news_id
int64
6
128k
news_date
stringlengths
19
22
news_category
stringclasses
15 values
news_title
stringlengths
1
226
news_article
stringlengths
7
17.4k
325
1/12/2011 5:30:07 PM
குற்றம்
பழ வியாபாரி கொலையில் 5 பேருக்கு ஆயுள்சிறை
தூத்துக்குடி: தூத்துக்குடி கோமதிபாய் காலனி 2வது தெருவை சேர்ந்தவர் லாலா என்ற மணிவண்ணன்(28).  தூத்துக்குடி பழைய பஸ்நிலையம் அருகே பழக்கடை வைத்திருந்தார். தூத்துக்குடியை சேர்ந்த பாலகருப்பசாமி என்பவரது மகள் செல்வபிரபாவை இவர் 2வதாக திருமணம் செய்தார். செல்வபிரபாவின் தங்கை நித்யாவை டூவிபுரத்தை சேர்ந்த  சரவணன்(30) என்பவர் திருமணம் செய்திருந்தார். அண்ணாநகர் மெயின்ரோட்டில் பர்னிச்சர் கடை நடத்தி வந்த பாலகருப்பசாமி சில ஆண்டுகளுக்கு முன் எரித்து கொலை செய்யப்படவே கடையை அவரது மனைவி விஜயா நடத்தி வந்தார். மாமனாரின் சொத்துக்களை அனுபவிப்பதில் மணிவண்ணனுக்கும், சரவணனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. கடந்த 9-2-2006 அன்று இரவு மணிவண்ணன் கடையை மூடிவிட்டு பாலவிநாயகர் கோவில் தெருவில் நிறுத்தியிருந்த தனது காரை எடுக்க சென்ற போது அங்கு பதுங்கியிருந்த சரவணன், அவரது தம்பிகள் இசக்கிதுரை என்ற துரை(33), கணேசன்(32) மற்றும் இவரது நண்பர்கள் முருகன்(33), சந்தனம் என்ற சந்தன குமார்(41) ஆகிய 5 பேரும் சேர்ந்து அவரை வெட்டிக் கொலை செய்தனர்.இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து 5 பேரையும் கைது செய்தனர். இந்த வழக்கு தூத்துக்குடி 2வது விரைவு கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கை  நீதிபதி கிருஷ்ண வள்ளி விசாரித்து 5 பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.
326
1/12/2011 5:31:27 PM
குற்றம்
வேன் - பைக் மோதல் ஒருவர் பலி 17 பேர் காயம்
வாலாஜாபாத்: வாலாஜாபாத் அருகே பைக் மீது வேன் மோதியதில் ஒருவர் இறந்தார். 15 பெண்கள் உள்பட 17 பேர் காயமடைந்தனர். வாலாஜாபாத் அடுத்த ஐயம்பேட்டையில் இருந்து காஞ்சிபுரத்துக்கு இன்று காலை பைக்கில் ராமு, சின்னமணி, பிரசாந்த் ஆகியோர் சென்றனர். அதன் மீது கன்னிகாபுரம் பகுதியில் காஞ்சிபுரத்தில் இருந்து படப்பை நோக்கி சென்ற வேன் மோதியது. இதில் ராமு உடல் நசுங்கி அதே இடத்திலேயே இறந்தார். பிரசாந்த், சின்னமணி ஆகியோர் பலத்த காயமடைந்து சென்னை அரசு மருத்துவமனையில்  சேர்க்கப்பட்டனர். அந்த வேனில் வந்த 15 பெண்கள் லேசான காயங்களுடன் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். இதுகுறித்து வாலாஜாபாத் போலீசார் விசாரிக்கின்றனர்.
327
1/12/2011 5:33:59 PM
குற்றம்
குழந்தை ஏக்கத்தில் இளம்பெண் தற்கொலை
மதுராந்தகம்: மதுராந்தகம் அடுத்த செய்யூர் அருகே சூரிய பிள்ளையார் குப்பத்தை சேர்ந்தவர் செல்வராஜ் (28). விவசாயி. இவரது மனைவி லட்சுமி (24). திருமணமாகி 3 ஆண்டுகள் ஆகிறது. குழந்தை இல்லை. இதனால் கடந்த சில நாட்களாக குழந்தை ஏக்கத்தில் மனம் உடைந்து காணப்பட்டார்.நேற்று முன்தினம் இரவு, வழக்கம் போல சாப்பிட்டு விட்டு அனைவரும் தூங்கினர். காலையில் செல்வராஜ் மற்றும் அவரது குடும்பத்தினர் எழுந்தபோது, லட்சுமி தூக்கில் பிணமாக தொங்கிக் கொண்டிருந்தார். தகவலறிந்து செய்யூர் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்தனர். சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இது குறித்து மதுராந்தகம் ஆர்டிஓ விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.
328
1/12/2011 5:38:52 PM
குற்றம்
மணல் திருட்டை தடுத்த எஸ்.ஐ.க்கு சவுல் அடி
ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டை அருகே தாராட்சி, மேல்சிட்ரபாக்கம் ஆகிய பகுதிகளில் உள்ள ஆரணி ஆற்றில் ஆந்திர மாநில லாரிகளில் மணல் கடத்துவதாக ஊத்துக்கோட்டை டிஎஸ்பி பாலச்சந்திரனுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் நாகலிங்கம், எஸ்.ஐ. அசோகன் தாராட்சி பகுதிக்கும், எஸ்.ஐ. ரஜினிகாந்த் மேல்சிட்ரபாக்கம் பகுதிக்கும் ரோந்து சென்றனர். மேல்சிட்ரபாக்கம் பகுதியில் மணல் திருடிய சிலரை, ரஜினிகாந்த் தடுத்து நிறுத்தினார். இதனால் ஆத்திரம் அடைந்த மணல் புரோக்கர் நாகூரைய்யா மணல் அள்ளுவதற்காக வைத்திருந்த சவுலால் சப்-இன்ஸ்பெக்டரை தாக்கினார். இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. உடன் சென்ற போலீசார் மணல் திருடிய நசீர்பாஷா (50), ஜிலால்கான் (37), சேக்அப்துல்நபி (42), சமீத் பாஷா (35), சப்-இன்ஸ்பெக்டரை தாக்கிய நாகூரைய்யா (35) ஆகியோரை மடக்கி பிடித்தனர். தாராட்சியில் மணல் திருடிய பாபு (40), ரபி (25) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். கைதான 7 பேரும் ஆந்திர மாநிலம் கோடூரை சேர்ந்தவர்கள். இவர்களை போலீசார் ஊத்துக்கோட்டை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மணல் திருட்டிற்கு பயன்படுத்திய 3 லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டது.
329
1/12/2011 5:40:48 PM
குற்றம்
வேலூரில் நள்ளிரவு பரபரப்பு லஞ்சபணத்துடன் பைக்கில் பறந்த 2 மின்வாரிய அதிகாரிகள் கைது
வேலூர்: வேலூர் அடுத்த ஊசூரைச் சேர்ந்த தர்மன் என்பவர் அதே பகுதியில் வெல்டிங் கடை வைத்துள்ளார். இந்த கடைக்கு மின் இணைப்பு பெற தர்மனின் மகன் மோகன்தாஸ் (24), ஊசூர் மின்வாரிய அலுவலகத்தை அணுகியுள்ளார். அவரிடம் இளநிலை பொறியாளர் சக்கரவர்த்தி, வேலூர் உதவி செயற்பொறியாளர் ரவி ஆகியோர் ரூ.10 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளனர்.இதுபற்றி வேலூர் லஞ்ச ஒழிப்பு போலீசில் மோகன்தாஸ் புகார் செய்தார். போலீசாரின் அறிவுரைப்படி, ரசாயன பவுடர் தடவிய ரூ.10 ஆயிரத்துடன் நேற்று இரவு 8 மணியளவில் வேலூர் கோட்டை சுற்றுச்சாலையில் உள்ள மின்வாரிய அலுவலகத்துக்கு மோகன்தாஸ் சென்றார்.அவரிடம் இருந்த ரூ.10 ஆயிரத்தை வாங்கிய இளநிலை பொறியாளர் சக்கரவர்த்தியும், உதவி செயற்பொறியாளர் ரவியும் ஆளுக்கு 5 ஆயிரம் என பங்கு போட்டுக்கொண்டனர். உடனே அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி கிருஷ்ணசாமி மற்றும் போலீசார், லஞ்சம் வாங்கிய மின்வாரிய அதிகாரிகளை கையும், களவுமாக பிடிக்க முயன்றனர்.போலீசாரைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த இருவரும் தங்களுடைய பைக்கில் ஏறி, ஆளுக்கொரு திசையில் தப்பினர். அவர்களை போலீஸ் அதிகாரிகள் ஜீப்பிலும், இருசக்கர வாகனங்களிலும் விரட்டிச் சென்று பிடித்தனர். இருவரையும் மின்வாரிய அலுவலகத்துக்கு அழைத்துச் சென்று, சோதனை நடத்தினர். அவர்களிடம் இருந்த லஞ்சப்பணம் ரூ.10,000, சக்கரவர்த்தியின் பைக்கில் இருந்த ரூ.76 ஆயிரத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இதையடுத்து இருவரும் கைது செய்யப்பட்டனர். நள்ளிரவு நேரத்தில் சினிமா காட்சியை மிஞ்சும் வகையில் நடந்த இந்த ‘சேசிங்’  வேலூரில் பரபரப்பை ஏற்படுத்தியது.
331
1/12/2011 5:43:27 PM
கல்வி
x vcnm,
cvhb,m.
332
1/12/2011 5:44:13 PM
குற்றம்
5 மாவட்டங்களில் கைவரிசை 409 பவுன் நகைகள் திருடிய தஞ்சை சகோதரிகள் கைது
கும்பகோணம்: திருச்சி உள்பட 5 மாவட்டங்களில்409 பவுன் நகைகளை திருடி வந்த தஞ்சை சகோதரிகளை போலீசார்கைது செய்தனர். கும்பகோணம் நாகேஸ்வரன் கோயிலில் கடந்த வாரம் ஒரு பெண்ணை கத்தியை காட்டி மிரட்டி அவரிடமிருந்த 2 பவுன் செயினை ஒரு பெண்ணும், ஒரு ஆணும் பறித்துச் சென்றனர். மேலும் தஞ்சை மாவட்டத்தில் பேருந்துகளில் பயணம் செய்யும் போதும்,  கோயில் திருவிழாக்களிலும், பொதுமக்கள் கூட்டமாக நிற்கும் இடங்களில் பெண்களிடமும், குழந்தைகளிடமும் நகைகள் திருட்டு போவது தொடர்கதையாக இருந்து வந்தது. இதையடுத்து, குற்றவாளிகளைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படையினர் கும்பகோணம் உச்சிபிள்ளையார்கோயில் அருகில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அங்கு சந்தேகத்திற்கிடமான வகையில் சுற்றிக்கொண்டிருந்த இரண்டு பெண்கள் ஒரு வாலிபரை பிடித்து விசாரித்தனர். அவர்கள் தஞ்சை கோரிகுளம் புதுத்தெருவைச் சேர்ந்த செல்வி (50), அவரது மகன் ரகு (24), செல்வியின் தங்கை கஸ்தூரி (35) எனத் தெரியவந்தது. இவர்கள் திருச்சி, தஞ்சை, திருவாரூர், நாகை, கடலூர், ஆகிய மாவட்டங்களில் கோயில் திருவிழாக்களிலும், பஸ்களில் பயணம் செய்பவர்களிடமும் நகை திருடும் தொழிலை  பல ஆண்டுகளாக செய்து வந்துள்ளனர். பலமுறை சிறைக்கும் சென்றுள்ளனர்.  கும்பகோணம், திருவிடைமருதூர் உட்கோட்ட காவல் நிலையங்களில் 27 இடங்களில் இவர்கள் திருடிய 90 பவுன் நகையை போலீசார் மீட்டனர். இதன் மதிப்பு ரூ. 13 லட்சம். இவர்கள் மூவரும் இதுவரை 409 பவுன் நகைகளை திருடியுள்ளனர். மூவரும் கைது செய்யப்பட்டு, திருச்சி சிறையில் அடைக்கப்பட்டனர்.
335
1/12/2011 5:47:37 PM
தலையங்கம்
பெற்றோரை இணைத்த குழந்தைகள்
வீட்டில் கணவனும் மனைவியும் எப்போது பார்த்தாலும் சண்டை போட்டுக் கொண்டிருந்தால் வீடே நரகமாகிவிடும். குடிப் பழக்கம், கள்ளக் காதல், நடத்தையில் சந்தேகம் இப்படி பல பிரச்னைகளால் சண்டை வருகிறது. தொடர் சண்டைகளால் கணவன், மனைவி பிரிந்து விடுகிறார்கள். குழந்தைகள்தான் பாவம். கோவையில் பெற்றோர் பிரிந்ததால் நொந்துபோன குழந்தைகள் போலீஸ் கமிஷனரிடம் புகார் கொடுக்க, அவர் சமரசம் பேசிய பிறகு, தம்பதியினர் ஒன்று சேர்ந்துள்ளனர்.கோவை சரவணம்பட்டியை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன். மனைவி தாரணி. காதல் திருமணம் செய்தவர்கள். சசிதரன் என்ற மகனும், ஜோஷிகா என்ற மகளும் உள்ளனர். ராமகிருஷ்ணன் கடந்த 2 வருடங்களாக பாட புத்தக வெளியீட்டை பகுதி நேர தொழிலாக மாற்றிவிட்டு, டிவி சீரியல் தயாரிப்பில் இறங்கியிருக்கிறார். ஒரு டிவி நடிகை அறிமுகமாகி, அவர் அடிக்கடி ராமகிருஷ்ணன் வீட்டுக்கு வந்து போயிருக்கிறார். இதனால் கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. தாரணி கோபித்துக்கொண்டு, குழந்தைகளுடன் பெற்றோர் வீட்டுக்கு சென்றுவிட்டார். வருமானம் இல்லாததால் குழந்தைகளின் படிப்பு பாதிக்கப்பட்டது. இதற்கிடையே, குழந்தைகள் இருவரும் கோவை மாநகர போலீஸ் கமிஷனர் சைலேந்திரபாபுவை நேரில் சந்தித்து அழுதுகொண்டே கோரிக்கை மனு கொடுத்திருக்கிறார்கள். அதில், பிரிந்து வாழும் எங்களது அம்மா, அப்பாவை சேர்த்து வையுங்கள் எனக் கூறியிருந்தனர். இதையடுத்து, கணவன், மனைவி இருவரும் மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு அழைத்து வரப்பட்டனர். தனித் தனியாகவும், பிறகு ஒன்றாகவும் விசாரணை நடந்தது. இருவரும் தனிமையில் ஒரு அறையில் அமர்ந்து பேசிவிட்டு ஒரு முடிவுக்கு வாருங்கள் எனக்கூறி கமிஷனர் அனுப்பி வைத்தார். 3 மணி நேரம் பேசிய பிறகு வெளியே வந்த இருவரும், இனி நாங்கள் சேர்ந்து வாழ்கிறோம் எனக்கூறினர். இதன்பின்னர் கணவன், மனைவி மற்றும் குழந்தைகள் போலீஸ் கமிஷனர் சைலேந்திரபாபுவுக்கு நன்றி தெரிவித்துவிட்டு, வீட்டுக்கு புறப்பட்டு சென்றனர்.சினிமாவில் வருவதுபோல்தான் இருக்கிறது. ஆனால் உண்மையில் நடந்துள்ளது. எவ்வளவு தூரம் பாதிக்கப்பட்டிருந்தால், குழந்தைகள் போலீஸ் ஸ்டேஷன் படியேறி இருப்பார்கள். குழந்தைகள் முன்பு பெற்றோர் சண்டை போடுவது குழந்தைகளின் மனதை பெரிதும் பாதிக்கிறது. சிறுசிறு பிரச்னைகளையும் பெரிதாக்கி, சண்டை போட்டால், அது விவாகரத்தில்தான் கொண்டு போய் முடிக்கும். தவறுகளை மன்னிக்க வேண்டும்.  பழைய விஷயங்களையே பேசிப் பேசிக் கொல்லாமல் மறந்துவிட வேண்டும். மன்னிப்போம், மறப்போம் என வாழ்ந்தால் எந்தப் பிரச்னையும் வராது.
338
1/12/2011 5:56:30 PM
கல்வி
இன்ஜினியரிங் படித்தால் மட்டும் போதும்?
இந்தியாவில் ஆண்டுதோறும் இன்ஜினியரிங் படிப்பை லட்சக்கணக்கான மாணவர்கள் முடித்து வெளியே வருகின்றனர். ஆனால் அனைவருக்கும் உடனடியாக வேலை கிடைப்பதில்லை. அப்படியே கிடைத்தாலும் எதிர்பார்க்கும் ஊதியம் கிடைப்பதில்லை. இவ்வாறான மாணவர்கள் குறுகிய கால துணை படிப்புகளை படித்தால் எளிதில் வேலைவாய்ப்பை பெற முடியும்.மத்திய அரசின் சிறு மற்றும் குறுந்தொழில் அமைச்சகத்தின் கீழ் ஐதராபாத்தில் இயங்கும் டூல் அண்ட் டிசைன் தொழிற்பயிற்சி மையத்தில் பல்வேறு சான்றிதழ் படிப்புகள் நடத்தப்படுகின்றன. Master Certificate in Computer Aided Tool Engineering (MCTE), Master Certificate in CAD/CAM (MCAD)/CAM) படிப்புகளில் மெக்கானிக்கல், புரொடக்ஷன், ஆட்டோமொபைல், ஏரோஸ்பேஸ் இன்ஜினியரிங் பாடங்களில் பிஇ, பிடெக், டிப்ளமோ படித்தவர்கள் சேரலாம். படிப்பின் கால அளவு 6 மாதங்கள்.Master Certificate in Computer Aided Tool Engineering (MCTE)பயிற்சிக்கட்டணம் ரூ.50 ஆயிரம். Master Certificate in CAD/CAM (MCAD)/CAM)  படிப்புக்கு கட்டணம் ரூ.40 ஆயிரம். இதனை 3 தவணைகளாக செலுத்தலாம். பட்டப்படிப்பு அல்லது டிப்ளமோ படிப்பில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறும். எஸ்சி, எஸ்டி மாணவர்களுக்கு கல்விக்கட்டண சலுகை உண்டு.www.citdindia.org  என்ற இணையதளத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை MSMETool Room, Hyderabad, Central Institute of Tool Design, Balanagar, Hyderabad500037  என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். வகுப்புகள் துவங்கும் தேதி உள்ளிட்ட இதர விவரங்களை பயிற்சி மைய இணைய தளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
339
1/12/2011 5:56:33 PM
விளையாட்டு
கிளார்க் தலைமையில் ஆஸ்திரேலிய அணி
ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகள் இடையே 7 ஒருநாள் போட்டி கொண்ட தொடர் நடைபெற உள்ளது. இதன் முதல் ஆட்டம் வருகிற 16-ந் தேதி மெல்போர்ன் நகரில் நடக்கிறது. இந்த ஆட்டத்திற்கான ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. கேப்டனாக கிளார்க் நியமிக்கப்பட்டுள்ளார். நீண்ட இடைவெளிக்குப்பிறகு வேகப்பந்து வீச்சாளர் பிரெட்லீ, ஷான்டெய்ட், பேட்ஸ்மேன் டேவிட்ஹசி ஆகியோருக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
340
1/12/2011 5:57:58 PM
விளையாட்டு
தெ.ஆ. பறந்தார் இஷாந்த்சர்மா
முழங்காலில் காயம் ஏற்பட்டதை தொடர்ந்து தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான தொடரில் இருந்து வேகப்பந்து வீச்சாளர் பிரவீன்குமார் நீக்கப்பட்டார். அவருக்கு பதிலாக சேர்க்கப்பட்டுள்ள இஷாந்த்சர்மா நேற்று இரவு தென் ஆப்ரிக்கா புறப்பட்டு சென்றார்.
341
1/12/2011 5:59:13 PM
விளையாட்டு
இளைஞர்களுக்கு வாய்ப்பு: டோனி
இந்திய அணியின் கேப்டன் டோனி கூறுகையில், கடந்த முறை இங்கு ஆடியபோது எல்லா இடங்களிலும் தோல்வியை சந்தித்தோம். பழைய கதைகளை நினைக்க விரும்பவில்லை. இந்த முறை நிலைமை வேறு. அணியில் வளர்ந்து வரும் இளம்வீரர்கள் பலர் உள்ளனர். அவர்கள் சிறப்பாக ஆடி ரன்குவிக்கும் பட்சத்தில் சாதிக்கலாம். உலககோப்பை நெருங்குவதால் அவர்கள் அடிக்கும் ஒவ்வொரு ரன்னையும் தேர்வு குழுவினர் பார்த்து கொண்டே இருப்பார்கள்.முதலில் பேட்டிங் செய்வது சாதகமாக இருக்கும். இரவில் பனிப்பொழிவு இருப்பதால் சற்று சிரமம் இருக்கும். இதனால் டாஸ் முக்கிய பங்கு வகிக்கும். கடந்த பிப்ரவரி முதலே முழு திறமையும் அடங்கிய அணியுடன் நாங்கள் களமிறங்கவில்லை. யாராவது ஒரு வீரர் காயம் காரணமாக விலகிய வண்ணம் உள்ளனர். எங்களை பொறுத்தவரை உலககோப்பை சமயத்தில் எந்த வீரரும் காயமடைந்து விடக்கூடாது என்பதில் கவனமாக உள்ளோம். அதற்காகத்தான் லேசான காயம் அடைந்திருந்தாலும் ரிஸ்க் எடுப்பதில்லை. இந்த தொடர் உலககோப்பைக்கு சிறந்த முன்னோட்டமாக அமையும் என்றார்.
343
1/12/2011 6:01:48 PM
விளையாட்டு
நம்பர் 1 க்கு சான்ஸ்
தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரை, இந்திய அணி வெல்லும் பட்சத்தில் தரவரிசையில் முதலிடத்திற்கு முன்னேற வாய்ப்புள்ளது. தற்போது இந்திய அணி 121  புள்ளிகளுடன் 2வது இடத்தில் உள்ளது. அதே வேளையில் முதல் மற்றும் 5வது இடத்திலுள்ள ஆஸ்திரேலியா (128), இங்கிலாந்து (112) அணிகள் இடையிலான ஒருநாள் தொடரின் முடிவை பொறுத்தும் ரேங்கிங் மாற்றம் அமையும்.
344
1/12/2011 6:06:32 PM
விளையாட்டு
டாக்டர் சச்சின்
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான சச்சினுக்கு டாக்டர் பட்டம் வழங்க மைசூர் பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது. இதற்கான விழா இந்த மாத இறுதி அல்லது அடுத்த மாத தொடக்கத்தில் நடைபெறும் என பல்கலைக்கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.
345
1/12/2011 6:12:32 PM
விளையாட்டு
முதல் ஒருநாள் போட்டி : சரித்திரம் படைக்குமா இந்திய அணி?
டர்பன்: இந்தியா - தென் ஆப்ரிக்கா அணிகள் இடையே 5 ஒருநாள் போட்டி கொண்ட தொடர் நடைபெற உள்ளது. இதன் முதல் ஆட்டம் இன்று மாலை 6 மணிக்கு டர்பன் நகரில் நடக்கிறது. டென் கிரிக்கெட் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது. பகல் - இரவு ஆட்டமாக நடப்பதால் டாஸ் வெல்லும் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்வதிலேயே ஆர்வம் காட்டும்.2வது பேட்டிங்கின் போது பனிப்பொழிவின் காரணமாக ரன் எடுப்பதில் சிரமம் இருக்கும். மேலும் தென் ஆப்ரிக்க ஆடுகளங்களில் ஒருநாள் போட்டியை பொறுத்தவரை அதிரடியாக ஆடாமல் நிதானமாக ஸ்ட்ரோக் செய்து ரன்சேர்த்தாலே நல்ல இலக்கை கொடுத்து விடலாம். இன்று போட்டி நடைபெறும் ஆடுகளம் பேட்டிங், பவுலிங் இரண்டிற்கும் ஒத்துழைக்கும்.முதல் 15 ஓவர்கள் பந்துவீச்சு நன்கு எடுபடும். அதன்பின் நிலைமை மாறிவிடும். இந்த கட்டத்தில் பேட்ஸ்மேன்கள் சுதாரிப்புடன் ஆடினால் ஜொலிக்கலாம். சேவாக், காம்பீர் ஆடாததால் இளம் வீரர்களுக்கு இந்த தொடர் நல்ல வாய்ப்பாக இருக்கும். சச்சின் 11 மாதங்களுக்கு பிறகு களமிறங்குகிறார். இந்திய அணி இதுவரை தென் ஆப்ரிக்க மண்ணில் ஒருநாள் போட்டி தொடரை வென்றதில்லை.1992-93ம் ஆண்டு போட்டியில் 2-5 என்ற கணக்கிலும், 2006-2007ம் ஆண்டு போட்டியில் 0-4 என்ற கணக் கிலும் இந்திய அணி படுதோல்வியைதான் சந்தித்துள்ளது. இம்முறை இந்திய அணி இளம் படையுடன் களமிறங்குவதால் சாதிக்க வாய்ப்புள்ளது. உலககோப்பை நெருங்குவதால் யூசுப்பதான், ரோகித்சர்மா, யுவராஜ்சிங், ரெய்னா, டோனி, ஹோக்லி ஆகியோர் தங்களது திறமையை மேம்படுத்தி கொள்ள இந்த தொடர் ஒரு வாய்ப்பாக அமையும்.
346
1/13/2011 5:24:55 PM
தொழில்
முயல் வளர்த்தால் முன்னேற்றம்
ஆடு, மாடு, கோழி வளர்ப்பு போல முயல் வளர்ப்பு தொழிலும் மிகுந்த லாபம் தரக் கூடியது. இத்தொழிலின் முக்கியத்துவம் கருதி, கோவை கால்நடை பல்கலைக்கழகத்தில் முயல் வளர்ப்பு பற்றி பயிற்சி வழங்கப்படுகிறது. முழுநேரமாகவோ, பகுதி நேரமாகவோ முயல் வளர்த்தால் முன்னேற்றம் நிச்சயம் என்கிறார் கோவை தொண்டாமுத்தூரை சேர்ந்த செல்வம். டெய்லரான இவர், பகுதி நேரமாக வீட்டிலேயே முயல் வளர்க்க துவங்கினார். இப்போது ஏகப்பட்ட கிராக்கி. தொழிலை விரிவாக்க திட்டமிட்டுள்ளார். அவர் கூறியதாவது:முயல் குட்டி ஒரு மாசம் வரை தாயுடன் இருக்கணும். அதுவரை தாய்ப்பால் குடிக்கணும். முதல்ல... 20 நாளில் குட்டியை பிரிச்சுட்டேன். 40 குட்டிகள் இறந்திடுச்சு. கோவை கால்நடை பல்கலை.யில் முயல் வளர்ப்பு பயிற்சி கத்து கொடுத்தாங்க. அவங்க சொன்னபடி முயல் வளர்க்க ஆரம்பிச்சேன். அப்புறம் ஒரு  குட்டியைக் கூட நான் இழக்கல.முயலையோ, முயல் கறியையோ முதலில் யாரும் வாங்கல. சமைக்கத் தெரியாது; ருசி பழக்கமில்லைனு சொன்னாங்க. நானே அதை சமைத்து அக்கம்பக்கத்தில் உள்ளவங்களுக்குக் கொடுத்தேன். அப்புறம் அவங்களுக்கு ரொம்ப பிடிச்சு போச்சு. இப்போ நல்ல கிராக்கி. ஒரு கிலோ ரூ.200க்கு விக்கறேன். முயல் இறைச்சி கடைக்காரர்கள் முயலை எடைபோட்டு உயிரோடு வாங்கிச் செல்கிறார்கள். அவர்கள் இறைச்சியை கிலோ ரூ.250க்கு மேல் விலை வைத்து விற்கிறார்கள். 4 முயல் குட்டி மூலம் ஒரு ஆண்டில் 300 குட்டிகள் கிடைத்தது. இதன் மூலம் மாதம் சராசரியாக ரூ.4 ஆயிரம் வரை வருவாய். குட்டிகளின் எண்ணிக்கை அதிகரிக்க, அதிகரிக்க வருவாயும் அதிகரிக்கும். இவ்வாறு செல்வம் கூறினார். ரூ.25 ஆயிரம் போதும்ஒரு முயல் ரூ.500 வீதம், 2 ஆண், 10 பெண் முயல்கள். கூண்டு, உணவு தானியம் என மொத்த முதலீடு ரூ.25 ஆயிரம். வீட்டு முற்றம், மொட்டை மாடி, தோட்டம், காலியிடத்தில் வளர்க்கலாம். காற்றோட்டமான இடம் தேவை. கூண்டு முறையில் வளர்க்க 50 செ.மீ. உயரம், 60 செ.மீ. அகலத்துடன் கூண்டு இருக்க வேண்டும். கூண்டின் நீளம் தேவைக்கு ஏற்ப அமைத்து கொள்ளலாம். கூண்டின் அடிப்பாகம் எலி, பாம்புகள் நுழையாதவாறு 90 செ.மீ. உயரத்தில் இருக்க வேண்டும். உற்பத்தி 5வது மாதம் முதல், பெண் முயல்கள் இனப்பெருக்கத்தை துவங்கும். ஒரு முயல் 3 ஆண்டு உயிர் வாழும். 6 மாதத்துக்கொரு முறை 6 முதல் 10 குட்டி போடும். 3 மாதத்தில் இருந்து இறைச்சிக்கு பயன்படுத்தலாம். ரோமம், தோலையும் விற்கலாம்.வகைகள் இமாலயன், சோவியத் சின்சில்லா, டச்சு, ஆல்பினோ வகை இனங்கள் 2 முதல் 3 கிலோ எடை வரை வளரும். இறைச்சிக்காக பயன்படுத்தலாம். நியூசிலாந்து வெள்ளை, நியூசிலாந்து சிவப்பு, கலிபோர்னியா வகை 3 முதல் 4 கிலோ எடை வரை வளரும். முயல்களில் வெள்ளை ஜெயின்ட், சாம்பல் நிற ஜெயின்ட், பிளமிஸ் ஜெயின்ட் இனங்கள் 4 முதல் 6 கிலோ எடை வரை வளரும். ரோமம் விற்றால் காசுசிறந்த ரக முடி 9 மாதத்தில் இருந்து கிடைக்கும். ஆண்டுக்கு பெண் முயல் 1 கிலோ முடியும், ஆண் முயல் 750 கிராம் முடியும் கொடுக்கும். முயல் தோலை பதனிட்டு நல்ல விலைக்கு விற்கலாம். முயல் தோலில் பர்ஸ், கையுறை, குல்லா, பொம்மை செய்யலாம். முயல் இறைச்சியை பிரியாணி, சில்லி,  ரோஸ்ட், சூப், ஊறுகாய் தயாரிக்க பயன்படுத்தலாம்.  சந்தை வாய்ப்பு  ஒரு கிலோ முயல் கறி ரூ.200க்கு விற்கலாம். நடமாடும் ஊர்திகள், முயல்கறி ஸ்டால், மொத்தக் கொள்முதல் விற்பனை நிலையங்கள்,  விடுதிகள், ஓட்டல்களுக்கு சப்ளை செய்யலாம்.கறியில் மருத்துவ குணம் முயல் இறைச்சியில் அதிக எலும்புகள் இருக்காது. குறைந்த அளவு கொழுப்பு, அதிக புரதம், உயிர்சத்துக்கள் மற்றும் தாதுக்கள் உள்ளன. உடல் ஆரோக்கியத்துக்கு உகந்தது. முயல் இறைச்சி சாப்பிட்டால் குடல்புண், ஜீரண பிரச்னை வராது. வாதம் குறையும். உடல் பித்தம், காசநோய், இருமல், வாயு தொல்லை, மலச்சிக்கல் ஏற்படாது. இதய நோய் உள்ளவர்கள் கூட முயல் கறி சாப்பிடலாம். ஆடு, கோழி இறைச்சியைவிட இதில் கொழுப்பு குறைவு.தினமும் 2 மணி நேரம் போதும்முயலுக்கு பச்சை தாவரங்கள், காய்கள், பழங்கள், குதிரை மசால், வேலி மசால், முட்டைகோஸ், கேரட், முள்ளங்கி, பீட்ரூட், புற்கள், பலா இலை, முள் முருங்கை போன்றவற்றை கொடுக்கலாம். இளம் முயல்கள் வேகமாக வளர்ச்சி அடைய சத்து மிகுந்த கலப்பு தீவனம் அவசியம். கலப்பு தீவனத்தில் உடைத்த மக்காச்சோளம், உடைத்த கம்பு, கடலை புண்ணாக்கு, கோதுமை தவிடு, தாது உப்பு கலவை ஆகியவற்றை கலந்து கொடுக்கலாம். ஒரு நாளைக்கு ஒரு முயலுக்கு 200 கிராம் முதல் 500 கிராம் வரை உணவு கொடுக்க வேண்டும். வீட்டில் வீணாகும் காய்கறிகளை கொடுக்கலாம். முயல் வளர்க்க தினமும் 2 மணி நேரம் செலவழித்தால் போதும். நல்ல லாபம் பார்க்கலாம். ரோமத்திற்காக வளர்க்கப்படும் அங்கோரா இனங்களை தனித்தனியாக கூண்டிலிட்டு வளர்க்க வேண்டும். கூண்டில் வைக்கோல் படுக்கை இட்டு வளர்ப்பதால் முயல்களுக்கு புண்கள் ஏற்படுவதை தடுக்கலாம். அதோடு 25 சதவீதம் அதிக ரோமம் கிடைக்கும். 3 மாதத்திற்கு ஒரு முறை முடியை வெட்டி எடுக்கலாம். பெண் முயல் அமைதியில்லாமல், வாயை தரையிலோ அல்லது கூண்டிலோ அடிக்கடி தேய்த்தால் சினை அறிகுறியாகும். சினை அறிகுறி தெரிந்தவுடன் பெண் முயலை ஆண் முயல் இருக்கும் கூண்டுக்கு எடுத்து சென்று இனச்சேர்க்கைக்கு விட வேண்டும். கருவுற்ற நாளில் இருந்து 29 நாட்களுக்குள் பெண் முயல் குட்டிகளை ஈனும். வளர்ப்பு முயல்கள் எங்கு கிடைக்கும்?முயல் பண்ணை அமைக்க விரும்புவோர் நாமக்கல் கால்நடை மருத்துவ கல்லூரியில் உள்ள முயல் பண்ணையில் மொத்தமாக முயல் வாங்கலாம். ஊட்டி சாந்தி நல்லாவில் உள்ள செம்மறி ஆடு ஆராய்ச்சி நிலையத்திலும் கிடைக்கும். முயல்களை 2 கிலோ உடல் எடை உள்ளபோது வாங்க வேண்டும். பெண் முயலுக்கு குறைந்த பட்சம் 8 பால் காம்புகள் இருக்க வேண்டும். பெண், ஆண் முயல்களை தனித்தனியே வெவ்வேறு பண்ணைகளில் இருந்து வாங்க வேண்டும். அல்லது முயல் வளர்ப்போரிடமும் பெற்றுக் கொள்ளலாம். பல்கலை.யில் பயிற்சிகோவை சரவணம்பட்டி கால்நடை பல்கலைக்கழக பயிற்சி மையத் தலைவர் சிவக்குமார் கூறியதாவது: குறைந்த செலவு, இடம், முதலீடு, குறுகிய காலத்தில் கணிசமான வருவாய் ஈட்டும் தொழிலாக முயல் வளர்ப்பு உள்ளது. சாதாரண தீவனத்தை தின்று சிறந்த இறைச்சியாக மாற்றும் தன்மை முயலுக்கு உண்டு. முயலை இறைச்சிக்காகவும், தோல் மற்றும் ரோமத்திற்காகவும் வளர்க்கலாம். முயல் வளர்க்க கால்நடை பல்கலைக்கழக பயிற்சி மையம் பயிற்சி அளித்து வருகிறது. கிராமத்தில் குறைந்தபட்சம் 10 பேருக்கு ஒரே நேரத்தில் பயிற்சி தேவைப்பட்டால் நேரிலேயே வந்து பயிற்சி அளிக்கிறோம். தகவல் அறிய விரும்புபவர்கள் அருகிலுள்ள கால்நடை பல்கலை பயிற்சி மையத்தை தொடர்பு கொள்ளலாம்.முயலை காதைப்பிடித்து தூக்கக்கூடாது. முதுகு பகுதியை பிடித்து தூக்க வேண்டும். வளர்ந்த முயல்களை முதுகு பகுதியை ஒரு கையாலும், அதன் வயிற்று பகுதியை ஒரு கையாலும் தாங்கிப் பிடித்து தூக்க வேண்டும். முயலுக்கு தோல் சிரங்கு, ரத்த கழிச்சல், சுவாச நோய், குடல் அழற்சி போன்ற நோய்கள் ஏற்படும். அப்படி வந்தால் கால்நடை மருத்துவரை அணுக வேண்டும்.
347
1/17/2011 11:16:13 AM
மர்மம்
கந்து வட்டிக்காரர்களை பழிவாங்கும் ஆவி
கோவை சிங்காநல்லூரில் இருந்து வெள்ளலூர் செல்லும் ஒற்றையடிப் பாதையில் உள்ளது ஆத்துப்பால சுடுகாடு. இங்குதான் அநியாய வட்டிக்காரர்களை பழிக்குப்பழி வாங்கத் துடிக்கும் ஆவிகள் நடமாட்டம் இருப்பதாக அச்சத்தில் உறைந்து போய் கிடக்கிறார்கள் அப்பகுதிக்காரர்கள்.கடந்த 28 ஆண்டுகளுக்கு முன்பு வட்டிக்காரர் ஒருவர் இப்பகுதியை கடந்தபோது, அவருக்கு நேர்ந்த கதியை இன்னும் அவர்களால் மறக்க முடியவில்லை. நள்ளிரவு 12 மணியளவில் சுடுகாடு அருகே பைக்கில் சென்ற போது, வெள்ளையாய் உருவம் திடீரென தோன்றி ஆக்ரோஷமாய் தாக்க.. கையில் வைத்திருந்த பையோடு கீழே சரிந்தார். பை நழுவி ஆற்றில் விழ, அதை எடுக்கக் கூட நினைவில்லாதவராய், பித்து பிடித்தது போல ஆனார். அப்படியே வீட்டுக்கு வந்து படுத்தவர்தான். எழுந்திருக்கவே இல்லை. இரண்டே நாளில் வட்டிக் கடைக்காரர் மூச்சு நின்று போனது. அது முதல் ஆத்துபால சுடுகாட்டில் ஆவிகள் உலவுவதாக அச்சப்படத் தொடங்கினார்கள். அதன்பிறகு அந்த பகுதியை கடந்த வட்டிக்காரர்களும் மர்மமான முறையில் சாக, பயம் பற்றிக் கொண்டது. வட்டிக்காரர்களை பேய்கள் பழிவாங்குவதாக நினைத்தனர்.  ‘மரணத்தில் சந்தேகம் இருக்கு... போலீஸ் விசாரிச்சா உண்மை தெரியும்’ என்ற பேச்சு எழாமல் இல்லை. ‘ஆவி அடிச்சிருக்கு... வைத்தியம் பாத்தா தப்ப முடியுமா? போலீசு அது இதுன்னு போனா ஆபத்துதான்’ என்று ஒரு பூசாரி சொல்ல, ஊரே அமைதியானது.இப்போதும் இரவு நேரத்தில் அந்த வழியாக செல்வதற்கே, கிராமவாசிகள் பயப்படுகிறார்கள். குறிப்பாக சுடுகாட்டை தாண்டும் வரை, உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு தான் செல்கிறார்கள். ‘என்னடா பண்ணும் ஆவி.. பாத்துருவோம்’ என்று 3 இளைஞர்கள் துடிப்பாக கிளம்ப, ஊர் மக்கள் எச்சரித்தனர். நள்ளிரவு கடந்த நேரத்தில் சுடுகாட்டுக்கு சென்ற இளைஞர்கள் மறுநாள் காலை வரை வரவில்லை. ஊர்மக்கள் சென்று பார்த்தபோது மூவரும் சுடுகாட்டில் மூர்ச்சையாகி கிடந்தனர். அவர்களை தண்ணீர் தெளித்து எழுப்பிய போது, நள்ளிரவில் வெள்ளையாய் உருவத்தைப் பார்த்து மயங்கி விழுந்து விட்டதாக கூற அச்சம் உச்சமானது.இதையடுத்து, 6 மாத இடைவெளிகளில் திடீரென அந்த வழியாக நள்ளிரவில் வருபவர்களை ஆவி தாக்குவதாக சம்பவங்கள் நடந்தன. இதில் 4 பேர் வரை வீட்டுக்கு வந்து மூர்ச்சையாகி இறந்துள்ளனர். இறந்தவர்கள் அனைவருமே வெளியூரில் இருந்து வந்து, இங்கு வட்டிக்கு கடன் கொடுத்தவர்கள்.‘வட்டிக் கொடுமைல பாதிக்கப்பட்டவங்க சில பேரு, வட்டிக்காரங்க கொடுமை தாங்காம இங்கே தற்கொலை பண்ணிருக்காங்க. அவங்க ஆவிதான் அநியாய வட்டிக்காரர்களை பழி வாங்குது. அமாவாசை, தேய்பிறை நாட்கள்லதான் ஆவிக உக்கிரத்தோட இருக்கும். சுடுகாடு பகுதியில இருக்கற மரத்தில்தான் ஆவிக இருக்கு’ என்று ஊர் பூசாரி சொல்கிறார். சுடுகாடு மற்றும் எதிரில் மரம் உள்ள பகுதிகளில் தெருவிளக்குகள் போட்டால், உடனுக்குடன் ‘பியூஸ்’ போய்விடுகிறது. இருட்டுதான் இருக்கிறது, இதுவும் ஆவிங்களோட சேட்டைதான் என்கிறார்கள் கிராமத்தினர். அநியான வட்டிக்காரர்களின் தொடர் மரணம் இன்றளவும் மர்மமாகவே உள்ளது.
348
1/17/2011 11:29:30 AM
வேலைவாய்ப்பு
மத்திய அரசு இன்ஜினியர் பணியிடங்களுக்கு ஸ்டாப் செலக்ஷன் தேர்வு
மத்திய அரசின் நீர்வளத்துறை மற்றும் தபால்துறையில் காலியாக உள்ள இளநிலை பொறியாளர் (சிவில், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல்) பணியிடங்கள் ஸ்டாப் செலக் ஷன் தேர்வு மூலம் நிரப்பப்பட உள்ளது.1. இளநிலை பொறியாளர் (சிவில் மற்றும் மெக்கானிக்கல்)- மத்திய நீர்வளத்துறைமொத்த இடங்கள்: 142 (ஓபிசி-95, எஸ்சி-22, எஸ்டி-25). இதில் சிவில் பிரிவுக்கு 99 இடங் களும், மெக்கானிக்கல் பிரிவுக்கு 43 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன.2. இளநிலை பொறியாளர் (எலக்ட்ரிக்கல்)- தபால்துறை. காலியிடங்கள்: 18 (பொது-9, ஓபிசி-7, எஸ்சி-1, எஸ்டி-1).கல்வித்தகுதி: (இரு பணிகளுக் கும்): அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் சிவில், எலக்ட்ரிக்கல், மெக்கானிக்கல் இன்ஜினியரிங் ஆகிய பாடங்களில் ஏதேனும் ஒன்றில் டிப்ளமோ அல்லது அதற்கு சமமான கல்வித்தகுதி.வயது: ( இரு பணிகளுக்கும்) 31.1.2011ன்படி 18 வயதிலிருந்து 28க்குள். அரசு விதிகளின்படி வயதுத் தளர்வு உண்டு. எழுத்துத் தேர்வு, நேர்முகத்தேர்வு அடிப்படை யில் விண்ணப்பதாரர்கள் தேர்ந் தெடுக்கப்படுவர். விண்ணப்ப கட்டணம்: ரூ.100/ மத்திய அரசின் வேலைவாய்ப்புக் கான அஞ்சல் தலையை ஒட்டி அனுப்ப வேண்டும். எஸ்சி.,எஸ்டி., மாற்றுத்திறனாளிகள், பெண்கள், முன்னாள் ராணுவத்தினர் கட்டணம் செலுத்த வேண்டியதில்லை.ஜனவரி-1-7 தேதியிட்ட எம்ப்ளாய் மென்ட் நியூஸில் வெளியான மாதிரி விண்ணப்ப படிவத்தை கம்ப்யூட்டர் தட்டச்சு செய்து பயன்படுத்தலாம். ஆன்லைனிலும் விண்ணப்பிக்கலாம்.பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப் பத்தை அனுப்ப வேண்டிய முகவரி:The Regional Director (KKR), Staff Selection Commission, 1st Floor, ‘E’ Wing, Kendriya Sadan Koramangala, Bangalore 560 034.விண்ணப்பிக்க கடைசிநாள்: 31.1.2011.மேலும் விவரங்களுக்கு http://ssc.nic.in இணையதளத்தை பார்க்கவும்
349
1/17/2011 11:33:49 AM
வேலைவாய்ப்பு
மத்திய தொழில் பாதுகாப்பு படையில் கான்ஸ்டபிள்/ டிரேட்ஸ்மென் வேலை
மத்திய தொழில் பாது காப்பு படையில் பார்பர், பூட் மேக்கர், சமையலர், கார்பென்டர், தோட்டக்காரர், எலக்ட்ரீஷி யன், மோட்டார் பம்ப் அட்டென்டன்ட், கட்டிட தொழிலாளி, பெயின்டர், பிளம்பர், ஸ்வீப்பர், வாட் டர்மேன், வாஷர் கேரியர் உள்ளிட்ட காலியாக உள்ள 105 பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற் கப்படுகின்றன. இவை தவிர முன்னாள் ராணுவத் தினருக்கு 227 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.கல்வித்தகுதி: 10ம் வகுப்பு அல்லது அதற்கு சமமான படிப்பு. உடல் தகுதி: உயரம்: 170 செ.மீ., மார்பளவு: சாதாரண நிலை யில் 80 செ.மீ., (விரிவடைந்த நிலையில் 85 செ.மீ). எடை: உயரம் மற்றும் வயதிற் கேற்ற எடை. வயது: 10.2.2011 அன்று 18 முதல் 25க்குள். இடஒதுக்கீட்டு பிரி வினருக்கு வயது வரம்பில் தளர்வு உண்டு. சம்பளம்: ரூ.5,200-20,200 மற்றும் தர ஊதியம் ரூ. 2,000.விண்ணப்ப கட்டணம்: ரூ. 50/ இதை Assistant Commandant/DDO CISF, DAE HQrs, Hyderabad என்ற முகவரிக்கு போஸ் டல் ஆர்டர் எடுக்க வேண் டும்.மாதிரி விண்ணப்பத்தை எம்ப்ளாய்மென்ட் நியூஸ் ஜன.1-7 இதழிலோ அல்லது www.cisf.gov.in இணைய தளத்திலோ பார்த்து நகல் எடுக்கலாம். தேவையான சான்றிதழ் களுடன் பூர்த்தி செய்த விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய முகவரி:Deputy Inspector General, CISF DAE HQrs POST ECIL NFC Hydera bad, ANDHRA PRADESH 500 062.விண்ணப்பிக்க கடைசி நாள்: 10.2.2011.
350
1/17/2011 11:36:34 AM
வேலைவாய்ப்பு
பரோடா வங்கியில் 900 புரொபஷனரி ஆபீசர் பணி
பரோடா வங்கியில் காலியாக உள்ள 900 புரொபஷனரி ஆபீசர்ஸ் பணியிடங்க ளுக்கு பட்டதாரிகளிடமிருந்து விண்ணப் பங்கள் வரவேற்கப் படுகின்றன.மொத்த இடங்கள்: 900 (பொது-450, ஓபிசி-236, எஸ்சி-142, எஸ்டி-72). இதில் மாற்றுத்திறனாளிகளுக்கு 27 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. கல்வித்தகுதி: ஏதேனும் ஒரு பட்டம் அல்லது அதற்கு சமமான கல்வித்தகுதி. கம்ப்யூட்டரில் பணிபுரியும் திறன் கூடுதல் தகுதி.வயது: 1.1.2011ம் தேதியின்படி 21 லிருந்து 30க்குள். எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். சென்னை, கோவை, பெங்களூர் ஆகிய இடங்களில் எழுத்துத்தேர்வு நடைபெறும்.விண்ணப்ப கட்டணம்: ரூ. 300/ஐ வங்கியின் கணக்கு எண் 29040200000198ல் செலுத்த  வேண்டும். இடஒதுக்கீட்டுப் பிரிவி னர் ரூ.50 செலுத்தினால் போதுமா னது. ஆன்லைனில் மட்டுமே விண் ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க கடைசி நாள்: 25.1.2011. எழுத்துத் தேர்வு நடைபெறும் நாள்: 13.3.2011. மேலும்  விவரங்களுக்கு www.bankofbaroda.com என்ற இணையதளத்தை பார்க்கவும்.
351
1/17/2011 11:39:48 AM
வேலைவாய்ப்பு
தென்கிழக்கு ரயில்வேயில் 5798 காலியிடங்கள்
தென்கிழக்கு ரயில்வேயில் காலியாக உள்ள 5798 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.1. போர்ட்டர் (ஆபரேட்டிங்): மொத்த இடங்கள்: 456 (பொது-224, ஓபிசி-86, எஸ்சி-122, எஸ்டி-24).2. ஹெல்பர்-2 (சிக்னல் மற்றும் டெலிகாம், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், சிவில்)- மொத்த இங்கள் 1542 (பொது-997, ஓபிசி-261, எஸ்சி-196, எஸ்டி-88) இதில் மாற்றுத்திறனாளிகளுக்கு 112 இடஙகள்.3. ஹெல்பர்- 2 (ஸ்டோர்ஸ் மற்றும் ஒர்க்ஷாப்); 220 (பொது-113, ஓபிசி-60, எஸ்சி-32, எஸ்டி-15) மாற்றுத்திறனாளிகள்-44.4. டிராக்மேன் (சிவில் இன்ஜி): 3145 (பொது-2179, ஓபிசி-468, எஸ்சி-349, எஸ்டி-149)5. சபைவாலா (கமர்சியல் மற்றும் மெடிக்கல்): 245 (பொது-119, ஓபிசி-56, எஸ்சி-34, எஸ்டி-36). மாற்றுத்திறனாளிகள்-43.6. ஹமால் (கமர்சியல்): 113 (பொது&44, ஓபிசி-35, எஸ்சி-16, எஸ்டி-18). மாற்றுத்திறனாளி கள்&5.7. பியூன்:77 (பொது-56, ஓபிசி-12,எஸ்சி-8, எஸ்டி-1). மாற்றுத்திறனாளிகள்-54.கல்வித்தகுதி: 1.1.2011ன்படி 10ம் வகுப்பு அல்லது ஐடிஐ அல்லது அதற்கு சமமான கல்வித் தகுதி. தேர்வு முடிவுக்காக காத் திருப்பவர்கள் விண்ணப்பிக்க வேண்டாம். வயது: 1.1.2011ன்படி 18 லிருந்து 33 வயதுக்குள். விண்ணப்பதாரர்கள் உடல்தகுதித் தேர்வு, எழுத்துத் தேர்வு அடிப்படையில்  தேர்ந் தெடுக்கப்படுவர்.விண்ணப்பகட்டணம்: ரூ  40/ ஐ Assistant Personnel Officer (Recruitment), Bilaspur, Chhattisgarh என்ற முகவரிக்கு டிடி எடுக்க வேண்டும். பெண்கள் மற்றும் இடஒதுக்கீட்டுப் பிரிவின ருக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது.மாதிரி விண்ணப்பம் மற்றும் கூடுதல் விவரங்களுக்கு www.secr.indianrailways.gov.in இணைய தளத்தை பார்க்கவும்.விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய முகவரி:Assistant Personnel Officer (Recruitment), Railway Recruitment Cell, Annex Building, General Manager‘s Office, South East Central Railway, Bilaspur, Chattisgarh 495 004.விண்ணப்பிக்க கடைசி நாள்: 14.2.2011.
352
1/17/2011 3:15:05 PM
இந்தியா
ஜெகன்மோகன் ரெட்டிக்கு சொந்தமான 7 நிறுவனங்களில் இன்கம்டாக்ஸ் ரெய்டு
ஐதராபாத்: காங்கிரசிலிருந்து விலகிய ஜெகன்மோகன்ரெட்டி பங்குதாரராக உள்ள நிறுவனங்களில் வருமானவரித் துறையினர் நேற்று அதிரடி சோதனை நடத்தியதாக ஐதராபாத் வட்டாரங்கள் தெரிவித்தன. இதுகுறித்து அந்த வட்டாரங்கள் மேலும் கூறியதாவது: ஆந்திர முதல்வராக இருந்த ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி கடந்த ஆண்டு ஹெலிகாப்டர் விபத்தில் இறந்தார். அவரது மறைவுக்குப்பின் ரோசய்யா முதல்வரானார். முதல்வர் பதவி கிடைக்கும் என்று எதிர்பார்த்திருந்த ராஜசேகர ரெட்டியின் மகன் ஜெகன்மோகன் ரெட்டிக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இதனால் கட்சி கட்டுப்பாட்டை மீறி ஆந்திரா முழுவதும் ஆறுதல் யாத்திரை நடத்தினார். கடந்த மாதம் ரோசய்யாவின் ராஜினாமாவை தொடர்ந்து கிரண்குமார்ரெட்டி முதல்வரானார். முதல்வர் பதவி கிடைக்காமல் 2&வது முறை விரக்தியடைந்த ஜெகன் காங்கிரசின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து விலகினார். பிப்ரவரி 4ம் தேதி புதிய கட்சி தொடங்கவிருப்பதாக தெரிவித்துள்ளார். இதற்கிடையில் விவசாயிகளுக்கு ஆதரவாக உண்ணாவிரதம் இருக்கப்போவதாக நேற்று அறிவித்தார். காங்கிரசுக்கு எதிராக ஜெகன் அரசியல் செய்ய தொடங்கிவிட்டதாக அவரது ஆதரவாளர்கள் தெரிவித்தனர். இதனால் ஜெகனுக்கு எதிராக காங்கிரசும் தனது நடவடிக்கையை தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்டது.ஜெகன்மோகன்ரெட்டி கடந்த 2009ம் ஆண்டு மக்களவை பொதுத் தேர்தலில் கடப்பா தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டார். அப்போது  தனது பெயரில் ரூ.61 கோடிக்கு சொத்து இருப்பதாகவும், தனது மனைவி பாரதி பெயரில் 16 கோடி சொத்து இருப்பதாகவும் வேட்புமனுவில் தெரிவித்திருந்தார்.  கடந்த செப்டம்பர் மாதம் 2010ம் ஆண்டுக்கான அட்வான்ஸ் வரியாக ரூ.84 கோடியை ஒரே தவணையில் வருமான வரித்துறைக்கு அவர் செலுத்தினார். பாரதி சிமென்ட்ஸ் உள்ளிட்ட 5 நிறுவனங்களில் தனக்குள்ள பங்கை விற்பனை செய்தபிறகு இவ்வளவு பெரிய தொகையை அட்வான்ஸ் வரியாக செலுத்தினார். மிகப்பெரிய தொழில் அதிபர்கள் கூட இந்த அளவு அட்வான்ஸ் வரி செலுத்தாத போது ஜெகன்மோகன் இந்த அளவு வரி செலுத்தியது வருமானவரித்துறை வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஜெகன்மோகன் குடும்பத்துக்கு 300 கோடி ரூபாய்க்கு சொத்து இருப்பதாகவும் 18க்கும் மேற்பட்ட நிறுவனங்களில் அவர்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் முதலீடு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் அவர் பங்கு வைத்துள்ள 7 நிறுவனங்களில் வருமான வரித்துறையினர் நேற்று அதிரடி சோதனை நடத்தினர். ஜெகன் முதலீடு செய்த பின்னர் இந்த நிறுவனங்களின் பங்கு மதிப்புகள் பல மடங்கு உயர்ந்தது குறித்து வருமானவரித்துறை தனியாக விசாரணை நடத்த முடிவு செய்துள்ளது. ஜெகன் குடும்பத்தினர் 15 நிறுவனங்களை நிர்வகிப்பதாகவும், அதில் ஜெகதி பப்ளிகேஷன்ஸ், சந்தூர் பவர் கம்பெனி, சரஸ்வதி பவர் மற்றும் சில ரியல் எஸ்டேட் நிறுவனங்களும் அடங்கும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ராஜசேகர ரெட்டி முதல்வராக இருந்தபோது பெரிய அளவில் பலன் அடைந்த நிறுவனங்கள், தொழிலதிபர்களை வருவான வரித்துறை கண்காணித்து வருகிறது. இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.இதற்கிடையில் ஜெகனுக்கு சொந்தமான நிறுவனங்களில் வருமானவரித்துறை சோதனை நடத்தியதற்கும் அவர் காங்கிரசிலிருந்து விலகியதற்கும் சம்பந்தம் இல்லை என ஐதராபாத் காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
353
1/17/2011 3:19:42 PM
தமிழகம்
கடலூர், நெல்லையில் வெள்ள சேத ஆய்வு : மத்திய குழுவினரிடம் விவசாயிகள் கண்ணீர்
சென்னை: தமிழகத்தில் கடந்த இரு மாதங்களாக பெய்த கனமழைக்கு 10 மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதந்தன. முதல் கட்டமாக ரூ.500 கோடியை வெள்ள நிவாரண நிதியாக ஒதுக்க முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டார். மேலும் வெள்ள நிவாரணமாக தமிழகத்துக்கு மத்திய அரசு ரூ.1,600 கோடி வழங்க வேண்டும் என்றும் பிரதமர் மன்மோகன்சிங்குக்கு கடிதம் எழுதினார். முதல்வர் கருணாநிதியின் வேண்டுகோளை ஏற்று மத்திய அரசு உள்துறை இணைச் செயலர் தலைமையில் 7 பேர் கொண்ட குழுவை தமிழகத்துக்கு அனுப்பியது. இந்தக் குழுவினர் 2 குழுக்களாகப் பிரிந்து ஆய்வு செய்கின்றனர். இன்று கடலூர் மற்றும் நெல்லை மாவட்டத்தில் ஆய்வு செய்தனர்.கடலூர் மாவட்டத்தில் மழை வெள்ளத்திற்கு 18 பேர் இறந்தனர். 1162 குடிசைகள் இடிந்து விழுந்தன. வெள்ளத்தால் விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. 2 லட்சத்து 10 ஆயிரம் ஏக்கர் பயிர்கள் வெள்ளத்தில் மூழ்கின. கடலூர் மாவட்டத்தில் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட குறிஞ்சிப்பாடி, காட்டுமன்னார்கோவில், சிதம்பரம் பகுதிகளை மத்தியக்குழுவினர் இன்று நேரில் ஆய்வு செய்தனர். அக்குழுவில் அதிகாரிகள் முரளிதரன், ஜித்தேந்திரகுமார் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.நெல்லை தொடர் மழையால் நெல்லை மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலைகள் 18 கி.ம¦., மாநில நெடுஞ்சாலைகள் 477 கி.மீ., மாநகராட்சி, நகராட்சி, டவுன் பஞ்சாயத்து பகுதிகளில் 27 கி.மீட்டரும் சேதமைடந்தன. 592 வீடுகள் சேதமடைந்தன. மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மத்திய குழுவைச் சேர்ந்த டாக்டர் மனோகரன், தங்கமணி, திக் விஜய் மிஸ்ரா ஆகியோர் இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர். நெல்லை வண்ணார்பேட்டை  சாலைகள், அம்பாசமுத்திரம், சேரன்மகாதேவி, களக்காடு, ராதாபுரம் ஆகிய பகுதிகளிலும் மத்திய குழு ஆய்வு செய்தது. மழையால் மூழ்கிய விளைநிலங்கள், மழை வடிந்த நிலையில் பயிர்கள் அழுகிய நிலங்கள், இடிந்த வீடுகள், நொறுங்கி கிடக்கும் சாலைகள் ஆகியவற்றை மத்திய குழுவினர் ஆய்வு செய்த போது, விவசாயிகள் அழுகிய நெற்பயிர்க¬யும் இடிந்த குடிசைகளையும் காட்டி கண்கலங்கினர். உடனடி நிவாரணம் வழங்க கோரியும் மத்தியக் குழுவினரிடம் பொதுமக்கள் மனு அளித்தனர்
354
1/17/2011 3:21:42 PM
தமிழகம்
திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் சொர்க்கவாசல் திறப்பு: பக்தர்கள் குவிந்தனர்
சென்னை: வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு அனைத்து பெருமாள் கோயில்களிலும் இன்று அதிகாலை சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர். மார்கழி மாதம் வளர்பிறையில் வரும் ஏகாதசி வைகுண்ட ஏகாதசியாகும். முக்கோடி ஏகாதசி, மோட்ச ஏகாதசி என்றும் அழைக்கப்படுகிறது. இதையொட்டி கடந்த 10 நாட்களாக பகல் பத்து உற்சவம் கொண்டாடப்பட்டது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான வைகுண்ட ஏகாதசி இன்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி அனைத்து பெருமாள் கோயில்களிலும் சொர்க்க வாசல் திறக்கப்பட்டது. ஆண்டுக்கு ஒருமுறை வைகுண்ட ஏகாதசியன்று மட்டுமே சொர்க்கவாசல் திறக்கப்படும். இந்த நாளில் பெருமாளும் இந்த வாசல் வழியாக சென்று அருள் பாலிப்பார். சொர்க்க வாசல் வழியாக சென்றால் பாவங்கள் தீரும், இறைவன் அருள் கிடைக்கும் என்பது நம்பிக்கை.திருப்பதி, ஸ்ரீரங்கம், ஸ்ரீவில்லிபுத்தூர், மதுரை அழகர்கோவில் உள்பட பல கோயில்களிலும் அதிகாலையில் சொர்க்க வாசல் திறக்கப்பட்டது. சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழா சிறப்பாக நடந்து வந்தது. இன்று சொர்க்கவாசல் திறப்பு என்பதால் சென்னை, புறநகர் பகுதிகள் மட்டுமல்லாமல் வெளி மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் நேற்று மாலையில் இருந்தே கோயிலில் குவிந்தனர். இன்று அதிகாலையில் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் பக்தர்கள் குடை பிடித்தபடி நீண்ட வரிசையில் காத்திருந்தனர். அதிகாலை 12.01 மணிக்கு விஸ்வரூப தரிசனம் நடந்தது. 2 மணியளவில் மார்கழி மாத பூஜை நடந்தது. 2.30 மணி முதல் அதிகாலை 4 மணி வரை உற்சவர் மகா மண்டபத்தில் காட்சியளித்தார். காலை 4.35 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. வேத மந்திரங்கள், நாலாயிர திவ்ய பிரபந்தம் ஓதப்பட்டது. 4.35 மணி முதல் 5.15 மணி வரை சொர்க்க வாசலில் பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். ‘கோவிந்தா, கோவிந்தா’ கோஷத்துடன் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.தி.நகர் திருப்பதி தேவஸ்தானம், திருநீர்மலை, பெசன்ட் நகர் அஷ்டலட்சுமி கோயில், திருவள்ளூர் வீரராகவ பெருமாள், காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் உள்ளிட்ட கோயில்களிலும் வைகுண்ட ஏகாதசி விமரிசையாக கொண்டாடப்பட்டது.
355
1/17/2011 3:24:12 PM
குற்றம்
புழல் சிறை கைதி தப்பி ஓட்டம் : வார்டன் சஸ்பெண்ட்!
புழல்: போலீசின் தீவிர கண்காணிப்பையும் மீறி புழல் சிறையில் இருந்து கைதி தப்பிய சம்பவம் தொடர்பாக, சிறை வார்டன் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். திருக்கழுக்குன்றம் தட்டாசுகுப்பம் பகுதியை சேர்ந்தவர் கார்த்திக் (25). இவர் மீது திருக்கழுக்குன்றம், செங்கல்பட்டு போலீஸ் நிலையத்தில் கொலை, கொள்ளை வழக்குகள் உள்ளன. கடந்த செப்டம்பர் மாதம் கார்த்திக்கை போலீசார் கைது செய்து, புழல் சிறையில் அடைத்தனர். செங்கல்பட்டு கோர்ட்டில் வழக்கு தொடர்பாக ஆஜர்படுத்த அவரை போலீசார் 14ம் தேதி அழைத்து சென்றனர். கோர்ட்டில் இருந்து திரும்பியதும் புழல் சிறையில் அடைத்தனர். அன்று இரவு 7 மணிக்கு சிறை அதிகாரிகள், அறைகளை சோதனையிட்டனர். அப்போது கார்த்திக் இல்லாதது கண்டுபிடிக்கப்பட்டது.  விசாரணையில், பார்வையாளர்கள் உட்காரும் அறைக்கு பக்கத்தில் மின்மோட்டார் ஒன்று உள்ளது. அதன் மீது ஏறி, பின்னர் சுவரை தாண்டிச் சென்றது தெரியவந்தது. கைதிகள் தப்பி செல்லாமல் இருக்க சிறைச்சாலையை சுற்றி பெரிய மதில்சுவர் கட்டப்பட்டுள்ளது.  26 அடி உயரத்தில் சுவரும் அதற்கு மேல் 4 அடிக்கு மின்கம்பி, அதன்மீது மின் இணைப்பும் உள்ளது. சிறையில் கண்காணிப்பு கோபுரம் அமைக்கப்பட்டு அதில் துப்பாக்கியுடன் போலீசார் பாதுகாப்பு பணிக்காக நியமிக்கப்பட்டுள்ளனர். அதேபோல் சிறையின் உள்ளேயும் வெளியிலும் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபடுகின்றனர். இதையும் மீறி புழல் சிறையில் இருந்து கைதி தப்பி ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. துணை ஜெயிலர் ராதாகிருஷ்ணன் புகாரின் பேரில் புழல் போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பியோடிய கைதி கார்த்திக்கை தேடி வருகின்றனர். இதை தொடர்ந்து சிறை கண்காணிப்பாளர் கனகராஜ் புழல் சிறையில் ஆய்வு செய்தார். விசாரணையில் கைதியை செங்கல்பட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்திவிட்டு சிறைக்கு கொண்டு வந்த பிறகு கைதிகளுக்கான அறையில் அடைக்காமல் கவனக்குறைவாக இருந்ததால் கைதி தப்பியோடியது தெரியவந்தது. கவனக்குறைவாக செயல்பட்டதாக கூறி சிறை வார்டன் ராஜாவை, சிறைத்துறை இயக்குநர் திரிபாதி தற்காலிக பணிநீக்கம் செய்து உத்தரவிட்டார்.கைதி தப்பியோடியதை தொடர்ந்து புழல் சிறைக்கு கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. புழல் சிறைக்கு வரும் பார்வையாளர்கள் தீவிர சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்படுகின்றனர். பணியில் உள்ள வார்டன்கள் கவனமாக பணியாற்ற வேண்டும் என்றும், கோர்ட்டில் இருந்து சிறைக்கு கொண்டுவரும் கைதிகளை உடனடியாக அறையில் அடைக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
357
1/17/2011 3:29:49 PM
குற்றம்
பகலில் 'வசூல்' & இரவில் 'சூது' போலி ஐயப்ப பக்தர்கள் 12 பேர் பிடிபட்டனர்
தூத்துக்குடி: ஐயப்ப பக்தர்கள் போல் வேடமிட்டு நன்கொடை வசூலித்த புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த 12 பேரை தூத்துக்குடி போலீசார் கைது செய்தனர். தூத்துக்குடி அண்ணாநகர் பகுதியில் ஐயப்ப பக்தர்கள் இருவர் நேற்று காலை வீடுகள் மற்றும் கடைகளுக்கு சென்று அன்னதானம் வழங்க இருப்பதால் நன்கொடை தரவேண்டும் என கேட்டனர். அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பேசியதால் அவர்கள் மீது சந்தேகமடைந்த பொதுமக்கள் தென்பாகம் போலீசில் ஒப்படைத்தனர்.புதுக்கோட்டை மாவட்டம் குலைவாழைபட்டியை சேர்ந்த 19 பேர் கொண்ட கும்பல் 5 நாட்களுக்கு முன்பு தூத்துக்குடி வந்து லாட்ஜில் தங்கி உள்ளது. காலையில் ஐயப்ப பக்தர்கள் போல மாலை அணிந்து 2 பேர் கொண்ட குழுவாக பிரிந்து சென்று பொதுமக்களிடம் பணம் வசூலித்துள்ளது. இரவில் அந்த பணத்தை வைத்து லாட்ஜில் சூதாட்டத்தில் ஈடுபட்டது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.இதையடுத்து போலீசார் தூத்துக்குடியில் உள்ள ஒரு லாட்ஜில் சோதனையிட்டு அங்கு தங்கியிருந்தவர்களை மடக்கி பிடித்தனர். ரவி(40), இளங்கோவன்(36), ஆறுமுகம்(28), மதியழகன்(26), முருகேசன்(28), முத்து(65), கனகராஜ்(30), பாண்டியன்(25), மருதமுத்து(58), செல்வம்(37), அழகுபாண்டியன்(40) ஆகிய 12 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்த பணம் பறிமுதல் செய்யப்பட்டது. உறவினர்களான இவர்கள் கடந்த 2 ஆண்டுகளாக தூத்துக்குடியில் இதேபோல் போலியாக வசூலில் ஈடுபட்டது தெரியவந்தது.  தலைமறைவான 7 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
358
1/17/2011 3:32:18 PM
தலையங்கம்
ரயில் பெட்டியில் புகை மண்டலம்
ஓடும் ரயிலில் ஏசி பெட்டியில் திடீரென புகை கிளம்பினால் யாருக்குதான் பயம் வராது. அபாய சங்கிலியை பிடித்து இழுத்து ரயிலை நிறுத்தியிருக்கின்றனர் பயணிகள். விசாரித்து பார்த்தால் ஐயப்ப பக்தர் ஒருவர், பக்தி பரவசத்தோடு கொளுத்திய கற்பூரத்தில் இருந்து கிளம்பிய புகையென்று தெரியவந்துள்ளது. அவருக்கு ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.சென்னையில் இருந்து புறப்படும் திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் ரயில் அது. இரவு 7.45 மணிக்கு சென்ட்ரலை விட்டு கிளம்பி உள்ளது. 10 நிமிடம்தான் போயிருக்கும். திடீரென ஏசி பெட்டியில் புகை பரவியுள்ளது. நெருப்பு பிடித்துவிட்டதாக கருதிய பயணிகள், அபாய சங்கிலியை பிடித்து இழுத்துள்ளனர். ரயில் நின்றுவிட்டது. டிக்கெட் பரிசோதகர், ரயில் பாதுகாப்பு போலீசார் அந்த பெட்டியை நோக்கி விரைந்துள்ளனர். ‘ஏன் அபாய சங்கிலியை இழுத்தீர்கள்’ என விசாரித்தபோது பயணிகள் அனைவரும் ஒரு ஐயப்ப பக்தரை கைகாட்டியுள்ளனர். கையில் கற்பூர தட்டுடன் இருந்துள்ளார் அவர். சபரிமலை சீசன் என்பதால் ரயில் முழுவதும் ஐயப்ப பக்தர்கள் அதிகம் இருந்துள்ளனர். அந்த ஏசி பெட்டியிலும் நிறையபேர் ஐயப்ப பக்தர்கள். ரயில் புறப்பட்டவுடன் அவர்கள் அனைவரும் ‘சாமியே சரணம் ஐயப்பா’ என சரண கோஷம் முழங்கியுள்ளனர். அப்போது, அந்த ஐயப்ப பக்தர் மட்டும் கற்பூரத்தை எடுத்து கொளுத்தி வழிபட்டுள்ளார். அத்தனை அமளிக்கும் காரணம் இதிலிருந்து கிளம்பிய புகைதான். காரணம் இல்லாமல் அபாய சங்கிலியை பிடித்து இழுத்து ரயிலை நிறுத்தினால் 1000 ரூபாய் அபராதம் வசூலிக்கப்படும். அந்த அபராதத்தை ஐயப்ப பக்தரிடம் வசூலித்த டிக்கெட் பரிசோதகர், ‘இனிமேல் இப்படி செய்யக்கூடாது’ என எச்சரித்துள்ளார்.ரயில், பஸ் போன்ற மக்கள் அதிகம் பயணம் செய்யும் வாகனங்களில் எளிதில் தீப்பற்றக்கூடிய பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய், பட்டாசு, கற்பூரம் போன்ற பொருட்களை எடுத்துச்செல்லக்கூடாது என்று விதிமுறை உள்ளது. ஆனால், இதை பயணிகள் மதிப்பது இல்லை. தீபாவளி நேரத்தில் பட்டாசு பண்டல்களை துணியில் சுற்றி மறைத்து எடுத்துசெல்வார்கள். ஒரேயொரு பெட்டியில் ஓரிடத்தில் பற்றும் சிறு நெருப்பு, ரயில் போகும் வேகத்தில் சிறிது நேரத்திலேயே அத்தனை பெட்டிகளுக்கும் பரவி எவ்வளவு பெரிய பேரழிவு, உயிர்ப்பலி ஏற்படுத்தும் என்பதை புரியாதவர்களாக இருக்கிறார்கள். பொது சொத்து உங்கள் சொத்து என்கிறது அரசு. அவை பத்திரமாக பாதுகாக்க வேண்டும் என்பதுதான் நோக்கம். பொது இடங்களில் விதி மீறுவோருக்கு கடுமையான அபராதம் விதித்தால் மீறல்கள் மறையும்.
359
1/17/2011 3:37:04 PM
தமிழகம்
ரத்து செய்த டிக்கெட் பணம் தர தாமதம் 13ஆயிரம் நஷ்டஈடு வழங்க ரயில்வேக்கு உத்தரவு
சென்னை: திருவான்மியூரைச் சேர்ந்தவர் ஜெகதீஷ் மகேஸ்வரி. இவர் சென்னை தெற்கு மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் புகார் அளித்தார். அதில், ‘போபாலில் இருந்து சென்னை வருவதற்காக ராஜ்தானி எக்ஸ்பிரசில் பயணம் செய்ய கடந்த 2006 டிசம்பர் மாதம் இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா வளர்ச்சி கழக இணையதளத்தில் 3 ஐ&டிக்கெட் எடுத்தேன். காத்திருப்போர் பட்டியலில் இருந்தது. பயணம் செய்யும் நாள் நெருங்கியும் டிக்கெட் உறுதியாகாததால் அந்த டிக்கெட்டை ரத்து செய்ய முடிவு செய்தேன். இது தொடர்பாக ரயில்வே வணிக மேலாளருக்கு கடிதம் அனுப்பினேன். ஆனால் ரத்து செய்ததற்கான பணம் எனக்கு கிடைக்கவில்லை. பல கட்ட போராட்டத்துக்கு பின்பு இரண்டு ஆண்டுகள் கழித்து அந்த பணம் கிடைத்தது. இவர்களின் சேவை குறைபாட்டால் மன உளைச்சலுக்கு ஆளானேன். இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும்‘ என்று கூறியிருந்தார்.இந்த வழக்கை நீதிபதி கோபால், உறுப்பினர்கள் மல்லிகா, தீனதயாளன் ஆகியோர் விசாரித்தனர். இருதரப்பு வாதங்களை கேட்டு கடந்த 13ம்தேதி தீர்ப்பு அளித்தனர். அதில்,‘‘ரத்து செய்த டிக்கெட்டுக்கான பணம் 2 ஆண்டுகள் கழித்து கொடுத்தது ரயில்வே நிர்வாகத்தின் சேவை குறைபாடு. இதனால் மனஉளைச்சலுக்கு ஆளான ஜெகதீஷ் மகேஸ்வரிக்கு ரயில்வே நிர்வாகம் நஷ்ட ஈடாக ரூ.10 ஆயிரமும், வழக்கு செலவுத் தொகையான ரூ.3 ஆயிரத்தையும் கொடுக்க வேண்டும்’’ என்று தீர்ப்பளித்தனர்.
360
1/17/2011 3:38:47 PM
தமிழகம்
இலங்கையில் சிறைபிடிக்கப்பட்ட காசிமேடு மீனவர்களை மீட்க போர்க்கால நடவடிக்கை
தண்டையார்பேட்டை: காசிமேடு சிங்காரவேலர் நகரை சேர்ந்தவர்கள் ரமேஷ் (35), தேசப்பன் (27), ஜெயக்குமார் (25), ராஜேஷ் (26). இவர்கள் 4 பேரும் 2 பைபர் படகுகளில் கடந்த 4ம் தேதி காலை மீன் பிடிக்கச் சென்றனர். இதுவரை வீடு திரும்பவில்லை. கடலில் மூழ்கினார்களா அல்லது வழிதவறி சென்றார்களா என்று  கடலோர காவல்பாதுகாப்பு படை, மீன்வளத்துறை அதிகாரிகள், விசைப்படகு சங்க உரிமையாளர்கள் தேடி வந்தனர். இந்த நிலையில் மாயமான மீனவர்கள் 4 பேரும் படகு பழுதாகி காற்றின் போக்கில் வழிதவறி சென்றபோது இலங்கை கடற்படையினரால் திரிகோண மலை பகுதியில் சிறை பிடிக்கப்பட்டது விசாரணையில் தெரியவந்தது.மீனவர் மேம்பாட்டு சங்கம் சார்பில் தலைவர் செல்வராஜ்குமார் பாதிக்கப்பட்ட மீனவர் குடும்பங்களை நேரில் சந்தித்து அரிசி, மளிகை, பணம் உள்ளிட்ட நிவாரண உதவி வழங்கி ஆறுதல் கூறினார். இலங்கையில் சிறைபிடிக்கப்பட்ட காசிமேடு மீனவர்களை மீட்க தமிழக மீன்வளத்துறையும், மத்திய அரசும் போர்க்கால நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று மீனவர்கள் கூறினர். பொதுச்செயலாளர் தியாகராஜன் உள்ளிட்ட சங்க நிர்வாகிகள் நிவாரணம் வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
361
1/17/2011 3:40:39 PM
குற்றம்
எஸ்ஐயை தாக்கிவிட்டு தப்பிய கொள்ளையன் பிடிபட்டான்
ஆவடி: ஆவடி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் எஸ்ஐயை தாக்கிவிட்டு தப்பிய கொள்ளையன் பிடிபட்டான். ஆவடி அருகேயுள்ள திருமுல்லைவாயல், அயப்பாக்கம் அண்ணனூர் உள்ளிட்ட பகுதியில் செயின் பறிப்பு, வீடு புகுந்து திருட்டு, வழிப்பறி சம்பவங்கள் தொடர்ந்து நடந்தன. இதுபற்றி வந்த புகார்கள் அடிப்படையில், கொள்ளையர்களை பிடிக்க திருமுல்லைவாயல் இன்ஸ்பெக்டர் பால்ராஜ், எஸ்ஐ கமலக்கண்ணன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள் புளியந்தோப்பு வ.உ.சி. நகரை சேர்ந்த சேக் பாட்ஷா (28) வை கைது செய்தனர். விசாரணையில், அவர் ஆவடி, அம்பத்தூர், திருமுல்லைவாயல் பகுதியில் பல்வேறு கொள்ளைகளில் ஈடுபட்டது தெரிய வந்தது.இதையடுத்து, கடந்த 9&ம்தேதி, ஆவடி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் பாட்ஷாவிடம் விசாரணை நடத்தினர். அப்போது சப்&இன்ஸ்பெக்டரை தாக்கிவிட்டு பாட்ஷா தப்பியோடி மாயமாகி விட்டார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. உதவி கமிஷனர் முகிலன் தலைமையில் பாட்ஷாவை அவரது சொந்த ஊரான திருவண்ணாமலை, சென்னை உள்பட பல இடங்களில் தேடினர். இந்நிலையில், சென்னையில் பதுங்கியிருந்த பாட்ஷாவை நேற்றிரவு போலீசார் கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.
362
1/17/2011 3:42:41 PM
தமிழகம்
பாலாற்றில் மணல் அள்ளுவதால் திருக்கழுக்குன்றத்தில் குடிநீர் தட்டுப்பாடு அபாயம்
திருக்கழுக்குன்றம்: பாலாற்றில் மணல் அள்ளுவதால் திருக்கழுக்குன்றத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே மணல் அள்ள தடை விதிக்க வேண்டும் என கலெக்டரிடம், மக்கள் மனு கொடுத்துள்ளனர். திருக்கழுக்குன்றம் பேரூராட்சி மக்களுக்கு குடிநீர் சப்ளை செய்ய, வள்ளிபுரம் பாலாற்று படுகையில் கிணறுகள் அமைத்து தண்ணீர் எடுக்கப்படுகிறது. பேரூராட்சியில் 34,000 பேர் வசிக்கின்றனர். இவர்கள் பாலாற்று குடிநீரையே நம்பி இருக்கின்றனர். பாலாற்றில் தினமும் 100க்கும் அதிகமான லாரிகளில் மணல் எடுத்து, சென்னை உள்ளிட்ட நகரங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. இதனால் பாலாற்றில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து விட்டது.  மழைக்காலத்திலேயே இந்த நிலை என்றால், கோடை காலத்தில் நீர்மட்டம் இன்னும் வேகமாக குறைந்து குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும். மேலும் மணல் லாரிகள் செல்வதால் அதிர்வில் குடிநீர் கிணறுகளும் சேதமடைகின்றன. குழாய்களும் அடிக்கடி உடைகின்றன. எனவே, குடிநீர் கிணறு உள்ள பகுதியில் மணல் அள்ள தடை விதிக்க வேண்டும் என, திருக்கழுக்குன்றம் மக்கள், கலெக்டரிடம் மனு கொடுத்துள்ளனர்.
363
1/17/2011 3:46:09 PM
இந்தியா
பெண்களே வடிவமைத்த கைவினை பொருட்கள் : டெல்லியில் ‘சக்தி’ கண்காட்சி தொடக்கம் தயாநிதி மாறன் துவக்கிவைத்தார்
புதுடெல்லி: டெல்லி பிரகதி மைதானத்தில் உள்ள தேசிய கைவினைப்பொருட்கள் மற்றும் கைத்தறி அருங்காட்சியகத்தில் Ôசக்திÕ என்ற பெயரில் பெண்களின் கைவினைப் பொருட்கள் கண்காட்சியை மத்திய ஜவுளித் துறை அமைச்சர் தயாநிதி மாறன் நேற்று துவக்கி வைத்தார்.நாட்டின் பல்வேறு பகுதிகளின் பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் வகையில், பெண்களால் தயாரிக்கப்பட்ட சிறந்த கைவினைப் பொருட்கள் இந்த கண்காட்சியில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, துணிகளில் கைவேலைப்பாடுகளின் மூலம் பல்வேறு வகையான பயன்பாடு கொண்ட கைவினைப் பொருட்கள் இடம் பெற்றுள்ளன. நாட்டின் பாரம்பரியத்தை உலகத்துக்கே எடுத்துக்காட்டும் வகையில் இது அமைந்துள்ளது. கைத்தறி அருங்காட்சியகத்தில் உள்ள கைவினைப் பொருட்கள் தொகுப்பில் ஒரு சில மாதிரிகள் மட்டுமே கண்காட்சியில் இடம்பெற்றுள்ளன. இதுதவிர ஏராளமான பொருட்கள் அருங்காட்சியகத்தில் உள்ளன. அண்மையில் இந்தியா வந்திருந்த அமெரிக்க அதிபர் ஒபாமாவின் மனைவி மிஷெல், தேசிய கைவினைப் பொருட்கள் மற்றும் கைத்தறி அருங்காட்சியகத்தை பார்வையிட்டார். இதைப் பார்த்து வியந்த அவர், இந்தியாவின் கைவினைப் பொருட்கள் பாரம்பரியத்தைப் பற்றி தெரிந்து கொள்வதற்கான முக்கிய இடமாக விளங்குவதாக குறிப்பிட்டார். இங்கு உள்ள கைவினைப் பொருட்களின் தரம் மற்றும் வகைகளை பார்வையிட்டது எனது இந்திய பயணத்தில் மறக்க முடியாத ஒன்று என குறிப்பிட்டார்.
364
1/17/2011 3:48:32 PM
இந்தியா
எல்லைக்குள் அத்துமீறிய இலங்கை மீனவர்கள் 16 பேர் பிடிபட்டனர்
மண்டபம்: இந்திய எல்லைக்குள் அத்துமீறிய இலங்கை மீனவர்கள் 16 பேர் கைதுசெய்யப்பட்டனர். இலங்கை புத்தளம் மாவட்டம் சிவகுளம் மற்றும் கல்பட்டி பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் சந்திரகோ, பிரசன்னா, மத்தியாஸ், லோகன் பெர்னாண்டோ மற்றும் சுஜித் பெர்னாண்டோ உட்பட 16 பேர் நேற்று முன்தினம் எல்லை தாண்டி இந்திய கடல் பகுதியில் 3 படகுகளில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர்.தனுஷ்கோடி கடல் பகுதியில்  ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இந்திய கடலோர காவல்படை போலீசார் அவர்களை கைது செய்தனர். அவர்களின் படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டன. நேற்று மண்டபத்தில் அவர்கள் 16 பேரிடமும் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணைக்கு பின்னர் அவர்களை அன்னிய ஊடுருவல் சட்டத்தில் கைது செய்தனர். கைதான 16 பேரும், மதுரை சிறையில் அடைக்கப்பட்டனர்.
365
1/17/2011 3:49:56 PM
தமிழகம்
திருச்சி அருகே பஸ்கள்-கார்கள் மோதல் 3 பேர் உடல் நசுங்கி பலி
திருச்சி: புதுக்கோட்டை மாவட்டம் வல்லப்பட்டினத்தை சேர்ந்த 30 பேர், மேல்மருவத்தூர் கோயிலுக்கு சென்றுவிட்டு டூரிஸ்ட் பஸ்சில் நேற்று ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தனர். பெரம்பலூருக்கும் திருச்சிக்கும் இடையே உள்ள சிறுகனூரை அடுத்த சொக்கலிங்கபுரம் என்ற இடத்தில் நேற்றிரவு ஓய்வெடுப்பதற்காக பஸ்சை நிறுத்தி இறங்கிக் கொண்டிருந்தனர். அப்போது மேல்மருவத்தூரில் இருந்து திருச்சி வழியாக ஊட்டி செல்லும் மற்றொரு பஸ், நின்று கொண்டிருந்த பஸ் மீது மோதியது. அதை பின்தொடர்ந்து வந்த ஒரு காரும், மோதிய பஸ் மீது மோதி கவிழ்ந்தது.இந்த மோதலால் நின்று கொண்டிருந்த பஸ், தாறுமாறாக சென்று சென்டர் மீடியனை உடைத்துக் கொண்டு நான்கு வழிச்சாலையின் மறுபக்கம் சென்றது. அப்போது திருச்சியில் இருந்து சென்னை நோக்கி சென்ற கார், அந்த பஸ் மீது மோதியது. இந்த விபத்தில் 2 கார்களில் இருந்த 3 பேர் அதே இடத்திலேயே பலியாயினர். கார், பஸ்களில் இருந்த 16 பேர் படுகாயமடைந்தனர். சென்னை நோக்கி சென்ற காரில் இருந்த வில்லிவாக்கத்தை சேர்ந்த பத்மநாபன்(50) என்பவர் இந்த விபத்தில் பலியானது தெரிந்தது. மற்ற 2 பேரின் விவரங்கள் தெரியவில்லை. இதுபற்றி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
366
1/17/2011 4:03:27 PM
இந்தியா
102 பேரை பலிகொண்ட சபரிமலை கோர விபத்து அமைச்சர், டிஜிபி நேரில் விசாரணை
கூடலூர்: சபரிமலையில் கோர விபத்து நடந்த இடத்தை கேரள உள்துறை அமைச்சர், டிஜிபி இன்று பார்வையிட்டு நேரில் விசாரணை நடத்தினர். நீதிபதி தலைமையிலான விசாரணை கமிஷன் பரிந்துரைகளை செயல்படுத்தாமல் கேரள அரசு மெத்தனம் காட்டியதால் விபத்து ஏற்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோயிலில் கடந்த 14ம் தேதி மகரஜோதி தரிசனம் நடந்தது. ஜோதியை பார்த்துவிட்டு புல்மேடு வழியாக லட்சக்கணக்கான பக்தர்கள் திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது புல்மேடு பகுதியில் ஏற்பட்ட விபத்து மற்றும் நெரிசலில் சிக்கி 102 பேர் பலியாயினர். புல்மேடு பாதையில் கும்மிருட்டாக இருந்ததும், போதிய பாதுகாப்பு இல்லாததும், குறுகலான பாதையில் அதிகம் பேர் சென்றதும் விபத்துக்கு முக்கிய காரணமாக அமைந்துவிட்டது.இதுதொடர்பாக கேரள வன அதிகாரி சுரேஷ், தாக்கல் செய்த அறிக்கையில், ‘புல்மேட்டில் குறுகலான பாதையில் பக்தர்களை ஏற்றிச் செல்வதற்காக நிறுத்தப்பட்டிருந்த ஜீப் ஸ்டார்ட் ஆகாமல் நின்றுள்ளது. அப்போது ஜீப்பை ஸ்டார்ட் செய்வதற்காக பக்தர்கள் தள்ளியுள்ளனர். கூட்டத்தில் ஜீப் நுழைந்து பக்தர்கள் மேல் ஏறிச்சென்றது. அதனால் பக்தர்கள் நாலாபுறமும் சிதறி ஓடினர். இருபுறங்களில் இருந்த கடைகளுக்குள் தஞ்சமடைய பக்தர்கள் புகுந்தனர். அப்போது ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் பக்தர்கள் இறந்துவிட்டனர்’ என தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக இடுக்கி மாவட்ட கலெக்டர் விடுத்த அறிக்கையில் ‘பக்தர்கள் திரும்பிக் கொண்டிருக்கும்போது பழுதாகி நின்ற ஜீப் கட்டுப்பாட்டை இழந்து கூட்ட நெரிசலுக்குள் புகுந்தது. இதுதான் விபத்துக்கு காரணம்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், எர்ணாகுளம் கிரைம் பிராஞ்ச் எஸ்பி சுரேந்திரன் விசாரணையை நேற்று துவக்கினார். 4 நாட்களில் அரசிடம் அறிக்கை தாக்கல் செய்வோம் என அவர் தெரிவித்துள்ளார். மேலும் தடயவியல் துறை நிபுணர் ஸ்ரீகுமார் தலைமையில் ஒரு குழுவினர் சம்பவ இடத்தை பார்வையிட்டு தடயங்களை சேகரித்தனர்.விபத்துக்கு காரணமான ஜீப் மற்றும் ஆட்டோவை போக்குவரத்து அதிகாரிகள் ஆய்வு செய்து அறிக்கை தரவேண்டும் என எஸ்பி உத்தரவிட்டார். மேஜர் ஆனந்த ரெட்டி தலைமையில் 13 பேர் கொண்ட ராணுவ குழுவினரும் விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தினர். இந்நிலையில், கேரள உள்துறை அமைச்சர் கொடியேறி பாலகிருஷ்ணன், டிஜிபி ஜேக்கப் புன்னூஸ் ஆகியோர் இன்று காலை சம்பவ இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். விபத்து நடந்தது எப்படி என அங்கிருந்தவர்களிடம் விசாரணை நடத்தினர். எவ்வளவு கூட்டம் இருந்தது, எத்தனை வாகனங்கள் அங்கு நிறுத்தப்பட்டிருந்தன, பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த விவரங்களை அவர்கள் கேட்டறிந்தனர்.கடந்த 1999ம் ஆண்டு சபரிமலையில் மகரவிளக்கு பூஜையன்று கூட்டநெரிசலில் சிக்கி 55 பேர் பலியாயினர். இந்த விபத்து குறித்து விசாரிக்க நீதிபதி சந்திரசேகர மேனன் தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டது. நீதிபதி அளித்த அறிக்கையில், ‘புல்மேடு பாதையை சீரமைத்து 40 சதவீத பக்தர்களை அவ்வழியாக திருப்பிவிட வேண்டும். புல்மேடு பகுதியில் பக்தர்களுக்கு தேவையான வசதிகள் செய்து தரவேண்டும். புல்மேடு அடிவாரமான உப்புப்பாறையில் மாற்று முகாம் அமைக்க வேண்டும்’ என அரசுக்கு பல பரிந்துரைகளை தெரிவித்திருந்தார். ஆனால், அவற்றை செயல்படுத்தாமல் கேரள அரசு மெத்தனம் காட்டியுள்ளது என எதிர்க்கட்சிகள் கடுமையாக குற்றம்சாட்டியுள்ளன.இந்த ஆண்டு மண்டல பூஜை ஆரம்பித்த நாளில் இருந்தே சபரிமலைக்கு பக்தர்கள் வருகை வழக்கத்தைவிட அதிகமாக இருந்தது. மகர விளக்கு பூஜையின்போது கட்டுக்கடங்காத கூட்டம் வரும் என முன்கூட்டியே எதிர்பார்க்கப்பட்டது. அதன்படி, ஜோதி தரிசனம் அன்றும், அதற்கு முதல் நாளும் சபரிமலைக்கு சென்ற வாகனங்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கின. மிளச்சல், இளவங்கல், லாகா பகுதிகளில் பல மணி நேரம் வாகனங்கள் நிறுத்தப்பட்டன. இதையடுத்து, வெளியூர்களில் இருந்து வந்த வாகனங்களை வண்டிப்பெரியார், புல்மேடு வழியாக செல்லுமாறு சிலர் ஆலோசனை வழங்கியுள்ளனர். அதனால் வண்டிப்பெரியார் வழியாக செல்லும் வாகனங்கள் எண்ணிக்கை வழக்கத்துக்கு மாறாக அதிகரித்துள்ளது. இதுபற்றி கேரள உளவுத்துறை முன்கூட்டியே அரசுக்கு தகவல் தெரிவித்துள்ளது. அப்படி இருந்தும் புல்மேடு பகுதியில் பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்துவதில் கேரள அரசு கவனம் செலுத்தாததே விபத்துக்கு காரணமாக அமைந்துள்ளது. ஆனால் அரசு தரப்போ, ‘புலிகள் அதிகம் வாழும் புல்மேடு பகுதி வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. அங்கு எவ்வித அடிப்படை வசதிகளையும் செய்து தருவதில் சிக்கல் உள்ளது’ என விளக்கம் அளித்துள்ளது.
367
1/17/2011 4:05:29 PM
தமிழகம்
களை கட்டியது காணும் பொங்கல் மெரினாவில் லட்சம் பேர் குவிந்தனர்
சென்னை: காணும் பொங்கலையொட்டி மெரினா கடற்கரை, வண்டலூர் மிருகக்காட்சி சாலை, அடையார் சிறுவர் பூங்கா மற்றும் சுற்றுலா பொருட்காட்சியில் லட்சக்கணக்கானவர்கள் குடும்பத்துடன் இன்று குவிந்தனர். தமிழகம் முழுவதும் பொங்கல் பண்டிகை நேற்று முன்தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது. சென்னையில் குறிப்பாக மெரினா கடற்கரை, சுற்றுலா பொருட்காட்சி, கிண்டியில் உள்ள சிறுவர் பூங்கா மற்றும் பாம்பு பண்ணை, செம்மொழிப் பூங்கா, வண்டலூரில் உள்ள மிருகக்காட்சி சாலை, வள்ளுவர் கோட்டம் ஆகிய இடங்களில் பொதுமக்கள் குவிந்தனர். மெரினா கடற்கரை பகுதியில் எந்த பக்கம் திரும்பினாலும் தலைகளாக தெரிந்தது. இங்கு மட்டும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் குவிந்தனர்.கூட்ட நெரிசல் அதிகமாக இருந்ததால் மெரினா கடற்கரையில் பொதுமக்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டு இருந்தது. கடற்கரையையொட்டி இரும்பு கம்பி ஏற்படுத்தி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். ஒரு சில இடங்களில் போலீசாரின் எச்சரிக்கையையும் மீறி இளைஞர்கள் கடலில் இறங்க முயன்றனர். அவர்களை போலீசார் விரட்டி அடித்தனர். கூட்ட நெரிசலை பயன்படுத்தி பிக்பாக்கெட் மற்றும் வழிப்பறி கொள்ளையர்கள் தங்கள் கைவரிசையை காட்டக் கூடும் என்பதற்காக முன்கூட்டியே போலீசார் ஆங்காங்கே ஒலிபெருக்கி மூலம் எச்சரித்தபடி இருந்தனர்.இதே போல் வண்டலூர் பூங்கா மற்றும் சிறுவர்கள் கூடும் பூங்காக்களில¢ பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அரசு சுற்றுலா தலங்களை தவிர தனியார் சுற்றுலா தலங்களான விஜிபி கோல்டன் பீச், கிஷ்கிந்தா, எம்ஜிஎம், முட்டுக்காடு போட்டிங், சினிமா தியேட்டர்களிலும் இன்று காலை முதல் மக்கள் கூட்டம் அதிகளவில் இருந்தது. சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. மேலும் சென்னையில் மின்சார ரயில்கள் மற்றும் பறக்கும் ரயில்களிலும் வழக்கத்தை விட அதிகளவில் மக்கள் கூட்டம் இருந்தது. சென்னை புறநகர் மக்கள் பலர், மாட்டு வண்டிகளில் குடும்பத்தினருடன் சென்னையில் உள்ள சுற்றுலா தலங்களுக்கு வந்தனர்.
368
1/17/2011 4:07:33 PM
தலையங்கம்
தள்ளுமுள்ளு உயிருக்கு ஆபத்து
சபரிமலை சென்ற பக்தர்களுக்கு நேர்ந்த கதி அனைவரையும் கலக்கி விட்டது. திருவிழா, கோயில் விழா போன்ற கூட்டம் கூடும் அத்தனை இடத்திலும் கண்டிப்பாக நெரிசல் இருக்கும். நெரிசலில் சிக்கி மக்கள் இறப்பது மற்ற நாடுகளில் எப்போதாவது நடக்கும். இந்தியாவில் அடிக்கடி நடக்கிறது. எதிலும் முந்திச் செல்ல வேண்டும் என்ற அவசரம். நிதானமாக இருக்க வேண்டிய இடத்தில் கூட கூட்டத்தை பார்த்து விட்டால் நமக்கு ஒரு பரபரப்பு வந்துவிடும். அதுதான் அத்தனை பேரின் உயிருக்கும் எமனாகிவிட்டது. ஒரே இடத்தில்... ஒரே நேரத்தில் இரண்டரை லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் புல்வெளிமேட்டில் மகரஜோதி காண குவிந்துள்ளனர். 7 மணிக்கு ஜோதி தரிசனம் முடிந்துள்ளது. புல்மேட்டு மலைப்பாதையில் பக்தர்கள் இறங்கத் தொடங்கியுள்ளனர். வனத்துறைக்கு சொந்தமான பகுதி என்பதால் மின் விளக்குகள் கிடையாது. கடைகளில் இருக்கும் வெளிச்சம்தான். அந்த நேரத்தில் பழுதான ஜீப் ஒன்று பக்தர்கள் கூட்டத்தில் மோதியிருக்கிறது. ஒரு ஆட்டோவை இடித்து தள்ளியிருக்கிறது. ஆட்டோவும் ஜீப்பும் பக்தர்களுடன் கவிழ்ந்துள்ளன. இதையடுத்து ஏற்பட்ட தள்ளுமுள்ளு நெரிசல்தான் 100க்கும் மேற்பட்டோர் பலியானதற்கு காரணம். நெரிசலில் சிக்கி கீழே விழுந்தவர்களை மிதித்துக்கொண்டு உயிர் பிழைக்க ஓடியிருக்கிறார்கள். கடைக்குள் சென்று தப்பிக்க முயன்றவர்களை அங்கிருந்தவர்கள் கட்டைகளால் தாக்கியுள்ளனர். அவர்கள் மீண்டும் வெளியே ஓடிவர ஒரே களேபரம்.லட்சக்கணக்கில் மக்கள் கூடும் இடத்தில் பாதுகாப்புக்காக நூற்றுக்கணக்கான போலீசார் இருக்கவேண்டும். அப்போதுதான் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியும். புல்மேடு பகுதியில் வெறும் 10 போலீசார்தான் இருந்துள்ளனர். அவர்களும் கூட்டத்தை கட்டுப்படுத்த எந்த முயற்சியும் எடுத்ததாக தெரியவில்லை. திருப்பதிக்கு தினமும் லட்சக்கணக்கில் பக்தர்கள் வருகிறார்கள். அங்கு இதுபோல் சம்பவம் நடந்தது இல்லை. காரணம் கூட்டத்தை கட்டுப்படுத்த எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள். ஏழுமலையானை தரிசிக்க காத்திருக்கும் நேரத்தில் பசித்தால் சாப்பிடலாம். உணவு கிடைக்கும். வயிறு கலக்கினால் கழிப்பறை வசதி உள்ளது. ஆனால் ஐயப்பனை தரிசிக்க 10 மணி நேரம் காத்திருக்க நேர்ந்தாலும் வரிசையை விட்டு விலக முடியாது. கூட்டத்தை ஒரே இடத்தில் கூட விடாமல் பிரித்து அனுப்பினால் நெரிசல் ஏற்படாது. மன நிம்மதிக்காக ஐயப்பனை, மகரஜோதியை பார்க்க சென்று பலியானோர்களால் பலரின் வாழ்க்கையில் இருள் சூழ்ந்துவிட்டது. பாதுகாப்பு குறைபாடுதான் இதற்கு முக்கிய காரணம். சபரிமலை செல்வது புனித பயணம் என்பது மாறி சாகச பயணமாகிவிட்டது.
369
1/17/2011 4:09:17 PM
குற்றம்
ரசாயனம் தேய்த்தால் டாலர் கிடைக்கும் கருப்பு தாள்களை கொடுத்து மோசடி செய்த 4 பேர் கைது
கோவை: கோவை புலியகுளத்தை சேர்ந்தவர் நவீன்குமார் (27). கண்ணாடி பிரேம் செய்யும் தொழில் செய்து வருகிறார். பேரூரை சேர்ந்த ராஜேஷ்குமார் (27), திருப்பூர் கமாலுதீன் (28), ராஜேஷ் (24), ராஜபாளையம் சபரி (41) ஆகியோர் நவீன்குமாரை சந்தித்தனர். ‘இந்தியப் பணத்துக்கு 10 மடங்கு அமெரிக்க டாலர் கொடுக்கிறோம். அதை வங்கியில் இந்திய பணமாக மாற்றிக்கொள்ளலாம்’ என ஆசை வார்த்தை கூறினர். தனக்கு ரூ.1.8 கோடி கிடைக்கும் என்ற ஆசையில் அவர்களிடம் ரூ.1.8 லட்சத்தை நவீன்குமார் கொடுத்தார். டாலர்கள் என்று கூறி கருப்பு தாள்கள் அடங்கிய கட்டுகளை நவீன்குமாரிடம் கொடுத்தனர். ‘அதிகாரிகளிடம் சிக்கக்கூடாது என்பதற்காக கட்டுகள் மீது கருப்பு மை தடவியுள்ளோம்; ரசாயனத்தை தேய்த்தால் கருப்பு சாயம் நீக்கி டாலர் வெளியே தெரியும்’ என்று கூறினர். ஒரு தாள் மீது ரசாயனக் கலவையை தேய்த்து அதை அமெரிக்க டாலராக்கி காட்டினர். இதை நவீன்குமார் நம்பி விட்டார். அவர்கள் பணத்தை பெற்றுக்கொண்டு தப்பினர்.சிறிது நேரம் கழித்து நவீன்குமார் அந்தக் கட்டுகள் மீது ரசாயன கலவையை தேய்த்தார். அவை மாறவில்லை. தான் ஏமாற்றப்பட்டது தெரிந்ததும் போலீசில் புகார் செய்தார். ராமநாதபுரம் குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி 4 பேரையும் கைது செய்தனர்.
370
1/17/2011 4:11:21 PM
தமிழகம்
ஷ்னைடர் எலக்ட்ரிக் நிறுவனம் விஐடி பல்கலை.யுடன் ஒப்பந்தம்
வேலூர்: ஷ்னைடர் எலக்ட்ரிக் இந்தியா என்ற நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. பல்கலைக்கழகத்தில் நடந்த விழாவில் வேந்தர் ஜி.விசுவநாதன், ஷ்னைடர் நிறுவன முதுநிலை துணைத் தலைவர் அரிந்தர்சென் ஆகியோர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.இதன் மூலம் விஐடி மாணவர்களுக்கு ஷ்னைடர் நிறுவனத்தில் தொழிற்பயிற்சி பெறும் வாய்ப்பும், நிபுணர்களின் உரைகளும், மாணவர்களுக்கு வேலைவாய்ப்பும், தொழிற்சாலையில் சுற்றுப்பயண வாய்ப்பும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதேபோல் ஷ்னைடர் நிறுவனம் தனது ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பணிகளுக்காக விஐடி பல்கலைக்கழகத்தை பயன்படுத்திக் கொள்ள முடியும். இந்த ஒப்பந்தம் மூலம் விஐடி மாணவர்களும், பேராசிரியர்களும் மின்னியல் துறையில் ஏற்படும் தொழில் முன்னேற்றங்களை அறிந்து கொள்ள முடியும். இந்நிகழ்ச்சியில் துணைத் தலைவர்கள் சங்கர் விசுவநாதன், சேகர் விசுவநாதன், துணை வேந்தர் வி.ராஜூ, இணை துணை வேந்தர் எஸ்.நாராயணன் மற்றும் விஐடி வேலைவாய்ப்பு இயக்குனர் எஸ்.ஆர்.புல்லபொட்லா ஆகியோர் கலந்து கொண்டனர்.
371
1/17/2011 4:13:07 PM
மாவட்ட மசாலா
எருது விடும் விழாவில் மோதல்: எஸ்ஐ, ஏட்டு காயம்: 2 பேர் கைது
கலசப்பாக்கம்: திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அடுத்த கடலாடியில் நேற்று மாட்டு பொங்கல் பண்டிகையொட்டி எருது விடும் விழா நடந்தது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். அப்போது குடிபோதையில் வந்த சிலர் தள்ளுமுள்ளுவில் ஈடுபட்டதால் இருபிரிவினரிடையே மோதல் ஏற்பட்டது. சிலர் கல்வீசி தாக்கியதில் கடலாடி எஸ்.ஐ. சிகாமணி, ஏட்டு பத்ராச்சலம் ஆகியோர் காயமடைந்தனர். அவர்கள் போளூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து, கடலாடியை சேர்ந்த ராஜாமணி (33), நவீன்குமார் (23) ஆகிய 2 பேரை கைது செய்தனர். மேலும் 30&க்கும் மேற்பட்டோரை தேடி வருகின்றனர்.
372
1/17/2011 4:13:49 PM
மாவட்ட மசாலா
12 விநாயகர் சிலைகள் 4 மாதத்துக்கு பிறகு கரைப்பு
நாகை: நாகை மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தியையொட்டி பல்வேறு இடங்களில் அமைக்கப்பட்ட விநாயகர் சிலைகள் கடந்த செப்டம்பர் 11ம் தேதி நீர்நிலைகளில் கரைக்கப்பட்டன. ஆரியநாட்டு தெரு, நம்பியார்நகர் உள்ளிட்ட 12 இடங்களில் அமைக்கப்பட்டிருந்த சிலைகளை வேறு நாளில் கரைக்க அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் அந்த சிலைகள் கரைக்கப்படாமல் அந்தந்த இடத்திலேயே வைக்கப்பட்டு இருந்தன. இதுதொடர்பான வழக்கை விசாரித்த ஐகோர்ட், சிலைகளை கடலில் கரைக்க அனுமதி வழங்கியது. அதன்படி, நேற்று மாலை 12 சிலைகளையும் சக்தி விநாயகர் வழிபாட்டு குழுவினர் ஊர்வலமாக எடுத்துச் சென்று நாகை கடலில் கரைத்தனர்.
373
1/17/2011 4:13:51 PM
குற்றம்
காட்டுக்குள் தூக்கி சென்று பலாத்காரம் : 10ம் வகுப்பு மாணவி கழுத்து நெரித்து கொலை
மன்னார்க்காடு: கேரள மாநிலம் மன்னார்க்காடு அருகே ஆதிவாசி மாணவி கற்பழித்து கொல்லப்பட்ட வழக்கில் வாலிபர் கைது செய்யபப்பட்டுள்ளார். கோவை மாவட்டம் ஆனைகட்டி அருகே உள்ளது சோலையூர் கிராமம். கேரள மாநிலம் மன்னார்க்காடு மாவட்டத்தை சேர்ந்த இந்த பகுதியில் வசிப்பவர் வெள்ளியங்கிரி. இவரது மகள் திலகமணி (15), அங்குள்ள ஆதிவாசிகள் நலப் பள்ளி ஒன்றில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார். கடந்த 14-ம் தேதி பள்ளி சென்ற திலகமணி, வீடு திரும்பவில்லை. பெற்றோர் பல இடங்களில் தேடினர். அப்போது, அப்பகுதியில் உள்ள ஒரு காட்டுப்பகுதியில் திலகமணி இறந்து கிடந்தது தெரியவந்தது. அவரை யாரோ பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்துள்ளது தெரிந்தது. இதனால் பெரும் பரபரப்பு நிலவியது. விசாரணையின்போது, கூட்டத்தில் நின்றிருந்த அதே பகுதியை சேர்ந்த முருகேசன்(20) என்பவர் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவரைப் பிடித்து விசாரித்தனர். கிடுக்கிப்பிடி விசாரணையில், திலகமணியை கொன்றதை ஒப்புக்கொண்டார். ‘‘பக்கத்து வீட்டில் இருந்த திலகமணிக்கு காதல் வலை வீசினேன். அவள் கண்டுகொள்ளவில்லை. 14-ம் தேதி மாலை பள்ளியில் இருந்து வந்த அவளை வழிமறித்து பலவந்தமாக காட்டுப்பகுதிக்குள் தூக்கிச் சென்றேன். பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு துப்பட்டாவால் அவரது கழுத்தை இறுக்கி கொன்று விட்டேன்’’ என்று முருகேசன் கூறினார். அவரை போலீசார் கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
374
1/17/2011 4:14:10 PM
மாவட்ட மசாலா
டாஸ்மாக் விடுமுறை நாளில் மது விற்ற 10 பேர் கைது
வேலூர்: திருவள்ளுவர் தினத்தையொட்டி டாஸ்மாக் மதுபான கடைகள் மற்றும் பார்கள் நேற்று மூடப்பட்டன. பார்களில் வேலை செய்பவர்கள், முந்தைய நாளே மது பாட்டில்களை வாங்கி வைத்து அதிக விலைக்கு விற்பதாக வேலூர் எஸ்பி அன்புக்கு தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின்பேரில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையின்போது, மதுபானங்களை கள்ளத்தனமாக விற்றதாக வேலூர், ராணிப்பேட்டை, வாலாஜா உள்பட பல இடங்களில் 10 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து ஏராளமான மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
375
1/17/2011 4:14:42 PM
மாவட்ட மசாலா
யானை தந்தம் விற்பனை ஊட்டியில் 2 பேர் கைது
ஊட்டி: வேலூரில் கணேசன் என்பவரை வனத்துறையினர் கைது செய்து, அவரிடம் இருந்து 2 யானை தந்தங்களை கைப்பற்றினர். விசாரணையின்போது ஊட்டியை சேர்ந்த இருவர் தனக்கு யானை தந்தங்களை விற்றதாக தெரிவித்தார். வேலூர் வனத்துறையினர் நீலகிரி வடக்கு வன கோட்ட அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, உதவி வன பாதுகாவலர் ஜெயராஜ் தலைமையில் வனத்துறையினர் விசாரணை நடத்தி ஊட்டி காந்தலை சேர்ந்த செந்தில்குமார் (35), தூதூர்மட்டத்தை சேர்ந்த வசந்த் (22) ஆகியோரை கைது செய்து, வேலூர் வன சரகர் காளிதாசிடம் ஒப்படைத்தனர். யானைகளை கொன்று தந்தங்களை திருடும் கும்பலை சேர்ந்தவர்களா என்பது குறித்து இவர்களிடம் விசாரணை நடக்கிறது.
376
1/17/2011 4:15:14 PM
மாவட்ட மசாலா
குற்றாலத்தில் திடீர் மழை அருவிகளில் வெள்ளம்
தென்காசி: குற்றாலத்தில் பெய்த பலத்த மழையால் அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. கடந்த ஒரு வாரமாக குற்றாலம் அருவிகளில் தண்ணீர் மிகவும் குறைவாக விழுந்தது. இந்நிலையில், நேற்று அதிகாலை தென்காசி, குற்றாலம் பகுதியில் திடீரென பலத்த மழை பெய்தது. இதனால் காலை முதல் அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்தது. மெயினருவியில் பாதுகாப்பு வளைவு மீது தண்ணீர் கொட்டியது. ஐந்தருவி, புலியருவி, பழையகுற்றால அருவிகளில் தண்ணீர் நன்றாக விழுகிறது. குற்றாலம் மெயினருவி மற்றும் ஐந்தருவி சிறுவர் பூங்காங்களில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது.
377
1/17/2011 4:15:39 PM
உலகம்
நரி சுட்டதில் குண்டு பாய்ந்து வேட்டைக்காரர் படுகாயம்
மாஸ்கோ: பெலாரஸ் மற்றும் போலந்து எல்லையில் குளிர்காலத்தில் நரி வேட்டை பிரபலம். பெலாரஸ் நாட்டைச் சேர்ந்த ஒருவர் நேற்று முன்தினம் வேட்டைக்கு சென்றார். தனது ரைபிள் மூலம் ஒரு நரியை சுட்டார். துப்பாக்கி சூட்டில் லேசான காயம் அடைந்த நரி கீழே விழுந்து துடித்துக் கொண்டிருந்தது. அதை ரைபிளின் அடிப்பகுதியால் அடித்து கொல்ல முயன்றார் வேட்டைக்காரர். அப்போது நரியின் கால் விரல், துப்பாக்கி விசை மீது பட்டது. அதில் இருந்து வெளியேறிய குண்டு வேட்டைக்காரரின் காலில் பாய்ந்தது. அவர் அலறி கீழே விழுந்ததும், நரி தப்பி ஓடியது. படுகாயம் அடைந்த வேட்டைக்காரர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
378
1/17/2011 4:16:02 PM
உலகம்
சர்ச் மீது தாக்குதல் குற்றவாளிக்கு மரண தண்டனை
கெய்ரோ: எகிப்து நாட்டின் தென்பகுதியில் உள்ள சர்ச் மீது, கடந்த ஆண்டு ஜனவரி 6ம் தேதி அன்று, மர்ம நபர்கள் 3 பேர் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் 6 கிறிஸ்தவர்கள் உட்பட 7 பேர் கொல்லப்பட்டனர்.  இந்த வழக்கில் எகிப்து கோர்ட் நேற்று தீர்ப்பு வழங்கியது. துப்பாக்கி சூடு நடத்திய ஆசாமிக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. மற்ற இரண்டு குற்றவாளிகளுக்கு அடுத்த மாதம் தண்டனை அறிவிக்கப்படுகிறது. அலெக்சாண்ட்ரியா நகரில் உள்ள சர்ச்சில் கடந்த கிறிஸ்துமஸ் தினத்தன்று நடந்த மனித குண்டு தாக்குதலில் 21 பேர் பலியாயினர். 100 பேர் காயம் அடைந்தனர். இச்சம்பவம் நடந்த இரண்டு வாரத்துக்கு பின், சர்ச் மீது தாக்குதல் நடத்திய குற்றவாளிக்கு எகிப்து கோர்ட் மரண தண்டனை வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
379
1/17/2011 4:16:31 PM
உலகம்
நீர்மூழ்கி கப்பல் வாங்கியதில் சர்தாரிக்கு ரூ. 198 கோடி லஞ்சம்
பாரிஸ்: பாகிஸ்தானில் பெனசிர் புட்டோ பிரதமராக இருந்தபோது, கடந்த 1990ம் ஆண்டில் மூன்று அகோஸ்டா வகை நீர்மூழ்கி கப்பல்கள் கடற்படைக்கு வாங்கப்பட்டன. இந்த கப்பல்களை சப்ளை செய்ய பிரான்ஸ், சுவீடன் மற்றும் ஜெர்மன் நாடுகளைச் சேர்ந்த ராணுவ கான்ட்ராக்டர்கள் போட்டி போட்டனர். அப்போது பெனசிரின் கணவர் ஆசிப் அலி சர்தாரி பேரம் பேசியுள்ளார். அவருக்கு ரூ.198 கோடி கமிஷன் வழங்க பிரான்ஸ் நிறுவனம் டி.சி.என் முன்வந்தது. இதனால் பிரான்ஸிடமிருந்து நீர்மூழ்கி கப்பல்கள் வாங்க முடிவு செய்யப்பட்டது. இந்த கமிஷன் பணம் வெளிநாட்டு நிறுவனங்கள் மற்றும் சுவிஸ் வங்கி கணக்கு மூலம் செலுத்தப்பட்டது. இந்த பணத்தில் ஒரு பகுதி, அப்போதைய பிரான்ஸ் அதிபர் ஜேக்ஸ் சிராக்கின் அரசியல் எதிரி எடோவர்டு பலதுரின் கட்சிக்கு நன்கொடையாக வழங்கப்பட்டது தெரிந்தது. இதனால் கமிஷன் தொகையை ரத்து செய்ய உத்தரவிட்டார் சிராக். இதன்பின் கடந்த 2002ம் ஆண்டு கராச்சி துறைமுகத்தில் நடந்த குண்டு வெடிப்பில், நீர்மூழ்கி கப்பல் கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்த பிரான்ஸ் இன்ஜினியர்கள் 11 பேர் கொல்லப்பட்டனர். இது தொடர்பாகவும் விசாரணை நடந்து வருகிறது. நீர்மூழ்கி கப்பல் விற்பனையில் இடைத்தரகராக செயல்பட்ட சர்தாரியின் நண்பர் அமிர் லோதி வீட்டில் பிரான்ஸ் போலீசார், கடந்த ஆண்டு ஜூன் மாதம் நடத்திய சோதனையில் பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. அதில் கமிஷன் பெற்றவர்களில் முக்கிய நபர் சர்தாரி, அவர்களுக்கு எப்படி கமிஷன் பணம் செலுத்தப்பட்டது என்ற விவரங்கள் இருந்தன. மூன்று நீர் மூழ்கி கப்பல்களின் மொத்த விலையில் 4 சதவீதம் அதாவது ரூ.198 கோடி லஞ்சம் கொடுக்கப்பட்டது தெரிந்தது.  மேலும், சுவிட்சர்லாந்து அரசுக்கு பாகிஸ்தான் கடந்த 1997ம் ஆண்டு விடுத்த வேண்டுகோளின் நகலும் இருந்தது. அதில் கோர்ட் விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என பாகிஸ்தான் கோரிக்கை விடுத்துள்ளதும் அம்பலமாகியுள்ளது.
380
1/17/2011 4:16:56 PM
ஸ்டேட் எக்ஸ்பிரஸ்
பைக்கில் வந்த கும்பல் ரூ. 15 லட்சம் வழிப்பறி
புதுடெல்லி: மேற்கு டெல்லி கிர்தி நகர் பகுதியில் வசிக்கும் தொழில் அதிபர் விகாஸ் கன்னா(41). இவர் சி பிளாக் பகுதியில் இந்தியன் வங்கிக்கு நேற்று முன்தினம் காரில் சென்றார். காரை விட்டு வங்கிக்கு செல்லும் போது, பைக்கில் வந்த இருவர் விகாஸ் கன்னாவை ஆயுதங்களால் மிரட்டி கையில் வைத்திருந்த பையை பறித்துச் சென்றனர். அதில் க்ஷ்15 லட்சம் பணம் இருந்துள்ளது. டெல்லியில் வழிப்பறி சம்பவம் அடிக்கடி நடக்கிறது. ஆனால் கொள்ளையர்கள் பிடிபடாமல் உள்ளனர். வழிப்பறி கும்பல் ஹெல்மட் அணியாமல், சாதாரணமாக வந்து பணத்தை பறித்துச் சென்றுள்ளது. இவர்களை பிடிக்க மேற்கு டெல்லி போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
381
1/17/2011 4:17:18 PM
ஸ்டேட் எக்ஸ்பிரஸ்
ஸ்ரீநகர், மணாலியில் கடும் பனிப்பொழிவு
ஸ்ரீநகர்: காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் பனி கடுமையாக பெய்கிறது. இதனால் ஸ்ரீநகர்&ஜம்மு நெடுஞ்சாலை மூடப்பட்டு போக்குவரத்து முடங்கியுள்ளது. பனி காரணமாக மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீநகர் செல்லும் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதே போல் இமாச்சலப் பிரதேசம் மணாலியிலும் கடும் பனி பெய்கிறது. இங்கு வெப்பநிலை மைனஸ் 3.3 டிகிரியாக குறைந்துள்ளது. சிம்லா செல்லும் அனைத்து ரோடுகளும் மூடப்பட்டுள்ளன.
382
1/17/2011 4:17:39 PM
ஸ்டேட் எக்ஸ்பிரஸ்
பாய்பிரெண்ட் மீது வெளிநாட்டு மாணவி புகார்
புனே: மகாராஷ்டிர மாநிலம் புனேயில் உள்ள பிரபல கல்லூரியில் படிக்கும் 25 வயது வெளிநாட்டு மாணவி ஒருவர் தனது பாய்பிரெண்ட் மீது பலாத்கார புகார் அளித்துள்ளார். இதுகுறித்து முந்துவா பகுதி போலீஸ் உதவி கமிஷனர் விதால் பவார் கூறுகையில், 'மேல்படிப்பு படிக்க வந்த வெளிநாட்டு மாணவி புனேயில் கடந்த ஒன்றரை வருடமாக தங்கியுள்ளார். இவருடன் ஓர் இளைஞர் நட்பாக பழகியுள்ளார். கடந்த 1ம் தேதி அன்று அதிகாலை மாணவியின் வீட்டுக்கு சென்ற அந்த இளைஞர், அவரை பலாத்காரம் செய்துள்ளார். அப்போது அவர் குடிபோதையில் இருந்ததாக மாணவி தெரிவித்துள்ளார். அவர் திருமணம் செய்ய மறுத்ததால், பாய்பிரெண்ட் மீது தாமதமாக பலாத்கார புகார் அளித்துள்ளார். அவரது  விவரங்களை மாணவி தெரிவித்துள்ளார். இது பற்றி விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.
383
1/17/2011 4:18:01 PM
ஸ்டேட் எக்ஸ்பிரஸ்
காற்றாடி விளையாட்டு குஜராத்தில் மோதல்
அகமதாபாத்: குஜராத் மாநிலம் அகமதாபாத் அருகேயுள்ள டரியாபூர் என்ற நகரில், உதாரயன் திருவிழாவை முன்னிட்டு இளைஞர்கள் சிலர் நேற்று மாலை காற்றாடி பறக்கவிட்டு விளையாடினர். அப்போது மற்றொரு பிரிவைச் சேர்ந்த இளைஞர்கள் மாஞ்சா மூலம் காற்றாடியை அறுத்தனர். இச்சம்பவத்தால் இரு பிரிவைச் சேர்ந்த இளைஞர்களிடையே மோதல் ஏற்பட்டது. கல் வீச்சில் ஆரம்பித்த சண்டை, நாட்டு வெடி குண்டு வீச்சில் முடிந்தது. சம்பவ இடத்துக்கு விரைந்த  போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசி நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர். அங்கு போலீசார் தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
384
1/17/2011 4:18:41 PM
குற்றம்
புனித தலமான சபரிமலையில் அடிப்படை வசதிகள் மிகவும் மோசம் : நடிகர் விவேக் ஓபராய் ஆவேசம்
மும்பை: சபரிமலையில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் பணியில் உதவ விரும்புகிறேன் என நடிகர் விவேக் ஓபராய் கூறியுள்ளார். இந்தி நடிகர் விவேக் ஓபராய் சபரிமலைக்கு கடந்த 12 வருடங்களாக புனித பயணம் மேற்கொள்கிறார். இந்த ஆண்டு மகரஜோதி தரிசனத்தின் போது புல்மேடு பகுதியில் நடந்த கோர விபத்தின் போதும் அவர் சபரிமலையில் இருந்துள்ளார். மும்பை திரும்பிய அவர் விபத்து குறித்து கூறியதாவது:தகவல் அறிந்ததும் இதயமே நொறுங்குவது போல் வேதனையடைந்தேன். நானும் என் நண்பர்களும் உடனடியாக அங்கு சென்று உதவ முன்வந்தோம். ஆனால், ‘பயிற்சி பெற்ற வீரர்களே மிகவும் சிரமப்படுகிறார்கள். நீங்கள் அப்பகுதிக்கு செல்வது பயனளிக்காது. வேண்டாம்’ என்று கூறி போலீசார் தடுத்துவிட்டனர். சபரிமலை சர்வதேச அளவில் புகழ்பெற்ற புனித தலம். ஆண்டுதோறும் இங்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை 15ல் இருந்து 20 சதவிகிதம் வரை அதிகரித்து வருகிறது. ஆனால் அடிப்படை வசதிகள் மிகவும் மோசமாக இருக்கிறது.நான் திருப்பதி மற்றும் வைஷ்ணவி தேவி கோயில்களுக்கும் சென்று வந்துள்ளேன். அங்கு திட்டமிட்டு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. பக்தர்கள் சென்று வர சிறப்பான வசதிகள் உள்ளன. எந்த குழப்பமும் இல்லை. ஆனால் சபரிமலையில் பக்தர்கள் வந்து செல்வது ஒழுங்கின்றி இருக்கிறது. இங்கு ஆண்டுதோறும் சிறுசிறு விபத்துகள் ஏற்படுகின்றன. ஆனால் தற்போது நடந்திருப்பது மிகமிக மோசமான விபத்து. 18ம் படி வழியே ஒரு மணி நேரத்திற்கு 5 ஆயிரம் பக்தர்கள் மட்டுமே சென்று வரமுடியும். இதனால் பக்தர்கள் பலமணி நேரம் காத்திருக்க வேண்டியுள்ளது. இதை சீரமைத்து அடிப்படை வசதிகளை மேம்படுத்த ஏதேனும் செய்ய விரும்புகிறேன். அரசு அறிவித்துள்ள ரூ. 5 லட்சம் நிவாரணம் தற்காலிக உதவிதான். சபரிமலையில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி மீண்டும் இது போன்ற விபத்து நடக்காமல் தடுப்பதுதான் நிரந்தர உதவியாக இருக்கும். பக்தர்களை இனிமேலும் இது போல் சிரமப்படுத்தக் கூடாது. இவ்வாறு விவேக் ஓபராய் கூறியுள்ளார்.
385
1/17/2011 4:23:00 PM
இந்தியா
புனித தலமான சபரிமலையில் அடிப்படை வசதிகள் மிகவும் மோசம் : நடிகர் விவேக் ஓபராய் ஆவேசம்
மும்பை: சபரிமலையில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் பணியில் உதவ விரும்புகிறேன் என நடிகர் விவேக் ஓபராய் கூறியுள்ளார்.இந்தி நடிகர் விவேக் ஓபராய் சபரிமலைக்கு கடந்த 12 வருடங்களாக புனித பயணம் மேற்கொள்கிறார். இந்த ஆண்டு மகரஜோதி தரிசனத்தின் போது புல்மேடு பகுதியில் நடந்த கோர விபத்தின் போதும் அவர் சபரிமலையில் இருந்துள்ளார். மும்பை திரும்பிய அவர் விபத்து குறித்து கூறியதாவது:  தகவல் அறிந்ததும் இதயமே நொறுங்குவது போல் வேதனையடைந்தேன். நானும் என் நண்பர்களும் உடனடியாக அங்கு சென்று உதவ முன்வந்தோம். ஆனால், ‘பயிற்சி பெற்ற வீரர்களே மிகவும் சிரமப்படுகிறார்கள். நீங்கள் அப்பகுதிக்கு செல்வது பயனளிக்காது. வேண்டாம்’ என்று கூறி போலீசார் தடுத்துவிட்டனர். சபரிமலை சர்வதேச அளவில் புகழ்பெற்ற புனித தலம். ஆண்டுதோறும் இங்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை 15ல் இருந்து 20 சதவிகிதம் வரை அதிகரித்து வருகிறது. ஆனால் அடிப்படை வசதிகள் மிகவும் மோசமாக இருக்கிறது.நான் திருப்பதி மற்றும் வைஷ்ணவி தேவி கோயில்களுக்கும் சென்று வந்துள்ளேன். அங்கு திட்டமிட்டு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. பக்தர்கள் சென்று வர சிறப்பான வசதிகள் உள்ளன. எந்த குழப்பமும் இல்லை. ஆனால் சபரிமலையில் பக்தர்கள் வந்து செல்வது ஒழுங்கின்றி இருக்கிறது. இங்கு ஆண்டுதோறும் சிறுசிறு விபத்துகள் ஏற்படுகின்றன. ஆனால் தற்போது நடந்திருப்பது மிகமிக மோசமான விபத்து. 18ம் படி வழியே ஒரு மணி நேரத்திற்கு 5 ஆயிரம் பக்தர்கள் மட்டுமே சென்று வரமுடியும். இதனால் பக்தர்கள் பலமணி நேரம் காத்திருக்க வேண்டியுள்ளது. இதை சீரமைத்து அடிப்படை வசதிகளை மேம்படுத்த ஏதேனும் செய்ய விரும்புகிறேன். அரசு அறிவித்துள்ள ரூ. 5 லட்சம் நிவாரணம் தற்காலிக உதவிதான். சபரிமலையில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி மீண்டும் இது போன்ற விபத்து நடக்காமல் தடுப்பதுதான் நிரந்தர உதவியாக இருக்கும். பக்தர்களை இனிமேலும் இது போல் சிரமப்படுத்தக் கூடாது. இவ்வாறு விவேக் ஓபராய் கூறியுள்ளார்.
386
1/17/2011 4:24:49 PM
தமிழகம்
1024 உதவி பேராசிரியர்கள் நியமனம் 19ம் தேதி முதல் இன்டர்வியூ
புளியங்குடி: தமிழகத்தில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் காலியாக இருந்த 1024 உதவி பேராசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கு அரசு உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து ஆசிரியர் தேர்வு வாரியம் முதற் கட்டமாக சான்றிதழ் சரிபார்ப்பை முடித்த நிலையில் பணியில் நியமனம் செய்யப்படுவோர், அவர்கள் பெற்றுள்ள மதிப்பெண்கள் மற்றும் இனச்சுழற்சி அடிப்படையில் 1:5 என்ற விகிதத்தில் தெரிவு செய்யப்பட்டு பாட வாரியாக நேர்காணலுக்கு வருவதற்காக பதிவஞ்சல் மூலம் அழைப்புக் கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளன.இந்த நேர்முகத் தேர்வானது ஆசிரியர் தேர்வு வாரியம், ஈவிகே சம்பத் மாளிகை, சென்னை6 என்ற அலுவலகத்தில் வரும் 19ம் தேதி முதல் பிப்.5ம் தேதி வரை நடைபெறுகிறது. மேலும் இந்த நேர்முகத்தேர்வுக்கு தெரிவு செய்யப்பட்டவர்களின் விவரங்கள் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில்  வெளியிடப்பட்டுள்ளது. அழைப்புக் கடிதம் பெறப்படாத நபர்கள் இணையதளத்திலுள்ள விவரங்களின்படி நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ளலாம் என ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
387
1/17/2011 4:27:45 PM
தமிழகம்
கலை பண்பாட்டு துறை சார்பில் தமிழக அரசு விருதுகள் அறிவிப்பு
சென்னை: தமிழக அரசின் கலை பண்பாட்டுத் துறை சார்பில் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதுதொடர்பாக தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள அறிக்கை: 2007-2008ம் ஆண்டிற்கான சுற்றுலா மற்றும் பண்பாட்டுத் துறை மானியக் கோரிக்கை மீது தமிழக சட்டப்பேரவையில் 7.5.2009 அன்று நடைபெற்ற விவாதத்தின்போது தமிழகத்தை சேர்ந்த கலைஞர்களுக்கு கலைமாமணி போன்ற விருதுகள் வழங்கப்படுவதுபோல, அகில இந்திய அளவில் புகழ்பெற்ற கலைஞர்களுக்கும், இலக்கியவாதிகளுக்கும் விருதுகள் வழங்கப்படும் என்று தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டது. அந்த அறிவிப்பினை செயல்படுத்தும் வகையில், இயல் துறையில் சிறந்து விளங்கும் ஒருவருக்கு ‘பாரதி விருதுÕ, இசைத் துறையில் சிறந்து விளங்கும் ஒருவருக்கு ‘எம்.எஸ்.சுப்புலட்சுமி விருதுÕ, நாட்டிய கலையில் சிறந்து விளங்கும் ஒருவருக்கு ‘பாலசரசுவதி விருதுÕ என மூன்று விருதுகளை ஆண்டுதோறும் வழங்க முதல்வர் கருணாநிதி ஏற்கனவே உத்தரவிட்டிருந்தார்.அந்த உத்தரவின்படி முதல் முறையாக இந்த ஆண்டில் இயல் துறையில் சிறந்த எழுத்தாளராகிய ஜெயகாந்தனுக்கு ‘பாரதி விருதுÕ வழங்கவும், திரை இசை கலையில் தனி முத்திரை பதித்துள்ள இளையராஜாவுக்கு ‘எம்.எஸ்.சுப்புலட்சுமி விருதுÕ வழங்கவும், நாட்டிய கலையில் புகழுடன் திகழும் டாக்டர் பத்மா சுப்ரமணியத்துக்கு ‘பாலசரசுவதி விருதுÕ வழங்கவும், இந்த விருதுகள் பெறும் ஒவ்வொருவருக்கும் தலா ஒரு லட்சம் ரூபாய் விருதுக்குரிய பொற்கிழியாக வழங்கவும் முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
388
1/17/2011 4:29:06 PM
தமிழகம்
ஏழை, எளிய மக்கள் நலன் கருதி பெட்ரோல் விலை உயர்வை அரசு ரத்து செய்ய வேண்டும்
சென்னை: ஏழை, எளிய மக்கள் நலன் கருதி பெட்ரோல் விலை உயர்வை மத்திய அரசு உடனே ரத்து செய்ய வேண்டும் என்று ஜெயலலிதா கூறியுள்ளார். இதுகுறித்து அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா இன்று வெளியிட்டுள்ள அறிக்கை: விலைவாசி உயர்வை கட்டுப்படுத்துவது குறித்து பிரதமர் தலைமையில் ஓர் உயர்மட்ட குழு கூட்டத்தினை நடத்திவிட்டு, உடனடியாக பெட்ரோல் விலையை ஒரு லிட்டருக்கு ரூ.2.55 காசுகள் என்ற அளவிற்கு எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்திக் கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்திருக்கிறது.விலைவாசி உயர்விற்கான முக்கிய காரணங்களில் பெட்ரோலிய பொருட்களின் விலை உயர்வும் ஒன்று. இந்த நிலையில், பெட்ரோல் விலையை மத்திய அரசு தொடர்ந்து உயர்த்திக் கொண்டே போவது கண்டனத்திற்குரியது. கடந்த ஒரு ஆண்டில் மட்டும் பெட்ரோலின் விலை ரூ.15 என்ற அளவுக்கு 9 முறை உயர்த்தப்பட்டு இருக்கிறது. இதனால் இரு சக்கர வாகனங்களில் செல்லும் பொதுமக்களும், ஆட்டோவில் செல்லும் சாதாரண மக்களும் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். இந்த நிலை நீடித்தால் குதிரை வண்டி, மாட்டு வண்டி, சைக்கிள் போன்ற வாகனங்களில்தான் மக்கள் செல்ல நேரிடும். இதற்கும் வழியில்லை என்றால் நடந்து செல்ல வேண்டியதுதான்.  மத்திய, மாநில அரசுகளின் மக்கள் விரோத செயல் காரணமாக வெங்காயம் உட்பட அனைத்து காய்கறிகளின் விலைகளும், அத்தியாவசிய பொருட்களின் விலைகளும் மேலும் உயர இருக்கிறது.எனவே ஏழை, எளிய மக்கள் நலன் கருதி பெட்ரோல் விலை உயர்வை மத்திய அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டும். வெங்காயத்தை உரித்தால் கண்ணீர் வரும் என்ற நிலை மாறி, வெங்காயத்தை பார்த்தாலே கண்ணீர் வருகின்ற அவல நிலை ஏற்பட்டு இருக்கிறது. இவ்வாறு ஜெயலலிதா அறிக்கையில் கூறியுள்ளார்.
389
1/17/2011 4:32:28 PM
தமிழகம்
எம்ஜிஆர் பிறந்தநாள் கொண்டாட்டம்
திருவள்ளூர்: எம்ஜிஆர் பிறந்த நாள் விழா திருவள்ளூரில் இன்று கொண்டாடப்பட்டது. திருவள்ளூர் பஜாரில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு அதிமுகவினர் மாலை அணிவித்தனர். இந்த விழாவுக்கு மாவட்ட பேரவை செயலாளர் பி.ரமணா தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர்கள் கந்தசாமி, சுதாகர், வக்கீல் ராம்குமார், முன்னாள் எம்எல்ஏ சக்குபாய் முன்னிலை வகித்தனர். தொகுதி இணைச் செயலாளர் கமாண்டோ ஏ.பாஸ்கரன், நகர செயலாளர் கந்தசாமி, இளைஞரணியை சேர்ந்த வேல்முருகன் வரவேற்றனர். டாக்டர் வேணுகோபால் எம்பி கலந்துகொண்டு, எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்தார். பொதுமக்களுக்கு அன்னதானம், லட்டு வழங்கினார்.இதில் வினோத்குமார் ஜெயின், பூண்டி ஆம்புரோஸ், லோகநாதன், ராமஞ்சேரி மாதவன் கலந்துகொண்டனர். கடம்பத்தூர் ஒன்றியம் மணவாளநகரில் நடைபெற்ற எம்ஜிஆர் பிறந்தநாள் விழாவுக்கு முன்னாள் எம்எல்ஏ நடராஜன் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் சுதாகர், முன்னாள் ஒன்றிய செயலாளர் சந்திரசேகர், இரா.பெருமாள், நரேஷ்குமார் முன்னிலை வகித்தனர். துணை செயலாளர் பாசுரன், பட்டாபி வரவேற்றார். திருத்தணி கோ. அரி எம்எல்ஏ கலந்து கொண்டு இனிப்பு வழங்கினார். நிர்வாகிகள் காசி, இன்பநாதன், பூபாலன் கலந்துகொண்டனர். பூண்டியில் எம்ஜிஆர் பிறந்தநாள் அன்புரோஸ் தலைமையில் கொண்டாடப்பட்டது. இளைஞரணி செயலாளர் தாஸ் வரவேற்றார். ஒன்றிய செயலாளர் கந்தசாமி கலந்து கொண்டார்.
390
1/17/2011 4:34:04 PM
தமிழகம்
செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயிலை தினமும் இயக்க வலியுறுத்தல்
சென்னை: செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயிலை தினமும் இயக்க வேண்டும் என்று ஜெயதுரை எம்பி வலியுறுத்தி உள்ளார். முதல்வர் கருணாநிதிக்கு தூத்துக்குடி எம்பி ஜெயதுரை அனுப்பி உள்ள கடிதத்தில் கூறியிருப்பது: திருச்செந்தூர், ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்டவர்கள் சென்னை மற்றும் சுற்றியுள்ள பகுதியில் 75 ஆயிரம் குடும்பங்கள் மற்றும் 30 ஆயிரம் பேர் வசிக்கின்றனர். இவர்கள் செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயிலை தினசரி விட கோரிக்கை வைத்து பல ஆண்டுகள் ஆவலோடு எதிர்பார்த்து கொண்டிருக்கிறார்கள். திருச்செந்தூர் கோயிலுக்கு தமிழகம் முழுவதும் இருந்து பல ஆயிரக்கணக்கானவர்கள் தினசரி வந்து கொண்டு இருக்கிறார்கள். இவர்களின் நலன் கருதி செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயிலை தினசரி ரயிலாக இயக்க, வரும் ரயில்வே பட்ஜெட்டில் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.தமிழ்நாட்டில் தயாரிக்கப்படும் தீப்பெட்டிகள்தான் இந்தியா முழுக்க 90 சதவீதம் பயன்பாட்டில் உள்ளது. வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. தற்போது தமிழ்நாட்டில் தீப்பெட்டி தொழில் நலிந்து வருகிறது. இத்தொழிலுக்கு மத்திய அரசு 10 சதவீதம் கலால்வரி விதித்து வருகிறது. இத்தொழிலில் ஈடுபட்டு இருக்கும் 3 லட்சம் தொழிலாளர்கள் பாதிக்கப்படுகிறார்கள். எனவே செமி மெஷினைஸ்ட்  கம்பெனிக்கு கலால் வரியை 4 சதவீதமாக குறைக்க ஆவன செய்ய வேண்டுகிறேன்.
391
1/17/2011 4:35:51 PM
தமிழகம்
தமிழக பாஜ வேட்பாளர் பட்டியல் தயாராகிறது
சென்னை: சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கான பாஜ வேட்பாளர் பட்டியல் தயாரிக்கும் பணியை மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் தீவிரப்படுத்தி உள்ளார். தமிழக சட்டமன்றத் தேர்தலில் பாஜ தனித்து போட்டியிடுவதால் அதனை  எதிர்கொள்ளும் வகையில் தாமரை யாத்திரை கடந்த ஆண்டு நவம்பர் 19ம் தேதி சென்னையில் தொடங்கியது. பல மாவட்டங்களில் யாத்திரை நடத்தி முடிக்கப்பட்டு சென்னைக்கு 29ம் தேதி வருகிறது. இந்த யாத்திரையின்போது ஆங்காங்கே கூட்டம் போட்டு தேர்தலில் போட்டியிடுவோர் பட்டியலையும் மாநிலத் தலைவர் ராதாகிருஷ்ணன் தயாரித்து வருகிறார். இதுவரை 50 தொகுதிகளில் போட்டியிடுவோர் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.குறிப்பாக கன்னியாகுமரி, கோவை, சென்னை, திருச்சி, நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. மீதியுள்ள மாவட்டங்களில் பட்டியல் தயாரிக்கப்பட்டு மேலிடத்தின் ஒப்புதலுக்கு விரைவில் அனுப்பி வைக்கப்படும் என்றும், பிப்ரவரி மாத இறுதியில் எந்தெந்த இடங்களில் போட்டியிடுவது என்ற பட்டியலும், வேட்பாளர் பட்டியலும் ரெடியாகிவிடும் என்றும் பாஜக நிர்வாகி ஒருவர் தெரிவித்தார். மாநிலத் தலைவர் கன்னியாகுமரி மாவட்டத்தில் போட்டியிடப் போவதாக கூறப்படுகிறது.
392
1/17/2011 4:39:43 PM
தமிழகம்
வழக்குகளை பதிவு செய்யாத 50இன்ஸ்பெக்டர்களுக்கு மெமோ
சென்னை-: தினமும் ‘75’ பிரிவின் கீழ் குறைந்தபட்சம் 20 வழக்குகள் பதிவு செய்யாத இன்ஸ்பெக்டர்களுக்கு மெமோ கொடுக்கப்பட்டுள்ளது.சென்னையில் கடந்த இரு நாட்களாக அடி, தடி தகராறுகள் அதிகமாக நடந்தன. குமரன் நகர், தி.நகரில் கொலை சம்பவங்களும் நடந்தன. Ôபண்டிகை நாட்களில் இது போன்ற சம்பவங்களை தடுக்க ஒவ்வொரு போலீஸ் நிலையங்களிலும் இந்திய தண்டனைச் சட்டம் ‘75’ பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்ய வேண்டும். குறைந்தது ஒவ்வொரு போலீஸ் நிலையத்திலும் 20 வழக்குகள் பதிவு செய்ய வேண்டும்Õ என்று போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் உத்தரவிட்டிருந்தார்.அதைத் தொடர்ந்து சென்னையில் உள்ள அனைத்து போலீஸ் நிலையங்களிலும் இன்ஸ்பெக்டர்கள் தனிப்படை அமைத்து ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர். நேற்றும் இன்றும் மதுபானக் கடைகளுக்கு விடுமுறை விடப்பட்டிருந்தது. ஆனாலும் பல இடங்களில் முதல் நாளே மதுபானங்கள் அதிக அளவில் வாங்கி வைத்து, அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. இதனால் பல இடங்களில் தகராறு நடந்தது. ஆனால், இது தொடர்பாக ஒரு சில போலீஸ் நிலையங்களைத் தவிர மற்ற போலீஸ் நிலையங்களில் குறைவாகவே வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தன. இது தொடர்பாக துணை கமிஷனர்களிடம் கூடுதல் கமிஷனர் ஷகீல் அக்தர் கேள்வி கேட்டுள்ளார். இதையடுத்து வழக்குகள் குறைவாக பதிவு செய்த இன்ஸ்பெக்டர்களுக்கு மெமோ கொடுக்கப்பட்டது. அதன்படி சுமார் 50 இன்ஸ்பெக்டர்களுக்கு மெமோ கொடுக்கப்பட்டுள்ளது. மெமோ கொடுக்கப்பட்ட சம்பவம் போலீஸ் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
393
1/17/2011 4:41:08 PM
தமிழகம்
எம்.ஜி.ஆர் சிலைக்கு ஜெயலலிதா மரியாதை
சென்னை-: அதிமுக நிறுவனர் எம்.ஜி.ஆரின் 94-வது பிறந்த நாளை முன்னிட்டு, சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்துக்கு பொதுச்செயலாளர் ஜெயலலிதா இன்று காலை 9.50 மணிக்கு வந்தார். அவரை ஓ.பன்னிர்செல்வம் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் வரவேற்றனர். எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து, பிறந்த நாள் விழா மலரை ஜெயலலிதா வெளியிட்டார். முதல் பிரதியை, திண்டுக்கல் மாவட்டச் செயலாளர் நத்தம் விசுவநாதன் பெற்றுக் கொண்டார். அதன்பின், ஏழ்மை நிலையில் இருக்கும் மாணவ - மாணவியர்களான சேலம் சூர்யா, மதுரை கவுசல்யா, தஞ்சாவூர் துரைராஜ் ஆகிய 3 பேருக்கு கம்ப்யூட்டர்களை ஜெயலலிதா வழங்கினார்.சென்னை துறைமுகம் பகுதியை சேர்ந்த விஜயா, சைதாப்பேட்டையைச் சேர்ந்த மாலா, விருகம்பாக்கம் பிரேமா ஆகிய மூன்று பேருக்கு தையல் மிஷின்களையும் சென்னை திரு.வி.க. நகர் வெங்கடேசன், பெரம்பூர் பாபு, ராயப்பேட்டைபழனிவேல் ஆகிய 3 பேருக்கு சலவைப் பெட்டிகளையும் வழங்கினார். பின்னர் ஜெயலலிதா பேசுகையில், ‘‘தமிழக மக்கள், தற்போது நரக வேதனை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள். மக்கள் நிம்மதியாக வாழ முடியவில்லை. விலைவாசி உயர்வு, மின் கட்டண உயர்வு, மின்சாரத் தட்டுப்பாடு போன்ற எத்தனையோ பிரச்சனைகளால் தமிழக மக்கள் இன்று துயருற்று இருக்கிறார்கள். அடுத்த சில மாதங்களில் சட்டமன்றப் பொதுத் தேர்தல் நடைபெறும் போது, நம்முடைய ஆட்சி வருவது நிச்சயம். இது காலத்தின் கட்டாயம். இதை யாராலும் மாற்ற முடியாது’’ என்றார்.
394
1/17/2011 4:42:45 PM
தமிழகம்
குடியரசு தினத்தையொட்டி தமிழகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு
ஆலந்தூர்: சென்னை புறநகர் கமிஷனர் அலுவலகத்தில் இன்று காலை பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. அலுவலக வளாகத்தில் அமைக்கப்பட்டு இருந்த குடிசையில் மாடுகள் கட்டப்பட்டு இருந்தன. அதற்கு முன்பு அடுப்பு வைத்து பெண் காவலர்கள் பொங்கல் வைத்தனர். இந்த நிகழ்ச்சிக்கு டிஜிபி லத்திகா சரண் தலைமை தாங்கினார். கயிறு இழுத்தல், தவளை ஓட்டம், ஸ்கிப்பிங், மெதுவாக சைக்கிள் ஓட்டுதல் உள்ளிட்ட பல போட்டிகளில் வெற்றிப் பெற்ற போலீசார் குடும்பத்து குழந்தை களுக்கு லத்திகா சரண் பரிசு வழங்கினார்.இதில் லத்திகா சரண் பேசியதாவது: போலீசாரின் மன உளைச்சல், மன அழுத்தம் உள்ளிட்டவற்றை போக்குவதற்காக இப்படிப்பட்ட போட்டிகள் நடத்தப்படுகின்றன. ஜனவரி 26ம் தேதி, குடியரசு தினத்தன்று, தமிழகத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்படும். முக்கிய இடத்தில் அதிகவேக சிறப்பு படையினர் நிறுத்தப்படுவார்கள். ரயில்வே ஸ்டேஷன் உள்ளிட்ட முக்கிய இடங்களை போலீசார் தீவிரமாககண்காணிப்பார்கள்.இவ்வாறு லத்திகா கூறினார். விழாவில் புறநகர் கமிஷனர் ஜாங்கிட், துணை கமிஷனர்கள் வரதராஜு, ஜான் செல்லையா, ஆனி விஜயா, கார்த்திகேயன், கயல்விழி பங்கேற்றனர்.
395
1/17/2011 4:43:54 PM
தமிழகம்
கொரட்டூர் அருகே சரக்கு லாரி கால்வாயில் கவிழ்ந்தது
ஆவடி: அம்பத்தூர் சிட்கோ தொழிற்பேட்டை நுழைவு பகுதியில் கொரட்டூர் அருகே தரைப்பாலம் உள்ளது. இங்கு, நேற்றிரவு கோவையில் இருந்து சென்னைக்கு சரக்கு ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று வந்தது. தரைப் பாலத்தின் மீது வந்தபோது, திடீரென லாரி கவிழ்ந்து கால்வாயில் விழுந்தது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதில் லாரி டிரைவரும் கிளீனரும் காயத்துடன் உயிர் தப்பினர். அவர்களை பொதுமக்கள் மீட்டு, மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தகவல் அறிந்து பூந்தமல்லி போக்குவரத்து போலீசார் சம்பவ இடத்துக்கு வந்தனர். வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர். இந்த தரைப்பாலத்துக்கு பல வருடமாக தடுப்புச்சுவர் கிடையாது. வாகனங்களில் செல்பவர்கள் அச்சத்துடனே வாகனங்களை ஓட்டிச் செல்கின்றனர். இரவில் வெளிச்சம் இல்லாததால் பாலத்தை கடக்கும்போது கீழே விழுந்து விபத்து நடக்கிறது. பாலத்தில் தடுப்புச்சுவர் அமைத்து சாலையை விரிவுப்படுத்த வேண்டும் என்று மக்கள் கோரிக்கை வைத்தனர். ஆனால் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
396
1/17/2011 4:46:55 PM
உலகம்
விக்கிலீக்ஸ்க்கு ரகசியங்களை தெரிவித்த அமெரிக்க வீரருக்கு சிறையில் சித்ரவதையா?
வாஷிங்டன்: விக்கிலீக்ஸ் இணையதளத்துக்கு பென்டகன் ரகசியங்களை தெரிவித்த அமெரிக்க வீரர் பிராட்லி மேனிங் தனிமை சிறையில் அடைக்கப்பட்டு சித்ரவதை செய்யப்படுவதாக எழுந்துள்ள குற்றச்சாட்டை அமெரிக்க ராணுவம் மறுத்துள்ளது. ஈராக், ஆப்கானிஸ்தான் போர் பற்றிய அமெரிக்க ராணுவ ரகசியங்கள், வெளிநாட்டில் உள்ள அமெரிக்க தூதரகங்கள் அனுப்பிய தகவல்களை எல்லாம் திரட்டி விக்கிலீக்ஸ் இணையளத்தில் வெளியிட்டு பரபரப்பு கிளப்பினார் அதன் நிறுவனர் ஜூலியன் அசான்ஞ். அவர் மீது குற்றவழக்கு பதிவு செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறது அமெரிக்கா. இந்நிலையில் விக்கிலீக்ஸ் நிறுவனத்துக்கு, ராணுவ ரகசியங்களை தெரிவித்த அமெரிக்க வீரர் பிராட்லி மேனிங்(23) கைது செய்யப்பட்டு விர்ஜினியா மாநிலத்தில் உள்ள ராணுவ ஜெயிலில் கடந்த 7 மாதமாக அடைக்கப்பட்டுள்ளார். இவர் மீதான குற்றச்சாட்டுக்கு 52 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என கூறப்படுகிறது.ஜூலியன் அசான்ஞ்க்கு எதிராக சாட்சியம் அளிப்பதற்காக ராணுவ வீரர் பிராட்லி தனிமை சிறையில் அடைக்கப்பட்டு சித்ரவதை செய்யப்படுகிறார் என பிராட்லியின் ஆதரவாளர்கள் சிலர் குற்றம் சுமத்தியுள்ளனர். இந்த விவகாரம் ஐ.நா. வரை சென்றதால், பிராட்லியை நடத்தும் விதம் பற்றி சிறப்பு அதிகாரி ஒருவர் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்துள்ளார்.  இந்த குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்துள்ள ராணுவ உயர் அதிகாரி கர்னல் ஜான்சன் கூறியதாவது:  ராணுவ வீரர் பிராட்லி தப்பிச் சென்றால், நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையும். ராணுவ டாக்டர்கள் அறிவுரைப்படி பிராட்லிக்கு தீவிர பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. அவர் தனிமை சிறையில் அடைக்கப்பட்டிருந்தாலும், சிறையில் உள்ள வீரர்கள், அருகில் உள்ள அறைகளில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் கைதிகளுடன் பிராட்லி பேசலாம். உடற்பயிற்சி, குளியல், போன் செய்தல், வக்கீலை சந்திப்பது எல்லாம் நடக்கிறது. வார இறுதி நாட்களில் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களை சந்திப்பதற்காக அவர் அறையை விட்டு வெளியே அழைத்துச் செல்லப்படுகிறார். பத்திரிகை மற்றும் டி.வி.யை அவர் பார்க்கலாம். ஆனால் பத்திரிகைக்கு பேட்டியளிக்க முடியாது. மற்ற கைதிகள் போலத்தான் பிராட்லியும் மரியாதையுடன் நடத்தப்படுகிறார். இவ்வாறு ஜான்சன் கூறியுள்ளார்.
398
1/17/2011 4:54:42 PM
விளையாட்டு
ஆஸ்திரேலிய ஓபன் ஷரபோவா முதல் சுற்றில் வெற்றி
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டிகள் இன்று காலை மெல்போர்னில் தொடங் கின. முதல் போட்டியில் ரஷ்யாவின் ஷரபோவா, தாய்லாந்தின் தமாரின் சுகானை எதிர்கொண்டார். இதில் 61, 63 என்ற நேர்செட்டில் ஷரபோவா வெற்றி பெற்று 2வது சுற்றுக்கு முன்னேறினார். ரஷ்யாவின் ரோடினா 63, 61 என்ற செட் கணக்கில் ஆஸ்திரேலியாவின் ஓலிவாவை வீழ்த்தினார். நிக்கோலஸ் 60, 63 என்ற செட் கணக்கில் சுவிட்சர்லாந்தின் திமாவை வீழ்த்தினார். உலகின் முதல்நிலை வீராங் கனையான டென் மார்க்கின் கரோலினி வோஸ்னியாக்கி 63, 64 என்ற செட் கணக்கில் அர்ஜென்டினா வீராங்கனை டல்கோவை வீழ்த்தினார்.
399
1/17/2011 4:56:24 PM
விளையாட்டு
இலங்கை வெ.இ. ஒருநாள் போட்டி ஜனவரி 31ல் தொடக்கம்
இலங்கையில் சுற்றுப்பயணம் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி கடந்த மாதம் 5 ஒருநாள் போட்டிகளில் விளையாட இருந்தது. ஆனால் கனமழை காரணமாக போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டன. தற்போது ஜனவரி 31ந் தேதி முதல் 3 ஒருநாள் போட்டிகளை நடத்துவதென இருநாட்டு வாரியங்களும் முடிவு செய்துள்ளன. முதல் போட்டி ஜனவரி 31ந் தேதி கம்பன்தோட்டா மைதானத்திலும், பிப்ரவரி 4 மற்றும் 6ந் தேதிகளில் மற்ற 2 போட்டிகள் கொழும்பு பிரேமதாசா மைதானத்திலும் நடக்கிறது.
400
1/17/2011 4:57:58 PM
விளையாட்டு
ஐபிஎல் போட்டிகள் மூலம் அரசுக்கு 300 கோடி வருமானம்
ஐபிஎல் 4வது சீசன் போட்டிகள் ஏப்ரல் 8 தொடங்கி மே 22 வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடக்கவுள்ளன. இதில் 60 போட்டிகள் வரை நடத்தப்படும். இதற்காக வீரர்கள், நடுவர்கள், பயிற்சியாளர்கள், வர்ணனையாளர்கள் உள்ளிட்டோருக்கு லட்சக்கணக்கில் பணம் கொடுக்கப்படுகிறது. இதற்கான வருமான வரி மற்றும் விளம்பரம், வியாபாரம் உள்ளிட்டவை மூலம் அரசுக்கு ரூ. 300 கோடி வரை வரி கிடைக்கும் என வருமானவரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
401
1/17/2011 4:59:54 PM
விளையாட்டு
நாளை இந்தியா தெ.ஆ. 3வது ஒன்டே முன்னிலை பெறுவது யார்?
இந்தியா  தென் ஆப்ரிக்கா அணிகள் மோதும் 3வது ஒருநாள் போட்டி நாளை மாலை இந்திய நேரப்படி மாலை 6 மணிக்கு கேப்டவுனில் நடக்கிறது. 5 ஒருநாள் போட்டி கொண்ட இந்த தொடரில் இரு அணிகளும் தலா 1 வெற்றி பெற்று சமநிலையில் உள்ளன. எனவே கேப்டவுன் போட்டி அதிக முக்கியத்துவம் பெற்றுள்ளது.இதில் வெற்றி பெற்றால் முன்னிலை பெறுவதுடன் தொடரை வெல்லவும் எளிதாக இருக்கும் என்பதால் இரு அணி வீரர்களும் கடுமையாக போராடுவார்கள். இந்திய அணியில் தொடக்கம் சரியில்லை. சேவாக்,, காம்பீர் ஆகியோர் நாடு திரும்பி விட்ட நிலையில் டெண்டுல்கரும் காயமடைந்து தொடரில் இருந்து விலகியிருப்பது பின்ன டைவை ஏற்படுத்தும். டெண்டுல்கருக்கு பதிலாக தென் ஆப்ரிக்கா புறப்பட்டுள்ள பார்த்திவ் படேல் நாளை ஆட்டத்தில் பங்கேற்பது கடினம். எனவே நாளைய ஆட்டத்தில் முரளிவிஜயுடன் விராட்கோஹ்லி அல்லது யூசுப்பதான் ஆகியோரில் ஒருவர் தொடக்க வீரராக களமிறங்குவார்கள் என தெரிகிறது.தென் ஆப்ரிக்க அணி முழு பலத்துடன் களமிறங்குகிறது. அதிரடி வீரர் மோர்க்கல் நல்ல பார்மில் இல்லாதது பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.டெண்டுல்கருக்கு பதில் பார்த்திவ்தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக ஜோகனஸ்பர்க்கில் நடந்த 2வது ஒருநாள் போட்டியில் காயமடைந்த டெண்டுல்கர் நாடு திரும்புகிறார். அவருக்கு பதிலாக விக்கெட் கீப்பர் பார்த்திவ் படேல் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். அவர் தென் ஆப்ரிக்கா புறப்பட்டு சென்றார். டெண்டுல்கர், சேவாக், காம்பீர், பிரவீன்குமார் ஆகியோர் காயம் காரணமாக தென் ஆப்ரிக்காவில் இருந்து திரும்பி வந்துள்ளனர்.
402
1/17/2011 5:07:21 PM
விளையாட்டு
2011 உலககோப்பை : இந்திய அணி அறிவிப்பு, ரோகித் சர்மா நீக்கம் : தமிழக வீரர் அஷ்வினுக்கு வாய்ப்பு
சென்னை: உலக கோப்பை தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டது. வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்த் மற்றும் ரோஹித் சர்மா ஆகியோருக்கு அணியில் இடம் மறுக்கப்பட்டுள்ளது.  இதில் தமிழக வீரர் அஷ்வினுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இந்தியா, இலங்கை, வங்கதேச நாடுகள் இணைந்து உலக கோப்பை கிரிக்கெட் (பிப்.18-ஏப்.2) தொடரை நடத்துகின்றன. இதற்கான 30 பேர் கொண்ட உத்தேச அணியை, இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) கடந்த மாதம் அறிவித்தது. இதிலிருந்து 15 பேர் கொண்ட அணி, இன்று சென்னையில் அறிவிக்கப்பட்டது. இந்த அணியை, ஸ்ரீகாந்த் தலைமையிலான பி.சி.சி.ஐ., தேர்வுக்குழு தேர்வு செய்தது.15 பேர் கொண்ட இந்திய அணி விவரம்::தோனி (கேப்டன்), சச்சின், சேவக், காம்பிர், விராத் கோஹ்லி, சுரேஷ் ரெய்னா, யுவராஜ், ஹர்பஜன், ஜாகிர் கான், யூசுப் பதான், அஷ்வின், பிரவீண் குமார், நெஹ்ரா, பியுஸ் சாவ்லா, மற்றும் முனாப் படேல்.முரளி விஜய், ரோகித் சர்மா நீக்கம்ஐபிஎல் போட்டிகளில் சிறப்பாக ஆடிய முரளி விஜய்க்கு உலகக் கோப்பைப் போட்டியில் வாய்ப்பு கிடைக்கும் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. அதேபோல ரோகித் சர்மா-க்கும் வாய்ப்பு கிடைக்கும் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவருக்கு வாய்ப்பளிக்கப்படவில்லை.தற்போது அறிவிக்கப்பட்டுள்ள அணியில், டோணி மட்டுமே விக்கெட் கீப்பராக உள்ளார். 2வது விக்கெட் கீப்பர் இடம் பெறவில்லை. உலகக் கோப்பைப் போட்டிக்கான அணியில் 7 பந்து வீச்சாளர்கள், 6 பேட்ஸ்மென்கள், ஒரு விக்கெட் கீப்பர், ஒரு ஆல் ரவுண்டர் (யூசுப் பதான்) இடம் பெற்றுள்ளனர்.சமீபகலமாக சிறப்பாக விளையாடி வரும் இந்திய அணி, இம்முறை அதன் சொந்த மண்ணில் கோப்பையை வெல்லும் என தான் நம்புவதாக இந்திய அணியின் தேர்வு குழுத் தலைவர் ஸ்ரீகாந்த் தெரிவித்தார்.
403
1/18/2011 4:03:17 PM
இந்தியா
மும்பை ஐஓசி கிடங்கில் பயங்கர தீ விபத்து
மும்பை: நவி மும்பை பகுதியில் உள்ள இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் எண்ணெய் கிடங்கில் நேற்றிரவு பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் 30 ஆயிரம் லிட்டர் லூப்ரிகன்ட் ஆயில் எரிந்து நாசமானது. தீயணைப்பு வீரர்கள் 8 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். நவி மும்பை பகுதியில் உள்ள இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் எண்ணெய் கிடங்கில், லூப்ரிகன்ட் ஆயில் சேமித்து வைக்கப்பட்டிருந்த பகுதியில் நேற்றிரவு திடீரென தீப்பற்றியது. தீ மளமளவென பரவி, லூப்ரிகன்ட் ஆயில் நிரப்பப்பட்டிருந்த டேங்க் முழுவதும் எரிந்தது. இதைப் பார்த்த செக்யூரிட்டிகள் உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் அளித்தனர். 25க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்களில் விரைந்து வந்த வீரர்கள், தீயை அணைக்க கடுமையாக போராடினர்.  ஐ.ஓ.சி. கிடங்கில் உள்ள மற்ற டேங்க்குகளுக்கும் தீ பரவாமல் இருப்பதற்கான நடவடிக்கைகள் தீவிரமாக எடுக்கப்பட்டன. சுமார் 8 மணி நேர போராட்டத்துக்குப் பின் தீயை முற்றிலுமாக அணைத்தனர் வீரர்கள். இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் ஏற்படவில்லை. தீயணைப்பு வீரர்கள் துரிதமாக செயல்பட்டதால் மிகப்பெரிய சேதம் தவிர்க்கப்பட்டது. அதே நேரம், தீ விபத்து ஏற்பட்ட டேங்கில் சேமித்து வைக்கப்பட்டிருந்த 30 ஆயிரம் லிட்டர் லூப்ரிகன்ட் ஆயில் எரிந்து நாசமானது. அங்குள்ள பல இயந்திரங்களும் தீ விபத்தில் சேதம் அடைந்தன. இங்கு மீண்டும் சீரமைப்பு பணியை மேற்கொள்ள ஒரு மாத காலம் ஆகும் என ஐ.ஓ.சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த ஆண்டு அக்டோபர் மாதம், ஜெய்ப்பூரில் உள்ள இந்தியன் ஆயில் சேமிப்பு கிடங்கில் பயங்கர தீ ஏற்பட்டது. இதில் 10 பேர் இறந்தனர். 100க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். தீயை கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. ஒரு வாரத்துக்குப் பின் எண்ணெய் முழுவதுமாக தீர்ந்து போய் தீ அணைந்தது குறிப்பிடத்தக்கது.
404
1/18/2011 4:43:04 PM
தமிழகம்
குடியரசு தின ஒத்திகை நிகழ்ச்சி காமராஜர் சாலையில் போக்குவரத்து மாற்றம்
சென்னை: குடியரசு தின விழா ஜன. 26ம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு சென்னை காமராஜர் சாலையில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடக்கவுள்ளன. அதற்கான ஒத்திகை நிகழ்ச்சிகள் இன்று நடக்கிறது. இதையடுத்து ஜன. 22, 23 தேதிகளிலும் காமராஜர் சாலையில் நடக்கவுள்ளது. எனவே இந்த 3 நாட்களில் காலை 6 மணி முதல் ஒத்திகை முடியும் வரை அனுமதி அட்டை வைத்திருக்கும் வாகனங்கள் தவிர, மற்ற வாகனங்கள் காமராஜர் சாலையில் உள்ள கலங்கரை விளக்கத்திலிருந்து போர் நினைவுச் சின்னம் வரையிலும், டாக்டர் நடேசன் ரோடு சந்திப்பு முதல் காந்தி சிலை சந்திப்பு வரையிலும் அனுமதி மறுக்கப்படும். வடசென்னையில் இருந்து அடையார் மார்க்கமாக செல்லும் வாகனங்கள் அண்ணா சாலை, ராயப்பேட்டை நெடுஞ்சாலை, ராயப்பேட்டை மேம்பாலம், ஆர்.கே.மடம் சாலை வழியாக சென்றடையலாம்.  அதேபோல் தென் சென்னையில் இருந்து வடசென்னை மார்க்கமாக செல்லும் வாகனங்கள் அடையார் வழியாக ஆர்.கே.மடம் சாலை, ராயப்பேட்டை மேம்பாலம், அண்ணாசாலை வழியாக செல்லலாம். இவ்வாறு போக்குவரத்து போலீசார் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
405
1/18/2011 4:44:58 PM
இந்தியா
சபரிமலை கோர விபத்துக்கு கூட்ட நெரிசலே காரணம் முதல்கட்ட விசாரணையில் தகவல்
கூடலூர்: சபரிமலையில் 100க்கும் அதிகமானவர்கள் பலியானதற்கு ஜீப் புகுந்தது காரணமல்ல. கூட்ட நெரிசலே விபத்துக்கு காரணம் என போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. கேரள மாநிலம் குமுளியில் இருந்து 18 கி.மீ. தொலைவில் வண்டிப்பெரியாறு உள்ளது. இதற்கு ஒரு கி.மீ. தூரம் முன்பே புல்மேடு பாதை பிரிந்து செல்கிறது. இந்த பாதை வழியாக 14 கி.மீ. தூரத்தில் புல்மேடை அடையலாம். அங்கிருந்து 8 கி.மீ. நடந்து சென்றால் சபரிமலை சென்று விடலாம். வண்டிப்பெரியாறில் இருந்து 8 கி.மீ. வரை அனைத்து வாகனங்களும் செல்லும் வகையில் ரோடு உள்ளது. அதன்பிறகு புல்மேடு வரை 6 கி.மீ. தூரம் ஜீப்கள் மட்டுமே செல்லக்கூடிய பாதை உள்ளது.இப்பகுதியில் கடந்த 14ம் தேதி இரவு நடந்த விபத்தில் 102 பக்தர்கள் பலியாயினர். அன்றைய தினம் புல்மேடு வரை ஜீப்பில் சென்ற பக்தர்கள் அங்கிருந்து ஒரு கி.மீ. தொலைவில் உள்ள மலை உச்சியை அடைந்துள்ளனர். அங்கிருந்து மகரஜோதி தரிசனத்தை முழுமையாக தரிசிக்க முடியும் என்பதால் சுமார் 2 லட்சம் பக்தர்கள் அப்பகுதியில் திரண்டனர். பக்தர்களை இறக்கிவிட்ட ஜீப்கள் அப்பகுதியில் உள்ள சமதளமான பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டன. இதில் 2 ஜீப்கள், ஒரு ஆட்டோ, ஒரு பைக் மட்டும் குறுகலான வழித்தடம் துவங்கும் பகுதியில் நின்றுள்ளன.இரவு 7.05 மணிக்கு மகரஜோதி தரிசனம் முடிந்த பிறகு பக்தர்கள் ஒரு கி.மீ. தூரம் கும்மிருட்டில் பயணித்துள்ளனர். ஜீப் நிற்கும் இடத்துக்கு செல்லும் குறுகிய பாதை வழியாக வந்தபோது கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது. ஒருவர் மீது ஒருவர் முண்டியடித்து ஓடிவந்த பக்தர்கள் ஜீப்கள், ஆட்டோக்கள், பைக் மீது விழுந்துள்ளனர். இதில் அவை சேதமடைந்துள்ளன.ஜீப் ஓடிச்சென்று பக்தர்கள் மேல் ஏறிச்சென்றதாகவும், அதனால் பக்தர்கள் நாலாபுறமும் சிதறி ஓடிச்சென்றதால் விபத்து நடந்ததாகவும் முதலில் தகவல் வெளியானது. இதுதொடர்பாக எர்ணாகுளம் கிரைம் பிராஞ்ச் எஸ்.பி. சுரேந்திரன் நடத்திய முதல்கட்ட விசாரணையில் கூட்ட நெரிசலே விபத்துக்கு காரணம் என கூறப்பட்டுள்ளது. பெரும்பாலானோர் மூச்சுத்திணறி இறந்ததாக பிரேத பரிசோதனை அறிக்கையிலும் கூறப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
406
1/18/2011 4:49:07 PM
தமிழகம்
திருவண்ணாமலையில் கிரிவலம் வர உகந்த நேரம்
திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் கிரிவலம் வர உகந்த நேரம் எது என்பதை கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. திருவண்ணாமலையில் ஒவ்வொரு மாதமும் பவுர்ணமியன்று லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் வருகிறார்கள். அதன்படி இந்த மாத பவுர்ணமி நாளை (19ம் தேதி) அதிகாலை 4.28 மணிக்கு தொடங்கி, மறுநாள்(20ம் தேதி) அதிகாலை 3.19 மணிக்கு முடிவடைகிறது. இந்த நேரத்தில் திருவண்ணாமலையில் பக்தர்கள் கிரிவலம் வரலாம். இதுவே கிரிவலம் வர உகந்த நேரமாகும். இந்த தகவலை அண்ணாமலையார் கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
408
1/18/2011 4:53:06 PM
மாவட்ட மசாலா
நாகர்கோவில் அருகே கடல் உள்வாங்கியது
நாகர்கோவில்: காணும் பொங்கலையொட்டி குமரி மாவட்டத்தில் கடலோர சுற்றுலா தலங்களில் மாலை வேளையில் பலர் குடும்பத்துடன் சென்று பொழுதை கழித்தனர். சொத்தவிளை கடற்கரையிலும் நூற்றுக்கணக்கானோர் குவிந்தனர். பலர் கடலில் குளியல் போட்டனர். நேற்று சொத்தவிளை கடல் சுமார் 100 மீட்டர் அளவுக்கு உள்வாங்கி காணப்பட்டது. இதனால் பாசி படர்ந்த பாறைகள் வெளியே தெரிந்தன. அலைகளின் வேகம் குறைந்து வழக்கத்துக்கு மாறாக கடல் அமைதியாக காணப்பட்டது.
409
1/18/2011 4:56:36 PM
மாவட்ட மசாலா
உளுந்தூர்பேட்டையில் 20 லட்சம் கறி விற்பனை
உளுந்தூர்பேட்டை: பொங்கல் விழாவை ஒட்டி நேற்று உளுந்தூர்பேட்டையில் உள்ள கறிக்கடைகளில் காலை முதல் அதிக கூட்டம் இருந்தது. உளுந்தூர்பேட்டை பேரூராட்சி பகுதியில் மட்டும் 30க்கும் அதிகமான கோழிக்கறி கடைகள் உள்ளன. இந்த கடைகளில் நேற்று கள்ளக்குறிச்சியில் இருந்து கோழி விற்பனையாளர்கள் வந்து 6 லோடு கோழிக்கறி விற்பனை செய்துள்ளனர். ஒரு லோடுக்கு 2 ஆயிரம் கோழி வீதம் 12 ஆயிரம் கோழி விற்பனை ஆனது. ஒரு கிலோ கோழிக்கறி ரூ.120க்கு விற்பனை ஆனது. நேற்று மட்டும் உளுந்தூர்பேட்டை பகுதியில் சுமார் ரூ.20 லட்சம் வரை கோழிக்கறி விற்பனையானது.
410
1/18/2011 4:58:41 PM
மாவட்ட மசாலா
குமரியில் 2 நாளில் 3 கோடி மது சேல்ஸ்
நாகர்கோவில்: குமரி மாவட்டத்தில் மொத்தம் 145 டாஸ்மாக் கடைகள் உள்ளன. பொங்கல் பண்டிகையை ஒட்டி பார்களில் கூட்டம் அலைமோதியது. பொங்கலுக்கு முதல் நாளான போகிப்பண்டிகை அன்றே விற்பனை அதிகரித்தது.  கடந்த 14, 15 தேதிகளில் மாவட்டத்தில் மொத்தம் ரூ.2 கோடியே 91 லட்சத்துக்கு மதுபானங்கள் விற்பனையாகியுள்ளன. இது கடந்த ஆண்டை காட்டிலும் 19 சதவீதம் அதிகரித்துள்ளது. இதில் பீர் வகைகள் 17 சதவீதம் அதிகம் விற்பனையானது.
411
1/18/2011 5:02:42 PM
மாவட்ட மசாலா
கிணற்றில் குளித்தபோது நீரில் மூழ்கி சிறுமி பலி
திருவண்ணாமலை: தி.மலை மாவட்டம் தண்டராம்பட்டு தாலுகா, மேல்சிறுப்பாக்கம் புதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகள்கள் சித்ரா(18), மீனா(15), சங்கவி (6). இவர்கள் நேற்று மதியம் தங்களுடைய விவசாய நிலத்துக்கு சென்றனர். அங்குள்ள கிணற்றில் இறங்கி குளித்தனர். மீனாவுக்கும், சங்கவிக்கும் நீச்சல் தெரியாததால், இருவரும் கிணற்று படியில் உட்கார்ந்தபடி குளித்தனர். அப்போது, படியில் இருந்த பாசி வழுக்கியதால் கிணற்றில் விழுந்தனர். சித்ராவால் மீனாவை மட்டும் காப்பாற்ற முடிந்தது. தகவல் அறிந்த தண்டராம்பட்டு தீயணைப்பு படை வீரர்கள் வந்து, 3 மணி நேரம் போராடி, சங்கவியை சடலமாக மீட்டனர்.
412
1/18/2011 5:07:12 PM
தலையங்கம்
பாதியில் நின்ற ஜல்லிக்கட்டு
கலவரம், கல்வீச்சு காரணமாக உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு பாதியிலேயே நிறுத்தப்பட்டது. திமிறிப் பாயும் காளைகளை வீரர்கள் அடக்கும் தமிழர்களின் வீரவிளையாட்டைக் காண வெளிநாடுகளில் இருந்தெல்லாம் வந்தவர்கள் இந்த சம்பவத்தால் ஏமாற்றம் அடைந்தனர்.உச்ச நீதிமன்றத்தின் ஏகப்பட்ட கெடுபிடிகளுடன் ஜல்லிக்கட்டு நடத்தப்படுகிறது. ரூ.2 லட்சம் டெபாசிட், காளைகளுக்கும் வீரர்களுக்கும் மருத்துவ சோதனை, அடையாள அட்டை, சீருடை, முதலுதவி ஏற்பாடுகள் என ஏகப்பட்ட நிபந்தனைகள். நேற்று நடந்த அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் மதுரை. தேனி, திண்டுக்கல், சிவகங்கை, திருச்சி, விருதுநகர், புதுக்கோட்டை, தஞ்சாவூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்தும் 366 காளைகள் பங்கேற்றன. இந்த காளைகளை அடக்க 250 வீரர்கள் களத்தில் இறங்கினர். காலை 10.30 மணிக்கு ஜல்லிக்கட்டு தொடங்கி இருக்கிறது. 2.30 மணிவரை எல்லாமே நன்றாகத்தான் போய்க்கொண்டிருந்தது. காளைகள் ஒன்றன்பின் ஒன்றாக வாடி வாசல் வழியாக வந்தன. சீறிப்பாய்ந்த காளைகளை வீரர்கள் அடக்க முயன்றனர். சில காளைகள் அடங்கின. சில, வீரர்களை முட்டி தூக்கி எறிந்துவிட்டு சீறிப்பாய்ந்து சென்றன. மாடுபிடி வீரர்களைவிட பார்வையாளர்கள் அதிகம் பேர் மாடு முட்டி காயம் அடைந்தனர். உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் உற்சாகமாக ரசித்து பார்த்தனர். அந்தநேரத்தில் ஒரு கும்பல் தடுப்பு வேலியை தாண்டி உள்ளே வர பிரச்னை ஆரம்பம் ஆனது. பொதுமக்கள் மாடு பிடிக்கும் பகுதிக்குள் வராமல் இருக்க மரக்கட்டைகளால் தடுப்பு வேலி அமைத்திருப்பார்கள். வாடி வாசல் வழியாக வரும் காளைகள் வீரர்களை தாண்டி தோப்பு என்ற பகுதிக்கு சென்றுவிடும். காளை உரிமையாளர்கள் அங்கு சென்று காளைகளை அழைத்துச் செல்வார்கள். நேற்று இப்பகுதியில் இருந்த பார்வையாளர்கள் தடுப்பு வேலியை தாண்டி உள்ளே நுழைந்துள்ளனர். இவர்களைப் பார்த்த காளைகள் திரும்பவும் வாடி வாசலுக்கு ஓடி வர குழப்பம் ஏற்பட்டது. இந்த குழப்பத்தில் மேலும் பலர் பாதுகாப்பு வேலிகளை உடைத்துக்கொண்டு உள்ளே வர போலீசார் தடியடி நடத்தி உள்ளனர். அடிவாங்கிய கும்பல் பதிலுக்கு கல் எறிய.. கலவரம் ஏற்பட்டது. ஜல்லிக்கட்டு பாதியில் நிறுத்தப்பட்டுவிட்டது.ஆர்வக்கோளாறால் தடுப்பு வேலியை தாண்டுபவர்களை காளைகள் குத்தி வீசிவிடுகின்றன. ஆண்டுதோறும் நடக்கும் உலகப்புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுக்கு தடுப்பு சுவர்கள் கம்பி வேலியோடு நிரந்தரமாக ஒரு மைதானம் அமைக்கப்பட வேண்டும். அது இருந்திருந்தால் பாதியில் ஜல்லிக்கட்டு நின்றுபோயிருக்காது.
413
1/18/2011 5:11:27 PM
தமிழகம்
கரூரில் 1000 கோடியில் காகித ஆலை யூனிட் வீடியோ கான்பரன்சில் முதல்வர் நாளை திறக்கிறார்
கரூர்: கரூர் காகித ஆலையில் ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டில் 3வது யூனிட் அமைக்கப்பட்டுள்ளது. இதன் தொடக்க விழா நாளை நடைபெறுகிறது. சென்னையில் இருந்து முதல்வர் கருணாநிதி வீடியோ கான்பரன்சிங் மூலம் இதனை தொடங்கி வைக்கிறார்.  கரூர் அடுத்த  காகிதபுரம் தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவன வளாகத்தில் ரூ.ஆயிரம் கோடி முதலீட்டில் உலகத் தரம் வாய்ந்த நவீன 3வது காகித உற்பத்தி இயந்திரம் (யூனிட்) தொடக்க விழா நாளை காலை 10.30 மணிக்கு நடைபெறுகிறது.ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டில் உலகத் தரம் வாய்ந்த ஆண்டொன்றுக்கு 1 லட்சத்து 55 ஆயிரம் டன் உற்பத்தித் திறன் கொண்ட நவீன 3வது யூனிட் தொடக்க விழா மற்றும் ரூ.67 கோடியில் நாளொன்றுக்கு 600 டன் உற்பத்தித் திறன் கொண்ட, திடக்கழிவில் இருந்து சிமென்ட் தயாரிக்கும் ஆலை, ரூ.135 கோடியில் நீராவி மற்றும் மின் உற்பத்திப் பிரிவை நவீனப்படுத்துதல், ரூ.175 கோடியில்  300 டன் உற்பத்தித் திறன் கொண்ட, காகிதத்தில் இருந்து மை நீக்கிய காகிதக்கூழ் தயாரிக்கும் ஆலை ஆகிய திட்டப் பணிகளின் அடிக்கல் நாட்டு விழா மற்றும் 50 ஆயிரம் மரக்கன்றுகளை சாலையோரம் மற்றும் பொது இடங்களில் நடும் திட்டத்தின் தொடக்க விழா நடைபெறுகிறது. சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் இருந்து வீடியோ கான்பரன்சிங் மூலம் நவீன 3ம் காகித இயந்திர உற்பத்தியைத் தொடங்கி வைத்து திட்டப் பணிகளுக்கு முதல்வர் கருணாநிதி அடிக்கல் நாட்டுகிறார். மரக்கன்றுகள் நடும் திட்டத்தினை துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் காகித ஆலை வளாகத்தில் தொடங்கிவைத்து ஆலையின் சமூக நலப்பணிகளுக்கான நிதி உதவிகளை வழங்கி உரையாற்றுகிறார்.
414
1/18/2011 5:17:56 PM
உலகம்
சுவிஸ் வங்கி ரகசியங்களை வெளியிட போகுது விக்கிலீக்ஸ்
லண்டன்: சுவிஸ் வங்கிகளில் ரகசியமாக கணக்கு வைத்திருக்கும், உலக பிரபலங்களின் பட்டிலை விரைவில் வெளியிடப் போவதாக விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசான்ஞ் தெரிவித்திருப்பது, மோசடி பிரபலங்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தான் போர் ரகசியங்கள்,  மற்றும் அரசியல் ரகசியங்களை வெளியிட்டு அமெரிக்காவையே கதிகலங்க வைத்தார் விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசான்ஞ். இவரை பழிவாங்க ஸ்வீடன் அரசு மூலம் பாலியல் குற்றச்சாட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பாக லண்டனில் கைது செய்யப்பட்ட ஜூலியன் அசான்ஞ், தற்போது ஜாமீனில் உள்ளார். இவர் மீது குற்றவழக்கு பதிவு செய்ய அமெரிக்க தீவிரமாக முயற்சி செய்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் ஜூலியன் அசான்ஞ்சிடம், சுவிட்சர்லாந்தில் உள்ள Ôஜூலியஸ் பேர்Õ என்ற வங்கி ஒன்றின் மாஜி அதிகாரி ரூடோல்ப் எல்மர் என்பவர் இரு ரகசிய சி.டி.க்களை கொடுத்துள்ளார். இதில் சுவிஸ் வங்கியில் ரகசியமாக கணக்கு வைத்திருக்கும் 2000 பேர் பற்றி விவரங்கள் உள்ளதாம். ஆசியா, அமெரிக்கா, இங்கிலாந்தை சேர்ந்த பிரபலங்களின் விவரம் இதில் உள்ளதாக கூறப்படுகிறது. ‘இந்த சி.டி.யில் உள்ள விவரங்களின் நம்பகத்தன்மை குறித்து ஆய்வு செய்து வருகிறோம். விரைவில் இதை வெளியிட உள்ளோம்’ என்று கூறியிருக்கிறார் விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசான்ஞ். இதில் இந்திய பிரபலங்களின் விவரங்கள் இருக்கிறதா என தெரியவில்லை. ஜூலியன் அசான்ஞ்சிடம் உள்ள சி.டி.யில் கடந்த 1990 முதல் 2009ம் ஆண்டு வரை சுவிஸ் வங்கியில் ரகசிய கணக்கு வைத்திருந்த பல நாடுகளைச் சேர்ந்த பிரபலங்கள் பற்றிய விவரங்கள் உள்ளன. இந்த சி.டி.க்களை வெளியிட்ட சுவிஸ் வங்கியின் மாஜி அதிகாரி ரூடோல்ப் எல்மர் மீது, சுவிஸ் வங்கியின் ரகசியங்களை கசியவிட்டதாக ஏற்கனவே வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த குற்றச்சாட்டு தொடர்பாக, ஜூரிச் கோர்ட்டில் இன்னும் இரு நாளில் ஆஜராக உள்ளார். அதற்கு முன் பிரபலங்களின் பட்டியலை, ஜூலியன் அசான்ஞ்சிடம் கொடுத்துள்ளார். இது குறித்து ரூடோல்ப் எல்மர் கூறுகையில், ÔÔவரி ஏய்ப்பு செய்வதற்காக, உலகில் உள்ள பெரும்புள்ளிகள் எல்லாம் சுவிஸ் வங்கிகளில் ரகசியமாக பணம் சேமிக்கின்றனர். இது சமுதாயக் கேடு. சுவிஸ் வங்கிகளின் ரகசிய செயல்பாடு குறித்து உலக மக்களுக்கு தெரியப்படுத்த விரும்புகிறேன். அதனால்தான் இதன் விவரங்களை விக்கிலீக்ஸிடம் கொடுத்துள்ளேன்ÕÕ என்றார். சுவிஸ் வங்கி கணக்கு விவரங்கள் விக்கிலீக்ஸ் வெப்சைட்டில் வெளியாக போகிறது என்ற தகவல் உலகம் முழுவதும் உள்ள மோசடி பிரபலங்களின் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
415
1/18/2011 5:26:44 PM
சினிமா(ரீல்மா)
நடிகர் பா.விஜய் வீட்டில் கொள்ளை முயற்சி
வளசரவாக்கத்தை அடுத்த ராமாபுரம் ராகவேந்திரா நகரில் சினிமா பாடலாசிரியரும் நடிகருமான பா. விஜய் குடும்பத்துடன் வசித்து வருகிறார். நேற்று நள்ளிரவு, 1 மணியளவில் இவர் வீட்டின் காம்பவுண்ட் சுவர் ஏறி குதித்து இரண்டு நபர்கள் உள்ளே புகுந்தனர். சத்தம் கேட்டு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த விஜய்யின் பெற்றோர் திடுக்கிட்டு எழுந்தனர். விளக்கு வெளிச்சத்தில் இரண்டு வாலிபர்களின் நடமாட்டம் தெரிந்தது. விஜய் வீட்டில் இல்லை. இதையடுத்து அவர்கள் காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்தனர். கட்டுப்பாட்டு அறையில் இருந்து வளசரவாக்கம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக ரோந்து பணியில் இருந்த போலீசார் பா.விஜய் வீட்டிற்கு விரைந்தனர். போலீஸ் வருவதை அறிந்த மர்ம நபா¢கள் அங்கிருந்து  தப்பி ஓடிவிட்டனர். போலீசார், மர்ம நபர்களின் அடையாளங்களை விஜய்யின் பெற்றோரிடம் கேட்டறிந்தனர். மர்ம நபர்கள், திருடுவதற்காக வந்தார்களா அல்லது வேறு காரணமா என்று போலீசார் விசாரிக்கிறார்கள்.
416
1/18/2011 5:42:10 PM
குற்றம்
பெசன்ட்நகரில் நள்ளிரவில் பயங்கரம் கத்தியால் குத்தி 2 பேர் கொலை
துரைப்பாக்கம்:பெசன்ட் நகரில் சாலையோரம் உள்ள டிபன் கடையில் சாப்பிடும்போது ஏற்பட்ட தகராறில் 2 பேர் கொடூரமாக குத்திக் கொல்லப்பட்டனர். நள்ளிரவில் நடந்த இந்த சம்பவம் சென்னையில் பெரும் பீதியை கிளப்பியுள்ளது. சென்னை பெசன்ட் நகர் ஓடைக்குப்பம் பழண்டி அம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் குணசீலன். இவரது மகன் சிலம்பரசன் (25). இவருக்கு நேற்று பிறந்த நாள். இதனால் நெருங்கிய நண்பர்களை அழைத்து மது விருந்து கொடுத்திருக்கிறார். இதன்பிறகு அனைவரும் வேளாங்கண்ணி கோயில் அருகே உள்ள சாலையோரக் கடையில் நேற்று நள்ளிரவு டிபன் சாப்பிட்டுள்ளனர்.அப்போது, பெசன்ட்நகர் பகுதி திடீர் நகரில் வசிக்கும் லட்டு (எ) மாதவன் (22) மற்றும் அவரது நண்பர்கள் அந்த கடையில் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். இரு தரப்பினரும் குடிபோதையில் இருந்துள்ளனர். திடீரென சிலம்பரசனுக்கும் மாதவனுக்கும் தகராறு ஏற்பட்டு மோதிக் கொண்டனர். அவர்களது ஆதரவாளர்களும் அடிதடியில் ஈடுபட்டதால் அந்த இடமே களேபரமானது. அங்கு சாப்பிட்டுக் கொண்டிருந்த மற்றவர்கள் ஓட்டம் பிடித்தனர்.அடிதடி உச்சகட்டத்துக்கு சென்றதும் கத்தி, அரிவாள் கொண்டு சரமாரியாக வெட்டிக் கொண்டனர். மாதவன், சிலம்பரசனுக்கு பலத்த வெட்டுக்காயம் ஏற்பட்டது. ரத்தவெள்ளத்தில் துடித்த இருவரையும் நண்பர்கள் மீட்டு, அடையாறில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இருவரும் இறந்துவிட்டதாக டாக்டர்கள் கூறினர்.இந்த அடிதடியில் ஓடைக்குப்பத்தை சேர்ந்த தீபக் (21) என்பவருக்கு வயிற்றில் கத்திக்குத்து விழுந்தது. உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ள அவருக்கு சென்னை அரசு பொது மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.தகவல் கிடைத்ததும் அடையாறு போலீஸ் துணை கமிஷனர் சாரங்கன், உதவி கமிஷனர் நரசிம்மவர்மன், இன்ஸ்பெக்டர் மகேஷ் ஆகியோர் போலீசாருடன் சம்பவ இடம் விரைந்தனர். இதனால் தாக்குதல் நடத்திய கும்பல் அங்கிருந்து தலைமறைவானது. இதுபற்றி போலீசார் விசாரித்தனர். புகார்கள் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதுசம்பந்தமாக இரு தரப்பையும் சேர்ந்த 10 பேரை பிடித்து விசாரித்து வருகின்றனர்.பெசன்ட் நகர் மீன்மார்க்கெட்டில் மாதவனுக்கும் சிலம்பரசனுக்கும் ஏற்கனவே ஒருமுறை தகராறு ஏற்பட்டுள்ளது. இதன்பிறகு இவர்களின் ஆதரவாளர்கள் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. சாப்பிடும்போது இந்த பிரச்னை பற்றி பேசியதால் மோதல் வெடித்திருக்கிறது. இரு தரப்பும் கத்தி, அரிவாள் சகிதம் மோதிக் கொண்டதால், கொலையில் முடிந்துள்ளது என போலீசார் நடத்திய முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
417
1/18/2011 5:43:54 PM
குற்றம்
குழந்தைகளை கொன்று பெண் தற்கொலை கணவன், மாமியார் சிறையில் அடைப்பு
கோபி:சேலம் மாவட்டம் கருமலை கூடலை சேர்ந்தவர் செல்வமணி(27). மனைவி ருக்மணி(23), குழந்தைகள் நவீன்குமார்(5), கோபிநாத்(3), தாய் லட்சுமி(38)யுடன் வசிக்கிறார். ஈரோடு மாவட்டம், பாரியூர் அருகே தடப்பள்ளி வாய்க்காலில் குழந்தைகளை வீசிக் கொன்று, தானும் குதித்து ருக்மணி தற்கொலை செய்துகொண்டார்.போலீஸ் விசாரணையில், மாமியார் லட்சுமிக்கும், வேன் டிரைவர் ஒருவருக்கும் கள்ளத்தொடர்பு இருந்ததும், ருக்மணி கண்டித்ததும் தெரியவந்தது. ருக்மணியை வீட்டை விட்டு துரத்த வரதட்சணை கேட்டு லட்சுமி கொடுமைப்படுத்தியதாக கூறப்படுகிறது. பாரியூர் கொண்டத்து காளியம்மன் கோயில் குண்டம் திருவிழாவுக்காக ஆண்டுதோறும் ருக்மணி விரதம் இருப்பார். இந்த ஆண்டும் இருந்தார். உறவினர் ஒருவர் இறந்ததால் குண்டம் இறங்க போகக்கூடாது என கணவனும், மாமியாரும் தடை விதித்தனர். குண்டம் இறங்கியே தீருவேன் என ருக்மணி தெரிவித்துள்ளார். அவரை கணவனும், மாமியாரும் கடுமையாக திட்டியுள்ளனர்.மனமுடைந்த நிலையில் குழந்தைகளை கொன்று ருக்மணி தற்கொலை செய்தது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து, கணவன் செல்வமணி, மாமியார் லட்சுமி ஆகியோரை போலீசார் நேற்று கைது செய்து, சிறையில் அடைத்தனர்.
418
1/18/2011 5:44:57 PM
விளையாட்டு
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் : நடால் வெற்றி
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிசின் 2ம் நாள் ஆட்டம் இன்று நடந்தது. பெண்கள் ஒற்றையர் பிரிவில் ரஷ்யாவின் வெனோரவா 6-2, 6-1 என்ற செட் கணக்கில் முன்னணி வீராங்கனை சைபிலி பாமரை வீழ்த்தினார். மற்ற போட்டிகளில் செக்குடியரசு வீராங்கனை பெட்ரா வெட்டோவா, ஜாயிபெங்க், பெனிசோவா, செர்பியாவின் ஜோவன்ஸ்சோகி, ஸ்பெயினின் லார்டஸ் ஆகியோர் வெற்றி பெற்று 2வது சுற்றுக்கு முன்னேறினர். ஆண்கள் ஒற்றையர் பிரிவில் உலகின் முதல்நிலை வீரர் நடால் 6-0, 5-0 என்ற செட் கணக்கில் முன்னிலையில் இருந்த போது பிரான்ஸ் வீரர் மார்க்கோஸ் டேனியல் ஆட்டத்தில் இருந்து விலகியதால் நடால் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.  மற்ற போட்டிகளில் ஆஸ்திரேலிய வீரர் தாமிக், அர்ஜென்டினா வீரர் எடூராடோ, ரஷ்ய வீரர் மைக்கேல் இச்சுனி ஆகியோர் முதல் சுற்றில் வெற்றி பெற்றனர்.
419
1/18/2011 5:45:46 PM
குற்றம்
நுங்கம்பாக்கம் ஓட்டலில் துணிகரம் தொழிலதிபரிடம் ரூ5 லட்சம் கொள்ளை
சென்னை:ஓட்டலில் சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது ரூ.5 லட்சம் இருந்த பணப் பையை அபேஸ் செய்த மர்ம ஆசாமியை போலீசார் தேடி வருகின்றனர்.பெரியமேடு கார்ட்டூன் சடையப்பன் தெருவைச் சேர்ந்தவர் ஜாபர் பாட்ஷா. அதே பகுதியில் லெதர் கம்பெனி நடத்தி வருகிறார். நேற்று இரவு குடும்பத்துடன் நுங்கம்பாக்கத்தில் உள்ள ஒரு ஓட்டலில் சாப்பிட்டு கொண்டிருந்தார். அப்போது, தான் உட்கார்ந்த சீட் அருகில் பணப்பையை வைத்திருந்தார். இதனை கண்காணித்த மர்ம ஆசாமி ஒருவர், பணப்பையை எடுத்துக் கொண்டு ஓட்டம் பிடித்தார். ஜாபர் பாட்ஷா அவனை துரத்தி கொண்டு ஓடினார். ஆனால் அவன் சாலையோரம் நின்றிருந்த மற்றொரு ஆசாமியின் மோட்டார் சைக்கிளில் ஏறி தப்பி விட்டான். அந்த பணப்பையில் ரூ.5 லட்சம் இருந்தது.இதுகுறித்து ஜாபர் பாட்ஷா நுங்கம்பாக்கம் போலீசில் புகார் செய்தார். பணத்துடன் ஓடிய ஆசாமியை போலீசார் தேடி வருகிறார்கள்.
420
1/18/2011 5:46:45 PM
விளையாட்டு
ரணதுங்காவுக்கு கோர்ட் வாரன்ட்
இலங்கை அணியின் முன்னாள் கேப்டன் ரணதுங்கா தற்போது அரசியல்வாதியாக உள்ளார். 47 வயதான இவரது தலைமையில் 1996ம் ஆண்டு நடந்த உலககோப்பை போட்டியில் சாம்பியன் பட்டம் வென் றது. கடந்த ஆண்டு இவர் இலங்கை காலே பகுதியில் நடந்த அரசியல் போராட்டத்தின் போது பொது சொத்துகளை சேதப்படுத்தியதாக கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் அவர் காலே மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஆஜராகாத தால் அவருக்கு வாரண்ட் பிறப்பித்து கோர்ட் உத்தரவிட்டது.
421
1/18/2011 5:47:51 PM
குற்றம்
காரைக்குடி அருகே கொடூரம் மனைவி, 2 குழந்தைகளை வெட்டிக்கொன்ற ஆசாமி
காரைக்குடி:காரைக்குடி கல்லல் அருகே குரண்டி தமிழர் தெருவைச் சேர்ந்தவர் சூரியகாந்தி (37). துபாயில் டெய்லராக உள்ளார். சூரியகாந்திக்கும் அவரது தாய்மாமன் மகள் வளர்மதி என்ற மலர்விழிக்கும் (30) ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு காயத்ரி (6), தாரணி (3) ஆகிய 2 குழந்தைகள். காயத்ரி அப்பகுதி மெட்ரிக் பள்ளியில் 1ம் வகுப்பு படித்து வந்தார்.துபாயில் பணியாற்றும் சூரியகாந்தி ஆண்டுக்கு 4 மாதம் மட்டும் கல்லல் வருவார். சூரியகாந்தியின் தாயார் அமிர்தவள்ளி பராமரிப்பில் மனைவி, குழந்தைகள் கல்லலில் வசித்து வந்தனர். கடந்த 4 மாதம் முன்பு சூரியகாந்தி துபாயிலிருந்து கல்லல் திரும்பினார். 2 நாள் முன்பு அமிர்தவள்ளி பழநிக்கு பாதயாத்திரை சென்றார். அதனால் சூரியகாந்தி, மனைவி குழந்தைகளுடன் வீட்டில் இருந்துள்ளார். நேற்று முன்தினம் கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த சூரியகாந்தி மனைவியை வெட்டிக்கொலை செய்து வீட்டுக்கு பின்புறம் உள்ள வாய்க்காலில் போட்டு மணலால் மூடிவிட்டார். பின்னர் குழந்தைகள் இருவரையும் வெட்டிக்கொலை செய்து சிவகங்கை ரோட்டில் உள்ள காட்டுப்பகுதி வாய்க்காலில் போட்டுள்ளார்.நேற்று மாலை மலர்விழியின் தாயார் சரஸ்வதி வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது வீடு பூட்டியிருந்தது. அதனால் மகளை குறித்து உறவினர்களுக்கு போன் செய்து விசாரித்துள்ளார். எங்குமே அவர் வரவில்லை என தகவல் வந்தது. அதனால் சந்தேகத்தின் பேரில் கல்லல் போலீசில் புகார் செய்தார்.கல்லல் போலீசார் வந்து, வீட்டில் இருந்த சூரியகாந்தியிடம் விசாரித்தனர். அவர் முன்னுக்குப் பின் முரணாக பேசவே ஸ்டேஷனுக்கு கொண்டு போய் தீவிரமாக விசாரித்தனர்.  அப்போது, குடும்ப பிரச்னையில் மனைவி, குழந்தைகளை வெட்டிக்கொலை செய்து, வாய்க்காலில் வீசியதை சூரியகாந்தி ஒப்புக்கொண்டார். அவரைக் கைது செய்த போலீசார், கள்ளத்தொடர்பு தகராறால் இப்படுகொலை நடந்ததா என விசாரிக்கின்றனர்.
422
1/18/2011 5:48:52 PM
விளையாட்டு
2வது டெஸ்ட் நியூசிலாந்து நிதானம்
பாகிஸ்தான் - நியூசிலாந்து அணிகள் மோதும் 2வது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்சில் நியூசிலாந்து 356, பாகிஸ்தான் 376 ரன் எடுத்தன. 20 ரன் பின்தங்கிய நிலையில் நியூசிலாந்து 2வது இன்னிங்சை தொடங்கியது. இன்று 4வது நாள் ஆட்டம் நடந்தது. குப்தில் 73, மெக்குலம் 64, வில்லியம்சன் 15 ரன் எடுத்து அவுட் ஆனார்கள். 3 விக்கெட் இழப்புக்கு நியூசிலாந்து 192 ரன் எடுத்திருந்த போது ஆட்டம் மழையால் நிறுத்தப்பட்டது.
423
1/18/2011 5:50:18 PM
குற்றம்
தொழிலதிபர் வீட்டில் 105 பவுன் கொள்ளை
கோவை:பட்டப்பகலில் தொழிலதிபர் வீட்டுப் பூட்டை உடைத்து 105 பவுன் நகை, ரூ.40 ஆயிரம் கொள்ளையடிக்கப்பட்டது.கோவை கோல்டுவின்ஸ் ஸ்டாப் அருகே தில்லைநகர் திருப்பதி அவென்யூவில் வசிப்பவர் பிரபாகரன்(40). மில்களுக்குரிய ஏர் டிரையர் இயந்திரங்கள் தயாரிக்கும் தொழிற்சாலையை நீலிக்கோணாம்பாளையத்தில் நடத்தி வருகிறார். இவர் கடந்த 13ம் தேதி குடும்பத்துடன் மைசூருக்கு சுற்றுலா சென்றார். வீட்டில் அவரது மைத்துனர் இரவு நேரத்தில் தங்கி வந்தார். இரவு தங்கிய அவர் நேற்று காலை வீட்டைப் பூட்டி விட்டு வேலைக்கு சென்றார். நேற்று இரவு மைசூரிலிருந்து வீட்டுக்கு திரும்பிய பிரபாகரன் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தார். உள் அறை மற்றும் பீரோவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. பீரோவிலிருந்த நகைப்பெட்டிகள் அறை முழுவதும் காலியாக வீசப்பட்டிருந்தது.நகைப்பெட்டியில் இருந்த 105 பவுன் நகை மற்றும் பீரோவிலிருந்த ரூ.40 ஆயிரம் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது. பகலில் வீட்டில் யாருமில்லாததை நோட்டமிட்ட மர்ம கும்பல் திட்டமிட்டு கொள்ளையடித்துச் சென்றது தெரியவந்தது. பீளமேடு போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர். வீட்டில் பதிந்திருந்த கொள்ளையர்களின் கைரேகைகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.  கொள்ளையர்களைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.பட்டப்பகலில் தொழிலதிபர் வீட்டில் 105 பவுன் நகை மற்றும் ரூ.40 ஆயிரம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
424
1/18/2011 5:51:24 PM
குற்றம்
வீட்டுக்கு வீடு ஜேப்படி.. ம.பி.யில் ஒரு திருட்டு கிராமம் கோச்சிங் கிளாஸ் நடத்தி திருட்டு ஜாமீனில் எடுக்க ஸ்பெஷல் வக்கீல்கள்
மும்பை:விவசாயம், நெசவு, தீப்பெட்டி என கிராமமே ஒட்டுமொத்தமாக ஒரே தொழில் செய்வதை கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் ஒரு கிராமமே திருடர்கள் வாழும் பூமியாக இருக்கும் அதிர்ச்சி தகவல் தற்போது தெரியவந்துள்ளது. இதுபற்றிய விவரம்:மும்பையில் பணக்கார வீட்டு திருமண நிகழ்ச்சி. மணமகள் அணிய வைத்திருந்த நகைகள், உயர்தர ஆடைகள், ரொக்கம் என ரூ.25 லட்சம் மதிப்புள்ள பொருட்களை திடீரென்று காணவில்லை. ஜூஹு பகுதியில் உள்ள சீ பிரின்சஸ், ராமதா பிளாசா போன்ற ஸ்டார் ஓட்டல்களில் நடந்த நிகழ்ச்சிகளிலும் ரொக்கம், நகைகள் மர்மமான முறையில் காணாமல் போயின. சம்பவங்கள் பற்றி சான்டாகுரூஸ் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. 7 பேரை போலீசார் பிடித்து விசாரித்தனர். 2 பேரை 2 வாரம் முன்பு கைது செய்தனர். இருவரும் சிறுவர்கள். பாலக் (9), நேஹா (11). 2 நாட்கள் கழித்து ஜோஸ்தா (60), மந்தாகினி சிஸ்சோதியா (21) உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களை கவனிக்க வேண்டிய விதத்தில் கவனித்து விசாரணையை தொடங்கியது போலீஸ்.‘எங்கிருந்து வறீங்க, உங்க அப்பா அம்மா யார், கொள்ளை கும்பல் தலைவன் யார்?’ என்று துருவிதுருவி விசாரணை நடந்தது. அவர்கள் கொடுத்த தகவல்படி மத்திய பிரதேச மாநிலம் காதியா என்ற கிராமத்துக்கு போலீஸ் டீம் சென்றது. ஊருக்குள் நுழைந்த போலீசை யாரும் கண்டுகொள்ளவில்லை. ‘இந்த பையனை தெரியுமா? இவங்க வீடு எங்கிருக்கு’ என்று ஊரில் உள்ளவர்களிடம் போலீசார் விசாரித்தனர். யாரும் சரியாக பதில் சொல்லவில்லை. போலீசுக்கு குழப்பம். அந்த கிராமத்தில் ஒருவர் பாக்கி இல்லாமல் அத்தனை பேரும் ‘திருட்டு தொழிலில்’ ஈடுபட்டிருப்பவர்கள் என்ற அதிர்ச்சி தகவல் அதன் பிறகுதான் போலீசுக்கு தெரியவந்தது. விசாரணைக்கு உள்ளூர் போலீசும் ஒத்துழைக்கவில்லை. விரக்தி அடைந்த போலீஸ் டீம் பிடிபட்டவர்களை அங்கேயே தனி அறையில் வைத்து விசாரித்தது. இதில் மேலும் பல ஷாக் தகவல்கள் தெரியவந்தன. விசாரணையில் அவர்கள் கூறியதாவது:திருட பயிற்சி கொடுக்க தனி மாஸ்டர்கள் இருக்கிறார்கள். பிக்பாக்கெட் அடிப்பது எப்படி? பூனைபோல் சத்தமில்லாமல் வீட்டுக்குள் நுழைவது எப்படி? பணக்கார வீடுகளில் நடக்கும் விழாக்களில் ஆடம்பர உடைகள் அணிந்து கூட்டத்தோடு கூட்டமாக கலப்பது எப்படி? அசந்த சமயத்தில் நகை, பணம், ஆடம்பர பொருட்களை  அமுக்கிக்கொண்டு எஸ்கேப் ஆவது எப்படி? என்ற எல்லா பயிற்சிகளையும் அவர்கள் தருவார்கள். திருட்டு எங்கள் பரம்பரை தொழில். எங்களுக்கென்று தனியாக வக்கீல் பிரிவு வைத்திருக்கிறோம். எப்போதாவதுதான் போலீசில் சிக்குவோம். அப்படி பிடிபட்டால் வக்கீல் பிரிவினர் வந்து ஜாமீனில் எடுத்துவிடுவார்கள்.திருடர்கள் சொல்லச் சொல்ல போலீசுக்கு தலை சுற்றியது.பிடிபட்ட 7 பேரை அழைத்துக்கொண்டு மீண்டும் மும்பை திரும்பிய போலீஸ் டீம் அவர்களை கோர்ட்டில் நிறுத்தியது. பின்னாலேயே வந்த வக்கீல் டீம், அவர்களை ஜாமீனில் எடுத்துக்கொண்டு ஊருக்கு போய்விட்டது. மேலும் 10 பேரை போலீசார் தேடி வருகிறார்களாம்.
425
1/18/2011 5:52:05 PM
விளையாட்டு
உலககோப்பை ஆஸி. அணி அறிவிப்பு : பான்டிங் கேப்டனாக நீடிப்பு
உலககோப்பை கிரிக்கெட் போட்டியில் விளையாடும் ஆஸ்திரேலிய அணி இன்று அறிவிக்கப்பட்டது. சுண்டுவிரல் காயம் காரணமாக இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து விலகிய பான்டிங் மீண்டும் கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார். அவரது தலைமையில் ஆஸ்திரேலிய அணி உலககோப்பையில் விளையாடுகிறது. பிரெட்லீ, ஷான்டெய்ட் ஆகியோர் மீண்டும் இடம்பிடித்துள்ளனர். பீட்டர்சிடில், சேவியர், டூஹெர்ட்டி ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர். ஸ்டீவன்ஸ்மித், டேவிட்ஹசி, மைக்ஹசி ஆகியோர் அணியில் இடம்பிடித்துள்ளனர். அணி விவரம் வருமாறு: பான்டிங் (கேப்டன்), மைக்கேல்கிளார்க், வாட்சன், மைக்ஹசி, டேவிட்ஹசி, கேமரூன்ஒயிட், டிம்பெய்ன், ஹடின், ஸ்டீவன்ஸ்மித், ஜான்ஹேஸ்டிங்ஸ், ஜாண்சன், நாதன் ஹவுரிட்ச், பிரெட்லீ, ஷான்டெய்ட், போலிங்கர்.
426
1/18/2011 5:53:38 PM
விளையாட்டு
எல்லோரையும் திருப்திபடுத்த முடியாது - கேப்டன் டோனி
உலககோப்பை இந்திய அணி தேர்வு குறித்து டோனி கூறுகையில், நாம் சில வீரர்களை அணியில் தேர்வு செய்யவில்லை. 7 பேட்ஸ்மேன்களை மட்டும்தான் தேர்வு செய்திருக்கிறோம். சிலர் வாய்ப்பு பெற்றிருக்கிறார்கள். சிலர் ஏமாற்றம் அடைந்திருக்கிறார்கள். ஆனால் நேர்மையான அடிப்படையில் அணியின் தேர்வு நடந்திருக்கிறது. இதை அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும். எல்லோரையும் ஒரே நேரத்தில் திருப்திப்படுத்த முடியாது என்றார்.
427
1/18/2011 5:59:19 PM
விளையாட்டு
உலககோப்பையை வென்று சச்சினுக்கு சமர்ப்பிப்போம் : கவுதம் காம்பீர் உறுதி
உலககோப்பை  கிரிக்கெட் போட்டியில் விளையாடும் இந்திய அணி நேற்று பிற்பகல் அறிவிக்கப்பட்டது. டெண்டுல்கர் இந்த உலககோப்பையில் விளையாடுவதன் மூலம் 6 உலககோப்பையில் விளையாடும் வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். இதுபற்றி இந்திய அணியின் தொடாக்க வீரர் காம்பீர் கூறியதாவது:சச்சின் மிகச்சிறந்த வீரர். அவருக்கு இந்த உலககோப்பை போட்டி கடைசியாக இருக்காது. அவர் இன்னும் ஒரு உலககோப்பையில் விளையாடுவார் என நம்புகிறோம். இருப்பினும் அணி வீரர்கள் அனைவரும் இந்த உலககோப்பையை வென்று அவருக்கு சமர்ப்பிக்க முடிவு செய்துள்ளோம். யுவராஜ்சிங் அணியின் வெற்றியை உறுதி செய்யும் வீரர். அவரும் முழுதகுதியுடன் இடம் பிடித்திருப்பது சந்தோஷம்.காயம் காரணமாக தென் ஆப்ரிக்க தொடரில் இருந்து விலகியுள்ள நான் உலககோப்பைக்கு முன் உடல்தகுதி பெறுவேன். கொல்கத்தா ஐபிஎல் அணியின் கண்காணிப்பாளராக கங்குலி நியமிக்கப்பட்டால் நான் சந்தோஷமடைவேன். அவர் இல்லாமல் கொல்கத்தா இல்லை. அவரது பங்களிப்புடன் இந்த ஐபிஎல்லில் கொல்கத்தா வெற்றி பெற நாங்கள் முயற்சி செய்வோம். இவ்வாறு அவர் கூறினார்.
428
1/18/2011 6:02:59 PM
உலகம்
கடும் தண்டனை வழங்கிய நீதிபதிகள் டிஸ்மிஸ்
பீஜிங்: சீனாவின் ஹெனான் பகுதியில் வசிக்கும் விவசாயி ஜியான்பெங். இவருக்கு சொந்தமான மணல் லாரியில், ராணுவ நம்பர் பிளேட்களை பொருத்தி, நெடுஞ்சாலையில் டோல்கேட் வரி செலுத்தாமல் சென்றுள்ளார். மொத்தம் 2,300 முறை இவர் வரி செலுத்தவில்லை. இதன் மூலம் அரசுக்கு ரூ.2 கோடியே 56 லட்சம் வரி ஏய்ப்பு செய்துள்ளார். இந்த குற்றத்துக்காக ஜியான்பெங் மீது ஹெனான் பகுதியில் உள்ள பிங்டிங்சன் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இதை விசாரித்த நீதிபதிகள் லோ யான்வே,  ஹோ ஜியோகாங் ஆகியோர் விவசாயி ஜியான்பெங்குக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தனர். இதை எதிர்த்து ஹெனான் உயர்நீதிமன்றத்தில் அப்பீல் செய்தார் ஜியான்பெங். வரிஏய்ப்பு செய்த குற்றத்துக்காக விவசாயிக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்த உயர்நீதிமன்றம், தீர்ப்பு வழங்கிய கீழ்கோர்ட் நீதிபதிகள் இருவரையும் டிஸ்மிஸ் செய்தது.
429
1/18/2011 6:05:38 PM
உலகம்
பாக். தீவிரவாத முகாமில் கனடா நாட்டினர் பயிற்சி
வசிரிஸ்தான்: பாகிஸ்தானின் வசிரிஸ்தான் பகுதியில் உள்ள தீவிரவாத முகாம்களில் ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த இளைஞர்கள் பயிற்சி பெறுவதாக அரபு உளவுத்துறை ஏஜென்சிகள் ஏற்கனவே எச்சரிக்கை விடுத்திருந்தன. மேற்கத்திய இளைஞர்களுக்கு பயிற்சி கொடுத்து, அவர்கள் மூலமாகவே அவர்கள் நாட்டில் தாக்குதல் நடத்த அல்&கய்தா அமைப்பு திட்டமிட்டுள்ளது.  இந்நிலையில் கனடா நாட்டைச் சேர்ந்த 12 இளைஞர்கள் வசிரிஸ்தான் பகுதியில் தீவிரவாத பயிற்சி பெறுவதாக ஆரிப் வாசிர் என்ற தீவிரவாதி உறுதியான தகவல்களை தெரிவித்துள்ளார். இவர்கள் கடந்தாண்டு பிப்ரவரி மாதம் ஆப்கானிஸ்தான் சென்றுள்ளனர். அங்கு 9 மாதம் பயிற்சியை முடித்து விட்டு தற்போது பாகிஸ்தானின் வசிரிஸ்தான் பகுதிக்கு அனுப்பப்பட்டுள்ளனர். இவர்கள் மதம் மாறியிருக்கலாம் என கூறப்படுகிறது. சர்க்கரை, சாதாரண ரசாயனங்களை எப்படி சக்தி வாய்ந்த வெடிபொருளாக மாற்றலாம் என இவர்களுக்கு பயற்சி அளிக்கப்படுகிறது. மேலும் நவீன ஆயுதங்களை பயன்படுத்துவது, அமெரிக்காவில் கடத்தல் வேலைகளில் ஈடுபடுவது போன்றவை குறித்தும் இந்த இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இங்கிலாந்து, ஜெர்மனி மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த இளைஞர்களும் தீவிரவாத பயிற்சி மேற்கொள்வதாக கூறப்படுகிறது.
430
1/19/2011 2:32:17 PM
கல்வி
விவசாய மேலாண்மை படிப்பு மார்ச் 27ல் நுழைவுத்தேர்வு
`இந்தியா  முழுக்க  முழுக்க விவசாயத்தை நம்பியுள்ள நாடு. நிரந்தர வருமானமின்மை, கூலியாட்கள் பற்றாக்குறை போன்ற காரணங்களால் விளை நிலங்கள் எல்லாம் வீடுகளாகி வரும் சூழ்நிலையில் எதிர்காலத்தில் விவசாயத்தில் புரட்சியை எதிர்நோக்கும் நிலையில் உள்ளோம். அதற்கேற்ப மத்திய, மாநில அரசுகளும் தயாராகி வருகின்றன. பல்வேறு ஆராய்ச்சிகள், புதிய பயிர்கள் கண்டுபிடிப்பு போன்றவை கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள் மூலமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. விவசாயம் சார்ந்த பல்வேறு படிப்புகளும் அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது.மத்திய விவசாய  அமைச்சகத்தின் கீழ் ஐதராபாத், ஜெய்ப்பூர் ஆகிய இடங்களில் இயங்கும் தேசிய விவசாய மேலாண்மையியல் கல்லூரிகளில் முதுகலை விவசாய மேலாண்மை படிப்புக்கு மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது. Graduate Programme in Agri Business Management என்றழைக்கப்படும் இப்படிப்பிற்கு வரும் மார்ச்.27ல் நுழைவுத்தேர்வு நடக்கிறது. நுழைவுத்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் குழு விவாதம், நேர்முகத்தேர்வுக்கு அழைக்கப்படுவர்.யுஜிசி/ஐசிஏஆர் மூலம் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் விவசாயம் சார்ந்த ஏதேனும் பாடப்பிரிவில் 4 வருட இளநிலை பட்டப்படிப்பை முடித்தவர்கள் இப்படிப்பில் சேர தகுதியானவர்கள். நுழைவுத்தேர்வுக்கு வரும் பிப்.14க் குள் விண்ணப்பிக்க வேண்டும். நுழைவுத்தேர்வுக்கட்டணம் ஹ்1000ஐ (எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 500) 'யிணிஜிகிஙிவி' என்ற பெயரில் ஐதராபாத்தில் மாற்றத்தக்க வகையில் டிடியாக செலுத்த வேண்டும்.1. National Institute of Agricultural Extension Management (MANAGE), Rajendra nagar, Hyderabad 500030.2. National Academy of Agricultural Research Management (NAARM),  Indian Council of Agricultural Research, Rajendra nagar, Hyderabad 500407.மேற்கண்ட ஏதேனும் ஒரு தேசிய விவசாய கல்லூரியில் விண்ணப்பக்கட்டணமாக ஹ்100ஐ டிடி, போஸ்டல் ஆர்டராக செலுத்தி, அத்துடன் கோரிக்கை மனுவை சேர்த்து அனுப்பி தபாலில் விண்ணப்பத்தை பெற்றுக்கொள்ளலாம். நுழைவுத்தேர்வு நடைபெறும் இடம் மற்றும் பிற விவரங்களை www.jetabm.gov.in என்ற இணையதள முகவரியில் தெரிந்து கொள்ளலாம்.
433
1/19/2011 2:35:27 PM
கல்வி
உடனடி வேலைவாய்ப்பு தரும் ஓட்டல் மேனேஜ்மென்ட் படிப்புகள்
தொழிற்படிப்புகளில் பல்வேறு பிரிவுகள் இருந்தாலும் உடனடி வேலைவாய்ப்பை பெற்றுத்தரும் படிப்புகளை தனியாக பட்டியலிட்டு விடலாம். அதில் ஓட்டல் மேனேஜ்மென்ட் மற்றும் டூரிசம் சார்ந்த படிப்புகள் முக்கிய இடத்தை பெற்றுள்ளன. பல கல்லூரிகளில் முழு நேரமாகவும், பல்கலைக்கழகங்களில் தொலைதூரக்கல்வி அடிப்படையிலும் இப்படிப்புகள் நடத்தப்படுகின்றன. இப்படிப்பை முடித்தவர்கள் உள்நாடு மட்டுமல்லாது வெளிநாடுகளிலும் அதிக ஊதியத்தில் பணிவாய்ப்பை பெற்றுள்ளனர்.அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் எம்பிஏ ஓட்டல் மேனேஜ்மென்ட் அண்ட் டூரிசம் படிப்பை ஏதேனும் பட்டப்படிப்பை முடித்தவர்கள் படிக்கலாம். ஏதேனும் பல்கலைக்கழகம் அல்லது அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் முதுகலை மேலாண்மை பட்டயப்படிப்பை படித்தவர்களுக்கு மாணவர் சேர்க்கையில் முன்னுரிமை அளிக்கப்படும்.இது தவிர எம்எஸ்சி ஓட்டல் மேனேஜ்மென்ட், எம்எஸ்சி டூரிசம், இளங்கலையில் பிஎஸ்சி ஓட்டல் மேனேஜ்மென்ட் அண்ட் டூரிசம், பிபிஏ ஹாஸ்பிடாலிட்டி அண்ட் டூரிசம் மேனேஜ்மென்ட் படிப்புகளும் நடத்தப்படுகிறது. மேலும் ஒரு வருட, இரண்டு வருட முதுகலை டிப்ளமோ படிப்புகளும், ஹோட்டல் மேனேஜ்மென்ட் அண்ட் கேட்டரிங் டெக்னாலஜி பட்டயப்படிப்புகள், ப்ரன்ட் ஆபீஸ் மேனேஜ்மென்ட் படிப்புகளும் வழங்கப்படுகின்றன.இத்துறைகளுடன் தொடர்புடைய ஹவுஸ் கீப்பிங், புட் அண்ட் பிவரேஜஸ் புரொடக்ஷன் புட் அண்ட் பிவரேஜஸ் சர்வீஸ், ரிசார்ட் அண்ட் ஸ்பா மேனேஜ்மென்ட், பெஸ்டிவல் அண்ட் ஈவென்ட் மேனேஜ்மென்ட், ரீகிரியேஷன் அண்ட் லிஷர் மேனேஜ்மென்ட், டிராவல் ஏஜென்சி மேனேஜ்மென்ட் படிப்புகளும் அளிக்கப்படுகின்றன. இப்படிப்புகளுக்கான கல்வித்தகுதி, கட்டண விவரம், வகுப்புகள் தொடங்கும் தேதி உள்ளிட்ட பிற விவரங்களை பல்கலைக்கழக இணையதள முகவரியில் தெரிந்து கொள்ளலாம்.
434
1/19/2011 2:36:40 PM
கல்வி
இன்சூரன்ஸ் நிறுவன பணிக்கு டிப்ளமோ கோர்ஸ்
ஒரு காலத்தில் இன்சூரன்ஸ் என்றாலே எல்ஐசி தான் நினைவுக்கு வரும். தற்போது இன்சூரன்ஸ் நிறுவனங்கள் பல்கிப்பெருகி விட்டன. உலகப்புகழ்பெற்ற தனியார் நிறுவனங்கள், வங்கிகள் மூலம் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் துவங்கப்பட்டு வாடிக்கையாளர்களை கவரும் பல்வேறு சலுகைகளை அளித்து வருகின்றன. இதற்காக அலுவலகம், களப்பணி நிலையில் ஆயிரக்கணக்கில் பணியாளர் களை நியமித்து  வருகின்றன. ஊதியமும் நல்ல நிலையில் வழங்கப்படுகிறது.ஆரம்பத்தில் பணி அனுப வம், பட்டப்படிப்பு, முதுகலை பட்டப்படிப்பு மிக்க நபர்களை தேர்வு செய்த நிறுவனங்கள் தற் போது  இன்சூரன்ஸ் துறை சார்ந்த படிப்பை முடித்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்க துவங்கியுள்ளன. ஒரு சில கல்வி நிறுவனங்களும் இத்துறை சார்ந்த படிப்பை அறிமுகப்படுத்தியுள்ளன. ஐதராபாத்தில் உள்ள ஐஐஆர்எம் (இன்ஸ்டிடியூட் ஆப் இன்சூரன்ஸ் அண்ட் ரிஸ்க் மேனேஜ்மென்ட்) கல்வி மையத்தில் காப்பீட்டு துறை சார்ந்த படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது.International Post Graduate Diploma Course (201112) என்றழைக்கப்படும் இந்த படிப்பின் கால அளவு ஒரு ஆண்டு. இதில் Life Insu rance, General Insurance, Risk Management ஆகிய 3 பாடப்பிரிவுகள் நடத்தப்படுகின்றன. கல்விக்கட்டணம் ஹ்2 லட்சத்து 25 ஆயிரம். இப்படிப்பில் சேர ஏதேனும் பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். நேர்முகத்தேர்வு மூலம் மாணவர் சேர்க்கை நடத்தப்படும்.விண்ணப்பக்கட்டணம் ஹ்300ஐ மிமிஸிவி என்ற பெயரில் ஐதராபாத்தில் மாற்றத்தக்க வகையில் டிடியாக எடுத்து அனுப்ப வேண்டும். www.iirmworld.org.in என்ற இணையதளத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து   அத்துடன் விண்ணப்பக்கட்டண டிடி மற்றும் தேவையான சான்றிதழ்களின் நகல் ஆகியவற்றை இணைத்து அனுப்ப வேண்டும். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை  'The Managing Director, IIRM Institute of Insurance and Risk Management, No.38/39, Financial District, APSFC Bldg, Gachichibowli, Hyderabad500032' என்ற முகவரிக்கு வரும் மே.31க்குள் அனுப்ப வேண்டும்.
435
1/19/2011 3:06:14 PM
குற்றம்
காஞ்சிபுரம் பஸ் ஸ்டாண்டில் நள்ளிரவில் பயங்கரம் கழுத்து அறுத்து வாலிபர் கொலை
காஞ்சிபுரம், - நர்ஸ் கொலை வழக்கில் கைதாகி, ஜாமீனில் வெளியே வந்த வாலிபர் கழுத்து அறுத்து கொல்லப்பட்டார். இதுதொடர்பாக 4 பேரை பிடித்து போலீசார்  விசாரித்து வருகின்றனர். காஞ்சிபுரத்தில் நள்ளிரவில் நடந்த இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. காஞ்சிபுரம் பஸ் நிலையத்தில் பெங்களூர் செல்லும் பஸ்கள் நிற்குமிடத்தில் மணிகூண்டு ஒன்று உள்ளது. இதன் அருகில் நேற்று நள்ளிரவு 1  மணியளவில் ரத்த வெள்ளத்தில் வாலிபர் இறந்து கிடப்பதை பார்த்த சிலர், சிவகாஞ்சி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து காஞ்சிபுரம் டிஎஸ்பி ராஜேந்திரன், இன்ஸ்பெக்டர் சிவவேலியப்பன் மற்றும் போலீசார் பஸ் ஸ்டாண்டுக்கு விரைந்து வந்தனர். அங்கு  கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் ஒரு வாலிபர் கொலை செய்யப்பட்டு கிடந்தார். அவரது கழுத்து, மார்பு மற்றும் இடது கையில் ஆழமான வெட்டுக்  காயம் இருந்தது. சடலத்தை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக காஞ்சிபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டனர். கொலை செய்யப்பட்டு கிடந்தவர் காஞ்சிபுரம் பாபாசாகிப் தெருவை சேர்ந்த  பாலமுரளி (23) என்பது விசாரணையில் தெரியவந்தது. இவரது மனைவி நசீராபானு (20). இருவரும் காதலித்து 2 ஆண்டுகளுக்கு முன்பு  திருமணம் செய்து கொண்டனர். காஞ்சியில் உள்ள ஒரு லாட்ஜில் பாலமுரளி ரூம்பாயாக வேலை செய்து வந்தார். கடந்த ஆண்டு காஞ்சிபுரம் நமந்தகார தெருவில் வசித்து வந்த நர்ஸ் ஒருவர், படுகொலை செய்யப்பட்டார். அவரை ஒரு கும்பல் பாலியல் பலாத்க £ரம் செய்து கொன்றது தெரியவந்தது. இந்த வழக்கில் பாலமுரளி முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருந்தார். அவர் உள்பட 6 பேரை போலீசார்  கைது செய்தனர். சிறையில் அடைக்கப்பட்டிருந்த பாலமுரளி, 2 மாதத்துக்கு முன்புதான் ஜாமீனில் வெளியே வந்துள்ளார். இந்நிலையில், நேற்று நள்ளிரவு நர்ஸ் கொலை வழக்கு தொடர்பாக சிலருடன் பாலமுரளி பேசிக்கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அதன் பிறகுதான்  அவர் கொலை செய்யப்பட்டுள்ளார். நர்ஸ் கொலையில் பழிக்குப்பழியாக இந்தக் கொலை நடந்ததா அல்லது வேறு காரணமா என பல கே £ணங்களில் போலீசார் விசாரிக்கின்றனர். இது தொடர்பாக சந்தேகத்தின்பேரில் 4 பேரிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர். ஜாமீனில் வெளியே  வந்த வாலிபர், நள்ளிரவில் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம், காஞ்சிபுரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.