் நாட்டில் ஆண்டு ஒன்றுக்கு ஒன்றரை லட்சம் பேர் சாலை விபத்துகளில் இறக்கின்றனர். 50 லட்சம் பேர் விபத்துகளில் காயமடைகின்றனர். எனவே சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது அவசியமாகிறதுÕÕ என்றார்.
205
1/8/2011 6:02:22 PM
தமிழகம்
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு : சென்னை&தூத்துக்குடி சிறப்பு ரயில்
சென்னை: தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கை: பொங்கல் பண்டிகைய முன்னிட்டு, சென்னை எழும்பூரில் இருந்து தூத்துக்குடிக்கு 12ம் தேதி சிறப்பு ரயில் (06101) இயக்கப்படுகிறது. இந்த ரயில் எழும்பூரில் இருந்து இரவு 10.45 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் மதியம் 12.30 மணிக்கு தூத்துக்குடியை சென்றடையும். தூத்துக்குடியில் இருந்து 13ம் தேதி மதியம் 3.45 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (06102), மறுநாள் காலை 6.05 மணிக்கு எழும்பூரை வந்தடையும். இந்த ரயில் தாம்பரம், செங்கல்பட்டு, விழுப்புரம், திருப்பாதிரிப்பூலியூர், சிதம்பரம், சீர்காழி, மயிலாடுதுறை, கும்பகோணம், தஞ்சாவூர், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, வாஞ்சிமணியாச்சி, மீளவிட்டான் ஆகிய ரயில் நிலையங்களில் மட்டும் நின்று செல்லும். இந்த ரயிலுக்கான முன்பதிவு நாளை காலை தொடங்குகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
206
1/8/2011 6:11:03 PM
உலகம்
பாதுகாப்பான உள்ளாடை கண்டுபிடிப்பு பாடி ஸ்கேனிங் வெட்கம் வேண்டாம்
வாஷிங்டன், -வளர்ந்த நாடுகளின் விமான, ரயில் நிலையங்களில் ‘ஃபுல் பாடி ஸ்கேனிங்’ முறை அமலில் இருக்கிறது. ஆபத்தான, தடை செய்யப்பட்ட பொருள் ஏதாவது உடலில் மறைத்து வைக்கப்பட்டிருக்கிறதா என்று 15 வினாடி ஸ்கேனில் தெரிந்துவிடும். உடலை தொட்டுத் தடவி சோதனையிட அவசியம் இல்லை என்பதால் இந்த முறைக்கு வரவேற்பு இருக்கிறது. எதிர்ப்பும் இல்லாமல் இல்லை. ‘ஸ்கேனிங் என்ற பெயரில் மொத்த உடம்பையும் உரித்த கோழியாய் பார்க்கிறார்கள். இது மனித உரிமை மீறல்’ என்கின்றனர் எதிர்ப்பாளர்கள். முக்கியமாக பெண்கள் இதை தர்மசங்கடமாக உணர்கின்றனர். இந்த நிலையில், முழு உடல் பரிசோதனையின் போது அந்தரங்க உறுப்புகளை மறைக்க ஏதுவாக புதிய உள்ளாடைகள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன. அமெரிக்காவை சேர்ந்த மார்க் கேரி என்பவர் விமான பயணிகளுக்காக பிரத்யேகமாக இதை உருவாக்கியுள்ளார். ஆடைகளில் சிறப்பு சாயத்தை பயன்படுத்துவதால் அந்தரங்க பகுதிகளை ஸ்கேனிங்கில் தெரியாமல் மறைத்துக் கொள்ள முடியும் என்கிறார் மார்க். இதற்காக சிறப்பு வகை சாயம் பயன்படுத்தி இருக்கிறார். டீ&ஷர்ட்களும் தயாரித்துள்ளார். ஆபத்தான பொருட்களை இதற்குள் மறைத்து எடுத்துச் செல்லமாட்டார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது. மிகமிக மெலிதானது என்பதால் அதற்கு வாய்ப்பில்லை என்கிறார் மார்க். இறுதிக்கட்ட ஒப்புதலுக்காக காத்திருக்கிறது ஸ்பெஷல் உள்ளாடை.
207
1/8/2011 6:11:32 PM
உலகம்
ஜப்பானில் உலக சாதனை 342 கிலோ ராட்சத மீன் ரூ1.75 கோடி
டோக்கியோ, - உலகம் முழுவதும் மீன் பிரியர்கள் அதிகம். இதில் ஜப்பானியர்கள் ஆண்டொன்றுக்கு 45 ஆயிரம் டன் மீன்களை உணவாக கொள்கின்றனர். அங்கு அதிக அளவில் மீன்கள் பிடிக்கப்படுவதால் அரசு அவ்வப்போது மீன் பிடிக்க தடை விதிப்பது வழக்கம். மீன்களின் இனப்பெருக்க காலத்தில் இத்தகைய தடைகள் மேலும் நீட்டிக்கப்படுவதும் வாடிக்கை. அழிவின் விளிம்பில் இருக்கும் ஆழ்கடல் மீன்களைப் பிடிக்க அங்கு நிரந்தர தடையும் அமலில் உள்ளது. இந்நிலையில் ஜப்பானின் வடபகுதியில் அமைந்துள்ள ஆழ்கடல் தீவான ஹொகைடோ அருகில் ராட்சத மீன் ஒன்று பிடிபட்டது. 342 கிலோ எடை கொண்ட இந்த ராட்சத மீன், 396 ஆயிரம் அமெரிக்க டாலருக்கு (ரூ.1 கோடியே 75 லட்சம்) விற்று உலக சாதனை படைத்துள்ளது. மீன் விற்பனையில் முந்தைய சாதனையை இது முறியடித்துள்ளது. இந்த ஆண்டின் முதல் ஏலத்தில் இந்த சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது.கடந்த 2001&ம் ஆண்டு 202 கிலோ எடையில் பிடிபட்ட ராட்சத மீன் 20.2 மில்லியன் யென்னுக்கு விற்பனையானது இதுவரை சாதனையாக இருந்தது. தற்போதைய விற்பனை இந்த சாதனையை முறியடித்துள்ளது. இதன் விற்பனை விலை எங்களுக்கு மிகுந்த ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளது என்கின்றனர் அப்பகுதி மீனவர்கள். ஆழ்கடல் பகுதியில் மட்டுமே இத்தகைய மீன்கள் இருக்கும் என்று கடல்வாழ் உயிரின ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ள னர். இந்த வகை மீன்களை பிடிக்க ஜப்பானில் தடை உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த வகை மீன்கள் அழிந்து வரும் இனமாக அடையாளம் காணப்பட்டதால் இத்தகைய கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டு அமலில் உள்ளது.
208
1/10/2011 10:49:53 AM
மர்மம்
தொடரும் மரணம் மிரளும் கிராமம்
விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை பேரூராட்சி உ.கீரனூர் கிராமத்தில் உள்ளது முத்துமாரியம்மன் கோயில். அப்பகுதி கிராம மக்களுக்கு இந்த மாரியம்மன்தான் கண்கண்ட தெய்வம். சர்வ சக்தி கொண்ட தெய்வமாக நம்புவதால், இக்கோயில் அப்பகுதியில் பிரசித்தமானது. இந்த கோயிலில் பூசாரியாக இருந்தவர் தண்டபாணி. அம்மன் மீது அளவு கடந்த பக்தி கொண்டவர். கோயிலே கதியென்று இருப்பார். இந்நிலையில் கடந்த மாதம் அவருக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இருந்தாலும் கோயிலுக்கு வருவதையும், பூஜைகள் செய்வதையும் குறைக்கவில்லை. ஒருநாள் காலை நேரத்தில் கோயிலுக்கு உள்ளே அமர்ந்திருந்த தண்டபாணி வெகுநேரம் எழுந்திருக்கவில்லை. நீண்ட நேரம் அப்படியே அசையாமல் உட்கார்ந்திருப்பதை பார்த்து, அருகில் சென்ற பொதுமக்களுக்கு அதிர்ச்சி. தண்டபாணி இறந்திருந்தார். பின்னர் அவர் உடல் முறைப்படி அடக்கம் செய்யப்பட்டது. அதன்பிறகு நடந்த தொடர் மரணங்கள் தான் கிராம மக்களை பயத்தில் உறைய வைத்துள்ளது.தண்டபாணியின் இறப்பை தொடர்ந்து நிகழ்ந்த 5 அடுத்தடுத்த சாவுகள் பீதியை கிளப்பின. இறந்தவர்களில் இளைஞர்களும் இருந்ததால், கிராம மக்களால் இதை சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியவில்லை. ‘அம்மன் மீது பயபக்தியாய் இருந்த தண்டபாணி கோயிலிலேயே இறந்தது, சாமிக்கு வைச்ச குறையாலதான். அதன் தொடர்ச்சியா தான் நிறைய பேர் சாகறாங்க‘ என்று ஊர் பெரியவர்கள் கூறியதை கிராமமே ஆமோதித்தது. அதோடு அம்மன் அருள் வந்து ஆடிய பெண்கள் ‘அம்மன் குத்தம் ஏற்பட்டுடுச்சு..அம்மன யாரோ கட்டி ச்சுட்டுட்டாங்க....அம்மன் கோயில விட்டே வெளியேறிட்டா.....இன்னும் மரணங்கள் தொடரும்’ என ஆளாளுக்கு ஒவ்வொன்று சொல்ல பீதியில் உறைந்தனர் கீரனூர் கிராமவாசிகள். பரிகார பூஜைகள் செய்தும் மரணங்கள் தொடர்கதையானதால் பயம் அவர்களை ஆட்டி படைத்தது.   இரவு நேரங்களில் வெளியே வராமல் பெண்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கினார்கள். சாயங்காலம் விளக்கேத்திய பிறகு, ஊரே வெறிச்சோடியது. பின்னர் மாரியம்மன் கோயிலில் ஒரு வாரம் கும்பாபிஷேம், பால் குடம் மற்றும் பரிகார பூஜைகள் செய்தார்கள். அதன்பிறகு, இப்போதுதான் சற்று நிம்மதியாக இருக்கிறார்கள். உளுந்தூர்பேட்டையில், இப்படி என்றால் பக்கத்து ஊரான பண்ருட்டி லட்சுமி நாராயணபுரத்தில், 10 பேர் தொடர்ந்து இறந்துள்ள சம்பவம் அந்த கிராம மக்களை பீதியடைய செய்துள்ளது. அந்த மாரியம்மன் கோயில், இந்த ஊருக்கும் பொதுவானது என்பதால் இவர்களும் அச்சப்பட்டனர். பூஜைகளுக்கு பிறகு நிலைமை சரியாக, இப்போது சிறிய நிம்மதி. இருந்தாலும் தொடர்மரணங்கள் தாக்கம் கிராமங்களை விட்டு முழுதாக மறையவில்லை.
209
1/10/2011 12:07:09 PM
வேலைவாய்ப்பு
மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் எஸ்ஐ, ஹெட்& கான்ஸ்டபிள் பணியிடங்கள்
மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் உதவி சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் தலைமை காவலர் பணியிடங்களை நிரப்ப ஆண்கள் மற்றும் பெண்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.1. அசிஸ்டென்ட் சப்&இன்ஸ்பெக்டர் (ஸ்டெனோகிராபர்):மொத்த இடங்கள்-103 (பொது-38, ஓபிசி-27, எஸ்சி-22, எஸ்டி-16). சம்பளம்: ரூ.5,200-ரூ.20,200 மற்றும் தர ஊதியம் ரூ. 2,800. கல்வித்தகுதி: பிளஸ் 2 தேர்ச்சி. ஆங்கிலம்/ஹிந்தி சுருக்கெழுத்தில் நிமிடத்திற்கு 80 வார்த்தைகள் வேகத்தில் 10 நிமிடங்கள் டிக்டேஷன் எழுத வேண்டும். பின்னர் ஆங்கிய சுருக்கெழுத்தை 50 நிமிடங்களிலும், ஹிந்தி சுருக்கெழுத்தை 65 நிமிடங்களிலும் முழுமையாக எழுத வேண்டும்.2. ஹெட் கான்ஸ்டபிள் (மினிஸ்டரியல்): மொத்த இடங்கள்:957 (பொது-238, ஓபிசி-138, எஸ்சி-72, எஸ்டி-151).துறை சார்ந்தவர்களுக்கு: மொத்தம்-297 (பொது-115, ஓபிசி-88, எஸ்சி-49, எஸ்டி-27).முன்னாள் ராணுவத்தினருக்கு: மொத்தம்-79 (பொது-27, ஓபிசி-29, எஸ்சி-16, எஸ்டி-7). சம்பளம்: ரூ.5,200& ரூ.20,200 மற்றும் தர ஊதியம் ரூ.2,400.கல்வித்தகுதி: பிளஸ் 2 தேர்ச்சி. கம்ப்யூட்டர் டைப்பிங்கில் ஆங்கிலத்தில் நிமிடத்திற்கு 35 வார்த்தைகள் (எஸ்சி, எஸ்டியினருக்கு 30 வார்த்தைகள்) அல்லது ஹிந்தி டைப்பிங்கில் நிமிடத்திற்கு 30 வார்த்தைகள் தட்டச்சு செய்யும் வேகம் பெற்றிருக்க வேண்டும். தட்டச்சு செய்வதற்கு கம்ப்யூட்டர் வழங்கப்படும்.உடற்தகுதி: உயரம் 165 செ.மீ., எஸ்டி பிரிவினருக்கு 162.5 செ.மீ. மார்பளவு 77-82 செ.மீ., எஸ்டி பிரிவினருக்கு 76-81 செ.மீ. உயரம் மற்றும் வயதிற்கேற்ப எடை இருக்க வேண்டும்.பெண்கள்: உயரம் 155 செ.மீ. எஸ்டியினருக்கு 154 செ.மீ. வயது: 16.11.2010ன்படி 18 லிருந்து 25க்குள். இடஒதுக்கீடு பிரிவினருக்கு வயது வரம்பில் தளர்வு உண்டு.உடல்தகுதி, எழுத்துத்தேர்வு, தட்டச்சு, சுருக்கெழுத்துத்தேர்வு அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவர்.விண்ணப்ப கட்டணம்:ரூ.30/& இதை DIGP, GCCRPF என்ற பெயரில் எந்த மைய முகவரிக்கு விண்ணப்பம் அனுப்பப்படுகிறதோ அங்கு செலுத்தத் தக்க வகையில் கிராஸ் செய்யப்பட்ட போஸ்டல் ஆர்டர் எடுக்க வேண்டும்.விண்ணப்பிக்கும் முகவரி மற்றும் தேர்வு மையங்கள்:DIGP, Group Centre, CRPF, Yelahanka, Bangalore, Karnataka 560 064.DIGP, Group Centre, CRPF, Pallipuram, Thiruvanthapuram, Kerela 695316.DIGP, Group Centre, CRPF, Avadi, Chennai, Tamilnadu 600 065.மாதிரி விண்ணப்பம் மற்றும் விவரங்களுக்கு www.crpf.nic.in இணையதளத்தை பார்க்கவும்.விண்ணப்பிக்க கடைசி நாள். 25.1.2011.
210
1/10/2011 12:14:25 PM
வேலைவாய்ப்பு
இந்திய கடற்படையில் பயிற்சியுடன் வேலை
இந்திய கடற்படையில் பயிற்சியுடன் கூடிய மாலுமியாக பணிபுரிய திருமணமாகாத ஆண்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆர்ட்டிபிசர் அப்ரன்டீஸ்-130 பிரிவின் கீழ் இப்பயிற்சி அளிக்கப்படுகிறது.கல்வித்தகுதி: அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் கணிதம் மற்றும் இயற்பியல் பாடங்களில் குறைந்தது 55 சதவீத மதிப்பெண்களுடன் பிளஸ் 2 தேர்ச்சி மற்றும் வேதியியல், உயிரியல், கம்ப்யூட்டர் சயின்ஸ் ஆகிய பாடங்களில் ஏதாவது ஒரு பாடத்தில் 55 சதவீத தேர்ச்சி.வயது: 1.8.1991க்கும் 31.7.1994க்கும் இடையே பிறந்திருக்க வேண்டும். விண்ணப்பதாரர் எழுத்து மற்றும் மருத்துவத் தகுதிகளின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவர். சென்னை, கோவை, அரக்கோணம், திருநெல்வேலி ஆகிய மையங்களில் தேர்வு நடைபெறும்.தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ஆகஸ்ட் 2011 முதல் 9 வாரங்களுக்கு அடிப்படை பயிற்சி அளிக்கப்படும். பயிற்சியை வெற்றிகரமாக முடிப்பவர்கள் முதல் கட்டமாக 20 ஆண்டுகளுக்கு பணிபுரிய அனுமதிக்கப்படுவர்.மாதிரி விண்ணப்பம் மற்றும் விவரங்களுக்கு டிச.18&24 எம்ப்ளாய்மென்ட் நியூஸ் அல்லது  www.nausenabharti.nic.in இணையதளத்தை பார்க்கவும்.விண்ணப்பத்தை சாதாரண தபாலில் அனுப்ப வேண்டிய முகவரி:POST BOX. NO.476, GOL DAK KHANA, GPO, NEW DELHI 110001. விண்ணப்பம் அனுப்ப கடைசி தேதி: 15.1.2011.
211
1/10/2011 12:23:26 PM
வேலைவாய்ப்பு
4,493 காலியிடங்களுக்கான டிஎன்பிஎஸ்சி குருப்&1, குருப்&2
தமிழக அரசுத்துறையில் காலியாக உள்ள 4 ஆயிரத்து 493 பணிகளுக்கான குருப்&1 மற்றும் குருப்&2 தேர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.குருப்-1 பிரிவில் டெபுடி கலெக்டர்-33, டெபுடி கலெக்டர்&23 (எஸ்சி, எஸ்டி மட்டும்), டிஎஸ்பி-29, அசிஸ்டென்ட் கமிஷனர்-28, மாவட்ட பதிவாளர்-7, உதவி இயக்குனர்-10, டிவிஷனல் ஆபீசர் (தீயணைப்பு மற்றும் பாதுகாப்புத் துறை)-1 ஆகிய இடங்கள் காலியாக உள்ளன.குருப் - 2 பிரிவில் உதவி வணிகவரி அதிகாரி-125, உதவி பதிவாளர் (நிலை-2)-7, உதவி தொழிலாளர் ஆய்வாளர்-13, முனிசிபல் கமிஷனர்-5, உதவி பிரிவு அதிகாரி-33, உதவி பிரிவு அதிகாரி (டிஎன்பிஎஸ்சி)-1, உதவி பிரிவு அதிகாரி மற்றும் புரோகிராமர்-26, இளநிலை வேலைவாய்ப்பு அதிகாரி-6, சீனியர் இன்ஸ்பெக்டர் ஆப் கோ-ஆபரேட்டிவ் சொசைட்டிஸ்-450, ஆடிட் இன்ஸ்பெக்டர்-30, மேற்பார்வையாளர் (இன்டஸ்ட்ரியல் கோ-ஆபரேட்டிவ்ஸ்)-22, ஜூனியர் டெக்னிக்கல் அசிஸ்டென்ட்-2, ஜூனியர் கோ ஆபரேட்டிவ் ஆடிட்டர்-83, ரெவின்யூ அசிஸ்டென்ட்-1884, ஆடிட் அசிஸ்டென்ட்- 13.பர்சனல் கிளார்க்-7, உதவியாளர்-6, உதவியாளர் (தொழிற்சாலை மற்றும் வணிகத்துறை)-26, உதவியாளர் (பதிவுத்துறை)-320, உதவியாளர் (நெடுஞ்சாலைத்துறை)-28, உதவியாளர்-(நில சீர்திருத்தத் துறை)-8, உதவியாளர் (சிறைத்துறை)-48, உதவியாளர் (காவல் துறை)-200, உதவியாளர்(நில மேம்பாட்டுத் துறை)-3, உதவியாளர் (நிலமேம்பாட்டுத்துறை)-3, உதவியாளர் (வணிகவரி ஆணையர் அலுவலகம்)-12, உதவியாளர் (போக்குவரத்துத் துறை)-170, உதவியாளர் (மருத்துவம் மற்றும் கிராம சுகாதாரச்சேவை)-485, உதவியாளர் (டிஎன்பிஎஸ்சி)-13, உதவியாளர் (நிதித்துறை)-37, உதவியாளர் (சட்டத்துறை)-6, உதவியாளர் (வணிகவரித்துறை திருச்சி டிவிஷன்)-37, உதவியாளர் (வணிகவரித்துறை சேலம் டிவிஷன்)-177, உதவியாளர் (வணிகவரித்துறை கோவை டிவிஷன்)-53, உதவியாளர் (வணிக வரித்துறை நெல்லை டிவிஷன்-21), பிளானிங் ஜூனியர் அசிஸ்டென்ட்-2.வயது: (அனைத்துப் பணிகளுக்கும்): 1.7.2010ன்படி 21 வயதிலிருந்து 30க்குள். இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு வயது வரம்பில் தளர்வு உண்டு.விண்ணப்ப கட்டணம்: ரூ.30 ஐ செலுத்தி தபால் அலுவலகங்களில் டிஎன்பிஎஸ்சி விண்ணப்பத்தை பெற்றுக் கொள்ளலாம். விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி:Tamil Nadu Public Service Commission, No.1, Greams Road, Commercial Taxes Office Annex, Chennai600006.குருப் & 1 விண்ணப்பத்தை அனுப்ப கடைசி தேதி: 28.1.2011. தேர்வு நடைபெறும் நாள்: 22.5.2011.குருப் & 2 விண்ணப்பத்தை அனுப்ப கடைசி தேதி: 11.2.2011. தேர்வு நடைபெறும் நாள்: 12.6.2011.மேலும் விவரங்களுக்கு டிஎன் பிஎஸ்சியின் இணையதளமான www.tnpsc.nicபார்க்கவும்.
212
1/10/2011 3:00:27 PM
மாவட்ட மசாலா
காட்டுத்தீயை தடுக்க வன ஊழியருக்கு பயிற்சி
மஞ்சூர்: நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பக இயக்குனர் ராஜீவ் ஸ்ரீவத்சவா கூறியதாவது: முதுமலை புலிகள் காப்பக பகுதியில் இரவில் பனி, பகலில் வெயில் கொளுத்துகிறது. செடி, கொடிகள் காய்ந்து, காட்டுத்தீ பரவும் அபாயம் உள்ளது. முன்னெச்சரிக்கையாக 100 கி.மீ தூரம் தீ தடுப்பு கோடுகள் அமைக்கப்பட்டுள்ளன. காட்டுத்தீ ஏற்பட்டால் தகவல் பரிமாறும் முறை மற்றும் வன விலங்குகளை பாதுகாத்து காட்டுத்தீ கட்டுப்படுத்துதல் குறித்து தெப்பக்காட்டில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு தீத்தடுப்பு மையத்தில், வனச்சரகர்கள், வனவர்கள், வனப்பாதுகாவலர்கள், வேட்டைத் தடுப்பு மற்றும் தீயணைப்பு காவலர்கள் உள்ளிட்ட 60 பேருக்கு, சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டது.
213
1/10/2011 3:05:26 PM
மாவட்ட மசாலா
ஊதிய உயர்வு வேண்டும் தலைமை ஆசிரியர்கள் கோரிக்கை
மதுரை: தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளி தலைமையாசிரியர் சங்க மாநில செயற்குழு கூட்டம் மதுரையில் நடந்தது. மாநில தலைவர் செல்வம் தலைமை தாங்கினார்.  மாநில பொதுச்செயலர் சத்தியமூர்த்தி, பொருளாளர் பாலகிருஷ்ணன் கலந்து கொண்டனர்.  உயர்நிலை பள்ளி தலைமையாசிரியர்களின் ஊதியம், நடுநிலை பள்ளி தலைமையாசிரியர்களின்   ஊதியத்தை விட குறைவாக உள்ளது. இதை உயர்த்தி வழங்க வேண்டும். அனைத்து உயர்நிலை பள்ளிகளிலும் கணினி ஆசிரியர்கள் நியமிக்க வேண்டும். மேல்நிலை பள்ளிகளில் கூடுதல் தலைமையாசிரியர்களை  நியமிக்க வேண்டும் என்பது உள்பட 22 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
214
1/10/2011 3:13:08 PM
மாவட்ட மசாலா
சிறுமியை பலாத்காரம் மேஸ்திரிக்கு வலை
ஜோலார்பேட்டை: வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகே உள்ள பால்ணாங்குப்பம் கிராமத்தை சேர்ந்த 9 வயது சிறுமி அதேபகுதியில் உள்ள ஆரம்ப பள்ளியில் படிக்கிறார். இவரது தாய் தங்களது விவசாய நிலத்திற்கு சென்றிருந்தார். அவரை தேடிக்கொண்டு இரவு 7 மணியளவில் சிறுமி நடந்து சென்றார். அப்போது அதேபகுதியை சேர்ந்த கட்டிட மேஸ்திரி ராஜேஷ் (22) என்பவர், சிறுமியை வழிமடக்கி, பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமி கூச்சல் போட்டார். சத்தம் கேட்டு சிறுமியின் தாய் மற்றும் அப்பகுதியினர் ஓடிவந்தனர். அதற்குள் ராஜேஷ் தப்பி விட்டார். இதுகுறித்து ஜோலார்பேட்டை போலீசில் நேற்றிரவு புகார் செய்யப்பட்டது. தலைமறைவான ராஜேஷை போலீசார் தேடி வருகின்றனர்.
215
1/10/2011 3:14:35 PM
மாவட்ட மசாலா
ராமேஸ்வரத்தில் 4 மீனவர்கள் மாயம்
ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்தில் இருந்து நேற்று முன்தினம் காலை 679 விசைப்படகுகள்  கடலுக்குச் சென்றன. இதில் 678 விசைப்படகுகள் நேற்று காலை கரை திரும்பின. ராமேஸ்வரம் சவுந்தர்ய அம்மன் கோயில் பகுதியைச் சேர்ந்த பிரேம்சுந்தர் என்பவரின் விசைப்படகில் சென்ற மீனவர்கள் வழிவிட்டான்(40), ராமநாதன்(30), ராமு(30), ஆனந்தன்(40) ஆகியோர் நேற்றிரவு வரை கரை திரும்பவில்லை. அவர்களை தேடும் பணியில் மீனவர்கள் ஈடுபட்டுள்ளனர்.
216
1/10/2011 3:16:13 PM
மாவட்ட மசாலா
பஞ். தலைவருக்கு கத்திகுத்து 14 பேர் மீது வழக்கு
குமாரபாளையம்: பள்ளிபாளையம் ஊராட்சி குப்பாண்டபாளையம் ஊராட்சி மன்ற தலைவர் வேல்முருகன். பள்ளிபாளையம் ஊராட்சி ஒன்றிய துணைத்தலைவராக இருப்பவர் யுவராஜ். இவர்களுக்கு குமாரபாளையம் மருத்துவமனை பஸ் நிறுத்தம் அருகே 2 கடைகள் உள்ளன. நேற்று இரவு 8 மணியளவில் இதே பகுதியை சேர்ந்த பாலசுப்பிரமணியம் என்பவர் ஜேசிபி இயந்திரம் கொண்டு வந்து இரண்டு கடைகளையும் இடித்துள்ளார். இதை வேல்முருகனும், யுவராஜும்  தடுத்துள்ளனர். அப்போது ஏற்பட்ட மோதலில், வேல்முருகனுக்கும், யுவராஜுக்கும் கைகளில் கத்தி குத்து விழுந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் பாலசுப்பிரமணியம் உள்பட 14 பேர் மீது வழக்கு பதிந்து போலீசார் தேடி வருகின்றனர்.
217
1/10/2011 3:19:39 PM
குற்றம்
மணிலா வியாபாரியை விடுவிக்க 1 கோடி கேட்டு கடத்தல்காரர்கள் மிரட்டல்
காட்டுமன்னார்கோவில்: கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே பழஞ்சநல்லூரை சேர்ந்தவர் செந்தில் குமார் (35). சென்னை முகப்பேர் மேற்கில் மனைவி, மகன்களுடன் வசித்து வருகிறார். இவர் ஓவ்வொரு ஆண்டும் மணிலா சாகுபடி காலங்களில் குஜராத், மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களுக்கு சென்று மணிலாவை கொள்முதல் செய்து பழஞ்சநல்லூரில் இருந்து பல கிராமங்களுக்கு விற்பனை செய்வது வழக்கம்.  இவருக்கு உதவியாக சகோதரர் முத்துகுமரன் இருந்து வருகிறார். மணிலா பயிரை கொள்முதல் செய்வதற்காக, கருணாநிதி என்பவருடன் கடந்த 2-ம் தேதி இரவு சென்னையில் இருந்து மத்தியபிரதேச மாநிலம் குவாலியருக்கு சென்றார். அதற்கு பிறகு அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை. இதனால் பயந்து போன செந்தில்குமார் குடும்பத்தினர் சென்னை காவல்துறை ஏ.டி.டி.ஜி.பி. யிடம் புகார் செய்தனர். மேலும் முத்துக்குமரன், தனது சகோதரரை தேடி குவாலியருக்கு சென்றுள்ளார். அங்கு முத்துக்குமரனின் செல்போனில் பேசிய கடத்தல்காரர்கள், செந்தில்குமாரை விடுவிக்க ரூ. 1 கோடி தர வேண்டும் என்று கேட்டு மிரட்டியுள்ளனர். இது குறித்து முத்துக்குமரன் குவாலியர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இதற்கிடையே கடத்தப்பட்டதாக கூறப்படும் செந்தில்குமார் நேற்றிரவு 8 மணி அளவில் சென்னையில் உள்ள தனது மனைவியிடமும், காட்டுமன்னார்கோவிலில் உள்ள தந்தையிடமும் செல்போனில் பேசியதாக கூறப்படுகிறது. செந்தில்குமாரை மீட்க குவாலியர் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
218
1/10/2011 3:28:41 PM
தலையங்கம்
நல்லது நினைத்தால் கெட்டது நடக்கிறது
பொதுநலம் கருதி யார் என்ன சொன்னாலும், செய்தாலும் அவர்கள் படும்பாடு கொஞ்சநஞ்சமல்ல. அதுவும் சென்னையில் கேட்கவே வேண்டாம். தனியார் நிறுவனம் ரசாயன கழிவுகளை பிளாஸ்டிக் குழாய் மூலம் கடலில் கொட்டுவதாக புகார் செய்திருக்கிறார் ஒரு மீனவர். அவ்வளவுதான். அவரை ஊரைவிட்டு ஒதுக்கிவிட்டனர். சொந்த ஊரில் மீன்பிடிக்க முடியாமல் வெளியூர் போய் வருகிறார் அவர்.சென்னை எண்ணூரை அடுத்துள்ளது காசிகோவில் குப்பம். இங்குள்ள கெமிக்கல் கம்பெனி கழிவுகளை கடலில் கொட்டிவந்துள்ளது. இதற்கு சங்கர் என்ற மீனவர் எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார். நிறுவனம் அதை கண்டு கொள்ளாததால் போலீசில் புகார் செய்தார். ரசாயன கழிவுகளை கடலில் கொட்டுகிறார்களே மீன்வளம் கெட்டுவிடுமே, கடல் நாசமாகிவிடுமே அதை தடுக்க வேண்டுமே  என்ற நல்ல எண்ணத்தில் அவர் கொடுத்த புகாரே அவர் நிம்மதியை கெடுத்துவிட்டது. கெமிக்கல் நிறுவனத்துக்கு வேண்டப்பட்ட அந்த கிராமத்தை சேர்ந்த சிலர் கட்டபஞ்சாயத்து கூட்டி சங்கரின் குடும்பத்தை ஊரைவிட்டு விலக்கி வைத்துவிட்டனர். இதனால்  சொந்த ஊரில் மீன்பிடிக்க முடியாமல் மாமல்லபுரம் போய் மீன்பிடித்து வருகிறார். இதோடு அவர் குடும்பத்தினர் நடத்தி வந்த கேபிள் டிவிக்கு யாரும் பணம் தரக்கூடாது என ஊராருக்கும் கட்டுப்பாடு விதித்துள்ளனர். வீட்டுக்குள் புகுந்து தாக்கிய ரவுடிகள் போலீசில் கொடுத்த புகாரை வாபஸ் பெறாவிட்டால் குடும்பத்தையை தீ வைத்து கொளுத்திவிடுவோம் என்று மிரட்டியிருக்கிறார்கள். சங்கரின் மனைவி அந்த கிராமத்தை சேர்ந்த 20 பெண்களுடன் புறநகர் கமிஷனரிடம் புகார் கொடுத்திருக்கிறார்.தப்பு நடந்தால் கண்டுகொள்ளாமல் போய்விடவேண்டும். தட்டிக்கேட்டால் நம்மை உண்டு இல்லையென பண்ணிவிடுவார்கள்.  இதுதான் நடக்கிறது நாடு முழுவதும். கிராமத்தை பொறுத்தவரை கட்டபஞ்சாயத்து அவர்களின் முக்கிய ஆயுதம். அதன் மூலம் ஊரைவிட்டு ஒதுக்கிவைத்து பழிவாங்கிவிடுவார்கள். அதோடு கொலை மிரட்டலும் தொடரும். சம்பந்தப்பட்டவர் ‘ஏண்டா இந்த பிரச்னையில் மூக்கை நுழைத்தோம்’ என நினைக்கும்படி செய்துவிடுவார்கள். ஆனால், அந்த பொது நல மீனவர் தனது புகாரை வாபஸ் பெறவில்லை.ஊருக்கு நல்லது நினைத்தால் இந்த காலத்தில் பிரச்னை வரத்தான் செய்யும். ஆனால் அது தெரிந்தும் நல்லது நினைப்பவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். சட்டமும் போலீசும் அவர்களுக்கு துணை நின்றால் நாட்டு மக்களுக்கு நல்லது நடக்கும். அவர்கள் வரும்வரை அவர்களின் நல்லமனசு கேடயமாக இருந்து துன்பங்களில் இருந்து அவர்களை காப்பாற்றும்.
219
1/10/2011 3:43:51 PM
சினிமா(ரீல்மா)
அனுஷ்கா சர்மா ஆஹா.. ஓஹோ.. புகழ்ந்து தள்ளுகிறார் ஓவியர் உசேன்
தோகா: இந்தி நடிகை அனுஷ்கா சர்மா சமீபத்தில் நடித்த Ôபேண்டு பாஜா பாராத்Õ என்ற படத்தை பிரபல ஓவியர் எம்.எப். உசேன் 8 தடவை பார்த்துள்ளார். இதன் மூலம் எம்.எப்.உசேனின் மனம் கவர்ந்த நடிகைகளின் பட்டியலில் அனுஷ்கா சர்மாவும் இடம் பெற்றுள்ளார்.மீசை, தாடி நரைத்தாலும் ஆசை நரைக்காதவர் உலகப்புகழ் பெற்ற ஓவியர் எம்.எப்.உசேன் (95). இந்தி நடிகை மாதுரி தீட்சித்தின் தீவிர ரசிகராக இருந்தவர். மாதுரி நடித்த ஹம் ஆப்கே ஹை கோன் படத்தை 73 தடவை பார்த்து சாதனை படைத்தவர். மாதுரி மட்டுமல்ல.. நடிகைகள் தபு, அம்ரிதா ராவ் ஆகியோரையும் உசேனுக்கு ரொம்ப பிடிக்கும். அம்ரிதா ராவ் நடித்த விவாஹ் படத்தை 20 முறை பார்த்துள்ளார். இந்த லிஸ்ட்டில் லேட்டஸ்ட்டாக சேர்ந்திருப்பவர் இந்தி நடிகை அனுஷ்கா சர்மா.மனீஷ் சர்மா இயக்கத்தில் அனுஷ்கா சர்மா, ரன்வீர் சிங் நடித்த இந்த படம் கடந்த டிசம்பர் 10&ம் தேதி ரிலீசானது. உசேன் வசிக்கும் கத்தார் நாட்டின் தோகா நகரில் இப்படம் ரிலீசாகவில்லை. துபாயில்தான் ரிலீசானது. இதற்காக, கத்தாரில் இருந்து அடிக்கடி துபாய் போய் பே.பா.பா. படத்தை பார்த்திருக்கிறார் உசேன். கடந்த புத்தாண்டு தினத்தன்று துபாய் வந்த மும்பை தொழிலதிபர் முன்னா ஜவேரியுடன் சேர்ந்து இப்படத்தை உசேன் பார்த்தது 8&வது முறை. சீட் நுனியில் உட்கார்ந்து உசேன் மிகுந்த ஆர்வத்துடன் படம் பார்ப்பதை ஆச்சரியத்துடன் விவரிக்கிறார் ஜவேரி. ''95 வயது மனிதர்தானா என்பதே சந்தேகமாக இருக்கிறது. கண்ணாடிகூட போடாமல் பார்த்தார். ஒவ்வொரு வசனத்தையும் வரி மாறாமல் ஞாபகம் வைத்திருக்கிறார். அழகான ஓவியத்தை ரசிப்பது போல அனுஷ்கா படத்தை ரசிக்கிறார்ÕÕ என்றார். பெருமை பொங்க உசேன் சொல்வது.. ''படம் இங்கு 4&வது வாரமாக ஹவுஸ் ஃபுல். அனுஷ்கா நடிப்பு சூப்பர். கதையும் அருமை. நான் இதற்கு முன்பு ரசித்த ஹம் ஆப்கே ஹை கோன், விவாஹ் போன்றவை திருமண நிகழ்ச்சி தொடர்பான படங்கள்தான். வாழ்க்கையை ஆராதிக்கும் இந்த படங்களை எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பு தட்டாது. துபாயில் ஓடும் வரை இந்த படத்தை இன்னும் பல முறை பார்ப்பேன். அனுஷ்கா சர்மா இந்த பக்கம் வந்தால் அவரது ஓவியத்தை வரைந்து பரிசளிக்க இருக்கிறேன்’’ என்றார்.
220
1/10/2011 3:49:18 PM
தமிழகம்
தேமுதிக ஆதரவின்றி யாரும் ஆட்சியை பிடிக்க முடியாது: விஜயகாந்த் பேச்சு
சேலம்: தேமுதிக மக்கள் உரிமைமீட்பு மாநாடு சேலத்தை அடுத்த வீராசாமி புதூரில் நேற்று மாலை நடந்தது.  அவைத்தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன், பொருளாளர் சுந்தர்ராஜன், இளைஞரணி செயலாளர் சுதீஷ், பிரேமலதா விஜயகாந்த் மற்றும் மாநில நிர்வாகிகள் பேசினர்.  மாநாட்டில் விஜயகாந்த் பேசியது: அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வு, பெட்ரோல், டீசல் விலை உயர்வால் ஏழைகள் பாதிக்கப்பட்டு உள்ளனர். தேமுதிக ஆட்சிக்கு வந்தால் வறுமை ஒழியும். வரும் சட்டசபை தேர்தலில் எந்த கட்சியுடன் கூட்டணி வைக்க போகிறேன் என்பதை அறிய காத்திருக்கின்றனர். கூட்டணி பிரச்னையை என்னிடம் விட்டுவிடுங்கள். அதை நான் பார்த்துக் கொள்கிறேன். என்னையும், என் கட்சி தொண்டர்களையும் யாரிடமும் அடகு வைக்க மாட்டேன்.  சில கட்சிகளைப்போல், கூட்டணி கட்சியிடம் உங்களை அடிமையாக்க நான் தயாராக இல்லை. நம் படை இல்லாமல் யாராலும் தமிழகத்தில் ஆட்சி அமைக்க முடியாது. உங்களில் நானும் ஒருவன். நீங்கள் இல்லாமல் நான் இல்லை. கட்சியை ஆரம்பித்தபோது, ஏற்கனவே 70 கட்சிகள் இருக்கு. அதில் தேமுதிக Ô70 பிளஸ் ஒன்Õ என்றும், Ôபத்தோடு பதினொண்ணு; அத்தோடு இதுவும் ஒண்ணுÕ என்றும் கேலி பேசினர். இப்போது தேமுதிகதான் நம்பர் ஒண்ணு.  இவ்வாறு விஜயகாந்த் பேசினார்.